New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தமிழ்வேள்வி வழிபாடு எனும் பொய்


Guru

Status: Offline
Posts: 24765
Date:
தமிழ்வேள்வி வழிபாடு எனும் பொய்
Permalink  
 


தமிழ்வேள்வி வழிபாடு எனும் பொய் -1 
 
திருமுறைக்கு தவறாக பொருள் கூறும் மேதைகளுக்கு இது சிவாபராதம் என்று தெரியுமா? புரிந்து வழிபாடாம் தமிழில். உண்மையில் புரிந்து மட்டும் ஒருவர் உங்கள் தமிழ் வழிபாட்டினை கண்ணுற்றால் அப்பொழுது தெரியும் உமது நிலை.கிரியைக்கு பொருத்தாமில்லப் பாடலைச் சொல்வது. உதாரணம் ஒன்று மட்டும் இப்போது ஆனைந்து வழிபாடு . ஆனைந்துக்கும்  பஞ்சாக்கரப் (நமசிவாய )பதிகங்களுக்கும் என்ன சம்பந்தம். தவறிப்போய் அப்பர் பஞ்சாக்கரப்பதிகத்தில்  ஆவினுக்கு அருங்கலம் அரன் அஞ்சாடுதல் என்று பாடிவிட்டார்.  ஆவினுக்குத் தான் அது அருங்கலம். ஆனால் பஞ்சகவ்விய வழிபாட்டுக்கும் இப்பாடலுக்கும் மற்ற ஐந்தெழுத்து பதிகங்களுக்கும் என்ன சம்பந்தம்.

இது மாதிரி சம்பந்தாசம்பந்தம் இல்லாமல் பொருத்தம் இல்லா பாடலைப் பாடி வயிறு வளர்க்கும் கும்பல் இதே போல தூபம் தீபம் அமுது படைக்க  என எல்லாவற்றிற்கும்  செய்கிறது. இச்செய்கைகள் தினம் ஒன்றாக பதிவிட்டு மக்களை  மாக்கள் என நினைந்து பொய்யுரைத்து பணம் பறிக்கும்  நிகழ்வு  திருவருள் துணை கொண்டு தோலுரிக்கப்படும்

 
                     திருச்சிற்றம்பலம்


__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

தமிழ்வேள்வி வழிபாடு எனும் பொய் -2
http://sivanadimai.blogspot.com/2017/10/2.html

வேதச்சிறப்பு
 
சைவத்தின் மேன்மை என்ன தெரியுமா மற்ற சமயங்கள் மற்றும் மதங்களின் வேதம் என்பது பசு வாக்கியம் அதாவது நம்மைப்போல மலம் உள்ள மனிதர்களால் செய்யப்பட்டதுஆனால் சைவ வேத ஆகமங்கள் சிவபரம்பொருளாலேயே அருளப்பட்ட பெருமை பெற்றது பதி வாக்கியம்.பிறவா இறவா கடவுள் சிவம் ஒருவரே.
சரி வேத ஆகமங்கள் எம்மொழியில் உள்ளது .சமஸ்கிருதம் என்னும் வடமொழியில்.அதை அருளியவர் சிவபெருமான் என்பதற்கு சான்று எங்கு உள்ளதுதிருமுறைகளில் .
சம்பந்தர் தேவாரம்
தி-1--131-பா -7 அறங்கிளரும் நால்வேதம் லின்கீழ் ருந்தருளி
தி-1--135-பா -3 வேதர் வேதமெல்லாம் முறையால்விரித்து ஓத தி-2--038-பா -7 வேத நாவினர்
அப்பர் தேவாரம்
தி-4--7-பா-8 விரித்தானை நால்வர்க்கு வெவ்வேறு வேதங்கள்
தி-4--51-பா-3 ஆறும் ர் நான்கு வேதம் றமுரைத் தருளி னானே
தி-4--22-பா-5 ஓதினார் வேதம் வாயால் ளிநிலா வெறிக்குஞ் சென்னி
சுந்தரர் தேவாரம்
தி-7--36-பா-10 மெய்யெலாம் பொடிக்கொண்டு பூசுதிர் வேதம் ஓதுதிர்
தி-7--49-பா-07 வேதம் தி வெண் ணீறு பூசி
தி-7--61-பா-07 வேதந் தான்விரித் தோதவல் லானை
மணிவாசகர்
நீத்தல்விண்ணப்பம் பா-43-வேதமெய்ந்நூல் சொன்னவனே
அன்னைப்பத்து பா-1- வேத மொழியர்
திருமூலர்
திருமந்திரம்-வேதச்சிறப்பு
வேதம் உரைத்தானும் வேதிய னாகிலன் வேதம் உரைத்தானும் வேதா விளங்கிட
வேதம் உரைத்தானும் வேதியர் வேள்விக்கா வேதம் உரைத்தானும் மெய்ப்பொருள் காட்டவே
 
வேதங்கள் சிவபெருமானால் அருளப்பட்டதுஇருக்கு யஜூர் சாம அதர்வணம் என்னும் நான்கு அதன் பெயர்களை சொல்லியுள்ளார்களா ?
 
இருக்கு வேதம்
தி-1--63-பா-3 நன்றுநகு நாண்மலரால் நல் ருக்கு மந்திரங்கொண்டு ஒன்றி வழிபாடு
தி-2--04-பா-7 பண்டு ருக்கு ரு நால்வர்க்கு நீர் உரை செய்ததே.
தி-4--29-பா-4 முந்திய தேவர் கூடி முறைமுறை யிருக்குச் சொல்லி
தி-4--48-பா-எண்ணுடை ருக்குமாகி ருக்கினுள் பொருளுமாகிப்
தி-4--100-பா-10 இருக்கு இயல்பாயின ன்னம்பரான் தன்இணையடியே
சாமவேதம்
தி-2--92-பா-8 சாம வேதமொர் கீதம் தியத் தசமுகன் பரவும்
தி-2--94-பா-1 சாகை யாயிர முடையார் சாமமு மோதுவ துடையார்
தி-3--56-பா-1 சடையினன் சாமவேதன் சரி கோவண வன்
தி-2--57-பா-1 சடையவன் சாமவேதன் சசி தங்கியசங்கவெண்தோடு
மற்ற இரு வேதங்களைச் சொல்லவில்லையே மண்ணுக்கும் விண்ணுக்கும் என்றால் இடையில் இருப்பது எல்லாம் என்று பொருள்
இப்படி பெருமானின் வாக்கை ஏற்காத இவர்கள் சைவர்களா ?
தமிழில் திருமுறைகளை அருளிய அருளாளர்கள் வாக்கையும் ஏற்காமல் அதை மறுக்கும் இவர்கள் சைவர்களும் அல்ல சிவ பெருமானின் அருளுக்குப் பாத்திரமானவர்களும் அல்ல .இவர்களை வைத்து வேள்வி செய்தால் அவமே விளையும்.குளிக்கிறேன் என்று சேற்றைப் பூசிக்கொள்வது போல சிவ நிந்தனைக்கு ஆளாகி விடுவோம்
 
தனது திருப்பதிகங்கள் தோறும் திருக்கடைக்காப்பில் பதிகப்பலன் சொல்லும் தவமுதல்வர் சம்பந்தப்பிள்ளையார் அவர்கள் இப்பதிகத்தை இசையொடுகூடிய, பாடவல்லார்க்கு, சொல்லவல்லார்க்கு, ஓதவல்லார்க்குகேட்டார்க்குநினைவார்க்குகற்றார்க்கு, ஏத்துவார்க்குபாடல்வல்லார்க்குபரவ வல்லார்க்குஉரைசெய்தார்க்குபத்தும் வல்லார்க்கு, தமிழ்வல்லார்க்குமொழிவார்க்குபாடியாட, மாலைவல்லார்க்குபாட, துதித்து, வணங்கிஉரைப்பார்இசைகூடும் வகை,சொலக்கேட்டார்,இசை பாடும் பத்தர்,இன்னுரை வல்ல என்று இன்னும் பலவாறு தான் அருளியுள்ளாரே தவிர இப்பதிகத்தை வைத்து வேள்வி செய்ய என்று ஒரு பதிகத்திலாவது அருளியுள்ளாரா ?
அப்படி இருக்க குருமுதல்வர் வாக்கை மீறிச் செய்யலாமா ?
வேதமும் வேள்வியும் ஆயினார்க்கு என்பது மணிவாசகம்.
 
மேலும் தேவாரம் இசையுடன் பாடக்கூடியதுஅது இசை பற்றி வந்ததுசமணர்கள் இசை காமத்தை உண்டாக்கும் என்ற கொள்கையுடையர் அதை மறுத்து சிவமே ஓசை ஒலி  எல்லாமானவர்அவரே வீணாகானர் ஏழிசையானவர் இசையே அவருக்கு விருப்பம்அதனால் தான் இராவணன் சாம கானம் பாடி அருள் பெற்றதை எட்டாவது பாடல் தோறும் குறிப்பிட்டார்சம்பந்தர் திருஅவதாரமே வேதநெறி தழைத்தோங்க மிகு சைவத்துறை விளங்கத்தானே சத்யம் வதா தர்மம் சர என்ற உண்மை அறம் வேதத்தில் எம்பெருமானால் சொல்லப்பட்டது
 
தமிழ் வேள்வி வழிபாடு தவறு என்று அவர்கள் தமிழிலேயே விளக்கியாயிற்று ஆக இவர்கள் தவறுக்கு உடந்தையாக இருப்பவர்க்கும் தக்கன் யாகத்தில் நடந்த அந்த பலனே விளையும்.
 

                             போற்றி ஓம் நமசிவாய 
                                 திருச்சிற்றம்பலம்



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

தமிழ்வேள்வி வழிபாடு எனும் பொய் – 03
 
திருச்சிற்றம்பலம்
 
திருஞான சம்பந்தர் பெருமான் தனது திருக்கடைக்காப்பில் எங்கும் இப்பதிகத்தை வைத்து வேள்வி செய்ய சொல்லவில்லை என்று பார்த்தோம்
வேத வேள்வி பற்றி சொல்லியுள்ளார்களா ?
 
சம்பந்தர்
தி-1-ப-39-பா-3 கலந்திசையாலெழுந்த வேதமும்வேள்வியும்
தி-1-ப-42-பா-2 அனலதுவாடுமெம் மடிகள் மிக்கநல்வேத வேள்வியுளெங்கும்
தி-1-ப-82-பா-8 மறைவேள்வி பயின்றார் பாவத்தைவிடுத்தார்
தி-1-ப-82-பா-10 தக்கார் மறைவேள்வித் தலையா யுலகுக்கு
தி-2-ப-13-பா-7 வில்லானை வேதமும் வேள்வியு மானானைக்
தி-2-ப-31-பா-3 வேதமொடு வேதியர்கள் வேள்விமுத லாகப்
தி-3-ப-71-பா-5 வேதமொடு வேள்விபல வாயினமி குத்துவிதி
தி-3-ப-80-பா-7 மந்திரநன் மாமறையி னோடுவளர் வேள்விமிசை
அப்பர்
தி-4-ப-74-பா-1 வித்தினை வேத வேள்விக் கேள்வியை விளங்க
தி-4-ப-92-பா-17 ஓதிய ஞானமும் ஞானப்பொருளும் ஒலிசிறந்த
வேதியர் வேதமும் வேள்வியு மாவன
தி-5-ப-11-பா-9 வேதத் தானென்பர் வேள்வியு ளானென்பர்
தி-5-ப-67-பா-4 அருமறை நான்குடன்தங்கு வேள்வியர்
தி-6-ப-2-பா-2 பரிதி நியமத்தார் பன்னிருநாள் வேதமும் வேள்விப் புகையும்
தி-6-ப-16-பா-3 வேதங்கள் வேள்வி பயந்தார் போலும்
தி-6-ப-48-பா-1 நல்லான்காண் நான்மறைக ளாயி னான்காண்
தி-6-ப-48-பா-1 வேத வேள்விச்சொல்லான்காண்
சுந்தரமூர்த்தி நாயனார்
தி-7-ப-68-பா-8 வேதனை வேத வேள்வியர் வணங்கும்விமல னை
தி-7-ப-88-பா-1 அந்தணர் நான்ம றைக்கிட மாய வேள்வியுள்
தி-7-ப-97-பா-7 அங்கமொ ராறவையும் அருமாமறை வேள்விகளும்
மணிவாசகர்
தி-8-ப-9-பா-20 வேதமும் வேள்வியும் ஆயி னார்க்கு
கண்டராதித்தர்
தி-9-ப-20-பா-2 ஓவா முத்தீ அஞ்சு வேள்வி ஆறங்க நான்மறையோர்
நக்கீரர்
தி-11-ப-13-பா-1 பெருந்தேவபாணி -
வேலை நஞ்சினை மிக அமுதாக்கியை
வேத வேள்வியை விண்ணவர் தலைவனை
 
இது போன்ற சான்றுகள் இன்னும் நிறைய திருமுறைகளில் உள்ளது.
இவர்கள் அருளியது சிவபரம்பொருளின் வாக்கேயாம். எனதுரை தனதுரை
என்று . அப்படிப்பட்ட அருளாளர்களின் வாக்கை மதியாமல் அவர்களின் பாடல்களைத் தவறாக வேள்விக்குப் பயன்படுத்தி குருத் துவேசத்துக்கும் சிவநிந்தனைக்கும் ஆளாக்குமே தவிர பயனிலாச் செயல் இவர்கள் செய்வது பொருள் பற்றியே அருள் பற்றியல்ல.
வேதவேள்வியை நம் ஆச்சார்ய பெருமக்கள் மறுத்து உள்ளார்களா ஆம்
அதற்கு ஒரு பதிகமே பாடியுள்ளார் தவமுதல்வர் குருமுதல்வர்
மூன்றாம் திருமுறை பதிகம் 108 பாடல் முதல் வரி மட்டும்
 
1.வேத வேள்வியை நிந்தனை செய்துழல்
2.வைதி கத்தின் வழியொழு காதவக்கைத வம்முடைக்
3.மறைவ ழக்கமி லாதமா பாவிகள்
4.அறுத்த வங்கமா றாயின நீர்மையைக்
5.அந்த ணாளர் புரியும் அருமறைசிந்தை செய்யா
6.வேட்டு வேள்விசெ யும்பொரு ளைவிளி
7.அழலது ஓம்பும் அருமறை யோர்திறம்
 
இப்படி சைவத்தின் வேதாகமத்தை மறுப்பது என்பது அதை அருளிய
ஈசனையே மறுப்பதாகும். இவர்கள் திருநீறு எங்கேஎதற்குசிவவேடம் எங்கே எதற்கு ?
எல்லாம் பொய்வேடமே. மேலும் திருமுறைக்கு தப்பாக பொருள் கூறும் அஞ்ஞானிகள் இது சமணர்களைக் கண்டித்து பாடியது எங்களுக்கு அல்ல என்பர் .அப்போ இடரினும் தளரினும் பாடல் பாடினால் சம்பந்தருக்கு மட்டும் தான் பொருள் கிடைக்குமா உங்களுக்கு கிடைக்காதா திருநீற்றுப்பதிகம் பாடினால் எல்லோருக்கும் சுகம் உண்டாகாதா அறிவிலிகளே. உண்மையை உணர்ந்து திருமுறையை ஓதி உய்வு பெறுங்கள்
ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்கு சோதிக்க வேண்டா என்றாரே சம்பந்தர் திருப்பாசுரத்தில்.
தி.க.வின் ஆன்மீகப்பிரிவினருக்குத் தான் இந்த எச்சரிக்கை. அடுத்த பாடலில்
ஆடும் மெனவும் அருங்கூற்ற முதைத்து வேதம்
பாடும் மெனவும் புகழல்லது பாவம் நீங்கக்
கேடும் பிறப்பும் மறுக்கும் மெனக்கேட் டீராகில்
நாடுந் திறத்தார்க் கருளல்லது நாட்ட லாமே
 
இறைவன் திருநடனம் புரிவதும் மார்க்கண்டேயருக்காகக் காலனைக் காலால் உதைத்ததும் வேதங்களை அருளிச் செய்ததுமான செயல்கள் தன் புகழ்  கருதியா செய்தார்  மன்னுயிர்களின் தீவினைகளை நீங்குவதற்காகவும் பிறப்பை அறுத்துப் பிறவா நெறியை அளிப்பதற்காகவும் செய்த அருளிப்பாடுகள் என்று கூறுகிறார். வேதங்களை அருளியது நாம் உய்யவே என்று நிறுவுகிறார்.
வேள்வித்தலைவன் ஈசனே அவரை மதியாதும் அவருடைய வாக்கை இந்த மரமண்டைகளுக்குப் புரியும் வண்ணம் தமிழில் அருளிய அருளாளர்களின் வாக்கை மதியாதும் செய்யும் வேள்வியால் என்ன பயன் ?. பயனல்ல கேடு தான் எப்படி இறைவன் திருவுளப்பாங்கிற்கு மாறாக இவர்கள் செய்யும் வேள்வி போலச் செய்த தக்கன் வேள்வியில் நிகழ்ந்தது
 
 
எச்சனிணத் தலைகொண்டார் பகன்கண் கொண்டார்
இரவிகளி லொருவன்பல் லிறுத்துக் கொண்டார்
மெச்சன்வியாத் திரன்தலையும் வேறாக் கொண்டார்
விறலங்கி கரங்கொண்டார் வேள்வி காத்த
உச்சநமன் தாளறுத்தார் சந்திரனை யுதைத்தார்
உணர்விலாத் தக்கன்றன் வேள்வி யெல்லாம்
அச்சமெழ அழித்துக்கொண் டருளுஞ் செய்தார்
அடியேனை யாட்கொண்ட அமலர் தாமே. தி-6-ப-96-பா-9
 
எச்சன் எனும் வேள்வித்தலைவனின் தலை,பகன் என்னும் சூரியரின் கண்,இன்னொரு சூரியனின் பல்,தக்கன் தலை,அக்கினியின் கரம்,வேள்வி காத்த யமன் கால்சந்திரனுக்கு உதை இவையெல்லாம் தண்டனையாக கிடைத்தது .
அற்ப மானுடராகிய நாம் ஈசனின் திருவுளத்திற்கு மாறாக தமிழ் வேள்வி செய்தால் …….
 
 

    திருச்சிற்றம்பலம்


__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

 தமிழ்வேள்வி வழிபாடு எனும் பொய் – 04
                     திருச்சிற்றம்பலம்
 
மறைகள் நிந்தனை சைவ நிந்தனை பொறா மனம் வேண்டும் என்று திருவையாற்றில் அப்பனிடம் வரம் கேட்டுப்பெற்ற நம் முதல் குரவனாம் (அடியேனுக்கும்நந்தி எம்பெருமான் பாதமலர் தலைக்கொண்டு தொடர்வோம்சைலாதி மரபுடையோன் கயிலாய பரம்பரையின் முதல் குருவான திருநந்தியெம்பெருமான் மறை நிந்தனை மறந்தும் தனக்கு வந்து விடக்கூடாது என்று முதல்வரமாக அதைக் கேட்கிறார் என்றால் அதன் முக்கியத்துவம் எவ்வளவு உயர்ந்ததாக இருக்கும் . குருவணக்கப் பாடல் சொல்லும்போது கல்லாலின் புடையமர்ந்து நான்மறை ஆறங்கம் முதல் கற்ற கேள்வி என்று பாடுகிறீர்களே .அது பொய்யான வணக்கமா உள்ளத்தில் அன்பில்லாமல் வெறும் வாய்ச்சொல்லாக பாடினால் பலன் உண்டா நால்வர்துதி சொல்கிறீர்களே அவர்கள் ஆசி உங்களுக்கு உண்டா ? உங்களையும் சிலர் வேள்விக்கு அழைக்கிறார்களே அவர்கள் நம்பிக்கையைக் கெடுத்து சிவபரம்பொருளின் திருவுள்ளத்துக்கும் ஆச்சார்யப் பெருமக்களின் வாக்குக்கும் மாறாக வேள்வி செய்கிறீர்களே ?.அது பலன் கொடுக்குமா ?

 

ஓதி உணர்ந்து இருந்தால் ஏக தெய்வ வழிபாடாக இருக்கும் தேவார திருவாசகங்களை வேள்வியில் இட மாட்டார்கள் அதை சிறு தெய்வங்களான கருப்பராயன் மாரியாத்தா அங்காளம்மன் சாய்பாபா முனீஸ்வரன் அய்யப்பன் கோவில் கும்பாபிஷேகத்திற்குப்  பயன்படுத்துவார்களா ?. ஆக இவர்கள் வேதத்திலும் பொருந்தவில்லை திருமுறைகளுக்கும் உண்மையாக இல்லைசாத்திரங்களிலும் நம்பிக்கையில்லை ஐயோ இரக்கம் ஒன்றிலீர் என்று பாடிவிட்டோமே? திருவருளுக்கு மாறுபட்டு நடந்தோமோ என்று அப்பர் வருந்தினாரே .என்ன கற்றீர் திருமுறையில் .வாகீசராக இருந்தபோது அப்பர் செய்த தவறு என்ன இராவணன் உய்யும் வழி தானே கூறினார் அதற்கே பிறவி பெற்று புறச்சமயம் சார்ந்து எவ்வளவு இன்னல்கள் பெற்றார்இன்னொரு பிறவியே கொடுமை எனும் போது புறச்சமயம் அதைவிடக்கொடுமை தானே இவர்கள் செய்யும் தவறுக்கு மனிதப்பிறவி வாய்ப்பதே அரிதல்லவா ஊதியமே பொருட்டாக செய்ய மனசாட்சி இல்லையாவந்த பிறவியை இறைவரை வாழ்த்தி ஆன்ம நலம் பெற்று உய்வு பெறாமல் வீணாக்கலாமா சிந்தியுங்கள் திருமுறைத்தொழிலோரே !

 

வேத நாயகன் வேதியர் நாயகன்

மாதின் நாயகன் மாதவர் நாயகன்

ஆதி நாயக னாதிரை நாயகன்

பூத நாயகன் புண்ணிய மூர்த்தியே. தி-5--100-பா-1

 

வேதத்தை விட்ட அறம்இல்லை வேதத்தின்

ஓதத் தகும்அறம் எல்லாம் உளதர்க்க

வாதத்தை விட்டு மதிஞர் வளமுற்ற

வேதத்தை ஓதியே வீடுபெற் றார்களே – திருமந்திரம்    வேதச்சிறப்பு

             திருச்சிற்றம்பலம்
 
அடுத்து ஆகமமாகி நின்றால் அண்ணிப்பவரைச் சிந்திப்போம்….


__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

 தமிழ்வேள்வி வழிபாடு எனும் பொய் – 05
 
 
 
                     திருச்சிற்றம்பலம்
ஆகமமாகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க

இது திருவாசகம் சிவபுராணத்தில் ஆவது வரி.

இந்த பாடல் வரிகள் மூலம் ஆகமத்தைப் பின்பற்றி வழிபட்டால் அயன் மால் இந்திராதி தேவர்களுக்கு அரிய பெருமான் நம்மை அண்ணிப்பார்.நெருங்குவார் என்று மணிவாசகர் அருளியுள்ளார்இது அவரை வணங்குவோம் அவர் பாடலை நாளும் சொல்லுவோம் அவர் சொன்னவாறு பொருள் உணர்ந்து அதன் படி நடக்க மாட்டோம் நாங்கள் பகுத்தறிவு சிங்கங்கள் என்பது போல உள்ளது.ஏன் இந்த போலி வேடம் ? இன்னும் ஆகமம் பற்றி சில திருமுறை உதாரணங்கள்

 

தி-3--39-பா-2- ஆகமத்தொடு மந்திரங்களமைந்த சங்கத பங்கமாப்

தி-3--57-பா-10- ஆகமச்செல்வனாரை லர் தூற்றுதல் காரணமாக்

தி-3--23-பா-6- தொகுத்தவன் அருமறை அங்கம் ஆகமம்வகுத்தவன்

தி-7--96-பா-6- அம்மானே ஆகம சீலர்க்கு ருள்நல்கும்பெம்மானே

தி-7--100-பா-8- அரவொலி ஆகமங்கள் அறிவார்அறி தோத்திரங்கள்
              விரவிய வேதஒலி விண்ணெலாம்

தி-8--2-மாவேட்டாகிய ஆகமம் வாங்கியும்
      மற்றவை தம்மை மகேந்திரத்திருந்து
      உற்ற ஐம்முகங்களால் பணித்தருளியும்

 

11-37-40 ஆகமங்கள் கேட்பார் அருங்கலை நூல் ஆதரித்துப்
                போகம் ஒடுங்காப் பொருள் துய்ப்பார் சோகமின்றி.

 

திருக்குறிப்புத் தொண்டர் நாயனார் புராணம்

 

வெள்ளி மால்வரைக் கயிலையில் வீற்றிருந்து ருளித்

துள்ளு வார்புனல் வேணியார் அருள்செயத் தொழுது

தெள்ளு வாய்மையின் ஆகமத் திறன் எலாம் தெளிய

உள்ளவாறு கேட்டு அருளினாள் உலகை ளுடையாள்  -பாடல்-50

 
திருக்கயிலை மலையில் வீற்றிருந்து அருளும் கங்கை சூடிய சிவபெருமான் உலக உயிர்களை அடிமையாக உடைய உமையம்மைக்கு தெளிந்த மெய்ப் பொருள்களைக் கூறும் சிவாகமங்களின் தன்மைகளை உள்ளவாறு அருள அம்மை தொழுது கேட்டருளினார்இது மேற்கண்ட பாடலின் பொருள்

 

எண்ணில் ஆகமம் இயம்பிய இறைவர் தாம் விரும்பும்

உண்மை யாவது பூசனை என  ரைத் தருள

அண்ணலார் தமை அர்ச்சனை புரிய ஆ தரித்தாள்

பெண்ணில் நல்லவள் யின பெருந்தவக் கொழுந்து – பாடல்-51

 

எண்ணற்ற ஆகமங்களை மொழிந்தருளிய ஈசர் தாம் விரும்பும் உண்மையாவது தம்மை முறைப்படி பூசிப்பதேயாகும் என்று உரைத்தருள பெண்ணில் நல்ல பெருமாட்டியாரும் உயிர்கள் அனைத்திற்கும் தலைவரான பெருமானாரை வழிபாடாற்ற உள்ளத்து விருப்பம் கொண்டார். இது மேற்கண்ட பாடலின் பொருள்

 

நங்கை உள்நிறை காதலை நோக்கி நாயகன் திருவுள்ளத்து மகிழ்ந்தே

அங்கண் எய்திய முறுவலுந் தோன்ற அடுத்ததென்கொல் நின்பாலெனெ வினவ

இங்கு நாதநீ மொழிந்த ஆகமத்தின் இயல்பினால் உனைஅர்ச்சனை புரியப்

பொங்குகின்றது என் ஆசையென்றிறைஞ்சிப் போகமார்த்தபூண்முலையினால் போற்ற – பாடல்-53

 

பெருமாட்டியின் திருவுள்ளம் தம்மை வழிபட இருக்கும் நிறைந்த காதலை நோக்கி நீ செய்வது யாது என வினவ என்தலைவரே தாங்கள் அருளிய ஆகமத்தின் இயல்பினால் உம்மை வழிபட ஆசை பொங்குகின்றது என்றார் பெருமாட்டி.

 

மூன்று பாடல்களிலிருந்தும் நாம் பெறுவது என்ன 
1.ஆகமங்கள் சிவபெருமானால் அருளப்பட்டவை 
2.ஆகம பூசையையே சுவாமி விரும்புகிறார்விருப்பு வெறுப்பற்ற ஈசனுக்கு விருப்பமா ஆம் உயிர்கள் உய்வு பெற வேண்டும் என்று கொண்ட பெருங்கருணை. 3.ஆகமங்களின் தன்மைகளை உணர்ந்து ஈசர் விரும்பும் பூசையை ஆகமத்தில் அருளியவாறு செய்ய அம்மை விரும்புகிறாள்அம்மை ஏன் விரும்ப வேண்டும் உலக உயிர்களைத் தன் அடிமையாக உடையவள் அல்லவா பால் குடிக்கும் குழந்தைக்கு உடல் நலமில்லை என்ற உடனே தாய் மருந்துண்ணுவது போல அன்னை தலைவியாய் இருந்து உயிர்களுக்கு முன்னுதாரணமாய் இருந்து உணர்த்தினாள்தலைவன் எவ்வழி மக்கள் அவ்வழி என்புழிப்போல .

 

தெய்வச்சேக்கிழார் சுவாமிகள் இதைவிட எப்படி விளக்கமுடியும் இதிலிருந்து ஆகமவழி பூஜையே இறைவர் விரும்புவது என்று நிரூபணம் ஆகிறது பெரியபுராண வகுப்பு எடுக்கும் தமிழ்வேள்வி வழிபாடு செய்யும் மேதாவிகள் தாங்கள் என்ன உணர்ந்தார்கள் இவர்கள் பெரிய புராணத்தை வெறும் கதையாக மட்டும் சொல்லிக்கொண்டுளரா இவர்களால் பெரியபுராணத்தின் உண்மையான சாராம்சம் விளக்க முடியுமா அதுவும் பொருள் பற்றியே தானா தமிழ்வேள்வி வழிபாட்டை விரும்பும் மக்களே ,ஒரு அடிப்படையும் இல்லாமல் நீங்கள் ஆதரவு கொடுத்தால் ஏமாறுபவர் இருக்கும்வரை ஏமாற்றுபவர் இருப்பர் என்பதற்கு உதாரணம் ஆவீர்.

 
            திருச்சிற்றம்பலம்

 

அடுத்து ஆகம உண்மைகளைச்செப்ப வந்த திருமூலதேவர்……


__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

 தமிழ்வேள்வி வழிபாடு எனும் பொய் – 06
 
                        திருச்சிற்றம்பலம்
 

பெரியபுராணம்-திருமூலதேவநாயனார் புராணம் பாடல்-23

 

 

தண்ணிலவார் சடையார்தாம் தந்த ஆகமப்பொருளை
மண்ணின்மிசைத் திருமூலர் வாக்கினால் தமிழ்வகுப்பக்
கண்ணிய அத்திருவருளால் அவ்வுடலைக் கரப்பிக்க
எண்ணிறைந்த ணர்வுடையார் ஈசர் அருள் னவுணர்ந்தார்

 

சிவபெருமான் தாம் அருளிய ஆகமப்பொருளை இந்நிலவுலகில் திருமூலர் வாக்கால் தமிழில் சொல்வதற்கு வாய்ப்பாக சிவயோகியார் உடலை மறைப்பித் தருளினார் என்று உணர்ந்தார். சடையார் என் உரைத்ததினால் தமது ஐந்து திருமுகங்களால் ஆகமம் அருளப்பட்டது என்பது முடிவான முடிவாகும்

இப்புராணம் வாயிலாகவும் ஆகமங்கள் சிவபெருமானால் அருளப்பட்டது என் தெளிவுபடுத்தப்படுகிறது .இனி திருமூலர் வாக்கால் அறிவோம்

 

அஞ்சன மேனி அரிவையோர் பாகத்தன்

அஞ்சொ டிருபத்து மூன்றுள ஆகமம்

அஞ்சலி கூப்பி அறுபத் தறுவரும்

அஞ்சாம் முகத்தில் அரும்பொருள் கேட்டதே.

 

மாதோர்பாகனாகிய சிவபெருமான் ஐந்தோடு இருபத்து மூன்று (5+23) அதாவது இருபத்தெட்டு ஆகமங்களை அருளினார் என்பது தெளிவு

 

ஐம்ப தெழுத்தே அனைத்து வேதங்களும்
ஐம்ப தெழுத்தே அனைத்து ஆகமங்களும்
ஐம்ப தெழுத்தேயும் ஆவதறிந்தபின்
ஐம்ப தெழுத்தும்போய் அஞ்செழுத் தாமே

 

இப்பாடல் மூலமும் வேதம் ஆகமம் இரண்டுமே வடமொழியில் தான் உள்ளது என அறியலாம். தமிழில் திருமந்திரத்தில்  திருவம்பலச்சக்கரம் அருச்சனை திரிபுரைச்சக்கரம் வயிரவிச்சக்கரம் சாம்பவி மண்டலச்சக்கரம் புவனாபதி சக்கரம் நவாக்கரி சக்கரம் ஆகியவற்றில் வடமொழி மந்திரங்களும் எழுத்துக்களும் உள்ளதால் அறியலாம் ஆக வேதம் ஆகமம் இரண்டுமே வடமொழியில் தான் உள்ளது

இரண்டுமே சிவபெருமானால் அருளப்பட்டது அவையே வேள்விக்கும் பூஜைக்கும் உரியன . சிவாலயங்கள் கட்ட துவங்குவதிலிருந்து பிரதிஷ்டை கும்பாபிஷேகம் அதன்பின் நித்திய நைமித்திகம் காமிக புண்ணியகால பூஜை முறைகள் என அனைத்துமே ஆகமங்களில் தான் சொல்லப்பட்டுள்ளது ஸ்தபதிகள் யாராவது இவர்கள் தமிழ் வேள்வி வழிபாடு எனச்சொல்வது போல தமிழ் ஸ்தபதிகள் என்று கூறுகிறார்களா இல்லை அவர்கள் முற்றிலும் ஆகம முறைகளைக் கடைப்பிடிப்பவர்களேதிருமுறைகளில் அவை சொல்லப்பட வில்லை .அதே போல திருமுறைகளில் திருமுறைகளை வேள்வி செய்ய பயன்படுத்தவும் கூறவில்லை நம என்பதை நாங்கள் போற்றி என்கிறோம் தவறா என்பார்கள்அது தவறில்லைஏழுகோடி மந்திரங்களில் மீதி ஸ்வாஹா , ஸ்வதா ,வஷட் ,வெளஷட் ,ஹூம் பட் ,இவைகளை என்ன சொல் கொண்டு நிரப்புவீர்கள் .ஐநூறு ரூபாயை கடையில் கொடுத்தால் பொருள் கிடைக்கும்அந்த ஐநூறு ரூபாயை நகல் எடுத்துக் கொடுத்தால் என்ன கிடைக்கும் அது போல வடமொழி மந்திரங்களை மொழி பெயர்த்துக் கூறுவதில் பயன் உண்டாமந்திர பீஜங்களுக்கு உள்ள வைப்ரேசனை அந்த மொழிபெயர்ப்பு மந்திரம் கொடுக்குமா ?

சைவத்தை அழிக்க வந்த கைக்கூலிகளால் தமிழ் தமிழ் என்று வெற்று வாய்வீச்சாளராக தமிழை முன் நிறுத்தி தன் குடும்பத்தை வளர்த்த சிலரால் தான் இந்நிலைமைஇந்த தமிழ் பற்றாளர்கள் சுயரூபம் தெரியுமா மக்களே 1.இவர்கள் ஒன்று நல்ல பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் தமிழ்பற்று வரும் 2. வருமானம் பற்றி தமிழ் பற்று வரும்.ஆனால் இந்த தமிழ் பற்றாளர்களின் குழந்தைகள் ஆங்கிலவழிக் கல்வியில் பொறியியலும் கணிணித்துறையிலும் வணிகவியலும் மருத்துவமும் சி பி எஸ் சி பள்ளிகளிலும் படிக்கிறார்கள்இவர்கள் தமிழ் வளர்க்க இவர்கள் வீட்டுக்குழந்தைகளை தமிழ் பள்ளியில் தமிழ் இலக்கியம் படிக்கவைக்க வேண்டியது தானே .அதைவிட்டு இறை நம்பிக்கையில் எழு பிறப்புக்கும் நம்மைத் தொடரும் புண்ணிய பாவ ஈட்டங்களில் வழிபாட்டில் உங்கள் தமிழார்வத்தைக் காட்டி சிவாபராதத்தை நீங்களும் தேடி உங்களுக்கு பொருளை வழங்குவோர்க்கும் தேடித்தராதீர்கள். உலகியல் எனும் இம்மை வாழ்க்கைக்கு அந்நிய மொழி ஆங்கிலம் கற்கும் சுயநல திராவிடக்கட்சியின் ஆன்மிகப்பிரிவினரே அம்மை நலம் அருளும் வடமொழி ஏன் கற்று முறையான வழிபாடு செய்யவேண்டியது தானே ?

 

இவர்களின் போலி வேள்வியில் செய்யும் முத்திரைகள் கிரியைகள் அனைத்தும் ஆகமத்தில் சொல்லப்பட்டதை அரைகுறையாக காபி அடித்து அரைகுறையாக செய்யப்படுபவையேமுழுமையில்லை மந்திரம் கிரியை பாவனை இவை மூன்றும் சேர்ந்து செய்யப்படுவதே வழிபாடு .முதலில் மந்திரமில்லை.ஏனெனில் திருமுறைகள் திருவிசைப்பா வரை எல்லாம் இசைப்பாக்கள் தோத்திரங்கள் புகழ் நூல்கள்அவை இசை பற்றி வந்தது என ஏற்கெனவே கூறியுள்ளோம் .இவர்களுக்கு கிரியை செய்யத் தெரியாது ஏனெனில் யாரும் இதற்கான முறையான பயிற்சி பெற்றவர் இல்லைஇது  பாரம்பரியமான ஒன்று அல்ல .சமீபகாலமாக வந்தது சைவ அருளாளர்கள் சேக்கிழார் கச்சியப்பர் குமரகுருபரர் தாயுமானார் ஆதீன கர்த்தர்கள் சிவஞான சுவாமிகள் இந்நூற்றாண்டில் சமீபத்தில் வாழ்ந்த வாரியார் சுவாமிகள் என யாரும் இந்த வழிபாட்டை ஏற்கவில்லை இறை வழிபாட்டில் இந்த போலிகளை இனம் கண்டு கொள்ளுங்கள். எட்டு ஆண்டுகள் குருகுல வாசமில்லை நான்கு ஆண்டுகள் திருமுறை பண்ணோடு பாடக் கற்கவில்லை முறையான தீட்சா பாரம்பரியம் இல்லா ஒருவரிடம் போலி தீட்சை பெற்று சிவபூசை செய்யும் தகுதி கூட இல்லாமல் வேள்வி செய்யக் கிளம்பும் இந்த தகுதியற்ற பொக்கம் மிக்கவர்கள் பூவும் நீரும் கண்டு நக்கு நிற்பர் அவர் தம்மை நாணியே.

 

                திருச்சிற்றம்பலம்


__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

 தமிழ்வேள்வி வழிபாடு எனும் பொய் – 07
                          திருச்சிற்றம்பலம்

 

தமிழ்வேள்வி வழிபாட்டுக்கு முன்னோடி என்று ஒருவரைக் கூறுகிறார்கள்

வேதாசலம் பிள்ளையை .இவர் தனித் தமிழ் இயக்கம் காணட்டும் இன்னும் எதுவும் காணட்டும் இவர் தனது பெயரைத் தானே தமிழ்ப்படுத்தி மறைமலை என்று வைத்துக்கொண்டார் நமக்கு ஆட்சேபணை இல்லைவாதவூரடிகள்நமிநந்திஅடிகள் , பெரியபெருமான் அடிகள் என்பது போல தனக்குத்தானே அடிகள் என்று தம்மைக் கடவுள் ரேஞ்சுக்கு உயர்த்திக்கொண்ட அக்கால நீதிக்கட்சிக்காரர் .இவர் செய்த அநியாயத்துக்கு அளவேயில்லை நம் சமயக்குரவர்களின் பெயரை தமிழ் படுத்தினார் பாருங்கள்

திருஞான சம்பந்தர் -  அறிவுத்தொடர்பு , மாணிக்க வாசகர் - மணிமொழிசுந்தரமூர்த்தி – அழகுரு , 
அப்பர் தப்பினார் இதில் இறைவனிடமும் அருளாளர்கள் மீதும் உண்மையான பயபக்தி இருந்தால் மலம் நீங்கப்பெறாத  தனது பெயரை அடிகள் என்றும் சமயக் குரவர்களின் பெயரையும் மாற்றுவார் .

 
இவர் யாரிடமும் தீட்சை பெறவில்லை சிவபூஜை செய்யவில்லை ஏன் சிவசின்னம் கூட தரிக்காத இவர் ஈரோடு ராமசாமியின் தோழர் என்றால் மிகையில்லைஇவர் எப்படி வழிபாட்டு முறையில் தலையிடலாம் ? தகுதி தான் என்ன ?   சண்டமாருதம் சூளை சோமசுந்தரம் நாயகர் அவர்களிடம் சைவ சித்தாந்தம் மட்டும் படித்தவர் .

 

அடுத்து இவரிடம் தமிழ் படிக்க வருகிறார் பாலசுந்தரம் அவர்கள் .இவருக்கு தனித் தமிழ் பெயராக இளவழகனார் என்று பெயர் மாற்றம் செய்கிறார் இவர் தனது ஆசிரியர் வழியில் தனது பெயரை தீட்சா நாமம்? ) அழகரடிகள் என்று வைத்துக் கொண்டார் . இவர் திருக்குறள் பீடம் நிறுவியவர் . இருக்கட்டும் இவர்களின் தமிழ் அறிவு கற்றதனால் ஆய பயனென் கொல் என்ற குறளுக்கு விளக்கமாக இல்லைநாலு பேர் போன வழியும் போகவில்லை அவர்கள் காட்டிய வழியும் போகவில்லை .வேதம் ஆகமம் முதலியவை இறைவனால் அருளப்பட்டவை என்ற நால்வர் வாக்கை தூக்கியெறிந்தனர் திருமுறைகளுக்கும் சைவ சித்தாந்தத்திற்கும் புதுமையாக இவர்கள் மனம் போன போக்கில் உரை சொன்னார்கள்.இன்னும் கூட சித்தாந்தத்திற்கு எல்லோரும் ஒரே மாதிரியான உரை சொல்வதில்லை அது நமக்கு வேண்டாம்

தீட்சா முறைகள் மற்றும் கிரியைகள் ஆகமத்தில் மட்டுமே விரிவாக கூறப் பட்டுள்ளது அதன் பின் திருமந்திரம் சித்தியார் போன்றவற்றில் கூறப்பட்டுள்ளது தீட்சை என்பது பாசமாகிய மலத்தைக் கெடுத்து ஞானத்தைக் கொடுப்பது .இந்த தீட்சையின் தாற்பரியம் எதுவும் இல்லாமல் இவர்களாக ஒரு தீட்சை முறையை உருவாக்கி மக்களை ஏமாற்றத் தொடங்கினர் .மலம் நீங்கி குருநாதரால் ஞானநோக்கம் அருளப்பெறாத மந்திர உபதேசம் பெறாதவர் எப்படி அதை மற்றவர்களுக்கு செய்து வைக்கமுடியும் ?. அந்த பாவனை எப்படித்தெரியும் ?.மந்திரம் என்ன பீஜம் சேர்த்து சொல்லவேண்டும் என்பதெல்லாம் இவர்கள் சம்பந்தர் போல ஓதாமல் உணர்ந்தரோ ?

இவரிடம் நடராசன் என்பவர் வருகிறார் அவருக்கு ஆடலரசு என்று தனித்தமிழ்ப் பெயர் சூட்டப்படுகிறது .அது அவருக்கு தீட்சாநாமம் ? ஆனதுஇந்த பெயர் மாற்றியதே சமய விஷேட நிர்வாண ஆச்சார்ய தீட்சை ஆனதுஆடலரசு அவர்கள் தம்தமிழ் குருநாதரைப் போலல்லாமல் எதோ இரண்டு கிரியைகள் அதாவது சீடன் மேல் நூல் போடுவது கையால் தொடுவது கண்ணால் பார்ப்பது எல்லாம் செய்கிறார் .இதெல்லாம் ஏதோ நூல்களில் படித்து விட்டு அதன் படி செய்கிறார் .ஆனால் அப்படி செய்யும் பாவனைக்கு பலன் உண்டாக்கத்  தெரிய வேண்டுமே வெறுமனே செய்து என்ன பயன் ?.உண்மையில் சொல்லப்போனால் தீட்சையில் வர்த்தினி என்றால் யார் என்று கேட்பார்கள் ஆனால் என்ன செய்தாலும் கோளறுபதிகம் திருநீலகண்டப்பதிகம் , இடர்களையும் பதிகம் ,பஞ்சாக்கரப்பதிகம் தவநெறிப் பதிகம் இவை தான் மந்திரம் . இன்று வரை எல்லா வேள்வியிலும் தீக்கை நிகழ்விலும் இவைதான் பாடப் படுகிறதுநால்வர் வாக்கை இவர்கள் மதியாமல் போனாலும் இப்பதிகங்கள் தான் சோறு போடுகிறது என்பது நிஜம்.

எப்படியோ ஆடலரசு சமய விஷேட தீட்சை மட்டும் கொடுத்துக்கொண்டிருந்தார் அவரிடம் நிர்வாண தீட்சை கேட்டவர்களுக்கு 12 ஆண்டுகள் ஆகவேண்டும் என்று கூறித் தப்பிவிட்டார் . அடுத்து இவர் தனது மகன்கள் அருளரசு மற்றும் ஒளியரசு அவர்களிருவருக்கும் நிர்வாண ஆச்சார்ய அபிஷேகம் செய்து வைத்ததாக சொல்லப்பட்டு அவர் காலத்திற்குப்பின் அவர்கள் தீட்சை வழங்கலாயினர் .ஏன் தமிழகம் முழுக்க சீடர்கள் இருக்க தம் இருமக்களுக்கு மட்டும் ஏன் நிர்வாண ஆச்சார்ய அபிஷேகம் செய்து வைக்கவேண்டும் . வேறு பக்குவமானவர் ஒருவரும் இல்லையா ? இங்கு தான் மிக முக்கிய காலகட்டம் நிர்வாண தீட்சைக்கான வழிமுறை தெரியாது அவர்களும் திருமடங்கள் வெளியிலுள்ள ஆச்சார்யார்கள் பலரிடம் கேட்டும் யாரும் அதற்கான செயல்விளக்கம் அளிக்கத் தயாராய் இல்லைஇந்நிலை இப்படியிருக்க நாங்கள் விஷேட தீட்சை பெற்று 15 ஆண்டுகள் ஆகிறது எங்களுக்கு நிர்வாண தீட்சை வழங்க வேண்டும் என்று பலரும் கேட்க தமிழ் முதுமுனைவர் ஒருவரிடம் கலந்து பேசி இவர்களே ஒரு வழிமுறை தயாரித்து (ஆகமசீலரோ) அதற்கு மேலும் இரண்டு பதிகங்கள் சேர்த்துப்பாடி கொடுத்துவிட்டார்கள் இருபிறப்பாளன் என்பதற்கு அடையாளமாக தீட்சா நாமம் கிடையாது நிர்வாண தீட்சை பெற்றவர் நித்தம் எரியோம்பல் செய்ய வேண்டிய தில்லை .ஏனெனில் ஆச்சார்யரே செய்வதில்லை .அதற்கெல்லாம் எங்கே வழிவகை தேடுவது தீட்சை செய்து வைப்பதே பெரிய வேலையாய்ப் போயிற்று சிவசிவ ஒளியரசு அவர்களை மிக உயர்ந்த இடத்தில் வைத்திருந்த சீடன் ஒருவர் நிர்வாண தீட்சை கேட்க அவர் காலம் தாழ்த்த அந்த சீடன் இறைவரின் பெருங்கருணையினால் நல்ல ஆச்சார்யர் ஆகமசீலர் கிடைக்க பழைய குருவான ஒளியரசுவிடம் ஆசி கேட்கிறார் . அப்பொழுது அவர் சொல்கிறார் அந்த நிகழ்வை வீடியோ எடுத்து தரமுடியுமா என்று .ஏன் ஐயா அது எதற்கு ?என்று கேட்க நிர்வாண தீட்சை வழிமுறைகள் தெரியவில்லை என் தந்தை எமக்கு முறையாக செய்து வைக்கவில்லை கிடைத்தால் சவுகரியமாயிருக்கும் நிறையப்பேர் கேட்கிறார்கள் என்று சொல்ல அந்த சீடனின் மனநிலை எப்படி இருந்திருக்கும் நாம் இவ்வளவு காலம் முறையாக தீட்சை உபதேசம் பெறாத ஒருவரையா ஆன்மநலம் கிட்டும் என நம்பிக்காலம் கழித்தோம் என்று மிகவும் நொந்துவிட்டார் .எப்படி பிறப்பு இறப்பு இல்லாத ஒருவரால் மட்டுமே பிறவாமையைத் தரமுடியுமோ  அதுபோல மலம் நீங்கி வினைகள் நீங்கிய ஒருவராலேயே சீடனின் மலம் நீக்கி ஞானத்தை புகட்டிடமுடியும் இவர் ஆன்மாக்கள் உய்ய வழிகாட்டாமல் ஆன்ம துரோகம் செய்கிறாரே பொய்யாக ஏமாற்றுகிறாரே போலிசாமியாருக்கும் இவருக்கும் என்ன வேறுபாடு ? மனச்சாட்சியே இல்லையா இவர்களுக்கு ? இன்னம்பர் ஈசன் இவர்களின் கீழ்க்கணக்கைப் பார்க்கமாட்டாரா என்று பிரார்த்திக்கிறார் .இன்று சாதாரண ஆரம்பப்பள்ளி ஆசிரியராவதற்கே டெட் நெட் தேர்ச்சி தேவை என்கிறார்கள் . அப்பொழுது இந்த அருளியல் கல்விக்கு எவ்வளவு தகுதி தேவை என பாருங்கள் . இப்படிபட்ட தகுதியற்ற வழிகாட்டிகள் தான் தமிழ்வேள்வி வழிபாட்டை முன்னெடுத்துச் செல்கின்றனர் .புரிந்துகொள்ளுங்கள் என்று முதல் பதிவுக்கு வருகிறோம் மருத்துவம் முறையாகக் கற்றுத் தகுதி பெற்று ஊசி போடுங்கள் நீங்கள் ஆரம்பக்கல்வியே முறையாகக் கற்காமல் ஆப்ரேசன் செய்வது எப்படி ?
இறைவா இன்னொரு சம்பந்தர் வேண்டும் பெருமானே

 

             திருச்சிற்றம்பலம்


__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

 தமிழ்வேள்வி வழிபாடு எனும் பொய் – 08
 
            திருச்சிற்றம்பலம்
 
கு – அஞ்ஞானம் , ரு – நீக்குபவர் குருஅஞ்ஞானத்தை நீக்குபவர் . அதாவது மல நீக்கமும் சிவஞானவிளக்கமும் அளிப்பவர்.
 
சென்ற பதிவில் தமிழ்வேள்வி வழிபாட்டின் முன்னோடிகளின் தகுதிகள் என்ன  எவ்வாறு எனப் பார்த்தோம் .சுந்தர மூர்த்தி சுவாமிகள் தமது ஆமாத்தூர் பதிகத்தில் முதல் பாடலில் மீண்டனன் மீண்டனன் வேத வித்து அல்லாதவர்க்கே என்று அருள்கிறார் . கச்சியப்ப சுவாமிகள் கந்தபுராணத்தில் 2038 ஆம் பாடலில் வந்தனைசெய் வேதநெறி மாற்றினர்கள் மாறாச் செந்தழல வாய நிரயத்தினிடை சேர்வார் என்று அருளியுள்ளார் . இப்படியிருக்க அவர் கோயில் கட்டினால் மட்டும் சுந்தரர் அருள் இவர்களுக்கு எவ்வண்ணம் கிட்டும் .
பொருள் பற்றும் புகழ்ப்பற்றும் தவிர இறை பக்தி இறைப்பொழுதும் இவர்களிடம் கிடையாது தனது இனிசியலைக் கூட விடாத ஒருவர் எப்படி பந்த பாசமறுத்து நிர்வாண ஆச்சார்ய அபிஷேகம் பெற்று சிவத்தையடைவார் அல்லது தனது சீடர்களுக்கு வழிதான் காட்டுவார் எல்லாமே போலி வேடம் சில ஆண்டுகள் முன் திருச்சிராப்பள்ளியில் ஒரு சைவப் பெரியார் ஒருவரின் படத்தை அவரது சீடர்கள் சிவபெருமானாக சித்தரித்து போட்டுவிட்டனர் அதற்கு அவர் எப்படி பொறுப்பாக முடியும் .அந்த பெரியார் அப்படி புகழ் விரும்பியல்லர் என்று சைவ உலகமே அறியும் .அவரை இந்த ஒளியரசுவின் சீடர்கள் எவ்வளவு சீரழித்தார்கள் தெரியுமா இன்று இவர் படம் இவருடைய பிரதம சீடர் படம் எல்லாம் பூசையறையை அலங்கரிக்கிறது சிவத்துக்கு நிகராக மலம் நீங்கப் பெறாதவர்கள் படம்
 
கோவையில் ஒரு முதுமுனைவர் விஷேட தீட்சை பெற்றுள்ளார் அவர் தீட்சை கொடுக்கிறார் யாரோ சிலரின் ஆதரவு இருக்கிறது என்பதனால் இவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்களா பிரதோஷ வழிபாடு பிறதேச வழிபாடு என்று ஒரு கட்டுரை இவர் வரைந்தது தான் எங்கேயாவது அதை பிறதேசவழிபாடு தான் என்று நிறுவியுள்ளாரா இல்லை. இப்படியே தான் இவர்கள் செயல்கள் இருக்கும் பிரதோசத்தை வைத்து மக்கள் ஆலயவழிபாடு மேற்கொள்வதில் இவர்கள் என்ன கஷ்டம் கண்டார்கள். தமிழ் ஆர்வலர்கள் என்றால் அத்தோடு இருக்க வேண்டியது தானே தமிழாளர்கள் எல்லாம் அருளாளரா வழிபாட்டில் தமிழ் என்று கொண்டு பொருள் சம்பாதிக்கும் ஒரே நோக்கம் கொண்டுள்ளனர் . உண்மையான பக்தி இருந்தால் இறைவன் நம்மை நோக்கிக்கொண்டுள்ளார் என்ற பயம் இருந்தால் இல்லாத நெறியை உருவாக்கிக் காசு பார்ப்பீர்கள் .? முறையாக மந்திரம் கற்க கூடாது .முறையாக திருமுறை பண்ணோடு பாட கற்கக்கூடாது ஆனால் நாங்கள் வேள்வி செய்வோம் என்பது தமிழ்ப்பற்றுமல்ல திருமுறைப்பற்றுமல்ல சிவப்பற்றுமல்ல . பொருள்பற்றே . பேருந்து நிலையத்திலும் இரயிலிலும் திரைப்படப்பாடல் பாடி காசு பெறுவோர்க்கும் உமக்கும் என்ன வேறுபாடு .
 
சம்பந்தர் சுவாமிகள் தன்னை தமிழ்ஞானசம்பந்தர் என்று சொல்லிக் கொள்கிறாராம் . தமிழில் பாடும்போது தமிழ்ஞானசம்பந்தர் என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்லமுடியும் தமிழ்நாட்டைக்கடந்து தமிழ்மொழி இல்லாததால் காளத்தியிலிருந்து வடதேய தலங்களைப்பாடினார் .ஏன் மறை ஞானசம்பந்தர் என்றும் தான் சொல்லியுள்ளார் .
 
மற்றுநீ வன்மை பேசி வன்றொண்டன் என்னும் நாமம்
பெற்றனை நமக்கு மன்பிற் பெருகிய சிறப்பின் மிக்க
அர்ச்சனை பாட்டே யாகும் ஆதலான் மண்மேல் நம்மைச்
சொற்றமிழ் பாடு கென்றார் தூமறை பாடும் வாயார்
 
தூய்மையான மறைகளைப் பண்டு அருளிச் செய்த சிவபெருமான்மேலும் நீ என்னுடன் வன்மையான சொற்களைச் சொல்லி வழக்கிட்டமையால்வன்தொண்டன் என்னும் பெயரைப் பெற்றாய்நமக்கும் அன்பினால் செய்யும் திருமுழுக்காட்டுதல் திருமாலை அணிவித்தல்திருவிளக்கிடுதல் முதலாய வழிபாடுகளினும் மேலான வழிபாடாவது போற்றியுரைக்கும் புகழுரைகளே யாகும்ஆதலின் இந்நிலவுலகில் நம்மைத் தமிழ்ச் சொற்களால் ஆகிய பாடல்களைப் பாடுக என்றருளிச் செய்தார் .
இப்பெரியபுராணப் பாடலைச் சொல்கிறார்கள் சுவாமியே தமிழில் பாடுவது தமக்கு விருப்பம் என்று நாமும் அதையே சொல்கிறோம் பாடுங்கள் பாடி உய்வு பெறுங்கள் வேள்விசெய்யாதீர்கள் என்று .ஏனெனில் தூமறை பாடும் வாயான் என்றதனால் ஏற்கெனெவே மறை உள்ளது அது சிவபெருமானால் சொல்லப்பட்டது என்பது புலனாகிறதுஇதையே எவ்வளவு நாட்களுக்கு தான் சொல்லிக்கொண்டு திரிவீர்கள் .
 
        திருச்சிற்றம்பலம்
 
  1. சுழிந்த கங்கை, தோய்ந்த திங்கள், தொல் அரா, நல் இதழி,
    சழிந்த சென்னி சைவவேடம் தான் நினைத்து, ஐம்புலனும்
    அழிந்த சிந்தை அந்தணாளர்க்கு அறம் பொருள் இன்பம் வீடு
    மொழிந்த வாயான், முக்கண் ஆதி, மேயது முதுகுன்றே.

    best u can join tamil archunaiyar pattaya padipu next year in srm they clear ur all doubts tamileyyy mei matra yellam poiiiiii


    1. அறம் பொருள் இன்பம் வீடு மொழிந்த வாயான் என்றதனால் அது வேதமாகாது. அங்கு மறை என்றோ வேதம் என்றோ சொல்லப்படவில்லை.ஆனால் வேதத்தை விட்ட அறம் இல்லை இடு திருமந்திரம்.வேதம் என்ற சொல்லே வடசொல் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.இதில் தமிழில் எப்படி வேதம் இருக்குமுடியும்.இதை சத்தியவேல்முருகனைக்கேட்டுத் தெளியவும் .சத்தியம் என்பதே வடசொல்தான்.முதலில் தன் பெயரை தமிழில் வைத்துவிட்டு ஊருக்கு தமிழ் வேதம் சொல்லலாம் . சத்யம் வத: தர்மம் சர:இது தான் வேத வாக்கு . அர்ச்சகர் என்பது திருமுறைச்சொல்லாட்சி அதை மறுப்பவன் திருமுறைகளை மறுப்பவனாவான்.திருமுறைகளை மறுப்பவன் சிவபெருமானை மறுப்பவனாவான் .சிவபெருமான் வாக்காகச் சொல்லப்படும் திருமுறைகளை மறுப்பவன் சிவத்துரோகி.தமிழன் சைவத்தில் மட்டுமல்ல கிறிஸ்தவத்திலும் இஸ்லாத்திலும் உள்ளான் .அவர்களிடம் சென்று நீ தமிழன் உனக்கு பைபிள்.குரான் வேதமல்ல .சதிவேல்முருகன் சொல்வது வேதம் என்று சொல்லவும். ஏன்னா சைவன் தான பருப்பும் கீரையும் தின்னுட்டு சாந்தமா இருக்கும் இளிச்சவாயன் .அந்த அரைகுறை எங்களுக்கு விளங்கவைக்குதோ



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

 தமிழ்வேள்வி வழிபாடு எனும் பொய் – 09
 
                    திருச்சிற்றம்பலம்

முத்திநெறி அறியாத பத்திநெறி அறிவிக்காத பழவினைகள் பாறாத சித்தமலம் அறுபடாத சிவமாக தன்னைப் பாவித்து தீட்சை கொடுக்கத் தெரியாதவரிடம் தீட்சை என்று ஏமாந்தவர்களுக்கு அருள் புரிவாய் எம்பெருமானே .

நீங்கள் நினைக்கலாம் திரும்பத் திரும்ப ஒரே விடயத்தை உரைக்கிறோம் என்று. பயிருக்கும் களைக்கும் வித்தியாசம் தெரிந்து கொள்ளவே .பயிரும் அந்த களையும் ஒரே மாதிரி இருக்கும் வளரும் ஏன் பயிரை விட களை மிகச்செழிப்பாக நன்றாகவே வளரும் . ஆனால் அறுவடை செய்யும்போது தான் உண்மை விளைச்சல் என்ன ? எது கொடுத்தது ?என்று தெரியும் .பயிர் மட்டுமே பயனுள்ள உணவுப் பொருளைத் தரும் இந்த களை பதர் கூட தராது . அது போல உண்மையான ஆச்சார்யாரிடம் தீட்சை பெற்றால் அது முத்திக்கு இப்பிறவியில் இல்லாவிட்டாலும் மறு பிறவியிலாவது வழி காட்டும் .அது தான் வள்ளுவர் சொன்ன ஒருமைக்கண் தான் கற்ற கல்வி என்பது அது தான் எழுமைக்கும் துணையாக வரும்

அடுத்து இவர்கள் மொழியறிவையும் மொழிபெயர்ப்பு அறிவையும் பார்ப்போம்

வழிபாட்டிடத்தில் அஸ்த்ராய பட் என்று சிறிது ஜலம் தெளிக்க என்பதை ஆய்தம்பட் என்று தெளிக்க என்று சொல்கிறீர்களே . அஸ்த்ரம் என்பதை ஆய்தம் என்று மொழிபெயர்த்து விட்டார்கள் .இதற்கும் ஒரு படி மேலே போய் இவர் சீடர்கள் அய்தம்பட் எனவும் ஆயத்தம்பட் எனவும் சொல்கிறார்கள். ஏன் என்றால் வழிபாட்டுக்கு ஆயத்தம் என்று அர்த்தமாம் சிவசிவ . பஞ்சபாத்திரத்தில் ஹ்ருதயாய நம என்று நீர் நிரப்ப வேண்டியதை இதயம் போற்றி என்று நிரப்பிக் கொள்ளவாம் .என்னா புலமை . ஏன் நகலெடுக்கிற வேலை . இது எங்கிருந்து காபி செய்யப்பட்டது பெரியோர்களே வடமொழியிலிருந்தா ? அல்லது தமிழ் வேதத்திலிருந்தா ? அங்குச முத்திரை தேனு முத்திரை நந்தி முத்திரை (ம்ருகீ ) இதெல்லாம் எங்கிருந்து வந்தது ?

ஆசமனம் செய்யும் மந்திரங்கள்

1.போற்றி நாலாறுண்மை (4*6= 24 ஆன்ம தத்துவமாம்)

2.போற்றி ஏழ் மெய்யறிவு (வித்யா தத்துவமாம் )

3.போற்றி ஐந்தாம் உணர்வு போற்றி (சிவ தத்துவமாம் )

ஸ்வதா எனும் மந்திரம் சேர வேண்டிய இடத்தில் போற்றியா .நம என்பதற்கு போற்றி பொருந்தி வரும் .ஸ்வதா வுக்கு ? .அந்த நாலாறும் உண்மையா ? வித்யா என்பதன் மொழியாக்கம் மெய்யறிவு ? சிவதத்துவங்கள் ஐந்து .ஐந்தாம் உணர்வு என்பதனால் ஐந்தாவதாக உள்ளது மட்டுமே என்று தானே பொருள் .அப்போ மற்ற நான்கும் அடங்குமா ? தமிழ் கற்றவர்கள் யாராவது விளக்கலாம். சொல்லும் பொருளுமே தூத்திரியும் என்று பாடிய காரைக் காலம்மை தான் விளக்கவேண்டும்

திருநீறு அபிமந்திரிக்கும் போது சொல்லும் மந்திரமாவது குருநாதர் அருளிய மூலமந்திரத்தால் ஐந்து முறை தொட்டு இறைவன் திருவருளையும் அவன் அருட்கலைகளாகிய நீக்கல், நிறுவல் ,ஞானம் ,மோனம் ,மோனம் கடந்த இயல்புநிலை ஆகிய ஐந்தையும் சிந்தித்து நீர் விட்டுக்குழைக்கவும் . இந்த ஐந்தும் என்ன என்று யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள் .இதில் யாராவது சம்ஹிதா மந்திரம் இல்லையா என்று கேட்காதீர்கள் அதற்கு இன்னும் மொழிபெயர்ப்பு கிடைக்க வில்லை . அதே போல விபூதிஉருத்திரரைக் தியானிக்க வேண்டாமா ? என்று கேட்காதீர்கள். அவர் சைவரல்ல அல்லது அவர் தமிழரல்ல என்று கூறிவிடுவார்கள் திருநீறு அணியும் இடங்களைப் பற்றியோ அதன் அளவுகளைப் பற்றியோ திருமுறைகளில் எங்காவது சொல்லப் பட்டுள்ளதா ?

அகமர்ஷணம் செய்ய மந்திரம் ஒன்றுமில்லை நன்று நாள்தொறும் என்ற அப்பர் குறுந்தொகை பாடினால் போதும் . அடுத்து தர்ப்பணம் .தர்ப்பணம் என்பது இவர்களுக்குத் தெரிந்தவரையில் முன்னோர்களுக்கு செய்வது தான். அதனடிப்படையில் மறைந்த முன்னோர்களை நினைந்து மூவேழ் சுற்றம் முரணுற நரகிடை ஆழாமே அருள் அரசே போற்றி என்ற மந்திரம் ? சொல்லி மூன்று முறை சங்குமுத்திரையால் நீர் விடுக என்பது தான். இந்த மூலமந்திரம் சொல்லி சிவகாயத்ரி சொல்லி சம்ஹிதா மந்திரம் சொல்லி பின்னும் மந்திரங்கள் .தேவர்கள் ரிஷிகள் மானுடர்கள் பூதங்கள் பிதுர்க்கள் ஞாதிக்கள் ஆச்சாரியார்கள் எண்கணங்கள் இவர்களுக்கு என்று நீங்கள் கேட்பது புரிகிறது .  இதற்கெல்லாம் திருமுறைகளில் பாடல் கிடைத்தால் போடமாட்டார்களா ?

சூர்யோபஸ்தானம் செய்ய மந்திரம் ? இன்றெனக்கருளி இருள்கடிந்து உள்ளத்து எழுகின்ற ஞாயிறே போற்றி சொன்னால் போதும் . அடுத்து மூச்சடக்கம், சிவம் (ஜபம்) பஞ்சபுராணம் அவ்வளவு தான் அனுஷ்டானம் முடிந்தது

ஏன் இப்படி தமிழ்வழிபாடு என்ற பெயரில் மொழிபெயர்ப்பு மந்திரமும் பொருந்தாத திருமுறைப்பாடலும் போட்டு மக்களை நன்னெறி சென்று உய்வு பெறுவதைத் தடுத்து சிவாபராதம் தேடுகிறீர்கள் .திருமுறைகள் நமக்கு கிடைத்து சற்றேறத்தாழ ஆயிரம் ஆண்டுகளாகிறது என வைத்துக்கொள்வோம் இந்த காலகட்டங்களில் எத்தனை தமிழ் அறிஞர்கள் அருளாளர்கள் வந்து சென்று விட்டார்கள் அவர்களை விட இன்று தமிழ்வழிபாடு என்று சொல்பவர்கள் எந்த விதத்தில் தகுதி பெற்றவர்கள் என்று சிந்தியுங்கள்.

ஏற்கெனவே சாமி அருளிய வேத ஆகமம் இருக்கிறது அது அரிசி .இவர்கள் அதை மொழிபெயர்த்து அந்த கிரியைகளை காபி அடிப்பது உமி .ஏன் அரிசியே இருக்க இவர்களின் உமியுடன் கலந்து ஊதி தின்ன வேண்டும்

என்று நீ அன்று நான் என்பது தாயுமானார் வாக்கு அது போல என்று சிவமோ அன்று முதல் அவர் அருளிய வேதாகமங்கள் அவைகளே வழிபாட்டில் போற்றப்பட வேண்டியவை

                    திருச்சிற்றம்பலம்



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

 தமிழ்வேள்வி வழிபாடு எனும் பொய் – 10
http://sivanadimai.blogspot.com/2017/11/10.html
                         திருச்சிற்றம்பலம்
 
வேதம் என்ற சொல்லே தமிழ்ச்சொல் அல்ல என்று சொல்லும் புத்திசாலிகள் வேதம் என்ற ஒன்றே இல்லை எனும் மதியிலிகள் வேதநெறி தழைக்கவும் மிகு சைவத்துறை விளக்கவும் வந்தவரின் கூற்றை ஏற்று எப்படி நடப்பர் . வேதம் என்பது வடசொல்லானால் திருமுறைக ளில் நூற்றுக்கணக்கான இடங்களில் வேதம் என்ற சொல் வருகிறது வடமொழி எதிர்ப்பாளரான நீங்கள் அதை வைத்து ஏன் பிழைப்பு நடத்த வேண்டும் . 
ஆக கொள்கைக்கு ஒன்று பிழைப்புக்கு ஒன்று என்ன ஒரு கபட நாடகம் ஆடி மக்களிடம் பணம் பறிக்கிறீர்கள்.

 

நீதியில் ஒன்றும் வழுவேன் நிட்கண்டகம் செய்து வாழ்வேன்

வேதியர் தம்மை வெகுளேன் வெகுண்டவர்க்கும் துணை ஆகேன்

 

இது ஏழாம் திருமுறை பதிகம் 73 பாடல் இதில் நிட்கண்டகம் என்பது வடசொல்லேஅடுத்து வேதியர் அதாவது அந்தணரை இகழேன் . அப்படி இகழ்ந்தவர்க்கும் துணையாக இருக்க மாட்டேன் என்பது சுந்தரர் அருள்வாக்குவேதத்தைப் புறம் கூறி சிவாபராதம் சம்பாதித்து ஆச்சாரியர் கள் வாக்கை மீறி குருத்துவேஷம் சம்பாதித்து நீங்கள் செய்யும் வேள்வியில் ஆகுதி பெற யார் வருவார் ?

 
திருமுறை வழி சிவபூசையில் பார்த்தோமானால் அவை அனைத்தும் பார்த்திப பூசாவிதி என்ற திருவாவடுதுறை ஆதீன வெளியீடான நூலின் மொழி பெயர்ப்பே ஆகும் .

 

ஐங்கலை (பஞ்சகலா) மந்திரங்கள் பின்வருமாறு ?

 

1.பாரிடை ஐந்தாய் பரந்தாய் போற்றி ( நிவிர்த்திகலை )

2.நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி ( பிரதிட்டை கலை )

3.தீயிடை மூன்றாய் திகழ்ந்தாய் போற்றி ( வித்தைகலை )

4.வளியிடை இரண்டாய்  மகிழ்ந்தாய் போற்றி ( சாந்திகலை )

5.வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி ( சாந்தியதீதகலை )

 

பஞ்சகலா மந்திரத்திற்கு பதில் திருவாசப்போற்றித் திருஅகவலிலிருந்து

 

ஐம்முக மந்திரங்கள் ?

 

1.ஓம் ஓம் ஈசானம் போற்றி

2.ஓம் ஏம் தத்புருடம் போற்றி

3.ஓம் ஊம் அகோரம் போற்றி

4.ஓம் இம் வாமதேவம் போற்றி

5.ஓம் அம் சத்யோசாதம் போற்றி

 

ஆறங்க மந்திரங்கள் ?

 

1.ஓம் அம் இதயம் போற்றி

2.ஓம் ரீம் சிரசு போற்றி

3.ஓம் ஊம் சிகை போற்றி

4.ஓம் ஐம் கவசம் போற்றி

5.ஓம் ஒளம் முக்கண் போற்றி

6.ஓம் அம் ஆயுதம் போற்றி

 

ஐயா நடுநிலையாளர்களே தேவையா இந்த மொழிபெயர்ப்பு மந்திரங்களில் ? . பீஜங்களைக் கூடவா மொழிபெயர்ப்பார்கள் ?. பீஜத்தை மொழிபெயர்த்தால் எப்படி அதன் ஒலி மற்றும் ஓசை மாறிவிடாதா உதாரணமாக ஓம் ஹாம் ஹ்ருதயாய நம என்பதற்கும் ஓம் அம் இதயம் போற்றி என்பதற்கும் எவ்வளவு வித்தியாசம் பாருங்கள்

 

அப்படி இவர்கள் சொந்த அறிவு இல்லாமல் யாரோ உருவாக்கியதை மொழி மாற்றம் செய்து உபயோகிக்க வெட்கமாயில்லை அப்படி செய்யவேண்டியதன் அவசியம் என்ன இவர்கள் சில பேரை முன்னிலைப் படுத்திக்கொள்ளத்தானே தவிர பக்தியும் இல்லை பயமும் இல்லை .இருசக்கர அல்லது நான்கு சக்கர வாகனமா இது புதுசு புதுசா மாடல் மாற்றவும் பேரை மாற்றவும் அல்லது திரைப்படமா மொழிமாற்றம் செய்து வெளியிட ?

 

இன்னும் வரும் இது போல அபத்தங்கள்….

 

               திருச்சிற்றம்பலம்


__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

http://sivanadimai.blogspot.com/2017/11/

தமிழ்வேள்வி வழிபாடு எனும் பொய் – 11
 
              திருச்சிற்றம்பலம்
 
பார்த்திப பூசாவிதி எனும் திருவாவடுதுறை நூலை திருமுறைவழியில் சிவபூசை என ஒளியரசு அவர்கள் தமிழ்ப்படுத்திய அவலம் கண்டோம்
 
ஓம் சிவசூர்யாசனாய நம – ஓம் சிவசூரியன் நிலை போற்றி
ஓம் சிவசூர்யமூர்த்தயே நம – ஓம் சிவசூரியன் உரு போற்றி
ஓம் சிவசூர்யாய நம – ஓம் சிவசூரியன் திருவடிகள் போற்றி
ஆசனம் என்பதற்கு நிலை எப்படி பொருத்தமாக இருக்கும் இருக்கை என்று சொன்னால் கூட பொருந்தும் மூர்த்தயே என்பது உருவாம் .இப்படி மொழிபெயர்த்த தில் உஷா தேவிக்கு தமிழ் படுத்த முடியவில்லை அதனால் உஷாதேவி அப்படியே ஷா வுடன் இருக்கிறார் பிரத்யுஷாவுக்கு சாயா தேவி என்று மொழிபெயர்ப்பு தொடர்ந்து சிவசூர்யனைப் போற்றுவதற்கும் இந்த பாடலுக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்களே சிந்தியுங்கள்
 
இன்று எனக்கு அருளி இருள்கடிந்து உள்ளத்து எழுகின்ற ஞாயிறே போன்று
நின்ற நின்தன்மை நினைப்பற நினைந்தேன் நீயலால் பிறிது மற்று இன்மை
சென்றுசென்று அணுவாய்த் தேய்ந்துதேய்ந்து ஒன்றாம் திருப்பெருந்துறை உறை சிவனே!
ஒன்றும் நீஅல்லை அன்றி ஒன்றுஇல்லையார் உன்னை அறியகிற்பாரே
திருவாசக கோயில் திருப்பதிகப்பாடல்
இப்படி சம்பந்தாசம்பந்தம் இல்லாமல் கிரியைக்குப்பொருந்தாத பாடலை எப்படி பூஜைக்குப் பயன்படுத்துவது .
 
யோக பீடம் வித்யா பீடத்தை யோகபீடம் ஞானபீடம் என்று போட்டுள்ளார் அதற்கு அவருக்கு விளக்கம் தெரிந்தால் போட்டிருக்கமாட்டார் .ஏனெனில் அந்த இடம் வேதாகமங்கள் மற்றும் திருமுறை களை பூசிக்குமிடம் சிவசிவ .
அடுத்து மேற்கு துவாரபாலரில் சரசுவதி (கலைமகள்) யும் மகாலட்சுமி(திருமகள்யும் மட்டும் எடுத்துக் கொண்டார்அதே நிலை,உரு , திருவடி போற்றி தான் எல்லாப் பரிவாரங்களுக்கும்.
 
திருமகள் பாடலாம் இது
கொம்பனை யாளைக் குவிமுலை மங்கையை
வம்பவிழ் கோதையை வானவர் நாடியைச்
செம்பவ ளத்திரு மேனிச் சிறுமியை
நம்பிஎன் னுள்ளே நயந்துவைத் தேனே
 
இப்பாடலுக்கும் திருமகளுக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா ?
கலைமகள் பாடலாம் இது
ஏடங்கை நங்கை இறைஎங்கள் முக்கண்ணி
வேடம் படிகம் விரும்பும்வெண் டாமரை
பாடும் திருமுறை பார்ப்பதி பாதங்கள்
சூடுமின் சென்னி வாய்த்தோத்திரங்கள் சொல்லுமே
 
பார்ப்பதி என்றதுமே அது பார்வதியேயான அவள் கலைமகளாகவும் இருக்கிறாள் என்று பொருள் ஆக இது உமை துதி தானே
 
அடுத்து மனோன்மணியை மறைப்பம்மை என்று சொல்லிவிட்டார் . மனோன்மணியான அம்பாள் எப்படி மறைப்பம்மை ஆவார் .சப்த குருமார்களை ஏழு ஆசிரியன்மார் என்று மொழியாக்கம் செய்து சப்தகுருமாரில் வரும் அம்பிகா குருவை அருளம்மை என ஆக்கிவிட்டார் அதிலே ஸ்ரீகண்டகுருவை உருத்திரர் என்று போட்டுள்ளார்  அதற்கு காஞ்சி புராணப்பாடல்
வாடது மலையிற் புயநான்கும் மலர்க்கண் மூன்றும் உருத்திரமும்  என்ற பாடலைப் போட்டுள்ளார் உருத்திரருக்கும் உருத்திரம் என்ற சொல்லுக்கும் என்ன சம்பந்தம்
அடுத்து சுவாமியின் சண்டியான த்வனிச்சண்டியை ஒலிச்சண்டிsound ) என்றும் சிவசூர்ய சண்டியான தேஜசண்டியை ஒளிச்சண்டி ( Light  ) என்றும் மொழி பெயர்த்துள்ளார் த்வனிச்சண்டேசருக்கு தாதையை தாளற வீசிய என்ற திருப்பல்லாண்டுப் பாடல் ஏதோ சண்டேச நாயனாரைப்பற்றிய பாடல் பரவாயில்லை .ஆனால் தேஜச்சண்டியான சிவசூர்ய சண்டிக்கு தழைத்ததோர் ஆத்தியின் கீழ்த் தாபர மணலால் கூப்பி என்ற பாடல் போட்டுள்ளார் சுவாமியின் சேய்ஞலூர் சண்டேசுவர நாயனாரின் பாடல் எப்படி போடலாம் ?. தேஜச்சண்டிக்கும் தந்தையின் தாளைத் தடிந்தவருக்கும் என்ன சம்பந்தம் பரிவார தெய்வங்கள் யார் யார் அவர்கள் திருவுருவம் எப்படி இருக்கும் அவர்களுக்கு என்ன வேலை என்ற அடிப்படை கூட தெரியாத இவர் தீட்சை அளித்து முத்திக்கு அழைத்துச்செல்லும் தகுதி உண்டா  
சிவ சிவ
அடுத்து ரிஷப தேவர் (அ) விடைத்தேவர் இறைவரின் ஊர்தியான காளை இவருக்கு
ஓம் நந்திதேவர் நிலை போற்றி
ஓம் நந்திதேவர் உரு போற்றி
ஓம் நந்திதேவர் திருவடிகள் போற்றி    என்று போட்டு
திருவிளையாடல் புராணத்தில் வரும் திருநந்திதேவர் துதிப்பாடலான
வந்திறை அடியில் தாழும் வானவர் மகுட கோடி
பந்தியின் மணிகள் சிந்த வேத்திரப் படையால் தாக்கி
அந்தியும் பகலும் தொண்டர் அலகிடும் குப்பையாக்கும்
நந்தி எம்பெருமான் பாதநகைமலர்முடிமேல் வைப்பாம்
இப்பாடலைப் போட்டுள்ளார் . திருநந்தி தேவருக்கும் ரிஷப தேவருக்கும் கூட வித்தியாசம் தெரியாத ஞானசூன்யத்திடம் என்ன கற்று ஆன்ம மேன்மை அடையப் போகிறீர்கள் . மகுடகோடி பந்தி என்பது வடசொல் அது தெரிய வில்லை
சுவாமிக்கு ஷடுத்தாசன மந்திரத்தை மொழிபெயர்த்துள்ளார் பாருங்கள்
1.அநந்தாய நம அனந்த நிலை 2.தர்மாய நம – அற நிலை 3.க்ஞாநாய நம ஞான நிலை 4.வைராக்யாய நம – வைராக்கிய நிலை 5.ஐஸ்வர்யாய நம செல்வ நிலை 6.பத்மாய நம – பதும நிலை
சிவஞாயிறு துதியாம் இது
அருக்கன் பாதம் வணங்குவர் அந்தியில்
அருக்கன் ஆவான் அரன் உரு அல்லனோ?
இருக்கு நால்மறை ஈசனையே தொழும்
கருத்தினை நினையார்கல்மனவரே
இப்பாடல் சிவசூர்யனையா போற்றுகிறது அருக்கன் எனும் சூரியனை சந்தியில் வணங்குகிறீர்களே அதுவும் சிவமே .அந்த சிவபெருமானை ரிக் முதலாகிய நான்மறை கள் தொழுகின்றன அதை நினையாதவர் கல்மனத்தவரே என்பது அப்பர் வாக்கு இதில் அருக்கன் என்பது வட சொல்லாகும்.
சுவாமிக்கு திருநீறு சாற்றும்போது மந்திரமாவது நீறு பாடல் பாடிச் சாற்றவாம் சுவாமிக்கு திருநீற்றின் பெருமையைச் சொல்லிக்கொடுக்கிறீர்களா நாம் பூசும் போது அப்பாடலைச்சொல்லிப் பூசலாம் நல்லது சுவாமிக்கு ?
இது போல எல்லாக் கிரியைகளும் சம்பந்தாசம்பந்தமில்லா பாடலுடனே தான் இருக்கிறது .சுவாமிக்கு தூபம் காட்ட தீபம் காட்ட அமுது படைக்க என் எல்லாமே . செய்யும் செயலைக்குறிக்கும் ஒரு சொல் அதில் இருந்தால் அந்த பாடலை அச்செயலுக்கு பயன்படுத்தவேண்டியது .அப்பாடலின் பொருள் என்ன அது பற்றி யெல்லாம் கவலையில்லை . உதாரணம் தூபம் காட்ட சலம் பூவொடு தூபம் மறந்தறியேன் என்று பாடினால் சுவாமியை தூபத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் என்றோ அல்லது தூபத்தை தங்களுக்கு சமர்ப்பிக்கிறேன் என்றோ அப்பாடலில் பொருள் வருகிறதா ?
இதெல்லாம் அவர் தொகுத்து அளித்துள்ள நூல் மூலமே அப்பட்டமாகத் தெரிகிறது அன்பர்களே தமிழ்ப்பற்று என்பது வேறு இறைபற்று என்பது வேறு  திருமுறைப்பற்று என்பது வேறு .அவர் அரசுப்பணியில் ஓய்வு பெற்று இப்பொழுது அவர் தந்தையாரால் போலியாக தீட்சை செய்து வைக்கப்பட்டதாகக் கூறிக்கொண்டு தீட்சை முறை தெரியாமல் தீட்சை அளித்து வருகிறார் சித்தாந்த ஞானம் கிடையாது திருமுறை ஞானம் கிடையாது சுவாமியின் பரிவார மூர்த்தங்கள் எவரெவர் எங்கிருப்பர் எப்படியிருப்பர் எனத் தெரியாத இவர் உங்களை எப்படி ஞானப்பாதையில்  அழைத்துச்செல்ல முடியும்
இப்படி தப்பும் தவறுமாக பாடலைத்தெரிவு செய்து பாடி சிவபூசை செய்தால் சிவாபராதமே மிஞ்சும் .சிவபுண்ணியம் கிட்டாது .கேட்டால் அன்பு பூசையாம்எது பொருத்தமில்லாமல் உங்கள் திருமுறைப் புலமையை வெளிப்படுத்த சிவபூசை நேரத்தை எடுத்துக்கொள்ளுவதா ? (கொல்லுவதா திருமுறைகள் சிவபூஜையில் ஒரு அங்கமே தவிர அதை அதற்குரிய இடத்தில் நேரத்தில் சொல்ல வேண்டும் .திருமுறையே சிவபூஜையாகாது .மந்திரம் கிரியை பாவனை இதில் ஒன்று குறைந்தால் கூட அந்த வழிபாடு பயனற்றது என்பது ஆன்றோர் வாக்கு எடுத்துக்கொள்ளும் நேரத்தை கிடைத்தற்கரிய மனிதப்பிறவியை நல்வழியில் சரியான ஆச்சார்யாரிடம் தீட்சை பெற்று வழிபாடு செய்து ஆன்ம உய்வு பெறுங்கள்ஒரு ஆன்மார்த்த பூஜையே இப்படி என்றால் வேள்விக் கிரியைகள் ????? சிவசிவ
 
குருட்டினை நீக்கும் குருவினைக்கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக்கொள்வர்
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடும் குருடும் குழிவிழு மாறே  - திருமந்திரம்
 

 

            திருச்சிற்றம்பலம்

 



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

தமிழ்வேள்வி வழிபாடு எனும் பொய் – 12
                                       திருச்சிற்றம்பலம்  http://sivanadimai.blogspot.com/2017/12/12.html
சென்ற பதிவுகளில் தமிழ்வேள்வி வழிபாட்டின் தீட்சா அனுஷ்டான அபத்தக் கிரியைகளும் திருமுறைவழியில் சிவபூசை என்ற பாவனை மந்திரம் இல்லா பூசையினால் ஒரு பலனும் இல்லை என்று நிறுவினோம். இப்பதிவில் முறையான தீட்சை என்னகொடுக்கும் என்று பார்ப்போம்
 
குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடும் குருடும் குழிவிழு மாறே - திருமந்திரம்



அஞ்ஞானம்( குருடு ) நீக்கி ஞானத்தை நல்கும் குருவினைக் கொள்ளாதவர்
தன்னுடைய அஞ்ஞானத்தை ( குருடு ) நீக்கிக் கொள்ளாத குருவை அடைவர் . இந்த குருடும் (குரு) குருட்டைப்போக்கிக் கொள்ள வந்த( சீடன் ) குருடும் ஆக இரண்டு குருடுகளும் சேர்ந்து குருட்டாட்டம் ஆடி இரண்டு குருடுகளுமே (குரு + சீடன் ) குழியில் வீழ்வர் .வழிகாட்டுகிறேன் என்று வந்தவரும் குருடு ஆதலால் இருவருமே அஞ்ஞானக் குழியில் (பிறவி ) மூழ்கி கரை காணாமல் இருப்பர்


குருவானவர் சிவஞானத்தை நல்குபவராக இருக்கவேண்டும் .அதற்கு அவர் நல்ல உபதேச குருபாரம்பரியத்தில் வந்தவராய் இருந்தால் கண்டிப்பாக நல்குவார். அவரே சிவஞான போதம் எட்டாம் சூத்திரப் பொருளில் வரும் குரு. பொருள் பற்றியும் தீட்சையின் தாற்பரியம் என்ன என்பதை அறியாமலும் போலிச்சாமியார்களைப் போல் ஆன்மாக்களை ஏமாற்றி உலா வருகின்றனர். உலகியல் ஆரம்பக்கல்விக்கே டெட் என்ற தேர்வில் தேறவேண்டும் எனில் பிறவாமையைத் தரும் இந்த தீட்சாகுரு வானவர் எவ்வளவு உயர்ந்தவராக இருக்க வேண்டும்
 

தீட்சை என்றால் என்ன ?






தீட்சை என்றால் உயிரைப்பற்றிய ஆணவ மலத்தைக் கெடுத்து சிவஞானத்தை கொடுப்பது . உடலுக்கு பலசடங்குகள் செய்யப் படுகின்றன அது போல உயிராகிய ஆன்மாவிற்கு செய்யக்கூடிய சடங்கே தீட்சை. எப்படி வாகனம் ஓட்ட ஓட்டுனர் உரிமம் தேவையோ நிலம் வாங்க பத்திரப் பதிவு அவசியமோ தொழில் துவங்க தொழில் உரிமம் தேவையோ அது போல சிவசம்பந்தம் எனும் ஆரம்பப்படி நிலையை உறுதிபடுத்திக்கொள்ளவும் இம்மை மறுமை நலன்கள் பெறவும் சிவபெருமான் திருவருள் பெறவும் உரிமம் எனும் (தீட்சை) தேவை . பச்சை நெல் முளைக்கும் .வறுபட்ட நெல் முளைக்காது . அது போல குருநாதர் சிவபெருமானின் பிரதிநிதியாக இருந்து உயிர்களின் மலத்தை பாவனா கிரியைகளின் மூலம் நீக்குவார் . நம் மலம் கெட நம்முள் இருக்கும் சிவம் மேலெழும் .அதன் மூலம் சிவசம்பந்தம் ஏற்பட்டதனால் சிவமே எல்லாம் என் உணர்வோம் .பொருள் பற்று ஒழியும் . முதல்வன் அருளிய வேதாகமங்களில் தெளிவோம் .சிவாலயத்தைப்பேணுவோம் . சிவனடியார்களைப் பேணுவோம். சிவத்துக்கு அணுக்கமாய்ச் சிவாலயத்தில் முப்போதும் திருமேனி தீண்டும் சிவாச்சார்யப் பெருமக்களைப் பேணுவோம் .சிவம் நம் சிந்தையில் வந்தபின் எல்லா சிவகைங்கர்யங்களும் செய்ய முற்படுவோம் .அதுவே நமக்கு முத்தி எனும் வீடுபேற்றை நல்கும்.
எந்த வயதினரும் (7வயது முதல் ) எந்த வயதிலும் ஆண் பெண் இருபாலரும் தீட்சை பெறலாம். தீட்சை பெறாதவர்கள் திருநீற்றை நீரில் குழைத்து முப்பரிமாணமாக (திரிபுண்டரமாக) பூச முடியாது. உயர்ந்த மந்திரமான ஐந்தெழுத்தை உச்சரிக்க முடியாது. மாதா பிதா குரு தெய்வம் என்பது தான் சைவம் காட்டும் நன்னெறியாகும் .எனவே தகுந்த குரு மூலம் தீட்சை பெற்று ஐந்தெழுத்து ஓதும் அதிகாரம் பெற வேண்டும் நமது சமயக்குரவர்களும் சந்தானக் குரவர்களும் நமக்கு அருளியது அதுவே . அவர்கள் அருளியதே நமக்கு பிரமாணம் . ஸ்ரீ இராமனுக்கு அகத்தியரும் ஸ்ரீகிருஷ்ணனுக்கு உபமன்யு முனிவரும் சிவ தீட்சை செய்து வைத்துள்ளார்கள்
ஏன் தீட்சை பெற வேண்டும் ?
1. சிவபெருமானை ஆகமங்களில் விதித்தபடி வழிபாடு செய்வதற்குரிய அதிகாரம் பெற்று ஐந்தெழுத்து ஓதி முப்புரிமாணமாக திருநீறு அணிந்து பூசை செய்யலாம் .
2. தீட்சை பெற்றால் ஞானம் பெறலாம் ஞானத்தின் வாயிலாக வீடுபேறு எனும் முக்தி பெறலாம்.
3.சமய தீட்சை பெற்றாலே அவர்களை எமன் அணுக மாட்டான். அதனால் நரகம் இல்லை . அந்த உயிரை வாங்க ஸ்ரீகண்ட பரமேஸ்வரன் தான் அதிகாரம் பெற்றவர் .
4.விசேட தீட்சை பெற்றால் அவ்வுயிரை அனந்த தேவர் வாங்குவார்
5.நிர்வாண தீட்சை பெற்றால் சதாசிவ மூர்த்தி வாங்குவார் .
6.உயிரை எமன் வாங்காததால் நரகதுன்பம் ஆவியுலக துன்பங்கள் நம்மை அணுகா .
7.நமது வாரிசுகள் நமக்கு பிதுர் கடன் ஆற்றா விட்டாலும் கூட ஆவியுலக இன்னல் இல்லை
8.இறைவன் தீட்சா கிரியையின் மூலம் மட்டுமே பாவமன்னிப்பு அருளுகிறார்
9.பில்லி சூன்யம் ஏவல் கண்திருஷ்டி இவை நெருங்காது
10.பிராணயாமம் செய்யும் போது இருதய நோய் வராது . மாரடைப்பு நெருங்காது .
11.சிவோகம்பாவனைகள் மூலம் மனம் அடங்கும் நிம்மதி கிட்டும் ஐம்பொறி களும் நமக்கு குற்றேவல் புரியும் .அப்பர் பெருமான் அதை பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி என்றதன் மூலம் அறியலாம். பாவனையானது உயிரைத் தூய்மைப் படுத்தும்
12.நியாசம் எனும் அங்கசுத்தி செய்வதன் மூலம் வியாதி நீங்கும் அது தான் இன்றைய ரெய்கி
13. முத்திரைகள் பிடிப்பதால் பிசியோதெரபி செய்யும் பலன் கிடைப்பதால் நரம்பு சம்பந்தமான வியாதிகள் நெருங்காது .
14. தீட்சை பெற்று ஆன்மார்த்தபூசை செய்வதன் மூலம் நமது வினைகள் குறையும் (முற்பிறவி பாவங்கள் சஞ்சிதம் ). ஆகாமியம் ஏறாது .
15.தீட்சை பெறாதவர்கள் செய்யும் பூஜாபுஷ்பங்கள் நிர்மால்யம் ஆகாது.
ஆன்மாவுக்கு இவ்வளவு நன்மைகள் அருளும் இந்த தீட்சையைக் கொச்சைப் படுத்தும் விதமாக தமிழ்வழி தீட்சை என்றும் திருமுறைவழி சிவபூசை என்றும் முறையாக ஆச்சார்ய அபிஷேகம் பெறாதவர்கள் கூறிக்கொண்டு மக்களை நற்கதிக்கு செல்லவிடாமல் ஏமாற்றிக்கொண்டுள்ளது மாபெரும் சிவாபராதம்.
அந்த சிவதுரோகிகளிடம் தீட்சை என்ற போலியான செயலுக்கு சென்று உங்கள் வாழ்நாளை வீணாக்காதீர்கள் . சிவாபராதத்திற்கு துணையாகாதீர்கள் .
 

தகுந்த குருவுவிடம் ஆகமத்தில் சொல்லப்பட்ட படி தான் தீட்சைபெற வேண்டும். தீட்சாகிரியை பற்றி ஆகமத்தில் மட்டுமே கூறப்பட்டுள்ளது . வேறெங்கும் சொல்லப்படவில்லை.அந்த பரம்பொருளை அடைய அவர் கொடுத்த ஆகமமே சரியான மார்க்கமாகும் . மொழிபற்றி அறியாமையில் பிதற்றுவோர் நிலைமை பதிவின் முதல் பாடலுக்கு ஒப்பாவார் .

                              திருச்சிற்றம்பலம்


__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

 http://sivanadimai.blogspot.com/2018/05/13.html
தமிழ்வேள்வி வழிபாடு எனும் பொய் – 13
  
                    திருச்சிற்றம்பலம்
 
            குமரகுருபரர் இதழ் - தலையங்கம்
 
சைவ சமயம் புராதனமான சமயம். சைவத் திருக்கோயில்கள் பாரம்பரியப் பெருமை உடையவை. நம் திருக்கோயில்களில் உள்ள இறை திருமேனிகள் வேத மந்திரங்களால் உருவேற்றப்பட்டவை. கும்ப தீர்த்தத்தில் சாந்நித்தியங்களைபிம்பத்தில் அபிஷேகித்துபக்தர்களுக்கு அருள்பாலிக்கச் செய்யும் அதி சூட்சும முறையையே கும்பாபிஷேகம் என்கிறோம். வேத வேள்விகள் இறைவனையும் தேவதைகளையும் அவிர்ப் பாகத்தால் திருப்திப்படுத்தும் நுணுக்கமான தேவகன்மங்கள் ஆகும். இச்செயல்களால் திருக்கோயில் இறை திருமேனிகளில் சாந்நித்தியம் பிரகாசிக்கிறது. அப்படிப்பட்ட திருமேனிகளின் முன் சென்று பயபக்தியுடன் வேண்டும் அடியார்களின் வேண்டுதல்கள் யாவும்வேண்டியாங்கு நிறைவேற்றப் படுகின்றன.
இறை திருமேனிகளின் சாந்நித்தியத்தை மந்திரங்களாலும்நித்திய நைமித்திக வழிபாடுகளாலும் காப்பதும்மேம்படுத்துவதும் சமயச் சான்றோர்களின் கடமையாகும். இதுவரங்கள் வேண்டி ஏங்கிக் கிடக்கும் பல்லாயிரம் கோடி பக்தர்களின் நலன் சம்பந்தப்பட்டது. இது விஷயத்தில் கவனக்குறைவோமரபு மீறலோ  ஏற்படுத்திப் பக்தர்களுக்குப் பலன் கிடைக்காதபடிக்கு ஆக்கிஅவர்களின் தெய்வ நம்பிக்கையைப் பாழ்படுத்திவிடக் கூடாது.
 
வேதம் பொதுவானது. தனியொரு பிரிவினருக்கு என்றில்லாமல்தெய்வத்திற்கே உரிய மொழியில் வேதங்கள் உள்ளன. வேதங்கள் இறைவனே அருளியவை” என்பதே நம் சைவத்தின் அசைக்க முடியாத நம்பிக்கை. இறைவன் அருளிய வேதங்களில் இறைவனே போற்றப்படுகிறான். தன்னை ஒப்பார் பிறர் இல்லாமையால் தாமியற்றிய வேதங்களில் இறைவன் தன்னைத் தானே புகழ்ந்து கொண்டார் ” என்று, 300 ஆண்டுகளுக்கு முன்னரே கங்கைவரை சென்றுகாசியில் சைவமும் தமிழும் பரப்பிய அருட்கவிஞர் ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் அதற்குக் காரணம் சொல்கிறார்.
 
தமிழர்கள்ஆதியிலிருந்தே வேதங்களைப் போற்றி வந்துள்ளனர். மறை (வேத) வழக்கம் இல்லாதாரை மாபாவிகள்” என்றே நம் சைவம் கடிந்து பேசுகிறது.
வேதத்தில் உள்ளது நீறு”,  “வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது நாதன் நாமம் நமசிவாயவே” என வேதத்தை ஏற்றுப் போற்றும் சைவத்தின் முதல் ஆச்சார்யர் திருஞானசம்பந்தப் பெருமான், “வேத வேள்வியை நிந்தனை செய்துழல் ஆதமில்லி அமணொடு  தேரரை”, “ஆகமத்தொடு மந்திரங்க ளமைந்த சங்கதபங்கமா........ ஆகதர்” என்றெல்லாம் வேதாகமங்களை வெறுத்த சமண சாக்கியர்களைப் பதிகந்தோறும் பத்தாவது பாடலில் சாடிப் பாடியுள்ளமையும், “மாசுமெய்யர் மண்டைத்தேரர்குண்டர்குணமிலிகள்பேசும் பேச்சை மெய்யென்றெண்ணி யந்நெறி செல்லன்மின்” என்று நமக்கு அறிவுறுத்தி உள்ளதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.
சமயங்கள் யாதாயினும் அதன் மரபுகளைக் கடைப்பிடிப்பதே அச்சமயிகளின் கடமை. அதில் மாறுபடுபவர்கள் அச்சமயத்திலிருந்து நீங்கியவராவர்.
 
  அனுச யப்பட் டதுஇது வென்னாதே
  கனிம னத்தொடு கண்களும் நீர்மல்கிப்
  புனித னைப்பூவனு னூரனைப் போற்றுவார்
  மனித ரில்தலை யான மனிதரே.” - திருநாவுக்கரசர்.
 
கி.மு. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த நூலாகிய தொல்காப்பியத்தைக் கேட்டு அங்கீகரித்தவர் என்று அதன் பாயிரத்தில் அதங்கோட்டாசான்” என்பவரைபாயிரம் பாடிய தொல்காப்பியரின் ஒரு சாலை மாணாக்கராகிய பனம்பாரர் குறிப்பிடுகிறார். அதில் அவர் அதங்கோட்டாசானை நான்மறை முற்றிய அதங்கோட்டாசான்” எனக் குறிப்பிடுகிறார். சதுர்வேத பண்டிதராகக் கி.மு. ஏழாம் நூற்றாண்டிலேயே சேரநாட்டுத் தமிழர் ஒருவர் விளங்கியிருந்தார் என்பதை நாம் மறக்கக்கூடாது. தொல்காப்பியமும் வேதத்தை அந்தணர் மறை” என்றே குறிப்பிடுகிறது.
இடைச்சங்க காலத்துப் பாண்டிய மன்னனாகிய முதுகுடுமிப் பெருவழுதிவேத வேள்விகள் பல செய்வித்தமையால் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி” என்ற சிறப்புப் பெயர் பெற்றான்.
தமிழின் மிகப் பழம்பெரும் அறநூலாகிய திருக்குறளும் அந்தணர் நூல்”, “ஓத்து” என்று வேதத்தைச் சொல்கிறது; “அவிஉணவு” என்று அவிர்ப்பாகத்தை - வேள்வி உணவைச் சொல்கிறது. திருக்குறள் அறுதொழிலோர்” என்று குறிப்பிடுவதில் உள்ள ஆறு தொழில்களில், “வேதம் ஓதுதல்வேதம் ஓதுவித்தல்வேத வேள்வி செய்தல்வேத வேள்வி செய்வித்தல்” என்பன அடங்கும். திருக்குறளைத் தமிழ் மறை” என்கிறோம். மறை என்ற சொல் வடமொழி வேதத்தையே குறிக்கும். ஆகையினால் தமிழ்” என்கிற முன் ஒட்டுச் சேர்த்துச் சொல்கிறோம்.
சங்க இலக்கியங்களாகிய பத்துப்பாட்டுஎட்டுத்தொகை நூல்களில் அக்காலத்தில் வேத வேள்விகள் பரவலாக நடந்தமைக்கான சான்றுகள் பல உள்ளன.
காப்பிய இலக்கியமாகிய சிலப்பதிகாரத்தில்கண்ணகியின் திருமணம் வேத முறைப்படி, “மாமுது பார்ப்பான் மறைவழி காட்ட நடந்தது” என்று வருகிறது. கண்ணகி கோட்டத்திற்குச் சேரன் செங்குட்டுவன் வேத விதிப்படி குடமுழுக்குச் செய்வித்தான்அத்திருவிழாவில் வேள்விச் சாலைக்கு மாடல மறையோனும் செங்குட்டுவனும் சென்ற காட்சி இளங்கோவடிகளால் விவரித்துச் சொல்லப்படுகிறது.
இவையெல்லாம் ஆயிரத்து எழுநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆயிரம் ஆண்டுகளில்தமிழ் நிலத்தில் - தமிழரின் வாழ்வில் வேதங்கள் - வேள்விகள் கொண்டிருந்த தொடர்புகள் பற்றிய ஆவணக் குறிப்புகள். தமிழில் வேதங்கள் என்றோதமிழில் வேள்விகள் என்றோ கூறுவதற்குச் சான்றே இல்லை.
தேவாரங்கள் வேதசாரங்கள். அவை கைகாட்டுவது வேதங்களை  - ஆகமங்களை - வேத வேள்விகளை. திருமுறைகளில் வேத வேள்விகள் பற்றிய நூற்றுக்கணக்கான புகழுரைகள் உள்ளன. வேத வேள்விகளை நிந்தனை செய்வதை பெரும் குற்றமாகவே நம் திருமுறைகள் அறிவிக்கின்றன. அப்படிச் செய்பவர்களைப் புறச்சமயத்தார்களாகவே அவை புறந்தள்ளுகின்றன. திருமுறைகளில் மிகப் பழமையானது எனப்படும் திருமந்திரம், “வேதத்தைவிட்ட அறம் இல்லை” என்றதுடன்வேதம் பற்றித் தர்க்கவாதம் செய்தல் கூடாது எனவும் எச்சரிக்கிறது. வேதம்ஆகமம் பற்றித் தனித் தலைப்பிட்டே திருமூலர் கொண்டாடுகிறார். தன்னை நன்றாகப் படைத்ததுசிவனை நன்றாகத் தமிழ் செய்வதற்காக என்று குறிப்பிட்ட அவர்வேதங்களைப் புகழ்ந்ததை மட்டும் கண்டும் காணாமற்போவது எப்படி முறையாகும்?
தமிழருக்கென்று தனியொரு வேள்வி இருந்ததாக எவ்விதச் சான்றும் இல்லை. சமயாசாரியர்கள்சந்தானாசாரியர்கள் போன்ற அருளாளர்கள் வாழ்ந்த காலங்களில் தமிழில் வேள்விதமிழில் கும்பாபிஷேகம் என்றெல்லாம் மரபை மாற்றி யாரும் பேசவுமில்லைசெய்யமுற்படவும் இல்லை. எனவே அவை மரபு மீறல்” எனச் சுட்டிக்காட்ட வேண்டிய தேவைஅவர்களுக்கு எழவில்லை.
நாம் பேசுவது தமிழ். திருஞானசம்பந்தப் பெருமான் பாடிய திருமுறைப் பாடல்கள், “திருநெறிய தமிழ்” என்றும்அது இறைவன் தனது வாக்கென்றும் குறித்துள்ளதை எண்ணிப் பார்க்க வேண்டும். பாடுவார்க்கும் கேட்பார்க்கும்அவர்க்கும் தமர்க்கும்இம்மைக்கும் மறுமைக்கும் நற்பயன் உண்டென்றும்எல்லியும் பகலும் இடர் இல்லை என்றும்எல்லாப் பேறுகளும் கிட்டுமென்றும் அருளியுள்ளதை எண்ணிப் பார்க்க வேண்டும். திருமுறையைக் கொண்டு வேள்வி செய்ய யாண்டும் அருளியதில்லை. திருஞானசம்பந்தப் பெருமான் அனல்வாதப் புனல்வாதங்களால் திருநெறியத் தமிழ்த் திருமுறைகள் வெந்தழலில் வேகாதுவெள்ளத்தால்போகாது” என்று மெய்ப்பித்துக் காட்டிய பின்னும்திருமுறைகளை குண்டத்திலும் குடத்திலும் செலுத்துவது நெறியல்லா நெறி என்று உணர வேண்டும். இறைவன் திருச்செவியில் நேரே சென்று சேர்ந்து பயனும் அளிக்கும் தமிழை - திருமுறைகளை ஊடகங்கள் வழி செலுத்துவதுதான் தமிழுக்கும் திருமுறைக்கும் பெருமையாஎன்று எண்ணிப் பார்க்க வேண்டும். இவ்வாறெல்லாம் சொல்வது இடையாயினார்க்குமறைகள் நிந்தனை சைவ நிந்தனைபொறா மனத்தினார்க்கு.
ஆங்கிலக் கல்வியை உயர்த்திப் பேசினால் அப்படிச் சொல்பவரையாரும் தமிழ்த் துரோகி” என்று சொல்வது இல்லை. தமிழும் வடமொழியும் சைவத்தின் இரு கண்கள்திருமுறைகளும் வேதங்களும் நம் கண்மணிகள்” என்று ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக இருந்துவரும் மரபைச் சொன்னால்சிலர் தமிழ்ப் பற்றில்லாதவர்கள் என்ற ஆதாரவிரோத வார்த்தைகளை அள்ளிவிடுகிறார்கள்.
திருமுறைகள் ஓதுவதற்கு உரியன. அப்படித்தான் திருமுறை ஆசிரியர்களே நமக்கு உத்தர விட்டிருக்கிறார்கள். திருமுறை ஓதினால் நிச்சயம் பயன் உண்டு. வேதங்களில் வேள்விச் சடங்குகள் உள்ளன. அந்தத் தேவை உள்ள இடங்களில் அதைத்தான் பயன்படுத்த வேண்டும். இவையெல்லாம் தெரிந்துவைத்துக் கொண்டும் தமிழ்ப் பற்று என்னும் போர்வையில் புகுந்து கொண்டுவசதிக்காக - புகழுக்காக - பொருளுக்காக - கூட்டம் சேர்ப்பதற்காக – மரபுகளை மறைத்துப் பேசலாமாசெயற்படலாமா?
எதற்கு எது உரியதோஅதற்கு அதைப் பயன்படுத்த வேண்டும். அறிவாற்றல்களால்ஞானத்தால் பழுத்த நம்முன்னோர்கள் எப்படிச் சொன்னார்களோ அப்படி நடக்க வேண்டும்அவர்களுக்கு இல்லாத தமிழ்ப் பற்று நம்மில் யாருக்கு இல்லை.
வேதங்களை உடன்படுபவர்களுக்குத்தான் வேள்வி” என்ற சொல்லை உச்சரிக்கவே தகுதி வரும்.
மழையை வரவழைக்க வேள்விகள் உள்ளன. அவை வேத வேள்விகள். ஆனால்சுந்தரமூர்த்தி சுவாமிகள்ஏயர்கோன் கலிக்காம நாயனாருடன் திருப்புன்கூர் தலத்தைத் தரிசனம் செய்தபோழ்து, “வையகம் முற்றும் மாமழை மறந்து வயலில் நீரில்லாத காலத்தில் மழை பெய்ய” பன்னிருவேலி நிலம் இறைவர்க்குக் கொடுத்ததும்பெய்த பெருமழையால் உண்டாகிய பெருவெள்ளத்தை நீக்கிஅதன்பொருட்டு ஏயர்கோன் கலிக்காமரிடம் மீண்டும் ஒரு பன்னிரு வேலி நிலத்தை இறைவன் பெற்றருளினான் என்ற வரலாற்றைத் திருப்புன்கூர்த் தேவாரத்தில் பதிவு செய்துள்ளார்.
பெருமழையைத் தருவித்ததும்நிறுத்தியதும் பக்தியே ஆகும். எனவே திருப்பதிகங்கள்ஓதிப் பயன்பெற உரியன என உணர வேண்டும். திருமுறைகளை ஓதினாலே பயனுண்டு என்ற சைவத்தின் அரிச்சுவடித் தத்துவத்திலே நம்பிக்கை வேண்டும். பெயர்த்தும் பன்னிருவேலி கொண்டு” (ஏயர்கோன் கலிக்காமர் வரலாறு) மழையை நிறுத்தினார் - திருமுறையைக் கொண்டு வேள்வி செய்து மழை பெய்யவில்லை.
வேள்வி செய்ய வேண்டும் என்ற உந்துதல் வந்துவிட்டால் வேதவழிப்பட்டதாக ஆகிவிடும். வேதத்தில் நம்பிக்கையில்லை. ஆனால் வேள்வியில் நம்பிக்கை உண்டு! அதையும் திருமுறைகளைக் கொண்டு செய்வது என்பது செய்யத்தக்க செயல் அல்ல என்பதை உணர வேண்டும். இத்தகு செயல்களைகடந்த 50 ஆண்டுகட்கு முன்னர்வரை யாரும் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும். இத்தகைய மரபு மீறும் செயல்கட்கு மறைகளோதிருமுறைகளோ எந்த வழியும் வைக்கவில்லை” என்று தெரிந்தே அவ்வாறு செய்வதுதிருமுறைகளில் ஆழங்காற்பட்ட பயிற்சி இல்லாததமிழ் ஆர்வம் என்ற மாயைக்கு உட்பட்டஎளிய மக்களின் பலவீனத்தைப் பயன்படுத்திஅதன்மூலம் புகழ்பொருள் சேர்க்கும் நோக்கமாகவே கருதப்படும். தமிழ்ப் பற்று - திருமுறைப் பற்று என்று கொள்ளப்படாது.
 
திருச்சிற்றம்பலம்


__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

தமிழ்வேள்வி வழிபாடு எனும் பொய் – 14
  http://sivanadimai.blogspot.com/2018/05/14.html
      திருச்சிற்றம்பலம்

வழிபாடுகளில் ஆப்தவாக்கியமான சிவபரம்பொருள் நாம் உய்யும் பொருட்டு அருளிய வேத சிவாகமங்களான வடமொழி மந்திரங்களே வேண்டும் என்பதை சென்ற பதிவுகளில் வலியுறுத்தி உள்ளோம் .

மேலும் மொழிபெயர்ப்பு மந்திரங்களால் பயனில்லையென முந்தைய பதிவுகளில் மேற்கோள் காட்டியிருந்தோம்.அதாவது அஸ்த்ராய நம என்பது ஆயுதம் போற்றி என மாறி அத்தம்பட் ஆயத்தம்பட் என்று மனம் போன போக்கில் திருத்தியமையை கண்டோம்.

ஆனால் வடமொழியில் காஷ்மீர் முதல் குமரி வரை ஒரே மந்திரம் தான் .

உதாரணத்திற்கு ஆசமன மந்திரங்கள்

1.ஆத்ம தத்வாய ஸ்வதா

2.வித்யா தத்வாய ஸ்வத

3.சிவ தத்வாய ஸ்வதா

ஆனால் இந்த மொழிபெயர்ப்பு மந்திரவாதிகள்

1.போற்றி நாலாறுண்மை

2.போற்றி ஏழ் மெய்யறிவு

3.போற்றி ஐந்தாம் உணர்வு போற்றி (!!!!!) 

இப்படி ஒருவர்

இன்னொருவர்

1.ஓம் எல்லாம் வல்ல பரம்பொருளுக்கு என் ஆன்மதத்துவங்களை தாரை வார்த்துத் தருகிறேன்

2.ஓம் எல்லாம் வல்ல பரம்பொருளுக்கு என் வித்தியாதத்துவங்களை தாரை வார்த்துத் தருகிறேன்

3.ஓம் எல்லாம் வல்ல பரம்பொருளுக்கு என் சிவதத்துவங்களை தாரை வார்த்துத் தருகிறேன்

மற்றொருவர்

1.ஓம் ஆத்ம தத்துவங்களை ஏற்றருள்க

2.ஓம் வித்யா தத்துவங்களை ஏற்றருள்க

3.ஓம் சிவ தத்துவங்களை ஏற்றருள்க

மேலும் ஒருவர்

1.உயிர் மெய்மையை ஏற்றுக்கொள்வீராக

2.கலை மெய்மையை ஏற்றுக்கொள்வீராக

3.சிவ மெய்மையை ஏற்றுக்கொள்வீராக

இன்னும் இருக்கிறது பதிவின் நீளம் காரணமாக தவிர்த்துள்ளோம் ஏன் இந்த மொழிபெயர்ப்பு வேலை ? .வழிபாட்டில் என்ன புதுமை சுவாமிக்குத் தெரியாதா தனு கரண புவன போகங்களைக் கொடுத்தவருக்கு தம்மை வழிபட்டு உயிர்கள் நற்கதி பெற என்ன சாதனம் கொடுக்கவேண்டும் எம்மொழியில் கொடுக்க வேண்டும் என்று

இவர்கள் சாமிக்கு வகுப்பு எடுத்து சொல்லிக் கொடுக்கிறார்களா நாங்க சொல்றத நீ கேட்டுத்தான் ஆகணும் என்பது மாதிரி என்ன ஆணவ மறைப்பு. மற்ற மாநிலங்களில் ஆன்மீகத்தில் வழிபாட்டில் மொழித்தலையீடு இல்லை தெலுங்கு வழிபாடு கன்னடவழிபாடு என்று இல்லை . அங்கெல்லாம் இறைவாக்கான சமஸ்கிருத மந்திரங்களைத் துவேஷிப்பதில்லை . மாறாக துதிக்கிறார்கள் .ஆனால் இறை சிந்தனை இல்லாத இக்கூட்டம் ??????

இந்த மூன்று மந்திரத்துக்கு நான்கு பேர் நான்குவிதமாக பொருள் சொல்கிறார்கள் என்றால் இவர்களுக்குள்ளே யார் புலமை மிக்கவர் அறிவாளி என்ற போட்டியே தவிர மக்களை நல்வழிகாட்டி நற்கதிக்குச் செலுத்தும் நோக்கமல்ல .இது காலப்போக்கில் அந்த ஜாதிகாரன் சொன்ன மந்திரத்த நான் சொல்றதா என்று ஜாதிக்கொரு மந்திரமாகும் . இதனால் வழிபாட்டில் குழப்பம் மிஞ்சுமே தவிர நன்மை கிட்டாது .இது போன்ற அசைவர்கள் ஏற்கெனவே ஜாதி பற்றி வழிபாட்டில் புகுத்திவிடடார்கள் ஆம் சத்தியம் இது .ஏனெனில் பிராமணத்துவேஷமாக வந்தது தானே இந்த தமிழ்வழிபாடு என்பது .ஆக ஜாதி ரீதியில் ஏற்கெனவே கிளம்பியாயிற்று

இதில் இன்னும் கொடுமை பின்னாளில் இது மனம் போன போக்கில் ஆளாளுக்கு மந்திரம் மொழிமாற்றம் செய்யப்பட்டு மந்திர பீஜம் எல்லாம் நெல்லை ஸ்லாங்  கோவை ஸ்லாங் மதுரை ஸ்லாங் சென்னை ஸ்லாங் என்று வந்தாலும் வரும்.

ஏனெனில் இந்த கொடுமைக்கு ஒரு உதாரணம் பஞ்சகவ்யம்.

கொங்கு நாட்டுத் தமிழ்வழிபாட்டுக்காரர்கள் பஞ்சகவ்யமானது பால் தயிர் நெய் கோமியம் கோசலம் என பயன் படுத்துகிறார்கள்ஆனால் சென்னைக்காரங்க கோமியம் கோசலத்திற்கு பதிலாக மோரும் வெண்ணையும் பயன்படுத்துகிறார்கள்.

இவர்கள் யாருக்கும் சிவவழிபாடோ அதன் பயனாம் வீடுபேறோ முக்கியம் அல்ல .தமிழ் வியாபாரம் திருமுறை வியாபாரம் காசு பணம் புகழ் இது மட்டுமே தமிழ் தாய்தமிழ் தமிழ்த்தாய் என்று சொல்வோரே உமக்கு எத்தனை பிறவியாய் தமிழ் தாய் மொழியாக இருக்கிறதுஇந்த திராவிட கட்சியின் ஆன்மீகப் பிரிவினருக்கு ஆதரவு கொடுத்தால் சிந்திக்கவே முடியவில்லை ஆன்ம முன்னேற்றத்தைவிழித்துக்கொண்டு படுகுழியில் வீழ்வோரை என்ன சொல்ல ?

திருச்சிற்றம்பலம்



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard