http://thirukural-kalai.blogspot.in/2018/01/blog-post.html
திருக்குறளின் பாயிரம் நான்கு அதிகாரங்களால் ஆனது.
கிழக்குதிசைக்கான தெய்வங்களை வணங்கிக் “கடவுள் வாழ்த்து“ம்,
மேற்கு திசைக்கான வருணனை வணங்கி “வான் சிறப்பு“ம்,
தெற்கு திசைக்கான நீத்தாரை வணங்கி “நீத்தார் பெருமை“யும்
வடக்கு திசைக்கான தர்மதேவனை வணங்கி “அறன் வலியுறுத்தலும்“ பாடப்பெற்றுள்ளன.
1) பாயிர அதிகார அமைப்பு முறைக்கான காரணம்
அதிகமான மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பெற்றுள்ள ஒரே நீதிநூல் திருக்குறள் மட்டுமேயாகும். திருக்குறளுக்கு அனேகர் உரை செய்துள்ளனர். அவ்வுரைகளுக்குள் பரிமேலழகர் செய்த உரையே மிகச் சிறந்ததெனக் கொள்ளப்பட்டு, கடந்த எழுநூறு ஆண்டுகளுக்கும் மேலாகப் பாடமாகக் கூறப்பட்டு வருகிறது. பரிமேலழகர் மிகச் சிறந்த அறிஞர், அவர், அவருடைய காலச் சமூகப் பழக்க வழக்கங்களைத் தழுவித் தம்முடை உரையைச் செய்திருக்கிறார். பரிமேலழகருக்கு முன்பு திருக்குறளுக்கு உரை செய்த ஒன்பது ஆசிரியர்களும், அவரவர்கள் மனம் கொண்டபடி குறள்களின் வரிசைவைப்பு முறையை மாற்றி அமைத்துக் கொண்டு பொருள் கூறியுள்ளனர்.
பரிமேலழகர் உரையும், மற்றும் இதுவரை குறளுக்குப் பொருள் கண்ட ஏனைய உரையாசிரியர்களது உரையும் சிறிது சிறிது வேறுபாடுகள் உடையனவாக உள்ளன. ஐயன் திருவள்ளுவருடைய சில குறள்களை, யானை தடவிய குருடன் நிலையிலிருந்து, கற்றறிந்தவை இங்கே உரை செய்யப்பட்டுள்ளன.
இக் கட்டுரையைக் கண்ணுறும் அறிஞர்கள், மற்ற உரையாசிரியர்கள் கூறியுள்ள பொருளுடன் இக்கட்டுரையில் கூறப்பட்டுள்ள கருத்துக்களையும் ஒன்றுசேர ஆராய்ந்து குறளின் மெய்ப்பொருளை உய்த்து உணருமாறு வேண்டிக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
1) பாயிரத்தில் உள்ள நான்கு அதிகாரங்களின் அமைப்பு முறைக்கான புதியதொரு விளக்கமும்.
அZவைத் துளைத்து எழுகடலைப் புகுத்திய குறளினைக் கசடறக் கற்றுப் பொருள் கூறியுள்ளனர் தமிழ் அறிஞர்கள்,
பாயிரம்; என்பது நு}லுக்கு முன்னுரை யாகும், திருக்குறளின் பாயிரத்தில். முதல் அதிகாரமாகக் கடவுள் வாழ்த்தும். இரண்டாவது அதிகாரமாக வான் சிறப்பும். ஸ்ரீன்றhவது அதிகாரமாக நீத்தார் பெருமையும். நான்காவது அதிகாரமாக அறன் வலியுறுத்தலும் உள்ளன.
கடவுள் வாழ்த்திற்கு அடுத்தபடியாக வான்சிறப்பு கூறப்படுவதன் காரணம் என்ன? அதன்பின்னர் நீத்தார் பெருமையும் அறன் வலியுறுத்தலும் அமைக்கப்பட்டுள்ளதற்கான காரணம் என்ன? இக் காரணத்தை ஆராயாத அறிஞர்களே இல்லை எனலாம்.
இவ்வாறான பாயிர அமைப்பு முறையானது, வேறு எந்த ஒரு தமிழ்நூலிலும் இடம் பெறவில்லை. வேறுபிற மொழிநூல்களில் இவ்வாறான பாயிர அதிகார அமைப்பு இல்லை.
பாயிர அமைப்பு முறைபற்றி அறிஞர்களின் கருத்து
1) கொடிநிலை, கந்தழி, வள்ளி என்ற
வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும்
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே – என்ற தொல்காப்பிய இலக்கணத்துடன் ஒப்பிட்டும்,
2) நன்னூல் கூறும் பாயிர இலக்கணத்திற்கு ஒப்பத் திருக்குறள் பாயிரம் அமைக்கப்படவில்லை எனவும்,
3) கடவுள் வாழ்த்து என்பது அருக சரணம், வான் சிறப்பு என்பது சித்த சரணம், நீத்தார் பெருமை என்பது சாது சரணம்,
அறன் வலியுறுத்தல் என்பது தர்ம சரணம் என்றும்,
4) " பாயிரமல்லது பனுவலன்று " - பாயிரம் இல்லாதவை நூல்களே அல்ல என்று இலக்கணம் கூறப்பட்டுள்ளதால், திருக்குறளுக்குப் பிற்சேர்க்கையாக இப்பாயிரம் சேர்க்கப்பட்டது என்றும் பொருள் கண்டுள்ளனர்.
திருக்குறள் பாயிரம் பிற்சேர்க்கை என்ற இக்கருத்து, கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. யிடமும் இருந்தது.
ஆனால், மேலே குறிப்பிடப் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தையும் அப்படியே ஏற்பதற்கில்லை. எனவே திருக்குறளின் பாயிர அதிகார அமைப்பு முறைக்கான காரணத்தைத் தெளிவாக அறிந்து கொள்ள முடியவில்லை.
பாயிர அதிகார அமைப்பு முறைக்கான புதிய விளக்கம்
வாஸ்து விஞ்ஞானம், திருக்குறளின் பாயிர அதிகார அமைப்பு முறைக்கு, ஒரு தெளிவான விடையைக் கூறுகிறது.
திசைகள் 1) கிழக்கு 2) மேற்கு 3) தெற்கு 4) வடக்கு என்ற வரிசையில் அறியப்படுகின்றன. வாஸ்து விஞ்ஞானம். 1) கிழக்குத் திசைக்கு அதிபதியாக இந்திரன் மற்றும் கடவுளரையும், 2) மேற்குத் திசைக்கு அதிபதியாக வருணனையும், 3) தெற்குத் திசைக்கு அதிபதியாக எமனையும், 4) வடக்குத் திசைக்கு அதிபதியாக அறக்கடவுளையும் குபேரனையும் திசைத்தெய்வங்களாகக் கூறுகிறது.
இந்நான்கு திசைகளுக்குமான, திசைதெய்வங்களை வணங்கிப் பாயிரத்தின் நான்கு அதிகாரங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
திசைப் பெயர் வாஸ்து விஞ்ஞானம் குறிப்பிடும் திசை தெய்வம் திருக்குறளின் பாயிர அதிகாரம்
1 கிழக்குதிசை - இந்திரன் மற்றும் பிற கடவுளர் - கடவுள் வாழ்த்து
2 மேற்கு திசை - வருணன் - வான்சிறப்பு
3 தெற்கு திசை - யமன் - நீத்தார்பெருமை
4 வடதிசை - தரும தெய்வம் மற்றும் குபேரன் - அறன்வலியுறுத்தல்
வளமான வாழ்க்கைக்கான வீடு கட்டுவதற்கு மட்டுமே இன்றைய நாளில் வாஸ்து விஞ்ஞானம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இன்றைக்குச் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே, திருவள்ளுவர் தான் இயற்றிய திருக்குறளில் திசைதெய்வங்களை வணங்கிப் பாயிரம் பாடியுள்ளது வியப்பினும் வியப்பாக உள்ளது.

திருக்குறளின் நான்கு அதிகாரங்களும், நான்கு வேதங்களின் சாரமாக இருக்க வேண்டும். இது தொடர்பான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும்.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்