New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சுவிசேஷ்ம்- கதாசிரியர்கள் யார்


Guru

Status: Offline
Posts: 24791
Date:
சுவிசேஷ்ம்- கதாசிரியர்கள் யார்
Permalink  
 


 மத்தேயு நற்செய்தி

http://www.arulvakku.com/biblecontent.php?book=Mat&Cn=1

ஆசிரியர்

இயேசு கிறிஸ்து நிறுவிய இறையாட்சி பற்றிய நற்செய்தியைத் திருத்தூதர் மத்தேயு முதன்முதலில் எழுதினார் என்றும் அதனை அரமேய மொழியில் எழுதினார் என்றும் திருச்சபை மரபு கருதுகிறது. எனினும் இன்று நம்மிடையே இருக்கும் கிரேக்க மத்தேயு நற்செய்தி நூல் ஒரு மொழிபெயர்ப்பு நூலாகத் தோன்றவில்லை. இயேசுவைப் பின்பற்றிய ஒரு திருததூதர் தாமே நேரில் கண்ட, கேட்ட, நிகழ்ச்சிகளை நூலாக வடித்திருக்கிறார் என்பதை விட, அவரது வழிமரபில் வந்த சீடரோ, குழுவினரோ இதனைத் தொகுத்து எழுதியிருக்கவேண்டும் எனக்கொள்வதே சிறப்பு.

சூழல்

எருசலேம் கோவிலின் அழிவுக்குப் பின்னர் யூதச்சங்கங்கள் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்திய ஒரு காலக்கட்டத்தில்இந்நூல் எழுதப்படடிருக்க வேண்டும். இயேசுவின் சீடர்கள் யூதத் தொழுகைக் கூடங்களை விட்டுவிட்டுத் திருச்சபையாகக் கூடிவரத் தொடங்கிவிட்ட காலத்தில் இந்நூல் தோன்றியிருக்கிறது. அத்தகைய தொடக்கக் காலத் திருச்சபைக்குள்ளும் அறம் மன்னிப்பு, நல்லுறவு ஆகியவை இன்றியமையாதவை எனக் கற்பிக்க வேண்டிய சூழல் காணப்படுவதையும் இதைப் படிப்பவர் உய்த்துணரலாம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24791
Date:
Permalink  
 

மாற்கு நற்செய்தி

http://www.arulvakku.com/biblecontent.php?book=Mark&Cn=1

 

நற்செய்தி நூல்களுள் மாற்கு நற்செய்தி நூல்தான் முதலாவதாக எழுதப்பட்டது என்பது பெரும்பாலான அறிஞர்களின் கருத்து. கி.பி.64- ஆம் ஆண்டில் இருந்து 70-ஆம் ஆண்டுக்குள் இந்நூல் எழுதப்பட்டிருக்க வேணடும். எருசலேம் அழிக்கப்படவிருந்த சூழலில், உரோமையரால் கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்டக் காலத்தில், உரோமை நகரிலிருந்த மாற்கு இதனை எழுதியிருக்க வேண்டும். பேதுரு,பவுல் போனற பெருந்தலைவர்கள் கொல்லப்பட்டுவிட்ட காலக் கட்டத்தில், இயேசுவின் நற்செய்தியைத் தொகுத்து அதற்கு எழுத்து வடிவம் கொடுக்க வேண்டியது இன்றியமையாத தேவையாகத் தெரிந்திருக்க வேண்டும்.

ஆசிரியர்

மாற்கு நற்செய்தி நூலின் ஆசிரியர் யோவான் மாற்கு என்பது திருச்சபை மரபு, மாற்குவின் தாய் பெயர் மரியா. இவர்களுடைய வீட்டில் தொடக்கக் காலக் கிறிஸ்தவர்கள் வழிபட்டு வந்தனர் (திப 12:12) . மாற்கு 14:51, 52 - இல் குறிப்பிடப்பட்டிருக்கும் இளைஞர் இவராக இருக்கலாம். இவர் பர்னபாவின் உறவினர். தொடக்கத்தில் பவுலோடு பயணம் செய்தவர். பவுலுடைய வாழ்வின் இறுதிக் கட்டத்தில் அவருக்கு உறுதுணையாக இருந்தவர் (2 திமொ 4:11). இவர் திருத்தூதர் பேதுருவுக்கும் துணையாகத் திருத் தொண்டில் ஈடுபட்டிருந்தார். பேதுருவின் போதனைகளின் அடிப்படையில் தான் இந்நற்செய்தி எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பது பலரது கருத்து.

லூக்கா நற்செய்தி 

http://www.arulvakku.com/biblecontent.php?book=Luke&Cn=1
 
ஆசிரியர்

மூன்றாம் நற்செய்தி நூலின் ஆசிரியர் சிரியநாட்டு அந்தியோக்கியாவைக் சேர்ந்த லூக்கா என்பது திருச்சபை மரபு. இவர் மருத்துவம் தெரிந்தவர். திருத்தூதர் பவுலோடு சேர்ந்து நறசெய்திப் பணி ஆற்றியவர். பிற இனக் கிறிஸ்தவர்சபைகளோடு மிகநெருங்கிய தொடர்பு கொண்டிருந்த இவரும் பிற இனக் கிறிஸ்தவர்தான் என்பது பெரும்பாலோர் கருத்து (பில 24:2 திமொ 4:11: கொலோ 4:11- 14).

சூழல்

'மாண்புமிகு' தியோபிலுக்கு இந்நூல் அர்ப்பணிக்கப்படுகிறது; நல்ல கிரேக்க மொழிநடையில் அமைந்துள்ளது. தம் காலத்துத் திருச்சபையின் போதனையையும் பணியையும் பற்றி அறிவிக்கும் நோக்கத்தோடு ஆசிரியர் இந்நூலைப படைத்துள்ளார். இயேசுவைப் பற்றிப் பிற நூல்இதற்குமுன் எழுதப்பட்டிருந்தாலும் முறையாகவும் முழுமையாகவும் வரலாறறுப் பின்ணணியோடும் யாவற்றையும் உறுதிபடுத்தும் வகையில் இந்நூலை இவர் எழுதுகிறார் (லூக்1:1-4). பிற இனத்தவருக்கென்றே எழுதுவதால் எபிரேயர் சொல்லாட்சி இந்நூலில் தவிர்க்கப்படுகிறது.

எருசலேம் நகரம் தீத்துவால் அழிக்கப்பட்டபோது நிகழ்ந்தவை இந்நூலில் சித்தரிக்கப்பட்டுள்ளன. மாற்கு நற்செய்தி நூலில் காணப்படும் எருசலேம் கோவில்பற்றிய தானியேல் மறைபொருள் வெளிப்பாட்டு இலக்கியச் செய்தி எருசலேம் நகர அழிவைப்பற்றிய செய்தியாக மாற்றப்படுகிறது (லூக் 21:5, 20; 13:35). எனவே இந்நூல் கி.பி 70-க்கு பின்தான் எழுதப்படிருக்கவேண்டும் அந்தியோக்கியா, உரோமை போன்ற ஏதேனும் ஒரு நகரிலிருந்து இந்நூல் எழுதப்பட்டிருக்கலாம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24791
Date:
Permalink  
 

 யோவான் (அருளப்பர்) நற்செய்தி

ஆசிரியர்

நான்காம் நற்செய்தியின் ஆசிரியர் செபதேயுவின் மகனாகிய யோவான் என்பது மிகத் தொன்மையான கிறிஸ்தவ மரபு.இதனை எழுதியதாக நற்செய்தியே கூறும் அன்புச் சீடர் (21:24) இவராகத்தான இருக்க வேண்டும். ஆனால் யோவானே அனைத்தையும் எழுதியிருக்கவேண்டும் என்று கூற முடியாது. யோவான் இயேசுவைப்பற்றி எடுத்துரைத்த செய்திகள் அவரது சமூகத்தில் தனி வடிவம் பெற்று, பின்னர் எழுத்து வடிவம் ஏற்றது. காலப்போக்கில் கிறிஸ்தவச் சமூகத்தின் தேவைகளுக் ஏற்பச் சில மாற்றங்கள் பெற்று, முன்னுரை, பிற்சேர்க்கை ஆகியவற்றுடன் இணைக்கப் பெற்று இன்றைய வடிவம் பெற்றிருக்கவேண்டும்.

இயேசுவின் அன்புச் சீடரான யோவான் முதலில் திருமுழுக்கு யோவானின் சீடராக இருந்து பின் இயேசுவின் சீடராகிறார் (1: 35-39), இயேசுவோடு மிகுந்த நெருக்கம் கொணடிருந்த மூன்று திருத்தூதருள் இவரும் ஒருவர் (மாற் 5:37; 9:2; 13:3; 14:33). இறுதி இராவுணவின்போது இயேசுவின மார்புப் பக்கமாய் சாய்ந்திருந்த இவர் (13:22-26) மற்றத் திருத்தூதரெல்லாம் ஓடிவிட்ட நேரத்திலும் இயேசுவின் சிலுவையடியில் நின்றார். இவரிடமே இயேசு தம் அன்பு அன்னையை ஒப்படைத்தார் (19:25-27).

முதல் நூற்றாணடின் இறுதிக் கட்டத்தில் தோன்றிய சில தவறான கொள்கைகளை (திருமுழுக்கு யோவானே மெசியா, தோற்றக் கொள்கை போன்றவை) திருத்துவதும் நூலாசிரியரின் நோக்கங்களாய் இருந்தன. இந்நோக்கங்களை நிறைவேற்றும் வண்ணம் ஏறத்தாழ கி.பி. 90 ஆம் ஆண்டில் கிரேக்க மொழியில் இந்நற்செய்தி எழுதப்பட்டது. இது எபேசு நகரில் எழுதப்பட்டது என்பது கிறிஸ்தவ மரபு.

இயேசுவின் உரைகள், அவருடைய செயல்கள, அவரைப் பற்றிய செய்திகள், அவருடைய ஆளுமை, அவரது பணித்தளம்ஆகிய அனைத்துமே இந்நற்செய்தியில் ஒத்தமை நற்செய்திகளிலிருந்து வேறுபட்டு இருக்கின்றன.

அப்போஸ்தலர் பணி

http://www.arulvakku.com/biblecontent.php?book=Acts&Cn=1

 

ஆசிரியர்

திருத்தூதர் பணிகள் என்னும் நூல் லூக்கா நற்செய்தி நூலின் தொடர்ச்சியான இரண்டாவது பகுதி (1:1). ஆகவே மூன்றாவது நற்செய்தி நூலின் ஆசிரியரே இந்நூலின் ஆசிரியர் என்னும் மரபு எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இந்நூலின் பிந்திய பகுதியில் ஆசிரியர் தாமே கண்ட நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவதாக எழுதுகிறார். 'நாங்கள் பயணம்செய்தோம்', 'நாங்கள் தங்கியிருந்தோம்', 'நாங்கள் போதித்தோம்' போன்ற பகுதிகள் இந்நூலின் ஆசிரியர் பவுலின் உடன்பணியாளர் என்பதைச் சுட்டிக் காட்டுகின்றன (16:10-17; 20:5-15; 21:1-18: 27:1-28:16).

 

சூழல்

கிறிஸ்துவோ அவர் வழியைப் பின்பற்றுபவர்களோ உரோமை அரசுக்கு எதிராகக் குற்றம் ஏதும் செய்யாதவர்கள் என விளக்கமளிக்கவும், பிற இனத்தாருக்குத் திருததூதராகத் தேர்ந்து கொள்ளப்பட்ட பவுல் யூதருக்கு எதிராகப் பெருந்தவறு ஒன்றும் செய்யவில்லை என்று எடுத்துரைக்கவும் இந்நூலை ஆசிரியர் எழுதுகிறார். இச்சூழலில் நற்செய்திப் பணியும் இறை வார்ததைப் போதனையும் சிறப்பிடம் பெறுகின்றன. ஆவியார் துணையுடன் கடவுளது மீட்புத் திட்டத்துக்குச் சான்று பகர்வது திருச்சபையின் கடமை என்பது தெளிவாகிறது. திருத்தூதர்கள் - குறிப்பாகப் பேதுருவும் பவுலும் - எவ்வாறு திருத் தொண்டாற்றினர் என்பது விளக்கமாக எடுத்துரைக்கப்படுகிறது. பவுல் உரோமையில் சான்று பகர்ந்து கொண்டிருப்பதே நூலின் முடிவுரையாக அமைகின்றது.



__________________


Guru

Status: Offline
Posts: 24791
Date:
Permalink  
 

 http://en.wikipedia.org/wiki/Gospel_of_Mark

The Gospel According to Mark does not name its author.[2] A 2nd century tradition ascribes it to Mark the Evangelist (also known as John Mark), the companion of Peter,[7] on whose memories it is supposedly based.[1][8][9][10] but the author's use of varied sources tells against the traditional account and according to the majority view the author is unknown.[11][12]The gospel was written in Greek shortly after the destruction of the Second Temple in AD 70, possibly in Syria.[5]

http://en.wikipedia.org/wiki/Gospel_of_Luke

Like Mark (but unlike Matthew), the intended audience is the Greek-speaking populations of the region; it assures readers that Christianity is an international religion, not an exclusively Jewish sect.[1]

 

AD 75 to 100

Stained glass depiction of St. Luke atSt. Matthew's German Evangelical Lutheran Church in Charleston, South Carolina.

Most contemporary scholars regard Mark as a source used by Luke (see Markan Priority).[73] If it is true that Mark was written around the destruction of the Temple of Jerusalem, around 70,[74] they theorize that Luke would not have been written before 70. Some who take this view believe that Luke's prediction of the destruction of the temple could not be a result of Jesus predicting the future but with the benefit of hindsight regarding specific details. They believe that the discussion in Luke 21:5-30 is specific enough (more specific than Mark's or Matthew's) that a date after 70 seems necessary.[75][76] These scholars have suggested dates for Luke from 75 to 100. Support for a later date comes from a number of reasons. Differences of chronology, "style", and theology suggest that the author of Luke-Acts was not familiar withPaul's distinctive theology but instead was writing a decade or more after his death, by which point significant harmonization between different traditions within Early Christianity had occurred.[77] Furthermore, Luke-Acts has views on Jesus' divine naturethe end times, and salvation that are similar to the those found in Pastoral epistles, which are often seen as pseudonymous and of a later date than the undisputed Pauline Epistles.[78]

Some scholars from the Jesus Seminar argue that the birth narratives of Luke and Matthew are a late development in gospel writing about Jesus.[33] In this view, Luke might have originally started at 3:1,[33] with John the Baptist.



__________________



__________________


Guru

Status: Offline
Posts: 24791
Date:
Permalink  
 

 
Permalink Reply Quote 
More indicator.png

http://en.wikipedia.org/wiki/Gospel_of_Matthew

According to an influential hypothesis put forward by W.D. Davies, the gospel of Matthew was written as a direct response to developments within the Jewish community following the destruction of the Temple in Jerusalem in 70 AD. The Pharisees of Judea emerged as the new leaders of the Jewish community after the war, and the loss of the Temple and its priests and the ritual of sacrifice faced them with the problem of finding a new Jewish identity. Their answer was to insist on strict observance of the Law (the Torah), isolation from the gentiles, and minimalisation of the expectation of the coming of the Messiah (the expectation which had provoked the war). The Jewish Christians of Antioch responded differently: obedience to law will be done though following Jesus; Jesus was the Messiah; and Jew and gentile were to be brought into the one community.[16]

If Matthew's prime concern was to preserve the Jewish character of the church, he failed: Christianity became a Gentile religion, and Christianity and Judaism came to view each other as opposites. Matthew's own Christian community may have called themselves Nazoreans, a sect mentioned byJerome and others: like Matthew, they maintained a "high Christology" (i.e., they stressed Jesus' divine nature over his human-ness), and did not demand that Gentile Christians observe all the Law.[17



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard