வாழ்வியலுக்கு பல அற்புத கருத்துக்களை எடுத்துரைக்கும் தமிழில் தொன்மையான நூலாக உலக பொதுமறை என அழைக்கப்படுவது ” திருக்குறள் “. திருக்குறள் அடிப்படை கிறிஸ்தவமே என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டது சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. திருக்குறளுக்கு கிறிஸ்தவ மதம் சார்ந்த விளக்க உரையை கிறிஸ்டோபர் என்பவர் எழுதி உள்ளார்.
யூடியூப் தளத்தில் ஜெஸீமின் அசிர் என்பவர் பேசிய வீடியோவில் திருக்குறள் ஒரு கிறிஸ்தவ நூல் என்று பேசி இருந்தார். அந்த வீடியோ பதிவும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வைரல் ஆகியது. இந்த வீடியோ 2016 ஜூனில் யூடியூப் தளத்தில் வெளியாகி இருக்கிறது.
கிறிஸ்டோபரின் ” திருக்குறள் ” அடிப்படை கிறிஸ்தவமே என்ற புத்தகம் முன்பே வெளியான புத்தகமாகும். 2014-ல் அப்புத்தகம் இரு பகுதிகளாக வெளியிடப்பட்டு உள்ளது.
திருக்குறள் வைத்து கிறிஸ்தவ மத அடிப்படையில் பல புத்தகங்கள் எழுதப்பட்டு உள்ளன. ஏன், இந்திய வரலாறு தொடங்கி திராவிடம் வரையில் கிறிஸ்தவ மதம் சார்ந்த அடிப்படை வாதங்களை கொண்டு புத்தகங்கள் வெளியிட்டு இருக்கிறார்கள்.
திருவள்ளுவர் என்பவர் ஒரு ஹிந்து, கிறிஸ்தவர், முஸ்லீம் என ஒரு மத அடிப்படையிலும், பிராமணர், தேவர், நாடார், வன்னியர், பறையர் என சாதீய அடிப்படையிலும் அடக்க முடியாதவர். ஏனெனில், அவரைப் பற்றிய தெளிவான விவரங்கள் யாவும் ஆராய்ச்சியாளர்களுக்கே கிடைக்காத நிலையில் இவர்களாகவே அவருக்கு ஒரு அடையாளத்தை கொடுக்கின்றனர்.
மேலும் படிக்க : திருவள்ளுவரின் சாதி என்ன ?
உலகத்திற்கான நூலை ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்தது எனக் கூறுவதே பாதகம். உள்ளிருக்கும் அரும்பெரும் கருத்துக்களை ஆராய்ந்து அதன்படி வாழ்வதை விடுத்து சாதீய, மத அடிப்படை வாதத்தை கையில் எடுப்பது அறிவிலிகளின் வேலையாகும்.
தமிழின் தொன்மையான நூலை மதமின்றி மனதளவில் ஏற்கும் நிலைக்கு அனைவரும் வர வேண்டும். அப்படி இல்லாமல், திருக்குறளை கிறிஸ்தவ நூல் என்பதும், திருவள்ளுவரின் புகைப்படத்தில் திருநீர் பட்டை மற்றும் பூணூல் இருப்பது போன்று சித்தரிப்பது யாவும் மடமையே !
Youturn பணியை விரும்புகிறீர்களா? இனி நீங்கள் நி