New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பிராமணன் யார்? ஜாதி வேறு, வர்ணம் வேறு- Part 1


Guru

Status: Offline
Posts: 24778
Date:
பிராமணன் யார்? ஜாதி வேறு, வர்ணம் வேறு- Part 1
Permalink  
 


ஜாதி வேறு, வர்ணம் வேறு- Part 1

pyramid_of_caste_system_in_india

Written by London swaminathan

Date: 15 September 2016

Time uploaded in London: 7-38 AM

Post No.3155

Pictures are taken from various sources; thanks.

 

 

ஜாதிகள் என்பன பிற்காலத்தில் தோன்றியன. வர்ணம் என்பது வேத காலத்தில் தோன்றின. நால் வர்ணம் என்பது பிராமண, க்ஷத்ரிய, வைஸ்ய, சூத்திரர்களைக் குறிப்பதாகும். இன்றோ பல்லாயிரம் ஜாதிகள் உள்ளன. இது எப்படிப் பல்கிப் பெருகின என்பது உலகிலேயே மிகவும் அதிசயமான ஒரு விஷயம். யாரும் தீவிரமாக ஆராய்ந்து எழுதவில்லை. வெள்ளைக்காரர் காலத்தில் தர்ஸ்டன் முதலியோர் பட்டியலிட்டு, அவர்களின் பழக்க வழக்கங்களை பல தொகுதிகளாக வெளியிட்டுள்ளனர். ஆனால் அவை ஏன் இப்படிப் பிரிந்தன, தோற்றம் என்ன? என்பதெல்லாம் இன்று வரை கேள்விக்குறியாகவே தொக்கி நிற்கின்றன.

 

தமிழ் இலக்கியத்தில் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐந்து பகு திகளிலும் இருந்த மேற்குடிகள், கீழ்க்குடிகள், புற நானூற்றில் குறிப்பிடப்படும் ஜாதிகள் பற்றி முன்னரே ஒரு ஆய்வுக் கட்டுரை எழுதியுள்ளேன்.

 

வேத காலத்தில் வர்ணம் என்று சொன்னது தோலின் நிறத்தை வைத்து அல்ல. வர்ணம் என்ற உடனே பலரும் கலர் = நிறம் = வர்ணம் என்றே நினைப்பர். வர்ணம் என்பது “வ்ரு” என்ற சம்ஸ்கிருத வேர்ச்சொல்லில் இருந்து வந்தது. “வ்ரு” என்றால் “தேர்ந்தெடு” என்று பொருள். ஒவ்வொருவரும் சில தொழில்களைத் தேர்ந்தெடுக்கலாம். அந்தத் தொழி லின் அடிப்படையில் அவர்கள் வர்ணம் நியமிக்கப்பட்டது. ஆனால் இந்தக் காலத்தில் நடிகர் மகள் நடிகை யாவது போலும், அரசியல்வாதி மகன் அரசியல் தலைவர் ஆவது போலவும் அந்தக் காலத்திலும் இயற்கையாக, இயல்பாக அவரவர் குடும்பத் தொழில்களைப் பின்பற்றினர். ஆயினும் விஸ்வாமித்திரர், தேவாபி போன்ற வேதகால அரசர்கள் பிராமண ர்களாக மாறியதும் மஹாபாரதத்தில் உள்ளது.

 

வெள்ளைக்கார்கள் அடிக்கடி சுட்டிக்காட்டும் வர்ணம் பற்றிய மந்திரம்:-

 

ப்ராஹ்மணோஸ்ய முகமாசீத் பாஹு ராஜன்ய: க்ருத:

ஊரு ததஸ்ய  யத்வைஸ்ய: பத்ப்யாஹும் சூத்ரோ அஜாயத

–ரிக் வேதம் 10-90-12

the-caste-system-during-vedic-civilisation

பிராமணர்கள் வாயிலிருந்தும் (முகம்), அரசர்கள் தோள்களிலிருந்தும் வைசியர்கள் தொடையிலிருந்தும், சூத்திரர்கள் கால்களில் இருந்தும் வந்தனர் என்பது புருஷ சூக்த மந்திரம் ஆகும். இந்த மந்திரம் இவர்கள் அனைவரும் கடவுளின் விராட ஸ்வரூபத்திலுந்து தோன்றினர் என்று சொல்வதிலிருந்து அனைவரும் கடவுளின் குழந்தைகள் என்பது தெளிவாகிறது. அது மட்டுமல்ல. வாய் மூலம் வேதம் சொல்லிப் பிழைப்பு நடத்துவோர் பிராமணர், தோள்வலி மூலம் அரசாட்சி செய்வோர் க்ஷத்திரியர்கள், தொடைகள், வயிற்றுப் பகுதிக்கு வாழ்வளிப்போர் வணிகர்கள், கால் உழைப்பினால் பணி புரிவோர் சூத்திரர்கள் என்பதும் தெளிவாகும். இந்த உடல் உறுப்பில் ஒன்று இல்லாவிடிலும் ஒருவன் முழு மனிதன் இல்லை. சமுதாயத்தில் இந்த 4 வகையான தொழில் புரிவோர் இல்லாவிடில் அந்த சமுதாயம் இயங்கா து என்பதையும் அறியலாம்.

 

மனுவும் தனது மானவ தர்ம சாஸ்திரத்தில்,

ஜன்மனா ஜாயதே சூத்ர: கர்மணா த்விஜ ஜாயதே என்பார். அதாவது பிறப் பினால் எல்லோரும் சூத்திரர் களே, தொழிலினால்தான் இரு பிறப்பாளராகின்றனர். இரு பிறப்பாளர் என்பது வேத  காலத்தில், முதல் மூன்று வர்ணங்களைக் குறித்தது . பின்னர் “கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது போல” பிராமணர்களை மட்டுமே குறித்து நின்றது!

 

கிருஷ்ண பரமாத்மாவும், பகவத் கீதையில் “சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குணகர்ம விபாகச: ( 4-13) என்கிறார். அதாவது நான்கு வர்ணம் என்பது குணங்களின் அடிப்படையில் என்னால் உருவாக்கப்பட்டது என்று சொல்லுகிறார். இதற்கு இந்தியாவிலுள்ள அறிஞர்கள் பலரும் விரிவான விளக்க உரைகள் எழுதியுள்ளனர். அத்தனையும் தொகுத்தால் அதுவே தனி புத்தகமாகிவிடும். மஹாத்மா காந்தி முதலியோரும் இதை நியாயப்படுத்தி விளக்கம் அளித்துள்ளனர்.

 

ஜாதிகள் பற்றி மஹாபாரதம் முதல் பாரதியார் வரை என்ன சொல்லுகின்றனர் என்பதை இரண்டாவது பகுதியில் காண்போம்.

 

–சுபம்—

My old articles on the same subject:–

Caste Divisions in Ancient Tamil Nadu

Posted on July 4, 2014

 

Eighteen groups of Indians!

Research paper written by London Swaminathan
Research article No.1390; Dated 4 November 2014.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

சூத்திரன் யார்? பிராமணன் யார்? ஜாதி வேறு, வர்ணம் வேறு- Part 2 (Post No.3158)

brahmin2

Written by London swaminathan

Date: 16 September 2016

Time uploaded in London: 9-52 AM

Post No.3158

Pictures are taken from various sources; thanks.

 

நேற்று வெளியான முதல் பகுதியைப் படித்துவிட்டு கீழேயுள்ள இரண்டாம் பகுதியைப் படித்தால் பொருள் நன்கு விளங்கும்.

 

மஹாபாரதத்தில் பல இடங்களில் ஜாதிகள் பற்றிய குறிப்புகள் உள. சில முக்கியமான விஷயங்களை மட்டும் காண்போம்:-

 

 

சத்யம் தானம் க்ஷமா சீலம் ந்ருசம்ஸ்யம் தமோ க்ருணா

த்ருஷ்யந்தே யத்ர நாகேந்த்ர ச ப்ராஹ்மண இதி ஸ்ம்ருத:

ஆரண்ய பர்வன் 177-16

 

வாய்மை, கொடை, பொறுமை, ஒழுக்கம், கருணை, தன்னடக்கம், நல்லெண்ணம் முதலியன எவனிடத்தில் காணப்படுகிறதோ அவனே பிராம்மணன்

 

சூத்ரே ச ஏதத் பவேத் லக்ஷ்யம் த்விஜே தத் ச ந வித்யதே

நவை சூத்ரோ பவேத் சூத்ரோ ப்ராஹ்மணோ ந ச ப்ராஹ்மண:

ஆரண்ய பர்வன் 177-20

 

இவை சூத்திரனிடத்தில் காணப்படுமானால் அவன் சூத்திரனும் இல்லை; இவை பிராமணனிடத்தில் காணப்படாவிடில் அவன் பிராமணனும் இல்லை.

 

 

ஆக நற்குணங்கள் எங்கு இருக்கிறதோ அவனே பிராமணன்:

இதைத் திருவள்ளுவனும் சில குறள்களில் அழகாகச் சொல்லுவான்:–

மறப்பினும் ஒத்துக்கொளலாகும் பார்ப்பான்

பிறப்பொழுக்கம் குன்றக் கெடும் (குறள் 134)

 

ஓதும் வேதத்தை மறந்தால் கூட ஐயர்கள் பிறகு கற்றுக்கொள்ளலாம்; ஆனால் ஒழுக்கம் ஒருமுறை கெட்டாலும் அவன் கெட்டவனே.

 

அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும்

செந்தண்மை பூண்டு ஒழுகலான்  (குறள் 30)

 

எல்லா உயிர்களிடத்திலும் அருளைப் பொழிவதால் அறவோரே அந்தணர்.

 

இன்னொரு இடத்தில் செப்புவான்:-

ஆ பயன் குன்றும் அறு தொழி லோர் நூல் மறப்பர்

காவலன் காவான் எனின் (குறள் 560)

 

நல்ல ஆட்சி நடக்காவிடில், பசு மாடுகள் பால் கறக்காது; ஐயர்கள் எல்லாம் வேதங்களை மறந்து  விடுவார்கள்.

வள்ளுவனுக்குப் பிராமணர்கள் பற்றி அவ்வளவு அக்கறை என்பதை இக்குறள்கள் மூலம் அறியலாம்.

 

மாஹாபாரத ஆரண்யக பர்வத்தில் மேலும் பல பாடல்கள் உள:–

யதி தே வ்ருத்ததோ ராஜன் ப்ராஹ்மண: ப்ரசமீக்ஷித:

வ்யர்த்தா ஜாதி ததா ஆயுஷ்மன் க்ருதி யாவத் த்ருஷ்யதே

 

சர்வே சர்வாசு அத்யானி ஜனயந்தி யதா நரா:

வாக் மைதுனம் அத ஜன்ம மரணம் ச சமம் ந்ருணாம்

 

பொருள்:-

ஒருவர் பிழைப்புக்காக பிராமணனாக இருந்தால் ஜாதி வீண்; எதுவரைக்கும் செயலில் பிராமணனாக இல்லையோ அது வரை ஜாதி என்பதே வீண்.

 

எல்லா மனிதர்களும் பிள்ளைகளைப் பெறுகிறார்கள்; உணவு, புணர்ச்சி, பிறப்பு இறப்பு இவை எல்லாம் எல்லோருக்கும் பொதுவானவையே.

 

ஆக ஒருவனுடைய குண நலன்களே அவனை வேறுபடுத்தி காட்டுகின்றன.

 

 

மூன்றாவது பகுதியில் பாரதியின் கருத்துகளைக் காண்போம்.

 

My old articles on the same subject:–

Caste Divisions in Ancient Tamil Nadu

Posted on July 4, 2014

 

Eighteen groups of Indians!

Research paper written by London Swaminathan
Research article No.1390; Dated 4 November 2014.

 

 

–சுபம்–



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard