பெலிஅத்த வீரகெடிய பாதையில் முல்கிரிகல சந்தியால் முல்கிரிகல – மகேவெல வீதியில் ஒரு மைல் போனபோது முல்கிரிகல விகாரைக்கு பிரவேசிக்கலாம். இது வீரகெடிய பிரதேச செயலாளர் பிரிவைச் சார்ந்ததாகும்.
முக்களின் பேச்சு வழக்க தடங்களின் படி சத்தாதிஸ்ஸ எனும் அரசன் (கி.மு. 137 – 119) இந்த வழியாக வேட்டையாட போகும்போது விகாரை நிர்மானிப்பதற்கு ஏற்ற பூமி என ஒரு வேடன் காட்டியதால் "மூ கிவு கல" (உள்ளடக்கம்: இவன் சொன்ன கல் என்பதாகும்) எனும் பெயரிட்டதாக சொல்லப்படுகின்றது. அதே போல் இந்த விகாரை ஹக்மன உமங்கல எனும் ஊரை சுரங்கத்தினால் சம்பந்தப்பட்டதெனவும் நாக அரசனால் இதை நிர்மானித்ததெனவும் மக்கள் பேச்சு வழக்கில் உள்ளது. 7 ம் நூற்றாண்டைச் சார்ந்த கல்வெட்டின் தடயங்களின் படி இந்த விகாரை அக் காலத்து உயர்ந்த நிலையில் இருந்ததாக ஊர்ஜிதமாகின்றது. 12 ம் நூற்றாண்டைச் சார்ந்த மணாபரன அரசனின் கடகமுவ கல்வெட்டில் "தலா முகுத்கிரி விகாரை" எனும் பெயரிலும் அறிமுகம் செய்வதும் இந்த விகாரையென நம்பப்படுகின்றது. கி.மு. 2 ம் நூற்றாண்டில் காவனதிஸ்ஸ அரசனால் செய்வித்த சமுத்கிரி விகாரை என்பதும் இதுவாகலாம் என ஒரு கருத்தும் உள்ளது.
முல்கிரிகல விகாரையின் ஆரம்பத்தைப் பற்றி சரியான கருத்து இல்லாவிட்டாலும் சுற்றவர உள்ள குகைத் தொகுதியும் விகாரையை நிர்மானிப்பதற்கு கொணடுள்ள சிரமத்தைப் பற்றி பார்க்கும்போது வரலாற்று காலம் தொட்டு இந்த விகாரைக்கு அரச அனுசரணை கிடைத்த பூமியாக தெரிகின்றது. கண்டி ஸ்ரீ ராஜசிங்ஹ ஆட்சி காலத்தில் இந்த விகாரையின் சீர்திருத்த வேலைகள் செய்து குகைகள் சிலவற்றில் கண்டி சம்பிரதாயத்து கீழ் தேசத்து மாதிரியான ஓவியங்களினால் அலங்கரித்துள்ளது. ஒல்லாந்தரின் காலத்தில் இந்த விகாரையை அடம்ஸ் பர்க் என்று அறிமுகம் செய்ததற்கான தடயங்களும் இருக்கின்றது.