நரகாசுரன் பாரதத்தின் வடகிழக்கு பகுதியின் அரசன்: நரகாசுரன் அசுரன், அரக்கன் அல்லது ராக்ஷஸன் இல்லை, ஆனால், பாரதத்தின் வடகிழக்குப் பகுதியான காமரூபத்தை ஆண்டுவந்த அரசன் ஆவான். சமீத்தைய அகழ்வாய்வுகள் வடகிழக்கு மாநிலங்களின் காலத்தை 3000 BCEக்கு முன் எடுத்துச் செல்கின்றன. சில ஆராய்ச்சியாளர்கள், இவன் மங்கோலிய இனத்தவன் என்றும் எடுத்துக் காட்டுகின்றனர். அதாவது, அவன், வடகிழக்கு பகுதிகள், மேலே மங்கோலியா முதலியவற்றை ஆண்டிருக்கக் கூடும். ஆனால், இனவாத சித்தாந்தங்கள் தோற்றுவித்த நிலையில், அத்தகைய திரிபு விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கலாம். பிராக்ஜோதிசபுரம் என்ற நகரத்தை உருவாக்கி, காமரூபத்தின் தலைநகராக்கி ஆட்சி செய்து வந்தான். இவனது சரித்திர விவரங்களை புராணங்களிலிருந்து மீட்டெடுக்க வேண்டியதுள்ளது. ஜைன-பௌத்தர்கள் காலங்களில், இதிகாச-புராணங்களில் அதிக அளவு இடைசெருகல்கள் செய்யப்பட்டன. அதுமட்டுமல்லாது, சில விசயங்கள் மாற்றி எழுதப்பட்டன, ஏன் புதியதாக புராணங்களையே உருவாக்கி சேர்த்தனர். இதனால், 18-புராணங்கள், 18-உப-புராணங்கள், என்று எண்ணிக்கையிலும் வளர்ந்தன. இவற்றிலிருந்து சரித்திரத்தை மீட்டெடுக்க வேண்டியுள்ளது.
சக்தி வழிபாட்டில் நாட்டம் கொண்ட நரகாசுரன்: 3100 BCE வாக்கில் ஆட்சி செய்து வந்த நரகாசுரன் சக்தி வழிபாட்டில் மிக்க நாட்டம் கொண்டவனாக இருந்தான். பூமாதேவிக்குப் பிறந்தவன் என்று உருவகமாக சொல்லப்படுவதால், தாயை தெய்வமாக மதித்ததால், காமாக்கியா கோவிலையும் கட்டினான். அந்நேரத்தில், சக்தியை அடையாளப்படுத்துவதில் ரிஷி-முனிவர்கள் மற்றவர்களிடையே கருத்து வேறுபாடு இருந்தது. ஆதிசக்தி என்று தேவியை பொதுவாக வழிபட்டு வந்து வந்தனர். அதே நேரத்தில், இமயமலையைச் சுற்றியுள்ள அரசை ஆண்டுவந்த அரசன் ஹிமவந்தனின் மகளான பார்வதி, ஹேமாவதியை, சிவன் மணந்து கொண்டார். சிவன் ஒரு சீனதேசத்து அரசன் என்று சொல்லப்பட்டது. சிவகணங்கள் எல்லொருமே குள்ளர்களாக இருப்பதை கவனிக்கலாம். இந்த விவரங்கள் எல்லாம் சைன-மங்கோலிய-நேபாள தொடர்புகளைக் காட்டுகிறது. இவர்கள் எல்லோருமே மந்திர-தந்திர-யந்திர முறைகளை கடைபிடித்தவர்கள்.
சக்தி வழிபாட்டில் வேறுபாடு ஏற்பட்டது: தக்ஷன் யக்ஞத்தில் சிவனுக்கு மரியாதை செய்யப்படாதலால், பார்வதி, தீயில் வீழ்ந்து சதியானாள். இதனால், பார்வதி, சதி, சக்தியாக கருதப்பட்டு, சக்தி வழிபாடு பிரபலம் ஆகியது. இந்த பிரிவைச் சார்ந்தவர்கள் காமாக்கிய கோவிலுக்கு வந்த வழிபடும் போது, வேறுபாடு ஏற்பட்டது. தங்களது தேவி வேறு, சக்தி வேறு என்ற சண்டை / போட்டி ஏற்பட்டது. இதனால், பார்வதிக்கு மரியாதை அளிக்கப்படவில்லை. அதுப்போலவே, ஒருமுறை வசிஷ்டர் அங்கு தேவியை வழிபட வந்தபோதும், நரகாசுரன் அவரைத் தடுத்து, அவமரியாதை செய்தான். இதனால், அவன் உயிரோடு இருக்கும் வரை அக்கோவிலுக்கு வரமாட்டேன் என்றும், அவன் தேவியால் மரணம் அடைவான் என்றும் சபித்தார். அதுமட்டுமல்லாது, காமாக்கியதேவியையே சபித்ததால், தேவி நீலாசல் மலையை விட்டு சென்று விட்டதாகவும் காளிகா புராணம் போன்றவை சொல்கின்றன. ஜைன-பௌத்தர்கள் மந்திர-தந்திர-யந்திர முறைகளை கையாண்டபோது, பெண்கள் அதிகமாக பாதிக்கப் பட்டனர். சந்நியானிகள் மற்றும் பிக்குனிகளை உப்யோகப் படுத்தியபோது, துஷ்பிரயோகங்கள் ஏற்பட்டன. இதனால், ஒருநிலையில், பெண்களை இவற்றில் சேர்க்கக் கூடாது என்ற விலக்கும் அறிமுகப் படுத்தப்பட்டது. இதெல்லாம் அக்காலத்தில் சக்திவழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்களில் ஏற்பட்ட இறையியல் குழப்பங்கள் என்று தெரிகின்றன.
நரகாசுரன் பெண்களை உபயோகப்படுத்தியது: நரகாசுரன் பூமாதேவி மற்றும் பிரஜாபதி என்ற வராகம்/ பன்றிக்கும் பிறந்தவன் போன்ற கதை பிற்பாடுதான் உருவாகியிருக்க வேண்டும். சதபத பிராமணத்தில் [c.1500 BCE] பிரஜாபதி என்ற வராகம் குறிப்பிடப்படுகிறது. பிறகு ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஹரிவம்சத்தில் பூமாதேவி மற்றும் பிரஜாபதி என்ற வராகத்திற்கும் பிறந்த முதல் குழந்தை நரகாசுரன் என்று குறிப்பிடப்படுகிறது. பிறகு விஷ்ணு புராணம், அதற்கும் பிறகு, பாகவத புராணத்திலும், இக்கதை பெரிதாக்கப்பட்டு, விவரணங்கள் சேர்க்கப்படுகின்றன. 10ம் நூற்றாண்டைச் சேர்ந்த காளிகாபுராணத்தில் இக்கதை இன்னும் பெரிதாக்கப்பட்டது. அதன்படி, நரகாசுரன் பல நாடுகளை வென்று, தென்கிழக்கு நாடுகளையும் சேர்த்து ஆண்டதாக சொல்லப்பட்டது. வானத்தின் தேவதை அதிதியின் காதணிகளைக் கவர்ந்ததோடு, அவரது நாட்டையும் ஆக்கிரமித்துக் கொண்டு 16,000 பெண்களையும் கவர்ந்து சென்றான் என்று பாகவதம் கூறுகின்றது. ஆங்கிலத்தில் அதிகமாக என்பதைக் குறிக்க மைரியாட் [myriad / miriad] என்ற வார்த்தை உபயோகிப்பார்கள். அதை சிலர் 1000, 2000 என்றும் குறிப்பிடுவர். அதே போலத்தான் இந்த 16,000 குறிப்பிடப்படுகிறது. மந்திர-தந்திர-யந்திர முறைகளை ஜைன-பௌத்தர்கள் துஷ்பிரயோகம் செய்தது போல, நரகாசுரனும் செய்திருக்கலாம்.
நரகாசுரனின் கொடுமைகள் பற்றி புகார் கொடுத்தது: ஆக அத்தனை கொடுமைகள் நடந்த நிலையில், நரகாசுரனைப் பற்றி யாராவது புகார் கொடுக்கத்தான் செய்வார்கள். இதனால், தேவர்கள் எல்லோரும், விஷ்ணுவிடம் முறையிட, அவர், தான் கிருஷ்ணனாக அவதாரம் எடுத்து, நரகாசுரனைக் கொல்வதாக வாக்களித்தார் என்று புராணங்கள் கூறுகின்றன. பிரம்மாவை வேண்டி கடும் தவம் இருந்து, நரகாசுரன் தான் உலகத்தில் யாராலும் கொல்லமுடியாது என்ற வரத்தைப் பெற்றிருந்தான். அதாவது, பெற்ற தாயைத் தவிர, வேறெவராலும் கொல்லப்படலாகாது என்ற வரத்தைப் பெற்றிருந்தான். இதனால், பூதேவியே, சத்தியபாமாவாக பிறந்து, கிருஷ்ணரை திருமணம் செய்து கொண்டார் என்றுள்ளது. சத்தியபாமாவின் வளர்ப்புத் தந்தை ஒரு கரடி-அதாவது ஜாம்பவான். அதாவது விலங்குகளின் சின்னங்கள் உபயோகப்படுத்தியிருப்பதும் கவனிக்கத் தக்கது. ஆக, கதைகள் இவ்வாறு இருக்கின்றன.
கிருஷ்ணர் சத்தியபாமாவின் உதவியோடு நரகாசுரனைக்கொன்றது, பெண்களை மீட்டது: கிருஷ்ணர் இருந்தவேளையில், நரகாசுரனின் கொட்டம் நாளுக்கு நாள் அதிகரித்ததால், தேவர்களும், கடவுள்களும் கிருஷ்ணரைச் சந்தித்து முறையிட்டனர், என்று புராணங்கள் கூறுகின்றன. நரகாசுரனை ஒடுக்கி, அவனிடமிருந்து தங்களுக்கும், மக்களுக்கும் விடுதலை தர வேண்டும் என கேட்டுக்கொண்டனர். நரகாசுரனை ஒழிக்க கிருஷ்ணர் வாகளித்தார். நரகாசுரன் பெற்ற வரம் பற்றி அறிந்த கிருஷ்ணர், தனது ரத சாரதியாக மனைவி பூதேவியின் மறுஉருவமான சத்யபாமாவை அழைத்துச் சென்றார். நரகாசுரனுக்கும், கிருஷ்ணருக்கும் இடையே நடைபெற்ற போரின் போது, நரகாசுரன் விட்ட ஒரு அம்பு தாக்கி கிருஷ்ணர் மயக்கமடைகிறார். இதையடுத்து சத்யபாமா, வில்லை எடுத்து, அம்பைத் தொடுத்து நரகாசுரனை குறிவைத்து ஏவுகிறார். நகராசுகரன் வீழ்கிறான். அதாவது அவன் பெற்ற வரத்தின் படி, தாய் மூலமாகவே அவனுக்கு இறப்பு ஏற்படுகிறது. கிருஷ்ணர், நரகாசுரன் பிடியில் இருந்த அனைத்துப் பெண்களையும், அதிதியின் காது வளையங்களையும் மீட்டு தேவர்களிடம் ஒப்படைத்தார். நரகாசுரனை அதிகாலையில் வதம் செய்து முடித்த கிருஷ்ண பகவான், எண்ணை தேய்த்து தலை முழுகினார். அந்த நாளே தீபாவளியாக இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு, கொண்டாடப்படுகிறது. அதாவது, நரகாச்யுரனின் தாயார், தனது மகனின் இறந்த நாளை துக்க நாளாக இல்லாமல், சந்தோஷமாகக் கொண்டாட வேண்டும் என்று வேண்டிக் கொண்டாள்.
ஒற்றைக்கொம்பு விலங்கு / வராகம்: ஒற்றைக்கொம்பு விலங்கு [unicorn] உலகத்தின் எல்லா பழையநாகரிகங்களின் கதைகளிலும் காணப்படுகிறது. அதில் வராகமும் உள்ளது. இப்பகுதிகளில் ஒற்றைக்கொம்புடம் இருக்கும் விலங்கு காண்டாமிருகம் ஆகும். ஒருவேளை, சின்னங்களில் குறிக்கும் போது, விலங்குகள் மாறியிருக்கலாம். மற்ற நாகரிகங்களில் குதிரை, ஆடு, எருது, மீன் என்று பலவாறாகக் குறிக்கின்றப்படுகின்றன. கொண்டாடும் தினத்தின் மகத்துவம் மாறினாலும், தினம் மாறாமல் இருப்பதும் நோக்கத்தக்கது. அதனால், இந்தியாவில் வராக அவதாரம் உவமையாக உபயோகப் படுத்தப்பட்டுள்ளது. வராகம் என்பது, பாரதத்தில் நல்லதற்குத்தான் உபயோகப் படுத்தப்பட்டு வந்துள்ளது. வராகம் என்றால் தங்க நாணயம் என்ற பொருளும் உண்டு. இதனால், அந்த வெற்றி பண்டிகையாகக் கொண்டாடப் படுகிறது. சீக்கியர்கள் 1577ல் தங்கக் கோவில் கட்ட ஆரம்பித்த தினத்தை தீபாவளியாக கொண்டாடுகின்றார்கள். சமணர்கள் / ஜைனர், மகாவீரர் முக்தியடைந்த தினத்தை தீபாவளியாக கொண்டாடுகின்றார்கள். தீபாவளியாக கொண்டாடுகின்றார்கள். ராமர் அயோத்தியாவுக்குத் திரும்பி வந்தபோது, மக்கள் கொண்டாடினார்கள் என்றும் சேர்க்கப்பட்டது. ஆக இப்படி தீபாவளி சந்தோஷமாகக் கொண்டாடப் பட்டு வரும் போது, சரித்திரம் அறியாமல், இக்காலத்தில் திரிபுவாதங்களை வைக்க வேண்டிய அவசியம் இல்லை.
© வேதபிரகாஷ்
28-10-2016