New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அய்யனார் கள்ளர் ஓர் ஆய்வு


Guru

Status: Offline
Posts: 24603
Date:
அய்யனார் கள்ளர் ஓர் ஆய்வு
Permalink  
 


அய்யனார் கள்ளர் ஓர் ஆய்வு

 
Tamil-Daily-News-Paper_9391094446183.jpg
http://kallarkulavaralaru.blogspot.com/2018/04/blog-post_85.html

ஆய்வுகள் சாத்தன், சாஸ்தா, அய்யனார், அய்யப்பன் – இவர்கள் அனைவரும் ஒன்றே எனக் குறிப்பிடுகின்றன. திருமால் மற்றும் சிவனின் அம்சமாக அறியப்படும் ஐயனார் பற்றிய கதைகளும், புராணங்களும், பாடல்களும் மற்றும் ஆய்வுகளும் அனேக தகவல்கள் தருகின்றன. ஐயனார் எந்த குடிகளின் குல தெய்வம் என பிரிக்கவும் முடியாது. அதில் சில ஆய்வாளர்கள் ஐயனாரை கள்ளர்களுடன் தொடர்பு படுத்தி எழுதியுள்ளனர்.


800px-Ayyanar_on_elephant_side_view.jpg


நாட்டுப்புற ஆண் தெய்வங்களுள் அய்யனார் முதன்மை இடம் பெறுகிறார். அய்யனார் கோயில்கள் ஆரம்ப காலத்தில் அடர்ந்த வனத்திற்கு நடுவே, மலையிலும், எல்லைப் பகுதிகளிலும், காலப்போக்கில் சிற்றூர்களிலும் தோன்றின. கிராமத்தில் இதன்பின். மக்கள் தாங்கள் குடியேறிய பகுதிகளில் உள்ள எல்லைகளில் கோயில் அமைத்து வழிபட்டனர். அய்யனாரின் பிரதான காவல் தெய்வம் கருப்பசாமி. 


KARUPPANNAN.jpg
 
karuppanna-samy.jpg

அய்யனாருடன் கருப்பண்ணசாமியும் இணைந்தே காணப்படுகின்றனர். கருப்பண்ணசாமி காவல் தெய்வமாகி நிற்கின்றார். இவர் வெள்ளைக்குதிரையில் கையில் அரிவாளுடன், நாய் உடன்வர, ஊரைக் காவல் செய்வதாக நம்பப்படுகிறது.

அதில் அய்யனாருக்கும் கள்ளருக்குமான தொடர்பு ஆராயும் போது

தமிழர் வரலாறு என்ற நூலில் மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர் குலப்பிரிவுகள் தோன்றிய வகைகள் என்ற பகுதியில் " தெய்வம் - ஐயனார் (கள்ளர் பிரிவு) " என்று குறிப்பிடுகிறார்.
 
Untitled.png

கள்ளர் உட்பிரிவுகளில் 'அய்யனார்' என்ற பெயரும் கள்ளர்களுக்கு உள்ளது என்று நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் குறிப்பிடுகிறார்.

எட்கர் தர்ஸ்டன் தனது தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் என்னும் நூலில் " அய்யனார் கள்ளர் சாதியின் ஓர் உட்பிரிவு. கிராம தேவதைகள் பலவற்றுள்ளும் ஒரே ஆண் தேவதையான அய்யனார் பெயரையொட்டி அமைந்தது" என குறிப்பிடுகிறார். கள்ளர் இனத்தினர் அய்யனார் என்னும் பெயரிலும் வாழ்ந்துள்ளனர் என்று குறிப்பிடுகிறார். (க.இரத்தினம் (மொ.பெ.ஆ.)
Untitled.JPEG

அய்யனார், போரில் விழுப்புண் பட்டு இறந்த வீரர்களுக்கு எடுப்பித்த நடுகற்கள் என்றும், இறந்த வீரன் நடுகல் தெய்வமானதும் அவனை 'அய்யன்' என அழைத்து வேலும், வில்லும் சாத்தி வணங்கினர் என்பார் முனைவர் கணபதிராமன்.
 
சிறுகுடி கள்ளர்கள் ஆண்டி, மண்டை, அய்யனார் என்பன போனற்வற்றைத் தங்கள் வகுப்பாரின் பெயராகக் கொண்டுள்ளனர்.
 
தொண்டை நாட்டின் ஒரு பகுதியான ஆம்பூர், வேலூர் ஆகிய கோட்டங்களில் எயினர் என்னும் இனத்தினர் கள்ளர்களாக வாழ்ந்திருந்தனர்' என்பார் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார். இதையே எஸ். இராமச்சந்திரன் தனது ஆய்வில் சபரிமலை சபரர் என அழைக்கப்பட்ட எயினர்களின் வாழ்விடமாகவே முற்காலத்தில் இருந்துள்ளது வேட்டையும் ஆனிரை கவர்தலுமே சபரர்களுடைய வாழ்க்கை முறை. சபரி என்ற பெயர் கொற்றவையின் பெயர்களுள் ஒன்றாகும். இவள், ‘சபரர்’ எனப்பட்ட பாலை நில எயினர்களின் தெய்வமாவாள். பிற்காலத் தமிழிலக்கியங்கள் கள்ளர் - மறவர் குலத்தவரைச் சபரர் என்றே குறிப்பிடுகின்றன. ஐயப்பன் கோயில் அமைந்துள்ள மலை சபரிமலை என வழங்கப்படுகிறது. சபரிமலைப் பெருவழிப் பாதையில் அமைந்துள்ள எருமைகொல்லி (எருமேலி), காளைகட்டி போன்ற ஊர்ப் பெயர்களையும், மஹிஷி என்ற எருமை வடிவப் பெண் தெய்வத்தை ஐயப்பன் கொல்வது, பெளத்த சமயத்தவரின் தர்மசாஸ்தாவாக உருவெடுக்கும் முன்னர், கூற்றுத் தெய்வத்தின் தன்மைகள் கொண்ட காரியாகவே இருந்திருக்க வேண்டும் குறிப்பிடுகிறார். காரி என்ற பெயர் இந்திரன், ஐயனாருக்கு உரியதென்றும் தமிழ் நிகண்டுகள் குறிப்பிடுகின்றன. பைரவரைச் சிவபெருமானின் பிள்ளை எனப் பெரியபுராணம் குறிப்பிடுவது போன்றே சிவபிரான், “சாத்தனை மகனா வைத்தார்” என அப்பர் பெருமான் தமது தேவாரத்தில் குறிப்பிடுகிறார்.
 
பிறமலைக்கள்ளர்கள் புன்னூர் அய்யனார், பூங்கொடி அய்யனார், ஊர்க்காளை அய்யனார், கல்யாணக்கருப்பு, தென்கரைக்கருப்பு, சோனைக்கருப்பு, பதினெட்டாம்படிக் கருப்பு தெய்வங்களைய தங்கள் குல தெய்வங்களாகவும் வணங்குகின்றனர்.
 
தஞ்சையின் கிழக்கு பகுதிகளில் கள்ளரில் வன்னியர் பட்டம் உடையவர்கள் குல தெய்வமாக அதிகம் வணங்குகிறார்கள். அதை போல கச்சராயர் பட்டம் உடையவர்கள் குல தெய்வமாக வணங்குகிறார்கள்.
sruti%2B-%2BCopy.jpg
 
அருள்மிகு அய்யனார் திருக்கோயில் திருப்பட்டூரில் உள்ளது. இங்கு அய்யனார் பிறந்த ஊர் என்று குறிப்பிடுகின்றனர். இங்கு கள்ளர்கள் பலகாலமாக வாழ்ந்துவருகின்றனர்.
 
31351540_704723506583844_318608814667486
 
அய்யனவர் என்று கன்னியகுமாரியிலும், திருவனந்தபுரத்தில் வாழும் தாழ்த்தப்பட்ட மக்களாக அறியப்படும் மக்கள் தங்களை எயினர்களாகிய கள்ளர்களின் உட்பிரிவாகிய 'அய்யனார்' என்னும் அய்யனவர்'களாக வாழ்ந்து வருவதாகவும் கூறிக்கொள்கின்றனர்.
16265825_1847593028856354_59120245361768
 
வாணிகத்திற்குப் புறப்படும் வண்டிகள் கூட்டம் கூட்டமாகவே செல்லும். இக்கூட்டம் 'வாணிகச் சாத்து' எனப்பட்டது. அவ்வழிகளில் பெரும்பாடி காவல் அதிகாரி, சிறுபாடி காவல் அதிகாரி என்போர் சோழப்பேரரசின் காலத்தே பணியாற்றினர். அவர்களை பாதுகாக்கும்போர்குடி தலைவனையே சாத்தன் என அழைக்கப்பட்டுள்ளனர்.  வாணிக நாட்டு கோட்டை செட்டிகள் என்று அழைக்கபடும் நகரத்தார்களை காத்து நின்றவர்களா கள்ளர் மற்றும் மறவர்களாக அறியப்படும் வல்லம்ப நாட்டார்கள், சாத்தனாரை தங்கள் குல முதல்வனாக கொண்டுள்ளனர்



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

மேலும் ஐயனார் பற்றிய தகவல்கள்

கி.மு. 500 ஆம் ஆண்டில் சீவகத்தை உருவாக்கியவர் மற்கலிதான் தமிழ் மக்கள் வணங்குகிற ‘தர்ம சாஸ்தா’ (அய்யனார்களில் ஒருவர்) என்றும், மகாவீரரும் மற்கலிகோசாலரும் ஒன்றாகப் பணியாற்றி, பிறகு இருவரும் பிரிந்துவிட்டனர் என்று ஜைன இலக்கியத்தில் குறிப்பும் உள்ளது. மற்கலியின் ஆயுதம் செண்டாயுதம், அய்யனார் கையில் இருப்பதுவும் அதுவே. பெரிய புராணத்தின் ‘வெள்ளானைச் சருக்கம்’ வழியாக அய்யனார் பிறந்த இடம் திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகேயுள்ள திருப்பட்டூர் என்று அறிய முடிந்தது. அங்கே கள ஆய்வுசெய்தபோது, அய்யனார் பிறந்த ஊர் என்பதற்கான கல்வெட்டு ஆதாரம் கிடைத்தது. அவ்வூரில் சிவாலயமும், அய்யனார் கோயிலும் உள்ளன.
 
தர்ம சாஸ்தா’ மரணமடைந்த இடமான சித்தன்னவாசலில், குகைக்குள்ளாக மூன்று சிலைகள் இருக்கின்றன. சித்தன்னவாசல் குகைக்கோயிலில் சிலையாக இருக்கிற மூவரும், ஐயப்பன், அய்யனார்கள்தான் என்றும் நடுவில் இருப்பவர் வேளிர் மரபில் பிறந்து சிற்றரசராக வாழ்ந்து, துறவியான அறப்பெயர் சாத்தன் (தர்ம சாஸ்தா). இரண்டாவது நபர் கிராமங்களில் பூரணம், பொற்கலை எனும் இரு மனைவியரோடு அருள்பாலிக்கிற பூரண அய்யனார். மூன்றாவதாக இருப்பவர் அடைக்கலம் காத்த அய்யனார் (பாண்டிய மன்னரின் படைத்தளபதியாக இருந்து துறவியானவர்) என்று  ‘ஆசீவகமும் அய்யனார் வரலாறும்’ நூல் எழுதிய பேராசிரியர் க.நெடுஞ்செழியன் கூறுகிறார். 
tanjore_periyakoil_ayyanar.jpg

20150501_082727.jpg
 
நடுகல் வழிபாடாக இருந்த அய்யனார், கி.பி. பத்தாம் நூற்றாண்டில் சோழ நாட்டில் அய்யனாருக்கு கோயில் அமைக்க முதலாம் ராஜராஜ சோழன் ஏற்பாடு செய்திருக்கிறான். இதன்பின்னர் தான் தமிழகத்தில் மற்ற பகுதிகளில் அய்யனார் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. சிதம்பரம் நகரம் காரிய பெருமாள் கோயிலிலில் அய்யனாரை குடும்பத்துடன் வழிபடும் சோழ மன்னன் “முடித்தலை கொண்ட பெருமாள்” என்ற பட்டப்பெயர் கொண்ட மூன்றாம் குலோத்துங்கன் வணங்கிய நிலையில் காணப்படும் சிற்பம் உள்ளது. 
 
 
Tamil-Daily-News-Paper_71387887002.jpg
 
திருப்புறம்பியம் ஊரில் பிரித்திவி மன்னன் பெயரால் பிரித்திவி ஐயனார் சன்னதியும், விஜயாலயச்சோழ மன்னன் பெயரால் விஜயாலய ஐயனார் சன்னதியும் அருகருகே உள்ளன.
Thirup_puram_piyam_1_620x528.jpg




31564056_1495615720560669_81809385731102



 அரியலூர் மாவட்டம் திருமானூர் , விழுப்பணங்குறிச்சி அருகே உள்ள சுந்தர சோழ அய்யனார்
31485177_1495615803893994_23179440092819

31495858_1495615767227331_80785051033429

அய்யனார் பற்றிய புராணங் கதைகளில் "சிவஞான முனிவர் பாடிய காஞ்சி புராணத்தில் 'மாசாத்தான்'. என்னும் தனிப்படலத்தில் காஞ்சியில் ஐயனார் அவதரித்துக் கோயில். கொண்ட செய்தி கூறப்பட்டுள்ளது”17. கந்தபுராணத்தை அடியொற்றியே. ஐயனாரின் அவதாரச் சிறப்பு கூறப்படுகிறது. ஐயனார் காஞ்சி நகருக்கு. வந்து இறைவனை வழிபட்டு காமாட்சி அம்மனுக்கு காவல் தெய்வமாக அம்மையின் அருகில் அமர்ந்தார் என்று கூறுகிறது.
 
மானவீர பாண்டிய மன்னனின் அமைச்சர்களாக ஏழுபேர் இருந்தனர். என்றும், அவர்களில் அருஞ்சுனை காத்த ஐயனாரும், கருக்குவேல் ஐயனாரும் முதலிடம் பெற்றிருந்தனர். பாண்டிய மன்னர்கள் காலத்தில். இத்தெய்வங்களுக்கு முதலிடம் கொடுத்து வணங்கப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. கற்குவேல் அய்யனாரும், மேலப்புதுக்குடியில் அமைந்துள்ள அருஞ்சுனை காத்த அய்யனாரும் சகோதரர்கள் எனப் பதிவு செயயப்பட்டுள்ள கருத்து சிறப்பானது.(H.R.Pate,tinneveli Manuel,1916)
 
30762639_10209489128024387_7516202289942
 
அய்யனார் செண்டு என்னும் படைக்கருவியை உடையவர். பாண்டியர்களின் முத்திரை சின்னமான இரண்டு மீன்களுக்கு நடுவே ஒரு செண்டு உள்ளது. கரிகாலன் தனது கையில் செண்டு என்னும் படைக்கருவியைக் கொண்டிருந்தான் என்று கலிங்கத்துப்பரணி கூறுகிறது. செண்டு என்னும் படைக்கருவி திருமாலின் திருக்கரத்திலும் திகழ்கிறது. 
 
30742663_10209489314429047_2679994446640
 
மன்னார்குடி அருள்மிகு இராஜகோபாலஸ்வாமி தமதுத் திருக்கரத்தில் ஏந்தியிருப்பதுவும் செண்டு என்னும் ஆயுதமே ஆகும்.
 
இந்திரன் இந்திராணிக்கு அசுரர்களால் தீங்கு நேரிடுமோ என்று அஞ்சிய அவன் ஐயனாரைத் துதித்து அவரைக் காவலாக எழுந்தருளியிருக்க வேண்டினான்.; ஐயனார் தனது சேனாபதிகளில் ஒருவரான மஹாகாளர் என்பரை இந்திராணிக்குக் காவலாக நியமித்தார் என்ற கதைகளும் உள்ளது.
10486657_715277295229822_388864885897749
 
“தேவர் கோமான் ஏவலிற் போந்த காவற் பூதத்துக் கடைகெழு பீடிகை” எனக் சிலம்பு கூறுகின்றது. பூதம், இந்திரனின் ஏவலால் பூமிக்கு வந்ததாகவும், நிணத்துடன் பொங்கல் முதலிய படையல்களை ஏற்றுக்கொள்வதாகவும். மேலும் மறக்குலத்தினர் அந்தபூதத்திற்கு அவரை, துவரை போன்ற பயிர்வகைகளையும் படைத்து, மலர் தூவி, புகை எழுப்பி வாழ்த்தினர் எனக் குறிப்பிடுகின்றது. வீரர்கள், வில், வேல், வாள், ஈட்டி போன்றவற்றை அந்த பூதம் முன் வைத்து வெற்றி வேண்டி வழிபட்டதாகவும் சிலப்பதிகாரம் கூறுகின்றது. இப்பொழுதும் கருப்பண்ணசாமி வில், வேல், வாள், ஈட்டி பலவேறு ஆயுதங்களைத் தாங்கியவராகத் தான் காட்சி அளிக்கின்றார். அந்தப் பூதம் தான் பிற்காலத்தில் கருப்பண்ணசாமியாக மாறி இருக்க வேண்டும் என்றும் அந்த பூதத்தை ஏவலாகக் கொண்ட, யானை வாகனம் உடைய இந்திரன் தான் பிற்காலத்தில் அய்யனாராக வழிபாடு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும் கருதப்படுகிறது.
 
'சாஸ்தா' என்னும் சொல்லின் திரிபாகிய 'சாத்தன்' என்னும் பெயர் புத்தரைக் குறிக்கும் பெயராகப் பண்டைக் காலத்தில் வழங்கப்பட்டு வந்தது. இந்தப் பெயரைப் பௌத்த மதத்தினர் பெரும்பான்மையும் தத்தம் சிறுவருக்குச் சூட்டினர்.
 
கோழிக் கொடியோன் சாதவாகனன்
காரி, சாத்தன், கடல்நிற ஐயன்
 
எனக் குறிக்கும் ஐயனாரின் கொடி சேவல் என்பதும், ஊர்தி குதிரை என்பதும் அவ் ஐயனார் காரி, சாத்தன், கடல் நிற ஐயன் என அழைக்கப்பட்டார் என்பதும் அப்பாடற்பகுதியின் பொருளாகும்.
 
கற்குவேல் அய்யனார் கள்ளர் வெட்டு திருவிழா தல வரலாறு 


19598618_199757093885514_112787013611379

கற்குவேல் அய்யனார் கோயில் என்பது தூத்துக்குடி தேரிக்குடியிருப்பு கிராமத்தில் அமைந்துள்ளது. தேரிகாடு என்னும் மணற்பாங்கான பகுதி தமிழகத்திலுள்ள பாலைவனம் எனலாம். அப்பாலைவனச் சோலைகளில் அய்யனார் கோவில்கள் உள்ளது
DSC07630.JPG
12928163_10204871469185802_8763644037893
தேரிக்குடியிருப்பு கிராமத்தில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் 500 முதல் 1000 ஆண்டுகள் பழமை நிறைந்தது. இந்தப் பகுதி பாண்டியர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. அதிவீர ரான சூர பாண்டியன் என்ற மன்னன் ஆட்சி செய்து வந்தான். அவனிடம் அமைச்சராக இருந்தவர் அய்யனார்.
இவ்வாலயத்தின் மற்றொரு தெய்வம்தான் கள்ளர்சாமி. அவர் பெயரால் நடக்கும் கள்ளர் வெட்டு திருவிழாவே இக்கோயிலின் முக்கிய திருவிழாவாகும். இதையறிந்த விஜயநகர பேரரசின் எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த (இப்போதைய ஆந்திரா) குப்பண்ணா என்பவன் தூத்துக்குடி மாவட்டம் தேரிக்குடியிருப்புக்கு வந்தான். கோயிலை நோட்டமிட்ட அவன் பொருட்களை களவாட திட்டமிட்டு செம்மண்தேரி பகுதியில் பனைமரங்களுக்கிடையே தங்கினான். நள்ளிரவு நேரம் சில ஆயுதங்களுடன் கோயிலுக்குள் நுழைந்தான். 

கருவூலக பெட்டியில் இருந்த ஆபரணங்களை மூட்டையாகக் கட்டிக்கொண்டு புறப்படத் தயாரானான். அப்போது வன்னியராஜன் குப்பண்ணா கைகளை பின்புறமாகக் கட்டினார். முன்னடியான் அவனை இழுத்துச் சென்றார். அனைவரும் சேர்ந்து அய்யனார் முன்பு நிறுத்தினார்கள். அய்யனார் அவனை கோயிலின் பின்புறம் உள்ள செம்மண் தேரியில் கொண்டு சென்று சிரச்சேதம் செய்துவிடுங்கள் என்றார். அதன்படி அவனை செம்மண் தேரிக்கு அழைத்துச் சென்று தலையை வெட்டி எறிந்தனர். அவனது ஆவி, அய்யனாரை அழைத்தபடி கோயிலின் வாசலில் நின்றபடி கத்தியது: ‘‘கட்டிய மனைவியும், பெற்ற நல்பிள்ளைகளும் கஞ்சிக்கு வழியின்றி கதறுகிறார்கள். 

பிழைப்புக்கு வழியுமில்லை, பேரரசனும் உதவவில்லை. கருணை காட்ட யாருமில்லை, களவாட உம் இருப்பிடம் வந்தேன். பிச்சாடனார் மைந்தனே, உயிர் பிச்சை தாரும். பழி பாவத்தால் இழி பிறப்புக்குள்ளான என்னை போற்றி புகழ்ந்துரைக்கும் வகையில் வாழ்வு கொடும். ஒருநாள் வாழ்ந்தாலும் போதும். உம்மால் உயர்வு பெற வேண்டும்.’’ ‘‘மாண்டவன் மீள்வதில்லை, இது மானுட நீதி. உம் மனைவி, மக்கள் எல்லா வளத்துடன் வாழ்வார்கள். நீ என் சந்நதியில் கள்ளர்சாமி என்ற பெயரில் வணங்கப்படுவாய். எனது ஆலய விழாவில் நீ முக்கியத்துவம் பெறுவாய். உன்னை நம்பி வரும் பக்தர்களுக்கு நீ கொடுக்கும் வரம், அவர்களை மேன்மை அடையச் செய்யும். உனது மரணம் திருட நினைக்கும் யாவருக்கும் பாடமாக அமையும் வகையில் கள்ளன் உன்னை வெட்டிய நிகழ்வே என் ஆலய விழாவில் முக்கிய நிகழ்வாகட்டும்,’’ என்று உரைத்தார் அய்யனார்.

அதன்படி குப்பண்ணன் தெய்வமானார். ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் 30ம் தேதி கள்ளர் வெட்டு திருவிழா நடைபெறுகிறது. பேச்சியம்மன் சந்நதி முன்பு நின்று, ‘‘தாயே நான் போகிறேன். உத்தரவு கொடு அம்மா’’ என்று கள்ளர்சாமிக்கு ஆடுபவர் கேட்பார். 

தெய்வமாக மாறிய குப்பண்ணன் வணங்குபவர்களுக்கு எல்லா பாக்கியமும் கிடைப்பதாக அப்பகுதியினர் மெய்சிலிர்க்கக் கூறுகின்றனர்.
 
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு திருமாவளவன் என்னும் கரிகாற்சோழன் போன்ற சோழப் பேரரசர்கள் ஆட்சி செய்த காலத்தில் சோழ வளநாடு பல கூற்றங்களாகப் பகுக்கப்பெற்று விளங்கியது. ஆவூர் கூற்றம், ஆர்க்காட்டுக் கூற்றம், கிழார் கூற்றம், உறையூர் கூற்றம் போன்றவை அவர்கள் வகுத்த சோழநாட்டு ஆட்சிப் பகுதிகளாகும். ஆர் என்பது ஆத்தி மரத்தைக் குறிக்கும் சொல்லாகும். ஆத்திமரங்களை மிகுதியாகப் பெற்ற காடாக இக்கூற்றம் விளங்கியதால் ஆர்க்காடு என அழைக்கப் பெற்றது. சோழப் பேரரசர்களுக்குரிய மாலை ஆத்தி மாலை என்பதால் ஆர் என்றும் ஆத்தி மரத்திற்கு தனிச் சிறப்பு உண்டு. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழப் பேரரசர்களின் யானைப்படைக்கு தலைமை வகித்த அழிசி, அவன் மகன் சேந்தன் போன்றவர்க்கு உரிய நாடாக இக்கூற்றம் திகழ்ந்தது. காவிரி, ெவண்ணாறு ஆகிய இரண்டு பேராறுகளுக்கு இடையில் திகழ்ந்த இக்கூற்றத்திற்கு தலைமை இடமாக விளங்கியது ஆர்க்காடு என்னும் ஊராகும்.
 
 
 
வரலாற்றில் சாத்தன் என்று பெயர் உடையவர்கள்

தருமபுரி மாவட்டம் தருமபுரி வட்டம் கொளகத்தூர் எனும் ஊரில் வட்டெழுத்து பொறிப்பு உள்ள நடுகல் கல்வெட்டு உள்ளது. (கிரு.மா. கல். 86/1974

மாந்த பருமற்கு இரபத்திரண்டா / வது வரி ஊரி நாட்டுவர் கரு இரும்புரை / சாத்தன்னோ / டு கற்றொறு / கொள்ளுட் ப / ட்டாரு கல்

கற் - கன்று; கொள்ளுட் - கவர்தலில்; கல் – நடுகல்

யாருக்கும் அடங்காமல் தனி ஆட்சி செலுத்திய மாந்த வர்மனுககு இருபத்திரண்டாவது ஆட்சி ஆண்டில் (கி.பி. 728) வரி ஊர் நாட்டவரான கரு இரும்பொறை சாத்தன் என்பவனோடு சேர்ந்து கன்றையும் ஆநிரையையும் கவரும் போது எதிரணிப் படை நடத்திய காப்புப் போர் தாக்குதலில் வீர சாவடைந்தான். 

புறநானூறு, 242. பாடியவர்: குடவாயில் கீரத்தனார். பாடப்பட்டோன்: ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன்.

இளையோர் சூடார் ; வளையோர் கொய்யார் ;
நல்யாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்
பாணன் சூடான் ; பாடினி அணியாள் ;
ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த
வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை
முல்லையும் பூத்தியோ, ஒல்லையூர் நாட்டே?

இதன் பொருள்:-

முல்லையே! தன்னுடைய வீரம் வெளிப்படுமாறு பகைவர்களின் வீரர்களைக் கொன்ற, வலிய வேலையுடைய சாத்தன் இறந்த பிறகு, ஒல்லையூர் நாட்டில் பூத்தாயோ? இனி, இளைய ஆடவர்கள் உன் பூக்களைச் சூடிக்கொள்ள மாட்டார்கள்; வளையல் அணிந்த மகளிரும் உன் பூக்களைப் பறிக்க மாட்டார்கள்; நல்ல யாழின் தண்டால் மெதுவாக வளைத்துப் பறித்து உன் பூக்களைப் பாணனும் சூடமாட்டன்; பாடினியும் சூடமாட்டாள்.

நொச்சி சாத்தன் : -

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே பாலவாடி எனும் ஊரில் கி.பி. 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கல்வெட்டு உள்ளது. (நடு. பக்.227)

ஸ்ரீ புருச பருமற்கு யா / ண்டு பத்தாவது பெரும்(பா) / ண முத்தரைசர் கங்கரை(சா)ள்ப் பாகற்றூர்த் தொறு அருங்கள்வர் கொண்ட ஞான் / று மீட்டுப் பட்டார் நொ / ச்சி சாத்தன் க(ல்)

கட்டாணை எனும் ஸ்ரீ புருசனுடைய பத்தாவது ஆட்சி ஆண்டில் முத்தரையரான பெரும் பாண கங்க அரைசர் ஆளும் பாகற்றூர் ஆநிரைகளை அருங்கள்வர் எனும் கூட்டத்தார் கவர்ந்து கொண்ட போது அவற்றை மீட்டு வீரசாவடைந்த நொச்சி சாத்தன் நினைவில் நட்ட நடுகல் இது. நொசசி சாத்தன் எவ் ஊரன், எந் நாடன், எவருடைய படைஆள் போன்ற செய்திகள் கல்வெட்டில் இல்லை

21730948_230515387476351_853147320819267
வைணவர் புத்தரைத் திருமாலின் ஓர் அவதாரமாகவே வெளிப்படையாக ஒப்புக்கொண்டனர். சைவ சமயத்தோர், புத்தராகிய சாத்தனாரைத் திருமாலுக்கும் சிவபெருமானுக்கும் பிறந்த பிள்ளையாகக் கற்பித்து, சாத்தனாரைத் தமது தெய்வக்குழாங்களில் ஒருவராகச் சேர்த்துக்கொண்டனர்.
 
ஆய்வு : திரு . பா .விக்னேஸ்வர் மாளு(வ)சுத்தியார்.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard