1.சிலப்பதிகாரத்தில் கி.பி.இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் இயற்றப் பெற்றது என்பர். சிலப்பதிகாரத்தில் திருக்குறளின் சொற்றொடர்களும் கருத்துகளும் எடுத்தாளப் பெற்றுள்ளன. எனவே திருக்குறள் சிலப்பதிகார காலமாகிய கி.பி.இரண்டாம் நூற்றாண்டிற்கு முற்பட்டது என்பதும், கி.பி.முதல் நூற்றாண்டளவில் தோன்றியது என்பதும் போதரும். திருக்குறள் தொல்காப்பித்தை அடியொற்றிச் சொல்லும் அறநூலாகும். அறம், பொருள், இன்பம் ஆகிய முப்பொருளும் செய்யுளுக்கு உரியன என்பதும் தொல்காப்பியர் கருத்தாகும். இப்பாகு பாட்டினைப் பின்பற்றியே திருவள்ளுவர் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் மூன்றினையும் அமைத்துள்ளார். இது மட்டுமன்று தொல்காப்பியரது வாய்மொழியினையும் கருத்தினையும் எடுத்தாண்டுள்ளார் ‘நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம்’ என்பார் தொல்காப்பியர் இந்நூற்பாவை பின்பற்றி, ‘சுவை ஒளி ஊறுஓசை நாற்றம் என்றைந்தின் வகைதெரிவான் கட்டே யுலகு’ என்று கூறியுள்ளார். ‘நிறைமொழி மாந்தர் ஆணையில் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப’ என்பது தொல்காப்யிர் கூற்றாகும். இதனையே திருவள்ளுவரும், ‘நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும்’ என்று கூறுகிறார். இவற்றால் தொல்காப்பியர், திருவள்ளுவர் காலமாகிய கி.பி. முதல் நூற்றாண்டுக்கும் முற்பட்டவர் என்பது விளங்கும்.
2.சங்க இலக்கியங்கள் என்று கூறப்பெறும் எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் கி.மு.மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி.மூன்றாம் நூற்றாண்டு வரை அமைந்த காலப் பகுதியினைச் சார்ந்தனவாகும். இச்சங்க இலக்கியங்களில் தொல்காப்பியத்திற்கு மாறான சில வழக்குகள் காணப்படுகின்றன.
i)‘கள்’ என்னும் பன்மை விகுதி அஃறிணையில் மட்டும் வரும் என்பது தொல்காப்பியம். ஆனால் கலித்தொகையில் ‘தீதுதீர் சிறப்பின் ஐவர்கள்’ என உயர்திணையில் வந்துள்ளது.
ii)‘அன்’ விகுதி ஆண்பாற் படர்க்கைக்கே உரியது என்று தொல்காப்பியர் கூறியுள்ளார். ‘யான் வாழலனே’ (அகம்-362) ‘அளியன் யானே’ (குறுந்-30) ‘கூறுவன் வாழி தோழி ‘(நற்-233) எனத் தொகை நூல்களில் அன் விகுதி தன்மையொருமையில் காணப்படுகிறது.
iii)ஆல், ஏல், மல், மை, பாக்கு முதலிய இறுதியையுடைய வினையெச்சங்கள் தொல்காப்பியத்தில் கூறப்பெறவில்லை. ஆயின் கலித்தொகையில் உள்ள சில பாடல்களில் இவ்வினையெச்சங்கள் வந்துள்ளன.
iv)பலர்பால் படர்க்கையில் வரும் மாரீற்று முற்றுச்சொல் பெயர் கொள்ளாது வினைக்கொண்டு முடியும் என்பது தொல்காப்பியர் கருத்து. புறநானூற்றில், “உடம்பொடுஞ் சென்மார் உயர்ந்தோர் நாட்டே” (புறம்-362) என மாரீறு பெயர் கொண்டு முடிந்துள்ளது.
v)மார் என்பது தொல்காப்பியர் காலத்தில் வினை விகுதியாகவே வழங்கப்பெறுகிறது. ஆனால் அகநானூற்றுப் பாடல் ஒன்றில் ‘தோழிமார்’ விகுதியாக வந்துள்ளது.
vi)வியங்கோளினை படர்க்கையில் அன்றி வாராதென்பது தொல்காப்பிய விதி. இவ்விதிக்கு மாறான சொன்முடிபுகள் சங்க இலக்கியங்களில் உள்ளன.
vii)சகரம் அகரத்தோடு கூடி மொழிக்கு முதலாகாது என்பது தொல்காப்பியம். சகடம், சடை, சதுக்கம், சந்து, சமட்டி எனச் சகர அகரத்தை சங்க இலக்கியங்கள் மொழிக்கு முதலாக வழங்கியுள்ளன.
மேற்காட்டியன போன்ற இன்னும் சில விதிகளில் சங்க இலக்கியங்களுக்கும் தொல்காப்பியத்திற்கும் வேறுபாடு காணப்படுகின்றது. தொல்காப்பியம் சங்க இலக்கியங்களுக்குப் பிற்பட்டதாயின், சங்க இலக்கியங்களில் அமைந்த மொழி நிலைக்கு இலக்கணம் கூறியிருத்தல் வேண்டும். அவ்வாறு விதிகள் கூறாமையால் தொல்காப்பியர் சங்க இலக்கிய காலமாகிய கி.மு. மூன்றாம் நூற்றாண்டுக்கு முற்பட்டவர் என்பது சொல்லாமலே விளங்கும்.
3.‘ஐந்திரம் நிறைந்த’ தொல்காப்பியன் எனத் தொல்காப்பியரைப் பனம்பாரனார் பாராட்டியுள்ளார். ஐந்திரம் என்பது வடமொழியில் அமைந்த மிகப் பழைய இலக்கண நூலாகும். இந்நூல் வடமொழியில் சிறந்த விளங்கும் பாணினீயத்திற்கு முற்பட்டது என்பர் எனவே, பாணினீயம் கற்ற தொல்காப்யிர் எனக் கூறப் பெற்றுள்ளதால் தொல்காப்பியர், பாணினீய ஆசிரியராகிய பாணினீக்கு முற்பட்டவராவார். பாணினீ கி,மு. நான்கு அல்லது ஐந்தாம் நூற்றாண்டில் இருந்தவர் என மாக்டோனல், வின்டெர்னிட்ஸ், கீத் முதலியோர் கூறியுள்ளனர். ஆதலால் தொல்காப்பியர் பாணினீக்கு முற்பட்டவர் என்பதும் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டினர் என்பதும் விளங்கும்.
4.இரண்டாம் சங்கத்தின் இறுதியில் மூன்றாம் சங்கத்தின் தொடக்கத்திலும் வாழ்ந்தவன் முடத்திருமாறன் என்னும் நிலந்தருதிருவிற் பாண்டியனாவான். இப்பாண்டியன் அவையில் தொல்காப்பியம் இயற்றப் பெற்றது என்பது பனம்பாரனார் பாயிரத்தால் தெரிகிறது. எனவே தொல்காப்பிர், நிலந்தருதிருவிற் பாண்டியன் காலத்தவர் என்று கருதலாம். நிலந்தருதிருவிற் பாண்டியன் தென் மதுரையில் மூன்றாம் சங்கத்தைத் தேற்றுவித்ததன் காரணம், இரண்டாம் சங்கம் இருந்த கபாடபுரம் கடல் கோளால் அழிந்தமையலாகும். மகாவம்சம், தீபவம்சம், இராஜாவளி ஆகிய இலங்கை வரலாற்று நூல்களில் கி.மு.2378-ல் முதற் கடல்கோளும் கி.மு.504-ல் இரண்டாவது கடல்கோளும் நிகழ்ந்தாகக் குறிக்கப் பெற்றுள்ளது. கபாடபுரம் அழிவதற்குக் காரணமான கடல்கோள், கி.மு. 504-ல் தோன்றியதாக இருக்கலாம். இதனாலும் தொல்காப்பியர் காலம் கி,மு ஐந்தாம் நூற்றாண்டு என்பது பெறப்படும் ஆய்வாளர்கள் தொல்காப்பியர் காலத்தைப் பற்றிப் பலவாறாகக் கூறுவர் அவர்கள் கருத்துக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
Øக.வெள்ளைவாரணன் : கி.மு.5320 – தமிழ் இலக்கிய வரலாறு பக்-127
Øமறைமலையடிகள் : கி.மு.3500 – மாணிக்கவாசகர் வரலாறு காலமும் பக்-595
Øகா.சு. பிள்ளை : கி.மு.2000 – இலக்கிய வரலாறு பக்-67
Øச.சோ. பாரதி : கி.மு.1000க்கு முற்பட்டவர் – கலைக் களஞ்சியம் தொகுதி 6 பக் 217
Øஞா.தேவநேயப்பாவணர்: கி.மு.7-ம் நூற்றாண்டு – தென்மொழி (இலக்கிய இதழ் இயல்இசை-1)
ØV.R.R. தீட்சிதர் : கி.மு.5-ம் நூற்றாண்டு
Øடாக்டர் மு.வ : கி.மு. 5-ம் நூற்றாண்டுக்கு– கலைக் களஞ்சியம் தொகுதி 5 பக் 479
ØM. சீனிவாசையங்கார் :கி.மு.5-ம் நூற்றாண்டு
TAMIL STUDIES P.117
Øகே.ஜி. சங்கரையர் :கி.மு.3-ம் நூற்றாண்டு -செந்தமிழ் தொகுதி -15, பக்.648
Øரா. இரகவையங்கார் :கி.மு.145-க்குச் சிறிது முற்பட்டவர் தமிழ்வரலாறு பக் -261
Øசீனிவாசையங்கர் : கி.பி முதலிரண்டு நூற்றாண்டுகளைச் சார்ந்தவர் History of Tamils P. 70
Øதெ.பொ.மீ கி.பி 2-நூற்றாண்டை ஒட்டிய சங்க நூல்களுக்கு முற்பட்டவர் - சமணத் தமிழ் இலக்கிய வரலாறு பக்-28
Øபெரிடேல் கீத் : கி.பி 4-நூற்றாண்டிற்குப் பிற்பட்டவர் தமிழ்ச்சுடர் மணிகள் பக்-39
Øஎஸ். வையாபுரிப்பிள்ளை : கி.பி 4 அல்லது 5 நூற்றாண்டில் வாழ்ந்தவர் தமிழ்ச்சுடர் மணி பக்-39
போன்றவர்களுக்கு போகிற போக்கில் ஆதாரம் இல்லாமல் வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் ஒன்றைச் சொல்லுவதும் அதற்கு மாங்கு மாங்கென்று மற்றவர்கள் தேடி எதிர்க்கருத்துச் சொல்லுவதும் வாடிக்கையாகிப் போய்விட்டது. எப்பொழுதும் எளிதாகக் கேள்வி கேட்டுக் கொண்டே இவர்கள் இருப்பார்கள்; மற்றவர்கள் விடை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். இந்தத் திருகு தாளத்திற்கு முடிவில்லை
அடுத்துக் கலந்து செய்து கதைக்கப்பட்ட மொழியான சங்கதம் என்பது செம்மை செய்து கதைக்கப்பட்ட மொழியான செங்கதமாகவும் கொள்ளப்படும் என்பது இந்த உரையாட்டில் ஈடுபடும் எல்லோருக்குமே தெரியும். ஆனாலும் அதைச் செஞ்சங்கதம் என்ற பொருளில் செஞ்சமஸ்கிருதம் என்று திரு.ஜடாயு சொல்ல வருவது சிறுபிள்ளைத்தனம்; அல்லது மற்றவனை மாங்காய் மடையன் என்று கருதும் போக்கு. இது போன்ற நக்கல்களை மற்றவரும் செய்ய முடியும்.
செந்தமிழை யாரும் பரவலாய்ப் பேசுவதாய் எங்கணுமே சொல்லுவதில்லை. செந்தமிழ் என்பது தரப்படுத்தப் பட்ட தமிழ், அவ்வளவுதான். அவரவர் அவர்களின் வட்டாரப் பேச்சில் பேசுவதும், பொதுத் தொடர்பிற்கும், பெரும்பாலும் எழுத்திற்கும் செந்தமிழை ஓரளவு கடைப்பிடிப்பதும் தான் உலகியல் வழக்கம். அதே நிலையில் தான் செங்கதத்தை பாகத்தின் தரப்படுத்தப்பட்ட மொழிவகையாக எல்லோரும் புரிந்து கொள்ளுகிறார்கள். காளிதாசனும் அப்படித்தான் சங்கதத்தைப் படித்தோரின் மொழியாகத் தன் நாடகங்களில் பயன்படுத்துகிறான்.
"தங்கள் உதவியில்லாமல் இந்த நாடு நிற்காது, கவிழ்ந்துவிடும்" என்று வெள்ளைக்காரன் கூட 60 ஆண்டுகளுக்கு முன்னால் சொன்னான்; "அட போங்கய்யா, நாங்கள் பார்த்துக் கொள்ளுவோம்" என்றான் ஒரு தண்டு கிழவன். வெள்ளைக்காரன் மேல் இருந்த வெறுப்பாலா, அந்தக் கிழவன் அப்படிச் சொன்னான்? தன் நாட்டினர் மேல் இருந்த நம்பிக்கையால், விடுதலை உணர்வால், அல்லவா சொன்னான்? "அரண்டவன் கண்ணிற்கு இருண்டதெல்லாம் பேய்" என்று சொல்லுவார்கள். அது போல எல்லா இடங்களிலும் "மிசனரி"களைத் தேடித் தேடிப் பார்க்கும் பார்வையும், "உலகமே என் கையில்" என்ற ஆணவமும் (இங்கு தான் பிழையே இருக்கிறது! தமிழ், தமிழர், தமிழக வரலாறுகளைத் தெரிந்து கொள்ளாமல் பாரதம், தேசியம் என்று சில்லு அடித்துக் கொட்டுவதும், மீறி நாம் பேசிவிட்டால் எல்லாவித தூற்றுகளையும், அடக்குமுறைகளையும் ஏவிப் பார்ப்பதும் காலம் காலமாய் நடப்பது தானே?) கூடிப்போன நிலையில், வரலாறு தெரியாத திரு.ஜடாயு ஆதாரம் கேட்கிறார்.
// சம்ஸ்கிருத ஐம்பது எழுத்துக்கள் அடிப்படையில் ஒலிக்குறிப்புகளாகும். இவை பலவித சேர்க்கையில் (combination) அண்டசராசரங்களின் தோற்றத்திற்கும் அடிப்படையாகும். இந்த அடிப்படையைப் புரிந்து கொண்டால் ஐந்தெழுத்தின் சூட்சுமத்தையும் புரிந்து கொள்ள முடியும் என்று பாடுகிறார் திருமூலர்.
ஐம்பது எழுத்தே அனைத்து வேதங்களும் ஐம்பது எழுத்தே அனைத்து ஆகமங்களும் ஐம்பது எழுத்தின் அடைவை அறிந்தபின் ஐம்பது எழுத்தும் ஐந்தெழுத் தாமே //
இது ஜடாயு பதிவிலிருந்து அப்படியே எடுத்தது. இதுக்கு என்ன பொருள்?
இன்னும் கொஞ்ச நேரம் கழித்து திருமூலரையும் திட்டப் போறீங்களா இல்ல அவரும் வடமொழி வெறுப்பாளர் தான், ஆனால் ஆதாரம் தந்து எழுதுவதற்கு நேரம் இல்லை அப்படின்னு மழுப்பப் போறீங்களா?
// ஒலிக்குறிப்புக்களை எழுத்து என்று சொல்லும் அளவுக்குத் திருமூலர் மடையனா? //
கேட்கும் நீங்கள் தான் மடையர்.
சிவபெருமானின் திருநடனத்தின் போது அவனது உடுக்கையினின்றும் எல்லாவற்றிற்கும் மூலமான சப்த ரூபங்கள் பிறந்தன - இவையே ஒலிக்குறிப்புக்கள். "மாஹேஸ்வர சூத்திரங்கள்" என்றும் அழைப்பார்கள். பாணினியின் இலக்கணமும் இவற்றை விளக்கும். இந்த ஒலிக்குறிப்புக்களே பின்னர் எல்லா எழுத்துக்களாகவும் பரிணமித்தன என்பது சைவ சித்தாந்தம். திருமூலர் சொல்லவந்த கருத்தை சுருக்கமாக ஜடாயு எழுதியிருக்கிறார், தவறாக அல்ல.
இது பற்றி மேலும் அறிந்துகொள்ள http://thevaaram.org/10/0101h.htm தளத்திற்குச் சென்று நான்காம் தந்திரத்தில் வரும் பாடல்களை எல்லாம் படிக்கவும்.
தமிழையும் தமிழறிஞரான தங்களையும் வசைச்சொல் பாடிய ஜடவாயுக்கு நான் எனது தனிப்பட்ட சொல்லாட்சியின் மூலம் தகுந்த பதில் அளித்து விட்டேன்.
செத்த மொழிக்கு உயிர்கொடுக்க எத்தனை மருத்துவர்கள் வந்தாலும் முடியாது என்பது தெரியாமல் புறம்பேசித் திரிகின்றனர்.
தங்கள் பாணியில் அமைந்த அருமையான பதிவு.
நன்றி.http://valavu.blogspot.in/2007/02/1_21.html
ஐம்பது எழுத்தே அனைத்து வேதங்களும் ஐம்பது எழுத்தே அனைத்து ஆகமங்களும் ஐம்பது எழுத்தேயும் ஆவது அறிந்தபின் ஐம்பது எழுத்தும் போய் அஞ்செழுத் தாமே
ஜடாயுவின் பதிவில் இருந்து எடுத்ததாக நீங்கள் காட்டியுள்ள அடிகள் இதனின்றும் விலகியுள்ளன. முனைவர் அண்ணாமலை தான் காட்டிய உருவத்தை, "நடைச்சிறப்பு இன்மை, சில சுவடிகளில் இல்லாமை" என்ற காரணத்திற்காக இடைச்செருகல் என்று சொல்லி விலக்குகிறார்.
அதே பொழுது ஐம்பத்தொன்று எழுத்துக்களைக் குறிக்கும் மற்ற சில பாட்டுக்கள் உண்டு தான். அவை ஐம்பத்தோரு கிரந்த எழுத்துக்களைக் குறிக்கலாம். [நீங்கள் ஐம்பத்தோராம் எழுத்து ஓம் என்று "guuns" ஆகச் சொல்லியிருந்தீர்கள். அப்படியெல்லாம் தான் தோன்றித் தனமாய்ச் சொல்லமுடியாது. ஓம் என்பது ஒரு கூட்டெழுத்துக் குறியீடு; அது தனியெழுத்தில்லை. வடமொழியின் அடிப்படை எழுத்துக்கள் 16 உயிர் (அனுஸ்வரம், விசர்க்கம் சேர்த்தது), 35 மெய்யெழுத்துக்கள். (இவற்றில் ளகரம், ழகரத்தைச் சேர்க்காது 33 என்று சொல்பவர்களும் உண்டு. இவற்றைச் சேர்ப்பது திராவிடத் தாக்கத்தை ஏற்றுக் கொள்வதாய் ஆகக் கூடும். மோனியர் வில்லியம்சு இவற்றை மெய்யெழுத்துக்களில் சேர்த்தே சொல்லுகிறது.)]
ஒரு பெயரில்லாதவரோடு நீங்கள் நடத்திய உரையாடலை மேலே பார்த்தால், உங்களுக்கு ஒலிகள், எழுத்துக்கள் பற்றிய சரியான புரிதல் இருப்பது போல் தெரியவில்லை. இந்த நிலையில் கொஞ்சம் உணர்வு மீறி இன்னொருவரை மடையர் என்கிறீர்கள்.
எழுத்து என்பது ஒலியைக் குறிக்கும் ஒரு முகப்பு (map). அது மொழியில் இருந்து விலகி நிற்பது. [ஒரு மொழியை எழுதிக் காட்டப் பல எழுத்து முறைகள் அமையலாம்.] அதே பொழுது இந்த எழுத்து-ஒலி என்ற இணை ஒன்றிற்கொன்று (one-to-one) என்றுள்ள முகப்பு இல்லை. பல ஒலிக்கு ஓரெழுத்து அமையலாம் காட்டாகத் தமிழில் க என்னும் எழுத்து (ka, ga, ha) என்ற மூன்று ஒலிகளுக்கான ஒரே முகப்பு. அந்த எழுத்து வரும் இடத்தைப் பொறுத்து ஒலி மாறும். எழுத்தைச் சரியாகப் புரிய வேண்டுமானால் கொஞ்சம் இலக்கணம் படியுங்கள். வெறுமே சைவசித்தாந்தத்தில் இருந்து கோலத்தில் பாயாதீர்கள்.
மொழி, ஒலி, எழுத்து என்பவை மாந்தன் உருவாக்கியவையே, அதில் சிவன் உடுக்கை, திருநடனம் என்பவைல்லாம் நம்பிக்கையின் பாற்பட்டன. அதனுள்ளே அறிவியல் இல்லை. இறைநம்பிக்கை உள்ள நான், அதே பொழுது அறிவியலை வாழ்நிலைக்கு வகையாய் வைத்திருக்கும் நான், இப்படி ஒரு எடுத்தேன், கவிழ்த்தேன் என்னும் விளக்கம் சொல்ல மாட்டேன்.
பாணினி நூலுக்கு துணையாய் இருக்கும் சிவசூத்திரங்களின் ஆசான் யார் என்று தெரியாது என்றுதான் பல ஆய்வாளர்களும் சொல்லுகிறார்கள். அது பாணினியாக இருக்கலாமோ என்று ஒரு சிலர் அய்யுறுகிறார்கள். சிவசூத்திரங்கள் என்பவை பாணினியின் அஷ்டத்யாயியில் பேசப்படுபவை அல்ல. அதற்கு வெளியில், புறத்தில், நிற்பவை. பாணினியைப் பொறுத்துக் கேட்டால், அவை அவன் நூலுக்குக் கொடுக்கப் பட்டவை; புறமித்தவை. (given; primitives). சிவக் கொண்முடிவுகளைப் பற்றியெல்லாம் நாம் இங்கு பேசவில்லை; ஒரு மொழி எழுத்துக்கள் பற்றிப் பேசுகிறோம். இப்படிச் சிந்தாந்தக் குழப்பம் கொண்டுதான் பலரும் வடமொழி / தமிழ் பிணக்கத்தைப் புரிந்து கொள்ளுகிறார்கள்.
திருமந்திரம் பற்றிய என் ஆய்வு இன்னும் முடியாதது. அரைகுறைப் படிப்பில் நான் ஏதும் சொல்லக் கூடாது. அதை ஆய்வு செய்தவரின் நூலை உங்களுக்குப் பரிந்துரைக்கிறேன். "திருமூலர்: காலத்தின் குரல் - ஆறுமுகத் தமிழன், தமிழினி வெளியீடு, 2004". இப்போதைக்கு நான் மேலும் இதுபற்றிச் சொல்ல முடியாது இருக்கிறேன். இன்னொரு நாள் இந்தத் தலைப்பிற்கு வரமுயல்வேன்.
"இன்னும் கொஞ்ச நேரம் கழித்து திருமூலரையும் திட்டப் போறீங்களா இல்ல அவரும் வடமொழி வெறுப்பாளர் தான், ஆனால் ஆதாரம் தந்து எழுதுவதற்கு நேரம் இல்லை அப்படின்னு மழுப்பப் போறீங்களா?" என்ற உங்களின் முன்முடிவு உளறல்களுக்கு நான் கருத்துச் சொல்ல முடியாது. உங்கள் மேல் கழிவிரக்கம் தான் ஏற்படுகிறது. அய்யா, இளைஞரே! ஊரில் இல்லாத அவக்கரம் உங்களுக்கு எங்கே வந்தது; இத்தனைக்கும் சைவசித்தாந்தம், திருச்சிற்றம்பலம் வேறெ.
நீங்கள் எல்லாம் ஆணையிட்டுத் தூண்டிவிட்டால், உங்கள் அலம்பல்களுக்கு விடை சொல்லுவதற்காகவே நான் வலைப்பதிவில் எழுதவில்லை. ஒரு கேள்வியை எழுப்பியிருக்கிறீர்கள்; குறித்து வைத்துக் கொள்ளுகிறேன். நேரம் கிடைக்கும் போது வருவேன். நம்பிக்கை இருந்தால் பொறுத்திருங்கள்; இல்லையென்றால், வேலையைப் பார்த்துக் கொண்டு போய்ச்சேருங்கள்.
"என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ்செய்யுமாறே" என்றுதான் நான் திருமூலனை அறிந்திருக்கிறேன்.
-- Edited by Admin on Wednesday 8th of April 2015 08:26:36 AM
வரலாறு. கி.மு 14 பில்லியன் பெரும் வெடியில் உலகம் தோன்றியது.
கி.மு 6 - 4 பில்லியன் பூமியின் தோற்றம்.
கி.மு. 2.5 பில்லியன் நிலத்தில் பாறைகள் தோன்றிய காலம். முதன் முதலில் தமிழ் நாட்டில் மனித இனம் தோன்றியது. தென் குமரிக்குத் தெற்கே இலெமூரியா கண்டத்தில் முதலில் மனித இனம் தோன்றியது.
கி.மு. 470000 இக்கால இந்தியாவின் தமிழ் நாடு, பஞ்சாப் ஆகிய இடங்களில் மனித இனம் சுற்றித் திரிந்தது.
கி.மு. 50000 தமிழ்மொழியின் தோற்றம்.
கி.மு. 50000 - 35000 தமிழிலிருந்து சீன மொழிக் குடும்பம் பிரிவு.
கி.மு. 35000 - 20000 ஆஸ்திரேலிய, ஆப்பிரிக்க சிந்திய மொழிகள் தமிழிலிருந்து பிரிந்ந காலம்.
கி-மு. 20000 - 10000 ஒளியர் கிளைமொழிகள் தமிழிலிருந்து பிரிந்தகாலம் ( இந்தோ ஐரோப்பிய மொழிகள் ) கி-மு. 10527 முதல் தமிழ்ச்சங்கத்தை பாண்டிய மன்னன் காய்கினவழுதி தோற்றுவித்த காலம். 4449 புலவர்கள் கூடினர். முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை முதலிய நூல்கள் இயற்றப்பட்டன.
கி.மு. 10527 - 6100 பாண்டிய மன்னர்கள் காய்கினவழுதி வடிவம்பலம்ப நின்ற நெடியோன், முந்நீர்ப் விழவின் நெடியோன், நிலந்தரு திருவிற் பாண்டியன் செங்கோன், பாண்டியன் கடுங்கோன்.
கி.மு. 6087 கடல் கொந்தளிப்பில் குமரிக் கண்டம் மூழ்கியது.
கி.மு 6000 - 3000 கபாடபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டவன் பாண்டிய மன்னன் வெண்தேர் செழியன். இரண்டாம் தமிழ்ச்சங்கத்தை நிறுவினான். 3700 புலவர்கள் இருந்தனர். அகத்தியம், தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்கள் எழுந்தன. பாண்டிய மன்னர்கள் செம்பியன் மந்தாதன், மனுச்சோழன், தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன் அதியஞ்சேரல், சோழன் வளிதொழிலாண்ட உரவோன், தென்பாலி நாடன் ராகன், பாண்டியன் வாரணன், ஒடக்கோன், முட்டதுத் திருமாறன் ஆண்டகாலம்.
கி.மு - 3102 சிந்து சமவெளிக் தமிழர்களின் "கலியாண்டு" ஆண்டு தொடக்கம், சிந்து சமவெளியில் தமிழர்களின் நாகரிகம் தழைத் தொடங்கியது. மண்டையோட்டு வடிவங்களின் வகைகள் இடமிருந்து வலம்: நெடுமண்டை நீள்வட்ட வடிவம்; இரண்டு குட்டைமண்டை வடிவங்கள்- நீளுருண்டை வடிவமும் ஆப்பு வடிவமும்; நடுமண்டை ஐங்கோண வடிவம்.
கி.மு - 2387 இரண்டாம் கடல் கொந்தளிப்பால் கபாடபுரம் அழிந்தது. ஈழம் பெருநிலப் பகுதியிலிருந்து பிரிந்தது.
கி.மு - 2000 - 1000 காந்தாரத்தில் இருந்த ஆரியர்களுடன் வடபுலத் தமிழ் மன்னர்களும் சிந்து வெளி தமிழர்களும் போர் புரிந்த காலம். கடற்பயணங்களில் புதியன கண்டுபிடித்த சேர இளவரசர்கள் ஈழத்தில் ஆண்டகாலம். கங்கைவெளி - சிபி மரபினர் ஆட்சி. சிந்து வெளி - சம்பரன் ஆட்சி.
கி.மு - 1915 திருப்பரங்குன்றத்தில் மூன்றாம் தமிழ்ச் சங்கம் நடந்தது.
கி. மு. 1000-600 வடக்கில் சிபி மரபினர், தெற்கில் திங்கள் மரபினர் ஆட்சி நிலவியது.
கி. மு. 900 இப்போதைய இந்தியாவில் இரும்பின் உபயோகம்.
கி. மு. 850பின் இபபோதைய இந்தியாவின் பொதுவான மொழி தமிழ், வடமொழி, (வடதமிழ், தென்தமிழ்) என மொழிகள் உருவாயின. வடபுலத்தில் பிராமி எனவும் தென்புலத்தில் தமிழி எனவும் பெயர்பெற்றன. பிராமிக்கும், தமிழுக்கும் எழுத்திலக்கண ஒற்றுமை உண்டு. வடமொழி பாகதமாகவும், தென்மொழி தமிழாகவும் பெயற்பெற்றன. (சமசுகிருதம் வடமொழி அல்ல. காரணம் அது போதுமான வளர்ச்சி அடைந்திருக்கவில்லை.) தொல்காப்பியம்- பிராகிருதப் பிரகாசா இலக்கண நூற்கள் எழுதப்பட்டன,
கடைச் சங்க காலத்தில் நற்றினை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், பத்துபாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, கூத்தராற்றுப்படை, மருதக்காஞ்சி, முல்லைப்பட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, நெடுநல்வாடை, முதலிய நூல்கள் தோன்றின. திருக்குறள் தலையாய நூல்,
பின்னர் சங்க கால முடிவுக்குப் பின் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி முதலிய ஐம்பெரும்காப்பியங்களும், முதுமொழிக்காஞ்சி, களவழி நாற்பது, கார்நாற்பது, நாலடியார் திரிகடுகம், நான்மணிக்கடிகை, சிறுபஞ்ச மூலம், ஏலாதி, ஆசாரக்கோவை, பழமொழி நானூறு, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, முத்தொள்ளாயிரம் முதலிய நூல்களும் தோன்றின.
கி. மு. 600 கோதடிபுத்தர் அறிந்த மொழிகளில் தமிழும் ஒன்று,
கி.மு. 400 - 500 குறிப்பிடத்தக்க மன்னர்கள் இளைஞன் கரிகாற்சோழன், பெருஞ்சோற்று உதயஞ்சேரலாதன். பழந்தமிழ் இசைக்கருவிகள் வடநாடு முழுவதும் வழக்கில் இருந்தன. (தோற்கருவிகள்) தமிழிலக்கணத்தைப் பின்பற்றி சமஸ்கிருதத்திலும் எழுத முயற்சி மேற்கொள்ளபட்டது. புணர்ச்சி இலக்கணம் சமஸ்கிருதத்தில் திணிக்கப்பட்டுள்ளது.
கி. மு. 500 கரிகாற் சோழன் காலம். உலக மக்கள் தொகை 100 மில்லியன். இப்போதைய இந்திய மக்கள் தொகை 25 மில்லியன்.
கி. மு. 478 இளவரசன் விசயா 700 துணையாளர்களுடன் இலங்கையில் சிங்கள அரசு ஏற்படுத்தல்.
கி. மு. 350 - 328 உதயஞ் சேரலாதன் காலம் (செங்குட்டுவன் நெடுஞ்சேரலாதன்)
கி. மு. 328 - 270 மகன் இமயவரம்பன் - நெடுஞ்சேரலாதன் ( ஆரியரை வென்றவன் - கிரேக்க யவனரை அடக்கியவன்)
கி. மு. 300 கல்வெட்டுகளில் சோழ, பான்டிய, சத்தியபுத்திர, சேர அரசுகள் இருந்தன.
கி.மு. 200 வரை தமிழ், பிராகிருதம் இரண்டும் எழுத்து மொழியாகவும் பேச்சு மொழியாகவும் விளங்கின. பிராகிருதம் - மக்களின் மொழி. நாணயங்களின் ஒரு பக்கம் தமிழ், மறுபக்கம் பிராகிருதம் என அமைந்திருந்தன.
கி.மு. 273-232 மெளரிய பேரரசர் அசோகர் காலம். தமிழ்நாடு தவிர மற்றவை இவர் வசம் இருந்தது. கலிங்க போர் இவரை புத்த மதத்திற்கு மாற வைத்தது. இவரது அசோக சக்கரம் இன்று இந்தியக் கொடியில் உள்ளது.
கி.மு. 270-245 சேரன் பல்யானை செல்கெழு குட்டுவன், சோழன் பெரும்பூண் சென்னி, பாண்டியன் ஒல்லையூர் பூதப் பாண்டியன், ஆகியோரின் காலம்.
கி.மு. 251 புத்த மதம் பரப்ப அசோகர் தன் மகனை இலங்கைக்கு அனுப்பினார்
கி.மு. 245-220 சேரன் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் காலம்.
கி.மு. 220 - 200 கரிகாற்சோழனுக்கும் பெருஞ் சேரலாதனுக்கும் போர்.
கி.மு. 220-180 குடக்கோ நெடுஞ்சேரலாதன் ஆட்சி. உறையூர்ச் சோழன் தித்தன், ஆட்டணத்தி, ஆதிமந்தி, ஆகியோர் வாழ்ந்த காலம்.
கி.மு. 200 முனிவர் திருமூலர் காலம். 3047 சைவ ஆகமங்களின் தொகுப்பான திருமந்திரம் எழுதினார்.
கி.மு. 200 தமிழ்நாட்டில் பதஞ்சலி முனிவர் யோக சூத்திரங்கள் எழுதினார். 18 சித்தர்களில் ஒருவரான போகர் முனிவர் பழனி முருகன் கோவிலை ஏற்படுத்தினார்.
கி.மு. 125-87 ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் காலம்.
கி.மு. 87-62 செல்வக் கடுங்கோ வாழியாதன் ஆட்சி. பாரி, ஒரி, காரி, கிள்ளி, நள்ளி முதலிய குறுநில மன்னர்கள் ஆட்சி
கி.மு. 62-42 யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை ஆட்சி, சேரமான் மாரி வெண்கோ தொண்டியில் ஆட்சி. இக்காலத்தில் வாழ்ந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், மாங்குடி மருதனார் கல்லாடனார்.(கல்லாடம்)
கி.மு. 42-25 பெருஞ்சேரலிரும்பொறை ஆட்சி, சேரமான் மாரிவென்கோ இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, கானபெரெயில் கடந்த உக்கிரப்பெருவழுதி ஒற்றுமையாய் இருந்தார்கள். இவர்களை இன்றே போல்கநும்புணர்ச்சி என அவ்வை பாராட்டினார், மோசிக்கீரனார், பொன்முடியார் கொண்கானங்கிழான் நன்னன், கரும்பனூர்கிழன், நாஞ்சில் வள்ளுவன் குறிப்பிடத்தக்கவர்கள்.
கி.மு. 31 உலகப் பொது மறையாம் தமிழனின் நன்கொடையாம் திருக்குறளைத் தந்த திருவள்ளுவர் பிறந்த ஆண்டு.
கி.மு. 25-9 இளஞ்சேரல் இரும்பொறை ஆட்சி. பாண்டியன் பழையன் மாறன். கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார், பொத்தியார், புல்வற்றூர் ஏயிற்றியனார் ஆகியோரின் காலம்.
கி.மு. 9-1 கருவூர் ஏறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை, பாண்டியன் கீரன் சாத்தன் வாழ்ந்த காலம்.
முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என இன்று குறிப்பிடப்படும் இச்சங்கங்களில் முதற்சங்கம், கடல்கோளினால் அழிந்துபோன பழைய மதுரையில் இருந்ததாம். இரண்டாவதான இடைச்சங்கமும், இதேபோல இன்னொரு கடல்கொண்ட பழந் தலைநகரான கபாடபுரத்திலிருந்ததாகக் கூறப்படுகிறது. கடைச் சங்கம் பாண்டிநாட்டின் பிற்காலத் தலைநகரான மதுரையில் நிறுவப்பட்டதாகக் கருதப்படுகிறது. நக்கீரர் என்னும் புலவரே தானெழுதிய இறையனார் அகப்பொருள் உரை நூலில் இச்சங்கங்கள் பற்றி விபரித்துள்ளார். ஒவ்வொரு சங்கமும் இருந்த காலமும், அச்சங்கங்களில் இருந்த புலவர்களின் எண்ணிக்கைகளையும் இவர் கொடுத்துள்ளார். இதன்படி:
முதற்சங்கம் 4440 ஆண்டுகள் நிலைத்திருந்ததாகவும், 4449 புலவர்கள் இருந்து தமிழாய்ந்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது.
இடைச்சங்கம் 3700 புலவர்களுடன் 3700 ஆண்டுகள் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
கடைச்சங்கம்1850 ஆண்டுகள் இருந்து, 449 புலவர்களுக்கு இடமளித்துள்ளதாம்.
இதன்படி மூன்று சங்கங்களினதும் மொத்தக் காலம் 9990 ஆண்டுகளாவதுடன், முதற்சங்கத்தின் தொடக்கம் அண்னளவாக 12000 வருடத்துக்கு முன் செல்கிறது. தற்போதுள்ள சான்றுகளின்படி, மேற்படி காலக்கணக்கு நிறுவப்பட முடியாத ஒன்றாகும்.
மேற்கூறிய சங்கங்கள் இருந்தது பற்றியே சில ஆய்வாளர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். எனினும், கிறீஸ்து சகாப்தத்துக்குச் சற்று முன்பின்னாகத் தமிழ்ச் சங்கம் ஒன்று இருந்திருக்கக் கூடும் என்று பலர் கருதுகிறார்கள். புறநானூறு, அகநானூறு போன்ற தொகை நூல்கள், சங்ககாலம் என்று குறிக்கப்படும் மேற்படி காலத்தில் இயற்றப்பட்டது என்பது பெரும்பான்மைத் துணிபு.
ஆனால் இவற்றுக்கெல்லாம் முரணாக முச்சங்கங்களுக்கு முந்தியும் பிந்தியும் பல தமிழ்ச் சங்கங்கள் இருந்ததாக சில ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. [1] இவ்வாய்வுகளின்படி 14 தமிழ்ச் சங்கங்கள் விபரிக்கப்படுகின்றன.
சங்க காலம் எனப்படுவது யாது? தென்னிந்திய வரலாற்றில் சங்க காலம் ஒரு சிறப்பான அத்தியாயம் ஆகும். தமிழ்ப் பழங்கதைகளின் படி பண்டைய தமிழ்நாட்டில் முச்சங்கம் என்றழைக்கப்பட்ட மூன்று தமிழ் சங்கங்கள் இருந்தன. பாண்டிய மன்னர்களின் ஆதரவில் இந்த சங்கங்கள் தழைத்தோங்கின. தென்மதுரையில் இருந்த முதற்சங்கத்தில் கடவுளரும், முனிவர்களும் பங்கேற்றனர் என்று கூறப்பட்டிருந்தாலும், இச்சங்தத்தைச் சேர்ந்த நூல்கள் ஏதும் கிடைக்கவில்லை. இரண்டாவது சங்கம் கபாடபுரத்தில் நடைபெற்றது. தொல்காப்பியம் தவிர ஏனைய இலக்கியங்கள் யாவும் அழிந்து போயின. மூன்றாவது சங்கத்தை மதுரையில் முடத்திருமாறன் என்ற பாண்டிய மன்னன் நிறுவினான். அதிக எண்ணிக்கையிலான புலவர்கள் இதில் பங்கேற்றனர். ஏராளமான இலக்கியங்கள் படைக்கப்பட்டன என்றாலும் ஒருசிலவே எஞ்சியுள்ளன. இந்த இலக்கியங்கள் சங்க கால வரலாற்றை அறிந்து கொள்ள பெரிதும் உதவுகின்றன.
சங்க இலக்கியங்கள்
சங்க இலக்கியத்தொகுப்பில் தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ் கணக்கு, சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியன இடம் பெற்றுள்ளன. காலத்தால் தொன்மை பெற்றதான தொல்காப்பியத்தை இயற்றியவர் தொல்காப்பியர். இது ஒரு இலக்கண நூல் என்றாலும், சங்க கால அரசியல், சமூக பொருளாதார நிலைமைகளைப் பற்றிய தகவல்களைத் தருகிறது. எட்டுத் தொகை என்பது ஐந்குறுநூறு, நற்றிணை, அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை, கலித்தொகை, பரிபாடல், பதிற்றுப்பத்து என்ற எட்டு நூல்களின் தொகுப்பாகும். பத்துப்பாட்டில் திருமுருகாற்றுப்படை, முல்லைப்பாட்டு, நெடுநல்வாடை, மதுரைக்காஞ்சி, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் என்ற பத்து நூல்கள் உள்ளன. எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்கள் அகம், புறம் என்ற இரண்டு திணைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. பதினெண்கீழ்கணக்கில் அறத்தையும் ஒழுக்கத்தையும் வலியுறுத்தும் பதினெட்டு நூல்கள் உள்ளன. அவற்றில் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் குறிப்பிடத்தக்கதாகும். இளங்கோ அடிகள் இயற்றிய சிலப்பதிகாரமும், சீத்தலைச்சாத்தனார் இயற்றிய மணிமேகலையும் சங்க கால சமூகம் மற்றும் அரசியல் குறித்த தகவல்களைத் தருகின்றன.
பிற சான்றுகள்
சங்க இலக்கியங்களைத் தவிர, கிரேக்க எழுத்தாளர்களான பிளினி, டாலமி, மெகஸ்தனிஸ், ஸ்ட்ராபோ ஆகியோர் தென்னிந்தியாவிற்கும் மேலை நாடுகளுக்கும் இடையே நிலவிய வர்த்தகத் தொடர்புகளை குறிப்பிட்டுள்ளனர். மெளரியப் பேரரசுக்கு தெற்கேயிருந்த சேர, சோழ, பாண்டிய ஆட்சியாளர்கள் பற்றி அசோகரது கல்வெட்டுக்கள் கூறுகின்றன. கலிங்கத்துக் காரவேலனின் ஹதிகும்பா கல்வெட்டும் தமிழ்நாட்டு அரசுகளைப் பற்றி குறிப்பிடுகிறது. அரிக்கமேடு, பூம்புகார், கொடுமணல் போன்ற இடங்களில் மேற்கொள்ளபட்ட அகழ்வாய்வுகளும் தமிழர்களின் வாணிப நடவடிக்கைகளை வெளிப்படுத்துகின்றன.
சங்க இலக்கியத்தின் காலம்
சங்க இலக்கியத்தின் காலவரையறை பற்றி அறிஞர்களுக்கிடையே இன்னும் கருத்தொற்றுமை ஏற்படவில்லை. இலங்கை அரசன் இரண்டாம் கயவாகு, சேர அரசன் செங்குட்டுவன் இருவரும் சமகாலத்தவர் என்ற செய்தி சங்க காலத்தை நிர்ணயிப்பதற்கு அடிப்படையாகத் திகழ்கிறது. இச்செய்தியை சிலப்பதிகாரம், தீபவம்சம், மகாவம்சம் ஆகிய நூல்கள் உறுதிப்படுத்துகின்றன. மேலும், கி.பி. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த ரோமானியப் பேரரசர்கள் வெளியிட்ட ரோமானிய நாணயங்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. எனவே, இலக்கியம், தொல்லியல், நாணயவியல் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு, சங்க இலக்கியங்களின் காலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரை என்ற முடிவுக்கு வரலாம்.
அரசியல் வரலாறு
சங்க கால தமிழகத்தில் சேர, சோழ, பாண்டிய மரபுகள் ஆட்சி புரிந்தனர். இலக்கிய குறிப்புகளிலிருந்து இந்த மரபுகளின் வரலாற்றை ஓரளவு அறிந்து கொள்ளலாம்.
சேரர்கள்
தற்காலத்திய கேரளப் பகுதியில் சேரர்கள் ஆட்சிபுரிந்தனர். அவர்களது தலைநகரம் வஞ்சி. முக்கிய துறை முகங்கள் தொண்டி மற்றும் முசிறி. பனம்பூ மாலையை அவர்கள் அணிந்தனர். கி.பி. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த புகலூர்க் கல்வெட்டு சேர ஆட்சியாளர்களின் மூன்று தலைமுறைகள் பற்றி குறிப்பிடுகிறது. சேர அரசர்களைப் பற்றி பதிற்றுப் பத்தும் கூறுகிறது. பெரும்சோற்று உதியன் சேரலாதன், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சேரன் செங்குட்டுவன் ஆகியோர் சேர மரபின் சிறந்த அரசர்களாவர்.
சேரன் செங்குட்டுவன் கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவன். அவனது இளவலான இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தை இயற்றினார். செய்குட்டுவனின் படையெடுப்புகளில் அவன் மேற்கொண்ட இமாலயப் படையெடுப்பு குறிப்பிடத்தக்கதாகும். பல்வேறு வட இந்திய ஆட்சியாளர்களை அவன் முறியடித்தான். தமிழ்நாட்டில் கற்புக்கரசி கண்ணகி அல்லது பத்தினி வழிபாட்டை செங்குட்டுவன் அறிமுகப்படுத்தினான். இமாலயப் படையெடுப்பின்போது பத்தினிசிலை வடிப்பதற்கான கல்லைக்கொண்டு வந்தான். கோயில் குடமுழுக்கு விழாவில் இலங்கை அரசன் இரண்டாம் கயவாகு உள்ளிட்ட பல அரசர்கள் கலந்து கொண்டனர்.
சோழர்கள்
தற்காலத்திய திருச்சி மாவட்டத்திலிருந்து தெற்கு ஆந்திரப் பிரதேசம் வரையிலான பகுதியே சங்க காலத்தில் சோழ நாடு எனப்பட்டது. சோழர்களின் தலைநகரம் முதலில் உறையூரிலும் பின்னர் புகாரிலும் இருந்தது. சங்க காலச் சோழர்களில் சிறப்பு வாய்ந்தவன் கரிகால் சோழன். அவனது இளமைக்காலம், போர் வெற்றிகள் குறித்து பட்டினப்பாலை விவரிக்கிறது. சேரர்கள், பாண்டியர்கள், பதினொரு குறுநில மன்னர்கள் அடங்கிய பெரிய கூட்டிணைவுப் படைகளை கரிகாலன் வெண்ணிப் போரில் முறியடித்தான். இந்த நிகழ்ச்சி சங்கப் பாடல்கள் பலவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவன் மேற்கொண்ட மற்றொரு போர் வாகைப் பறந்தலைப் போராகும். அதில் ஒன்பது குறுநில மன்னர்களை மண்டியிடச் செய்தான். கரிகாலனின் போர் வெற்றிகள் தமிழ்நாடு முழுவதையும் சோழர்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தன. அவனது ஆட்சிக் காலத்தில் வாணிகமும் செழித்தோங்கியது. காடுகளைத் திருத்தி விளை நிலமாக்கியவன் கரிகாலன். இதனால் நாட்டின் செல்வச் செழிப்பு பெருகியது. காவிரி ஆற்றின் குறுக்கே கல்லணையை கரிகாலன் அமைத்தான். வேறு பல நீர்ப்பாசன ஏரிகளையும் அவன் வெட்டுவித்தான்.
பாண்டியர்கள்
தற்காலத்திய தெற்குத் தமிழ்நாட்டில் சங்ககாலப் பாண்டியர்கள் ஆட்சி புரிந்தனர். அவர்களின் தலைநகரம் மதுரை. நெடியோன், பலயாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, முடத்திருமாறன் போன்றோர் முற்காலத்திய பாண்டிய மன்னவர்களாவர். ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், கோவன் கொல்லப்படவும், கண்ணகி சினமுற்று மதுரையை எரிக்கவும் காரணமாக இருந்தவர். மற்றொருவர் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன். நக்கீரன் மற்றும் மாங்குடி மருதனார் ஆகிய புலவர்களால் போற்றப்பட்டவர். தற்கால தஞ்சை மாவட்டத்திலிருந்த தலையாலங்கானம் என்ற விடத்தில் நடைபெற்ற போரில் எதிரிகளை வீழ்தியதால் அவருக்கு இப்பெயர் வழங்கலாயிற்று. இவ்வெற்றியின் பயனாக, நெடுஞ்செழியன் தமிழகத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். செழிப்பான துறைமுகமான கொற்கை பற்றியும், பாண்டிய நாட்டின் சமூக – பொருளாதார நிலைமைகளை குறித்தும் மாங்குடி மருதனார் மதுரைக் காஞ்சியில் விவரித்துள்ளார். உக்கிரப் பெருவழுதி மற்றொரு சிறப்பு மிக்க பாண்டிய அரசன். களப்பிரர்கள் படையெடுப்பின் விளைவாக சங்க காலப்பாண்டியர்கள் ஆட்சி வீழ்ச்சியடைந்தது.
குறுநில மன்னர்கள்
சங்க காலத்தில் குறுநில மன்னர்கள் முக்கிய பங்காற்றினர். பாரி, காரி, ஓரி, நல்லி, பேகன், ஆய், அதியமான் என்ற கடையெழு வள்ளல்கள் கொடைக்குப் பெயர் பெற்றவர்கள். தமிழ்ப் புலவர்களை ஆதரித்துப் போற்றினர். சேர, சோழ, பாண்டி ஆட்சியாளர்களுக்கு அவர்கள் கீழ்ப்படிந்தவர்கள் என்ற போதிலும் தத்தம் ஆட்சிப் பகுதிகளில் வலிமையும் புகழும் பெற்றுத் திகழ்ந்தனர்.
சங்க கால அரசியல்
சங்க காலத்தில் மரபுவழி முடியாட்சி முறையே வழக்கிலிருந்தது. அமைச்சர், அவைப்புலவர், அரசவையோர் போன்றவர்களின் ஆலோசனையை அரசன் கேட்டு நடந்தான். வானவரம்பன், வானவன், குட்டுவன், இரும்பொறை, வில்லவர் போன்ற விருதுப் பெயர்களை சேர மன்னர்கள் சூட்டிக் கொண்டனர். சென்னி, வளவன், கிள்ளி என்பன சோழர்களின் பட்டப் பெயர்களாகும். தென்னவர், மீனவர் என்பவை பாண்டிய மன்னர்களின் விருதுப் பெயர்களாகும். ஒவ்வொரு சங்ககால அரச குலமும் தங்களுக்கேயுரிய அரச சின்னங்களைப் பெற்றிருந்தனர். பாண்டியர்களின் சின்னம் மீன். சோழர்களுக்கு புலி, சேரர்களுக்கு வில், அம்பு. அரசவையில் குறுநிலத் தலைவர்களும் அதிகாரிகளும் வீற்றிருந்தனர். ஆட்சியில் அரசருக்கு உதவியாக பெரும்திரளான அதிகாரிகள் இருந்தனர். அவர்கள் ஐந்து குழுக்களாக பிரிக்கப்பட்டிருந்தனர் – அமைச்சர்கள், அந்தணர்கள், படைத்தலைவர்கள், தூதுவர்கள், ஒற்றர்கள். சங்க காலத்தில் படை நிர்வாகம் திறம்பட சீரமைக்கப்பட்டிருந்தது. ஒவ்டிவாரு ஆட்சியாளரும் நிரந்தரப் படையையும், தத்தமக்குரிய கொடிமரத்தையும் கொண்டிருந்தனர்.
அரசின் முக்கிய வருவாய் நிலவரி. அயல்நாட்டு வாணிகத்தின் மீது சுங்கமும் வசூலிக்கப்பட்டடது. புகார் துறைமுகத்தில் நியமிக்கப்பட்டிருந்த சுங்க அதிகாரிகள் பற்றி பட்டினப்பாலை குறிப்பிடுகிறது. போரின்போது கைப்பற்றப்படும் கொள்ளைப் பொருட்கள் அரசுக் கருவூலத்திற்கு முக்கிய வருவாயகத் திகழ்ந்தது. சாலைகளும் பெருவழிகளும் நன்கு பராமரிக்கப்பட்டுவந்தன. கொள்கை மற்றும் கடத்தல் ஆகியவற்றை தடுப்பதற்காக இரவும் பகலும் அவை கண்காணிக்கப்பட்டன.
சோழர் கால புலவர்கள் கி.பி.30 கழாத்தலை. கி.பி 30 -60 இவர் ஒரு போர்த்துறை கவிஞர். சேரன் ஆதனும் சோழன் கிள்ளியும் போரில் இறந்தபோதும் பின்னர் சேரலாதன் கரிகால் சோழனால் முறியடிக்கப்பட்ட வெண்ணிற் போரிலும் உடனிருந்தார். புலவர் கபிலர் இவரை தம்மினும் மூத்த புலவராக குறிப்பிடுவதுடன் அரசன் இருங்கோவேள் கழாத்தலையை மதிக்காத காரனத்தால் அவன் நகராகிய அரையம் அழிக்கப்பட்டதென்றும் தெரிவிக்கிறார். இவர் இயற்றிய ஆறு பாடல்கள் புறநானூற்றில் 62வது, 65வது, 270வது, 288வது, 289வது, 368வது பாடல்களாக இடம்பெற்று உள்ளன.
உருத்திரன் கண்ணனார். கி.பி. 40 - 70 இவர் பெரும் பாணாற்றுப்படை, படினப்பாலை ஆகிய இரு பாடல்களின் ஆசிரியர். பாணாற்றுப்படை கி.பி 50ல் சோழ அரசன் திரையன் காஞ்சியில் அரசனுக்குரியவனாய் இருக்கும் போது பாடப்பட்டது. இப்பாடல் மூலம் தலைநகரம் காஞ்சியின் சிறப்புகள், மக்கள் குடும்பத்துடன் மாட்டு வண்டிகளில் பயனம் செய்வது, மிளகு மூட்டைகள் சுமந்து பொதி கழுதைகள் வணிகத்திற்காக துறைமுகம் செல்லுதல், ஆயர், உழவர் உறைவிடங்களாகிய சிற்றூர்களின் வாழ்வுமயம், துறைமுகங்களில் கப்பல்கள் நெருக்கமாக நிற்பது, மன்னன் திரையனின் ஆட்சி மகிமை போன்ற முல்லைநில வாழ்க்கை வரலாற்றை சுமந்து பண்டைய நாகரிகத்தையும் பண்புகளையும் நமக்கு தெரிவிக்கிறது. பட்டினப்பாலை கி.பி. 70ல் கரிகால் சோழன் அரசிருக்கை ஏற்று பல குழந்தைகளின் தந்தையாய் இருந்த சமயத்தில் இயற்றப்பட்டது. இது கரிகால் சோழனின் காவிரிப்பட்டினத்தின் புகழ் பாடுகிறது. காவிரியால் வளம்பெற்ற செழுங்கழனிகள், நகரைச் சூழ்ந்த வயள்கள், சோலைகள், கடல் துறைமுகம், அதிலுள்ள கப்பல் தங்குதுறைகள், சந்தைக்களம், அகலச்சாலைகள், நகரின் கோட்டைகொத்தளங்கள், திருமாவளவன் என்ற கரிகால் சோழனின் வீரதீர வெற்றிகள் ஆகிய வரலாற்று காவியங்களை நீள விரித்துரைக்கிறது.
முடத்தாமக்கண்ணியார். கி.பி. 60 - 90 இவர் கரிகால் சோழனின் இளமை வரலாற்றை பொருநராற்றுப்படை மூலம் நமக்கு தெரிவிக்கிறார். இளமையில் கரிகாலன் சிறையிலிருந்து தப்பியது, வெண்ணில் போர் வெற்றி, அவைக்கு வந்த பாணர் புலவர்களை பண்புடனும், வள்ளன்மையுடன் போற்றியது பற்றியும் தெரிவிக்கிறார்.
கபிலர். கி.பி. 90 - 130 இவர் தொழிலால் புலவர், பிறப்பில் பார்ப்பனர். பாரிமன்னனின் உற்ற நண்பன். கரிகால் சோழன் மகளை மணந்த சேர அரசன் ஆதன் அரசவையில் புலமையின் பிறப்பிடமாக இருந்தவர். ஆதன் இவருக்கு பல ஊர்களை இறையிலிக் கொடையாகக் கொடுத்தான். பாரி மன்னன் அவையிலும் அவைப்புலவராக வளம் வந்தவர் கபிலர். பெருங்குறிஞ்சி என்ற இயவரின் பாடல் தமிழக மலங்குடியினரின் காதல் கதை ஒன்றை விரித்துரைக்கிறது. ஆரிய அரசன் பிரகத்த்னுக்குத் தமிழ் அறிவுறுத்தும்படி பெருங்குறிஞ்சி இயற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இவரால் இயற்றப்பட்ட மற்றொரு பாடல் இன்னா நாற்பது. ஒவ்வொரு பாட்டிலும் நான்கு தீங்குகளை உள்ளடக்கிய 40 பாட்டுக்களையுடைய அறநூல் இது. இவரால் இயற்றப்பட்ட ஒரு நூறு பாட்டுக்கள் ஐங்குறு நூற்றில் ஒரு பகுதியாகும், சேரல் ஆதனைப் பாடிய பத்துப் பாட்டுக்கள் பதிற்றுப்பத்தில் இடம் பெற்றுள்ளன.
பெண் புலவர்கள் ஔவையார், அள்ளூர் நன்முல்லையார், காக்கைப் பாடினியார், நச்செள்ளையார், நக்கண்ணையார், வெள்ளி வீதியார், மாறோக்கத்து நப்பசபையார், வெண்ணிக்குயத்தியார், குறமகள் இளவெயினி, பூங்கணுத்திரையார், ஒக்கூர் மாசாத்தியார். அரச குல ஆதிமந்தி, பெருங்கோப்பெண்டு மற்றும் பாரி மகளிர் அங்கவை, சங்கவை.
சங்க கால சமூகம்
ஐந்து வகை நிலப்பிரிவுகள் பற்றி தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.
குறிஞ்சி, மலையும் மலைசார்ந்த பகுதி
முல்லை, மேய்ச்சல் காடுகள்
மருதம், வேளாண் நிலங்கள்
நெய்தல், கடற்கரைப் பகுதி
பாலை, வறண்ட பூமி
இந்த நிலங்களில் வாழ்ந்த மக்கள் தத்தம் கடவுளர்களையும் தொழில்களையும் பெற்றிருந்தனர்.
1. குறிஞ்சி – முதன்மைக் கடவுள் முருகன் (தொழில்: வேட்டையாடுதல், தேன் எடுத்தல்)
2. முல்லை – முதன்மைக் கடவுள் மாயோன் (விஷ்ணு) (தொழில்: ஆடு, மாடு வளர்ப்பு, பால் பொருட்கள் உற்பத்தி)
4. நெய்தல் – முதன்மைக்கடவுள் – வருணன் (தொழில்: மீன் பிடித்தல், உப்பு உற்பத்தி)
5. பாலை – முதன்மைக் கடவுள் – கொற்றவை (தொழில்: கொள்ளையடித்தல்)
நான்கு வகை சாதிகள் – அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் – குறித்து தொல்காப்பியம் கூறுகிறது. ஆளும் வர்க்கத்தினர் அரசர் என்றழைக்பட்டனர். சங்க கால அரசியல் மற்றும் சமய வாழ்க்கையில் அந்தணர் முக்கிய பங்கு வகித்தனர். வணிகர்கள் வணிகத் தொழிலில் ஈடுபட்டனர். வேளாளர்கள் பயிர்த் தொழில் செய்தனர். பழங்குடி இனத்தவர்களான பரதவர், பாணர், எயினர், கடம்பர், மறவர், புலையர் போன்றோரும் சங்க கால சமுதாயத்தில் அங்கம் வகித்தனர். பண்டையக்கால தொல்பழங்குடிகளான தோடர்கள், இருளர்கள், நாகர்கள், வேடர்கள் போன்றோரும் இக்காலத்தில் வாழ்ந்தனர்.
சங்க காலமும் நூல்களும் முதல் சங்கம், இடைச்சங்கம் மற்றும் கடைச்சங்கம் முதலியன மொத்தமாக 9990 ஆண்டுகள் நிலபெற்றிருந்தன. இக் காலங்களில் 8598 புலவர்கள் அரிய பல நூல்களை இயற்றி சங்கத்தில் அரங்கேற்றியுள்ளனர். முதல் இருசங்கங்களிலும் எண்ணிறந்த இலக்கிய நூல்கள் எழுந்தன என்வும், அவற்றுள் பெரும்பாலானவை அழிந்தொழிந்தன எனவும் தற்போது எஞ்சி நிற்கும் நூல்கள் பெரும்பாலும் கடைச்சங்கத்தை சார்ந்தவை என்று செவிவழிச்செய்திகள் வலியுறுத்துகின்றன. கி.மு 500 முதல் கி.பி 900 வரயுள்ள காலகட்டங்களை கடைச்சங்க காலமென வரலாற்று அறிஞர்கள் குறிபிட்டுள்ளனர். சங்க நூல்களுள் இக் காலம் எஞ்சியிருப்பனவற்றில் தொல்காப்பியம் இடைச்சங்கத்திற்கு உரியது என்றும், எட்டுத்ெத்ாகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு, சிலப்பதிகாரம், மணிமேகலை முதலியன் கடைச்சங்க படைப்புகள் என்றும் அறியப்படுகிறன.
பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் திருக்குறல் நாலடியார் களவழி நாற்பது கைந்நிலை இனியவை நாற்பது இன்னா நாற்பது நான்மணிக்கடிகை கார் நாற்பது ஐந்திணை ஐம்பது திணைமொழி ஐம்பது ஐந்திணை எழுபது திணைமாலை நூற்றைம்பது திரிகடுகம்
தினமணி ஏடு மாதந்தோறும் ஏதேனும் ஒரு பொருள் குறித்து இலக்கிய விவா தம் நடத்தி வருகிறது. ஆகஸ்டு மாதம் அது எடுத்துக் கொண்ட பொருள் தொல் காப்பியர் காலம் பற்றியது. இதில் தமி ழண்ணல் உள்ளிட்ட பல அறிஞர் பெரு மக்கள் பங்கேற்று தத்தம் கருத்தைப் பதிவு செய்துள்ளார்கள்.
கி.மு.711 தான் தொல்காப்பியம் எழுந்த ஆண்டு என்கிறார் தமிழண் ணல். முனைவர் க.நெடுஞ்செழி யனோ தொல்காப்பியம் ரிக்வேதத்திற் கும் முந்தியது என்கிறார். அது அப் படியல்ல என்று வாதிட்டிருக்கிறார் பத் திரிகையாளர் கே.சி. லட்சுமி நாராய ணன். இவர்களுக்குள் இப்படி வேறு பாடு இருந்தாலும் ஓர் ஒற்றுமை தெரி கிறது. அதாவது தொல்காப்பியமானது சங்க இலக்கியத்திற்கும் முந்தியது என்கிறார்கள்.
சங்க இலக்கியம் பிறந்த காலம் கி.மு.200 முதல் கி.பி.200க்கு இடைப் பட்ட காலம் என்பது பொதுவாக வர லாற்றாளர்கள் கூறுவது. தமிழாசிரி யர்கள் எப்போதும் இதை இன்னும் முந் திய காலத்தது என்றே கூறி வரு கிறார்கள். தொல்காப்பியத்தையோ அதற்கும் முந்திக் கொண்டு போய் நிறுத்துகிறார்கள். வெள்ளைவாரணர் கி.மு.5,320 என்றார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! மனித நாகரிகம் திட்டவட்டமான வடிவெடுப்பதற்கு முன்பே தொல்காப்பியம் பிறந்துவிட் டது என்று சொல்கிறவர்களோடு எப்படி வாதிடுவது?
இது ஒரு புறமிருக்க, தினமணி விவாதத்தில் வந்த பொதுக் கருத்துக்கு வருவோம். சங்க இலக்கியத்திற்கும் முந்தியது தொல்காப்பியம் என்பது அது இதற்கு இவர்கள் யாரும் கல் வெட்டு ஆதாரமோ, செப்பேட்டு ஆதா ரமோ தரவில்லை. அப்போது இந்தச் சரித்திரச் சான்றுகளுக்கு வாய்ப் பில்லை. இந்த இலக்கியங்களின் அகச்சான்று மற்றும் மொழியியல் ஆகியவற்றைக் கொண்டுதான் காலத்தை நிறுவ வேண்டியுள்ளது.
மொழியியலைப் பொறுத்தவரை - குறிப்பாக இலக்கணவியலைப் பொறுத்தவரை - தமிழாசிரியர்கள் விதவிதமான விளக்கங்கள் தரலாம். அதிலே கருத்து வேறுபாடுகளுக்கு வாய்ப்புகள் அதிகம். ஆனால் அகச் சான்று எனப்படுவதற்கு - இந்த இலக்கி யங்கள் காட்டும் சமூக வாழ்வு எனப் படுவதற்கு - ஆளாளுக்கு வியாக் கியானங்கள் தந்துவிட முடியாது. இதிலே திருகல் வேலைகளுக்கு வாய்ப்பு குறைவு.
லட்சுமி நாராயணன் புத்திசாலித் தனமாக இந்த ஆதாரத்திற்குள் புகுந்து வருகிறார். இதை நெடுஞ் செழியனால் முறையாக எதிர்கொள்ள முடியவில்லை. தொல்காப்பியத்திற்கு பனம்பாரனார் சிறப்புப் பாயிரம் தந் துள்ளார். அதில் “நான்மறை முற்றிய அதங்கோட்டு ஆசான்” தலைமையில் இந்த நூல் அரங்கேற்றப்பட்டது என்று வருகிறது. அதாவது நான்கு வேதங் கள் கற்ற ஆதங்கோட்டு ஆசான் அப் போதே இருந்தான், அவன்தான் இந்த நிகழ்வுக்கு தலைமை தாங்கினான். அப்படியென்றால் தொல்காப்பியர் காலத்திலே வருணாசிரமம் இங்கே வேரூன்றியிருந்தது என்று அர்த்தம். எனவே நிச்சயமாக இது வேதங் களுக்கு பிந்திய காலத்துப் படைப்புத் தான்.
இதற்கு பதில் சொல்லப் புகுந்த க.நெடுஞ்செழியன் “நான்மறை என்ப தற்கு மூலமறை” எனப்பொருள் கொள்ள வேண்டும் என்கிறார். இது சற்றும் பொருந்தி வரவில்லை. நான் மறை என்பது பிராமணிய மதத்தின் நான்கு வேதங்களைக் குறிப்பது என் பதற்கு தமிழ் இலக்கியங்களில் எத் தனையோ உதாரணங்கள் உள்ளன.
இதைவிட முக்கியம் தொல்காப்பி யம் பொருளதிகாரத்தில் வருகிற “அறு வகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்” என் கிற சூத்திரத்தை லட்சுமி நாராயணன் சிக்கெனப் பிடித்திருப்பது. இதற்குப் பதிலே சொல்லவில்லை க.நெடுஞ் செழியன். அதற்குப் பதிலாக மொழியி யலுக்குள் புகுந்து கொண்டு ஏதோ சித்து விளையாட்டு காட்டுகிறார்.
தொல்காப்பியர் காலத்திலே தமிழ் கூறும் நல்லுலகில் வருணாசிரம சமூக வாழ்வு நிலைபெற்றுவிட்டது. பிராமணர், ஷத்திரியர், வைசியர், சூத்திரர் எனும் அந்த வருணப் பிரிவு தெளிவான, திட்டவட்டமான வடிவம் எடுத்துவிட்டது. இதற்கான ஆதாரம் தான் அந்தச் சூத்திரம். “அறுவகைப் பட்ட பார்ப்பனர்ப் பக்கமும், ஐவகை மர பின் அரசர் பக்கமும், இருமூன்று மர பின் ஏனோர் பக்கமும்...” எனத் துவங்கி “என்மனார் புலவர்” என்று அது முடி கிறது.
தனது “தொல்காப்பியப் பூங்கா” நூலில் தமிழக முதல்வர் கலைஞர் இதன் சாரத்தை இப்படித் தெளிவாகக் கூறியிருக்கிறார் -’’ என்மனார் புலவர் என்று, புலவர்கள் என்று கூறுவார்கள் எனக் குறிப்பிடுவதி லிருந்தே ஆரியர் வரவும், அவர்கள் புதிதாக வகுத்த தமிழர்க்குப் புறம்பான மரபும் தொல்காப்பியர் வாழ்ந்த காலத் தில் அல்லது அவர் தோன்றுவதற்கு முன்பு நம் நிலத்தையும் இனத்தையும் வளைத்துவிட்டன என்பது தெளிவாகும்.”
நாம் இங்கு எழுப்புகிற கேள்வி, இப்படித் தமிழ்ச் சமுதாயம், வருணா சிரமமயமாகி இருந்ததுதான் தொல் காப்பியர் காலம் என்றால் அது வேத காலத்திற்குப் பிந்தியது என்பதில் என்ன சந்தேகம் இருக்க முடியும்? கூடவே நாம் எழுப்புகிற மற்றொரு கேள்வி, இத்தகைய திட்டவட்டமான வருணாசிரம வாழ்வைச் சங்க இலக்கி யங்கள் காட்டாத போது தொல்காப்பிய மானது அவற்றுக்குப் பிந்திய படைப் பாகத்தானே இருக்க வேண்டும்?
சங்க இலக்கியத்திலேயே அந்த ணர் வந்துவிட்டார், வேள்விமுறை வந் துவிட்டது, நான்மறை பேசப்படுகிறது, பல்யாக சாலை முதுகுடுமிப் பெரு வழுதி வந்துவிட்டான் என்பதெல்லாம் உண்மையே. ஆனால், “வைசிகன் பெறுமே வாணிப வாழ்க்கை” என்று நால் வருணத்தின் ஒரு முக்கிய கூறை அதே சொல்லாட்சியோடு நாம் காண் பது தொல்காப்பியத்தில் அல்லவா!
“மறையோர் தேடுத்து மன்றல் எட்டனுள் துறையமை நலயாழ்த் துணைமையோர் இயல்பே” என்று வருவது இன்னும் கூர்ந்து கவனிக்கத் தக்க விஷயம். பிராமணியம்தான் எட்டு வகைத் திருமண முறைகளைக் கொண்டிருந்தது. அதாவது பிரமம், பிசாபத்தியம், ஆரிடம், தெய்வம், காந் தருவம், அசுரம், ராட்சசம், பைசாசம் எனும் எட்டு வகை. இதையெல்லாம் தொல்காப்பியர் தெரிந்து வைத்துக் கொண்டு பேசுகிறார் என்றால் அது காலத்தல் பிந்தியது என்பதை உணர்த்தவில்லையா?
அதனால்தான் இந்தச் சூத்திரத் திற்கு உரை எழுதிய வெள்ளை வாரன்னார் “தொல் காப்பியனார் காலத்தே வடவர் நாகரிகம் தமிழகத் தில் மெல்ல மெல்லப் பரவத் தலைப் பட்டமையால் மறையோர் தேஎத்து மணமுறைக்கும் தென்றமிழ் நாட்டு மணமுறைக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை விளங்க உணர்த் தல் அவரது கடனாயிற்று” என்றார். இது கலைஞர் எடுத்துக் காட்டும் மேற்கோள்.
அப்படியென்றால் இப்படித் தமிழ்ச் சமுதாயம் வருணாசிரம மயமான காலம் சங்க காலத்திற்கு முந்தியதா, பிந்தியதா? முந்தியது என்றால் சங்க இலக்கியத்தில் இந்தத் திட்டவட்ட மான வருணாசிரம வாழ்வு இல்லா மல் போனது ஏன்? அப்போது மட்டும் அது மறைந்து, பின்னர் அது மீண்டும் தலையெடுத்ததோ? ஏற்கவியலாத சரித்திர முரண். சங்க காலத்திற்கும் பிந்தியதே தொல்காப்பியம், சங்க காலத்திலேயே வந்துவிட்ட வருணா சிரம வாழ்வு தொல்காப்பியர் காலத் தில் இன்னும் திட்டவட்டமான வடிவு எடுத்தது என்று முடிவுகட்டுவதே சரித்திர நியாயமாக இருக்கும்.
இதைவிடுத்து தொல்காப்பியத் திற்கு செயற்கையாகக் கூடுதல் வயது கொடுப்பது அதைப் புரிந்து கொள்ள வும் உதவாது, சங்க இலக்கியத்தை அறிந்து கொள்ளவும் உதவாது.
-- Edited by Admin on Thursday 9th of April 2015 02:22:27 PM
தமிழ்ப்பண்டிதர்களுக்கு _ என்னும் தலைப்பில் எழுதிய கட்டுரை இல்லை. வினாக்கள் கடந்த செப்டம்பர் 1_15, 2012. உண்மை இதழில், தமிழ் இலக்கியங்கள் _ அறைகின்றார் அண்ணா என்னும் தலைப்பில் மறுவெளியீடாக வந்துள்ளது.
விடையளிக்க விரும்பினேன்
இவற்றிற்கு அன்றைய தமிழ்ப் பண்டிதர்கள் _ என அழைக்கப்பட்ட தமிழ் புலவர்கள் விடை தந்துள்ளனரா? என, எனக்குத் தெரியாது. ஆனால், இந்த வினாக்களைப் படித்த ஓர் எளிய இன்றைய தமிழ்ப்புலவன் ஆகிய நான் விடையளிக்க விரும்பி அந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.
புரிந்துகொள்ள மாட்டார்களா, புலவர்கள்?
இந்த வினாக்கள் வாயிலாக அண்ணாவின் தமிழிலக்கிய நுண்மான் நுழைபுலமும்,இ அஃகி, அகன்ற தமிழறிவும் நம் தமிழர்களுக்கு - குறிப்பாக தமிழ்ப் புலவர்களுக்கு விளங்காமற் போகாது.
மேலும் வளர்த்தாமல், நேரடியாக அண்ணாவின் வினாக்களுக்கு ஒரு தமிழ்ப்புலவன் ஆகிய நான் என் விடைகளைத் தந்துள்ளேன்.
முதன்மை வினா எண்: 1
நாம் தமிழர்கள் என ஒப்புக் கொள்கிறோம்.
விடை
எதுவும் கிடையாது. தனித்தமிழ்கலைகள் என்பதாக உள்ளவை _ அதாவது இலக்கியங் களையே கலைகள் என அண்ணா சுட்டுகின்றார் _ ஆரியம் கலந்தவை இலக்கியங்களே ஆகும். தொல்காப்பியமும், சங்க இலக்கியங்களை வேண்டுமானால் தமிழர்ககுரிய இலக்கியங் (கலை)களாகக் கூறலாம்.
முதன்மை வினா _ எண்: 2
தொல்காப்பியமும் சங்க இலக்கியங்களும்தான் தமிழர் கலைகளா?
விடை:
இவை முழுக்க முழுக்க தமிழர்களுக்குரிய தமிழர் கலை (இலக்கியங்)களாகக் கூறமுடியாது.
முதன் வினா எண்-3
தமிழ்க்கலைகளின் லட்சணங்கள் என்ன? அவை, தமிழர்ககுப் போதிக்கும் நெறி யாவை?
விடை:
தமிழ்க் கலைகள் அதாவது இலக்கியங்கள் இவற்றிற்கென தனி இலக்கணம் (இலக்கணம்) எதுவும் கிடையாது!
ஆரியம் கலவாத தமிழிலக்கியங்கள் தனிநிலையில் இருந்தால்தானே அவற்றிற்கென இலக்கம் கூறப்பட்டிருக்கும்?
இலக்கணமே இல்லை என்கிறபோது,இ கலை தமிழர்க்கு என்ன நெறியைப் போதித்து இருக்கும்? போதித்திருக்க முடியும்? ஒன்றும் இல்லை!
முதன்மை வினா எண்: 4
தமிழர்க்கு அறிவைப் போதித்து, தன்மானத்தை ஊட்டி, முன்னேற்றத்திற்கு வழிகாட்டும் நூல்கள் என்னென்ன உண்டு?
விடை:
இவ்வகையில் நூல்கள் அவ்வளவாக இல்லை. அய்யா தந்தை பெரியார் அவர்களின் கருத்தினைப் பார்ப்போமே!
நமக்குப் பயன்படத்தக்க, நம் வளர்ச்சிக்கு ஏற்ற இலக்கியம் எதுவும் கிடையாது. இருப்பவை எல்லாம் மிகமிக மோசமானவைகளேயாகம்.
அதாவது, நமக்குப் பயன்படத் கூடியதாகவோ, நம் மக்களை வளர்ச்சியடைச் செய்யக் கூடியதாகவோ, நடப்பிற்கு ஒத்ததாகவோ, வழிகாட்டக்கூடியதாகவோ எதுவும் கிடையாது.
நம் இழிவைப் போக்கக் கூடியதாகவோ, அறிவை வளர்க்கக் கூடியதாகவோ, நடப்புக் ஒத்ததாகவோ எதுவாகிலும் ஒரு இலக்கியம் இருக்கிறதா? _ என்று உங்களில் யாராவது எடுத்துக்காட்டுங்கள்.
தமிழில் பெரும் அறிஞர் என்று எல்லோராலும் போற்றப்பட்ட மறைமலையடிகளே தமிழில் நம் வளர்ச்சிக்கான புத்தகங்கள் இல்லை இலக்கியங்கள் இல்லை என்று கூறியுள்ளார் _ (பெரியார்: விடுதலை: 21.4.1965)
... இருக்கின்ற இலக்கியங்களுள், நீதி வருகின்ற நூல்களுள் சிறந்த நூல் என்று கொள்ளத்தக்கது திருக்குறள் தான்! _ (பெரியார்: நூல் _ திருக்குறளும் பெரியாரும்)
அப்படிப் பார்த்தால், எவையும் இல்லை. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று, ஆரிய வர்ண_ஜாதி வல்லாண்மையை உடைத்து நொறுக்கித் தள்ளும் பிரகடனம் (றிக்ஷீஷீநீறீணீனீணீவீஷீஸீ) ஆக, திருக்குறள் மட்டுமே திகழ்கிறது. ஆகவே, ஆரியம் புகுத்தப்படாத, ஆரியத்தை உயர்வென ஒப்புக் கொள்ளாத நூல்கள் திருக்குறள் ஒன்றைத் தவிர, வேறு எவையும் இல்லை!
முதன்மை வினா: 6
தொல்காப்பியம் ஓர் ஆரியரால் எழுதப்பட்டது என்று சொல்வதை நீங்கள் ஒப்புகிறீர்களா? அதில் ஆரியத்திற்கு ஆதரவும், உயர்வும் அளிக்கப்பட்டிருக்கிறதென்பதை நீங்கள் மறுக்க முடியுமா?
விடை:
ஆம்! நான் ஒப்புக் கொள்கிறேன்.
தொல்காப்பியர் ஓர் ஆரியர் (பார்ப்பனர்) என்று ஆய்வு செய்து கூறியுள்ளார் மொழிஞாயிறு _ ஞா.தேவ நேயப்பாவாணர் அவர்கள். தொல்காப்பியர் பல இடங்களில் தவறினதற்குக் காரணம் அவரது ஆரியப் பிறப்பேயன்றி வேறன்று. _(பாவாணர்:நூல்: ஒப்பியன் மொழிநூல்_பக்கம்: 82)
தொல்காப்பியரின் இயற்பெயர் திரண தூமாக் கினி என்பதாலும், தந்தை ஜமதக்னி முனிவர் என்பதா லும், தொல்காப்பியத்தில் உள்ள சில இலக்கண வழுக் களாலும் தொல்காப்பியர் ஆரியரே! என்று துணியப் படும். _ (பாவாணர்: நூல்: ஒப்பியன் மொழி நுல். _ பக்கம்: 73)
தொல்காப்பியத்தில் ஆரியத்திற்கு ஆதரவும், உயர்வும் அளிக்கப்பட்டிருக் கிறது என்பதை எவரும் மறுக்க முடியாது.
தொல்காப்பியத்துள், திருமால் (மாயோன்), முருகன் (சேயோன்), இந்திரன் (வேந்தன்), வருணன் போன்ற பல கடவுள், பல தேவர் வணக்கங்கள் புகுத்தப்பட்டுள்ளன.
மேற்பிறப்பு (ஜாதி), கீழ்ப்பிறப்பு (ஜாதி) ஜாதிப்பாதுகாப்பு இவை அந்நூலில் பொதிந்துகிடக்கின்றன.
ஆரிய வர்ண ஜாதித் தத்துவம் தெளிவாகவே கூறப்பட்டுள்ளது.
பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர வர்ண முறை கூறப்பட்டுள்ளது. இவை, அந்தணர், அரசர், வணிக, வேளாளர் என தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன.
பார்ப்பனராகிய அந்தணர் (பிராமணர்)க்குரிய கோலங்கள் மிகத் தெளிவாக குறிக்கப்பட்டுள்ளன.
நூலே,கரகம், முக்கோல் மணையே ஆயுள் சாலை அந்தணர்க்குரிய _ (தொல்காப்பியர்: சூத்திரம்: 1572)
அந்தணராகிய பார்ப்பனருக்கு, நூல் (பூணூல் அல்லது உபநயனம்), களுகம் (கமண்டலம்), முக்கோல் (திரிதண்டம்) மணை _ (ஆசனப்பலகை), இவை உரியவையாகக் கூறப்பட்டுள்ளன.
வணிகர் என்பார் வடமொழி வேத _ மனு நீதி முறைப்படி வைசிகன் (வைஸ்யன்) என்கிறார்.
வைசியன் பெறுமே வாணிக வாழ்க்கை _ (தொல்கா: சூத்திரம்: 1578)
என்று வெளிப்படையாக சூத்திரம் செய்திருக்கிறார்.
இனி, தொல்காப்பியச் செய்திபற்றி, தந்தை பெரியாரின் கருத்தை மேற்கோளாக் காட்டுகிறேன். தொல்காப்பியத்தில்தான் என்ன இருக்கிறது? அதிலும் நாலுஜாதி; அந்த நாலுஜாதியில் நம்மைத்தான் கீழ் ஜாதியாகக் குறிப்பிட்டிருக்கிறது. மேலோர் மூவர்க்கும் புணர்ந்த கரணங்கள் கீழோர்க்கு.... என்ற பாடலைப் பார்த்தாலே போதுமே! _ (பெரியார்: விடுதலை: 4.10.1967, பக்கம்:2)
இத்துணை சான்றுகள் மிக வலிவானவையாக இருக்க இவை இல்லை என்று நாம் எப்படி மறுக்க முடியும்? மறுத்தால், குன்றுமுட்டிய குருவியின் இரங்கத்தக்க நிலைதானே எமக்கு ஏற்படும்?
முதன்மை வினா எண்: 7
சங்க இலக்கியங்கள் பலவற்றில் ஆரியக் கொள்கைகள் புகுத்தப்பட்டிருக்க வில்லையா?
விடை:
ஆம்! புகுத்தப்பட்டிருக்கின்றன. இதனை எவரும் மறுக்க முடியாது. சங்க இலக்கியங்கள் பற்றி மொழி ஞாயிறு பாவாணர் கருத்துகளைப் பார்ப்போம். கடைக் கழக (சங்க) நூல்கள் முப்பத்தாறனுள் ஒன்றாவது, கலைபற்றியதன்று; பாவியமும் அன்று. அவற்றுள், ஆசாரக் கோவையோ வடநூல் மொழிபெயர்ப்பாயும் பிறப்பில் உயர்வு _ தாழ்வு வகுப்பதாயும் எளிய பொருள்களைக் கூறுவதாயும் உள்ளது. _ (பாவாணர்: நூல்: ஒப்பியன் மொழிநூல் _ பக்கம் 194-_195.)
சங்க இலக்கியங்கள் மனுநீதியைப் போற்றுதல், யாகங்கள் செய்தல், பாரத இராமாயணக் கதைகளைப் பரப்புதல் இவற்றைப் பணிகளாகக் கொண்டிருந்தன.
எடுத்துக்காட்டுகள்:
பல்யாக சாலை முதுகுடுமிப்பெருவழுதி; இராசசூய வேட்ட பெறுநற்கிள்ளி இவர்கள் வேத வேள்விகள் புரிந்த செய்திகள் கூறப்பட்டுள்ளன. அன்றியும், சங்க இலக்கியங்களாகக் கருதப்படும் புறநானூறு, அகநானூறு, கலித்தொகை, திருமுருகாற்றுப்படை, பரிபாடல் முதலானவற்றுள். முருகன் பிறப்பு, திருமால் பெருமை, இராமன், சீதை, பரமன், சிவன், இந்திரன், அகலிகை கதை முதலான இதிகாசப் பெயர்களும் கதைகளும் தங்குதடையின்றி, தாராளமாக வழங்கப்பட்டுள்ளன.
சார்பு வினா: (1)
தமிழ்க்கலைகளில் ஆரியத்திற்கு இடமிருக்கலாமா?
விடை:
கூடாது, கூடாது, கூடவே கூடாது.
சார்பு வினா: (2)
அவற்றைப் போக்க நீங்கள் ஏதேனும் முயற்சி செய்ததுண்டா? முயல்வீர்களா?
விடை:
எந்த முயற்சியும் பெரும்பாலான தமிழ்ப்புலவர்கள் செய்ததில்லை; செய்கிறதுமில்லை; செய்வதுமில்லை. இதுபற்றி, அய்யா பெரியார் கூறவதைப் பார்ப்போமா?
தமிழ்ப் புலவர்கள் தமிழை ஒரு, நியூசென்ஸ் ஆக ஆக்கிவிட்டார்கள். இன்றும், வடமொழிக் கதைகள், கற்பனைகள், ஆபாசங்கள் புகுத்தப்பட்ட இலக்கியங்கள் பேராலேயே தமிழ்ப்புலவர்கள் ஆகின்றனர்; வித்துவான்கள் ஆகின்றனர்; டாக்டர் _ ஆகின்றனர்.
.... உலகில், வேறு எங்குமே இல்லாத அதிசயப் பிறவிகள் நம், புலவர்கள்! _ (பெரியார்: விடுதலை: 12.4.1965)
முதன்மை வினா: 8
தமிழ் எழுத்துடைய நூல்கள் தமிழரால் எழுதப்பட்ட நூல்கள் யாவும் தமிழ்க்கலை களாகுமா?
விடை:
ஆகாது.
சார்ப் வினா ( 1 )
ஷேக்ஸ்பியர் நாடகத்தை, ஒரு தமிழர் தமிழில் மொழிபெயர்த்தால் அது தமிழ்க்கலையாகுமா?
விடை:
ஆகாது.
சார்பு வினா (2)
அதேபோல், கிறிஸ்து, இஸ்லாம் ஆகிய பிறமதக் கொள்கைகளைத் தமிழில் மொழி பெயர்த்தால் அவை தமிழர் மதமாகுமா? இலக்கியமாகுமா?
விடை:
ஒருக்காலும் அவை, தமிழர் மதமும் ஆகாது! இலக்கியகுமாகாது!
சார்பு வினா(3)
இல்லையெனில், ஆரிய மதம் கொள்கைகளையும் உணர்த்தக் கூடியதும், அதனோடு தமிழரை இழித்தும் பழித்தும், கூறக்கூடியதுமான புராண இதிகாசங்களைத் தமிழ்க் கலைகள் என்னலாமா?
விடை
அவற்றைத் தமிழ்க்கலைகள் என்று கூறவே கூடாது.
சார்பு வினா:(4)
அவை, இந்த முறையில் எழுதப்பட்டதன்று என்பதையாவது நிரூபிக்க முடியுமா?
விடை
நிரூபிக்கவே முடியாது! ஒரே ஓர் எடுத்துக்காட்டு:
தன் ஆட்சியில் (இராமன் ஆட்சி) உள்ள குடிமகன் ஒருவன் (சம்பூகன்) பார்ப்பனனைக் கடவுளாக வணங்காமல் கடவுளை நேரில் வணங்கிப் பயன்பெற முயற்சித்தான் என்று அவனைத் துண்டு துண்டாக வெட்டிச் சித்திரவதை செய்தானே; _ (பெரியார் _ விடுதலை 10.3.1968) நிலைமை இவ்வாறிருக்க, புலவர்கள் ஆரியத்தை உயர்த்தியும் தமிழரை இழித்தும் கூறப்பட்டுள்ள நிகழ்ச்சியை இல்லை என்று எப்படி நிரூபிக்க முடியும்? முடியாது.
முதன்மை வினா: 9
தமிழர்க்குக் கொள்கை என்ன? சைவமும் வைணவமும் சாதியாச்சாரமும்தானா? தமிழர்க்கு என்கிறபோது, தொல்காப்பியர் காலம்; சங்க காலம், காவிய காலம், களப்பிரர் காலம், பக்திநெறிக் காலம் முதலான பல நிலைகள் உள.
இவற்றுள், எந்தக் காலத் தமிழர்க்கு என்ன கொள்கை எனத் தெரியாது!
வரையறைக்கப் படவுமில்லை. சைவமும் வைணவமும் சாதியாச்சாரமும்தான் இடைக் காலத்தில் தமிழர் கொள்கையாக இருந்துள்ளது. சைவத்தில் நந்தனார் தாழ்த்தப்பட்டோர், திருநீலகண்டர் குயவர். வைணவத்தில் திருப்பாணழ்வார் தாழ்த்தப்பட்டவர், திருவரங்கம் பெரிய கோயிலுள் நுய முடியாமலும் ஜாதியாசாரத்தால் பேணப்பபட்டவர்கள்.
சார்பு வினா ( 1 )
அவற்றிற்கு ஆதாரம் என்ன? பெரிய புராணம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகள்; நாலாயிரத் திவ்யப் பிரப்ந்தம் முதலான சைவ, வைணவ பக்திப் பனுவல்கள். அவற்றிற்கான ஆதரங்கள் ஆம்!
சார்பு வினா ( 2 )
அவற்றைப் பற்றிய கொள்கைகளை வலியுறுத்தும் நூல்கள் தமிழர்க்குக் கலைகள் ஆகுமா?
விடை:
ஆகமாட்டா! முதன்மை வினா எண்: (10)
தமிழரை இழிவுபடுத்தக்கூடியதும் தமிழரின் தன்மதிப்பைப் போக்கக் கூடியதும், தமிழர்தம் அறிவை மாய்க்கக் கூடியதும், தமிழரை மூடநம்பிக்கையில் அ:ழ:ததக் கூடியதும் தமிழர்க்கு அடிமை நிலையையே சதம் எனப் போதிக்கக் கூடியதும், தமிழரை,இ தமிழரல்லாத ஒரு வகுப்பினருக்கு வேசி மகனாக இருக்க வைப்பதும் ஆகிய நூல்கள் தமிழ்க்கலைகளா? இல்லை எனில், அவற்றை ஒழிப்பதில் நீங்கள் ஏன் குறுக்கிடுகிறிர்கள்?
விடை:
மேல்குறிப்பிட்ட அடிப்படையில் எபந்த நூல்கள் உறுதியாகத் தமிழ்க் கலைகள் அல்லவே அல்ல! அவை, ஆரியக் கலைகள். இவற்றை ஒழிப்பதில், ஏன் தமிழ்ப் புலவர்கள் ஏன் குறுக்கிடுகிறார்கள்? என்றால், எல்லாம் ஆரிய மாயைதான்! பார்ப்பனிய _ பக்தி _ மோட்ச, புண்ணிய மோகம்தான்! அவற்றால், அவற்றைப் பரப்புவதால் வரும் ஆதாயம்தான்! செல்வாக்குதான்! சற்சூத்திரப் பட்டப் போதைதான்! சைவ _ வைணவ சமய வெறிதான்! வேசிமகன் _ என்கிற இன இழிவு,இ சூத்திரன் என்கிற இரிவு பற்றியெல்லாம் இவர்கட்கு கவலை இல்லை! சிவபதம், வைகுந்தபதம் அடைவதே இத்தகையோரின் இன்றியமையா நோக்கம்.
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, நான் ரெங்கராஜன். தொல்காப்பியத்தைப் பற்றி ஒரு சந்தேகம், அபத்தமாகவும் இருக்கலாம். தொல்காப்பியம் படித்த போது ஒட்டகத்தைப் பற்றிய குறிப்பைக் கண்டேன். எனக்குத் தெரிந்து தமிழ்நாட்டில் ஒட்டகம் இருக்கும் அளவிற்குப் பாலைவனம் இல்லை, இருந்திருப்பதாகவும் அறியவில்லை. அப்படியானால், ஒன்று ஒட்டகம் வட இந்தியாவில் இருந்து தமிழகத்திற்கு வந்திருக்க வேண்டும். அல்லது அரபு நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப் பட்டிருக்க வேண்டும்.
அரபு மற்றும் ரோம நாட்டினருடன் வணிகம் கிபி 100 – 300 செழித்திருந்ததாகப் படித்திருக்கின்றேன். அப்படியானால் தொல்காப்பியம் கிபி 100 போல் எழுதப்பட்டதா ?
சங்க இலக்கியங்களில் ஒட்டகம் பற்றிய செய்தி இருக்கிறதா என்று தெரியவில்லை. புறநானூற்றில் நான் படித்த வரை ஒட்டகம் பற்றிச் சொல்லியிருப்பதாக நினைவில்லை. புறத்திற்குப் பிறகு தொல்காப்பியம் எழுதப்பட்டதா ? தொல்காப்பியத்தின் காலம் என்ன ?
நன்றி.
ரங்கராஜன்
அன்புள்ள ரங்கராஜன்
தொல்காப்பியத்தின் காலகட்டத்தைப் பின்னுக்குத்தள்ளியவர்கள் தமிழிய இயக்கத்தவர். அது உணர்ச்சிகர நம்பிக்கை மட்டுமே. வையாபுரிப்பிள்ளை மரபைச் சேர்ந்தவர்கள் தொல்காப்பியம் பிற்காலப்பிரதி என்றே நினைக்கிறார்கள்.வேதசகாயகுமார் எழுதியிருக்கிறார்.
நற்றிணை, குறுந்தொகை பாடல்கள் மிகவும் தொன்மையானவை. அவை தொல்காப்பிய இலக்கணத்துக்குள் பின்னர் அடக்கப்பட்டவைதான். தொல்காப்பியம் இலக்கியங்கள் தொகுக்கப்பட்டகாலகட்டத்தில் உருவானது. அதாவது கிபி இரண்டு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. பிற தொல்தமிழிலக்கியங்களைவிட அதிகமான சம்ஸ்கிருதக் கலப்பும் சம்ஸ்கிருத இலக்கணப்பாதிப்பும் கொண்டது