செவ்வாய்பேட்டை அருகே கன்னியாஸ்திரியை தேவாலயத்தில் அடைத்து வைத்து சித்ரவதை: 2 பேர் கைது
பதிவு: ஆகஸ்ட் 06, 2017 18:07
கன்னியாஸ்திரியை தேவாலயத்தில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த பாதிரியார் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செவ்வாப்பேட்டை:
செவ்வாப்பேட்டையை அடுத்த வெள்ளைக்குளம் கிராமத்தில் கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது. இங்கு அதே பகுதியை சேர்ந்த ஞானசேகர் என்கிற டேனியல் பாதிரியராகவும், நான்சி என்பவர் கன்னியாஸ்திரியாகவும் உள்ளனர்.
இந்த நிலையில் பாதிரியார் ஞானசேகரின் நடவடிக்கை பிடிக்காததாலும், தேவாலய ஊழியத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாலும் கன்னியாஸ்திரி நான்சி தேவாலயத்தில் இருந்து வெளியேற முடிவு செய்தார்.
இதுபற்றி அறிந்ததும் பாதிரியார் ஞானசேகர், மற்றொரு கன்னியாஸ்திரி கிறிஸ்டி மற்றும் திருநின்றவூரில் பாதிரியாராக உள்ள பிரபுகுமார், செவ்வாப்பேட்டை பாதிரியார் வின்சென்ட் ஆகியோர் கன்னியாஸ்திரி நான்சியிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அவர்களிடையே வாக்கு வாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.
இதையடுத்து கன்னியாஸ்திரி நான்சியை தேவாலயத்தில் உள்ள ஒரு அறையில் அவர்கள் அடைத்து வைத்து சித்ரவதை செய்து உள்ளனர்.
அங்கிருந்து தப்பி வந்த நான்சி இது குறித்து செவ்வாப் பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பாதிரியார் பிரபுகுமார், கன்னியாஸ்திரி கிறிஸ்டி ஆகியோரை கைது செய்தனர்.
தலைமறைவான பாதிரியார் ஞானசேகர், வின்சென்ட் ஆகியோரை தேடி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாஸ்திரி கொடுமை: இருவருக்கு சிறை
செவ்வாப்பேட்டை:செவ்வாப்பேட்டை அருகே, கன்னியாஸ்திரியை அடைத்து வைத்து கொடுமைப்படுத்திய பெண் உட்பட இருவரை போலீசார் சிறையில் அடைத்தனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர்.செவ்வாப்பேட்டை அடுத்த, கிளாம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ரவி மகள் நான்சி, 26. இவர், வெள்ளகுளத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் கன்னியாஸ்திரியையாக பணிபுரிந்து வருகிறார்.
இதே ஆலயத்தில், துாத்துக்குடியைச் அந்தோணி மகன் ஞானசேகர் (எ) டேனியல், 32 பாதிரியார், கிளாம்பாக்கத்தை மாணிக்கம் மகள் கிறிஸ்டி, 23 என்பவரும் பணிபுரிந்துவருகின்றனர்.இதில், கிறிஸ்டிக்கும், நான்சிக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், பாதிரியார் ஞானசேகர், அவரது நண்பர்களான திருநின்றவூரைச் சேர்ந்த பிரபுகுமார், 42, செவ்வாப்பேட்டையைச் சேர்ந்த வின்சென்ட், 30 மற்றும் கிறிஸ்டி ஆகிய நான்கு பேரும் சேர்ந்த, நான்சியை ஆலயத்தில் உள்ள அறையில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இவர்களிடமிருந்து, தப்பி வந்த நான்சி, நேற்று முன்தினம் செவ்வாப்பேட்டை போலீசில் புகார் செய்தார்.இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி, பிரபுகுமார் மற்றும் கிறிஸ்டியைகைது செய்தனர். மேலும், ஞானசேகர் மற்றும் வின்சென்ட் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.