"விஜயகாந்த் இனி 'புரட்சிக்கலைஞர் டாக்டர் விஜயகாந்த்'. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஐ.ஐ.சி.எம். பலகலைக்கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியிள்ளது." - இது பத்திரிகை செய்தி.
நடிகர் - அரசியல்வாதியான திரு. விஜயகாந்த் அவர்கள் டாக்டர் பட்டம் வாங்குவதில் குறைசொல்ல எதுவும் இல்லை. அது வரவேற்க வேண்டியதுதான்.
அதேசமயம், நாட்டின் புகழ்பெற்ற முன்னணி பல்கலைக் கழகங்கள் டாக்டர் பட்டம் வழங்குவது நாம் அறிந்தது. கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பலரும் இப்படி டாக்டர் பட்டம் பெற்றுள்ளனர். இப்போது, நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் கூட டாக்டர் பட்டம் தருகின்றன. கமலஹாசன், நடிகர் விஜய் போன்றோர் இப்படி டாக்டர் பட்டம் பெற்றுள்ளனர்.
ஆனால், இவ்வாறெல்லாம் இல்லாமல் - அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஐ.ஐ.சி.எம். பலகலைக்கழகத்தில் திரு. விஜயகாந்த் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.
அது என்ன - ஐ.ஐ.சி.எம்?
பன்னாட்டு கிறித்துவ தேவாலய மேலாண்மை நிறுவனம் (International Institute of Church Management Inc.) என்பதுதான்"ஐ.ஐ.சி.எம்" ஆகும். இது இணையத்தின் மூலம் கிறித்துவ மதத்தை பரப்புவதற்கான ஒரு அமைப்பு. நமது ஊரில் ஆங்காங்கே உள்ள "இயேசு அழைக்கிறார்" என்கிற மதத்தைப் பரப்பும் அமைப்புகள் போன்றதுதான் அது. அது ஒரு பொதுவான கல்விநிலையமோ, பல்கலைக்கழகமோ அல்ல.
அதாவது - முழுக்க முழுக்க மத பிரச்சாரம் செய்வதற்கான ஒரு அமைப்பிடம் திரு. விஜயகாந்த் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.
அதிலும் அந்த அமைப்பு "டாக்டர் பட்டம்" அளிக்க வைத்திருக்கும் நிபந்தனைகளை பார்த்தால் - திரு. விஜயகாந்த் டாக்டர் பட்டம் பெற்றது விந்தையாக இருக்கிறது.
கிறித்தவ மதம் தொடர்பான "Biblical Studies, Church Management, Christian Leadership, Ministry"ஆகிய துறைகளில் அனுபவம் உள்ளவர்கள் தங்களது "பயோ - டேட்டாவை" அனுப்பினால் "டாக்டர் பட்டம்" கிடைக்குமாம். ஆக, பைபிள் படிப்பு, தேவாலய நிருவாகம், கிறித்துவ தலைமைத்துவம், கிறித்துவ இறைப்பணி இதிலெல்லாம் திரு. விஜயகாந்த் எப்போது நிபுணத்துவம் பெற்றார் என்பது அந்த கடவுளுக்கே வெளிச்சம்.
இப்படிதான் முன்பு ஐ.நா. அவையின் பேரைச்சொல்லி - இல்லாத ஒரு பன்னாட்டு அமைப்பு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மையாருக்கு "தங்கத்தாரகை விருது" கொடுத்தது. இப்போது - ஒரு மதப் பிரச்சார அமைப்பு பல்கலைக்கழகத்தின் பெயரால் திரு. விஜயகாந்த் அவர்களுக்கு "டாக்டர் பட்டம்" அளிக்கிறது.
இப்படி செல்வி. ஜெயலலிதா, திரு. விஜயகாந்த் போன்று உயர்ந்த இடத்தில் இருப்பவர்களே, எளிதில் ஏமாறுவது அதிர்ச்சியளிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு பின்வரும் இணையதளத்தை காண்க.
http://www.iicmweb.org/
ஐ.ஐ.சி.எம் நிறுவனத்தின் நோக்கங்கள் இதோ:
OBJECTIVES OF IICM
To provide Continuing Education for Pastors, Evangelists, Bible Teachers and Christian Leaders;
To Equip Professionals, Businessmen/Women & Lay Leaders for Ministry.
To Teach the Word of God, topically in a Simple and Practical Way to make it Easy to Understand and Apply it, both in their Lives and Ministries
To help understand the importance of using Management Skills and Modern Technologies of Communication to Maximize Results in the Ministry
To impart Revelation Knowledge of the Word of God and the Anointing of the Holy Spirit
To facilitate Spiritual, Leadership and Church Growth and Development
To help being Effective and Successful in Life and Ministry in terms of achieving Goals and realizing Full Potential
To help Discover and Fulfill God's Will & Purpose!