பெண்கள் கர்ப்பமாவது அசம்பாவிதமாய் இருப்பதுடன், பெண்களின் சுதந்திர வாழ்வுக்கும் கர்ப்பமானது பெரிய இடையூறாயிருக்கிறது. … புருஷன் தனக்கு இஷ்டமான பெண்ணை மணந்து கொள்வதற்கும், பெண்சாதி ஒரு புருஷனைத் தவிர வேறு எந்தப் புருஷனையும், எந்தக் காரணம் கொண்டும் மணந்து கொள்ள முடியாததற்கும், குழந்தைகளைப் பெறுவதே பெருத்த தடையாய் இருக்கிறது… இதுவரை கூறி வந்தவைகளாலும், இன்னும் பல காரியங்களாலும், பெண்கள் கர்ப்பத் தடையை அனுசரிக்க வேண்டியது அவசியமாகும்.