New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பாவினங்களின் அடிக்கணக்கு. 1) ஆசிரியப்பா, 2) வெண்பா, 3) கலிப்பா, 4) வஞ்சிப்பா, 5)பரிபாடல், 6) மருட்பா.


Guru

Status: Offline
Posts: 24740
Date:
பாவினங்களின் அடிக்கணக்கு. 1) ஆசிரியப்பா, 2) வெண்பா, 3) கலிப்பா, 4) வஞ்சிப்பா, 5)பரிபாடல், 6) மருட்பா.
Permalink  
 


பாவினங்களின் அடிக்கணக்கு.

 

தமிழன்பர்களே!  தொல்காப்பியர் தம் நூலில் உரைக்கும் ஆறுவகையாக பாவினங்களாவன, 1) அகவற்பா எனப்படும் ஆசிரியப்பா, 2) வெண்பா, 3) கலிப்பா, 4) வஞ்சிப்பா, 5)பரிபாடல், 6) மருட்பா.  இவற்றுள் பரிபாடல் என்னும் இசைப்பாட்டைப் பாடும் பாணர்கள் அருகியதால், அவ்வகையான பாடல்கள் மறைந்துவிட்டன.  மருட்பா என்னும் பாவினமோ வெண்பாவும் ஆசிரியப்பாவும் கலந்த கலவை என்பதால், இன்று நிலைத்திருக்கும் வகையின முதல் நான்கே!  பாவினங்களைப் பற்றி அறியு முன்பு, இந்த இந்த பாடல்களை இப்படி இப்படி அடிகள் கொண்டு பாடும் ஒரு வரையறை இலக்கணத்தை முதலில் காண்போம்.  ஓரடியாய்ப் பாக்கள் அமைவதில்லை; அப்படி அமைந்துவரும் அமைப்பு நூற்பா என்று வழங்கப்படுகிறது (எ-கா – ஆத்திசூடி பாவடிகள்)

பாவினங்களில் சிற்றெல்லை:

1)அகவற்பாவின் சிற்றெல்லை: மூன்றடிகள். அதாவது மூன்றுக்கு குறைந்து, இயற்சீர் அமைந்து ஆசிரியத்தளையுடன் வரும்  பாடலை அகவற்பா என்று இனம் காணவியலாது.  அகவற்பாவின் பாவினங்கள்: இணைகுறள் அகவற்பா, நேரிசை அகவற்பா, நிலைமண்டில அகவற்பா, அடிமறிமண்டில அகவற்பா…. என விரியும்.

2)வெண்பாவின் சிற்றெல்லை:  இரண்டிகள்.  அதாவது இரண்டுக்குக் குறைந்து, வெண்டளை பொருந்த வரும் பாடலை நூற்பா என்றுதான் சொல்ல முடியும். இரண்டடி வெண்பாக்களை குறள் வெண்பா என்று அழைக்கிறோம். குறள்வெண்பாவின் இனங்களாவன; குறாட்டாழிசை, குறள்வெண்செந்துறை.. எனவிரியும். மற்றபடி நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா, வெண்கலிப்பா, கலிவெண்பா…. என விரியும்.

3)கலிப்பாவின் சிற்றெல்லை: நான்கடிகளுக்குக் குறையாமல் வரும். கலிப்பாவின் பாவினங்கள்: ஒத்தாழிசை, அம்போதரங்க ஒத்தாழிசை, இயல்தரவிணை, வண்ணக ஒத்தாழிசை, கொச்சகம்… என்று விரியும்.

4)வஞ்சிப்பாவின் சிற்றெல்லை: வஞ்சிப்பாவின் தனிச்சொல், சுரிதகம் இவை நீக்கிக் காணில் இரண்டடியே சிற்றெல்லை. வஞ்சிப்பாவினங்கள்; குறளடி வஞ்சிப்பா, சிந்தடி வஞ்சிப்பா…. என விரியும்.  இந்த தனிச்சொல் சுரிதகம் போன்ற புரியாத சொல்லாட்சிகளை அந்தந்த பாவினத்தைப் பற்றி அறியும் போது அறியலாம்.

பாவினங்களில் பேரெல்லை:

இவ்வளவுக்குக் குறையாது என்று வரையறுக்கும் போது, எவ்வளவுக்கு மிகாது என்ற வரையறையும் இருக்க வேண்டும் அல்லவா?  ஆனால் அவ்விதமாக அறுதியிட்டு சொல்ல இயலவில்லை என்றுதான் ஒப்புக் கொள்ள முடிகிறது. பாவலனின் மனமே எல்லை என்போம்.   ஆனால் சில சில வரைமுறைகளும் இருக்கின்றன.  (எ-கா) மூன்றடி வெண்பாவைச் சிந்தியல் வெண்பா எனவும்,  நான்கடி வெண்பாக்கள் இன்னிசை/நேரிசை வெண்பாக்கள் எனவும், ஏழடி வெண்பாக்களை பஃறொடை எனவும் அதற்கு மேல் கலிவெண்பா எனவும் கூறுகின்றனர்.  இந்த பேரெல்லையை விளக்கி, “உரைப்போர் உள்ளக் கருத்தின் அளவே பெருமை” என்றுரைக்கும் காரிகை கீழே:-

வெள்ளைக்கு இரண்டடி; வஞ்சிக்கு மூன்றடி; மூன்றுஅகவற்கு
எள்ளப் படாக்கலிக்கு ஈரிரண் டாகும், இழிபு; உரைப்போர்
உள்ளக் கருத்தின் அளவே பெருமை;ஒண் போதுஅலைத்த
கள்ளக் கரும்நெடும் கண்சுரி மென்குழல் காரிகையே’

இனி அடியிலக்கணம் பற்றி:

செய்யுள்/ பாக்கள் யாவும் அடிகளைக் கொண்டு விளங்குபவையே.  பாடலைச் சொல்லும் போது வரிகள் / சொற்கள் என்று கூறாமல், அடிகள், சீர்கள் என்றே விளிக்க வேண்டும்.  பொதுவாக பாவினங்களில் அடிகள் ஐந்து வகைப்படும்:

1) குறளடி:  இரண்டு சீர்கள் அமைந்த ஓரடியைக் குறளடி என்கிறோம்.

(எ-கா)  கண்ணதாசனின் திரைப்படப் பாடல்:
பார்த்தேன் சிரித்தேன்;
பக்கம்வரத் துடித்தேன்!
இங்கே ஓரடியில் இரண்டே சீர்கள்; எனவே குறளடியாகும்.

2) சிந்தடி :  மூன்று சீர்கள் அமைந்த ஓரடியைச் சிந்தடி என்கிறோம்.

(எ-கா) கண்ணதாசனின் திரைப்படப் பாடல்:
பார்த்த ஞாபகம் இல்லையோ;
பருவ நாடகம் தொல்லையோ;
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ;
மறந்ததே உன்றன் நெஞ்சமோ?
இங்கே ஓரடியில் மூன்று சீர்கள்: எனவே சிந்தடியாகும்.

3) அளவடி:  நான்கு சீர்கள் அமைந்த ஓரடியை அளவடி என்கிறோம்.

(எ-கா)  பாரதியின் பாடல்:
வீணையடி நீயெனக்கு மேவுவிரல் நானுனக்கு
பூணுவடம் நீயெனக்கு புதுவயிரம் நானுனக்கு
இங்கே ஓரடியில் நான்கு சீர்கள்: எனவே அளவடி என்கிறோம்.

4) நெடிலடி:  ஐந்து சீர்கள் அமைந்த ஓரடியை நெடிலடி என்கிறோம்.

(எ-கா)  என்னுடைய கட்டளைக் கலித்துறை பாடல்:
கன்னற் சிரிப்புடன் பிள்ளை வடிவெனுங் கற்பகமாய்
அன்னை யுருவினில் அன்பைப் பொழிந்திடும் அற்புதமாய்
பின்னல் சுழற்றியே கண்கள் சிலிர்த்திடும் பெண்ணழகாய்
என்னில் உறைந்தெனை என்றும் உயர்த்திடும் என்தமிழே!

இங்கே ஒரடியில் ஐந்து சீர்கள்; எனவே இது நெடிலடி என்கிறோம்.

5) கழிநெடிலடி:  ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட சீர்களை கொண்ட ஓரடியை கழிநெடிலடி என்கிறோம்.

(எ-கா)  ஒரு அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தப் பாடல்:
திருமண மக்கள் நல்ல திருவேந்திப் புகழும் ஏந்திப்
பருதியும் நிலவும் போலப் பல்லாண்டு வாழ்நாள் ஏந்திக்
கருவிலே தமிழ்ப்பண் பாடு கமழ்மக்கள் பேரர் ஏந்திப்
பெருவாழ்வு வாழ்க உற்றார் பெற்றோரும் தமிழும் வாழ்க
இங்கே ஓரடியில் ஆறு சீர்கள்; எனவே இது கழிநெடிலடி என்கிறோம்.

இனி தொடர்ந்து பாவினங்கள்:

தமிழன்பர்களே, சென்ற யாப்பிலக்கண குறிப்புகளில் அசை, சீர், தளை, தொடை, முதலியவற்றைப் பற்றி, ஆரம்ப இலக்கணம் அறிய விரும்புவோர்க்காக, நானறிந்தவரை மேம்போக்காக எடுத்துரைத்தேன். இனி பாக்களைப் பற்றியும் அவற்றின் இனங்களைப் பற்றி ஓரளவுக்குப் பார்ப்போம்.

பாக்கள் என்று வருகையில் பொதுவான வகைகளாவன: (அ) நூற்பா,  (ஆ) ஆசிரியப்பா என்ற அகவல்பா, (இ) வெண்பா, (ஈ) கலிப்பா, (உ) வஞ்சிப்பா, (ஊ) மருட்பா. செய்யுள் சூத்திரங்களை நூற்பா என்கிறோம். எந்த பாடலும் ஓரடியில் வருவதில்லை. நூற்பா மட்டுமே சிற்றெல்லையாக (குறைந்த அளவு) ஓரடி பெற்று வரும்.  அதுபோலவெ மருட்பா என்பது வெள்ளையில் தொடங்கி அகவலில் முடியும் ஒருவகைக் கலவைப் பாடல், ஆக பொதுவாக பயன்படும் வகைகள்: அகவல், வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்றறிக. இவற்றைப் பற்றி அடுத்த குறிப்புகளில் தனித்தனியாகக் காண்போம். அதற்கு முன் பாவின்ங்கள் என்றால் என்னவென்று பார்க்கலாம்.

அந்தந்தப் பாவின் பொதுவிலக்கணங்களைத் தவறாமல் பெற்று வருபவை அகவல், வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்று அறிந்தோம். ஆனால் இவற்றுடன் அந்தந்த பாவின் இலக்கணங்களுடன், கூடவே பல மாறுதல்களும் பெற்று வரும் பாடல்களும் உண்டு.  ஆதலால் அவற்றை வகைப்படுத்துவதற்காக நம்முடைய பேரறிவு கொண்ட இலக்கண ஆசிரியர்கள் அந்தந்த பாவின் இனங்கள் என்று பொருள்படும்படி பாவினங்கள் என்று வகைப் படுத்தினர். ஒவ்வொரு பாவின் பாவினங்களும் (அ) தாழிசை, (ஆ) துறை (இ) விருத்தம் என்று மூன்று வகைப்படும். அதாவது:-

1)   அகவலின் இனம்: ஆசிரியத் தாழிசை, ஆசிரியத்துறை, ஆசிரிய விருத்தம்.

2)   வெண்பாவின் இனம்: வெண்டாழிசை, வெண்டுறை, வெளிவிருத்தம்.

3)   கலிப்பாவின் இனம்: கலித்தாழிசை, கலித்துறை, கலிவிருத்தம்.

4)   வஞ்சிப்பாவின் இனம்: வஞ்சித்தாழிசை, வஞ்சித்துறை, வஞ்சிவிருத்தம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24740
Date:
RE: பாவினங்களின் அடிக்கணக்கு. 1) ஆசிரியப்பா, 2) வெண்பா, 3) கலிப்பா, 4) வஞ்சிப்பா, 5)பரிபாடல், 6) மருட்பா.
Permalink  
 


சங்க இலக்கியங்களில் வெண்பா யாப்பு

POSTED ON மே 9, 2015

தமிழின் இலக்கிய வளம் காலம் காலமாய் தொடர்ந்து புதுமையுடன் தொடர்கின்றன. தமிழிலக்கிய வரலாற்றில் பல்வேறு நூல்கள் மறைந்தும் சில பல நூல்கள் அழிந்தமையும் தெளியுறுத்தப்பட்டுள்ளன.

இருப்பினும் தற்போது கிடைத்துள்ள நூல்களில் முதன்மையானதாக கருதப்படுபவை எட்டுத்தொகயும், பத்துபாட்டும் ஆகிய இவ்விரு தொகை நூல்களேயாகும். எட்டுத்தொகை எட்டு நூல்களும், பத்துப்பாட்டில் பத்துநூல்கள் என பதினெட்டு நூல்களையும் பதினெண் மேற்கணக்கு நூல்களாக வரையறுத்துள்ளனர்.

பண்டைய கால தமிழர்கள் காதலையும், வீரத்தையும் இரு கண்களைப் போல போற்றினர். காதலையும் வீரத்தையும் இயற்கை நிகழ்வுகளோடு போற்றி பாக்கள் பல புனைந்துள்ளனர். தற்கால இலக்கியங்களைப் போன்று உரைநடை இலக்கிய வளர்ச்சி இல்லாத அக்கால சூழலில் படைப்பாளன் தனது கருத்துக்களையும், அழகுணர்ச்சியையும் வெவ்வேறு வடிவத்தில் வெளிப்படுத்தியுள்ளனர். பொதுவாக இவையனைத்து யாப்பு வடிவத்தைச் சார்ந்தவை. செவிக்கு இனிமை பயக்கும் இந்த ஒலி நயத்தை – கவிதையில் பயிலும் இப்பண்பை – வளர்த்து வாய்பாடுகளாக்கி ஒருவகைச் செயற்கை அமைப்பைத் தந்தனர் நம் முன்னோர் . இந்த வாய்பாடுகள் அமையும் முறையே யாப்பு என்றும் பெயரிட்டனர். வரையறுக்கப் பெற்ற ஒலிநயமே யாப்பு என்பது.(ந. சுப்புரெட்டியார் இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்;46)  இருப்பினும் ஓரே வகையான யாப்பினை எல்லா வகை இலக்கியங்களுக்கும் பயன்படுத்த வில்லை. அவ்வாறான பல்வேறு பாவடிவங்கள் ஆசிரியப்பா, வெண்பா, வஞ்சிப்பா, கலிப்பா.

ஆசிரியப்பா எனும் அகவற்பா பெரும்பான்மையான சங்க இலக்கியங்களில் பயின்று வந்துள்ளது. ஆனால் வெண்பா யாப்பானது ஒரு சில நூல்களில் சிறிதளவே அதாவது பாடல்களுக்கு இடையிலே அமைந்துள்ளன. சமுதாயப் பின்னணி — பா ஆக்க முறை —– பாடுபொருள் ஆகியவற்றின் அடிப்படையில் பாவடிவங்களைப் நோக்குவோமானால் முதலில் ஆசிரியமும். இரண்டாவதாக வஞ்சியும், மூன்றாவதாகக் கலிப்பாவும், நான்காவதாக வெண்பாவும் தோன்றியிருக்க வேண்டும் (அ. பிச்சைசங்க இலக்கிய யாப்பியல்: 66 : 2011)

மேற்குரிய கருத்திற்கு அடிப்படையாக அமைந்திருப்பது வெண்பாவின் செம்மையான இலக்கண அமைப்பாகும். மற்ற பாவடிவங்களைப் போல் அல்லாமல் நெகிழ்வு தன்மையற்ற பாவடிவமான வெண்பா பிற்காலத்தில் செம்மைபடுத்தப்பட்ட பாவடிவம் என்பது தெளிவாகும்.

வெண்பாவானது அடிதோறும் நான்கு சீர்களைப்பெற்று வர வேண்டும். இயற்சீர் மற்றும் வெண்சீர் வெண்டளைகள் பயிலப்பெற்று, இதன் இறுதிச் சீரானது மூன்று சீர்களால் ஆனதாக அமையும். இறுதியடியின் இறுதிச் சீரானது நாள், மலர், காசு, பிறப்பு என்ற நான்கு வகையான வாய்பாடுகளில் முடிக்கப்படுதல் வேண்டும் .எல்லா பாவினங்களுக்குள்ளும் பாவகையும், பாஇனமும் உண்டு. வெண்பாவில் பாவகை அடி, வரையரையின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன.

இரண்டு அடிகளால் ஆனது குறள் வெண்பா மூன்று அடிகளால் ஆனது சிந்தியல் வெண்பா நான்கு அடிகளால் ஆனது இன்னிசை வெண்பா,நான்கடி பெற்று இரண்டாமடியின் நான்காம் சீர் தனிசொல் பெற்று வருதல் நேரிசை வெண்பா, ஐந்து முதல் பன்னிரெண்டு அடிகள் வரை அமைப்பின் அது பஃறொடை வெண்பா, அதற்கு மேல் அமையின் கலிவெண்பா.    நெடுங்காலமாக கலிவெண்பா என்பது கலிப்பாவின் வகையில் ஒன்றாகவே இலக்கண நூலில் குறிப்பிட்டுச் சென்றுள்ளனர். முதன்முதலாக வீரசோழியந்தான் கலிவெண்பாவை வெண்பா வகையுள் அடங்கியது என்பர் (சோ. ந. கந்தசாமி, தமிழ் யாப்பியலின் தோற்றமும் வளர்ச்சியும். அ: 74-742)  (வீரசோழிய நூற்பா – 114). சங்க  இலக்கியங்களில் வெண்பா யாப்பு கலித்தொகை , பரிபாடல்

பத்துப்பாட்டு முதலான நூல்களில் காணக்கிடைக்கின்றன.

கலித்தொகையில் வெண்பாக்கள்

கலித்தொகையில் பாக்கள் அனைத்தும் கலிப்பா யாப்பினால் பாடப்பட்டவையாகும். இருப்பினும் கலிப்பாவின் உறுப்புகளின் இடையே வெண்பாக்கள் பயின்று வந்துள்ளன. கலிப்பா வெண்பாவின்கண் அடங்கும் என்றும், வெண்பாப் போன்ற நடையுடையது என்றும் தொல்காப்பியர் கூறினர். நடை என்றது பாக்கள் இயலும் திறம் என்று விளக்கினார் இளம்பூரணர். இவ்விரு பாக்களுக்கும் இடையே இடையே உள்ள ஒற்ருமைப் பண்புகளினால் கலிப்பாக்களில் வெண்பாக்கள் கலந்து வருதல் சுட்டத்தக்கது. (சோ. ந. கந்தசாமிதமிழ் யாப்பியலின் தோற்றமும் வளர்ச்சியும். அ: 619)

கலிப்பாவில் ஐஞ்சீர் அடுக்கிய குறள் வெண்பா , சிந்தியல் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பாக்கள் காணக்கிடைகின்றன. இவையன்றி தளைதட்டி வரும் வெண்பாக்களும் காணக்கிடைக்கின்றன. கலிப்பாவின் உறுப்புகளில் தரவாகவும், சுரிதகமாகவும், இடைநிலைப்பாட்டாகவும், கொச்சகமாகவும் வெண்பாக்கள் இடம்பெற்றுள்ளன.

பரிபாடலில் வெண்பாக்கள்

எட்டுத்தொகை நூல்களுல் ஒன்றான பரிபாடலில் மொத்த பாடல்களாக அறியப்பட்டவை. 70 பாடல்கள்  கிடைத்தவை 22 பாடல்கள் இவற்றுள் வையைப்பற்றி  எழு பாடல்களும் முருகனைப் பற்றி – எட்டு பாடல்களும் , திருமாலைப் பர்றி ஆறு பாடல்களும் உள்ளன. புறதிரட்டாக பதினோரு பரிபாடல் தனியாப்பு வடிவமாக இருப்பினும் இப்பாடலில் இடைஇடையே வெண்பா யாப்பு பயின்று வந்துள்ளமை பாடல்களில் வழி அறியப்படும் செய்தியாகும். வெண்பா வகையான குறள், சிந்தியல், இன்னிசை, நேரிசை, பஃறொடை, கலிவெண்பா என எல்லா வகைகளும் இப்பாடல்களின் இடைகிடையே காணக் கிடைப்பவையாகும்.

குறள் வெண்பாக்கள்

வையை

ஆறாம் பாடல் — 94 – 95 வரையிலான அடிகள்

பத்தாம் பாடல் – 69 – 70 வரையிலான அடிகள்

பதினொராம் பாடல் – 72 – 73 மற்று,ம் 101 – 102 வரையிலான அடிகள்

இருபதாம் பாடல் – 96 – 97 வரையிலான அடிகள்

(பரிபாடல் திரட்டில் )

இரண்டாம் பாடல் – (58 – 59) (60 – 61) (62 – 63 )

இருபதாம் பாடல் – (46 – 47 ) (60 -61 ) (குட்டம்பட்ட வெண்பா)

செவ்வேள்

8  ஆம் பாடல் ( 17 -18) வரையிலான அடிகள்

17 ஆம் பாடல் (20 -21) வைரையிலான அடிகள்

18 ஆம் பாடல் மூன்று வெண்பாக்கள் (34 -35 ) , (36 – 37) (38 -39).

19 ஆம் பாடல் இரண்டு வெண்பாக்கள் (65 -66) , (95-96)

21 ஆம் பாடல் ( 64-65)

பரிபாடல் திரட்டில் திருமால் (72-73)

சிந்தியல் வெண்பாக்கள்

16 ஆம் பாடல் (வையை).

( 17 -19 வரையிலான 3 அடிகள்

பரிபாடல் திரட்டில்

3 – பாடல் (வையை)

சேறுநர் விழையாச்  —————- வையை எமக்கு

மண்ணார்ந்(து)  —————— நிற்குமோ நெஞ்சு

இவையன்றி இன்னிசை வெண்பாக்கள் சில காணக் கிடைக்கின்றன. அவை ஐச்சீர் அடுக்கி வேற்று தளை விரவியும் தளை தட்டுவனவாகும் அமைந்துள்ளன.பரிபாடலில் புறத்திரட்டாக கிடைத்த பாடலில் இரண்டு நேரிசை வெண்பாக்களாகும் அவற்றுள் ஐந்தாம் பாடல் “முன்புற்று அறியா எஅனத் தொடங்கும் பாடலில் ஈற்றடி சிதைந்து காணப்படுகிறது. மதுரையைப் பற்றிய ஆறாம் பாடல் முழுமையாக கிடைக்கும் நேரிசை வெண்பாவாகும்.

பரிபாடலில் பஃறொடை வெண்பா

6 – ஆம் பாடல் – வையை – ”நல்லாள் கரைநிற்ப —- இவ்வையை யாறு”(87 -93 வரையிலான 7  — அடிகள்).

8 – ஆம் பாடல் —- செவ்வேள்

“தெரி இழாய் செல்க  —————— ஆற்றுஇருஞ் சூள்.”(83 — 89  வரையிலான  7 —- அடிகள் )

10  — ஆம் பாடல் — வையை

“காமம் கனைந்து  ——————– களிமதரும் போன்ம். “(63 — 68 வரையிலான 6 — அடிகள்)

11 —- ஆம் பாடல் – வையை

“உருகெழு வௌ;ளி  —————- வையைப் புனல் “( 4 — 13 வரையிலான 12 — அடிகள்

”மையாடல்  —————— வையைநதி .” ( 88 -92 வரையிலான 5-அடிகள்)

“தண்டு தழுவாத்  ————— கார்நீர் வரவு.”  (106 – 114 வரையிலான 9 அடிகள்)

16 ஆம் பாடல் – வையை

”கருங்கையின் ஆயத்தார்  ——————- வையை வரவு” (20 – 31 வை ரையிலான 12 அடிகள்_

“மலையின் இழிஅருவி  ——————— வையைக்கு இயல்பு.” (32 – 38 வரையிலான 7 அடிகள்)

“கள்ளே புனலே  ————- வையைக்கு இயல்பு.” (39 – 47 வரையிலான 9 அடிகள்)

“கண்ணியர் தாரர்  ——————-  வையை நினக்கு.” (50 — 55 வரையிலான 6 அடிகள்)

17 ஆம் பாடல் —- செவ்வேள்

”தெய்வ விழவும்  —————— தடுமாற்றம் நன்று” (42 – 46 வரையிலான 5 அடிகள்)

18 ஆம் பாடல் – செவ்வேள்

“போரெதிர்ந்து ஏற்றார்  —————- ஏற்கும் இக்குன்று” (1 — 6 வரையிலான 6 அடிகள்)

19  ஆம் பாடல் – செவ்வேள்

“தும்பி தொடர்  ——————- யாம் ஏத்தும் ஆறு “ ( 30 – 37 வரையிலான 8 அடிகள்)

20 ஆம் பாடல் – வையை

“ஒய்யப் போ வாளை  ————– மாற்றாள் மகள்.” (41 – 45 வரையிலான 8 அடிகள்)

“அஃ சொல்  ——————- தந்தே தருக்கு “ (74 – 78 வரையிலான 5 அடிகள்)

பரிபாடல் திரட்டு —- பஃறொடை வெண்பா

2  ஆம் பாடல் – வையை

‘துறைபாடும் காதலர்  ————— வையை துறை.” (28 — 33 வரையிலான 6 அடிகள்)

“காதலான் மார்பிற்  ————— ஓஒ பெரிதும் வியப்பு “ (34 —  40 வரையிலான 7 அடிகள்)

“கயத்தக்க பூப்பெய்த  —————– அவட்குத் துணை.” (41 – 45 வரையிலான 6 அடிகள்)

“பணிவில் உயர்சிறப்பின்  ———— வையைப்புனல்.” (46 – 50 வரையிலான 6 அடிகள்)

”புனலோடு போவதோர்  —————- ஊர்த்தலர்வந் தூர்ந்து” (51 – 56 வரையிலான 6 அடிகள்)

”மழைநீர் அறுகுளத்து     ——————– ஆடும் தகைத்து.” (87 – 96 வரையிலான 10 அடிகள்)

பரிபாடலில் கலிவெண்பா

பத்தாம் பாடல் – வையை “மதிமாலை மாலிருள்  ————– ஆர்க்கும் புகை.”(112 – 125)(ஒர் அடி நெடிலடி – 121 அடி)

இவையன்றி பஃறொடை மற்றும் கலிவெண்பாக்கள்  ஐச்சீர் அடுக்கியும் வேற்று தளை விரவியும் தளை தட்டுவனவாகவும் அமைந்துள்ளன.

பத்துப்பாட்டில் வெண்பாக்கள்

பத்துபாட்டு என்பது பத்து தனி நூல்களின் தொகுப்பு நூல் ஆகும். மலைபடுகடாம் (கூத்தராற்றுப்படை), பொருநராற்றுப்படை, பட்டினப்பாலை, குறிஞ்சிப்பாட்டு, நெடுநல்வாடை, திருமுருகாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, முல்லைப்பாட்டு, பெரும்பாணாற்றுப் படை, சிறுபாணாற்றுப் படை, ஆகிய பத்து நூல்களில் பாடல்களின் முடிவில் தனிப்பாடலாக 24 பாடல்கள் வெண்பா யாப்பில் அமைந்துள்ளன.

மலைபடுகடாம் பாடலின் முடிவில் தூஉஉத் தீம்புகை ..” எனத் தொடங்கும் இன்னிசை வெண்பா காணப்படுகிறது. பொருநராற்றுப்படையில் எரியும் ஏற்றத்தினானும்”,   “அரிமா சுமந்த அமளி மேலானன “, முச்சரக் கரமும் அளப்பதற்கு எனத் தொடங்கும் மூன்று நேரிசை வெண்பாக்கள் காணக்கிடைக்கின்றன. இவற்றுள் முச்சரக் கரமும் அளப்பதற்கு என தொடங்கும் நேரிசை வெண்பாவானது. பட்டினப்பாலை நூலின் முடிவிலும் அமையப்பெற்றுள்ளது. பொருநராற்றுப்படை மற்றும் பட்டினப்பாலை ஆகிய இரு நூல்களும் சோழன் கரிகாற்பெருவளத்தானைப் பற்றிய நூலாகும்.

கபிலரால் பாடப்பட்ட குறிஞ்சிப் பாட்டில் நின்குற்றம் இல்லை’ எனத் தொடங்கும் நேரிசை வெண்பாவும் “’ஆற்றல் சால் கேள்வி” எனத் தொடங்கும் நேரிசை வெண்பா என இரண்டு வெண்பாக்கள் காணப்படுகின்றன.

நெடுநல்வாடையில் வாடை நலிய வடிக்கண்ணால்’ என்ற நேரிசை வெண்பாவென்றும், திருமுருகாற்றுப்படையில் பத்து நேரிசை வெண்பாக்களும் காணப்படுகின்றன. மதுரைக்காஞ்சியில் பைங்கண் இளம்பகட்டின் மேலானை’ எனத் தொடங்கும் வெண்பாவும்,  “சொல்லென்னும் பூம்போது தோற்றி எனத் தொடங்கும் வெண்பாவும் என இரண்டு நேரிசை வெண்பாக்கள் உள்ளன.

வண்டடைந்த கண்னி’,  புனையும் பொலப்படை’ எனத் தொடங்கும் இருவேறு நேரிசை வெண்பாக்கள் முல்லைப்பாட்டில் முடிவில் உள்ளன. அதைப்போலவே கங்குலும் நண்பகலும்’ எனத் தொடங்கும் நேரிசை வெண்பா பெரும்பாணாற்றுப் படையிலும், ‘அணியிழை யார்க்கு’, ‘நெடுவரைச் சந்தனம்’ எனத் தொடங்கும் இரண்டு நேரிசை வெண்பாக்களின் சிறுபாணாற்றுப் படையிலும் காணப்படுகின்றன.

மொத்தம் பத்துப்பாட்டில் கிடைக்கும் வெண்பா எண்ணிக்கை 25 ஆகும். இவற்றூள் ஒரு வெண்பா இரு நூல்களிலும் காணப்படுகிறது. எனவே எண்ணிகையில் 24 பாக்களே ஆகும். இதில் ஒன்று இன்னிசை வெண்பா. மற்றவை 23 ம் நேரிசை வெண்பாவாகும். இவை அனைத்தும் ஒவ்வொரு நூலின் முடிவாக அமையப்பெற்றுள்ளதால் பிற்காலத்தவரால் சேர்க்கப்பட்டவை என கருத இடமுண்டு. காரணம் ஆசிரிய யாப்பே மிகுதியாக பயன்பாட்டில் இருந்த காலத்தில் வெண்பாக்கள் இடம் பெற்றுள்ளமை ஆய்வுக்குரியது. இதைத் தவிர்த்து வெண்பா யாப்பிலும் கூட இன்னிசை வெண்பா முதன்முதலில் தோன்றிய வெண்பா வகையாக கருதப்படும் நிலையில் நேரிசை வெண்பா மிகுதியாக இடம்பெற்றுள்ளமையை நோக்கும் போது, இவ்வெண்பாக்கள் அனைத்தும் சிலப்பதிகாரத்தில் ஒவ்வொரு காதைகளின் முடிவில் இடம் பெற்றுள்ள வெண்பாக்களைப் போல பிற்காலத்தவரால் சேர்க்கப்பட்டவை எனக் கருத இடமுண்டு. இவ்வெண்பாக்களில் பல பத்துப் பாட்டினைப் படித்துச் சுவைத்த ஆசிரியர் பிறாரால் பாடப்பெற்றிருத்தல் வேண்டும் என்றே தோன்றுகிறது. (சோ. ந. கந்தசாமி. யாப்பியலின் தோற்றம் வளர்ச்சி அ ; 614) மேற்குறிய கூற்றினை கொண்டு நோக்கும் பொழுது பத்துப்பாட்டில் இடம் பெற்றுள்ள வெண்பாக்கள் பிற்காலத்தவறால் சேர்க்கப்பட்டவை என்பது தெளிவாகும்.

சங்கம் மருவிய கால இலக்கியங்களில் வெண்பா யாப்பின் ஆதிக்கத்தைக் காணும் போது, சங்க இலக்கியங்களின் வழி மெல்ல மெல்ல வெண்பா வளர்ச்சியடைந்து தனித்த செம்மையான யாப்பு வடிவமாக வளர்ந்த நிலை தெளிவாகிறது



__________________


Guru

Status: Offline
Posts: 24740
Date:
Permalink  
 

 

 5.2 நால்வகைப்பாவும் அடிவரையறையும்

     தொல்காப்பியர் தமது செய்யுளியலில் ஆறுவகைப்
பாக்களைக் கூறுகின்றார். அவை 1.வெண்பா 2. அகவற்பா
3.கலிப்பா 4.வஞ்சிப்பா 5. பரிபாடல் 6. மருட்பா.

     இவற்றுள் பரிபாடல் என்னும் இசைப்பாவைப் பாடுபவர்
நாளடைவில் அருகிவிட்டனர். அருகியமைக்கான காரணம், 
இசையும் நாடகமும் காமத்தைத் தூண்டுவன என்று அவற்றைப் 
பேணாமல் புறந்தள்ளியவர்கள் அரியணை ஏறியமை ஆகலாம்.
புரப்பார் இல்லாமையால் இசைப்பாவாகிய பரிபாடலைப் பாடுவோர்
இலராயினர். மருட்பா என்பது வெண்பாவும் ஆசிரியப்பாவும் 
எனக் கலந்து பாடப்பெறும் கலவைப்பாடல் ஆகும். எனவே. 
இன்று பாவகைகளில் சிறப்பின இவை எஞ்சிய நான்கே.

     கவிஞர்கள் தாம் சொல்லவந்த கருத்து, சொல்லும் திறன்
அமைக்க வேண்டிய நெறி ஆகியவற்றை மனத்தில் கொண்டே
தமது கவிதைகளைப் படைக்கின்றனர். அவர்கள் தம் கவிதைகளைச்
‘செவிநுகர் கனி’களாக்கக் கற்பனைகளையும் ஆளவேண்டியுள்ளது.
ஆகலின், பாடலின் அடியெல்லைகள் வேறுபடுகின்றன. எனினும்,
இன்ன இன்ன பாவினை இன்ன இன்ன அடிவரையில் பாடுதல்
வேண்டும் என்றும் விதித்தனர். விதித்தவை சிற்றெல்லை
எனப்பட்டன. ‘சிற்றெல்லை’ எனவே, ‘எடுத்த மொழிஇனம்
செப்பலும்     உரித்தே’     என்றபடிக்கொப்பப் ‘பேரெல்லை’
என்பதொன்றும் உண்டு என்பதும் பெறப்படுகின்றது. இது,
அருத்தாபத்தி. இனிப் பாக்களின் சிற்றெல்லை, பேரெல்லை ஆகிய
இரண்டைப் பற்றிப் படிப்போம்.

5.2.1 சிற்றெல்லை, பேரெல்லை - வேண்டுமா?

 

     ஒருவன் இருதாள் நிழற்கீழ்
     மூவகை உலகும் முகிழ்த்தன முறையே’


என்று பாடிவைத்தால், இது, நேரிசை ஆசிரியப்பா என்று
வரையறுக்க முடியாது. மேலும், கலிப்பாவின் வஞ்சிப்பாவின்
சுரிதகம் போலும் என்று எண்ண வேண்டியும் வரும்.

     
கொடியவாலன குருநிறத்தன குறுந்தாளை
     ..... ..... .....
     ..... ..... .....
     பயில்படுவினை பத்தியலாற் செப்பினோன்
             புனையெனத்
     திருவுறு திருந்தடி திசைதொழ
     வெருவுறு நாற்கதி வீடுநனி யெளிதே”


எனவரும் இவ்வஞ்சிப்பாவின் சுரிதகத்தொடு மேல்சொன்ன
‘ஒருவன் ..... ..... முறையே’ என்ற அடிகளை வைத்துப்பாருங்கள்.
மருட்கை பிறக்கும். மற்றும் மருட்பாவின் பின்னிரண்டு
அடிகளாகவும் தோன்றும்.

     ‘திருநுதல் வேரரும்பும் தேங்கோதை வாடும்
     இருநிலம் சேவடியும் தோயும்-அரிபரந்த
     போகிதழ் உண்கணும் இமைக்கும்
     ஆகும் மற்றிவள் அகலிடத் தணங்கே’

இம்மருட்பாவின்     இறுதி இரண்டடிகளைப் பாருங்கள்.
தடுமாற்றத்திற்கான தடயம் தெரியும்.

     ‘நீல மேனி வாலிழை பாகத்து
     ஒருவன் இருதாள் நிழற்கீழ்
     மூவகை உலகமும் முகிழ்த்தன முறையே’


என்றவாறு முதலில் (தலைப்பில்) ஓரடியைச் சேர்த்துவிட்டால்,
தெளிவாக இந்தப்பாடல் நேரிசை ஆசிரியப்பா என இனம் பிரித்து
அறியலாம். இனிய மாணாக்கர்களே! இதனால், சிற்றெல்லையும்
கொள்ளவேண்டியமையை உணர்வீர்கள்.

    நாரா யணனை நராயணன்என் றேகம்பன்
    ஓராமல் சொன்ன உறுதியால் - நேராக
    வார்என்றால் வர்என்பேன் வாள் என்றால் வள் என்பேன்
    நார்என்றால் நர்என்பேன் நான்’

இது காளமேகப் புலவரின் பாட்டு. இதனைக் கம்பர் மேற்கொண்ட
குறுக்கல் விகாரத்தை (நாராயணன்->நராயணன்) ஏளனம் செய்து
காளமேகம் பாடியதாகக் கருதுவதைவிடத் தமிழிலக்கிய உலகம்
கவிஞர்களுக்குக் கொடுத்துள்ள சலுகையாகக்     கருதலாம்.
தொல்காப்பியர் கூறும் செய்யுள் விகாரங்கள் உள்ளிட்டுச்
செய்யுட்கென அமைக்கும் நூற்பாக் கருத்துகள் எல்லாமும்
கவிஞர்களுக்கு வழங்கிய சலுகை தாமே? ‘பாண!’ என முன்னிலை
ஒருமையில் தொடங்கிப் ‘பெறுகுவிர்’ என முன்னிலைப் பன்மையில்
முடிக்கலாம் என உரிமை தருகின்றாரே தொல்காப்பியர். என்னே
சலுகை.

     ‘முன்னிலை சுட்டிய ஒருமைக் கிளவி
     பன்மையொடு முடியினும் வரைநிலை இன்றே:
     ஆற்றுப்படை மருங்கில் போற்றல் வேண்டும்’


     இவற்றையெல்லாம் உட்கொண்டவர்கள்போல யாப்பிலக்கண
நூலாரும் செய்யுள் யாக்கும் புலவனது கற்பனைக்கும் அவனது
உள்ளத்து உணர்வுக்கும் தடையிருத்தலாகாது எனக் கருதி
இவ்வளவு அடிகளில்தான் பாடவேண்டுமென     எல்லையை
வைக்கவில்லை.

5.2.2 நால்வகைப் பாக்களுக்கான சிற்றெல்லை

     வெண்பா முதலான நான்குவகைப்     பாக்களுக்கான
சிற்றெல்லையை அஃதாவது, குறைந்த அடி எவ்வளவு என்பதை
இனிப் பார்க்கலாம்.

  • வெண்பா சிற்றெல்லை

     ‘அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
     பொறுத்தானொ டூர்ந்தான் இடை’,


இது வெண்பா. இரண்டு அடிகளை உடையதாய் வந்துள்ளது.
ஆதலால் குறள் வெண்பா எனப் பெறுவது. எனவே, வெண்பாவின்
சிற்றெல்லை இரண்டடி. இரண்டடியின் குறைந்து பாடல்
அமைவதில்லை. ஆத்திசூடி போன்றவற்றில் ஓரடியும் பாடலடியாக
வந்துள்ளதே என நீங்கள் வினவலாம். அதற்கு விடை, அவை
நூற்பா யாப்பு வகையின என்பதே ஆகும்.

     ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்
     ஓதலின் சிறந்தன்று ஒழுக்க முடைமை’

இது குறள் வெண்பாவின் இனமான குறள் வெண் செந்துறை.

     வண்டார்பூங் கோதை வரிவளைக்கைத் திருநுதலாள்
     பண்டையள் அல்லள் படி.


இது சந்தம் குறைந்த குறள் வெண்பா. யாப்பிலக்கணத்தார்
இதனைக் குறட்டாழிசை என்பர். இதுவும் குறள் வெண்பாவின்
இனம்.

ஆக, வெண்பாவின் சிற்றெல்லை இரண்டடியே.

ஆசிரியப்பாவின் சிற்றெல்லை

     ‘முதுக்குறைந் தனளே முதுக்குறைந் தனளே
     மலையன் ஒள்வேல் கண்ணி
     முலையும் வாரா முதுக்குறைந் தனளே’

     இது நேரிசை ஆசிரியப்பா. மூன்றடியால் வந்துள்ளது. 
இதனை விடக் குறைந்த அடியால் வந்தால், என்ன பா என்றோ,
இன்ன பாவில் இவ்வகைப்பா என்றோ பிரித்தறிய முடியாது.
இவையெல்லாம் ஒருசேர அறிய குறைந்தஅளவு மூன்றடிகளாவது
வேண்டும். எனவே, ஆசிரியப் பாவின் சிற்றெல்லை மூன்றடி.

கலிப்பாவின் சிற்றெல்லை

     கலிப்பா குறைந்தது நான்கடிகளை உடையதாய் வரும்.
நான்கடிகளினும் குறைந்து கலிப்பா வாராது.

‘செல்வப்போர்க் கதக்கண்ணன் செயிர்த்தெறிந்த சினஆழி
முல்லைத்தார் மறமன்னர் முடித்தலையை முருக்கிப்போய்
எல்லைநீர் வியன்கொண்மூ இடைநுழையும் மதியம்போல்
மல்லல்ஓங்கு எழில்யானை மருமம்பாய்ந்(து) ஒளித்ததே’


     
இது தரவு கொச்சகக் கலிப்பா; நான்கடியால் வந்துள்ளது.
கலிப்பாவின் சிற்றெல்லை நான்கடி.

     அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பாவும் வண்ணக
ஒத்தாழிசைக் கலிப்பாவும் தவிர்ந்து ஏனைய கலிப்பாக்களுக்குத்
தரவு மூன்றடியே சிறுமை என்பது ஒழிபியலில் காணப்படுவதாம்.
தரவு கொச்சகக் கலிப்பாவுக்குத் தரவு நான்கடிச் சிறுமை என்பது
கொண்டு, ‘செல்வப் போர்க் கதக்கண்ணன்’ என்னும் தொடக்கத்த
பாடல் சான்றாகத் தரப்பட்டது]

  • வஞ்சிப்பாவின் சிற்றெல்லை

 

     வஞ்சிப்பா கலிப்பாவைப்போலத் துணை உறுப்புகளை
உடையது. துணை உறுப்புகள் தனிச்சொல்லும் சுரிதகமும் ஆம்.
வஞ்சிப்பா ஒன்றைக் காண்போம்.

     ‘செங்கண்மேதி கரும்புழக்கி
     அங்கண்நீலத் தலர்அருந்திப்
     பொழிற்காஞ்சி நிழல்துயிலும்
     செழுநீர்
     நல்வயல் கழனி யூரன்
     புகழ்தல் ஆனாப் பெருவண் மையனே’


-இப்பாடல் குறளடி வஞ்சிப்பா. குறளடி என்னும் இருசீர்களால்
ஆகிய மூன்று அடிகளைக் கொண்டுள்ளது. ‘செழுநீர்’ என்ற
தனிச்சொல்லையும் அதாவது துணை உறுப்பையும் சுரிதகம் 
என்னும் துணை உறுப்பையும் நீக்கி, எஞ்சியதையே வஞ்சிப்பா
எனக் கொண்டு அடிகளைக் கணக்கிட வேண்டும்.

     பூந்தண்சினை மலர்மல்கிய பொழிற்பிண்டி
     வேந்தன்புகழ் பரவாதவர் வினைவெல்லார்
     அதனால்.
     அறிவன தடியிணைப் பரவிப்
     பெறுகுவர் யாவரும் பிறவியில் நெறியே


     
இது சிந்தடி வஞ்சிப்பா. முச்சீரடியான் (சிந்தடியான்) இயன்ற
அடிகள் இரண்டைக் கொண்டுள்ளது. இதனை நோக்க
வஞ்சிப்பாவின் சிற்றெல்லை இரண்டடி என்றாகின்றது.

     வஞ்சிப்பா மூன்றடிச் சிறுமையை உடையது என்பவர்
அமிதசாகரர். இவர் ‘வெள்ளைக்கு இரண்டு அடி; வஞ்சிக்கு
மூன்றடி... இழிபு’ என்றே குறிப்பிட்டுள்ளார். 

     வஞ்சிப்பா இரண்டடிச் சிறுமையை உடையது என்பவர்
மயேச்சுரர். மயேச்சுரரின் கருத்தை ஏற்க     விரும்பிய
உரையாசிரியராகிய குணசாகரர், நான்கு பாக்களுக்குரிய அடியின்
சிறுமையும் பெருமையும் சொல்ல வந்த காரிகைக் சூத்திரம்,
வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்ற முறைமையில்
நிறுத்திச் சொல்லாமல் வெண்பா, வஞ்சிப்பா, அகவற்பா, கலிப்பா
என்று முறைமாற்றிச் சொல்வதைக் காண்கின்றார். கண்டு, இங்ஙனம்
முறைமாற்றித் தலை தடுமாற்றமாக உரைத்தது ஒரு கருத்தைச்
சொல்வதற்காகத்தான் என்று கொண்டு ‘மயேச்சுரர் முதலாகிய 
ஒரு சார் ஆசிரியர் வஞ்சிப்பா இரண்டடியானும் வரப்பெறும்
என்றார்’ என்று சொல்லித் தழுவிக் (ஏற்றுக்) கொள்கின்றார்.

     மூல நூலாசிரியரின் கருத்துப்படி     வஞ்சிப்பாவின்
அடிச்சிற்றெல்லை மூன்று என்றே கொள்வோம்.

5.2.3. நால்வகைப் பாக்களுக்கான பேரெல்லை

     இரண்டடிச் சிற்றெல்லையது வெண்பா; மூன்றடிச்
சிற்றெல்லையை உடையன ஆசிரியப்பாவும் வஞ்சிப்பாவும்;
நான்கடிச் சிற்றெல்லையை உடையது கலிப்பா என்று வரையறுத்துக்
கூறியவாறு இந்நான்கு வகைப்பாடல்களையும் எவ்வளவு
அடிப்பெருமையில் பாடலாம் என்ற வரையறை இல்லை. அதாவது,
கீழ் எல்லை சொல்ல முடிகின்றது மீ எல்லையாகிய மேல்
எல்லையைக் கூற முடியவில்லை. நால்வகைப் பாவிற்கும் உரிய
அடிகளின் மேல் எல்லை, பாடுவோரின் உள்ளத்தின் எல்லை
என்றுதான் அமையவேண்டும்.

குறள்இரு சீரடி; சிந்துமுச் சீரடி; நாலொருசீர்
அறைதரு காலை அளவொடு நேரடி; ஐயொருசீர்
நிறைதரு பாதம் நெடிலடி யாம்;நெடு மென்பணைத்தோள்
கறைகெழு வேற்கண்நல் லாய்! மிக்க பாதம் கழிநெடிலே’
,

எனவும்,

     ‘வெள்ளைக்கு இரண்டடி; வஞ்சிக்கு மூன்றடி; மூன்று
                 அகவற்கு
     எள்ளப் படாக்கலிக்கு ஈரிரண் டாகும், இழிபு;
                 உரைப்போர்
     உள்ளக் கருத்தின் அளவே பெருமை;ஒண்
             போதுஅலைத்த
     கள்ளக் கரும்நெடும் கண்சுரி மென்குழல் காரிகையே’


எனவும் வரும் இவ்விரண்டு காரிகைச் சூத்திரங்கள் தந்த
செய்திகளே மேல் நாம் பார்த்தன எல்லாமும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24740
Date:
Permalink  
 

 

5.2 யாப்பிலக்கணம்
 

‘யாப்பு’ என்னும் சொல்லுக்குச் செய்யுள் என்பது பொருள். நரம்பு, தோல், தசை, எலும்பு, கொழுப்பு, குருதி முதலியவற்றால் யாக்கப்பட்ட (கட்டப்பட்ட) உடலை யாக்கை என்று வழங்குகிறோம். இதேபோல எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை முதலியவற்றைக் கொண்டு கட்டப்படுவது யாப்பு என்று அழைக்கப்படுகிறது.
 

யாப்பு, செய்யுள், பாட்டு, தூக்கு, தொடர்பு, பா, கவி என்பன யாவும் ‘செய்யுள்’ என்னும் ஒரே பொருள் உணர்த்தும் சொற்கள் ஆகும்.
 

செய்யுள் இயற்றுவதற்கு உரிய விதிகளையும், விதிவிலக்குகளையும் கூறுவது யாப்பிலக்கணம். 
 

5.2.1 செய்யுள் உறுப்புகள்
 

செய்யுளுக்கு உரிய உறுப்புகள் ஆறு வகைப்படும். அவை, எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை ஆகியவை ஆகும்.
 

5.2.1.1 எழுத்து
 

முதல் எழுத்தும் சார்பெழுத்தும் செய்யுளுக்கு உரிய எழுத்துகள் ஆகும்.
 

5.2.1.2 அசை
 

எழுத்துத் தனித்தோ,  இணைந்தோ அசைந்து தக்க ஒலியுடன் சீருக்கு உறுப்பாகி நின்றால் அது அசை எனப்படும். அசை, நேரசை, நிரை அசை என இருவகைப்படும்.
 

1. நேரசை : குறில் தனித்தும்(‘க’) குறில் ஒற்றடுத்தும்(கல்) நெடில் தனித்தும்(பா) நெடில் ஒற்றடுத்தும்(பால்) வருவது நேரசை எனப்படும்.
 

2. நிரையசை : குறில் இணைந்தும்(பசு) குறில் இணைக் கீழ் ஒற்றும்(பகல்) குறில் நெடில் தனித்தும்(நிலா) குறில் நெடிற்கீழ் ஒற்றும்(இறால்) வருவது நிரையசை ஆகும்.
 

இவ்வாறு செய்யுளில் அசைபிரித்து எழுதுவதை ‘அலகிட்டு வாய்பாடு கூறல்’  என்று கூறுவர். செய்யுள் இயற்றுவதற்குரிய அடிப்படை அளவுகளைப் பிரித்து, வாய்பாடு காணும் முறைக்கு அலகிடுதல் என்று பெயர்.
 

5.2.1.3 சீர்
 

அசைகள் ஒன்றோ, இரண்டோ, மூன்றோ, நான்கோ இயைந்து நிற்பது சீர் எனப்படும். சீர் நான்கு வகைப்படும். அவை, 1. ஓரசைச்சீர், 2. ஈரசைச்சீர், 3. மூவசைச்சீர், 4. நாலசைச்சீர் ஆகியனவாகும்.
 

ஓரசைச்சீர் - 4 
 

1.

நேர்

-

நாள்

 

3.

நேர்+பு

-

காசு

2.

நிரை

-

மலர்

 

4.

நிரை+பு

-

பிறப்பு

ஈரசைச்சீர் - 4 
 

1.

நேர் நேர்

-

தேமா

 

3.

நிரை நிரை

-

கருவிளம்

2.

நிரை நேர்

-

புளிமா

 

4.

நேர் நிரை

-

கூவிளம்

மூவசைச்சீர்
 

1.

நேர் நேர் நேர்

-

தேமாங்காய்

 

1.

நேர் நேர் நிரை

-

தேமாங்கனி

2.

நிரை நேர் நேர்

-

புளிமாங்காய்

 

2.

நிரை நேர் நிரை

-

புளிமாங்கனி

3.

நிரை நிரை நேர்

-

கருவிளங்களய்

 

3.

நிரை நிரை நிரை

-

கருவிளங்கனி

4.

நேர் நிரை நேர்

-

கூவிளங்காய்

 

4.

நேர் நிரை நிரை

-

கூவிளங்கனி

5.2.1.4 தளை
 

சீர்கள் ஒன்றுடன் ஒன்று இயைந்து கட்டுப்பட்டு நிற்பது தளை எனப்படும்.  தளைகள் ஏழு. அவையாவன, 1. நேரொன்றாசிரியத் தளை, 2. நிரையொன்றாசிரியத் தளை, 3. இயற்சீர் வெண்டளை, 4. வெண்சீர் வெண்டளை, 5. கலித்தளை, 6. ஒன்றிய வஞ்சித்தளை, 7. ஒன்றாத வஞ்சித்தளை ஆகியவை ஆகும்.
 

5.2.1.5 அடி
 

தளைகள் அடுத்து நடப்பது அடி எனப்படும். அடி ஐந்து வகைப்படும். அவை, 1. குறளடி, 2. சிந்தடி, 3. அளவடி (நேரடி), 4. நெடிலடி, 5. கழிநெடிலடி ஆகியவை ஆகும்.
 

5.2.1.6 தொடை
 

செய்யுளில், மோனை, எதுகை முதலாகத்  தொடுக்கப்படுவது ‘தொடை’  எனப்படும். தொடைகள், மோனைத் தொடை, எதுகைத் தொடை, முரண் தொடை, இயைபுத் தொடை, அளபெடைத் தொடை, அந்தாதித் தொடை எனப் பல வகைப்படும்.
 

ஆசிரியர் பயிற்சி மாணவர்களே!  தொல்காப்பியர் கருத்துப்படி,  தமிழ்ச் செய்யுளில் 13,699 (பதின்மூன்றாயிரத்து அறுநூற்று தொன்னூற்று ஒன்பது) தொடைகள் உள்ளன. அறிமுக நிலையில் சிலவற்றின் பெயர்களை மட்டும் அறிந்துகொள்கிறோம் என்பதை நினைவில் கொள்க.
 

5.2.2 செய்யுள் வகை
 

ஆசிரியர் பயிற்சி மாணவர்களே! மேற்காட்டிய செய்யுள் உறுப்புகளால் ஆகிய தமிழ்ச் செய்யுள்கள் நான்கு வகைப்படும். அவை, வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகியவை ஆகும். நான்கு வகைப் பாக்களுக்கும் எடுத்துக்காட்டுகள் காண்போம்.
 

5.2.2.1 வெண்பா
 

நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல்லுலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட் (டு)
எல்லார்க்கும் பெய்யும் மழை.
 

இவ்வாறு வரும் வெண்பாவனது, 1. குறள் வெண்பா, 2. நேரிசை வெண்பா, 3. இன்னிசை வெண்பா, 4. பஃறொடை வெண்பா, 5. சிந்தியல் வெண்பா என ஐந்து வகைப்படும்.
 

5.2.2.2 ஆசிரியப்பா
 

நாடாகு ஒன்றோ காடாகு ஒன்றோ
அவலாகு ஒன்றோ மிசையாகு ஒன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே!
 

இவ்வாறு வரும் ஆசிரியப்பாவானது,  நேரிசை ஆசிரியப்பா,  இணைக் குறள் ஆசிரியப்பா,  நிலை மண்டில ஆசிரியப்பா, அடிமறி மண்டில ஆசிரியப்பா என நான்கு வகைப்படும்.
 

5.2.2.3 கலிப்பா
 

உயர் வற உயர் நலம் உடையவன் யவனவன்
மயர் வற மதி நலம் அருளினன் யவனவன்
அயர் வறும் அமரர்கள் அதிபதி யவனவன்
துயரறு சுடரடி தொழு தெழு என் மனனே.
 

என வருவது கலிப்பா ஆகும். இது 1. ஒத்தாழிசைக் கலிப்பா, 2. கொச்சகக் கலிப்பா, 3. கட்டளைக் கலிப்பா, 4. வெண் கலிப்பா என நான்கு வகைப்படும்.
 

5.2.2.4 வஞ்சிப்பா
 

மந்தாநிலம் வந்தசைப்ப
வெண்சாமரை புடைபெயர்தரச்
செந்தாமரை நாண்மலர்மிசை
எனவாங்கு
இனிதின் ஒதுங்கிய இறைவனை
மனமொழி மெய்களின் வணங்குதும் மகிழ்ந்தே.
 

என வருவது வஞ்சிப்பா ஆகும்.  இது 1. குறளடி வஞ்சிப்பா,  2.  சிந்தடி வஞ்சிப்பா என இரண்டு வகைப்படும்.
 

மேற்குறிப்பிட்ட நால்வகைப் பாக்களுக்கும் தனித்தனி ஓசைகள் உள்ளன.
 

1.

வெண்பா

-

செப்பலோசை

2.

ஆசிரியப்பா

-

அகவலோசை

3.

கலிப்பா

-

துள்ளலோசை

4.

வஞ்சிப்பா

-

தூங்கலோசை



__________________


Guru

Status: Offline
Posts: 24740
Date:
Permalink  
 

5.3 அணியிலக்கணம்
 

அணி என்பதற்கு ‘அழகு’ என்பது பொருள். செய்யுளில் அமைந்துள்ள சொல்லழகு,  பொருளழகு முதலியவற்றை வரையறுத்துக் கூறுவது அணி இலக்கணம் ஆகும்.
 

அணி என்பது 1. சொல்லணி, 2. பொருளணி என இரு வகைப்படும். யமகம், மடக்கு முதலான அணிகள் சொல்லணியில் அடங்கும்.  உவமை,  உருவகம் முதலான அணிகள் பொருளணியில் அடங்கும்.
 

தண்டி என்பவரால் இயற்றப்பெற்ற ‘தண்டியலங்காரம்’ என்னும் அணியிலக்கண நூல், முப்பத்தைந்து பொருளணிகளைக் கூறுகின்றது.
 

பொருளணிகள் முப்பத்தைந்து அணிகளுள் உவமையணி,   எடுத்துக்காட்டு உவமையணி, இல்பொருள் உவமையணி, முற்றுருவக அணி, ஏகதேச உருவக அணி, இயல்பு நவிற்சியணி, உயர்வு நவிற்சியணி, வேற்றுமையணி, பிறிது மொழிதல் அணி, இரட்டுற மொழிதல் அணி, நிரனிறையணி, வேற்றுப் பொருள்வைப்பணி, தற்குறிப்பேற்ற அணி, வஞ்சப்புகழ்ச்சியணி, சொல் பின்வருநிலையணி, பொருள் பின்வருநிலையணி, சொற்பொருட் பின்வருநிலையணி ஆகிய அணிகள் அடங்கியுள்ளன. இவற்றுள் ஓர் எடுத்துக்காட்டினைக் காண்போம்
 

சொற்பொருட் பின்வரு நிலை அணி
 

ஒரு செய்யுளில், ஓரிடத்தில் வந்த சொல் மீண்டும் வந்து, அதே பொருள் தருவது சொற்பொருட்பின் வருநிலை அணி ஆகும்.
 

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லில் பயனில்லாச் சொல்.
 

இக் குறட்பாவில், ‘சொல்’ என்பது, ஒரே பொருளில் பல இடங்களில் வந்துள்ளது. ஆதலின், இது சொற்பொருட் பின்வருநிலை அணி ஆகும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24740
Date:
Permalink  
 

TAMIL NADU

‘Sangam literary works dwelt upon meteorology’They appear to have a more sound scientific basis, says expert

The Sangam literary works, despite being much older than the subject of modern meteorology, have dwelt upon the subject, according to veteran meteorologist K.V. Balasubramanian.

Dr. Balasubramanian, who has put in 38 years of service at the Meteorological Department, says that even though literary works in many other languages have treated the subject like any set of abstract ideas, the Sangam works appear to have better scientific basis.

Relying on a study undertaken by him, the meteorologist explains how the literature has talked about wind, rain, thunder, clouds and climate, by quoting from the works such as NattrinaiKurunthogai, and Agananuru. The findings of his study form part of a publication, Sanga Kala Vaanilai, (Sangam Era Weather), which was launched at an event at the Meteorological office in Nungambakkam on Sunday evening. A recipient of the Central government’s award four years ago for his article on tornado in Hindi, Dr. Balasubramanian has come out with another Tamil work which deals with six big-sized animals, which are herbivores.

https://www.thehindu.com/news/national/tamil-nadu/sangam-literary-works-dwelt-upon-meteorology/article29257605.ece



__________________


Guru

Status: Offline
Posts: 24740
Date:
Permalink  
 

 சங்க இலக்கிய காலகட்டத்து தமிழ் மொழியில் செய்வினை,செயப்பாட்டு வினை பிரிவினை இல்லை. கொன்ற, கொல்லப் பட்ட இரண்டுமே கொன்ற என்றே சொல்லப் படும். பின்னாளில் அது உருவாகி வந்தது. இவ்வாறு தமிழுக்கு மூன்று அடுக்குகள் உள்ளன. நவீனத் தமிழ், சங்க காலம் வரையிலான தமிழ், சங்க காலத் தமிழ் என பிரித்துச் சொல்லலாம். 


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard