முல்லைப்பாட்டு – Mullaippāttu
Translation by Vaidehi Herbert
Copyright © All Rights Reserved
பாடியவர்: காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் நப்பூதனார்
பாடப்பட்டவன்: தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
திணை: முல்லை, பாவகை: ஆசிரியப்பா, மொத்த அடிகள்: 103
தமிழ் உரை நூல்கள்
பத்துப்பாட்டு (2 பகுதிகள்) – பொ. வே. சோமசுந்தரனார் – சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.
நச்சினார்க்கினியர் உரை – உ. வே. உ. வே. சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை.
ராணி மேரி கல்லூரி பேராசிரியர் முனைவர் அபிராமசுந்தரி அவர்கள் பாடியது.
கேட்டு மகிழுங்கள்.
நச்சினார்க்கினியர் உரை – இப்பாட்டிற்கு முல்லை என்று பெயர் கூறினார். முல்லை சான்ற கற்புப் பொருந்தியதனால். இல்லற நிகழ்த்துதற்குப் பிரிந்து வருந்துணையும் ஆற்றியிருவென்று கணவன் கூறிய சொல்லைப் பிழையாமல் ஆற்றியிருந்து இல்லற நிகழ்த்திய இயற்கை முல்லையாமென்று கருதி இருத்தலென்னும் பொருடர முல்லையென்று இச்செய்யுட்கு நப்பூதனார் பெயர் கூறினமையிற் கணவன் வருந்துணையும் ஆற்றியிருந்தாளாகப் பொருள் கூறலே அவர் கருத்தாயிற்று.
This song has 103 lines in Āsiriyappā/Akaval meter, and was written by poet Nappoothanār. The king is Thalaiyālankānathu Cheruvendra Neduncheliyan. This is the shortest of the 10 idylls. The poem describes the queen waiting patiently for her husband who has gone on a military campaign, the battle camp, Yavanas in the camp, women guards, and elephant trainers who speak in a northern language.
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் சேரனையும் சோழனையும் (சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை, சோழன் கிள்ளிவளவன்), ஐந்து வேளிர் குறுநில மன்னர்களையும் (திதியன், எழினி, எருமையூரன், இருங்கோ வேண்மான், பொருநன்) சோழ நாட்டில் உள்ள தலையாலங்கானத்தில் தோற்கடித்தான். There are references to Thalaiyālangam battle in Puranānūru 19, 23, 25, 76, Natrinai 387, Mathuraikkānji 55, 127, and Akanānūru 36, 175 and 209.
‘வஞ்சி தானே முல்லையது புறனே’ என்று தொல்காப்பியம் கூறுகின்றது (புறத்திணை இயல் 6). மன்னனின் பாசறை நிகழ்வுகள் மூலம், இந்த முல்லைத் திணைப் பாடலில் உள்ள வஞ்சித் திணைப் பகுதியை நாம் காணலாம்.
பொ. வே. சோமசுந்தரனார் உரை – முல்லைத்திணை பொருள்பற்றி வந்த இப்பாட்டின் பொருளுக்கு ஏற்ப முல்லை நிலத்திற்குரிய தெய்வமாகிய திருமாலும், அத்திணைக்குரிய பெரும்பொழுதாகிய கார்ப்பருவமும், சிறு பொழுதாகிய மாலைப் பொழுதும், இவ்வடிகளிலே கூறப்பட்டமை உணர்க. ‘காரும் மாலையும் முல்லை (தொல்காப்பியம், அகத்திணையியல் 6).
மால் போலத் தோன்றும் மழை மேகம்
நனந்தலை உலகம் வளைஇ, நேமியொடு
வலம்புரி பொறித்த மா தாங்கு தடக்கை
நீர் செல நிமிர்ந்த மாஅல் போல,
பாடு இமிழ் பனிக்கடல் பருகி, வலன் ஏர்பு,
கோடு கொண்டு எழுந்த கொடுஞ் செலவு எழிலி,
பெரும் பெயல் பொழிந்த சிறு புன் மாலை (1-6)
The Rising Rain Clouds appeared like Towering Thirumāl
Clouds that absorbed water from the roaring,
cold ocean rose up with strength up to the
mountains with great speed, appearing like
Thirumāl who protects the vast earth
bearing a discus and right-twisted conch shell,
when he towered high as water was poured
in his large hands that embraced Thirumakal.
Heavy rains fell during the evening hours of
painful separation.
Notes: நனந்தலை (1) – அகன்ற இடம், ‘நனவே களனும் அகலமும் செய்யும்’ (தொல்காப்பியம், சொல்லதிகாரம், உரியியல் 78). வலன் (1) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வலப் பக்கம். முல்லைத் திணைக்குரிய கடவுளான திருமாலும், பெரும்பொழுதாகிய கார்காலமும், சிறுபொழுதாகிய மாலைப் பொழுதும் இவ்வடிகளில் உள்ளன. நீர் செல நிமிர்ந்த மாஅல் போல (3) – வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரி உரை – மாவலி ஓர் அசுரன். திருமால் வாமன அவதாரம் எடுத்துச் சென்று ‘மூன்றடி மண் தா’ என்று இரந்து அவன் தாரை வார்த்துக் கொடுக்க, திரிவிக்கிரமனாகி நெடிது வளர்ந்து, பூமியையும் வானுலகையும் இரண்டடியாக அளந்து, மூன்றாவது அடிக்கு அவன் தலையில் காலை வைத்து அவனைத் பாதலத்தில் அழுத்தினான் என்பது புராணகதை. நேமியொடு வலம்புரி பொறித்த (12) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இச் சங்கு சக்கர குறிகள் உத்தம விலக்கணங்கள் என்ப. இறைவனாகிய திருமாலின் கைகளிடத்தும் கால்களிடத்தும் இக்குறிகள் உள என்பர். நச்சினார்க்கினியர் உரை – ‘நேமியொடு வலம்புரி தாங்கு தடக்கை மா பொறித்த மால்’ எனச் சொற்களைப் பிரித்துக் கூட்டி, ‘சக்கரத்தோடே வலம்புரியைத் தாங்கும் பெரிய கைகளையுடைய மால்’ என்றும், ‘திருமார்பிடத்தே திருமகளை வாய்த்த மால்’ என்னும் உரை கூறுவார் நச்சினார்க்கினியர். வலன் ஏர்பு – அகநானூறு 43, 84, 188, 278, 298, 328, நற்றிணை 37, 264, 328, குறுந்தொகை 237, ஐங்குறுநூறு 469, பதிற்றுப்பத்து 24, 31, நெடுநல்வாடை 1, பட்டினப்பாலை 67, முல்லைப்பாட்டு 4, திருமுருகாற்றுப்படை 1. இலக்கணம்: நன – அகலம் என பொருள் குறிக்கும் உரிச்சொல். வளைஇ – வளை என்பது வினையெச்சப் பொருள்பட வளைஇ என்று அளபெடுத்தது. தட – உரிச்சொல், பெருமைப்பண்பு குறித்து நின்றது. தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், சொல்லதிகாரம், உறியியல் 22). மாஅல் – இசைநிறை அளபெடை. பெரும் பெயல் பொழிந்த சிறு புன் மாலை – முரண்தொடை.
Meanings: நனந்தலை – wide place, vast place, உலகம் – earth, வளைஇ – surrounded, protects, நேமியோடு – with wheel, discus, வலம்புரி – வலப்பக்கமாகச் சுற்றுக்கள் அமைந்த சங்கு, right-twisted conch shell, பொறித்த – with the sign, மா – Thirumakal, Lakshmi, தாங்கு – embracing, bearing, தடக்கை – large hands, நீர் செல – as Mahabali Chakravarthi (Asura king) poured water, நிமிர்ந்த – raised, மாஅல் போல – like Thirumal, பாடு இமிழ் – loud sounding, பனிக்கடல் – cold ocean, பருகி – absorbed, drank, வலன் – with strength, on the right side, ஏர்பு – rose up, கோடு கொண்டு எழுந்த – rose up to the mountains, கொடுஞ் செலவு – going fast, எழிலி – clouds பெரும் பெயல் – heavy rains, பொழிந்து – poured, சிறு – slightly, புன் – painful, மாலை – evening
முதுபெண்டிர் விரிச்சி கேட்டல்
அருங்கடி மூதூர் மருங்கில் போகி,
யாழ் இசை இன வண்டு ஆர்ப்ப, நெல்லொடு
நாழி கொண்ட நறு வீ முல்லை
அரும்பு அவிழ் அலரி தூஉய்க் கைதொழுது, 10
பெரு முது பெண்டிர் விரிச்சி நிற்பச், (7-11)
Elderly Women Waited for a Good Omen
Elderly women went near the well protected
ancient town carrying rice paddy and mullai
flowers in their bowls, and prayed with their
palms pressed together, sprinkling newly opened,
fragrant mullai blossoms as swarming bees
hummed like yāl music, and waited for a good omen.
Notes: மேற்கோள்: நெடுநல்வாடை 43 – நெல்லும் மலரும் தூஉய்க்கை தொழுது, முல்லைப்பாட்டு 8-10 – நெல்லொடு நாழி கொண்ட நறு வீ முல்லை அரும்பு அவிழ் அலரி தூஉய்க் கைதொழுது, விரிச்சி (11), நன்மொழி (17), வாய்ப்புள் (18) என்பன ஒரு பொருள் சொற்கள். விரிச்சி: நற்றிணை 40 – விரிச்சி நிற்ப, குறுந்தொகை 218 – விரிச்சியும் நில்லாம், புறநானூறு 280 – விரிச்சி ஓர்க்கும், முல்லைப்பாட்டு 11 – விரிச்சி நிற்ப. இலக்கணம்: தூஉய் – இன்னிசை அளபெடை.
Meanings: அருங்கடி – heavy protection, மூதூர் – an ancient town, மருங்கில் – nearby, close to it, போகி – went, யாழ் இசை – yāl music, lute music, இன வண்டு – swarms of bees, ஆர்ப்ப – humming, நெல்லொடு – with rice paddy, நாழி கொண்ட – in measuring bowls, நறு –fragrant, வீ – flowers, முல்லை – jasmine, அரும்பு – buds, அவிழ் – opened, அலரி – blossomed flowers, தூஉய் – sprinkled, கைதொழுது – worshipping with their hands, பெருமுது – very old, பெண்டிர் – women, விரிச்சி நிற்ப – they waited for a good omen