New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மனுவும் வள்ளுவரும் குறிப்பிடும் மறுபிறப்பு


Guru

Status: Offline
Posts: 24811
Date:
மனுவும் வள்ளுவரும் குறிப்பிடும் மறுபிறப்பு
Permalink  
 


ஆய்வு: மனுவும் வள்ளுவரும் குறிப்பிடும் மறுபிறப்பு

- முனைவர் மா. உமா மகேஸ்வரி, உதவிப்பேராசிரியா், தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி, மதுரை- 09தொல் தமிழரின் நுண்ணறிவு மிக வியப்பிற்குரியதாகும். பல்லாயிரம் நூற்றாண்டுகளுக்கு முன் மொழியியல், உயிரியல், கணிதவியல், அறிவியல் ஆகியவற்றில் தமிழர் பெற்றிருந்த பேரறிவு போற்றுதற்குரியதாகும். தொன்மை மிகுந்த தமிழன் கண்ட பேருண்மைகளை இன்றைய அறிவியலாளர் மறுப்பதற்கில்லை. மாறாகப் பண்டைத்தமிழர் கூற்றினை அடிப்படையாகக் கொண்டே பல சிறந்த அறிவியல் உண்மைகளை நிலைப்படுத்தியுள்ளனர் என்பது தெளிவாகும். பிறப்புக்கள் ஆறு என்பதை,

“ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே;
இரண்டு அறிவதுவே அதனொடு நாவே
மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே
நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே
ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே
ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே”    (தொல் ; மரபியல், நூ - 27.)

என்று தொல்காப்பியர் மரபியலில் எடுத்துரைக்கின்றார். மேலும்

“புல்லும் மரனும் ஓர் அறிவினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே”

“நந்தும் முரளும் ஈர்அறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே”

“சிதலும் எறும்பும் மூஅ றிவினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே”

“நண்டும் தும்பியும் நான்கு அறிவினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே”

“மாவும் மாக்களும் ஐஅறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே”

“மக்கள் தாமே ஆறுஅறி வுயிரே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே”    (தொல் ; மரபியல், நூ -28-34 )

என்று பிறப்புக்கள் ஆறு என்பதைத் தொல்காப்பியம் எடுத்துரைக்கின்றது. தோன்றிய பல்லிலக்க உயிர்கள் எல்லாம் ஆறு அறிவுனுள் அடங்கும் என்பதை,

“பற்றே பவமே தோற்றம் வினைப்பயன்
இற்றென வகுத்த இயல்பீ ராறும்”
(மணிமேகலை, ஆபுத்திரன் நாடு அடைந்த காதை, 107-108)

என மணிமேகலை ஆபுத்திரன் நாடு அடைந்த காதையில் எடுத்துரைக்கின்றது. மேலும்

“நல்வினை யென்ப தியாதென வினவில்
சொல்லிய பத்தின் றொகுதியி னீங்கிச்
சீலந் தாங்கித் தானந் தலைநின்று
மேலென வகுத்த வொருமூன்று திறத்துத்
தேவரும் மக்களும் பிரமரு மாகி
மேவிய மகிழ்ச்சி வினைப்பய னுண்குவர்.”(மணிமேகலை, 135 – 140)

என்றும் எடுத்துரைக்கின்றது. செய்கின்ற வினைப்பயன் வழியே உயிர்கள் தோற்றம் பெறுகின்றன என்பதை மணிமேகலை வலியுறுத்துகின்றது. இதனைப் “பரம்பொருள் எல்லாப் பொருள்களையும் ஐவினைகளில் இயங்கச் செய்து, முன்பு செய்த வினைகளுக்கேற்ப மறுபிறப்புக்களை அவற்றிற்கு விதித்து, அவ்விதமே பிறந்து வளர்ந்து மாய்ந்தும், பின்னர் முக்தி நிலை பெறும்வரை வண்டிச் சக்கரம் போல் நில்லாது சுழன்றும்வரச் செய்கிறார்” (மனு – 12 : 124) என்று மனுதருமத்தில் கூறப்படுகின்றன. மனிதன் செய்கின்ற தீவினைகளுக்கு ஏற்ப அவன் அடையும் மறுபிறப்புக்களைப் பற்றி மனுதருமம் பட்டியலிட்டுக் காட்டுகிறது. இதனை,

செய்த வினை
அடையும் மறுபிறப்பு
பிரம்மஹத்தி
நாய், பன்றி, கழுதை, அட்டை, பசு, ஆடு, சிங்கம், பறவை, சண்டாளன், புற்கசன்
கள்ளுண்ட அந்தணன்
புழு, உலண்டு, விளக்கணை பூச்சி, மலப்பூச்சி, பறவை, புலி
பொன் களவாடியவன்
சிலந்திப்பூச்சி, பாம்பு, கரட்டோணான், நீர்வாழ்பிறவிகள், கொலை விருப்புள்ள பிசாசுகள்
குரு மனைவியைக் கூடியவன்
புல், புதர், கொடி, மாமிசம் தின்னிக் கழுகு
அந்தணன் பொருளை அபகரித்தல்
தானியம் திருடுதல்
பிரம்ம ராஷசனாகப் பிறப்பான்
பெருச்சாளி (மனு : 12 : 60 - 68)

இவ்விதமாகச் செய்த வினைகளுக்கு ஏற்ப அடையும் மறுபிறப்புக்களைப் பற்றி மனுதருமம் எடுத்துரைக்கின்றது. மேலும் “சிரார்த்தத்தில் வரிக்கப்பட்ட அந்தணன் புலால் உண்ணலாகாதென்று எண்ணி மறுத்தால் இருபத்தோரு பிறவிகள் பசுவாய்ப்பிறப்பான்” (மனு – 5 : 35) என்று மனு அந்தணர்களுக்குப் புலால் உண்பதை வற்புறுத்துவதோடு அதை உண்ணாமல் மறுத்தால் இருப்பதோரு பிறவிகள் பசுவாகப் பிறப்பர் என்று அவனுடைய மறுபிறப்புச் செய்தியினையும் எடுத்துரைக்கின்றது.

சைவசித்தாந்தம் ஒருவன் இறைவனிடம் ஏதாவது வேண்டுகின்றான் என்றால், அவ்வேண்டுதல் மீண்டும் பிறவாமையாகவே இருக்க வேண்டும் என்று கூறுகிறது. இதனைத் திருக்களிற்றுப் படியார்,

“வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை என்றமையால்
வேண்டின் அஃது ஒன்றுமே வேண்டுவது – வேண்டினது
வேண்டாமை வேண்டவரும் என்றமையால் வேண்டிடுக
வேண்டாமை வேண்டும்அவன் பால்”
(சி.சு. மணி, திருக்களிற்றுப்படியார், பா.40)

என்று கூறுகின்றது. இதனை வள்ளுவர்;

“வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்” (குறள் - 362)

என்று குறிப்பிடுகின்றார். பிறப்பு, இறப்பு என்பதை அறிந்தவன் ஒன்றை விரும்புவான் ஆயின், மீண்டும் வந்து இந்த உலகத்தில் பிறந்து விடக்கூடாது என்பதையே விரும்புவான். அந்தப் பிறவாமைதான் எந்த ஒரு பொருளையும் விரும்பாமையை அவனுக்கு ஏற்படுத்தும். இதனை,

இலக்கியக் கட்டுரை வாசிப்போமா?

“முற்பிறப்பில் தான்செய்த புண்ணியத்தின் நல்லதோர்
இல்பிறந்து இன்புறா நின்றவர்- இப்பிறப்பே
இன்னும் கருதுமேல் ஏதம்கடிந்து அறத்தை
முன்னிமுயன்(று) ஒழுகல் பாற்று” (அறநெறிச்சாரம், பா.54.)

என்று அறநெறிச்சாரம் எடுத்துரைக்கின்றது.

எனவே தான் எதனையும் விரும்பாமை ஆகிய பெருஞ்செல்வத்தை விடச் சிறந்தது வேறு இல்லை என்கிறார் வள்ளுவர். இதனை,

“வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டுஇல்லை
யாண்டும் அஃதுஒப்பது இல்” (குறள் - 363)

என்று குறிப்பிடுகின்றார். மேலும் மறுபிறப்பு என்பது உண்டு என்பதைப் பற்றித் தாயுமானவர்

“இப்பிறவி தப்பினால் எப்;பிறவி வாய்க்குமோ
ஏது வருமோ அறிகிலேன்” (தாயுமானவர் பாடல், பா.24.)

என்ற பாடலின் வழி எடுத்துரைக்கின்றார். ஒளவை மூதாட்டியும் ‘அரிது அரிது மானிடராய்ப் பிறப்பதரிது’ ( ஓளவை, தனிப்பாடல் 30.)

என்று பிறப்பிலே மனிதப்பிறவி உயர்வுடையது என்பதை எடுத்துரைக்கின்றார். மேலும் முதுமொழிக் காஞ்சியும்

“ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
மக்கட் பேற்றிற் பெரும்பே றில்லை”
(முதுமொழிக்காஞ்சி - இல்லைப்பத்து.)

என்பதை வலியுறுத்துகின்றது. இதனை வள்ளுவரும்,

“பெறுமவற்றுள் யாமறிவதில்லை அறிவறிந்த
மக்கட் பேறல்ல பிற (குறள் - 61)

என்று குறிப்பிடுகின்றார். மேலும் வள்ளுவர் மறுபிறப்பு பற்றிய உண்மையை வலியுறுத்தி கல்வியின் சிறப்பை எடுத்துரைக்கின்றார். இதனை,

“ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து” (குறள் - 398)

என்று குறிப்பிடுகின்றார். ஒருவர் கற்ற கல்வி ஏழு பிறவிகளுக்கும் தொடர்ந்து வரும் என்ற கருத்தை எடுத்துரைக்கின்றார். மேலும், ஒருவர் தம் துன்பத்தை நீக்கியவரின் நட்பைத் தொடர்ந்து வரக்கூடிய ஏழு பிறப்புகளிலும் மறவாது நினைத்திருப்பார் என்பதை,

“எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு” (குறள் - 107)

என்றும் குறிப்பிடுகின்றார். மேலும் இறப்பும் பிறப்பும் எவ்வாறு நிகழ்கிறது என்பதைப் பற்றி வள்ளுவர்,

“உறங்குவது போலுஞ் சாக்கா டுறங்கி
விழிப்பது போலும் பிறப்பு”    (குறள் - 339)

என்று குறிப்பிடுகின்றார். இதே கருத்தை மணிமேகலையில்

“பிறந்தவர் சாதலும், இறந்தவர் பிறத்தலும்
உறங்கலும் விழித்தலும் போன்ற துண்மையின்” (மணிமேகலை, ஆதிரை பிச்சையிட்ட காதை, பா.வரி, 86-87)

என்று வாழ்க்கைச் சக்கரத்தைப் பற்றி எடுத்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் சுந்தரர் தேவாரத்தில் “உறங்கி விழித்தால் ஒக்கும் இப்பிறவி.” ( சுந்தர மூர்த்தி சுவாமிகள், ஏழாந்திருமுறை, பா.வரி, - 3-4.) பிறப்பும் இறப்பும் விரைவில் மாறி மாறி வரும் என்பதை அறிய முடிகின்றது. எனவே வள்ளுவர் மறுபிறப்பு உண்மையை வலியுறுத்தியுள்ளார் என்பது தெளிவாகிறது.

வினைப்பயன் என்பது மனிதனுடைய வாழ்க்கையில் அவன் செய்யக்கூடிய நல்வினை, தீவினைகளுக்கு ஏற்ப அமையும். நல்வினை செய்தால் அவன் நற்கதியை அடைவான். தீவினை செய்தால் நரகத்தில் துயருறுவான்; என்றும் கூறப்படுகின்றது. மனு மனிதன் செய்கின்ற வினைகளைப் பொறுத்து மீண்டும் அடைகின்ற பிறப்புக்களைப் பற்றி எடுத்துரைத்துள்ளார். வள்ளுவர் ‘தீவினையச்சம்’ என்னும் அதிகாரத்தில் தீவினைகள் செய்தல் கூடாது என்பதை எடுத்துரைக்கின்றார். மேலும் வினைப்பயன் குறித்து ஒளவையார்,

“வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதல்ஆம்
அனைத்துஆய நூல்அகத்தும் இல்லை - நினைப்பதுஎனக்
கண்உறுவது அல்லால் கவலைப்படேல், நெஞ்சே
விண்உறுவார்க்கு இல்லை விதி.”    ( ஒளவையார், நல்வழி, பா.38.)

என்று வினைப்பயனை வெல்வதற்கு நான்மறைகளிலும்கூட வழி சொல்லப்படவில்லை. நல்ல வீடுபேறு அடையும் செயல்களைச் செய்பவரை விதி ஒன்றும் செய்யாது என்பதை வலியுறுத்துகின்றார். ஆனால் வள்ளுவர் தீய செயல்கள் செய்தல் கூடாது என்பதை வலியுறுத்துகின்றார். மேலும் வள்ளுவர் ஒருவன் ஒவ்வொரு நாளும் அறத்தைச் செய்வானானால் அதுவே ஒருவனது பிறவியைத் தடுக்கும் கல்லாகும் என்பதை,

“வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்குங் கல்”    (குறள் - 8)

என்று எடுத்துரைக்கின்றார். எனவே மறுபிறவியைத் தடுப்பதற்கு மனிதன் அறத்தைச் செய்ய வேண்டும் என்பதை வள்ளுவர் வலியுறுத்துகின்றார்.

முடிவுரை:
பற்றறுத்தல் என்பது பிறவி ஆசையை விட்டொழித்தலாகும். எதன் மீதும் பற்று இல்லாமல் இருப்பதே பற்றற்ற நிலை எனலாம். துறவு என்பது பற்றினை விடுவதாகும். யான் எனது என்ற இருவகைப் பற்றினையும் விடுத்து துறவு நிலையை மேற்கொள்ள வேண்டும் என்பதை மனுவும் வள்ளுவரும் வலியுறுத்துகின்றனர். துறவு மூலம் மெய்யான அறிவைப் பெறமுடியும் என்பதை மனுவும் வள்ளுவரும் எடுத்துரைக்கின்றனர். வினைப்பயன் குறித்த செய்திகளை எடுத்துரைத்து தாம் செய்த வினையால் அடையும் மறுபிறப்புச் செய்தியினையும் மனு எடுத்துரைக்கின்றது. மனு குறிப்பிடுவதைப்போல் வள்ளுவத்தில் வினையால் அடையும் மறுபிறப்பு பற்றி எடுத்துரைக்கவில்லை. ஆனால் வள்ளுவரும் மறுபிறப்புக் கொள்கையினை ஏற்றிருக்கின்றார் என்ற செய்தி காணப்படுகின்றது.

பார்வை நூல்கள்

1. வீரமணி, கீ.,(ஆய்வுரையுடன்) அசல் மனுதரும சாஸ்திரம்    ,
(மக்கள் பதிப்பு) (1919 பதிப்பில் உள்ளபடி),திராவிடர் கழக வெளியீடு,
50, ஈ.வெ.கி.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 600 007,
முதல்பதிப்பு - 2004.

2. பரிமேலழகர்.,(உ.ஆ)திருக்குறள், சாரதா பதிப்பகம்;,
சென்னை - 600014, முதற்பதிப்பு - 2002.

3. இளம்புரணர்., தொல்காப்பியம் பொருளதிகாரம்,
கழக வெளியீடு, சென்னை, முதற்பதிப்பு - 1972.

4. ஔவையார்.,மூதுரை,கழக வெளியீடு,
சென்னை, முதற்பதிப்பு - 1989.

5. சுந்தரமூர்த்தி சுவாமிகள்., தேவாரம் - ஏழாம் திருமுறை,
ஞானசம்பந்தர் பதிப்பகம், தருமை ஆதீனம், மயிலாடுதுறை - 609001,
இரண்டாம் பதிப்பு - 1997.

6. தண்டபாணி.துரை., மணிமேகலை, உமா பதிப்பகம்,
மண்ணடி, சென்னை – 600001, நான்காம் பதிப்பு - 2010.

7. தாயுமானவர், தனித்திரட்டு, நர்மதா பதிப்பகம்,
தியாகராயர் நகர், சென்னை - 600017.

8. பாலசுந்தரம்பிள்ளை, தி.சு., முதுமொழிக்காஞ்சி,
திருநெல்வேலித்தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக லிமிடெட்,
திருநெல்வேலி - 6, முதற்பதிப்பு - 1947.

9. மணி,சி.சு., திருஉந்தியார், திருக்களிற்றுப்படியார்,
(உ.ஆ)அருள்நந்திசிவம் அருட்பணி மன்றம், 78, செல்விநகர், சிந்துபுந்துறை,
திருநெல்வேலி - 627001, இரண்டாம் பதிப்பு, 2000.

umamaheswarikalimuthu@gmail.com

* கட்டுரையாளர் - - முனைவர் மா. உமா மகேஸ்வரி, உதவிப்பேராசிரியா், தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி, மதுரை- 09



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
RE: மனுவும் வள்ளுவரும் குறிப்பிடும் மறுபிறப்பு
Permalink  
 


செய்தொழில் வேற்றுமையான் - புதியபார்வை

1-53.jpg

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் -972.

இக்குறட்பா, பொருட்பாலில் பெருமை என்ற அதிகாரத்தில் உள்ளது.  இக் குறட்பாவுக்கு மணக்குடவர் மற்றும் பரிமேலழகர் முதல், நம் காலத்திய உரையாசிரியர்கள்வரை எண்ணற்றோர் உரை கண்டுள்ளனர். இப்போதும் பற்பலர் உரையெழுதி வருகின்றனர்.  இக்குறட்பாவுக்கு இதுகாறும் கண்ட உரைகள் இயல்பானவை-யாகவோ பொருத்தமுடையனவாகவோ இல்லை. அவ்வுரைகள் இக்குறட்பாவுக்கு ஓரளவே ஒத்துள்ளனவேயன்றி முழுமையாகப் பொருந்த-வில்லை. இக்குறட்பாவுக்கு இயல்பான, உண்மையான உரையைக் காண வேண்டுமாயின், திருக்குறள் முழுவதையும் ஒப்பு நோக்கி அவருடைய காலச் சமுதாயச் சிந்தனையின் உண்மைகளை உணர்ந்தால்தான் முடியும்.  மேலும், அந்தச் சிந்தனைகளை அக்காலச் சமுதாயச் சூழலோடு ஒப்பிட்டால்தான் உண்மையை உணரமுடியும்.  எல்லா உயிர்க்கும் பிறப்பால் ஒரு வேறுபாடில்லை; ஆயினும் தான் செய்தொழிலினது ஏற்றச் சுருக்கத்தினாலே பெருமை ஒவ்வாது என்றவாறு என்கிறார் மணக்குடவர்.

எல்லா மக்களுயிர்க்கும் பொதுவாகிய பிறப்பியல்பு ஒக்குமே எனினும், செய்யும் தொழில்களது வேறுபாட்டான் பெருமை சிறுமை எனப்பட்ட சிறப்பியல்புகள் ஒவ்வா என்றவாறு என்கிறார் பரிமேலழகர்.

இவ்விரு விளக்கங்களும் ஒரு பொருளுடைய-தாகவே உள்ளன. இவ்விரு உரைகாரர்களும் வைதிக முறையிலேயே உரையெழுதி உள்ளனர்.  செய்யும் தொழிலின் ஏற்றச் சுருக்கத்தினால் பெருமை ஒத்திருப்பதில்லை; வேறுபாடு உண்டு என்கிறார் மணக்குடவர். பரிமேலழகரும், செய்யும் தொழில்களது வேறுபாட்டால் பெருமை சிறுமை எனப்பட்ட சிறப்பியல்புகள் ஒரே நிலையில் ஒத்திருப்பதில்லை என்கிறார்.

எல்லா உயிர்களுக்கும் பிறப்பு ஒத்திருந்தாலும் அவை செய்கின்ற  தொழில் வேறுபாட்டினால் பெருமை ஒத்திருப்பதில்லை என்று (1928) - கா. சுப்பிரமணியம்பிள்ளையும்,

எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒரு தன்மை-யானதே ஆயினும் செய்கின்ற தொழில்களின் உயர்வு - தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை என்று (1949) - டாக்டர் மு.வ.வும்,

மாந்தரெல்லார்க்கும் தாய் வயிற்றுப் பிறத்தலாகிய பிறப்புமுறை ஒரு தன்மையதே ஆயின், அவரவர் செய்யுந் தொழில்களின் வேறு-பாட்டால் ஏற்படும் சிறப்பு நிலைமைகள் ஒரு நிகரானவல்ல - (1965) என்று பாவணரும் பொருள் உரைக்கின்றனர்.

இம்மூன்று உரைகளும் ஒரே பொருளையே உணர்த்துகின்றன.  பழைய உரைகாரர்களையொட்டியே இவ்வுரைகளும் அமைந்துள்ளன.  அதாவது, இவ்வுரைகளும் தொழில் வேறுபாட்டால் சிறப்பு வேறுபடும் என்கின்றன. நம் காலத்து உரையாசிரியர்கள், உண்மை காணும் நோக்கில் காய்தல், உவத்தலின்றி ஆய்ந்திருக்க வேண்டும்; அவ்வாறு ஆய்வு செய்யாதது வருந்தத்தக்கதே.  பரிமேலழகரைக் கடுமையாகச் சாடும் பாவாணரும், இக்குறட்பாவுக்குப் பரிமேலழகரையொட்டியே உரை கண்டுள்ளார். இது வியப்பினும் வியப்பாக உள்ளது.  உண்மையை நோக்கும் நாம், ஆயும்போது இவற்றையெல்லாம் ஒப்பிட்டு நோக்க வேண்டியுள்ளது.  பல இடங்களில் ஆரியக் கருத்தாக்கங்களை மறுக்கும் பாவாணர், இக்குறட்பாவில் வருணத் தர்மத்தை எதிர்க்காததை விளங்கிக் கொள்ள முடியவில்லை. இக்குறட்பாவுக்கு, இவ்வுரைகளி-லிருந்து வேறுபட்டும் சிலர் உரை கண்டுள்ளனர்.

1-54.jpgஎல்லா உயிர்களுக்கும் பிறப்பு ஒத்த தன்மையதே; அதுபோல் தொழில்களும் ஒத்தவையே; எனினும், அவற்றைச் செய்யும் செயல்நிலை வேறுபாட்டால் சிறப்பு ஒத்தவையாகா என்று (1990) - புலவர் இரா. இளங்குமரனாரும், எல்லா உயிர்களும் பிறப்பினால் சமம்; ஆயினும் செய்யும் தொழிலின் தரத்தால் மாறுபாட்டால் அவர்தம் சிறப்பும் மேன்மையும் வேறுபடுகின்றன என்று (2001)_ கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியமும் உரை எழுதியுள்ளனர்.

இவ்விரு உரைகளும், முன்னர் உரைகளி-லிருந்து வேறுபடுகின்றன.  இளங்குமரனார், தொழில்களில் வேறுபாடில்லை  அனைத்தும் ஒத்தவையே என்கிறார். தொழில்களில் உயர்வு தாழ்வை வலியுறுத்தும் வருணத் தர்ம முறைக்கும் மனுதர்மத்துக்கும் இவ்வுரை மாறானது.  அனைத்துத் தொழில்களும் ஒத்தவையேயாயினும்  தொழில்களைச் செய்யும் திறத்தால் தரத்தால் சிறப்பு வேறுபடும் என்கிறார் இளங்குமரனார். கவிஞர் சிற்பி, அனைத்துத் தொழில்களும் ஒத்தவையே என்று வெளிப்-படையாகக் கூறாவிடினும், மறைபொருள் அதுதான்.

அதாவது, ஒத்தவை என்பதுதான் அவர் கருத்து.  அதனைச் செய்யும் தொழிலின் தரத்தால் மாறுபாட்டால் அவர்தம் சிறப்பும் மேன்மையும் வேறுபடுகின்றன என்று குறிப்பிடுவதால் உணரலாம். கவிஞர் சிற்பி, இளங்குமரனாரின் உரையையே இங்கு வழி-மொழிகிறார் எனலாம்.  இவ்விரு உரைகளும் வருணத் தர்மத்தை மறுக்கும் உரைகளாக இருந்தாலும், இவ்வுரைகள் வள்ளுவரின் கருத்தாகுமா? என்பது அய்யமே;

திருக்குறளில் முழுமைப் பார்வை தேவை; அதாவது, ஆயிரத்து முந்நூற்று முப்பது அருங்குறளையும் முழுவதும் பயில்வார்க்கே தனியொரு குறளின் உண்மைப் பொருள் விளங்கும். இதற்குக் குறள் மூலங்களையே திரும்பத் திரும்பப் படிக்க வேண்டும்.  மூலத்தை இவ்வாறு படித்துணர நுண் பொருளுரைகளை ஒரு கைவிளக்காக மட்டுமே பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

குறள்களுக்குள்ளேயே குறளுக்கு உரை தேட வேண்டும்; இயலுமானால், குறள்கள் வழியாகவே குறள் உரை விளக்கம் அமைய வேண்டும்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற குறளை மறப்பினும், ஒத்துக் கொளலாகும் என்ற குறளோடு ஒப்புநோக்கின் வள்ளுவரின் நோக்கு நிலை புலனாகும். அதன்வழி அக்குறளுக்குச் சரியான உரை காணலாம்.  மேலும், கீழுள்ள குறள்களை நோக்கின் அவ்வுண்மை உறுதிப்படும்.

மேற்பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு - 409

மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர்; கீழிருந்தும்; கீழல்லார் கீழல் லவர் - 973

கல்லாதவர் மேற்குடியில் பிறந்தவராயிருப்பினும், கீழ்க்குடியில் பிறந்த கற்றவரைப் போன்று பெருமையுடையவர் அல்லர் என்றும், மேல்-நிலையில் இருந்தாலும் மேன்மைப் பண்பு இல்லாதவர் மேலானவர் அல்லர் என்றும், கீழ்நிலையில் இருந்தாலும் இழிகுணம் இல்லாதவர் கீழ்மக்கள் அல்லர் என்றும் அவர் வரையறுக்கிறார்.  இந்த வரையறுப்பு மிகமிக முக்கியமானது; இவ்விரு குறள்களும் வடநூன் மரபுக்கு மாறானவை.  இக்குறள்கள் வள்ளுவரின் நெஞ்சை நமக்குத் தெளிவுறக் காட்டுவனவாகும்.  முதற்குறள் கல்வியைக் கொண்டு மக்களை மேல் - கீழ் என்று வரையறுக்கிறது.  இரண்டாம் குறள் பண்பு நலனைக் கொண்டு மேல் - கீழ் என்று வரையறுக்கிறது.  ஆனால், தொழிலைக் கொண்டு மக்களை மேல் - கீழ் என்று எங்கும் அவர் கூறவில்லை.  முதற்குறள் ஜாதி _ மற்றும் வருண உயர்ச்சியை மறுத்து, கல்வியின் வழி சமநீதியை உருவாக்க வழிகாட்டுகிறது.

வேற்றுமை திரிந்த நாற்பா லுள்ளும்
கீழ்பா லொருவன் கற்பின்
மேற்பா லொருவனு மவன்கண் படுமே - புறம் - 181

என்று புறநானூறு கூறுவதும் வருண தர்மத்துக்கு எதிரானதேயாகும்.  இப்பாடலும் குறளும் ஒரே பொருளையே உணர்த்துகின்றன.  இரண்டாம் குறள், பதவி, பொறுப்பு, செல்வம், ஜாதி, வருணம் ஆகியவற்றின் உயர்ச்சியை மறுத்து, பண்பின் உயர்வை நிலைநாட்டுகிறது. உயர்பணியிலிருந்தாலும், கீழ்ப்பணியிலிருந்-தாலும் எல்லாம் ஒன்றே; ஆனால், பண்பு அப்படிப்பட்டதன்று; அதாவது, ஒருவர் பண்புடையவராக இருப்பின் (கீழ் ஜாதியில் இருப்பவராயினும்) அவர் மேன்மை மிக்கவரே; மேற்ஜாதியில் பிறந்திருந்தாலும் பண்பற்றவராக இருப்பின் அவர் கீழானவரே என்பது அவர் கருத்து. இந்த அடிப்படையில்தான் பிறப்-பொக்கும் எனத் தொடங்கும் குறளுக்கும் பொருள் காண வேண்டும்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான் - 972

எல்லா மக்களுக்கும் பிறப்பு ஒரே தன்மைத்தேயாகும்.  எல்லாத் தொழில்களும் ஒத்தவையே; அதனால், தொழில் வேறு-பாட்டைக் கொண்டு சிறப்புத் தருவது பொருந்தாது என்று பொருள் கொள்வதே ஏற்றது.  எக்குடியில் பிறந்தாலும் பிறப்பு ஒரே தன்மைத்தாக இருப்பதைப் போன்று, எந்தத் தொழில் செய்தாலும் அதில் உயர்வு தாழ்வு இல்லை; எல்லாத் தொழில்களும் மதிப்-புடையனவாகும் என்கிறார்.

அதாவது, தொழில் வேறுபாட்டைக் கொண்டு உயர்வு தாழ்வைக் கற்பிக்கக் கூடாது என்கிறார்.  அந்தந்தத் தொழில் அந்தந்த நிலையில் சிறப்புடையதாகு-மென்பது அவர் கருத்து.     தலையிலிருந்தும், தோளிலிருந்தும், தொடையிலிருந்தும், காலிலிருந்தும் மனிதர்கள் பிறக்கிறார்களென்று கூறி அந்தந்தப் பிறப்பைக் கொண்டு உயர்வு தாழ்வைக் கற்பித்தார் மனு.  இப்படிக் கூறுவது அறிவியலுக்கு முற்றிலும் மாறானது.  அவ்வுறுப்புகளிலிருந்து எவ்வுயிரும் பிறக்க-முடியாது, அதுவேறு கதை; மனு கூறும் பிறப்பு முறையை மறுக்கவே வள்ளுவர் பிறப்பொக்கும் என்றார்.

தொழில்களால் சிறப்பு வேறுபடும் என்பதை மறுக்கவே சிறப்பொவ்வா என்றார்.

வருணத்துக்கேற்ற தொழிலைக் கூறி, அந்தந்தத் தொழில்களுக்குப் பெருமை சிறுமையைக் கற்பித்த மனுவை மறுக்கவே வள்ளுவர் சிறப்பு ஒவ்வா என்றார். அதாவது, சிறப்பு அளிப்பது பொருந்தாது என்கிறார்.  பிறப்பு ஒத்திருப்பதைப் போன்று, எல்லாத் தொழில்களும் அந்தந்த நிலையில் சிறப்புடையன-வாகும் என்பது அவர் முடிவு.

வள்ளுவர் எவ்வாறு பிறப்பைக் கொண்டு உயர்ந்தவராகக் கருதுவதை மறுத்துள்ளாரோ, அவ்வாறே வடபுலத்தில் பிறப்பைக் கொண்டு பார்ப்பனரை உயர்ந்தவராகக் கருதப்படுவதைப் புத்தரும் மறுத்துள்ளார். அவ்வாறு புத்தர் மறுப்பதற்கு சமூகத் தேவை இருந்துள்ளது.  அதே தேவை தமிழகத்திலும் இருந்துள்ளது; அந்தத் தேவை ஏன் ஏற்பட்டது என்பதைப் புறநானூற்றுப் பாடலால் நன்கு உணரலாம்.  அதனால்தான் வள்ளுவர் ஒழுக்கங்கெட பிறப்பு குன்றும் _ 134 என்றும், இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும் - 133 என்றும் கடுமையாகக் கூறினார்.  இந்தக் கடுமை புத்தரின் தம்மபதத்திலும் காணப்படுகிறது.

ஒருவன் அந்தணனாவது சடைத்-தலையால் அன்று; தன் கோத்திரத்தால் அன்று; பிறப்பினாலும் அன்று; எவனிடம் சத்தியமும் தருமமும் நிலைத்துள்ளனவோ அவனே அந்தணன் - தம்மம் - 391

தாயைக் கொண்டோ குலத்தைக் கொண்டோ ஒரு மனிதனை நான் அந்தணன் என்று கூறுவதில்லை - தம்மம் - 394

இவ்வாறு புத்தர் கூறுவதைப் பின்பற்றியே வள்ளுவரும், பிறப்பால் அந்தணரென்று கூறுவதை மறுக்கும் முறையில், அந்தணர் என்போர் அறவோர் - 30 என்றார்.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர்; நீந்தார்
இறைவனடி சேரா தார் - 10

இறைவனடி சேராதார் பிறவிப் பெருங்கடலை நீந்தாரென்கிறார் வள்ளுவர்; அப்படியெனில் பிறவிப் பெருங்கடலை நீந்துவர் யார்?  அதற்கு விடை குறளில் இல்லை.  ஆதலின் இறைவனடி சேராதார் என்பதற்கு எதிர்மறையாக, சேர்ந்தார் என்ற சொல்லை வருவித்து, இறைவனடி சேர்ந்தார் பிறவிப் பெருங்கடலை நீந்துவர் என்று பொருள் கொள்கிறோம். அவ்வாறே சிறப்பொவ்வா என்பதற்கு, தருவது எனும் சொல்லை வருவித்து சிறப்புத் தருவது பொருந்தா வென்று பொருள் கொள்வதே ஏற்றது.  வள்ளுவர் பல இடங்களில் வடநூல் மரபை மறுப்பதைப் போலவே குறிப்பாக, மனுதர்மத்தின் வருண தர்மத்தை மறுக்கவே பிறப்பொக்கும் என்றார்; அதன் நீட்சியே சிறப்பொவ்வா என்பதும்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்

எனுங் குறளுக்கு, மக்கள் அனைவருக்கும் பிறப்பு ஒரு தன்மைத்தே ஆகும். எல்லாத் தொழில்களும் மதிப்புடையனவே யாகும்.  ஆதலின், தொழில் வேறுபாட்டைக் கொண்டு சிறப்பளிப்பது பொருந்தாதென்று பொருள் கொள்வதே ஏற்றது; சிறந்தது. பிறப்பு எல்லோருக்கும் ஒத்திருப்பதைப் போன்று, மக்களைத் தொழில்களால் பெருமை - சிறுமைக்கு உட்படுத்தாமல், அனைத்துத் தொழில்களையும் ஒத்ததாகக் கருத வேண்டு-மென்பது அவர் நோக்கு.  அதாவது, பிறப்பிலும் ஏற்றத்தாழ்வு இல்லை; அதே போன்று தொழில்களிலும் ஏற்றத்தாழ்வு இல்லை என்கிறார்.  வள்ளுவரின் நெஞ்சை உள்ளவாறு உணர்ந்ததால்தான் மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை மிகச் சரியாக,

வள்ளுவர் செய் திருக்குறளை
மருவற நன்குணர்ந்தோர்
உள்ளுவரோ மனுவாதி
ஒருகுலத்துக் கொரு நீதி என்றார்.

மனுநீதியைச் சுந்தரம்பிள்ளை சரியாக அடையாளம் காட்டியுள்ளார். அவர் கூற்றாலும் வள்ளுவம் மனுவுக்கு நேர் எதிரானது என்பதை உணரலாம். தமிழறிஞர்களும், குறளாய்வாளர்களும் இது குறித்து மேலும் சிந்திக்க வேண்டும்.  மெய்ப்பொருள் காண்பது ஆய்வாளரின் கடனன்றோ!

 

- புலவர் பா.வீரமனி



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

பார்ப்பான், பார்ப்பனீயம் என்று சொல்லி, மொத்த இந்து நம்பிக்கைகளையும், கடவுள்களையும் அசிங்க படுத்திக்கொண்டிருக்கிறது ஒரு கும்பல்.. இந்த திக, விசிக, டேனியல் காந்தி, சைமன் போன்ற அயோக்கியர்கள் இந்து தெய்வங்களையும், இந்து நம்பிக்கைகளையும் திட்டுவதற்கு முன், பார்ப்பான், பார்ப்பனீயம் என்று வசதியாக ஒரு வார்த்தயை பயன்படுத்திக்கொள்கிறார்கள்.. அதாவது இந்து மதமே பார்ப்பனிய மதம் என்பது போல.. ப்ராமணரல்லாதவர்களும், அவர்கள் பார்பானைதானே சொல்கிறார், நமக்கென்ன என்று ஒதுங்கி கொள்கிறார்கள்

அப்பொழுது நீங்கள் அவர்கள் கூற்றுப்படி பார்ப்பான் அடிமைகள் என்று ஒப்புக்கொள்கிறீர்களா? இந்து நம்பிக்கைகளும், கடவுள்களும் பார்ப்பானுக்கு மட்டுமே சொந்தமானது என்று நினைக்கிறீர்களா? அப்பொழுது ஏன் கோவில்களுக்கு வரவேண்டும்? பேசாமல், அவர்கள் ஆசை படி மதம் மாறிவிடுங்கள்.. தமிழர்களின் கடவுள்களான யேசுவையும் அல்லாவையும் வணங்க சர்ச்சுக்கு, மசூதிக்குமே போங்கள்..

இல்லை.. நாங்கள் அதை ஏற்கவில்லை? கடவுளும், நம் அடிப்படை நம்பிக்கைகளும் அனைவருக்கும் பொதுவானது என்று நம்பினால் எதிர்த்து கேள்வி கேளுங்கள்.. இது போல மட்டமான ஜென்மங்களில் ஈன பிழைப்பிற்கு முட்டு கொடுக்காதீர்கள்.. அதுவும் இந்த திருமுருகன் காந்தி எனும் அயோக்கியன் சொல்கிறான், இது பார்ப்பன இந்தியாவால்.. பிச்சைக்கார பயலே.. இந்த நாட்டின் அரசியல் சட்டத்தை இயற்றியது அம்பேத்கர்.. அவர் பார்பனரா? இந்த நாய் பிரச்சனை வரும்பொழுதெல்லாம் வெளிநாட்டில் போய் ஒளிந்துகொள்கிறதே, அது பயன்படுத்தும் பாஸ்போர்ட் கூட பார்ப்பன இந்தியாவினுடையதுதான்..

இவனை போன்றவர்களுக்கெல்லாம் பின்புலத்தில் இருந்து செயல் படுவது naxal அமைப்புகள் , மதமாற்று அமைப்புகள் மற்றும் சில தீவிரவாத அமைப்புகள்தான்.. இந்தியாவை துடைக்கவேண்டும் என்றால் இந்து என்கிற நம்பிக்கையை துடைக்கவேண்டும்.. ஏனென்றால் இந்த நாட்டை இணைப்பது இந்து என்கிற நம்பிக்கை மற்றும் வாழ்க்கைமுறை மட்டுமே.. இங்கே இருப்பவன் காசியையும், வடநாட்டில் இருப்பவன் ராமேஸ்வரத்தையும் புனிதமாக நினைக்கும் வரை இந்த நாட்டை உடைக்க முடியாது என்று நன்கு தெரிந்துகொண்டிருக்கிறார்கள்..

உடனே இந்த அறிவுகெட்ட டுமிலன்ஸ் ஒரு கேள்வியை கேட்ப்பார்கள்... எங்கேயாவது தமிழ் இலக்கியங்களிலோ, கல்வெட்டுகளிலோ இந்து என்கிற வார்த்தை பயன்படுத்த பட்டிருக்கிறதா என்று.. இந்து என்கிற வார்த்தை சமஸ்க்ரித வேதங்களில் கூட கிடையாது.. ஏனென்றால் அது நாம் வைத்த பெயரல்ல.. வெளிநாட்டுக்காரன் நம்மை அழைக்க பயன்படுத்திய பெயர்.. பெயரில்லை என்பதற்க்காக, அந்த கலாச்சாரம், நம்பிக்கைகள் இல்லை என்று அர்த்தமில்லை.. இந்த வாதம், நான் பெயர்வைத்த நாளைத்தான் புறந்தநாளாக கொண்டாடுவேன் என்று சொல்வதற்கு சமம்..

சிவன் விஷ்ணுவெல்லாம் ஏதோ ஒரு சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பார்ப்பான் கண்டுபிடித்த (ஆரிய படையெடுப்பு கப்ஸா) கடவுள்கள் போல போய் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.. உலகிலேயே பழமையை சிவனின் விகிரஹம் 28000 வருடம் பழமையானது , கல்ப விகிரஹம் என்று பெயர்.. அப்பறம் எப்படி 3000 வருடத்திற்கு முன் வந்த மதமாக இருக்க முடியும்?

பலமுறை சொல்லிவிட்டேன், ஜாதி என்பது பிறப்பால் வந்தது.. அதை இந்து தர்மம் சொல்லவில்லை, ஏற்கவுமில்லை.. வர்ணம் என்பது ஒருவனது குணத்தாலும், செயலாலும் வருவது.. ஆழ்வார்களில் நாயன்மார்களில் பெரும்பாலானோர் பிராமணர்கள் இல்லை.. அதே போல, கடவுளின் அவதாரங்களில் பெரும்பாலான அவதாரங்கள் (வாமனர் மற்றும் பரசுராமர் தவிர, ஆனால் அவர்களுக்கு பெரிதாக கோவில் கிடையாது) பிராமணர்கள் இல்லை.. அப்பறம் எப்படி இந்த அயோக்கியர்கள் இந்த தர்மத்தை பார்ப்பான் மதம் என்று இழிவு படுத்துவதை நீங்கள் எல்லாம் பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள்? கொஞ்சம் ரோஷத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்.. அரசியலை ஒதுக்கிவைத்துவிட்டு (மோடியை பிடிக்கவில்லை என்றால், வேறு நல்ல தலைவருக்கு வாக்களியுங்கள், அனால் அவர் மீது இருக்கும் வெறுப்பில், நீங்கள் வணங்கும் கடவுள்களை இழிவுபடுத்துபவனை ஆதரிக்காதீர்கள்), இந்த இந்து விரோத கும்பல்களை எதிர்த்து பேச பழகுங்கள்



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard