New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கீழடி commedies


Guru

Status: Offline
Posts: 24778
Date:
கீழடி commedies
Permalink  
 


கீழடி ஆகழாய்வும் தமிழர்களும்
----------------------------------------------------

https://www.facebook.com/photo.php?fbid=591350261401588&set=a.104365713433381&type=3

கீழடி அகழாய்வு அறிக்கை வந்ததிலிருந்து, தமிழர் நாகரீகம் எழுத்தறிவு பெற்றது என்றும் மிகவும் பண்டைய நாகரீகம் என்றும் பலர் சொல்லிவருகிறார்கள் என்பது மிகவும் மகிழ்சிக்குரியதாகும். கீழடி அகழாய்வில் ஸ்வஸ்திக் முத்திரை கிடைக்கப்பெற்றதாக இணையத்தில் சிலர் குறிப்பிடுகிறார்கள். மேலும் இந்த கீழடி நாகரீகம் என்பது பண்டைய சிந்து சமவெளி நாகரீகத்தின் தொடர்ச்சி மற்றும் அங்கமாகும்.

கீழடி நாகரீகம் என்பது சிந்து சமவெளி நாகரீகம் என்று உறுதியாவதால், வேந்தர்களும் வேளிர்களும் மற்றும் சிலரும், வேதியரான அகத்தியரின் தமிழோடு தென்னகமாக தமிழகம் வந்தனர் என்பது சான்றுகளின் அடிப்படையில் தெரியவருகிறது.

அகத்தியர் அவர்கள், வேளிர்களை அழிவில் இருந்து காப்பாற்றினார் என்ற 1300 ஆண்டுகால சான்று ஒன்று நமக்கு உணர்த்தும் செய்தி என்னவென்றால், சிந்து சமவெளியின் ஒரு அங்கமான பண்டைய துவாரகை அழிந்தபோது, சிவனுக்கு நிகரான பொதிய மலை முனிவரான (சம்பு மாமுனிவர்) அகத்தியரின் தலைமையில் தென்னகமான தமிழகத்திற்கு மக்கள் புலம்பெயர்ந்தனர் என்பதாகும்.

பண்டைய சிந்து சமவெளியின் ஒரு அங்கமான துவாரகையில் இருந்து மிக மிக பண்டைய காலத்தில் அகத்தியரின் தலைமையில் தமிழகத்திற்கு வந்த பெருமக்களே தமிழர் ஆவர். இப்படி சொல்வதே ஏற்புடைய கருத்தாகும். இவர்கள் வருவதற்கு முன்பு இங்கு இருந்த பூர்வகுடிமக்களையும் நாம் இன்று தமிழர்கள் என்று வகைப்படுத்துகிறோம் என்பது மிகவும் ஏற்புடையதே. ஆனால், அகத்தியரின் தலைமையில் தமிழகத்திற்கு கொணர்ந்த நாகரீகம் என்பது இந்த பூர்வகுடிகளையும் சேர்ந்தது என்று சொல்லலாமா என்று தெரியவில்லை. அறிஞர்கள் இதற்கு பதில் சொல்வர்களாக.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

பானைகளில் அக்கினிகுண்டம் எனக் குறிப்பிடும் தமிழ் எழுத்துக்கள்!!!
தமிழகத்தில்!!

கீழடி -கீழடிக்கு முன்னே!!! செஞ்சி மல்லம்பாடி!! 



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

கீழடியில் கிடைத்த "குவிரன்" என்பதன் பொருள் என்ன??
******************
சந்திர "குப்த" மௌரியரும்--நம் ஐயனாரும்!! தமிழும்!!
***-****************************************

1)மேட்டுப்பட்டி.சித்தர்மலைக் கல்வெட்டு.காலம்கி.மு 4ஆம்நூற்றைண்டுக்குமுன்."குவிரன் அந்தை செய்அ தான";"குவிர அந்தை வேள்அ தான"

2) குன்றக்குடி கல்வெட்டு.காலம்.கி.மு4ஆம்நூற்றாண்டுக்குமேல்."...பிஊர் ஆதன் சாத்தன்"
*****
1)மேலுள்ள கல்வெட்டுக்களைப் கல்வெட்டை புரிந்துகொள்ள சிலகுறிப்புகள்.!!
*
"குவி" என்ற தமிழ்ச் சொல்லடியாகத் தோன்றியதே "குப்த". குவித்தல் என்றால் பரவிக்கிடப்பததை திரட்டி குவித்தல் ஆகும். செல்வங்களை குவித்தலால் வணிகன் "குவிரன்"எனப்பட்டான்.
குவி-குவிரன்-குவேரன்(காவிரியின் தந்தைப்பெயர்)-குபேரன் என்று ஆயிற்று. குவிர என்ற சொல்லே "கவர"; "கவரை"(இன்றைய தெலுங்கு பலிஜன் பெயர்!!)
*
குவி-குவே-குவை-பொற்"குவை"(பொற்காசுகளின்மூட்டை) ஆனது. குவி-குவிப்பு.குவி-குவ்வை-குப்பை-குப்ப -குப்த என்றும்;குப்ப-குப்பம்-குப்பன் என்றும் சொற்கள் உருவாயிற்று. தாணியச்செல்வத்திற்கும் பின்னர்வந்த தங்கத்திற்கும் "குப்பை" என்ற பெயரஏற்பட்டது.குப்பைவிற்கும் இடம் "குப்பம்" குப்பைவிற்பவன் "குப்பன்";"குப்பு"எனப்படட்டான்.குப்ப என்பதே வடமொழிப்பில் "குப்த";"குப்தா";குப்தர்"என்று பெயர் ஏற்பட்டது.
***
வேளிர்களில் இளங்கோக்கள் தம் அரசிடம் வரியாகக் குவிந்த வனப்பொருட்களை விற்றானர். "வன"ப்பொருளே வடமொழிப்பில் "பன"ப்பொருள் எனப்பட்டது. பனப்பொருளுக்கு மாற்றாக/செலாவணி(வணிகத்தில் செலவழிப்பதால் செலாவணி எனப்பட்டது) யாக அரசனால் மதிப்புஉத்திரவாத குறியீட்டு காசுக்கும் "வன-பன-பண-பணம்"என்ற பெயரைப்பெற்றது. இந்த இளங்கோக்கள் வன்னியர்(வேளிர்)என்பதால் வன்னியர்-வனியர்-வனியம்-வணிகர்-வணிகம் என்பெயரைப்பெற்றது. வணியம் செய்யும் பாடி(ஊர்) வணியம்பாடி-வாணியம்பாடி எனப்பட்டது.
*
சேத்-சேத்தூர்;சேத்துப்பட்டு.
சேத்-சேத்தான்-சாத்தன்.
சேத்-சேட்-சேட்டு.
எ.கா. பிடாவூர்" சாத்தன்" என்ற வேளிர்.;இளஞ் "சேட் "சென்னி
*
சேத் -சேத்திரம் என்றால் நாடு.சேட்;சாத்தன் என்றால் நாட்டுவணியன்.உள்நாட்டுவணியன் என்று பொருள்.
*
வன்-வனியன்/
வண்-வணியன் என்பதே வாணியன்;வாணிபம் என்று ஆனது.
*
கண்ணகி மா சாத்தனின் மகள்.இவர்களுக்கும் "நகரத்தார் செட்டியார் எனப்படுபாவர்களுக்கும் எள் அளவும் சம்மந்தமில்லை என்பதை குறித்துக்கொள்க".
*

1) "பெரு நிலம் முழுது ஆளும் பெருமகன் தலைவைத்த
ஒரு தனிக் குடிகளோடு உயர்ந்து ஓங்கு செல்வத்தான்;
வரு நிதி பிறர்க்கு ஆர்த்தும் மாசாத்துவான் என்பான்;"- சிலப்பதிகாரம்.

1)"செல்லா நல்லிசை யுறந்தைக் குணாது20நெடுங்கை வேண்மா னருங்கடிப் பிடவூர்
அறப்பெயர்ச் சாத்தன் கிளையேம் பெரும"- அகநாநூறு. இப்பாடல் "ஐயனார்" என்று மக்களால் வணங்கப்பெரும் வாழ்வாங்கு வாழ்ந்து வின்னுறையும் தெய்வத்துள் வைக்கப்பட்ட ஐயனார் தெய்வமாகும்.
**************
By mani pari



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

Mathi Vanan சாத்தன் என்றால் செட்டி, ஐயனார் செட்டி தெய்வம். இசுலாம், கிருத்தவத்தில் வரும் சைத்தான் இந்த சாத்தன் என்கிறார்களே. அது குறித்து

 

Mani Pari சேய்மை
அன்மை


சேய்மை-சீமை(அயல்தேசாந்திரம்).

சேய்(மை)- சேய்ட்டு-சேட்(டு)-[இளஞ் "சேட்" சென்னி]-செட்டி என்றால் அயல் தேசங்களுடன் வனிகம் செய்வோர்.

வனிய(பனியா)சாத்துக்களே அரபு நாடுகளுக்கு சென்னு வனியம் செய்ததோடு நபிகள் நாயகம் காலம்வரை ஆண்டிருந்தனர் என்பாதற்கு சான்றுகள் பல உண்டு.அவர்கள் உருவச்சிலை வழிபாட்டு வேளீர் என்று சான்றுகாள் கூறுவதோடு தீயில்பிறந்தவர் என்று திருக்குரான் கூறுகிறது.அவர்களை சைத்தான்(சாத்தான்)என்கிறது.

Mani Pari Mathi Vanan சாத்தன் என்றால் தரைவழிசென்று வணிகம் செய்பவர் என்று பொருள்



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

சாதி இந்து அறிவாளி: "கீழடியில் இருந்தது பௌத்த மக்கள் இல்லை தோழர். சங்க இலக்கியங்களில் உள்ள பொருட்களே கீழடியில் கிடைத்திருப்பதை வைத்துப் பார்த்தால், அது சங்ககால மக்களின் பண்பாடுதான்."

தலித் அறிவாளி: "புறநானூறு சங்க இலக்கியமா?"

சாதி இந்து அறிவாளி: "ஆமாம் தோழர். இதிலென்ன சந்தேகம்?"

தலித் அறிவாளி: "துடியன், பாணன், பறையன், கடம்பன் என்று இந்நான்கல்லது குடியும் இல்லை என்கிறது புறநானூறு. அப்படியானால் கீழடி பண்பாடு இவர்களின் பண்பாடுதான் என்று நீங்கள் கூறவேண்டியதுதானே?"

சாதி இந்து அறிவாளி: 😳



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

கீழடி "ஆதன்" என்பதன் பொருள் என்ன??
**********************************

வேள்விக்குடி செப்பேடு!!
************************
"அளவரிய "ஆதிராஜரை"அகலநீக்கி அகவிடத்தை களப்ரெனனுங்" இதில் காணப்படும் ஆதிராஜர் யார்??????
****************************
ஆத-ஆதன்-ஆதவன்-ஆதாம்!!
*
ஆத>ஆதாரம்(அடிப்படை)
ஆத>ஆதவன்(ஆதாரமான துவக்கம்)
ஆத->ஆதிமூலம்- ஆதிபகவன்-ஆதிநாதர்-ஆதிநாராயாணர்-ஆதிவிநாயகர்
ஆத>ஆதியந்தம்
ஆத>ஆதாம்(!)
ஆத> ஆதன்(துவக்ககால அரசரான சேரர்)
ஆதி;அனஆாதி
*
நெடில் குரிலாக மரூவும் என்பார் பாவாணர். அவ்வகையில்
ஆதி>ஆதிகாலம்-அதிகாலம்-ஆதி>ஆதிகாலை-அதியகாலை
ஆதி>ஆத-அதஅன்(அதங்கோட்டு ஆசான்)-அதினஅன்.
ஆதி->ஆதன்-ஆதவன்
ஆதி>அதி->அதிஅன்->அதியன்-அதிகன்.
*
ஆதன் என்பது சேரரின் பெயர்.
ஆதன்-ஆதன்எழினி-எழினி ஆதன் என்பது அதியமானின் பெயர்.
ஆதன்-வில்லிஆதன் என்பது ஒய்மானின் பெயர்.
*
ஆரம்பத்தை;துவக்கத்தை குறிப்பதே "ஆதி"என்ற சொல்லாகும்."ஈரெழுத்து ஒருமொழி"என்றவகையில் தமிழின் தொடக்க காலசொல்லே "ஆதி"என்றசொல்லாகும்.
ஆதி நெடில் அதி என்று குறிலாக மரூவும். அவ்வகையில்தான் ஆதிகாலமாகிய ஆதிகாலையை அதிகாலை என்று விளிக்கின்றோம். பெருமால் வழி வந்ததால் வேளீர்கள் மால்->மான் என்று சொல்லப்படுகின்றனார். அரசு தோற்றம்பெற்ற காலத்திலிருந்து தொடர்ந்துவரும் அரசமரபினர் சேரர்கள் ஆவர். அந்தவகையில் சேரமாரபினர் "ஆத"; "ஆதன்" என்று அழைக்கப் பட்டனார். ஆதமான்கள் என்பதே அதமான்-அதன்கோடு-அதியமான்கள்-அதியரையர்-அதியரையன் என்று அழைக்கப்பட்னார். அதியமான்கள் தம்மை "காடவர்"என்று குறிப்பிட்டுக் கொள்வதைப்போல் பல்லவர்களும் தம்மை "அதியரையர்"; "அதி(ய)மான்" என்று குறிப்பிடுவதை கவெட்டுக்காள் கூறுகிறது.
***
சங்ககாலம் முதல் வரலாற்றுக் காலம்வரை பாண்டிநாட்டை ஆண்டதை சங்கப்பாடல்களும் கலேவெட்டுக்களும். காட்டுகின்றன. சங்ககாலத்தில் பாண்டிநாட்டை ஆண்ட அதியமான்காளை அகற்றிவிட்டே களப்பிரர் எனப்படும்"கல்பாழியர்"(களப்பாளார்) பாண்டிநாட்டு ஆட்சியை கைக்கொண்டனர். கல்பாழியர் என்போர் ஆதிநாதர் முதற்றானா மூலாத் தமிழ் சமணத்தை சேர்ந்த வேளீர் மரபினர் ஆவர்.
***
வேள்விக்குடி செப்பேடு!!
************************
"அளவரிய "ஆதிராஜரை"அகலநீக்கி அகவிடத்தை களப்ரெனனுங்
கலியரசன் கைக்கொண்டு" என்று கூறுகிறது.
****
இதில் கூறப்படும் "ஆதிராஜார்"என்பது
அதியமான்களே என்பது என் முன் மொழிவு. சேரர்களில் நெடியவன்;ஆதன்;இமையவரம்பன் இவானே நெஞ் சேரலான் எனப்பட்டான் இவனின் மற்றொருப்பெயர் "ஆதிராஜன்" என்பது இங்குக் குறிப்பிடத் தக்கது. யவனநாட்டைவென்று யவனர்களின் கைகளை பின்கட்டாகக் கட்டி தாலையீல் நெய்பெய்தவன் என்று புகழப்பட்டவன். சேரர்கள் "சேரமான்" எனப்பட்டனார். விற்கொடியும் பனம்பூமாலையும் அனிந்நந சேரகுடும்த்து "அதியமான்"; "நெடுமான்";"அஞ்சி(வஞ்சி)" எனப்பட்டனர். அதியமான் மரபு முன்னோரே யவன வேந்தன் அலக்சாண்டரைத் தோற்கடித்து சிந்துநதி சட்லஜ் ஆறு(வேள் ஆறு என்றபெயருண்டு) இடையில் ஆழிநீர்சூழ் இறுக்கை கொண்டு பாடிவீடு அமைத்து பாரதத்தின் எல்லைக்காவலாக இருந்தவன் அதியமான்கள் என்பது தொல்லியல்சான்றுகளும்

அளவில்லாத அதியமரபு அரசர்களை அகண்டநாடுகள் பலவற்றில் ஆட்சியிலிருந்து நீங்கும்படியாக செய்து;அவர்களின் அகமாகிய படைவீடுகளை களப்பிரன் என்ற வகையுடைய கலியரசன் கைக்கொண்டு என்று கூறுகிறது . இந்த கலியரசன் கிமு 3-4ஆம்நூற்றாண்டில் எருமைநாட்டு அரசன் நன்னன் என்பது ஒரு முன்மொழிவுஆகும்.
*******
அன்புடன்:- Mani pari



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

Mani Pari

பல்லவர்களே அதிஅரையர்(ஆதிஅரயரான அதியமான்)!!
பல்லவர்களே முத்தரையர்(ஆதிராசர்)!!!!
****************************************

பரமேஸ்வர வர்ம பல்லவன் இறந்த பிறகு அவனின் பங்காளிக் குடும்பத்தை சேர்ந்த பீமவர்மன் வழித்தோன்றல்;. இரண்டாம் நந்திவர்மப் பல்லவன் (கம்போடியாவிலிருந்து)வந்து காஞ்சிபுரத்தில் பல்லவ அரசனாக முடிசூட்டப்பட்டான். இதை பரமேஸ்வர வர்மனின் மகன் சித்திரமாயப் பல்லவன் மற்றும் சிலர் எதிர்த்தனர். பல்லவக்குடும்பத்தை சேர்ந்தோர் சிலர் சித்திரமாயன் பட்டத்துக்கு கொண்டுவர முயன்றனர். இவர்களையே உதயேந்திரம் செப்பேடு "தமிழ் நரபதிகள்/தமிழ் அரசர்கள்"என்று குறிப்பிடுகிறது.12 வயதுள்ள பல்லவ மல்லனை பீமவர்மனை சந்தித்து வேண்டிய "தரணி கொண்ட போசர்(இவர்களே போசாளர் என்றும் ஒய்சாளர் என்றும் பிற்காலத்தில் துவாரசமுத்திரத்தை ஆண்டவர்கள். இவர்கள் ஒய்மாநாட்டு ஒய்மான்கள்பல்லவ அரசகுடும்பத்தவர்.) நகரத்தாரும்; காடவமுத்தரையரும் பீமவர்மனை வேண்டி பல்லவ மல்லனை அழைத்துவந்தனர்.

பல்லவமல்லனை எதிர்கொண்டு வரவேற்றவர்கள் "பல்லவ அதியரையன்" ;"காடவமுத்தரையர்"என்ற பல்லகுடும்பத்து அரசர்கள் எதிர்கொண்டு வரவேற்றனர் என்று வைகுண்டப்பெருமாள் கல்வெட்டு (ep.ind..vol,18 p 117)குறிப்பிடுகிறது.
****
பல்லவப்பேரரசன் இராஜசிம்மப் பல்லவன் தன்னை "அதி(ய)மான"என்று கூறிக்கொண்டதாக எலியட் என்ற வரலாற்று ஆய்வாளர் கூறுகின்றார்.
****
பல்லவக் குடும்பத்து அரசர்கள் தம்மை "காடுவெட்டி முத்தரையர்"என்றும் "பல்லவ அதி(ய) அரையர்"என்றும் " "அதி(ய)மான" என்றும் கூறுவதால் செந்தலை முத்தரைய அரசரும் அதியமான்களும் ;ஒய்மான் நாட்டு ஒய்சாளர்(போசாளர்)பல்லவ அரசமரபினர் என்பது தெளிவாகிறது.
************
அன்புடன்:- Mani par



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

Thanam Vettivelu ஐயாக்களே! பண்டைய இலங்கை, இந்திய தமிழ், பாளி, சமஸ்கிருத இலக்கியங்களதும், தொல்பொருட்களினதும் விஞ்ஞான ரீதியிலான ஆய்வுகள் ஒன்றினைத்தான் வலியுறுத்துகின்றன. தமிழ், பாளி, சமஸ்கிருத எழுத்துக்கள், பிராமி எழுத்துக்கள், இலக்கியங்களின் உருவாக்கங்கள், புத்தபெருமானையும், பௌத்த்தினையும் அடையாளப்படுத்துதல் என்பவைகள் எல்லாம் யாழ்ப்பாண தமிழ் ”மஹாயாண” பௌத்தப் பேரறிஞப் பெருந்தேரனால்தான் அவனது 80 வருட வாழ்க்கையில் உருவாக்கப்பட்டவை. நீங்கள் புத்தபெருமானையும், பௌத்தத்தினையும் அடையாளப்படுத்துவது பற்றி விஞ்ஞான ரீதியாக ஆராய்ந்து சரியான விளக்கங்களை ஏற்படுத்தாத நிலையில், கீழடி அகழ்வாராய்வு முடிவுகள் மாத்திரமல்ல, இலங்கை, இந்தியா என்பவைகளின் தொலபொருள் ஆய்வுகள் பிழையான, கற்பனையான முடடிவுகளுக்குத்தான் இட்டுச் செல்லும். மற்றைய புறத்தில் கலிபோனியாவின் தொல்பொருள் கால நிர்ணயிப்புக்கள் தவறானவை என்ற உண்மையும் மெல்ல மெல்ல நிருபிக்கப்படும் நிலையும் உருவாகும் ஐயாக்கள்!



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

முட்டாள்களுக்குப் புரிய வைப்பது கடினம். இருந்தாலும் முயல்கிறேன்.

எழுத்தறிவு என்பது வாழ்க்கையின் அத்தியாவசியத் தேவையாக மாறியது மிகச் சமீபத்தில்தான். ஓர் இருநூறு ஆண்டுகளுக்கு முன் கூட வயலில் உழுத விவசாயியும், பட்டறையில் சம்மட்டி அடித்த தொழிலாளியும் தங்களது தினப்படி வாழ்க்கையில் எழுத்து என்பதையே பார்த்திருக்க மாட்டார்கள். அவர்களுக்குத் தேவையும் இல்லை. கலாச்சார உந்துதல் என்பது மிகச் சிலருக்கே இருந்திருக்க முடியும். எனவே பண்டைய தமிழ்நாட்டில் மக்கள் எழுத்தாற்றல் பெற்றிருந்தார்கள் என்று சொல்வதெல்லாம் உயர்வு நவிற்சி.

சங்க காலப்பானைகளில் எல்லாப் பானைகளிலும் பெயர்கள் இல்லை என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். நமக்குக் கிடைத்திருக்கும் லட்சக் கணக்கான பானை ஓடுகளில் சில நூறுகளில் மட்டுமே பெயர்கள் கிடைக்கின்றன. அதுவும் சில நூறு ஆண்டுகள் இடைவெளியில் கிடைத்திருக்கின்றன. கீழடியில் கூட வண்டி வண்டியாகப் பானைத்துண்டுகள் கிடைத்திருந்தாலும், எழுத்துள்ள பானைக்கீறல்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.
பெயர்கள் உள்ள பானைகள் எதற்காகப் பயன்படுத்தப்பட்டன் என்பதை அறியாமல் நம்மால் எதையும் உறுதியாகச் சொல்ல முடியாது. அவை வழிபாட்டுச் சடங்குகளுக்காக எழுதப் பட்டிருக்கலாம். எழுதியவர் பானையின் சொந்தக்காரர் என்பதையும் உறுதியாகச் சொல்ல முடியாது.

அறிவியல் அணுகுமுறை என்பது காற்றில் கயிறு திரிக்கும் வேலையல்ல.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

வேதம் வேதபிரகாஷ் கீழடி அகழ்வாய்வு, இன்னும் முடியவில்லை, கிடைத்துள்ளவை பிரிக்கப் பட்டு, அடையாளம் காணப் படவேண்டியுள்ளது [1]

சுடுமண் உருவங்கள் / சிற்பங்களின் உடைந்த பாகங்கள் கிடைத்துள்ளன. அவற்றின் நிலைப் பற்றி ஆராய வேண்டியுள்ளது [2]


வழிபாடு தொடர்பான தொல்பொருட்கள் எவையும் தெளிவான முறையில் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது என்று அறிவித்தது பொறுபற்றச் செயல் [3]

சேரன், சிவானந்தம் மற்றும் ராஜன் தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். அகழ்வாய்வு நிபுணர்கள், தங்களது கருத்தை முடிவாகத் திணிக்கக் கூடாது [4]

தமிழ் நாடு அரசு, தொல்லியல் துறை மூலமாக அந்த அறிக்கை வெளியிடப் பட்டுள்ளதால், அத்தகைய தனிப்பட்ட நபர்களின் திணிப்பு இருக்கக் கூடாது! [5]

இந்த சுடுமண் உருவங்கள் / சிற்பங்களின் உடைந்த பாகங்கள் எவற்றாஇக் காட்டுகின்றன என்று சொல்ல வேண்டும், இல்லை சும்மா இருக்க வேண்டும்! [6]

அனுப்பப்பட்ட மாதிரிகளில், 3.53 மீ / 11.58136 அடிகள் கீழ் கிடைத்த ஒரு கனிமத்தை வைத்துக் கொண்டு 480 BCE தேதி நிர்ணயிக்கப் பட்டுள்ளது [7].

அதாவது இதன் மூலமாக மற்றவைகளுக்கு தோராயமாக சார்பு தேதி [relative dating] நிர்ணயிக்கப் பட்டுள்ளது, ஆகவே, உறுதியாக சொல்வது தவறு! [8]

ஒருவர், இதை தாய் கடவுள் என்று ஆகஸ்ட் 30 2019 அன்று மீனாக்ஷி கல்லுரியில் கட்டுரை வாசித்தார்! சிவானந்தம் கேட்டுக் கொண்டிருந்தார், எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை! [9]

சரித்திரம், சரித்திரவரைவியல், அகழ்வாய்வு, அனைத்தின் விளக்கங்கள், மக்களை இணைப்பதாக இருக்க வேண்டும், பிரிப்பதாக இருக்கக் கூடாது! [10]

வேதபிரகாஷ்
23-09-2010



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

மேலும் எழுத்தைப் பற்றி.
எழுதுவது என்பது எளிமையான செயலாக மாறியது தொழில் நுட்பம் பெருகிய பிறகுதான். தாள் பேனா, சிலேட்டு, குச்சி போன்றவை நமக்குக் கிடைத்த பிறகுதான். அதுவும் மலிவாகக் கிடைத்த பிறகு.

பண்டையக் காலத்தில் எழுதுவது என்றால் எங்கே எழுத முடியும்?
ஏடுகளில் எழுத முடியும். பானைகளில் எழுத முடியும். சுவர்களில் எழுத முடியும். பாறைகளில் எழுத முடியும். ஆனால் இவற்ற்றில் எழுதினால் அழித்துத் திரும்ப எழுத முடியாது. மேலும் இன்று என்னால் என் பெயரை சில விநாடிகளில் எழுத முடியும். அதை ஏட்டில் எழுத நிறைய நேரம் எடுக்கும். பானை, சுவர், பாறை போன்றவற்றில் ஏட்டை விட அதிக நேரம் எடுக்கும்.
மண்ணில் எழுதலாம். ஆனால் படிப்பது கடினம். தொடர்ந்து எழுதுவதும் கடினம்.
எனவே அன்று விரும்பியிருந்தாலும் எல்லோராலும் எழுத, படிக்க முடிந்திருக்காது.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

நாமும் இந்த சங்க இலக்கியம் முதல் முதுமக்கள் தாழி வரை பார்க்கின்றோம்

அட தமிழில்தான் இல்லை என்றால் மாயன், செவ்விந்தியர், இன்கா தொடங்கி அப்படியே ஐரோப்பாவின் வைக்கிங் குடிகளின் தொல்பொருட்கள் பார்த்துவிட்டு, எகிப்தின் பிரமீடுக்குள் தேடிவிட்டு இந்த மம்மிகள் உடலில் எல்லாம் தேடிவிட்டு அப்படியே பாபிலோன் நாகரீகம், சிந்துவெளி நாகரீகம் இந்த சீன நாகரீகம் ஜப்பானிய தொடக்க கால புதைபொருட்கள் என எல்லாம் சுற்றிவிட்டு வந்தால் "திராவிடம்" என்றொரு வார்த்தையினையினை காணோம்

அட அது உலகிலும் இல்லை, தமிழிலும் இல்லை, தமிழக ஆலய கல்வெட்டிலும் இல்லை எதிலுமே இல்லை

தமிழிலில் திரிகடுகம் என்றொரு பாடல் உண்டே தவிர திராவிடம் இல்லை

முதலில் அதை சொன்னவன் வெள்ளையன் கால்டுவெல், எங்கிருந்தோ வந்த அவனுக்கு இதுபற்றி எந்த பெரியார் போதித்தானோ தெரியவில்லை, அவன் கண்ட திரித்துவத்தை திராவிடம் என சொல்லிவிட்டானோ என்னவோ?

அதன் பின் அதை பிடித்தது பெரியார் கோஷ்டி, நீதிகட்சி கூட அதை தொடவில்லை அது அர்த்தமற்றது என விட்டுவிட்டது

ஆக 150 ஆண்டு கூட வரலாறு இல்லாத வெறும் வெற்று வார்த்தையான, மாயமானான அந்த திராவிட வார்த்தையினை வைத்து கொண்டு பல்லாயிரம் ஆண்டு தமிழின வரலாறை சொல்ல வருகின்றன ஏமாற்று பேர்வழி கோஷ்டி

திராவிட சூது என்றால் இதுதான், இதுவேதான்..



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

*கீழடியை விட பழமையான ஆதாரங்கள்
- ரவிக்குமார்*

கீழடி அகழ்வாய்வு குறித்து தமிழக அரசின் தொல்லியல் துறை வெளியிட்ட அறிக்கை, அங்கு கிடைத்த தமிழ் பிராமி எழுத்துகளின் காலத்தை கிமு 6 ஆம் நூற்றாண்டு என உறுதி செய்திருக்கிறது. இதனால் 2600 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள், எழுத்தைக் கையாளும் அளவுக்குக் கல்வி அறிவு பெற்றிருந்தனர் என (சமூக) ஊடகங்களிலும் உற்சாகம் கொப்பளிக்கும் பதிவுகளைப் பார்க்க முடிகிறது. தமிழ் எழுத்தின் தொன்மை 2600 ஆண்டுகள் அல்ல, அது அதையும் தாண்டி 3300 வரை ஏற்கனவே சென்றுவிட்டது. தொல்லியல் துறையைச் சேர்ந்தவர்கள் அதை அறிவார்கள். இதைப் பற்றி 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தொல்லியல் அறிஞர் பேராசிரியர் கா.ராஜன் அவர்களிடம் நான் பதிவு செய்த நேர்காணலின் ஒரு பகுதியை இங்கே பகிர்கிறேன் (இந்த நேர்காணல் மணற்கேணி ஆய்விதழில் வெளியிடப்பட்டது).

======

ரவிக்குமார்: பொருந்தல் அகழ்வாய்வில் கிடைத்த நெல்லின் காலம், அறிவியல் முறைப்படி, கி.மு.490 என உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக கூறி-யிருக்கிறீர்கள். இது எந்த அளவுக்கு இதுவரையிலான ஆய்வுகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும்?


பேராசிரியர் கா.ராஜன்: சோழர்களின் தலைநகரமாகவும் துறைமுகப் பட்டினமாகவும் கருதப்படுகிற பூம்புகார்; கொற்கை, ஆதிச்சநல்லூர்; மாங்குடி மருதனார் வாழ்ந்ததாகக் கருதப்படும் மாங்குடி; அதியமான் இருந்ததாகக் கருதப்படுகிற தகடூர்; கொடுமணல்; சேரர்களின் தலைநகராகக் கருதப்படும் முசிறிப் பட்டினம் அல்லது இப்போதைய பட்டணம் போன்ற சங்க கால ஊர்களில் அகழ்வாய்வு செய்யப்பட்டிருக்கின்றன. பெரும்பான்மையான அகழ்வாய்வுகளில் தமிழ் பிராமி எழுத்துப் பொறிப்புக்களைக் கொண்ட பானை ஓடுகள் கிடைத்துள்ளன. ஏற்கனவே தமிழ் பிராமி எழுத்துக்களுக்கு ஒரு கால நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிற காரணத்தால், இந்த அகழ்வாய்வுகளைச் செய்த அனைவருமே இந்த ஊர்கள் அனைத்துமே கி.மு. 3 ஆம் நூற்றாண்டு அளவிலே தான் தோன்றியிருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டியதாயிற்று.

அசோகனது கல்வெட்டிலேயே இங்கு அரசுகள் உருவாகியிருந்த செய்தி காணப்படுகிறது. சேர, சோழ, பாண்டியர்களைப் பற்றி அதில் சொல்லப்- பட்டிருக்கிறது. ஆனாலும் அதற்குத் தேவையான தொல்லியல் சான்றுகள் இங்கு முன்வைக்கப்படவில்லை. அதற்குக் காரணம், அனைத்து ஊர்களும் கி.மு.3 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு உருவானவை என்று காலக் கணிப்பு செய்யப்பட்டதே ஆகும். அதற்கு முக்கிய காரணம் தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள். அரிக்கமேடு, கொற்கை, கரூர், கொடுமணல் போன்ற அனைத்து ஊர்களுமே அந்த அடிப்படையில் தான் காலக் கணிப்பு செய்யப்பட்டன. அதனால் தமிழகத்தினுடைய வரலாற்றை கி.மு 3 ஆம் நூற்றாண்டுக்கு முன் எடுத்துச் செல்ல முடியவில்லை. ஆனால் கிடைத்திருக்கிற சான்றுகளைப் பார்க்கிறபோது, பெருங்கற்படை சின்னங்களைப் பார்க்கிறபோது, அங்கே கிடைத்த மணிகள் முதலான பொருட்களைப் பார்க்கிறபோது, அதற்கு முன்னதாகவே அயல்நாடுகளோடு வணிக உறவுகளைப் பேணியிருந்தது தெரிகிறது. கி.மு.ஆயிரம் முதலே வட இந்தியாவோடு அவர்களுக்குத் தொடர்பிருந்திருக்கிறது. ஆகவே கி.மு.1000 முதல் கி.மு 300 வரை அவர்களது வரலாறு என்னவாக இருந்தது என்பது ஒரு கேள்வியாக இருக்கிறது. அந்த அகழ்வாய்வுகளை அறிவியல்ரீதியான காலக்கணிப்புக்கு உட்படுத்த அப்போது சரியான வசதிகள் இல்லை. அதனால்தான் பொருந்தல் அகழ்வாய்வில் கிடைத்த நெல்லை தற்போதிருக்கும் அறிவியல் ரீதியான காலக் கணிப்புக்கு உட்படுத்துவதென்று முடிவு செய்தோம். இப்போது கிடைத்திருக்கும் காலக் கணிப்பு, கி.மு.ஐந்தாம் நூற்றாண்டு என்று வந்திருக்கிறது. இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்தியாவில் அசோகனுக்கு முந்தைய வரிவடிவங்கள் கிடைத்திருக்கின்றன. பிராகிருத வரிவடிவங்கள் கிடைத்துள்ளன. பிராமி வரிவடிவங்கள் கிடைத்துள்ளன. இலங்கையில் உள்ள அனுராதபுரத்தில் அகழ்வாய்வு மேற்கொண்டபோது கிடைத்த வரிவடிவம், கி.மு.ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று கண்டறிந்திருக்கிறார்கள். ஆனால் மற்றைய தொல்லியல் அறிஞர்கள் அதை, ஒரே ஒரு சான்று தான் கிடைத்திருக்கிறது எனச் சொல்லி ஒதுக்கிவிட்டார்கள். அதன் பிறகு நாகசாமி அவர்கள் கொற்கையில் அகழ்வாய்வு செய்து அங்குக் கிடைத்த வரி வடிவத்தை கி.மு.785 என்று கண்டறிந்தார்கள். அதையும், ஒரே ஒரு சான்றுதான்; இன்னும் பல ஆதாரங்கள் வேண்டும் என்று சொல்லி ஒதுக்கிவிட்டார்கள். அதைப்போல, சத்தியமூர்த்தி அவர்கள் ஆதிச்சநல்லூரிலே அகழ்வாய்வு செய்து கி.மு. 1300 எனச் சொன்னார்கள். அவரே கேரளாவிலிருக்கும் மாங்காட்டில் ஆய்வு செய்து, அதை கி.மு.ஆறாம் நூற்றாண்டு எனச் சொன்னார்கள். இவை எல்லாமே, ஒரு சான்றினை அடிப்படையாகக் கொண்டவை தான். கி.மு 1000 ல் இருந்து கி.மு. 300 வரையிலான கால கட்டத்தை சரியாக விளக்க முடியாத நிலை இருந்தது.

ஐராவதம் மகாதேவன் அவர்கள், சான்றுகள் அதிகம் கிடைக்காத காலத்தில், தமிழ் பிராமியின் காலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு எனச் சொல்லி வந்தார். ஆனால், அவரே ஆதாரங்கள் அதிகம் கிடைக்க ஆரம்பித்த பிறகு, கி.மு.இரண்டாம் நூற்றாண்டு என இன்னும் காலத்தைக் குறைத்துச் சொல்ல ஆரம்பித்துவிட்டார். இது ஒரு மாறுபட்ட கருத்தாகத் தெரிகிறது. அதை அப்படியே ஏற்றுக்கொண்டாலும் கூட, தமிழகம் முழுவதும் ஒரே காலக் கணிப்பு எப்படிப் பொருந்தும் என்று தெரியவில்லை. தமிழ்நாட்டில் வரிவடிவம் எப்படித் தோன்றியது அது எப்படிப் பரவியது என்பது குறித்து அவர் தெளிவாக ஆராயவில்லை. புலிமான்கொம்பை மற்றும் தாதப்பட்டியில் கிடைத்த நடுகற்களில் இருந்த கல்வெட்டுகள் யாவும் சமண மதத்தைச் சார்ந்தவையாக இருப்பதால் சமணர்கள் தான் வரிவடிவத்தை அறிமுகப்படுத்தியிருக்க வேண்டும் என்று அவர் சொல்லியிருக்கிறார். ஆனால் புலிமான் கொம்பையில் கிடைத்த மூன்று நடுகற்களும் தாதப்பட்டியில் கிடைத்த ஒரு நடுகல்லும் தமிழில் எழுதப்பட்டிருக்கின்றன. அதில் வேறு எந்த ஒரு மொழிக் கலப்பும் இல்லை. எந்தவொரு பிராகிருத சொல்லும் இல்லை. இரண்டாவதாக தொல்காப்பியத்தில் சொல்லப்படுகிற சங்க இலக்கியத்தில் சொல்லப்படாத சொற்களெல்லாம் அங்கு பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. உதாரணமாக நாம் அவ்வை என்ற சொல்லை அறிந்திருப்போம். அதற்கு ஆண் பாலாக ‘அவ்வன்’ என்ற சொல்லைப் புலிமான்கொம்பையில் பயன்படுத்தியிருக்கிறார்கள். அந்த அளவுக்குத் தமிழ் மொழி நன்கு வளர்ச்சி பெற்ற நிலையிலே அங்கு காணப்படுகிறது. மாங்குளம் கல்வெட்டுக்கு முன்பாக அதைக் கொண்டு செல்லலாம் என ஐராவதம் மகாதேவன் அவர்களும் சொல்லியிருக்கிறார். சமணர்களுக்கு முன்பாகவே பிராகிருதச் சொல் கலக்காத கல்வெட்டுகள் அங்கே கிடைத்திருக்கின்றன.

இதுவரை கிடைத்திருக்கிற அனைத்துத் தமிழ் பிராமி கல்வெட்டுகளும் தலைநகரங்கள், துறைமுகங்கள், பெரும் வணிக நகரங்கள் முதலானவற்றில் கிடைத்ததால் மிகப்பெரிய செல்வந்தர்கள், அதிகாரம் உள்ளவர்கள் போன்றவர்களால்தான் வரி வடிவம் என்பது பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று ஒரு கருதுகோள் இருந்தது. அதை இந்த நடுகற்கள் தகர்த்திருக்கின்றன. சிறிய கிராமம் ஒன்றில்தான் இவை கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. அந்தக் கல்வெட்டிலேயே கூடலூர் என்று ஒரு ஊரின் பெயரும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. புலிமான்கொம்பை கல்வெட்டில் ‘வேளிர்‘ என்று குறிப்பிடப்பட்டிருப்பதை வைத்துப் பார்த்தால் அங்கு ‘வேளிர்’ என்ற ஒரு இனக்குழு உருவாகியிருந்ததைப் பார்க்கிறோம். ஒரு இனக்குழு உருவாக வேண்டும் என்றால், அதற்குக் குறிப்பிட்ட காலம் பிடித்திருக்கும். அங்கு ஊர் என்ற பெயரைப் பார்க்கும்போது ஊர்கள் உருவாகிவிட்டன, இனக்குழு உருவாகிவிட்டது, கல்வி அறிவும் ஏற்பட்டுவிட்டது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. சிற்றூர்களிலும் கூட கல்வி அறிவு பரவி இருக்கிற நிலையை அங்கு பார்க்கிறோம்.

தமிழ்நாட்டில் கி.மு.மூன்றாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட சான்றுகள், சின்னங்கள், அகழ்வாராய்விலே கிடைக்கவில்லை என்று சொன்னால், அவை உண்மையாகவே கிடைக்கவில்லை என்று பொருளல்ல. காலக் கணிப்பிலே ஏற்பட்ட குழப்பம் தான் காரணம்.

====

தமிழ் பிராமி எழுத்துகளைக் கண்டறிந்ததிலும், சிந்துவெளிக் குறியீடுகளில் தமிழ் அடையாளங்களைக் கண்டறிந்து கூறியதிலும் திரு ஐராவதம் மகாதேவன் அவர்களுக்கு முக்கியமான பங்கு உண்டு. ஆனால் தமிழ் எழுத்துகளின் காலத்தை அசோகன் காலத்துக்குப் பிந்தையது என்று எவ்வித தர்க்க அடிப்படையும் இல்லாமல் அவர் சொல்லிக்கொண்டிருந்தார். அவரது பங்களிப்புகளின் காரணமாக அவரை மறுத்துப் பேசமுடியாமல் தமிழகத் தொல்லியலாளர்கள், ஒன்று அவரை வழிமொழிந்தனர், அல்லது முணுமுணுத்தனர். இதனால் தமிழகத் தொல்லியல் ஆய்வாளர்கள் ஒரு தேக்கநிலைக்குத் தள்ளப்பட்டனர் என்றுகூட சொல்லலாம்.

தமிழ் எழுத்துகளின் தொன்மையை நிறுவுவதில் இன்று தமிழகத் தொல்லியல் ஆய்வாளர்களின் முன்னால் இருக்கும் சவால், திரு ஐராவதம் மகாதேவனை அறிவியல் ரீதியாகக் கடந்துசெல்வது தான்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

Nks Thiruchelvam

#இலங்கைத் #தமிழர்கள் #தென்னிந்திய #தமிழர்களைவிட #காலத்தாலும் #வழிபாட்டு #பாரம்பரியத்தாலும் #முற்பட்டவர்களா?

தமிழ் நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி என்ற இடத்தில் பெருங்கற்கால தொல்லியல் மையம் ஒன்றில் அகழ்வாராய்ச்சிகள் நடைபெற்றன.
இது 2600 வருடங்கள் பழமையான தொல்லியல் மையம் என ஆய்வறிக்கை கூறுகிறது. இங்கு 7000 தொல்லியல் சின்னங்கள் கிடைத்ததாகவும், இவற்றில் வழிபாடு தொடர்பான சின்னங்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

ஆனால் இலங்கையில் 3000 வருடங்கள் பழமையான பெருங்கற்கால தொல்லியல் மையங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இவற்றில் கிடைத்த சுடுமண் சின்னங்களில் லிங்க வடிவங்கள் மற்றும் இரும்பு வேல் சின்னங்களும், பெண் தெய்வ உருவங்களும் கிடைத்துள்ளன.

பொம்பரிப்பு, பூநகரி, ஆகிய இடங்களில் இரும்பு வேல் சின்னங்களும், நிக்காவெவ, உருத்திராபுரம், பின்வெவ ஆகிய இடங்களில் லிங்க வடிவங்கள், பெண் தெய்வ வடிவம் ஆகியவையும் கிடைக்கப்பெற்றுள்ளன. இவற்றின் படங்களை கீழே இணைத்துள்ளேன்.

உசாத்துணை நூல்கள்.
( ஈழத்து இந்து சமய வரலாறு-பேராசிரியர் சி.க.சிற்றம்பலம்)
(ஸ்போலியா செலனிகா-பேராசிரியர் ஜீ.ஏ.பி.தெரனியகல)
(தொல்லியல் நோக்கில் ஈழத் தமிழரின் பண்டைய கால மதமும் கலையும்-பேராசிரியர் பரமு புஸ்பரட்ணம்)

அப்படியானால் லிங்க வழிபாடும், வேல் வழிபாடும், பெண் தெய்வ வழிபாடும் இலங்கையில் இருந்து தான் தென்னிந்தியாவுக்கு பரவியுள்ளதா?
இவ்வழிபாடுகளுக்கு தென்னிந்தியத் தமிழருக்கு இலங்கைத் தமிழர்கள் தான் முன்னோடிகளா?

இலங்கைத் தமிழர்கள் தென்னிந்திய தமிழர்களை விட காலத்தாலும், வழிபாட்டு பாரம்பரியத்தாலும் முற்பட்டவர்கள் எனும் எனது சந்தேகம் இதன் மூலம் வலுப்பெறுகிறது.

இலங்கைத் தமிழர்கள் சிவலிங்க வழிபாட்டையும், முருகவேல் வழிபாட்டையும், பெண் தெய்வ வழிபாட்டையும் இந்தியத் தமிழர்களுக்குக் கொடுத்துள்ளார்கள்.
எனவே தான் ஈழத்தமிழர்கள்
இன்று வரை தமிழர் வழிபாட்டையும், கலாசாரத்தையும், தமிழ் மொழியையும் தென்னிந்தியத் தமிழர்களை விட அதிகமாக பேணி பாதுகாத்து கடைப்பிடித்து வருகிறார்கள்.

ஈழத்தமிழரின் மரபணு இந்தியத் தமிழருடன் 16.60% வீதம் தான் பொருந்துகிறது.
ஆனால் வங்காளியர்களுடன் 28.10% வீதமும், சிங்களவர்களுடன் 55.20% பொருந்துகிறது.

எனவே ஈழத்தமிழர்கள் தனித்துவ மானவர்கள்.

"ஈழத்தமிழருக்கு தமிழ் நாட்டோடு மொழியைத் தவிர வேறெந்தத் தொடர்பும் இல்லை." எனக் கூறப்படுவது உண்மை போலத் தெரிகிறது.
இதுபற்றி உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.

என்.கே.எஸ்.திருச்செல்வம்
வரலாற்று ஆய்வாளர்
இலங்கை.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 

புத்தர்கள்.

கௌதம புத்தர் காலத்தை எடுத்துக்கூறும் சிலர், புத்தரின் காலம் என்பது பௌதம புத்தரின் காலத்திலிருந்தே துவங்குகிறது என்கிறார்கள். ஆனால், உண்மை என்ன?

புத்தர் என்கிற மரபு இந்தியவின் பூர்வ மரபுகளில் ஒன்றாக இருந்து வருகிறது. அவ்வகையில் இம்மண்ணில் பலகாலமாக பல புத்தர்கள் தோன்றி மறைந்துள்ளனர். புத்த மரபுடைய மக்களை ஓர் பெரும் அமைப்பாக(சங்கமாக) ஆக்கியவர்தான் கௌதம புத்தர். அதன்பிறகே புத்த மரபானது பௌத்தம் எனும் சமயமாக உருமாறியது. அதற்கும் முன்பாக புத்த மரபு சமூகங்களை புத்தர்களின் அறிவே வழிநடத்தி வந்தது. அவ்வாறு வழிநடத்திய கௌதமருக்கும் முந்தைய 27 புத்தர்களை பாளி இலக்கியங்கள் அடையாளப் படுத்தியிருக்கின்றன. கௌதமரோடு சேர்த்து 28 புத்தர்களின் பெயர் பட்டியல் இது:
1.தன்ஹங்கர புத்தர்
2.மேதங்கர புத்தர்
3.சரணங்கர புத்தர்
4.தீபங்கர புத்தர்
5. கௌண்டின்ய புத்தர்
6. மங்கல புத்தர்
7.சுமன புத்தர்
8.ரேவத புத்தர்
9.சோபித புத்தர்
10.அனோம தஸ்ஸி புத்தர்.
11.பத்ம புத்தர்
12.நாரத புத்தர்
13.பத்மோத்ர புத்தர்
14.சுமேத புத்தர்
15.சுஜாத புத்தர்
16.பிய தஸ்ஸி புத்தர்
17. அர்த்த தஸ்ஸி புத்தர்
18. தம்ம தஸ்ஸி புத்தர்
19. சித்தார்த்த புத்தர்
20. திஸ்ஸ புத்தர்
21. புஷ்ய புத்தர்.
22. விபஸ்ஸி புத்தர்
23.சிக்கி புத்தர்
24.விஸ்வபூ புத்தர்
25.ககுசந்த் புத்தர்
26. கனகமுனி புத்தர்
27.காஸ்யபர் புத்தர்
28. கௌதம புத்தர்.

எனவே, புத்தர்களின் காலம் என்பது கௌதள புத்தரின் காலத்திலிருந்து இன்னும் சில ஆயிரமாண்டுகள் பின்னோக்கி செல்லுவதற்கே வாய்ப்பிருக்கிறது என்பதை இதன் மூலம் அறியமுடிகிறது.

படம்: கௌதம புத்தருக்கு முன்பிருந்த கடைசி ஆறு புத்தர்களான விபஸ்ஸி புத்தர், சிக்கி புத்தர், விஸ்வபூ புத்தர், ககுசந்த் புத்தர்,கனகமுனி புத்தர், காஸ்யபர் புத்தர் ஆகியோரைக் குறிக்கும் கி.பி.1 ஆம் நூற்றாண்டு சாஞ்சி சின்னம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

Rajamanickam Veera Thirupathy Muthukrishnan சகோதரரே, அம்பானி, அதானி, கார்ப்பரேட் கைக்கூலி, தரகு முதலாளித்துவ, ஏகாதிபத்திய இப்படி ரைமிங்க்கா, சில பல சில்லறை மேற்கோள்களை வைத்து கொண்டு இன்னும் எத்தனை நாள்களுக்கு மக்களை ஏமாற்றப்போகிறீர்கள். ஆரியம் என்றால் என்ன தோழர், அதற்கு ஏன் நாங்கள் அடிமையாய் இருக்க வேண்டும். இனவாதத்தை எப்போதும் நாஸித்தனமாக பிரச்சாரம் செய்து கொண்டும் , சக மனிதர்கள் மீது அவதூறையும், அவ நம்பிக்கையையும் பிரச்சாரம் செய்பவர்கள் தான் வெட்கப்பட வேண்டும். தன்னெஞ்சறிய பொய் சொல்பவர்கள் வெட்கி தலை குனிய வேண்டும். அப்புறம் எனக்கு கம்யூனிஸத்தின் மீது வெறுப்பு வரக்காரணம், அந்த சித்தாந்தம் 10 கோடிக்கும் அதிகமான மக்களை கொன்று குவித்திருக்கிறதே என்ற ஆற்றாமையால் தான். அப்புறம் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு நாங்கள் காரணியாய் இருப்பதற்கு மிகவும் மகிழ்கிறோம்

டு நாகரீகத்தை எப்படி அறிவது என்பது போன்ற புதிய பார்வையையும் அறிவையும் சொல்லிக்கொடுத்தார். நவீன இந்துத்துவ சிந்தனை மரபு எப்படி வலதுசாரி அல்ல? இந்து பண்பாடே ஒரு மனித நேயமிக்க, அன்பையும், கருணையையும் மையமாக கொண்ட வாழ்வியல் என்றும் அற்புதமாக எடுத்து சொன்னார். கூடவே மற்றொரு ஆய்வாளரும், தமிழக பாஜகவின் சிந்தனை முகமுமான திரு . ம . வெங்கடேசன் அவர்களையும், நண்பர் ஓகை நடராஜன், ஹரன் பிரசன்னா, கேந்திரா பாலா அண்ணா ஆகியோரோடு இன்றைய நாள். இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்ட நாள்.


-- Edited by Admin on Monday 23rd of September 2019 04:55:12 PM

__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 Ancient Tamil Civilization

பக்கத்தை விரும்பு

குவிரன் வடமொழிச் சொல் அல்ல

கீழடி அகழாய்வில் அறியப்பட்ட "குவிரன்" என்ற சொல் வடமொழிச் சொல் என சாதிக்க நினைக்கும் சில வடமொழி ஆதரவாளர்களுக்குத் தக்கதொரு பதிலாக தொல்லியல் அறிஞர் டாக்டர் ராஜவேலுவின் பதில்..

தவறான தகவல்கள் பகிரப்படுவதை தவிர்க்க இச்செய்தியை அனைவரும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

~~~~~~~~~

"குவி" என்பது வணிகத்தின் அடிப்படையில் பிறந்தது. கூல வணிகன் போன்றது தமிழ் சொல். ஐராவதம் பிற்கால வடமொழி குபேரனுக்கு இட்டுச் சென்றது பெரும் தவறு. எடுத்துக்காட்டுகள் சொல்லும்பொழுது மூலச் சொல் எப்பொழுது வழக்கில் வந்தது என்பதை பார்க்க வேண்டும். மொழியியலார்கள் செய்யும் தவறுகள் இவை. வடமொழியில் ப தமிழில் வ ஆகும் என இலக்கணத்தை வகுப்பர். வடமொழியே புழக்கத்தில் இல்லாத காலத்தில் குழியின் பெயர் சொல் கொடுப்பதிலும் குகை கல்வெட்டிலும் தற்பொழுது கீழடியிலும் கிடைத்துள்ளன. அதாவது வணிகத் தொடர்பை மவன் தானியங்களை குவிப்பவன் (அல்லது) பொருள்களை குவித்து வணிகம் செய்பவன் என்ற பொருள் கொள்ளுதல் வேண்டும். கொடுப்பதில் மட்டும் நான்கு சில்லுகளில் இப்பெயர் உள்ளது ஒன்றில் குழியின் அத்தை என வருகிறது.

காலம் கணிக்கப்பட்ட பின்பு கூட வடமொழியைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருப்பது நடுநிலையான ஆய்வாளர்களுக்கு அழகல்ல.

டாக்டர் ராஜவேலு
கடல்சார் தொல்லியல் அறிஞர்

...

#_சங்கவிலக்கியத்தில்_ஆதன் :

அண்மையில் கீழடி அகழ்வாய்வின் பானையோடுகளில் எழுதிய பெயர்களில் ஆதன் என்பதும் ஒன்று. இப்பெயர் தமிழவை நூல்களில் பலவிடங்களிலுண்டு. பெரும்பாலும் சேரமரபினரின் பெயர்களே ஆதன் என்றுள்ளன. ஆனால், பாண்டி நாட்டில் கிடைத்த தொல்சான்றில் சேரப்பெயரான ஆதனெனும் பெயர் நம்முள் பலவினாக்களைத் தொடுக்கிறது. எது எவ்வாறோ இருக்கட்டும். இப்பெயர், சங்கநூல்களில் யாங்கெல்லாம் குறிப்பிட்டப்பட்டுள்ளது என்பதை எடுத்தியம்பும் சிறுபதிவே இது. நம்முடைய சங்கநூல்களும் இப்போது கிடைக்கும் தொல்சான்றுகளும் நூறு விழுக்காடு ஒத்தே காணப்படுகின்றன. இவ்வறிவிலியேனுக்குக் கிடைத்த சிலசான்றுகளை உமக்கும் அறிவிக்கிறேன்.

#_ஆதன்_பெயர்க்காரணம் :

மூச்சுக்காற்றில் உள்ளிழுக்கும் காற்று, வெளிவிடும் காற்று என்று இரண்டு வகையுண்டு. உள்ளிழுக்கும் காற்றிலுள்ள உயிர்வளி உடலில் ஊறிய சத்தை எரிக்க உதவுகிறது. உதவும் காற்று நமக்கு ஆகும் காற்று. ஆகும் காற்று ஆதல் காற்று. ஆதல் காற்றை ஆதன் என்பது தமிழ். ஆதன் என்பது உயிர்வளி. உயிர் என்றும் பொருளாகும்.

வெளிவிடும் காற்று அவிந்த காற்று. எரிந்தது அவிந்தால் கரி. அதனால் வெளிவிடும் காற்றைக் கரி+அமில வாயு என்பர். தமிழ் அவிந்த காற்றை அவினி என்று குறிப்பிடுகிறது.

ஆதன், அவினி என்னும் பெயர்கள் இவ்வாறு தோன்றின. இவற்றை மக்களும் தமக்குப் பெயராக்கிக்கொண்டனர்.

#_ஆதன்_பெயர்கள் :

1. சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன்
2. சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதன்
3. சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்
4. பெருஞ்சேரலாதன்
5. ஆதன் அழிசி - ஒல்லையூர்தந்த பூதப்பாண்டியனின் 5 நண்பர்களுள் ஒருவன்

6. ஆதன் - ஓரியின் தந்தை
7. நெடுவேள் ஆதன் - போந்தைப்பட்டினம் என்னும் குறுநில மன்னன்

8. நல்லியாதன் - ஓய்மான் நல்லியக்கோடன்
9. ஓய்மான்வில்லியாதன் - இலங்கையரசன்
10. ஆதனுங்கன் - வேங்கடநாட்டு அரசன்
11. ஆதன் - வாட்டாற்று எழினியின் மகன்
12. ஆடுகோட்பாட்டுச்சேரலாதன்
13. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
14. முடங்கிக்கிடந்த நெடுஞ்சேரலாதன்

15. ஆதனூர் - "மேற்காநாட்டு ஆதனூர்" - திருத்தொண்டர் மாக்கதை.

*******************

நன்றி. வணக்கம்.

பதிவிற்கு உதவிய நூல்கள் :
1. புறநானூறு நூல்
2. செந்தமிழ்ச்சொற்பிறப்பியல் பேரகரமுதலி
3. சங்ககாலவரசர் வரிசை நூல்
4. பெரியபுராணம்.

தொகுப்பு : தமிழ் கோ விக்ரம்



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

ஆராய்ச்சியை அரசியலாக்கும் அன்னியக் கூலிகளின் பணி

Ramachandran

மத்தியத் தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா தாம் (இப்போது மதுரை நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள) திரு. சு. வெங்கடேசனை அழைத்து வந்து தமது வீட்டில் வைத்துக் கூட்டம் நடத்திப் பிரச்சினையை உருவாக்கியவர். மத்திய அரசு அவருக்கு அதுவரை எந்தத் தொந்தரவும் கொடுக்கவில்லை. அதன்பிறகு திரைப்பட இயக்குநர் அமீரும் இதில் நுழைந்து ’பாரதிய ஜனதா கீழடி அகழாய்வைச் சீர்குலைக்க முயல்கிறது’ என்று பொய்மூட்டைகளை அவிழ்த்து விட்டதன் விளைவாக மத்திய அரசு அமர்நாத் ராமகிருஷ்ணாவை இடமாற்றல் செய்தது.

மதுரைக்காரரான அமர்நாத் அதன்பின்னர் கீழடிக் கிளர்ச்சியாளராக உருமாறினார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

வாய்க்கொழுப்பும் வாய்வீச்சும்

facebook.svg Share
twitter.svg Tweet
pinterest.svg Pin
email.svg Email
sharethis.svg Share

 

keeladi%2000.jpg

By: இரா.தமிழ்க்கனல்   Submitted: 2019-09-24 10:42:11

மாறுபாடான கொள்கைகள், கருத்துநிலைகள், விருப்பங்கள் இல்லாமல் இவ்வுலகம் இல்லை; தமிழ்ச் சமூகம் மட்டும் இதற்கு விதிவிலக்கு அல்ல. நூற்றாண்டுகளாகத் தொடரும் துருவநிலைக் கருத்துமோதல், இணைய சமூக ஊடகக் காலகட்டத்திலும் இங்கு தொடர்கிறது.

குறிப்பாக, வரலாற்றுத் துறையில் கடுமையான மோதல் அதிகரித்துவருகிறது, இந்தியத் துணைக்கண்டப் பகுதியில்! தொன்மையான பின்புலத்தைக் கொண்டதாக தமிழர்த் தேசிய இனத்தின் தற்பெருமையாக மட்டுமே இருந்துவந்தது மாறி, அறிவியல்வகையில் மானுட வளர்ச்சியின் தொடர்ச்சி என்பது தொல்லியல் ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுவருகிறது. இதன் ஒரு பகுதியே, தமிழ்நாட்டின் ’கீழடி- வைகை நதிக்கரை சங்ககாலத் தமிழர் நாகரிக வாழ்வு’ எனும் அகழாய்வு முடிவு!

தமிழ்நாட்டு அரசின் தொல்லியல் துறையின் சார்பில் அதன் ஆணையராக இதில் முழுமையாக ஈடுபட்டு உழைத்த இந்திய ஆட்சிப்பணி அதிகாரி த. உதயச்சந்திரனுடன் துறை அமைச்சர் பாண்டியராசனும், கடந்த வியாழனன்று சென்னையில் இதன் ஆய்வறிக்கையை வெளியிட்டனர்.

சரியாகச் சொன்னால், இது கீழடி பகுதியில் நடத்தப்பட்ட நான்காவது கட்ட ஆய்வு தொடர்பானதே! 55 பக்கங்களில் சுருக்கமாகத் தரப்பட்டுள்ள ஆய்வறிக்கையானது, சில புதிய முடிபுகளை முன்வைத்திருப்பது, தமிழர்களால் பரவலான அளவில் மிகவும் நெகிழ்ச்சியாகக் கொண்டாடப்படுகிறது. இதற்கு முக்கியமான ஒரு காரணம், பெரும்பாலானவர்களும் புரிந்துகொள்ளக்கூடியபடி எளிமையாக கீழடி ஆய்வறிக்கையைத் தயாரித்திருப்பதுதான்! ஆராய்ச்சி முடிவுகள் என்றாலே தூர ஓடும்படி செய்யும் ஆய்வேடுகளை அப்படியே சம்பிரதாயமாக வெளியிட்டுவைக்காமல், பரவலாக தமிழ் மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கும் பணியையும் தமிழ்நாட்டு அரசின் தொல்லியல் துறை பயனுறு பணியைச் செய்திருக்கிறது. விளைவு, (புத்தகமாக வெளியிடப்படாதபோதும்) நவீன கைப்பேசிகளின் ஊடாக மின்வடிவப் புத்தகமாக இலட்சக்கணக்கானவர்கள் பகிர்ந்துகொண்டிருக்கின்றனர். உலகளாவிய பிபிசி தமிழ் ஊடகம் முதல் உள்ளூர் அளவில் பகிரப்படும் சமூக ஊடகக் குழுக்கள்வரை தமிழ் மக்களிடம் சேதியைக் கொண்டுபோய்ச் சேர்த்துவருகின்றன.

IMAGE_ALT

 

தொன்மையும் வளமையும் கொண்ட மொழி, இனப் பெருமையைக் கொண்டாடுவது உலகின் எந்த மனிதக் குழுக்களுக்கும் மிக இயல்பான ஒன்றுதானே.. ஆனால், தமிழர் மட்டும் தம் பெருமையைக் கொண்டாடினால் தமிழ்நாட்டிலேயே உலாவிவரும் குறிப்பிட்ட சக்திகளுக்கு எரியத் தொடங்கிவிடும். வயிற்றுக்கு மேல் ஈரம் என்று சொல்வார்கள்; அப்படியானவர்களுக்கு ஏப்பம் வராமல் இருக்கத்தான் செய்யும். பசி இல்லாமல் தின்றுகொழுத்தால் அப்படித்தானே நடக்கும்!

 

அதேவகையினருக்கு தமிழுக்கோ தமிழர்க்கோ ஒரு பெருமிதம் என்றாலும் எரிவு திடீரென அதிகமாகிவிடும். உயிரியலாக மனிதர்க்கு உண்டாகும் வாயுத்தொல்லையை நாம் பரிகசிக்கமுடியாது; இவர்களினதோ வாய்த்தொல்லை இல்லையில்லை வாய்க்கொழுப்பு!

தமிழ்நாட்டு தமிழ் ஊடகங்களில் முன்னேறிய சமூகத்தினருக்கு நூறாண்டுகளுக்கும் மேல் வழங்கப்படும் அதிகமான இட ஒதுக்கீடானது, இந்த வாய்க்கொழுப்புக்கு முதன்மைக் காரணமாக இருக்கிறது. மானுடவியலில், தொல்லியலில் குறிப்பிடும்படியான ஆய்வுகளைச் செய்துவரும் எத்தனையோ கல்வியாளர்கள், ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் தமிழ்நாட்டில் அமைதியாகச் செயல்பட்டுவருகிறார்கள். இந்தத் துறை தொடர்பான விடயங்களில் அவர்களில் எவரினதும் கருத்துகளை, கண்ணோட்டங்களைப் பெற்று வெளியிடுவதுதானே, ஊடகங்களின் கடமை? ஆனால், அதைச் செய்யாமல் குறிப்பிட்ட சமூகத்தில் பிறந்தவராக, தமிழுக்கும் தமிழர்க்கும் எதிராக பொறுப்பற்றுப் பேசும், எழுதும் எவராக இருந்தாலும், வாய்க்கு வந்ததை, மனதில் தோன்றியதை எல்லாம் சிறிதும் கூச்சமில்லாமல் வெளியிடுகிற- உரியவை பற்றி அறியாத- ஆட்களைக் கருத்தாளர்களாக ஆக்கும் அவலம் இன்றுவரை தொடர்கிறது.

IMAGE_ALT

 

மிக அண்மையான காட்டு, காலச்சுவடு இதழில் தொடர்ச்சியாக எழுதிவரும் பி.ஏ.கிருட்டிணன் என்பவரின் கீழடி தொடர்பான இரண்டு கட்டுரைகள்.

 

முன்னையது, இந்த மாதத் தொடக்கத்தில் வெளியானது. சிந்துவெளி- கீழடி தொடர்பிலான அக்கட்டுரையில், திராவிட - தமிழிய ஆய்வாளர்கள் ஆய்வுரீதியாக - அறிவியல் தர்க்கரீதியாக முன்வைக்கும் சில கருதுகோள்களுக்கு முகாந்திரமே இல்லை என மையமாகச் சொல்லும் அவர், தூக்கலாக எள்ளி நகையாடுகிறார்; இது தொடர்பில் அவரின் சவால்பேச்சுகளுக்கும் குறைவு இல்லை. ஆனால் அறிவியல் அவரின் விருப்பத்தை, தமிழ்க் காழ்ப்பை ஒரு நொடிப்பொழுதில் காலில்போட்டு துவம்சம் செய்துவிட்டது. பெரும் ஆய்வு அறிஞர்களேகூட அவர்களின் புதுக் கண்டறிவுகளை, கருதுகோள் எனும் அளவில் முன்வைக்கும் அவை நாகரிகத்தில், அவற்றை ஏறிமிதித்து எள்ளல்செய்யும் இந்தக் கோமான், தன்னை ஒரு தொல்லியல் ஆய்வாளருக்கும் மேல் நிறுத்தி, தகவல்களை அடுக்குகிறார். அதேபாணியில் அவரால் கொட்டிவைக்கப்பட்ட திணிப்புக் கற்பனைக் கருத்தை, அரப்பா காலத்துப் பெண் எலும்புக்கூட்டு ஆய்வுமுடிவு பொய் என்று நிரூபித்துவிட்டது. அதாவது, காலச்சுவட்டில் அவரின் அந்த அபத்தக் கட்டுரையில், ‘ அரப்பா காலத்துப் பெண்ணின் எலும்புக்கூடு கலப்பு இனத்தைச் சேர்ந்தது’ என அடித்துக்கூறுவதை, அந்த மரபணு மூலக்கூறு ஆய்வானது, ” இல்லை; அந்த வாதம் தவறானது; ஸ்டெபி புல்வெளிப் பகுதியிலிருந்து நாடோடிகளாக வந்து குடியேறிய(ஆரிய இனத்த)வர்களுடனோ பழங்குடி ஈரானிய மக்களுடனோ இனக்கலப்பு கொண்டவர்கள் அல்லர்” என்று நிறுவியது.

IMAGE_ALT

 

அதே கட்டுரையிலும் சென்னையிலிருந்து வெளியாகும் பெடரல் ஆங்கில இணைய ஊடகத்தில் இன்றும் பட்சி அ. கிருட்டிணன், கீழடி அகழாய்வு குறித்து தன் ’அறிவுமேதைமை’யைக் காட்டியுள்ளார். முன்னேறிய பிரிவினருக்கான கூடுதல் இடப்பறிப்பின் மூலம் முன்னணி செய்தியேடுகள், இலக்கிய இதழ்களில் எழுதித்தீர்க்கும் கிருட்டிணனுக்கு எழுதுவதற்கு விடயம் இல்லாமல் இவற்றை எழுதிவிடுகிறாரோ என்றுகூட எண்ணம் எழக்கூடும். ஆனால், இதேகருத்தை, தன்னுடைய சொந்த சமூக ஊடகப் பக்கங்களில், விடலைக்காலப் போக்கிலிகளுக்குப் போட்டியாக, மிகவும் தரமிறங்கி வெளியிடுவது, அவரின் இயல்பாகக் காணப்படுகிறது.

 

குறித்த கட்டுரையைப் படிக்கும் எந்த ஒரு செய்திக்காரம் அதன் அபத்தங்களைப் பட்டியலிட்டு பதில்கூற முடியும். ஆனாலும் அது எப்படி அனுமதிக்கப்பட்டது எனும் கேள்வி உடன் எழக்கூடும். இதுதான் தமிழ்நாட்டு ஊடகங்களில் தமிழ், தமிழர் தொடர்பான விடயங்களில் பல பத்தாண்டுகளாகக் காணப்படும் சகிக்க இயலாத தொழில்நெறியற்ற தன்மை. அது ஒரு பக்கம் இருக்கட்டும்; அது துறையின் பிரச்னை என விட்டுவிட்டே வந்துகொண்டிருந்ததால் வந்த வினை, இது.

கிருட்டிணனின் முதல் அலட்சியமே, அரப்பா எலும்புக்கூட்டில் உண்மை துவைத்துத் தொங்கப்போட்ட பின்னரும், அதைப் பற்றி சுயவிமர்சனமில்லாமல், கடந்துசெல்வது!

வரிசையாக எட்டு கேள்விகளை அடுக்கி அதற்கு வியாக்யானம் சொல்கிறேன் பேர்வழி என ஒரே எள்ளலும் துள்ளலும்தான், பட்சி அ. கி.க்கு! ஆனால் என்ன தர்க்கரீதியாக மட்டும் பேசத் தெரியவில்லை.

வெளியிடப்பட்டிருப்பது, ஒரு அகழாய்வின், ஒரு கட்டம் குறித்த ஆய்வு அறிக்கை; இந்தக் கட்டத்தின் எளிய ஆய்வுமுடிவே, முழுமையான ஆய்வறிக்கையோ, முழு ஆய்வின் அறிக்கையோ அல்ல என்பதை எளிதாகப் புரிந்துகொள்ளமுடியும். ஆனால், இந்த அதிகாரவர்க்கத்துப் புள்ளிக்கு (அப்படியும் அவருக்கு ஒரு பட்டம் தருகிறார்கள், குறித்த ஆங்கில ஊடகத்தில்.) இதுகூடத் தெரியவில்லையா, என்ன? தமிழ்நாட்டு மண்ணில் கண்டறியப்பட்டிருப்பது தமிழி- தமிழ் பிராமி எனும் எழுத்துவகை. இவருக்கு அதை அவ்வாறு சுட்டக்கூடக் கசக்கிறது. பிராமி என்றே குறிப்பிடுபவர்,

பழங்கால எழுத்துகள் தாங்கிய பானையோட்டை கரிமத்துணை காலக்கணிப்பு (கார்பன் டேட்டிங்) செய்ததில், அதன் காலத்தைக் கணக்கிடுகின்றனர். அதெப்படி..அந்த இடத்தில் உள்ள ஒரு பொருள் கி.மு. ஆறாம் நூற்றாண்டு என முடிவுசெய்தால், அந்தப் பொருளின் மீது இருக்கும் எழுத்தும் ஆறாம் நூற்றாண்டு ஆகிவிடமுடியுமா என்றெல்லாம் கேட்கிறார். தோண்டப்பட்ட குழிகள், பொருட்கள் எடுக்கப்பட்ட ஆழம் போன்ற விவரங்களை இச்சுருக்க அறிக்கையில் வெளியிட்டிருக்கும் தொல்லியல் துறை, இம்மாதிரியான கேள்விகளுக்கு பதில் அளிப்பது பொருத்தமாக இருக்கும்.

சிந்துவெளி நாகரிகத்துக்கும் கீழடிக்கும் நேரடித் தொடர்பு இருக்கிறதா என்றும் கீழடியில் வசித்த மக்கள் மத நம்பிக்கை அற்றவர்களாக இருந்தார்கள் என்று அறிவில்லாதவர்தான் சொல்லமுடியும் என்றும் அறிக்கையில் அறுதியிட்டுக் கூறப்படாதவற்றை, அப்படிக் கூறப்பட்டிருக்கிறது என்பதாகச் சித்திரம் தீட்ட முனைகிறது, பட்சி அ.கி.யின் மூளை!

IMAGE_ALT

 

 

ஆய்வறிக்கையிலோ, சிந்துவெளி எழுத்தின் தொடர்ச்சியாகவும் தமிழி- தமிழ் பிராமி எழுத்துவகையின் முன்னியாகவும் வாய்க்கக்கூடிய ‘கீறல்கள் அல்லது குறியீடுகள்’ கீழடியில் கிடைத்துள்ளன என்றே கூறப்படுகிறது. அத்துடன், முன்னர், தமிழ்நாட்டில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட, “ ஆதிச்சநல்லூர், கொற்கை, அழகன்குளம், கொடுமணல், கரூர், தேருருவேலி, உறையூர், மாங்குளம், பேரூர் ஆகிய இடங்களிலும் இத்தகைய குறியீடுகள் கிடைத்துள்ளன. இலங்கையில் திசமகரம, கந்தரோடை, மாந்தை, ரிதியகம ஆகிய இடங்களிலும் இதேவகை குறியீடுகள் அகழாய்வில் கிடைத்துள்ளன. இந்திய அளவில் கிடைத்துள்ள இக்குறியீடுகளில் 75 விழுக்காடு தமிழகத்தில் கிடைத்துள்ளன” எனத் தெளிவாக விளக்குகிறது, தொல்லியல் துறை.

நான்காம் கட்ட அகழாய்வின் முடிவை அதுவும் தமிழ்நாட்டு அரசின் தொல்லியல் துறையின் ஆய்வின் முதல் பகுதியின் முடிவு மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது; ஐந்தாம் கட்ட ஆய்வானது இந்த மாத இறுதியில்தான் நிறைவடையவுள்ளது; கீழடி மக்களின் சமயம் குறித்து எந்தவொரு முடிவான முடிபையும் தொல்லியலாளர்கள் தெரிவிக்கவில்லை. ஆனால், அங்கு வசித்த மக்கள் மதநம்பிக்கையற்றவர்களாக இருந்தார்கள் எனக் கூறப்பட்டுள்ளதாக, வார்த்தை விளையாட்டில் ஈடுபடும் வினைகாரராக இருக்கிறார், பட்சி அ.கி.

இவ்விரண்டு கூறுகளையும் திரும்பத் திரும்ப அவர் கவனப்படுத்துவதன் பின்னணி என்னவோ அவருக்குதான் வெளிச்சம்!

ஒன்று மட்டும் தெரிகிறது, யார் ஒருவரோ ஒரு குழுவினரோ சொல்லாத ஒன்றை, அவரோ அவர்கள் சொன்னதாகச் சொல்லி, ஏகடியம்செய்வதும் எள்ளல்செய்வதும் அவர்களுக்கு அந்த விடயம் தொடர்பான காழ்ப்புணர்வோ அச்சமோ இருக்கலாம், அது அறிவியலுக்குப் புறம்பாக இருந்தாலும்; அதன்பொருட்டு அவர்களால் அதைச் சகிக்கமுடியாமல் போகலாம்; அதனால் மனம்போகும் போக்கில் அவர்கள் நடந்துகொள்ளக்கூடும். மற்றது, யதார்த்தம் என்னவென்று தெரிந்தாலும், அதை மறைத்து, தன்னுடைய அல்லது தன் சமூகப் பிரிவினரின் ஆதிக்க பிம்பங்கள் தவிடுபொடியாவதை சகிக்கமுடியாமல் வாய்க்கொழுப்பாக கருத்துகளைக் கொட்டுவது!

கீழடியின் தொல்லியல் அறிவியல்படியான வரலாறு இப்படி அவதூறுக்கு ஆளாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் வேளையில், பெருமைகொள்ள வேண்டிய தமிழர் இனத்தவரோ- ஆம், தமிழ்நாட்டு, ஈழத் தமிழர் ஆகிய தனித்தனி தேசிய இனங்களைச் சேர்ந்தவர் என்றாலும், தென்னகத் தொன்மையில் சிங்களவர்க்கு முந்தைய தாயக வரலாற்று உரிமையை நிலைநாட்டவேண்டிய கடப்பாட்டை உணராதவராக, தமக்குள் வீண்பெருமைடிப்பாக, வாய்வீச்சில் ஈடுபட்டுக்கொண்டிருப்பது, இன்னுமொரு அவலம்!

நன்றி - தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை

தமிழ்நாட்டிலிருந்து இர.இரா.தமிழ்க்கனல்



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

திராவிடர் வரலாற்று ஆய்வு மய்ய சிறப்புக் கூட்டம்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

'கீழடியும் தொல்லியல் ஆய்வுகளும்' பேராசிரியர் கு.ராசவேல் சிறப்புச் சொற்பொழிவு

சென்னை, செப். 24 13.9.2019 அன்று மாலை 6 மணிக்கு சென்னை பெரியார் திடல், அன்னை மணியம்மையார் அரங்கத்தில் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் சிறப்புக் கூட்டம் பேராசிரியர் அ.ராமசாமி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேராசிரியர் முனைவர் ந.க.மங்கள முருகேசன் தமது வரவேற்புரையில் கீழடி ஆய்வின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

பேராசிரியர் வின்சென்ட் சுமித், மனோன்மணியம் சுந்தரனார் ஆகியோர் இந்திய வரலாறு எழுதுவோர் அதன் வரலாற்றைக் கங்கைக் கரையில் இருந்து தொடங்கும் தவறை செய்யாமல் காவிரிக்கரையில் இருந்து தான் தொடங்க வேண்டும் என்று கூறிச் சென்றதை நினை வுறுத்தி, இன்று வைகைக் கரையில் கண்டுபிடிக்கப்பட்ட 3000 ஆண்டுக்கால பழமை   வாய்ந்த நகர நாகரீகமான, அரப்பா மொகஞ் சோதராவிற்கும் முற்பட்ட கீழடி நாகரீகத்தில் இருந்து வைகைக் கரை நாகரீகத்தைத் தொடங்கி வரலாறு எழுதப்பட வேண்டும் என்று கூறியவர், கீழடியில் மய்ய அரசு மேற்கொள்ளும் உள்ளடி வேலைகள் குறித்துத் தமிழர்கள், பண்பாட்டு ஆர்வலர்கள் விழிப் புணர்வுடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தலைமையுரை ஆற்றிய பேராசிரியர் அ.ராமசாமி, கீழடி நாகரிகத்தின் தொன்மையை வலியுறுத்தும் வேளையில் வைகை கரைக்கும் மேலே தாமிரபரணிக் கரை நாகரிகமாம் ஆதிச்சநல்லூர் அகழாய்வு எனும் பண்டைத்தமிழர் இந்திய நாகரீகத்தை மறந்து விடக் கூடாது என அதன் சிறப்பை வலியுறுத்தினார்.

மேலும் இன்றைய சுனாமி போல் அன்றைய நாளில் சிலப்பதிகாரம் படைத்த இளங்கோ அடிகள் "பஃறுளி யாற்றுடன் பன்மலையடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள" என்ற வரிகளை எடுத்துக்காட்டி அன்றைய தமிழர்கள் குமரி வழியே சென்றே சேர நாட்டை வென்றனர் என்பதை எடுத்துக் காட்டினார்.

சிறப்புரை நிகழ்த்திய பேராசிரியர் கு.ராசவேல் இந்திய மொழிகளில் பழமையான மொழி தமிழ் மொழிதான், சமஸ் கிருதம் கி.பி.இரண்டாம் நூற்றாண் டுக்கும் பிற்பட்டது என் பதைத் தொல்லியல் ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டினார்.

பல்லவர் காலத்திற்கு பின் தான் சமஸ்கிருத ஆதிக்கம் தலை தூக்கியது, சர்மா என்ற ஆரியப் பெயரை வர்மா என்று சத்திரிய பெயராக மாற்றிக் கொண்டனர் என்ப தையும், தமிழகத்தில் கிடைத்த கருப்பு, சிவப்பு பானை ஓடுகள், அதுவும் அதில் எழுத்துப் பொறித்திருப்பது போல் வடநாட்டில் எங்கும் கிடையாது என்றும் பல்வேறு ஆதாரங்களுடன் படங்களுடன் எடுத்துக் காட்டினார்.

மற்ற அரசர்கள் எல்லாம் வட்டவடிவில் நாணயங்கள் வெளியிட்ட வேளையில், எங்கே சதுரவடிவ நாணயம் கிடைக்கிறதோ அந்த நாணயங்கள் எல்லாம் சங்க கால நாணயங்கள் என்றும் படத்துடன் விளக்கினார். ஒலி, ஒளி காட்சியுடன் அழகன் குளம்,  ஆதிச்ச நல்லூர், கீழடி அகழ் வாய்வுகளை எடுத்துக் காட்டிய போது வருகை புரிந்த பார்வையாளர்கள் பண்டைத் தமிழ்க் காலத்திற்கே சென்றனர். தமிழரின் நாகரிகச் சின்னங்களைக் நேரில் காணும் அனுபவத்தைப் பெற்றனர்.

தொல்லியல் துறை இயக்குநராக இருந்த போது தமிழின் தொன்மை, தமிழர் பண்பாட்டின் தொன்மை, தமிழர் காலக்கணக்கீடு என்பவை கிறிஸ்து பிறப்பதற்கு 1000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று கூறியும், எழுதியும் வந்த இரா.நாகசாமி, இன்று விருதுகள், சன்மானங்கள் பெற முன்னர் உண்மைகளை கூறியதை மாற்றிக் கூறிவரும் மோசடியை அவருடைய எழுத்து ஆதாரங்களை எடுத்துக் கூறி உண்மையை நிலை நாட்டியதோடு நாகசாமி போன் றோரின் முகமூடியை ஆதாரத்துடன் கிழித்தெறிந்தார்.

இந்தச் சொற்பொழிவில் ஒரு சிறப்பு அம்சம், தந்தை பெரியாரின் எழுத்துத் சீர்திருத்த தொண்டிற்கு நம் முடைய கி.மு.காலத்துக்கு முற்பட்ட எழுத்து ஆதாரத்தை குறிப் பதாக 'ஐ' என்ற எழுத்தைத் தந்தை பெரியார் நீக்கி, 'அய்' என்று எழுதியது இன்று புதுமையாக இருந்தாலும், தந்தை பெரியாருக்கு  'ஐ' என்பதற்கு 'அய்' என்று எழுத வேண்டும் என்ற தொலைநோக்கு எப்படி ஏற்பட்டது என்பது வியப்பாக இருக்கிறது என்று வியந்து 'அய்' என்றே கல்வெட்டு ஆதாரங்களையும் எடுத்துக் காட்டினார் பேராசிரியர் கு.ராசவேல்.

சிறந்த ஆய்வாளர், தொல்லியலாளர் ஆன ராசவேல் கல்வெட்டுப் பெயர்களைச் சரளமாக வாசித்துக் காட்டிய தோடு, அவை அத்தனையும் தமிழ்ப் பெயர்கள் என்று சுட்டிக்காட்டியதும், கிடைத்த அத்தனை பானை ஓடு களிலும் இன்று பாத்திரக் கடையில் பெயர் பொறிப் பது போல் அன்றே தமிழர் பெயர் பொறித்திருந்தது என எடுத்துக் காட்டியபேறு கண்டபோது வியப்பாக இருந் தது. எவ்வளவு சிறப்பு வாய்ந்த பண்பாட்டிற்கு நாம் சொந்தக் காரர்கள் எனப் பெருமை கொள்ளச் செய்தது.

ஒரு மணி நேரத்திற்கு மேல் பவர் பாயிண்ட் பிரசண் டேஷனாகவும் கூறிய செய்திகள் கூட்டத்திற்கு வந்த அனைவரையும் எழுந்திருக்க விடாமல் கட்டிப் போட்டது.

கூட்டத்தில் பார்வையாளராக அமர்ந்திருந்து சொற் பொழிவை ஆழ்ந்து நோக்கிய திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், ஆதாரத் துடனும், பட விளக்கத்துடனும் அரிய கருத்துக்களை எளிய தமிழில் எடுத்துக்கூறிய பேராசிரியர் ராசவேல் அவர்களைப் பாராட்டி, இக்கருத்துகள் எல்லாம் எளிய மக்களைச் சென்று சேர்க்க வேண்டும் எனும் தம், அவாவினை வேண்டு கோளாக வைத்ததுடன் பேராசிரியர் ராசவேல் இக்கருத்துக் களை எழுத்து வடிவில் உண்மை, விடுதலை மலர்களுக்குத் தொடர்ந்து எழுதும்படி கேட்டுக்கொண்டார். வாசகர்களின் வினாக்களுக்கு பேராசிரியர் பதில் கூறி விளக்கினார். முனைவர் தானப்பன் நன்றி கூறினார்.

கூட்டத்திற்கு விடுதலை வாசகர் வட்டம் சிவ.உடுமலை வடிவேல், இரா.தமிழ்செல்வன்,  கோபால் முதலான பலரும் வருகை புரிந்தனர்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

கீழடி: திமிறும் காளை 

keezhadi-excavation

சு.வெங்கடேசன்

உலகெங்கும் உள்ள தமிழ்ச் சமூகத்தின் கவனத்தை ஈர்த்திருக்கிறது, சென்ற வாரத்தில் தமிழக அரசின் தொல்லியல் துறை வெளியிட்ட கீழடி தொடர்பான அறிக்கை. “கீழடியில் கிடைத்த கட்டுமான அமைப்புகள் முதிர்ச்சி பெற்ற சமூகத்தின் அடையாளம். எழுத்தறிவும், சிறந்த கைவினைத் தொழில்நுட்பமும், உள்நாடு மற்றும் வெளிநாடு வணிக வளமும் கொண்ட இந்நாகரிகத்தின் காலம் கிமு 600” என்று அது கூறுகிறது. அதாவது, கீழடியின் வயது 2600 என்று கூறும் அந்த அறிக்கை, அந்தக் காலகட்டத்திலேயே எழுத்தறிவு பெற்ற சமூகமாக தமிழ்ச் சமூகம் இருந்ததையும் விரிவான ஆதாரங்களோடு நிறுவ முயல்கிறது. ஆனால், தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை மேற்கண்ட முயற்சியின் விளைவு இது என்பதையும், கீழடியை அணுகும் விதத்தில் இனியேனும் மத்திய அரசு சிறப்புக் கவனம் அளிக்க வேண்டும் என்பதையும் இங்கு நாம் அழுத்திச் சொல்ல வேண்டியிருக்கிறது.

 

மூன்று கட்ட ஆய்வுகள்

நான்காண்டுகளாக கீழடியில் ஆய்வு நடந்திருக்கிறது. மத்திய தொல்லியல் துறை முதல் மூன்றாண்டுகள் ஆய்வுகளை நடத்தியது. அதில் முதல் இரண்டு ஆண்டுகள் ஆய்வுகளை நடத்திய அமர்நாத் இராமகிருஷ்ணன் குழு 102 குழிகள் அகழ்ந்தது. அவற்றில் கிடைத்த சான்றுகளின் அடிப்படையில், 2017 பிப்ரவரியில் இடைக்கால அறிக்கை கொடுத்தார் அமர்நாத் இராமகிருஷ்ணன். ‘தமிழகத்தில் முதன்முறையாக நகர நாகரிகத்துக்கான விரிவான கட்டுமானங்கள் கிடைத்திருக்கின்றன’ என்று அவர் குறிப்பிட்டார்.

விரைவிலேயே அவர் பணியிடம் மாற்றப்பட்டார். மூன்றாவது ஆண்டில் ஆய்வுகளை நடத்திய ஸ்ரீராமன், வெறும் 10 குழிகளை மட்டுமே அகழ்ந்தார். ‘புதிய ஆதாரங்களோ, கட்டுமானத்தின் தொடர்ச்சியோ கிடைக்கவில்லை; புதிய சான்றுகளும் எதுவும் கிடைக்கவில்லை’ என்று ஒரு பக்க அறிக்கையை மத்திய அரசுக்கு அவர் அனுப்பினார். அந்த அறிக்கையின் அடிப்படையில் கீழடி ஆய்வை முடித்துவிட்டு வெளியேறியது மத்திய தொல்லியல் துறை.

இந்தக் கட்டத்திலிருந்துதான் நான்காம் ஆண்டில் சிவானந்தம் தலைமையில், தன்னுடைய அகழாய்வைத் தொடங்கியது தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை. 34 குழிகளில் நடத்தப்பட்ட இந்த அகழாய்வில் கிடைத்த சான்றுகளை உயரிய ஆய்வு நிறுவனங்கள் பார்வைக்கு அனுப்பி, அவர்கள் அளித்த மதிப்பீட்டின்படியே தன்னுடைய அறிக்கையை அது சமீபத்தில் சமர்ப்பித்தது.
ஒரு ஆண்டில் கிடைத்த சான்றுகளே மறு ஆண்டும் கிடைக்கும் என்று யாரும் எதிர்பார்க்க முடியாது. முதல் ஆண்டில் விரிவான ஆதாரங்கள் கிடைத்து, மறு ஆண்டில் எதுவும் கிடைக்காமலும் போகலாம். ஆய்வு என்பது இவை அனைத்தையும் உள்ளடக்கியதுதான். இன்னும் துல்லியமாகச் சொல்லப்போனால், சான்றுகள் என்று எது கருதப்படுகிறதோ அது கிடைத்த இடத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறதோ அதே அளவு சம முக்கியத்துவம் பெற்றதுதான் கிடைக்காத இடமும். சான்றுகள் கிடைத்த இடத்துக்கும் கிடைக்காத இடத்துக்கும் உள்ள வேறுபாடுகளைப் பற்றி தொல்லியல் அறிஞர்கள் விவாதிக்கட்டும். நாம் எழுப்ப வேண்டிய கேள்வி, இந்த அறிக்கைகள் அடிப்படையில் அரசு எடுக்கும் முடிவுகள் தொடர்பில்தான்.


 

சர்ச்சைகளும் முடிவுகளும்

ஏற்கெனவே, கீழடி ஆய்வில் தீவிரமான ஆர்வம் காட்டிவந்த அமர்நாத் இராமகிருஷ்ணன் அங்கிருந்து பணிமாற்றம் செய்யப்பட்டது உள்ளூர் மக்களிடம் அதிருப்தியையும் சந்தேகத்தையும் உண்டாக்கிய நிலையில், புதிதாகப் பொறுப்பேற்ற ஸ்ரீராமன், கீழடி ஆய்வையே முடிக்கும் அளவுக்குக் கொடுத்த அறிக்கையையேனும் மத்திய அரசு கேள்விக்குட்படுத்தியிருக்கலாம். “ஒரு வருஷம் முழுக்கவுமே வெறும் 10 குழிகள் அளவுக்கு மட்டுமே அகழாய்வு நடத்த முடிந்ததா? ஓராண்டில் இந்த ஆய்வுக்காகக் கொடுக்கப்பட்ட பணத்தில் மூன்றில் ஒரு பங்கைக்கூட நீங்கள் ஏன் செலவிடவில்லை? இன்னும் கொஞ்சம் முயன்றுபார்க்கலாமா?” என்றுகூடக் கேட்காமல் ஸ்ரீராமன் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் அப்படியே கீழடியைக் கைவிட்டது மத்திய அரசு.

இப்போது மாநிலத் தொல்லியல் துறை நடத்தியிருக்கும் ஆய்வு கீழடியின் முக்கியத்துவத்தை ஒட்டுமொத்த நாட்டுக்கும் உணர்த்தியிருக்கும் சூழலிலேனும், கீழடியை இனி கூடுதல் முக்கியத்துவத்துடன் அணுக முற்பட வேண்டும். முழு ஆய்வையும் முடிக்காமல் ஒரு அதிகாரி கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில் ஆய்வை முடித்துக்கொள்ளும் போக்கைக் கைவிட வேண்டும்.
கீழடியில் உள்ள தொல்லியல் மேடு என்பது தனித்த ஒன்றல்ல, 110 ஏக்கர் கொண்ட அம்மேட்டுக்குப் பக்கத்தில் 90 ஏக்கரில் இன்னொரு மேடு உள்ளது. கீழடியைச் சுற்றி கொந்தகை, மணலூர், அகரம் ஆகிய கிராமங்களும் இதே அளவு தொல்லியல் எச்சங்களோடு உள்ளவை என்று கருதப்படுபவை.

இவை அனைத்தும் ஒரே குவிமைய நிலப்பரப்பு என்பது இங்கு நாம் கவனிக்க வேண்டியதாகும். ஒரு பெரும் நீர்நிலையைச் சுற்றிய நிலவியல் அமைப்பாக இது இருந்திருக்கலாம். வைகையின் நீரைக் கால்வாய் வழியாக இரண்டு கிமீ தூரம் பிரித்து வந்து, நீர் தேக்கி வேளாண்மையில் ஈடுபட்டவர்களாக அங்கு வாழ்ந்தவர்கள் இருந்திருக்கலாம். ஆனால், இவையெல்லாம் தொடர் ஆய்வுகளில் நிறுவப்பட வேண்டியவை.

இரு கோரிக்கைகள்

ஆகவே, கீழடியைச் சுற்றியுள்ள இப்பகுதியைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கும் பணி முதன்மையானது. உத்தர பிரதேசத்தில் பாக்பத்தில் உள்ள சனவுலி கிராமத்தில் 28.67 ஏக்கர் நிலத்தைப் பாதுகாக்கப்பட்ட நிலமாக சில நாட்களுக்கு முன் மத்திய தொல்லியல் துறை அறிவித்துள்ளதை இங்கு சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்கும். அங்கு கடந்த ஆண்டு மத்திய தொல்லியல் துறை நடத்திய அகழாய்வில் பழங்காலச் சவப்பெட்டிகளும் கல்லறைகளும் கிடைத்துள்ளன. அவற்றின் காலத்தைக் கணிக்கக் காலப் பகுப்பாய்வுக்கு மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன. ஆனால், அவற்றின் முடிவுகள் வருவதற்கு முன்பே அவ்விடத்தைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்திருக்கிறது மத்திய தொல்லியல் துறை.

ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளாக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொல்லியல் பொருட்களும் கட்டுமானச் சான்றுகளும் கண்டுபிடிக்கப்பட்டு, ஒன்றுக்கும் மேற்பட்ட முறை காலப் பகுப்பாய்வுக்கு மாதிரிகளை அனுப்பி, கால நிர்ணயம் செய்யப்பட்ட கீழடியின் ஆய்வுக்குரிய நிலம் இன்னும் பாதுகாக்கப்பட்ட நிலமாக அறிவிக்கப்படவில்லை.

அடுத்து, கீழடியில் சர்வதேசத் தரத்தில் ஒரு அருங்காட்சியகமும் அமைக்கப்பட வேண்டும். கீழடியில் ஆய்வு தொடங்கப்பட்ட அதே காலகட்டத்தில், அகழாய்வு தொடங்கப்பட்டதும் பிரதமர் மோடியின் சொந்த நகரமான குஜராத்தின் வட் நகரில் இதுவரை கிடைத்த பொருட்களைக் கொண்டு, சர்வதேசத் தரத்தில் மெய்நிகர் அருங்காட்சியகம் அமைக்க சர்வதேச ஒப்பந்தப்புள்ளியை மத்திய தொல்லியல் துறை கோரியுள்ளதை இங்கு சுட்டிக்காட்டலாம். மத்திய அரசிடம் இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்துவது மாநில அரசின் கடமையும்கூட.

கீழடியில் கிடைத்த எலும்பை டெக்கான் கல்லூரிக்குப் பகுப்பாய்வுக்கு அனுப்பியதில், அது திமிலுடைய காளையின் எலும்பு என ஆய்வு முடிவுகள் கூறுவதாகச் சொல்கிறது தமிழக தொல்லியல் துறை வெளியிட்டுள்ள அறிக்கை. வைகை நதியிலிருந்து கீழடியின் வழியே மேலேறும் திமிலுடைய காளை தமிழின் குறியீடு!

- சு.வெங்கடேசன்,

சாகித்ய அகாடமி விருது பெற்ற ‘காவல் கோட்டம்’ நாவலின் ஆசிரியர்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

கீழடி: 2,600 ஆண்டுகால வரலாற்றின் ஆய்வறிக்கை வெளியாகக் காரணமான பெண்

வழக்கறிஞர் கனிமொழி மதிImage captionவழக்கறிஞர் கனிமொழி மதி

இன்று கீழடி நாகரிகம் பற்றி உலகமே பேச ஆரம்பித்துள்ளது. ஆனால், இந்திய அரசின் தொல்லியல் துறையால் முதலில் செய்யப்பட்ட ஆய்வுகளின் அறிக்கை வெளியிடப்படாமல் இருந்தது விமர்சனத்துக்கு உள்ளானது.

கீழடி ஆய்வு அறிக்கையை வெளியிடவும், அங்கு தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்படவும், அங்குள்ள தொல்பொருட்களை அங்கேயே வைத்து பாதுாக்கவும் நீதிமன்ற வழிகாட்டுதல்கள் கிடைக்க வழி செய்தவர் திண்டுக்கல்லைச் சேர்ந்த வழக்கறிஞர் கனிமொழி மதி.

இந்தியத் தொல்லியல் துறை நடத்தி வந்த கீழடி அகழ்வாய்வை, தமிழக அரசே நடத்தவும், அங்கு கிடைத்த பொருட்களை அங்கேயே அருங்காட்சியகம் அமைத்து பாதுகாக்க இடம் ஒதுக்கப்படவும் கனிமொழி மதி, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தொடுத்த பொதுநல வழக்கும் முக்கிய பங்காற்றியது.

கீழடி ஆய்வு முடிவுகள் வெளியாவதில் முக்கியமான பங்காற்றியுள்ள வழக்கறிஞர் கனிமொழி மதியை தொடர்பு கொண்டு பிபிசி தமிழ் பேசியது.

கீழடி நாகரிகம்படத்தின் காப்புரிமைTAMIL NADU STATE ARCHEOLOGY DEP

கீழடியில் இரண்டாவது கட்ட ஆய்வுகள் நடைபெற்று கொண்டிருந்தபோதுதான், அது பற்றிய செய்திகள் வெளிவந்ததை பார்த்து வியப்படைந்துள்ளார் வரலாற்று மாணவியான கனிமொழி மதி.

திண்டுக்கல் பக்கத்திலுள்ள கிராமம் ஒன்றுதான் சொந்த ஊர் என்பதால் மதுரை பக்கத்திலுள்ள கீழடியில் தொல்பொருள் ஆராய்ச்சி என்றவுடன் இவருக்கு ஆர்வம் மேலிட்டுள்ளது.

பழங்கால நாகரிகம் என்றால் மொஹஞ்சதாரோ, ஹரப்பா பற்றி நாம் படித்திருக்கிறோம். கீழடியில் கட்டட சுவர்கள் கண்டுபிடிக்க்பபட்டுள்ளன என்று கேள்விப்பட்டபோது கனிமொழி மதிக்கு ஆர்வம் இன்னும் அதிகமானது.

கீழடி அகழாய்வில் கிடைத்தது என்ன?

கிணறு அமைப்பு, குழாய் மூலம் தண்ணீர் எடுத்து வருவது, கொண்டு செல்வது போன்றவை எல்லாம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை அங்கு சென்று பார்த்துள்ளார்.

இதற்குப் பிறகு நடக்கும் தொல்லியல் ஆய்வுகளில் இன்னும் அதிகமானவை கண்டுபிடிக்கப்படும் என்று அவர் எதிர்பார்த்திருந்த நிலையில், அகழ்வாய்வு தொடராமல் இருந்ததும், கீழடியில் கிடைத்த பொருட்களை அங்கேயே காட்சிக்கு வைக்காமல் எடுத்து செல்ல முற்பட்டதையும் பார்த்து கனிமொழி மதி ஆதங்கப்பட்டதாக பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

கீழடி நாகரிகம்

பின்னர் இது தொடர்பாக பொதுநல வழக்கு தொடர முடிவு செய்திருக்கிறார் அவர்.

கல்லூரி நாட்களில் அருட்காட்சியகங்கள் மற்றும் தொல்பொருட்களை பற்றி அறிந்து வைத்திருப்பதால், இந்த பொருட்களை இன்னொரு இடத்திற்கு கொண்டு சென்று விட்டால், அவற்றை திருப்பி கொண்டுவர மிகவும் கடினம் என அவருக்கு புரிந்தது.

எனவே, பொருட்களை எடுத்து செல்வதை தடுத்து, உள்ளூரில் வைத்து காக்க ஏற்பாடு செய்யும் நொக்கத்தோடு இந்த பொதுநல வழக்கை தொடுத்ததாக அவர் தெரிவித்தார்.

கீழடி நாகரிகம்

கீழடி நாகரிகம் 2,600 ஆண்டுகள் பழமை வாய்ந்து. அப்போதைய மக்கள் படிப்பறிவோடு வாழ்ந்து வந்துள்ளனர் என்கிற முக்கிய தகவல்கள் வெளிவந்துள்ளதை பார்த்து பெருமகிழ்ச்சியடைவதாக கனிமொழி மதி தெரிவித்தார்.

அக்கால மக்கள் எதார்த்தமாக, சாதாரணமாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பது நமக்கு தெரிய வந்துள்ளது. ஆனால், நாம் கடைபிடிக்கும் சில மூடநம்பிக்கைகளால் எதார்த்தமான வாழ்க்கையை தொலைத்துவிட்டோமோ எண்ண தோன்றுகிறது என்கிறார் அவர்.

"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற புறநானூற்றுப் பாடலின் வரிகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. மனிதரை மதிக்கக்கூடிய அக்கால மக்களின் வாழ்வை இந்த பாடல் உணர்த்துவதாகவும் தெரிவித்தார்.

கீழடி நாகரிகம்

அறிவியல் கருத்துகளை எதார்த்தமாக உள்வாங்கி கொண்டு வாழ்ந்த சமூகமாக 2,600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இந்த சமூகத்தின் அடிப்படை இருந்திருககிறது என்றால்,இந்த காலத்திற்கு பின்னர் வாழ்ந்தவர்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள் என்பதை அறிய, இந்த கீழடி கண்டுபிடிப்பு ஒரு தூண்டுதலாக இருக்கும் என்று கனிமொழி மதி தெரிவித்தார்.

இந்த பொதுநல வழக்கில் பெரிய தடைகளை எல்லாம் சந்திக்கவில்லை என்று தெரிவித்த அவர், இந்த வழக்கை மதுரையில் தொடர வேண்டியிருந்தது என்பதால், கடைசி நேரத்தில் அடுத்த நாள் வழக்கு விசாரணைக்கு வருவது தெரியவந்தபோது, அன்றைய நாளில் சரியாக ஆஜராவதில் சில சிரமங்களை எதிர்கொண்டதாகத் தெரிவித்தார் கனிமொழி மதி.

ஆனால், இந்த பொதுநல வழக்கு ஒரு நாள் கூட பாதிப்பு இல்லாமல் நடைபெற வேண்டும். தனிப்பட்ட வழக்குகள் பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை, ஒருநாள் கூட ஆஜராகாமல் இந்துவிட கூடாது என்பதில் தான் மிகவும் கவனமாக இருந்ததாக அவர் தெரிவித்தார்.

இந்த வழக்கில் ஏதாவது சிக்கல் என்றால், அது எனக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமுதாயத்திற்கே பாதிப்பு என்பதால் ஒவ்வொரு நாளும் சரியாக இந்த வழக்கில் ஆஜராகியுள்ளார் கனிமொழி மதி.

மதுரையில் தனக்கு முத்து பாண்டி என்கிற வழக்கறிஞர் உதவியதாகவும் அவர் கூறினார்.

கீழடி நாகரிகம்

"மத்திய தொல்லியல் துறை எங்கு அகழ்வாராய்ச்சி செய்தாலும், அறிக்கை வெளியிடுவதில்லை. ஆதிச்சநல்லூரில் இந்தநிலைதான் ஏற்பட்டது. மாநில அரசு தமிழகத்திலுள்ள பல இடங்களில் தொல்பொருள் ஆராய்ச்சிகளை தொடர்ந்து நடத்தி, வரலாற்று புதையல்களை வெளிக்கெணர செய்வதே தனது நோக்கம்," என்கிறார் வழக்கறிஞர் கனிமொழி மதி.

யார் இந்த கனிமொழி மதி?

திண்டுக்கல்லுக்கு அருகிலுள்ள தேவத்தூர் கிரமத்தை சேர்ந்தவர் கனிமொழி மதி. எட்டாம் வகுப்பு வரை அதே கிராமத்தில் பயின்றுவிட்டு, 12ம் வகுப்பு வரை திண்டுக்கல்லில் கல்வி கற்றுள்ளார்.

திருச்சியில் ஹோலி கிராஸ் கல்லூரியில் வரலாறு படித்து விட்டு, சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றுள்ளார்.

மூத்த வழக்கறிஞர்களோடு எட்டு ஆண்டு காலம் பணிபுரிந்துவிட்டு, 2009ம் ஆண்டு தனியாக வழக்குகளை எடுத்து வாதிட தொடங்கியுள்ளார்.

"எனது தந்தை, பெரியார் கொள்கைகளில் ஈடுபாடு உடையவர் என்பதால், அதிக புத்தகங்கள் வீட்டில் இருந்தன. அவற்றைப் படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது," எனத் தெரிவித்தார் கனிமொழி மதி.

கீழடி நாகரிகம்

மேலும், பெண்களுக்கு பல்வேறு உரிமைகளை பெற்று கொடுப்பதிலும் இவர் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

கீழடி தான் மணலூர் என்று சில
ஆய்வாளர்கள் கருத்து கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் கீழடி கடைச்சங்க மதுரையாக
இருக்கவே வாய்ப்பு அதிகம்.

கடைச்சங்க மதுரை அதாவது சிலப்பதிகாரம்
போன்றவை குறிப்பிடுகிற மதுரை
திருப்பரங்குன்றத்திற்கு கிழக்கே இருந்தது
என்று தான் சங்க இலக்கியங்களில்
குறிப்பு வருகிறது

"மாட மலிமருகில் கூடற் குடவயின்" என்ற திருமுருகாற்றுப்படை வரி தெரிவிக்கப்பட்டிருந்தது. "கூடற்குடவயில் பரங்குன்று" என்பது நக்கீரர் வாழ்த்து. ஆகவே மதுரை பரங்குன்றின் கிழக்கே இருந்திருக்க வேண்டும். ஆனால் இன்றைய மதுரை திருப்பரங்குன்றத்திற்கு கிழக்கில் இல்லை.
வடக்கே இருக்கிறது.

இந்த விஷயங்கள் வரலாற்று உலகில்
கீழடி கண்டறியப்பட்டதற்கு நீண்ட காலத்திற்கு
முன்பிருந்தே ஆய்வில் இருக்கிறது.

கீழடி தான் மணலூர் என்று சில
ஆய்வாளர்கள் கருத்து கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் கீழடி கடைச்சங்க மதுரையாக
இருக்கவே வாய்ப்பு அதிகம்.

கடைச்சங்க மதுரை அதாவது சிலப்பதிகாரம்
போன்றவை குறிப்பிடுகிற மதுரை
திருப்பரங்குன்றத்திற்கு கிழக்கே இருந்தது
என்று தான் சங்க இலக்கியங்களில்
குறிப்பு வருகிறது

"மாட மலிமருகில் கூடற் குடவயின்" என்ற திருமுருகாற்றுப்படை வரி தெரிவிக்கப்பட்டிருந்தது. "கூடற்குடவயில் பரங்குன்று" என்பது நக்கீரர் வாழ்த்து. ஆகவே மதுரை பரங்குன்றின் கிழக்கே இருந்திருக்க வேண்டும். ஆனால் இன்றைய மதுரை திருப்பரங்குன்றத்திற்கு கிழக்கில் இல்லை.
வடக்கே இருக்கிறது.

இந்த விஷயங்கள் வரலாற்று உலகில்
கீழடி கண்டறியப்பட்டதற்கு நீண்ட காலத்திற்கு
முன்பிருந்தே ஆய்வில் இருக்கிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 

குவிரன்...ஆதன்

https://aarkaytamil.blogspot.com/2019/09/blog-post_62.html

 
FB_IMG_1569302357115.jpg
குவிரன் வடமொழிச் சொல் அல்ல

கீழடி அகழாய்வில்  அறியப்பட்ட "குவிரன்" என்ற சொல் வடமொழிச் சொல் என சாதிக்க நினைக்கும் சில வடமொழி  ஆதரவாளர்களுக்குத் தக்கதொரு பதிலாக தொல்லியல் அறிஞர் டாக்டர் ராஜவேலுவின் பதில்..

தவறான தகவல்கள் பகிரப்படுவதை தவிர்க்க இச்செய்தியை அனைவரும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

~~~~~~~~~

"குவி" என்பது வணிகத்தின் அடிப்படையில் பிறந்தது. கூல வணிகன் போன்றது தமிழ் சொல். ஐராவதம் பிற்கால வடமொழி குபேரனுக்கு இட்டுச் சென்றது பெரும் தவறு. எடுத்துக்காட்டுகள் சொல்லும்பொழுது மூலச் சொல் எப்பொழுது வழக்கில் வந்தது என்பதை பார்க்க வேண்டும். மொழியியலார்கள் செய்யும் தவறுகள் இவை. வடமொழியில் ப தமிழில் வ ஆகும் என இலக்கணத்தை வகுப்பர். வடமொழியே புழக்கத்தில் இல்லாத காலத்தில் குழியின் பெயர் சொல் கொடுப்பதிலும் குகை கல்வெட்டிலும் தற்பொழுது கீழடியிலும் கிடைத்துள்ளன. அதாவது வணிகத் தொடர்பை மவன் தானியங்களை குவிப்பவன் (அல்லது) பொருள்களை குவித்து வணிகம் செய்பவன் என்ற பொருள் கொள்ளுதல் வேண்டும். கொடுப்பதில் மட்டும் நான்கு சில்லுகளில் இப்பெயர் உள்ளது ஒன்றில் குழியின் அத்தை என வருகிறது.

காலம் கணிக்கப்பட்ட பின்பு கூட வடமொழியைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருப்பது நடுநிலையான ஆய்வாளர்களுக்கு அழகல்ல.

டாக்டர் ராஜவேலு
கடல்சார் தொல்லியல் அறிஞர்

...

#_சங்கவிலக்கியத்தில்_ஆதன் :

அண்மையில் கீழடி அகழ்வாய்வின் பானையோடுகளில் எழுதிய பெயர்களில் ஆதன் என்பதும் ஒன்று. இப்பெயர் தமிழவை நூல்களில் பலவிடங்களிலுண்டு. பெரும்பாலும் சேரமரபினரின் பெயர்களே ஆதன் என்றுள்ளன. ஆனால், பாண்டி நாட்டில் கிடைத்த தொல்சான்றில் சேரப்பெயரான ஆதனெனும் பெயர் நம்முள் பலவினாக்களைத் தொடுக்கிறது. எது எவ்வாறோ இருக்கட்டும். இப்பெயர், சங்கநூல்களில் யாங்கெல்லாம் குறிப்பிட்டப்பட்டுள்ளது என்பதை எடுத்தியம்பும் சிறுபதிவே இது. நம்முடைய சங்கநூல்களும் இப்போது கிடைக்கும் தொல்சான்றுகளும் நூறு விழுக்காடு ஒத்தே காணப்படுகின்றன. இவ்வறிவிலியேனுக்குக் கிடைத்த சிலசான்றுகளை உமக்கும் அறிவிக்கிறேன்.

#_ஆதன்_பெயர்க்காரணம் :

மூச்சுக்காற்றில் உள்ளிழுக்கும் காற்று, வெளிவிடும் காற்று என்று இரண்டு வகையுண்டு. உள்ளிழுக்கும் காற்றிலுள்ள உயிர்வளி உடலில் ஊறிய சத்தை எரிக்க உதவுகிறது. உதவும் காற்று நமக்கு ஆகும் காற்று. ஆகும் காற்று ஆதல் காற்று. ஆதல் காற்றை ஆதன் என்பது தமிழ். ஆதன் என்பது உயிர்வளி. உயிர் என்றும் பொருளாகும்.

வெளிவிடும் காற்று அவிந்த காற்று. எரிந்தது அவிந்தால் கரி. அதனால் வெளிவிடும் காற்றைக் கரி+அமில வாயு என்பர். தமிழ் அவிந்த காற்றை அவினி என்று குறிப்பிடுகிறது.

ஆதன், அவினி என்னும் பெயர்கள் இவ்வாறு தோன்றின. இவற்றை மக்களும் தமக்குப் பெயராக்கிக்கொண்டனர்.

#_ஆதன்_பெயர்கள் :

1. சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன்
2. சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதன்
3. சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்
4. பெருஞ்சேரலாதன்
5. ஆதன் அழிசி - ஒல்லையூர்தந்த பூதப்பாண்டியனின் 5 நண்பர்களுள் ஒருவன்

6. ஆதன் - ஓரியின் தந்தை
7. நெடுவேள் ஆதன் - போந்தைப்பட்டினம் என்னும் குறுநில மன்னன்

8. நல்லியாதன் - ஓய்மான் நல்லியக்கோடன்
9. ஓய்மான்வில்லியாதன் - இலங்கையரசன்
10. ஆதனுங்கன் - வேங்கடநாட்டு அரசன்
11. ஆதன் - வாட்டாற்று எழினியின் மகன்
12. ஆடுகோட்பாட்டுச்சேரலாதன்
13. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
14. முடங்கிக்கிடந்த நெடுஞ்சேரலாதன்

15. ஆதனூர் - "மேற்காநாட்டு ஆதனூர்" - திருத்தொண்டர் மாக்கதை.

*******************

நன்றி. வணக்கம்.

பதிவிற்கு உதவிய நூல்கள் :
1. புறநானூறு நூல்
2. செந்தமிழ்ச்சொற்பிறப்பியல் பேரகரமுதலி
3. சங்ககாலவரசர் வரிசை நூல்
4. பெரியபுராணம்.

தொகுப்பு  : தமிழ் கோ விக்ரம்


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

திரு அமர்நாத் ராமகிருஷ்ணனின் நேர்காணல். நிதானமாக, தெளிவாக தனது தரப்புக் கருத்துக்களை முன் வைக்கிறார். அவரோடு ஒத்துப் போக முடியாத பல இடங்கள் இருந்தாலும், அவரும் இன்னும் தீவிரமாக ஆராய்ச்சி செய்த பிறகுதான் எந்த முடிவிற்கும் வர முடியும் என்கிறார். இதை நான் சொன்னதற்குத்தான் வரிந்து கட்டிக் கொண்டு சண்டைக்கு வருகிறார்கள்.

தமிழ்நாட்டின் மார்கரைன் மார்க்சிஸ்டுகள் ராமகிருஷ்ணனை சங்கி என்று அழைக்க மாட்டார்கள் என்று எண்ணுகிறேன்.

Ananthakrishnan Pakshirajan Balasubramaniam Muthusamy இது மிகவும் கீழ்த்தரமான வாதம். நாசி இனவெறியர்களுக்கு வால் பிடிக்கும் வாதம். முடிவிற்கு வருவதற்கு முன்னால் தூக்கிக் கொண்டு குதிக்காதே என்று சொல்வது நக்கல் என்று அறவுணர்வின் சுவடு இருப்பவர்கள் கூடச் சொல்லமாட்டார்கள். நீங்கள் நாசிகளோடு சேர்ந்து கொள்ளுங்கள். எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

Ananthakrishnan Pakshirajan Premanand Velu YRead the Government report - the least you can do instead of sitting in the Nazi dustbin. the Fourth excavation took place only in 11 trenches. "During the season totally 11 trenches were laid out, of which 7 in locality 1 and 4 in locality 2."

Premanand Velu Ananthakrishnan Pakshirajan trench A3/2 trench would mean as explained in the naming of the trench as layer 2 isn't it? So how come it is top layer?

Ananthakrishnan Pakshirajan It is the top level of the layer. The point is the site was a disturbed one. I have said again and again that even if it is in last zone its date was between 6th century BC and 3rd century BC.

Ananthakrishnan Pakshirajan "For argument’s sake, let us assume that these were found near the carbon-dated charcoal and at the lowest level of deposit. The archaeologists themselves say that whatever found at this level may belong to the period between 6th century BCE and 3rd Century BCE. Thus, it is amazing that with this scant evidence, a reputed professor says Tamil Brahmi’s date can be pushed back to another century." This is what I am saying.

Ananthakrishnan Pakshirajan When a site is disturbed then archaeological principles take a dive. We do not know from which trench the carbon was taken. This is a valid question. Even if the potsherd was found right next to charcoal it is a valid question.

Ananthakrishnan Pakshirajan And this is what the archaeologist said at the third stage: Regarding the continuation of excavation, he told The Hindu that he had made a proposal for the fourth season of excavation. He pointed out that the Department of Archaeology in Tamil Nadu had sent a proposal to the ASI for allowing it to excavate at Keezhadi.

Ananthakrishnan Pakshirajan This is what I wrote: I have no doubt that it is extremely stupid to transfer an archaeologist in the middle of an important excavation, but I must say that I was extremely disappointed with some of the statements made by Amarnath Ramakrishna in his interview with the Scroll magazine. In fact, since the excavation is not complete he has no business to talk to journalists. He should first submit his findings (interim or final) to the authorities and publish papers in professional journals. He can surely claim that he is being obstructed by the powers that be but he should not make tall claims to journalists without any solid evidence.

These are some of the astounding statements made by him.

1 "All this while, the theory was that there were no proper ancient habitation sites or riverine settlements in Tamil Nadu."

Whose theory was this? No standard book on Tamil History says this. In fact all books say that there have been continuous habitation in Tamil Nadu and trade routes existed right from the first millennium BCE.

2. "What all this did was it disproved the theory that there were no urban settlements in the Sangam era."

Who said there were no urban settlements in the Sangam era?

3. "When you find inscriptions on pottery, it tells you a story. That story is that the common man was literate – another sign of a great settlement."

It does no such thing. Most of these inscriptions are really short and they usually signify the names of the owners of the vessels. That does not necessarily mean that the owners were literate.

According to Subbarayulu, a foremost scholar of this period, introduction of Brahmi script into the Tamil country happened during 3rd century BCE. Nothing that has so far come out of Keezhadi significantly changes our existing knowledge of Sangam period. It is however unquestionable that this is the first major habitation site and hence it is sensational.

I am not for a moment suggesting that Keezhadi is not going to push the Tamil civilization a few centuries or even a few millennia back. It may well do. But so far, there is scant evidence to reach that conclusion.

Archaeologists should do archaeology and not indulge in politics.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

சங்ககால இலக்கியங்கள் தமிழ் இலக்கியங்கள் தானே?

தமிழ் இலக்கியங்களை இயற்றியவர்கள் தமிழர்கள் தானே?

தமிழகத்தில் தானே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை நிலங்கள் இருந்ததாக இலக்கியங்களில் வகைப்பாடு செய்யப்பட்டுள்ளது ?

ஒவ்வொரு வகை நிலத்திற்கும் ஒவ்வொரு தெய்வம் குறிப்பிடப்பட்டுள்ளதே, அவர்கள் எல்லாம் யாரு பெளத்த, சமண துறவிகளா அல்லது மதமே இல்லாதவர்களா?

இல்லே இந்த நிலவகைகள், அவற்றுக்கான தெய்வங்களை தமிழ் இலக்கியங்களில் பாடலாக எழுதியவர்கள் வந்தேறிகளா?

அதுவும் இல்லே, இவ்வகையான நிலங்களையும், தெய்வங்களையும் குறிப்பிடும் பாடல்கள் தமிழ் இலக்கியத்தை சேர்ந்தவையே இல்லையா?

தமிழா? தமிழரா? தமிழ் இலக்கியமா?
முதல், இடை, கடைச்சங்க காலங்கள் முறையே 4400, 3700, 1850 வருட காலங்கள் தானே?
அப்படின்னா, குறைந்தபட்சம் 9950 வருட பழமையானவற்றை எந்த அடிப்படையில் 2600 வருட அளவுகோலால் நிர்ணயிக்க முடியும்?

இன்னொண்ணும் ஞாபகம் வச்சிக்குங்க : திருக்குறள் 2000 ஆண்டுகள் பழமையானது, ராமாயணம் 5000 வருடங்கள் பழமையானதுன்னு நான் ஸ்கூல்ல படிச்சப்ப சொன்னாங்க, எங்க அப்பா, அவரோட அப்பா படிச்சப்பயும் அதே 2000, 5000 வருட கதைதான் சொல்லியிருக்காங்க, என் பையன் படிக்கிறப்பயும் இதையே தான் சொல்றாங்க. அதனால, முழுசா ஆய்வு செய்யும் வரை பொறுமை தேவை; ஒரிஜினல் ஆய்வாளர்கள் சொல்வதை மட்டுமே நம்பவும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

பொதுவாக நம்முடைய பொது அரட்டைகளில், ஆழ்ந்த வாசிப்போ வரலாற்றுப்புரிதலோ இல்லாத மேடைப்பேச்சாளர்களிடம் இருந்து பெற்றுக்கொண்டு முன்வைக்கப்படும் திரிபுகளும் அவதூறுகளும்தான் இவை.

பல லட்சம் பேரைக் கொலைசெய்த ஸ்டாலினைப்பற்றி அல்லது மாவோவைபற்றிப் பேசும் போது அவர்களின் தவறுகளை வைத்து அவர்களை மதிப்பிடக்கூடாது என்று சொல்பவர்கள்தான் காந்திமேல் இந்த ‘மாபெரும்’ தவறுகளைக் கண்டுபிடித்து அவரை மனிதர்களில் கடையர் என்று சொல்லவருகிறார்கள். இவ்வளவுதான் காந்தியில் அவரது மோசமான எதிரிகள் கூட கண்டுபிடிக்கக்கூடிய பிழைகள் என்றால் இதுவே காந்தியின் மேன்மைக்கான சான்றாகும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

செ. இரா. செல்வக்குமார் வட பிராமியிலும் சரி தமிழியிலும் சரி கல்வெட்டு வடித்தவர்கள் பல பிழைகள் செய்திருக்கின்றார்கள். வட பிராமியிலுமே ஒரே வரியிலேயே ஒரே எழுத்தை வெவ்வேறு விதமாகவும் பிழையுடனும் எழுதியும் இருக்கின்றார்கள்.

Vinothkumar Pasupathi Deva Priyaji தமிழ் பிராமியில் எ, ஒ உண்டு. எ, ஏ மற்றும் ஒ, ஓ விற்கான வேறுபாடு தான் இல்லை. மாறாக சமஸ்கிருதத்தில் தான் குற்றிய ஒகரம் இல்லை

Deva Priyaji பிராமி கல்வெட்டுகளில் குற்றியல் எகரம் உகரம் இல்லை, ஆனால் வடமொழி வர்க்க எழுத்துக்களுக்கு எழுத்து உரு உள்ளது, வடமொழி எழுத்துருவை தமிழ் பெற்றுக் கொண்டது என உலகின் நடுநிலை கல்வெட்டு படிப்பு துறை, மற்றும் எழுத்தின் வளர்ச்சி ஆராய்ச்சியாளர் epigraphy & paleography ஏற்கின்றனர்.

செ. இரா. செல்வக்குமார் ஆதன் என்னும் பெயரிலும் அ என்னும் குறில்தான் உள்ளது. ஒருகாலத்தில் இடம்சார்ந்து சூழல் சார்ந்து உயிரெழுத்துகளை அறிந்தனர். புள்ளி இட்டு நீட்டத்தைக் குறைக்கவும், புள்ளியிட்டு அகரத்தை நீக்கிய தனி மெய்களையும் குறித்தனர். தமிழ்க் கல்வெட்டுகளும் வட இந்திய பிராமி கல்வெட்டுகளுக்கு முந்தியவை. நீங்கள் கூறும் வேதம்-இந்துத்துவ சார்பான கருத்துகள் உண்மையில் செல்லாதன. "வேத" ஆரியர் இந்தியாவுக்குள் நுழைன்டஹ்து கி.மு 1500 வாக்கில்தான் இன்றைக்கு 6000-9000 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் இல்லை. இப்படிச் சொல்வது பொருந்தாது.

Deva Priyaji உள்ள தரவுகள் அடிப்படையில் தான் படிக்க இயலும், அதன் முடிவுகள் பிராமி வடமொழிக்கு உருவானது, தமிழ் அதை ஏற்று வளப் படுத்தியதுஉள்ள தரவுகள் அடிப்படையில் தான் படிக்க இயலும், அதன் முடிவுகள் பிராமி வடமொழிக்கு உருவானது, தமிழ் அதை ஏற்று வளப் படுத்தியது

 



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

செ. இரா. செல்வக்குமார் "ஆரியர்கள்" (யாமினிய-இசுதெப்பி சமவெளி ஆரியர்) இந்தியத் துணைக்க்ண்டத்துள் இன்றைக்கு 3500 ஆண்டுகள் முன்னர் நுழைந்தவர்கள். செப்டம்பர் 5, 2019 ஆய்வுக்கட்டுரைகள் இரண்டின் வழி அறிந்து உண்மையிது. உங்கள் கருத்து செல்லாதது.

Deva Priyaji அந்தக் கட்டுரையை அவரவர் வசதிக்கு ஏற்ப திரிக்கின்றனர். அதில் தெளிவாய் உள்ளது - ஒரே ஒரு பெண்ணின் மரபணு மட்டுமே முழுமை, எனவே இது இறுதி முடிவு அல்ல, மேலும் இது தென் இந்தியராகவும் இருக்கலாம், அல்லது முழுமையாய் வட இந்தியராகவும் வாய்ப்பு உண்டு என்கிறது.

செ. இரா. செல்வக்குமார் Deva Priyaji நீங்கள் புரிந்துகொள்ளவில்லை. வாகீசு நரசிம்மனின் கட்டுரையைப் படியுங்கள்.

செ. இரா. செல்வக்குமார் Deva Priyaji மரபணு மட்டுமன்று தொல்லியல் சான்றுகளிலும், மொழியியல் வழியாகவும் "வேத" ஆரியர்கள் ஏறத்தாழ கி.மு 1500 வாக்கில் இந்தியாவுக்குள் நுழைந்தவர்களே. "வேத" மதத்துக்கு தொல்லியலில் சான்றுகள் ஏதும் கிடையாது.

 

Deva Priyaji பன்னாட்டு மொழியியல் அறிஞர்கள் கருது பொருள், அகழ்வாராய்ச்சி உண்மைகள் ஏதும் ஆரியர் வருகையை நிருபிக்கவில்லை. மேலும் அன்னியர் வருகை எனில் கால்டுவில் கருதுகோள்படி தமிழ் கைபர்-போலன் வழி வந்த மொழி.
தொல்காப்ப்பியத்திற்கு பொஆ8ம் நூற்றாண்டு முன்போ, திருக்குறளை பொஆ9ம் நூற்றாண்டு நடுவிற்கு முன்போ எடுத்து செல்வது அறிவுபூர்வம் இல்லை

செ. இரா. செல்வக்குமார் Deva Priyaji உங்கள் கருத்துகள் எல்லாம் செல்லாதவை. ஆரியர் உள்நுழைவை பற்பல வழிகளில் தெள்ளத் தெளிவாகக் காணலாம்.

பற்பல நோக்குகளில் ஒன்றைப் பகிர்கின்றேன். மரபணுவில் தோலின் நிறத்தைக் கட்டுப்படுத்தும் மரபணு ஒன்று SLC24A5. இது எப்படிப் பரவியிருக்கின்றது என
்று பாருங்க்கள். வடமேற்கே இருந்து எப்படிப் பரவி இருக்கின்றது என்று பாருங்கள்.

https://www.facebook.com/notes/%E0%AE%9A%E0%AF%86-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/10151746486980966/?hc_location=ufi



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

செ. இரா. செல்வக்குமார் Deva Priyaji வாகீசு நரசிம்மன் அவர்களின் ஆய்வுக்கட்டுரையைப் பாருங்கள்:
https://scholar.harvard.edu/.../files/eaat7487.full_.pdf



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

Deva Priyaji இதுபோன்றபடியில் ஆய்வுகளை மிகக் குறைவான தரவின் அடிப்படையில் தன்னிச்சையாய் தங்கள் நம்பிக்கைக்கு(மூட) ஏற்ப (காலணிக்காய் காலை வெட்டும் வழி) ஆய்வுகள் பன்னாட்டு கலாசாலைகழில் நிற்பதில்லை. ஆனால் இங்கே அன்னிய மதமாற்ற சக்திகள் பணத்தில் முழுமையாய் நிராகரிக்கப்பட்ட கருதுகோள்களை மீண்டும் மீண்டும் சொல்லி மேலும் தரம் குறைவாகிட 60 ஆண்டாய் தமிழக ஆய்வாளர்கள் கருத்துகளை பன்னாட்டு பல்கலைக் கழக தமிழ் சேர்கள் ஏற்பதே இல்லை.
நீங்கள் மேலே சொன்ன அதே தரவு கொண்டு தமிழர் தமிழ் மொழி வெளியிலிருந்து தான் வந்தது எனவும் பல கட்டுரைகள் எழுத இயலும்
ஹார்வர்டு வரலாற்று ஆசிரியர் சீ பார்மர் தளத்தில் தொல்காப்பியம் காலம் என உள்ள கட்டுரை.
மொழியியல் என்பது இலக்க்கண ஆடிப்படையில் நேர்மையாய் செய்ய வேண்ட்டும். முன்பு அறிவு பூர்வமற்றபடி வேர் சொல்கிறேன் என அவரவர் கூறியது எதையும் பன்னாட்டு பல்கலைக் கழக தமிழ் சேர்கள் ஏற்கவில்லை, மேலும் இப்போது அதே நடைமுறையில் வேர் தெலுங்கு என கட்டுரைகளும் உள்ளது http://www.safarmer.com/Indo-Eurasian/bglswamy.pdf



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

மதுரை தேனூரில் 2009-ம் ஆண்டு கிடைத்த தங்கக் கட்டியில் உள்ள பிராமி எழுத்துக்களை "போகுல் குன்றக் கோதை'" என உள்ளது என மிக வளமான புனையல், ஆனால் அதையே படித்த டாக்டர்.இரா.கிருஷ்ணமூர்த்தி, "அரசன்கு கொற்கொய்கோன்' என்கிறார் - இப்படியானவற்றை என்ன செய்வது



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

மதுரை தேனூரில் 2009-ம் ஆண்டு கிடைத்த தங்கக் கட்டியில் உள்ள பிராமி எழுத்துக்களை "போகுல் குன்றக் கோதை'" என உள்ளது என மிக வளமான புனையல், ஆனால் அதையே படித்த டாக்டர்.இரா.கிருஷ்ணமூர்த்தி, "அரசன்கு கொற்கொய்கோன்' என்கிறார் - இப்படியானவற்றை என்ன செய்வது

பிராமியின் உருவாக்கம் பற்றிய அறிவு சார் பன்னாட்டு அறிஞர்கள் யாரும் நீங்கள் கூறும் தமிழ் பிராமி முன்னர் என்பதை ஏற்கவில்லை, பொருந்தல், கொடுமணல், கீழடி, இலங்கை அனுராதபுரம் பானை கீறல்களில் பல வடமொழி எழுத்தோடான பெயர்கள் படிக்கப் பட்டமை அதை மேலும் உறுதி செய்கின்றன, பானை கீறலை பேலியோக்ரேபி முறையில் ஆராய்ந்தால் மேலும் தெளிவு வரும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 

 

Kumarimainthan

கீழடி வைகைக் கரை நாகரிகம் கி.மு. ஆறாம் நூற்றாண்டுக்கு உரியது என்றால் அது பாண்டியர்க்கு உரியது இல்லை என்று உறுதியாகக் கூற முடியும். ஏனென்றால் தமிழகத்தின் மூலக்குடிகளான பறையர், பாணர், துடியர், கடம்பர்(புறநானூறு, மாங்குடி கிழார் பாடல்) ஆகியோரை வீழ்த்த முடியாமல் ஏறக்குறைய 1300 ஆண்டுகள் திணறிய மூவேந்தர்கள் அலக்சாந்தர் கார்த்தசீனியர்கள் ஆகிய பினீசியர்களை களத்திலிருந்து அகற்றிய பின்னர் அரபிக் கடலில் புகுந்த கிரேக்கர்களது கப்பற்படை மேற்குக் கடற்கரையில் கோலோச்சிய கடம்பர்களை இன்றைய கோவா ஆகிய கொங்கணத்துக்குத் துரத்திய பின்னரே பறையர்கள் தலைமையில் மூவேந்தர்களைத் தடுத்த மூலக்குடிகளை ஒடுக்க முடிந்தது. இந்த மூலக்குடிகள் சிறுதவசங்களை(தானியங்களை) மாட்டிறைச்சியோடு உண்டு தோலைப் பாடம் செய்து உலகப் பெரும் கடல் வாணிகர்களான பினீசியர்கள் மூலம் பனிபடர்ந்த ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்து கிடைத்த செல்வம்தான் அவர்களது வலிமையாக இருந்தது. யாழிசைப்பவர்களாகவும் தையற்தொழிலில் வல்லோராகவும் அறியப்படும் பாணர்களின் தோல் தையல் திறமையை கழக இலக்கியம் இரு இடங்களில் சுட்டிக்காட்டுகிறது. அவர்களது யாழை மூடியிருக்கும் உறையின் தையல் அழகை அப்பாடல்கள் போற்றுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மக்கள் தொகுதியின் வலிமையை அலக்சாந்தரின் படையெடுப்பு அழித்தது. தோல்வியுற்ற பறையர்களை செத்த மாட்டை உண்போராக மூவேந்தர்கள் ஒடுக்கினர். சாதிய ஒடுக்குமுறைக்கு ஓர் எடுத்துக்காட்டாக பறையர்கள் மீது மூவேந்தர்கள் நிகழ்த்திய கொடுமைகளைக் கூறலாம்.

குமரிக் கடலில் அடிக்கடி நிகழ்ந்த கடற்கோள்களால் இடம் பெயர்ந்து நண்ணில(மத்தியதர)க் கடலின் கிழக்கு ஓரத்தில் அசிரியா(இன்றைய சிரியா?) என்ற நாட்டில் குடியேறி உலகக் கடற்பரப்பு முழுவதையும் தம் கட்டுப்பாட்டில் பல பத்தாயிரம் ஆண்டுகளுக்கு வைத்திருந்தவர்கள் பினீசியர்கள். பனை, தென்னை போன்ற மரங்களை அவ்வட்டாரத்தில் அறிமுகம் செய்தவர்கள். “அ” முதல் “ன” வரை 16 எழுத்துகளை ஐரோப்பியர்களுக்கு அறிமுகம் செய்தவர்கள். ஐரோப்பிய நாகரிகத்தின் அடித்தளத்தை உருவாக்கியவர்கள் அவர்கள்தாம். உலகம் முழுவதும் குமரிக் கண்ட நாகரிகத்தைப் பரப்பியவர்கள். வரலாறு அறிந்த முதல் உலக வாணிகர்கள் அவர்கள். இன்றைய வல்லரசியம் போன்று கொடுமைகளையும் நிகழ்த்தியவர்கள். பானியர்களைப் பிடித்து அமெரிக்கர்களுக்கு அடிமைகளாக விற்றவர்கள்(இந்தப் பானியர்கள்தாம் பிற்காலத்தில் ஆப்பிரிக்கக் கறுப்பின மக்களைப் பிடித்து அமெரிக்காவில் புகுந்த ஐரோப்பியர்களுக்கு விற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.) கிரேக்க உழவர்களுக்குக் கடன் கொடுத்து அவர்களது வயல்களில் அதற்கு அடையாளமாக கொடிகளை நட்டுவைத்திருந்தனர். அவற்றை சோலோன் என்ற கிரேக்கத் தலைவர் பிடுங்கி எறிந்தார். அவர் மீது இவர்கள் கொடுமைகளை நிகழ்த்தியிருக்கலாம் என்று வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர், ஏனென்றால் அவரது எழுத்துக்களில் சில துண்டு துணுக்குகள் தவிர எஞ்சியவை கிடைக்கவில்லையாம். அதற்கு பினீசியர்களே காரணம் என்று கருதுகிறார்கள். இதற்கெல்லாம் சேர்த்துப் பழிவாங்கத்தான் ஆப்பிரிக்காவின் லிபியாப் பகுதியில் வாழ்ந்த அவர்களை அலக்சாந்தர் தடமின்றி அழித்தான். கிரேக்கர்கள் மீது இவர்கள் நிகழ்த்திய ஒரு படையெடுப்பின் போது நண்ணிலக்கடலில் வீசிய ஒரு சூறாவளியில் சிக்கி இவர்களது கப்பல்கள் அழிந்ததால் அவர்கள் தோல்வியுற்று அசிரியாவைக் கைவிட்டு லிபியா சென்றனர். பினீசியர்களைப் பற்றிய மேலே கூறப்பட்ட செய்திகளில் பெரும்பாலானவை எசு.வி.எசு.இராகவன் என்பார் எழுதிய எராடோட்டசு என்ற நூலிலிருந்தும் சியார்சு தாம்ப்சன் என்பார் எழுதிய Aeschylus and Athens என்ற நூலிலிருந்தும் பெரும்பாலானவை பெறப்பட்டவை.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

Arunkumar Pankaj பொருந்தலில் கிடைத்தது ஒரேயொரு வார்த்தை தான்..

ஆகவே தான் பேரா.கா.ராஜன் அதனை தனித்து காட்டாமல் அதற்கு இணையான காலகட்டத்தை சேர்ந்த கொடுமணல் ஆய்வுகளுடன் காலத்தை பொறுத்திக் காட்டுகிறார். கொடுமணலில் கிடைத்த பானைக்கீறல் எழுத்துக்களை அட்டவணைப்படுத்திய அவர், கொ
டுமணல்-பொருந்தல் ஆய்வு அசோகருக்கு முற்பட்ட காலத்தில் தமிழ் எழுத்துக்கள் மட்டுமல்ல வடமொழி எழுத்தும் இருந்தமைக்கும் சேர்த்தே சான்று பகர்வதாக தனது "Early writing system" புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்..

கொடுமணலில் உள்ள சாத்தன் பெயர்கள் பெரும்பாலும் "ஸாத்தன்" என்றே உள்ளன. இதெல்லாம் அப்பவே ஒழுங்கா படிச்சிருந்தா "வடமொழி புழக்கத்தில் இல்லாத காலத்திலேயே இங்கு தமிழ் தனித்து இருந்தது" என்று உளறிக்கொண்டு இருக்க மாட்டார்கள்..

Vicky Kannan பிராக்கிருதத்தை எவ்வாறு அணுகுவதுனு லாம் நல்லாவே தெரியும். தொல்காப்பியம் லாஜிக் ஓட்டாண்டிகள் எல்லாம் இருக்கட்டும் அந்த கிமு 500 பாணிணி க்கு எதுனா ஆய்ந்து அறிந்திருந்தா என்னைபோன்ற நுணிப்புல் மேய்ந்தவர்களுக்கு தெளிவுபடுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். பிராக்கிருத பிராமி தமிழ நாட்ல கிடைச்ச மாதிரி வட இந்தியால எங்கேயாவது கிடைத்திருந்தாலும் சொல்லவும் ஏன்னா நாங்க நுணிப்புல் கோஷ்டி.. சர்வாள் தொல்லியலில் நீந்துபவர்.

Arunkumar Pankaj 1. தமிழ்நாட்டில் தான் பானை கீறல்கள் எழுத்துக்களோடு கிடைக்கின்றன.

2. பானையில் அதன் உரிமையாளரோ பானை வனையும் குயவரோ தான் எழுதியிழுக்க முடியும்.


3. ஆக, அக்கால தமிழகத்தில் பாமரர்களும் கல்வியறிவோடு திகழ்ந்தது புலனாகிறது.

4. கிடைக்கும் பானை பொறிப்புகளில் வடமொழி எழுத்துக்களும் கலந்த வார்த்தைகளும் உள்ளன

5. ஆக அக்கால பாமர தமிழர்கள் தமிழ் மட்டுமல்ல வடமொழியில் எழுதவும் படிக்கவும் தேர்ச்சி பெற்றிருந்தனர்..

6. கிடைக்கும் வார்த்தைகள் அனைத்தும் தனிநபர் பெயர்களே.

7. ஆக தமிழர்கள் இன்று போலவே அக்காலத்திலும் வடமொழியிலும் பெயர்கள் வைத்திருந்தனர்.

8. 7வது point லாஜிக் இடிக்குது - வடமொழி எழுத்து கலந்த தமிழ்பெயர்கள் வைத்திருந்தனர்.

9. 8வது பாயிண்டுக்கு 7வது பாயிண்டே பரவாயில்லை.

10. எப்படி சமாளிக்கறது?!! அந்த வடமொழியையும் தமிழர்கள் தான் கண்டுபிடித்தனர்னு சொல்லிட்டா எல்லாம் tally ஆகிடும். எப்படி ஐடியா?!!

 



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

Jayabalan Govindhasami குவிரன் தமிழ்ப்பெயராக இருந்தால் சங்க இலக்கியத்தில் எங்கும் வரவில்லையே ஏன்?

Muthalagan Jayabalan Govindhasami சங்க நூல்கள் பெயர்ப் பட்டியல்கள் அல்ல,
கல்வெட்டுகளிலும் பானையோடுகளிலும் காணப்படும் பலநூறு பெயர்கள் தமிழ் இலக்கியங்களில் இல்லை என்பதாலேயே அவை தமிழ்ப்பெயர்கள் அல்ல என்ற முடிவுக்கு வருதல் அறியாமையே.
வேர்ச் சொல் நோக்கியே முடிவு செய்தல் வேண்டும்.

Jayabalan Govindhasami Muthalagan
கபிலர், தாமோதரனார், உருத்திரங் கண்ணனார், விண்ணந்தாயனார், உக்கிரப் பெருவழுதி இவற்றுக்கு வேர்ச்சொல் ஆய்வு சொல்லுங்க!

Muthalagan Jayabalan Govindhasami கபிலர். உக்கிரப்.. தாமம் எனும் சொற்கள் வட சொல்லாக இருப்பது உண்மை.இது போல் கலந்து விட்ட வட சொற்களை அறிஞர்கள் விவரித்துள்ளனர். அதற்காக குவிரன் என்ற சொல்லைக் குபேரன் என்ற சொல்லிருந்துதான் வந்தது எனும் ஐராவதத்தில் கருத்தை எப்படி ஏற்க முடியும்?
குவி என்பதற்குச் "சேர்தல் " "நிறைதல் " "ஒன்றாதல் "எனப் பல பொருள் உணர்த்தும் சொல்லிருந்துதான் குவியல் எனும் சொல் உருவாகும். செல்வன் எனும் பொருள் தரும் குவிரன் குவியன் முதலிய தோன்றியிருக்கும்.

தமிழ் நாட்டில் பல இடங்களில் கிடைத்த பானையோடுகளில் இப்பெயர் உள்ளது. பரவலாக அப்பெயர் வைக்கும் மரபுள்ளதை அறியலாம்.

சங்க இலக்கியத்தில் வடமொழிப் பெயர் வருதல் உண்மையே. அதை நான் மறுக்கவில்லை.
குவிரன் எனும் சொல் வட சொல் என்பதற்கு வடமொழி வேர்ச் சொல் காட்டுக நண்பரே.

Jayabalan Govindhasami Muthalagan
அய்ராவதம் அய்யர் சொல்லிவிட்டார் என்பதற்காக மறுத்தே ஆக வேண்டும் எனப் பிடிவாதமாக இருக்கக் கூடாது.


ஸ என்ற எழத்தே தமிழில் கிடையாது. வட பிராமி எழுத்து. அந்த எழுத்தை வைத்து 'ஸாலகன்' என்ற பெயர் கொடுமணலில் கிடைத்துள்ளதைப் பாருங்கள்.

ஆக, பழமையில் மாட்டுவது எல்லாம் தமிழ்தான் என மல்லுக்கட்டக் கூடாது.

பலவகைகளில் குறுக்காய்வு( Cross check) செய்தே ஏற்க வேண்டும்.

சங்கப்பாடல்களில் ஆயிரக்கணக்கான பெயர்கள் வந்துள்ளதை நண்பர் கவனிக்க வேண்டுகிறேன்

Muthalagan Jayabalan Govindhasami சங்கப் பாடலில் ஆயிரக் கணக்கான வட சொற்கள் இல்லை. நூற்றுக்கணக்கில்தான் உள்ளன. நம் வாதம் அதுவன்று
குவியன் எனும் சொல் வடசொல் என்றால் அதற்கான சான்றை நிறுவுக. மானியர் வில்லியம்ஸ் அகராதியையும் துணைக்கு வைத்துக் கொள்க.


பல அகழாய்வில் கிடைத்திருக்கும் வடமொழிச் சொற்கள் குறித்து நன்கு அறிவேன்.

பிறவற்றைப் பேச இது இடமில்லை. அருள்கூர்ந்து குவிரன் என்பதற்கு வேர்ச்சொல் காட்டுக.

Jayabalan Govindhasami Muthalagan
குபேரன் என்ற வடசொல்லே 'குவிரன்' எனத் தமிழில் திரிந்து வழங்கி உள்ளது என்பது என் கருத்து.


குபேரன் இந்து மதம் தமிழ்நாட்டில் நுழைவதற்கு முன்பே சமண, பவுத்த மத பரவலால் வந்திருக்கிறது.

நான் சங்கப்பாடல்களில் ஆயிரக்கணக்கான தமிழ்ப்பெயர்கள் வந்துள்ளன.அவற்றில் குவிரன் எங்கும் காணப்படவில்லை என்பதையே கூற வந்தேன்.

Jayabalan Govindhasami Muthalagan குவிரன் காணப்படவில்லை.

ஆனால், கபிலர், தாமோதர் என்ற வடசொல் சங்க காலத்திலேயே வந்துவிட்டதற்கு சான்று உள்ளது.


சங்கப்புலவர் தாமோதரனார் யார்?
'தாமோதர' என்ற வடசொல் பெயரில் இருந்து எழுந்ததுதானே!

விண்ணந்தாயனார் யார்?
'விஷ்ணுதாச' என்ற வடசொல்லில் தமிழின் 'அன்' விகுதி சேர்த்து 'விஷ்ணுதாசன்' ஆக்கி உள்ளனர்.

'விஷ்ணு கிரஹம்' தமிழில் 'விண்ணகரம்' ஆகி 'நந்திபுர விண்ணகரம்' என பழையாறை ஜெகநாதப் பெருமாள்கோவிலுக்குப் பெயராயிற்று.

ஆக, விஷ்ணுதான் 'விண்ணு'. தாஸன்- தாயன் என 'ஸ' வை விலக்கி தமிழ்ப்படுத்தப்படுகிறார்.

அதுவே, விண்ணந்தாயன் என்ற புலவர் பெயர்.

சங்க இலக்கியத்திலேயே இப்படி ஒரு சில புலவர்கள் பெயர்கள் வடமொழிப் பெயர்களாக நுழைந்திருக்கும்போது ரோம், கிரேக்கம் போன்ற நாடுகளினுடேயே கீழடி மக்கள் வணிகம் செய்ததற்கு ஆதாரம் கிடைத்திருக்கையில் வட இந்தியாவுடனும் வாணிகத் தொடர்பு வைத்து , அதன்வழி சமணம், பவுத்த தாக்கம் கீழடியிலும் ஏற்பட்டு டப்புக்கே' அதிபதியாகிய 'குபேரன்' பெயரில் பேரார்வம் ஏற்பட்டு அதை ஏன் 'குவிரன்' என மாற்றி வைத்திருக்கக் கூடாது?

இதையும் எண்ணிப் பாருங்கள்!

Jayabalan Govindhasami அதில் 196- ம் பக்கத்தில், "தமிழ்ப் பொறிப்புகளில் உள்ள குவிரன் (குபேரன்) போன்ற பெயர்களும் வணிகர்களால் விரும்பி ஏற்ற பெயர்களாகும்!" என அவர், குபேரன் என்ற வடமொழிப்பெயர்தான் 'குவிரன்' என ஆகியுள்ளது என்று குறிப்பிட்டு இருப்பதைப் பாருங்கள்.

இதில், வடமொழி 'ஸ' வர 'விஸாகீ' என்ற வடமொழிப் பெயர் கொடுமணலில் கிடைத்துள்ளதைப் பாருங்கள்.

Muthalagan Jayabalan Govindhasami அதற்கான மறுப்புதான் என் பதிவு. வழக்கத்தில் சிற்றூர்களில் குவியன் எனப் பெயர் வைக்கும் முறையுள்ளது அதை நான் சுட்டிக்காட்டு உள்ளேன். ஐராவதம் கருத்தைத்தான் சுப்புராயலு தெரிவித்துள்ளார். வட மொழி வேர்ச்சொல் காட்டாமல் வேறு பேசுவதால் பயனில்லை.

Jayabalan Govindhasami தொல்காப்பியத்தின்படி 'ச' வில் தமிழ்ப்பெயர் தொடங்காது. ஆனால், இங்கு அதற்கு மாறாக 'சம்பன்' என்று பொறித்த பானை ஓடு கொடுமணலில் கிடைத்துள்ளதைப் பாருங்கள்!

இதில் வடமொழி 'ஸ' முதலில் வர 'ஸந்ததன்' என்ற வடமொழிப் பெயர் தமிழ்பிராமி எழுத்து உள்ள காலத்திலேயே வந்துள்ளதைப் பாருங்கள்!

Jayabalan Govindhasami இதில், 'விஸகன் அதன்' என 'ஸ' வர வடமொழி பெயர் பொறித்த பானை ஓடும் கொடுமணலிலேயே கிடைத்திருப்பதைப் பாருங்கள்!

Muthalagan Jayabalan Govindhasami இவை எல்லாம் எனக்கும் தெரியும். வாதத்திற்கு நேர் பதில் வேண்டும் சான்றுடன் . வேறு கதை பேசி என் நேரத்தை வீணடிக்க வேண்டாம்

Jayabalan Govindhasami இங்கு காலையில் குறிப்பிட்ட 'ஸாலகன்' என்ற வடமொழிப்பெயர் தமிழ் பிராமி எழுத்தில், சங்க காலத்திலேயே வந்துவிட்டதற்கான ஆதாரத்தைச் சொன்னேன்.

அது கொடுமணல் என கூறியது தவறு. மதுரை மாங்குளத்தின் பாண்டியன் நெடுஞ்செழியனைக் குறிப்பிடும் புகழ் பெற்ற தமிழ் பிராமி க
ல்வெட்டு.

அதில் ' ஸாலகன்' என்ற வடமொழிப் பெயர் வந்திருப்பதையும், நெடும்செழியனை, 'நெடுஞ்சழியன்' என்றும், இளஞ்செழியனை 'இளஞ்சடிகன்: என்று குறிப்பிட்டு இருப்பதையும் பாருங்கள்.

நெடுஞ்செழியனைக் குறிப்பிடுவதால் இது சங்ககால கல்வெட்டுதான்!

Jayabalan Govindhasami குபேரன் வடசொல்தான் என்பதற்கான சான்றுகளைப் பின்னர் தருகின்றேன்.

Jayabalan Govindhasami Muthalagan
தாமோதரன் என்ற பெயரை சங்க காலத்திலும்தான் வைத்திருக்கிறார்கள் இன்றும்தான் வைத்து இருக்கிறார்கள்.


அதனால் அது தமிழ்ப்பெயர் ஆகிவிடுமா?

குபேரன் என்ற வடமொழிப் பெயரை திரித்து 'குவிரன்' என கீழடி காலத்திலேயே, சங்க காலத்திலேயே வைத்துவிட்டார்கள்.

தாமோதரன் என்ற பெயரை விடாமல் இன்றுவரை போட்டுவருவது போல நீங்கள் சொல்லும் ஊரிலும் குவிரன் என்ற பெயரை இன்னும் திரித்து, 'குவியன்' என்று சொல்லி வரலாம்.

அதனால் தமிழ்ப் பெயர் ஆகிவிடுமா?

'குவியன்' தமிழ்ப் பெயர் என்றால் இடைக்கால கல்வெட்டுச் சான்றுகள், தேவாரம் முதல் சிற்றிலக்கியம் ஈறாக ஆதாரங்கள் காட்டுங்கள்!

Jayabalan Govindhasami குவிரனும், குவியனும் ஒன்றுதான் என்பதற்கு முதலில் சான்று தாருங்கள்!

குவிப்பவன் 'குவியன்' என்றால் கீழடியிலும் அப்படியே வரவேண்டியதுதானே!


குவியன் என வராமல் ஏன் 'குவிரன்' என வருகிறது.

கி.மு. 6- ம் நூற்றாண்டிலேயே எழுத்தறிவு பெற்ற சமுதாயம், சிந்துவெளி நாகரிகத்து இணையா வாழ்ந்தவங்க கீழடி தமிழர்கள், இப்படி 'குவியனை'ப் போய் 'குவிரன்' னு தப்புத்தப்பா எழுதுவாங்களா?

டேலி ஆகலையே!

Muthalagan Jayabalan Govindhasami வீண் வாதம் வேண்டா. உங்கள் வாதத்தை ஏற்றுக்கொண்டால் குபேரனைக் குவிரன் என்று எழுதாமல் குபேரன் என்றுதான் எழுதியிருக்க வேண்டும் .ஏன் குவிரன் என்று எழுதினர்கள்.
அன்பு நண்பரே!
குவி எனும் சொல் செல்வத்தை அல்லது குபேரனைக் குறித்து வந்ததா எனப் பிராகிருத சமஸ்கிருத அகராதியில் பாருங்கள் நானும் பார்க்கிறேன். தேடுவோம் உண்மையைக் கண்டறிவோம்

Jayabalan Govindhasami Elanchezian Sav சரி!
அதுக்கு அப்புறம் வந்துள்ள இலக்கியங்களிலாவது இருக்கா நண்பரே!


சங்க இலக்கியத்தை உட்டுடுவோம்.

பின்னாடி குவிரன், நவிரன் வந்ததுக்கு ஆதாரம் காட்டுங்க!

2000 வருஷத்துக்கு முன்னாடி இருந்த குவிரன், நடுப்புற எந்த இணைப்பும்,தொடர்ச்சியும் இல்லாம திடீன்னு 2000 ஆண்டு கழிச்சு புதுக்கோட்டைல மட்டும் வந்து, 'குவியன்' னு முளைக்குதா?

Jayabalan Govindhasami Muthalagan
விஷ்ணுதாஸனை 'விண்ணந்தாயனார்'ன்னு எழுதினா மாதிரிதான்!


நெடுஞ்செழியனை 'நெடுஞ்சழியன், இளஞ்செழியனை ' இளஞ்சடிகன்'னு எழுதினா மாதிரிதான்.

அக்காலத்தில் Ba ஒலி தமிழர் வாயில் வராமல் இருந்திருக்கலாம். இன்றும் கி.ராஜநாராயணன் அய்யாவின் நண்பரான கோவில்பட்டியைச் சேர்ந்த ஒரு செட்டியார் 'ஜ' வராத காரணத்தால் "வாங்க ராச நாராயணன்!" என்றுதான் அழைப்பாராம்.

அதேபோல, குbeரன் என்பதை ba வராததால் 'குவேரன்' என்றிருக்கலாம். அது 'குவிரன்' என்று ஆகி இருக்கலாம்.

இந்த கீழடி 'வெள்ளிச் சந்தை புதூர்' எனப்பட்டிருக்கிறது.
ஆக, நீண்டகாலமாக இங்கு சந்தை,வணிகம் இருந்து வந்துள்ளதால்தான் இந்த பெயர்.

வணிகர்கள் காசு, பணம், துட்டு, டப்புவில் மிகவும் நாட்டம் உள்ளவர்கள்.அப்படியாப்பட்டவர்கள் பணங்காசுக்கு அதிபதியான் 'குபேரன்' மீதும், அந்தப் பெயரின்மீதும் அதிக நாட்டம் காட்டுவது இயல்புதானே!

பிறகு, 'குபேரன்' என்ற பெயரைத்தான் தமிழ்ப்படுத்தி 'குவேரன்' என வைத்து, அது பின்னர் ஏன் 'குவிரன்' ஆகி இருக்கக்கூடாதா?

லக்ஷமணன் என்பதற்கும் 'இலக்குவன்' என்பதற்கும் சடாரென்று பார்த்தால் தொடர்பு தெரிகிறாதா?

டக்கென்று பார்த்தால் 'இலக்கியம்' என்ற சொல்லில் இருந்து வந்தா மாதிரி அல்லவா தெரிகிறது.

அதுவா சரி சகோ?

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

69565511_923903841300498_429296112107100  71499959_923901324634083_914311096079220  71576834_923893784634837_125336577445462 71592242_923894991301383_263056863730755

72196796_923899911300891_688413855172263 



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

தமிழோடு கிரந்த எழுத்துக்கள் கலந்தது எப்படி?
(சமூக ஊடகம் வலைத்தளம் திசெம்பர் 29, 2016)
-----------------------------------------------------------------------------
தமிழ் எழுத்துக்கள் 247 என்றுதான் பள்ளியிலே படிக்கிறோம். ஆனாலும், எழுதும்போது வடமொழி எழுத்துக்களான ஸ, ஷ, ஜ, ஹ, க்ஷ, ஸ்ரீ எனப்படும் கிரந்த எழுத்துக்களையும் சேர்த்தே எழுதவேண்டிய சூழலுக்கு ஆளாகிறோம். இந்த வடமொழி கிரந்த எழுத்துக்கள் எந்தக் காலகட்டத்தில், எப்படி தமிழ் எழுத்துகளுக்குள் நுழைந்தன? என்பது பற்றி தமிழ் மொழி ஆராய்ச்சியாளரும், தமிழ்ப் பண்பாட்டு தொல்லியல் ஆய்வாளருமான முனைவர் மு.இளங்கோவனிடம் பேசினோம். அவர் தந்த கருத்தினை இங்கு தருகிறோம்.

தமிழ்மொழி பிற மொழிகளின் துணையின்றித் தனித்து இயங்கும் பேராற்றல் பெற்றது. உலகில் பிறமொழிகளுக்கு இல்லாத தனித் தன்மை இதுவாகும். தமிழ்மொழி பன்னெடுங்கால வரலாறு உடையது. அரசியல், தன்னலம் காரணமாகத் தமிழ்மொழியின் சிறப்பு சில பொழுது குறைத்துக் கூறப்பட்டுள்ளதே தவிர உண்மையில் தமிழ் என்று தோன்றியது என்று வரையறை செய்ய முடியாதபடி காலப் பழைமை உடையது. தமிழ் உலகில் தோன்றிய முதன்மொழி என்ற பாவாணர் கூற்று சற்று மிகைப்படத் தோன்றுவதுபோல் இருந்தாலும் அண்மைக் காலமாகக் கிடைத்துவரும் சான்றுகள் (செம்பியன் கண்டீயூர் கல்வெட்டு, ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வுச் சான்றுகள், அரிக்கமேட்டு ஆய்வுகள், கேரள புதைபொருள் அகழ்வாய்வுகள்) இந்த உண்மையை நோக்கி நம்மை ஆற்றுப்படுத்துகின்றன.

தமிழர்களின் ஆழமான அறிவாராய்ச்சிகள் உலகப் போக்குக்கு ஈடுகொடுக்கும்படி இல்லாததால் தமிழின் தமிழர்களின் சிறப்பு இன்னும் உலக அரங்கில் முறையாக அங்கீகரிக்கப்படவில்லை. தமிழார்வம் இல்லாத தலைமைகளும், தமிழின் சிறப்புணராத மக்கள் திரளும் இந்த மொழி பேசுபவர்களாக அமைந்தமை தமிழின் சிறப்பு அறிய முடியாமல் போனமைக்குக் காரணங்களாகும்.

குமரிக்கண்ட அகழ்வாய்விலும், பூம்புகார், அரிக்கமேடு கடலாய்விலும் நாம் முழுமையாக ஈடுபடாமல் மாநாடுகள் கூட்டுவதிலும், சிலைகள் எடுப்பதிலும், தோரண வாயில்கள் அமைப்பதிலும், கோட்டங்கள் கட்டுவதிலும், வானவேடிக்கைகள் நடத்துவதிலும் நம் அறிவாராய்ச்சியை இழந்தோம். தமிழறிவற்றவர்களைத் தமக்கு அணுக்கமாக அந்த அந்தக் காலங்களில் ஆட்சியாளர்கள் அமர்த்திக்கொள்வதும் நம் ஆராய்ச்சியைப் பின்னுக்குத் தள்ளி வருகின்றது. மொழியியல் அறிஞர்களின் கூற்றுகள் புறக்கணிக்கப்பட்டு, வெற்று ஆரவாரப் பேர்வழிகள் அரசுக்கு அறிவுரைஞர்களாக அமைந்தமையும் நம் பின்னடைவுக்குக் காரணங்களாகச் சுட்டலாம்.

தமிழுக்குக் காலந்தோறும் இடையூறுகள் ஏற்பட்ட பொழுதெல்லாம் தமிழ் தன்னைத்தானே காத்துக் கொண்டுள்ளது. சிலபொழுது அறிஞர்கள் கூடித் தமிழ்க் காப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அவ்வகையில் நாம் தமிழ்க்காப்புப் பணிகளில் ஈடுபடவேண்டிய ஒரு சூழல் உருவாகியுள்ளது.

தமிழ் மொழியின் 247 எழுத்துக்கள் தவிர்த்து கிரந்த எழுத்துக்களும் (ஸ,ஷ,ஜ,ஹ,க்ஷ,ஸ்ரீ) தமிழோடு பழகி விட்டன. கிரந்தம் என்பது ஒரு தனிப்பட்ட மொழியன்று. இது வடமொழியை (சமஸ்கிருதம்) எழுதத் தமிழர்கள் கண்ட எழுத்து வடிவம். கி.பி. 4 ஆம் நூற்றாண்டிலிருந்து 13 ஆம் நூற்றாண்டு வரை பெருமளவில் பயன்பாட்டில் இருந்து வந்த எழுத்துமுறை இதுவாகும். தேவநாகரி எழுத்து பயன்பாட்டுக்கு வரத்தொடங்கிய பின்னர் கிரந்தத்தில் எழுதுவது மறைந்து போயிருக்கிறது.

கிரந்த எழுத்துகள் என்றால் என்ன?

கிரந்தம் என்பது தமிழகத்தில் வடமொழியை எழுத வழங்கிய எழுத்து ஆகும். வடமொழிக்கு முதன்முதல் எழுத்து ஏற்பட்டது தமிழ்நாட்டில் தான். அது தமிழ் ஏட்டெழுத்தினின்று திரிந்த கிரந்தவெழுத்து. அதன் காலம் தோராயமாக கி.மு 10ஆம் நூற்றாண்டு எனலாம். “கிரந்தம் என்பது நூல். வடமொழியாளர்க்குச் சொந்த வழக்கு மொழியின்மையால், நூலிற்கு மட்டும் பயன்படுத்தப் பெற்ற எழுத்தைக் கிரந்தாட்சரம் என்றனர்’ என்பர் மொழிஞாயிறு பாவாணர்.

தமிழகத்தில் வடமொழியை எழுத, வழங்கிய எழுத்தும் தெலுங்கு, கன்னடப் பகுதியில் வழங்கிய எழுத்தும் ஒன்றுபோல இருந்தன. கி.பி. 7ஆம் நூற்றாண்டிலிருந்து கிரந்த எழுத்துகளும் தெலுங்கு, கன்னட எழுத்துகளும் தனித்தனியே பிரிந்து வளரலாயின. பல்லவர் காலத்தில் வழங்கிய கிரந்த எழுத்துகளைப் பல்லவ கிரந்தம் என்றனர். இரண்டாம் நரசிம்மவர்மன் காலத்தில் கிரந்த எழுத்துகள் மிக அழகாகப் பொறிக்கப்பட்டுள்ளன. தென்பகுதியை ஆண்ட பாண்டியர் கல்வெட்டுகளில் வடமொழி வருமிடங்களில் கிரந்த எழுத்துகளே பயன்பாட்டில் இருந்துள்ளது.

ஆனைமலை, அழகர்மலை, திருமயம், குடுமியான் மலை கல்வெட்டுகளிலும் வேள்விக்குடி, சின்னமனூர் செப்பேடுகளிலும் கிரந்த எழுத்துகள் பொறிக்கப்பட்டு உள்ளன. சோழர்காலக் கல்வெட்டுகள், செப்பேடுகளிலும் கிரந்த எழுத்துகள் உள்ளன. விஜய நகரப் பேரரசர்களும், நாயக்கர் மன்னர்களும் கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்தியுள்ளனர். இத்தகு அரசாட்சியில் வட மொழியாளர்கள் அரசர்களுக்கு அறிவுரை சொல்லும் குருநாதர்களாகவும், அரசவையில் அமைச்சர் பதவி வகிக்கும் உயர்பொறுப்புகளிலும் இருந்து வடமொழி வளர்ச்சிக்கு மன்னர்களைப் பயன்படுத்திக் கொண்டனர். எனவே அரச ஆவணங்களில் கிரந்தம் செல்வாக்கு பெற்றது.

கிரந்த வளர்ச்சியை அறிவதற்கு நாம் சங்க நூல்களையும் அதற்கு முன் இலக்கண நூலாக இருந்த தொல்காப்பியத்தையும் அறிந்தால் தமிழ்மொழியின் சிறப்பில் எப்படி பிறமொழி ஆதிக்கம் கலந்து அதன் சிறப்பபைக் குலைத்தது என்பது புலனாகும். தொல்காப்பியம் தமிழ் எழுத்துகள் பிறப்பதைப் பற்றி எடுத்துரைக்கும் பகுதிகள் இன்றைய மொழியியல் அறிஞர்களையும் வியப்படையச் செய்கின்றது. அதுபோல் தொல்காப்பியர் காலத்தில் பிற மொழிச்சொற்களையும், எழுத்துகளையும் எவ்வாறு எடுத்து ஆள்வது என்ற வரையறை அமைக்கப்பட்டுள்ளது.

“வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ
எழுத்தொடு புணர்ந்து சொல்லாகும்மே”

என்னும் நூற்பா மிகச்சிறந்த வரையறை செய்து தமிழில் பிறமொழிச்சொற்களை ஆளும்பொழுது வடவெழுத்து நீக்கி (ஒரீஇ=நீக்கி) தமிழ் எழுத்துகளில் எழுதவேண்டும் என்கின்றது. பின்னாளில் கம்பர் காலம் வரை இந்த மரபை நாம் கண்டு உவக்கின்றோம். விபீஷணன் என்பதைக் வீடணன் என்றும் ஜானகி என்பதைச் சானகி (சானகி நகுவள் என்று) என்றும் எழுதும் கம்பனின் மொழியாளுமையை நினைக்கும்பொழுது அவரின் தமிழ்மரபு காக்கும் சிறப்புத்தெற்றென விளங்கும்.

கி.பி.12, அல்லது கி.பி 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நன்னூல் என்னும் இலக்கண நூல் தமிழ் எழுத்துகளுக்கு இலக்கணம் கூறுமிடத்து வட எழுத்துகள் பற்றியும் ஒப்பிட்டுப் பேசுகின்றது (நன்னூல் நூற்பாக்கள்: 146,147148,149). வடமொழியாக்கம் என்று அறிஞர்கள் இதனைக் குறிப்பர். அந்த அளவு நன்னூலார் காலத்தில் வடமொழிச் செல்வாக்குத் தமிழகத்தில் இருந்துள்ளது. அதனால்தான் பிற்காலக் கல்வெட்டுகளில் வடமொழியை எழுதும் கிரந்த எழுத்துகளைப் பார்க்கிறோம்.

இந்தக் காலங்களில் எல்லாம் பிற நாட்டுப் படையெடுப்பும், ஆட்சியும், பிறமொழியினரின் ஆதிக்கமும் தமிழகத்தில் இருந்து வந்ததை நினைவில் கொள்ளவேண்டும். பிற்காலப் புலவர் ஒருவர் தமிழுக்கு ஐந்தெழுத்து (எ, ஒ, ழ, ற,ன) மட்டும் உண்டு என்று எள்ளி நகையாடிய கதையும் இலக்கிய வரலாற்றில் பதிவாகியுள்ளது. (இந்த ஐந்தெழுத்து மட்டும்தான் தமிழுக்கு உரியது என்று புலவர் இகழ்ந்தார். அது புலவர் காலம். இந்த எழுத்து இல்லாமல் கிரந்தத்தை எழுது முடியாது என்று இமணசர்மா குறிப்பிடுகின்றார். இது இந்தக் காலம். இது வடமொழியாதிக்கத்தின் உச்சநிலை என்று கருதவேண்டும்.

இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதிவரை வடமொழிக்குத் தமிழ்நாட்டுத் திருமடங்கள் ஆதரவளித்தன. தமிழ்ப்புலவர்கள் என்றால் கட்டாயம் அவர்களுக்கு வடமொழிப்புலமை இருக்கும் மறைமலையடிகள், பண்டிதமணி கதிரேசன் செட்டியார் உள்ளிட்ட தமிழறிஞர்கள் வடமொழி நூல்களை மொழிபெயர்க்கும் அளவுக்குப் புலமை பெற்றவர்கள்.

கிரந்தத்தைத் தமிழில் இணைத்தால் ஏற்படும் இழப்புகள் என்ன?

தமிழில் பிறமொழி (சமற்கிருதம்) கலந்து முன்பு எழுதப்பட்டதால் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட கிளை மொழிகள் இதிலிருந்து பிரிந்து, அம்மொழி பேசும் மக்கள் நாம் அனைவரும் ஒன்று என்ற நினைவில்லாமல் ஆற்று நீருக்கும், எல்லைக்குமாகப் பிரிந்து போரிட்டு நீதிமன்றப் படிக்கட்டுகளில் நிற்கவேண்டிய நிலைக்கு ஆளானோம். தமிழ் தவிர்ந்த பிறமொழிகள் பிறமொழி கலப்பில்லாமல் வழங்க முடியாது. ஆனால் தமிழ்மட்டும்தான் பிறமொழிகளின் கலப்பில்லாமல் பயன்படுத்தமுடியும் என்று மொழியியல் அறிஞர் கால்டுவெல் போன்றவர்களால் கூறப்பட்டது.

அக்கொள்கையை வழிமொழிவதுபோல் தனித் தமிழ்க்கடல் மறைமலையடிகளார் தனித்தமிழ் இயக்கம் கண்டு பிறமொழி கலவாமல் எழுதவும் பேசவும் செய்தார். பாவாணர், பெருஞ்சித்திரனார் உள்ளிட்ட அறிஞர்களின் எழுத்தாக்கமும், பாடல்களும் தமிழ்நாட்டில் தமிழ் மொழியைச் செப்பமாகவும், பிழையின்றியும் எழுதவும் பேசவுமான நிலையை ஆழமாகச் செய்தன. தனித்தமிழ் இயக்கம் வரலாற்றுத் தேவையாக இருந்தது. திராவிட இயக்கம் நல்ல தமிழுக்குரிய நாற்றங்காலாக இருந்தது.

முற்காலத்தில் வடமொழியும் தமிழும் கலந்து எழுதும் பெரும்பணியை வைணவ உரையாசிரியர் பெரியவாச்சான் பிள்ளை போன்றவர்கள் செய்தனர். அதன் நீட்சி இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் ஏன் இடைப்பகுதி வரையிலும் தென்படுவதைப் பழைய தமிழக நாளேடுகளைப் புரட்டிப் பார்த்தால் நமக்கு உண்மை விளங்கும்.

தமிழில் பிறமொழிச் சொற்கள் கலந்தாலும், பிறமொழிகளின் எழுத்துகள் கலந்தாலும், பிறமொழி ஒலி கலந்தாலும் தமிழின் தனித்தன்மை கெடும். அவ்வாறு கெடாமல் செவ்வியல் மொழியைப் பாதுகாப்பது அந்த மொழியை தாய்மொழியாக கொண்டவரின் கடமையாகும்.

— முனைவர் மு.இளங்கோவன்



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 Arunkumar Pankaj பொருந்தலில் கிடைத்தது ஒரேயொரு வார்த்தை தான்..


ஆகவே தான் பேரா.கா.ராஜன் அதனை தனித்து காட்டாமல் அதற்கு இணையான காலகட்டத்தை சேர்ந்த கொடுமணல் ஆய்வுகளுடன் காலத்தை பொறுத்திக் காட்டுகிறார். கொடுமணலில் கிடைத்த பானைக்கீறல் எழுத்துக்களை அட்டவணைப்படுத்திய அவர், கொ
டுமணல்-பொருந்தல் ஆய்வு அசோகருக்கு முற்பட்ட காலத்தில் தமிழ் எழுத்துக்கள் மட்டுமல்ல வடமொழி எழுத்தும் இருந்தமைக்கும் சேர்த்தே சான்று பகர்வதாக தனது "Early writing system" புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்..

கொடுமணலில் உள்ள சாத்தன் பெயர்கள் பெரும்பாலும் "ஸாத்தன்" என்றே உள்ளன. இதெல்லாம் அப்பவே ஒழுங்கா படிச்சிருந்தா "வடமொழி புழக்கத்தில் இல்லாத காலத்திலேயே இங்கு தமிழ் தனித்து இருந்தது" என்று உளறிக்கொண்டு இருக்க மாட்டார்கள்..



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard