லைமை பேராயர்) மாடரேட்டர் மற்றும் பெரும்பான்மை மண்டலங்களின் (மொத்தம் 24 மண்டலங்கள்) பேராயர்களின் "பேராசையினாலும் மற்றும் சுயநலத்தினாலும்" மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடி கண்காணிப்புக்குள் வருகிற 25'ஆம் தேதியிலிருந்து செல்லப்போகிறது என்ற அதிர்ச்சியான செய்தியானது நமது இந்திய தேசத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிற நற்செய்திப்பணிக்கு மேல் விழுந்த பேரிடி என்பதில் ஐயமில்லை. காரணம். நமது பாரத தேசத்தில் சுவிஷேசப் பணியை செய்து கொண்டிருக்கும்... IMS, FMPB, GEMS, BYM, VISWAVANI, IEM, போன்ற அநேக மிஷனரி இயக்கங்களுக்கு நமது CSI திருச்சபையின் வழியாகத்தான் பெருமளவில் பொருளாதார தேவைகள் (அதாவது மிஷினரிகளின் தேவைகள் சுமார் 80% க்கும் மேல்) சந்திக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. 2016 ஜனவரி மாதம் நடை பெற்றுருக்க வேண்டிய நமது CSI நிர்வாகக்குழுவின் தேர்தலானது மாடரேட்டர் மற்றும் பெரும்பான்மை பேராயர்களின் முறைகேடுகளால் நடத்தப்படவில்லை என்பதை விட "கேவலம்" பதவி ஆசைக்காகவும் மற்றும் பணம் சம்பாதிக்க வேண்டுமென்பதற்காகவும் ஓய்வு பெறும் வயதை 65ல் இருந்து 68ஆக உயர்த்திக் கொண்டார்கள். இதை எதிர்த்து திரு.ஜான் துரை என்பவர் "தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில்" பொது நல வழக்காக போட்டிருந்த வழக்கு விசாரணை முடிந்து கடந்த 18ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது. இந்தத் தீர்ப்பின்படி "CSI திருச்சபையின் நிர்வாகப் பொறுப்பில் உள்ள அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட்டு விட்டார்கள்". தீர்ப்பு வெளியான ஒருவார காலத்திற்குள் தீர்ப்பாயம் நியமித்துள்ள ஓய்வுபெற்ற நீதிபதி திரு.சம்பத் அவர்களிடம் "அன்றாட வரவு செலவு விவரங்கள், சொத்து விவரங்கள், கணக்கு நோட்டுகள் உட்பட அனைத்து ஆவணங்களையும் ஒப்படைக்க வேண்டுமென்ற "வேதனையான, அதிர்ச்சியான" இத்தீர்ப்புக்காக ஓவ்வொரு கிறிஸ்தவர்களும் நம்முடைய ஜீவனுள்ள தேவனை நோக்கி கண்ணீரோடு விண்ணப்பம் பண்ண வேண்டியது மிக மிக அவசியம் பிரியமானவர்களே. இன்றைக்கு நமது CSI திருச்சபைக்கு ஏற்பட்ட மாபெரும் சோதனை நாளைக்கே பொதுநல வழக்குகளாக ஒவ்வொரு திருச்சபையின் மீதும் போலிக் கிறிஸ்தவர்களைக் கொண்டு போட வைத்து மத்திய அரசாங்கத்தின் நேரடி கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு செல்லப்படுவோம் என்பதில் கடுகளவும் சந்தேகமில்லை பிரியமானவர்களே. (தினமலர் 26/11/2016) இச்செய்தியினை அனைத்து நமது திருச்சபைகளுக்கும் தெரிவித்து ஜெபிக்க ஊக்குவிப்போம்...
If this video recording is true, Bishop says that he received around one crore of money as "offering for Bishop" which he had spend for the poor. Is there something called 'Offering for Bishop' in CSI book of accounts ? Is this a new type of offering introduced in CSI which Bishop can directly receive and spend ?
I am not questioning on spending the offering money for the poor.
My question is why the Bishop is receiving money directly from the believers ? He should receive it in Church Accounts and spend after accounting it properly.
The people who are contributing to the "Offering for Bishop" also needs to be condemned and equally responsible for such wrong happenings.