New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருக்குறள் - மனுஸ்மிருதி


Guru

Status: Offline
Posts: 24765
Date:
திருக்குறள் - மனுஸ்மிருதி
Permalink  
 


அரசனால் தண்டனைக்கு உட்படுத்தப் படும் பாவங்களைச் செய்த மனிதர்கள், குற்றம் நீங்கி சொர்க்கத்தைச் சென்று அடைகிறார்கள், புண்ணியம் செய்த நல்லோர்களைப் போல.

- மனுஸ்மிருதி 8.318 **

தர்மத்தின் வழி செங்கோல் ஆட்சி செய்யும் அரசன் குற்றம் புரிந்தவர்களுக்குத் தண்டனையளிப்பது அவனது கடமை என்பதால், அதில் உள்ள ஹிம்சை அவனுக்குப் பாவத்தைத் தராது என்பது நேரடியாகவே விளங்கும். குற்றம் செய்தவரின் விஷயத்திலும் பாவத்திற்கான தண்டனை அப்போதே கிடைத்துவிட்டது. எனவே, அந்தப் பாவம் கர்மவினையில் சேர்ந்துமறுமையில் தொடராது என்பது மட்டுமல்ல, தண்டனையே பிராயச்சித்தமாக அமைந்து அந்த உயிரை சொர்க்கத்திலும் சேர்க்கும் என்று மனு கூறுகிறார். தண்டநீதி என்ற விஷயத்தில், எந்தவிதத்திலும் யாருக்கும் குற்ற உணர்ச்சி ஏற்பட்டுவிடக் கூடாது என்பதை அழுத்தமாக மனதில் பதியவைப்பதற்காகவே இக்கருத்து கூறப்பட்டது என்று தோன்றுகிறது.

திருக்குறளும் இக்கருத்தை அடியொற்றியே செல்வதைக் காணமுடியும்.

குடிபுறம் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்.

பரிமேலழகர் உரை: "வடுவன்று - வேந்தனுக்குப் பழியன்று, தொழிலாகலான்.. தன் கீழ் வாழ்வாரை ஒறுத்தல் அறன் அன்மையின், வடுவாம் என்பதனை ஆசங்கித்து, அஃதாகாது, அரசனுக்கு அவரை அக்குற்றத்தின் நீக்கித் தூயராக்குதலும் சாதிதருமம் என்றார்".

அரசனது தண்டனை குற்றவாளியை குற்றத்திலிருந்து நீக்கித் தூயவராக்குகிறது என்ற உரைக் கருத்து மேற்சொன்ன ஸ்மிருதியிலிருந்தே பெறப்பட்டது.

** மூலம்:

राजभि: कृतदण्डास्तु कृत्वा पापानि मानवा: ।
निर्मला: स्वर्गमायान्ति सन्त: सुकृतिनो यथा ॥



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

மனுஸ்மிருதி,திருக்குறள்-ஓர் ஒப்பீடு

 
 images?q=tbn:ANd9GcQevJFSTemkwas8nF-9r8a 

ஆரியன் என்றால் உயர்ந்தவன், மேன்மையான தர்மநெறியில் வாழ்பவன். வேதம் முதற்கொண்டு திருக்குறள்,திருமந்திரம் என அனைத்து நூல்களும் கூறும் நன்னெறியே உயர்ந்த வாழ்வியல் நெறி. யார் அவற்றைப் பேணி வாழ்கின்றனரோ அவரே ஆரியர் ஆகவே அவ்வறத்தைக் கைக்கொண்டு வாழும் தமிழர் அனைவரும் ஆரியரே!

ஊர் ஒற்றுமையாய் இருக்கவேண்டும் என்று அவ்வூரின் முன்னேற்றத்தை விரும்புவோர் நினைப்பது இயல்பு. கூத்தாடிகளுக்கு ஊர் இரண்டுபட்டால்தானே கொண்டாட்டம். நாமும் அதுபோல தமிழும் ஆரியமும் வேறல்ல ஒன்றுதான் எனும் உண்மையைத் தெளிவுறுத்துகின்றோம், ஆனால் குழப்பவாதிகளின் கருத்துகளுக்கு நமது தமிழன்பர்கள் சிலரும் பலியாகி அவர்களது ஊதுகுழலாகிவிட்டனர் அதுதான் வருத்தமாக இருக்கிறது.

சரி விஷயத்துக்கு வருவோம், இங்கு நாம், (உள்நோக்கத்துடன்) தவறாகப்புரிந்துகொள்ளப்பட்ட மனுசாஸ்திரத்துக்கும் திருக்குறளுக்கும் உள்ள ஒற்றுமைகள் பலவற்றைப் பார்ப்போம்.

வேதத்தைக் கற்பது, வேதத்தைக் கற்பிப்பது; யாகம் செய்வது, யாகங்களைச் செய்விப்பது; தானம் வாங்குவது, தானம் செய்வது – என்ற ஆறு ‘தொழில்கள்’ பிராமணனுக்கு விதிக்கப்பட்டுள்ளன.

இதைக் கூறுகிற மனு ஸ்ம்ருதி வாசகம் இது :

அத்யாபனம் அத்யயனம்
யஜனம் யாஜனம் ததா
தானம் ப்ரதிக்ரஹ ஸ்சைவ
ஷட் கர்மாண்யக்ரஜன்மன:
(75/467)



திருக்குறள்

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் 
காவலன் காவான் எனின்.


உரை:
காவலன் காவான் எனின் – காத்தற்குரிய அரசன் உயிர்களைக் காவான் ஆயின்;
ஆபயன் குன்றும் – அறன் இல்லாத அவன் நாட்டுப் பசுக்களும் பால் குன்றும்;
அறுதொழிலோர் நூல் மறப்பர் – அந்தணரும் நூல்களை மறந்துவிடுவர்.
ஆபயன் – ஆவால் கொள்ளும் பயன்,
அறுதொழில்களாவன (வேதம்) ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என இவை.


திருக்குறள்

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா 
செய்தொழில் வேற்றுமை யான்.


மனுஸ்மிருதி

இத்யேதி: கர்மபிர்வ்யஸ்தா
த்விஜா வர்ணாந்தரம் கத:
தர்மோ யக்ஞ்யக்ரியா தேஷாம்
நித்யம் ந ப்ரதிஷித்யதே


பொருள்

பிராமணர்களே தங்கள் நியமங்களைக் கைவிட்டதால், வெவ்வேறு செயல்முறைகளை மேற்கொண்டு, மற்ற மூன்று வர்ணங்களைச் சார்ந்தவர்கள் ஆனார்கள்.

மனுஸ்மிருதி

சூத்ரோ ப்ராம்மணதாமேதி
ப்ராம்மணஸ்சைதி சூத்ரதாம்
க்ஷத்ரியாஜ்ஜாதமேவம் து
வித்யாத் வைச்யாத் ததைவ ச

பொருள்

சூத்திரன் பிராமணன் ஆகலாம்; பிராமணனும் சூத்திரன் ஆகலாம்; அதேபோல, க்ஷத்ரிய மற்றும் வைச்ய வகைகளைச் சார்ந்தவர்களின் மகன்களும், வேறு வர்ணத்தை அடையலாம்.

மனுஸ்மிருதி

கோரக்ஷகான் வாணிஜிகாம்ஸ்ததா
காருகுசீலவான்
ப்ரேஷ்யான் வார்துஷிகாம்ஸ்சைவ
விப்ரான் சூத்ர வதாசரேத்

ஆடு, மாடுகளை வளர்த்துக்கொண்டும்; வர்த்தகம் செய்தும்; கை வேலை செய்பவர்களாகவும், நடிகர்கள் மற்றும் பாடகர்களாகவும், வட்டிக்குப் பணம் தருகிறவர்களாகவும் வாழ்கிற பிராமணர்கள், சூத்ரர்களாகவே கருதத்தக்கவர்கள்.

திருக்குறள்

மறப்பினும் ஓத்துக் கொளல் ஆகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்


உரை

ஓத்து மறப்பினும் கொளல் ஆகும் – கற்ற வேதத்தினை மறந்தானாயினும் அவ்வருணம் கெடாமையின், பின்னும் அஃது ஓதிக் கொள்ளலாம்; பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக்கெடும் – அந்தணனது உயர்ந்த வருணம் தன் ஒழுக்கம் குன்றக்கெடும்.
திருக்குறள்

சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை
 – 57

மனுஸ்மிருதி-9 : 12

பெண்களை வீட்டினுள் நம்பிக்கைக்குரிய காவலர்கள்மூலம் காத்துவைதிருத்தல் மூலம் அவரது ஒழுக்கத்தைக் காத்துவைத்திடமுடியாது. அவர்கள் தாமாகவே உறுதியுடன் தமது ஒழுக்கத்தைக் காத்துக்கொள்வதே சிறந்தது.
நிறைவுரை

வேதப் பொருளை விரகால் விரித்துலகோர்
ஓதத் தமிழால் உரைசெய்தார் – ஆதலால்
உள்ளுநர் உள்ளும் பொருளெல்லாம் உண்டென்ப
வள்ளுவர் வாய்மொழி மாட்டு.
– செயலூர்க் கொடுஞ்செங்கண்ணனார்


கற்கை நன்றே; கற்கை நன்றே;
பிச்சை புகினும் கற்கை நன்றே (35)


நாற்பால் குலத்தின் மேற்பால் ஒருவன்
கற்றிலன் ஆயின் கீழ் இருப்பவனே (37)

எக்குடிப் பிறப்பினும் யாவரே ஆயினும்
அக்குடியில் கற்றோரை ‘மேல்வருக‘ என்பர் (38)

கல்லா ஒருவன் குலநலம் பேசுதல்
நெல்லினுள் பிறந்த பதர் ஆகும்மே (36)

-அதிவீர ராம பாண்டியர் இயற்றிய வெற்றிவேற்கை என்னும் நறுந்தொகை

இவை யாவும் நமது முன்னோர்களான தமிழர்கள் நமது அற நெறி இது என்று சொல்லிவைத்த பாடல்கள். பலருக்கு ஜி.யு.போப் வகையறாக்கள் மட்டுமே தமிழர்களாகத் தெரிகின்றனர் போலும்


__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

 ஒழுக்கத்தினை விட்ட பிராமணனுக்கு வேதத்திற் சொல்லிய பலன் கிடைப்பதில்லை. ஒழுக்கமுடைய பிராமணனுக்கு சகல பலனும் குறைவின்றி கிடைக்கும். (மனு அத்தியாயம் 1 ஸ்லோகம் 109)

 
          மறப்பினும் ஒத்துக்கொள்ளலாகும் பார்ப்பான்
         பிறப்பொழுக்கம் குன்றக் கெடும் (திருக்குறள் 134)
 
     பார்ப்பான் தான் கற்ற வேதத்தினை மறந்து போனாலும் பிறகு கற்றுக் கொள்ளலாம். ஆனால் அவன் பிறந்த குலத்திற்கு ஏற்ற மேலான ஒழுக்கதிலிருந்து தாழ்ந்தால், பிராமணன் என்கிற நிலையிலிருந்து தாழ்ந்தவன் ஆவான்
 
மனுவின் 1-109 ஸ்லோகம் திருக்குறள் 134 ஐ அப்படியே வழிமொழிகிறதே?!
 
     ஒழுக்கம் உடைமை குடிமை; இழுக்கம்
     இழிந்த பிறப்பாய் விடும்
 
     என்னும் ஒழுக்கம் உடைமை அதிகார  மூன்றாவது குறள் சொல்கிறது “ஒழுக்கம் உயர்ந்த குடியின் தன்மை, ஒழுக்கம் இல்லாமை தாழ்ந்த குடியின் இயல்பு” என்று இதையல்லவா மனுஸ்ம்ருதி எதிரொலிக்கிறது.  

 



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

எவனுக்கு வாக்கும் மனமும் பொய் சொல்லாமல் உள்ளதோ அதாவது சொல்வதும் செய்வதும் ஒன்றாக உள்ளதோ அவன் வேதாந்த சாஸ்திரத்தில் சொல்லியுள்ள எல்லா பலன்களையும் அடைகிறான் ( மனு ஸ்மிருதி 2-160)
 
     இங்கும் திருக்குறளையே மறுபதிவு செய்கிறார் மனு, ஆம்! திருக்குறள் வாய்மை அதிகாரம் 6,7 குறள் என்ன சொல்கிறதோ அதை ஒட்டியே மனு ஸ்மிருதி ஸ்லோகம் 2-160 உள்ளது.
 
     “பொய்யாமை அன்ன புகழ்இல்லை; எய்யாமை
     எல்லா அறமும் தரும்.”


__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

 ஒருவன் துன்பத்தினை அடைந்திருந்தாலும் அந்நியனை பார்த்து துன்பம் வரும்படி பேசக்கூடாது. செய்கையாலும் மனதாலும் ஒருவனுக்கும் துரோகம் செய்யக்கூடாது. கொடுமையான அமங்கலமான வார்த்தைகளை சொன்னால் சுவர்க்காதி புண்ணிய லோகங்களை அடையமாட்டான். (மனுஸ்ம்ருதி 2-161)
 
     “அழுக்காறு அவா, வெகுளி இன்னாச்சொல் நான்கும்
     இழுக்கா இயன்றது அறம்”.
 
     அறன் வலி உறுத்தல் அதிகாரத்தின் 5 ஆவது குறள் அல்லவோ இங்கு நினைவுக்கு வருகிறது   
 
     பிராமணன் தனக்கு அயலான் செய்கின்ற மரியாதையை விஷத்தினை போல நினைத்து அஞ்சவேண்டும். அவமானத்தினை அம்ருதம் போல் விரும்பவேண்டும். (மனு ஸ்ம்ருதி 2-162)
 
      இதோ இங்கும் திருக்குறள் “பொறைஉடைமை” அதிகாரத்தின் சில குறள்கள் அப்படியே ஒன்றாக ஒத்துப்போகிறது மனுவுடன்
 
     “அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத், தம்மை
     இகழ்வார்ப் பொறுத்தல் தலை” (பொறை உடைமை -1)
 
     “துறந்தாரின் தூய்மை உடையர், இறந்தார் வாய்
     இன்னாச்சொல் நோற்கிற்பவர்”
 
கெட்டவர்களின் கொடுஞ்சொற்களை பொறுப்பவர் துறவிகளை போன்று பரிசுத்தமானவர்கள் ஆவார்கள்.
 
     “உண்ணாட்டு நோற்பார் பெரியர், பிரற்சொல்லும்
     இன்னாச்சொல் நோற்பாரின் பின்”. (பொறை உடைமை -10)
 
பசியை பொறுக்கும் தவசிகளைவிட பிறர் பேசும் கொடுஞ்சொற்களைப் பொறுப்பவர் பெரியவர்.


__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

 சரி கடவுள் கொள்கை பற்றி மனு ஸ்மிருதி என்ன சொல்கிறது முதல் அத்தியாயம் 10 வது ஸ்லோகம்
 
     “ ஜலமானது நரன் (கேடில்லாதவன்) என்கிற பெயரையுடைய பரமாத்மாவினால் சிருஷ்டிக்கப்பட்டதால் நாரமென்கிற பெயரையடைந்தது அந்த நாரமென்கிற பெயரையுடைய ஜலத்தில் வசித்தலினால் அந்த பரமாத்மாவுக்கு “நாராயண “னென்று பெயர்.


__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

 சரி கடவுள் கொள்கை பற்றி மனு ஸ்மிருதி என்ன சொல்கிறது முதல் அத்தியாயம் 10 வது ஸ்லோகம்
 
     “ ஜலமானது நரன் (கேடில்லாதவன்) என்கிற பெயரையுடைய பரமாத்மாவினால் சிருஷ்டிக்கப்பட்டதால் நாரமென்கிற பெயரையடைந்தது அந்த நாரமென்கிற பெயரையுடைய ஜலத்தில் வசித்தலினால் அந்த பரமாத்மாவுக்கு “நாராயண “னென்று பெயர்.
உண்மையான வர்ணாஸ்ரம தர்மம் பகவத் கீதையில் (4.13) கூறப்படுவது .

'ஒருவனது குணத்தினையும், செயல்களையும் அடிப்படையாக வைத்து வெவ்வேறு மனிதர்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளனர்.' பகவத் கீதையில் (4.13)


அவர்கள் பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என நான்கு வகை வர்ணம்( சமுதாய பிரிவு ) அறியப்படுகின்றனர். 

உண்மையான வர்ணாஸ்ரம தர்மத்தில், ஒருவனின் வர்ணம் என்பது அவன் பெற்றுள்ள உண்மையான தன்மையை அடிப்படையாக கொண்டதே தவிர, பிறப்பு அல்லது கோத்திரத்தை வைத்து அல்ல.

மஹாபாரதம் வனபர்வம் பகுதி 311-ல், யுதிஷ்டிரர் யக்ஷனிடம் மேற்கொண்ட உரையாடலைக் காண்போம். 

யக்ஷன் யுதிஷ்டிரரிடம் வினவினார், "மன்னா, எத்தகைய பிறவி, நடத்தை, (வேத) படிப்பு அல்லது (சாஸ்திர) கல்வியினால் ஒரு மனிதன் பிராமணனாகிறான்? 

யுதிஷ்டிரர் பதிலளித்தார், "யக்ஷனே, கேள்! பிறவியோ, படிப்போ, பிராமணத் தன்மைக்குக் காரணமில்லை. நடத்தையே பிராமணத் தன்மையாகும், இஃது எப்போதும் நன்கு பாதுகாக்கப்பட வேண்டும். நடத்தையைக் கெடாமல் பராமரித்தால். அவன் ஒருபோதும் கெடு நிலையை அடைவதில்லை. நான்கு வேதங்களைப் படித்தும், ஒருவன் இழிந்தவனாக இருந்தால், அவன் சூத்திரன். புலன்களைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பவனே பிராமணன் என்று அழைக்கப்படுகிறான்."


__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

பூவினுள் பிறந்தோன் நாவினுள் பிறந்த
நான்மறைக் கேள்வி நவில் குரல் எடுப்ப
ஏம ஆன் துயில் எழிதல் அல்லதை,
வாழிய வஞ்சியும் கோழியும் போலக்
கோழியின் எழாது, எம் பேர் ஊர் துயிலே.

- பரிபாடல்-திரட்டு 8:7-12

விளக்கம்:

பூவினுள் பிறந்தோன்- பிரம்மா
நான்மறைக் கேள்வி நவில் குரல் எடுப்ப- ரிக், யஜுர், சாம அதர்வண வேதங்களின் முழக்கம் அந்தணர் ஓத
வஞ்சியும் -சேர தலைநகர்- வஞ்சி
கோழியும்- உரையூர்- சோழ தலைநகர்
கோழியின் எழாது- சேவல் கூவலில் எழ

"பாண்டி நாட்டு தலைநகர் மதுரைவாசி சொல்கிறா: சேர தலைநகர்- வஞ்சிவாழ் மக்களும், உரையூர் சோழ தலைநகர்வாழ் மக்களும் தினமும் அதிகாலை சேவல் கூவலில் எழுகின்றனர். நாங்கள் அதிகாலையில் அந்தணர் ரிக், யஜுர், சாம அதர்வண வேதங்களின் ஓதும் முழக்கம் கேட்டு எழுகிறோம் என பெருமை கொள்கின்றார்.

தமிழின் பழமையான தொல்காப்பியத்தில் பரி பாடலின் இலக்கணம் எடுத்தாளப்பட்டு இருக்கு. சங்க இலக்கிய காலத்திற்கும் தெளிவாய் தெரிந்திருகிறது வேதத்தின் ஆதி என்பது தமிழே. தமிழின் மந்திர மொழி சமஸ்கிருதம்.

 

சங்ககால சந்நியாசிகளின் இலக்கணத்தைக் கூறும் தொல்காப்பியர்.

"நூலே கரகம் முக்கோல் மனையே

ஆயுங்காலை அந்தணர்க்குரிய"

- தொல்காப்பியம் பொருளதிகாரம் 9.71

பூணூலையும், முக்கோலாகிற திரிதண்டத்தையும் தரித்த பெரியவர்களே அந்தக்காலத்தில் சந்நியாசிகளாகக் கருதப்பட்டனர் என விளங்குகிறது. பூணூலும், முக்கோலுமுள்ள வைணவ சந்நியாசிகளே அக்காலத்தில் சான்றோர்களால் சந்நியாசிகளாகக் கருதப்பட்டார்கள் என விளங்குகிறது. இவ்வண்ணமாக, சங்ககாலத்தில் விஷ்ணுவைப் பரம்பொருளாகக் கொண்ட வைஷ்ணவ நிலைத்து நின்றது என்று நன்கு புலப்படும்.

''நூலே கரகம் முக்கோல் மணையே ஆயும் காலை அந்தணர்க்கு உரிய'' (தொடர் எண்- 1570)

முப்புரிநூல், கமண்டலம், முக்கோல் எனக்கூடிய தவம் செய்யும் கைதாங்கி, அமரும் பலகை இவை நான்கும் அந்தணர்க்குரியவைகள். (வனத்திற்கு சென்று தவம் செய்யும் வனப்பிரஸ்தன்)

''அந்தணாளர்க் குரியவும் அரசர்க்கு ஒன்றிய வரூஉம் பொருளுமார் உளவே.'' (தொடர் எண்- 1572)

“அந்தணர்க்குரிய முப்புரி நூல், கமண்டலம், முக்கோல், பலகை அரசர்க்கும் பொருந்தும். (அரசனும் தவம் செய்ய தகுதியானவன்)

தொல்காப்பியத்தின் இந்த அந்தணன் யார்...? ஆரியர்கள் தான் அந்தணன் என்றால் அவன் எப்படி கமண்டலம், முப்புரி நூல், அமரும் பலகை உடன் எப்படி தொல்காப்பியத்திற்குள் வந்தான்...?

அவனுக்குரிய அடையாளங்களை எப்படி தொல்காப்பியரல் சொல்ல முடிந்தது ? அந்த அந்தணனன் எந்த தெயவத்திற்காக காட்டில் தவம் செய்தான்.?

இதிலும் தெளிவாக சொல்கிறது, அந்தணன் என்கிற வேத கலாச்சாரத்தை தான் !



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

 உண்மையான வர்ணாஸ்ரம தர்மம் பகவத் கீதையில் (4.13) கூறப்படுவது .


'ஒருவனது குணத்தினையும், செயல்களையும் அடிப்படையாக வைத்து வெவ்வேறு மனிதர்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளனர்.' பகவத் கீதையில் (4.13)

அவர்கள் பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என நான்கு வகை வர்ணம்( சமுதாய பிரிவு ) அறியப்படுகின்றனர். 

உண்மையான வர்ணாஸ்ரம தர்மத்தில், ஒருவனின் வர்ணம் என்பது அவன் பெற்றுள்ள உண்மையான தன்மையை அடிப்படையாக கொண்டதே தவிர, பிறப்பு அல்லது கோத்திரத்தை வைத்து அல்ல.

வேத,புராணங்களில் வரணத்தின் அடிப்படையில் வேத கல்வி அளிக்கப்படவில்லை ! 

இதற்கு ஸ்ரீ பாதராயணர் - சாந்தியோக்கிய உபநிஷத்தில் - 4:4 to 9 இல் சத்யகாமனின் வரலாறு மூலம் விளக்குகிறார். 

கெளதம முனிவர் ஒரு சூத்திரனான - சாத்யகாமனுக்கு வேதம் சொல்லி கொடுப்பதாகவும். இதை படிக்க வர்ணங்கள் முக்கியமில்லை என கூறுகிறார் ! பின் அவனை சீடனாக ஏற்றுக்கொண்டு அவனுக்கு வேத அறிவை சொல்லிக்கொடுத்து பிராமணனாக ஆகுகிறார் !



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard