கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓத்து என்பது இலக்கண நூல்களில் அமைந்து கிடக்கும் பாகுபாடுகளில் ஒன்று. ஓரினப்பட்ட செய்திகளை ஒருமிக்கச் சொல்வது ஓத்து. நூலின் படிவடுக்குகளாகத் தொல்காப்பியம்சூத்திரம், ஓத்து, படலம், பிண்டம் என்னும் நான்கினைக் குறிப்பிடும்போது இதனைத் தெளிவுபடுத்துகிறது. [1]
நன்னூல் நூலின் படியடுக்குகளைக் குறிப்பிடும்போது வெறுமனே 'ஓத்து' எனக் குறிப்பிடுகிறது. [2]தவல்காப்பிய இலக்கண நூலில் இந்த 'ஓத்து' என்னும் சொல்லை 'இயல்' என்னும் சொல்லால் வழங்கிவருகின்றனர். நன்னூல் குறிப்பிடும் 'படலம்' என்னும் சொல்லும் 'அதிகாரம்' என்று வழங்கப்படுகிறது.
ஓத்து என்னும் சொல்லுக்கு இயல் [3] என்று பொருள் கூறியுள்ளனர்.
Jump up↑'ஒரு பொருள் நுதலிய சூத்திரத்தானும், இன மொழி கிளந்த ஓத்தினானும், பொது மொழி கிளந்த படலத்தானும், மூன்று உறுப்பு அடக்கிய பிண்டத்தானும், என்று ஆங்கு அனை மரபின் இயலும்' என்ப (தொல்காப்பியம் 3-470)
நூலின் இயல்பே நுவலின் ஓர் இரு பாயிரம் தோற்றி மும்மையின் ஒன்றாய் நால்பொருள் பயத்தோடு எழுமதம் தழுவி ஐ இரு குற்றமும் அகற்றி அம் மாட்சியோடு எண் நான்கு உத்தியின் ஓத்துப் படலம் என்னும் உறுப்பினில் சூத்திரம் காண்டிகை விருத்தி ஆகும் விகற்ப நடை பெறுமே (நன்னூல் 4)