New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கொலைகாரக் கிறிஸ்தவம்: ஓர் வரலாறு = - பி.எஸ். நரேந்திரன்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
கொலைகாரக் கிறிஸ்தவம்: ஓர் வரலாறு = - பி.எஸ். நரேந்திரன்
Permalink  
 


கொலைகாரக் கிறிஸ்தவம்: ஓர் வரலாறு – 1

 

இத்தொடரின் மற்ற பகுதிகளை இங்கு வாசிக்கலாம்.

ந்தியாவின் கோவா பகுதியை ஆண்ட போர்ச்சுக்கீசிய கிறிஸ்தவர்களால் தங்களின் ஆளுமைக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் ஹிந்துக்கள், சமணர்கள், பவுத்தர்கள் போன்றவர்களின் மதவழிபாட்டு உரிமையை அழித்தொழித்து, அவர்களைக் கிறிஸ்தவர்களாக கட்டாய மதமாற்றம் செய்யும் வகையில் கொண்டுவரப்பட்ட ‘இன்குசிஷன் (Inquisition)’ என்னும் கொடூரமான வழக்கம் 1560-ஆம் வருடம் ஆரம்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பல இலட்சக்கணக்கான ஹிந்துக்கள் கொடூரமான முறையில் மதமாற்றம் செய்யப்பட்டார்கள். மதம் மாற மறுத்த பலர் இரக்கமற்ற முறையில் படுகொலை செய்யப்பட்டார்கள்.

1174-ஆம் வருடம் பிற மதங்களையும் மதிக்கிற, சுதந்திர எண்ணம் கொண்டவரான போர்ச்சுக்கலின் மந்திரி மார்க்வெஸ்-டி-பொம்பால் என்பவரால் கோவாவில் பிற மதத்தவரை கொடூரமான முறையில் மதம் மாற்றும் இன்க்குசிஷன் சிறிது காலத்திற்கு தடை செய்யப்பட்டது. எனினும் அடுத்த ஐந்து ஆண்டுகளில், 1778-ஆம் வருடம், போர்ச்சுக்கலின் அரசியான டி. மாரியா மீண்டும் இன்க்குசிஷனுக்கு அனுமதி கொடுத்தாள். அதனைத் தொடர்ந்து நடந்த கட்டாய கிறிஸ்தவ மதமாற்றங்கள் 1812-ஆம் வருடம் வரை தொடர்ந்து நடந்தன.

துரதிருஷ்டவசமாக இந்தியர்களுக்கு, முக்கியமாக ஹிந்துக்களுக்கு அது குறித்தான அறிவு சிறிதும் இல்லாமல் இருப்பது கண்கூடு. எனவே, இந்தியர்கள் பலரும் அறியாத அல்லது மறந்து போன அந்தக் கொடூர காலகட்டத்தைக் குறித்து இங்கு சிறிதளவு அறிவினைப் புகட்டுவதே இந்தத் தொடரின் நோக்கமாகும்.

கிறிஸ்தவ மதவெறியர்கள் இந்தியாவில் மீண்டும் தலையெடுக்க முயற்சிகள் செய்து கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் இதனைக் குறித்து ஒவ்வொரு ஹிந்துவும் அறிவதும், மதமாற்றம் செய்ய வரும் கிறிஸ்தவனை விரட்டுவதும் மிக முக்கியமான ஒன்றாகும். அறியாமையே இன்றைக்கு ஹிந்துக்களைச் சூழ்ந்திருக்கும் ஒரு பெருநோயாக அச்சமூட்டும் வகையில் வளர்ந்து நிற்கிறது. அந்த அறியாமையை நீக்க இந்தக் கட்டுரைத் தொடர் உபயோகமாக இருக்கும் என நம்புகிறேன்.

****

1229-ஆம் வருடம் இத்தாலியின் டொலோஸா பகுதியில் போப் ஒன்பதாம் கிரிகொரி தலைமையில் கூடிய கிறிஸ்தவ பிஷப்களின் கூட்டத்தில் உலகெங்கிலும் கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதற்குத் தேவையான நாற்பத்தைந்து கருத்துக்கள் கொண்ட சட்ட முன்வடிவு எழுதப்படுகிறது. அந்தக் கூட்டத்தில் அவை விவாதிக்கப்பட்டுப் பின்னர் அங்கிருந்த அனைவராலும் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. முக்கியமாக அந்தச் சட்டெங்களில் அடங்கியிருந்த பதினெட்டு கருத்துக்கள் கிறிஸ்தவர்களல்லாத அன்னிய மதத்தவர்கள் அல்லது அன்னிய மதத்தவர்கள் என சந்தேகம் கொள்ளத்தக்கவர்களைப் பற்றியும் அவர்கள் மீது எடுக்கவேண்டிய நடவடிக்கைகளையும் பற்றியதாகும்.

அந்தச் சட்டங்களின்படி, ஒவ்வொரு பகுதியிலும் வசிக்கும் பிஷப்களும் அவரது அடிப்பொடிகளும் அந்தந்த பகுதிகளில் வசிக்கும் அன்னிய மதத்தவர்களின் மீது தங்களின் பிடியை இறுக்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. பாகன் கடவுள்களை வணங்கும் அன்னிய மதத்தவனுக்கு உழுவதற்கு நிலம் கொடுக்காமலிருக்க வேண்டுமென கிறிஸ்தவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதனை மீறும் கிறிஸ்தவன் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டான். எவனேனும் ஒரு பாகனிய அன்னிய மதத்தவன் வாழும் வீடு கண்டறிப்பட்டால் அது உடனடியாக இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. பிறமதத்தவனின் வாழ்வாதாரங்கள் அனைத்தும் கடுமையான முறையில் முடக்கப்பட்டு அவன் கிறிஸ்தவனாக மதம் மாறும்வரையிலும் கொடுமைகளுக்கு உள்ளானான்.

ஃபிரான்ஸ் நாட்டை ஆண்டுவந்த ஒன்பதாம் லூயி மன்னன் இந்தச் சட்டங்களை முழுமையாக ஸ்வீகரித்து அதனைத் தான் ஆளும் பகுதியில் உடனடியாக நடைமுறைப்படுத்த உத்தரவிட்டான். இதே போன்ற மனப்பாங்கு இரண்டாம் ஃப்ரெடரிக் அரசன் ஆண்ட ஜெர்மனியிலும், இத்தாலியின் ஒருபகுதியிலும் நிலவியது. பின்னர் ஃப்ரான்ஸிலும் இந்தச் சட்டங்கள் தீயைப் போலப் பரவின.

பதின்மூன்றாம் நூற்றாண்டின் காலப்பகுதில் கிறிஸ்தவ சர்ச்களுக்கும், ஐரோப்பிய நாடுகளை ஆண்ட அரசாங்கங்களுக்கும் இடையே இருந்த முழுமையான ஒத்துழைப்பின் காரணமாக கிறிஸ்தவர்கள் அல்லாத பிற தெய்வங்களை வழிபடும் பாகன்கள் கொடுமையான அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். ஸ்பெயினில் அரசன் ஃபெர்டினெண்ட்டும், இஸபெல்லாவும் ஆண்ட காலத்தில் இன்குஷிஷன் என்கிற கொடூரத்தை அவர்கள் ஸ்பெயினில் வாழ்த பாகன்கள் மீது கட்டவிழ்த்துவிட இந்த ஒத்துழைப்புகளே காரணமாக இருந்தன. சர்ச் சொல்வதனைக் கண்ணை மூடிக் கொண்டு கேட்ட அரசர்கள் பாகன்களை கொடூரமாக அழித்து ஒழித்தார்கள்.

ஃபெர்டினண்டும், அவனது அரசி இஸபெல்லாவும் ஸ்பெயினை ஆண்டுகொண்டிருந்த காலத்தில் யூதர்கள் அந்த நாட்டில் பெரும் செல்வாக்குடன் திகழ்ந்தார்கள். அது கல்வியாகட்டும், வியாபாரமாகட்டும் அல்லது அரசியலாகட்டும். யூதர்கள் எல்லாவற்றிலும் மிகுந்த ஈடுபாடும் செல்வாக்கும் உள்ளவர்களாக இருந்தார்கள். அவர்கள் மீது பொறாமையுடன் இருந்த கிறிஸ்தவர்கள் யூத வெறுப்புத் தூண்டும்விதமாக வெறுப்பூட்டும் வதந்திகளைப் பரப்பி வந்தார்கள். அந்த வெறியூட்டுதல்களே பின்னாளில் ஸ்பெயினில் வாழ்ந்த யூதர்களைப் படுகொலை செய்ய வழிவகை செய்தது.

பொறாமையில் புழுங்கிய கிறிஸ்தவர்கள் ஸ்பெயினில் வாழும் யூதர்களைக் குறித்தான கட்டுக்கதைகளை ஸ்பெயினெங்கும் பரப்பினார்கள். யூதர்கள் கிறிஸ்தவத்தைக் குறித்து ஏசியதாகவும், அவர்களின் புனித அடையாளங்களை அவமானப்படுத்தி சிலுவையை அசிங்கப்படுத்தியதாகவும், யூதர்களின் வசந்தவிழாவில் (Passover) குழந்தைகளையும், கிறிஸ்தவர்களையும் நரபலி கொடுத்ததாகவும் செய்திகள் ஸ்பெயினெங்கும் பரப்பப்பட்டன. இந்த கட்டுக்கதைகளை உண்மையென்று நம்பிய சாதாரண கிறிஸ்தவர்களும், அவர்களது மதவெறி பிடித்த மதத்தலைவர்களும் யூதர்களின் மீது தங்களின் தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தினார்கள்.

பதினான்காம் நூற்றாண்டி இறுதிப் பகுதியில் இந்த மதவெறித் தாக்குதல்கள் உக்கிரமடைந்து கேஸ்ட்டில் மற்றும் ஆராகன் பகுதியில் வசித்த யூதர்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டார்கள். அவர்களின் வீட்டுக் கதவுகளை உடைத்துக் கொண்டு உட்புகுந்த கிறிஸ்தவ மதவெறியர்கள் அவர்களின் சொத்துக்களை அழித்து நாசம் செய்தார்கள். ஆண், பெண், சிறுவர், சிறுமியர் என்று பேதம் பார்க்காமல் யூதர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இந்தக் கொடுமையிலிருந்து யூதர்கள் தப்புவதற்கு ஒரேவழி அவர்கள் கிறிஸ்தவர்களாக மதம் மாறுவது மட்டும்தான் என அவர்களுக்குச் சொல்லப்பட்டது. இதனால் அஞ்சி நடுங்கிய ஏறக்குறைய 35,000 யூதர்ளை “அற்புதங்கள்” செய்தவர் என்று அறியப்பட்டவரான செயிண்ட் வின்செண்ட் ஃபெரியர் என்பவன் மதமாற்றம் செய்வித்தான். இதுவே கிறிஸ்தவர்கள் மத்தியில் “அற்புதம்” என இன்றைக்கு அறியப்படுகிறது.

ஆரகன் மற்றும் கேஸ்ட்டின் என்கிற தனித்தனியான இரெண்டு ஸ்பெயின் பகுதிகள் ஃபெர்டினண்ட் மற்றும் இஸபெல்லாவின் திருமணத்திற்குப் பிறகு ஒன்றாகின. இவர்கள் இருவரும் இணைவதற்கு முக்கிய காரணமானவன் டொமினிக்கன் சாமியாரான டோர்க்குமடா (Torquemada, 1420-1498) என்பவன். பெரும் கிறிஸ்தவ மதவெறியனும், யூத வெறுப்பாளனுமான இந்த டோர்க்குமடா ராணி இஸபெல்லாவிற்கு சிறுவயதிலிருந்தே பாவமன்னிப்பு வழங்கி வந்தவன். இவனே ஸ்பெயினில் யூதர்களுக்கு எதிராக நிகழ்ந்த இன்குஷிஷன் வெறியாட்டங்களுக்கு முக்கிய காரணமானவன்.

இந்த நாயிலும் கீழான கிறிஸ்தவ மதவெறியனின் பின்னனியை ஆராய்ந்த போர்ச்சுக்கீசிய எழுத்தாளர் ஒருவர் அவனின் இந்த மதவெறிக்குக் காரணமாக கீழ்க்கண்டவற்றை எழுதுகிறார்.
“தனது இளமைக்காலத்தில் பல நாடுகளுக்கும் பயணம் செய்த பாதிரி டோர்க்குமடா, கார்டோவா என்னும் பகுதியிலிருந்த ஒரு இளம் பெண்ணின் மீது காதல் கொண்டான். ஆனால் துரதிருஷ்டவசமாக அந்தப் பெண் அவனை உதாசினம் செய்துவிட்டு முஸ்லிம் ஒருவனைத் திருமணம் செய்து கொண்டு கிரெனெடா பகுதிக்குச் சென்றுவிட்டாள். இதன் காரணமாக டோர்க்குமடா முஸ்லிம்களின் மீது கடும் வெறுப்பு கொண்டான். பின்னர் அங்கிருந்து சரகோகா பகுதிக்குச் செல்லும் அவன் அங்கு கிறிஸ்தவ வேதங்களைக் குறித்துப் படிக்கிறான். அவன் மீது ஈர்ப்பு கொண்ட பிற பாதிரிகள் உதவியுடன் அவன் டொமினிகன் சர்ச்சில் சேருகிறான்.

அங்கிருந்த நூலகத்தில் கிறிஸ்தவ அதிகாரங்களைக் குறித்துக் கற்கும் டோர்க்குமடா அங்கிருந்தே பிறமதத்தவரை வெறுத்து அவர்களைப் படுகொலை செய்யும் இன்குசிஷன் என்கிற கொடும் செயலை தனது கொள்கையாகக் கொள்கிறான். பழிவாங்கும் எண்ணமும், தன்னை அனைவரிலும் ஒரு நல்ல கிறிஸ்தவனாக காட்டிக் கொள்வதற்காகவும் தனது எண்ணத்தில் உதித்த இன்குசிஷன் என்னும் கொடூரத்தை செயலில் காட்டும் நாளுக்காகக் காத்திருக்க ஆரம்பித்தான்.”

இன்னொரு வரலாற்றாசிரியரான பிரஸ்காட் மேற்படி டோர்க்குமடா பாதிரி ஸ்பெயினில் எவ்வாறு பாகனியர்களுக்கும், யூதர்களுக்கும் எதிராக தனது கொடூர திட்டத்தை நிறைவேற்றினான் என்பதனைக் குறித்துக் கூறுகையில்,

“மனதில் சிறிதும் ஈரமும், இரக்கமும் இல்லாதா வஞ்சகனான டோர்க்குமடா தன்னிடம் பாவமன்னிப்பு கேட்க வரும் சிறுமி இஸபெல்லாவின் மனதில் நஞ்சை விதைக்க முயற்சி செய்கிறான். பாகன்களையும், யூதர்களையும் குறித்து அவள் மனதில் வெறுப்பைத் தூண்டும் விதமாகக் கட்டுக்கதைகளை அவிழ்த்துவிடுகிறான். ஆனால் இயல்பிலேயே நல்ல மனதுடைய சிறுமி இஸபெல்லா அந்தக் கதைகளைப் புறம் தள்ளுகிறாள். இருப்பினும் மனம் தளராத டோர்க்குமடா எதிர்காலத்தில் அவள் அரியணை ஏறியபின்னர் கடவுளின் நல்ல சேவகியாக மாறி, கத்தோலிக்க நம்பிக்கைக்கு மிகவும் உதவுபவளாக, பரமண்டலத்தில் இருக்கும் பிதாவினைப் போற்றிப் புகழ்பவளாக இருப்பாள் என நம்பிக்கை கொள்கிறான்.

அந்த நேரமும் வந்தது. டோர்க்குமடாவின் வஞ்சக எண்ணமும் ஈடேறி ஸ்பெயினில் யூதர்களும், பாகன்களும் படுகொலை செய்யப்பட்டார்கள். ஈவு இரக்கமின்றி விரட்டியடிக்கப்பட்டார்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
RE: கொலைகாரக் கிறிஸ்தவம்: ஓர் வரலாறு = - பி.எஸ். நரேந்திரன்
Permalink  
 


கொலைகாரக் கிறிஸ்தவம் – 2

 

இத்தொடரின் மற்ற பகுதிகளை இங்கு வாசிக்கலாம்.  

தொடர்ச்சி…

The Inquisition is the institutional practice of specially appointed Roman Catholic priests, charged with investigating and putting on trial individuals suspected of “heresy” (holding to beliefs and practices that were considered to be a threat to, or significantly out of line with, official Roman Catholic teaching).

முன்பே கூறியபடி, தங்களின் உயிரையும், உடைமைகளையும் பாதுகாத்துக் கொள்வதற்காக ஸ்பெயினில் வாழ்ந்த யூதர்கள் கிறிஸ்தவர்களாக மதம் மாறும்படி கட்டாயப்படுத்தப்பட்டார்கள். வேறு வழியில்லாத யூதர்கள் பலரும் கிறிஸ்தவர்களாக மதம் மாறினார்கள் என்றாலும், மனதளவில் அவர்கள் யூதர்களாகவே வாழ்ந்தார்கள். வெளிப்புறம் தாங்கள் முழுக் கிறிஸ்தவர்களாக காட்டிக்கொண்ட அவர்கள் தங்களின் பாரம்பரியமான திருவிழாக்களையும், வழிபாடுகளையும் பிறர் அறியாவண்ணம் ரகசியமாகச் செய்துவந்தார்கள்.

அவர்களைக் குறித்து விளக்கும் அன்டலூசியாவைச் சேர்ந்த க்யூரட்டே என்பவர் கூறுகையில்,

பெரும் சாபத்திற்கு உள்ளாக்கப்பட்ட இந்தப் பரிதாபமான இனத்து மக்கள் தங்கள் குழந்தைகளை கிறிஸ்தவர்களாக ஞானஸ்நானம் செய்விக்க அரைமனதுடன் அழைத்துச் சென்றாலும், வீடு திரும்பியவுடன் அதன் சுவடுகளை அழித்தார்கள்.  கிறிஸ்தவர்களைப்போல அவர்களின் சமையலில் பன்றிக் கொழுப்பினைக் கலந்து சமைக்காமல் அவர்களின் உணவில் தாவர எண்ணெயைப் பயன்படுத்தினார்கள். பன்றி இறைச்சி உண்பதினை முற்றிலும் தவிர்த்தார்கள். தங்களின் வசந்த விழாவினை (Passover) ரகசியமாகக் கொண்டாடினார்கள். கிறிஸ்தவர்களின் ஈஸ்டர் திருநாளின்போது உபவாசம் இருக்காமல் இறைச்சியை உண்டார்கள்.  மேலும், தங்களின் யூதக் கோவில்களில் விளக்கெரிக்கத் தேவையான எண்ணெய் மற்றும் பிற பிரார்த்தனைப் பொருட்களை ரகசியமாக தங்களின் பூசாரிகளுக்குக் கொடுத்தனுப்பினார்கள்.”

எனவே, இந்த யூதர்களைத் தண்டிக்க இன்குசிஷனை உடனடியாக நடைமுறைப்படுத்தவேண்டுமென்ற கூச்சல் நாடெங்கிலும் எழுந்தது.  செவிய்யா [Seville] நகரிலிருந்த செயிண்ட் பால் சர்ச்சைச்சேர்ந்த டொமினிகனான அல்போன்ஸோ-டி-ஒஜெடோ என்கிற மதகுருவும் அவரது உதவியாளனான டியாகோ-டி-மெர்லோ என்கிற இருவரும் இதனைக் குறித்து மிகத் தீவிரம்காட்டினார்கள். ஸ்பெயினின் அரசர் பெர்டினண்டிடம் சென்ற அல்போன்ஸோ, யூதக் குஷ்டரோகம் நாடெங்கும் பீடித்துக் கிடப்பதாகவும் அதனைத் தீர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தினார். அரசவையிலிருந்த பிற கிறிஸ்தவ மதகுருக்களும் அதற்கு ஆதரவாகக் குரலெழுப்பினார்கள்.

அவ்வாறு யூதர்களைத் தண்டிப்பதால் கிடைக்கக்கூடிய ஏராளமான வருமானத்தைக் குறித்து கேள்விப்பட்ட பெர்டினண்ட் அதற்குச் சாதகமாக பதிலளித்தாலும், அரசியான இஸபெல்லா அதனைத் தடுத்தாள்.  இருப்பினும்  மதகுருமார்கள் மூலமாக அவளுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது.  இறுதியில் கேஸ்ட்டில் என்னுமிடத்தில் இன்குசிஷன் செய்வதற்கு வசதியாக ஒரு அலுவலகத்தைத் திறப்பதற்கு அவள் சம்மதித்தாள். அதன்படி 1478-ஆம் வருடம் ஒரு அலுவலகம் திறக்கப்பட்டு, அதில் பணிபுரிய மூன்று மதகுருமார்களும்   நியமிக்கப்பட்டார்கள்.  கிறிஸ்தவர்களல்லாத பேகன்களையும் [pagans], யூதர்களையும் பிடித்து விசாரித்து அவர்களைக் கிறிஸ்தவர்களாக மதம்மாறச் செய்வதற்கான அத்தனை அதிகாரங்களும் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

இருப்பினும், இன்குசிஷனிலால் பிறமதத்தவர்களுக்கு விளையவிருக்கும் இன்னல்களை நன்கு அறிந்தவளான, இளகிய மனம்கொண்ட அரசி இஸபெல்லா, மதகுருமார்களுக்கு உடனடியாக அதிகாரம் அளிப்பதிலிருந்து நாட்களைத் தள்ளிப்போட்டாள். அதற்குப் பதிலாக புதிதாக மதமாற்றம் செய்யப்பட்டவர்களுக்கு கிறிஸ்தவ மதத்தினைக் குறித்து பாடம் எடுக்கவேண்டுமென ஆர்ச் பிஷப் கார்டினல் மண்டோசா என்பவரிடம் வேண்டுகோள் விடுத்தாள் இஸபெல்லா.

தொடர்ச்சியான அழுத்தங்களின் காரணமாக இறுதியில் ஸ்பெயின் அரசனும் அரசியும் இன்குசிஷன் தொடங்குவதற்கான சம்மதத்தை அளித்தார்கள். அதன்படி ஜனவரி 2, 1481 -ஆம் ஆண்டு ஸ்பெயினில் இன்குசிஷன் என்னும் பயங்கரம் துவங்கியது. துவங்கிய நான்கே நாட்களில் பிறமதத்தவர்களான பேகன்கள் நான்குபேர் பிடிக்கப்பட்டு உயிருடன் தீவைத்துக் கொளுத்திக் கொல்லப்பட்டார்கள்.

Image result for jews burning at the stake

1481-ஆம் வருட முழுமையும் ஏறக்குறைய 300 கிறிஸ்தர்களல்லாத பிறமதத்தவர்கள் செவிய்யா (Seville) நகரில் கம்பங்களில் கட்டி வைக்கப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டனர், 80 பேர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். அந்தப் பகுதியின் பிறநகரங்களில் ஏறக்குறைய 2000 பேர்கள் எரித்துக் கொல்லப்பட்டனர். மேலும் 17,000 பேர்களுக்கு வெவ்வேறுவிதமான தண்டனைகள் வழங்கப்பட்டன.

1483-ஆம் வருடம் போப் நான்காம் சிக்ஸ்டஸ், ஒரு புதிய டிரிபியூனலை ஆரம்பித்து அதற்கு தாமஸ்-டி-டார்க்குமெடாவை இன்குசிஷன் ஜெனரலாக நியமித்தார். இன்குசிஷனை துல்லியமாக நடத்தத் தேவையான புதிய சட்ட-திட்டங்களை வகுக்கும் பணி அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவ்வாறு எழுதப்பட்ட புதிய சட்டங்கள் 1484-ஆம் வருடம் நடைமுறைக்கு வந்தன. இந்தச் சட்டங்களைக் குறித்து எழுதப்பட்ட நூல்கள் பலவும் இன்றைக்கும் கிடைக்கின்றன.  H.C. Lea எழுதிய A History of the Inquisition in Spain இதில் ஒரு முக்கியமானதொரு புத்தகம்.

ஸ்பெயினில் வாழ்ந்த பல யூதர்களும், புதிதாகக் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டவர்களும் இந்த பயங்கரங்களிலிருந்து தப்புவதற்காக அருகாமை நாடுகளான ஃப்ரான்ஸ், இத்தாலி மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்குத் தப்பி ஓடினார்கள்.  இருப்பினும், தாங்கள் பிறந்து வளர்ந்த, தங்களது சொத்துக்களும், வியாபாரங்களும், உறவினர்களும் இருக்கும் ஸ்பெயினை விட்டுச் செல்ல பல யூதர்கள் பெரிதும் தயங்கினார்கள். எனவே அம்மாதிரியானவர்கள் ஸ்பெயினிலேயே வாழவிரும்பி, அங்கேயே தங்கினார்கள்.

ஸ்பெயினில் தங்க விழைந்த யூதர்கள், தங்களை அங்கே வாழவிடும்படி அரசன் ஃபெர்டினண்டிற்குக் கோரிக்கை வைத்து அதற்கென 80,000 டக்கெட் (Duckat) பணத்தையும் அவருக்கு அளிப்பதாகக் கூறினார்கள். உள்ளுக்குள் அதற்கு சம்மதிக்காவிட்டாலும், அரசி இஸபெல்லாவின் வற்புறுத்தலுக்குச் செவிசாய்க்கும் ஃபெர்டினண்ட், அந்த யூதர்கள் ஸ்பெயினில் இருக்க சம்மதமளித்தார்.

இதனைக் கேட்டுக் கோபமுற்ற டார்க்குமெடா, அரண்மனைக்குள் நுழைந்து தன் கையிலிருந்து சிலுவையை அரசனின் முன்னிருந்த மேசையில் வீசிவிட்டு, “ஜூதாஸ் கரியோத்து தனது எஜமானனை வெறும் முப்பது வெள்ளிக்கு விற்றான். நீ ஏசுவை 80,000 டக்கெட்டுக்கு விற்க்க ஆசைப்படுகிறாய். இதோ இந்தச் சிலுவையை எடுத்து அதனையும் விற்றுக் கொள்!” எனக் கூறினான். டார்க்குமெடாவின் இந்தத் தோரணையைக் கண்டு அஞ்சிய அரசனும், அரசியும் யூதர்களுக்கு அடைக்கலம் கொடுக்க ஒப்புக்கொண்ட வாக்கிலிருந்து விலகினார்கள்.

இதன்படி, மார்ச் 8, 1492-ஆம் வருடம் ஸ்பெயினில் வாழும் அத்தனை யூதர்களும் அந்த நாட்டை விட்டு உடனடியாக வெளியேற வேண்டுமென உத்தரவிடப்பட்டது.  யூதர்களுக்கு நான்கு மாத காலம் அனுமதிக்கப்பட்டு, அவர்கள் அனைவரும் அந்த நான்கு மாதகாலத்திற்குள் தங்களின் சொத்துக்களையும், வியாபாரங்களையும் விற்றுவிட்டு வெளியேறவேண்டும் என அவகாசம் தரப்பட்டது. அனுமதிக்கப்பட்ட நான்கு மாதங்களுக்கும் மேல் ஸ்பெயினில் தங்குகிற ஒவ்வொரு யூதனுக்கும் கடுமையான தண்டனை அளிக்கப்படும் எனவும், அவனது அத்தனை சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டது.

மேற்படி யூதர்கள் இப்போது கிறிஸ்தவர்களாக மதம்மாறச் சம்மதித்தாலும், புதிய இன்குசிஷன் சட்டங்களின்படி அவர்கள் ஸ்பெயினில் வாழ்வது கடினம் எனவும் அவர்களுக்கு உணர்த்தப்பட்டது. அந்த உத்தரவுகளை மதிக்காமல் நான்கு மாதங்களுக்கும் மேலாக அங்கு தங்கியிருந்த யூதர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அரசாங்க கஜானாவில் சேர்க்கப்பட்டது..  வெளியேற விரும்பியவர்கள் தங்களின் சொத்துக்களை (தங்கம், வெள்ளி, இன்னபிற தடைசெய்யப்பட்ட பொருட்களைத் தவிர்த்து) நிலவழியாகவோ அல்லது கடல்வழியாகவோ கொண்டு செல்லலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது..

புறப்படுவதற்கு அனுமதிக்கப்பட்ட இறுதி நாட்கள் நெருங்க, நெருங்க யூதர்கள் பதற்றமடைந்தார்கள்.  நினைத்ததற்கு மாறாக அவர்களின் சொத்துக்களை விற்பதற்கு மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது.. பெரும் மதிப்புடைய அவர்களின் நிலங்களை ஒன்றிரண்டு துணிகளுக்காக விற்றார்கள். அரண்மனைபோலக் கட்டியிருந்த வீடுகள் ஒன்றிரண்டு கோவேறு கழுதைகளுக்கு பதிலாகக் கொடுக்கப்பட்டன. பெரும் பணக்காரர்களாக வாழ்ந்த யூதர்ள் தங்களின் உடைமைகள் விட்டுவிட்டு அந்தக் கோவேறு கழுதைகளால் சுமக்கமுடிந்த பொருட்களைமட்டும் எடுத்துச் சென்றார்கள்.

ஸ்பெயினில் வாழ்ந்த பல பெரும்பணக்காரர்கள், வியாபாரிகள், பிரபுக்கள் எனப் பலரும் அந்த யூதர்களிடம் பெரும் பணம் கடன்வாங்கியவர்களாக இருந்தார்கள். அந்தக் கடன்களை மீண்டும் தனக்குக் கடன்கொடுத்த யூதனிடம் திருப்பிக் கொடுக்க ஒருவனும் முன்வரவில்லை. எண்ணிப் பார்க்கவே இயலாத நஷ்டத்துடன் அந்த யூதர்கள் மனதில் ஊமை அழுகையுடன் ஸ்பெயினை விட்டுச்செல்லத் தங்களை ஆயத்தப்படுத்திக்கொண்டிருந்தார்கள். இன்னும் சிலரோ தாளமுடியாத கண்ணீருடன் தங்களின் இறந்துபோன பெற்றோர்களைப் புதைத்துவைத்த இடத்தின் மேலிருந்த கற்பலகைகளைத் தோண்டியெடுத்துத் தங்களுடன் கொண்டுசெல்ல முயன்றார்கள். எங்கும் கண்ணீரும், வேதனையும் யூதர்களைச் சூழ்ந்திருந்தது.

வேறு வழியின்றி யூதர்கள் ஸ்பெயினை விட்டு வெளிச்சென்றார்கள்.  எனினும் அவர்கள் அடைக்கலம் புகுந்த நாடுகளிலும் அவர்களுக்கு நிம்மதி இருக்கவில்லை.

மொராக்கோ மற்றும் அல்ஜியர்ஸ் நாடுகளுக்குள் அடைக்கலம் புகுந்த யூதர்களுக்கு அங்கும் துயரமே பரிசாகக் கிடைத்தது. பல யூதர்கள் சிறைபிடிக்கப்பட்டு அடிமைகளாக விற்கப்பட்டார்கள். மேலும் சிலர், உண்ண உணவின்றி பட்டினியால் மரித்தார்கள். இன்னும் சிலர் வயிற்றில் தங்கம் கடத்திச்செல்லுவதாகச் சந்தேகிக்கப்பட்டு, அவர்களின் வயிறுகள் கிழிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்கள். தப்பிப் பிழைத்த சிலர் மீண்டும் ஸ்பெயினுக்கே சென்று கிறிஸ்தவரகளாக மதம்மாறிவாழ ஆசைப்பட்டார்கள்.

இதற்கு நேர்மாறாக துருக்கியில் யூதர்கள் வரவேற்கப்பட்டு குடியமர்த்தப்பட்டார்கள். இருப்பினும் ஸ்பெயினிலிருந்து இடம்பெயர்ந்த யூதர்களில் பெரும்பாலோர் போர்ச்சுக்கலுக்குச் சென்ரார்கள். போர்ச்சுக்கல் அரசன் இரண்டாம் ஜான் அந்த நாட்டுக்கு வரும் ஒவ்வொரு யூதனும் குடியேற்றவரி செலுத்தவேண்டும் என்றும், அவ்வாறு வந்தவர்கள் அனைவரும் எட்டு மாதங்களுக்குப் பிறகு வேறு நாடுகளுக்குச் சென்றுவிடவேண்டும் எனவும் உத்தரவிட்டான். வேறுவழியின்றி அதனை ஏற்றுக் கொள்ளும் யூதர்கள் போர்ச்சுக்கலுக்குள் அடைக்கலம் புகுந்தார்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 கொலைகாரக் கிறிஸ்தவம் – 3

 

இத்தொடரின் மற்ற பகுதிகளை இங்கு வாசிக்கலாம்.

தொடர்ச்சி..

Image result for christian attack on jews in portugal

நயவஞ்சகக் கிறிஸ்தவப் பாதிரியான டார்க்குமெடாவின் தலைமையில் புதிதாக மதம்மாறிய 8,800 கிறிஸ்தவர்கள் கட்டைகளில் கட்டிவைக்கப்பட்டு உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார்கள்.  ஸ்பானிய இன்குசிஷன் விசாரணையின் காரணமாக 96,504 பேர்களுக்கு கடுமையான அபராதங்களும் தண்டனைகளும் விதிக்கப்பட்டன.  இந்தத் தகவல்கள் அனைத்தும் 1790-92 ஆண்டுகாலத்தில் ஸ்பானிஷ் இன்குசிஷன்களுக்குப் பொறுப்பாளராக இருந்த, மாட்ரிட் நகரைச் சார்ந்த டான்-குவான் அன்டோனியோ லோராண்ட்டே என்பவரால் அளிக்கப்பட்டவை. இன்குசிஷன் குறித்த அனைத்து ஆவணங்களையும் ஆராயும் உரிமை அவருக்கு இருந்தது இங்கு நினைவுகூரத்தக்கது.

1808-ஆம் வருடம் இன்குசிஷன் நிறுத்தப்பட்ட பிறகு, ஸ்பானிஷ் நகரங்களிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் அதன் தாக்கத்தைக் குறித்து ஆராய்ந்தவர் அண்டோனியோ லோராண்ட்டே. இன்குசிஷன் விசாரனைக் காலத்தில் நடந்த படுகொலைகள் அனைத்தும் முகத்திரையிட்டு மறைக்கப்பட்டிருக்கையில் அதனை விலக்கி உண்மையை அறிந்துகொள்ள முயன்ற ஒரே எழுத்தாளர் அல்லது ஆய்வாளர் அவர் மட்டும்தான். அன்றைக்கு வாழ்ந்த பிற எழுத்தாளர்கள் எவரும் அதனை ஆராயத் துணியவில்லை. ஏனென்றால் ஏசுவின் பெயரால் யூதர்களுக்கும், பேகன்களுக்கும் நடந்த கொடூரங்கள் அத்தனை பயங்கரமானவை.

ஸ்பெயினிலிருந்து நான்கு மாதகால அவகாசத்தில் விரட்டியடிக்கப்பட்ட யூதர்கள் அதன் அருகாமை நாடான போர்ச்சுகலுக்கு வந்து சேர்ந்தார்கள். ஸ்பெயினும் போர்ச்சுகலும் அருகருகே அமைந்த நாடுகள் என்பது ஒருபுறமிருந்தாலும், ஸ்பெயினில் வாழ்ந்த யூதர்களுக்கும் போர்ச்சுகலில் வாழ்ந்த யூதர்களுக்கும் காலம் காலமாக இருந்த தொடர்பும் இன்னொரு முக்கிய காரணம். எனவே ஸ்பெயினிலிருந்து நாடுகடத்தப்பட்ட யூதர்கள் போர்ச்சுகல் அரசரை அணுகி, பிறநாடுகளுக்குத் தாங்கள் செல்லத் தங்களுக்குச் சரியான வசதிகள் ஏற்படும்வரை அங்கு தங்க அனுமதிக்க வேண்டுமெனக் கோரிக்கைவிடுத்தார்கள். அதற்கென ஏராளமான பணமும் போர்ச்சுகல் அரசனுக்குக் கொடுக்கப்பட்டது.

அந்த நேரத்தில் போர்ச்சுகல் ஆப்பிரிக்கப் போர்களில் ஈடுபட்டிருந்ததால் பொருளாதார ரீதியில் சிறிது பின்தங்கியிருந்தது. எனவே யூதர்கள் அளித்த பணத்தைப் பெற்றுக்கொண்டு அவர்களுக்குத் தற்காலிகப் புகலிடம் கொடுக்க அனுமதி கொடுக்க போர்ச்சுகல் அரசரான இரண்டாம் டி. ஜொவாவோ (D. Joao II)  இசைகிறார். இதனை விரும்பாத அவரது அரசசபை பிரபுக்களும் அப்போது நாட்டில் நிலவும் பொருளாதார சிக்கல்கள் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் இந்த யோசனைக்கு அரைமனதுடன் இசைந்தார்கள். இருப்பினும் அரசசபையில் இருந்த சில கிறிஸ்தவ அடிப்படைவாதிகள் அரசரின் இந்த யோசனையை எதிர்த்தார்கள்.

எனவே, அரசர் இந்த யோசனையை உடனடியாகக் கைவிட்டு, யூதர்களை போர்ச்சுகலிலிருந்து விரட்டியடிக்க வேண்டும் அல்லது அப்படியே அவர்களை அனுமதித்தாலும் அவர்களின் குழந்தைகளை கிறிஸ்தவர்களாக ஞானஸ்னானம் செய்விக்க நிபந்தனை விதிக்கவேண்டும் எனவும் கோரினார்கள். எனினும், அரசர் ஜொவாவோ அந்த யோசனையை நிராகரித்தார். யூதர்கள் போர்ச்சுகலில் மூன்று மாத காலம் தங்கிக் கொள்ள அனுமதி அளிப்பதாகவும், அதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை வரியாகக் கொடுக்க வேண்டும் எனவும், அவர்கள் அந்த நாட்டை விட்டுச்செல்வதற்குத் தேவையான கப்பல்களையும் அவர்களே ஏற்பாடுசெய்து கொள்ளவேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

இந்த நிபந்தனைகளை ஏற்று ஏறக்குறயை 1,50.000 யூதர்கள் போர்ச்சுகலுக்குள் நுழைகிறார்கள். இவர்களுடன் வந்த 600 பெரும் பணக்கார யூதர்கள் போர்ச்சுகல் குடியுரிமையைப் பெற ஒவ்வொருவரும் 6,00,000 எஸ்க்யூடோக்களை (போர்ச்சுகல் பணம்) அளித்து குடியுரிமை பெற்றார்கள். அதுபோலவே ஒருசில கலைஞர்களுக்கும் குடியுரிமை வழங்கப்பட்டது.

துரதிருஷ்டவசமாக அந்தக் காலகட்டத்தில் ஸ்பெயின் ப்ளேக் நோயின் பிடியில் சிக்கியிருந்தது. ஸ்பெயினை விட்டுச் சென்ற யூதர்கள் ப்ளேக் கிருமிகளை போர்ச்சுக்கலுக்குள்ளும் கொண்டுசென்றார்கள். எனவே ப்ளேக் நோய் போர்ச்சுகல் குடிமகனையும் தொற்ற ஆரம்பித்ததால் அங்கு குடியேறிய யூதர்கள் மீது பெரும் வெறுப்பு ஆரம்பமாகியது. அவர்கள் ஸ்பெயினிலிருந்து வந்த யூதர்களைத் தாக்க ஆரம்பித்தார்கள். எனவே வேறுவழியில்லாத போர்ச்சுகல் அரசன் இரண்டாம் ஜோவொவோ அந்த யூதர்களை அனுமதிக்கப்பட்ட காலமான எட்டு மாதங்களுக்கு முன்பே அங்கிருந்து வெளியேறும்படி உத்தரவிட்டான். அவர்கள் செல்வதற்குத் தேவையான கப்பல்களையும் மனிதாபிமான அடிப்படையில் தானே ஏற்பாடும் செய்து கொடுத்தான்.

ஆனால் அவர்களை ஏற்றிச் சென்ற கப்பல்களின் கேப்டன்கள் அந்த யூதர்களின் கையறு நிலையைப் பயன்படுத்தி அவர்களைக் கொள்ளையடித்தபின்னர் பெயரறியாத ஆப்பிரிக்க நாடுகளின் கரைகளில் அவர்களை இறக்கிவிட்டுச் சென்றார்கள். அங்கு உண்ண உணவின்றி பல யூதர்கள் பட்டினியால் மாண்டார்கள். தப்பியவர்களை முஸ்லிம்கள் அடிமைகளாகப் பிடித்துச் சென்றனர்.

யூதர்கள் தங்களிடமிருந்த தங்கத்தைப் பொடியாக்கி அதனை விழுங்கியதாக ஸ்பெயினில் பரவிய வதந்தி ஆப்பிரிக்க நாடுகளையும் அடைந்ததால் பல யூதர்கள் பிடிக்கப்பட்டு அவர்களின் வயிறுகள் கிழிக்கப்பட்டன. இதன் காரணமாக ஆப்பிரிக்காவை அடைந்த பல நூற்றுக்கணக்கான யூதர்கள் கொலையுண்டனர்.

பிறநாடுகளில் நுழைய விதிக்கப்பட்ட வரியைக் கொடுக்கவியலாத பல யூதர்கள் அந்த நாடுகளில் திருட்டுத்தனமாக நுழையை முற்பட்டார்கள். அவ்வாறானவர்கள் பிடிக்கப்பட்டு அடிமைகளாக்கப்பட்டார்கள், அல்லது அடிமைச் சந்தைகளில் விற்கப்பட்டார்கள். போர்ச்சுகல் அரசன் இரண்டாம் ஜெவொவாவின் ஆணைப்படி இந்த பரிதாபத்திற்குரிய யூதர்களின் 8 முதல் 10 வயதுடைய குழந்தைகள் அவர்களின் பெற்றோர்களிடமிருந்து பிரிக்கப்பட்டு, போர்ச்சுகல் காலனியான செயிண்ட் தாமஸ் தீவுக்கு அனுப்பிவைக்கப்பட்டார்கள்.

போர்ச்சுகல் அரசனின் இந்த நடவடிக்கைகள் போர்ச்சுகலின் குடிமக்களாக வாழ்ந்த யூதர்களிடையே பெரும் பதற்றத்தை உண்டுபண்ணியது. தங்களின் புத்தி சாதுர்யத்தாலும், கல்வியாலும், கடின உழைப்பாலும் முன்னேறிய போர்ச்சுகல் யூதர்களுக்கு அங்கு பெரும் மதிப்பும், மரியாதையும் நிலவியது. பெரும் நிலச்சுவான்தார்களாக, விவசாயம் புரிபவர்களாக இருந்த யூதர்கள் போர்ச்சுகலில் பெரும் ஆளுமைசெலுத்தினார்கள்.

எனினும் தங்களின் யூதப் பின்னணி காரணமாக தங்களின் மீது எந்தநேரமும் கிறிஸ்தவர்கள் தொல்லைசெய்யலாம் என்கிற அச்சத்தின் காரணமாக அவர்கள் தங்களைப் பெருமளவு வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்தனர். ஏனென்றால் கிறிஸ்தவ மதவெறி எந்தநேரமும் தங்களின் வழிபாட்டிடங்களைப் பிடுங்கிக் கொள்ளலாம், தங்களின் மதத்தைப் பின்பற்ற அனுமதி மறுக்கலாம் என அவர்கள் நன்கு அறிந்திருந்தார்கள். அதனையும்விட, யூதர்கள் தங்களின் மதத்தைப் பின்பற்ற, ஒரு தனிப்பட்ட வரியும் அவர்கள் மீது விதிக்கப்பட்டிருந்தது (இந்த வரியே பின்னர் இந்தியாவின் கோவாவில் ஹிந்துக்களின் மீது அதனை ஆண்ட போர்ச்சுகல் ஆட்சியாளர்களால் விதிக்கப்பட முன்னோடியாக இருந்தது).

ஒரு போர்ச்சுகல் யூதனின் மகன் கிறிஸ்தவனாக மதம்மாறினால் அவனது தகப்பனது சொத்துக்கள் அனைத்தும் அந்தக் கிறிஸ்தவ மகனுக்கே சென்றுவிடும் எனச் சட்டம் இருந்தது. அப்படி மதம்மாறியவனின் பெற்றோர்கள் இறந்துவிட்டதாக அனுமானிக்கப்பட்டு அவர்களின் வீடும், நிலமும், அசையும் அசையாத சொத்துக்கள் அனைத்திலும் மூன்றில் இரண்டு பங்கு அந்த மகனுக்கே உரிமையாகும்.  இந்த நடவடிக்கை யூதர்கள் கிறிஸ்தவர்களாக மதம்மாறுவதற்குப் பெரிதும் உதவியது. அதனையும்விட யூதர்கள் நகர்ப்புறங்களிலிருந்து தள்ளியிருந்த இடங்களில் மட்டுமே குடியிருக்க அனுமதிக்கப்பட்டார்கள். அவர்களின்கீழ் வேலைசெய்ய எந்தக் கிறிஸ்தவனும் அனுமதிக்கப்படவில்லை. பட்டுத் துணிகள் அணியவும், நகைகளை அணியவும், குதிரைகளின்மீது ஏறி சவாரிசெய்யவும் போர்ச்சுகல் யூதர்கள் அனுமதிக்கப்படவில்லை. எனினும், அவர்கள் தங்களின் ஆலயங்களில் பிறர் அறியாமல் தங்களின் மதச் சடங்குகளை பின்பற்ற அனுமதிக்கப்பட்டிருந்தார்கள்.

போர்ச்சுகல் அரசனான இரண்டாம் ஜொவாவோ, ஸ்பெயினிலிருந்து வந்த யூதர்களைக் கடுமையாக நடத்தினாலும், தனது நாட்டில் கிறிஸ்தவ அடிப்படைவாதமான கொடூர இன்குசிஷன் விசாரணைகளை அனுமதிக்க முற்றிலும் மறுத்துவிட்டார். தனது நாட்டிற்கு யூதர்களால் விளையும் நன்மைகளையும், அவர்களை விரட்டியடித்தால் விளையும் தீமைகளையும் ஜொவாவோ மிக நன்றான உணர்ந்திருந்தார். எனினும் சாதாரண கிறிஸ்தவக் குடிமகன் யூதர்கள்மீது சந்தேகமும், தீராத வெறுப்பும் கொண்டிருந்தான். இதற்கு மத அடிப்படை ஒரு காரணமாக இருந்தாலும், வசதிகளுடன் வாழும் யூதர்களும், கடன்காரர்களிடம் கடனைத் திரும்பப் பெற அவர்கள் எடுக்கும் கடுமையான நடவடிக்கைகளும் இன்னொருபுறம் போர்ச்சுகல் கிறிஸ்தவ குடிமகனைக் கோபம்கொள்ளச் செய்திருந்தன.

இருப்பினும் ஸ்பெயினில் யூதர்களுக்கு நிகழ்ந்த பெரும் கொடுமைகளைக் கேள்விப்பட்டிருந்த போர்ச்சுகல் கிறிஸ்தவர்கள் அவர்கள்மீது சிறிது பரிதாபமும் கொண்டிருந்தார்கள் என்பதில் சந்தேகமில்லை. இந்தச் சூழ்நிலையில் போர்ச்சுகல் அரசன் இரண்டாம் ஜொவோவோ 1495-ஆம் ஆண்டு மரணமடைந்தான். அதற்கு நான்கு வருடங்களுக்கு முன்பு அவனது ஒரே மகனான டி. அஃபோன்ஸோ குதிரையிலிருந்து தவறி விழுந்து மரணமடைந்திருந்தான். எனவே அரசன் ஜெவோவோவின் மருமகனான டி. மானுவெல் என்பவன் போர்ச்சுக்கலுக்கு அரசனாக முடிசூட்டப்பட்டான்.

புதிதாக பதவியேற்ற அரசன் மானுவெல் யூதர்கள்மீது சிறிதுகாலம் வரைக்கும் பரிதாபம் கொண்டவனாக, அவர்களை அதிகம் துன்புறுத்தாதவனாக இருந்தான். எனினும், அவன் மறைந்த அரசனின் மனைவியான இஸபெல்லாவிடம் (இவன் ஸ்பானிஷ் அரசர் ஃபெர்டினெண்ட் மற்றும் அரசி இஸபெல்லாவின் மூத்த மகள்) காதல் கொண்டு அவளைத் திருமணம் செய்துகொள்ள ஆவலுடையவனாக இருந்தான். இந்த இஸபெல்லா அவளது அன்னையைப் போலில்லாமல் யூதர்களின்மீது பெருவெறுப்பும், மதவெறியும் கொண்டவளாக இருந்தாள். மானுவெல் தன்னை மணந்துகொள்ள வேண்டுமென்றால் தனது பெற்றோர்களைப் போலவே யூதர்களின்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் நிபந்தனை விதித்தாள்.

இந்த நிபந்தனைக்குச் சம்மதிக்கும் மானுவெல், இஸபெல்லாவைத் திருமணம் செய்து கொண்டான். இதனைத் தொடர்ந்து ஸ்பெயினிலிருந்து போர்ச்சுகல்லுக்கு வந்து தங்கியிருக்கும் அத்தனை யூதர்களும் போர்ச்சுகல்லை விட்டு உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவும் மானுவெல்-இஸபெல்லாவின் திருமண ஒப்பந்தத்தில் ஒரு ஷரத்தாக 1497-ஆம் வருடம் இணக்கப்பட்டு, கையொப்பமிடப்பட்டது.

போர்ச்சுகலில் இருக்கும் யூதர்கள் அனைவரும் ஒரு மாதகாலத்திற்குள் வெளியேற்றப்பட வேண்டும் எனத் தெரிவிக்கும் அந்த ஒப்பந்தைப் படித்த பின்னரே இஸெபெல்லா மானுவலைத் திருமணம் செய்து கொள்ளச் சம்மதம் தெரிவித்தாள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கொலைகாரக் கிறிஸ்தவம் – 4

 

இத்தொடரின் மற்ற பகுதிகளை இங்கு வாசிக்கலாம்.

தொடர்ச்சி..

ஸ்பெயினில் வாழ்ந்த யூதர்கள்மீது ஆரம்பத்தில் இரக்கப்பட்டுப் பின்னர் அவர்களை ஸ்பெயினிலிருந்து விரட்டியத்தவர்களான ஸ்பெயின் அரசர் ஃபெர்டினெண்டும் அவரது மனைவி இஸபெல்லாவும் போர்ச்சுகல்லின் புதிய அரசனான மெனுவலை மணந்த அவர்களது மகளின் கோரிக்கையை இன்னும் ஒருபடி மேலே எடுத்துச்சென்றார்கள். அதன்படி ஸ்பெயினிலிருந்து போர்ச்சுகலில் குடியேறிய யூதர்களுடன் அங்கேயே காலம் காலமாக வசித்த, அந்த நாட்டுக் குடிமக்களான, யூதர்களையும் அங்கிருந்து விரட்டியடிக்கவேண்டும் எனக் கோரிக்கவிடுத்தார்கள். அந்த அளவிற்குக் கிறிஸ்தவ அடிப்படைவாதம் அவர்களின் கண்ணை மறைத்தது.

எனவே அரசன் மேனுவல் அந்தக் கோரிக்கையை ஏற்று, 1446-ஆம் வருடம் போர்ச்சுகலில் குடியிருக்கும் அத்தனை யூதர்களும் அங்கிருந்து உடனடியாக வெளியேறவேண்டும், அல்லது கிறிஸ்தவ மதத்தைத் தழுவவேண்டும் என உத்தரவிட்டான். அந்த உத்தரவை மீறுபவர்கள் உடனடியாகக் கொல்லப்படுவார்கள் எனவும், அவர்கள் சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. நாட்டை விட்டுச்செல்ல விரும்பும் யூதர்கள் அனைவரும் தங்களின் உடமைகளைத் தங்களுடன் எடுத்துச்செல்லலாம் எனவும், அதற்குத் தேவையான வாகனப் போக்குவரத்துச் சாதனங்களும் அவர்களுக்கு அளிக்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டது.

மேற்படி உத்தரவு போர்ச்சுகலில் வாழ்ந்த முஸ்லிம்களுக்கும் பொருந்தும் என ஆரம்பத்தில் கூறப்பட்டாலும், பிற இஸ்லாமிய நாடுகளின் கோபத்தை அது சம்பாதிக்கும் என்பதால், பின்னர் கைவிடப்பட்டதாகவும் தெரிகிறது.  மேனுவலின் உத்தரவைக் கேட்ட யூதர்களில் பெரும்பகுதியினர் கிறிஸ்தவர்களாக மதம்மாறுவதனை விரும்பவில்லை. அதற்கு மாறாக அந்த நாட்டைவிட்டுச் சென்றுவிடவே விரும்பினர்.  

போர்ச்சுகல்லைவிட்டுச் செல்லவிரும்பும் யூதர்களின் 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் அனைவரும் அவர்களின் பெற்றோர்களிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பிடுங்கிச் செல்லப்பட்டு கிறிஸ்தவர்களாக வளர்க்கப்படுவார்கள் என, தொடர்ந்து விதிக்கப்பட்ட இன்னொரு உத்தரவு அறிவித்தது. இந்த உத்தரவுகள் செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கையில், போர்ச்சுகலிலிருந்து தப்பிச்செல்ல நினைக்கும் யூதர்களைக் கசக்கிப் பிழியும் வெவ்வேறு அரசு உத்தரவுகளும் தொடர்ந்து வெளியிடப்பட்டன.

முதன் முதலாக வெளியிடப்பட்ட அரசு உத்தரவானது, போர்ச்சுகலைவிட்டுச் செல்லநினைக்கும் யூதர்கள் அனைவரும் ஒபார்ட்டோ, லிஸ்பன் மற்றும் அல்கார்வே துறைமுகங்களை உபயோகித்துக் கொள்ளலாம் என அறிவித்தது. பின்னர், அனைவரும் லிஸ்பன் துறைமுகம் வழியாக மட்டுமே நாட்டைவிட்டுச் செல்லவேண்டும் என அது மாற்றம் செய்யப்பட்டது. மேலும் துறைமுகங்களில் கப்பல்கள் கிடைப்பதற்கு மிகுந்த சிரமமேற்பட்டதால் அவர்கள் தங்களுடன் ஆடைகளையும் பிற அத்தியாவசியச் சாதனங்களையும் மட்டுமெ எடுத்துச் செல்லப்படவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த இரக்கமற்ற செயல்களைப் பற்றிக் குறிப்பிடும் எ. ஹெர்குலானோ என்னும் வரலாற்றாசிரியர், சிறிதும் மனிதாபமற்ற, குக்ரூரமான இந்த உத்தரவுகள் செயல்படுத்தப்படுகையில் ஏற்படும் வேதனைகளை எவரும் எளிதில் புரிந்து கொள்ளலாம். யூதத் தாய்மார்களின் கைகளிலிலிருந்து வலுக்கட்டாயமாகப் பிடுங்கிச் செல்லப்பட்ட குழந்தைகளில் அழுகுரலும், அந்த யூதத் தாய்மார்களின் ஓலமும் போர்ச்சுகல் எங்கும் ஒலிக்க ஆரம்பித்தது. அதனைத் தடுக்க முயன்ற அந்தக் குழந்தைகளின் தந்தையர்களும், அன்னையர்களும் மிகக் கடுமையான முறையில் தாக்கப்பட்டார்கள். தங்களின் குழந்தைகளை பிரிவதற்கு மறுத்த யூத அன்னையர்களும், தந்தையர்களும் அந்தக் குழந்தைகளைத் தங்களின் கைகளினால் கழுத்தை நெருக்கிக் கொன்றார்கள். கிணற்றில் தூக்கியெறிந்து அவர்களை மூழ்கடித்துக் கொன்றார்கள், என விளக்குகிறார்.

இந்தியாவின் கோவாவில் போர்ச்சுக்கீசியர்கள் ஆண்ட பகுதியில் ஹிந்துக்களுக்கு இதே நிலைமை ஏற்பட்டது என்பதினையும் இங்கு நாம் நினைவில்கொள்ளவேண்டும்.

போர்ச்சுகலில் முதலில் 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் மட்டுமே அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டு அவர்கள் கிறிஸ்தவர்களாக வளர்க்கப்படவேண்டும் என்கிற உத்தரவு மாற்றப்பட்டு, பின்னர் 20 வயதிற்கு உட்பட்ட யூதக் குழந்தைகள் அனைவரும் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படவேண்டும் என மாற்றம் செய்யப்பட்டது.

யூதர்கள் போர்ச்சுகலை விட்டுச்செல்லக் குறிப்பிட்ட காலகட்டம் நெருங்கிவருகையில், அங்கு செல்வாக்குடன் வாழ்ந்து வந்த யூதக் குடும்பங்கள் தாங்கள் அங்கிருந்து வேறு நாடுகளுக்குத் செல்வதற்குத் தேவையான கப்பல்களை அரசாங்கம் தரவேண்டுமென அரசன் மேனுவலிடம் வேண்டுகோள் விடுத்தார்கள். அவ்வாறு இல்லாத கட்டத்தில் தங்களுக்குத் தேவையான கப்பல்களைத் தாங்களே பணம் கொடுத்து ஏற்பாடு செய்து கொள்வதாகவும் கூறினார்கள். அதற்குச் செவி சாய்க்கும் அரசன் மேனுவல் அவர்கள் அனைவரையும் லிஸ்பன் நகரில் வந்து கூடுமாறும் அங்கு அவர்களுக்குத் தேவையான பயண ஏற்பாடுகள் செய்து தரப்படும் என்றும் உறுதியளிக்கிறான்.

இதனை நம்பிய ஏறக்குறைய 20,000 யூதர்கள் லிஸ்பனிலிருக்கும் எஸ்டோஸ் என்கிற இடத்தில் வந்து கூடினார்கள். ஆனால் அங்கு அவர்களுக்கு மிகவும் கொடூரமான விதி காத்துக்கொண்டிருந்தது.  அவர்களைச் சூழும் போர்ச்சுகல் அதிகாரிகள் அங்கிருந்த அனைத்து யூதக் குழந்தைகளையும் ஆண், பெண் வயது வித்தியாசமின்றி கட்டாயமாகப் பிடித்துக்கொண்டு சென்று அவரகளைக் கத்தோலிக்கர்களாக ஞானஸ்னானம்செய்வித்து, கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்தார்கள்.

இதனைக் குறித்துக் எ. ஹெர்குலானோ இவ்வாறு கூறுகிறார்: சிறுவர், சிறுமிகளையும் மற்றும் இருபதுவயதிற்கு உட்பட்டவர்களையும் கட்டாயமாக கிறிஸ்தவரகளாக மதமாற்றம்செய்ததுடன் இது நின்றுவிடவில்லை. அதனைத் தொடர்ந்து வயதுவந்த ஆண், பெண், முதியோர்களும் இவ்வாறு கட்டயாமாக மதமாற்றம் செய்யப்பட்டார்கள். வரமறுத்தவர்களின் தலைமுடியைப் பிடித்துத் தெருக்களில் இழுத்துச்சென்று அவர்களுக்குச் சர்ச்களில் ஞானஸ்நானம் செய்துவைக்கப்பட்டது. நாட்டைவிட்டு வெளியேறமுடியாத நலைக்குத் தள்ளப்பட்ட பெரும்பாலான இந்த பரிதாபத்திற்குரிய யூதர்கள் கண்ணீர்விட்டுக் கதறி அழுதார்கள்.

தங்களைப் பாதுகாக்க வேண்டிய அரசாங்கமே தங்களுக்கு எதிராக இந்தக் கொடுமைகளைச் செய்ததால், தங்களின் துயரங்களிலிருந்து எவரும் பாதுகாக்க இல்லாத நிலைமையை எதிர்கொள்ள நேரிட்டது. மதம்மாற மறுத்தால் மரணம் என்கிற நிலைக்குத் தள்ளப்பட்ட யூதர்களில் பெருமளவினர் கிறிஸ்தவர்களாக மதம்மாறச் சம்மதித்தார்கள். இருப்பினும் அதனை எதிர்த்துநின்ற சிலர் உடனடியாகக் கைதுசெய்யப்பட்டுக் கொலைசெய்யப்பட்டார்கள். இன்னும் சிலர் ஆப்பிரிக்காவிற்கு நாடுகடத்தப்பட்டார்கள்

இப்படிப்பட்ட மனிதாபிமானமற்ற செயல்கள் கிறிஸ்தவத்தின் கோரமுகத்தின் அடையாளம் என்றாலும், நடந்த நிகழ்வுகள் அரசன் மேனுவலின் மனதில் பெரும் ரணத்தை உண்டாக்கின. புதிதாக மதமாற்றம் செய்யப்பட்டவர்களைச் சிறிது மென்மையாக நடத்தும் உத்தரவை மே 30, 1497-ல் பிறப்பித்தான், மேனுவல். அதன்படி புதிதாக மதமாற்றம் செய்யப்பட்டவர்கள் புதிய மதத்தைக் குறித்து அறிந்துகொள்ள இருபதாண்டுகால அவகாசம் தரப்பட்டது. அந்த இருபதாண்டுகாலத்திற்குப் பின்னரும் தங்களின் மதத்தைத் தொடர்ந்து வழிபடும் யூதர்களின் சொத்துக்கள் பறிமுதல்செய்யப்பட்டு அரசாங்க கஜானாவில் சேர்க்கப்படவேண்டும் எனவும் அந்த உத்தரவு விளக்கியது. இனிமேலும் யூதர்களைக் கொடுமைசெய்யும் சட்டங்களைத் தான் கொண்டுவரப் போவதில்லை எனவும் உறுதியளித்தான் மேனுவல்.

எனினும், புதிதாக மதமாற்றம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் மிகவும் அதிருப்தியான மனநிலையுடன் வாழ்ந்துவந்தார்கள். வெளிப்புறம் தங்களின்மீது திணிக்கப்பட்ட கிறிஸ்தவச் சடங்குகளைப் பின்பற்றுவதுபோல நடித்தாலும் அவர்களின் வீடுகளில் தங்களின் பூர்விக மதமான யூதமதத்தின் சடங்குகளை ரகசியமாகப் பின்பற்றியே வந்தார்கள். இஸ்ரேலின் யூதக்கடவுள் ஏன் தங்களைக் கைவிட்டுவிட்டது என ஏங்கி அழுதார்கள். இவ்வாறு கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டவர்களைப் போர்ச்சுக்கீசிய கிறிஸ்தவர்கள் சந்தேகத்துடனேயே பார்த்தார்கள். அவர்களின்மீது காட்டுமிராண்டித்தனமான வன்முறைகளைப் பிரயோகித்தார்கள்.

எனவே, அவர்களைத் தொடர்ந்து கண்காணிக்கவும், தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவும் கடுமையான விசாரணைகளை (இன்குசிஷன்) கொண்டுவரவேண்டும் எனவும் போர்ச்சுக்கீசிய கிறிஸ்தவர்கள் ஆவலுடன் இருந்தார்கள். இதனை உணர்ந்து கொண்ட பல புதிதாக மதம்மாறிய (மாற்றப்பட்ட) கிறிஸ்தவர்கள், அங்கிருந்து தப்பி அருகாமை நாடுகளான இத்தாலி, ஃப்ளாண்டர்ஸ் போன்ற நாடுகளுக்குச் செல்லத் தலைப்பட்டார்கள். எனவே, அவர்கள் போர்ச்சுகலில் இருக்கும் தங்களின் அசையாச் சொத்துக்களை ரகசியமாக விற்றுப் பணமாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார்கள்.

மதம்மாற்றப்பட்ட கிறிஸ்தவர்கள், ரகசியமாக சொத்துக்களை விற்பதனைத் தடுக்க போர்ச்சுக்கீசிய அரசாங்கம் வன்முறை நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்தது. போர்ச்சுகலின் மதம்மாற்றப்பட்ட கிறிஸ்தவர்களின் சொத்துக்களை வெளிநாட்டினர் வாங்கக்கூடாது, அவர்களுக்குப் பணம் தரக்கூடாது எனவும், அவ்வாறு தங்களை அணுகுகிற மதம்மாற்றப்பட்ட கிறிஸ்தவனைக் குறித்து உடனடியாக எட்டு நாட்களுக்குள் அரசாங்கத்திற்குத் தெரியப்படுத்தவேண்டும் எனவும் ஒரு உத்தரவு ஏப்ரல் 22, 1499-ஆம் வருடம் பிறப்பிக்கப்பட்டது. அதனால், கிறிஸ்தவனாக மதம் மாற்றப்பட்ட யூதன் தன்னுடைய மனைவி, மக்களுடன் வெளி நாடுகளுக்குப் போவதும் தடை செய்யப்பட்டதோடுமட்டுமன்றி, அரசனின் தனிப்பட்ட உத்தரவில்லாமல் வெளிநாடு செல்வதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது.

இதனை ஏற்கமறுத்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டதுடன், அவர்களின் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 கொலைகாரக் கிறிஸ்தவம் – 5

 

இத்தொடரின் மற்ற பகுதிகளை இங்கு வாசிக்கலாம்.

தொடர்ச்சி…

இதற்கிடையே 1506-ஆம் வருடம் போர்ச்சுகலைப் பெரும் பஞ்சம் தாக்கியது. அதனுடன் பிளேக் நோயும் சேர்ந்து கொண்டது. போர்ச்சுகல் குடிமக்கள், பரமண்டலத்தில் இருக்கும் பிதாவின் கருணையை வேண்டி அங்கங்கிருந்த சர்ச்சுகளில் வந்து குவிந்தார்கள். லிஸ்பனில் இருந்த போம்-ஜீசஸ் சர்ச்சின் மேடையில் ஒரு பேழையில் மூடிவைக்கப்பட்டிருந்த சிலுவையின்மீது ஒரு விசித்திரமான விளக்கொளி பரவியது. அது கடவுளின் அற்புதம் என்று கருதிய கத்தோலிக்கர்கள், பெரும் பரவசத்திற்குள்ளானார்கள்.

பரமண்டலத்து பிதாவின் அற்புதம் போர்ச்சுகலெங்கும் பரவியது. ஆயிரக்கணக்கான கத்தோலிக்கர்கள் அந்தச் சர்ச்சிற்கு வந்து பிதாவின் அற்புத ஓளியைக் காணத் துடித்தார்கள். எனினும் அந்தக் கூட்டத்தில் இந்த “அற்புத” ஒளியைக் குறித்த சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. அவர்களில் புதிதாக மதமாற்றம் செய்யப்பட்ட ஒருவன் இந்த அற்புதம் போலித்தனமானது எனச் சொல்ல, கடவுளுக்கு எதிராகச் சொல்லப்பட்ட இந்த வார்த்தைகளைக் கேட்ட நம்பிக்கையாளர்கள் கூட்டம் அவனைப் பிடித்து தீவைத்து எரித்துத் தனது கோபத்தைத் தீர்த்துக்கொண்டது.

மேற்படி ஒளிவீசிய சிலுவையைக் கையில் தூக்கிக்கொண்டு சர்ச்சிலிருந்து வெளிவந்த இரண்டு கத்தோலிக்க சாமியார்கள், “பரமண்டலத்துப் பிதாவுக்கு எதிராகப் பேசியவர்களை விடாதீர்கள்! பரமண்டலத்துப் பிதாவுக்கு எதிராகப் பேசியவர்களை விடாதீர்கள்!” எனக் கூக்குரலிட்டார்கள். அதனைக் கேட்டு வெறிகொண்ட கூட்டம், கண்ணில் தென்பட்ட புதிதாக மதமாற்றம் செய்யப்பட்ட மூன்று கிறிஸ்தவர்களைப் பிடித்துத் நெருப்பில் தூக்கியெறிந்து கொன்றார்கள். அன்றுமட்டும் லிஸ்பனில் 800-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள்.

அதற்கு மறுநாளும் போர்ச்சுகலெங்கும் வன்முறை தொடர்ந்து, ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். சில பழைய கிறிஸ்தவர்களையும் புதிய கிறிஸ்தவர்கள் எனத் தவறுதலாக எண்ணி, அவர்களையும் கிறிஸ்தவ மதவெறிக் கும்பல் படுகொலைசெய்தது. புதிய கிறிஸ்தவர்கள் என்று அறியப்பட்டவர்களின் வீட்டுக் கதவுகளை உடைத்துக்கொண்டு உட்புகுந்த கிறிஸ்தவ மதவெறியர்கள் அங்கிருந்த ஆண், பெண், குழந்தைகள் என அனைவரையும் இரக்கமின்றி படுகொலை செய்தார்கள். அன்னையரின் மார்பில் பால் குடித்துக்கொண்டிருந்த மழலைகளைப் பிடுங்கி, பாறைகளில் அவர்களின் தலைகளை சுவற்றில் மோதிக் கொன்றார்கள்.

காணுமிடமெங்கும் கொலையும், கொள்ளைகளும் தலைவிரித்தாடின. ஆலயங்களுக்குள் பாதுகாப்பாகச் சென்று ஒளிந்தவர்களும் விடப்படவில்லை. அவர்களும் அங்குவைத்தே கொல்லப்பட்டார்கள். கன்னிகளும், திருமணமான பெண்களும் அங்கிருந்து இழுத்துச் செல்லப்பட்டுக் கற்பழிக்கப்பட்ட பின்னர், நெருப்பில் தூக்கிவீசிக் கொல்லப்பட்டார்கள். தொடர்ந்து பலநாட்கள் நிகழ்ந்த இந்தப் படுகொலைகளில் குறைந்தபட்சம் 2000 பேர்களுக்கும் மேலானவர்கள் படுகொலையானார்கள். பின்னர் போர்ச்சுகல் அரசாங்கத் தலையீட்டினால் இந்தக் கலவரங்கள் அடக்கப்பட்டன.

கொலைகாரக் கும்பல்களைத் தூண்டிவிட்ட இரண்டு பாதிரிகளும் கைது செய்யப்பட்டுத் தூக்கிலிடப்பட்டார்கள். அவர்களின் உடல்கள் எரிக்கப்பட்டன. லிஸ்பன் நகரின் சர்ச்சுகளில் இருந்த டொமினிகன் பாதிரிகள் நீக்கப்பட்டு, அவர்களுக்குப் பதிலாக சிறிது நடுநிலையுடன் செயல்படுபவர்களிடம் அச்சர்ச்சுகள் ஒப்படைக்கப்பட்டன. கலவரங்களை நடத்தியவர்களின்மீது கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.

இந்தக் கலவரங்களினால் நிகழ்ந்த பயங்கரங்களைக் கண்ட போர்சுக்கீசிய அரசன் டி. மேனுவல் மிகவும் வருந்தினான். புதிதாக மதமாற்றம் செய்யப்பட்டவர்கள் கிறிஸ்தவ மதத்தைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கான கால அளவு 1526-ஆம் ஆண்டுவரையிலும் நீடிக்கப்பட்டது. புதிதாக மதமாற்றம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் தங்களின் சொத்துக்களை விற்பதற்கும், வெளிநாட்டில் புகலிடம் தேடுவதற்குமான தடைகள் முழுவதும் நீக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து 1521-ஆம் வருடம் மேனுவல் இறக்கும் வரையில் போர்ச்சுகல்லில் புதிதாக மதமாற்றம் செய்யப்பட்டவர்கள் அமைதியான வாழ்க்கை வாழ்ந்தார்கள்.

மெனுவலின் மரணத்திற்குப் பிறகு அவனது மகனான மூன்றாம் டி. ஜோவவ் (Joao III) அரியணை ஏறுகிறான். மெனுவலைப் போலல்லாது, அவனது மகனான ஜோவவ் யூதர்களுக்கு எதிரான வெறுப்புகொண்டவன். தனது பதவியின் தொடக்ககாலத்தில் தனது தகப்பனான மேனுவல் புதிதாக மதமாற்றம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு வழங்கிய சலுகைகளைத் தொடர்ந்து அளிக்கப்போவதாக உறுதியளித்தான் ஜோவவ். இருப்பினும் தனது அந்த உறுதிமொழிகளிலிருந்து பின்வாங்குவதற்கான அத்தனை வழிகளையும் அவன் தொடர்ந்து தேடிக்கொண்டிருந்தான்.

லிஸ்பனில் வாழும் புதிதாக மதமாற்றம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களின் நடவடிக்கைகளை ரகசியமாகக் கண்காணித்துத் தனக்குக் தகவல் அனுப்புமாறு 1524-ஆம் வருடம் ஜார்ஜ் தெமுடோ என்பவனை நியமித்தான், ஜோவவ். அவர்கள் இன்னமும் தொடர்ந்து தங்களின் பூர்வமதமான யூதமதத்தையே பின்பற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்கிற சந்தேகம் அவனுக்குள் இருந்தது. லிஸ்பனிலிருக்கும் சர்ச்சுகளில் இருக்கும் சாமியார்களிடம் விசாரித்தபின்னர் புதிதாக மதம்மாறிய கிறிஸ்தவர்கள் இன்னமும் தங்களின் பழைய வழக்கங்களைத் தொடர்வதாக ஜார்ஜ் தெமுடோ ஜோவவ்விற்குத் தெரிவித்தான்.

பின்னர் ஜோவவ், என்ரிக்கே ந்யூனஸ் என்பவனிடம் இதே வேலையை ஒப்படைத்து, தனக்குத் தகவல் தெரிவிக்குமாறு ஆணையிட்டான். என்ரிக்கே ந்யூனஸ் ஒரு கிறிஸ்தவ மதவெறியன் என்பது மட்டுமன்றி, ஸ்பெயினில் யூதர்களுக்கு எதிரான இன்குசிஷன் விசாரணைகளில் பங்கெடுத்துக்கொண்ட இன்னொரு மதவெறியனான இன்குசிடர் லூசேரோ என்பவனின் கீழ் பணிபுரிந்தவன். ஹென்றி நூனஸ் தந்திரமாகத் தன்னைப் புதிதாக மதமாற்றம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களுடன் இணைத்துக்கொண்டு, அங்கு அவர்களை ரகசியமாகக் கண்காணிக்கும் அவன், புதிதாக மதமாற்றம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவ சடங்குகளை வெளிப்புறம் செய்வதுபோல நடித்துக்கொண்டு தங்களின் யூதச் சடங்குகளை ரகசியமாகத் தொடர்ந்து நடத்துவதாக அரசன் ஜோவவ்விற்குத் தெரியப்படுத்தினான்.

இதனைக் கேட்டு மகிழ்ந்துபோகும் போர்ச்சுக்கீசிய அரசன் ஜோவவ், நூனசைப் பாராட்டி அவனுக்கும் உறுதியான மத நம்பிக்கையாளன் என்கிற பட்டத்தை அளித்தான். இருப்பினும் அவன் ஒரு உளவாளி என அறிந்துகொண்ட புதிதாக மதமாற்றம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள், அவனைக் கொலைசெய்தார்கள். இதனை அறிந்த போர்ச்சுக்கீசியக் கிறிஸ்தவர்கள் புதிதாக மதமாற்றம் செய்யப்பட்டவர்களின்மீது கோபம் கொண்டார்கள். இதனைத் தொடர்ந்து கிறிஸ்தவத்தை அவமானம் செய்வதாகக் குற்றம் சாட்டப்படும் மதம் மாற்றப்பட்டவர்கள்மீது வன்முறை கட்டவிழ்த்துவிடபட்டது.

யூத வெறுப்பாளர்கள் அரசி டி. காத்ரீனின் வலிமையான ஆதரவையும் பெற்றார்கள். அவள் ஸ்பெயினை ஆண்டுகொண்டிருந்த அரசன் ஐந்தாம் சார்லஸின் சகோதரி. ஸ்பெயினில் நிகழ்த்தப்பட்ட இன்குசிஷன் விசாரணைகளைக் கண்டு வளர்ந்தவளான அவள், உண்மையான கிறிஸ்தவ மதநம்பிக்கைகள் கட்டிக்காக்கப்படவேண்டும் என்பதில் உறுதியான நிலைபாடுடையவள். இந்தச் சூழ்நிலையில் மீண்டும் யூதர்களுக்கு எதிரான இன்குசிஷன் விசாரணைகள் போர்ச்சுகல்லில் நடத்தப்படவேண்டும் என்கிற எண்ணம் தலையெடுத்தது.

இதனைத் தொடர்ந்து போர்ச்சுக்கீசிய அரசன் தனது தூதுவரை அனுப்பும் ரோமிலிருக்கும் போப்பைச் சந்தித்து, மீண்டும் இன்குசிஷன் விசாரணைகளைத் துவங்குவதற்கான உத்தரவை அளிக்கும்படி ரகசியவேண்டுகோள் விடுத்தான். அதன்படி போப் அந்த உத்தரவை டிசம்பர் 17, 1531-ஆம் ஆண்டு போர்ச்சுகல் அரசனுக்கு வழங்கினார். இந்தச் செய்தி பல பத்தாண்டுகளுக்கும் மேலாகப் பெரும் துயரத்தைச் சந்தித்துவரும் — புதிதாக மதமாற்றம் செய்யப்பட்ட –கிறிஸ்தவர்களின் மத்தியில் இடியாக இறங்கியது. நடக்கவிருக்கும் பயங்கரங்களை எண்ணி அஞ்சி நடுங்கினார்கள் அவர்கள். இதனைப் போப்பிடம் எடுத்துச் சொல்லித் தங்களைக் காப்பாற்றுமாறு அனுப்பிவைக்கப்பட்ட இன்னொரு புதிதாக மதமாற்றம்செய்யப்பட்ட கிறிஸ்தவனான டுராட்டே-டி-பாஸ் என்பவன், அதற்கு நேரெதிராக போப்பிடம் பேசி பரிதாபத்திற்குரிய தனது இனத்தை நட்டாற்றில் விட்டான்.

இருப்பினும், அவன்மீது சந்தேகம் கொள்ளும் போப் அவனைச் சிறையில்தள்ள உத்தரவிட்டார். அங்கிருந்து விடுதலையானபின்னர் துருக்கிக்குப் போன டுராட்டே, முஸ்லிமாக மதம்மாறி, அங்கேயே இறந்துவிட்டான். மிகுந்த துன்பத்துடனும், துயரத்துடனும் இன்குசிஷன் விசாரணை என்னும் பயங்கரத்தைத் தடுக்கமுயன்ற புதிய கிறிஸ்தவர்களின் எண்ணம் நிறைவேறவில்லை. அதற்கு மாறாக 1541=ஆம் ஆண்டு போர்ச்சுகலில் இன்குசிஷன் விசாரணைகள் துவங்குகின.

இதனைக் குறித்து எழுதும் போர்ச்சுக்கீசிய வரலாற்றாசிரியரான ஓலிவெரா மார்ட்டின்ஸ் கீழ்க்கண்ட தகவல்களைத் தருகிறார்,

இன்குசிஷன் விசாரணை என்கிற பெயரில் நிகழ்ந்த நிகழ்வுகளில், நீதியும் நல்லெண்ணமும் சிறிதும் இல்லை. புதிதாக மதம்மாற்றம் செய்யப்பட்டவர்கள்மீது குற்றம் சுமத்தியவர்கள், அவர்களின் மகன்களைத் தங்களின் பெற்றோர்களுக்கு எதிராகவும், பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு எதிராகவும் சாட்சிசொல்லவைத்தார்கள். குற்றம் சாட்டப்பட்டவன் தங்களின் வக்கீலுடன் பேசுவதற்கும் அனுமதிக்கப்படவில்லை.

தங்கள்மீது குற்றம் சுமத்தியவர்கள் யார், அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்கிற விவரமும் அவர்கள் அறிந்திருக்கவில்லை. அவர்கள்மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் அனைத்தும் புகழப்பட்டன; அதற்கும் மேலாகப் புதிதாக மதம்மாற்றப்பட்டவர்களை உளவுபார்ப்பதும் புனிதச் செயலாகக் கருதப்பட்டது. உளவாளிகள் அந்தப் பரிதாபப்பட்ட ஜீவன்களின் குடும்பத்தில் பலவிதங்களிலும் உட்புகுந்தார்கள்.

ஒரு மருத்துவராக, அல்லது ஒரு உண்மைவிளம்பியாக, அல்லது மிகநெருங்கிய நண்பர்கள் என்கிற தோற்றத்தில், அல்லது அவர்களுக்கு அறிவுரை சொல்பவர்களாக அவர்களுடன் பழகி அவர்களின் ரகசியங்களை அறிந்துகொண்டார்கள். குற்றம்சாட்டப்பட்டு தண்டனை அளிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்வதற்கும் தடைவிதிக்கப்பட்டது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 கொலைகாரக் கிறிஸ்தவம் – 6

 

இத்தொடரின் மற்ற பகுதிகளை இங்கு வாசிக்கலாம்.

தொடர்ச்சி…

போர்ச்சுக்கல்லில் புதிதாக மதமாற்றம் செய்யப்பட்டு இன்குசிஷன் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்களின் கதியைக் குறித்து விளக்கும் ஓலிவரா மார்ட்டின்ஸ் மேலும் சொல்கிறார்,

“குற்றம் சாட்டப்பட்ட மதம் மாற்றப்பட்ட கிறிஸ்தவர்கள் சிறையில் இத்தனை ஆண்டுகள்தான் இருக்க வேண்டும் என்பதற்கு வரம்பு எதுவும் விதிக்கப்படவில்லை. எனவே பலரும் மாதக்கணக்காக, வருடக்கணக்காக, ஏன் வாழ்க்கை முழுவதும் தாங்கள் என்ன குற்றம் செய்தோம் என அறியாமலேயே சிறையில் வாடினார்கள். இன்னும் பலர் தந்திரமாக விரிக்கப்பட்ட வலைகளில் வீழ்ந்து தண்டனைகளுக்கு ஆளானார்கள். அவர்கள் மீது பரிதாபம் கொள்வது போல நடித்த சிறைக்காவலர்கள் அவர்களிடமிருந்து சொத்துக்கள், மத எண்ணங்கள் போன்ற ரகசியங்களை அறிந்து பின்னர் அவர்களைக் காட்டிக் கொடுத்தார்கள்.

இந்த வகையில் இன்குசிஷன் என்னும் பயங்கரம் ஒரு பெரும் ப்ளேக் நோயைப் போலப் பரவி யூதர்களையும், புதிதாக மதமாற்றம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களையும் துன்பத்திலும், துயரத்திலும் தள்ளியது. பொய்யாக ஜோடிக்கப்பட்ட வழக்குகளும், குற்றமற்றவர்களை ஏமாற்றி செய்யாததொரு குற்றத்தை ஒப்புக் கொள்ள வைத்து, உண்மையைச் சொன்னால் அவர்களை விடுதலை செய்வதாக ஏமாற்றி….இன்னும் பலப்பல வழிகளில் அந்த பாவப்பட்ட யூதர்களும், மதம் மாற்றப்பட்ட கிறிஸ்தவர்களும் துன்புறுத்தப்பட்டார்கள்.

ஒவ்வொரு முறை சிறைக் கதவுகள் திறக்கப்படுகையிலும் சிறைக் கைதிகள் அச்சத்தால் நடுங்கினார்கள். அவர்களில் சிலரைப் பிடிக்கும் காவல்காரர்கள் அவர்களது கயிற்றால் அவர்களது கைகளை பின்புறம் கட்டிப் பின்னர் சித்திரவதைக் கூடங்களுக்கு இழுத்துச் சென்றார்கள். பாதாள அறைகளை நோக்கி நடத்திச் செல்லப்படுகையில் அவர்கள் இட்ட கூக்குரல்கள் குரல்வளையை நசுக்கி அடக்கப்பட்டன. மனம் பேதலித்த அவர்களில் பலர் உண்மைக்கும், பொய்க்கும் வித்தியாசம் தெரியாமல் உளறிக்கிடந்தனர்.

இன்னும் பல அப்பாவிகளோ தங்களைத் தாங்களே பெரும் பிசாசுகளாகக் கற்பனை செய்துகொண்டு தங்களுக்கு அளிக்கப்படும் தண்டனைகள் அனைத்தும் சரியானவைதான் என்கிற முடிவுக்கு வந்தனர். உதாரணமாக தாங்கள் அடைத்துவைக்கப்பட்டிருந்த சிறைச்சாலைகளில் பிசாசுகளைக் கண்டதாகவும், இன்னும் சிலர் அங்கிருந்த சிலுவையைத் தூக்கி சுத்தியலை வைத்து அடித்து உடைத்ததாகவும் தாங்களாகவே சொல்லிக் கொண்டு திரிந்தனர்.

பாதாள அறைகளின் அதிக வெளிச்சமில்லாத சித்திரவதைக் கூடங்களின் மேசைக்குப் பின்புறம் அமர்ந்திருக்கும் இன்குசிஷன் விசாரணை நடத்தும் கிறிஸ்தவ சாமியார் மேற்படி கதைகளை உண்மையென்று எடுத்துக் கொண்டு அவர்களைத் சித்திரவதை செய்து கொன்றார்கள் (வார்த்தைகளில் விவரிக்க முடியாத அந்த சித்திரவதைகளைக் குறித்து பிறிதொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்). இந்தச் சித்திரவதைகளின் போது அந்தப் பரிதாபப்பட்டவன் அல்லது பரிதாபப்பட்டவள் மரணமடைவது இயல்பு. அவ்வாறு மரணமடைந்தவர்கள் அரண்மனைத் தோட்டத்தின் மூலையில் அடையாளம் தெரியாத ஓரிடத்தில் புதைத்தார்கள்.

சதையையெல்லாம் மண் தின்றபிறகு கிடைக்கும் எலும்புகளை வெளியில் எடுத்துக் கவனமாகச் சேகரித்து வைத்தார்கள். பின்னர் அந்த எலும்புகள் அடுத்த auto-de-fe என்கிற சடங்கின்போது எரித்துச் சாம்பலாக்கப்பட்டன.”

போர்ச்சுக்கல்லின் சுதந்திரச் சிந்தனையுடைய புகழ்பெற்ற அமைச்சரான மார்க்குவெஸ்-டி-பொம்பால் 1774 வருடம் எடுத்த சீர்திருத்த நடவடிக்கைகளின்படி சிறிதும் மனிதத்தன்மையற்ற, குரூரமான, மதவெறி பிடித்த இன்குசிஷன் விசாரணைகளைச் சட்ட விரோதமாக அறிவித்தார். எனினும் 1820-ஆம் ஆண்டே அது முழுமையாகத் தடைசெய்யப்பட்ட ஒன்றானது.

போர்ச்சுக்கல்லில் 1782-ஆம் வருடம் வரையில் ஏறக்குறய 28,000 பேர்கள் பல்வேறு தண்டனைகளுக்கு ஆளானதாகவும், 1454 பேர்கள் கட்டைகளில் கட்டி வைக்கப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டதாகவும் தெரிகிறது. ஆனால் உண்மையில் எத்தனைபேர்கள் இந்தக் கொடுமையால் மரித்தார்கள் அல்லது சித்தரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார்கள் என்கிற உண்மை இன்றுவரை வெளிவரவில்லை.

குறிப்பு : சென்னையில் பல முதியவர்களின் எலும்புக்கூடுகளில் சர்ச்சுகளில் பிடிபட்ட செய்தியை நீங்கள் அறிந்திருக்கலாம். அனேகமாக பல முதியவர்கள் கொடூரமாக சித்திரவதை செய்து கொல்லப்பட்டிருக்கலாம் என்பதே எனது அனுமானம். அவர்கள் இறந்து, சதைகள் அழுகிய பிறகு அவர்களின் எலும்புகள் சேகரிக்கப்பட்டு auto-de-fe திருவிழா நடத்தப்பட்டு அந்த எலும்புகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டிருக்கலாம்.

இனி இந்தியாவில் நிகழ்ந்த போர்ச்சுக்கீசிய இன்குசிஷன் பயங்கரங்களைக் குறித்துக் காண்போம்.

இந்தியாவில் போர்ச்சுக்கீசிய குடியேற்றங்கள் ஆரம்பமானபின்னர் போர்ச்சுக்கல்லைச் சேர்ந்த பல யூதர்கள் இந்தியாவிற்கு வந்து குடியேறி அங்கு கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி வியாபாரம் செய்ய ஆரம்பித்தார்கள். இதற்கிடையே போர்ச்சுக்கல்லில் கிறிஸ்தவ மதவெறி தூண்டப்பட்டு இன்குசிஷன் விசாரணைகள் துவங்கிப் பெரும்பாலான யூதர்கள் கட்டாயமாக கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்யப்பட்டுக் கொண்டிருந்தார்கள். இதிலிருந்து தப்பவும், தங்களின் பூர்வ மதமான யூத மதத்தைக் காப்பற்றவும் பல யூதர்கள் இந்தியாவின் பல பாகங்களுக்கும் சென்று குடியேறிக் கொண்டிருந்தார்கள்.

யூதர்கள் பழங்காலம் தொட்டே இந்தியாவைத் தங்களது தாயகமாகக் கொண்டிருந்தார்கள். கொச்சி அரசரின் படைகளில் பல யூதர்கள் சிப்பாய்களாகப் பணிபுரிந்தார்கள். தங்களுக்கு அடைக்கலம் கொடுத்த கொச்சி அரசரை யூதர்கள் தங்களின் அரசனாகக் கருதினார்கள் என்பது அன்று வாழ்ந்த் பாதிரி லூஸன்கா என்பவர் எழுதி வைத்திருக்கிறார். இருப்பினும் அவர்கள் தங்களின் அடைக்கல நாடான இந்தியாவிலும் மதவெறி பிடித்த கிறிஸ்தவர்களால் தொடர்ந்து தொல்லைகளுக்கு ஆளாக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

இன்குசிஷன் விசாரணகள் போர்ச்சுக்கல்லில் 1541-ஆம் ஆண்டு ஆரம்பமாயின. பின்னர் அதே இன்குசிஷன் விசாரணைகள் இந்தியாவின் போர்ச்சுக்கீசியப் பகுதிகளில் 1560-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இருப்பினும் கேஸ்பர் கொரெரியா என்பவர் எழுதிய Lendas de India என்கிற புத்தகத்தில் இன்குசிஷன் விசாரணைகள் இந்தியாவில் 1548-ஆம் ஆண்டே ஆரம்பமாகிவிட்டதாகக் குறிப்பிடுகிறார். அதனைக் குறித்து அவர் கீழ்க்கண்டவாறு விளக்குகிறார்,

“1548-ஆம் வருடம் இந்திய போர்ச்சுக்கீசிய கோவா பகுதியில் வாழ்ந்த புதிதாக மதமாற்றம் செய்யப்பட்ட ஜெரானிமோ டயஸ் என்பவன் தன்னுடைய நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கையில் பரமண்டலத்திலிருக்கும் பிதாவையும் அவனது மகனான ஏசுவையும் குறித்து தவறாக ஏதோ சொல்லியதாகத் தெரிகிறது. அதனைக் கேள்விப்படும் கோவா பிஷப் அந்த டயஸ் உடனடியாகக் கைது செய்யப்பட்டு சாட்சிகளின் முன்னிலையில் விசாரணை செய்யப்பட வேண்டும் என உத்தரவிடுகிறார். அதன்படி கைது செய்யப்படும் டயஸ் பிடிவாதமாகத் தனது யூத மத ஆச்சாரங்களைக் குறித்து உயர்வாகப் பேசியதாகத் தெரிகிறது. அதனைத் தொடர்ந்து கோவாவின் முக்கியஸ்தர்களைச் சந்திக்கும் ஆர்ச் பிஷப்பின் வேண்டுகோளுக்கு இணங்க அவனுக்குத் தண்டனை வழங்கப்படுகிறது.

அதன்படி, இதன்படி பரமண்டலத்தில் இருக்கும் பிதாவினையும், அவனது மகனான ஏசு கிறிஸ்துவையும் பழித்து, கிறிஸ்தவ மத ஆச்சாரங்களை இழித்துக் கூறிய புதிதாக மதமாற்றம் செய்யப்பட்ட யூதனான டயஸ் ஒரு கம்பத்தில் கட்டிவைக்கப்பட்டு எரித்துக் கொல்லப்படவேண்டும் எனத் தீர்ப்பு வழங்கப்படுகிறது. ஒருவேளை நீ உன் குற்றத்தை ஒப்புக் கொண்டு, கிறிஸ்தவனாக மரிக்க ஆசைப்பட்டாயானால் முதலில் உனது கழுத்து நெறிக்கப்பட்டுக் கொல்லப்பட்டு அதன் பின்னர் தீ வைத்து எரிக்கப்படுவாய். அவ்வாறு நீ கிறிஸ்தவன் அல்ல என்று கூறினால் உன்னை உயிருடன் கம்பத்தில் கட்டி எரிப்போம் எனவும் அவனுக்குக் கூறுகிறார்கள்.

பின்னர் மதகுருமார்கள் அந்த டயஸை நோக்கிக் கடுமையான வார்த்தைகளால் திட்டித் தீர்க்கிறார்கள். டயஸ் தன்னை ஒரு கிறிஸ்தவனாக அறிவித்துக் கொள்கிறான். அதன்படி அவனது கழுத்து நெறிக்கப்பட்டுக் கொலை செய்யப்படுகிறான். பின்னர் அவனது உடல் தீவைத்துக் கொளுத்தப்படுகிறது. “

அதன் பின்னர் ஞாயிற்றுக் கிழமை சர்ச்சில் கூடிய கூட்டத்தில் பிஷப் தங்களின் தாய் நாடான போர்ச்சுக்கல்லில் துவங்கியிருக்கும் புனித இன்குசிஷன் விசாரணைகளைக் குறித்து அங்கு வந்திருக்கும் கிறிஸ்தவர்களிடையே பேசுகிறார். கிறிஸ்தவ மதத்தைக் குறித்து தவறாகப் பேசுபவர்களைக் கண்டறிந்து அவர்களைக் குறித்த தகவல்களைத் தனக்குத் தருமாறும் வேண்டுகோள் விடுக்கிறார் பிஷப். எனினும் போர்ச்சுக்கல் அரசரின் நேரடி உத்தரவு தங்களுக்கு வந்து சேராதவரையில் அந்த மத நிந்தனையாளர்களுக்குத் தண்டனை வழங்குவதனை நிறுத்தி வைக்கப் போவதாகவும் அறிவிக்கிறார்.

இந்தியாவில் இன்குசிஷன் விசாரணைகளைத் துவக்க வேண்டும் என்கிற முதல் வேண்டுகோள் “புனித” ஃப்ரான்ஸிஸ் சேவியர் என்பவனால் முன்வைக்கப்படுகிறது. அம்பொய்னா என்னும் கோவா பகுதியிலிருந்து போர்ச்சுக்கல் அரசனான மூன்றாம் ஜெகோவோவுக்கு மே 16. 1545-ஆம் வருடம் சேவியர் எழுதிய கடிதம் இவ்வாறு கூறுகிறது,

“இந்தியாவிலும் உடனடியாக இரண்டாவது இன்குசிஷன் விசாரணைகளைத் துவங்க வேண்டும் என மேதகு அரசரை வேண்டிக் கொள்கிறேன். ஏனென்றால் இங்கும் தங்களின் மத ஆச்சாரங்களைப் பின்பற்றும் யூதர்களும், முஸ்லிம்களும் கடவுளைக் குறித்த எந்த அச்சமும், அவமானமும் இல்லாமல் வாழ்கிறார்கள். இந்த கோட்டையின் பெரும்பகுதிகளில் அவர்களைப் போன்றவர்கள் நிரம்பி இருப்பதால் இங்கும் இன்குசிஷன் விசாரணைகளைத் துவக்க வேண்டியது அவசியமாகிறது. அதற்காகப் பல கிறிஸ்தவ சாமியார்களும் தேவைப்படுகிறார்கள். உங்களின் உண்மையுள்ள குடிமக்கள் வாழும் கோவாவிற்கு இந்த அவசியமானதொரு உத்தரவை மேதகு அரசர் வழங்கிக் கவுரவிக்க வேண்டும்”



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 கொலைகாரக் கிறிஸ்தவம் – 7

 

இத்தொடரின் மற்ற பகுதிகளை இங்கு வாசிக்கலாம்.

தொடர்ச்சி…

போர்ச்சுகலில் நடப்பதைப் போல இந்தியாவின் போர்ச்சுக்கீசிய பகுதியான கோவாவிலும் இன்குசிஷன் விசாரணைகளை ஆரம்பிக்கவேண்டும் என “புனித” செயிண்ட் சேவியர் போர்ச்சுக்கள் அரசனான மூன்றாம் டி. ஜொகோவோவுக்கு அனுப்பிய கடிதத்தை அரசன் மதிக்காமல் மூலையில் எறிந்துவிட்டான். அவன் ஆட்சிக்காலத்தில் கோவாவில் இன்குசிஷன் விசாரணைகள் நடக்கவில்லை.

இருப்பினும், வேறுசில பகுதிகளிலிருந்து அரசனுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது. பி.எம். நூனஸ் பாரெட்டோ என்கிற கிறிஸ்தவசாமியார் ஜனவரி 5, 1551-ஆம் ஆண்டு ரோமிலிருக்கும் கிறிஸ்தவ உயரதிகாரி ஒருவருக்கு எழுதிய கடிதம் ஒரு உதாரணம்.

அந்தக் கடிதம், உலகின் எந்தப் பகுதியை விடவும் இந்தியாவில் இன்குசிஷன் விசாரணைகளை நடத்த அனுமதி அளிக்கவேண்டும். ஏனென்றால் இங்கு கிறிஸ்தவர்கள் பிறமதத்தவர்களான முஸ்லிம்கள், யூதர்கள் மற்றும் ஹிந்துக்களுடன் கலந்து வாழ்கிறார்கள். மேலும் இந்தப் பெரிய நாட்டில் வசிக்கும் கிறிஸ்தவர்கள் தங்களின் மதச் சம்பிரதாயங்களைச் சரிவரச் செய்யாமல் இருக்கிறார்கள். இதனைத் தடுத்து அவர்கள் நல்லதொரு வாழ்க்கை வாழவேண்டுமென்றால் இன்குசிஷன் விசாரணைகள் மட்டுமே சரியானதாக இருக்கமுடியும். எனச் சொல்கிறது.

போர்ச்சுகல் அரசன் மூன்றாம் ஜெகோவா 1557-ஆம் வருடம் மரணமடைந்த சிறிது காலத்திற்குள்ளாக கோவாவிலும் இன்குசிஷன் விசாரணைகள் துவக்கப்படவேண்டும் என்கிற குரல் ஓங்கி ஒலித்தது. இதனடிப்படையில் 1560-ஆம் வருடம் கோவாவில் இன்குசிஷன் விசாரணைகள் துவங்க அனுமதியளிக்கப்பட்டு அதற்குத் தலைவராக அலெக்ஸியோ டயஸ் ஃபால்க்கோ என்கிறவர் நியமிக்கப்பட்டார்.  

உலகின் மிக இரக்கமற்ற கிறிஸ்தவப் படுகொலைகள் நிகழ்வதற்கு அச்சாரமிட்ட கோவா இன்குசிஷன் விசாரணைக்கான அனுமதி வழங்கபட்ட சூழ்நிலைகளைக் குறித்து வரலாற்றாசிரியரான எச். சி. லீ என்பவர் விளக்குகையில், போர்ச்சுகல் அரசன் மூன்றாம் ஜெகோவோ ஜூன் 11, 1557-ஆம் வருடம் இறந்தபிறகு அவனது மூன்று வயது பேரக்குழந்தையான டான் செபாஸ்டியன் என்பனுக்கு முடிசூட்டப்படுகிறது. அவன் வயதுக்கு வரும் வரையில் அரசியான காட்டலினா பொறுப்பெடுப்பாள் என அறிவிக்கப்படுகிறது. இருப்பினும் 1562-ஆம் வருடம் அரசி காட்டலினா கார்டினல் ஹென்றிக் என்பவரிடன் அந்தப் பொறுப்பை ஒப்படைத்து விலகிவிட்டாள். இந்த காடினல் இந்தியாவில் தூய கிறிஸ்தவம் பரவவேண்டும் என்கிற ஆவல் உடையவன்.

எனவே 1560-ஆம் வருடம் மேற்படி ஹென்றிக், கோவா இன்குசிஷன் விசாரணைகளை ஆரம்பிக்கும் எண்ணத்துடன் அலெக்ஸியோ டயால் ஃபால்க்கோவை இன்குசிடராக நியமித்து அவன் கீழ் பணிபுரியத் தேவையான கிறிஸ்தவ சாமியார்களையும் அனுப்பி வைக்கிறான். இப்படியாக கோவாவில் மிகக் கொடூரமான இன்குசிஷன் தொடங்குவதற்கான அச்சாரம் இடப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகளை இங்கு சுருக்கமாகப் பார்க்கலாம்.

கிறிஸ்தவ வரலாற்றாசிரியரான பாதிரி ஃப்ரான்ஸிஸ்கோ டிசொவுசா கீழ்க்கண்டதொரு சம்பவத்தைக் குறிப்பிடுகிறார்.

“கோவா தீவில் ஹிந்துக்களையும், அவர்களது ஆலயங்களையும், மதச் சடங்குகளை ஒழிப்பதற்கான முயற்சிகள் மிகத் தீவிரமாக முன்னெடுத்துச் செல்லப்பட்டன. இன்னொருபுறம் பாதிரிகள் கோன்ஸால்வோ-டா-ஸில்வெய்ரா மற்றும் பெல்சோய்ர் கார்னிரோ என்கிற இருவரும் கொச்சியிலிருக்கும் யூதர்களை ஒடுக்குவதற்குத் செல்கிறார்கள்.  ஏற்கனவே கூறியபடி கொச்சி பழங்காலம் தொட்டே யூதர்களுக்குப் புகலிடம் அளிக்கும் இடமாக இருந்தது. இந்தியாவில் வந்து தங்கி தங்களின் கடின உழைப்பினால் முன்னேறிப் பெரும் செல்வந்தர்களாக வாழ்ந்த கொச்சியின் யூதர்கள், தங்களின் மதச்சடங்குகளை தீவிரமாகப் பின்பற்றிக் கொண்டிருந்தார்கள். இவர்களுடன் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே யூதர்களாக மதம்மாறிய ஹிந்துக்களும் வாழ்ந்து வந்தார்கள்.

கோவாவைப் போலல்லாது கொச்சிப் பகுதியில் இன்குசிஷன் விசாரணைகள் தொடங்குவதற்கான சூழ்நிலைகள் இல்லாததால் கொச்சி வாழ் யூதர்கள் அமைதியான வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்தார்கள். இதற்கு எதிராக பாதிரி சில்வியெரா தனது பிரச்சாரங்களைத் துவக்கி நடத்த ஆரம்பித்தான். கிரேக்கமும், ஹீப்ருவும், பைபிளும் நன்கு அறிந்திருந்த இந்தப் பாதிரி ஏசு கிறிஸ்து ஒருவர் மட்டுமே உண்மையான கடவுள் எனப் பிரசங்கிக்க ஆரம்பித்தான். இந்தப் பேச்சுக்களால் எரிச்சலடைந்த கொச்சி யூதர்கள் தெருவுக்கு வந்து மேற்படி பாதிரியை எதிர்த்துப் பேச ஆரம்பித்தார்கள். சர்ச்சுகளில் வைக்கப்பட்டிருந்த ஆலோசனைப் பெட்டிகளில் கிறிஸ்துவுக்கு எதிரான வார்த்தைகள் எழுதப்பட்டு இடப்பட்டன.

யூதர்களை விடவும் எண்ணிக்கையில் அதிகமுள்ள கத்தோலிக்கப்பகுதியில் நிகழும் இந்த நிகழ்வுகளைக் கண்டு அதிர்ந்து போன பாதிரிகள் “புனித” செயிண்ட் சேவியரின் நண்பனான கவர்னர் பெரோ கோன்ஸால்விஸ் என்பவருக்குக் கடிதம் எழுதி இதுபோன்ற செயல்கள் தொடர்ந்து நடக்குமானால் அதனைத் தடுப்பதற்கு அதிகாரமுள்ள அமைப்பு எதுவும் இந்தியாவில் இல்லை. எனவே அதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கிறார்கள்.

இந்தக் கோரிக்கையை ஏற்கும் பெரோ கோன்ஸால்விஸ் யூதர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்தான். இது இவ்வாறு நிகழ்ந்து கொண்டிருக்கையில் புதிதாக மதமாற்றம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களும் இதனால் பாதிக்கப்படுகிறார்கள். இவர்கள் முன்னாள் யூதர்கள். இந்தியாவிற்கு வந்து வணிகம் செய்து வசதியாக வாழ்ந்துவந்தவர்கள் அவர்கள். ஏசு கிறிஸ்துவைக் குறித்துக் கேவலமகப் பேசினார்கள் என்கிற குற்றச்சாட்டின் பேரில் அவர்களில் சிலர் கொச்சியில் கைது செய்யப்பட்டு கோவாவிற்குக் கொண்டு செல்லப்படுகிறார்கள். இவர்களே இந்திய இன்குசிஷன் விசாரணையில் தண்டனையளிக்கப்பட்டவர்களில் முதலானவர்கள். இவர்களைப் போலவே மேலும் பல புதிய மதமாற்றம் செய்யப்பட்ட கிறிஸ்தவரக்ள் கோவாவிலிருந்து போர்ச்சுகல்லுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவர்கள் யூதர்களாக கருதப்பட்டு உயிருடன் எரிக்கப்பட்டு தண்டனையளிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இதன் காரணமாக இந்தியாவில் நடப்பதனைப் புரிந்து கொள்ளும் கார்டினல் ஹென்றிக் இந்தச் சந்தர்ப்பத்தை உபயோகப்படுத்தித் தனது கிறிஸ்தவ பாதிரிகளை இந்தியாவிற்கு அனுப்பி வைக்க முடிவு செய்கிறார். இதனைத் தொடர்ந்த காலத்தில் கோவாவில் மேலும் பல புதிய கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவுக்கு எதிரானவர்கள் எனக் கண்டறியப்பட்டு அவர்களும் தீயிட்டுக் கொளுத்திக் கொல்லப்படுகிறார்கள்.

கோவாவில் பல புதிதாக மதமாற்றம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் தங்களின் பூர்விக மதமான யூத மதத்தையே இன்னும் பின்பற்றுவதாகவும், அவர்களில் பலர் பெரும் பணக்காரர்கள் என்றும், அவர்களே யூத ஆல்யங்கள் பலவற்றையும் கட்டியவர்கள் எனவும், அதனை உறுதிப்படுத்தும் விதமாகக் கண்டறியப்பட்ட பல ஆவணங்களும் மேற்படி பாதிரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுத் தண்டனையளிக்கப்பட்டுக் கொல்லப்படுகிறார்கள்.  இவ்விதமாக கோவாவிலும், கொச்சியிலும் ஏசு கிறிஸ்துவின் புனிதம் காக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு அதனைக் குறித்து போப்பிற்கும் தகவலனுப்புகிறார்கள்.

கோவாவில் நடந்த இன்குசிஷன் விசாரணைகளைக் குறித்துக் கூறும் ஃப்ரான்ஸிஸ்கோ பையார்ட் என்னும் ப்ரெஞ்ச் பயணி கோவாவில் ஜூலை 1608-ற்கும் ஜனவரி 1610-ற்கும் இடையே நிகழ்ந்த இன்குசிஷன் விசாரணைகளைக் குறித்து விளக்கமாக எழுதியிருக்கிறார்.

“கோவா இன்குசிஷனை நடத்தியவர்களில் முக்கியமானவர்கள் இரண்டு பாதிரிகள். அங்கிருந்த போர்ச்சுக்கீசியர்கள் அந்த பாதிரிகளின் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார்கள். அவர்களில் ஒருவர் இன்குசிஷன் மேஜர் என்று அழைக்கப்பட்டு பெரும் அதிகாரம் கொண்டவராக இருந்தார். அவர்கள் கடைபிடித்த நடவடிக்கைகள், தண்டனைகள் போர்ச்சுகல்லில் நிகழ்ந்ததைவிடவும் பலமடங்கு பயங்கரமானவை.  கையில் கிடைத்த யூதர்களையும் அவர்களில் புதிதாக மதமாற்றம் செய்யப்ப்ட்டவர்களையும்  எரித்துக் கொல்லுவதனை ஒரு சடங்காகவெ செய்தார்கள்.  அவர்களால் கைது செய்யப்படும் அப்பவி யூதனின் சொத்துக்களை உடனடியாகப் பறிமுதல் செய்தார்கள். சுருக்கமாகச் சொல்வதென்றால் பணக்கார யூதர்களே இவர்களின் தண்டனைகளுக்கு முதல் பலியானார்கள்.

போர்ச்சுகல் அரசனிடமிருந்து இந்த இன்குசிஷன் விசாரணைகளைச் செய்வதற்கான உபகரணங்களும், உதவிகளும் பெறப்பட்டன.  கைது செய்யப்பட்டவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை உலகின் எந்த மொழியின் வார்த்தைகளாலும் விவரிக்கவே இயலாது.  ஒரு சிறிய சந்தேகம், ஒரு தவறான வார்த்தை அல்லது வேறேந்த சிறிய தவறு செய்தவர்கள் ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும் ஏன் குழந்தைகளாக இருந்தாலும் பிடித்துச் செல்லப்பட்டு தூக்கிலடப்பட்டார்கள்.

அவர்களால் சாட்டப்பட்ட குற்றங்கள் பலவும் சாதாரணமானவை என்றாலும் தண்டனை என்னவோ மரணம்தான். உதாரணமாக, தாங்கள் உட்காரும் மெத்தையின் மீது சிலுவையை வைத்ததற்க்காக கைது செய்யப்பட்டவர்கள் உண்டு. இன்னும் சில சமயங்களில் ஏதேனும் காய்கறிகளையோ அல்லது மாமிசங்களையோ ஓங்கி வெட்டுகையில் அங்கிருக்கும் ஏசு கிறிஸ்துவின் “புனித” படத்தின் மீது தவறுதலாக அடிபடுவது போன்ற குற்றங்களைச் செய்பவர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் பரமண்டலத்தில் இருக்கும் பிதாவின் மதத்தைப் பின்பற்றாமல் தங்களின் பழைய மதத்தையே பின்பற்றுவதாகக் குற்றம் சாட்டப்பட்டார்கள்.

மேலே கூறியபடி, போர்ச்சுக்கீசியர்களான இவர்களில் பணக்காரர்களே பெரும்பாலும் கொல்லப்பட்டார்கள்.  போர்ச்சுக்கீசிய ஏழைகளுக்குப் பல சமயம் அபராதங்கள் விதிக்கப்பட்டன.  இதையெல்லாம் விடவும், ஒருவனைப் பிடிக்காத இன்னொருவன் அவனைக் குறித்து பல பொய்யான தகவல்களை இன்குசிஷன் கமிட்டியிடம் சொல்லி அவனைத் தண்டனை பெறச் செய்வது போன்றவையும் நடந்தேறின.  எவரேலும் கைது செய்யப்பட்டாலும் அவர்களை விடுவிக்க அவர்களது நண்பர்களோ அல்லது உறவினர்களோ எந்த முயற்சியும் செய்யவில்லை. தாஙகளும் அதில் சிக்க வைக்கபடலாம் என்கிற அச்சத்தால்.

எனவே தெருக்களில் அனைத்து போர்ச்சுக்கீசியர்களும் இன்குசிஷனைக் குறித்து மிகுந்த மரியாதை தொனிக்கும் வார்த்தைகளையே பேசினார்கள்.  ஏதேனும் சிறிய தவறான வார்த்தையும் பெரும் அழிவினைத் தேடித் தரும் என்பதால் அனைவரும் அதற்கு அஞ்சி வாழ்ந்தனர்.  போர்ச்சுகல்லிலும், இத்தாலியிலும், ஸ்பெயினிலும் நிகழ்ந்ததைப் போன்ற நடவடிக்கைகளே கோவாவிலும் மேற்கொள்ளப்பட்டன. சில சமயங்களில் தாங்கள் என்ன குற்றம் செய்தோம் என்பதை அறியாத அப்பாவிகள் பலரும் வருடக்கணக்கில் சிறையில் வாடினார்கள். அவர்களுக்கென வாதாட வக்கீல்களை அமர்த்திக்கொள்ளவும் அவர்களுக்கு அனுமதியளிக்கப்படவில்லை.

இந்திய ஹிந்துக்களும், முஸ்லிம்களும், அவர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் இன்குசிஷன் விசாரணை என்கிற பயங்கரத்திற்கு ஆட்பட்டார்கள். அதிலிருந்து அவர்கள் தப்ப ஒரேவழி அவர்கள் கிறிஸ்தவரகளாக மதம் மாறுவது மட்டும்தான் என அவர்களுக்குச் சொல்லப்பட்டது. ஏதேனும் ஒரு கோவா கிறிஸ்தவன் அங்கு வாழும் ஹிந்து அல்லது முஸ்லிமுக்கு எதிராகச் சொல்லப்படும் குற்றச்சாட்டிற்கு மிகுந்த முக்கியத்தும் அளிக்கப்பட்டு அவன் கிறிஸ்தவனாக மதம் மாறுவதாக அறிவிக்கும் வரையில் துன்புறுத்தப்பட்டான்.  இருப்பினும் அவர்களின் கலாச்சாரம், உடைகள் போன்றவற்றை மாற்றுவதற்கு போர்ச்சுக்கீசியர்கள் முயலவில்லை. “



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 கொலைகாரக் கிறிஸ்தவம் – 8

 

இத்தொடரின் மற்ற பகுதிகளை இங்கு வாசிக்கலாம்.

தொடர்ச்சி…

கோவாவில் போர்ச்சுக்கீசிய கிறிஸ்தவ மதவெறியர்களால் நடத்தப்பட்ட இன்குசிஷன் விசாரணைகளைக் குறித்துப் ஃப்ரெஞ்சுப் பயணியான ஃப்ரான்கோ பையார்ட் மேலும் சொல்கையில்,

கோவாவில் நடத்தப்பட்ட இரக்கமற்ற இன்குசிஷன் விசாரணைகளின்போது மரணமடைந்தவர்கள் எத்தனைபேர்கள் என்று அளவிடுவது மிகமிகக் கடினமான ஒரு விஷயமாகும். எனக்குத் தெரிந்த ஒரு ஹாலந்து குடிமகனுக்கு நிகழ்ந்த கொடுமைகளைக் குறித்து மட்டும் கூறிக்கொண்டு இதனை முடிக்கிறேன்.  நகை விற்பனையானான அந்த ஹாலந்தியன் மிகக் கடினமாக உழைத்து ஏறக்குறைய முப்பதிலிருந்து, நாற்பதாயிரம் குரூசோடோக்களை (போர்ச்சுக்கீசிய பணம்) சம்பாதித்து வைத்திருந்தான்.  அவன் ஒரு போர்ச்சுகல்காரியை மணமுடித்ததிருந்தான். அவர்களிருவருக்கும் திருமணவயதில் ஒரு மிக அழகான மகள் இருந்தாள்.

அவனுக்கும் அவனது மனைவிக்கும் உண்டான மனஸ்தாபத்தின் காரணமாக, அவன் மனைவி தனது கணவன் பரமண்டலத்திலிருக்கிற பிதாவினையும், அவனது மகனான ஏசுகிறிஸ்துவையும் தவறாகப் பேசினான் என இன்குசிஷன் விசாரணை அதிகாரிகளுக்குப் பொய்யான புகாரளித்தாள். இதனடிப்படையில் அந்த ஹாலந்தியன் கைதுசெய்யப்பட்டதோடுமட்டுமல்லாமல், அவனது சொத்துக்ளும் பறிமுதல் செய்யப்பட்டன. அந்தச் சொத்துகளில் பாதியளவு அவனது மனைவிக்கும் மீதிப் பாதி இன்குசிஷன் விசாரணை அதிகாரிகளுக்கும் பகிர்ந்துகொள்ளப்பட்டது. அதற்குப் பின்னர் அந்த ஹாலந்தியன் என்னவானான் என்று எனக்குத் தெரியவில்லை. அனேகமாக அவன் சித்திரவதைசெய்யப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கவே வாய்ப்பிருக்கிறது என்று உறுதியாக நம்புகிறேன்.

அவனே ஒரு போர்ச்சுக்கீசியனாக இருந்திருந்தால் அவனைக் கைதுசெய்து போர்ச்சுகலுக்கு அனுப்பிவைத்திருப்பார்கள். மேற்படி ஆள், ஹாலந்துக்காரனாகவும், பணக்காரனாகவும் இருந்ததால் இங்கேயே அவனது கதையை முடித்துவிட்டார்கள்.

கோவாவில் நடந்த இன்குசிஷன் விசாரணைகளின் தண்டனைகள் அனைத்தும் பெருவிருந்து நாட்களிலேயே நடந்தன. தங்களின் புனிதப் புத்தகங்களையோ, அல்லது புனிதர்களையோ தவறாக விமரிசித்தவர்கள் என்று நம்பப்பட்டு, சித்திரவதைசெய்யப்பட்டுத் தண்டனையளிக்கப்பட்ட பரிதாபகரமானவர்கள் — சல்ஃபர் [கந்தகம்] ஊற்றி ஊறவைக்கப்பட, தீயின் படம் வரையப்பட்ட உடல்களுடன் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டார்கள். அவர்களில் தீயால் கொளுத்தி எரியப்போகிறவர்களைத் தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டிருப்பார்கள். பின்னர் ஊர்வலம் ஒரு பெரிய சர்ச்சையோ, அல்லது சிறைக்கு அருகிலிருக்கும் பெரிய மைதானத்திலோ சென்று கூடும்.

பின்னர் பாதிரிகள் புனிதப் புத்தகத்தைப் படித்து பிரசங்கம் நிகழ்த்துவார்கள். அதனைத் தொடர்ந்து அந்தக் கைதிகள் அவரவர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனைகளின்படி தண்டிக்கப்பட்டார்கள் (Campo Sancto Lazaro). எரித்துக் கொல்லப்பட தண்டனையளிக்கப்பட்டவர்கள் கம்பங்களில் தலைகீழாகக் கட்டிவைக்கப்பட்டுப் பின்னர் அத்தனைபேர்களுக்கும் முன்னிலையில் எரித்துக் கொல்லப்பட்டார்கள்.

ஜெ.சி. பரேட்டோ மிராண்டா என்கிற கோவா வரலாற்றாசிரியர் இன்குசிஷன் விசாரணைகள் என்கிற பெயரில் போர்ச்சுக்கீசிய பாதிரிகள் பிறமதத்தவர்களின்மீதும், குற்றம் சாட்டப்பட்டவர்கள்மீதும் நடத்தப்பட்ட கொடூரங்களைக் குறித்துக் கூறுகையில்,“அன்பும், அமைதியும் நிறைந்த மதமாக ஐரோப்பாவில் கூறப்படும் கிறிஸ்தவமதத்தைச் சார்ந்த பாதிரிகள், அவர்களின் நாட்டில் பிறமதத்தவர்களான யூதர்கள் போன்றவர்களுக்கு நடத்திக் காட்டிய கொடூரங்களைக் காட்டிலும் பல மடங்கு குரூரங்களை இந்தியாவின் கோவாபகுதியில் நடத்தினார்கள். இன்குசிஷன் விசாரணையை நடத்திய குழுவினருக்கு இந்தியாவிலிருந்த ஆர்ச்பிஷப்பும், கோவாவை ஆண்ட வைசிராயும்கூட அஞ்சவேண்டிய நிலை இருந்தது. ஒரே ஒரு தவறான வார்த்தையோ, அல்லது தவறான நடவடிக்கையோ, அங்கு பயங்கரத்தை வரவழைத்தது மட்டுமல்லாமல், அவர்களின் வாழ்வையும் சாவையும் தீர்மானிப்பதாகவும் இருந்தது. தங்களின் கைகளில் சிக்கியவர்களைப் பாதாளச் சிறைகளிலிட்டு இரக்கமில்லாமல் சித்திரவதைசெய்து கொன்றார்கள்; அல்லது அவர்களுக்கு உணவும், நீரும் வழங்காமல் பட்டினியிட்டுக் கொன்றார்கள்; அல்லது அவர்களை நெருப்பிலிட்டு எரித்துக் கொன்றார்கள்.” என்கிறார்.

போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் நாடுகளில் நிகழ்ந்த இன்குசிஷன் விசாரணைக் கொடூரங்களைக் குறித்த பல புத்தகங்கள் எழுதப்பட்டிருந்தாலும், இந்தியாவில் நிகழ்ந்த இன்குசிஷன் விசாரணைகளைக் குறித்த முழுமையான ஆவணங்கள் எதுவும் இன்றைக்குக் கிட்டுவதில்லை. ஐரோப்பிய நாடுகளில் நிகழ்ந்த கொடுமைகளைவிடவும் கிறிஸ்தவமத நம்பிக்கையற்றவர்களான ஹிந்துக்களும், முஸ்லிம்களும் வாழ்ந்த கோவாவில் நிகழ்ந்த கொடுமைகள் பலமடங்கானவை என்பதில் எந்த வரலாற்றாசிரியருக்கும் பேதமில்லை.

மிகைல் வின்செண்ட்டே-டி-அபேரோ என்பவர் எழுதியுள்ளபடி, கோவாவின் சிறந்த வராலாற்றாசிரியரான ஃபெலிப்பே-நெரி-சேவியர், தான் கோவாவைக் குறித்து 1864-ஆம் வருடம் ஒரு புத்தகம் எழுதப் போவதாகவும் (Boletim do Governo), அதில் கோவாவைக் குறித்தான நினைவுகளை வெளிக் கொணரப் போவதாகவும் (Memoria Historica de Tribunal da Inquisicao de Goa – Historical Record of the Tribunal of the Inquisition of Goa) சொல்கிறார். அதில் கோவாவில் இருநூற்றைம்பது வருட காலமாக கிறிஸ்துவின் பெயரால் நடந்த கொடூரங்களை உலகிற்கு வெளிச்சம்போட்டுக் காட்டப்போவதாக மேலும் குறிப்பிட்டிருக்கிறார் என்றாலும் அந்தப் புத்தகம் என்னவாயிற்று என்பது எவருக்கும் தெரியவில்லை.

எதனால் கோவா பயங்கரங்கள் குறித்த தகவல்களோ அல்லது அங்கு நடத்தப்பட்ட பயங்கரங்கள் குறித்த குறிப்புகளோ வெளிவரவில்லை என்பதனைக் குறித்து எவராலும் எளிதாக யூகிக்கமுடியும். ஏனென்றால் இன்குசிஷன் விசாரணை செய்தவர்களுக்கு இருந்த வானளாவிய அதிகாரம் அங்கு வாழ்ந்த அத்தனை குடிமக்களின் மனதிலும் அச்சத்தையும், திகிலையும் ஏற்படுத்தியிருந்தது. எதிர்த்துப் பேசிய, எழுதிய, அத்தனைபேர்களுமே கொடூரமாகத் தண்டிக்கப்பட்டார்கள் என்பதால் எவரும் அதனை எழுதிவைக்கத் துணியாதிருந்திருக்கலாம். இருப்பினும், இன்குசிஷன் விசாரணைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் அதனை நடத்தியவர்களால் துல்லியமாக எழுதப்பட்டு ஆவணங்களாக்கப்பட்டன என்பதில் சந்தேகம் எதுவுமில்லை. அவை என்னவாகின?

அந்த ஆவணங்கள் அனைத்தும் போர்ச்சுகலுக்கு எடுத்துச்செல்லப்பட்டு அங்கு உயர்பதவிகளிலிருந்த கிறிஸ்தவர்களால் மூடிமறைக்கப்பட்டன. போர்ச்சுகல் அரசாங்கம் அந்தக் கொடூரங்களைக் குறித்து எழுதமுயன்ற அனைவரையும் தடுத்துநிறுத்தியது. இன்றைக்கு கோவாவில் வசிக்கும் எவரும் அந்த ஆவணங்களைக் குறித்தோ, அல்லது கிறிஸ்துவின் பெயரால் நடந்த கொடூரமான கேவலங்களைக் குறித்தோ ஆராய்ந்து எழுத முன்வருவதில்லை. வரலாற்றின் இருண்ட பக்கங்களில் சென்று மறைந்துவிட்டது, கோவா இன்குசிஷன் விசாரணை. எதிர்காலத்தில் எவரேனும் துணிந்து அதனைச்செய்ய முன்வரலாம்.

எக்காரணத்திற்காக இந்தக் கொடுமைகளை எவரும் எழுதிவைக்க முற்படவில்லை என்பதற்கு நெரி-சேவியர் என்பவர் எழுதியதொரு உதாரணத்தைப் பார்க்கலாம்.

இன்குசிஷன் விசாரணைக் காலத்தில் அப்பாவிகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் கோவாவாசிகளின் மனதில் பெரும் அச்சத்தைத் தோற்றுவித்து, அவர்களுக்குள் அழியாததொரு வடுவாகச் சமைந்துவிட்டது. இந்த விசாரணைகள் நடந்ததொரு வீட்டின் பெயரை உச்சரிப்பதற்குக்கூட எவருக்கும் தைரியமில்லை. அதற்குப் பதிலாக ,அந்த வீட்டைக் குறித்து சொல்கையில் அந்தப் பெரிய வீடு (Orlem gor) எனச் சூசகமாகச் சொன்னார்களேயன்றி, அது எந்தவீடு என்று சுட்டிக்காட்டக்கூடத் தயங்கினார்கள். இன்னதற்கும் இன்குசிஷன் விசாரணைகள் முழுமையாக ஆரம்பமாகாத காலகட்டம் அது

ஒரு வீட்டின் பெயரை உச்சரிப்பதற்குக்கூட ஒரு சாதாரண குடிமகன் அஞ்சினானென்றால் அவன் மனதில் அது எத்தகையதொரு அச்சத்தைத் தோற்றுவித்திருக்கும் என்று உணரலாம். கோவாவைக் குறித்து எழுதப்பட்ட அத்தனை குறிப்புகளையும் போர்ச்சுகீசிய அரசாங்கம் தீவைத்து எரித்தோ, அல்லது வேறு ஏதோ ஒருவகையிலோ அவற்றை அழித்திருக்க வேண்டும். ஏனென்றால் அங்கு நடந்தவை அனைத்தும் அன்பு மதத்தின் பெயரால் நிகழ்ந்த அழிவுகள் என்பதனைச் சாதாரணன் உணரவேண்டும்.

1739-ஆம் வருடம் மராத்தாக்கள் கோவாவைத் தாக்கினார்கள். அந்தக் காலகட்டத்தில் கோவவைப்பற்றி எழுதப்பட்ட இன்குசிஷன் விசாரணைத் தகவல்கள் அனைத்தும் கோவாவிலேயே இருந்திருக்கின்றன. மராத்தாக்கள் கையில் இந்தத் தகவல்கள் சிக்கிவிடாதிருக்கும் பொருட்டு அவற்றை எரிப்பதற்குப் போர்ச்சுக்கீசிய ஆட்சியாளர்கள் முனைந்திருக்கிறார்கள். இதற்கானதொரு உத்தரவை அன்றைக்கு கோவாவில் இன்குசிஷன் ஜெனரலாக இருந்த அண்டோனியோ-டி-அமரால் குட்டின்ஹா எழுதியிருக்கிறார்.

ஜனவரி 23, 1738-ஆம் வருடம் கோவாவின்மீது மராத்தாக்களின் தாக்குதலை அடுத்து போர்ச்சுக்கீசியர்கள் மர்கோவாவை விட்டு செல்செட்டேவிலிருந்த கிராமங்களுக்குத் தப்பிச் சென்றார்கள். அடுத்த சில நாட்களில் மராத்தாக்கள் கோவாவையும் தாக்குவார்கள் என அஞ்சிய இன்குசிஷன்-ஜெனரல் குட்டின்ஹா அனைத்து இன்குசிஷன் விசாரணைகள் குறித்த தகவல்கள், ஆவணங்கள், சித்திரவதைக் கருவிகள், ஊர்வலங்கள் குறித்த குறிப்புகள் என அத்தனையையும் ஒரு பெட்டியில் வைத்து, மர்கோவா கோட்டைக்கு அனுப்பிவைக்க உத்தரவிட்டார்.

இதற்கிடையே மராத்தாக்கள் பார்டெஷ் நகரைக் கைப்பற்றினார்கள். அவர்களின் அடுத்த குறி கோவாதான் என அஞ்சிய வைசிராய், போர்ச்சுக்கீசிய பெண்கள், குழந்தைகள் அனைவரையும் மர்கோவாவிற்குச் செல்ல ஆணையிட்டார். இந்தக் குழப்பத்தில் இன்குசிஷன் விசாரணைகள் குறித்த ஆவணங்கள் அனைத்தையும் மர்கோவாவிற்கு எடுத்துச் செல்ல வாகனங்கள் கிடைக்காததால் அங்கிருந்த சிறையின் அறைகளில் பரப்பிவைக்கப்பட்டு, தேவைப்பட்டால் அந்த ஆவணங்களைத் தீக்கிரையாக்கும் எண்ணத்துடன் அதன்மீது உலர்ந்த இலைகளைப் போட்டு மூடினார்கள்.

ஆனால் அன்றைக்கு அதிர்ஷ்டம் போர்ச்சுக்கீசிய ஆட்சியாளர்களின் பக்கம் இருந்ததால் மராத்தாக்களின் தாக்குதல் வெற்றிபெறவில்லை. எனவே அந்தக் ஆவணங்களை அன்று அவர்கள் எரிக்கவேண்டிய தேவை ஏற்படவில்லை.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கொலைகாரக் கிறிஸ்தவம் – 9

 

பின்னர் 1812-ஆம் வருடம் இன்குசிஷன் விசாரணைகளை மொத்தமாக நிறுத்திட முடிவெடுக்கப்பட்ட பிறகு இந்த ஆவணங்களை என்ன செய்வது என்கிற சிக்கலில் ஆழ்ந்தார்கள் போர்ச்சுகல் அதிகாரிகள். கோவாவின் வைசிராயாக இருந்த கோண்டே-டி-சார்டெஸாஸ், டிசம்பர் 20, 1812-ஆம் தேதி போர்ச்சுகல் அரசருக்கு அனுப்பிய கடிதமொன்றில் இவ்வாறு குறிப்பிட்டார்,

இன்குசிஷன் விசாரணைகள் குறித்தான நூற்றுக்கணக்கான ஆவணங்கள் மிக அதிகப்படியாக இங்கு தேங்கியிருக்கின்றன. அவற்றை வைப்பதற்கு இடமில்லாமல் அலுவலகங்கள் நிரம்பி வழிகின்றன. எனவே அந்த ஆவணங்கள் அனைத்தையும் பெரிய சாக்குப் பைகளில் அடைத்து, அந்த சாக்குகளின் மீது இன்குசிஷன் முத்திரையைப் பதித்து, பின்னர் அவற்றை அரசின் ஆயுதக்கிடங்கில் வைக்குமாறு உத்தரவிட்டிருக்கிறேன். அந்த அறை மூன்று வெவ்வேறு சாவிகள் கொண்டு பூட்டப்பட்டது. அதில் ஒரு சாவி என்னுடனும், இன்னொரு சாவி அரசாங்க அலுவலகத்திலும், மூன்றாவது சாவி கப்பல்படை கண்காளிப்பாளரிடமும் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிக முக்கியமானவை என நான் கருதுகிறேன். ஏனென்றால் புனித இன்குசிஷன் விசாரணைகள் குறித்த அத்தனை நடவடிக்கைகளும் இந்த ஆவணங்களிலேயே எழுதி வைக்கப்பட்டிருக்கின்றன.  இந்த ஆவணங்கள் இல்லாமல் எதிர்வரும் எல்லா பிரச்சினைகளையும், தவறான குற்றச்சாட்டுகளையும் களைந்தெரிய மிக உதவிகரமாக இருக்கும். எனினும் மகாகனம் பொருந்திய அரசர் இத்தனை பெரிய ஆவணக்காகிதங்களை என்ன செய்யவேண்டும் எனக்குத் தெரியப்படுத்தவேண்டுகிறேன்.  மேலும் இந்த ஆவணங்களை வேறு எவரும் பார்வையிட்டுவிடக்கூடாது என எனக்குத் தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதால் இவைகளை உடனடியாக தீயிலிட்டு எரிப்பதே உசிதமானதாக இருக்கும் என்பது என் எண்ணம்

அதற்குப் பதில் அனுப்பிய போர்ச்சுக்கள் அரசன் தனது செப்டம்பர் 27, 1813-ஆம் தேதியிட்ட கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருக்கிறது,

நீங்கள் சொன்ன அந்தப் பெரும் இன்குசிஷன் விசாரணைகள் குறித்த ஆவணங்களைத் தகுதிவாய்ந்த எவரேனும் படித்துப் பார்க்காமல் எரிப்பது சரியான ஒன்றாக எனக்குத் தெரியவில்லை.  இருப்பினும் வேறு யாரையும் இந்த ரகசிய ஆவணங்களுக்குப் பொறுப்பாளராக வைப்பதற்கும் அரசர் ஒப்பவில்லை.  எனவே மேன்மைதங்கிய அரசர் இந்த ஆவணங்களை யாரேனும் படித்து, அவற்றில் முக்கியம் அல்லது முக்கியமற்றவை எனக் கருதப்படுபவைகளைத் தனித்தனியே பிரிக்கவும், அவ்வாறு பிரிக்கப்பட்ட பிறகு முக்கியமல்லாத ஆவணங்கள் அனைத்தையும் தீயிட்டுக் கொளுத்தலாம் எனவும் உத்தரவிடுகிறார். பிரித்தெடுக்கப்பட்ட பிற முக்கிய ஆவணங்களை அரசாங்கத்தின் உள்துறை அமைச்சகத்திடம் ஒப்படைக்கவும் வேண்டும்

இந்த உத்தரவின்படி, கோவா இன்குசிஷன் விசாரணை குறித்த ஆவணங்களைப் படித்துப் பார்த்து தரம்பிரிக்கும் வேலை பாதிரி தோமஸ்-டி-நோரன்ஹா என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது.  ஆனால் அவர் எவ்வாறு அந்த ஆவணங்களைத் தரம்பிரித்தார் என்கிற தகவல் இல்லை.

அதனைக் குறித்து ஆராயும்,  A Inquisicao de Goa என்கிற புத்தகத்தை எழுதியவருமான அண்டோனியோ-டி-பையாயோ, அந்த ஆவணங்கள் தரம்பிரிக்கப்பட்டு போர்ச்சுகலுக்கு அனுப்பி வைக்கப்பட்டதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்கிறார்.

அதற்கும் மேலாக, அந்த ஆவணங்கள் குறித்த தடயம் எதுவும் கோவாவில் இன்றுவரை தட்டுப்படவில்லை. மர்மமாக அவை மறைந்துபோயின.

அவ்வாறு அந்த ஆவணங்கள் மறைந்தது ஆச்சரியப்படுகிற விஷயமில்லை. ஏனென்றால் இன்குசிஷன் விசாரணைகள் அனைத்தும் ரகசியத்தில் பொதிந்தவை.  ஒவ்வொரு விஷயமும் துல்லியமாக பதிவு செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்த அந்த ஆவணங்கள் இல்லாமல் கோவா இன்குசிஷனின் கோரமுகத்தையும், அது எவ்வாறு இயங்கியது, எத்தனை அப்பாவிகள் சித்திரவதை செய்யப்பட்டும், நெருப்பில் எரிக்கப்பட்டும் கொல்லப்பட்டார்கள் என்பதினைத் தெரிந்து கொள்வது சாத்தியமே இல்லாத ஒன்று.

இருப்பினும் இன்குசிஷன் கொடூரங்கள் கோவாவில் நடந்து கொண்டிருக்கையில் அங்கு வாழ்ந்த பிற நாட்டவர்கள் எழுதிய குறிப்புகள் இன்குசிஷனின் கோரமுகத்தைக் குறித்து அறிந்து கொள்ள மிகவும் உதவிகரமானதாக இருக்கின்றன.

உதாரணமாக, பிரெஞ்சுப் பயணியான மருத்துவர் டெல்லோன் (Dr. Dellon) இன்குசிஷன் காலகட்டத்தில் கோவாவில் மூன்றுவருட காலம் சிறைக் கைதியாக இருந்தார். அவர் எழுதிய குறிப்புகளைச் சுருக்கமாக இங்கு பார்ப்போம்.

 1649-ஆம் வருடம் பிறந்த டாக்டர் டெல்லோன் பிரெஞ்ச் ஈஸ்ட் இண்டியா கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்து மார்ச் 20, 1668-ஆம் வருடம் இந்தியாவை வந்தடைந்தார். இந்தியாவில் சிறிது காலம் பிரெஞ்ச் ஈஸ்ட் இண்டியா கம்பெனியின் கப்பல்களிலும், தொழிற்சாலைகளிலும் மருத்துவராகச் சிறிது காலம் பணிபுரிந்தார். 1673-ஆம் வருடம், தலைச்சேரியில் அவர் பணிபுரிந்து கொண்டிருக்கையில், அங்கிருந்த தொழிற்சாலை மேலாளருடன் கருத்து வேறுபாடு கொண்டு போர்ச்சுக்கீசியப் பகுதியான டாமனுக்குச் சென்று, அங்கு மருத்துவராக வேலை செய்யத் துவங்கினார்.

டாமனில் நான்கைந்து மாதம் பணிபுரிந்தபிறகு இன்குசிஷன் அதிகாரிகளால் 1674-ஆம் ஆண்டுத் துவக்கத்தில் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். இன்குசிஷன் உச்சத்தில் நடந்து கொண்டிருந்த கோவாவில் இரண்டு வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் போர்ச்சுகலுக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு பாதாளச் சிறையில் ஐந்து வருடங்கள் சிறத்தண்டனை அவருக்கு வழங்கப்பட்டது. 1677-ஆம் வருடம் இன்குசிட்டர் ஜெனரலால் மன்னிப்பு வழங்கப்பட்டு உடனடியாக பிரான்ஸிற்குச் செல்ல உத்தரவிடப்பட்டார்.

டாக்டர் டெல்லோன் இந்தியாவில் தனது அனுபவங்களைக் குறித்து இரண்டு புத்தகங்கள் எழுதியிருக்கிறார். அவற்றில் முதலாவது புத்தகமான Relation d’un Voyage fait aux Indes Orientales 1785-ஆம் வருடம் பாரிஸ் நகரில் வெளியிடப்பட்டது. பல பதிப்புகள் கண்ட அந்தப் புத்தகம் பின்னர் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு Voyage to the East Indies என்கிற பெயரில் இங்கிலாந்திலிருந்து வெளியிடப்பட்டது.  இன்னொரு புத்தகமான Relation de l’Inquisition de Goa 1687-ஆம் வருடம் பதிப்பிக்கப்பட்டது.

டெல்லோன் இந்தியாவில் இருக்கையில் இரண்டு முறைகள் கோவாவிற்குச் சென்றிருக்கிறார். முதலில் அவர் மங்களூரிலிருந்து வடக்கே பயணம் செய்து கோவாவிற்குச் சென்றார். இரண்டாவது முறை அவர் டாமனில் கைது செய்யப்பட்டு இன்குசிஷன் விசாரணைக் கைதியாக கோவாவிற்குக் கொண்டுவரப்பட்டார். அவரது புத்தகத்தின் முதல் நான்கு அத்தியாயங்கள் அவரது கோவா பயணத்தைக் குறித்து விளக்குகின்றன.

அத்தியாயம் பத்தில் டெல்லோன் கோவாவில் நடந்து கொண்டிருந்த இன்குசிஷன் விசாரணைகளைக் குறித்து இவ்வாறு கூறுகிறார்,

அந்தப் பெரிய சர்ச்சிற்கு எதிர்ப்புறம் இருக்கும் பிரம்மாண்டமான மைதானத்தின் நடுவில் அந்தப் பண்ணை வீடு இருந்தது. அந்த வீட்டின் பெயரைக் கேட்டாலேயே ஆயிரக்கணக்கானவர்கள் நடுநடுங்கினார்கள். அதுவே இன்குசிஷன் விசாரணைகள் நடந்த இடம். அந்த இடம் போர்ச்சுக்கீசிய மொழியில் Santa Casa or Casa do Santo Oficio என அழைக்கப்பட்டது.

அதே புத்தகத்தில் அவர் தனது இரண்டாவது கோவா பயணத்தைக் குறித்து இவ்வாறு எழுதுகிறார்,

பாஸைம் என்கிற இடத்தில் நான்கு அல்லது ஐந்து நாட்கள் தங்கவைக்கப்பட்ட நாங்கள் பின்னர் கோவாவை நோக்கிக் கப்பலில் பயணித்து ஜனவரி பதினான்காம் தேதி இரவு கோவாவை வந்தடைந்தோம்.  இதற்கு முன்னர் நான் கோவா வருகையில் அங்கு வசித்த என் நண்பர்களின் உதவியுடன் கோவா கடற்கரைக்குச் சென்று பார்த்ததுவும் பின்னர் அவர்களின் உதவியுடன் மூன்று வருடங்கள் அந்த நகரில் வசித்ததுவும் குறித்து முதலிலேயே எழுதியுள்ளேன்.

நான் ஃப்ரான்ஸிற்கு வந்து எட்டாண்டுகள் கழித்து இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறேன். மிகுந்த தயக்கத்துடன் இதனை எழுதி முடிக்க எனக்கு நான்காண்டுகள் ஆனது.  புனித சர்சிற்கு எதிராக எதுவும் எழுதிவிடுவேனோ அல்லது அங்கு நான் செய்து கொடுத்த சத்தியத்தை மீறிவிடுவேனோ என்கிற அச்சத்துடனேயே இதனை எழுதியிருக்கிறேன்….



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 கொலைகாரக் கிறிஸ்தவம் – 10

 

பிரெஞ்சு மருத்துவர் டெல்லோன் எழுதிய கோவா இன்குசிஷன் குறித்த புத்தகங்கள் போலியானவைகளாக இருக்கலாம் என பின்னாட்களில் வந்த வரலாற்றாசிரியர்கள் மதிப்பிடுகிறார்கள். எனினும் இன்குசிஷன் குறித்து அவர் குறிப்பிடும் விஷயங்கள் மறுக்கவியலாதவை. டெல்லோன் உண்மையிலேயே கோவாவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாரா (1674-76) என போர்ச்சுக்கீசிய ஆவணங்களுடன் ஒப்பிட்டாலேயே உண்மை விளங்கிவிடும் என்றாலும், அந்த ஆவணங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டதால் அதனைக் குறித்து மேலும் விசாரணை நிகழ்த்தவியலாத நிலையே இன்றைக்கு உள்ளது.

அதேசமயம், டெல்லோன் இன்னொரு ஃப்ரெஞ்சுப் பயணியான அப்பே கார்ரே (Abbe Carre) தன்னை வந்து சிறையில் சந்தித்ததாகக் கூறுவதனையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.

டாமனிலிருந்து செயிண்ட் தாமஸ் தீவுக்குப் பயணம் செய்யும் வழியில் கோவாவிற்கு வந்த அப்பே கார்ரே மிகுந்த சிரமத்துடன் அனுமதிகளைப் பெற்று என்னைச் சிறையில் சந்தித்தார். ஒரு கிறிஸ்தமஸ் நாளுக்கு முந்தைய நாளாகும் அது. அதன் பின்னர் அவர் சூரத்திற்குச் சென்றுவிட்டார் என்கிறார்.

மேற்கண்ட அப்பே கார்ரே மராட்டிய சத்ரபதி சிவாஜி மீது பெரும் மதிப்பு கொண்டிருந்தவர். அவரைக் குறித்தான பல குறிப்புகளைத் தனது பயணக் கட்டுரைகளில் குறிப்பிட்டிருக்கிறார். அதே அப்பே கார்ரேதான் டெல்லானைச் சந்தித்தது குறித்தும் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுபிருப்பதால், டெல்லான் கோவா இன்குசிஷனைக் குறித்துக் கூறும் விவரங்கள் சரியானவையாகவே இருக்கும் என நம்பலாம்.

போர்ச்சுகலில் அறிமுகப்படுத்தப்பட்ட இன்குசிஷன் விசாரணைகள் யூதர்களை மதம்மாற்றுவதற்கும், அவ்வாறு மதம் மாற்றப்பட்ட புதிய கிறிஸ்தவர்கள் அவர்களின் பூர்விக மதத்திற்குத் திரும்பாமலிக்க அவர்களைக் கண்காணிப்பதற்கும் உபயோகிக்கப்பட்டது என நாம் முன்பே பார்த்தோம். இதுவே போர்ச்சுக்கீசியர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த இந்தியாவின் கோவாவில், வசித்த யூத, ஹிந்து மற்றும் முஸ்லிம்களைக் கிறிஸ்தவர்களாக கட்டாய மதமாற்றம்செய்வதற்கும் உபயோகிக்கப்பட்டது.

கோவாவின் கிறிஸ்தவர்களல்லாதவரை மதம்மாறச் செய்வதற்குச் சாம, தான, பேத, தண்டங்கள் உபயோகிக்கப்பட்டன. அவ்வாறு மதம்மாற்றப்பட்டவர்கள் போர்ச்சுகல் யூதர்களைப்போல வெளியில் கிறிஸ்தவர்களாக நடித்தாலும் உள்ளுக்குள் தங்களின் பூர்விக மதங்களையே பின்பற்றினர். இதன் பின்னனியில் கோவாவின் இன்குசிஷன் விசாரணை மதமாற்றங்கள் எவ்வாறு நிகழ்ந்தன என்பது குறித்துச் சிறிது பார்க்கலாம்.

அதனைக் குறித்து விளக்கும் வரலாற்றாசிரியன் பென்ரோஸ் (Penrose), இன்குசிஷன் விசாரணையால் தூண்டப்பட்ட கிறிஸ்தவ அடாவடித்தனமும், அதனுடன் இணைந்த கட்டாய மதமாற்றவெறியும், போர்ச்சுகீசிய ராஜ்யமெங்கும் ஒரு விஷத்தைப்போலப் பரவி, அதன் காரணமாகக் கிளர்ந்தெழுந்த கிறிஸ்தவ பயங்கரவாதம் பிறமதத்தினவரின்மேல் பெருந்துயராகச் சூழ்ந்தது.

இந்தக் கொடூரம் ஆரம்பமானதொரு முக்கிய தினம் என நாம் ஒருநாளைக் குறித்து எண்ணுவோமானால் அது பாதிரி ஃப்ரன்ஸில் சேவியர் கோவாவில் காலடி எடுத்துவைத்த தினமான மே 6, 1542-ஐச் சொல்லலாம். பாதிரி சேவியர் காலடி எடுத்த நாள் முதல் கோவா பாதிரிகள் பிறமதத்தவர்களான ஹிந்துக்கள், யூதர்கள், முஸ்லிம்கள் மீது கொடூரமாக நடக்க ஆரம்பித்தனர். மதம்மாறுவதற்கு லஞ்சம் கொடுப்பது, மிரட்டுவது, அடிபணிய மறுப்பவர்களைப் பிடித்துக் கொண்டுசென்று சித்திரவதைகள்செய்வது என நெஞ்சம் நடுங்கும் காரியங்களைச் செய்யத் துணிந்தனர்.என்றெழுதியுள்ளார்.

வரலாற்று ஆய்வாளர் பர்ட்டன், கோவாவில்  நெருப்பும், இரும்பும், பாதாளச்சிறையும், துன்புறுத்துதலும், அரிசியும், ரூபாயும் உபயோகிக்க கோவா பாதிரிகளுக்கு அனுமதியளிக்கபட்டது. அதனை அந்தப் பாதிரிகள் மிகச் சிறப்பாகவே உபயோகித்துக்கொண்டனர்,’ என்கிறார். மேலும், அங்கிருந்த கிறிஸ்தவ பாதிரிகள் அனைவரும் அடிப்படைவாத மதவெறியர்கள். அந்த மதவெறியர்கள் அங்கிருந்த மக்களுக்கு மீளவே முடியாத துயரத்தை அள்ளித்தந்தார்கள் எனச் சொல்கிறார்.

கோவாவில் நடக்கும் கொடுமைகளை அறிந்த போர்ச்சுகீசிய அரசர் அவ்வப்போது பாதிரிகளிடம் பிறமதத்தவர்கள் தங்களுடைய சுய ஆர்வத்தின் பேரிலேயும், கிறிஸ்துவின்மீது உண்மையான பற்றின் பேரிலேலும் மட்டுமே மதமாற்றம்செய்யப்பட வேண்டுமேயன்றி அவர்களை வற்புறுத்தி ஒருபோதும் மதமாற்றம்செய்யக்கூடாது என வலியுறுத்தினார். ஆனால் இது வேளாவேளைக்கு மாறிக் கொண்டிருந்தது. மேலும் இந்தியாவிலிருந்த கிறிஸ்தவ பாதிரிகள் இந்த உத்தரவை மீறத் தயங்கவில்லை.

பாதிரிகள்/ஆர்ச் பிஷப்களின் கூட்டமைப்பான The Concilio Provincial 1567-ஆம் வருடம் பிறப்பித்த விதிகளின்படி எந்தவொரு மாற்றுமதத்தவனும் வற்புறுத்தலால் மதமாற்றம் செய்யப்படக கூடாது என்கிறது.

ஒருவனை பயமுறுத்தியோ அல்லது கட்டாயப்படுத்தியோ எந்தவொருவனையும் கிறிஸ்தவனாக ஞானஸ்னானம் செய்யக்கூடாது. ஏனென்றால் ஏசுகிறிஸ்துவின் அருமை, பெருமைகளை அறிந்த எவரும் அவர்களாகவே, தங்கள் மனதில் எழுந்த அன்புணர்ச்சியுடன் மதம்மாறுவதுதான் சரியானது. நம்பிக்கையற்ற பிறமதத்தவர்கள் நமது மதத்திற்கு வருவதற்கு நாம் ஒரு முன்னுதாரனமாக வாழ்ந்து காட்டவேண்டுமேயன்றி பொய்களாலும், புரட்டுக்க்களாலும், பித்தலாட்டங்களாலும் அவர்களை ஏமாற்றி மதம் மாற்றுதல் தவறானது… எனப் பலவாறும் விளக்குகிறது.

எனினும் கோவா இன்குசிஷ்ன் விசாரணைகள் அதற்கு நேரெதிராக நடந்தன. பிரெஞ்சுப் பயணியான ஃப்ரன்கோ பையார்ட், கோவா மதமாற்றங்களை நிகழ்த்திய பாதிரிகள் மதமாற்றப்பட்டவர்கள் தாங்களே முழு சுதந்திரத்தோடு அவரகளிடம் வந்து கிறிஸ்தவர்களாக ஞானஸ்னானம் செய்துகொண்டார்கள் எனக் காட்டுவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகளைக் குறித்து கீழ்க்கண்டவாறு விளக்குகிறார்…

பாதிரிகள் இருந்த இரண்டாவது சர்ச்சிற்கு அருகில் இன்னொரு வீடு இருந்தது. அதனைப் புதிய கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவ மதத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்குப் பாடம் நடத்துமிடம் [Cathecumenos] என அழைத்தாரகள்.  ஞானஸ்னானம் நடக்கும் நாள் வரும்வரைக்கும் அந்த வீட்டில் பிறமதத்தவர்கள் அடைத்து வைக்கப்பட்டு, அவர்களுக்கு உணவும், உடையும் கொடுத்து அவர்கள் தப்பிச் சென்றுவிடாதபடி  பாதுகாத்து வைத்திருந்தார்கள்.

செயிண்ட் பால் மதமாற்ற விருந்துநாளன்று இந்த வீட்டிலிருந்து சுமார் 1,500 இந்திய ஆண்கள், பெண்கள், குழந்தைகள் பலரும் கிறிஸ்தவமுறைப்படி இரண்டிரண்டு பேர்களாக வரிசையில் ஊர்முழுக்க ஊர்வலமாக நடந்து வந்தார்கள். ஏற்கனவே ஞானஸ்னானம் செய்யப்பட்ட கிறிஸ்துவர்களிலிருந்து பிரித்துக்காட்டும் பொருட்டு அவர்களின் கைகளில் குருத்தோலையால் செய்யப்பட்ட சிலுவைகள் அளிக்கப்பட்டிருந்தன. இறுதியில் செயிண்ட் பால் சர்ச்சிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஒவ்வொருவராக ஞானஸ்னானம் செய்யப்பட்டு கிறிஸ்தவர்களாக்கப்பட்டார்கள். அவர்களில் ஏழைகளாக இருந்தவர்களுக்கு பாதிரி பணம் கொடுத்தார். பின்னர் அவர்கள் உயிர் போனாலும் தாங்கள் கிறிஸ்தவ மதத்தைவிட்டு விலகமாட்டோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டார்கள்.

இதே ஊர்வலங்களும், மதமாற்றங்களும் ஒவ்வொரு வருடமும் பலமுறைகள் நடத்தப்பட்டன. கிறிஸ்துமஸ் நாட்களில் பலமுறை ஃப்ரான்ஸிஸ்கன் சர்ச்சில் இன்னும் நூற்றுக்கணக்கானவர்கள் மதமாற்றம் செய்யப்பட்டதை நான் பலமுறை கண்டிருக்கிறேன்.

அவ்வாறு மதம் மாறியவர்கள் அனைவரும் தாங்களாக முன்வந்து மதம் மாறிக் கொண்டார்கள் என்பது ஒரு பெரும் பொய்யே. டாக்டர் நூரன்ஹா இதனை இன்னொரு விதமாக விளக்குகிறார்,

ராச்சோல் கோட்டைக்குள் 1560-ஆம் வருடம் வரையில் ஒரே ஒரு சர்ச் மட்டுமே இருந்தது.  ஆனால் அடுத்த 50 வருடங்களில் அந்தப் பகுதியில் இருந்த பெரும்பாலோர் கிறிஸ்தவர்களாகிவிட்டார்கள். ஏறக்குறைய 28 புதிய பெரும் சர்ச்சுகள் தோற்றுவிக்கப்பட்டிருந்தன. இவ்வாறு மதம்மாற்றப்பட்டவர்களில் பெரும்பாலோர் கடுமையான மிரட்டல்களாலும், பாதிரிகளை எதிர்த்துநிற்கத் துணிவில்லாததாலும் மதம்மாறியவர்கள். தங்களின் மதத்தின்மீதும், தேசத்தின்மீதும் பற்றுகொண்டு மதம்மாற மறுத்தவர்கள் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டார்கள்.  இன்னும் சிலருக்கு நிலமும், பணமும், வேலைகளும் கொடுக்கப்பட்டது. எனவே அங்கு மதம்மாறியவர்களில் பெரும்பாலோர் கிறிஸ்தவத்தின்மீதுள்ள பிடிப்பால் மதம் மாறவில்லை. அந்தப் பிடிப்பு பிற்காலத்தில் வந்தது.

எப்படிப்பட்டவர்களெல்லாம் மதம்மாறினார்கள் என்பதனை விளக்கும் கடிதம் ஒன்று அக்டோபர் 10, 1547-ஆம் வருடம் பாதிரி நிகாலோ லாண்சிலோட்டே என்பவரால் பாதிரி இக்னேஷியோ லொயோலா எனபவருக்கு எழுதப்பட்டது.  லாண்டிசிலோட்டே, புதிதாக மதம்மாறியவர்கள் கிறிஸ்தவத்தின்பால் இருந்த ஈர்ப்பினைவிடவும் பிற காரணங்களுக்காகவே மதம்மாறினார்கள் என்கிறார்.

இந்த நாட்டில் மதம்மாறியவர்கள் யாவரும் தங்களின் சுயநலத்திற்காக, அடிமைத்தனத்திலிருந்து தப்புவதற்காக மதம்மாறியவர்கள் மட்டுமே.  முஸல்மான்களிடமும், ஹிந்துக்களிடமும் அடிமைகளாக இருந்து, பின்னர் போர்த்துக்கீசியர்களின் தயவை நாடிநின்றவர்களும், ஒரு சாதாரண தலைப்பாகை, சட்டை, வேறொரு விரும்பிய சிறுபொருளுக்காகவும், தூக்குத்தண்டனையிலிருந்து தப்புவதற்காகவும், எவளாவது கிறிஸ்துவச்சியின்மீது கொண்ட காதலுக்காகவும், இன்னபிற சிறிய காரணங்களுக்காகவும் மதம்மாறியவர்களே அதிகம். அவ்வாறானவர்கள் மதம்மாற விருப்பம்தெரிவித்தவுடன் உடனடியாக எந்தக் கேள்வியும் கேட்கப்படாமல், கிறிஸ்தவமதத்தைப் பற்றித் தெரிவிக்காமல் உடனடியாக ஞானஸ்னானம் அளிக்கப்பட்டார்கள்.

இன்னும் சில பிராமணர்கள் தங்களின் சாதியைவிடவும் கீழான சாதிப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதற்காகவும் மதம்மாறிய சம்பவங்களும் உண்டு.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 கொலைகாரக் கிறிஸ்தவம் – 11

 

“புனித” செயிண்ட் சேவியரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவரான பாதிரி ஜேம்ஸ் ப்ரோடெரிக், சேவியருடன் பணிபுரிந்த இன்னொரு பாதிரியான மின்குவல் வாஸ் எவ்வாறு ஹிந்துக்களுக்கு அழுத்தம் கொடுத்து அவர்களை மதம்மாற நிர்ப்பந்தித்தார் என விளக்குகிறார். மதம்மாற மறுத்தவர்களுக்கு அவர் கொடுத்த தொல்லைகளே ஹிந்துக்கள் மத்தியில் கிறிஸ்தவமதத்தைக் குறித்தான எதிர்மறை எண்ணங்கள் ஏற்படக் காரணமானவர் என்கிறார்.

போர்ச்சுகீசிய சர்ச்சுகளை இந்தியாவில் ஆண்ட மின்குல் வாஸ் கோர்ட்டின்ஹோ அடிப்படையில் ஒரு ஒன்றுமறியாத மூடன். ஆனால் செயிண்ட் சேவியரோ அவரை போர்ச்சுகீசிய அரசரின் அளவிற்குத் தூக்கிப் பிடித்துக்கொண்டிருந்தார். மிகுந்த மூர்க்ககுணம் கொண்டஇந்தியக் கிறிஸ்தவர்களின் உண்மையான தந்தையும் [?!], நேர்மையாளரான பாதிரி மின்குல் வாஸ் கோர்ட்டின்ஹோ மிகுந்த குறுகிய மனப்பான்மையுடையவர். இந்திய ஹிந்துக்கள்மீது தாளமுடியாத வெறுப்பினை உமிழ்பவராக, அவர்களைத் துன்புறுத்துபவராக இருந்தார் அவர்.

போர்ச்சுகீசிய பகுதியிலிருந்த ஹிந்து ஆலயங்களை இடிப்பது மட்டுமன்றி, அந்த ஆலயங்களின் வருமானத்தையும் பிடுங்கி சர்ச்சுகள் கட்டவேண்டும், அதன்மூலமே கிறிஸ்தவத்தை இந்தியாவில் வளர்த்தெடுக்கவேண்டும் எனும் எண்ணமுடையவர், மின்குல் வாஸ் கோர்ட்டின்ஹோ. கோவாவிலோ, கொச்சியிலோ, மலாக்காவிலோ எந்தவொரு ஹிந்துவும் கிறிஸ்தவமதத்தின் மேன்மையை அறிந்து தானாகவே அதில் சேர்ந்துவிடவில்லை. மாறாக, கோர்ட்டின்ஹோ ஹிந்துக்களின் வாழ்வாதாரங்களின்மீது தொடுத்த தாக்குதல்களே அந்த அப்பாவிகள் கிறிஸ்தவர்களாக மதம்மாறுவதற்கான காரணங்களாக இருந்தன.

அந்தச் செயல்கள் கிறிஸ்துவ மதத்தின்பால் ஈர்ப்பினை வளர்ப்பதற்கு நேரெதிராக வெறுப்பினை ஊட்டிவளர்த்தன. துரதிருஷ்டவசமாக, எப்படியேனும் அடுத்த மதத்துக்காரனை கிறிஸ்தவனாக்கும் அந்தமுறையே ஐரோப்பிய நாடுகளின் ஆசியைப்பெற்ற முறையாகவும் இருந்தது.

அவருடன் பணிபுரிந்த செயிண்ட் சேவியருக்கு ஹிந்துமதம், அதன் மதச் சம்பிரதாயம், சடங்குகள் குறித்தோ எந்த அறிவும் இருக்கவில்லை. அதைவிடவும் இஸ்லாமைக் குறித்து அவருக்குத் தெரிந்தது ஒன்றுமேயில்லை என்றே சொல்லலாம். சேவியரின் காலத்தில் போர்ச்சுகீசியர் இந்தியாவிற்கு வந்து ஏறக்குறைய நாற்பது ஆண்டுகள் தாண்டியிருந்தன என்றாலும் அவர்கள் ஒருவர்கூட இந்தியாவின் பழமையான கலாச்சாரத்தைக் குறித்தோ, மதத்தைக் குறித்தோ அறிந்து கொள்வதற்கான சிறிய முயற்சிகளைக்கூடச் செய்யவில்லை. அதற்கு பதிலாக, அந்தப் பழமையான கலாச்சாரத்தைச் சிதைப்பதற்குரிய அத்தனை முயற்சிகளையும் வெறியுடன் செய்தனர்.

செயிண்ட் சேவியரின் காலத்தில் கோவா தீவு ஒரு துறைமகமாக இருந்தாலும், அது மக்கள்தொகை இல்லாததாக, அதிக முக்கியத்துவம் இல்லாத ஒரு பகுதியாகத்தான் இருந்தது. மாண்டோவி, ஜுவாரி ஆறுகள் இந்துமதக் கடவுள்களுக்கு சேவகம்செய்துகொண்டிருந்தன. கோவாவைப் பிடித்தவரான அல்பெர்க்கர்க்கிக்கு அஞ்சி விலகியோடிய முஸ்லிம்கள் மீண்டும் கோவாவிற்குள் வணிகம்செய்ய வந்திருந்தார்கள். பழங்காலந்தொட்டே கோவா ஹிந்துக்களின் ஒரு முக்கியத் தலம் என்பதையும், வணிகத்திலும் கல்வியிலும் சிறந்து விளங்கியதொரு பகுதி என்பதையும், இஸ்லாமியர்களிடம் வீழ்ந்த பின்னரும் தெற்காசியாவின் முக்கிய துறைமுகமாக விளங்கியது என்பதையும், அங்கிருந்துதான் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் ஒவ்வொரு வருடமும் மக்காவிற்குச் செல்வதற்காக பல்லாயிரக்கணக்கில் வந்து கூடுவார்கள் என்பதினையும் செயிண்ட் சேவியர் அறிந்திருக்கவில்லை. அல்லது அறிந்திருந்தாலும் அதனைப் பொருட்படுத்தவில்லை.

இத்தனை சிறப்புடைய ஒரு இந்தியப் பகுதி எளிதில் கிறிஸ்தவமயமாகாது என்பதினை மட்டும் சேவியர் நன்கு உணர்ந்திருந்தார் என்பதால், அவர்களை மதம்மாற்றுதற்கு அவராலும், அவரைச் சேர்ந்தவர்களாலும், கடுமையான முறைகள் உபயோகிக்கப்பட்டன என்பதில் சந்தேகமில்லை.

கோவா பகுதியிலிருந்த ஹிந்துக்கள், கிறிஸ்தவ பாதிரிகளின் சுவிசேஷ பிரசங்கங்களைப் பொருட்படுத்தவில்லை. எனவே அவர்களை மதமாற்றம் செய்யமுடியாத பாதிரிகள், ஹிந்துக்கள் தங்களின் கடவுளர்களை வணங்குவதற்குத் தடைசெய்தார்கள். மறுத்தவர்கள் கடுமையான தண்டனைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர். புதிதாக மதமாற்றம் செய்யப்பட்டவர்களுக்கு ஏராளமான சலுகைகளை அள்ளி வீசி மதம்மாறாமல் இருக்கும் மற்ற ஹிந்துக்களின் மனதில் சலனத்தை உண்டாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

கிறிஸ்தவத்தின் அடிப்படையை அறியாது இவ்வாறு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்ட ஹிந்துக்கள், வெளிப்படையாக கிறிஸ்தவர்களாகத் தங்களைக் காட்டிக்கொண்டாலும் உள்ளுக்குள் ஹிந்துக்களாகவே இருப்பார்களோ என்கிற சந்தேகத்தின்பேரில் இன்குசிஷன் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. அவர்களுக்குச் செய்யப்பட்ட கொடுமைகள் பலவும் துல்லியமாக எழுதப்பட்டு வைக்கப்பட்டிருந்தாலும், அந்த ஆவணங்கள் அனைத்தும் சுவடின்றி இன்றைக்கு மறைந்துவிட்டன. எனவே, இன்குசிஷன் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட இந்தியர்கள் எத்தனைபேர்கள் கட்டைகளில் கட்டிவைக்கப்பட்டு கொல்லப்பட்டார்கள் என்கிற தகவல்களை இன்றைக்கு நாம் அறியமுடிவதில்லை. எனினும் அவ்வாறு நடந்தது என்பது மறுக்கவே முடியாத உண்மையே.

இருப்பினும் இதுகுறித்தான தகவல்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாகக் கிடைத்தவண்ணமே இருக்கின்றன. ஃபிலிப்பே நெரி சேவியர் என்பவர் Gabinete Literatorio பத்திரிகையில் இன்குசிஷன் விசாரணைகள் காரணமாக கட்டையில்கட்டி எரிக்கப்பட்ட ஒரு குடும்பத்தினைக் குறித்து எழுதியிருக்கும் குறிப்பு முக்கியமானது.

பாஸின் ஜில்லாவில் 1840-ஆம் வருடம் செய்த சோதனைகளின்போது சதுரக்கற்களால் கட்டப்பட்டு பின்னர் 1786-ஆம் வருடம் இன்குசிஷன் விசாரணை பாதிரிகளால் இடித்துத் தள்ளப்பட்ட வீடு ஒன்றினைக் கண்டோம். அங்கிருந்த கற்பலகை ஒன்றில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டிருந்தது…

இந்தக் குறிப்பிட்ட இனத்தைச் சார்ந்தவர்களும் மற்றும் பலரும் கிறிஸ்தவமல்லாத பல பாகனீயச் சடங்குகளையும், விழாக்களையும் கொண்டாடியதால் கிறிஸ்தவ புனித அலுவலகம் அந்த வீட்டை எரிக்குமாறு நீதி வழங்கியது. அதன்படி டிசம்பர் 30, 1747-ஆம் வருடம் Auto de Fe கொண்டாடப்பட்ட நாளன்று எரிக்கப்பட்டது என்கிறது, அக்குறிப்பு.

மேலும், மேற்கண்ட வீடு முழுவதுமாக இடிக்கப்பட்டுத் தரைமட்டமாக்கப்பட்ட பின்னர் உப்பு தெளிக்கப்பட்டு உழப்பட வேண்டும் என்றும், இந்த தண்டனையைக் குறித்தான கல்வெட்டு ஒன்று இங்கு நிறுவப்பட வேண்டும் எனவும் உத்தரவாகி அதன்படியே செய்து முடிக்கப்பட்டது.

அதாவது இன்குசிஷன் விசாரணைக்குப் பின்னர், அதன் சட்டங்களின்படி, கிறிஸ்தவரல்லாத ஒருவனின் வீடு தகர்க்கப்பட்டது. 1865-ஆம் வருடம் குறிப்புகள் எழுதப்பட்ட அந்தக் கற்பலகை இரண்டு துண்டுகளாக உடைக்கப்பட்டு சாலையில் கிடந்ததாக பாதிரி நெரி சேவியர் குறிப்பிடுகிறார்.

போர்ச்சுகீசிய தளபதியான அல்ஃபோன்ஸோ-டி-அல்புகர்க்கி, கோவாவை வெற்றி கொள்ளுவதற்குமுன்னர் கோவா, பிஜப்பூரைத் தலைநகராக ஆண்டுகொண்டிருந்த யூசுஃப் அடில்ஷா வசம் இருந்தது. அடில்ஷாவின் ஆட்சியின்கீழ் ஹிந்துக்கள் துருக்கியர்களிடமும் அவர்களது ரூமஸ் அலுவலகர்களிடமும் தாங்கவொன்னாத் துயரம் அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். எனவே கோவா ஹிந்துக்கள் அவர்களின் அருகாமை நாடான ஹொனாவர் நாட்டின் கப்பல்படையை அனுப்பி துருக்கர்களை அடக்குமாறு அந்த நாட்டின் அரசனான டிமோஜா (Timoja) என்பவனை வேண்டுகின்றனர். தன்னால் தனியாக துருக்கர்களை அடக்க முடியாது என்று உணர்ந்து கொண்ட தமோஜா போர்ச்சுகீசிய தளபதி அல்பர்கர்க்கை உதவிக்கு அழைக்கிறான்.

அல்புக்கர்க்கி, அந்த நேரத்தில் ஒர்முட்ஸ் பகுதியை நோக்கிச் செல்லும் வழியில் சிண்ட்டகோரா என்னுமிடத்தில் நங்கூரமடித்து தங்கியிருந்தான். தனோஜா அவனை அங்குவந்து சந்திக்கிறான். அந்த சத்திப்பைக் குறித்து எழுதும் அல்பர்கர்க்கின் மகனான அஃபோன்ஸோ-டி-அல்புக்கர்க்கி,

என்ன காரணத்திற்காகத் தான் கோவா வரவேண்டும் என கேட்டவுடன், கோவாவின் நிலைமை வெகு கவலைக்கிடமாக இருப்பதாகவும், ஏராளமான கொலை, கொள்ளைச் சம்பவங்கள் அந்தப் பகுதியிலிருக்கும் வியாபாரிகளுக்கு எதிராகக் கடந்த சில வருடங்களாக நடந்து கொண்டிருப்பதாகவும், இதன் காரணமாக இருநூற்றிற்கும் மேற்பட்ட வியாபாரிகள் கொல்லப்பட்டனர் என்றும், அதன் காரணமாக, அங்கு வாழும் பொதுமக்கள் பொங்கியெழுந்து கோவாவின் ஆட்சியாளர்களுக்கு எதிராகக் கிளர்ச்சிகள் செய்து கொண்டிருக்கிறார்கள், கோவாவைத் தான் பிடிக்க நினைத்தால், தனது படைகளுடன் அங்கு சென்றாலேயே அனைத்து கோவா மக்களும் தனக்கு ஆதரவாகத் திரண்டு ஆட்சியைத் தன்னிடம் ஒப்படைப்பார்கள் எனத் தனோஜா சொன்னதாக எழுதுகிறான்.

அல்புக்கர்க்கியின் பொதுக்காரியதரிசகளில் ஒருவரான காஸ்பர் கொர்ரியா, ஹிந்து அரசன் தனோஜா அல்புக்கர்க்கியிடம் சொன்னவற்றைக் குறித்துச் சொல்லுகையில், கொள்ளையடிக்கப்பட்ட வியாபாரிகள் எவரும் கோவாவைவிட்டு வெளியில்செல்ல அனுமதிக்கப்படாமல், அடிமைகளைப்போல பிடித்துவைக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே அவர்களிடையே பெரும் அதிருப்தி நிலவுகிறது. நீங்கள் உங்களின் கப்பல்களுடன் ஆற்றின் வழியக உள்ளே நுழைந்து கோட்டைக்கு எதிராக நிறுத்தினாலேயே கோட்டை முழுவதும் உங்களிடம் சரணடைந்துவிடும். முஸ்லிம் ஆட்சியாளர்களிடமிருந்து அவர்களுக்கு விடுதலை வேண்டும் என அவர்கள் எழுதிய பல கடிதங்கள் என்னிடம் இருக்கின்றனஎன்கிறார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கொலைகாரக் கிறிஸ்தவம் – 12

 

தனேஜாவின் பேச்சைக் கேட்டுத் தன்னுடைய கப்பல்களை கோவா நோக்கித் திருப்பிய  போர்ச்சுகீசிய தளபதி அல்புகர்க்கி, தனேஜாவிற்கு கீழ்க்கண்ட பதிலை அவர் அளித்ததாக அவரது செயலாளர் காஸ்பர் கரேர்ரா சொல்கிறார்:

தனேஜா, நீங்கள் சொல்வது உண்மையென நான் நம்புகிறேன். எனது மேன்மை தங்கிய அரசரின் அனுமதியின்பேரில்  நான் செல்லவேண்டிய இன்னொரு பகுதிக்குச் செல்லாமல் உங்களுக்கு உதவிசெய்யத் துணிகிறேன். என்னை நீங்கள் கோவாவிற்கு வழிகாட்டி அழைத்துச் சென்றால் எனது அரசர் உமக்கு ஏராளமான பொன்னும், பொருளும் பரிசளிப்பார் என்று உறுதியளிக்கிறேன். அதனுடன் நீங்கள் ஆள்வதற்குத் தேவையான சரியான நிலப்பகுதியும் பரிசாக அளிக்கப்படும் எனவும் கூறுகிறேன்.

அதனைத் தொடர்ந்து கோவாவின்மீது படையெடுத்துவரும் அல்புகர்க்கிகிற்கின் படைகளைக் கண்டு, தனேஜா சொன்னது போல, கோவா அமைதியாக போர்ச்சுகீசியர்களிடம் சரணடைந்தது. அதற்கு அடுத்தநாளே கோவாவின் தலைமை அதிகாரியாக இருந்த கிருஷ்ணா என்பவர் அல்புகர்க்கியிடம் சென்று கோவாவின் குடிமக்களுக்கும், பிராமணர்களுக்கும் பாதுகாப்பளிக்க வேண்டும் என வேண்டினார். அதனை ஏற்று அல்புகர்க்கி பொதுமக்களுக்குப் பாதுகாப்பளிக்கும் உறுதிமொழியை அளித்தான். வியாபாரிகள், கோவா குடிமக்கள், முஸ்லிம்கள், பிராமணர்கள் மற்றும் பிறருக்குப் பாதுகாப்பளிப்பதாக அவர் கூறிய உறுதிமொழி, ஹிந்து மற்றும் முஸ்லிம்களிடையே மகிழ்ச்சியைத் தோற்றுவித்தது.

கோவாவில் முஸ்லிம்களை நீக்கிவிட்டு அந்த இடத்தில் போர்ச்சுகீசியர்களை அமர்த்துவது தனேஜாவின் விருப்பமல்லாததால் அவர்களுக்குத் தேவையான பணத்தை அளித்தால் போர்ச்சுகீசியர்கள் தன்னிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிடுவார்கள் என நம்புகிறார். ஆனால், அல்புகர்க்கி அங்கிருந்து செல்வதற்குப் பதிலாக கோவாவைச் சுற்றி கோட்டைச் சுவர்களைக் கட்டுவதிலும், மற்ற பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்வதனால் போர்ச்சுகீசியர்கள் கோவாவைவிட்டுச் செல்லப்போவதில்லை என்பதினை உணர்ந்தான்.

கோவாவின் பாதுகாப்புகளை பலப்படுத்தியபின்னர், குடிமக்கள், வியாபாரிகள் என அனைவரும் போர்ச்சுகீசிய அரசரின் பிரதிநிதியான தனக்கு வரிகட்ட வேண்டும் என அறிவுறுத்தும்படி அல்புகர்க்கி தனேஜாவிடம் உத்தரவிட்டான்.  அதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தனேஜா, தனது உணர்வுகளை மறைத்துக் கொண்டு, கோவாவாசிகளை அழைத்து இது குறித்துப் பேசுவதாக பதிலளித்தான்.  எனினும் தனக்கு கோவாவை ஒப்படைக்கவில்லை என்னும் ஏமாற்றம் அவரிடம் தொனித்தது. அல்புகர்க்கியைத் தனிப்பட்ட முறையில் சந்திக்கும் தனேஜா தன்னிடம் கோவாவை ஒப்படைக்குமாறும் அதற்குப் பிரதியுபகாரமாக தேவையான பணம் அளிப்பதாகவும் கூறினார். அந்த நேரத்தில் தனேஜாவின் படையினரை கோட்டைச் சுவர்கள் கட்ட உபயோகித்துக் கொண்டிருந்த அல்புகர்க்கி, அதற்கான பதிலை நேரடியாக தனேஜாவின் தராமல் மழுப்பினார்.

அல்புகர்க்கி தன்னுடைய வேண்டுகோளுக்கு செவிசாய்க்கப் போவதில்லை என்பதை உணர்ந்த தனேஜா, அல்புகர்க்கியின் கப்பல்படை கேப்டன்களிடம் பேசி, அவர்களின் ஆதரவைப்பெற முயன்றார். அந்த அதிகாரிகளிடம் பேசிய அல்புகர்க்கி, தனக்கு ஒவ்வொரு வருடமும் 20,000 பரோடாக்கள் (இந்தியப் பணம்) தருவதாக இருந்தால் கோவாவை ஒப்படைப்பதாகவும், போர்ச்சுகீசிய அரசரின்கீழ் தனேஜாவிற்கு உயர்ந்த பதவியும் வாங்கித் தருவதாகச் சொன்னார்.

தனேஜாவிற்காக தான் செய்த பலகாரியங்களுக்குப் பிரதியுபகாரமாக மர்கோவா பகுதியின் மொத்த வருமானத்தையும் கோவாவிலிருக்கும் போர்ச்சுகீசிய ஆலைக்கு அளித்தால்தான் கோவாவை அவருக்கு ஒப்படைப்பதாக அல்புகர்க்கி கூறியதனைக் கேட்டுக் கோபமடையும் தனேஜா அங்கிருந்து வெளியேறினான். அந்தப் பகுதியிலிருந்த பிற அரசர்களின் துணையோடு போர்ச்சுகீசியர்களை விரட்டும் எண்ணத்துடன் அவன் இருந்தான்.

அல்ஃபான்ஸொ ட அல்புகர்க்கி

கோவாவை விட்டு தனேஜா சென்ற மூன்று நாட்களுக்குப் பிறகு, அல்புகர்க்கிகைச் சந்திக்கவரும் சில ஹிந்துக்கள், தனேஜா செலஸ்டே பகுதியில் இருப்பதாகவும், கோவாவைச் சேர்ந்த அனைத்து ஹிந்துக்களும் அவனுடன் சேரப்போவதாகவும் சொல்கிறார்கள். எனினும் இதனை உணர்ந்திருந்த அல்புகர்க்கி, தான் கோவாவைவிட்டுப் போகப்போவதில்லை என்கிற உறுதியான முடிவில் இருந்தான்.

சிறிது நாட்களுக்குப் பிறகு அடில்ஷா கோவாவைத் தாக்குகிறான்.  எனவே, அல்புகர்க்கி கோவாவிலிருந்து பின்வாங்கிச் சென்று, நவம்பர் 25, 1510-ஆம் வருடம் மீண்டும் கோவாவைப் பிடித்தான்.  தனக்கு எதிராகச் சதிசெய்த முஸ்லிம்களின்மீது கோபத்துடனிருக்கும் அல்புகர்க்கி, கோவாவிலிருக்கும் அனைத்து முஸ்லிம்களையும் படுகொலைசெய்ய உத்தரவிட்டான்.

அதனைக் குறித்து அல்புகர்க்கியின் மகன் இவ்வாறு எழுதியிருக்கிறான்:

“..…..போர்ச்சுகீசியர்களுக்கு எதிராக முஸ்லிம்கள் செய்த சதிவேலைகளுக்காகவும், துரோகத்திற்காகவும், கோவாவின் எதிர்காலப் பாதுகாப்பிற்காகவும் மிக அவசியமானது என நினைத்த அல்ஃபோன்ஸோ டி அல்புகர்க்கி , தனது கேப்டன்களை அழைத்து,  கோவா தீவில் வசிக்கும் அனைத்து முஸ்லிம்களையும் — அவர்கள் ஆண், பெண், குழந்தைகள் என யாராக இருந்தாலும் — கண்ட இடத்திலேயே கொல்லும்படி உத்தரவிட்டான். அந்தத்  தீவில் எங்கினும் முஸ்லிம்கள் என்பவர்கள் எவருமே இருக்கக்கூடாது என்பதில் அவன் கண்டிப்பானவனாக இருந்தான். அதன்படி கோவாத் தீவில் இருந்த அத்தனை முஸ்லிம்களும் கொல்லப்பட்டார்கள்.

அவ்வாறு கொல்லப்பட்ட முஸ்லிம் ஆண், பெண், குழந்தைகளின் எண்ணிக்கை ஆறாயிரத்தையும் தாண்டியது. இதனைத் தொடர்ந்து, அடுத்த நான்கு நாட்கள் கோவாவில் வசித்த முஸ்லிம்களின் ரத்தம் தெருவெங்கும் ஓடியது.

அந்தக் கொலைகளை நேரில் பார்த்த ஜோவா பர்ரோஸ் என்பவர், இந்த பயங்கரத்திலிருந்து தப்புவதற்காக பல முஸ்லிம்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஆற்றில் குதித்து அக்கரைக்குச் செல்ல முற்பட்டார்கள். ஆனால் அவர்களுக்குத் தேவையான படகுகள் எவையும் கிடைக்காததால் அவர்களில் பலர் ஆற்றில் மூழ்கி இறந்தனர். இந்தப் படுகொலைகள் நிகழ்ந்து கொண்டிருக்கையில், தனேஜா தனது மூவாயிரம் படையினருடன் மீண்டும் கோவாவிற்குத் திரும்பி வந்தான். இந்தச் சம்பவங்களுக்கு முன்னரே தான் வர இயாலாதது குறித்து அல்புகர்க்கியிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டான் தனேஜா. எனக் கூறியிருக்கிறார்.

கோவாவில் முஸ்லிம்களுக்கு எதிராக நிகழும் கொலைச் சம்பவங்களைக் கண்டு அஞ்சிய கோவா ஹிந்துக்கள், அங்கிருந்து வெளியேறி, அருகாமைப் பகுதிகளில் சென்று தங்கினர். அவர்களைத் தைரியப்படுத்தும் விதமாக அல்புகர்க்கி அவர்களை மீண்டும் கோவாவில் வந்து குடியேறும்படி தண்டோரா அடித்து, போர்ச்சுகீசியர்கள் முஸ்லிம்களுக்கு எதிரானவர்களேயன்றி உங்களுக்கல்ல. நீங்கள் மீண்டும் உங்கள் முன்னோர்களின் வீடுகளில் தங்கி, உங்கள் நிலங்களில் விவசாயம் செய்து, அரசாங்கத்திற்கு வரிகளைச் செலுத்துமாறு வேண்டுகிறேன் என அறிவித்தான்.

தனேஜா கோவாப் பகுதி ஹிந்துக்களின் தலைவனாக அறிவிக்கப்பட்டான். எனினும் கோவா ஹிந்துக்கள் தனேஜாவை விரும்பவில்லை எனத் தெரிந்ததால், அவனை நீக்கிய அல்புகர்க்கி, ஒனோர் பகுதி அரசனின் உறவினனான மெல்ராவ் என்பவனை நியமித்தான்.  பின்னர் சிறிது காலத்திற்குப் பிறகு மெல்ராவ் ஓனோருக்கு அரசனாக ஆனான்.  

தனேஜா கோவாவிலிருந்து வெளியேறி விஜயநகரத்திற்குச் சென்றதாகவும், அங்கு அவன் விஷம்வைத்துக் கொல்லப்பட்டதாகவும் தெரிகிறது. அதன் பின்னர் ஒனொரில் வாழ்ந்த தனேஜாவின் மனைவியும் குழந்தைகளும் கோவாவிற்கு வந்து வாழ்ந்ததாகவும், பின்னர் அவர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றப்பட்டதாகவும் பாதிரி லியனார்டோ பயஸ் அவரது Promptuario das Diffinicoes Indicas என்கிற புத்தகத்தில் எழுதி வைத்திருத்தான்.

மேற்கண்டவற்றைப் பார்க்கையில், போர்ச்சுகீசியனான அல்புகர்க்கி கோவாப் பகுதி ஹிந்துக்களுடன் நல்லுறவு கொண்டிருந்தான் எனத் தெரிகிறது.  மிகச் சமீப காலம்வரை அல்புகர்க்கி இறக்கும் வரை தனது வாக்கிலிருந்து தவறாமல் ஹிந்துக்களையும் அவர்களது மதச்சடங்குகளையும் மதித்து நடந்ததாகவே அறியப்பட்டிருத்தது. எனினும், கோவாவின் அகழ்வாராய்ச்சித் துறைத் தலைவரான டாக்டர் பராக்னாகா பெரெய்ரா சமீபத்தில் வெளியிட்டதொரு ஆவணத்தின்படி அல்புகர்க்கி ஹிந்துக்களை மதித்து நடந்தான் என்பது மிகத் தவறானதொரு எண்ணம் எனத் தெரிகிறது.

ஜனவரி 6, 1515-ஆம் வருடம், அல்புகர்க்கி உயிருடன் இருக்கையில், கொச்சியைச் சேர்ந்த ஆன்ட்ரே கோர்ச்சாலி என்பவர் ட்யூக் கிலியானோ-டி-மெடிசிஸ் என்பவருக்கு எழுதிய கடிதமொன்றில் கோவாவிலிருந்த ஹிந்து ஆலயமொன்றை இடித்த செய்தியை இவ்வாறு கூறுகிறார்:

பழமையான கோவாவிலும், இந்தியாவின் பிற பகுதிகளிலும் எண்ணவே இயலாத அளவிற்கு ஹிந்து ஆலயங்களும், வழிபாட்டிடங்களும் இருக்கின்றன. அருகாமைத் தீவான திவாரியில் ஒரு புதிய நகரைக் கட்டமைக்கத் தீர்மானித்த போர்ச்சுகீசியர்கள், அங்கிருந்ததொரு மிக அற்புதமான, கலை நயத்துடன் கட்டப்பட்டதொரு பெரிய ஆலயத்தையும், கருங்கற்களால் பெரும் அழகுடன் வடிவமைக்கப்பட்ட சிலைகளையும், அதன் கோபுரத்தையும், சிறிதும் பொருட்படுத்தாமல் இடித்துத் தகர்த்தார்கள். அந்தச் சிலைகளில் ஒன்றேனும் எனது கையில் கிடைத்திருந்தால் அதனை மேன்மை தங்கிய தங்களுக்கு அனுப்பிவைத்து, அதன் சிறப்பினை நீங்களே கண்டு தீர்மானிக்கச் செய்திருப்பேன்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 கொலைகாரக் கிறிஸ்தவம் – 13

 

அல்புகர்க்கி கோவா ஹிந்துக்களுக்கு உதவுவதாக வெளிப்படையாகச் சொன்னாலும், உள்ளுக்குள் அவர்களைக் கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்யவேண்டும் என்கிற எண்ணமுடையவராக இருந்தார் என்பதில் சந்தேகமில்லை. போர்ச்சுக்கல் அரசருக்கு டிசம்பர் 20, 1514-ஆம் வருடம் எழுதிய கடிதத்தில் இதனைக் குறித்தான தனது ஆர்வத்தையும், அதற்கென தான் எடுக்கப்போகும் நடவடிக்கைகளையும் விளக்கியிருப்பது தெளிவு.

லுசேனா என்கிற போர்ச்சுக்கீசிய வரலாற்றாசிரியரின் பதிவுப்படி கோவா ஹிந்துக்களைத் தண்டித்து அவர்களது ஆலயங்களைத் தகர்க்கும் செயலினை 1540-ஆம் வருடம் துவங்கியவர்கள் மினுகுவல் வாஸ் என்பவரும் டியாகோ போர்பா என்னும் இருவர்தான். எனினும், அவர்களுக்கு முன்பாகவே கோவா ஹிந்துக்கள் மீதான தாக்குதல்களும், மதம்மாறச்செய்வதற்கான அழுத்தங்களும், அவர்களது வழிபாட்டிடங்களை இடிப்பதற்குமான நடவடிக்கைகளை ஃப்ரான்ஸிஸ்கன்ஸ் என்கிற பிறிவினர் எடுக்கத் துவங்கியிருந்தனர். ஃப்ரயர் அண்டோனியோ என்பவர் போர்ச்சுக்கல் அரசருக்கு விடுத்த கோரிக்கை ஒன்று இப்படிச் சொல்கிறது,

போர்ச்சுக்கீசிய ஹிந்துக்களின் பிரதிநிதியாக உங்களால் நியமிக்கப்பட்ட கிருஷ்ணா என்பவனை அந்தப் பதவியிலிருந்து நீக்கி விரட்டியடித்தால் நீங்கள் கடவுளுக்குப் பெரும் தொண்டு செய்தவராவீர்கள். இந்தக் கிருஷ்ணா ஏசுவின்மீது நம்பிக்கையில்லாமல் ஹிந்துமத நம்பிக்கை கொண்டிருப்பவன் என்றாலும் அவனை மதம்மாறச்செய்வது எளிதாக இருக்கும் என்று நம்புகிறேன். இதனைக் குறித்து நான் அவனிடம் பலமுறை பேசியிருக்கிறேன் என்றாலும், மேன்மை தங்கிய அரசர் அவனிடம் பேசினால், கிறிஸ்தவனாக மதம்மாறுவதனைத் தவிர அவனுக்கு வேறு வழியிருக்காது.

ஹிந்து யோகிக்கள் கோவாவிற்குள் நுழைவதற்குத் தடைவிதிக்க வேண்டுமெனவும் நான் மேன்மைதங்கிய அரசரிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். ஏனென்றால் அவர்கள் கோவாவிலிருக்கும் ஹிந்துக் கோவில்களுக்குத் தேவையான பூசனைப் பொருட்களையும், மலர்களையும் கொண்டுவந்து அவர்களின் ஆலயங்களில் பிசாசு வழிபாடுகளைத் செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஏற்கனவே மதம்மாறிய கிறிஸ்தவர்களை மீண்டும் பிசாசு வழிபாட்டிற்குள் அழைத்துச் சென்றுவிடுகிறார்கள்.

மேன்மை தங்கிய அரசரே, திவார் என்னும் தீவில் இருந்த, கற்களால் கட்டப்பட்டதொரு ஒரு பெரும் ஹிந்து ஆலயத்தின் பெரும்பகுதியை ஏற்கனவே இடித்துத் தகர்த்துவிட்டோம்.  எனவே நீங்கள் அந்த ஆலயத்தை நமது கிறிஸ்தவ மடத்திற்கு அன்பளிப்பாக அளிக்க வேண்டுகிறேன்.

இந்த திவார் ஆலயம் இதற்கு முன்னர் அன்ரே கோர்சாலி என்பவன் சொன்ன அதே ஆலயமாகத்தான் இருக்க வேண்டும்.

கோவாவையும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள ஹிந்துக்கள், பிசாசு சிலைகள் அடங்கிய, ஏசுவின் சிலுவைக்கு எதிரான ஆலயத்தில் தினமும் வழிபாடுகளும், விழாக்களும் எடுத்துவருகிறார்கள். இந்த வழிபாடுகளிலும் விழாக்களிலும் ஹிந்துக்கள் மட்டுமல்லாது சில ஐரோப்பியர்களும் பங்கெடுத்துவருகிறார்கள். இது ஒரு தவறான செயலாகும். இது அவர்களிடையே சிலைவழிபாட்டிற்கு வழிவகுக்கும் ஆபத்து இருக்கிறது.

எனவே இங்கிருக்கும் அத்தனை ஹிந்து ஆலயங்களையும் இடித்துத் தகர்ப்பது, அந்த இடத்தில் சர்ச்சுகள் கட்டுவது, ஆண்டவனான ஏசுவுக்குச் செய்யும் பெரும் சேவையாகும். அவ்வாறு நமது புனிதர்களின் ஆலயங்கள் கோவாவில் கட்டப்பட்டபிறகு தங்களின் வீடு, நிலங்களுடன் வாழ நினைக்கும் அனைவரும் கிறிஸ்தவர்களாகக் கட்டாய மதமாற்றம் செய்யப்படவேண்டும். அதற்கு மறுப்பவர்கள் கோவாவிலிருந்து விரட்டியடிக்கப்படவேண்டும். மேன்மைதங்கிய அரசர் பெருமானே, வாழ்வாதாரத்தைப் பிடுங்கி இங்கிருந்து துரத்தியடிக்கப்படும் நிலைவந்தால், கிறிஸ்தவனாக மதம்மாறுவதனைத் தவிர அவனுக்கு வேறுவழியில்லை.

நவம்பர் 13, 1521-ஆம் வருடம் டியாகோ மாரிஸ் என்பவன் கோவவின் சர்ச்சுகளைக் குறித்து எழுதிய கடிதமொன்றில், “பல இந்திய மண்ணின் மைந்தர்கள் கிறிஸ்தவர்களாக மதம்மாற்றப்பட்டுவிட்டார்கள்,” எனக் குறிப்பிடுகிறான். இவர்களில் எவரும் முஸ்லிம்களாக இருக்கச் சாத்தியமில்லையாதலால் அவ்வாறு மதம்மாற்றப்பட்டவர்கள் அனைவரும் ஹிந்துக்களாகவே இருக்கவேண்டும்.

மதம்மாறச் செய்யப்பட்ட ஹிந்துக்களில் சிலர் மீண்டும் தங்களின் மதநம்பிக்கையைப் பின்தொடர ஆரம்பித்தார்கள். அவ்வாறு செய்பவர்களைத் தண்டிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என அரசருக்கு கடிதத்தின்மீது கடிதமாக எழுதினார்கள், கோவா பாதிரிகள்.

மேன்மைதகு அரசரின் பிரதிநிதியாக புதியதொரு ஆட்சியாளர் (வைசிராய்) கோவாவிற்கு வருவதாக அறிகிறேன். அவர்கள் அனைவரும் கடவுளின் பிரதிநிதியாக அவரது புகழை இந்தப் பிராந்தியத்தில் பரப்புவதற்கு உதவிகரமாக இருக்க வேண்டும் என அவர்களுக்கு அறிவுறுத்துமாறு வேண்டுகிறோம்.

இந்தப் பிராந்தியத்தில் வாழும் பல கிறிஸ்தவ பாதிரிகள் முறையற்ற வாழ்க்கை வாழ்ந்து தங்களுக்கும், தங்களைச் சார்ந்த மதத்திற்கும் பெரும் இழிவினைத் தேடித்தந்து கொண்டிருக்கிறார்கள். பரமண்டலத்திலிருக்கும் பிதாவின் புகழை மேம்படுத்துவதற்கு பதிலாக நம்பிக்கையற்ற ஹிந்துக்களின் ஆலயங்களுக்குப் போவதும், அவர்களின் ஆலயங்களைப் புகழ்வதுமாக இருக்கும் இந்த பாதிரிகளை மேதகு அரசர் விசாரித்து ஆவண செய்யவேண்டும்.” என்னும்பல கடிதங்கள் போர்ச்சுக்கல்லை நோக்கிச் சென்று கொண்டிருந்தன.

அனேகமாக அந்த புதிய வைசிராய் மின்குல் வாஸ் என்பவராகத்தான் இருக்கவேண்டும். அவருக்கு முன் கோவாவை ஆண்ட செபாஸ்ட்டியோ பிர்ரஸ் மீது பல ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தன. எனவே அவர் நீக்கப்பட்டு முன்குல் வாஸ் கோவாவிற்கு அனுப்பிவைக்கப்பட்டார். இந்த மின்குல் வாஸ் என்பவரே கோவா ஹிந்துக்கள் தங்கள் மதத்தை கோவாவிற்குள் பின்பற்றுவதற்கு அனுமதி மறுத்ததுடன், அவ்வாறு பின்பற்றுபவர்களுக்கு கடுமையான தண்டனைகளையும் அளிக்கும் வழக்கத்தைத் துவங்கியவர்.

1534-ஆம் வருடம் கோவா பிஷப் (Bishopric) அதிகாரம் கொண்ட பகுதியாக ஆக்கப்பட்துட என்றாலும் அங்கு மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான கிறிஸ்தவர்களே வாழ்ந்து வந்தார்கள். எனவே அவர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, கோவாவை கிறிஸ்தவப் பகுதியாக மாற்றும் Rigour of Mercy (Rigor-de Misericordia) என்னும் திட்டம் 1541-ஆம் வருடம் ஆரம்பமாக்கப்பட்டது.

இதனால் அந்த வருடம் ஏராளமான ஹிந்து ஆலயங்கள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன. மேலும் அங்கு வாழும் ஹிந்துக்கள் அனைவரும், அவர்களின் பகுதியில் இருந்த (இடிக்கப்பட்ட) ஹிந்து ஆலயங்களுக்குச் சொந்தமான நிலங்களில் வருகிற வருமானம் அனைத்தையும் அந்தப் பகுதியில் கட்டப்பட்ட கிறிஸ்த ஆலயத்தைப் பராமரிப்பதற்கு மட்டுமே அளிக்கவேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது. வேறுவழியில்லாத கோவா ஹிந்துக்கள் அதற்குச் சம்மதம் தெரிவித்து இடிக்கப்பட்ட கோவில்களின் வருமானத்தைக் கிறிஸ்தவர்களுக்குக் கொடுக்கச் சம்மதித்தார்கள்.

ஏறக்குறைய 300 ஹிந்து பேராலயங்களும், சிறிய ஆலயங்களும் கோவா பகுதியில் இடித்துத் தகர்க்கப்பட்டன. இந்த ஆலயங்களைக் குறித்தான அத்தனை தகவல்களும் போர்ச்சுக்கீசியர்களாலேயே பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன.

கீழ்க்கண்ட நூல்களில் இடிக்கப்பட்ட கோவில்களைக் குறித்த தகவல்களைக் காணலாம்.

Francisco Pais, Tombo Da Illha de Goa e das Terras de Salcete e Bardes (Annotated by P.S.S. Pissurlencar), Bastora 1952, pp. 165-69.

கோவில்களை இடிப்பதுடன் மட்டும் போர்ச்சுக்கல் கிறிஸ்தவ மதவெறியர்கள், கோவா ஆட்சியாளர்களின் ஆத்திரம் அடங்கிவிடவில்லை. அதனைத் தொடர்ந்து பெருவாரியான ஹிந்துக்களை கிறிஸ்தவர்களாக மதம்மாற்றத் துடித்தார்கள். எனினும், அதற்குப் பணிய மறுத்த ஹிந்துக்கள், அவர்களது தலைவர்களின் போக்கு அவர்களை மேலும் வெறிகொள்ளச் செய்தது.

அன்றைய காலகட்டத்தில் கோவாவில் வாழ்ந்த போர்ச்சுக்கல் அரச குடும்பத்தைச் சேர்ந்த மார்ட்டின் அஃபோன்ஸோ டி மெலோ என்பவன் நவம்பர் 6, 1541-ஆம் வருடம் கோவா அரசருக்கு எழுதிய கடிதம் ஒன்று மதம்மாற மறுத்து எதிர்க்கும் ஹிந்துக்களைக் குறித்து இவ்வாறு குறிப்பிடுகிறது,

இந்த கோவா தீவுகளில் பல ஹிந்துக்களும், முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள் என்றாலும் மேலும் பலர் மதம் மாறுவதற்குத் தடையாக கிருஷ்ணா, லூகு, அனு சினாய் போன்ற ஹிந்து தலைவர்கள் இருக்கிறார்கள். கிறிஸ்தவர்களாக மதம்மாறுவது தவறானது என்று இங்கிருக்கும் ஹிந்துக்களிடம் இவர்கள் தொடர்ந்து பிரச்சாரம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

மேன்மை தங்கிய அரசர், இந்தத் தலைவர்களை உடனடியாக கிறிஸ்துவர்களாக மதம் மாற்றுவதற்குத் தேவையானவற்றைச் செய்யவேண்டும். அல்லது அவர்களை ஏதாவதொரு காரணம் காட்டி போர்ச்சுக்கல்லுக்கு வரவழைத்துக் கொள்ளவேண்டும். அவ்வாறு இவர்கள் இரண்டு வருடங்கள் இந்தப் பகுதியிலிருந்து நீக்கப்பட்டால் இந்தத் தீவுகளில் இருக்கும் அத்தனபேர்களையும் மிகஎளிதாக்க கிறிஸ்தவர்களாக மதமாற்றம்செய்துவிடலாம் என நான் நம்புகிறேன். போர்ச்சுகலுக்கு வரும் அவர்கள் இன்னும் ஆறுமாதகாலத்திற்குள் மதம்மாறாவிட்டால் உடனடியாக கோவா பகுதியிலிருந்து வெளியேற வேண்டும் எனவும் மிரட்டிவைக்க வேண்டுகிறேன். இவ்வாறுசெய்யும் பட்சத்தில், மேலும்பல வழிதவறிய ஆடுகளை ஆன்ம அறுவடை செய்வது எளிதாக இருக்கும் என மேன்மைதங்கிய அரசரிடம் கூறிக்கொள்கிறேன்.

மேற்கூறப்பட்ட கிருஷ்ணா மேலும் பல கடிதங்களில் அடையாளம் காணப்பட்டிருப்பதனை நீங்கள் கண்டிருக்கலாம். அந்த கிருஷ்ணா என்பவர் சுங்கவரி வசூலிப்பவராகவும், கோவாவிலிருக்கும் ஹிந்துப் படைகளுக்குத் தலைவராகவும், குதிரைத் தரகராகவும் இன்னபிற பதவிகளிலும் இருந்த முக்கியஸ்தர் எனத் தெரிகிறது. அவர் போர்ச்சுக்கலுக்குச் சென்றதாகவும் தெரிகிறது என்றாலும் அவர் கிறிஸ்தவராக மதம்மாறவில்லை. எனினும், கிருஷ்ணா, பிஜப்பூர் அரசனால் கைதுசெய்யப்பட்டுப் பின்னர் சிறையிலேயே இறந்துவிட்டதாகத் தெரிகிறது.

அவருக்குப் பின்னர் அவரது மகனான தாதாஜி என்பவர் கோவாவின் ஹிந்துக்களுக்குப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டதாக பெட்ரோ ஃபெர்னாண்டஸ் சார்டின்ஹா போர்ச்சுக்கல் அரசருக்கு எழுதிய கடிதத்திலிருந்து தெரியவருகிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 கொலைகாரக் கிறிஸ்தவம் — 14

 

Related image

கோவாவின்  ஹிந்துக்களுக்குத் தலைவனாக இருந்த கிருஷ்ணா என்பவன் அடில்ஷாவால் சிறைப்பிடிக்கப்பட்டுக் கொல்லப்பட்ட பின்னர் அவனது மகனான தாதாஜி என்பவன் ஹிந்துக்களுக்குத் தலைவனானான். எனினும் அவன் கோவா ஹிந்துக்களை மதம்மாற்ற நினைக்கும் போர்ச்சுக்கீசியர்களுக்கு உதவ மறுத்து அவர்களை எதிர்த்தான். எனவே அவனை அந்தப் பதவியிலிருந்து நீக்கிய போர்ச்சுக்கீசியர்கள் அவனுக்கு பதிலாக லக்‌ஷ்மன் என்பவனை நியமித்தார்கள். அந்த லக்‌ஷ்மன் போர்ச்சுக்சியர்களின் அத்தனை நிபந்தனைகளுக்கும் உட்பட்டுத் தனது குடும்பத்துடன் கிறிஸ்தவனாக மதம்மாறினான்.

நவம்பர் 28, 1548-ஆம் வருடம் ஜொகோவோ-டெ-அல்புகர்க்கி போர்சுக்கீசிய அரசன் மூன்றாம் ஜொகோவோவிற்கு எழுதிய கடிதம் இது,

“நேற்றைக்கு நமது பாதிரிகள் லோக்குவை (லக்‌ஷ்மண்) கிறிஸ்தவனாக மதம்மாற்றம் செய்து அவனுக்கு லோக்குதாஸ்-டி-சா எனப் பெயர் சூட்டினார்கள். கோவாவின் ஹிந்து தலைவர்களில் அவன் இரண்டாம் இடம் வகித்தவன். மேலும் ஹிந்துக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவன். மிகப் பெரிய விவசாயியும், பணக்காரனுமான லோக்கு மேன்மைதங்கிய அரசரருக்கு விசுவாசமாக இருந்து நெடுங்காலம் தங்களின் கீழ் பணிபுரிவான் என்பதில் சந்தேகமில்லை. இதற்கு முன்னர் அவனும் ஹிந்துக்களுக்கு எல்லா உதவிகளும் செய்து அவர்களைக் கிறிஸ்தவர்களாக மதம் மாறுவதிலிருந்து தடுத்தவன் என்றாலும் கிருஷ்ணாவிற்குப் பிறகு அவனுக்குப் பொறுப்புகள் வருவதற்காகத் தன்னைக் கிறிஸ்தவனாக மதம் மாற்றிக் கொண்டான்.

“லோக்குவுடன் அவனது மனைவியும், இரண்டு உதவியாளர்களும், இன்னொரு சொந்தக்காரனும் மற்றுமொரு உறவுப் பெண்ணும் கிறிஸ்தவர்களாக மதம்மாற்றம் செய்யப்பட்டார்கள். இவனது உதவியுடன் நானும் மற்ற பாதிரிகளும் சேர்ந்து இந்தத் தீவை இன்னும் இரண்டுவருடங்களுக்குள் முழுமையாக கிறிஸ்தவர்கள் நிறைந்த பகுதியாக ஆக்குவேன் என உறுதியளிக்கிறேன்”.

லோக்குவின் மதமாற்ற விழா பெரிதும் முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டாடப்பட்டது. கோவாவின் கவர்னர் கலந்துகொண்ட அந்த விழாவில் கவர்னரே அவனுக்கு மதத்தைக் குறித்துக் கற்றுக்கொடுக்கும் பொறுப்பாளராக (Godfather)  இருந்தார். லோக்குவுக்கும், அவனது மனைவிக்கும், மருகனுக்கும் லூகாஸ், இஸபெல், அண்டோனியோ எனப் பெயரிடப்பட்டது. அவர்கள் குதிரைகளில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். கோவாவின் பல முக்கியஸ்தர்களும் அந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

வைசிராய் ஜெனரலான பாதிரி மின்குல் வாஸ் கோவாவில் ஹிந்துக்களிடையே கிறிஸ்துவ மதத்தைப் பரப்ப பெரும் சிரத்தையும், முயற்சிகளும் மேற்கொண்டார். செயிண்ட் பால் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு, அதனைப் பராமரிக்க, இடிக்கப்பட்ட ஹிந்துக்கோவில்களின் வருமானம் உபயோகப்படுத்தப்பட்டது. எனினும் ஹிந்துக்களின் வழிபாட்டைத் தடுப்பது அத்தனை எளிதான ஒன்றாக இருக்கவில்லை. எனவே கடுமையான நடவடிக்கைகள் எடுத்தாலன்றி கோவா ஹிந்துக்களை மதம் மாற்றுவது என்பது நடக்கப் போவதில்லை என்பதனை போர்ச்சுக்கீசிய ஆட்சியாளர்கள் உணர்ந்துகொண்டனர்.

அந்தக் கடுமையான நடவடிக்கைகள் எடுப்பதற்கு போர்ச்சுக்கீசிய அரசரின் சம்மதம் தேவையாக இருந்தது. அதனைப் பெறுவதற்காக பாதிரி மின்குல் வாஸ் போர்ச்சுக்கலுக்குச் சென்று, கோவாவை கிறிஸ்தவப் பகுதியாக மாற்றுவதற்குத் தேவயான 41 கருத்துகளை எழுதி, போர்ச்சுக்கல் அரசரின் பார்வைக்கு அனுப்பிவைத்தார். கோவாவில் ஹிந்துக்களை மதம்மாற்றுகையில் எடுக்கப்பட்ட கடுமையான நடவடிக்கைகளின் பின்னணியில் இருந்த 41 சட்டங்களிலிருந்து சில பகுதிகளை இங்கு காண்போம்,

“3. சிலை வழிபாடு செய்வது கடவுளுக்கு எதிரான மிகப்பெரும் குற்றம் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. எனவே கோவா உட்பட, கிறிஸ்து வழிபாட்டினைத் தவிர்த்து எந்தவொரு கோவிலோ அல்லது ரகசிய வழிபாடுகளோ இல்லாமல் தடை விதிக்கவேண்டும். அவ்வாறு வழிபடுகிறவர்களுக்கு கடுமையான தண்டனைகளை அளிக்க வேண்டும். கோவாவின் எந்தவொரு அதிகாரியும் சிலைகளை எந்த ரூபத்திலும் செய்யக்கூடாது. அதனைத் தடை செய்ய வேண்டும்.  கோவா தீவின் எந்தப் பகுதியிலும் ஹிந்துத் திருவிழாக்கள் நடைபெறுவதினைத் தடைசெய்ய வேண்டும். பிராமணப் பூசாரிகள் தீவுப்பகுதியிலிருகும் எந்தவொரு ஹிந்துவின் வீட்டிற்குள்ளும் நுழையாதிருக்க வேண்டும். ஏதேனும் ஒரு ஹிந்துவின் வீட்டில் சிலைகள் இருப்பதாகச் சந்தேகம் இருந்தல் செயிண்ட் பால் சர்ச்சில் இருக்கும் பாதிரிகளும் மற்ற ஊழியர்களும் அந்த ஹிந்துக்களின், பிராமணர்களின் வீடுகளுக்குள் நுழைந்து அவர்களின் வீட்டைச் சோதனையிடும் அதிகாரம் அளிக்கப்பட வேண்டும்.

“4. இந்தத் தீவுப்பகுதிகளில் சன்னியாசி பிராமணர்கள் என்கிற ஒருபிரிவினர் கிறிஸ்துவர்களாக மதம்மாறுவதற்கு மறுப்பது மட்டுமன்றி, அங்கிருக்கும் ஹிந்துக்களும்  கிறிஸ்துவர்கள் மதம்மாறுவதற்குத் தடைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் முஸ்லிம்களுக்கு நம்பகமானவர்களாகவும் இருப்பதால், பிரச்சினைக் காலங்களில் நம்முடைய அரசாங்கத்திற்குச் சாதகமானவர்களாக நடந்துகொள்வார்கள் என்பது சந்தேகமே. துரோகிகளான முஸ்லிம்கள் நூனோ-டி-குன்ஹா காலத்தில் நடந்துகொண்ட முறையை நான் இங்கு நினைவூட்டுகிறேன். எனவே நமது மதமாற்ற முயற்சிகளுக்குத் தடையாக இருக்கும் இந்த சன்னியாசி பிராமணர்களும் அவர்களது தலைவர்களும் கோவா பகுதியைவிட்டு வெளியேற்றப்படவேண்டும். அவர்கள் மீண்டும் உள்ளே நுழைவதற்கும் தடைகள் விதிக்கவேண்டும்.

“5. கடவுளுக்கும், அரசருக்கும் நன்மைபயக்கும் விதமாக, கோவா நகரத்திலிருக்கும், நமது மதமாற்ற விவகாரங்களுக்குப் பெரும் தடையாக இருக்கும் ஹிந்து பிராமணனான அனு சைனாய் என்பவனை நமது பொருட்களுக்குத் தரகனாக இருப்பதிலிருந்து உடனடியாக விலக்கவேண்டும்.

“6. அரசரின் ராஜ்ஜியத்திற்குள் வரும், வெளியே செல்லும் கடிதங்கள் அனைத்தையும் மொழிபெயர்க்க அரசாங்க மொழிபெயர்ப்பாளர்களை உடனடியாக நியமிக்கவேண்டியது அவசியம். போர்ச்சுக்கீசிய கிறிஸ்தவர்களுக்கு முக்கியமான விஷயங்கள் எதுவும் ஹிந்துக்களின் கையில், முக்கியமாக கிறிஸ்தவ எதிர்ப்பாளனான கிருஷ்ணாவின் மகனின் கையில் சிக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

“7. பரமண்டலத்திலிருக்கும் பிதா நமது பகுதிகளான சால்செட்டே மற்றும் பார்டெஸ் பகுதிகளை அடில்ஷாவிடமிருந்து காத்துநிற்கிறார். எனவே நமது பிதாவுக்குச் செய்யும் மரியாதையாக மேற்கண்ட பகுதிகளிலும் சிலை வழிபாடுகளையும், வழிபாட்டிடங்களையும் அடையாளம் தெரியாமல் அழித்தொழிக்கவேண்டும் எனவும் அரசரிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்.

“9. கோவாவில் யாரேனும் இறந்துவிட்டால் அவனது சொத்துக்கள் அனைத்தும் அவனது மகனோ அல்லது மகளுக்கோ சேராமல் முழுமையாக அரசரின் வசமே வந்துவிடுகிறது. இது சரியான ஒன்றல்ல என நான் கருதுகிறேன். கவர்னர் மார்ட்டின் அல்போன்ஸோ சமீபத்தில் இட்ட உத்தரவின்படி அசையும் சொத்துக்களைப் பிள்ளைகளும் அசையா சொத்துக்களை அரசருக்கும் பிரிக்க உத்தரவிட்டிருக்கிறார். அதற்குப் பதிலாக அந்தப் பிள்ளைகள் கிறிஸ்தவர்களாக மதம்மாறினால் அந்தச் சொத்துக்கள் அனைத்தையும் அவர்களே அனுபவிக்கலாம் என உத்தரவிடுவது நல்லதென நான் எண்ணுகிறேன்.”

போர்ச்சுக்கீசிய அரசன் மூன்றாம் ஜெவாவோ உடனடியாக இந்துக்கள்மீதும், பிராமணர்களின் மீதும் மின்குல் வாஸ் சிபாரிசுசெய்த நடவடிக்கைகளை எடுக்கும்படி மார்ச் 8, 1547-ஆம் ஆண்டு உத்தரவிட்டான்.

ஹிந்துக்களின் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும்படி பணித்த மின்குல் வாஸ் பாதிரி விஷம்வைத்துக் கொல்லப்பட்டதாக வரலாற்றாசிரியர் ஃப்ரான்ஸிஸ்கோ-டி-சூசா, “போர்ச்சுக்கீசிய அரசருக்கு மிக நெருக்கமானவரான பாதிரி மின்குல் வாஸ், போர்ச்சுக்கல்லுக்குச் சென்று திரும்பிய சிறிது காலத்திற்குள்ளாகவே ஹிந்துக்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்தார். அரசனிடமிருந்து பெற்றுவந்த அளப்பரிய அதிகாரத்தைப் பயன்படுத்தி கோவாவிலிருந்த ஹிந்துக் கோவில்களை இடித்தும், ஹிந்துக்களைத் துன்புறுத்தியும் வந்ததால் ஹிந்துக்களின் கோபத்தைச் சம்பாதித்திருந்த மின்குல் வாஸ் இறுதியில் ஹிந்துக்களால் விஷம் வைத்துக் கொல்லப்பட்டார்,” எழுதியிருக்கிறார்.

அல்பர்கர்க்கினால் வெல்லப்பட்ட பகுதிகள் கோவா தீவும் மற்றும் அதன் அருகாமைப் பகுதிகளான திவார், சோரோ மற்றும் ஜுவா ஆகியவையாகும். அந்த பகுதியிலிருந்த அத்தனை ஹிந்து ஆலயங்களும் 1540-ஆம் ஆண்டுவாக்கில் இடித்துத் தகர்க்கப்பட்டன.  1543-ஆம் வருடம் இப்ராஹிம் அடில்கான் பார்டெஸ் மற்றும் செலெஸ்டெ பகுதிகளை போர்ச்சுக்கீசியர்களின் வசம் ஒப்படைத்தான். அந்தப் பகுதிகளில் இருந்த ஆலயங்களையும் இடித்துத் தகர்க்கவேண்டும் எனக் கூறிய மின்குல் வாஸ் எல்லா ஆலயங்களும் இடிக்கப்படுவதற்கு முன்னர் 1547-ஆம் வருடம் இறந்து போனான். எனவே, செலாட்ஸ், பார்டெஸ் பகுதிகளிலிருந்து ஆலயங்களும், ஹிந்து திருவிழாக்களும் அழிவிலிருந்து தற்காலிகமாகத் தப்பின.

இருப்பினும் ஆகஸ்ட் 29, 1566-ஆம் வருடம், வைசிராய் அண்டோ-டி-நூரன்ஹா மேற்கண்ட பகுதிகளில் புதிதாக ஹிந்து ஆலயங்கள் கட்டுவதற்கும், இடிந்த ஆலயங்களைச் செப்பனிடுவதற்கும் தடை விதித்து, அப்படிச்செய்தால் அவை இடிக்கப்படும் எனவும், அதற்கு ஆகும் செலவினை ஹிந்துக்களே தரவேண்டும் எனவும் உத்தரவிட்டான்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 கொலைகாரக் கிறிஸ்தவம் — 15

 

தொடர்ந்து தொல்லைகள் கொடுத்துக் கொண்டே இருந்தால் கோவா ஹிந்துக்கள் மனம் வெதும்பி அவர்களின் ஆலயங்களைக் கைவிட்டுவிடுவார்கள், ஹிந்து ஆலயங்கள் கவனிக்கப்படாமல் இடிந்து விழுந்துவிடும் எனப் போர்ச்சுக்கீசியர்கள் எண்ணினார்கள்.  தங்களின் மத உரிமைகளைப் பின்பற்ற முட்டுக்கட்டைகள் விதிக்கப்பட்டதால் வருந்திய செல்செட்டே பகுதி ஹிந்துக்கள் வைசிராயை அணுகி அதனைச் சரிசெய்யுமாறு வேண்டினார்கள். எனினும் அந்த வேண்டுகோள்கள் செவிடன் காதில் ஊதிய சங்காக ஆகியது.

இடிந்து கிடக்கும் தங்களின் கோவில்களுக்குத் திரும்பிய ஹிந்துக்கள் அங்கிருந்த தெய்வ விக்கிரகங்களை வண்டிகளில் வைத்து எடுத்துக்கொண்டு போர்ச்சுக்கீசியர்கள் இல்லாத பகுதிகளை நோக்கிக் குடியேற ஆரம்பித்தார்கள்.  இந்தக் காலகட்டத்திலேயே (1566) கோர்ட்டாலிம் பகுதி ஆலயத்திலிருந்த ஸ்ரீ மங்கேஷ் பகவானின் சிலையும் வேறு இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கவேண்டும். வரலாற்றாசிரியர் ஃப்ரான்ஸிஸ்கோ-டி-சூசா மங்கேஷ் பகவனானையும் அவரது வழிபாட்டார்களையும் குறித்த கீழ்க்கண்ட சம்பவத்தைச் சொல்கிறார்:

“கோர்ட்டாலிம் பகுதியைச் சார்ந்த ஹிந்துக்கள் ஸ்ரீ மங்கேஷ் பகவானின் சிறிந்த பக்தர்கள். இந்த கோர்ட்டாலிம் பகுதி நிலப்பரப்பில் மிகச் சிறியதாக இருந்தாலும் அங்கு பல ஹிந்து ஆலயங்கள் இருந்தன. முற்காலத்தில் அந்தப் பகுதியை ஆண்ட ஹிந்து அரசர்களின் கணக்கு வழக்குகளைப் பார்த்துக் கொள்பவர்களாக இருந்த கோர்ட்டாலிம் வாசிகள், அரசனிடம் சம்பாதித்த ஏராளமான பணத்தைக்கொண்டு இந்தப் பகுதியில் பல பெரும் ஆலயங்களை எழுப்பி, அதனைப் பராமரிப்பதற்காக ஏராளமான நிலங்களையும் வாங்கி, அந்த ஆலயங்களுக்க்குச் சமர்ப்பித்தார்கள். கொங்கணி பிராமணர்களான அவரகள் ஷென்விஸ் என அழைக்கப்பட்டவர்கள். அவர்களே அந்தப் பகுதியில் வாழும் பிறபிராமணர்களுக்குப் பாடம் சொல்லும் தகுதியையும் பெற்றிருந்த ஆசிரியர்களும் கூட.

“அந்தப் பகுதியின் பிறபிராமணர்களும் ஷென்விஸ் பிராமணர்களுக்குக் கட்டுப்பட்டே நடந்தார்கள்.  பகவான் ஸ்ரீ மங்கேஷின் சிலை வைக்கப்பட்டு வணங்கப்பட்டுவந்த இடத்தைக் கைப்பற்றிய போர்ச்சுக்கீசிய பாதிரிகள் அங்கிருந்து அந்தச் சிலையை அகற்றிவிட்டு அதற்குப் பதிலாக அந்த இடத்தில் ஒரு சர்ச்சினை நிறுவினார்கள். “

மதவெறிபிடித்த கிறிஸ்தவ மிஷனரிகள் ஹிந்துக்களை அமைதியாக வாழவிடாமலும், அவர்களின் இடிக்கப்பட்ட ஆலயங்களை மீண்டும் கட்டுவதனைத் தடைசெய்தும் தொல்லைகள் கொடுத்ததினால், வேறு வழியின்றி அவர்கள் போர்ச்சுக்கீசிய பகுதிகளுக்கு வெளியே குடியேறிதனை ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன். இவ்வாறு அவர்கள் வெளியேறியதைச் சாக்காக வைத்துக்கொண்டு 1567-ஆம் வருடம் செலாஸ்ட் பகுதியில் எஞ்சியிருந்த பிற கோவில்களை இடித்துத் தள்ளினார்கள், போர்ச்சுக்கீசியக் கிறிஸ்தவப் பாதிரிகள். ஹிந்துக்கள் எடுத்துச் செல்லாமல் விட்டுச்சென்ற கடவுளர்களின் சிலைகளும் தெருவில் தூக்கியெறியப்பட்டுத் துண்டுகளாக உடைத்துத் தள்ளப்பட்டன.

கோட்டாலிம் கிராமத்தவர்கள் அனைவரும் உடனே தன்னை வந்து சந்திக்கவேண்டும் என உத்தரவிட்ட கேப்டன் ரோட்ரிகஸ், அவர்கள் வராததால் உடனடியாக அந்த ஊரில் இருந்த கோவிலை எரித்து இடித்து, கிராமத்தையும் தீ வைத்துக் கொளுத்தினான்.  இடிக்கப்பட்ட ஆலயத்தை உடனடியாக ரோட்ரிகஸ் கட்டித்தரவேண்டும் என உத்தரவிட்ட மனசாட்சியுள்ள ஒரு மாஜிஸ்ட்ரேட்டின் உத்தரவும் காற்றி தூக்கியெறியப்பட்டது. அவனுக்கு வலிமையுள்ள கோவா பாதிரிகளின் ஆதரவு இருந்தது.

நடந்ததைக் கேள்விப்படும் கோவாவின் வைசிராய், கேப்டன் ரோட்ரிகஸ் செய்தது சரிதான் எனச் சொன்னதுடன் செலஸ்டே பகுதியில் இருக்கும் அத்தனை ஹிந்துக் கோவில்களையும் அவன் உடனே எரிக்கவேண்டும் என உத்தரவிட்டதால்,  ராச்சோல் பகுதிக்குத் திரும்பிய கேப்டன் ரோட்ரிகஸ் செலஸ்டே பகுதி கிறிஸ்தவ பாதிரிகளின் துணையுடன் கண்ணில் தென்பட்ட அத்தனை ஹிந்து ஆலயங்களையும், வழிபாட்டிடங்களையும் தீ வைத்துக் கொளுத்தி, தெய்வத் திருவுருவங்களையும் உடைத்தான்.

அந்தக் காலகட்டத்தில் கோவாவில் மட்டும் ஏறக்குறைய 280 ஹிந்து ஆலயங்கள் இடித்தும், தீ வைத்து எரித்தும் தகர்க்கப்பட்டதாக வரலாற்றசிரியர் ஃப்ரான்ஸிஸ்கோ-டிசூசா கூறுகிறார்.

கேப்டன் ரோட்ரிகஸ் டிசம்பர் 12, 1567-ஆம் வருடம் போர்ச்சுக்கீசிய அரசருக்கு அனுப்பிய கடிதத்தில் தான் இடித்துத் தள்ளிய கோவில்களைக் குறித்த துல்லியமான விவரங்களைக் குறிப்பிட்டிருப்பதாக இர்மாவோ கோம்ஸ் வாஸ் சொல்கிறார்.

அந்தக் கடிதங்களில் “மால்சா தேவி” குறித்த குறிப்புகள் இருக்கின்றன.  அலர்டோல் அல்லது மார்டோல் என்னும் இடத்திலிருந்த ஆலயத்தின் மூர்த்தியைத் உடைத்துத் துண்டுகளாக்கியதனையும் குறிப்பிடுகிறார் ரோட்ரிகஸ்.  மேலும் மார்ச் 15, 1567-ஆம் வருடம் டோரோ, மாண்டோ, நாரானா, பகுனோட்டேவில் இருந்த ஹிந்து ஆலயங்களை இடித்தது மற்றும் சான்குலேயில் இருந்த ஹிஸ்போரோ (ஈஸ்வரன்?)  ஆலயத்தைத் தீவைத்துக் கொளுத்தியபின் இடித்துத் தரைமட்டமாக்கியது போன்ற தகவல்களை அவன் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறான்.

மேலும் குன்காலிம், ச்சின்ச்சிம் மற்றும் அம்பெலிம் பகுதிகளிலிருந்த ஆலயங்களை இடித்த குறிப்பும் அந்தக் கடித்திலேயே இருப்பதாகச் சொல்கிறார், இர்மாவோ கோம்ஸ்.  இடிக்கப்பட்ட ஆலயங்களிலிருந்து கைப்பற்றப்பட்ட ஏராளமான சிலைகள் அங்கிருந்த ஆற்றில் தூக்கிப் போடப்பட்டதாகவும், உலோகத்தால் ஆன ஸ்வாமி சிலைகள் உருக்கப்பட்டு, மெழுகுவர்த்தி வைப்பதற்கு உதவும் ஸ்டாண்டுகளாகவும், மற்ற சர்ச் உபயோகங்களுக்காகவும் பயன்படுத்தப்பட்டன.

குறிப்பு : கோவாவில் இடிக்கப்பட்ட அந்த ஆலயங்கள் அனைத்தும் இன்றைக்கு அடையாளம் காணப்பட்டுவிட்டன. அதனைக் குறித்த விவரங்கள் பின்னர் அளிக்க முயற்சிகள் செய்யப்படும்.

அதே காலத்தில் பால்டெஸ் பகுதியிலும் கிறிஸ்தவ மதவெறிப்பாதிரிகள் ஹிந்து ஆலயங்களை இடித்துத் தகர்க்கத் துவங்கினார்கள். செலஸ்டே பகுதியிலிருந்த மிஷினரி பாதிரிகள் ஜெர்சுயிட் பிரிவைச் சேர்ந்தவர்கள். ஆனால் பால்டெஸ் பகுதி மிஷினரி கிறிஸ்தவ வெறியர்கள் ஃப்ரான்ஸிஸ்கன் பிரிவைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். 1567-ஆம் வருடம் பால்டெஸ் பகுதியிலிருந்த அத்தனை ஆலயங்களையும் இடித்துவிட்டதாகக் குறிப்பிடும் கடிதத்தைப் பற்றி கோம்ஸ்-டி-வாஸ் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

“அரசரின் ஆட்சியதிகாரத்திற்கு உட்பட்ட பகுதியிலிருந்த அத்தனை ஹிந்து ஆலயங்களும் இடித்துத் தள்ளப்பட்டுவிட்டன. அவற்றின் ஒன்றுகூட இன்றைக்கு மிஞ்சியிருக்கவில்லை எனத் தெரிவித்துக்கொள்கிறேன். செயிண்ட் பிரான்ஸிஸ் சேவியரின் தலைமையில் கிறிஸ்தவ பாதிரிமார்கள் பால்டெஸ்சில் இருந்த  ஹிந்து ஆலயங்களைத் தகர்த்து அவை இருந்த சுவடே தெரியாமல் துடைத்தெடுத்துவிட்டார்கள்.”

ஜெர்சுயிட் பிரிவு பாதிரிகள் இடித்த கோவில்களைப் போல ஃப்ரான்ஸிஸ்கன் பிரிவு பாதிரிகள் இடித்த ஆலயங்களைக் குறித்த விவரங்களும் துல்லியமாகப் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. இதனைக் குறித்து ஃப்ரான்ஸிஸ்கன் பாதிரிகள் வெளியிட்ட ஆவணமான “Noticia que obravao os frades de S. Francisco” 300 ஹிந்து ஆலயங்களை இடித்துத் தகர்த்துவிட்டதாகச் சொல்கிறது. அந்த ஆலயங்களும் இன்றைக்கு அடையாளம் காணப்பட்டிருந்தாலும் அவை இன்றைக்கு இருந்த சுவடே இல்லாமல் அந்த ஆலயங்களுக்கு மேலாக இன்றைக்குச் சர்ச்சுகள் நின்றுகொண்டிருக்கின்றன. இடிக்கப்பட்ட ஹிந்துக்கோவில்கள் அனைத்துக் சர்ச்சுகளாக மாற்றப்படவேண்டும் என செபாஸ்தியோ மார்ச் 21, 1569-ஆம் வருடம் விதித்த உத்தரவின் அடிப்படையிலேயே அங்கு சர்ச்சுகள் கட்டப்பட்டன என்பதினை நினைவுகொள்ளவேண்டும்.

கிறிஸ்தவ பாதிரிகள் வெறிகொண்டு ஹிந்துக் கோவில்களைத் தாக்கி அழித்தாலும் அவர்களால் அதில் முழுமையான வெற்றிகொள்ள இயலவில்லை என்பதுவே உண்மை. போர்ச்சுக்கீசியப் பகுதிகளை விட்டகன்ற ஹிந்துக்கள் தாங்கள் சென்ற பகுதிகளில் புதியதாக ஆலயங்களையும், வழிபாடுமிடங்களையும் கட்டிக்கொண்டார்கள்.  போர்ச்சுக்கீசியர்களால் இடிக்கப்பட்ட கோவில்களிலிருந்த விக்கிரகங்கள் சாத்தியப்படும் இடங்களிலெல்லாம் ரகசியமாகக் கடத்திச் செல்லப்பட்டு புதிதாகக் கட்டப்பட்ட கோவில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டன.  அவ்வாறு இயலாதபட்சத்தில் புதிய சிலைகள் செய்யப்பட்டு கோவில்களில் நிறுவப்பட்டன.

சான்றாக, கோர்ட்டாலிமில் இடிக்கப்பட்ட ஸ்ரீ மங்கேஷ் ஆலயத்தின் மூர்த்தியும், வெர்னம் பகுதியிலிருந்தத மாலசா சிலைகளும் ப்ரியூல் ஆலயத்தில் வைக்கப்பட்டன.  அதுபோலவே கவெலொஸிம்மின் சாந்த துர்கா குவேலாவிலும், லவுட்லிமின் ராம்நாத்தும், கோல்வாவின் மஹாலக்‌ஷ்மியும் பண்டோரா ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டனர். கோவாவிலிருந்து வெளியேறிய ஹிந்துக்கள் புதிதாகக் கட்டிய ஆலயங்கள் தென் கர்னாடகாவின் கடற்கரைப் பகுதிகளிலிருந்து கேரளாவரைக்கும் புதிய ஆலயங்களைக் கட்டினார்கள். அந்த ஆலயங்கள் இன்றைக்கும் இருக்கின்றன.

இவ்வாறு கட்டப்படும் புதிய ஆலயங்களுக்குத் தேவையான பொருள் மற்றும் பண உதவியைத் தங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் புதிதாக மதம் மாற்றப்பட்ட ஹிந்துக்கள் அளிக்கிறார்கள் என்கிற விஷயத்தைக் கண்டுபிடித்த போர்ச்சுக்கீசிய பாதிரிகள் மிகுந்த சினம் கொண்டார்கள். மதம்மாற்றப்பட்ட பின்னரும் தங்களின் பழைய அடையாளங்களை விடாத அவர்களைக் கட்டுப்படுத்தவும், தண்டனையளிக்கவும் தேவையான  நடவடிக்கைகளில் இறங்கினார்கள். பாதிரிகள் தலைமையில் கோவவில் 1585-ஆம் வருடம் கூடியதொரு கூட்டத்தில் ஹிந்துக்களின் இந்தச் செயலுக்கு முற்றுப்புள்ளிவைக்க உடனடியாகச் சட்டமியற்ற வேண்டுமென போர்ச்சுக்கீசிய அரசருக்கு வேண்டுகோள் விடுத்தார்கள். இதன்படி மதம்மாறிய அல்லது மதம்மாறாமல் கோவாவில் இருக்கும் ஹிந்துக்கள் எவரும் அருகாமைப் பகுதிகளில் புதிதாகக் கட்டப்படும் ஆலயங்களுக்கும், அல்லது ஏற்கனவே இருக்கும் ஆலயங்களைப் பராமரிப்பதற்கும் பொருளுதவி செய்வது தடை செய்யப்படவேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.

இந்த காலகட்டம் வரைக்கும் ஹிந்துக்கள், மதம்மாறிய கிறிஸ்தவர்கள்மீதான நடவடிக்கைகள் இத்துடன் மட்டுமே நின்றன.  இதற்கு அடுத்த காலங்களில் இன்குசிஷன் விசாரணைகள் கோவா கிறிஸ்தவர்கள் மற்றும் ஹிந்துக்களுக்கு பெரும் கேடுகளைக் கொண்டுவந்தன.  இனிவரும் அத்தியாயங்களில் கோவாவில் இன்குசிஷன் சட்டங்கள் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டன என்பது குறித்தும், அதனால் உண்டான பாதகங்களைக் குறித்தும் விளக்கமாகப் பார்க்கலாம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 கொலைகாரக் கிறிஸ்தவம் – 16

 

கோவா இன்குசிஷன் விசாரணைகள் — கிறிஸ்தவர்களல்லாத பிற மதத்தவர்களைக் கண்டறிந்து தண்டனையளிப்பது, அவர்களை கட்டாய மதமாற்றம் செய்வது, அதற்கு உடன்படாத பிறமதத்தவர்களையும், மதம்மாறிய பின்னரும் தங்களின் பழைய மதங்களை ரகசியமாக பின்பற்றுபவர்களையும் சித்திரவதை செய்து கொல்வது போன்ற நடவடிக்கைகள் — போர்ச்சுகலில் யூதர்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகளை ஒட்டிச் செய்யப்பட்டவையாகும். கோவாவில் ஹிந்துக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகளைக் குறித்த ஆவணங்கள் அனைத்தும் அழித்து ஒழிக்கப்பட்டுவிட்டன. இன்றைக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கிடைக்கும் குறிப்புகளின் அடிப்படையில் இந்தக் கொடூரங்களைக் குறித்து நாம் அறியக் கிடைக்கிறதென்றாலும் அவை அதிர்ச்சியை அளிப்பவை என்பதில் சந்தேகமேயில்லை.

இந்திய ஹிந்துக்களின் அறியாமை எந்த அளவிற்கு இருக்கிறதென்றால் — எந்த செயிண்ட் சேவியர் கோவா ஹிந்துக்களைக் கொடுமைப்படுத்தி அவர்களின் ஆலயங்களை இடித்தானோ –அதே செயிண்ட் சேவியர் இன்றைக்குப் புனிதனாகக் கருதப்படுகிறான். தான் கட்டாயமாக மதம்மாற்றப்பட்டதை உணராத கோவா கிருஸ்தவன், தன்னை ஒரு கிறிஸ்தவனாக அறிவித்துக் கொள்வதில் பெருமைப்படுகிறான். இந்தியாவின் பிறபகுதியிலிருக்கும் ஹிந்துக்கள் இந்தக் கொடுமைகளை இன்றுவரை அறியவில்லை. உலகின் எந்தவொரு பகுதியிலும் வலிமைபெறும் கிறிஸ்தவம் அந்தந்த பகுதியின் மொழி, கலாச்சாரம், பொருளாதாரம் என அத்தனையையும் அழித்தொழிக்கும் என மீண்டும்மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அதனை உணரச்செய்வதே இந்தத் தொடரின் நோக்கம் என மீண்டும் வலியுறுத்தப்படுகிறது.

*           *           *

கோவா இன்குசிஷன் விசாரணைகளின் இரண்டு தீர்ப்பாயங்கள் (tribunals) ஏறக்குறைய போர்ச்சுக்கல்ல் விதிக்கப்பட்ட சட்டங்கள் மற்றும் கட்டுப்படுகள் அடிப்படைகளில் அமைந்தவை. Regimento do Santo Officio da Inquisicam dos Reynos de Portugal (Manual of Rules and Regulations of the Holy office of the Inquisition in the Kingdom of Portugal) என அறியப்படும் இன்குசிஷன் சட்ட வரையறைகள், நடைமுறைகளைக் குறித்த இந்தப் புத்தகம் 1640-ஆம் ஆண்டு பிஷப் ஃப்ரான்ஸிஸ்கோ டி காஸ்ட்ரோ என்பவரால் போர்ச்சுக்கலில் வெளியிடப்பட்டது. 1613-ஆம் வருடம் இன்குவிசிடர் ஜெனரலாக இருந்த பிஷப் பெட்ரோ டி காஸ்ட்டில்ஹோ என்பவரால் எழுதப்பட்ட புத்தகத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட காஸ்ட்ரோவின் புத்தகம் பல மாற்றங்களையும், புதிய சட்டங்களையும், தண்டனைகளையும் இணைத்து எழுதப்பட்ட ஒன்று.

மூன்று தொகுதிகளாக எழுதப்பட்ட காஸ்ட்ரோவின் இன்குசிஷன் சட்டப்புத்தகம் ஒவ்வொன்றிலும் 22 அத்தியாயங்கள் உண்டு. முதலாவது தொகுதியின் ஒவ்வொரு அத்தியாயமும் இன்குசிஷன் நடைமுறைகளையும், அதனைச் செய்யும் அதிகாரிகளின் அதிகாரங்கள் மற்றும் பொறுப்புகள் குறித்தும், தகுதிகள் மற்றும் அவர்களைத் தேர்ந்தெடுக்கும் வழிகள் குறித்தும் விளக்குகின்றன.

28 அத்தியாயங்கள் கொண்ட இரண்டாவது தொகுதி இன்குசிஷன் விசாரணைகளின்போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளையும், 27 அத்தியாயங்கள் கொண்ட மூன்றாவது தொகுதி இன்குசிஷன் விசாரணையில் கண்டறியப்பட்ட குற்றவாளிகளுக்கு அளிக்கவேண்டிய தண்டனைகளையும், அபராதங்களையும் குறித்த விவரங்களையும் கூறுகிறது.

மேற்கண்ட புத்தகமே நமக்கு கோவாவில் ஹிந்துக்களின் மீது எத்தகைய நடவடிக்கைகள் போர்ச்சுக்கீசிய கிறிஸ்தவ மதவெறியர்களால் எடுக்கப்பட்டன என்பதனை அறிந்துகொள்ள உதவும் ஒரு தெளிவான அடிப்படையைத் தருகிறது. இந்தப் புத்தகம் வெளீயவந்த பிறகு கோவாவில் பிற மதத்தவர்கள், கிறிஸ்துவின் மீது நம்பிக்கையற்ற கிறிஸ்தவர்கள் இவர்களின்மீது விசாரணைகள் துவங்கியிருப்பதான அரசாணை வெளியிடப்படுகிறது.

“போர்ச்சுக்கீசிய அரசருக்குக் கட்டுப்பட்ட இந்தப் பகுதியின் புனித இன்குசிஷன் விசாரணைகளின் இன்குவிசிட்டர் ஜெனரல்களாகிய நாங்கள் அறிவித்துக் கொள்வது என்னவென்றால், இந்தியாவிலிருக்கும் கோவா நகரத்தின் ரெவரெண்ட் ஆர்ச்பிஷப் மற்றும் அவரது அலுவலர்கள் இன்குசிஷன் புனித விசாரணைகளைத் துவங்கியிருக்கிறார்கள். எனவே இந்தப் புனித இன்குசிஷன் அலுவலகம் கோவா பகுதியில் இந்த விசாரணைகளை தொடங்கி நடத்துகையில், பரமண்டலத்தில் இருக்கும் நமது பிதாவிற்கோ அல்லது புனித கத்தோலிக்க மதத்திற்கோ எந்தவிதமான அவப்பெயரும் வராமல் நடத்தப்படவேண்டும். இந்தச் செயல்பாடுகள் அனைத்தும் எவ்வாறு முறையாக, எந்தப் பிழையும் இல்லாமல் நடத்தவேண்டும் என்பதை இந்தப் புத்தகத்திலிருந்து படித்து உணர்ந்து கொள்ள வேண்டும்…..”

இன்னின்னாருக்கு இன்ன பதவிகள் வழங்க வேண்டும், முக்கியமாக அவர்கள் கிறிஸ்தவர்களாகவும், போர்ச்சுக்கீசிய அரசருக்கும், சர்ச்சுகளுக்கும் அடிபணிய வேண்டியவர்களாகவும், ரகசியங்களைக் காப்பாற்றுபவர்களாகவும், சட்ட வரைமுறைகளை இரக்கமின்றி செயல்படுத்துபவர்களாகவும் இருக்கவேண்டியது அவசியம் என உணர்த்தப்பட்டது. பதவி ஏற்பதற்கு முன்னர் ஒவ்வொருவரும் தாங்கள் உண்மையாக இயேசு கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்வோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இதற்கென உருவாக்கப்பட்ட சிறைகள் ஆர்ச் பிஷப்பின் வீட்டினை ஒட்டிக் கட்டப்பட்டன. விசாரணைக்கு வரும் கைதிகளை விசாரித்துத் தண்டனையளிக்க எளிதாகும் என்பதால். ஒருவேளை அப்படியான சிறைகள் கிட்டவில்லையென்றால் அல்லது அந்தச் சிறைகள் நிரம்பிவிட்டால் அந்தப் பகுதியிலிருக்கும் எந்தவொரு வீட்டையும் இன்குசிஷன் விசாரணை அதிகாரிகள் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அந்த வீடுகளில் அடைக்கப்படுபவர்கள் விசாரணை முடிந்தவர்களுடன் எந்தவொரு பேச்சுவார்த்தைகளும் நடத்தாமலிருக்கும் பொருட்டு எச்சரிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதுபோலவே வெளியார் எவரும் அங்கு நடப்பதைக் காண்பதற்கோ அல்லது தொடர்புகள் வைத்துக் கொள்வதற்கோ வழியில்லாமல் மிகக் கடுமையானமுறையில் அந்த வீடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டன.

இப்போதைக்கு கோவாவிலும், கொச்சியிலும் நிகழ்ந்த இன்குசிஷன் விசாரணைகளைக் குறித்து மட்டும் பார்க்கலாம்.

விசாரணைகள் தொடங்குவதாக கோவாவில் அறிவித்த பின்னர், கொச்சியிலும் இதே போன்ற அறிக்கைகள் வெளியிடப்பட்டன. போர்ச்சுக்கீசியர்களின் கீழிருந்த பகுதிகளில் இந்த இரண்டு நகரங்கள் மட்டுமே ஓரளவிற்கு மக்கள்தொகை கொண்டவையாக இருந்தன என்பது முக்கிய காரணம்.

இன்குசிஷன் விசாரணைகள் தொடங்குவதனைக் குறித்து அந்தந்த நகரங்களில் உள்ள முக்கியமான சர்ச்சுகளில் நிகழ்ந்த பிரார்த்தனைக் கூட்டங்களில் அறிவிக்கப்பட்டன. மேலும் அதற்கான சட்டங்கள் எழுதப்பட்ட புத்தகங்கள் அவர்களுக்கு அறிமுகம் செய்துவைக்கப்ப்பட்டன. இந்த சட்டங்கள் நடைமுறைக்கு வருவதற்கு நான்குமாத காலம் அவகாசம் கொடுக்கப்பட்டு, புதிதாக மதம்மாற்றப்பட்ட கிறிஸ்தவர்கள் தாங்களாகவே முன்வந்து அவர்களின் குற்றங்களை — அவர்கள் தங்களின் பழைய மத ஆச்சாரங்களைப் பின்பற்றுவதாக, ஒப்புக்கொண்டால் அவர்களுக்குச் சிறை தண்டனைகளிலிருந்தும் அபராதங்களிலிருந்து விலக்கு அளிப்பதாக அறிவிக்கப்பட்டது. அதேசமயம் அவர்கள் இனிமேல் கிறிஸ்தவ மதத்தைத் தீவிரமாகப் பின்பற்றுவதாக உறுதிமொழிகள் அளிக்கவேண்டும்.

சர்ச்சுகளில் இரண்டு பக்கங்களுள்ள ஒரு பெரிய நோட்டுப் புத்தகம் வைக்கப்பட்டு, அதன் ஒருபகுதியில் தாங்கள் கிறிஸ்தவ மதத்தை இனிமேல் பின்பற்றுவதாக உறுதிமொழியும், அடுத்த பக்கத்தில் கிறிஸ்தவ மதத்திற்கு எதிராகத் தாங்கள் செய்த பாவங்களைக் குறிப்பதற்கும் எடுத்துச் சொல்லப்பட்டது. தாங்கள் செய்த பாவங்களுக்கு மனம் கனிந்து இரக்கம் கொள்ளவேண்டும் எனக் குறிப்பிடவும் சொல்லப்பட்டது.

இம்மாதிரியான குறிப்புகள் எழுதப்பட்ட புத்தகங்கள் எண்கள் இடப்பட்டு அந்தச் சர்ச்சின் பாதிரியால் கையொப்பம் இடப்பட்டது. பின்னர் அவை ஆர்ச் பிஷப்பின் முன்னிலையில் இன்குசிஷன் விசாரணைகள் நடத்தும் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அதுபோலவே கிறிஸ்துவுக்கு எதிராகச் செயல்படுபவன் பிடிக்கப்படுகையிலும், அவன் ஆர்ச் பிஷப்பின் முன்னிலையில் வைத்தே இன்குசிஷன் விசாரணைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டான். அவ்வாறு ஆர்ச் பிஷப் இல்லாத நிலையில் அவருக்கு அடுத்த நிலையிலுள்ள கிறிஸ்தவப் பாதிரிகள் அந்த இடத்தை வகித்தார்கள்.

Image result for goa inquisition

ஒரு ஹிந்துவையோ, கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றாத கிறிஸ்தவனையோ விசாரணைக்கு கைது செய்யுமுன்னர் அதற்கான வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு அந்த வாரண்ட்டில் ஆர்ச் பிஷப் கையெழுத்திட்டார். அவ்வாறு கைது செய்யப்பட வேண்டியவன் முக்கியஸ்தனாக, பணக்காரனாக இருக்கும்பட்சத்தில் அதுகுறித்து வைசிராயிக்குச் சொல்லப்பட்டு அனுமதி பெறப்பட்டது.

கிறிஸ்துவுக்கு, கிறிஸ்தவ மதத்திற்குப் புறம்பாக ஒருவன் நடப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டால், அவனது அசையும்-அசையாத சொத்துகள் அனைத்தும் ஜப்தி செய்யப்பட்டு இன்குசிஷன் விசாரணை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.  அம்மாதிரியானவர்கள் ஹிந்துக்களாக இருந்தால் அவனது சொத்துக்கள் அனைத்தும் போர்ச்சுக்கீசிய அரசனுக்கு அளிக்கப்பட்டது. இருப்பினும் போர்ச்சுக்கல் அரசன் 1559-ஆம் வருடம் பிறப்பித்த அரசாணையின்படி அவ்வாறு குற்றம்சாட்டப்பட்டவர்கள் புதிதாக மதம்மாற்றப்பட்ட கிறிஸ்தவர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. எனினும் அவர்கள் மதம்மாறி ஐந்து வருடங்களாகியிருந்தால் அவர்களின் சொத்து முழுமையும் போர்ச்சுக்கீசிய அரசனுக்குச் சொந்தமாகும்.

புதிதாக மதமாற்றம் செய்யப்பட்ட ஹிந்துவோ அல்லது முஸ்லிமோ கிறிஸ்தவ மதத்திற்கு எதிராக நடந்து கொண்டால் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். பின்னர் அவர்கள் தங்களின் குற்றத்தை ஒப்புக் கொண்டால் அதற்கு மன்னிப்பு வழங்கப்பட்டது என்றாலும் முதலில் அவர்கள் ஒரு தனியறையில் அடைக்கப்பட்டு பரமண்டலத்திலிருக்கும் பிதாவின் மகிமையைக் குறித்தும், கிறிஸ்தவ மதத்தின் மகிமையைக் குறித்தும் பாடம் கற்றபிறகே அங்கிருந்து விடுவிக்கப்பட்டார்கள்.

ஏசு கிறிஸ்துவை பாவங்களைத் துடைக்க வந்த கடவுளின் குமாரனாக ஒத்துக் கொள்ளாதவர்கள், யூத மதச் சடங்குகளைச் செய்தல், திருவிழாக்களில் பங்கெடுத்தல், சனிக்கிழமைகளில் வேலைசெய்தல், பன்றி இறைச்சியை உண்ணதிருத்தல், முயல்களையும், செதில்களில்லாத மீன்களைத் திண்ணுதல், பிறமதத்துப் பிரார்த்தனைகளைச் சொல்லுதல், செத்தவர்களைக் குளிப்பாட்டுதல், புதிய துணிகளில் தைக்கப்பட்ட நீண்ட அங்கிகளை அணிதல், புதிய தரையில் இறந்தவர்களை ஆழமாகப் புதைத்தல், அவர்களின் குழந்தைகளின் முன்னே அழுதல், இறந்தவர்களின் வாயில் வெள்ளி, தங்கக் காசுகளை வைத்தல், நகங்களை வெட்டி அவற்றைக் காப்பாற்றி வைத்தல், உட்கார்ந்திருக்கும் நாற்காலியைவிடவும் உயரம் குறைந்த மேசையில் உணவு உண்ணுதல், துக்ககாலத்தில் கதவுக்குப் பின்னே ஒளிந்திருத்தல் — இவை அனைத்தும் இயேசுவுக்கு எதிரான குற்றச் செயல்களாகக் கருதப்பட்டன.

மதம்மாற்றப்பட்ட எந்தவொரு முஸ்லிமும், குரானைப் படிப்பதோ அல்லது முகமது நபியைக் குறித்துப் பேசுவதோ குற்றமாகும். மார்ட்டின் லூதர் அல்லது கால்வின் போன்ற கிறிஸ்துவுக்கு எதிரானவர்களைப் புகழ்வது, கிறிஸ்துவைக் குறித்தும் அவர் செய்த அற்புதங்களைக் குறித்தும் சந்தேகம் கொண்டு பேசுவது, வானத்தில் சொர்க்கம் இருப்பதனை மறுதலிப்பது, கிறிஸ்தவர்கள் மட்டுமே சொர்க்கத்திற்குப் போவார்கள் மற்றவர்களுக்கு நரகமே கிடைக்கும் என்கிற நம்பிக்கையைக் கேலிசெய்வது, பாவமன்னிப்புக் கேட்கத் தவறுவது, பாவமன்னிப்பில் உண்மையைச் சொல்லாமல் மறைப்பது, பைபிளில் கூறப்பட்ட எந்தவொரு பகுதியைக் குறித்தும் சந்தேகம் கொள்வது, மனைவி உயிருடன் இருக்கையில் இன்னொரு மணம் புரிவது, மனிதன் தனக்குப் பிரியமானதைச் செய்யவும், சொல்லவும் உரிமையில்லை என்று சொல்வது, மதப்பற்றில்லாமலேயே நல்ல செயல்களைச் செய்து தனது ஆன்மாவைக் காப்பாற்றி கொள்ள முடியும் என்றும், பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையில் நடப்பதற்கு மனிதன் பொறுப்பல்ல என்றும், புனிதர்கள் என்று எவருமில்லை எனச் சொல்வதும், புனித அடையாளங்களை மறுதலிப்பதுபோன்ற செயல்களும் இன்குசிஷன் விசாரணைகளில் கிறிஸ்துவுக்குக்கும், கிறிஸ்தவ மதத்திற்கும் எதிரானவை எனக் கொள்ளப்பட்டுத் தண்டனைகள் அளிக்கப்பட்டன.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கொலைகாரக் கிறிஸ்தவம் — 17

 

கோவாவிற்கு 1511-ஆம் வருடம் வந்த, பின்னர் சீனாவில் போர்ச்சுக்கீசியத் தூதுவராகப் பணியாற்றிய தோமே பைரஸ் என்பன் 1540-ஆம் வருடம் எழுதிய புத்தகமான Suma Oriental-இல் அன்றைய கோவாவைப் பற்றி இப்படிச் சொல்கிறான்,

தக்காணத்துப் பகுதியையும்விட அதிகமான இறைமறுப்பாளர்கள் கோவா ராஜ்ஜியத்தில் வாழ்ந்துகொண்டிருந்தார்கள். அவர்களில் சிலர் பெரும் பணக்காரர்கள். ஏறக்குறைய மொத்த கோவாவும் அவர்களின் வசம் இருந்தது. அவர்களின் மூலமாக போர்ச்சுக்கீசிய அரசருக்கு ஏராளமான வரியும் கிடைத்துவந்தது.  காம்பே பகுதியை விடவும் அழகான ஆலயங்கள் கோவா பகுதியில் இருந்தன. அதனைப் பராமரிக்கவும், தினப்படி பூசைகள்செய்யவும் பலவிதமான பிராமணர்கள் இருந்தார்கள். மிகவும் சுத்தமும், ஆச்சாரமும் பேணும் அந்த பிராமணர்கள் விலங்குகளைக் கொன்று தின்னாதவர்களாக, பிறரால் சமைக்கப்பட்ட உணவை உண்ணாதவர்கள். அந்தப் பகுதியில் வாழ்ந்த ஹிந்துக்கள் இந்த பிராமணர்களின்மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டவர்கள்.  தங்களின் மதத்தின்பால் மிகவும் பிடிப்புகொண்டிருந்த இந்த பிராமணர்கள் அரசபதவி அளித்தாலும் முஸ்லிம்களாக மதம்மாறத் தயாராக இல்லாதவர்கள்.

இந்தப் புத்தகம் கோவாவைக் கைப்பற்றிய அல்புகர்க்கி உயிரோடு இருக்கையில் எழுதப்பட்டது என்பதினை நாம் இங்கு நினைவில் கொள்ளவேண்டும். அதுவரையில் கோவா ஹிந்துக்கள் எவரும் கொடுமைப்படுத்தப் படவில்லை அல்லது மதம் மாறவேண்டும் என வற்புறுத்தப்படவில்லை என்பது இது உணர்த்துகிறது.  தோமே பைரஸ் சொன்னபடி பிராமணர்கள் மட்டுமல்லாமல் அங்கு வாழ்ந்த ஹிந்துக்கள் அனைவரும் தங்களின் மதத்தின்மீது மிகுந்த பற்றுள்ளவர்களாக, அதனை தினப்படி வாழ்க்கையில் பின்பற்றுபவர்களாகவே இருந்து வந்திருக்கிறார்கள். பிற்காலத்தில் கிறிஸ்தவர்களாக அவர்கள் மதம்மாற வறுபுறுத்தப்படுகையில் அவர்களில் பலர் மதம்மாற மறுத்து கோவாவைவிட்டு வெளியேறி பிறபகுதிகளில் குடியேறினார்கள்.

இனி கோவா மதமாற்றங்களை வலியுறுத்தி போர்ச்சுக்கீசியர்கள் எடுத்த சில நடவடிக்கைகளைக் குறித்து பார்க்கலாம்.

மதமாற்ற நடவடிக்கைகளை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம்.  முதலாவது, கோவாவில் வாழும் ஹிந்துக்களுக்குத் தொடர்ந்து தொல்லைகள் கொடுத்து அவர்கள் தங்களின் மதத்தைப் பின்பற்றுவதைக் கடினமான ஒன்றாக்கியது.  இதன்படி ஹிந்துக் கோவில்கள் அனைத்தும் இடிக்கப்பட்டதுடன், புதிதாக ஆலயங்கள் எதுவும் கட்டுவதற்கும், புனரமைப்பதறும் தடைகள் விதிக்கப்பட்டன.

ஹிந்து விழாக்கள், பண்டிகைகள், ஹிந்து முறையிலான திருமணங்கள், பூணூல் அணிவது, பிள்ளைகளுக்குப்  பூணூல் அணிவிக்கும் விழா நடத்துவது, குழந்தை பிறந்ததை ஹிந்து முறைப்படி கொண்டாடுவது போன்ற சடங்குகள் முற்றிலும் தடைசெய்யப்பட்டன.  ஹிந்துப் பூசாரிகள், காலட்சேபம் செய்பவர்கள், ஹிந்து ஆசிரியர்கள் என கிறிஸ்தவ மதம் பரப்புவதற்குத் தடையாக எவரெவர் இருப்பார்கள் என்று கருதப்பட்டார்களோ அவர்கள் அத்தனைபேர்களும் கோவாவிலிருந்து துரத்தப்பட்டார்கள்.

Image result for goa inquisition lest we forget

மீதமிருந்தவர்கள் அவர்களின் முன்னோர்களின் நிலங்களில் வரும் வருமானத்தை எடுத்துச் செலவுசெய்ய அனுமதி மறுக்கப்பட்டார்கள். ஹிந்துக்கள் என்கிற ஒரே காரணத்திற்க்காக பல்வேறு அவமானங்களும், கொடுமைகளும், உடல் உறுப்புகளைச் சிதைத்தலும் வெளிப்படையாகச் செய்யப்பட்டது.  ஹிந்துக்களின் அனாதைக் குழந்தைகள் பிடிக்கப்பட்டு உடனடியாக கிறிஸ்தவர்களாக ஞானஸ்னானம் செய்துவைக்கப்பட்டார்கள்.  கூட்டமாகப் பிடிக்கப்பட்டு சர்ச்சுகளுக்கு அழைத்துச்செல்லப்பட்ட ஹிந்து ஆண், பெண்கள் அங்கு நடந்த கிறிஸ்தவ மதப்பிரச்சாரத்தை வலுக்கட்டாயமாக கேட்கவைக்கப்பட்டார்கள்.

இரண்டாவது பகுதி, கிறிஸ்தவத்தைக் குறித்த நல்லெண்ணத்தை எப்பாடு பட்டாவது ஹிந்துக்களிடையே பரப்புவது என்பதாகும். கிறிஸ்தவர்களாக மதம்மாறுபவனுக்கு அரசாங்க வேலைகளைக் கொடுப்பது, ஹிந்து சொத்துச் சட்டங்களை மாற்றி, நியாயமற்ற முறையில் அவனது பெற்றோர்களிடமிருந்து அதிகமான சொத்துக்களைப் பிடுங்கிக் கொடுப்பது, ஊர்களிலும், கிராமங்களிலும் நடக்கும் வாக்குவாதங்கள், சண்டை சச்சரவுகள் போன்றவற்றில் தலையிட்டு கிறிஸ்தவனாக மதம்மாறியவனுக்குச் சாதகமாக தீர்ப்புவழங்குவது  போன்றவை தொடர்ந்து நடத்தப்பட்டன.

இன்குசிஷன் விசாரணைகள் மேற்கண்ட செயல்களுக்குப் பேருதவியாக இருந்தன. மதம்மாற மறுத்த ஒவ்வொரு ஹிந்துவும் நரகத்தில் வாழ்ந்தான். அவனுக்கு எதிராக கண்மூடித்தனமான, ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

ஏப்ரல் 2, 1560-அன்று கோவாவின் வைசிராயான கான்ஸ்டாண்டினோ பிராகன்கா, கோவாவில் வசிக்கும் ஏராளமான பிராமணர்கள் உடனடியாக போர்ச்சுக்கீசிய அரசருக்குக் கீழ்வரும் கோவாவிலிருந்தும், அதனைச் சுற்றியுள்ள கிராமங்கள், கோட்டைகளிலிருந்தும் உடனடியாக வெளியேற வேண்டுமென உத்தரவிட்டான். செலசெட் மற்றும் பார்டெஸ் பகுதிவாசிகள் மட்டும் மீண்டும் ஊருக்குள் திரும்ப அனுமதிக்கப்பட்டார்கள்.  பிராமணர்களுடன் வைசிராயின் பட்டியலில் பெயர் உள்ள பிறஹிந்துக்களில் உடனடியாக வெளியேறாதவர்கள், வெளியேற மறுப்பவர்கள் அனைவரும் சிறையிலடைக்கப்படுவார்கள், அவர்களின் சொத்து ஜப்தி செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.  அவர்கள் தங்களின் சொத்துக்களை விற்பதற்கு ஒருமாத காலம் அவகாசம் அளிக்கப்பட்டது.

அதே ஆண்டு ஜூன் 8-ம் தேதி கோவாவில் வசிக்கும் தங்க நகைகள் செய்யும் ஆசாரிகள் போர்ச்சுக்கீசிய கோவாவுக்கு வெளியிலிருக்கும் நிலம் சொத்துக்களை உடனடியாக விற்றுவிட்டு, அவர்களின் குடும்பத்தார் கோவாவுக்கு வெளியில் வசித்தால், அவர்களும் அடுத்த பத்து நாட்களுக்குள் கோவா பகுதிக்குள் வந்துவிடவேண்டும் என உத்தரவிடப்பட்டது. ஒருவேளை தங்க நகை செய்யும் ஆசாரகளிடம் நிறையத் தங்கம் இருப்பதாக வைசிராய் நினைத்திருக்கலாம்.

இந்தக் கொடுமையான உத்தரவின் காரணமாக போர்ச்சுக்கீசிய கோவாவில் வாழ்ந்த ஹிந்துக்கள் மூட்டைமுடிச்சுகளுடன் அருகிலிருந்த பகுதிகளுக்குக் கூட்டம் கூட்டமாக இடம்பெயர ஆரம்பித்தார்கள். கோவாவில் அவர்கள் நடத்திக் கொண்டிருந்த வியாபாரங்கள், கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. ஹிந்து விவசாயக் கூலிகளும் கோவாவைவிட்டுச் சென்றுவிட்டதால் விவசாயக் கூலிகள் கிடைப்பது அரிதாகியது. அவர்களுடன் கலைஞர்களும், சிறு தொழில் நுட்பங்கள் தெரிந்தவர்களும் சென்றுவிட்டதால்  கோவா பெரும் சிக்கலுக்கு உள்ளாகியது.

கோவாவின் பொருளாதாரம் அதலபாதாளத்திற்குச் சென்றுவிட்ட நிலையில் புதிய வைசிராயான கோண்டே-டி-ரொனால்டோ ஃப்ரான்ஸிஸ்கோ கோட்டின்ஹா டிசம்பர் 3, 1561-ஆம் வருடம் கோவாவை விட்டு வெளியேறிய ஹிந்துக்கள் அனைவரையும் திரும்ப வரும்படி வேண்டுகோள் விடுத்தார்.

நான் கோவாவுக்கு வந்தவுடன் அதன் நகரங்களும், கிராமங்களும் ஜனங்கள் எவருமின்றி வெறிச்சோடிக் கிடப்பதனைக் கண்டேன். விவசாயிகள் இல்லாத வயல்களில் ஆற்றுநீர் புகுந்து வயல்வெளிகள் நீரில் மூழ்கியிருந்தன. அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்ட ஹிந்துக்கள் மீண்டும் கோவாவிற்கு வரமறுத்து வெளியிலேயே தங்கியிருந்தார்கள்.  முன்னாள் வைசிராயான காண்ஸ்ட்டண்டினோவின் உத்தரவுப்படி அவர்களின் சொத்துக்களும், நிலங்களும் கோவாவாசிகளுக்குத் தானமாகப் பிரித்துக் கொடுக்கப்பட்டிருந்தன.  எனவே வைசிராய் கான்ஸ்டண்டினோ ஹிந்துக்கள் உடனடியாகத் திரும்பி வராவிட்டால் அவர்களின் சொத்துக்களை கிறிஸ்தவர்களுக்குக் கொடுத்துவிடுவதாக மிரட்டி இன்னொரு உத்தரவினை வெளியிட்டார். இந்தச் சூழ்நிலையை உருவாக்கியவர்களில் மிக முக்கியமானவர்கள் ஆர்ச் பிஷப்பும் அவரைச் சார்ந்த கிறிஸ்தவ பாதிரிகளும்தான் என்பதனைக் கண்டுகொண்டேன். எனவே நான் அவர்களுடன் விவாதித்து கான்ஸ்டண்டினோவின் கடுமையான உத்தரவுகளைச் செயல்படுத்தக்கூடாது என வேண்டியதுடன் கோவாவிற்குத் திரும்பிவரும் ஹிந்துக்களுக்கு அவர்களின் பூர்விக நிலத்தை ஒப்படைப்பதாக ஒரு உத்தரவைப் பிறப்பித்தேன்.

இந்த உத்தரவால் சில ஹிந்துக்களும், பிராமணர்களும் மீண்டும் கோவா பகுதிகளுக்குள் வந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்றாலும், போர்ச்சுக்கீசியப் பகுதியிலிருந்த கிறிஸ்தவ மதவெறியர்கள் தங்களின் அரசருக்குக் கடிதங்கள் எழுதி, புதிய வைசிராயின் உத்தரவுகளை நீக்கச் செய்தார்கள். எனவே நவம்பர் 27, 1563-ஆம் வருடம் புதிய வைசிராயான ஃப்ரான்ஸிஸ்கோ கோட்டின்ஹா, ஆர்ச்பிஷப்பின் பட்டியலில் இருக்கும் பிராமணர்கள் அனைவரும் ஒரு மாத காலத்திற்குள் கோவாவைவிட்டு வெளியேறவேண்டும் எனப் புதிதாக உத்தரவிட்டார்.

இவர்களிலிருந்து தங்களின் நிலங்களைத் தாங்களாகவே உழுது பயிர்செய்த பிராமணர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது.  அவர்களுடன் மருத்துவர்கள், தச்சர்கள், கருமான்கள், கடைக்காரர்கள், வரிவசூலிப்பவர்கள் ஆகியோர்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டு கோவாவிலேயே தங்க அனுமதிக்கப்பட்டார்கள்.

அங்கிருந்த விரட்டப்படுபவர்கள் அனைவரும் தங்களின் சொத்துக்களை ஒரு மாதகாலத்திற்குள்ளாக விற்றாகவேண்டும், ஒருவேளை அதனைச் செய்ய இயலாவிட்டால் கோவாவில் இருக்கும் வேறு யாருக்காவது அதனை விற்பதற்கான அதிகாரத்தைத் தரவேண்டும் என்றும், அவர்கள் ஒரு வருட காலத்திற்குள்ளாக அந்தச் சொத்துக்களை விற்றாகவேண்டும் எனவும் கூறப்பட்டது.  அவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட காலத்திற்குள் அவர்கள் அங்கிருந்து வெளியேறாவிட்டால் அவர்கள் உடனடியாக கைது செய்யப்ப்ட்டு சிறைகளில் அடைக்கப்படுவார்கள் என்றும், அவர்களின் சொத்துக்கள் அனைத்தும் ஜப்தி செய்யப்படும் எனவும் மிரட்டப்பட்டார்கள்.

பிப்ரவரி 7ம் 1575-ஆம் ஆண்டு கவர்னர் அண்டோனியோ மோனிஸ் பர்ரெட்டோவினால் பிறப்பிக்கப்பட்ட இன்னொரு உத்தரவின்படி, கிறிஸ்துவின் பெயரால் கோவாவை விட்டு விரட்டியடிக்கப்பட்ட பிராமணர்கள் எவரும் மீண்டும் போர்ச்சுக்கீசியப் பகுதிக்குள் காலடி எடுத்துவைத்தால் அவர்கள் சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு புதிதாக மதம்மாறிய கிறிஸ்தவனுக்குக் கொடுக்கப்படவேண்டும் என அறிவிக்கப்பட்டது.

பின்னர் 1585-ஆம் வருடம் பிறப்பிக்கப்பட்டதொரு தீர்மானம், “அரசர் தனது வைசிராய்களுக்கும், கவர்னர்களுக்கும் மீண்டும் மீண்டும் எடுத்துச் சொன்னது என்னவென்றால், அவரது ஆட்சிக்குட்பட்ட இந்தியப் பகுதி எவற்றிலும் பிராமணர்கள் எவரும் குடியிருக்க அனுமதிக்கவே கூடாது எனவும், அவர்களுடன் கிறிஸ்துவமத நம்பிக்கையற்ற மருத்துவர்களும் கிறிஸ்துவ எதிரிகளும் விரட்டியடிக்கப்படவேண்டும்.  இவர்கள் விரட்டியடிக்கப்பட்ட பிறகே ஏராளமான ஹிந்துக்கள் புதிய கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள். எந்த பிராமணனோ அல்லது மருத்துவனோ இதனைத் தடுக்க முயன்றால் அவனைக் குறித்து ஆர்ச்பிஷப்பிற்குத் தெரியப்படுத்தப்படவேண்டும். பின்னர் வைசிராயிடமும், கவர்னரிடமும் இதனைக் குறித்து எடுத்துச்சொல்லி இந்தக் கிறிஸ்தவ எதிரிகளை ஒழித்துக்கட்ட அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்ளவேண்டும்……” எனக் குறிப்பிடுகிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கொலைகாரக் கிறிஸ்தவம் — 17

 

கோவாவிற்கு 1511-ஆம் வருடம் வந்த, பின்னர் சீனாவில் போர்ச்சுக்கீசியத் தூதுவராகப் பணியாற்றிய தோமே பைரஸ் என்பன் 1540-ஆம் வருடம் எழுதிய புத்தகமான Suma Oriental-இல் அன்றைய கோவாவைப் பற்றி இப்படிச் சொல்கிறான்,

தக்காணத்துப் பகுதியையும்விட அதிகமான இறைமறுப்பாளர்கள் கோவா ராஜ்ஜியத்தில் வாழ்ந்துகொண்டிருந்தார்கள். அவர்களில் சிலர் பெரும் பணக்காரர்கள். ஏறக்குறைய மொத்த கோவாவும் அவர்களின் வசம் இருந்தது. அவர்களின் மூலமாக போர்ச்சுக்கீசிய அரசருக்கு ஏராளமான வரியும் கிடைத்துவந்தது.  காம்பே பகுதியை விடவும் அழகான ஆலயங்கள் கோவா பகுதியில் இருந்தன. அதனைப் பராமரிக்கவும், தினப்படி பூசைகள்செய்யவும் பலவிதமான பிராமணர்கள் இருந்தார்கள். மிகவும் சுத்தமும், ஆச்சாரமும் பேணும் அந்த பிராமணர்கள் விலங்குகளைக் கொன்று தின்னாதவர்களாக, பிறரால் சமைக்கப்பட்ட உணவை உண்ணாதவர்கள். அந்தப் பகுதியில் வாழ்ந்த ஹிந்துக்கள் இந்த பிராமணர்களின்மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டவர்கள்.  தங்களின் மதத்தின்பால் மிகவும் பிடிப்புகொண்டிருந்த இந்த பிராமணர்கள் அரசபதவி அளித்தாலும் முஸ்லிம்களாக மதம்மாறத் தயாராக இல்லாதவர்கள்.

இந்தப் புத்தகம் கோவாவைக் கைப்பற்றிய அல்புகர்க்கி உயிரோடு இருக்கையில் எழுதப்பட்டது என்பதினை நாம் இங்கு நினைவில் கொள்ளவேண்டும். அதுவரையில் கோவா ஹிந்துக்கள் எவரும் கொடுமைப்படுத்தப் படவில்லை அல்லது மதம் மாறவேண்டும் என வற்புறுத்தப்படவில்லை என்பது இது உணர்த்துகிறது.  தோமே பைரஸ் சொன்னபடி பிராமணர்கள் மட்டுமல்லாமல் அங்கு வாழ்ந்த ஹிந்துக்கள் அனைவரும் தங்களின் மதத்தின்மீது மிகுந்த பற்றுள்ளவர்களாக, அதனை தினப்படி வாழ்க்கையில் பின்பற்றுபவர்களாகவே இருந்து வந்திருக்கிறார்கள். பிற்காலத்தில் கிறிஸ்தவர்களாக அவர்கள் மதம்மாற வறுபுறுத்தப்படுகையில் அவர்களில் பலர் மதம்மாற மறுத்து கோவாவைவிட்டு வெளியேறி பிறபகுதிகளில் குடியேறினார்கள்.

இனி கோவா மதமாற்றங்களை வலியுறுத்தி போர்ச்சுக்கீசியர்கள் எடுத்த சில நடவடிக்கைகளைக் குறித்து பார்க்கலாம்.

மதமாற்ற நடவடிக்கைகளை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம்.  முதலாவது, கோவாவில் வாழும் ஹிந்துக்களுக்குத் தொடர்ந்து தொல்லைகள் கொடுத்து அவர்கள் தங்களின் மதத்தைப் பின்பற்றுவதைக் கடினமான ஒன்றாக்கியது.  இதன்படி ஹிந்துக் கோவில்கள் அனைத்தும் இடிக்கப்பட்டதுடன், புதிதாக ஆலயங்கள் எதுவும் கட்டுவதற்கும், புனரமைப்பதறும் தடைகள் விதிக்கப்பட்டன.

ஹிந்து விழாக்கள், பண்டிகைகள், ஹிந்து முறையிலான திருமணங்கள், பூணூல் அணிவது, பிள்ளைகளுக்குப்  பூணூல் அணிவிக்கும் விழா நடத்துவது, குழந்தை பிறந்ததை ஹிந்து முறைப்படி கொண்டாடுவது போன்ற சடங்குகள் முற்றிலும் தடைசெய்யப்பட்டன.  ஹிந்துப் பூசாரிகள், காலட்சேபம் செய்பவர்கள், ஹிந்து ஆசிரியர்கள் என கிறிஸ்தவ மதம் பரப்புவதற்குத் தடையாக எவரெவர் இருப்பார்கள் என்று கருதப்பட்டார்களோ அவர்கள் அத்தனைபேர்களும் கோவாவிலிருந்து துரத்தப்பட்டார்கள்.

Image result for goa inquisition lest we forget

மீதமிருந்தவர்கள் அவர்களின் முன்னோர்களின் நிலங்களில் வரும் வருமானத்தை எடுத்துச் செலவுசெய்ய அனுமதி மறுக்கப்பட்டார்கள். ஹிந்துக்கள் என்கிற ஒரே காரணத்திற்க்காக பல்வேறு அவமானங்களும், கொடுமைகளும், உடல் உறுப்புகளைச் சிதைத்தலும் வெளிப்படையாகச் செய்யப்பட்டது.  ஹிந்துக்களின் அனாதைக் குழந்தைகள் பிடிக்கப்பட்டு உடனடியாக கிறிஸ்தவர்களாக ஞானஸ்னானம் செய்துவைக்கப்பட்டார்கள்.  கூட்டமாகப் பிடிக்கப்பட்டு சர்ச்சுகளுக்கு அழைத்துச்செல்லப்பட்ட ஹிந்து ஆண், பெண்கள் அங்கு நடந்த கிறிஸ்தவ மதப்பிரச்சாரத்தை வலுக்கட்டாயமாக கேட்கவைக்கப்பட்டார்கள்.

இரண்டாவது பகுதி, கிறிஸ்தவத்தைக் குறித்த நல்லெண்ணத்தை எப்பாடு பட்டாவது ஹிந்துக்களிடையே பரப்புவது என்பதாகும். கிறிஸ்தவர்களாக மதம்மாறுபவனுக்கு அரசாங்க வேலைகளைக் கொடுப்பது, ஹிந்து சொத்துச் சட்டங்களை மாற்றி, நியாயமற்ற முறையில் அவனது பெற்றோர்களிடமிருந்து அதிகமான சொத்துக்களைப் பிடுங்கிக் கொடுப்பது, ஊர்களிலும், கிராமங்களிலும் நடக்கும் வாக்குவாதங்கள், சண்டை சச்சரவுகள் போன்றவற்றில் தலையிட்டு கிறிஸ்தவனாக மதம்மாறியவனுக்குச் சாதகமாக தீர்ப்புவழங்குவது  போன்றவை தொடர்ந்து நடத்தப்பட்டன.

இன்குசிஷன் விசாரணைகள் மேற்கண்ட செயல்களுக்குப் பேருதவியாக இருந்தன. மதம்மாற மறுத்த ஒவ்வொரு ஹிந்துவும் நரகத்தில் வாழ்ந்தான். அவனுக்கு எதிராக கண்மூடித்தனமான, ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

ஏப்ரல் 2, 1560-அன்று கோவாவின் வைசிராயான கான்ஸ்டாண்டினோ பிராகன்கா, கோவாவில் வசிக்கும் ஏராளமான பிராமணர்கள் உடனடியாக போர்ச்சுக்கீசிய அரசருக்குக் கீழ்வரும் கோவாவிலிருந்தும், அதனைச் சுற்றியுள்ள கிராமங்கள், கோட்டைகளிலிருந்தும் உடனடியாக வெளியேற வேண்டுமென உத்தரவிட்டான். செலசெட் மற்றும் பார்டெஸ் பகுதிவாசிகள் மட்டும் மீண்டும் ஊருக்குள் திரும்ப அனுமதிக்கப்பட்டார்கள்.  பிராமணர்களுடன் வைசிராயின் பட்டியலில் பெயர் உள்ள பிறஹிந்துக்களில் உடனடியாக வெளியேறாதவர்கள், வெளியேற மறுப்பவர்கள் அனைவரும் சிறையிலடைக்கப்படுவார்கள், அவர்களின் சொத்து ஜப்தி செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.  அவர்கள் தங்களின் சொத்துக்களை விற்பதற்கு ஒருமாத காலம் அவகாசம் அளிக்கப்பட்டது.

அதே ஆண்டு ஜூன் 8-ம் தேதி கோவாவில் வசிக்கும் தங்க நகைகள் செய்யும் ஆசாரிகள் போர்ச்சுக்கீசிய கோவாவுக்கு வெளியிலிருக்கும் நிலம் சொத்துக்களை உடனடியாக விற்றுவிட்டு, அவர்களின் குடும்பத்தார் கோவாவுக்கு வெளியில் வசித்தால், அவர்களும் அடுத்த பத்து நாட்களுக்குள் கோவா பகுதிக்குள் வந்துவிடவேண்டும் என உத்தரவிடப்பட்டது. ஒருவேளை தங்க நகை செய்யும் ஆசாரகளிடம் நிறையத் தங்கம் இருப்பதாக வைசிராய் நினைத்திருக்கலாம்.

இந்தக் கொடுமையான உத்தரவின் காரணமாக போர்ச்சுக்கீசிய கோவாவில் வாழ்ந்த ஹிந்துக்கள் மூட்டைமுடிச்சுகளுடன் அருகிலிருந்த பகுதிகளுக்குக் கூட்டம் கூட்டமாக இடம்பெயர ஆரம்பித்தார்கள். கோவாவில் அவர்கள் நடத்திக் கொண்டிருந்த வியாபாரங்கள், கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. ஹிந்து விவசாயக் கூலிகளும் கோவாவைவிட்டுச் சென்றுவிட்டதால் விவசாயக் கூலிகள் கிடைப்பது அரிதாகியது. அவர்களுடன் கலைஞர்களும், சிறு தொழில் நுட்பங்கள் தெரிந்தவர்களும் சென்றுவிட்டதால்  கோவா பெரும் சிக்கலுக்கு உள்ளாகியது.

கோவாவின் பொருளாதாரம் அதலபாதாளத்திற்குச் சென்றுவிட்ட நிலையில் புதிய வைசிராயான கோண்டே-டி-ரொனால்டோ ஃப்ரான்ஸிஸ்கோ கோட்டின்ஹா டிசம்பர் 3, 1561-ஆம் வருடம் கோவாவை விட்டு வெளியேறிய ஹிந்துக்கள் அனைவரையும் திரும்ப வரும்படி வேண்டுகோள் விடுத்தார்.

நான் கோவாவுக்கு வந்தவுடன் அதன் நகரங்களும், கிராமங்களும் ஜனங்கள் எவருமின்றி வெறிச்சோடிக் கிடப்பதனைக் கண்டேன். விவசாயிகள் இல்லாத வயல்களில் ஆற்றுநீர் புகுந்து வயல்வெளிகள் நீரில் மூழ்கியிருந்தன. அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்ட ஹிந்துக்கள் மீண்டும் கோவாவிற்கு வரமறுத்து வெளியிலேயே தங்கியிருந்தார்கள்.  முன்னாள் வைசிராயான காண்ஸ்ட்டண்டினோவின் உத்தரவுப்படி அவர்களின் சொத்துக்களும், நிலங்களும் கோவாவாசிகளுக்குத் தானமாகப் பிரித்துக் கொடுக்கப்பட்டிருந்தன.  எனவே வைசிராய் கான்ஸ்டண்டினோ ஹிந்துக்கள் உடனடியாகத் திரும்பி வராவிட்டால் அவர்களின் சொத்துக்களை கிறிஸ்தவர்களுக்குக் கொடுத்துவிடுவதாக மிரட்டி இன்னொரு உத்தரவினை வெளியிட்டார். இந்தச் சூழ்நிலையை உருவாக்கியவர்களில் மிக முக்கியமானவர்கள் ஆர்ச் பிஷப்பும் அவரைச் சார்ந்த கிறிஸ்தவ பாதிரிகளும்தான் என்பதனைக் கண்டுகொண்டேன். எனவே நான் அவர்களுடன் விவாதித்து கான்ஸ்டண்டினோவின் கடுமையான உத்தரவுகளைச் செயல்படுத்தக்கூடாது என வேண்டியதுடன் கோவாவிற்குத் திரும்பிவரும் ஹிந்துக்களுக்கு அவர்களின் பூர்விக நிலத்தை ஒப்படைப்பதாக ஒரு உத்தரவைப் பிறப்பித்தேன்.

இந்த உத்தரவால் சில ஹிந்துக்களும், பிராமணர்களும் மீண்டும் கோவா பகுதிகளுக்குள் வந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்றாலும், போர்ச்சுக்கீசியப் பகுதியிலிருந்த கிறிஸ்தவ மதவெறியர்கள் தங்களின் அரசருக்குக் கடிதங்கள் எழுதி, புதிய வைசிராயின் உத்தரவுகளை நீக்கச் செய்தார்கள். எனவே நவம்பர் 27, 1563-ஆம் வருடம் புதிய வைசிராயான ஃப்ரான்ஸிஸ்கோ கோட்டின்ஹா, ஆர்ச்பிஷப்பின் பட்டியலில் இருக்கும் பிராமணர்கள் அனைவரும் ஒரு மாத காலத்திற்குள் கோவாவைவிட்டு வெளியேறவேண்டும் எனப் புதிதாக உத்தரவிட்டார்.

இவர்களிலிருந்து தங்களின் நிலங்களைத் தாங்களாகவே உழுது பயிர்செய்த பிராமணர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது.  அவர்களுடன் மருத்துவர்கள், தச்சர்கள், கருமான்கள், கடைக்காரர்கள், வரிவசூலிப்பவர்கள் ஆகியோர்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டு கோவாவிலேயே தங்க அனுமதிக்கப்பட்டார்கள்.

அங்கிருந்த விரட்டப்படுபவர்கள் அனைவரும் தங்களின் சொத்துக்களை ஒரு மாதகாலத்திற்குள்ளாக விற்றாகவேண்டும், ஒருவேளை அதனைச் செய்ய இயலாவிட்டால் கோவாவில் இருக்கும் வேறு யாருக்காவது அதனை விற்பதற்கான அதிகாரத்தைத் தரவேண்டும் என்றும், அவர்கள் ஒரு வருட காலத்திற்குள்ளாக அந்தச் சொத்துக்களை விற்றாகவேண்டும் எனவும் கூறப்பட்டது.  அவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட காலத்திற்குள் அவர்கள் அங்கிருந்து வெளியேறாவிட்டால் அவர்கள் உடனடியாக கைது செய்யப்ப்ட்டு சிறைகளில் அடைக்கப்படுவார்கள் என்றும், அவர்களின் சொத்துக்கள் அனைத்தும் ஜப்தி செய்யப்படும் எனவும் மிரட்டப்பட்டார்கள்.

பிப்ரவரி 7ம் 1575-ஆம் ஆண்டு கவர்னர் அண்டோனியோ மோனிஸ் பர்ரெட்டோவினால் பிறப்பிக்கப்பட்ட இன்னொரு உத்தரவின்படி, கிறிஸ்துவின் பெயரால் கோவாவை விட்டு விரட்டியடிக்கப்பட்ட பிராமணர்கள் எவரும் மீண்டும் போர்ச்சுக்கீசியப் பகுதிக்குள் காலடி எடுத்துவைத்தால் அவர்கள் சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு புதிதாக மதம்மாறிய கிறிஸ்தவனுக்குக் கொடுக்கப்படவேண்டும் என அறிவிக்கப்பட்டது.

பின்னர் 1585-ஆம் வருடம் பிறப்பிக்கப்பட்டதொரு தீர்மானம், “அரசர் தனது வைசிராய்களுக்கும், கவர்னர்களுக்கும் மீண்டும் மீண்டும் எடுத்துச் சொன்னது என்னவென்றால், அவரது ஆட்சிக்குட்பட்ட இந்தியப் பகுதி எவற்றிலும் பிராமணர்கள் எவரும் குடியிருக்க அனுமதிக்கவே கூடாது எனவும், அவர்களுடன் கிறிஸ்துவமத நம்பிக்கையற்ற மருத்துவர்களும் கிறிஸ்துவ எதிரிகளும் விரட்டியடிக்கப்படவேண்டும்.  இவர்கள் விரட்டியடிக்கப்பட்ட பிறகே ஏராளமான ஹிந்துக்கள் புதிய கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள். எந்த பிராமணனோ அல்லது மருத்துவனோ இதனைத் தடுக்க முயன்றால் அவனைக் குறித்து ஆர்ச்பிஷப்பிற்குத் தெரியப்படுத்தப்படவேண்டும். பின்னர் வைசிராயிடமும், கவர்னரிடமும் இதனைக் குறித்து எடுத்துச்சொல்லி இந்தக் கிறிஸ்தவ எதிரிகளை ஒழித்துக்கட்ட அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்ளவேண்டும்……” எனக் குறிப்பிடுகிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கொலைகாரக் கிறிஸ்தவம் — 17

 

கோவாவிற்கு 1511-ஆம் வருடம் வந்த, பின்னர் சீனாவில் போர்ச்சுக்கீசியத் தூதுவராகப் பணியாற்றிய தோமே பைரஸ் என்பன் 1540-ஆம் வருடம் எழுதிய புத்தகமான Suma Oriental-இல் அன்றைய கோவாவைப் பற்றி இப்படிச் சொல்கிறான்,

தக்காணத்துப் பகுதியையும்விட அதிகமான இறைமறுப்பாளர்கள் கோவா ராஜ்ஜியத்தில் வாழ்ந்துகொண்டிருந்தார்கள். அவர்களில் சிலர் பெரும் பணக்காரர்கள். ஏறக்குறைய மொத்த கோவாவும் அவர்களின் வசம் இருந்தது. அவர்களின் மூலமாக போர்ச்சுக்கீசிய அரசருக்கு ஏராளமான வரியும் கிடைத்துவந்தது.  காம்பே பகுதியை விடவும் அழகான ஆலயங்கள் கோவா பகுதியில் இருந்தன. அதனைப் பராமரிக்கவும், தினப்படி பூசைகள்செய்யவும் பலவிதமான பிராமணர்கள் இருந்தார்கள். மிகவும் சுத்தமும், ஆச்சாரமும் பேணும் அந்த பிராமணர்கள் விலங்குகளைக் கொன்று தின்னாதவர்களாக, பிறரால் சமைக்கப்பட்ட உணவை உண்ணாதவர்கள். அந்தப் பகுதியில் வாழ்ந்த ஹிந்துக்கள் இந்த பிராமணர்களின்மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டவர்கள்.  தங்களின் மதத்தின்பால் மிகவும் பிடிப்புகொண்டிருந்த இந்த பிராமணர்கள் அரசபதவி அளித்தாலும் முஸ்லிம்களாக மதம்மாறத் தயாராக இல்லாதவர்கள்.

இந்தப் புத்தகம் கோவாவைக் கைப்பற்றிய அல்புகர்க்கி உயிரோடு இருக்கையில் எழுதப்பட்டது என்பதினை நாம் இங்கு நினைவில் கொள்ளவேண்டும். அதுவரையில் கோவா ஹிந்துக்கள் எவரும் கொடுமைப்படுத்தப் படவில்லை அல்லது மதம் மாறவேண்டும் என வற்புறுத்தப்படவில்லை என்பது இது உணர்த்துகிறது.  தோமே பைரஸ் சொன்னபடி பிராமணர்கள் மட்டுமல்லாமல் அங்கு வாழ்ந்த ஹிந்துக்கள் அனைவரும் தங்களின் மதத்தின்மீது மிகுந்த பற்றுள்ளவர்களாக, அதனை தினப்படி வாழ்க்கையில் பின்பற்றுபவர்களாகவே இருந்து வந்திருக்கிறார்கள். பிற்காலத்தில் கிறிஸ்தவர்களாக அவர்கள் மதம்மாற வறுபுறுத்தப்படுகையில் அவர்களில் பலர் மதம்மாற மறுத்து கோவாவைவிட்டு வெளியேறி பிறபகுதிகளில் குடியேறினார்கள்.

இனி கோவா மதமாற்றங்களை வலியுறுத்தி போர்ச்சுக்கீசியர்கள் எடுத்த சில நடவடிக்கைகளைக் குறித்து பார்க்கலாம்.

மதமாற்ற நடவடிக்கைகளை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம்.  முதலாவது, கோவாவில் வாழும் ஹிந்துக்களுக்குத் தொடர்ந்து தொல்லைகள் கொடுத்து அவர்கள் தங்களின் மதத்தைப் பின்பற்றுவதைக் கடினமான ஒன்றாக்கியது.  இதன்படி ஹிந்துக் கோவில்கள் அனைத்தும் இடிக்கப்பட்டதுடன், புதிதாக ஆலயங்கள் எதுவும் கட்டுவதற்கும், புனரமைப்பதறும் தடைகள் விதிக்கப்பட்டன.

ஹிந்து விழாக்கள், பண்டிகைகள், ஹிந்து முறையிலான திருமணங்கள், பூணூல் அணிவது, பிள்ளைகளுக்குப்  பூணூல் அணிவிக்கும் விழா நடத்துவது, குழந்தை பிறந்ததை ஹிந்து முறைப்படி கொண்டாடுவது போன்ற சடங்குகள் முற்றிலும் தடைசெய்யப்பட்டன.  ஹிந்துப் பூசாரிகள், காலட்சேபம் செய்பவர்கள், ஹிந்து ஆசிரியர்கள் என கிறிஸ்தவ மதம் பரப்புவதற்குத் தடையாக எவரெவர் இருப்பார்கள் என்று கருதப்பட்டார்களோ அவர்கள் அத்தனைபேர்களும் கோவாவிலிருந்து துரத்தப்பட்டார்கள்.

Image result for goa inquisition lest we forget

மீதமிருந்தவர்கள் அவர்களின் முன்னோர்களின் நிலங்களில் வரும் வருமானத்தை எடுத்துச் செலவுசெய்ய அனுமதி மறுக்கப்பட்டார்கள். ஹிந்துக்கள் என்கிற ஒரே காரணத்திற்க்காக பல்வேறு அவமானங்களும், கொடுமைகளும், உடல் உறுப்புகளைச் சிதைத்தலும் வெளிப்படையாகச் செய்யப்பட்டது.  ஹிந்துக்களின் அனாதைக் குழந்தைகள் பிடிக்கப்பட்டு உடனடியாக கிறிஸ்தவர்களாக ஞானஸ்னானம் செய்துவைக்கப்பட்டார்கள்.  கூட்டமாகப் பிடிக்கப்பட்டு சர்ச்சுகளுக்கு அழைத்துச்செல்லப்பட்ட ஹிந்து ஆண், பெண்கள் அங்கு நடந்த கிறிஸ்தவ மதப்பிரச்சாரத்தை வலுக்கட்டாயமாக கேட்கவைக்கப்பட்டார்கள்.

இரண்டாவது பகுதி, கிறிஸ்தவத்தைக் குறித்த நல்லெண்ணத்தை எப்பாடு பட்டாவது ஹிந்துக்களிடையே பரப்புவது என்பதாகும். கிறிஸ்தவர்களாக மதம்மாறுபவனுக்கு அரசாங்க வேலைகளைக் கொடுப்பது, ஹிந்து சொத்துச் சட்டங்களை மாற்றி, நியாயமற்ற முறையில் அவனது பெற்றோர்களிடமிருந்து அதிகமான சொத்துக்களைப் பிடுங்கிக் கொடுப்பது, ஊர்களிலும், கிராமங்களிலும் நடக்கும் வாக்குவாதங்கள், சண்டை சச்சரவுகள் போன்றவற்றில் தலையிட்டு கிறிஸ்தவனாக மதம்மாறியவனுக்குச் சாதகமாக தீர்ப்புவழங்குவது  போன்றவை தொடர்ந்து நடத்தப்பட்டன.

இன்குசிஷன் விசாரணைகள் மேற்கண்ட செயல்களுக்குப் பேருதவியாக இருந்தன. மதம்மாற மறுத்த ஒவ்வொரு ஹிந்துவும் நரகத்தில் வாழ்ந்தான். அவனுக்கு எதிராக கண்மூடித்தனமான, ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

ஏப்ரல் 2, 1560-அன்று கோவாவின் வைசிராயான கான்ஸ்டாண்டினோ பிராகன்கா, கோவாவில் வசிக்கும் ஏராளமான பிராமணர்கள் உடனடியாக போர்ச்சுக்கீசிய அரசருக்குக் கீழ்வரும் கோவாவிலிருந்தும், அதனைச் சுற்றியுள்ள கிராமங்கள், கோட்டைகளிலிருந்தும் உடனடியாக வெளியேற வேண்டுமென உத்தரவிட்டான். செலசெட் மற்றும் பார்டெஸ் பகுதிவாசிகள் மட்டும் மீண்டும் ஊருக்குள் திரும்ப அனுமதிக்கப்பட்டார்கள்.  பிராமணர்களுடன் வைசிராயின் பட்டியலில் பெயர் உள்ள பிறஹிந்துக்களில் உடனடியாக வெளியேறாதவர்கள், வெளியேற மறுப்பவர்கள் அனைவரும் சிறையிலடைக்கப்படுவார்கள், அவர்களின் சொத்து ஜப்தி செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.  அவர்கள் தங்களின் சொத்துக்களை விற்பதற்கு ஒருமாத காலம் அவகாசம் அளிக்கப்பட்டது.

அதே ஆண்டு ஜூன் 8-ம் தேதி கோவாவில் வசிக்கும் தங்க நகைகள் செய்யும் ஆசாரிகள் போர்ச்சுக்கீசிய கோவாவுக்கு வெளியிலிருக்கும் நிலம் சொத்துக்களை உடனடியாக விற்றுவிட்டு, அவர்களின் குடும்பத்தார் கோவாவுக்கு வெளியில் வசித்தால், அவர்களும் அடுத்த பத்து நாட்களுக்குள் கோவா பகுதிக்குள் வந்துவிடவேண்டும் என உத்தரவிடப்பட்டது. ஒருவேளை தங்க நகை செய்யும் ஆசாரகளிடம் நிறையத் தங்கம் இருப்பதாக வைசிராய் நினைத்திருக்கலாம்.

இந்தக் கொடுமையான உத்தரவின் காரணமாக போர்ச்சுக்கீசிய கோவாவில் வாழ்ந்த ஹிந்துக்கள் மூட்டைமுடிச்சுகளுடன் அருகிலிருந்த பகுதிகளுக்குக் கூட்டம் கூட்டமாக இடம்பெயர ஆரம்பித்தார்கள். கோவாவில் அவர்கள் நடத்திக் கொண்டிருந்த வியாபாரங்கள், கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. ஹிந்து விவசாயக் கூலிகளும் கோவாவைவிட்டுச் சென்றுவிட்டதால் விவசாயக் கூலிகள் கிடைப்பது அரிதாகியது. அவர்களுடன் கலைஞர்களும், சிறு தொழில் நுட்பங்கள் தெரிந்தவர்களும் சென்றுவிட்டதால்  கோவா பெரும் சிக்கலுக்கு உள்ளாகியது.

கோவாவின் பொருளாதாரம் அதலபாதாளத்திற்குச் சென்றுவிட்ட நிலையில் புதிய வைசிராயான கோண்டே-டி-ரொனால்டோ ஃப்ரான்ஸிஸ்கோ கோட்டின்ஹா டிசம்பர் 3, 1561-ஆம் வருடம் கோவாவை விட்டு வெளியேறிய ஹிந்துக்கள் அனைவரையும் திரும்ப வரும்படி வேண்டுகோள் விடுத்தார்.

நான் கோவாவுக்கு வந்தவுடன் அதன் நகரங்களும், கிராமங்களும் ஜனங்கள் எவருமின்றி வெறிச்சோடிக் கிடப்பதனைக் கண்டேன். விவசாயிகள் இல்லாத வயல்களில் ஆற்றுநீர் புகுந்து வயல்வெளிகள் நீரில் மூழ்கியிருந்தன. அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்ட ஹிந்துக்கள் மீண்டும் கோவாவிற்கு வரமறுத்து வெளியிலேயே தங்கியிருந்தார்கள்.  முன்னாள் வைசிராயான காண்ஸ்ட்டண்டினோவின் உத்தரவுப்படி அவர்களின் சொத்துக்களும், நிலங்களும் கோவாவாசிகளுக்குத் தானமாகப் பிரித்துக் கொடுக்கப்பட்டிருந்தன.  எனவே வைசிராய் கான்ஸ்டண்டினோ ஹிந்துக்கள் உடனடியாகத் திரும்பி வராவிட்டால் அவர்களின் சொத்துக்களை கிறிஸ்தவர்களுக்குக் கொடுத்துவிடுவதாக மிரட்டி இன்னொரு உத்தரவினை வெளியிட்டார். இந்தச் சூழ்நிலையை உருவாக்கியவர்களில் மிக முக்கியமானவர்கள் ஆர்ச் பிஷப்பும் அவரைச் சார்ந்த கிறிஸ்தவ பாதிரிகளும்தான் என்பதனைக் கண்டுகொண்டேன். எனவே நான் அவர்களுடன் விவாதித்து கான்ஸ்டண்டினோவின் கடுமையான உத்தரவுகளைச் செயல்படுத்தக்கூடாது என வேண்டியதுடன் கோவாவிற்குத் திரும்பிவரும் ஹிந்துக்களுக்கு அவர்களின் பூர்விக நிலத்தை ஒப்படைப்பதாக ஒரு உத்தரவைப் பிறப்பித்தேன்.

இந்த உத்தரவால் சில ஹிந்துக்களும், பிராமணர்களும் மீண்டும் கோவா பகுதிகளுக்குள் வந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்றாலும், போர்ச்சுக்கீசியப் பகுதியிலிருந்த கிறிஸ்தவ மதவெறியர்கள் தங்களின் அரசருக்குக் கடிதங்கள் எழுதி, புதிய வைசிராயின் உத்தரவுகளை நீக்கச் செய்தார்கள். எனவே நவம்பர் 27, 1563-ஆம் வருடம் புதிய வைசிராயான ஃப்ரான்ஸிஸ்கோ கோட்டின்ஹா, ஆர்ச்பிஷப்பின் பட்டியலில் இருக்கும் பிராமணர்கள் அனைவரும் ஒரு மாத காலத்திற்குள் கோவாவைவிட்டு வெளியேறவேண்டும் எனப் புதிதாக உத்தரவிட்டார்.

இவர்களிலிருந்து தங்களின் நிலங்களைத் தாங்களாகவே உழுது பயிர்செய்த பிராமணர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது.  அவர்களுடன் மருத்துவர்கள், தச்சர்கள், கருமான்கள், கடைக்காரர்கள், வரிவசூலிப்பவர்கள் ஆகியோர்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டு கோவாவிலேயே தங்க அனுமதிக்கப்பட்டார்கள்.

அங்கிருந்த விரட்டப்படுபவர்கள் அனைவரும் தங்களின் சொத்துக்களை ஒரு மாதகாலத்திற்குள்ளாக விற்றாகவேண்டும், ஒருவேளை அதனைச் செய்ய இயலாவிட்டால் கோவாவில் இருக்கும் வேறு யாருக்காவது அதனை விற்பதற்கான அதிகாரத்தைத் தரவேண்டும் என்றும், அவர்கள் ஒரு வருட காலத்திற்குள்ளாக அந்தச் சொத்துக்களை விற்றாகவேண்டும் எனவும் கூறப்பட்டது.  அவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட காலத்திற்குள் அவர்கள் அங்கிருந்து வெளியேறாவிட்டால் அவர்கள் உடனடியாக கைது செய்யப்ப்ட்டு சிறைகளில் அடைக்கப்படுவார்கள் என்றும், அவர்களின் சொத்துக்கள் அனைத்தும் ஜப்தி செய்யப்படும் எனவும் மிரட்டப்பட்டார்கள்.

பிப்ரவரி 7ம் 1575-ஆம் ஆண்டு கவர்னர் அண்டோனியோ மோனிஸ் பர்ரெட்டோவினால் பிறப்பிக்கப்பட்ட இன்னொரு உத்தரவின்படி, கிறிஸ்துவின் பெயரால் கோவாவை விட்டு விரட்டியடிக்கப்பட்ட பிராமணர்கள் எவரும் மீண்டும் போர்ச்சுக்கீசியப் பகுதிக்குள் காலடி எடுத்துவைத்தால் அவர்கள் சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு புதிதாக மதம்மாறிய கிறிஸ்தவனுக்குக் கொடுக்கப்படவேண்டும் என அறிவிக்கப்பட்டது.

பின்னர் 1585-ஆம் வருடம் பிறப்பிக்கப்பட்டதொரு தீர்மானம், “அரசர் தனது வைசிராய்களுக்கும், கவர்னர்களுக்கும் மீண்டும் மீண்டும் எடுத்துச் சொன்னது என்னவென்றால், அவரது ஆட்சிக்குட்பட்ட இந்தியப் பகுதி எவற்றிலும் பிராமணர்கள் எவரும் குடியிருக்க அனுமதிக்கவே கூடாது எனவும், அவர்களுடன் கிறிஸ்துவமத நம்பிக்கையற்ற மருத்துவர்களும் கிறிஸ்துவ எதிரிகளும் விரட்டியடிக்கப்படவேண்டும்.  இவர்கள் விரட்டியடிக்கப்பட்ட பிறகே ஏராளமான ஹிந்துக்கள் புதிய கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள். எந்த பிராமணனோ அல்லது மருத்துவனோ இதனைத் தடுக்க முயன்றால் அவனைக் குறித்து ஆர்ச்பிஷப்பிற்குத் தெரியப்படுத்தப்படவேண்டும். பின்னர் வைசிராயிடமும், கவர்னரிடமும் இதனைக் குறித்து எடுத்துச்சொல்லி இந்தக் கிறிஸ்தவ எதிரிகளை ஒழித்துக்கட்ட அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்ளவேண்டும்……” எனக் குறிப்பிடுகிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கொலைகாரக் கிறிஸ்தவம் — 18

 

, கிறிஸ்தவர்களல்லாத, கிறிஸ்தவமதத்தின்மீது நம்பிக்கையற்ற பிறமதத்தவர்கள், அதாகப்பட்டது ஹிந்துக்கள், எவரும் சர்ச் தடைவிதித்திருக்கும் காலங்களில் திருமணம் செய்துகொள்ளக்கூடாது எனவும், அந்தத் தடைகள் நீக்கப்பட்ட மாதங்களில் அவர்கள் தங்களுடைய கிராமங்களுக்கு வெளியே மட்டும் திருமணம் செய்துகொள்ளவேண்டும், அதை மீறினால் 1000 ஜெராஃபின்ஸ் (Xerafins) அபராதம் விதிக்கப்படும் என மார்ச், 13, 1613 அன்று கோவாவின் போர்ச்சுக்கீசிய கவர்னர் ஹைரானிமோ-டி- அஸெவிடோ உத்தரவு பிறப்பித்தார்.

ஆனால் ஜனவரி 31, 1620-ஆம் வருடம் அதைவிடவும் கடினமான உத்தரவு ஒன்று வெளியிடப்பட்டது.

இந்த உத்தரவு வெளியிடப்படும் இந்த நாளிலிருந்து, எந்தவொரு ஹிந்துவும், கோவா நகருக்குள்ளோ அல்லது அதைச் சுற்றியுள்ள தீவுகளிலோ திருமணம் செய்யத் தடைவிதிக்கப்படுகிறது. அதை உதாசீனம் செய்பவர்களுக்கு 1000 ஜெராஃபின்ஸ் பணம் அபராதம் விதிக்கப்படும்.

மனம் வெதும்பிய கோவா ஹிந்துக்கள் தங்களின் திருமணங்களை கோவாவில் நடத்த அனுமதிக்கவேண்டும் என வேண்டி 32,000 ஜெராஃபின் பணத்தை வைசிராய்க்கு அளித்தார்கள். அதற்கு ஒப்புக்கொண்ட வைசிராய் கொண்டே-டி-விடிகுயிரா ஹிந்துக்களின் திருமணங்களை நடத்த அனுமதித்தாலும் சிறிது காலத்திற்குப் பிறகு அந்த அனுமதியை ரத்து செய்ததோடு மட்டுமன்றி, கோவா ஹிந்துக்கள் தங்களின் நெற்றியில் சந்தனப் பொட்டு வைக்கவும், அரிசிப் பொட்டு வைக்கவும் தடைவிதித்தார்.

இருப்பினும், போர்ச்சுக்கல் அரசருக்கு இதனைக் குறித்து எழுதும் கடிதத்தில் ஹிந்துக்கள் சர்ச்சுகள் இல்லாத கோவாவின் பிறதீவுகளில் வைத்து திருமணம் செய்து கொள்ள அனுமதித்தால் ஒவ்வொரு வருடமும் அரசாங்க கஜானாவுக்கு 6000 ஜெராஃபின்ஸ் வரை வருமானம் வரும் என வைசிராய் குறிப்பிட்டார். அதேபோல பொட்டுவைக்க அனுமதித்தால் இன்னும் 2000 ஜெராஃபின்ஸ் கூடுதல் வருமானம் வருவது மட்டுமல்லாமல், அந்தப் பொட்டைவைத்தே அவர்களைக் கிறிஸ்தவர்களிடமிருந்து பிரித்து இனம் காணமுடியும் ஸ்பெயினில் நிகழ்ந்த இன்குசிஷன் விசாரணைகளின்போது  யூதர்களை மஞ்சள் தொப்பி அணியச் செய்து அவர்களை எளிதில் அடையாளம் கண்டுகொண்டதுபோல பொட்டு வைக்க அனுமதிப்பதும் உதவிகரமாக இருக்கும் எனவும் தெரிவித்தார்..

எனவே கோவாவில் திருமணம் செய்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்ட ஹிந்துக்கள் அருகாமையிலிருந்த முஸ்லிம் ஆட்சியாளர்களின் பகுதிகளில் சென்று திருமணம் செய்யத் தலைப்பட்டார்கள். எனினும் அந்தப் பகுதிகளில் திருடர்களும், வழிப்பறிக் கொள்ளைக்காரர்களும் திருமண கோஷ்டிகளைத் தாக்கிக் கொள்ளையடித்தார்கள்.  பின்னர் ஐம்பது ஆண்டுகள் கழித்து  1679-ஆம் வருடம் வைசிராய் பெட்ரோ-டி-அல்மைடா ஹிந்துக்களை கோவாவிலேயே திருமணம் செய்து கொள்ள அனுமதித்தார்.

அதேசமயம் ஹிந்துக்கள் பொதுவெளியில் திருமணம் செய்து கொள்ளத் தடை விதிக்கப்பட்டார்கள். அவர்களின் திருமணங்கள் கதவடைக்கப்பட்ட வீட்டுக்குள் மட்டுமே நடத்தப்படவேண்டும். மேலும் அந்தத் திருமணங்களை நடத்துவதற்கு பிராமணர்களோ அல்லது ஆலயப் பூசாரிகளோ வந்து ஹிந்து முறைப்படியான சடங்குகளை நடத்தி விடாமலிருக்க அரசாங்கமே தேவையான காவலதிகாரிகளை திருமணம் நடக்கவிருக்கும் அவர்களின் வீடுகளின் முன்னால் நிறுத்தியது. கோவாவில் அன்றைக்கு நடந்து கொண்டிருந்த இன்குசிஷன் விசாரணை அதிகாரிகள் இதுபோன்ற திருமணங்களைத் தீவிரமாகக் கண்காணித்தார்கள்.

ஹிந்துத் திருமணச் சடங்குகள் அனைத்தும் புரோகிதர்களை முன்னிறுத்திச் செய்யப்பட வேண்டியவை. ஆனால் புரோகிதர் மந்திரம் ஓதி நடத்தாத திருமணங்கள் ஹிந்துக்களைப் பொறுத்தவரை திருமணங்களே அல்ல என்பதால் அந்தச் சடங்குகளைச் செய்யாமல் நடத்தப்பட்ட திருமணங்களினால் மணமான பெண்கள் வெறும் வைப்பாட்டிகளாக மட்டுமே கருதப்பட்டார்களேயன்றி மனைவிகளாக அல்ல. எனவே அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்கு சமுதாயத்தில் அந்தஸ்து எதுவுமின்றி, சட்ட ரீதியிலான பல சிக்கல்களைச் சந்தித்தார்கள்.

பின்னர் மேற்கண்ட சட்டம் ஆகஸ்ட் 29, 1679-ஆம் வருடம் போர்ச்சுக்கீசிய அரசனான பெட்ரோவால் விலக்கிக் கொள்ளப்பட்டு, கோவா ஹிந்துக்கள் கப்பல்களிலோ அல்லது கட்டுமரங்களிலோ வைத்து திருமணம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இருப்பினும் கிறிஸ்தவர்கள் எவர்களும் இல்லாத பகுதிகளிலும், போர்ச்சுக்கீசிய பகுதிகளிலிருந்து தொலை தூரத்தில் இருக்கிற முஸ்லிம் பகுதிகளிலும் மட்டுமே ஹிந்துக்கள் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டார்கள்.

கோவாவில் ஆற்றில் படகில் நடக்கும் இந்துத் திருமணம்

இப்படியாக தங்களின் சொந்த நாட்டிலேயே அலைக்கழிக்கப்பட்டு, அவமானப் படுத்தப்பட்ட ஹிந்துக்கள்மீது கருணைகொண்ட போர்ச்சுக்கீசிய அரசன் மார்ச் 4, 1701-ஆம் வருடம் புதியதொரு உத்தரவினைப் பிறப்பித்தான். அந்த உத்தரவின்படி, ஹிந்துக்கள் மூடிய வீட்டுக்குள் வைத்துத் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டார்கள். ஆனால் கிறிஸ்தவர்கள் எவரும் அந்தத் திருமணங்களுக்குக் அழைக்கப்படக் கூடாது எனவும், அப்படியே தப்பித்தவறி எவனாவது ஒரு கிறிஸ்தவன் அந்தத் திருமணத்திற்கு வந்தான் என்றால் அதற்கான தண்டனையை ஹிந்துக்கள் அனுபவிக்க வேண்டும் எனவும் அந்த உத்தரவு விளக்கியது.

ஒருவழியாக இந்தப் பிரச்சினை முடிவுக்கு வந்தது என ஹிந்துக்கள் நிம்மதிகொண்டிருந்த வேளையில், கோவாவின் வைசிராய் போர்ச்சுக்கீசிய அரசருக்கு டிசம்பர் 5, 1704-ஆம் வருடம் அனுப்பிய கடிதத்தில், இவ்வாறு ஹிந்துக்களுக்கு அளிக்கப்படும் சலுகைகளை கோவாவின் சர்ச் பாதிரிகள் மிகவும் கோபத்துடன் எதிர்ப்பதாகச் தெரிவித்தார். எனவே போர்ச்சுக்கீசிய அரசர் தனது செப்டம்பர் 22, 1705 அன்று அனுப்பிய கடிதத்தில் ஹிந்துக்கள் மூடிய கதவிற்குள் வைத்து திருமணம் செய்து கொள்ளப் பிறப்பித்த தனது அனுமதியை ரத்து செய்வதாக அறிவிக்கிறார்.

இதனைத் தொடர்ந்து கோவவின் சர்ச்சு, ஹிந்துக்களின் திருமணச் சடங்குகளைக் குறித்து இவ்வாறு அறிக்கை விட்டது:

ஹிந்து முறைப்படி திருமணம் செய்து கொள்ள விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்களின் குருட்டுத்தனமான சடங்குகளையும், விழாக்களையும், கோவில் அலங்காரங்களையும், பிரார்த்தனைகளையும் செய்யமாட்டோம், திருமணம் புனித சர்ச்சினால் அனுப்பி வைக்கப்படும் பிரதிநிதியின் முன்னிலையில் மட்டுமே நடக்கும் என உறுதியளித்தால் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.   சர்ச்சின் பிரதிநிதிகள் திருமணம் நடக்கும் ஐந்து நாட்களும் மணமகன் மற்றும் மணமகளுடன் இருந்து அவர்களைக் கண்காணித்துக் கொண்டிருப்பார்கள்.

தங்களின் திருமணச் சடங்குகளுக்குத் தேவையில்லாமல் இன்குசிஷன் சர்ச்சினால் இத்தகையை கொடூரமான தடைகள் விதிக்கப்பட்டதால் வருந்திய ஹிந்துக்கள் கோவாவைவிட்டு வெளியேறிச் சென்றார்கள்.  இதனைக் குறித்து வைசிராய்க்குக் மார்ச் 8, 1715 அன்று கடிதம் எழுதும் போர்ச்சுக்கீசிய அரசன் ஜெவாவோ, எனது ஆட்சிக்கு உட்பட்ட கோவா பகுதிகளில் வாழும் ஹிந்துக்கள் மூடிய கதவுகளுக்குப் பின்னால்,  ரகசியமாக, எந்தவொரு கத்தோலிக்கனும் அறியாமல், அவர்களின் மதச் சடங்குகளைப் பின்பற்றி திருமணம் நடத்தினாலும் இன்குசிஷன் பாதிரிகளினால் கடுமையான தண்டனைகளுக்கு ஆளாக்கப்படுவதாக அறிகிறேன்.  இதன் காரணமாக பல ஹிந்துக்கள் தங்களது உடைமைகளையும், நிலங்களையும் விட்டுவிட்டு இந்தியாவின் பிற பகுதிகளுக்குக் குடியேறியதின் காரணமா பல கிராமங்கள் அழிவின் விளிம்பில் இருப்பதாகவும் எனக்குத் தெரிகிறது. இதனைக் குறித்து மேலதிக தகவல்களை அறிய விழைவதால் உங்களது எண்ணங்களை எனக்குத் தெரிவிக்கவும். என எழுதினான்.

அதற்குப் பதிலளிக்கும் வைசிராய், இன்குசிஷன் பாதிரிகள் எவரும் குற்றம் செய்ததாகத் தனக்குத் தெரியவில்லை என பதிலெழுதினான்.

திருமணங்கள் மட்டுமல்லாமல் சாதாரண பூணூல் அணிவிக்கும் நிகழ்வுகள்கூட கோவாவில் நடத்த அனுமதி மறுக்கப்பட்டு அவையும் போர்ச்சுக்கீசிய பகுதிகளுக்கு வெளியே நடத்தப்பட்டன.  எனவே அவையும் பூட்டிய கதவிற்குப் பின்னால் ரகசியமாக நடத்த அனுமதியளிக்கப்படுகின்றன.  அந்த உத்தரவுக்குக் கீழ்ப்படியாமல் வெளியூருக்குப் போகிறவர்களுக்கும் கடுமையான தண்டனைகள் அளிக்கப்பட்டன எனத் தெரிகிறது.

1640-ஆம் வருடம் மதவெறி பிடித்த கிறிஸ்தவப் பாதிரிகள் ஹிந்துக்கள் பூணூல் அணிவதனைத் தடைசெய்ததற்கான ஆதாரங்களும் இன்றைக்குக் கிடைத்திருக்கின்றன. போர்ச்சுக்கீசிய கவுன்சிலைக் கூட்டிய பாதிரிகள் “ஹிந்துக்கள் ஏவரும் பூணூல் அணிவதனைத் தடுக்க வேண்டும் என்றும், அவர்களின் பிள்ளைகள் எவருக்கும் அவ்வாறு பூணூல் அணிவிப்பது தடை செய்யப்பட வேண்டும்,” எனப் போர்ச்சுக்கீசிய அரசருக்குக் கடிதம் எழுதினார்கள்.

மேன்மை தங்கிய அரசருக்கு, இந்தியாவிலிருக்கும் ஹிந்து எவனுக்கும் மகன் பிறந்தால் இங்கு அது ஒரு பெரும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.  மகன் பிறந்ததற்க்காக எட்டு நாட்கள் விழாவெடுத்து, விருந்து உண்ணும் ஹிந்துக்கள் நமது இறைவனை அவமதிக்கிறார்கள். கோவாவில் ஹிந்துக்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்து பல கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்யப்பட்ட போதும் புதிதாக மதமாற்றம் செய்யப்பட்ட இந்தக் கிறிஸ்தவர்களில் பலர் தாங்கள் ஹிந்துக்களாக இருந்தபோது செய்த அத்தனை செய்கைகளையும் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறார்கள்.  இவர்களின் இந்தச் செய்கை நமது போர்ச்சுக்கீசியர்களையும் பீடித்து அவர்களும் இந்த கடவுளுக்கு எதிரான கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களில் பணக்காரன் ஏழை என்கிற வித்தியாசமில்லாமல் இந்தக் கண்டிக்கத்தக்க செயல்களைச் செய்துகொண்டிருக்கிறார்கள்.

எனவே, கோவாவின் வைசிராயாக அப்போது இருந்த ஜொகோவோ சால்டானா-டி-காமா, “ஹிந்துக்களின் பண்டிகைகளை, அவர்களின் மதச் சடங்குகளைக் கொண்டாடுகிற போர்ச்சுக்கீசியர்கள் அனைவருக்கும் 500 ஜெராஃபின் அபராதமும், அவர்கள் புதிதாக மதமாற்றம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களது முதல் குற்றத்திற்கு 100 ஜெராஃபின் அபராதமும், இரண்டாவது குற்றத்திற்கு சிறையும் பின்னர் சீனா அல்லது மொசாம்பிக் நாட்டிற்கு இரண்டு வருடங்கள் நாடுகடத்தப்படுவார்கள்,” என்று மார்ச் 22, 1729-அன்று உத்தரவிடுகிறார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கொலைகாரக் கிறிஸ்தவம் — 19

 

கோவாவிற்குள் கிறிஸ்தவப் பாதிரிகளைத் தவிர்த்து வேறெந்த மதகுருமார்களும், பூசாரிகளும் இருக்கவே கூடாது என்பதில் போர்ச்சுக்கீசியர்கள் மிக உறுதியாக இருந்தார்கள். போர்ச்சுக்கீசிய அரசனான செபாஸ்தியோ டிசம்பர் 4, 1567-ஆம் வருடம் வெளியிட்ட அரசாணையானைது போர்ச்சுக்கீசிய கோவாவில் முஸ்லிம் காஜிக்களோ அல்லது ஹிந்து யோகிக்களோ, கோவில்களில் பூசனைகள் செய்யும் ஹிந்து பிராமணர்களோ அல்லது மந்திரவித்தைகள் செய்பவர்களோ இருக்கவே கூடாது எனச் சொன்னது. ஹிந்துக்களின் மதத்தலைவர்களும் அவர்களது ஆதரவாளர்களும் உடனடியாக கோவாவைவிட்டுச் செல்லவேண்டும், மீறுபவர்கள் கைது செய்யப்பட்டு கோவாவின் துறைமுகத்தில் கூலி வேலை செய்ய வைக்கப்படுவார்கள் என உத்தரவிட்டது.

இதுபோலவே, ஜூன் 28, 1727-ஆம் வருடம் ஜோவாவொ சால்தானா-டி-காமா “கோவாவிற்குள் ஹிந்து பிராமணப் பூசாரிகளும் வேறு பல ஹிந்து மதச்சடங்குகள் செய்பவர்களும் தங்களின் உண்மையான பெயர்களை மறைத்து வேறு பெயர்களில் தங்குவதற்கான அனுமதியைப் பெற்றிருக்கிறார்கள் என எனக்குத் தெரியவந்தது.  இது எங்களது கிறிஸ்தவ மத நம்பிக்கைகளுக்கு எதிரானது. எனவே போலியான பெயர்களுடன் இங்கு வந்து தங்கியிருக்கும் ஹிந்து பிராமணர்களும், பூசாரிகளும் உடனடியாக கோவாவை விட்டு வெளியேற வேண்டும்,” என எச்சரித்து  மீண்டும் ஒரு உத்தரவு பிறப்பித்தான்.

போர்ச்சுக்கீசிய அரசனால் 1567-ஆம் வருடம் ஹிந்துக்களுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ஹிந்துக்களின் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. கிறிஸ்தவ பாதிரியான பாதிரி அல்ஃபோன்ஸோ-டி-கோஸ்டா, “ஹிந்துக்கள் அனைவரும் அவர்களது குடும்பத்தினருடன் அவர்களுக்கு அருகிலுள்ள கிறிஸ்தவ தேவாலயத்திற்குச் சென்று பாதிரிகளின் பிரசங்கங்களைக் கண்டிப்பாகக் கேட்கவேண்டும்” எனக் கூறியதும் பதிவு செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது..

ஹிந்துக்களின் அவர்களது தொழில்களைச் செய்வதற்கும், அன்றாடக் கடமைகளைச் செய்து பிழைப்பதற்கும் பெரும் தடைகள் மதவெறி பிடித்த கிறிஸ்தவ பாதிரிகளால் செய்யப்பட்டன. இதனால் அவர்கள் நரக வாழ்க்கையை வாழ்ந்தார்கள்.

“வரி வசூலிக்கும் அதிகாரிகள், சுங்கவரி அலுவலர்கள், அரசாங்க கஜானாவை நிர்வாகிப்பவர்கள், கணக்கு வழக்குகளைப் பார்ப்பவர்கள், நீதிபதிகள் என எந்தவொரு கோவாவின் போர்ச்சுக்கீசிய அல்லது கிறிஸ்தவ அதிகாரிகள் பிராமணர்கள் மற்றும் ஹிந்துக்கள் எவரையும் கண்டிப்பாக பணிக்கு எடுக்கவே கூடாது.

“இதை மீறும் அதிகாரி உடனடியாகக் கைது செய்யப்பட்டு, அவன் வேலையை விட்டு நீக்கப்படுவான் எனவும், அவனிடம் வேலை செய்த பிராமணன் அடிமையாகப் பிடிக்கப்பட்டு அவனது சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு, அதில் பாதி அரசனுக்கும், மீதிப் பாதி அவனைக் காட்டிக் கொடுத்தவனுக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் எனவும், கோவா மட்டுமல்லாது அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உடனடியாக நடைமுறைப் படுத்தப்பட வேண்டும்.

“நகரங்களிலும், கோட்டைகளிலும் எவனேனும் ஒரு பிராமணன் அல்லது வேறொரு ஹிந்துவுக்கு வேலை கொடுத்த கவர்னரோ அல்லது போர்ச்சுக்கீசிய அதிகாரியோ பரமண்டலத்தில் இருக்கும் நமது பிதாவுக்கு பெரும் கேட்டினைக் கொண்டுவருகிறான் என உணரந்து, அவர்கள் உடனடியாக விரட்டியடிக்கப்பட வேண்டும். அந்த வேலைகள் சமீபத்தில் மதம்மாறின கோவா கிறிஸ்தவனுக்குக் கொடுக்கப்படவேண்டும். அதுபோல விவசாயம் செய்வதற்கு நிலங்கள் ஒதுக்குகையில் அந்த நிலங்கள் கிறிஸ்தவனுக்கு மட்டுமே கொடுக்கப்பட வேண்டும்.” எனவும் அந்த உத்தரவு தெரிவித்தது.

இந்தக் கொடுமைகளைத் தாங்காமல் பல ஹிந்துக்கள் அருகிலுள்ள விஜயநகரப் பகுதிகளுக்கும், முஸ்லிம் ஆட்சியாளர்கள் ஆண்ட பகுதிகளுக்கும் கூட்டம் கூட்டமாகச் சென்றார்கள். இதனால் கோவாவின் பொருளாதாரம் பாதிக்கப்பட, கோபமுற்ற போர்ச்சுக்கீசியர்கள் அவ்வாறு வெளியேறியவர்களின் நிலங்களைப் பிடுங்கி, கோவா கிறிஸ்தவர்களுக்குக் கொடுத்தார்கள். மேலும் சில ஹிந்துக்கள் தங்களின் பிள்ளைகளை அழைத்துச் செல்ல முடியாத சூழ்நிலையில் அவர்களை கோவாவிலியே அனாதைகளாக விட்டுச் சென்றார்கள். அந்த ஹிந்து அனாதைக் குழந்தைகள் அனைவரும் உடனடியாக கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்ய அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

ஹிந்து அனாதைகளைக் குறித்து போர்ச்சுக்கீசிய அரசன் செபாஸ்தியோ மார்ச் 23, 1559 அன்று வெளியிட்ட அரசாணை, …..இன்றைய தேதியிலிருந்து கோவாவில் தகப்பன், தாய், பாட்டன், பாட்டி அல்லது பிற உறவினர்கள் எவரும் இல்லாத கோவாவின் ஹிந்துக்களின் குழந்தைகள் அனைவரும், அல்லது அவர்களின் கடைசி உறவினன் இறந்தபிறகு, அவர்கள் கிறிஸ்தவ மதத்தைக் குறித்து உணரும் வயதுடையவர்களாக இருக்கும்பட்சத்தில், அவர்கள் உடனடியாக பிடிக்கப்பட்டு அனாதைகளை நிர்வகிக்கும் நீதிபதிமூலம் செயிண்ட் பால் கிறிஸ்தவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு கிறிஸ்தவர்களாக ஞானஸ்னானம் செய்யப்பட வேண்டும். கிறிஸ்தவ பாதிரிகள் அவர்களுக்கு கிறிஸ்தவ மதத்தின் மேன்மையைக் கற்றுக் கொடுத்து அவர்களை அரசாங்கத்தின் உயர்பதவிகளில் அமர்த்த வேண்டும். என்றது.

இதை உடனடியாக ஏற்ற கோவாவின் வைசிராய் அண்டாவோ-டி- நூரன்ஹாவும், அவருக்குப் பின் வந்த கவர்னரான அண்டோனியோ மோனிஸ் பார்ரெட்டேவும் இதனைச் செயல்படுத்த முனைந்தார்கள்.

ஏப்ரல் 3, 1582-ஆம் வருடம், தந்தை இல்லாமல் தாயுடனோ அல்லது பாட்டன், பாட்டிகளிடமோ வளரும் ஹிந்துக் குழந்தைகளும் பிடித்துச்செல்லப்பட்டு கிறிஸ்தவர்களாக்கப்பட வேண்டும் போர்ச்சுக்கீசிய அரசனால் இன்னொரு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

கோவாவில் ஹிந்துக்களுக்கு எதிராக இன்குசிஷன் விசாரணைகளை நடத்திய போர்ச்சுகீசிய பாதிரிகள், ஹிந்து அனாதைக் குழந்தைகளைக் குறித்து தங்களுக்கு தகவல்கள் தரப்படாமல் மறைக்கப்படுவதாகவும், அம்மாதிரியான குழந்தைகளை ஹிந்துக்கள் ஒளித்து வைத்துக் கொள்வதாகவும் அல்லது அவர்களை ரகசியமாக போர்ச்சுக்கீசிய பகுதியிலிருந்து கடத்தி கொண்டு போய்விடுவதாகவும் அதனால் தங்களால் அதிகமான ஹிந்து அனாதைக் குழந்தைகளை மதமாற்றம் செய்ய முடியவில்லை என்று புகாரளித்தார்கள். எனவே தாங்களே ஹிந்துக்களின் பகுதிக்குச் சென்று அவர்களைப் பிடித்து உடனடியாக ஆறு நாட்களுக்குள் அவர்களை மதமாற்றம் செய்ய அனுமதி வேண்டி அரசனுக்கு மனுச் செய்தார்கள்.

பாதிரிகளின் இந்தச் செயல் ஹிந்து அனாதைகளை மதம் மாற்றம் செய்வதுடன் மட்டும் முடிந்துவிடவில்லை. கோவா சட்டங்களின்படி ஹிந்து அனாதைகளின் நிலமும், சொத்தும் அவர்களின் கண்களை உறுத்தியதால் அந்தச் சொத்துக்களை அபகரிக்க வேண்டியும் இவர்கள் இந்த நாடகங்கள் ஆடினார்கள்.  அந்த அனாதைகளைப் பிடித்து கட்டாய மதமாற்றம் செய்ததின் காரணமாக ஹிந்துக்களின் சொத்துக்கள் அனைத்தும் கிறிஸ்தவர்களின் கைகளில் சென்று சேர்ந்தன.

ஓர்மே ஆவணங்கள் (Orme manuscripts, Vol. 114, Sect.4, Page 164), ஹிந்து அனாதைகள் குறித்து மராட்டா சிவாஜிக்கும், போர்ச்சுக்கீசியர்களுக்குன் நிகழ்ந்த தொடர் சச்சரவுகளைக் குறித்துக் கூறுகிறது:

அனாதை ஹிந்துக் குழந்தைகளைப் பிடித்து ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்வதன் காரணமாக மராட்டா சிவாஜிக்கும், போர்ச்சுக்கீசியர்களுக்கும் இடையே தொடர்ந்து சச்சரவுகள் நிகழ்ந்தன. ஹிந்துக்களின் பரம்பரை பரம்பரையாக வந்த சொத்துக்களை மதமாற்றம் என்கிற பெயரில் போர்ச்சுக்கீசிய பாதிரிகள் எடுத்துக் கொள்வதனை மராட்டாக்கள் மிகவும் எதிர்த்தார்கள். இதன் காரணமாக இவர்களிடையே தினமும் சச்சரவுகளும், சண்டைகளும் நிகழ்ந்து கொண்டிருந்தன….

பாதிரிகளால் கைப்பற்றிக் கொண்டு செல்லப்பட்ட சில ஹிந்து அனாதைகளில் சிலர் பெரும் பணம் மாற்றாகக் கொடுக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட சம்பவங்களும் நிகழ்ந்தன. பாதிரிகளைத் தவிர்த்துச் சில சாதாரண போர்ச்சுக்கீசியர்களும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு ஹிந்துக்களிடம் பெரும் பணம் பெற்றுக் கொண்ட நிகழ்வுகளும் அங்கு சாதாரணமாக நிகழ ஆரம்பித்தது. அந்தச் செயல்கள் அனைத்து பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. போர்ச்சுக்கீசிய பாதிரிகள் தங்களின் அரசனுக்கு இதனைக் குறித்து புகார்களும் அளித்துள்ளார்கள். அந்த ஆவணங்கள் இன்றைக்கும் இருக்கின்றன.

சில சமயங்களில் ஹிந்துக் குழந்தைகளின் தகப்பன்மார்கள் உயிருடன் இருந்தபோதே அவர்களின் குழந்தைகள் வலுக்கட்டாயமாகப் பிடிக்கப்பட்டு, சர்ச்சுகளின் அடைக்கப்பட்டுப் பின்னர் கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்யப்பட்டார்கள். பாதிரிகளின் கொடூரங்களுக்கு அஞ்சிய பல ஹிந்துக்கள் இந்தச் சம்பவங்களை கண்ணீருடன் ஏற்றுக் கொண்டு அமைதியானார்கள். ஏனென்றால் போர்ச்சுக்கீசியக் கோர்ட்டுகளில் ஹிந்துக்களின் சொற்களுக்கு மதிப்பில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும், அவர்கள் மிக மோசமாக பழிவாங்கப்படுவார்கள் என்பதும் இன்னொருபுறம்.

இதே நிலைமை 1718-ஆம் வருடம் வரையிலும் கோவாவெங்கும் இருந்தது. இந்தக் கட்டாய மதமாற்றங்களுக்கு அஞ்சிய பல ஹிந்துக்கள் தங்களின் குழந்தைகளை போர்ச்சுக்கீசியப் பகுதிகளிலிருந்து வெளியே கொண்டுசென்றார்கள். எனவே ஹிந்துக்கள் தங்களின் குழந்தைகளை வெளியே அனுப்பினால் தங்களின் கிறிஸ்தவ மதமாற்ற வெறிக்குப் பங்கம் வந்துவிடும் என அஞ்சிய கோவா வைசிராய் ஜூலை 11, 1718-ஆம் வருடம் கீழ்க்கண்ட உத்தரவைப் பிறப்பித்தார்:

கோவாவில் வாழும் எந்த ஹிந்து ஆண் அல்லது பெண் எவரும் தங்களின் பாதுகாப்பில் வாழும் பதினான்கு வயதிற்குட்பட்ட மகனையோ அல்லது பேரனையோ அல்லது பனிரெண்டு வயதிற்குட்பட்ட ஹிந்துப் பெண்களையோ இந்தியப் பகுதிகளுக்கு அழைத்துச் செல்லத் தடைவிதிக்கப்படுகிறது.  அவ்வாறு அழைத்துச் செல்லப்படுவது சட்டவிரோதம் என அறிவிக்கிறேன். இந்த உத்தரவை மதிக்காதவர்கள் கைது செய்து சிறையிலடைக்கப்படுவதுடன் அவர்களது சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படும். சொத்துக்கள் இல்லாதவர்களுக்கு கசையடி வழங்கப்படுவதுடன், அவர்கள் பத்து ஆண்டுகளுக்கு குவாமா நதிக்கருகில் வருவதும் தடை செய்யப்படும்.  இந்த தண்டனைகளிலிருந்து தப்ப ஒரே வழி அவர்கள் அந்தக் குழந்தைகளை கிறிஸ்தவ பாதிரிகளிடம் ஒப்படைத்து அவர்களை மதமாற்றம் செய்ய அனுமதிப்பதுதான்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 கொலைகாரக் கிறிஸ்தவம் — 20

 

சொஸைட்டி ஆஃப் ஜீஸஸைச் சேர்ந்த பாதிரியான ஃப்ரான்ஸிஸ்கோ-டிசௌசா, கோவாவின் திவார் நகரத்தில் வசித்த பிராமணர்கள் தங்களைச் சுற்றிலும் கிறிஸ்தவர்களையும், கிறிஸ்தவ அதிகாரத்தையும் கண்டு, பரமண்டலத்திலிருக்கும் பிதாவின் அதிகாரம் தங்கள் வீட்டு வாசலில் வந்து நின்றிருப்பதனைக் கண்டு கொண்டார்கள். இப்போது அவர்களின் முன்னிருக்கும் ஒரே வழி, தாங்களும் கிறிஸ்தவர்களாக மதம்மாறுவது அல்லது கோவாவைவிட்டு வெளியேறுவதுதான் என்பதை உணர்ந்து பெரும் சோகமடைந்தனர். என்று குறிப்பிட்டுவிட்டு மேலே தொடர்கிறான்:

“தாங்கள் கிறிஸ்தவர்களாக மதம்மாறுவது ஆண்டவனால் இடப்பட்ட கட்டளை என்பதைச் சிலரும், சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட அந்தச் சமயம் தங்களை எதிர்நோக்கி வந்துவிட்டதாகவும் மற்றும் சிலரும் புரிந்துகொண்டார்கள். ஆனாலும் பலர் தங்களின் மூதாதையர்களின் குருட்டுப் பழக்கவழக்கங்களைக் கைவிட முடியாமல், கிறிஸ்தவர்களாக மதம்மாற மறுத்து, கோவாவை விட்டு வெளியேற முடிவுசெய்தார்கள். மிகவும் பக்திமான்களான சில பிராமணர்கள் திவாரில் இருந்த யானைத் தலையும், மனித உடலும் உடைய பிள்ளையார் சிலையின் முன்பு கூடி, அந்தச் சிலையை எடுத்துக்கொண்டு இந்தியப் பகுதியில் உள்ள மலாருக்குச் செல்வது குறித்து விவாதித்தார்கள்.

“இந்த யோசனை அந்தப் பகுதியிலிருந்த சில பணக்காரக் குடும்பத்தினர்களாலும், இளஞர்களாலும் நடைமுறைத்தப்படுத்தப்பட்டு, பிள்ளையார் சிலையை மலர்களால் அலங்காரம்செய்து தூக்கிக்கொண்டு ஆற்றைக் கடந்து இந்தியப் பகுதிக்குச் செல்வதற்கு முன்னர் போர்ச்சுக்கீசிய படையினரால் பிடிக்கப்பட்டு வைசிராயின் முன்னால் நிறுத்தப்பட்டார்கள்.

“வைசிராய், அந்தக் கூட்டத்திலிருந்த குழந்தைகள் அனைவரையும் தனியே பிரித்து ஒரு வீட்டில் விசாரணைகள் முடியும் வரைக்கும் அடைத்துவைக்க உத்தரவிட்டார். அக்குழந்தைகள் அனைவரும் தங்களுடன் பேசிய போர்ச்சுக்கீசிய பாதிரிகளிடம் கிறிஸ்தவர்களாக மதம்மாறச் சம்மதம் தெரிவிக்கவே. வைசிராய் அவர்களின் பெற்றோர்களுக்கு அந்த குழந்தைகளிடம் பேச அனுமதி அளித்து, அக்குழந்தைகள் அனைவரும் சுதந்திரமன மனதுடன் மதம்மாறுகிறார்களா எனக் கேட்கச் சொன்னார்.  அந்தக் குழந்தைகளும் சுதந்திரமாக மதம் மாறியதாகச் சொல்கிறார்கள். தங்கள் குழந்தைகளைப் பெற்றோர்கள் தங்களுடன் அழைத்துச் செல்லவேண்டுமானால் அவர்களும் கிறிஸ்தவர்களாக மதம்மாறவேண்டும் எனச் சொல்லப்பட்டு வேறுவழியின்றி அவர்களும் மதம் மாறினார்கள்.”

இதுபோன்ற ஹிந்துக்களுக்கெதிரான பல சோகச் சம்பவங்கள் ஏராளமானவையும் போர்ச்சுக்கீசிய பாதிரிகளால் எழுதிவைக்கப்பட்டிருக்கின்றன.

இதுபோன்ற கொடுமைகள் கிறிஸ்துவின்பேரால் ஹிந்துக்கள் நிறைந்த இந்தியாவில் நிகழ்ந்திருக்கிறத,. இன்றும்நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இனியும் நிகழும் என எச்சரிக்கத்தான் முடியும்.

மதமாற்ற மிஷனரி வேலைகளில் ஒரு கிறிஸ்தவ பாதிரியின் வேலைகளும், அவன் எப்படி நடந்து கொள்ள வேண்டும், எப்படிக் கபடமாகப் பேசி பிற மதத்துக்காரனை மயக்கவேண்டும் என்பதற்கான துல்லியமான அறிவுறுத்தல்கள் அவர்களுக்குக் கற்பிக்கப்பட்டிருக்கின்றன. இதனைப் பிறமதத்துக்காரர்கள் அறிந்து ஒதுங்கினாலும், ஹிந்துக்கள் அறிந்துகொள்வதில்லை. எனவே அவர்கள் எளிதாக தேனொழுகப் பேசும் கிறிஸ்தவ பாதிரியின் வார்த்தை ஜாலங்களுக்கு மயங்கிவிடுகிறார்கள். இதனைக் குறித்து ஏராளமான புத்தகங்கள் எழுதப்பட்டிருந்தாலும், பதினைந்து பதினாறாம் நூற்றாண்டுகளில் அவர்களுக்குக் கற்பிக்கப்பட்ட பாடங்களைக் குறித்து இங்கு சிறிது காண்போம்.

“கோவாவில் வாழும் ஒரு கிறிஸ்தவப் பாதிரி, ஹிந்துக்கள் கொண்டாடும் திருவிழாக்கள், பண்டிகைகள் போன்றவை எந்த மாதத்தில், எந்த நேரத்தில் கொண்டாடப்படுகின்றன என்பதனைக் குறித்தான துல்லிய அறிவு கொண்டவனாக இருக்க வேண்டும். பாக்கு மரங்கள் மற்றும் சந்தனம் போன்றவற்றை ஹிந்துக்கள் எதற்காக உபயோகிக்கிறார்கள் என்பதனையும் அவன் கவனித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். அதனைக் கொண்டு அந்தத் திருவிழாவில் பங்கெடுக்க வருபவர்களை அடையாளம் கண்டு தடுப்பதற்கும் அல்லது தண்டனையளிப்பதற்கும் அது மிக உதவிகரமாக இருக்கும்.

“இதேபோல, கோவில்களுக்குப் புனிதப் பயணம் வரும் ஹிந்துக்களையும் அடையாளம் கண்டு அவர்களுடன் நமது கோவாவைச் சேர்ந்த ஹிந்துக்களும் சேர்ந்துகொள்கிறார்களா எனக் கண்காணிப்பதுடன் அவர்கள் நமது நிலத்தின் வழியாகச் செல்வதனைத் தடுத்து, நமது அரசர் உத்தரவிட்டபடிக் கடுமையான முறையில் தண்டிக்கவேண்டும்.

“ஹிந்துக்கள் தங்கள் திருமணங்களை ஹிந்துப் பண்டிகைகளுடன் சேர்த்துக் கொண்டாடுவதனை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். எனவே ஹிந்துத் திருமணங்கள் எவையும் திருவிழாக்காலங்களிலோ அல்லது பிறமதச் சடங்குகளுடனோ கொண்டாடுவதனை முற்றிலும் தடுத்து அவர்களைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்.

“பாதிரிகள் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள ஹிந்துக்களைக் கண்காணித்து அவர்களில் எவரேனும் பெற்றோர்களை இழந்த அனாதைகளாக, பதினான்கு வயதிற்கும் குறைந்தவர்களாக இருக்கிறார்களா என்பதினைக் கண்டறிந்து, அந்த அனாதைகளை உடனடியாகப் பிடித்துக் கொண்டுவரவேண்டும். அவ்வாறு பிடிபட்ட அனாதைகளை உடனடியாக கிறிஸ்தவனாக ஞானஸ்னானம் செய்துவைக்கவேண்டும்.

“நமக்குத் தெரியாமல் எவரேனும் பதினான்கு வயதிற்குட்பட்ட அனாதைகளை போர்ச்சுக்கீசியப் பகுதியிலிருந்து வெளியே அனுப்பி வைத்திருப்பார்களேயானால் அவர்களின் சொத்துக்கள், நிலம் அனைத்தையும் கைப்பற்றி அவர்களைக் கடுமையாகத் தண்டித்து, அந்த நிலங்களையும், சொத்துக்களையும் கிறிஸ்தவர்களுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும்……..” எனப் பட்டியல் நீளுகிறது.

இப்படியாக கோவாவாழ் ஹிந்துக்கள் வந்தேறிகளான போர்ச்சுக்கீசியர்களின் கீழ் பல கொடூரங்களை அனுபவித்து நரக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தாலும், மதவெறி பிடித்த கோவா பாதிரிகள் தொடர்ந்து ஹிந்துக்களுக்குச் சலுகைகள் வழங்கப்படுவதால் அவர்கள் கிறிஸ்தவர்களாக மதம்மாற மறுத்து தொடர்ந்து ஹிந்துக்களாகவே ‘சுகமாக’ வாழ்ந்து கொண்டிருப்பதாக போர்ச்சுக்கீசிய அரசனுக்குப் புகாருக்கு மேல் புகாரளித்துக் கொண்டிருந்தனர்.

“ஹிந்துக்கள் கிறிஸ்தவர்களை விடவும் நன்றாக நடத்தப்படுவதாகவும், எந்த அழுத்தத்திற்கும் அஞ்சாமல் தொடர்ந்து அவர்கள் ஹிந்துக்களாகவே இருப்பதால், சமுதாயத்தில் அவர்களுக்குப் பெரிம் மதிப்பு இருப்பதாகவும், மதம்மாறிய ஹிந்துவைவிட மதம்மாறாத ஹிந்துவே மிகவும் நம்பிக்கைக்கு உரியவனாக இருப்பதால் கோவாவில் வசிக்கும் பெரும்பாலான ஹிந்துக்கள் மதம்மாறி கிறிஸ்தவர்களாக மறுக்கிறார்கள்” எனப் பாதிரி இக்னேசியோ மார்ட்டின், ஜனவரி 30, 1698-ஆம் வருடம் போர்ச்சுக்கீசிய அரசனுக்கு எழுதிய கடிதம் தெரிவித்தது. அந்தக் கடிதத்தை அரசன் கோவாவின் வைசிராய்க்கு அனுப்பிவைத்து அவரது பதிலைக் கோரினான். வைசிராயும் ஹிந்துக்கள்மீது நடவடிக்கை எடுப்பதாக பதில் அனுப்பிவைக்கிறார்.

இதே தொல்லை அடுத்த நூற்றாண்டிலும் தொடர்வதனைக் காணலாம்.

ஜனவரி 21, 1735-ஆம் வருடம், கிறிஸ்தவப் பாதிரியான மானுவெல்-டி-அப்ரு, இந்தியாவில் கிறிஸ்தவர்கள் எதற்காகக் கூட்டம் கூட்டமாக மதம்மாறாமல் இருக்கிறார்கள் என்பதற்கான பல காரணங்களை வெளியிடுகிறார்:

ஒன்று, ஹிந்துக்கள் மதம்மாறிய கிறிஸ்தவர்களைவிடவும் பலமடங்கு உயர்வாக மதிக்கப்படுகிறார்கள்.

இரண்டு, ஹிந்துக்கள் கோவாவிற்குள் மிகச் சுதந்திரமாக வாழ்கிறார்கள்.

மூன்று, ஹிந்துக்கள் கிறிஸ்தவ சட்டங்களை மதிக்காமல் அதனை உதாசீனப்படுத்துகிறார்கள்.

உண்மையில் கோவாவின் பல பகுதிகளில் ஹிந்துக்கள் பெருமளவு ஒழிக்கப்பட்டிருந்தார்கள். சில பகுதிகளில் கிறிஸ்தவ மக்கள் தொகையில் ஒப்பிடுகையில் ஹிந்துக்களின் எண்ணிக்கை மிக,மிகக் குறைவாகவே இருந்தது. உதாரணமாக 1705-ஆம் வருடம் கோவாவின் செலசெடே பகுதியில் ஏறக்குறைய அனைத்து ஹிந்துக்களும் கிறிஸ்தவர்களாக மதம்மாற்றப்பட்டிருந்தார்கள். ஏறக்குறைய ஒரு இலட்சம் கிறிஸ்தவர்கள் இருந்த அந்தப் பகுதியில் வெறும் 3000 ஹிந்துக்கள் மட்டுமே வாழ்ந்தார்கள் என கிறிஸ்தவ பாதிரிகளே எழுதிவைத்திருக்கிறார்கள். கோவாவிலோ அவர்களின் எண்ணிக்கை 12,000 மட்டும்தான். மற்றவர்கள் அனைவரும் கிறிஸ்தவர்களாக்கப்பட்டுவிட்டார்கள்.

ஹிந்துக்களின் மதநம்பிக்கைகளைக் குலைத்ததுடன் கோவா மதவெறிப் பாதிரிகள் நின்றுவிடவில்லை. கண்ணில் தென்படும் ஒவ்வொரு ஹிந்துவையும் சிறுமைப் படுத்தும் முயற்சியில் அவர்கள் தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டே இருந்தார்கள்.

டிசம்பர் 15, 1752 அன்று கோவாவின் வைசிராய், ஹிந்துப் பண்டிதர்கள் (பிராமணர்கள்), ஹிந்து மருத்துவர்கள் நகரின் எந்தவொரு பகுதிக்குச் செல்வதாக இருந்தாலும் குதிரைகளில் அமர்ந்தோ அல்லது பல்லக்கில் அமர்ந்தோ செல்லக்கூடாது எனவும், அவ்வாறு பயணிப்பவர்களுக்கு முதல் தடைவையாக 10 குருசோடோக்களும், இரண்டாம் தடவைக்கு 20 குருசோடக்களுடன் அவர்கள் பயணம் செய்த குதிரைகள் மற்றும் பல்லக்குகள் பறிமுதல் செய்யப்படும் எனவும், மூன்றாம் முறை பிடிபட்டால் அவர்கள் உடனடியாக பாதாளச் சிறைகளில் அடைக்கப்படுவாரகள் எனவும் உத்தரவிட்டார்.

பின்னர் 1781-ஆம் வருடம் வைசிராயாக இருந்த கோண்டே-டி-சண்டோமில், கிறிஸ்தவர்கள் எவரும் ஹிந்துக்கள் பயணிக்கும் பல்லக்குகளைத் தூக்கக்கூடாது என உத்தரவிடுகிறார். அவ்வாறு தூக்கிச் செல்லும் கிறிஸ்தவர்களின் அனுமதிச் சீட்டுகள் அனைத்தும் ரத்துசெய்யப்படும் எனவும் கூறப்பட்டது.

கிறிஸ்த விவசாயப் பணியாளர்கள் எவரும் ஹிந்துக்களின் நிலங்களில் வேலைசெய்யக்கூடாது எனத் தடை விதிக்கப்பட்டது. ஹிந்து விவசாயிகள் கிறிஸ்தவர்களை வேலைக்கு வைத்துக்கொள்வதுகூடக் குற்றம் என அறிவிக்கப்பட்டு தண்டனையளிக்கப்பட்டது. அவ்வாறு தண்டனையளிக்கப்பட்டவர்களின் பட்டியல் இன்றைக்கும் இருக்கிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 கொலைகாரக் கிறிஸ்தவம் — 21

 

கோவாவில் கிறிஸ்தவர்களாக மதம்மாறும் ஹிந்துக்களுக்குப் பதினைந்து ஆண்டுகள் வரை நிலவரி எதுவும் தரவேண்டாம் போன்ற பல்வேறு சலுகைகளை போர்ச்சுகீசிய அரசு வழங்கியது

ஹிந்துமதச் சட்டங்களின்படி மகன்கள் அல்லாத ஒரு ஹிந்து இறந்தால் அவனது சொத்துக்கள் அவர்களின் மகள்களைச் சேருவதில்லை (இன்றைக்கு இந்தச் சட்டங்கள் மாற்றப்பட்டுவிட்டன). இதனை உபயோகிக்க நினைத்த கிறிஸ்தவ பாதிரிகள், இறந்தவனின் மகள் கிறிஸ்துவமதத்திற்கு மாறினாலோ, அவள் மாறாது அவளது நெருங்கிய உறவினர்கள் மாறினாலோ அவள் அந்தச் சொத்துக்களை வைத்துக் கொள்ளலாம் எனச் சட்டமியற்றினர். இந்தச் சட்டம் மார்ச் 22, 1559-ஆம் வருடம் கோவாவில் நடைமுறைக்கு வந்தது.

அதுபோலவே ஒரு பெண் கிறிஸ்தமதத்திற்கு மாறிய பிறகு அவளது கணவன் அதனை ஏற்றுக் கொள்ளாமல் அவளை வெளியே அனுப்பினாலோ, அல்லது அவள் கணவனுடன் வாழப்பிடிக்காமல் வெளியேறினாலோ,  அவளுக்குக் கணவனது சொத்தில் பாதியளவு கிடைக்கும் எனவும் சட்டத்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. தங்களது இறைநம்பிக்கையைப் பரப்புவதற்கு இதையெல்லாம் செய்வதில் தவறில்லை எனவும் கிறிஸ்தவ பாதிரிகள் சொல்லித் திரிந்தார்கள்.

போர்ச்சுக்கீசிய வெள்ளையர்கள் ஹிந்துக்களை மதம்மாற்றி அவர்களைக் கிறிஸ்தவர்களாக்கினாலும் அவர்களைத் தங்களின் இனத்திலிருந்து ஒதுக்கியே வைத்திருந்தார்கள். அவர்களைப் பெயரளவிற்குக் கூடத் தங்களுக்கு இணையானவர்களாக ஒருபோதும் நடத்தினார்களில்லை. பிப்ரவரி 19, 1718-ஆம் வருடம் போர்ச்சுக்கீசிய அரசன் எழுதிய கடிதமொன்று, புதிதாக மதம்மாறிய ஹிந்துக்களுக்கு வேலைவாய்ப்புகள் கொடுக்கப்பட்டாலும் அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டுமென்றும், அவர்களுக்கு ஒருபோதும் போர்ச்சுக்கீசியர்களுக்கு இணையான வேலைகள் கொடுக்கப்படவே கூடாதென்றும், அதிகாரத்தை இந்தியர்கள்மீது செலுத்த இது மிக அவசியமான ஒன்று என்கிறது அந்தக்கடிதம்.

ஒரு போர்ச்சுக்கீசியன் ஒரு வேலையில் எட்டு வருடங்கள் பணிபுரிந்தாலேயே அவன் அந்த வேலையைச் செய்யத் தகுதியானவனாகிறான். அதே இடத்தில் ஒரு மதம்மாறிய ஹிந்து பணிபுரிந்தால் அவன் தகுதியானவனாவதற்குப் பனிரெண்டு ஆண்டுகள் காத்திருக்கவேண்டும். இந்த வேறுபாடு எப்போதும் தொடர்ந்து இருக்கும்படி பார்த்துக்கொள்ளவேண்டும் என்பது போர்ச்சுக்கீசிய அரசனின் உத்தரவு.

கோவாவில் நிறவெறிக் கொள்கைகள் கடைப்பிடிக்கப்பட்டதனைக் குறிக்கும் பிரெஞ்சுப் பயணியான ஃபரான்கோ பையார்ட், இந்தியக் கிறிஸ்தவர்கள் கோவாவிலிருந்த உயரிய மருத்துவமனையான ராயல் ஹாஸ்பிடலில் நுழைய அனுமதிக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டு,

நூற்றுக்கணக்கானவர்கள் அந்த மருத்துவமனைக்குத் தினமும் வந்தனர். நான் அங்கு இருக்கையில் ஏறக்குறைய 1500 போர்ச்சுக்கீசிய மற்றும் பிற ஐரோப்பியக் கிறிஸ்தவ நோயாளிகள் அங்கு வந்து மருத்துவம் பார்த்துக்கொண்டனர். ஆனால் இந்தியக் கிறிஸ்தவர்கள் எவரும் அங்கு அனுமதிக்கப்படவில்லை. இந்தியக் கிறிஸ்தவர்களுக்கு என அமைக்கப்பட்டிருந்த சிறிய மருத்துவமனைகளில் மட்டுமே அவர்கள் வைத்தியம்பார்க்க அனுமதிக்கப்பட்டார்கள். நகரின் இன்னொருபுறத்தில் கிறிஸ்தவப் பெண்களுக்கு மட்டுமேயான மருத்துவமனை ஒன்றும் இருந்தது. அங்கு மதம்மாறிய இந்திய கிறிஸ்தவப் பெண்கள் மட்டும் நுழைய அனுமதிக்கப்பட்டார்கள். என்கிறார் பையார்ட்.

இன்னொரு பயணியான ஆங்கிலேயர் ஜான் ஃப்ரையர் 1675-ஆம் வருடம் கோவாவில் நிலவிய சூழ்நிலையைக் கூறுகையில், பெரும்பாலான இந்தியர்கள் போர்ச்சுக்கீசியமொழி பேசி, போர்ச்சுக்கீசிய நடை, உடை, பாவனைகளில் நடந்துகொண்டாலும் வெள்ளைக்காரப் போர்ச்சுக்கீசியனைக் கண்டால் மிகவும் மரியாதையுடன் நடந்து கொள்வதினைக் கண்டேன். எவனேனும் ஒரு வெள்ளைக்கார போர்ச்சுக்கீசியன் எதிரே வந்தால் அவனுக்குப் பயந்து வழிவிட்டு, சல்யூட் அடித்து நின்றார்கள் இந்திய கிறிஸ்தவர்கள். என்று எழுதியிருக்கிறார்.

ஆக, புதிதாக மதம் மறியவன் ஐரோப்பிய உடகளை அணிந்து அவர்களைப் போலப் பழக்க, வழக்கங்கள் மேற்கொண்டு, அவர்களை எங்கு பார்த்தாலும் குனிந்து கும்பிட்டுக் கொண்டு திரிந்திருக்கிறார்கள் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. ஐரோப்பிய வெள்ளையன் இந்தியக் கறுப்பனைவிடவும், அவன் கிறிஸ்தவனாக இருந்தாலும், கலாச்சார ரீதியில் அவனுக்குப் பலமடங்கு தான் உயர்ந்தவன் என்பதனைத் தொடர்ந்து அவன் கறுப்பு இந்தியனுக்கு நினைவூட்டிக்கொண்டிருந்தான்.

இன்னொருபுறம் ஹிந்துக்கள் தங்களுக்குள் ஒற்றுமையின்றி, போர்ச்சுக்சியப் பாதிரிகளே சிரிக்குமளவுக்கு ஒருவருக்கொருவர் உளவுபார்த்துச் சொல்வதும், அடுத்த சாதிக்காரனைக் குறித்துக் கோள்சொல்வதுமாக இருந்தார்கள். உதாரணமாக பாதிரிகளின் மதமாற்றத் தொல்லை காரணமாக இந்தியாவின் பிறபகுதிகளுக்குச் சென்ற ஹிந்து வியாபாரிகளை மீண்டும் திரும்பி வருமாறு போர்ச்சுக்கீசிய ஆட்சியாளர்கள் கேட்டுக்கொண்டபோது, அவ்வாறு திரும்பி வரவேண்டுமென்றால் தனக்கு பிடிக்காத இன்னாரைப் பழிவாங்கவேண்டும் என வேண்டிக்கொண்ட சம்பவங்கள் திரும்பத் திரும்ப நிகழ்ந்தன. ஹிந்துக்கள் பல குழுக்களாக, ஜாதிவாரியாக, சொந்த கோபதாபங்கள் காரணமாக, ஒருவர் காலை ஒருவர் வாருபவர்களாக இருந்ததால், மதமாற்ற பாதிரிகளுக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கைகளையும் ஒன்றுபட்டு எடுக்க இயலாதவர்களாக இருந்தார்கள்.

பிராமண்ர்களும் தங்களுக்குளுள்ள பிரிவினைகளை வைத்துக்கொண்டு சண்டையிட்டுப் பிரிந்து கிடந்த வரலாறும் காணக் கிடைக்கிறது. பிராமணர்களுக்கும், அவர்களுக்குள்ளேயே மதம்மாறியவர்களுக்கும் — சரஸ்வத் பிராமணர்களுக்குள்ளே ஸ்மார்த்த பிரமாணர்களுக்கும், வைணவ பிராமணர்களுக்கும் இடையே இருந்த பிளவுகளும், சச்சரவுகளும் படிக்கக் கிடைக்கின்றன. இதுவே இவர்களின் வீழ்ச்சிக்குக் காரணம் என்பதினை ஹிந்துக்கள் எவரும் இறுதிவரை உணரவில்லை என்பதுதான் பரிதாபம்.

பிராமணர்களும், சாரதாக்கள் (Charados) என்கிற இரு சாதிகள் கோவாவின் உயர்சாதிகளில் முதன்மையானவர்களாக இருந்தார்கள்.  இவர்களின் சாதிப்பிடிப்பு மிக ஆழமானது. இந்த உயர்சாதிக்காரர்களில் பலர் மதம்மாறிக் கிறிஸ்தவர்களான பிறகும்  தங்களின் சுயசாதிப் பிடிப்பினை விட்டார்களில்லை. அவர்களும் அவர்களின் பிள்ளைகளும் கிறிஸ்தவப் பெயர்கள் கொண்டிருந்தாலும் அதனுடன் தங்களின் சுயசாதியையும் சேர்த்தே அழைத்துக் கொண்டிருந்தார்கள். அரசாங்க ஆவணங்களிலும் அவர்களின் பெயர்கள் சாதி அடையாளத்துடனேயே இருந்தது.  இன்குசிஷன் விசாரணையால் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டவர்களும் தங்களின் சாதிய அடையாளங்களை இழக்க விரும்பவில்லை என்பது இன்குசிஷன் ஆவணங்களிலிருந்து தெரிகிறது.

மதம் மாறிய இந்த பிராமணர்களுக்கும் அவர்களின் உட்பிரிவுகளுக்கும் இடையே யார் பெரியவர் என்கிற விவாதங்கள் தொடர்ந்து நடந்து, அவை பெரும் கலவரமாகவும் மாறியிருந்திருக்கின்றன. இரண்டுபக்கமும் ஆயுதம்தாங்கியவர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டு ரத்தம் சிந்தியதாக ஜனவரி 15, 1741-ஆம் வருடம் கோவா வைசிராய் எழுதிய ஒரு கடிதத்தின்மூலம் தெரியவருகிறது. அவ்வாறு சண்டையிட்டுக்கொண்டவர்கள் கைத செய்யப்பட்டு தண்டனையளிக்கப்பட்டு அவர்களின் பெயர்களும் ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன.

 மதம் மாறிய வைணவர்களுக்கும், ஸ்மார்த்தர்களுக்குமிடையே நடந்த சண்டைகள் போர்ச்சுக்கீசிய ஆட்சியாளர்களுக்குப் பெரும் தலைவலிகளை உண்டுபண்ணின.  இருபிரிவினரும் ஒருவரை ஒருவர் வெறுத்து ஒதுக்கினார்கள்.  இவர்களிடையே தொடர்ந்து நடந்த சண்டைகளைச் சமாதானம்செய்ய அரசாங்கம் அடிக்கடித் தலையிடவேண்டியிருந்தது. எனவே இந்த இரண்டு பிரிவினர்களும் ஒருவருக்கொருவர் தொடர்பு இல்லாமல் தள்ளி இருக்கும்படி பார்த்துக்கொள்ளப்பட்டார்கள். இருப்பினும் இந்த இருபிரிவினர்களுக்குமிடையே தொடர்ந்த திருமண பந்தங்கள் இருந்தன.  ஒரு பிரிவிலிருந்து திருமணமாகி இன்னொரு பிரிவுக்குச் செல்லும் பெண், தன்னுடைய கணவன், குழந்தைகளின் சாதிப் பிரிவுக்கு மாறவேண்டியிருந்தது. அவ்வாறு மாறாத பெண்கள் கணவனால் துன்புறுத்தப்பட்டதால், பல பிராமணப் பெண்கள் தற்கொலை செய்துகொண்டார்கள்.

பல ஹிந்துக்கள் தங்களின் மதத்திற்காக, கட்டாய மதமாற்றங்களுக்கு எதிராக பல தியாகங்களைச் செய்துகொண்டிருந்தார்கள். அதேசமயம் பல சாதி ஹிந்துக்கள் தங்களிடையே இருக்கும் சிறிய வேற்றுமைகளைக்கூடச் சகித்துக்கொள்ளாமல், அதை ஊதி ஊதிப் பெரிதாக்கி ஒருவரை ஒருவர் மதிக்காமல் தொடர்ந்து சண்டையிட்டுக்கொண்டிருந்தார்கள். அந்தச் சண்டைகளுக்கு ஆதரவாக அயல் நாட்டுக்காரர்களான போர்ச்சுக்கீசியர்களை அழைத்து தங்களைத் தாங்களே அவமானப்படுத்திக்கொண்டார்கள். தங்களின் மதத்தையும், கலாச்சாரத்தையும், மதநம்பிக்கைகளையும், சடங்குகளையும் அழிக்கத் துடித்துக்கொண்டிருந்த போர்ச்சுகீசியர்களுக்குத் துரதிருஷ்டவசமாக எல்லா வசதிகளையும் ஹிந்துக்களே செய்து கொடுத்தார்கள் என்பது கோவாவின் வரலாறு நமக்குச் சொல்லித்தரும் பாடம்.

*

இனி, இன்குசிஷன் விசாரணைகளில் எந்த மாதிரியான சித்திரவதைகள் மதம்மாற மறுத்த ஹிந்துக்களுக்கும், மதம்மாற்றப்பட்ட பின்னரும் அதனைப் பின்பற்றாத யூதர்களுக்கும் போர்ச்சுக்கீசிய பாதிரிகளால் நடத்திக் காட்டப்பட்டன என்பதினைக் குறித்து டெல்லோன் சொல்வதினை (Dellon) சுருக்கமாகக் காண்போம். டெல்லோன் இன்குசிஷன்நடந்த சமயத்தில் கோவாவில் இருந்தவர்.

நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில், ஒவ்வொரு நாள் காலையிலும் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாகும் பலரின் அலறல் மற்றும் அழுகைச் சத்தங்களைக் கேட்டேன். அந்தக் கொடும் சித்திரவதைகளுக்கு ஆளான பலரையும் நான் நேரில் கண்டிருக்கிறேன். ஆண்களும், பெண்களும் அந்தச் சித்திரவதைகளின் காரணமாக உடல் ஊனமடைந்து கண்ணீர் சிந்தினார்கள். அவர்களில் ஒருவன் என்னுடைய சிறையில் என்னுடன் அடைத்து வைக்கப்பட்டிருந்தான்.

இன்குசிஷன் விசாரணைகளின்போது பாதிரிகள் தங்களிடம் பிடிபட்டவனைப் பல சித்திரவதைகள் செய்து அவன் மீது சாட்டப்பட்ட குற்றங்கள் உண்மையானவையா, அல்லது குற்றம் சாட்டப்பட்டவன் உண்மைகளை முழுமையாகச் சொல்லாமல் தங்களிடமிருந்து மறைக்கிறானா என அறிந்தார்கள்.

முதலில் சாதாரண விசாரணைகள் செய்யப்படும் குற்றம் சாட்டப்பட்டவன் கிறிஸ்துவுக்கு எதிரானவன்எனப் பட்டம் சூட்டப்பட்டு, இன்னொரு பிரிவான “செக்யூலர்” பிரிவுக்கு (மதச் சார்பற்றவர்களை விசாரிக்கிற பிரிவு!) அனுப்பி வைத்தார்கள். அந்தப் பிரிவே மேற்கண்ட உடல் ரீதியான சித்திரவதைகளை “கிறிஸ்துவுக்கு எதிரானவனுக்கு” வழங்கும்.

கோவா இன்குவிஷன்

இந்த சித்திரவதைகள் தாங்காமல் எவரேனும் தாங்கள் கிறிஸ்துவமதத்திற்கு எதிராகப் பேசின குற்றத்தை ஒப்புக்கொண்டால் மட்டுமே அவனது சித்திரவதைகள் நிற்காது. அதற்கும் மேலாக அவன் தனக்குத் தெரிந்த பிற “கிறிஸ்தவ எதிரிகளையும்” காட்டிக்கொடுக்கவேண்டும்.  எப்படிச் என்னென்ன காரணங்களுக்காக, எத்தனை நாட்களுக்குச் சித்திரவதைசெய்யவேண்டும் என்பதற்கான வழிகாட்டிகள் துல்லியமாக எழுதிவைக்கப்பட்டு, அதன்படியே சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டன என்பதினை நாம் கவனிக்கவேண்டும். அதனை எல்லாம் இங்கு எழுதுவதற்குச் சாத்தியமில்லை. அந்த விவரங்கள் அனைத்தும் இன்றைக்குப் பொதுவெளியில் கிடைக்கின்றன.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 கொலைகாரக் கிறிஸ்தவம் — 22

 

இன்குசிஷன் விசாரணைகளுக்கு இரண்டு முக்கிய  நோக்கங்கள் இருந்தன. முதலாவது, கிறிஸ்தவனாக மதம்மாறிய அல்லது மாற்றப்பட்ட ஒருவன் கிறிஸ்துவுக்கு எதிராகப் பேசினாலோ, அல்லது கிறிஸ்தவ மதத்திற்கு எதிராக நடந்து கொண்டாலோ அவனையொ — இரண்டாவதாக, ஹிந்துக்கள், முஸ்லிம்கள், யூதர்கள் போன்ற  பிறமதத்தினரைப் பிடித்துச் சித்திரவதைசெய்து — அவர்களைக் கிறிஸ்தவர்களாக மதம்மாற்றுவது.

இந்த விசாரணைகளின் போது செய்யவேண்டிய பலவிதமான சித்திரவதைகளைக் குறித்தும் இன்குசிஷன் சட்ட நடவடிக்கைப் புத்தகம் தெளிவாக விளக்குகிறது. அந்த சித்திரவதை முறைகளில் ஒன்றிரண்டை இங்கு பார்க்கலாம்.

முதலாவது, தண்டனையளிக்கப்பட்டவனின் கைகளைப் பின்புறமாக மணிக்கட்டில் இறுக்கமாகக் கயிற்றால் கட்டி, (Torture of Pole or Potro) அவனைச் சிறிது சிறிதாக அந்தரத்தில் தூக்கி, கால்கள் தரையில்படாமல் தொங்கவிடுவார்கள். சிலசமயங்களில் கால்களில் எடைகளைக் கட்டுவதும் உண்டு. அவனை இன்குசிஷன் நீதிபதில் மனதுவைக்கும் காலம் வரைக்கும் அந்தரத்தில் தொங்கவிடுவார்கள். அவ்வப்போது அவனைக் கீழே இழுத்து வீழ்த்துவதும் உண்டு. பெண்களுக்கு இந்தத் தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

1620-ஆம் வருடம் ஒரு இன்குசிஷன் எழுத்தன், மேற்படி தண்டனையளிக்கையில் குற்றவாளியைக் கட்டி அவனை மெதுவாக மட்டுமே இழுக்கவேண்டும், அப்போதுதான் அவன் நிறைய வலியும், வேதனையும் அடைவான். அத்துடன், அவனது கால்களை முழுமையாகத் தரையிலிருந்து தூக்கமல் அவனது முன்னங்கால்கள் லேசாகத் தரையைத் தொட்டபடி இருந்தால் அவன் இன்னும் வேதனையடைவான் என சிபாரிசு செய்தான். அப்படி அந்தரத்தில் தொங்கி வேதனைப்பட்டுக் கொண்டிருக்கையில் பைபிளின் ஒரு குறிப்பிட்ட சில வார்த்தைகள் (Psalm Miserere)  மூன்றுமுறைகள் அமைதியான முறையில் சொல்லப்படவேண்டும். அதேவேளையில் குற்றம் சாட்டப்பட்டவன் தனது குற்றத்தை ஒப்புக் கொள்ளும்படி மீண்டும், மீண்டும் கேட்கவேண்டும்.  அப்பொழுதும் அவன் தனது குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுத்தால் அவனைக் கீழே இறக்கி, பின்னர் அவன் கால்களில் எடைகளைக் கட்டி, இரண்டு பைபிள் வாசகங்கள் சொல்லவேண்டும். கால்களில் கட்டப்படும் எடைகளின் அளவு ஒவ்வொருமுறையும் கூட்டிக்கொண்டே போகவேண்டும் எனவும் அவன் இன்குசிஷன் நீதிபதிகளுக்கு சிபாரிசளித்தான்.

இரண்டாவது, தண்ணீர் சித்திரவதை (Water torture of potro). இந்த சித்திரவதை முறை சிறிது சிக்கலானது.  முதலில் குற்றவாளியை ஒரு சரிவான மேசையில் (trestle – a framework consisting of a horizontal beam supported by two pairs of sloping legs) தலை சரிவான பகுதியிலும், கால் மேடான பகுதியிலும் இருக்கும்படி சரிவாகப் படுக்கவைப்பார்கள். சரிவான பகுதியின் கீழ்ப்பகுதியில் குழிபோன்ற ஒரு அமைப்பு இருக்கும். அதில் அவனுடைய தலையை அமுக்கி, அவன் நகராமலிருக்குக்ம் பொருட்டு அவன் தலையைச் சுற்றிலும் இரும்புப் பட்டையை இறுக்கிப் பிணைப்பார்கள்.

சதையை வெட்டுமளவிற்குக் கூர்மையான சங்கிலிகளை அவனது கை, கால்கள், துடைகள், கணுக்கால்கள் என அத்தனை பகுதிகளிலும் ஓரிடம் விடாமல் பிணைத்து, மேசையுடன் இணைத்துக் கட்டுவார்கள். அந்தச் சங்கிலிகளை முறுக்க முறுக்க அவை சதைக்குள் புதைந்து ஆழமான வெட்டுக் காயங்களை உருவாக்கும். நகரமுடியாமல் தலைகீழாகக் கிடக்கும் அந்த பரிதாபத்திற்குறிவனின் வாயைப் பெரிய இரும்புக் கொறடா போன்ற ஒன்றால் திறந்தே இருக்கும்படி செய்வார்கள். அவன் வாய்க்குள் ஒரு துணிப்பந்து சொருகப்பட்டு ஒரு ஜாடியிலிருந்து தண்ணீர் மெதுவாக அவன் வாய்க்குள் ஊற்றப்படும்.

இந்தத் துயரத்தை அனுபவிக்கும் குற்றம்சாட்டவன் மூச்சுத் திணறித் திணறி மரண அவஸ்தைப்படுவான். அவ்வப்போது அந்தத் துணியை நீக்கி, அவனது குற்றத்தை ஒப்புக்கொள்ளும்படி கேட்பார்கள். ஒப்புக்கொண்டவன் குற்றுயிரும் குலையுயிருமாகப் பிழைத்துக் கிடப்பான். சிலசமயம் குற்றவாளிகளுக்கு ஆறு முதல் எட்டு ஜாடிகள் அளவிற்குத் தண்ணீர் புகட்டப்பட்டதாகத் தகவல்கள் உண்டு.

இவற்றுடன் பலதரப்பட்ட சித்திரவதைகளும் இன்குசிஷன் விசாரணைகள் நடத்தியவர்களால் செய்யப்பட்டன. இந்த சித்திரவதைகளைக் குறித்து ஆராய்ந்தவரான இ.டி. விட்டிங்டன் இவ்வாறு சொல்கிறார்,

நாகரிக மனிதன் கண்டுபிடித்த காட்டுமிராண்டித்தனமான சித்திரவதைகள் அவை என்பதில் சந்தேகம் இல்லை. சாதாரண முள் சங்கிலியிலிருந்து, கையின் கட்டைவிரலைச் சிதைக்கும் கருவிகளும், கால்களின் எலும்புகளை நொறுக்கும் கருவிகளும், ஸ்பானிஷ் காலணிகள் என்றழைக்கப்படும் கூர்மையான சக்கரங்களும், கொதிக்கும் எண்ணெய் குற்றவாளிகளில் கால்களில் ஊற்றப்பட்டும், கொளுத்திய மெழுகுவர்த்தியை அவர்களின் அக்குளுக்கு நேராகப் பிடித்து எரிப்பதும், எரியும் சல்ஃபரை அவர்களின் உடலில் வீசுவதும்…..எனப் பலவகையான சித்திரவதை முறைகளை இன்குசிஷன் விசாரணைகளில் பயன்படுத்தினார்கள்.

பாம்பெர்க் என்கிற இடத்தில் விசாரணைக் கைதிகளுக்கு உப்பிடப்பட்ட மீனை உண்ணக் கொடுத்து, அவர்களுக்குக் குடிக்கத் தண்ணீரை அளிக்க மறுத்தார்கள். பலரை சுண்ணாம்புக் காளவாயில் தூக்கியெறிந்து அவர்கள் உயிருடன் வெந்து சாகச்செய்தார்கள்.  இன்னொரு இடமான லின்ஹெய்ம் என்கிற இடத்தில் கைதிகளை ஒரு சக்கரத்தில் படுக்கவைத்துக் கட்டி அந்தச் சக்கரத்தைத் தொடர்ந்து சுற்றினார்கள். அதில் கட்டப்பட்டிருந்த கைதிகள் வாந்தியெடுத்து முழு உணர்வும் அற்றவர்களாகும்வரை அந்தச் சக்கரங்களை விடாமல் சுற்றினார்கள். மயக்கம் தெளிந்தவுடன் மீண்டும் அந்தச் சித்திரவதைகக்கு ஆளாக விரும்பாதவர்கள் தாங்கள் செய்யாத குற்றங்களைக்கூட ஒப்புக்கொண்டார்கள்.

நெய்ஸே என்னுமிடத்தில் நூற்றைம்பது விரலளவுள்ள கூர்மையான ஆணிகள் அறையப்பட்ட நாற்காலியில் குற்றம் சாட்டப்பட்ட பிறமதத்தவனை நாட்கணக்கில் உட்காரவைத்தார்கள். இந்தச் சித்திரவதைக்கு ஆளான பத்தில் ஒன்பதுபேர், அவர்கள் குற்றமற்றவர்களாக இருந்தாலும், தாங்கள் செய்யாத அத்தனை குற்றங்களையும் செய்ததாக ஒப்புக்கொண்டார்கள்.

இந்தச் சித்திரவதைகள் எந்த அளவிற்கு குற்றவாளிகளின் மனதில் அச்சத்தை மூட்டின என்பதற்கு உதாரணமாக ஹெச்.சி. லீ என்பவர் சொல்லும் கிறிஸ்வதமதத்தைச் சாராத ஒரு பெண்மணிக்கு நிக்ழந்ததொரு ‘மிதமான’ சித்திரவதைச் சம்பவத்தைப் பார்க்கலாம். இந்தச் சம்பவத்தில் ‘பன்றி இறைச்சி தின்ன மறுத்து, சனிக்கிழமைகளில் சுத்தமான துணியை அணிந்த’ ஒரு பெண்ணுக்கு அளிக்கப்பட்ட தண்ணீர் சித்திரவதை இது:

அந்தப் பெண்ணை சித்திரவதைக் கூடத்திற்குத் தூக்கிவந்து, அவளை உண்மையைச் சொல்லும்படி உத்தரவிட்டாரகள். அவள் தன்னிடம் சொல்வதற்கு எதுவுமில்லை என அப்பாவித்தனமாக பதில்சொன்னாள். உடனடியாக அவளது உடைகளைக் களைய உத்தரவிட்டு, மீண்டுமொருமுறை அவளிடம் குற்றத்தை ஒப்புக்கொள்ளும்படிச் சொன்னார்கள். அதன் பின்னரும் அவள் அமைதியாயிருந்தாள். அவளது உடைகளை அவர்கள் களைய ஆரம்பிக்கையில், கனவான்களே, நான் சொல்லவேண்டியதை எல்லாம் சொல்லிவிட்டேன். நான் எந்தக் குற்றமும் அற்றவள். கடவுளின் பெயரால் சொல்கிறேன். நான் எதுவும் அறியாதவள் எனச் சொன்னாள்.

அவளது உடைகளைக் களைந்த பின்னர் அவளை மேசையில் தலைகீழாகப் படுக்க வைத்து அவளது கைகளைக் கட்ட ஆரம்பித்தார்கள். அவள் மீண்டும்நான் உண்மையைத்தான் சொன்னேன். நான் என்ன சொல்லவேண்டும் என நினைக்கிறீர்கள்? என்று கேட்டபோதும், உண்மையைச் சொல்லும்படி வலியுறுத்தினார்கள். நான் உண்மையை மட்டுமே சொன்னேன். என்னிடம் சொல்வதற்கு வேறொன்றுமில்லை, என்றாள் அந்தப் பெண்.

அவளது கைகளில் முள் கம்பியைச் சுழற்றிக் கட்டிவிட்டு, அவளை மீண்டும் உண்மையைச்சொல்லும்படி வற்புறுத்துகினர். வலிதாங்காமல் கதறியழும் அவள் மீண்டும், ‘‘நான் சொல்லவேண்டியது அனைத்தும் சொல்லிவிட்டேன்,’ என்றாள். நீ இன்னும் உண்மையச் சொல்லவில்லை, எனச் சொல்லிக் கொண்டே முள்கம்பியை இறுக்கினர். நான் என்ன சொல்லவேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்களோ அதனைச் சொல்லுங்கள். நான அதையே திரும்பச் சொல்லுகிறேன், எனக் கண்ணீருடன் மன்றாடினாள் அவள்.

நீ என்ன செய்தாய் என்பதனைச் சொல்லு எனக் கடுமையாகக் கேட்பவர்களிடம் மீண்டும் அந்தப் பெண், நான் ஒன்றுமே செய்யவில்லையே என்றாள். உடனடியாக மற்றொரு முள்கம்பிக் கயிறு கொண்டுவரும்படி உத்தரவிடுகிறான், இன்குசிஷன் விசாரணைசெய்பவன். என்னை அவிழ்த்துவிடுங்கள். நான் என்ன செய்தேனென்று எனக்குத் தெரியவில்லை. நீங்கள் என்ன சொன்னாலும் அதனை ஒப்புக்கொள்கிறேன். என் மீது இரக்கம் காட்டுங்கள்,’ என அவள் சொல்லச் சொல்ல, இன்னொறு முள்கம்பியினால் அவளது கை, கால்கள் இறுக்கப்பட்டன. நீ பன்றி இறைச்சியைச் தின்ன மறுத்தாயா எனக் கேட்டுக் கொண்டே அவளது கைகளை இறுக்கினார்கள். இப்படியாக பதினாறு முள் கம்பிகளை அவள் உடலில் இட்டு முறுக்கினார்கள்.

அதற்குப் பிறகு அவளை தண்ணீர் சித்திரவதைக்குத் தயாராக்கினார்கள். இறைவனின் பெயரால் நான் என்ன சொல்லவேண்டும் எனச் சொல்லுங்கள். அத்தனையையும் நான் ஒப்புக் கொள்கிறேன் எனக் கெஞ்சியும் அவளைத் தண்ணீர் சித்திரவதைக்கு உள்ளாக்கினார்கள். அவள் மயக்கமடைந்து ஏறக்குறைய மூச்சுத் திணறி இறக்கும்வரை சித்திரவதைகளை அவர்கள் தொடர்ந்தார்கள்.” என்று விளக்குகிறார்.

ஏற்கனவே சொன்னபடி இது ஒரு சிறு உதாரணம் மட்டுமே.

கோவாவின் இன்குசிஷன் கொடூரங்களைக் குறித்துப் பேசும் அத்தனை வரலாற்று அறிஞர்களும், கிறிஸ்தவ மதத்தின் பெயரால் அப்பாவி ஹிந்துக்களுக்கு நடந்த இரக்கமற்ற கொடூரங்களை எவராலும் மறுக்கவியலாது எனச் சொல்கின்றனர். ஐரோப்பிய நாடுகளில் தங்களின் இனமான வெள்ளைக்காரர்களையே எண்ணமுடியாத, இரக்கமற்ற முறைகளால் சித்திரவதைசெய்தவர்கள் கறுப்பர்களான இந்தியர்களை — குறிப்பாக ஹிந்துக்களை எத்தனை சித்திரவதைகள் செய்திருப்பார்கள் என்பதினை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.

தங்களின் மதச் சடங்குகளைச் செய்த, திருவிழாக்களைக் கொண்டாடிய ஹிந்துக்களுக்கு கசையடிகள் கொடுக்கப்பட்ட சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அவ்வாறான ஹிந்துக்கள் கோவாவிலிருந்து துரத்தியடிக்கப்பட்ட சம்பவங்களும்கூட பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்தச் சூழ்நிலையில் கோவா ஹிந்துக்கள் தாங்கள் உண்ணாத உணவுகளையும் கட்டாயப்படுத்தி உண்ணவைக்கப்பட்டிருக்கலாம். தங்களின் உயிரையும், உடமைகளையும் இரக்கமற்ற கிறிஸ்தவப் பதர்களிடமிருந்து காப்பாற்றிக்கொள்வதற்காக தங்களின் மதச்சம்பிரதாயங்களையும் துறந்து நடந்திருக்கலாம். அவ்வாறான சூழலில் தாங்கள் கிறிஸ்தவர்களாக மதம்மாறுவதனைத் தவிர்த்து வேறுவழியின்றி அவர்கள் மதம்மாறிய சம்பவங்களும் நடந்திருக்கலாம் என்பதில் சந்தேகமில்லை.

[தொடரும்]



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 கொலைகாரக் கிறிஸ்தவம் — 23

 

கோவாவில் ஹிந்துக்களுக்கு எதிரான இன்குசிஷன் விசாரணகள் டவுன் ஹாலுக்கு எதிரே, கதீட்ரல் சதுக்கத்திற்குத் தெற்கில் இருந்த மாளிகையில் (Sambaio Palace) நடத்தப்பட்டன. போர்ச்சுகீசியர்கள் கைப்பற்றுவதற்கு முன்பு அந்த வீடு அடில்ஷா சுல்தானின் தங்குமிடமாக இருந்தது. பின்னர் கோவாவின் போர்சுகீசிய கவர்னர் மற்றும் வைசிராய்கள் தங்குமிடமாக சிறிதுகாலம் இருந்தது. 1554-ல் கோவாவின் வைசிராயாக இருந்த பெட்ரோ மாஸ்காரேன்ஹாஸ் மிகவும் வயதாகி அந்த மாளிகையின் மாடிப்படிகளில் ஏறி இறங்குவதற்குச் சிரமப்பட்டதால் அவரது இருப்பிடம் கோட்டைக்குள் இருந்த வீட்டிற்கு மாற்றப்பட்டது. அவரைத் தொடந்து வந்த கவர்னர்களும், வைசிராய்களும் அங்கேயே தங்க ஆரம்பித்தார்கள்.

சம்பாயோ மாளிகை பாழடைந்து கிடந்த காரணத்தால் 1560ல் கோவாவில் துவங்கப்பட்ட இன்குசிஷன் விசாரணைகளுக்காக அது ஒதுக்கப்பட்டது. அங்கு ஒரு சர்ச்சும், வருபவர்கள் அமர்வதற்காக ஒரு பெரியதொரு முன்னறையும், வரவேற்பறையும், கைதுசெய்யப்பட்ட குற்றவாளிகளை விசாரணைசெய்வதற்கான விசாரணை அறையும், தலைமை விசாரணை அதிகாரி தங்கும் இடமும், கிறிஸ்தவரல்லாதவர்களுக்கு கிறிஸ்தவமதத்தின் மேன்மையைக் குறித்துப் பாடமெடுக்கும் அறைகளும், எண்ணவே இயலாத பல்வேறு சிறைகளும், வேலைக்காரர்கள், ரகசிய உளவாளிகள் தங்குமிடங்களும், சித்திரவதைசெய்யும் அறைகளும், அந்த மாளிகையில் அமைக்கப்பட்டன. அந்த மாளிகையைச் சுற்றிலும் எழு கையளவு தடிமனுள்ள சுவர்களும் கட்டப்பட்டன.

ஃப்ரெஞ்சுப் பயணியான டெல்லோன் இந்த அரண்மனையைக் குறித்து அவரது புத்தகத்தின் 15-ஆவது அத்தியாயத்தில் அந்த மாளிகையில் ஏறக்குறைய 200 சிறை அறைகள் இருந்ததாகத் தெரிவிக்கிறார். சில அறைகள் சன்னல்கள் இல்லாமல் இருண்ட அறைகளாகவும், ஐரோப்பாவில் அமைக்கப்பட்டிருந்தது போல பாதாளச் சிறைகளை உடையதாகவும் இருந்ததாக அவர் விளக்குகிறார்.

இந்தச் சிறைகளை நேரில் கண்ட பிரிட்டோரியஸ் என்கிற போர்ச்சுகீசியர் எழுதிய கடிதமொன்று மேற்படி மாளிகையைக் குறித்து இவ்வாறு கூறுகிறது,

சில பாதாளச் சிறைகள் கிணறு போன்ற தோற்றமுடைய, பதினைந்து அல்லது முப்பது மீட்டர்கள் (fathoms?) ஆழமுள்ளவை. மேற்புறமிருக்கும் திறப்பின் வழியாக கை, கால்களில் கயிறுகள் பிணைக்கப்பட்ட கைதிகளை உள்ளே இறக்கி, அதன் வழியாகவே மேலே இழுத்து வெளியே எடுப்பார்கள். அந்த மாதிரியான சிறைக்கைதிகளை நானே நேரில் கண்டிருக்கிறேன். அந்தக் கைதிகள் கிணற்றின் கீழே கடுமையான குளிரில் நடுங்கியபடி அமர்ந்திருப்பார்கள். நாளெல்லாம் குளிர்ந்த நீரில் இருப்பதானால் உறைபனிக் கடி ஏற்பட்டு அவர்களின் கை, கால்கள் உறைந்துவிடும். விரல்கள் உதிர்ந்து ஊனமுற்றவர்களாக மாறும் அவர்கள் அந்தச் சிறையிலிருந்து விடுபட்டாலும் வாழ்நாளெல்லாம் ஊனமுற்றவர்களாகவே இருப்பார்கள்.

மேலும் சிலர் சூரியவெளிச்சம் படாத வைகையில் இரவும், பகலும் இருட்டுச் சிறைகளில் அடைபட்டுக் கிடந்தார்கள். அவர்களின் கை-கால்கள் கயிறுகளால் இறுக்கமாகக் கட்டப்பட்ருந்ததால் எங்கும் நகரமுடியாமல் கிடந்த இடத்திலே கிடந்து வலியில் உழன்றார்கள். அவர்களின் மலம்-மூத்திரத்தின்மீது அவர்கள் படுத்து உறங்கவேண்டிய நிலைமை இருந்தது. சாதாரண ஆடு, மாடுகளுக்கு வழங்கப்படும் சுதந்திரம்கூட அவர்களுக்கு வழங்கப்படவில்லை. சரியான உணவும் வழங்கப்படாமல், நிம்மதியாக உறங்க முடியாமல், அச்சத்திலும், பயத்திலும் நடுங்கியபடி அவர்கள் அங்கு பிழைத்துக் கிடந்தார்கள்.

அவர்களைப் பேன்களும், எலிகளும், இன்ன பிற ஜந்துக்களும் அவர்களின் உடல்களைச் சிறிது சிறிதாக கடித்துத் தின்றுகொண்டிருந்தன. அத்துடன் இன்குசிஷன் விசாரணை அதிகாரிகளும், சிறைக்காவலர்களும், மரணதண்டனைகளை நிறைவேறுபவர்களும், அந்த பரிதாபப்பட்ட ஜீவன்களை மிரட்டியும், அடித்தும் ஒடுக்கிக்கொண்டிருந்தனர். இந்தச் சூழ்நிலைக்கு மாத, சில சமயங்கள் வருடங்களுக்கும் ஆளாக்கப்பட்ட அக்கைதிகள் தங்களின் மனோதைரியத்தையும், உடல் உறுதியையும், பொறுமையையும் இழந்து நாட்கள் செல்லச் செல்ல உடல் பலத்தை இழந்து பலகீனமானவர்களாக, கோழைகளாக, வாழ்வில் நம்பிக்கை இழந்தவர்களாக மாறினார்கள். இன்னும் சிலரோ இந்தக் கொடுமைகளைத் தாங்க இயலாமல் அரைப் பைத்தியங்களாக மாறினார்கள். எனக் குறிப்பிடுகிறார்.

எல்லா மதத்தினரையும் சமமாகப் பாவிக்க நினைத்த மார்க்குவஸ்-டி-பொம்பால், ஃபிப்ரவரி 10, 1774ல் இன்குசிஷன் விசாரணைகளை நிறுத்த உத்தரவிடும்வரை, மேற்சொன்ன மாளிகை கைதிகளின் விசாரணைக் கூடமாக, சித்திரவதைக் கூடமாகத் திகழ்ந்தது. போர்ச்சுக்கீசிய கவர்னர்களும், வைசிராய்களும் மீண்டும் அந்த மாளிகையிலே வாழவேண்டும் எனப் பொம்பால் உத்தரவிட்டார். அந்தநேரத்தில் வைசிராயாக இருந்த ஜோஸே பெடரோ-டி-கமாரா, இன்குசிஷன் விசாரணைகளுக்காக அந்த மாளிகையில் செய்யப்பட்ட பல மாற்றங்களைச் சுட்டிக்காட்டி அவற்றையெல்லாம் மீண்டும் மாற்றுவதற்கு ஏராளமாக செலவுசெய்யவேண்டும் எனக் கூறியதால் அந்த யோசனை கைவிடப்பட்டது.

இருப்பினும், 1778ல் போர்ச்சுகீசிய அரசி மரியாவின் உத்தரவின்பேரில் ஹிந்துக்களுக்கு எதிரான இன்குசிஷன் விசாரணைகள் மீண்டும் அதே மாளிகையில் துவங்கப்பட்டன. அந்த மாளிகையை 1808ல் பார்த்த டாக்டர் புக்கானன் என்பவர் எழுதிய குறிப்புகளைப் படித்த — அன்றைய இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் ஹிந்துக்களுக்கு எதிரான இன்குசிஷன் பயங்கரங்களை நிறுத்தும்படி போர்ச்சுகீசிய அரசிற்கு வேண்டுகோள்விடுத்தார்கள்.

அதே மாளிகையை 1821-ஆம் வருடம் கண்ட அபே-கோட்டின்யூ, அந்த மாளிகை கவனிப்பாரின்றி பாழடைந்து கொண்டிருந்ததாகத் தெரித்தார்:

இன்குசிஷன் விசாரணைகள் நிகழ்ந்த அந்த மாளிகை இப்போது வேகமாகப் பாழடைந்து கொண்டிருக்கிறது. அந்த மாளிகையில் கதவுகளோ அல்லது ஜன்னல் கதவுகளோ இல்லை. எங்கு நோக்கினும் புதர்களும், குப்பையும் குவிந்து மாளிகையின் வாசலை அடைத்துக் கொண்டிருக்கின்றன. 1812ல் பிரிட்டிஷ்காரர்கள் கோவாவில் தங்கியிருக்கையில் போர்ச்சுக்கீசிய ரியோ-ஜெனெய்ரோ நீதிமன்றந்திலிருந்து கோவாவில் ஹிந்துக்களுக்கு எதிரான இன்குசிஷன் விசாரணைகளை நிறுத்துவதற்கான உத்தரவு வந்தது. அதன் பின்னர் அந்த மாளிகை உபயோகத்திலில்லை எனத் தெரிகிறது.

1828-1830 கால கட்டத்தில் கோவா அரசாங்கம் அந்த மாளிகையை இடிக்க உத்தரவிட்டது. அந்த மாளிகையிலிருந்து எடுக்கப்பட்ட பொருள்கள் பஞ்சிமில் இன்னொரு மாளிகை கட்டுவதற்காக உபயோகப்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. இதனைப் பற்றி ஜெ.என். ஃபொன்சேகா என்பவர், இடித்துத் தகர்க்கப்பட்ட இன்குசிஷன் விசாரணை மாளிகையின் மீதங்கள், ஃப்ரான்ஸிஸ் சேவியரின் உடல் கண்காட்சியில் வைக்கப்பட்ட 1859-ஆம் வருடத்திலும் அங்கேயே இருந்தன. அந்த இடிபாடுகளை நீக்கிக் களைவதற்கு அழைக்கப்பட்ட கூலியாட்கள் அங்கு பல பாதாள அறைகளைக் கண்டுபிடித்தார்கள். அங்கு ஏராளமான மனித எலும்புகள் ஒரு ஒரு பெரும் படகு அல்லது திமிங்கலத்தைப் போன்ற தோற்றமுள்ள அமைப்பு ஒன்றின் அடியில் இருப்பதனைக் கண்டறிந்தார்கள். குறிப்பிட்டிருக்கிறார்.

இன்றைக்கு அந்தக் கட்டிடம் இருந்த இடத்தை கோவாவாசிகளே அறிவார்களா என்பது சந்தேகம்தான்.

இன்குசிஷன் விசாரணைகளை நடத்துபவரின் அதிகாரம் வானளாவியது. ஏனென்றால் அவர் பரமண்டலத்தில் இருக்கும் பிதாவிற்காக வேலைசெய்கிறவர். ஏறக்குறைய அரசனுக்கும் மேலான அதிகாரம் அவருடையது. அரசனுக்கு இருக்கும் அதிகாரம் அவனது குடிமக்களுக்கு மட்டுமேயானது. ஆனால் பரமண்டலத்து பிதாவிற்காக ஆன்மீக வேலைசெய்பவர் அவனுக்கும் அதிக அதிகாரத்தில் இருப்பதுதானே சரியானது?!

ஃப்ரெஞ்சுப் பயணியான டெல்லோன், கோவா இன்குசிஷன் விசாரணைகளை நடத்திய முதன்மை தண்டனையளிப்பவர் (Grand Inquisitor) மட்டுமே குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் பிரயாணம் செய்ய இயலும், கோவாவின் ஆர்ச் பிஷப்பை விடவும் அதிகாரம் அவருக்கு இருந்தது. வைசிராய், கவர்னர், ஆர்ச்பிஷப் போன்றவர்களைத் தவிர்த்து, கண்ணில் தென்படுகிற அத்தனைபேர்களின்மீது அவரது அதிகாரம் செல்லுபடியாகியிருந்தது. போர்ச்சுகலிலிருந்து இறையாண்மை அமைப்பிலிருந்தோ (Conselho Supremo) அல்லது அங்கிருக்கும் நீதிமன்றங்களிலிருந்தோ ரகசிய ஆணைகள் பிறப்பிக்கப்பட்டால் கோவாவிலிருக்கும் எவரையும் கைது செய்யும் உரிமையும் அவருக்கு இருந்தது என்று எழுதியுள்ளார்.

இன்குசிஷன் விசாரணைகள் தொடங்கிய காலகட்டத்தில் கோவா ஆர்ச்பிஷப்பிற்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தாலும் பின்னர் அது குறைக்கப்பட்டது. கோவாவின் கவர்னர்களுக்கும் இன்குசிஷனைச் செய்தவர்களுக்கும் இடையே தகராறுகளும் ஏற்பட்ட சம்பவங்களும் உண்டு. அந்தச் சம்பவங்களும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. உதாரணமாக, கவர்னர்கள் தங்களின் பேச்சைக் கேட்டு ஹிந்துக்களின் மீது நடவடிக்கைகள் எடுக்க மறுக்கிறார்கள் எனக் கூறும் குற்றச்சாட்டுகள் அடங்கிய கடிதங்கள் போர்ச்சுகீசிய அரசனுக்கு அனுப்பப்பட்டிருக்கின்றன. கவர்னர் கோர்டின்ஹோவும் அவரது மனைவியும் ஹிந்து விழாக்களில் கலந்துகொள்வது பற்றியும், இன்னொரு பெண்மணியான டோனா அனா எஸ்பான்ஹொலிம் ஹிந்து மந்திரவாதிகளைக் கலந்து ஆலோசிப்பது பற்றியுமான குற்றச்சாட்டுக்களும் உண்டு.

சில சமயங்களில் பல போர்ச்சுகீசிய கிறிஸ்தவர்களும்கூட இன்குசிஷன் விசாரணை நடத்தியவர்களால் கைதுசெய்யப்பட்ட சம்பவங்களும் நடந்தேறின.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 கொலைகாரக் கிறிஸ்தவம் — 24

 

கோவாவில் கிறிஸ்தவர்களாக மதம்மாற்றப்பட்ட பிராமணர்களுக்கு போர்ச்சுகீசியர்கள் மரியாதை அளிக்காமல், அவர்களைத் தங்களுக்கும் கீழானவர்களாகவே நடத்தினார்கள்.

1607-ஆம் வருடம் கோவாவின் தீவாரில் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தவரான பிஷப் மாத்யூஸ் காஸ்ட்ரோ, 1679-ஆம் வருடம் ரோம் நகரில் இறந்தவர். The Peal of India புத்தகத்தை எழுதிய அப்பே கார்ரே, கோவாவின் ஆர்ச் பிஷப்பாக இருந்த கிறிஸ்டவோ-டி- சாஹா கத்தோலிக்க உயர்பதவிகளுக்கு பிஷப் மாத்யூசை அவர் பிராமணர் என்கிற ஒரே காரணத்திற்காக சிபாரிசுசெய்ய மறுத்துவிட்டதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

இன்னொருபுறம் கத்தோலிக்க பாதிரிகள் ஹிந்து சன்னியாசிகளைப் போல வேடம் தரித்து, அப்பாவி ஹிந்துக்களை மதமாற்றம் செய்தார்கள். உதாரணமாக, “ரோமக் பிராமணன்” எனத் தன்னை அறிவித்துக் கொண்ட பாதிரி டி. நொபிலி என்பவன் நூற்றுக்கணக்கான ஹிந்துக்களை மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் மதம் மாற்றினான். ஆனால், கோவாவின் ஆர்ச் பிஷப்பாக இருந்த டி-சா, நொபிலி ஹிந்து மத உருவ வழிபாடு செய்வதாகக் குற்றம் சாட்டி கோவாவின் இன்குசிஷன் விசாரணைத் தண்டனைகள் அளிக்க முற்பட்டார். ஆனால் அப்படிச் செய்வதற்கு பாதிரிகளின் கூட்டமைப்பு ஆதரவுதராததால் நொபிலி இன்குசிஷன் விசாரணைக் கொடூரங்களிலிருந்து தப்பினான்.

இன்குசிஷன் விசாரணை அதிகாரிகளில் எவரும் இந்தியர்கள் நியமிக்கப்படவே இல்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. போர்ச்சுகலைச் சேர்ந்த வெள்ளை இனத்துப் பழமையான கிறிஸ்தவ பரம்பரையில் வந்தவர்கள், யூத, இஸ்லாமியக் கலப்பு சிறிதும் இல்லாத, புதிதாக மதமாற்றம் செய்யப்பட்ட குடும்பத்திலிருந்து வராதவர்கள் மட்டுமே இன்குசிஷன் விசாரணை அதிகாரிகளாக நியமிக்கப்பட்டனர். அவர்களின் தகுதிகள் ஆழ்ந்து ஆராயப்பட்டன. அவர்கள் நேர்மையானவர்களாக, எளிமையானவர்களாக, கிறிஸ்துவுக்கு உண்மையானவர்களாக, கல்வி கற்றவர்களாக, கடிதங்களும் குறிப்புகளும் எழுதத் தெரிந்தவர்களாக இருக்க வண்டியது முக்கியம். ஆனால் உண்மையில் அப்படி நேர்மையாளர்களாக நடந்ததார்களா என்பது சந்தேகமே.

கோவாவின் இன்குசிஷன் சமயத்தில் அங்கு பயணித்த ஃப்ரெஞ்சுப் பயணியான டாவர்னியரின் கூற்றின்படி, கிறிஸ்துவுக்கு எதிரானவர்கள் என அறியப்படுகிறவர்களின் வீடுகளில் தேடுதல் நடத்துகையில், அங்கிருந்த விலையுயர்ந்த மேசை, நாற்காலிகள், தங்க, வெள்ளி நகைகள், பணம் போன்றவை அந்தக் குற்றவாளி குற்றமற்றவன் என நிரூபணமானால், அவனிடமே திரும்பக் கொடுக்கவேண்டும் என்பது சட்டம். ஆனால் உண்மையில் அப்படி நடக்கவில்லை. அதற்குப் பதிலாக இன்குசிஷன் விசாரணைகள் நடத்துவதற்கு அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்ட பொருட்கள் உபயோகப்பட்டுத்தப்பட்டுவிட்டதாகக் கூறப்பட்டது.

இதனையே இன்னொரு ஃப்ரெஞ்சுப் பயணியான டெல்லோன், ஜனங்களின் மனதில் அச்சத்தை மூட்டிய இன்குசிஷன் அதிகாரிகள் அதனைத் தங்களின் சுயநலத்திற்காக உபயோகப்படுத்திக் கொண்டார்கள். கைதிகளிடம் கைப்பற்றப்பட்ட விலையுயர்ந்த பொருட்களை ஏலம்விடும் சமயத்தில் தங்களின் சொந்த வேலைக்காரர்களை அங்கு அனுப்பிக் குறைந்த விலைக்கு அந்தப் பொருட்களை வாங்கச்செய்தனர். அவர்களை எதிர்த்து அதிக விலைக்கு ஏலம்கேட்க எவரும் முன்வரவில்லை என்பது முக்கிய காரணம். எவ்வளவு பணம் குற்றவாளிகளிடமிருந்து கைப்பற்றப்பட்டது என்பதற்கு முறையான கணக்குகளையும் அவர்கள் இன்குசிஷன் அலுவலகத்திற்குச் சொல்லவில்லை. அவர்கள் சொன்ன தொகையே ஏற்றுக்கொள்ளப்பட்டது. மீண்டும் அதனைச் சரிபார்க்க எவரும் முன்வராததால் இன்குசிஷன் அதிகாரிகள் கொழுத்த லாபமடைந்தார்கள்.” என எழுதியுள்ளார்.

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அப்பாவி ஹிந்துக்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களின் மனைவிகளைச் சந்தித்த இன்குசிஷன் அதிகாரிகள், அவர்களின் கணவர்களை விடுதலை செய்வதாக சத்தியம்செய்து  பணத்தை வாங்கிக்கொண்டு சென்ற சம்பவங்களும் பதியப்பட்டிருக்கின்றன.

இன்குசிஷன் விசாரணை செய்தவர்கள் செய்த பல நேர்மையற்ற செயல்களைக் குறித்தான தகவல்கள் அனைத்தும் இன்றைக்கும் கிடைக்கின்றன. உதாரணமாக, கோவாவின் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த டாக்டர் அண்டோனியோ நூரன்ஹா எழுதிய “The Hindus and the Portuguese Republic” இதுகுறித்தான பல தகவல்களை அளிக்கிறது. லிஸ்பனின் எவோரா நகரிலிருந்த கதீட்ரல் சர்ச்சின் ஆர்ச் பிஷப்பாக 1897-ஆம் வருடம் பணியாற்றிய பாதிரி அண்டோனியோ வியரியா இன்குசிஷன் விசாரணைகளைக் குறித்து இவ்வாறு குறிப்பிடுகிறார்:

இன்குசிஷன் விசாரணைகளை நடத்திய டிரிபியூனல்கள் எல்லா இடத்திலும் இருந்தனவென்றாலும், கோவாவில் இருந்த இன்குசிஷன் விசாரணை டிரிபியூனலுக்கு இணையான படுமோசமான, இனவெறி கொண்ட, அயோக்கியர்களால் முழுமையாக ஆக்கிரமிக்கப்படதொரு டிரிபியூனல் வேறெங்கும் இல்லை. இங்கிருந்த இன்குசிஷன் அதிகாரிகள் ஹிந்துப் பெண்களையும் கைதுசெய்து சிறையிலடைத்தார்கள். அங்கு தங்களது மிருகவெறியை அவர்களிடம் தீர்த்துக்கொண்ட பின்னர் அந்தப் பெண்களைக் கிறிஸ்துவுக்கு எதிரானவர்கள் எனக் கூறி கட்டைகளில் கட்டி தீவைத்து எரித்துக் கொன்றார்கள்

இன்குசிஷனின் டிரிபியூனலின் இன்னொரு முக்கிய வேலை புத்தகங்களை தணிக்கைசெய்வது. இன்குசிஷன் சட்டங்களில் தடைசெய்யப்பட்ட புத்தகங்களை வைத்திருப்பதும், அதனைப் படிப்பதும் குற்றம் எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தடைசெய்யப்பட்ட புரெட்டஸ்டண்ட் மதப் புத்தகங்களை வைத்திருந்த தனது கணவனை கத்தோலிக்க மனைவியானவள் இன்குசிஷன் விசாரணை அதிகாரிகளிடம் காட்டிக்கொடுத்த சம்பவங்களும் உண்டு. புத்தகங்களைப் படித்து அவற்றைத் தணிக்கை செய்வதற்கென தனியான விசாரணை அதிகாரிகளும் நியமிக்கப்பட்டிருந்தார்கள். குவாலிஃபிகடொரெஸ் [Qualificadore]s என்றறியப்பட்ட அவர்களின் முக்கிய வேலை கோவாவில் எழுதப்பட்ட புத்தகங்கள் அச்சடிக்கப்படுவதற்கு முன்னர் அவற்றைப் படித்து கிறிஸ்துவுக்கு எதிரானவற்றை நீக்குவது, வெளியிலிருந்து கொண்டுவரப்படும் புத்தகங்களை ஆராய்ந்து, அவற்றில் கத்தோலிக்க மதத்திற்கு எதிராக ஏதேனும் சொல்லப்பட்டிருக்கிறதா எனக் கண்டறிவது.

தடை செய்யப்பட்ட புத்தகங்களின் பட்டியலையும் அந்தத் தணிக்கை அதிகாரிகள் வைத்திருந்தார்கள். கோவாவிலிருந்த புத்தகக் கடைகளுக்கு வருடத்தில் பலமுறை சென்று அங்கிருந்த புத்தகங்களை ஆராய்ந்தார்கள். அவற்றில் ஏதனும் தடைசெய்யப்பட்ட புத்தகங்களோ, பரமண்டலத்திலிருக்கும் பிதாவுக்கு எதிரான, கிறிஸ்துவமதத்திற்கு எதிரான புத்தகங்களோ இருந்தால் உடனடியாக அவற்றை வெளியே எடுத்துத் தீவைத்துக் கொளுத்தினாரகள். பின்னர் அந்தப் புத்தகங்களைக் குறித்த தகவல்கள் இன்குசிஷன் விசாரணைக் கமிட்டிக்குத் தெரியப்படுத்தப்பட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. கோவாவிற்குள் நூலகமோ அல்லது புத்தகக் கடையோ வைத்திருந்த எவரேனும் இறந்துவிட்டால், தடைசெய்யப்பட்ட புத்தகங்கள் எதையேனும் வைத்திருந்தானா என்று  அவனது வீட்டிலும், கடையிலும் ஆதியோடு அந்தமாக தேடுதல் வேட்டைகள் நடத்தப்பட்டன.

புதிதாக எழுதப்பட்ட புத்தகங்கள் அச்சடிப்பதற்கு முன்னால் இன்குசிஷன் டிரிபியூனலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அதில் ஆட்சேபகரமாக எதுவும் இல்லாத பட்சத்தில் அச்சடிக்க அனுமதி லைசென்ஸ் வழங்கப்பட்டது. அந்த அனுமதி ஒவ்வொரு புத்தகத்தின் முதல் பக்கத்தில் அச்சடிக்கப்பட்டது. பதினேழாம் நூற்றாண்டில் அச்சடிக்கப்பட்ட புத்தகங்களில் மராத்தியிலும், வட்டார மொழியிலும் அந்த அனுமதிச் சீட்டுகள் அச்சடிக்கப்பட்டன.

அதேசமயம், சமஸ்கிருதத்திலோ, மராத்தியிலோ எழுதப்பட்ட அத்தனை புத்தகங்களும் — அவை எதனைப் பற்றி இருந்தாலும் — பறிமுதல்செய்யப்பட்டு எரிக்கப்பட்டன. அந்தப் புத்தகங்கள் கிறிஸ்துவுக்கு எதிரான உருவ வழிபாடு குறித்த கருத்துக்களைக் கொண்டிருக்கலாம் என்கிற சந்தேகமே அந்தப் புத்தகங்களைக் கொளுத்தக் காரணமாயின. இந்த மூடத்தனத்தினால், பல முக்கியமான, மதச் சார்பு சிறிதும் அற்ற இலக்கியங்களும், அறிவியல் குறித்த புத்தகங்களும், கலை, பண்பாடு குறித்த புத்தகங்களும் தீக்கு இரையாகியிருக்கலாம். இந்திய மொழிப் புத்தகங்கள் மட்டுமல்லாமல், போர்ச்சுகலைத் தவிர்த்த பிற ஐரோப்பியமொழிப் புத்தகங்களும் இவ்வாறு எரிக்கப்பட்டன. இந்த மூடத்தனங்கள் எல்லாம் கோவாவில் இன்குசிஷன் விசாரணைகள் ஆரம்பமாவதற்கு முன்பே தொடங்கிவிட்டன என்பதினை நீங்கள் அறிய வேண்டும். இதனைக் குறித்து நவம்பர் 28, 1548-ஆம் வருடம் பாதிரி ஜொகோவோ-டி-அல்பர்கர்க் எழுதிய கடிதமொன்று இதனைத் தெளிவாகக் குறிப்பிடுகிறது.

1606-ஆம் வருடம் கூடிய ஐந்தாவது இன்குசிஷன் கமிட்டிக் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது,

புனித கவுன்சிலின் தீர்மானத்தின்படி, எல்லாக் கப்பல்களில் பணிபுரியும் கேப்டன்களும், படைவீரர்களும், கிறிஸ்தவர்களும் ஆங்கிலக் கப்பல்களிலிருந்தோ அல்லது டச்சுக்கப்பல்களிலிருந்தோ கொண்டுவரப்படும் புத்தகங்களை — அது எந்த மொழியில் எழுதப்பட்டிருந்தாலும் படிக்கக்கூடாது எனவும், அந்தப் புத்தகங்களை பிறருக்குக் கொடுக்கக் கூடாது எனவும் அறிவிக்கப்படுகிறது. அம்மாதிரியான புத்தகங்களைக் கண்டவர்கள் உடனடியாக இன்குசிஷன் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவிக்கும்படியும் கூறப்படுகிறது. இந்த அறிவிப்பு எல்லா சர்ச்சுகளிலும் மற்ற அரசாங்கத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வைக்கப்பட வேண்டும்.

அவ்வாறு பிற ஐரோப்பியர்கள், இந்தியர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட புத்தகங்கள் பெட்டிகளில் வைக்கப்பட்டு பெருவிருந்து நாளன்று (Auto da Fe) ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கொளுத்தப்பட்டன. எனினும், சில இன்குசிஷன் பாதிரிகள் இந்தப் புத்தகங்களிலிளுள்ள உள்நாட்டு இலக்கியங்களை அழிப்பது மட்டுமல்லாமல் இந்திய மொழிகளில் எழுதப்பட்ட எல்லாப் புத்தகங்களையும் எரித்துவிட்டு, அதற்குப் பதிலாக போர்ச்சுகீசிய புத்தகங்களை மட்டுமே கொண்டுவர ஆசைப்பட்டார்கள்.

இதைக் குறித்து குன்ஹா ரெவாரா அவரது கொங்கணிமொழி வரலாறு [“Historical Essay on Konkani Language”] என்னும் புத்தகத்தில் இந்த மூடத்தனங்களைக் குறித்துத் தெளிவாக விளக்கியிருக்கிறார். கோவாவின் ஹிந்துக்கள் அவர்களது தாய்மொழியில் பேசுவதும், எழுதுவதும் தடைசெய்யப்பட்டு அதற்கு பதிலாக அவர்கள் போர்ச்சுகீசியமொழியை மட்டுமே பேச, எழுதவேண்டும் என நிர்பந்தப்படுத்தப்பட்டார்கள். அவ்வாறு அவர்களின் மொழியை அழிப்பதால் அவர்களால் தங்களின் மொழியில் எழுதப்பட்ட — கிறிஸ்துவுக்கு எதிரான — புத்தகங்களைப் படிக்கவும், ஹிந்து மதச் சடங்குகளைப் பின்பற்ற இயலாமலும் போகும் என்பது அவர்களின் சிந்தனைப் போக்காக இருந்தது. போர்ச்சுகீசிய மொழியைப் பேச இயலாத கிராமத்து மக்கள் பலர் கைதுசெய்யப்பட்டார்கள். மேலும் பல மதமாற்றம் செய்யப்பட்ட ஹிந்துக்கள் ரகசியமாக ஹிந்து ஆலயங்களுக்குச் செல்வதனையும், பாகனீய கடவுள்களை வணங்குவதனையும் கண்டு வெகுண்ட பாதிரிகள், அவர்களின் மொழியை அழித்தாலன்றி கிறிஸ்துவின் போதனைகளுக்கு அவர்கள் செவ சாய்க்க மாட்டார்கள் என உரக்க குரலெழுப்பினார்கள்.

அவ்வாறு ரகசியமாக ஹிந்து ஆலயங்களுக்குச் சென்ற — மதம்மாற்றம் செய்யப்பட்ட ஹிந்துக்கள் பலரும் — இன்குசிஷன் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுக் கொடூரமான தண்டனைகளுக்கு ஆளானார்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 கொலைகாரக் கிறிஸ்தவம் — 25

 

Image result for portuguese king de joseபோர்ச்சுகல் அரசன் ஹொசே 1

ஏப்ரல் 6, 1778ல் மார்குவெஸ்-டி-பொம்பால் என்கிற மனிதாபிமானமிக்க மந்திரியின் பேச்சினைக் கேட்டு கோவாவில் கிறிஸ்தவ மதவிசாரணைகளை நிறுத்த போர்ச்சுகீசிய அரசன் டி. ஜோஸெ, முடிவெடுத்தான். அந்த அரசாணை கிடைத்தவுடன் பிப்ரவரி 8, 1774-ஆம் வருடம் கோவாவில் இன்குசிஷன் விசாரணைகள் நிறுத்தப்படுவதாகவும், சிறையில் இருக்கும் ஹிந்துக்களையும் கிறிஸ்தவர்களல்லாத பிறமதத்தினர் அனைவரையும் விடுதலைசெய்ய இன்குசிஷன் விசாரணை நடத்தும் தலைமைப் பாதிரி உத்தரவிட்டான்.

விசாரணை நடந்துமுடியாதவர்களைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் ஒரு பெட்டியில் வைத்து உடனடியாக அடுத்த கப்பலில் போர்ச்சுக்கலில் இருக்கும் கவுன்சிலர் ஜெனரலுக்கு அனுப்பிவைக்க வேண்டுமெனவும், கையிருப்பில் இருக்கும் அத்தனை பணத்தையும் அரசாங்க கஜானாவுக்கும், நிலங்கள் மற்றும் பிறசொத்துக்களை கோவா கவர்னர் வசம் ஒப்படைக்கவேண்டுமெனவும், அந்தத் தகவல்கள் அனைத்தும் ரகசிய காப்பகங்களில் சேர்க்கப்படவேண்டும் எனவும் அந்த உத்தரவு சொன்னது.

பிப்ரவரி 10, 1774-அன்று மார்க்குவெஸ் பொம்பால் அரசனின் உத்தரவை மீண்டும் உறுதிசெய்து இன்குசிஷன் ஜெனரலுக்கும், கோவா கவர்னருக்கும் கடிதங்கள் அனுப்பினார். அரசனின் உத்தரவு எந்த தாமதமும் இல்லாமல் உடனடியாக நடைமுறைப்படுத்தவேண்டும் என அந்தக் கடிதம் வலியுறுத்தியது.

அரசன் டி.ஜோஸே 1778-ஆம் வருடம் மரணமடைய, அவனைத் தொடர்ந்து முதலாம் மரியா என்பவள் பதவியேற்றாள். உடனடியாக மார்க்குவெஸ் பொம்பாலின் மந்திரி பதவியைப் பிடுங்கி அவரைத் துரத்தியடித்தாள். இதையறிந்த — கோவா இன்குசிஷனை நிறுத்தவேண்டும் எனக் கேட்ட அதே  இன்குசிட்டர் ஜெனரல் குன்ஹா —  இந்தியாவில் கிறிஸ்தவமதம் பெரும் அழிவில் இருப்பதால் மீண்டும் கோவாவில் இன்குசிஷனைக் கொண்டுவரவேண்டும் எனக் கேட்க ஆரம்பித்தார்.

கோவாவில் இன்குசிஷன் நீக்கப்பட்டவுடன் ஹிந்துக்களும், மதம் மாற்றப்பட்ட கிறிஸ்தவர்களும் மீண்டும் ஹிந்துப் பண்டிகைகளையும், ஆலயத் திருவிழாக்களையும் வெளிப்படையாகக் கொண்டாடிக் கொண்டிருந்ததனைக் காரணம் காட்டினார் குன்ஹா. புதிதாக ஹிந்து ஆலயங்கள் கட்டப்பட்டுக் கொண்டிருப்பதாகவும், அதன் காரணமாக ஏற்கனவே மதம்மாறிய கிறிஸ்தவர்கள் கூட்டம் கூட்டமாக மீண்டும் ஹிந்துமதத்திற்கே திரும்பிச் செல்லும் ஆபத்து இருப்பதாகவும், இதனைத் தடுப்பது மிகவும் கடினம் எனவும் காரணங்களை அடுக்கினார்.

மக்கள் இப்போது போர்ச்சுகீசிய மொழியைப் பேசுவதில்லை. இதன் காரணமாக கிறிஸ்தவமதத்தின் மேன்மையைக் குறித்து அவர்கள் அறியாதவர்களாக மாறியதல்லாமல், போர்ச்சுகீசிய கலாச்சாரம், அரசு, மதத்தின் இவற்றின்மீது எந்தவிதமான மரியாதையும் இல்லாதவர்களாக மாறிவிட்டார்கள்; ஆகவே, உடனடியாக கிறிஸ்தவமதத்தைப் பரப்புகிற பள்ளிகளைத் துவங்கி, கிறிஸ்துவின் மேன்மையைப் பரப்ப முயலவேண்டும். ஹிந்துக்கள் மீதான இன்குசிஷன் விசாரணைகள் ஒருபோதும் நிறுத்தப்படாமல் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கவேண்டும்.

ஹிந்துக்களுடன் இத்தனை நாள் ஒளிந்து கிடந்த மோசமான கிறிஸ்தவர்களும் வெளியே வந்து அந்த பொய்க்கடவுள்களை வணங்க ஆரம்பித்திருக்கிறார்கள். கோவா மட்டுமல்லாமல் அதன் அருகாமைப் பகுதியைஸ் சார்ந்த ஹிந்துக்களும் கோவாவிற்குள் வந்து அங்கு ஒரு குளத்தினுள் மறைந்திருப்பதாகக் கருதப்படுகிறதொரு புகழ்பெற்ற ஹிந்து ஆலயத்தில் கூட்டமாகப் பிரார்த்தனைகள் செய்ய ஆரம்பித்திருக்கிறாரகள். இந்த ஆலயம் ஒரு நீர்வீழ்ச்சிக்கருகிலிருக்கும் ஒரு தென்னந்தோப்பினுள், டிரினிடி சர்ச்சிற்கு அருகில், பூமியிலிருந்து மிக ஆழத்தில் இருக்கிறது. இங்கு பிரார்த்தனைகள் செய்யவரும் ஹிந்துக்கள் உச்சரிக்கும் மந்திர சத்தங்களினாலும், இசையாலும் கோவா நகரமே எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

எல்லா அதிகாரங்களும் கொண்ட புனித பாதிரிகளை உள்ளடக்கிய, கைது செய்யவும், தண்டனைகள் வழங்கவும் அதிகாரமிருக்கும் ஒரு டிரிபியூனல் மட்டுமே இவர்களை அடக்குவதற்கு ஏதுவாக இருக்கும். அந்த அதிகாரமில்லாத டிரிபியூனல்களினால் பிரயோஜனம் எதுவுமில்லை.

மானுவெல் மார்க்குவெஸ்-டி-அஸவிடோ என்னும் முன்னாள் இன்குசிஷன் அதிகாரியும் மீண்டும் கோவாவில் இன்குசிஷனைக் கொண்டுவரவேண்டும் என்பதில் முனைப்பாய் இருந்தார். இக்கூப்பாடு போர்ச்சுகலிலும், கோவாவிலும் உயர்ந்து ஒலிக்க ஆரம்பித்தது.

ஏப்ரல் 1779-ஆம் வருடம் கோவாவில் மீண்டும் இன்குசிஷன் விசாரணைகள் துவங்கின. முன்பைப் போல கொடூரமான தண்டனைகளைக் கொடுக்காமல் ஹிந்துக்களிடம் நைச்சியமாகப் பேசி அவர்களின் மனதை மயக்கிக் கிறிஸ்தவ மதமாற்றம் செய்வதினைப்பற்றி யோசிக்க வேண்டும் என்னும் குரல்களும் ஒலித்தன.

இன்குசிஷன் டிரிபியூனல் மேலும் முப்பது வருடங்கள் கோவா வாழ் ஹிந்துக்களைப் பாடாய்ப்படுத்திக் கொண்டிருந்தது. இருப்பினும் முதலாவது விசாரணைகளைப் போல இல்லாமல் தண்டனைகள் மிதமாகவே இருந்தன. கிறிஸ்தவ பாதிரிகளின் மென்மையான அணுகுமுறைகளால் அருகாமைப் பகுதியிலிருந்து ஏராளமான வியாபாரிகள் கோவாவிற்குள் வந்து குடியேற ஆரம்பித்திருப்பதாகவும், தனது 19 ஆண்டுகால ஆட்சியில் கடுமையான முறையில் தண்டிக்கப்பட்ட எந்த கோவா ஹிந்துவையும் தான் காணவில்லையென்றும் மே 2, 1801-ஆம் வருடம் கோவா கவர்னர் எழுதிய கடிதொமொன்று கூறுகிறது. எனவே இன்குசிஷன் விசாரணைகளை மொத்தமாக நிறுத்திவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கிறார் கவர்னர்.

பிப்ரவரி 19, 1810-ஆம் வருடம் பிரிட்டனுடன் செய்துகொண்ட ஒரு ஒப்பந்தத்தின்படி கோவாவில்  பிறமதங்களையும் அனுமதித்து, சகிப்புத் தன்மையுடன் நடந்துகொள்வதாக போர்ச்சுகீசிய அரசாங்கம் ஒப்புக்கொண்டது. அதன்படி, ஜூன் 16, 1812-ஆம் வருடம் போர்ச்சுகீசிய இளவரசர், கோவாவின் வைசிராய் கோண்டெ-டி-சர்செடாஸுக்கு கோவாவில் கிறிஸ்துவின் பெயரால் நடந்த கொடும் இன்குசிஷன் விசாரணைகளை நிறுத்தி, எல்லா மத, இன மக்களை அனுமதிக்க உத்தரவிட்டார்.

வரலாற்றாசிரியர் குன்ஹா ரெவெரா, “புனித விசாரணை என்கிற பெயரில் கட்டாயப்படுத்தி ஒரு சமுதாயத்தின் மொழியை அழிப்பதன் மூலம், அந்தச் சமுதாயம் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளவைக்க இயலாது என்பதினை போர்ச்சுகீசிய பாதிரிகளும் அவர்களது ஆதரவாளர்களும் உணர்ந்து கொள்ளவில்லை. அதன் காரணமாக போர்ச்சுகீசிய பேரரசு இந்தியாவில் அழிவுண்டு கிடந்தது” என்கிறார்.

இந்தியாவில் இங்குசிஷன் விசாரணையால் ஏற்படப் போகும் பின்விளைவுகள் குறித்து போர்ச்சுகீசிய அறிஞர்கள் பலர் தொடர்ந்து அரசனை எச்சரித்துக் கொண்டிருந்தார்கள். டிசம்பர் 19, 1729 அன்று போர்ச்சுகீசிய வைசிராய் ஜெஹோவொ சல்தான்ஹா-ட-காமா அவரது அரசருக்கு எழுதிய கடிதமொன்று இதனை விளக்குகிறது.

இந்தியாவில் போர்ச்சுக்கீசிய அரசாங்கத்தின் அழிவு கண்முன்னே தெரிகிறது. இதற்குக் காரணம் இங்கு தேவையான பொருளாதார நடவடிக்கைகள் இல்லாமல் போனது. கோவாவின் வியாபாரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களான ஹிந்துக்களும், முஸ்லிம்களும் இங்குசிஷன் விசாரணைகளின் பயங்கரங்களைக் கண்டு அஞ்சி நடுங்கினார்கள். அவர்களின் மதச்  சடங்குகள் கிறிஸ்துவுக்கு எதிரானவை என்று சொல்லப்பட்டன. ஹிந்துக்கள் கடுமையான தண்டனைகளுக்குப் பின்னும் மதம்மாற மறுத்து, அதற்குப் பதிலாக உணவும், தண்ணீரும் உட்கொள்ளாமல் உண்ணாவிரதம் இருந்து மரித்தார்கள். இவர்களிடையே இருந்த சாதி உட்பிரிவுகளும் இதனை எளிதாக்காமல் மிகவும் சிக்கலாக்கின. இந்தத் தேவையற்ற வன்முறையே கோவாவில் எந்தவொரு பொருளாதார நடவடிக்கைகளும் இயங்காமல் போனதற்கு முக்கிய காரணம் எனத் தங்களுக்கு நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன்.

வைசிராய் மேலும் சொல்கையில், இந்தியாவின் பிற பகுதிகளைப் போல அல்லது போர்ச்சுகீசிய மற்றும் ஐரோப்பிய பகுதிகளில் இருக்கு நீதி பரிபாலங்கள் குறித்த நல்ல அபிப்ராயம் இந்த வியாபாரிகளுக்கு இருந்தாலும், கடுமையான மதத் தண்டனைகளுக்கு அஞ்சியவர்களாக இருந்தார்கள் எனக் குறிப்பிடுகிறார். தங்களின் மதச் சடங்குகளைச் சுதந்திரமாகப் பின்பற்ற விடாத கோவாவில் இருப்பதனைவிடவும் நீதி பரிபாலனம் சரியில்லாத பிறபகுதிகளுக்கு அல்லது ஃப்ரெஞ்சுக்காரர்கள் மற்றும் பிரிட்டிஷ்காரர்கள் ஆளும் பகுதிகளுக்குச் செல்வதனையே அவர்கள் விரும்பினார்கள்.

அதேசமயம் அவர்கள் தங்களின் பூர்வீகமான போர்ச்சுகீசிய பகுதிகளுக்கு வருவதனை மனதளவில் விரும்பினார்கள். கிறிஸ்தவமதத்தைத் திணிக்கும் இன்குவிஷனையும் கடும் தண்டனைகளையும் நீக்கினாலன்றி அவர்கள் கோவா பகுதிக்குத் திரும்பிவருவது எளிதில்லை. அப்படியே அனுமதித்தாலும் தங்களின் மதத் திருவிழாக்களையோ அல்லது திருமணங்களையோ பொதுவெளியில் கொண்டாட இயலாமல் பூட்டிய வீட்டிற்குள் கொண்டாடுவதனையும் அவர்கள் வெறுத்துக்கொண்டிருந்தார்கள். தங்களின்மீது போலித்தனமான குற்றச்சாட்டுகளைக் கூறுபவர்களுக்கு எதிரான எந்த நடவடிக்கைகளையும் புனித விசாரணைகளின் போது அவர்களால் எடுக்க இயலாமல் துன்புற்றுக் கொண்டிருந்ததுவும் இன்னொரு காரணம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 கொலைகாரக் கிறிஸ்தவம் – 26

 

 

கோவாவிற்குத் திரும்பி வரமறுக்கும் வியாபாரிகளைக் குறித்து வைசிராய், ஜனவரி 18, 1727லும், மற்ற சமயத்திலும் போர்ச்சுகீசிய அரசருக்கு எழுதிய கடிதங்களில், இன்குசிஷன் விசாரணைகள் காரணமாக பல நல்ல ஹிந்துக்கள் சிறையில் அடைக்கப்பட்டு கொடுமைப் படுத்தப்பட்டதின் காரணமாக கோவாவின் வடபகுதியிலிருந்த மக்கள் அனைவரும் வெளியேறியதால், தாணா மாவாட்டத்தில் இருக்கும் பல நல்ல போர்ச்சுகீசிய தொழிற்சாலைகள் வேலைசெய்ய ஆட்கள் கிடைக்காமல் நஷ்டமடைந்திருப்பதாகவும், அங்கிருந்து சென்றவர்கள் பாம்பேயில் (மும்பை) சிறப்பான தொழிற்சாலைகள் அமைத்துக் கொண்டிருப்பதாகவும் விளக்குகிறார்.

மேளும், போர்ச்சுகீசிய அரசாங்கம் உடனடியாக பிரிட்டிஷ்காரர்களிடமிருந்து பம்பாயை மீண்டும் விலைக்கு வாங்கிக் கொள்ளவேண்டும் என்றும்,. (போர்ச்சுக்கீசியர் வசமிருந்த பம்பாயை பிரிட்டிஷ்காரர்கள் விலைக்கு வாங்கினார்கள் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்). பம்பாயில் பிரிட்டிஷ் தொழிற்சாலைகள் நன்றாக நடப்பதாகவும், ஒவ்வொரு வருடமும் 1,60,000 ஜெராஃபின் (போர்ச்சுகீசிய கரன்ஸி)  லாபம் வருவதாகவும், அங்கு (பம்பாயில்) நிலவும் மதப்பிணக்குகளற்ற சுதந்திரச் சூழ்நிலையே இந்தத் தொழில்வளப் பெருக்கத்திற்கு முக்கிய காரணம் எனவும் எச்சரிக்கிறார்.

ஆர்க்கைவோ போர்ச்சுகீஸ் ஓரியன்டல் [Archivo P0rtugues Oriental] என்ற பத்திரிகையை நடத்தும் குன்ஹா ரிவாரா என்பவர், “போர்ச்சுகீசிய மதவெறியர்களால் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட ஹிந்துக்கள் அந்தப் பிரச்சினைகள் எதுவுமில்லாத பம்பாய்க்குப் போய் அந்த நகரைப் பொருளாதார ரீதியில் வெற்றியடையச் செய்கிறார்கள்,” என்கிறார். கோவாவில் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்ட ஹிந்துக்களில் பலருக்கு வியாபாரம் செய்வதற்கோ அல்லது அரசுப் பணிகளில் ஈடுபடுவதற்கோ தேவையான கல்வியும், தகுதிகளும் இல்லை எனப் போர்ச்சுகீசிய புனித விசாரணை நடத்தியவர்களே ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.

மதம்மாறிய பெரும்பாலோர் போர்ச்சுகீசியர்கள் தரும் பொருளுதவிக்காகவும், பதவிகளுக்காகவும் மதம்மாறியவர்களேயன்றி தகுதியானவர்கள் அல்ல. இருப்பதை வைத்துக் கொண்டு தாங்கள் சொகுசான வாழ்க்கையை வாழலாம் என்பதற்காக மதம்மாறிய ஹிந்துக்கள் எப்படி கடினாமாக உழைப்பார்கள்? எனவே புதிதாக மதம்மாறியவர்கள் போர்ச்சுகீசிய மதவெறியர்களால் விரட்டியடிக்கப்பட்ட ஹிந்துக்கள் மற்றும் முஸ்லிம்களின் இடத்தை இட்டு நிரப்ப இயலவில்லை என்பதே உண்மை.

இன்குசிஷன் விசாரணைகளைக் குறித்தும் அதன் பின்விளைவுகளைக் குறித்தும் பெயரறிவிக்காத ஒருவர், 1778-ஆம் வருடம் புனித விசாரணைகள் நிறுத்தப்பட்டபிறகு, எழுதிய குறிப்புகள் இன்றைக்கும் லிஸ்பன் நகரில் இருக்கும் நூலகத்தில் இருக்கிறது. அது கோவாவில் நிகழ்ந்த மத பயங்கரங்களைக் குறிப்பிட்டு, சர்ச்சுகளும், அரசாங்கமும் தனித்தனியே இயங்க வேண்டும் எனச் சொல்கிறது..

போர்ச்சுகீசிய அரசு ஒரு காலத்தில் கிழக்கின் பெரும்பாலான நாடுகளில் வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்தார்கள். கிழக்கின் பெரும்பகுதியை தங்கள் ஆட்சியின் கீழ்க் கொண்டுவந்திருந்தார்கள். எனினும் மதவெறியர்கள் அங்கு தலையெடுத்து பேயாட்டம் ஆடி ஓய்ந்த பிறகு போர்ச்சுகீசிய அரசு சுருங்கி கோவா, டையூ, டாமன் போன்ற இந்தியப் பகுதிகளிலும், சீனாவின் மக்காவ் பகுதிகளிலும் மட்டுமே ஆட்சி புரியும் நிலைக்குத் தள்ளப்பட்டது. இந்த அவல நிலைக்கு கட்டற்ற கிறிஸ்தவ மதவெறியே காரணம் என்று மேற்கண்ட எழுத்தாளர் உறுதிபடக் கூறியிருக்கிறார்.

கோவாவில் இன்குசிஷன் விசாரணைகளை நடத்த அனுமதிக்கும் போர்சுகீசிய அரசன் மூன்றாம் ஜொகோவோ, அந்த விசாரணைகள் கிறிஸ்துவர்களிடம் மட்டுமே நடத்தப்படவேண்டும் எனவும் பிற மதத்தவரகள் இதனால் பாதிக்கக்கூடாது என்று கூறியே அனுமதி அளித்தான். எனினும் மூன்றாம் ஜெகோவோ இறந்தபிறகு அந்த உத்தரவு காற்றில் பறக்கவிடப்பட்டு, அது பிற மதத்தவர்களான ஹிந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் மீது திணிக்கப்பட்டது. இதனால் ஹிந்துக்கள், முஸ்லிம்கள், , வியாபாரிகள், அரசுப்பணி செய்பவர்கள் கோவாவை விட்டு வெளியேறியதன் காரணமாக கோவாவின் பொருளாதாரம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது என்பதில் சந்தேகமில்லை. எனவே கோவாவில் குடியேறிய போர்ச்சுகீசியர்கள் பிழைப்பிற்காக இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் சென்று குடியேறி அங்கு வேலைகள் செய்ய ஆரம்பித்தார்கள். உதாரணமாக வாழ்வதற்கு வழியற்ற முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட போர்ச்சுகீசிய படைவீரர்கள் அருகிருந்த அரசர்கள் மற்றும் போர்ச்சுகீசிய எதிரிகளிடம் பணிபுரிய ஆரம்பித்தார்கள்.

இலங்கையைப் பிடித்த போர்ச்சுகீசியர்கள் அங்கிருந்த குடிமக்களை மிகவும் கொடூரமான முறையில் நடத்தினார்கள். காலான்பினி என்னுமிடத்திலிருந்த சீனப் பேரரசரின் கல்லறையை உடைத்துச் சிதைத்தார்கள். மகாடோஸ் கடற்கரை (Mahatos?) ஓரமிருந்த பல கோவில்களை இடித்து உடைத்தார்கள் போர்சுகீசியர்கள். இடிந்த கோவிலைக் கண்டு கதறி அழுதுகொண்டிருந்தவர்களைப் பிடித்துத் தூக்கிலிட்டுக் கொன்றார்கள். தங்களின் பண்பாட்டையும, கலாச்சாரத்தையும் தூக்கியெறிந்து கொலைவெறியும், கொள்ளையடிப்பதனையும், குரூர புத்தியையும் கைக் கொண்டார்கள் போர்ச்சுகீசியர்கள்.

போர்ச்சுகிசிய அரசு உச்சத்திலிருந்த காலத்தில் பிடிக்கப்பட்ட பகுதிகளிலில் இருந்த 150க்கும் மேற்பட்ட அரசுகளிடமிருந்து அரசனால் கப்பம் எதனையும் பெற இயலவில்லை. இந்தக் கப்பங்கள் இல்லாமல் போர்ச்சுகீசிய ராணுவத்தையும், கப்பல் படையையும், கோட்டைகளையும் அதற்குத் தேவையான ஆயுதங்களையும், பொருட்களையும் வாங்க இயலாத நிலை உருவானது. அந்தப் பகுதிகளில் குடியேறி ஆட்சி புரிந்து கொண்டிருந்தவர்கள் தங்களின் முன்னோர்களைப் போன்ற வீரமற்றவர்களாக மாறியிருந்தார்கள். எனவே கிறிஸ்தவ மதவெறியைக் கையிலெடுத்துத் தனது குடிமக்களைத் தாங்கவொண்ணாத் துயரத்தில் ஆழ்த்திய போர்ச்சுகீசியர்களைக் கண்டு சாதாரண குடிமகன் அஞ்சி நடுங்கினான்.

போர்ச்சுகீசியர்கள் இந்தியா வந்ததற்கு முக்கிய காரணம் வியாபாரம்தான். ஆனால் அவர்கள் அதனைக் கைவிட்டு மதவெறியைக் கையிலெடுத்தார்கள். மதமும், வியாபாரமும் ஒன்றுக்கொன்று எதிரானவை. எனவே போர்ச்சுகீசிய அரசின் அழிவை எவராலும் தடுக்க இயலவில்லை எனக் குறிப்பிடுகிறார் அந்த பெயரறிவிக்காத எழுத்தாளர்.

வியாபாரம் பல நாட்டு, பல மொழி, பல இன மக்கள் ஒன்றிணைய ஒரு முக்கிய காரணம். அம்மாதிரியான மக்கள் கூட்டம் தங்களின் கலாச்சாரத்தை எந்தத் தடையுமின்றித் தொடருவதற்கான அத்தனை பாதுகாப்புகளையும் அளிப்பதே ஒரு சிறந்த ஆட்சியாளனின் அடையாளம். ஏனெனில் வேற்றுமைகளே பல சமயத்தில் ஒருவரை ஒருவர் இணைக்கும் பாலமாகவும் இருக்கும்.

ஆனால் கிறிஸ்தவ மதவெறிபிடித்த இன்குசிஷன் புனித விசாரணைகள் மக்களை ஒன்றிணைய விடாமல் அவர்களை கிறிஸ்தவர், கிறிஸ்தவரல்லாதவர் என இரண்டாகப் பிரித்தன. இதன் காரணமாக அது சாதாரண பிற மதத்துக்கார குடிமகனை அச்சத்திலும், குழப்பத்திலும் ஆழ்த்தியது. இதே மதவெறிச் செயல்கள்  லண்டனிலோ அல்லது ஆம்ஸ்டர்டாமிலோ நடத்தப்பட்டிருந்தால் அந்த நகரங்கள் சுடுகாடுகளாக மாறியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஃப்ரான்ஸின் இரண்டாம் பிலிப்ஸ் மன்னன் இதே இன்குசிஷன் விசாரணைகளை ஃப்ளாண்டர்ஸ் நகரில் துவங்கியபோது அதன் காரணமாக அங்கு ஏற்பட்ட வியாபாரத் தடங்கல்கள் பொதுமக்களின் கோபமாக மாறி ஃப்ரான்ஸில் ஃப்ரெஞ்சுப் புரட்சி ஏற்பட முக்கிய காரணமாகியது என்பது இங்கு நினைவுகூறத்தக்கது.

அதில் பாடம் பயின்ற ஃப்ரான்ஸ் மற்றும் ஜெர்மனி தேசங்கள் இந்தக் கொடுமையிலிருந்து தப்பின. ஏனென்றால் இந்த இரண்டு நாடுகளும் படுபயங்கரமான மதச் சண்டைகளில் ஈடுபட்டவை. அதிலிருந்து அவர்கள் பாடம் கற்றுக் கொண்டார்கள். ஆனால் போர்ச்சுகீசியர்கள் மூடத்தனமாக கிறிஸ்தவ மதவெறியைக் கையிலெடுத்து கோவாவையும் அதனுடன் போர்ச்சுக்கலையும் அழிவுப்பாதைக்கு இட்டுச் சென்றார்கள்.

மேற்கண்ட எழுத்தாளர் குறிப்பிடும் இன்னொரு விஷயம் என்னவென்றால், கோவாவில் புனித விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட பிறகு பல்வேறு பாதிரிகள் தங்குவதற்குப் பல்வேறு கான்வெண்ட்டுகள் ஆரம்பிக்கப்ப்ட்டன. அந்த காலகட்டத்தில் கோவாவில் பயணம் செய்தவார்கள் ஏறக்குறைய 60 கான்வெண்ட்டுகளைக் கண்டதாகக் குறிப்பிடுகிறார்கள். இந்தக் கான்வெண்டுகளில் ஏறக்குறைய 20,000 பாதிரிகள் தங்கியிருந்ததாகவும், அவர்களுக்குத் தேவையான உணவும், உடையும் கோவாவாசிகளிடமிருந்து வசூலிக்கப்பட வரியிலிருந்து கொடுக்கப்பட்டதாகவும் தெரிகிறது. இறுதியில் கோவாவின் வியாபாரம் இந்தக் கான்வெண்ட் வாசிகளின் கையில் சிக்கிப் பின்னர் அதுவே போர்ச்சுகீசிய அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கும், அவமானத்திற்கும் காரணமாயிற்று. அங்கிருந்த பாதிரிகள் அரசனைக் கூட மதிக்காகமல் கப்பல், கப்பலாக தங்களுக்குத் தேவையானவற்றை வரவழைத்து உண்டு கொழுத்தார்கள்.

கோவாவில் இன்குசிஷனை நீக்கியதோடு மட்டும் நில்லாமல் அதனுடனேயே காண்வெண்டுகளில் உண்டு திரியும் இந்த கொழுத்த பாதிரிகளையும், அவர்களது நடவடிக்கைகளையும் முடக்கியிருக்க வேண்டும் என எழுதுகிறார் அந்த எழுத்தாளர்.

கிறிஸ்துவின் பெயரால் வெறியாட்டம் நிகழ்த்திய இந்த பாதிரிகளின் கொடூரச் செயல்களால் இந்திய ஹிந்துக்களின் மனதில் கிறிஸ்துவ மதத்தினைக் குறித்த பெரும் வெறுப்பு விதைக்கப்பட்டது என்றால் மிகையல்ல. போர்ச்சுகீசியர்கள் பிற மதங்களை மதிக்காததன்மை, பிற மதத்தவரின் மீது அவர்கள் நிகழ்த்திய குரூரங்கள், இரக்கமற்ற அவர்களின் நடவடிக்கைகள் கிறிஸ்த மதத்தின்பால் அச்சத்தையும், அவநம்பிக்கையையும் சாதாரண ஹிந்துக்களின் மனதில் தோற்றுவித்தன. அதுவே இன்றைக்கும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இத்துடன் கோவா புனித விசாரணைகள் குறித்த பகுதி முடிவுக்கு வருகிறது. இனிவரும் பகுதிகளில் உலகின் பிற நாடுகளில் மதவெறி பாதிரிகள் கிறிஸ்துவின் பெயரால் நிகழ்த்திய படுகொலைகளையும், கலாச்சார, இன அழிப்புகளையும் தொடர்ந்து காண்போம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 கொலைகாரக் கிறிஸ்தவம் – 27

 

கிறிஸ்துவின் பெயரால் கோவாவில் போர்ச்சுகீசியர் ஹிந்துக்களுக்குச் செய்த அதே கொடுமைகளை இலங்கையில் யாழ்ப்பாணத்து ஹிந்து தமிழர்களுக்கும் செய்தனர்.

1560லிருந்து 1621வரை போர்ச்சுகீசிய மேஜரும், இலங்கையின் கவர்னருமான ஃபிலிப்பே-டி-ஒலிவெரா ஏறக்குறைய 500 ஹிந்துக் கோவில்களை இடித்தான். 1575-ஆம் வருடம் சிலாவில் இருந்த சிலாபம் முனீஸ்வரன் கோவில் இடிக்கப்பட்டது. 1588-ஆம் வருடம் தேவனுவேராவில் இருந்த விஷ்ணு ஆலயமும், மாதோட்டத்தில் இருந்த மாதோட்டம் திருக்கேதீஸ்வர சிவாலயமும் இடிக்கப்பட்டன.

1619ல் போர்ச்சுகீசியர்களால் யாழ்ப்பாணம் கைப்பற்றப்பட்ட பிறகு தமிழர்களின் மீதான அவர்களின் பிடி இறுகியது. ஆரம்பத்தில் தமிழ் அரசர்களைத் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்து அவர்களின் மூலமாக தமிழர்களை ஆண்டு கொண்டிருந்த போர்ச்சுகீசியர்கள், பின்னர் நேரடியாகவே தமிழர்களை ஆளத் துவங்கினர். இதன் காரணமாகத் தமிழர்கள் மத்தியில் கிறிஸ்துவ மதமாற்றம் துரிதப்படுத்தப்பட்டது. இதன் பின்னனியில் யாழ்ப்பாணத்து ஹிந்துக் கோவில்கள் இடித்துத் தள்ளப்பட்டன.

1621 பிப்ரவரி 2-ல் யாழ்ப்பாணத்தில் போர்ச்சுகீசிய உயரதிகாரியாகப் பதவியேற்ற கவர்னர் ஒலிவேராவின் ஆணையின்படி அன்றே நல்லூரின் புகழ்பெற்ற கந்தசுவாமி ஆலயம் இடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, 1622-ஆம் வருடம் இன்னொரு புகழ்பெற்ற பெருங்கோவிலான ஆரியச் சக்கரவர்த்தி ஆலயமும், திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலயமும் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன.

இடிக்கப்பட்ட ஆலயங்களிலிருந்து எடுக்கப்பட்ட செங்கற்களும், சிலைகளும் போர்ச்சுகீசியர்கள் கட்டிக் கொண்டிருந்த கோட்டைச் சுவர்களை பலப்படுத்தவும், புதிய பல சர்ச்சுகள் யாழ்ப்பாண நகருக்குள் கட்ட உபயோகப்படுத்தப்பட்டன.

உலகின் மிகப்பழமையான மொழியில் எழுதப்பட்ட ஓலைச்சுவடிகளும், தாமிரப் பட்டயங்களும், தமிழர்களின் தொன்மையான வரலாறு அடங்கிய பல அபூர்வமான நூல்களும் வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணத்து பழமையான சரஸ்வதி மஹால் நூலகாத்தையும், அருங்க்காட்சியகத்தையும் இடித்துத் தகர்த்ததுதான் இக்கிறிஸ்தவ மதவெறியனான ஒலிவேரா செய்த மாபெரும் குற்றம் எனலாம்.

இந்தியாவிற்கு வந்தததைப் போலவே இலங்கையிலும் வியாபாரம் செய்யவும், பணம் சம்பாதிக்கவும்தான் வந்த  போர்ச்சுகீசியர்கள், தங்களிடமிருந்த ஆயுத மற்றும் கப்பல்படையின் பலத்தால் கடற்கரையோரப் பகுதிகள் முழுவதையும் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார்கள். எனவே இலங்கையில் வியாபாரம் செய்யவந்தவர்கள் அனைவரும் அவர்களின் தயவை நாடி இருக்கவேண்டியதாயிற்று.  யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியபிறகு வியாபாரத்தையோ அல்லது உள்கட்டுமானத்தையோ பலப்படுத்த போர்ச்சுகீசியர்கள் எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை.

அதற்குப் பதிலாக இவாஞ்சலிச [மதமாற்றும்] கிறிஸ்தவம் யாழ்ப்பாணப்பகுதிகளில் ஊக்குவிக்கப்பட்டதால் ஏராளமான ஹிந்துத் தமிழர்கள் கிறிஸ்தவர்களாக இந்தக் காலகட்டத்தில் மதமாற்றம் செய்யப்பட்டார்கள். மறுத்தவர்கள் கொடூரமான தண்டனைகளுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். 1658 ஜூன் 21-ஆம் தேதி டச்சுக்காரர்கள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும்வரை போர்ச்சுகீசிய மதவெறிக் கிறிஸ்தவர்களின் அட்டகாசம் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருந்தது.

போர்ச்சுகீசியர்கள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதற்கு முன்பிருந்தே கத்தோலிக்க மிஷனரிகள் யாழ்ப்பாணத்திற்கு வந்து குவிந்து கொண்டிருந்தார்கள். எனினும் 1591 நவம்பர் மாதம் போர்ச்சுகீசியர்கள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய பிறகு ஃப்ரான்ஸிஸ்கன் பாதிரிகள் யாழ்ப்பாணத்தையும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த முக்கியஸ்தர்களையும், முதலியார்களையும், கிராமசபைத் தலைவர்களையும் குறிவைக்கத் துவங்கினார்கள்.

போர்ச்சுகீசிய ஆவணங்களின்படி, அதிகாரத்தில் அமர்ந்திருந்த போர்ச்சுகீசிய அதிகாரிகள் தங்களின் அதிகாரத்தை கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதற்காக உபயோகிக்க ஆரம்பித்தார்கள் எனத் தெரிகிறது. கிறிஸ்தவர்களாக மாறிய ஹிந்துத் தமிழர்களுக்குப் பதவிகளும், பரிசுகளும் கொடுத்து ஊக்குவிக்க ஆரம்பித்தார்கள். யாழ்ப்பாணத்தில் நிலம் வைத்திருந்த பெருநிலக்கிழார்கள் கட்டாயப்படுத்தப்பட்டு ரோமன் கத்தோலிக்கர்களாக மாற்றப்பட்டார்கள்.

1622ல் ஜெர்ஸ்யூட் பாதிரிகள் யாழ்ப்பாணத்திற்குள் நுழைந்து அங்கு ஒரு கல்லூரியை ஸ்தாபித்ததுடன், யாழ்ப்பாணத்தைத் தங்களின் தலைமையகமாகவும் மாற்றினார்கள். போர்ச்சுகீசிய ஆட்சியாளர் யாழ்ப்பாணத்தை 42 கிறிஸ்தவ மண்டலங்களாகப் (Parishes)  பிரித்து அதில் 24 பகுதிகளை  ஃப்ரான்ஸிஸ்கன் பாதிரிகளுக்கும் எஞ்சியவைகளை ஜெர்ஸ்யூட் பாதிகளுக்கும் அளித்தார்கள். அந்தப் பகுதிகளில் மதமாற்ற வேலைகள் செய்து கொண்டிருந்த ஒற்றை டொமினிகன் பாதிரியை யாழ்ப்பாணக் கோட்டைப்பகுதிக்கு அனுப்பி வைத்தார்கள். 1634-ஆம் வருட இறுதிக்குள் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட அத்தனை கிறிஸ்துவ மதமாற்ற சபைகளும் முழுவேகத்தில் இயங்க ஆரம்பித்தன.

1640-ல் எழுதப்பட்ட ஒரு மிஷனரிக் குறிப்பின்படி யாழ்ப்பாணத்திலிருந்த அத்தனை ஹிந்துத் தமிழர்களும் கிறிஸ்தவர்களாக மதம்மாற்றப்பட்டதாகக் கூறுகிறது. போர்ச்சுகீசியர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து விரட்டியடிக்கப் படுவதற்குச் சிறிது காலத்திற்கு முன் “யாழ்ப்பாணம் ஒரு முழுக் கிறிஸ்தவப் பகுதி” என போர்ச்சுகீசிய அதிகாரியொருவர் பெருமையுடன் குறிப்புகள் எழுதினார். அது உண்மையாகவே இருக்க வாய்ப்பிருக்கிறது. மதவெறி பிடித்தவர்களான போர்ச்சுகீசியர்களுக்கு அஞ்சி யாழ்ப்பாணத்துத் தமிழர்கள் அனைவரும் கிறிஸ்தவமதத்தை மட்டுமே பின்பற்றி வந்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. அப்படி இல்லாவிட்டாலும் வெளிப்படையாக தங்களின் மதமான ஹிந்து மதத்தைப் பின்பற்றாமல் இருந்திருக்கக்கூடும்.

 “போர்ச்சுகீசிய மிஷனரிகள் ஏதோ ஒரு கிராமத்திற்கு வருகை தருவதற்கு முன்பு, அவர்களின் வருகையை முரசறிவிப்பார்கள் அதைக் கேட்டு, பொது இடத்தில் கூடிய கிராமவாசிகளிடம் அந்தப் பாதிரிகள், கிராமவாசிகள் வணங்கும் ‘பொய்யான’ கடவுளர்களை மறுதலித்து ‘இயேசு கிறிஸ்துவான தங்களின் உண்மையான ஒரே இறைவனை’ வணங்கும்படிச் சொல்வார்கள்.

“பொது இடத்தில் கூடவேண்டும் என வேண்டுகோள் எதுவும் விடுக்கப்படவில்லை. மாறாக போர்ச்சுகீசிய அரசாங்கம் அவர்களை அங்கு வரவேண்டும் என ‘உத்தரவு’ இட்டது. மதமாற்ற மிஷனரிப் பாதிரிகள் போர்சுகீசிய அதிகாரிகள்,  ஆயுதமேந்திய ராணுவத்தினர், உள்ளூர் பெரியமனிதர் சகிதமாகவே கிராமங்களுக்குச் சென்றனர்.  ஞாயிற்றுக்கிழமைகளில் சர்ச்சுக்கு வராதவர்களுக்கு கடுமையான தண்டனைகளும், அபராதங்களும், மரக்கட்டையால் அடிகளும் கிட்டியதால், சர்ச்சுகளில் கூட்டம் அலைமோதியது.” என்று வரலாற்று ஆய்வாளர் அபயசிங்கே, போர்ச்சுகீசிய அதிகாரிகளான டிரினிடாடே, குயிர்ரோஸ் என்ற இருவரும் எவ்வாறு தமிழ்ப்பகுதிகளில் மதமாற்றங்களை நடத்தினார்கள் என்பதை விளக்கியிருக்கிறார்.

போர்ச்சுகீசிய ஃப்ரான்ஸிஸ்கன் பாதிரிகள் 25, ஜெர்ஸ்யூட் பாதிரிகள் 12 கிறிஸ்தவப் பள்ளிகளை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்தனர்.  அவை மதமாற்றக் கூடமாக மாற்றப்பட்டு, பைபிள் பாடங்கள் போர்ச்சுகீசிய தமிழ் மொழிகளில் அங்கு படிக்க வரும் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டன.  அதனுடன் மேற்படிப்பு படிக்கும் கல்வி நிறுவனங்களும், கல்லூரிகளும் துவங்கப்பட்டன. ஆனால் அதன் அடிப்படையில் மதமாற்றம் ஒன்றே குறியாக இருந்தது.

இதனால் ஹிந்துக்கள் அச்சத்துடன் வாழ்ந்துவந்தார்கள். வரலாற்றாசிரியரான ஃபெர்னாண்டோ-டி-குயிர்ரோஸ் போர்ச்சுகீசிய ஆட்சியினைப் பற்றி எழுதுகையில், “யாழ்ப்பாணத்து ஹிந்துக்கள் பரிதாபத்திற்குரியவராக” மாற்றப்பட்டார்கள்”, எனக் குறிப்பிட்டிருக்கிறார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 கொலைகாரக் கிறிஸ்தவம் – 28

 

Image result for krishnadevarayaகிருஷ்ணதேவராயர்

கிருஷ்ண தேவராயரின் மரணத்திற்குப் பிறகு அச்சுதராயனின் காலத்தில் போர்ச்சுகீசிய கவர்னரின் நடவடிக்கைகள் முற்றிலும் மாறிவிட்டன. 1544-ஆம் வருடம் போர்ச்சுகீசிய கவர்னரான மார்டின் டிசொசா 27 போர்ச்சுகீசிய கேப்டன்களின் தலைமையில் நாற்பத்தைந்து கப்பல்களை இந்தியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதிக்கு அனுப்பி, திருப்பதிக் கோவிலில் இருக்கும் ஏராளமான தங்க, வைர ஆபரணங்களைக் கொள்ளையடிக்க உத்தரவிட்டான். தஎனினும் அவனது படைகள் அம்முயற்சியில் தோல்வியையே தழுவின.

போர்ச்சுகீசியர்களின் இந்த நடவடிக்கைகளைப் பற்றிக் கேள்விப்பட்ட ராமராஜா, அந்தப் படைகளைத் தாக்கித் தோற்கடித்து விரட்டினான். பின்னர் போர்ச்சுகீசியப் படைகள் திருவிதாங்கூரிலிருந்த சில கோவில்களைத் தாக்கிக் கொள்ளையடித்துக் கொண்டு கோவாவைச் சென்றடைந்தன. பின்னர் விஜயநகர அரசும், போர்ச்சுகீசியர்களும் சமாதான உடன்படிக்கைகளில் கையொப்பம் இட்டுக்கொண்டார்கள். இப்ராஹிம் அடில்ஷாவுக்கு எதிராக இரண்டும் படைகளும் போரிட்டதாகத் தெரிகிறது.

பின்னர் போர்ச்சுகீசிய கவர்னரான அல்ஃபோன்ஸோ டிசொளசா, பட்கல்லைத் தாக்கினான். பட்கல் அரசி நேரடியாக வந்து தனது படைவீரர்களை ஊக்குவித்தும் பட்கல் போர்ச்சுகீசியர் வசம் வீழ்ந்தது.  அங்கு கொள்ளையடித்த பொருட்களை அருகிலிருந்த குன்றில் வைத்து போர்ச்சுகீசியர்கள் பங்கு பிரித்துக் கொண்டிருந்ததைக் கண்ட பட்கல் அரசி அவர்களைத் திடீரெனத் தாக்கி அங்கிருந்து விரட்டியடித்தாள். கப்பலில் தப்பிச்செல்ல நினைத்த பலர் நீரில் மூழ்கி இறந்தார்கள். மேலும் பல போர்ச்சுகீசிய படைவீரர்கள் கொல்லப்பட்டனர். அதனால் கோபமடைந்த கவர்னர் மறுநாள் வெறிகொண்டு மீண்டும் பட்கல்லைத் தாக்கி அதனையும் அதன் சுற்றுப்புறத்தையும் தீயிட்டுக் கொளுத்தினான்.

பட்கல் அரசி 1548 வருடம் போர்ச்சுகீச்யர்களுடன் சமாதானம் செய்துகொண்டு அவர்களுக்குத் தேவையான அரிசி மற்றும் கப்பத்தொகையைத் தருவதாக ஒப்புக்கொண்டாள்

1550-ஆம் வருடம் போர்ச்சுகீசியரகள். தங்களுக்குத் தரவேண்டிய கப்பத்தொகையைத் தரவில்லை என்ற பொய்யான காரணத்துடன் உல்லாலைத் தாக்கி, மங்களூரைச் சூறையாடி அந்த நகரிலிருந்த பெரும் ஹிந்துக் கோவில் ஒன்றினை இடித்து அழித்தார்கள். உல்லால் அரசி சரணடைந்தாள்.

அதற்குப் பத்துவருடங்கள் கழித்து உல்லாலை ஆண்ட இன்னொரு ராணியான புக்காதேவியையும் தாக்கிய போர்ச்சுகீசியர்கள். மீண்டும் மங்களூரை அழித்தனர். அங்கிருந்து தப்பி அருகிலிருந்த மலைப்பகுதிக்குள் தப்பி ஒளிந்த புக்காதேவி இறுதியில் புக்காதேவி போர்ச்சுகீசியர்களுன் கோரிக்கைகள் அனைத்தையும் கடைப்பிடிக்க ஒப்புக் கொண்டாள்.

போர்ச்சுகீசியர்கள் 1566ல் மங்களூரில் ஒரு கோட்டையைக் கட்டிமுடித்தார்கள்.

1522-ஆம் வருடம் அவர்கள் மயிலாப்பூரைக் கைப்பற்றி அங்கு தங்களது குடியேற்றங்களை நிறுவ ஆரம்பித்தார்கள். அந்தக் குடியேற்றங்கள் இருந்த பகுதியே இன்றைக்கு செயிண்ட் தாமஸ் மலை என அறியப்படுகிறது. அன்றைய தினத்தில் மயிலாப்பூர் ஒரு பேரூராக அறியப்படாதிருந்தாலும் 1558-ஆம் வருடவாக்கில் பெரும் வியாபாரத்தலமாக மாறியிருந்தது.

அதே வருடம் ஃப்ரான்ஸிஸ்கன் பாதிரிகள் நாகப்பட்டினம் பகுதியிலிருந்த பல ஹிந்து ஆலயங்களை இடித்தும், அந்த ஆலயத்தின் சிலைகளை உடைத்தும் எறிந்தார்கள். அந்தக் கோவில்கள் இருந்த பகுதிகளில் பல சர்ச்சுகளைக் கட்டினார்கள். அவர்களைப் பின் தொடர்ந்த ஜெசுயிட் பாதிரிகளும் அதனையே தொடர்ந்தார்கள்.

இன்றைய வேளாங்கண்ணி மாதா ஆலயம் போர்ச்சுகீசியரகளால் இடிக்கப்பட்ட ஹிந்து ஆலயத்தின் மீது கட்டப்பட்ட ஒன்றே.

சென்னையில் இன்றிருக்கும் சாந்தோம் சர்ச்சும் அப்பராலும், சம்பந்தராலும் பாடல் பெற்ற தலமாக இருந்த ஹிந்து ஆலயமான கபாலீஸ்வரர் ஆலயத்தைத் தகர்த்துக் கட்டப்பட்ட ஒன்றே.. இன்றைக்கு இருக்கும் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயம் அதன் பின்னர் கட்டப்பட்ட ஒன்று.

கிருஷ்ணதேவராயர் காலத்திலிருந்தே போர்ச்சுகீசியர்களின் அட்டகாசம் ஆரம்பமாகிவிட்டதென்றாலும், தேவராயர் அதனைக் கண்டும் காணமலும் இருக்க வேண்டிய நிலையில் இருந்தார். ஏனென்றால் விஜயநகரப்படைகளுக்குத் தேவையான குதிரைகளைப் போர்ச்சுகீசியர்களிடமிருந்தே வாங்கியாக வேண்டிய நிர்பந்தம் அவருக்கிருந்தது. விஜயநகரத்திற்கென கப்பல்படை எதுவும் இல்லாத காலத்தில் அரேபியாவிலிருந்து, ஐரோப்பாவிலிருந்து குதிரைகளை வாங்கிக் கொண்டுவந்து கிருஷ்ணதேவராயருக்கு விற்றுக் கொண்டிருந்தார்கள் போர்ச்சுகீசியர்கள்.

இதே நிலைமைதான் கிருஷ்ணதேவராயரின் மரணத்திற்குப் பின்னரும் நீடித்தது. அவருக்குப் பின்னர் பதவியெற்ற அவரது மறுமகனான ராமராஜாவும் (ராமராயர்) போர்ச்சுகீசியர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கத் தயங்கினார். எனினும், நாகப்பட்டினத்தில் இடிக்கப்பட்ட ஆலயங்கள் விஜயநகர அரசின் கீழிருந்ததால் அங்கு படையெடுத்துச் சென்ற ராமராயர், இடிக்கப்பட்ட ஆலயங்களில் சிலவற்றை செப்பனிட்டார். சென்னையிலிருந்த ஒரு போர்ச்சுகீசிய காலனியைத் தாக்கி அங்கிருப்பவர்களைப் பிடித்துச் சென்ற ராமராயருக்கு ஒரு லட்சம் பகோடா பணம் கொடுத்து சமாதானம் செய்து கொண்டார்கள் போர்ச்சுகீசியர்.

இதற்குப் பின்னர் வழக்கம்போலவே போர்ச்சுகீசியர்களும், விஜயநகர சாம்ராஜ்யமும் நல்லுறவுடனேயே இருக்க ஆரம்பித்தது. சாந்தோம் பகுதி சதாசிவ ராயரின் காலத்திலும் ஒரு பெரும் வியாபார ஸ்தலமாக முன்னேறியிருந்தது. சோழமண்டலக் கடற்கரைப் பகுதிகளில் தயாரிக்கப்படும் துணிகள் போர்ச்சுகலில் பெரும் புகழடைந்திருந்தது. எனவே இங்கிருந்து கப்பல்கப்பலாக துணிகள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

ராமராயரின் சென்னை விஜயமும், அதே காலத்தில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ஆலயத்தினுள் காணப்பட்ட ரோமன் எழுத்துக்களுடன் கூடிய உடைபட்ட கல்லறைகளின் பகுதியும் குறித்தான சரியான விளக்கங்கள் எதுவும் இதுவரை வெளிப்படவில்லை. இந்த கல்லறைக் கற்களின் ஒன்றிரண்டு பகுதிகள் ஆலயத்தின் கருவறைக்கு மிக அருகில் காணப்பட்டன என்பதனையும் இங்கு குறிப்பிடவேண்டும் (Mysore Gazetteer – Medival Volii-Part-Iii, Page 2043). இந்த ஆலயம் 1564-ஆம் வருடம், சதாசிவராயரால் கட்டப்பட்ட பள்ளிகொண்ட பெருமாள் ஆலயத்திற்கு அருகில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. அனேகமாக அந்தக் கல்லறைக் கற்கள் ராமராயர் தாக்கியழித்த போர்ச்சுகீசியல் காலனியிலிருந்து எடுக்கப்பட்ட கற்களாக இருக்கலாம்.

1549-ஆம் வருடம் கோர்ரியா என்பவரின் தலைமையில் போர்ச்சுகீசியர்கள் ராமேஸ்வரம் ஆலயப்பகுதிகளைக் (வேதாளை) கைப்பற்றினர். ஆலயத்திற்கு அருகில் பதுங்குகுழிகளைக் கட்டிக் கொண்டு அங்கு வணங்கவரும் ஹிந்துக்களை ஆலயத்திற்குள் நுழையவிடாமல் தடுத்தனர். பின்னர், வரி வசூலிக்கப்பட்டு அந்த வரியைச் செலுத்தியவர்கள் மட்டுமே ஆலயத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதனை எதிர்த்த விஜயநகரத்தளபதி விட்டலன் 6000 படைவீரர்களுடன் கோர்ரியாவின் படைகளைத் தாக்கினான். இந்தத் தாக்குதலை எதிர்கொள்ள முடியாத கோர்ரியா அங்கிருந்த, கிறிஸ்தவர்களாக மதம்மாறிய மீனவர்களான பரதவர்களிடம் தஞ்சம் புகுந்தான்.

போர்ச்சுகீசியனான கோர்ரியாவைக் காப்பதற்காக பரதவர்களுக்குத் தலைமை தாங்கிப் போரிட்ட ஒரு கிறிஸ்தவ பாதிரி, விஜயநகரப்படைகளை நடத்திவந்த முஸ்லிம் ஒருவனின் ஈட்டியால் கொல்லப்பட்டான். ராமேஸ்வரத்தில் போர்ச்சுகீசியர் அங்கு கட்டிய கோட்டை தகர்க்கப்பட்டு, அவர்கள் கட்டியிருந்த பதுங்கு குழிகள் மண்ணிட்டு மூடப்பட்டன. ராமேஸ்வரத்தை மீட்ட இந்தப் போருக்கு அன்றைய மதுரையை ஆண்டுகொண்டிருந்த விஸ்வநாத நாயக்கர் உதவிசெய்தார் என வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.

இருப்பினும் கிழக்கு, மேற்கு கடற்கரைப் பகுதிகள் பெரும்பாலும் போர்ச்சுகீசியர்களின் வசம் இருந்தன. விட்டலன், கள்ளிக்கோட்டையைச் சேர்ந்த அரசன் எரப்பாளியுடன் கூட்டுசேர்ந்து போர்ச்சுகீசியர்களைத் தரையிலும், கடலிலும் ஒரேசமயத்தில் தாக்கினான். புன்னைக்காயல் விட்டலனின் கப்பல் படைகளால் தாக்கப்பட்டது. பின்வாங்கி ஓடிய போர்ச்சுகீசியப் படைகளை விட்டலனின் படைகள் சிறைபிடித்தனர். புன்னைக்காயல் கோட்டையைப் பிடித்த எரப்பாளி அங்கு போர்ச்சுகீசிய ஆட்சி முடிவடைந்துவிட்டதாக அறிவித்தார்.

இந்தத் தகவல் கொச்சியை அடைந்ததும் அங்கிருந்த போர்ச்சுகீசியர்கள் புன்னைக்காயலை நோக்கிப் படையெடுத்தார்கள். அங்கு நடந்த போரில் இருபக்கமும் பெரும் சேதம் உண்டானாலும் எரப்பாளி அங்கு கொல்லப்பட்டார். போர்ச்சுகீசிய தளபதி நாகப்பட்டினம் சென்ற படகிலேறித் தப்பிச் சென்று, தமிழ்ப் பரதவர்களை அழைத்துக்கொண்டு மீண்டும் புன்னைக்காயலுக்கு வந்தான். மீதமிருந்த எரப்பாளியின் படைகளை அவர்கள் தோற்கடித்துக் கொலைசெய்தார்கள். விட்டலனைப் பிடித்த போர்ச்சுகீசியர்கள், அவனை அங்கிருந்து தூத்துக்குடிக்குக் கொண்டு சென்றார்கள். விஸ்வநாத நாயக்கருடன் சமாதானம் செய்துகொண்டு விட்டலனை விடுதலை செய்தார்கள்.

இருப்பினும் அந்த சமாதான நடவடிக்கைகள் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. புன்னைக்காயலின்மீது படையெடுத்த விஸ்வநாத நாயக்கர் அங்கிருந்த போர்ச்சுகீசியர்களைத் தோற்கடித்தார். எனவே, புன்னைக்காயலில் வாழ்ந்த அனைவறையும் மன்னார் தீவில் குடியேற்ற முயற்சிசெய்யப்பட்டது.

அச்சமயம் [1545] ஆரல்வாய்மொழி வழியாக திருவிதாங்கூர்மீது படையெடுக்கிறான் வித்தலன். அந்தப் படையெடுப்பைக் கண்டு அஞ்சிய, புதிதாக மதமாற்றப்பட்ட கிறிஸ்தவர்கள் வடக்கிலிருக்கும் காட்டுப் பகுதிகளை நோக்கி ஓடுகிறார்கள்.  அவர்களின் மதமாற்றத்திற்குக் காரணமான சேவியர் (“புனித” சேவியரேதான்) , திருவிதாங்கூர் அரசனான உண்ணி கேரளவர்மாவிடம் சென்று கிறிஸ்தவர்களைக் காக்கும்படி வேண்டினார்.

உண்ணி கேரளவர்மா அதற்குச் சம்மதித்துத் தன் படைகளை ‘புனித” சேவியருக்கு உதவ அனுப்பினார்.  நாகர்கோவில் அருகிலிருக்கும் கோட்டாருக்கு வரும் விட்டலனின் படைகள் அங்கு நின்றுகொண்டிருக்கும் சேவியரையும் அவருடனிருக்கும் கேரளவர்மாவின் படைகளையும் காண்கிறார்கள். பின்னர் என்ன காரணத்தோலோ அந்தப் படைகளைத் தாக்காமல் திரும்பிச் சென்ற. விட்டலன், சிறிது காலத்திற்குப் பிறகு

தூத்துக்குடியில் கிறிஸ்தவ பாதிரி சேவியருடன் சமாதானம் செய்து கொண்டான். சுசீந்திரம் வந்த விட்டலன் அங்கு ஸ்தாணுநாத ஆலயத்தில் தன்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடியதாகத் தெரிகிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 கொலைகாரக் கிறிஸ்தவம் – 29

 

போர்ச்சுகீசியர்களுக்கு இணையாக டச்சுக்காரர்களும் இந்தியாவில் ஹிந்துக்களை மதமாற்றம் செய்யும் மிஷனரி வேலைகளைத் தொடர்ந்தார்கள். எனினும், போர்ச்சுகீசியர்கள் அளவிற்கு வன்முறைகளை அவர்கள் உபயோகிக்கவில்லை. ஆரம்பத்தில் ஒன்றிரண்டு கட்டாய மதமாற்றங்களை அவர்கள் நடத்தினாலும் கத்தோலிக்க போர்ச்சுகீசியர்களின் மதவெறிக்கு முன்னால் புரோட்டஸ்டண்டுகளான அவர்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை.

அதேசமயம் இந்தியாவிற்கு மதத்தைப் பரப்பவந்த பிற ஐரோப்பிய நாட்டுக் குடிமக்களைவிடவும் டேனிஷ் அரசாங்கம் தங்களுக்குத் தேவயானவற்றைச் செய்யவும் அவர்களைப் பாதுகாக்கவும் முன்னின்றது என்பதில் சந்தேகமில்லை. அந்த காலகட்டத்தில் நடந்துகொண்ட பிறநாடுகளைப்போல மிஷனரிகளை நடவடிக்கைகளைத் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த டேனிஷ் அரசாங்கம் பிறமதத்தினவர்களை கட்டாய மதமாற்றம் செய்வதனை அங்கீகாரம் செய்யவில்லை. எனினும், பல திறமையான பாதிரிகளை இந்தியாவிற்கு அனுப்ப வைப்பதில் டேனிஷ் அரசாங்கம் வெற்றிபெற்றது என்பதில் சந்தேகமில்லை.

சீகன்பால்க்

1705-ஆம் வருடம் டேனிஷ் பாதிரிகளான சீகன்பால்க்கும் (Zigenbalg), புலுட்ச்சாவும் (Plutschau) முதன்முதலாக இந்தியாவில் மிஷனரிப் பணிகளைச் செய்வதற்காக அனுப்பிவைக்கப்பட்டார்கள். அவர்களே கிழக்கு ஆசியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட முதலாவது புரோட்டஸ்டண்ட் மிஷனரிகளும் ஆவார்கள் எனபது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் கிழக்குக் கடற்கரையின் ஒரு மூலையில் டேனிஷ்காரர்களின் வசமிருந்த தரங்கம்பாடிக்கு வந்து சேர்ந்த அந்த இரு பாதிரிகளும் உடனடியாக தமிழ்மொழியைக் கற்கவும், அந்தப் பகுதியிலிருந்த மக்களின் நல்லெண்ணத்தைப் பெறுவதிலும் முயற்சிகளைத் தொடங்கினார்கள்.

எனினும் அவர்களின் மதமாற்ற முயற்சிகளுக்கான எதிர்ப்பு அந்தப் பகுதியில் இருந்த பிற ஐரோப்பிய காலணி அதிகாரிகளால் கடைபிடிக்கப்பட்டு அந்த இரு பாதிரிகளும் சிறையில் அடைக்கப்பட்டார்கள். இன்றைக்கு இருப்பதுபோல தகவல்தொடர்பு சாதனங்கள் அதிகமில்லாத அந்தக்காலத்தில் இவ்விரு பாதிரிகள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட தகவல் டேனிஷ் அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட தாமதமானதால் இருவரும் நீண்டகாலம் சிறையில் இருந்தார்கள். பின்னர் ஐரோப்பிய நாடுகளிடையே இருந்த ஒப்பந்தங்கள் காரணமாக சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்கள்.

தங்களின் மதமாற்ற பிரசாரங்களைத் தரங்கம்பாடியில் துவங்கிய சீகன்பால்க், அருகிலிருந்த தஞ்சாவூருக்கும் பின்னர் திருநெல்வேலிக்கும் விரிவுபடுத்தினார். சென்னை ஐரோப்பிய மிஷனரி வேலைகளின் தலைமையகமாக இருந்தாலும், டேனிஷ் மிஷனரிகள் ‘கடற்கரையோர மிஷனரிகள்’ என அறியப்பட்டனர்.

ஹிந்துக்களை வற்புறுத்தி மதமாற்றம் செய்யாதவர்களாக டேனிஷ் புரோட்டஸ்டண்ட் கிறிஸ்தவர்கள் இருந்தாலும், மிகத் திறமையான அவர்களது பிறசெயல்களால் மதமாற்றம்செய்வதில் வெற்றியும் கண்டார்கள். உதாரணமாக, ஐரோப்பிய மொழிகளில் மட்டுமே இருந்த பைபிளை மூன்றே வருடங்களில் “தேவையான அளவுக்கு” தமிழில் மொழிமாற்றம் செய்து, ஹிந்துக்களை மூளைச் சலவை செய்வதிலும் ஓரளவுக்கு வெற்றியும் பெற்றார்கள்.

தமிழகத்தில் பள்ளிகளைத் மதமாற்றக் கருவிகளாகத் துவங்கி, படிக்கவரும் இளம் சிறுவர்களை மனதைத் திருப்பியும், மெதுவான அணுகுமுறைகளாலும் தமிழக ஹிந்துக்களிடையே நன்மதிப்பைப் பெற்றுப் பலரை புரொட்டஸ்டண்ட் கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்வதில் வெற்றி பெற்றார்கள், டேனிஷ் மிஷனரிகள்.

சீகன்பால்க் வெறும் மூன்றரை வருடங்களில்  நூற்றி அறுபது ஹிந்துக்களை புரொட்டஸ்டன்ட் கிறிஸ்துவர்களாக மதமாற்றம் செய்தார். பத்தே வருடங்களில் அந்த எண்ணிக்கை மூன்று மடங்காகியது. ஆகவே, சென்னையில் ஒரு அலுவலகம் தொடங்கப்பட்டு சீகன்பால்க்கின் பாதிரிகள் தெலுங்கிலும், போர்ச்சுகீசிய மொழியிலும், தமிழிலும் மதப்பிரசங்கங்களைச் செய்யத் துவங்கினர்.

இதனால், சென்னையில் மட்டுமே ஒரே வருடத்தில் நூற்றுநாற்பது ஆடுகள் வழி தவறி, இயேசு கிறிஸ்துவின் புரோட்டஸ்டண்ட் பாதையில் பயணிக்கத் துவங்கின. சீகன்பால்க்கின் பைபிளுக்கு பெரும் கிராக்கி ஏற்பட்டதால் மும்பை போன்ற தூரப்பகுதிகளிலும், வட இந்தியாவின் பல பகுதிகளிலும் அச்சுக்கூடங்கள் ஏற்படுத்தப்பட்டு பல மொழிகளில் அது அச்சடிக்கப்பட்டது.

Image result for Friedrich Schwartzஃப்ரெடெரிக் ஷ்வார்ட்ஸ்

சீகன்பால்கிற்குப் பின்னர் 1750-ஆம் வருடம் இந்தியாவிற்கு வந்த மிஷனரியான ஃப்ரெடெரிக் ஷ்வார்ட்ஸின் (Friedrich Schwartz)  வருகை டேனிஷ் மிஷனரிகளிடையே பெரும் உற்சாகத்தைக் கொண்டுவந்தது. ஷ்வார்ட்ஸ் மிஷனரி உலகில், பெரும் மதமாற்றத் திறமை உடையவர் எனக் கணிக்கப்பட்டவர். அவர் இந்தியா வந்த காலத்தில் முதல்தலைமுறை டேனிஷ் மிஷனரிகள் பெரும்பாலோர் உயிருடன் இருக்கவில்லை. தென்னிந்தியாவில் அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாமல் இருந்தபோது வந்த ஷ்வார்ட்ஸ்,, தென்னிந்தியாவில் காலனி அமைத்திருந்த ஃப்ரெஞ்சுக்காரர்கள், ஹிந்து, முஸ்லிம் ஆட்சியாளர்களின் நன்மதிப்பைப் பெற்றார். மேலும், பிரிட்டிஷ்காரர்களின் சமாதான ஏஜெண்ட்டாகவும் வேலைசெய்துவந்தார்.

பதினாறு வருடங்கள் தரங்கம்பாடியிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் மதமாற்றப் பணிகள் செய்த ஷ்வார்ட்ஸ் திருச்சிராப்பள்ளியிலும், தஞ்சாவூரிலும் தனது பணிகளைத் துவக்கினார். பல சர்ச்சுகள் அங்கு கட்டப்பட்டன. 1779—ஆம் வருடம் பிரிட்டிஷ்காரர்களுக்கும், ஹைதர் அலிக்கும் நிகழ்ந்த போர்களில் சமாதானத் தூதுவராக பணியாற்றிய ஸ்குவார்ஷின் தலையீட்டால் பிரிட்டிஷ் ஈஸ்ட் இந்தியா கம்பெனியின் முக்கிய கோட்டை அமைந்திருந்த கடலூர் பேரழிவிலிருந்து காப்பாற்றப்பட்டது. ஷ்வார்ட்ஸால் ஏறக்குறைய 50,000 ஹிந்துக்கள் புரோட்டஸ்ட்டுகளாக மதம்மாறியதாகத் தெரிகிறது. இருப்பினும் இத்தனை முயற்சிகளுக்குப் பின்னரும் 1850-ஆம் வருடம் எடுத்த கணக்கின்படி கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் மிகக் குறைவாகவே இருந்தது.

டேனிஷ் கப்பலில் ஏறி நவம்பர் 11, 1793-ஆம் வருடம் இந்தியவிற்கு வந்த வில்லயம் கேரியே டேனிஷ் மிஷனரிகளுக்கு அடுத்தபடியாக, பிரிட்டிஷ் இவாஞ்சலிசம் இந்தியாவில் காலூன்றக் காரணமானவர்.

பெங்காலி மொழியைக் கற்றுக் கொண்ட கேரி, கல்கத்தாவைச் சுற்றியிருந்த நூற்றுக்கணக்கான கிராமங்களில் கிறிஸ்தவ மதப்பிரச்சாரம் செய்ய ஆரம்பித்ததுடன், பைபிளின் புதிய ஏற்பாட்டையும் பெங்காலி மொழியில் மொழிபெயர்த்தார். கேரியால் ஹூப்ளி நதியில் ஞானஸ்னானம் செய்து வைக்கப்பட்ட கிருஷ்ணபால் என்கிற ஹிந்துவே முதன்முதல் கல்கத்தாவில் கிறிஸ்தவ மதத்தைத் தழுவிய ஹிந்து எனத் தெரிகிறது. அங்கிருந்த பிரிட்டிஷ் மிஷனரிகள் பூடான், பர்மா, ஒரிஸ்ஸா எனப் பல பகுதிகளுக்கும் பரவி, பல்லாயிரக்கணக்கான ஹிந்துக் குழந்தைகளை மதமாற்றம் செய்தார்கள்.

அதனைத் தொடர்ந்து பல மிஷனரிகள் இங்கிலாந்திலிருந்தும், அமெரிக்காவிலிருந்தும் வெள்ளமெனத் திரண்டு இந்தியாவைச் சூழத் துவங்கியது வரலாறு. அதனைக் குறித்து எழுதுவதென்றால் தனிப் புத்தகமே எழுதவேண்டும். ஆரம்பத்தில் ஹிந்து மதத்தைத் தொந்திரவு செய்ய விருப்பமில்லாதிருந்த வைசிராய்கள், மதமாற்றம் செய்யப்பட்ட ஹிந்துக்கள் தங்களின் அடிமைகளாக மாறி சேவகம் செய்வதினைக் கண்டு அதனை மேன்மேலும் செய்ய முற்பட்டார்கள். மிஷனரிகள் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஒரு அங்கமாகவே செயல்பட்டனர். அதற்கான சட்ட வரையறைகளும் கொண்டுவரப்பட்டு மிஷனரிகள் பாதுகாக்கப்பட்டனர்.

இந்திய விடுதலைப் போரில் ஒரே ஒரு குறிப்பிட்ட இந்திய கிறிஸ்வனைக்கூட உங்களால் அடையாளம் காட்ட இயலாது. ஏனென்றால் அந்த அளவிற்கு அவர்கள் தங்களின் வெள்ளைக்கார கிறிஸ்தவ முதலாளிகளுக்கு அடிமைகளாக, அவர்களின் கால்நக்கிப் பிழைப்பவரகளாக வாழ்ந்தார்கள். அவர்களின் வாரிசுகளே இன்றைக்கும் இந்திய இறையாண்மைக்கு எதிரானவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது  கண்கூடு.

அடிமைகள் என்றைக்கும் அடிமைகளே.

இந்தியாவை ஆண்ட இன்னொரு பெரும் ஐரோப்பிய நாடு ஃப்ரான்ஸ். எனினும் கத்தோலிக்கர்களான ஃப்ரெஞ்சுக்காரர்கள் பெரும்பாலும் மதமாற்றங்களிலும், ஹிந்துக்களைத் துன்புறுத்துவதிலும் இருந்து விலகியே இருந்தார்கள் என்றாலும் அவர்களிடையேயும் மதவெறியர்கள் அவ்வப்போது தோன்றி இருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை.

ஃப்ரெஞ்சுக் காலனியான பாண்டிச்சேரியை ஆண்ட டூப்ளேவின் காலத்தில்தான் புகழ்பெற்ற, பழமையான வேதபுரீஸ்வரர் ஆலயம் இடித்துத் தகர்க்கப்பட்டு அதன்மீது சர்ச் கட்டப்பட்டது. காரைக்காலில் இருந்த பெயரறியாத இன்னொரு பேராலயமும் இடித்துத் தகர்க்கப்பட்டது. ஃப்ரெஞ்சுப் பாதிரிகள் ஹிந்துக்களை மிரட்டி அவர்களைத் துன்புறுத்தியதும் நிகழ்ந்தது. சாதிவாரியான மதமாற்றங்களும் ஃப்ரெஞ்சுப் பாண்டிச்சேரியில் நிகழ்ந்த ஆதாரங்களை ஆனந்தரெங்கம்பிள்ளை போன்றவர்கள் எழுதியிருக்கிறார்கள். மதம்மாறிய ஹிந்துக்களுக்குப் பதவிகளும், பட்டங்களும் அளிக்கப்பட்டன. ஹிந்துக்கள் உதாசீனப்படுத்தப்பட்டு, இரண்டாம்தர குடிமக்களாக நடத்தப்பட்டார்கள் என்பதற்கான பல ஆதாரங்களும் இருக்கின்றன.

அதனையெல்லாம் இங்கு எழுதுவதென்றால் ஏற்கனவே சொன்னபடி இன்னொரு புத்தகம்தான் எழுத வேண்டியிருக்கும். அனைத்துத் தகவல்களும் இன்றைக்கு இணையத்தில் கிடைக்கின்றன. ஆர்வமுள்ளவர்கள் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கொலைகாரக் கிறிஸ்தவம் – 30

 

கோவாவின் இன்குவிஷனுக்கும், தமிழகக் கடலோர, கேரள ஹிந்து பரதவர்கள் மதம்மாறுவதற்கு முக்கியமான ஒரு மனிதரான சேவியரைத் தமிழகத்தில் ஹிந்துக்கள் அதிகம்பேர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.  இன்றைக்குப் “புனித” சேவியராக அழைக்கப்படும் இந்த மதவெறியனைக் குறித்து சிறிது இங்கு காணலாம். இது ஒரு அறிமுகம் மட்டுமே என்பதினை நினைவில் கொள்ளுங்கள்.

பிரான்சிஸ் சேவியர்

எந்த சேவியர் ஹிந்துக்களைக் கொடூரமாகக் கொன்றானோ, எந்த சேவியர் ஹிந்து ஆலயங்களை இடித்து, அதிலிருந்த சிலைகளை உடைத்தானோ, எந்த சேவியர் அப்பாவி ஹிந்துக்களை இன்குவிசிஷன் விசாரணைகள் மூலம் கொடுமைகள் செய்து மதமாற்றம் செய்தானோ, அதே சேவியர் இன்றைக்குப் “புனித”னாக இந்தியாவில் அழைக்கப்படுகிறான்.  இந்தக் கொலைகாரனின் பெயரால் இன்றைக்கு இந்தியாவெங்கும் பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. அறியாமையில் உழலும் ஹிந்துக்கள் தங்களின் குழந்தைகளை அந்தப் பள்ளிகளில் சேர்க்க வரிசையில் நிற்கிறார்கள் என்பதுதான் பரிதாபம்.

சேவியரின் பூர்வீகம் இன்றைய ஸ்பெயினில் இருக்கும் பாம்பலோனா நகரிலிருந்து இருபது மைல்கள் தொலைவிலிருக்கும் பைரனீஸ் மலையடிவாரக் கிராமமான நவார்ரே என்பதாகும். இங்குதான் பிரபுக்களான சேவியர் குடும்பத்தின் அரண்மனை இருக்கிறது. இங்கு வாழ்ந்த டான் யுவான்-டி-ஜாஸ்ஸோ என்பவருக்கும் அவரது மனைவியான மேரி சேவியருக்கும் மகனாக 1506-ஆம் வருடம், ஏப்ரல் 7-ஆம் தேதி ஃப்ரன்ஸிஸ் சேவியர் பிறந்தான். இந்தியாவில் கிறிஸ்தவ மதத்தைப் பரப்பவந்த இன்னொரு புகழ்பெற்ற ஸ்பானியப் பாதிரியான லொயோலாவும் பிறந்த இடம் நாவார்ரேதான்.

இளமையில் சேவியர் பிறகுழந்தைகளைப் போல விளையாட்டுக்களில் ஆர்வம் காட்டாமால், நவார்ரேவின் காடுகளில் தனியனாகச் சுற்றித் திரிவதில் ஆர்வம் கொண்டிருந்தான். பணக்காரர்களான அவர்களது பெற்றோர்கள் சேவியருக்குத் தனியான ஆசிரியர்களை அமர்த்திப் பாடம் கற்றுக் கொடுத்தார்கள்.  சேவியர் தத்துவத்தில் (meta-physics)  நாட்டம்கொண்டு படித்து தத்துவவாதியாகத் தேர்ந்தான். 524-ஆம் வருடம் பாரிஸ் செயிண்ட் பார்பா கல்லூரியில் மாணவனாகச் சேர்ந்து படித்து இளவயதிலேயே, அதே கல்லூரியில் அரிஸ்ட்டாட்டிலின் தத்துவத்தைப் போதிக்கிற ஆசிரியராகப் பதவி வகித்தான்.

சேவியர் பிறர் அரியாமல் பாரிஸிலேயே தன் வாழ்நாளைக் கழித்திருப்பதற்கான வாய்ப்புகள் இருந்தபோதும், அவையனைத்தும் அவனது சொந்த ஊர்க்காரனான லொயோலாவின் வருகையால் முற்றிலும் மாறியது. லொயோலா ‘சொஸைட்டி ஆஃப் ஜீஸஸ்’ என்கிற அமைப்பைத் தொடங்கி, அதன் தலைவராக இருந்தான். இருப்பினும் தன்னுடைய கல்வி அறிவு போதாது என்கிற எண்ணத்தால், பாரிஸிலிருந்த ஒரு கல்லூரியில் சேர்ந்து படித்துக் கொண்டிருந்தான். அங்கு சேவியரினைப் பற்றிக் கேள்விப்பட்ட லொயோலா, அந்த புத்திசாலியின் மனதை எப்படியாவது  மாற்றித் தனது மதமாற்ற வேலைகளுக்குப் பயன்படுத்திக்கொள்ள நினைத்தான்

சேவியருடன் நட்புக்கொண்ட லொயோலா மெல்லமெல்ல அவன் மனதினைக் கரைத்து. “இந்த உலகத்தையே வென்ற மனிதன் தன் ஆன்மாவைக் கொன்று சாதிக்கப்போவதுதான் என்ன?” என சேவியரைக் கேட்கிறான். அவனது பரப்புரைகள் சேவியரை ஈர்த்தது.

ஆகஸ்ட் 15, 1534ல் இக்னேஷியர் சேவியரும், இன்னும் ஐந்து பேர்களும் ஃப்ரான்ஸின் செயிண்ட் டெனிஸ் சர்ச்சில் சந்தித்தார்கள். அங்கு நடந்த பிரார்த்தனைக்குப் பிறகு சேவியர் பரமண்டலத்திலிருக்கும் பிதாவினுக்கும், லொயோலாவின் சர்ச்சிற்கும் சேவைசெய்து வாழ்வதாக முடிவெடுத்தான். அந்த நாளே இந்தியாவையும், பிற கிழக்கு நாடுகளின் தலைவிதியை எதிர்காலத்தில் நிர்ணயித்த நாளாகும். அன்றைக்கு அந்த சந்திப்பு நிகழாதிருந்தால், இன்றைய உலகம் வேறுவிதமான ஒன்றாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அடுத்த் ஆறாண்டுகள் சேவியர் தனது சத்தியத்திற்கு உண்மையானவனாக உலகத்து இன்பங்களைத் துறந்து, பயணங்களில் கழித்துக் கொண்டிருந்தான்.  வறுமையையும், களைப்பையும், கடின வாழ்க்கைமுறைகளையும் தனது அனுபவத்தில் கண்டுகொண்டிருந்த சேவியரை உடனடியாக ரோமிற்கு வரும்படி அழைத்தான் லொயோலா. அவர்கள் பொம்பலோனோவில் சொஸைட்டி-ஆஃப்-ஜீஸஸ் நிறுவனத்தை நிறுவினர். அங்கிருந்து கிழக்குநாடுகளுக்கு கிறிஸ்தவ மதத்தைப் பரப்பச் செல்வதற்காக சேவியருக்குப் பாதிரியாக வாழ்வதற்கும், பிரசங்கங்கள் செய்வதற்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.

பின்னர் ரோமில் சந்திக்கும் லோயோலாவின் இன்னொரு மாணவன் மூலமாக கிறிஸ்துவ மதத்தைப் பரப்புவதில் அவர்களுக்கு உள்ள ஆர்வத்தைக் கண்டு வியந்தான் சேவியர். போர்ச்சுகீசிய அரசர்கள் தென்னிந்தியாவில் கிறிஸ்தவ மதத்தைப் பரப்ப அனுப்பிவைத்த மிஷனரிகளாகவே அவன் அவர்களைப் பார்த்தான்.  சேவியரும் அவர்களுடன் இந்தியாவிற்குப் போகவிருப்பதைக் கேட்டு மிகுந்த மகிழ்ச்சியடைந்தான் லொயோலா.

இந்தியாவில் கிறிஸ்தவ மதத்தைப் பரப்ப 1540 மார்ச் 16 ரோமிலிருந்து புறப்பட்ட சேவியர் இந்தியாவிற்குச் செல்ல கப்பல் கிடைக்காமல் ஒன்பது மாதங்கள் போர்ச்சுகலில் காத்திருந்து, 1541 ஏப்ரல் மாதம் போர்ச்சுகீசிய கப்பலில் ஏறி, 1542 மே மாதம் ஆறாம் தேதி கோவாவை அடைந்தான்.

அங்கு ஹிந்துக்களை மதமாற்றம் செய்வதற்குப் பல தந்திரங்களைச் செய்ய ஆரம்பித்தான் சேவியர். அவற்றில் முக்கியமானது ஹிந்துக்களை சித்திரவதைசெய்து படுகொலை செய்ய அச்சாரமிட்ட கோவா இன்குசிஷன் என்கிற கொடிய விசாரணை.  ஹிந்துக்களை மத மாற்றம் செய்து பாகன்களை ஒழிக்க  ஒரே வழி அங்கு இன்குசிஷன் விசாரணைகளைத் துவக்குவதுதான் என போர்ச்சுகீசிய அரசருக்குக் கடிதங்கள் எழுதி சம்மதிக்க வைத்தவனும் கத்தோலிக்க பயங்கரவாதியாகியான சேவியர்தான்.

பிராமண வெறுப்பில் ஊறியவனான சேவியர் அவர்களைத் துன்புறுத்தி கோவாவிலிருந்து விரட்டியடித்தான். அந்த பிராமண வெறுப்பே பிற்காலத்தில் பிரிட்டிஷ்காரர்களால் கடைப்பிடிக்கபட்டு இன்றுவரையிலும் இந்திய கிறிஸ்தவ மதமாற்றிகளால் தொடரப்பட்டுக் கொண்டுருப்பதனைக் காணலாம்.  பிரிட்டிஷ்காரனான லார்ட் மிண்ட்டோ என்பவன் ‘கிறிஸ்வமதம் இந்தியாவில் பரவ வேண்டுவதற்கு ஒரேவழி பிராமணர்களை இனப்படுகொலை செய்வதுதான்’ என 1812-ஆம் வருடம் பிரிட்டிஷ் பார்லிமெண்டிற்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகிறான்.  தமிழ்நாடுபோன்ற மாநிலங்களில் பிராமணர்கள் குறிவைத்துத் தாக்கப்படுவதன் பின்னணியில் மதவெறிபிடித்த கிறிஸ்தவ பாதிரிகளே இருப்பதனை நீங்கள் கவனித்திருக்கலாம்.

சேவியர் சொஸைட்டி ஆப் ஜீஸசுக்கு எழுதிய கடிதமொன்றில், “மனைவி, பிள்ளைகளுடன் மதமாற்றம் செய்யப்பட்டு கிறிஸ்தவர்களாக ஞானஸ்னானம் செய்யப்பட்ட ஹிந்துக்களுக்கு, போலிக் கடவுளர்களின் ஆலயங்களை இடித்து, அங்குள்ள சிலைகளை உடைத்து எறியும்படி உத்தரவிட்டேன். அந்த ஆலயங்கள் உடைக்கப்படுகையில் எனக்கு உண்டான மகிழ்ச்சியைக் குறித்து வார்த்தைகளால் விளக்க இயலாது. எந்த மக்கள் அந்தச் சிலைகளையெல்லாம் வணங்கி வந்தார்களோ அந்த மக்களின் கைகளாலேயே அந்தச் சிலைகள் உடைக்கப்படுவது ஒரு பேரின்பமடையும் நிகழ்வு”.

கொச்சிக்குச் செல்லும் சேவியர் அங்கிருந்த ஹிந்து ராஜாவிடம் நைச்சியமாகப் பேசி அவனிடமிருந்து ஏராளமான நிலத்தையும், பணத்தையும் தானமாகப் பெற்றான். பின்னர் அந்தப் பணத்தை உபயோகித்து அங்கு ஒரு பெரும் சர்ச்சினைக் கட்டி அங்கிருந்த ஹிந்துக்களை மதமாற்றம்செய்தான்.  ஹிந்துக்களின் கையால் ஹிந்துக்களின் கண்ணைக் குத்திய செயலுக்கு நிகரானது அது.

கோவா, கொச்சி வழியாக கன்னியாகுமரிக்கும் வந்த சேவியர் அங்கிருந்த ஏராளமான ஹிந்துப் பரதவர்களை மதமாற்றம் செய்தான்.

அதனைக் குறித்து பிறிதொரு சமயத்தில் பார்ப்போம்.

(முற்றும்)



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard