இஸ்லாமையும் அதன் மூடநம்பிக்கைகளையும் டாக்டர் அம்பேத்கார் அம்பலப்படுத்துகிறார் ----------------- பாகம்-50 ---------------- கருத்து பாகிஸ்தான் பிரிவினையின்போது பாகிஸ்தானில் கட்டாய மதம்மாற்றம் செய்யப்பட்ட தலித்துகள் ----------------- தாழ்த்தப்பட்டவர்களுக்கு இஸ்லாமியர்கள் நண்பர்களல்ல என்பதை இஸ்லாமியர்களே நிரூபித்துவிட்டனர்.
தாழ்த்தப்பட்டவர்கள் பாகிஸ்தானில் தாக்கப்படுவது குறித்து அம்பேத்கர் ஓர் அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில் அம்பேத்கரின் தேசிய உணர்வை நாம் புரிந்துகொள்வது மட்டுமல்ல, மதமாற்றம் எதற்காக என்பது பற்றியும் அவர் கூறியுள்ளார். இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அறிக்கை.
அம்பேத்கர் கூறுகிறார்…
“பாகிஸ்தானிலும் மற்றும் ஹைதராபாத்திலும் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களிடமிருந்து எனக்கு ஏராளமான முறையீடுகள் வந்துள்ளன. பாகிஸ்தானிலும் ஹைதராபாத்திலும் அவர்களுக்கு எதிராகக் கடைப்பிடிக்கப்படும் கொள்கைகள் காரணமாக அவர்கள் அனுபவித்துவரும் இன்னல்களிலிருந்து மீட்க நான் ஏதாவது செய்ய வேண்டுமென்று அவர்கள் கேட்டுள்ளார்கள்.
பாகிஸ்தானில் அவர்கள் இந்தியாவிற்கு வர அனுமதிக்கப்படுவதில்லை. அவர்கள் பலவந்தமாக இஸ்லாமிற்கு மாற்றப்படுகிறார்கள். ஹைதராபாத்தில், அங்குள்ள முஸ்லீம் மக்கட்தொகையை அதிகரிக்கும் நோக்கத்தோடு அவர்கள் பலவந்தமாக முஸ்லீம்களாக மாற்றப்படுகிறார்கள். மேலும், ஹைதராபாத்தில் ஒரு பொறுப்புள்ள அரசு அமைய வேண்டும் என்றும் ஹைதராபாத், இந்தியக் கூட்டாட்சியுடன் இணைய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து நடைபெறும் இயக்கங்களில் ஹைதராபாத்திலுள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் கலந்துகொள்ள இயலாத அளவுக்கு அவர்கள் உள்ளத்தில் பய உணர்வை ஏற்படுத்துவதற்காக அங்குள்ள தீண்டத்தகாதவர்களின் வீடுகளை எரித்து, இட்டிஹாட்-உல்-முஸ்லீமின் (Ittihadul Muslimeen) என்னும் அமைப்பு தொடர்ந்து இயக்கங்களை நடத்தி வருகிறது.
என்னால் செய்ய முடிந்ததெல்லாம், இந்தியாவுக்கு வரும்படி அவர்களை அழைப்பதுதான். ஏனென்றால், இந்தியாவிலுள்ள தாழ்த்தப்பட்ட மக்களின் நிலைமையும் பாகிஸ்தானில் உள்ளதைப் போன்றே இருக்கிறது. இந்தியாவில், நாட்டின் எல்லாம் பகுதிகளிலும் ஜாதி இந்துக்களால் அவர்கள் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள்
பாகிஸ்தானில் அவர்கள் கட்டாய மதமாற்றத்திற்கு உள்ளாக்கப்படுகிறபோது, இந்துஸ்தானத்தில் அவர்கள் கட்டாய அரசியல் மாற்றம் செய்யப்படுகிறார்கள். அவர்கள் காங்கிரஸ் உறுப்பினர்களாகக் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். அவ்வாறு உறுப்பினர்களாக மறுத்தால் அவர்கள் ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள். இதனால் அவர்கள் வாழ்க்கை நாசமடைகிறது.
இந்தியாவிலுள்ள தாழ்த்தப்பட்ட மக்களின் எண்ணிக்கை மிக அதிகம். அமைப்பு ரீதியாக நன்கு திரட்டப்பட்டிருக்கிறார்கள். எனவே இன்றுள்ள அரசின் மேல் தங்கள் செல்வாக்கைச் செலுத்த அவர்கள் தவறமாட்டார்கள்
இஸ்லாமையும் அதன் மூடநம்பிக்கைகளையும் டாக்டர் அம்பேத்கார் அம்பலப்படுத்துகிறார் ----------------- பாகம்-51 ---------------------- தலித்துகள் முஸ்லீம்களை நண்பர்களாக பாவிக்ககூடாது. முஸ்லீம்கள் இரட்டை வேடம் போடுபவர்கள். ------------ இந்துக்களை வெறுப்பதனாலேயே முஸ்லீம்களை நண்பர்களாகப் பாவிப்பது தாழ்த்தப்பட்ட மக்களுக்குப் பழக்கமாகிவிட்டது. இது ஒரு தவறான கண்ணோட்டமாகும்.
தாழ்த்தப்பட்ட மக்களின் ஆதரவை முஸ்லீம்கள் வேண்டுகிறார்கள். ஆனால் அவர்கள் தங்களின் ஆதரவைத் தாழ்த்தப்பட்ட இன மக்களுக்குத் தருவதே இல்லை. எப்போதுமே ஜின்னா இரட்டை வேடம் போட்டு வருகிறார். அவருக்குத் தேவைப்படும்போது தாழ்த்தப்பட்ட இன மக்கள் தனிப்பிரிவினர் என்று மிக அழுத்தமாகச் சொல்லுவார். அவருக்குத் தேவைப்படாதபோது அவர்கள் இந்துக்கள் என்று அதே அழுத்தத்தோடு கூறுவார்.
முஸ்லீம்களும் முஸ்லீம் லீக்கும் எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் முஸ்லீம்களை ஆளும் வர்க்கமாக்கிவிட வேண்டும் என்னும் வெறியில் இருப்பதால் தாழ்த்தப்பட்ட இன மக்களின் கோரிக்கைகளுக்கு அவர்கள் முக்கியத்துவம் கொடுக்கவே மாட்டார்கள். இதை நான் எனது அனுபவத்திலிருந்து கூறுகிறேன்.
மதமாற்றத்தைப் பொருத்தவரையில் தங்கள்மீது வன்முறை மூலம் திணிக்கப்படுகின்ற கடைசிப் புகலிடமாகத்தான் தாழ்த்தப் பட்ட மக்கள் அதைப் பார்க்க வேண்டும். நிர்ப்பந்தம் மூலமோ அல்லது வன்முறை மூலமோ மதமாற்றம் செய்யப்பட்டவர்கூட, தாங்கள் மீளமுடியாத வகையில் அந்த மதத்திற்கு இழுக்கப்பட்டு விட்டதாகக் கருதக்கூடாது என்று அவர்களுக்குக் கூறுவேன். அவர்கள் மீண்டும் தங்கள் மதத்திற்குத் திரும்ப விரும்பினால், அவர்கள் வரவேற்கப்பட்டு, மதமாற்றத்திற்கு முன்னால் எவ்வாறு நடத்தப்பட்டார்களோ அதே முறையில் சகோதரத்துவத்துடன் நடத்தப்படுவார்கள் என்று உறுதி கூற விரும்புகிறேன்.
ஹைதராபாத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட இன மக்கள் எந்தச் சூழ்நிலையிலும் நிஜாமையும் இட்டிஹட்-உல்-முஸ்லீமினையும் ஆதரிக்கக்கூடாது. என்னதான் அநீதியையும் கொடுமையையும் இந்துக்கள் நமக்கு இழைத்தாலும் அது நமது கவனத்தைத் திருப்பக்கூடாது. நமது கடமையிலிருந்து நாம் விலகிச் செல்ல அனுமதிக்கக்கூடாது. இந்தியாவோடு இணைவதை எதிர்க்கும் நிஜாமுக்கு நமது ஆதரவு கிடையாது. இவ்வாறு செய்வதன்மூலம் அவர் தனது சொந்த நலனுக்கு எதிராகவே செயல்படுகிறார். தனது சொந்த பாரம்பரிய உரிமையைப் பாதுகாக்க இட்டிஹட்-உல்-முஸ்லீமினை நம்பியிருப்பதைவிட, இந்தியாவிலுள்ள 90 சதவீத இந்துக்களின் ஒப்புதலைப் பெற்றிருக்கும் கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தின் உத்திரவாதம் கிடைக்குமானால் அது மிகவும் பத்திரமாக இருக்கும் என்பதை அவர் உணரவில்லை.
இந்தியாவின் எதிரியாக இருக்கும் ஒருவருக்கு ஆதரவு கொடுப்பதன்மூலம், தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த எவரும் அந்த இனத்திற்கு அவப்பெயரை தேடிக்கொடுத்துவிடக்கூடாது என்ற கவலை எனக்கிருக்கிறது.’’
இஸ்லாமையும் அதன் மூடநம்பிக்கைகளையும் டாக்டர் அம்பேத்கார் அம்பலப்படுத்துகிறார் ----------------- பாகம்-52 -------------------- தலித்துக்களை பாகிஸ்தானில் கொடுமைப்படுத்திய முஸ்லீம்கள் -------------------- பாகிஸ்தானில் நடைபெற்ற கொடூரங்கள், கொடுமைகள் எண்ணற்ற தீண்டத்தகாதவர்களையும் பாதித்தன. இந்துக்கள், முஸ்லீம்கள், சீக்கியர்கள், ஜாட்டுகள் ஆகியோரினால் அடையும் துயரங்களை விவரித்து எண்ணற்ற தீண்டத்தகாதவர்கள் அம்பேத்கருக்குக் கடிதங்கள் எழுதினார்கள்.
ஆகவே, தீண்டத்தகாதவர்களின் துன்பங்களை எடுத்துக்கூறி, அந்தத் தாழ்த்தப்பட்ட இன அகதிகளுக்கு நிவாரணம் அளிக்கக்கோரி அவர் பிரதம மந்திரி நேருவிற்கு 1947 டிசம்பர் 18-ஆம் தேதி ஒரு கடிதம் எழுதினார்.
அக்கடிதத்தில்,
“பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு வெளியேற்றப்பட்ட மற்றும் இந்தியாவிற்கு வருவதினின்றும் தடுக்கப்பட்டு பாகிஸ்தான் அரசினால் அங்கேயே அடைக்கப்பட்டிருக்கிற தாழ்த்தப்பட்ட மக்களிடமிருந்து எண்ணற்ற முறையீடுகள் எனக்கு வந்துள்ளன. அவர்களின் துயரங்களைத் தங்களின் கவனத்திற்குக் கொண்டுவர வேண்டிய தருணம் வந்துவிட்டதாகக் கருதுகிறேன்.
அங்கு என்ன நடைபெறுகிறது, என்ன செய்ய வேண்டும் என்பதைத் தங்கள் பார்வைக்குக் கொண்டுவருவதற்காக அவர்கள் படும் துயரங்களுக்கான காரணங்களையும், அவற்றை நீங்குவதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளையும் இங்கு கீழே தந்திருக்கிறேன்.
1.பாகிஸ்தான் அரசு தங்கள் எல்லையிலிருந்து தாழ்த்தப்பட்ட இன மக்கள் வெளியேறுவதை எல்லா வழிகளிலும் தடுத்து வருகிறது. குற்றேவல்கள் செய்வதற்கும் நிலமுள்ள பாகிஸ்தானிய மக்களுக்கு நிலமற்ற கூலிகளாக இருந்து உழைப்பதற்கும் தாழ்த்தப்பட்ட இன மக்கள் பாகிஸ்தானிலேயே இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புவதுதான் இதற்குக் காரணம் என்று எனக்குத் தோன்றுகிறது.
பாகிஸ்தான் அரசு, குறிப்பாக, தோட்டிகளை இருத்தி வைத்துக்கொள்ளவே மிகவும் ஆர்வமாக இருக்கிறது. அவர்களை அத்தியாவசியப் பணியிலீடுபட்டிருப்பவர்கள் என்று அறிவித்திருக்கிறது. ஒருமாத அறிவிப்புக் கொடுத்தாலன்றி அவர்களை விடுவிக்க அரசு தயாராக இல்லை.
2.வெளியேற விரும்புகிற தாழ்த்தப்பட்ட இன அகதிகளுக்கு எம்.இ.ஓ. என்று அழைக்கப்படும் ஓர் அமைப்புத்தான் சிறிது உதவி செய்துவருகிறது. எனினும் வெளியேற விரும்புகிற தாழ்த்தப்பட்ட மக்களோடு நேரடித்தொடர்பு கொள்ள எம்.இ.ஓ-வை பாகிஸ்தான் அரசு அனுமதிப்பதில்லை என அறிகிறேன். இதன் விளைவாக, தாழ்த்தப்பட்ட மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் மிக மெதுவாகவே நடைபெறுகின்றன. சில இடங்களில் அது ஸ்தம்பித்து விட்டது. விரைவில் எம்.இ.ஓ. மூடப்பட்டுவிடும் என்றும் கேள்விப்பட்டேன். அது நடைபெற்றால் பாகிஸ்தானிலிருந்து தாழ்த்தப்பட்ட இனத்தவரை வெளியேற்றுவது என்பது முடியாததாகிவிடும்.
3.இந்நிலையில் என்ன செய்யப்பட வேண்டும் என்றால்: 1.தாழ்த்தப்பட்ட இன மக்கள் வெளியேறுவதற்கு எந்தவிதத் தடையும் செய்ய வேண்டாம் என்று பாகிஸ்தான் அரசைக் கேட்டுக்கொள்ள வேண்டும்.
2.வெளியேற விரும்புகிற தாழ்த்தப்பட்ட இனமக்களோடு நேரடித்தொடர்புகொள்ள எம்.இ.ஓவை அனுதிக்க வேண்டும்.
3.தாழ்த்தப்பட்ட இன மக்கள் எல்லாம் வெளியேற்றப்படுகிற வரைக்கும் எம்.இ.ஓ. தொடர்ந்து செயலாற்ற வேண்டும்.
4.இதுவரையிலும் நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு அமைச்சகம் மேற்கு பஞ்சாபிற்குத் தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து ஒரே ஓர் அதிகாரியைத்தான் நியமித்திருக்கிறது. ஆனால் பாகிஸ்தானிலுள்ள வடமேற்கு எல்லை மாகாணம், சிந்து, பவல்பூர் போன்ற பிற மாகாணங்கள் விடுபட்டுப்போய்விட்டன. அம்மாகாணங்களுக்கு இப்படிப்பட்ட அதிகாரிகள் நியமிக்கப்படவேயில்லை.
இந்தப் பகுதிகளுக்கு அதிகாரிகளை நியமனம் செய்யும்படி அமைச்சகம் அறிவுறுத்தப்பட வேண்டும். இதனால் அச்சிறப்பு அதிகாரிகள் பாகிஸ்தான் பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து எந்தெந்தப் பகுதிகளில் தாழ்த்தப்பட்ட இனமக்கள் வெளியேறுவதினின்றும் பாகிஸ்தான் அரசினால் தடுக்கப்படுகிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்க முடியும்.’’ என்று எழுதியிருந்தார்.
அதாவது தாழ்த்தப்பட்டவர்கள் பாகிஸ்தானில் இருக்கக்கூடாது. இருந்தால் இஸ்லாமியர்களால் கொடுமைப்படுத்தப்படுவார்கள். இந்தியாவில் உள்ளதுபோல் வாழ முடியாது என்பதே அவர் எண்ணம். அதனாலேயே பிரிவினை ஏற்பட்டு தாழ்த்தப்பட்டவர்கள் கொடுமைப்படுத்தப்படும்போது அம்பேத்கர் தாழ்த்தப்பட்டவர்களைக் காப்பாற்ற “மகர்சேனை” என்ற அமைப்பை உருவாக்கி பாகிஸ்தானுக்கு அனுப்பினார். அவர்கள் தாழ்த்தப்பட்டவர்களை பத்திரமாக இந்தியாவிற்கு அழைத்து வந்தனர். மகர்சேனையின் இந்த வீரச்செயல் அன்று தாழ்த்தப்பட்டர்களிடையே பெரும் பாராட்டுதலைப் பெற்றது.
இஸ்லாமையும் அதன் மூடநம்பிக்கைகளையும் டாக்டர் அம்பேத்கார் அம்பலப்படுத்துகிறார் ----------------- பாகம்-53 ---------------- நேரு எப்போதும் முஸ்லீம்களுக்கு சாதகமாக பேசுவார். தாழ்த்தப்ட்டவர்களை முஸ்லீம்கள் கொடுமைப்படுத்துவரை அவர் பார்ப்பதில்லை ------------------- இதுகுறித்து 1951 அக்டோபர் 27-இல் ரம்தாஸ்பூர், ஜலந்தர், பஞ்சாபில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அம்பேத்கர் பேசும்போது, ‘
‘….. பண்டிட் நேரு எப்போதும் முஸ்லீம்களின் பக்கம் நிற்பார். முஸ்லீம்கள் அலட்சியப்படுத்தப்பட வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவர்களைவிட அதிகப் பாதுகாப்பு தேவைப்படுகிற மற்ற வகுப்பினருக்குக் கிடைக்கவேண்டிய உரிமைகளை அவர்கள் தட்டிச்செல்லக் கூடாது என்றுதான் கூறுகிறேன்.’’
அம்பேத்கர் தொடர்ந்து பேசுகையில், “…
பிரிவினையின்போது, பாகிஸ்தான் அதிகாரிகள் எம்மிடம், பாகிஸ்தானிலே இருந்துவிடுங்கள். அப்போதுதான் நீங்கள் கேவலமாக வேலை செய்ய வேண்டியது இருக்காது என்று சொன்னார்கள். ஆனால் அப்போது நான் பண்டிட் நேருவிடம் ஏழை தாழ்த்தப்பட்டோர் வெளியேறுவதற்கு உதவும்படி கேட்டுக் கொண்டேன்.
நமது மக்கள் வெளியேறுவதற்கு வசதி செய்வதற்காக இரு நபர்களை நான் அனுப்பினேன். அத்துடன் நமது மகர் படைகளையும் நமது மக்களின் பாதுகாப்புக்காக அங்கு அனுப்பிவைத்தேன்.’’ என்று கூறுகிறார்.
மேலும் இதே கருத்தை 1951 நவம்பர் 22ஆம்தேதி தாழ்த்தப்பட்டோர் சம்மேளனத்தின் பம்பாய் கிளை சார்பில் போய் வதாவிலுள்ள விளையாட்டு அரங்கில் அம்பேத்கருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டபோது அம்பேத்கர் பேசியதாவது:
“…தேசப்பிரிவினை சமயத்தில் சாதி இந்துக்கள் இந்தியாவுக்குச் செல்ல பாகிஸ்தான் அரசாங்கம் அனுமதித்தது. ஆனால் தாழ்த்தப்பட்டோர் பாகிஸ்தானை விட்டுச் செல்ல அனுமதிக்கப் படவில்லை. இவர்களில் பலர் முஸ்லீம்களாக மதமாற்றம் செய்யப்பட்டனர்.
மகர்சேனை சில தாழ்த்தப்பட்டோரை இந்தியாவுக்குக் கொண்டுவருவதில் வெற்றி பெற்றது. ஆனால் இந்திய அரசாங்கம் அவர்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. அவர்களில் சிலர் ராஜ்காட்டில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். ஆனால் எவரும் அவர்களது போராட்டத்தில் அக்கறை காட்டவில்லை.
காங்கிரஸ் அரசாங்கம் அவர்களது குறைகளைத் தீர்க்க முன்வராது என்பதை உணர்ந்தேன். எனவே பதவி விலகுவதென முடிவு செய்தேன். பண்டிட் நேரு எந்தப் பதிலும் எனக்குத் தரவில்லை.’’ என்று கூறுகிறார்.
இங்கு ‘தாழ்த்தப்பட்டோர் பாகிஸ்தானை விட்டுச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இவர்களில் பலர் முஸ்லீம்களாக மதமாற்றம் செய்யப்பட்டனர். மகர்சேனை சில தாழ்த்தப்பட்டோரை இந்தியாவுக்குக் கொண்டுவருவதில் வெற்றி பெற்றது.’ என்று அம்பேத்கர் சொல்லவருவதன் நோக்கம் என்ன? இஸ்லாம் மதமாற்றத்திற்கு உகந்தது அல்ல என்பதுதான்.
இஸ்லாமையும் அதன் மூடநம்பிக்கைகளையும் டாக்டர் அம்பேத்கார் அம்பலப்படுத்துகிறார் ----------------- பாகம்-54 -------------------- பாகிஸ்தான் பிரிவினைக்கு அம்பேத்கார் முன்வைத்த திட்டங்கள் --------------------- பிரிவினையின்போது நடைபெற்ற கொடூரங்கள், கற்பழிப்புகள், படுகொலைகள் இவற்றைத் தடுத்திருக்க முடியாதா என்ற கேள்வி மனதில் எழும்போது அம்பேத்கர் சொன்ன திட்டத்தைச் செயற்படுத்தியிருந்தால் சோகம் நிறைந்த அந்தச் சம்பவங்களை கண்டிப்பாகத் தடுத்திருக்க முடியும்.
மேலும் இப்போதுள்ள இந்து-முஸ்லீம் மதப்பிரச்சினையும் 90 சதவீதம் ஏற்பட்டிருக்காது. இஸ்லாமிய மதமாற்றம் நடைபெறுகிறதே என்ற கவலையும் இருந்திருக்காது. அப்படி என்ன திட்டத்தை முன்மொழிந்தார் அம்பேத்கர்?
அம்பேத்கர் கூறுகிறார்:
‘‘பஞ்சாப், வங்க மாநில நிலவரங்களிலிருந்து, வடமேற்கு எல்லை, சிந்து மாநில நிலவரங்கள் முற்றிலும் வேறுபட்டுள்ளதைக் காண்கிறோம். பஞ்சாப், வங்க மாநிலங்களில் இயற்கையாகவே முஸ்லீம், இந்துப் பெரும்பான்மைப் பகுதிகள் பிரிந்து அமைந்திருப்பதால், எல்லைகளைச் சரியாகத் திருத்தியமைப்பதன் மூலம் ஒரேசமய மக்கள் சீராக வாழும் பகுதிகளைப் பிரித்து, ஒரே வகுப்பினர் கொண்ட நாடாக உருவாக்குதல் இயலும்.
மிகச்சிறு எண்ணிக்கையில் மட்டுமே மக்கள் குடிபெயர நேரும். ஆனால், வடமேற்கு எல்லைப்புற சிந்து மாநிலங்களில், இந்துச் சிறுபான்மையோர் மாநிலம் முழுவதும் பரவலாக விரவிக் கிடப்பதால் எல்லைகளைத் திருத்தி அமைப்பதால் மட்டுமே ஒரு குறிப்பிட்ட வகுப்பைச் சேர்ந்த மக்கள் வாழும் அரசை உருவாக்க இயலாது. மக்களை குடிபெயரச் செய்தல் ஒன்றே இங்கு வழியாகத் தெரிகிறது.
மக்களை இடம் பெயர்த்துக் குடியமர்த்தும் திட்டத்தைப் பலர் பழித்து இகழ்வர். அப்படி இகழ்வோர், பெரும்பான்மை வகுப்பினரின் பகைப்புலத்திற்கிடையே சிறுபான்மையோரை வாழவிடுவதால் அவர்களுக்கு நிகழும் இன்னல்களையும் கடந்த காலத்தில் அத்தகையோரின் துயர் களைய எடுத்துக் கொள்ளப்பட்ட முயற்சிகளின் தோல்விகளையும் பற்றி அறியாதவர்கள் என்றே கூறலாம்.
ஐரோப்பாவில் உலகப் பெரும் போருக்குப் பின்னர் அமைந்த நாடுகளிலும், பழைய நாடுகளிலும் கூடச் சிறுபான்மையோருக்கான பாதுகாப்பு, அரசியலமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்படுவதன் மூலமாகவே எய்தப்படுமென்ற எதிர்பார்ப்புகள் பொய்த்துப் போனதையே வரலாறு உணர்த்துகிறது.
எனவே, சிறுபான்மையோர் உரிமைகளைப் பெரும்பான்மையோர் மிதித்துச் சிறுமைப்படுத்துவதைத் தவிர்க்க, நீண்ட அடிப்படை உரிமைப் பட்டியல்கள் அரசியலமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்டு வருவதையும் அறிவோம். வரலாற்று அனுபவம் என்ன கூறுகிறது? சட்டப் பாதுகாப்புகளால் சிக்கல் தீரவில்லை என்பதையும் சிறுபான்மை இனத்தவர் மீது நடத்தப்பட்ட கொடும்போர்களாலும் சிக்கலைத் தீர்க்க இயலவில்லை என்பதையுமே வரலாறு உணர்த்துகிறது. எனவே, அயலவரான சிறுபான்மையினரை நாடுகளுக்கிடையே குடிபெயரச் செய்து மாற்றிக் கொள்வதன் வாயிலாக ஒரே இனத்தவர் நாடு எனும் நிலையை அடைவதையே இறுதியான தீர்வாக வரலாறு காட்டுகிறது.
துருக்கி, கிரேக்கம், பல்கேரியா ஆகிய நாடுகளுக்கிடையே இத்தகைய சிறுபான்மையோர் பரிமாற்றம்தான் இறுதித் தீர்வாக அமைந்தது. குடிபெயர்த்தல் திட்டத்தைப் பழித்திகழ்வோர் துருக்கி, கிரேக்கம், பல்கேரியா ஆகிய நாடுகளின் சிறுபான்மையினரது சிக்கல் வரலாற்றினைப் படித்துப் பார்க்க வேண்டும். படித்தால் சிறுபான்மையோர் சிக்கல்களுக்கான நிலைத்த தீர்வு காண்பதற்கு ஒரே வழி சிறுபான்மை மக்கள் குடிபெயர்ப்புப் பரிமாற்றம்தான் என்ற முடிவுக்கு இந்நாடுகள் வந்ததை அறிந்துகொள்வர். இந்த நாடுகளில் நடைபெற்றது, ஏதோ ஒரு சில மக்களைக் குடிபெயர்க்கும் எளிய செயலன்று.
ஏறத்தாழ இரண்டு கோடி மக்கள் குடிபெயர்க்கப்பட்ட மாபெரும் திட்டப் பணியாகும். நிலையான வகுப்பு அமைதி என்னும் குறிக்கோளை எய்துவதற்கு இப்பணியின் தேவையை உணர்ந்தமையால், இதிலுள்ள இடர்ப்பாடுகளைப் பொருட்படுத்தாமல், திட்டத்தை நிறைவேற்றும் பணியில் மூன்று நாடுகளுமே ஒன்றுபட்டுச் செயலாற்றின. சிறுபான்மை மக்களை குடிபெயர்ப்பு செய்வதுதான் நீடித்த வகுப்பு அமைதிக்கு ஒரே வழி என்பதில் ஐயம் ஏதும் இல்லை.
….இந்துக்கள் அக்கறை செலுத்த வேண்டிய பிரச்சினை இதுதான்: பாகிஸ்தான் உருவாக்கப்படுவதன் மூலம், இந்துஸ்தானத்தில் வகுப்புப் பிரச்சினை எந்த அளவுக்குத் தணிவடையும்? நாம் கருத்துச் செலுத்த வேண்டிய மெய்யான பிரச்சினை இதுவே. பாகிஸ்தான் உருவாக்கப்படுவதால் இந்துஸ்தானத்தில், வகுப்புப் பிரச்சினை அறவே மறைந்துவிடாது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
எல்லைகளைத் திருத்தியமைப்பதன் மூலம் பாகிஸ்தானை ஒரே இனத்தைச் சேர்ந்த மக்களின் நாடாக உருவாக்குதல் இயலுமென்றாலும் இந்துஸ்தான் பல்வேறு வகுப்பினர் கொண்ட நாடாகத்தான் விளங்க முடியும். இந்துஸ்தானம் முழுவதும் முஸ்லீம்கள் பரவிக்கிடக்கின்றனர்.
அவர்களில் பெரும்பாலோர் நகரங்களிலேயே திரண்டு வாழ்ந்து வருகின்றனர். எவ்வளவு திறமையாக முயன்று பார்த்தாலும் எல்லைக்கோடுகளை எப்படி மாற்றி வரைந்து பார்த்தாலும் இந்துஸ்தானத்தை ஒரே இனத்தவர் வாழும் நாடாக மாற்றிவிட முடியாது.
இந்துஸ்தானத்தை ஒரே இன நாடாக்குவதற்குக் குடிபெயர்த்தல் ஒன்றே வழியாக இருக்க முடியும். இதனைச் செய்து முடிக்கும்வரை, பாகிஸ்தான் உருவாக்கப்பட்டாலும்கூட, இந்துஸ்தானத்தில் பெரும்பான்மையோர்-சிறுபான்மையோர் பூசல்களையும், அதனால் இந்திய அரசியலில் விளையும் குழப்பங்களையும் தவிர்க்க இயலாது என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.’’
இஸ்லாமையும் அதன் மூடநம்பிக்கைகளையும் டாக்டர் அம்பேத்கார் அம்பலப்படுத்துகிறார் ----------------- பாகம்-55 ------------ பாகிஸ்தானில் இந்துக்கள் வாழநேர்ந்தால் அது அவர்களுக்கு துன்பத்தையே கொண்டுவரும் ---------------------- “முஸ்லீம்கள் எதற்காகப் பாகிஸ்தான் கோருகிறார்கள்? முஸ்லீம்கள் தங்களுக்கு ஒரு தேசியத் தாயகம்தான் தேவையென்று கருதினால் அதற்காக பாகிஸ்தான் பிரிவினை கோர வேண்டியதில்லை.
இந்தியாவிலேயே, முஸ்லீம் மாநிலங்களை அவர்கள் தம் தாயகமாக்கிக்கொள்ள முடியும். அவர்களது சமயப் பண்பாட்டை மேம்படுத்தும் வாய்ப்புகளுக்கு இங்கு குறையேதும் இருக்காது. அவர்கள் பாகிஸ்தானை ஒரு தேசிய அரசாகக் கோருகிறார்களெனில், தமது நாட்டுப் பகுதி மீது முழு இறையாண்மை கோருவதாகவே பொருள். அதைக் கோர அவர்களுக்கு உரிமையுண்டு.
ஆனால், அவர்கள் பெறும் நாட்டின் எல்லைப் பகுதிகளுள், முஸ்லீம் அல்லாத சிறுபான்மையினரையும் குடிமக்களாக இருத்திக்கொண்டு அச்சிறுபான்மையினர் மீது இஸ்லாமிய தேசியத்தைத் திணிக்க அனுமதிக்கப்பட வேண்டுமா என்பதே கேள்வி.
அரசியல் இறையாண்மையுடன் அத்தகைய உரிமை இணைந்தேயிருக்குமென்பதில் ஐயமில்லை. ஆனால் இத்தகைய கலப்பு மக்கட் குழுமங்கள் வாழும் நாடுகளிலெல்லாம் இதுவே பெரும்பாலான குழப்பங்களுக்குக் காரணமாயிருக்கிறது என்பது இற்றை நாள் உலகநிலை. இந்தக் கூறுபாட்டைப் புறக்கணித்துவிட்டுப் பாகிஸ்தான் பிரிவினைக்குத் திட்டமிடுதல் வரலாற்றின் படிப்பினையைப் புறக்கணிப்பதாகும்.
வெகு அண்மைக் காலத்தில் துருக்கி, கிகம், பல்கேரியா, செக்கோசுலேவேகியா ஆகிய நாடுகளில் சிறுபான்மையினத்தவர் மீது பெரும்பான்மையினத்தவர் நிகழ்த்திய கொடுமைகள், கொலைகள், கொள்ளைகள், சூறையாடல்கள் முதலான அட்டூழியங்களைப் பற்றி இக்கால வரலாற்று ஏடுகள் விவரிப்பனவற்றையெல்லாம் மறந்துவிடத்தான் முடியுமா?
ஆனால் இதற்கான வாய்ப்பை நம்மால் தவிர்க்க இயலும். அதாவது முற்றிலும், முஸ்லீம் மக்களை மட்டுமே கொண்ட தேசிய முஸ்லீம் அரசினை அமைக்க அனுமதிப்பதன் வாயிலாகவே இதைச் சாதிக்க இயலும்.
முஸ்லீம்களும் இந்துக்களும் கலந்து ஒருவருக்கொருவர் பகைமையுணர்வு பூண்டு முஸ்லீம் பெரும்பான்மையுடன் வாழும் பகுதிகளைக் கொண்டு பாகிஸ்தான் அரசு அமைக்க ஒருபோதும் அனுமதியளிக்கக் கூடாது.’’
அம்பேத்கரின் இந்தக் குடிபெயர்த்தல் திட்டம் இங்கிருக்கும் எல்லா முஸ்லீம்களையும் பாகிஸ்தான் பகுதிக்கு அனுப்பிவிடுதல் என்பதாகும்.
இதன்மூலம் அவர் இஸ்லாமியர்கள் அல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தை– தம்முடைய கருத்தை– முன்மொழிந்தார்.
அதுமட்டுமல்லாமல் காஷ்மீரிலும் இஸ்லாமியர்களைத் தவிர்த்து நமது மக்களையாவது காப்பாற்ற வேண்டும் என்று பேசினார்.
இஸ்லாமையும் அதன் மூடநம்பிக்கைகளையும் டாக்டர் அம்பேத்கார் அம்பலப்படுத்துகிறார் ----------------- பாகம்-56 ------------- முஸ்லீம்களை பாகிஸ்தானுக்கு அனுப்பிவிடவேண்டும் பிரிவினை ஏற்பட்டால் தான் இந்துக்கள் சுதந்திரமாக வாழ்வார்கள் ------------------- பாகிஸ்தான் பிரிக்கப்பட்டு நாட்டில் அமைதி ஏற்பட வேண்டும் என்ற தமது எண்ணம் நிறைவேறியதற்காக மகிழ்ச்சி தெரிவித்துக் கீழ்க்கண்டவாறு அம்பேத்கர் எழுதினார்:
‘‘பாகிஸ்தானிலிருந்து இந்தியா பிரிக்கப்பட்டதற்காக மிக்க மகிழ்ச்சியடைகிறேன். பாகிஸ்தானைப் பொருத்தவரை என் கருத்து தீர்க்கதரிசனமாகப் பலித்தது. பாகிஸ்தானை நான் ஆதரித்தற்கான காரணம், பிரிவினை ஏற்பட்டால்தான் இந்துக்கள் சுதந்திரமடைவதோடு சிக்கலிலிருந்தும் விடுபடுவார்கள்.
இந்தியாவும் பாகிஸ்தானும், ஒரே நாடாயிருந்தால், இந்துக்கள் முஸ்லீம்களின் தயவில்தான் வாழ வேண்டியேற்படும். இந்துக்களைப் பொருத்தவரை அரசியல் விடுதலை மட்டுமே விடுதலையாகக் கருதப்பட மாட்டாது. ஒரே நாட்டில் இரு தேசங்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கும்.
அப்படிப்பட்ட சூழ்நிலையில் முஸ்லீம்கள்தான் ஆளும் மக்களாக இருப்பார்கள். இந்து மகாசபையோ ஜனசங்கமோ அவர்களிடம் வாலாட்ட முடியாது’’ –நூல்: (Thoughts on Linguistic States)
இதிலிருந்து நாம் ஒன்றைத் தெரிந்துகொள்ளலாம். இந்திய தேசம் யாருக்கானது, யாருடைய ஆட்சி நடைபெற வேண்டும், இங்கு யார் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று அம்பேத்கர் நினைத்தார் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
இன இழிவு நீங்க இஸ்லாம் இனிய மருந்து என்பதை அம்பேத்கர் எப்போதும் ஏற்றுக்கொள்ளவில்லை. தாழ்த்தப்பட்டவர்களின் மதமாற்றத்திற்கு இஸ்லாம் ஏற்றுக் கொள்ளக்கூடிய மதம் அல்ல என்பதுதான் அம்பேத்கரின் கருத்து என்பதை மேற்கண்ட அம்பேத்கரின் எழுத்துகளிலிருந்தும் பேச்சுகளிலிருந்தும் நாம் தெரிந்துகொள்ளலாம்.
இஸ்லாமையும் அதன் மூடநம்பிக்கைகளையும் டாக்டர் அம்பேத்கார் அம்பலப்படுத்துகிறார்
---------------------- பாகம்-57 ------------------ தங்களது தீர்க்கத்தரிசி வகுத்துத் தந்த சட்டங்களுக்கு தாங்கள் வாழும் நாட்டின் சட்டங்களுக்கும் மேலாகக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்று முசல்மான்களின் தலைவர்கள் இப்போது முன்வைத்திருக்கும் கோரிக்கை குடிமையியல் மரபொழுங்கையும் நாட்டின் ஸ்திரத்தன்மையையும் சீர்குலைக்கக்கூடியதேயாகும்.
இது அவர்களை மோசமான குடிமக்களாக்குகிறது.
ஏனென்றால் அவர்களது விசுவாச மையம் நாட்டுக்கு வெளியே இருக்கிறது;
மௌலானா முகமது அலி, சௌகத் அலி போன்ற பிரபல முஸ்லீம் தலைவர்களின் கருத்துக்களைக் கொண்டிருந்தபோதிலும் தங்களுடைய சக பிரஜைகளின் நம்பிக்கைக்கு அவர்கள் பாத்திரமாக முடியாது.
இந்தியா சுதந்திரமடைந்தால் மக்கள் தொகையில் முஸ்லீம் பகுதியினர் – அறியாமையில் மூழ்கிக் கிடக்கும் இவர்கள் தங்களது தீர்க்கத்தரிசியின் பெயரால் பேசுபவர்களைத்தான் பின்பற்றுவார்கள்.
இது பற்றி திருமதி அன்னிபெசன்ட் கூறுகிறார் :
‘இந்தியாவின் முகம்மதியர்கள் சம்பந்தமாக, மற்றொரு கடுமையான பிரச்சினை எழுந்துள்ளது. முஸ்லீம்களுக்கும் இந்துக்களுக்கும் இடையேயான உறவு லக்னோ நாட்களில் இருந்தது போன்று இருந்திருந்தால் இந்தப் பிரச்சினை இத்தனை அவசரமானதாக இருந்திருக்காது. அந்த லக்னோ நாட்களில்கூட இந்தப்பிரச்சினை ஏறத்தாழ நிச்சயமாக எழுந்திருக்கவே செய்யும். சுதந்திர இந்தியாவிலும் முன்னோ பின்னோ எப்போதேனும் எழவும்கூடும். கிலாபத் கிளர்ச்சிக்குப் பிறகு நிலைமை பெரிதும் மாற்றமடைந்துள்ளது.
கிலாபத் கிளர்ச்சியை ஊக்குவித்ததன் மூலம் இந்தியா எண்ணற்ற இன்னல்களுக்கு, அல்லல்களுக்கு உள்ளாகியிருக்கிறது. இவற்றில் ஒன்று முஸ்லீம் அல்லாதவர்களுக்கு எதிராக முஸ்லீம்களின் உள் மனதில் கனன்று கொண்டிருக்கும் பகைமை உணர்வு கடந்த காலத்தைப் போன்றே அப்பட்டமாக, கூச்சநாச்சமின்றி பீறிட்டெழுந்திருப்பதாகும். வாளேந்தும் பழைய முஸ்லீம் மதம் மீண்டும் புத்துயிர் பெற்று வருவதைப் பார்க்கிறோம்.
நூற்றாண்டுக்காலமாக மறந்து போயிருந்த தனித்து ஒதுங்கி நிற்கும் பழைய போக்கு மீண்டும் தலையெடுத்து வருவதைக் காண்கிறோம். ஜஸ்ருத்-அரபை, அரபிய தீவை முஸ்லீமல்லாதவர்களின் மாசு படிந்த பாதங்கள் படாத புனித பூமி என்று உரிமை கொண்டாடுவதை நோக்குகிறோம். ஆப்கானியர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து வந்தால் நாங்கள் எங்களுடைய சக மதத்தினருடன் சேர்ந்து கொள்வோம்; தங்கள் தாயகத்தைப் பகைவர்களுக்கு எதிராகப் பாதுகாக்கும் இந்துக்களின் தலைகளை கொய்தெறிவோம் என்று முஸ்லீம் தலைவர்கள் பிரகடனம் செய்து வருவதைக் கேட்கிறோம்.
முஸ்லீம்களின் பிரதான விசுவாசம் இஸ்லாமிய நாடுகளின் மீதிருக்கிறதே அன்றி தங்கள் தாய்நாட்டின் மீது இல்லை என்பதைக் காண்கிறோம். அவர்களது அத்யந்த ஆசை ‘ஆண்டவனின் ராஜ்யத்தை’ ஏற்படுத்துவதுதான் என்பதை அறிகிறோம்.
ஆனால் அந்த ஆண்டவன் உலகுக்கெல்லாம் தந்தையல்ல, அனைத்து ஜீவராசிகளையும் நேசிப்பவரல்ல, தங்களுடைய தீர்க்கதரிசி என்னும் முசல்மான்களின் மூக்குக் கண்ணாடிகள் வழியாகத் தெரிபவரே அந்த ஆண்டவன்; முஸ்லீம் அல்லாதவர்களைப் பொறுத்தவரை, ஆரம்பகால முஸ்லீம்களைப் போலவே மோசஸ் வழிப்பட்ட எகோவாவைக் கடவுளாக் கொண்ட எபிரேயர்களும் தங்களுடைய தீர்க்கத் தரிசி தங்களுக்கு அருளிய மதத்தைக் கடைபிடிக்கும் சுதந்திரத்திற்காகப் போராடியதை வரலாற்று ஏடுகளில் காண்கிறோம்.