New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: எஸ்.வி.ராஜதுரையின் வக்கீல் நோட்டீஸ் ஜெயமோகன்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
எஸ்.வி.ராஜதுரையின் வக்கீல் நோட்டீஸ் ஜெயமோகன்
Permalink  
 


வழக்குரைஞர் கே.விஜயன்

சட்ட அறிவிக்கை
பதிவஞ்சலில்
(அஞ்சல் ஒப்புகையுடன்)
உதகமண்டலம் 06-07-2012

பெறுகை
திரு ஜெயமோகன்
(தந்தையார் பெயர் தெரியவில்லை)
கதவு எண்.93, 5-வது குறுக்குத் தெரு
சாரதா நகர்
பார்வதிபுரம்
நாகர்கோவில்

அய்யன்மீர்,
பொருள்த் தெரிவு – தெளிவு – செறிவு – குறிப்பு

எமது கட்சிக்காரர் காலஞ்சென்ற திருமிகு.காளியப்பா மகன் மானமிகு எஸ்.வி.ராஜதுரை (எ) கே.மனோகரன் (வயது 72) அவர்கள் குறித்த உமது அவதூறு செய்தி, தகவல் – வெளியீடு பரப்பல் – தொடர்தல் – அவமதிப்பு, சமூக தகுதி குறைப்பு, மானநட்டம், மன உளைச்சல் ஏற்படுத்தியது – ரூ.20,00,000/- (இருபது இலட்சம் ரூபாய்) இழப்பீடு வேண்டல் – நிபந்தனையற்ற வருத்தம் தெரிவித்து அறிவிப்பு வெளியிட அறிவுறுத்த, எமது கட்சிக்காரர் குறித்த உமது செய்தி மறுத்தல் – உண்மை நிலை சுட்டல் – உமது பாசாங்கு, அறமற்ற முகமூடி கிழித்தல் – உம் தீய உட்கிடக்கையுடன் கூடிய சட்டத்திற்குப் புறம்பான வெளிப்படுத்துதல்களை திருத்திக் கொள்ள வாய்ப்பளித்தல் – விவரணைகள், விளக்கங்கள், எச்சரிக்கை, வினைமுன்சொல் – தொடர் சிறப்புரிமை தக்க வைப்பு – ஆள்வரை சிறப்புரிமை – இட ஆள்வரை தொடர்பமை குறிப்பு – குறித்து.
…..

எமது கட்சிக்காரர் நீலகிரி மாவட்டம், கோத்தகிரி, அணையட்டி சாலை, கார்சிலி தோட்டம், கதவு எண். 5/43 ஜே வில் வசிக்கும் காலஞ்சென்ற திருமிகு. காளியப்பா மகன் மானமிகு எஸ்.வி.ராஜதுரை என்றழைக்கப்படும் கே.மனோகரன் அவர்கள் சார்பாக, அவர் எம்கை அளித்துள்ள ஆவணங்கள் கண்ணுற்றும் சர்வதேசீய, இந்திய, திராவிட, தமிழ், தத்துவ, பத்திரிகை, ஊடகவியல் கோட்பாடு, சித்தாந்த, தொழிற்சங்க, சமூக, அரசியல், பொருளாதார ஆய்வு சாட்சிகள் கேட்டும், ஆய்ந்தும், சட்டத்தின்முன் செல்லத்தக்க நியாயம் சொல்லத்தக்கவை வழி நின்றும் எம் கட்சிக்காரர் தம் கூற்றினைக் கூரையாய்க் கொண்டு அவர்தம் உரையினை உறையாய்க் கட்டியும் அவர்தம் மொழிவழி சென்றும் அவர்தம் நீள் நெடிப் பணிச் சான்றுகள், கலை, இலக்கிய, தத்துவ, அரசியல், பொருளாதார களங்கள் நிர்ணயத்துற்றும், அவர்தம் மேன்மை நெடி பணி முடிவுகள் திரிபற அறிந்தும் எமது கட்சிக்காரரின் நிலைபாட்டை சட்ட, கருத்து வெளியீட்டு நியதி, நீதி, கோட்பாடு சார்ந்து பகுத்தும் வகுத்தும் தொகுத்தும் மெத்தப்படிப்பிடை மேனி நெடிப்பிடை முழுதும் அறிவார்ந்ததாய் வெளிக்காட்டப்படும் உமது கருத்து வெளியீட்டு பசப்புகள், உம்மொழியில் சொல்லின் ‘கேனத்தனங்களாய் புறந்தள்ளப்பட வேண்டுபவையாய் நடிப்பிடைத்துலங்கும் குப்பைகள் தவறிடை முளைத்த கசடுகளாய் கருத்துதுலகில் ‘கருப்பு’ கட்டி வரும் அபத்தம் சுட்டியும் பொறுப்புடை பொதியவெற்பனின் புத்தகம் விமர்சிக்கும் புத்தகன் மொழியில் சொல்லின் “குற்றம் சொல்லிப் பெயர் வாங்கும் இக்கால புலவர் வகையறாக்களில் ஒருவராய் நின்று, தான் அறிந்ததை மட்டுமல்ல, அறியாதது, தெரியாதது, புரியாததைக்கூட பக்கம் பக்கமாய் எழுதிப் பிரித்து மேய்ந்து தன்னுடைய உள்நோக்கங்களை உலகியல் நெறிகளாக மாற்றிச் சொல்லி…” தீய உட்கிடக்கையுடன் சட்டத்திற்குப் புறம்பாக கேவலப் புகழ் இலாபம் பார்க்கும் நோக்கில் _ ‘பிறரை இழிவுபடுத்தி தான் மேன்மைப்படும் முயற்சியில்’ சேறு வாரியிறைத்து எழுதியும் பேசியும் பரப்பியும் மேன் மக்களை – மென்மக்களை அவர்தம் சமூகத் தகுதியிலிருந்து கீழிறக்கி அவமானப்படுத்தி கடும் மன உளைச்சலும் மான நட்டமும் பொருளாதார நட்டமும் உண்டாக்கும் உம் ஈன செயல் சுட்டி அதைத் தொடர்வதை நிறுத்திட அறிவுறுத்தி உம்மால் உமது தவறான கருத்துப் பரப்பலால் எமது கட்சிக்காரருக்கு ஏற்பட்ட மன உளைச்சல், அவமானம், சமூகத் தகுதிக் குறைப்பு மாற்றிடப்பட வேண்டியும், ஈடுசெய்ய முடியாததெனினும் சட்ட நெறிகளுக்காக குறிப்பிட்ட வரையறைக்குள் அடக்கப்பட்டு, ரூ.20,00,000/- (இருபது இலட்சம் ரூபாய்) என எட்டப்பட்ட தொகையினை இழப்பீடாய் வேண்டியும் இந்த சட்ட அறிவிக்கை நீ கைபெற்று மனங்கொண்டு சட்டப்படி தீர்வு தந்திட வேண்டி உமக்கு அனுப்பப்படுகிறது.

எமது கட்சிக்காரர் கொங்கு மண்டலத்தின் ஆரமாம் தாராபுரத்தின் காந்தி பொதுநல மன்றம் கண்ட காந்தீயவாதியும் கல்வி போதகருமான காளியப்பருக்கும் கருணையும் ஈகையும் கணவர் கொள்கையால் கொண்ட ஈர்ப்புமாய் இயங்கிய சரிநிகர் வாழ்க்கைக்கும் வாழ்க்கைப்பட்ட அங்கம்மாளுக்கும் அருமை மகனாய்ப் பிறந்து – கருத்துரிமையும் நட்பும் பாராட்டிய தந்தை, “அம்மா அடுக்கி வைத்த சாமியில் எந்த சாமியை வணங்கறது?” என்று கேட்க “ஈரோடு இராமசாமியை வணங்குங்கள்” என்று சொல்லுகிற வன்மையும் தன்மையும் வாய்த்திருந்த கே.மனோகரன் தனது 12ஆம் வயதில் எட்டிய பகுத்தறிவு கொள்கையிலும் ‘நூல் நூற்றல்’ கட்டாயம் என கால் நூற்றாண்டு காலம் வாழ்ந்த வீட்டினில் ‘நூல் கற்றல் விருப்பம்’ என மேல் நூற்றாண்டுக்கு அழைத்து வளர்ந்தவர் அவர் படித்தது பள்ளி இறுதி ஆண்டென்றாலும் தனது அரசியல், இலக்கிய, கலை, திரை, சமூகவியல், மானுடவியல், சூழலியல் உள்ளிட்ட துறைதோறும் ஆழ்ந்து தேடிய அறிவால் தேர்ந்து எழுதிய எழுத்தால், மெத்த படித்தோர் கரைத்து குடித்தோர் ‘கப்பம் கட்டி’ கடைத்தேறியவர் என பலரும் காத்திருக்க அறிவால், ஆழ்ந்த கொள்கை கொண்டிலங்கிய திறனாய்வு திறனால் பாரதிதாசன் பல்கலையில் பெரியார் உயர் ஆய்வு மய்யத் தலைவராய் இலங்கினார். அரசியலுக்காய் படிப்பை விட்டது போல் கொள்கை கருத்துவேறுபாட்டால் பல்கலை பொறுப்பையும் விடுத்தார் அடுத்து வந்த விருதுகளை எல்லாம் கொள்கைத் தோரணை காரணமாகவே தன் தோளில் தொங்கவிடாமல் தவிர்த்தவர் மனித உரிமைப் போராளிகளை பொது அங்கமாய்க் கொண்டிருக்கும் மக்கள் சிவில் உரிமைக்கழகம் (PUCL) அமைப்பின் தமிழ்நாட்டுத் தலைவர், பொதுச்செயலர், தேசீய துணைத்தலைவர் என பல்வேறு பொறுப்புகள் வகித்தவர்; எங்கெல்லாம் மனிதம் மிதிபடுகிறதோ உரிமை அடிபடுகிறதோ அங்கெல்லாம் சென்று உண்மை அறியும் குழுக்கள் மூலம் வேணவா பணிகளாற்றியவர் தூக்குக்கயிறுகளை முத்தமிட விதிக்கப்பட்டிருந்த கழுத்துகளுக்கு விடுதலை பெற்றுத்தந்தவர் ‘புதிய தலைமுறை’ ‘இனி’ எனும் கலை இலக்கிய இதழ்கள் மூலம் சமூகப் பணியாற்றியவர் சுதேசிப் போராளி ஜெயபிரகாஷ் நாராயணனின் தலைமையில் இருந்த, பேராசிரியர் ரஜினி கோத்தாரி, நீதியரசர் வி.எம்.தார்க்குண்டே உள்ளிட்டவர்களோடு இணைந்தும் இயைந்தும் பணியாற்றிய காலங்களில் ‘எக்கனாமிக் & பொலிடிக்கல் வீக்லி”, ‘செமினார்’, ‘தி இந்து’, ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ‘மன்த்லி ரிவியூ’ போன்ற ஆங்கில பத்திரிகைகளில் தனித்தும் போற்றுதலுக்குரிய ஆய்வறிஞர் தோழர். வ.கீதாவோடு இணைந்தும் ஆக்கங்கள் அளித்தவர் அரசியல், சாதீயம், சமூகவியல் துறைகளில் பெருஞானமுற்றும் நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ண அய்யரின் மனிதநேய சித்தாந்தங்களை மனமேல் சுமந்து எழுத்திலிறக்கி களமிறங்கி போராடி வெற்றி பெற்றவர் மார்க்சிய, பெரியாரிய பொதுவுடைமை அமைப்புகள் அளித்த நிதிக்கொடையுடன் கூடிய விருதுகளைக் கூட தன் துணைவியார் நோயுற்று நலிவுற்று பார்வையற்று பரிதவித்திருந்த நிலைபோக்க நிதி உதவி தேவைப்பட்ட நேரத்திலும் மறுதளித்த மகத்துவத்துக்கு சொந்தக்காரர் மாண்பமை உயர்நீதி மன்ற நீதிமான்கள் தம் தீர்ப்பில் எடுத்தாளும் சிறப்பு பெற்ற கருத்துரைகள் அடங்கிய நூல்கள் ஆக்கியவர் தனித்த எந்த இயக்கத்தையும் கட்சியையும் சாராத சுதந்திரமான பெரியாரிய, அம்பேத்காரிய சிந்தனையாளராக தன்னை வெளிக்காட்டும் எம் கட்சிக்காரர் தன்னை ஒரு ‘சர்வதேசீய வாதி’ என்கிற முழு மனிதம் சார்ந்த வெளிப்படுத்துதலில் பெரு விருப்புடையவர் அதற்கான செயல்பாட்டு தளத்தில் இயங்குபவர்.

மேற்கண்ட விவரணைகள் எமது கட்சிக்காரரின் பத்திலொரு பங்கு மேன்மையையே விளக்குமாயினும் அத்தகு பண்புடை – பகுத்தறிவுடை – மாண்புடை மனிதரை, ஏற்கெனவே மார்க்ஸ், பெரியார், அம்பேத்கார், அருந்ததிராய்… என தொடரும் பட்டியலில் இடம் பெறும் பெரும் மாமனிதர்களை இழிவுபடுத்துவதன் மூலம் உம் இருப்பை உறுதிபடுத்திக் கொள்கிற கேவலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் சில ‘ஜந்து’க்களின் கூட்ட்த்தைச் சேர்ந்தவர்கள் போல நீர், ஒரு சனாதன பார்ப்பார் –பெரு சாதிவெறியர் – மேலும் கீழும் இரண்டும் கெட்ட செளுக்கைகளின் முழு உறவினர் போல் உள் குமையும் வெக்கையால் எமது கட்சிக்காரரையும் வீண் சண்டைக்கு இழுக்கிற வேலையைச் செய்துள்ளீர். மானுடப்பார்வை, மானசீகப்பார்வை, அறவியல், உள்ளுணர்ந்து பார்ப்பது … என்னும் வார்த்தைகள் பயன்படுத்தி ஆகப்பெரும் எழுத்தச்சனாக காட்டிக்கொள்ளும் சிலர் போல் நீர் ‘கவிதாசரண்’ சுட்டிக்காட்டிய பொண்டாட்டி பேரிலான களவாணித்தனத்திற்கு’ சொந்தக்காரர் ‘என்பதும் “நடைமுறை விஷயங்களை விட கற்பனை உலகமே எனக்கு பிடித்திருக்கிறது” “…பொறுப்புகளற்று அலைந்து திரிகிற” “…உலகம் சார்ந்த பொறுப்புகளை கூடுமானவரை தவிர்த்து வருபவன்” என்கிற பொறுப்பற்ற ‘லும்பன்’த்தன இயல்பாலன் என்பது உம் மொழியிலேயே வெளிப்பட “…தமிழில் என்னளவுக்கு தீவிரமாக பாதிக்கக்கூடிய மொழி கொண்ட படைப்பாளி இல்லை என்பதை…” என்னும் அகங்கார பீற்றலுக்கும் நீர் சொந்தக்காரர் என்பது தெரிந்தும் உம்முடைய வார்த்தைகளால் சொன்னால் பல நேரங்களில் நீர் ஒரு ‘கேனயன்’ என்று விளங்கிக் கொண்டும் கூட விலகிக் கொள்ள முடியாமல் கொண்ட கொள்கைக்காய் அவசியத் தேவைகளுக்கு கிடைக்கிற ஆதாரங்களைக் கூட பற்றிக் கொள்ளாமல் அல்லாடிக் கொண்டிருக்கிற எமது கட்சிக்காரர் மீது நீர் தெளித்திருக்கிற சேறு உம்மாலே கழுவப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் உமக்கு இந்த சட்ட அறிவிக்கை என்பதை நினைவில் கொள்க.

உமது 20.06.2012 தேதியிட்ட ஜெயமோகன்.இன் வளைத்தளத்தில்

“ஃபோர்டு பவுண்டேஷனின் பெருநிதிக் கிழவரான எம்.டி.முத்துக்குமாரசாமி காலச்சுவடுக்கு நிதியளித்த ஒரு நிறுவனத்தின் மூலநிதி ஃபோர்டு பவுண்டேஷன் அளித்ததே என வெளிப்படுத்தியிருக்கிறார். மாறி மாறி இவ்வாறு வெளிப்படுத்துவார்கள் என்றால் நல்லது தான் என்றே நான் நினைக்கிறேன். தமிழில் க்ரியாவும் காலச்சுவடும் எஸ்.வி.ராஜதுரையும் எல்லாம் பெற்ற பணத்தின் அளவு சராசரி வாசகனுக்கு கொஞ்சம் பிரமிப்பைத்தான் அளிக்கும். நாம் சாதாரணமாக வாசித்துச் செல்லும் கருத்துகளுக்கு இவ்வளவு பணமதிப்பா என நாம் வியப்போம். அடுத்தமுறை கொஞ்சம் கவனமாக புத்தகங்களை புரட்டிப் பார்ப்போம்”

உமது 23.06.2012 தியதி வெளியீட்டில்

“நான் அக்கட்டுரையிலேயே சுட்டிகாட்டியபடி நிதியுதவிகள் பெரும்பாலும் பலவகையான அறிவார்ந்த நோக்கங்கள் சொல்லப்பட்டு விதவிதமான பண்பாட்டு அமைப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வழியாகவே அளிக்கப்ப்படுகின்றன. எம்.டி.முத்துக்குமாரசாமி போல உள்ளிருந்தே ஒருவர் சுட்டிக்காட்டும்போதே நமக்கு உண்மை தெரிகிறது இல்லையேல் வாய்பே இல்லை”

“…அந்த பிற நிதியுதவிகளைச் சுட்டிக்காட்டும்போது காலச்சுவடு, க்ரியா, நீங்கள் என மூன்று பெயர்களையும் எடுத்துச்சொல்லி நான் பேசியமைக்குக் காரணம் நீங்கள் மூன்று தரப்பும்தான் உங்கள் நூல்களிலேயே பெற்றுக்கொண்ட நிதியைப்பற்றிய குறிப்புகளை அளித்திருக்கிறீர்கள் என்பதுதான்.”

“…உங்களுடைய பெரியார் சுயமரியாதை சமதர்ம்ம் என்ற நூலின் முதற்பதிப்பின் நான்காம் பக்கத்தில் சிறிய எழுத்துக்களில் அதன் ஆராய்ச்சி மற்றும் வெளியீட்டுக்காக நிதியுதவி செய்த அமைப்பின் பெயர் அதிகாரபூர்வமாகவே குறிப்பிடப்பட்டிருந்தது என்பது என் நினைவு இதைப் புதியதாகவும் நான் சொல்லவில்லை”

மேற்படி உமது விவரிப்புகளின் அனைத்து சொல், தொடர், வாக்கியம் ஆகியன தனித்தனியாயும் ஒன்று கூடியும் கொண்டு கூட்டியும் தரும் பொருளனைத்தும் நீர் உமது ‘அதி அறிவு மேன்மைத்தனம்!’ காட்டி அறத்தால் கழுவப்படாது புறத்தே மூன்றாம் தர திரவியம் தடவி அதற்கு வசீகரமொழியான சுயதம்பட்ட பட்டம் சூட்டி அதில் சுருட்டி வைக்கப்பட்டிருக்கும் சமுக்காளத்தில் வடிகட்டப்பட்ட, இட்டுகட்டப்பட்ட, கட்டி சமைக்கப்பட்ட, உற்றுப்பார்த்து உதறிவீசின் சுற்றமெல்லா அசிங்க மணமேற்றும் நெடிமிக்கப் பொய்கள், புனையப்பட்ட செய்திகள் எமது கட்சிக்காரரின் புகழ் குலைத்து மான நட்டமேற்படுத்தி எமது கட்சிக்காரருக்கு மன உளைச்சல் உண்டாக்கும் உருப்படிகள் ஆகும்.

உம்முடைய மேற்படி அவதூறுக்கு ‘விடியல்’ பதிப்பகத்தின் நேரிய பதிப்பாளர் மரணப்படுக்கையிலும் மகத்தான புத்தகங்களை மனதுக்குள் கனாக்கண்டு வடிவம் கொடுக்க தன் இறுதி மூச்சையும் பிடித்துக்கொண்டிருக்கும் புனிதர் விடியல் சிவா எதிர்வினை ஆற்றியவுடன் உமது ‘பல்டி அடிப்பு’ உத்தி தொடங்குகிறது. மீண்டுமே சொரணை கெட்ட ஜந்துக்கள் தமக்கே உரித்தான மொகரக்கட்டை வார்த்தைகளில் முகமூடி பூட்டிக்கொண்டு முகமன் கூறும் முகமாக சிவாவின் உடல்நிலை… இத்யாதி விஷயங்களைப் பேசி சட்ட நடவடிக்கை என்றவுடன் சந்துக்குள் புகுந்து கொண்டு மன்னிப்பு சித்தாந்தம் பேசி ஓடிப்போனீர்.

மீண்டுமே உலகளாவிய ஆய்வமைப்பான டபுள்யூ.எ.சி.சி. (W.A.C.C.) குறித்த கேரள, நைஜீரிய புளுகுகளிலும் உமது அப்பட்ட, கற்பனை உப்பிட்ட கூறல்களும் அவதூறு பரப்புதல்களுமே முன்னின்றுள்ளனவே யன்றி வேறொன்றுமில்லை.

“…அவர் சொன்னார்” “…இவர் சொன்னார்”, “…அந்த நண்பர்” “…அய்ந்தாண்டு” போன்ற சொல்லாடல்கள் உம்முடைய ஆதாரமற்ற அவதூறு பரப்பும் நோக்கம் மட்டுமே ஆன செயல்களை வெளிப்படுத்தி எமது கட்சிக்காரருக்கு கடும் மன உளைச்சலையும் சமூகத்தகுதிக் குறைப்பும் ஏற்படுத்தி இருக்கிறதே அன்றி வேறொன்றும் சாதிக்கவில்லை.

டபுள்யூ.எ.சி.சி. மீது உமக்கிருக்கும் ‘ஏதோ இழந்த’ கடுப்பும் அனாமத்து முத்துகிருஷ்ணன், உமது அங்காடி ரசிகன் பாண்டியன் உள்ளிட்ட உமது பலவீன முகமூடிகள், நீர் விரித்துள்ள சர்வதேச நிதிவலை… போன்றவை எதுவுமே எமது கட்சிக்காரரை ஆதாரப்பூர்வமாக நல்ல நோக்கோடு விமர்சனம் செய்வதாக அமையாமல் உமது வக்கிரத்தை நேர்மையும் நற்சிந்தனையும் சமூக அக்கறையும் பன்முக ஆளுமையும் கொண்ட எமது கட்சிக்காரர் தம் தோளில் தேய்த்து அதில் கொஞ்சத்தில் நீர் தோய்ந்தொழுகும் ஆர்வம் காட்டும் சபலமாகவும் வெளிப்பட்டு எமது கட்சிக்காரரை மன உளைச்சலுக்கும் அவரது சமூக தகுதி குறைப்புக்கும் ஆட்படுத்தி உள்ளது.

அடுத்து, 24.06.2012 தியதி உமது வெளியீட்டில்

“உங்கள் நிதியாதாரங்களைப்பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். இன்னொரு தருணத்தில் விரிவாகவே எழுதுகிறேன். ஒன்று உங்களுக்காக வ. கீதா நிதி பெற்றிருக்கிறாரா? என்ற கோணத்தில் இரண்டு பாரதிதாசன் பல்கலையில் பெரியாரியலாய்வு இருக்கையில் கெளரவப்பேராசிரியராக நீங்கள் பணியாற்றியதை ஒட்டி அந்த இருக்கையின் நிதியாதாரம் என்ன என்று கோணத்தில்…”

மற்றும்

“எஸ்.வி.ராஜதுரை பற்றிய உங்கள் கருத்துகளை நான் ஏற்கவில்லை. அவர் நீங்கள் சொல்ல நினைக்கும் பொருளியல் நிலையிலும் இல்லை என்பதை நான் அறிவேன். எண்பதுகளின் இறுதியில் அவரது பொருளியல்நிலை எப்படி இருந்த்து? இப்போது எப்படி இருக்கிறது என அறியாதவனல்ல நான்! விருதுகளை ஏற்பதில் அவருக்கு பல தோரணைகள் தேவையாக இருக்கலாம்”.

“இந்த சின்ன்ஞ்சிறு விருதுகளுக்கும் சர்வதேசக் கவனத்தைப் பெற்றுத்தரும் பிரம்மாண்டமான கிறித்துவ நிதிவலைப் பின்னல்களின் உதவிகள் மற்றும் பிரச்சாரத்துக்குமான வேறுபாடு உங்களைவிட எஸ்.வி.ராஜதுரைக்குத் தெரிந்திருக்கிறது”.

“வ.கீதா நடத்திவரும் தன்னார்வக்குழு பற்றி ஒரு முழுமையான பொதுவிவாதம் தமிழில் தேவையாகிறது. நம் அறிவு ஜீவிகளுக்கும் தன்னார்வக் குழுக்களுக்கும் இடையேயான உறவுகள் பற்றி தன்னார்வக்குழு நடத்தும் எழுத்தாளர்களைப்பற்றி வெளிப்படையான பேச்சு உருவாகவேண்டும்”.

“எஸ்.வி.ராஜதுரை எனக்கு ‘பிரச்சனைகள்’ வந்திருக்கும் என ஊகிப்பதற்குக் காரணம் உண்டு”.

“உயிர்எழுத்து மாத இதழில் நான் இந்திய அமைதிப்படை பற்றி எழுதிய குறிப்பின் முன்பகுதி மட்டும் எடுத்துப் பிரசுரிக்கப்பட்டிருந்தது. கூடவே அதற்கு பதிலாக முறிந்தபனை நூலில் இருந்து சில பகுதிகளும் அதனுடன் அவ்விதழின் ஆசிரியர் சுதீர் செந்தில் என்னை கடுமையாக வசைபாடி எழுதிய ஒரு குறிப்பும் இருந்தது”.

“இதழ் வந்த சில நாட்களுக்குள் எனக்கு ஏராளமான தொலைபேசி அழைப்புகள் வர ஆரம்பித்தன. செல்பேசியை எடுத்ததுமே காது கூசும் வசைகள். வேறு வேலையில் இல்லை என்றால் வசைபாடுபவர்கள் அனைவரிடமும் நான் பேசினேன். முக்கால்வாசிப் பேருக்கு நான் யாரென்றே தெரியவில்லை. என்னை இதழாளர் என்று நினைத்தார்கள். பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ. என்றுகூட ஒருவர் சொன்னார்”.

“என்னுடைய எண் எப்படிக் கிடைத்தது என்று கேட்டேன் “எஸ்.எம்.எஸ். வந்திச்சி. கூப்பிட்டு கண்டியுங்கன்னு சொன்னாங்க அதான்” என்றார்கள். அவர்களுக்கு உயிரெழுத்து இதழோ எஸ்.வி.ராஜதுரையோ சுதீர்செந்திலோ கூட யாரென்று தெரிந்திருக்கவில்லை. கிட்டத்தட்ட தமிழ்நாட்டில் உள்ள எல்லா தமிழ் அமைப்புகளுக்கும் என்னுடைய செல்பேசி எண்ணை குறுஞ்செய்தியாக அனுப்பியிருக்கிறார்கள் எஸ்.வி.ராஜதுரையும் சுதீர் செந்திலும், கண்டிக்கும்படி கோரி தொலைபேசியில் மன்றாடியிருக்கிறார்கள். கிட்டத்தட்ட இரண்டு வாரம் இருநூறு அழைப்புகள் வரை வந்தன. வசைகளை கேட்பதை ஒரு பயிற்சியாகவே வைத்திருக்கிறேன் என்பதனால் நான் அதை ஒரு பெரிய விஷயமாக நினைக்கவில்லை”.

எமது கட்சிக்காரர் மீதான மேற்கண்ட உமது தொடர் அவதூறுகள் உம்மை நீர் பெரிய ‘லார்டு லபக்’ கென உமது அடிப்பொடிகளுக்கு காட்டிக்கொள்வதற்கும் உமது அசிங்க பலவீனங்கள் புரிந்தவர்களுக்கு உம்மை ‘வின்னர் வடிவேலாக’ பார்ப்பதற்கும் வழக்கம்போல் பயன்பட்டிருந்தால் எம் கட்சிக்காரர் தன் பழைய கோட்டில் அமர்ந்த மலம் மொய்த்த ஈ – நீ! ச்சீ! போ! என உம்மை அருவெருத்து விரட்டி ஒதுங்கி இருப்பார். ஆனால் உமது அவதூறு பரப்பலின் பின்னாக, அடிநாதமாக உமது வக்கிரமும், மூன்றாந்தர முட்டாள்தனமும், அறிவுகெட்ட – அற நெறிசாரா ‘உம்பாஷை ஹம்பக்கு’களும் மீறி எமது கட்சிக்காரரின் மனமொடிக்கும், தகுதி குறைக்கும், உமது தீய உட்கிடக்கையின் மேலெழுந்த அவதூறு பரப்பும் நோக்கமும் இருப்பதாலே எமது கட்சிக்காரர் இந்த சட்ட அறிவிக்கை மூலம் உம்மை நிபந்தனையற்ற மன்னிப்பு கோரவும், இழப்பீடு வழங்கவும், எச்சரிக்கிறார் என்பதறிக.

எமது கட்சிக்காரரின் புரிதல்படி ஆகப்பெரிய ஒரு கொம்பனாகவோ உலகளாவிய மேன்மை தாங்கிய நிறுவனங்களின் அளப்பறிய சேவை தொடர்ச்சியை இடையிட்டு தடுக்க முடிகிற ‘பயில்வானாகவோ’ எந்த கேனத்தனத்தின் தொடர்ச்சியாகவோ பல கோணத்திலும் பல்வேறு அமைப்புகளின் பல்கலை கழகங்களின் ஆய்வு இருக்கைகளின் நிதியாதாரங்களை ஆய்கிற வீர்ர், உளவாளியாகவோ ஆன எவராகவோ நீர் இல்லை எனும்போதும் நீர் உம்மை ஒரு ஆகப்பெரிய கொம்பனாக, ‘ஃபுல்’ தடுக்கி (புல் தடுக்கி அல்ல) பயில்வானாக, ‘007 ஜேம்ஸ்பாண்டாக’ “பிடிக்கிலேனா விட்டிருங்கோ…” வசனம் மூலம் உம்மை புல்லரிக்க வைத்த உமது ‘பாஷை’யில் சொன்னால் அதிகம் அறிவில்லாத ‘அவளுக்கோ’ பிறரை சுரண்டுகிற அறிவு மட்டுமே உடைய ‘அவாளுக்கோ’ காட்டிக்கொள்வதற்காகவோ அதன்மூலம் எதையோ இறுக்கி கட்டிக்கொள்வதற்காகவோ ‘எங்கேயோ போற ஆத்தா எம்மேல ஏறும்’ சடங்கு பிடிக்காது உம்மை கண்டிக்கிறார் உம் செயலை சட்டத்தின்முன் அம்பலப்படுத்திட இந்த சட்ட அறிவிக்கை மூலம் முனைப்பு முன்னெடுக்கிறார்.

உமது அவதூறு செய்திகளுக்கெதிராய் சட்டப்படி நடவடிக்கைகள் தொடரும் என அறிவித்தவுடன் ஏதோ ஒரு முட்டாளின் பேச்சு கேட்டு மிரட்டும் தொனியில் உமது மரபியல்பின் தொடர் வரியில் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் தோன்றுயரா அளவு அறஞ்சார்ந்த மனமும் ஆய்வு சார்ந்த அறிவும் அர்ப்பணிப்பு உணர்வும் உம்மைப் போன்ற வகையறாக்களால் அசைத்துக்கூடப் பார்க்க முடியாத துணிவும் நேர்மைத்திறமும் தனித்தியங்கும் தகுதியும் கொண்டிலங்கும் – இன்றைய காலகட்டத்தின் தனிப்பெரும் ஆய்வுலக நாயகி தோழர் வ.கீதாவை எல்லாம் வம்பிக்கிழுப்பது உமது தோன்றலின் பிறழ்வை யும் உமது அடிப்படை மனச்சான்று இன்மையையுமே காட்டுவதென்று புறந்தள்ளி மேல் செல்லினும் உமது “…ஆராய்வேன்” … “அவரது பொருளாதார நிலை அறியாதவனல்ல” “…விருதுகளை ஏற்பதில்… தோரணை” “…பொது விவாதம் தேவை….” “…உயிர் எழுத்து சுதீர் செந்தில் வசை”, “எஸ்.எம்.எஸ்.” ‘இத்யாதி… ‘இத்யாதி’ மிரட்டல் தொனி ‘கெக்கே பிக்கேக்கள்’ வெறுமனே உமது மன வக்கிர வடிகாலகவும் பெரியவர்கள் மீதான சேறு தெளிப்பின் மூலம் அந்தரங்கமாய் சொறிந்து கொள்வதற்கும் மட்டுமே பயன்பட்டு உமக்கு சிலிர்ப்பேற்படுத்தி அடங்கிவிடும் என நீர் நினைக்க – தம் கடமையே கண்ணாகக் கொண்டு மனிதநேயப் பணிகளுக்காக தம்மையே ஈகைச் சுடர்களாய் ஈந்து வாழ்பவர்களை தேவையில்லாமல் சீண்டி ‘பெரிய ஆளாக’ நினைக்கும் உம்மைப் போன்றவர்களுக்கும் சட்டம் தகுந்த சாட்டையடி கொடுக்கும் என்பதை உணர்த்திடும் முகமனே இந்த சட்ட அறிவிக்கை என அறிக.

 மேற்படி செய்திகள் உம்மால் சட்டத்திற்கு புறம்பாக தீய உட்கிடக்கையுடன் கூடிய நோக்கில் ஊடக நெறிக்கு எதிரான போக்கில் வெளியிடப்பட்டு பரப்பப்பட்டு எமது கட்சிக்காரரின் சமூகத்தகுதி குறைக்கப்பட்டு உள்ளது.
 எமது கட்சிக்காரர் உமது மேற்கண்ட செயலால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார்.
 எமது கட்சிக்காரரின் பல்லாண்டு கால அரசியல், சமூக, மாண்புகள் உம்மால் கீழ்நிலைப்படுத்தப்பட்டுள்ளன.
 எமது கட்சிக்காரர் உம்மால் தாங்கொணா துயரத்திற்கு ஆட்பட்டுள்ளார் அலைகழிப்பிற்கு உள்ளாகி உள்ளார்.
 எமது கட்சிக்காரருக்கு உம்மால் ஏற்பட்டுள்ள அவமானம் அவருக்கு ஈடு செய்யமுடியா இழப்பை ஏற்படுத்தி உள்ளது.
 மேற்குறிப்பிட்ட வெளியீடு பரப்புதல் எமது கட்சிக்காரருக்கு மான நட்டம் ஏற்படுத்தி உள்ளது.
 மேற்படி தகவல் பரப்புதல் மூலம் நீர் எமது கட்சிக்காரரை தகுதியிறக்கம் செய்துள்ளீர்.
 உமது வெளியீடு எமது கட்சிக்காரரை கொச்சைப்படுத்தி இழிவுபடுத்துகிறது.
 உமது மேற்படி செய்தி வெளியீடு அனைத்து நிலைகளிலும் எமது கட்சிக்காரருக்கு எதிரானதாக நிற்கிறது. எமது கட்சிக்காரரின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்துள்ள உமது மேற்படி அவதூறு செய்தி பரப்புதல் எம் கட்சிக்காரர் உம்மீது குற்றவியல், உரிமையியல் பிரிவுகளில் மான நட்ட ஈடு வழக்கு தொடர வழக்கெழுமூலம் எழுப்பி உள்ளது.
 உமது செயல் உம்மீது குறைந்தபட்சமாக குறிப்பிடினும் ரூ.20,00,000 (இருபது இலட்ச ரூபாய்) நட்ட ஈடு வழங்கிடக் கோரி வழக்கு தொடர ஏதுவாக உள்ளது.
 உமது செயல் உம்மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகள் 499, 500-ன் கீழ் வழக்கு தொடர காரணியாகி நிற்கிறது.
 உம்மீது சட்டம் சுட்டுகிற, எமது கட்சிக்காரர் உகந்ததெனவும் உசிதமெனவும் கருதும் பிற வகைகளிலும் நடவடிக்கைத் தொடர உமது அவதூறு பரப்பு தகவல் ஆதாரமாகிறது.

காலக்கெடு / வினைச்சொல் / எச்சரிக்கை

மேற்படி எமது கட்சிக்காரரை அவர் மீது அவதூறு கிளப்பி அவரது சமூக தகுதி குறைத்திட உமது வளைத்தளத்தின் மூலம் தகவல் பரப்பி அவரையும் அவர் குடும்பத்தைச் சார்ந்தோரையும் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியதற்கு 15 தினங்களுக்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரவும் ரூ.20,00,000/- (இருபது இலட்ச ரூபாய்) இழப்பீடு வழங்கிடவும் நீர் இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறீர்.

இல்லையேல்…..

நீர்

“தன் தலையில் தானே மண் வாரியிட்டுக் கொள்ளும் யானை போல்” நீரே உமது முகத்திரை கிழித்து வெளிபட்டு உமது சித்து வேலைகளுக்கு உலைவைக்கப்படும் சூழலுக்கு ஆளாவீர்! பல்முனை வழக்கு சந்திப்பீர்!!

ரூ.20,00,000/- (ரூபாய் இருபது இலட்சம்) நட்ட ஈட்டு தொகையுடன் கூடி இந்த சட்ட அறிவிக்கை கட்டணம் ரூ.2,000/- (ரூபாய் இரண்டாயிரம்) சேர்த்து அளித்திட வேண்டியவராவீர்.

சிறப்புரிமை தக்கவைப்பு

உமது பொறுப்பற்ற, அசட்டையான, அபத்தமான பிறர் வாழ்வின் உள்ளுறை அறியா, உண்மை நிலை காணா தீய உட்கிடக்கையுடன், கடும் மன உளைச்சலும் ஈடு செய்ய முடியாத இழப்பும் ஏற்படுத்திய எம் கட்சிக்காரருக்கு எதிரான உமது குற்றவியல், உரிமையியல் செயல்பாடுகளை வேண்டும் வேளைகளில் சமூக, அரசியல், பத்திரிகைசார் களங்களில் முன்வைக்கும் உரிமையும் உமக்கு இணை அறிவிக்கை, விவரக்குறிப்பு, விவரணை, தொடர்பமை விளக்கம் அளித்திடும் உரிமைகளும் சிறப்புரிமைகளாக எம்மால் தக்க வைத்துக் கொள்ளப்படுகின்றன.

இந்த சட்ட அறிவிக்கையின் உள்ளடக்க உள்ளுறைக் கூற்றுக்களில் சுட்டப்பட்டுள்ளவை எமக்கு எதிரான உமது அவதூறுகளுக்கு மோசடிகளுக்கு எதிராக தொடுக்கப்படும் சட்ட முன்வைப்புகளுக்கு ஒரு முன் ஆவணமெனவும் கொள்க.

இந்த சட்ட அறிவிக்கை உமக்கு எதிராக தொடரப்படும் அனைத்து உரிமையியல், குற்றவியல், இழப்பு கேட்பீடு வழக்குகளுக்கும் ஆனது என்பதறிக!

வழக்கு இட ஆள்வரை பாதிக்கப்பட்டோர் வசிப்பிடமும், உமது வெளியீடு எம்மால் படிக்கப்பட்ட, உமது வெளியீடு உம்மால் பரப்பப்பட்ட எமது கட்சிக்காரரின் தகுதி தாழ்த்தப்பட்ட, எம் கட்சிக்காரரின் மானம் நட்டப்பட்ட, எமது கட்சிக்காரருக்கு சட்டப்படி வாய்ப்பிருக்கிற இடமாகவே அமையும் என்பதறிக!

வினைகளுக்கும் விளைவுகளுக்கும் விளையும் செலவுகளுக்கும் நீரே பொறுப்பு! நியாயம் எதிர்கொள்க!!

என படித்தேன் – கேட்டேன் – சரி

(கே.விஜயன், வழக்குரஞர்) எஸ்.வி.ராஜதுரை (எ) கே.மனோகரன்



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
RE: எஸ்.வி.ராஜதுரையின் வக்கீல் நோட்டீஸ் ஜெயமோகன்
Permalink  
 


எஸ்.வி.ராஜதுரை என் மீது தொடர்ந்த வழக்கு பற்றி அவரது வழக்கறிஞர் விஜயன் உதவியுடன் அவருக்குச் சாதகமான நண்பர்கள் உடைய ஜூனியர் விகடன் போன்ற இதழ்களில் செய்திகள் வெளியிட்டு வருகிறார். என் வாசகர்களுக்காக ஒரு விளக்கம்.


அன்னியநிதி

தமிழில் எழுதும் ஓர் எழுத்தாளனாகவும், வாசகனாகவும் எப்போதும் எனக்குள்ள ஓர் ஐயத்தை பதிவுசெய்தபடியே இருக்கிறேன். இங்கே பேசப்படும் கணிசமான கருத்துக்களுக்குப் பின்னால் அன்னிய நிதியுதவி இருக்கிறது என்பதுதான் அது.

இடதுசாரி இயக்கங்கள் சோவியத் நிதியுதவியை வெளிப்படையாகவே பெற்றவர்கள். பிறரை அவர்கள் ஏகாதிபத்திய நிதியுதவிபெறுபவர்கள் என குற்றம்சாட்டியிருக்கிறார்கள். தமிழில் ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக இந்த விவகாரம் அவ்வப்போது பேசப்பட்டிருக்கிறது.

சோவியத் ருஷ்யாவின் வீழ்ச்சிக்குப்பின், இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு எதிரான சிந்தனைகளுக்காக ஏகாதிபத்தியச் சார்பு அமைப்புகளும், இந்தியப் பண்பாட்டுக்கு எதிராக மதமாற்ற அமைப்புகளும் நிதியளிக்கின்றன என்ற பேச்சும் பலமுறை பதிவாகியிருக்கிறது. குறிப்பாக இடதுசாரி இதழ்கள் பலமுறை இக்குற்றச்சாட்டுகளைப் பதிவுசெய்திருக்கிறார்கள்.

இங்கே பேசப்படும் ஒரு கருத்தைப் பரிசீலிப்பதற்கு முன் அதை எழுதியவருக்கு இந்தப் பின்னணி ஏதேனுமுண்டா என்பதையும் பரிசீலிக்கவேண்டுமென்பது இச்சூழலில் செயல்படும் ஒருவன் என்ற முறையில் என்னுடைய கோரிக்கை.

ஓர் எழுத்தாளனாகிய நான் அவ்வாறு நிதியளிக்கும் நிறுவனங்களின் கணக்குவழக்கு நூல்களைத் தேடிச்செல்லவோ ஆதாரங்களை அளிக்கவோ முடியாது. இவ்விஷயமாக இதுவரை பேசிவந்த இடதுசாரிகள் உட்பட எவரும் நேரடி ஆதாரங்கள் அளித்ததில்லை, ஏனென்றால் அது சாத்தியமே இல்லை.

ஆகவே தற்செயலாக அச்சில் வெளிவந்த செய்திகளையும், சம்பந்தப்பட்டவர்களாலோ அவர்களின் முன்னாள் நண்பர்களாலோ சுட்டப்படும் தகவல்களையும் வாசகர்களுக்குச் சுட்டிக்காட்டி அவற்றை முன்வைத்து வாசகர்கள் இதை விவாதிக்கவேண்டும் என்று கோரி வருகிறேன்.

இது எந்த தனிநபருக்கும் எதிரான கருத்து அல்ல. உண்மையில் தமிழ்ச்சூழலில் செயல்படும் பெரும்பாலானவர்களின் தனிவாழ்க்கையை நான் நன்றாகவே அறிவேன். சங்கடமூட்டும் உண்மைகளைக்கூட. ஒரு தருணத்திலேனும் ஒரு தனிநபரின் அந்தரங்க வாழ்க்கை பற்றிய விவாதத்தில் நான் இறங்கியதில்லை. அவர்களின் தனிவாழ்க்கை ஊடகங்கள் முழுக்க பேசப்பட்ட காலகட்டங்களில்கூட அவர்களைப்பற்றிப் பேசியதில்லை, எழுதியதில்லை. மாறாக அவர்கள் அந்தக் காலகட்டத்தைக் கடந்துவருவதற்கான உதவிகளையே செய்திருக்கிறேன். இங்கே தனிவாழ்க்கை ஊடகங்களில் பேசப்பட்ட எவரேனும் இல்லை என்று சொல்லட்டும் பார்ப்போம்.

ஏனென்றால் நான் உறுதியான ஒழுக்கவாதி. அதனாலேயே பிறருடைய ஒழுக்கம் பற்றி எந்தத் தீர்ப்பையும் நான் அளிப்பதில்லை. ஒழுக்கம்சார்ந்து எவரையும் மதிப்பிடுவதுமில்லை. அது அந்நபரின் ஆன்மீகப்பயணம் சார்ந்தது, மிகமிக அந்தரங்கமானது என்பதே என் எண்ணம். வளர்ந்த மனிதர் ஒருவருடைய ஒழுக்கம் பற்றி விமர்சிப்பதற்கு அவரது குருவுக்கு மட்டுமே உரிமையுண்டு என்பதே என் தரப்பு.

நான் சொல்வது நம் சூழலில் உள்ள கருத்துக்களின் உண்மையான பெறுமதியை வாசகர்கள் மதிப்பிடுவதைப்பற்றி மட்டுமே. உண்மை மீதான விருப்பு ஒன்றால் மட்டுமே இயக்கப்படும் ஒன்றாகவே நான் என் குரலைக் காண்கிறேன். அந்தக் குரலை முன்வைக்கும் உரிமையும் பொறுப்பும் எழுத்தாளனாக எனக்கு உண்டு என்றே நினைக்கிறேன். ஆகவே நான் சொல்லும் எல்லாக்கருத்துக்கும் நான் பொறுப்பேற்றுக்கொள்கிறேன்.

நான் வழக்கறிஞனோ துப்பறிபவனோ அல்ல. நேர்மையான கருத்தியல்விவாத நோக்கில், உண்மை நிற்க வேண்டுமென்ற விருப்பில் என் கருத்துக்களைச் சொல்கிறேன். ஒருவேளை அதற்காக நான் தாக்கப்பட்டாலோ சிறைப்பட்டாலோகூட அதை என் பணியின் ஒரு பகுதியாகவே கொள்வேன். அதில் எந்த அச்சமும் இல்லை, வருத்தமும் இல்லை.

ஏனென்றால் என் சொந்த நலனுக்காகவோ சொந்தக் காழ்ப்புகளுக்காகவோ நான் செயல்படுவதில்லை. தமிழின் முதன்மையான படைப்புகளை எழுதிய எனக்கு புகழும் வாசகர்வட்டமும் எல்லாம் அந்நூல்களாலேயே வருகின்றன. இந்த விவாதங்கள் இலக்கியத்தளத்தில் எதிர்மறையாகவே விளைவுகளை உருவாக்குகின்றன என நான் அறிவேன். ஆனாலும் இதை நான் செய்வது நான் நம்பும் விழுமியங்களுக்காக மட்டுமே

ஓர் எழுத்தாளனாக என்னை மதிப்பிடவேண்டியது காலம்தான். என் காலகட்டத்தை நோக்கி நான் செய்யவேண்டியதைச் செய்தேன் என்ற நிறைவே எனக்குப்போதும்.

நமது கருத்துக்களின் பின்னாலுள்ள நிதிவலைப்பின்னல் பற்றி நான் தொடர்ச்சியாக கவனப்படுத்தி வருகிறேன். ஏற்கனவே இடதுசாரிகள் இதைப்பற்றிப் பேசியிருந்தாலும் நான் பேசும்போது அது மிகுந்த அழுத்தம் பெறுகிறது. வாசக மனதில் ஓர் ஆழமான பதிவை உருவாக்குகிறது. ஆகவேதான் நம் சூழலில் இத்தனை பதற்றம் ஏற்படுகிறது. நான் அதைப் புரிந்துகொள்கிறேன்.

உண்மையில் இவ்விளைவுக்காக நிறைவே கொள்கிறேன். நான் நினைத்தது நம் கருத்துச்சூழலில் புழங்கும் அன்னியநிதி என்ற விஷயம் கவனிக்கப்படாமல் போகக்கூடாது, ஒவ்வொரு வாசகனும் இதை உள்ளூரவேனும் உணர்ந்திருக்கவேண்டும் என்றுதான். அது நிகழ்கிறது.

தமிழ்ச்சிற்றிதழ் சூழலில் எவ்வளவோ கடும் விவாதங்கள் நடந்திருக்கின்றன. தனிமனிதத் தாக்குதல்களின் உச்சம் இங்கே நிகழ்ந்திருக்கிறது. அபூர்வமாகக் கைகலப்புகள் நடந்துள்ளன. எந்த தருணத்திலும் அவை ஊடக எல்லைக்குள்ளேயே நின்றுள்ளன. இப்போது இந்த விவாதம் சூழலில் வரவே கூடாதென்று நினைக்கிறார்கள். இதன் அடுத்தடுத்த படிகள் பேசப்படக்கூடாதென விரும்புகிறார்கள். அந்த அச்சத்தையும் தடுமாற்றத்தையும் புரிந்துகொள்கிறேன்.


நடந்தது என்ன?

அன்னியநிதி பற்றி ஓர் விவாதம் இயல்பாக இங்கே எழுந்து வந்தது. எம்.டி.முத்துக்குமாரசாமி ‘இந்தியா ஒரு தேசமே அல்ல’ என்றவகையில் கருத்து சொல்லும்போது அவர் பணியாற்றிய ஃபோர்டு ஃபவுண்டேஷனுடன் இணைத்தே அதை வாசகர் புரிந்துகொள்ள முடியும் என்று நான் எழுதினேன்.

விளைவாக எம்.டி.முத்துக்குமாரசாமி ஃபோர்டு ஃபவுண்டேஷனின் நிதி பெறும் பிறரை சுட்டிக்காட்டினார். ஃபோர்டு ஃபவுண்டேஷன் ஒன்றும் தவறான அமைப்பு அல்ல என்று சுட்டிக்காட்டுவதே அவரது நோக்கம். ஆனால் இந்திய அரசே ஃபோர்டு ஃபவுண்டேஷன் உட்பட அன்னிய நிதி பெறும் அமைப்புக்களைக் கண்காணிக்க ஆரம்பித்தபோது அவரது தரப்பு அடங்கிப்போனது.

அதன் நீட்சியாக நான் இந்திய எதிர்ப்பு பேசும் எஸ்.வி.ராஜதுரை போன்றவர்களின் நிதியாதாரங்களை வாசகர்கள் அறிந்துகொள்ளவேண்டியிருக்கிறது என நான் எழுதினேன். இதையே எஸ்.வி.ராஜதுரை அவதூறு என குற்றம் சாட்டியிருக்கிறார்.

எஸ்.வி.ராஜதுரையைத் தனிப்பட்ட முறையில் எனக்குத் தெரியாது, பொதுநண்பர்கள் மூலம் அறிந்ததோடு சரி. அவரது இலக்கிய நூல்களை வாசித்திருக்கிறேன். அவறைப்பற்றிய என் மதிப்பை எழுதியுமிருக்கிறேன்.அவர்மேல் எந்தக் கசப்பும் காழ்ப்பும் எனக்கிருக்க வாய்ப்பில்லை.

என்னுடைய கருத்தின் ஆதாரம் ஒன்றுதான். தமிழகத்தில் உள்ள தீவிர இடதுசாரிகளால் இருபதாண்டுக்காலத்துக்கும் மேலாக தன்னார்வக்குழுக்களிடம் நிதிபெற்று செயல்படுபவர் என்றும் அன்னியநிதி பெறும் அமைப்புகளுடன் தொடர்புடையவர் என்றும் எஸ்.வி.ராஜதுரை சுட்டிக்காட்டப்படுகிறார்.

புதியஜனநாயகம் 1988 ஜூலை 16-31 இதழில் ஆர்.கெ என்பவரின் அதைப்பற்றிய விரிவான கட்டுரை எஸ்.வி.ராஜதுரையின் படத்துடன் வெளிவந்துள்ளது. அந்தக்கட்டுரைக்கு மறுப்பு தெரிவிக்கவோ மானநஷ்ட வழக்குபோடவோ எஸ்.வி.ராஜதுரை முயலவில்லை

எஸ்.வி.ராஜதுரை இந்தக்காலகட்டத்தில் கிளாட் ஆல்வரிஸ் என்பவரது தன்னார்வக்குழுவில் பணியாற்றினார். அந்தக் குழு அன்னியநிதி பெறக்கூடியது. அந்த விஷயத்தை அவரது இடதுசாரி தோழர்கள் சுட்டிக்காட்டினார்கள். அவர்கள் இந்தக்காரணத்தால் எஸ்.வி.ராஜதுரையை ஒதுக்கிவைத்தார்கள். இந்தவிஷயத்தை புலவர் கலியபெருமாள் எழுதிய ‘மக்கள்துணையோடு மரணத்தை வென்றேன்’ என்ற தலைப்பில் 2006இல் வெளிவந்த நூலில் 25 ஆம் பக்கத்தில் உள்ள ‘உருக்குமனிதர் குழந்தை மனது’ என்ற முன்னுரையில் எஸ்.வி.ராஜதுரையே எழுதியிருக்கிறார்

எஸ்.வி.ராஜதுரை எழுதிய ‘Towards a Non Brahmin Millennium: From Iyothee Thass to Periyar’ என்னும் ஆங்கில நூலின் முதல் பதிப்பில் முன்னுரையில் None of this would have been possible without the support of Pradip Thomas and World Association for Christian Communication who were there at the very beginning, and who enabled us to begin work”. என்று தெளிவாகவே சொல்லப்பட்டுள்ளது.WACC என்ற உலகளாவிய மிகப்பிரம்மாண்டமான அமைப்பு கிறித்தவ மதவாதச் சிந்தனைகளை உலகமெங்கும் ஊடகங்களில் பரப்புவதற்காக உருவாக்கப்பட்டது என்பது அவ்வமைப்பின் அதிகாரபூர்வ இணையதளத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.

இதைத்தவிர பல்வேறு இணையதளங்களில் பல இடதுசாரி எழுத்தாளர்கள் எஸ்.வி.ராஜதுரை நிதியுதவி பெற்று எழுதுபவர் என்பதைப் பதிவுசெய்திருக்கிறார்கள். உதாரணமாக அசோக் யோகன் என்ற இடதுசாரிச் சிந்தனையாளர் ’இனியொரு’ என்னும் இடதுசாரி இணைய இதழில் ’எஸ்.வி.ராஜதுரை – பொய்கள், மறுபடி மறுபடி பொய்கள்!’ என்ற கட்டுரையில் எஸ்.வி.ராஜதுரை எவாஞ்சலிகா அக்காதமியா என்ற மதப்பரப்பு அமைப்பால் நிதியுதவிசெய்யப்படும் INSD என்ற அமைப்புடன் தொடர்புடையவர் என்று தெளிவாகவே குற்றம்சாட்டுகிறார்.

‘ ஆண்மையிருந்தால் நான் சொல்வது அவதூறு என நிரூபியுங்கள்’ என்கிறார். [ http://inioru.com/?p=7440 ] ராஜபட்சேவுக்கு ஆதரவானவர்கள் நடத்திய மாநாட்டுக்குச் சென்று புலிகளுக்கு எதிராக ராஜதுரை பேசுவதற்கு அந்நிதியுதவியே காரணம் என அசோக் யோகன் குற்றம் சாட்டுகிறார்.

இந்த எந்தக்குற்றச்சாட்டுக்கும் எஸ்.வி.ராஜதுரை ஆதாரபூர்வமாக மறுப்பு சொன்னதோ மானநஷ்ட வழக்கு போட்டதோ இல்லை. ஆகவே ஒரு பொதுவாசகனாகிய நான் இவ்விஷயங்களை எஸ்.விராஜதுரையின் கட்டுரைகளின் இந்திய எதிர்ப்பு, இந்தியப்பண்பாட்டு எதிர்ப்புக் கருத்துக்களுடன் இணைத்துக்கொண்டு சிந்திக்கிறேன். இது நம் சூழலில் உண்மையின்மீதான பற்றுடன் செயல்படும் ஒவ்வொருவரும் செய்தாகவேண்டும் என நினைக்கிறேன். இதையே எழுதினேன்.

ஆக, இது தனிப்பட்ட அவதூறு அல்ல. இந்தக்குற்றச்சாட்டு நான் என் கற்பனையில் இருந்து உருவாக்கியதுமல்ல. எந்த உள்நோக்குடன் புனையப்பட்டதும் அல்ல. நம் கருத்துச்சூழலில் செல்வாக்குடன் உள்ள இந்த ஐயத்தை நான் என் சிந்தனைகளுக்கு ஆதாரமாகக் கொள்கிறேன்.

நான் இவற்றை எஸ்.இ.ராஜதுரை மேல் குற்றம்சாட்டவில்லை. ஏற்கனவே சூழலில் எழுத்துவடிவிலேயே இருந்துவரும் குற்றச்சாட்டுகளைச் சுட்டிக்காட்டுகிறேன்,அவ்வளவுதான். எஸ்.வி.ராஜதுரை இவற்றை ஆதாரபூர்வமாக மறுப்பாரென்றால் நான் என் கருத்தை மாற்றிக்கொள்கிறேன். மறுக்கவேண்டும் எனக் கோருகிறேன். இதில் என்ன அவதூறு உள்ளது?


ராஜதுரையின் அவதூறு

எஸ்.வி.ராஜதுரை விஷயமாக என் நண்பர் விடியல்சிவா ஒரு கடிதம் எழுதினார். அதில் எஸ்.வி.ராஜதுரையை ஆகா ஓகோ என புகழ்ந்திருந்தார். நான் அளித்த பதிலுக்கு அவர் அளித்த பதிலில் ‘என் சடலத்தைக்கூட நீங்கள் பார்க்கக் கூடாது’ என்று சொல்லியிருந்தார். அதுகுறித்து சிவாவிடம் பேச நான் முயன்றேன். அவர் பேசும் நிலையில் இல்லை, படுத்த படுக்கையாக இருக்கிறார் என்றார்கள். சிவா அவரது நோய்பற்றிப் பேசுபவரே அல்ல. ஆனால் எந்த நேரமும் தனக்கு நோய் நோய் என்று சொல்பவர் எஸ்.வி.ராஜதுரைதான். எனக்கு ஐயத்தை அளித்தது இது. மேலும் எஸ்.வி.ராஜதுரை விடியல் இணையப்பக்கத்தை சிலகாலமாக கவனித்துவருகிறார்.

எஸ்.வி.ராஜதுரை அவரே சிவா பேரில் கடிதங்களை அனுப்பியிருக்கிறார் என்று ரவி என்ற ஈழ எழுத்தாளர் எழுதியிருந்தார். சிவாவின் உயிர்நண்பர் , இயக்கத்தோழர் ரவி. சிவாவைப் பார்ப்பதற்காக இந்தியா வந்து சிவாவுடன் தங்கி இருந்தவர். சிவாவிடம் எஸ்.வி.ராஜதுரையின் கடிதத்தை அவர்தான் சொல்லியிருக்கிறார். எஸ்.வி.ராஜதுரை செய்தது மிகப்பெரிய அநீதி என்றும், ஒருபோதும் நோயைப்பற்றி பேசுபவரல்ல. அந்தக் கடிதம் சிவாவை புண்படுத்தியது என்கிறார்.

அந்தத் தகவல் எனக்கு ஆழமான மனவருத்தத்தை அளித்தது. நான் ஒரு பொதுவெளியில் ஏற்கனவே பேசப்பட்ட ஒரு விஷயத்தைச் சுட்டிக்காட்டியதை எஸ்.வி.ராஜதுரை எதிர்கொண்டவிதம் மனக்கசப்படையச்செய்தது. [ http://ndpfront.com/tamil/index.php/articles/articles/guest/1342-2012-07-31-07-31-21 ]

ரவி எழுதிய குறிப்பு அனாமதேய இணையதளத்தில் வரவில்லை.  ND FRONT என்ற அவர்களின் அரசியல் அவர்களின் அமைப்பின் அதிகாரபூர்வ இணையதளத்தில், அஞ்சலிக்கட்டுரையில் வெளிவந்துள்ளது. ரவியை நன்கறிந்த எஸ்.வி.ராஜதுரை அவர் மேல் அவதூறு வழக்கு தொடுக்கவில்லை. மறுக்கக்கூட இல்லை.

ராஜதுரை செய்தது அப்பட்டமான உளவியல் தாக்குதல். தன்னை உணர்சிவேடங்கள்மூலம் பாதுகாக்கும் செயல். அதற்காகவும் அவரது வேறு அவதூறுகளுக்காகவும் நான் அவர் மேல் அவதூறு வழக்கு தொடுக்கவிருக்கிறேன்.


இந்த வழக்கு

உண்மையில் இந்தியாவில் எந்த ஒரு கருத்தையும் தனிப்பட்ட தாக்குதலாகக் காட்டி, மனம் புண்பட்டதாகச் சொல்லி, நீதிமன்றம் செல்லமுடியும். அதன்மூலம் அக்கருத்தைத் தற்காலிகமாகத் தடைசெய்து நிறுத்தவும் முடியும். சொன்னவரை நீண்ட சட்டப்போருக்குள்ளாக்கவும் முடியும். ஆகவே கருத்துலக விவாதங்களை நீதிமன்றம் கொண்டுசெல்வதென்பது கருத்துலகையே முடக்குவதாகும்.

ஏனென்றால் அதை முன்னுதாரண வழக்கமாகக் கொண்டால் எஸ்,வி.ராஜதுரைன் ஒவ்வொரு கட்டுரைக்கும் அவரை நீதிமன்றம் இழுக்கமுடியும். அப்பட்டமான நேரடி வசைகளைக்கூட நீதிமன்றம் கொண்டுசெல்வது என்பது கருத்துலகச் செயல்பாட்டில் சரியான தொடக்கம் அல்ல. எஸ்.வி.ராஜதுரையின் தனிப்பட்ட அவதூறை நான் பொருட்படுத்தாதது இதனாலேயே. இப்போதுகூட எஸ்.வி.ராஜதுரை நீதிமன்றம் சென்றிருப்பதனாலேயே நானும் செல்கிறேன்.

இந்திய தேசியத்தின் மீதும் இந்திய அரசமைப்பின்மீதும் நம்பிக்கையற்றவராகத் தோற்றமளித்து இதுவரை பேசிவந்த ராஜதுரை இன்று நீதிமன்றம் மீது நம்பிக்கை கொண்டு செயல்பட்டிருப்பதை ஆச்சரியமாகவே பார்க்கிறேன்.

என்னுடைய தரப்பை நீதிமன்றத்தில் முன்வைக்கிறேன். இந்திய தேசிய நலனுக்க்கும், இந்தியாவின் சமூக ஒருமைப்பாட்டுக்கும் எதிராக முன்வைக்கப்பட்ட கருத்துக்களை ஐயப்படவும் விவாதிக்கவும் எனக்கு உரிமை உண்டு. அது தனிப்பட்ட அவதூறு அல்ல. அந்த விவாத உரிமையைத் தடைசெய்ய முயல்வது என்பது ஜனநாயக விரோதம்.

பார்வைக்கு http://inioru.com/?p=7440″>அசோக் யோகனின் கட்டுரை
http://ndpfront.com/tamil/index.php/articles/articles/guest/1342-2012-07-31-07-31-21″>ரவி எழுதிய கட்டுரை



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

எஸ்.வி.ராஜதுரை – பொய்கள், மறுபடி மறுபடி பொய்கள்!:அசோக் யோகன்

lie10கோட்பாடு சார்ந்த அறம் பேசிய காலமெல்லாம் காற்றோடு போய்விட்டது. எஸ்.வி.ராஜதுரை நமக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாகத் தந்துகொண்டிருக்கிறார் .

இலங்கைப் பிரச்சினையில் ஐஎன்எஸ்டி எனும் ஜெர்மானிய தன்னர்வ நிறுவனத்தின் நிலைபாடு, ஜெர்மானிய பிராதஸ்தாந்து நிறுவனமான எவாஞ்ஜலிகா அகாதமியாவினுடன் அதனது நிதி சார்ந்த உறவு, அந்த அமைப்பின் இலங்கை அரசு ஆதரவு நிலைபாடு பற்றி எனது முன்னைய கட்டுரையொன்றில் கேள்வி எழுப்பியிருந்தேன். ஏகாதிபத்திய நிதி மூலதனம் பற்றியும் தன்னார்வ நிறுவனங்களது எதிர்ப்புரட்சி அரசியல் பற்றியும் வாய்கிழியப் பேசும் ‘புரட்சிகர’ மார்க்சியரான எஸ்.வி.ராஜதுரையும், ‘புரட்சிகர’ எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனும், ஐஎன்எஸ்டி நிறுவனம் திருவனந்தபுரத்தில் நடத்திய கருத்தரங்கில் என்ன அடிப்படையில் கலந்து கொண்டீர்கள் எனக் கேட்டிருந்தேன்.

தமிழ்ச்செல்வனின் பதில் நகைச்சுவை தவிர வேறில்லை. ‘ஐஎன்எஸ்டி அமைப்பாளர்களில் ஒருவரான சுசீந்திரனையும் அவரது துணைவியான இன்பாவையும் அவருக்குப் பல ஆண்டுகள் தெரியும். தமிழ்ச்செல்வனின் வீட்டுக்கு எல்லாம் அவர்கள் வந்திருக்கிறார்கள். அதனால் சுசீந்திரன் கூப்பிட்டார். நான் போனேன்’ என்கிறார் தமிழ்ச்செல்வன்.

2222பிராஸ்தஸ்தாந்து நிறுவனம், தன்னார்வ நிறுவனத்திற்கான நிதி போன்றவை குறித்த கேள்விகளுக்கான தமிழ்ச்செல்வனது பதில் இது. கருத்தரங்கிற்கு வந்தவர்கள் எல்லாம் இலங்கை அரசை எதிர்ப்பவர்கள் என்கிறார் தமிழ்ச்செல்வன். பச்சைப் பொய். தமிழ்ச்செல்வன் இலங்கை அரசை பாசிச அரசு என்கிறார். ஐஎன்எஸ்டி அமைப்பாளர்களான ரஞ்சித்தோ அல்லது சுசீந்திரனோ அப்படியா சொல்கிறார்கள்?

தமிழ்ச்செல்வனுக்காக மறுபடியும் ஒரு தகவல் சொல்கிறேன். 2009 அக்டோபரில் ஜெர்மனியில் இலங்கை தொடர்பாக நடந்த கருத்தரங்கிற்கு ஜெர்மானிய அரசின் பெடரல் ஏஜன்ஸி நிதி வழங்கியிருக்கிறது. அக்கருத்தரங்கில் ஜெர்மனியில் இருக்கும் இலங்கைத் தூதுவரும், ஜெர்மனி அரசின் தூதுவரும் பங்குபற்றியிருக்கிறார்கள்.

தமிழ்ச்செல்வன் கதை எழுதுகிறவர் என்பது மறுபடி ஒருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

திருவனந்தபுரம் கருத்தரங்கு ஏழு நாட்கள் நடைபெற்றது என டக்கிளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி கட்சியைச் சேர்ந்த எம் பௌசரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த ‘எதுவரை’ என்ற சஞ்சிகையில் தாஸ் என்பவர் எழுதியுள்ளார். ஆனால் ஒரு நாள் நிகழ்ச்சியோடு இந்திய உளவுத்துறை அதனைக் கலைத்துவிட்டது என்கிறார் தமிழ்ச்செல்வன். இந்த ‘எதுவரை’ சஞ்சிகையின் ஆசிரியரான எம் பௌசர் திருவனந்தபுரம் கூட்டத்திற்கு லண்டனலிருந்து சென்று கலந்துகொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்படியானால் எது உண்மை, எது பொய்?

இதுவாவது பரவாயில்லை. எஸ்.வி.ராஜதுரையின் சாட்சியங்கள் அருவறுப்பானவையாக இருக்கிறது. எஸ்.வி.ராஜதுரை திருவனந்தபுரம் கருத்தரங்கம் என ஒரு இடத்திலும் குறிப்பிடாமல், போகிற போக்கில் பத்துப் பக்கக் கட்டுரையொன்றில் (உயிர் எழுத்து : அக்டோபர் 2009) இரண்டு பத்திகளில் தனது அரசியல் ‘திருவிளையாடலை’ நிகழ்த்தியிருக்கிறார்.

ஐஎன்எஸ்டி, தன்னார்வ அமைப்புக்கள், ஏகாதிபத்திய நிதி, இலங்கை அரசு ஆதரவு பற்றி கேள்வி எழுப்புபவர்கள், புலி எதிர்ப்பு-புலி ஆதரவு என கறுப்பு வெள்ளை அரசியல் நடத்துகிறார்களாம். கருத்துக்களை ‘ஜனநாயகபூர்வமாக’ எதிர்கொள்கிற ‘ஆன்மபலம்’ இல்லாமல் அவதூறு செய்கிறார்களாம். எஸ்.வி.ஆர். சொல்கிறார்.

ranjt7ஐஎன்எஸ்டி அமைப்பாளர்களில் ஒருவரான ரஞ்ஜித் முன்னாள் ஜேவிபி இயக்கத்தில் ஆயுதம் ஏந்திப் போராடி, அதனது இனவாதத்தினால் வெளியேறியவராம். ஜனநாயகத்திற்கான இலங்கை ஊடகவியலாளர்கள் வெளியிட்ட, இலங்கை ராணுவத்தினர் விடுதலைப் புலிகளைக் கொலைசெய்யும் ஒளிநாடாவை வெளியிட்டார் என இலங்கை அரசினால் குற்றம் சாட்டப்படுகிறவராம் – சிறி டெலோ இணையத்தள ஆதாரம் தருகிறார் எஸ்வி.ஆர் – இதுவெல்லாம் எஸ்.வி.ராஜதுரையின் நகைச்சுவைக்குச் சான்றுகள்.

ரஞ்ஜித்தை ஒரு புரட்சிக்காரராகவும், இலங்கை அரசுக்குத் ‘தண்ணி காட்டுகிறவராகவும்’ சித்தரிக்க முயல்கிற எஸ்.வி.ராஜதுரையை நினைக்க எனக்குப் பரிதாபமாக இருக்கிறது. விடுதலைப் புலிகளை இலங்கை இராணுவத்தினர் கொல்வதாக வந்த ஒளிநாடாவை ரஞ்ஜித் வெளியிட்டதாக இலங்கை அரசு குற்றம் சாட்டுவதாகச் சுட்டிக் காண்பிப்பதன் மூலம் எஸ்.வி.ராஜதுரை என்ன சொல்ல வருகிறார்?

இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களை எதிர்த்துப் போர் புரிகிற நெஞ்சுரம் படைத்தவர் என, ரஞ்ஜித்தையும் அவர் சார்ந்த ஐஎன்எஸ்டியையும் சொல்கின்றாரா? என்ன கொடுமை!

மற்றவர்களுக்காகப் ‘பொய்’ பேசுகிற அவலநிலை எஸ்.வி.ராஜதுரை அவர்களுக்கு வந்திருப்பதற்காக உண்மையாகவே நான் வருத்தப்படுகிறேன்.

80011அந்த ஒளிநாடாவுக்கும் ஐஎன்எஸ்டிக்கும் சம்பந்தம் இல்லை என அது பற்றி ஒரு விசாரணை நாடகம் ஆடிய பின்னர் இலங்கை அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. அந்த ஒளிநாடாவுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என ரஞ்ஜித் இலங்கை அரசுக்குக் தன்னிலை விளக்கமளித்து மன்னிப்புகோரும் பாணியில் கடிதம் எழுதியிருக்கிறார். இலங்கை ஜனநாயக ஊடகவியலாளர்களுக்கும் தனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என ரஞ்ஜித் தனது அரசுக்கான கடிதத்தில் தெரிவித்திருக்கிறார். அத்தோடு 2009 அக்டோபரில் ஜேர்மனியில் தங்களுடைய ஐஎன்எஸ்டி நடாத்திய கருத்தரங்குக்கு இலங்கை அரச தூதுவர் கலந்துகொண்டு சிறப்பித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சிறி டெலோ இணையதளத்தைப் பார்த்துப் “புரட்சிகரமான” தகவல் தந்த எஸ்.வி. ராஜதுரை அவர்கள் சமகாலத்தில் வெளியான இந்தத் தகவல்களையும் குளோபல் தமிழ் இணையத்தள வழியிலோ அல்லது லங்காவெப்நியூஸ் இணையத் தள வழியிலோ அறிந்திருக்கவேண்டும்.

நாம் கேட்ட கேள்விகள் எதற்கும் ஐஎன்எஸ்டி இதுவரை மூச்சுவிடவில்லை. தமிழ்ச்செல்வனும் இதுவரை உருப்படியாக எதுவும் சொல்லவில்லை. எஸ்.வி.ராஜதுரைக்கு மட்டும் என்ன நேர்ந்தது? ‘அவர்களுக்காக’ப் பேசவேண்டிய அவசியம் ‘இவருக்கு’ ஏன் வந்தது? எஸ்.வி.ராஜதுரை சுசீந்திரனுக்காகவும் ரஞ்ஜித்துக்காகவும் “பேசுகிறவராக” வெளிவந்திருப்பதால் நேரடியாகவே நாம் இப்போது எஸ்.வி.ராஜதுரையிடம் கேட்க வேண்டியிருக்கிறது.

478ஐஎன்எஸ்டிக்கும் உங்களுக்கும் என்ன உறவு?

ஐஎன்எஸ்டி எவாஞ்ஜலிக்கா அக்காதமியாவுடன் என்ன உறவுகளை வைத்திருக்கிறது?

ஐஎன்எஸ்டி ஜெர்மனி பெடரல் ஏஜன்சியுடன் என்னவிதமான நிதி சார்ந்த உறவு கொண்டிருக்கிறது?

இலங்கை அரசு பாசிச அரசு என ஐஎன்எஸ்டி கருதுமானால் எவ்வாறு அவர்கள் நடத்திய கருத்தரங்கில் இலங்கை அரசின் தூதவர் கலந்து கொள்வார்?

‘ஆன்மபலம்’ பற்றிப் பேசுகிற எஸ்.வி.ராஜதுரை அவர்களே நேர்மையாக நெஞ்சின் மீது கைவைத்து இதற்குப் பதில் சொல்லுங்கள்.

எஸ்.வி. ராஜதுரை அவர்களின் தகவலில் அல்லது ஆதாரத்தில் என்னவிதமான ‘ஆன்மபலம்’ இருக்கிறது என அவர் கருதுகின்றார்? எது அவதூறு? எது பொய்? எது நேர்மை? எது ஆன்ம பலம்?

எஸ்.வி. ராஜதுரை தரப்பில் இவைகளில் எதுவொன்றும் இல்லாததால்தான் ஆளுக்கு ஆள் ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

நாம் சொல்லுகிற இவற்றில் எது அவதூறு என எமக்கு நிரூபித்துக் காண்பியுங்கள். மொன்னைத்தனமாக எழுதிக் கொண்டிருக்காமல் மனத் திண்மையிருந்தால் நேரடியாக எழுதுங்கள்.

இதனோடு தொடர்புடைய இடுகைகள்:
http://inioru.com/?p=6163
http://inioru.com/?p=6337



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

எஸ்.வி.ராஜதுரையும் – அறம்சார் சில கேள்விகளும்! : அசோக் யோகன்

progovஇலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக ஜெர்மனியை தளமாகக் கொண்ட இயங்கும் ஐ.என்.எஸ்.டி எனும் தன்னார்வ அரசு சாரா நிறுவனத்தின் அனுசரணையில் திருவனந்தபுரத்தில் நடந்த மாநாட்டில் தாங்கள் சிறப்புரை ஆற்றினீர்கள் (எதுவரை – செப்டம்பர்-அக்டோபர் – 2009) என்பதைக் கேட்டு நான் அதிர்ந்து போனேன்.
இலங்கையில் இனப்படுகொலை நடக்கவில்லை எனச் சொல்கிற சுசீந்திரனின் முன்முயற்சியில் நடைபெற்ற நிகழ்வுதான் திருவனந்தபுரம் கூட்டம் என்பதைத் தாங்கள் அறிவீர்கள் என நான் நம்புகிறேன்.
இந்து பத்திரிக்கையின் என்.ராமினாலும், சிங்கள இனவாதக் கட்சியான ஜே.வி.பியினாலும் தகவமைக்கப்பட்ட இலங்கை குறித்த அரசியல் பார்வை கொண்ட மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எழுத்தாளர்களான ச.தமிழ்ச் செல்வன், ஆதவன் தீட்சண்யா போன்றவர்களோடு திருவனந்தபுரம் கூட்டத் தளத்தை நீங்கள் பயன்படுத்தியிருந்தீர்கள் என அறிந்தபோது மேலும் அதிர்ந்து போனேன்.
மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இலங்கை சார்ந்த நிலைபாட்டுக்கு ஆதரவாக, சுசீந்திரன் போன்றவர்களை முன்வைத்து, இவர்கள் தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வருவதையும் நீங்கள் அறியாதவரல்ல என நினைக்கிறேன்.

 இலங்கை அரசின்பாலான ஒரு மென்மையான நிலைபாட்டுடன் விடுதலைப் புலிகளை மட்டுமே நடந்து முடிந்த கொலைகளுக்குக் காரணமாக நிறுத்துகின்ற அரசியலை சுசீந்திரன் போன்றவர்கள் முன்வைத்து வருகிறார்கள். இந்த அரசியலைத் தமிழகத்தில் முன்னெடுத்து வருகிறவர் அ.மார்க்ஸ் என்பதையும் தாங்கள் அறியாதிருக்க வாய்ப்பில்லை.

இலங்கை பற்றிய, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியலுக்குகந்த வகையிலான சுசீந்திரன் போன்றவர்களின் நேர்முகங்களையும், இவர்களுக்கு ஆதரவாக அ.மார்க்ஸ் எழுதிய கட்டுரையையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினது ஆதவன் தீட்சண்யா அங்கம் வகிக்கிற புதுவிசையில் அவர்தம் கட்சியினது அரசியல் பிரச்சாரத்தின் பகுதியாக வெளியிட்டார்கள் என்பதனையும் தாங்கள் அறிந்தே இருப்பீர்கள்.
சுசீந்திரன் தனது தன்னார்வ நிறுவன அரசியலுக்கும், தனது இலங்கை அரசின்சார்பு அரசியலுக்கும் ஒரே தளத்தில் தங்களையும், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும் இணைத்திருக்கிறார் என்பதுதான் இன்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

அன்புள்ள எஸ்.வி.ஆர் அவர்களே, இனப்படுகொலை நடக்கவில்லை என்று சொல்கிற சுசீந்திரன் கூட்டிய திருவனந்தபுரம் மாநாட்டில் தாங்கள் ஏன் கலந்து கொண்டீர்கள் எனச் சொல்வீர்களா?
அன்று முதல் இன்று வரை இலங்கை அரசு சார்பான இந்து என்.ராமினதும், சிங்கள இனவாதக் கட்சியான ஜே.வி.பியினதும் அரசியலையுமே முன்னெடுக்கும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினது எழுத்தாளர்களுக்கும் தங்களுக்குமான, அக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கான, பொதுக் காரணிகள் என்ன எனச் சொல்வீர்களா?
தன்னார்வ மற்றும் அரசு சாரா அமைப்புகளின் அரசியல் பற்றித் தாங்கள் அறியாதிருப்பீர்கள் என நான் நம்பவில்லை. உலகெங்கிலும் புரட்சிகர அரசியல் முன்னெடுக்கப்படாது முடக்குவதும், அமெரிக்க ஐரோப்பிய பாணியிலான ஜனநாயகத்தையும் சிவில் சமூகத்தையும் அமைப்பதுமே அவர்களது அரசியல் என்பதையும் தாங்கள் ஒப்புக் கொள்வீர்கள் என்றே நம்புகிறேன்.

ஐ.என்.எஸ்.டி எனும் அமைப்பு ஜெர்மனியைத் தளமாகக் கொண்ட ஒரு தன்னார்வ அரசு சாரா அமைப்பு. இந்த அமைப்பு இலங்கை அரசியலும் இனப்பிரச்சினையும் தொடர்பான கருத்தரங்குகளை நடத்தி வருகிறது. கருத்தரங்குகள் ஜெர்மனியின் பேட் போல் நகரில் அமைந்துள்ள பிராதஸ்தாந்து கிறித்தவ அமைப்பான எவாஞ்ஜலிக் அகாதமி துணையுடன் நடத்தப்பட்டு வருகிறது.
ஐ.என்.எஸ்.டி அமைப்புக்காக சலுகையில் இக்கருத்தரங்குகளை இந்த அமைப்பு நடத்துகிறது. இக்கருத்தரங்கு தொடர்பு முகவரியாகவும் இந்த அமைப்பினது முகவரியே இக்கருத்தரங்க அழைப்பிதழில் உள்ளது.
உலக தேவாலயக் கூட்டமைப்பிலும் எவாஞ்ஜலிக்கா அகாதமி அங்கம் வகிக்கிறது. ஜெர்மானிய அரசு, இலங்கை அரசு, அரசு சாரா அமைப்புக்கள், பிற ஈடுபாடுள்ள குழுக்கள் போன்றவற்றுக்கு இடையில் புரிந்துணர்வுக்காகவும் ஒத்துழைப்புக்காகவும் இக் கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன. ஜெர்மனியிருந்தும், இலங்கையிலிருந்தும், உலகெங்கிலுமிருந்தும் ஐரோப்பியர்களும் ஆசியர்களும் இக்கருத்தரங்ககளில் பங்கு பெறுகிறார்கள்.
மேலும் ஜெர்மனியிலும் உலகெங்கிலும் பிராதஸ்தாந்து அறத்தைப் பரப்புவதன் ஒரு பகுதியாகவே இந்தக் கருத்தரங்குகளை இவ்வமைப்பு நடத்தி வருகிறது.
மார்க்ஸியர்களும் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்தவர்களும் தன்னார்வ அமைப்புக்களின் கருத்தரங்குகளில் கலந்து கொள்ளும் போது எழுப்பப்படும் கேள்விகளையே தங்கள் முன்பாகவும், தங்களோடு அக்கூட்டத்தில் பங்கு பற்றிய, தன்னார்வ நிறுவனங்கள் குறித்து புரட்சிகரமான அறம் பேசுகிற மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எழுத்தாளர்களான ச.தமிழ்ச்செல்வன் மற்றும் ஆதவன் தீட்சண்யா முன்பாகவும் முன் வைக்கிறேன்.
தன்னார்வ நிறுவனங்கள் என்கிறபோது அதனது நிதியாதாரம் பற்றிய கேள்விகளை இடதுசாரிகளும் மார்க்சியர்களும் எழுப்புவது தவிர்க்க இயலாதது. பெருமளவிலான நிதிச்செலவுகளோடுவும் பயணச் செலவுகளோடும் உலகெங்கிலும் கருத்தரங்குகளை நடத்தும் ஐ.என்.எஸ்.டியின் நிதியாதாரம் குறித்த ஒரு ஆர்வலரின் கேள்விக்கு ஐ.என்.எஸ்.டி தளத்தில் பதில் சொல்லப் பட்டிருக்கிறது. இலங்கை அரசின் நிதியாதாரத்தில் ஐ.என்.எஸ்.டி இயங்குகிறது என்பது குற்றச்சாட்டு.

இலங்கை அரசின் பணத்திலோ அல்லது விடுதலைப் புலிகள் பணத்திலோ ஐ.என்.எஸ்.டி இயங்கவில்லை எனப் பதில் தரப்பட்டிருக்கிறது. திட்டவட்டமாக இதில் ஐ.என்.எஸ்.டியின் நிதியாதாரம் குறித்த பதில் தவிர்க்கப்பட்டிருக்கிறது.

எவாஞ்ஜலிகல் அகாதமியாவின் உறவு, நிதி தொடர்பாக எழுந்திருக்கும் கேள்விகள், தமிழர்கள் மீதான இனப்படுகொலை எனச் சிக்கலானதொரு சூழ்நிலையில் தன்னார்வ மற்றும் அரசு சாரா நிறுவனமான ஐ.என்.எஸ்.டி நடத்திய கருத்தரங்கில், மார்க்சியராகத் தம்மை முன்னிறுத்தும் தாங்கள் கலந்து கொண்டதற்கான நிதி ஆதாரம் குறித்த தெளிவுறுத்தலையும், நியாயப்பாட்டையும் அன்புள்ள எஸ்.வி.ஆர் அவர்களே, தாங்கள் முன்வைக்க வேண்டும்.
உலகெங்கிலும் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள் நடந்து வருகின்றன. மக்கள் தமது உரிமைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுகிறார்கள். இவ்வாறான மக்கள் இயக்கங்களை வழிநடத்துகிறவர்கள், நிறைய அரசியல் தவறுகளும் செய்கிறார்கள்.
மதவழி நின்று இதனை அணுகுகிறவர்கள் இருக்கிறார்கள். வஹாபிசத்தையும் பிராதஸ்தாந்து அணுகுமுறையையும் இந்துத்துவ அணுகுமுறையையும் தீர்வாக முன்வைக்கிற அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். மார்க்சியர்கள் எனத் தம்மைக் கருதிக் கொள்கிறவர்கள் இவ்வழிகளில் பிரச்சினைக்கான தீர்வுகளை முயல்வதில்லை .
அப்படி எனில், அன்புள்ள எஸ்.வி. ஆர். அவர்களே, தன்னார்வ மற்றும் அரசு சாரா நிறுவனமான ஐ.என்.எஸ்.டி நடத்திய இலங்கைத் தமிழர் தொடர்பான திருவனந்தபுரக் கூட்டப் பங்கேற்பை மார்க்சியர்களாகத் தம்மைக் கருதிக்கொள்ளும் தாங்களோ, தங்களோடு கூட்டத்தில் கலந்துகொண்ட ச.தமிழ்ச்செல்வன், ஆதவன் தீட்சண்யா போன்றவர்கள் எவ்வகையில் நியாயப்படுத்த முடியும் எனக் கருதுகிறீர்கள்?
தமிழ்செல்வனுக்கும், ஆதவன் தீட்சண்யாவுக்கும் ஒரு கேள்வியை இங்கே முன்வைக்கிறேன். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் உலக தன்னார்வ அரசு சாரா நிறுவனங்களின் எதிர்ப்புரட்சி அரசியல் பற்றி ஒரு நூலையே எழுதியிருக்கிறார்.
ரட்சியாளர்களாகத் தங்களை முன்னிறுத்திக் கொள்ளும் ச.தமிழ்ச்செல்வனும் ஆதவன் தீட்சண்யாவும், இலங்கை அரசு சார்பான, தன்னார்வ அரசு சாரா நிறுவனக் கருத்தரங்கில் கலந்து கொண்ட தங்கள் நடத்தைக்கு என்ன காரணத்தை முன்வைக்கிறீர்கள்?
அன்புள்ள எஸ்.வி.ஆர் அவர்களே, இறுதியாக ஒரு முக்கியமான கேள்வி. தாங்கள் இலங்கை அரசைக் கடுமையாக எதிர்த்து வருகிறீர்கள். ஐ.என்.எஸ்.டி நடத்தி வரும் இலங்கை தொடர்பான கருத்தரங்குகளில் தொடர்ந்து கலந்து கொண்டு வரும் பத்திரிக்கையாளர் பௌஸர் என்பவர் யார் எனத் தங்களுக்குத் தெரியுமா?
அவர் இலங்கை அரசுடன் செயல்பட்டு வரும் ஈ.பி.டி.பி செயலர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் ஐரோப்பியப் பிரதிநிதிகளில் ஒருவர் என்பது தங்களுக்குத் தெரியுமா?
பௌஸர் ஆசிரியராக இருந்து நடத்தும் “எதுவரை” இதழில்தான் உங்கள் திருவனந்தபுரச் சிறப்புரை பற்றிய செய்தி வந்ததும், வேறு எந்த இலங்கைத்தமிழ் பத்திரிக்கைகளிலும், ஐ.என்.எஸ்.டி தளம் உள்பட படத்துடன் அந்தச் செய்தி வரவில்லை என்பதும் தங்களுக்குத் தெரியுமா?
பௌஸர் பெயரிலோ, சுசீந்திரன் பெயரிலோ அக்கட்டுரை வராமல் தாஸ் எனும் அநாமதேயத்தின் பெயரில் அக்கட்டுரை வெளியாகி இருக்கிறது என்பதனையும் தாங்கள் அறிவீர்களா?
தோழர் எஸ்.வி.ஆர். அவர்களே, இலங்கை அரசு சார்பான கொள்கையுடைய தன்னார்வ அரசு சாரா நிறுவனமொன்று இலங்கை அரசியல் தொடர்பாக நடத்தியிருக்கிற திருவனந்தபுரம் கருத்தரங்கில் நீங்கள் கலந்து கொண்டிருப்பதானது தாங்கள் இதுவரை பேசி வந்திருக்கிற புரட்சிகர மார்க்சியத்துக்கு ஒரு களங்கம் என்றே நான் நினைக்கிறேன்.
இது பற்றி எங்களுக்குச் சொல்ல நீங்கள் என்ன பதிலை வைத்திருக்கிறீர்கள்?
மற்றபடி என்றும் போல அன்புடன்,
அசோக் யோகன்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

“புதுவிசை” அரசியலும், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் -தமிழ் செல்வனுக்கு ஒரு பதில் : அசோக் யோகன்

visaiஎஸ்.வி.ஆர் இற்கான எனது  திறந்த மடலுக்கான தங்களது வருத்தம் படர்ந்த எதிர்வினையைக் காண நேர்ந்த நெகிழ்ச்சியுடனும், தங்களுக்கு எனது தரப்பு சார்ந்த நியாங்களை விளக்குவதற்குமாகவே இதனை எழுதுகிறேன்.

தாங்களும், தாங்கள் சார்ந்த மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வெகுஜன அமைப்புக்களான தொழிற்சங்கம், இலக்கிய அமைப்பு, வாலிபர் அமைப்பு என அனைத்திலும் செயல்படும் ஆதவன் தீட்சண்யாவினதும் பிரச்சினையின் வேர்களில் இருந்து எனது இந்த பிரதியை துவங்கலாம் என நினைக்கிறேன்.

ஆதவன் தீட்சண்யாவும் நீங்களும் தனிநபர்கள் அல்ல.மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும் அதனது வெகுஜன அமைப்புக்களிலும் பொறுப்பிலுள்ளவர்கள்.

பொதுவாழ்வு சார்ந்த உங்களது நடத்தைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், மாரக்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் சார்ந்து நீங்களும் பொறுப்புடன் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள்.

”கட்சியின் அதிகாரபூர்வமான தீக்கதிர், செம்மலர் போன்ற பத்திரிக்கைகளில் வருவதைத்தான் நாங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் “என நீங்கள் சொல்வது அடிப்படையான அரசியல் பிழை என்றே நான் கருதுகினறேன்.

ஆதவன் தீட்சண்யாவும் நீங்களும் ஆசிரியர் குழுவிலிருந்து வழிநடத்தும் புதுவிசை சஞ்சிகைகக்கும், உங்களுக்கும், நீங்கள் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் கருத்தளவில் சம்பந்தமில்லை என்கின்ற மாதிரி நீங்கள் பேசுகின்றீர்கள்.

இது ஒப்ப முடியாத ஒரு வாதம் என நான் நினைக்கின்றேன்.

ஆதவன் தீட்சண்யா ஒரு அப்பாவி அல்ல. அவர் இலங்கைப் பிரச்சினை தொடர்பாகத் தமிழகத்தில் செய்து கொண்டிருப்பது சர்வதேசிய அரசு சாரா தன்னார்வ வலைப்பின்னலின் தொடர் அரசியல்.

அவர்தான் சுசீந்திரனைத் தேடிச் சென்று நேர்காணல் செய்து புதுவிசையில் வெளியிட்டவர்.

அவர்தான் சோபாசக்தியின் நேர்காணலை, சுகனின் நேர்காணலைhinduramவெளியிட்டவர். அ.மார்க்ஸின் கட்டுரையை வெளியிட்டவர்.
அந்த நேர்காணல்களில் தான் இலங்கையில் இனப் படுகொலை நடக்கவில்லை எனும் விடயம் சொல்லப்பட்டது.

இலங்கை இடதுசாரிகளின் சாதிய எதிர்ப்புப் போராட்டங்கள் கொச்சைப்படுத்தபட்டன. கோவை ராணுவ வாகனங்கள் எதிர்ப்புப் போராட்டம் கொச்சைப்படுத்தப்பட்டது.

புலிகள் எதிர்ப்பை மட்டுமே முனைப்பாகக் கொண்டு அரசு சார்பு நிலைபாடுகளை முன்வைப்பவர்கள் இந்த நால்வர் குழுதான்.

இதனது உச்சம் இலங்கை இனவாத அரசுக்கும்,இலங்கை பௌத்தக் கருத்தியலுக்கும் சம்பந்தமில்லை எனும் சுகனின் உளறல்கள்.

புதுவிசையின் இந்த அரசியலுடன் உடன்பாடு கொண்டு, நீங்கள் சொல்கிற வகையிலான இலங்கை அரசுக்கு எதிரான ‘ஒற்றுமை’ அரசியலை முன்னெடுக்க முடியும் என நீங்கள் கருதுகிறீர்களா?

நீங்கள் மாறுபட்ட கருத்து உள்ளவர்களின் ஒற்றுமை பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.

ஆதவன் தீட்சண்யா திட்டமிட்ட வகையில் அதனைக் குலைப்பதற்கான அரசியலை, முனைப்பாக முன்னெடுத்துக் கொண்டு இருக்கிறார்.

ஆதவன் தீட்சண்யா அப்பாவி அல்ல.

இலங்கை அரசு ஆதரவுக் குழுவினரின் அழைப்பின் பேரில்தான் அவர் லண்டன் கூட்டத்திற்கு வந்து சென்றார்.

இந்த  இலங்கைக் ஆதரவு    குழுவினர்  தமிழகத்திற்கு வரும்போது அவர்தான் அவர்களை வரவேற்று, ஈழப் பிரச்சினை தொடர்பாக நக்கல் நளினமாகக் கேள்விகளும் கேட்டு புதுவிசை சஞ்சிகையில் தொடர்ந்து நேர்காணல்கள் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.

இதனைத் தனிநபர் உறவுகள் எனச் சொல்கிறீர்களா அல்லது அரசியல் பரிமாணம் கொண்ட உறவு எனச் சொல்கிறீர்களா?

புதுவிசை மேலெடுத்து வருகிற அரசியலுக்கும் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சிக்கும், அதில் அங்கம் வகிக்கும் உங்களுக்கும் தொடர்பற்ற ‘சுதந்திர’ அரசியல் எனச் சொல்கிறீர்களா?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொறுப்பான முழுநேர ஊழியரான உங்கள் பதில் இவ்விடயத்தில் ஒப்ப முடியாததாகவே இருக்கிறது.

இலங்கை குறித்த என்.ராமின் நிலைபாடுகளும் ஆதவன் தீட்சண்யாவின் நிலைபாடுகளும் தங்களது கட்சியின் நிலைபாடுகளுக்கு விரோதமானது எனத் தாங்கள் கருதுவீர்களானால்-

நிலவி வரும் ஒரு குழப்பத்திற்கு நீங்கள் திட்டவட்டமாக முடிவு கட்டமுடியும்.

 தங்களது கட்சியின் அதிகாரபூர்வமான தீக்கதிர் பத்திரிக்கையில், “பலர் நினைக்கிறமாதிரி, என்.ராமின் அரசியலுக்கும், ஆதவன் தீட்சண்யா முன்னெடுக்கும் அரசியலுக்கும், இலங்கைப் பிரச்சினை தொடர்பாக புதுவிசை முன்னெடுக்கும் அரசியலுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியலுக்கும் சம்பந்தமில்லை” என நீங்கள் அறிவிக்கலாம் இல்லையா?

அறம் சார்ந்த கருத்துப் போராட்டத்தில் எமக்கு நம்பிக்கையுண்டு.
நாம் நடத்திக் கொண்டிருப்பதும் கருத்துப் போராட்டம்தான்mahintha100என்பதில் நாங்கள் உறுதியான நிலைபாடு கொண்டிருக்கிறோம்.

தங்கள் மீது இப்போதும் நான் பெறுமதிப்புக் கொண்டிருக்கிறேன். இலங்கை அரசைப் பாசிச அரசு எனத் தாங்கள் விமர்சித்திருப்பதை நான் அறிவேன். இலங்கை அரசுக்கு எதிராக, கருத்து மாறுபாடுகளுக்கு அப்பால் அனைவரும் ஒன்றுபட வேண்டும் எனத் தாங்கள் அறைகூவி வருவதையும் நாங்கள் அறிவோம். அதனையே நாங்களும் வழிமொழிகிறோம்.

துரதிருஷ்டவசமாக திருவனந்தபுரம் மாநாடு குறித்து தாங்கள் முழுமையாக அறியாமல், தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன்தான் நீங்கள் சென்றீர்கள் என்று நீங்கள் சொல்வதை எம்மால் ஒப்ப முடியாததாக இருக்கிறது.

ஆதவன் தீட்சண்யாவின் நிலைபாடுகளும் தொடர்புகளும் அறியாமையிலும் அப்பாவித்தனத்திலும் நடக்கிற காரியங்கள் அல்ல. அவரோடுதான் நீங்கள் திருவனந்தபுரம் மாநாட்டில் பங்கு கொண்டிருக்கிறீர்கள்.

தன்னார்வ அரசு சாரா நிறுவனங்களின் எதிர்ப் புரட்சி அரசியல் குறித்து அதிஅவதானம் கொண்டிருக்கிற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முழு நேர ஊழியராகத் தங்களது பதிலை எம்மால் ஒப்ப முடியவில்லை.

நான் தங்களது வலைத்தள வாசகன் எனும் அளவில் எமது நண்பர் டி.அருள் எழிலனது கருத்துக்கள் தொடர்பான தங்களது பதிவில், ஆதவன் தீட்சண்யாவினது வழமையான நக்கல் நடையுடனான ஒரு பின்னூட்டம் பார்த்தேன்.

”டி.அருள் எழிலனதும் அவரொத்தவர்களினதும் கருத்துக்களுக்கு வார்த்தைக்கு வார்த்தை தன்னால் பதில் எழுத முடியும்” என எக்களிப்புச் செய்துவிட்டு, “ஆனாலும் தான் எழுதக் கூடாது என அமைதி காப்பதாக “ புத்த பகவானின் மறு அவதாரம் போல ஆதவன் தீட்சண்யா பேசுகிறார்.

அவரை வார்த்தைக்கு வார்த்தை பதில் சொல்லச் சொல்லுங்கள்.
வெறும் வாய்வீச்சு வேண்டாம். நாங்கள் அதனை ஒரு சவாலாகவே ஏற்கிறோம்.

மற்றபடி, தங்களது வருத்தம் படர்ந்த எதிர்விணையைக் காண நேர்ந்த நெகிழ்ச்சியுடனும்,தங்களுக்கு எனது தரப்பு சார்ந்த நியாங்களை விளக்குவதற்குமாகவே இதனை எழுதுகின்றேன்.

அன்புடனும் தோழமையுடனும்
அசோக் யோகன்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

ச.தமிழ்ச்செல்வனுடைய பதிலை படிக்கும் யாருக்கும் அய்யோ பாவம் ரொம்ப அப்பாவி போலிருக்கு என்று தான் தோன்றும்.அப்படி எழுதியிருக்கிறார். ஆனால் அது உண்மையா ? இல்லை. குழப்பமான சூழல் நிலவும் நேரத்தில் தெரிந்துகொள்ளும் ஆர்வத்துடன் சென்றதை ஒரு பழியாக மாற்றுவது சரியா என்று கேட்கிறார்.என்ன குழப்பம் நிலவுகிறது தமிழ‌கத்தில் ? இங்கு எல்லாம் ‘தெளிவாக’த்தான் இருக்கிறது. நீங்களும் (இந்திய அரசின் நிலையிலிருந்து புலியை எதிர்க்கும் நீங்களும்) தெளிவாக இருக்கிறீர்கள், புலி ஆட்களும் தெளிவாகத் தான் இருக்கிறார்கள்.அனைத்திலும் தான சொல்கிறேன்.

உங்களுக்கு யாருடைய பின்புலமும் தெரியாதா ? சுசீந்திரன் நடராசாவின் பின்புலம் தெரியாமல் தான் அவர் பின்னால் போனீர்கள்,அதை நாங்கள் எல்லாம் நம்ப வேண்டும் என்கிறீர்கள். ஏன் அவரைப் பற்றி உங்கள் கட்சியின் பின்நவீனத்துவ சூப்பர் ஸ்டார் ஆதவன் தீட்சன்யாவிடம் கேட்டிருக்க வேண்டியது தானே, நன்றாகவே அவரின் பின் புலத்தை உங்களுக்கு புரிய வைத்திருப்பார்.

மார்க்சிஸ்ட் கட்சி என்றால் என்ன வேணாலும் பேசலாம் என்று இங்கே யார் உங்களைப் பற்றி பேசுகிறார்கள். உங்களுடைய அரசியலைப் பற்றித்தானே விமர்சிக்கிறோம்.அதை விடுத்து ஆதவன் தீட்சன்யா தன்னியடித்துவிட்டு சுற்றுகிறார். சென்னைக்கலைக்குழு பிரளயன் எப்போதும் புல் மப்பில் தான் இருக்கிறார், அப்புறம் உங்கள் கட்சியின் கள்ளக்காதல் தொடர்புகள் பற்றியெல்லாமா நாங்கள் பேசிக்கொண்டிருக்கிறோம்.?

ஈழத்துக்காக நீங்கள் என்ன லட்சனத்தில் போராட்டங்கள் நடத்துகிறீர்கள் என்பது தான் தெரியுமே ?

நீங்கள் புலியை என்ன நிலையிலிருந்து விமர்சிக்கிறீர்கள். இந்திய அரசு,சுப்பிரமணிய சாமி,இந்து ராம் நிலைப்பாட்டிற்கும் உங்கள் மார்சிஸ்ட் கட்சி நிலைப்பாட்டிற்கும் ஒரு நாலு வேறுபாடு மட்டுமாவது சொல்லுங்களேன் பார்ப்போம்.

 

ஒன்றும் தெரியாத இவர்கள் தான் 2004ல் மும்பையில் நடந்த‌ WSF மாநாட்டில் கலந்து கொண்டார்கள். ஒன்றும் தெரியாத இவர்களுடைய கட்சி தான் தன்னார்வக்குழுக்களுட‌ன் ஒன்றாக இயங்குகிற‌து. இது தமிழக‌த்திலுள்ள எமக்கு நன்கு தெரியும்.

தற்போது புதுவிசை -சுசீந்திரன் நடராசா-மற்றும் கைக்கூலித்தனம் தொடர்கிற‌து …



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

எஸ்.வி.ராஜதுரை ஆழ்ந்த அறவேதனை தொனிக்க எழுதிய குறிப்புகளை அவரது ஆதவாளர்கள் ஊடகங்களில் வெளியிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். முதியவர், இடதுசாரி, நோயாளி,திராவிடச்சிந்தனையாளர் என எல்லா அடையாளங்களையும் அவர் பயன்படுத்திக்கொள்கிறார். உண்மையில் பயன்படும் அடையாளம் எது என அனைவருக்கும் தெரியும்.

ஆனால் அதுதானா எஸ்.வி.ராஜதுரை? அதுவா அவரது மனம், அதுதானா அவரது மொழி?

அவர் எனக்களித்த வக்கீல்நோட்டீசின் பக்கங்கள் இதோ உள்ளன. [தனியாக அதன் தட்டச்சு வடிவம் உள்ளது]

இந்த மொழிநடையைப் பாருங்கள். இதில் பக்கம்பக்கமாக வெளிப்படும் வசைச்சொற்கள். [கேனையன்,மலத்தில் மொய்த்த ஈ]

அப்பட்டமான அவதூறுகள் சம்பந்தமே இல்லாமல் மனைவிமக்களை இழுத்துப்பேசும் கீழ்த்தரமான குறிப்புகள். [பொண்டாட்டி பேரிலான களவாணித்தனத்திற்கு’ சொந்தக்காரர்]

சினிமாவிலிருந்து பொறுக்கியெடுத்த வசைகள் , உவமைகள்.[வின்னர் வடிவேல், லார்டு லபக்கு]

என்னை அவருக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். ஆனால் நான் பெண் பொறுக்கி என்கிறார் [“பிடிக்கிலேனா விட்டிருங்கோ…” வசனம் மூலம் உம்மைப் புல்லரிக்க வைத்த உமது ‘பாஷை’யில் சொன்னால் அதிகம் அறிவில்லாத ‘அவளுக்கோ’]

என்னைக் குடிகாரன் என்று குற்றம்சாட்டுகிறார். [‘ஃபுல்’ தடுக்கி (புல் தடுக்கி அல்ல) பயில்வானாக]

சாதிசார்ந்த வசைகள்தான் எவ்வளவு. [ நீர், ஒரு சனாதனப் பார்ப்பார் – பெரு சாதிவெறியர் , பிறரை சுரண்டுகிற அறிவு மட்டுமே உடைய ‘அவாளுக்கோ’ ]

என் பிறப்பை வசைபாடுகிறார் [பிறப்பின் பிறழ்வு]

என்ன நினைக்கிறார் எஸ்.வி.ராஜதுரை? இதே போல ஒரு வக்கீல் நோட்டீஸை நான் அவருக்கு அனுப்புவேன் என்றா? அது என்னால் முடியுமென நினைக்கிறாரா என்ன? என் குடும்பத்தையே அழிக்கும் செயலை எஸ்.வி.ராஜதுரை செய்திருந்தால்கூட அவர் என் மனைவியை சம்பந்தபப்டுத்தி எழுதியிருப்பதுபோன்ற ஒரு வரியை நான் சொல்லிவிடுவேனா என்ன? எனக்கு மகள் இருக்கிறாள். உலகமெங்கும் வாசகியர் இருக்கிறார்கள். அவர்கள் முகத்தில் அதன்பின் என்னால் விழிக்கமுடியுமா?

ஆம், நான் வாழும் உலகமும் சிந்திக்கும் தளமும் வேறு. அதை எஸ்.வி.ராஜதுரை ஒருபோதும் உணரமுடியாது.

*

இந்த வக்கீல்நோட்டீஸை வழக்கறிஞர் விஜயன் அவரே எழுதியிருக்க வாய்ப்ப்பில்லை. சட்டப்படி வழக்கறிஞர் கட்சிக்காரரின் குரலாகவே ஒலிக்கிறார். இதன் எல்லாப் பக்கங்களிலும் எஸ்.வி.ராஜதுரை கையெழுத்திட்டிருக்கிறார்.

மேலும் இந்த வக்கீல் நோட்டீஸில் திரித்தும், நக்கலடித்தும், ஆபாசமான உட்குறிப்புகள் கொண்டும் குறிப்பிடப்பட்டிருக்கும் பலவிஷயங்கள் நெடுநாள் சிற்றிதழ்ச்சூழலில் புழங்குபவர்களுக்கு மட்டுமே தெரிந்தவை. இந்த மொழிநடை நெடுங்காலமாக நம் இடதுசாரி தீவிர இதழ்களில் சிலர் எழுதிவந்த அழுகல்நடை. எஸ்.வி.ராஜதுரை உருவாகிவந்த நாற்றங்கால் அது.

இதுதான் உண்மையான எஸ்.வி.ராஜதுரை என அவரிடம் பேசியவர்களும், கடிதம் பெற்றவர்களும் சொல்லிக் கேட்டிருந்தாலும் இது எனக்கு முதல் அனுபவம்.

உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் நான் மனம் உடைந்துபோனேன். எஸ்.வி.ராஜதுரைக்கே தெரியும், நான் அவர் நூல்களை வாசித்து வளர்ந்தவன். அதைப் பலமுறை எழுதியவன். இன்று அவரது திரிபுநிலைகளைக் கண்டு கருத்தியல் ரீதியாக முரண்படும்போதும் உள்ளூர அவர்மேல் ஆழ்ந்த மதிப்பு கொண்டவன். இந்த மொழியும் இந்த அவதூறும்தான் எஸ்.வி.ஆர் என்றால் என் மனதுக்குள் நான் கொண்டிருக்கும் அந்த பிம்பம் எவருடையது?

இருபதையொட்டிய வயதுகளில் பிம்பங்கள் உடைவது சாதாரணமான விஷயம். ஐம்பதில் உடைவது மிகமிக வலி அளிப்பது. இந்த வக்கீல் நோட்டீஸை நான் என் மனைவியிடமோ நண்பர்களிடமோ கூட காட்டவில்லை. இது ஒரு சட்ட ஆவணமாக இல்லை என்றால் அப்போதே கிழித்துப்போட்டிருப்பேன். இதை இன்னொரு கண் வாசிக்கலாகாதென்றே எண்ணினேன். இரண்டுமாதங்களுக்கும் மேலாக இதைப்பற்றி நான் எவரிடமும் பேசியதில்லை.

‘அன்னியமாதல்’ ‘ரஷ்யப்புரட்சி இலக்கிய சாட்சியம்’ போன்ற நூல்களின் ஆசிரியரை இந்த வண்ணத்தில் இந்தக் கோலத்தில் வெளிக்காட்ட நான் விரும்பவில்லை. ஆனால் வழக்கு நீதிமன்றம் சென்றபின் இதை வாசிக்க நேர்ந்த நண்பர்கள் அனைவரும் இது பொதுப்பார்வைக்கு வந்தாகவேண்டும் என்றார்கள். ஏன் என்றால் இதிலுள்ளது ஓர் அறப்பிரச்சினை.

ஒரு வக்கீல்நோட்டீஸ் என்பது தனிப்பட்ட கடிதமல்ல. அது ஒரு பொது ஆவணம். அழிக்கவோ மறைக்கவோ முடியாத ஒன்று. அதில் இவ்வளவு ஆபாச வசைகளையும் அவதூறுகளையும் எழுதிச்சேர்ப்பதென்பது மிகமிக மோசமான முன்னுதாரணம். யோசித்துப்பாருங்கள் இத்தகைய ஒரு வக்கீல்நோட்டீஸ் வழியாக ஒரு எளிய மனிதரை உளவியல் ரீதியாக உடைத்துப்போட்டுவிட முடியும். ஒரு தமிழ்ப்பெண்ணின் வாழ்க்கையையே நாசம் செய்துவிடமுடியும்.

நம் சூழலில் பெரும்பாலானவர்கள் தங்கள் சாதி, மதம் சார்ந்தும் கருத்துநிலைப்பாடுகள் சார்ந்தும் மட்டுமே ஒவ்வொன்றையும் புரிந்துகொள்கிறார்கள். பொதுவான ஓர் அறம்பற்றிப் பேசுபவர்கள் மிகக்குறைவு. எஸ்.வி.ராஜதுரை விஷயத்தில் ஆதரித்து நியாயங்கள் பேசியவர்கள் ஒவ்வொருவரும் அந்தரங்கமாகவேனும் இந்த வழக்கறிஞர் அறிக்கையைப்பற்றி யோசிக்கவேண்டும்.

சட்டத்தின் பெயரால் இத்தகைய உளவியல் வன்முறையை நாம் அனுமதிக்கலாமா? இது ஒரு முன்னுதாரணமாக ஆனால் இந்தியாவில் எவரேனும் மானமாக வாழமுடியுமா? மானமிகு என எஸ்.வி.ராஜதுரை போட்டுக்கொள்ளும் சொல்லுக்கான அர்த்தம் அதன் பின் இருக்குமா?

இதை வாசிக்க நேர்ந்த ஒவ்வொரு வழக்கறிஞரும் அதிர்ச்சியடைகிறார்கள். ஏனென்றால் இந்த மொழியில் ஒரு வக்கீல்நோட்டீஸ் அனுப்பப்படுவது தமிழகத்தில் இதுவே முதல்முறை. இதன் நகலைப் பல்வேறு மூத்த வழக்கறிஞர்கள் கேட்டுப்பெற்றிருக்கிறார்கள். ஓர் ஆவணமாக.

சிற்றிதழ்ப்பண்பாடு என்று சொல்கிறோமே அதிலிருந்து சென்று நாம் சட்டத்தின் உலகுக்கு அளிக்கும் பங்களிப்பு இதுதானா?

அவரே குறிப்பிட்டதும் பொதுவெளியில் பேசப்பட்டதுமான ஒரு விஷயத்தைச் சுட்டிக்காட்டுவதை அவதூறு என்றும் தாக்குதல் என்றும் சொல்லி கண்ணைக்கசக்கும் எஸ்.வி.ராஜதுரை இந்த வக்கீல்நோட்டீஸில் உள்ள ஆபாசத்தை எப்படி எனக்கு அனுப்பினார்? எப்படி அவர் கை நடுங்காமலிருந்தது?

அவரை ஒரு இடதுசாரித் தியாகி என்று முன் நிறுத்திய ஜூனியர்விகடன் போன்ற இதழ்கள் இதைப்பற்றி என்ன சொல்லப்போகின்றன?

அவரை ஓர் இடதுசாரிச் சிந்தனையாளர் என நினைப்பவர்கள் இந்த செயலைப்பற்றி என்ன நினைக்கிறார்கள்? இதுவா இடதுசாரி ஒழுக்கம்? இதுவா இடதுசாரி கருத்தியல் நாகரீகம்?

வசதியான மௌனம் மூலம் இதை அவர்கள் அங்கீகரிக்கவா போகிறார்கள்?

சரி, நாளை அவர் எழுதிய ஒவ்வொரு எழுத்துடனும் இந்த நோட்டீசின் மொழியும் நினைவுகூரப்படுமென்றாவது எஸ்.வி.ராஜதுரை யோசித்தாரா?

எஸ்.வி.ராஜதுரையை நேரில் கண்டால் அவர் கைகளைப் பற்றிக்கொண்டு நான் சொல்ல விரும்புவது இதைத்தான். ‘எஸ்.வி. ஆர், இதைப்போல கீழிறங்காதீர்கள். தயவுசெய்து…. தமிழ்ச்சிந்தனையாளர்களில் ஒருவராகக் கருதப்படும் உங்களை முன்வைத்து இத்தகைய கீழ்த்தரமான ஒரு வழக்கம் நம் சட்டச்சூழலில் உருவாக வேண்டாம். என்றோ ஒருநாள் உங்கள் நூலை வாசித்து மன எழுச்சியடைந்தவன் என்பதனால் நானும் உங்கள் மாணவனே. இந்தக் கீழ்த்தர மொழியாக உங்களை வாசிக்கையில் நான் அடைவது மரணத்துக்கிணையான ஓர் அனுபவம்… தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்….’

வக்கீல் நோட்டீஸ் ஸ்கான் பக்கங்கள்

[தட்டச்சு வடிவம் ]



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

ஜெயமோகன்

எனது எதிர்வினையைப் பிரசுரித்து விட்டு, மிக சாதுரியமான வார்த்தைகளால் என் மீது உங்கள் வளைத் தலத்தில் 20.6.2012 அன்று நீங்கள் செய்துள்ள அவதூறை மறைக்கவும் மறுக்கவும் முயற்சி செய்திருக்கிறீர்கள்.

23.06.2012 அன்று உங்கள் வளைத் தளத்தில் எழுதுகிறீர்கள்:

“நான் ‘எஸ்.வி.ராஜதுரை ஃபோர்டு பவுண்டேஷனில் இருந்து பணம் பெற்றுக்கொண்டு எழுதினார்’ என்று எழுதியிருக்கிறேனா என்ன? அந்த வரி, அல்லது அப்படிப் பொருள் அளிக்கும் வரி என் கட்டுரையில் எங்கே உள்ளது?”

“நான் அக்கட்டுரையிலேயே சுட்டிக்காட்டியபடி நிதியுதவிகள் பெரும்பாலும் பலவகையான அறிவார்ந்த நோக்கங்கள் சொல்லப்பட்டு விதவிதமான பண்பாட்டுஅமைப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வழியாகவே அளிக்கப்படுகின்றன. எம்.டி.முத்துக்குமாரசாமி போல உள்ளிருந்தே ஒருவர் சுட்டிக்காட்டும்போதே நமக்கு உண்மை தெரிகிறது. இல்லையேல் வாய்ப்பே இல்லை.

“அந்த பிற நிதியுதவிகளைச் சுட்டிக்காட்டும்போது காலச்சுவடு, கிரியா, நீங்கள் என மூன்று பெயர்களையும் எடுத்துச்சொல்லி நான் பேசியமைக்குக் காரணம் நீங்கள் மூன்று தரப்பும்தான் உங்கள் நூல்களிலேயே பெற்றுக்கொண்ட நிதியைப்பற்றிய குறிப்புகளை அளித்திருக்கிறீர்கள் என்பதுதான்.

“உங்களுடைய ‘பெரியார்: சுயமரியாதை சமதர்மம்’ என்ற நூலின் முதற்பதிப்பின் நான்காம் பக்கத்தில் சிறிய எழுத்துக்களில் அதன் ஆராய்ச்சி மற்றும் வெளியீட்டுக்காக நிதியுதவி செய்த அமைப்பின் பெயர் அதிகாரபூர்வமாகவே குறிப்பிடப்பட்டிருந்தது.”

இப்போது,ஜெயமோகன், உங்கள் வளைத்தளத்தில் 20.6.2012 அன்று நீங்கள் எழுதிய வரிகளை இங்கே மேற்கோள் காட்ட விரும்புகிறேன்:

“ஃபோர்டு பவுண்டேஷனின் பெருநிதிக் கிழவரான எம்.டி.முத்துக்குமாரசாமி காலச்சுவடுக்கு நிதியளித்த ஒரு நிறுவனத்தின் மூலநிதி ஃபோர்டு பவுண்டேஷன் அளித்ததே என வெளிப்படுத்தியிருக்கிறார்.மாறிமாறி இவ்வாறு வெளிப்படுத்துவார்கள் என்றால் நல்லதுதான் என்றே நான் நினைக்கிறேன். தமிழில் க்ரியாவும் காலச்சுவடும் எஸ்.வி.ராஜதுரையும் எல்லாம் பெற்ற பணத்தின் அளவு சராசரி வாசகனுக்கு கொஞ்சம் பிரமிப்பைத்தான் அளிக்கும்.நாம் சாதாரணமாக வாசித்துச்செல்லும் கருத்துக்களுக்கு இவ்வளவு பணமதிப்பா என நாம் வியப்போம். அடுத்தமுறை கொஞ்சம் கவனமாகவே புத்தகங்களை புரட்டிப் பார்ப்போம்”.

லீனா மணிமேகலைக்கும் காலச்சுவடு கண்ணனுக்கும் நடக்கும் சர்ச்சைகள் குறித்து நீங்கள் எழுதியுள்ளவற்றின் பகுதியாக அமைந்துள்ள இந்த வரிகளுக்கு என்ன அர்த்தம்? ·போர்ட் ·பவுண்டேஷனிடமிருந்தோ அல்லது இது போன்ற ஏகாதிபத்திய நிறுவனங்களிலிருந்தோ நான் பணம் பெற்றுள்ளேன்,அதுவும் ‘சராசரி வாசகனுக்கு கொஞ்சம் பிரமிப்பை அளிக்கும் அளவு’க்கு பெற்றுள்ளேன் என்பதுதானே நீங்கள் எழுதியுள்ள வரிகளுக்கு அர்த்தம்?

இது என் மீது செய்யப்பட்ட அவதூறு அல்ல என்று கூறுகிறீர்கள். “நான் ‘எஸ்.வி.ராஜதுரை ஃபோர்டு பவுண்டேஷனில் இருந்து பணம் பெற்றுக்கொண்டு எழுதினார்’ என்று எழுதியிருக்கிறேனா என்ன? அந்த வரி, அல்லது அப்படிப் பொருள் அளிக்கும் வரி என் கட்டுரையில் எங்கே உள்ளது?” என்று கேட்கிறீர்கள்.

எனது எதிர்வினையில் நான் எழுப்பிய கேள்வி இதுதான்: “அவருக்கு (ஜெயமோகனுக்கு) நேர்மை இருக்குமானால்,நான் எழுதுபவற்றுக்கு ·போர்ட் ·பவுண்§டேஷனிலிருந்தோ,வேறு எந்த நிறுவனத்திலிருந்தோ எப்போது, எவ்வளவு பணம் தரப்பட்டது என்பதையோ, அந்தப் பணத்திற்குக் கைமாறாக எனது எழுத்துகளின் உள்ளடக்கம் எவ்வாறு அமைந்திருந்தது என்பதையோ தக்க சான்றுகளுடன் மெய்ப்பிக்க வேண்டும். அவருக்கு இன்னும் ஒரு வார கால அவகாசம் தர விரும்புகிறேன்”.

வெளிநாட்டுப் பணத்தைப் பெற்றுக் கொண்டு பெரியார் பற்றிய நூலை நானும் வ.கீதாவும் எழுதிய பிறகுதான் இந்திய தேசி¢யம், இந்துப் பண்பாடு, நேரு, காந்தி போன்றோரை இழிவுபடுத்தும் ‘இந்து இந்தி இந்தியா’போன்ற நூல்களை நான் எழுதத் தொடங்கியதாகக் கூறுகிறீர்கள். இந்த்துத்துவ எதிர்ப்பை வெளிப்படுத்துகிறவர்களுக்கு வெளிநாட்டு நிதி உதவிகள் கிடைக்கின்றன என சங் பரிவாரம் கூறி வரும் கருத்தை ஒத்ததுதான் இது. உண்மையில் ‘இந்து இந்து இந்தியா’ நூல் வெளிவந்ததோ 1993இல். பெரியார் குறித்து நான் தனியாகவோ,வ.கீதாவுடன் இணைந்தோ எழுதிய நூல்கள் 1996இல் இருந்துதான் வெளியாகின.அதற்கு முன்பு, அயோத்திதாசர் குறித்தும் திராவிட இயக்கங்கள் குறித்தும் இந்துத்துவம் குறித்தும் நாங்கள் ஆங்கிலத்தில் சில கட்டுரைகள் எழுதியுள்ளோம்.

எனது புத்தகங்களைப் பற்றியோ, கருத்துகளைப் பற்றியோ நீங்கள் கொண்டிருக்கும் கருத்துகளைப் பற்றி எனக்குக் கவலையில்லை. அவற்றைக் குப்பைக்கட்டு எனத் தூக்கியெறிவது உங்கள் கருத்துச் சுதந்திரம்.

ஆனால்,’சராசரி வாசகர்களுக்குக் கொஞ்சம் பிரமிப்பை அளிக்கும் அளவுக்கு’ நான் ஏதேனும் ஒரு நிறுவனத்திடமிருந்து பணம் பெற்றுள்ளதாக நீங்கள் சொல்லும் ‘அவதூறுக்கு’ (உங்களைப் பொருத்தவரை இது வெறும் தகவலோ,கருத்தோ மட்டுமதான்) நிரூபணமாக நீங்கள் கீழ்க்கண்டவற்றைச் சொல்கிறீர்கள்:

“உங்களுடைய ‘பெரியார்: சுயமரியாதை சமதர்மம்’ என்ற நூலின் முதற்பதிப்பின் நான்காம் பக்கத்தில் சிறிய எழுத்துக்களில் அதன் ஆராய்ச்சி மற்றும் வெளியீட்டுக்காக நிதியுதவி செய்த அமைப்பின் பெயர் அதிகாரபூர்வமாகவே குறிப்பிடப்பட்டிருந்தது.”

என் மீது நீங்கள் சுமத்தியுள்ளது அவதூறு அல்ல, தக்க சான்றாதாரங்களின் அடிபபடையில் முன் வைக்கப்படும் தகவல் மட்டுமே என்று எனது எதிர்வினைக்குப் பிறகே மேற்சொன்ன வரிகளை எழுதியுள்ளீர்கள். இதை உங்கள் சொந்த அறிவைக் கொண்டு அல்ல, வேறு யாரோ தந்த தகவலின் அடிப்படையில்தான் எழுதியிருக்கிறீர்கள். ஏனெனில் ‘விடியல் பதிப்பகம்’ 1996இல் வெளியிட்ட ‘பெரியார்:சுயமரியாதை சமதர்மம்’ நூலின் முதல் பதிப்பில் உள்ள எங்கள் முன்னுரையின் ix-xiஆம் பக்கங்களில் எங்கள் நூலின் ஆக்கத்திற்குப் பல்வேறு வகைகளில் உதவிய நண்பர்கள், சமூக செயலார்வலர்கள் ஆகியோரின் பெயர்களைப் பதிவு செய்துள்ளோம். இந்தப் பெயர்களில் எந்த உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனத்தின் பெயரும் இல்லை. உங்களால் ‘குப்பைக் கட்டு’ என்று கருதப்படும் இந்த முதல் பதிப்பைத் தேடிக் கண்டுபிடிப்பது உங்களைப் போன்ற சாமர்த்தியசாலிகளுக்குக் கடினமானதல்ல.

இருப்பினும், நான் இந்த விடயத்தை இத்துடன் முடித்துக் கொண்டு தப்பி ஓட விரும்பவில்லை. துப்பறியும் பணியில் ஈடுபட வைத்து உங்களை சிரமப்படுத்த விரும்பாததாலும் நீங்கள் எல்லோரிடமிருந்தும் எதிர்பார்க்கும் ஒளிவுமறைவற்ற தன்மையை நானும் வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதாலும், உங்களுக்குக்கு நானே ஒரு தகவலைத் தர விரும்புகிறேன். வ.கீதாவும் நானும் Towards a Non-Brahmin Milennium:From Iyothee Thass to Periyar’ என்னும் நூலின் முதல் பதிப்பின் (1998இல் கல்கத்தாவிலுள்ள ‘சாம்யா’ பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது) viiஆம் பக்கத்தில் அந்த நூலை எழுதுவதற்கான எங்களது ஆராய்ச்சிக்கும் ஆக்கத்திற்கும் உதவியவர்கள் என்ரு ஒரு பெரிய பட்டியலையே தந்திருக்கிறோம். அதில் உள்ள வரிகளிலொன்று: “None of this would have been possible without the support of Pradip Thomas and World Association for Christian Communication who were there at the very beginning, and who enabled us to begin work”.

ஜெயமோகன், இந்தத் தகவலுக்கு உங்கள் கற்பனை வளத்துக்கேற்ப விளக்கம் தந்து கொள்ள உங்களுக்கு உரிமை உண்டு. எனினும், எனது முதல் எதிர்வினையில் நான் கேட்ட கேள்வியை நான் மாற்றிக் கொள்ளவில்லை: “ஜெயமோகனுக்கு நேர்மை இருக்குமானால்,நான் எழுதுபவற்றுக்கு ·போர்ட் ·பவுண்§டேஷனிலிருந்தோ,வேறு எந்த நிறுவனத்திலிருந்தோ எப்போது, எவ்வளவு பணம் தரப்பட்டது என்பதையோ, அந்தப் பணத்திற்குக் கைமாறாக எனது எழுத்துகளின் உள்ளடக்கம் எவ்வாறு அமைந்திருந்தது என்பதையோ தக்க சான்றுகளுடன் மெய்ப்பிக்க வேண்டும்.”

உங்களது அவதூறை சட்டரீதியாக எதிர்கொள்ள எனக்கு இன்னும் வாய்ப்பி¢ருக்கிறது

எஸ்.வி.ராஜதுரை

எஸ்.வி.ஆர் அவர்களுக்கு,

சாமர்த்தியமான எதிர்வினை என்கிறீர்கள். நீங்கள் என் மீது சுமத்திய கூடங்குளம் பற்றிய அவதூறை அப்படியே தாண்டிச்சென்றதையே நான் சாமர்த்தியம் என்கிறேன். அதை உங்களிடமிருந்து நான் கற்றுக்கொள்ளமுடியவில்லை. ஏனென்றால் என்னிடம் ஒளிக்க ஏதுமில்லை.

உண்மையில் என்னைப்போன்ற ஒருவர் செய்யக்கூடாத பணியை ஒரு உந்துதலின் விளைவாக காமா சோமாவென்றுசெய்துகொண்டிருக்கிறேன். முறையான ஆய்வோ தகவல்சரிபார்ப்போ இல்லாமல் என்னுடைய நினைவுகளையும் மனப்பதிவுகளையும் கொண்டு கருத்துச் சொல்கிறேன். இதிலுள்ள அபாயங்கள் தெரியும். பிழை வந்தால் வரட்டும், ஆனால் மனமறிந்த உண்மையை சொல்லிப்பார்ப்போமே என்ற துணிவுதான் என்னுடையது. எந்நிலையிலும் என்னுடைய சொந்த நேர்மையை மட்டுமே நான் ஆதாரமாக கொள்கிறேன். எந்த மேடையிலும் அதையே முன்வைக்கிறேன்.

ஏனென்றால் நான் நன்றாக அறிந்த ஒரு உண்மையை பொது விவாதத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன். இந்தியாவில் இன்று புழங்கும் கருத்துக்கள் பலவற்றுக்குப்பின்னால் பல்வேறு நிதியுதவிகள் இருக்கின்றன. அவற்றை விவாதிக்காமல் கருத்துக்களை விவாதிப்பது வீண்வேலை. அவ்வாறு நிதியூட்டப்பட்ட கருத்துக்கள் பெரும்பாலும் இந்தியாவில் ஏதேனும் வகையில் பிரிவினையை, பிளவுகளை உருவாக்கக்கூடியவை. நீண்டகால அளவில் பெரும் வன்முறைக்கும் மானுட அழிவுக்கும் வழிவகுக்கக்கூடியவை.

அவை மானுட உரிமைகள், சமூகநீதி என பல்வேறு போலி முற்போக்கு வேடங்களில் வருகின்றன. அவற்றைப்பற்றிய எச்சரிக்கை நம் சமூகத்துக்கு அவசியம். உண்மையான மானுட உரிமைகள் ,சமூகநீதி ஆகியவற்றுக்கான போராட்டங்களில் இருந்து அவற்றை நாம் பிரித்துக்காண வேண்டும். அவற்றின் லேபிள்களை மட்டும் கவனித்தோமென்றால் அவை நம்மை மாபெரும் மானுட அழிவை நோக்கியே கொண்டுசெல்லும். அந்த அழிவில் குளிர்காய நினைக்கும் ஏகாதிபத்திய சக்திகளால் அவை இங்கே வளர்க்கப்படுகின்றன.

அவை பற்றிய தகவல்கள் மிகமிகக் குறைவே. நிரூபிக்கப்படத்தக்க தகவல்கள் அபூர்வம். ஏனென்றால் இந்த மாபெரும் சர்வதேச நிதிவலைப்பின்னலை நம் அரசுகள் கூட இன்னும் ஊடுருவவில்லை. ஆனாலும் அவற்றைப்பற்றி பேசுவதன் மூலம் நான் உருவாக்க விரும்பும் விளைவுகள் இரண்டு. ஒன்று, இப்படி ஒரு விஷயம் நிகழ்கிறதென்றே தெரியாமல் , தெரிந்தும் நம்பாமல் இருக்கும் பெரும்பான்மை வாசகர்களிடம் இதைப்பற்றி ஒரு விவாதத்தை உருவாக்குகிறேன். இரண்டு, சம்பந்தப்பட்டவர்கள் சிலரேனும் சுயவிளக்கமளிக்கும் கட்டாயத்தை உருவாக்குகிறேன்.

ஆகவேதான் இவற்றைப்பற்றி பேசுகிறேன். போதாத தகவல்களுடன். பெரும்பாலும் ஊகங்களுடன். ஆனால் இது ஒரு தொடக்கமே. இது தொடங்கிவிட்டால் ஆராய்ச்சித்திறனும் அதற்கான வாய்ப்புகளும் உடையவர்கள் உள்ளே வருவார்கள்.

*

நேற்று உங்களுக்கான எதிர்வினையை வைத்ததுமே நள்ளிரவிலேயே நண்பர்கள் சொன்னார்கள் பெரியார் பற்றிய அந்த நூலில் -ஆம் அந்த குப்பைக்கட்டில் – நான் சொன்ன தகவல் இல்லை என. ஆனால் என் நினைவில் தகவல் இருந்தது, நான் அதற்கு எதிர்வினையும் ஆற்றியிருக்கிறேன். அதை திடமாகவே நம்பினேன். ஆனால் மூளையிலிருந்து வெளியே எடுக்கமுடியவில்லை.

ஆகவே முதன்முதலில் என்னிடம் இந்த விவகாரத்தைப்பற்றிப் பேசிய நண்பரிடமே கேட்டேன். அவர் இப்போது வெளிநாட்டில் இருக்கிறார். WACC யுடன் தொடர்பு கொண்டிருந்த இறையியலாளராக இருந்தவர். இன்று நாத்திகர். அவர்தான் உங்கள் நூலைச் சுட்டிக்காட்டினார். ஆம் நீங்கள் குறிப்பிட்ட நூலேதான். Towards a Non-Brahmin Milennium:From Iyothee Thass to Periyar.

என்னுடைய நினைவுக்குழப்பத்துக்கு முக்கியமான காரணம் இந்த அமைப்பின் உதவி உங்களுக்கு பெரியார் பற்றிய நூலுக்காகவே அளிக்கப்பட்டது என்றும் அதற்கும் ஐந்தாண்டுகளுக்கும் மேலாக உங்களுக்கு அவ்வமைப்புடன் தொடர்பிருந்தது என்றும் அந்நண்பர் முன்பு எனக்கு சொல்லியிருந்ததுதான்.. ஆங்கிலத்தில் நீங்கள் எழுதிய Towards a Non-Brahmin Milennium:From Iyothee Thass to Periyar. என்ற நூல் தமிழில் எழுதிய நூல்களை மறுஆக்கம் செய்தது என்ற நிலையில் அது இப்போதும் தர்க்கபூர்வமாகச் சரிதான்.

கிட்டத்தட்ட ஒரே விஷயங்களைப் பேசும் நூல்களில் ஆங்கிலநூலில் நீங்கள் WACC யை குறிப்பிட்டாகவேண்டிய கட்டாயமிருந்தது. அந்தக்குறிப்புதான் அந்நூலை மேலைநாட்டு பல்கலைகளுக்கு கொண்டுசென்று சேர்க்கும்.

இனிமேல் உங்களைப்பற்றி முடிவெடுக்கவேண்டியது உங்கள் முற்போக்குமுகத்தை நம்பும் உங்கள் வாசகர்களின் மனசாட்சிதான். மிக எளிதாக வார்த்தைகளைப்போட்டு எல்லாவற்றையும் நியாயபடுத்திவிடமுடியும்தான். அப்படி இல்லை இப்படி என்றெல்லாம் வாதிடலாம்தான். ஆனால் தன் மக்கள் மீதும் தன்னுடைய கொள்கைமீதும் நம்பிக்கை கொண்ட ஒரு இடதுசாரி உதவிபெறவேண்டிய தகுதிகொண்ட நிறுவனம்தானா WACC என அவர்கள் அந்தரங்கமாக முடிவுசெய்யட்டும்.

மிகமிக மென்மையாக அவர்களாலேயே குறிப்பிடப்பட்டிருக்கும் சொற்களை மேற்கோள்காட்டியே சொல்வதென்றால் The World Association for Christian Communication (WACC) என்பது ஒரு சர்வதேச தன்னார்வ நிறுவனம். அதன் தலைமையகம் கனடாவிலும் பிரிட்டனிலும் இருக்கிறது. நிதியாதாரங்கள் அமெரிக்காவிலும் பரந்து கிடக்கின்றன. உலகின் நூற்றுக்கும் மேற்பட்ட ஏழைநாடுகளில் மதப்பரப்ப்புவேலைகளில் ஈடுபட்டுள்ள இந்த அமைப்பு 1500 க்கும் மேற்பட்ட துணை அமைப்புகளைகொண்ட ஒரு குட்டி அரசாங்கம். அதன் ஒட்டுமொத்த ஊழியர்கள் கிட்டத்தட்ட லட்சம்பேர்.

எந்தத் தன்னார்வ நிறுவனத்தைப்போலவும் WACC யின் அறிவிக்கப்பட்ட இலக்கு என்பது மானுட உரிமைகளுக்காக குரல்கொடுப்பதும் சமூகநீதியை உருவாக்குவதும்தான். ஆனால் தெளிவாகவே அவற்றை கிறித்தவ விழுமியங்களாக அவ்வமைப்பு கருதுகிறது. அதற்காக மட்டுமே அது போராடுகிறது. வறுமையும் உள்நாட்டுப்போரும் ஓங்கிய, ஆனால் கனிவளம் மிக்க, ஆப்ரிக்காவிலும் ஆசியாவிலும் லத்தீனமேரிக்காவிலும் தன் கிளைகளை விரித்துக்கொண்டு செயல்படும் WACC அளவுக்கு செல்வமும் செல்வாக்கும் கொண்ட அமைப்புகள் உலகில் மிகக்குறைவே

1950களில் இடதுசாரி கருத்துக்கள் உலகமெங்கும் பரவியபோது அதற்கு எதிராக கிறித்தவ மதக்கருத்துக்களைப் பிரச்சாரம்செய்யும்பொருட்டு உருவான அமைப்பு WACC . ஏற்கனவே தனித்தனியாகச் செயல்பட்டுவந்த பல்வேறு கிறித்தவ மதப்பிரச்சார அமைப்புகள் இந்த பொதுக்குடைக்கீழ் இணைந்தன. World Council of Churches போன்ற மாபெரும் தேவாலயக்கூட்டமைப்புகள் இந்த அமைப்புக்கு துணைச்சக்தியாகச் செயல்பட்டன. பின்னர் அவை இவ்வமைப்பில் இணைந்துகொண்டன.

1959ல் கேரளத்தின் முதல் கம்யூனிஸ்டு அரசைக் கலைத்ததில் இந்த அமைப்பின் பெரும்நிதியுதவி இருந்தது என்று சொல்லப்படுகிறது. இந்தியாவின் வடகிழக்குப்பகுதிகளில் பிரிவினைவாத, இனவாத இயக்கங்கள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னணிச்சக்தியாகவும் இந்த அமைப்பு குறிப்பிடப்படுகிறது. இந்த அமைப்பு உலக அளவில் பல்வேறு வகையான பதற்றங்களையும் வன்முறைகளையும் உருவாக்கியிருக்கிறது என்கிறார்கள்.

ஆப்ரிக்காவின் பலநாடுகளில் கிறித்தவதேசியவாதம் முளைத்தெழவும் அவை இஸ்லாமியதேசியங்களுடன் மோதி வன்முறைகள் வெடிக்கவும் இவ்வமைப்பு காரணமாக அமைந்திருக்கிறது. குறிப்பாக நைஜீரியாவில் பயாஃப்ரா என்ற கிறித்தவதேசிய இயக்கம் உருவாகி உலகின் மாபெரும் மானுட அழிவுகளில் ஒன்று நிகழ இவ்வமைப்பின் நிதி மற்றும் கருத்தியல் பின்னணி உண்டு என்று குறிப்பிடப்பட்டுள்ளது

[உங்களுக்கும் தெரிந்திருக்கும். இன்று நைஜீரியா உள்நாட்டுப்பிரச்சினைகளை ஓரளவு தீர்த்துக்கொண்டு தன்னுடைய பெட்ரோலியத்தை கொள்ளையிட்டுச்செல்லும் ஐரோப்பியநாடுகளுடன் முரண்பட்டு வினவ முனைகிறது. அதற்கு பதிலடியாக பயாஃப்ரா கிறித்தவக் குடியரசை உயிர்த்தெழச்செய்ய முயல்கின்றன ஐரோப்பியநாடுகள். பயாஃப்ரா குடியரசுக்கான போராட்டத்தின் புண்களை கிளறும் நோக்கமுடைய சிமொண்டா அடிச்சியின் நாவலை [Half of a Yellow Sun ,Chimamanda Adichie] அவை விருதுக்குமேல் விருதாகக் கொடுத்து உலகமெங்கும் தூக்கிப்பிடிக்கின்றன. அந்தக்குப்பையை ஒரு மாபெரும் மானுட ஆவணம் என்று விசுவாசமாக புகழ்ந்து நீங்களும் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறீர்கள்]

லத்தீனமேரிக்காவில் இடதுசாரி இயக்கங்கள் உருவானபோது அவற்றுக்கு எதிராக கிறித்தவ பிரச்சாரம்செய்ய WACC பெரும் நிதியையும் முயற்சியையும் செலவிட்டது. அதற்காக உருவாக்கப்பட்ட போலி புரட்சிச் சிந்தனையான விடுதலை இறையியல் அதன் சிருஷ்டி என்று சொல்லப்படுகிறது. இன்று அதைப்பற்றி மிகவிரிவான தக்வல்கள் வெளிவந்துள்ளன.

ஒட்டுமொத்தமாக WACC யின் செயல்பாடுகள் என்ன? அவர்களே அறிவித்துக்கொள்ளும் செயல்திட்டங்கள் இவை. முக்கியமாக ஊடகங்களைக் கைப்பற்றுதல். அவற்றில் கிறித்தவக்கொள்கைகளை ஊடுருவச்செய்தல். பல்வேறு பண்பாடுகளை கிறித்தவப்பிரச்சாரத்துக்கு உகந்தவகையில் மாற்றி எழுதுவதற்கு ஊக்கமளித்தல். அப்பண்பாட்டுத்தகவல்களை தொகுத்து சர்வதேசத்தன்மை கொண்ட ஒரு தகவல்களஞ்சியத்தை உருவாக்குதல். அவற்றைக்கொண்டு கிறித்தவ மதப்பரப்பலுக்கு உகந்த கொள்கைகளை வடிவமைத்தல்.

அதை இப்படிச் சொல்லலாம். இந்தியா போன்ற நாடுகளில் உள்ள ஒட்டுமொத்த பொதுச்சிந்தனைகளையும் ஊடுருவுதல். செய்திகளில், வரலாற்று ஆய்வுகளில், அரசியல் சொல்லாடல்களில், கல்விப்புலங்களில் தங்கள் கருத்துக்களை நுழைத்தல். தங்களுடைய நீண்டகால திட்டங்களுக்கு ஏற்ப பண்பாட்டாய்வுகளையும் அரசியலாய்வுகளையும் திரித்து வடிவமைத்தல்.

அதற்காக எல்லா இடங்களிலும் அவர்கள் ஆட்களைக் கண்டடைகிறார்கள். அவர்களுக்கிருக்கும் செல்வவளம் என்பது நினைத்துப்பார்ப்பதற்கரியது. ஒருவேளை இந்திய அரசின் வரவ்செலவு கணக்கைவிடப்பெரியது அது. அந்தப்பணத்தை பல்வேறு வழிகளில் அவர்கள் பகிர்ந்தளிக்கிறார்கள். நூலாய்வுகளுக்கு நூலாக்கங்களுக்கான நிதியுதவிகள், கருத்தரங்குகளில் கட்டுரை படிப்பதற்கான அழைப்புகள். அவற்றின் நிதியளிக்கைகள் ஒருபோதும் பொதுப்பார்வைக்கு வைக்கப்படுவதில்லை. இந்தியா போன்ற அரசுகள் எளிதில் அவற்றை பெறுவதும் சாத்தியமல்ல.

எஸ்.வி.ஆர் சொல்லுங்கள், WACC யின் மேலே சொன்ன எந்த நோக்கங்களுடன் நீங்கள் ஒத்துழைத்தீர்கள்? அப்படி ஒத்துழைக்காவிட்டால் எதற்காக அவர்கள் உங்களுக்கு உதவினார்கள்? ஒரு ’மார்க்ஸிய களப்போராளி’ ஒத்துழைக்கவேண்டிய, உதவிபெற்றுக்கொள்ளவேண்டிய அமைப்புதானா அது?

உலகமெங்கும் WACC செய்வதென்ன என்பதை மிக எளிதாக ஒருவர் இணையம் மூலமே வாசித்து மேலே ஊகிக்க முடியும். ஒன்று நிதியுதவிகள் மூலம் தங்கள் ஆதிக்கத்தை பரப்பத்திட்டமிட்டுள்ள நாடுகளின் பண்பாட்டாய்வுகளை எழுதச்செய்கிறார்கள். பின்னர் அந்நூல்களை அப்பண்பாடுகளுக்கான ஆவணமாக, ஆதாரநூல்களாக எடுத்துக்கொள்கிறார்கள். அந்நூல்களை மேற்கோள்காட்டி அப்பண்பாடுகளைப்பற்றிய தங்கள் ஊடகப்பிரச்சாரத்தை ஆரம்பிக்கிறார்கள்.

அதாவது நைஜீரியாவின் மதச்சூழல் பற்றி பற்றி என்ன எழுதவேண்டும் என்பதற்கு நிதியுதவி அளிக்கப்படுகிறது. அதன் பின் அந்நூல் ஐரோப்பாவெங்கும் பல்கலைகழகங்களில் மூலநூலாக அங்கீகரிக்க வைக்கப்படுகிறது. அதன்பின் அந்நூலை மேற்கோளாக்கி நைஜீரியாவின் மதச்சூழல் பற்றிய இதழியல்கட்டுரைகள், செய்திகள் எழுதப்படுகின்றன. தொலைக்காட்சிச்செய்திகள் உருவாக்கப்படுகின்றன. விளைவாக அவர்கள் விரும்பினால் பயாப்ராவை எழுப்பலாம், அணைக்கலாம்.

உங்கள் நூல் இன்று உலகின் பல பல்கலைகளில் மூலநூலாக அங்கீகரிக்க வைக்கப்பட்டிருக்கும் சூழலில் அந்நூல் பெற்ற உதவிகள் என்ன என்று பார்ப்பது இந்திய வாசகனாக என் கடமை அல்லவா? அந்நூலை மேற்கோளாக்கி இன்று ஆங்கில ஊடகங்களில் எழுதப்படும் பல்வேறுசெய்திக்கட்டுரைகளை காணும்போது, அந்த ஆங்கிலக் கட்டுரைகளை ஒட்டி வட்டாரமொழிகளில் வரும் கட்டுரைகளை காணும்போது அவற்றின் பின்னணி என்ன என்று ஏன் நான் யோசிக்கக்கூடாது?

கடைசியாக எந்த ஒரு பொதுவாசகனும் கேட்கும் கேள்வி. இத்தனை பிரம்மாண்டமான ஓர் அமைப்பு, உலகம் முழுக்க பரவியிருக்கும் ஓர் அரசாங்கம், எப்படி உருவாகிறது? ஐரோப்பாவில் தேய்ந்துகொண்டிருக்கும் கிறித்தவத்துக்கு இத்தனை நிதி பக்தர்களின் நன்கொடையாக குவிகிறதா என்ன?

மார்க்ஸிய அரிச்சுவடி தெரிந்த எவருக்கும் தெரியும், இது ஏகாதிபத்தியத்தின் கைத்தடி என. மதம் அதன் வாகனம் மட்டுமே. அல்லது முகமூடி. நைஜீரிய அரசு எண்ணைக்கு நியாய விலை கோருவதை கைவிட்டால் பயாப்ரா கிறித்தவக்குடியரசு அப்படியே அணைந்து போகும். உலகமெங்கும் பரவும் ஐரோப்பிய வணிகநிறுவனங்களின் மீசைமுறுக்கல்தான் இந்த வகை அமைப்புகள். அதற்காகவே நிதி வந்து குவிகிறது.

உங்கள் நூலில் குறிப்பிடப்பட்டிருக்கும் பிரதாப் நைனான் தாமஸ் பற்றி இன்னும் விரிவாகவே சொல்லமுடியும். இங்கே WACC யின் உச்சநிலை தொடர்பாளராக இருந்து பண்பாட்டாய்வுகளையும் அரசியலாய்வுகளையும் வழிநடத்தியவர் அவர். இந்திய ஊடகங்களை ஊடுருவுவதலை விரிவாகவே ஆவணப்படுத்திய ஆய்வுக்கட்டுரைகளை எழுதியிருக்கிறார். பின்னர் WACC யில் இருந்து விலகி அதைப்பற்றி நிறையவே எழுதியிருக்கிறார்.

அரவிந்தன்நீலகண்டன் -ராஜீவ் மல்ஹோத்ரா எழுதிய உடையும் இந்தியா என்ற நூலில் கூட அவரது நூலைப்பற்றிய குறிப்புகள் உள்ளன. உலகமெங்கும் உள்ள கிறித்தவ செய்தி அமைப்புகள், பிரச்சார அமைப்புகள், ஆய்வு அமைப்புகள் ஆகியவை ஒன்றுடன் ஒன்று இணைந்து ஒரு ‘கிறித்தவ உம்மாவை’ உருவாக்கியிருப்பதை இவர் பெருமையுடன் அறிவிக்கிறார். இந்நூலில் இந்தியாவில் செயல்படும் இத்தகைய அமைப்புகளின் செயல்பாடுகள் அவர்களின் அறிக்கைகளில் இருந்தே விரிவாக எடுத்துக்கொடுக்கப்பட்டிருக்கின்றன.

நீங்கள் உங்கள் கடிதத்திலேயே முன்ஜாமீன் எடுத்துவிட்டீர்கள். எளிதாக இந்துத்துவ பிரச்சாரம் என்று சொல்லி தாண்டிச்சென்று விடுவீர்கள். மதசார்பற்ற தன்மைக்காகத்தான் எல்லாம் என்று சொல்லிவிட்டால் இங்கே எதையும் செய்யமுடியுமே. ஆனால் நான் பேசுவது மார்க்ஸியத்தில் நம்பிக்கை கொண்டிருக்கும் உங்கள் வாசகர் சிலருக்காகத்தான்.

உங்கள் நிதியாதாரங்களைப்பற்றி ஆராய்ந்துகொண்டிருக்கிறேன், இன்னொரு தருணத்தில் விரிவாகவே எழுதுகிறேன். ஒன்று உங்களுக்காக வ.கீதா நிதி பெற்றிருக்கிறாரா என்ற கோணத்தில். இரண்டு, பாரதிதாசன் பற்கலையில் பெரியாரியலாய்வு இருக்கையில் கௌரவப்பேராசிரியராக நீங்கள் பணியாற்றியதை ஒட்டி. அந்த இருக்கையின் நிதியாதாரம் என்ன என்ற கோணத்தில்.

கடைசியாக, நீங்கள் வழக்கு தொடுப்பதைப்பற்றி. நீங்கள் அதைச்செய்யலாம். நான் அது அவசியமான ஒரு தொடக்கமாக இருக்கும் என்று இப்போது நினைக்கிறேன். பல காரணங்கள். ஒன்று, இந்த விஷயம் நீதிமன்றம் சென்றதென்றால் முறையாகவே ஒரு வழக்கறிஞரை அமைத்து பல விஷயங்களை ஆராயச்செய்யலாம். தகவலறியும் சட்டத்தைக்கொண்டு தகவல்களை பெறலாம்.

இது என்னைப்போன்ற ஒரு சாமானியன் எதிர்கொள்ளவேண்டிய விஷயமல்ல. கடல். ஒன்றும் உருப்படியாக சிக்காமல் போகலாம். அப்போது நான் தண்டிக்கப்படலாம். பரவாயில்லை. ஒரு பொதுவிவாதத்தை பிரபல ஊடகங்கள் வழியாக உருவாக்க அது எனக்கு உதவும். இனி இவ்விவாதம் அந்த தளத்திற்கு கொண்டு செல்லப்படவேண்டும்

உண்மையில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் ஒருநாள் மதுரையில் இந்த நிறுவனத்துடன் உங்கள் உறவைப்பற்றி கேள்விப்பட்டபோது நான் இவ்வளவு பெரிதாக நினைக்கவில்லை. நம்மூர் கலைக்காவேரி போல கிறித்தவர்களின் ஒரு சில்லறை கலாச்சார நிதியுதவி அமைப்பு என்றே எண்ணினேன். மேலே சென்று யோசிக்கவுமில்லை. இன்று இணையம் வழியாக WACC பற்றி அறிய வரும்போது பதற்றமும் துயரமும் ஏற்படுகிறது. எஸ்.வி.ஆர், என்னதான் சொல்லுங்கள், நீங்கள் இதைச்செய்யலாமா? உங்கள் மனசாட்சியுடன் ஒரு கணமாவது இந்தச்சொற்கள் பேசாதா என ஏங்குகிறேன்.

ஜெ

 

 

WACC இணையதளம்

WACC லண்டன் இணையதளம்



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

வரலாற்றை எவ்வகையிலும் பொருட்படுத்தாத தன்மை பரப்பியம் சார்ந்த எல்லா இயக்கங்களுக்கும் இருக்கும். திராவிட இயக்கம் என்பது முழுக்க முழுக்க ஒரு பரப்பிய இயக்கம். பரப்பிய இயக்கம் என்றுமே பொதுமேடைகளை மட்டுமே சார்ந்து இயங்குவது. சராசரி மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டிவிடுவதையே கருத்தியல் செயல்பாடாகக் கொண்டது.

*எப்போதுமே ஈ.வே.ரா அவர்கள் தர்க்கத்தின் மொழியில் பேசியதில்லை, முழுக்க முழுக்க மிகையான உணர்ச்சியின் மொழியிலேயே பேசினார்


*வரலாற்றியக்கத்தில் உள்ள சிக்கலான முரணியக்கங்களை அது பேசமுடியாது. அனைத்தையும் அது எளிமைப்படுத்தியாகவேண்டும். ஹீரோX வில்லன் என்ற நாடகத்தனம் அதற்கு தேவையாகிறது. எதிரிகளை உருவாக்கி அவர்கள் மீது உச்சகட்ட வசைகளைப் பொழிந்து அந்தக் கருமைச்சித்திரம் முன்பு தன்னை வெண்மையாக நிறுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது அதற்கு. எல்லா தளங்களிலும் திராவிட இயக்கம் அதையே செய்கிறது என்பதைக் காணலாம் 

 

கிறித்தவ மதப்பரப்புநர்கள் தங்கள் மதத்தைப் பரப்ப இந்திய சமூகத்தின் பிளவுகளையும் மோதல்களையும் பயன்படுத்திக்கொண்டார்கள் என்றால் அதையே திரு ராமச்சந்திரன் மற்றும் கணேசனின் கட்டுரையைப்பற்றியும் சொல்லலாமே. அவர்கள் முதலில் ஒருதகவலைச் சொல்கிறார்கள் அதனடிப்படையில் ஒரு ஊகத்தை நிகழ்த்துகிறார்கள் அந்த ஊகத்தை மேலும் மேலும் எடுத்துச்சென்றபின் கடைசியில் ஒரு முடிவுக்கு வந்து அம்முடிவை அந்த முதல் தகவல் நிரூபிக்கிறது என நினைக்கிறார்கள்.

 

ஐரோப்பிய மிஷனரிகள் கேரள – குமரிமாவட்ட கல்வி மற்றும் பண்பாட்டு வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பாற்றியிருக்கிறார்கள் என்றே நான் எண்ணுகிறேன். அனைவருக்கும் சமசீரான கல்வி என்பது ஓர் ஐரோப்பியக் கோட்பாடு. கேரளத்திலும் அதன்பகுதியாக இருந்த குமரிமாவட்டத்திலும் அது மிஷனரிகள் மூலம் முன்னரே அறிமுகம் ஆகியது. அதன் விளைவுகள் அச்சமூகத்தை பண்பாட்டுத்தளத்தில் விரைவாகவே முன்னெடுத்தன.

 

இரண்டாவதாக சாதி, இன ஆசாரங்களாலும் ஒதுக்குமுறைகளாலும் இறுகி கெட்டிதட்டிப்போயிருந்த கேரளச் சூழலில் ஓர் ஆழமான உடைவையும் நிலைகுலைவையும் உருவாக்க மிஷனரிகளால் முடிந்தது. அதுவே அச்சமூகத்தை மறுபரிசீலனைகளுக்கும் மாறுதலுக்கும் இட்டுச்சென்றது. பெரும்பாலும் ஒரு சமூகத்தின் கட்டுமானம் மறுபரிசீலனைக்குள்ளாவது அன்னியர்களின் ஊடுவல்மூலமே.

 

ஒரு வழக்கம் நெடுங்காலமாக இருக்கும்போது அது நீதிபோதத்தை தீண்டாமலாகிறது. ஒரு அன்னியர் கண்ணில் அது ஆழமான அதிர்ச்சியை உருவாக்கும். கேரளத்தில் இருந்த தீண்டாமை முதலியவற்றுக்கு எதிரான நவீன நீதியுணர்ச்சியை கிறித்தவர்களில் மட்டுமல்ல இந்துக்களின் கண்களிலும் மிஷனரிகளே உருவாக்கினர்.

 

கல்வியைதவிர்த்தால் மிஷனரிகளின் முக்கியமான பங்களிப்பு தொழில்கள் சார்ந்து உருவாகியிருந்த மரபுகளைத் தகர்த்து பொருளியல்தளத்தில் ஒரு செயலூக்கத்தை உருவாக்கியது. இன்ன தொழில் இன்ன சாதிக்கு என வகுத்து வேறு தொழில் சாத்தியமில்லாமல் செய்திருந்த சமூகம் அன்றையது. மிஷனரிகள் தையல், கூடைமுடைதல் உட்பட பலவகையான தொழில்களை மதம் மாறிய மக்களுக்குக் கொடுத்து அவற்றுக்கு வணிக வாய்ப்பையும் உருவாக்கி அவர்களின் பொருளியல்நிலையை மேம்படுத்தினார்கள்.

 

இதுவே பின்னர் நாராயணகுருவின் இயக்கம் வழியாக மேலும் விரிவாக்கம் பெற்றது. ஈழவர்கள் முதலியோர் குலத்தொழில் அல்லாத அனைத்து பிற தொழில்களிலும் இறங்கி வெற்றிபெற இது முன்னுதாரணமாக அமைந்தது.  பலவகையிலும் ஒடுக்கபப்ட்டு கைவிடப்பட்டிருந்த மக்களுக்கு மிஷனரிகள் மிகப்பெரிய வரலாற்று வாய்ப்பை வழங்கினார்கள் என்பதில் ஐயமில்லை.

 

மிஷனரிகளின் எதிர்மறைப் பங்களிப்பு என்றால் அவர்களின் வரலாற்று உருவகமே. அவர்களுக்கு இந்திய சமூகம் குறித்த எந்த நுண் அறிதலும் இருக்கவில்லை. தங்கள் ஐரோப்பிய மைய நோக்கு உருவாக்கிய முன்முடிவுகளை அப்படியே இந்திய சமூகம் மேல் போட்டார்கள். இந்திய சமூகம் ஒருவகையான காட்டுமிராண்டிச் சமூகம் என்றும் கிறித்தவ நற்செய்தி மூலம் அதை தாங்கள் மேம்படுத்தி காப்பதாகவும் எண்ணினார்கள். அந்த ஆழமான நம்பிக்கையே அவர்கள் இங்கே அர்ப்பண உணர்வுடன் சேவைசெய்யவும் காரணம்

 

அதற்கு அவர்களை குறை சொல்வதில் பொருள் இல்லை. நான் இங்கே சந்தித்த ஒரு வயதான மிஷனரி என்னிடம் சொன்னார். அவர் 60களில் வந்தபோது மாட்டுவண்டியில் தென்னைஓலை கொண்டுவந்து போட்ட ஒருவர் இடுப்பில் அழுக்குத்துண்டு மட்டும் கட்டியிருந்தார். அவரை ஒரு அடிமை என்றே துரை நினைத்தார். பிறகு தெரிந்தது அவர் ஒரு பெரும் நிலக்கிழார். மட்டுமல்ல அவர் ஒரு பெரிய தமிழறிஞரும் சோதிடரும் மருத்துவரும்கூட.

 

செல்வமும் கல்வியும் நிறைந்த ஒரு பிரபு அவர். அவரது உடை என்பது இந்த ஊரில் அன்றிருந்த வழக்கம். சட்டைபோடாதவரை அடிமை என எண்ணிய துரைமார் என்ன வரலாற்றுச் சித்திரத்தை அளிக்க முடியும்? அந்த வரலாற்றை மூலமாகக் கொண்டு இன்று எழுதப்படும் வரலாற்றுக்கு என்ன பொருள்?

 

நான் சொல்வது இதைத்தான். இன்று மதப்பரப்பு நோக்கத்துடன், மிஷனரிகளின் பங்களிப்பை மிகைப்படுத்தும் நோக்குடன், இந்திய சமூகம் அன்று ஒரு அரைப்பழங்குடிச் சமூகமாக இருந்தது என்ற சித்திரம் உருவாக்கப்படுகிறது. இது வரலாற்றுத்திரிபு. மதம் மாற்றபப்ட்ட மக்களின் முந்தைய வரலாறு அழிக்கப்படுகிறது. இது ஒரு பெரும் தீமை



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

எம்.டி.முத்துக்குமாரசாமியும் பாரதியும்


 
பின்நவீனத்துவ, பின்காலனித்துவ, எதிர்கலாச்சார, எதிர்அற அடிப்படையில் பாரதி மகாகவியே என எம்.டி.முத்துக்குமாரசாமி அறிவித்திருப்பது பற்றி என்னுடைய எதிர்வினை. முதலிலேயே சொல்லிவிடுகிறேன். எம்.டி.முத்துக்குமாரசாமி சொல்லியிருப்பது தவறு நான் சொல்வது சரி என்றுகூட நான் சொல்ல வரவில்லை. எம்.டி.முத்துக்குமாரசாமி சொல்லியிருப்பது பாரதி விவாதத்தில் தீர்ப்பு. நான் சொல்லியிருப்பது விவாதத்துக்கான ஒரு தரப்பு என்றே வைத்துக்கொள்வோம். ஆகவே எம்.டி.முத்துக்குமாரசாமி மீது நான் வன்முறையைச் செலுத்துகிறேன் என்று அவர் சொல்லாமலிருக்கவேண்டும்.

எம்.டி.முத்துக்குமாரசாமி பாரதியை நாம் மகாகவி என்று சொல்லி மகிழலாம் என்கிறார். இதேபோல பாவேந்தர் பாரதிதாசன், பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், கவிக்கோ அப்துல்ரகுமான், கவிப்பேரரசு வைரமுத்து போன்ற பட்டங்ளையும் அங்கீகரித்து ‘சொல்லிக்கொள்ளலாம், தப்பில்லை’ என்று அவர் சொல்வாரென்றால் எனக்கு மேற்கொண்டு ஒன்றும் சொல்வதற்கில்லை. பின் நவீனத்துவ அணுகுமுறைப்படி இவர்கள் நடுவே வேறுபாடு காண்பது, தரவரிசை செய்வது எல்லாமே தவறு என அவர் சொல்லக்கூடும். அந்நிலையில் அவருக்குக் கடிதமெழுதி பாரதிக்காகக் கண்ணீர்விட்டு ஏங்கிய அந்த 292 பேரும்தான் அவருடன் பேசவேண்டும்.

இல்லை, அவர் ஒரு தரவேற்றுமை காண்கிறார், அதற்கான அளவுகோலை வைத்திருக்கிறார், அதனடிப்படையில்தான் பாரதியை மகாகவி என்கிறார் என்றால் அந்த உரிமை அவருக்கு மட்டுமே உண்டு என்று தயவுசெய்து சொல்லக்கூடாது.பாரதியை மகாகவி அல்ல என்று சொல்பவரும் அதேபோலத் தரவேற்றுமை காணலாம் , அதற்கான அளவுகோலைக் கொண்டிருக்கலாம், அது அவரது வன்முறைப் போக்கு அல்ல அவரும் நல்லவர்தான் என்று அவர் தயவுசெய்து ஒத்துக்கொள்ளவேண்டும்.

இனி எம்.டி.முத்துக்குமாரசாமி உருவாக்கும் வாதங்கள். ‘காற்றைத் தூலமான பொருளாக, ஆளாக உருவகித்து விளிக்கும்போதே அந்த வரி ஒரு நிகழ்த்துதன்மையை இரண்டே வார்த்தைகளில் அடைந்துவிடுகிறதுசங்க அக இலக்கியங்களிலிருந்து கவிதைக்கு ஒரு நிகழ்த்துதன்மையைத் தருகிற மரபின் நவீன நீட்சி இது’ என்கிறார் எம்.டி.முத்துக்குமாரசாமி. ஆகவேதான் பாரதியார் கவிதைகள் மொழியாக்கம்செய்யமுடியாத தன்மையுடன் இருக்கின்றனவாம்.

இந்த அம்சம் வேறு எந்த இந்தியக்கவிதையிலும் இல்லையா என்ன? அவை மொழியாக்கம் செய்யப்படவோ பொருள்கொள்ளப்படவோ இல்லையா? எவ்வளவு சாதாரணமாக ஒரு ஒரு பொதுமைப்படுத்தல் நிகழ்ந்து முடிகிறது இங்கே.

இந்தியமொழிகளின் கவிதைமரபு எப்போதுமே நிகழ்த்துகலைகளுடன் இணைந்தே இருந்தது. பிற்கால சம்ஸ்கிருத மகாகாவிய இயக்கம்தான் நிகழ்த்துகலைகளை விட்டு விலகி வந்த குறிப்பிடத்தக்க இலக்கிய அலை. அதன் உறைந்த நிலைக்குக் காரணம் அதுவே என சம்ஸ்கிருதத் திறனாய்வாளர் சொல்வதுண்டு. நான் வாசித்தவரை வங்க, கன்னட கவிதைகள் எப்போதும் நிகழ்த்துகலைகளின் பகுதிகளாகவே இருந்துள்ளன. தாகூரும் குவெம்புவும் இசைநாடகங்களை அதிகமாக எழுதியவர்கள்.

பாரதியில் இருந்த அந்த நிகழ்த்துகலைத்தன்மை காரணமாக அது இந்திய அளவில் தொடர்புறுத்தப்படாது போயிற்று என்பதெல்லாம் என்னவகை வாசிப்பு என்றே தெரியவில்லை. மாறாக ஒரு சிறு நிகழ்த்துகலைக்கூறு இருந்தால்கூட சட்டென்று அக்கவிதை தொடர்புறுத்தலை நிகழ்த்துவதையே நாம் எந்த இந்தியமொழியிலும் காண்கிறோம்.

பாரதியின் இந்தவகை வசனக்கவிதைகள்தான் அவரது கவிதைகளிலேயே தமிழ்மொழிசார்ந்த தனித்தன்மைக்கு வெளியே செல்லக்கூடியவை. ஒரு பக்கம் அன்று உலகளாவிய கவனத்தைப் பெற்றிருந்த வால்ட் விட்மன் கவிதைகளின் நேரடிச்சாயல் கொண்டவையாக இருந்தன. இன்னொரு பக்கம் அன்று ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு வந்த வேதசூக்தங்கள் உபநிடத சூத்திரங்களின் பாணியால் பாதிப்படைந்தவையாக இருந்தன

பருப்பொருளை முன்னிலைப்படுத்திப் பேசும் பாரதியின் வசனகவிதைப்பாணி சாமவேதத்தின் ஆக்னேய காண்டத்தில் அக்னியை முன்னிலைப்படுத்தி அழைக்கும் பாடல்களின் அதே தொனி கொண்டது. அந்த வேதசூக்தங்கள் கூட ஒருவகையில் நிகழ்த்துக்கலைத்தன்மையுடன் [நடிப்பு, உச்சரிப்பு,சைகைகள்] பாடப்பட்டு வந்தவையே. காற்றை முன்னிலைப்படுத்தி அழைக்கும் வேதவரிகளை பாரதியே கட்டுரைகளிலும் அந்த வசனகவிதையிலும் மேற்கோள்காட்டியிருக்கிறார்.

சரி, இந்த நிகழ்த்துகலை அம்சம் தமிழ் சங்கப்பாடல்களுக்கு மட்டுமே உரியது, இந்தியாவிலோ உலகிலோ எங்குமே இல்லாதது என்றே வைத்துக்கொள்வோம். சங்க அழகியலே பிராகிருதத்தில் அப்படியே எடுத்தாளப்பட்டுள்ளது என்ற உண்மை மிச்சம் கிடக்கிறது. கதாசப்தசதியின் பாடல்கள் சங்க இலக்கியத்தின் திணை,துறை வரையறைக்குக்கூட அடங்குபவை. ஆந்திரநாட்டு அகநானூறு என்றே தமிழில் அவை மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. [ முனைவர் மதிவாணன்] சங்க அழகியல் இந்தியாவின் எந்த மொழியிலும் ஏதேனும் வகையில் சென்றடைந்து வலுவான செல்வாக்கைச் செலுத்தியிருக்கும்.

இன்னொருபக்கம் நம் பக்தி இயக்க கவிதைகளின் அழகியல் புஷ்டிமார்க்கம் வழியாக எல்லா இந்திய மொழிகளிலும் சென்று ஆழமான பாதிப்பைச் செலுத்தியது. பத்து நூற்றாண்டுக்காலம் நீண்டு நின்ற ஒரு அலை அது. ஆந்திரத்தில் நம்மாழ்வார், ஆண்டாள் கவிதைகளை அப்படியே நம்மால் கேட்க முடியும். ஒரு வங்க பவுலுக்கும் நம் பக்தி இயக்கப்பாடல்களுக்கும் நிகழ்த்துகலைத்தன்மை அல்லது மனநிலையில் வேறுபாடே காணமுடியாது.

தமிழின் சுவர்களுக்குள் மட்டுமே அடங்கி, தமிழுக்கு வெளியே இந்திய இலக்கிய வாசகர்களால் அடையாளம் காணவே முடியாத தனித்தன்மை என ஏதும் இல்லை. ஏனென்றால் ஐந்து நூற்றாண்டுக்காலம் வடக்கிலிருந்து பௌத்தமும் சமணமும் இங்கே வந்து நிறைந்தன. பத்து நூற்றாண்டுக்காலம் பக்தி இயக்கம் இங்கிருந்து வடக்கே சென்று நிறைந்தது. இந்தப் பரிமாற்றம் நடந்துகொண்டே இருந்திருக்கிறது. இதன்வழியாகக் கொஞ்சம்கூட வெளியே செல்லாத ஏதோ ஒரு மர்மமான தனித்தன்மை -அது நிகழ்த்துகலைத்தன்மை!- சங்கமரபில் இருந்து பக்தி இயக்கம் வழியாக பாரதியில் வந்து சேர்ந்திருக்கிறது என்கிறார் எம்.டி.முத்துக்குமாரசாமி.

சரி, அப்படியே வைத்துக்கொண்டாலும் எம்.டி.முத்துக்குமாரசாமி சொல்வதைப்பார்த்தால் அந்த ஒரே ஒரு அம்சம் அல்லாமல் பாரதியிடம் விசேஷமாக எதுவுமே இல்லை. அதை அறியாவிட்டால் ஒருவருக்கு பாரதி கவிஞனே இல்லை. இதுதான் சென்ற அரைநூற்றாண்டில் பாரதி மேல் வைக்கப்பட்ட மிகப்பெரிய வசை.

பாரதியின் வசன கவிதைகள் ஏற்கனவே இந்திய அளவில் இருந்துவந்த ஒரு விரிவான கவிதைக்கான சொற்களனில்தான் சென்று சேர்கின்றன. அவற்றின் ஐரோப்பிய அம்சமும் வைதிக அம்சமும் கவிதையைப் பொருள்கொண்டு ரசிக்கும் பொதுவான இந்திய பண்பாட்டு-மொழிப்புலனுக்கு எளிதில் தொட்டுணரக்கூடியவையாகவே உள்ளன.

ஆம், எந்தக்கவிதையிலும் ஓர் அம்சம் மொழியாக்கத்தில் விடப்படும். பழைய வரையறையைச் சொல்லவேண்டுமென்றால் ‘முழுக்க மொழிபெயர்க்கப்பட சாத்தியமானதும் முழுக்க மொழிபெயர்க்கப்பட சாத்தியமற்றதும் நல்ல கவிதை அல்ல’. நல்ல கவிதை வாசகன் அந்த விடப்படும் அம்சத்தை கருத்தில்கொண்டே கவிதையை வாசிப்பான். அதை அவனால் உய்த்துணர்ந்து வந்தடைந்துவிடவும் முடியும்.அப்படித்தான் நாம் பதினெட்டாம்நூற்றாண்டு ஐரோப்பியக் கவிதையையும் பத்தாம்நூற்றாண்டு சீனக்கவிதையையும் வாசிக்கிறோம்.

பாரதி கவிதைகளைவிட நிகழ்த்துகலை அம்சம் கொண்டவையும், பாரதியில் இருந்த நவீனக்கூறு சற்றும் இல்லாதவையுமான சங்கப்பாடல்களையும் ஆழ்வார் பாடல்களையும் ஏ.கெ.ராமானுஜன் மொழியாக்கத்தில் வாசித்தவர்கள் அந்தக் கவிதைகளை வந்தடைய முடிந்தது. அவற்றை சர்வதேசக்கவிதையரங்குகளில் முற்றிலும் அன்னியமான பண்பாட்டைச் சேர்ந்தவர்கள் ரசிப்பதை நான் கண்டிருக்கிறேன். அவற்றைத்தான் பாரதிக்கு முன்னோடிகளாக எம்.டி.முத்துக்குமாரசாமி சொல்கிறார்.

மரபான தமிழ் பக்திக் கவிதைகளில் உள்ள இறைவனை முன்னிறுத்தி வேண்டிக்கொள்ளும் முறை பாரதியில் தனக்குத்தானே வேண்டிக்கொள்ளும் போக்காக மாறியிருப்பதை சுட்டி அது ஒரு மகத்தான தருணம் என்கிறார் எம்.டி.முத்துக்குமாரசாமி. அது நல்ல கவிதை என அவர் நினைத்தால் அது வேறு. ஆனால் ’தமிழ் இலக்கிய வரலாற்றிலேயே தன் அகம் நோக்கிப் பேசுகின்ற கவித்துவ குரல் பாரதியால் கட்டமைக்கப்படுகின்ற மகத்தான தருணமது’ என்கிறார் அவர்.

தமிழ் இலக்கியவரலாற்றிலேயே தன் அகம் நோக்கிப் பேசும் கவித்துவக் குரலே இல்லையா என்ன? திருமூலரில் இருந்து வள்ளலார் வரை? அகம் என்பதை பாரதி தமிழில் கட்டமைத்தார் என்று சொல்லும் வரியை நினைத்துக்கொண்டு நெடுநேரம் அமர்ந்துவிட்டேன்.

பாரதியின் காலகட்டத்தில்தான் தமிழனின் நவீன சுயம் உருவாகிவந்தது எனலாம். அதில் அவரது பங்களிப்பு முக்கியமானது என்பதுதான் என் எண்ணம். அதைச் சொல்லியே இந்த விவாதத்தை ஆரம்பித்தேன். அந்த நவீன சுயம் வெளிப்படும் பல வரிகளை நாம் காணலாம். ஆனால் அது முழுக்க முழுக்க அவருடைய கவிதையின் சிருஷ்டி என்று சொல்வதைக் கொஞ்சம் அதிகமாகவே எம்புதல் என்றுதான் சொல்வேன்.

மேலும் ஒன்று, பாரதியின் அந்த வரிகள் எழுதப்பட்டபோது பிரம்மசமாஜம் ஒரு நிறுவனமாக வலுப்பெற்றுவிட்டிருந்தது. பாரதி அதில் பெரும் ஈடுபாடு கொண்டிருந்தான். பிரம்மசமாஜம் உருவற்ற அகவய வடிவமான கடவுளை உருவகம் செய்து அதை வழிபட்டது. பிரம்மசமாஜத்தின் பாடல்கள் பலவற்றில் கடவுள் இல்லாமல் தன் அகத்துடன் பேசிக்கொள்ளும் இதற்கிணையான வேண்டுதல்கள் பல உள்ளன. அந்த மனநிலையை நான் அன்று இந்தியா முழுக்க உருவாகிவந்த ஆழ்நிலைசுயம் என்ற கருத்தின் ஒரு வெளிப்பாடாகவே காண்கிறேன்

நான் பார்ப்பதற்கும் எம்.டி.முத்துக்குமார்சாமி பார்ப்பதற்கும் உள்ள வேறுபாடு என்ன? நான் பாரதியில் உள்ள தனித்தன்மைகளை ஐரோப்பியமரபு, வைதீகஞானமரபு, தமிழ் அழகியல் மரபு, அன்று உருவாகிவந்த நவீன இந்திய மறுமலர்ச்சிப்போக்கு ஆகியவற்றின் பாதிப்புகளால் உருவானவை என்று காண்கிறேன். எம்.டி.முத்துக்குமார்சாமி அவை தமிழ் மரபில் இருந்து மட்டுமே உருவானவை என்றும் ஆகவே பிற இந்தியச்சூழல்களுடன் அது உரையாடவே முடியாது என்றும் நிறுவ முயல்கிறார்.

கடைசியாக எம்.டி.முத்துக்குமார்சாமி சொல்வது பாரதி நாட்டார்மரபை நவீன வடிவங்களுக்குள் உள்வாங்குகிறார் என்பது. எல்லா இந்திய மொழிகளிலும் பாரதிக்குச் சமானமான காலகட்டத்தில் கவிஞர்கள் அதைத்தான் செய்திருக்கிறார்கள். குவெம்பு,ஆசான், தாகூர் எல்லாருமே. உதாரணமாக தாகூர் பவுல் போன்ற வங்க நாட்டார்பாடல்களையும் வங்காள நாட்டார் இசைநாடக மரபான ஜாத்ராவின் வடிவத்தையும் நவீனகவிதையால் மறு ஆக்கம் செய்வதை சுட்டிக்காட்டலாம்.

இதற்கு ஒரு வரலாற்றுக்காரணம் உண்டு. இந்தியாவெங்கும் பதினெட்டாம் நூற்றாண்டு முதலே செவ்வியல் வீழ்ச்சியடைய ஆரம்பித்தது. பிரிட்டிஷ் ஆட்சியால் நிலப்பிரபுத்துவ அமைப்பு அழிக்கப்பட்டு செவ்வியல்கலைகளை பேணுபவர்கள் அழிந்ததே காரணம். அதன்பின்னர் செவ்வியலின் தேங்கிப்போன சிறுசிறு வடிவங்களே நீடித்தன. நம் சிற்றிலக்கியங்கள் போலஆனால் நாட்டாரிலக்கியம் அதே வீச்சுடன் நீடித்தது

சிறிதுகாலம் கழித்து பிரிட்டிஷ் ஆட்சி உருவாக்கிய நவீனக்கல்வியால் ஒரு நடுத்தர வர்க்கம் உருவாகி வந்தது. ஜனநாயக யுகத்தின் தொடக்கம் நிகழ்ந்தது. அப்போது உருவானவர்கள் பாரதி தாகூர் போன்ற நவகவிஞர்கள். அவர்கள் அந்த படித்த நடுத்தரவர்க்கத்தை நோக்கிப் பேசியவர்கள். ஒருபக்கம் அவர்கள் நவீனத்துவத்தைக் கொண்டுவந்தார்கள். இன்னொருபக்கம் அவர்கள் மரபைத் திருப்பி எழுப்ப முயன்றார்கள். தேங்கிப்போன செவ்வியலை விட உயிர்த்துடிப்புள்ள நாட்டார் மரபு அவர்களுக்கு அதிக ஈர்ப்புடையதாக இருந்தது.

மேலும் இந்தப் புதிய ஜனநாயக யுகத்தில் கவிதை பெருவாரியான மக்களிடம் பேசவேண்டியிருந்தது. பயிற்சி பெற்ற ஒரு வட்டத்துடன் அல்ல. அதற்கு ஜனநாயக விழுமியங்களை முன்வைக்கவேண்டிய கடமை இருந்தது. அதற்கு அக்கவிதை நாட்டாரியலை உள்வாங்கியதாக இருப்பதே உவப்பானது. அவை எல்லாமே அச்சுக்காக எழுதப்பட்ட அந்தரங்க வாசிப்புக்கு உகந்த context free modern forms தான். நிகழ்த்துகலை அம்சம் , நாட்டார் அம்சம் அவற்றில் ஒரு அன்றைய பொதுவாசகர் எளிதில் அடையாளம் காணும் ஒரு நுண்அழகியல் கூறாக உருமாற்றம் அடைந்தது. பாரதி செய்ததும் அதுவே.

ஆனால் பாரதியின் பெரும்பாலான கவிதைகளில் நாட்டார் அழகியல் மறு ஆக்கம்செய்யப்படவே இல்லை என்பதே உண்மை. கோபாலகிருஷ்ண பாரதியின் ‘மாடுதின்னும் புலையா உனக்கு மார்கழி திருநாளோ?’என்ற பாடலுக்கும் பாரதி அதை மறு ஆக்கம் செய்த ’தொண்டு செய்யும் அடிமை – உனக்குச் சுதந்திர நினைவோடா?’ என்ற பாடலுக்கும் என்ன அழகியல் வேறுபாடு உள்ளது? போலி மிகப்பெரும்பாலான பாடல்களை சம்பிரதாயமான கீர்த்தனை வடிவிலேயே பாரதி எழுதியிருக்கிறார். விதிவிலக்கானவை சிலவே. அவை சிறந்த கவிதைகள் என்பதில் எனக்கும் மாற்றுக்கருத்தில்லை.

என் பார்வையில் தமிழ் நவீனத்துவத்தின் தெளிவான ஒரு தொடக்கப்புள்ளி என பாரதியைச் சொல்லலாம். அவரே அந்த வரிசையில் முதன்மையானவர் என்றும் சொல்வேன். ஆனால் அது அவரது சிருஷ்டி மட்டுமே என்பது இலக்கியவரலாற்று நோக்கே அல்ல. நவீனத்துவத்தின் தொடக்கத்தை இந்தப் பின்நவீனத்துவர்களைக் காட்டிலும் நவீனத்துவரான க.நா.சுவே தெளிவாக விவாதித்திருக்கிறார். க.நா.சு முன்வைக்கும் முன்னோடிகள் பலர்.

மரபான மதத்தில் இருந்து நவீன ஆழ்நிலை ஆன்மீகம் ஒன்றை உருவாக்கி அதற்கான நவீன ஜனநாயகத்தன்மை கொண்ட கவிமொழியையும் உருவாக்கிய வள்ளலார் முக்கியமான முன்னோடி என்கிறார் க.நா.சு. பாரதியின் கவிமொழியளவுக்கே பல வகையிலும் நவீனமான கவிமொழியை வள்ளலார் பல கவிதைகளில் அடைந்திருப்பதைக் காணலாம். மரபான மதக்கூறுகளை உதறி நவீனஆன்மீகத்தை முன்வைத்தது, நாட்டார் பண்புகளை உள்வாங்கி நவீனக் கவிமொழியை அமைத்தது என பாரதிக்கு நாம் கொடுக்கும் அங்கீகாரங்களில் பெரும்பகுதியை வள்ளலாருக்கும் கொடுக்கலாம்.

பாரதியை இன்று இவ்வாறு மிகையாகத் தூக்கிக் கொண்டு முன்னே நிறுத்தும்போது மௌனமாக வள்ளலார் கீழே இறக்கப்படுகிறார். இந்தவகையான ஒற்றைப்படையாக்கப் போக்குகளை, இதிலுள்ள அதிகார உருவாக்கத்தை எதிர்த்தே பின்நவீனத்துவ அணுகுமுறை மேற்கே உருவானது. எம்.டி.முத்துக்குமார்சாமி போன்றோரால் எனக்களிக்கப்பட்டுள்ள அடையாளத்தைக்கொண்டு பார்த்தால் எம்.டி.முத்துக்குமார்சாமி சொன்னதையெல்லாம் நான் சொல்ல நான் இப்போது சொல்பவற்றை எம்.டி.முத்துக்குமார்சாமி சொல்லியிருக்கவேண்டும். எப்படி இது இப்படித் தலைகீழாக ஆனது தெரியவில்லை.

நாட்டார் அழகியலை செறிவான நவீன கலையனுபவத்துக்கு அருகே கொண்டு வந்த கோபாலகிருஷ்ணபாரதியையும் க.நா.சு தமிழ் நவீனத்துவத்தின் சிற்பிகளில் ஒருவராகக் குறிப்பிடுகிறார். ராஜம் அய்யர், அ.மாதவையா வ.வே.சு அய்யர் ஆகியோரின் பங்களிப்பையும் இணைத்துக்கொண்டு ஒரு கூட்டான அறிவியக்கமாகவே அதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்பேன்.

இது இலக்கியத்தளத்தில் மட்டுமே. அரசியலையும் உள்ளிட்ட தளத்தில் என்றால் சிங்காரவேலரையும் , அயோத்திதாசரையும் உள்ளடக்கியே நாம் தமிழின் நவீனத்துவத்தைப்பற்றி பேசமுடியும். அதுதான் நான் சொல்லவரும் விவாததன்மை கொண்ட மதிப்பீடு. எம்.டி.முத்துக்குமாரசாமி பாணி பின்நவீனத்துவ நோக்கில் பாரதியில் தமிழ் நவீனத்துவம் பிறந்த அந்த சரியான பிரசவநேரத்தைக் கண்டுபிடித்து ஜாதகம் எழுதுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. பின் நவீன அணுகுமுறையில் அதற்கு சந்துவழி இருப்பதாகவும் நான் கேள்விப்பட்டதில்லை.

ஆயினும் பாரதியைத் தமிழ் நவீனத்துவத்தின் படைப்பாளி என்று சொல்வதில் எனக்கு தயக்கமில்லை. ஏனென்றால் அவரைப்போன்ற ஒரு கவிஞனிலேயே அந்தத் திருப்பம் படைப்பெழுச்சியுடன் நிகழ்கிறது. அதுவே தீவிரமான முன்னுதாரணமாக ஆகிறது. அவர் தமிழ் உரைநடையின் சிற்பி என்பதிலும் தயக்கமில்லை. அவரில்தான் அது உச்சம் கொண்டது.

இக்காரணத்தால் பாரதி மகாகவி என்றால் கன்னடர்களுக்கு குவெம்பு மகாகவி. மலையாளிகளுக்கு ஆசானும் வள்ளத்தோளும் மகாகவிகள். இந்தியில் மகாவீர் பிரசாத் திவிவேதி அவர்களுக்கு மகாகவி. அப்படி அவர்களின் பாடநூல்கள் சொல்லவும் செய்கின்றன. கெ.எம்.ஜார்ஜ் தொகுத்த இந்திய ஒப்பிலக்கியத் தொகைநூல்களில் எம்.டி.முத்துக்குமாரசாமி பாரதிக்கு அளிக்கும் இதே சாதனைப்பட்டியல் இந்தக் கவிஞர்களுக்கெல்லாம் அளிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அப்படித்தான் எம்.டி.முத்துக்குமாரசாமி பாரதியையும் சொல்கிறார் என்றால் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை.

நான் முன்வைக்கும் அளவுகோல்கள் வேறு. பாரதி மிகச்சிறந்த கவிதைகள் சிலவற்றை எழுதியிருக்கிறான் என்றே நானும் கொள்கிறேன். நான் பேசிக்கொண்டிருப்பது க.நா.சு முன்வைத்த அளவுகோலைக்கொண்டு. கவிதை என்ற அளவிலேயே நம்முடன் பேசக்கூடிய படைப்புகளைப்பற்றி. ஷேக்ஸ்பியரும் கதேயும் வேர்ட்ஸ்வெர்த்தும் கம்பனும் காளிதாசனும் நம்மை எங்கே தொடுகிறார்களோ அங்கே சென்று தொடும் கவிதைகளைப்பற்றி. அத்தகைய கவிதைகளை பாரதி மிகக்குறைவாகவே அடையமுடிந்திருக்கிறது, அவரை ஒரு மகாகவி என்று வகுக்க அவை போதாது என்பதே என்னுடைய தரப்பு

பாரதியை மகாகவி என்றும் யுககவி என்றும் வகுத்து எப்போதைக்குமாக வகுக்கும் போக்கு நல்லதல்ல. அதன் வழியாக நாம் பாரதியின் கவித்துவம் மீது நம் நுண்ணிய ரசனையை செலுத்த முடியாமலாகிறது. பாரதிக்கு முந்தைய கவிதைகளை அணுக அது தடையாகிறது. பாரதிக்குப்பின் உருவாகி வந்த நவகவிதையின் அழகியலே நமக்குப் பிடிகிடைக்காமலும் போகிறது. அவ்வடையாளங்களை ஒவ்வொரு காலகட்டத்திலும் தொடர்ச்சியாக மறுபரிசீலனைசெய்துகொள்வதன் வழியாகவே இலக்கிய மதிப்பீடுகள் உயிர்ப்புடன் இருக்கமுடியும். இலக்கிய மதிப்பீடு எதுவும் எப்போதும் ஒரு விவாதநிலையிலேயே இருக்கும், இருக்கவேண்டும் என்று எப்போதும் சொல்வதை இப்போதும் சொல்கிறேன்

இந்த அளவீடுகளை தரவரிசையை ஏன் உருவாக்குகிறேன்? ஏன் உருவானவற்றை மறுபரிசீலனை செய்கிறேன்? எம்.டி.முத்துக்குமாரசாமி சொல்வதுபோல இது தீர்ப்போ சுயவலியுறுத்தலோ அல்ல. ரசனை விமர்சனம் எப்போதுமே முதற்பேரிலக்கிய மரபு [canon] ஒன்றை நிறுவிக்கொண்டுதான் பேசும். அதுவே அதன் வழிமுறை. அந்த முதற்பேரிலக்கிய மரபிலிருந்துதான் அது தன் அளவுகோல்களை உருவாக்கிக் கொள்ளும். ஒப்பிடுவதன் மூலமே அது தன் தரமதிப்பீடுகளை உருவாக்கும்

முதற்பேரிலக்கியத்தொகை ஒன்றை உருவாக்கும்போது ஒவ்வொரு படைப்பாளியையும் அவருக்கான இடத்தில் அமரச்செய்துதான் அந்த அமைப்பை உருவாக்க முடியும். வள்ளுவன்போல் கம்பன்போல் இளங்கோவைப்போல் என பாரதி செய்தது அதையே. நான் முன்வைத்த அந்த இடவரையறைகள் என்னுடையவை அல்ல, தமிழில் தொடர்ந்து நிகழ்ந்துவந்த ரசனைசார்ந்த விமர்சன மரபின் நீட்சியாகவே நான் பேசுகிறேன் என்பதைத் தெளிவாகச் சொல்லியே நான் ஆரம்பித்தேன்

கபிலனும் வள்ளுவனும் ஔவையும் கம்பனும் கொண்ட ஒரு முதற்பேரிலக்கியத் தொகையை உருவாக்கும்போது அதில் பாரதி எங்கே வருகிறார் என்பதே இந்த விவாதத்துக்கான அடிப்படைக் கேள்வி. தாகூரும் குவெம்புவும் ஆசானும் மிர்சாகாலிப்பும் காளிதாசனும் பவபூதியும் கொண்ட ஒரு முதற்பேரிலக்கியத்தொகையை உருவாக்கும்போது பாரதி எங்கே வருகிறார் என்பது அடுத்த வினா. ஷேக்ஸ்பியரும் கதேயும் தாந்தேயும் து ஃபுவும் அடங்கிய முதற்பேரிலக்கியத் தொகையில் எங்கே வருகிறார் என்பது அடுத்த வினா.

இந்தச் செயல்பாட்டை ரசனை விமர்சனம் ஓயாது செய்துகொண்டிருக்க வேண்டும். உலகமெங்கும் ரசனைவிமர்சனத்தின் வழியே அதுதான். ஹரால்ட் ப்ளூமோ ஃப்ராங் கெர்மோடோ ஷேக்ஸ்பியரை மையமாகக்கொண்ட ஒரு முதற்பேரிலக்கியதொகையைத் நிறுவுவது அதற்காகவே. வ.வே.சு அய்யரும், தெ.பொ.மீனாட்சி சுந்தரனாரும், வையாபுரிப்பிள்ளையும், ரா.ஸ்ரீ.தேசிகனும்,க.நா.சுவும் செய்தது அதையே. ஒரு தனி விமர்சகனின் விசித்திரமான அகங்கார வெளிப்பாடு அல்ல அது. அது ரசனை விமர்சனத்தின் அடிப்படைச் செயல்பாடு. நாளை இன்னொரு விமர்சகன் இதை முன்னெடுப்பான்.

சமகாலத்துப் பிற கவிஞர்களிடமிருந்து பாரதியை முதல்பெரும் கவிஞனாக மேலே தூக்கி நிலைநிறுத்தியது வ.வே.சு.அய்யரில் ஆரம்பிக்கும் ரசனை விமர்சனம்தான். எந்த அமைப்புவாத அலசலும் அல்ல. அவர்கள் கம்பனை முதன்மையாகக் கொண்ட முதற்பேரிலக்கியத்தொகை ஒன்றை உருவாக்கி அதனடிப்படையிலேயே அதைச் செய்தார்கள். அதே அளவுகோலின்படித்தான் இன்னும்பெரிய ஒரு முதல்பேரிலக்கியத்தொகையின் பின்னணியில் பாரதியை மறுவரையறை செய்ய நேர்கிறது.

அதாவது எந்த ரசனைவிமர்சனம் பாரதி மகாகவி என்றதோ அதே ரசனை விமர்சனம்தான் அப்படி சொல்லமுடியுமா என்ற ஐயத்தை எழுப்பி விவாதிக்கிறது. மகாகவி என்று வகுக்கும்போது அது செல்லுபடியாகக்கூடியதும் ஐயப்படும்போது அர்த்தமற்றதுமாக ஆகுமா என்ன?

ரசனை விமர்சனத்தின் வழி முதற்பேரிலக்கியத்தொகையை வரையறைசெய்து நிலைநாட்டுவது என்பதனாலேயே அதனுள் நிகழும் எல்லா சலனங்களும் அந்த முதற்பேரிலக்கிய உருவகத்தை மாற்றுவதற்கானவையாகவே அமைய முடியும். முதற்பேரிலக்கியம் என்பது புனிதமான மதநூல் அல்ல. அப்படி நம்ப ஆரம்பிக்கையில் ரசனை தேக்கமுறுகிறது. எல்லா முதல்பேரிலக்கியங்களும் அழகியல்நோக்கில் தொடர்ந்து மறுபரிசீலனை செய்யப்பட்டபடியே இருக்கவேண்டும். அரசியல்,சமூகவியல் நோக்கில் அவை தொடர்ந்து மறுபரிசீலனைசெய்யப்படவேண்டும்.

நம் சூழலில் எப்போதுமே அந்த மறுபரிசீலனை நடந்துகொண்டுதான் இருக்கிறது. பதினெட்டாம் நூற்றாண்டில் கந்தபுராணம் ஒரு மாபெரும் முதல்பேரிலக்கியம். இன்று அந்த இடத்தில் அது இல்லை. கம்பனைப்போல் வள்ளுவர்போல் இளங்கோவைப்போல் எனச் சொல்லும்போதே பாரதி அன்று அவர்களுக்கும் மேலான இடத்தில் இருந்த மாணிக்கவாசகரை இறக்கி விடுகிறான். கம்பராமாயணம் மீது நடந்த விவாதங்களை இன்று குறள்மேல் நடக்கும் எதிர்விவாதங்களை எல்லாமே நான் இவ்வகையில்தான் அணுகுகிறேன்.

ரசனை விமர்சனத்தில் எந்த ஒரு விமர்சகனின் பங்களிப்பும் ஏதோ ஒருவகையில் முதற்பேரிலக்கியத்தின் அமைப்பில் உருவாக்கும் மாற்றமாகவே இருக்கும். அதன் வழியாகத் தரவரிசையில் அவன் செய்யும் மாறுதலாகவே நிகழும். அதன் வழியாகவே அவன் இலக்கியவாசிப்பில் ஒரு வழியைத் திறக்கிறான்.எனக்கும் பாரதி எழுச்சியை ஊட்டும் கவியே. ஆனால் இந்த விவாதம் வழியாக நான் முன்வைப்பது இன்னும் விரிவான இலக்கிய அணுகுமுறையை. உருவாக்க நினைப்பது இன்னும் கூரிய ரசனையை.


எம்.டி.முத்துக்குமாரசாமி, அறிமுகம்

[எம்.டி.முத்துக்குமார்சாமி நெல்லையைச் சேர்ந்தவர். இலக்கியத்திலும் தத்துவத்திலும் முதுகலைப் பட்டம் பெற்றவர். பாரதக்கூத்து -குறியியல் ஆய்வு என்ற தலைப்பில் நாட்டாரியலில் முனைவர் பட்டம் பெற்றவர். பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்லூரி நாட்டார் வழக்காற்றியல் துறையில் நாட்டாரியல் பேராசிரியராகப் பணியாற்றினார். ஃபோர்ட் ஃபவுண்டேஷனின் நியூடெல்லி அலுவலகத்தில் நாட்டாரியல் ஆலோசகராகப் பணியாற்றினார். ஃபோர்ட் ஃபவுண்டேஷனின் தேசிய அளவிலான நாட்டாரியல் வளார்ச்சித் திட்டங்களை ஒருங்கிணைத்து வழிநடத்தினார்.

1997 ல் ஃபோர்டு ஃபவுண்டேஷனின் முழுமையான நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட நேஷனல் ஃபோக்லோர் சப்போர்ட் செண்டர் என்ற அறக்கட்டளையின் நிறுவன அறங்காவலர்களில் ஒருவர். தொடக்கம் முதல் அதன் செயல்அறங்காவலராகவும் இயக்குநராகவும் பணியாற்றி வருகிறார். எம்.டி.முத்துக்குமாரசாமி அடிப்படையில் இலக்கிய விமர்சகர், அமைப்புவாத ஆய்வாளர். சில்வியா என்றபேரில் கதைகள் எழுதியிருக்கிறார். பிரம்மனைத்தேடி என்ற பேரில் தொகுதியாக வெளிவந்துள்ளது. அவரது நவீன நாடகம் காலச்சுவடு ஆண்டு மலரில் வெளிவந்து ஒரு முன்னோடி முயற்சியாகப் பெரிதும் பாராட்டப்பட்டது]



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
எஸ்.வி.ராஜதுரையின் வக்கீல் நோட்டீஸ் ஜெயமோகன்
Permalink  
 


த஡ொல்கொப்தி஦ர் ஆரி஦஧ொ?

http://literaturte.blogspot.in/2015/04/blog-post.html

aryan_illusion-libre_Page_1 aryan_illusion-libre_Page_2 aryan_illusion-libre_Page_3_new

”ஆரி஦ர்கள் ஡ொன் அநி஬ிற் சிநந்஡஬ர்கள்;ஆரி஦ர்களப ஆபப் திநந்஡஬ர்கள்;”எண உ஧த்஡ மு஫க்கம் புரிந்து தச஥ிட்டிக்குகளப-ம௄஡ர்களப-ப் தல்னொ஦ி஧க்க஠க்கொகப் தடுதகொளன தசய்஡ இட்னர் ஥ளநந்து த஢டு஢ொள்கபொகின்நண.எணினும் இட்னரின் ஬஫ித்ள஡ொன்நல்கள் இன்னும் ஢ிளந஦ப்ளதர் இம௅க்கிநொர்கள்.

அநி஬ிற் சிநந்஡஬ர்கள் ஆரி஦ர்கபொகத் ஡ொன் இம௅க்கள஬ண்டும் எண அறு஡ி஦ிட்டு மு஫ங்குள஬ொர் ஡஥ிழ்஢ொட்டில் இம௅க்கிநொர்கள்.அ஬ர்கள் ஥ிக உ஦ர்ந்஡ கல்஬ி஬ொய்ப்ளதப் ததற்று ஥ிக உ஦ர்ந்஡ தட்டங்களபம௃ம் த஡஬ிகளபம௃ம் ததற்றுச் சமூகத்஡ின் உ஦ர்஢ிளன஦ில் ஡ிகழ்஬து ஑ம௅ சமூகமு஧ண் எணள஬ கூநள஬ண்டும்.

த஡ொல்கொப்தி஦ர் ஆரி஦ர்;஡ிம௅஬ள்ளு஬ர் ஆரி஦க் கனப்திணர்;கதினர் ஆரி஦ர்;஢க்கீ஧ர் ஆரி஦ர்;எண இ஬ர்கள் ஡஥ிழ்஢ொட்டின் ஡ளனசிநந்஡ அநிஞர்ளபத஦ல்னொம் ஆரி஦ர்கபொகள஬ கொண்கின்நணர்.

த஡ொல்கொப்தி஦த்஡ிலும் சங்க இனக்கி஦த்஡ிலும் ஐ஦ர்,தொர்ப்தணர்,அந்஡஠ர் என்னும் தசொல்னொட்சி ஢ினவு஬து உண்ள஥ள஦.எணினும் அச் தசொற்கள் குநிக்கும் ததொம௅பில் ஢஥க்குத் ஡டு஥ொற்நம் ஏற்தட்டள஡ தல் கு஫ப்தங்களுக்கு ஬஫ி ஬குத்஡து.

ததொய்ம௃ம் ஬ழுவும் ள஡ொன்நி஦ தின்ணர்

ஐ஦ர் ஦ொத்஡ணர் க஧஠ம் என்த

என்னும் த஡ொல்கொப்தி஦ த௄ற்தொ஬ிற்குப் ததொம௅ள் கூறும் ளத஧ொசிரி஦ர் சி.இனக்கு஬ணொர்

”ஐ஦ர் என்னும் தசொல் தூ஦ ஡஥ிழ்ச்தசொல்.஡ளன஬ர்,ள஥ளனொர்,஬ி஦த்஡கு சிநப்புளடள஦ொர் என்று ததொம௅ள்தடும்.இன்று ஥ற்ந஬ள஧ ‘ஐ஦’என்று அள஫ப்தது ‘ஐ஦ர்’என்த஡ன் ஬ிபிள஬ற்றுள஥஦ொகும்.஡஥ிழ்஢ொட்டுப் ததரி஦஬ர்களப ‘ஐ஦ர்’என்று அள஫ப்தள஡க் கண்ட ஬ட஢ொட்டினிம௅ந்து ஬ந்஡ தி஧ொ஥஠ர் ஡ம்ள஥ம௃ம் ஐ஦ர் என்று அள஫த்துக்தகொண்டணர்.ஆ஡னின் த஡ொல்கொப்தி஦ர் குநிப்திடும் ஐ஦ர் ள஬று;தி஧ொ஥஠ர்கள் ள஬று.த஡ொல்கொப்தி஦ர் த௄ற்தொ஬ில் உள்ப ஐ஦ர் ஡஥ிழ்஢ொட்டுப் ததரிள஦ொர்களபள஦ குநிப்த஡ொகும்.”

(இனக்கு஬ம்;த஡ொல்கொப்தி஦ ஆ஧ொய்ச்சி;தக்.261-262)

எண ஬ிபக்க஥பித்துள்பொர்.

த஡ொல்கொப்தி஦ த௄ற்தொக்களுக்கு ஢ச்சிணொர்க்கிணி஦ர் ஆரி஦ ஢ஞ்சு ள஡ொய்த்து உள஧ எழு஡ி஦ள஥ள஦ப் ளத஧ொசிரி஦ர் சி.இனக்கு஬ணொர் ஥றுப்பும் ஬ம௅த்஡மும் த஡ரி஬ித்து எழு஡ிம௃ள்ப஬ற்ளந ஑வ்த஬ொம௅ ஡஥ி஫ம௅ம் தடித்து ஆரி஦ப் தண்தொட்டுப் தளடத஦டுப்தின் தகொடுள஥ள஦ அநி஦ள஬ண்டும்.

஡ளன஬ன் ளதசு஡ற்குரி஦ ஢ிகழ்ச்சி஦ிடங்கள் எண முப்தத்துமூன்ளநத் த஡ொல்கொப்தி஦ர் த஡ொகுத்துள஧க்கிநொர்.,

”க஧஠த்஡ின் ள஥ந்து முடிந்஡ கொளன

த஢ஞ்சு஡ளப அ஬ிழ்ந்஡ பு஠ர்ச்சிக் கண்ணும் ”

எணத் த஡ொடங்கும் இந் த௄ற்தொ஬ின் ஆநொம் துளந஦ொக

”அல்னல் ஡ீ஧ ஆர்஬த஥ொடளபஇ஦ச்

` தசொல்லுறு ததொம௅பின் கண்ணும்”

என்னும் தகு஡ிக்கு ஢ச்சிணொர்க்கிணி஦ர் ஬குத்஡ ஢ச்சு உள஧ள஦ இனக்கு஬ணொர் அம்தனப்தடுத்஡ி உண்ள஥ள஦த் த஡பி஬ிக்கிநொர்.

஡ிம௅஥஠ம் முடிந்து மூன்று ஢ொள் ஡ளன஬னுக்கும் ஡ளன஬ிக்கும் ஢ிக஫ள஬ண்டி஦ மு஡னி஧வு ஢ிக஫ொள஥஦ொல் ஡ளன஬ி ஬ம௅ந்துகிநொபொம்!ஏதணணில் மு஡ல் ஢ொள் அ஬ளபத் ஡ண்க஡ிர்ச்தசல்஬ர்க்கும் அடுத்஡ ஢ொள் கந்஡ம௅஬ர்க்கும் மூன்நொம் ஢ொள் அக்கிணிக்கும் அபித்து ஢ொன்கொம் ஢ொள் அக்கிணி அ஬ளபத் ஡ளன஬னுக்கு அபித்஡ொணொம்.ஏதணணில் ள஬஡ம் இவ்஬ொறு஡ொன் கூறுகிந஡ொம்.

஡஥ிழ்ப்தண்தொட்டுக்கு முற்நிலும் ததொம௅ந்஡ொ஡ இக் கொட்டு஥ி஧ொண்டித்஡ணத்ள஡ ஢ச்சிணொர்க்கிணி஦ர் த஡ொல்கொப்தி஦ர் ள஥ளனற்நிப் ததொய்ம௃ள஧ப்தது கண்டு ளத஧ொசிரி஦ர் சி.இனக்கு஬ணொர் த஢ஞ்சு ஢டுங்குகிநொர்.

”க஠஬ளண஦ன்நிக் கடவுளபத் த஡ொழு஡ொலும் கற்புக்கு இழுக்கு என்று கம௅஡ி ஬ந்஡ ஥கபிர் ஬ொழ்ந்஡ ஡஥ிழ்஢ொட்டில்,மூன்று ஢ொள் இ஧஬ிலும் ள஬று ள஬று மூ஬ள஧ொடு கூடச் தசய்து஬ிட்டு, ஢ொன்கொம் ஢ொள் ஡ொன் கூடு஬஡ொகத் ஡ளன஬ன் கூறுகின்நொன் என்று தசொல்லு஡ல் எவ்஬பவு ளதள஡ள஥?ளதள஡ள஥ ஥ட்டு஥ன்று;அநஞ் சொ஧ொக் தகொடுள஥ம௃஥ொகும்.கபவுக் கொனத்஡ில் கொ஡னளணொடு கூடிணொள்;சடங்கு ஢ிகழ்ந்஡தின்ணர் மூன்று ஢ொள் மூன்று ள஡஬ர்களபொடு கூடிணொள்;஢ொன்கொம் ஢ொள் ஡ொன் க஠஬ளணொடு கூடிணொள் என்று கூந அ஬ர் ஢ொக்கூச஬ில்ளனள஦!எழுதுங்கொல் எம் ளக ஢டுங்குகிநள஡!஢ிளணக்க த஢ஞ்சு ள஢ொகின்நள஡!”

(இனக்கு஬ம்;த஡ொல்கொப்தி஦ ஆ஧ொய்ச்சி;தக்.263-264)

ஒர் எடுத்துக்கொட்டுக்குத் ஡ொன் இப் தகு஡ிள஦க் கொட்டிளணன்.஬ிரித்துள஧த்஡ொல் ததரி஦ த௄ல் ஆகி஬ிடும்.இனக்கு஬ணொரின் ’த஡ொல்கொப்தி஦ ஆ஧ொய்ச்சி’ எனும் ஡஥ிழ்த௄லும் “Tolkappiam in English with critical studies” என்னும் ஆங்கின த௄லும் ஥ிக ஬ிரி஬ொக இந்஡ப் தண்தொட்டுப் தளடத஦டுப்ளத ஬ி஬ரிக்கின்நண.

஢ொல் ஬ம௅஠(அ)஡ம௅஥த்ள஡த் ஡஥ி஫ர் தின்தற்நி஦ள஡ப்ளதொல் கொட்டும் சின த௄ற்தொக்கள் இளடச்தசம௅கனொக த௃ள஫க்கப்தட்டண என்தள஡ம௃ம் இனக்கு஬ணொர் ஬஫ித் த஡பிகிளநொம்.

இ஬ற்ளநத஦ல்னொம் ஆ஡ொ஧஥ொக ள஬த்துக்தகொண்டு இன்று த஡ொல்கொப்தி஦ர் ஆரி஦ர் எணச் சினர் புளுகவும் து஠ிந்துள்பள஥ ஢ம் கண்டணத்஡ிற்குரி஦து.ஆரி஦ ள஥னொண்ள஥ள஦ ஢ிளன஢ொட்டு஬஡ொகக் கூநிக்தகொண்டு த௄நொ஦ி஧க்க஠க்கொளணொள஧க் தகொன்றுகு஬ித்஡ இட்னர் இணப்தடுதகொளன ஥ட்டுள஥ புரிந்஡ொன்.தடுதகொளன஦ில் ஡ப்திப்திள஫த்஡ ம௄஡ர்கள் கல்஬ிளகள்஬ி஦ில் ள஥ம்தட்டு சு஦஥ரி஦ொள஡ தகொண்தடழுந்து ஡஥க்தகண ஑ம௅ ஢ொட்ளட உம௅஬ொக்கிக்தகொண்டணர்.

ஆணொல் ஆரி஦ ள஥னொண்ள஥ள஦ ஢ிளன஢ொட்டு஬஡ற்கொக இ஬ர்கள் ஒர் இணத்஡ின் சு஦஥ரி஦ொள஡ள஦ம௃ம் தண்தொட்டு அளட஦ொபத்ள஡ம௃ம் அ஫ிக்கும் மு஦ற்சி஦ில் அல்ன஬ொ முளணந்துள்பணர்?

சூடுசு஧ள஠ தற்நிக் க஬ளனப்தடொ஡ ஡஥ி஫ன் ஬ி஫ித்த஡ழு஬ொணொ?



-- Edited by Admin on Tuesday 5th of May 2015 02:49:53 PM



-- Edited by Admin on Tuesday 5th of May 2015 02:54:20 PM

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard