திருமுருகாற்றுப்படை – Thirumurukātruppadai
Translation by Vaidehi Herbert
Copyright © All Rights Reserved
பாடியவர் – மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர்
பாடப்பட்டவன் – முருகப்பெருமான்
திணை – பாடாண்
துறை – ஆற்றுப்படை
பாவகை – ஆசிரியப்பா
மொத்த அடிகள் – 317
தமிழ் உரை நூல்கள்
பத்துப்பாட்டு (2 பகுதிகள்) – பொ. வே. சோமசுந்தரனார் – சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.
நச்சினார்க்கினியர் உரை – உ. வே. உ. வே. சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை.
This song has 317 lines in the Āsiriyappā/Akaval meter, and was written by the poet Nakkeerar for Murukan. The six holy Murukan sites of Thirupparankundram, Thirucheer Alaivāy, Thiruvāvinankudi, Thiruvērakam, Kundruthoru ādal and Palamuthir Chōlai are described. Unlike the other ātruppadai songs which guide artists to donors, this song guides seekers to Murukan. It has been included in the Eleventh Thirumurai of the Saivite Canon and it is recited by many Tamils as part of their daily worship.
1. திருப்பரங்குன்றம்
குமரவேளின் பெருமை
தெய்வயானையின் கணவன்
உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு
பலர் புகழ் ஞாயிறு கடல் கண்டாஅங்கு
ஓவற இமைக்கும் சேண் விளங்கு அவிர் ஒளி
உறுநர்த் தாங்கிய மதன் உடை நோன் தாள்
செறுநர்த் தேய்த்த செல்உறழ் தடக்கை
மறு இல் கற்பின் வாணுதற் கணவன் (1 – 6)
1. Thirupparankundram
Splendor of Murukan
Husband to Theivayānai
He shines splendidly with a glow at a distance,
like the sun that rises with strength from the ocean
on the right side, glittering without a break,
causing those in the world to be happy,
the god with powerful, strong feet, large, mighty
hands, who ruined his enemies and protects those
who suffer, husband to a woman with bright
forehead and faultless chastity.
Notes: வலன் ஏர்பு – அகநானூறு 43, 84, 188, 278, 298, 328, நற்றிணை 37, 264, 328, குறுந்தொகை 237, ஐங்குறுநூறு 469, பதிற்றுப்பத்து 24, 31, நெடுநல்வாடை 1, பட்டினப்பாலை 67, முல்லைப்பாட்டு 4, திருமுருகாற்றுப்படை 1.
Meanings: உலகம் உவப்ப – for those in the world to be happy, வலன் ஏர்பு திரிதரு – rising on the right side and moving, rising with strength and moving, பலர் புகழ் ஞாயிறு கடல் கண்டாஅங்கு – like seeing the sun that many praise that rises from the ocean, ஓவற இமைக்கும் – glittering without a break, சேண் விளங்கு – shining afar, greatly splendid, அவிர் ஒளி – bright light, உறுநர்த் தாங்கிய – protecting those who are suffering, மதன் உடை நோன் தாள் – powerful strong feet, செறுநர்த் தேய்த்த – ruined enemies, செல்உறழ் – thunder-like, தடக்கை – large hands, மறு இல் கற்பின் வாணுதற் கணவன் – husband of a woman with faultless chastity/virtue and a bright forehead
கடப்ப மாலை புரளும் மார்பினன்
கார்கோள் முகந்த கமஞ்சூல் மாமழை
வாள் போழ் விசும்பில் வள் உறை சிதறி
தலைப்பெயல் தலைஇய தண் நறுங்கானத்து
இருள்படப் பொதுளிய பராரை மராஅத்து . . . .10
உருள் பூந்தண் தார் புரளும் மார்பினன் (7 – 11)
Kadampam Garland on his Chest
His chest is adorned with a cool garland
woven with round kadampam flowers
resembling the wheels of chariots, that bloom
on thriving, thick-trunked, densely growing
trees, causing darkness in the cool, fragrant
forest where the heavy, first rain fell from dark,
full rainclouds that had absorbed water, from
the from the sky where darkness is dispelled by
the sun and the moon.
Notes: கமம் – நிறைவு. கமம் நிறைந்தியலும் (தொல்காப்பியம். உரியியல் 57).
Meanings: கார்கோள் முகந்த – clouds absorbed from the ocean, கமஞ்சூல் மா மழை – full dark clouds, pregnant dark clouds, வாள் போழ் விசும்பில் – in the sky where darkness is split (by the sun and moon), வள் உறை சிதறி – scattered down heavy drops of rain, தலைப்பெயல் தலைஇய தண் நறுங்கானத்து – in the cool fragrant forest where the first rains fall, இருள் பட – causing darkness, பொதுளிய – thriving, பராரை மராஅத்து – of the kadampam tree with thick trunk, உருள் – chariot wheel, rounded, பூந்தண் தார் புரளும் மார்பினன் – he is one with a cool garland moving on his chest
சூரர மகளிர்
மால் வரை நிவந்த சேண் உயர் வெற்பில்
கிண்கிணி கவைஇய ஒண் செஞ் சீறடி
கணைக்கால் வாங்கிய நுசுப்பின் பணைத்தோள்
கோபத்து அன்ன தோயாப் பூந்துகில்
பல்காசு நிரைத்த சில்காழ் அல்குல்
கை புனைந்து இயற்றாக் கவின்பெறு வனப்பின்
நாவலொடு பெயரிய பொலம்புனை அவிர் இழை
சேண் இகந்து விளங்கும் செயிர் தீர் மேனி
துணையோர் ஆய்ந்த இணைஈர் ஓதிச் . . . .20
செங்கால் வெட்சிச் சீறிதழ் இடைஇடுபு
பைந்தாட் குவளைத் தூவிதழ் கிள்ளி
தெய்வ உத்தியொடு வலம்புரி வயின்வைத்து
திலகம் தைஇய தேம்கமழ் திருநுதல்
மகரப் பகுவாய் தாழ மண்ணுறுத்து
துவர முடித்த துகள் அறும் முச்சிப்
பெருந்தண் சண்பகம் செரீஇ கருந்தகட்டு
உள் ஐப்பூ மருதின் ஒள் இணர் அட்டி
கிளைக் கவின்று எழுதரு கீழ் நீர்ச் செவ்வரும்பு
இணைப்புறு பிணையல் வளைஇ துணைத்தக . . . .30
வண் காது நிறைந்த பிண்டி ஒண் தளிர்
நுண் பூண் ஆகம் திளைப்ப திண் காழ்
நறுங்குறடு உரிஞ்சிய பூங்கேழ்த் தேய்வை
தேம் கமழ் மருது இணர் கடுப்ப கோங்கின்
குவி முகிழ் இளமுலைக் கொட்டி விரிமலர்
வேங்கை நுண் தாது அப்பி காண்வர
வெள்ளில் குறுமுறி கிள்ளுபு தெறியா
கோழி ஓங்கிய வென்று அடு விறற்கொடி
வாழிய பெரி என்று ஏத்தி பலர் உடன்
சீர்திகழ் சிலம்பு அகம் சிலம்பப் பாடி ….40
சூரர மகளிர் ஆடும் சோலை (12 – 41)
Nature of Celestial Women
Celestial women sing loudly, their music
echoing in the mountains, and dance in a grove
on the lofty mountain with tall bamboo. They wear
anklets on their bright, red, small feet. They have
rounded legs, curved waists, bamboo-like arms, clothing
that is in natural color, lovely like pattupoochis, and gold
ornaments with few strands on their waists, their great
beauty not created by hand. They wear bright jewels that
shine from afar, made with gold from the place with the
name nāval.
Their bodies are faultless and their hair, admired by
their friends, oiled, is adorned with vetchi flowers with
small stems, amidst which are placed petals of kuvalai
flowers with green stems. Jewels called seedevi are
placed on their right-whorled hair knots that look like
conch shells. Ornaments shaped like the open mouths of
sharks adorn their foreheads with pottu. Huge blossoms
of chenpakam are placed on their faultless hair knots.
They also adorn their hair with honey-flowing marutham
flowers with soft insides and dark petals, and strands
that are woven with red buds which have grown under
water. Tender, bright pindi sprouts hang from their
ears, touching their breasts decorated with ornaments.
Their breasts that resemble pointed kōngam buds
have beautiful sandal paste smeared on them like
smearing the fragrant flower paste of marutham flowers,
along with vēngai flower pollen. They pluck and disperse
tender leaves of woodapple trees and sing praising
his lovely, victorious rooster banner, their songs echoing
in the great mountains.
Notes: கோங்க முகைப்போன்ற முலை: அகநானூறு 99 – மாண் இழை மகளிர் பூணுடை முலையின் முகை பிணி அவிழ்ந்த கோங்கமொடு, அகநானூறு 240 – கோங்கு முகைத்தன்ன குவி முலை ஆகத்து, குறுந்தொகை 254 – முலை ஏர் மென் முகை அவிழ்ந்த கோங்கின் தலை அலர், கலித்தொகை 56 – முதிர் கோங்கின் முகை என முகம் செய்த குரும்பை எனப் பெயல் துளி முகிழ் எனப் பெருத்த நின் இள முலை, கலித்தொகை 117 – கோங்கின் முதிரா இள முகை ஒப்ப, புறநானூறு 336 – கோங்கின் முகை வனப்பு ஏந்திய முற்றா இள முலை, திருமுருகாற்றுப்படை 34 – தேம் கமழ் மருது இணர் கடுப்ப கோங்கின் குவி முகிழ் இளமுலை, சிறுபாணாற்றுப்படை 25-26 – யாணர்க் கோங்கின் அவிர் முகை எள்ளிப் பூண் அகத்து ஒடுங்கிய வெம்முலை. நாவலொடு பெயரிய பொலம்புனை (18) – போ. வே சோமசுந்தரனார் உரை – சம்பு என்பது நாவல் மரத்தின் பெயர் (வடமொழி). நாவற் கனிச்சாறு பாயும் சம்பு நதியின்கண் தோன்றும் பொன் என்னும் கொள்கைப் பற்றி நால்வகைப் பொன்னுள் வைத்து ஒன்றனைச் சம்பூநதம் என்ப. பொலம் (18) – பொன். பொன்னென் கிளவி ஈறு கெட முறையின் முன்னர்த் தோன்றும் லகார மகாரம் செய்யுள் மருங்கின் தொடரியலான (தொல்காப்பியம், எழுத்ததிகாரம் 355). மண்ணுறுத்து (25) – போ. வே சோமசுந்தரனார் உரை – தங்கச் செய்து, நச்சினார்க்கினியர் உரை – ‘ஆவுதி மண்ணி’ என்றாற்போல கொள்க. இனி ‘கழுவி’ என்றுமாம். நறுங்குறடு (33) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – கட்டை. ஈண்டுக் குறிப்பாற் சந்தனக் கட்டையை உணர்த்திற்று.
Meanings: மால் வரை – tall bamboo (வரை என்பது ஆகுபெயராய் மூங்கிலைக் குறிக்கும் – பொ. வே. சோமசுந்தரனார் உரை), நிவந்த சேண் உயர் வெற்பில் – in the distant tall mountain, கிண்கிணி கவைஇய – surrounded by anklets (கவைஇய – சொல்லிசை அளபெடை), ஒண் செஞ் சீறடி – bright red small feet, கணைக்கால் – thick legs, rounded legs, வாங்கிய நுசுப்பின் – with curved waists, பணைத்தோள் – bamboo arms, கோபத்து அன்ன – like pattupoochi, trombidium grandissimum (கோபத்து – கோபம், அத்து சாரியை), தோயாப் பூந்துகில் – delicate/beautiful cloth that is not dyed, delicate/beautiful cloth of natural color, பல் காசு நிரைத்த – with rows of gold coins, சில்காழ் அல்குல் – few strands, waist/loins, கை புனைந்து இயற்றாக் கவின் பெறு வனப்பின் – with great beauty that was not created by hand, நாவலொடு பெயரிய பொலம் புனை – made with gold from the place with the name naval (see notes above), அவிர் இழை – bright jewels, சேண் இகந்து விளங்கும் – shines from afar, செயிர் தீர் மேனி – faultless bodies, துணையோர் ஆய்ந்த – analyzed by friends, admired by friends, இணை – alike ones, ஈர் ஓதி – wet hair, oiled hair, செங்கால் வெட்சி – vetchi flowers with small stems, சீறிதழ் இடை இடுபு – placed tiny petals in between (இடுபு – இட்டு, செய்பு என்னெச்சம்), பைந்தாட் குவளை – blue waterlilies with green stems, தூவிதழ் – pure petals, கிள்ளி – tore off, தெய்வ உத்தியொடு – ornament called Seedevi, வலம்புரி வயின் வைத்து – placed on the hair knot looking like right-whorled conch shells, திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல் – fragrant beautiful foreheads with pottu (தைஇய – சொல்லிசை அளபெடை, தேம் – தேன் என்றதன் திரிபு), மகரப் பகுவாய் தாழ மண்ணுறுத்து – placed/washed ornaments that are in the shape of open mouths of sharks, துவர முடித்த – tied totally, துகள் அறும் முச்சி – faultless hair knots, பெருந்தண் சண்பகம் செரீஇ – placed huge cool Chenbakam flowers (செரீஇ – சொல்லிசை அளபெடை), கருந்தகட்டு – black petals, உள் ஐப்பூ மருதின் – of marutham tree flowers with delicate insides, ஒள் இணர் – bright clusters of flowers (இணர் – கொத்து, ஆகுபெயர் மலருக்கு), அட்டி – placed, கிளைக் கவின்று எழுதரு – rising beautifully from the branches, கீழ் நீர்ச் செவ்வரும்பு – red buds under the water (கீழ் நீர்= நீர்க்கீழ்), இணைப்புறு பிணையல் – woven flower garlands, வளைஇ – around, துணைத்தக – together, வண் காது நிறைந்த – big ears full, பிண்டி ஒண் தளிர் – asoka tree’s bright sprouts, Saraca indica, நுண் பூண் – fine jewels, ஆகம் திளைப்ப – touching the chest, திண் காழ் – hard-wood sandal, நறுங்குறடு – fragrant wood, உரிஞ்சிய – peeled, பூங்கேழ் – lovely color, lovely and bright, தேய்வை – rubbed and reduced, தேம் கமழ் மருது இணர் கடுப்ப – like the honey-fragrant clusters of marutham tree flowers, Terminalia arjuna (தேம் தேன் என்றதன் திரிபு, கடுப்ப – உவம உருபு, இணர் – கொத்து, ஆகுபெயர் மலருக்கு), கோங்கின் குவி முகிழ் – like the pointed buds of kōngam, இள முலைக் கொட்டி – smeared on their breasts, விரி மலர் வேங்கை நுண் தாது அப்பி – rubbed with fine pollen of open vēngai flowers, காண்வர – beautiful to look, வெள்ளில் – woodapple trees, குறுமுறி – tender leaves, கிள்ளுபு தெறியா- plucked and threw, கோழி – rooster, ****, ஓங்கிய – tall, flourishing, வென்று – victorious, அடு – attacking, விறற் கொடி – victorious flag, beautiful flag, வாழிய பெரி என்று ஏத்தி – praise that you live for long, பலர் உடன் – with many, சீர் திகழ் சிலம்பு அகம் சிலம்பப் பாடி – sing loudly in the great mountains causing echoes, சூரர மகளிர் ஆடும் சோலை – grove where goddesses dance, where celestial maidens dance