இந்து மதத்திலிருந்து எடுத்து தங்களுக்கு தோதானபடி வாசங்களை மாற்றியமைத்து கொண்டுஎங்கள்மதமே பெரியது என்று மார்தட்டி கொள்ளும்மூடர்கள்.இந்துமதத்தில்சேருங்கள் என்று எங்கேனூம் அழைத்ததாக பார்த்தீரா?மனதில் பயமும்தொழிலில் திருட்டுதனமும்குடும்பத்தில் குழப்பமும்கட்டிய மனைவியையேசந்தேக படும்கேவலமானபிறப்புகள் பிழைப்புக்காககாசுக்காகஎதையும் செய்யும்ஈனப்பிறவிகளால்சித்தர்களும்பேரரசர்களும் கட்டி காப்பாற்றிய இந்து மதமும் அதன் கோட்பாடுகளும்அழித்துவிடமுடியாது""நம்முள் இருக்கும் தரங்கெட்டவர்களின் சதிகளை முறியடிப்போம்
திருக்குறள் வரலாறு அன்று தெளிவாக இருந்தது
ஜோசப் பெஸ்கி என்கிற வீரமாமுனிவர் -
என்ற கிறிஸ்தவ நாசகாரன் பைபிலுக்கு தேவையாணா பகுதியிணை எடுத்துக் கொண்டு
அதன் முக்கிய பகுதியாணா திருக்குறளில் சைவ சித்தாந்தம்-என்றபகுதியிணை அகற்றிணார்
முழுவிபரம் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளது
இவரின் அகற்றலை திராவிடமும் ஒத்துக்கொண்டு விளக்கம் கொடுத்துக்கொண்டிருக்கின்றணர்
மீண்டும் நாம் சிவன் அருளால் ஒன்று சேர்க்கும் நிலமை ஏற்பட்டுக்கொண்டு இருக்கின்றண
படியுங்கள் பரப்புங்கள் மேலும் உங்கலுக்கு நிலமை புரிய வரும் நடைபெற்றவை.அவன் அருளால் அவன் தாள் வணங்கி
வெளியீடு செய்கின்றேன்
சைவ முழக்கங்கள் விண்ணை பிளக்கட்டும். தீமைகள் ஒழியட்டும். ஆன்மீகம் பரவட்டும். இறையருள் உண்டாகட்டும்.
சிவ சிவ
தெய்வப் புலவர் திருவள்ளுவர் அருளிச்செய்த திருக்குறள் உலகம் போற்றும் ஒப்பற்ற தெய்வப் புலவர் திருவள்ளுவர் அருளிச்செய்த திருக்குறள் உலகம் போற்றும்ஒப்பற்ற பொதுமறையாகும். திருஞானசம்பந்தரின் தேவாரம் சைவ உலகம் போற்றும் திருமறையாகும். திருக்குறளின் காலம் பற்றிச் சங்க இலக்கியங்கட்கு முன்னர்த் தோன்றியது
திருஞானசம்பந்தரின் காலம் கி.பி.ஏழாம் நூற்றாண்டு. அவருடைய பாடல்கள் சைவத்திருமுறைகளுள் முதல்முன்றுதிருமுறையாகத் தொகுககப்பட்டது கி.பி. பதினொன்றாம் நூற்றாண்டில் ஆகும். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் முதலியோர் அருளிச் செய்த பாடல்களைத் தேவாரம் என்ற பொதுப்பெயரால் அழைப்பர்
. இவர்களுடைய நூல்கள் மூவர் தமிழ் எனப்போற்றப்படுகின்றது.
திருக்குறளும் மூவர்தமிழும் ஒத்த பொருளுடையன என ஒளவையார் தம்நீதிநூலில் கூறியுள்ளார்.
'தேவர் குறளும் திருநான்மறை முடிவும் மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை
திருவாசகமும் திருமூலர் சொல்லும் ஒரு வாசகம் என்று உணர்"
என்பது ஒளவையார் வாக்கு.
இவ்விரு நூல்கட்குமுள்ள ஒப்புமைப் பகுதிகள் பலவேறுநோக்கில்
இவ் ஆய்வுக் கட்டுரையில் ஆராய்ந்து கூறப்படுகின்றன
திருவள்ளுவர் (thiruvalluvar), பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய புலவர்.
.கடைச் சங்க காலமான .அவர் கி.மு.31 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார்.
பணி: புலவர்
பிறப்பிடம்: நாட்டுரிமை: பாண்டிய நாடு மதுரை
"இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை
மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்
மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்"
திருவள்ளுவர், அனைத்து தமிழர்களாலும் போற்றப்படுபவராகவும் தமிழர்களின் பண்பாட்டுச் செறிவின் அடையாளமாகவும் திகழ்கிறார்
‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு’ என்று தொடங்கி, ஈரடி குறளில் உலகத் தத்துவங்கள் அனைத்தையும் ‘திருக்குறள்’ என்னும் உன்னதப் படைப்பில் மக்களுக்கு எடுத்துச் சொன்னவர், திருவள்ளுவர். உலகளாவிய தத்துவங்களைக் கொண்ட திருக்குறளைப் படைத்து, உலக இலக்கிய அரங்கில் தமிழ்மொழிக்கென்று ஓர் உயர்ந்த இடத்தை நிலைப்பெற செய்தவர். இவர் உலக மக்களால், ‘தெய்வப்புலவர்’, ‘பொய்யில் புலவர்’, ‘நாயனார்’, ‘தேவர்’, ‘செந்நாப்போதர்’, ‘பெருநாவலர்’, ‘பொய்யாமொழிப் புலவர்’ என்றெல்லாம் பல பெயர்களில் அழைக்கப்படுகிறார். அவர் எழுதிய திருக்குறள், வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் இனம், மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால், திருக்குறளை சிறப்பிக்கும் விதமாக ‘உலகப் பொது மறை’, ‘முப்பால்’, ‘ஈரடி நூல்’, ‘உத்தரவேதம்’, ‘தெய்வநூல்’, ‘பொதுமறை’, ‘பொய்யாமொழி’, ‘வாயுறை வாழ்த்து’, ‘தமிழ் மறை’, ‘திருவள்ளுவம்’ போன்ற பல பெயர்களால் சிறப்பித்து அழைக்கின்றனர். அத்தகைய சிறப்புமிக்கத் திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு மற்றும் உலக இலக்கிய அரங்கில் அவர் படைத்த சாதனைகள்
திருக்குறள் (Thirukkural) உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். . இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன. இது அடிப்படையில் ஒரு ஒப்பரிய வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழும் புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழத் தேவையான மாறா அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. இந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும் அழகுடன் இணைத்தும் கோர்த்தும் விளக்கும் பேரழகுடைய இலக்கியப் படைப்பு.
இந்நூல், சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. மேலும், வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் இனம், மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால், திருக்குறளை சிறப்பிக்கும் விதமாக ‘உலகப் பொது மறை’, ‘முப்பால்’, ‘ஈரடி நூல்’, ‘உத்தரவேதம்’, ‘தெய்வநூல்’, ‘பொதுமறை’, ‘பொய்யாமொழி’, ‘வாயுறை வாழ்த்து’, ‘தமிழ் மறை’, ‘திருவள்ளுவம்’ போன்ற பல பெயர்களால் சிறப்பித்து அழைக்ககின்றனர்.
இந்நூல் அறத்துப்பால், பொருட்பால் மற்றும் காமத்துப்பால் (இன்பத்துப்பால்) என்னும் மூன்று பிரிவுகளைக் கொண்டது.
அறத்துப்பால் – முதல் பிரிவான ‘அறத்துப்பாலில்’ மனசாட்சி மற்றும் மரியாதை, நல்ல நடத்தை போன்றவற்றை பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் என்ற உட்பிரிவுகளில் தெளிவாக எடுத்துரைக்கிறார்.
பொருட்பால் – இரண்டாவது பிரிவான ‘பொருட்பாலில்’ உலக விவகாரங்களில் எவ்வாறு சரியான முறையில் நடந்து கொள்வது என்பதை அரசியல், அமைச்சியல், அங்கவியல், ஒழிபியல் போன்ற உட்பிரிவுகளில் விளக்கியுள்ளார்.
இன்பத்துப்பால் – மூன்றாவது பிரிவான ‘இன்பத்துப்பால்’ அல்லது ‘காமத்துப்பாலில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கிடையேயான காதல் மற்றும் இன்பத்தைத் தெளிவாக களவியல், கற்பியல் என்ற தலைப்புகளில் எடுத்துரைக்கிறார்.
முதல் பிரிவில் 38 அத்தியாயங்களும், இரண்டாவது பிரிவில் 70 அத்தியாயங்களும் மற்றும் மூன்றாவது பிரிவில் 25 அத்தியாயங்களும் உள்ளன. ஒவ்வொரு அத்தியாயத்தில் பத்து ஈரடி குறள்கள் என மொத்தம் 1330 குறள்கள் உள்ளன.
திருக்குறளில் உள்ள அனைத்து கருத்துகளும், உலகில் உள்ள அனைத்து திருக்குறள் சமயங்களுக்கும் பொருந்துவதாக உள்ளது. இந்நூல், ஏறக்குறைய4000 ஆண்டு பழமையானது என்று கணிக்கப்பட்.டதாகும்.
.இயற்றிய நூல்கள்
திருக்குறள்
திருவள்ளுவர் எழுதியதாகக் கருதப்படும் நூல்கள்
இது தவிர மருத்துவம் பற்றிய இரு நூல்களை இவர் இயற்றியதாக கூறுவர்.
1. ஞானவெட்டியான் - 1500 பாக்கள்
2. திருக்குறள் - 1330 பாக்கள்
3. ரத்தினசிந்தாமணி - 800 பாக்கள்
4. பஞ்சரத்தனம் - 500 பாக்கள்
5. கற்பம் - 300 பாக்கள்
6. நாதாந்த சாரம் - 100 பாக்கள்
7. நாதாந்த திறவுகோல - 100 பாக்கள்
8. வைத்திய சூஸ்திரம் - 100 பாக்கள்
9. கற்ப குருநூல் - 50 பாக்கள்
10. முப்பு சூஸ்திரம் - 30 பாக்கள்
11. வாத சூஸ்திரம் - 16 பாக்கள்
12. முப்புக்குரு - 11 பாக்கள்
13. கவுன மணி - 100 பாக்கள்
14. ஏணி ஏற்றம் - 100 பாக்கள்
15. குருநூல் - 51 பாக்கள்
மருத்துவம் பற்றியநூல்கள்
ஞான வெட்டியான்
பஞ்ச ரத்னம்
தமிழ் மக்கள் அவர் பிறந்தஆண்டைஅடிப்படையாக கொண்டு பண்டைய தமிழ் அரசர்கள் திருவள்ளுவர் ஆண்டுகலுக்கு முன் பின் என்று தான் பாவிக்கப்பட்டு வந்தது அந்நிய ஆக்கிரமங்கலுக்குப்பின் (தமிழ் அரசின் வீழ்ச்சிக்கு பின் )கிமு--கிபி என்று பலவந்தமாக மாற்றி எழுதப்பட்டது இவ் மாற்றம் மேற்குலகம் வெற்றியாக கொல்லலாம்இவ் வெற்றி தமிழுக்கு முன் தோல்வியாகும் மீண்டும் உண்மைசித்தியம் வெல்லும் இது வரலாறு கூறும்உண்மை.
திருவள்ளுவரது வேறு பெயர்கள்:
-நாயனார்
-தேவர்
-தெய்வப்புலவர்
-பெருநாவலர்
-பொய்யில் புலவர்
-நான்முகனார்
-மதனுபங்கி
-செந்நாப் போதார்
-பொய்யாப்புலவர்
திருக்குறள் சிறப்பு பெயர்கள்:
வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறள் கூறுவதால், அதைச் சிறப்பித்துப் பல பெயர்களால் அழைப்பர்:
Ø திருக்குறள்
Ø முப்பால்
Ø உத்தரவேதம்
Ø தெய்வநூல்
Ø பொதுமறை
Ø பொய்யாமொழி
Ø வாயுறை வாழ்த்து
Ø தமிழ் மறை
Ø திருவள்ளுவம்
என்ற பெயர்கள் அதற்குரியவை. கருத்துக்களை இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால் இந்நூல் "உலகப் பொது மறை" என்றும் அழைக்கப்படுகிறது.
திருக்குறள் அரங்கேற்றம்:
மதுரையிலே தமிழ் அரசர்கள் சங்கம் அமைத்து தமிழ் வளர்த்தனர். மூன்று சங்கங்கள் இருந்தன. கடைசியாக இருந்த சங்கம் கி.மு.500க்கும்அப்போதுதான் திருக்குறள், புலவர்கள் நடுவிலே பாடி அறிமுகம் செய்யப்பட்டது. மதுரையை "ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்' என்ற பாண்டிய மன்னன் அன்று ஆட்சி புரிந்துள்ளான். கிடைக்கின்ற செய்திகளையெல்லாம் இணைத்துப் பார்க்கின்றபோது, வள்ளுவர் என்ற மனிதர் இருந்தார் என்பதும், அவர் எழுதிய நூலே திருக்குறள் என்பதும் உறுதியாகிறது. ஆனால் அவரைப் பற்றிய அத்தனை செய்திகளும் அழிக்கப்பட்டுள்ளன.(தமிழா உண்பெருமையை நீய் அறியா அதைஅறிந்தவரின் நோக்கம் அழிக்கவேண்டும் எண்பதேயாகும்.)வள்ளுவர் காலத்துக்கு முன்பு இருந்த புலவர்களைப் பற்றியெல்லாம் சான்றுகள் இருக்கிறபோது, இவரைப்பற்றி எதுவும் இல்லாமல் இருப்பது வியப்புதான்..
என்ற திருக்குறள்களால் அடிசேர் முத்தியாகிய சித்தாந்த முத்தியைக் கூறுதலானும், ‘திருவள்ளுவ நாயனார் சித்தாந்த சைவர்’ என்பது தேற்றம்
திருக்குறளும் திருஞானசம்பந்தர் தேவாரமும்
Printer Friendly
வேதம்‘செய்யாமொழிக்கும் திருவள்ளுவர் மொழிந்த பொய்யா மொழிக்கும் பொருள் ஒன்றே” திருவள்ளுவமாலை, செய்யுள், 23) என்று வெள்ளிவீதியார் கூறுகின்றார். இங்குச் ‘ செய்யாமொழி என்றது வேதத்தைக் குறிக்கும். வேதமும், திருக்குறளும் பொருளால் ஒன்றே என உணர்த்தப்படுவதால், ஆன்றோர்கள் திருக்குறளை ‘உத்தரவேதம்” என அழைக்கலாயினர். பின்தோன்றிய வேதம் எனப் பொருள் ( உத்தரம் – பின்).சேக்கிழார் பெருமான் திருஞானசம்பந்தரை ‘வேதம் தமிழால் விரித்தார்” (திருஞானசம்பந்தர், செ. 289) எனப் போற்றுகிறார். எனவே திருஞானசம்பந்தர் தேவாரமும் ‘தமிழ்வேதம்” எனப் போற்றப்படும் சிறப்புடையது என்பது புலனாகும்.எழுதுமறை எழுதுமறை வேதம் ஏட்டில் எழுதப்படாது வாய்மொழியாகவே ஒதப்பட்டு வந்த காரணத்தினால் அதனை ‘எழுதாக்கிளவி” என அழைப்பார். திருக்குறளைக் கோதமனார் என்னும் புலவர்,‘ஆற்றல் அழியும் என்று அந்தணர்கள் நான்மறையைப்போற்றி உரைத்து ஏட்டின் புறத்து எழுதார் – ஏட்டெழுதிவல்லுநரும் வல்லாரும் வள்ளுவனார் முப்பாரைச்சொல்லிடினும் ஆற்றல் சோர்வின்று”(திருவள்ளுவமாலை, செ. 15)என்று கூறுவதால் திருக்குறள் எழுதுமறை எனப் போற்றப் படுகின்றது.சேக்;கிழாரும் திருஞானசம்பந்தரை, ‘வண்டமிழால் எழுதுமறை மொழிந்த பிரான்” (திருஞா. புராணம், செ. 260) என்று போற்றவதால் திருஞானசம்பந்தர் தேவாரமும் எழுதுமறை என ஆன்றோர்களால் போற்றப்பட்டு வருகின்றது.சம்பந்தர் தேவாரத்தில் திருக்குறள் மேற்கோள்கள் சம்பந்தர் தேவாரத்தில் திருக்குறள் மேற்கோள்கள்::::அகரமுதல அகரமுதல அகரமுதல:::: திருஞானசம்பந்தர் தேவாரத்தில் திருக்குறள் மேற்கோள்களாகப் பல இடங்களில் எடுத்தாளப்பட்டுள்ளன.முன்னோர் கூறிய பொருளை அவர்தம் சொல்லாமல் எடுத்துக் கூறுதலே மேற்கோள் எனப்படும்.
‘அகர முதல எழுத்தெல்லாமல் ஆதிபகவன் முதற்றே உலகு” (கடவுள் வாழ்த்து, 1)என்று கூறுகிறார். திருஞானசம்பந்தர்,‘அகரமுதலானை அணி ஆப்பனூரானை” (1:88:5) என்று கூறுகின்றார்.எண்ணும் எழுத்தும் கண் எண்ணும் எழுத்தும் கண்‘எண் என்ப ஏனை ஏழுத்தென்ப இவ்இரண்டும்கண் என்ப வாழும் உயிர்க்கு” (குறள், 392)என்கின்றார் வள்ளுவர். திருஞானசம்பந்தரும்,‘எண்ணும் ஒரெழுத்தும் இசையின் கிளவி தேர்வார்கண்ணும் முதலாய கடவுள்” (2:170:4)என்கின்றார்…. ஈத்துவக்கும் இன்பம ஈத்துவக்கும் இன்பம::::; அருளாளர்கள் தம் செல்வத்தை வறியவர்கட்குக் கொடுத்து, அதனால்அவர்கள் அனுபவிக்கும் இன்பத்தினைக் கண்டு தாமும் மகிழ்வர். இவ்வாறு ஈவதால் எய்தும் இன்பத்தினை ‘ஈத்துவக்கும் இன்பம்” என்பர்.தமது செல்வத்தைச் சேர்த்து வைத்துப் பின் அதனை இழந்து போகின்ற கொடியவர், வறியவர்க்குக் கொடுத்து அவர்கள் மகிழ்வதால் தமக்கு உண்டாகும் இன்பத்தை அறிய மாட்டார்கள்.‘ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமைவைத்திழக்கும் வன் கணவர்” (குறள், 228) என்கின்றார் வள்ளுவர்.ஈத்துவக்கும் இன்பத்தைத் திருஞானசம்பந்தர்‘ இன்மையால் சென்றிரந்தார்க்கு இல்லை என்னாது ஈத்துவக்கும்தன்மையார் ஆக்கூரில் தான் தோன்றி மாடமே” (2:178:9)என்று ஆக்கூர் அருளாளர்களின் ஈகைச் சிறப்பைப் போற்றும்போது குறிப்பிடுகின்றார்.
சலத்தால் பொருள் செய்யாமை: சலத்தால் பொருள் செய்யாமை: குற்றமற்ற தம்குலத்து மரபோடு ஒத்து வாழக் கருதுபவர்கள் வறுமை வந்துற்றபோதும், தம் குலத்துக்குப் பொருந்தாத தொழில்களைச் செய்யார். இதனை வள்ளுவர்,‘சலம் பற்றி சார்பில் செய்யார் மாசற்றகுலம் பற்றி வாழ்தும் என்பார்” (குறள், 956)என்கின்றார். தீயவழியில் பொருள் ஈட்டக்கூடாது என்பதை ஒமாம்ப+ர் சான்றோர் செயலால்,‘ சலத்தினால் பொருள்கள் வேண்டுதல் செய்யாத் தன்மையார் நன்மையால் மிக்க உலப்பில் பல்புகழார் ஓமாம்புவிய+ர்” (3:380:5)என ஞானசம்பந்தர் அறிவுறுத்துகின்றார்.சொல்லாட்சிகள் சொல்லாட்சிகள்: : : திருக்குறளில் காணப்படும் சொல்லாட்சிகள் சில, எப்பொருளில்திருக்குறளில் பயன்படுத்தப்பட்டுள்ளனவோ அப்பொருளிலேயே அச்சொற்கள் திருஞானசம்பந்தர் தேவாரத்திலும் பயிலப்பட்டுள்ளன. ஒரு சில எடுத்துக்காட்டுக்கள் இக்கட்டுரையில் காட்டப்படுகின்றன.ஈரம் ஈரம் —- அன்பு அன்பு அன்பு:::: அன்போடு கலந்து வஞ்சனை இல்லாது அறத்தை உணர்ந்தாரது வாயினின்று வரும் சொற்களே இன்சொற்கள் எனப்படும்.‘இன்சொலால் ஈரம் அளைஇப் படிறு இலவாம்சொற்பொருள் கண்டார் வாய்ச்சொல்” (குறள். 91)என்கிறார் வள்ளுவர். இங்கு ‘ஈரம்” என்பது அன்பு எனப் பொருள்படும்.‘ஈரம் ஏதும் இலனாகி எழுந்த இராவணன் (2:141:8)என்ற திருஞானசம்பந்தர் பாடலடியில் ‘ஈரம்” என்ற சொல் அன்பு என்ற பொருளில் பயிலப்பட்டுள்ளதைக் காண்க.படிறு படிறு —- பொய் பொய் பொய்::::கள்ள மனமுடையானின் பொய் ஒழுக்கத்தைப் பிறர் அறியவில்லை என்றாலும். அவனது உடம்பில் கலந்துள்ள ஐந்து ப+தங்களும் கண்டு தம்முள்ளே ஏளனமாகச் சிரிக்கும்.‘வஞ்சமனத்தான் படிற்று ஒழுக்கம் ப+தங்கள்ஐந்தும் அகத்தே நகும்” (குறள்.271)படிற்று ஒழுக்கம் என்பதில் ‘படிறு” என்றது பொய் எனப் பொருள்படும்.படைக்கலங்களை ஏந்திய எட்டுத் திருக்கரங்களை உடைய பெருமான் பொய்யாகப் பலியேற்பதுபோலப் பிரமக பாலத்தைக் கையில் ஏந்தி வீடுகளின் வாயில்களில் சென்று பலியேற்றுண்ணும் கள்வன் என்ற பொருளில்.‘படையிலங்கு கரம் எட்டுடையான் படிறாகக் கலனேந்திக்கடையிலங்கு மனையில் பலி கொண்டு உணும் கள்வன்” (1:3:2)என்று திருஞானசம்பந்தர் கூறுகின்றார். உலகமெல்லாவற்றையும் தமக்கு உடைமையாகக் கொண்ட இறைவன் பலி கொண்டு உண்டான் என்பது பொருந்தாது ஆதலின் அஃது அவருக்கு விளையாட்டு@ உண்மையன்று என்பது பொருள். இங்குப் ‘படிறு” என்றது பொய் எனப்பொருள்படும்.உடுக்கை – ஆடை ஆடை:::: ‘உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கேஇடுக்கண் களைவதாம் நட்பு” (குறள். 788)என்ற குறளில் உடுக்கை என்பது ஆடையைக் குறிக்கும்.உணவை உண்டு ஆடையைக் கைவிட்ட சமணர்களை. ‘உண்டு உடுக்கை விட்டார்கள்”(3:295:9) என்று சம்பந்தர் குறிப்பிடுவதில் உடுக்கை என்பது ஆடை எனப்பொருள்படுதல் காண்க.வெறி நாற்றம் வெறி நாற்றம் —- நறுமணம் நறுமணம் நறுமணம்‘முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்வேல் உண்கண் வேய்த்தோள் அவட்கு” ( குறள் 1113) மூங்கில் போலும் தோள்களை உடையளுக்கு உடல்நிறம். தளிர் நிறமாகும். பற்கள்முத்தாகும். இயல்பான மணம் நறுமணமாய் இருக்கும். மையுண்ட கண்கள் வேற்படையாகும்என்பது பொருள். இக்குறளில் ‘வெறிநாற்றம்” என்றது மணம் நறுமணத்தைக் குறித்தது.‘வெறியார் மலர்த் தாமரையான்” (1:39:9)‘நாற்றமலர் மிசை நான்முகன்” (1:116:9)என்ற திருஞானசம்பந்தர் பாடலடிகளில் ‘வெறி, நாற்றம்” என்பன நறுமணம் எனப்பொருள்படுதல் காண்க.
பயனில சொல்லாமை பயனில சொல்லாமை:::: பயனில்லாத சொற்களைப் பலமுறையும் பேசுகின்றவனை மனிதன் என்று சொல்லாதீர்கள. அவன் மக்களுள் பதர் எனக் குறிப்பிடுகின்றார். வள்ளுவர் (குறள்,196).‘பேச்சினால் உனக்கு ஆவது என் பேதைகாள்” (2:142:2) என்பதால், சிவசம்பந்தமில்லாத அவப்பேச்சால் ஒரு பயனுமில்லை. அவ்வாறு பேசுபவர்கள் அறிவிலிகள் என அறிவுறுத்துகின்றார் திருஞான சம்பந்தர்.‘சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்கசொல்லிற் பயனிலாச் சொல்” (குறள், 200) என்று வள்ளுவர் கூறுகிறார்.‘பெற்றம் அமரும் பெருமானை அல்லால்பேசுவது மற்றோர் பேச்சிலோமே” (1:5:9)என்பதால் மெய்யுணர்வு பெற்றவர்கள் இறைவனைப் பற்றிய பேச்சு அல்லாமல் வேறு பயனில்லாத வீண்பேச்சுப் பேசமாட்டார் எனத் திருஞானசம்பந்தர் அறிவுறுத்துகிறார்.சிவநெறிக் கொள்கைகளில் ஒப்புமை சிவநெறிக் கொள்கைகளில் ஒப்புமை:::: சிவநெறிக்கொள்கைகள் கூறும் இறைவன், உயிர்,உலகம் என்ற முப்பொருட்கள் பற்றிய கருத்துக்களில் இவ்விருநூல்களுக்குமிடையேயானஒப்புமையான கருத்துக்கள் சில இப்பத்தியில் ஆராய்ந்து கூறப்படுகின்றன.இறைவன் இறைவன்:::: வள்ளுவர் இறைவனை ‘ஆதிபகவன்” (கடவுள் வாழ்த்து,) எனக் குறிப்பிடுகின்றார். திருஞானசம்பந்தரும்,‘ஆதி பாதமே ஓதி உய்ம்மினே”‘பரமன் பகவன் பரமேச்சுவரன் பழனநகராரே” (1:67:4)என இறைவனைக் குறிப்பிடுகின்றார்.வள்ளுவர் இறைவனை ‘வாலறிவன்” (கடவுள் வாழ்த்து, 2) எனக் குறிப்பிடுகின்றார்.வாலறிவன் என்றால் தூய அறிவினன், நிறைந்த ஞானமுடையவன் எனப் பொருள்.திருஞானசம்பந்தரும், ‘ஞானத்திரளாய் நின்ற பெருமான்” (1:69:3) என இறைவனைப்போற்றுகின்றார்.திருவள்ளுவ் இறைவன் அன்பர்களின் நெஞ்சமாகிய தாமரைமலரில் வீற்றிருப்பவன் என ‘மலர்மிசை ஏகினான்” (குறள், 3) என குறிப்பிடுவதும், திருஞானசம்பந்தர் ‘மலர்மிசை யெழுதரு பொருள்” (1:21:5) என்று இறைவனப் போற்றுவதும் ஒப்புநொக்கத்தக்கது.திருவள்ளுவர் இறைவனைப் ‘பொறிவாயில் ஐந்தவித்தான்” (குறள், 6) என்று குறிப்பிடுவது போலத் திருஞான சம்பந்தரும்,’புலன்கள் வென்றவன் எம் இறைவன்” (3:319:7) என இறைவனைப் போற்றுகின்றனர்.இறைவனுக்கு ஒப்பாக எவரையும் கூற முடியாது ஆதலால் வள்ளுவர், ‘தனக்குவமை இல்லாதவன்” (குறள், 7) என்று குறிப்பிடுவது போலத் திருஞானசம்பந்தரும் ‘தன்னேர்பிறரில்லான்” (2:198:3) எனப் போற்றுகின்றார்.இறைவன் அறக்கடலாக விளங்குவதை வள்ளுவர் ‘அறவாழி” ((குறள், என்கின்றார்.திருஞானசம்பந்தரும் இறைவன் அறவடிவினன் என்பதை அறிவுறுத்துகின்றார் (1:9:2, 2:199:11).இறைவனின் குணங்கள் இறைவனின் குணங்கள்:::: இறைவனை ‘எண்குணத்தான்” (குறள், 9) என வள்ளுவர்குறிப்பிடுகின்றார். தன்வயத்தனாதல் (சுதந்தரமுடையவன்) தூயஉடம்பினனாதல்,இயல்பாகவே பாசங்களை நீக்கியவன், இயற்கை உணர்வினன், முற்றுணர்வினன்,பேரருளுடையவன், முடிவிலாற்றலுடையவன், வரம்பிலின்பமுடையவன் என எண்குணங்களைப்பரிமேலழகர் குறிப்பிடுகின்றார். திருஞானசம்பந்தரும் இறைவன் எண்குணத்தினன் எனக்குறிப்பிடுகின்றார் (1:131:1)உயிர்கள் உயிர்கள் உயிர்கள்:::: இவ்விருநூல்கட்கும் உயரிகள் பல என்பதில் உடன்பாடு உண்டு (குறள், 322:திருஞானசம்பந்தர் தேவாரம், 1: 53:2, 1:63:4). உயிர் இவ்வுடம்பிற்கு வேறாய் உள்ளது என்பதும், அது தான் செய்யும் வினைக்கீடாக வேறுவேறு பிறப்புக்களுள் புகுந்து உழன்று வரும் என்பது வள்ளுவர் கருத்து. அவர்,‘குடம்பை தனித் தொழியப் புட்பறந்தற்றேஉடம்போடு உயிரிடை நட்பு” (குறள், 338) என்கிறார். இதனால் புள் (பறவை),குடம்பையின் (முட்டை அல்லது கூடு) வேறாயினாற்போல உயிர் உடம்பின் வேறாயுள்ளதுஎன்பது பெறப்படும். திருஞானசம்பந்தரும் ‘உடல் வரையின் உயிர்” (3:363:1) எனஉடல்வேறு, உயிர்வேறு என உணர்த்துகிறார்.‘உறங்குவது போதும் சாக்காடு உறங்கிவிழிப்பது போலும் பிறப்பு” (குறள், 339)என்பதால் உறக்கமும், விழிப்பும் மாறி மாறி வருதல் போல, உயிர்கட்கு இறப்பும், பிறப்பும்மாறி மாறிவரும் என மறுபிறப்பு உண்மை பெறப்படும். திருஞான சம்பந்தரும் மறுபிறப்புபற்றிக் கூறுகின்றார் (2:182:1, 3:353:9).பாசம் பாசம்::::ஆணவம், கன்மம், மாயை முதலியன பாசம் என்ற சொல்லால் சிவநெறிக்கொள்கைகளில் குறிப்பிடப்படும். ‘யான எனது என்னும் செருக்கு” (குறள், 346) என்பதில்‘செருக்கு” என்றது ஆணவத்தைக் குறிக்கும். இவ் ஆணவமே உயர்கள் இறைவனை உணரா வண்ணம் அவற்றின் அறிவை மறைக்கின்றது. இந்த மறைத்தல் சக்தி காரணமாக அஃது இருள் எனப்படும். ஆணவமலச் சேர்க்கை காரணமாக உயிர்கள் செய்யும்செயல்களே வினை எனப்படும். இச்சிவநெறிக் கொள்கையை ‘இருள்;சேர் இருவினை” (குறள்,5) என்ற தொடர் உணர்த்துவது காண்க. திருஞானசம்பந்தரும் ‘ஊனத்திருள்” (1:38:3) என ஆணவத்தையும், ‘நல்வினை” (2:207:11), தீவனை (2:207:11) என இருவினைகள் பற்றியும் குறிப்பிடுகின்றார். இறைவனை வணங்குதலின் இன்றியாமை இறைவனை வணங்குதலின் இன்றியாமை:::: ‘கோளில் பொறியில் குணமிலவேஎண்குணத்தான்தாளை வணங்காத் தலை” (குறள், 9)எனத் தலை முதலிய உறுப்புகள் இறைவனை வணங்காவிடில் காணாத கண்போல, கேளாதசெவிபோல, மற்றும் தம் தம் புலன்களைக் கொள்ளாத பிற பொறிகள் போலப்பயனற்றவையாய்க் குற்றமுடையவனவாம் என வள்ளுவர் கூறுகிறார்.‘ஆமாத்தூர் அ ‘ஆமாத்தூர் அ ‘ஆமாத்தூர் அம்மானைக் காணாத கண்ணெல்லாம் காணாத கண்களே” (2:180:4) ம்மானைக் காணாத கண்ணெல்லாம் காணாத கண்களே” (2:180:4) ம்மானைக் காணாத கண்ணெல்லாம் காணாத கண்களே” (2:180:4)‘ஆமாத்தூர் அம்மானைக் கூறாத நாவெல்லாம் கூறாத நாக்களே” (2:180:7) ‘ஆமாத்தூர் அம்மானைக் கூறாத நாவெல்லாம் கூறாத நாக்களே” (2:180:7) ‘ஆமாத்தூர் அம்மானைக் கூறாத நாவெல்லாம் கூறாத நாக்களே” (2:180:7); ‘ஆமாத்தூர் அம்மானைக் கேளாச் செவியெல்லாம் கேளாச் செவிகளே”(2:180:8) என்ற திருஞானசம்பந்தரின் தேவார அடிகள் முற்கூறிய திருக்குறள் கருத்துடன் ஒப்புடையதாய் விளங்குவதைக் காண்க.இறைவனைப் புகழ்வதால் உண்டாகும் நன்மை இறைவனைப் புகழ்வதால் உண்டாகும் நன்மை:::: இறைவனைப் புகழ்ந்து போற்றுபவர்களைஇருவினைகள் வந்தடையா.‘இருள்சோ இருவினையும் சேரா இறைவன்பொருள் சேர் புகழ்புரிந்தார் மாட்டு” (குறள்,5)என்கிறார் வள்ளுவர்.திருஞானசம்பந்தரும்,‘நல்லூர்ப் பெருமானைப் பாடும் அடியார்கட்குஅடையா பாவமே” (1:86:3) என்கின்றார்
முடிவுரை1. திருக்குறள் உத்தரவேதம் என்றும், திருஞானசம்பந்தர் தேவாரம் தமிழ்வேதம் என்றும் போற்றப்படுகின்றன.2. இவ்விரு நூல்களையும் எழுதுமறை என் ஆன்றோர்கள் போற்றியுள்ளனர்.3. திருஞானசம்பந்தர் தேவாரத்தில் திருக்குறள் மேற்கோள்களாகப் பல இடங்களில் எடுத்தாளப்பட்டுள்ளன.4. சில சொல்லாட்சிகள் திருக்குறளில் எப்பொருளில் வழங்கப்பட்டனவோ, அப்பொருளில்அச்சொற்கள் திருஞானசம்பந்தர் தேவாரத்திலும் பயிலப்பட்டுள்ளன.5. திருக்குறளனின் கருத்துக்களை உள்ளடக்கித் திருஞானசம்பந்தர் தேவார அடிகள் பலவிளங்குகின்றன.6. ப+க்களால் தொடுக்கப்பட்ட மாலைக்குள் இழைநார் ஊடுருவிச் செல்வது போல, திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல்களில் மனிதனின் உள்ளத்தைப் பண்படுத்தும் உயரிய அறக்கருத்துக்கள் திருக்குறளின் அறக்கருத்துக்களுடன் இவ் ஆய்வில்ஒப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளன.7. இவ்விரு நூல்கட்கிடையே சிவநெறிக் கொள்கைகளில் ஒப்புமைகள் பல உள்ளன. ஆயினும் இட எல்லை கருதி ஒரு சில ஒப்புமைகள் மட்டுமே இங்குச் சுட்டிக் காட்டப்பட்டன.8. இவ்வாறு திருக்குறளுக்கும், திருஞானசம்பந்தர் தேவாரத்திற்கும் இடையே காணப்படும்ஒப்புமைகள் பலவாகும். இவ்விரு நூல்களையும் ஊன்றிப் படித்து ஆராய்வோர்க்கு அவை உவப்பிலா ஆனந்தத்தை உண்டாகும்;.
ஜோசப் பெஸ்கி என்கிற வீரமாமுனிவர் --படியுங்கள் பரப்புங்கள் வருங்காலச் சந்ததியிணருக்கு எடுத்துரையுங்கள்
/
ஜோசப் பெஸ்கி என்கிற வீரமாமுனிவர் --படியுங்கள் பரப்புங்கள் வருங்காலச் சந்ததியிணருக்கு எடுத்துரையுங்கள்
/
கிறிஸ்துவப் படையெடுப்புகளும் மதமாற்றமும்-
போர்ச்சுகீசியப் படையெடுப்பின் போதுதான்
நூற்றுக் கணக்கான கோவில்கள் தரைமட்டமாக்கப் பட்டன;
பல்லாயிரக் கணக்கான இந்துக்கள் மதமாற்றம் செய்யப்பட்டனர்.
மதம் மாற மறுத்த இந்துக்கள் கொல்லப்பட்டனர்.
பெண்கள் கற்பழிக்கப்பட்டு, குழந்தைகளும் கொல்லப்பட்டனர்.
போர்ச்சுகீசியர் கோவாவில் மட்டுமல்லாமல்,
கேரளம் மற்றும் தமிழகத்திலும் நுழைந்து தங்கள் கிறிஸ்துவ மதத்தை ஓரளவு ஸ்தாபித்தனர்.
இதை நாம் சொல்லவில்லை. வரலாறு பேசுகிறது.
அவர்கள் அவிழ்த்து விட்டதுதான் ‘புனித தாமஸ்’
என்கிற கற்பனைக் கதா பாத்திரமும் அவரைப் பற்றிய கட்டுக்கதைகளும்.
தாமஸ் கட்டுக்கதை
கோவாவில் செய்தது போலவே, வட தமிழகத்தின் (சென்னை) கடலோரத்தில் அற்புதமாக அமைந்திருந்த ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலையும் அழித்து அந்த இடத்தில் புனித தாமஸ் (Santhome Church) தேவாலயத்தை அமைத்தனர். மேலும் தற்போது ‘புனித தோமையர் மலை’ (St. Thomas Mount) என்று அழைக்கப்படும் பிருங்கி மலையில் (பிருங்கி முனிவர் தவம் செய்த மலை பிருங்கி மலை – இதுவே பின்னர் பறங்கி மலையாக மருவியது) உள்ள கோவில்களையும் அழித்து, அங்கும் ஒரு தேவாலயத்தை அமைத்தனர். புனித தாமசை ஒரு மயிலை பிராம்மணர் ஈட்டியால் குத்திக் கொன்றதாகவும் அவரது உடல் அங்கே புதைக்கப் பட்டிருப்பதாகவும் கதை கட்டிவிட்டனர்.
இங்கே முக்கியமாகக் கவனிக்கப் படவேண்டிய விஷயம் என்னவென்றால் தாமஸ் என்று ஒருவர் தமிழகத்துக்கு வந்தார் என்பதற்கோ, இங்கே ஒரு பிராம்மணர் அவரைக் கொன்றார் என்பதற்கோ எந்த வரலாற்றுச் சான்றும் கிடையாது. ஆனால், போர்ச்சுகீசியர் படையெடுத்து வந்து ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலை அழித்தனர் என்பதற்கும், பிருங்கி மலையில் இருந்த கோவிலையும் அழித்தனர் என்பதற்கும் கல்வெட்டு ஆதாரங்கள் உட்படப் பல ஆதாரங்கள் இருக்கின்றன. எனவே, இந்தத் தாமஸ் என்கிற கதாபாத்திரத்தை உருவாக்கியதே பாரதத்தின் தென்பகுதியில் உள்ள இந்துக்களை மதமாற்றம் செய்யத்தான்.
தாமஸ் இங்கு வந்து திருவள்ளுவருக்கு குருவாக இருந்தார் என்றும் திருவள்ளுவர் தாமஸிடம் பைபிள் கற்று, பின்னர் பைபிளில் உள்ள பல கருத்துக்களின் அடிப்படையில் திருக்குறளை இயற்றினார் என்றும் கதை கட்டிவிட்டது தான் தமிழுக்குப் பங்குத் தந்தைகளின் பங்களிப்பு. பதினெண்கீழ் கணக்கு நூல்களில் ஒன்றாகும் திருக்குறள். நம்மிடமுள்ள வரலாற்றுச் சான்றுகளை வைத்துப் பார்த்தால் திருவள்ளுவர் இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்திருப்பார் என்று தெரிய வருகிறது. மேலும் இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் இயற்றப்பட்ட கம்ப ராமாயணம், பெரிய புராணம் ஆகியவற்றில் திருக்குறள் கருத்துக்கள் காணப்படுவதும், கிறிஸ்துவம் பற்றிய ஒரு தகவலும் இல்லாமல் இருப்பதுமே, இவர்களின் தாமஸ் கதை சரியான ஏமாற்று வேலை என்பதை வெளிச்சம் போட்டுக் காண்பிக்கிறது. மயிலையில் உள்ள புனித தாமஸ் தேவாலயத்தின் சுவர்களில் பதினோராம் நூற்றாண்டு ராஜேந்திர சோழனின் கல்வெட்டுக் குறிப்புகள் இருந்து பின்னர் அழிக்கப் பட்டுள்ளன. கிறிஸ்தவர்களின் தாமஸ் கூத்தை “புனித தாமஸ் கட்டுக்கதையும் மயிலை சிவாலயமும்” என்ற புத்தகத்தின் மூலம் ஈஸ்வர் சரண் என்கிற ஆராய்ச்சியாளர் தோலுரித்துக் காட்டியுள்ளார். வேதம் வேதபிரகாஷ் என்கிற வரலாற்று ஆசிரியரும், தன்னுடைய “புனித தாமஸ் கட்டுக்கதை” என்கிற புத்தகத்தில் கிறிஸ்துவர்களின் சூழ்ச்சியை நிரூபித்துள்ளார். ஈஸ்வர் சரண் தாஸ் எழுதியுள்ள The Myth of St.Thomas and Mylapore Shiva Temple என்ற கட்டுரையை அவசியம் படியுங்கள். அதற்குக் கோன்ராட் யெல்ட்ஸ் எழுதியுள்ள முன்னுரையும் படிக்க வேண்டிய ஒன்று.
தெய்வநாயகத்தின் விஷவித்து
தமிழர் சமயம் பற்றிய திரிப்பு வேலையில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் தெய்வநாயகம் ‘விவிலியம், திருக்குறள், சைவ சித்தாந்தம் – ஒப்பு ஆய்வு’ என்கிற ஒரு நூலை 1985-86 ல் எழுதி வெளியிட்டு இந்தப் புனித தாமஸ் கட்டுக்கதையை உண்மையென ஸ்தாபிக்க முயற்சி செய்தார். ஆனால் அருணை வடிவேல் முதலியார் என்கிற தமிழறிஞர் மூலம் தரமான மறுப்பு நூல் ஒன்றை வெளியிட்டு தருமை ஆதீனத்தைச் சேர்ந்த அனைத்துலக சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவனத்தினர் தெய்வநாயகத்தின் சதியை முறியடித்தனர். அந்த நூல்: “விவிலியம் திருக்குறள் சைவ சித்தாந்தம் ஒப்பாய்வின் மறுப்பு நூல்” – அனைத்துலக சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவனம், தருமபுரம் ஆதீனம் – 1991].
சரி, இந்த தெய்வநாயகத்தின் குறிக்கோள் தான் என்ன?
தமிழர்களை இந்து மதத்திலிருந்து பிரிப்பது; தமிழ் சமயம் வேறு இந்து மதம் வேறு என்று நிறுவுவது; ஆதி கிறிஸ்துவமே தமிழர்களின் சமயம் என்றும் அதிலிருந்து வெளியானவே சைவமும் வைணவமும் என்றும் ஸ்தாபிப்பது; ஆதாமுக்கு கடவுள் கற்றுக் கொடுத்த முதல் மொழியே தமிழ் என்றும், ஆதாம் முதல் மெய்க்கண்டார் வரை வந்துள்ள ஆன்மீகச் சிந்தனையாளர்களின் கருத்துக்களின் தொகுப்பே ‘தமிழர் சமயம்’ என்று நிறுவுவது; என்பன போன்ற துளியும் ஆதாரமற்ற, தமிழருக்கு, தமிழ் நிலத்துக்கு எதிரான கோட்பாடுகளை உண்மையெனச் சாதிப்பதே அவரது குறிக்கோள்
பித்தலாட்டத்தின் முன்னோடிகள்
இங்கே கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால் இவர் திடீரென்று கிளம்பவில்லை. இவருக்கு முன்னோடியாக நம் தமிழகத்தில் சில வந்தேறிகள் முயற்சி செய்துள்ளனர். அதில் முதலாமவர் 17-ம் நூற்றாண்டில் பிரான்சு நாட்டிலிருந்து வந்த ராபர்ட் தே நொபிலி (1577-1656) என்கிற கிறிஸ்துவப் பாதிரியார். இவர் நம் மக்களைச் சுலபமாக மதமாற்றம் செய்யவேண்டும் என்பதற்காக சமஸ்க்ருதம் கற்றுக்கொண்டு தன்னை “ரோமாபுரி பிராம்மணர்” என்றும் சொல்லிக்கொண்டார். காவி உடை அணிந்து உடம்பில் ஒரு பூணூலையும் அணிந்து கொண்டு, ஒரு ஆச்ரமத்தையும் அமைத்துக் கொண்டார். பைபிள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் மறைந்து போன வேதங்களில் ஒன்று என்று சாதித்தார். காவி, பூணூல் அணிந்து குடில் ஒன்றில் ஆச்ரமம் அமைத்து போதனை செய்ததால் ஓரளவிற்கு மதமாற்றம் செய்வதில் வெற்றியும் கண்டார். ஆனால் இவருடைய “கலாசாரக் களவுக்கலவை” (inculturation) முறை ஐரோப்பிய ஆசான்களுக்கு சற்றும் ஒப்புடைமை இல்லையாதலால் இவருடைய முயற்சிகள் பாதியில் நின்று போயின. [Refer: The Portuguese in India, Orient Longman, Hyderabad, 1990)]
ஜி யு போப் என்கிற போப்பையர் (1820-1907), கன்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி என்கிற வீரமாமுனிவர் (1680-1746) போன்றவர்களும் தமிழ் கற்றுக்கொண்டு தமிழ் நூல்களை மொழி பெயர்த்ததும், வேறு சில தமிழ் நூல்களை எழுதியதும் தமிழ் மொழி மேல் இருந்த பற்றினால் அல்ல. சீகன் பால்கு ஐயர் (ஜெர்மானியர்), இரேனியஸ் (ஜெர்மானியர்) மற்றும் எல்லிஸ் துரை (Francis Whyte Ellis) ஆகியோரும் தமிழ்த் தொண்டு புரியும் நோக்கில் மொழித் தொண்டிர்ன் போர்வையில் சமயப் பணி ஆற்றியவர்களே. இவர்களைப் போலவே கால்டுவெல் என்கிற பாதிரியாரும் முழுப் பொய்யும், புளுகும், புனைசுருட்டுமான ‘ஆரிய-திராவிட’ இனக் கோட்பாடுகளை உண்மையான சரித்திரம் எனப் புகுத்தி தமிழ் மக்களைப் பிளவுபடுத்தி மதமாற்றம் செய்ய அதிக நாட்டம் காட்டினார்.
இன்றைய திராவிட இனவெறியாளர்கள் இந்தப் புளுகுகளை விவிலியமாக ஏற்றுக் கொண்டுவிட்டனர். தமிழகத்தை நாசமாக்கிக் கொண்டிருக்கும் “திராவிட இனவெறி” என்கிற நச்சு மரத்துக்கு வித்திட்டவர் இந்த பிஷப் கால்டுவெல்தான் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.
கலாசாரக் களவு (Inculturation)
மேற்கண்ட மாதிரி அடிப்படை நாணயமற்ற நபர்களைக் கொண்ட சர்ச்சுகளும் மிஷனரிகளும் ‘மொழிக் களவு’ (Hijacking the native language), ‘கலாசாரக் களவு’, ‘இனவெறி’ (Racism) ஆகியஅபாயகரமான யுக்திகளின் மூலம் மதமாற்றம் செய்யத் தொடங்கினர். இவற்றில், இடையே சற்று மங்கியிருந்த ‘கலாசாரக் களவு’ (inculturation) முன்னரே உண்டு என்ற போதும் தற்போது பெரிதாகத் தலை தூக்கியிருக்கிறது. அதாவது, ‘கத்தோலிக்க ஆஸ்ரமங்கள்’ அமைத்தல்; ஆஸ்ரமத்தின் நுழைவாயிலின் முகப்பில் ‘ஓம்’ சின்னத்தை வைத்தல்; ‘ஓம்’ என்பது “வேதச்சொல்” என்றும் “இந்துச்சொல் அல்ல” என்றும் சாதித்தல்; ஆஸ்ரமத்தின் உள்ளே யோக முத்திரையுடன் பத்மாசனத்தில் தியானம் செய்வதுபோல் இயேசு வீற்றிருக்கும் சிலை அமைத்தல்; தாமரை மலரின் மேல் இயேசு ஒரு கால் மடக்கி, ஒரு கால் கீழே தொங்க விட்டு வீற்றிருப்பது போல் சிலையமைத்தல்; ஆஸ்ரமத்தில் உள்ள பாதிரியார்கள், கன்யாஸ்திரீகள் காவியுடை அணிதல்; போன்ற இந்துமதப் புனித வழிகளைப் போலியாக பாவனையில் ஏற்று, மக்களை ஏமாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன.
மேலும், யேசுவுக்கு ‘அஷ்டோத்திர நாமாவளி’, ‘ஸஹஸ்ர நாமாவளி’ அர்ச்சனைகள் செய்தல்; வேளாங்கண்ணி போன்ற சில கிறிஸ்துவ தேவாலயங்கள் உள்ள ஊர்களுக்குப் “பாத யாத்திரை” போதல்; “இருமுடி” தூக்குதல்; மேரி மாதாவை “மாரியம்மன்” என்று சொல்லுதல்; சில மலைகள் மேல் அரசாங்கத்தின் அனுமதி இன்றிச் சர்ச்சுகள் கட்டி அந்த மலைகளைச் சுற்றி பௌர்ணமி “கிரிவலம்” ஏற்பாடு செய்தல்; என இந்து மத ஆன்மீக வழிபாட்டு முறைகளையும் கலாசாரக் களவாடுதலிலும் சர்ச்சுகளும் மிஷனரிகளும் இறங்கியுள்ளன.
இந்துக்களைச் சீண்டுதல்
முச்சந்திகளில் நாம் பிள்ளையார் சிலைகள் வைத்து வழிபடுதல் போல, மேரி சிலைகளை வைக்க ஆரம்பித்துள்ளனர். எல்லா நகரங்கள் மற்றும் ஊர்களின் எல்லைகளில் வரிசையாக சர்ச்சுகளும் பிரார்த்தனைக் குடில்களும் அமைக்கின்றனர். ஒவ்வொரு பகுதியிலும் தங்கள் ஜனத்தொகைக்கு சிறிதும் சம்பந்தம் இல்லாமல், அளவுக்கதிகமான சர்ச்சுகள், மற்றும் பிரார்த்தனைக் குடில்கள் அமைக்கின்றனர். (இப்படிச் செய்வது மிக லாபகரமான, வெளிநாட்டு வருவாய் ஈட்டும் தொழில் என்பதும் மக்கள் அறிந்ததே). மலைகள், குன்றுகளின் மீது வெள்ளை வர்ணத்தில் சிலுவை வரைதல், ‘மரியே வாழ்க’ என்று எழுதுதல் கணக்கின்றி அதிகரித்து வருகிறது.
வேண்டுமென்றே இந்துக் கோவில்களுக்கு எதிரிலோ, அல்லது அருகிலோ சர்ச்சுகளை கட்டுகின்றனர். அவைகளில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக ஒலிபெருக்கி மூலம் மதப் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர். பின்னர் இந்துக் கோவில்களுக்கு வரும் பக்தர்களிடம் மதமாற்றப் பிரச்சாரம் செய்கின்றனர். இந்துக் கடவுள்களைக் கேலி, கிண்டல், அவமானம் செய்யும் துண்டுப் பிரசுரங்களையும், இந்து மதப் பழக்க வழக்கங்களை ஏளனம் செய்யும் துண்டுப் பிரசுரங்களையும், ஏசுவைப் புகழ்ந்து எழுதப் பட்டிருக்கும் கையேடுகளையும், கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் வழங்கி அவர்களை மதமாற்றம் செய்ய முயல்கின்றனர். உதாரணமாக, சென்னை மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில், திருவேற்காடு ஸ்ரீ கருமாரியம்மன் கோவில் போன்ற மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களின் வாசலில் கூட இந்த மாதிரிப் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். (ஆதாரம்: குமுதம் ஜோதிடம் – 14 நவம்பர் 2008 தேதியிட்ட இதழ்)
இந்துக்களைக் குழப்பும் சதி வேலை
தெய்வநாயகம் போன்ற போலி ஆராய்ச்சியாளர்கள் நம் மக்களின் மனதைக் குழப்புகின்ற நோக்கில், பல புத்தகங்களை அச்சடித்து வெளியிடுகின்றனர். அவர் சமீபத்தில் ‘திருநீறா சிலுவையா’ என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளார். அந்தப் புத்தகத்தில், “திருநீறு என்பது சாம்பல் புதன்கிழமை என்கிற ஆதி கிறிஸ்துவ விரதத்திலிருந்து வந்தது. இடம்-வலமாக நெற்றியில் இட்டுக்கொள்ளும் பழக்கம், ஆதி கிறிஸ்துவ சைவத்திலிருந்து, வைணவம் பிரிந்தபோது, மேல்-கீழாகத் திருமண் இட்டுக் கொள்ளும் பழக்கமாக மாறியது. சிவன் தன் இடது பாகத்தை சக்தியிடம் கொடுத்த பிறகு, அந்த சக்தியைப் “பெண்ணாக” வழிபட்டால் அவள் “பார்வதி” என்றும், “ஆணாக” வழிபட்டால் அவர் “விஷ்ணு” என்றும் போற்றப் படுகிறார்கள். திருஞான சம்பந்தரின் “திருநீற்றுப் பதிகம்” கிறிஸ்துவ மதக் கோட்பாடுகளையே இயம்புகிறது. தேவாரம், திருவாசகம், திருப்பதிகம் என அனைத்து சைவ இலக்கியங்களும் ரிக்கு, யஜூர், சாமம் என்ற வேதங்களைப் பற்றிச் சொல்லாமல் கிறிஸ்துவ வேதமாகிய பைபிளின் தத்துவங்களையே சொல்கின்றன” என்றெல்லாம் அபத்தக் களஞ்சியங்களை அள்ளி வீசியிருக்கிறார். மிகவும் நல்லது ஐயா! அப்படியென்றால் பேசாமல் நீங்கள் எல்லோரும் திருநீறோ, திருமண்ணோ இட்டுக் கொண்டு எமது கோவில்களில் வந்து வழிபட வேண்டியதுதானே! எங்களுக்குப் புரியாதா உங்கள் திருகுதாளங்கள். பொய் சொல்வது தவறு என்று விவிலியத்தில் சொல்லப்படவே இல்லையா அன்பரே? இல்லை உங்களுக்குத்தான் நாவு கூசவில்லையா?
மேலும், “புனித தோமையர்” (St.Thomas) தமிழகத்தில் நிறுவிய ஆதி கிறிஸ்துவமே தமிழர்களின் மதமாம். ‘இந்தியாவின் மீது படையெடுத்து வந்த ஆரியர்களே ஆதி கிறிஸ்துவத்தைத் திரித்து சைவம், வைணவம் என்கிற கோட்பாடுகளை உண்டாக்கினராம். எனவே சைவம் வைணவம் ஆகியவை ஆதி கிறிஸ்துவத்தின் உப பிரிவுகளாகவே கொள்ளப்படவேண்டும். “பிதா-மகன்-பரிசுத்த ஆவி” என்கிற புனித மூவர் “சிவன்-முருகன்-சக்தி” என்றும் “பிரம்மா-விஷ்ணு-ருத்ரன்” என்றும் அழைக்கப் படுகின்றனர்” என்றெல்லாம் இந்துக்களின் மனமும் உணர்வும் புண்படும்படியாக பல அருவருக்கத்தக்க பிதற்றல்கள் ஏராளமாக எழுதப் பட்டுள்ளன. இவற்றையெல்லாம் ஒரு முட்டாளின், மன நோயாளியின் பிதற்றல்கள் என்று அசட்டை செய்துவிடக் கூடாது. விஷமே உருவான ஒரு மனிதனின் நச்சுக் கருத்துகள் என்பதை உணர்ந்து அவற்றைப் பரவவிடாமல் அழிக்கவேண்டும்.
மதம் மாற்றுவதை நாம் தவறென்று சொல்லவில்லை. அது புரிதலின், அங்கீகரித்தலின் அடிப்படையில் ஏற்பட வேண்டும். அப்படியல்லாமல் பணம், தாய்மதத்தைப் பற்றித் திரித்துக் கூறுதல், அரசியல் அதிகாரத்தைக் கையகப்படுத்திக் கொள்ளுதல், இல்லாத நேயத்தை இருப்பதாகக் காட்டிக் கொள்ளுதல் என்று இவ்வாறு பலவகை புனைவுகளாலும் வேடங்களாலும் சற்றும் மனசாட்சியின்றிச் செய்யப்படுவதைத்தான் இங்கே விவரிக்கிறோம், கண்டிக்கிறோம். இதனை மதம் மாறிவிட்டவர்களும், மாறத் தயாராகிவிட்டவர்களும் புரிந்து கொள்ள வேண்டும் இதைப் பற்றிய விழிப்புணர்வு ஒவ்வொரு இந்துவுக்கும் தேவை.
இதன் அரசியல் பரிமாணங்களை, சூதுகளை அடுத்த பகுதியில் பார்க்கலாம்
எல்லா சமவுடமை தத்துவங்கலும் சைவசமயத்திலிருந்து பெறப்பட்டவையாகும்.
இந்த சமத்துவக்கொள்கை உயிரின் தன்மையையும் அதன் வாழ்வையும் அடிப்படையாகக் கொண்டசமயமும், உயிரின் வாழ்வைக் நெறிப்படுத்த தக்க மொழியும் முடிந்தமுடிவுகளை உணர்ந்து ஏற்றுக்கொண்ட ஒரே ஒரு சமூகம்
சைவ சமய வழிப்பட்டதமிழர்களே தான் .
மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம் இதணுல் எல்லாம் அடங்கும்
அன்பே சிவம் மூலம் மணிதபரிணாம வளர்ச்சி கண்ட சமுதாயத்தில் நாகரீகத்தின் வளர்ச்சி எண்பது சமத்துவ வாழ்வை எடுத்துக்காட்டும் அதேவேளை.
உருவாணா படியிணால் சமுதாயா ஏற்றத்தாழ்வு எண்பது இருக்க முடியாது
தற்பொழுது காணப்படு ஏற்றத்தாழ்வுகள் வந்தேறு சமய வியாபாரிகலிணால் கடந்த 4000 ஆண்டுகாலத்திணுல் தமிழரை அழிக்கும் நோக்குடன் நமது முண்ணோர் மீது தமிழ் துரோகிகளை வைத்து திணிக்கபட்டைவையாகும்.
மணிதபரிணாம வளர்ச்சியடையாத சமுதாயத்திலும் நீதி இல்லாதா இடங்கலிலும் அன்பு பரிமாற்றம் இல்லாத கலாச்சார வாழ்வுடைய மக்கள் மத்தியில் தான் சமவுடமை தோன்றமுடியும்.
உலகம் சமநிலை பெறவேண்டும் என்ற கோட்பாட்டை வலியுறித்தியவர் தமிழ்மாமுனி அகத்தியர் ஆகும் இதணுல் பொதிந்து கிடக்கும் யோகசாத்திரங்கல் உண்ணை வாழவைக்கும்.
மணிதபரிணாம வளர்ச்சியைப் பற்றி மாணிக்கவாசகரும் பல இடங்களில்குறிப்பிட்டுள்ளார். உதாரணமாகச் சிவபுராணத்தில் புல்லாகிப் பூடாகிப் புழுவாகிமரமாகிப் பல்விருகமாகிப் பாம்பாகி ... என்ற வரிகளில் விஞ்ஞானப்பரிணாமவளர்ச்சியைக் குறிப்பிடுவது போலத் தோன்றினாலும் , எல்லாப்பிறப்பும் பிறந்து இளைத்து விட்டேன் எம்பெருமான் ..... என்பதிலிருந்து உயிரின்ஆனாதியானதும் அழிவற்றதுமான தன்மையையும் , அது சிவத்தின் தயவைவேண்டுவதையும் குறிப்பிடுவதன் மூலம்
மணிதபரிணாம வளர்ச்சியைச்சுட்டுகிறார் என்பது வெள்ளிடைமலை . இவ்வாறான தெளிந்த கூர்ப்புத் தன்மை மானிட வரலாற்றில் அதி உயர்ந்தபடைப்பாற்றல் வரலாறாக எடுத்துக் காட்டுகிறது.
சித்தர்கள் உலகின் முதல் விஞ்ஞானிகள் சித்தர்கள் மிகப் பெரிய விஞ்ஞானிகள். யோகத்தால் ஞானமடைந்து, ஞானத்தால் உண்மையை உணர்ந்தவர்கள்.
தமிழா நம் முன்னோர்கள் சாதித்தார்கள்
சித்தர்கள் சக்திகள் உடையவர்கள் அவர்களின் ஆராய்ச்சிகள் இன்றைய விஞ்ஞானஆய்வுடன் ஒத்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.
மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்
சைவநீதியின் மேல் .எந்தவொரு சமத்துவ சோசலிசதத்துவ கோட்பாடுகலோ கிடையாது அத்துடன் நீதி கோட்பாடுகலோ சரிநிகர் பெறமாட்டாது
சைவத்தமிழின் தொன்மை என்பது காலத்தால் அளக்கமுடியாதது மட்டுமன்றி அழிக்க முடியாததும் கூட.
தமிழா தமிழ் அவமாணம் அல்ல உன் தொண்மை வாய்ந்த வரலாற்று அடையாலம்
சிவணுக்கு மேல் ஒரு தெய்வவும் இல்லை.
சைவத்துக்கு மேல் ஒரு மதமும் இல்லை
தமிழுக்கு மேல் எந்த மொழியும் இல்லை
மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்
<p> சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்---</p><p>துலங்குக வையக மே!-</p><p></p><p> -தொல்லை வினை தரு தொல்லை யகன்று</p><p>சுடர்க தமிழ்</p><p></p><p></p><p>தமிழா நமது முண்ணோர் தமிழால் சாதித்தார்கள்</p><p></p><p>தமிழா நமது முண்ணோர்ஆண்மீக பலத்தால் சாதித்தார்கள்</p><p></p><p></p><p></p><p>தமிழ் என் தாய் நாம் வாழ்க. நாம் உயிர் தமிழ் முச்சி</p><p></p><p>தமிழ் முச்சி எங்கும் வாழ்க வாழ்க வாழ்கவே </p>