New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சுப்பிரமணிய சுவாமிக்கு ஹார்வர்ட் விதித்த ஃபத்வா December 16, 2011- கலவை வெங்கட்


Guru

Status: Offline
Posts: 24624
Date:
சுப்பிரமணிய சுவாமிக்கு ஹார்வர்ட் விதித்த ஃபத்வா December 16, 2011- கலவை வெங்கட்
Permalink  
 சுப்பிரமணிய சுவாமிக்கு ஹார்வர்ட் விதித்த ஃபத்வா

(திரு.கலவை வெங்கட் அவர்கள் எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் தமிழ் மொழியாக்கம்: மது)

சுப்பிரமணியன் சுவாமி இடைவிடாது தொடர்ச்சியாக ஊழலுக்கு எதிராக போராடிவரும் ஓர் இந்திய அரசியல் வாதி; முக்கியமாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஏற்பாட்டில் நிகழ்ந்த மாபெரும் 2G ஸ்பெக்ட்ரம் லைசன்ஸ் ஊழல், சட்ட விரோத வழிகளில் சம்பாதித்து கறுப்புப் பணமாக ஸ்விஸ் வங்கிகளில் பதுக்கி வைத்திருக்கும் இந்திய அரசியல் வாதிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பது போன்றவற்றில் தொடர்ந்து போராடி வருகிறார். ஆகவே பலம் படைத்த ஊழல்வாதிகளின் முக்கிய இலக்காக அவர் இருந்து வருவதில் வியப்பேதும் இல்லை. இருந்தும் சுவாமி அவர்கள் சென்ற ஆண்டு வரை வணிகவியல் பேராசிரியராக, வகுப்புகள் எடுத்து நடத்தி வந்த ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில்உள்ள மதச்சார்பற்ற, இடது சாரிகள் தான் அவர் மீது முதலில் தாக்குதல் தொடுத்தவர்கள் என்பது ஒரு முரண்நகை.

July 16, 2011ல் சுவாமி டி.என்.ஏ இதழில் ஹிந்துக்கள் மற்றும் இந்தியாவின் மீது பாயும் இஸ்லாமிய பயங்கரவாதம் குறித்து ஒரு கட்டுரை ஒன்றை எழுதினார். பாகிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றக் கூடும் ; அதனைத் தொடர்ந்து இந்தியாவின் மீதான தீவிரவாதம் பெருகும் என்று அண்மையில் ஒசாமா பின் லாடனுக்கு பின் வந்த அல் கொயிதாவின் தலைமை ஏற்கனவே இந்தியாதான் எங்கள் முதன்மை இலக்கு என்று அறிவித்ததை அடிப்படையாக வைத்து ஒரு தீர்க்க தரிசனமாக தெரிவித்திருந்தார். “தீவிரவாதிகள் அறியாமை, ஏழ்மை, அடக்குமுறை, பாரபட்சம் ஆகியவற்றால் தான் உருவாகிறார்கள்”, “தீவிரவாதிகளை ஒழித்துக் கட்டுவதை விட, இந்நான்கு சமூகத் தீமைகளை முதலில் ஒழிக்க வேண்டும்” என்பன போன்ற “கசிந்து உருகும் இதயம்” கொண்ட தாராளவாதிகளின் வக்காலத்துகளை புறந்தள்ளி,

பயங்கரவாதி ஒசாமா பின் லாடன் ஒரு கோடி கோடீஸ்வரன்!

டைம்ஸ் சதுக்கத்தில் குண்டு வைக்க முயன்று தோற்ற தீவிரவாதி பைசல் ஷஸத், அமெரிக்க பல்கலையில் MBA பட்டம் பெற்றவன், பாகிஸ்தானில் ஒரு பெரிய முக்கிய குடும்பத்தை சேர்ந்தவன்!

என்பன போன்றவற்றை சுட்டிக் காட்டி இருந்தார். “தீவிரவாதிகளை பயமுறுத்தி தளர்ச்சி அடையச் செய்ய முடியாது ஏனெனில் அவர்கள் பகுத்தறிவை மீறி, சாகவும் துணிந்து செயல்படுபவர்கள்” என்கிற வாதத்தையும் கேலி செய்து “தீவிரவாதத்தின் மூளையாக செயல்படுபவர்கள் அரசியல் இலக்கு கொண்டவர்கள்; தமது உன்மத்தமான போக்கிலும் ஒரு முறையக் கடைபிடிப்பவர்கள்” என்பதை சுட்டிக் காட்டினார். மேலும் பயன் தரக்கூடிய தீவிரவாத முறியடிப்பு முறை என்னவெனில் இந்த அரசியல் வெற்றிக்கான அம்சத்தை தோற்கடிக்க வேண்டும்; தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் வழியாக அவற்றை குப்பைத் தொட்டிக்கு தள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

தீவிரவாதிகளின் ஒவ்வொரு இலக்கையும் புத்திசாலித் தனமாக தோற்கடிக்கவேண்டும் என்பதை சுட்டிக் காட்டி இஸ்லாமிய தீவிரவாதத்தை எதிர்கொள்ள தேவையான வழிமுறைகளை சுவாமி எடுத்துரைத்திருந்தார். அவருடைய அந்த யோசனைகளில் சில:

 1. ஏற்கனவே இந்தியாவில் முஸ்லிம்கள் அனுபவித்து வரும் சிறப்பு சலுகைகள், உதாரணமாக சிவில் சட்டங்கள் விஷயத்தில் இஸ்லாமிய ஹதீது அடிப்படையிலான நிர்வாக சட்டங்களை அடியோடு நீக்கி பொது உரிமையியல் சட்டத்தை (Uniform Civil Code) அமுல் படுத்துதல்; காஷ்மீருக்கு சிறப்பு இடம் அளித்து, தீவிரவாதம் வளர காரணமாக இருந்து வரும் Article 370ஐ முற்றிலும் நீக்குதல்.
 2. பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆதரவு கொடுத்தால், பதிலுக்கு இந்தியா பலுசிஸ்தான், சிந்து பகுதி மக்கள் பாகிஸ்தானிடமிருந்து விடுதலை பெற உதவுதல்
 3. வன்முறையாக இந்து கோவில்களை இடித்து கட்டப் பட்ட மசூதிகளை நீக்கி அந்த இடங்களில்மீண்டும் இந்து கோவில்களை கட்டுதல்
 4. எந்த பாடல் இந்தியாவை தாய் தெய்வமாக உருவகிக்கிறதோ, புனிதத் தாயாக தாய் நாட்டை வாழ்த்துவது இஸ்லாமுக்கு எதிரானது என்று கூறி எதனை இந்திய முஸ்லிம்கள் பாட மறுக்கிறார்களோ அந்த தேசிய கீதமான வந்தே மாதரம் பாடலை ஒவ்வொரு இந்தியனும் பாட வேண்டும் என்று ஆணை நிறைவேற்றுதல்; இந்தியப் பாரம்பரியத்தைக் கொண்டுள்ள சம்ஸ்க்ருத மொழியை ஒவ்வொரு இந்தியனும் கற்றுக் கொள்ளச் செய்தல்
 5. ஹிந்துக்களும், ஹிந்து அல்லாதோரும் தாங்கள் இந்துப் பாரம்பரியத்தை சேர்ந்தவர் என்பதைஒப்புக் கொண்ட பின்பே வாக்களிக்க அனுமதித்தல்
 6. இந்துக்களை மதமாற்றம் செய்வதை தடை செய்தல்

சுவாமியின் கட்டுரை இஸ்லாமியவாதிகளாலும் இடதுசாரிகளாலும் எதிர்க்கப் பட்டது; இந்த கட்டுரை முஸ்லிம்களுக்கு எதிராக தூண்டி விடுவதாக இருப்பதாகக் கூறி அவர்கள் ஹார்வர்ட் பல்கலைக்கு அவரது வகுப்புகளை நீக்கச் சொல்லி மனுச் செய்தனர். இதே சமயத்தில் இந்தியாவில் சுவாமி எவருடைய முறைகேடுகளுக்கு எதிராக போராடி வந்தாரோ அந்த பலம் வாய்ந்த அரசியல் எதிரிகள் அதே கட்டுரையைக் காரணமாக வைத்து அவரை கைது செய்யவேண்டும் என்று கூச்சல் எழுப்பினர். முதலில் ஹார்வர்ட் மறுத்தும், சுவாமியின் பேச்சுரிமைக்கு ஆதரவாக இருப்பதாகக் காட்டிக் கொண்ட போதிலும் இறுதியில் எதிர்புறமாக திரும்பி அவருடைய வகுப்புகளை நீக்குவதில் வந்து நின்று விட்டது. இது ஒரு இடது சாரிக் குறுங்குழுவின் முயற்சியில் பேச்சுரிமையே தடை செய்யப் பட்டது போல அல்லவா இருக்கிறது!

டயானா எக் (Diana Eck) என்பவர் சுவாமியின் வகுப்புகளுக்கு பத்துவா போடுவதை வலியுறுத்துகையில், “சுவாமியின் கட்டுரை எல்லை மீறிப் போகிறது; (முஸ்லிம்) மதக் கூட்டமைப்பு முழுவதையுமே அரக்கர்களாக சித்தரித்து, அவர்களது புனிதத் தலங்கள் மீது வன்முறையை தூண்டி விடுகிறது” என்று கூறினார். அதோடு “சிறுபான்மை சமூகத்தின் மீது வெறுப்பை தூண்டி விடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுடன் தொடர்பு கொள்ளாமல் இருப்பது என்கிற தார்மீகப் பொறுப்பு ஹார்வர்ட் பல்கலைக் கழகத்திற்கு உள்ளது” என்று நினைவூட்டினார். சுகதா போஸ் (Sugata Bose) இதே பத்துவாவை ஆதரித்து “முஸ்லிம்கள் வாக்களிக்க அனுமதிக்கக் கூடாது எனும் சுவாமியின் நிலை எப்படி உள்ளது எனில் அமெரிக்காவில் குடிமக்களாக உள்ள யூத அமெரிக்கர்களும், ஆப்பிரிக்க அமெரிக்கர்களும் வாக்களிக்க அனுமதிக்கக் கூடாது; அவர்கள் வெள்ளை ஆங்கிலோ சாக்சன் புரோட்டஸ்டண்ட்களின் மேட்டிமையை ஒப்புக்கொண்ட பின்பே அனுமதிக்க வேண்டும் என்று சொல்வதற்கு சமம்” என்கிறார்.

இந்த விமர்சனங்களில் பலகாரணங்களின் அடிப்படையில் மிகவும் கவலை அளிக்கக் கூடிய அம்சங்கள் இருக்கின்றன. அவற்றைப் பார்ப்போம்.

 1. சுவாமியின் கருத்துக்களை ஒருவர் ஏற்றுக் கொள்ளாமல் போகலாம்; ஆனால் அதற்காக ஏற்றுக் கொள்ளக் கூடியவகையில் பேசுவதை முன்வைத்து பேச்சுரிமையை பின்னுக்கு தள்ள முடியாது. ஒரு பேராசிரியர் சில கருத்துக்களை வெளியிட்டதற்காக அவருக்கு கல்வித்துறையில் ஃபத்வா விதிப்பது என்பது “ஸ்டாலின் தவிர்த்த ஸ்டாலினிசம் ” என்று ஹார்வர்டின் பேராசிரியர் ஜேம்ஸ் ரஸ்ஸல் சொன்னதற்கு ஈடானது; ஏனெனில் இவ்வாறு பத்துவா விதிப்பது கல்வித்துறையை வன்முறையாக அடிபணியச் செய்து விடுகிறது.
 2. இஸ்லாமிய அரசுகளால் ஹிந்துக்கோவில்கள் இடிக்கப் பட்டு அந்த இடத்தில் எழுப்பப் பட்ட சுமார் முன்னூறு மசூதிகளை சட்ட ரீதியில் அகற்றுவதைத் தான் சுவாமி கேட்டிருந்தார். இது “வன்முறை அறைகூவல்” என்று டயானா எக் நினைத்தால், இதற்கு முன்பு கோவில்களை இடித்தது நிறுவனமாக செயல்பட்ட வன்முறையின் விளைவு எனபதை ஒப்புக் கொள்வாரா? ஹிந்துக்கள் வன்முறையால் இடிக்கப் பட்ட தமது புனிதத் தளங்களை புனர்நிர்மாணம் செய்ய என்றுமே கோரமுடியாது என்பதுதான் அவரது எதிர்பார்ப்பா?
 3. “ஒரு மதக் கூட்டமைப்பை அரக்கத் தனமாக சித்தரிப்பது” என்பது மட்டுமே ஒரு கல்விப் பொறுப்பை நீக்க போதுமான காரணம் என்று டயானா எக் நினைப்பதனால், இதே போல ஹார்வர்ட் பல்கலைக் கழகக் கூட்டாளி மைக்கேல் விட்ஸலுக்கு எதிராகவும் பத்துவா விதிப்பதை ஆதரிப்பாரா என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன் . ஏனெனில் கலிபோர்னியாவில் பள்ளிப் பாடப்புத்தகங்களில் இந்து மதத்தை நியாயமான முறையில் சித்தரிக்கப் படவேண்டும் என்று கேட்ட எல்லா அமெரிக்க ஹிந்துக்களையும் தீவிரவாதிகளாக உருவகித்தவர் மைக்கேல் விட்சல். இத்தகைய ஃபத்வாக்களை நான் ஆதரிக்கிறேன் என்பதில்லை. ஆனால் எக் எல்லா விஷயங்களிலும் சமச்சீரான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்; இல்லையென்றால் “கங்கா தின்“களின்1 வார்ப்பில் இல்லாதவர்களுக்கு எதிராக மட்டும் தான் முல்லா தொப்பியை எடுத்து அணிபவர் அவர் என்று கருதப்படுவதற்கே அது இடமளிக்கும்.
 4. போஸ் குற்றம் சாட்டுவது போல சுவாமி ஹிந்து மேட்டிமையை ஒப்புக் கொள்ளக் கோரவில்லை. அவர் எல்லா இந்தியர்களும் தம் முன்னோர்கள் ஹிந்துக்கள் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும் என்றார். இது அர்த்தமற்ற வேலை என்று தோன்றினாலும், தார்-உல்-இஸ்லாம் அமைப்பிற்கு எல்லைகளற்ற இஸ்லாமிய சகோதரத்துவம் தேவைப் படுகிறது என்பது உண்மை; சிலநேரங்களில் இதனால் இந்திய முஸ்லிம், ஆப்கானிய – பாகிஸ்தானிய கூட்டாளிகள் மீது பற்றுக் கொண்டு, சில நேரங்களில் இந்தியாவுக்கு எதிராகவே புனிதப் போர் தொடுத்து விடுகிறான்; இதற்கு 26/11 ல் மும்பாயில் நடந்த பயங்கரம் உள்ளூர்வாசிகளில் சிலர் உடந்தையாக செயல்படாமல் நடைபெற்றிருக்க முடியாது என்பதே சாட்சி. எல்லா நாடுகளுக்கும் தம் மீது விசுவாசம் என்பது தேவை. இஸ்லாம் ஒரு அரசியல் கருத்தியலாக இருப்பதால், முஸ்லிம்களின் விசுவாசத்தைப் பெற இந்தியாவுக்கு இருக்கும் ஒரே வழி, முஸ்லிம்களை கற்பனையான உலகாளவிய உம்மாவின் மீதான தொடர்பை விட்டு, ஹிந்து பாரம்பரியத்தில் தம்மை இணைத்துக் கொள்ள செய்வதில் தான் இருக்கிறது. இவ்வாறு முஸ்லிம்களின் மன நிலையில் மாற்றங்கள் ஏற்படுவதை செயலாக்கும் வழிமுறைகள் குறித்து வாத – பிரதிவாதங்கள் எழலாம் என்றாலும் சுவாமி கோரியது “ஹிந்து மேட்டிமைக்கான அறைகூவல்” என்று நிச்சயம் கூறமுடியாது.
 5. அண்மையில் நடந்து முடிந்த American Academy of Religions (AAR) மாநாட்டில், பல இடதுசாரி கல்வியாளர்கள், டேனிஷ் கார்ட்டூன் சர்ச்சையை முன்வைத்து, பேச்சு சுதந்திரம் குறித்து விவாதிக்கும் போது, முஸ்லிம்களின் உணர்வுகளை அவமதிக்காமல் இருக்க வேண்டும் என்பதையே எப்போதும் பேச்சுரிமையில் ஒரு பகுதியாகக் கொண்டனர். பேச்சுரிமையை விட மத சுதந்திரம் முக்கியம் என்று இடதுசாரிகள் கருதுகிறார்கள் போலும்! சரிதான், இந்த கருத்தியலை ஆதரிக்கும் எக் போன்றவர்கள், அதுவும் தற்பால் சேர்க்கையில் ஈடுபட்டு இன்னொரு பெண்ணை மணந்த எக் போன்ற பெண்களுக்கு, இஸ்லாமிய அரசில் மரணதண்டனை கிடைக்கும் என்பது நினைவில் கொள்ளவேண்டிய ஒன்று. இந்துக்களின் உருவவழிபாடுகளை சகித்துக் கொள்ள முடியாது போலவே இஸ்லாத்தில் எக் போன்றவர்களின் வாழ்க்கை முறையையும் சகித்துக் கொள்ள முடியாது. ஏன் சுவாமி போன்ற ஒரு ஹிந்துவால் இந்த சகிப்புத் தன்மை இல்லாத மதத்தை சகிக்க முடியவில்லை என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது ஆனால் எக் அவர்களின் தற்கொலைக்கு இட்டுச் செல்லும் சகிப்புத் தன்மை, அதுவும் இஸ்லாமிய ஆதரவைத் தான் புரிந்து கொள்ள முடியவில்லை.
 6. எந்த சகிப்புத் தன்மையும் அற்ற அமைப்புகளுடன் ஹார்வர்ட் பல்கலைக் கழகம் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்கிற எக்-கின் எச்சரிக்கை பாராட்டத் தக்கது தான். சவூதி இளவரசர் அல்வாலீத் பின் தலால் பின் அப்துல் அசீஸ் 2005ல் ஹார்வர்ட் பல்கலையில் இஸ்லாமியக் கல்வி மையம் அமைக்க இருபது மில்லியன் டாலர் நன்கொடை தந்தது உண்மை தானே? இதே சவூதி ஆட்சியாளர்கள் தான், முறை தவறி பாலியல் தொடர்பு கொண்ட (அல்லது வன்முறையாக கற்பழிக்கப் பட்ட) பெண்களுக்கு மரண தண்டனை, சவுக்கடி போன்ற தண்டனைகள் வழங்குபவர்கள், புலம் பெயர்ந்து வரும் இந்துக்கள் தமது தெய்வங்களின் உருவப் படங்களைக் கூட தம்முடன் வைத்திருக்க அனுமதிக்காதவர்கள் என்பது எக் அவர்களுக்கு நிச்சயம் தெரியும். எக் இது விஷயத்தில் உடனே அந்த பணத்தை சவூதிகளிடம் திருப்பிக் கொடுத்து, இஸ்லாமிய கல்வி மையத்தையும் மூடவேண்டும் என்று ஆவேசமாக விவாதம் நடத்த வேண்டும்; இல்லா விட்டால் எக் அவர்களது பார்வையில் “சகிப்புத் தன்மை அற்றவர்களை” இருபது மில்லியன் டாலர் பணம் “சகிப்புத்தன்மை”யுடையவர்களாக மாற்றிவிடும் என்று நாம் முடிவு கட்டுவதில் அவருக்கு ஆட்சேபனை இல்லை என்று ஆகும்.

இந்த ஹார்வர்ட் ஃபத்வா என்னவோ தனிப்பட்ட ஒரு நிகழ்வு என்று முடிவு கட்டிவிடக் கூடாது. அண்மையில் இந்திய அரசு, அரசியல் ஊழல்கள் குறித்த செய்திகளை தடுத்து அமிழ்த்தும் முயற்சியில்,ஊழல் செய்யும் அரசியல் வாதிகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் இணைய தளங்களை மூடும் முயற்சியில் ஒளிவு மறைவின்றி வெளிப்படையாகவே நடவடிக்கைகளைத் துவங்கியது. இந்த ஊழல் வாதிகளுக்கு எதிராகத்தான் சுவாமி மிக தைரியமான கண்ணியமான ஒரு யுத்தத்தை தொடுத்து வருகிறார். டி.என்.ஏ இதழ் சுவாமியின் கட்டுரைகளை நீக்க வேண்டி வந்தது, பின்புலத்தில் இதற்காக முனைந்து செயல்பட பலம் வாய்ந்த அரசியல் கரம் ஒன்று இருப்பதையே நமக்கு காட்டுகிறது. ஹார்வர்ட் பல்கலையிலும் சுவாமிக்கு எதிராக இடதுசாரிகளின் கூட்டு முயற்சிக்குப் பின்னால் இந்தக் கரம் தான் செயல் படுகிறதோ?

இடதுசாரிகள் மத சுதந்திரம் என்பது மறுக்க முடியாத உரிமை என்கிறார்; அவர்கள் இந்த அளவு பேச்சுரிமைக்கு முக்கியமாக அவர்களுக்கு பிடிக்காத வகையில் உள்ள பேசப் படும்பேச்சுக்கள் குறித்து மதிப்பளிக்காவிட்டாலும் கூட இது ஒருவிதத்தில் அவர்களது ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை என்றுதான் கொள்ளவேண்டும். இந்த பிரகடனம் மற்றவர்கள் நியாயமாக கேட்கும் கேள்விகளைத் தடுக்க முடியாது. மத சுதந்திரம் என்பது உரிமையா? சலுகையா? ஒரு மதம் சகிப்புத் தன்மை அற்று அதன் வழியில் எதிர்படும் மற்ற கலாச்சாரங்களை எல்லாம் வென்று அழிக்கக் கிளம்பினால், சமூகம் அதனை ஏன் பொறுக்க வேண்டும்? சகிப்புத் தன்மை உள்ள ஒரு சமூகமும், சற்றும் சகிப்புத் தன்மை அற்ற மதமும், சகித்துக் கொண்டு போகும் பெண்ணும், அவளைக் கற்பழிக்கும் கயவனும் போன்று பொருத்தம் இல்லாதது. இஸ்லாம் புனிதப் போர் மற்றும் மக்கள் தொகை பரவல் மூலமாக உலகை வெல்ல முயற்சிக்கிறது. இஸ்லாம் அல்லாதவர்கள் இந்த அபாயம் குறித்து விவாதிக்கவும், நியாயமான – சட்டத்திற்குட்பட்ட வழிகளில் இதனை எதிர்கொள்ள யோசனைகளை கூறுவதற்கும் எல்லா உரிமையும் உள்ளது.

பௌத்தம், சமணம், சீக்கியம், மற்றும் இதர பழமையான பாரம்பரியங்கள் அனைத்தும் கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய இரு மதங்களின் சட்டவிரோத மதமாற்றங்களுக்கான கூட்டு இலக்கு எனும் போது, இந்த மதங்கள் எல்லாம் இணைந்து ஒரு ஹிந்து அமைப்பாக அரசால் பாதுகாக்கப் படவேண்டும் என்ற கோரிக்கை நியாயமானதே! அப்படியே நடந்தாலும் இந்தியா ,முதன் முதலாக ஒரு மதச்சார்புடைய நாடாக ஆகிவிடாது. ஐக்கிய அரசு (UK), ஜெர்மனி மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் மதச்சார்புடைய நாடுகளாகவே இருக்கின்றன – இவை சர்ச்சுகளுக்கு நிதி ஒதுக்கீடும் செய்து வருகின்றன. இந்த நாடுகள் கிழக்கின் மதங்களை தடுக்கவும், அவற்றின் உர்மைகள் – சலுகைகள் ஆகியவற்றை நீக்குவதற்கும் சட்டங்களை வழமையாக இயற்றி வருகின்றன; கிறிஸ்தவ நாடான ஹங்கேரி கிழக்கத்திய மதங்களை ஒடுக்க இயற்றிய சட்டம் ஒரு அண்மைய உதாரணம். அமேரிக்கா மதச்சாற்பற்றது (மதச்சார்பின்மை என்றாலே கிறிஸ்தவத்துக்கு ஆதரவாக ஆகிவிடுகிறது – இது வேறு ஒரு தலைப்பில் பேச வேண்டியது) – இருந்தும் அமெரிக்க அரசு சர்ச்சுக்கு எக்கச் சக்கமாக நிதி செலவிடுகிறது. பல அரபு நாடுகள் இஸ்லாமிய மதவாத அமைப்புகளாகவே இருக்கின்றன – இவை பௌத்தம், இந்து, சமணம் மற்றும் சீக்கியம் போன்ற மதங்களை தம் மண்ணில் சகிப்பதில்லை. இது போன்ற இடங்களில் எல்லாம் இந்து உரிமைகளுக்காகஇடது சாரிகள் போராடுவதே இல்லை – அதே சமயம் இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் மீது சகிப்புத் தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று நமக்கு உபதேசிக்க முதலில் வந்து அமர்ந்து விடுகிறார்கள்.

சகிப்புத் தன்மை அற்ற மதங்களை இந்துக்கள் கண்மூடித் தனமாக பொறுத்துக் கொள்வது என்பது அவர்களது உச்ச அளவிலான முட்டாள்தனம். நமக்குள்ளே இருக்கிற சில “கங்கா தின்”கள் வேண்டுமானால் பரிசுப் பணத்துக்காக “மதச்சார்பின்மை தொப்பியை” அணிந்து கொள்ளட்டும்; ஏனையோர் நிதர்சனத்தை அலட்சியப் படுத்த முடியாது. இப்போது சுவாமியை அமைதியாக்க விரும்பும் இடது சாரிகள் தான், சர்ச்சு இந்திய அரசுடன் சேர்ந்து கொண்டு டாவின்சி கோட்திரைப்படத்தை தடை செய்தபோது கப்சிப் என்று இருந்தார்கள் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

ஹார்வர்ட் பல்கலைக் கழகம் தன்னுடைய பேராசிரியர்களிலேயே ஒருவரான ஜேம்ஸ் ரஸ்ஸல், கருத்துரிமை குறித்து எழுதியதை கவனத்தில் கொள்ள வேண்டும்:

“தாராள வாதம் (liberalism) என்பது சுதந்திரத்தைச் சார்ந்தது. சிறுவனாக இருந்த போது சமூக உரிமைகளுக்காக அணிவகுப்பில் பங்கேடுத்தேன்; அதன் பொருள் சம வாய்ப்பு, ஒருங்கிணைப்பு மட்டுமே; கறுப்பினப் பிரிவினை, affirmative action மற்றும் கட்டற்ற வன்முறை அல்ல. கல்லூரியில் படிக்கும் இளைஞனாக தற்பால் கவர்ச்சியாளர்களின் உரிமைக்காக போராடினேன்; வன்முறை, கேலி, கண்டனம் ஆகியவை குறித்த பயமின்றி நம்மைப் போலவே ஓரினச் சேர்க்கையாளர்களும் காதலை வெளிப்படுத்த வேண்டும் என்று எண்ணினேன். (…) வெளியுறவுகள் குறித்து இடது சாரிகளின் தவறான வழியில் திரும்பி விட்ட கொள்கைகள் முழு அளவும் பாதகமான செமித்திய-எதிர்ப்பாகவும், ஓரினச்சேர்கையாளர்களை வெறுத்தல், பெண்களை வெறுத்தல் என்பதில் அடிப்படையிலேயே வெறுப்பியலாகத் துவங்கும் அரசியல் இஸ்லாத்தின் மீது எந்த தர்க்கமும் இல்லாத வழிபாடுமாகவும் உருமாறிக் கொண்டிருக்கிறது. அதே சமயம், இடது சாரிகள் சர்வாதிகாரத்தின் வன்முறையியலுடன் என்றுமே உறவாடியும், அமெரிக்காவை அரக்கனாக சித்தரித்து வந்திருக்கிறது எனும் போது நமக்கு புரிந்து போகிறது – இதில் இதற்கு மேல் ஆழமாக சிந்திக்க ஏதுமில்லை. ஹோரோவிட்சின் “101 கல்வித்துறை முரடர்களின்”2 பட்டியலில் உள்ளவர்களில் பெரும்பாலர் தங்களை சுதந்திர உணர்வு கொண்ட லிபரல்களாகவே சித்தரித்துக் கொள்வார்கள். ஆனால் எதிர்க்கருத்துக்களை சகித்துக் கொள்ள முடியாமல் சென்சார் செய்யத் துடிக்கும் அவர்கள்து மனநிலையே உண்மையில் கருத்துச் சுதந்திரத்தின் முதல் எதிரியாகும். தமது பதவியை துஷ்பிரயோகம் செய்து, வேறு எங்கும் நகர்ந்து போய்விட முடியாமல் சிக்கி விட்ட தம் மாணவர்களிடம் தம் கருத்துகளை சுமத்துகிறார்கள். (..) அது மட்டும் அல்ல, யாரெல்லாம் தம் எண்ணங்களின் படி செயல் படுகிறார்களோ அவர்களை வளர்த்து விட்டு கல்வித் தரத்தையும் தாழ்த்தி விடுகிறார்கள்.”

எக் மற்றும் போஸ் போன்றவர்களைப் போல, (நீட்ஷே சொன்ன அர்த்தத்தில்) “ஒத்துழைக்கும் முட்டாளாக” இல்லாமல் இருப்பதற்கும், துணிந்து தெளிவாக சிந்தித்ததற்காகவும் நான் சுவாமிக்கு நன்றி கூறுகிறேன். அவர் எழுப்பியுள்ள பிரச்சனைகள் மிகவும் அவசியமானவை. என்னால் அவர் கூறுகிற சில வழிமுறைகளுடன் ஒத்துப் போக முடியாவிட்டாலும், அவருடைய கருத்துரிமைச் சுதந்திரத்தை நான் ஆதரிக்கிறேன். ஏனெனில் ஹார்வர்ட் இடது சாரிகளைப் போல அல்லாமல், என்னால் ஒப்பமுடியாத சுவாமியின் சில கருத்துக்களை எதிர்கொள்ள என் பேனாவின் வலிமையே போதும், எந்த தணிக்கையும் கோரமாட்டேன்.

ஹார்வர்ட் முல்லாக்கள் வெட்கம் கெட்டவர்கள்.-- Edited by Admin on Monday 3rd of August 2015 03:29:25 PM

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard