ஒருவன் கல்வி கற்றலின் பயன் என்னவென்றால், தூய அறிவினன் - மெய் உணர்வினன் - ஆகிய இறைவனுடைய காலடிகளைத் தொழுது பற்றிக் கொள்ளுதல் ஆகும். (தமிழர் மெய் மரபுரை)
பரிமேலழகர் உரை: கற்றதனால் ஆய பயன் என் - எல்லா நூல்களையும் கற்றவர்க்கு அக்கல்வி அறிவான் ஆய பயன் யாது?; வால் அறிவன் நல் தாள் தொழாஅர் எனின் - மெய்யுணர்வினை உடையானது நல்ல தாள்களைத் தொழாராயின்? (எவன் என்னும் வினாப்பெயர் என் என்று ஆய், ஈண்டு இன்மை குறித்து நின்றது. 'கொல்' என்பது அசைநிலை. பிறவிப் பிணிக்கு மருந்து ஆகலின் 'நற்றாள்' என்றார். ஆகம அறிவிற்குப் பயன் அவன் தாளைத் தொழுது பிறவியறுத்தல் என்பது இதனான் கூறப்பட்டது.
மணக்குடவர் உரை: மேற்கூறிய வெழுத்தினானாகிய சொற் ளெல்லாங் கற்றதனானாகிய பயன் வேறியாது? விளங்கின வறிவினை யுடையவன் திருவடியைத் தொழாராயின். சொல்லினானே பொருளறியப்படுமாதலான் அதனைக் கற்கவே மெய்யுணர்ந்து வீடுபெறலாகும். மீண்டும் வணக்கம் கூறியது எற்றுக்கென்றாற்கு, இஃது அதனாற் பயனிது வென்பதூஉம், வேறுவேறு பயனில்லையென்பதூஉம் கூறிற்று. `கற்பக் கழிமட மஃகும் என்றாருமுளர்.
நல்ல நூல்களையும் படித்து, பெரியோர்களிடமும் கற்று மெய்ப்பொருளை உணர்ந்தவர்கள் இந்த பூவுலகில் பிறக்காமல் இருக்கும் வழியை அடைவர். (தமிழர் மெய் மரபுரை)
பரிமேலழகர் உரை: ஈண்டுக் கற்று மெய்ப்பொருள் கண்டார் - இம்மக்கட் பிறப்பின் கண்ணே உபதேச மொழிகளை அனுபவம் உடைய தேசிகர்பால் கேட்டு அதனான் மெய்ப்பொருளை உணர்ந்தவர், மற்று ஈண்டு வாரா நெறி தலைப்படுவர் - மீண்டு இப்பிறப்பின்கண் வாராத நெறியை எய்துவர். ('கற்று' என்றதனால் பலர்பக்கலினும் பலகாலும் பயிறலும், 'ஈண்டு' என்றதனால் வீடுபேற்றிற்குரிய மக்கட்பிறப்பினது பெறுதற்கு அருமையும் பெற்றாம். ஈண்டுவாரா நெறி: வீட்டு நெறி. வீட்டிற்கு நிமித்த காரணமாய முதற்பொருளை உணர்தற்கு உபாயம் மூன்று: அவை கேள்வி, விமரிசம், பாவனை என்பன. அவற்றுள் கேள்வி இதனால் கூறப்பட்டது.). மணக்குடவர் உரை: இவ்விடத்தே மெய்ப்பொருளை யறிந்துதெளிந்தாரே அடைவார்; மீண்டு இவ்விடத்து வாராத வழியினை. கல்வி யறிவால் அறிவை அறியப் பிறப்பறு மென்றவாறு.
அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது பொன்றுங்கால் பொன்றாத் துணை. (குறள் 36: அறன்வலியுறுத்தல்) அறம் செய்ய-பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நாள் கடத்தாமல் அறம் செய்ய வேண்டும் அது ஒருவர் இறந்தபின்னும் அதன் புண்ணியங்கள் பின் எழும் பிறவிகளில் துணையாய் நிற்கும் (தமிழர் மெய் மரபுரை)
பரிமேலழகர் உரை: அன்று அறிவாம் என்னாது அறம் செய்க - 'யாம் இது பொழுது இளையம் ஆகலின் இறக்கும் ஞான்று செய்தும்' எனக் கருதாது அறத்தினை நாள்தோறும் செய்க; அது பொன்றுங்கால் பொன்றாத் துணை - அவ்வாறு செய்த அறம் உடம்பினின்றும் உயிர் போங்காலத்து அதற்கு அழிவு இல்லாத துணை ஆம். ('மற்று' என்பது அசைநிலை. 'பொன்றாத் துணை' என்றார், செய்த உடம்பு அழியவும் உயிரோடு ஒன்றி ஏனை உடம்பினுட் சேறலின். இதனான் இவ்வியல்பிற்றாய அறத்தினை நிலையாத யாக்கை நிலையின பொழுதே செய்க என்பது கூறப்பட்டது. மணக்குடவர் உரை: பின்பே அறிந்து செய்வோமென்னாது முன்பே அறத்தைச் செய்க. அது சாங்காலத்தினுஞ் சாகாதே நின்று பிறக்கு மிடத்திற்குத் துணையாம். இஃது அறஞ்செய்யுங்கால் விரைந்து செய்யவேண்டு மென்பதும் அது மறுமைக்குத் துணையாமென்பதும் கூறிற்று.
திருவள்ளுவர் இறைவனை அடைய என்ன வழி என்கிறார்
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. (குறள் 5: கடவுள் வாழ்த்து)
இறைவனுடைய மெய்யான புகழைப் புரிந்து அதன்படி போற்றுவாருக்கு அஞ்ஞானத்தினால் வருவின்ற நல்வினை தீவினையாகிய இரண்டும் சேர்வதில்லை (தமிழர் மெய் மரபுரை)
திருக்குறளில் வள்ளுவர் ஒரு முழுமையான ஆஸ்தீகராய், மெய்ப்பொருளை ஏற்றவராய் விளங்குகிறார்.
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின். (குறள்- 2 கடவுள் வாழ்த்து) ஒருவன் கல்வி கற்றலின் பயன் என்னவென்றால், முழுமையான அறிவன் - ஆகிய இறைவனுடைய நல்ல திருவடிகளைத் தொழுது பற்றிக் கொள்ளுதல் ஆகும்.
பிறவி பெரும் கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடி சேராதார் (குறள்- 10 கடவுள் வாழ்த்து)
திருவள்ளுவர் இறைவன் திருவடியை சேராதார்- பிறந்த், இறந்து மீண்டும் பிறந்து எனத் தொடரும் பிறவிப் பெருங்க்டலை நீந்திக் கடக்க முடியாது என்பது அப்படியே சங்க இலக்கியத்தின் பரிபாடலில் மறுபிறப்பு அறுக்கும் மாசில் சேவடி என்ற அதே மெய்யியல் நெறியே ஆகும்.
திருவள்ளுவர் அடி அளந்தான் என - திருமால் எனும் விஷ்ணு தன் மூன்று கால் அடிகளால் மூன்று உலகம் அளந்ததை குறல் 610ல் கூறி உள்ளார்
இறைவன் திருமேனி- உருவ வணக்கம்
ஒரு நிலைப் படுத்த இறைவன் திருமேனி- உருவ வணக்கம் மெய்யியல் மரபில் எளிமையான வழியாக ஏற்கப் பட்டு உள்ளதை, சங்க இலக்கியம் முழுவதும் உள்ள கோவில் இறை பற்றிய பாடல் குறிப்புகள் உறுதி செய்கின்றன.
இறைவன் வெளிப்பாடாக இயறகையையும் பஞ்ச பூதங்களையும் போற்றி வணங்கும் முறையில் வான் சிறப்பு என அதிகாரம் வைத்துள்ளார். பஞ்ச பூதங்கள் நம் உள்ளேயும் உள்ளது என்கிறார்.
மழையைப் போற்றுகையில் திருவள்ளுவர் நீர் இன்று அமையாது உலகு என நீரின் முக்கியத்துவத்தைக் கூறும் முன்பாக தமிழர் மெய்யியல் வாழ்வின் முக்கிய அம்சங்களைச் சுட்டி உள்ளார்.
மழை இல்லாது போனால் தமிழர் இறைவன் திருக்கோவிலில் அன்றாட நடத்தும் பூஜை வழிபாடும் (பூசனை என வடசொல் தமிழில் முதல் முறை வந்து உள்ளது; பரிபாடலில் பூசை என பூனைச் சுட்டும் சொல் உள்ளது), பண்டிகை என விழாக்களும் நடவாது போகும் என்கிறார்
மழை இல்லை என்றால் -மனித வாழ்வில் திருமணம் செய்து பொருள் இட்டும் 'மனைவி, பிள்ளை, பெற்றோர் உடன் இல் வாழ்வான்'; மற்றும் துறவு வாழ்க்கை. இல்வாழ்வான் தானங்களும், துறவி தவமும் இல்லாது போகும் என தமிழர் வாழ்நிலையைக் காட்டி உள்ளார்.
5. ‘அற ஆழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்’ - பிற பொருள் இன்பக் கடல் கடக்க இயலும்
6. ‘ எண்_குணத்தான் தாளை வணங்கா தலை’- வணங்காதவனிடம் உள்ள ஐம்பொறிகளால் பயன் இல்லை.
7. ‘நீந்தார் இறைவன் அடி சேராதார்’ - பிறவிப் பெருங்கடலை நீந்திக் கடக்க முடியாது
என ஏழு குறள்களில் இறிவன் திருவடிகளை அடிபணிய வேண்டும் என வலியுறுத்திக் கூறுகிறார். அடிபணிதல் என்றால் அது தன்னை முழுமையாக ஒப்புவித்தலாகும்.
நான்கு குறட்பாக்களில் இறைவன் திருவடியைப் பணியாதவர்களால் முடியாது என்கையில் -நாத்திகம் பேசுவாரோ; உலகாயுதம் எனும் சமண, பௌத்த, ஆஜிவிக மதங்களிற்கும் தொடர்பே இல்லை, அவை உலகைப் படைத்த கடவுளை ஏற்பதில்லை. இன்று மதமாற்ற அன்னிய காலனி ஆதிக்க நச்சுக் கருத்து அடிமைப் புலவர்கள் ஆத்தீக- நாத்தீகர் இடையே என்ற மோசடி வேடம் - வள்ளுவத்தை தமிழர் மெய்யியல் வழியினை மடை மாற்றவே
திருவள்ளுவர் போற்றும் மெய்யியல் நெறி
திருக்குறள் இயற்றிய அடுத்த நூற்றாண்டில் எழுந்த தமிழ் சமணர் மணக்குடவர் உரை கடவுள் வாழ்த்து மற்றும் மேலும் பல குறட்பாக்களில் தமிழ் மரபு படி வள்ளுவர் கூறி உள்ளது உலகைப் படைத்த பரம்பொருளை என உரை செய்து உள்ளார்.
5.இருள் சேர் இரு வினையும் சேரா இறைவன்
பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு
6.பொறி வாயில் ஐந்து அவித்தான் பொய் தீர் ஒழுக்க
நெறி நின்றார் நீடு வாழ்வார்
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் மற்றீண்டு வாரா நெறி. (குறள் 356: மெய்யுணர்தல்) நல்ல நூல்களையும் படித்து, பெரியோர்களிடமும் கற்று மெய்ப்பொருளை உணர்ந்தவர்கள் இந்த பூவுலகில் பிறக்காமல் இருக்கும் வழியை அடைவர்.
பரிமேலழகர் உரை: ஈண்டுக் கற்று மெய்ப்பொருள் கண்டார் - இம்மக்கட் பிறப்பின் கண்ணே உபதேச மொழிகளை அனுபவம் உடைய தேசிகர்பால் கேட்டு அதனான் மெய்ப்பொருளை உணர்ந்தவர், மற்று ஈண்டு வாரா நெறி தலைப்படுவர் - மீண்டு இப்பிறப்பின்கண் வாராத நெறியை எய்துவர். ('கற்று' என்றதனால் பலர்பக்கலினும் பலகாலும் பயிறலும், 'ஈண்டு' என்றதனால் வீடுபேற்றிற்குரிய மக்கட்பிறப்பினது பெறுதற்கு அருமையும் பெற்றாம். ஈண்டுவாரா நெறி: வீட்டு நெறி. வீட்டிற்கு நிமித்த காரணமாய முதற்பொருளை உணர்தற்கு உபாயம் மூன்று: அவை கேள்வி, விமரிசம், பாவனை என்பன. அவற்றுள் கேள்வி இதனால் கூறப்பட்டது.). மணக்குடவர் உரை: இவ்விடத்தே மெய்ப்பொருளை யறிந்துதெளிந்தாரே அடைவார்; மீண்டு இவ்விடத்து வாராத வழியினை. கல்வி யறிவால் அறிவை அறியப் பிறப்பறு மென்றவாறு.
அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது பொன்றுங்கால் பொன்றாத் துணை. (குறள் 36: அறன்வலியுறுத்தல்) அறம் செய்ய-பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நாள் கடத்தாமல் அறம் செய்ய வேண்டும் அது ஒருவர் இறந்தபின்னும் அதன் புண்ணியங்கள் பின் எழும் பிறவிகளில் துணையாய் நிற்கும் (தமிழர் மெய் மரபுரை) பரிமேலழகர் உரை: அன்று அறிவாம் என்னாது அறம் செய்க - 'யாம் இது பொழுது இளையம் ஆகலின் இறக்கும் ஞான்று செய்தும்' எனக் கருதாது அறத்தினை நாள்தோறும் செய்க; அது பொன்றுங்கால் பொன்றாத் துணை - அவ்வாறு செய்த அறம் உடம்பினின்றும் உயிர் போங்காலத்து அதற்கு அழிவு இல்லாத துணை ஆம். ('மற்று' என்பது அசைநிலை. 'பொன்றாத் துணை' என்றார், செய்த உடம்பு அழியவும் உயிரோடு ஒன்றி ஏனை உடம்பினுட் சேறலின். இதனான் இவ்வியல்பிற்றாய அறத்தினை நிலையாத யாக்கை நிலையின பொழுதே செய்க என்பது கூறப்பட்டது. மணக்குடவர் உரை: பின்பே அறிந்து செய்வோமென்னாது முன்பே அறத்தைச் செய்க. அது சாங்காலத்தினுஞ் சாகாதே நின்று பிறக்கு மிடத்திற்குத் துணையாம். இஃது அறஞ்செய்யுங்கால் விரைந்து செய்யவேண்டு மென்பதும் அது மறுமைக்குத் துணையாமென்பதும் கூறிற்று.
திருவள்ளுவர் இறைவனை அடைய என்ன வழி என்கிறார் இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. (குறள் 5: கடவுள் வாழ்த்து) இறைவனுடைய மெய்யான புகழைப் புரிந்து அதன்படி போற்றுவாருக்கு அஞ்ஞானத்தினால் வருவின்ற நல்வினை தீவினையாகிய இரண்டும் சேர்வதில்லை (தமிழர் மெய் மரபுரை)
திருவள்ளுவர் கூறியதும் - திருக்குறளை திராவிடியார் புலவர் நச்சுப் பொய்களும் வள்ளுவம் 133 அதிகாரங்கள் என வெவ்வேறு வாழ்வியல் பொருள்/அறத்தினை விளக்க இயற்றப் பட்ட குறட்பாக்களில் ஏதோ ஒரு குறளை தன்னிச்சையாய் குறளில் இல்லாத பொருளை வலிந்து கூறிக் கொண்டு, அதுவே வள்ளுவத்தின் அடிப்படை என பயனற்ற உண்மைக்கு மாறான கூச்சல் செய்வோர் எடுத்து ஆளும் 3 குறட்பாக்களை வள்ளுவர் வழியிலேயே நாம் காண்போம்
கல்வி கற்றலின் தொடக்கம் அகரம், எழுத்து எல்லாம் என்றால் (எண்-எழுத்து இரண்டும் கண், கண்ணுடையார் என்பவர் கற்றவர்) கற்பவை எல்லாம் எனவும், ஒருவன் பெற்ற அக்கல்வி அவன் எங்கே இருந்தாலும் அவனோடே இருப்பது போல கடவுளும் எங்கும் நிறைந்து உள்ளார் என்பதும் விளங்கும்.
தாளும் தலையும் இவ்விரு உறுப்புக்களும் சிவவழிபாட்டில் சிறப்பிடம் பெறுகின்றன. தெய்வப் புலவர் திருவள்ளுவதேவ நாயனார் கடவுள் வாழ்த்து அதிகாரத்திலே ‘வாலறிவன் நற்றாள்’, ‘மலர்மிசை யேகினான் மாணடி’, ‘வேண்டுதல் வேண்டாமை யிலானடி’ தனக்குவமையில்லாதான் தாள்’, ‘அறவாழி அந்தணன் தாள்’, ‘எண்குணத்தான் தாள்’,.’இறைவன் அடி என்று பத்துக் குறள்வெண்பாக்களுள் ஏழு திருக்குறள்களில் இறைவனின் திருவடிகளைக் கூறுகின்றார் மக்களின் உடலுறுப்புக்களில் உத்தமாங்கம் எனப் பெருமையுடையது ‘தலை’. அவ்வாறே இறைவனின் அங்கங்கங்களில் உத்தமாங்கம் எனப்படுவது, தாள் எனப்படும் திருவடிகளே. திருவடியே வீடுபேறாகும் என்பது சைவச் சான்றோர் கருத்து. திருவள்ளுவப் பெருமான் கடவுளின் ஏனைய உறுப்புக்களைப் பற்றி எதுவும் கூறவில்லை.குணங்குறி அடையாளங்களில்லாச் சர்வ வியாபியாகிய பரம்பொருளை அறிவதற்கு அவனுடைய திருவடிகளைக் காட்டி அதனைப் பற்றிக் கொள்ளும்படிக் கூறுகின்றார். கடவுளுடைய உத்தமாங்கமாகிய திருவடிகளுக்கும் மக்களுடைய உத்தமாங்கமாகிய தலைக்கும் உள்ள நெருக்கமான தொடர்பையும் இவ்விரு உறுப்புக்களையும் பயன்கொள்ளும் முறையையும் சிவநெறி பேசும் அளவுக்குப் பிறநெறிகள் கூறுகின்றனவா என்பது ஐயம். “கோளில் பொறியிற் குணமிலவே யெண்குணத்தான் தாளை வணங்காத் தலை” என்றார். உத்தமாங்கமாகிய தலை இறைவனின் திருவடிகளை வணங்காவிடில் கோளில்லாத (தத்தம் புலன்களைக் கொண்டிராத) பொறி போலாகும் என்ற திருவள்ளுவரது கருத்தைக் காழிப் பிள்ளையார், மெய்யறிவுடையானின் நல்ல தாள்களைத் தொழாராகில் நூல்களைப் பயின்று பகுத்தறிவு பெற்றதன் பயன் இன்ல்லையாகும்; இறைவந்து திருவடிகளைச் சேர்ந்தார் எல்லா உலகிற்கும் மேம்பட்டதான மீதானம் எனப்படும் வீட்டுலகில் நிரந்தரமாக வாழ்வர்; இறைவனின் திருவடிகளைச் சேர்ந்தவர்களுக்கு எக்காலத்திலும் துன்பங்கள் உளவாகா; பிறவிக்குக் காரணமாகிய நல்வினை தீவினை இரண்டும் இறைவனின் திருவடிகளைச் சேர்ந்தவர்களைச் சேரா.; பிறப்பிறப்பின்றி எக்காலத்தும் ஒரு தன்மையராய் வாழ்வார் ; இவர்களுக்கு மனத்தின்கண் நிகழும் துன்பங்களே இல்லை; இதெல்லாம் இறைவனுடைய திருவடிகளை வணங்குதலால் பெறும் பயன்கள் என்பது திருவள்ளுவ தேவர் கருத்து. சைவம் என்ன கூருகிறது? “வாளினான் வேலினான் மால்வரை யெடுத்ததிண் தோலினான் நெடுமுடி தொலையவே யூன்றிய தாளினான் கானப்பேர் தலையினால் வணங்குவார் நாளும்நாள் உயர்வதோர் நன்மையைப் பெறுவரே”” என்றும், “சிற்றம் பலந்தன்னைத்,தலையால் வணங்குவார் தலையா னார்களே” என்றும் திருஞானசம்பந்த சுவாமிகள் போற்றினார். உடலைக் கொண்டிராத திருவடி எதனைக் குறிக்கின்றது?
“திருவடி யேசிவ மாவது தேரில் திருவடி யேசிவ லோகஞ் சிந்திக்கில் திருவடி யேசெல் கதியது செப்பில் திருவடி யேதஞ்சம் உள்தெளி வார்க்கே” திருமந்திரம் 138) இத் திருவடியைத் திருவள்ளுவதேவர் அறிவுறுத்தியபடிக் கைப்பற்றிக் கொண்டால் என்ன பயன்? திருமந்திரதேவர் கூறுகின்றார்: “திருவடி ஞானம் சிவமாக்கு விக்குந் திருவடி ஞானஞ் சிவலோகஞ் சேர்க்கும் திருவடி ஞானஞ் சிறைமல மீட்குந் திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே” (1598) திருமந்திரம் ஆறாந் திருமுறை சித்தாந்த முடிபுகளை உபதேச வாயிலாகக் கேட்டறிந்தோர் அவற்றைச் சிந்தித்துத் தெளிந்துணர்தற்குரிய பொருள்களாகிய ஞானம் பெறும் சாதனங்களாக உணர்த்துவதாகும். இது, சிவகுரு தரிசனம், முதல் பக்குவன் ஈறாகப் பதினான்கு திருவடிப் பேறு
உயிர்களை மும்மலக் கட்டிலிருந்து விடுவிக்க இறைவன் தன்னுடைய திருவருளாகிய திருவடிகளைத் தருகின்ற அப்பொழுதே, அதனை முறையாக வணங்கிப் பெறுதற்குக் தலையையும் கொடுத்துள்ளான். “ தாடந்த போதே தலைதந்த எம்மிறை” என்பது திருமூலர் வாக்கு (1591)
பகவானைக் காட்டிலும் அவனது திருவடிகளே உயர்வுடையன; வேண்டியவற்றை ஈயும் கருணையும் ஆற்றலும் உடையன என்பது ஸ்ரீவைணவர் கொள்கைஇறந்துபோன பெரியோர்களின் ஆன்மா குருநாதனின் திருவடி சேர்ந்ததெனச் சைவர்களும் ஆச்சாரியன் திருவடியை அடைந்ததென ஸ்ரீவைஷ்ணவர்களும் கூறுவர். ஏனெனில் எழுந்தருளியது; திருவடியே முத்தி ஆதலின். சிவபரம்பொருளின் திருவடி மலர்களிலே அழுந்திய அடியவனின் தலை முத்திப் பேற்றைக் குறிக்கும் அடையாளமாகச் சைவம் கொள்கிறது. தாள்+தலை. நிலைமொழி ஈற்றில் உள்ள ளகரமும் வருமொழி முதலில் உள்ள தகரமும் கூடும்போது ‘ட’ எனுமொலி பிறக்கும். இந்த டகரத்தில் ளகரமும் உண்டு; தகரமும் உண்டு. ‘தாள்’ என்பது சிவத்தையும் ‘தலை’ என்பது ஆன்மாவையும் குறிக்கும். ‘தாடலை’ என்ற எடுத்துக் காட்டில் ‘ட’ என்பதே இங்குக் கருதத் தக்கது. இந்தத் ‘ட’வில் ளகரமும் இருக்கிறது; தகரமும் இருக்கிறது. இவ்விரண்டும் கெடுதலும் இன்றித் திரிதலும் இன்றி ஒன்றாய் இருக்கின்றன. சைவசித்தாந்தம் கூறும் சாயுச்சிய முத்தியில் ஆன்மா கெட்டுச் சிவம் ஒன்றே இருக்கும் நிலையல்ல. ஆன்மாவும் சிவமும் பேதமாகப் பிரிந்து நிற்றலும் இல்லை. இரண்டும் கெடுதலுமின்றித் திரிதலுமின்றி உடனாய் ( அத்துவிதமாய்) உள்ளன. இந்த நிலையில் இன்பகனமாக உள்ள இறைவன் ஆன்மாவுக்கு இன்பளிப்பன்; ஆன்மா அவ்வின்பத்தில் தன்னை இழந்து நிற்கும். இவ்வின்ப நிலையை, அருணகிரிப் பெருமான்,
“இருவினைமு மலமுமற இறவியொடு பிறவியற ஏக போகமாய் நீயு நனுமாய் இறுகும்வை பரமசுக மதனையரு ளிடைமருதில் ஏக நாயகா லோக நாயகா இமையவர் பெருமாளே” எனக் காட்சிப்படுத்தி யருளினார். சிவசித்தாந்திகள் திருவள்ளுவ நாயனார் அளிக்கும் தேவாமிர்தத்தை நேரில் சுவைப்பவர்கள். திருக்குறளுக்குப் புத்துரை என இக் காலத்தவர் நஞ்சாக்கிக் கொடுக்கும் விஷமான நைந்த சோற்றை விரும்புவரோ/