New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கீழடி – நகர நாகரிகம் என்று சொல்ல முடியுமா? P A Krishnan


Guru

Status: Offline
Posts: 23907
Date:
கீழடி – நகர நாகரிகம் என்று சொல்ல முடியுமா? P A Krishnan
Permalink  
 


கீழடி – நகர நாகரிகம் என்று சொல்ல முடியுமா?

கீழடியில் கிடைத்திருப்பவை எல்லாம் இன்றைக்கு 2600 ஆண்டுகளுக்கு முந்தையவை என்று பலர் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் கீழடியில் கிடைத்த கலாச்சாரப் பொருள்களின் காலகட்டம் இன்றைக்கு 2300 ஆண்டுகளிலிருந்து 1900 ஆண்டுகள் வரை என்று அரசு எழுதிய புத்தகமே சொல்கிறது. எனவே கிடைத்தவற்றைக் கால வரிசைப்படுத்தி அவற்றின் காலங்கள் என்ன என்பதை விளக்குவது தொல்லியல் துறையின் கடமை. அதை அவர்கள் விரைவில் நிச்சயம் செய்வார்கள் என்று நம்புகிறேன்.

மேலும் கீழடி நகர நாகரிகத்தை குறிக்கிறது என்பதை நீங்கள் ஏன் மறுக்கிறீர்கள் என்ற கேள்வியை பலர் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். இன்னும் ஆதாரங்கள் வேண்டும். கீழடியில் இதுவரை கிடைத்திருப்பவை எவையும் வரலாற்றைப் புரட்டிப் போடுபவை அல்ல என்றுதான் சொல்கிறேன். அரசியல் காரணங்களுக்காகச் செய்யப்படும் பித்தலாட்டங்களுக்கு நான் ஆமாம் சாமி போட முடியாது.

சரி, அகழ்வாய்வாளர்கள் நகர நாகரிகங்களை எவ்வாறு அடையாளம் காண்கிறார்கள்? கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக வெளியீடான Eurasia at the Dawn of History -Urbanization and Social Change என்ற புத்தகத்தில் பத்தாவது அத்தியாயத்தின் தலைப்பு இது: How Can Arch aeologists Identify Early Cities? Definitions, Types, and Attributes? மைக்கேல் ஸ்மித் எழுதியது. அதில் அவர் நகர நாகரிகத்திற்கு 21 அடையாளங்கள் அல்லது தடையங்கள் இருக்க வேண்டும் என்கிறார்:
அவை
1.மக்கள் தொகை
2. நகரப்பரப்பு
3. மக்களடர்த்தி
4. அரண்மணைகள்
5. அரசர்கள் மற்றும் சமூகத்தில் உச்சநிலையில் உள்ளவர்களை புதைத்த இடங்கள்
6. பெரிய வழிபாட்டுத்தலங்கள்
7. பொதுக் கட்டிடங்கள்
8. கைவினைக் கூடங்கள்
9. சந்தைகள், கடைகள்
10. மதில்கள், கோட்டைகள்
11. நுழைவாயில்கள்
12. இவற்றை ஒன்று சேர்க்கும் தடையங்கள்- தெருக்கள், குளங்கள், ஓடைகள், முதலியவை
13. சிறிய வழிபாட்டுத்தலங்கள்
14. வீடுகள்
15. மக்கள் கூடுவதற்கான இடங்கள்
16. நகரின் நடுப்புற அமைப்பு
17. சமூகத்தில் உயர்ந்த ஆனால் உச்சநிலையில் இல்லாதவர்களைப் புதைத்த இடங்கள்
18. சமூகத்தின் பல தட்டுக்களுக்கான அடையாளங்கள்
19. அருகில் இருந்த நகரங்கள், கிராமங்கள்
20. நகரித்தின் உள்ளே அல்லது அருகில் நடக்கும் விவசாயம்
21. இறக்குமதிப் பொருள்கள்

நமக்கு இதே தடையங்கள் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. நமக்குக் கிடைத்திருக்கும் இலக்கிய, தொல்லியல் சான்றுகளை வைத்துக் கொண்டு, நமது அகழ்வாய்வாளர்களும் இது போன்ற பட்டியலைத் தயாரிக்கலாம்.
இப்போது கீழடிக்கு வருவோம். அங்கு வண்டி வண்டியாக பானைச் சிதறல்கள் கிடைத்திருக்கின்றன. குறிப்பிடத்தக்க பெரிய அடையாளங்கள் வேறு ஏதும் கிடைக்கவில்லை. நான் ஒரு அனுபவமிக்க, ஹரப்பா நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்ட இடங்களில் அகழ்வாராய்ச்சி செய்த ஒரு தொல்லியளாளரிடம் கேட்டேன். அவர் சொன்னது இது: They are all fragmentary and not found in one structural phase. No evidence of any fortification, dwelling or contiguous structure. The habitation may be fairly large. But structural and artefactual remains are poor. அதாவது மக்கள் வாழ்ந்திருக்கும் தடையங்கள் இருந்திருக்கலாம், ஆனால் நகரக் குடியிருப்புகள் என்று நிரூபிக்க கிடைத்திருக்கும் சான்றுகள் போதாது என்கிறார்.

கீழடியில் இதுவரை நடந்திருக்கும் அகழ்வாராய்ச்சிகளில் (மத்திய மாநில அகழ்வாராய்ச்சிகள்)கிடைத்திருக்கும் எல்லாத் தடையங்களை வைத்துக் கொண்டுதான சரியான முடிவிற்கு வர வாய்ப்புகள் இருக்கின்றன. ஒரு இடத்தில் கிடைத்ததை மட்டும் வைத்துக் கொண்டு மேலும் கீழும் குதிப்பதை அரசியல்வாதிகளும் அவர்களுக்கு கொடி பிடிப்பவர்களும் செய்யலாம். அறிவியல் அணுகுமுறையில் நம்பிக்கை வைத்திருப்பவர்கள் செய்யத் தயங்குவார்கள்.__________________


Guru

Status: Offline
Posts: 23907
Date:
Permalink  
 

 

 

சிந்து சமவெளி நாகரிகம் என்பது ஒரே நாகரிகம் அல்ல. பல குழுக்கள் இருந்திருக்க வேண்டும் அவற்றுக்குள் பூசலும் இருந்திருக்கலாம். பின்னர் அந்த நாகரிகம் அழிந்த போது ஒரு குழுவினர் கிழக்கு நோக்கி நகர்ந்து வேத நாகரிகமாகவும் மேற்கு நோக்கி நகர்ந்தவர்கள் இரானிய அவெஸ்த நாகரிகமாகவும் மாறியிருக்க வாய்ப்பிருக்கிறது. இந்த சிந்து நாகரிகத்தின் இன்னொரு பகுதியினர் தெற்கு நோக்கியும் நகர்ந்திருக்கக் கூடும்.

வீடுகள் இல்லை. தெருக்கள் இல்லை.

ஆனால் செங்கல் சுவர்கள் உள்ளனவே? அவை…?-- Edited by Admin on Thursday 26th of September 2019 09:36:25 AM

__________________


Guru

Status: Offline
Posts: 23907
Date:
Permalink  
 

terrific article but a couple of points, the dna results of rakigarhi are out which concludes there is no significant changes in its dna and the current poulace of south asia and the sanauli excavations in gangetic plains discovered bronze age chariots which refutes the iron age chariots of ait/amt theorists. iron forge dated 1900bce found in uttar pradesh tells us that iron was invented at the same date or earlier than any mesapatomian culture which takes back rig veda to a considerable time in the past. vedas didn’t speak about tigers because the place which was populated during that time was north and north west india which was devoid of tigers__________________


Guru

Status: Offline
Posts: 23907
Date:
Permalink  
 

இது மதுரைக்காஞ்சி. மதுரையைப் பற்றியது. சங்க இலக்கியம்.

கோயில்களில் அந்தி விழா

"நீரும் நிலனும் தீயும் வளியும்
மாக விசும்போடு ஐந்து உடன் இயற்றிய
மழு வாள் நெடியோன் தலைவன் ஆக,

இங்கு மழுவாள் நெடியோன் என்பது பரசுராமனையோ அல்லது சிவபெருமானையோ குறிக்கும், யாராக இருந்தாலும் இந்துக் கடவுள்,

சமணப்பள்ளி குறிப்பிடப்படுகிறது. பௌத்தப்பள்ளி குறிப்பிடப்படுகிறது. அந்தணர் பள்ளியும் குறிப்பிடப்படுகிறது.

"சிறந்த வேதம் விளங்கப் பாடி,
விழுச் சீர் எய்திய ஒழுக்கமொடு புணர்ந்து,
நிலம் அமர் வையத்து ஒரு தாம் ஆகி,

உயர் நிலை உலகம் இவண் நின்று எய்தும்
அற நெறி பிழையா அன்புடை நெஞ்சின்,
பெரியோர் மேஎய், இனிதின் உறையும்
குன்று குயின்றன்ன அந்தணர் பள்ளியும்"

வேலன் வழிபாடும் குரவை கூத்தும் பேசப்படுகின்றன.

இது அதிகாலை மதுரை!

"ஓதல் அந்தணர் வேதம் பாட,
சீர் இனிது கொண்டு, நரம்பு இனிது இயக்கி,
யாழோர் மருதம் பண்ண"

என்னத்தச் சொல்ல!

Ananthakrishnan Pakshirajan

திரு ஐராவதம் மகாதேவனின் Early Tamil Epigraphy உலகப் புகழ்பெற்ற புத்தகம். அமெரிக்காவில் ஹார்வர்ட் பல்கலைக் கழகமும் தமிழ் நாட்டில் க்ரியா பதிப்பகமும் சேர்ந்து வெளியிட்டது. அது சொல்லும் வரலாறு இது. (அசோக)பிராமி எழுத்து மூதாதை. அதற்குப் பிறந்தவை தமிழ் பிராமி முதலியவை.
இதற்கு நேர் எதிராக தமிழ் பிராமியிலிருந்து அசோக பிராமி பிறந்தது என்று நிறுவ வேண்டுமானால் அதை முதலில் மற்றைய ஆராய்ச்சியாளர்களுடன் விவாதிக்க வேண்டும். அறிவியல் இதழ்களில் எழுத வேண்டும்.

இப்போது நடந்திருப்பது அப்பட்டமான அரசியல். தமிழ்நாட்டின் பெரும்பாலான பத்திரிகையாளர்கள் அரைகுறை மார்க்சியவாதிகளாகவோ, பெரியாரிய நாசி இனவெறியர்களாகவோ இருப்பதால்தான் இதுபோன்ற அரசியல் நிகழ்வுகள் அறிவியல் நிகழ்வுகளாகக் கருதப்படுகின்றன.

 

 

Ananthakrishnan Pakshirajan

I sent my article to an experienced archaeologist. I don't want to reveal his name because he is in active service. He doesn't want to involve himself in controversies. This is what he says:
"Thanks for the article. At last and at least one sane piece to appear."
"Hope it will stir the sane minds in Tamil Nadu to question the issue."

Parvati Shastri In the other direction, have you listened to various interviews of Vasant Shinde? The papers are scientific, collective, joint work, and do not make any extravegant claim. But personal views and conclusions of Vasant Shinde is quite irrational. He said in one of the interviews, that he will write a paper on the conclusions he derived.

Ananthakrishnan Pakshirajan He does sound irrational. But I will wait for his papers before making a final judgement.

Alwar Narayanan Sir you have not mentioned the intentional blackout done by the ruling government, the transfers, the attempt to bury the site with JCB and the loot of artifacts in a lorry which public stopped.

All these deserve condemnation of Hindutva's malious intent.


Your article is written in a hurry only to blame tamil dravidian from taking credits.

Ananthakrishnan Pakshirajan This is the usual rant of one with a terrorist mind.

Swaminathan V Alwar Narayanan Govt had clearly explained that the land was a private property. That was the reason, they have to close temporarily..

 

 


__________________


Guru

Status: Offline
Posts: 23907
Date:
Permalink  
 

"சிந்துச் சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் இல்லை என்று சொல்கிறீர்கள்?" என்று என்னிடம் ஒருவர் கேட்டிருக்கிறார். நான் எங்கேயும் இல்லை சொன்னதில்லை. நானும் திராவிட் நாகரிகம் என்றுதான் நினைக்கிறேன். ஆனால் இதுவரை வலுவான ஆதரங்கள் கிடைக்கவில்லை என்றுதான் சொல்கிறேன். சமீபத்தில் வந்த science பத்திரிகையில் சொல்லப்பட்டிருப்பது இது:
A possible scenario combining genetic data with archaeology and linguistics is that proto-Dravidian was spread by peoples of the IVC along with the Indus Periphery Cline ancestry component of the ASI. Nongenetic support for an IVC origin of Dravidian languages includes the present-day geographic distribution of these languages (in southern India and southwestern Pakistan) and a suggestion that some symbols on ancient Indus Valley seals denote Dravidian words or names.
அதாவது தொல் திராவிட மொழியை தென் இந்தியாவிற்கு சிந்துச் சமவெளி நாகரிக மக்கள் கொண்டு வந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்று கட்டுரை சொல்கிறது. ஆனால் அதோடு நின்று விடவில்லை. இதையும் சொல்கிறது.
An alternative possibility is that proto-Dravidian was spread by the half of the ASI’s ancestry that was not from the Indus Periphery Cline and instead derived from the south and the east (peninsular South Asia). The southern scenario is consistent with reconstructions of Proto-Dravidian terms for flora and fauna unique to peninsular India.
அதாவது தொல் திராவிட மொழி இங்கிருந்தவர்களின் மொழியாகவும் வாய்ப்பிருக்கிறது, சிந்துச் சமவெளி மொழியாகத்தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்கிறது.

இதுதான் அறிவியல் அணுகுமுறை. இது போன்ற அணுகுமுறை கீழடியில் கடைப்பற்றப்பட்டதா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்

Some clowns are asking me a question: are you an archaeologist? My answer is I am not. But I am a person with some common sense and my doubts are all genuine. If they are answered not by semi-literate journalists and amateur archaeologists, but by professional archaeologists not connected with any government, I will also gladly join the bandwagon.
In fact, I got my article vetted by a senior, experienced archaeologist.

திராவிடக் குஞ்சுகளுக்கு தெற்கு எது வடக்கு எது என்பது கூட மறந்து விட்டதா?. திராவிட இயக்கத்தின் தனிப்பெரும் தலைவர் திரு கருணாநிதி லெமூரியா, குமரிக்கண்டம் என்று பேசிக் கொண்டிருந்தாரே? லெமூரியாவும் திராவிட நாகரிகம் சிந்துச் சமவெளியும் திராவிட நாகரிகம் என்றால் இங்கிருந்து இவர்கள் சிந்துச் சமவெளி சென்றார்களா? அதற்கு ஆதாரம் எங்கே இருக்கிறது? தேவநேயப்பாவாணர் சொன்னால் மட்டும் போதுமா? மரபணு ஆராய்ச்சி வேறுமாதிரி அல்லவா சொல்கிறது?__________________


Guru

Status: Offline
Posts: 23907
Date:
Permalink  
 

திராவிடம் என்ற பெயர் தென்பகுதிக்கும் பயன்படுத்தப் பட்டுள்ளது. தமிழுக்கும் பயன் படுத்தப் பட்டுள்ளது. திராவிட என்று நமது நாட்டுப் பாடலில் வருவது தென்பகுதியைக் குறிக்கிறது. திராவிட வேதம் என்று திருவாய்மொழியைப் போற்றுவதில் திராவிடம் என்பது தமிழ் மொழியைக் குறிக்கிறது. வேதம் தமிழ் செய்த மாறன் என்றும் நம்மாழ்வார் போற்றப்படுகிறார்.

திராவிட முன்னேற்றக் கழகம், மற்றும் பல கழகங்களோடு ஒட்டிவரும் திராவிடத்தின் பொருள் வசதியையும் தருணத்தையும் பொறுத்து மேலே சொன்ன இரண்டையும் இன்னொன்றையும் குறிக்கிறது.
கர்நாடகாவைத் திட்டும் போது அது தமிழைக் குறிக்கும். வடநாட்டைத் திட்டும் போது அது தென்பகுதியைக் குறிக்கும். பிராமணர்களைத் திட்டும் போது நாசி இனவெறியைக் குறிக்கும்.

 

திரு அருணன் எனக்குச் சரமாரியாக அர்ச்சனை செய்திருக்கிறார்! நான் சங்கியாம். இது அருணனை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கைக்கூலி என்று சொல்வது போல. அது எந்த அளவிற்கு உண்மையோ அதே அளவு என்னைச் சங்கி என்று சொல்வது உண்மை.
இவரைப் போன்றவரகள் திராவிட இயக்க்தோடு ஒன்று சேர்ந்து பல ஆண்டுகளாகி விட்டன. மிகவும் கீழ்த்தரமான குறுங்குழுவாதத்திற்கு இவர்கள் அடிமைகள். தொண்டர்களைச் சொல்லவில்லை. இவரைப் போன்றவர்களைச் சொல்கிறேன்.
1967 லிருந்து 1980 வரை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் சில தோழர்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டிருந்தேன். என்னை வழிப்படுத்தியவர்களில் தோழர் பாலவிநாயகம் ஒருவர். தில்லி வந்த பிறகும பல மார்க்சியர்களோடு தொடர்பு இருந்தது. ஆனால் அன்றைய மார்க்சியர்கள் திராவிட இயக்கத்தை சரியாக அளவிட்டிருந்தார்கள். பெரியாரையும் சரியாக அளவிட்டிருந்தார்கள். இன்று இவர்கள் அறிவு வறட்சியால் குழம்பி நிற்கிறவர்கள்.__________________


Guru

Status: Offline
Posts: 23907
Date:
Permalink  
 

Ananthakrishnan Pakshirajan இல்லை. நான் பொறுக்கி மார்க்சியவாதியாக விரும்பவில்லை. இங்கு பதிவு செய்ய வேண்டாம்.__________________


Guru

Status: Offline
Posts: 23907
Date:
Permalink  
 

தமிழ், வடமொழிகள் மற்றும் கீழடி – ஆதாரங்களின் வெளிச்சத்தில்

https://pakrishnan.com/2019/09/16/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/?fbclid=IwAR0KXXykBbCBeZGxnfCYJsmoKAr_aXNrIqcbLVbBBRD8SN1UOoBuEAq9a04

ஹெரோடடஸ் வரலாற்றின் தந்தை என அறியப்படுபவர். பொது நூற்றாண்டு தொடங்குவதற்கு ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னால் (500 BCE) இருந்தவர். இவர் எழுதிய ‘வரலாறுகள்’ புத்தகம் மிகவும் புகழ் பெற்றது. எந்த இனம் பழைய இனம் என்பதை ஆராய்ச்சி செய்த எகிப்திய ஃபாரோ ஒருவரைப் பற்றிய செய்தியை இவர் இப்புத்தகத்தில் தருகிறார். இரண்டு பிறந்த குழந்தைகளை ஆடு மேய்ப்பவரிடம் கொடுத்து மொழிப் பரிச்சயமே இல்லாமல் ஃபாரோ வளர்க்கச் சொன்னார். அவர் ஒழுங்காக வளர்க்கிறாரா என்பதும் கண்காணிக்கப்பட்டது. இரண்டு வருடங்கள் கழித்து குழந்தைகள் ஒருநாள் ‘பெக்கோஸ்’ என்று சொல்லிக் கொண்டு ஓடி வந்தன. ஃபாரோ ‘பெக்கோஸ்’ என்ற சொல்லுக்கு ஃப்ரீஜியன் மொழியில் ரொட்டி என்று பொருள் என்பதை அறிந்தார். எனவே ஃப்ரீஜியன் இனம் எகிப்திய இனத்தை விட முந்தையது என்ற முடிவிற்கு வந்தார்.
இச்சோதனை அறிவுப்பூர்வமானது என்று சொன்னால் இன்று நம்ப முடியுமா? ஏன் நம்பக் கூடாது? முதலாவது, இது யாரோ சொன்ன கதை. இரண்டாவது, குழந்தைகள் சொன்னது ‘பெக்கோஸ்’தான் என்பதும் மேய்ப்பவர் சொல்லித்தான் தெரிகிறது. இது போன்ற ஆதாரங்களை வைத்துக் கொண்டு எந்த முடிவிற்கும் வர முடியாது என்றுதான் இன்றைய அறிவியலை அறிந்தவர்கள் சொல்வார்கள் ஆனால் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்குப் பின்னரும் ஹெரோடடஸ் பேசுவதைப் போல தமிழில் சில அறிஞர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். உணர்ச்சிக் கொந்தளிப்பில் தொலைக்காட்சிகளில் மொழிகளின் பழமையைப் பற்றி அவர்கள் உளறுவதைக் கேட்டால் தமிழ்நாட்டில் அறிவுப்பூர்வமான விவாதங்கள் நடைபெற என்றும்வாய்ப்பே இல்லை என்ற உணர்வுதான் மேலோங்குகிறது.
தமிழ் உலகிலேயே மிகப் பழமையான மொழியா? அல்லது சமஸ்கிருதம் என்று அறியப்படும் வடமொழி உலகிலேயே மிகப் பழமையான மொழியா? அல்லது பிராகிருதம் பழமையான மொழியா?
மொழி என்றால் என்ன?
நம் எல்லோருக்கும் எழுத்துக்கு முன் பேச்சு வந்து விட்டது என்பது தெரியும். எப்போது மனிதன் பேசத் தொடங்கினான்? சுமார் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கும் முன்னால் இருக்கலாம் என வல்லுனர்கள் கருதுகிறார்கள். மனித குலம் ஹோமோ சேபியன்ஸ் என்று அறியப்படும் நிலையை அடைய பல லட்சம் ஆண்டுகள் ஆயின என்பதைக் கணக்கில் எடுத்துக் கொண்டால். ஒரு லட்சம் ஆண்டுகள் என்பது மிகவும் சமீபத்தியது. மனிதன் எழுதுவதற்கு முன்னால் வரையத் துவங்கி விட்டான். அவன் விட்டுச் சென்ற மகத்தான ஓவியங்களை – நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையவை – இன்றும் காணலாம். இதற்கு அடுத்தபடியாக அவன் தான் கொன்ற மிருகங்கள் எத்தனை என்பதற்குக் கணக்கு (மரத்திலோ அல்லது எலும்பிலோ செதுக்கி) வைத்துக் கொள்ளத் துவங்கினான். இம்முறை தோன்றி சுமார் முப்பதாயிரம் ஆண்டுகள் ஆகி விட்டன. அடுத்த வளர்ச்சியாக குறியீடுகள் பிறந்தன. களிமண் வடிவங்களால் அவன் குறியீடுகளைச் செய்யத் துவங்கினான். உதாரணமாக பந்து வடிவம் ஆட்டைக் குறிக்கலாம். மூன்று பந்துகள் மூன்று ஆடுகளைக் குறிக்கலாம். இவ்வாறு துவங்கித்தான் எழுத்திற்கும் பேச்சிற்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டு மொழிகள் வளர்ச்சியடைந்தன. அவை இருபரிமாணங்களில், சுவர் களிமண் சதுரம் போன்ற தளங்களில், எழுதப்படத் துவங்கின. தரப்படுத்தப்பட்ட எழுத்துக்கள் உருவாக பல நூறாண்டுகள் எடுத்திருக்க வேண்டும். உதாரணமாக நான் இங்கு ஆடு என்று தமிழில் எழுதினால் இதைப் படிக்கத் தெரிந்த எல்லோருக்கும் நான் குறிப்பிடுவது ஆடு என்று உடனே புரிந்து விடும். அதை மாடு என்று தவறாக யாரும் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். இவ்வாறு தரப்படுத்தப்பட்ட எழுத்துக்களைக் கூட்டாகச் சேர்த்து எழுதுவது பிறந்து அதிக ஆண்டுகள் ஆகி விடவில்லை. சுமார் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால்தான் அவை பிறந்தன.
மிகச் சமீப காலம் வரை உலகில் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள்தாம் அதிகம் இருந்தார்கள். எல்லா நாகரிகங்களிலும் எழுத்து என்பது சமூகத்தின் உயர்நிலையில் இருந்தவர்களுக்கு மட்டுமே சொந்தமாக இருந்தது. 1820ல் உலகில் 12% சதவீத மக்கள் மட்டுமே எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள். 15ம் நூற்றாண்டு பிரான்சில் 6% மக்கள் மட்டுமே எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள். இந்தியாவிலும் இதை விட அதிகமாக இருக்க வாய்ப்பே இல்லை. அச்சடித்த புத்தகங்கள் பரவலாக வந்தபிறகுதான் எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் அதிகமானார்கள். இருநூறு ஆண்டுகளுக்கு முன்வரை குறைந்த பட்சம் 95% இந்தியர்களுக்கு எழுதப்படிக்கத் தெரியாது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு சதவீதத்தினருக்கு எழுதப்படிக்கத் தெரிந்திருந்தால் அது ஆச்சரியம். தமிழகத்திலும் இதே நிலைமைதான் இருந்திருக்க வேண்டும். காதால் கேட்பதை மனதில் வாங்கி அதைத் திரும்பச் சொல்வதுதான் பலருக்குக் கல்வியாக இருந்திருக்க வேண்டும்.
ஒரு லட்சம் ஆண்டுகளுக்கும் முன்னால் பேசத் துவங்கிய நாம், எழுத்துக்களை கிட்டத்தட்ட முழுவதும் நமதாக்கிக் கொண்டது மிகச் சமீபத்தில்தான். உரசிக்கொள்ளும் தூரம்தான்.
உலகின் பழைய மொழிகள் யாவை?
தமிழ் முதல்முதலாக எப்போது பேசப்பட்டது என்பதற்கு நம்மிடம் எந்தத் தரவுகளும் இல்லை. நமக்குக் கிடைத்திருக்கும் தமிழின் எழுத்து வடிவங்கள் என்று அறியப்படுபவை சுமார் 2300 ஆண்டுகள் பழமையானவை. 2500 ஆண்டுகள் என்றும் சிலர் சொல்கிறார்கள். எகிப்து மொழி எழுத்துக்கள் கொண்ட கல்லறைகள் அந்நாட்டில் தடுக்கி விழுந்தால் கிடைக்கின்றன். இவை மிகப்பழமையானவை. பல இன்றைக்கு 4700 ஆண்டுகளுக்கு (2700 BCE) முந்தையவை. அதாவது தமிழுக்கு 2200 ஆண்டுகள் பழமையானவை. இந்த 2200 ஆண்டுகளில் உலகெங்கும் சுமார் இருபத்து ஐந்து மொழிகளில் எழுத்துக்கள் கிடைத்திருக்கின்றன. இவற்றில் நமக்குப் பரிச்சயமான பழைய மொழிகளான எகிப்து, சுமேரியன், சீனம், அராமிக், ஹீப்ரூ, ஃபோனிஷியன், ஹிட்டைட், அக்கேடியன், கிரேக்கம் போன்ற மொழிகள் அடங்கும். இவற்றில் எழுதப் பட்டிருப்பவற்றில் பல வரலாற்றுத் தகவல்களைத் தருபவை. அக்கேடியன் மொழியில் 3800 ஆண்டுகளுக்கு முன்னால் பதிக்கப்பட்ட ஹம்முராபியின் சட்டம் (code of Hammurabi) 282 சட்டங்களை எழுத்து வடிவில் தந்திருக்கிறது.
தமிழ் மொழி குமரிக்கண்டத்தில் செழித்து வளர்ந்து கொண்டிருந்த்து அதன் இலக்கியச் செல்வங்களைக் கடல் அழித்து விட்டது போன்ற கதைகளை யாரும் நம்ப மாட்டார்கள். இதே போன்ற கடலால் அழிக்கப்பட்ட கதைகள் உலகெங்கும் புழங்கி வருகின்றன. எந்த மொழிக்கும் இக்கதையைச் சொல்லி அதன் பழமையை நிறுவலாம்.
எனவே இன்று வரை கிடைத்திருக்கும் எழுதப்பட்ட மொழிகளைப் பற்றிய தரவுகளின் அடிப்படையில் தமிழ் உலகின் மூத்த மொழியில்லை என்று உறுதியாகக் கூற முடியும். முதல் இருபத்து ஐந்தில் கூட வருமா என்பது சந்தேகம்தான். தமிழ்மொழிதான் உலகில் முதலில் பேசப்பட்ட மொழி என்று சொல்லலாமா? சொல்லலாம். ஆனால் அது அறிவியல் பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்படாது. நமக்குள்ளே சொல்லிக் கொள்ள வேண்டியதுதான்.
இதே போன்று சமஸ்கிருதமும் உலகின் பழமையான மொழி என்று சொல்ல முடியாது.
இந்தியாவில் பேசப்பட்ட மொழிகள் எவை?
மொழிகளைப் பற்றிப் பேசும் முன்னால் நாம் ஒன்றைச் சொல்லியாக வேண்டும். பண்டைய வரலாற்றைப் பொறுத்த அளவில் சான்றுகள் என்று நமக்கு அளிக்கப்படுபவற்றில் பல எதையும் ஆணித்தரமாக நிறுவ உதவுவதில்லை. வேறு ஏதும் கிடைக்காததால் இவற்றைக் கட்டி அழ வேண்டியிருக்கிறது. இவற்றைப் போன்ற சான்றுகளை அறிவியற் துறைகளில் தொட்டுக் கூடப் பார்க்க மாட்டார்கள். எனவே சான்றுகள் கிடைத்து விட்டன, தமிழ் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மொழி, சமஸ்கிருதம் உலகிலேயே மூத்த மொழி என்றெல்லாம் சொல்லிக் கொண்டு மேலும் கீழும் குதிப்பது நகைப்பிற்குரியது. பெரும்பாலான சான்றுகள் இப்படி நடந்திருக்க வாய்ப்பு இருந்திருக்கலாம் என்று சொல்வதற்கு உதவியாக இருக்கின்றனவே தவிர, இப்படித்தான் நடந்தது என்று அறுதியாக நிறுவுவதற்கு உதவுவதில்லை. உலகம் முழுவதும் இதே கதை என்றாலும் இந்தியாவில் பண்டையக்காலத்தைக் குறித்து கிடைக்கும் சான்றுகள், எல்லோராலும் ஏற்கத்தக்க சான்றுகள் மிகவும் குறைவு. இந்திய வரலாற்றில் குறிப்பாக கால ஆராய்ச்சியும், மொழி ஆராய்ச்சியும், யார் எங்கிருந்து எங்கு சென்றார்கள் என்பது பற்றிய ஆராய்ச்சியும் பெரும்பாலும் ஊகங்களில் அடிப்படையிலேயே அமைந்திருக்கின்றன. அவை துறை வல்லுனர்களால் ஒப்புக்கொள்ளக் கூடிய ஊகங்களாக இருக்கலாம், அல்லது ஆமைகளைத் தொடர்ந்து தமிழன் உலகம் முழுவதும் சென்றான் போன்ற ஊகங்களாக இருக்கலாம்.
அறிவியல் என்ன சொல்கிறது?
தொல் இந்தியர்கள் என்று அறியப்படுபவர்கள் சுமார் 65000 ஆண்டுகளுக்கு முன்னால் இங்கு சேர்ந்தடைந்தவர்கள். ஆப்பிரிக்காவிலிருந்து கிளம்பியவர்கள். நம் மரபணுக்களில் ஐம்பதிலிருந்து அறுபது சதவீதம் மரபணுக்கள் தொல் இந்தியர்களைச் சார்ந்தவை என்று சோதனைகள் சொல்கின்றன. நமது பழங்குடி மக்களிடமிருந்து, தாங்கள் மிகவும் சுத்தமான பிராமணர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் வரை இது பொருந்தும்.
அறிவியல் சான்றுகளைக் கொண்டு வல்லுனர்கள் செய்யும் ஊகங்கள் என்ன?
இந்தியாவிற்கு வடமேற்கிலிருந்து வந்தவர்கள் (குறிப்பாக ஸக்ரோசியர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் –இரான், தென்கிழக்கு துருக்கி பகுதிகளைச் சேர்ந்தவர்கள்) தொல் இந்தியர்களுடன் கலந்து ஹரப்பா நாகரிகத்தை அமைத்தார்கள். இவர்களே தெற்கே வந்து இங்குள்ள தொல் இந்தியர்களுடன் கலந்து இன்று தென்னகத்தில் பரவலாக இருக்கும் தொல் தென்னிந்தியர்களாக (Ancestral South Indian) உருவானார்கள். இதே போன்று வட இந்தியாவிலும் இங்கிருப்பவர்களும் இன்று காகேசியர்கள், ஐரோப்பியர்கள், மத்திய ஆசியர்கள் என்று அழைக்கப்படுப்வர்களும் கலந்ததால் தொல் வட இந்தியர்களாக (Ancestral North Indians) உருவானார்கள். (இந்தியாவின் உயர்சாதி என்று அறியப்படுவர்களிடம் தொல் வட இந்தியர்களின் மரபணுக் கூறுகள் அதிகம் இருக்கின்றன, மற்றவர்களிடம் தொல் தென்னிந்தியர்களின் கூறுகள் அதிகம் இருக்கின்றன என்பதும் அறிவியல் பூர்வமாகத் தெரியவருகிறது).
இந்தச் செய்தி முக்கியமான ஒன்றைச் சொல்கிறது. திராவிடர்கள் என்று நாம் இன்று சொல்லிக் கொள்ளும் தொல் தென்னிந்தியர்களும் வந்தேறிகள் பரம்பரைதான். இவர்கள் முன்னால் வந்தார்கள். தொல் வட இந்தியர்கள் பின்னால் வந்தார்கள். அவ்வளவுதான்.
தொல் இந்தியர்கள் இந்தியாவிலிருந்து மற்ற இடங்களுக்கு பரவியிருக்க முடியாதா?
முடியாது என்றுதான் அறிவியற் தரவுகள் சொல்கின்றன. தொல் இந்தியர்களின் மரபணுக் கூறுகள் இந்தியாவிற்கு வெளியே அனேகமாக இல்லை.
இனி மொழிகளுக்கு வருவோம்.
இந்தியாவின் மக்கள் தொகையில் பெரும்பான்மையானவர்கள் பேசும் மொழிகள் இந்தோ ஐரோப்பிய மொழிகளைச் சார்ந்தவை. சுமார் இருபது சதவீத்த்தினர் திராவிட மொழிகளைப் பேசுகின்றனர். திராவிட மொழிகள் தொல் திராவிட மொழியிலிருந்து பிறந்தவை.
தொல் திராவிட மொழி எங்கிருந்து வந்தது?
தெற்கே வந்த தொல் தென்னிந்தியர்கள் தங்களோடு மொழியையும் கொண்டு வந்திருக்கலாம். சில ஆராய்ச்சியாளர்கள் இம்மொழி ஸாக்ரோசியப் பகுதியிலிருந்து வந்த்து என்று கருதுகிறார்கள். தொல் ஸாக்ரோசிய மொழி தொல் எலாமைட் மொழியாவும் தொல் திராவிட மொழியாகவும் பிரிந்தன. இதில் எலாமைட் மொழியிலிருந்து ப்ராஹுய் வந்தது (தொல் திராவிடத்திலிருந்து அல்ல). தொல் திராவிட மொழி தொல் வட திராவிட மொழியாகவும் தொல் தீபகற்பத் திராவிடமொழியாகவும் பிரிந்தது. குருக் மொழியும் மால்டோ மொழியும் (மேற்கு வங்காளம், ஜார்கண்ட் மாநிலங்களில் பேசப்படுபவை) தொல் வட திராவிட மொழியிலிருந்து பிறந்தன. தமிழ் போன்ற மொழிகள் தொல் தீபகற்ப திராவிட மொழியிலிருந்து பிறந்தன.
தொல் ஸார்கோசிய மொழி
|
தொல் எலாமைட் – தொல் திராவிடம்
| |
ப்ராஹூய் வட திராவிடம் – தீபகற்ப திராவிடம்
| |
குருக் மற்றும் தமிழ், தெலுங்கு
மால்டோ மற்றைய மொழிகள்
தமிழனின் மூதாதையர்களும் வெளியிலிருந்து வந்தவர்கள், தமிழ்மொழியின் தாய்மொழியும் வெளியிலிருந்து வந்ததுதான் என்று இம்மொழியியல் வல்லுனர்கள் சொல்கிறார்கள்!
வேத சமஸ்கிருதமும் வெளியிலிருந்து வந்ததுதான். வேத சமஸ்கிருதத்திற்கும் மூலமொழி இந்தோ-இரானியன் மொழி. இது அவெஸ்தா மொழியாகவும் வேத சமஸ்கிருதமாகவும் பிரிந்த்து என்று வல்லுனர்கள் கருதுகிறார்கள். சொல்லப்போனால் தமிழ் வெளியிலிருந்து வந்தது என்பதற்குக் கிடைத்திருக்கும் சான்றுகளை விட, சமஸ்கிருதம் வெளியிலிருந்து வந்தது என்பதற்குக் கிடைத்திருக்கும் சான்றுகள் அதிகம்.
சிந்துச் சமவெளி நாகரிகத்தின் மொழி என்ன?
சிந்துச் சமவெளி நாகரிகம் அல்லது ஹரப்பா நாகரிகம் இந்தியாவின் வடமேற்குப் பகுதிகளில் 2600-1900 BCE காலகட்டத்தில் தழைத்திருந்தது என்று வரலாறு சொல்கிறது. இன்றுவரை சிந்துச் சமவெளி நாகரிகத்தின் எழுத்துகள் என்ன சொல்கின்றன என்பதை யாராலும் அறிய முடியவில்லை. அது எழுத்துக்களே இல்லை, வெறும் வடிவங்கள்தாம் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். எழுதப் படிக்கத் தெரியாத மக்களிடையேயும் பெரிய நாகரிகங்கள் வளர்ந்து செழிக்க வாய்ப்பு இருக்கின்றன என அவர்கள் கருதுகிறார்கள். தமிழ் மொழியின் வரலாற்றை எழுதிய டேவிட் ஷுல்மான் அது திராவிட மொழியாக இருக்க முடியாது என்று கருதுகிறார். ஆனால் பல ஆராய்ச்சியாளர்கள் அது திராவிட மொழிகளில் ஒன்றாக இருக்கலாம் என்று கருதுகிறார்கள். அவர்களில் திரு ஐராவதம் மகாதேவன் ஒருவர்.
மகாதேவன் சொல்கிறார்.
1. சிந்துச் சமவெளி நாகரிகம் நகரத்தைச் சார்ந்தது; வேதகால ஆரிய நாகரிகம் மேய்ப்பர்கள் உலகத்தைச் சார்ந்தது
2. குதிரைகளே இல்லாதது, சிந்துச் சமவெளி நாகரிகம், ஆனால் வேதங்கள் குதிரைகளைப் பற்றியும் தேர்களைப் பற்றியும் பேசுகின்றன.
3. சிந்துச் சமவெளி முத்திரைகளில் புலிகள் காணப்படவில்லை. புலியைப் பற்றி எந்தப்பதிவும் ரிக்வேதத்தில் இல்லை.
இச்சான்றுகளால் சிந்துச் சமவெளி நாகரிகம் ஆரிய நாகரிகம் இல்லை என்று நிறுவலாம். ஆனால் அதன் மொழி திராவிட மொழி நிறுவ என்று அவர் கடைசிவரை முயன்றார். ஆனால் முடியவில்லை.
ராகிகடி (Rakhigarhi) என்ற இடத்தில் கிடைத்த ஹரப்பா காலத்திய எலும்புக்கூட்டின் மரபணுக் கூறுகள் ஸாக்ரோசிய விவசாயிகளுக்கும் ஹரப்பாவில் இருப்பவர்களும் இடையான கலப்பு என ஆராய்ச்சி நிறுவுகிறது என்று ‘பழங்காலத்திய இந்தியர்கள்’ புத்தகத்தில் டோனி ஜோசஃப் சொல்கிறார். ஊடகங்களும் உலகப்புகழ் பெற்ற ‘ஸயின்ஸ்’ (Science) பத்திரிகை ஆராய்ச்சிக் கட்டுரையை வெளியிடப் போகிறது என்ற செய்தியை வெளியிட்டன. ஆனால் பல மாதங்கள் ஆகியும் கட்டுரை வெளிவந்ததாகத் தெரியவில்லை. இல்லை, எலும்புக்கூடு ஆரிய எலும்புக்கூடுதான் என்று சிலர் சொல்லிக்கொண்டு அலைகிறார்கள்.
இதுவரை கிடைத்த சான்றுகளின் மூலம் சிந்து சமவெளி நாகரிகம் ஆரியர்கள் தொடர்பு இல்லாதது என்றோ, திராவிட நாகரிகத்திற்கு முன்னோடி என்றோ நிச்சயமாகச் சொல்லி விடமுடியுமா? சொல்ல முடியாது. இன்னும் தரவுகள் வேண்டும். ஆனால் அவ்வாறு ஊகிக்க முடியும். இதே போன்று சிந்துச் சமவெளி நாகரிகத்தின் மொழி என்ன என்பதையும் ஊகம்தான் செய்ய முடியும். ஐராவதம் மகாதேவன் செய்தது போல. அது தொல் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம்.
ஆனால் ஒன்றை இங்கு சொல்லியாக வேண்டும். சிந்துச் சமவெளி மொழி என்று சொல்லப்படுவது திராவிட குடும்பத்தைச் சேர்ந்த மொழி என்பது நிறுவப்பட்டாலும், சமஸ்கிருதம் அடங்கிய இந்தோ-ஐரோப்பிய குடும்பத்தைச் சார்ந்த பல மொழிகள், இதே காலகட்டத்தில் புழங்கி வந்திருக்கின்றன என்பதும் மறுக்க முடியாத உண்மை. ஊகங்களுக்கு அதிக இடம் கொடுக்க வேண்டிய தேவையே இல்லாமல் ஹிட்டைட் மொழியைச் சேர்ந்த கல்வெட்டுகள் படிக்கப்பட்டு விட்டன. எனவே தொல் திராவிட மொழி பழைய மொழியா அல்லது தொல் இந்தோ-ஐரோப்பிய மொழி பழைய மொழியா என்ற கேள்விக்கு உறுதியாக விடை கிடைப்பது கடினம்.
சிலர் சிந்துச்சமவெளி நாகரிகம் தோன்றும் முன்பே தொல் திராவிடமொழி பேசுபவர்கள் தெற்கே வந்தடைந்து விட்டார்கள் என்று கருதுகிறார்கள். மேய்ப்பர்களாக வந்த அவர்கள் பின்னால் விவசாயம் செய்யத் துவங்கியிருக்கலாம். இன்று வரை, சிந்துச் சமவெளியிலிருந்து தென்கோடி வரை Savannah Zone என்று அழைக்கக் கூடிய மேய்ச்சல் நிலங்கள் தொடர்ச்சியாக இருக்கின்றன.
எது எப்படியிருந்தாலும் தெற்கே இருந்து வடக்கே மொழிகள் சென்றிருக்கலாம் என்பதற்குச் சான்றுகள் அதிகம் இல்லை. வடக்கே இருந்து மொழிகள் தெற்கே வந்தன என்பதற்குச் சான்றுகள் இருக்கின்றன. எனவே ஒருவகையில் பார்க்கப்போனால் தமிழும் வடமொழிதான்.
வேதகால மொழி
சிந்துச் சமவெளி நாகரிக கால எழுத்துக்கள் என்று அறியப்படுபவைகளுக்குப் பின் இந்தியாவில் எழுத்துகள் மௌரியரகள் காலம் வரை கிடைக்கவில்லை. இடைவெளி சுமார் 1500 வருடங்களுக்கும் மேல் இருக்கலாம். இந்தக் காலகட்டத்தில்தான் வேதங்கள் வந்தன, ஆரியர்கள் இந்தியாவிற்கு வந்தார்கள் என்று சொல்லப்படுகிறது. வேதங்களில் மிகப்பழமையான ரிக்வேத்த்தின் காலம் சுமார் 3500 ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம் என்று வல்லுனர்கள் சொல்கிறார்கள். எழுதாக்கிளவியாக பல நூற்றாண்டுகள் இருந்த வேதங்களின் சமஸ்கிருதம் வரி வடிவத்தில் மிகவும் பின்னால் எழுதப்பட்டது. வேதம் எழுதப்பட்ட மிகப் பழைய ஏடுகள் இன்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கிடைத்திருக்கின்றன. ஆனால் வேதங்களையும் உபநிடதங்களையும் எதிர்த்துத் தோன்றிய மதங்களான பௌத்தமும், ஜைனமும் இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முந்தையவை என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அசோகரின் கல்வெட்டுகள் 2300 ஆண்டுகளுக்கு முந்தையவை. அவை பிராமணர்களைப் பற்றிப் பேசுகின்றன. மதங்களைப் பற்றிப் பேசுகின்றன. “.
வேதங்கள் எழுதப்பட்டவை சமஸ்கிருதத்தில். வேதகால சமஸ்கிருத்த்திற்கும் பின்னால் வந்த சமஸ்கிருதத்திற்கும் (பாணினியின் அஷ்ட்த்யாயிக்குப் பிறகு) வேறுபாடுகள் இருக்கின்றன. ஆனால் பின்னால் வந்த சமஸ்கிருதம் வேதகால மொழியிலிருந்து முற்றிலும தொடர்பற்றது என்று தற்குறிகள் மட்டுமே சொல்வார்கள். இரண்டிற்கும் பிரிக்க முடியாத, நெருங்கிய தொடர்பு இருக்கிறது. சமஸ்கிருதம் இந்தியாவில் குறைந்தது 3500 ஆண்டுகள் புழங்கி வந்திருக்கிறது. பெரிடேல் கீத் சொல்வது போல புத்த ஜாதகக் கதைகள் பிராமண ஆசிரியர்கள் பிராமண, க்ஷத்திரிய, வைசிய வகுப்புகளுக்குக் கல்வி கற்றுக் கொடுப்பதைப் பற்றிப் பேசுகின்றன. ராமாயண மகாபாரதக் கதைகள் புத்தர் காலத்திலேயோ அதற்குச் சற்று முன்போ வாய்மொழியாகப் புழங்கத் துவங்கி விட்டன என்று பல வரலாற்று ஆசிரியர்கள் கருதுகிறார்கள். மக்கள் வாழ்வோடு பின்னிப் பிணைந்த இக்கதைகளுக்கும் சமஸ்கிருத்த்திற்கும் உள்ள தொடர்பை நாம் ஒதுக்கி விட முடியாது. சமஸ்கிருத்த்திற்கு குறைந்தது 3500 வருடங்களுக்கு முன்பிருந்தே இலக்கியம் இருந்திருக்கிறது. பின்னால் பௌத்தர்களும் ஜைனர்களும் கூட சமஸ்கிருத மொழியில் தங்கள் படைப்புகளை எழுதத் துவங்கினார்கள்
இனி பிராகிருதத்திற்கு வருவோம்.__________________


Guru

Status: Offline
Posts: 23907
Date:
Permalink  
 

பிராகிருத மொழி
பிராகிருதத்திற்கும் சமஸ்கிருதத்திற்கும் இடையிலேயும் பிரிக்க முடியாத தொடர்பு இருக்கிறது. சிலர் பிராமணர்கள் பயன்படுத்திய மொழியான சமஸ்கிருதத்திற்கு எதிராக ஜைனர்களும் பௌத்தர்களும் படைத்த மொழி என்று பிராகிருதத்தைக் கருதுகிறார்கள். சிலர் பிராகிருதம்தான் மக்கள் பேசும் மொழியாக இருந்தது, அதிலிருந்துதான் பின்னால் வந்த சமஸ்கிருதம் பிறந்திருக்க முடியும் என்கிறார்கள். ஆனால் யாரும் பிராகிருதத்திற்கும் சமஸ்கிருதத்திற்கும் உறவே கிடையாது என்று சொல்லவில்லை. பிராகிருதம், சமஸ்கிருதம் இரண்டும் வேத சமஸ்கிருதத்தின் வயிற்றில் பிறந்த குழந்தைகள் என்பதுதான் உண்மை. எழுதுவதற்கு இரு மொழிகளும் பல நூற்றாண்டுகளுக்குப் பயன்படுத்தப் பட்டன. நாட்டிய சாஸ்திரம் எழுதிய பரத முனிவர் மூன்று மொழிகளை அடையாளப்படுத்துகிறார்; சமஸ்கிருதம், பிராகிருதம் மற்றும் தேசபாஷா (பிராந்திய மொழி). தண்டியின் காவியதர்சம் எழுதும் முறைகளில் (koines) நான்கு பிரிவுகளை அடையாளம் காண்கிறது; சமஸ்கிருதம், பிராகிருதம், அபப்ரம்சம் மற்றும் எல்லாம் சேர்ந்த கலவை.
ஷெல்டன் போலாக் இன்னும் தெளிவாகச் சொல்கிறார்: எழுத்தறிவு வந்த நான்கு நூற்றாண்டுகளுக்கு, கல்வெட்டுகள் போன்றவை ஆவணங்களைப் பதிவு செய்வதற்காகவே பயன்படுத்தப்பட்டன. இலக்கியத்திற்காக அல்ல. அதனால் அவை சமஸ்கிருதத்தில் எழுதப்படமால் பிராகிருத்த்தில் எழுதப்பட்டன. அன்றையக் கலாச்சாரப் பழக்கம் அவ்வாறாக இருந்தது.
உதாரணமாக, இன்று கவிதையில் எழுதப்பட்ட ஒரு அரசு அறிவிப்பையோ அறிக்கையையோ காட்ட முடியுமா? வடமொழி அன்று இலக்கியத்திற்கு மட்டுமே சொந்தமான மொழியாக இருந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. பிராகிருதம் உரைநடைமொழி. பின்னால் இப்பழக்கம் மாறி சமஸ்கிருத்த்திலும் கல்வெட்டுகள் வரத் துவங்கின.
சமஸ்கிருத வரிவடிவம்
வேதங்கள் வாய்வழியாக வந்ததால் வேத சமஸ்கிருத மொழிக்கு இலக்கணம் கிடையாது என்று எடுத்துக் கொள்ள முடியாது. அப்படியிருந்திருந்தால் அது என்ன சொல்கிறது என்பதை இன்று யாராலும் புரிந்து கொள்ள முடியாது. வாய்மொழிக்கும் இலக்கணம் தேவை. வாய்மொழிக்கு ஒலியியல், மொழியியல், சொற்கள், பேசும் முறை, வழக்கு போன்றவை எவ்வளவு தேவையோ அவ்வளவு இலக்கணமும் தேவை. ஒரு குழந்தை மொழியைப் படிக்கத் தெரியாமலேயே அதைத் தெளிவாகப் பேசிப் புரிந்துக் கொள்வதன் காரணம் இதுதான்.
பாணினிக்கும் பின் வந்த சமஸ்கிருதம் எந்த வரிவடிவத்தில் எழுதப்பட்டது?
முதலில் கரோஷ்டியில் (வலது பக்கத்திலிருந்து இடதுபக்கம் எழுதப்பட்ட வடிவம்); பின்னால் பிராமியில். பிராமியில் எழுதப்பட்டபோது, அசோகன் பிராமி, குஷான பிராமி, மற்றும் குப்தா பிராமி என்ற மூன்று வரிவடிவங்களில் எழுதப்பட்டது. குப்தபிராமி, சப்தமாத்ரிகா என்ற வரிவடிவமாக மாறியது. அதிலிருந்து தற்போது இருக்கும் தேவநாகரி பிறந்தது.
35 லட்சத்திற்கு அதிகமான ஏடுகளும் பழைய காலத்து ஆவணங்களும் இன்று இந்தியாவில் பாதுகாக்கப்படுகின்றன. அவற்றில் மூன்றில் இரண்டு சமஸ்கிருதத்தில் இருக்கின்றன. சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட மிகப்பழைய ஏடுகள் இன்றைக்கு ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் முந்தையவை (கில்கிட் ஏடுகள்). சமஸ்கிருதம் பல இடங்களில் பல வரிவடிவங்களில் எழுதப்பட்ட காரணம், அது இந்தியா முழுவதும் பரவியிருந்ததால்தான். தென்னகத்தில் கிரந்தத்தில் எழுதப்பட்டதற்கும், வடநாட்டில் தேவநாகரியில் எழுதப்பட்டதற்கும், காஷ்மீரத்தில் சாரதாவில் எழுதப்பட்டதற்கும் காரணம் அந்தந்த பகுதியினர் எளிதாகப் படித்துப் புரிந்து கொள்வதற்காக.
தமிழ்க் கல்வெட்டுகள்
தமிழ்மொழிக்கு வரிவடிவம் எவ்வாறு வந்தது?
தமிழ் மொழியியல் வல்லுனரான ஐராவதம் மகாதேவன் அது பிராமியிலிருந்து பிறந்தது என்கிறார். (பிராமி எழுத்துக்களே இந்தியாவிற்கு வெளியிலிருந்து வந்தவை என்று சிலர் சொல்கிறார்கள்). தமிழில் எழுதுவதற்கு வசதியாக அசோகர் காலத்திய பிராமியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு அது தமிழ் பிராமி என்று (அல்லது தமிழி) என்று அழைக்கப்பட்டது. இதற்குப் பிறகு வட்டெழுத்து வந்தது. பின்னால் இப்போது நாம் எழுதும் வரிவடிவம் வந்தது.
பேராசிரியர் ராஜன் போன்றவர்கள் பொருந்தல், கொடுமணல் போன்ற இடங்களில் கிடைத்திருக்கும் பானையோடுகளில் எழுதப்பட்டிருக்கும் வடிவங்களின் அடிப்படையில் தமிழ் பிராமி அசோக காலத்திய பிராமிக்கு முந்தையது என்கிறார்கள். ஆனால் ஹாரி ஃபால்க் போன்ற இந்தியவியலாளர்கள் அதை வலுவாக மறுக்கிறார்கள்.
நமக்கு இதுவரையில் கிடைத்திருக்கும் தமிழ் பிராமிக் கல்வெட்டுகளின் (பானைகளில் எழுதப்பட்டிருப்பவற்றைத் தவிர – பானைகளிலும் முழு வாக்கியங்கள் கிடைக்க வாய்ப்புகள் குறைவு) கால இடைவெளி சுமார் அறுநூறு ஆண்டுகள். – முதல் கல்வெட்டு –இன்றைக்கு சுமார் 2200 ஆண்டுகளுக்கு முன்னால் செதுக்கப்பட்டது. கடைசிக் கல்வெட்டு இன்றைக்கு 1600 ஆண்டுகளுக்கு முன்னால். இவற்றில் செதுக்கப்பட்டவை எல்லாவற்றையும் ஒரே பக்கத்தில் எழுதி விடலாம். அதாவது அறுநூறு வருடங்களில் எழுதப்பட்டவற்றை ஒரே பக்கத்தில் அடைத்து விடலாம். எல்லாம் ஓரிரண்டு வரிகள்தாம். இவற்றில் பெரும்பாலானவை பெயர்கள். பல பிராகிருதச் சொற்களும் காணப்படுகின்றன.
மாறாக அசோக காலத்திய பிராமி கல்வெட்டுகள் விரிவானவை. பெரிய தூண்களிலும் பாறைகளிலும் பதிவு செய்யப்பட்டவை. அவை நமக்கு வரலாற்றைத் தருகின்றன. அன்றைய சமூகத்தின் வாழ்க்கை முறையைத் தெரிவிக்கின்றன. அவை பண்டைய இந்தியா முழுவதும் பரவிக் கிடக்கின்றன. எனவே தமிழ் பிராமியிலிருந்துதான் அசோகன் பிராமி பிறந்தது என்று சொல்வதற்கு இப்போது கிடைத்திருக்கும் தரவுகள் போதாது. இன்னும் வலுவான தரவுகள் வேண்டும்.
மேலும் தமிழகத்தில் கிடைத்திருக்கும்‘முழுமையான’ கல்வெட்டுகள் பல்லவர்கள் காலத்தில் துவங்குகின்றன். துவக்க காலத்தில் அவை அனைத்தும் பிராகிருதத்தில் இருக்கின்றன. மிகவும் பின்னால்தான் தமிழ் வருகிறது. தமிழகத்தில் முழுமையாகத் தமிழில் கிடைத்திருக்கும் கல்வெட்டு பூலான்குறிச்சிக் கல்வெட்டு என்று சொல்ல்லாம். பொ. ஆ. ஐந்தாம் நூற்றாண்டைச் சார்ந்த வட்டெழுத்துக் கல்வெட்டு.
ஆனால் இதற்கு முன்னாலேயே முழுமையான சமஸ்கிருதக் கல்வெட்டுக்கள் இந்தியா முழுவதும் கிடைக்கத் துவங்கி விட்டன. பொ. ஆ இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த கிர்னார் கல்வெட்டு ஓர் உதாரணம்..
கீழடி
தாங்கள் மிகப்பெரிய நாகரிகத்தின் வாயிலில் நின்று கொண்டிருக்கிறோம் என்பதை அறிந்த பின்பும், மொகஞ்சதாரோவில் அகழ்வாராய்ச்சி செய்த மார்ஷல் முதன்முதலாக பொதுமக்களிடம் அதைப் பற்றி அறிவிக்கும் போது சொன்னது இது: அகழ்வாராய்ச்சிக்காரர்களுக்கு… மிகப்பெரிய, மறக்கப் பட்ட நாகரிகத்தை கண்டுபிடிக்கும் வாய்ப்பு எளிதில் கிடைப்பதில்லை. ஆனால் இப்போது எங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று தோன்றுகிறது. இப்படித்தான் உண்மையான அகழ்வாராய்ச்சியாளர்கள் பேசுவார்கள். புதைந்து போய்விட்ட நாகரிகத்தின் சுவடுகள் அவ்வளவு எளிதாகக் கிடைத்து விடாது.
உலகத்தின் பெருநதிக் கரைகளில் பண்டையக்கால நாகரிகங்கள் அமைந்திருந்தன என்பது நமக்குத் தெரிந்ததே . யூஃப்ரடிஸ்-டைக்ரிஸ் நதிகள், நைல் நதி, சிந்து நதி, மஞ்சள் நதி யாங்ஸே போன்ற நதிகள் மற்றும் அவற்றின் கிளை நதிகள் நனைக்கும் பகுதிகளில் நாகரிகங்கள் பல நூற்றாண்டு காலங்களாக செழித்து வளர்ந்திருக்கின்றன.
இவை ஏன் பெருநதிக்கரைகளிலேயே அமைந்திருந்தன?
இவற்றிற்குத் தேவையானவை விளைச்சல் நிலங்கள் மற்றும் பெருநகரங்கள். கூடவே இவற்றை உருவாக்குவதற்கான தொழில் நுட்பமும் தேவை. இந்நாகரிகங்கள் தொடர்ந்து வளரத் தேவையானவை: மக்கள் திரள், அவர்கள் சேர்ந்து வாழவகை செய்யும் சமுதாய அமைப்பு மற்றும் பண்டங்களைப் பரிவர்த்தனை செய்து கொள்ள வகை செய்யும் வணிக அமைப்பு. மேலும் தேவையானவை வளர்ச்சி பெற்ற எழுத்து முறை, கணிதம், பருவநிலைகளைக் கணிக்கக் கூடிய வானவியல் திறமை, நாட்காட்டிகளை அமைக்கக் கூடிய திறமை, தண்ணீர் வசதி, மக்கள் கூடும் பொதுக் கட்டிடங்கள், விரைவாகப் பயணம் செய்யக்கூடிய சாதனங்கள், தெருக்கள் போன்றவை. இவற்றில் பெரும்பாலானவை இருந்தாலும் விவசாயத்திலும் வணிகத்திலும் தொடர்ந்து உபரி வருமானம் கிடைத்தால் மட்டுமே நாகரிகம் பல நூற்றாண்டுகள் செயற்பட முடியும். மேலே சொல்லப்பட்ட. பெருநதிகளும் அவற்றின் கிளைகளும் நனைக்கும் பகுதிகள் பரந்து பட்டவை. அதனால்தான் இந்நாகரிகங்களுக்கு உபரி வருமானம் தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருந்தன.. சிறுநதிக்கரைகளில் இது போன்ற நாகரிகம் அமைந்து பன்னூறாண்டுகள் தொடர்வது அரிதினும் அரிதானது.
.
கீழடி வைகை நதியோரத்தில் இருக்கிறது. வைகை நதி நனைக்கும் பகுதிகளின் பரப்பளவு, 7000 சதுர கிலோமீட்டர்கள். சிந்து நதி நனைக்கும் பகுதிகளின் பரப்பளவு 1,165,000 சதுர கிலோமீட்டர்கள். சிந்து நதி வற்றாத நதி. வைகை வானம் பார்த்த நதி. எனவே வைகைக்கரையில் நாகரிகம் ஒன்று பிறந்து அது பல நூற்றாண்டு தொடர்ந்து நீடித்திருந்த வாய்ப்புகள் மிகக் குறைவு. மேலும் கீழடியில் இதுவரை தோண்டப்பட்டிருக்கும் நிலப்பரப்பளவு மிகவும் குறைவானது. கிடைத்திருப்பவையும் மிகவும் அதிகமானவை என்று சொல்ல முடியாது. இதுவரை கிடைத்திருப்பற்றை வைத்துக் கொண்டு எந்த அகழ்வாராய்ச்சியாளரும் அறுதியான முடிவிற்கு வர முடியாது – நகரம் ஒன்று தமிழகத்தில் சுமார் 2200 ஆண்டுகளுக்கும் முன்னால் இருந்திருக்கக் கூடியதற்கான தடயங்கள் சில கிடைத்திருக்கின்றன என்பதைத் தவிர. ஆனால் நம் ஊடகங்கள் அலறத் துவங்கி விட்டன. இந்து Keezhadi excavation leads to ancient civilization on the banks of Vaigai என்ற தலைப்பில் செய்தியை வெளியிட்டது. அரைகுறை அரசியல்வாதிகளும் எழுத்தாளர்களும் ஏதோ தமிழகத்தின் வரலாற்றில் புதிய திருப்பம் நிகழ்ந்து விட்டது என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். தமிழனுக்குத்தான் சிந்துச்சமவெளி நாகரிகம் சொந்தம், அதன் தொடர்ச்சிதான் கீழடி என்றும் சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
உண்மை என்ன?
சிந்துச் சமவெளி நாகரிகத்திற்கு கீழடிக்கும் இடையே குறைந்த்து 1800 ஆண்டுகள் இடைவெளியிருக்கின்றன. சிந்துச் சமவெளி நாகரிகம் வெங்கலக் காலத்தைச் சார்ந்த்து. கீழடி இரும்பு யுகத்தைச் சார்ந்தது. சிந்துச் சமவெளிக்கும் தமிழகத்திற்கும் இடையே பெரிய நிலப்பரப்பு இருக்கிறது. அங்கிருந்து இங்கு ஆகாயத்தில் பறந்து வந்து குதித்து விட முடியாது. தமிழகத்தில் கிடைத்தது போல, இடைப்பட்ட நிலப்பரப்புகளிலும் தோண்டினால் அடையாளங்கள் கிடைக்கலாம் – சிந்துச்சமவெளியிலிருந்து மக்கள் தமிழகத்திற்கு வந்தடைந்திருந்தால். மேலும் முன் சொன்னது போல நிலத்திலிருந்து உபரி வருமானம் கிடைத்து அதன் மூலம் பெரிய நகரங்களையும் பெரிய நாகரிகத்தையும் நிறுவுவதற்கு முக்கியமாகத் தேவையான இரண்டு. ஒன்று பெரிய மக்கள் தொகை. இரண்டாவது நிலம். சங்ககாலத் தமிழகத்தில் விவசாயம் பெருமளவில் நடந்திருக்க வாய்ப்பு இல்லை. காவிரி, வைகை, தாமிரபரணி நதிகளின் ஓரப்பகுதிகளைத் தவிர மற்றைய இடங்களில் காடுகள்தாம் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தன. மக்கள் தொகையும் அதிகம் இருந்திருக்க முடியாது. நெல் பயிரிட்டு பலன் காண்பதற்கு கடுமையாக உழைக்க வேண்டும். அதற்கு பெருத்த மக்கள் தொகை அவசியம். எனவே இவற்றிலிருந்து உபரி வருமானம் அதிகம் கிடைத்திருக்க முடியாது.

காட்டைத் திருத்திக் கழனியாக்கும் வேலை பெருமளவிற்கு நடந்தது பல்லவர், சோழர் காலத்தில் தான். கரஷிமா பெரிய ஏரிகளை அமைப்பதற்குத் தேவையாக இருந்த தொழில் நுட்பம் பல்லவர் காலத்திற்கு பிறகே வந்தது என்கிறார். மதகு போன்ற சொற்கள் கல்வெட்டுகளில் இடம் பெற்றது இந்தக் கால கட்டத்தில்தான் என்றும் அவர் சொல்கிறார். வியாபரம் சங்ககாலத்தில் நடந்தது என்றாலும், வியாபாரத்தையும் விவசாயத்தையும் சொந்தக்காரக் குழுக்களே நடத்தின, பெரிய அளவில் இரண்டும் வர்க்க அடிப்படையில் நடக்கத் துவங்கியது சங்ககாலத்திற்கு பின்புதான் என்று வல்லுனர்கள் கருதுகிறார்கள். எனவே வியாபாரத்திலிருந்தும் பெரிய உபரி வருமானம் கிடைத்திருக்க வாய்ப்பில்லை.
நமக்கு எழும் கேள்வி கீழடி தமிழர்களின் பெருமையை அறிவிக்கிறதா, இல்லையா என்பதாகத்தான் இருக்க வேண்டும். நிச்சயம் அது தமிழர்களின் பெருமையை அறிவிக்கிறது. குறைந்த இயற்கை வளங்களை வைத்துக் கொண்டு, தளராமல் கடுமையாக உழைத்து முன்னேறிய தமிழர்களின் அடையாளம் அது. அங்கு உலகையோ, இந்தியாவையோ உலுக்கும் அடையாளங்கள் ஏதும் கிடைக்கத் தேவையில்லை. நமது முன்னோர்கள் எப்படி வாழ்ந்தனர் என்பதை நமக்குக் காட்டுவதால் அது நமக்கும் இந்தியாவிற்கும் மிக முக்கியமானது. எனவே கீழடியை அணுகும் போது அது நமது என்ற உணர்வோடு நிச்சயம் அணுக வேண்டும். ஆனால் அது நமது என்பதாலேயே அதற்கு ஈடு இணை ஏதும் வேறு எங்கும் இல்லை என்ற கட்டாயம் இல்லை. அதைச் சிந்துச் சமவெளி நாகரிகத்தோடு உடனடியாகக் கோர்த்து விட அரசியல் கட்டாயங்களைத் தவிர எந்தக் கட்டாயமும் இல்லை.
முடிவாக…
தமிழ் ஐயாயிரம் ஆண்டுகள் பழமையானதா? தமிழ் பத்தாயிரம் ஆண்டுகள் பழமையானதாகக் கூட இருக்கலாம். ஆனால் நமக்கு இதுவரை அதற்குச் சான்றுகள் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை. தமிழின் பழமையைப் பின்னுக்குத் தள்ளி இன்றுவரை தரப்பட்டிருக்கும் சான்றுகள் முகநூலிலும், வாட்ஸப்பிலும், குறுங்குழுக்களிலும், அறிவு சார்ந்த எதனுடனும் சிறிது கூடத் தொடர்பே இல்லாத ஊடகங்களிலும், சில பல்கலைக்கழங்களில் பேராசிரியர்கள் என்று சொல்லிக் கொண்டு அலைபவர்கள் மத்தியிலும், அரசியல் வட்டங்களிலும் செல்லுபடியாகும். ஆனால் உண்மையான அறிஞர்கள் நிச்சயம் புறந்தள்ளி விடுவார்கள்.
சமஸ்கிருதத்தைத் தூக்கிப் பிடித்து தேவபாஷை, அபௌருஷேயம் (மனிதர்களால் செய்யப்படாதது) என்று சொல்பவர்களுக்கும் இதே செய்திதான். .
தமிழிலேயே மிகப்பழமையான நூல் தொல்காப்பியம் என்று கூறப்படுகிறது. இல்லை என்பதற்கு பல சான்றுகள் இருக்கின்றன. பெரும்பாலான அறிஞர்கள் அதை பொ.ஆ ஐந்தாம் நூற்றாண்டிற்கும் பின்னால் தள்ளுகிறார்கள். அதை மிகப் பழைய நூலென்றே வைத்துக் கொண்வோம். அதுவும் வடசொற்களைக் குறிப்பிடுகிறது. “வடசொற் கிளவி, வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா குமே” என்கிறது. வடசொல் என்பது, சமஸ்கிருதம், பிராகிருதம், பாலி ஆகிய மொழிகளின் சொற்களைக் குறிக்கும் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். தொல்காப்பியரே ‘ஐந்திரம் நிறைந்தவர்’ என்று அழைக்கப்படுகிறார். ஐந்திர வியாகரணம் சமஸ்கிருத இலக்கண வகைகளில் ஒன்று. தொல்காப்பியம் பிராமணர்களின் வாழ்க்கை முறை பற்றிப் பேசுகிறது. ‘அறுவகைப் பட்ட பார்ப்பனப்பக்கம்’ என்கிறது. வேதங்களை ஓதுதல், ஓதுவித்தல், வேட்டல் (யாகங்களைச் செய்தல்) வேட்டுவித்தல், ஈதல், ஏற்றல் என்பவை அறுவகை என அறியப்படுகின்றன. இரண்டாயிரத்து இருநூறு ஆண்டுகள் பழமையான சங்க இலக்கியத்திலும் வேதங்களைப் பற்றிய குறிப்புகள் வருகின்றன. “ஆன்ற கேள்வி அடங்கிய கொள்கை நான்மறை முதல்வர்” என்பது ஓர் உதாரணம். மிகப் பழமையான கல்வெட்டுகளிலும் வடமொழிகள் இயல்பாகக் கையாளப்படுகின்றன. பூலான்குறிச்சிக் கல்வெட்டும் – முழுமையாகத் தமிழில் கிடைத்த முதற் கல்வெட்டு – தேவகுலத்தையும், தாபதப்பள்ளியையும் (தவம் செய்பவர்கள் இருக்கும் இடம்) பிரம்மச்சாரிகளையும் குறிப்பிடுகிறது.
தமிழுக்கும் வடமொழிகளுக்கும் இடையே உள்ள உறவு தமிழ் வரலாறு எவ்வளவு பழமையானதோ அவ்வளவு பழமையானது. உண்மைகளின் வெளிச்சத்தில் இம்மொழிகளைப் பார்த்தால் அவற்றின் இணக்கம் நமக்குத் தெளிவாகத் தெரியும். முரண்களும் இருந்தன. இவை இருந்ததால்தான் தமிழ் மொழி வளர்ந்து ஓங்க முடிந்தது. சமஸ்கிருதம் பேச்சு மொழியல்ல என்று சொல்வதும், சங்கத் தமிழ்மொழி பேச்சு மொழியல்ல என்று சொல்வதும் ஒன்றுதான். தற்காலத்தமிழோடு சங்கத்தமிழ் எவ்வாறு பிரியாமல் இணைந்திருக்கிறதோ, அதே போன்று சமஸ்கிருதமும் இந்தியாவின் மொழிகளோடு பிரியாமல் இணைந்திருக்கிறது.
“எவன் தன் மதத்தைப் பற்றி, அதன் மீது கொண்டிருக்கும் அதீதமான பற்றினால், மிகவும் உயர்வாகப் பேசுகிறானா, மற்ற மதங்களை இழிவு செய்கிறானோ.. அவன் தன் மதத்திற்குத் தீங்கே இழைக்கிறான்” என்று அசோகரின் கிர்னார் கல்வெட்டுச் சொல்கிறது.
மதங்களுக்குச் சொல்வது மொழிகளுக்கும் பொருந்தும்.
பி ஏ கிருஷ்ணன்

Bibliography
A little Book of Language, David Crystal, 2010
Indian Epigraphy, Richard Salomon, 1998
A History of Ancient and Medeival India, Upinder Singh 2017,
A concise History of South India, Noburu Karashima, 2014
Early Indians, Tony Joseph, 2018
Rice in Dravidian (paper), Franklin Southworth, 2011
Owner’ graffiti on Pottery from Tissamah, Harry Falk, 2010
Indus Valley Fantasies: Political Mythologies, Academic Careerism, and the Poverty of Indus Studies Steve Farmer and Michael Witzel, 2010
Edicts of King Ashoka: Ven S Dhammika, 1993
history of Sanskrit A Berriedale Keith, 1928

The language of Gods in the world of men, Sheldon Pollock, 2006
Tamil, A biography, David Shulman
Early Tamil Epigraphy, I Mahadevan, 2003
Speaking of Sanskrit, Bibek Debroy, 2016
Critical role of oral language in Reading – Elizabeth Brooke, 2018
Mirror of Tamil and Sanskrit, R Nagaswamy, 2012
Situating the beginning of early historic times in Tamil Nadu: some issues and reflections, K. Rajan, 2008__________________


Guru

Status: Offline
Posts: 23907
Date:
Permalink  
 

கீழடி – சில முக்கியமான கேள்விகள்

தமிழில் ஒரு கதை உண்டு. அரசகுமாரியின் ஒரு தலைமயிர் இழையை வைத்துக் கொண்டு அரசகுமாரன் ஒருவன் அவர் படத்தை தத்ரூபமாக வரைந்தான் என்று. இன்று கீழடி அந்த அரசகுமாரியின் நிலையில் இருக்கிறது. 2500 ஆண்டுகளுக்கு முன்னால் அது எப்படியிருந்தது என்பதை தற்காலத் தமிழ் அரசகுமாரர்கள் – வரலாற்றோடோ, அகழ்வாராய்ச்சியோடோ எந்தத் தொடர்பும் இல்லாதவர்கள்- வரையத் தொடங்கியிருக்கிறார்கள். எந்த லட்சணத்தில் அவை இருக்கின்றன என்பதைச் சொல்லவே வேண்டாம்.
தனது தரப்பிலிருந்து கீழடியை பற்றி தமிழக அரசு ஒரு புத்தகத்தை தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிட்டிருக்கிறது. அதில் இருக்கும் ஆதாரங்களை எடுத்துக் கொண்டு இக்கட்டுரையை எழுதுகிறேன்.

கீழடி தனித்தன்மை வாய்ந்ததா?

தமிழ் திராவிட, அரைகுறை மார்க்சிய வெறியர்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம்; ஆனால் கீழடி சிந்துச் சமவெளி நாகரிக காலத்திலிருந்து தொடர்ந்து வரும் இந்திய நாகரிகப் பெரும்பரப்பில் ஒரு சிறிய பகுதி. தமிழ் நாட்டிற்கு வடக்கிலிருந்து குடியேறுதல் 1500 BCEயில் இருந்து தொடர்ந்து கொண்டிருக்கிறது. அவர்கள் இங்குள்ளவர்களோடு கலந்து படைத்தவைகளில் வடக்கு-தெற்கு கலவை நிச்சயம் இருக்கும். கீழடியில் கிடைத்திருக்கும் கறுப்பு சிவப்பு பானை, சிந்துச் சமவெளியிலும் கங்கை மற்றும் வட இந்தியப் பிரதேசத்திலும் கிடைத்திருப்பது தற்செயலல்ல. கண்ணாடி மணிகளும் பல இடங்களில் கிடைத்திருக்கின்றன. தமிழகத்தில் இடுகாடு அல்லாத இடம் ஒன்றில் முக்கியமான பொருட்கள் கிடைத்திருப்பது கூட இது முதல் முறை அல்ல. காவிரிப்பூம் பட்டினம், அரிக்கமேடு போன்ற இடங்களிலும் கிடைத்திருக்கின்றன. இந்தியாவிலும் இது போன்று பல இடங்கள் இருக்கின்றன. கீழடி தனித்தன்மை வாய்ந்தது அல்ல.

கீழடி நகர, நதி நாகரிகத்தைச் சேர்ந்ததா?

இதைப் பற்றி நான் முன்பே எழுதியிருக்கிறேன். கிடைத்திருக்கும் ஆதாரங்கள் போதாது. மிருகங்களில் எலும்புகள் கிடைத்திருக்கின்றன. மனிதன் தொடர்ந்து வாழ்ந்திருக்கும் தடயங்கள் கிடைக்கவில்லை. வீடுகள் இல்லை. தெருக்கள் இல்லை. இடம் பானை வனையும் இடமாக இருந்திருக்கலாம். ஆனால் அது ஆறாம் நூறாண்டு BCEல் இயங்கி கொண்டிருந்தது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் நகர, நதி நாகரிகத்தைச் சேர்ந்தது கீழடி என்று சொல்ல இன்னும் ஆதாரங்கள் தேவை.

கரிமப்பகுப்பாய்வு – என்ன சொல்கிறது?

இதற்கு முன் கீழடியில் அகழ்வு எவ்வாறு நிகழ்ந்தது என்பதைப் பற்றிய புரிதல் இருக்க வேண்டும். தோண்டியதை மூன்று அடுக்குகளாகப் பிரித்துக் கொண்டார்கள். முதல் அடுக்கு காலத்தில் மிகப் பிந்தைய அடுக்கு. அதன் பண்பாட்டுக் காலம் கி.பி. நான்காம்-ஐந்தாம் நூற்றாண்டிகளிலிருந்து கி.பி. 11-12 நூற்றாண்டுகள் வரை. அதற்கு அடுத்த நடு அடுக்கின் பண்பாட்டுக் காலம் கி.மு மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி நான்காம் -ஐந்தாம் நூற்றாண்டுகள் வரை. கடைசி அடுக்குத்தான் மிகப் புராதன அடுக்கு. அதன் பண்பாட்டுக்காலம் கி.மு ஆறாம் நூற்றாண்டிலிருந்து கி.மு. மூன்றாம் நூற்றாண்டு வரை. எனவே கீழடியில் கிடைத்திருக்கும் பொருட்களின் காலம் கி.மு. ஆறாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 12ம் நூற்றாண்டு வரை இருக்கலாம். கால இடைவெளி 1800 ஆண்டுகள். இதை நான் சொல்லவில்லை. அகழ்வாராய்ச்சியாளர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
இப்போது கரிமப் பகுப்பாய்விற்கு வருவோம்.
பல தளங்களில் கிடைத்த கரித்துண்டுகளை கரிமப்பகுப்பாய்வு செய்து அதில் ஒன்றின் வயது 580 BCE என்று கண்டுபிடித்திருக்கிறார்கள் . இவ்வயது ஆராய்ச்சி செய்யப்பட்ட கரித்துண்டுகளுக்கு மட்டுமே பொருந்தும். அதாவது மரம் கரியாக மாறியது 580 BCE என்பதை மட்டும்தான் அது சொல்கிறது. சுற்றியுள்ள எந்தப் பொருட்கள் மீதும் அதை ஏற்ற முடியாது. இந்தத் தகவலை வைத்துக் கொண்டு அருகே கிடைத்த பானைத் துண்டுகளின் வயதும் அதுதான் என்று சொல்ல முடியாது. மேலும் பானையின் வயதும் பானைக்கீறல்களின் வயதும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் இல்லை. பானைகளை பல ஆண்டுகள் பத்திரமாகப் பாதுகாக்க முடியும். அதுவும் சடங்குகளுக்காக ஒதுக்கப்பட்ட பானைகளாக இருந்தால்.

பிராமி பானைத்துண்டுகளின் காலம் என்ன?

பதினொன்று இடங்களில் அகழ்வாய்வுக் குழிகள் வெட்டப்பட்டன. அதில் A3/2 குழியில் மேல்பகுதி பானை ஓடுகளால் நிரப்பப்பட்டிருந்தன. வண்டி வண்டியாக எடுத்துச் செல்ல வேண்டியிருந்தது என்று ஆங்கிலக்குறிப்பு சொல்கிறது. தளம் மேலும் கீழுமாக மாறி விட்டது என்றும் சொல்கிறது. எனவே கீழடியில் கிடைக்கும் பானைத் துண்டுகளின் காலத்தை மதிப்பிடுவது கடினம். பிராமி எழுத்துக்கள் கொண்ட பானை ஓடுகள் எந்த அடுக்கில் கிடைத்தன என்பதைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. அவை கடைசி அடுக்கில் கிடைத்திருந்தாலும் அதன் கால கட்டம் பொது ஆண்டுக்கு முன் ஆறாம் நூற்றாண்டு என்று சொல்ல முடியாது. அதிக பட்சமாக அதன் காலம் கிமு ஆறாம் நூற்றாண்டிலிருந்து கிமு மூன்றாம் நூற்றாண்டு வரை என்று சொல்லலாம். அப்படிச் சொல்வது கூடக் கடினம்.

சிந்துச் சமவெளி நாகரிகத்திற்கும் கீழடிக்கும் தொடர்பு இருக்கிறதா?

சிந்துச் சமவெளி நாகரிகத்திற்கு பின்வந்த எந்த இந்தியக்கலாச்சாரங்களுக்கும் அதோடு ஒரு இழையால் இணைக்கப்பட்டிருக்க வாய்ப்பிருக்கிறது. இதனால் கீழடி சிந்துச் சமவெளி நாகரிகத்தோடு நேரடியாக இணைந்திருக்கிறது என்ற பொருள் அல்ல. அங்கிருந்தவர்கள் இங்கு நேரடியாக வந்து குதிக்கவில்லை. கீழடியில் கிடைக்கும் பானைக் கீறல்களை சிந்துச் சமவெளி நாகரிகத்தில் கிடைத்திருக்கும் குறியீடுகளோடு ஒப்பிடுவது பரிதாபகரமானது. அறிவிற்குப் புறம்பானது.

திட்டம் என்ன?

திட்டம் தெளிவானது. தமிழ் பிராமி அசோகன் பிராமிக்கும் முன்னால் என்று நிரூபிக்க வேண்டும். கரித்துண்டுகளின் காலத்தை பானையோடுகளின் காலத்தோடு இணைத்து, இரண்டும் ஒன்று என்று சொன்னால் தமிழுக்கு வரிவடிவம் அசோகன் பிராமி வருவதற்கு முன்னால் என்று நிறுவ முடியும். எனக்கும் அப்படி நிறுவ முடிந்தால் மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் அது அறிவியல் பூர்வமாக இருக்க வேண்டும். இப்போது நடப்பது முற்றிலும் அறமில்லாத, அறிவியலுக்குப் புறம்பான செயல் என்றுதான் சொல்ல முடியும்.
தமிழ் பிராமி ஆறாம் நூற்றாண்டில் வந்தது என்றே வைத்துக் கொள்வோம். இதன் பொருள் தமிழில் எழுத்து முறை குறைந்தது ஆயிரம் ஆண்டுகள் வளர்ச்சியடையாமல் தேக்கத்தில் இருந்தது என்றுதான் பொருள். தமிழில் முழுமையான கல்வெட்டு பொது ஆண்டு நான்காம் நூற்றாண்டில்தான் கிடைக்கிறது. பானையில் கிடைப்பவையும் கல்வெட்டுகளில் கிடைப்பவையும் வெறும் பெயர்களும் – பாதி பிராகிருதப் பெயர்கள் – யார் யாருக்குக் கொடை செய்தார்கள் என்பவை மட்டும்தான். பல பிழைகள் மிகுந்தவை. மாறாக அசோகனின் கல்வெட்டுகள் விரிவான உலகைப் பற்றி அழகிய, மேம்பட்ட மொழியில் பேசுகின்றன். மொழியின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டால் அசோகன் பிராமி மொழிக்கும் பானைக்கீறல்களில் கிடைத்திருக்கும் மொழிக்கு மலைக்கும் மடுவிற்கும் இடையே உள்ள வித்தியாசம். தமிழன் ஆயிரம் ஆண்டுகள் சரியாக எழுத முடியாமல் இருந்தான், எழுதியதையே திரும்பத் திரும்ப எழுதிக் கொண்டிருந்தான் என்று சொல்பவர்கள்தாம் பானைக்கீறல்களின் வயதை வலிந்து பின் தள்ளுவார்கள். இன்னொன்றும் சொல்ல வேண்டும். இதே காலகட்டத்தில் சங்கப் பாடல்கள் வந்து விட்டன. அதன் அழகும், நுட்பமும் உலகறிந்தது. தமிழன் கவிதை மொழியில் உச்சத்தை அடைந்து விட்ட அதே காலகட்டத்தில் சரியாக எழுத முடியாமல் ஆயிரம் ஆண்டுகள் தடுமாறிக் கொண்டிருந்தான் என்று சொல்வது சரியாக இருக்குமா?
எனவே இவ்வாதாரத்தை வைத்துக் கொண்டு தமிழ் மொழி வரலாற்றைக் கட்டமைப்பது காற்றில் கயிறு திரிக்கும் வேலை. அறிவியல் அணுகுமுறை அல்ல.

கீழடி நம்பிக்கையில்லாத சமூகத்தைச் சார்ந்ததா?

அன்றைய சமூகத்தில் நம்பிக்கை என்பது பிரிக்க முடியாத அங்கம். மேலும் சங்க இலக்கியத்தில் இந்துக்கடவுளர் பேசப்படுகிறார்கள். அதற்குப் பிற்காலத்தை இந்துக் கடவுளர்கள் முழுவதுமாக ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பக்கம் கீழடியில் 1800 வருடக் கலாச்சாரத் தொடர்ச்சி இருக்கிறது என்று சொல்லிவிட்டு, மறுபக்கம் கீழடி நம்பிக்கை இல்லாத சமூகத்தைச் சார்ந்தது என்று சொல்வது அறிவுள்ள செயலாகாது.

முடிவாக…

1. கீழடி நகர நாகரிகம் அல்லது நதிக்கரை நாகரிகம் என்பதை நிறுவ இன்னும் வலுத்த ஆதாரங்கள் தேவை.
2. கீழடியில் கிடைத்த எல்லாப் பொருட்களும் 2500 ஆண்டுகளுக்கு முந்தையது என்று ஆராய்ச்சி சொல்லவில்லை. அவற்றில் பல இன்றைக்கு 800 ஆண்டுகளுக்கு முந்தையவை.
2. கரிமப்பகுப்பாய்வில் கிடைத்த காலம் கரித்துண்டுகளுக்கு மட்டுமே பொருந்தும். கீழடியில் கிடைத்த மற்ற பொருட்களுக்குப் பொருந்தாது.
3. கரித்துண்டுகளில் காலத்தை பானைத்துண்டுகள் மேல் ஏற்றுவது அறமாகாது. அதிகபட்சமாக பானைத்துண்டுகளின் காலம் கிமு ஆறாம் நூற்றாண்டிலிருந்து கிமு மூன்றாம் நூற்றாண்டாக இருக்கலாம் என்று ஊகம் செய்யலாம். அதையும் பானைத்துண்டுகள் கரித்துண்டுகளுக்கு மிக அருகாமையில் அதே தளத்தில் கிடைத்திருந்தால் மட்டுமே சொல்ல முடியும்.
4. சிந்துசமவெளி நாகரிகத்தையும் கீழடியையும் நேரடியாக இணைப்பது அறிவார்ந்த செயலாகாது.
4. கீழடி நம்பிக்கை இல்லாத சமூகத்தைச் சார்ந்தது என்று சொல்வது நகைப்பிற்குரியது.

நான் மிகவும் பெருமை மிக்க தமிழன். தமிழின் தொன்மை அறிவியல்பூர்வமாக நிறுவப்பட்டால் அதிகம் மகிழ்ச்சி அடைவது நானாகத்தான் இருப்பேன். ஆனால் அரசியல் காரணங்களுக்காக அகழ்வாராய்ச்சியையும் மொழியாராய்ச்சியையும் பயன்படுத்துவது தமிழை இழிவு செய்வது என்று நான் திடமாக நம்புகிறேன்.

ஆங்கிலத்தில் படிக்க விரும்பினால்:
https://thefederal.com/the-eighth-column/2019/09/24/keeladi-excavation-raises-more-questions-than-answers/__________________


Guru

Status: Offline
Posts: 23907
Date:
Permalink  
 

பிராமி – சில கேள்விகள்

பிராமிக்கு சமஸ்கிருதத்தோடு தொடர்பு இருப்பதாக சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பிராமி என்பது ஓர் எழுத்து வடிவம். அவ்வளவுதான். சமஸ்கிருதம் பிராமி வடிவில் பின்னால்தான் எழுதப்பட்டது. அதிகமான கல்வெட்டுக்கள் முதலில் கிடைத்திருப்பது பிராகிருதத்தில்தான். அசோகக் கல்வெட்டுகளில் அது பயன்படுத்தப்படுவதால் அதன் பெயர் அசோகன் பிராமி என்று ஆகி விட்டது. அசோகன் பிராமியில் எழுதப்பட்டிருக்கும் கல்வெட்டுக்கள் மொழிவளம் மிக்க கல்வெட்டுகள். அன்றைய இந்தியாவைக் குறித்த பல செய்திகள் அவற்றில் கிடைக்கின்றன – சமூக, பொருளாதார, அரசியல், மதங்கள் பற்றிய செய்திகள். இவ்வளவு அழகாக மொழியை வெளிப்படுத்தும் எழுத்து வடிவம் அசோகர் காலத்தில் உடனே தோன்றி செயல்பட்டிருக்க முடியாது என்பது வெளிப்படை.
மௌரிய அரசு வட இந்தியாவை ஆண்டு கொண்டிருந்த போது இங்கு வந்த மெகஸ்தனிஸ் இந்தியர்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்று சொன்னதனால் இங்கு எழுத்து வடிவம் இல்லை என்று சொல்வது சரியல்ல. மெகஸ்தனிஸ் சொன்னது சாதாரண மக்களைப் பற்றி. அவரே மக்களில் ஏழுவகைப் பிரிவுகளைக் கூறுகிறார். அதில் முதல் பிரிவான தத்துவவாதிகளைப் பற்றிப் பேசும் போது அவர்கள் அரசர்களுக்கு தங்கள் கருத்துக்களை எழுத்துப்பூர்வமாகக் கொடுக்கிறார்கள் என்று சொல்கிறார். எனவே மௌரியர் காலத்திலும் எழுத்து இருந்திருக்க வேண்டும்.(Any philosopher who may have committed any suggestion to writing – Strabo – of the seven classes among Indians – page 83 McCrindle’s translation, 1926 Calcutta edition)

மெகஸ்தனிஸ் சொல்வதையெல்லாம் நம்ப வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. அவர் சொன்னதாக மற்றவர்கள் எழுதியிருப்பதுதான் நமக்குக் கிடைத்திருக்கிறது அவரது ‘இண்டிகா’ புத்தகம் கிடைக்கவில்லை. அவரே தங்கத்தைத் தோண்டும் எறும்புகள் இந்தியாவில் இருக்கின்றன என்று சொல்கிறார் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இனி கேள்விகளுக்கு வருவோம்.

பிராமி எங்கு பிறந்தது?

பிராமி மொழிக்கு மூதாதைகள் செமெடிக் மொழிகள் என்று சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். சொல்லுகிறார்கள். அப்படிச் சொல்பவர்கள் கூட அது இந்தியாவிற்கு எட்டாம் நூற்றாண்டு BCEல் வந்தது என்று நம்புகிறார்கள். ( (They) are known to believe that Brahmi was introduced in India in the 7th or 8th century
BC(cf. T.W. Rhys Davids,Buddhist India , 1903) இத கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழத்தின் பேராசிரியர் திலீப் சக்ரவர்த்தி சொல்வது. பிராமி சிந்துச் சமவெளி நாகரிக மொழியின் தொடர்ச்சி என்றும் இந்தியாவில் பிறந்தது என்றும் அவர் நினைக்கிறார்

ஏன் அவ்வாறு நினைக்கிறார்?

அவர் சொல்வதையே கேட்கலாம்.

My opinion is that the general problem of the rise of Brahmi script should not be disassociated from the picture of archaeological developments at the dawn of the historical period. The idea that the development of the Brahmi is rooted in the earlier Indus script seems to receive support from two developments. First, the chronological gap between the end of the Indus civilization and the early historic period of the Ganga plain has considerably narrowed. On the one hand, the terminal date of the Indus civilization has comedown to the 13th century
BC, as the occurrence of Indus seals from the Kassite period at Nippurand in Bahrain, and some relevant radiocarbon dates from Harappa, among other places,indicate. On the other hand, the date of the NBP,the most important pottery marker of the Gangetic valley early historic period, is now raised to c. 800 BC, if not somewhat earlier.

அவர் மேலும் சொல்கிறார்:
Looked at from these points of view, the postulated appearance of the Brahmi script around 800 BC is quite probable in at least parts of the Ganga plain, although there is no direct archaeological evidence yet. அதாவது பிராமி கங்கைச் சமவெளியில் 8 நூற்றாண்டு BCEல் தோன்றியிருக்க வாய்ப்பு இருக்கிறது என்று சக்ரவர்த்தி கருதுகிறார்.

பொருந்தலில் கிடைத்த பானைக் கீறலைப் பற்றி வல்லுனர்கள் என்ன சொல்கிறார்கள்?

சக்ரவர்த்தி அது 5ம் நூற்றாண்டு BCE ஐச் சேர்ந்ததுதான் என்று கருதுகிறார் என்பது உண்மை. ஆனால் அவர் அது கங்கைச் சமவெளியில் பிறந்த பிராமியைத் தழுவியதாகத்தான் கருதுகிறார். அவர் சொல்வது இது: There is no point in forgetting that what is called Tamil-Brahmi is essentially Brahmi script adopted to facilitate the writing of Tamil. அவர் பிராமி தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டதாகச் சொல்லவில்லை.

சக்ரவர்த்தி சிந்துச் சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் என்பதையோ அல்லது அங்குள்ளவர்கள் தொல் திராவிட மொழியைப் பேசினார்கள் என்பதையோ முழுமையாக நிராகரிப்பவர். தமிழர்கள்தாம் சிந்துச் சமவெளி மக்கள் என்ற கருத்தை கட்டுக்கதை என்று சொல்பவர். மொழியின் அடிப்படையில் ஒரு நாகரிகம் கட்டமைக்க முடியாது என்று கருதுபவர். ஆரிய, திராவிடப் பிரிவினையை சாடுபவர்.

மகாதேவன் சொல்வது இது: Supposing a large number of carbon-datings are available from various sites, which will take us to the period of the Mauryas and even the Nandas, we can consider. But to push [the date of the origin of the Tamil-Brahmi script] a couple of centuries earlier with a single carbon-dating is not acceptable because chances of contamination and error are there.” அதாவது ஒரே ஆதாரத்தை வைத்துக் கொண்டு சாமியாடக் கூடாது, பல ஆதாரங்கள் வேண்டும் என்கிறார்.

சுப்பராயுலு சொல்வது இது: The date of the Tamil-Brahmi script found at Porunthal, on palaeographic basis, could be put only in the first century BCE/CE and “cannot be pushed back to such an early date [490 BCE].” The three letters “va-y-ra” found on the ring-stands were developed and belonged to the second stage of Mr. Mahadevan’s dating of Tamil-Brahmi. “It is premature to revise the Tamil-Brahmi dating on the basis of a single carbon date, which is governed by complicated statistical probabilities,” Dr. Subbarayalu said. The word “vayra” is an adapted name from the Prakrit or Sanskrit “vajra” and it is difficult to explain convincingly the generally dominant Prakrit element in Tamil-Brahmi inscriptions found on rock and potsherds if Tamil-Brahmi is indigenous and pre-Asokan and transported from south India to north India, he says. இதுதான் உண்மையான வரலாற்றாசிரியரின் அணுகுமுறை. அவர் பானையில் எழுதியிருப்பது காலத்தில் பிந்தையது என்கிறார். தமிழில் இவ்வளவு பிராகிருதக் கலப்பு இருக்கும் போது பிராமி எழுத்து தமிழ்நாட்டில் பிறந்தது என்று சொல்வது சரியாக இருக்காது என்றும் சொல்கிறார்.

இது பேராசிரியர் வாரியர் சொல்வது: Its importance lay in the fact that while the Asokan-Brahmi began in the 3rd century BCE, the Porunthal script could be dated to 5th century BCE, he says. “But we cannot argue that Brahmi was invented by the southern people. That is a different issue.” அதாவது ஐந்தாம் நூற்றாண்டு என்றாலும் பிராமி தெற்கில் இருப்பவர்களால் கண்டு பிடிக்கப்பட்டது என்று சொல்ல முடியாது என்கிறார்.

இது பேராசிரியர் ஃபால்க் சொல்வது: Misinterpreting megalithic logograms for Brāhmī writing at Porunthal he “reads” va-y-ra (“meaning diamond”) on a ring-stand 14C-dated to 490 B. C. by an American laboratory. The non-letters put aside, the presence of stirrups in the same tomb sounds suspicious too. அவர் அது பிராமி எழுத்தே இல்லை என்கிறார்.

எனவே பொருந்தலில் கிடைத்ததை வைத்துக் கொண்டு முக்கியமான வல்லுனர்கள் யாரும் பிராமி தமிழ்நாட்டில் தோன்றியது என்று சொல்லவில்லை. ஒரு பானைத்துண்டை வைத்துக் கொண்டு அதுவும் பிராகிருதமொழியின் தமிழாக்கம் போன்ற சொல் ஒன்றை வைத்துக் கொண்டு, இம்முடிவிற்கு வர முடியாது என்கிறார்கள்.

சரி, இப்போதுதான் கீழடி சொல்கிறதே, அதை ஏற்றுக் கொள்ள மாட்டீர்களா?

கீழடியில் கரிமப்பகுப்பாய்வு செய்திருக்கப்பட்டிருப்பது ஒரு கரித்துண்டில். தமிழ் பிராமி எழுத்துக்கள் பதித்த பானைத்துண்டுகள் அதே தளத்தில் கிடைத்தன என்று அரசு வெளியீடு சொல்லவில்லை. அதே தளத்தில் இருந்தாலும் தளத்தின் காலம் 600 BCEல் இருந்து 300 BCE வரை என்று தமிழக அகழ்வாராய்ச்சியாளர்களே சொல்லியிருக்கிறார்கள். எனவே பானைத்துண்டு ஆறாம் நூற்றாண்டு என்று உறுதியாகச் சொல்ல முடியாது.

ஆறாம் நூற்றாண்டு என்பது உறுதியாகி விட்டால் ஏற்றுக் கொள்வீர்களா?

நிச்சயம் மாட்டேன். ஓரிரு சான்றுகள் உதவா. மகாதேவன் சொன்னது போல நிறையச் சான்றுகள் நிறைய இடங்களில் இருந்து வேண்டும். பானைகளில் இருக்கும் பெயர்களை வைத்துக் கொண்டு எந்த முடிவிற்கும் வரமுடியாது. மொழி வளம் மிக்க கல்வெட்டுகள் வேண்டும்.

ஏன் இவ்வாறு சொல்கிறீர்கள்?

என்னுடைய கல்வெட்டுகளைப் பற்றிய பதிவிற்குக் காத்திருங்கள்.

பி ஏ கிருஷ்ணன்

https://www.academia.edu/40197879/Dilip_K._Chakrabarti_1_

https://www.thehindu.com/news/national/tamil-nadu/palani-excavation-triggers-fresh-debate/article2408091.ece

https://www.academia.edu/11754083/Owners_graffiti_on_pottery_from_Tissamaharama__________________


Guru

Status: Offline
Posts: 23907
Date:
Permalink  
 

சிந்து வெளியுடன் ஒன்றுபடும் கீழடி நாகரிகம்..!

http://www.unmaionline.com/index.php/5043-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.html

a16.jpg

பேராசிரியர் இரா.மதிவாணன்

இயக்குனர், சிந்துவெளி எழுத்தாய்வு  நடுவம்

கீழடி அகழ்வாராய்ச்சிகள், சிந்துவெளி அகழ்வாராய்ச்சிகள் ஆகியவை ஒரே இனம், ஒரே மொழி பேசிய திராவிட நாகரிகத்துக்கு உரியவை என அறிஞர்களால் நிறுவப்பட்டு வருகிறது.

1920-ல் சிந்துவெளி நாகரிகம் குறித்த ஜான் மார்ஷின் கண்டுபிடிப்புகளை போலவே 2014 முதல் நடைபெற்று வரும் வைகைச் சமவெளி கீழடி கண்டுபிடிப்புகளும் உலக அறிஞர்களின் பார்வையைக் கவர்ந்துள்ளன. ரோமிலா தாப்பர் என்னும் புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர் கீழடி கண்டுபிடிப்புகள் தமிழர் வரலாற்றில் புதிய திருப்பத்தை உருவாக்கும் எனக்கூறியுள்ளார்.

கீழடியில் இதுவரை நடந்த நான்கு அகழ்வாராய்ச்சிகளில் மொத்தம் 13ஆயிரத்து 658 பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சிந்து வெளியில் கண்டுபிடிக்கப்பட்ட அனைத்துப் பொருள்களின் எண்ணிக்கையைவிட இது அதிகம். சிந்துவெளியில் கிடைத்த முதுமக்கள் தாழிகளை விட, ஆதிச்சநல்லூரில் கிடைத்த தாழிகள் பெரியவை. அணிகலன் ஏற்றுமதியில் சிந்துவெளியை விட கீழடி போன்ற தமிழக நகரங்களின் ஏற்றுமதி அதிகமானது. குண்டூசியின் தலையைவிட சிறிய பாசிமணிகளில் தலைமயிரைவிட குறுகிய துளையிட்டு, உலக நாடுகளில் விற்ற நேர்த்தியை கீழடியில்தான் காண முடிகிறது. 138 ஏக்கர் நிலத்தில் ஒரு ஏக்கர் நிலத்தில் தான் கீழடி அகழ்வாய்வு நடந்து வருகிறது. சிந்து வெளி நகர அமைப்பைப் போன்றே கீழடியிலும் திட்டமிட்ட நகர அமைப்பு, உறை கிணறு, குளியலறை, கழிப்பறை, புதை சாக்கடை ஆகியவை காணப்படுகின்றன. கொல்லன் உலைக்களம் செம்புருக்கவும் பயன்பட்டது, செம்பு வெட்டி எடுக்கப்பட்ட பொதிய மலை ‘செம்பின் பொருப்பு’ எனப்பட்டது. எனவே தமிழ்நாட்டில் செம்புக்காலம் இல்லையென்று கூறுவது பொருந்தாது. அம்பில் செருகும் கூரிய எலும்பு முனைகள் வேட்டைக்கால நாகரிகத்திலிருந்தே தமிழர்களின் நாகரிகத் தொன்மை விளங்கியதைக் காட்டுகிறது.

a17.jpg

கீழடி அகழ்வாராய்ச்சி

கீழடியிலிருந்தே சிந்து வெளி நாகரிகம் வடக்கு நோக்கிப் பரவியது என்பதை அது உறுதிப் படுத்துகிறது. கீழடியில் கிடைத்த பானை ஓடுகளில் தென் பிராமி எனப்படும் தமிழி எழுத்தில் வேந்தன், பேரையன், இயனன், ஆதன் போன்ற பெயர்களைப் படித்துக் காட்டியுள்ளனர். ஆனால் சிந்துவெளி எழுத்துகளில் எழுதப்பட்ட மூன்று பானை ஓடுகளை அவர்கள் படிக்கவில்லை. அவற்றில் உள்ள காவன், உன்னு, வக்கன் உன்னப்பன் போன்ற சிந்துவெளிப் பெயர்களை நான் படித்துக்காட்டியுள்ளேன். ஆதிச்சநல்லூரில் நான் கண்டெடுத்த பானை ஓட்டில் ‘மணக்கன்’ என்னும் பெயர் சிந்துவெளி எழுத்தில் எழுதப்பட்டுள்ளது, அதனை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை இயக்குனரிடம் ஒப்படைத்தேன். நகரமைப்பு, செம்பின் பயன்பாடு உலகளாவிய வணிகம், எழுத்தறிவு பெற்ற கல்வி வளர்ச்சி, தாய் தெய்வ வழிபாடு. தாழியில் புதைத்தல் ஆகியவை கீழடிக்கும் சிந்துவெளிக்கும் உள்ள பொதுவான நாகரிக ஒப்புமைகள் எனலாம், இதுவரை கண்டெடுக்கப்பட்ட பொருள்களில் இரண்டுக்கு மட்டும் காலக்கணிப்பு செய்து, கீழடி நாகரிகம் கி.மு. 300 முதல் கி.மு. 200 வரை நிலவியது எனக் கணித்துள்ளனர். ஆயிரக்கணக்கான பொருள்கள் காலக்கணிப்பு செய்யப்படவில்லை. பழைய நாகரிகங்கள் மூன்று காரணங்களால் அழிகின்றன. அவை, வெயில்பாழ், வெள்ளப்பாழ், குடிப்பாழ் எனப்படும். மழை பெய்யாமல் வெயில் நீடித்த நீண்ட காலங்களிலும், பெருவெள்ளத்தில் நகரங்கள் மூழ்கிய போதும், போர், கொள்ளை நோய் போன்றவற்றால் குடிமக்கள் இடம் பெயரும் போதும் பழைய நாகரிகங்கள் அழிகின்றன. இருப்பினும் நூற்றாண்டுகள் கடந்தும், மக்கள் மீண்டும் அங்கே குடியேறுவதும் உண்டு. எனவே நகரத்தின் அழிவை அந்த மக்கள் இனத்தின் அழிவு எனக் கூறலாகாது.

a18.jpg

கேரளத்து தொல்பொருள் ஆராய்ச்சி அறிஞர் செரியன் என்பவர் முசிறித் துறைமுக அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருள்கள் அழகன்குளம் அகழ் வாராய்ச்சியில் கிடைத்த பொருள்களொடு நூற்றுக்கு நூறு ஒப்புமையாக உள்ளன என்கிறார்.

a19.jpg

முதுமக்கள் தாழி

 a21.jpg

கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள்

தமிழ்நாட்டில் 44 இடங்கள் அகழாய்வு செய்யப்பட வேண்டும் தமிழக மூவேந்தர்கள் எகிப்து, மத்திய தரைக்கடல் நாடுகள் உள்ளிட்ட மேலைக்கடல் நாடுகளிலும் சீனா முதலிய கீழைக்கடல் நாடுகளிலும் மொத்தம் 40 துறைமுகங்களில் கடல் வணிகத்தொடர்பு கொண்டிருந்தனர் எனவும் தமிழ்நாட்டுத் துறைமுகங்கள் உலகத் துறைமுகங்களுக்கு நடுநாயகமாக வணிகத் தலைநிலமாக விளங்கின என்றும் கூறுகிறார். வைகைச் சமவெளியில் உள்ள 293 இடங்களில் 90 இடங்கள் அகழ்வாய்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளன. கீழடி அகழ்வாய்வில் முதன்முதலில் ஈடுபட்ட அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையும், தமிழக தொல்பொருள் ஆய்வுத் துறையின் அறிக்கையும் விரைவில் வெளியிடப்பட்டால், பல உண்மைகள் வெளிவரும்.

 திருப்புவனம் அருகே கீழடியில் தற்போது நடைபெற்ற 4ஆவது கட்ட அகழ்வாராய்ச்சி பணியின் போது 8 அடுக்கு உறை கிணறுகள், கத்தி, கோடரி, கண்ணாடி மணிகள், தாயக்கட்டைகள், அணிகலன்கள் உள்ளிட்ட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கீழடி போன்று ஆதிச்சநல்லூரை அடுத்த குடியிருப்புப் பகுதியாகக் கருதப்படும் கொங்கராயன்குறிச்சி மேட்டில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்படவேண்டும். வரலாற்றை மறந்த இனம் பிற நாட்டாருக்கு அடிமையாகி விடும் என்பதால் தமிழ் வரலாற்று மீட்டெடுப்பு தமிழினம் தலை நிமிரும் காலத்துக்குப் பச்சைக்கொடி காட்டுவதாகும்.

சிந்து வெளியுடன் ஒன்றுபடும் கீழடி நாகரிகம்..!

http://www.unmaionline.com/index.php/5043-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.html

a16.jpg

பேராசிரியர் இரா.மதிவாணன்

இயக்குனர், சிந்துவெளி எழுத்தாய்வு  நடுவம்

கீழடி அகழ்வாராய்ச்சிகள், சிந்துவெளி அகழ்வாராய்ச்சிகள் ஆகியவை ஒரே இனம், ஒரே மொழி பேசிய திராவிட நாகரிகத்துக்கு உரியவை என அறிஞர்களால் நிறுவப்பட்டு வருகிறது.

1920-ல் சிந்துவெளி நாகரிகம் குறித்த ஜான் மார்ஷின் கண்டுபிடிப்புகளை போலவே 2014 முதல் நடைபெற்று வரும் வைகைச் சமவெளி கீழடி கண்டுபிடிப்புகளும் உலக அறிஞர்களின் பார்வையைக் கவர்ந்துள்ளன. ரோமிலா தாப்பர் என்னும் புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர் கீழடி கண்டுபிடிப்புகள் தமிழர் வரலாற்றில் புதிய திருப்பத்தை உருவாக்கும் எனக்கூறியுள்ளார்.

கீழடியில் இதுவரை நடந்த நான்கு அகழ்வாராய்ச்சிகளில் மொத்தம் 13ஆயிரத்து 658 பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சிந்து வெளியில் கண்டுபிடிக்கப்பட்ட அனைத்துப் பொருள்களின் எண்ணிக்கையைவிட இது அதிகம். சிந்துவெளியில் கிடைத்த முதுமக்கள் தாழிகளை விட, ஆதிச்சநல்லூரில் கிடைத்த தாழிகள் பெரியவை. அணிகலன் ஏற்றுமதியில் சிந்துவெளியை விட கீழடி போன்ற தமிழக நகரங்களின் ஏற்றுமதி அதிகமானது. குண்டூசியின் தலையைவிட சிறிய பாசிமணிகளில் தலைமயிரைவிட குறுகிய துளையிட்டு, உலக நாடுகளில் விற்ற நேர்த்தியை கீழடியில்தான் காண முடிகிறது. 138 ஏக்கர் நிலத்தில் ஒரு ஏக்கர் நிலத்தில் தான் கீழடி அகழ்வாய்வு நடந்து வருகிறது. சிந்து வெளி நகர அமைப்பைப் போன்றே கீழடியிலும் திட்டமிட்ட நகர அமைப்பு, உறை கிணறு, குளியலறை, கழிப்பறை, புதை சாக்கடை ஆகியவை காணப்படுகின்றன. கொல்லன் உலைக்களம் செம்புருக்கவும் பயன்பட்டது, செம்பு வெட்டி எடுக்கப்பட்ட பொதிய மலை ‘செம்பின் பொருப்பு’ எனப்பட்டது. எனவே தமிழ்நாட்டில் செம்புக்காலம் இல்லையென்று கூறுவது பொருந்தாது. அம்பில் செருகும் கூரிய எலும்பு முனைகள் வேட்டைக்கால நாகரிகத்திலிருந்தே தமிழர்களின் நாகரிகத் தொன்மை விளங்கியதைக் காட்டுகிறது.

a17.jpg

கீழடி அகழ்வாராய்ச்சி

கீழடியிலிருந்தே சிந்து வெளி நாகரிகம் வடக்கு நோக்கிப் பரவியது என்பதை அது உறுதிப் படுத்துகிறது. கீழடியில் கிடைத்த பானை ஓடுகளில் தென் பிராமி எனப்படும் தமிழி எழுத்தில் வேந்தன், பேரையன், இயனன், ஆதன் போன்ற பெயர்களைப் படித்துக் காட்டியுள்ளனர். ஆனால் சிந்துவெளி எழுத்துகளில் எழுதப்பட்ட மூன்று பானை ஓடுகளை அவர்கள் படிக்கவில்லை. அவற்றில் உள்ள காவன், உன்னு, வக்கன் உன்னப்பன் போன்ற சிந்துவெளிப் பெயர்களை நான் படித்துக்காட்டியுள்ளேன். ஆதிச்சநல்லூரில் நான் கண்டெடுத்த பானை ஓட்டில் ‘மணக்கன்’ என்னும் பெயர் சிந்துவெளி எழுத்தில் எழுதப்பட்டுள்ளது, அதனை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை இயக்குனரிடம் ஒப்படைத்தேன். நகரமைப்பு, செம்பின் பயன்பாடு உலகளாவிய வணிகம், எழுத்தறிவு பெற்ற கல்வி வளர்ச்சி, தாய் தெய்வ வழிபாடு. தாழியில் புதைத்தல் ஆகியவை கீழடிக்கும் சிந்துவெளிக்கும் உள்ள பொதுவான நாகரிக ஒப்புமைகள் எனலாம், இதுவரை கண்டெடுக்கப்பட்ட பொருள்களில் இரண்டுக்கு மட்டும் காலக்கணிப்பு செய்து, கீழடி நாகரிகம் கி.மு. 300 முதல் கி.மு. 200 வரை நிலவியது எனக் கணித்துள்ளனர். ஆயிரக்கணக்கான பொருள்கள் காலக்கணிப்பு செய்யப்படவில்லை. பழைய நாகரிகங்கள் மூன்று காரணங்களால் அழிகின்றன. அவை, வெயில்பாழ், வெள்ளப்பாழ், குடிப்பாழ் எனப்படும். மழை பெய்யாமல் வெயில் நீடித்த நீண்ட காலங்களிலும், பெருவெள்ளத்தில் நகரங்கள் மூழ்கிய போதும், போர், கொள்ளை நோய் போன்றவற்றால் குடிமக்கள் இடம் பெயரும் போதும் பழைய நாகரிகங்கள் அழிகின்றன. இருப்பினும் நூற்றாண்டுகள் கடந்தும், மக்கள் மீண்டும் அங்கே குடியேறுவதும் உண்டு. எனவே நகரத்தின் அழிவை அந்த மக்கள் இனத்தின் அழிவு எனக் கூறலாகாது.

a18.jpg

கேரளத்து தொல்பொருள் ஆராய்ச்சி அறிஞர் செரியன் என்பவர் முசிறித் துறைமுக அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருள்கள் அழகன்குளம் அகழ் வாராய்ச்சியில் கிடைத்த பொருள்களொடு நூற்றுக்கு நூறு ஒப்புமையாக உள்ளன என்கிறார்.

a19.jpg

முதுமக்கள் தாழி

 a21.jpg

கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள்

தமிழ்நாட்டில் 44 இடங்கள் அகழாய்வு செய்யப்பட வேண்டும் தமிழக மூவேந்தர்கள் எகிப்து, மத்திய தரைக்கடல் நாடுகள் உள்ளிட்ட மேலைக்கடல் நாடுகளிலும் சீனா முதலிய கீழைக்கடல் நாடுகளிலும் மொத்தம் 40 துறைமுகங்களில் கடல் வணிகத்தொடர்பு கொண்டிருந்தனர் எனவும் தமிழ்நாட்டுத் துறைமுகங்கள் உலகத் துறைமுகங்களுக்கு நடுநாயகமாக வணிகத் தலைநிலமாக விளங்கின என்றும் கூறுகிறார். வைகைச் சமவெளியில் உள்ள 293 இடங்களில் 90 இடங்கள் அகழ்வாய்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளன. கீழடி அகழ்வாய்வில் முதன்முதலில் ஈடுபட்ட அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையும், தமிழக தொல்பொருள் ஆய்வுத் துறையின் அறிக்கையும் விரைவில் வெளியிடப்பட்டால், பல உண்மைகள் வெளிவரும்.

 திருப்புவனம் அருகே கீழடியில் தற்போது நடைபெற்ற 4ஆவது கட்ட அகழ்வாராய்ச்சி பணியின் போது 8 அடுக்கு உறை கிணறுகள், கத்தி, கோடரி, கண்ணாடி மணிகள், தாயக்கட்டைகள், அணிகலன்கள் உள்ளிட்ட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கீழடி போன்று ஆதிச்சநல்லூரை அடுத்த குடியிருப்புப் பகுதியாகக் கருதப்படும் கொங்கராயன்குறிச்சி மேட்டில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்படவேண்டும். வரலாற்றை மறந்த இனம் பிற நாட்டாருக்கு அடிமையாகி விடும் என்பதால் தமிழ் வரலாற்று மீட்டெடுப்பு தமிழினம் தலை நிமிரும் காலத்துக்குப் பச்சைக்கொடி காட்டுவதாகும்.__________________


Guru

Status: Offline
Posts: 23907
Date:
Permalink  
 

பிராமியில் தமிழ் உயிர் எழுத்துகளில் குறில் "எ""ஒ" இல்ல்லை. ஆனால் அனுராதபுரம் மற்றும் தமிழக பானை கீரல் உருகளை எழுத்தாய் படிப்போர் சொல்வது பல வடமொழி சொற்கள் வட மொழி வர்க்க எழுத்தோடு உள்ளது. தமிழில் உயிரில் இவ்வெழுத்துக்கள் மாறியது 18ம் நூற்றாஆண்டில் ஜோசப் பெஸ்கி (வீரமாமுனிவர்) பின் தான் என தெள்ளிவாகிறது.

இந்தியாவில் அறிவு சார் இணைப்பு மொழியாய் வடமொழி தான் இருந்தது. வடமொழியில் மெய் எழுத்து க் என்கையில் k,kh, g, gh 4 வர்க்கம் உண்டு இது போல் மற்றவை எனவே 33, தமிழில் 18. தமிழில் உள்ள ழ, ள, வடமொழியில் இல்லை.
வடமொழி உயிர் எழுத்துகளில்ல் குறுக் எ - ஒ கிடைய
ாது, இதுவும் கல்வெட்டுகளில் இல்லை. எனவே பிராமி உருவாக்கப் பட்டது வடமொழிக்கு, தமிழ் தனக்கு அதை பயன்படுத்திக் கொண்டது. இதுவரை பானைக் கீறிறல்களின் மிகத் தொன்மையிலும் கூட வடமொழி வர்க்க எழுத்தோடு உள்ளது.

பிராமி எழுத்து ஒலிக்கான முறையில் வர்க்க எழுத்தோடான வடமொழிக்கு உருவானது என்பது தெளிவு. கொடுமணல், பொருந்தனை, கீழடி எல்லா பானை கீரல் படிப்பில் பிராமி என கூறுகையில் - வர்க்க எழுத்தோடும் உள்ளது.
இவை தமிழ்பொறிப்பா, வடமொழியா என்பதே கூட விவாதத்திற்கு உரியது

அகழ்வு குழியில் கிடைத்த சோதனைக்கு அனுப்பப்பட்ட பொருள் காலம் - அந்த அகழ்வின் அனைத்து பொருளிற்க்கும் சேராது.
பானை கீரறல்கள் எழுத்தா வெறும் சித்திரமா(சிந்து போல) என்பதிலேயே இன்னும் அறிஞர்கள் இடையே முழுமையான கருத்தொற்றுமை இல்லை.
தமிழில் இதுவரை பிராமியில் கிடைத்துள்ள அனைத்தையும் ஒரு A4 வெள்ளை தாளில் அடக்கலாம், ஆனால் அசோகருடைய கல்வெட்ட்டில் மட்டும் தம்மம் விளக்கமாய் உள்ளது. அது தவிர பல பெரிய கல்வெட்டுகள் உள்ளன. ஆனால் தமிழில் பொ.ஆ 6 ஆம் நூற்றாண்டு வரை கிடைக்கும் கல்வெட்டுக்கள் மிகச் சிறியவை. பூலாங்குறிச்சிக் கல்வெட்டு தான் சற்றே பெரியது.
தமிழில் இதுவரை பிராமியில் கிடைத்துள்ள அனைத்து கல்வெட்டுகள்படி அ முதல் ன வரை எழுத்துக்களின் தோற்றம் வளர்ச்சி.

அறிஞர்கள்படி தமிழில் 40% சம்ஸ்கிருத சொற்களும்; சம்ஸ்கிருத மொழியில்33% தமிழ் சொற்களும் உள்ளன, இரண்டும் சகோதரிகள், சம்ஸ்கிருத இலக்கியத்தில் பெரும் பங்கு தமிழர் பணி உள்ளது, ஆனால் தொன்மையில், இலக்கிய வளர்ச்சியில்ல எழுத்து உரு உருவாக்கலில் பல நூற்றாண்டுகள் முன்பே வடமொழி வளர்ச்சி பெற்ற மொழி இன்று வரை உள்ள தரவுகள் காட்டும் உண்மை.__________________


Guru

Status: Offline
Posts: 23907
Date:
Permalink  
 

நியூஸ் 18 கீழடி விவாதம் -தமிழ்நாட்டு அறிஞர்களின் அறிவு வறட்சி

நேற்று நடந்த விவாதத்தில் நான் திரு வெங்கடேசனைக் குறை சொல்ல மாட்டேன். அவர் அரசியல்வாதி. கீழடி அரசியல் அவருக்குப் பிழைப்பு. ஆனால் ராஜவேலு அவர்கள் தொல்லியல் துறையில் பேராசிரியராக இருந்திருக்கிறார். அவர் பேச்சுத்தான் எனக்கு அதிர்ச்சியைத் தந்தது. கரிமப்பகுப்பாய்வு பற்றிய இப்படி ஒரு புரிதலை வைத்துக் கொண்டு இவர் மாணவர்களுக்கு என்ன சொல்லிக் கொடுத்திருப்பார்?

நான் என்னுடைய வாதத்தை மறுபடியும் தெளிவாக வைக்கிறேன்.

1. கீழடியில் பகுப்பாய்வு செய்யப்பட்டது கரித்துண்டு. கரித்துண்டின் வயது என்ன என்பதுதான் கண்டறியப்பட்டது. அதன் வயதை சுற்றியிருக்கும் பொருட்கள் மீது ஏற்ற முடியாது.
2. ஏன் அவ்வாறு சொல்கிறேன்? நான் சொல்லவில்லை. அகழ்வாராய்வு பாடப்புத்தகம் சொல்கிறது? We can never date archaeological sites by simple equivalences. The radiocarbon lab, for instance, takes a chunk of charcoal and tells you how long ago that tree died. By itself, this date says nothing important about your site. However, if we can show that the charcoal came from a tree used as a roof beam in a pueblo, then we have a date that matters – page 90, Archaeology, Kelly and Thomas. எனவே கரித்துண்டின் வயது பொருட்கள் கிடைத்திருக்கும் தளம் கி.மு. ஆறாம் நூற்றாண்டிற்கு முற்பட்டதாக இருக்க முடியாது என்ற தகவலை மட்டும் அளிக்கிறது. அது நிச்சயமாக தளத்தில் இருக்கும் பொருட்கள் எல்லாவற்றிற்கும் கரித்துண்டின் வயதுதான் என்று சொல்லவில்லை.
3. இன்னொன்று. அகழ்வாராய்ச்சியின் அடிப்படை விதிகள் இவை:
Archaeological stratigraphy is based on a series of axiomatic principles or “laws”. They are derived from the principles of stratigraphy in geology but have been adapted to reflect the different nature of archaeological deposits. Harris notes two principles that were widely recognised by archaeologists by the 1970s:
The principle of superposition establishes that within a series of layers and interfacial features, as originally created, the upper units of stratification are younger and the lower are older, for each must have been deposited on, or created by the removal of, a pre-existing mass of archaeological stratification.
The principle that layers can be no older than the age of the most recent artefact discovered within them. This is the basis for the relative dating of layers using artefact typologies.

அதாவது, ஒரு கலைக்கப்படாத அடுக்கில் (கலைக்கப்படாத என்பது முக்கியமானது) மேல் தளங்கள் வயதில் இளையவை கீழ்த்தளங்கள் வயதில் மூத்தவை என்பது முதல் விதி. இரண்டாவது விதி ஓர் அடுக்கின் வயது அதில் ஆக இளையதான பொருளின் வயதாகத்தான் இருக்க முடியும். இந்த விதி தெளிவாக ஓர் அடுக்கில் இருக்கும் எல்லாப் பொருட்களும் ஒரே வயதாக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்கிறது.

4. இந்த விதிகளை வைத்துக் கொண்டு கீழடியைப் பார்ப்போம். நான்காம் கட்டத்தில் அகழ்வாய்வு செய்த பகுதி கலைக்கப்படாததா? இது அரசு அகழ்வாராய்ச்சி அறிக்கை சொல்வது:
In fact, the top portion was completely filled and packed with cart load of ceramic tiles and to everyone’s surprise an almost full shape like Black and red ware vessel was found embedded. The clear cut marks vertically on the western end was suggestive of the dig at a later period and dumped with such huge amount of discarded potsherds. Rest of that level running correspondingly on the northwest, south and east was of high compact yellowish gritty clay sterile deposit with few sherds and brickbats. The large pieces found over the lower rings in full shapes indicate the crumbled nature of the upper rings of the well probably crushed due to heavy loading and dumping of the unwanted materials thrown in to the well due to its non-utility.
எனவே நான்காம் கட்ட அகழ்வாய்வு செய்யப்பட்ட பகுதி கலைக்கப்பட்ட பகுதி என்பது தெளிவு. எனவே மேலே சொன்ன முதல் விதி இங்கு பொருந்துமா என்பதே கேள்விக்குறி. சரி பொருந்தும் என்றே வைத்துக் கொள்வோம். அடுத்த விதிக்கு வருவோம்.
5. பிராமி எழுத்துகள் கொண்ட பானைத்துண்டுகள் எந்த தளத்தில் கண்டுபிடிக்கப்பட்டன என்பது தெரியவில்லை. கடைசித் தளத்தில் கண்டு பிடிக்கப்பட்டது என்றே வைத்துக் கொள்வோம். இத்தளத்தின் காலம் என்ன? அறிக்கை சொல்கிறது:
So the chronology of this site keeladi with three periods could be scientifically fixed between 6th century BCE and 11, 12th century CE. In this context, period-I represented the cultural settings of the site from 6 century BCE to 3rd century BCE. Period-II existed between 3rd century BCE and 4, 5th century CE, while the last phase, period-III consituted the finds belonging to date from 4, 5th century CE t0 11, 12th century CE. Hence period-I is the earliest phase found at the lower level of the deposit and consequently the other two over it.

இரண்டாம் விதிப்படி அடித்தளத்தின் வயது கிமு ஆறாம் நூற்றாண்டிலிருந்து கிமு மூன்றாம் நூற்றாண்டு வரை என்று அரசு அறிக்கையே சொல்கிறது. எனவே கரித்துண்டின் வயது அதைச் சுற்றியிருக்கும் பொருட்களுக்கு ஏற்ற முடியாது. அவற்றின் காலகட்டத்தை வேறு விதமாகத்தான் கண்டுபிடிக்க வேண்டும். அரசு அறிக்கை கொடுத்த கால அளவு சரி என்று வைத்துக் கொண்டாலும் பானைத்துண்டுகளின் வயது மூன்றாம் நூற்றாண்டிலிருந்து ஆறாம் நூற்றாண்டு வரை என்றுதான் சொல்ல முடியும்.

6. பானைத்துண்டுகளின் வயதும் ஆறாம் நூற்றாண்டுதான் என்று சொல்வதற்கு நாம் எத்தனை தர்க்கரீதியான தாண்டல்களை நிகழ்த்த வேண்டும் என்பதைப் பாருங்கள்.
1. முதலில் தளம் கலைக்கப்பட்டதல்ல என்பதை எடுத்துக் கொள்ள வேண்டும்.
2. பிராமி எழுதப்பட்ட கீறல்கள் அடித்தளத்தில் கிடைத்தன என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.
3. அவை கரித்துண்டிற்கு மிக அருகாமையில் கிடைத்ததென்று வைத்துக் கொள்ள வேண்டும்.
4. கரித்துண்டின் வயதை பானைக்கீறல்களுக்கு ஏற்ற வேண்டும்
5. தளத்தில் கிடைத்த எல்லாப் பொருட்களுக்கும் வயது கி மு ஆறாம் நூற்றான்டு என்று சொல்ல வேண்டும்.
6. தளத்தின் வயது கிமு ஆறாம் நூற்றாண்டிலிருந்து கிமு மூன்றாம் நூற்றாண்டு வரை என்று அரசு அறிக்கை சொல்வது கரித்துண்டு கிடைத்த இடத்திற்கு பொருந்தாது என்று கொள்ள வேண்டும்.

இத்தாண்டல்களைக் கேள்வி கேட்பவர்கள் மட்டுமே அறிவியல் சார்பாகப் பேசுகிறவர்கள்.

ஆனால் நேற்று விவாதத்திற்கு வந்திருந்த பேராசிரியர்களுக்கு அறிவியல் பூர்வமான வாதம் என்றால் என்ன என்பதே தெரியவில்லை. திரு ராஜவேலு உலகம் முழுவதும் அகழ்வாராய்ச்சியாள்ர்கள் கரித்துண்டின் வயதைத்தான் சுற்றுபுறத்திற்கும் அளிக்கிறார்கள் என்று கூசாமல் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார். இது பொது அறிவிற்கு புறம்பானது, அறிவியலையே இழிவு செய்வது என்ற புரிதல் கூட அவருக்கு இல்லை. திரு ராஜேந்திரன் ‘ராஜவேலுவிற்குத் தெரியுமா? உனக்குத் தெரியுமா/’ என்று கேட்டார். இவர் பேராசிரியர் என்று சொல்லிக் கொள்வதே அப்பதவிக்கு இழுக்கு. பேராசிரியர்கள் சட்டாம்பிள்ளைகள் அல்ல. கேள்வி கேட்காதே என்று சொல்லி அடக்குவதற்கு. பதில் தெரியவில்லையென்றால் தெரியவில்லை என்று சொல்ல தைரியம் வேண்டும்.

இப்போது கிடைத்திருக்கும் ஆதாரங்கள் போதா என்றுதான் நான் சொல்கிறேன். அறிவியலின் அடிப்படை தெரிந்த எல்லோரும் அவ்வாறுதான் சொல்வார்கள்.

தமிழ்நாட்டின் கம்யூனிஸ்டுகள் மார்க்சை மறந்து பல ஆண்டுகள் ஆகி விட்டன. திராவிட இயக்கத்தினருக்கும் அறிவியல் அணுகுமுறைக்கும் இடையே இருக்கும் இடைவெளி பெரியாருக்கும் பிராமணர்களுக்கும் இடையே இருக்கும் இடைவெளியை விட அதிகம். ஆனால் தமிழ்நாட்டில் இவ்விருதரப்பினரையும் தவிர அறிவியல் அணுகுமுறையை ஆதரிக்கும் சிலராவது இருப்பார்கள் என நினைக்கிறேன். அவர்கள் வாயை மூடிக் கொண்டு இருக்கக்கூடாது – தமிழகத்திற்கு என்று தனி அறிவியல் விதி முறைகள், அணுகுமுறைகள் இருக்கிறது என்று நினைத்தால் ஒழிய. அப்படி வாயை மூடிக் கொண்டிருந்தால் அவர்களுக்கும் மொழி வெறி பிடித்தாட்டுகிறது என்றுதான் பொருள்.__________________


Guru

Status: Offline
Posts: 23907
Date:
Permalink  
 

 Ananthakrishnan Pakshirajan

கீழடியை நகர நாகரிகம் என்று நிறுவுவதற்குச் செல்ல வேண்டிய தூரம் அதிகம் என்று சொன்னால் பலர் குதிக்கிறார்கள். தமிழ்நாட்டில் அறிஞர்கள் என்று சொல்லிக் கொண்டு அலைந்து கொண்டிருக்கும் அரைகுறைகளும், ஏமாற்றுப் பேர்வழிகளும் என்னை தினத்தந்தி படிக்காதீர்கள் என்று அறிவுறுத்துகிறார்கள்!

இந்த ஆண்டு சீனாவில் லியாங்சு என்ற 5000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான இடம் யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற நகர நாகரிகமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
எதனால்?
1. விவசாயம்
2. சமூக ஏற்றத்தாழ்வு
3.இறை நம்பிக்கை கொண்ட சமூகம்
4. சமுதாய கலாச்சார அடையாளங்கள்
இதைத் தவிர நான்கு முக்கியமான மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட அடையாங்களாகக் கருதப்படுவை இவை:
1. நகரம் இருந்ததற்கான முழு அடையாளங்கள் - அரசர் மாளிகை கோட்டைச் சுவர்கள் போன்றவை
2. நீரைச் சேமித்து வைத்திருந்ததற்கான அடையாளங்கள் - அணைகள்.
3. சமூகத்தில் மேலோர், மற்றவர் புதையிடங்கள்.
4. அந்த இடத்தில் கிடைத்திருக்கும் கலாச்சாரச் சின்னங்கள்.

இது கீழடிக்கு 2700 ஆண்டுகள் முந்தையது.

மீண்டும் சொல்கிறேன்.

உல்கம் பெரியது.

https://whc.unesco.org/en/list/1592/?fbclid=IwAR0N1F8CvEK4b_0DHEAp3el5VxFfWhgaQ4ltJC6CCPeRDdHeCQfrZBXhMsc

 __________________


Guru

Status: Offline
Posts: 23907
Date:
Permalink  
 

கீழடியில் பெரிய செங்கற் கட்டுமானம் ஏதும் கிடைக்கவில்லை என்பதை பேராசிரியர் ராஜன் ஒப்புக் கொள்கிறார். கீழடிப் புத்தகத்திற்கு அவர் அளித்திருக்கும் முன்னுரை சொல்வது இது: One need not depend on brick structures alone for urbanization, as we could not come across any such massive brick structures even during medieval dynasties such as the Pallavas, Pandyas and Cholas. In tropical and sub-tropical climatic zones wooden superstructures are favoured more than brick structures.

யாரும் தமிழகத்தில் பல்லவ, பாண்டிய, சோழர் காலத்தில் பெரும் செங்கற் கட்டுமானங்கள் இல்லாததால் நகர நாகரிகம் இல்லை என்று சொல்லவில்லை. மற்றையச் சான்றுகள் இருக்கின்றன.

கீழடியில் 1.25 மீட்டர் ஆழத்தில் கிடைத்திருக்கும் செங்கல் கட்டுமானம் எந்த காலகட்டத்தியது? அரசு அறிக்கை சொல்கிறது. The excavation on the eastern and northeastern side will reveal more spots of brick structural activity contemporary to the earlier phase of the Christian Era.

அதாவது கிபி ஒன்றாம் நூற்றாண்டிலிருந்து ஐந்தாம் நூற்றாண்டு வரை இருக்கலாம்.

அந்தக் காலகட்டத்தில் மதுரை நகரம் இருந்தது என்பதை வரலாற்று ஆசிரியர்கள் யாரும் மறுக்கவில்லை. கீழடி நகர நாகரிகம் கிமு ஆறாம் நூற்றாண்டைச் சார்ந்தது என்பதற்குத்தான் தகுந்த ஆதாரம் இல்லை நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

இன்னொன்று.

தமிழகத்தில் பெரும் செங்கற்கட்டுமானங்கள் அக்காலகட்டத்தில் இல்லை என்பதை ஒப்புக் கொண்டால் சிந்துச்சமவெளி நாகரிகம் விட்ட இடம்தான் கீழடி தொட்ட இடம் போன்ற கருத்துகளுக்கு பலத்த அடி கிடைக்கும்.__________________


Guru

Status: Offline
Posts: 23907
Date:
Permalink  
 

 

திரு பாலகிருஷ்ணன் ரோஸெட்டா கல்வெட்டு சுமேரிய நாகரிகத்தைச் சேர்ந்தது என்கிறார்!

Rosetta Stone என்று அழைக்கப்படும் ரோஸெட்டா கல்வெட்டிற்கும் சுமேரிய நாகரிகத்திற்கும் ஒரு தொடர்பும் கிடையாது. ரோஸெட்டா கல்வெட்டு எகிப்தில் கிடைத்தது. அது மூன்று வரிவடிவங்களில் எழுதப்பட்டிருந்தது. ஒன்று ஹைரோக்ளைஃபிக் என்னும் பழங்காலத்திய எகிப்திய வரிவடிவம். டெமொடிக் எனப்படும் புதிய கிரேக்க மொழி வரிவடிவம் மற்றும் பழைய கிரேக்க வரிவடிவம்.

சுமேரிய எழுத்து க்யூனிஃபார்ம் என்று அழைக்கப் பட்டது. அது எகிப்திய ஹைரோக்ளைஃபிக்கிலிருந்து வேறுபட்டது. பெஹிஸ்துன் கல்வெட்டுகள் என்று அழைக்கபப்டும் இரானில் கிடைக்கும் கல்வெட்டுகளைத்தான் க்யூனிஃபார்மின் ரோஸெட்டா கல்வெட்டு என்கிறார்கள்.

திரு பாலகிருஷ்ணன் சிந்துச்சமவெளி மொழி ஆராய்ச்சியாளர். அவருக்கு இந்த வித்தியாசம் தெரியாதது ஆச்சரியமாக இருக்கிறது!

 __________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard