New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: புத்தர் இந்துமதத்திலிருந்து எப்போது விலகினார்? - கொய்ன்ராட் எல்ஸ்ட்


Guru

Status: Offline
Posts: 24765
Date:
புத்தர் இந்துமதத்திலிருந்து எப்போது விலகினார்? - கொய்ன்ராட் எல்ஸ்ட்
Permalink  
 


புத்தர் இந்துமதத்திலிருந்து எப்போது விலகினார்? - கொய்ன்ராட் எல்ஸ்ட் (தமிழில்: ஜடாயு)

 கொய்ன்ராட் எல்ஸ்ட் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த சிறந்த வரலாற்றாசிரியர், இந்தியவியலாளர். கடந்த ஐம்பதாண்டுகளாக இந்தியாவுடன் ஆழ்ந்த பிணைப்புக் கொண்டு ஆய்வுகளைச் செய்து வருபவர். அயோத்தி ராமஜன்ம பூமி வரலாறு குறித்தும், இந்துத்துவ இயக்கங்கள் குறித்தும் காத்திரமான நூல்களை எழுதியிருக்கிறார்.

koenraad_elst.jpg

 

 ஐரோப்பாவைச் சேர்ந்த கீழைத்தேச ஆய்வாளர்கள் (Orientalists) இந்தியாவிற்கு வெளியில்தான் பௌத்தத்தை முதலில் கண்டறிந்தனர். அதனால், பௌத்தம் புழக்கத்தில் உள்ளதற்கான அடையாளமே இல்லாதிருந்த இந்தியாவுடன் அதற்கு எந்த வெளிப்படையான தொடர்பும் இல்லை, பௌத்தம் முற்றிலும் தனிப்பட்ட ஒரு மதம் என்று அவர்கள் கருதினர். ஆரம்பத்தில், புத்தர் இந்தியாவைச் சேர்ந்தவர் என்றுகூட அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. இந்தியாவின் வரலாற்று நிகழ்வுகளுக்கு எந்த வகையிலும் தொடர்பில்லாத வகையில் பௌத்தம் பல நூற்றாண்டுகள் பல்வேறு வகைகளில் இந்தியாவிற்கு வெளியே வளர்ந்து வந்தது உண்மை. எனவே, இந்துமதத்துடன் அதற்கு உள்ள உறவு எடுத்துச் சொல்லப்படும் வரை, பௌத்தம் முற்றிலும் தனிப்பட்ட ஒரு மதம் என்ற கருத்து அவர்களிடையே நிலவியது புரிந்துகொள்ளக் கூடியதே.

 

நவீன இந்தியாவில் பௌத்தம்

 

இதன் பின்னர் இந்தியாவிலும் பௌத்தம் தனி மதம் என்ற இந்த நிலைப்பாட்டுடன் பொருந்தும்படி பலவிதமான புதிய ‘கண்டுபிடிப்புகள்’ உருவாக்கிச் சேர்க்கப்பட்டன. குறிப்பாக 1956ல் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் புத்தமதம் தழுவியதன் பின்னணியில், ‘இந்துமதத்திற்கு முற்றிலும் எதிரானவர்’ என்ற வகையில் புத்தரின் கடந்தகாலத்தை மீள் உருவாக்கும் முயற்சிகளில் அம்பேத்கரிய இயக்கம் முனைந்து ஈடுபட்டது. தனது மத சம்பிரதாயத்திலிருந்து வேறு ஒரு மத சம்பிரதாயத்தைத் தழுவுவதாக அல்லாமல் (இந்துவாக இருந்துகொண்டு இதைச் செய்வதற்கான முழு சுதந்திரம் இந்துமதத்தில் உண்டு), ‘மதமாற்றம்’ என்ற பெயரில் ‘எனது முந்தைய மதத்தைத் துறந்து பௌத்த மதத்தில் இணைகிறேன்’ என்று அம்பேத்கர் அறிவித்தது கிறிஸ்தவ மதக் கோட்பாடே அன்றி, இந்திய மதங்களில் உள்ள கோட்பாடு அல்ல.

 

கி.பி. 496ம் வருடம் ஃபிராங்கிய மன்னர் க்ளோவிஸ் ‘தான் அதுகாறும் வழிபட்டு வந்தவற்றை எரித்து, எரித்து வந்ததை வழிபடத் தொடங்கி’ மதம் மாறியது இதற்கான முன்னுதாரணமாகலாம். (கிறிஸ்தவ வரலாற்றாசியர்கள் ஒரு பொய்யான எதுகைமோனைக்காகத் தங்களது மத எதிரிகளை வசைபாடி இவ்வாறு எழுதினார்கள். மற்றபடி பழைய விக்கிரக வழிபாட்டாளர்கள் கிறிஸ்தவச் சின்னங்களை ஒருபோதும் எரித்ததும் அழித்ததும் கிடையாது என்பதே உண்மை.) இஸ்லாமின் வரலாறு குறித்தும், சாதி தொடர்பான வரலாற்றில் உள்ள சில விஷயங்கள் குறித்தும் அம்பேத்கர் சிறப்பாக எழுதியுள்ளார் என்பது உண்மையே. ஆனால் பௌத்த தர்மத்தின் வரலாறு குறித்து அவரது புரிதல் சிறிதுகூட ஆதாரமில்லாதது, நம்பகத்தன்மையில்லாதது. ஆனால், அவர் கொஞ்சம் சரியாகவும் கொஞ்சம் தவறாகவும் இதுபற்றிச் சொல்லிச் சென்றவற்றை, அவரைப் பின்பற்றிய தொண்டர்கள் ஒரேயடியாக மட்டையடி அடித்து, வரலாற்றுக் கேலிச்சித்திரம் போல ஆக்கிவிட்டார்கள். இந்து வரலாற்றில் பௌத்தத்தின் இடம் என்ன என்பது குறித்த அம்பேத்கரிய கருத்துக்கள் விஷயத்தில் இந்த விமரிசனம் முற்றிலும் பொருந்தும்.

 

இங்கு ஆட்சியதிகாரத்தில் இருந்த நேருவியர்களின் இந்துமத எதிர்ப்பு ஒரு கட்டுக்குள் அடங்கியதாக இருந்தது. அம்பேத்கரியக் கண்ணோட்டம் அதை மேலும் தீவிரப்படுத்தியது. இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் ஆட்சியில் இந்தியாவின் ‘அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத அரசு மதமாக’ பௌத்தம் முன்னெடுக்கப்பட்டது. பௌத்தப் பேரரசர் அசோகரின் சிங்கத் தூண் அரசுச் சின்னமாகவும், 24 ஆரங்கள் கொண்ட ‘சக்ரவர்த்தி’ ஆழி தேசியக் கொடியில் இடம்பெறும் ஒன்றாகவும் ஆயிற்று. இந்திய வரலாற்றைப் பற்றிய நேருவின் குறுகலான அறிவுப் பார்வையில் ஒட்டுமொத்த இந்திய சரித்திரத்தில் இரண்டு ஆன்மிகத் தலைவர்களும் (புத்தர், மகாத்மா காந்தி) மூன்று அரசியல் தலைவர்களும் (அசோகர், அக்பர் மற்றும் ஜவஹர்லால் நேருவாகிய தான்) மட்டும்தான் தெரிந்தார்கள்! உண்மையில் ‘சக்ரவர்த்தி’ (சக்கரத்தை சுழலச் செய்பவர், உலகப் பேரரசர்) என்ற கோட்பாடு, அசோகருக்கு மிகவும் முன்பு வேதகாலத்திலிருந்தே வந்து கொண்டிருக்கும் ஒன்று. 24 ஆரங்கள் என்பவை பௌத்த கோட்பாடுகளை மட்டும் குறிக்கவில்லை. அந்தக் குறியீட்டை பல்வேறு விதங்களில் பொருள் கொள்ளலாம். உதாரணமாக, சாங்கிய தரிசனத்தில் புருஷன் என்பதை மையமும், 24 தத்துவங்களுடன் கூடிய பிரகிருதி என்பதை ஆரங்களும் குறிப்பதாகக் கொள்ளலாம்.

 

முற்றிலும் ஆங்கிலமயமாகி விட்ட ‘இந்தியாவின் கடைசி வைஸ்ராய்’ ஆன நேரு, இந்துக் கலாசாரம் குறித்த தனது அறியாமையை ஒருவிதப் பெருமையுடன் பறைசாற்றிக் கொள்பவராகவே இருந்தார். உண்மையில் அவர் சக்கரத்தையோ அதன் தத்துவத்தையோ பற்றியெல்லாம் எதுவும் அறிந்திருக்கவில்லை. ஆனால், இந்தs சின்னங்கள் அசோகரின் பெருமையைப் பறைசாற்றி இந்துமதத்தைச் சிறுமைப்படுத்துகின்றன என்பதே அவருக்குப் போதுமானதாக இருந்தது. பௌத்தத்தைத் தழுவுவதற்காக, அசோகர் தன்னை அதிலிருந்து உடைத்துக்கொண்டு வெளியேறிய இந்துமதம்! பொதுவாக, இந்தியாவில் பெருமிதத்திற்கும் மதிப்புக்கும் உரியவை எல்லாம், பௌத்தம் (மற்றும் இஸ்லாம்) துப்புக்கெட்ட இந்துக்களுக்கு அளித்துவிட்டுச் சென்ற கொடை என்றே நேரு கருதினார். அவரைப் பொருத்த வரையில் இந்துக்களின் சகிப்புத்தன்மை என்ற புகழ்பெற்ற விஷயம் கூட புத்தமதத்திலிருந்து கடன் வாங்கியதுதான். ஆனால், உண்மை என்னவென்றால், வரலாற்று ரீதியாக, இங்கு ஏற்கெனவே நிலைநிறுத்தப்பட்டிருந்த இந்துக் கலாசாரத்தின் பன்முகத்தன்மைதான், புத்தர் என்பவர் தோன்றி, தனது தர்ம உபதேசங்களைக் கூறுவதற்கே காரணமாக அமைந்தது. ஒரு முஸ்லிம் நாட்டில் அவர் தனது கொள்கைகளை 45 வருடங்கள் அமைதியாகவும் சுகமாகவும் உபதேசித்துக் கொண்டிருந்திருந்திருக்க முடியாது. இங்கும் அவரது உயிருக்குச் சில முறைகள் ஆபத்துக்கள் நேர்ந்தனதான். ஆனால் அவை ‘இந்துக்களிடமிருந்து’ வரவில்லை. அவரே உருவாக்கியிருந்த துறவு அமைப்பின் பொறாமை பிடித்த சீடர்களிடமிருந்துதான் வந்தன.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
RE: புத்தர் இந்துமதத்திலிருந்து எப்போது விலகினார்? - கொய்ன்ராட் எல்ஸ்ட்
Permalink  
 


 ஆயினும், இந்துவாகப் பிறந்து துறவறம் பூண்ட புத்தர், தனது வாழ்க்கையின் ஏதோ ஒரு காலகட்டத்தில் இந்துமதத்திலிருந்து தன்னைத் துண்டித்துக்கொண்டு, புத்தமதம் என்ற ஒரு புதிய மதத்தை உருவாக்கினார் என்பதான ஒரு கருத்தாக்கத்தை நேருவும், அம்பேத்கரும் அவர்களைப் பின்பற்றியவர்களும் நம்பத் தொடங்கினர். இந்தக் கருத்துதான் இப்போது எங்கும் பரவலாக உள்ளது. பள்ளிப் பாடப் புத்தகங்களின் வாயிலாக, பெரும்பாலான இந்தியர்களுக்கு இந்தக் கருத்து ஊட்டப்பட்டுள்ளது. இதற்கு மேல் இந்த விஷயம் குறித்து அவர்களுக்கு ஒன்றும் தெரியாது. ஆனால், இந்தக் கதையை நம்புகின்ற எண்ணற்றவர்களில் ஒருவர் கூட, புத்தர் தனது வாழ்க்கையில் எந்தக் கட்டத்தில் இந்துமதத்திலிருந்து துண்டித்துக் கொண்டு சென்றார் என்பதைக் கூறுவதே இல்லை. எப்பொழுது அவர் இந்துமதத்திற்கெதிராகப் புரட்சி செய்தார்? ஏராளமான இந்தியர்கள் இந்த நேருவியச் சித்தரிப்பை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதுவரை புத்தரின் வாழ்வில், அவர் இந்துமதத்திலிருந்து துண்டித்துக் கொண்டு சென்றார் என்று கருதத்தக்க ஒரு சம்பவத்தைக்கூட அவர்கள் ஒருவராலும் சுட்டிக்காட்ட இயலவில்லை.

 

‘இந்துமதம்’ என்னும் சொல்

 

இவ்வாறு கேள்விக்குள்ளாக்கப்படும்போது அவர்களது முதல் வாதம் கட்டாயமாக இப்படித்தான் இருக்கும் – ‘உண்மையில், அந்தக் காலகட்டத்தில் இந்துமதமே இருக்கவில்லையே.’ அதாவது, அப்போது இந்துமதம் இருக்கவில்லை. ஆனால் ஏதோ ஒரு விதத்தில் புத்தர் அதிலிருந்து விலகிக்கொண்டு மட்டும் வந்து விட்டார்! ஆமாம், அவர் செய்த மகா அற்புதங்களில் ஒன்று இது. இப்படித்தான் உள்ளது மதச்சார்பின்மைவாதிகளின் நிலைப்பாடு.

 

அதைத் திருத்துவோம். அதாவது, ‘இந்துமதம்’ என்ற *சொல்* அப்போது இருந்திருக்கவில்லை. புத்தருக்குச் சமகாலத்தில் வாழ்ந்த அகாமெனிட் (Achaemenid) பாரசீகர்களின் அரசன் டேரியஸ் ‘ஹிந்து’ என்ற சொல்லைப் பயன்படுத்தியபோது, அது நிலவியல் சார்ந்ததாக மட்டுமே இருந்தது – அதாவது, சிந்து பிரதேசத்திலும் அதற்கு அப்பாலும் இருப்பவர்கள். மத்தியக் காலத்திய முஸ்லிம் படையெடுப்பாளர்கள் இந்தியாவுக்கு ‘ஹிந்து’ என்ற சொல்லைக் கொண்டுவந்தபோது அதன் பொருள் இப்படி இருந்தது – இந்திய முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், யூதர்கள் தவிர்த்து இந்தியாவில் உள்ள மற்ற அனைவரும். ‘ஆபிரகாமியர்களாக அல்லாதவர்கள்’ என்ற எதிர்மறைக் குறிப்பைத் தாண்டி, ஹிந்து என்ற அந்தச் சொல் எந்தக் குறிப்பிட்ட மதக்கொள்கையுடனும் தொடர்புபடுத்தப்படவில்லை. எல்லா விதமான இந்திய பாகனியர்களையும் (Indian Pagans) அது குறித்தது – பிராமணர்கள், பௌத்தர்கள் (‘மொட்டைத் தலை பிராமணர்கள்’), ஜைனர்கள், மற்ற துறவிகள், தாழ்ந்த சாதியினர், இடைநிலைச்சாதியினர், பழங்குடியினர் மேலும் இதே தொடர்பின் காரணமாக, வரலாற்றில் இன்னும் தோன்றியிருக்காத லிங்காயதர்கள், சீக்கியர்கள், ‘ஹரே கிருஷ்ணா’க்கள், ஆரிய சமாஜிகள், ராமகிருஷ்ண இயக்கத்தினர், மதச்சார்பின்மைவாதிகள் மற்றும் தற்காலத்தில் இந்து என்ற முத்திரையை மறுதலிப்பவர்கள் – இவர்கள் எல்லாரையுமே அச்சொல் குறித்தது. ஹிந்து என்ற சொல்லுக்கான இந்த வரையறையைத்தான் ஹிந்துத்துவம் என்ற தனது நூலில் (1923) வீர சாவர்க்கரும், இந்திய அரசின் இந்து திருமணச் சட்டமும் (1955) ஏற்றுக்கொண்டனர்.

 

இந்த வரலாற்று ரீதியான வரையறை ‘தந்திரக்கார பிராமணர்களால்’ புகுத்தப்படவில்லை என்பதனால் சாதகமானதும்கூட. இதன்படி, புத்தரும் அவரைப் பின்பற்றுபவர்களும் சந்தேகத்திற்கிடமின்றி இந்துக்களே. எனவே, அம்பேத்கர் புத்தமதத்தில் தஞ்சமடைந்தபோது, ‘உறுதியாக இந்து அரவணைப்புக்குள் தாவியிருக்கிறார்’ என்று வீர சாவர்க்கர் கூறியது இதன்படி மிகச்சரியானதே.

 

ஆனால் நடைமுறையில் ‘இந்து’ என்ற இந்தச்சொல் அபிமான விளையாட்டுக் கருவி போல இஷ்டத்துக்கு வளைக்கப்படுகிறது. திராவிடர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், சீக்கியர்கள் என்று பலதரப்பட்ட சமூகக் குழுக்களையும் ‘இந்துக்களே அல்ல’ என்று மதச்சார்பின்மைவாதிகள் அடித்துக் கூறுவார்கள். ஆனால் சிறுபான்மை மதத்தினரின் அராஜக ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளைப் பற்றி இந்துக்கள் புகார் கூறினால், அது ஒரு பிரச்சினையே அல்ல என்று ஏளனமாகச் சிரிப்பார்கள். ‘இந்துக்கள் எப்படி ஆபத்தாக உணர முடியும்? அவர்கள் தான் 80%க்கு மேல் இருக்கிறார்களே’ என்று அதே வாயால் கூறுவார்கள் இந்த மதச்சார்பின்மைவாதிகள். ‘பழங்குடிகள் இந்துக்களே அல்ல’ என்று கிறிஸ்தவ மிஷனரிகள் அறிவிப்பார்கள். ஆனால் தங்களது மரியாதைக்குரிய துறவியின் படுகொலைக்குக் காரணமான கிறிஸ்தவர்களை எதிர்த்துப் பழங்குடியினர் கலவரத்தில் ஈடுபடும்போது அவர்கள் ‘இந்து கலவரக்காரர்கள்’ ஆகிவிடுகிறார்கள்! இதே ரீதியில்தான், புத்தர் விஷயத்தில் ‘இந்து‘ என்பது ‘வேதம் சார்ந்த, வைதீக‘ என்ற பொருளில் சௌகரியத்திற்கேற்றபடி குறுக்கப்படுகிறது. பிறகு தேவைப்படும்போது அதன் பரந்த பொருளுக்குத் திரும்ப அழைத்து வரப்படுகிறது.

Buddha.jpg

 

ஹிந்து என்ற சொல்லின் ஒரு பொருளாக ‘வேதம் சார்ந்த, வைதீக‘ என்பது நிச்சயமாக இல்லை. அந்தச் சொல் அறிமுகப்படுத்தப்பட்ட போதும் கூட அப்படி ஒரு பொருள் இருக்கவில்லை. சங்கரர் பதஞ்சலிக்கும், சாங்கிய தத்துவப் பிரிவினருக்கும் எதிராக, ‘அவர்கள் (புத்தரைப் போன்றே) வேதங்களைப் பிரமாணமாகக் கொள்வதில்லை‘ என்று கூறுகிறார். ஆயினும் இந்துச் சிந்தனைப்பள்ளியின் ஒவ்வொரு வரலாற்றிலும் இந்தத் தத்துவங்களுக்கு முக்கியமான இடம் உள்ளது. இந்துமதத்தின் பல கூறுகளில் வேதம் ஒரு மெல்லிய மேற்பூச்சுப் படலம் போல மட்டுமே உள்ளதையும், இன்னும் சில கூறுகளில் வேதம் சாராமலே அவை இருப்பதையும் நாம் கவனிக்கலாம். சில அறிஞர்கள், வைதீக ‘பெருமரபு’, பற்பல பிரதேசம் சார்ந்த சம்பிரதாயங்களும் அனுமதிக்கப்பட்ட ‘சிறுமரபு’ இவை இரண்டுமே வேதம் என்ற பெருமிதமிக்க விசாலமான குடையின் கீழ் வளர்ந்து வந்துள்ளன என்று இதனை விளக்குகிறார்கள். இந்த விதத்தில் நாம் புத்தரை வகைப்படுத்த விரும்பினால், அவருக்கான இடம் பெருமரபு என்பதிலேயே உள்ளது என்பதையும் தெளிவாக உணரலாம்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

 சித்தார்த்த கௌதமர் என்கிற புத்தர்சூரிய குலத்தில் இக்ஷ்வாகு வம்சத்தில்மனுவின் வழித்தோன்றலாக வந்த க்ஷத்திரியர் ஆவார். ‘ராமரின் மற்றொரு அவதாரமாகத் தோன்றியவன்‘ என்று தன்னை விளித்துக் கொள்ளும் அவர்சாக்கியர் குடியின் ராஜனுடைய (நிரந்தரக் குடித்தலைவன்மகனாககௌதமக் கோத்திரத்தில் உதித்துசபையின் உறுப்பினராக இருந்தவர்.துறவிகள் பெரும்பாலும் தங்களது துறவுப்பெயராலேயே அறியப்படுவது மரபானாலும்பௌத்தர்கள் புத்தரை அவரது குலப்பெயரைச் சேர்த்து ‘சாக்கிய முனி’ (சாக்கியர் குடியைச் சார்ந்த துறவிஎன்று அழைப்பதையே விரும்புகின்றனர்இந்தக் குடியானது எந்த அளவுக்குச் சாத்தியமோ அந்த அளவுக்கான ஒரு இந்து சமூகமாக இருந்ததுஆதி மூதாதையான மனுவின் மூத்த மகனின் வழித்தோன்றல்களாகவும்அவரது பிந்தையஇளைய மனைவியின் ஆணையால் மறுதலிக்கப்பட்டவர்களாகவும் அக்குடியினர் தங்களைக் கருதினர்புத்தர் ஒருபோதும் ‘சாக்கியஎன்ற குலப்பெயரை நிராகரித்ததற்கான சான்றுகள் இல்லை.அவரது வாழ்வின் இறுதிக்கட்டத்தில்சாக்கியர்கள் கோசல மன்னன் விடூதபனின் கோபத்திற்கு இலக்காகி முற்றிலுமாக படுகொலை செய்யப் பட்டபோதும் கூட.
 
ராமன் முதலான அவதாரங்களின் வரிசையில் அவரும் ஒருவர் என்பதான கருத்துகுயுக்திபடைத்த பிராமணர்களின் புராணங்களின் கண்டுபிடிப்பு அல்லமாறாகபுத்தரே தன்னைக் குறித்து அறிவித்துக் கொண்டது அதுதனது முந்தைய அவதாரங்களில் ராமரும் ஒருவர் என்று கூறிக்கொண்டது புத்தர்தான்பல இந்துமதக் கொள்கைகளையும் பழக்கங்களையும்புத்தமதத்திலிருந்து கடன்வாங்கப்பட்டது’ என்றே கூறி விளக்க விரும்பும் அறிஞர் பெருமக்கள்இந்தக் குறிப்பிட்ட ‘இந்துமதக்கொள்கையை அம்பேத்கர் நிராகரிப்பதைஇல்லை இல்லை இதுவும் ‘புத்தமதத்திலிருந்து கடன் வாங்கப்பட்டதே’ என்று சிறப்பாகவும் செம்மையாகவும் கூறி அம்பேத்கரை எதிர்க்கலாம்.
 
வாழ்க்கைப் பாதை
 
தனது 29ம் வயதில் அவர் சமூக வாழ்க்கையைத் துறந்தார்,ஆனால் இந்துமதத்தைத் துறக்கவில்லைசமூகத்திலிருந்து முற்றிலுமாக விலகிதனது சாதிக்கான அடையாளங்களையும் பெயரையும் கூட நீத்துச் செல்வது என்பது இந்துக்களிடையே இருந்த பழக்கம்தான்சடாமுடிகளுடன் ஆகாயத்தையே ஆடையாக உடுத்து வாழும் முனிவர்களைப் பற்றி ரிக்வேதத்திலேயே குறிப்பு உண்டு. ‘நாகா சாதுக்கள்’ என்று இன்று அழைக்கப்படுபவர்கள் இத்தன்மையினர்தான்துறவு வாழ்க்கை என்பது புத்தருக்கு நீண்ட காலம் முன்பே வேதகால சமுதாயத்தில் அங்கீகரிக்கப்பட்ட நடைமுறையாகவே இருந்தது. ‘ஆத்மா’ என்ற தத்துவத்தை விரிவாக வளர்த்தெடுத்த உபநிஷத ரிஷியாகிய யாக்ஞவல்கியர் அரசவைப் புரோகிதராகஇரண்டு மனைவியருடன் நிறைவான இல்லறத்தில் வாழ்ந்து பின்னர் சமூகவாழ்வைத் துறந்தவர்எனவேஇந்து சமுதாயத்தில் ஏற்கெனவே இருந்த ஒரு மரபைப் பின்பற்றியே புத்தரும் தனது அரசியல் எதிர்காலத்தையும் குடும்பத்தையும் துறந்து சென்றார்அதன்பிறகு மற்ற வேதநெறி சார்ந்த துறவியர் போலவேஅவரும் எந்த வைதீக சடங்குகளையும் பின்பற்றவில்லை (ஆனால் ஜென் பௌத்தர்கள் இன்றளவும், ‘ஸவுகா’ அதாவது ‘ஸ்வாஹா’ என்று முடியும் ஹிருதய சூத்திரத்தை (Heart Sutra) வேதமந்திரங்களின் பாணியில் போல ஜபம் செய்கிறார்கள்).
 
கர்மகாண்டம்’ எனப்படும் சடங்குகளைத் துறந்துஅறிவுத் தேடலில் ஈடுபடும் ‘ஞானகாண்டம்’ என்பதான இயக்கத்திற்கு உபநிஷதங்களில் சான்று உள்ளதுஇந்த இயக்கத்தையே பிற்பாடு புத்தரும் பின்பற்றினார்கானகத்திற்குச் செல்லுதல் என்ற இந்து நடைமுறையை மேற்கொண்டதன் பின்அவர் இரண்டு குருமார்களிடமிருந்து கற்றுக்கொண்ட தியான முறைகள் உட்பட பல வழிமுறைகளை முயன்று பார்த்தார்எவையும் அவருக்குத் திருப்தியளிக்கவில்லைஆயினும்அவற்றைத் தனது பௌத்தப் பாடத்திட்டத்தில் சேர்க்க அதுவே போதுமானதாக இருந்தது.அனபனஸதி (Anapanasati) அதாவது மூச்சுக்காற்றைக் கவனித்தல் என்ற வழிமுறையை அவர் பின்பற்றியதாகக் கூறப்படுகிறது.இன்று ஒவ்வொரு யோகப்பள்ளியிலும் பிரபலமான இருக்கும் யோக முறைதான் அதுசில காலங்கள்இந்துமதப் பிரிவான ஜைனத்தில் உள்ளது போன்றே அதிதீவிர துறவு நெறியையும் அவர் பின்பற்றினார்ஆன்மிக வழிமுறைகளைப் பின்பற்றும் ஒரு குழுவில் சேர்வதற்கும்பிறகு அதிலிருந்து விலகுவதற்குமான இந்து மதத்திற்கே உரியதான சுதந்திரத்தை அவர் பயன்படுத்திக் கொண்டார்இதில் ஒவ்வொரு கட்டத்திலும் அவர் இந்துவாகவே நீடித்தார்.
 
பிறகு அவர் தனது சொந்த வழிமுறைகளையும் இதில் சேர்த்தார் அல்லது அப்படித்தான் புத்தமதத்தின் முதல்நூல்கள் நமக்குச் சொல்கின்றனஇது குறித்து ஆதாரபூர்வமான சான்றுகள் இல்லை என்பதனால்விபாசனா (மனதை முழுவதுமாக ஈடுபடுத்தியிருத்தல்என்ற இந்த வழிமுறையையும் கூட வேறு எங்கிருந்தாவது அவர் கற்றிருக்கக் கூடுமா என்பதை நாம் அறிய வாய்ப்பில்லைவேறு ஏதேனும் எதிர்மறையான சான்றுகள் கிடைக்காத பட்சத்தில்ஒரு இந்துவுக்கு அத்தகைய (புதிய பாதைகளை உருவாக்கும்சுதந்திரம் எப்போதுமே உண்டு என்பதனால்இந்த வழிமுறையை அவர் தானாகவே முழுமையாகக் கண்டுபிடித்தார் என்றே நாம் கொள்ளலாம்அதன் பிறகு அவர் ‘போதி’ என்ற அகவிழிப்பு நிலையை அடைந்தார்.அவரே கூறியுள்ளபடிஅவர் இத்தகைய நிலையை அடைந்த முதல் மனிதரும் அல்லமாறாகஅவருக்கு முந்தைய விழிப்புற்றோர் (புத்தர்கள்நடந்த பாதையில் சென்றவரே அவர்.
 
வேத தெய்வங்களான பிரம்மாவும் இந்திரனும் கேட்டுக் கொண்டபடிஅவர் தன்னிறைவு பெற்ற அந்த அகவிழிப்பு நிலையிலிருந்து இறங்கி வந்துதனது உபதேசங்களை மற்றவர்களுக்கு வழங்கத் தொடங்கினார்தர்மத்தின் ஆழியை அவர் இயக்கத்தொடங்கிய போது (தர்மசக்ர ப்ரவர்த்தனம்),ஏற்கெனவே இருக்கும் ஒரு அமைப்பிலிருந்து (system)விலகுவதற்கான எந்த அடையாளமும் அதில் இல்லைமாறாக,ஏற்கெனவே உள்ள வேத உபநிஷத சங்கேதங்களைப் பயன்படுத்தி தனது வழியை ‘ஆர்ய தர்மம்’ என்று அழைத்தார் (ஆர்ய =வேதத்தினால் பண்படுத்தப்பட்ட). இதன் மூலம் தனது வேத வேர்களை உறுதி செய்தது மட்டுமின்றிதனது வழியானது சீரழிந்து விட்ட வேத ஆதர்சங்களை மறுசீரமைப்பு செய்வதாகும் என்றும் அவர் உணர்த்தினார்தனது வழிமுறைகளையும்மானுட நிலை குறித்த தனது வியாக்கியானங்களையும் தனது சீடர்களுக்குப் போதித்துஅவற்றைச் சிரத்தையுடன் கடைப்பிடித்தால்தான் அடைந்தது போன்ற அதே அகவிழிப்பை அவர்களும் அடையமுடியும் என்றும் வாக்களித்தார்.
 
 


__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

சாதி
 
சாதி விஷயத்தில்ஏற்கெனவே இருந்த சமுதாய அமைப்புடன் முழுவதுமாக ஒத்துழைப்பவராகவே புத்தர் இருந்தார் என்பதைக் காண்கிறோம்செல்வாக்குள்ள பிரபு குடும்பத்தவர் என்ற அளவில்,தனது உபதேசங்களைப் பரப்புப் பணிக்காக உயர் சாதியினரையே அவர் தெரிவு செய்தார்அதில் 40%க்கும் அதிகமானோர் பிராமணர்கள்பிற்காலத்தில் பௌத்தம் என்றாலே நேர்த்தியான நுட்பமான தத்துவங்கள் என்ற நிலையை உருவாக்கப் போகிற மகத்தான தத்துவவாதிகள் அவர்களிலிருந்துதான் வந்தார்கள்.இதற்குப் பிரதியாகபிற்காலத்தில் பௌத்த பல்கலைக்கழங்கள் வானியலாளர் ஆர்யபட்டர் போன்று சிறந்த பௌத்தரல்லாத அறிஞர்களுக்கும் கற்பிக்கும் கேந்திரங்களாக விளங்கின.இந்தியாவின் பண்டைய பல்கலைக்கழங்களே புத்தமதம் அளித்த கொடைதான் என்று ஒரு பொதுப்படையான எண்ணம் நிலவுகிறது.ஆனால்புத்தரின் நண்பர்களான பந்துலர் (Bandhula), பிரசேனாதி(Prasenadi) ஆகியவர்களும் (சில ஊகங்களின் படி இளைஞரான சித்தார்த்தருமே கூடதட்சீலத்தில் இருந்த பல்கலைக்கழகத்தில் பயின்றவர்கள்பௌத்தர்களின் கூட்டம் உருவாவதற்குப் பலகாலம் முன்பே இப்பல்கலைக்கழகம் நிறுவப்பட்டுவிட்டிருந்ததுகறாராகச் சொல்வதானால்இந்துச் சமூகத்தில் முன்பு இருந்த கல்வி அமைப்புகளை விரிவாக்கி மேன்மைக்கு இட்டுச்சென்றது புத்தமதம் என்பது சரியாக இருக்கும்.
 
கிழக்கு கங்கைச் சமவெளிப் பகுதியைச் சார்ந்த மன்னர்களும் செல்வந்தர்களும் புத்தரைத் தங்களில் ஒருவராகக் கருதினர்.அதுவே உண்மையும் கூடஎனவே வேகமாக வளர்ந்து வந்த அவரது துறவு அமைப்புக்கு மகிழ்ச்சியுடன் அவர்கள் உதவினர்.தங்களது பணியாளர்களையும் பிரஜைகளையும் அந்த அமைப்புக்கான மடாலயங்களை உருவாக்குமாறு ஆணையிட்டனர்.எதிர்காலத்தில் தன்னைப் போன்ற அகவிழிப்பு கொண்டமைத்ரேய’ புத்தரின் (நட்பும் கொடையும் நிரம்பியவர்வருகை நிகழும் என்றும் அவர் பிராமணக் குடும்பத்தில் பிறப்பார் என்றும் கௌதம புத்தர் அறிவித்தார்.


__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

தனது மனைவி தூய சாக்கிய குல இளவரசி அல்லசாக்கிய அரசருக்கும் பணிப்பெண்ணும் பிறந்தவள்தான் என்று தெரிய வந்தவுடன்மன்னர் பிரசேனாதி அவளையும் அவள்மூலம் பிறந்த மகனையும் மறுதலித்தார்இளமைக்காலம் முதல் மன்னரின் நண்பராக விளங்கிய புத்தர் அது தவறு என்று கூறி மன்னர் அவர்களை ஏற்றுக்கொள்ளச் செய்தார்ஆனால்அம்பேத்கரியர்கள் கூறுவது போல, ‘பிறப்பு முக்கியமானதல்ல’ என்றோ ‘சாதி தவறுஎன்றோ ‘சாதி ஒரு பொருட்டல்ல’ என்றோ கூறி அதை அவர் சாதித்தாரா என்னஇல்லைமாறாகசாதி என்பது தந்தைவழியிலேயே சந்ததியினருக்கு வரும் என்ற பழைய சாஸ்திர மரபை மன்னனுக்கு நினைவுறுத்தினார்(அக்காலகட்டத்தில் இந்த சாஸ்திர மரபு இன்னும் கறாராகத் திருத்தி எழுதப்பட்டுக் கொண்டிருந்தது). குதிரைகள்கழுதைகள் ஆகியவற்றின் கூட்டு இனங்களில்ஆண் குதிரைக்கும் பெண் கழுதைக்கும் பிறப்பவைதந்தையின் இனம் சார்ந்து குதிரையினங்களாகவே கருதப்பட்டனஆண் கழுதைக்கும் பெண் குதிரைக்கும் பிறப்பவை அதே ரீதியில் கழுதையினங்களாகக் கருதப்பட்டனஇந்தப் பழங்கால மரபை வைத்துத்தான்ஆகத் தொன்மையான சாந்தோக்ய உபநிஷதத்தில்பிராமணர்களுக்கு மட்டுமே கற்பிக்க விரும்பும் குருசத்யகாம ஜாபாலனை சீடனாக ஏற்றுக்கொள்கிறார் – அவனது தாய் பணிப்பெண்ணாக இருந்தாலும் தந்தை பிராமணர் என்று அறியப்பட்டிருந்ததால்இதே முறைப்படிதான்தனது மனைவி தூய சாக்கிய க்ஷத்திரிய ரத்த உறவில் வந்தவளாக இல்லாவிட்டாலும்கூட அவள் பெற்ற மகனை மன்னர் பிரசேனாதியும் க்ஷத்ரியனாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று புத்தர் வாதிட்டார்.
 
அவரது மறைவின்போதுஎட்டு நகரங்களின் பெருங்குடியாளர்களும் பிரபுக்களும், ‘நாங்கள் க்ஷத்ரியர்கள்.அவரும் க்ஷத்ரியர்எனவேஅவரது புனித சாம்பல் மீது எங்களுக்கு உரிமை உள்ளது’ என்று கோரி அந்தப் புனித சாம்பலுக்கான உரிமையைப் பெறுவதில் வெற்றியடைந்தனர்.அதற்கு அரை நூற்றாண்டு காலத்திற்குப் பிறகுஅவரது சீடர்கள் பொதுவில் சாதியைக் கடைப்பிடிப்பதில் எந்தத் தயக்கத்தையும் காண்பிக்கவில்லைசொல்லப் போனால் அது புத்தமதத்தின் சிறந்த நெறியாகவே கருதப்பட்டதுகாரணம் என்னவென்றால்புத்தர் அவரது உபதேசங்களில் சாதியை விட்டுவிடுங்கள் (உதாரணமாக,உங்கள் மகள்களை வேறு சாதியினருக்கு திருமணம் செய்து கொடுங்கள் என்பது போலஎன்று ஒருபோதும் கூறவில்லை.தர்க்கபூர்வமாகவும் இதுவே சரியாக வருகிறதுஏனென்றால்,ஆன்மிக உபதேசகராகசமூக நடைமுறை சார்ந்த விஷயங்களில் அனாவசியமாக நேரத்தை விரயமாக்க புத்தருக்கு எந்த விருப்பமும் இருக்கவில்லைசொந்த வாழ்வில் தனிப்பட்ட அளவில் துன்பத்திற்குக் காரணமான ஆசையைத் திருப்தி செய்வதே மிகக் கடினமாக இருக்கையில்சமதர்ம சமுதாயத்திற்கான ஆசையைத் திருப்தி செய்வதெல்லாம் ஆன்மத் தேடலிலிருந்து விலகிய முடிவற்ற திசைதிருப்பலாகவே இருக்கும்.
 
ஏழு நெறிகள்:
 
இந்து அல்லாத தனிப்பட்ட பௌத்த சமுதாயம் என்று ஒன்று எப்போதுமே இருந்ததில்லைபெரும்பாலான இந்துக்கள்பல்வேறு கடவுளர்களையும் ஆசாரியர்களையும் வழிபடுகின்றனர்தங்கள் வீட்டுப் பூஜை அறைகளில் ஒருசில படங்களையும் திருவுருவங்களையும் சில சமயங்கள் சேர்ப்பதும்சில சமயங்கள் எடுப்பதும் சகஜமான விஷயம்தான்இந்த வகையில்தான் புத்தரை வழிபடும் மக்களும் இருந்தார்கள்மற்ற தெய்வங்களையும் ஆசாரியர்களையும் வழிபடுபவர்களிடமிருந்து தனிப்பட்ட ஒரு சமூகமாக அவர்கள் இருக்கவில்லைசமூகத்தைக் கறாரான மதப்பிரிவுகளாகப் பிரித்து தனித்தனி பெட்டிகளுக்குள் அடைப்பது என்பது பரஸ்பர காழ்ப்புணர்வுகளுடன் கூடிய கிறிஸ்தவ மனநிலைஇந்தக் கிறிஸ்தவக் கண்ணோட்டம் நேருவிய மதச்சார்பின்மையால்நவீன இந்து சமுதாயத்திற்குள் வலிந்து புகுத்தப்பட்டிருக்கிறதுவரலாற்று உண்மை என்னவெனில் –இந்துக்கள் மட்டுமே இருந்தனர்இந்து சாதிகளின் உறுப்பினர்களாகஅவர்களில் சிலர் மற்ற தெய்வங்களோடு கூட புத்தர் மீதும் வழிபாட்டுணர்வுடன் கூடியவர்களாக இருந்தனர்.
 
இந்தியாவின் பௌத்தமதக் கட்டடங்கள் பெரும்பாலும் வேதம் சார்ந்த வசிப்பிடச் சூழல் கோட்பாடுகள் அல்லது வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையிலேயே அமைந்துள்ளனபௌத்தக் கோவில்களின் நடைமுறைகள் ஏற்கெனவே நிறுவப்பட்டிருக்கும் இந்துமதப் பாணியையே பின்பற்றுகின்றனஇந்தியாவிலும் அதற்கு வெளியிலும்பௌத்த மந்திரங்கள் வேத மந்திரங்களின் பாணியிலேயே உள்ளனசீனாவிலும் ஜப்பானிலும் பௌத்தம் பரவியபோதுபௌத்த துறவிகள் பன்னிரு ஆதித்தியர்கள் போன்ற வேத தெய்வங்களையும் தங்களுடன் அழைத்துச் சென்றனர்.அவர்களுக்கான கோயில்களையும் எழுப்பினர்ஜப்பானின் பல ஊர்களில்பென்ஜைடென் (Benzaiten) என்ற நதி தேவதையின் கோயில் உள்ளதுஇவள் சாட்சாத் சரஸ்வதி தேவியேதான்.அவளை அங்கு பௌத்தர்களேதான் அறிமுகப்படுத்தினர், ‘குயுக்தி பிடித்த’ பிராமணர்கள் அல்ல.
 
தனது வாழ்வின் கடையிறுதிக்காலத்தில்சமூகத்தை அழிவிலிருந்து காப்பாற்றும் ஏழு நெறிகளை புத்தர் வரையறுத்தார்.இவை சப்தசீலங்கள் என்று அழைக்கப்படுகின்றன (சீதாராம் கோயல்இதனை ‘சப்த சீல’ என்ற தனது வரலாற்று நாவலில் விரிவாக எடுத்தாண்டுள்ளார்). ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள பண்டிகைகளையும்புனிதயாத்திரைகளையும்சடங்குகளையும் போற்றிப் பாதுகாத்தல்அனைத்துத் துறவியர்களுக்கும் மரியாதை செய்தல் ஆகிய நெறிகளும் அவற்றில் அடக்கம்இதில்,பண்டிகைகள் என்று புத்தர் குறிப்பிடுவை அனைத்தும் வேதநெறி சார்ந்தவை அன்றி வேறென்னமகாபாரதத்தில் சரஸ்வதி நதிதீரத்திற்கு பலராமன் சென்ற யாத்திரைதம் முதியவயதில் பாண்டவ சகோதரர்கள் செய்த கங்கா தீர யாத்திரை போன்றவைதான் இதில் புனித யாத்திரைகள் என்று குறிப்பிடப்படுபவை.
 
புத்தர் ஒரு புரட்சிக்காரர் என்பதெல்லாம் தொலைதூரக் கற்பனை.உண்மையில்சமூக விஷயங்களிலும் மத விஷயங்களிலும் மரபில் வேரூன்றியவராகவே (conservative) அவர் தன்னை உறுதியாக நிலைநிறுத்திக் கொண்டார்அவர் விரும்பியது கிளர்ச்சியையோ புரட்சியையோ அல்லஏற்கெனவே உள்ள பழக்கவழக்கங்கள் நீடித்துத் தொடர்வதைத்தான்தன் ஒவ்வொரு அணுவிலும் இந்துவாக இருந்தவர் புத்தர்.
 
*********
 


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard