New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ராமசாமி நாயக்கர் - இந்துவாய் சாகமாட்டேன்


Guru

Status: Offline
Posts: 24765
Date:
ராமசாமி நாயக்கர் - இந்துவாய் சாகமாட்டேன்
Permalink  
 


பெரியாரின் மறுபக்கம் – பாகம்8 (நான் இந்துவாய் சாகமாட்டேன் – பெரியாரின் முரண்பாடு)

 

periyar_marubakkamசொல்வது ஒன்று-செய்வது ஒன்று என்ற கட்டத்திற்கு அய்யா (ஈ.வே. ராமசாமி நாயக்கர்) அவர்கள் போகவில்லை என்று வீரமணி சொல்கின்றாரே-அது உண்மையில்லை. சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்ற கட்டத்திற்கு பல தடவை போயிருக்கிறார் ஈ.வே. ராமசாமி நாயக்கர் என்பதற்கு இதோ ஓர் ஆதாரம்:-

முஸ்லிமாகச் சாவேன்: ஈ.வே. ரா அறிக்கை!

ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-

‘‘நான் சாவதற்கு சில நிமிடமிருக்கும் வரையிலும் இந்த ஜாதி, மத, புராணப் புரட்டுகளை ஒழிக்கப் போராடி சாகுந்தருணத்தில் முஸ்லிமாகத்தான் சாவேன். ஏனென்றால் நான் செத்த பிறகு என் சொத்துக்களை, என்னை மோட்சத்திற்கு அனுப்புவதான புரட்டுகளால் என் சந்ததியாரை ஏமாற்றிப் பறிக்கப்படாமலும், அவர்கள் மூடநம்பிக்கையிலீடுபடாமலிருக்கச் செய்யவும்தான் நான் அவ்வாறு செய்யத் தீர்மானித்திருக்கின்றேன். நான் செத்தபிறகு என் சந்ததியார் என்னை மோட்சத்திற்கனுப்பப்படுமென்ற மூடநம்பிக்கையினால் பார்ப்பனர் காலைக்கழுவி சாக்கடைத் தண்ணீரை குடிக்காமலிருக்க செய்ய வேண்டுமென்பதற்காகவும்தான் நான் முஸ்லிமாகச் சாவேன் என்கிறேன்.
(திராவிடன் 05-08-1929)

இதையும் ஈ.வே. ராமசாமி நாயக்கரே கூறுகிறார்:-

தோழர் ஈ.வே. ராமசாமி அவர்கள் தீண்டப்படாத வகுப்பு என்பதைச் சார்ந்தவர் அல்ல என்று சொல்லப்படுவரானாலும் தான் சாகும்போது இந்துவாய்ச் சாகப்போவதில்லை என்று சுமார் பத்து வருடத்திற்கு முன்பே சொல்லியிருக்கிறார்.
(குடியரசு 20-10-1935)

அம்பேத்கருக்கு அறிவுரை கூறிய ஈ.வே. ரா!

தான் இறக்கும்போது இந்துவாய் சாகமாட்டேன் என்று கூறிய ஈ.வே. ராமசாமி நாயக்கர், டாக்டர் அம்பேத்கருக்கு அறிவுரை கூறுகிறார். அதாவது, ‘‘அம்பேத்கர் தாம் இறக்கும்போது இந்துவாக இறக்கமாட்டேன். வேறு மதத்துக்கு மாற உள்ளேன்’’ என்று கூறியதை எடுத்துக்காட்டி ஈ.வே. ராமசாமி நாயக்கர், ‘‘இதை பாராட்டும்போது நாம் சொல்வதெல்லாம்-அம்பேத்கர் அவர்கள் பார்ப்பன சூழ்ச்சிக்கு ஏமாந்து மறுபடியும் இத்தீர்மானத்தை மாற்றிக் கொள்ளக்கூடாது என்பதோடு வைதீகரும் மூடநம்பிக்கையும், குருட்டு பழக்கவழக்கமும் கொண்ட வேறு எந்த மதத்திலும் விழுந்துவிடக்கூடாது என்று எச்சரிக்கை செய்கிறோம்’’ என்று கூறுகிறார்.
(குடியரசு 20-12-1935)

மேலும் ஈ.வே. ராமசாமி நாயக்கர் ‘‘1926-ல் நான் இந்துவாய் இறக்கப்போவதில்லை என்று கூட்டத்தில சபதம் செய்து தருகிறேன்’’ என்று நினைவூட்டுகிறார்.
(குடியரசு 31-05-1936)

ஆக, ஈ.வே. ராமசாமி நாயக்கர் இறக்கும்போது இந்துவாக இறக்கக்கூடாது என்பதிலே உறுதியாக இருந்தார் என்பது தெளிவாகின்றது. ஆனால் இவ்வளவு உறுதியாக, சபதம் ஏற்றிருந்த ஈ.வே. ராமசாமி நாயக்கர் ஏன் தனது கடைசி காலத்தில் மதம் மாறாமல் இந்துவாகவே இறந்தார்?

இதில் ஒரு வேடிக்கை என்ன தெரியமா?

அம்பேத்கருக்கு அறிவுரை கூறியதுதான்.

அதாவது அம்பேத்கர் கொண்டுவந்த தீர்மானத்தை மாற்றிக் கொள்ளக்கூடாது என்று சொன்னதுதான். ஆனால் அம்பேத்கர் தான் இந்துவாக இறக்கப்போவதில்லை என்று சொன்னவாறே பெளத்தத்தை தழுவி, தான் சொன்ன சொல்லை செயலில் காட்டினார். ஆனால் அம்பேத்கருக்கு அறிவுரை சொன்ன ஈ.வே. ராமசாமி நாயக்கர் அதை காற்றிலே பறக்கவிட்டுவிட்டார். உண்மையிலேயே ஈ.வே. ராமசாமி நாயக்கருக்குத்தான் அம்பேத்கர் அறிவுரை சொல்லியிருக்க வேண்டும். இவர், தான் சொல்வது ஒன்று-செய்வது ஒன்று என்ற கட்டத்திற்குப் போகாதவராம்!

இதில் மற்றொரு வேடிக்கை என்ன தெரியுமா?

அம்பேத்கருக்கு, வைதீகமும், மூடநம்பிக்கையும், குருட்டு பழக்க வழக்கமும் கொண்ட வேறு எந்த மதத்திலும் விழுந்துவிடக்கூடாது என்று எச்சரித்த ஈ.வே. ராமசாமி நாயக்கர், மூடநம்பிக்கையும், குருட்டு பழக்கவழக்கமும் கொண்ட இஸ்லாமுக்கு மாறுவதே சரியான அரசியாலாக இருக்கும் என்று அம்பேத்கர் பவுத்த மதத்தை தழுவியபோது சொன்னதுதான்!

சொல் ஒன்று-செயல் ஒன்று என்ற கட்டத்திற்கே அய்யா போகவில்லை என்று வீரமணி சொல்கின்றாரே-அப்படியானால் இந்துவாக இறக்கமாட்டேன் என்று சொன்ன கட்டத்திலிருந்து இந்துவாகவே இறந்தார் என்ற கட்டத்திற்கு சென்றது ஏன்? இதுதான் சொல்லும் செயலும் ஒன்று என்ற கட்டமா? இதை வீரமணிதான் விளக்கவேண்டும்.

ஈ.வே. ராமசாமி நாயக்கர் இந்துவாகத்தான் இறந்தார் என்று நாம் சொன்னால்-உடனே ஈ.வே. ராமசாமி நாயக்கர் இந்துமதத்தை எதிர்த்தவர். நாத்திகர்களுக்கு மதம் இல்லை. அவர் மதம் மாறவில்லையென்றாலும் அவரை இந்து என்று சொல்லிவிடமுடியாது. ஈ.வே. ராமசாமி நாயக்கர் நாத்திகவாதியாதலால் அவர் இறக்கும்போது நாத்திகவாதிதான். இந்து அல்ல என்று பகுத்தறிவுவாதிகள் சொல்லிவிடுவார்கள்.

அறிவுரையை மறந்த ஈ.வே. ரா!

ஆனால் ஈ.வே. ராமசாமி நாயக்கர் இந்துவாகத்தான் இறந்தார் என்பதற்கு ஈ.வே. ராமசாமி நாயக்கரே சாட்சியம் கொடுத்திருக்கிறார்.

ஈ.வே. ராமசாமி நாயக்கர் கூறுகிறார்:-

நான் அம்பேத்கர் அவர்களை சந்தித்தபோது அவர் என்னிடத்தில் ஒரு ஃபாரத்தை நீட்டிப்போடு கையெழுத்தை. நாம் இருவரும் புத்த நெறியில் சேருவோம் என்றார். அதற்கு நான் சொன்னேன் நீங்கள் சேருங்கள். நான் மாறாமல் இருந்து – இந்து என்பனவாகவே இருந்து-இந்து வண்டவாளங்களை எடுத்துப் பிரச்சாரம் செய்ய வசதியாக இருக்கும் என்று தெரிவித்தேன். நான் புத்த மார்க்கத்தில் சேர்ந்துவிட்டால், இப்போது கடவுள் உருவச்சிலைகளை உடைத்துக்கிளர்ச்சி செய்தது போல செய்ய முடியாததாகிவிடும் என்றேன்.
(விடுதலை 09-02-1950)

periyar_ambedkarஈ.வே. ராமசாமி நாயக்கர் சொல்வதிலிருந்து, ஈ.வே. ராமசாமி நாயக்கர் இந்துவாகத்தான் இறந்தார். யாருக்கு ஈ.வே. ராமசாமி நாயக்கர் அறிவுரை கூறினாரோ, அவரே ஈ.வே. ராமசாமி நாயக்கரை அழைத்தபோது இந்துவாக இறக்கமாட்டேன் என்ற தன் சபதத்தை காற்றில் பறக்கவிட்டுவிட்டு இந்துவாகவே இருப்பேன் என்று சொன்னாரே ஏன்? அந்த ஈ.வே. ராமசாமி நாயக்கர்தான் சொல் ஒன்று செயல் ஒன்று என்ற கட்டத்திற்கு போகாதவரா?

— தொடரும்



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

H.RAZIN ABDUL RAHMAN on August 2, 2009 at 6:32 pm

அம்பேத்கருக்கு, வைதீகமும், மூடநம்பிக்கையும், குருட்டு பழக்க வழக்கமும் கொண்ட வேறு எந்த மதத்திலும் விழுந்துவிடக்கூடாது என்று எச்சரித்த ஈ.வே. ராமசாமி நாயக்கர், மூடநம்பிக்கையும், குருட்டு பழக்கவழக்கமும் கொண்ட இஸ்லாமுக்கு மாறுவதே சரியான அரசியாலாக இருக்கும் என்று அம்பேத்கர் பவுத்த மதத்தை தழுவியபோது சொன்னதுதான்……

இஸ்லாம் பற்றி எதுவுமே தெரியாமல் அதை விமர்சிப்பது தான் தங்கள் எழுத்துரிமையோ…..இது மற்ற மதங்களின் மீதான,தங்களின் தவறான எண்ணத்தையும்,அதன் வெளிப்பாட்டையும் காட்டுகிறது,ஹிந்துத்துவம் பற்றி அறியவே நான் தங்கள் தளத்தை அணுகினேன்..ஆனால் இங்கு,என்னுடைய மதம்(மார்க்கம்) இழிவு படுத்த படுவதை,என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது..இஸ்லாம் பற்றிய அறிமுகம் இல்லாதவராக தாங்கள் இருக்கலாம்,அல்லது தவறான அறிமுகம் பெற்றவராக இருக்கலாம்..
இஸ்லாம் தூய்மையான மார்க்கம்,அது பற்றி அறிய விரும்பினால்,தயக்கம் இல்லாமல் என்னிடம் கேளுங்கள்..நல்ல நண்பனாக இருந்து,தங்களுடைய கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க கடமை பட்டுள்ளேன்,,…..அதுபோல ஹிந்து மதம் பற்றிய என்னுடைய சந்தேகங்களுக்கு தங்களிடம் விளக்கம் கேட்டு பெறவும் விரும்புகிறேன்..

நீங்கள் இதை ஏற்றுக்கொண்டால்,இஸ்லாம் குறித்த சந்தேகங்களுடன் என்னுடைய முகவரியை தொடர்பு கொள்ளவும்.என்னுடைய பதிலுடன்,ஹிந்து மதம் குறித்த என்னுடைய சில சந்தேகங்களை நான் தங்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள நல்ல வாய்ப்பாக அமையும்.
இது இந்த வலைதள உரிமையாளருக்கு மட்டுமல்ல..இதை படித்து,ஆர்வமுள்ள அனைவரும் என்னை தொடர்பு கொள்ளலாம்.

இஸ்லாத்தில் தாங்கள் கண்ட மூடநம்பிக்கைகள்,பற்றி எனக்கு சொல்லுங்கள்.அது மூட நம்பிக்கையா அல்லது,இஸ்லாத்தில் இல்லாத நம்பிக்கையா என்பதை நான் உங்களுக்கு விளக்குகிறேன்..

இந்த மடலில் என்னுடைய வரம்பு மீறி,தங்களின் மனம் புண்படும்படி எழுத நீங்கள் கண்டால்,தயவு செய்து என்னை மன்னிக்கவும்..
பதில் எதிபார்க்கிறேன்…
நன்றி……

நட்புடன்……
H.RAZIN ABDUL RAHMAN.
MECHANICAL ENGG,
DUBAI.
razinabdul@gamil.com



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

இதற்குமுன், திரு.மகிழ்நன் அவர்கள் ஏன் பெரியார் இந்துமதத்தை கேவலப்படுத்தியது போல பிற மதங்களை விமர்சிக்கவில்லை என்று “bleaching powder” என்ற கட்டுரையில், “ஒரு வகுப்பறையில், வாத்தியார் ஒரு மாணவனை தண்டித்தால், அவன் ஏன் மற்ற மாணவர்களை தண்டிக்க வில்லை என்று கேட்பது போல இந்த வாதம் உள்ளது” என்று மொக்கைபோட்டார். இங்கு இந்த பெரியார்தாசர்களே அப்படித்தானே பேசுகிறார்கள்! ஏன் பெரியார் இவ்வாரு செய்தார் என்று கேட்டால், அவர் இப்படிசெய்தார், சங்கராச்சாரியார் இப்படிசெய்தார் ஏன் இவைகளை விமர்சிக்கவில்லை என்று திரு.வெங்கடேசனை கேள்வி கேட்கிறார்கள். முதலில், உங்கள் அழுக்கை நோன்டிக்கொள்ளுங்கள் தோழர்களே, பிறகு அடுத்தவனை குளிப்பாட்டலாம்!



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard