புதுக்கவிதை பல எழுதிய எனக்கு மரபுக் கவிதை எழுதுவோர் மீது எப்போதும் ஒரு பொறாமை உண்டு. பொறாமை என்றவுடன் என்னை முறை க்க வேண்டாம். இது அவர்போல் நானு ம் எழுத வேண்டும் என்ற நல்ல எண்ண த்தில் தோன்றிய பொறாமைதான். அதன் விளைவாக மரபுக் கவிதை எப்படி இருக்க வேண்டும்? என்று இணையத் தில் தேடிய போது எனது கண்ணில் பட்ட அருமையான tamilmantram.com என்ற இணையம். ஆம் இந்த இணையத்தில் கவிதா என்ற ஒரு பெண், மரபுக் கவிதை எப்படி எழுதுவது என்பதை மட்டுமல்லாமல் தமிழ் இலக்கணத் தையும் சேர்த்து எளிமையான நடையிலும், சுருக்கமாக சொல் லி , எல்லோருக்கும் புரியும் வண் ணம், நமக்கெல்லாம் வரப்பிரசாத மாக தந்துள்ளது இந்த இணை யம். விதை2விருட்சம் இணையம் சார்பாக இதயம் கனிந்த பாரட்டுக்க ளை கவிதா அவர்களு க்கு தெரிவித்துக் கொள்கிறது. இதோ உங்களுக்கும் அந்த இணையத்தில் இருந்த வற்றை பகிர்கிறேன்.
***
கற்றது கையளவு கல்லாதது உலகளவு என்பர்.
என்னைப்போல் மரபுக்கவிதை எழுத விரும்புபவர்களுக்கு உதவும் எண்ணத்திலேயே வ.த. இராமசுப்ரமணியம் அவர்கள் எழுதிய நூலிலிரு ந்துஇதை ஆரம்பிக்கிறேன்.
“யாப்பருங்கலக்காரிகை கற்றுக் கவிபாடுங்கால்
பேரிகை கொட்டி பிழைப்பது மேலாம்.” என்பர்.
எனினும் அலை ஓய்வது எப்போது? நாம் முழுகுவது எப்போது?
கவிதை எழுதுவதற்கு இலக்கிய அறிவும், இலக்கணத்தேர்ச்சியும் வேண்டும் என்பர். நல்ல தரமான கவிதைகளைப்படைக்க இத்தகை ய இலக்கண இலக்கியங்களில் புலமை கொண்டிருக்க வேண்டும். என்பது கருத்தேயன்றி கவிதை எழுதுவதற்கான தடைகள் அல்ல.
கவிதை எழுத மிக முக்கியமானது உணர்ச்சி. ஒரு கவிஞன் எத னை இலக்காகக் கொள்கின்றானோ அதுவே இலக்கிய அறிவாக அவ னுக்கு அமைகிறது. வாழ்க்கையில் உண்டாகும் அனுபவமே அவனு க்கு இலக்கிய அறிவைப்புகட்டுகின்றது.
கவிஞன் என்பவன் எதனையும் கூர்ந்து நோக்கும் இயல்புடைய வன். அவன் எதனை எந்த நோக்கத்தில் பார்க்கின்றானோ அதுவே அவனுக்கு அதனைப்பற்றிய அறிவை ஈட்டித்தருகிறது.
எனவே உணர்ச்சிகளை இதமாகக்கொட்ட வேண்டும். பிறர் மனத் தில் பதியுமாறு நயமிகு நற்றமிழில் கொடுக்கவேண்டும். அதற்கு மொழி அறிவு நிச்சயம் தேவை. இலக்கியங்களைச் சுவைத்து நமது இலக்கிய அறிவைப்பெருக்கிக்கொள்ளலாம். உணர்வுகளை முழு மையாக அனுபவித்து தன்னிச்சையாக எழுதப்படும் கவிதைகள் இலக்கணங்கள் பார்ப்பதில்லை.
முற்காலத்தில் பாடல்கள் யாவும் இறையருளால் பாடப் பெற்ற வை என்றும் திருஞான சம்பந்தர், சுந்தரமூர்த்தி சுவாமிகள், அருணகிரி நாதர், இராமலிங்க அடிகளார், காளமேகப்புலவர் முதலானோர் அவ் வாறு பாடிய அருளாளர்கள் என்றும் கூறுவர்.
கவிகள் ஆசுகவி, வித்தார கவி, மதுரகவி, சித்திரகவி என நான்கு வகை உள்ளன. எனினும் பெரும்பான்மையான கவிதைகள் தனித் து ஒரு கவிஞனின் சிந்தனையிலிருந்து பேனா முனையின் வழி யாக வெளிவந்து மலர்கிறது.
கவிதை எழுதுவதற்கு நிறையச் சொற்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அவற்றின் வீரியத்தையும் உணர்ந்திருக்க வேண்டும். அது மக்களுக்கு எளிதில் விளங்கக்கூடியவையாகவும் இருக்க வேண்டும்.
இதன் அடிப்படையில் இனி இலக்கண மரபுகள் என்பவற்றின் அடித் தளத்தைச் சிறிது நோக்குவோம்.
யாப்பிலக்கணத்தின் படி எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை முதலியவற்றையும் பாக்கள் ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா – இவைகளின் இலக்கணங்களையும் பற்றி இனிவரும் தொடரில் எளிமையாக விளக்கக் காண்போம்.
தெருவீதிகளில் வண்ணமிகு கோலங்களை அமைத்து மங்கையர் அழகு செய்கின்றார்கள். அப்போது அவை நன்கு அமைவதற்குக் கருவியாக உள்ளவை அவற்றுக்குரிய கோலப்புள்ளிகளே!
வண்ணக்கோலங்கள் பளிச் எனத் தோன்றினாலும் அதற்குள்ளே விளங்கும் புள்ளிகள் வைக்கப்பெற்று வரையப்படும் கோலங்கள் மிகுந்த எழில்பெறும்.
இதுபோல செம்மையான எழில்மேவும் கவிதைகளுக்கு இலக் கண மரபுகள் என்ற கோலப்புள்ளிகள் உதவி புரிகின்றன. எனவே இத் தகைய மரபுகளைத்தெரிந்து வைத்திருத்தல் அவசியம்.
கவிதையின் உறுப்புகள் ஆறு. அவை எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்பன. தற்போது யாப்பருங்கலக்காரிகை என்னும் இலக் கணமே கவிதைக்கு உரிய இலக்கணமாகப் பெரிதும் கொள்ளப்படு கிறது.
எழுத்து
செய்யுள் உறுப்புகளுள் முதலாவதாக விளங்கும் எழுத்து என்பதைக் காண்போம்.
மொழிக்கு முதலில் வரும் எழுத்துக்கள் :-
பொதுவாக மொழிக்கு முதலில் வரும் எழுத்துக்கள் 21. அவற்றுள்
உயிர் எழுத்துக்கள் = 12
வல்லின எழுத்துக்கள் = க, ச, த, ப = 4
மெல்லின எழுத்துக்கள் = ஞ, ம, ந = 3
இடையின எழுத்துக்கள் = ய,வ = 2
(குறிப்பு: “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல” எனும் நோக்கில் ‘ச’ சேர்க்கப்பட்டுள்ளது. தொல்காப்பியத்தில் ‘ச’ எழு த்து குறிப்பிடப்படவில்லை என்றே கூறப்படுகிறது. அவ்வாறே குறிப்பிடாத பிற எழுத்துக்களும் வர நேரிடலாம்.)
எழுத்து வகைகள்:-
எழுத்து உறுப்புகள் 13 வகைப்படும்.
1. குறில் எழுத்து (குற்றெழுத்து)
2. நெடில் எழுத்து ( நெட்டெழுத்து)
3. உயிரெழுத்து
4. மெய்யெழுத்து
5. உயிர்மெய் எழுத்து
6. வல்லின எழுத்து
7. மெல்லின எழுத்து
8. இடையின எழுத்து
9. ஆய்த எழுத்து
10. குற்றியலுகரம்
11. குற்றியலிகரம்
12. ஐகாரக்குறுக்கம்
13. அளபெடை
மாத்திரை:-
ஓர் எழுத்தை இயல்பாக ஒலிப்பதற்கு ஆகும் நேரம் மாத்திரை என்று கூறப்படும். இந்த மாத்திரை அளவினை வைத்தே எழுத்தா னது வகைப்படுத்தப்படுகிறது. எனவே மாத்திரை குறித்து அறிந்து கொள்ளுவது கவிதை எழுதுவதற்கு மிகவும் அவசியமானதாகும்.
ஒரு மாத்திரை கால அளவு என்பது கைவிரல் நொடிக்கும் நேரம், அல்லது கண்ணிமைக்கும் நேரம் எனவும் ஆகும். குறில் எழுத்தை ஒலிப்பதற்கு ஒரு மாத்திரை அளவுக்காலமும் நெடில் எழுத்தை ஒலிப்பதற்கு இரண்டு மாத்திரை அளவுக்காலமும் ஆகும்.
தமிழில் உயிர் எழுத்துக்கள்
12 = அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ.
இவற்றுள்,
அ,இ,உ, எ, ஒ ஆகிய ஐந்தும் குறில் எழுத்துக்கள்.
குறில் எழுத்துக்களை உச்சரிப்பதற்கு ஆகும் கால அளவு 1 மாத்திரை.
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ ஆகிய ஏழும் நெடில் எழுத்துக்கள்.
நெடில் எழுத்துக்களை உச்சரிப்பதற்கு ஆகும் கால அளவு 2 மாத்திரைகள்.
மெய் எழுத்துக்கள்
18. அவை,
க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் ஆகும்.
மெய்யெழுத்துக்கள் 18ம் உச்சரிக்கும் வகைகளைக்கொண்டு
1. வல்லின எழுத்துக்கள் – க், ச், ட், த், ப், ற் – 6
2. மெல்லின எழுத்துக்கள் – ங், ஞ், ண், ந், ம்,ன் – 6
3. இடையின எழுத்துக்கள் – ய், ர், ல், வ், ழ், ள் – 6
என்று பிரிக்கிறோம்.
இவை ஒவ்வொன்றும் அரை (1/2) மாத்திரை உடையது.
18 மெய் எழுத்துக்கள் 12 உயிர் எழுத்துக்களோடு சேர்ந்து ஒலிப் பது உயிர் மெய் எழுத்துக்களாகும். இவற்றின் எண்ணிக்கை 216. இவற்றுள்,
குறில் உயிர்மெய் எழுத்துக்கள் (5 * 18) = 90
இவை ஒவ்வொன்றும் ஒரு மாத்திரை கொண்டு இயங்கும்.
நெடில் உயிர்மெய் எழுத்துக்கள் (7 * 18) = 126
இவை ஒவ்வொன்றும் இரு மாத்திரை கொண்டு இயங்கும்.
குறிப்பு : 1. உயிர்மெய்க்குறில் எழுத்துக்கள் க, கி, கு, கெ, கொ…. முதலானவை ஒரு மாத்திரை அளவே.
இவற்றை மெய்யெழுத்துக்குரிய 1/2 மாத்திரையோடு உயிர் எழுத்துக்குரிய 1 மாத்திரையும் சேர்ந்து 1 1/2 மாத்திரை என்று கொள்ளக்கூடாது.
குறிப்பு : 2. உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் கா, கீ,கூ, கே, கோ…. முதலானவை இரு மாத்திரை அளவே. இவற்றை மெய்யெழுத்து க்குரிய 1/2 மாத்திரையோடு உயிர் எழுத்துக்குரிய 2 மாத்திரையும் சேர்ந்து 2 1/2 மாத்திரை என்று கொள்ளக்கூடாது.
கவிகள் ஆசுகவி, வித்தார கவி, மதுர கவி, சித்திர கவி என நான்கு வகை உள்ளன. ஆசு கவி – உடனடியாக விரைவாக இயற்றப்படும் கவிதை வகை யினரை இவ்வாறு பிரிக்கலாம்.
வித்தார கவி – விரிவாக விளக்கமாக இயற்றப்படும் கவிதை
மதுர கவி – இனிமையான குரலில் பாடக்கூடிய கவிதை
சித்திர கவி – ஓவியங்கொண்டு புனையப்படும் கவிதை
இனி எழுத்தின் தொடர்ச்சியைப் பார்ப்போம்.