New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பைபிள் பழைய ஏற்பாடு - மோசே சட்டங்கள் எழுதிய கதை ஆசிரியர் மோசே இல்லை


Guru

Status: Offline
Posts: 24601
Date:
பைபிள் பழைய ஏற்பாடு - மோசே சட்டங்கள் எழுதிய கதை ஆசிரியர் மோசே இல்லை
Permalink  
 


பைபிள் பழைய ஏற்பாடு - மோசே சட்டங்கள் எழுதிய கதை ஆசிரியர் மோசே இல்லை

 

 images?q=tbn:ANd9GcQ0vDXWO6hmecsxQ6SdKOCfHiv8LQrKfuavvtFVXLhrKxUMpDQJKw
கிறித்தவ மற்றும் யூதர்களின் நூலாகிய  விவிலியத்தில் (பழைய ஏற்பாடு) முதல் ஐந்து புத்தகங்கள்,-  சட்டங்கள் 
  • தொடக்க நூல் -ஆதியாகமம்
  • விடுதலைப் பயணம்-யாத்திராகமம்
  • லேவியர் -லேவியராகமம்
  • எண்ணிக்கை -எண்ணாகமம்
  • இணைத் திருமுறை -உபாகமம்.
பைபிள் கதைப்படி கானான் என்னும் பகுதியை தேர்ந்தெடுத்து அதை, மெசப்படோமியாவைச் சேர்ந்த ஆபிரகாம் - அவர் வாரிசிஉகளுக்கு என இஸ்ரேலின் சிறு தெய்வம் கர்த்தர் கொடுத்தாராம். புதைபொருள் அகழ்வாராய்ச்சிகளில் இதில் சற்றும் உண்மையில்லை என இஸ்ரேல் டெலவிவ் பல்கலைக் கழக அகழ்வாய்வுத் துறைத் தலைவர் இஸ்ரேல் ப்ராங்ஸ்டைன் என்பவர் "பைபிள் தோண்டப்படுகிறது" என்னும் நுல்லை எழுதினார். அதே போல பஞ்சத்திற்கு பிழைக்க எகிப்து சென்ற எபிரேயர்கள் அடிமையாய் இருக்க 30 லட்சம் எபிரேயர்கள்களை கர்த்தர் ஆசியுடன் மோசஸ் வழிநடத்தினார். எகிப்திலிருந்து 40 வர்டங்கள் 30 லட்சம் எபிரேயர்கள் பயணம் செய்ததாகக் கதை. இப்படி ஒன்று நடந்ததாக புதைபொருள் ஆய்வுகள் ஏற்கவில்லை.  

எகிப்திலிருந்து யாத்திரை வரும்போது இஸ்ரேலின் சிறு எல்லை தெய்வம் யாவே தந்த சட்டங்கள்-என்பது கதை, ஆனால் இவை உருவானவிதத்தை பைபிளே கூறும் கதை.

இயேசுவும் அதை நம்பி அப்படியே சொன்னராம் 


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

மாற்கு 10:2 பரிசேயர் அவரை அணுகி, ' கணவன் தன் மனைவியை விலக்கிவிடுவது முறையா? ' என்று கேட்டு அவரைச் சோதித்தனர்.3 இயேசு அவர்களிடம் மறுமொழியாக, ' மோசே உங்களுக்கு இட்ட கட்டளை என்ன? ' என்று கேட்டார்.4 அவர்கள், ' மோசே மணவிலக்குச் சான்றிதழ் எழுதி அவரை விலக்கிவிடலாம் என்று அனுமதி அளித்துள்ளார் ' என்று கூறினார்கள்.5 அதற்கு இயேசு அவர்களிடம், உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே மோசே இக்கட்டளையை எழுதி வைத்தார்.6 படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள், ' ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்.7 இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான்.  8இருவரும் ஒரே உடலாய் இருப்பர். ' இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல்.9 எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும் ' என்றார்.
http://pagadhu.blogspot.in/2012/07/blog-post_26.html ஆனால் பழைய ஏற்பாடு உள்ளேயே மோசே சட்டங்கள் உருவான கதையைக் காணலாம்.

2இராஜாக்கள்23: 21 பிறகு அரசர் மக்கள் எல்லோரையும் பார்த்து, இவ்வுடன்படிக்கை நூலில் எழுதப்பட்டுள்ளதுபோல் உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்குப் பாஸ்கா கொண்டாடுங்கள்.22 இந்தப் பாஸ்காவைப்போல், முன்பு இஸ்ரயேலக்குத் தலைமை தாங்கிளய நீதித் தலைவர்களின் காலத்திலோ, இஸ்ரயேல், யூதா அரசர்களின் எல்லாக் காலங்களிலுமோ கொண்டாடப்பட்டதில்லை.23 யோசியா ஆட்சியேற்ற பதினெட்டாம் ஆண்டில் எருசலேமில் ஆண்டவரின் பாஸ்கா கொண்டாடப்பட்டது.
பஸ்கா, கூடாரப் பண்டிகை போன்றவை உண்மையில் விவாசய அறுவடைக் காலப் பண்டிகைகள். பஸ்கா, கூடாரப் பண்டிகை, பெந்தகோஸ்து போன்றவை உண்மையில் விவாசய அறுவடைக் காலப் பண்டிகைகள்.  லேவியர் 23:5- 31,33- 37 மற்றும் எண் 28:16- 31, 29:1- 15
விவசாயிக்ளின் அறுவடைப் பண்டிகைகளை -யாத்திரையோடு இணைக்கும் கதைகள், 600- 700 வருடம் இல்லாத அளவில் கொண்டாட்டமாம்.

இந்த ராஜா காலத்தில் மோசே சட்டம் தேடிக் கண்டுபிடித்தனராம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

2 இராஜாக்கள்22:8தலைமைக் குரு இல்க்கியா எழுத்தன் சாப்பானை நோக்கி, ஆண்டவரின் இல்லத்தில் ஒரு சட்ட நூலைக் கண்டெடுத்தேன் என்று சொல்லி, அந்நூலைச் சாப்பானிடம் கொடுக்க, அவனும் அதைப் படித்தான். 10 மேலும் அவன் அரசரிடம், குரு இல்க்கியா என்னிடம் ஒரு நூலைக் கொடுத்துள்ளார் என்று கூறி, அரசர் முன்னிலையில் அதைப் படித்துக் காட்டினான்.11 அரசர் சட்டநூலின் வார்த்தைகளைக் கேட்டதும் தம் ஆடைகளைக் கிழித்துக்கொண்டார்.12 பின் குரு இல்க்கியாவையும் சாப்பானின் மகன் அகிக்காமையும், மீக்காயாவின் மகன் அக்போரையும், எழுத்தன் சாப்பானையும் அரச அலுவலன் அசாயாவையும் நோக்கி, அரசர் இட்ட கட்டளை இதுவே:13 நீங்கள் போய் என்னைக் குறித்தும், மக்களைக் குறித்தும், யூதா முழுவதைக் குறித்தும் கண்டெடுக்கப்பட்ட இந்நூலில் என்ன எழுதப்பட்டுள்ளது என்று ஆண்டவரின் திருவுளத்தைத் தெரிந்து வாருங்கள்.16ஆண்டவர் கூறுவது இதுவே: யூதாவின் அரசர் படித்த அந்த நூலின் வார்த்தைகளின்படி, நான் இந்த இடத்திற்கும் அதில் வாழ்வோர்க்கும் தீங்கு வரச் செய்வேன்.17 ஏனெனில், அவர்கள் என்னைப் புறக்கணித்துவிட்டு, வேற்றுத் தெய்வங்களுக்குத் தூபம் காட்டினர். அவர்கள் தங்கள் கைவினையான சிலைகள் அனைத்தாலும் எனக்குச் சினமூட்டினர். எனவே இவ்விடத்தின்மேல் கொண்ட என் சினம் கனன்று எரியும்: அதைத் தணிக்க இயலாது.

இந்த ராஜா காலத்தில் மோசே சட்டம் தேடிக் கண்டுபிடித்தனராம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

ஆனால் பின் எஸ்ரா காலத்தில் இன்னொரு கதை
எஸ்ரா1:1 எரேமியா வழியாக வெளிப்படுத்தப்பட்ட இறைவாக்கு நிறைவேறும்படி பாரசீக மன்னர் சைரசின் முதல் ஆண்டில்தூண்டினார். எனவே சைரசு ஆணை ஒன்றைப் பிறப்பித்து, அதைத் தம் நாடெங்கும் எழுத்துமூலம் வெளியிட்டார்
எஸ்ரா3:2அப்பொழுது யோசதாக்கின் மகன் ஏசுவாவும் அவருடைய சகோதர குருக்களும், செயல்தியேல் மகனான செருபாபேலும், அவருடைய சகோதரர்களும், கடவுளின் மனிதரான மோசே திருச்சட்டநூலில்   எழுதியுள்ளபடி  எரிபலிகள் ஒப்புக்கொடுக்க இஸ்ரயேலின் கடவுளுக்கு ஒரு பலிபீடம் கட்டியெழுப்பினர்.
எஸ்ரா 4:11 மன்னர் அர்த்தக்சஸ்தாவுக்கு அனுப்பிய கடிதத்தின் உட்பொருள் இதுவே..
24 எருசலேமில் உள்ள கடவுளின் கோவில் வேலை தடைப்பட்டு, பாரசீக மன்னர் தாரியு ஆட்சியின் இரண்டாம் ஆண்டுவரைநிறுத்தப்பட்டிருந்தது.
எஸ்ரா6:14 இறைவாக்கினர் ஆகாயும் இத்தோவின் மகன் செக்காரியும் இறைவாக்கு உரைத்ததன் விளைவாக யூத மூப்பர்கள் கோவிலைக் கட்டினர்: வேலையும் முன்னேறிக்கொண்டிருந்தது. இஸ்ரயேலின் கடவுளது ஆணையாலும், பாரசீக மன்னர்களான சைரசு, தாரியு, அர்த்தக்சஸ்தா ஆகியோரின் கட்டளையாலும் அவர்கள் கட்டடப்பணியை முடித்தனர்15 மன்னர் தாரியு ஆட்சியின் ஆறாம் ஆண்டிலே, அதார் திங்கள் மூன்றாம் நாளிலே, கோவில் வேலை நிறைவுற்றது.
எஸ்ரா7:1இதன்பின், பாரசீக மன்னரான அர்த்தக்சஸ்தாவின் ஆட்சிக் காலத்தில் எஸ்ரா பாபிலோனிலிருந்து புறப்பட்டார்.
12 மன்னர்களின் மன்னரான அர்த்தக்சஸ்தா என்னும் நான் விண்ணகக் கடவுளின் சட்டத்தில் வல்லுநரான குரு எஸ்ராவிற்கு வாழ்த்துக்கூறி எழுதுவது:13 என் ஆட்சிக்குட்பட்ட இஸ்ரயேல் மக்களினத்திலும், குருக்களிலும், லேவியர்களிரும் விருப்பமுள்ளவர்கள் உம்மோடு எருசலேமிற்குச் செல்ல நான் அனுமதி வழங்குகிறேன்.
இம்மன்னர்களில்  தாரியு, அர்த்தக்சஸ்தா- 1, தாரியு- 2,அர்த்தக்சஸ்தா- 2  அர்த்தக்சஸ்தா- 3, தாரியு- 3 என்ற வரிசையில் பொ.மு.330 வரை ஆண்டதாக வரலாறில் கூறுகின்றனர்
பைபிளியல் அறிஞர்கள்படி- 4 பிரிவினர் - எல், யாவே என கடவுள் பெயரை வைத்து புனைந்தவர், ஜெருசலேமில் மட்டுமே என்னும் உபாகமக் குழு, யூதப் பாதிரிகள் லேவியருக்கெ உரிமை எனும் நான்கு பிரிவினர் புனைந்தனர்.இதில் மேலுள்ள ராஜா காலத்தில் உபாகம சிலவும், எஸ்ரா காலத்தில் சிலவும் வடிவு பெற, கி.மு. 3ஆம் நூற்றாண்டில் இன்றைய வடிவம் பெற்றது, எபிரேயத்திலும் கிரேக்கத்திலும் ஒரே சமயத்தில் தான் புனையப்பட்டது.
ஆனால் பழைய ஏற்பாடு புனையல் அடிப்படை- யூதர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், யூதர்களைக் காப்பாற்ற செங்கடல் இரண்டாகப் பிளந்து தூணாக நின்று வழிவிட்டதாகக் கதை. இஸ்ரேலின் ஆட்சி உரிமை அவர்களுக்கு என நிலை நாட்ட அரசியல் சூழ்ச்சியே இப்புனையல்கள்


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 ஆபிரகாம் - இசாக் கதை பற்றி யூதக் கலைகளஞ்சியம் சொல்வது-Jewish Encyclopedia,
"From the point of view of the history of culture these episodes are very instructive. But it is not very probable that Abraham would have run the risk twice. Moreover, a similar incident is reported in regard to Isaac and Rebecca (Genesis 34:6-11). This recurrence indicates that none of the accounts is to be accepted as historical; all three are variations of a theme common to the popular oral histories of the Patriarchs. That women were married in the way here supposed is not to be doubted. The purpose of the story is to extol the heroines as most beautiful and show that the Patriarchs were under the special protection of the Deity."
ஆபிரகாம் - இசாக் கதை பற்றி  யூதக் கலைகளஞ்சியம் சொல்வது
ஆபிரகாம் வாழ்வில் இரண்டுமுறை- மனைவி தங்கை என்பது வாய்ப்பில்லை.அதைவிட இதே சம்பவம் மகன் இசாக்-ரெபெக்கா காலத்திலும் என்பது இவை நம்புதலுக்கு உள்ளவை அல்ல என்பது தெளிவாக்கும். இக்கதைகள் பிதாக்கள் மனைவிகள் அழகானவர்கள்- இஸ்ரேலின் யாவே- சிறு தெய்வம் பாதுகாப்பு பெற்று இருந்தனர் எனக் காட்ட எழுந்த கதையே.
செங்கடல்-கதை New Catholic Encyclopedia Vol-5 page-745 “Mention of the Red Sea in the Exodus context is a misnomer to be attributed to early Septuaginal editorOne has to glance at any map to see the complete lack of relevance the Red sea has to the entire narrative of Exodus. The Hebrew term Yamsup signifies Reed sea. ” New Catholic Encyclopedia Vol-5 page-745
மோசஸ் எழுதியதான நியாயப்பிரமாணத்தில் செங்கடல் என வந்ததற்கு கிரேக்கர்கள்   தவறான மொழி பெயர்ப்பு  காரணமாம் -அமெரிக்க  கத்தோலிக்க  பல்கலைக்  கழகத்தின்  கத்தோலிக்க கலைக்களஞ்சியம் சொல்கின்றது.  இது  நியாயப்பிராமாணங்கள்  அல்லது  புனையப் பட்டதே பொ.மு. 300-200 வாக்கில் என்பதைநிருபிக்கும்.
“இஸ்ரயேலரின் வரலாறு”- – ஆர்,எட்வர்ட் சாம், தமிழ் தியொலொஜிகல் புக் க்லப், மதுரை 1996.( (First Edition in 1966; this is 3rd edition)
ஒருவேளை, இஸ்ரயேலர் எந்தக் காலத்தில் எகிப்துக்குள் சென்றனர் என்ற கேள்வியே தவறாயிருக்கலாம், ஏனெனில் இஸ்ரயேலர் என்ற சிறப்புப் பெயரோடு தனித்தியங்கிய மக்கட் கூட்டம் ஒன்று அக்காலத்தில் இருந்ததில்லை.- பக்- 60
இப்பயண வரலாற்றில் காணப்படும் பல இடங்கள் இன்னும் கண்டு பிடிக்கவில்லை. எனவே, பயணப் பாதை, எதுவெனத் திட்டமாய்க் கூறுவதற்கில்லை. செங்கடலைக் கடந்திருந்தாலும் எகிப்தியக் குதிரை படைகளால் பிடிபட்டிருப்பர். என்வே, இது சாத்தியமென்று கூறப்படும் அளவு அன்று செங்கடல் நீளமுள்ளதாயிருக்கவில்லை எனக் கருத இன்று சான்றுகளுண்டு. – பக்  90- 91
ஆதியாகமம் பெயர்தரும் ஒரு வரலாற்று மனிதர் பெயரைக்கூட புறச்சான்றுகளால் உறுதிப்படுத்த இயலவில்லை. முக்கியமாக, அவர்களின் பெயர்களில் ஒன்றாயினும் கல்வெட்டுக்களில் கிடைக்கவில்லை. எனவே, பொதுவான பொருளில் வரலாறு எழுதுவது இயலாத செயலே. பக் 49 


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 நூல்- : “நிஜங்கள்-விவிலியம் பற்றிய கேள்வி –பதில்” ; –கத்தோலிக்க பைபிளியல் பேராசிரியரும் திருச்சி சலேசிய மாநிலத் தலைவர் தெயோபிலஸ்இப்புத்தகத்திற்கு இரண்டு ஆர்ச் பிஷப்கள் என நிகில் ஒப்ஸ்டட் என்னும் முத்திரை அங்கிகாரம் கொடுத்து -முள்ளனர். 
தொடக்கத்தில் உள்ள முதல் 11 அதிகாரங்கள் சரித்திரத்தில் நிகழ்ந்தவை அல்ல என வல்லுனர்கள் கூறுகிறார்கள். மனிதன் தந்து சமுதாயத்தில் நிலவிய புதிர்களுக்க்ப் பதிலைத் தேடினர்(உ-ம் படைப்பு, பாவம், சாவு, துன்பம்…)இதற்குரிய பதிலகளைப் “படைப்பு” போன்ற புராண (mythological) கதைகள் வழியாகக் கூறுகிறான், படைப்பை எவரும் பார்த்தது கிடையாது, பார்க்கவும் முடியாது. மனிதனே இந்தப் படைப்பை இப்படிப் பற்றி புரிந்து கொண்டுள்ளதன் விளக்கமே, இந்தக் கதைகளில் கூறப்பட்டுள்ளது போலத்தான் நடந்தன என்று சொல்ல முடியாது. -- பக்கம் 15அதே சமயத்தில், ஆபிரகாமைப் பற்றி விவிலியத்தில் காணப்படுகின்ற அத்தனை சம்பவங்களையும் உண்மை வரலாற்று நிகழ்வுகளென யாரும் கருத முடியாது. ஏனெனில் விவிலியம் ஒரு இறையியல் வரலாறு. பக்௧17

 

  •   நியாயப்பிரமாணங்கள் பொ.மு.300- 200 இடையே புனையப் பட்டவையே.

மோசே இல்லவே இல்லை



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard