New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அந்தணர் என்போர் அறவோர் -குறளை வைத்து தமிழர் மரபைச் சிதக்கும் நவீன திராவிடியார் புலவர்

Guru

Status: Offline
Posts: 24778
Date:
அந்தணர் என்போர் அறவோர் -குறளை வைத்து தமிழர் மரபைச் சிதக்கும் நவீன திராவிடியார் புலவர்
Permalink  
 
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான். குறள் 30: நீத்தார் பெருமை.
மணக்குடவர் உரை:எல்லாவுயிர்க்குஞ் செவ்விய தட்பஞ்செய்தலை மேற்கொண்டொழுகலானே, அந்தணரென்போரும் துறந்தாராகக் கொள்ளப்படுவர். மேல் துறந்தவர்களினுஞ் சிறியாருளரென்று கூறினார். இதனானே துறவாதாரினும் பெரியாருளரென்று கூறினார். இவை யெட்டானும் துறவறத்தின் பெருமை கூறப்பட்டது.
பரிமேலழகர் உரை:எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான் - எல்லா உயிர்கள் மேலும் செவ்விய தண்ணளியைப் பூண்டு ஒழுகலான்; அந்தணர் என்போர் அறவோர் - அந்தணரென்று சொல்லப்படுவார் துறவறத்தில் நின்றவர். (பூணுதல் விரதமாகக் கோடல். 'அந்தணர்' என்பது அழகிய தட்பத்தினை உடையார் என ஏதுப்பெயர் ஆகலின், அஃது அவ்வருளுடையார் மேலன்றிச் செல்லாது என்பது கருத்து. அவ்வாறு ஆணையுடையாராயினும் உயிர்கண்மாட்டு அருளுடையர் என்பது இதனால் கூறப்பட்டது.
மு. வரதராசன் உரை:எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால், அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர்.
கலைஞர் உரை:அனைத்து உயிர்களிடத்திலும் அன்புகொண்டு அருள் பொழியும் சான்றோர் எவராயினும் அவர் அந்தணர் எனப்படுவார்.
சாலமன் பாப்பையா உரை:எல்லா உயிர்களிடத்திலும் இரக்கம் கொண்டு வாழ்பவரே அறவோர்; அவரே அந்தணர்.
Translation:Towards all that breathe, with seemly graciousness adorned they live; And thus to virtue's sons the name of 'Anthanar' men give,
Explanation: The virtuous are truly called Anthanar; because in their conduct towards all creatures they are clothed in kindness.

குறளிற்கு பொருள் கூறும்போது அதிகாரத்தின் தலைப்போடு ஒத்து கூற வேண்டும். இது நீத்தார் பெருமை- எனத் துறவிகள் போற்றும் அதிகாரம் 

வேதங்களினால் விளக்கப்பட்ட ஸனாதந தர்மம் எனும் வ்ருக்ஷத்திற்கு ஆணிவேராக திகழ்பவை வர்ணதர்மங்கள், ஆஸ்ரமதர்மங்கள் என்னும் இரண்டு தர்மங்கள் ஆகும்.

வர்ணதர்மங்கள் ப்ரஹ்ம, க்ஷத்ரிய, வைச்ய, சூத்ர பேதத்தினால் நான்காகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஆஸ்ரம தர்மங்கள் ப்ரஹ்மசர்ய, க்ருஹஸ்த, வானப்ரஸ்த, ஸன்யாஸ எனும் பேதத்தினால் நான்காகப் பகுக்கப்பட்டுள்ளது.

அவற்றுள் சிறந்தது (க்ருஹஸ்த தர்மம்) எனும் இல்லற வாழ்வு. இல்வாழ்க்கையைப் பற்றி திருவள்ளுவர் தம்முடைய திருக்குறளில்

“இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் 
நல்லாற்றின் நின்ற துணை.

என்று கூறுகின்றார். அதாவது இல்லறத்தில் வாழ்பவன் அறத்தின் இயல்புகளை உடைய மூவர்க்கும் நல்வழியில் நிலைபெற்ற துணையாக இருக்கின்றான் என்பதாகும்.

உபநயனம் ஆனபிறகு ப்ரஹ்மசாரியானவன் குருவினிடத்தில் முறையாகக் கல்விகற்க வேண்டும். மனுஸ்மிருதி இவ்வாறு கூறுகின்றது -(வேதானதீத்ய வேதௌ வா வேதம் வா அபி யதாக்ரமம்

அவிலுப்தப்ரஹ்மசர்யேள க்ருஹஸ்தாஸ்ரமமாவஸேத்)

முறை பிறழாமல் ஒழுக்கத்துடன் குருகுலவாஸம் புரிந்த சீடனானவன் தனது வேதத்தினை முதலில் தெளிவுறக் கற்று பின்னர் மற்றைய மூன்று வேதங்களையோ, அல்லது இரண்டு வேதங்களையோ, அல்லது ஒரு வேதத்தையோ தெளிவுறக் கற்றுத் தேர்ந்த பின் இல்லற வாழ்வினை மேற்கொள்ள வேண்டும். பின்னர் தன்னுடைய தந்தை அல்லது ஆசார்யனுடைய அனுமதியுடன் தன்னுடைய வர்ணத்தைச் சேர்ந்த அழகுடைய பெண்ணைத் திருமணம் செய்ய வேண்டும்.

(அஸபிண்டா ச யா மாதுரஸகோத்ரா ச யா பிது:
ஸா ப்ரசஸ்தா த்விஜாதீனாம் தாரகர்மணி மைதுனே)

அப்பெண்ணானவள் அதாவது மணப்பெண்ணானவள் தன் தாயின் ஏழு தலைமுறைகளுக்குட் படாதவளாயும், தன்னுடைய கோத்ரத்தில் பிறவாதவளாயும், வைதிக கார்யங்கள் மற்றும் மக்கட்பேறு ஆகியவற்றிற்கு உகந்தவளாயும் இருக்கின்றாளா? என்பதை அறிந்து அக்கன்னிகையை மணம் புரிந்து கொள்ள வேண்டும். மணந்து கொள்ள வேண்டிய கன்னிகையானவள் எவ்வாறு இருக்க வேண்டும் என்றால்

(அவ்யங்காங்கீம் ஸௌம்யநாம்னீம் ஹம்ஸவாரணகாமிநீம் 
தனுலோமகேசதசனாம் ம்ருத்வங்கீமுத்வஹேத்ஸ்திரியாம்)

அழகு மிகுந்தவளும், நற்பெயருடையவளும், அன்னம், பெண்யானையின் நடையினை உடையவளும், மென்மையான உடலினை உடையவளும், மென்மையான பற்கள், மென்கூந்தல், மென்மையான குரலினை உடையவளுமான கன்னிகையை மணந்து கொள்ள வேண்டும்.

திருமணமானது வேதநெறிப்படி செய்யப்பட வேண்டியதாகும். ப்ராஹ்மணர்களுக்கு “ப்ராஹ்மம்” எனப்படும் திருமணமே உயர்ந்ததாகச் சொல்லப்பட்டுள்ளது.

சாஸ்த்ரோக்தமாக திருமணம் ஆன பின்னர் இல்வாழ்க்கையில் ஈடுபடுபவன் விரிக்கப்பட்ட இல்லற தர்மங்களை செவ்வனே கடைப்பிடித்து வரவேண்டும். ஸந்த்யாவந்தனம், ஔபாஸனம், அக்நிஹோத்ரம் முதலியவற்றை க்ருஹஸ்தன் விடாது செய்து வரவேண்டும்.

(பஞ்சஸுநா க்ருஹஸ்தஸ்ய சுல்லீ பேஷண்யுபஸ்கர:
கண்டநீ சோதகும்பச்ச்ச பத்யதே யாஸ்து வாஹயன்)

எந்திரம், முறம், அம்மி, துடைப்பம், உரல், உலக்கை, நீரக்குடம், ஆகியவற்றைப் பயன்படுத்துவதால் ஐந்து கொலைக்குற்றங்கள் இல்லறத்தானை வந்தடைகின்றன.

அவை நீங்குவதற்கு மஹர்ஷிகளால் கீழ்வரும் உபாயங்கள் சொல்லப்பட்டுள்ளன.

(அத்யாபனம் ப்ரஹ்மயக்ஞ: பித்ருயக்ஞஸ்து தர்பணம் 
ஹோமோ தைவோ பலிர்பௌதோ ந்ருயஞோ அதிதிபூஜனம்)

அவையாவன:

1. ப்ரஹ்ம யக்ஞம் 
தினந்தோறும் தான் கற்றறிந்த வேதத்தினை ஓதுதல் வேண்டும்.

2.பிதுர்யக்ஞம் 
அன்னம் படைத்தோ அல்லது புனல் வார்த்தோ தென்புலத்தார்க்கு அதாவது பித்ருக்களுக்கு வழிபாடு செய்தல் வேண்டும்.

3. தேவயக்ஞம் 
அக்னியில் அவி சொரிந்து (ஹவிஸினை இட்டு) தேவர்களை வழிபடுதல்

4. பூதயக்ஞம் - அன்னத்தினால் பலியிடுதல்

5. ந்ருயக்ஞம்- விருந்தோம்பல் முதலியன ஆகும்.
(யதா வாயும் ஸமாஸ்ரித்ய வர்தந்தே ஸர்வஜந்தவ:
ததா க்ருஹஸ்தமாஸ்ரித்ய வர்தந்தே ஸர்வ ஆஸ்ரமா:)
எல்லா உயிர்களும் பிராண வாயுவினால் வாழ்ந்திருப்பதைப் போன்று ப்ரஹ்மசாரி, வானப்ரஸ்தன், ஸந்யாசி மூவரும் இல்வாழ்வானைச் சார்ந்து வாழ்கின்றனர். எனவே இல்லற தர்மம் மிகவும் சிறந்ததாக விளங்குகின்றது.
மேற்கண்ட ஐந்து யக்ஞங்களைப்பற்றி மனுஸ்மிருதியில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. விரிவஞ்சி சுருக்கமாக இங்கு எழுதப்பட்டது. மேலும் ப்ராஹ்மணனாக இருக்கும் ஒருவன் தன்னுடைய நித்ய கர்மானுஷ்டானங்களை விடாமல் செய்து கொண்டும், எல்லா உயிர்களிடத்திலும் கருணை உள்ளத்தோடு, புத்திரர்களை கல்விமான்களாகவும், பண்புடையவர்களாக ஆக்குவதிலும், பிறன்மனை விழையாமலும், பெரியவர்களைப் போற்றியும், வேதாந்த விசாரங்களைச் செய்து கொண்டு சாஸ்த்ரங்கள் மற்றும் நீதிநூல்களை தினந்தோறும் பயின்றும், இறைவனை இடைவிடாது த்யானித்துக் கொண்டும், பசித்தவர்களுக்கு உணவளித்தும் உறவினர்களைப் போற்றியும், வறியவர்களுக்கு தன்னாலான உதவிகளைச் செய்தும், பித்ரு கார்யங்களான, தர்ப்பணம், ச்ராத்தம் முதலியவற்றைச் செவ்வனே நிறைவேற்றிக் கொண்டும், சிற்றின்பங்களில் பற்றின்றியும் இருக்க வேண்டும். கணவனும் மனைவியும் இணைந்து இல்லறத்தைச் செவ்வனே நடத்தி வரவேண்டும். அவ்வாறு இம்மண்ணுலகில் செவ்வனே இல்லறத்தை நடத்திய ஒருவன்

“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் 
தெய்வத்துள் வைக்கப் படும்”

எனும் குறளுக்கேற்ப வானுலகத்தில் தேவனாக மதிக்கப்படுவான்.

__________________

Guru

Status: Offline
Posts: 24778
Date:
RE: அந்தணர் என்போர் அறவோர் -குறளை வைத்து தமிழர் மரபைச் சிதக்கும் நவீன திராவிடியார் புலவர்
Permalink  
 
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.  குறள்:50 இல்வாழ்க்கை
இந்த உலகில் புகழோடு நீதி நூல்கள் காட்டும் அற வழியில் வாழ்ந்தவர் வானுலகில் (சொர்கத்தில்) வாழும் தேவர்களோடு (தெய்வம்) வைக்கப் படுவார்

திருவள்ளுவர் வானுறையும் தெய்வம் என்பது என்ன?
வானுறையும் தெய்வம் என்ற சொல் தேவர்களை குறிக்கிறது என்பதை நாம் வள்ளுவத்திலேயே காணலாம்

வானில் உள்ள தெய்வத்திற்கு சிறப்பான பூஜைகள் எனக் (குறள்18) கூறுகிறார்
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு. குறள் 18: வான்சிறப்பு.

விருந்தினரை நன்கு உபசரித்து, வரும் விருந்தினரை எதிர்பார்த்து இருப்பவன் வானுலக தேவர்க்கு நல்ல விருந்தினன் (குறள்-86)ஆவான்.
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்வருந்து வானத் தவர்க்கு. குறள் 86: விருந்தோம்பல்.
மேலே உள்ளது வானுலகம் - மேலுலகம் (குறள்-222)
இந்த வான் எனும் அகன்ற மேலுலகத்தின் அரசன் இந்திரன் (குறள்-25)

நரகம் -தேவர்கள் வாழும் சொர்கம் மேலுலகம், வான் என்ற வள்ளுவரே, நரகம் என்பதை  மீள முடியாத இருள்(ஆர் இருள்), இருள் சேர்ந்த இன்னா உலகம், மீள் முடியாத அளறு என்கிறார்
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆர் இருள் உய்த்துவிடும் - குறள் 121
மணக்குடவர் உரை: மன மொழி மெய்களை அடக்கி யொழுக அவ்வடக்கம் தேவரிடத்தே கொண்டு செலுத்தும்: அவற்றை அடக்காதொழிய அவ்வடங்காமை தானே நரகத்திடைக் கொண்டு செலுத்திவிடும். மேல் பலவாகப் பயன் கூறினாராயினும், ஈண்டு அடக்கத்திற்கும் அடங்காமைக்கு மிதுவே பயனென்று தொகுத்துக் கூறினார்.

மனிதன் தூங்குவது போல பிறப்பு, தூங்கி எழுவது போலே பிறப்பு (குறள்-339),   இந்த பிறப்பில் நல்ல அற வாழ்க்கை அடக்கத்தோடு வாழ்ந்தால் தேவர் வாழும்  சொர்கம்  செல்லம்

யான்எனது என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும். குறள் 346: துறவு
உடம்பை நான் என்றும், பொருள் பற்றி எனது என்றும் வரும் செருக்கை மனத்துள் இருந்து அறுத்து விட்டவன், தேவர்க்கும் மேலான வீட்டுலகத்தை அடைவான்.

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி. குறள் 356:மெய்யுணர்தல்.
மு. வரதராசன் உரை:கற்க வேண்டிய வற்றைக் கற்று இங்கு மெய்ப் பொருளை உணர்ந்தவர் , மீண்டும் இப்பிறப்பிற்கு வராத வழியை அடைவர்.
மு. கருணாநிதி உரை:துறவற வாழ்வுக்குத் தகுதியுடையவராகச் செய்திடும் அனைத்தையும் கற்று, உண்மைப் பொருள் உணர்ந்து அதன்படி ஒழுகுபவர், மீண்டும் இல்லற வாழ்க்கையை விரும்ப மாட்டார்கள்.
சாலமன் பாப்பையா உரை:பெரியவர்களிடம் கற்று, மெய்ப்பொருளை இவ்வுலகில் உணர்ந்தவர்கள் திரும்பவும் பிறக்காமல் இருக்கும் வழியில் செயல்படுவர்.

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு. குறள் 358: மெய்யுணர்தல்.
மு. வரதராசன் உரை:பிறவித்துன்பத்திற்கு காரணமான அறியாமை நீங்குமாறு முக்தி எனும் சிறந்த நிலைக்குக் காரணமான செம் பொருளைக் காண்பதே மெய்யுணர்வு.
மு. கருணாநிதி உரை:அடுத்த பிறப்பு எனக் கூறப்படும் அறியாமையைப் போக்கித் தெளிந்த உண்மையை நிலைநாட்டுவதுதான் அறிவுடைமையாகும்.
சாலமன் பாப்பையா உரை:பிறவி என்னும் அறியாமையிலிருந்து விலகப் பிறவாமை என்னும் செவ்விய பொருளைக் காண்பதே மெய்யுணர்தல்.

ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணிய துடைத்து. குறள் 353:மெய்யுணர்தல்.
மு. வரதராசன் உரை:ஐயத்திலிருந்து நீங்கி மெய்யுணர்வு பெற்றவர்க்கு அடைந்துள்ள இவ்வுலகை விட அடைய வேண்டிய மேலுலகம் அண்மையில் உள்ளதாகும்.
மு. கருணாநிதி உரை:ஐயப்பாடுகளைத் தெளிந்த ஆராய்ச்சி வாயிலாகத் தீர்த்துக் கொண்டவர்களுக்குப் பூமியைவிட வானம் மிக அருகில் இருப்பதாகக் கருதுகின்ற ஊக்கம் ஏற்படும்.
சாலமன் பாப்பையா உரை:சந்தேகத்திலிருந்து விலகி மெய்ப்பொருளைத் தெளிவாக உணர்ந்தவருக்கு, அவர் வாழும் பூமியை விட, விரும்பும் வான உலகம் மிக அருகில் இருப்பதாகும்.

ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர்வு இல்லா தவர்க்கு. குறள் 354:மெய்யுணர்தல்.
மு. வரதராசன் உரை:மெய்யுணர்வு இல்லாதவர்க்கு ஐந்து புலன்களின் வேறுபாட்டால் வளர்ந்த ஐந்து வகை உணர்வும் முற்றப்பெற்ற போதிலும் பயன் இல்லை.
மு. கருணாநிதி உரை:உண்மையைக் கண்டறிந்து தெளிவடையாதவர்கள், தமது ஐம்புலன்களையும் அடக்கி வெற்றி கண்டிருந்தாலும் கூட அதனால் அவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை.
சாலமன் பாப்பையா உரை:மனம் அடங்கக் கற்றவர் என்றாலும், உண்மையை உணரும் உணர்வு இல்லாதவர்க்கு ஒரு பயனும் இல்லை.

நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று. குறள் 222: ஈகை.
மணக்குடவர் உரை:ஒருவன்மாட்டுக் கொள்ளல் நன்மை பயக்கும் நெறியெனினும் கோடல் தீது: ஒருவர்க்குக் கொடுத்தாற் பாவ முண்டெனினும் கொடுத்தல் நன்று. கொள்வோ ரமைதி யறிந்து கொடுக்கவேண்டுமெனினும் இது வரையாது கொடுத்தலாதலால் யாதொருவாற்றானுங் கொடை நன்றென்பது கூறிற்று.
மு. வரதராசன் உரை:பிறரிடம் பொருள் பெற்றுக் கொள்ளுதல் நல்ல நெறி என்றாலும் கொள்ளல் தீமையானது, மேலுலகம் இல்லை என்றாலும் பிறக்குக் கொடுப்பதே சிறந்தது.
மு. கருணாநிதி உரை:பிறரிடமிருந்து நல்வழியில் பொருளைப் பெற்றாலும் அது பெருமையல்ல; சிறுமையே ஆகும். கொடை வழங்குவதால் மேலுலகம் என்று சொல்லப்படுவது கிட்டிவிடப் போவதில்லை; எனினும் பிறர்க்குக் கொடுத்து வாழ்வதே சிறந்த வாழ்க்கையாகும்.
சாலமன் பாப்பையா உரை:நல்லதுதான் என்று எவரேனும் சொன்னாலும் பிறரிடம் ஒன்றைப் பெறுவது தீமை; ஏதும் இல்லாதவர்க்குக் கொடுப்பதால் விண்ணுலகம் கிடைக்காது என்றாலும் கொடுப்பதே நல்லது.

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு. குறள் 247: அருளுடைமை.
மணக்குடவர் உரை:அருள் இல்லாதார்க்கு மேலுலகமுறுங் காட்சியில்லை; பொருள் இல்லாதார்க்கு இவ்வுலகின்கண் இன்பமுறுங்காட்சி யில்லையானாற்போல. இஃது அருளில்லாதார் சுவர்க்கம் புகாரென்றது.
மு. வரதராசன் உரை:பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலகத்து வாழ்க்கை இல்லாதவாறு போல உயிர்களிடத்தில் அருள் இல்லாதவர்க்கு அவ்வுலகத்து வாழ்க்கை இல்லையாம்.
மு. கருணாநிதி உரை:பொருள் இல்லாதவர்களுக்கு இல்லற வாழ்க்கை சிறப்பாக இராது. அதுபோலவே கருணை உள்ளம் இல்லாதவர்களின் துறவற வாழ்க்கையும் சிறப்பாக அமையாது.
சாலமன் பாப்பையா உரை:பொருள் இல்லாதவர்க்கு இப்பூவுலக இன்பம் இல்லாதது போலவே, அருள் இல்லாதவர்க்கு மேல் உலக இன்பம் இல்லை.

__________________

Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 
வள்ளுவர் குறளின் அந்தணர் எனும் சொல்லை மேலும் இரண்டு குறளில் கூறி உள்ளார்.
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது. (8-கடவுள் வாழ்த்து)
மணக்குடவர் உரை: அறமாகிய கடலையுடைய அந்தணனது திருவடியைச் சேர்ந்தவர்க்கல்லது, ஒழிந்த பேர்களுக்குப் பிறவாழியை நீந்தலாகாது. அது பெறுதலரிது. இது காமமும் பொருளும் பற்றி வரும் அவலங் கெடுமென்றது.
சாலமன் பாப்பையா உரை: அறக்கடலான கடவுளின் திருவடிகளை சேர்ந்தவரே அல்லாமல் மற்றவர் பிறவியாக கடலை நீந்திக் கடப்பது கடினம்.
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான். (30-நீத்தார் பெருமை)
மணக்குடவர் உரை: எல்லாவுயிர்க்குஞ் செவ்விய தட்பஞ்செய்தலை மேற்கொண்டொழுகலானே, அந்தணரென்போரும் துறந்தாராகக் கொள்ளப்படுவர். மேல் துறந்தவர்களினுஞ் சிறியாருளரென்று கூறினார். இதனானே துறவாதாரினும் பெரியாருளரென்று கூறினார். இவை யெட்டானும் துறவறத்தின் பெருமை கூறப்பட்டது.
சாலமன் பாப்பையா உரை: எல்லா உயிர்களிடத்திலும் இரக்கம் கொண்டு வாழ்பவரே அறவோர்; அவரே அந்தணர்.
இக்குறள் நீத்தார் பெருமை அதிகாரத்தில் - துறவிகளைப் பற்றியது, அதிகார அமைப்பின் பொருள் ஒழுக்கத்தில் நிலைத்து வாழ்ந்த துறவிகள் எனும் அறவோர் எல்லா உயிர்களிடத்திலும் இரக்கம் கொண்டு வாழ்பவர்
வள்ளுவர் அந்தமே ஆன இறைவன் எனவும், அந்தத்தை உணந்த துறவிகள் எனும் பொருளில் மேலுள்ள குறட்பாக்களில் அதிகாரத் தலைப்போடு ஒட்டி நேர்மையாக படிப்போர் அறியலாம்
இறைவனை அந்தணர் என்றும் பார்ப்பான் என்றும் அழைப்பது சங்க இலக்கிய நடைமுறையே.
ஆதி அந்தணன் அறிந்து பரி கொளுவ,
வேத மா பூண் வையத் தேர் ஊர்ந்து,
நாகம் நாணா, மலை வில்லாக,
மூவகை ர் எயில் ஓர் அழல்-அம்பின் முளிய, – 25
மாதிரம் அழல, எய்து அமரர் வேள்விப்
பாகம் உண்ட பைங் கட் பார்ப்பான்
உமையொடு புணர்ந்து, காம வதுவையுள்,
அமையாப் புணர்ச்சி அமைய, நெற்றி
இமையா நாட்டத்து ஒரு வரம் கொண்டு – 30
(Paaaripādal 5)
வள்ளுவர் தமிழ் சமுதாயத்தில் கல்வி, ஆன்மிகப் பணீயாளரான பிராமணரை அந்தணர், பார்ப்பனர், அறுதொழிலார் என சங்க இலக்கிய மரபில் குறிப்பிட்டு உள்ளார்
அந்தணர்- அந்தம் + அணர். உலகின் இறுதிப் பொருளான வேதங்களினை கொண்டு இறைவன் வழி காட்டுபவர் எனப் பொருள் படும்.
வேதங்களின் உறுப்புகளான ஆயுர்வேதம், பஞ்சாங்கங்கள் துணை கொண்டு, சிறு மருத்துவம், வரும் ஆண்டில் காலநிலையை முன்னரே கணித்து பார்த்து யாது பயிரிடலாம், பயணங்கள் செய்ய உகந்த நாளா என நிமித்தம் பார்த்து சொல்வதாலும் பார்ப்பான்.
அறு வகைப்பட்ட பார்ப்பன பக்கமும் - தொல்காப்பியம் பொருள். புறத்:20/1
அமரர்-கண் முடியும் அறு வகையானும் - தொல்காப்பியம் பொருள். புறத்:26/1
பதிற்றுப்பத்து பிராமணர்கள் ஆறு தொழிலை உடையவர்கள்.
“ஓதல் வேட்டல் அவை பிறர்ச் செய்தல்
ஈதல் ஏற்றல் என்று ஆறு புரிந்தொழுகும்
அறம் புரி அந்தணர்” – 24)
கேள்வி கேட்டுப் படிவம் ஒடியாது
வேள்வி வேட்டனை உயர்ந்தோர் உவப்பச் பாட்டு – 74
ஆறு அறி அந்தணர்க்கு அரு மறை பல பகர்ந்து - கலி 1/1
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல் (செங்கோன்மை:543)
மணக்குடவர் உரை: அந்தணர்க்கு உரித்தாகிய வேதத்திற்கும் அதனால் கூறப்பட்ட அறத்திற்கும் முதலாக நின்றது அரசன் செய்யும் முறைமை.
அந்தணர்களின் வேதங்களிற்கும் அவ்ற்றினின்றி எழுந்த தர்ம சாஸ்திரங்களிற்கும் அடிப்படையாய் நின்று உலகத்தைக் காப்பது அரசனுடைய செங்கோல் முறைமை ஆகும்.
Translation: Learning and virtue of the sages spring,From all-controlling sceptre of the king.
Explanation: The sceptre of the king is the firm support of the Vedas of the Brahmin, and of all virtues therein described.
மு. வரதராசன் உரை: அந்தணர் போற்றும் மறைநூலுக்கும் அறத்திற்கும் அடிப்படையாய் நின்று உலகத்தைக் காப்பது அரசனுடைய செங்கோலாகும்.
வ சுப மாணிக்கம் உரை: அருளாளர்தம் நூலுக்கும் அறத்துக்கும் அடிப்படை அரசனது ஆட்சியே.
மு. கருணாநிதி உரை: ஓர் அரசின் செங்கோன்மைதான் அறவோர் நூல்களுக்கும் அறவழிச் செயல்களுக்கும் அடிப்படையாக அமையும்.
சாலமன் பாப்பையா உரை:அறிவை வளர்த்துக் கொள்பவர்தம் ஞான நூல்களுக்கும், அறத்திற்கும் அடிப்படையாய் இருப்பது ஆளுவோரின் நேர்மையான ஆட்சியே.
திருவள்ளுவர் அவருடைய காலத்தில் பயன்படுத்திய சொல்லை அவருக்கு முன்பான சங்க இலக்கியம் மற்றும் பின்னர் எழுந்த சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலையில் எந்த பொருளில் பயன்படுத்தினரோ அதே பொருளில் மட்டுமே பிரயோகம் செய்துள்ளார்

__________________

Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 
வேதங்களினால் விளக்கப்பட்ட ஸனாதந தர்மம் எனும் வ்ருக்ஷத்திற்கு ஆணிவேராக திகழ்பவை வர்ணதர்மங்கள், ஆஸ்ரமதர்மங்கள் என்னும் இரண்டு தர்மங்கள் ஆகும்.

வர்ணதர்மங்கள் ப்ரஹ்ம, க்ஷத்ரிய, வைச்ய, சூத்ர பேதத்தினால் நான்காகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஆஸ்ரம தர்மங்கள் ப்ரஹ்மசர்ய, க்ருஹஸ்த, வானப்ரஸ்த, ஸன்யாஸ எனும் பேதத்தினால் நான்காகப் பகுக்கப்பட்டுள்ளது.

அவற்றுள் சிறந்தது (க்ருஹஸ்த தர்மம்) எனும் இல்லற வாழ்வு. இல்வாழ்க்கையைப் பற்றி திருவள்ளுவர் தம்முடைய திருக்குறளில்

“இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் 
நல்லாற்றின் நின்ற துணை.

என்று கூறுகின்றார். அதாவது இல்லறத்தில் வாழ்பவன் அறத்தின் இயல்புகளை உடைய மூவர்க்கும் நல்வழியில் நிலைபெற்ற துணையாக இருக்கின்றான் என்பதாகும். 

உபநயனம் ஆனபிறகு ப்ரஹ்மசாரியானவன் குருவினிடத்தில் முறையாகக் கல்விகற்க வேண்டும். மனுஸ்மிருதி இவ்வாறு கூறுகின்றது -(வேதானதீத்ய வேதௌ வா வேதம் வா அபி யதாக்ரமம்

அவிலுப்தப்ரஹ்மசர்யேள க்ருஹஸ்தாஸ்ரமமாவஸேத்)

முறை பிறழாமல் ஒழுக்கத்துடன் குருகுலவாஸம் புரிந்த சீடனானவன் தனது வேதத்தினை முதலில் தெளிவுறக் கற்று பின்னர் மற்றைய மூன்று வேதங்களையோ, அல்லது இரண்டு வேதங்களையோ, அல்லது ஒரு வேதத்தையோ தெளிவுறக் கற்றுத் தேர்ந்த பின் இல்லற வாழ்வினை மேற்கொள்ள வேண்டும். பின்னர் தன்னுடைய தந்தை அல்லது ஆசார்யனுடைய அனுமதியுடன் தன்னுடைய வர்ணத்தைச் சேர்ந்த அழகுடைய பெண்ணைத் திருமணம் செய்ய வேண்டும்.

(அஸபிண்டா ச யா மாதுரஸகோத்ரா ச யா பிது:
ஸா ப்ரசஸ்தா த்விஜாதீனாம் தாரகர்மணி மைதுனே)

அப்பெண்ணானவள் அதாவது மணப்பெண்ணானவள் தன் தாயின் ஏழு தலைமுறைகளுக்குட் படாதவளாயும், தன்னுடைய கோத்ரத்தில் பிறவாதவளாயும், வைதிக கார்யங்கள் மற்றும் மக்கட்பேறு ஆகியவற்றிற்கு உகந்தவளாயும் இருக்கின்றாளா? என்பதை அறிந்து அக்கன்னிகையை மணம் புரிந்து கொள்ள வேண்டும். மணந்து கொள்ள வேண்டிய கன்னிகையானவள் எவ்வாறு இருக்க வேண்டும் என்றால்

(அவ்யங்காங்கீம் ஸௌம்யநாம்னீம் ஹம்ஸவாரணகாமிநீம் 
தனுலோமகேசதசனாம் ம்ருத்வங்கீமுத்வஹேத்ஸ்திரியாம்)

அழகு மிகுந்தவளும், நற்பெயருடையவளும், அன்னம், பெண்யானையின் நடையினை உடையவளும், மென்மையான உடலினை உடையவளும், மென்மையான பற்கள், மென்கூந்தல், மென்மையான குரலினை உடையவளுமான கன்னிகையை மணந்து கொள்ள வேண்டும்.

திருமணமானது வேதநெறிப்படி செய்யப்பட வேண்டியதாகும். ப்ராஹ்மணர்களுக்கு “ப்ராஹ்மம்” எனப்படும் திருமணமே உயர்ந்ததாகச் சொல்லப்பட்டுள்ளது. 

சாஸ்த்ரோக்தமாக திருமணம் ஆன பின்னர் இல்வாழ்க்கையில் ஈடுபடுபவன் விரிக்கப்பட்ட இல்லற தர்மங்களை செவ்வனே கடைப்பிடித்து வரவேண்டும். ஸந்த்யாவந்தனம், ஔபாஸனம், அக்நிஹோத்ரம் முதலியவற்றை க்ருஹஸ்தன் விடாது செய்து வரவேண்டும்.

(பஞ்சஸுநா க்ருஹஸ்தஸ்ய சுல்லீ பேஷண்யுபஸ்கர:
கண்டநீ சோதகும்பச்ச்ச பத்யதே யாஸ்து வாஹயன்)

எந்திரம், முறம், அம்மி, துடைப்பம், உரல், உலக்கை, நீரக்குடம், ஆகியவற்றைப் பயன்படுத்துவதால் ஐந்து கொலைக்குற்றங்கள் இல்லறத்தானை வந்தடைகின்றன.

அவை நீங்குவதற்கு மஹர்ஷிகளால் கீழ்வரும் உபாயங்கள் சொல்லப்பட்டுள்ளன.

(அத்யாபனம் ப்ரஹ்மயக்ஞ: பித்ருயக்ஞஸ்து தர்பணம் 
ஹோமோ தைவோ பலிர்பௌதோ ந்ருயஞோ அதிதிபூஜனம்)

அவையாவன:

1. ப்ரஹ்ம யக்ஞம் 
தினந்தோறும் தான் கற்றறிந்த வேதத்தினை ஓதுதல் வேண்டும்.

2.பிதுர்யக்ஞம் 
அன்னம் படைத்தோ அல்லது புனல் வார்த்தோ தென்புலத்தார்க்கு அதாவது பித்ருக்களுக்கு வழிபாடு செய்தல் வேண்டும்.

3. தேவயக்ஞம் 
அக்னியில் அவி சொரிந்து (ஹவிஸினை இட்டு) தேவர்களை வழிபடுதல்

4. பூதயக்ஞம் - அன்னத்தினால் பலியிடுதல்

5. ந்ருயக்ஞம்- விருந்தோம்பல் முதலியன ஆகும்.
(யதா வாயும் ஸமாஸ்ரித்ய வர்தந்தே ஸர்வஜந்தவ:
ததா க்ருஹஸ்தமாஸ்ரித்ய வர்தந்தே ஸர்வ ஆஸ்ரமா:)
எல்லா உயிர்களும் பிராண வாயுவினால் வாழ்ந்திருப்பதைப் போன்று ப்ரஹ்மசாரி, வானப்ரஸ்தன், ஸந்யாசி மூவரும் இல்வாழ்வானைச் சார்ந்து வாழ்கின்றனர். எனவே இல்லற தர்மம் மிகவும் சிறந்ததாக விளங்குகின்றது.
மேற்கண்ட ஐந்து யக்ஞங்களைப்பற்றி மனுஸ்மிருதியில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. விரிவஞ்சி சுருக்கமாக இங்கு எழுதப்பட்டது. மேலும் ப்ராஹ்மணனாக இருக்கும் ஒருவன் தன்னுடைய நித்ய கர்மானுஷ்டானங்களை விடாமல் செய்து கொண்டும், எல்லா உயிர்களிடத்திலும் கருணை உள்ளத்தோடு, புத்திரர்களை கல்விமான்களாகவும், பண்புடையவர்களாக ஆக்குவதிலும், பிறன்மனை விழையாமலும், பெரியவர்களைப் போற்றியும், வேதாந்த விசாரங்களைச் செய்து கொண்டு சாஸ்த்ரங்கள் மற்றும் நீதிநூல்களை தினந்தோறும் பயின்றும், இறைவனை இடைவிடாது த்யானித்துக் கொண்டும், பசித்தவர்களுக்கு உணவளித்தும் உறவினர்களைப் போற்றியும், வறியவர்களுக்கு தன்னாலான உதவிகளைச் செய்தும், பித்ரு கார்யங்களான, தர்ப்பணம், ச்ராத்தம் முதலியவற்றைச் செவ்வனே நிறைவேற்றிக் கொண்டும், சிற்றின்பங்களில் பற்றின்றியும் இருக்க வேண்டும். கணவனும் மனைவியும் இணைந்து இல்லறத்தைச் செவ்வனே நடத்தி வரவேண்டும். அவ்வாறு இம்மண்ணுலகில் செவ்வனே இல்லறத்தை நடத்திய ஒருவன்

“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் 
தெய்வத்துள் வைக்கப் படும்”

எனும் குறளுக்கேற்ப வானுலகத்தில் தேவனாக மதிக்கப்படுவான்.

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us

Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard