பெரும்பாணாற்றுப்படை – Perumpānātruppadai
Translated by Vaidehi Herbert
Copyright © All Rights Reserved
பாடியவர் : கடியலூர் உருத்திரங் கண்ணனார்
பாடப்பட்டவன் : தொண்டைமான் இளந்திரையன்
திணை : பாடாண் திணை
துறை : ஆற்றுப்படை
பாவகை : ஆசிரியப்பா
மொத்த அடிகள் : 500
தமிழ் உரை நூல்கள்
பத்துப்பாட்டு (2 பகுதிகள்) – பொ. வே. சோமசுந்தரனார் – சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.
நச்சினார்க்கினியர் உரை – உ. வே. உ. வே. சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை.
பொ. வே. சோமசுந்தரனார் உரை – பெரும்பாண், பெரிய பாண் எனப் பொருள்படும். பெரிய பாணாவது, பெரும் பண். அஃதாவது பெரிய பாட்டு. அக்காலத்துப் பாட்டுக்களைப் பாடுவதற்கெனத் தனி வகுப்பினராய்ச் சிலர் பிரிந்திருந்தனர். அவருள் பெரிய யாழைத் தாங்கி அதன் நரம்புகளை வலித்து அதன் இசையோடு ஒன்ற இனிது பாடுவோரே பெரும்பாணர் ஆவர். பாணரை அவர் பண்பால் பாண் என்றுக் கொண்டு அவரை ஆற்றுப்படுத்தியதால் பெரும்பாணாற்றுப்படை எனப் பெயர் அமைத்தனர்.
பாணனது யாழின் வருணனை
அகல் இரு விசும்பில் பாய் இருள் பருகிப்
பகல் கான்று, எழுதரு பல் கதிர்ப் பருதி
காய் சினம் திருகிய கடுந்திறல் வேனில்,
பாசிலை ஒழித்த பராஅரைப் பாதிரி
வள் இதழ் மாமலர் வயிற்றிடை வகுத்ததன் 5
உள்ளகம் புரையும் ஊட்டுறு பச்சைப்
பரியரைக் கமுகின் பாளை அம் பசும் பூக்
கரு இருந்தன்ன, கண்கூடு செறி துளை
உருக்கி யன்ன, பொருத்துறு போர்வைச்
சுனை வறந்தன்ன இருள் தூங்கு வறுவாய்ப் 10
பிறை பிறந்தன்ன பின் ஏந்து கவைக்கடை,
நெடும் பணைத் திரள் தோள் மடந்தை முன்கைக்
குறுந்தொடி ஏய்க்கும், மெலிந்து வீங்கு திவவின்
மணி வார்ந்தன்ன, மாஇரு மருப்பின்
பொன் வார்ந்தன்ன, புரி அடங்கு நரம்பின் 15
தொடை அமை கேள்வி இடவயின் தழீஇ, (1-16)
Description of the bard’s lute
The sun rises with many rays, with great
rage, swallowing the darkness spread in the
wide sky, in this scorching intense summer.
Hugging perfectly on your left side is your lute,
its outer leather cover like the torn inner part
of large pāthiri flowers with thick petals,
swarmed by bees, that blossom on thick-trunked
trees that have lost their green leaves,
its eye-like close holes like the new flower buds
under the spathe of a betelnut palm, its cover like
it was melted and molded, its sound hole dark
like a dry spring, its lifted, forked end like the
crescent moon, its frets like the small bangles
on the forearms of a delicate woman with long,
bamboo-like arms, its strings looking like gold,
that can be loosened and tightened, and
its large, dark stem resembling sapphire strands,
Notes: புறநானூறு 135, 308, பெரும்பாணாற்றுப்படை 15, சிறுபாணாற்றுப்படை 34 – பொன் வார்ந்தன்ன புரி அடங்கு நரம்பின். கேள்வி (16) – யாழிற்கு ஆகுபெயர்.
Meanings: அகல் இரு விசும்பில் – in the wide, vast/dark sky, பாய் இருள் பருகி – swallowing the darkness that has spread, பகல் கான்று – revealing day time, எழுதரு பல் கதிர்ப் பருதி – rising sun with many rays, காய் சினம் திருகிய – scorched with great rage, கடுந்திறல் வேனில் – in the intensely hot summer, பாசிலை ஒழித்த – lost its green leaves, பராஅரை – thick trunk (இசைநிறை அளபெடை), பாதிரி – Stereospermum chelonoides, Trumpet flower, வள் இதழ் – thick petals, மா மலர் – large/dark flowers buzzed by bees, வயிற்றிடை வகுத்ததன் – inside the torn part, உள்ளகம் புரையும் – like the inner sides (புரை – உவம உருபு, a comparison word), ஊட்டுறு பச்சை – dyed leather cover, பரியரைக் கமுகின் – betel nut trees with thick trunks, பாளை – spathe, அம் பசும் பூக்கரு இருந்தன்ன – like the new buds of the beautiful flowers, கண் கூடு செறி துளை – close holes like eyes together, thick holes like eyes together, உருக்கியன்ன பொருத்துறு போர்வை – the cover appeared like it was melted and fitted perfectly, சுனை வறந்தன்ன – like a dried spring, இருள் தூங்கு – darkness residing, வறுவாய் – empty mouth/mouth without tongue/opening, பிறை பிறந்தன்ன – like a new crescent moon that appeared, பின் ஏந்து – in the back and lifted, கவைக்கடை – forked end, நெடும் – long, பணைத் திரள் தோள் – thick arms like bamboo, மடந்தை முன்கைக் குறுந்தொடி ஏய்க்கும் – like the small bangles on a young girl’s forearm, மெலிந்து வீங்கு – loosen and tighten, திவவின் – with frets, மணி வார்ந்தன்ன – like long strands of sapphire, மாஇரு மருப்பின் – with a large and dark stem, பொன் வார்ந்தன்ன – like made with stretched gold, புரி அடங்கு நரம்பின் – with tightly tied strings, தொடை அமை – ties are perfect, கேள்வி – lute (ஆகுபெயர் யாழிற்கு), இடவயின் தழீஇ – hugging on your left side (தழீஇ – சொல்லிசை அளபெடை)
பாணனது வறுமை
வெந்தெறல் கனலியொடு மதி வலம் திரிதரும்
தண் கடல் வரைப்பில் தாங்குநர்ப் பெறாது,
பொழி மழை துறந்த புகை வேய் குன்றத்துப்
பழுமரம் தேரும் பறவை போலக், 20
கல்லென் சுற்றமொடு கால் கிளர்ந்து திரிதரும்
புல்லென் யாக்கைப் புலவுவாய்ப் பாண! (17-22)
The Poverty of the Bard
you with a body that is thin, wander with your
loud relatives, like birds that seek fruit trees
in the mountains with fog, abandoned by rain,
frustrated that you cannot find donors in this
world surrounded by the cool ocean, circled
with strength by the moon and heated by the
hot sun, O bard!
Notes: பழ மரமும் புள்ளும்: புறநானூறு 173 – பழுமரம் புள் இமிழ்ந்தன்ன, புறநானூறு 370 – பழுமரம் உள்ளிய பறவை போல, பெரும்பாணாற்றுப்படை 20 – பழுமரம் தேரும் பறவை போல, பொருநராற்றுப்படை 64 – பழுமரம் உள்ளிய பறவையின், மதுரைக்காஞ்சி 576 – பழம் தேர் வாழ்க்கைப் பறவை போல.
Meanings: வெந்தெறல் கனலியொடு – along with the heat emitting sun, மதி – the moon, வலம் திரிதரும் – roams with strength, தண் கடல் வரைப்பில் – in the land with the ocean as its limits, in the earth surrounded by cool water, தாங்குநர்ப் பெறாது – not getting donors, பொழி மழை துறந்த – abandoned by the pouring rains, புகை வேய் குன்றத்து – in the mountains with fog, பழுமரம் தேரும் பறவை போல – like birds that search for fruit trees, கல்லென் சுற்றமொடு – with loud relatives, கால் – places, கிளர்ந்து – rise up, திரிதரும் – roam around, புல்லென் யாக்கை – dull body, body that is thin, புலவுவாய்ப் பாண – O frustrated bard, O bard who talks ill of your training and work (பாண – அண்மை விளி)
பரிசு பெற்றோன் தன் செல்வ நிலையை எடுத்துரத்தல்
பெருவறம் கூர்ந்த கானம் கல்லெனக்
கருவி வானம் துளி சொரிந்தாங்குப்,
பழம் பசி கூர்ந்த எம் இரும்பேர் ஒக்கலொடு 25
வழங்கத் தவாஅப் பெருவளன் எய்தி,
வால் உளைப் புரவியொடு வயக்களிறு முகந்துகொண்டு
யாம் அவணின்றும் வருதும்; (23-28)
The Bard who received wealth tells the other Bard about it
We are returning with our very large family
that was hungry for a long time, after receiving
gifts of horses with white tufts, strong bull
elephants and great wealth that will not get
reduced by giving, like a dry forest receiving
loud, heavy rain with thunder and lightning.
Notes: இரும்பேர் ஒக்கல் – பொருநராற்றுப்படை 61, சிறுபாணாற்றுப்படை 139, 144, பெரும்பாணாற்றுப்படை 25, 470, மலைபடுகடாம் 157 – நச்சினார்க்கினியர் உரை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – கரிய பெரிய சுற்றம், ஒளவை துரைசாமி உரை – புறநானூறு பாடல்கள் 69, 150, 370, 378, 390, 391, 393, 394, 396 – மிக்க பெரிய சுற்றத்தார், மிகப் பெரிய சுற்றம், புறநானூறு 320 – கரிய பெரிய சுற்றத்தார். கருவி வானம் (23) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இடி மின்னல் முதலிய தொகுதிகளையுடைய முகில்கள்.
Meanings: பெருவறம் கூர்ந்த கானம் – forest that is very dry, கல்லெனக் கருவி வானம் துளி சொரிந்தாங்கு – like how the clouds with thunder and lightning poured rain loudly, பழம் பசி கூர்ந்த – with great hunger for a long time, எம் இரும்பேர் ஒக்கலொடு – with my very large clan of relatives, with my dark and large family of relatives, வழங்கத் தவாஅ – won’t get reduced by giving (தவாஅ – இசை நிறை அளபெடை), அப் பெருவளன் எய்தி – attain great wealth (வளன் – வளம் என்பதன் போலி), வால் உளைப் புரவியொடு – along with horses with white tufts, வயக்களிறு – strong male elephants, முகந்துகொண்டு யாம் அவணின்றும் வருதும் – we coming from there after receiving all these
திரையனது சிறப்பை அறிவித்தல்
….. …. ………. நீயிரும்,
இருநிலம் கடந்த திருமறு மார்பின்
முந்நீர் வண்ணன் பிறங்கடை, அந்நீர்த் 30
திரைதரு மரபின் உரவோன் உம்பல்,
மலர்தலை உலகத்து மன் உயிர் காக்கும்
முரசு முழங்கு தானை மூவருள்ளும்
இலங்கு நீர்ப் பரப்பின் வளைமீக் கூறும்
வலம்புரி அன்ன வசை நீங்கு சிறப்பின், 35
அல்லது கடிந்த அறம் புரி செங்கோல்,
பல்வேல் திரையற் படர்குவிர் ஆயின்,
கேள் அவன் நிலையே கெடுக நின் அவலம்! (28-38)
Announcing the Fame of Thiraiyan
Your poverty will be removed if you go to
Thiraiyan who has an army of spears and a
protecting, just scepter, who is of a lineage
from that of the ocean with waves, heir to
Thirumal of ocean color,
who measured the earth in one step and has
Thirumakal on his chest, greater than the three
great kings with armies with roaring drums,
who protect lives on this wide earth. His faultless
splendor is great like the right-whorled conches
from the bright, wide ocean that is praised as
the best among conch.
Listen to what I have to say about him!
Meanings: நீயிரும் – also you, இரு நிலம் கடந்த – measured the large land, stepped over the large land, திருமறு மார்பின் – with a chest with Thirumakal, with a chest with Lakshmi, முந்நீர் வண்ணன் – one with the color of the ocean, Thirumal, பிறங்கடை – one who came behind, heir, அந்நீர்த் திரைதரு மரபின் உரவோன் – of the family with heritage given by that ocean, உம்பல் – heir, மலர்தலை உலகத்து – in the wide world, மன் உயிர் காக்கும் – protecting stable lives, முரசு முழங்கு தானை மூவர் உள்ளும் – among the three great kings with armies with roaring drums, இலங்கு நீர்ப் பரப்பின் – in the bright wide water (ocean), வளை மீக் கூறும் – praised more than other conches, வலம்புரி அன்ன – like the right-whorled conches, வசை நீங்கு சிறப்பின் – with faultless greatness, அல்லது – or, கடிந்த – protective, அறம் புரி – desiring virtue, desiring justice, செங்கோல் – scepter, பல்வேல் திரையன் படர்குவிர் ஆயின் – if you go to Thiraiyan with many spears, கேள் அவன் நிலையே – listen about his situation, கெடுக நின் அவலம் – let your poverty be ruined, let your poverty be lost (கெடுக – வியங்கோள் வினைமுற்று)
திரையனது ஆணை
அத்தம் செல்வோர் அலறத் தாக்கிக்
கைப்பொருள் வௌவும் களவு ஏர் வாழ்க்கைக் 40
கொடியோர் இன்று அவன் கடியுடை வியன் புலம்;
உருமும் உரறாது, அரவும் தப்பா,
காட்டு மாவும் உறுகண் செய்யா,
வேட்டு ஆங்கு, அசைவுழி அசைஇ, நசைவுழித் தங்கிச்,
சென்மோ இரவல! சிறக்க நின் உள்ளம்! (39-45)
Safe paths in Thiraiyan’s country
In his protected, wide country, there are no
cruel wasteland bandits whose livelihood is
plucking things from the hands of people,
attacking them as they scream. Thunder does
not attack, snakes don’t kill, and wild animals
do not hurt. Rest wherever you desire to rest,
relax and proceed. May your mind flourish!
Meanings: அத்தம் செல்வோர் – those who go to the wasteland, அலறத் தாக்கி – attack them as they scream, கைப்பொருள் வௌவும் – plunder what they carry in their hands, களவு ஏர் வாழ்க்கைக் கொடியோர் – cruel people (men) who live a life of stealing (as their plow/livelihood), இன்று – without, அவன் கடியுடை வியன் புலம் – his vast land with protection, உருமும் உரறாது – thunder does not roar/attack, அரவும் தப்பா – snakes don’t err (don’t bite), காட்டு மாவும் உறுகண் செய்யா – forest animals do not hurt, வேட்டு ஆங்கு அசைவுழி அசைஇ – rest where you are tired (அசைவுழி – உழி ஏழாம் வேற்றுமை உருபு, அசைஇ – சொல்லிசை அளபெடை), நசைவுழி – desired place (நசைவுழி – உழி ஏழாம் வேற்றுமை உருபு), தங்கி சென்மோ இரவல – stay and go O bard in need (மோ – முன்னிலையசை, an expletive of the second person), சிறக்க நின் உள்ளம் – may your mind flourish (சிறக்க – வியங்கோள் வினைமுற்று)
உப்பு வாணிகர் செல்லும் நெடிய வழி
கொழுஞ்சூட்டு அருந்திய, திருந்து நிலை ஆரத்து,
முழவின் அன்ன முழுமர உருளி,
எழூஉப் புணர்ந்தன்ன பரூஉக்கை நோன் பார்,
மாரிக் குன்றம் மழை சுமந்தன்ன,
ஆரை வேய்ந்த அறைவாய்ச் சகடம் 50
வேழம் காவலர் குரம்பை ஏய்ப்பக்
கோழி சேக்கும் கூடுடைப் புதவின்,
முளை எயிற்று இரும்பிடி முழந்தாள் ஏய்க்கும்
துளை அரைச் சீறுரல் தூங்கத் தூக்கி,
நாடக மகளிர் ஆடுகளத்து எடுத்த 55
விசி வீங்கு இன் இயம் கடுப்பக் கயிறு பிணித்துக்
காடி வைத்த கலனுடை மூக்கின்,
மகவுடை மகடூஉப் பகடு புறம் துரப்பக்
கோட்டு இணர் வேம்பின் ஏட்டு இலை மிடைந்த
படலைக் கண்ணிப் பருஏர் எறுழ்த் திணிதோள், 60
முடலை யாக்கை, முழு வலி மாக்கள்
சிறு துளைக் கொடு நுகம் நெறிபட நிரைத்த,
பெருங் கயிற்று ஒழுகை மருங்கில் காப்பச்
சில்பத உணவின் கொள்ளை சாற்றிப்
பல் எருத்து உமணர் பதி போகு நெடு நெறி, (46-65)
The Long Path that Salt Merchants take
The wagons of salt merchants have wheel
rims which surround perfectly placed spokes,
massive wheel hubs made from huge trees,
thick, strong wooden axle bars appearing like
two fortress gate cross bars tied together, roofs
woven with grass looking like rain clouds carried
by the mountains during monsoons, and cages
for domestic fowl resembling the huts of guards
who protect fields against elephants.
In a wagon, there is a small mortar with holes
in the shape of the knees of a cow elephant with
tusks like the sprouts of bamboo, that dangles
from the cart near the cage.
The salt merchant’s wife, holding her child,
is seated on a wooden bar on which a pickle pot
circled with ropes is placed, that resembles
small drums with holes that are tied with ropes
and played when drama actresses dance in dancing
arenas, that resemble the legs of female elephants
whose tusks appear like bamboo sprouts.
She hits the oxen on their back and drives the
cart, and strong men with thick shoulders and firm
bodies wearing garlands made with fine leaves
of neem trees with clusters of flowers on branches,
walk near the cart with curved yoke with small holes
tied properly with large ropes, calling out the price of
salt, in the long path that takes the salt merchants
owning many bulls, to many towns.
Notes: அறைவாய்ச் சகடம் (50) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – ‘அறைத்துச் செல்லும் வாயையுடைய’ எனினுமாம், ‘வாய் அறை சகடம் என மாறி வழியை அறுத்துச் செல்லும் சகடம்’ எனினுமாம், அறைவாய்ச் சகடம், அகநானூறு 301 – வேங்கடசாமி நாட்டார் உரை – ‘ஒலியினைச் செய்யும் வாயினுடைய வண்டி’, பொ. வே. சோமசுந்தரனார் உரை – ‘அறுத்து அமைத்த வாயையுடைய சகடம்’. மூக்கின் (57) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – மூக்கு – சகடத்தின் முன்னர் நுகத்தடி பிணைக்கப்பட்ட மரம். இக்காலத்திலும் மூக்கணை என்றே வழங்குதல் அறிக.
Meanings: கொழுஞ்சூட்டு – with thick wheel rims, அருந்திய – swallowed, covered, திருந்து நிலை ஆரத்து – with perfectly placed spokes, முழவின் அன்ன – like drums, முழு மர – of thick trees, of whole trees, உருளி – round wheel hubs, எழூஉப் புணர்ந்தன்ன – like two wooden bars (from fort gates) that are united (எழூஉ – இன்னிசை அளபெடை), பரூஉக்கை நோன் பார் – thick and strong wooden bar (பரூஉ – இன்னிசை அளபெடை), மாரிக் குன்றம் மழை சுமந்தன்ன – like the mountains carrying the rain clouds in the rainy season, ஆரை வேய்ந்த – mat woven with grass, அறைவாய்ச் சகடம் – wagon that cuts into the path, wagon front made with cut grass, வேழம் காவலர் குரம்பை ஏய்ப்ப – like the huts that guards who protect from elephants have built (on tall platforms), கோழி சேக்கும் கூடுடைப் புதவின் – with baskets with hens residing near the entrance, முளை எயிற்று – with tusks that are like sprouts (of bamboo), இரும்பிடி – dark/big female elephant, முழந்தாள் ஏய்க்கும் – like the legs (முழந்தாள் = முழங்கால் முட்டுக்கும் கணுக்காலுக்கும் இடையிலுள்ள உறுப்பு, part of the leg between the knee and the ankle), துளை – holes, அரைச் சீறுரல் – a small drum, தூங்கத் தூக்கி – moving and lifting, நாடக மகளிர் ஆடுகளத்து – in the dancing hall of drama actresses, எடுத்த – carrying, விசி வீங்கு – tied with strings, இன் இயம் கடுப்ப – like the sweet instruments/drums (கடுப்ப – உவம உருபு), கயிறு பிணித்து – tied with ropes, காடி வைத்த கலனுடை மூக்கின் – on the wooden part of the cart where the yoke is attached that bears the vessels with pickles, மகவுடை மகடூஉ – lady holding a child (மகடூஉ- இன்னிசை அளபெடை), பகடு – oxen, புறம் துரப்ப – hit on the back, கோட்டு இணர் வேம்பின் – neem trees with clusters of flowers on their branches, ஏட்டு இலை மிடைந்த – woven with the fine leaves, படலைக் கண்ணி – leaf garlands, பருஏர் எறுழ்த் திணிதோள் – thick and strong shoulders, முடலை யாக்கை – tight bodies, முழு வலி மாக்கள் – men with great strength, சிறு துளை – small holes, கொடு நுகம் – curved yoke, நெறிபட நிரைத்த – tied straight in a proper manner, பெருங் கயிற்று – with large ropes, ஒழுகை மருங்கில் – near the cart, காப்ப – protected, சில்பத உணவின் – of salt which is food, கொள்ளை சாற்றி – calling out prices, பல் எருத்து – with many oxen, உமணர் – salt merchants, பதி போகு – going to towns, நெடு நெறி – long path
வம்பலர் கழுதைச் சாத்தொடு செல்லும் காட்டுவழி
எல்லிடைக் கழியுநர்க்கு ஏமம் ஆக,
மலையவும் கடலவும் மாண்பயம் தரூஉம்,
அரும்பொருள் அருத்தும் திருந்து தொடை நோன் தாள்
அடிபுதை அரணம் எய்தி படம் புக்குப்
பொரு கணை தொலைச்சிய புண்தீர் மார்பின், 70
விரவு வரிக் கச்சின் வெண்கை ஒள் வாள்,
வரை ஊர் பாம்பின் பூண்டு புடை தூங்கச்
சுரிகை நுழைந்த சுற்று வீங்கு செறிவு உடைக்
கரு வில் ஓச்சிய கண் அகன் எறுழ்த்தோள்,
கடம்பு அமர் நெடுவேள் அன்ன மீளி, 75
உடம்பிடித் தடக்கை ஓடா வம்பலர்,
தடவு நிலைப் பலவின் முழு முதற் கொண்ட
சிறு சுளைப் பெரும்பழம் கடுப்ப, மிரியல்
புணர்ப்பொறை தாங்கிய வடு ஆழ் நோன் புறத்து
அணர்ச்செவிக் கழுதைச் சாத்தொடு வழங்கும் 80
உல்குடைப் பெருவழிக் கவலை காக்கும்
வில்லுடை வைப்பின் வியன் காட்டு இயவின்; (66-82)
The Forest Path on which Merchants Travel with their Donkeys
As a protection to those who travel during the
day, there are merchants who trade with rare
things that are from the mountains and oceans.
They are men of firm mind who wear body shirts
and sandals that cover their feet. They have scars
on their chests, caused by taking arrows from foes.
Adept in archery, they hang bright swords with
white hilts, on the striped cloth tied around their
chests, which resemble snakes crawling on
mountains.
They have daggers on their tight clothing. Their
arms that held black bows are strong. Their
strength is like that of Murukan in kadampam
trees. They have large hands carrying spears and
they don’t back off.
They travel on wide toll roads with their donkeys
with lifted ears and backs with deep scars,
that carry loads of pepper sacks, well balanced,
resembling jackfruits with small segments
that grow on the low, thick trunks of curved trees.
The forked forest paths used by merchants are
protected by those with bows.
Meanings: எல்லிடைக் கழியுநர்க்கு – for those who pass during the day, ஏமம் ஆக – as protection, மலையவும் கடலவும் – from the mountains and oceans, மாண் பயம் தரூஉம் – yields with esteem (தரூஉம் – இன்னிசை அளபெடை), அரும் பொருள் – rare things, அருத்தும் – share with desire, திருந்து தொடை – perfectly started work, நோன் தாள் – unshakeable effort, அடி புதை அரணம் எய்தி – wearing slippers that hide the feet, படம் புக்கு – wearing a body shirt, பொரு கணை தொலைச்சிய – shot with arrows in fights and did not get killed, புண் தீர் மார்பின் – with chests with sores healed, விரவு வரிக் கச்சின் – on the striped cloth wrapped around their bodies, வெண்கை – white handles, ஒள் வாள் – bright sword, வரை ஊர் பாம்பின் – like a snake crawling on a mountain, பூண்டு புடை தூங்க – hung on one side, சுரிகை நுழைந்த – sword placed, சுற்று வீங்கு செறிவு உடை – tightly worn clothes surrounding the body, கரு வில் – black bow, ஓச்சிய கண் அகன் எறுழ்த்தோள் – strong wide shoulders that shot them, கடம்பு அமர் நெடுவேள் அன்ன மீளி – strength like that of Murukan who is in a Kadampam tree, Neolamarckia cadamba, உடம்பிடி – spears, தடக்கை – large hands, ஓடா வம்பலர் – travelers/strangers who don’t run away, தடவு நிலைப் பலவின் – of jackfruit trees with curved trunks, of jackfruit trees with large trunks, Artocarpus heterophyllus, முழு முதற் கொண்ட – that are low on the thick trunks, சிறு சுளைப் பெரும்பழம் – large fruits with small segments, கடுப்ப – like (உவம உருபு), மிரியல் – black pepper, புணர்ப்பொறை தாங்கிய – carrying the weight together, வடு ஆழ் நோன் புறத்து – with strong back with deep scars, அணர்ச் செவிக் கழுதைச் சாத்தொடு – with merchants with donkeys with lifted ears, வழங்கும் – go, உல்குடைப் பெருவழி – huge path with toll roads, கவலை காக்கும் – protects the forked paths, வில்லுடை வைப்பின் – in towns/places bow warriors with bows, வியன் காட்டு இயவின் – in the vast forest paths