New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சானியா மிர்ஸா


Guru

Status: Offline
Posts: 24765
Date:
சானியா மிர்ஸா
Permalink  
 


ஹமீது ஜாஃப்பருக்கு வணக்கங்களும் வாழ்த்துக்களும்



மதிப்பிற்குரிய சகோதரரே,
தங்கள் திண்ணை கட்டுரை உணர்ச்சி பூர்வமாகவும் அறிவுப் பூர்வமாகவும் இருந்தது. முகமது கரீம் சாக்லா தமது சுயசரிதையில் தேசிய உணர்வுள்ள முஸ்லீம்கள், மதச்சார்பற்ற ஹிந்து தலைவர்களால் தனித்து விடப்பட்டார்கள் என்றும் மதச்சார்பற்ற ஹிந்து தலைவர்கள் மதவெறியை தூண்டிய இஸ்லாமியர்களையே இஸ்லாமிய தலைவர்களாக கருதி அவர்களை தாஜா செய்ய முற்பட்டதால் தேசிய உணர்வுடைய இஸ்லாமியர்கள் தமக்கு துரோகம் இழைக்கப்பட்டதாகவே உணர்ந்தார்கள் என்றும் கூறியுள்ளார். அன்புள்ள சகோதரர் ஜாஃபர் அவர்களே இப்பிரச்சனையில் மிகச்சிறந்த துணிவான ஒரு நிலைபாட்டை எடுத்துள்ள தங்கள் துணிவுக்கு வணக்கங்கள். இத்தனை நேர்மையான சுய-சமுதாய விமர்சனம் என்னிடம் உண்டா என என்னையே நான் கேட்டுக்கொள்கிறேன். தங்கள் திண்ணை கட்டுரையை இங்கு மீண்டும் உள்ளீடாக இடுவதில் நான் பெருமை அடைகிறேன்.நாம் பல விடயங்களில் முழுக்க முழுக்க வேறுபடுகிறோம் என்பதையும் நான் அறிவேன். எனவே இங்கு இக்கட்டுரையை இட்டிருப்பதால் எனது அனைத்து கருத்துகளையும் திரு.ஜாஃப்பர் ஏற்கிறார் என்பது பொருளல்ல. 
அரவிந்தன் நீலகண்டன்

இவர்கள் அறிவீனர்கள்

 

ஹமீது ஜாஃபர்



சானியா மிர்ஜா - ஔதருகின்ற சினிமா தாரகையுமல்ல, சின்னத் திரை சீரியலில் வரும் நட்சத்திரமுமல்ல. 110 கோடி மக்களின் ஔத வீசும் ஒரேயொரு டென்னிஸ் வீராங்கனை. இந்திய திருநாட்டிற்குப் பெருமைத் தேடி தரும் ஒரேயொரு வீர மங்கை.


அந்த பெண் விளையாட்டிற்காக அணிந்துள்ள உடையைப் பார்த்துவிட்டு பொருக்க முடியாத மார்க்க அறிஞர்கள் என்று பறைச் சாற்றிக்கொள்ளும் சிலர், அந்த உடை இஸ்லாத்திற்கு விரோத மானது, அணியக்கூடாதது, தடை செய்யப்படவேண்டியது, அப்படி இப்படி என்று ஃபத்துவா கொடுத்துள்ளார்கள் என்ற செய்தியை சன் தொலைக்காட்சியில் கேட்டபோது ஆயிரக்கணக்கான உள்ளங்களுடன் நானும் அதர்ச்சி அடைந்தேன்.


இவர்கள் அடிப்படைவாதிகளா? இல்லை இல்லை, இஸ்லாத்தின் பெயரைக் கெடுக்கவந்த அறிவீனர்கள், அபு ஜஹில்கள். படிக்கவேண்டும் அறிவைத் தேடவேண்டும் என்ற உண்மையான ஆர்வத்துடன் மதரஸாவுக்குச் சென்றிருந்தால் நல்ல கருத்துக்கள் வௌதவரும். எதோ வறுமைக்குப் பயந்து அங்கேயாவது நல்ல சோறு கிடைக்குமே என்ற எண்ணத்தில் ஐந்தேழு ஆண்டுகள் பெஞ்சைத் தேய்த்துவிட்டு வௌதவந்தால், இவர்களிடமிருந்து என்ன வௌதவரும்? இப்படிப்பட்ட தீர்ப்புகள்தான்! இவர்களுக்கு அல்லாஹ்வையும் தெரியாது, ரசூலையும் தெரியாது, குர்ஆனும் புரியாது, ஹதீஸும் விளங்காது.


பெண்கள் படிக்கக்கூடாது விளையாடக்கூடாது, வேலைக்குப் போகக்கூடாது என்று எங்கேயாவது இறைவன் சொல்லியிருக்கிறானா? இல்லை அவனது தூதர் ரசூல் (சல்) அவர்கள்தான் சொல்லியிருக்கிறார்களா? எதையும் சிந்தித்துப் பார்க்காமல் நீங்களாக ஒரு முடிவு எடுத்து ஃபத்துவா கொடுப்பதல்ல! பெரியப் பெரிய தலைப்பாவும் நீண்ட தாடியும், கையில் தஸ்பிஹ் மணியும் வைத்துக்கொண்டிருந்தால் மட்டும் போதாது? ஆழ்ந்த சிந்தனையும் தௌதவான அறிவும் வேண்டும். இப்படிப்பட்டவர்கள் ஏமாற்றுகாரர்கள் என்று அப்போதே இமாம் கஜ்ஜாலி (ரஹ்) அவர்களும் தக்களை ஞானி பீர் முஹம்மது அப்பா அவர்களும் சொல்லிவிட்டார்கள்.


பெண் என்பவள் ஆணுடைய இச்சையைத் தணிக்கக்கூடிய வடிகால் அல்ல; பிள்ளை பெற்று கொடுக்கக்கூடிய இயந்திரம் அல்ல; அடுப்படியில் அடங்கிக்கிடக்கும் அடிமையும் அல்ல. அவள் மென்மையானவள். இறைவனுடைய படைப்புகளிலேயே மிக புனிதமானப் படைப்பு பெண். இதை இந்த அறிவீனர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். உன்னிடம் வீரமிருந்தால் அவளிடம் விவேகம் இருக்கிறது; உன்னிடம் கோபம் இருந்தால் அவளிடம் சாந்தம் இருக்கிறது; உன்னிடம் ஆனவம் இருந்தால் அவளிடம் அரவணைப்பு இருக்கிறது; எல்லாவற்றிற்கும் மேலாக தன்னையே தியாகம் செய்யும் அந்த தாய்மை இருக்கிறது.


ஒரு பெண் விளையாடுகிறாள் என்றால் அதற்கென்று தனி பயிற்சி, தனி உடை இருக்கிறது. முஸ்லிம் பெண் என்பதற்காக புருக்கா அணியமுடியாது; ஹிந்து பெண் என்பதற்காக புடவைக் கட்டமுடியாது; கிருஸ்துவ பெண் என்பதற்காக நீண்ட அங்கி அணியமுடியாது. (Emphasis mine not author's) அவள் விளையாடும்போது நீ ஏன் அவளது அங்கங்களைப் பார்க்கிறாய்? அவள் முகத்தில் தெரியும் உணர்ச்சியைப் பார்; கண்களில் தெரியும் கூர்மையைப் பார்; பந்து எடுக்கும் லாவகத்தைப் பார்; அதை அடிக்கும் வேகத்தைப் பார். அப்போது புரியும் அவளது திறமை, துணிவு, சக்தி, வீரம், சாதுர்யம், அடக்கம் இவை அனைத்தும்.


முடிந்தால் எங்களுடன் சேர்ந்து அவள் வெற்றி மேல் வெற்றி பெற்று உலகில் முதலிடத்தைப் பெறவேண்டும் என்று பிரார்த்தனை செய்யுங்கள். இல்லாவிட்டால் ஒதுங்கி இருங்கள். அதுதான் உங்களுக்கும் நல்லது, இஸ்லாத்திற்கும் நல்லது.


அருஞ்சொற்கள்:

 

  • ஃபத்துவா - மார்க்க தீர்ப்பு
  • அபு ஜஹில் - அறிவீனனின் தந்தை, பெருமானார் காலத்து இஸ்லாத்தின் எதிரி
  • தலைப்பா - தலைப்பாகை
  • தஸ்பீஹ் - இறை திருநாமத்தை துதிக்க உபயோகப்படுத்தும் 100 மணிகள் கொண்ட மாலை
  • மதரஸா - அரபி பாடகசாலை
  • (சல்) - சல்லல்லாஹு அலைஹி வ சல்லம்
  • (ரஹ்) - ரஹ்மத்துல்லாஹி அலைஹி


Hameed Jaffer
e.mail: maricar@emirates.net.ae



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

சானியா மிர்ஸாவுக்கு மிரட்டல்


மதக்கோட்பாட்டின் படி ஆடை அணியாவிட்டால் சானியா மிர்ஸாவை விளையாடவிட மாட்டோம் என இஸ்லாமிய அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது. இதையடுத்து சானியாவுக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என கோல்கத்தா நகர காவல்துறை கூடுதல் ஆணையர் மோகன் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்....கோல்கத்தாவை சேர்ந்த ஜமாத்-இ-உலேமா-இ-ஹிந்த் எனும்a6e94642c6.jpg அமைப்பு சானியாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. இஸ்லாமிய மதக்கோட்பாட்டுக்கு எதிராக ஆடை அணிந்து விளையாடுவதை நிறுத்தாவிட்டால் சானியா மிர்ஸாவை விளையாடவிட மாட்டோ ம் என அந்த அமைப்பு மிரட்டியுள்ளதாகத் தெரிகிறது.... (தினமணி செய்தி : செப்டம்பர் 17-2005) முழு செய்தியும் இங்கே பார்க்க: தினமணி செய்தி
உண்மையிலேயே வருத்தமான விவகாரம்தான் இது. அந்த பெண்ணிற்கு தேவையற்ற மன-அழுத்தத்தை ஏற்படுத்துகிறார்கள். ஆனால் இவற்றை மீறி அவர் எழுந்து பிரகாசித்தால் இஸ்லாமிய சமுதாயத்திற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த பாரத பெண் சமுதாயத்திற்கே இது ஒரு ஆற்றலேற்றம் (empowerment) அளிக்கும். மேற்கு வங்க அரசு ஒவ்வொரு முறையும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளிடம் மண்டியிட்ட அரசு. உதாரணமாக தஸ்லிமாவின் நூலை தடை செய்தது; மதரசாக்களில் ஐஎஸ்ஐ செயல்பாடுகள் குறித்து கூறி பின்னர் மறுதலித்தது என பல உதாரணங்களைக் கூறலாம். மார்க்ஸியத்திற்கும் இஸ்லாமிய மேலாதிக்க வாதத்திற்கும் இருக்கும் சில இணைத்தன்மைகள் கூட இதற்கு காரணமாக இருக்கலாம். அல்லது பங்காலி பாபு திமியாக மாறிவிட்டதும் காரணமாக இருக்கலாம். 1c2de02c45.bmpஎதுவாயினும் வங்க அரசும் மிர்ஸாவை 'இஸ்லாமிய உடை' அணியக் கூறி வற்புறுத்தாமல் இருந்தால் சரி.பாரதத்தின் பெண் குழந்தைகள் நலம் குறித்த சர்வதேச நல்லெண்ண தூதுவராக தேர்வு செய்யப்பட்டுள்ள மூவரில் சானியாவும் ஒருவர் என்னும் முறையில் இந்த கீழ்த்தர மிரட்டல் பாரத இறையாண்மைக்கும் ஒரு சவால்.

இந்த உள்ளீட்டினைத் தொடர்ந்து பின்னோட்டத்தில் ஒரு நண்பர் ஒரு முக்கிய சுட்டியினை அளித்திருந்தார், அதனையும் அதனைத் தொடர்ந்து எனது பதிலையும் இந்த உள்ளீட்டுடன் இணைத்துள்ளேன். நண்பரின் பின்னோட்டம் சிவப்பு வர்ணத்தில் உள்ளது:
Arvindan,
This discussion on sania's dress looks funny.You might be interested in the website too.
http://www.jihadwatch.org/dhimmiwatch/archives/008066.php
I sent you an email before 10 days.Just an appreciation of your jainulabdeen and vedalam article.Maybe you were in bengal then. Good luck in your quest for truth.

எனது பதில்:
அன்புள்ள அநாநிமஸ்,

நீங்கள் தானா அது. மகிழ்ச்சியும் தங்கள் பாராட்டுகளுக்கு நன்றியும். பதிலளிக்காமைக்கு மன்னியுங்கள். சானியாவின் உடை குறித்த 'சர்ச்சை' 'funny' ஆக உள்ளதாக கூறியுள்ளீர்கள். It is not funny and it is disturbing. டெல்லியில் மாநில ஆட்சியில் பெண்களுக்கு உடை கட்டுப்பாடு கொண்டுவந்தபோது அதையும் நான் எதிர்த்தேன். ஒரு முக்கியமான பாஜக தலைவரிடம் நான் கூறிய வார்த்தைகளை கூறுகிறேன், "பெண்களின் உடை நீளங்களை குறித்து பத்வா அளிப்பதை இலட்சிய தேசத்தின் அறிகுறிகளாக கொள்பவர்களால் நல்ல நிர்வாகிகளாகவோ அல்ல தேச புனர் நிர்மாணம் என நீங்கள் ஏற்றெடுத்துள்ளதாக கூறுகிற கடுமையான முள் நிறைந்த பாதையில் நடக்கும் விவேகம் கொண்டவர்களாகவோ இருக்க முடியாது." மறைந்த சீதாராம் கோயல் கூட இதே வித கருத்தினைக் கொண்டிருந்ததாக பின்னர் அறிந்தேன். மிகக் கணிசமான அளவு ஸ்வயம் சேவகர்களிடமிருந்தே எனது கருத்துக்கு ஆதரவு கிடைத்தது. முக்கியமான விஷயம் என்னவென்றால் மிர்சாவிற்கு உடைக் கட்டுப்பாடு விதித்த தலை கழண்ட அஃறிணைகள் அனைத்து சமுதாயங்களிலும் உள்ளனர். ஆனால் இஸ்லாமில் அது 'being disgustingly funny' என்கிற அளவையும் தாண்டி ஏறத்தாழ ஒட்டுமொத்த அளவில் அதனை அவர்கள் வாழ்க்கை நெறி என்பது போல வலியுறுத்துவதும், அதனை மீறுபவர்களை எந்த அளவிற்கும் சென்று தண்டிக்க தயாரவதும் தான். தாங்கள் அளித்திருந்த சுட்டி முக்கியமானது. அதில் டால்பின் என்கிற பெயரில் ஒருவர் அளித்துள்ள உள்ளீடு இந்த 'சர்ச்சை'யின் முழு வேதனையை காட்டுகிறது.
-------------------------------------------------------

" Go back and reread her statements. Try reading between the lines. Try feeling her tone, her voice. It's faltering. She's scared. A thin thread of fear goes through her entire speech and is most vividuly manifested in the following sentence: "Every word I speak, every skirt I wear is discussed and analysed. I have to take all this in my stride. That's why these days I prefer to stay at home." Note the last sentence. She is already intimidated enough to spend her days in isolation from the rest of the world. Wherever she goes, she sees her former Muslim friends and supporters turning against her in a matter of days and even hours. Sania is learning a painful lesson. I think she gradually begins to understand where the true loyalties of her fellow Muslims lay. They're not with her. In Islam, the concept of personal loyalty isn't nearly as powerful as in the secularized cultures. What matters the most is loyalty to the word of God who has banned all possible displays of a female pride. When it comes to standing for Sania or standing for Islam, her friends make an abhorrent but fairly predictable choice: to stand for Islam. No one wants to be called an apostate. But, alas, that's not the worst part.It is at this age when having support in one's endeavours matters the most. The values and aspirations of a young mind haven't been shaped completely yet, and that's why encouragement from the closest people plays a crucial role in one's future career. Sania needs exactly that." And she doesn't get it an ounce of it.
Her own father, who once encouraged her to begin playing tennis, now seems to agree with the members of Ulema. See more here: He wants Women's Tennis Association to twist its regulations to allow Sania to wear proper Muslim clothing. Now, having said that, just imagine what happens behind the walls of Sania's house. She faces DAILY pressure from her closest relatives to start behaving 'properly'


----------------------------------------------------------
உங்களையோ என்னையோ சானியாவின் தகப்பனாரின் இடத்தில் வைத்து பாருங்கள். என்ன சொல்லுவோம், " மகளே உனக்கு ஏன் இந்த வம்பு. இந்த கிறுக்கனுங்க என்ன செய்வான்களோ தெரியாது. பேசாம நீயும் அந்த ஈரான் பொண்ணுங்க மாதிரி டிரெஸ் பண்ணிட்டு விளையாடு" என்று தானே சொல்லுவோம்? வெளியில் என்ன சொல்லுவோம்? பயந்து விட்டோம் என்றா? இஸ்லாமிய கலாச்சாரத்தின் உயர்வினை புரிந்து கொண்டோம் என்றுதானே?இஸ்லாம் வெற்றி பெறும், நமது தனி மனித சுதந்திரம் தோல்வியுறும் புள்ளி இதுதான். இஸ்லாமின் எதிரிகள் எனக் கருதப்படுவோர் மனங்களில் அச்சத்தை உருவாக்குவது ஜிகாதின் முக்கிய அம்சங்களில் ஒன்று. மீண்டும் தங்கள் சுட்டிகளுக்கும் கருத்துகளுக்கும் நன்றி.
மேலும் அறிய சுட்டிகள்:
இங்கே
ஜிகாத் வாட்ச்-திமி வாட்ச்
பிபிஸி-1
பிபிஸி-2



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard