1. சுமங்கலிப்பெண்களின் தலை வகிட்டின் நுனியை சீமந்த பிரதேசம் என்பார்கள். அம்பிகையின் வகிட்டில் உள்ள குங்குமம் பக்தர்களுக்கு சேமத்தைக் கொடுக்கும். 2. சுமங்கலிப் பெண்களின் சீமந்த பிரதேசம் ஸ்ரீமகாலட்சுமியின் இருப்பிடம் சுமங்கலிகளின் சக்தி குங்குமத்தில் உள்ளது. 3. வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்குகுங்குமம் கொடுப்பது, தருபவர் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தைப் பெருக்கும். 4. குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை தோற்றுவிக்கும்.குங்குமம் அணிந்த எவரையும் வசியம் செய்வது கடினம். 5. பெண்கள் குங்குமத்தை தான் இட்டுக் கொண்ட பின்பு தான் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும். 6. அரக்கு நிற குங்குமம் சிவசக்தியை ஒரு சேரக் குறிப்பதாகும். திருமணப்புடவை அரக்கு நிறத்தில் இருப்பது நல்லது. 7. தெய்வீகத்தன்மை, சுபதன்மை, மருத்துவத்தன்மைஉள்ள குங்குமம் அணிவதால் முகம், உடல் மற்றும் மனம் ஆகியவைகளுக்கு அதிக நன்மைகள் உண்டாகும். 8. திருமணமான பெண்கள் நெற்றி நடுவிலும் வகிட்டின் தொடக்கத்திலும் குங்குமம் அணிவது சிறப்பு. 9. ஆண்கள் இருபுருவங்களையும் இணைத்தாற் போல் குங்குமம் அணிவது தன்னம்பிக்கையை அதிகரிக்கும். 10. கட்டைவிரலால் குங்குமம் இட்டுக் கொள்வது மிகுந்த துணிவைக் கொடுக்கும். 11.குருவிரலால் (ஆள்காட்டி விரல்) குங்குமம் அணிவது முன்னனித்தன்மை, நிர்வாகம், ஆளுமை போன்றவற்றை ஊக்குவிக்கும். 12. சனிவிரல் (நடுவிரல்) குங்குமம் இட்டுக் கொள்வது தீர்காயுளைக் கொடுக்கும். குங்குமம் அணிவதுதெய்வீக தன்மை, உடல் குளிர்ச்சி மற்றும் சுயக் கட்டுபாட்டிற்கு நல்லது
வேறெந்த நாட்டுக்கும் இல்லாத சிறப்பு நம் நாட்டுக்கு உண்டு.
அதுதான் பெண்களும், ஆண்களும் நெற்றியில் அணியும் குங்குமப்பொட்டு.
வீடுகளில் குங்குமம் தயாரிப்பது வழக்கமாக இருந்தது. அப்படித் தயாரித்து ஆலயங்களுக்குத் தருவதை புண்யமாகக் கருதினர். அது போல் சிறுமிகளுக்குச் சாந்தும் வீட்டிலேயே தயாரித்தனர்.
ஒட்டுப்பொட்டு தெரியாத காலம். தோல் வியாதிகள் எட்டிப் பார்க்காத காலம்.
சரி. இப்போது யார் வீட்டில் தயாரிப்பார்கள் என்று எண்ணினாலும் நம்ம ஊரு கலாசாரத்தில் அதைத் தெரிந்து கொள்வதில் நல்லதுதானே!
தேவையானவை:
1) அரிநெல்லிக்காய் சைசில் கொட்டை மஞ்சள் –ஒரு கிலோ
2) எலுமிச்சம் பழச்சாறு – 1 1/2 லிட்டர்
3)வெங்காரம் – BORAX – 170 கிராம்
4)சீனாக்காரம்- ALUM – 65-70 கிராம்
5)நல்லெண்ணை – 100 கிராம்
6)ரோஜா அத்தர் அல்லது தாழம்பூ அத்தர்– வாசனைக்கு தேவையான சில துளிகள்
தயாரிக்கும் முறை:
கொட்டை மஞ்சளை நாலு நாலு துண்டுகளாக உடைத்து தனியாக ஒரு பாத்திரத்தில் போடவும். அதோடு பிழிந்து வைத்துள்ள எலுமிச்சை சாறை கலக்கவும் . Bhakthisagaram - Manjalஅத்துடன் வெங்காரம், சீனாக்காரம் இரண்டையும் சேர்த்து கலக்கவும்
நன்றாகக் கலந்ததும் மெல்லிய வெள்ளைத் துணியால் மூடி தனியே வைக்கவும்.
தினமும் காலையும் மாலையும் நன்றாகக் கிளறிவிடவும்.
கிளறுவதற்கு மரக்கரண்டியையே உபயோகிக்கவும்
சாறு முழுவதும் மஞ்சளில் ஏறும் வரை இதே போல் கிளறிக்கொண்டே
இருக்கவேண்டும். சாறு ஏற ஏற மஞ்சள் குங்கும நிறத்துக்கு மாறியிருக்கும்.
பிறகு ஒரு பெரிய தாம்பாளத்தில் கொட்டி நிழலில் காயவைக்கவேண்டும்.
இப்போது கேட்டு உடனே செய்து தர முடியாது. நாளும் நேரமும் நிறையBhakthisagaram - lemon
பொறுமையும் பிடிக்கும் வேலையிது!
நன்றாகக் காய்ந்த பிறகு இதற்கென்றே உள்ள இரும்பு உரல், உலக்கை
கொண்டு கைப்பிடி அளவாகப் போட்டு இடிக்கவேண்டும். சுமாராக
இடிபட்டதும் அதே பாத்திரத்தின் வாயை மெல்லிய வெள்ளைத் துணியால்
கட்டி பொடி செய்ததை அதில் கொட்டி மெதுவாக ‘வஸ்தரகாயம்’ செய்ய
வேண்டும். மேலிருக்கும் கப்பியை உரலிலிட்டு மீண்டும் இடிக்கவேண்டும்.
இவ்வாறு கிடைத்த மஞ்சள் பொடியை… இனிமேல் ‘குங்குமம்’ என்றேBhakthisagaram - kungumam
அழைக்கலாம். குங்மத்தோடு இளக்கின நெய் சிறிது ஊற்றி
கிளறவும். நெற்றியில் நன்றாக அப்பிக்கொள்ள எண்ணைப்பசை தேவை.
இறுதியாக கமகமக்கும் வாசனைக்கு தாழம்பூ அத்தர், ரோஜா அத்தர்
சில சொட்டுகள் விட்டு நன்றாகக் கலந்து காற்றுப் புகாத கண்ணாடி
பாட்டிலில் மாற்றி வைத்துக் கொள்ளவும். தேவைப்படும்போது
கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உபயோகிக்கலாம். விரும்பிக் கேட்பவர்க்கும்