New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சென்னை ராஜதானி என்றுமே கல்வியில் முன்னிலை


Guru

Status: Offline
Posts: 24765
Date:
சென்னை ராஜதானி என்றுமே கல்வியில் முன்னிலை
Permalink  
 


Ananthakrishnan Pakshirajan

இது பற்றி நான் முன்னால் ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறேன்.

சென்னை ராஜதானி என்றுமே கல்வியில் முன்னிலையில் நின்றது என்பது உண்மை. இது பெரியார் பிறப்பதற்கு முன்பேயே நிகழ்ந்து விட்டது. 1864ல் இருந்து 1886 வரையில் கல்லூரி நுழைவுத் தேர்வு எழுதியவர்கள் மதராஸ் ராஜதானியில் 61124 பேர்கள். வங்காளத்தில் 37,790 பம்பாய் ராஜதானியில் 24,857.

கல்லூரிப்படிப்பு வங்காளத்தில் கல்கத்தாவை மட்டும் சுற்றியிருந்தது. பம்பாய் ராஜதானியில் பம்பாய், பூனா நகரங்களைச் சுற்றியிருந்தது. மதராஸ் மாநிலத்தில் அது பரவலாக இருந்தது. கல்லூரி படிப்பவர்களில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே சென்னையில் படித்துக் கொண்டிருந்தார்கள். 
படித்துக் கொண்டிருந்தவர்களில் பிராமணர்கள் அதிகம் என்பது உண்மை. ஆனால் கல்லூரிப்படிப்பு இலவசமாகத் தரப்படவில்லை. ஏதும் தனிப்பட்ட சலுகையும் இல்லை. பிராமணர்கள் தங்கள் நிலங்களை விற்று கிராமங்களிலிருந்து நகர்ப்புறம் பெயர்ந்து கல்வி கற்றனர்.

ஆனால் 1870களில் மற்றைய சாதியினர் வேகமாக முன்னேறத் துவங்கினர். இடைநிலைப் பள்ளிகளில் பிராமணர்களின் சதவீதம் வேகமாகக் குறையத் துவங்கியது. 1879 -1884ல் பிராமணர் அல்லாதவர்களில் மெட்ரிக் தேறியவர்கள் 67 சதவீதம் உயர்ந்தார்கள். பிராமணர்களில் 33 சதவீதம் உயர்ந்தார்கள்.

1891ல் பிராமணர்களில் ஆங்கிலம் தெரிந்தவர்கள் 24, 946. பிராமணர் அல்லாத இந்துக்களில் ஆங்கிலம் தெரிந்தவர்கள் 30,531. பிராமணர்களில் 12 பேரில் ஒருவருக்கு ஆங்கிலம் தெரிந்திருந்தது. வெள்ளாளர்களில் 22 பேரில் ஒருவருக்கு.

எனவே பெரியார் இல்லாவிட்டால் "சூத்திரர்கள்" படித்திருக்க முடியாது என்பதெல்லாம் இவர்கள் சொல்லும் மற்றப் பொய்களைப் போலவே கலப்படமற்ற பொய்.

சென்னை மாகாணம் அன்றும் படிப்பில் முன்னிலையில் நின்றது. இன்றும் நிற்கிறது. இதற்குக் காரணம் தமிழ் மக்களிடம் கேடில் விழுச் செல்வம் கல்வி என்ற எண்ணம் ஆழமாகப் பதிந்து விட்டதால்தான். இதற்கும் பெரியாருக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. 1947லிருந்து அடித்தளத்தை இன்னும் வலுப்படுத்தியவர் காமராஜர். 1967ல் இருந்து தமிழகத்தின் நீண்ட காலக் கல்விச் செழிப்பு வரண்டு போகாமல் மேலும் செழிக்கச் செய்தவர்கள் திராவிட ஆட்சியாளர்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

லப்பதிகாரம் நாடுகாண் காதையில்,

கருங்கை வினைஞருங் களமருங் கூடி

என்றொரு வரி.

இதில் கருங்கை வினைஞர் என்பதற்கு வலியகை என்றும் பறையர், பள்ளர் முதலாயினர் என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. களமர் என்பது உழுகுடி வேளாளர்.

 "... மங்கல மறையோர் இருக்கை; அன்றியும்,
பரப்பு நீர்க் காவிரிப் பாவை-தன் புதல்வர்,
இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும்

உழவிடை விளைப்போர், பழ விறல் ஊர்களும்..."

- சிலம்பு

பிரமதேயத்தையும், வெள்ளான் வகை நிலங்களையும் கூறும் சிலப்பதிகாரம்.

இதில் தெளிவாக மறையோர் என பிராமணர்களைக் குறிக்கிறது.

காவிரிப் புதல்வர்(கங்கை குலத்தவர்) என வேளாளர்களைக் குறிக்கிறது.

 "வினைஞரும் களமரும் கூடி" என்பதனால் வயலில் ஏவல் நிமித்தம் பணி புரிந்த வினைஞராகிய பள்ளரும் பறையரும் வேறு, களமர் ஆகிய வேளாளர்கள் வேறு எனவும் நிறுவப்பட்டது!

நன்றி ஸ்ரீராமதாஸ் மகாலிங்கம்


தேவேந்திர குலத்துப் பள்ளர்கள் இனிமேலும் தாங்கள் வேளாளர்கள் எனப் பொய் வரலாறு வேண்டின் இதைப் படித்தேனும் திருத்தம் கொள்வாராக.

 

களமர் என்பது உழுகுடி வேளாளர் என்று விளக்கத்தில் சொல்லப்பட்டுள்ளது.

 

இந்த உழுகுடி உழுவித்துண்ணும் குடி என்ற பொருள் விளக்கம் எந்த நூற்றாண்டில் வந்தது?

கருங்கை வினைஞர் என்பதற்கான விளக்கம் எதில் பெறப்பட்டது?

சங்க இலக்கியத்தில் உள்ள வேளாளர் என்ற பதம் யாரை குறிக்கிறது? 

நான் கேட்பது விளக்கவுரையைக் கொண்டல்ல. உழுகுடி உழாக் குடி என்றதன் பிரிவு மிகப்பிந்தையது!

தவிர சங்கத்தில் கீழ்க்குடி மக்களென எங்கேயும் களமர் என்ற சொல்பதம் பயன்படுத்தப்படவில்லை. 

உங்களின் கருத்தை அதிலேற்ற வேண்டாம். இதைப் பற்றி நாளை முழுவதுமாக தெளிவாக விளக்குகிறேன். சான்றுகளுடன்.

சில இடங்களில் அருகர் என்பது இடத்துக்கு தக்கபடி இருடிகளை குறிக்கவும் செய்கிறது. அப்படி வேளாளர் என்ற குறிப்பு களமர் க்கு இங்கு இருக்கும்.

நிகண்டுகளில் ஆரியர்(உயர்ந்தோர்) என்ற சொல் உயர் குண பிராமணரையும் குறிக்கிறது, மிலேச்சர்களில் வரும் ஆரியர் (ஈரானியர்/பாரசீகர்) எனும் இனத்தாரையும் குறிக்கிறது. 

எது எதைக் குறிக்கிறது என்பதை பொதுவழக்கம் அறிந்து தரவுகளின் உதவிகளுடன் தான் சொற்களை பொருள் கொள்ள முடியும்

 

அயன்மணம் என்பது பிராசாபத்யம் எனும் வகை திருமணத்திற்கு நிகரான தமிழ்ப்பதம். சிலப்பதிகாரத்தில் குன்றக்குரவை பகுதியில் எடுத்தாளப்பட்டுள்ளது.

அயன்மண மொழி யரு ளவர்மண மெனவே..

 

(பிரஜாபதி - அயன்?)



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

 

திரு சூரியாவின் பேச்சைக் கேட்டேன். சில விஷயங்களைப் பற்றிப் புரியாமல் பேசியிருக்கிறாரே தவிர, கிராமப்புறப் பள்ளிகளையும் கல்லூரிகளையும் எதிர்நோக்க இருக்கும் அபாயத்தைப் பற்றிச் சுட்டிக்காட்டியிருப்பது மிகவும் சரி. Census based assessment என்பதை தேர்வு என்று தவறாக எடுத்துக் கொண்டு பேசியிருப்பதற்குக் காரணம், சரியாகப் புரிதல் இல்லாமல் இருக்கலாம். The results ..will be used only for developmental purposes என்று அறிக்கை கூறுகிறது. தவறு சூரியா மீது மட்டும் இல்லை. இந்த அறிக்கையைப் படித்துப் புரிந்து கொள்வதற்கு தனியாகக் கமிட்டி ஒன்று அமைக்கப்பட வேண்டும். அறிக்கையில் அனேகமாக எந்த இடத்திலும் இதுதான் எங்கள் பரிந்துரையின் விளைவுகள் என்பதைத் தெளிவாகச் சொல்லவில்லை. மேலும் அறிக்கையின் பரிந்துரைகள் என்ன என்பதையும் கண்டுபிடிக்க மிகுந்த நேரமெடுக்கும் அளவிற்கு அறிக்கை எழுதப்பட்ட லட்சணம் இருக்கிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

"ஒட்டுமொத்த மக்களும் ஒரே அடையாளம் கொண்டவர்கள் எனக்கூறி மாற்று அடையாளத்தை எதிரியாக்கும் போக்கே பாசிசம். "
இது திராவிட முன்னேற்றக் கழத்தின் வாரிசு அரசியலைத் தூக்கிப் பிடிக்கும் சோம்பேறிப் பேராசிரியரின் பதிவு. 
அப்படியா?
தமிழத்தில் பிராமணர் அல்லாத ஒட்டுமொத்த மக்களையும் ஒரே அடையாளம் கொண்டவர்கள் என்று சொன்னவர் பெரியார்!
பிராமணர்களை மாற்று அடையாளம் என்று சொல்லி அவர்களை எதிரியாக்கியவர் பெரியார்!

அரைகுறைகள்தான் திராவிட இயக்கத்தை ஆதரிக்க முடியும் என்பதற்கு இதைவிடப் பெரிய சான்றுகள் தேவையில்லை. பாசிசத்திற்குப் பல கூறுகள் இருக்கின்றன. அவற்றில் இதுவும் ஒன்று அவ்வளவுதான்.

இது தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்ட இலக்கியப் புத்தகங்களின் பட்டியல். நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். ஏழு எட்டு புத்தகங்கள் அண்ணா, கருணாநிதி எழுதிய குப்பைகளின் ஆராய்ச்சி. உருப்படியான புத்தகங்கள் எல்லாம் நிழற்பட மறுபதிப்புகள். தற்கால இலக்கியம் என்றால் இவர்களுக்கு என்னவென்றே தெரியாது என்று நினைக்கிறேன். 38 வருடங்களில் 70க்கும் குறைவாகத்தான் இலக்கியப் புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன. அதிலும் கடந்த பதினைந்து ஆண்டுகளாக எந்த இலக்கியப் புத்தகமும் பதிப்பிக்கப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை

'கண்ணோய்களும் நவீன மருத்துவமும்' கூட இலக்கியப் புத்தகமாகக் கருதப் படுகிறது!



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

காஞ்சி அத்திவரதர் நாற்பதாண்டுகளுக்கு ஒருமுறை தரிசனம் தருவது போன்ற நிகழ்வுகள், அன்றாடத்தின் சோர்விலிருந்து மக்களை விடுவித்து ஒரு அபூர்வ நிகழ்வில் பங்கேற்பதான கிளர்ச்சியை வழங்குவதற்காக மானுட சமூகங்கள் உருவாக்கிக் கொள்பவை.

இவை இறைநம்பிக்கை என்பதைவிட ஒரு பங்கேற்பின் சுவாரசியத்தால் பிரபலமடைபவை. இப்போது பார்க்காவிட்டால் நாற்பதாண்டுகள் பார்க்க முடியாது என்றால் ஒரு தனி கிளர்ச்சி. அதுதான் ஊரெல்லாம் கோயிலாக இருக்கிறதே, இறைவனோ தூணிலும், துரும்பிலும் இருப்பவனாயிற்றே என்றால் கேட்கவா போகிறார்கள்.

உள்ளபடி பார்த்தால் நாற்பதாண்டுகள் கழித்து அத்திவரதர் இருப்பாரோ என்னவோ அவரை தரிசிக்க உலகில் மனிதர்கள் இருப்பார்களா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது. (புவி வெப்பமடையும் பிரச்சினை: முதலீட்டியமும் மானுட அழிவும்).

குறைந்த பட்சம் சமகாலத்தில் மக்கள் தொகை பன்மடங்கு அதிகரித்து விட்டதை கணக்கில் கொண்டு, எங்கெல்லாம் சாத்தியமோ அங்கெல்லாம் இந்த அபூர்வ நிகழ்வுகளை நீடிக்க வேண்டும்.

அத்தி வரதர் ஆறு மாதம் அல்லது ஓராண்டு வெளியில் இருப்பார் என்று அறிவித்தால் ஓரளவு கூட்ட நெரிசல் குறைய வாய்ப்பிருக்கிறது. அதன்பிறகு ஏதாவது முன்பதிவு செய்யும் முறையை ஏற்படுத்திக்கொண்டு ஓரளவு நெரிசலை தவிர்க்கலாம்.

கூட்ட நெரிசலில் சாவது போன்ற ஒரு மிருகத்தனம் ஏதாவது இருக்குமா என்று தெரியவில்லை. நல்ல சாமி, நல்ல பக்தி.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard