New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: "ஈரோட்டுப் பாதை சரியா?"- by ப ஜீவானந்தம்


Guru

Status: Offline
Posts: 24636
Date:
"ஈரோட்டுப் பாதை சரியா?"- by ப ஜீவானந்தம்
Permalink  
 


 


"
.வே.ராமசாமி தான் உயிரோடு இருக்க பிற்போக்கு கும்பலின் யோசனைப்படி யார் காலையும் பிடிக்க துணிந்தார்.

என்னை மானங்கெட்டத் தனமாக மன்னிப்பு கொடுத்துவிட்டு வெளியே வரும்படி
K.M.
பாலசுப்பிரமணயம் மூலம் கடிதம் கொடுத்து சிறைச்சாலைக்கு அனுப்பி கட்டாயப் படுத்தினார். "  - தோழர் பா.ஜீவானந்தம்.
~~~~~~~~~~||||||||||||~~~~~~~~~~
H
ராஜா ஈவேரா சிலை அகற்றச் சொன்னதற்குக் கொதிப்பவர்கள்,

ஈவேரா வை .ஜீவானந்தம் கிழிகிழின்னு கிழிக்கறதையும் படிக்கணும்! 

"
அரசாங்கம் (ஜஸ்டிஸ் கட்சி) மீண்டும் 1935ல் பத்திரிகையில் ஜாமீன் கேட்டனர்.
பகுத்தறிவு நூற்பதிப்புக் கழக வெளியீடான "நான் நாஸ்திகன் ஏன்?"- பற்றி பிரச்னை வந்தது.
இந்நூல் பகத்சிங் இறுதிக் காலத்தில் தன் தந்தைக்கு எழுதிய கடிதத்தின் மொழிபெயர்ப்பு:

வெளியிட்டவர் என்பதற்காக ஈ வே கிருஷ்ணசாமியையும், மொழி பெயர்த்தவர் என்பதற்காக என்னையும் கைது செய்தனர். 'சுயமரியாதை இயக்கத்தின்' மீது சர்க்காரின் கோபப்பார்வை விழுந்தது.

அதிகாரத்தில் இருந்தது பொப்பிலி அரசரின் ஜஸ்டிஸ் கட்சி.  தேர்தலில் ஈவேரா ஜஸ்டிஸ் கட்சிக்கு தோள்போட்டு, அதை சமதர்மக் கட்சி ஆக்கியதன் விளைவுதான் இந்த அடக்குமுறை.  சர்க்கார் அழிவ நடவடிக்கையைக் கண்டு ஈவேரா மிரண்டார்.

சமதர்மத்திற்கு விரோதிகளான R K சண்முகம் செட்டி போன்றவர்கள் தருணத்தைத் தவறவிடாமல் செயல்பட்டனர்.  ஏற்கனவே மந்திரியாக இருந்த பன்னீர்செல்வம், GD நாயுடு மூலம் நாஸ்திகப் பொதுவுடமைப் பிரச்சாரத்தை நிறுத்திவிட வேண்டும் என்றும், இல்லாவிட்டால் கட்சியை சர்க்கார் அழிக்க முடிவு கட்டி விட்டதென்றும் ஈவேரா வை மிரட்டிய கதையும் நமக்குத் தெரியும்.

என்னை மானங்கெட்டத் தனமாக, மன்னிப்புக்கொடுத்துவிட்டு வெளியே வரும்படி, ஈவேரா, K M பாலசுப்ரமணியம் மூலம் ஒரு கடிதத்தை சிறைச்சாலைக்கு அனுப்பிக் கட்டாயப் படுத்தினார்.

''
பெரிய நாயக்கர் (ஈ வே கிருஷ்ணசாமி) வேண்டுமானால் மன்னிப்புக் கடிதம் கொடுத்துவிட்டுப் போகட்டும்: நான் முடியாது"- என்று பிடிவாதமாகக் கூறினேன். நான் மன்னிப்புக் கடிதம் கொடுக்காவிட்டால் இயக்கம் அழிக்கப்பட்டு விடும் என்றும், தானே மன்னிப்பும் பொறுப்பும் என்று 'குடியரசு' வில் எழுதிவிடுவதாகவும் ஈவேரா கட்டாயப்படுத்தினார்.

தான் உயிரோடிருக்க (யாருக்காக?) பிற்போக்கு கும்பல்களின் யோசனைப்படி யார் காலையும் பிடிக்கத் துணிந்தார்.

பெரியார் சிறையிலிருந்த சமயத்தில் தோழர்.ஜீவா புரட்சி இதழில் எழுத ஆரம்பித்திருந்தார்.. பின், மாவீரன் பகத்சிங் தான் தூக்கிலிடப்படுவதற்கு முன்பாக எழுதிய “நான் ஏன் நாத்திகன் ஆனேன்” என்ற கட்டுரையை ஜீவா தமிழாக்கம் செய்தார். அதை தந்தைபெரியார் புரட்சி ஏட்டில் பதிப்பித்து வெளியிட்டார். அந்தக் கட்டுரையை வெளியிட்டதற்காக அரசு பெரியாரின் சகோதரர் கிருஷ்ணசாமிக்கும் (ஆசிரியர் என்ற முறையில்) , மொழி பெயர்ப்பாளர் ஜீவாவுக்கும் சிறைத் தண்டனை விதித்தது. பெரியார் சொன்னபடி ஈ.வெ.கி-யும் ஜீவா அவர்களும்  மன்னிப்புக் கடிதம் கொடுத்து விடுதலை ஆனார்கள். முதலில் மறுத்த ஜீவா,.கட்சி சொன்னதன் காரணமாக ஜீவாவும் மன்னிப்புக் கடிதம் கொடுத்து விடுதலையானார். இதுதான் “கடித” விசயத்தில் நடந்தது. இதில் பெரியார் கைதாகவே இல்லை.

பெரியார் தனது அண்ணனை மன்னிப்புக் கடிதம் கொடுக்கச் சொன்னது மட்டுமே உண்மை. ஈ.வெ.கி & ஜீவா கொடுத்த மன்னிப்புக் கடிதம் செய்தித் துணுக்காக  குடி அரசில் இருக்கிறது.

“நான் ஏன் நாஸ்திகன் ஆனேன்” என்று பகத்சிங்கினால் எழுதப்பட்ட கடிதம் லாகூரிலிருந்து வெளியாகும் “”பீபிள்ஸ்” பத்திரிகையில் பிரசுரிக்கப் பட்டிருந்ததை அரசாங்கத்தாரால் பறிமுதல் செய்யப்பட்ட விஷயம் தங்களுக்குத் தெரியாதென்றும், ஆகவே அதை மொழி பெயர்த்ததும், அச்சிட்டுக் கொடுத்ததும் ராஜ துவேஷத்தை உண்டாக்க வேண்டும் என்னும் எண்ணத்துடன் அல்ல வென்றும் அதற்காக மன்னித்துவிட வேண்டும்.” – குடி அரசு  செய்தித் துணுக்கு   24.03.1935apology

ஜீவா சமதர்மம் என்ற இதழை ஆரம்பித்து மன்னிப்புக் கடிதம் கொடுத்தற்கு விளக்கம் அளித்தார். இது தேவையில்லா மனக்கசப்பை ஏற்படுத்தும் எனக் கருதிய பெரியார், இந்தக் கடிதத்திற்கு தானே பொறுப்பு என்றார்.

31.03.1935 குடி அரசு தலையங்கத்தில் இது பற்றி “எனது அறிக்கையின் விளக்கம்” என்றத் தலைப்பில் விரிவாக எழுதினர்.

உண்மை விளக்கம் பிரஸ் பதிப்பாசிரியரான தோழர் ஈ.வெ. கிருஷ்ணசாமி அவர்கள் மீதும், தோழர் ப. ஜீவானந்தம் அவர்கள் மீதும் காலஞ்சென்ற பகத்சிங்கால் எழுதப்பட்ட “”நான் ஏன் நாஸ்திகன் ஆனேன்?” என்ற புஸ்தகத்தை முறையே பிரசுரித்ததற்காகவும், மொழி பெயர்த்ததற்காகவும் இந்தியன் பினல் கோர்ட் 124ஏ செக்ஷன்படி ராஜ துவேஷக் குற்றம் சாட்டி கைதியாக்கி சிறையில் வைத்து வழக்குத் தொடர்ந்திருந்தது வாசகர்கள் அறிந்ததாகும். அவ்வழக்கு மேல்கண்ட இரு தோழர்களாலும் ராஜ துவேஷத்தை உண்டாக்கவோ, அதைப் பிரசாரம் செய்யவோ எண்ணங் கொண்டு அப்புத்தகம் பிரசுரிக்கவில்லை என்று அரசாங்கத்திற்குத் தெரிவித்து ராஜதுவேஷம் என்று கருதத்தகுந்த காரியங்கள் பதிப்பிக்கப்பட்டு விட்டதற்காக மன்னிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டதின் பேரில் அரசாங்கத்தார் வழக்கை வாபீஸ் வாங்கிக் கொண்டு தோழர்கள் ஈ.வெ.கி., ப.ஜீவா. அவர்களை விடுதலை செய்துவிட்டார்கள். இந்தப்படி இந்த இரு தோழர்களும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு விடுதலையடைந்தார்கள் என்பதற்கு அவர்களே முழு ஜவாப்தாரிகள் அல்ல என்பதையும் பெரும்பான்மையான அளவுக்கு நானே ஜவாப்தாரி என்பதையும் முதலில் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.” – குடி அரசு  தலையங்கம்  31.03.1935



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

EVR the uncertain mindset. .

"
.வே.ராமசாமி தான் உயிரோடு இருக்க பிற்போக்கு கும்பலின் யோசனைப்படி யார் காலையும் பிடிக்க துணிந்தார்.

என்னை மானங்கெட்டத் தனமாக மன்னிப்பு கொடுத்துவிட்டு வெளியே வரும்படி
K.M.
பாலசுப்பிரமணயம் மூலம் கடிதம் கொடுத்து சிறைச்சாலைக்கு அனுப்பி கட்டாயப் படுத்தினார். "  - தோழர் பா.ஜீவானந்தம்.
~~~~~~~~~~||||||||||||~~~~~~~~~~
H
ராஜா ஈவேரா சிலை அகற்றச் சொன்னதற்குக் கொதிப்பவர்கள்,

ஈவேரா வை .ஜீவானந்தம் கிழிகிழின்னு கிழிக்கறதையும் படிக்கணும்! 

"
அரசாங்கம் (ஜஸ்டிஸ் கட்சி) மீண்டும் 1935ல் பத்திரிகையில் ஜாமீன் கேட்டனர்.
பகுத்தறிவு நூற்பதிப்புக் கழக வெளியீடான "நான் நாஸ்திகன் ஏன்?"- பற்றி பிரச்னை வந்தது.
இந்நூல் பகத்சிங் இறுதிக் காலத்தில் தன் தந்தைக்கு எழுதிய கடிதத்தின் மொழிபெயர்ப்பு:

வெளியிட்டவர் என்பதற்காக ஈ வே கிருஷ்ணசாமியையும், மொழி பெயர்த்தவர் என்பதற்காக என்னையும் கைது செய்தனர். 'சுயமரியாதை இயக்கத்தின்' மீது சர்க்காரின் கோபப்பார்வை விழுந்தது.

அதிகாரத்தில் இருந்தது பொப்பிலி அரசரின் ஜஸ்டிஸ் கட்சி.  தேர்தலில் ஈவேரா ஜஸ்டிஸ் கட்சிக்கு தோள்போட்டு, அதை சமதர்மக் கட்சி ஆக்கியதன் விளைவுதான் இந்த அடக்குமுறை.  சர்க்கார் அழிவ நடவடிக்கையைக் கண்டு ஈவேரா மிரண்டார்.

சமதர்மத்திற்கு விரோதிகளான R K சண்முகம் செட்டி போன்றவர்கள் தருணத்தைத் தவறவிடாமல் செயல்பட்டனர்.  ஏற்கனவே மந்திரியாக இருந்த பன்னீர்செல்வம், GD நாயுடு மூலம் நாஸ்திகப் பொதுவுடமைப் பிரச்சாரத்தை நிறுத்திவிட வேண்டும் என்றும், இல்லாவிட்டால் கட்சியை சர்க்கார் அழிக்க முடிவு கட்டி விட்டதென்றும் ஈவேரா வை மிரட்டிய கதையும் நமக்குத் தெரியும்.

என்னை மானங்கெட்டத் தனமாக, மன்னிப்புக்கொடுத்துவிட்டு வெளியே வரும்படி, ஈவேரா, K M பாலசுப்ரமணியம் மூலம் ஒரு கடிதத்தை சிறைச்சாலைக்கு அனுப்பிக் கட்டாயப் படுத்தினார்.

''
பெரிய நாயக்கர் (ஈ வே கிருஷ்ணசாமி) வேண்டுமானால் மன்னிப்புக் கடிதம் கொடுத்துவிட்டுப் போகட்டும்: நான் முடியாது"- என்று பிடிவாதமாகக் கூறினேன். நான் மன்னிப்புக் கடிதம் கொடுக்காவிட்டால் இயக்கம் அழிக்கப்பட்டு விடும் என்றும், தானே மன்னிப்பும் பொறுப்பும் என்று 'குடியரசு' வில் எழுதிவிடுவதாகவும் ஈவேரா கட்டாயப்படுத்தினார்.

தான் உயிரோடிருக்க (யாருக்காக?) பிற்போக்கு கும்பல்களின் யோசனைப்படி யார் காலையும் பிடிக்கத் துணிந்தார்.

1)
ஈரோட்டில் சமதர்ம வேலைத் தீர்மானத்தை நிறைவேற்றினார் - பின்னர் சமதர்ம விரோதிகளான R K சண்முகம் செட்டியார், ஏ ராமசாமி முதலியார்களைத் தேர்தலில் ஆதரித்தார் ஈவேரா.
2)
ஜமீன்தார் அல்லாதார் மாநாடு கூட்டி, பொப்பிலி முதல் எல்லா ஜமீன்தாரிகளும் ஒழிய வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றி விட்டு, பொப்பிலி அரசர் சிறந்த சமதர்ம வீரர் என்று புகழ்ந்தார் ஈவேரா.
3)
லேவாதேவிக்காரர் அல்லாதார் மாநாடு கூட்டி, லேவாதேவிக்காரர்கள் எல்லாம் ஒழிய வேண்டும் சரமாரியாகச் சொன்மாரி பொழிந்து தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, குமார ராஜா முத்தையா செட்டியாரோடு கொஞ்சிக் குலாவினார் ஈவேரா.
4)
மதங்கள் எல்லாம் ஒழிய வேண்டும் என்று விருது நகர் சுயமரியாதை மகாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, இஸ்லாம் மார்க்கம் நல்லதென்றும் அதில் தாழ்த்தப்பட்ட மக்கள் சேருங்கள் என்றும் பிரச்சாரம் செய்தார் ஈவேரா!
5)
திருநெல்வேலி மாநாட்டில் கொள்கைப் பரப்பலில் ஈடுபட்ட சுயமரியாதை இயக்க முக்கிய ஊழியர்களைத் தாக்கி, அவர்தம் கொள்கையைப் பழித்த சோமசுந்தர பாரதியை ஆதரித்து 'குடியரசில்' தலையங்கம் எழுதினார் ஈவேரா! 
("
ஈரோட்டுப் பாதை சரியா?"- by ப ஜீவானந்தம் - சந்தியா பதிப்பகம் - பக்கம் 25 -29)
-----'-----------'--------------'-----------'----- 
நான் மேலே காட்டியிருப்பது கம்யூனிஸ்ட் தலைவர் ப ஜீவானந்தம் அவர்கள், ஈவேரா வைப் புத்தகம் முழுக்கக் கிழித்துத் தொங்க விட்டிருப்பதில் சிறிய சாம்பிள்தான்.
என்னுடைய கவலையே கோவை பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசியவர்கள், தோழர் ஜீவா இப்படி எல்லாம் ஈவேராவைக் கிழித்திருப்பதைப் படித்து விட்டு "பாலன் இல்லத்தின்" மீது வீசிவிடுவார்களோ என்பதுதான்! பாவம் வீதி வீதி யாக உண்டியல் குலுக்கி சேர்த்த மணத்தில் கட்டியதாகக் கூறிக் கொள்கிறார்கள்!!
நன்றி.Abvp. chandran.



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

தமிழைக் காட்டுமிராண்டி பாஷை என்றவர்,

திருக்குறளை தங்கத்தட்டில் வைக்கப்பட்ட மலம் என்றவர்,

கண்ணகியின் மார்பகம் வெடிகுண்டா என வினவியவர்,

பறைச்சிகள் ரவிக்கை அணியத் தொடங்கியதால் விலைவாசி ஏறியதாகப் பரிகாசம் செய்தவர்,

கீழவெண்மணி தலித்துகள் படுகொலையை நியாயப்படுத்தியவர்,

அண்ணல் அம்பேத்கரை பிராமணர்களிடம் லஞ்சம் வாங்கியவர் என அபாண்டம் சொன்னவர்,

பாம்பை கண்டால் அடிக்காதே பார்ப்பானை கண்டால் அடி என்று "அன்புவழியை" வளர்த்தவர்,

சூத்திரனுக்கு இணையாக பஞ்சமனை வைப்பதா என்று வெகுண்டவர்,

கோவிலுக்குச் செல்லும் தனது முதல் மனைவியை ரௌடிகளை வைத்து மிரட்டியவர்,

72 வயதில் 26 ஐ திருமணம் செய்து புரட்சி செய்தவர்,

அதனாலேயே பிரிந்து சென்ற அண்ணா உள்ளிட்டோரை கண்ணீர்துளி பசங்க என்று கேலி செய்தவர்,

பதிலடியாக முரசொலி உள்ளிட்ட திராவிட பத்திரிகைகளில் பலகாலம் வசைபாடபட்டவர்,

வைக்கம் ஆலய பிரவேசத்தை வேடிக்கைப் பார்க்கச் சென்று விட்டு வைக்கம் வீரர் என முடிசூட்டிக் கொண்டவர்,

அன்றைய பத்திரிகைகளில் வகுப்புவாதி என்று விமர்சிக்கப்பட்டவர்,

கோடிக்கணக்கான மனிதர்களின் லட்சிய புருஷரும் சீர்திருத்தவாதியுமான சுவாமி விவேகானந்தரைப் பைத்தியம் என்று பகர்ந்தவர்,

கடவுளுக்கு செருப்புமாலை அணிவித்து நாகரீகம் பேணியவர்,

தமிழனின் தனித்த அடையாளங்களைச் சிதைத்துப் போலியான திராவிட இனப் பெருமையில் புகுத்தியவர்,

கடவுளை வணங்குவோரை வசைபாடிக் கருத்து சுதந்திரம் காத்தவர்,

இறப்புக்குப் பின் தானே சிலையாகிச் சிலரின் வயிற்றுப் பிழைப்புக்காகக் கடவுள்போல் மதிக்கப்படுபவர்,

உண்மை தெரியாத பலரால் உயர்வாக கருதப்படுபவர் = இவர்தான் ஈவேரா.

தமிழைக் காட்டுமிராண்டி பாஷை என்றவர்,

திருக்குறளை தங்கத்தட்டில் வைக்கப்பட்ட மலம் என்றவர்,

கண்ணகியின் மார்பகம் வெடிகுண்டா என வினவியவர்,

பறைச்சிகள் ரவிக்கை அணியத் தொடங்கியதால் விலைவாசி ஏறியதாகப் பரிகாசம் செய்தவர்,

கீழவெண்மணி தலித்துகள் படுகொலையை நியாயப்படுத்தியவர்,

அண்ணல் அம்பேத்கரை பிராமணர்களிடம் லஞ்சம் வாங்கியவர் என அபாண்டம் சொன்னவர்,

பாம்பை கண்டால் அடிக்காதே பார்ப்பானை கண்டால் அடி என்று "அன்புவழியை" வளர்த்தவர்,

சூத்திரனுக்கு இணையாக பஞ்சமனை வைப்பதா என்று வெகுண்டவர்,

கோவிலுக்குச் செல்லும் தனது முதல் மனைவியை ரௌடிகளை வைத்து மிரட்டியவர்,

72 வயதில் 26 ஐ திருமணம் செய்து புரட்சி செய்தவர்,

அதனாலேயே பிரிந்து சென்ற அண்ணா உள்ளிட்டோரை கண்ணீர்துளி பசங்க என்று கேலி செய்தவர்,

பதிலடியாக முரசொலி உள்ளிட்ட திராவிட பத்திரிகைகளில் பலகாலம் வசைபாடபட்டவர்,

வைக்கம் ஆலய பிரவேசத்தை வேடிக்கைப் பார்க்கச் சென்று விட்டு வைக்கம் வீரர் என முடிசூட்டிக் கொண்டவர்,

அன்றைய பத்திரிகைகளில் வகுப்புவாதி என்று விமர்சிக்கப்பட்டவர்,

கோடிக்கணக்கான மனிதர்களின் லட்சிய புருஷரும் சீர்திருத்தவாதியுமான சுவாமி விவேகானந்தரைப் பைத்தியம் என்று பகர்ந்தவர்,

கடவுளுக்கு செருப்புமாலை அணிவித்து நாகரீகம் பேணியவர்,

தமிழனின் தனித்த அடையாளங்களைச் சிதைத்துப் போலியான திராவிட இனப் பெருமையில் புகுத்தியவர்,

கடவுளை வணங்குவோரை வசைபாடிக் கருத்து சுதந்திரம் காத்தவர்,

இறப்புக்குப் பின் தானே சிலையாகிச் சிலரின் வயிற்றுப் பிழைப்புக்காகக் கடவுள்போல் மதிக்கப்படுபவர்,

உண்மை தெரியாத பலரால் உயர்வாக கருதப்படுபவர்தமிழைக் காட்டுமிராண்டி பாஷை என்றவர்,

திருக்குறளை தங்கத்தட்டில் வைக்கப்பட்ட மலம் என்றவர்,

கண்ணகியின் மார்பகம் வெடிகுண்டா என வினவியவர்,

பறைச்சிகள் ரவிக்கை அணியத் தொடங்கியதால் விலைவாசி ஏறியதாகப் பரிகாசம் செய்தவர்,

கீழவெண்மணி தலித்துகள் படுகொலையை நியாயப்படுத்தியவர்,

அண்ணல் அம்பேத்கரை பிராமணர்களிடம் லஞ்சம் வாங்கியவர் என அபாண்டம் சொன்னவர்,

பாம்பை கண்டால் அடிக்காதே பார்ப்பானை கண்டால் அடி என்று "அன்புவழியை" வளர்த்தவர்,

சூத்திரனுக்கு இணையாக பஞ்சமனை வைப்பதா என்று வெகுண்டவர்,

கோவிலுக்குச் செல்லும் தனது முதல் மனைவியை ரௌடிகளை வைத்து மிரட்டியவர்,

72 வயதில் 26 ஐ திருமணம் செய்து புரட்சி செய்தவர்,

அதனாலேயே பிரிந்து சென்ற அண்ணா உள்ளிட்டோரை கண்ணீர்துளி பசங்க என்று கேலி செய்தவர்,

பதிலடியாக முரசொலி உள்ளிட்ட திராவிட பத்திரிகைகளில் பலகாலம் வசைபாடபட்டவர்,

வைக்கம் ஆலய பிரவேசத்தை வேடிக்கைப் பார்க்கச் சென்று விட்டு வைக்கம் வீரர் என முடிசூட்டிக் கொண்டவர்,

அன்றைய பத்திரிகைகளில் வகுப்புவாதி என்று விமர்சிக்கப்பட்டவர்,

கோடிக்கணக்கான மனிதர்களின் லட்சிய புருஷரும் சீர்திருத்தவாதியுமான சுவாமி விவேகானந்தரைப் பைத்தியம் என்று பகர்ந்தவர்,

கடவுளுக்கு செருப்புமாலை அணிவித்து நாகரீகம் பேணியவர்,

தமிழனின் தனித்த அடையாளங்களைச் சிதைத்துப் போலியான திராவிட இனப் பெருமையில் புகுத்தியவர்,

கடவுளை வணங்குவோரை வசைபாடிக் கருத்து சுதந்திரம் காத்தவர்,

இறப்புக்குப் பின் தானே சிலையாகிச் சிலரின் வயிற்றுப் பிழைப்புக்காகக் கடவுள்போல் மதிக்கப்படுபவர்,

உண்மை தெரியாத பலரால் உயர்வாக கருதப்படுபவர் = இவர்தான் ஈவேரா.

தமிழைக் காட்டுமிராண்டி பாஷை என்றவர்,

திருக்குறளை தங்கத்தட்டில் வைக்கப்பட்ட மலம் என்றவர்,

கண்ணகியின் மார்பகம் வெடிகுண்டா என வினவியவர்,

பறைச்சிகள் ரவிக்கை அணியத் தொடங்கியதால் விலைவாசி ஏறியதாகப் பரிகாசம் செய்தவர்,

கீழவெண்மணி தலித்துகள் படுகொலையை நியாயப்படுத்தியவர்,

அண்ணல் அம்பேத்கரை பிராமணர்களிடம் லஞ்சம் வாங்கியவர் என அபாண்டம் சொன்னவர்,

பாம்பை கண்டால் அடிக்காதே பார்ப்பானை கண்டால் அடி என்று "அன்புவழியை" வளர்த்தவர்,

சூத்திரனுக்கு இணையாக பஞ்சமனை வைப்பதா என்று வெகுண்டவர்,

கோவிலுக்குச் செல்லும் தனது முதல் மனைவியை ரௌடிகளை வைத்து மிரட்டியவர்,

72 வயதில் 26 ஐ திருமணம் செய்து புரட்சி செய்தவர்,

அதனாலேயே பிரிந்து சென்ற அண்ணா உள்ளிட்டோரை கண்ணீர்துளி பசங்க என்று கேலி செய்தவர்,

பதிலடியாக முரசொலி உள்ளிட்ட திராவிட பத்திரிகைகளில் பலகாலம் வசைபாடபட்டவர்,

வைக்கம் ஆலய பிரவேசத்தை வேடிக்கைப் பார்க்கச் சென்று விட்டு வைக்கம் வீரர் என முடிசூட்டிக் கொண்டவர்,

அன்றைய பத்திரிகைகளில் வகுப்புவாதி என்று விமர்சிக்கப்பட்டவர்,

கோடிக்கணக்கான மனிதர்களின் லட்சிய புருஷரும் சீர்திருத்தவாதியுமான சுவாமி விவேகானந்தரைப் பைத்தியம் என்று பகர்ந்தவர்,

கடவுளுக்கு செருப்புமாலை அணிவித்து நாகரீகம் பேணியவர்,

தமிழனின் தனித்த அடையாளங்களைச் சிதைத்துப் போலியான திராவிட இனப் பெருமையில் புகுத்தியவர்,

கடவுளை வணங்குவோரை வசைபாடிக் கருத்து சுதந்திரம் காத்தவர்,

இறப்புக்குப் பின் தானே சிலையாகிச் சிலரின் வயிற்றுப் பிழைப்புக்காகக் கடவுள்போல் மதிக்கப்படுபவர்,

உண்மை தெரியாத பலரால் உயர்வாக கருதப்படுபவர் 



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

 

தமிழ் ஒன்றுக்கும் பயன்படாது 
தமிழ் படித்தால் பிச்சைகூட கிடைக்காது. தமிழ் படித்து பிச்சை எடுப்பதைத் தவிர வேறு உயிர் வாழ ஒன்றுக்கும் பயன்படவில்லை என்பதோடு, அதற்காகச் செலவு செய்த காலத்தை வேறு துறையில் செலவிட்டால், வாழ்வில் பயன் ஏற்பட்டிருக்கும் என்பதை ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் கற்ற ஓர் அனுபவப் புலவர் பாடியுள்ளார். - தந்தை பெரியார் விடுதலை(27.11.43)

ஒடுக்கப்பட்டவர்களை நாராயணகுரு போன்ற பெரியோர்கள் தோன்றி அவர்கள் வாழ்வில் மேம்படுத்தினார்கள்!

தமிழகத்தின் ஈவெரா போன்று சண்டியர்த்தனம், வெறுப்பு என்று ஒரு சமூகத்தின் மனதில் வெறுப்பியலை நிலைநிறுத்தவில்லை.

தமிழ்பேசுவோர் எங்கு வசித்தாலும் உள்ளுக்குள்ளே ஈவெரா சொல்லித்தந்த வெறுப்பியல் முன்னெடுத்துச்செல்ல ஒருவருக்கொருவர் அடித்துகொண்டு எங்கிருந்தாலும் ஒற்றுமையின்றி ஒன்பது சங்கங்கள் வைத்துக்கொண்டு தமிழர் பாரம்பரியம் என்பதே ஒற்றுமையின்றி இருப்பதே என்பதை நிறுவப்பட்டு இருக்கும் உண்மை.
கடந்த சில நூற்றாண்டுகளில் உலக வரலாற்றை உற்று நோக்கினால் எளியவனை வலியவன் சமூகத்தில் இன, தேச பேதமின்றி எல்லா பிரதேசங்களிலும் நடந்தேறி இருக்கிறது.
உலகில் எல்லோரும் தத்தம் சமூக வரலாற்றில் நிகழ்ந்த புண்ணைச் சொறியாமல் ஆறவிட்டு ஒட்டுமொத்தமாக முன்னேறி வளர்ந்து ஆக்கமாக இருக்கிறார்கள்.
பகுத்தறிவு என்று சொல்லிக் கொண்டு தமிழ்ச் சமூகத்தில் வரலாற்றுப் புண்ணைச் சொறிந்து சொறிந்து இன்னமும் ஆறவிடாமல் சமூகத்தையே இன்னமும் இன்பெக்டட் சமூகமாகவே மனதளவில் வைத்திருக்கும் சித்தாந்தம் ஈவெரா சொன்னது.
திருக்குறள் போன்ற பல்வேறு இலக்கியங்களை மலம் என்று பழித்திடமுனைந்தது காட்டுமிராண்டித்தனம்.
மொழிசார் உடனடிப் பொருளாதாரப் பயன்பாடு என்கிற அளவில் 100% தமிழ்மொழி மட்டுமே அறிந்திருந்தால் பொருளீட்டுவதில் உயரம் தொடமுடியாதுதான்! 
ஆனால் இன்றைக்கும் திருக்குறள் படிப்பதால் பயனடைகிறேன். தமிழிலக்கியமான திருக்குறளில் சொல்லப்படும் கருத்துக்கள் மனிதனாக என்னைச் செம்மையாக்குகிறது. 
திருவள்ளுவர் எழுதிய திருக்குறளை 100% படித்து புரிந்து பயனடைவதில் பெருமை மட்டுமே கொள்கிறேன்.
ஈவெரா தெளிவு ஏதும் இன்றிச் செய்த பிராமண எதிர்ப்பு, இந்துக்கடவுள் எதிர்ப்பு, இந்துமத இதிகாச இலக்கிய எதிர்ப்பு, தமிழ் மொழி, தமிழிலக்கிய குறைகூறல் என்பதில் எதனால் ஓரளவு மாற்றம் வந்தது என்று அறுதியிட்டுக் கூறமுடியாததால் ஈவெராவின் ஆதரவாளர்கள் அப்படியே கதம்பமாக ஈவெரா செய்தவற்றைச் செய்யத் தலைப்படுகிறார்கள்.
உண்மையாக 1940களுக்குப்பின் உலக, இந்திய, தமிழ்ச்சமூகத்தில் ஆளாதிக்கச் சிந்தனையில் சரிவு ஏற்படக் காரணம் உலகப் போர்களுக்குப் பின் ஆளாதிக்கம் செய்வதை உலகம் முழுவதும் பரப்பிய இங்கிலாந்து, ஐரோப்பியர்கள் ஜெர்மெனி, ஜப்பான் போன்ற நாடுகள் மிகக் கடுமையாக இரண்டாம் உலகபோரினால் பாதிப்புக்கு உட்பட்டு செயல் குறுக்கம் அடைந்ததே!
ஈவெராவின் செயல்களால் ஒருசில பயன்பாடுகள் தமிழ்ச்சமூகத்திற்கு கிட்டியிருக்கின்றன என்ற அளவில் ஈவெராவுக்கு மரியாதை காட்டினால் உண்மையாகவும்,வெகுதியானோர்க்கு ஏற்புடையதாகவும் இருக்கும். அதைவிடுத்து ஈவெரா வாயில் இருந்து உதிர்த்தது எல்லாமே புனிதம் என்று தலைப்படுவதும் அப்படி அவுட் ரைட்டாக ஈவெராவின் கருத்துக்கள் அனைத்தையும் புனிதமாக ஏற்க யாரும் மறுத்தால் அவரது தமிழர் ஐடெண்டிடியில் குறைகாணும் போக்கு என்பது போங்குத்தனமான பகுத்தறிவு!

"சிலப்பதிகாரம் ஒரு தேவடியாள் கதை. தேவடியாள் எப்படி வெளியே அழகாக, உள்ளே
வஞ்சகத்துடன் இருப்பாளோ அதுபோலவே சிலப்பதிகாரமும்"
"
வள்ளுவன் மூடநம்பிக்கையும் ஆரிய மத கருத்தையும் சொன்னான். திருக்குறள்
ஒரு மலம். அதை வீசி எறி"
"
தமிழனுக்கு இலக்கியம், வரலாறு, குடும்பம், பண்பாடே கிடையாது. இங்கு
பிராமணன் வந்து எழுதியதும், பிராமண அடிமை எழுதியதும்தான் இலக்கியம்.
"
தமிழில் இலக்கியம், வரலாறு என்ன இருக்கிறது? தமிழை விட்டால் என்ன கேடு?.
தமிழ்த்தாய் சத்தில்லாமல், அதன் பிள்ளைகள் நடைப்பிணமாகவே
இருக்கிறார்கள்."
"
இந்தி எதிர்ப்பு அரங்குக்கு போனேன். இந்திக்கு பதில் இங்கிலீஷ்
போதனாமொழி என ராஜகோபாலாச்சாரி சொன்னார். நான் இங்கிலிஷ் போதனாமொழி
மட்டுமல்ல. பேச்சுமொழியாகவும் இருக்க வேண்டும். தமிழ் எழுத்துகளை நீக்கி,
இங்கிலீஷ் எழுத்துகளை வைக்கவேண்டும் என்றேன்." - பெரியார்



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

 

Dr.Anburaj said...

காசு வருகிறது என்பதற்காக நாம் எதிர்க்கும் காரியத்தையே நமது இடத்தில் நடத்தி கொள்ள அனுமதிப்பது மானம் கெட்ட செயலே தவிர சுயமரியாதைக்கு உகந்த செயல் அல்ல. விபச்சாரம் செய்யக்கூடாது என்று பிரச்சாரம் செய்பவன் எனது வீட்டில் வந்து அதை செய்து கொள் என்று கூறினால் அவன் சுயமரியாதை உள்ளவனா?" ஈவெராவாதிகள் நாக்கை புடுங்கி கொள்வதுபோல் கேட்கப்பட்ட, இந்த கேள்விக்கு என்ன பதில் உள்ளது ஈவெராவாதிகளிடம்.. "பணம் சம்பாதிப்பது தானய்யா உங்கள் நோக்கம்" என்றால், என்ன சொல்வார்கள் "இறை நம்பிக்கையாளர்கள் கருத்தை நாங்கள் மதிக்கிறோம். அதனால் நாங்கள் எங்கள் இடத்தை அவர்களுக்கு அனுமதிக்கிறோம்" என்று நொண்டி சாக்கு சொல்வார்கள். "கடவுளை பரப்புபவன் அயோக்கியன், காட்டுமிராண்டி என சொல்லிவிட்டு, அதை பரப்ப உன் இடத்தையே அனுமதித்தால் "நீங்கள் தானே முதல் அயோக்கியன், முட்டாள்".

"
மதம் இல்லை என்று சொல்லி வயிறு வளர்த்தவர்!" என்கிற பி.ஜெய்னுலாபிதீன் பேச்சுக்கு ஈவெராவாதிகள் என்ன கதை சொல்கிறார்கள் என்றால், "ஈவெராமசாமி அன்றைய தமிழகத்தின் டாப் 10 பணக்காரர்களில் ஒருவர்" என்று. அது உண்மையா? அத்தகைய பணக்கார ஈவெராமசாமி ஏன் இப்படி பிச்சை எடுத்தார். ஈவெராமசாமி, 'எங்கள் பாடு' என்கிற தலைப்பில் தாங்கள் நன்கொடை பெறபட்ட பாட்டை விவரிக்கிறார். "இந்தச் சிறு தொகைக்கு நானும், தோழர் பாண்டியன், நாயகம், ராமசாமி, வாலகுருவா ரெட்டியார் ஆகியவர்கள் இரண்டு தடவை இந்த ஊருக்கு வந்து விட்டோம். வந்து எவ்வளவு கஷ்டப்பட்டோம். எங்களால் தோழர் ஈஸ்வரப் பிள்ளைவாளுக்கும் எவ்வளவு கஷ்டம். முன் தடவை வந்திருந்தபோது நாங்கள் பட்டபாட்டிற்கு அளவில்லை.
நாங்கள் வந்த நாள் பகலில் 3 மணிக்குச் சாப்பிட்டோம். பஸ்ஸில் பகல் பிரயாணத்தில் 3,4 மணி நேரம் வெயிலில் அவஸ்த்தைப்பட்டோம். இராத்திரி பட்டினி கிடந்தோம்."என்று நீண்ட கட்டுரை ஒன்றை எழுதி உள்ளார் குடி அரசு 7.6.1936,

இப்படியெல்லாம் ஒருவனிடம் நன்கொடை பெறுகிறார்கள்.. அப்படி நன்கொடை கொடுத்தவன் பின்னாளில் ஒரு அயோக்கியதனம் செய்தால் கண்டிப்பார்களா? நிச்சயம் மாட்டார்கள். அதையும்
நாம் சொல்லவில்லை. "மனச்சான்றுக்கு மாறாகப் போகாமை" என்கிற தலைப்பில் அண்ணாவின் மகன் அண்ணா பரிமளம் எழுதிய கட்டுரை சொல்கிறது..
1941-
ஆம் ஆண்டில், இராசா சர்.அண்ணாமலைச் செட்டியாரின் அறுபதாம் ஆண்டு நிறைவு விழா, மிகப் பெருஞ்செலவில், மிக ஆடம்பரமான முறையில் செட்டி நாட்டிலும், அண்ணாமலை நகரிலும் கொண்டாடப்பட்டது. தான தருமங்கள் எல்லாம் பெரும்பாலும் பார்ப்பனர்க்கே வழங்கப்பட்டன. அறுபதாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் அறிகுறியாக பார்ப்பனர்களுக்கு அறுபது வீடுகள், அறுபது அடுக்கு, வீட்டு சாமான்கள், அறுபது அம்மி ஆட்டுக்கற்கள், அறுபது பசுமாடுகள் போன்றவற்றை இராசா சர் தானமாக வழங்கினார்.

5:02 AM

 

                               Dr.Anburaj said...

 

அப்பொழுது அறிஞர் அண்ணா அவர்கள் சென்னையில் விடுதலை இதழின் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார்கள். பார்ப்பனர்க்குத் தானம் கொடுத்தல் என்னும் குருட்டு நம்பிக்கையான மூடப்பழக்க வழக்கத்தைக் கண்டித்து விடுதலையில் தலையங்கம் ஒன்று எழுதுவது என்று அண்ணா அவர்கள் எண்ணினார்கள். இந்த எண்ணத்தைப் பெரியார் அவர்களிடம் வெளியிட்டார்கள். பெரியார் அவர்களுக்கு அப்பொழுது அண்ணாமலைச் செட்டியாரிடத்தில் மிக்க சினம் பொங்கி எழுந்திருந்தது. இராசா சர் அறுபாதாம் ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி யார் யாருக்கோ ஏராளமான நிதி வழங்கியதோடு, தேசீயப் பத்திரிகைகளுக்கு மிக நிதி வழங்கியிருந்தார். விடுதலைக்கு ஏதொரு உதவியும் புரியவில்லை. இது பெரியாருக்கு மிக்க சினத்தை மூட்டியது. யார் யாருக்கோ கொள்ளை கொள்ளையாகப் பணம் கொடுக்கிறான். பார்ப்பனர்களுக்கு இலட்சம் இலட்சமாக அள்ளித் தருகிறான். அவனை ஓயாமல் திட்டிக்கொண்டிருக்கிற தேசீயப் பத்திரிகைகளுக்கு நன்கொடை தந்திருக்கிறான்.

நாம் ஒரு பத்திரிகை வைத்து நடத்துகிறோம். தேவையானபொழுதெல்லாம் அவனுக்கு ஆதரவு தருகிறோம். அப்படி இருந்தாலும், நமது பத்திரிகையைக் கவனிக்காமல் இருக்கிறான் என்றால் என்ன நியாயம்? அவனது அடிமைத்தனத்தைக் கண்டித்து எழுதுங்கள்! என்னும் கருத்துப்பட பெரியார் அவர்கள் அண்ணாவிடம் கூறினார்கள். அண்ணா அவர்களும் அண்ணாமலைச் செட்டியாரின் போக்கைக் காரசாரமாகக் கண்டித்துத் தலையங்கம் ஒன்று தீட்டினார்கள். தலையங்கம் தீட்டி அச்சேற்றுவதற்குள், எதிர்பாராதவிதமாக இராசா சர் அண்ணாமலைச் செட்டியாரிடமிருந்து விடுதலைக்கு என்று ரூ.1000 நன்கொடை செக் வந்து சேர்ந்தது. செக்கை எடுத்துக்கொண்டு பெரியார் அவர்கள் அண்ணாவிடம் வந்து பைத்தியக்காரன் இப்பொழுது ரூ.1000-க்குச் செக் அனுப்பியிருக்கிறான். கண்டித்துச் தலையங்கம் தீட்டிவிட்டீர்களா? என்று கேட்டார். முன்பே எழுதிக்கொடுத்துவிட்டேன். அச்செறும் நிலையில் இருக்கிறது என்று அண்ணா கூறினார்கள்.

அவனைச் சாதாரணமாகப் பாராட்டி ஒரு தலையங்கம் எழுதுங்கள் என்று பெரியார் அவர்கள் அண்ணாவிடம் கூறினார்கள். அண்ணா அவர்கள் அவரது போக்கைக் கண்டித்து நான் எழுதிவிட்டேன். பாராட்டி எழுத என் மனம் இடந்தரவில்லை. வேண்டுமானால் நீங்கள் எழுதுங்கள்; நான் எழுதமாட்டேன் என்று உறுதியாக விடையிறுத்துவிட்டார்கள். பெரியார் அவர்கள் எவ்வளவோ வற்புறுத்தியும் அண்ணா அவர்கள் பாராட்டி எழுத மறுத்துவிட்டார்கள். பிறகு அண்ணாவின் தலையங்கத்தை நிறுத்திவிட்டுப் பெரியாரே ஒன்று எழுதி வெளியிட்டார்கள். மனச்சான்றுக்கு மாறாக போகக்கூடாது என்பதிலே அண்ணா அவர்கள் எவ்வளவு அழுத்தமாக இருந்து வருகிறார்கள் என்பதற்கு, இது சீரியதொரு எடுத்துக்காட்டாகும். (மன்றம்: 15.06.1956)

அண்ணா பரிமளம் பொய் சொல்கிறார் என சொல்வார்களா? அப்படியும் சொல்ல முடியாதே. பல நேரங்களில் அண்ணா பரிமளம் கூறியதை தங்கள் கூற்றுக்கு ஆதாரமாக போட்டவர்கள் தானே திராவிடர் கழக பெருந்தலைகள். அதனால், எல்லாவற்றையும் தெரிந்து கொண்டிருக்கும் திராவிடர் கழக பெருந்தலைகள் வாய் திறக்குமா.. 

எப்படி திறக்கும்.. அது தான் பி.ஜெய்னுலாபிதீன் விஷயத்தில் இறுக மூடி கொண்டுள்ளது.



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

http://www.tamilhindu.com/2010/01/why-dmk-emerged-by-malarmannan/

இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் கடைசியாக தந்தை பெரியார் விடுத்த பிரம்மாஸ்திரம் தான், 1949 ஜூலை 13-ம் தேதி விடுதலை பத்திரிகையில் வெளியிட்ட அறிக்கை. அதில் தான் திருமணம் செய்துகொண்டதற்கான ஒரு புதிய காரணத்தைச் சொல்கிறார். அறிக்கையின் தலைப்பு:”திருமண எண்ணத் தோற்றத்துக்கு காரணமும், அவசர முடிவும். அதில் யாரோ (மறைமுகமாக அண்ணாவைக் குறித்து) தன்னைக் கொலை செய்யச் சதிசெய்து வருவதாகவும் அதற்கு சம்பத் உதவி வருவதாகவும் ஒரு குற்றச் சாட்டு. உடனே அண்ணா, தந்தை பெரியார் தன்னைத்தான் மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளதாக, அவதூறு வழக்கு தொடர்கிறார். நீதி மன்றத்தில் ஆஜரான பெரியார், தான் அண்ணாவைக் குறிக்கவில்லை என்று சொல்கிறார். அவ்வாறு வாக்குமூலம் அளித்தால் தான் வழக்கை வாபஸ் வாங்குவதாகச் சொல்லவே, வழக்கு தள்ளுபடியாகிறது. சம்பத்தும், .வே.ரா மணியம்மை இருவர் மீதும் அவதூறு வழக்குத் தொடர்கிறார். நீதிமன்றத்தில் ஈ.வே.ரா, மணியம்மை இருவருமே வருத்தம் தெரிவிக்கவே, வழக்கு வாபஸ் ஆகிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

 சுயமரியாதை இயக்கம்:

 

பார்ப்பனரல்லாத சமூக சீர்திருத்த இயக்கம், சுயமரியாதை இயக்கம் என்ற பேர் தாங்கிற்று. பார்ப்பனீயம் – வருணாஸ்ரம தர்மம், மூடப்பழக்க வழக்கங்கள் ஆகியவைகளையும் அவைகளுக்குக் காரணமான வேதசாத்திர புராணங்களையும், குறிப்பாக மனுஸ்மிருதியையும், இவைகளுக்கு அடிப்படையான இந்து தர்மத்தையும், பெண்ணடிமையையும் இடைவிடாமல் எதிர்த்து நாடு முழுவதும் சுற்றிச் சுற்றி, ஈ.வெ.ரா.வும் அவரைப் பின்பற்றியவர்களும் பிரசாரம் செய்து வந்தார்கள்.

 

பல காலமாக, பழிக்கப்பட்டுத் தாழ்த்தப்பட்டுக் கிடந்த மக்கள் உள்ளங்களில் தன்மான உணர்ச்சி கொழுந்துவிட்டு எரியவே அவர்களுடைய அனுதாபமும் ஆதரவும் சுயமரியாதை இயக்கத்திற்கு கிடைத்தன.

 

சைமன் கமிஷன் வரவேற்பு:

 

இந்தியாவுக்கு அரசியல் உரிமையைப் பற்றி ஆராய சைமனைத் தலைவராகக் கொண்டு ‘ராயல் கமிஷன் வந்தது ‘ 1928ல். காங்கிரஸ் கமிஷனை பகிஷ்கரிக்க முடிவு செய்தது. இதர கட்சியினரும் பகிஷ்காரப் பாதைக்கே ஓட்டு அளித்தனர். ஈரோட்டுப் பாதை தனது தனிச்சிறப்பைக் காட்டிற்று. ஈ.வெ.ரா. ஒருவரே கமிஷனை வரவேற்கப் பிடிவாதம் காட்டினார்.

 

காங்கிரஸ் சுயராஜ்யக் கட்சிக்கும், பொதுஜனங்களின் இயக்கத்திற்கும் தொடர்பில்லாது இருந்த காலம் அது. சோஷலிஸத்தைக் குறிக்கோளாகக் கொண்ட தொழிலாளி வர்க்கம் சுயேச்சையான அரசியல் சக்தியாக உருவாகிவந்த காலம் அது. ஜவஹர்லால் நேருவும், சுபாஷ் சந்திர போசும் சர்வதேச ஏகாதிபத்திய எதிர்ப்புச் சங்கத்தின் காரியதரிசிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் அந்நாட்களில்தான். இந்தியத் தொழிற்சங்க காங்கிரஸில் இடதுசாரிகள் ஆதிக்கம் பெற்றிருந்தனர். நாடு முழுவதும் தேசீய வாலிபர் சங்கங்களும், மாணவர் கழகங்களும் தோன்றிக் கிளர்ச்சி செய்தன. சென்னையில் நடந்த காங்கிரஸ் பேரவையில் வலதுசாரித் தலைவர்களின் பலத்த எதிர்ப்புக்களிடையே பூர்ண சுதந்திரத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

இந்தச் சூழ்நிலையில்தான் சைமன் கமிஷன் வந்தது. எனவே, இமயம் முதல் குமரி முனைவரை பகிஷ்கார ஆர்ப்பாட்டம் அமர்க்களப்பட்டதில் ஆச்சரியப்படுவதற்கில்லை. காங்கிரசின் பிற்போக்காளர்கள்கூட, காலவெள்ளத்தை எதிர்த்து நிற்க முடியாமல், பகிஷ்காரத்திற்கு இடம் கொடுத்தனர்; தொழிலாளிவர்க்கம் முக்கிய பங்கெடுத்து, வேலைநிறுத்தப் புயலைக் கிளப்பிவிட்டது. கமிஷன் போன ஒவ்வொரு நகரத்திலும் வாலிபர்களும், மாணவர்களும், பொதுமக்களும் பகிஷ்கார ஆர்ப்பாட்டங்களின் சிகரங்களைத் தொட்டனர். லாலா லஜபதிராய், தென்னாட்டில் சீனிவாச அய்யங்கார் போன்ற சிறந்த தேசீயத் தலைவர்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னின்று நடத்திச் சென்றனர். என்றும் காணாதவாறு தேசீயமான உணர்ச்சி அடிபட்ட புலிபோல் சீறிற்று. மக்கள் எழுச்சியைக் கண்டு ஏகாதிபத்தியத்தின் பரமதாசர்களான ஜஸ்டிஸ் கட்சியார்கூட செய்வதறியாது தடுமாறினர்.

 

ஈ.வெ.ரா. மாத்திரம் சைமன் கமிஷனை வரவேற்கும்படி ஜஸ்டிஸ் கட்சிக்கு உபதேசம் செய்தார். ‘டாக்டர் நாயர், சர்.பி.தியாகராயர் ஆகிய தலைவர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றி, வாய் இல்லாத பூச்சிக்களாய் கிடக்கின்ற பாமர மக்களுக்கும், தொழிலாளிகளுக்கும், நாம்தான் பிரதிநிதிகள் என்பதை நினைவில் வைத்து கமிஷனை நமது கட்சி வரவேற்க வேண்டு ‘மென்று ஈ.வெ.ரா. காரணம் காட்டினார். ஜஸ்டிஸ் கட்சியும் வரவேற்க முடிவு செய்தது.

 

காங்கிரஸீம், நாட்டுப் பொதுமக்களும், தொழிலாளர், வாலிபர், மாணவர்களும் சைமன் கமிஷனைப் பகிஷ்கரித்தனர். ஈ.வெ.ரா.வின் பேச்சைக் கேட்டு பாமர மக்களுக்கும், தொழிலாளி மக்களுக்கும் தன்னைத்தானே பிரதிநிதியாக தேர்ந்தெடுத்துக் கொண்டு ஜஸ்டிஸ் கட்சி சைமன் கமிஷனை வரவேற்கத் துணிந்தது.

 

1928 இறுதியில் சென்னையில் சீர்திருத்த மகாநாடு ஈ.வெ.ரா.வின் தலைமையில் நடந்தது. தான் சீர்திருத்தவாதி அல்லவென்றும், அழிவு வேலைக்காரனென்றும் அதிதீவிரவாதம் பேசினார் ஈ.வெ.ரா. அந்த மகாநாட்டில். ஜஸ்டிஸ் கட்சித் தலைவர் பனகல் அரசர் அந்த மகாநாட்டில் கலந்துகொண்டு ஈ.வெ.ரா.வை இருபதாம் நூற்றாண்டின் புத்தர் என்று வானளாவப் பேசி ஜஸ்டிஸ் கட்சிக்கு ஈ.வெ.ரா. செய்த சேவைக்கு நன்றியறிதல் தெரிவித்தார்.

 

செங்கற்பட்டு மகாநாடு:

 

1929ம் வருஷ ஆரம்பத்தில் முதலாவது மாகாண சுயமரியாதை மகாநாடு நடந்தது. மகாநாட்டை நடத்தியவர்கள் ஜஸ்டிஸ் பிற்போக்கு கும்பலும், ஜமீந்தார்களுமான எம்.கே.ரெட்டியார், வேதாசலம் முதலியார், ஜெயராம் ரெட்டியார் போன்றவர்கள். ஜஸ்டிஸ் கட்சியோடு கூடிக்குலாவி மந்திரிப் பதவியில் அட்டை மாதிரி ஒட்டிக் கொண்டிருந்த சுப்பராயன் கூட்டத்தாரும் மகாநாட்டைச் சிறப்பித்தனர். ஏ.ராமசாமி முதலியார் போன்ற ஏகாதிபத்தியத்தின் நல்ல பிள்ளைகளும் அந்த விழாவை அலங்கரித்தனர். ஆயினும் சமூக, ஜாதி மத விஷயங்களில் முற்போக்குக் கருத்துக்கொண்ட ஆயிரக்கணக்கான வாலிபர்கள் மகாநாட்டில் கலந்துகொண்டனர் என்பது மறக்க முடியாதது. மகாநாட்டின் தலைவர் சவுந்திரபாண்டியன் தனது தலைமையுரையில் ‘பார்ப்பனரல்லாதார் இயக்கம் மெதுவாக முன்னேற்றம் அடைந்து வருங்கால், அவ்வியக்கத்திற்கு திடாரென ஒரு நற்காலம் கிட்டியது. மக்களிடை செல்வாக்குப் பெற ஒரு சந்தர்ப்பம் வாய்த்தது. அதுதான் இப்பொழுது தமிழ்நாட்டில் வீரகர்ஜனை புரிந்துவரும் சுயமரியாதை இயக்க ஆரம்பமாகும். மக்களுக்கு நலன்பல விளைவித்து வருபவரான, நமது மாபெரும் தலைவர் உயர்திரு. ஈ.வெ.ராமசாமி நாய்க்கர் அவர்களால் சுயமரியாதை வேதம் மக்களிடையே பரவிய புண்ணிய தினத்தையே யான் இங்கே குறிக்கின்றேன் ‘ என்று சுயமரியாதை இயக்கத்திற்கும் ஜஸ்டிஸ் கட்சிக்குமுள்ள தொடர்பை தெளிவாகக் கூறினார்.

 

இதிலிருந்து ஆயிரக்கணக்கான வாலிபர்கள் கருதியதுபோல், சுயமரியாதை இயக்கம் தனிச்சமூக சீர்திருத்த இயக்கம் அல்ல என்பதும், ஜஸ்டிஸ் கட்சிக்கு மக்களிடையில் செல்வாக்குபெற சந்தர்ப்பம் அளிக்கும் இயக்கம் என்பதும் தெளிவாகும். ஆயினும் ‘மகாநாட்டுத் தீர்மானங்கள் பல ஜஸ்டிஸ் கட்சி வைதீகர்களுக்குப் பிடிக்கவில்லை. அதனால் சமுதாயச் சீர்திருத்தத்தில் மேற்போக்காகவே நடந்து கொண்டனர். ‘ (தமிழர் தலைவர் 102ம் பக்கம்) ஜஸ்டிஸ் கட்சிக்கு சமூகச் சீர்திருத்தத்தைவிட பதவி மோகமே பெரிது என்பதை உணர்ந்தவர்களுக்கு இதில் வியப்பு இராது.

 

ஈரோடு மகாநாடு:

 

செங்கற்பட்டு மகாநாட்டுக்கும், ஈரோட்டு மகாநாட்டுக்கும் இடையில் ராமாயண ஆராய்ச்சி, பெரிய புராண ஆராய்ச்சி, பாரத ஆராய்ச்சி மற்றும் பல புராண ஆராய்ச்சிகளும் வெளிவந்தன. இந்துமத எதிர்ப்புப் பிரசாரத்தின் பலனாக வைதீகர்கள், சைவ, வைணவப் பண்டிதர்களின் எதிர்ப்பும், வாலிபர்களின் ஆதரவும் ஒருப்போல் வளர்ந்து வந்தன.

 

1930ல் அரசியல்மிதவாதப் பழமான மகாகணம் ஜெயகர் தலைமையில் 2வது சுயமரியாதை மாகாண மகாநாடு நடந்தது. மகாநாட்டுத் தலைவர் விரிவுரையில் ஜெயகர் ‘ஈ.வெ.ராமசாமியார் சட்டசபைகளைப் பற்றியோ, அரசாங்கத்தைப் பற்றியோ கவலை கொள்ளாதவர். அவர் ஏழை மக்களுக்குத் தொண்டு செய்வதே தனது பிறவியின் பயன் என்று கருதியிருப்பவர் ‘ என்று ஈ.வெ.ரா.வைப் புகழ்ந்தார். ஈ.வெ.ரா. அரசியலுக்கு அப்பாற்பட்டவர் என்ற கருத்தை வாலிபர்கள் உள்ளத்திலும் பொதுமக்கள் மனத்திலும் புகுத்துவதற்கான நல்ல ஏற்பாடு இது.

 

ஈரோட்டு மகாநாட்டுக்கு முன்பே, நாடு முழுவதிலும் உப்பு சத்தியாக்கிரகம் ஆரம்பமாகிவிட்டது. (1929ல் லாகூரில் காங்கிரஸ் மகாசபை நிறைவேற்றிய பூர்ண சுதந்திரத் தீர்மானத்தை அமுலுக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கை இது.) உப்புச் சத்தியாக்கிரகம் காந்திஜியின் திட்டம். இருந்தபோதிலும், சத்தியாக்கிரகப் போராட்டம் நாடு முழுவதிலும் உள்ள தீவிர தேசியவாதிகளான வாலிபர்கள், மாணவர்கள் நடத்திய திரண்ட கிளர்ச்சியின் பலனாக, காங்கிரஸ் தலைமை நிர்ப்பந்திக்கப்பட்டு தொடங்கியதாகும். எனவே, அந்த ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரில் வாலிபர்கள் ஆயிரக்கணக்கில் தலைகால் புரியாமல் குதித்தனர். நாடு முச்சூடும் உள்ள ஏகாதிபத்திய எதிர்ப்புச் சக்திகள் தழுவிநின்றன. ஈ.வெ.ரா. எதிர்த்தார்.

 

‘குடியரசில் ‘ உப்புப் போரை எதிர்த்து எழுதினார். ‘இந்தியாவின் இன்றைய நிலைமைக்கு பூரண சுயேச்சை வேண்டுமானால் – விடுதலை வேண்டுமானால் – சுயராஜ்யம் என்பது வேண்டுமானால் – வெள்ளைக்காரர் சுயநல ஆட்சி ஒழிய வேண்டுமானால் முதலில் மத ஆதிக்கமும் அதன் குருட்டு நம்பிக்கைகளும் ஒழிய வேண்டும், ஜாதி ஒழிய வேண்டும், பார்ப்பன ஆதிக்கம் அடியோடு ஒழிக்க வேண்டும், இவ்வளவும் நடந்தபிறகுதான் வெள்ளைக்காரர் கொடுங்கோன்மை (தானாய் ஒழிந்துவிடும் அல்லது) நம்மால் ஒழிக்கப்பட வேண்டும்; ஒழிக்கப்படவும் முடியும் எனப்து நமது முடிவு. ‘ (குடியரசு – 16-3-30)

 

அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றித்தான் சமூகவாழ்வை சீர்திருத்த முடியும் என்பது சரித்திரம் கண்ட உண்மை. அனுபவ அரசியலும்கூட. ஆயினும் தனது ‘சுயமரியாதைச் சித்தாந்தத்திற்கு ‘ ஆக்கம் தேடும் நோக்கத்தோடு வெள்ளைக்கார ஆட்சி ஒழியுமுன்பே ஜாதியும், மதமும், பார்ப்பன ஆதிக்கனும், முதலாளித்தன்மையும் ஒழிய வேண்டுமென்று குதிரைக்கு முன் வண்டியைக்கட்டி ஓட்ட முடியுமென்பதுபோல் சாதித்தார் ஈ.வெ.ரா.

 

இன்னும் ஒருபடி மேற்சென்று உப்பு சத்தியாகிரகத்தை எதிர்த்து (குடியரசு, 13-4-30) எழுதுகிறபோது, ‘எப்படி இருந்தாலும் சரி, உப்பு காய்ச்சும் சட்டமறுப்பு வெற்றிபெற்று தெருத்தெருவாக உப்பு மலைமலையாகக் குவிந்து கிடந்தாலும், அங்கே அதோடு வெள்ளைக்கார ராஜாங்கமே ஒழிந்து, இந்தியா பூர்ண சுயேச்சை அடைந்து இங்கிலாந்து தேசமும் நமது கைக்கு வருவதாயிருந்தாலும் சரி, இந்த உப்புக் காய்ச்சும் காரியத்தையோ, இது சம்பந்தமான சட்டமறுப்புக் காரியத்தையோ நாம் சிறிதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்பதை தைரியமாகச் சொல்வதோடு, இதனால் இந்தியாவுக்கு வளைந்துபோன குண்டூசி அளவுகூட நன்மை ஏற்படாதென்று கோபுரத்தின்மீது நின்று கூறுவோம் ‘ என்று எழுதி தனது காங்கிரஸ் எதிர்ப்பு உணர்ச்சியின் வேகத்தை காட்டினார்.

 

உப்புச் சத்தியாக்கிரக காலத்தில் நாடு முழுவதும் பல இடங்களிலும், குறிப்பாகத் தமிழ்நாட்டில் சென்னையிலும் வேதாரண்யத்திலும் அடக்குமுறை பேயாட்டம் ஆடியது. ஈரோட்டு மகாநாட்டில் அரசாங்கத்தின் அடக்குமுறையைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற சில இளைஞர்கள் முயன்றனர். இந்தத் தீர்மானம் விஷயாலோசனை கமிட்டிக்கு வந்தபொழுது, கமிட்டிக்குத் தலைமை வகித்த ஆர்.கே.ஷண்முகம், சுயமரியாதை இயக்கம் அரசியலில் கலக்கலாமா, கூடாதா என்று முடிவு கட்டியபின்னர்தான், தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொள முடியுமென்றார். உடனே ஈ.வெ.ரா. ‘சுயமரியாதை இயக்கம் அரசியலில் கலக்கக் கூடாது. யார் எவ்வளவு தூற்றினாலும் சரி, போற்றினாலும் சரி, சட்டமறுப்பை ஆதரிக்கக்கூடாது. தனித்த சமூக இயக்கமாகவே நடைபெற வேண்டும் ‘ என்று அழுத்தமாகக் கூறிவிட்டார். தீர்மானத்திற்கு இடம் கிடைக்கவில்லை.

 

இந்த மகாநாட்டிற்குப்பின் சுயமரியாதை இளைஞர்கள் பலர் இயக்கத்தை விட்டு விலகினர். ஏகாதிபத்ய எதிர்ப்புப் போரால் வசீகரிக்கப்பட்டு காங்கிரஸில் சேர்ந்தனர். சுயமரியாதைக் கொள்கைகளோடு தேசீயமும் அவசியம் என்பதை உணர்ந்து தேசீய சுயமரியாதைக்காரர்களென்று பேர் பூண்டு, ஈ.வெ.ரா.வின் தேசீய எதிர்ப்பு, காங்கிரஸ் எதிர்ப்பைக் கண்டித்தனர்.

 

1930ல் செப்டம்பரில் சென்னை சட்டசபைக்கு பொதுத்தேர்தல் நடைபெற்றது. சட்ட மறுப்பில் ஈடுபட்டிருந்த காங்கிரஸ், தேர்தலில் ஈடுபடவில்லை. இது ஜஸ்டிஸ் கட்சிக்கு நல்ல வாய்ப்பாக முடிந்தது. சுயேச்சையாக நின்ற பலர் தோல்வியுற்றனர். ஜஸ்டிஸ் கட்சி வெற்றி பெற்றது.

 

‘ஜஸ்டிஸ் கட்சியின் இவ்வெற்றிக்குக் காரணம் சுயமரியாதை இயக்கமும், ஈ.வெ.ராவின் உழைப்புமே ‘ என்று ஈ.வெ.ரா.வின் வரலாற்று ஆசிரியர் கூறுகிறார்.

 

பிற்போக்கு அரசியல் கட்சியான ஜஸ்டிஸ் கட்சிக்கு தேர்தல் ஏஜண்டாக ஈ.வெ.ரா.வும், சுயமரியாதை இயக்கமும் ஊழியம் புரிந்தபோது சுயமரியாதை இயக்கம் அரசியலில் கலக்கக் கூடாதென்று ஈ.வெ.ரா. சொன்னதில்லை. ஏகாதிபத்திய எதிர்ப்புத் திட்டம் கொண்ட காங்கிரஸையோ, காங்கிரஸ் போராட்டங்களையோ சுயமரியாதை இயக்கமும், ஈ.வெ.ரா.வும் எதிர்த்தபொழுதும் சுயமரியாதை இயக்கம் அரசியலில் கலக்கக்கூடாதென்று, ஈ.வெ.ரா. சொன்னதில்லை. அரசாங்க அடக்குமுறையைக் கண்டித்து, காங்கிரஸ் போராட்டத்திற்கு அனுதாபம் காட்ட தீவிர இளைஞர்கள் முன்வந்த பொழுதுதான் ‘சுயமரியாதை இயக்கம் அரசியலில் கலக்கக் கூடாது, தனித்த சமூக இயக்கமாகவே நடைபெற வேண்டும் ‘ என்று ஈ.வெ.ரா. கூறினார் என்பதை நன்றாகச் சிந்திக்க வேண்டும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

பகுத்தறிவு இயக்கம்:

 

சுயமரியாதை இயக்கத்தில் ‘பகுத்தறிவு ‘ முதலிடம் பெற்று கிளர்ச்சி நடைபெற்றது. இந்து மதத்தோடு நிற்காமல் கிறிஸ்துவ, மகம்மதிய மதங்களிலும் பகுத்தறிவு ஆராய்ச்சி நுழைந்தது. இந்தக் காலத்தில் முனுசாமி நாயுடு ஜஸ்டிஸ் கட்சித் தலைவராகவும், முதன் மந்திரியாகவும் இருந்தார். ஜஸ்டிஸ் கட்சிக்கும், சுயமரியாதை கட்சிக்கும் அதிகம் தொடர்பில்லை. ஏற உதவிய ஏணியை எட்டி மிதித்துவிட்டதாக ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களைப் பற்றி சுயமரியாதைக்காரர்கள் நொந்து கூறி மூக்கால் அழுத காலம் இது. சுயமரியாதை இயக்கத்தில் சிக்கிய வாலிபர்களுக்கு போதை ஊட்டுவதுபோல், உணர்ச்சி வேகம் ஊட்டவும், புதிய மக்கள் பகுதியை இழுக்கவும், பகுத்தறிவு கண்ணோட்டத்தை பல துறைகளிலும், ஈ.வெ.ரா.வும், சுயமரியாதைக்காரர்களும் செலுத்தினார்கள்.

 

பகத்சிங்கின் தூக்கைப் பற்றி பயங்கரமான தலையங்கம் எழுதிற்று ‘குடியரசு ‘. நூற்றுக்கணக்கான வாலிபர்கள் பகத்சிங்கைப் பின்பற்ற வேண்டும் என்று சண்டப்பிரசண்டம் அடித்தார் ஈ.வெ.ரா. அதேபொழுது பகத்சிங்கின் தியாகத்தை ஆகாயத்தில் தூக்கி வைத்துப் பேசி தனது ரத்தத்தில் ஊறிய காந்தி எதிர்ப்பு, காங்கிரஸ் எதிர்ப்புக் கொள்கைக்கு புரட்சி உணர்ச்சி கொண்ட வாலிப உள்ளங்களின் ஆதரவைத் தேடினார். இந்தக் காலத்தில்தான் கதர் எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பில் சுயமரியாதை இயக்கம் முனைந்தது. நாட்டின் பல பகுதிகளிலுள்ள புரட்சிக்காரர்களுக்கும், கம்யூனிஸ்ட்களுக்கும் தீவிர வாலிபர்களுக்கும், தொழிற்சங்க இயக்கத்தார்களுக்கும் காந்தீயத்தையும், காங்கிரஸையும் பிரித்து வெவ்வேறாகக் காண முடிந்தது. ஈ.வெ.ரா.வின் பகுத்தறிவுக் கண்ணில் காந்தியும், காங்கிரஸீம் ஒன்றாகவே தென்பட்டனர்.

 

விருதுநகர் மகாநாடு:

 

மகாநாடு ஆரம்பிக்க மூன்றிரண்டு நாட்களிருக்கும்பொழுது உள்ளூர் காங்கிரஸ் வாலிபர்களுக்கும், சுயமரியாதை வாலிபர்களுக்கும் தகராறு, கைகலப்பு. அரசியலில் கலப்பதில்லை என்றும், அரசியல் அயோக்கியரகளின் புகலிடமென்றும் உதட்டளவில் சொல்லி வந்த சுயமரியாதை இயக்கம், காங்கிரஸ் எதிர்ப்பை பாலூட்டி வளர்க்காமல் ஒரு நிமிஷம்கூடக் கழித்ததில்லை. தகராறு வைதீகர்களோடல்ல; காங்கிரஸ் வாலிபர்களோடு.

 

இந்த மகாநாட்டின் முக்கிய அம்சம், எல்லா மதங்களும் ஒழிய வேண்டுமென்ற தீர்மானம். இங்கும் கண்டனக் கோடாலி காந்திஜியின் மீதும், கராச்சித் திட்டத்தில் மத நடுநிலைமை தீர்மானம் கண்ட காங்கிரஸ் மீதுமே வீசப்பட்டது. மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட இந்தி எதிர்ப்பு, கதர் எதிர்ப்புத் தீர்மானங்கள், பகுத்தறிவு இயக்கத்தின் பலன்கள் என்று கூறப்பட்டபோதிலும், காங்கிரஸ் எதிர்ப்பு நோக்கம் கொண்ட அரசியல் தீர்மானங்களே.

 

சமதர்ம நாஸ்திக இயக்கம்:

 

சுயமரியாதைப் பகுத்தறிவு இயக்கம் நாளடைவில் சமதர்ம நாஸ்திக பிரசாரத்திலும் இறங்கியது.

 

சமதர்ம நாஸ்திகப் பிரசாரம் செய்ய சோவியத் யூனியனின் சமூகவாழ்வு எடுத்துக்காட்டாக இருந்தது சுயமரியாதைக்காரர்களுக்கு. அங்கு மதமற்ற சமூக வாழ்வைக் கண்டனர். எனவே, ரஷ்யக்காதல் பிறந்தது. ஈ.வெ.ரா. ரஷ்யாவுக்குப் போக விரும்பினார். சோவியத் இலக்கியங்களையும் கம்யூனிஸ்ட் நூற்களையும் படித்துக் கொண்டிருந்த எஸ்.ராமநாதனின் கூட்டுறவும் யோசனையும் ஐரோப்பியப் பிரயாணமாக மலர்ந்தது.

 

இந்தக் காலத்தில் இந்தியக் கம்யூனிஸ்டுகளை சம்பந்தப்படுத்திய மீரத் சதிவழக்கு நடந்து கொண்டிருந்தது. இந்துஸ்தான் சோஷலிஸ்ட் குடியரசு பட்டாளத்தின் சரித்திரமும், டில்லி வெடிகுண்டு வழக்கு, லாகூர் சதிவழக்கு விவரங்களும் வாலிப உலகத்தின் உள்ளத்தில் புயல் வீசிக் கொண்டிருந்தன. உப்புச் சத்தியாக்கிரகத்தில் சிறைசென்ற ராஜாஜிகூட, பக்லாரி சிறையில் சோஷலிஸத்தைப் பற்றி பேச ஆரம்பித்தார். இந்தச் சூழ்நிலை சுயமரியாதை இயக்கத்திலும் எதிரொலிக்காதா ?

 

ஈ.வெ.ரா. ஐரோப்பா சென்றிருந்த காலத்தில் தோழர் சிங்காரவேலுவின் தொடர்பு சமதர்ம இயக்கத்திற்குக் கிடைத்தது. சிங்காரவேலு குடியரசுப் பத்திரிகையில் தொடர்ச்சியாக எழுதிய கட்டுரைகள் சமதர்மம், நாஸ்திகம் ஆகியவைகளைப் பற்றிய புத்தொளியையும், புதிய பார்வையையும் சுயமரியாதை இயக்கத்தாருக்கு அளித்தன. பலப்பல மகாநாடுகளில் சிங்காரவேலு முக்கிய பங்கெடுத்து, சுயமரியாதை இயக்கத்தை சமதர்மத்தை நோக்கி அழைத்துச் சென்றார்.

 

ஈ.வெ.ரா. இந்தியாவுக்கு திரும்பினார். ஈ.வெ.ரா.வின் இலங்கைப் பிரசங்கம் சோவியத் யூனியனைப் பார்த்ததின் பலனையும், பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட்களோடு பழகியதன் காரணமாகவும் சமதர்மப் பாதையில் செல்வதாக இருந்தது.

 

ஈ.வெ.ரா. சோவியத் யூனியனிலிருந்து இங்கிலாந்துக்குச் சென்றபோது பல தொழிலாளர் தலைவர்களைச் சந்தித்தார். காலஞ்சென்ற தோழர் சக்லத்வாலாவைக் கண்டு அவரோடு உரையாடி பிரிட்டிஷ் தொழிலாளர் இயக்கத்தைப் பற்றிய உண்மைகளைத் தெரிந்து கொண்டார். இங்கிலாந்தில் மேம்ஸ்பரோலேக் பார்க்கில் ஒரு தொழிலாளர் கூட்டம் நடைபெற்றது. பிரிட்டிஷ் தொழிலாளர் தலைவர் ஒரு சொற்பொழிவாற்றினார். லாண்ட்ஸ்பரிக்கு விடைகூறும் முறையில் ஈ.வெ.ரா.வுக்கு பேச சந்தர்ப்பம் கிடைத்தது. தோழர் சக்லத்வாலா எழுதிக் கொடுத்த பிரசங்கத்தை ஈ.வெ.ரா. படித்தார். அதில் இரண்டொரு கருத்தைக் கீழே தருகிறோம்.

 

‘இந்தியர்களாகிய எங்களை நீங்கள் ஒரு பரிகசிக்கத்தக்க சமூகமாகக் கருதலாம். ஆனால் நாங்கள் பிரிட்டிஷ் தொழிற்கட்சியை மிகமிகப் பரிகசிக்கத்தக்க சமூகமாகக் காண்கிறோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

இந்திய சுரங்கங்களில் 10 மணிநேர வேலை கொடுக்கப்படுகிறது. சுமார் 40 ஆயிரம் பெண்கள் தினம் 15 அணா கூலிக்கு பூமிக்குள் வேலை செய்கிறார்கள். இந்தக் கொடுமையையும் ஆபாசத்தையும் தொழிற்கட்சி அரசாங்கம் என்ன செய்தது ?

 

அவ்வளவோடு மாத்திரம் அல்லாமல், இந்தியா தனது – இந்திய அரசர்களூம், ஜமீந்தார்களும், முதலாளிமார்களும், ஐரோப்பிய வியாபாரிகளுமே ஆதிக்கம் வகிக்கும்படியானதும் தொழிலாளிகளுக்கும், பணக்காரர்களுக்குமே பாத்யமும், பொறுப்பும் இல்லாததுமான ஒரு அரசியல் சபை மூலம் நிர்வாகம் கிடைக்கும்படியான காரியத்திற்கு உதவி செய்கிறார்கள்.

 

ஆதலால் யார்க்ஷயர் தொழிலாளர்களே! நீங்கள் இந்தப் போலி கட்சிகளையும், கொள்கைகளையும் நம்பாமல் மனித சுதந்திரத்துக்கும், சமத்துவத்துக்கும் உண்மையாகவே போராடுவதற்காக உலகத் தொழிலாளர்களின் ஒற்றுமையை எதிர்நோக்கிக் கொண்டிருங்கள் ‘

 

கம்யூனிஸ்ட் சக்லத்வாலாவோடு சேர்ந்தபோது ஈ.வெ.ரா. பார்ப்பன ஆதிக்கத்தையும், பனியா சுரண்டலையும் மறந்துவிட்டார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

 

இதற்கிடையில் 1932 அக்டோபரில் தஞ்சையில் தங்கள் கட்சி மகாநாடு நடைபெற்றது. கண்டோர், கேட்டோர் எள்ளி நகையாடும்படி மகாநாடு குழப்பத்தில் முடிந்தது. முனுசாமி நாயுடு மந்திரி பதவியிலிருந்தும், கட்சிப் பதவியிலிருந்தும் விலகிக் கொண்டார். அவருக்குப் பின் பொப்பிலி அரசர் ஜஸ்டிஸ் கட்சியின் தலைவராகி முதன்மந்திரியானார். இந்த முயற்சியில் சுயமரியாதைக்காரர்களுக்கு முக்கிய பங்குண்டு. தஞ்சையில் நடந்த மகாநாட்டில் சுயமரியாதைக்காரர்கள் அத்தனை பேரும் பொப்பிலி அரசரையே ஆதரித்தார்கள். காரணம் முனுசாமி நாயுடு காங்கிரஸில் அனுதாபமுடையவர் என்பதைப் பல வழிகளில் காட்டிக் கொண்டதேயாகும்.

 

ஈரோட்டு வேலைத்திட்டம்:

 

இதுவரை சுயமரியாதை இயக்கம் வெறும் சமுதாயச் சீர்திருத்த இயக்கம் என்று சொல்லிக் கொண்டு வந்தது. மாஸ்கோ வழியை நேரில் கண்டறிந்து வந்த ஈ.வெ.ரா., அதை மாற்றி அரசியல் கொள்கையுடைய இயக்கமாக்க எண்ணினார். தோழர் சிங்காரவேலுவோடு கலந்து ஒரு திட்டமும் தயாரிக்கப்பட்டது. இதில் சுயமரியாதை இயக்கத்தின் நோக்கமும், சட்டசபை, சமதர்ம வேலைத் திட்டமும் இடம் பெற்றிருந்தன.

 

சவுந்திரப் பாண்டியன், வி.வி.ராமசாமி போன்ற சுயமரியாதைப் பணக்காரர்கள் இந்தத் திட்டத்திற்கு ஆதரவு கொடுக்கவில்லை. சுயமரியாதைச் சங்கத்தின் தலைவராயிருந்த ஆர்.கே.ஷண்முகம், ஈ.வெ.ரா.வின் போக்கை எதிர்த்துக் கடிதம் எழுதினார். சுயமரியாதை இயக்கம் அரசியலில் கலவாத வெறும் சமூகச் சீர்திருத்த இயக்கம் என்று சொல்லிக்கொண்டே ஜஸ்டிஸ் கட்சிக்கு பலம் தேடிவந்த சுயமரியாதை பிரமுகர்கள் பலர், முகத்தைச் சுழித்தார்கள். ஆனால் சமதர்ம பிரசாரமும், கிளர்ச்சியும் இவற்றைச் சட்டை செய்யாமல் முன்னேறிக் கொண்டிருந்தன.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

 

ஈரோட்டு வேலைத்திட்டக் கூட்டம் 1932 டிசம்பர் 28, 29ம் தேதிகளில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்டாயம் பங்கெடுத்துக் கொள்ள வேண்டுமென்று, சுயமரியாதைத் தொண்டர்களில் தலைசிறந்தவராயிருந்த தோழர் பொன்னம்பலனார் மூலம் ஈ.வெ.ரா. எனக்கு செய்தி தெரிவித்தார்.

 

1926வது வருஷத்திலிருந்து சுயமரியாதை இயக்கத்தின் சமுதாயச் சீர்திருத்த கொள்கைகளைப் பரிபூரணமாக ஆதரித்து வந்தேன். அதேபொழுதில் ஜஸ்டிஸ் கட்சியின் அரசியலை விடாமல் எதிர்த்து வந்தேன். அரசியலில் காங்கிரஸ்காரன் நான். ஆனால் தீவிரவாதி. செங்கற்பட்டு, ஈரோடு, விருதுநகர் மாகாண சுயமரியாதை மகாநாடுகளில் பங்கெடுத்துக் கொண்டேன். அதேபோல், சென்னையில் நடந்த காங்கிரஸ் மகாசபைக்கும், பின்னர் 1931ல் ஈரோட்டில் நடந்த தமிழ்நாடு நவ ஜவான் மகாநாட்டுக்கும் பிரதிநிதியாகச் சென்றேன். சுயமரியாதை இயக்கம், அரசியலில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டுமென்றும் அதன் அரசியல் ஜஸ்டிஸ் கட்சி அரசியலாக இருக்கக்கூடாது என்றும், ஈரோடு, விருதுநகர் மகாநாடுகளில் போராடினேன். நான் சுயமரியாதைக்காரர்களிடையேயும் சரி, காங்கிரஸ்காரர்களிடையேயும் சரி, தீவிரவாதியாகவே விளங்கினேன். 1932ம் போராட்டத்தில் ஜனவரி ஆரம்பத்தில் சிறை சென்று நவம்பர் இறுதியில் வெளிவந்தேன். பகத்சிங்கின் தோழர்களோடும், வங்கப் புரட்சி தலைவர்களோடும், சிறைச்சாலைகளில் விவாதித்தும், மார்க்ஸிய நூற்களைக் கற்றும் உறுதியான கம்யூனிஸ்ட் அபிப்பிராயத்தோடு சிறையிலிருந்து வெளிவந்தேன். இப்படி வெளிவந்த சந்தர்ப்பத்தில்தான் ஈரோட்டு வேலைத்திட்ட கூட்டத்தின் அழைப்பு, ஈ.வெ.ரா.விடமிருந்து கிடைத்தது.

 

ஈரோட்டு வேலைத்திட்டக் கூட்டத்துக்கு சுயமரியாதைத் தொண்டர்கள் அனைவரும் வந்திருந்தனர். திட்டத்தின் கருத்தைப் பற்றித் தோழர் சிங்காரவேலு விளக்கிக் கூறினார். ஈ.வெ.ரா.வும், நானும் ஆதரித்தோம். சுயமரியாதை இயக்கத்தில் அரசியல் கொள்கைகள் வேண்டாம் என்கின்ற பழைய பல்லவியைப் பாடி சிலர் திட்டத்தை எதிர்த்தனர். எந்தச் சீர்திருத்தத்தையும் நிறைவேற்ற அரசியல் அதிகாரம் வேண்டுமென்றும், அரசியலில் நுழைய விரும்புவோருக்கு நமது இயக்கத்தில் இடமிருக்க வேண்டுமென்றும், சுயமரியாதை இயக்கம் எப்பொழுதும்போல் சமூக இயக்கமாக இருக்கலாமென்றும், அரசியலுக்காக அதற்குள் சமதர்மக் கட்சி என்ற ஒரு தனிப்பிரிவை அமைத்துக் கொள்ளலா மென்றும் விளக்கி எதிர்த்தவர்களுக்கு விடையளிக்கப்பட்டது. எதிர்த்தவர்களும் புதிய திட்டத்தை ஒப்புக் கொண்டனர்.

 

இதுவரை அரசியல் கூடாது என்று ஜஸ்டிஸ் கட்சி அரசியலை ஆதரித்து வந்த சுயமரியாதை இயக்கம் இப்பொழுது அரசியல் வேண்டுமென்றும், அந்த அரசியலைத் தாங்கி நிற்கும் கட்சி ஜஸ்டிஸ் கட்சி அல்லவென்றும், சுயமரியதை இயக்கத்திற்கேற்ற சமதர்மக் கட்சிதான் என்றும் முடிவு கட்டியது குறிப்பிடத்தக்கது. இது காலவேகத்தின் அறிகுறி.

 

1933, 34-வது வருஷங்களில் சமதர்மப் பிரசாரம் தமிழ்நாடு முழுவதும் காட்டுத்தீ போல் பரவிற்று. அதேகாலத்தில், காங்கிரஸ் வாலிபர்களிடையிலும் சோஷலிஸ்டுக் கொள்கை தலைதூக்க ஆரம்பித்தது. 1930, 32 தேசீயப் போராட்டங்களின் தோல்வியைக் கண்டு காந்தீயத் தலைமையில் நம்பிக்கை இழந்தனர் தேசீய வாலிபர்கள். தகுந்த புதிய தலைமையைத் தேடினர். மார்க்ஸீயத் தலைமைதான் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போருக்கு ஏற்ற தலைமை எனக் கண்டனர். 1932ல் சிறைசென்ற வாலிபர்களில் தீவிர நோக்கமுடையவர்கள் இந்தியாவில் எந்தெந்த சிறைச்சாலைகளில் இருந்தார்களோ, அங்கெல்லாம் போராட்டமும், தலைமையும் என்ற பிரச்சனையைக் கிளப்பி விவாதித்து இதே முடிவுக்கு வந்தனர். சிறைச்சாலைகளிலேயே பல வாலிபர்கள் மார்க்ஸியவாதிகள் ஆயினர். மீரத் சதிவழக்கும், அதன் முடிவும் இந்த முடிவுக்கு ஆக்கமும், ஊக்கமும் அளித்தன. நாஸிக் ஜெயிலில் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி பிறந்தது. திருச்சி, சென்னை, பெல்லாரி, அலிப்புரம், வேலூர், கண்ணனூர், கோவை முதலிய ஜெயில்களிலிருந்து பல காங்கிரஸ் வாலிபர்கள் சோஷலிஸ்டுகளாக வெளிவந்தனர். சமதர்மக் கருத்துக்களுக்கு, மக்களிடையில் பேராதரவு ஏற்பட்டது. இந்த கற்றுணர்ச்சியில் சுயமரியாதைக்காரர்களின் சமதர்மப் பிரசாரத்தைக் கேட்ட மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டனர்.

 

பிற்போக்கு அரசியல்வாதிகள் ஈரோட்டுத் திட்டத்தைக் கண்டு நடுங்கினர். சுயமரியாதை இயக்கம் பொதுவுடைமை இயக்கமாக மாறிவிட்டதென்று கூச்சலிட்டனர். பழைய சுயமரியாதைக்காரர்களில் பலர் கட்சியின் போக்கு பிடிக்கவில்லையென்று ஒதுங்கினர். சிலர் அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு ஆளாவோம் என்று, அஞ்சி மறைந்தனர். ஆனால் புதியவர்கள் பலர் இயக்கத்தில் சேர்ந்து கொண்டே இருந்தனர். அந்த நாளில் காங்கிரஸைவிட சமதர்ம இயக்கத்திற்கு, தமிழ் மக்களிடம் அமோகமான ஆதரவு இருந்தது. அந்தக் காலத்திலும்கூட ஈ.வெ.ரா தனது காங்கிரஸ் எதிர்ப்புத் திருப்பணியை சமதர்ம பிரசார போர்வைக்குள் நின்றும் நடத்தி வந்தார். ஒரு உதாரணம்:

 

‘பொருளாதாரத் துறையிலும், அரசியல் துறையிலும் வேலை செய்யாமல் சமூக முற்போக்கு எப்படி ஏற்படும் ? ஒரு சமூகத்துக்குப் பொருளாதாரமும் அரசியலும் அவசியமானதா ? அல்லவா ? நீங்கள் இரண்டையும் விட்டுவிட்டுச் செய்யும் முற்போக்காக நமது சுயமரியாதை இயக்கம் தேவையே இல்லை. சும்மா அலங்காரமாக – வேடிக்கையாக புராண முட்டாள் தனத்தையும், பார்ப்பன சூழ்ச்சியையும் பேசிக்காலம் கழிப்பது மாத்திரமே சுயமரியாதை இயக்கம் என்றால், அது அழிந்துபோவதே மேலான காரியம் என்று சொல்வேன்.

 

‘வருணாச்சிரமம் இருக்க வேண்டும். ஜாதி இருக்க வேண்டும். ராஜாக்கள் இருக்க வேண்டும். முதலாளிகள் இருக்க வேண்டும். மதம் இருக்க வேண்டும். வேதம், புராணம், இதிகாசம் இருக்க வேண்டும். இன்றைக்கு இருக்கிறவைகள் எல்லாம் இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டு, இவைகளை எல்லாம் பலப்படுத்த – நிலைக்க வைக்க வேண்டி – ‘வெள்ளைக்காரன் மாத்திரம் போக வேண்டும் ‘ என்கிற காங்கிரஸோ, சுயராஜ்யமோ, தேசீயமோ, காந்தீயமோ, சுயமரியாதை இயக்கத்துக்கு வைரியேயாகும். ஆகையால் சுயமரியாதை இயக்கத்தாரால் அழிக்கப்பட வேண்டியவைகளில் இந்தக் காங்கிரஸீம், காந்தீயமும் முதன்மை யானவைகளாகும். ‘ ( ’33-ல் திருப்பத்தூர் மகாநாட்டில் பேசிய பேச்சு)

 

மேற்படி பேச்சில் பொருளாதாரத் துறையிலும், அரசியல் துறையிலும் வேலை செய்யாமல் சமூகப் போக்கு எப்படி ஏற்படுமென்று கேட்டு, அரசியல் மதிப்பைக் குறைத்துப் பேசிய சென்ற காலத்தவர்களைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்கிறார். புராண முட்டாள்தனத்தையும் பார்ப்பனச் சூழ்ச்சியையும் பேசிக் காலங்கழிப்பது மாத்திரமே சுயமரியாதை இயக்கமென்றால், அது அழிந்து போவதே மேலென்று ஆணித்தரமாக எடுத்துக்காட்டி சமதர்மக் கருத்தைப் பெருமைப்படுத்துகிறார். ஆனால், அதே பேச்சின் பிற்பகுதியில், ‘பழைய கருப்பன் கருப்பன் ‘, ‘பழைய மண் கிண்ணி மண் கிண்ணி ‘, ‘பழைய ஈ.வெ.ரா. ஈ.வெ.ரா., பழைய காங்கிரஸ் எதிர்ப்பு, காங்கிரஸ் எதிர்ப்பு ‘ என்றே பேசியிருக்கிறார் என்பதைக் கவனிக்க வேண்டும். காங்கிரஸைக் குறை கூறுவது சமதர்மக் கண்ணோட்டத்தில் தவறில்லை. குறை கூறுவது தேசீய இயக்கத்தை வளப்படுத்தி முன்னேற்றுவதற்காக இருக்க வேண்டும். தேசீய இயக்கத்தை உருக்குலைப்பதாக இருக்கக் கூடாது. ஆனால், ஈ.வெ.ரா.வோ ‘முதன்முதலில் அழிக்கப்பட வேண்டியது காங்கிரஸ்தான் ‘ என்கிறார் சொற்பொழிவில்.

 

இந்தக் காலத்தில், சமதர்ம இலக்கியமாக சின்னஞ்சிறு நூற்கள் வெளியிடப்பட்டன. ‘சோஷலிஸம் ‘, ‘உழைப்பாளிகளுக்கு ஏன் உலகமில்லை ? ‘ போன்ற நூற்கள் ‘குடியரசு ‘ப் பதிப்பகத்திலிருந்து வெளிவந்தன. ஈ.வெ.ரா.வின் இன்றைய பாஷையில் இந்த நூற்களின் ஆசிரியர்கள் இருவரும் ஆரியர்கள். இருவரும் இந்திய ஊழியர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள். ‘சோஷலிஸம் ‘ எழுதியவர் நரசிம்மன் ஏ.ஏ. அடுத்த புத்தகத்தை எழுதியவர் கே.ஜி.சிவசாமி. நரசிம்மனின் கட்டுரைகள் ‘குடியரசிலும் ‘, ‘புரட்சி ‘யிலும் அடிக்கடி வெளிவந்தன. எனக்குத் தெரிந்தவரையில், நரசிம்மனின் எழுத்துக்களில் ஆரியச் சூழ்ச்சி பொதிந்து கிடக்கிறதென்று ஈ.வெ.ரா. என்றும் சொன்னதில்லை. ‘பொது உடைமைத் தத்துவங்கள் ‘ (திருச்சி ஜெயிலில் வைத்து ஒரு தீவிர காங்கிரஸ் இளைஞரால் மொழிபெயர்க்கப்பட்டது) ‘ஐந்தாண்டு திட்டம் ‘ என்ற இரண்டு நூல்களும் முறையே, ஏங்கல்ஸையும், ஐலின் என்ற ரஷ்ய ஆசிரியரையும், ஆசிரியர்களாகக் கொண்ட சிறந்த மார்க்ஸிய நூல்கள்.

 

ஜமீன்தார் அல்லாதார் மகாநாடு, லேவாதேவிக்காரர் அல்லாதார் மகாநாடு இந்தக் காலகட்டத்தில் வந்தவைகளே. இந்த மகாநாடுகளில் பொப்பிலி அரசர்களும், சர் முத்தையா செட்டியார்களும் பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல. இந்தக் காலத்தில்தான் அ.இராகவன் அருமுயற்சியால் ‘பகுத்தறிவுக் கழகம் ‘ தோன்றி பகுத்தறிவு நூல்கள் பல வெளிவந்தன. சிங்காரவேலு, பிரம்மச்சாரி போன்றவர்களின் நூல்களும், இங்கர்சால், பர்டண்ட் ரஸ்ஸல், ஜீன் மெஸ்லியர் போன்ற ஆசிரியர்களின் மொழிபெயர்ப்புகளும் குறிப்பிடத்தக்கவை.

 

தமிழ்நாட்டில் பெரும்பரபரப்பை எழுப்பிய ‘சென்னை மாகாண பகிரங்க நாஸ்திகர் மாநாடு ‘ம் காந்தி பகிஷ்கார ஆர்ப்பாட்டங்களும் நடந்தது இந்தக் காலத்தில்தான். இவைகளுக்கும் ஈ.வெ.ரா.வுக்கும் நேரடியான சம்பந்தமில்லை. ஈ.வெ.ரா. ‘குடியரசில் ‘ எழுதிய ‘இன்றைய ஆட்சி ஏன் ஒழிய வேண்டும் ‘ என்ற தலையங்கத்திற்காக தண்டிக்கப்பட்டார். ஜஸ்டிஸ் கட்சி அதிகாரத்திலும் பொப்பிலி முதலமைச்சர் பீடத்திலும் இருந்த பொழுதுதான் ஈ.வெ.ரா. தண்டிக்கப்பட்டார். ‘குடியரசு ‘ ஜாமின் கேட்கப்பட்டு நிறுத்தப்பட்டது. பின்னர் தோன்றிய கட்சிக்கும் ரூ.2000 ஜாமீன் கேட்கப்பட்டு நிறுத்தப்பட்டது. ‘குருட்டு முதலாளிகளூம் செவிட்டு சர்க்காரும் ‘ என்று ‘புரட்சி ‘யில் பம்பாயில் நடந்த பொது வேலைநிறுத்தத்தைப் பற்றி நான் எழுதிய கட்டுரைகளுக்குத்தான் இந்த ஜாமீன்.

 

‘மே தின விழா ‘ கொண்டாடப்பட்டது சுயமரியாதை சமதர்மிகளால். தொழிலாளர் மகாநாடுகளும் அங்கே நடைபெற்றன. மாகாண சமதர்ம மகாநாடு மன்னார்குடியில் சிங்காரவேலு தலைமையில் நடைபெற்றது.

 

இந்த சந்தர்ப்பத்தில் தோழர் அமீர் ஹைதர் அலி சென்னைக்கு வந்து கம்யூனிஸ்ட்டுக் கட்சி வேலையில் ஈடுபட்டிருந்தார். சுந்தரய்யா, கம்மம்பாடி சத்திய நாராயணா, பி.ஸ்ரீனிவாச ராவ் போன்றவர்கள் அவரால் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இழுக்கப்பட்டார்கள். அவர்களிடையிலும் நகரசுத்தி தொழிலாளர்களிடையிலும் இவர்களுக்குத் தொடர்பு இருந்தது. பின்னர் இந்தக் கோஷ்டி தொழிலார் பாதுகாப்புக் கழகமாக (Labour Protection League) வேலை செய்தது.

 

1934:

 

இந்த வருஷத்தில்தான் அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சட்டவிரோதமானதென்று தடை செய்யப்பட்டது. காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியும் பிறந்தது இந்த வருஷம்தான். ஜவஹர்லால் நேரு ‘இந்தியா எங்கே போய்க்கொண்டிருக்கிறது ? ‘ என்ற காங்கிரஸ் முன்னணிப் படைக்குப் புதிய வெளிச்சம் கொடுத்த கட்டுரையும் இந்த வருஷத்திலேயே வெளிவந்தது. காங்கிரஸில் தீவிரவாதம் மேலோங்கிற்று. பம்பாய் காங்கிரஸீக்குப் பின் காந்திஜியும் காங்கிரஸிலிருந்து விலகினார்.

 

ஈ.வெ.ரா – ஜெயப்பிரகாஷ்:

 

ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஈரோட்டில் ஈ.வெ.ரா.வைச் சந்தித்தார். தமிழ்நாட்டில் சமதர்ம நோக்கம் கொண்ட சுயமரியாதைக்காரர்கள் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியாக இயங்க வேண்டிய அவசியத்தை வற்புறுத்தினார். நீண்ட விவாதத்தின் பிறகு ஈ.வெ.ரா.வும் ஒப்புக் கொண்டு சுயமரியாதை இயக்கத்தை காங்கரஸ் சோஷலிஸ்ட் கட்சியோடு இணைத்து விடுவதைப் பற்றி முடிவுகட்ட சுயமரியாதை இயக்கத் தொண்டர் கூட்டம் ஒன்று கூட்டுவதாகவும் ஒப்புக் கொண்டார். இது சம்பந்தமாக ஜெயப்பிரகாஷை சந்திக்கும்படி, அப்போது ஜோலார்பேட்டையில் ‘சமதர்மம் ‘ என்ற வாரத்தாளின் ஆசிரியராக இருந்த எனக்கு தந்தியும் கொடுத்தார்.

 

இரண்டு தினங்களுக்குப் பின், ‘சமதர்மம் ‘ ஆரம்ப விழாவுக்கு வந்த ஈ.வெ.ரா.வோடு, சுயமரியாதைக்காரர்கள் காங்கிரஸில் சேர்வது பற்றியும், காங்கிரஸ் சமதர்மக் கட்சியில் இணைந்துவிடுவது பற்றியும் நான் கலந்து பேசிய பொழுது, ஈ.வெ.ரா. காங்கிரஸில் சேர இணங்கினார். ஆனால் அன்றே மாலையில் நடந்த கூட்டத்தில், ‘சில வாலிபர்கள் காங்கிரஸ் ‘மேனியா ‘ பிடித்து நிற்கிறார்கள் ‘ என்றும் ‘அதற்கு சுயமரியாதை இயக்கம் ஒருநாளும் இடம் கொடாது ‘ என்றும் பேசினார். ‘க்ஷணச்சித்தம் க்ஷனப்பித்தம் ‘ ‘பெரியார் ‘களிடமும் உண்டு.

 

இந்தியா சட்டசபைத் தேர்தல்:

 

‘குடியரசை ‘ப் புரட்டிப் பாருங்கள். முதல் வாரத்தில் தேர்தலில் சுயமரியாதைக்காரர்கள் கலந்து கொள்வதைப் பற்றி மாவிலும் படாமல், மாங்காயிலும் படாமல் எழுதினார் ஈ.வெ.ரா. அடுத்த வாரத்தில் ஆர்.கே. சண்முகத்திற்கும் டாக்டர் நாயுடுவுக்கும் ஆதரவாகப் பேனாவை நாட்டினார்.

 

எந்த அரசியல் கட்சிக்கும் தேர்தல், குறைத்தெண்ணவோ, புறக்கணிக்கவோ தக்கதல்ல. சமதர்ம வேலைத்திட்டம் வகுத்துவிட்ட சுயமரியாதைக்காரர்களும் இந்தியச் சட்டசபை விஷயத்தில் முக்கிய கவனம் செலுத்தியிருக்க வேண்டும். மகாநாட்டையோ மாகாணத் தொண்டர் கூட்டத்தையோ கூட்டி, தக்க முடிவு எடுத்திருக்க வேண்டும். சிங்காரவேலு, ஈ.வெ.ரா. போன்றவர்கள் தேர்தலில் போட்டி போட்டிருக்க வேண்டும். வெற்றி பெறாமற்போனாலும் பிரசார மதிப்பேனும் ஏற்பட்டிருக்கும். அத்தகைய முறையான நடவடிக்கைகள் எவையும் எடுத்துக் கொள்ளப்படவில்லை. ஈ.வெ.ரா. தானடித்த மூப்பாக (சர்வாதிகாரமாக) காங்கிரஸை எதிர்த்து, ஆர்.கே.சண்முகத்தையும் டாக்டர் நாயுடுவையும் தேர்தலில் ஆதரித்தார், பேசினார், எழுதினார். ஆர்.கே. சண்முகம் சமதர்மத் திட்டத்தை எதிர்த்தவர். டாக்டர் நாயுடு சுயமரியாதை இயக்கத்தையே பழித்தவர்.

 

காங்கிரஸ் எதிர்ப்பு ஈ.வெ.ரா.வை சமதர்மத் திட்டத்தைக் குப்பைத் தொட்டியில் தூக்கி எறியச் செய்தது; சமதர்ம எதிரியைத் தாங்கி நிற்கத் தூண்டிற்று; சுயமரியாதை இயக்கத்தை அவமரியாதை செய்தவரை ஆதரிக்க வைத்தது.

 

இந்திய சட்டசபைத் தேர்தலுக்கு முன்பே, சுயமரியாதை மாகாண மகாநாடு கூட்ட வேண்டுமென்றும் அதில் சமதர்ம திட்டத்தை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றும் பலகாலும் பலவிடத்தும் சுயமரியாதைக்காரர்கள் கோரினர். இந்தக் கோரிக்கையை ஒரு காதொடிந்த ஊசியளவு கூட மதிக்கவில்லை. ஈ.வெ.ரா. சுயமரியாதைச் சங்கத்தை ‘ரிஜிஸ்தர் ‘ செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை மதித்தாரா ? தொண்டர்களின் நோக்கு, நடந்துகொண்ட விதத்தை மாற்றிக் கொள்ள வேண்டுமென்ற பட்டுக்கோட்டைத் தொண்டர் மகாநாட்டுத் தீர்மானத்தை மதித்தாரா ? மன்னார்குடி, சுசீந்திரம் முதலிய இடங்களில் சத்யாகிரகம் செய்வது பற்றி, ஈரோட்டு மகாநாட்டில் நிறுவிய சத்யாக்கிரக கமிட்டியின் சிபாரிசை மதித்தாரா ? சுயமரியாதை மகாநாட்டுத் தீர்மானங்களை சுயமரியாதைக்காரர்கள் மதித்தார்களேயொழிய அவர் மதித்தாரா ? சுயமரியாதை வட்டாரத்தில் ஈ.வெ.ரா. ‘வைத்தது சட்டம், இட்டது வழக்கமாகத்தானே ‘ நடந்து வந்திருக்கிறது ?

 

ஆகவே. ஈ.வெ.ரா. தன்னிச்சையாக ஒரு திட்டத்தைத் தயாரித்து, (அதைத்தான் பின்னால், பொதுஉடைமை என்பது இன்னதென்று புரியாதவாக்கில் ஈ.வெ.ரா.வின் பொது உடைமைத் திட்டம் ‘ என்று பிரமாதப்படுத்தினார்கள்) அதை ராஜாஜிக்கும் பொப்பிலி அரசருக்கும் (கோவையில் நடந்த தமிழ் மாகாண மகாநாட்டுக்கும், சென்னையில் நடந்த ஜஸ்டிஸ் மாகாண மகாநாட்டுக்கும்) அனுப்பினார். அந்தத் திட்டத்தை ஒத்துக் கொள்கிறவர் கட்சியை தேர்தலில் ஆதரிப்பதாகவும் சொன்னார்.

 

ஜஸ்டிஸ் கட்சியினர் ஈ.வெ.ரா.வின் திட்டத்தை (ஈரோட்டுத் திட்டத்தை அல்ல) ஒப்புக் கொள்வதாக உறுதிகூறி, சென்னை மகாநாட்டில் இதற்காக ஒரு கமிட்டியையும் தேர்ந்தெடுத்தனர். ஈ.வெ.ரா.வும் பிரிந்திருந்த ஜஸ்டிஸ் கட்சியை மனதாரத் தழுவினார்.

 

பின்னர்தான், மேலே குறிப்பிட்ட இந்தியா சட்டசபைத் தேர்தல் நடந்தது. ஜஸ்டிஸ் கட்சி அபேட்சகர்கள் அனைவரும் போட்டியில் கோட்டை விட்டனர்.

 

இச்சமயத்திலும் சில சுயமரியாதைக்காரர்கள் ஈ.வெ.ரா.வின் போக்கில் வெறுப்படைந்து, காங்கிரஸில் சேர்ந்தனர்.

 

ஈ.வெ.ரா. தனது பக்த கோடிகளுக்கு ‘தோல்வியிற் கலங்கேல் ‘ என்றும் ‘கெலிப்பும் தோற்பும் ஒருவர் பங்கல்ல ‘ என்றும், தேறுதல் சொன்னார். பார்ப்பனரல்லாத வாலிபர்களுக்கு புதிய தத்துவோபதேசமும் செய்தார். அதாவது: ‘வகுப்புவாதத்தால்தான் சமதர்மம் அடைய முடியும் என்று நினையுங்கள் ‘ (18-11-1934 – பகுத்தறிவு தலையங்கம்)

 

மேலும்,

 

‘காங்கிரஸ் வாயிலாகச் சமூகச் சீர்திருத்தம் செய்ய முடியாது. அதை சமதர்ம நோக்கத்திற்காகத் திருப்ப முடியாது. ஜஸ்டிஸ் கட்சியின் மூலமே அதை சீர்திருத்தம் செய்ய முடியும். அதைச் சமதர்மக் கட்சியாகவும் ஆக்கிவிட முடியும் ‘ என்று ஈ.வெ.ரா. அசையாத நம்பிக்கை கொண்டிருந்தார். ( ‘தமிழர் தலைவர் ‘ – 149 பக்கம்)

 

காங்கிரஸை ஏகாதிபத்திய எதிர்ப்பு ஸ்தாபனமாகவும் ஜஸ்டிஸ் கட்சியை ஏகாதிபத்ய அடிமைக் கும்பலாகவும் கருதிய கம்யூனிஸ்ட் பாதையில் மேற்கூறிய கருத்துக்கள் உண்மைகளாக்கப்பட முடியாது. தனக்குத் தோன்றியபடி எல்லாம் எண்ணவும், பேசவும், எழுதவும், நடக்கவும் துணிச்சலுள்ள ‘ஈரோட்டுப் பாதை ‘யில்தான் மேற்படி கருத்துக்கள் அசைக்கவியலாத உண்மைகளாகப் பட முடியும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

எனது அறிக்கையின் விளக்கம்

 

 

உண்மை விளக்கம் பிரஸ் பதிப்பாசிரியரான தோழர் ஈ.வெ. கிருஷ்ணசாமி அவர்கள் மீதும், தோழர் ப. ஜீவானந்தம் அவர்கள் மீதும் காலஞ்சென்ற பகத்சிங்கால் எழுதப்பட்ட “”நான் ஏன் நாஸ்திகன் ஆனேன்?” என்ற புஸ்தகத்தை முறையே பிரசுரித்ததற்காகவும், மொழி பெயர்த்ததற்காகவும் இந்தியன் பினல் கோர்ட் 124ஏ செக்ஷன்படி ராஜ துவேஷக் குற்றம் சாட்டி கைதியாக்கி சிறையில் வைத்து வழக்குத் தொடர்ந்திருந்தது வாசகர்கள் அறிந்ததாகும்.

அவ்வழக்கு மேல்கண்ட இரு தோழர்களாலும் ராஜ துவேஷத்தை உண்டாக்கவோ, அதைப் பிரசாரம் செய்யவோ எண்ணங் கொண்டு அப்புத்தகம் பிரசுரிக்கவில்லை என்று அரசாங்கத்திற்குத் தெரிவித்து ராஜதுவேஷம் என்று கருதத்தகுந்த காரியங்கள் பதிப்பிக்கப்பட்டு விட்டதற்காக மன்னிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டதின் பேரில் அரசாங்கத்தார் வழக்கை வாபீஸ் வாங்கிக் கொண்டு தோழர்கள் ஈ.வெ.கி., ப.ஜீ. அவர்களை விடுதலை செய்துவிட்டார்கள்.

இந்தப்படி இந்த இரு தோழர்களும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு விடுதலையடைந்தார்கள் என்பதற்கு அவர்களே முழு ஜவாப்தாரிகள் அல்ல என்பதையும் பெரும்பான்மையான அளவுக்கு நானே ஜவாப்தாரி என்பதையும் முதலில் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

இந்த மன்னிப்பு கொடுக்கப்பட்டதும், அதை சர்க்கார் ஏற்றுக் கொண்டதும் ஆகிய இரண்டு காரியமும் மிகுதியும் இந்தக் கேசையே பொறுத்தது மாத்திரமல்ல என்பது இதில் முக்கிய விஷயமாகும். விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால் சுயமரியாதை இயக்கத்தைப் பற்றி சர்க்காரார் மனதில் எப்படியோ தப்பு அபிப்பிராயம் ஏற்பட்டு எப்படியாவது சுயமரியாதை இயக்கத்தை அடக்கி அழித்துவிட வேண்டும் என்று தீர்மானித்து விட்டார்கள் என்பதாக நான் கொஞ்ச நாளைக்கு முன்பே தெரிந்து கொண்டேன்.

அன்றியும் நான் ரஷியாவில் கொஞ்ச காலம் தாமதித்து அங்கு இருந்து திரும்பி வந்த பிறகு, என் விஷயத்தில் சர்க்கார் எனக்கு ரஷ்யாவில் இருந்து பணம் வருவதாகவும், நான் ரஷ்ய ஒற்றனென்றும் சந்தேகப்பட்டு அதிக கவலை எடுத்து எனக்காக தனியாக ஒரு சுருக்கெழுத்து சி.ஐ.டி. சப் இன்ஸ்பெக்டர் மாதம் 200 ரூபாய் செலவிலும், எனது தபால்களை எல்லாம், வருவதையும், போவதையும், இரகசியமாய் உடைத்துப் பார்ப்பதற்கென்று ஒரு சி.ஐ.டி. சப் இன்ஸ்பெக்டரும் என் வீட்டு வாசலிலும், ஆபீசு வாசலிலும், போலீஸ் சேவகர்களும், நான் செல்லுமிடங்களிலெல்லாம் என் பின் தொடர்ந்து எனது போக்குவரத்தை கவனிக்க சில போலீஸ் கான்ஸ்டேபிள்கள் பின் தொடரவும் நியமிக்கப்பட்டு, அவர்கள் மூலம் சில அறிக்கை இடும் காரியங்கள் நடந்து கொண்டே இருந்தன  இன்னமும் இருந்து வருகின்றன.

இவை தவிர பல தடவை ஆபீசும், வீடுகளும் சோதனை இடப் பட்டதுடன் என்னுடன் நெருங்கிப் பழகுகின்றவர்களுக்கும் இம்மாதிரி கவனிப்பும் அவர்களது தபால்களை உடைத்துப் பார்த்தல் ஆகிய காரியங்களும் நடந்து வந்தன.

உதாரணமாக தோழர் சர்.ஆர்.கே. ஷண்முகம் அவர்களுடைய தபால்களைக்கூட சி.ஐ.டி. போலீசார் உடைத்துப் பார்த்து வந்திருக்கிறார்கள் என்றால் மற்றவர்கள் விஷயத்தைப் பற்றி எழுத வேண்டியதில்லை என்றே நினைக்கிறேன். மற்றும் நான் மேல்நாட்டுச் சுற்றுப் பிரயாணத்தில் இருந்து வந்த பிறகு, தமிழ் ஜில்லாக்களில் சுமார் 175 சுயமரியாதைக் கிளைச் சங்கங்கள் பல பெயர்களின் பேரால் ஏற்பட்டு ஏதோ சிறிது வேலை செய்து வந்ததை, சர்க்கார் இ.ஐ.ஈ. இன்ஸ்பெக்டர்கள் ஆங்காங்கு சென்று அங்கத்தினர்கள் பயப்படும்படியான மாதிரியில் பல விசாரணைகள் வெளிப்படையாகவும், இரகசியமாகவும் நடத்தி தடபுடல் செய்ததின் மூலம் பல சங்கங்கள் பயந்து மூடப்பட்டும் யாதொரு வேலையும் செய்யாமலும் இருக்கவும் நேர்ந்துவிட்டது.

இயக்க சம்மந்தமுள்ள பல பெரிய ஆட்கள் என்பவர்களும், சர்க்கார் உத்தியோகம் முதலியவைகளில் சம்பந்தமுள்ள சிலர்களும், இதை அறிந்து இயக்கத்திலிருந்தும், சங்கத்திலிருந்தும் விலகிக் கொள்ளவும் பாராமுகமாய் இருக்கவும் ஆரம்பித்ததோடு “”சுயமரியாதை இயக்கம் ஆபத்தான இயக்க”மென்று சொல்லவும் ஆரம்பித்துவிட்டார்கள்.

இவை ஒருபுறமிருக்க, இயக்கத்தில் கலந்து வேலை செய்து கொண்டு இருந்த தொண்டர்களில் பலர் தங்கள் உற்சாகத்தைக் காட்டிக் கொள்ளும் முறையில் தலைகால் தெரியாமல் வேகமாகப் பேசுவதும், பாடுவதும் அதைப் பார்த்த போலீசார் அங்கொன்றும் இங்கொன்றுமாக குறித்து சர்க்காருக்கு அனுப்பி நடவடிக்கை எடுத்துக் கொள்ளத் தூண்டுவதுமான காரியங்களும் எனது தகவலுக்கு அவ்வப்போது சில வந்து கொண்டே இருந்தது. அன்றியும் என் பேரிலும் என் தங்கை பேரிலும் இயக்கத்தை அடக்க வேண்டுமென்ற கருத்தோடே செய்ததாக எண்ணும்படி பல வழக்குகள் தொடுத்து காவல் தண்டனை, அபராதங்கள் முதலிய தண்டனைகளும் விதிக்கப்பட்டோம்.

இதனால் எல்லாம் நம்முடய விரோதிகள் பலரும் இயக்கத்தில் பொறுப்பில்லாமல் கலந்து விளம்பரம் பெற்று வாழ்ந்து வந்த சிலர் மாத்திரம் “”பேஷ் பேஷ்” என்று நம்மை உற்சாகப்படுத்துகிற மாதிரியில் பேச முடிந்ததே ஒழிய மற்றபடி இயக்கம் வளர்ச்சியடைய முடியாமல் போகவும் சர்க்காரின் கடுமையான அடக்குமுறைக்கு ஆளாகுமே என்கின்ற பயத்திற்கும் இடம் தந்ததால் இயக்கப் பிரமுகர்களில் இரண்டொருவர் யோசனைக்கு இணங்கி இதைப்பற்றி சர்க்காரிலேயே சில பொருப்புள்ள அதிகாரிகளைக் கண்டு பேச வேண்டிய அவசியத்திற்கு உள்ளானேன்.

அப்படிப் பேசியதில் எனக்கும் இரஷியாவுக்கும் பணப்போக்குவரத்தோ, பிரசார சம்பந்தமோ ஏதும் இல்லை என்று விளக்க வேண்டி இருந்ததோடு சுயமரியாதை இயக்கம் சட்டமறுப்பு இயக்கமல்லவென்றும், சர்க்காரோடு ஒத்து உழையா இயக்கமல்லவென்றும், சட்டத்தையும் சமாதானத்தையும் மதியாத இயக்கமல்லவென்றும் எடுத்துச் சொன்னதோடு அதன் ஆரம்பகால முதல் நாளது வரை பல சமயங்களில் வெளியிடப்பட்டும், பல மகாநாடுகளில் தீர்மானிக்கப்பட்டும் இருக்கும் வேலைத் திட்டம், தீர்மானங்கள் முதலியவைகள் எல்லாம் சட்ட வரம்பிற்கு உட்பட்டு நடத்தும் காரியங்களாகவேதான் இருந்து வருகிறதென்றும் விளக்கிக் காட்டினேன்.

மற்றும் சட்ட விரோதமாக அல்லது ராஜத்துவேஷமுண்டு பண்ணுவதற்கு ஆக பதிப்பிக்கப்பட்டதென்றோ, பேசப்பட்டதென்றோ ஏதாவது காட்டப்படுமானால் அதற்குப் பதில் சொல்ல கடமைப்பட்டிருப்பதாகவும் ஒப்புக் கொண்டேன்.

இந்த நிலைமையில் பிரஸ்தாப வழக்கு சம்மந்தப்பட்ட விஷயங்கள் எனக்குக் காட்டப்பட்டன. அதைக் கண்ட பிறகு அது ராஜத் துவேஷமான விஷயம் என்று சர்க்கார் முடிவு செய்து விட்டார்கள் என்பதையும், அது எப்படியும் ராஜத் துவேஷமான விஷயம் என்று தீர்ப்புப் பெறும் என்பதையும் விவகாரம் பேசுவதில் பயன் ஏற்படாது என்பதையும் உணர்ந்தேன். உணர்ந்ததும் உடனே அதை மன்னித்து விடுங்கள் என்று சொல்லிவிட்டேன். அதிகாரிகளும் அந்தப்படியே ஒப்புக் கொண்டார்கள்.

ஆகவே இந்த சம்பவமானது இயக்க சம்பந்தமாய் சர்க்காருக்குள்ள தப்பபிப்பிராயத்தை நீக்க வேண்டும் என்பதற்காகவே ஏற்பட்டது என்பதை தெரிவித்துக் கொள்ளவே இதை எழுதுகிறேன்.

நம் இயக்கம் (சுயமரியாதை இயக்கம்) சமூகத் துறையில் உள்ள குறைகளை நிவர்த்திப்பதற்கென்றே ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வந்ததும், சர்க்கார் அதிகாரிகள் முதல் அனேக செல்வவான்களும் இயக்கத்தில் கலந்து வேலை செய்து வந்ததும் எவரும் அறியாததல்ல. ஆனால், சிறிது காலம் சென்றபின் மக்களுக்குள்ள சமுதாயக் கொடுமை தீர வேண்டியது எவ்வளவு அவசியமோ அது போலவே மக்களுக்குள்ள பொருளாதாரக் கொடுமையும் தீர வேண்டியதும் மிகவும் அவசியமென்று கருதியதால், பொருளாதார சம்பந்தமாக நாம் சிறிது பிரசாரம் செய்ய ஆரம்பித்தோம் என்றாலும் அதன் பிறகே அரசாங்கத்தார் தப்பபிப்பிராயங் கொண்டு இயக்கத்தை அடக்க அடக்குமுறை பிரயோகம் ஆரம்பித்து விட்டார்கள் என்று உணருகிறேன்.

இதையேதான் அதிகாரிகள் முன்பும் தெரிவித்துக் கொண்டேன்.

ஆனால் ஒரு அளவுக்கு சர்க்காருடன் ராஜி ஏற்படுத்திக் கொள்ளலாம் என்கின்ற ஆசையின் மீதே பொருளாதார விஷயத்தில் சமதர்மக் கொள்கையை பிரசாரம் செய்வதில் சர்க்காருக்கு ஆட்சேபணை இல்லை என்றும், ஜாதி மத சம்பந்தமான விஷயங்களில் வேறு ஜாதி மதக்காரர்கள் மனம் புண்படும்படியோ அவமானம் ஏற்படும்படியோ என்று இல்லாமல் ஜாதி மத கண்டனங்கள் செய்து கொள்ளலாம் என்றும் முடிவுக்கு வந்தோம். சர்க்காரோடு இந்த மாதிரியான ஒரு சமாதான முடிவுக்கு வராத பக்ஷம் சர்க்காருக்கும் நமக்கும் வீண் தொந்தரவும் மனக்கசப்பும் ஏற்பட்டுத் தீரும் என்கின்ற நிலையில் மற்ற ஆதாரங்களும்  முயற்சிகளும் நிலைமைகளும் இருந்ததால் நான் இந்த சமாதானத்துக்கு வரவேண்டியதாயிற்று. ஆகவே இதன் பலன் என்னவானாலும் அதற்கு நானே பொறுப்பாளி என்றுதான் சொல்ல வேண்டும்.

சில இளைஞர்களுக்கு இது கேவலமாகத் தோன்றலாம்; என்றாலும் நாம் இயக்க சம்பந்தமாக நமது கொள்கைகளிலோ திட்டங்களிலோ எதையும் விட்டுக் கொடுத்து சமாதானம் செய்து கொண்டதாக எனக்குப் படவில்லை; ஆதலால் யார் எப்படி நினைத்தாலும் நமக்கு ஒன்றும் முழுகிப் போய்விடாது என்று தைரியமாகச் சொல்லுகிறேன்.

சுயமரியாதை இயக்கம் சட்ட வரம்புக்கு உட்பட்ட இயக்கம் என்பதையும், நாம் சட்ட வரம்புக்கு உட்பட்டு பிரசாரம் செய்கிறவர்கள் என்பதையும் ஈரோடு சுயமரியாதை இயக்கம் சமதர்மக் கட்சி வேலைத் திட்டத்திலேயே கடசி பாராவில் தெளிவாய்க் காட்டி இருக்கிறோம்.

செங்கல்பட்டு மகாநாட்டின்போதும் இயக்க நோக்கம் வகுத்த போதும் நம் இயக்கம் சட்ட வரம்பிற்குட்பட்ட ஸ்தாபனம் என்றே குறிப்பு காட்டி இருக்கிறோம். மத்தியிலும் பல தடவையிலும் எனது வழக்கு ஸ்டேட்மெண்டிலும் குறிப்பு காட்டி இருக்கிறேன். மற்றும் ஆரம்ப முதல் காங்கிரஸை எதிர்த்து வந்திருப்பதோடு தென்னாட்டில் காங்கிரசின் ஆதிக்கத்தை சிறிதாவது குறையும்படி செய்த பெருமைக்காக நம்மை நாமே பல தடவை பாராட்டிக் கொண்டே வந்திருக்கிறோம்.

இனியும் நாம் காங்கிரசை பார்ப்பனர் கோட்டையென்றும், அதன் செல்வாக்கு அழிக்கப்பட வேண்டும் என்பதையும் முக்கிய நோக்கங்களில் ஒன்றாய் கருதிக் கொண்டும் இருக்கிறோம்.

இன்றும் அன்றாடம் நித்திய நடவடிக்கைகளில் காங்கிரசின் பேரால் நடக்கும் சூழ்ச்சிகளைக் கண்டு ஆத்திரம் காட்டி  அவ்வப்போது கண்டித்துக் கொண்டு தான் வந்திருக்கிறோம்.

சுயராஜ்ஜியம் என்பது அர்த்தமற்றதும் பாமரர்களை ஏமாற்றுவதுமான வார்த்தை என்றும், தேசாபிமானம் என்பதும் தேசீயமென்பதும் சிலருக்கு வயிற்றுப் பிழைப்பு நாடகம் என்றும், யோக்கியப் பொறுப்பற்ற காரியம் என்றும் ஆரம்ப முதலே சொல்லிக் கொண்டு வந்திருக்கிறோம்.

“”இந்தியா பூராவுமே” பகிஷ்கரித்த சைமன் கமிஷனைக்கூட வரவேற்கச் செய்து அக் கமிஷனுக்கு உண்மை தெரியச் செய்தோம்.

இந்தக் காரியங்களால் ஒரு கூட்டத்தாரால் நாம் “தேசத் துரோகி’, “சர்க்கார் தாசர்’ என்ற பெயரைக்கூட வாங்கினோம்.

இதனால் எல்லாம் கெட்டுப் போகாத அழிந்து போகாத சுயமரியாதை இயக்கமும் அதன் பிரமுகர்களும் அதில் கலந்திருந்த தொண்டர்களும் இந்த அறிக்கையினாலோ சர்க்காருடன் சமாதானம் செய்து கொண்டதாலோ அழிந்து போகும் என்று யாராவது நினைப்பார்களானால் அவர்களுக்கு சமாதானம் சொல்லி கொண்டு நேரத்தைக் கெடுத்துக் கொள்வதை விட சற்று பொறுமையாய் இருந்து பாருங்கள் என்று சொல்லிவிடுவது புத்திசாலித் தனமான காரியமாகுமென்றே நினைக்கிறேன்.

சுதந்திர எண்ணம் தோன்றிய வாலிபர்கள் என்பவர்கள் என்னுடைய இந்த அபிப்பிராயத்துக்காக வெட்கப்படுவதாகக்கூடச் சொல்லலாம். இயக்கத்தில் இருப்பதே தங்கள் சுயமரியாதைக்கு அழகல்லவென்றும் சொல்லலாம். இதைப் பற்றி ஊரார் சிரிக்கிறார்கள் என்றும் பலர் சொல்லலாம். பலர் இயக்கத்தை விட்டுப் போய் விடுவதாகவும் சொல்லலாம்.

இவை எல்லாம் எந்த  எப்படிப்பட்ட இயக்கத்துக்கும் ஒவ்வொரு சமயங்களில் இயற்கையேயாகும். பழைய வாலிபர்கள், ஆட்கள் கழிதலும் புதிய வாலிபர்கள் ஆட்கள் புகுதலும் குற்றமல்ல, கால இயற்கையேயாகும்.

அது மாத்திரமல்லாமல் இயக்கத்தில் முக்கியஸ்தர்களாக கருதப் பட்டு வந்தவர்களே இயக்கத்தையும் இயக்கத்தில் முக்கியமாய் வேலை செய்து கொண்டு இருப்பவர்களையும் குற்றம் சொல்லுவதும் இயற்கையேயாகும்.

எந்த இயக்கத்தை எடுத்துக் கொண்டு பார்த்தாலும் இது விளங்கும்.  ஜஸ்டிஸ் கட்சியில் தாசானு தாசர்களாய் இருந்தவர்கள் இன்று அந்தக் கட்சியை வைது கொண்டு அழிக்க முற்பட்டுக் கொண்டு திரிவது நமக்குத் தெரியவில்லையா? காங்கிரசில் தாசானுதாசர்களாய்  காந்தியாருக்குத் தாசானுதாசர்களாய்  இருந்தவர்கள் காங்கிரசை வைதுகொண்டும், காந்தியாரை வைதுகொண்டும் இவை ஒழிந்தாலொழிய நாட்டுக்கு ÷க்ஷமமில்லை என்று சொல்லுகின்றவர்களையும் நாம் பார்க்கவில்லையா? பெசண்டு அம்மையாரை குருவாகவும், “”தெய்வமாகவும்”, அந்த ஸ்தாபனத்தைத் “”தெய்வீக” ஸ்தாபனமாகவும் கொண்டாடியவர்கள் இன்று அந்த அம்மையாரையும், அந்த ஸ்தாபனத்தையும் பயனற்றது என்றும் ஹம்பக் என்றும் சொல்லுகின்றதை நாம் பார்க்கவில்லையா?

மற்றும் சைவன் சைவ மதத்தையே வைவதும் விட்டுப் போவதும், வைணவன் வைணவ மதத்தையே வைவதும் விட்டுப் போவதும், கத்தோலிக்கன் கத்தோலிக்க மதத்தையே வைவதும் விட்டுப் போவதும்,  முஸ்லீம் முஸ்லீம் மதத்தையே வைவதும் விட்டுப் போவதும் இவற்றிற் கெல்லாம் புது ஆட்கள் வந்து சேர்ந்து கொண்டு இருப்பதும் ஆன காரியங்களை “”தெய்வத் தன்மை பொருந்திய” மத விஷயங்களில்கூட நாம் தாராளமாய் தினமும் பார்த்துவர வில்லையா? ஆகவே இவற்றாலெல்லாம் ஸ்தாபனங்கள் ஆடிப்போகும் என்று கருதுவது அனுபவ ஆராய்ச்சி இன்மையே ஆகும். எவ்வித மாறுதலும், இறக்கமும், ஏற்றமும் பிற்போக்கும் முற்போக்குமான விஷயமாய் இருந்தாலும் திடமான மனதுடன் உண்மையான முடிவுடன் ஏற்பட்டதானால் ஒற்றை ஆளாயிருந்தாலும்கூட ஒரு நாளும் ஆடிப் போகாது என்பது உறுதி.

ஆனால் ஊரார் என்ன சொல்லுவார்கள் எதிரிகள் என்ன சொல்லு வார்கள் என்பதையே முக்கிய குறிப்பாய் வைத்து, அதற்கு அடிமையாகி மாற்றங்கள் செய்வதனால் மாத்திரம் அவற்றிற்கு அதிக ஆயுள் இருக்குமென்று கருத முடியாதே தவிர, மற்றபடி உண்மையும் துணிவும் உள்ள காரியத்தில் எவருக்கும் யாரும் பயப்பட வேண்டியதில்லை என்றே கருதுகிறேன்.

ஆகவே இயக்க சம்மந்தமாகவும் திட்டங்கள் சம்மந்தமாகவும், வழக்கு சம்மந்தமாகவும் சர்க்கார் நிலைமை சம்மந்தமாகவும் ஏற்பட்டுள்ள நிலைமயையும் அவசியத்தையும் விளக்கவே இதை எழுதுகிறேன்.

ஈ.வெ. ராமசாமி

குடி அரசு  தலையங்கம்  31.03.1935



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

ஈரோட்டுப் பாதை சரியா ? – 1

This entry is part [part not set] of 52 in the series 20040513_Issue

ப. ஜீவானந்தம்


pl0513041.jpg

 

‘கண் முன்னால் கிழக்கு வெளுத்துவிட்டது! கதிரவன் எழுந்துவிட்டான்! புதிய ஒளி எங்கும் பரவிவிட்டது! சுயமாரியாதைக் கோட்டத்தில் மட்டும்தானா, இல்லை தமிழகம் முழுவதுமே புரட்சி மனப்பான்மை பொங்கித் ததும்புகிறது. நாடெங்கும் புதுநாதம் ஒலிக்கிறது. தென்றல் வீசுகிறது. ஒவ்வொரு துறைகளிலும் மறுமலர்ச்சி தேவை என்ற துடிதுடிப்பு காணப்படுகிறது. எப்படி ஏற்பட்டது இந்த புதிய நிலை ? யாரால் விளைந்தது இது ? இந்தக் கேள்விகளுக்கு ஒரு பதில் ‘ஈரோட்டுப் பாதை ‘. ‘ ( ‘ஈரோட்டுப் பாதை ‘ என்ற சிறுநூலில் இருந்து).

 

‘உண்மையான பொது உடைமைத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு (நல்ல வைத்தியன் நோய்க்கு ஏற்றபடி, அவனவன் உடற்கூறுக்கு ஏற்றபடி மருந்து கொடுப்பது போல) திராவிட நாட்டிற்கு ஏற்றவிதமாக கம்யூனிஸம் என்ற உயர்மருந்தை நோயாளிக்குக் கொடுத்துவரும் இயக்கம் திராவிட கழகம் ஒன்றேதான் என்பதையும், மனப்பாடஞ் செய்த பாடல்களை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு மருந்து கொடுக்கும் சில நாட்டு வைத்தியர்களைப் போலில்லாமல் நோயின் முதிர்ச்சியையும் கண்டறிந்து முதிர்ந்த அனுபவத்தை ஒட்டி, மருந்து கொடுத்துவரும் இயக்கம் இது ஒன்றேதான் என்பதையும் நன்றாக உணர்ந்துள்ள பொதுமக்கள் இந்தப் புதிய விஷமப் பிரசாரத்தினால் ஏமாந்துவிட மாட்டார்கள் என்பது நமக்குத் தெரியும். ‘ ( ‘விடுதலை ‘ தலையங்கம் 20-10-47)

 

‘தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சிக்கு சுயபுத்தியில்லை. ‘ ( ‘விடுதலை ‘ தலையங்கம் 4-8-47)

 

‘ஆம்! பெரியார் அவர்கள் கூறுவதே திராவிடர்களின் முடிவு ‘. ( ‘விடுதலை ‘ தலையங்கம் 9-8-47)

 

20 ஆண்டுகளுக்கு மேலாகவே, ஈரோட்டுப் ‘பெரியார் ‘ ஈ.வெ.ரா. தமிழர்களுக்கும் ‘திராவிடர்களுக்கும் ‘ காட்டிய, காட்டுகிற பாதைதான் ஈரோட்டுப் பாதை.

 

‘நம்முடைய இருபது ஆண்டுப் பயணம் வீணாகவில்லை. நாம் தொடங்கிய காரியம் எதுவும் வெற்றி தராமல் போனதுமில்லை. பல போராட்டங்களில் எதிர்பார்த்ததற்குமேல் பலனடைந்தும் இருக்கிறோஒம். நம்முடைய பாதையோ ஆபத்துகள் செறிந்தது – ஆனால், இலட்சியத்தை நிறைவேற்றுவது ‘ என்று ‘ஈரோட்டுப் பாதை ‘யின் ஆசிரியரான ‘இளைஞர் ‘ கூறுகிறார்.

 

இவரைப் போன்று ஈரோட்டுப் பாதைதான் தமிழ் மக்களின் லட்சியபுரியை அடையச் சிறந்த பாதை என்று நம்பி, அதன் வழிச் செல்கிற இளைஞர்கள் தமிழ்நாட்டில் பலர். ஸ்தாபன ரீதியான தொழிலாளர்களிலும் ஒரு சிறு பகுதியார் மேற்படி கருத்தைத் தழுவி நிற்கிறார்கள். ஆரம்ப ஆசிரியரகளிடையிலும், தமிழாசிரியர்களிடையிலும் மாணவர்களிடையிலும் இந்தக் கருத்து குறிப்பிடத்தக்க அளவு காணப்படுகிறது.

 

ஈரோட்டுப் பாதையில் செல்வோரில் சிறுபாலோர் இந்தி-எதிர்ப்புக் கிளர்ச்சியின் மூலமும் பெரும்பாலோர் திராவிட கழகத்தின் மூலமும் வந்தவர்களே.

 

யுத்த கால முடிவிலும் அதன் பின்னாலும் நாடு முழுவதும் கரை புரண்டோடிய புதிய சக்தி, திராவிடக் கழக வாய்க்காலிலும் பாய்ந்தது. விடுதலை ஆர்வம், தமிழ்ப்பற்று, இனஎழுச்சி, புதுவாழ்வு நாட்டம், புரட்சி உணர்ச்சி, பொதுவுடைமைக் காதல் இவைகளுக்கு உள்ளத்தைப் பறிகொடுத்த இளைஞர்களில் அநேகர், பொதுவுடைமைப் பேச்சு, ஜாதிமத ஒழிப்புக் கிளர்ச்சி, திராவிட நாட்டுப் பிரிவினை, இவை குறித்து ஈ.வெ.ரா., அண்ணாத்துரை ஆகிய திராவிடக் கழகத் தலைவர்கள், ஆற்றிய சொற்பொழிவுகள், தீட்டிய கட்டுரைகள் ஆகியவற்றில் சொக்கி திராவிடக் கழகத்தில் குவிந்தார்கள். அவர்களுக்கு ஈரோட்டுப் பாதையைப் பற்றிய சரித்திர அனுபவமும் இல்லை. பல கோணங்களிலிருந்து அதனை ஆராய்ச்சி செய்ய முடிகிறதும் இல்லை.

 

ஈரோட்டுப் பாதையைப் பற்றி இதுவரையில் தமிழ் மக்களுக்கு மக்கள் கண்ணோட்டத்தோடு செய்யப்பட்ட விமர்சனம் கிடைத்ததில்லை. இன்றைய தமிழ் மக்களுக்கு ஈரோட்டுப் பாதையையும், இருபதாண்டு சரித்திரத்தையும், சுருக்கமாகக் கூறவும், ஈரோட்டுப் பாதைக்கும், கம்யூனிஸ்ட் பாதைக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை விளக்கிக் காட்டவும், இக்கட்டுரை முயற்சிக்கும்.

 

ஈரோட்டுப் பாதையின் இருபதாண்டுகள்: இன்று ஈரோட்டுப் பாதை திராவிடக் கழகம் என்று அழைக்கப்படுகிறது. ஆரம்பித்த பொழுது அதற்கு இந்தப் பெயரில்லை. கூடுவிட்டுக் கூடு பாய்வதுபோல் பல பெயர்களைத் தாங்கி ஈரோட்டுப் பாதை இருபதாண்டுகளைக் கழித்திருக்கிறது.

 

பார்ப்பனரல்லாதார் இயக்கம், சமூக சீர்திருத்த இயக்கம், சுயமரியாதை இயக்கம், பகுத்தறிவு இயக்கம், சமதர்ம நாஸ்திக இயக்கம், தமிழர் இயக்கம், திராவிடர் இயக்கம் என்ற பல பெயர்களோடு பாதை காட்டி வந்திருக்கிறார், தன்னைப் பின்பற்றிய தமிழ் மக்களுக்கு ஈரோட்டுப் பெரியார்.

 

பார்ப்பனரல்லாதார் இயக்கம்: ஈ.வெ.ரா. காங்கிரஸ் தலைவராக காட்சியளித்த காலத்தில் பரம காந்தி பக்தர். காந்தீயக் குட்டையில் ஊறிய மட்டை. அந்த ஒத்துழையாமைக் காலத்திலும், காந்தீயத் தலைமையில் நம்பிக்கையற்ற பலதீவிரவாதிகள் காங்கிரஸில் இருந்தனர். ஹஸரத் மோகினி, டாங்கே போன்றவர்களும், வங்காளம், பஞ்சாப் மாகாணங்களிலிருந்து அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியில் இடம் பெற்றிருந்த புரட்சித் தலைவர்களூம் தேசீய இயக்கத்தை முன்னேற்ற வேண்டி, காந்தீயத் தலைமையைப் புரட்சிக்கண்ணோடு குறை கூறினர். அப்பொழுது ஈ.வெ.ரா. முற்போக்குவாதியல்ல. காந்தி பக்தராக இருந்து தீவிரவாதிகளை எதிர்த்து வந்தார்.

 

அன்று தமிழ்நாட்டில் ராஜாஜியின் பரமானந்த சிஷ்யர் நாய்க்கர். ‘ஜஸ்டிஸ் கட்சி ‘யை அதன் ஆரம்பமுதலே ‘தேசீயத்திற்கு விரோதமான வகுப்புவாத பிளேக் ‘ என்று கடுமையாக அந்நாளில் எதிர்த்துவந்த முதலியார், நாயுடு, நாய்க்கர் ஆகிய முப்பெரும் பார்ப்பனரல்லாத தமிழ்நாட்டுக் காங்கிரஸ் தலைவர்களில் நாய்க்கருக்கே முதல் தாம்பூலம் வைக்க வைக்கலாம்.

 

அத்தகைய நாய்க்கர் 1925ல் காஞ்சீபுரத்தில் நடந்த தமிழ் மாகாண மகாநாட்டின்போது காங்கிரஸை விட்டு வெளியேறினார். வெளியேறும்போது ‘காங்கிரஸ் மகாசபையில் பார்ப்பனரல்லாதார் நன்மையடைய முடியாது. காங்கிரஸை ஒழிப்பதே இனி எனது வேலை ‘ என்று ஒரு போடு பொட்டு வெளியேறினார்.

 

காங்கிரஸ், அரசியல் ஸ்தாபனம். காங்கிரஸ், ஜாதி, மத, வகுப்புவாதமற்ற அரசியல் ஸ்தாபனம். காங்கிரஸ், ஏகாதிபத்திய எதிர்ப்பு ஸ்தாபனம். காங்கிரஸ், விடுதலை ஆர்வம் உள்ள பொதுமக்களை வரவர வசீகரிக்கும் முற்போக்கு தேசியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்தாபனம். இவ்வாறு காங்கிரஸ் ஸ்தாபனத்தை மதிப்பிட்டார்கள் அன்றைய அரசியல் தீவிரவாதிகள். காங்கிரஸிலிருந்த பிற்போக்குத் தலைமையை, பிற்போக்குத் திட்டங்களை கண்டித்து அம்பலப்படுத்தினார்கள். காங்கிரஸ் பிரதிநிதித்துவப்படுத்திய தேசீய இயக்கத்தை புரட்சிகரமாக வளர்க்க முழுமூச்சுடன் பாடுபட்டார்கள்.

 

காங்கிரஸில் படர்ந்த அரசியல் பிற்போக்கை தீவிரவாதிகள் திருத்த கச்சை கட்டினார்களே ஒழிய, காங்கிரஸ் ஸ்தாபனத்தையே வெறுத்து விலகிப்போக விரும்பினார்கள் இல்லை. ஆனால், ஈ.வெ.ரா.வோ வகுப்புவாதச் சகதியை அள்ளி காங்கிறஸின் முகத்தில் எறிந்துவிட்டு, தேசீய ஸ்தாபனத்தைத் துறந்தார். அரசியல் பார்ப்பனர்களிடம் அவருக்கேற்பட்ட ஆத்திரத்தின் பலனை, அவரிடம் பொங்கி எழுந்த வெறுப்பின் வேகம், அவரை தேர்வடம் போட்டு இழுத்து, காங்கிரஸீக்கு வெளியே வெகுதூரம் கொண்டு போயிற்று. காங்கிரஸின் மேல்தட்டில் கண்டி தேசீயத்திற்கு விரோதமான ஜாதி ஆணவத்தை சம்மடி அடி கொடுத்து உடைத்தெறியும் நன்முயற்சியில் ஈடுபடுவதற்குப் பதிலாக காங்கிரஸையே அடியோடு அழித்துவிடுவேன் என்ற அடாத துவேஷ அம்டுவில் தள்ளிற்று.

 

1924ல் கான்பூர் கம்யூனிஸ்ட் சதிவழக்கு நடந்தது. தமிழ்நாட்டு சிங்காரவேலு செட்டியார் அதில் சம்பந்தப்பட்டவர். ஈ.வெ.ரா. அன்று மாறுதல் வேண்டாதார்.

 

குருகுலப் போராட்டம்:

 

1926ல் தமிழ்நாட்டையே குலுக்கி ஆட்டிய சேரன்மாதேவி குருகுலப் போராட்டம் ஏற்பட்டது. காற்றுள்ளபோதே தூற்றிக் கொண்டார் ஈ.வெ.ரா. பக்குவம் கெடுவதற்கு முன்னால், சந்தர்ப்பத்தை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, காங்கிரஸ் – தமிழர் இளைஞர்களுக்கிடையே பிராமண எதிர்ப்பு விதையை தாராளமாக விதைக்கத் தொடங்கினார். தருணம் கிடைக்கும்பொழுதெல்லாம் காங்கிரஸைத் தாக்க தயங்கியது இல்லை. மயங்கியதும் இல்லை அவர்.

 

பிராமணீய எதிர்ப்பின் வேகம் ஏற ஏற, ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்கள், ஈ.வெ.ரா.வுக்கு ஞானாசிரியர்களாகக் காட்சியளித்தார்கள். அரசியல் பார்ப்பனர்களை ஒருபோதும் நம்பாதே என்ற சர்.பி.தியாகராஜ செட்டியாரின் வாக்கு, வேதவாக்காக ஒலித்தது ஈ.வெ.ரா.வுக்கு. ‘பார்ப்பனர்கள் வகுப்புவாதிகள் ‘ என்ற வகுப்புவாத மோஹினி, ஈ.வெ.ராவின் இதயபீடத்தில் ஏறிச் செம்மையாக உட்கார்ந்து கொண்டது. அரசியல் பார்ப்பனர்களைச் சாக்காக வைத்து காங்கிரஸ் ஸ்தாபனத்தின்மீது ஓய்வு ஒழிவு இன்றிச் சொல்லம்பு தொடுத்து வந்தார்.

 

1926ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் ஜஸ்டிஸ் கட்சி படுதோல்வியடைந்தது. மண் கவ்வி விழுந்த ஜஸ்டிஸ் கட்சி, ஈ.வெ.ரா.வின் கைத்தாங்கலில் எழுந்து புத்துயிர் பெற்று மீண்டும் தேர்தலில் காங்கிரஸை முறியடிக்க விரும்பிற்று. ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்கள் ஈ.வே.ராவை வளைத்துக்கொள்ள முயன்றனர். காங்கிரஸை பழிவாங்கும்வெறி, ஈ.வெ.ராவை ஜஸ்டிஸ் கட்சிக்குத் தூணாக்கிற்று.

 

மதுரையில் 1926 டிசம்பரில் நடந்த பார்ப்பனரல்லாதார் மாநாட்டில் (ஜஸ்டிஸ் கட்சி மகாநாட்டில்) ஈ.வெ.ரா. பங்கெடுத்துக் கொண்டார். அம்மாநாட்டிற்கு வ.உ.சி., ஜார்ஜ் ஜோசப் போன்ற தேசபக்தர்கள் அழைக்கப்பட்டார்கள். கதர் ஆதரிப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தேசபக்தர்களையும் கதரையும் காட்டி தேசீய உணர்ச்சி கொண்ட பார்ப்பனரல்லாத இளைஞர்களை ஜஸ்டிஸ் கட்சியின் பக்கம் இழுத்துவிடலாமென்று சூழ்ச்சி செய்தனர். ஈ.வெ.ராவின் தூண்டுதலே இதற்குக் காரணம். பதவி மோகிகளான ஜஸ்டிஸ் கட்சியின் ஜரிகைத் தலைப்பாகைகள் மக்களை ஏய்க்க கதர் வேஷம் போட்டன.

 

அப்பால் தமிழ்நாடு முழுவதும் பார்ப்பனரல்லாதார் மகாநாடுகள் நடந்தன. அவைகளிலெல்லாம் ஈ.வெ.ராவின் சொற்பெருக்குகள் நிகழ்ந்தன.

 

இந்த காலத்தில்தான் ஏகாதிபத்திய அடிமை நாவலர் ஏ.ராமசாமி முதலியார் ஈ.வெ.ராவை தமிழ்நாட்டு ரூஸோ (பிரெஞ்சுப் புரட்சிக்கு முக்கியமான காரணஸ்தன்) என்று, வாயாரப் பாராட்டினார். இந்த பாராட்டு, ஈ.வெ.ரா. ஜஸ்டிஸ் கட்சிக்கு செய்த சேவைக்கு சன்மானம்.

 

சீர்திருத்த இயக்கம்: பார்ப்பனரல்லாதார் இயக்கத்தை வலுப்படுத்த, சமூக சீர்திருத்தப் பிரசாரம் மிக அவசியம் என்பதை உணர்ந்தார் ஈ.வெ.ரா. ஜாதி எதிர்ப்பு, சடங்குகள் எதிர்ப்பு, புரோகித மறுப்பு, பிரசார சண்டமாருதம் தமிழ்நாடு பூராவும் நடைபெற்றன. தாழ்த்தப்பட்ட, பார்ப்பனரல்லாத ஜனத்திரளை தன்வழிக்கு குறிப்பிடத்தக்க அளவுக்கு இழுக்க முடிந்தது ஈ.வெ.ரா.வால்.

 

சென்னையில் ‘நால்வர் சந்திப்பு ‘ நடந்தது. (1-8-27) அடுத்தவார குடியரசில் வெளியான பிராமணீய சடங்கை விலக்கியவர் பட்டியலில் ஈ.வெ.ரா., திரு.வி.க., டாக்டர் நாயுடு, ஆர்.கே. ஷண்முகம் ஆகிய நால்வரின் பெயர்களும் முன்வரிசையில் இடம் பெற்றன. இவ்வாறு காங்கிரஸ்காரர்களோடு இணைந்து, சமூகச் சீர்திருத்தத்திற்கு ஆதரவு தேடுவதாகக் காட்டி, காங்கிரஸ் ஒழிப்பு வேலைக்கு மறைமுகமாக பணம் திரட்ட முனைந்தார். ஈ.வெ.ரா.

 

1927ல் கோவையில் நடந்த ஜஸ்டிஸ் கட்சியின் விசேஷ மகாநாட்டுக்கு ஈ.வெ.ராவின் தூண்டுதலினால், திரு.வி.க., டாக்டர் நாயுடு, ஷண்முகம் செட்டியார், சுரேந்திரநாத் ஆச்சாரியா ஆகியோர் அழைக்கப்பட்டார்கள். ஜஸ்டிஸ் கட்சியார் காங்கிரஸில் சேர்ந்து காங்கிரஸைக் கைப்பற்ற வேண்டுமென்று அவர்கள் யோசனை கூறினர். ஆனால், அந்த யோசனையை ஈ.வெ.ரா. பெரும்திரளான ஜஸ்டிஸ் கட்சியோடு சேர்ந்து எதிர்த்தார்.

 

1927ல் காந்திஜியோடு வருணாஸ்ரம தர்மத்தைப்பற்றி, ஈ.வெ.ரா.வும் எஸ்.ராமனாதனும் விவாதித்தனர். விவாதத்திற்குப் பின்னால் ‘மூன்று காரியங்கள் முடிவு பெறாமல் நமது நாட்டிற்கு விடுதலை இல்லை ‘ என்று குடியரசில் எழுதினார். அவையாவன:

 

1. காங்கிரஸ் ஒழிப்பு, 2. இந்துமத ஒழிப்பு, 3. பார்ப்பன ஆதிக்க ஒழிப்பு.

 

மேற்படி நோக்கங்களுக்கு தக்கபடி ஈ.வெ.ரா. தனது சித்தாந்தத்தை உருவாக்கினார். ‘நாம் முதலில் சுயமரியாதை அடைந்தால்தான் அரசியல் உரிமை பெறத் தகுதியுடையவராவோம் ‘ என்றார். ‘சுயமரியாதை முதலில் அரசியல் விடுதலை பிறகே ‘ என்பதுதான் அந்த சித்தாந்தம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24636
Date:
Permalink  
 

தோழர் ஜீவா
=========

நாஞ்சில் நாட்டின் பூதப்பாண்டியில் பட்டம்பிள்ளைக்கும் உமையம்மைக்கும் மகனாக 21-08-1907ல் பிறந்த சொரிமுத்து, மூக்காண்டியாக உருவெடுத்து பின்னர் ஜீவானந்தமாகவும், இடையில் வந்த தனித்தமிழ்ப்பற்றின் காரணமாக உயிரின்பனாகவும் மாறிப் பின்னர் ஜீவானந்தமாகவும் இயக்கத்தோழர்கள் மற்றும் அனைத்துத் தமிழர்களுக்கும் ஜீவாவாக மாறிய வரையிலான அவருடைய பயணம் தான் நம்பியதை உண்மையென்று உறுதியாக நம்பிய பயணமாகவே இறுதி வரை தொடர்ந்துள்ளது.

அவருடைய பொதுவாழ்விலான ஈடுபாடு மிக இளமையிலேயே ஆரம்பித்தது என்று சொல்வார்கள். அது தீண்டாமை மிகவும் கொடுமையாக உலவி வந்த காலகட்டம். ஆலயப்பிரவேச உரிமை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மறுக்கப்பட்ட காலம். நாஞ்சில் நாட்டின் ஊர்களில் கோயில் திருவிழா தொடங்கியதும் நான்கு முக்கிய தெருக்களிலும் தெரு மறிச்சான் கட்டி விழா தொடங்கி விட்டது என்று அறிவிப்பு செய்வார்கள். தாழ்த்தப்பட்ட சாதியினர் அந்தத் தெருக்களில் நுழையக்கூடாது என்று தெருவில் போடப்படும் தடுப்புத்தான் தெருமறிச்சான். இதைக் கண்டு மனம் வெதும்பிய ஜீவா சேரியைச் சார்ந்த தனது இரு நண்பர்களை அழைத்துக் கொண்டு அந்த தெருமறிச்சானைத் தாண்டி அவர்களை உள்ளே அழைத்துச் சென்றிருக்கிறார். ஊர்மக்களால் கட்டப்பட்ட அந்தத் தெருமறிச்சானைப் பிடுங்கியெறிந்து தன்னுடைய தோழர்களை அத்தெருவுக்குள் அழைத்துச் சென்றிருக்கிறார்.

ஜீவாவின் துவக்க காலம் கதர், காங்கிரஸ் போன்றவைகளில் ஆழ்ந்த நாட்டம் கொண்டிருந்திருக்கிறது. அவருடைய தாயார் மரணத்தின் போது கொள்ளி வைக்கும்போது கட்டிக்கொள்ளும் கோடித்துணிக்காக கதராடையைக் கேட்டிருக்கிறார் ஜீவா. அது மறுக்கப்பட்டதால் தனது தாயாருக்கு கொள்ளி போடவும் மறுத்திருக்கிறார். பின்னர் அவருடைய சகோதரர் நடராஜனை வைத்து தாயாரின் இறுதிச் சடங்கினை உறவினர்கள் முடித்திருக்கிறார்கள்.

தன்னுடைய மிகவும் இளம்வயதில் 1924ல் பெரியாரை சந்தித்திருக்கிறார் ஜீவா. அந்த சந்திப்பு வைக்கத்தில் நடைபெற்ற மிகவும் சரித்திரப் பிரசித்த பெற்ற ஆலயப் பிரவேசப் போராட்டத்தில் அவரை மிகவும் தீவிரத்துடன் ஈடுபட வைத்திருக்கிறது. சுமார் 20 மாதங்கள் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டதினால் தன்னுடைய பள்ளிப்படிப்பினை இழந்து தன்னுடைய சொந்த ஊரான நாஞ்சில் நாட்டின் சுசீந்திரத்தில் நடைபெற்ற ஆலயப்பிரவேசப் போராட்டத்திலும் கலந்து பல இன்னல்களை அனுபவித்திருக்கிறார் ஜீவா. நாஞ்சில் நாடு திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்ததினால் இப்போராட்டங்கள் அவர் எதிர்பார்த்த அளவுக்கான வீச்சில் நடைபெறாததால் நாஞ்சில் நாட்டை விட்டு வெளியேறியிருக்கிறார் ஜீவா.

தனித்தமிழ் ஆர்வம் ஜீவானந்தத்தை உயிரின்பனாக பெயர் மாற்றம் செய்திருக்கிறது. இவருடைய துடிப்பான தனித்தமிழ்ப் பேச்சை மிகவும் ரசித்த பாரதி அன்பர் வ.ராமசாமி இம்மாதிரி பிரசங்கத்தை நான் கேட்டதே இல்லை என்றும் ஆனால் தமிழ் மொழியின் வளர்ச்சியை உத்தேசித்து தயவு செய்து தனித்தமிழை விட்டுவிடுங்கள். இந்தத் தமிழைப் பாமர மக்களால் புரிந்து கொள்ள முடியாது. இது மக்களுடைய மொழியல்ல என்று யோசனை தெரிவித்திருக்கிறார். இந்த யோசனை ஏற்றும் மனநிலையில் ஜீவா அப்போது இல்லை. பெரியார் சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்போது ஜஸ்டிஸ் கட்சிக்கும் அதற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. அதனால் ஜீவா காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டே பெரியாரின் சுயமரியாதை இயக்கத்திலும் இருந்திருக்கிறார். அப்போது தூய தமிழ் இயக்கத்தின் முன்னோடியாக இருந்த சுவாமி வேதாச்சலம் என்கிற மறைமலையடிகள் ஜீவாவுக்கு ஆதர்ச புருஷனாக இருந்திருக்கிறார்.

1927ம் ஆண்டு செங்கற்பட்டில் நடந்த சுயமரியாதை மாநாட்டிலும் சென்னையில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டிலும் கலந்து கொண்ட ஜீவா மறைமலையடிகளைப் பார்க்க பல்லாவரம் போயிருக்கிறார்.

மறைமலையடிகள் வீட்டை அடைந்து கதவைத்தட்டிய போது பேட்ட குரல் ஜீவாவை மதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. கேட்ட குரல் தனித் தமிழ் இயக்கத்தின் ஆதர்ச நாயகனாகக் கருதப்பட்ட மறைமலையடிகளின் குரல். துரதிருஷ்டவசமாக அக்குரல் தனித் தமிழில் ஒலிக்கவில்லை.

யாரது போஸ்ட்மேனா? என்று தனித்தமிழ்; வித்தகர் கேட்ட கேள்வி ஜீவாவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதைத் தொடரந்த மறைமலையடிகளுடனான விவாதத்தில் அவர் வடமொழி எதிர்ப்பாளாராக மட்டுமல்லாது ஆங்கித்தின் ஆதரவாளராகவும் இருப்பதையம் உணர்ந்திருக்கிறார் ஜீவா. பிற்காலத்தில் தன்னுடைய தலைமறைவு வாழ்வின் போது மக்களுடன் ஜீவனுள்ள தொடர்பு கொள்ள வேண்டுமென்றால் வரா சொன்னது போல மக்கள் மொழியில் பேசவேண்டும் என்பதை உணர்ந்ததாக பல இடங்களில் பதிவு செய்திருக்கிறார் ஜீவா.

சிராவயலில் ஆசிரமம் நடத்திக் கொண்டிருந்தபோது வ.உ.சிதம்பரனார் அங்கு வருகை புரிந்தபோது மாணவர்களை நூல் நூற்க வைப்பது குறித்து மிகவும் தாக்கிப்பேசியிருக்கிறார். வாள்பிடிக்க வேண்டிய கைகளை நூல் நூற்க வைப்பது ஏன் என்றும் கேள்விகேட்டு பெண்களைப் பற்றியும் சில கருத்துக்களை முன்வைத்திருக்கிறார். ஜீவா நூல் நூற்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றி தைரியமாக எடுத்துரைத்தது மட்டுமல்லாது வஉசியின் பேச்சில் வெளிப்பட்ட பெண்களைப் பற்றிய தவறான கருத்துக்களை மிகவும் தைரியத்துடன் சுட்டிக்காட்டி அவரை மறுத்திருக்கிறார் ஜீவா. ஜீவாவின் தைரியத்தை மிகவும் மெச்சிய வஉசி பின்னாளில் பெண்களைப் பற்றிய தன் கருத்துக்களை மாற்றிக் கொண்டதையும் அதில் ஜீவாவின் பங்கு பற்றியும் பதிவு செய்திருக்கிறார்.

சிராவயல் ஆசிரமத்தில் பல அற்புதமான காரியங்களை நிகழ்த்தியிருக்கிறார் ஜீவா. அவைகளை அக்காலத்திய சமூக நடைமுறை மனதில் கொண்டு பார்க்கும் போது அச்செயலின் பிரம்மாண்டம் நமக்கு விளங்கும். பல ஆதி திராவிடக் குழந்தைகளுக்கு கௌதமன், மணிவாசகன், மணித்தொண்டன், கிளிமொழி, மங்கையர்க்கரசி போன்ற பெயர்களைச் சூட்டி அவர்களுக்கு வடமொழி சுலோகங்களைப் பயிற்றுவித்து பல பொது மேடைகளில் அவர்களை அச்சுலோகங்களை சொல்லும்படி செய்திருக்கிறார் ஜீவா.

1927ம் வருடம். இலங்கைக்கு செல்லும் வயலில் ஜீவா சிராவயலில் நடத்தி வந்த ஆசிரமத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட காந்தியார் வவேசு அய்யருடன் அந்த ஆசிரமத்துக்கு வருகை புரிந்திருக்கிறார். அகிம்சைவாதியான காந்தி தன்னுடைய சபர்மதி ஆசிரமத்தில் நோய்வாய்ப்பட்ட ஆட்டுக்குட்டியை விஷ ஊசி போட்டுக் கொன்றதை ஏற்கனவே சுதேசமித்திரன் பத்திரிகையில் படித்த ஜீவா அது குறித்து காந்திஜியிடம் துணிச்சலாக முதல் சந்திப்பிலேயே எதிர்த்து வாதிட்டிருக்கிறார். வருணாசிரமம் குறித்த காந்திஜியின் கருத்துக்கள் குறித்தும் ஜீவா வாதம் செய்திருக்கிறார். ஜீவாவின் துணிச்சல் கண்டு மிகவும் வியந்து போன காந்தியடிகள் விதத்துக்கிடையே உங்களுக்குச் சொத்து எவ்வளவு இருக்கிறது என்று கேட்டார்.

இந்தியாதான் என் சொத்து என்று ஜீவா பதிலளித்திருக்கிறார்.
இல்லை. இல்லை. நீங்கள்தான் இந்தியாவின் சொத்து என்று ஜீவாவைப்பார்த்து மகிழ்ச்சியுடன் காந்தியடிகள் சொல்லியிருக்கிறார்.

இந்த சந்திப்பு ஜீவாவுக்கு சிறிது சிறிதாக காந்தியடிகள் மீதும் காங்கிரஸ் மீதும் கொண்டிருந்த ஆழமான ஈடுபாட்டினை சிறிது அசைத்து வைக்கிறது.

சிராவயல் ஆசிரமத்தின் நிர்வாகிகளுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகளினால் அங்கிருந்தும் வெளியேறுகிறார் ஜீவா.
ஜீவாவின் தீவிர அரசியல் ஈடுபாடு படிப்படியாக அந்நாளில் நிலவிய அரசியல் சூழலில் தீவிரமடைந்து வந்துள்ளது. 1932ல் சட்ட மறுப்பு இயக்கத்தில் பங்குகொள்ளவைத்து சிறைவாசம் பெற்றுத்தந்தது. அந்த ஆண்டு ஜனவரியில் காங்கிரஸ்காரராக சிறைக்குள் புகுந்த ஜீவா நவம்பரில் வெளியேறும்போது சிறைக்குள் கிடைத்த நட்பு மற்றும் அங்குக் கிடைத்த நூல்களின் ஈர்ப்பில் கம்யூனிஸ்டாக வெளியே வருகிறார்.

இக்காலகட்டத்தில் பொதுஉடைமை இயக்க முன்னோடிகளில் முக்கியமானவராகக் கருதப்படும் சிங்காரவேலரின் நட்பு ஜீவாவுக்குக் கிடைக்கிறது. தன்னுடைய வீட்டு நூலகத்தை பயன்படுத்திக்கொள்ள ஜீவாவுக்கு அனுமதி அளிக்கிறார். இது ஜீவாவின் வாழ்வில் மிகப்பெரிய ஜன்னலைத்திறந்து வைத்துள்ளது.
பகத்சிங்கின் நான் ஏன் நாத்திகன் ஆனேன் என்னும் கடிதத்தை ஜீவா தமிழில் மொழிபெயர்க்க பெரியார் அதனை பிரசுரிக்கிறார். அப்போதைய அரசு இருவரையும் கைது செய்து சிறையில் அடைக்கிறது. பெரியார் மன்னிப்புக்கடிதம் எழுதிக் கொடுத்து சிறையை விட்டு வெளியே வருகிறார். இதற்கு முதலில் தீவிரமாக மறுத்த ஜீவா கட்சியின் கட்டுப்பாட்டுக்கு இணங்கி தானும் ஒரு மன்னிப்புக் கடிதத்தை எழுதிக்கொடுத்து வெளியேறுகிறார்.

சுயமரியாதை இயக்கத்துடன் சமதர்மக்கொள்கைகளையும் ஏற்றுக்கொள்வதாக முதலில் அறிவித்த பெரியார் 1934ல் கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தடைவிதிக்கப்பட்டதும் சமதர்மக்கொள்கைகளை அந்தக் கட்சி கைவிடுவதாகவும் மீண்டும் சுயமரியாதை இயக்கமாக அறிவிக்கப்படுகிறது என்றும் தெரிவிக்க கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்த ஜீவா காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியில் தன் சமூகபப்பணிகளைத் தொடர்கிறார்.

1937ல் கோவை லட்சுமி மில் போராட்டத்தைத் தொடர்ந்து திருத்துறைப்பூண்டியில் ஈஎம்எஸ் நம்பூதிரபாடு தலைமையில் காங்கிரஸ் சோஷலிஸ்ட் மாநாட்டில் ஜீவா செங்கொடியினை ஏற்றுவித்தார். அதைத்தொடர்ந்து 1938ல் மதுரை பசுபதி மில் தொழிலாளர்கள் போராட்டத்தில் கைது செய்யப்டுகிறார் ஜீவா. இப்படியான போராட்டங்களுக்கான களம் வலுவடைகிறது ஜீவாவின் வாழ்வில். அதன் பிறகு அவரது வாழ்வல் அலைக்கழிப்பு தொடங்குகிறது. காங்கிரசிலிருந்து வெளியேற்றப்பட்டு பின்னர் சென்னை மாகாணத்திலிருந்தே வெளியேற்றப்பட்டு பம்பாய் சென்று அங்கும் அரசியல் காரணங்களுக்காகக் கைது செய்யப்பட்டார் ஜீவா. இதுபோன்று இருமுறை சென்னை மாகாணத்தை விட்டு வெளியேற்றப்பட்டிருக்கிறார் ஜீவா.

அந்நேரத்தில் காங்கிரஸ் கட்சியானது தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்று குற்றப் பரம்பரை சட்ட ஒழிப்பு என்பதாகும். இதை எதிர்த்து ஜீவா, முத்துராமலிங்கத்தேவர் மற்றும் பி ராமமூர்த்தி போன்றவர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் வாதாடிப்பார்த்தும் ஒன்றும் நடக்கவில்லை. இதைத்தொடர்ந்து ராஜாஜி மதுரை வந்தபோது ஜீவாவும் சசிவர்ணத்தேவரும் கலந்து கொண்ட பேரணி மதுரை மாவட்டம் கம்பத்தில் துவங்கி உசிலம்பட்டி செக்காலூரணி வழியாக மதுரை வந்தடைந்தபோது மக்கள் வெள்ளம் அலைமோதியது. ராஜாஜியிடம் மகஜர் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது. ஒருவழியாக அடுத்து வந்த சட்டசபைக்கூட்டத்தில் அந்த சட்டம் ரத்துச் செய்யப்பட்டது. இவ்வாறு ஜீவா அரசியல் பொருளாதார பிரச்னைகள் மட்டுமல்லாது சமூகப்பிரச்னைகளிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருந்தார்.

இதற்குப்பின் தொடர்ச்சியான சிறைவாசங்களும் தலைமறைவு வாழ்க்கையும் ஜீவாவின் அன்றாட வாழ்க்கையின் அங்கம் ஆகின்றன.

இடையில் 1937ல் நவம்பர் 20ம் தேதி பல இன்னல்களுக்கிடையில் ஜனசக்தி பத்திரிகையை துவங்கினார் ஜீவா. முதல் இதழில் பாரதிதாசனின் புதியதோர் உலகம் செய்வோம் என்ற பாடலும் ஜீவாவின்
காலுக்குச் செருப்புமில்லை
கால்வயிற்றுக்கூழுமில்லை
பாழுக்கு உழைத்தோமடா - என் தோழனே
பசையற்றுப்போனோமடா
என்னும் பாடல்கள் வெளியாகின. ஜீவாவின் இந்தப்பாடலைப் பாடாத நாடக மேடைகள் தமிழகத்தில் இல்லை என்று சொல்லப்படுகிறது.

அதிலும் இசைமேதை மறைந்த கேபி சுந்தராம்பாள் அவர்கள் இப்பாடலைப் பாடும்போது பலர் கண்ணீர் விட்டு அழுதிருக்கின்றனர் என்று ஜீவாவைப் பற்றி வெளிவந்த அனைத்து நூல்களிலும் பதிவாகியிருக்கின்றது. ஜீவாவின் மரண இறுதிச்சடங்கின் போது நாடகக்கலைஞர் டிகே சண்முகம் அவர்கள் சென்னை இடுகாட்டில் இப்பாடலைப்பாடிய போது கண்ணீர் உகுக்காதவர்கள் யாரும் இல்லை என்று சொல்வார்கள்.

1957ல் டிசம்பரில் திருச்சியில் நடந்த கம்யூனிஸ்ட் கட்சி தமிழக பிரதிநிதிகளின் மாநாட்டை தொடர்ந்து நடந்த பொதுக்கூட்டத்தில் மாநாட்டுத் தீர்மானங்களை விளக்கி ஜீவா பேசிய பேருரையே ஜாதி ஒழிப்பும் மொழிப்பிரச்னையும் என்ற நூல் ஆகும்.
நாட்டின் சுதந்திரத்துக்குப்பின் ஒருமுறை சட்டசபை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார் ஜீவா. சட்டமன்றத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக அவர் ஆற்றிய உரை மிகவும் பிரசித்தமானது.

நான் தமிழன். என்னுடைய மொழியே இந்த ராஜ்யத்தில் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய கோரிக்கை. கல்விக் கூடங்களிலும் ஆட்சி மன்றத்திலும் நியாய மன்றத்திலும் நிர்வாகத்துறையிலும் பிரதேச மொழியே இயங்கவேண்டும். ஆகவே வெகுசீக்கிரமாக தமிழ்மொழியை ஆட்சி மொழியாக்க அரசியலார் தக்க நடவடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். ஜனநாயகத்தின் முதல் அடிப்படையான கொள்கை இதுதான். இப்படிச் செய்தால்தான் ஜனநாயகத்தின் முதல் வடிவம் சிருஷ்டிக்கப்படும். தமிழ் தெரிந்தால் போதும். இந்நாட்டின் ஆட்சியாளராகவும் ஆகலாம். உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் ஆகலாம். கல்லூரிப்பேராசியராகவும் ஆகலாம்.
இது ஜீவா காட்டிய உண்மையான மொழிப்பற்று. இங்கு மொழிப்பற்று கட்சி கோஷமாக வில்லை. கடைவிரித்த வியாபாரப் பொருளாகவில்லை.

தாமரை இதழ்களில் பாரதி பற்றி ஜீவா எழுதிய கட்டுரைகள் பாரதி ஆய்வாளர்களுக்கு மிகவும் பயனுள்ளவை என்று சொல்லலாம்.
தமிழகத்தின் சிறந்த மேடைப்பேச்சாளராகக் கருதப்பட்ட ஜீவா ஆற்றிய சிந்தனை ஆழமிக்க சொற்பொழிவுகள் அப்போது போதிய பொறியியல் வசதிகள் இல்லாத காரணத்தால் சுந்தரராமசாமி குறிப்பிடுவது போல காற்றில் கலந்த பேரோசைகளாகப் போய்விட்டன. அவர் குடியரசு, பகுத்தறிவு, புரட்சி, ஜனசக்தி, தாமரை ஆகிய பத்திரிகைகளில் எழுதிய கவிதைகளும் கட்டுரைகளும் ஆய்வுக்கட்டுரைகளும் மட்டுமே இப்போது கிடைக்கின்றன. தோழர் ஜீவபாரதி அவர்கள் ஜீவாவின் மொத்தப் படைப்புக்களையும் ஒருங்கிணைத்து வெளியிடவேண்டி தீவிரத்துடன் செயல்பட்டு வருகிறார்.

ஜீவா அடித்தளமிட்ட கலை இலக்கியப் பண்பாட்டு இயக்கமானது இன்று கலை இலக்கியப் பெருமன்றம், மக்கள் எழுத்தாளர் சங்கள், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்று இலக்கிய இயக்கத்தையும், முகாமையும் தோற்றுவித்துள்ளது.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard