New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வேர்ச்சொல் ஆய்வு ... - V.S.Rajam


Guru

Status: Offline
Posts: 24625
Date:
வேர்ச்சொல் ஆய்வு ... - V.S.Rajam
Permalink  
 


  
முதலிலேயே ஒத்துக்கொள்கிறேன் ... எனக்கு வேர்ச்சொல் ஆய்வில் அவ்வளவாகப் பிடிப்பில்லை, திறமையும் இல்லை. ஏன் என்றால் ... அந்த வகை ஆய்வுக்குத் தேவையான பலமொழிப் புலமை இல்லை. என் தமிழை மட்டுமே முழுதுமாக அறிந்தேனா என்பதுவும் ஐயமே!
 
 
 
இக்கால வேர்ச்சொல் ஆய்வின் நடைமுறை எனக்கு ஒத்துவரவில்லை. கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டாற்போல இருக்கிறது. சரியான சான்றுகள் இல்லாமல் ... இங்கேயிருந்து இது அங்கே போச்சு என்ற கூற்றும், இந்த ஒலி இப்படித் திரியும் என்ற கூற்றும் என்னை இந்தவகை ஆய்விலிருந்து அப்புறப்படுத்துகின்றன. 
 
 
என் முறைப்படி, ஒரு தமிழ்ச் சொல்லுக்கு வேர்ச்சொல் காணவேண்டுமென்றால் ... 
  
 
1. ஒலி ஒப்புமை மட்டும் நோக்கி உடனே பிற மொழிக்குத் தாவக்கூடாது. 
 
 
2. அந்தச் சொல் தமிழிலேயே காலந்தோறும் எப்படிப் புழங்கிவந்திருக்கிறது என்பதைத் திட்டமாக அறியவேண்டும் (இலக்கியம், இலக்கணம், உரைகள், எழுத்து, பேச்சு, கல்வெட்டு, இன்ன பிற அகப்படும் சான்றுகள் மூலம்).  
 
 
3. காலத்தையும் வரையறுத்துக் கொள்ளவேண்டும். வெறுமனே ... ஈன் என்ற மிகப் பழைய தமிழ்ச்சொல்லில் இருந்துதான் yean என்ற ஆங்கிலச்சொல் பிறந்தது என்றும், நெருடு என்ற தமிழ்ச்சொல்லில் இருந்துதான்  nerd என்ற ஆங்கிலச் சொல் உருவானது என்றும் சொல்லுவதில் பயனும் இல்லை, பிறருடைய கிண்டலுக்கும் ஆளாவோம். 
 
 
4. தமிழுக்குள்ளேயே கிடைக்கும் சான்றுகளுக்கு இடையே காணப்படும் ஒலி மாற்றங்களுக்கும் பொருள் மாற்றங்களுக்கும் நேரிய முறையில் விளக்கம் கொடுக்கவேண்டும். அதாவது, இன்ன ஒலி/பொருள், இந்தச் சொற்சூழலில், இந்தச் சமூகச் சூழலில், இந்தக் காலத்தில் ... இப்படி மாறியிருக்கிறது என்று சான்று காட்டவேண்டும். 
 
 
5. எல்லாவற்றுக்கும் மேலாக ...  தமிழைத் தூய்மைப்படுத்தும் நோக்கத்துடன் பிறமொழிச் சொற்களைக் களையவேண்டி வேர்ச்சொல் ஆய்வில் இறங்குவது நேரியதில்லை. ஜன்னல் என்ற சொல்லில் உள்ள கிரந்த ஒலியை/எழுத்தைக் களையவேண்டிச்சன்னல் என்று சொன்னாலும் எழுதினாலும் அது பிறமொழிச் சொல்லே! போர்த்துக்கீசியம். தமிழில் இருக்கு ஓர் அழகான சொல்: காலதர் (== 'காற்று வழி'). அதைத் தவறாக நம் இளைய தலைமுறை 'காதலர்' என்று எழுதிவிடும். அதுக்கு ஜன்னலே பரவாயில்லை! அலமாரியை என்ன செய்வீர்கள்? கிராம்பு என்பதை இலவங்கம் என்று சொல்லலாம், ஆனால் அது எங்கேயிருந்து வந்தது?
 
 
அடுத்து, சில சொற்களை எடுத்துக்காட்டியிருக்கிறேன். ஓர் இடத்தில் நிகழும் ஒலி மாற்றத்தைப் பொத்தாம் பொதுவாக எல்லா இடத்துக்கும் பொருத்த முடியுமா என்று பாருங்கள். 
 
++++++++++++++++++++++++++++++++++++
 
சில எடுத்துக்காட்டு
------------------------ 
 
எழுத்தில்பேச்சில்மாற்றம்வேர்?
---------------------------------------------------------------------------
 
அகம்ஆம்க > 0 ?
இலைஎலஇ > எ?
இழப்பு, இழவுஎழப்பு, எழவு    இ > எ  ?
 
 
உலக்கைஒலக்கைஉ > ஒ?
உவகைஓகைஉ > ஓ       ?
 
ஒப்பிலிஉப்பிலிஒ > உ       ?
 
 
குடைகொடெஉ > ஒ       ?
கொடைகொடை
குயவன்கொயவன்
குலை (bunch)கொல  
 
பருமன் பெருமன்அ > எ      ?
 
பிறகுபொறவுஇ > ஒ; க் > வ்    ?
புறா, புறவுபொறாஉ > ஒ          ?
 
விரல்வெரல்இ > எ                ?
 
 
++++++++++++++++++++++++++++
கன்றுகண்டுன்ற் > ண்ட் 
கன்றுகன்னுன்ற் > ன்ன் 
மூன்றுமூணுன்ற் > ண்
 
++++++++++++++++++++++++++++
பூண்டுபூடுண் > 0
    
தாண்டு?         
++++++++++++++++++++++++++++ 
 
ஓத்து (வேதம், நூற்பா)<ஓது 
ஓத்து (இன்று கொச்சை மொழி)      <      உவ
 
கொல<கொல் (kill)? குலை (bunch)? 
 
++++++++++++++++++++++++++++++++
 
மரம் ~ மரன்
குணம் ~ குணன் 
 
அப்போ ... அவன் என்பதைஅவம் என்றும் சொல்லலாமோ?! 
 
 
 
பந்தர் ~ பந்தல் 
 
அப்போ ... இவர் என்பது இவல் என்றும் புழங்கப் படலாமே?!
 
+++++++++++++++++++++++++++++++++++++++++
சொல்கிறாள் சொல்றா, சொல்லுதா
 
இதைப் பற்றி என்ன சொல்லலாம்? 
 
 
வால், வாலம் ('tail'; சங்க இலக்கியச் சான்று). 
 
அப்போ, கால் ('leg') என்பது காலம் என்றும் சொல்லப்படுமோ?
 
++++++++++++++++++++++++++++++++++++++++++
ஆல் < யால் < சால் 
ஆனை < யானை < சானை?
ஆத்தா < யாத்தா? < சாத்தா?
 
++++++++++++++++++++++++++++++++++++++++++ 
 
இங்கேயும் பார்க்கவும்: 
http://viruntu.blogspot.com/2010/10/roots-and-stems.html 
 
 
++++++++++++++++++++++++++++++++++++++++
 
ஒரு வினாடி வினா: "சொல்" என்பதன் அடிப்படைப் பொருள் என்ன? 

Roots and stems ...

 
An experiment... in visual representation of the roots and stems of Old Tamil words.

The example root here is the reconstructed *அம் (*am):

stems_3.JPG

stems_1.JPG

stems_2.JPG



I did the following for a colleague who taught Hindi:

stems_4.JPG


__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

தமிழின் தொன்மைக்கு ஏது ஆண்டுகள்..???
பல சுனாமிகள் தோன்றி குமரிக் கண்டத்தைச் சிறிது சிறிதாகச் சிதைத்து வந்தன. ஒவ்வொரு 10,000 ஆண்டுகளிலும் ஒரு பெரிய சுனாமி தோன்றியதாக ஆய்வறிஞர்கள் கூறி வருகின்றனர். இதனால் சில இலட்சம் மக்கள் மடிந்தனர். ஆனால், மிகச் சிறிதளவு நிலப்பகுதியே அழிந்தது.ஆனால் கடற்கோள் என்பது கி.மு.10,000 அளவில் தோன்றி கி.மு. 8,000 அளவு நீண்ட காலம் நடந்தது. இதனை மேலை நாட்டு ஆய்வாளர்கள் பெரும்பனிக்காலம் ( THE GREAT ICE-AGE ) என்கின்றனர்.இதன் காரணமாகவே குமரிக் கண்டம் முற்றிலுமாகவே அழிந்தது.
முதல் பெருஞ்சுனாமி கி.மு. 60,000 ஆண்டுகளை ஒட்டி நிகழ்ந்ததாக ஆய்வறிஞர்கள் கூறினார்கள். இதற்கு அஞ்சியே குமரிக் கண்டத் தமிழர்கள் கட்டுமரங்களில் ஏறி ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா ஆசிய கண்டங்களுக்குக் குடியேறினர். இதனால் அந்தக் கண்டத்து இன்றைய மக்களிடம் திரியாத தமிழ்ச் சொற்களும், திரிந்த தமிழ்ச் சொற்களும் பற்பல இலக்கணக் கூறுகளும் இன்றும் அழியாத நிலையில் உள்ளன.
ஆஸ்திரேலியப் பழங்குடிகள் ;
நீ...நீங்கள் என்பதை, நீ, நிங்க என்கின்றனர். நான், நாம் ( நாங்கள் ) என்பதை நா, நாங்க என்கின்றனர். கண் ஐம்புலன்களில் சிறந்த தலையாய புலன் என்பதால், அதனை புலன் என்கின்றனர்.
என் கண் - நா புலன், உன் கண் - நின் புலன், அவன் கண் - அவன் புலன் என்கின்றனர். பிரதி பெயர்கள் நாடு விட்டு நாடு போகாது. மேலும் ஆஸ்திரேலியப் பழங்குடிகள் கடந்த 50,000 - 30,000 ஆண்டுகளை ஒட்டியோ அல்லது அதன் பின்னரோ தமிழகத்துடன் தொடர்பு இல்லை.
ஆப்பிரிக்கப் பழங்குடிகள் :
எள் + நெய் என்பதுதான் எண்ணேய் ஆயிற்று. எனவே OIL என்ற சொல்லுக்கு ஈடான தமிழ்ச் சொல் நெய் என்பதே ஆகும். தமிழகத்தில் நெய் என்ற சொல் பசுவின் நெய் என்றாகிறது. ஆனால், ஆப்பிரிக்காவின் வழக்கு மொழிகளில் நெய் என்பதே ஆயில். உண் என்ர வினைச் சொல் எகிப்து மொழியில் 4000 ஆண்டுகளுக்கு முன்பே உள்ளது.
தென் அமெரிக்கத் தமிழர் :
அன்னை என்ற
அருமையான
அற்புதத் தமிழ்ச் சொல், தென் அமெரிக்காவில் ஒரு மொழியான இன்கா மொழியில் உள்ளது. சரி என்று நாம் கூறுவதைம் அவர்கள் கரி ( ச = க ) என்கின்றனர். நம் பயிர் பச்சைகளுக்குக் கடவுளாகப் பச்சை அம்மன் என்று நாம் கூறுவதைப் போல், அவர்களும் தம் பயிர்க் கடவுளாகப் பச்சை அம்மன் என்றே வைத்துள்ளனர். 60,000 - 50,000 ஆண்டுகளாக நமக்கும் தென் அமெரிக்காவின் பல குடி மக்களுக்கும் தொடர்பு எதுவும் இருந்ததில்லை.
எனவே 60,000 ஆண்டுகளுக்கு மு8ன்னரே தமிழ் செம்மையான செம்மொழியாக இருந்தது என்றால் தமிழின் வயது ( 1,00,000 ) ஓர் இலட்சம் ஆண்டுகள் என்று கணிக்கலாம். வெறும் சொல் ஆராய்ச்சிச் சான்றுகள் மட்டுமில்லை; கரி, அணு ஆய்வுகளும் ஆண்டுக் கணக்கை உறுதி செய்கின்றன.
=====
எம்மொழியும் எம் மொழி : உலக மொழியறிஞர் சாத்தூர் சேகரனின் 'அகில மொழி' யின் அற்புதங்கள்.
உலக அறிஞர்கள் பார்வையில் "பன்மொழி அறிஞர்" சாத்தூர் சேகரன் பற்றி இப்படித்தான் பேசி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள், "தமிழைப் பற்றி இது காறும் இத்தனை விரிவாக ஐரோப்பாவில் கூறிடவில்லை. எனவே சமஸ்கிருதம் இந்திய மொழிகளின் தாய் என்ற ஐரோப்பியரின் கருத்து இன்றளவும் மாறவில்லை. உங்கள் உரையாற்றல் எங்களுக்கு அதிர்ச்சியைத் தந்த போதிலும் தமிழே உலக மொழிகளின் தாய் என்ற கருத்தை நம்பத்தூண்டுகிறது" -
சமஸ்கிருதத்துறை தலைவர், லண்டன் பல்கலைக்கழகம், லண்டன்.
"நாங்கள் நினைத்தே பார்க்கவில்லை. ஹிப்ரு மொழிக்கும் தமிழ் மொழிக்கும் உறவு உண்டு என்று. உங்கள் உரையால் பல புதிய உண்மைகளை உலகிற்கு அறிவித்திருக்கிறீர்கள்"
- நூலகர், ஹிப்ரு பல்கலைக்கழகம், ஜெருசேலம், இஸ்ரேல்.
"பிரமிட் கட்டியவர்களான எங்கள் முன்னோர்கள் தமிழர்களா? தமிழர்கள்தான் உலக முழுவதும் பரவி இருந்தார்களா? வியப்பிறகுரிய செய்திகளைச் சொல்கிறீர்கள்"
- கெய்ரோ அருங்காட்சியகம், கெய்ரோ, எகிப்து.
"தமிழ் மொழியின் நீள அகலம் பற்றி உலகம் மீண்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும். உண்மையை வெளிக்கொணர நீங்கள் ஆற்றும் பணி அருமையானது. உங்களோடு இணைந்து பணியாற்ற நான் பெருமிதம் கொள்கிறேன்"
- டாக்டர் ஹக்பாக்ஸ், மெக்சிக்கன் பல்கலைக்கழகம், ஐக்கிய அமெரிக்கா.
"இந்திய மொழிகளை மட்டுமல்ல உலக மொழிகளை எல்லாம் அறிந்திருப்பதுடன் அவற்றின் வேர்ச்சொற்களை எல்லாம் கடகடவென கூறுவதை வியக்கிறேன். நான் சீனமொழி அறிந்தவன். ஆனால் நீங்கள் சீனமொழி தமிழ் மொழி உறவு கூறியதைக் கேட்டு மலைத்து நிற்கிறேன்"
- டாக்டர் அருணபாரதி, பெனாரஸ் பல்கலைக்கழகம், காசி.
இவர்களைப் போல இன்னும் பல்வேறு நாட்டு அறிஞர்கள் நம் தமிழரை அதுவும் ஒரு தமிழ்மொழி அறிஞரை புகழாரம் சூட்டிக் கொண்டிருக்கிறார்கள். "சங்கம் வைத்து தமிழ் வளர்த்த" மதுரையில் அகிலமொழி பயிலரங்கத்திற்கு பிரதிமாதம் வந்திருந்து தமிழ் மொழியின் தொன்மை பற்றியும், அதன் இலக்கணங்களையும், ஆதாரங்களுடன் தமிழ்ச் சொற்கள் அதிக மாற்றமின்றி எப்படி பிறமொழி சொற்களாகின்றன என்றும்... தமிழே உலகமொழிகளின் தாய்மொழி
என்பதற்கும் பல்வேறு உதாரணங்களை அந்த 72 வயது இளைஞர் தமிழ்மொழி ஆய்வாளர் சாத்தூர் சேகரன் பொங்கு தமிழாக கீழ்க்கண்டவாறு மேற்கொள்காட்டி எடுத்துரைக்கிறார்.
களி (மண்) - Clay. பிறப்பு - Birth. பொறு - Bear. நாடுதல் - நாடு (ஜெர்மன்). கண் - கண் (சீனா). உப்பர் - ஊப்பர் (இந்தி).
தமிழ் சொற்களில் நடு எழுத்து மறைந்து உருவான சொற்கள்
"நாமம் - நாம் (இந்தி). தாழ்வு - தாவு (தெலுங்கு).
தமிழ் எதிர்மறை முன் ஒட்டுக்களுடன் புதிய சொற்கள்
இம் - Immoral. இல் - Illegal. நிர் - Nil. அன் - Unused. அவ/அப - Abuse.
தமிழ் சொற்களின் முன் எழுத்து விலகி புதிய சொற்கள் உருவாகின்றன.
பதின் - Ten. உருண்டை - Round. உருளை - Roll. அம்மா - மா (இந்தி). நிறங்கள் - றங் (இந்தி). உராய் - Rub. அரிசி - Rice
காரணப் பெயராகிய புதிய சொற்கள்
தேங்குதல் - Tank. ஈனுதல் - Earn என்றும்
 


__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

திசை எட்டும் என்ற தலைப்பின் வாயிலாக தமிழ்மொழி பயன்பாடு தமிழரின் நாகரீகம் பற்றியும் குறிப்பிடுகிறார்.
* சித்திரை முதல் நாள் வருடப்பிறப்பாக இஸ்ரேல்-லில் கொண்டாடப்படுகிறது.
* உணவில் வாசனைப் பொருட்களை அரேபியர்கள் பயன்படுத்துகிறார்கள்.
* பச்சை அம்மன் வழிபாடு என்ற பெயரில் தென் அமெரிக்காவில் நடைமுறையில் உள்ளது.
* பல்லாங்குழி விளையாட்டு இன்றும் ஆப்பிரிக்காவில் நடைமுறையில் உள்ளது.
* தமிழகத்தில் நாம் கொண்டாடும் பொங்கல் தினத்தில் அதே நேரம் "ஹொங்கரோ ஹொங்கர்" என ஜப்பானி-ல் சூரியனை வணங்கி குரலிட்டு கொண்டாடுகிறார்கள்.
* கண்-கண் காண் - காண் காண மகேந்திர + வர்ம + பல்லவர் போல மா+சே+துங் சீனாவில் பேசப்படுகிறது.
* சேவல் சண்டை, திருமண சீர் வரிசை, மஞ்சள் துணி பயன்பாடு தாய்லாந்து-ல் இன்னும் இருக்கிறது.
ஆற்று மீன் என்பதை நறு நீரு மீன் என்று ஆஸ்திரேலியா பழங்குடியின மொழியில் பேசப்படுகிறது.
* மேலும் தமிழ் சொற்களின் முன் S என்ற எழுத்து சேர்ந்து ஆங்கில சொற்கள் எப்படி உருவாகின்றன.
S பேச்சு - Speech. S மெது - Smooth. S உடன் - Sudden. S நாகம் - Snake
* தமிழ் சொற்களின் முன் எழுத்துக்கள் மாறி உருவான சொற்கள்
எட்டு - ஆட் (இந்தி) பத்து - ஹத்து (கன்னடம்) கடை - கெடா (மலாய்) பூங்கொத்து - கொத் (ஜெர்மன்)
* இலக்கிய வழக்காக மலையைக் கல் என்பர். வடபெருங்கல் என்பது இமயமலையைக் குறிக்கிறது.
கல்லூர், குண்டுக்கல், கர்நாடகம்
(கல்அறை) கல்லறா - கேரளம்
கல்லூர் - ஆந்திரம்
கல்முனை - இலங்கை
கல்லினா பாட் - ரஷ்யா
* மலை என்ற தண்டமிழ்ச் சொல்லை மலைய, மலய, மாலயா என்று வட இந்திய மொழிகள் திரித்துப் பயன்படுத்துகின்றன. இமயமலை - ஹிமாலயா என்று மலையா (ஒருநாடு) மலேயா என்றும்
* மலை / மலா ஆகி லாம என மாறுகிறது. பிறழ் விதிப்படி ய ர ல ள ழ போன்ற (LIQUID) இடையினம் தம்முள் மாறிக் கொள்வதால் லகரம் இங்கு யகரமாகிறது.
* மன் என்பதிலிருந்துதான் மனு, மனிதன், மனுசன் போன்று பல சொற்கள் உண்டாகின. பல மக்கட் பெயர்களும் கிடைத்தன.
ஹிப்ரு மொழி
மனுஏல் - மனுவேல்
தமிழ்ப் பெயர்
கருமன் / கருத்திருமன்
தருமன் / திருமன்
வட இந்தியப் பெயர்
பீமன் இராமன்
இவ்வாறு "உலக ஊர்ப் பெயர்களாக ஐந்து லட்சம் பெயர்களை ஆராய்ந்ததில் யாவும் தமிழாகவே உள்ளன.
உலக மக்கட் பெயர்களாக லட்சம் பெயர்களை எடுத்து ஆராய்ந்ந்து பார்த்ததில் யாவும் தமிழாகவே உள்ளன.
இதைப் போலவே இன்னும் தமிழ்மொழியில் அம்மா அப்பா என்ற நாவில் தவழும் சொல் உலகில் 200 மொழிகளுக்கும் மேல் பயன்படுத்தப்படுகிறது என்று தமிழ் தன் சிந்தனையைச் சிறகுகளாக இன்னும் விரித்துக் கொள்வதுபோல எடுத்துக் கூறுகிறார்.
"கி.மு.1000 ஆண்டை ஒட்டி மைய ஐரோப்பாவிலும், வட இத்தாலியிலும் வழங்கி வந்த மொழி எத்ருஸ்கன்" ஆகும். அப்போது அங்கு இலத்தீன் மொழியும் கிடையாது. கிரேக்க மொழியும் கிடையாது. கிரேக்கர்களும் இலத்தீனியர்களும் குடியேறியவர்களே! எங்கிருந்து குடியேறினர் என்பது இன்னும் அறுதியிடப்படாத ஆராய்ச்சியாகவே உள்ளது.
கிரீட் தீவு என்பவர் பலர். எத்ருஸ்கன் மொழியோ இந்த இரண்டைக் காட்டிலும் பழமையானதாக ஆனால் இந்த இரண்டு மொழிகளுக்கும் இலத்தீன் கிரீட் தொடர் பற்றாக இருந்தது. எனினும் திருவிட மொழியோடு எத்ருஸ்கன் மொழிக்குத் தொடர்பு இருக்கிறது.
"ஐரோப்பாவில் திருவிடமொழி எங்ஙனம் முளைத்தது?
(1) திருவிடர்கள் குமரிக்கண்ட மக்கள். குமரிக்கண்டம் சிதையும்போது திருவிட மக்கள் உலகெங்கும் குடியேறினர். எனவேதான், திருவிடமொழி உலகமெங்கும் உள்ளது. அப்போதைய திருவிடமொழி பழந்தமிழே!
(2) மங்கோலியர், சீனர், மத்திய கிழக்கு மக்களான ஹிப்ருக்கள், அரபிய மற்றும் சிலாவியர், ரோமானியர், ஜெர்மானியர், மலேசிய பாலினேசியர், இந்தோ ஆரியர், தென் அமெரிக்கர், ஆப்பிரிக்க மக்கள், ஆஸ்திரேலியப் பழங்குடியினர் - இங்ஙனம் உலக மக்கள் பிரிவினர் யாவருமே திருவிடரே! கடல் கோளால் வந்தோரும் நில அதிர்வாலும் வந்தோருமாக உலகின் பல பாகங்களுக்கு வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு முறைகளில் குடியேறியவர் திருவிடரே!
(3) திருவிடர்கள் சிந்துவெளி நாகரீகம் அமைத்தனர். அதன் மேலும் மேற்கே குடியேறத் தொடங்கி பாபிலோனியா மொசபப்டடோமியா வழியே ஈரான் ஈராக் ஆகிய பல பகுதிகளிலும் குடியேறினர். ஆக திருவிடர் தென்னிந்தியாவில் இருந்தே வடஇந்தியா போய் அங்கிருந்து உலக நாடுகள் யாவற்றிற்கும் சென்றிருக்க முடியும். எனவே திருவிட மொழியாம் தமிழ் உலகெங்கும் அடித்தளமாக அமைப்பு முறையாக இலக்கு கருவியாக இயக்கும் ஆற்றலாக விளங்குகின்றது என்று உலகளாவிய தமிழ் என்று, தான் எழுதியிருக்கும் நூலின் மூலமாகவும் விளக்கத்தை தந்திருக்கும் தமிழ்மொழி அறிஞர் சாத்தூர் சேகரன் சாட்சிக் களத்திற்காக விதைத்திருப்பதை கோடிட்டுக் காட்டுகிறார்.
தமிழ் எழுத்துக்கள் எப்படி எப்படி மாறும் என்பதற்கு ஒரு வரையறை இருக்கிறது. அதற்கு உட்பட்டே மாறுகிறது.
ஆகவே என்னோடு இந்த ஆய்வுகள் நின்றுவிடாமல் தொடர வேண்டும். அதற்கு இன்றைய இளைஞர்கள் இந்தத் தமிழ்மொழியை இளைஞர்கள் குழு மூலம் மக்களை ஒன்று திரட்டி பெரும் இயக்கமாகக் கொண்டு செல்ல வேண்டும் என்று தன் ஆசையை பழுத்த ஆதங்கத்துடன் வெளிப்படுத்தியதைக் கண்டு தமிழே நெகிழ்ந்ததைப் போல அவ்வப்போது தெரிவித்து வருகிறார்". இப்பேற்பட்டவர் ஒரு தமிழாசிரியிராக இருப்பாரா? பேராசிரியராக இருக்கலாம்? இல்லை தமிழ்த்துறை தலைவராகத்தான் இருக்க வேண்டும்? இத்தனை தமிழ் சார்ந்த் தகவல்களை சொன்னவர் ஏன் ஒரு பல்கலைக் கழக துணைவேந்தராக இருக்கக்கூடாது? என்று நினைப்போர்க்கு...
இவர் அப்படி எந்த பதவியிலும் இல்லை
ஆனால் அத்தனை தகுதிகளையும் கொண்ட இன்னொரு தமிழ்தாத்தா என்று சொல்லும் அளவிற்கு தமிழ் மொழிப்புலமை சாத்தூர் சேகரன் அய்யாவிடம் புதைந்து கிடக்கிறது.
சரி இவர் என்ன படித்திருக்கக் கூடும்? எம்.ஏ. (தமிழ்), எம்.ஏ. (ஆங்), எம்.ஏ. (வரலாறு), எம்.ஏ. (சமூகம்), எம்.ஏ. (அரசியல்), எம்.ஏ. (வரலாறு), எம்.பில். (வரலாறு), எம்.ஏ. (பொருளாதாரம்), எம்.ஏ. (மொழி) இது முழுக்க முழுக்க அவர் படித்து முடித்துவிட்ட பட்டங்கள். இன்றும் படித்துக்கொண்டுதான் இருக்கிறார்...
"இது மட்டுமில்லாமல் உலகமெங்கும் பயணம் செய்து அந்தந்த நாடுகளில் தங்கியிருந்து அங்கு வாழும் மக்களிடம் பேசி, பழகி, ஆய்வு செய்திருப்பதால் உலக மொழிகள் 120 தெரியும். மேலும் இலக்கணப் பூர்வமாகவும், விதிமுறைப்படியும் 200 மொழிகளில் ஆய்வு செய்து வரும் சாத்தூர் சேகரன் அய்யா 200 மொழி நூல்களும் எழுதியிருக்கிறார். பல நூறு ஆய்வுக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார்".
"உலக அரங்கங்களிலும். பல்கலைக்கழகங்களிலும், மொழி ஆய்வுக் கூடங்களிலும், புதிய மொழி கொள்கைகளை முழங்குகின்ற தமிழ் மொழி ஆய்வாளர் சாத்தூர் சேகரன் இதுவரை 10,000 பாடல்கள், 400 நவீனங்கள், 40 காப்பியங்கள், 200 சிறுகதைகள் எழுதியிருப்பதோடு, 50 நாடகங்களையும் இவரே எழுதி இயக்கியும் இருக்கிறார். பல்வேறு இதழ்களிலும் இவரது கதைகள், கட்டுரைகள், கவிதைகள் வெளியாகியுள்ளன. இன்னும் இவரது எழுத்துக்களில் 40 நூல்கள் வெளிவர இருக்கிறது.
தமிழ்மொழியைப் பற்றி, தமிழ் மொழியின் ஆதி, அந்தம், ஆச்சர்யங்களையும் சொல்லும்போது பிரமிடுகளை தாண்டிய பிரமிப்பை ஏற்படுத்துகிறது.
தமிழ் மொழிக்காகவே தன் உடல், பொருள், ஆவி, அனைத்தையும் அர்ப்பணித்திருக்கும் தமிழ்மொழி ஆய்வாளர் சாத்தூர் சேகரன், தான் அடுத்தடுத்து தமிழ்ச்சங்கங்கள், பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள் என்று அழைத்தவர்களின் இடம் நோக்கி... தன் கையோடு கொண்டு செல்லும் தமிழ் மொழியைப் போல கணத்த சூட்கேஸ்-உடன் தமிழோடு தானும் சேர்ந்தே பயணிக்கிறார்.
தமிழ்தான் என் மூச்சு, தமிழர்களுக்காக என் உயிரையும் கொடுப்பேன் என்று உரக்க பேசுகின்ற எத்தனையோ தலைவர்களுக்குக்கிடையில் தமிழ் மொழி மற்றும் கலாச்சாரம், பண்பாடு, குறித்த முழு பார்வையை வளரும் இளம் தலைமுறையினர்க்கு வாரி வழங்குவதற்காக ஒரு சப்தமில்லா சாம்ராஜயத்தையே நடத்தி வருகிறார்.
அதே நேரத்தில் சாத்தூர் சேகரன் அய்யாவின் 40 வருட உழைப்பைச் சிந்தாமல் சிதறாமல் மாணவ - மாணவியர்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகவும், அவர்களைச் சாத்தூர் சேகரனின் தமிழ் வாரிசுகளாகவும் உருவாக்கி, அவர்கள் பல்வேறு இடங்களுக்கும் சென்று பேசக்கூடிய ஊக்கத்தையும் தந்து உலக நாடுகளில் போய்ப் பேசுகின்ற தனித்தன்மையை எம்மொழியும் எம் மொழி என்ற கொள்கை முழக்கத்துடன் அகிலமொழி எனும் அமைப்பை தமிழ்நாட்டில் மாநகர் மதுரையில் துவங்கி அதற்கு வேராகவும் நீராகவும் விளங்குகின்ற கோ மற்றும் அவருக்கு உறுதுணையாய் இருக்கும் தமிழ் நெஞ்சங்களையும் பாராட்டியே ஆகவேண்டும்.
உலகின் பல்வேறு நாடுகளில் இயங்கும் தமிழ்ச் சங்கங்கள் தமிழ்மொழி ஆய்வாளர் சாத்தூர் சேகரன் அய்யாவையும் 'அகிலமொழி' யின் மாணவர்களையும் உற்று நோக்க வேண்டும். தமிழைச் செழிக்கச் செய்ய நாமனைவரும் அரும்பாடு படவேண்டும்.
தமிழைக் கன்னித் தமிழ் என்கிறோம் ஏன்? உலகின் முதன் மொழி தோன்றி இரண்டு இலட்சம் ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும் என்கிறார் அமெரிக்க மொழி அறிஞர் சுவாடேசு. உலகின் தாய்மொழிக்கான வாய்ப்பு தமிழுக்கு உள்ளது என்றும் உறுதி கூறுகிறார். பாவாணர் போன்றோரும் இதனை அறுதியிடுகின்றனர். எனது கள ஆய்வும் இதனையே உறுதி செய்கிறது. இதனால்தான் எனது நூல்களில் தமிழ்ச் சொற்களின் வழித்தோன்றலாக உலகின் பெரிய 400 மொழிகளில் ஒப்புமையைக் காட்டமுடிகிறது. தமிழின் இத்தகைய வீச்சிற்கும், வீழாத தன்மைக்கும் காரணங்கள் யாவை?
இன்ன எழுத்தில்தான் தொடங்க வேண்டும், இன்ன எழுத்தில்தான் சொற்கள் முடிவடைய வேண்டும். உச்சரிக்கக் கடினமான சொற்கள் இருத்தல் கூடாது. என்றெல்லாம் நமது முன்னோர்கள் வரையறை செய்து வைத்திருந்தனர். மேலும் மொழி என்பது பாமரர் சொத்து என்பதை ஒரு சட்டமாகவே வைத்திருந்தனர். சிறுவர் எளிதில் கற்றுணர மொழிச்சட்டம் அல்லது இலக்கணம் ஒரு தடையாக இருத்தல் ஆகாது என்று திட்டமிட்டிருந்தனர். எனவே மறபு மீறலை ஒரு மரபாகவும் வைத்திருந்தனர்.
தமிழ் நாகரிகம் என்ற வரையறை ஒரு பரந்து பட்ட பொருளில்தான் இயங்குமே தவிர, ஒரு சிறு எல்லைக்குள் நிலைபெறவில்லை.
கன்னித்தமிழ் எங்ஙனம் அவ்வப்போது தோன்றிய இறுக்கமான சூழ்நிலைகளையும் எதிர்ப்பான சூழ்நிலைகளையும் தகர்த்தெறிந்து மீண்டும் மீண்டும் தன்னை இளமைப்படுத்திக் கொண்டு வருகிறதோ அவ்வாறே தமிழ் நாகரிகம் என்பதுவும் அழிக்கப்பட முடியாத ஒன்று என்று தன்னை அடிக்கடி நிலைநாட்டி வந்திருக்கிறது.
தமிழ் நாகரிகத்தின் உச்சங்கள் :
1. உலகின் முதன் முதலில் சித்திர எழுத்தைக் கண்டவன் தமிழன். அதிலிருந்து வட்ட எழுத்து, கோட்டு எழுத்து, நகர்ப்புற நகரி எழுத்து என்று பல்வேறு காலச்சூழலில் பல்வேறு எழுத்துகளைப் படைத்தவனும் தமிழன். படைத்ததோடு மட்டுமின்றி உலகெங்கும் அவற்றைப் பரப்பியவனும் தமிழன்.
2. சங்கங்கள் அமைத்து, மொழியை வளர்த்தவனும் தமிழன்தான். ஏறத்தாழ 10,000 ஆண்டுகளாய் இந்நிலை இருந்து வந்தது.
3. சாதி, சமயம் சிற்சில விதிவிலக்குகளைத் தவிர - சங்க இலக்கியங்களில் இல்லை, இல்லவே இல்லை. ஆனால் உரோமபுரி, கிரேக்கம், சீனம், எபிரேயம்(பிப்ரு) போன்ற எந்த மொழியின் தொடக்க கால இலக்கியங்கள் யாவும் சமயம் சார்பாகவும், மந்திர தந்திர வித்தைகளைக் கொண்டுள்ளதாகவும் இருக்கக் காண்கிறோம்.
4. தத்துவங்கள், வேதாந்தங்கள் யாவுமே தமிழனுக்கு மட்டும் சொந்தமாய் இருந்தன. தமிழன் இவற்றைக் காப்பாற்றாததால், பிறர் பிற எழுத்துகளில் பொதிந்து வைத்திருக்கின்றனர்.
5. அறநூல்களிலும் வாழ்க்கை வாழ்வதற்கே என்ற கோட்பாட்டிலும் முன்னோடியாகத் திகழ்ந்தவன் தமிழன். திருக்குறளைக் காட்டிலும் வேறு என்ன வாழ்வியல் நூல் வேண்டும்?
6. 10,000 ஆண்டுகளுக்கு முன்பே சிந்துவெளி - ஹரப்பா நாகரிகங்களை உருவாக்கியவன் தமிழன். அதன் தொடர்ச்சியாக லோத்தல் முதல் ஆந்திர பொட்டி புரலுவரை கொண்டு சென்றவன் தமிழன். இம்மட்டோ? பத்தாயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள ஈஸ்டர் தீவில் குடியேறி அங்கும் அவ்வெழுத்துகளைப் பொறித்தவன் தமிழன்.
7. பிற நாடுகளில் கற்கால நாகரிகமும் செம்பு நாகரிகமும் நிறைவேறாத காலத்திலேயே இரும்பை வடிக்கவும் வார்க்கவும், உருக்கு செய்யவும் கற்றுக் கொண்டவன் தமிழன். ரோமாபுரி வீதிகளிலும், கிரேக்க நாட்டுச் சிற்றூர்களிலும் தமிழன் வடித்த வேலும், வாளும், ஈட்டியுமே நிறைந்திருந்தன.
8. மருத்துவத் துறையிலும், அறுவை மருத்துவத்திலும் தமிழர்கள் தன்னிகரற்று விளங்கினர். மருத்துவ சேவைக்குச் சென்றனர். முன்னாளில் உலகப் பெரும் விஞ்ஞானியராகத் தமிழரே திகழ்ந்தனர். இயற்கை வளமும், மூலிகைத் தளமும் இதற்கு உதவின.
9. கல்வி கற்பதிலும், தமிழர்கள் திகழ்ந்தனர். சீனமொழி எழுத்தைத் திருத்தியவர்கள் தமிழர்கள். கொரிய மொழிக்கு தமிழை ஒட்டிய எழுத்து முறையைத் தந்தவர்கள் தமிழர்கள். சப்பான் மொழியையும் எழுத்தையும் செப்பம் செய்தவர்கள் தமிழர்கள்.
10. உலகில் அதிக அளவில் பருத்தி விளைவித்து ஆடையாக ஆக்கியவர்கள் தமிழர்கள். சாயமிடக் கற்றுக் கொண்டவர்களும் தமிழர்களே.
11. கடல் கடந்து பெரும் படையுடன் உலகை வலம் வந்தவர் தமிழரே. 1000, 1500, ஆண்டுகளுக்குப் பின்னரே பிறநாட்டினர் கடலை எட்டிப் பார்த்தனர். 2000, 3000 கிலோ மீட்டர் தொலைவுக்கப்பால் ஆட்சியை அமைத்தவர்களுள் தமிழரே முதல்வர்.
12. பழந்தமிழர் குடியேறாத நாடில்லை. தீவில்லை. இட்சிங் என்ற சீனத்துறவி கி.பி. 2 ஆம் நூற்றாண்டினர். இவரது கூற்றுப்படி, சீனாவில் 50,000 தமிழ்க் குடியிருப்புகள் (50,000 காலனிகளா) இருந்தன.
13. தமிழரின் வணிகக் கப்பல்கள் செல்லாத நாடு இல்லை. தீவுகள் இல்லை. பழந்தமிழருக்குக் கடல் ஒரு விளையாட்டுத் திடல். உலக நதிகள், மலைகள், கடல்கள், ஊர்கள் யாவற்றிற்கும் தமிழனே பெயரிட்டான். மக்கட் பெயர்களும் தமிழாகவே உள்ளன.
14. ஆழ்கடலில் அச்சமின்றி முத்தெடுத்தான். அவற்றை இலங்கையில் இரத்தினத்திற்கு மாற்றினான். சாவகம் சென்று பவளத்திற்கும் வாசனைப் பொருளுக்கும் மாற்றினான். இவற்றைச் சீனாவில் விற்று பட்டு வாங்கினான். ரோமாபுரி வரை சென்று பட்டிற்குத் தங்கம் பெற்றான். தமிழ் வணிகனின் கதை அஞ்சா நெஞ்சுரத்தின் விதை. அவனியில் அவன் கல்வியையும், சமயத்தையும் தத்துவத்தையும் பரப்பியவன். வாளெடுக்காமலும், வேல் எறியாமலும் தமிழ் நாகரிகத்தை உலகெங்கும் விதைத்தவன். இன்றும் உலகில் நிலைத்துள்ள நாகரிகம் தமிழன் நாகரிகமே. அற்பத் தமிழன் இந்த அரிய உண்மையை உணராமல் இருப்பதுவும் பறர்க்கு உணர்த்தாமல் இருப்பதுவுமே இன்றைய சாபக்கேடு.
15. அறநூலகத்திற்குப் பின், சமயத்தை ஒரு நிறுவனமாக ஏற்றுச் செயல்பட்டதில் தமிழனே முன்னோடியாக நிலை பெற்றான். புத்த சமயத்தைப் பரப்பியதிலும் சமண சமயத்தைப் பரப்பியதிலும் தமிழனே முன் நிற்கிறான். இன்று உலகெங்கும் இருப்பது தமிழன் பரப்பிய புத்த மகாயானமே (பெருவழி) சீனாவில், சப்பானில், கொரியாவில், இந்தோ சீனநாடுகளில், பர்மாவில், இருப்பன மகாயானமே. புத்தர் பரப்பிய சிறு வழி (ஹீனயானம்) அழிந்துவிட்டது.
16. பக்தி இயக்கம் தமிழகத்தில் உருவாகி ஐந்நூறு ஆண்டுகளுக்குப் பின்னரே வட இந்தியாவில் (கி.பி 1200- 1500) பரவியது. இதன் எதிரொலி கிறித்துவத்தில் கி.பி.1700 க்குப் பின்னரே வெளிப்பட்டது. இசுலாமில் கி.பி.1200 க்குப் பின் (சரியாகச் சொல்வதானால் கி.பி. 1400 க்குப் பின்னரே) மதநெறியாகியது. சோமபானத்தையும், சுராபானத்தையும் மாந்தி மாந்தி - ஐயோ எங்களைக் காப்பாற்று, சோமா, தமிழரிடமிருந்து எங்களைக் காப்பாற்று - என்று அறியாமையின் உச்சத்தை, பேதமையின் பிதற்றலை, தமிழ் நாகரிகம் எஞ்ஞான்றும் அரங்கேற்றியதில்லை. (Edited)
17. குதிரைக்கறி முதல் எல்லாக்கறி வகைகளையும் தின்று வந்த ஆரிய அநாகரிகரை சைவநெறியில் ஈடுபடுத்தி நாகரிகப்படுத்தியது தமிழ் நாகரிகமே. தோலாடை கட்டியும், மரவுரி தரித்தும் அரை நிர்வாணமாகத் திரிந்த ஆரியருக்கு ஆடை கொடுத்து நாகரிகப்படுத்தியது தமிழர் நாகரிகம். இல்லாத கடவுளான சோமன், சுரா, உசா, இந்திரன் போன்ற கற்பனைக் கடவுளை ஆரியர் கைவிட்டனர். தமிழரின் சமயங்களை சிவன், சக்தி, மயிலவன் ஆகியோரை வழிபட வைத்தது தமிழ் நாகரிகமே. வட இந்தியாவில் அம்மணமாகத் திரிந்து பனியிலும், குளிரிலும் வாடி வதங்கிய ஆரியருக்கு இருப்பிடம் தந்து வாழ வைத்தது தமிழ் நாகரிகமே.
18. இந்தியாவில் உள்ள கல்வெட்டுகளில் 75 விழுக்காடு தென்னிந்தியாவில் உள்ளன. இதில் பாதிக்கு மேல் 40 விழுக்காடு தமிழகத்தில் உள்ளன. இதில் பாதி 20 விழுக்காடு ஆரியருக்குத் தானமளித்த ஈனச் செய்திகள்தான் உள்ளன. நன்றி என்பதற்கு அர்த்தம் தெரியாத ஆரிய அறிவிலிகள், தமிழரது படைப்புகளைத் தமது என்று உரிமை கொண்டாம் அற்பத்தனத்தை இனியும் சகிக்கத்தான் வேண்டுமா? சிதம்பரம் கோவில் கட்டியவன் சோழ அரசன். கட்டியோர் தமிழகக் குடிபடைகள். இன்று, உள்ளிருந்து கொட்டம் அடிப்பது மட்டுமின்றி, தமிழ்ப் பாடல்களைப் பாடக்கூடாது என்று சொல்வது, தமிழ் நாகரிகத்தையே அவமதிப்பது அல்லவா ?


__________________


Guru

Status: Offline
Posts: 24625
Date:
Permalink  
 

பரிதாபங்கள்..
பரிதாபங்களைக் காணுமுன்..
காஞ்சிபுராணத்திலிருந்து ஒரு பாடல். சிவஞான முனிவர் கூறுகிறார்.
"வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி அதற்கிணையாத்
தொடர்புடைய தென்மொழியை உலகமெலாந் தொழுதேத்துங் குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப் பாகரெனின்..."
வடமொழியை பாணினிக்கு அருளி அதற்கு இணையாகத் தமிழ் மொழியை அகத்தியருக்குக் கொடுத்து உலகமெல்லாம் பரவ செய்த சிவபெருமான்.
எந்த ஒரு சூழ்நிலையிலும் தமிழும் வடமொழியும் ஒன்றுக்கொன்று குறைந்தது அல்ல என்பது இவ்விருமொழியையும் கசடறக் கற்றறிந்தோர் கண்ட உண்மையாகும்.
ஆனால்..
பார்த்துக் கொண்டிருப்பதால் பார்வதி .. நடந்து கொண்டு இருப்பதால் நடராசன் என்று வேர்சொல் காமெடி ஒருபக்கம் என்றால்..
அனைத்துத் தமிழ் சொற்களும் வடமொழியில் இருந்து வந்தது என்று வலிந்து திணிக்கும் ஆர்வக்கோளாறுகள் ஒரு பக்கம்.
தமிழ் சொற்களை வடசொற்கள் என்று திரிபு வேலை செய்வது இன்று நேற்றல்ல.. 1300 ஆண்டுகளுக்கு முன்பே நடந்துள்ளது. இதை ஒரு அறிஞர் கண்டிக்கவும் செய்தார்.
குமரிலபட்டர்.
இவரது காலம் கி.பி.7 ஆம்
நூற்றாண்டு. மிகச்சிறந்த சமஸ்க்ருத அறிஞர்.
வேதத்தின் பொருள்கூறும் மீமாம்ஸ சூத்திரங்களுக்கு உரை எழுதியவர்.பிகம், நேமம், தாமரஸம் என்ற சொற்களுக்கு வடமொழியில் பொருள் கூறும் சொல் இல்லாததால்
குயில், பாதி, தாமரை என்ற தமிழ் சொற்களைப் பயன்படுத்தியவர்.
இந்த குமரிலபட்டர்தான்
தமிழ் சொற்களை வடமொழி என்று திரிப்பதை எதிர்க்கிறார்.
இவர் எழுதிய தந்த்ரவர்த்திகா என்னும் நூலில் இவ்வாறு கூறுகிறார்.
"மெய்யெழுத்தில் முடியும் தமிழ் சொற்களை உயிரெழுத்தில் முடிமாறோ.. பெண்பால் வினைமுற்றுகளைச் சேர்த்தோ வடமொழிச் சொல்லாக உருவாக்கி பொருள் கூறுவது தவறு.."
குவிரன் என்று மெய்யெழுத்தில் முடியும் தமிழை குவிரா என்று உயிரெழுத்தில் முடித்து அதை வடமொழியாக்கி குபேரா என்று திரித்து பெரும் பொருளுடையவன் என்று பொருள் கூறுவதைப்போல்..
ஒரு ஐந்து தமிழ் சொற்களை மேற்கோள் காட்டுகிறார் பட்டர்.
சோறு, அதர், பாம்பு, மாலை, வயிறு .. என்ற ஐந்து தமிழ் சொற்களை மேற்கோள் காட்டி அவை எவ்வாறு வடமொழியாகத் திரிக்கப்பட்டன என்பதையும் கூறுகிறார்.
உதாரணமாக..
" அதர்" என்னும் சொல்.
இது ஒரு தூய தமிழ் சொல்.
ஏராளமான சங்க இலக்கியங்களில் அதர் என்னும் சொல் பயின்றுள்ளது. வழி, காட்டுவழிப்பாதை, கரடுமுரடானப் பாதை என்ற பொருளில் அதர் என்னும் சொல் பயின்றது.
அதர் என்ற தமிழ் சொல்லை அதர என்று திரித்து இதை வடமொழியாக்கி
கடப்பதற்கு கடிணம், எல்லையில்லா, கடக்கவொண்ணாதது என்ற பொருளில் வடமொழியாக்கினார்கள் என்கிறார் பட்டார்.
தனது தந்த்ரவர்த்திகா நூலில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.
"பந்தானமதரித்யுக்தே அதர இதி கல்பயித்வாஹு​:| ஸத்யம் துஸ்தரத்வாததர ஏவ பந்தா இதி |"
இதேபோல் சோறு , பாம்பு, மாலை, வயிறு போன்ற தமிழ் சொற்கள் எவ்வாறு வடமொழியில் திரிக்கப்பட்டன என்பதையும் கூறுகிறார்.
கடைசியில் இதுபோல் திரிபுவேலை செய்பவர்களின் தலையில் நங்கென்று கொட்டும் வைக்கிறார்.
"தமிழ் ழுதலிய மொழிகளில் இவ்வாறு திரிபுவேலை செய்யும் நீங்கள் பாரசீக பர்பர யவன
ரோமன் மொழியில் உள்ள சொற்களை எதை மாற்றி என்ன பொருள் கொண்டு வருவீரோ என்பதை யாம் அறியோம் என்று முடிக்கிறார் பட்டர்.
1300 ஆண்டுகளுமுன் குமரிலபட்டர் என்ன கூறினாரோ அதைத்தான் இன்றும் சிலர் செய்கின்றனர்.
தமிழில் வடமொழி கலப்பு உள்ளதை சுட்டும் இவர்கள்.. வடமொழியில் தமிழ் கலந்துள்ளதை ஏனோ ஏற்க மறுக்கிறார்கள்.
அன்புடன்..
மா.மாரிராஜன்.
( Content credit..
பேராசிரியர் முனைவர்
க.சங்கரநாரயணன்.
Sarasvatam.in)


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard