சில ஆண்டுகளுக்கு முன்பு சட்டப்பேரவையில் எழுப்பப்பட்ட கேள்வி, "ராஜாத்தி அம்மாள் யார்?'
அதற்கு கருணாநிதி அளித்த சாதுர்யமான பதில், " என் மகள் கனிமொழியின் தாய் " .
" ராஜாத்தி அம்மாள் யார் ? " என்ற கேள்விக்கு அவரால் நெஞ்சை நிமிர்த்தி நேரிடையாக பதில் சொல்ல முடியவில்லை.
காரணம் ? இந்திய அரசியலமைப்புச் சட்டம்.
" ராஜாத்தி அம்மாள் என் மனைவி " எனறு சொல்லியிருந்தால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி குற்றவாளியாகிறார்.
ஒரு மனைவிக்கு மேல் திருமணம் செய்வது இந்து மத சட்டத்தின் படி குற்றம். இதைக் காரணமாக வைத்தே அவருடைய பதவியும் பறி போகலாம்.
அவர் மேல் வழக்கும் தொடரலாம். அதே நேரம் இரண்டாம் மனைவியோடு குடும்பம் நடத்துவதை அதே சட்டம் அனுமதிக்கிறது.
ஆனால் மனைவி என்ற அந்தஸ்தை அதே சட்டம் அனுமதிக்காது. அது சட்டத்தில் உள்ள ஓட்டை.
சரி, உண்மையில் யார் இந்த ராஜாத்தி என்று பார்ப்போம்.
60களில் 75 ரூபாய் வாடகைக்கு இருந்த ராஜாத்தி என்கிற தர்மாம்பாள் தற்போது ராஜாத்தி கருணாநிதியாக மாறி இருக்கிறார்.
இவருக்குத் தான் இன்று எத்தனை சொத்துக்கள் ?…..
வெஸ்ட் கேட் லாஜிஸ்டிக்ஸ் என்ற பல கோடி ரூபாய் கப்பல் போக்குவரத்து நிறுவனம்,
சிஐடி காலனி வீடு,
ராயல் பர்னிச்சர்,
பினாமி பெயரில் அண்ணாசாலை வோல்டாஸ் கட்டிடம்,
ஊட்டியில் 535 ஏக்கர் எஸ்டேட்,
விலையுயர்ந்த கார், மாட மாளிகை, கூட கோபுரம்…..
தர்மாம்பாள் என்ற ராஜாத்தி தென்னாற்காடு மாவட்டத்தில் ஸ்ரீமுஷ்ணத்தில் திருமதி சிவபாக்கியம் அம்மாளுக்குப் பிறந்த கடைசி மகள்.
திருமதி சிவபாக்கியம் அம்மாள் முதலில் கருப்பையா நாடார் என்பவரை மணந்தார்.
அவர் மரணத்திற்குப் பின்னர் ஸ்ரீமுஷ்ணத்தைச் சேர்ந்த முத்துக்குமாரசாமி நாடார் என்பவரை மறுமணம் செய்து கொண்டார்.
இரண்டாவது திருமணத்திற்குப் பின் அவருக்கு ராஜலட்சுமி, சுப்ரமணியம், தர்மா என்ற மூன்று பிள்ளைகள் பிறந்தனர்.
இரண்டாவது கணவரும் இறந்து விட்டார். அதன் பின்னர் சிவபாக்கியம் அம்மாள் அந்த கிராமத்தை விட்டு சிதம்பரம் வந்து அங்கு தன் மூன்று பிள்ளைகளுடன் தங்கியிருந்தார்.
அதன் பிறகு அவர் தனது இருப்பிடத்தை சென்னைக்கு மாற்றிக் கொண்டார். அவர் வசதியான நிலையில் இல்லை.
அவருடைய மூன்று குழந்தைகளில் யாரும் தொடக்கக் கல்வியைத் தவிர உயர்கல்வி படிக்க முடியவில்லை.
சென்னையில் சிவபாக்கியமும் அவர் குழந்தைகளும், இராயப்பேட்டையில் 62, முத்துமுதலி தெருவில் உள்ள ஓர் அறையில் தங்கியிருந்தனர்.
அதற்கு மாதம் ரூ.18 வாடகை கொடுத்து வந்தார்.
திருமதி தர்மா நாடகத்தில் நடிப்பதை தன் வாழ்க்கைத் தொழிலாக மேற்கொண்டார்.
அவர் சகோதரர் சுப்ரமணியம் எம்.பி.டி லாரி சர்வீசில் கூலியாக வேலை பார்த்து வந்தார்.
1962ல் மயிலாப்பூர், விவேகானந்தா கல்லூரிக்கு எதிரேயுள்ள ஒரு வீட்டை மாதம் ரூ.75 வாடகைக்கு எடுத்துக் கொண்டு அங்கு குடியேறினர்.
1966ல் “காகிதப்பூ“ என்னும் நாடகத்தில் தர்மாவும், மு.கருணாநிதியும் இணைந்து நடித்த போது அவர்கள் இருவரும் சந்திக்க நேரிட்டது.
கருணாநிதி கூறியுள்ளபடி, அவர் தர்மாவை 23.9.1966 ல் சமயச் சார்பற்ற முறையில் திருமணம் செய்து கொண்டார்.
அது முதல் இருவரும் கணவன் மனைவியாகவே வாழ்ந்து வருகின்றனர்.
10.3.1966 ல் திருமதி தர்மா, சென்னை.17, தியாகராய நகரில், 24.A, திருமூர்த்தி தெருவில் மாதம் ரூ.100 வாடகைக்கு வீடு ஒன்றை எடுத்து அதில் வசித்து வந்தார்.
இந்த வீட்டுக்கான வாடகையை கருணாநிதி கொடுத்து வந்தார்.
தர்மாவுடன் அவர் தாயார், சகோதரர், சகோதரி ஆகியோரும் அதே வீட்டில் வசித்து வந்தனர்.
கருணாநிதிக்கு 5.1.1968 ல் ஒரு பெண் குழந்தைக் பிறந்தது என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
சென்னை தியாகராய நகர் திருமூர்த்தி தெருவில் உள்ள அவரது வீட்டில் தொலைபேசி ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது.
கருணாநிதி தர்மாவை பார்க்க அவ்வீட்டிற்கு அடிக்கடி வருவது வழக்கம்.
20.1. 1969ல் திருமதி தர்மா, சென்னை இராஜா அண்ணாமலைபுரத்தில் எண் 9, முதல் குறுக்குத் தெருவில் உள்ள வீட்டை திருமதி ஈ.எல்.விசுவாசம் என்பவரிடமிருந்து 57 ஆயிரத்திற்கு கிரயத்திற்கு வாங்கியதாக கூறப்படுகிறது.
இன்று ராஜாத்தி அம்மாளின் ஆண்டு வருமானம் - ஒரு கோடியே, 67 லட்சத்து, 94 ஆயிரம் ரூபாய். அதாவது மாதம் ரூபாய் 14 லட்சம் .....
1968 ல் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம், இன்றைய தலைமுறையினருக்கு தெரிய வாய்ப்பில்லை.
அந்த காலகட்டத்தில் ஜவகரிஸ்ட் என்ற பத்திரிகை வந்து கொண்டு இருந்தது. அதன் ஆசிரியர் கருணாநிதிக்கு நெருங்கிய நண்பர், என்.கே.டி.சுப்பிரமணியம் .
அவர் நடத்திய ஜவகரிஸ்ட் பத்திரிகையில் (ஜனவரி 5, 1968 ) சென்னையில் உள்ள மருத்துவமனையில் தர்மாம்பாள் (எ) ராசாத்தி அம்மாளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.
மருத்துவமனை பதிவேட்டில், பெண் குழந்தையின் தகப்பனார் மு.கருணாநிதி என்று குறிப்பிட்டு உள்ளது, யார் இந்த கருணாநிதி ? என செய்தி வெளியிட்டார்.
உடனே வெகுண்டெழுந்தார் கருணாநிதி, அரசியலில் நேர்மை, தூய்மை, ஒழுக்கத்தை கடைபிடிப்பவரல்லவா?
ராசாத்தி, என்ற தர்மாம்பாள் யாரென்றே எனக்கு தெரியாது. எனக்கு அப்படி ஒரு பெண் குழந்தையே பிறக்க வில்லை என பொய் சொன்னதோடு மட்டுமல்லாமல், நீதிமன்றத்திற்கும் போனார்.
அந்த பெண் குழந்தை யாரென தெரியாது. கனிமொழி என்ற பெயரில் பிறந்து இருக்கும் குழந்தை எனக்கு பிறந்தது இல்லை என நீதிமன்றத்தில் சாதித்து அந்த பத்திரிகை ஆசிரியருக்கு தண்டனையும் வாங்கி கொடுத்தார்.
இதை எல்லாம் ஒரு, பேட்டியில் போட்டு உடைத்தவர். காங்கிரஸ்காரரான , திருச்சி வேலுசாமி,
சரி ... இந்த என்.கே.டி சுப்பிரமணியம் யார் ?
அது பற்றிய ஒரு குறிப்பு ....
கருணாநிதியின் முதல் மனைவி பத்மாவதி மு.க.முத்துவின் தாய்.
கருணாநிதி வளர்ச்சியடையாத காலத்தில் குழந்தையை கையில் கொடுத்துவிட்டு இறந்துபோனார் பத்மாவதி. இவர் திருவாரூர் CS ஜெயராமனின் சகோதரி.
கருணாநிதிக்கு இரண்டாவது திருமணத்திற்கு யாரும் பெண்கொடுக்க முன்வராத நிலையில் சீர்காழி அருகே தயாளு அம்மாவின் பெற்றோர் அவருக்கு மாப்பிள்ளை பார்த்துக்கொண்டிருந்தனர்.
கருணாநிதிக்கு பெண்வீட்டாரிடம் பரிந்துபேசி பெண்கேட்டு போனவர்தான் இந்த சுப்பிரமணியம்.
நிலையான வருமானமும், சொத்துபத்து ஏதுமில்லாத ஒருவருக்கு பென் கொடுக்க நாங்கள் தயாராக இல்லை என்று பெண்வீட்டார் மறுத்துவிட்டனர்.
கருணாநிதி விரைவிலேயே எம்.எல்.ஏ ஆகிவிடுவார். இளம் வயதில் இருக்கும் அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என பெண்வீட்டாரிடம் கருணாநிதி சார்பில் பரிந்துபேசி தயாளு அம்மாள் பெற்றோரை சம்மதிக்க வைத்தவர்தான் இந்த என்.கே.டி சுப்பிரமணியம் .....
அதே கருணாநிதி என்.கே.டி சுப்பிரமணியம் அவர்களை சிறைக்கு அனுப்பினார் ....