New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வேதம் & திருக்குறள் => ஹிந்துத்வம்

Guru

Status: Offline
Posts: 24788
Date:
வேதம் & திருக்குறள் => ஹிந்துத்வம்
Permalink  
 
வேதம் & திருக்குறள் => ஹிந்துத்வம் <= திருமந்திரம் & தேவாரம் <= ஸ்ரீமத் பகவத் கீதை

பகுதி - 1

திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தையும் இல்லை.
ஹிந்து என்ற வார்த்தையும் இல்லை.
எந்த ஒரு கடவுளையும் குறிப்பிட்டு வள்ளுவர் குறள் இயற்றவில்லை. என ஒரு பிரச்சாரம் நடந்த வண்ணமே உள்ளது. 
அதை சரி பார்க்க கூட திறன் இன்றி பல தமிழ்க் கொழுந்துகள் சமூக வலை தளங்களில் மேலும் பகிர்ந்து கொண்டுள்ளார்கள்.

வேசப்பார்ப்பான்னு திருமூலர் சொன்னதுபோல.. முட்டாத்தமிழர்னு இவர்களை குறிப்பிடுதல் சாலப்பொருந்தும்..

எப்படி இந்தியா என்பது #ஒருசமய சார்பற்ற நாடு என்பதை.. இந்தியா ஒரு சமய-சார்பற்ற நாடு என தப்பிதமாக பதிஞ்சு வச்சிருக்கோமோ அப்படிதான்... திருக்குறளும்...

திருக்குறள் #ஒருசமய சார்பற்ற நூல் என்பதுதான் சரியான பதம்..
(இதில் காணப்படும் உவமைகளை வைத்தே.. இதை பலர் இயற்றியிருக்கலாம் என்ற கருத்தும் உண்டு.)

இல்லவேயில்லை... திருக்குறளுக்கும் ஹிந்துத்வத்துக்கும் தொடர்பேயில்லை.. அது வேறு... இதுவேறுங்கற பிரச்சாரத்தை ஆதரிச்சால்... அஅல்லது அதை நீங்கள் ஆமோதித்தால் கீழே உள்ள குறள்களை படித்து தெளிவு பெறவும்.

இந்த உவமைகளும் குறிப்புகளும் நான் உருவாக்கினவை அல்ல..
தேடி அலைஞ்சு சேகரித்தவைகளகயே தொகுத்துள்ளேன்...
என்னினும் எம்மக்கள் அறிவுடையோர்..
என்ற வாக்குக்கு ஏற்ப எனக்கு முன்னால் இதுதொடர்பில் பதிவிட்டவர்களுக்கு நன்றி நவின்று.. பதிவுக்கு போவோம்...

முதல் அதிகாரமே கடவுள் வாழ்த்தில் தான் துவக்கம்.

1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு

வள்ளுவர் தன் முதல் குறளை துவக்கும் போதே இறைவனை முன்னிறுத்தியே துவங்குகிறார்.

மேலும் இதில் கவனிக்க தக்க இன்னொரு விசயம்.. தமிழ் இலக்கண விதிப்படி ஆதி'ப்' பகவ(வா)ன் என வந்திருக்க வேண்டும்.. பகவான் என்பது தமிழ் சொல்லென்றால்... 
ஆனால்... குறள் எழுதப்பட்ட காலத்திலேயே மொழிக்கலப்பு இயல்பாக இருந்தபடியால் முதல் குறளிலேயே ஆதி பகவன் , உலகு போன்ற மொழி மருவிய சொற்கள் கையாளப்பட்டுள்ளது..

அடுத்த குறளை பார்ப்போம்..

10. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா தார்

ஒருவர் இறைவனை நாடி அவரது அடி சேராமல் இருப்பாராயின், அவர் மீண்டும் இந்த உலகில் பிறந்து துன்பத்துக்குள்ளாவார்கள் என்பதே வள்ளுவனின் கருத்து. முற்பிறவியிலும் மறு பிறவியிலும் நம்பிக்கை கொண்ட மதம் ஹிந்து சமயம். இக்குறள் மூலம், வள்ளுவர் ஹிந்து சமுதாய சமய நம்பிக்கையான மறுபிறவியை பற்றி எழுதியுள்ளார்.

அடுத்து...

18. சிறப்பொடு பூசனை செல்லாது வானம்

வறக்குமேல் வானோர்க்கு ஈண்டு

இவ்வுலகில் மழை பெய்யாமல் இருக்குமேயானால், வானவர்க்கு செய்யும் எந்த விழாவும் பூசைகளும் நடைப்பெறாது என்று உணர்த்தும் குறள். இதில் கூறப்பட்டிருக்கும் பூசையும் வான் வழிபாடும் இந்து மத நம்பிக்கைகளையும் பழக்கங்களையும் வழிபாடுகளையும் குறிப்பதல்லவா?

அடுத்து...

25. ஐந்துஅவித்தான் ஆற்றல் அகல்விசும்பு னார்கோமான்

இந்திரனே சாலும் கரி

தனது ஐம்புலனையும் அடக்க தெரியாதொருவனுக்கு என்ன தீங்கு நேரிடும் என்பதற்கு அந்த இந்திரனே ஒரு சான்று. இந்த குறளில் வரும் இந்திரன் எந்த மதம் சார்ந்தவர்களின் நம்பிக்கை என்று கூற முடியுமா? திருக்குறளில் எந்த கடவுள் பெயரும் இல்லை என்று பொய்யாக கூறி திரியும் மகாஜனங்களே இப்பொழுது புரிகிறதா?

அடுத்து...

55. தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்

பெய்எனப் பெய்யும் மழை

எல்லோரும் போற்றும் அந்த கடவுளை வழிபடவில்லையென்றாலும் தன் கணவனை உண்மையாய் போற்றி வரும் பெண்களின் பெருமையை உணர்த்தும் குறள் இந்த குறள்.

அதாவது இதில் #தொழுதெழுவாள் என்ற வார்த்தையை கவனியுங்க...

தொழுவாள்னு வள்ளுவன் சொல்லவில்லை... தொழுது எழுவாள்னு குறிப்பிடுகிறான்... 
அதாவது... வள்ளுவன்-வாசுகி கதையில்... கணவனுக்கு பின் தூங்கி... முன்னெழும் பழக்கத்து கதையை வைத்து பார்க்கும்போது... இரவு தூங்கி காலையில் எழும்போது இறைவனை தொழும் முன்பு கனவணை தொழுது எழும்புவாள் மனைவி என்ற சொல்லாட்சிதான் இது...

அதுவும்....
இப்படி எழும்பும் மனைவி எப்படிப்பட்டவள் என்றால்... 
"பெய்யென பெய்யும் மழை" மாதிரியாம்... 
அதாவது மழை வேண்டும்னு கேட்டதும்... மழை பொழிவது எப்படி இருக்குமோ... அப்படிப்பட்டவளாம் இந்த மனைவி...

(இதில் ஒரு சோகம் என்னவெனில்.. குறள் எழுதின வள்ளுவர்களில் ஒருத்தரோட மனைவியான வாசுகிக்கு இப்படிப்பட்ட கொடுப்பினை கிடைக்கவே இல்லியாம்... வாசுகியோட புருஷனான வள்ளுவர் தினசரி மனைவி கண்விழிக்கும் முன்னே எழும்பிடும் பழக்கம் உள்ளவராக இருந்திருக்கார்... சரி... பிறன் மனை நோக்கா பேராண்மைன்னு சொல்லியிருக்கார் ஒரு வள்ளுவர்... அதனால... வாசுகி வீட்டு கதையை இத்தோடு நிறுத்திப்போம்...)

...“திருமணம் சில கால நிகழ்வு” என்றும், அது “இன்னும் 50 – 100 வருடத்தில் மறைந்துவிடும்” என்றும் கூறிவரும் ...
தன்னை கவிப்பேரரசு என சொல்லிக்கும்... தன் பிறந்த நாளை கவிஞர்கள் தினமாக கொண்டாடனும்னு சொன்ன... முண்டக்கலப்பை வைரமுத்துவுக்கு (உப்புக்கல்லுக்கு வைரம்னு பெயர்வச்சமாதிரி...) தெரியாமல் போனது?

ஆயிரம் ஆயிரம் வருடங்களாக நமது தமிழ் சமுதாயம் இந்த திருமணம் என்ற ஓர் சமூக நிகழ்வை தாங்கி பாதுகாத்து வந்துள்ளது என்பதையே இக்குறள் நினைவூட்டுகிறது. அது இறக்க நாம் ஒரு காரணம் என்று கூறும் போது ஓர் குற்ற உணர்வுகூட இல்லையா? அதை பாதுகாத்து எவ்வாறு நமது முன்னோர்கள் நம்மிடம் வழங்கினார்களோ அதே போன்று நாமும் நம் அடுத்த சந்ததியினருக்கு வழங்கிச் செல்லவில்லை என்றால் நாம் இந்த பிறவியில் பிறந்து தான் என்ன பயன்?

அடுத்து...

62. எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்

பண்புடை மக்கள் பெறின்

ஒருவன் நற்பண்புகள் கொண்ட மக்களை பெற்றிருந்தால் அவருக்கு இந்த பிறப்பில் மட்டுமல்ல ஏழு பிறவியிலும் எந்த துன்பமும் தோன்றாது என்ற இந்த குறள் மூலம் இந்து மதத்தின் நம்பிக்கையை எடுத்துரைக்கவில்லையா? மறுபிறப்பில் நம்பிக்கை உள்ள மதம் இந்து மதம் தவிர வேறு ஒன்று உண்டா?

அடுத்து...

167. அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்

தவ்வையைக் காட்டி விடும்

இந்த குறளின் மூலம், பொறாமை பிடித்த ஒருவனிடமிருந்து ஸ்ரீதேவி விலகுவது மட்டுமல்ல, அவளது சகோதரியான மூதேவியை விட்டு செல்வாள் என்று நமக்கு கூற வருகிறார் வள்ளுவர். ஸ்ரீதேவியும் மூதேவியும் எந்த மத நம்பிக்கை உள்ள மக்கள் வழிபடுவார்கள்? அதை நான் கூறி தான் உங்களறிவுக்கு எட்ட வேண்டுமா?

அடுத்து...

260. கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி

எல்லா உயிரும் தொழும்.

ஒருவன் புலால் உண்பதை தவிர்த்தால், அனைத்து உயிரினங்களும் அவனை வணங்கும் என்பதே இந்த குறளின் பொருள். புலால் உணவை வேண்டாம் என்று வலியுறுத்த புலால் மறுத்தல் என்ற அதிகாரத்தையே இயற்றியுள்ளார் வள்ளுவர். இதை எந்த சமயம் வலியுறுத்துகிறது என்பதை உங்கள் பார்வைக்கே விட்டு விடுகிறேன்.

அடுத்து....

262. தவமும் தவமுடையார்க்கு ஆகும் அவம்அதனை

அஃதிலார் மேற்கோள் வது

தவம் செய்வது கூட முற்பிறவியில் நல்வினை கொண்ட மக்களாலேயே செய்யவல்லது என்பதே என் வள்ளுவனின் கருத்து. தவத்தில் சிறந்த பல முனிவர்களையும் ரிஷிகளையும் கொண்ட மதம் இந்து மதம். அப்படியிருக்க இந்த குறளில் வரும் தவம் என்ற சொல் வேறெந்த மதத்தினை குறிக்க முடியும்? அதுமட்டுமின்றி இந்த குறளின் மூலமாக இந்து மக்களின் நம்பிக்கையான முற்பிறவியின் பலனை பற்றியும் கூறுகிறார் அல்லவா?

அடுத்து...

380. ஊழின் பெருவலி யாவுள? மற்றொன்று

சூழினும் தான்முந் துறும்

நீ விதியை வெல்ல எது செய்தாலும் விதியே வந்து உன் முன் நிற்கும் என்று கூறும் வள்ளுவரின் குறள். விதி வலியது என்று நம்பும் மக்கள் இந்து மத வழி வந்தவர்கள். இங்கு ஊழி என்பது விதியையே குறிக்கும். இந்த குறளில் ஹிந்து சமுதாய சமய நம்பிக்கைகளை கூறவில்லை என்றால், வேறு எதை பற்றி கூறுகிறார்?

அடுத்து..

617. மடிஉளாள் மாமுகடி என்ப மடிஇலான்

தாள்உளாள் தாமரையி னாள்

இந்த குறளின் மூலமாக சோம்பேறியாக சுற்றி திரிபவனிடம் மூதேவியும், உடல் உழைப்பு கொண்டவனிடம் ஸ்ரீதேவியும் குடியிருப்பாள் என்பதை எடுத்துரைக்கிறார் வள்ளுவர்.

இந்த குரலில் தாமரையினாள் என்று போற்றப்படுவது யார் என்று தெரிகிறதா? தாமரையில் அமர்ந்திருக்கும் ஸ்ரீதேவியையே இந்த குறள் குறிக்கிறது. ஸ்ரீதேவி எந்த சமய கடவுள் என்று அறிவோம் அல்லவா?

இது போன்று பல திருக்குறளில் இந்து மத நம்பிக்கையை வலியுறுத்தியுள்ள நூல் தான் திருக்குறள்.

சரி... வள்ளுவரை கிறிஸ்தவர் , சமணர்னு ஆளாளுக்கு சொந்தம் கொண்டாடுறானுக... கொண்டாடிட்டு போகட்டும்...

வள்ளுவர் (கள்!?) எழுதின இந்த குறள்களை என்ன பண்ணுவானுக??

இதுவரை கொஞ்சம் மேலோட்டமாக பார்த்தாச்சு... கொஞ்சம் உள்ளே இறங்கி அலசுவோமா??

வாங்க போகலாம்...

திருவள்ளுவ மாலை அப்படின்னு ஒரு தொகுப்பு உண்டு... நம்ம டலீவர் இலக்கியத்துக்கு உரை எழுத நாடு கடந்து போனாரு... ஆனால் திருவள்ளுவ மாலை உண்டான காலத்துல இப்படிலாம் இல்லை... 
அட அவ்வளவு ஏன் ??

இந்த 1330 குறள்களையும் எழுதினது ஒரே ஆளா? இல்லியாங்கிற சந்தேகம்கூட அவர்களுக்கு இல்லை.. ஒருவேளை அவர்களுக்கு தெரிஞ்சிருக்கலாம்... அல்லது இந்த சந்தேகமே வராமல் இருந்திருக்கலாம்...

ஆனால்... அதில் பரணர் என்ற தமிழ்ப்புலவருக்கு வேறு சந்தேகம் வந்ததாம். அதை அவர்அப்படியே ஒரு வெண்பாவாகப் பாடிவைத்துள்ளார்.

மாலும் குறளாய் வளர்ந்திரண்டு மாணடியால்
ஞாலம் முழுதும் நயந்தளந்தான்-வாலறிவின்
வள்ளுவரும் தம்குறள்வெண் பாவடியால் வையத்தார்
உள்ளுவஎல் லாம்அளந்தார் ஓர்ந்து

இதே கருத்தைப் பொன்முடியார் என்ற புலவரும்

கான்நின்ற தொங்கலாய் காசிபனார் தந்ததுமுன்
கூநின்று அளந்த குறளென்ப-நூன்முறையால்
வானின்று மண்நின்று அளந்ததே வள்ளுவனார்
தாம்நின்று அளந்த குறள்

என்று பாடியுள்ளார். சரி, முதல் குறளிலேயே அகர முதல எழுத்தெல்லாம்- இது அப்படியே ....
கீதா வாக்கியம் – அக்ஷராணாம் அகாரோஸ்மி. என... எழுத்துக்களில் நான் அகாரமாய் (முதலாவதாய்/ ஆரம்பமாய்) இருக்கிறேன் வரும்... எனவே வள்ளுவர் குறிப்பிடும் கடவுள் திருமால்தான்..

अक्षराणामकारोऽस्मि द्वन्द्वः सामासिकस्य च ।
अहमेवाक्षयः कालो धाताहं विश्वतोमुखः ॥१०- ३३॥

அக்ஷராணாமகாரோऽஸ்மி த்³வந்த்³வ: ஸாமாஸிகஸ்ய ச |
அஹமேவாக்ஷய: காலோ தா⁴தாஹம் விஸ்²வதோமுக²: || 10- 33||

எழுத்துகளில் நான் அகரம்; புணர்ப்புகளில் இரட்டைப் புணர்ப்பு; நான் அழிவற்ற காலம்; எப்பாரிசத்தும் சுமப்போன் யானே.

न मे विदुः सुरगणाः प्रभवं न महर्षयः ।
अहमादिर्हि देवानां महर्षीणां च सर्वशः ॥१०- २॥

ந மே விது³: ஸுரக³ணா: ப்ரப⁴வம் ந மஹர்ஷய: |
அஹமாதி³ர்ஹி தே³வாநாம் மஹர்ஷீணாம் ச ஸர்வஸ²: || 10- 2||

வானவர் கணங்கள் என் மகிமையை உணரார்; பெருந்தகை முனிவருமுணரார்; யாங்கணும், வானோர்கட்கும் மகரிஷிகட்கும் ஆதி நானே

अहं सर्वस्य प्रभवो मत्तः सर्वं प्रवर्तते ।
इति मत्वा भजन्ते मां बुधा भावसमन्विताः ॥१०- ८॥

அஹம் ஸர்வஸ்ய ப்ரப⁴வோ மத்த: ஸர்வம் ப்ரவர்ததே |
இதி மத்வா ப⁴ஜந்தே மாம் பு³தா⁴ பா⁴வஸமந்விதா: || 10- 8||

நான் அனைத்திற்கும் தொடக்கம். என்னிடமிருந்தே எல்லாம் இயலும். இங்ஙன முணர்ந்த புலவர் என்னை அன்புடன் தொழுவார்.

அடுத்த குறளிலே வாலறிவன் என்கிறார். வாலறிவன் என்பதற்கு வடமொழியில் ‘சர்வக்ஞ:’ அல்லதுமுற்றுமுணர்ந்தவன் என்று பொருள் கொள்ளலாம். ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமத்தில் வருகின்ற ஒரு நாமம்.

அடுத்து ஆறாம் குறளில் ‘ஐந்தவித்தான்’ என்று குறிப்பிடுமிடத்தே, ஐம்புலன்களை வென்றவன் அதாவது ஹ்ருஷீகேசன் என்ற திருநாமம் பொருந்துகிறது. இதுவும்திருமாலின் ஒரு திவ்யநாமம். ஹ்ருஷீகம் என்றால் இந்திரியங்கள். அவற்றுக்கு ஈசனாய் இருப்பவன் ஹ்ருஷீகேசன்.

ஏழாவது குறளிலே தனக்கு உவமை இல்லாதான் என்கிறார். அதாவது ஒப்பில்லாதவன்; ஒப்பிலியப்பன். தன்னொப்பாரிலப்பன் (திருவாய்மொழி 6-3-9)); ஒப்பார் மிக்காரை இலையாய மாமாயன் (திருவாய்மொழி 2-3-2); வடமொழியில் அதுல: என்ற திருநாமத்திற்கு உரியவன்.

ஒன்பதாவது குறள். எண்குணத்தான் என்கிற தலைவன் யார்? வடமொழியில் குணப்ருத் என்கிற நாமத்திற்கு உரை சொல்லிமிடத்தே எல்லாப் பொருள்களையும் தனது குணம் போல தரிப்பவன். இதுவும் சஹஸ்ரநாமத்தில் வருகின்ற திருநாமம்.

குறள்எண்610 :-
மடியிலா மன்னவன் எய்தும்; அடியளந்தான்
தாஅயது எல்லாம் ஒருங்கு

இங்கே அடியளந்தான் என்ற பதத்தால் திருமாலை நேராகவே குறிப்பிட்டு விடுகிறார் வள்ளுவர். திரிவிக்கிரமன் என்பதும் திருமாலின் திவ்யநாமம்,

உடம்போடு உயிர்க்கு உள்ள உறவு, தான் இருந்த கூடு தனியே இருக்க அதை விட்டு வேறிடத்திற்குப் பறவை பறந்தாற் போன்றது.

குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே
உடம்போ டுயிரிடை நட்பு. ( குறள் எண் : 338 )

உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு. (குறள் எண்: 339)

இறப்பு தூக்கத்தையும், பிறப்பு தூங்கி விழிப்பதையும் போன்றவை.

இதைப் படித்தவுடன் பகவத் கீதையில் கண்ணன் சொல்வது இந்தக் குறட்களுக்கு அடிப்படையாக இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

वासांसि जीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरोऽपराणि।
तथा शरीराणि विहाय जीर्णान्यन्यानि संयाति नवानि देही॥२२॥

வாஸாம்ஸி ஜீர்ணாநி யதா² விஹாய நவாநி க்³ருஹ்ணாதி நரோऽபராணி|
ததா² ஸ²ரீராணி விஹாய ஜீர்ணாந்யந்யாநி ஸம்யாதி நவாநி தே³ஹீ ||2-22||

நைந்த துணிகளைக் கழற்றி யெறிந்துவிட்டு மனிதன் புதிய துணிகள் கொள்ளுமாறு போல, ஆத்மா நைந்த உடல்களைக் களைந்து புதியனவற்றை எய்துகிறான்.
கடைசியாக,, குறள் எண்1103 புணர்ச்சி மகிழ்தல் எனப்படும் அதிகாரம்.

தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்?
தாமரைக் கண்ணான் உலகு

தாம் காதலிக்கும் மாதரின் தோள்களைத் தழுவிக்கொண்டு உறங்குவது போன்ற இன்பம் வைகுந்ததிலும் இல்லை என்று திருமால் வசிக்கும் வைகுந்தத்தைக் குறிப்பிடுகிறார். தாமரைக்கண்ணனாகிய அரவிந்தாக்ஷன், புண்டரீகாக்ஷன் என்பன ஸஹஸ்ரநாமத்தில் வரும் திருநாமங்கள்.

நம்மாழ்வார் திருவாய்மொழியில் திருமாலை,’அறவனை ஆழிப்படை அந்தணனை’ என்றுதானே சுட்டுகிறார். எனவே, இப்படிப்பார்த்தாலும், திருமாலைத்தான் குறிக்கிறது’. வள்ளுவர் சமண சமயம் அல்ல... வைணவ சமயத்தவர்தான்..

பிறவித் துயரற ஞானத்துள் நின்று
துறவிச் சுடர்விளக் கம்தலைப் பெய்வார்
அறவனை யாழிப் படையந் தணனை
மறவியை யின்றி மனத்துவைப் பாரே!

க்ஷமயா ப்ருதிவீ ஸம: என்று இராமனின் குணவிஷே சத்தை வால்மீகி எடுத்துச் சொல்வதுபோல், பொறையுடைமை அதிகாரத்தில், ‘அகழ்வாரைத் தாங்கும் நிலம்’ என்று முதல் குறளில் தொடங்குகிறார். பின்னர் அடுத்துவரும் அழுக்காறாமையில், பொறாமையுள்ளவனைத் திருமகள் நீங்கிவிடுவாள் என்றும் நிலை நாட்டுகிறார். இதுமட்டுமன்று. மூதேவி வந்து சேர்வாள் என்றும் எச்சரிக்கையும் விடுக்கிறார்.

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்

இவ்வாறு நீங்கிய திருமகள் எங்கே குடியிருப்பாள் என்ற வினா தொடர்ந்து வருவது நியாயந்தானே! அதற்கும் விடை தருகிறார் ஸ்ரீ வல்லபர்.

தருமம் இது என்று உணர்ந்து, பிறர்பொருளை விரும்பாத அறிவுடையாரைத் திருமகள் அவர் தகுதியை அறிந்து அவரிடம் சேர்வாள்.

அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறனறிந் தாங்கே திரு

முயற்சி இன்றிச் சோம்பி இருப்பாரையும் விட்டு விலகிவிடுவாள் இலக்குமி. மூதேவி குடிகொள்ளுவாள்.

மடியுளான் மாமுகடி என்ப, மடியிலான்
தாளுளாள் தாமரையி னாள்.

“குழல் கோவலர் மடப் பாவையும் மண் மகளும் திருவும் நிழல் போல்வனர்” ( திருவிருத்தம் – 3 ) என்கிறார் நம்மாழ்வார். 
நீளாதேவியான நப்பின்னை மற்ற இருவரோடு (திருமகள் , மலை மகள்) இணைந்து, இம்மூவரும், திருமாலின் நிழல் போலானவர் என்பதால் இம்மூவருமே ஒருவர்தான் என்றும் காட்டுகிறது. நிழல் ஒன்று தான் இருக்க முடியும். அந்த நிழலை மூன்று பெயர்களில், மூன்று குணங்களில் மூன்று தேவியராகப் பார்க்கிறோம் என்றும் தெரிகிறது. இதனால் நீளாதேவியைப் பற்றிய செய்தி திருக்குறளில் இல்லாமல், நிழலாகத் திருவள்ளுவமாலையில் கிடைக்கிறது எனலாம்..

நீளாதேவியைப் பற்றி திருவள்ளுவமாலையில் ஒருபாடல் கிடைக்கிறது. இந்தத் தொகுப்பில் பல்வேறு காலக்கட்டத்தில், பல்வேறு புலவர்கள் திருவள்ளுவரைப் புகழ்ந்து பாடிய பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அவர்களுள் ‘நல்கூர் வேள்வியார்’ என்னும் புலவர் கூறியுள்ள செய்தியில், நப்பின்னையின் இயற்பெயர் இடம் பெற்றுள்ளது.

உப்பக்க நோக்கி உபகேசி தோள் மணந்தான்
உத்தர மாமதுரைக்கு அச்சு என்ப – இப்பக்கம்
மாதானு பங்கி மறுவில் புலச் செந்நாப்
போதார் புனற்கூடற் கச்சு.

இதன் பொருள், ” உப்பக்கம் நோக்கி, அதாவது எருத்தின் முதுகு நோக்கி (உப்பக்கம் – முதுகு), உபகேசியை மணந்தவன் வட மதுரைக்கு ஆதாரம் போன்றவன். (கண்ணன்.) அதுபோல மாதானுபங்கி எனப்படுகின்ற குற்றமற்ற செந்நாப் போதார் எனப்படும் திருவள்ளுவர் தென் மதுரைக்கு ஆதாரமானவர்.”

வள்ளுவர் திருமாலையும், லக்ஷ்மியையும் குறிப்பிட்டுச் சொல்வதால், கவிசாகரப் பெருந்தேவனார், திருக்குறளை மிக உயர்வாகப் பின்வருமாறு ஒப்பிடுகிறார்.

பூவில் சிறந்தது தாமரை; பொன்னில் சிறந்தது சாம்புனதம்; பசுவில் சிறந்தது காமதேனு; ஆனையில் சிறந்தது ஐராவதம்; தேவர்களில் திருமால்; பாடல்களிலே வள்ளுவரின் குறள் என்று முடிக்கிறார்.

பூவிற்குத் தாமரையே; பொன்னுக்குச் சாம்புனதம்
ஆவிற்கு அருமுனியா. ஆனைக்கு அமரரும்பல்
தேவில் திருமால், எனச்சிறந் தென்பவே
பாவிற்கு வள்ளுவர்வெண் பா

காரிக்கண்ணனார் என்பார், வள்ளுவரை நான்முகனுக்குச் சமமாகச் சொல்கிறார். திருமாலையும், இலக்குமியையும் அருகிருந்து அறிந்தார் கொப்பூழ் எழுகமலத்தே அமர்ந்த நான்முகனைத் தவிர வேறு யார் உளர்?

ஐயாறும், நூறும் அதிகாரம் மூன்றுமாம்
மெய்யாய வேதப் பொருள்விளங்கப்-பொய்யாது
தந்தான் உலகிற்குத் தான்வள் ளுவனாகி
அந்தா மரைமேல் அயன்..

(தொடரும்)

__________________

Guru

Status: Offline
Posts: 24788
Date:
RE: வேதம் & திருக்குறள் => ஹிந்துத்வம்
Permalink  
 
பகுதி - 2.

ஹப்பா... ஒருவழியா முடிவுக்கு வந்தாச்சு... கண்டிப்பா... வள்ளுவர் பெருமாள் பக்தன்தான்னு... அப்படின்னு நினைக்கிறீங்களா...

அதெப்படி அப்படியே விடுவேன்??

__________________

Guru

Status: Offline
Posts: 24788
Date:
Permalink  
 
பகுதி - 3

அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு. 1

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்நின்றது மன்னவன் கோல். 543

கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்வார்க்குத்தள்ளாது புத்தே ளுளகு. 290

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்தாஅய தெல்லாம் ஒருங்கு. 610

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்தொகுத்தவற்றுள் எல்லாந் தலை. 322

என்ற திருக்குறள்களால் உரையளவையும் (ஆகமப் பிரமாணத்தையும்) உடம்படுதலானும், கடவுள் வாழ்த்து என்ற அதிகாரம் கூறியதனாலும்,

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்இறைவன் அடிசேரா தார். 10

என்பது முதலிய திருக்குறள்களானும் கடவுள் ஒருவரே உண்டென்றும்,

அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு. 1

என்ற திருக்குறளால் அக்கடவுள் சித்தாந்தத் தெய்வமாகிய ஆதிசத்தியாரோடு கூடிய சிவமே (சிவபரம்பொருளே) என்றும் கூறுதலானும்,

தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிதுஇன்னுயிர் நீக்கும் வினை. 327

ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும்நன்மை குறித்தது சால்பு. 1013

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்தொகுத்தவற்றுள் எல்லாந் தலை. 322

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்துஇறந்தாரை எண்ணிக்கொண் டற்று. 22

என்ற திருக்குறளால் எண்ணில்லாத உயிர்கள் உண்டென்று கூறுதலானும்,

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. 5

இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கிமாசறு காட்சி யவர்க்கு. 352

சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்சார்தரா சார்தரு நோய். 359

காமம் வெகுளி மயக்கம் இவ்முன்றன்நாமம் கெடக்கெடும் நோய். 360

என்ற திருக்குறள்களால் ஆணவமலம் ஒன்றுண்டென்று கூறுதலானும்,

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்கருமமே கட்டளைக் கல். 505,

அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ் ஞான்றும்தவாஅப் பிறப்பீனும் வித்து. 361

அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல்தவாஅது மேன்மேல் வரும். 368

இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்துன்பத்துள் துன்பங் கெடின். 369

ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையேபேரா இயற்கை தரும். 370

என்ற திருக்குறள்களால் ‘ஆகாமிய’ கன்மத்தையும்,

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றதுபொன்றுங்கால் பொன்றாத் துணை. 36

என்ற திருக்குறள்களால் ‘சஞ்சித’ கன்மத்தையும்,

ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்போகூழால் தோன்றும் மடி. 371

துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பாலஊட்டா கழியு மெனின். 378

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்றுசூழினுந் தான்முந் துறும். 380

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்மெய்வருத்தக் கூலி தரும். 619

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்தாழாது உஞற்று பவர். 620

அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்பலரறியார் பாக்கியத் தால். 1141

என்ற திருக்குறள்களால் ‘பிராரத்த’ கன்மத்தையுங் கூறதலானும்,

பெற்றான் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்புத்தேளிர் வாழும் உலகு. 58

செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும்வானகமும் ஆற்றல் அரிது. 101

புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதேஒப்புரவின் நல்ல பிற. 213

நல்லாறு எனினுங் கொளல்தீது மேலுலகம்இல்லெனினும் ஈதலே நன்று. 222

நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்போற்றாது புத்தேள் உலகு. 234

கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்தள்ளாது புத்தேள் உலகு. 290

தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்தாமரைக் கண்ணான் உலகு. 1103

புலத்தலின் புத்தேள்நா டுண்டோ நிலத்தோடுநீரியைந் தன்னார் அகத்து. 1323

என்ற திருக்குறள்களால் ‘துறக்கம்’ உண்டென்று கூறதலானும்,

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமைஆரிருள் உய்த்து விடும். 121

அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்தீயுழி உய்த்து விடும். 168

அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்தஇன்னா உலகம் புகல். 243

உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ணஅண்ணாத்தல் செய்யாது அளறு. 255

என்ற திருக்குறள்களால் நிரயத்தைக் கூறதலானும்,

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும்தெய்வத்துள் வைக்கப் படும். 50

பெற்றான் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்புத்தேளிர் வாழும் உலகு. 58

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்துநல்விருந்து ஓம்புவான் இல். 84

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்நல்விருந்து வானத் தவர்க்கு. 86

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமைஆரிருள் உய்த்து விடும். 121

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்தவ்வையைக் காட்டி விடும். 167

நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்போற்றாது புத்தேள் உலகு. 234

கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்ஆற்றல் தலைப்பட் டவர்க்குல். 269

கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்செல்லாது உயிருண்ணுங் கூற்று. 326

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்தாஅய தெல்லாம் ஒருங்கு. 610

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழைமாதர்கொல் மாலும் என் நெஞ்சு. 1081

பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்பெண்டகையால் பேரமர்க் கட்டு. 1083

என்ற திருக்குறள்களால் தேவர்கள் உண்டெனக் கூறுதலானும்.

உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்துஅலகையா வைக்கப் படும். 850

என்ற திருக்குறள்களால் அலகை உண்டெனக் கூறுதலானும்.

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்விழுமந் துடைத்தவர் நட்பு. 107

உறங்குவது போலும் சாக்காடு உறங்கிவிழிப்பது போலும் பிறப்பு. 339

அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ் ஞான்றும்தவாஅப் பிறப்பீனும் வித்து. 361

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றதுவேண்டாமை வேண்ட வரும். 362

ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்குஎழுமையும் ஏமாப் புடைத்து. 398

இன்மை எனவொரு பாவி மறுமையும்இம்மையும் இன்றி வரும். 1042

இம்மைப் பிறப்பின் பிரியலம் என்றேனாக்கண்ணிறை நீர்கொண் டனள். 1315

என்ற திருக்குறள்களால் மறுபிறப்புக்கள் உண்டெனக் கூறுதலானும்.

மன்னுயி ரெல்லாம் துயிற்றி அளித்திராஎன்னல்லது இல்லை துணை. 1168

என்ற திருக்குறளால் அழிப்பும் அருளலின் (சங்கராமும்) அநுக்கிரகத்தின் பொருட்டே எனக் கூறுதலானும்.

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். 134

என்ற திருக்குறளால் நான்மறையை உடம்படலானும்,

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்கநெறிநின்றார் நீடுவாழ் வார். 6

என்ற திருக்குறளால் சிவாகமத்தை உடம்படலானும்,

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்நின்றது மன்னவன் கோல். 543

குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்வடுவன்று வேந்தன் தொழில். 549

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்களைகட் டதனொடு நேர். 550

என்ற திருக்குறள்களால் சாதி (வருண) பேதங்களைக் கூறுதலானும்,

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்நல்லாற்றின் நின்ற துணை. 41

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றிற் புறத்தாற்றின்போஒய்ப் பெறுவது எவன் 46

அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்பிறன்பழிப்ப தில்லாயின் நன்று. 50

வேண்டின் உண்டாகத் துறக்க துறந்தபின்ஈண்டுஇயற் பால பல. 342

தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கிவலைப்பட்டார் மற்றை யவர். 348

என்ற திருக்குறள்களால் நிலைகள் ‘ஆச்சிரம’ பேதங்களை உடம்படலானும்,

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவைநாடி இனிய சொலின் 96

என்ற திருக்குறளால் கன்ம பேதங்களாகிய நல்வினை தீவினைகளைக் கூறுதலானும்,

ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்எண்ணின் தவத்தான் வரும். 264

வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்ஈண்டு முயலப் படும். 265

என்ற திருக்குறளால் எடுத்த பிறப்பின் (திருஷ்ட ஜன்ம) போக்கிய கன்மமும்,

சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்இம்மையும் இன்பந் தரும். 98

என்ற திருக்குறளால் இம்மை மறுமைப் பிறப்புக்களின் (திருஷ்டாதி திருஷ்ட ஜன்ம) போக்கிய கன்மமும்,

தவமுந் தவமுடையார்க்கு ஆகும் அவமதனைஅஃதிலார் மேற்கொள் வது. 262

என்ற திருக்குறளால் தவப் பிறப்பின் (அதிருஷ்ட ஜன்ம) போக்கிய கன்மமும் உண்டெனக் கூறதலானும்.

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகைபொறுத்தானோடு ஊர்ந்தான் இடை. 37

இலர்பல ராகிய காரணம் நோற்பார்சிலர்பலர் நோலா தவர். 270

என்ற திருக்குறள்களால் கன்ம பேதத்தால் போக பேதங் கூறுதலானும்,

எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகைவீயாது பின்சென்று அடும். 207

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னாபிற்பகல் தாமே வரும். 319

துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பாலஊட்டா கழியு மெனின். 378

எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்வேறாகும் மாந்தர் பலர். 514

என்ற திருக்குறள்களால் கன்ம பலன்கள் அனுபவமானது நிச்சயமென்று கூறுதலானும்,

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடிதொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது. 377

என்ற திருக்குறளால் இறைவனே கன்ம பலனைக் கொடுப்பனெனக் கூறுதலானும்,

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவைநாடி இனிய சொலின் 96

என்ற திருக்குறளால் ஒரு வினைக்கு மற்றொரு வினையால் கூறுதலானும்,

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றதுபொன்றுங்கால் பொன்றாத் துணை. 36

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்வாழ்நாள் வழியடைக்குங் கல். 38

என்பது முதலிய திருக்குறள்களால் கடமைகளைச் (தருமத்தைச்) செய்ய வலியுறுத்தலானும்,

இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்துணைத்துணை வேள்விப் பயன். 87

உதவி வரைத்தன்று உதவி உதவிசெயப்பட்டார் சால்பின் வரைத்து. 105

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்கொள்வர் பயன்தெரி வார். 104

என்ற திருக்குறள்களால் அறத்துக்குத் தக்கார் தகாதாரை (தருமத்துக்குப் பாத்திரா பாத்திரத்தை ) உடம்படலானும்,

இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்துணைத்துணை வேள்விப் பயன். 87

அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்உயிர்செகுத் துண்ணாமை நன்று. 259

செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்ஆன்றாரோ டொப்பர் நிலத்து. 413

என்ற திருக்குறள்களால் வேள்வியை உடம்படலானும்,

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு. 204

உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ணஅண்ணாத்தல் செய்யாது அளறு. 255

அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்உயிர்செகுத் துண்ணாமை நன்று. 259

பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சிஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு. 252

என்ற திருக்குறள்களால் உயிரிரக்கம் கட்டாயமானது ( சீவகாருணியம் அவசியம்) என்றும், வேள்வியினும் சிறந்த தென்றுங் கூறுதலானும்,

அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்தஇன்னா உலகம் புகல். 243

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்குஇவ்வுலகம் இல்லாகி யாங்கு. 247

என்ற திருக்குறள்களால் வீட்டுலகத்தை (மோட்ச லோகத்தை) அடைய உயிர்களிடத்து அருள் பாலித்தல் கட்டாயம் (அவசியம்) எனக் கூறுதலானும்,

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்பண்புடை மக்கட் பெறின். 62

தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்தம்தம் வினையான் வரும். 63

குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்நாணுடையான் சுட்டே தெளிவு. 502

தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறைதீரா இடும்பை தரும். 508

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்உண்பதூஉம் இன்றிக் கெடும். 166

என்ற திருக்குறள்களால் ஒருவன் செய்த வினை அவனைச் சார்ந்தார்க்கும் ஆகும் எனக் கூறுதலானும்,

யான்எனது என்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்குஉயர்ந்த உலகம் புகும். 346

என்ற திருக்குறளால் தேவலோகங்களுக்கு அப்பாற்பட்டு மேலுள்ளது முத்தியுலகம் எனக் கூறுதலானும்,

பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்மருளானாம் மாணாப் பிறப்பு. 351

என்ற திருக்குறளால் ‘நித்தியா நித்திய வஸ்து விவேகம்’ கூறுதலானும்,

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்அதனின் அதனின் இலன். 341

யான்எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்குஉயர்ந்த உலகம் புகும். 346

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்பற்றுக பற்று விடற்கு. 350

இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கிமாசறு காட்சி யவர்க்கு. 352

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்மற்றீண்டு வாரா நெறி. 356

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றதுவேண்டாமை வேண்ட வரும். 362

இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்துன்பத்துள் துன்பங் கெடின். 369

ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையேபேரா இயற்கை தரும். 370

உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்வரனென்னும் வைப்பிற்கோர் வித்து. 24

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்வகைதெரிவான் கட்டே உலகு. 27

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்எழுமையும் ஏமாப் புடைத்து. 126

அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்நன்குடையான் கட்டே தெளிவு. 513

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்சுடச்சுட நோற்கிற் பவர்க்கு. 267

தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனையமன்னுயி ரெல்லாந் தொழும். 268

என்ற திருக்குறள்களால் முத்தியடைதற்குரிய சிறந்த காரணங்களை (சாதனங்களை)க் கூறுதலானும்,

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்நிலமிசை நீடுவாழ் வார். 3

என்பது முதலிய திருக்குறள்களால் மனத்தாற் செய்யப்படும் வழிபாட்டையும்,

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. 5

என்ற திருக்குறளால் வாக்காற் செய்யப்படும் வழிபட்டையும்,

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்நற்றாள் தொழாஅர் எனின். 2

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்தாளை வணங்காத் தலை. 9

என்ற திருக்குறள்களாற் காயத்தாற் செய்யப்படும் வழிபாட்டையும் கூறுதலானும்,

சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்சார்தரா சார்தரு நோய். 359

காமம் வெகுளி மயக்கம் இவ்முன்றன்நாமம் கெடக்கெடும் நோய். 360

இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கிமாசறு காட்சி யவர்க்கு. 352

என்ற திருக்குறள்களால் பிறவி(பெத்த) நீக்கமும் முத்திப் பயனுங் கூறுதலானும்,

விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்முயக்கற்றம் பார்க்கும் பசப்பு. 1186

என்ற திருக்குறளால் முத்தியிலும் முப்பொருளும் முதல்வன் உபகாரமும் உண்டென்று கூறுதலானும்,

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்இறைவன் அடிசேரா தார். 10

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்நிலமிசை நீடுவாழ் வார். 3

என்ற திருக்குறள்களால் அடிசேர் முத்தியாகிய சித்தாந்த முத்தியைக் கூறுதலானும், ‘திருவள்ளுவ நாயனார் சித்தாந்த சைவர்’ என்பது தேற்றம்

__________________

Guru

Status: Offline
Posts: 24788
Date:
Permalink  
 
திருக்குறளும் திருஞானசம்பந்தர் தேவாரமும்

வேதம்‘செய்யாமொழிக்கும் திருவள்ளுவர் மொழிந்த பொய்யா மொழிக்கும் பொருள் ஒன்றே” திருவள்ளுவமாலை, செய்யுள், 23) என்று வெள்ளிவீதியார் கூறுகின்றார். இங்குச் ‘ செய்யாமொழி என்றது வேதத்தைக் குறிக்கும். 
வேதமும், திருக்குறளும் பொருளால் ஒன்றே என உணர்த்தப்படுவதால், ஆன்றோர்கள் திருக்குறளை ‘உத்தரவேதம்” என அழைக்கலாயினர். பின்தோன்றிய வேதம் எனப் பொருள் ( உத்தரம் – பின்).சேக்கிழார் பெருமான் திருஞானசம்பந்தரை ‘வேதம் தமிழால் விரித்தார்” (திருஞானசம்பந்தர், செ. 289) எனப் போற்றுகிறார்.

எனவே திருஞானசம்பந்தர் தேவாரமும் ‘தமிழ்வேதம்” எனப் போற்றப்படும் சிறப்புடையது என்பது புலனாகும்.எழுதுமறை எழுதுமறை வேதம் ஏட்டில் எழுதப்படாது வாய்மொழியாகவே ஒதப்பட்டு வந்த காரணத்தினால் அதனை ‘எழுதாக்கிளவி” என அழைப்பார்.

திருக்குறளைக் கோதமனார் என்னும் புலவர்,‘ஆற்றல் அழியும் என்று அந்தணர்கள் நான்மறையைப்போற்றி உரைத்து ஏட்டின் புறத்து எழுதார் – ஏட்டெழுதிவல்லுநரும் வல்லாரும் வள்ளுவனார் முப்பாரைச்சொல்லிடினும் ஆற்றல் சோர்வின்று”(திருவள்ளுவமாலை, செ. 15)என்று கூறுவதால் திருக்குறள் எழுதுமறை எனப் போற்றப் படுகின்றது.
சேக்கிழாரும் திருஞானசம்பந்தரை, ‘வண்டமிழால் எழுதுமறை மொழிந்த பிரான்” (திருஞா. புராணம், செ. 260) என்று போற்றவதால் திருஞானசம்பந்தர் தேவாரமும் எழுதுமறை என ஆன்றோர்களால் போற்றப்பட்டு வருகின்றது.
திருஞானசம்பந்தர் தேவாரத்தில் திருக்குறள் மேற்கோள்களாகப் பல இடங்களில் எடுத்தாளப்பட்டுள்ளன.முன்னோர் கூறிய பொருளை அவர் தாம் சொல்லாமல் எடுத்துக் கூறுதலே மேற்கோள் எனப்படும்.

.திருவள்ளுவர் இறைவனை அகர எழுத்துக்கு ஒப்பிட்டு,

‘அகர முதல எழுத்தெல்லாமல் ஆதிபகவன் முதற்றே உலகு” (கடவுள் வாழ்த்து, 1)என்று கூறுகிறார். 
திருஞானசம்பந்தர்,‘அகரமுதலானை அணி ஆப்பனூரானை” (1:88:5) என்று கூறுகின்றார்.
எண்ணும் எழுத்தும் கண் எண்ணும் எழுத்தும் கண்‘எண் என்ப ஏனை ஏழுத்தென்ப இவ்விரண்டும்கண் என்ப வாழும் உயிர்க்கு” (குறள், 392)என்கின்றார் வள்ளுவர். 
திருஞானசம்பந்தரும்,‘எண்ணும் ஒரெழுத்தும் இசையின் கிளவி தேர்வார்கண்ணும் முதலாய கடவுள்” (2:170:4)என்கின்றார்….

அருளாளர்கள் தம் செல்வத்தை வறியவர்கட்குக் கொடுத்து, அதனால்அவர்கள் அனுபவிக்கும் இன்பத்தினைக் கண்டு தாமும் மகிழ்வர். இவ்வாறு ஈவதால் எய்தும் இன்பத்தினை ‘ஈத்துவக்கும் இன்பம்” என்பர்.தமது செல்வத்தைச் சேர்த்து வைத்துப் பின் அதனை இழந்து போகின்ற கொடியவர், வறியவர்க்குக் கொடுத்து அவர்கள் மகிழ்வதால் தமக்கு உண்டாகும் இன்பத்தை அறிய மாட்டார்கள்.

'‘ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமைவைத்திழக்கும் வன் கணவர்” (குறள், 228) என்கின்றார் வள்ளுவர்.
ஈத்துவக்கும் இன்பத்தைத் திருஞானசம்பந்தர்‘ இன்மையால் சென்றிரந்தார்க்கு இல்லை என்னாது ஈத்துவக்கும்தன்மையார் ஆக்கூரில் தான் தோன்றி மாடமே” (2:178:9)என்று ஆக்கூர் அருளாளர்களின் ஈகைச் சிறப்பைப் போற்றும்போது குறிப்பிடுகின்றார்.

சலத்தால் பொருள் செய்யாமை: சலத்தால் பொருள் செய்யாமை: குற்றமற்ற தம்குலத்து மரபோடு ஒத்து வாழக் கருதுபவர்கள் வறுமை வந்துற்றபோதும், தம் குலத்துக்குப் பொருந்தாத தொழில்களைச் செய்யார். இதனை வள்ளுவர்
,‘சலம் பற்றி சார்பில் செய்யார் மாசற்றகுலம் பற்றி வாழ்தும் என்பார்” (குறள், 956)என்கின்றார். தீயவழியில் பொருள் ஈட்டக்கூடாது என்பதை ஒமாம்ப+ர் சான்றோர் செயலால்,‘ சலத்தினால் பொருள்கள் வேண்டுதல் செய்யாத் தன்மையார் நன்மையால் மிக்க உலப்பில் பல்புகழார் ஓமாம்புவிய+ர்” (3:380:5)என ஞானசம்பந்தர் அறிவுறுத்துகின்றார்.

திருக்குறளில் காணப்படும் சொல்லாட்சிகள் சில, எப்பொருளில்திருக்குறளில் பயன்படுத்தப்பட்டுள்ளனவோ அப்பொருளிலேயே அச்சொற்கள் திருஞானசம்பந்தர் தேவாரத்திலும் பயிலப்பட்டுள்ளன.

ஒரு சில எடுத்துக்காட்டுக்கள் இக்கட்டுரையில் காட்டப்படுகின்றன.

ஈரம்—- அன்பு 
அன்போடு கலந்து வஞ்சனை இல்லாது அறத்தை உணர்ந்தாரது வாயினின்று வரும் சொற்களே இன்சொற்கள் எனப்படும்.
‘இன்சொலால் ஈரம் அளைஇப் படிறு இலவாம்சொற்பொருள் கண்டார் வாய்ச்சொல்” (குறள். 91)என்கிறார் வள்ளுவர். 
இங்கு ‘ஈரம்” என்பது அன்பு எனப் பொருள்படும்.
‘ஈரம் ஏதும் இலனாகி எழுந்த இராவணன் (2:141:8)என்ற திருஞானசம்பந்தர் பாடலடியில் ‘ஈரம்” என்ற சொல் அன்பு என்ற பொருளில் பயிலப்பட்டுள்ளதைக் காண்க.

படிறு —- பொய் 
கள்ள மனமுடையானின் பொய் ஒழுக்கத்தைப் பிறர் அறியவில்லை என்றாலும். அவனது உடம்பில் கலந்துள்ள ஐந்து பதங்களும் கண்டு தம்முள்ளே ஏளனமாகச் சிரிக்கும்.
‘வஞ்சமனத்தான் படிற்று ஒழுக்கம் ப+தங்கள்ஐந்தும் அகத்தே நகும்” (குறள்.271)
படிற்று ஒழுக்கம் என்பதில் ‘படிறு” என்றது பொய் எனப் பொருள்படும்.படைக்கலங்களை ஏந்திய எட்டுத் திருக்கரங்களை உடைய பெருமான் பொய்யாகப் பலியேற்பதுபோலப் பிரமக பாலத்தைக் கையில் ஏந்தி வீடுகளின் வாயில்களில் சென்று பலியேற்றுண்ணும் கள்வன் என்ற பொருளில்.
‘படையிலங்கு கரம் எட்டுடையான் படிறாகக் கலனேந்திக்கடையிலங்கு மனையில் பலி கொண்டு உணும் கள்வன்” (1:3:2)என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். 
உலகமெல்லாவற்றையும் தமக்கு உடைமையாகக் கொண்ட இறைவன் பலி கொண்டு உண்டான் என்பது பொருந்தாது ஆதலின் அஃது அவருக்கு விளையாட்டு@ உண்மையன்று என்பது பொருள். இங்குப் ‘படிறு” என்றது பொய் எனப்பொருள்படும்.

உடுக்கை – ஆடை
‘உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கேஇடுக்கண் களைவதாம் நட்பு” (குறள். 788)
என்ற குறளில் உடுக்கை என்பது ஆடையைக் குறிக்கும்.
உணவை உண்டு ஆடையைக் கைவிட்ட சமணர்களை. 
‘உண்டு உடுக்கை விட்டார்கள்”(3:295:9) என்று சம்பந்தர் குறிப்பிடுவதில் உடுக்கை என்பது ஆடை எனப்பொருள்படுதல் காண்க.

வெறி நாற்றம் —- நறுமணம் 
‘முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்வேல் உண்கண் வேய்த்தோள் அவட்கு” ( குறள் 1113) 
மூங்கில் போலும் தோள்களை உடையளுக்கு உடல்நிறம். தளிர் நிறமாகும். பற்கள்முத்தாகும். இயல்பான மணம் நறுமணமாய் இருக்கும். மையுண்ட கண்கள் வேற்படையாகும்என்பது பொருள். இக்குறளில் ‘வெறிநாற்றம்” என்றது மணம் நறுமணத்தைக் குறித்தது.
‘வெறியார் மலர்த் தாமரையான்” (1:39:9)‘நாற்றமலர் மிசை நான்முகன்” (1:116:9)என்ற திருஞானசம்பந்தர் பாடலடிகளில் ‘வெறி, நாற்றம்” என்பன நறுமணம் எனப்பொருள்படுதல் காண்க.

பயனில சொல்லாமை 
பயனில்லாத சொற்களைப் பலமுறையும் பேசுகின்றவனை மனிதன் என்று சொல்லாதீர்கள், அவன் மக்களுள் பதர் எனக் குறிப்பிடுகின்றார். வள்ளுவர் (குறள்,196).‘பேச்சினால் உனக்கு ஆவது என் பேதைகாள்” (2:142:2) என்பதால், சிவசம்பந்தமில்லாத அவப்பேச்சால் ஒரு பயனுமில்லை. அவ்வாறு பேசுபவர்கள் அறிவிலிகள் என அறிவுறுத்துகின்றார் திருஞான சம்பந்தர்.
‘சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்கசொல்லிற் பயனிலாச் சொல்” (குறள், 200) 
என்று வள்ளுவர் கூறுகிறார்.
‘பெற்றம் அமரும் பெருமானை அல்லால்பேசுவது மற்றோர் பேச்சிலோமே” (1:5:9)
என்பதால் மெய்யுணர்வு பெற்றவர்கள் இறைவனைப் பற்றிய பேச்சு அல்லாமல் வேறு பயனில்லாத வீண்பேச்சுப் பேசமாட்டார் எனத் திருஞானசம்பந்தர் அறிவுறுத்துகிறார்.

சிவநெறிக்கொள்கைகள் கூறும் இறைவன், உயிர்,உலகம் என்ற முப்பொருட்கள் பற்றிய கருத்துக்களில் இவ்விருநூல்களுக்குமிடையேயானஒப்புமையான கருத்துக்கள் சில இப்பத்தியில் ஆராய்ந்து கூறப்படுகின்றன. வள்ளுவர் இறைவனை ‘ஆதிபகவன்” (கடவுள் வாழ்த்து,) எனக் குறிப்பிடுகின்றார். திருஞானசம்பந்தரும்,‘ஆதி பாதமே ஓதி உய்ம்மினே”‘பரமன் பகவன் பரமேச்சுவரன் பழனநகராரே” (1:67:4)என இறைவனைக் குறிப்பிடுகின்றார்.
வள்ளுவர் இறைவனை ‘வாலறிவன்” (கடவுள் வாழ்த்து, 2) எனக் குறிப்பிடுகின்றார்.வாலறிவன் என்றால் தூய அறிவினன், நிறைந்த ஞானமுடையவன் எனப் பொருள்.திருஞானசம்பந்தரும், 
‘ஞானத்திரளாய் நின்ற பெருமான்” (1:69:3) என இறைவனைப்போற்றுகின்றார்.
திருவள்ளுவர் இறைவன் அன்பர்களின் நெஞ்சமாகிய தாமரைமலரில் வீற்றிருப்பவன் என ‘மலர்மிசை ஏகினான்” (குறள், 3) என குறிப்பிடுவதும், திருஞானசம்பந்தர் ‘மலர்மிசை யெழுதரு பொருள்” (1:21:5) என்று இறைவனப் போற்றுவதும் ஒப்புநோக்கத்தக்கது.
திருவள்ளுவர் இறைவனைப் ‘பொறிவாயில் ஐந்தவித்தான்” (குறள், 6) என்று குறிப்பிடுவது போலத் திருஞான சம்பந்தரும்,’புலன்கள் வென்றவன் எம் இறைவன்” (3:319:7) என இறைவனைப் போற்றுகின்றனர்.
இறைவனுக்கு ஒப்பாக எவரையும் கூற முடியாது ஆதலால் வள்ளுவர், ‘தனக்குவமை இல்லாதவன்” (குறள், 7) என்று குறிப்பிடுவது போலத் திருஞானசம்பந்தரும் 
‘தன்னேர்பிறரில்லான்” (2:198:3) எனப் போற்றுகின்றார்.
இறைவன் அறக்கடலாக விளங்குவதை வள்ளுவர் ‘அறவாழி” ((குறள், என்கின்றார்.திருஞானசம்பந்தரும் இறைவன் அறவடிவினன் என்பதை அறிவுறுத்துகின்றார் (1:9:2, 2:199:11).

இறைவனை ‘எண்குணத்தான்” (குறள், 9) என வள்ளுவர்குறிப்பிடுகின்றார். தன்வயத்தனாதல் (சுதந்தரமுடையவன்) தூயஉடம்பினனாதல்,இயல்பாகவே பாசங்களை நீக்கியவன், இயற்கை உணர்வினன், முற்றுணர்வினன்,பேரருளுடையவன், முடிவிலாற்றலுடையவன், வரம்பிலின்பமுடையவன் என எண்குணங்களைப்பரிமேலழகர் குறிப்பிடுகின்றார். திருஞானசம்பந்தரும் இறைவன் எண்குணத்தினன் எனக்குறிப்பிடுகின்றார் (1:131:1)

இவ்விருநூல்கட்கும் உயரிகள் பல என்பதில் உடன்பாடு உண்டு (குறள், 322:திருஞானசம்பந்தர் தேவாரம், 1: 53:2, 1:63:4). உயிர் இவ்வுடம்பிற்கு வேறாய் உள்ளது என்பதும், அது தான் செய்யும் வினைக்கீடாக வேறுவேறு பிறப்புக்களுள் புகுந்து உழன்று வரும் என்பது வள்ளுவர் கருத்து. 
அவர்,‘குடம்பை தனித் தொழியப் புட்பறந்தற்றே உடம்போடு உயிரிடை நட்பு” (குறள், 338) என்கிறார். இதனால் புள் (பறவை),குடம்பையின் (முட்டை அல்லது கூடு) வேறாயினாற்போல உயிர் உடம்பின் வேறாயுள்ளதுஎன்பது பெறப்படும். திருஞானசம்பந்தரும் ‘உடல் வரையின் உயிர்” (3:363:1) எனஉடல்வேறு, உயிர்வேறு என உணர்த்துகிறார்.
‘உறங்குவது போதும் சாக்காடு உறங்கிவிழிப்பது போலும் பிறப்பு” (குறள், 339)என்பதால் உறக்கமும், விழிப்பும் மாறி மாறி வருதல் போல, உயிர்கட்கு இறப்பும், பிறப்பும்மாறி மாறிவரும் என மறுபிறப்பு உண்மை பெறப்படும். திருஞான சம்பந்தரும் மறுபிறப்புபற்றிக் கூறுகின்றார் (2:182:1, 3:353:9).

ஆணவம், கன்மம், மாயை முதலியன பாசம் என்ற சொல்லால் சிவநெறிக்கொள்கைகளில் குறிப்பிடப்படும்.
‘யான எனது என்னும் செருக்கு” (குறள், 346) என்பதில்‘செருக்கு” என்றது ஆணவத்தைக் குறிக்கும். இவ் ஆணவமே உயர்கள் இறைவனை உணரா வண்ணம் அவற்றின் அறிவை மறைக்கின்றது. இந்த மறைத்தல் சக்தி காரணமாக அஃது இருள் எனப்படும். 
ஆணவமலச் சேர்க்கை காரணமாக உயிர்கள் செய்யும்செயல்களே வினை எனப்படும். இச்சிவநெறிக் கொள்கையை 
‘இருள்சேர் இருவினை” (குறள்,5) என்ற தொடர் உணர்த்துவது காண்க. திருஞானசம்பந்தரும் ‘ஊனத்திருள்” (1:38:3) என ஆணவத்தையும், ‘நல்வினை” (2:207:11), தீவனை (2:207:11) என இருவினைகள் பற்றியும் குறிப்பிடுகின்றார்.

‘கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை” (குறள், 9)எனத் தலை முதலிய உறுப்புகள் இறைவனை வணங்காவிடில் காணாத கண்போல, கேளாதசெவிபோல, மற்றும் தம் தம் புலன்களைக் கொள்ளாத பிற பொறிகள் போலப்பயனற்றவையாய்க் குற்றமுடையவனவாம் என வள்ளுவர் கூறுகிறார்.
‘ஆமாத்தூர் அம்மானைக் காணாத கண்ணெல்லாம் காணாத கண்களே” (2:180:4) 
ஆமாத்தூர் அம்மானைக் கூறாத நாவெல்லாம் கூறாத நாக்களே” (2:180:7)
‘ஆமாத்தூர் அம்மானைக் கேளாச் செவியெல்லாம் கேளாச் செவிகளே”(2:180:8) என்ற திருஞானசம்பந்தரின் தேவார அடிகள் முற்கூறிய திருக்குறள் கருத்துடன் ஒப்புடையதாய் விளங்குவதைக் காண்க.

இறைவனைப் புகழ்ந்து போற்றுபவர்களை இருவினைகள் வந்தடையா.
‘இருள்சோ இருவினையும் சேரா இறைவன்பொருள் சேர் புகழ்புரிந்தார் மாட்டு” (குறள்,5)என்கிறார் வள்ளுவர்.
திருஞானசம்பந்தரும்,‘நல்லூர்ப் பெருமானைப் பாடும் அடியார்கட்குஅடையா பாவமே” (1:86:3) என்கின்றார்.

ஹை... அப்படின்னா... வள்ளுவர் சைவ சமய ஆளுதான் போல...

முடிவுக்கு வந்தாச்சா?? அதெப்படி?? இன்னும் இருக்குல..

__________________

Guru

Status: Offline
Posts: 24788
Date:
Permalink  
 
 பகுதி - 4 ( இறுதிப்பகுதி )

இனி, திருக்குறளிலும், திருமந்திரத்திலும், இருக்கும் சில ஒற்றுமைகளையும வேதம் சொல்வது பற்றியும் காண்போம்.

1. “ஆரும் அறியார் அகாரம் அவனென்று.” – திருமந்திரம்

அகரம் முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன்.” – திருக்குறள்

2. “அறிவுடையைார் நெஞ்சொடு ஆதிபகவனும்.” – திருமந்திரம்

“ஆதிபகவன் முதற்றேயுலகு.” – திருக்குறள்

3. “போதுகந் தேறும் புரிசடை யானடி.” – திருமந்திரம்

“மலர்மிசை ஏகினான்.” – திருக்குறள்

4. “பொருளதுவாய் நின்ற புண்ணியன்.” – திருமந்திரம்

“இறைவன் பொருள்சேர் புகழ் புரிந்தார்.” – திருக்குறள்

(பொருள்சேர் இறைவன் புகழ் புரிந்தார்)

5. “எண் சத்தி தூய்மையும்.” – திருமந்திரம்

“எண் குணத்தான்.” – திருக்குறள்

6. “தன்னை யொப்பார் ஒன்றுமில்லாத் தலைமகன்.”- திருமந்திரம்

“தனக்கு உவமை யில்லாதான்.” – திருக்குறள்

7. “அறவாழி அந்தணன் ஆதி பராபரன்.” – திருமந்திரம்

“அறவாழி அந்தணன் தாள்.” – திருக்குறள

8. “விளைக்கும் தவம் அறம் மேல் துணை யாமே.”- திருமந்திரம்

“தானம் தவம் இரண்டும்.” – திருக்குறள்

9. “முழக்கி எழுவன மும்மத வேழம்

அடக்க அறிவெனும் தோட்டியால் வைத்தேன்.”- திருமந்திரம்

“உரன் என்னும் தோட்டியால் ஓர் ஐந்தும் காத்தல்.” – திருக்குறள்

10. “ஆமே சுவை ஒளி யூறோசை நாற்றம்.” – திருமந்திரம்

“சுவை ஒளி யூறோசை நாற்றமென் றைந்தின்.” – திருக்குறள்

11. “அந்தண்மை பூண்ட அறவோர் ஆகமத்துச்
சிந்தைசெய் அந்தணர் சேரும் செழும்புவி.” – திருமந்திரம்
“அந்தணர் என்போர் அறவோர்.” – திருக்குறள்.

இன்னாது... வள்ளுவர் சமய சார்பற்ற சித்தரான்னு தோணுதா??

இருங்க... இருங்க... இன்னும் ஒன்னு இருக்குது...

திருக்குறளின் முதலதிகாரம் கடவுள் வாழ்த்து. அதில் இறைவனைக் குறிக்க எட்டு பெயர்கள் கூறப்படுகின்றன. 
ஆதிபகவன்(1), 
வாலறிவன்(2), 
மலர்மிசை யேகினான்(3), 
வேண்டுதல் வேண்டாமையிலான்(4), 
இறைவன்(5), 
பொறிவாயிலைந்தவித்தான் (6), 
தனக்குவமையில்லான் (7), 
அறவாழியந்தணன்(8) எனும் இவ்வெட்டுப் பெயர்களும் இறையாகிய பதிக்கு வேதாகமங்கள் கூறும் தன்வயம், இயற்கையறிவு, முற்றுணர்வு, இயல்பாகவே பாசங்களினீங்குதல், பேராற்றல், தூயவுடம்பு, வரம்பிலின்பம், பேரருள் எனும் எட்டுக் குணங்களை முறையே உணர்த்துவனவாகும்.
கீதையில்...
भूमिरापोऽनलो वायुः खं मनो बुद्धिरेव च।
अहङ्कार इतीयं मे भिन्ना प्रकृतिरष्टधा॥४॥

பூ⁴மிராபோऽநலோ வாயு: க²ம் மநோ பு³த்³தி⁴ரேவ ச|
அஹங்கார இதீயம் மே பி⁴ந்நா ப்ரக்ருதிரஷ்டதா⁴ ||7-4||

மண், நீர், தீ, காற்று, வான், மனம், மதி, அகங்காரம், இவ்வெட்டு வகையாக என் இயற்கை பிரிந்து தோன்றுகிறது.

இறைவன் ‘எண்குணத்தான்’ ஒன்பதாவது திருக்குறளும் கூறுகின்றது. இந்த இலக்கணம் இறைக்கு வேறெங்கும் கூறப்படவில்லை.

பிறப்பைப் ‘பெருங்கடல்’ என்றது, அதைக் கடக்கப் புணை இறைவனது திருவடி என்றது, (10), 
அவிச்சை காரணமாகப் பிறப்புத் தோன்றலின் ‘ பிறப்பைப் பேதமை’ என்றது, (358), 
மக்கள் தேவர் நரகர் விலங்கு பறவை முதலிய எந்தப் பிறப்பும் துன்பமேயாகையால் பிறப்பினை ‘மாணாப் பிறப்பு என்றது (351)
பிறப்புத் துன்பமாதலறிந்து அப்பிறப்பே வேண்டாமென ‘வேண்டுங்கால் பிறவாமை வேண்டும்’(362) என்றது, 
‘தூய்மை அவாவின்மை,(364), 
உயிர் இருவினையை ஈட்டுவதற்கும் அதனால் பிறப்புண்டாதற்கும் காரணம் இருள் என்னும் ஆணவமலம் அதனைப் போக்கிக் கொள்ள இறைவனின் புகழ்சேர் புகழை இடைவிடாது சிந்திக்க வேண்டும் (5)
என்றது இவை போன்றவையெல்லாம் வேத சிவாகமங்களில் பேசப்பட்ட பொருள்களாகும்.

திருக்குறள் ‘தாமைரைக் கண்ணா னுலகு’(1103), 
‘புத்தேள் நாடு’(1323),
‘அளறு’(நரகம் 255) முதலிய உலகங்களையும் ,
’அடியளந்தான்’
(திரிவிக்ரமன் 610)’
தாமரையினாள்’, ‘முகடி’(617), 
தென்புலத்தார்’ (43), என்னும் இவை போன்ற வேதாகமக் கருத்தாக்கங்கள் திருக்குறளில் செறிந்துள்ளன.
திருமகளைச் செய்யாள் என்பது தமிழ்வழக்கு. முகமினியனாய்த் தக்க விருந்தினரைப் பேணுவாரது இல்லின்கண் செய்யாளாகிய திருமகள் 'அகனமர்ந்து உறைவாள்' (84) எனக் கூறிய திருவள்ளுவர், 
வேதநெறி பற்றிச் செய்யாளுக்கு மாறுபட்ட இயல்புடைய மூத்தாளையும் கூறுகிறார். சீதேவிக்கு மூத்தவள் மூதேவி. அவளை ‘ஜ்யேஷ்டா’ என வடமொழியிலும், அதனைத் தமிழ் எழுத்தில் ‘சேட்டை’ என்றும் கூறுவர். “முன்னம் தோன்றலால் முகடியைச் சேட்டை என்றனர்” (லிங்கபுராணம்2-5-4) தமக்கை எனப் பொருள்படும் ‘ஜ்யேஷ்டா’ என்னும் சொல்லை மொழிபெயர்த்துத் திருவள்ளுவர்,
“அவ்வித் தழுக்கா றுடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்” (167) என்றார். தவ்வை மூத்தவள்.
“அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு”
என்னும் முதற்குறளில் வேதாகமத் தாக்கம் பெரிதும் காணலாம். வேதங்களின் ஆறங்கங்களில் ஒன்று தருக்கம். முதற்குறள் தருக்க முறைப்படி முதற்கடவுளது உண்மையை நிறுவுகின்றது.
தருக்கத்தில் ஒருபொருளை(வஸ்து)ப் பெயர்(உத்தேசம்) கூறிய பின்னரே மேற்கோள் ஏது உதாரணம் முதலியவற்றல் நிறுவ வேண்டும் என்பது விதி. திருவள்ளுவர் ஆதிபகவன் என்று தாம் சாதிக்கப் போகும் பொருளுக்கு முதலில் பெயர் கூறினார். உலகம் ஆதிபகவனாகிய முதலை யுடைத்து என்று மேற்கோள் கூறினார். அகரமுதல வெழுத்தெல்லாம் என்று ஏது கூறினார். காணப்பட்ட உலகத்தாற் காணப்படாத கடவுட்கு உண்மை கூறும் அனுமானமும் இதனால் உணர்த்தினார்.

ஆதி பகவன் என்னும் இரு வடசொல்லும் சேர்ந்த தொகைச் சொல்.
இச்சொல் இருபெயரொட்டுப் பண்புத்தொகை யென்றும் இது வடநூன்முடிபு என்றும் பரிமேலழகர் கூறினார்.
பகவன் என்பது ‘பகவான்’ என்னும் வடசொல் என்றும், பகவான் என்பது சிவனுக்குப் பெயர் என்றும், அதர்வசிகோபநிஷத், “யோவை ருத்ர: ஸ பகவான்” என முப்பது முறை கூறுகின்றது. சங்கார காரணனாகிய சிவனே உலகத்துக்கு ஆதி என்பது இதனால் உணர்த்தப்பட்ட பொருளாம்.
“சங்கரோ பகவான் ஆத்யோ ரரட்ச ஸகலா: ப்ரஜா:
மஹேசோ பகவான் ஆதி தேவ:”
எனச் சரபோபநிஷதம் கூறுகின்றது. 
அதாவது சங்கரனுக்குத் தவிர ஏனையோருக்கு இறைமைக் குணங்கள் இல்லை. அவனே பகவான். எனவே ‘மஹேசனே பகவான், ஆதி தேவன்’ என்பது இதன் பொருள். எனவே ‘ஆதிபகவன்’ என்ற பெயரில் உள்ள ‘ஆதி’ என்பது, இறைமைக் குணங்கள் இலராகிய ஏனைத் தேவர்களை விலக்க வந்த அடை, அதாவது சிவனே முதற்கடவுள் என்றுணர்த்துவது இதன் கருத்தாம்.
சித்தாந்த சைவர்கள் ‘ஆதிபகவன்’ எனுமித்தொடருக்கு ‘ஆதிசத்தியொடு கூடிப் பிரிவின்றி யுள்ளானாகிய சிவன்’ என்று மூன்றாம் வேற்றுமை உடனிகழ்ச்சிப் பொருள் விரித்துப் பொருள்கொள்வர். பதிப்பொருளாகிய ஒருபொருள் சிவமும் சத்தியுமாகத் தாதான்மியத்தால் இருதிறப்பட்டு உலகினை இயக்கி நிற்றல் பற்றி இறைவனை “ஆதிபகவன்” எனும் பெயரால் திருவள்ளுவர் குறித்துள்ளார் எனகொள்ளுதல் பொருந்தும் என்பர். (திருவருட்பயன். 1-2. க. வெள்ளைவாரணம். சமாஜபதிப்பு)
திருவள்ளுவர் வேதங் கூறும் நான்கு வருணங்களை அறிந்தேயுள்ளார். அதில் தமிழ் மரபுக் கேற்றதைத் தழுவிக் கொண்டுள்ளார்.
“மறப்பினு மோத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்” (134)

என்னும் குறளில் ‘பார்ப்பானின் தொழில்களில் ஒன்று வேதங் கற்றல். கற்ற வேதத்தை மறந்தாலும் மீண்டும் கற்று மீட்டுக் கொளலாகும். ஆனால் அவன் தன்னுடைய பிறப்பொழுக்கத்தைக் கைவிட்டால் அழிந்துவிடுவான்’ என்று பார்ப்பனன் தொழிலின் சிறப்பையும், அவன், தன் பிறப்பொழுக்கத்தைக் கைவிடாமையின் சிறப்பையும் ஓதினார்.
பார்ப்பான் என்னும் பெயர் முன்பு மரியாதைக்கு உரியதொன்றாகவே வழங்கியது. இது இருபிறப்பாளன் என்ற பொருளைத் தருவதாகும்.
“பார்ப்பு” என்பது பறவையின் குஞ்சுக்குப் பெயர்.

(“பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற்றிளமை” தொல். பொருள்- மரபியல் சூ559). பறவைக்குஞ்சுக்கு இரண்டு முறை பிறப்புண்டாகும். தாயின் வயிற்றினின்றும் முட்டையாக வெளிவருவது ஒருபிறப்பு. முட்டையினின்றும் குஞ்சாக வெளிவரல் மற்றொரு பிறப்பு. அந்தணர்களுக்கும் இரண்டு பிறவிகள் உண்டு. ஒன்று அன்னையின் வயிற்றினின்றும் வெளிவரல், மற்றொன்று, உபநயனத்தின் பின் உள்ள வாழ்க்கை. ஆதலின் அவர்களை “இருபிறப்பாளர்” என்பர். அதாவது, பறவையின் குஞ்சு போல்பவர் என்ற பொருளில் “பார்ப்பு அன்னவர்” என்பர். ‘பார்ப்பன்னவன்’ என்பதில் உள்ள மெல்லொற்றும் ‘வ’கர உயிர்மெய்யும் கெட்டுப் ‘பார்ப்பனன்’ என நின்றது.

மாணிக்கவாசக சுவாமிகள் குருவாக வந்து ஆண்டு கொண்ட சிவபரம்பொருளை, “பார்ப்பானே” என விளிப்பது அறியத் தக்கது. ( புணர்ச்சிப்பத்து -10 திருவாசகம், சிவக்குடில் விளக்கம்.)
“அந்தணர் நூற்கு மறத்திற்கு மாதியாய்
நின்றது மன்னவன் கோல்” (543)
என்னும் குறளில் அரசசாதியையும் செங்கோலின் மாட்சியையும் கூற வந்த திருவள்ளுவர், முதற்சாதியாகிய சிறப்புடைய அந்தணசாதிக்குரிய வேதத்திற்கும் அறத்திற்கும் மன்னவன் செங்கோலே காரணமாக நின்றது என்றார். சிறப்புடைய அந்தணசாதியைக் கூறி ஏனைய இரண்டுசாதியையும் தழுவிக் கொண்டார்.

“ஆபயன் குன்று மறுதொழிலோர் நூன்மறப்பர்
காவலன் காவா னெனின்” (560)
என்னும் குறளில் அரசன் செங்கோல்முறையினால் உயிர்களைக் காவானாகில் கேடுகளாக அறனில்லாத அந்நாட்டுப் பசுக்களும் பால் குன்றும்; அறுதொழிலோராகிய அந்தணரும் தம்முடைய வேதக் கல்வியை மறந்து விடுவர் என்று கூறுகின்றார்.

இதனால், ‘வேதமும் அறனும் அநாதி; பசுக்கள் பால் குன்றியவழி அவியில்லாது போகும். அவி கொடுத்தற்கு உரியராகிய அந்தணர் வேள்வியின்மையின் வேதக் கல்விக்குரிய மந்திரங்களை ஓதார். வேள்வி நடவாது. ஆதலால் வானம் மழை பொழியாது’ என்று வேள்விக்கும் மழைக்கும் உள்ளதொடர்பினைக் கூறினார்.
இந்தத் தொடர்பைத் தொல்காப்பியமும்,
“அமரர்கண் முடியும் அறுவகையானும்” (தொல். பொருள்81 புறத்திணை 26)
என்று கூறிற்று.

‘அமரர்கண் முடியும் அறுவகையாவது பிறப்பு வகையானன்றிச் சிறப்பு வகையால் தேவர்கண்ணே வந்து முடிதலுடையவாகிய அறுமுறை வாழ்த்தின் கண்ணும்’ என்றும், அந்த ஆறாவன, ’முனிவரும் பார்ப்பாரும் ஆனிரையும் மழையும் முடியுடை வேந்தரும் உலகுமாம்’ என்று நச்சினார்க்கினியர் எடுத்துரைத்தார்.

இச்சூத்திரத்திற்கு பலர் பலவாறு கூறினும் நச்சினார்க்கினியர் கூறியதே பண்டை மரபு தழுவியதாம். திருஞானசம்பந்தசுவாமிகள் தம்முடைய திருப்பாசுரத்தில் இந்த அறுமுறை வாழ்த்தை வலியுறுத்தியுள்ளார்.

‘வாழ்க அந்தணர் வானவ ரானினம்
வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக
ஆழ்க தீயதெல் லாமர னாமமே
சூழ்க வையக முந்துயர் தீர்கவே’ (3-54-1)
என்னும் இவ்வறுமுறை வாழ்த்தில் நச்சினார்க்கினியர் கூறிய முனிவருக்குப் பதில் ‘வானவர்’ இடம்பெற்றுள்ளது.

அரசனது செங்கோலுக்கும் அந்தணர் வேள்விக்கும் மழைக்கும் நாட்டின் வளத்துக்கும் குடிகளின் மகிழ்ச்சிக்கும் உள்ள சங்கிலித் தொடர்பினைச் சமயச்சான்றோர் உடன்பட்டு ஏற்றுக் கொண்டுள்ளனர்.

“வேந்தன் முறைதிறம்பின் வேத விதிதிறம்பும்
ஏந்திழை யார்தம் கற்பும் இல்லறமும் நில்லாவாம்
மாந்தர் பசியால் உணங்க மழைவறந்து
பாந்தள் மூடிக்கிடந்த பாரின்விளை வஃகுமால்”
(பிரமோத்தரகாண்டம்,10- 1)
என எதிர்மறையானும் வலியுறுத்தப்பட்டது.

பராசரருக்கும், மீனவப்பெண் மச்சகந்திக்கும் பிறந்த மாமுனிவர் வேதவியாசர்
திருவள்ளுவர், வேதவேள்வி செய்யும் அந்தணர்களுக்கு இவ்வளவு ஏற்றம் கொடுத்துப் பேசினாலும் பிறப்பால் மட்டுமே அந்தப் பெருமை ஒருவர்க்கு வந்துவிடாது; அதாவது, ‘ஜன்ம பிராமணனை விடக் கன்ம பிராமணனுக்கே ஏற்றம்’ என்பதையும் தெய்வப்புலவர் எடுத்துக் காட்டியுள்ளார்.

“பிறப்பொக்கு மெல்லா வுயிர்க்குஞ் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்” (972)
என்னும் குறளில், திருவள்ளுவர், பெருமையாவது குலத்தினா லறியப்படாதென்றும் அதற்குக் காரணம் இன்னது என்றும் சுட்டிக் காட்டினார்.

இங்குத் தொல்காப்பியம், பொருளதிகாரம், களவியல், 2-ஆம் சூத்திரத்திற்கு இளம்பூரணர், இத்திருக்குறளை மேற்கோள் காட்டி செய்தவுரை ஆன்றோர் கருத்தை நன்கு புலப்படுத்தும்.

“ஒத்த கிழவனும் கிழத்தியுங் காண்ப” என்பது.
ஒப்பு பத்து வகைப்படும். அவை,
“பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டொடு வகையே (மெய்ப்.25)
என்னும் மெய்ப்பாட்டியற் சூத்திரத்துள் கூறிய பத்துமாம்.

அவற்றுள் பிறப்பாவது, அந்தணர், அரசர், வணிகர், வேளாளர், ஆயர், வேட்டுவர், குறவர், நுளையர் என்றாற்போல வருங் குலம். குடிமையாவது அக்குலத்தினுள்ளார் எல்லாருஞ் சிறப்பாக ஒவ்வாமையின் அச்சிறப்பாகிய ஒழுக்கம் பற்றிய குடிவரவைக் குடிமை என்றார்.

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமையான்” (குறள் 972)
எனவே குலத்தின்கண்ணே சிறப்பென்பது ஒன்றுண்டு.
அந்தணர் ,பார்ப்பார் என்பன காரண இடுகுறிப் பெயர். காரணம் குறிக்கும் பொழுது அப்பெயர் அந்தக் காரணத்தை உடைய எல்லாரையும் குறிக்கும். சுட்டப்பட்ட காரணம் அந்தணரிடம் சிறப்பாக விளங்க வேண்டும் என்பது விதி. பிறப்பந்தணர்களிடத்தில் எதிர்பார்க்கப்படும் பண்பு.. இதனைத் திருவள்ளுவர் அளவையியலில்(Logic) கூறப்படும் முக்கூற்று விதியில் (Deductive syllogism) வைத்துக் கூறியுள்ளது அறியத்தக்கது.

எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகுவோர் அறவோர்
அந்தணர் எவ்வுயிரிடத்தும் செந்தண்மை யுடையவர்
ஆதலால் அந்தணர் என்போர் அறவோர்.
மற்றொரு முறையிலும் இதனைக் கூறலாம்.

அந்தணர் என்போர் அறவோர் – இது மேற்கோள்
எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகலான் – இது ஏது.
எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகுவோர் அறவோர். – முடிவு
இதனால், எவ்வுயிருக்கும் செந்தண்மை பூண்டொழுகும் சிறப்பொழுக்கம் அந்தணர்களுக்குப் பிறப்பால் குடிவரவாக வரும் என்பதும், அச்சிறப்பொழுக்கம் இல்லாதவன், பிறப்பால் அந்தணனாயினும் அந்தணன் எனப்படமாட்டான் என்றும், ஏனைய குலத்தில் பிறந்தாலும் செந்தண்மை பூண்டொழுகும் அறவோர் அந்தணர் எனப்படுவாரென்பதும் வள்ளுவனார் கருத்தென்பது பெறப்படும்.

இவ்வாறு வேதவழிச் செல்வதே தமிழ்வேதமாம் திருக்குறள் எனலாம்.
பிறப்பால் மட்டுமே சாதியுயர்வைப் பேசுவாரை வேதமும் இழித்துரைக்கின்றது. ஈண்டு சந்தமறையும் தமிழும் வல்ல பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் கூறுவது கருதத் தக்கது.
“ஸாமவேத வஜ்ரஸூசிகோபநிஷதம் – பிராமணத் தன்மைக்குரியது சீவனன்று, உடம்பன்று, சாதியன்று, கல்வியறிவன்று, கன்மமன்று, தன்மமன்று எனத் திருட்டாந்த வாயிலாக விளக்கிச் சுவானுபவப் பிரம ஞானமுடையவனே பிராமணனென்றோதி இதுவே, சுருதிஸ்ம்ருதி புராணேதிஹாசங்களின் அபிப்பிராயம் என்று முடிவுரை மொழிந்துளது. “
“மஹாபாரதத்து வனபர்வத்து 206ஆம் அத்தியாயங்களிற் பகரப்பட்ட தர்மவியாதரென்னும் வேடரும் அந்தப் பாரதத்திற் பல இடத்துங் கூறப்பட்ட விதுரரென்னுஞ் சூத்திரரும் மகாஞானிகளா யிருந்தனர் என்பதை அறியலாம். இத்திறத்தோரும் பலரே.”

“இன்னோர், பிராமணராகப் பிறந்திருந்த சன்மாந்தரத்தில் ஆர்ச்சித்த ஞானம் அழியாதிருந்ததினாற் பிரமநிட்டராயினரென்று அவர்கள்நிலைக்கொரு போக்குக் காட்டினும் அஃது அத்திறமுள்ளார் இக்காலத்து மிருப்பர், இனி வருங் காலத்துந் தோன்றுவரென்பதையும்; சன்மாந்தரத்தில் ஆர்ச்சித்த அறியாமை அநீதி. அநீதி அழியாம லிருந்தோரே அநீதிகளை யெழுதி வைத்தார், அவற்றைப் பிரமாணமாக வெடுத்துக் காட்டுகின்றாரென்பதையும்; பிரம வித்தைக்கும் பிரமோபாசனைக்கும் உரியோர் பிராமணசாதியிற் பிறந்தவரே யல்லால் இதரரல்லரென் றியம்பிக்கொண்டு கல்வி யறிவுமில்லாதிருப்போரும் அவரொத்தவரே யென்பதையும் நிலைநிறுத்தும்” எனப் பாம்பனடிகள் கூறுவது கருத்தில் இருத்தத் தக்கது.

“பிரஜாபதியின் முகம், தோள், தொடை, காலெனுமிடங்களில் முறையே பிராமணனும், சத்திரியனும், வைசியனும், சூத்திரனும் பிறந்தனரென்று நுவறல் – முகம் (பிரம வித்தையாகிய ) வாக்குக்கும், தோள் வெற்றிக்கும், கால் ஒருவனைச் சரணடைந்து ஊழியஞ்செய் துயிர் வாழ்தற்கும், தோலுக்குங் காலுக்கும் இடையிலுள்ள தொடை நடுநாவுடைத் துலையினுக்கும் அருத்தமாதலைக் காட்டவல்லதாமேயன்றிப் பிறப்பிடமே அவைகளெனக் காட்ட வல்லதாகாது. வல்லதாமென்னின், மேற்சொல்லப்பட்ட சூதமுனிவரும், பிறமுனிவருள் வியாசர் முதலாயினார் பலரும் பிறப்பிடத்தா லிழிந்தோராவரெனுந் தீர்வை யேற்படும். இதுநிற்க.”

“குறிப்பிட்ட தொழில்களை யுடையாரெல்லாம் அவ்வத்தொழில் இழைக்குங்காறும் அவ்வச்சாதியாரென விருத்தலுங் கண்கூடன்றோ. முனிவர் சரிதைகளையுங் கருதுக. பூணூல் பல தொழிலாளருந் தரிக்கின்றமையின் அதனையொரு பெரிதாக நினைப்பதும், இருபிறப்பாள ரென்பார் அத்துவித ஆன்மஞான வேதம் தமக்கே யுரித்தென்பதற்கியைய ஆசாரமுள்ள மற்றையர் அவ்வேதத்தைக் கைவிடலும் அறிவுடைமையாகா” (பரிபூரணானந்த போதம், சிவசூரியப்பிரகாசம். பக் 208-209)

சரி... அப்படின்னா... சங்கரனை(ஈசனை)தான் வள்ளுவர் பக்திமார்க்கமாக பின்பற்றினாரா அப்படின்னு தானே கேக்கறீங்க...

இதையும் படிச்சிடுங்க...

கீதையில் இருந்து...
रुद्राणां शंकरश्चास्मि वित्तेशो यक्षरक्षसाम् ।
वसूनां पावकश्चास्मि मेरुः शिखरिणामहम् ॥१०- २३॥

ருத்³ராணாம் ஸ²ங்கரஸ்²சாஸ்மி வித்தேஸோ² யக்ஷரக்ஷஸாம் |
வஸூநாம் பாவகஸ்²சாஸ்மி மேரு: ஸி²க²ரிணாமஹம் || 10- 23||

ருத்திரர்களில் நான் சங்கரன்; இயக்கர் அரக்கருள் யான் குபேரன். வசுக்களில் நான் தீ; மலைகளில் மேரு.

ருத்ரன் யாரு... சங்கரன் யாருன்னு தெளிவாகிடுச்சா...

குழப்பமா இருந்தால்... ஆரம்பத்தில் இருந்து படியுங்க...

பை தி பை நானென்ன சொல்ல வர்றேன்னா...

நான் திருக்குறள் ஹிந்து சமுதாய சமயத்திற்கே சொந்தம் என்று கூறவில்லை. 
ஆனால், என்று ஒருவர் தீய நோக்கதோடு திருக்குறள் ஹிந்து சமுதாய சமயம் சார்ந்ததில்லை என்று பொய் கூற்றை பரப்ப முயலுகிறார்களோ அப்போது அதை பொய் என்று நிரூபிப்பது நம் கடமையல்லவா? 
அதற்காகவே இந்த பதிவு...

__________________

Guru

Status: Offline
Posts: 24788
Date:
Permalink  
 
 வள்ளுவர் என்பதன் அர்த்தம் என்ன?

'நாள், கிழமை,நட்சத்திரம், கோள், கணிதம்' ஆகிய ஐந்துறுப்புகளைக் கொண்டதே பஞ்சாங்கம்(பஞ்ச+அங்கம்). இவற்றைக் கணித்து வழிக்காட்டிய பௌத்த அறிஞர்களையே அன்றைய காலத்தில் பிராமணர் என்று வடமொழியும், வள்ளுவர் என்று தென்மொழியும் கூறின.

வள்ளுவர் என்பதற்கு என்ன அர்த்தமாக இருக்க முடியும் என்று நாம் தேடிப்பார்க்கும் முன், வள்ளுவர்களின் ஞானத்தொடர்ச்சியை நாம் அறிதல் வேண்டும். முந்தையக் காலத்தில் எழுத்துமுறையில்லை. குறியீடுகளும், சித்திரங்களுமே சிந்தனையை பதியவைக்க உதவின. கதைகளும் கலைகளும் மனங்களில் சிந்தனையை பதியவைத்தன. கதைகளாகவும் பாடல்களாகவும் அடுத்தடுத்த சந்ததியினருக்கு கொண்டுசெல்லப்பட்டதில் முக்கிய பங்கு, மானுட செவியுணர்வுக்கே உண்டு. புத்தரின் போதனைகள் அவர்காலத்தில் எழுதப்பட்டவையல்ல. அவை, அடுத்தடுத்த சங்க தலைவர்களால், உறுப்பினர்களால், அடுத்தடுத்த சந்ததியர்க்கு செவி மூலம் கேட்கப்பட்டு, வாய்மூலம் போதிக்கப்பட்டு வந்தன.( இச்சிரமங்களைப் போக்கவே, பௌத்தம் எளிய எழுத்துவடிவங்களைக் கண்டறிந்தது. தமிழ் எழுத்துகள் அவற்றில் ஒருவகை.) அசோகர்கால எழுத்துகள் வரை புத்தரது போதனைகள் இப்படி செவியின் மூலமே பயணம் கொண்டன. ஞானத்தை அடுத்தக் காலக்கட்டத்திற்கு கொண்டுசென்றதில் செவிக்கு முக்கிய பங்குண்டு என்று அறியமுடிகிறது. இந்த புரிதலோடு வள்ளுவர் என்கிற பெயர்க்காரணத்திற்குள் நுழைவோம்.

'வள்' என்பதற்கு மண்டல புருடோத்தமன் நிகண்டு தரும் பொருள், 'காது.' அதாவது செவி. கூர்மை என்கிற அர்த்தத்தையும் இதேநிகண்டு கொடுப்பதால், 'செவிக்கூர்மை' என்று நாம் எடுத்துக்கொள்ளலாம்.

செவிக்கூர்மை என்பது கேள்வியைக் குறிக்கிறது. கேள்வி என்பது அறிதலைக் குறிக்கிறது. கேள்வி என்றால் வினா என்பதாக மட்டும் அர்த்தமில்லை. அறிதல் என்பதும் அர்த்தம். ஒன்றை அறிந்ததைப் பற்றிக் கூறும் போது, 'கேள்விப்பட்டேன்' என்று கூறுவது இதனடிப்படையில் தான். கேள்விக் குறிக்(?) கூட காதின் வடிவையேக் குறிக்கிறது என்று கூறவர். இப்படி செவிவழியே ஞானத்தைக் கடத்திவருவதையும், பஞ்சாங்க அறிதலையும் கடமையெனக் கொண்டமையால் அவர்கள் வள்ளுவர்கள் என்று அழைக்கப்பட்டிருக்க வேண்டும்.

திரிக்குறளில்கூட வள்ளுவர் செவியை செல்வம் என்று மட்டுமல்லாமல் 'செல்வத்துளெல்லாம் தலை'யாய செல்வம் என்றும் கூறுகிறார். செவியுணவு என்கிற சொல்லின் மூலம், செவிவழியாகப் பெறும் ஞானத்தை இன்றியமையா உணவென்கிறார்.

மேலும், வள்ளுவர்களின் முக்கியக் குறியீடு சங்கு ஆகும். சங்கு ஒலியின் குறியீடு. ஒலியோ செவியின் உணர்வோடு தொடர்புடையது. இதன் மூலம் 'வள்ளுவ' என்பது செவி எனும் ஞான வழியைக் குறிப்பதாகவே வந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

__________________

Guru

Status: Offline
Posts: 24788
Date:
Permalink  
 
அரசனால் தண்டனைக்கு உட்படுத்தப் படும் பாவங்களைச் செய்த மனிதர்கள், குற்றம் நீங்கி சொர்க்கத்தைச் சென்று அடைகிறார்கள், புண்ணியம் செய்த நல்லோர்களைப் போல.

- மனுஸ்மிருதி 8.318 **

தர்மத்தின் வழி செங்கோல் ஆட்சி செய்யும் அரசன் குற்றம் புரிந்தவர்களுக்குத் தண்டனையளிப்பது அவனது கடமை என்பதால், அதில் உள்ள ஹிம்சை அவனுக்குப் பாவத்தைத் தராது என்பது நேரடியாகவே விளங்கும். குற்றம் செய்தவரின் விஷயத்திலும் பாவத்திற்கான தண்டனை அப்போதே கிடைத்துவிட்டது. எனவே, அந்தப் பாவம் கர்மவினையில் சேர்ந்து மறுமையில் தொடராது என்பது மட்டுமல்ல, தண்டனையே பிராயச்சித்தமாக அமைந்து அந்த உயிரை சொர்க்கத்திலும் சேர்க்கும் என்று மனு கூறுகிறார். தண்டநீதி என்ற விஷயத்தில், எந்தவிதத்திலும் யாருக்கும் குற்ற உணர்ச்சி ஏற்பட்டுவிடக் கூடாது என்பதை அழுத்தமாக மனதில் பதியவைப்பதற்காகவே இக்கருத்து கூறப்பட்டது என்று தோன்றுகிறது.

திருக்குறளும் இக்கருத்தை அடியொற்றியே செல்வதைக் காணமுடியும்.

குடிபுறம் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்.

பரிமேலழகர் உரை: "வடுவன்று - வேந்தனுக்குப் பழியன்று, தொழிலாகலான்.. தன் கீழ் வாழ்வாரை ஒறுத்தல் அறன் அன்மையின், வடுவாம் என்பதனை ஆசங்கித்து, அஃதாகாது, அரசனுக்கு அவரை அக்குற்றத்தின் நீக்கித் தூயராக்குதலும் சாதிதருமம் என்றார்".

அரசனது தண்டனை குற்றவாளியை குற்றத்திலிருந்து நீக்கித் தூயவராக்குகிறது என்ற உரைக் கருத்து மேற்சொன்ன ஸ்மிருதியிலிருந்தே பெறப்பட்டது.

உண்மையில் இது ஒரு மகத்தான இந்து அறக்கோட்பாடு. இந்தக் கோட்பாடு கொடிய பாவங்களைச் செய்பவர்களுக்கு அப்பிறவியிலேயே தண்டனை அளிப்பதை வலியுறுத்துவதன் மூலம், அவர்களது பாவச் செயல்களான கர்மவினைகளின் வாசனை அடுத்தடுத்த பிறவிகளிலும் தொடர்ந்து அந்த ஜீவனுக்கும், சுற்றியுள்ள சமூகத்திற்கும் தீங்கு உண்டாக்குவதைத் தடுக்கிறது.

** மூலம்:

राजभि: कृतदण्डास्तु कृत्वा पापानि मानवा: ।
निर्मला: स्वर्गमायान्ति सन्त: सुकृतिनो यथा ॥

__________________

Guru

Status: Offline
Posts: 24788
Date:
Permalink  
 
திருக்குறளும் வடமொழி வேதமும்

மாமுனிவர் திருவள்ளுவர்

தமிழ் வேதம் என்றும் உத்தரவேதம் என்றும் போற்றப்படுவது திருக்குறள். திருவள்ளுவரின் காலம் கி.பி 2 எனக்கருதப்படுகின்றது. திருக்குறள் வேதநெறியினைத் தழுவிக்கொண்டு தமிழ்மரபின் தனித்தன்மையையும் நிலைநிறுத்தும் அறநூலாகும்.

திருக்குறளின் முதலதிகாரம் கடவுள் வாழ்த்து. அதில் இறைவனைக் குறிக்க எட்டு பெயர்கள் கூறப்படுகின்றன. ஆதிபகவன்(1), வாலறிவன்(2), மலர்மிசை யேகினான்(3), வேண்டுதல் வேண்டாமையிலான்(4), இறைவன்(5), பொறிவாயிலைந்தவித்தான் (6), தனக்குவமையில்லான், அறவாழியந்தணன்(8) எனும் இவ்வெட்டுப் பெயர்களும் இறையாகிய பதிக்கு வேதாகமங்கள் கூறும் தன்வயம், இயற்கையறிவு, முற்றுணர்வு, இயல்பாகவே பாசங்களினீங்குதல், பேராற்றல், தூயவுடம்பு, வரம்பிலின்பம், பேரருள் எனும் எட்டுக் குணங்களை முறையே உணர்த்துவனவாகும். இறைவன் ‘எண்குணத்தான்’ ஒன்பதாவது திருக்குறளும் கூறுகின்றது. இந்த இலக்கணம் இறைக்கு வேறெங்கும் கூறப்படவில்லை.

பிறப்பைப் ‘பெருங்கடல்’ என்றது, அதைக் கடக்கப் புணை இறைவனது திருவடி என்றது, (10), அவிச்சை காரணமாகப் பிறப்புத் தோன்றலின் ‘ பிறப்பைப் பேதமை’ என்றது, (358), மக்கள் தேவர் நரகர் விலங்கு பறவை முதலிய எந்தப் பிறப்பும் துன்பமேயாகையால் பிறப்பினை ‘மாணாப் பிறப்பு(351) என்றது, பிறப்புத் துன்பமாதலறிந்து அப்பிறப்பே வேண்டாமென ‘வேண்டுங்கால் பிறவாமை வேண்டும்’(362) என்றது, ‘தூய்மை அவாவின்மை,(364), உயிர் இருவினையை ஈட்டுவதற்கும் அதனால் பிறப்புண்டாதற்கும் காரணம் இருள் என்னும் ஆணவமலம் அதனைப் போக்கிக் கொள்ள இறைவனின் புகழ்சேர் புகழை இடைவிடாது சிந்திக்க வேண்டும் (5) என்றது இவை போன்றவையெல்லாம் வேத சிவாகமங்களில் பேசப்பட்ட பொருள்களாகும்.

திருக்குறள் ‘தாமைரைக் கண்ணா னுலகு’(1103), ‘புத்தேள் நாடு’(1323), ‘அளறு’(நரகம் 255) முதலிய உலகங்களையும் ,’அடியளந்தான்’(திரிவிக்ரமன் 610)’தாமரையினாள்’, ‘முகடி’(617), தென்புலத்தார்’ (43), என்னும் இவை போன்ற வேதாகமக் கருத்தாக்கங்கள் திருக்குறளில் செறிந்துள்ளன.

திருமகளைச் செய்யாள் என்பது தமிழ்வழக்கு. முகமினியனாய்த் தக்க விருந்தினரைப் பேணுவாரது இல்லின்கண் செய்யாளாகிய திருமகள் அகனமர்ந்து உறைவாள்(84) எனக் கூறிய திருவள்ளுவர், வேதநெறி பற்றிச் செய்யாளுக்கு மாறுபட்ட இயல்புடைய மூத்தாளையும் கூறுகிறார். சீதேவிக்கு மூத்தவள் மூதேவி. அவளை ‘ஜ்யேஷ்டா’ என வடமொழியிலும், அதனைத் தமிழ் எழுத்தில் ‘சேட்டை’ என்றும் கூறுவர். “முன்னம் தோன்றலால் முகடியைச் சேட்டை என்றனர்” (லிங்கபுராணம்2-5-4) தமக்கை எனப் பொருள்படும் ‘ஜ்யேஷ்டா’ என்னும் சொல்லை மொழிபெயர்த்துத் திருவள்ளுவர்,

“அவ்வித் தழுக்கா றுடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்” (167) என்றார். தவ்வை மூத்தவள்.

“அகர முதல வெழுத்தெல்லா மாதி
பகவன் முதற்றே யுலகு”

என்னும் முதற்குறளில் வேதாகமத் தாக்கம் பெரிதும் காணலாம். வேதங்களின் ஆறங்கங்களில் ஒன்று தருக்கம். முதற்குறள் தருக்க முறைப்படி முதற்கடவுளது உண்மையை நிறுவுகின்றது.

தருக்கத்தில் ஒருபொருளை(வஸ்து)ப் பெயர்(உத்தேசம்) கூறிய பின்னரே மேற்கோள் ஏது உதாரணம் முதலியவற்றல் நிறுவ வேண்டும் என்பது விதி. திருவள்ளுவர் ஆதிபகவன் என்று தாம் சாதிக்கப் போகும் பொருளுக்கு முதலில் பெயர் கூறினார். உலகம் ஆதிபகவனாகிய முதலை யுடைத்து என்று மேற்கோள் கூறினார். அகரமுதல வெழுத்தெல்லாம் என்று ஏது கூறினார். காணப்பட்ட உலகத்தாற் காணப்படாத கடவுட்கு உண்மை கூறும் அனுமானமும் இதனால் உணர்த்தினார்.

ஆதி என்ற தமிழ்ச் சொல்லும் பகவன் என்னும் வடசொல்லும் சேர்ந்த தொகைச் சொல் ஆதிபகவன் என்பது. பகவன் தமிழ்ச் சொல்லாயின் ஆதிப்பகவன் என ஒற்று மிகவேண்டும் ஒற்று மிகாமல் ஆதியாகிய பகவன் என்னும் பொருளைத் தருதலால் இச்சொல் இருபெயரொட்டுப் பண்புத்தொகை யென்றும் இது வடநூன்முடிபு என்றும் பரிமேலழகர் கூறினார்.

பகவன் என்பது ‘பகவான்’ என்னும் வடசொல் என்றும், பகவான் என்பது சிவனுக்குப் பெயர் என்றும், அதர்வசிகோபநிஷத், “யோவை ருத்ர: ஸ பகவான்” என முப்பது முறை கூறுகின்றது. சங்கார காரணனாகிய சிவனே உலகத்துக்கு ஆதி என்பது இதனால் உணர்த்தப்பட்ட பொருளாம்.

“சங்கரோ பகவான் ஆத்யோ ரரட்ச ஸகலா: ப்ரஜா:
மஹேசோ பகவான் ஆதி தேவ:”

எனச் சரபோபநிஷதம் கூறுகின்றது. அதாவது சங்கரனுக்குத் தவிர ஏனையோருக்கு இறைமைக் குணங்கள் இல்லை. அவனே பகவான். எனவே ‘மஹேசனே பகவான், ஆதி தேவன்’ என்பது இதன் பொருள். எனவே ‘ஆதிபகவன்’ என்ற பெயரில் உள்ள ‘ஆதி’ என்பது, இறைமைக் குணங்கள் இலராகிய ஏனைத் தேவர்களை விலக்க வந்த அடை, அதாவது சிவனே முதற்கடவுள் என்றுணர்த்துவது இதன் கருத்தாம்.

சித்தாந்த சைவர்கள் ‘ஆதிபகவன்’ எனுமித்தொடருக்கு ‘ஆதிசத்தியொடு கூடிப் பிரிவின்றி யுள்ளானாகிய சிவன்’ என்று மூன்றாம் வேற்றுமை உடனிகழ்ச்சிப் பொருள் விரித்துப் பொருள்கொள்வர். பதிப்பொருளாகிய ஒருபொருள் சிவமும் சத்தியுமாகத் தாதான்மியத்தால் இருதிறப்பட்டு உலகினை இயக்கி நிற்றல் பற்றி இறைவனை “ஆதிபகவன்” எனும் பெயரால் திருவள்ளுவர் குறித்துள்ளார் எனகொள்ளுதல் பொருந்தும் என்பர். (திருவருட்பயன். 1-2. க. வெள்ளைவாரணம். சமாஜபதிப்பு)

திருவள்ளுவர் வேதங் கூறும் நான்கு வருணங்களை அறிந்தேயுள்ளார். அதில் தமிழ் மரபுக் கேற்றதைத் தழுவிக் கொண்டுள்ளார்.

“மறப்பினு மோத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்” (134)

என்னும் குறளில் ‘பார்ப்பானின் தொழில்களில் ஒன்று வேதங் கற்றல். கற்ற வேதத்தை மறந்தாலும் மீண்டும் கற்று மீட்டுக் கொளலாகும். ஆனால் அவன் தன்னுடைய பிறப்பொழுக்கத்தைக் கைவிட்டால் அழிந்துவிடுவான்’ என்று பார்ப்பனன் தொழிலின் சிறப்பையும், அவன், தன் பிறப்பொழுக்கத்தைக் கைவிடாமையின் சிறப்பையும் ஓதினார்.

பார்ப்பான் என்னும் பெயர் முன்பு மரியாதைக்கு உரியதொன்றாகவே வழங்கியது. இது இருபிறப்பாளன் என்ற பொருளைத் தருவதாகும்.

“பார்ப்பு” என்பது பறவையின் குஞ்சுக்குப் பெயர். (“பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற்றிளமை” தொல். பொருள்- மரபியல் சூ559). பறவைக்குஞ்சுக்கு இரண்டு முறை பிறப்புண்டாகும். தாயின் வயிற்றினின்றும் முட்டையாக வெளிவருவது ஒருபிறப்பு. முட்டையினின்றும் குஞ்சாக வெளிவரல் மற்றொரு பிறப்பு. அந்தணர்களுக்கும் இரண்டு பிறவிகள் உண்டு. ஒன்று அன்னையின் வயிற்றினின்றும் வெளிவரல், மற்றொன்று, உபநயனத்தின் பின் உள்ள வாழ்க்கை. ஆதலின் அவர்களை “இருபிறப்பாளர்” என்பர். அதாவது, பறவையின் குஞ்சு போல்பவர் என்ற பொருளில் “பார்ப்பு அன்னவர்” என்பர். ‘பார்ப்பன்னவன்’ என்பதில் உள்ள மெல்லொற்றும் ‘வ’கர உயிர்மெய்யும் கெட்டுப் ‘பார்ப்பனன்’ என நின்றது. மாணிக்கவாசக சுவாமிகள் குருவாக வந்து ஆண்டு கொண்ட சிவபரம்பொருளை, “பார்ப்பானே” என விளிப்பது அறியத் தக்கது. ( புணர்ச்சிப்பத்து -10 திருவாசகம், சிவக்குடில் விளக்கம்.)

“அந்தணர் நூற்கு மறத்திற்கு மாதியாய்
நின்றது மன்னவன் கோல்” (543)

என்னும் குறளில் அரசசாதியையும் செங்கோலின் மாட்சியையும் கூற வந்த திருவள்ளுவர், முதற்சாதியாகிய சிறப்புடைய அந்தணசாதிக்குரிய வேதத்திற்கும் அறத்திற்கும் மன்னவன் செங்கோலே காரணமாக நின்றது என்றார். சிறப்புடைய அந்தணசாதியைக் கூறி ஏனைய இரண்டுசாதியையும் தழுவிக் கொண்டார்.

“ஆபயன் குன்று மறுதொழிலோர் நூன்மறப்பர்
காவலன் காவா னெனின்” (560)

என்னும் குறளில் அரசன் செங்கோல்முறையினால் உயிர்களைக் காவானாகில் கேடுகளாக அறனில்லாத அந்நாட்டுப் பசுக்களும் பால் குன்றும்; அறுதொழிலோராகிய அந்தணரும் தம்முடைய வேதக் கல்வியை மறந்து விடுவர் என்று கூறுகின்றார்.

இதனால், ‘வேதமும் அறனும் அநாதி; பசுக்கள் பால் குன்றியவழி அவியில்லாது போகும். அவி கொடுத்தற்கு உரியராகிய அந்தணர் வேள்வியின்மையின் வேதக் கல்விக்குரிய மந்திரங்களை ஓதார். வேள்வி நடவாது. ஆதலால் வானம் மழை பொழியாது’ என்று வேள்விக்கும் மழைக்கும் உள்ளதொடர்பினைக் கூறினார்.

இந்தத் தொடர்பைத் தொல்காப்பியமும்,
“அமரர்கண் முடியும் அறுவகையானும்” (தொல். பொருள்81 புறத்திணை 26)
என்று கூறிற்று. ‘அமரர்கண் முடியும் அறுவகையாவது பிறப்பு வகையானன்றிச் சிறப்பு வகையால் தேவர்கண்ணே வந்து முடிதலுடையவாகிய அறுமுறை வாழ்த்தின் கண்ணும்’ என்றும், அந்த ஆறாவன, ’முனிவரும் பார்ப்பாரும் ஆனிரையும் மழையும் முடியுடை வேந்தரும் உலகுமாம்’ என்று நச்சினார்க்கினியர் எடுத்துரைத்தார்.

இச்சூத்திரத்திற்கு பலர் பலவாறு கூறினும் நச்சினார்க்கினியர் கூறியதே பண்டை மரபு தழுவியதாம். திருஞானசம்பந்தசுவாமிகள் தம்முடைய திருப்பாசுரத்தில் இந்த அறுமுறை வாழ்த்தை வலியுறுத்தியுள்ளார்.

‘வாழ்க அந்தணர் வானவ ரானினம்
வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக
ஆழ்க தீயதெல் லாமர னாமமே
சூழ்க வையக முந்துயர் தீர்கவே’ (3-54-1)

என்னும் இவ்வறுமுறை வாழ்த்தில் நச்சினார்க்கினியர் கூறிய முனிவருக்குப் பதில் ‘வானவர்’ இடம்பெற்றுள்ளது.

அரசனது செங்கோலுக்கும் அந்தணர் வேள்விக்கும் மழைக்கும் நாட்டின் வளத்துக்கும் குடிகளின் மகிழ்ச்சிக்கும் உள்ள சங்கிலித் தொடர்பினைச் சமயச்சான்றோர் உடன்பட்டு ஏற்றுக் கொண்டுள்ளனர்.

“வேந்தன் முறைதிறம்பின் வேத விதிதிறம்பும்
ஏந்திழை யார்தம் கற்பும் இல்லறமும் நில்லாவாம்
மாந்தர் பசியால் உணங்க மழைவறந்து
பாந்தள் மூடிக்கிடந்த பாரின்விளை வஃகுமால்”
(பிரமோத்தரகாண்டம்,10- 1)
என எதிர்மறையானும் வலியுறுத்தப்பட்டது.

vyasa_ganapatiபராசரருக்கும், மீனவப்பெண் மத்ஸ்யகந்திக்கும் பிறந்த மாமுனிவர் வேதவியாசர்

திருவள்ளுவர், வேதவேள்வி செய்யும் அந்தணர்களுக்கு இவ்வளவு ஏற்றம் கொடுத்துப் பேசினாலும் பிறப்பால் மட்டுமே அந்தப் பெருமை ஒருவர்க்கு வந்துவிடாது; அதாவது, ‘ஜன்ம பிராமணனை விடக் கன்ம பிராமணனுக்கே ஏற்றம்’ என்பதையும் தெய்வப்புலவர் எடுத்துக் காட்டியுள்ளார்.

“பிறப்பொக்கு மெல்லா வுயிர்க்குஞ் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்” (972)
என்னும் குறளில், திருவள்ளுவர், பெருமையாவது குலத்தினா லறியப்படாதென்றும் அதற்குக் காரணம் இன்னது என்றும் சுட்டிக் காட்டினார்.

இங்குத் தொல்காப்பியம், பொருளதிகாரம், களவியல், 2-ஆம் சூத்திரத்திற்கு இளம்பூரணர், இத்திருக்குறளை மேற்கோள் காட்டி செய்தவுரை ஆன்றோர் கருத்தை நன்கு புலப்படுத்தும்.

“ஒத்த கிழவனும் கிழத்தியுங் காண்ப” என்பது.
ஒப்பு பத்து வகைப்படும். அவை,
“பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டொடு வகையே (மெய்ப்.25)

என்னும் மெய்ப்பாட்டியற் சூத்திரத்துள் கூறிய பத்துமாம்.

அவற்றுள் பிறப்பாவது, அந்தணர், அரசர், வணிகர், வேளாளர், ஆயர், வேட்டுவர், குறவர், நுளையர் என்றாற்போல வருங் குலம். குடிமையாவது அக்குலத்தினுள்ளார் எல்லாருஞ் சிறப்பாக ஒவ்வாமையின் அச்சிறப்பாகிய ஒழுக்கம் பற்றிய குடிவரவைக் குடிமை என்றார்.

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமையான்” (குறள் 972)

எனவே குலத்தின்கண்ணே சிறப்பென்பது ஒன்றுண்டு.

அந்தணர் ,பார்ப்பார் என்பன காரண இடுகுறிப் பெயர். காரணம் குறிக்கும் பொழுது அப்பெயர் அந்தக் காரணத்தை உடைய எல்லாரையும் குறிக்கும். சுட்டப்பட்ட காரணம் அந்தணரிடம் சிறப்பாக விளங்க வேண்டும் என்பது விதி. பிறப்பந்தணர்களிடத்தில் எதிர்பார்க்கப்படும் பண்பு.. இதனைத் திருவள்ளுவர் அளவையியலில்(Logic) கூறப்படும் முக்கூற்று விதியில் (Deductive syllogism) வைத்துக் கூறியுள்ளது அறியத்தக்கது.

எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகுவோர் அறவோர்
அந்தணர் எவ்வுயிரிடத்தும் செந்தண்மை யுடையவர்
ஆதலால் அந்தணர் என்போர் அறவோர்.

மற்றொரு முறையிலும் இதனைக் கூறலாம்.

அந்தணர் என்போர் அறவோர் – இது மேற்கோள்
எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகலான் – இது ஏது.
எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகுவோர் அறவோர். – முடிவு

இதனால், எவ்வுயிருக்கும் செந்தண்மை பூண்டொழுகும் சிறப்பொழுக்கம் அந்தணர்களுக்குப் பிறப்பால் குடிவரவாக வரும் என்பதும், அச்சிறப்பொழுக்கம் இல்லாதவன், பிறப்பால் அந்தணனாயினும் அந்தணன் எனப்படமாட்டான் என்றும், ஏனைய குலத்தில் பிறந்தாலும் செந்தண்மை பூண்டொழுகும் அறவோர் அந்தணர் எனப்படுவாரென்பதும் வள்ளுவனார் கருத்தென்பது பெறப்படும்.

இவ்வாறு வேதவழிச் செல்வதே தமிழ்வேதமாம் திருக்குறள் எனலாம்.

பிறப்பால் மட்டுமே சாதியுயர்வைப் பேசுவாரை வேதமும் இழித்துரைக்கின்றது. ஈண்டு சந்தமறையும் தமிழும் வல்ல பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் கூறுவது கருதத் தக்கது.

“ஸாமவேத வஜ்ரஸூசிகோபநிஷதம் – பிராமணத் தன்மைக்குரியது சீவனன்று, உடம்பன்று, சாதியன்று, கல்வியறிவன்று, கன்மமன்று, தன்மமன்று எனத் திருட்டாந்த வாயிலாக விளக்கிச் சுவானுபவப் பிரம ஞானமுடையவனே பிராமணனென்றோதி இதுவே, சுருதிஸ்ம்ருதி புராணேதிஹாசங்களின் அபிப்பிராயம் என்று முடிவுரை மொழிந்துளது. “

“மஹாபாரதத்து வனபர்வத்து 206ஆம் அத்தியாயங்களிற் பகரப்பட்ட தர்மவியாதரென்னும் வேடரும் அந்தப் பாரதத்திற் பல இடத்துங் கூறப்பட்ட விதுரரென்னுஞ் சூத்திரரும் மகாஞானிகளா யிருந்தனர் என்பதை அறியலாம். இத்திறத்தோரும் பலரே.”

“இன்னோர், பிராமணராகப் பிறந்திருந்த சன்மாந்தரத்தில் ஆர்ச்சித்த ஞானம் அழியாதிருந்ததினாற் பிரமநிட்டராயினரென்று அவர்கள்நிலைக்கொரு போக்குக் காட்டினும் அஃது அத்திறமுள்ளார் இக்காலத்து மிருப்பர், இனி வருங் காலத்துந் தோன்றுவரென்பதையும்; சன்மாந்தரத்தில் ஆர்ச்சித்த அறியாமை அநீதி. அநீதி அழியாம லிருந்தோரே அநீதிகளை யெழுதி வைத்தார், அவற்றைப் பிரமாணமாக வெடுத்துக் காட்டுகின்றாரென்பதையும்; பிரம வித்தைக்கும் பிரமோபாசனைக்கும் உரியோர் பிராமணசாதியிற் பிறந்தவரே யல்லால் இதரரல்லரென் றியம்பிக்கொண்டு கல்வி யறிவுமில்லாதிருப்போரும் அவரொத்தவரே யென்பதையும் நிலைநிறுத்தும்” எனப் பாம்பனடிகள் கூறுவது கருத்தில் இருத்தத் தக்கது..

“பிரஜாபதியின் முகம், தோள், தொடை, காலெனுமிடங்களில் முறையே பிராமணனும், சத்திரியனும், வைசியனும், சூத்திரனும் பிறந்தனரென்று நுவறல் – முகம் (பிரம வித்தையாகிய ) வாக்குக்கும், தோள் வெற்றிக்கும், கால் ஒருவனைச் சரணடைந்து ஊழியஞ்செய் துயிர் வாழ்தற்கும், தோலுக்குங் காலுக்கும் இடையிலுள்ள தொடை நடுநாவுடைத் துலையினுக்கும் அருத்தமாதலைக் காட்டவல்லதாமேயன்றிப் பிறப்பிடமே அவைகளெனக் காட்ட வல்லதாகாது. வல்லதாமென்னின், மேற்சொல்லப்பட்ட சூதமுனிவரும், பிறமுனிவருள் வியாசர் முதலாயினார் பலரும் பிறப்பிடத்தா லிழிந்தோராவரெனுந் தீர்வை யேற்படும். இதுநிற்க.”

“குறிப்பிட்ட தொழில்களை யுடையாரெல்லாம் அவ்வத்தொழில் இழைக்குங்காறும் அவ்வச்சாதியாரென விருத்தலுங் கண்கூடன்றோ. முனிவர் சரிதைகளையுங் கருதுக. பூணூல் பல தொழிலாளருந் தரிக்கின்றமையின் அதனையொரு பெரிதாக நினைப்பதும், இருபிறப்பாள ரென்பார் அத்துவித ஆன்மஞான வேதம் தமக்கே யுரித்தென்பதற்கியைய ஆசாரமுள்ள மற்றையர் அவ்வேதத்தைக் கைவிடலும் அறிவுடைமையாகா” (பரிபூரணானந்த போதம், சிவசூரியப்பிரகாசம். பக் 208-209)

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us

Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard