New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஈவெரா நாயக்கர் உண்மையான முகம்?


Guru

Status: Offline
Posts: 24601
Date:
ஈவெரா நாயக்கர் உண்மையான முகம்?
Permalink  
 


ஈவெரா நாயக்கர் உண்மையான முகம்?

சிறப்புக் கட்டுரை:  உண்மையான முகம்?

பி.ஏ.கிருஷ்ணன்

(The Wire இணையதளத்தில் எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணன், பெரியாரை விமர்சனப் பார்வையோடு அணுகும் கட்டுரை ஒன்றை எழுதினார். அதற்கு எதிர்வினையாக கார்த்திக் ராம் மனோகரன், எஸ்.ஆனந்தி ஆகியோர் ஒரு கட்டுரை எழுதினார்கள். அதற்கு, கிருஷ்ணன் ஒரு பதில் எழுதினார். மொழிபெயர்ப்பாளர் என்.கல்யாணராமனும் பெரியாரை விமர்சித்து ஒரு கட்டுரை எழுதினார். தலித் முரசு ஆசிரியர் புனித பாண்டியன் அதற்குப் பதில் எழுதினார். கார்த்திக் ராம் மனோகரன், எஸ்.ஆனந்தி ஆகியோர் எழுதிய கட்டுரையையும் (https://minnambalam.com/k/2017/10/04/1507055422) புனித பாண்டியனின் கட்டுரையையும் (https://minnambalam.com/k/2017/10/20/1508437821) மின்னம்பலம் இணைய இதழில் வெளியிட்டிருந்தோம். இந்த விவாதத்தின் புள்ளிகளை வாசகர்கள் அறிந்துகொள்வதற்கு ஏதுவாக கிருஷ்ணனின் கட்டுரைகளின் சுருக்கத்தை இங்கே தருகிறோம் - ஆசிரியர்)

“யூதர்கள் தங்களைத் தவிர வேறு எதிலும் சிறிதும் பொறுப்பு இல்லாமல் எப்படியாவது ஆளுபவர்களைக் கையில் போட்டுக்கொண்டு நிர்வாகத்தில் கலந்துகொண்டு தந்திரங்கள் செய்து மற்ற குடிகளை வாட்டி வதக்கி உயிர்வாங்கி வாழ்கிறவர்கள்...”

ஹிட்லரின் கொடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது எழுதப்பட்ட வரிகள் இவை. நாஜி ஆதரவு பத்திரிகை ஒன்றில் இப்படி எழுதப்பட்டிருக்கும் என்று நீங்கள் நினைக்கலாம். இந்த வரிகளைத் தொடர்ந்து வரும் வரிகளையும் பாருங்கள்.

“...மற்ற குடிகளை வாட்டி வதக்கி உயிர்வாங்கி வாழ்கிறவர்கள் என்பதற்கும் பார்ப்பனர்களும் சிறிதும் பொறுப்பு இல்லாமல் எப்படியாவது ஆளுகிறவர்களைச் சுவாதீனம் செய்துகொண்டு ஆட்சியில் புகுந்து ஆதிக்கம் செலுத்தப் பார்க்கிறவர்கள் என்பதற்கும் சரியான பொருத்தம் இல்லையா?”

இதை எழுதியவர் பெரியார் ஈ.வெ.ரா. (குடியரசு 20.3.1938 தொகுப்பு: பசு கௌதமன் 532ஆம் பக்கம் நான்காம் பாகம்).

பெரியார் சுயநலமற்ற, அப்பழுக்கில்லாத தனிப்பட்ட வசீகரம் கொண்டிருந்த மனிதர். வாழ்க்கை முழுவதும் தான் நம்பிக்கை கொண்டுள்ள கருத்துக்கு ஆதரவாகவும், அடியோடு வெறுத்த கருத்துக்கு எதிராகவும் ஓய்வில்லாமல் பாடுபட்டார். சுய மரியாதை, பகுத்தறிவு, பாலினச் சமத்துவம் அவரது வரையறையின் அடிப்படையிலான சமூக நீதி ஆகியவற்றின் மீது நம்பிக்கை கொண்டிருந்தார். சாதிப் பாகுபாடு, காந்தி, கடவுள், மதம், பிராமணர்கள் இந்தியா குறித்து அன்று நிலவிய கருத்தோட்டம் ஆகியவற்றை வெறுத்து ஒதுக்கினார். தலைசிறந்த அறிஞர் பி.ஆர்.அம்பேத்கரைப் போன்றல்லாமல், இவர் தெருச்சண்டைக்காரர். கோபத்தில் அவர் சொன்ன பெரும்பாலான விஷயங்களை அச்சிலேற்ற முடியாது (அவை தமிழில் அச்சடிக்கப்பட்டு வெளிவந்திருந்தாலும்).

பெரியாரின் ஆதரவாளர்கள் அவரது பல்வேறு குறைபாடுகளை மூடி மறைத்து, அவருடைய நேர்த்தியான பிம்பம் ஒன்றைத் தமிழர் அல்லாத அறிவுஜீவிகள் மத்தியில் முன்னிறுத்துகிறார்கள். ஆனால், உண்மையில் பெரியாரிடம் ஏகப்பட்ட முரண்பாடுகளும் ஆட்சேபகரமான கருத்துகளும் அணுகுமுறைகளும் இருந்தன. பிராமண எதிர்ப்பில் அவருக்கு இருந்த அதீதமான ஈடுபாடு பிராமணரல்லாதவர்களின் குறைகளைப் பார்க்க முடியாமல் செய்துவிட்டன. அவர் காலனியாதிக்கத்தை ஆதரித்தார். ஜனநாயக விரோதப் போக்குடன் நடந்துகொண்டார். பிராமணியத்தைக் காட்டிலும் பிராமணர்களையே அதிகம் வெறுத்தார். அவருடைய கருத்துகள் ஃபாஸிசத்தன்மை கொண்டவையாகவும் இருந்தன.

பெரியார் எதிர்த்தது பிராமணர்களையா, பிராமணியத்தையா?

தான் பிராமணர்களுக்குத்தான் எதிரி, பிராமணியத்துக்கு அல்ல என்பதைப் பெரியார் தெளிவுபடுத்தியுள்ளார். ஆனால், பின்னோக்கிப் பார்க்கும்போது அவர் உண்மையிலேயே பிராமணியத்தைத்தான் எதிர்த்தாரா என்பது குழப்பமாக உள்ளது. 1973 டிசம்பர் 19ஆம் நாள் அவர் நிகழ்த்திய கடைசி உரையில் கடவுள், மதம், காங்கிரஸ், காந்தி மற்றும் பிராமணருக்கு எதிராக நீண்ட காலம் பாடுபட்டுவந்தது குறித்து பேசினார். பிராமணியத்தைத்தான் அவர் பிராமணர் என்று குறிப்பிட்டார் என யாரும் நினைத்திருக்கக்கூடும். ஆனால், 1959, ஆகஸ்ட் 31இல் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் அவர் இதற்கு நேர் எதிராகப் பேசியிருக்கிறார்:

‘நீங்கள் வெறுப்பது பார்ப்பானையா? அல்லது பார்ப்பனீயத்தையா? அல்லது பார்ப்பனீயம் என்பது என்ன?’ என்ற கேள்விகளுக்குப் பதில் என்ன? பார்ப்பானில் இருந்துதானே பார்ப்பனீயம் வந்தது; எனவேதான் பார்ப்பான் ஒழிய வேண்டும் என்கிறேன். திருடனை வெறுக்கிறாயா அல்லது திருட்டை வெறுக்கிறாயா என்பதுபோல் இருக்கிறது; திருடனாக இருப்பதால்தானே அவன் திருடுகிறான். எனவே, இது அர்த்தமற்றதாகும். திருட்டுத்தனத்தை வெறுக்கும்போது திருடனையும் வெறுப்பதாகத்தானே அர்த்தம்? எனவே பார்ப்பானில் இருந்துதான் பார்ப்பனீயம் வந்தது; மூலத்தை ஒழிக்கப் பாடுபடுகிறேன்.

(31.08.1959 சிதம்பரத்தை அடுத்த கண்ணன்குடியில் பெரியார் சொற்பொழிவு. விடுதலை 11.09.1959)

சில சமயங்களில், ரத்தத்தை உறைய வைக்கும் எச்சரிக்கைகளை அவர் விடுத்ததுண்டு. ஆனால், நடைமுறையில் வன்முறையை அவர் நம்பவில்லை. அவரது கருஞ்சட்டைத் தொண்டர்களில் பலர், தனிப்பட்ட முறையில் நல்ல மனிதர்கள். அதேசமயம், ஜனநாயகம் என்று வரும்போது ஆட்சி அதிகாரம் முற்றிலுமாக பிராமணர்களின் கைக்குப் போய்விடும் என்று பெரியார் அஞ்சினார். இது குறித்து அவர் சொன்னது இது:

“இந்தியாவுக்கு ஜனநாயகக் கொள்கை கூடவே கூடாது. ஏனென்றால் 100க்கு 90 பேர் பாமர (மூட) மக்கள். 100க்கு 97 பேர் ‘இழி’ மக்கள். இவர்களது ஜனநாயகத்துவம் நாட்டைச் சீர்படுத்துமா?”

தஞ்சாவூர் மாவட்டத்தில் நிலச்சுவான்தார் ஒருவருடைய கூலிப்படையினர் 44 தலித்துகளை வெட்டிக்கொன்ற படுபாதகம் குறித்துப் பெரியார், பின்வருமாறு கூறினார்: “ஜனநாயக ஆட்சி உள்ளவரை யோக்கியர்கள் மறைந்து போக வேண்டியதுதான்; அயோக்கியர்கள் ஆட்டம் போட வேண்டியதுதான். இந்திய மக்கள் காட்டுமிராண்டிகள். இந்திய தர்மம் குற்றப்பரம்பரையினர் தர்மமேயாகும். மனு தர்மவாதிகள் உள்ளவரை நாடு ஒழுக்கம், நேர்மை, நாணயம், நீதி பெற முடியாது. வெள்ளையன் வெளியேறியவுடன் நாடு அயோக்கியர்கள் வசமாகிவிட்டது.”

சாதி அடக்குமுறையின் விலங்குகளைத் தகர்த்துக்கொண்டு தலித்துகள் வெளிவர வேண்டும் என்று பெரியார் உண்மையாக விரும்பினார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அவரது அணுகுமுறை, ஐயோ பாவம் என்று தலித்துகளைத் தட்டிக்கொடுக்கும் அனுதாபப் பார்வையாகத்தான் இருந்தது. காந்தி தலித்துகள்மீது இத்தகைய அணுகுமுறையைக் கொண்டிருந்தார் என்று குற்றம்சாட்டப்பட்டது. ஆனால், அவரை விடவும் இந்தத் தன்மை பெரியாரிடமே அதிகம் இருந்தது. பிராமணர் அல்லாதோருக்கு அரசியல் அமைப்புச் சட்டத்தில் இட ஒதுக்கீடு அளிக்கப்படாததை அவர் சாடினார். அம்பேத்கர் தன்னைத்தானே பிராமணர்களிடம் விற்றுக்கொண்டுவிட்டதாகக் குற்றம்சாட்டினார்.

1508956227a.jpg

பார்ப்பனர்கள் அவருக்கு விலை கொடுத்துவிட்டார்கள். அது என்ன விலையென்றால், தன்னுடைய மக்களுக்கும் 100க்கு 10 இடம் கல்வி வசதியில், உத்தியோக வசதியில் கேட்டார்க். ‘15 ஆகவே எடுத்துக் கொள்’ என்று சொல்லிவிட்டான். அவனுக்குத் தெரியும். 25 இடம் கொடுத்தால்கூட அவர்களில் மூன்று, நான்கு பேர் கூட வரமாட்டார்கள் என்பது. பார்ப்பான் எழுதிக்கொடுத்த சட்டத்தில் அவர் கையெழுத்துப் போட்டுக்கொடுத்து விட்டார். மற்றவர்கள் சங்கதியைப் பற்றிச் சிந்திக்கவில்லை. (ஈ.வே.ரா. பெரியார் சிந்தனைகள், ஆனைமுத்து, 1974, பக்.1860)

பிராமணர்கள் மட்டும்தான் குற்றவாளிகளா?

பிராமணர்கள் பரிசுத்த ஆத்மாக்கள் என்று யாரும் சொல்லவில்லை. அவர்கள் மூர்க்கத்தனமாக நடந்துகொண்டிருக்கிறார்கள். சாதி வெறியைக் கடைப்பிடித்திருருக்கிறார்கள். ‘சுத்தபத்தமாக இல்லாத’ லட்சக்கணக்கானவர்கள்மீது வெறுப்பைக் காட்டியிருக்கிறார்கள். ‘சுத்தமாக’ இருப்பவர்கள்மீதும் அவர்களுக்கு வெறுப்பு இருந்தது. ஆனால், இத்தகைய போக்கு அவர்களிடத்தில் மட்டும்தான் இருந்தது என்று சொல்ல முடியாது. பல தரப்பட்ட வகுப்பினரும் தங்களுக்குக் கீழே இருந்தவர்கள்மீது அடக்குமுறையைக் கையாண்டபோதும், பிராமணர்களுக்கு எதிராக மட்டுமே கண்டனக்குரல் எழுப்பியதுதான் பெரியரிடம் இருந்த பிரச்னை. பாரபட்சமாக நடந்துகொள்ளும் மற்றவர்களை அவர் பொருட்படுத்தவில்லை அல்லது எதிர்காலத்தில் நன்றாக நடந்துகொள்ளுங்கள் என எச்சரித்ததோடு நிறுத்திக்கொண்டார். பிராமணர் அல்லாத உயர் சாதிகளைச் சேர்ந்த நிலச்சுவான்தார்கள், லேவாதேவிக்காரர்கள், வர்த்தகர்கள், வியாபாரிகள் ஆகியோரை பாதிக்கப்பட்டவர்களாக கருதியதால் - உண்மையிலேயே அவர்களும்கூட அடக்குமுறை வர்க்கத்தின் ஒரு பகுதிதான் - இந்த அணுகுமுறையைக் கையாண்டார்.

பிராமணர்களை மாற்றவே முடியாது என்பதைப் பெரியார் தெளிவுபடக் கூறியுள்ளார். 1959 மார்ச் 6இல் வெளிவந்த கரன்ட் இதழுக்கு அவர் அளித்த பேட்டியில் இப்படி ஒரு கேள்வி கேட்கப்பட்டது: “பிராமணர்கள், அவர்கள் பிராமணர்களாக பிறந்திருப்பதாலேயே நேர்மையான நோக்கங்கள் அவர்களுக்கு இருக்கவே இருக்காது என நீங்கள் சொல்கிறீர்களா?”

இதற்குப் பெரியார் அளித்த பதில் இதுதான்: “உண்மைதான். அவர்களுக்கு நேர்மையான நோக்கங்கள் இருக்கவே இருக்காது.” அதே பேட்டியில், செட்டியார், நாயக்கர், பிள்ளை, கவுண்டர், பள்ளர், பறையர் ஆகியோரிடையே எந்த வேறுபாடும் இல்லை என்றும் அவர் கூறினார். ஒடுக்கப்பட்டவர்கள்மீது அவர் கொண்டிருந்த அக்கறை இதுதான்.

பிராமணப் பெண்கள் குறித்த அவரது கருத்துகள், பெண் விடுதலைப் போராளி என்ற அவரது பிம்பத்துக்கு முரண்பட்டதாக இருந்தன. 1969 மார்ச் 4ஆம் தேதி விடுதலை இதழில் அவர் எழுதியிருந்த தலையங்கத்தில், “ஒரு சில வழிபாட்டு இடங்களில் பிராமண அர்ச்சகர்கள் தங்கள் மனைவிமார்களுக்கான புரோக்கர்களாகச் செயல்படுகிறார்கள்” எனக் குறிப்பிட்டிருந்தார். 1956 ஜூன் 21ஆம் தேதி இதழில், அவர் எழுதியிருந்த இன்னொரு கட்டுரையில் அதிர்ச்சியளிக்கும் பின்வரும் கருத்துகளை வெளியிட்டிருந்தார்:

ஜனநாயக விரோதப் போக்கு

“வெள்ளையன் போகாமல் இந்த 10 வருட காலம் இப்போது இந்திய ஆட்சியை நடத்தி வந்திருப்பானேயானால், பார்ப்பனப் பெண்கள் பகுதி பேருக்கு நம்மவர்களே, தமிழர்களே புருஷர்களாக இருந்து சாதியின் ஆதிக்கம் பகுதிக்கு மேல் ஒழித்துக் கட்டப்பட்டிருக்கும். பார்ப்பனப் பெண்கள் நம்மவர்களை வலுவில் காதலிக்கத் தொடங்கிய பின்னர்தான் பார்ப்பனர்களுக்கு வெள்ளையர்கள்மீது ஆத்திரம் வலுக்க ஆரம்பித்தது.” (விடுதலையில் பெரியார் எழுதிய கட்டுரை 21.06.1956)

கவிஞர் கண்ணதாசன் தனது ‘வனவாசம்’ புத்தகத்தில் பெரியாருக்கே உரித்தான அவரது பேச்சு குறித்து விவரித்துள்ளார். பெரியார் பிராமணப் பெண்களை விபசாரிகள் என்றும் திராவிட நாட்டில் காலூன்றுவதற்காகத் தங்கள் மனைவிமார்களை பிராமண ஆண்கள் பயன்படுத்திவருவதாகக் குற்றம்சாட்டியும் பேசியதைக் கண்ணதாசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

பெரியார் அவரது நீண்ட அரசியல் பயணத்தில் பல சந்தர்ப்பங்களில் ஒரு ஃபாசிஸ்ட் போன்று நடந்துகொண்டுள்ளார். இப்படிச் சொல்வது நான் மட்டுமல்ல. அவருடைய முதன்மைச் சீடரான அண்ணாதுரை, 1949இல் அவரிடமிருந்து பிரிந்து வந்தபோது, அவரது வழிமுறைகள் பற்றி இப்படிக் கூறினார்:

“பாசிசத்தையும் பழைமையையும் நாட்டிலே படையெடுக்க விடக் கூடாது – அதுபோல கழகத்தில் பாசிசத்தை வளர்த்துள்ள தலைமையில் இனியும் இருந்து பணியாற்றவும் கூடாது. நாட்டைப் பாழ்படுத்தும் சக்திகளை எதிர்த்துப் போராடும் செயலையும் மறக்கக் கூடாது – அதுபோல், ஜனநாயகத்தை – தன்மானத்தை அழிக்கும் போக்கினை மேற்கொண்டுவிட்ட தலைவரிடம் இனிக் கூடிப் பணியாற்றுவது என்பது முடியாத காரியம்.”

பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய விஸ்வநாதன், பின்வருமாறு கூறியுள்ளார்: “1944இல் நடைபெற்ற சேலம் மாநாட்டில் பெரியார் பேசியது, அவருடைய யதேச்சதிகாரப் போக்கைத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. அங்கு பேசும்போது பின்வருமாறு அவர் சொன்னார்: ஒரு தலைவர் என்ற முறையில், ஒருவிதத்தில் நான் என் விருப்பப்படி செயல்படுகிறேன். பலரிடம் ஆலோசித்து அவர்களின் கருத்துகளை நான் தெரிந்துகொண்டு இருக்க முடியாது. நான் செய்வதுதான் சரி என்று நம்புகிறேன். ஒரு தலைவனாக என்னால் வழிநடத்த மட்டுமே முடியும், வேலை செய்ய வேண்டியது மற்றவர்கள்தான்.”

இந்த ஆதிக்கப்போக்கு அவர் மரணம் வரையில் திராவிடர் கழகத்தில் இருந்துவந்தது. அவருக்கு நெருக்கமான வட்டத்தில் இல்லாத, பணிந்து நடக்காத, அவருக்குப் பிடிக்காதவர்களைச் சமாளிக்க, கடுமையான தனது பாணி நடவடிக்கைகளை எடுத்தார். 1965இல் இந்தி எதிர்ப்புப் போராட்டம், உச்சத்தில் இருந்தபோது பெரியார் அரசை முழுமையாக ஆதரித்தார். ஒரு பொதுவான ஒழுங்கு கட்டுப்பாடு தேவை எனக் கூறிய அவர், அந்தப் போராட்டம் குறித்துப் பேச யாரையும் அனுமதிக்கக் கூடாது என்றார். அனைத்து நாளேடுகளையும் அரசு தடை செய்ய வேண்டும் என்றுகூட அவர் விரும்பினார். 1968இல் தலித் மக்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பிறகு, காங்கிரஸ் மற்றும் திமுகவைத் தவிர கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட மற்ற அனைத்து அரசியல் கட்சிகளையும் தடைசெய்ய வேண்டும் என பரிந்துரைத்தார்.

உலகப் பெரியார்களும் நமது பெரியாரும்

பேராசிரியர்கள் கார்த்திக் ராம் மனோகரனும் எஸ்.ஆனந்தியும் மார்டின் லூதர் கிங் (ஜூனியர்), அமில்கர் காப்ரல், ஃபிரான்ஸ் ஃபானான், மால்கம் எக்ஸ், ஜேம்ஸ் பால்ட்வின் மற்றும் ஸ்டீவ் பிக்கோ ஆகியோருக்கு இணையாகப் பெரியாரைக் குறிப்பிடுவதுதான் உண்மையிலேயே மெய்சிலிர்க்க வைக்கிறது (சிறப்புக் கட்டுரை: திரிக்கப்படும் பெரியாரின் கருத்துக்கள்!). இவர்களுக்கும் பெரியாருக்கும் இடையே ஒரு முக்கியமான வேறுபாடு உள்ளது. இவர்கள் அனைவருமே யதேச்சாதிகாரத்துக்கும் காலனி ஆதிக்கத்துக்கும் பரம வைரிகள். பெரியார், யதேச்சாதிகாரத்துக்கும் காலனி ஆதிக்கத்துக்குமான தன் ஆதரவை வெளிப்படையாகவே முன்வைத்துள்ளார். சுதந்திர இந்தியாவைவிட காலனி ஆட்சியைத்தான் அவர் விரும்பினார். சுதந்திர இந்தியா என்பது பிராமணர்கள் நிறைந்த காங்கிரஸின் ஆதிக்கத்தின் கீழ்தான் இருக்கும் என அவர் கருதினார்.

தமிழ்நாட்டின் அரசியல், கல்வி, சமூக அமைப்புகள் ஆகிய களங்களில் ஆட்டிப்படைத்த பிராமண சக்தி என்ற ஆவி நீண்ட காலத்துக்கு முன்பே விரட்டியடிக்கப்பட்டுவிட்டது. தற்போது, இந்த அமைப்புகளில் பிராமணர் அல்லாத, தலித்துகள் அல்லாத மற்ற ஆவிகளின் ஆதிக்கம் தலைவிரித்து ஆடுகிறது. இந்த நெருடலான உண்மையை மூடி மறைப்பதற்காக, சுய நல ஆதாய கும்பல்கள் போலியான பிராமண ஆவியை விரட்டியடிப்பதில் தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றன.

நன்றி: வயர் இணைய தளம்

thewire.in

thewire.in

சுருக்கமாகத் தமிழில்: ராஜலட்சுமி சிவலிங்கம்



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Why Do Dravidian Intellectuals Admire a Man as Prickly as Periyar?

The reason is simple. The national intellectual landscape is verdant. The Dravidian landscape, on the other hand, is an arid desert, and Periyar was the only cactus plant to have bloomed in it.

M. Karunanidhi (front row, third from left) and Periyar (fourth). Source: YouTube

M. Karunanidhi (front row, third from left) and Periyar (fourth). Source: YouTube

P.A. Krishnan is an author in both English and Tamil. He regularly contributes to various journals and magazines.

“The Jews are only interested in themselves, and nobody else. They somehow contrive to have the rulers in their pocket, participate in governance and conspire to torture and suck the lives out of other citizens in order that they live (in comfort).” These blatantly anti-semitic lines were penned on March 20, 1938, when Hitler’s flag was flying high. If you had read them in isolation and if you were familiar with the history of the Nazis, it is likely that you would think they must have been fished out of some sordid pro-Nazi tabloid.

These are the next lines: “Are they not comparable to the Brahmins who too have no responsibility but have the rulers in their pocket, have entered the ruling dispensation and been lording over (all of us)?” 

This is Periyar E.V. Ramasamy writing in his magazine Kudiyarasu, and he is being unusually mild here. (Naan Sonnal Unakku Yen Kopam Vara Vendum, vol. 4, p. 532, compiled by Pasu. Gowthaman)

Periyar was a selfless and incorruptible man of considerable personal charm. He spent his long life tirelessly working in support of what he believed in and against what he detested. What he believed in were self-respect, rationalism, gender equality and his own version of social justice. What he detested were caste discrimination, Gandhi, god, religion, Brahmins and the then-prevailing idea of India. Unlike B.R. Ambedkar, who was a prodigious scholar, Periyar was a street-fighter, and the things he said in anger are largely unprintable (though it is available in print in Tamil). What he said in cooler moments – rare though they were – are also available.

The Periyar that the non-Tamil intellectuals know is a sanitised version of his real personality, lovingly packaged and offered by his admirers.

Against the Brahmin

It is almost axiomatic in Tamil Nadu, and constantly parroted by non-Tamils too, that it was thanks only to Periyar that reservations in jobs and education came into being in the state. But as Granville Austin writes in his seminal book, Working a Democratic Constitution (1999), “After the Congress eclipsed the Justice party in the 1937 elections and later, it made ‘compulsory discrimination’ very much its own policy even while led by Tamil Brahmins like [Chakravarti] Rajagopalachari.”

In fact, reservations were first introduced in Tamil Nadu in 1927, when P. Subbarayan was the chief minister and had the support of the Swarajya Party, and when Periyar was just leaving the Congress. It was expanded in 1947 by the then-ruling Congress party, and when Periyar was busy demanding a separate ‘Dravida Nadu’. Similarly, while it is true that Periyar did agitate in 1951 when the Madras high court struck down the orders on reservation – and the Government of Madras subsequently lost its appeal with the Supreme Court – it was on the recommendations of the Congress Government of Madras and on consideration of the need for ‘removing man-made equalities’ (in Granville Austin’s words) that the Nehru dispensation brought in the First Amendment to the Indian Constitution.

Bear in mind that Periyar in the 1950s did not have the larger than life image that he has now. Though he was personally liked by almost all political leaders, almost all of them considered him to be maverick, unrestrained and irresponsible. Between 1949 and 1967, the former being the year his disciple Annadurai broke away from him and formed his own party and the latter being the year he formed the first non-Congress government, Periyar’s harshest abuses were reserved for his former disciples.

In all his agitations – and he had many – the lowest common denominator was the Brahmin. Even while criticising non-Brahmin national leaders like Gandhi, Subhash Chandra Bose and Sardar Vallabhai Patel, Periyar said that they were all victims of a Brahmin conspiracy.  He said, without so much as a pause, that Gandhi was killed by Brahmins because Gandhi was turning into a Periyar himself!

Periyar was clear that he was against Brahmins, not Brahminism. However, this seems confused in hindsight. In his last ever speech, on December 19, 1973, he spoke that he had been striving for long to annihilate god, religion, the Congress, Gandhi and the Brahmin. One might think that by Brahmin he meant Brahminism. However, he stated the opposite in an earlier meeting on August 31, 1959:

Who do you hate? The Brahmin or Brahminism? What is Brahminism?’ – for questions such as these, my reply is Brahminism came from Brahmins and hence it is the Brahmins who should be annihilated. It is like asking whether you hate thievery or the thief. It is because one is a thief, one indulges in thievery. When someone says he hates thievery, it means he hates the thief, too, doesn’t it? Thus, [my stand is] Brahminism grew out of the Brahmin and I am striving to annihilate the root.

What is the reality? Was the Brahmin the bogeyman, the Baba Yaga of the Tamil country?

Brahmins in colleges and government jobs

There is no doubt that in the late 19th century and early 20th century, Brahmins dominated the educational scene in the state. Colleges swarmed with them. As a result, most of coveted government jobs went to the Brahmins. But statistically they were not very significant. The total number of students in both the arts and professional colleges was around 3,000 in 1890 (The Politics of South India, C.J. Baker, 1976, p. 46). Fewer than 1,000 students would have had to be passing out every year in the 1890s.

This number increased to around 14,000 in 1936. This would mean that around 4,500 students would have had to be passing out every year in the 1930s. The population of the presidency of Madras (a.k.a. Tamil Nadu today) in 1931 was around 46 million.

Thus, less than 1% of 1% of the population were graduating from these colleges. Also, by the 1930s, the majority of students in both arts and professional colleges were not Brahmins. On the employment front, the total number of Brahmin gazetted officers were 620 in 1928. Overall, there were about 15,000 Brahmins out of about 80,000 government employees (Political Career of E.V. Ramaswamy Naicker,  E. Sa. Viswanathan, 1983, p. 126).

(Baker points out in his book that there were 10,237 students in first grade colleges in 1931; the number of available government posts carrying a salary of Rs 35 per month were 29,081. He adds that in 1927, a ‘Staff Selection Board’ had to select 467 persons. Even if it had chosen every non-Brahmin applicant who possessed the barest qualification, it could not have met the stated quota.)

Even then it was clear that the trend was changing. The Tamil Brahmins started migrating to cities both within the Tamil land and without – whereas an overwhelming majority of them had been living in villages at the dawn of the 20th century. In 2001, about a hundred years later, around 4.3% of them resided in villages – the figure would be 5.6% if the non-Tamil Brahmins were also added.   (Tamil Brahmans: The Making of a Middle Class, Fuller and Narasimhan, 2014, appendix). Their land holdings dwindled to almost nothing as they had to sell them off to get higher quality education.

In short, while Tamil Brahmins used the opportunities that the British Government provided, it was not that they arm-twisted anybody to get where they did. The Justice Party came to power in 1920 and the Dravida Munnetra Kazhagam (DMK) in 1967. In the intervening years, Madras had a Brahmin chief minister for only four years (including the uncertain years between 1952 and 1954). The British had no love lost for them because most of the intellectual leaders of the Brahmin community were with the Congress.

A bias against Brahmins

Unfortunately, Periyar and his disciples could not look at the problem from this perspective. They attributed – exactly like Hitler did with the German Jews – grand conspiracies and clever manipulations by Brahmins for the plight of the non-Brahmins. It did not ever occur to Periyar that independence would open the sluice gates of education and other opportunities. He wanted the British to continue to remain in power – while simultaneously complaining that they were succumbing to the machinations of the Brahmins.

At times, Periyar issued blood-curdling threats to Brahmins, but in action he did not believe in violence. Many of his black-shirted followers were fine individuals personally. At the same time, Periyar was also paranoid that democracy would result in Brahmins completely taking over the reins of the government. His words: “India should never go anywhere near democratic principles. The reason is 90% of our population are fools and 97% of them are persons of low birth. How will their rule set right our country?” (Periyar’s writings compiled by Pasu. Gowthaman, vol. 4, 2017, p. 432)

Another case in point followed in 1968, when, in Tanjore district, 44 Dalits were butchered by the goons of a landlord. Periyar commented on the murders thus: “So long as democracy exists, the honest will have no other option except to fade away, giving the dishonest room to dance around. The people of India are barbarians. The dharma of India is the dharma of criminal tribes. As long as the ones who follow Manu dharma exist, the nation will never have discipline, integrity, honesty and justice. India has gone into the hands of scoundrels after the departure of the British.”

There is no doubt that Periyar genuinely wanted the Dalits to break out of the shackles of caste oppression but his approach was more paternalistic than what Gandhi was being accused of. He was miffed that the Constitution did not provide reservations for non-Brahmins. He accused Ambedkar for selling himself to the Brahmins: “The Brahmins had paid him a price. The price is this: he asked for 10% reservation and they gave him 15%. They knew that even if they gave him 25%, not even three or four percent of qualified people would be available [among the Dalits]. He accepted the Constitution written by the Brahmins and signed on the dotted lines. He did not think about others.” (Periyar E.V.R. Chintanaikal, Anaimuthu, 1974, p. 1,860)

It is nobody’s case that the Brahmins were angels. They were arrogant, casteist and possessed a general contempt for the ‘unwashed’ millions, and even the washed others. Then again, they were not alone. The problem with Periyar was that he used his bludgeon only against the Brahmins while the oppressing classes belonged to a wider spectrum. He either ignored the prejudices of others or simply admonished them to behave well in the future. He did so because he considered all the upper caste non-brahmins, many of whom were landlords, money lenders, traders and merchants, to be victims – when the reality was that they, too, were part of the machinery of oppression.

Periyar’s atheism was crude and obnoxious. His so-called research on the Ramayana dwelled on such grave issues as whether Sita slept with Valmiki. His rationalism was hollow and lacked any useful content. Though his love for science was childlike, he did not have the intellectual rigour to understand what the scientific enterprise was all about. He once said that the white people who lived in the temperate regions were less brainy than the ones who lived in Tamil Nadu. The reason? Their flowers were less fragrant than the flowers of Tamil Nadu. Their snakes don’t have venom but the Tamil snakes do.

Given all this, why is he being heralded as a great thinker by the Dravidian intellectuals?

The reason is simple. The national landscape is verdant. It has such giant trees as Gandhi, Nehru, Rabindranath Tagore, Ambedkar, Ram Manohar Lohia, Jaiprakash Narayan and a score others. The Dravidian landscape, on the other hand, is an arid desert. Periyar was the only cactus plant to have bloomed in it. And prickly though he was, he did have a few beautiful flowers. The only flowers.

Note: This article was corrected on September 22, 2017, to state that reservations were first introduced in Tamil Nadu in 1927 with the support of the Swarajya Party, not the Justice Party as was stated earlier. In 1927, the Justice Party had been in the opposition.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Periyar’s Blinkers Made Him See Only the Brahmin Hegemon, None Else

Tamil Nadu’s public institutions have been exorcised of the Brahmin ghost and are now ruled by non-brahmins and non-Dalits. It is to hide this that a fake Brahmin-ghost is continuously being exorcised.

A statue for Periyar in Vaikom, Kerala. Credit: Wikimedia Commons

A statue for Periyar in Vaikom, Kerala. Credit: Wikimedia Commons

P.A. Krishnan is an author in both English and Tamil. He regularly contributes to various journals and magazines.

Reading the article written by Karthick Ram Manoharan and S. Anandhi on Periyar, I was reminded of the famous Chinese face-changing trick of bian lian. The performers of this trick use vividly coloured masks which they change almost instantaneously with a swipe of a fan or a wave of a hand. The audience are thrilled with the rapid changes of masks but they do know that the performer has a real face which has nothing to do with these masks. My article was about the real face of Periyar and not the ever-changing masks that he wore owing to political and other compulsions. The professors’ article, on the other hand, problematises the idea of truth by giving Periyar a few more brand-new Gramscian masks.

The professors say that Periyar’s works would span over 40 volumes and there is a need to translate him into English but nothing much has happened. I fully agree with them. But who should take the blame? When he died, Periyar left a huge fortune to his faithful followers. Today, the value of his accumulations will run into several hundreds of crores of rupees. The Tamil Nadu government is being run by the Dravidian parties for the last fifty years and the universities in the state are stuffed with staunch Periyar supporters. Despite these enviable advantages, there is not even one authoritative biography either in English or Tamil on Periyar, leave alone his collected works. This is the arid landscape I was talking about in my earlier article.

Once a thief…

Nevertheless, there are a few collections of his works compiled privately by a couple of selfless persons and my admiration for them is boundless. One is the Anaimuthu collection in three volumes compiled in the 1970s and the other, Gowthaman’s, collection in five volumes published earlier this year. There are also collections of his Kudiyarasu articles between the years 1925 and 1938. Thus, until the fabled 40 volumes get published, we have no other option but to depend principally on these collections. Together, they run into a few thousand pages.

In these pages, god, religions (especially the Hindu religion), the Puranas and the epics do receive special treatment – but the main devil looming large in them happens to the Brahmin. Periyar sprinkles the works liberally with vile abuses of Brahmins and Brahminism is hardly mentioned. In fact, Annadurai, who was the chief disciple of Periyar, lamented in a piece written in March 1956 that Dravidar Kazhagam members considered it rank cowardice to speak about Brahminism when the intention was to annihilate Brahmins.

Periyar keeps making it clear that Brahmins, having been born Brahmins, are irredeemable. For instance, in an interview given to the Current magazine on March 6, 1959, there is a question asked: “Do you mean to say that Brahmins, by the very fact that they were born Brahmins, can never have honest intentions?” Periyar’s reply: “I do. They can never have honest intentions.” In the same interview, he says that there was no difference between Chettiar, Naicker, Pillai, Gounder, Pallar and Parayar. So much for his concern for the subaltern classes!

His views on Brahmin women do not fit well with his image of a great liberator of women either. In an editorial written in Viduthalai on March 4, 1969, he says the Brahmin priests act as pimps for their wives in a few religious places. In another piece written on June 21, 1956, he makes this startling assertion:

Had the British continued for another ten years, more than half of the Brahmin women would have been ours and Tamils would have been their husbands and the dominating caste would have been destroyed [by] more than half. Only after Brahmin women had started chasing our boys did the Brahmin men become very angry with the British.

The Tamil poet Kannadasan describes in his book Vanavasam a typical speech of Periyar’s, in which the latter calls Brahmin women ‘prostitutes’ and accuses Brahmin men of using their women to gain ground in the Dravida land.

I said in my article that Periyar kept issuing blood-curdling threats to the Brahmins. One such threat was issued in 1947. In an article written in Viduthalai on July 27, 1947, he says Aryans – read Brahmins – living in the Dravida land (which he calls “our land” and distinguishes it from Hindustan) would be solely responsible if Noakhalis happened there. He exhorts Aryans not to be the agents of northern imperialism and betray the Dravida land. History tells us that those were dangerous times, and if a few lunatics had taken Periyar’s call to violence seriously, the outcome would have been disastrous.

No shelter to North Indians

I am in good company when I say that Periyar behaved like a fascist many a time in his long and illustrious career. His own principal disciple, the redoubtable Annadurai, called his methods fascist when he broke away from Periyar in 1949. Visswanathan says in his biography of Periyar, “This despotism is best illustrated in his own speech made at [the] Salem conference in 1944. In that speech, he said emphatically, ‘In a way I was doing things as I pleased as president, and I could not be consulting too many opinions. I believed myself to be right… As a president I could only take the lead and it was for others to do the work.”

This special brand of fuhrerprincip was in force in the Dravida Kazhagam until his death. For other disobedient undesirables not in his immediate circle, Periyar was all for using rough and ready methods to tackle them. When the Hindi agitation was in full swing in 1965 – the agitation that catapulted the Dravida Munnetra Kazhagam (DMK) to power – Periyar was fully supporting the government. He suggested that there should a general gag order and nobody should be allowed to speak about the agitation. To rub it in, he wanted the government to ban all newspapers. After the gruesome murders of Dalits in 1968, he recommended that all political parties, including the Communist parties, be banned except the Congress and the DMK!

The professors speak of a splendid umbrella that Periyar made all by himself to give shelter to the victims of social of economic oppression, an umbrella so capacious that it could accommodate even the Palestinians. I am not sure who all were accommodated but it certainly did not allow the North Indians to rest under its shade. There could be an Arab Dravida but there was no such thing as a North Indian Dravida.


Also read: Questioning Periyar is necessary for forging a progressive anti-caste politics


In Periyar’s view, all North Indians were pot-bellied exploiters. For a time, the umbrella must have given shelter to the other three unfortunate Dravidian clans, but when the reorganisation of the states happened, they must have unceremoniously been kicked out. His Dravida Nadu later became Tamil Nadu when the people of the other three states were reluctant to join the Dravida Nadu – and Periyar was not the man to excuse such disrespect. He kept scolding them; he even chose Malayalis for special abuse because of their social practice of sambandam. Even in his very last speech, he averred that every Malayali was of doubtful parentage.

It is really touching that Periyar is mentioned in the same breath as Martin Luther King, Jr., Amilcar Cabral, Frantz Fanon, Malcolm X, James Baldwin and Steve Biko. There is one crucial difference between them and Periyar, however. All of them were inveterate enemies of imperialism and colonialism. Periyar made no bones about the fact that he preferred the colonial rule to an independent India, which, in his view, would be dominated by the Brahmin-ridden Congress. Thus, the dirtiness or cleanliness of the chit given by Periyar to colonialism did not matter at all. The British, it must be added, were not exactly anxious to know how clean the chit was or how he was ‘problematising what freedom meant’. To them, he was just one of the spanners that they used to throw in the works of the freedom movement.

An analysis of Periyar’s agitations throws up a surprising fact. The first major agitation under his leadership was against the imposition of Hindi in 1938. After independence, he led several other agitations that involved idol-breaking and burning of copies of our constitution and maps (without the sacred Dravidian Land), and of course pictures of Gandhi. None of his agitations was primarily about caste or Dalit oppression. Though he kept riling against caste, there is not even a single worthwhile suggestion in the entire corpus of his works as to how caste could be annihilated. He recommends the usual inter-caste marriages but, being Periyar, he also suggests that governments pass a law stipulating that only inter-caste marriages will be recognised as legal (Viduthalai, January 10, 1947).

Complexity of hegemony

Next: the Gramscian theory of hegemony and consciousness is used by all professorial Periyarists as a last resort when they don’t find a straightforward way out. Let me counter-quote here. This is Raymond Williams:

A lived hegemony is always a process. It is not, except analytically, a system or a structure. It is a realised complex of experiences, relationships and activities, with specific and changing pressures and limits. In practice, that is, hegemony can never be singular. Its internal structures are highly complex, as can readily be seen in any concrete analysis. Moreover (and this is crucial, reminding us of the necessary thrust of the concept), it does not just passively exist as a form of dominance. It has continually to be renewed, recreated, defended, and modified. It is also continually resisted, limited, altered, challenged by pressures not at all its own.

Williams speaks of the non-singularity and the complexity of hegemony. The hegemony that the professors say Periyar was addressing is starkly singular. Periyar had his blinkers on and they made him see only the Brahmin hegemon and none else. I would like to redirect the professors’ attention to the Sattanathan Commission’s report in 1971, which says that nine dominant backward castes that constituted 11.3 % of the population held 37.3% of non-gazetted posts and 48.2% of gazetted posts.

Let me also quote a scholar who has written on Periyar:

Ramasamy’s interventions in caste politics in Tamil Nadu involved discursive strategies directed towards three groups: the intermediate castes, whose social status as ‘Shudras’ he used as a weapon to incriminate the Brahmins; the Brahmins, who were the Other who, according to Ramasamy, by their very presence condemned the rest of the population to the status of Shudrahood and untouchability; and the untouchable Dalit castes whose particularism he respected and whom he considered allies in the struggle against casteism. Comparing with Fanon’s identity politics, I explore what are the pitfalls in Ramasamy’s discursive strategies. Drawing from Fanon, I conclude that a transformative praxis in search of a post-casteist society must be based on a universalism that, while being cognizant of particulars, nevertheless unsettles both the identities of the oppressor and the oppressed.

This is an abstract of a paper by Karthick Ram Manoharan. It speaks of Brahmins and not Brahminism – Brahmins whose very presence is so terrifying. I humbly submit to the author that we also aim to unsettle the identity of the oppressor so abusively portrayed by Periyar and at identifying certain oppressors merrily wearing the cloak of the oppressed.

Tamil Nadu’s political, educational and social systems were exorcised of the Brahmin ghost long ago. The systems have now been taken over by other ghosts, all pristine non-brahmins and non-Dalits. It is only to hide this uncomfortable fact that a fake Brahmin-ghost is continuously being exorcised by vested interests.

The author would like to thank N. Kalyan Raman for inputs.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard