New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மதுரை தேனூரில் "போகுல்குன்றக் கோதை' தங்கக்கட்டிகள்


Guru

Status: Offline
Posts: 24778
Date:
மதுரை தேனூரில் "போகுல்குன்றக் கோதை' தங்கக்கட்டிகள்
Permalink  
 


தங்கமகள் கோதை - வைகை ஆற்றங்கரையில் கிடைத்த தங்க கட்டிகள்;

கீழடியை போன்றே வைகை ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் ஊர், தேனூர்.

முதலாம் இராஜராஜ சோழன் கல்வெட்டும், சடாவர்மன் சுந்தரபாண்டியன் காலத்து
கல்வெட்டும் சங்க இலக்கியமும் இந்த ஊரின் சிறப்பைப் பதிவு செய்கின்றன என
இலக்கிய, தொல்லியல் அறிஞர்கள் கூறுகின்றனர். ஆனால், அறிஞர்கள் யாரும்
ஆய்வுநடத்தாமல், தானாகவே வெளிவந்த சுயம்புவான கண்டுபிடிப்பு ஒன்று உண்டு.

தேனூரில் 2009-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பெய்த ஒரு கனமழையில்,
கருவேலமரம் ஒன்று வேரோடு சாய்ந்தது. மரத்தின் தூருக்கு அடியில் இருந்து
ஒரு மண்முட்டி மேலெழுந்துவர, அதனை எடுத்து சிறுவர்கள் விளையாடத்
தொடங்கினார்கள். உள்ளே விரல் அளவு கனம் கொண்ட கட்டிகள் இருப்பது
தெரிந்ததும் விஷயம் பரவியது. அவை அத்தனையும் தங்கக்கட்டிகள். சுமார்
முக்கால் கிலோ எடையுள்ள தங்கக்கட்டிகள்.

புதையல், அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அரசு அதிகாரி முதல்,
பொதுமக்கள் வரை எல்லோரும் பெரும் புதையல் என அந்தத் தங்கக் கட்டியை
நினைத்தனர். ஆனால் விலைமதிப்பில்லா புதையல் அந்தத் தங்கக் கட்டியில்
பொறிக்கப்பட்டிருந்த எழுத்துக்கள்தான்(படத்தில் பார்க்க).

ஏழு தங்கக்கட்டிகளிலும் ''தமிழி'' எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன.
ஏழிழும் ஒரு பெண்ணின் பெயரே இடம்பெற்றிருந்தது. அந்தப் பெயர் 'போகுல் குன்றத்துக் கோதை’.
அந்த எழுத்துக்கள் எழுதப்பட்ட விதத்தை வைத்து, இது கி.மு முதல்
நூற்றாண்டைச் சேர்ந்தது எனத் தொல்பொருள் துறை மதிப்பிட்டுள்ளது.
(போகுல் குன்றத்துக் கோதை இதன் பொருள் போகுல் என்ற குன்றுப் பகுதியைச் சார்ந்த கோதை என்ற பெண்.)

இதில் அதிசயம் என்ன தெரியுமா? எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட தங்கக்கட்டி,
இந்தியாவில் முதன்முதலில் இங்குதான் கிடைத்துள்ளது.

2,100 ஆண்டுகளுக்கு முன் தங்கத்தால் செய்யப்பட்ட தெய்வச்சிலைகள்கூட
இதுவரை கிடைக்கவில்லை. எந்தத் தெய்வத்தின் பெயரும் தங்கத்தில் எழுதி,
இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

உருவ வழிபாடு தொடங்காத காலம் அது. எனவே சிலைகளுக்கோ, அல்லது அதுசார்ந்த
பெயர்களுக்கோ வாய்ப்பு இல்லை. ஆனால், அன்பும் காதலும் அப்படி அல்ல.
மனிதனின் ஆதி அணுத் துகளில் இருந்து தொடங்கியது. காலமானிகளால்
அளவிட்டுவிட முடியாத உணர்வுகளின் பரிணாமம். அதைப் போய் தனியாகக்
கண்டுபிடிக்கத் தேவை இல்லை, ஏனென்றால், நாமே அதன் கண்டுபிடிப்புதான்.
அதனால்தான் தெய்வத்தின் பெயரோ, அல்லது மன்னனின் பெயரோகூட தங்கத்தில்
எழுதப்படாத காலத்தில், ஆன்மிகமும் அதிகாரமும் எட்ட முடியாத எல்லையை,
அன்பினால் தோய்ந்த மனிதச் செயலால் எட்டித்தொட முடிந்துள்ளது, ஒரு
மனுஷிக்கு அவளை நேசித்த மற்றொருவரால் தரப்பட்ட, அல்லது அவளது பெயரை அவளே
விரும்பி எழுதிவைத்துக்கொண்ட ஒரு செயலாகக்கூட இது இருக்கலாம். ஆனால்,
இந்த எழுத்துக்குப் பின்னால் இருந்த நேசம், இத்தனை ஆயிரம்
வருடங்களுக்குப் பின்பும் நம் இதயத்தை ஏதோ செய்கிறது.தமிழகத்தின் முதல்
தங்கமகள் மட்டும் அல்ல, இந்தியாவின் முதல் தங்கமகளும் கோதைதான்.
மண்ணுக்குள் இருந்து சுயமாக உதித்தெழுந்தவர்களைப் பற்றி புராணங்களில்
படித்திருக்கிறோம். இதுவும் ஒரு சுயமான உதித்தெழுதல் தான்; ஒரு வகையில்
உயிர்த்தெழுதலும்கூட. எழுந்தவள் எழுப்பும் கேள்விகளும் எண்ணற்றவை.

2,100 ஆண்டுகளுக்கு முன்பு தங்கத்தைக் கண்டறிய பயன்படுத்திய
தொழில்நுட்பம் என்ன? அதை அணிகலனாக மாற்ற என்னென்ன வடிவத்தைக்
கையாண்டார்கள். கலைநுட்பமும் ரசவாதமும் கலந்து உருக்கொள்ளும் படைப்பின்
ரகசியத்தை எவ்வாறு கண்டறிந்தார்கள்? எழுத்தை எங்கும் நிறைந்த ஒன்றாக
எப்படி மாற்றினர்? கேள்விகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.

பாதுகாப்பு வசதிகள் பெரிதாக இல்லாத காலம் அது. அந்தக் காலத்தில்
வெளியூரில் இருந்து நகரத்துக்குள் வருகிறவர்களுக்கு, தங்களின் செல்வத்தை
நகருக்கு வெளியே அடையாளத்துடன் புதைத்துவைத்துவிட்டு உள்ளே வரும் பழக்கம்
இருந்துள்ளது. அத்தகைய பழக்கப்படி இந்தப் புதையல் வைக்கப்பட்டிருக்கலாம்.
அப்படியென்றால், நகரத்தைவிட்டு வெளியே கிராமங்களிலோ அல்லது
சிறுநகரங்களிலோ இருந்தவர்களிடமே, இவ்வளவு தங்கம் புழங்குகிற அளவுக்கு
பொருளாதாரச் செழிப்பு இருந்துள்ளது என்பதை அறிய முடிகிறது.
கிராமப்புறத்திலே இவ்வளவு வளமை இருந்திருக்கும்போது, தலைநகரமான மதுரையின்
வளமை எப்படி இருந்திருக்கும்?

முதலில் ஞாபகம் வருவது அழகர்கோயில் கல்வெட்டு. அங்கே கி.மு மூன்றாம்
நூற்றாண்டில் சமணப் பள்ளி அமைக்க, மதுரையைச் சேர்ந்த பொற்கொல்லன் ஆதன்,
தானம் அளித்துள்ளான் எனச் செய்தி உள்ளது. இது மதுரை பொற்கொல்லர்களின்
உயர்வைக் காட்டுகிறது. சிலப்பதிகாரத்தின் கடைசிப் பகுதியில் 1,000
பொற்கொல்லர்களின் தலைகளைக் கொய்து, கண்ணகியைச் சாந்தப்படுத்தினான்
பாண்டிய வேந்தன் எனச் சொல்லப்படுகிறது. இது ஒரு படைப்பாளியின் கற்பனையாக
இருக்கலாம். ஆனால், பெரும் எண்ணிக்கையில் பொற்கொல்லர்கள் இங்கு
வாழ்ந்திருக்கிறார்கள் என்பதன் சாட்சி இது.

தூத்துக்குடி கிறிசி மஹாலட்சுமி கல்லூரி மாணவர்கள் நடத்திய கள ஆய்வில்,
முக்காணி என்ற கிராமத்தில் இருக்கும் பொற்கொல்லர்கள் தங்களின்
குலக்கதையைச் சொல்லும்போது, 'மதுரையில் பெரும் எண்ணிக்கையில்
பொற்கொல்லர்கள் கொலைசெய்யப் பட்டபோது நாங்கள் உயிர் தப்பி இங்குவந்து
சேர்ந்தவர்கள்’ எனக் கூறியதாக கூறப்படுகிறது

இவ்வளவு பெரும் எண்ணிக்கையில் பொற்கொல்லர்கள் வாழ்வதற்கான தேவை இருந்த
நகரமாக மதுரை இருந்துள்ளது. அப்படியென்றால், அவ்வளவு வேலைப்பாடுகள்
செய்யத் தேவையான பொற்குவியல் இருந்துள்ளது என்பதை, யூகிப்பது கடினம்
அல்ல.

ஒரு கல்வெட்டு ஆதாரம், ஓர் இலக்கிய ஆதாரம், ஒரு வாய்மொழி வரலாற்று
ஆதாரம்... என ஒவ்வொன்றாகச் சேர்த்துக்கொண்டிருந்தால், கை நிறையத்
தங்கக்கட்டிகளோடு நம் முன்னால் வந்து நிற்கிறாள் கோதை. அவளின் கைகளில்
இருக்கும் மண் கலயத்திலேயே இவ்வளவு தங்கம் என்றால், மாமதுரைக்குள்
எவ்வளவோ?
சங்க இலக்கிய அகநானூற்றுப் பாடல் ஒன்றில் பொருள் தேடி வட திசை சென்ற
தலைவன் வரத் தாமதமாவதால் கோபமான தலைவி, 'பாடலிபுரத்தில் எடுத்து சோணை
நதிக்கரையில் நந்த வம்சத்தினர் புதைத்துவைத்த புதையல் நம்மைவிட அதிக
செல்வத்தைக்கொண்டது என நினைத்துத் தேடிக்கொண்டிருக்கிறானோ?’ எனக்
கேட்கிறாள். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, சோணை நதிக்கரை நந்த
வம்சத்தினரின் புதையலுக்கு இலக்கியம் சான்று கூறுகிறது. வைகை நதிக்கரை
கோதை வம்சத்தின் புதையலுக்கு நாமே சான்றாக இருக்கிறோம்.

சாம்ராஜ்ஜியங்களை ஆண்ட பேரரசர்களின் பெயர்கள்கூட கல் எழுத்துக்குள்
பதுங்கியிருக்கும் நிலையில், சாமானியப் பெண்ணின் பெயர் ஒன்று, பொன்
எழுத்துகளால் பொறிக்கப்பட்டு இன்றும் மின்னுகிறது. அந்த மின்னும் ஒளியின்
வழியாக சிரித்துக்கொண்டே கோதை சொல்லும் செய்தி இதுதான்.

வைகை நதிக்கரை சங்கத் தமிழை மட்டும் வளர்க்கவில்லை, தங்கத் தமிழையும்
அதுதான் வளர்த்தது!

#செம்மொழிவாழ்க!

(நன்றி: தமிழக தகவல் திரட்டு பக்கம்)
=======================°===°===
இது குறித்த தினமலர் செய்தி 09.10.2013
(https://m.dinamalar.com/detail.php?id=822775)

மதுரை மாவட்டம், தேனூரில், 2009ல், செல்வம் என்பவரின் வீடு அருகில் இருந்த மரம், காற்றில் முறிந்து விழுந்தது. அதை அகற்றுகையில், மண் கலயத்திற்குள் தங்கப்புதையல் கண்டெடுக்கப்பட்டது. கலயத்திற்குள், 661 கிராம் எடையுள்ள, ஏழு தங்கக்கட்டிகள், 21 உத்தி ராட்ச மணிகள், மணிகளை இணைக்கும் 32 பொட்டுகள், 5.3 கிராம் எடையுள்ள டாலர் இருந்தன. அவை, மதுரை கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. கலெக்டர் அறிவுறுத்தலின் படி, தங்கக் கட்டிகளை ஆய்வு செய்த, அரசு மியூசிய காப்பாட்சியர் கூறுகையில், 'ஏழு தங்கக் கட்டிகளிலும், தமிழ் பிராமி எழுத்து வடிவில், 'போகுல் குன்றக் கோதை' என, எழுதப்பட்டிருந்தது. இவை, 2,300 ஆண்டுகளுக்கு முந்தைய எழுத்து. தற்போது, போகுல் என்ற வார்த்தை வழக்கொழிந்திருக்கலாம். குன்றம் என்பது, மலையைக் குறிக்கும்' என்றார்

நன்றி: திணையகம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
RE: மதுரை தேனூரில் "போகுல்குன்றக் கோதை' தங்கக்கட்டிகள்
Permalink  
 


தேனூர் புதையல் தங்கக்கட்டிகள் கொற்கைப் பாண்டியர்களுடையதா?
 
Tamil_News_large_868756.jpg
மதுரை மாவட்டம், தேனூரில், 2009 ஆம் ஆண்டு, செல்வம் என்பவரின் வீட்டருகில் இருந்த முதிர்ந்த மரம் ஒன்று, காற்றில் முறிந்து விழுந்தது. அந்த மரத்தை அகற்றுகையில், வேருக்கு அடியில், மண் கலயத்திற்குள், தங்கப் புதையல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அந்த மண் கலயத்தினுள், 661 கிராம் எடை கொண்ட ஏழு தங்கக் கட்டிகள், 21 உத்திராட்ச மணிகள், மணிகளை இணைக்கும் 32 பொட்டுகள், 5.3 கிராம் எடையுள்ள டாலரும் இருந்தன. அவை, மதுரை கருவூலத்தில், பாதுகாப்பாக வைக்கப்பட்டன. அந்தத் தங்கக்கட்டிகளில் எழுத்துக்கள் இருப்பது தெரிந்தும், யாரும் படிக்க அனுமதிக்கப்படவில்லை. கலெக்டர் எல்.சுப்ரமணியன் அவர்களின் அறிவுறுத்தலின்படி, தங்கக் கட்டிகளில் உள்ள எழுத்துக்கள், மதுரை அரசு மியூசிய காப்பாட்சியர் பெரியசாமி அவர்களால், 2013 ஆம் ஆண்டு படிக்கப்பட்டு, இந்த ஆண்டு அக்டோபர் மாதம், செய்தியாக வெளியானது. தங்கக் கட்டிகளில், தமிழ்-பிராமி எழுத்து முறையில், "போகுல்குன்றக் கோதை' என்று எழுதப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளார். அந்தத் தங்கக் கட்டிகள், வரலாற்று முக்கியம் வாய்ந்தவை.
அந்த ஏழு கட்டிகளின் புகைப்படங்களைப் பெற்று படிக்கும் வாய்ப்பு, எனக்குக் கிடைத்தது. அந்தத் தங்கக்கட்டிகள், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக புதையுண்டு இருந்ததால், அக்கட்டிகளின் மேல், அதிக அளவில் மாசு படிந்திருக்கலாம். புகைப் படங்களை எடுக்கும் முன், சரியான முறையில் சுத்தம் செய்தனரா என்று தெரியவில்லை. சரியான முறையில் சுத்தம் செய்து, மீண்டும் புகைப்படம் எடுத்தால், தவறில்லாமல் படிக்க வாய்ப்புண்டு. கிடைத்தப் புகைப்படங்களை வைத்துக்கொண்டு, பல நாட்கள் ஆய்வு செய்தேன். அந்த ஏழு கட்டிகளில், இரண்டு கட்டிகள் தான், ஆய்வுக்கு உதவியாக இருப்பதை உணர்ந்தேன். அதில், முதல் கட்டியின் புகைப்படத்தைக் கீழே கொடுத்துள்ளேன். இந்தக் கட்டியின் எடை, நீளம் மற்றும் அகலம் அறிய முடியவில்லை. இந்தக் கட்டியில் படிக்க முடிந்த எழுத்துக்களை மட்டும், கீழே உள்ள வரைபடத்தில் கொடுத்துள்ளேன். தெரியாத எழுத்துக்கள் உள்ள இடங்களில், சிறு வட்டக் குறியீடு போட்டுள்ளேன். கீழே கொடுத்துள்ள முறையில், முதல் கட்டியில் காணப்படும் "தமிழ்-பிராமி' எழுத்துக்களைப் படித்துள்ளேன். எழுத்து தெளிவில்லாத இடங்களில், 'ணி' வட்டமிட்டு காட்டியுள்ளேன்.
முதல் ஐந்து எழுத்துக்களை "அரசன்கு' என்று படித்துள்ளேன். "கு' எழுத்திற்கு பிறகு, அடைப்புக்குறி போட்டுள்ளேன். பல தெளிவில்லாத எழுத்துக்கள், படிக்க முடியாத நிலையில் உள்ளன. நடுவில் மீன் சின்னம் உள்ளது. மீன் சின்னத்திற்கு இடப்பக்கம், "மா' என்ற எழுத்தும், அதை அடுத்து தெளிவில்லா எழுத்தும், சின்னத்தின் வலப்பக்கத்தில், "ன்' என்ற எழுத்தும் உள்ளது. இதை, "மாறன்' என்று படிக்க வாய்ப்புண்டு.
"ன்' எழுத்திற்குப் பிறகு சில எழுத்துக்கள் தெரியவில்லை. அத்துடன் அடைப்புக்குறி போட்டு முடித்துள்ளேன். அடைப்புக்குறிக்கு பிறகு, இரண்டு எழுத்துக்கள் உள்ளன. அந்த எழுத்துக்களை, "கொற்' என்று படிக்க முடிகிறது.இரண்டாவது கட்டியில் இந்த, "கொற்' எழுத்துக்களின் தொடர்ச்சி இருக்கிறது. இரண்டாவது கட்டியின் புகைப்படத்தையும் கீழே கொடுத்துள்ளேன். இதன் எடை, நீளம், அகலம் அறிய முடியவில்லை. இந்தக் கட்டியின் வலப்பகுதியில், நான்கு எழுத்துக்கள், படிக்கும் நிலையில் உள்ளன. அந்தக் கட்டியின் வரைபடத்தையும், வலப்பகுதியில் உள்ள நான்கு எழுத்துக்களின் வரைபடத்தையும் கொடுத்துள்ளேன்.
கீழே கொடுத்துள்ள முறையில், இரண்டாவது கட்டியில் காணப்படும் தமிழ்-பிராமி எழுத்துக்களைப் படித்துள்ளேன். இரண்டாவது கட்டியில், "கொய் கோன்' என்று படிக்க முடிகிறது. இரண்டு கட்டிகளில் உள்ள தெளிவான எழுத்துக்களை வைத்துப் பார்க்கும்போது, தமிழ்-பிராமி எழுத்து முறையில், "அரசன்கு கொற்கொய்கோன்' என்று தெரிகிறது. இந்தச் சொற்றொடர், "கொற்கொய்யின் அரசன்' என்று பொருள்படும்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, "தாமிரபருணி' ஆறு, கடலில் கலக்கும் இடத்தில், கொற்கைத் துறைமுகம் இருந்தது. கொற்கையை தலைநகராகக் கொண்டு, பாண்டியர்கள் ஆட்சி செய்தனர். அவர்களுக்கும், மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த பாண்டியர்களுக்கும் என்ன உறவின்முறை என்று தெரியவில்லை. "பெரிப்ளஸ்' (கூடஞு கஞுணூடிணீடூதண் ணிஞூ tடஞு உணூtடணூச்ஞுச்ண குஞுச்) என்ற நூலில், சேர நாடு குறித்தும், பாண்டிய நாடு குறித்தும் பல செய்திகளைக் காண முடிகிறது. இந்நூல், கி.பி., 60 ஆம் ஆண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்த நூலின் ஆசிரியர் யார் என்று தெரியவில்லை.
குமரியைக் கடந்து கடல் வழியாகச் செல்லும்போது, கொற்கை (ஓணிடூடுடணிடி) இருப்பதாகவும், அந்த ஊர், பாண்டியர்கள் ஆட்சியின் கீழ் இருப்பதாகவும், அக்கொற்கைக் கடலில், குற்றம் செய்து தண்டிக்கப்பட்டவர்களைப் பயன்படுத்தி, முத்துக் குளிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
அங்கு விளைந்த முத்துக்கள், பாண்டிய அரசர்களின் கட்டுப்பாட்டில் இருந்திருக்க வேண்டும். கிரேக்க, ரோமானிய வணிகர்கள், அந்த முத்துக்களை வாங்க, தரமான தங்கக் கட்டிகளைக் கொடுத்திருக்கின்றனர் என்று தெரிகிறது. இந்தத் தங்கக்கட்டிகளில் எழுதப்பட்டச் சொற்களை வைத்து பார்க்கும்போது, இவை, கொற்கை மன்னருக்கு உரியது என்பது உறுதியாகிறது. தங்கக் கட்டியின் நடுவில் இருக்கும், "மீன்' சின்னம், பாண்டியர்களது சின்னம் என்பதும், அது ஆதாரமாகி இருப்பதும், இதில் தெளிவாகத் தெரிகிறது.

டாக்டர்.இரா.கிருட்டிணமூர்த்தி, தலைவர் - தென்னிந்திய நாணயவியல் சங்கம்.


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

'சேரமான் குட்டுவன் கோதை' என்ற மன்ன்னைப்பற்றி ஒரு புறநானூற்றுப் பாடலே இருக்கிறது.

(புறம்- 54). அம்மன்னனின் இயற்பெயரே 'கோதை'தான்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
மதுரை தேனூரில் "போகுல்குன்றக் கோதை' தங்கக்கட்டிகள்
Permalink  
 


Seshadri Sridharan
 
2015-08-05 21:49 GMT+05:30 Malarvizhi Mangay <malarm...@gmail.com>:
//சேஷாத்ரி அவர்களே "வில்லவன் மாக்கோதை " என்ற ஆண்பாற் பெயர் என் இலக்கிய ஓர்மைக்குள் வருகிறது./

ஆம் இது சேரரை குறிப்பது தான். ஆனால் கட்டுரையாளர் கோதை என்பதை பெண்ணாகக் கொண்டு கற்பனைக் காப்பியமே புனைந்து விட்டார். நேற்று தான் பொது நூலகத்தில் விகடனில் இக்கட்டுரையை படித்தேன். இதை google ல் தேடினேன் தொடுப்பு கிட்டவில்லை. இன்று முகநூலில் ஒரு அன்பர் தட்டச்சி இட்டிருந்தார் அவ்வளவு தான் வேலை எளிமை ஆனது என்று ஒத்தி ஓட்டினேன். 
 
இதில் இன்னொரு செய்தியும் கட்டுரையாளர் குறிப்பிடுகிறார். அது உருவ வழிப்பாடு தோன்றாத காலம் என்பது தான். உருவ வழி எப்படி தோன்ற முடியும்? அதற்கான கதைகூறு வேண்டாமா? கி.பி. 5 - 6 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட புராண கதைநாயர்களை அதற்கு முற்பட்ட காலத்தில் எவ்வாறு சிலையாக வடித்து வழிபட முடியும்? என்பதே கேள்வி. கூர்தல், தமிழர் மதம் என்ற பேச்செல்லாம் இந்த ஆகழாய்வால் அடிபட்டுப்போகின்றது.  
உருவ வழிபாடு தொடங்காத காலம் அது. எனவே சிலைகளுக்கோ, அல்லது அதுசார்ந்த பெயர்களுக்கோ வாய்ப்பு இல்லை. ஆனால், அன்பும் காதலும் அப்படி அல்ல. மனிதனின் ஆதி அணுத்துகளில் இருந்து தொடங்கியது. காலமானிகளால் அளவிட்டுவிட முடியாத உணர்வுகளின் பரிணாமம். அதைப் போய் தனியாகக் கண்டுபிக்கத் தேவை இல்லை, ஏனென்றால், நாமே அதன் கண்டுபிடிப்புதான். அதனால்தான் தெய்வத்தின் பெயரோ, அல்லது மன்னனின் பெயரோ கூட தங்கத்தில் எழுதப்படாத காலத்தில், ஆன்மிகமும் அதிகாரமும் எட்ட முடியாத எல்லையை, அன்பினால் தோய்ந்த மனிதச் செயலால் எட்டித்தொட முடிந்துள்ளது.
 
எருதன் 
- show quoted text -


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
RE: மதுரை தேனூரில் "போகுல்குன்றக் கோதை' தங்கக்கட்டிகள்
Permalink  
 


Seshadri Sridharan
 
கோதை என்றால் பெண் தானா? அது சேரர் பெயர் ஆகாதா?
 
 
Ancient Tamil Civilization's photo.
 
 வைகை நதி நாகரிகம் ! - 2
மதுரை மண்ணுக்குள்... ரகசியங்களின் ஆதிநிலம்!

மனித குலத்தின் நாகரிகங்கள் எல்லாம் நதிக்கரையின் ஈரமணலில்தான் தொடங்கின. வருடம் முழுவதும் தண்ணீர் ஓடும் ஜீவநதிக் கரையில்தான் பெரு நகரங்களும் நாகரீகமும் தழைத்தோங்கும் என்பது இல்லை.

ஜவநதி அல்லாத வரளும் நதிக்கரையிலும் மனித நாகரீகம் தழைத்தோங்கும் என்பதற்கான சான்றுதான் வைகை. தமிழ் நாகரீகத்தின் தொட்டிலாக வைகையே இருந்துள்ளது. வருடத்தில் நான்கு மாதங்களே நீர் ஓடும் வைகையின் கரையில், பல்லாயிரம் ஆண்டுகளாக மக்கள் கூட்டம் செழித்தோங்கி வளர்ந்துள்ளது.

மத்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் அகழாய்வுப் பிரிவு, வைகை நதிக்கரை நாகரிகத்தைப் பற்றி முழுமையான கள ஆய்வை நடத்த முடிவு செய்தது. அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழு, 2013 மற்றும் 2014-ஆம் ஆண்டுகளில் வைகையின் தொடக்க இடமான வெள்ளிமலையில் இருந்து, அது வங்கக் கடலில் கலக்கும் அழகன் குளம் – ஆத்தங்கரை வரை, ஆற்றின் இருபுறமும் ஐந்து கிலோமீட்டர் தூரத்துக்குள் இருக்கும் எல்லா கிராமங்களிலும் தொல்லியல் கள ஆய்வை நடத்தியது.

சுமார் 350 கிராமங்களில் கள ஆய்வை நடத்திய இந்தக் குழு, 293 கிராமங்களில் ஏதேனும் ஒரு வகையில் தொல்லியல் எச்சங்கள் இருப்பதைக் கண்டறிந்துள்ளது. அதாவது 80 சதவீதக் கிராமங்கள், வளமான வரலாற்று ஆதாரங்களைக் கொண்டுள்ளன. இந்தப் புள்ளிவிவரங்களே மிகச் சிறந்த ஒரு கண்டுபிடிப்புதான். 256 கிலோமீட்டர் நீளம் கொண்ட ஒரு நதியில், சுமார் ஒரு கிலோமீட்டருக்கு ஒரு கிராமம் காலத்தின் மங்காத சுவடுகளை, தனது தோளில் சுமந்தபடி நிற்கிறது. வைகை வறண்ட நதி அல்ல... வரலாற்று நதி என்பதை நிருபிக்கும் புள்ளிவிவரங்களே இவை.

எத்தனையோ கண்டுபிடிப்புகளுக்குத் தகுதியான ரகசியங்களை மறைத்துவைத்திருக்கும் மந்திரக் கிண்ணங்களாக வைகைக் கரைக் கிராமங்கள் இருக்கின்றன. அந்த மந்திரக் கிண்ணங்களைத் திறந்து பார்க்கும் சக்தியும் சாமர்த்தியமும் தான் இன்றைய தேவை.

அமர்நாத் ராமகிருஷ்ணன் குழு கள ஆய்வைத் தொடங்குவதற்கு முன்னர், கடந்த 30-40 ஆண்டுகளில் தொல்லியல் துறை, பல்கலைக்கழகங்கள் மற்றும் தனிநபர்கள் அவ்வப்போது நடத்திய ஆய்வில், பல முக்கியக் கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றையாவது நினைவூட்டுவது அவசியம்.
மணலூர் கண்மாய்க்கரையின் கதையை அறிந்துகொள்ளும் முன்னர், தேனூர் கருவேலமரத்தடியின் கதையை அறிந்துகொள்வோம்.

மதுரைக்கு மிக அருகில் வைகை ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் கிராமம், தேனூர். முதலாம் இராஜராஜ சோழன் கல்வெட்டும், சடாவர்மன் சுந்தரபாண்டியன் காலத்து கல்வெட்டும் சங்க இலக்கியமும் இந்த ஊரின் சிறப்பைப் பதிவு செய்கின்றன என இலக்கிய, தொல்லியல் அறிஞர்கள் கூறுகின்றனர். ஆனால், அறிஞர்கள் யாரும் ஆய்வு நடத்தாமல், தானாகவே வெளிவந்த சுயம்புவான கண்டுபிடிப்பு ஒன்று உண்டு.

தேனூரில் 2013-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பெய்த ஒரு கனமழையில், கருவேலமரம் ஒன்று வேரோடு சாய்ந்தது. மரத்தின் தூருக்கு அடியில் இருந்து ஒரு மண்முட்டி மேலெழுந்து வர, அதனை எடுத்து சிறுவர்கள் விளையாடத் தொடங்கினார்கள். உள்ளே விரல் அளவு கனம் கொண்ட கட்டிகள் இருப்பது தெரிந்ததும் விஷயம் பரவியது. அவை அத்தனையும் தங்கக்கட்டிகள். சுமார் முக்கால் கிலோ எடையுள்ள தங்கக்கட்டிகள்.

புதையல், அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அரசு அதிகாரி முதல், பொதுமக்கள் வரை எல்லோரும் பெரும் புதையல் என அந்தத் தங்கக் கட்டியை நினைத்தனர். ஆனால் விலைமதிப்பில்லா புதையல் அந்தத் தங்கக் கட்டியில் பொறிக்கப்பட்டிருந்த எழுத்துக்கள்தான்.

ஏழு தங்கக்கட்டியிலும் தமிழ் பிராமியில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன. ஏழிலும் ஒரு பெண்ணின் பெயரே இடம் பெற்றிருந்தது. அந்தப் பெயர் ‘கோதை’. அந்த எழுத்துக்கள் எழுதப்பட்ட விதத்தை வைத்து, இது கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்தது எனத் தொல்பொருள் துறை மதிப்பிட்டுள்ளது.

இதில் அதிசயம் என்ன தெரியுமா? எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட தங்கக்கட்டி, இந்தியாவில் முதன்முதலில் இங்குதான் கிடைத்துள்ளது. 2,100 ஆண்டுகளுக்கு முன் தங்கத்தால் செய்யப்பட தெய்வச்சிலைகள் கூட இதுவரை கிடைக்கவில்லை. எந்தத் தெய்வத்தின் பெயரும் தங்கத்தில் எழுது, இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

உருவ வழிபாடு தொடங்காத காலம் அது. எனவே சிலைகளுக்கோ, அல்லது அதுசார்ந்த பெயர்களுக்கோ வாய்ப்பு இல்லை. ஆனால், அன்பும் காதலும் அப்படி அல்ல. மனிதனின் ஆதி அணுத் துகளில் இருந்து தொடங்கியது. காலமானிகளால் அளவிட்டுவிட முடியாத உணர்வுகளின் பரிணாமம். அதைப் போய் தனியாகக் கண்டுபிக்கத் தேவை இல்லை, ஏனென்றால், நாமே அதன் கண்டுபிடிப்புதான். அதனால்தான் தெய்வத்தின் பெயரோ, அல்லது மன்னனின் பெயரோ கூட தங்கத்தில் எழுதப்படாத காலத்தில், ஆன்மிகமும் அதிகாரமும் எட்ட முடியாத எல்லையை, அன்பினால் தோய்ந்த மனிதச் செயலால் எட்டித்தொட முடிந்துள்ளது.

ஒரு மனுஷிக்கு அவளை நேசித்த மற்றொருவரால் தரப்பட்ட, அல்லது அவளது பெயரை அவளே விரும்பி எழுதிவைத்துக்கொண்ட ஒரு செயலாகக்கூட இது இருக்கலாம். ஆனால், இந்த எழுத்துக்குப் பின்னால் இருந்த நேசம், இத்தனை ஆயிரம் வருடங்களுக்குப் பின்பும் நம் இதயத்தை ஏதோ செய்கிறது.

தமிழகத்தின் முதல் தங்க மகள் மட்டுமல்ல, இந்தியாவின் முதல் தங்கமகளும் கோதைதான். மண்ணுக்குள் இருந்து சுயமாக உதித்தெழுந்தவர்களைப் பற்றி புராணங்களில் படித்திருக்கிறோம். இதுவும் ஒரு சுயமான உதித்தெழுதல் தான்; ஒரு வகையில் உயிர்த்தெழுதலும் கூட. எழுந்தவள் எழுப்பும் கேள்விகளும் எண்ணற்றவை.

2,100 ஆண்டுகளுக்கு முன்பு தங்கத்தைக் கண்டறியப் பயன்படுத்திய தொழில்நுட்பம் என்ன? அதை அணிகலானாக மாற்ற என்னென்ன வடிவத்தைக் கையாண்டார்கள். கலைநுட்பமும் இரசவாதமும் கலந்து உருக்கொள்ளும் படைப்பின் ரகசியத்தை எவ்வாறு கண்டறிந்தார்கள்? எழுத்தை எங்கும் நிறைந்த ஒன்றாக எப்படி மாற்றினர்? கேள்விகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

பாதுகாப்பு வசதிகள் பெரிதாக இல்லாத காலம் அது. அந்தக் காலத்தில் வெளியூரிலிருந்து நகரத்துக்குள் வருகிறவர்களுக்கு, தங்களின் செல்வத்தை நகருக்கு வெளியே அடையாளத்துடன் புதைத்து வைத்துவிட்டு உள்ளே வரும் பழக்கம் இருந்துள்ளது. அத்தகைய பழக்கப்படி இந்தப் புதையல் வைக்கப்பட்டிருக்கலாம். அப்படியென்றால், நகரத்தைவிட்டு வெளியே கிராமங்களிலோ அல்லது சிறு நகரங்களிலோ இருந்தவர்களிடமே, இவ்வளவு தங்கள் புழங்குகிற அளவுக்கு பொருளாதாரச் செழிப்பு இருந்துள்ளது என்பதை அறிய முடிகிறது. கிராமப்புறத்திலே இவ்வளவு வளமை இருந்திருக்கும்போது, தலைநகரமான மதுரையின் வளமை எப்படி இருந்திருக்கும்?

முதலில் ஞாபகம் வருவது அழகர் கோயில் கல்வெட்டு. அங்கே கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் சமணப்பள்ளி அமைக்க, மதுரையைச் சேர்ந்த பொற்கொல்லன் ஆதன், தானம் அளித்துள்ளான் எனச் செய்தி உள்ளது. இது மதுரை பொற்கொல்லர்களின் உயர்வைக் காட்டுகிறது. சிலப்பதிகாரத்தின் கடைசிப் பகுதியில் 1,000 பொற்கொல்லர்களின் தலைகளைக் கொய்து, கண்ணகியைச் சாந்தப்படுத்தினான் பாண்டிய வேந்தன் எனச் சொல்லப்படுகிறது. இது ஒரு படைப்பாளியின் கற்பனையாக இருக்கலாம். ஆனால், பெரும் எண்ணிக்கையில் பொற்கொல்லர்கள் இங்கு வாழ்திருக்கிறார்கள் என்பதன் சாட்சி இது.
ஒருமுறை பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியத்திடம் பேசிக் கொண்டிருக்கும்போது, தூத்துக்குடி APC மகாலெட்சுமி கல்லூரி மாணவர்கள் நடத்திய கள ஆய்வில், முக்காணி என்ற கிராமத்தில் இருக்கும் பொற்கொல்லர்கள் தங்களின் குலக்கதையைச் சொல்லும்போது, ‘மதுரையில் பெரும் எண்ணிக்கையில் பொற்கொல்லர்கள் கொலைசெய்யப்பட்டபோது நாங்கள் உயிர் தப்பி இங்குவந்து சேர்ந்தவர்கள்’ எனக் கூறியதாகக் குறிப்பிட்டது நினைவுக்கு வருகிறது.

இவ்வளவு பெரும் எண்ணிக்கையில் பொற்கொல்லர்கள் வாழ்வதற்கான தேவை இருந்த நகரமாக மதுரை இருந்துள்ளது. அப்படியென்றால், அவ்வளவு வேலைப்பாடுகள் செய்யத் தேவையான பொற்குவியல் இருந்துள்ளது என்பதை, யூகிப்பது கடினமல்ல.

ஒரு கல்வெட்டு ஆதாரம், ஓர் இலக்கிய ஆதாரம், ஒரு வாய்மொழி வரலாற்று ஆதாரம்... என ஒவ்வொன்றாகச் சேர்த்துக்கொண்டிருந்தால், கை நிறையத் தங்கக்கட்டிகளோடு நம் முன்னாள் வந்து நிற்கிறாள் கோதை. அவளின் கைகளில் இருக்கும் மண் கலயத்திலேயே இவ்வளவு தங்கம் என்றால், மாமதுரைக்குள் எவ்வளவோ?

சங்க இலக்கிய அகநானுற்றுப் பாடல் ஒன்றில் பொருள் தேடி வட திசை சென்ற தலைவன் வரத் தாமதமாவதால் கோபமான தலைவி, ‘பாடலிபுத்திரத்தில் எடுத்து சோணை நதிக்கரையில் நந்த வம்சத்தினர் புதைத்துவைத்த புதையல் நம்மைவிட அதிக செல்வத்தைகொண்டது என நினைத்துத் தேடிக்கொண்டிருக்கிறானோ?’ எனக் கேட்கிறாள். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, சோணை நதிக்கரை நந்த வம்சத்தினரின் புதையலுக்கு இலக்கியம் சான்று கூறுகிறது. வைகை நதிக்கரை கோதை வம்சத்தின் புதையலுக்கு நாமே சான்றாக இருக்கிறோம்.

சாம்ராஜ்ஜியங்களை ஆண்ட பேரரசர்களின் பெயர்கள்கூட கல் எழுத்துக்குள் பதுங்கியிருக்கும் நிலையில், சாமானியப் பெண்ணின் பெயர் ஒன்று, பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டு இன்றும் மின்னுகிறது. அந்த மின்னும் ஒளியில் வழியாக சிரித்துக்கொண்டே கோதை சொல்லும் செய்தி இதுதான்.

வைகை நதிக்கரை சங்கத் தமிழை மட்டும் வளர்க்கவில்லை, தங்கத் தமிழையும் அதுதான் வளர்த்தது! 

-------------------------------------------------------------------------------------
'கோதை' தங்கக்கட்டிகள் உண்மையில் கண்டறியப்பட்டது 2009-ஆம் ஆண்டு என்று தெரிகிறது.
http://www.dinamalar.com/news_detail.asp?id=868756&Print=1.
--------------------------------------------------------------------------------------
நன்றி:
Vikatan EMagazine. 


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

எங்கள் பக்கத்து வீட்டில் ஒரு கிறித்துவக் குடும்பம். அந்தக் குடும்பத் தலைவர் ஒரு கிறித்துவப் பெண்ணைக் காதலித்து அவரை மணப்பதற்காகக் கிறித்துவராக மதம் மாறியவர். பரம்பரையாகக் கிறித்தவர்களாக இருப்பவர்கள் கூட அவ்வளவு வெறியுடன் இருக்க மாட்டார்கள். அவருக்கு அந்த மதத்தின் மீது ஏற்பட்ட அதீதப் பிரியத்தினால் தன் உடன் பிறந்த சகோதரர்களையும் மதம் மாறச் சொல்லிக் கட்டாயப் படுத்தினார். தம்பிகள் ஒத்துக்கொள்ளவில்லை. அவர்களோடு அவர் பேசுவதையே நிறுத்தி விட்டார்.

*புதிதாக மதம் மாறியவர்கள் அந்த மதத்தின் மீது கொண்ட பிரியத்தால் ஈர்ப்பால் பைத்தியக்காரர்கள் போலவே நடந்து கொள்வார்கள் என்பதை நான் நேருக்கு நேர் பார்த்தவள்்*.

*அதனால் இந்தப் பதிவை ஒரு மத வாதப் பதிவெனப் பார்க்காமல் கொஞ்ச நேரம் யோசிக்க முயற்சியுங்கள்.*

ஒரு தனி மனிதன் "இஸ்லாம் மதம் மாறினால் என்ன ஆகப்போகுது. அவனுக்கு புடிச்ச மதத்தில் அவன் கடவுளை வழிபட்டுட்டு போறான். இதனால உனக்கு என்ன பாதிப்பு?

இந்த கேள்வியை மேலோட்டமாக பார்த்தால் சாதாரணமாகத் தான் தெரியும். ஆனால் நாளை உனது குடும்பத்தில் மதம் மாறிய ஒருவனால், 'உனது நாடு துண்டாடப்படலாம், உனது மொழி அழிக்கப்படலாம், உனது கலாச்சாரம் சிதைக்கப் படலாம், உனது சந்ததிகளே பலி கொடுக்கப்படலாம்!'

இதெல்லாம் சாத்தியமா..? இப்படி உள்மனதில் ஒரு ஐயப்பாடு எழலாம். ஆனால் சாத்தியமே என்பதற்கு சமகால உதாரணம் பாகிஸ்தானின் தந்தை என்றழைக்கப்-படும் "முகமது அலி ஜின்னா"!
யார் இந்த ஜின்னா?

*முகலாயர் காலத்து பரம்பரை முஸ்லீமா?* *இன்றைய பாகிஸ்தானைச் சார்ந்தவரா?*
*உருதினை தாய் மொழியாகக் கெண்டவரா?*

இந்தக் கேள்விகளுக்கு ஒரே பதில் "இல்லை" என்பது தான்! அப்படியெனில் இவர் யாராக இருக்கக்கூடும்?
முகலாயப் படையெடுப்புகளில், அவர்கள் கையில் அகப்பட்டு அவமானப்படுவதை விட, "உடன்கட்டை ஏறி உயிரை விடுவதே மேல்" என எண்ணிய தாய்மார்களைக் கொண்ட இந்து ராஜபுத்ர வம்சத்தை சார்தவர் தான் இவர். இவரது தாத்தா தான் முதலில் இவரது குடும்பத்தில் மதம் மாறியவர்.

ஜின்னாவுடைய ஊர் குஜராத். தாய்மொழி குஜராத்தி. இவரது தாத்தா மதம் மாறிய ஒரு முஸ்லிம். ஆனால் பேரன் ஜின்னா, அந்த தாத்தா ஏற்றுக்கொண்ட மதத்திற்காக "இஸ்லாமியர்களுக்காக பாகிஸ்தான் உருவாக்கப்பட வேண்டும்! இல்லையேல் பாரதம் அழிக்கப்படும்" என அறைக்கூவல் விடுத்தார். தனது மதத்திற்காக தாய் நாட்டையே அழிப்பேன், என கூறும் அளவிற்கு இஸ்லாமிய அடிப்படைவாதம் அவரிடம் குடியேறியிருந்தது. இதனால் தான், "ஒரு தனிநபர் மதமாற்றம் கூட இந்த நாடு துண்டாட காரணியாக மாறும் என்று கூறுகிறேன்! இங்கே அந்த தனிநபர் ஜின்னாவுடைய தாத்தா!".

*குஜராத்தியை தாய்* *மொழியாக கொண்ட* *ஜின்னா பாகிஸ்தான்* *உருவானதும் முன்* *வைத்த முதல்* *கொள்கை என்ன தெரியுமா?*

அனைவருக்குமான ஒரே மொழி உருது மட்டுமே! அதற்கான காரணம் யாதெனில், உருது மொழியானது இஸ்லாமிய வரலாற்றோடு பிணைந்த புனித மொழி என ஜின்னா கருதியதே!

அதே நேரம் பாகிஸ்தானில் அன்றைய காலகட்டத்தில் உருது பேசிய மக்கள் வெறும் 7% தான். கிழக்கு பாகிஸ்தானில் 2% தான்.

பாகிஸ்தானின் பெரும்பான்மை மக்கள் பேசிய மொழிகள் சிந்து, பஞ்சாபி மற்றும் பஷ்து மொழிகளே. கிழக்கில் வங்கமே பிரதான மொழி. இதுவே கிழக்கு பாகிஸ்தான், வங்கதேசமாக மூல காரணம். ஒரு தனி மனிதனின் மதமாற்றத்தால், ஒரு நாடே தன் தாய் மொழிகளை தாரைவார்க்க வேண்டியதாயிற்று . இந்த இடத்தில் அந்த தனிமனிதன் ஜின்னாவுடைய தாத்தா!
ராஜபுத்திர காலாச்சாரத்திற்கும், இஸ்லாமிய கலாச்சாரத்திற்கும் உதாரணம் சொல்ல வேண்டுமானால் , தயிர் சாதத்துல மாட்டுக்றி கலந்த மாதிரி! இந்த கலாச்சார சீரழிவு ஜின்னாவுடைய தாத்தா இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட போதே முடிந்த கதை!

ஜின்னாவின் மத அடிப்படைவாதத்தால் நாடு துண்டாடப்பட்ட போது, கொல்லப்பட்ட லட்சக் கணக்கான இந்துக்களில் கண்டிப்பாக ஜின்னாவுடைய தாத்தா மதம் மாறிய போது, தாய் மதத்தை விட்டுக்கொடுக்காது, இந்துவாகவே வாழ்ந்த பங்காளிகளின் சந்ததிகள் கூட பாதிக்கப்பட்டிருக்க-லாம், பலியாகவும் கூட, ஆகியிருக்கலாம்.

*உனது குடும்பத்தில்* *மதம் மாறி ,ஒருவனால் , 'உனது நாடு* *துண்டாடப்படலாம், உனது மொழி அழிக்கப்படலாம்*,
*உனது கலாச்சாரம் சிதைக்கப்படலாம், உனது சந்ததிகளே பலி கொடுக்கப்படலாம்!*

யாருக்கு தெரியும் வருங்காலத்தில் யுவன் சங்கர் ராஜா எள்ளு பேரன் கூட ISIS போன்று ஒரு அமைப்புக்கு தலைவனாகி திருவண்ணாமலையை தகர்ப்பேன் என்று "அல் ஸஜீரா" அறிக்கை விடலாம். அவனுக்கு தெரியவா போகுது அவனது தாத்தாவுக்கு தாத்தா அண்ணாமலையானின் அதிதீவிர பக்தன் என்று!(நடக்கக் கூடாதென்று வேண்டிக்கொள்வோம்.)

*தேசம் தெய்வம் தர்மம்*

*மூன்றும் பிரிக்க முடியாது! பிரிக்கக் கூடாதது!*

*மத மாற்றம் ஒரு தேசிய அபாயம்*

*தர்மத்தை கற்போம்! கடைபிடிப்போம்!*
*ஏமாறாதே! ஏமாற்றாதே!*

*மதம் மாறாதே!*
*மதமாற்றத்தைத் தடுப்போம்.*கருடன்

எங்கள் பக்கத்து வீட்டில் ஒரு கிறித்துவக் குடும்பம். அந்தக் குடும்பத் தலைவர் ஒரு கிறித்துவப் பெண்ணைக் காதலித்து அவரை மணப்பதற்காகக் கிறித்துவராக மதம் மாறியவர். பரம்பரையாகக் கிறித்தவர்களாக இருப்பவர்கள் கூட அவ்வளவு வெறியுடன் இருக்க மாட்டார்கள். அவருக்கு அந்த மதத்தின் மீது ஏற்பட்ட அதீதப் பிரியத்தினால் தன் உடன் பிறந்த சகோதரர்களையும் மதம் மாறச் சொல்லிக் கட்டாயப் படுத்தினார். தம்பிகள் ஒத்துக்கொள்ளவில்லை. அவர்களோடு அவர் பேசுவதையே நிறுத்தி விட்டார்.

*புதிதாக மதம் மாறியவர்கள் அந்த மதத்தின் மீது கொண்ட பிரியத்தால் ஈர்ப்பால் பைத்தியக்காரர்கள் போலவே நடந்து கொள்வார்கள் என்பதை நான் நேருக்கு நேர் பார்த்தவள்்*.

*அதனால் இந்தப் பதிவை ஒரு மத வாதப் பதிவெனப் பார்க்காமல் கொஞ்ச நேரம் யோசிக்க முயற்சியுங்கள்.*

ஒரு தனி மனிதன் "இஸ்லாம் மதம் மாறினால் என்ன ஆகப்போகுது. அவனுக்கு புடிச்ச மதத்தில் அவன் கடவுளை வழிபட்டுட்டு போறான். இதனால உனக்கு என்ன பாதிப்பு?

இந்த கேள்வியை மேலோட்டமாக பார்த்தால் சாதாரணமாகத் தான் தெரியும். ஆனால் நாளை உனது குடும்பத்தில் மதம் மாறிய ஒருவனால், 'உனது நாடு துண்டாடப்படலாம், உனது மொழி அழிக்கப்படலாம், உனது கலாச்சாரம் சிதைக்கப் படலாம், உனது சந்ததிகளே பலி கொடுக்கப்படலாம்!'

இதெல்லாம் சாத்தியமா..? இப்படி உள்மனதில் ஒரு ஐயப்பாடு எழலாம். ஆனால் சாத்தியமே என்பதற்கு சமகால உதாரணம் பாகிஸ்தானின் தந்தை என்றழைக்கப்-படும் "முகமது அலி ஜின்னா"!
யார் இந்த ஜின்னா?

*முகலாயர் காலத்து பரம்பரை முஸ்லீமா?* *இன்றைய பாகிஸ்தானைச் சார்ந்தவரா?*
*உருதினை தாய் மொழியாகக் கெண்டவரா?*

இந்தக் கேள்விகளுக்கு ஒரே பதில் "இல்லை" என்பது தான்! அப்படியெனில் இவர் யாராக இருக்கக்கூடும்?
முகலாயப் படையெடுப்புகளில், அவர்கள் கையில் அகப்பட்டு அவமானப்படுவதை விட, "உடன்கட்டை ஏறி உயிரை விடுவதே மேல்" என எண்ணிய தாய்மார்களைக் கொண்ட இந்து ராஜபுத்ர வம்சத்தை சார்தவர் தான் இவர். இவரது தாத்தா தான் முதலில் இவரது குடும்பத்தில் மதம் மாறியவர்.

ஜின்னாவுடைய ஊர் குஜராத். தாய்மொழி குஜராத்தி. இவரது தாத்தா மதம் மாறிய ஒரு முஸ்லிம். ஆனால் பேரன் ஜின்னா, அந்த தாத்தா ஏற்றுக்கொண்ட மதத்திற்காக "இஸ்லாமியர்களுக்காக பாகிஸ்தான் உருவாக்கப்பட வேண்டும்! இல்லையேல் பாரதம் அழிக்கப்படும்" என அறைக்கூவல் விடுத்தார். தனது மதத்திற்காக தாய் நாட்டையே அழிப்பேன், என கூறும் அளவிற்கு இஸ்லாமிய அடிப்படைவாதம் அவரிடம் குடியேறியிருந்தது. இதனால் தான், "ஒரு தனிநபர் மதமாற்றம் கூட இந்த நாடு துண்டாட காரணியாக மாறும் என்று கூறுகிறேன்! இங்கே அந்த தனிநபர் ஜின்னாவுடைய தாத்தா!".

*குஜராத்தியை தாய்* *மொழியாக கொண்ட* *ஜின்னா பாகிஸ்தான்* *உருவானதும் முன்* *வைத்த முதல்* *கொள்கை என்ன தெரியுமா?*

அனைவருக்குமான ஒரே மொழி உருது மட்டுமே! அதற்கான காரணம் யாதெனில், உருது மொழியானது இஸ்லாமிய வரலாற்றோடு பிணைந்த புனித மொழி என ஜின்னா கருதியதே!

அதே நேரம் பாகிஸ்தானில் அன்றைய காலகட்டத்தில் உருது பேசிய மக்கள் வெறும் 7% தான். கிழக்கு பாகிஸ்தானில் 2% தான்.

பாகிஸ்தானின் பெரும்பான்மை மக்கள் பேசிய மொழிகள் சிந்து, பஞ்சாபி மற்றும் பஷ்து மொழிகளே. கிழக்கில் வங்கமே பிரதான மொழி. இதுவே கிழக்கு பாகிஸ்தான், வங்கதேசமாக மூல காரணம். ஒரு தனி மனிதனின் மதமாற்றத்தால், ஒரு நாடே தன் தாய் மொழிகளை தாரைவார்க்க வேண்டியதாயிற்று . இந்த இடத்தில் அந்த தனிமனிதன் ஜின்னாவுடைய தாத்தா!
ராஜபுத்திர காலாச்சாரத்திற்கும், இஸ்லாமிய கலாச்சாரத்திற்கும் உதாரணம் சொல்ல வேண்டுமானால் , தயிர் சாதத்துல மாட்டுக்றி கலந்த மாதிரி! இந்த கலாச்சார சீரழிவு ஜின்னாவுடைய தாத்தா இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட போதே முடிந்த கதை!

ஜின்னாவின் மத அடிப்படைவாதத்தால் நாடு துண்டாடப்பட்ட போது, கொல்லப்பட்ட லட்சக் கணக்கான இந்துக்களில் கண்டிப்பாக ஜின்னாவுடைய தாத்தா மதம் மாறிய போது, தாய் மதத்தை விட்டுக்கொடுக்காது, இந்துவாகவே வாழ்ந்த பங்காளிகளின் சந்ததிகள் கூட பாதிக்கப்பட்டிருக்க-லாம், பலியாகவும் கூட, ஆகியிருக்கலாம்.

*உனது குடும்பத்தில்* *மதம் மாறி ,ஒருவனால் , 'உனது நாடு* *துண்டாடப்படலாம், உனது மொழி அழிக்கப்படலாம்*,
*உனது கலாச்சாரம் சிதைக்கப்படலாம், உனது சந்ததிகளே பலி கொடுக்கப்படலாம்!*

யாருக்கு தெரியும் வருங்காலத்தில் யுவன் சங்கர் ராஜா எள்ளு பேரன் கூட ISIS போன்று ஒரு அமைப்புக்கு தலைவனாகி திருவண்ணாமலையை தகர்ப்பேன் என்று "அல் ஸஜீரா" அறிக்கை விடலாம். அவனுக்கு தெரியவா போகுது அவனது தாத்தாவுக்கு தாத்தா அண்ணாமலையானின் அதிதீவிர பக்தன் என்று!(நடக்கக் கூடாதென்று வேண்டிக்கொள்வோம்.)

*தேசம் தெய்வம் தர்மம்*

*மூன்றும் பிரிக்க முடியாது! பிரிக்கக் கூடாதது!*

*மத மாற்றம் ஒரு தேசிய அபாயம்*

*தர்மத்தை கற்போம்! கடைபிடிப்போம்!*
*ஏமாறாதே! ஏமாற்றாதே!*

*மதம் மாறாதே!*
*மதமாற்றத்தைத் தடுப்போம்.*கருடன்



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

பிராமணர்களின் ஆச்சாரம்
மற்றும் தீட்டு என இரு வேறு விஷயங்களை ஒன்றாக போட்டு குழப்பி, தீண்டாமைக்கு பிராமணன்தான் காரணம் என்கிற தவறான பிரச்சாரத்தை சமூகத்தில் இந்த இந்து விரோத கும்பல்கள் பிரச்சாரம் செய்ததன் காரணமாகவே.... தமிழ்நாட்டில் இந்த பிராமண வெறுப்பு வளர்ந்திருக்கிறது..!

நான் இதில் பிராமணர்களையும் குறை கூறுவேன்.. ஏனென்றால் சில பிராமணர்கள் எதற்காக மேலே படாதே என்று சொல்கிறான் என்பதை மற்றவர்களுக்கு பொறுமையாக விளக்காமல், அவர்களிடம் கொஞ்சம் கடுமையாக பேசியிருப்பார்கள்.. அதுவே மற்றவர்களுக்கு ஒரு தாழ்வுமனப்பான்மையை ஏற்படுத்தி, பின்னால் வெறுப்பாக உருமாறியது

ஆச்சாரம் என்றால் என்ன? மேல் ஜாதியினர் தாழ்த்தப்பட்டவர்களை தொடாமல் இருப்பது ஆச்சாரமா? இல்லவே இல்லை..

ஒரு உதாரணம் சொல்கிறேன்.. ஒரு காலத்தில் *(இப்பொழுது ஆபீஸ் வேலைக்கு வந்த பிறகு பல பிராமணர்கள் , சிலரை தவிர, இதையெல்லாம் கைவிட்டுவிட்டார்கள்)* பிராமணர்கள் அவர்கள் அகத்தில் *(வீடு என்பதற்கு தூய தமிழ், இதை அகத்தில் என்று வேகமாக சொல்ல, அது ஆத்தில் என்று உச்சரிக்கிரிக்கிறார்கள் பிராமணர்கள்)* தங்களது இஷ்ட மூர்த்தியின் விக்கிரஹமோ அல்லது சாளக்ராமமோ *(பெருமாளின் உருவில் நேபாளத்தில் கண்டகி நதியில் மிதந்து வரும் கற்கள், இதை பெருமாளின் விக்கிரஹமாக)* வைத்து ஆராதனை செய்வார்கள்.

அப்படி செய்யும்பொழுது பல கோட்பாடுகளை கடைபிடிக்க வேண்டும். பூஜை செய்யும் ஆண்களும், அதற்க்கு உணவு சமைத்து தரும் பெண்களும் தாங்கள் துவைத்து கொடியில் உலர்த்திய துணிகளை குளிப்பதற்கு முன் தாங்களே தொட மாட்டார்கள்.. குளித்து முடித்த உடன் தான் அதை கையால் எடுத்து அணிந்து கொள்வார்கள்..
அதே போல, வீட்டில் இந்த பூஜைகள் முடியும் வரை யார் மீதும் பட மாட்டார்கள், தன் சொந்த மகன், மகள் ஆனாலும் சரி..

இதை எப்படி எடுத்து
கொள்வீர்கள்? தன் மகன் மகளை தொட்டால் தீட்டு என்றா? தீண்டாமை என்றா? சிலர் கோவிலை போல காலை, மாலை என இரு வேலைகள் பூஜை செய்வார்கள்.. அதனால் இரு வேலை குளிப்பார்கள்.. குளித்த பிறகு யாராவது மேலே பட்டால் மீண்டும் குளிக்க நேரிடும்..

அதேபோல காபி, தண்ணீர் போன்ற விஷயங்களை உதட்டில் படாமல் பருகுவார்கள்.. ஏனென்றால் அதே பாத்திரத்தை வைத்துதான் வீட்டில் உள்ள விக்கிரஹமூர்த்திக்கு சமைக்க வேண்டியிருக்கும்.. நம் எச்சில் பட்ட பாத்திரத்தில் இறைவனுக்கு சமைத்துப்போட வேண்டாம் என்பதற்காக.. அதையும் மீறி பலர் தாங்கள் சாப்பிட தனி பாத்திரங்கள் வைத்திருப்பார்கள். அதை சமையல் அறைக்குள் எடுத்து செல்ல மாட்டார்கள்.. இதற்கு பெயரென்ன? தங்களுக்கு தாங்களே தீண்டாமை செய்கிறார்கள் என்றா?

இதெல்லாம் நாம் கொண்டாடும் தெய்வத்திற்கு நம்மால் முடிந்த சின்ன அர்ப்பணிப்பு.. இதை கடைபிடிப்பது அவ்வளவு எளிதல்ல...

எல்லா மதங்களிலும், எல்லா கோவில்களிலும் கடைபிடிக்க பல கோட்பாடுகள் உண்டு.. அது போலதான் இதுவும்..Orthodox ஆன பல பிராமணர்கள் வெங்காயம், பூண்டு, கிழங்குகள் எல்லாம் சாப்பிட மாட்டார்கள்... சாப்பிட்டால் பூஜைகள் செய்யும்பொழுது வாயு போன்ற உபத்திரவங்கள் ஏற்பட்டு இடையூறு உண்டாகும்.. இவ்வளவுதான் விஷயம்..

அதை திரித்து சொன்னது சொரியான் கும்பல்களின் அயோக்கியத்தனம்..

வாழ்க ஹிந்து தர்மம்..!



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard