வரலாற்றில் மற்றொரு பெரும்பிழை சேரமான் பெருமாள் இஸ்லாமியராக மாறி மெக்கா சென்றார் என்பது. மும்மணிக் கோவை, பொன்வண்ணத்தந்தாதி மற்றும் திருக்கைலாய ஞானஉலா பாடியவர் மாறிச் சென்றதாக அவர்கள் கூறும் ஆதாரங்கள்
1. சேரமான் பள்ளி என வழங்கப்பெறும் பள்ளிவாசல் 2. கேரளோத்பத்தி மற்றும் கேரள மாஹாத்ம்யம் ஆகிய நூல்கள் தரும் தகவல்கள். 3. சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள் ஆழிக்கடல் அரையா என்று பாடி கடல்வழியே இருவரும் புகுந்தது.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் சேரமான் பெருமாளுக்கு இருநூறு வருடங்களுக்கு உள்ளாகவும் ராஜராஜன் எடுப்பித்த பெரிய கோயிலில் சேரமான் பெருமாள் கைலையேறும் காட்சியை அவன்ஓவியமாக்கியது, பிறகு வந்த பெரியபுராணம், அதனையொட்டி தாராசுரத்துச் சிற்பம், இன்னும் பல கோயிற் சிற்பங்கள் கூறும் செய்திகளையெல்லாம் விடுத்து பிற்கால ஆதாரங்களான கேரளோத்பத்தியும் கேரளமாஹாத்ம்யமும் ஆதாரமாக எப்படி அமையும் என்பதுதான். சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள் பாடியபடியே இருவரும் கடல்வழி புகுந்தனர் என்றால் சேரமான் மட்டும் வலது புறம் திரும்பி மெக்கா புகுந்தாரா. சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள் வேறுதிசை புகுந்தாரா. சேரமான் பள்ளி விஷயத்திற்கு வருவோம். இது சேரமான் என்னும் பெயர் பொதுவாகச் சேரமன்னர்களுக்குப் பயின்று வரும் பொதுச்சொல். இவற்றை நன்கு ஆய்ந்த பல ஆய்வாளர்கள் இந்தப் பள்ளிவாசல் பள்ளி பாணபெருமாள் என்னும் நாயனாருக்குச் சிலகாலம் பிந்தி வந்த மன்னரால் எடுப்பிக்கப் பெற்றதைக் கூறுகின்றனர்.
ஆக பள்ளியும் கேரளோத்பத்தியும் கூறும் மன்னர் இவராகலாம். இரு ராஜராஜர்களும் பெரியபுராணமும் மற்றும் பல சிற்பங்களும் தரும் தரவுகள் பொய், அவர் மெக்கா புகுந்ததே மெய் என்று விதண்டாவாதம் செய்தால், மெக்காவில் சிவாலயம் இருந்ததாக ஒரு கூற்றை ஒப்புக் கொண்டால் போதும். சேரமான் பெருமாள் மெக்கா புகுந்த செய்தியை ஒப்புக் கொள்ள நானும் தயார்.....