ஏசுவின் மரணத்திற்கு சில ஆண்டுபின், சீடர்களை துன்புறித்திய ரோம் குடிமகனான பவுல் என்பவர் கிறிஸ்துவராகி - யூதர் அல்லாத மக்களிடம் மதம் பரப்பி தனக்கு அதற்காக பணமும் பெற்றுக் கொண்டார் என்கிறது அவர் கடிதஙகள். இவர் தன்னால் மதம் மாற்றப்பட்ட கூட்டத்தினருக்கு எழுதியவையே இக்கடிதங்கள்.
ஏசு சீடரோடு இயங்கிய காலக் கதையில் யூதர் அல்லாதவரிடம் செல்லவே இல்லை, ஆனால் இறந்தபின் பழைய உடம்பில் வந்த கதையின் பகுதியில் ஏசு எல்லோரிடமும் செல் என சொன்னதாக கதை, ஆனால் பவுல் இப்படி யூதர் அல்லாத மக்களிடம் செவதடி அபோஸ்தலர் ஏற்கவில்லை என பவுல் அவர்களை கேவலமாய் இகழ்வார்.
2 கொரி 11: 5 மகாபிரதான அப்போஸ்தலரைவிட நான் ஒன்றிலும் குறைவு உள்ளவன் அல்லன் என எண்ணுகிறேன். 12:11...“அந்த மகா பிரதான அப்போஸ்தலர்களோடு” ஒப்பிடும்போது நான் குறைந்தவன் அல்லன்
கலாத்தியர் 1:17 எருசலேமில் உள்ள அப்போஸ்தலர்களையும் நான் போய்ப் பார்க்கவில்லை.2:7தேவன் பேதுருவிடம், யூதர்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கிக்கும்படி ஆணையிட்டிருந்தார். ஆனால் எனக்கோ, யூதர் அல்லாதவர்களுக்குப் போதிக்கும்படி தேவன் ஆணையிட்டிருந்தார். 11 அந்தியோகியாவுக்குப் பேதுரு வந்தார். அவர் செய்தவற்றுள் சில சரியானவை அல்ல. அவர் தவறு செய்தார். அதனால் அவரோடு நேருக்கு நேராக எதிர்த்தேன்.
உண்மையில் பவுலின் நம்பிக்கை என்ன, அப்போஸ்தலர் நம்பிக்கை என்ன, அதற்குள்ளும் பிரச்சனைகள்
1 கொரி 1:12 நான் கூற விரும்புவது இது தான்: உங்களில் ஒருவர் “நான் பவுலைப் பின்பற்றுகிறேன்” என்கிறார். மற்றொருவர் “அப்பொல்லோவைப் பின்பற்றுகிறேன்” என்கிறார். இன்னொருவர் “நான் கேபாவைப் பின்பற்றுகிறேன்” என்கிறார். இன்னும் ஒருவர் “நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறேன்” என்கிறார். 13 கிறிஸ்துவைப் பலவகைக் குழுக்களாகப் பிரித்துப் பார்க்கமுடியாது!
ஏசுவிடம் அதிசயம் ஏதும் கிடையாது
1 கொரி 1:22 யூதர்கள் அதிசயங்களைச் சாட்சியாகக் கேட்கின்றனர். கிரேக்கர்கள் ஞானத்தை வேண்டுகின்றனர். 23 ஆனால் நாங்கள் போதிப்பது இதுவே. கிறிஸ்து சிலுவையின் மேல் கொல்லப்பட்டார். இது யூதர்களுக்கு, நம்பிக்கைக்கு ஒரு பெரிய தடையாகும். யூதர்களைத் தவிர பிறருக்கு இது மடமையாகத் தோன்றும்.
பவுலின் அடிப்படை நம்பிக்கை
ஏசு தன் வாழ்நாளில் உலகம் அழியும் என நம்பினார், யுகமுடிவிற்கு முன் கதையின் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடு இஸ்ரேலை யூதர்களிடம் மீட்க தாவிது ராஜா வாரிசு தான் என நம்பினார், ஆனால் அவர் வாழ்நாளில் உலகம் அழியவில்லை.
பவுல் இந்த நம்பிக்கையில் சிறுது மாற்றம், ஏசு இறந்த பின் மீண்டும் பழைய உடம்பில் காட்சி தந்தாய் புரளி, அதை வளர்த்து, ஏசு மீண்டும் வருவார்- அட்தோடு உலகம் அழியும் இதுவே பவுலின் பிரச்சாரம்.
1 கொரி 15: 51 ஆனால் நான் கூறும் இரகசியத்தைக் கேளுங்கள். நாம் எல்லாரும் மரணம் அடையப் போவதில்லை.. நாம் மாற்றமுறுவோம். 52 கணத்தில் அது நிகழும். கண்ணிமைக்கும் நேரத்துக்குள் நமது மாற்றம் நிகழும். கடைசி எக்காளம் முழங்கும்போது இது நடக்கும். எக்காளம் முழங்கும், மரித்த விசுவாசிகள் எப்போதும் வாழும்படியாய் எழுப்பப்படுவார்கள். நாமும் கூட முழுமையாய் மாற்றம் அடைவோம்.
உலகம் அழியப் போகிறது அதனால் திருமணம் செய்யதவர்கள் இனிமேல் திருமணம் செய்துகொள்ளத் தேவையில்லை என்பார்.
1 கொரி 7 :1ஒரு மனிதன் திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பது நல்லது. 26மணமாகாதோர் தாம் அழைக்கப்பட்ட நிலையிலேயே இருந்துவிடுவது நல்லது. இப்போதுள்ள இடர் நிலையை முன்னிட்டு இவ்வாறு இருப்பதே நல்லதென எண்ணுகிறேன்.31 ...இவ்வுலகு இப்போது இருப்பது போல் நெடுநாள் இராது.
பவுல் பிரச்சாரத்தில் உலகம் அழிவினை எதிர்பார்த்தபோது யாரோ உலக முடிவு கணக்கெடுப்பு நாள் முடிந்தது என்றதை
2 தெசலோனிக்கேயர் 2: 2 கர்த்தர் வரும் நாள் ஏற்கெனவே வந்து முடிந்து விட்டதென கேள்விப்பட்டால், மனக் கலக்கமோ, பயமோ அடைந்து விடாதீர்கள். சிலர் இதனைத் தீர்க்கதரிசனமாகவோ, செய்தியாகவோ சொல்லலாம், அல்லது ஒருவன் எங்களிடத்தில் இருந்து கூட ஒரு கடிதம் வந்ததாகக் கூறி உங்களை ஏமாற்றப் பார்க்கலாம்.
பைபிளியல் அறிஞர்கள் கூறுவது பவுல் உலகம் விரைவில் அழியப் போகிறது என்றதை புரிந்துகொள்ளவில்லை என்றால் நீங்கள் பவுல் கடிதங்களில் ஏதும் புரிந்து கொள்ளவில்லை எனப் பொருள்.தங்கள் வாழ்நாளில் உலகம் விரைவில் அழியப் போகிறது பவுல் கடிதங்கள், இயேசு சொன்னதாக ஏன் மற்ற கடிதங்களில் என்றது இங்கே
ஏசுவின் கதை சொல்பவை, சுவிசேஷங்கள் எனில் நல்ல கதை கோட் Good Spellee எனப் பொருள். இவற்றின ஆசிர்யர்கள் யார் எனத் தெரியாது. இறந்த மனிதர் ஏசுவை தெய்வீகர் என நம்பிய அவரைப் பார்க்காத பிற்கால கிரேக்க சர்ச் மதம் பரப்பும் வகையில்உருவாக்கிய கதைகள் சுவிசேஷங்கள் ஆகும்.
மாற்கு தான் முதலில் வரையப்பட்ட சுவி கதை ஆகும். இவர் சுவியில் ஏசு பிறப்பு கதைகள் இல்லை.5ம் நூற்றாண்டிற்கு முந்தைய கிரேக்க ஏடுகளில் ஏசு உயிர்த்து காட்சி அளிக்கும் கதைகளும் இல்லை.மாற்கு சுவி 68- 75 இடையே முதல் வடிவம் பெற்றது. மாற்கு சுவி கதைய மற்ற மூவரும் அறிந்து மேலும் பல சேர்த்து எழுதினர். மத்தேயுவும் லூக்காவும் அந்த கதையமைப்பை மாற்றாமல் தருவதால் ஒத்த கதை சுவிகள்(Synoptic)எனப்படும்.
மத்தேயு சுவி 80 - 90 இடையே முதல் வடிவு பெற்றது, இவர் ஏசு பிறப்பு கதைகள் மற்றும் போதனைகள் மற்றும் பல சேர்த்திருக்கிறார்..இவர் மாற்கின் 90% எடுத்து பயன் படுத்தி உள்ளார்.
லூக்கா சுவி 85 - 95 இடையே முதல் வடிவு பெற்றது, இவர் ஏசு பிறப்பு கதைகள் மற்றும் போதனைகள் மற்றும் பல சேர்த்திருக்கிறார்..இவர் மாற்கின் 65% எடுத்து பயன் படுத்தி உள்ளார்.
ஒத்த கதை சுவிகள் மத்தேயு - லூக்காவில் மாற்கு கதை அமைப்பு தவிர போதனைகள் பெரும்பாலும் ஒரே மாதிரி இருப்பதால் அவை முன்பு வாய்மொழியிலிருந்த "Q" எனும் குறிப்பை பயன்படுத்தப் பட்டது எனபெரும்பாலன அறிஞர் கூறுவர், ஆனால் சிலர் அப்படிகிடையாது, மத்தேயுவை படித்து பிரச்சனை உள்ளவை மாற்றி லூக்கா கதை உருவானது என்பர்.
நான்காவது யோவான் சுவி தனி நடை. இவர் மாற்கு சுவியை அறிந்து இருந்தாலும் முழுவதுமாய் மாற்றி அமைத்துள்ளார், ஏசுவின் தன்மை, இயங்கிய காலம், எங்கே இயங்கினார் என்பதைலேயே மாறுபாடுகள். பைபிளில்யல் அறிஞர்கள் பெரும்பாலும் யோவான் சுவியின் வரலாற்று தன்மையை ஏற்பதில்லை. 2ம் நூற்றாண்டு சர்ச் குறிப்புகள்படி ரோமன் அரசன் டிராஜன் காலத்தின் (பொகா 98- 117) போது வரையப்பட்டது.
மாற்கு சுவி தான் முதலில் வடிவம் பெற்றது, சர்ச் குறிப்புபடி முக்கிய சீடர் பேதுரி மரணம் பின்பு பொகா௬5. ஆனால் ஒரு குறிப்பு(மூலம் கிடையாது) மத்தேயு தான் முதல் அதுவும் எபிரேயத்தில் எழதப் பட்டது என்பதை இன்று அறிஞர்கள் ஏற்பதில்லை, அவரும் கிரேக பழைய ஏற்பாட்டை பயன்படுத்து உள்ளார், மாற்கினிலிருந்துதான் எழுதப் பட்டது, மாற்கு போலவே எந்த சுவி கதாசிரியர்களும் இஸ்ரேலின் புவியிய்ல் அமைப்பை அறியவே இல்லை என அறிஞர்கள் காட்டுகின்றனர். `
சுவிசேஷங்கள் முதலில் வைக்கப்பட்டாலும் முதலில் வரையப்பட்டவை பவுல் பெயரில் உள்ளவற்றில 7மட்டுமே. சுவிசேஷங்கள் எழுதிய ஆசிரியர் யார் என்பது தெரியாது, இரண்டாம் நூற்றாண்டு இறுதியில் அதற்கு ஏசு சீடர்/சீடர் துணைவர் பெயர்கள் திணிக்கப்பட்டன. தற்போது எந்த ஒரு நூலின் மூலச் சுவடி கிடையாது. நாம் பைபிளியல் அறிஞர்கள் ஆய்வுகள் கூறுவதைப் பார்ப்போம்.
புதிய ஏற்பாடு 27ல் ஒன்றைக்கூட ஏசுவை பார்த்து பழகியவர் எழுதியது இல்லை, பவுல் பெயரில் உள்ள கடிதங்களில் 7 மட்டுமே சொல்லப்பட்ட ஆசிரியர் யார் எனத் தெரியும், மீதம் 20பிற்காலத்தில் யாரோ எழுதியவை,இறந்தவர் பெயர்கள் திணிக்கப்பட்டது. கதைப்படி பவுல் ஏசுவை அறியாதவர். ஏசுவும் சீடர்களும் பேசிய மொழியான எபிரேயத்தில் ஒன்றுமே கிடையாது, எல்லாமே கிரேக்க மொழியில் தான், பயன்படுத்திய பழைய ஏற்பாடு வாக்கியங்கள் கிரேக்க செப்துவகிந்துவில் இருந்து தான், மூல எபிரேயத்தினது அல்ல.
பவுல் பிற கடிதங்கள்
பவுல் பெயரில் 14ல் 7 மட்டுமே அவரே எழுதியதாம், மீதம் யாரோ எழுதியவை, இதில் பாதிரி மடல்கள் (1 திமோத்தேயு, 2 திமோத்தேயு, தீத்து), இவை மார்சியன் என்பவர் கிளரிச்சிக்கு பதிலாக 2ம் நூற்றாண்டில் எழுதப்பட்டவையாம்.
கொலோசையர், எபேசியர், 2தெசலோனிக்ர்கேயர் 3ம் யாரோ முதல் நூற்றாண்டில் எழுதியவை, எபிரேயர் தனி நடை - இதை பவுல் பெயரில் சொல்வதைக் கூட பல அறிஞர்கள் நிறுத்தி விட்டனர்.
மற்ற கடிதங்கள்.
1யோவான், 2யோவான் & 3யோவான் மற்றும் 1பேதுரு யாரோ முதல் நூற்றாண்டில் எழுதியவை, யாக்கோபு, யூதா & 2பேதுரு 2ம் நூற்றாண்டில் பிற்பலுதியில் வரையப்பட்டவை என அறிஞர்கள் கூறுகின்றனர்.
வெளிப்படுத்தின விசேஷம்என்பது முதல்நூற்றாண்டின்இறுதியில் ஒரு குழுவில் வெவ்வேறு ஆசிரியர்களால் புனையப் பட்டது. இது சர்ச்சில் சேர்ந்து பலர் வெளியேறுவதைத் தடுக்க உலகம் கணக்கெடுப்பு நாளில் கிறிஸ்துவர்களுக்கு மட்டும் பரலோகம் மற்றவருக்கு நரகம் எனும் புனைய்ல்
அப்போஸ்தலர் நடபடிகள்நூலை லுக்கா சுவி கதாசிரியரே எழுதியதாம், இது பவுல் கடிதங்களுக்கும் சுவிசேஷ ஏxஉவிற்கும் தொடர்பு ஏற்படுத்த 2ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் புனையப்பட்டது.
மாற்கினை ஒத்து எழுதியவகளும் தன்னிச்சையாய் பலவற்றை மாற்றி கதை செய்து உள்ளனர். சுவிசேஷக் கதாசிரியர்கள் நிச்சயமாய் ஏசு கதையை சீடர்களிடமோ அல்லது சீடர்கள் அறிந்தவர்கள் சொன்னதைதான் கதை ஆக்கியிருக்க வேண்டும், நாம் இரண்டு சீடர் பற்றிய கதைகளை பார்ப்போம். ஒன்று முக்கிய சீடர் பேதுரு, இன்னொருவர் ஏசுவினால் 12 சிம்மாசனத்தில் அமர தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆனால் ஏசுவைக் காட்டிக் கொடுத்த யூதாஸ் ஸ்காரியோத்து.
லூக்கா 5ம் அத்தியாயத்தின் கதையில் கலிலேயா கடற்கரையில் மீன்பிடிக்கையில் ஏசு அதிக மீன் பிடிக்கச் செய்தபின் சேர்ந்தார் எனக் கதை. யோவான் 1ம் அத்தியாயத்தின் கதையில் பேதுருவும் அவர் சகோதரரும் யூதேயாவில் பெத்தானியா ஆற்றங்கரையில் யோவான்ஸ்நானர் சொல்ல சேர்ந்தனர்.
மத்தேயு சுவி கதையில் காட்டிக் கொடுக்க பெற்ற லஞ்சத்தை யூதாஸ் ஸ்காரியோத்து யூத ஆலயத்தில் வீசி எறிந்து ஏசுவின் மரணத்திற்கு முன்பே தூக்கு போட்டு இறந்தார், அந்தப் பணத்தில்யூதப் பூசாரிகள் நிலம் வாங்கி யூதர் அல்லாதவர் மயானமாக (மத்தேயு 27:3௰), இங்கே சிலபல தீர்க்கம் நிறைவேறியதாகக் கதை. லுக்கா கதாசிரியரின் 2வது நூல் அப்போஸ்தலர் நடபடிகள், இதில் ஏசு மரணமாகிய பின்பாக, காட்டிக் கொடுக்க பெற்ற பணத்தில் யூதாசே ஒரு நிலம் வாங்கி அதில் நடந்தபோது வயிறு பலூன் போலே ஊதி வெடித்து இறக்க, யூதர் அல்லாதவர் மயானம ஆக அந்நிலம் ஆனதாம், இங்கேயும் சிலபல தீர்க்கம் நிறைவேறியதாகக் கதை.
யூதாசு மரணம் ஏசுவின் மரணம் ஒட்டியே, ஆனால் அந்நாள் சம்பவம் பற்றியே இருவேறு கதை, ஒருவர் ஒரு முறை தான் சாக முடியும்.
ஒத்த கதை சுவி கதாசிரியர்கள் மாற்கினை அப்படியே பயன்படுத்தாமல் தேவைக்கு ஏற்ப மாற்றியுள்ளனர். அதே போல "Q" பயன்பாட்டில் மத்தேயு மலை மேல் பிரசங்கம் எனக் காட்டுவதை மலை மேல் வெறும் பிரார்த்தனை செய்துவிட்டு அதே ப்ரிஅசங்கத்தை பல்வேறு முறை செய்தார் என லூக்கா மாற்றுவார். ஏசு தீவீர யூதர் என உள்ளவற்றை நீக்கி லூக்கா சில கதைகளை இடையில் சேர்ப்பார்.
முதலில் புனைந்த மாற்கு சுவியில் மிக முக்கியமாக் இரண்டு பிரதானமாய் இருக்கும், ஒன்று பின் பாதி முழுது ஏசு கைது மரணம், மிதமுள்ள கதைகளில் ஏசு அதிசயங்கள் செய்தார் எனப் புனைக் கதைகள்.
ஆனால் மாற்கிற்கு 2 வருடம் முன்பு எழுதிய பவுல் கடிதம் தெளிவாய் அதிசயம் ஏதும் கிடையாது எனச் சான்று தருகிறது.
அப்போஸ்தலர் எனும் சீடர்களுள் இருவர் யாக்கோபு, யூதா - இவர்கள் பெயரில் கடிதங்களும் உண்டு. இந்த இருவரை சர்ச் மரபுக் கதைகள்படி ஏசுவின் சகோதரர்கள், ஆனால் யோவான் சுவி வசனம் 7:5படி ஏசுவின் உடன் பிறந்த சகோதரர்கள் ஏசுவை தெய்வீகர் என ஏற்கவில்லை. மேலும் சீடர் பட்டியலில் மூன்று யூதாசுகள், யூதா ததேயு, யூதாஸ் ஸ்காரியோத்துமற்றும் யூதா தோமோ மூவரும் ஒருவரே தான் எனும்படியாக பல ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
நாம் மேலே பார்த்தவரை ஏசு சுவிசேஷக் கதை எழுதியவர்கள்யார் எனத் தெரியாது, ஏசு யார்? எங்கே இயங்கினார்? - குழப்பம்; சீடர்கள் யார் என்பதிலேயே குழப்பம், ஏசு பழைய உடம்பில் உயிரோடு வந்தார் கதை குழப்பம் நாம் விரிவாக காண்போம்.