New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அரிந்தம் சவுத்ரி


Guru

Status: Offline
Posts: 24603
Date:
அரிந்தம் சவுத்ரி
Permalink  
 


நானே சிறந்தவன் ஷாரூக்கான் எப்படி வெற்றிபெறுகிறார்?
 

அரிந்தம் சவுத்ரி | செப்டம்பர் 8, 2011 12:52
 


நானே சிறந்தவன்! தன்னைப் பற்றி ஷாரூக்கான் நானும் எனது மனைவி ரஜிதாவும் சேர்ந்து சமீபத்தில் எழுதிய புத்தகமான ‘தார்ன்ஸ் டு காம்பெடிஷன்’  வெளியீட்டு விழாவில் இவ்வாறு கூறினார். இது ஷாரூக்கானுடனான சாதாரண புத்தக வெளியீட்டு விழாவாகத்தான் அமைந்திருக்க வேண்டியது. ஆனால் அந்த  நிகழ்ச்சி வேறுமாதிரியாக அமைந்துவிட்டது. ஷாரூக் வெறுமனே புத்தகத்தை மட்டும் வெளியிடவில்லை. அந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு கருத்தையும் தனது வாழ்க்கையில் பொருத்திப் பார்த்து விவரமாகப் பேசினார்.  அது  எப்படி தன் வாழ்க்கை யில் பயணமாக மாறியது என்பதையும் குறிப்பிட்டார். அவர் அரிதாகவே தன்னைத் திறந்து பேசுபவர் என்பதால் இந்த முறை இது பற்றி எழுதவேண்டும் என நினைத்தேன். அவரது வாழ்க்கையின் இப்பகுதியைப் பற்றி தெரிவது ஒருவருக்கு நல்ல தூண்டு தலைக் கொடுக்கும். இந்தப் பெரிய மனிதனின் வெற்றிப் பயணத்தைப் புரிந்து கொள்வதற்கு மக்களுக்கு நான் எழுதுவது உதவிகரமாகவும் இருக்கும். இன்று காலை பேஸ்புக்கில் இதுகுறித்து ஒரு குறிப்பை எழுதினேன். இவ்விஷயம் குறித்து எழுதச் சொல்லி எனக்கு செய்திகள் குவிந்தன.


அவர் பேசியது குறித்து எழுதுவதற்கு முன்பு நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்பதை  ஒப்புக்கொள்ள  விரும்புகிறேன்.(அவர் தற்போதைய சூப்பர் ஸ்டார் நிலையை அடைவதற்கு முன்பே சபீனா என்னும் பொது நண்பர் வழியாக அவரை அறிந்திருந்தது அதிர்ஷ்டம்தானே!) அவர் ஐஐபிஎம் முக்கு வரும்போதெல்லாம் பேசுவது குறித்துச் சொல்பவர்கள் இதுபோல முன்பு அவர் பேசியதில்லை என்று சொல்வார்கள். அவர் ஐஐபிஎம்முக்கு வரும்போது மாணவர்கள் அவரை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதும் அவர்களுக்கு பொழுது போக்கைத் தருவது மட்டும் தன் வேலை இல்லை என்பதை அவர் உணர்ந்திருக்கிறார். அவர்கள் வாழ்வில் ஒரு செய்தியை விட்டுச் சென்று ஒரு வித்தியாசமான பாதையைக் காட்ட வேண்டும் என்று அவர் நினைத்திருக் கலாம். அந்தச் செய்திகள் மிகமிக அர்த்தப்பூர்வமானவை. அவரது வாழ்க்கையிலிருந்து பெறப்பட்டவை. அதேபோலவே புத்தக வெளியீட்டு விழாவுக்கு வரும்போதும் மேடையில் கற்றறிந்த மனிதர்களின் சூழலை பார்த்திருக்கிறார். கருத்துகளும் தத்துவங்களும் புழங்கும் உலகத்திற்குள் அங்குள்ளவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அவர் நடந்துகொண்டார் என்று நான் நினைக்கிறேன். 
மற்றவர்களிடமிருந்து அவரை தனித்துக்  காட்டுவது அவரது பிரம்மாண்ட வாசிப்புப் பழக்கம். நீங்கள் நல்ல வாசகராக இல்லாவிட்டால் பெரிய தலைவராக இருக்கவே முடியாது என்பதை நான் நம்புகிறேன். அமிதாப்பச்சனின் சமூக ஊடகச் செய்திகளைப் போலவே எனது நண்பர்களை ஷாரூக்கானின் செய்திகளையும் படிக்கச் சொல்வேன். அது வாழ்க்கையின் பல்வேறு முகங்களை எப்படிப் பார்ப்பது? அதை எப்படி புத்திசாலித்தனமான வார்த்தையில் வெளிப்படுத்துவது என்பதைக் கற்பதற்கு வழிகாட்டியாக இருக்கின்றன. அவர்கள் சம்பிரதாயமாக நாம் கருதும் அழகர்கள் அல்ல. அவர்களது கடுமையான உழைப்பு மற்றும் உறுதிவழியாகவே வெற்றி பெற்றுள்ளனர். 
இந்த நூலில் நாங்கள் T-H-O-R-N-S என்ற வார்த்தையின் ஒவ்வொரு எழுத்தையும் ஆறு வெல்லும் உத்திகளாகப் பிரித்துள்ளோம். சரியாக இலக்கை வையுங்கள் (Target it right),  எங்கே வலிக்கிறதோ அங்கே அடியுங்கள் (Hit  where  it hurts), இலக்கில் ஈடுபாட்டோடு இருங்கள் (Obsess with it), மறுகண்டுபிடிப்புச்  செய்யுங்கள் (Reinvent it), ஆணி அடியுங்கள் (Nail it), விற்பனை செய்யுங்கள் (Sell it).


ஷாரூக்கான் ஒரு நட்சத்திரமாக அறிமுகமானபோது, அவர் கடும் போட்டியைச் சமாளிக்க வேண்டியிருந் தது. மேலே சொன்ன விஷயங்கள் அவர் வாழ்க்கையில் எப்படி நேர்ந்தன என்று அவர் சொன்னார். உங்களது வாடிக்கையாளரை சரியாக அடையாளம் கண்டு இலக்கு வைப்பது முதல் நெறிமுறையாகும். ஷாரூக்கும் சரியான இலக்கை விதித்துக் கொண்டது முக்கியமானது. எல்லா நட்சத்திரங்களும் வாடிக்கையாளர்களைத்தான் தங்களது முக்கிய இலக்காகக் கொண்டு திருப்திப் படுத்தினால் ஷாரூக்கின் இலக்கு அதையெல்லாவற்றையும் தாண்டியது. அவர்  சினிமா துறைக்குள் நுழைந்த போது மிகவும் மெலிவாக இருக்கிறார் என்றும், கறுப்பாக இருக்கிறார் என்றும் வேகமாகப் பேசுகிறார் என்றும் சொன்னார்கள். அத்துடன் அவர் ஏன் சினிமா துறைக்குள் வர நினைக்கிறார் என்று அவரைக் கேட்டார்கள். மக்களை சிரிக்கவைப்பதற்காக என்று அவர் பதில் கூறினார். அதை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. பணம் சம்பாதித்து பணக்காரர் ஆவதற்கே சினிமாவுக்கு வருவதாக அவர்கள் கூறினார்கள். அது உண்மையாக இருக்கமுடியாது. ஏன் சினிமா நட்சத்திரம் ஆக விரும்புகிறீர்கள் என்று அவர்கள் கேட்டார்கள். அவர் அதற்கு தனது பெற்றோர்கள் இறந்துவிட்டதால் நட்சத்திரமாக விரும்புவதாகக் கூறினார். அத்துடன் தான் மிகப்பெரிய சினிமாக்களில் நடிக்க விரும்புவதாகவும் சொர்க்கத்தில் ஏதாவது ஒரு நட்சத்திரத்தில் அமர்ந்து தனது பெற்றோர்கள் எனது படங்களைப் பார்ப்பார்கள் என்றும் கூறினார். சொர்க்கத்தில் அமர்ந்து இருக்கும்போது சீனப் பெருஞ்சுவர் தெரிவதைக் காட்டிலும் என் மகனின் திரைப்படங்கள் தெளிவாகத் தெரிகின்றன என்று அவர்கள் கூறுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இன்று பூமியின் முகத்தை அவர் படங்கள் தழுவியிருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. அதுதான் அவரது இலக்கு. அந்த இலக்குடன் யாரும் போட்டியிட முடியாது. அது அவரின் தரமதிப்பீடு. அதனால்தான் அவர் தன்னை வெல்ல முடியாதவர் என நினைக்கிறார். அவரைப் பொறுத்தவரை இலக்குக்கு ஒரு லட்சியம் தேவை. அப்படி இருந்தால் தான் ஒருவர் வெல்லமுடியும்.


எங்கு வலிக்கிறதோ அங்கு அடிப்பது ஷாரூக்கானுக்கு அடுத்த முக்கியமான வழி. எங்களது புத்தகம் ஒப்பீட்டு விளம்பரத்தையும் போட்டிச்சூழலில் தகவல் சேகரிப்பைப் பற்றியும் பேசுகிறது. அவரோ சினிமா துறைக்குள் வரும்போதும் நிறையப் பேரை அடித்த உணர்வு இருந்ததாக நகைச்சுவையாக குறிப்பிட்டார். தற்போதும் அதே சூழல்தான். அவர் யாரும் இதுவரை போகாத பாதையில் பயணிக்க முடிவெடுத்தார். மோசமான குணபாவம் உள்ள கதாபாத்திரங்களில் நடித்தார். அவர் தற்போது இந்தியா இதுவரை காணாத பிரம்மாண்ட திரைப்படம் ஒன்றில் நடித்துவருகிறார். அப்படித்தான் கடினமாக தனது தாக்குதலைச் செய்கிறார். 


எங்களது நூலில் வாடிக்கையாளர் மற்றும் தேசத்திடம் ஈடுபாடாக இருப்பது ஒரு  நெறிமுறையாக  வகுக்கப்பட்டுள்ளது. ஷாரூக்கானும் தான் செய்யும் பணியில் ஈடுபாட்டுடன் இருக்கிறார். சினிமாவில் நடிப்பது, பணம் சம்பாதித்து குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கைக்கு உதவுவதற்காக என்று ஒருபோதும் அவர் சொல்லியதில்லை. அவரின் சந்தோஷத்திற்காகவே படங்களில் நடிக்கிறார். ஏனெனில் அவர் சினிமாவில் நடிப்பதை விரும்புகிறார். அதுதான் அவருக்கு மிகப்பெரிய ஈடுபாடாக உள்ளது. இன்றும் அவர் நள்ளிரவில் விழித்து கி..கி..கி கிரண் என்று கூறி தனது மனைவியை திடுக்கிட வைக்கிறார். ஒரு காமிராவின் பிளாஷ் விழும்போது ஒரு மனிதனின் ஆயுளில் ஒரு  நிமிடம்  எடுத்துக் கொள்ளப்படுகிறது என்று ஷாரூக்கானின் பாட்டி அவரிடம் கூறியிருக்கிறார். ஆனால் சினிமா மீதான அவர் காதல் எப்படிப்பட்டது என்றால் ஒரு நொடிப்பொழுதிலேயே வாழ்க்கை முடிவடையும் அளவுக்கு அதிகமான காமிரா பிளாஷ்கள் தன்மீது விழவேண்டும் என்று அவர் நினைக்கிறார்.(இ¢ன்னும் அவர் எழுதி முடிக்காத சுயசரிதையின் கடைசி வரியாக இது). அப்படித்தான் அவர் செல்லவேண்டும் என நினைக்கிறார். அப்படிப்பட்ட ஈடுபாடு அவர் வேலை யில் இருக்கிறது. இதுவே வெற்றிக்கு வழிவகுக்கும். மறு கண்டுபிடிப்புச் செய்வது அடுத்த நெறிமுறை. ஷாரூக்குக்கு அது தொடர்ந்த செயல் முறையாக உள்ளது. இன்றைய தலைமுறையினரைப் புரிந்துகொள்ள லேடி காகாவை தான் கேட்பதாகவும் பைரவி ராகத்தைக் கேட்பதில்லை என்றும் அவர் கூறினார். வாழ்க்கையில் மறுகண்டுபிடிப்புச் செய்துகொள்வது  என்பது  முக்கியமான அம்சமாகும்.


ஆணி அடியுங்கள் என்பது மற்றொரு நெறிமுறை. பொதுமக்கள் உளவியலில் நானே சிறந்தவன் என்று நம்பிச் சொல்லும்போது அது பதிந்து விடுகிறது. நானே சிறந்தவன் என்று கூறும்போது அது கூறுபவரின் மூளையிலும் உளவியலிலும் அவரே சிறந்தவர் என்று பதியப்பட்டுவிடுகிறது. அவர் முன்பைவிட கடுமையாக வேலை செய்யத் தொடங்குகிறார். ஷாரூக்கான் சிறந்த திறன்வாய்ந்த நடிகர்களுடன் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். அவரது மன அமைப்பில் நானே சிறந்தவன் என்ற மந்திரம் பதிந்த பிறகு ஒவ்வொரு காலையிலும் எழும்போதும் சிறந்த இலக்கைத் தேடி அலைகிறார். அதனால்தான் தன்னையே சிறந்தவர் என நம்ப முடிகிறது. தானே சிறந்தவன் என்ற சொல்லுக்கு ஏற்ப அவர் இரண்டு மடங்கு உழைக்கிறார்.


அடுத்தது விற்பதைப் பற்றி. எந்த சந்தை செயல்முறையின் முடிவும் விற்பதில்தான் இருக்கமுடியும். விற் பனையாகவில்லை என்றால் அதற்குப் பயன் இல்லை. ஷாரூக்கும் அதை மிகவும் நம்புபவர். அவர் கனவுகளை விற்பவர். இதுவோ நிஜ உலகம். நாம் எல்லோரும் சம்பாதிக்க வேண்டிய அவசியம் உள்ளது. நல்ல சம்பாத்தியம் வாழ்க்கையை மேலும் சுலபமாக்கு கிறது. அதனால் அவர்  ஒருபோதும் தன் திறமையை விற்பதிலிருந்து நழுவியவர் அல்ல. இரண்டு சிரிக்கும் முகங்களைப் பார்ப்பது அவருக்கு அவசியம். அதற்காக கைகளால் நிற்கவும் ஆடவும் தயார். 
வாழ்க்கைகூட இலவசமாக வருவதில்லை. அது மரணம் என்னும் விலை சீட்டுடனே தான் வருகிறது. நாம் எல்லோரும் தளராத வாலிபம், நரைக்காத முடி, குறையாத செல்வம் போன்ற தேடலில் இருக்கிறோம். இதற்கும் விலை இருக்கிறது. அதனால் அந்த விலையை நாம் ஏற்றுக்கொண்டு விற்பதை விருப்பத்துடன் செய்தால் எல்லா மதிப்புடன் இருக்கும். ஷாரூக் கிடம் மக்கள் கலையை விற்க வேண்டாம் என்று கூறுகிறார்கள். அவர் முடியாது என்கிறார். நான் இலவசமாக வருவதில்லை. நீங்கள் என்னை வாங்க முடியும் என்கிறார். நான் எதைச் செய்யவேண்டும்  என  விரும்புகிறீர்களோ அதையெல்லாம் செய்வேன். ஏனெனில் கனவுகளை விற்பதில் உறுதியான நம்பிக்கை உள்ளவன் நான் என்கிறார். பார்வையாளர் கூட்டத்தில் இரண்டு பேரின் முகங்களில் புன்னகையைப் பார்த்தால் போதும், நான் பெருமை யடையும் வியாபாரி! என்கிறார். மல்லிகா ஷெராவத் சொன்னதில் எந்த அதிசய மும் இல்லை. இந்த நாட்டில் இரண்டு பொருட்கள் விற்பனை ஆகும். ஒன்று செக்ஸ். இன்னொன்று ஷாரூக்! 
ஷாரூக்கான் எப்படி வெற்றிகரமாக தனது போட்டியாளர்களை வீழ்த்தினார் என்பதைத் தெரியாதவர்களுக்கு அவரது வெற்றி மந்திரம் இதுதான். போட்டிக்கே போட்டியைத் தருவது அது. இருப்பினும் எந்த கட்டத்திலும் தான்  தோல்வியையே   அடையமாட்டோம் என்ற கர்வம் இல்லை. எனது முந்தைய ‘உனக்குள் இருக்கும் வைரத்தைக் கண்டுபிடி’ நூலில் "வெற்றி என்பது கடைசியும் அல்ல. தோல்வி என்பது மரணமும் அல்ல" என்கிறார். இந்த பிரதான அணுகுமுறைதான் ஜெயிப்பவனுக்கு கருவியாக உள்ளது. "தோல்வி எனக்கு கடுமையாக உழைப் பதற்கு உற்சாகத்தை அளிக்கிறது. அதுதான் வெற்றியை பல இடங்களில் கொண்டு வந்திருக்கிறது. அதனால் தோல்வி அடையும்போது கடினமாக வேலை செய்யுங்கள். தோல்வி என்பது பிரமாதமான ஆசிரியர். எனது வாழ்க்கையில் வெற்றியைவிட தோல்வி அடையக்கூடாது என்றே விரும்பினேன்" என்கிறார். தனது அனைத்து தோல்விகளிலிருந்தும் கற்ற ஒரு மனிதர் அவர்.


இப்படியான மகத்தான உந்துதலின் வழியாகத்தான் இந்நூலில் சொல்லப் பட்டுள்ள  T-H-O-R-N-S  நெறிமுறைகளை தன் வாழ்க்கையின் அடிப்படையில் வைத்து விளக்குகிறார்.  நானே சிறந்தவன் என்ற மந்திரத்தை அவர் தொடர்ந்து நம்பவேண்டும். போட்டிக்கே போட்டியை வாழ்வு முழுவதும் தந்துகொண்டே இருக்கவேண்டும் என்று நம்பி வாழ்த்துவோமாக.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

அமெரிக்காவை தீவிர வலதுசாரிகளும் , இந்தியாவை தீவிர இடதுசாரிகளும் காலி செய்கின்றனர்!

 

அரிந்தம் சவுத்ரி | ஏப்ரல் 25, 2012 11:52
 


நான் எனது உரைப்பயணத்துக்காக கடந்த சில நாட்கள் அமெரிக்காவில் இருக்க நேரிட்டது. ஒவ்வொரு முறை நான் இங்கே வரும்போதும், இந்த வசீகரமான நாட்டைப் பற்றிய புதிய வசீகரமான விஷயங்களை கண்டுகொள்வேன். அமெரிக்காவை இடதுசாரி கருத்தியலாளர்கள் அதிகமாக வெறுத்தாலும் ஒரு விஷயத்தை ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். இங்கே பேச்சுரிமை என்பது மிகவும் நேர்மையாக கடைபிடிக்கப்படுகிறது. என்ன தோன்றுகிறதோ அதை எல்லாரும் வெளிப்படுத்தும் உரிமை உள்ளது. இந்த உரைப்பயணத்தில் நான் படித்த அனைத்து செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிக்கைகளிலும் ஒபாமாகேர் திட்டம் தொடர்பான சர்ச்சையாக இருந்தாலும் சரி, ப்ளோரிடாவைச் சேர்ந்த பதின்வயது இளைஞனை வெள்ளைக்காரர் ஒருவர் சுட்ட சம்பவமாக இருந்தாலும் சரி அதுதொடர்பான கட்டுரைகள், அபிப்ராயங்கள் மற்றும் பத்திகளைப் படித்தபோது மிகவும் வியப்பாக இருந்தது. அவற்றில் எழுதப்பட்டிருந்த கருத்துகள் இந்தியா போன்ற நாட்டில் கலவரங்களை ஏற்படுத்தியிருக்கும். இல்லையெனில் குறிப்பிட்ட பத்திரிக்கைகள் தடைசெய்யப்பட்டிருக்கும்.

அமெரிக்காவில் நடந்துகொண்டிருக்கும், எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் விவாதங்களையும், கருத்தியல் மோதல்களையும் படிப்பது எனக்கு மிகுந்த சுவாரசியமாக இருந்தாலும் ஒரு யோசனை தொடர்ந்து என்னைச் சுற்றிக்கொண்டே வந்தது. அங்குள்ள வலதுசாரிகள் தங்கள் கருத்தியலில் வைத்திருக்கும் பிடிவாதமும், எதார்த்தத்திலிருந்து விலகியிருப்பதும் தான் அது. அமெரிக்காவில் வலதுசாரிகள் இருப்பதைப் போலவேதான் இந்தியாவில் இடதுசாரிகள் நடந்துகொண்டிருக்கின்றனர். அமெரிக்காவில் உள்ள தீவிர வலதுசாரிக்குழுக்கள் இஸ்லாமின் மீதான வெறுப்பை போஷித்துக் கொண்டிருப்பது போல இங்குள்ள தீவிர இடதுசாரிகள் இந்துத்துவ எதிர்ப்பை கடுமையாக போஷித்துக் கொண்டிருக்கின்றனர். இதுபோன்ற பிடிவாதமான கருத்தியல் நிலைப்பாடுகளும், குருட்டு எதிர்ப்புநிலையும்தான் அவர்களது உலகப்பார்வையையே மறைத்து இரண்டு நாடுகளையும் படுகுழியில் தள்ளுகின்றன.
இந்தியாவில் இடதுசாரிகளின் தாக்கமும், அமெரிக்காவில் வலதுசாரிகளின் தாக்கமும் கொள்கை உருவாக்கத்தில் செலுத்தும் செல்வாக்கை நீங்கள் தெரிந்துகொண்டால்தான் அது எவ்வளவு அபாயகரமானது என்று தெரியவரும். 2008 இல் உலகளாவிய நிதித்துறையில் ஏற்பட்ட சீர்குலைவுக்கு அநியாயமான, பேராசை மனோபாவம் கொண்ட வங்கிகளும் அதன் கணக்கு தணிக்கையாளர்களும் தான் முக்கியமான காரணிகளில் ஒன்று. எல்லாருக்கும் இந்த விஷயம் தெரியும். வாஷிங்டன் மீது வால்ஸ்ட்ரீட் செலுத்தும் அதிகாரத்தை தாராளவாதியான ஒபாமா போன்றவர்களால் கூட அடக்கி ஒடுக்க முடியவில்லை. கார்ப்பரேட் லாபிகள் தான் தங்களது நலன்களுக்கேற்ப அனைத்து சட்டதிட்டங்களையும் வளைத்தன. அவர்களது செயல்களால் நாட்டுக்கு கெடுதல் வரும் என்று சொல்லப்பட்ட அனைத்து நேர்மையான விமர்சனங்களையும் புறம்தள்ளின. பணக்காரர்கள் மீது ஒரு சதவிகிதம் வரியைக்கூட உயர்த்துவதற்கு டீபார்ட்டியைச் மிதவாத குடியரசுக்காரர்களும், தீவிர நிலைப்பாடுள்ளவர்களும் ஒருவர் கூட ஒப்புக்கொள்ளவில்லை. பணக்காரர்கள் மீது செலுத்தப்படும் வரியை மேலும் குறைப்போம் என்றே கூறிவந்தனர். அப்போதுதான் அவர்களால் செல்வத்தையும் வேலைகளையும் உருவாக்கமுடியும் என்று சாக்குப்போக்கு கூறினார்கள். இரண்டாம் உலகப்போருக்குப் பின்னான 40 ஆண்டுகளில் நாட்டின் பௌதீக, சமூக உட்கட்டமைப்பில் முதலீடு செய்து வருவாய் ஏற்றத்தாழ்வுகளை பெருமளவு குறைத்ததுதான் அந்நாட்டின் பொற்காலமாக இருந்தது என்ற உண்மையை அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். இன்றைய அமெரிக்காவில் நடுத்தர வர்க்கத்தினர் மறைந்துகொண்டு வருகின்றனர். நாடு சீக்கிரத்தில் பெரும் செல்வந்தர்கள், பெரும் ஏழை ஆகிய இரு பிரிவுகளையே சந்திக்கப் போகிறது. தீவிர வலதுசாரிகள் அமெரிக்க கொள்கைத் திட்டமிடுதலில் தாக்கம் செலுத்துவதால் சலுகைகாட்டும் முதலாளித்துவமாக நாட்டை உருவாக்கும் பயங்கரம் நடந்துவருகிறது.
  
இந்தியாவில் இதேபோல் தீவிர இடதுசாரிகள் கொள்கை திட்டமிடுதலில் தாக்கம் செலுத்துகின்றனர். 2004 ஆம் ஆண்டிலிருந்து அவர்களது தாக்கம் பல திட்டங்கள் மற்றும் மசோதாக்களில் பிரதிபலித்தது. அவைகள் நன்றாக தெரிந்தாலும் அழிவுக்கானது. அரசு எல்லா இடத்திலும் தனது தலையீட்டை வைத்திருக்க வேண்டும் என்று இடதுசாரிகள் விரும்புகின்றனர். வறுமை ஒழிப்புக்கு ஜிடிபி வளர்ச்சிவிகிதம் அதிகம் இருக்கவேண்டும் என்பது மிக எளிய உண்மையாகும். ஆனால் அவர்களோ வறுமையை மறுபங்கீடு செய்யவும் மாய் பாப் சர்க்காரைத் தக்கவைக்கவும் விரும்புகின்றனர். தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தையே எடுத்துக்கொள்வோம். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு ஊழல் மற்றும் ஓட்டைகளால் நிறைந்து இந்த ஆண்டு அதற்கான பட்ஜெட் ஒதுக்கீட்டையே அரசு குறைக்கும் நிலை ஏற்பட்டுளது. கல்விக்கான உரிமைச் சட்டத்தையே பார்ப்போம். ஏழை மாணவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் பெரிய திட்டம் தான். ஆனால் தனியார் பள்ளிகளில் 100 சதவிகிதம் ஏழைக்குழந்தைகளுக்கு ஒதுக்கீடு அளித்தாலும்- நடுத்தர, பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் சேரமுடியாமலேயே போனாலும்- இன்னும் லட்சக்கணக்கான குழந்தைகள் நல்ல கல்வி கிடைக்காமல் வெளியே இருக்கும் நிலைதான் இருக்கும். போதுமான இடங்களுடன் போதுமான தனியார் பள்ளிகள் இங்கில்லை. இந்திய கிராமங்களில் தனியார் பள்ளிகள் இருக்கிறது என்று நீங்கள் நினைத்தால் அது சிரிப்பிற்குரியதுதான். அங்குள்ள ஏழைக்குழந்தைகளுக்குத் தான் தரமான கல்வி அவ்வளவு தேவையாக உள்ளது. தீவிர இடதுசாரிகளிடம் பொதுக்கல்வியை தரமுயர்த்துவது குறித்தோ,  ஆசிரியர்களையும் நிர்வாகிகளையும் பதில்சொல்லும் கடமை உள்ளவர்களாக மாற்றுவது பற்றியோ பேசினால் அவர்களது தொழிற்சங்க கூட்டாளிகள் எத்தனை புழுதி கிளப்புவார்கள் என்று உங்களுக்கே தெரியாது. இன்னொன்றையும் நான் சுட்டிக்காட்டியே ஆகவேண்டும். வகுப்புவாத வன்முறை மசோதாவும் இடதுசாரிகளின் முன்முயற்சிதான். அந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் ஒரு வகுப்புக் கலவரம் நடந்தால் இந்துக்கள் மற்றுமே குற்றவாளிகள். கடவுள்தான் இந்த நல்ல மனிதர்களிடம் இருந்து இந்தியாவைக் காப்பாற்றவேண்டும்.


அமெரிக்காவில் உள்ள வலதுசாரிகள் தங்கள் பக்கம்தான் கடவுள் உள்ளதாகவும் அதனால் வேறொன்றையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்ற நிலையில் இருப்பதுதான் அடிப்படைப் பிரச்னை. தீவிர இந்திய இடதுசாரிகளின் அடிப்படை பிரச்னையும் அதேதான். இவர்கள் விஷயத்தில் கடவுள் கிடையாது. கடவுளின் இடத்தில் மார்க்சோ மாவோவோ இருப்பார்கள். இது விநோதமானது சோகமுமான விஷயமாகும். உலகின் இரண்டு பெரிய ஜனநாயகங்கள் தீவிரவாதிகளின் வசம் உள்ளது.

  

(Disclaimer: The views expressed in the blog are that of the author and does not necessarily reflect the editorial policy of The Sunday Indian)


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

இந்தியாவின் ரத்த கோடீஸ்வரர்களின் ரகசியங்களை அம்பலப்படுத்துவதன் மூலம் சிஏஜியை அச்சத்திற்குரிய பெயராக மாற்றியிருக்கிறார் வினோத் ராய்!

 

அரிந்தம் சவுத்ரி | ஏப்ரல் 12, 2012 16:26
 

டிஎன். சேஷனைப் போல் இல்லாமல், மிகவும் இனிய மென்மையாக பேசும் அதிகாரியாகத் தெரிபவர் வினோத் ராய். எங்கள் நிறுவனத்தில் படித்த மாணவர்களுக்குப் பட்டம் கொடுக்கும் நிகழ்ச்சிக்கு அவர் வந்திருந்தபோது,  வினோத் ராயிடம் சேஷன் அளவு  துணிச்சலாக அரசை எதிர்க்க வில்லையே என்று எங்கள் இயக்குனர் குறிப்பிட்டார். அதற்குப் பதிலளித்த வினோத் ராய், அரசியல் சாசனம் அனுமதிப்பதைத்தான் செய்து கொண்டிருப்பதாகக் கூறினார். முதல் நிலையிலேயே மத்திய தலைமை கணக்குத் தணிக்கை அலுவலகத்தின் கண்டுபிடிப்புகளில் 90 சதவிகிதம் கைவிடப்படுவதாக பிரணாப் முகர்ஜி பகிரங்கமாக அறிவித்தது குறித்து அவர் என்ன சொல்லவிருக்கிறார்? “ஆம். ஒருவகையில் திரு. முகர்ஜி சொன்னது சரி. எங்கள் அலுவலகம் பல கேள்வி களை எழுப்புகிறது. பெரும்பாலான பிரச்னைகளுக்கு முதல்கட்டத்திலேயே திருப்தியான பதில்கள் கிடைத்து விடுகின்றன” என்று அமைதியாகவும், உறுதியாகவும் சிறிதும் சந்தேகமின்றி கூறினார். கொஞ்சம் பலவீனமாக இந்த நிலை தோற்றமளிக்கவில்லையா? இருக்கலாம். அவர் அரசியல் சாசனம் தனக்கு அளித்திருக்கும் வரம்புகளை மெதுவாக நெகிழ்த்துகிறார். அதை மறுவரையறை செய்து அரசை சத்தமாக பதில் அளிக்குமாறு வலியுறுத்துகிறார். இது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. எல்லா மனிதர்களும் ஒரே அணுகுமுறையை வைத்திருக்க முடியாது. தற்போதைய தேர்தல் ஆணையரான திரு. குரேஷி மென்மையாகப் பேசும் இயல்புடைய இசை விரும்பும் நபராவார். ஆனால் பீகார், வங்காளம் மற்றும் உ.பி. போன்ற ரத்தம் வடியும் இடங்களில் ஜனநாயகத்தை தழைக்கச் செய்திருக்கும் மனிதராக மாறி இருக்கிறார். அதேபோன்றே மென்மையாகப் பேசும் அதிகம் வெளிச்சத்தை நாடாத ஆனால் நேர்மை, தைரியம் மற்றும் கடப்பாட்டுடன் வேலை செய்வதன் மூலம் மத்திய தலைமை கணக்குத் தணிக்கை அலுவலகத்தை இந்தியாவில் அனைவருக்கும் தெரிந்த பெயராக மாற்றியுள்ளார் வினோத் ராய். தற்போதைய அரசு அவரது அறிக்கைகளைப் பார்த்து பயம் கொள் கிறது. ஏனெனில் அதிகமாய்  சமூகக் கண்காணிப்பும் ஊழலும் இருக்கும் இச்சமயத்தில் இதன் அறிக்கைகள் நெருப்பைப் பற்றவைப்பவையாக உள்ளன. சிஏஜி என்னும் அலுவலகம் என்ன செய்கிறது? அதன் வேலை ஏன் இத்தனை முக்கியமாக இருக்கிறது? இந்திய கோடீஸ்வரர்களின் பின்னணியில் இருக்கும் அவமான கதைகளை இந்த அமைப்பு வெளிகொணர்கிறது. வரி செலுத்தும் மக்களின் பணத்தையும் நாட்டின் நலன்களையும் தனியாருக்கு தாரைவார்ப்பதையும் அது அம்பலப்படுத்துகிறது.

நான் என்ன சொல்லவருகிறேன்? போர்ப்ஸின் கோடீஸ்வரர் பட்டியலில் இந்திய தொழிலதிபர்கள் 30க்கும் குறையாமல் இருக்கிறார்கள். இவர்களின் சொத்து 200 பில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல்.( நமது மக்கள் ஆண்டு முழுவதும் சம்பாதிக்கும் பணத்தில் 15%).  இந்தப் பட்டியலில் உள்ளவர்களில் மூன்று பேர் உலகப் பணக்காரர்களின் 20 பேர் பட்டியலில் தொடர்ந்து உள்ளனர். இந்தியாவை மிஞ்சும் மற்றொரு பொருளாதாரமாக ஒன்று அல்லது இரண்டு அதிக கோடீஸ்வரர்களுடன் அமெரிக்கா மட்டுமே உள்ளது. ஆசியாவில் இந்தியா மட்டுமே அதிகமான கோடீஸ்வரர்களை வைத்துள்ளது. அதற்கு அடுத்து ஜப்பான் பல ஆண்டு அற்புதத்தின் கதையாக இருக்கிறது. நான் வெளிநாட்டுக்குச் செல்லும்போது இதைக் கேட்பர். அவர்களிடம் உள்ள பில்கேட்ஸ், வாரன் பப்பட் போன்ற கோடீஸ்வரர்கள் பல்லாண்டுகள் தங்கள் பிராண்டுகளின் புகழை உயர்த்தும் செயல்முறைகள், ஆய்வு மற்றும் மேம்பாட்டுச் செயல்பாடுகள் ஆகியவற்றின் மூலம் சர்வதேச சந்தைகளைப் பிடித்து கோடீஸ்வரர்கள் ஆயினர். ஆனால் அதே பூமியில் சர்வதேச சந்தையில் ஒரு பிராண்டுகூட இல்லாமல், நாம் எப்படி இத்தகைய கோடீஸ்வரர்களை உருவாக்கியுள்ளோம்? பிஸினஸ் வீக் - இன்டர்பிராண்டில் 100 சிறந்த பிராண்டுகளை ஆய்வு செய்ததில் ஒன்றுகூட இந்தியாவினுடையது அல்ல. இதில் எந்த அதிசயமும் இல்லை. ஜப்பானியர்கள், பிரெஞ்சுக்காரர்கள், சுவிஸ், ஜெர்மானியர்கள், இத்தாலியர்கள் அனைவரும் சந்தையில் நூற்றாண்டுக்கும் மேலாக போட்டியிட்டு பிராண்டுகளை உருவாக்குவதில் கடும் முயற்சி செய்து, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் முதலீடு செய்து போட்டியில் தோற்று, போராடி மீண்டும் உயர்ந்து தங்கள் வளத்தை உருவாக்கி கோடீஸ்வரர்களாகிறார்கள். இப்படியான நிலையில், எப்படி கோடீஸ்வரர் பட்டியலில் இந்தியர்கள் இடம்பிடிக்கின்றனர்? பதில் மிகவும் சுலபமானது. ஊழல்கள் மூலமே அந்த உச்சகட்ட இடத்துக்கு இந்தியர்கள் வருகின்றனர். அத்துடன் தேசிய வளத்தை கொள்ளையடித்து தனியாரின் கைகளில் கொடுப்பதன் மூலம் அவர்கள் கோடீஸ்வரர்களாகிறார்கள். ஒரு உலகளாவிய பிராண்டைக்கூட உருவாக்காமல் கோடீஸ்வரர் களாகிறார்கள். ஆம். அதுதான் உண்மை.

இந்தியா விடுதலை அடைந்த பிறகு, நமது தொழிலதிபர்களுக்கு ஏகபோகம் செலுத்துவதற்கான சந்தை வாய்ப்புத் தரப்பட்டது. லஞ்சம் ஆட்சி செலுத்தும் நமது அதிகாரவர்க்கம்தான் இதற்குக் காரணம். பின்னர் அந்த தொழிலதிபர்களுக்கு பொதுத்துறை வளங்களான இரும்பு போன்றவை மானிய விலையில் கொடுக்கப்பட்டன. அப்படி வாங்கிய தனியார் நிறுவனங்கள் பேருந்துகள் மற்றும் டிராக்டர்களை செய்து சந்தையில் சரியான விலைக்கு விற்றன. இப்படி கிடைத்த லாபமும் செல்வமும் தனியார் துறையின் வரவு கணக்குகளாக மாறின. இந்நிலையில் பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தைச் சந்திக்கும் தோல்விகரமான நிறுவனங்களாக மிஞ்சின. இப்படித்தான் நமது இந்திய வர்த்தக நிறுவனங்கள் வளர்ந்து ஏகபோகம் செலுத்தும் ஊழல் கோடீஸ்வரர்களை முதல்கட்டமாக உருவாக்கியது. இப்படியான முதல் சோதனை, நம்மை மூன்றாம் உலக நாடாக மூன்றாம் தரத்திலேயே வைத்த நிலையில், இரண்டாம் கட்ட வளர்ச்சி தாராளவாதத்துக்குப் பின்பு தொடங்கியது. வரி கட்டும் மக்களின் பணத்தில் பிரம்மாண்ட உள்கட்டுமானம் மற்றும் நிலவசதிகளுடன் கூடிய நஷ்டம் ஏற்படுத்தும் பொதுத்துறை நிறுவனங்களை அரசு விற்கத்தொடங்கியது. ஆனால் அதற்கு சரியான விலையை வைக்கவில்லை. ஏனெனில் தொழிலதிபர்களிடம் இருந்து பெறப்பட்ட லஞ்சமோ நமது கற்பனைக்கும் அதிகமானது. தனியார்மயமான உலகில் அளப்பரிய வழிகளில் லஞ்சம் வாங்கி பொதுத்துறை வளங்களில் பெரும்பாலானவற்றை விற்ற பிறகு, இந்திய அரசுதான் உலகளாவிய பணக்காரர்களை உருவாக்கும் போட்டியில் இறங்கியது.  ஐஐபிஎம் சிந்தனைக்குழுமத்தினர் தேசிய நில கொள்ளைச் சட்டம் என்று அழைக்கும் ‘சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்’ என்ற பெயரால் நிலங்களை வழங்குவதன் மூலமும் கோடீஸ்வரர்கள் உருவாக்கப் படுகிறார்கள். அது இரண்டாம் அலைகற்றை விவகாரமாகவோ, நிலக்கரி சுரங்க விவகாரமாகவோ இருக்கலாம். கலிங்கா நகருக்கோ, குஜ்ஜாங்குக்கோ சென்று பார்த்தால் இந்த நிலைமை புரியவரும். கைவிரல்களுக்குள் அடங்கக்கூடிய சொற்ப நிறுவனங்கள் அளவற்ற நிலங்களையும், இயற்கை வளங்களையும் மலிவான விலைக்கு அரசியல்வாதிகளிடம் இருந்து பெற்று, வளங்களைக் கொள்ளையடித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கமுடியும். இவர்களில் இந்த நடவடிக்கைக்கு விலையாக ஆயிரக்கணக்கான ஏழை விவசாயிகளும், மீனவர்களும் தங்கள் பாரம்பரிய இடங்களிலிருந்தும் வாழ்வாதாரத்திலிருந்தும் வெளியேற்றப்படுகின்றனர். அரசு நிலத்தை கையகப்படுத்தும்போதெல்லாம் கடும் எதிர்ப்பும் யுத்தமும் ஏற்படுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

இவை எல்லாம் துரதிருஷ்டவசமாக இந்தியாவின் கதையாக மாறிவிட்டது. இன்னமும் ஏராளமான நிலங்களும், இயற்கை வளங்களும் நாட்டை ஆளும் மரண வியாபாரிகளால் விற்கப்படாமல் உள்ளன. அந்த இடத்தில் நின்றுதான் நமது தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி வினோத் ராய் உலகளாவிய கோடீஸ்வரர்கள் பட்டியலில் வளர்ந்து கொண்டிருக்கும் இந்திய கோடீஸ்வரர் களின் பின்னுள்ள ரகசியத்தை அமைதியாகவும், உண்மையாகவும் அம்பலப்படுத்திக்கொண்டிருக்கிறார். இதன்மூலம் சிஏஜியை அச்சத்திற்குரிய பெயராக அவர் மாற்றியிருக்கிறார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

அகிலேஷை அத்தனை சீக்கிரத்தில் விமர்சனம் செய்யவேண்டாம்

 

அரிந்தம் சவுத்ரி | மார்ச 30, 2012 14:54
 

உத்தரப்பிரதேசத்தில் நடக்கும் தேர்தல்கள் எப்போதுமே பரபரப்பாகவே இருந்துள்ளன. இந்த மாநிலத்தில்தான் அரசியல் தலைவர்கள் அடிக்கடி சர்ச்சைகளுக்குள் சிக்குவார்கள். சாதி அடிப்படையிலான அரசியல் என்றாலும் சரி, அரசியல் குற்றமயமாவதும் சரி,  ஊழல் முதல் சர்ச்சைகள் வரை அவர்கள் தொடர்ந்து எதிலாவது மாட்டுபவர்களாகவே உள்ளனர். இந்த ஆண்டு சர்ச்சை, புதிய வடிவை எடுத்திருப்பதுபோலத் தோன்றுகிறது. உ.பி.யில் எழுச்சி பெற்றிருக்கும் இளமையும் ஆற்றலும் கொண்ட தலைவரால், மேலே நான் சொன்ன சூழ்நிலை நிச்சயம் மாறும். பொதுக்கருத்துக்கு எதிராக சமாஜ்வாடி கட்சி திடீரென்று எழுந்து நின்று தேர்தல்களில் பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த அசாதாரண வெற்றிக்கான பெருமை முழுவதும் அகிலேஷ் யாதவையே போய்ச் சேரும். வெற்றிக்குப் பிறகும் இந்த இளம் அரசியல்வாதி தன்னை முதலமைச்சர் பதவிக்கு முன்னிறுத்தவில்லை.- ஆனால் வெற்றித் தீர்ப்பை அளித்த மக்களின் மனதைப் படித்த சமாஜ்வாடி கட்சி அகிலேஷை முதலமைச்சராக்க தீர்மானித்தது. இப்படித்தான் உத்தரப் பிரதேசத்தில் புதிய நட்சத்திரம் ஒன்று உதயமானது.

இந்தியாவின் பெரிய மாநிலமாக உத்தரப்பிரதேசம் இருக்கலாம். ஆனால் அது நிச்சயமாக நல்ல நிர்வாகம் நடக்கும் மாநிலம் கிடையாது. இத்தனைக்கும் இங்கிருந்துதான் அதிக தொகையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்படுகின்றனர். ஆனால் தலைமுறைகளாக அந்த மாநிலம் மதரீதியாக, சாதிரீதியாக பிளவுபட்டுப் போயிருக்கிறது. கடந்துபோன 20 ஆண்டுகள்தான் உத்தரப்பிரதேசத்துக்கு மிக மோசமான காலம் என்று சொல்லவேண்டும். மாயாவதியும், முலாயமும் சேர்ந்து மாநில அரசியலை ஒரு காட்டாட்சிபோல மாற்றிவிட்டார்கள். அகிலேஷ் யாதவ்  சரியான சமயத்தில் பொறுப்பேற்று, மாநிலத்தின் வளர்ச்சிக்குப் புத்துயிர் அளிக்கப்போவதாகக் கூறி, நேர்மறையான பிரச்சாரம் வழியாகவே ஈர்த்திருக்காவிட்டால் உ.பியில் கிட்டத்தட்ட சமாஜ்வாடி வீட்டுக்குப் போக வேண்டிய நிலையில்தான் இருந்தது. இன்றுள்ள இளைஞர்களின் பிரதிநிதி அவர்தான் என்பதை அவரது செயல்பாடுகள் உறுதிப்படுத்தின. அவரைச் சுற்றி புகழ்ச்சிகளும், எதிர்பார்ப்பின் நம்பிக்கை தோய்ந்த கண்களும் இருப்பினும் அவருக்கு முன்னால் சிக்கலானதும் சிரமமானதுமான பணி காத்திருப்பதை ஒருவர் உணரமுடியும். அவர் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து சில நாட்களிலேயே அந்தச் சிக்கல்கள் உணரப்பட்டன. எந்த ஊடகம் இந்த இளைஞன் குறித்து அத்தனை பாராட்டுகள் கூறிப் புகழ்ந்ததோ, அதே ஊடகங்கள்தான் அவர் தனது அமைச்சரவையை அறிவித்த உடன் ஒரே இரவில் கைகழுவவும் செய்தன. ஊரறிந்த ராஜா பையா தொடங்கி 47  அமைச்சர்கள்( அவரது அப்பா முலாயமோ 97 அமைச்சர்களை வைத்திருந்தார்) கொண்ட அமைச்சரவையை அகிலேஷ் அறிவித்தார். அவர்களில் 28 பேர் குற்றப்பின்னணி உடையவர்கள். உத்தரப் பிரதேசம் போன்ற ஒரு மாநிலத்தில் தேர்தல்களில் வெற்றிபெறுவது அத்தனை எளிதல்ல என்று மட்டும் என்னால் சொல்லமுடியும். எந்தக் கட்சியின் அமைச்சரவைப் பட்டியலும் இப்படித்தான் இருக்கும். காலிகளும், குண்டர்களும் அடைக்கலமாக வைத்திருந்த கட்சிக்குத்தான் அவர் இப்போது வாரிசாகப் பொறுப்பேற்றிருக்கிறார்.  தனது பிரசாரத்தின்போது அகிலேஷ் நேர்மையான வெளிப்படையான நிர்வாகமாகவும், விஞ்ஞானரீதியான வழிமுறைகள் மூலம் குற்றவாளிகளை ஒதுக்குவேன் என்றும் பிரசாரம் செய்து வலியுறுத்தினார். தற்போதைக்கு அவருக்கு ஏற்பட்ட அரசியல் நெருக்கடி இதன் காரணமானது என்று கொள்ளலாம். அவர் தனது அரசைக் காப்பாற்ற வேண்டுமெனில் அவர்களை உள்ளே சேர்க்காமல் இருக்கவும் முடியாது.

ஆனால், அவர் புத்திசாலித்தனமாக இந்த ரௌடிகள் அனைவருக்கும் தலைமையாக இருக்கும் நபரை தனது அமைச்சரவையில் சேர்க்கவேயில்லை.  பல்வேறு திசைகளிலிருந்து அழுத்தம் வந்தும் அவர் டி.பி. யாதவ்வை அனுமதிக்கவில்லை. இதனால் அவருக்கு சிறுபான்மையினரின் ஆதரவு கிடைத்தது. டி.பி. யாதவின் கொட்டத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தவர்கள் அவர்கள். அத்துடன் முக்கியமான துறைகள் அனைத்தையும் அகிலேஷ் தன்னிடமே வைத்துள்ளார். சமாஜ்வாடி கட்சி சார்பாக போட்டியிட்டவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் 40 வயதுக்குக் கீழே உள்ளவர்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் மருத்துவம், பொறியியல், நிர்வாகம் மற்றும் அறிவியல் பட்டப்படிப்புப் படித்தவர்கள்.

அகிலேஷின் அணியில் விட்டுவிடக்கூடாத ஒரு பெயர் அபிஷேக் மிஷ்ரா. இந்த 35 வயது மனிதர் காம்பிரிட்ஜில் பிஎச்டி முடித்தவர்; ஐஐஎம்-ஏயில் பேராசிரியராக இருந்தவர். அபிஷேக் செய்த வெற்றிகரமான உத்தி தேர்தல் அறிக்கையும் பிரச்சாரத் திட்டமும்தான்! எதிர்த்தரப்பை விமர்சிக்காத தேர்தல் பிரசார உத்தியை வகுத்ததும் ஊடகங்களில் விளம்பரங்கள் வருவதில் கவனம் செலுத்தியதையும் சொல்லலாம். அடுத்த சகா தாஜ் நாராயண் பாண்டே. இவர் அகிலேஷின் நெருங்கிய நண்பர். மாணவர் யூனியனின் துணைத் தலைவராக இருந்து மாணவரிடையே செல்வாக்குப் பெற்றவர். இவர் உள்துறை மற்றும் நிதி அமைச்சரவையைக் கவனிக்க உள்ளார். அத்துடன் முக்கிய துறைகளான நிர்வாகம், காவல், வரிவிதிப்பு மற்றும் பதிவு, கல்வி, வீட்டு வசதி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் பிறதுறைகள் இதன்கீழ்தான் வருகின்றன. வயதான, செயல்படுவதற்கு வாய்ப்பற்ற நபர்களுக்கு குறைந்த முக்கியத்துவமுள்ள துறைகளைத் தள்ளிவிட்டு விட்டு, சக்திவாய்ந்த துறைகளை கல்வியறிவு பெற்ற,  குறிப்பிட்ட துறையில் சிறப்புப் பயிற்சியுடையவர்களுக்கு அகிலேஷ் வழங்குகிறார். இவரது பாணியை மத்திய அரசும் பின்பற்ற வேண்டும்.

அகிலேஷ், மாயாவதியை மட்டும் எதிர்கொள்ளவில்லை.  ராகுல் காந்தியுடனும் மோதினார். அகிலேஷையும் ராகுலையும் பிரிக்கும் வித்தியாசம் எது? அகிலேஷின் பேச்சில் வளர்ச்சி மற்றும் மேம்பாடு குறித்து பேசப்பட்டது. எதிர்க்கட்சியை நோக்கிய தேவையற்ற சாடல்கள் இல்லை. இதற்கு முரணாக ராகுல்காந்தியிடம் இரண்டு கவனிக்கவேண்டிய பிரச்னைகள் இருந்தன. முதல் பிரச்னை ராகுல் காந்தி எத்தனைதான் கடினமாக அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டாலும், வாக்காளர்களை தனது ராஜ்ஜியத்தின் குடிமக்களாகப் பார்க்கும் தன்மை இருந்தது. சமீபத்தில் புழுதியைக் கிளப்பிய ஊழலுக்கு எதிரான பிரச்சாரத்தை உத்தரப்பிரதேச மக்கள் மறக்கவே மாட்டார்கள். அத்துடன் அகிலேஷ் இளைஞர்களையும் நவீனத்துவத்தையும் பிரதிநிதித்துவம் செய்தார். அவரது அப்பா முலாயம் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வியை எதிர்த்தவர். ஆனால் அதை அகிலேஷ் ஆதரித்தார். இலவச மடிக்கணினிகளை மாணவர்களுக்கு அளிப்பதாக அவர் வாக்குறுதி அளித்துள்ளார். ஆனால் அதற்கு நேரெதிராக ராகுல் பழைய புண்களை நினைவுபடுத்தி, பட்லா ஹவுஸ்  என்கவுண்டர் போன்ற செத்துப்போன நிகழ்ச்சிகளுக்கு உயிர் கொடுத்தார். அகிலேஷ்,  மிதிவண்டி வழியாகவே 10 ஆயிரம் கிலோ மீட்டர் யாத்திரை செய்ததும் ஆறு மாதங்களில் 800 ஊர்வலங்களை நடத்தியும் தனது எதிரிகளைவிட பல மைல்கள் முன்னணி யில் இருந்தார். இப்படித்தான்  ஒவ்வொரு வாக்காளரையும் நெருக்கமாகப் போய் பார்த்து, தனது கட்சியின் புதுப்பிக்கப்பட்ட கொள்கைகளை விளக்கமுடிந்தது. அகிலேஷ் அணுகமுடிந்தவராக இருந்ததோடு எளிமையாக மக்கள் உணர்ந்ததால் அவரது பெயர் எல்லா வீடுகளிலும் ஒலிக்கும் பெயர் ஆனது. தங்களது 24 பக்கத் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள அனைத்து வாக்குறுதி களையும் நிறைவேற்றுவோம் என்று அகிலேஷ் வாக்குறுதி அளித்துள்ளார். மற்றபடி பார்த்தாலும் அந்த தேர்தல் அறிக்கையில் வளர்ச்சியின் அனைத்து பரிமாணங்களும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தன.  தேர்தல் அறிக்கையில் அரசியல்ரீதியான இட மாறுதல்கள் உயர் அதிகாரிகளுக்கு இருக்காது என்பதும் அவர்களது நியமனம் மற்றும் இடமாறுதல்களுக்கு அவர்களது முந்தைய பணி சாதனைகளே பரிசீலிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. கல்வி மற்றும் ஆரோக்கியம் தொடர்பாக நவீனமாகவும் தேய்வழக்கு இன்றியும் இருந்தன. வேளாண்மை அபிவிருத்தி, கிராமப்புற உட்கட்டுமானம் மற்றும் உ.பி.க்கு முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாகவும் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தன.

தகவல் தொழில்நுட்பத்தில் வல்லவர் மற்றும் எளிதில் அணுகக்கூடியவர்கள் என்ற பிம்பத்தை நிர்வகித்துக்கொண்டே சமாஜ்வாடி கட்சியின் இளைஞர் பேஸ்புக் பக்கத்தையும் நிர்வகிக்கிறார். மற்ற கட்சிகளின் பக்கங்களைப் போலன்றி அர்த்தப்பூர்வமான விவாதங்கள் வசைகள் இன்றி அங்கு நடக்கின்றன.  காலவரிசைப்படிப் பேசினால், 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம், ஆங்கிலவழிக் கல்வியே இருக்கக்கூடாது என்ற சமாஜ்வாடி கட்சியின் பழைய கோஷத்தை மாற்றி புதிய தொழில்நுட்பம் சார்ந்த கல்வி என்பதாக அகிலேஷ் மாற்றியபோதுதான் இந்த மாற்றம் தொடங்கியது. ஆனால் மொத்த பிரச்சாரத்தின் போக்கும் 2011 ஆம் ஆண்டு நவம்பர் 22 ஆம் நாள், சமாஜ்வாடி கட்சி தனது புதிய இணையத்தளத்தை கொண்டுவந்தபோது மாறியது. இந்த இணையத்தளத்தில் தற்போது கட்சித் தலைவர்கள், கருத்தியல், வரலாறு, தலைமை, பிரச்சாரங்கள், வெற்றிகள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் அனைவரின் விவரங்களும் காணக்கிடைக்கின்றன.

அவரது அணியில் உள்ள பல்துறை திறனாளிகள் பழைமையான காலம்கடந்த பிரச்சார உத்திகளைக் களைந்து, புதிய அர்த்தங்களைக் கொடுப்பதில் உறுதுணையாக இருந்தனர். நவம்பர் 22 ஆம் தேதி கொடுக்கப்பட்ட ஒரு சிறப்பு விளம்பரம் இது. “சுதந்தரக் கருத்துகளும், அபிப்ராயங்களுக்குமான யுகம் இது. நமது நலம் விரும்பிகள் மற்றும் நண்பர்களுடன் தொடர்ந்து தகவல் பரிமாறிக்கொள்ளும் தேவை இருக்கிறது. மூடிய கதவுக்குப் பின்னர் இருப்பவர்களுக்கன்றி மக்களுடன் இருப்பவர்களுக்குத்தான் இந்த உலகம் சொந்தம். எப்போதும்... எல்லா காலங்களிலும்” சமாஜ்வாடி கட்சியின் விளம்பரங்கள் அனைத்தும் சமூக வளர்ச்சித் திட்டங்கள் பற்றியே பேசின.

இதையெல்லாம் கூறும்போது அகிலேஷ் வந்தார். பார்த்தார். வென்றார் என்று அர்த்தம் அல்ல. இத்தனை வெற்றியும் கடுமையான திட்டமிடுதல், அர்ப்பணிப்பு மற்றும் கடும்முயற்சியால் சாத்தியமானது. அவரால் தன்னைச் சுற்றி காந்த ஈர்ப்பை ஏற்படுத்த முடிந்தது. அகிலேஷின் வாக்குறுதிகளையும் பண்புகளையும் தொடக்க அரசியல் கட்டாயங்கள் கொஞ்சம் மூடி வென்றுள்ளன. ஆனால் அவரது அமைச்சரவையை வைத்து அவர் பற்றி முடிவை எடுத்துவிடக்கூடாது. இந்த அமைச்சரவையை மீறியும் அவர் தனது பணிகளைச் செய்வதற்கு நாம் அவகாசம் தருவோம். மாயாவதியின் மோசமான ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தவர் அல்லவா. அந்த ஒரு காரணத்தை முன்னிட்டாவது அவருக்கு தனது திறனை நிரூபிக்க கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டியது அவசியம்.

 


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

ராகுல் காந்திக்கு ஒரு பட்ஜெட்

 

அரிந்தம் சவுத்ரி | மார்ச 5, 2012 16:36
 

ஊழலை ஒழிப்பதில்தான் இந்தியா மற்றும் அதன் எதிர்காலத் தலைவர் இருவரின் எதிர்காலமும் உள்ளது. ஊழலை ஒழிக்க இந்தப் பட்ஜெட்டை பிரணாப் முகர்ஜி எப்படிப் பயன்படுத்தலாம்?

பிப்ரவரி 28, 1958:   “நாம் பயன்படுத்தும் நடைமுறை களை தொடர்ந்து மறுபரிசீலனை செய்யத் தயாராகும் வேளையில், அது அவசியமாக இருக்கும் நிலையில் நமது எல்லா பலத்தையும் பயன்படுத்தி, நமது வளங்கள் அனைத்தையும் பாதுகாத்து, வளர்ச்சியை திட்டமிட்டு உற்பத்தியை பெருக்கும்போதும் முற்போக்கான சமத்துவமான பகிர்வை முயற்சிக்கும்போதும் பெருந்திரளான நமது மக்களின் தரங்களை உயர்த்துகிறோம்.” ஜவஹர்லால் நேரு, மத்திய நிதியமைச்சராக.

பிப்ரவரி 28, 1970: “சமூகப் பொருளாதார அரசியல் ஸ்திரத்தன்மை என்பது உற்பத்தி சக்திகளில் வளர்ச்சி ஏற்படாமல் தேசிய வளத்தின் சேர்மானம் இல்லாமல் சாத்தியமில்லை என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கூற்றாகும். அத்துடன் அத்தகைய வளர்ச்சியும் வளத்தின் அதிகரிப்பும் சமூகத்தின் பலவீனமான பகுதியினர் நலமாக இல்லையெனில் நீடிக்காது.” இந்திரா காந்தி, மத்திய நிதியமைச்சராக.

பிப்ரவரி 28, 1987: “29 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டின் நிதிநிலை அறிக்கையை சமர்ப்பிக்கும்போது ஜவஹர்லால் நேரு இந்த மன்றத்தில் பேசியது இது...  நமது எல்லா பலத்தையும் பயன்படுத்தி நமது வளங்கள் அனைத்தையும் பாதுகாத்து வளர்ச்சியை திட்டமிட்டு உற்பத்தியைப் பெருக்கும்போதும் முற்போக்கான சமத்துவமான பகிர்வை முயற்சிக்கும்போதும் பெருந்திரளான நமது மக்களின் தரங்களை உயர்த்துகிறோம். எங்களது அடிப்படையான நோக்கங்களாக இருப்பது வறுமை ஒழிப்பு மற்றும் வலுவான நவீன தன்னிறைவான சுயேட்சையான பொருளாதாரத்தை உருவாக்குவது” ராஜிவ் காந்தி, மத்திய நிதியமைச்சராக.
உங்களில் சிலருக்கு எப்படி மேற்சொன்ன மூன்று முன்னாள் பிரதமர்களும், மத்திய நிதியமைச்சர் பொறுப்பையும் சுமக்க நேரிட்டது என்பது தெரிந்திருக்கும். இந்த சுவாரசியமான வரலாற்றை தெரியாதவர்களுக்கு ஒரு சின்ன பின்னோட்டம். 1958-ல் முந்ரா ஊழலில் அப்போதைய நிதியமைச்சர் டி.டி. கிருஷ்ணமாச்சாரிக்கு தொடர்பிருப்பதாக நேருவின் மருமகனும் இந்திரா காந்தியின் கணவருமான பெரோஸ் காந்தி கேள்வி எழுப்பினார். இதனால் 1958 பிப்ரவரியில் டி.டி.கே. ராஜினாமா செய்தார். தாற்காலிகமாக நேரு நிதியமைச்சர் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார். 1969-ல் காங்கிரஸ் கட்சி பிளவுண்டது. அப்போதைய மத்திய நிதியமைச்சர் மொரார்ஜி தேசாய் பதவியிலிருந்து விலகிவிட்டார். தேசாய் விலகிய பிறகு இந்திரா காந்தி நிதியமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இந்திராவுக்கும் ராஜிவ் காந்திக்கும் விசுவாசமான ஆதரவாளராக இருந்த வி.பி. சிங், 1987-ல் பட்ஜெட்டை சமர்ப்பிக்கத் தயாரானார். ஆனால் ராஜிவ்காந்தி சிங்கை மாற்றிவிட்டு தானே பட்ஜெட்டை சமர்ப்பித்தார். சில வாரங்களிலேயே போபர்ஸ் ஊழல் அவரை குறிவைத்தது.

இம்முறை  எனது 12வது தொடர்ச்சியான மாற்று பட்ஜெட்டை சமர்ப்பிக்க இருக்கும் நிலையில், ஏன் நான் வரலாற்றை எழுதுகிறேன் என்று உங்களில் பலர் யோசிக்கலாம். இந்த பட்ஜெட்டுக்கான தலைப்பான ராகுல் காந்திக்கு ஒரு பட்ஜெட் என்ற தலைப்பைக் குறித்து நீங்கள் சிந்திக்கக்கூடும்.  இரண்டாவதை முதலில் கூறிவிடுகிறேன். ஆகஸ்டு 2010&ல் திடீரென்று ராகுல் காந்தியின் அலுவலகத்திலிருந்து  அழைப்பு வந்தது. நான் அவரைப் பார்க்க எந்த வேண்டுகோளையும் விடுத்திராததால் ஆச்சரியப்பட்டேன். இருந்தாலும் சென்றுபார்க்கலாம் என்று கருதினேன்.  அவருடன் நிகழ்ந்த சிறிய சந்திப்பில் அவர் என்ன செய்யவேண்டும் என்று  நான்  விரும்புவதாக கேட்டுக்கொண்டே இருந்தார். நான் இதுபற்றி எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சென்றிருந்ததால், ஐஐபிஎம் சிந்தனைக் குழுமம் ஒவ்வொரு ஆண்டும் சமர்ப்பிக்கின்ற மாற்று பட்ஜெட் பற்றிக் குறிப்பிட்டேன். அதுபற்றி நிறைய கேள்விகள் கேட்டார். அடுத்த முறை என்னுடைய மாற்று பட்ஜெட்டின் ஒரு நகலை அனுப்பி வைக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். பிப்ரவரி வந்ததும் நான் அதை அனுப்பினேன். அவருடைய அலுவலகத்திலிருந்து எந்த எதிர்வினையும் இல்லை. அரசு பட்ஜெட்டில் விவசாயிகளின் நிலையை  மாற்றுவதற்கான  என்னுடைய  எந்தக் கருத்துகளையும் கணக்கில் கொள்ளவில்லை. 2014&ல் ராகுல் காந்தி பிரதமராவதற்கு பெருமளவுக்கு வாய்ப்பு இருப்பதால்(இந்தியாவில் வரலாறு திரும்பத் திரும்ப நிகழ்கிறது. அவருடைய கொள்ளு தாத்தா, பாட்டி, தந்தை ஆகியோரைப் போலவே அவரும் பட்ஜெட்டை எதிர்காலத்தில் சமர்ப்பித்தாலும் நான் ஆச்சரியப் படுவதற்கில்லை) அவருக்கே நேரடியாக இந்த பட்ஜெட்டை அளித்தால் என்ன என்று நினைத்தேன். பிரணாப் முகர்ஜியைவிட அவர் இதை கவனிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக நான் நம்புகிறேன். அத்துடன் பிரணாப் முகர்ஜி இந்த ஆண்டின் பட்ஜெட்டை ராகுல்காந்தியின் எதிர்கால பிரதமர் வாய்ப்புகள் குறித்து மனதில் வைத்துக்கொண்டு சமர்ப்பிப்பார் என்று நான் உறுதியாக கருதுகிறேன்.

ஆனால், நான் கூறிய  வரலாறு  இந்தியாவின் எதிர்காலத்தோடு மிகவும் தொடர்புடையது. நேரு, இந்திரா, ராஜிவ் ஆகியோர் நிதியமைச்சர்களாக பேசியதை நான் குறிப்பிட்டதற்கான காரணங்கள் இரண்டு. ஒன்று இவர்கள் மூவருமே இந்தியா மீது அக்கறை கொண்டவர்கள். தங்கள் வழியில் இந்தியாவில் ஏழ்மையைக் குறைப்பதற்கு முயற்சி செய்தவர்கள். இரண்டாவது அவர்கள் தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணம் ஊழல். அது நேரு காலத்தில் உருவாகி, இன்று ராகுல் காந்தி காலத்தில் மிகப்பெரிய புற்றுநோயாக உருவாகியுள்ளது. 2014 மக்களவை தேர்தலில் ஊழலும் நல்ல நிர்வாகமும் பெரிய பங்கு வகிக்கும். இந்தியாவிலிருந்து ஊழலை ஒழிப்பதற்கு தாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று காட்டுவதற்கு 2014க்கு முன்பாக இருக்கும் இரண்டு பட்ஜெட்டுகள் டாக்டர் முகர்ஜிக்கும் நேரு குடும்ப வாரிசுக்கும் இறுதி வாய்ப்பாக அமைந்துள்ளன. ராகுல் காந்தியின் அரசியல் எதிர்காலம் இதை சார்ந்துள்ளது. மிக முக்கியமாக இந்தியாவின் எதிர்காலமும் இதை சார்ந்துள்ளது.

2009-ல் ஐமு கூட்டணி வியப்புக்குரிய முறையில் வெற்றி பெற்று காங்கிரஸ் அதைவிட ஆச்சரியமான முறையில் 200 மக்களவை இடங்களையும் வென்றபோது, நான் என்னுடைய மாற்று பட்ஜெட்டை ‘சுருட்டிக்கொண்டே உதவும் பட்ஜெட்’ என்ற தலைப்பில் வெளியிட்டேன். இந்த தலைப்பைக் கண்டு சிலர் புருவங்களை உயர்த்தினார்கள். என்னுடைய நிலைப்பாடு எளிதானது: அழுகிப்போன ஓர் அமைப்பை மக்களாட்சி முறையில் ஒரே நாளில் மாற்றிவிட முடியாது. ஆனாலும் வறுமை, சமத்துவமின்மை, கல்வி, சுகாதாரம், நிர்வாகம் ஆகியவற்றில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய திட்டங்களை ஊழல் தொடர்ந்தாலும்கூட டாக்டர் முகர்ஜி செயல்படுத்த முடியும் என்பதாகும். 

அதில் ஒரு பரிந்துரையானது பின்வரும் தலைப்பில் கொடுக்கப்பட்டது. ஏழைகள் கணக்கெடுப்பு மற்றும்  பயோமெட்ரிக் கார்டுகள். அதில், “நிதியமைச்சர் மேலும் 2000 கோடியை ஒதுக்கி ஏழைகளுக்கு பயோமெட்ரிக் போட்டோ அடையாள அட்டைகளை தேர்தல் ஆணையத்தின் உதவியோடு கொடுக்கவேண்டும். 250 மில்லியன் இந்தியர்கள் இந்த அட்டைகளைப் பெற்று நலத்திட்டங்களையும் ஆதாரங்களையும் பெறுவார்கள். பல தகுதியற்ற நபர்கள் இந்த சென்செஸுக்குள் இடம்பெறுவார்கள். பல தகுதியுள்ள ஆட்கள் வெளியே இருப்பார்கள் என்பது இந்தியாவில் நடக்கக்கூடியது. ஆனால் நாம் இந்த பட்ஜெட்டில் முழுமையை அடைவது பற்றிப் பேசவில்லை” என்று கூறினேன். 2009&ல் என்னுடைய மாற்று பட்ஜெட்டை முன்னாள் இன்போஸிஸ் தலைவர் நந்தன் நிலக்கேனியும், டாக்டர் முகர்ஜியும் படித்திருப்பார்களா என்பது எனது சந்தேகம். ஆனாலும் சில மாதங்கள் கழித்து அரசு தனித்துவ அடையாள அட்டை திட்டத்தை அறிமுகப்படுத்தியபோது நான் மகிழ்ச்சி அடைந்தேன். இன்று இந்தியாவில் பல மாவட்டங்களில் பயோமெட்ரிக் கார்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன என்பது நம்பிக்கையூட்டுகிறது.

இந்த நாட்டின் குடிமக்களுக்கு விரக்தியை ஏற்படுத்தக்கூடியதாக ஊழல் இருக்கிறது. மனிதவளக் குறியீடுகளில் நமது நாடு மிகவும் கீழ்த்தரத்தில் இருப்பதற்கு முக்கிய காரணம், ஏழ்மையோ, வளமின்மையோ அல்ல. ஊழலும், தரமற்ற நிர்வாகமும்தான். எவ்வளவோ வாக்குறுதிகள், 65 மத்திய பட்ஜெட்டுகள் ஆகியவற்றுக்குப் பிறகும் இந்தியா 125 என்ற நிலையிலே தரப்பட்டியலில் இருக்கிறது. 400 மில்லியன் இந்தியர்கள் இன்னும் கல்லாதவர்கள்.  750 மில்லியன் இந்தியர்களுக்கு அடிப்படை சுகாதார வசதி இல்லை, 1000 மில்லியன் இந்தியர்கள் மருத்துவத்துக்கு தங்கள் சொந்த குடும்பப் பணத்தை செலவழிக்கிறார்கள். லஞ்ச ஊழல் குறியீட்டையோ அல்லது போட்டித்திறன் குறியீட்டையோ அல்லது வேறு எந்தக் குறியீட்டையோ பாருங்கள். இந்தியா தன்னுடைய ஏழைகள், திக்கற்றவர்களை கவனித்துக்கொள்வதில் மோசமான இடத்திலேயே உள்ளது என்பது தெரியும். 2004லிருந்து ஐமு கூட்டணி பல சமூகநலத்திட்டங்களை அறிவித்தும் இதேநிலைதான். 
ஊழல் எப்படி நம்மைப் பாதிக்கிறது என்பதைப் பார்க்க இன்னொரு வழி உள்ளது. 1980களில் ராஜிவ் காந்தி, சமூகநலத் திட்டங்களுக்காக செலவழிக்கப்படும் பணத்தில் 85 சதவிகிதம் ஊழலில் சுருட்டப்படுகிறது என்றார். தகவல் அறியும் உரிமைச் சட்டம், ஊடகங்கள், நீதித்துறை கண்காணிப்புகள் எல்லாம் இருந்தும் ஊழல் மேலும் அதிகரித்துள்ளது. ஐமு கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு மத்திய அரசும் மாநில அரசுகளும் 25 லட்சம் கோடி ரூபாயை கல்விக்காகச் செலவிட்டுள்ளன. திட்டமிட்ட,  திட்டமிடாத  செலவினங்கள் இதில் அடங்கும். ராஜிவ் காந்தி அதிகமாக கூறிவிட்டார், 50 சதவிகித நிதி மட்டுமே சுருட்டப்படுகிறது என்று வைத்துக்கொண்டாலும், 10 லட்சம் கோடி ரூபாய் கல்வியின் பெயரால் சுருட்டப்பட்டுள்ளது. சுகாதாரம், நீர்ப்பாசனம், கிராமப்புற மின்மயமாக்கல், சாலைவசதி  போன்றவற்றை  கணக்கில்  எடுத்துக்கொள்ளுங்கள். ஊழலின் அளவு தெரியும். அனைத்துமே ஏழை மக்களை வறுமைக்கோட்டுக்கு மேலே கொண்டுவருவதற்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம். என்னுடைய  மாற்று  பட்ஜெட்டில் இதை வைத்துதான் பரிந்துரைகளை உருவாக்கியுள்ளேன்.

ஆனால் அவற்றைச் சமர்ப்பிக்கும் முன்னால் நாம் அனைவரும் அறிந்த ஒன்றைப் பகிர்ந்துகொள்கிறேன். ஊழல்வாதிகள் தப்பிப்பதால்தான் இந்தியாவில் ஊழல் வளர்ச்சி அடைகிறது. முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் சுக்ராமுக்கு எதிரான வழக்கு இழுத்துக்கொண்டே வருகிறது. இப்போது அவர் 80களின் இறுதியில் உள்ளார். செய்தித்தாளில் 96 வயதான முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் ஷீலா கௌல், ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக நீதிமன்றத்தில் ஆஜராகும்படி சம்மன் விடுக்கப்படுவதை கண்டு எனக்கு வருத்தம் மேலிடுகிறது. ஏன் இந்தியாவில் ஊழல் வளர்கிறது என்றால், நமது நீதியமைப்பு முழுமையாக சிதைந்துள்ளது.

ராகுல் காந்திக்காக ஒரு பட்ஜெட்டை சமர்ப்பித்தால் பிரணாப் முகர்ஜி அதில் என்ன செய்யமுடியும்? அன்னா ஹசாரே இயக்கம், ராம்தேவ் குழப்பம் போன்றவற்றால் அரசை பாடுபடுத்திய ஊழல் என்கிற முக்கியமான விஷயத்தை அவர் எதிர்கொள்ள வேண்டும். மேலும் பல போராட்டங்கள் வெடிக்கக் காத்துள்ளன.  பெருமளவுக்கு ஊழலால் பாதிக்கப்படுபவர்கள் ஏழைகளே. பணக்காரர்கள் ஊழலை தங் கள் நலனுக்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். என்னுடைய பரிந்துரைகள் இங்கே. 

முக்கியமான வள ஒதுக்கீடு

நீதித்துறையில் மாற்றம் கொண்டுவாருங்கள்

வளையக்கூடிய, தவறான மசோதாவாக லோக்பாலை உருவாக்கி அதற்கு அஞ்சலி செலுத்திவிட்டோம். இருப்பினும் லோக்பால் மசோதா, லட்சிய அளவில் ஊழலைத் தடுக்கும் மாபெரும் வலுவையும் தாக்கத்தையும் கொண்டிருந்தாலும், இதுவே ஊழலைச் சமாளிப்பதற்கு முன்னுரிமையானது என்று நான் ஒருபோதும் கருதியதேயில்லை.  அதி காரத்தில் உட்கார்ந்திருப்பவர்களும் நீதித்துறையை செயல்படாத ஒன்றாக வைத்திருப்பவர்களாலும்தான் ஊழல்வாதிகள் சந்தோஷமாக இருக்கமுடிகிறது! ராகுல் காந்தி இந்த நாட்டை மாற்றுவதற்கு உண்மையிலேயே முயல்வார் எனில், ஊழலை இந்த நாட்டில் குறைப்பதன் மூலம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த நினைப்பாரெனில், அவர் இந்நாட்டின் செயல்படாமல் தூங்கிக்கொண்டிருக்கும் நீதித்துறையை விழித்தெழச் செய்யவேண்டும்! மத்திய, மாநில அரசுகளின் நிதிஒதுக்கீட்டில் நீதித்துறைக்கு ஒதுக்கப்படுவது 1% தான் என்று அறிந்தபோது உண்மையிலேயே நான் அதிர்ச்சியடைந்தேன். 9ஆம் ஐந்தாண்டுத் திட்டத்தில் இந்திய அரசு 385 கோடி ரூபாயை நீதித்துறைக்காக ஒதுக்கியது. நமது மொத்த செலவுத் திட்டத்தில், அதன் பங்கு 0.078 %. 10 ஆவது ஐந்தாண்டு திட்டத்தில் ஒதுக்கீடு 700 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது. ஆனால் மொத்த செலவுத் திட்டத்தில் அதன் பங்கு 0.071%. 11 ஐந்தாண்டுத் திட்டத்தில் தாராளமான முறையில் 1470 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால் மொத்த செலவுத் திட்டத்தில் அதன் பங்கு மட்டும் பெரிதாக அதிகரிக்கவே இல்லை. இந்தக் கணக்குகளைப் பார்த்தால் இவை நகைப் பிற்கு இடமளிக்கும் அளவுக்குக் குறைவான ஒதுக்கீடுகள். இதை வைத்து எப்படி நீதித்துறை செயல்பட முடியும்?

இன்று ஊழலுக்கான ஒரே ஒரு தீர்வு செயல்படும் நீதித்துறை ஒன்றுதான். ஊழலும் பேராசையும் உலகளாவிய அளவில் நிலவும் ஒன்றுதான். ஆனால் அதன் பாதிப்புகள் இந்தியாவில் நிறைய பேரைத் தொட்டதைவிட அமெரிக்காவில் குறைவு. ஏனெனில் அமெரிக்க நீதித்துறை செயல்படுகிறது. இந்தியாவில் செயல்படாமல் உள்ளது. அமெரிக்க நீதித்துறையின் தரத்தை நாம் எட்டவேண்டுமெனில் இன்னும் நமக்கு 1 லட்சம் நீதிபதிகள் தேவை. இந்த எண்ணிக்கை பிரம்மாண்டமாகத் தோன்றலாம். ஆனால் 5 ஆண்டுகளில் அதை அமல்படுத்திவிட முடியக்கூடியதுதான். ஒவ்வொரு ஆண்டும் 20 ஆயிரம் கூடுதல் நீதிபதிகளை நியமிப்பதற்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் கோடி ரூபாய்களை ஒதுக்க வேண்டியிருக்கும். ஒரு நீதிபதியை நியமித்து அவருக்கான செலவுகள் மற்றும் அலுவலக உதவியாளர்களுக்கான செலவுகளையும் சேர்க்கும் போது ஆண்டுக்கு 30 லட்சம் ரூபாய் செலவாகும்.

நான் பிரணாப் முகர்ஜியாக இருந்தால் 2012 பட்ஜெட்டில் 6 ஆயிரம் கோடியை வரும் நிதி ஆண்டிலேயே ஒதுக்கி, அடுத்த நிதியாண்டில் 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுமென்ற உறுதியையும் தருவேன். இந்தியா மிகப்பெரிய மாற்றத்திற்கான நகர்வை அடைய இந்தப் பெரிய  செலவு நிச்சயம் தேவை.சட்ட அமைச்சகம், உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளுடன் சேர்ந்து நீதிமன்றங்களில் நீதிபதிகளை நான்கு மடங்காகப் பெருக்குவதற்கான திட்ட வரைபடத்தை, 2014 பொதுத்தேர்தலுக்கு முன்பே உருவாக்கிக் கொள்ள வேண்டும். வழக்குதாரர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகளை வைத்து வழக்குகளை ஒரு காலவரம்புக்குள் முடிவுக்கு வருவதை உறுதிசெய்ய வேண்டும். இதனால் அரசு செயல்பட விரும்புகிறது என்ற செய்தி முதலில் வாக்காளர்களைச் சென்று சேரும். இரண்டாவது இந்தியாவின் நிர்வாக முறையையே இது மாற்றும். ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்பவர்களுக்கு ஓர் ஆண்டுக்குள் தண்டிக்கப்படுவோம் என்றும் அவர்களது சொத்துகள் கையகப்படுத்தப்பட்டு ஏலம் விடப்படும் என்றும் உறுதியானால்-  முழுமையாக ஊழல் மறையாவிட்டாலும் ஊழல் பரவலாக குறையத் தொடங்கிவிடும். லோக்பாலைப் பற்றி கூச்சல் எழுப்பிக் கொண்டிருப்பதைவிட இந்த மாற்றம் அவசியமானது. இது செய்வதற்கு சாத்தியமானதுமாகும். நீதித்துறைக்கு ஒதுக்கப்படும் அதிக நிதி ஒதுக்கீடு மூலம், இந்திய நீதித்துறையில் விரைவு நீதிமன்றங்கள் விதிவிலக்காக ஆக்காமல் இயல்பான அம்சங்களாக மாறும் நிலை ஏற்படும்.

கல்வி மற்றும் ஆரோக்கிய நலத்தில் கவனம்

கிட்டத்தட்ட பத்தாண்டுகளாக கல்வி மற்றும் ஆரோக்கிய நலனில் மாற்றம் வராமல், இந்தியா ஒருபோதும் சீனாவாக மாறும் நிலையை எட்டமுடியாது என்ற எளிமையான உண்மையைத் திரும்பத் திரும்பச் சொல்லிவருகிறேன். ஆரோக்கியம் மற்றும் கல்வியில் இரண்டு சதவிகிதத்துக்கும் குறைவாக அரசின் செலவு விகிதம் இருப்பதும் மீதத்தொகை தேவையற்ற மானியங்களுக்கும் வரிச் சலுகைகளுக்கும் செல்வது வெட்கக்கேடானதாகும். சர்வ சிக்ஷா அபியான் மற்றும் தேசிய கிராமப்புற ஆரோக்கிய திட்டங்களில் முதலீடுகளை அதிகப்படுத்த வேண்டும். நிர்வாகத்தில் சீர்திருத்தம் செய்யாமல் ஊழலைக் குறைக்காமல், வெறுமனே பணத்தை ஒதுக்கீடு செய்வதன் மூலம் எந்த மாற்றமும் ஏற்படாது என்பதை நான் மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டி வருகிறேன்.

வேலைவாய்ப்பு வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் குடிசைப்பகுதி அகற்றும் திட்டங்களில் கவனம் செலுத்தி மக்களுக்கு கௌரவமான இருப்பை வழங்குதல்

நான் கடந்த ஆண்டில் தெரிவித்ததுபோலவே நான் பிரணாப் முகர்ஜியின் இடத்தில் இருந்தால் கிராமப்புற இந்தியர்களுக்கு குறிப்பாக விவசாயிகளுக்கு ஓர் ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடியை நேரடியாக வழங்குவேன். ஏன் வழங்க வேண்டும் என்று ஒரு கேள்வி வரும். எல்லாவற்றுக்கும் ஒரு பின்னணி இருக்கிறது. இங்குள்ள பின்னணி கிராமப்புற இந்தியாவில் 150 மில்லியன் வேலைகள் உருவாக்கப்பட வேண்டி யுள்ளது. ஒரு பொறுப்புள்ள அரசாக இந்த காரியத்தை 5 ஆண்டுகளில் செய்ய வேண்டும். 65 ஆண்டுகள் தேவையில்லை. இப்படியாக நாம் ஆண்டுக்கு 30 மில்லியன் வேலைகளை உருவாக்கவேண்டும். கிராமப்புற இந்தியாவில் தற்போதுகூட 33 ஆயிரத்து 750 ரூபாய் முதலீட்டில் ஒரு வேலையை   உருவாக்கலாம். இதற்குத்தான் ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி தேவைப்படுகிறது. இதில் பாதிப்பணத்தை கிராமப்புறங்களில் உள்கட்டுமான வளர்ச்சியைப் பெருகவும், வேளாண்மை வசதிகளைச் செய்யவும் மின்சார வசதி கொடுக்கவும் பயன்படுத்தலாம். மிச்சப்பகுதியை கல்வி, ஆரோக்கியம் மற்றும் சுகாதார மேம்பாட்டுக்காகப் பயன்படுத்தலாம். உட்கட்டுமான வளர்ச்சியின் மூலம் கிராமப்புற இந்தியாவின் உற்பத்தித் திறனில் பெரிய திருப்பம் ஏற்படும். இதனால் விவசாயிகளின் வருவாய் அதிகரிக்கும். இரண்டாம் கட்ட முதலீட்டின் மூலம் கிராமப்புற மக்களின் மனித வளர்ச்சிக் குறியீடுகளில் அபாரமான வளர்ச்சி ஏற்படும். இந்த இரண்டு செயல்பாடுகளின் மூலம் வேலைகள் உருவாகி, வேலைவாய்ப்பின்மை அகற்றப்படும். 

வளப்பெருக்கத்திற்கான நடவடிக்கைகள்

இதற்கு பணத்திற்கு எங்கே போவது என்ற கேள்வி எழலாம். நான் என் தந்தையுடன் சேர்ந்து எழுதிய ‘தி கிரேட் இந்தியன் டிரீம்’ புத்தகத்தில் கடந்த 11 மாற்று பட்ஜெட்டுகள் போடும்போதும் வருவாயைப் பெருக்குவதற்கான புதுமையான வழிகளை நான் சுட்டிகாட்டியிருந்தேன். ஆனால் அரசுகள் அத்தனை யோசனைகளையும் எடுத்துக்கொண்டு கறுப்பு பணத்தை சம்பாதிப்பதற்காகவே வளங்களை பெருக்கிக்கொண்டது. இந்த முறை நான் மூன்று எளிமையான யோசனைகளையே சொல்லப்போகிறேன். மேலும் யோசனைகளுக்கு எனது முந்தைய பட்ஜெட்டுகளை திருப்பிப் பார்த்துக்கொள்ளலாம். கோடிக்கணக்கான ரூபாய் கறுப்புப் பணத்தைத் திரும்பி, கொண்டுவருவதன் மூலம் நமது நிலையை மாற்றமுடியும். இதுதான் நமது பட்ஜெட்டின் முக்கிய யோசனையும்கூட. 

கறுப்புப் பணத்தை சட்டப்பூர்வமாக்குங்கள்

வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்ட கறுப்புப் பணத்துக்கு வெறுமனே 10% வரி விதிப்பதன் மூலம் அதற்கும் ஐந்து தவணைகள் தருவதன் மூலம் சட்டப் பூர்வமாக்க முடியும். இதற்கு இரண்டு கூடுதல் பலன்கள் உண்டு. முதலில் அரசு கறுப்புப் பணத்தை கொண்டுவர நேர்மையான நடவடிக்கை களை எடுக்கிறது என்ற நிலை வரும். ஒரு ஆண்டுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்படும் கறுப்புப் பணத்தை தேசியமாக்கி விடலாம். இரண்டாவது பலன் எதிர்கால சந்ததியினர் கறுப்புப் பணம் என்றால் என்ன என்றே தெரியாத அளவுக்கு ஒழித்துவிடும் நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும். 75 லட்சம் கோடி ரூபாய் கறுப்புப் பணம் வெளிநாடுகளில் இருப்பதாக கணக்குகள் உள்ளன. குறைந்தபட்சம் 7 லட்சத்து 50 ஆயிரம் கோடி ஐந்து ஆண்டுகளில் திரும்பி வந்தாலே போதும். அந்த வருவாயின் மூலம் எனது திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்துவிடலாம். 

விலக்குகள் தருவதை ஒழியுங்கள்

2009-ல் நான் பரிந்துரைத்த பயோமெட்ரிக் அட்டைகளிலிருந்து தொடங்குகிறேன். இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப் படுவதாக இருக்கும் நேரடி வரி எண் மற்றும் பொது விற்பனை வரி மூலம் வரி செலுத்துபவர்களின் நடைமுறையை எளிதாக்க முடியும். நான் பிரணாப் முகர்ஜியின் இடத்தில் இருந்தால் இந்த விஷயத்தில் ஒரு திருப்பத்தைக் கொண்டுவருவேன். வரிப்படிவங்களை எளிமைப்படுத்தி, 5 லட்சம் வரை வருவாய் உள்ள எல்லோருக்கும் வருமான வரி அதிகாரிகள் எந்த கேள்விகளும் கேட்கக்கூடாது. அடுத்த விஷயம் வரிவிலக்குகள் அனைத்தையும் நிறுத்துவது. வரிச்சட்டங்களில் உள்ள சிக்கல் வரி செலுத்துபவர்களை ஏமாற்ற ஊக்குவிக்கிறது. பொருளாதார ஆலோசனைக் குழுவினர் வரிகளை உயர்த்தவேண்டும் என்று பரிந்துரைத்திருப்பது என்னை அதிர்ச்சியடையச் செய்தது. இதுபோன்ற பிரச்னைகளால்தான் இந்தியர்களில் இரண்டு சதவிகிதமே வருமான வரி கட்டுகிறார்கள். ஆனால் சாதாரண அறிவுக்கே புரியும். குறைந்தபட்சம் 10 சதவிகித இந்தியர்களாவது வருமானவரி கட்டும் நிலை உள்ளது. முக்கியமாக வேளாண் வருவாய், வரி வளையத்துக்குள் கொண்டு வரப்படவேண்டும். பல ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் பீகார் முதலமைச்சர் மற்றும் லாலு பிரசாத் யாதவின் மனைவியான ராப்ரி தேவி மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு வந்தபோது அவர் சாதாரணமாக வருமான வரித்துறை அதிகாரிகளிடம் பால் மற்றும் அது சார்ந்த பொருட்களை விற்று சில கோடி ரூபாய்களை சம்பாதித்ததாகத் தெரிவித்தார்.

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கோடீஸ்வரரும் பண்ணை வீடு ஒன்றை வைத்து, விவசாயியின் அந்தஸ்தை பெற்றவராக உள்ளார். அதனால் விவசாயச் சலுகைகள் முழுமையாக ஒழிக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளது. இந்திய நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் பெரும்பாலான வழக்குகள் சிக்கலான வரிவிதிப்புகளாலேயே தீர்க்கப்படாமல் உள்ளன. இந்த ஒரு எளிய நடவடிக்கையை டாக்டர் முகர்ஜி செய்தால் ஊழலைக் குறைப்பதில் பெரும் முன்னெடுப்பாக இருக்கும். வாக்காளர்களும் மகிழ்ச்சி அடைவார்கள். 2014&ல் ராகுல் காந்தி வெற்றி பெறுவதற்கும் உதவும். எனது சகாக்கள் செய்த கணக்குகளின்படி, இந்த நடவடிக்கையின் மூலம் கூடுதல் வரி வருவாயாக 3 லட்சம் கோடி ரூபாய் ஆண்டுக்குக் கிடைக்கும். சமூக நலத்திட்டங்களுக்காக ஆண்டுக்கு ஒதுக்கப்படும் தொகை ஒரு லட்சம் கோடிக்கும் குறைவு. 

பெரும்பாலான மானியங்களை ஒழியுங்கள்

தேவையற்ற மானியங்கள் இந்திய பொருளாதாரத்தைச் சீர்குலைக்கின்றன. இந்தியாவில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் பரம ஏழைகள். அவர்கள் உருவாக்கும் உணவு பொருட்களையே அவர்கள் வாங்கக்கூடிய நிலையில் இல்லை. ஆனாலும் உர மானிய செலவு மட்டும் ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாயை கடக்கிறது. இந்தியாவில் உள்ள ஏழை குடியானவன் டீசல் கார் உரிமையாளராகவோ, டீசல் பம்ப் செட்டின் உரிமையாளராகவோ இருக்கிறாரா? ஆனாலும் டீசலுக்கான மானிய பணம் 50 ஆயிரம் கோடியை கடக்கிறது. வறுமைக்கோட்டிற்குக் கீழே உள்ள எத்தனை பேர் திரவ எரிவாயு சிலிண்டர்களைப் பயன்படுத்துகிறார்கள்? ஆனாலும் ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் மானியம் செலவாகிறது. இதுபோன்ற எண்ணற்ற உதாரணங்கள் உண்டு. இவையெல்லாம் பொருளாதாரத்தைச் சீர்குலைப்பது மட்டுமின்றி; பெருமளவு ஊழலுக்கும் வழிவகுக்கிறது. இந்த வர்த்தகத்தில் மாபியாக்கள் கொழுக்கின்றனர். நான் பிரணாப் முகர்ஜி இடத்தில் இருந்தால் எல்லா மானியங்களையும் ஒழித்து, பயோமெட்ரிக் புகைப்பட அட்டையைப் பயன்படுத்த வைத்து உண்மையான ஏழைகளுக்கு நேரடியாக மானியத்தில் பொருட்களையும் சேவையையும் வழங்குவேன்.

நான் முன்பே சொன்னதுபோல இந்தியாவைப் பொருத்தவரை வரலாறு திரும்ப நிகழக்கூடியது. 82 ஆம் ஆண்டில் ராஜிவ் காந்தி வாரிசாக உருவானார். 30 ஆண்டுகள் கழித்து அவரது மகன் அடுத்த வாரிசாக வந்துள்ளார். 1982-ல் டாக்டர் பிரணாப் முகர்ஜி பட்ஜெட்டை சமர்ப்பித்தார். 2012லும் அவர்தான் பட்ஜெட்டை சமர்ப்பிக்கப்போகிறார். ராஜிவ் காந்தியை அவரது இந்தியாவை மாற்ற இளைஞர்களைத் திரட்டும் நடவடிக்கைளில் நம் ‘அமைப்பு’ தோற்கடித்தது. அடுத்த சில ஆண்டுகளில் ராகுல் காந்தியை ப்பற்றியும் அப்படி சொல்ல நேருமோ?



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

தேவை...வேளாண்மைத் துறையில் கவனம்

 

அரிந்தம் சவுத்ரி | பிப்ரவரி 24, 2012 12:18
 

சட்டப்பேரவைகளுக்கான தேர்தல்கள் சூடு பிடித்திருக்கும் சமயத்தில் இந்திய விவசாயிகள் மீது பலரும் கவனம் குவித்திருக்கின்றனர். எப்போதும் ஒதுக்கப்பட்டவர்களாக இருக்கும் இவர்களுக்கு எல்லா கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளும் முதலிடம் அளித்திருக்கின்றன. இந்த நாட்டின் மக்கள் தொகையில் அவர்கள் 60 சதவிகிதமாக இருக்கும் போது தேர்தலின் போது அவர்களை எந்த அரசியல் கட்சியாலும் ஒதுக்க முடியாது. ஆனால், தேர்தலுக்குப் பிறகு இவர்கள் கண்டுகொள்ளப்படுவதேயில்லை. இந்தியாவில் விவசாயம் 60 சதவிகிதம் பேருக்கு வேலைவாய்ப்பளிக்கிறது, ஆனால் நாட்டின் மொத்த வருமானத்தில் வெறும் 17 சதவிகிதத்தை மட்டுமே அளிக்கிறது! தொடர்ந்து வந்த எல்லா அரசுகளும் விவசாயிகளை புறக்கணித்தே வந்திருக்கின்றன.

நமது விவசாயத்துறையில் தொழில்நுட்ப ரீதியாக இதுவரை எந்த பெரும் முன்னேற்றமும் இருந்ததில்லை. இன்றும் கிராமங்களில் பழங்கால முறையிலேயே விவசாயம் செய்யப்படுகிறது, இன்றும் விவசாயிகள் மாடுகளை பூட்டியே ஏர் உழுகிறார்கள். இதனால் ஒரு ஹெக்டேருக்கான உற்பத்தியின் அளவு மிகக் குறைவாகவே இருக்கிறது. நமது நீர்ப்பாசன முறை மேம்படுத்தப்படவேயில்லை என்பதால் இந்தியாவில் விவசாயம் இன்றளவும் பெருமளவிற்கு மழையை நம்பியே இருக்கிறது. உணவு விவசாய கழகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையின்படி 2003-2005 காலகட்டத்தில் ஒரு ஹெக்டேருக்கு இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் அரிசியின் அளவு 3,034 கி.கி. மட்டுமே, ஆனால் சீனாவிலோ இது 6,233 கி.கி. ஆக இருக்கிறது. இதே நிலைதான் கோதுமை (ஒரு ஹெக்டேருக்கு இந்தியா 2,688 கி.கி. உற்பத்தி செய்ய சீனாவோ 4,155 கி.கி. உற்பத்தி செய்கிறது), கடுகு (இந்தியா 909 கி.கி., சீனா 1,778 கி.கி) ஆகியவற்றிலும் நிலவுகிறது! 2004ல் சீனாவின் மொத்த அரிசி உற்பத்தி 186 மில்லியன் டன், ஆனால் இந்தியாவின் உற்பத்தியோ 124 மில்லியன் டன். அது மட்டுமல்ல, இந்தியாவில் ஒரு ஹெக்டேரில் உற்பத்தி செய்யப்படும் பயிர்களின் மதிப்பு சர்வதேச சந்தையில் 914 டாலராக இருக்க சீனாவில் அது 2780 டாலராகவும், கொரியாவில் 3530 டாலராகவும் இருக்கிறது. 

2008ல் சீனாவில் விவசாயத்தின் மூலம் வேலைவாய்ப்பு பெற்றிருந்தவர்கள் 39.6 சதவிகிதம், ஆனால் இந்தியாவிலோ அது 60 சதவிகிதம். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின் பங்கு வெறும் 17 சதவிகிதம் மட்டுமே. வளர்ச்சிப் பாதையில் செல்லும் எந்தவொரு நாடும் இயல்பாகவே விவசாயத்திலிருந்து, தொழிற்துறைக்கும் பின்னர் சேவைத்துறைக்கும் மாறும். இந்த விஷயத்தில் சீனாவை விட இந்தியா பின்தங்கியிருந்த போதிலும் (சீனாவில் விவசாயத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் குறைவு) இரு நாடுகளுக்குமிடையே பெரிய வித்தியாசமில்லை. ஆனால் தென் கொரியாவோ முற்றிலும் வேறுபட்டிருக்கிறது! அங்கு வெறும் 7.2 சதவிகித மக்களே விவ்சாயத்தில் ஈடுபட்டுள்ளனர். அதற்குக் காரணம் 1960களிலிருந்து அந்த நாட்டில் ஏற்பட்டுள்ள அபரிமிதமான அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியும், அது மேற்குலக நாடுகளுடன் நெருக்கமாக இணைந்திருப்பதுமேயாகும். இந்தியாவில் இவ்வளவு பேர் விவசாயத்தில் ஈடுபட்டிருந்த போதிலும் விவசாயிகளுக்கு கிடைக்கும் லாபம் என்பது கவலைக்குரிய வகையிலிருக்கிறது. மேலும் இந்தியாவில் விவசாயத்தில் தேவைக்கு அதிகாமனவர்கள் ஈடுபட்டிருப்பதால் ஏரளமான மனித உழைப்பு வீணாகிறது. உலக வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தின்படி, 1994ல் 400 டாலராக இருந்த ஒரு விவசாயத் தொழிலாளியின் பங்களிப்பு 2009ல் 500 டாலராக உயர்ந்தது. அதாவது 25 சதவிகித உயர்வு. சீனாவிலோ ஒரு விவசாயத் தொழிலாளின் பங்களிப்பு 85 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. ஆனால் இந்த விஷயத்திலும் இந்தியா மற்றும் சீனாவை விட தென் கொரியா மிக மிக முன்னேறியிருக்கிறது. 1994ல் ஒரு விவசாயத் தொழிலாளியின் பங்களிப்பு 7000 டாலராக இருந்தது. இன்று அது 20,000 டாலராக உயர்ந்திருருக்கிறது. அதாவது 185 சதவிகித உயர்வு!  இந்தியாவின் மொத்த விவசாய நிலம் 157.92 மில்லியன் ஹெக்டேர் (இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் இது 53.11 சதவிகிதம்), சீனாவில் மொத்த விவசாய நிலம் 110 மில்லியன் ஹெக்டேர் (சீனாவின் மொத்த நிலப்பரப்பில் 12 சதவிகிதம்), தென் கொரியாவின் மொத்த விவசாய நிலம் 1.60 மில்லியன் ஹெக்டேர் (தென் கொரியாவின் மொத்த நிலப்பரப்பில் 16 சதவிகிதம்). இந்த விவரங்களிலிருந்து இந்த நாடுகள் விவசாயத்தில் செய்திருக்கும் சாதனைகளை புரிந்துகொள்ளலாம்.

மிக நவீன தொழில்நுட்ப உதவிகளுடன் தென் கொரியா விவசாய உற்பத்தியில் செய்திருக்கும் சாதனையின் விளைவாக அங்கு ஊட்டச்சத்துக்குறைவு என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற நிலை. சீனாவில் 1990&92ல் 18 சதவிகிதமாக இருந்த ஊட்டச்சத்துக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தவர்களின் எண்ணிக்கை 2007ல் 10 சதவிகிதமாக குறைந்தது. ஆனால் இதே காலகட்டத்தில் இந்தியாவிலோ அது அவமானத்திற்குரிய வகையில் 20 சதவிகிதத்திலிருந்து 21 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. இப்போது வெளியாகிக்கொண்டிருக்கும் ஊழல்களை பார்க்கிற போது இது ஆச்சர்யத்திற்குரியதல்ல. தொடர்ச்சியாக வந்த அரசுகள் கிடங்குகளில் தானியங்களை அழுக விட்ட நிலையில், பதுக்கலை ஊக்குவித்த நிலையில், வெங்காயத்தை தங்கத்தின் விலைக்கு உயரவிட்ட நிலையில், எல்லாவற்றிற்கும் மேலாக விவசாயிகளை தற்கொலை செய்துகொள்ளவிட்ட நிலையில் நாம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்! சொகுசுக் கார் வாங்க தரப்படும் கடனுக்கான வட்டியை விட விவசாயி வாங்கும் டிராக்டர் கடனுக்கான வட்டி அதிகமாக இருக்கும் நிலையில் நீங்கள் வேறென்ன எதிர்பார்க்க முடியும்! இது விவசாயிக்கு மூலதனம் கிடைக்காத நிலையை ஏற்படுத்துவதுடன் அவர்களுக்கு நவீன கருவிகளும் தொழில்நுட்பங்களும் கிடைக்காத நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒரு தனிநபருக்கு கிடைக்கும் உணவின் அளவும் இந்தியாவில் மோசமாகவே இருக்கிறது. இந்தியாவில் நாளொன்று ஒருவருக்கு கிடைப்பது வெறும் 2333 கேலரி மட்டுமே (1992லிருந்ததை விட இது 8 கேலரி அதிகம்). ஆனால் சீனாவில் இது 2947 கேலரி (1992லிருந்ததை விட 400 கேலரி அதிகம்). தென் கொரியாவிலோ இது 3104 கேலரியாக இருக்கிறது (1992ல்ஐது 3003 கேலரியாக இருந்தது). பசியின் காரணமாக இந்தியாவில் ஆண்டுதோறும் பல லட்சம் பேர் மடிகின்றனர்.

அறிவியல் தொழில்நுட்பத்துறையில் செய்த முதலீடு, கிராமப்புறங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியது, விவசாயக் கொள்கைகளில் தொலைநோக்குப் பார்வையுடன் கொள்கைகளை வகுத்தது ஆகியவற்றின் காரணமாக விவசாயத்தில் சீனா பெரும் சாதனைகளை செய்ய முடிந்தது. 1995ல் ஆராய்ச்சித் துறையில் 4 பில்லியன் யுவானாக இருந்த முதலீடு 2006ல் 12 பில்லியனால உயர்ந்தது. இதன் விளைவாக விவசாயத்திற்கென 1000க்கும் அதிகமான ஆராய்ச்சி மையங்கள் உருவாயின. 2002ல் விவசாயத்துறையில் இந்தியா 79 காப்புரிமைகளை மட்டுமே செய்திருந்த நிலையில் சீனா 4500 காப்புரிமைகளை செய்திருந்தது, மேலும் அது 2008ல் 9300ஆக உயர்ந்தது. ஆனால் இந்தியாவில் 2003ல் 74ஆக இருந்த காப்புரிமைகள் 2004ல் 63ஆக குறைந்தது! 2000 - 2011 காலகட்டத்தில் இந்தியாவின் விவசாயத்துறைக்கு வந்த வெளிநாட்டு நேரடி முதலீடு 1.42 பில்லியன் டாலர், ஆனால் 1999 & 2006 காலகட்டத்தில் சீனா விவசாயத்துறைக்கு வந்த வெளிநாட்டு நேரடி முதலீடு 8.388 பில்லியன் டாலர்!

சீனா இன்று உலகின் தொழிலுற்பத்தி மையமாக விளங்குகிறது. ஆனால் அங்கு விவசாயத்திற்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் குறையவில்லை. 1977ல் நிலச் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது, குழு உடமையிலிருந்து தனிப்பட்ட குடும்பங்களுக்கு நிலம் குத்தகைக்கு விடப்பட்டது. சீர்திருத்தங்களின் விளைவாக கிராமப்புற குடும்பங்களுக்கு விளைநிலங்கள் கிடைத்ததுடன், விவசாய உற்பத்தியும் பெருகியது. இதன் விளைவாக வறுமை குறைந்தது. சீனா வகுத்த விவசாயக் கொள்கைகளின் காரணமாக விவசாயத்திலிருந்து விலகிய மக்கள் கிராமப்புறங்களிலிருக்கும் விவசாயமல்லாத தொழிற்துறைகளுக்கு மாறினர். இதன் விளைவாக நகர்ப்புறங்களில் மக்கள் நெருக்கம் அதிகரிப்பது குறைந்தது. சீர்திருத்த காலகட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுச்சூழல் விவகாரங்ளிலும் கவனம் செலுத்தப்பட்டது. 

தென் கொரியாவில் வேறு மாதிரியன கொள்கைகள் வகுக்கப்பட்டன. பல வகையான பயிர்களுக்கும், விலங்குகளுக்கும் காப்பீடு வசதி விஸ்தரிக்கப்பட்டது. சுய சார்பை அடைவது மற்றும் நகரத்திற்கும் கிராமத்திற்கும் இடையிலான இடைவெளியை குறைப்பது ஆகிய விஷயங்களுக்கு தென் கொரிய அரசு முக்கியத்துவம் அளித்தது. மக்கள்தொகை பரவல், உணவு பாதுகாப்பு, சுற்றுச்சூழல் விவகாரங்கள், வருமானத்தில் நிலவும் சமத்துவமின்மை ஆகிய விஷயங்களிலும் தென் கொரிய அரசு கவனம் செலுத்தியது.

இந்தியாவில் படித்த விவசாயியை பார்ப்பது அரிது. விவசாய உற்பத்தி, உணவு விநியோகம், விவசாய தொழில்நுட்ப முன்னேற்றம் என எந்த விஷயத்திலும் தெளிவான கொள்கைகள் இல்லை. விவசாயத்தை பொருத்த வரை ஒரு முழுமையான தெளிவான கொள்கைத் திட்டத்தை வகுத்து நடமுறைப்படுத்துவதில் இந்தியா மிகவும் மெத்தனமாக இருக்கிறது. 2000ஆம் ஆண்டு ஜூலை 28ஆம் தேதிதான் முதன்முறையாக இந்தியாவில் தேசிய விவசாய கொள்கை என்ற ஒன்றே அறிவிக்கப்பட்டது என்பதற்கு மேலாக நான் ஏதாவது சொல்ல இருக்கிறதா?



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

இந்திய சுங்கத்துறையினர் மற்றும் சீன கடத்தல்கார வியாபாரிகளுக்கு இடையே இந்திய வர்த்தகர்கள் அவதிப்படுகின்றனர்

 

அரிந்தம் சவுத்ரி | பிப்ரவரி 17, 2012 14:22
 

சீனாவில் சமீபத்தில் இந்திய வர்த்தகர் கடத்தப்பட்ட சம்பவம், அங்கு நிலவும் பல்வேறு சிக்கல்களை அம்பலப்படுத்தியுள்ளது. சீன நீதித்துறையின் பலவீனத்தைக் காட்டுவதோடு மட்டுமன்றி, இந்திய வர்த்தகர்கள் நெடுங்காலமாக சொல்லாமல் அனுபவித்துவரும் வேதனைகளையும் காட்டுவதாக இருந்தது. இந்தியாவில் மொத்த வணிக சந்தைக்கு வெளியே இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே கணக்கில் அடங்காத மொத்த வியாபாரிகள்  டெல்லியில் உள்ள சதர் பஜாரைப்போல இயங்குகின்றனர். இவர்கள் பெரிய பண முதலைகளும் அல்ல. அதிக எண்ணிக்கையில் இருந்தாலும் இவர்கள் சிறிய வர்த்தகர்கள்தான்.  யிவு போன்ற சீன நகரங்களுக்குச் சென்று 30 லட்சத்திலிருந்து ஒரு கோடி வரை ஒன்றோ இரண்டோ கண்டெய்னர் அளவுக்கு சரக்குகளை மூன்று மாதத்திற்கு ஒருமுறை வாங்கி வருபவர்கள்தான். ஆனால் தற்போது அந்த வர்த்தகர்கள் சீனாவுக்குச் செல்வதற்கே அச்சப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு சம்பவம் மூலம் வர்த்தக சமூகம் முழுவதுமே உலுக்கப்படும் சாத்தியம் உள்ளதா? அதிலும் சீனாவில் அவர்களால் பொருட்களை மலிவாக வாங்கமுடியும். அப்படியெனில் அவர்களை அச்சுறுத்தியது ஒரு சம்பவமாக இருப்பதற்கு வாய்ப்பில்லை.

மணிஷ் ரிவாரியின் உதாரணத் தையே எடுத்துக்கொள்வோம். அவரும் யிவு நகரத்தில்தான் வர்த்தகம் மேற்கொண்டு வந்தார். சீனா அவருக்குத் தரும் அனுகூலங்களை தனது கவர்ச்சியான கை கடிகாரத் தைக் காண்பித்துப் பெருமையுடன் பேசிக்கொண்டிருக்கிறார். முதலில் அந்தக் கை கடிகாரத்தை கரோல் பாக்கில் உள்ள மொத்தக் கடையில் பார்த்தார். பேரத்தில் 22 ஆயிரம் ரூபாய் சொல்லப்பட்டது. அடுத்த முறை யிவு நகரத்திற்குச் சென்று அதே கடிகாரம் எங்கிருக்கிறது என கடைகளில் அலைந்தார். அங்கே ஒரு கை கடிகாரம் 2500 ரூபாய். 100 கடிகாரங்களைச் சேர்த்து வாங்கினால் அதன் விலை 1200 ரூபாய். அந்த கை கடிகாரப் பிரியர் தனது உபயோகத்திற்காக ஒன்று மட்டுமே வாங்கினார். இதற்கு முந்தைய பயணத்தில் ரிவாரிக்கு கசப்பான அனுபவம் ஒன்று ஏற்பட்டது. 75 ஆயிரத்திற்கான வியாபாரம் ஒன்றை ஏஜெண்ட் மூலம் முடித்தார். ஆனால் அந்த ஏஜெண்ட் பணத்தை வாங்கிக்கொண்டு பொருட்களையும் கொடுத்தார். ஆனால் அந்தப் பணத்தைக் கொடுக்கவேண்டிய வியாபாரியிடம் ஏஜெண்ட் தரவில்லை. இந்த முறை நேரிடையாகவே வியாபாரியிடமே ரிவாரி சென்றார். பழைய ஏஜெண்டின் பெயர் உள்ள ரசீதை காண்பித்தவுடன் அந்த வியாபாரி கோபப்பட்டார். ஏனெனில் அவர் முந்தைய பரிவர்த்தனைக்கான பணத்தைப் பெறவில்லை. ஆனாலும் மணிஷ் தன்னுடைய தரப்பை நேர்மையாக கூறினார். அவர் எவ்வளவோ முயன்றும் பிரச்னை தீராமல் அவரைச் சுற்றி வியாபாரிகள் சூழ்ந்துகொண்டனர். இதனால் சங்கடமான ரிவாரி அருகில் உள்ள காவல் நிலையத்தை அணுகினார். அவர்கள் வழக்கம்போலான போலீஸ் தனத்துடன் தாங்கள் சீனர்களின் நலனுக்காகவே இருப்பதாக சீன மொழியில் கூறினார்கள். ரிவாரிக்கு நிறைய வர்த்தகத் திட்டங்கள் இருந்தன. மூன்று நாட்களே பயணத்தில் மீதமிருந்ததால் பிரச்னையை சிக்கலாக்கி சிறையில் காலம் கழிக்க விரும்பவில்லை. அவர் ஒரு பேரத்திற்கு சம்மதித்தார். 50 சதவிகிதம் பணத்தைக் கொடுக்க ஒப்புக்கொண்டு தப்பிக்க முடிவு செய்தார்.

இந்த ஆண்டு அவர் சீனாவுக்குப் போக முற்றிலும் தயாராக இல்லை. இந்திய ஏஜெண்ட் ஒருவர் வழியாக தனது வியாபாரத்தைச் செய்கிறார். பொருளாதார மந்தநிலையால் தொழில் சிறப்பாக இல்லை. இந்திய ஏஜெண்ட் சீன விற்பனையாளர்களுக்கு பணத்தை சரியாகக் கொடுத்திருப்பாரா என்று சந்தேகப்படுகிறார்(கடைசியாக வாங்கிய கண்டெய்னர் பொருட்களுக்கு 37 லட்ச ரூபாய் அவர் கொடுத்துவிட்டார்). “அது ரொம்பவும் அச்சம் மிகுந்த சூழ்நிலையாக இருக்கிறது. வெளிநாட்டில் இருந்து வரும் வர்த்தகர்களுக்குப் பாதுகாப்பே இல்லை. ஆனால் அவர்கள்தான் அதிக தொகையில் வியாபாரம் செய்கின்றனர். அவசர உதவிக்கு ஹெல்ப் லைன் வசதிகூட இல்லை. எங்களது தரப்பை கேட்பதற்கே தயாராக இல்லை. யாரோ பிரச்னை செய்ய, வேறு யாரோ அதற்கு அபராதம் கட்டவேண்டியுள்ளது. சமீபத்தில் நடந்த கடத்தல் சம்பவம் சீனாவில் வர்த்தகர்களுக்கு ஏற்படும் தொல்லையை வெளிக்காட்டுவதாக உள்ளது” என்கிறார்.

குர்காவோனில் இந்தியப் பணியாளர்களுக்குக் கிடைக்கும் அவமரியாதை பற்றியும் அவர் பேசத் தொடங்கினார். நான் இதற்கு முந்தைய கட்டுரையில் சீன நிறுவனங்கள் சீனப் பணியாளர்களை வைக்க அனுமதித்தால்தான் இங்கே வியாபாரம் செய்ய முயல்வதைப் பற்றி எழுதியிருந்தேன். குர்காவோனில் பல்வேறு பணிகளில் சீனர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இந்தியாவில் வேலை செய்தாலும் இந்தியர்களை கீழாகவே பார்க்கின்றனர். அதையே மணிஷும் பிரதிபலித்தார். “சீனாவிடம் நாம் இதேபோல நிறைய வர்த்தகம் செய்கிறோம். ஆனால் அவர்கள் போதிய மரியாதை கொடுப்பதில்லை. அதுதான் அவர்களது அடியாள் மாதிரியான போக்குக்கும் காரணம்’’ என்கிறார்.

இந்தியர்களும் இந்திய அமைப்பும் இப்பிரச்னைக்குக் காரணம். நமது சுங்கத்துறை அதிகாரிகள் தாறுமாறாக லஞ்சம் கேட்கின்றனர். நமது வர்த்தகர்கள் அவர்களுக்கு லஞ்சம் கொடுக்காவிட்டால் பண்டிகைக் காலங்களில் சரக்குகளை எளிதாக விடுவிக்கவும் மாட்டார்கள். இதனால் சரக்குகள் நிற்கின்றன. ஆனால் அடுத்த பண்டிகை பருவத்தில் அப்பொருட்களுக்கு  மீண்டும் தேவை ஏற்படுமா என்று அவர்களுக்குத் தெரியாது. இதனால் அவர்களால் மிச்சப்பணத்தை ஏஜெண்டுகளுக்குச் செலுத்தமுடியாது. அந்த ஏஜெண்டுகளும் சீன வியாபாரிக்கு மிச்சப்பணத்தைத் தரமுடியாத நிலை ஏற்படும். மேலும் பிரச்னை வலுக்கும். இப்படித்தான் மணிஷ் ரிவாரி போன்ற எண்ணற்ற வர்த்தகர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இந்திய அதிகாரிகளுக்கும் சீன அதிகாரிகளுக்கும் இடையே சில விதிகளை உருவாக்கிக்கொள்வது அவசியமாக உள்ளது. அப்போதுதான் வர்த்தகர்களின் நிலைமை சீராகும். யிவு போன்ற நகரத்தை பாதுகாப்பற்ற இடம் என அறிவிக்கும் எச்சரிக்கை மட்டும் போதாது. ஏனெனில் அதுபோன்ற இடங்களில் நடக்கும் வியாபாரத்தை இந்திய வர்த்தகர்கள் தங்கள் லாபத்திற்காக நம்பியிருக்கிறார்கள். அதேவேளையில் சுங்கத்துறை அதிகாரிகளின் மிரட்டலையும் குறைப்பதற்கு வழிகளைக் காணவேண்டும். அப்போதுதான் பண்டிகைக் காலங்களில் வர்த்தகர்கள் பாதிக்கப்படுவது குறையும். 



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

ஊழல் குறியீட்டெண் தர வரிசையில் இந்தியாவுக்கு 95ஆவது இடம். இந்த அவல நிலையைப் பற்றியும் அதன் சமூக பாதிப்புகள் பற்றியும் ஒரு பகுப்பாய்வு

 

அரிந்தம் சவுத்ரி | ஜனவரி 23, 2012 11:41
 

இந்தியப் பொருளாதாரம் எதிர்கொண்டுள்ள பல முக்கியமான பிரச்னைகளுள் தலையாயது ஊழல். சமீபகாலமாக அதிகம் விவாதிக்கப்படும் விஷயமாகவும் அது இருக்கிறது. அனைத்து விநியோக முறைகளையும் அது பலவீனப்படுத்தியுள்ளதுடன், அவற்றைச் செயலற்றதாகவும் ஆக்கியிருக்கிறது. ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல், காமன்வெல்த் விளையாட்டு ஊழல் மற்றும் 2ஜி அலைக்கற்றை ஊழல் என மொத்த இந்திய பொது வாழ்க்கையும் ஊழலில் ஊறித் திளைத்திருக்கிறது. ஊழல்களின் பட்டியலும் அவற்றின் அளவும் அளவிடமுடியாததாக இருக்கின்றன. உலகின் ஆக மோசமான ஊழல் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

உதாரணத்திற்கு, டிரான்ஸ்பரன்ஸி இன்டர்நேஷனல் என்ற சர்வதேச அமைப்பு வெளியிட்டுவரும் ஊழல் உணர்தல் குறியீட்டெண் பட்டியலில் 3.1 புள்ளிகள் பெற்று (10 புள்ளிகளுக்கு) இந்த ஆண்டு இந்தியா 95ஆவது இடத்தைப் பெற்றிருக்கிறது. தர வரிசையில் 2007ஆம் ஆண்டில் இருந்த இடத்திலிருந்து இந்தியா 23 இடங்கள் தாழ்ந்திருக்கிறது. 3.6 புள்ளிகள் பெற்று சீனா 75ஆவது இடத்தில் உள்ளது. இந்த குறியீட்டெண் நமது ஊழலை வெளிப்படுத்துவதுடன் ஊழல் எந்த அளவு நமது சமூகத்தில் நிறுவனமயமாகியிருக்கிறது என்பதையும் காட்டுகிறது. 2ஜி அலைக்கற்றை ஊழல் நடைபெறாமல் இருந்திருந்தால் குறியீட்டெண் பட்டியலில் இந்தியாவின் இடம் சற்று மேம்பட்டதாக இருந்திருக்கும். முறையே 9.5, 9.4 மற்றும் 9.4 புள்ளிகளைப் பெற்றுள்ள நியூசிலாந்து, டென்மார்க் மற்றும் பின்லாந்து ஆகிய ஊழல் குறைவாக இருக்கும் நாடுகள், சமூகரீதியாக மட்டுமல்ல பொருளாதாரரீதியாகவும் மிகவும் முற்போக்கான நாடுகளாக உள்ளன. மேலும் ஊழல் உணர்தல் குறியீட்டெண்ணிற்கும் மனித வளர்ச்சிக் குறியீட்டெண்ணிற்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது. பெரும்பாலான ஆப்பிரிக்க மற்றும் ஆசிய நாடுகள் இரண்டு விஷயங்களிலும் மிகவும் பின்தங்கியிருக்கின்றன. மாறாக, ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் முன்னணியில் இருக்கின்றன.

இந்திய மக்களின் வருமானத்தில் சமத்துவமின்மை அதிகரித்துவரும் நிலையில் உலகிலேயே வறியவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது இந்தியாவில்தான்.  பொருளாதாரக் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பான ளிணிசிஞி  வெளியிட்டுள்ள அறிக்கையின்படி அதிக வருமானம் பெறும் முதல் பத்து சதவிகித மக்கள், கடைநிலையிலுள்ள பத்து சதவிகித மக்களைவிட பன¢னிரெண்டு மடங்கு அதிக வருமானம் ஈட்டுகிறார்கள். இந்த இடைவெளி இருபது ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது தாராளமயமாக்கல் என்ற மாயாஜால நடவடிக்கையை நாம் தொடங்குவதற்கு முன்னர் ஆறு மடங்காக இருந்தது. வருமானத்தில் நிலவும் சமத்துவமின்மையை அளவிட பயன்படுத்தப்படும் மற்றொரு முறையான ஜினி கோஎபீசியென்ட்படி 2000ஆம் ஆண்டில் 0.32ஆக இருந்த சமத்துவமின்மை இன்று 0.37ஆக அதிகரித்திருக்கிறது. வருமானத்தில் நிலவும் சமத்துவமின்மையானது பல வேலைவாய்ப்புகளைக் குறைப்பதுடன் வாங்கும் சக்தியையும் குறைக்கிறது. மேலும் அது மக்களின் கடன்பெறும் வசதியைக் குறைப்பதுடன் அவர்கள் சேமிப்பு மற்றும் முதலீடு செய்வதைக் குறைக்கிறது.  லஞ்சம், வேண்டியவர்களுக்கு சலுகை காட்டுதல், கொள்ளையடித்தல், பொதுப் பணத்தைக் கையாடல் செய்தல் என ஊழல் உணர்தல் குறியீட்டெண் விஷயத்தின் எல்லா காரணிகளிலும் இந்தியா மோசமாகவே இருக்கிறது.

ஆபத்திற்குரிய வகையில், இந்தியா வளர வளர வெளிநாடுகளில் பதுக்கப்படும் சட்டத்திற்குப் புறம்பான பணத்தின் அளவும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.  இந்தியாவைப் பீடித்திருக்கும் ஊழலின் காரணமாக பல வளர்ச்சிப் பணிகளின் நன்மைகள் அவை போய்ச் சேரவேண்டிய மக்களை அடையவேயில்லை. நல்லாட்சிக்கான குறியீடுகளைப் பொருத்தவரை, இந்தியா எல்லா விஷயங்களிலும் மோசமாக இருப்பதாக உலக வங்கியின் அறிக்கை கூறுகிறது (பெரும்பாலான விஷயங்களில் நாம் ஐம்பது சதவிகிதத்திற்கும் குறைவான புள்ளிகளையே பெற்றிருக்கிறோம்). உதாரணமாக, குற்றம், வரி ஏய்ப்பு, கள்ளச்சந்தை மற்றும் சுதந்தரமான நீதித்துறை ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்புகொண்ட ‘‘சட்டத்தின் ஆட்சி மற்றும் ஊழலைக் கட்டுப்படுத்துவது'' என்ற விஷயத்தை எடுத்துக்கொண்டால் நாம் பெற்றிருக்கும் புள்ளிகள் 56 சதவிகிதம் மட்டுமே. இதுவொன்றும் ஆச்சரியத்திற்குரிய விஷயமல்ல. கருப்புப் பண விஷயத்தைப் பொருத்தவரை உலகிலேயே மிக மோசமான நிலையிலிருப்பது இந்தியாவே. நம்ப முடியாத அளவிற்கான கருப்புப் பணம் இந்தியர்களால் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருக்கிறது (50 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக இந்திய கருப்புப் பணம் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருப்பதன் மூலம் இந்த விஷயத்தில் உலகிலேயே இந்தியா முதலிடம் வகிக்கிறது).

இந்தியர்களை தனிப்படுத்திக் காட்டும் ஒரு குணம் ஊழலை சகித்துக்கொள்வது. பொது விநியோகத்துறை, மருத்துவமனைகள், பள்ளிகள், தண்ணீர் விநியோகம் என பொதுச்சேவைத் துறைகள் அனைத்தும் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை ஊழலால் பீடிக்கப்பட்டிருக்கின்றன. 2010ல் சி.எம்.எஸ். என்ற நிறுவனம் 12 மாநிலங்களில் நடத்திய ஆய்வின்படி ஓராண்டு காலத்தில் கிராமப்புற மக்கள் மட்டும் சுமார் 470 கோடி ரூபாயை லஞ்சமாகக் கொடுத்திருக்கிறார்கள்.

உலகின் அனைத்து நாட்டு மக்களும் சேர்த்து சுவிஸ் வங்கிகளில் பதுக்கியிருக்கும் கருப்புப் பணத்தைவிட இந்தியர்கள் மட்டும் பதுக்கியிருக்கும் கருப்புப் பணத்தின் அளவு அதிகம். இது உண்மையிலே மலைக்க வைக்கும் புள்ளிவிவரம்! 1,500 பில்லியன் டாலர் என்ற இந்த அளவை வேறு நாட்டாலும் நெருங்கக்கூட முடியாது. நமக்கு அடுத்த இடத்தில், ஆனால் வெகுதூரத்தில் உள்ள ரஷ்யா பதுக்கியிருக்கும் பணம் 470 பில்லியன் டாலர் மட்டுமே. 390 மற்றும் 96 பில்லியன் டாலர் என அதற்கு அடுத்த இடங்களில் பிரிட்டனும் சீனாவும் இருக்கின்றன.

மக்கள்தொகையில் இளைஞர்களின் எண்ணிக்கையை உலகிலேயே இந்தியாவில்தான் அதிகம். இந்தியா அடைந்துவரும் பொருளாதார வளர்ச்சி மூலம் தங்களது கனவுகளை நிறைவேற்றிக்கொள்ள இளைஞர்கள் காத்திருக்கும் நிலையில் சமீபத்திய ஊழல்கள் அவர்களிடையே பெரும் அதிருப்தியை உருவாக்கியிருக்கின்றன. அரசு மீதும் அதன் நிறுவனங்கள் மீதும் அவர்கள் பெரிதும் அதிருப்திகொண்டுள்ளனர். அரசு மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை ஊழல் வேகமாக அழித்துவருகிறது. இந்த நிலை சமூகத்திற்கு மிக ஆபத்தானது மட்டுமல்ல, நாட்டின் ஒற்றுமைக்கே ஆபத்தானதும்கூட. இன்றைய சமூக அவலத்தை குறியீட்டெண்களின் தர வரிசை காட்டுவதைவிட நமது பொருளாதாரக் குறியீடுகள் தெளிவாகக் காட்டுகின்றன. இக்குறியீடுகள் கூட குறைத்துக் காட்டப்படுபவையே. நமது அவமானகரமான செயல்பாடுகள் மூலம் நாம் ஏற்படுத்தும் உண்மையான சமூக நஷ்டத்தை எந்தக் குறியீட்டெண்ணாலும் அளவிடமுடியாது.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

சீன நீதியமைப்பின் பரிதாபகரமான எதார்த்தம் இது!

 

அரிந்தம் சவுத்ரி | ஜனவரி 5, 2012 16:23
 

இந்திய தூதரக அதிகாரி சீன நீதிமன்றத்திற்குள் மயங்கி விழுந்தார்!

நவம்பர் 2011-ல்  சீனாவில் உள்ள தகவல் தொடர்பு பல்கலைக்கழகத்தின் சட்டப் பேராசிரியரான வாங் சிக்ஸின், “இந்தியாவில் பொதுவாக நீதிபதிகள் ஒரு செய்திக்கட்டுரை அல்லது மனுதாரர் கடிதத்தை முன்வைத்தே ஒரு வழக்கை விசாரிக்கலாம். சீனாவிலும் இந்நிலைமை வரவேண்டும்’’ என்றார். இந்தக் கருத்து, சுதந்தரமான பேச்சு அல்லது கருத்து வெளிப்பாடு முழுமையாக தணிக்கை செய்யப்படும் நாட்டில் அரசின் சர்வாதிகாரத்துக்கும் நீதியமைப்பு பயன்படுத்தப்படுகிற நாட்டில் தேவையான ஒன்றே. இதற்கு ஒப்பான குரூர சம்பவம் ஒன்றுதான் யிவு நகரத்தில் இந்திய தூதரக அதிகாரி ஒருவருக்கு நடந்துள்ளது. அவர் பெயர் எஸ். பாலச்சந்திரன். அவர் தனக்கு நீரிழிவு நோய் இருப்பதைச் சொல்லியும் உணவும், மருந்தும் மறுக்கப்பட்டுள்ளன. நீதிமன்றத்தில் மயங்கி விழுந்த பிறகே அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். சீன வர்த்தகர்களால் கடன் விவகாரம் தொடர்பாக கடத்தப்பட்ட இரண்டு இந்தியர்களை விடுதலை செய்யக் கோரும் வழக்குக்காக அந்த தூதரக அதிகாரி நீதிமன்றம் வந்துள்ளார். ஆனால் சீன நீதிமன்றமோ சீன வர்த்தகர்களுடன் கூட்டுசேர்ந்து அவர்மீது நிகழ்த்திய கருணையற்ற சித்திரவதை, சீன நிர்வாகத்தின் நிலையைக் காட்டுவதாக உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்புகூட உங்களுக்கு ஒரு குழந்தைக்கு மேல் இருந்தால் அரசு டிராக்டர்கள் வந்து சீன கிராமத்தில் உள்ள வீட்டை தரைமட்டமாக்கிச் சென்றுவிடும். இதுதான் சீன குரூரமாகும். நான் அதை சீன சித்திரவதை என்று சொல்லலாமா? ஏழை கிராமத்தவர்கள் நீதியமைப்பிலிருந்து ஒரு உதவியையும் பெறமுடியாது.

சீன நீதியமைப்பு ஒருபோதும் சுதந்தரமான அமைப்பாக இருந்ததில்லை. குறிப்பாக 1966 மற்றும் 1976க்கு இடையே முழுமையாக நீதியமைப்பு கலாசாரப் புரட்சியின்போது சிதைக்கப்பட்டது. 1976க்கு வேறுவிதமான நீதிமுறை உருவானது. 1980இன் இறுதியில் நாட்டில் புத்தம் புதிய நீதியமைப்பு ஒன்று உருவானது. மொத்த தேசத்தையும் நீதிபரிபாலனத்திற்குள் கொண்டு வந்த முயற்சி அது. 1980களில் 50 ஆயிரம் நீதிபதிகளே இருந்த நிலை மாறி ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 460 நீதிபதிகள் 90களில் பெருகினர். 2000களில் இரண்டு லட்சத்து 58 ஆயிரம் நீதிபதிகளாக ஆனார்கள். இதனால் சீனாவில் மக்களுக்கும் நீதிபதிக்கும் இடையிலான விகிதம் 8600 பேருக்கு ஒரு நீதிபதியாக ஆனது. இது அமெரிக்க விகிதத்திற்கு மிகவும் அருகில் உள்ளதாகும். இந்தியாவில் இந்தக் கனவை அடைய நாம் 64 ஆண்டுகளாக முயற்சித்து வருகிறோம்.

இவ்வளவு எண்ணிக்கையிலான நீதிபதிகள் மற்றும் பிரம்மாண்ட உள்கட்டுமான வசதிகள் ஆகியவற்றுடன் சீன நீதியமைப்பு பலவிதமான பிரச்னைகளையும் அனுபவித்துவருகிறது. அப்பிரச்னைகள் நீதியமைப்பின் ஆதாரத்தையே குலைக்கக்கூடியவை. சீன நீதியமைப்பு சுதந்தரமானதாக இல்லை. அவற்றின் சுதந்தரத்தை நிர்ணயிக்கக்கூடிய எந்த நெறிமுறைகளும் உருவாக்கப் படவில்லை. ஒற்றை கட்சி ஆட்சியின் ஆதிக்கம் நடுநிலையான நீதி பரிபாலனத்தை அனுமதிக்கவில்லை. சீன கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து நீதிமன்ற நடவடிக்கையில் தலையிட்டு வருகிறது. பெய்ஜி¢ங், ஷாங்காய் அல்லது குவாங்டங் போன்ற முன்னேறிய பிராந்தியங்களில் உள்ள நீதிபதிகளுக்கான ஊதியம் அதிகமாகவும், மற்றப் பகுதிகளில்  குறைவாகவும் உள்ளன. இதனால் நல்ல தகவல் தொடர்பும், உள்கட்டுமான வசதியும், ஊதியமும் உள்ள பிராந்தியங்கள் சிறந்த நீதிபதிகளைக் கவர்வதாகவும் மற்றப் பகுதிகள் யாரும் செல்ல விரும்பாததாகவும் உள்ளன. சீனாவில் அரசு அதிகாரத்திற்கும் நீதி அதிகாரத்திற்கும் நடுவே பிரிவினை இல்லை. தேசிய மக்கள் நாடாளுமன்றம் உயர்நிலையில் இருந்துகொண்டு நீதி அமைப்பின் சுதந்தரத்தை தொடர்ந்து காலில் போட்டு மிதிக்கும் உரிமையை அனுபவிக்கிறது. நீதிபதிகள் நியமனமும் இதன் வழியாகவே நடக்கிறது. சீனாவில் நீதிபதியாக வேண்டுமெனில் அவர் கட்சி ஆதரவுடன் இருக்கவேண்டும் என்பதுதான் தெளிவான நிலையாக உள்ளது. நீதிபதியின் பணி என்பது அரசின் கொள்கைகளை விளக்குவதாகவே உள்ளது. அவருக்கு ஒரு கட்சியின் தொண்டருக்கு சற்று மேலான நிலையே உள்ளது. இருந்தாலும் அவர் நீதிபதி என அழைக்கப்படுகிறார்.

இதில் சுவாரசியம் என்னவெனில் உச்சநீதிமன்றம் தனது காலவாரியான அறிக்கையை தேசிய நாடாளுமன்றத் துக்கு அளிக்கவேண்டியது அவசியம். இப்படியாக இன்று நாடாளுமன்றம் நீதிஅமைப்பின் சகல நடைமுறை களிலும் மூக்கை நுழைத்து அதன் முடிவுகள் மீது ஆளுமை செலுத்துகிறது. உள்ளூர் அரசுகள், அரசு வழக்குகளைப் பொறுத்தவரை நீதிமன்றங்களுக்கு அப்பட்டமாக ஆலோசனை சொல்லும் அதிகாரத்தைப் பெற்றுள்ளன. உள்ளூர் நீதிமன்றம் மக்களுக்கு ஆதரவாக அரிதாகவே தீர்ப்பு கொடுக்கின்றன. பெரும்பாலான நேரங்களில் காலவரையற்று வழக்குகள் இழுத்தடிக்கப்படுகின்றன.

இதுபோன்ற ஆதாரமே ஆடிக்கொண்டிருக்கும் நீதியமைப்பினால் சட்டங்களும் உரிமைகளும் தொடர்ந்து மீறப்படுகின்றன. தவறான நீதியமைப்பினால் தொடர்ந்த மனித உரிமை மீறல்களும் சுதந்தரத்துக்கு அச்சுறுத்தலும் உருவாகியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் சீன அரசின் ஒடுக்குமுறையைக் கட்டுப்படுத்த சர்வதேச மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. சர்வதேசரீதியிலான கண்டனங்களைக் குறைக்கவும் மனித உரிமை சட்டங்களிலிருந்து தப்பிக்கவும் சீன அரசு, தற்போது அதிகாரபூர்வமான கைதுகள் விசாரணைகளில் இறங்காமல் வீட்டுச்சிறை, கடத்தல்கள் ஆகியவற்றில் இறங்கியுள்ளது. சீன மனித உரிமை காப்பாளர்களின் விவரங்களின்படி, வழக்கு பதியாமல் காவலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் 35-00 பேர்(2010). ஆனால் இந்த எண்ணிக்கையும் உண்மையில் 5 ஆயிரத்திற்கு மேல் இருக்கலாம் என கருதப்படுகிறது. நீதிமன்றங்களுக்கு நிதி இல்லாமையும் குறைவான சம்பளம் பெறும் நீதிபதிகளும் நீதிமன்றங்களை கற்காலத்தின் வசதிகளுடனும் செயலற்றதாகவும் வைத்துள்ளனர். 1997 ஆம் ஆண்டு முடிவில் 20 லட்சம் வழக்குகள் நிலுவையில் இருந்தன. நிதிப் பற்றாக்குறையால் தீர்ப்புகளின் தரம் பாதிக்கப்படுகிறது. சீனாவில் மொத்த நீதியமைப்பு ஊழல்மயமாக உள்ளது. வழக்குதாரர்களிடமிருந்து பணம் பெற்று நீதிபதிகள் பாரபட்சமான தீர்ப்புகளைச் சொல்வது அந்நாடு முழுவதுமே வழக்கமாக உள்ளது.

மக்களின் சுதந்தரத்தை ஒடுக்குவதற்காகவே நீதியமைப்பை பலவீனப்படுத்தும் அதேநிலையில், போலீஸாருக்கு மிருக பலத்தை அளித்துள்ளது சீன அரசு. இதுவும் கலாச்சாரப் புரட்சி காலத்தில்தான் நடந்தது. போராட்டங்கள் மற்றும் மக்கள் கூட்டங்களை சிதறடிக்க போலீஸ் சக்திகளுக்கு கடும் அதிகாரம் கொடுக்கப்பட்டது. போலீஸார் தொடர்ந்து வழக்கறிஞர்களை உடல்ரீதியாக தாக்குவது வழக்கமாக உள்ளது. பொய் வழக்குகள் போட்டு சிறையில் அடைப்பதும் நடக்கிறது. சமீபத்தில் கிடைத்த விவரங்களின்படி, ஊழல் வழக்கில் 900 நீதிபதிகள் 2003&ல் தண்டிக்கப்பட்டுள்ளனர். 2007 ஆம் ஆண்டில் 200 பேர் தண்டிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் உண்மையில் செய்த குற்றம் என்பது பெரும்பாலும் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது. சீனாவில் தெற்கு ஹுனான் பகுதி நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது சில மாதங்களுக்கு முன்பு நடந்த சம்பவமாகும்.

கடந்த ஏழு ஆண்டுகளாக அரசு எதிர்ப்பாளர்களை கறுப்புச்சிறைகள் என அழைக்கப்படும் பகுதியில் ரகசியமாக சிறை வைத்துள்ளது. இவை மரபான சிறைகள் அல்ல; இந்தக் கட்டடங்கள் அரசு கட்டுப்பாட்டில் உள்ளவை. விடுதிகளிலிருந்து அரசு மருத்துவமனைகள் வரை எந்த கட்டடமும் கறுப்புச் சிறைகளாக பயன்படுத்தப்படும். இங்கு கைது செய்யப்பட்டவர்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் விலங்குகளைப் போல வைக்கப்பட்டு துன்பறுத்தப்படுவார்கள். கைதிகளுக்குள் பாலின அடிப்படையிலோ வயது அடிப்படையிலோ வித்தியாசம் பார்க்கப்படுவதில்லை. சிறுவர் கைதிகளிலிருந்து முதியவர்கள் வரை இங்கே உண்டு. இங்குள்ள பெரும்பாலான சிறைகள் தனியார் பாதுகாப்பு நிறுவனங்களால் நிர்வகிக்கப்படுகின்றன. இருப்பினும் சில வாரங்களுக்கு முன்பு சீன அரசு இதுபோன்ற சிறைகள் மற்றும் பாது காப்பு நிறுவனங்களைக் கண்டறிந்து அகற்றப்போவதாகக் கூறியுள்ளது. ஆனால் இவையெல்லாம் வெறும் வெற்று அறிவிப்பாகவே இருக்கும். ஏனெனில் இந்த கறுப்புச் சிறைகளின் எண்ணிக்கை மற்றும் அவை இருக்கும் இடங்கள் சரியாக ஆவணப்படுத்தப் படவே இல்லை.

உலகம் முழுமையும் மரணதண்டனை நடைமுறை படிப்படியாக தடைசெய்யப்பட்டு வரும் நிலையில் சீனா முரணான போக்கில் உள்ளது. ஒரு நாளைக்கு சீனாவில் 20 குற்றவாளிகளுக்கு மரணதண்டனை அளிக்கப்படுகிறது. மொத்த உலக நாடுகளும் மரண தண்டனை கொடுக்கும் எண்ணிக்கையைவிட இது மூன்று மடங்கு அதிக எண்ணிக்கையாகும். அத்துடன் சீனா தனது கைதிகளை தேசிய நலனுக்கு எப்படிப் பயன்படுத்தவேண்டும் என்பதையும் தெரிந்துவைத்துள்ளது. பொருளாதாரப் பரிமாற்றமாக பிற நாடுகளுக்கு தங்களது கைதிகளை பரிமாற்றும் ஒரே நாடும் சீனாதான். ஆசிய நாடுகளில் கட்டுமான வேலைகளுக்காக தனது சிறைக்கைதிகளை ஏற்றுமதி செய்துள்ளது. இது மீண்டும் மனித உரிமை மீறலாகவே உள்ளது. வெளிநாடுகளில் அந்தக் கைதிகள் வேலைகளில் ஈடுபடும்போது எதிர்கொள்ளும் கொடுமைகளையும் நான் சொல்ல வேண்டியதில்லை. இந்தக் கைதிகள் அயல்நாடுகளில் செயல்படும் சீன நிறுவனங்களுக்கான வேலைகளிலேயே ஈடுபடுத்தப் படுகின்றனர். அயல்நாடுகளில் உள்ள இந்த சீன நிறுவனங்கள் உள்ளூர் பணியாளர்களை அரிதாகவே பணியமர்த்துகின்றன.

தகவல் பரிமாற்றத்தை முற்றிலும் தடுத்து நிறுத்தவும் சமூக வலைத்தளங்களான ட்விட்டர் முதல் யு டியூப் வரை அரசு தணிக்கை செய்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் மக்கள் புரட்சி எழுந்தபோது லிபியா மற்றும் அது தொடர்பான வார்த்தைகளை கணிப்பொறியில் இட்டால் எந்த தகவலும் வராது. தியான்மென் சதுக்கப் படுகொலை பற்றிய செய்திகளும் மிகச் சொற்ப மாகவே கிடைக்கும். இணையத்தின் மூலமாக பெறப்படும் செய்திகளை ‘பயர்வால்’ மூலம் சீனா கட்டுப்படுத்துகின்றது. இது கிண்டலாக ‘கிரேட் பயர்வால் ஆப் சீனா’ என்றழைக்கப்படுகிறது.

மத நம்பிக்கைகளை அனுசரிப்பதும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. எல்லா மதக் குழுக்களும் அந்தந்த பிராந்திய அதிகாரிகளிடம் பதிவு செய்யவேண்டும். பதிவு செய்யாத மதக் குழுக்கள் தண்டனைக்கு உள்ளாகும் வாய்ப்புண்டு. கலாசாரரீதியான தணிக்கையும் கடுமையாக நிலவுகிறது. ஓவியரும் அரசியல் செயலாளியுமான ஐவிய்விய், சுவாக்சியோ ஷுஷுவோ, லியு சியபாவு, லியு சியான்பின், ரான் யங்பி, டிங் மாவோ, சென் வி மற்றும் கவோ ஜிசங் ஆகியோர் அனுபவித்த தண்டனைகளையும் ஞாபகத்தில் வைக்கவேண்டும்.

சீனாவின் அரசியல் சாசன சட்டம் பத்திரிகை சுதந்தரத்துக்கு அனுமதி அளித்துள்ளது. ஆனால் பத்திரிகைகளில் எவை இடம்பெற வேண்டும் என்பதை கம்யூனிஸ்ட் கட்சியே நிர்ணயிக்கிறது. 70 முதல் 80 சதவிகித செய்திகள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவே வரவேண்டும். அதற்கு எதிரான செய்திகள் சட்டரீதியான விசாரணைக்கு உள்ளாகும். எதிர்மறையான செய்திகள் மரண தண்டனைக்குக்கூட வழிவகுக்கும். அரசு ரகசிய பாதுகாப்பு என்ற பெயரில் ஷாவோயான், ஷீதாவோ, ஜிங்ஜியாங், யு குவாபெங், லி மினியிங் உள்ளிட்ட பல பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் எழுதிய கட்டுரைகள் அரசையும், அதிகாரிகளையும் விமர்சித்தவை.

தணிக்கை, உடனடி காவல் வைப்பு, மத நியமங்கள் கண்காணிப்பு, தூக்கு தண்டனை போன்ற கடுமையான சட்டங்கள் மற்றும் நடைமுறைகள் மூலம் சமூகவிரோத சக்திகள் சீனாவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. சமூக ஸ்திரமின்மை என்பது இல்லவே இல்லை. ஆனாலும் அரசியல் தலைமை தொடர்ந்து இந்தச் சட்டங்களை தங்கள் அனுகூலத்திற்காகப் பயன்படுத்திக் கொண்டுள்ளது. அவர்கள் தங்களது குடிமக்களுக்கு உண்மையான சுதந்தரத்தை அளிக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது.

இதுபோன்ற சர்வாதிகார ஒடுக்குமுறைக்கு எதிராக நிற்பதற்கு சீன குடிமக்கள்தான் முடிவு செய்யவேண்டும். சீன ஏகாதிபத்திய மனநிலையால் மற்ற நாட்டு குடிமக்களும் பாதிக்கப்படும் நிலை இருப்பதால், சர்வதேச சமூகமும் ஒன்றிணைந்து சீனாவுக்கு எதிராக கைகோர்க்கவேண்டும். அப்போதுதான் மனிதர்களை மனிதாபிமானத்துடன் மனித உரிமைகள் மீது மரியாதையுடன் சீனாவைப் பார்க்கவைக்க வலியுறுத்த முடியும். அப்போதுதான் சீனா, இந்த உலகத்தில் உண்மையான தலைவராக இருக்கமுடியும்!



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

சீன மாணவர்கள் உயரத்தில் இருக்கும் நிலையில் ஏன் இந்திய மாணவர்கள் கீழே இருக்கின்றனர்?

 

அரிந்தம் சவுத்ரி | பிப்ரவரி 2, 2012 16:57
 

இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஏசர் பிஐஎஸ்ஏ தேர்வில் ஓஇசிடியின்  ஆண்டிறுதி மாணவர் திறன் மதிப்பீட்டுப் பட்டியலில் (தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா) இந்தியா கீழிருந்து கிர்கிஸ்தானை வென்று இரண்டாம் இடத்திலும், சீனா மேலே முதலிடத்திலும் இருக்கிறது. இது இந்தியாவின் பிழைபட்ட கல்வி அமைப்புக்கு அடிக்கப்பட்ட சாவுமணி ஆகும். இந்தியா முழுவதும் பல்வேறு கல்வித் திட்டங்கள் செயல்பட்டாலும் அனைவருக்குமான கல்வி என்ற நிலை இன்னும் இந்தியாவில் வரவேயில்லை. ஆனால் சீனாவிலோ கடந்த 40 ஆண்டுகளாக கல்விமுறையை தொடர்ந்து புதுப்பித்து வந்ததற்கு ஆதாரமாக, அதன் தரப்பட்டியல் இடம் உள்ளது. சீனக்கல்வி முறை என்பது கன்பூசியசின் கோட்பாடுகளும் நவீன கல்விக்கொள்கைகளும் சீன தேசிய வளர்ச்சிக் கொள்கைகளும் சேர்ந்த சரியான கலவையாகும். நம்மைப் போலன்றி சீனக் கல்வியில் சமூக கலாச்சார அம்சங்களோடு தேசத்தின் அரசியலுக்கும் கவனம் தரப்படுகிறது. 1974 இல் சீனாவை ஆண்ட சூ என் லாயின் வழிகாட்டுதல்கள்தான் தற்போதைய சீன கல்விமுறையாக உள்ளது. அது சி ஜி க்சியான் டய் ஹூவா அல்லது நான்கு நவீனப்படுத்தல்கள் என்று அழைக்கப்படுகின்றன. சீனாவின் கல்விமுறை வேளாண்மை, தொழிற்துறை, தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை உட்செரித்த தாக உள்ளது. இவைதான் நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான அம்சமுமாகும். சீனாவில் தற்போது கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கென பிரத்யேகப் பள்ளிகள் இன்றைய நிலையில் அமைக்கப்பட்டு வருகின்றன.

ஒன்பது ஆண்டுகள் அனைவருக்கும் கட்டாயக் கல்வி என்பதை சீனா கொள்கையாகவே கடைப்பிடிக்கிறது. அக்காலகட்டத்தில் தொழிற்கல்விக்கும் உயர்கல்விக்கும் போதிய அழுத்தம் தரப்படுகிறது. 9 ஆண்டு கட்டாயக் கல்வி ஒரு குழந்தையை கணிதம், அறிவியல் மற்றும் சீன இலக்கியத்தில் நல்ல திறன்பெறச் செய்துவிடும். ஒரு நகர்ப்புற மாணவன் எதை ஒன்பது ஆண்டுகளில் பெறுகிறானோ, அதே தரத்திலான கல்வியை கிராமப்புற மாணவனும் பெறுகிறான் என்பதுதான் சுவாரசியமானது. ஆனால் இந்தியாவிலோ உயர்நிலைப் பள்ளி மாணவன் ஒருவனுக்கு ஒரு வாக்கியத்தை சொந்தமாக அமைக்கவோ அடிப்படை கணக்குப் புதிரைத் தீர்க்கவோ முடியாத நிலை உள்ளது. இந்தியாவின் கிராமப் பள்ளிகளோ உட்கட்டுமானமின்மைப் பிரச்னைகளால் சூழப்பட்டுள்ளன. அத்துடன் அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களின் வருகையின்மையால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். சராசரியாக கிராமப்புறப் பள்ளிகளில் 30 சதவிகித ஆசிரியர்கள் வருவதேயில்லை. இப்பிரச்னையைத் தீர்க்க மாணவனின் கல்விச் செயல்பாட்டைப் பொருத்து ஆசிரியருக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. இத்துடன் பள்ளியின் நிலை நன்றாக இருந்தால் கட்டணமும் உயருகிறது. இதனால் போட்டியும் தரமும் ஒரே நேரத்தில் பெருகுகிறது. 2007 ஆம் ஆண்டு பிபிசியில் வெளியான செய்தி, “உலகின் மிகப்பெரிய உயர்கல்வி அமைப்பைக் கொண்டிருக்கும் நாடு சீனாதான். அமெரிக்கா மற்றும் இந்தியாவில் வழங்கப்படும் பல்கலைக்கழகப் பட்டங்களைச் சேர்த்துக் கூட்டினாலும் சீனாவுக்கு அருகில் வரமுடியாது. மேற்கு நாடுகளால் எளிதில் கற்பனையே செய்யமுடியாத அளவு பல்கலைக்கழக விரிவாக்க விகிதம் உள்ளது” என்று கூறுகிறது.

லட்சக்கணக்கான சீன மாணவர்கள் தற்போது கல்லூரிகளைப் புறக்கணித்து தொழிற்பள்ளிகளுக்குப் போகும் நிலை உள்ளது. இந்தப் பள்ளிகள் சீன தொழிலதிபர்களின் ஆதரவுடன் நடத்தப்படுபவை. அங்கே வேலைக்குத் தயார் நிலையில் மாணவர்கள் உருவாக்கப்படுவதாக அறியப்படுகின்றனர்.  2007 ஆம் ஆண்டில் இருந்து கடந்த நான்கு ஆண்டுகளில் சீனா, இந்த தொழிற்பள்ளிகளுக்காக 14 பில்லியன் யென்களைச் செலவழித்துள்ளது. இந்தியாவில் உள்ள தொழிற்கல்விபோல வெறுமனே உற்பத்தித் துறையுடன் முடங்கிவிடாமல் தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா மற்றும் மருந்துத் தொழில் பயிற்சிகளும் அங்கே கற்றுத் தரப்படுகின்றன.  சீன அரசு ஸ்டேட் ப்ராஜக்ட் 211,895,111 போன்ற திட்டங்களை அறிமுகப்படுத்தி பட்டதாரிகளின் தரத்தை உயர்த்த, தரமான 100 உயர்கல்வி நிலையங்களைத் தேர்ந்தெடுத்து பிரத்யேக கவனம் அளிக்கிறது. இந்தக் கல்வி நிலையங்களில் பணிபுரிவதற்காக உலகின் சிறந்த ஆராய்ச்சியாளர்களை அழைத்து சர்வதேசத் தரத்தை எட்ட சீன அமைச்சரவை தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. இந்தியாவும் உயர்கல்விக்கு அதிக அழுத்தம் கொடுத்தாலும் நிதி விஷயத்தில் வலுவான தடைகள் உள்ளன. தேவைக்கும், வழங்கலுக்கும் இடையிலான இடைவெளியை நிரப்புவதில் இந்தியாவைப் பொருத்தவரை தனியாரே முக்கியமான பங்களிப்பைச் செய்கின்றனர். 2003 இல் சீனா, வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களை தங்கள் நாட்டில் வளாகங்களை அமைத்துக்கொள்ள வரவேற்றது. இந்தியாவிலோ இதே மசோதாவை நிறைவேற்ற 7 ஆண்டுகள் தாமதம் ஆனது. வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் உலகளாவிய பாடமுறையை அங்கே அமல்படுத்தியதோடு மட்டுமின்றி; அந்நாட்டின் கல்விநிலையும் உயர்ந்துள்ளதை உணரமுடிகிறது. இதற்குப் பின்னர்தான் உலகளாவிய தரப்பட்டியல்களில் சீனா முன்னோக்கிப் பாய்ந்தது. 2009 ஆம் ஆண்டு பாரீசைச் சேர்ந்த ஆர்கனைசேஷன் பார் எகானமிக் கோஆப்ரேசன் அண்ட் டெவலப்மெண்ட் அமைப்பு, 34 நாடுகளைப் பிரதிநிதித்துவம் செய்து சர்வதேச மாணவர் மதிப்பீட்டுப் பட்டியல் ஒன்றை வெளியிட்டது. அதில் ஷாங்காய் பிராந்தியம் அனைத்துக் கல்வி வகையிலும் முதலிடம் பிடித்தது.

ஓஇசிடியைப் பொருத்தவரை சீனாவின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்பது கீ பள்ளிகள் என்று அழைக்கப்படும் சிறந்த மாணவர்களுக்கான பிரத்யேகப் பள்ளிகள்தான். 2003 ஆம் ஆண்டு உலகப் பல்கலைக்கழக கல்வித் தரப்பட்டியலில் வெளியிடப்பட்ட 35 தரமான பல்கலைக்கழகங்களில் சீனப் பல்கலைக்கழகங்கள் 23 இடம்பெற்றிருந்தன. உலகளவில் உயர்ந்த பல்கலைக்கழகங்களாக பட்டியலிடப்பட்டிருக்கும் 200 பல்கலைக்கழகங்களில் மூன்று சீனப் பல்கலைகள் இடம்பிடித்துள்ளன. இந்தியாவை ஒப்பிட்டுப் பார்த்தால் தரப்பட்டியலில் வெற்றிடமே உள்ளது. உலகப் பல்கலைக்கழகங்களின் கல்வித் தரப்பட்டியலில் இல்லாதது மட்டுமல்ல; டைம்ஸ் உயர் கல்வி உலகப் பல்கலைக்கழக தரப்பட்டியலிலும் க்யூ எஸ் பல்கலைக்கழகத் தரப்பட்டியல் களிலும் இடம்பிடிக்கவில்லை. சீனாவைவிட பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கையிலும் இந்தியா பின்தங்கியுள்ளது. சீனாவில் 2 ஆயிரத்து 236 பல்கலைக்கழகங்கள் உள்ளன. இந்தியாவிலோ 545 பல்கலைக்கழகங்கள் தான் உள்ளன. இந்தியப் பல்கலைக்கழகங்களில் மாணவர் பதிவு 4.7 மில்லியன். சீனாவிலோ 11 மில்லியன். இந்தியா 2004-&2005 இல் 4 லட்சத்து 64 ஆயிரத்து 743 பொறியியல் முடித்த மாணவர்களை உற்பத்தி செய்தது. சீனாவோ 6 லட்சம் பேரை அனுப்பியது. மருத்துவக் கல்லூரிகளைப் பொருத்தவரை, சீனாவில் 630 உள்ளன. இந்தியாவிலோ 251 மருத்துவக் கல்லூரிகளே உள்ளன.

இந்தியக் கல்வித்துறையின் விரிவான குறிக்கோள்களும் சீனாவுக்கு ஒப்பானதுதான். ஆனால் இவையெல்லாம் காகிதமாகவே உள்ளன. இரண்டு தேசங்களின் கல்வி அமைச்சக வலைத்தளத்தைப் பார்த்தாலே போதும், அத்துறையின் நோக்கங்கள் மற்றும் நடவடிக்கைகளையும் கொள்கைகளையும் பார்த்தாலே இரண்டு நாடுகளின் நிலையையும் எளிதாக கணித்துவிடலாம். சீனாவின் கல்வித் திட்டங்கள் அனைத்தையும் உள்ளடக்கியது ஆகும். நாம் தரமான கல்விநிலையங்கள் விஷயத்தில் மட்டுமல்ல; சரியான கொள்கைகளை வகுப்பதிலும் பின்தங்கியுள்ளோம். சீனா, தனது மக்கள்தொகையின் ஆற்றலை சாதகமாக மாற்றியுள்ளது. ஆனால் நாமோ அந்த அசுர சாத்தியத்தை சிதிலப்படுத்தி வருகிறோம். நமது அதிகரித்து வரும் ஜனத்தொகையின் பின்னணியில் அனைவருக்கும் கல்வி தருவதென்பது அவசியமானதாகும். இல்லையெனில் நமது அனுகூலங்கள் அனைத்தும் சுமைகளாக மாறும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

தேர்தல் நிதி தொடர்பான பிரச்னை இந்தியாவில்தான் இருக்கிறது என்று நீங்கள் நினைத்தால் இங்கே பாருங்கள். அமெரிக்காவும் அதில் சிக்கியிருப்பது வெட்கக்கேடுதான்!

 

அரிந்தம் சவுத்ரி | மார்ச 17, 2012 15:20
 

முதலில் நமது தலைமைத் தேர்தல் ஆணையர் டாக்டர் குரேஷிக்கு வாழ்த்துக்களைச் சொல்வோம். குறைந்தபட்ச புகார்களுடன் இந்த தேர்தல்களை நடத்திமுடித்துள்ளார். கடின உழைப்பால் இந்திய இளைஞர்களின் பிம்பமாக ஒரேநாளிலான அகிலேஷுக்கு பாராட்டுக்கள். நான் அவரைப் பற்றி விரைவில் எழுதக்கூடும். இம்முறை இந்தியாவில் எங்கு தேர்தல் நடந்தாலும் பேசப்படும் ஒன்றைப் பற்றி எழுதப்போகிறேன். தேர்தல் காலத்தில் சேகரிக்கப்படும் நிதி குறித்துதான் எழுதப்போகிறேன். இந்தியாவில் தேர்தல் நிதியைப் பொறுத்தவரை கறுப்புப்பணம் ஆதிக்கம் செலுத்துவது வெட்ககரமான ஒரு நிலையே. ஆனால் அமெரிக்க அதிபர் தேர்தல்கள் தூய்மையாக நடக்கிறது என நீங்கள் எண்ணுவீர்கள் எனில், அதை மறுபரிசீலனை செய்வதற்கான சில தகவல்கள் இங்கே உள்ளன.

வரலாற்றில் தேர்தல்கள் உண்மையில் ஜனநாயகபூர்வமாக நடந்ததில்லை. திறமையைவிட பணபலம்தான் ஏதாவது ஒருநிலையில் ஆதிக்கம் செலுத்தும் சக்தியாக உள்ளது. உலகில் நடக்கும் அனைத்து தேர்தல்களும் ஒருவகையில் பணம், அதிகாரம், கள்ள ஓட்டு ஆகியவற்றின் மூலமே நடக்கின்றன. வரவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலும் இதிலிருந்து விலக்கல்ல. இங்கேதான் தெளிவாக ஒரு முரண்பாடு வருகிறது. ஒருபுறம் அமெரிக்கத் தேர்தல் முறை அதிகபட்சமாக வெளிப்படையான செயல்முறையை வைத்திருக்கிறது. இன்னொருபுறமோ அமெரிக்க மக்களுக்கு அதே தேர்தல் முறை நியாயமாகவே நடந்துகொண்டதில்லை.

மறைமுகமான வழியில் கறுப்புப்பணம்  மூலம் தேர்தல் நிதி இந்தியாவில் சேகரிக்கப்படுவது போன்ற நிலை அமெரிக்காவில் இல்லை. அமெரிக்கத் தேர்தல் முறையில் முறையான வழிமுறைகள் வழியாகவே நிதி பெறும் நிலை உள்ளது. இதை வைத்துப் பார்த்தால் அமெரிக்காவில் நடக்கும் தேர்தல் வெளிப்படையாகத்தானே நடக்கும் எனவும், இறுதி வெற்றியை நிர்ணயிப்பதில் பணம் மிதமான பங்கே வகிக்கும் எனவும் தோன்றலாம். ஆனால் துரதிருஷ்டவசமாக தேர்தல் முறை எவ்வளவு வெளிப்படையானதாக இருந்தாலும் அரசியல் கட்சி மற்றும் எந்த அதிபர் வேட்பாளரும் தேர்தல்களில் அதிக ஓட்டு வாங்கவேண்டுமானால் பணபலம் முக்கியத் தேவை. அதுதான் ஜனநாயகத்தின் சாராம்சத்துக்கே இழுக்கை உண்டாக்குகிறது. இன்று உலகளாவிய அளவில் பார்த்தாலும் ஒருவரை தேர்தலில் வெற்றிபெற வைப்பது பணம்தான் என பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க தேர்தல் சட்டங்கள், அரசியல் நடவடிக்கைக் குழுக்களை (பி.ஏ.சி எனப்படும் இவை வேட்பாளர் களுக்கு ஆதரவாகவோ எதிராகவோ பிரச்சாரம் செய்பவை) தேர்தலுக்காக நிதியைத் திரட்ட அனுமதிக்கின்றன. அரசு சாராத அமைப்புகள் என்ற பெயரில் இந்த குழுக்கள் தங்களுக்குக் கிடைக்கும் நிதியை மறைமுகமாக குறிப்பிட்ட ஒன்றுக்கு லாபி செய்வதற்கும் அரசியல் தேவைகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளும். தற்போது புதியவகை அரசியல் செயற்குழுக்கள் உருவாகியுள்ளன. இவை சூப்பர் பிஏசி என அழைக்கப்படுகின்றன. 2010-ல் கொடுக்கப்பட்ட இரண்டு நீதிமன்றத் தீர்ப்புகளை ஊன்றுகோலாகக் கொண்டு இந்த குழுக்கள் செயல்படுகின்றன. இந்த தீர்ப்புகளில் முதல் தீர்ப்பை அமெரிக்க உச்சநீதிமன்றமும், இரண்டாம் தீர்ப்பை மேல்முறையீட்டுக்கான பெடரல் நீதிமன்றமும் கொடுத்தது. இத்தீர்ப்பு வந்த பிறகு சூப்பர் பிஏசி குழுக்கள் தனிநபரிடமிருந்தும் நிறுவனங்க ளிலிருந்தும் எவ்வளவு பணமும் வாங்கலாம். யார் கொடுத்தார்கள் என்று சொல்லத் தேவையும் இல்லை (இந்தக் குழுக்கள் சுயேச்சையாக எந்த அரசியல் கட்சி வேட்பாளரும் கட்டுப்படுத்த முடியாத நிலையில் இருக்கையில்). தற்போது இருக்கும் தேர்தல் பிரச்சார விதியை அரசியல் கட்சிகள் புறக்கணிப்பதற்கு இந்த சூப்பர் பிஏசி மாதிரி முழுமையான வாய்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. தற்போதிருக்கும் பிரச்சார நிதி விதிகளின்கீழ் தனிநபர் ஒருவர் 2500 டாலருக்கு மேல் வேட்பு மனு தாக்கலின்போது கொடுக்கலாம். தேர்தல் நடக்கும்போது 2500 டாலர் நிதி பெறலாம். இந்த சூப்பர் பிஏசி கமிட்டிகள் குறிப்பிட்ட வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளுடன் தொடர்பில் இருக்கவில்லை என்பதுபோல் தோன்றினாலும், இந்த அமைப்பின் மூலம் ஒரு பணக்கார அமெரிக்கர் பயன்பெற விரும்பாமல் இருக்கவேமாட்டார் என்பது யாருக்கும் தெரிந்ததுதான். இந்த சூப்பர் பிஏசி அமைப்புகள் அமெரிக்க வேட்பாளர்களின் சொந்தக்காரர்கள் அல்லது உடன் பணியாற்றியவர்களாகவே இருக்கிறார்கள் என்பதைச் சொல்லவும் தேவையில்லை.

உதாரணத்துக்கு ஒரு சூப்பர் பிஏசி கமிட்டி ஆதரிக்கும் மிட் ரோம்னி(தற்போது குடியரசுக் கட்சி வேட்பாளர்) 2011 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 12 மில்லியன் டாலர்களை தேர்தல் நிதியாக வசூல் செய்துள்ளார். மற்றொரு சூப்பர் பிஏசி குழு ஆதரிக்கும் ஒபாமா, 4.4 மில்லியன் டாலர் பணத்தைப் பெற்றுள்ளார். இந்த சூப்பர் பிஏசி கமிட்டிகளின் இருப்பே ஒரு கேள்விக்குறி யாக உள்ளது.  இவை அமெரிக்காவின் ஒரு சதவிகிதம் பணக்காரர்களால் ஆதிக்கம் செய்யப்படும் நிலையில், மிச்சம் 99 சதவிகித மக்கள் ஏமாற்றப்பட மாட்டார்களா? அமெரிக்காவின் அரசியல் நிலவியலுக்கே இது அபாயகரமான செய்தி இல்லையா? சமீபத்தில்தான் வெகுமக்கள், இந்த 1% பணக்கார லாபியிஸ்டுகளுக்கு எதிராக போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.

இவ்விஷயத்தில் பாரக் ஒபாமாவின் நிலையே சங்கடமானது. அவர் சென்ற தேர்தலில் நிதிகளைப் பெற்றது குறித்து பெருமையாகக் கருதினார். ஆனால் போனமுறை ஒபாமா தனது தேர்தல் நிதியில் 99 சதவிகிதத்தை சாதாரண பொதுமக்கள் மற்றும் சிறு கொடையாளிகளிடமிருந்தே பெற்றார். ஆனால் இந்த முறையோ நிலைமை தலைகீழாகிவிட்டது. ஒபாமாவுக்கு நிதி கொடுத்தவர்களில் முக்கியமானவர்களின் பெயர்களைப் பார்த்தால், எம்.எப். குளோபலின் முன்னாள் சிஇஓ ஜான் கார்ஸின், ப்ரெட் எய்சனர், சிகாகோவைச் சேர்ந்த ஓர் ஊடக முதலாளி, ட்ரீம் ஒர்க்ஸின் சிஇஓ ஜெப்ரி கேட்ஸன் வொர்க் போன்றவர்கள்தான். இவர்களில் ஜெப்ரி கேட்ஸன் வொர்க் நிதி மட்டும் 2 பில்லியன் டாலர். வேறுவகையில் சொல்லப்போனால் நிதி கொடுப்பவர்களுக்கும் வேட்பாளர்கள் அல்லது கட்சிகளுக்கு இடையிலான உறவு சுதந்தரத்தன்மை உடையதல்ல. தேர்தலில் நிதி கொடுப்பது நேரடியாக கட்டுப்பாட்டை நிர்வாகத்தில் செலுத்துவதில்தான் முடியும்.

பொது நேர்மை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்களின்படி, தேர்தல்களுக்குப் பிறகு அதிக நிதி கொடுத்தவர்களில் 80 சதவிகிதம் பேருக்கு நிர்வாகப் பதவிகள் பரிசாக அளிக்கப் படுவதாகக் கூறப்படுகிறது. இதேநிலை மற்ற வேட்பாளர்களுக்கும் பொருந்தும். மிட் ரோம்னி 5 மில்லியன் டாலரை வெறும் 25 பேரிடமிருந்து மட்டும் வாங்கினார்! ரோம்னிக்கு தாராளமாக நிதி கொடுத்தவர்களில் ஒருவர் ஹெரால்டு சிம்மன்ஸ். அவர், இந்த ஆண்டு 5 மில்லியன் டாலரும், கடந்த ஆண்டு 7 மில்லியன் டாலரும் வழங்கியுள்ளார். ரோம்னியை ஆதரிக்கும் லாபி நபர்களில் பல பெரிய நிதி நிறுவனங்களும் உள்ளன. இவற்றில் சில நிறுவனங்கள் திவாலாவதிலிருந்து மீளப் போராடிக்கொண்டிருப்பது எல்லோருக்கும் தெரியும்.

இந்த சூப்பர் பிஏசி கமிட்டிகளின் மேலான அதிருப்தி அமெரிக்க மக்களிடையே அதிகரித்துவருகிறது. மார்ச் 2012-ல் வாஷிங்டன் போஸ்ட் ஏபிசி செய்தி கருத்துக்கணிப்பில் இந்த சூப்பர் பிஏசிக்கள் தடை செய்யப்படவேண்டும் என்று 70 சதவிகிதம் பேர் கூறியுள்ளனர்.

இப்பிரச்னை வால்ஸ்ட்ரீட் போராட்டத்தைப்போல பல போராட்டங்களுக்கு வழிகாட்டியுள்ளது. அத்துடன் பெருநிறுவனங்கள் தங்கள் நிதி சிரமங்களிலிருந்து வெளியேறுவதற்கும் சட்டவிரோதமாக லாபி செய்வதற்கும் வழிவகுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க தேர்தல் வெறுமனே 5 பணக்கார நபர்களுக்குத்தான் என்று அர்த்தமாகிறது. அவர்கள் வால்ஸ்ட்ரீட்டில் தங்கள் ஆணைகளைப் பிறப்பிப்பார்கள். அவர்களது உத்தரவைக் கேட்டு அமெரிக்க அதிபர் அப்படியே நடப்பார். அது பெரிய அவமானம்தான். 



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

ஜெயிக்கும் தோல்வியாளர்கள்

 

அரிந்தம் சவுத்ரி | டிசம்பர் 19, 2011 12:14
 

விருப்பத்துடன் செய்யும் அனைத்துக் காரியங்களுக்கும் நான் பெருமைப்படுபவன்நான் நீண்டகாலமாக கனவாக வைத்திருந்த புத்தகம் தொடர்பாக இப்போது அதிகமாகப் பெருமைப்படுகிறேன்ஆம்எனது அடுத்த புத்தகமான கல்ட் தற்போது கடைகளில் விற்பனைக்குக் கிடைக்கிறதுஇந்த நூலை எனது நீண்டகால நண்பரான ஏ.சந்தீப்புடன் சேர்ந்து எழுதியுள்ளேன்அவர் எனக்கு 22 கால நண்பர்அந்தப் புத்தகம் லண்டனில் கடந்த 12 ஆம் தேதி நிர்வாக குருகய் கவாசகியால் வெளியிடப்பட்டதுஅவர் ஆப்பிள் இன்க் நிறுவனத்தில் எல்லாரும் பொறாமைப்படும் பதவியான சீஃப் இவான்ஜலிஸ்ட் பொறுப்பை வகித்தவர்ஆப்பிள் நிறுவனத்தின் தற்போதைய மதிப்பு 353.07 பில்லியன் டாலர்ஸ்டீவ் ஜாப்ஸ் உயிருடன் இருந்தால் இந்தப் புத்தகத்தைக் கண்டு பெருமைப்பட்டிருப்பார் என்று அவர் பேசும்போது கூறினார்இதுதான் என்னுடைய பெருமைக்குக் காரணம்கல்ட் நூலில் இருந்து சில பகுதிகளை கொடுக்கிறேன்அந்த அத்தியாயத்தின் பெயர் ஜெயிக்கும் தோல்வியாளர்கள்பகுதி 1, 10ஆம் அத்தியாயம்)

ஹலோ தோல்வியாளர்களே!

நீங்கள் திவாலானவர் என்று உங்களைப் பற்றி விவரிக்கிறீர்களாநிச்சயமாக தோற்கக் காத்திருப்பவர் என்கிறீர்களாஎப்போதும் தோல்விகளையே சந்திப்பவரா...வாருங்கள் இந்த நூற்றாண்டை ஆள்வோம்..சேருங்கள் தோல்வியாளர்களின் குழுமத்தில்..

தோல்வியாளன்உங்களது இதயம் வரை இந்த வார்த்தை துன்புறுத்துகிறதாஆனால் இந்த அத்தியாயம் உங்களுக்கானதேஇந்த இடத்துக்கு வந்ததற்கு உங்களுக்குப் பாராட்டுகள்.

நியூயார்க்கில் உள்ள சிரகாசைச் சேர்ந்தவன் அந்தப் பையன்அவனுக்கு ஏழு வயதான போது டிஸ்லெக்சியாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக அறியப்பட்டான்அவனது நண்பர்கள் அவனை துன்புறுத்தினார்கள்பள்ளி ஆசிரியர்கள் அவனை ஒதுக்கினார்கள்அவன் மூன்று விதமான உயர்நிலைப் பள்ளிகளுக்கு மாறினான்அவன் தனது குறைபாட்டை முயற்சிக்க எத்தனையோ முயன்றான்ஆனால் எங்கே போனாலும் அந்த குறைபாடு தெரிந்துபோய்விடும்அவனது வீட்டுப்பாடத்தை எழுதவேண்டுமானாலும் முதலில் தனது அக்காவிடம் சொல்லி எழுதவைப்பான்.பிறகு அவள் எழுதியதை வாங்கி வார்த்தைக்கு வார்த்தை நகல் செய்வான்.

அவனுக்கு 12 வயதாக இருந்தபோது பெற்றோர்கள் பிரிந்தனர்அவன் தனது அக்கா மற்றும் அம்மாவுடன் நியூஜெர்சிக்கு இடம்பெயர்ந்தான்அவனது அம்மா குழந்தைகளைக் காப்பாற்றுவதற்காக மூன்று வேலைகளை ஒரே நேரத்தில் செய்யவேண்டி இருந்ததுபேஸ்பால்கால்பந்து விளையாட்டுகள் தவிர அந்தச் சிறுவனுக்கு வாழ்க்கையே நம்பிக்கையற்றதாக இருந்ததுஉயர்நிலைப்பள்ளியில் அவன் தேர்வுபெற்றாலும் இளங்கலைப் படிப்பில் தோல்வியடைந்தேன்அவன் எல்லாவற்றையும் அறிந்துகொள்ள விரும்பினான்ஆனால் டிஸ்லெக்சியா அவனைத் தடுத்ததுஅவன் நடிகனாக விரும்பி லாஸ் ஏஞ்சல்சுக்கு வந்தான்அவனது அம்மாவின் வார்த்தைகள் தான் அவனை ஊக்குவித்தன. “உனக்கு நிறைய திறன் உள்ளதுஅதனால் நம்பிக்கையை விடவேண்டாம்என்பதுதான் அந்த வார்த்தைகள். 1983 ஆம் ஆண்டு ரிஸ்கி பிசினஸ் திரைப்படத்தில் ஒரு பாத்திரம் கிடைத்ததுஅவரது முகம் அமெரிக்காவில் அறிமுகமானதுமூன்று ஆண்டுகள் கழித்து வெளியான டாப் கன் திரைப்படம்343 மில்லியன் டாலர் வசூலைக் குவித்ததுஅந்த திரைப்படம் அந்தப் பையனை கோடீஸ்வரனாக்கியது.அவனது பெயர் தாமஸ் க்ரூஸ் மபோதர்தற்போது அவனை உலகம் டாம் க்ரூஸ் என அறிந்திருக்கிறது.

முன்பு நினைவுக்குறைபாடுள்ள டாம் க்ரூஸ்இப்போது சான்றிதழ் பெற்ற விமானிதயாரிப்பாளர் மற்றும் ஹாலிவுட்டின் சக்தி வாய்ந்த நட்சத்திரம்அவர் நம்பிக்கையை விடவேயில்லை.

தோல்விகள் வெற்றிக்கான படிகள்இது நிறுவனங்களுக்கும் பெருநிறுவனங்களுக்கும் பொருந்தும்.இந்த நம்பிக்கைதான் பாரக் ஒபாமாவை இல்லினாய்ஸ் செனேட்டராக்கியதுஅந்த நம்பிக்கைதான் அமெரிக்க கருப்பின மக்கள் மீதான போலீசாரின் சித்திரவதைகளை தடுத்து நிறுத்தியதுஒபாமாவின் குழந்தைப்பருவம் வசதியற்றதாகச் சென்றது எனில்மறைந்த ஸ்டீவ் ஜாப்சின் குழந்தைப் பருவமோ மிகவும் மோசமானது.

ஸ்டீவ் ஜாப் பிறந்தபோது அவரது அம்மா திருமணமாகாத பட்டதாரி மாணவிஸ்டீவ் ஜாப்பை வளர்ப்பதற்கு வழியின்றி அவரை தத்து தந்துவிட்டார்அவரை தத்தெடுத்தவர்களுக்கும் பெண்குழந்தையே விருப்பமாக இருந்ததுஸ்டீவின் புதிய அம்மா உயர்நிலைப்பள்ளியில் படித்து தேர்வானவர்அவரது தந்தை அந்தப் படிப்பைக் கூட நிறைவு செய்யாதவர்ஸ்டீவ் ஜாப்சோ கல்லூரியில் சேர்தாலும் ஆறு மாதத்திலேயே அந்தக் கல்வி பிடிக்காமல் வெளியேறினார்ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை இரவும் ஏழு மைல்கள் நடந்து ஹரேகிருஷ்ணா கோவிலில் இலவச உணவு சாப்பிட்டார்அவரது வெளியுலக அனுபவங்கள்தான் 1976 இல் ஆப்பிள் நிறுவனத்தை தொடங்க வைத்ததுஅவரது 26 வயதில் தனது தயாரிப்புகளுக்காக டைம் அட்டைப்படத்தில் இடம்பெற்றார்அவர் தொடங்கிய ஆப்பிள் நிறுவனமே அவரை வெளியேற்றியதுஅவர் பிக்சார் மற்றும் நெக்ஸ்ட் நிறுவனங்களைத் தொடங்கினார்கணையத்தில் புற்றுநோய் பாதித்தவரான ஸ்டீவ் ஜாப்சுக்கு 2009 ஆம் ஆண்டு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடந்ததுஅதற்குப் பிறகு வேலைகளில் உற்சாகமாக ஈடுபட்டார்ஒவ்வொரு நாளும் வாழ்வின் கடைசி நாளைப் போல வாழுங்கள் என்பதுதான் அவரது தாரக மந்திரமாக இருந்தது. 17 வயதுவரை தோல்விகளையே சந்தித்துக்கொண்டிருந்த ஸ்டீவ் ஜாப்ஸ் மிக வெற்றிகரமான ஆளுமையாக கடந்த அக்டோபர் ஆம் தேதி தனது இன்னுயிரை நீத்தார்.

நீங்கள் வெற்றியின் மிகப்பெரிய உதாரணமாக இருக்கவேண்டியதில்லைஆனால் மிக மோசமான தோல்விகளை எதிர்த்துப் போராடியவர் என்பதற்கு உதாரணமாக இருங்கள்உங்களது தோல்வியையே வெற்றியாக மாற்றும் தோல்வியாளனின் அணுகுமுறை அவசியம்வாழ்த்துகள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

இந்தியாவின் கல்வியை மாற்றக்கூடிய பதினோரு விஷயங்கள்

 

அரிந்தம் சவுத்ரி | டிசம்பர் 22, 2011 14:27
 

இந்தியாவின்  எதிர்காலம் இந்நாட்டின் கல்வியின் எதிர் காலத்தைப் பொருத்து அமையும்  என்று நான் அடிக்கடி கூறிவருகிறேன். நமது இந்திய இளைஞர்களின் தொகை குறித்துப் பெருமைப்படுகிறோம். ஆனால் நமது கல்வி அமைப்பால் இந்தப் பெருமை கானல்நீராகவே தொடரும். நீதித்துறையில் தாமதங்களைக் களைவது, சுகாதாரத்தில் அதிகபட்ச முதலீடு ஆகியவற்றோடு கல்வியிலும் சீர்திருத்தத்தைக் கொண்டு வருவது அவசியம். அதுதான் நமது இளைஞர்கள் தொகையிலிருந்து நல்ல பலன்களை அடைவதற்கு வழிவகுக்கும். நம்மிடம் போதுமான அவகாசம்கூட இல்லை.

60 ஆண்டுகளுக்குப் பிறகு கல்வி அடிப்படை உரிமை என இந்தியா உணர்ந்து அறிவித்திருக்கிறது. இது ஒன்று மட்டுமே நமது கல்வி அமைப்பை மாற்றிவிடும் என்று நம்பவில்லை. ஆனால் கல்விச் சீர்திருத்தங்களில் இது முக்கிய படிக்கல்லாக இருக்கும். 2001&ல் ஆரம்பிக்கப்பட்ட சர்வ சிக்ஷா அபியான் திட்டத்திலிருந்து 14  வயதுக்குக் கீழ் உள்ள எல்லா இந்திய குழந்தைகளும் இலவச கட்டாயக் கல்வியைப் பெறவேண்டும் என்ற நிலை படிப்படியாக உருவாகியுள்ளது. சமூகத்தில் தாழ்ந்த நிலையில் உள்ள குழந்தைகளுக்குத் தனியார் பள்ளிகளிலும் குறிப்பிட்ட அளவு இடங்களை ஒதுக்கவேண்டும் என்றும் சட்டம் உருவாகியுள்ளது. சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின்கீழ் பள்ளிகள் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளுடன் அர்ப்பணிப்பு உணர்வுள்ள ஆசிரியர் களையும் கொண்டிருக்க வேண்டியது அவசியம். இன்றுகூட நடுநிலைப் பள்ளி அளவில் மூன்று லட்சம் வகுப்பறை களுக்குத் தட்டுப்பாடு உள்ளது. உயர்நிலைப் பள்ளி அளவில் 1.7 லட்சம் வகுப்பறைகள் தேவை. இந்தியாவில் உள்ள பாதி பள்ளிகளில் அடிப்படைக் குடிநீர், சுகாதார வசதிகள் கிடையாது. ஒரு குழந்தை அடிப்படைக் கல்வி முடித்து மேல்நிலைக் கல்விக்குச் செல் வதற்கு இந்த வசதிகள் மிகவும் அவசியம்.

நான் மேற்சொன்ன நடவடிக்கைகள் அனைத்தும் பகுதி அளவு பலன்களையே தரும். சமூகத்தின் ஒரு வகுப்பினருக்கே பயன்படும். இதை சரிசெய்ய கல்வியில் நிலவும் பாலின பாகுபாட்டை சரிசெய்ய வேண்டும். பெண் குழந்தைகள் கல்வியில் பிரம்மாண்டமான முதலீட்டைச் செய்ய வேண்டியது  இரண்டாவது முக்கிய படிக்கல்லாகும்.  உலகளாவிய அளவில் பெண்கள் கல்வி பெறும்போது சமூகப் பொருளாதார வசதிகளை அடையும்போது சமூகத்தில் தீமைகள் குறைகின்றன. நாடுகள் வளம்பெறுகின்றன. மனித வளர்ச்சிக் குறியீட்டில் கேரள மாநிலம் முன்னணியில் இருப்பதற்குக் காரணம் அங்குள்ள பெண்கள் அதிக கல்வி அறிவைப் பெற்றிருப்பதே.

ஆசிரியர்கள் பற்றாக்குறை முழுமையாக கல்வி அமைப்பை சீர்குலைப்பதாக உள்ளது. பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் போன்ற தொழில்முறை பயிலகங்கள் மட்டுமின்றி, உயர்கல்வி அமைப்பில்கூட ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. ஆசிரியர்களுக்கு போதுமான கல்வியைக் கொடுப்பதுதான் மூன்றாவது பெரிய சீர்திருத்த படிக்கல்லாக இருக்கும். இந்தியாவில் ஆசிரியர்களின் தரம் மிக மோசமாக உள்ளது. நமது கல்வி அமைப்பில் ஆசிரியர்கள் பாடத்திட்டத்தில் கூறப்பட்டுள்ளதையே கிளிப்பிள்ளை களைப்போல சொல்லிக் கொடுத்து கொண்டிருக்கின்றனர். இந்தப் பாடத் திட்டங்கள் முழுவதும் காலத்துக்கு ஒவ்வாதவை. நவீன மாற்றங்கள் மற்றும் போக்குகளைக் கற்பிக்கும் முறைகளில் தொடர்ந்து அனுசரிக்க வேண்டும். இதன் மூலம்தான் வேலைத்திறன் உள்ள பட்டதாரிகளை நம்மால் உருவாக்க முடியும்.

ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களின் பணித்திறனை மதிப்பிட அரசு வெளிப்படையான நேர்மையான முறை ஒன்றை அமல்செய்யவேண்டும். தற்போது தரம் இல்லாத சோம்பேறி ஆசிரியர்கள் வாழ்க்கை முழுவதற்குமான வேலை உத்தரவாதத்தைப் பெற்று ஆண்டுதோறும் சம்பள உயர்வையும் பெற்று நிம்மதியாக இருக்கின்றனர். இந்திய பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஒரு பேராசிரியருக்கு எந்த நிலையிலும் தனது வேலை பறிபோகாது என்று தெரியும். இச்சூழ்நிலையில் நேர்மையாக, கடினமாக உழைக்கும் ஆசிரியர்கள்தான் பலியாகின்றனர். அவர்கள் சோம்பேறி ஆசிரியர்களின் உழைப்பையும் சேர்த்து கொடுக்க வேண்டியுள்ளது. ஆசிரியரின் பணித்திறனை மாணவர்களும் பெற்றோர்களும் மதிப்பிட ஒரு முறைகூட இல்லையே ஏன்?

அடுத்த ஐந்தாவது படிநிலை முக்கியமானது. மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டங்கள் போன்ற திட்டங்களில் நாம் ஏற்கெனவே ஆயிரக்கணக்கான கோடிகளை ஆண்டுதோறும் செலவழிக் கிறோம். இந்தத் திட்டங்களை உறுதியான பள்ளி மற்றும் கல்லூரிக் கட்டடங்கள் கட்ட செலவழிக்கவேண்டும். தற்போது இத்திட்டங்களின் கீழ் நடக்கும் வேலைகள் எதுவும் சமூகத்திற்கு நீண்டகால பலன் தருவதாக இல்லை. இந்தத் திட்டங் களின்கீழ் பணிபுரிபவர்கள் தாங்கள் கட்டும் கட்டடங் களில் தங்கள் குழந்தைகள் படிக்கப்போவதை எண்ணிப் பார்த்தால் கூடுதல் பயனாக உணர்வார்கள்.

அடுத்த படிநிலை பிரம்மாண்டமான சீர்திருத்த மாகும். ஆரம்பக்கல்வி நிலையை ஒரு குழந்தை தாண்டி, அடுத்ததாக கல்லூரிக் கல்வியில் நுழைவதற்கான அடிப்படைப் பயிற்சிக்குச் செல்கிறது. இது ஆறாவது படிநிலை. ஆரம்ப உயர்நிலைப்பள்ளி கல்வியோடு மேல்நிலைக்கல்வியிலும் தரத்தை உருவாக்க வேண்டியது அவசியம். கடந்த பல ஆண்டுகளாக இந்தியாவில் உள்ள நகரங்களிலும் சிற்றூர்களிலும் 14 முதல் 18 வயது வரையிலான மாணவர்கள் மதிப்பெண்கள் தொடர்பான அழுத்தத்தால் தற்கொலை செய்யும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளன. மதிப்பெண் மற்றும் சதவிகித முறையை மாற்றும் திட்டங்கள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன. கிரேடு முறை மூலம்  தேவையற்ற அழுத்தத்தையும் போட்டிகளால் பிஞ்சுக் குழந்தைகளுக்கு ஏற்படுத்தப்படும் சங்கடங்களும் குறைந்துள்ளன.

இன்று பட்டப்படிப்போ, முதுகலைப் படிப்போ படிக்காவிட்டால் கல்வி முழுமையற்றது என உணரப்படுகிறது. அதனால் உயர்கல்வி அளவில் அதிகபட்ச சீர்திருத்தங்களைச் செய்யவேண்டும். சுதந்தரம் பெற்றபோது ஐஐடி மற்றும் ஐஐஎம் போன்ற நிறுவனங்கள் தரமாக தொடங்கப்பட்டன. தற்போதைய நிலையில் மிகக்குறைவான எண்ணிக்கையில் உள்ளவர்களுக்கே அந்த நிலையங்கள் சேவை செய்கின்றன. அதனால் உயர் கல்விக்காக நிறைய கல்வி நிலையங்களை உருவாக்கவேண்டும். தேசிய அறிவு ஆணையத்தின் கணக்குப்படி நமக்கு இன்னும் ஆயிரம் பல்கலைக் கழகங்கள் தேவை. 500 பல்கலைக் கழகங்களே உள்ளன.

முந்தைய வழிமுறைகள் அனைத்தையும் பின்பற்றிவிட்டு கல்வியின் முழுமையான தரத்தை அதிகரிக்க தனியார்களை கல்வித்துறைக்குள் அனுமதிப்பது அவசியம். தனியார் துறையினரின் தேசக்கட்டுமான பங்கேற்பை ஊக்குவிப்பது அவசியம். இந்திய தொழில் முனைவோரை உயர்கல்வியில் அதிகம் முதலீடு செய்ய வைப்பது எட்டாவது படிநிலையாகும்.

ஏஐசிடிஇ போன்ற காலாவதியான அமைப்புகள் ஊழலின் பிறப்பிடங்களாக உள்ளன. அவற்றிற்கு எல்லையற்ற அதிகாரமும் தரப்பட்டுள்ளது. இந்த அதிகாரங்களைக் களைந்து அனைத்தை யும் வெளிப்படையாக மாற்றவேண்டும். இது அடுத்த படிநிலை.  இந்த ஒரு நடவடிக்கையின் மூலம் தனியார் கல்வி நிலையங்களுக்குச் செல்லும் லட்சக் கணக்கான மாணவர்கள் பயன் பெறுவார்கள். இதை தற்போதைய அரசு பரிசீலித்துவருகிறது.

கல்விக்கான மானியங்களில் அதிக கவனம் செலுத்துவது 10வது படிநிலையாகும். ஏழைப் பின்னணியுள்ள எத்தனையோ மாணவர்கள் தரமான படிப்புகளில் சேரமுடியாமல் உள்ளனர். அரசுக்கு நல்ல எண்ணங்கள் இருப்பினும் வங்கிகள் அவர்களுக்குக் கடன் தர மறுக்கின்றன. இவர்களுக்கு ஒரு பெரிய தொகை கொண்ட நிதியை அரசு உருவாக்கவேண்டும். மதம், சாதி வித்தியாசம் இல்லாமல் இது உதவுவதாக இருக்கவேண்டும்.

பதினொன்றாவதும் முக்கிய மானதுமான படிநிலை என்னவெனில், நாட்டின் ஜிடிபியில் 1.5 சதவிகிதத்தி லிருந்து கல்விக்கான முதலீட்டை 5 சதவிகிதமாக அதிகரிக்க வேண்டும். ஆரம்பக் கல்வியில் அரசு மிகச்சிறந்த பங்கேற்பைச் செய்யமுடியும். ஆரம்பக் கல்வி மற்றும் அடிப்படை ஆரோக்கியத் தில் தனியார் துறையினர் காப்பாற்று வார்கள் என்று எதிர்பார்க்க வேண்டாம்.

இந்த பதினோரு வழி முறைகளும் இந்தியா வின் கல்வி நிலையை மாற்று வதற்கு உதவும் என நான் நினைக்கிறேன். ஆனால் இன்னொன்றையும் நான் அறிவேன். எல்லாம் வேகமாக மாறிக் கொண்டிருக்கும் உலகில் திறந்த மனதுடன் இருக்கவேண்டி யதும் அவசியம். அதுதான் இந்த பதினோரு வழிமுறைகளைவிட முக்கிய மான வழிமுறையாகும். 



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

அரசியல் தலைமைக்கான 7 வெற்றிப் பண்புகள்

 

அரிந்தம் சவுத்ரி | டிசம்பர் 12, 2011 16:19
 

எனது 40வது பிறந்தநாள் தருணத்தில் அமர்ந்து இந்த தலையங்கத்தை எழுதுகிறேன். இன்று எல்லாவற்றையும்விட இந்தியாவின் உடனடித் தேவையாக மிகப்பெரிய அரசியல் தலைமைத்துவம் உள்ளது. தலைமைத்துவம் குறித்து நான் ஏராளமாக எழுதியிருந்தாலும், பிரதானமானது பெரு நிறுவன தலைமைத்துவத்தை பற்றிதான். அவற்றின் தலைமைத்துவம், அரசியல் தலைமைத்துவத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது. அதனாலேயே அரசியல் தலைமைத்துவத்துக்கு குறிப்பிட்ட முன்மாதிரியும், சிறப்பான சிந்தனை முறையும் அவசியம். நிறுவனங்களைப் பொறுத்தவரை இறுதி இலக்கு பெரும்பாலும் லாபத்தை அதிகரிப்பதுதான். அரசியலைப் பொறுத்தவரை சமூக நலனை அதிகரிக்க வேண்டும். பெரு நிறுவனங்களின் சிறந்த தலைவர்கள் எல்லோரும் சிறந்த சந்தைப்படுத்தும் வல்லவர்களாக இருப்பார்கள். ஆனால் அரசியலிலோ சிறந்த தலைவர்கள் கடின உழைப்பாளிகளாகவும் உண்மையானவர் களாகவும் இருக்கவேண்டும். வியாபாரத்தில் நியாயமற்று இருப்பது கடைசியில் உங்களையே சீரழிக்கும்.

மிஞ்சிப்போனால் உங்கள் பங்காளிகளை பாதிக்கும். அரசியலில் நியாயமின்றி செயல்பட்டால் முழு தேசத்தின் எதிர்காலமும் நிர்மூலமாகும். பெரு நிறுவன தலைமைத்துவத்தில் வலுவானவர்களிடம் கடப்பாடு தேவை. பலமுள்ளவனே வாழ்வான் என்ற நியதி அங்கே செல்லுபடியாகும். அரசியல் தலைமைத்துவமோ பலவீனனின் வாழ்வோடு தன்னை பிணைத்துக் கொள்வது. இதுபற்றி ஏற்கெனவே எங்கள் குழும பத்திரிகையான பிசினஸ் அண்டு எகானமியில் எழுதினேன். பார்க்க: (http://www.businessandeconomy.org/27102011/storyd.asp? sid= 6462& pageno=1).  அரசியல் தலைமைத்துவம் என்பது சில நல்ல பண்புகளைக் கொண்டிருப்பது அவசியம் என்பது போலவே  இருக்கவே கூடாத பண்புகளும் உள்ளன. சில பண்புகளை பெற்றிருக்காமல் இருப்பதன் மூலம் நல்லவை சரியாக ஒருவருக்கு அமைந்துவிடும்.

அரசியல் தலைமைத்துவத்துக்கான ஏழு வெற்றிகரமான நற்பண்புகளின் மாதிரிகளை இங்கே வழங்குகிறேன். நம்பகத்தன்மை, கருணை, கடந்து பார்க்கும் சக்தி, தோழமைப் பண்பு, கடப்பாடு, கவர்ச்சி மற்றும் போட்டித்திறன் ஆகிய பண்புகள்தான் அவை. ஊழல் குற்றச்சாட்டுகள் பிரம்மாண்டமாக அம்பலமாகிக் கொண்டிருக்கும் நிலையில் இந்திய அரசியல்வாதிகள் இந்தப் பண்புகளை மனதிற்கொள்வது நன்று. நான் கொடுக்கப்போகும் மாதிரியின் வித்தியாசம் என்னவெனில், ஒவ்வொரு நற்பண்புக்கும் நேரெதிராக ஒரு தீங்கு இருக்கும். இதன் மூலம் ஏழு மோசமான தீமைகளை தவிர்க்கவேண்டியதைச் சொல்கிறேன்.  பேராசை, பெரு நுகர்வு, சோம்பேறித்தனம், பொறாமை, கர்வம், கோபம் ஆகியவைதான் அவை. ஒன்றன் பின் ஒன்றாக இவற்றைப் பார்க்கலாம்.

முதலில் ஒரு தலைவர் தவிர்க்க வேண்டியது பேராசை. இந்தியாவின் அரசியல் தலைவர்களிடம் உள்ள மிகப்பெரிய பிரச்னை இது. இந்தியாவில் வளர்ச்சியின்மை காணப்படுவதற்கு முக்கியமான காரணம் வீங்கும் சுவிஸ் வங்கி சேமிப்புக் கணக்குகள்தான். ஒவ்வொரு அரசியல்வாதியும் அரசியலை விரைவாக பணம் சம்பாதிக்கும் வழியாக பார்க்கிறார்.  இங்குதான் பேராசை என்ற தீய பண்பைப் பற்றி முக்கியத்துவம் உருவாகிறது. இதற்கு நேரெதிரான நல்ல பண்பு நம்பகத்தன்மை.

பேராசை மற்றும் நேர்மையின்மைக்குப் பதிலாக அரசியல் தலைமை நம்பகத்தன்மையுடன் திகழவேண்டும். அதுதான் அரசியல் தலைவரின் உண்மையான பண்பு. நம்பகத்
தன்மையை இழந்துவிட்டால், மரியாதை இருக்காது. இப்படித்தான் பெரும்பாலான இந்திய அரசியல்வாதிகள் இன்று அவஸ்தைப்படுபவர்களாக மாறியுள்ளனர்.

அரசியல்வாதி தவிர்க்கவேண்டிய இன்னொரு தீங்கு பெருநுகர்வாகும். எல்லாவற்றையும் தாங்களே விழுங்க வேண்டும் என்று நினைக்கும் பண்பு அது. அதே வேளையில் லட்சக்கணக்கான மக்கள் பசியிலும், நல்ல குடிநீர் கிடைக்காமலும் இறந்துபோகின்றனர். நல்ல உணவு மற்றும் தூய்மையான குடிநீரை உண்ணும் பருகும் வசதியுள்ள அரசியல் தலைவர் அதே தரத்தில் தமது மக்களுக்கும் கிடைக்கவேண்டும் என்று குறைந்தபட்சம் எண்ணிப் பார்க்கவேண்டும். நமது பொறுத்தமற்ற அரசியல் தலைவர்கள் மற்றும் அவர்களது இடுப்பு அளவைப் பார்த்தால் போதும் அவர்களது நோக்கம் என்னவென்பது விளங்கும். அந்த கேவலத்தை நாம் தவிர்க்கவேண்டும். சரியான தலைமை ஒருபோதும் பெரு நுகர்வு கொண்டதாக இருக்காது. இதற்கு நேரெதிரான நற்பண்பு கருணை ஆகும். பசியுடன் இருக்கும் உணவு குறைபாடு கொண்ட மக்கள் மீது கருணை வந்தால் அது ஒரு நல்ல அரசியல் தலைவரை உருவாக்கும். அடுத்து ஒரு தலைவர் தவிர்க்கவேண்டிய மற்றொரு தீய அம்சம் சோம்பேறித்தனம். இது ஆன்மிகரீதியான, உணர்வுரீதியான, உடல்ரீதியான செயலின்மையை குறிப்பது. இதுதான் பெரும்பாலான அரசியல்வாதிகளை செயல்படாமல் வைத்திருக்கிறது. உற்சாகமாக யோசித்து திட்டமிடாமல் அலட்சியமாகவும், செயலற்றும் இருக்கின்றனர். மக்களுக்கு நல்லது செய்யும் எண்ணமின்மை, சோம்பேறித்தனம் என்னும் தீமைக்கு அவர்களை கொண்டு செல்கிறது. இதற்குப் பதிலாக அவர்கள் எதிர்காலம் குறித்த கடந்துபார்க்கும் சக்தியுடன் இருக்க வேண்டும்.  நாட்டை முன்னுக்குக் கொண்டு செல்ல அவர்கள் செயல்பட்டுக்கொண்டே இருக்கவேண்டும். இதுதான் பெரிய தலைவர்களை உருவாக்குகிறது.

நான்காவது தீங்கு பொறாமை. இது ஒருவரை மற்ற எல்லாவற்றையும்விட வீழ்த்தும் தன்மைகொண்டது. தங்கள் கூட்டாளிகளின்மீது பொறாமை கொள்ளாமல் இருப்பது அவசியம். சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு தவிர்க்க முடியாத தேவை என்பதை உணர்ந்த தலைவர்கள் உள்ளனர். ஆனால் மற்ற தலைவர்களின் மீதுள்ள பொறாமை யால் அவர்கள் அந்தத் திட்டத்தை எதிர்க்கிறார்கள். இதற்கு நேரெதிரான பண்புதான் தோழமை உணர்வு. இந்தப் பண்புதான் அரசியல் தலைவருக்கு அவசியம் வேண்டுவதாகும். இப்பண்பு இருந்தால் மட்டும்தான் சக தலைவர் களையும் மக்களையும் நேசத்துடன் அணுகமுடியும்.

ஒரு தலைவர் தவிர்த்தே தீரவேண்டிய தீங்கு கட்டுப்பாடற்ற காமம் ஆகும். இப்போது அரசியல்வாதிகள் தங்களது பாலியல் முறைகேடுகள் அம்பலத்திற்கு வந்துவிடுமோ என்பதற்காக கொலைகூட செய்ய துணிந்துவிட்டனர். காமத்துக்கு பதில் வளர்த்துக்கொள்ளவேண்டிய நற்பண்பு கடப்பாடாகும். கர்வம்தான் அடுத்து ஒரு தலைவர் தவிர்க்கவேண்டிய அம்சம். கர்வம்தான் தங்களை வெல்ல முடியாதவர்கள் என்று எண்ணம்கொள்ள வைக்கிறது. கர்வம்தான் உழைப்பதை நிறுத்திவிடுகிறது. அவர்களுக்கு இயற்கையான கவர்ச்சி இருக்கிறது. கவர்ச்சி அந்த மக்களை நோக்கி நெருங்க வைக்கும். அதன் மூலம் அவர்களுக்கு புகழ் கிடைக்கும். ஆனால் கர்வம் மக்களிடமிருந்து விலக்கி கீழே தள்ளுகிறது. அதனால் கர்வத்திற்கு பதில் கவர்ச்சியை நல்ல பண்பாக ஒரு அரசியல் வாதி உருவாக்க வேண்டியது அவசியம். எல்லா அரசியல் தலைவரும் தவிர்க்க வேண்டிய மிக மோசமான ஒரு பண்பு கோபம். கோபம் என்பது செலுத்தப்படும் நபரை மட்டும் பாதிக்காமல் தம்மையும் பாதிக்கும். இதற்கு மாற்றானது போட்டித் திறன். தங்களது சொந்தத் திறன் மூலம் தொடர்ந்து வேலைசெய்து வெற்றி பெறமுடியும். இவர்களுக்கு கோபம்  தேவை இல்லை.

இப்படித்தான் நண்பர்களே, அரசியல் தலைமைத்துவம் இருக்கவேண்டும். இந்த ஏழு வெற்றிப் பண்புகள் மூலம் ஒருவர் நாட்டை நல்ல எதிர்காலத்துக்கு இட்டுச் செல்லமுடியும். அதைத்தான் காந்தி, மாவோ, பிடல் காஸ்ட்ரோ, ஜார்ஜ் வாஷிங்டன், லெனின், நெல்சன் மண்டேலா மற்றும் சேகுவேரா ஆகியோர் செய்தனர். அவர்களது வாழ்க்கையே ஏழு தீய பண்புகளைத் தவிர்த்து ஏழு நற்பண்புகளை கைக்கொண்டதுதான். இந்த ஏழு நல்ல பண்புகளைப் பெற்ற ஏழு தீய பண்புகளைக் களைந்த இந்திய தலைவர்கள் வரும் நாள் உருவாகட்டும்!



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

மும்பையில் தாக்குதல்கள் தொடரும் நிலையில், அமெரிக்காவில் 9/11 தாக்குதல்களுக்குப் பிறகு அதுபோன்ற தாக்குதல் ஏதும் நடைபெறவே இல்லையே என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

 

அரிந்தம் சவுத்ரி | ஜூலை 27, 2011 09:39
 

இந்திய இறையாண்மையின் முகத்தில் மீண்டும் காறித்துப்பியுள்ளனர். இறந்தவர்களுக்கு அஞ்சலிகளை செலுத்திவிட்டு, அடுத்த குண்டுவெடிப்புகளுக்காக நாம் காத்திருக்க வேண்டியதுதான். 

தீவிரவாதத்தை எதிர்க்க நம்மிடம் அரசியல் உறுதிப்பாடும், உறுதிமிக்க சட்டங்களும் இல்லை என்பதே உண்மை. நமது சட்ட அமலாக்க நிறுவனங்களிடம் அதற்குரிய திட்டமும் இல்லை. இதனால்தான் தற்போதிருக்கும் தீவிரவாத எதிர்ப்பு சட்டங்களின் ஓட்டைகளுக்குள் புகுந்து தீவிரவாதிகள் தப்பிவிடுகின்றனர். அதை சீரழித்து தங்கள் நன்மைக்கு பயன்படுத்திக் கொள்கின்றனர். நமது சட்டங்கள் பழையவை மட்டுமல்ல. பல ஓட்டைகளும் உடையவையாகும். உண்மை யான குற்றவாளிகளைப் பிடிப்பதற்கு பதில் அரசியல்ரீதியான, தனிப்பட்டரீதியான பழிவாங்கலுக்கே இச்சட்டங்கள் பயன்படுகின்றன. உதாரணத்துக்கு பொடா சட்டத்தை எடுத்துக்கொள்வோம். இதை அப்பாவி மக்களை கைதுசெய்ய சட்ட அமலாக்க நிறுவனங்கள் அதிகம் பயன்படுத்தின.  மிக மோசமாகப்  பயன்படுத்தப்பட்டதால், அது  திரும்பப்பெறப்பட்டது. இச்சட்டம் இங்கிலாந்தின் தீவிரவாத எதிர்ப்புச்சட்டம் மற்றும் அமெரிக்காவின் தேசபக்தி சட்டத்துக்கு ஒப்பானது என்பதை இந்த வேளையில் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இருப்பினும் நம்மை போலன்றி அவர்களது சட்டங்கள் தொடர்ந்து தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக பலப்படுத்தப்பட்டு தீவிரவாத தடுப்புப் பிரிவுக்கு உதவுபவை. 
இதே நிலைமைதான் ஆயுதப் படை சிறப்பு அதிகாரங்கள் சட்டத்திற்கும் நிலவுகிறது. தீவிரவாதத்துக்கு எதிரான சக்தியாக திரண்டு நல்ல பலன்களை அளிப்பதற்கு பதில் வடகிழக்குப் பிராந்தியத்தில் காவல்துறை அதிகாரிகளால் அதிகமாக துஷ்பிரயோகம் செய்யப்படும் சட்டமாகும் இது. இதற்கு அடுத்து அதிகம் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சட்டம் தடா. தடாவின்கீழ் கைது செய்யப்பட்ட 50 ஆயிரம் பேரில் 0.8 சதவிகிதம் பேர்தான் உண்மையில் தண்டனை கொடுக்கப்பட்டவர்கள். மும்பையில் 26/11 தாக்குதல்களை அடுத்து, இச்சட்டங்களில் புதிதாக சில திருத்தங்கள் செய்யப்பட்டு, 43ஏ பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் போலீஸுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டது. ஆனால், சட்டத்தின் அம்சங்கள் விரிவாக்கப்படவில்லை. ஒவ்வொரு முறையும் நல்ல நோக்கத்துடன் ஒரு புதிய சட்டத்தைக் கொண்டுவரும்போது காவல்துறையும், ராணுவமும் அதை முறையாக பயன்படுத்தாமல் துஷ்பிரயோகம் செய்கின்றன. இந்த இரண்டு சட்டங்களிலும் தவறாக பயன்படுத்துபவர்களுக்கு கடும் தண்டனை அளிக்கும் அம்சங்கள் சேர்க்கப்பட வேண்டும். 

“தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகள் அதன் காலாவதியான அதிக வேலைச்சுமை கொண்ட சட்ட அமலாக்க நிறுவனங்களால் பாதிக்கப்படுகின்றன” என்று அமெரிக்க அரசுத் துறையின் மே, 2011 அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. அத்துடன் நமது மந்தமான, அதிக ஆட்சுமை கொண்ட ஊழலான நீதி அமைப்பையும்  தாமதத்திற்குக் காரணமாக குற்றம்சாட்டுகிறது. இந்தியாவின் வெடிபொருள் சட்டத்தைப் பற்றிப் பேசுவது கூடுதல் கேவலத்திற்கே வழிவகுக்கும். நமது வெடிபொருள் சட்டம் 127 ஆண்டுகள் பழைமையானது. எதிர்காலத்தில் பரிணாமம் பெறக்கூடிய தீவிரவாதத்தின் அனைத்து அம்சங்களையும் எதிர்கொள்ளும் நிலையில், அமெரிக்க சட்டங்கள் உள்ளன. உயிரியல் ஆயுத தீவிரவாத எதிர்ப்புச் சட்டம் 1989 இல் அங்கு அமலானது. 1995 இல் ஓம்னிபஸ் தீவிரவாத தடுப்புச்சட்டம், 1996 இல் அமெரிக்க தீவிரவாத எதிர்ப்புச் சட்டம் மற்றும் மரணதண்டனை சட்டம், எக்ஸிகியூட்டிவ் ஆர்டர் 13,224 , பொருளாதார தீவிரவாத சட்டத்தோடு இணைந்த பேட்ரியாட் சட்டம், ஹோம்லேண்ட் பாதுகாப்புச் சட்டம் 2002, தீவிரவாத எதிர்ப்புச் சட்டத்துக்கு துணையாக தொழில்நுட்பச் சட்டம் 2002, எல்லைப் பாதுகாப்பு, தீவிரவாத தடுப்பு மற்றும் சட்டவிரோத குடியேற்ற கட்டுப்பாட்டு சட்டம் 2005, ரியல் ஐ.டி சட்டம் 2005 மற்றும் ராணுவ கமிஷன்கள் சட்டம் 2006 ஆகியவை அமைப்பை ஏமாற்றி தப்பிக்கமுடியாமல் தீவிரவாதிகளைத் தண்டிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. இதனால்தான் அமெரிக்காவில் மீண்டும்  9/11  தாக்குதல் போன்ற  ஒரு சம்பவம் நடைபெறவில்லை போலும். இன்னும் நான் சொல்ல வேண்டுமா?



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

700 கோடி மக்களும் மூலாதாரங்களுக்கான நெருக்கடியும்! யார் உண்மையான குற்றவாளி?

 

அரிந்தம் சவுத்ரி | நவம்பர் 9, 2011 11:59
 


சில நாட்களுக்கு முன்பு உலக மக்கள்தொகை 700 கோடியை தொட்டது. ஏற்கனவே இருக்கும் மூலாதாரப் பற்றாக்குறையை இந்த மக்கள்தொகை அதிகரிப்பு எவ்வாறு பாதிக்கும் என்ற விவாதம் சூடு பிடித்திருப்பதில் ஆச்சர்யமில்லை. உணவிற்காக ஏற்பட்ட கலவரம் (எகிப்து), தண்ணீர் பற்றாக்குறை மற்றும் குணப்படுத்தப்படக் கூடிய நோய்களால் சாகும் மூன்றாம் உலக மக்கள் ஆகிய பிரச்னைகள் மக்கள்தொகை பெருக்கம் பற்றிய கவலைகளை அதிகரித்துள்ளன. 700ஆவது கோடி குழந்தை இந்தியா போன்ற ஒரு நாட்டில் பிறந்ததன் மூலம் (ஐநாவால் அடையாள ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற சில நாடுகளிலும்) மக்கள்தொகை மற்றும் உலக நெருக்கடி அதிகரிப்பிற்கான காரணம் மூன்றாம் உலக நாடுகள் மீது சுமத்தப்பட்டுள்ளது. ஆனால், விவாதத்திற்குரிய கேள்விகள் இதுதான்: 700 கோடி மக்களை தாங்க இந்த பூமி தயாரில்லையா? வளரும் நாடுகளிலுள்ள மக்கள் அதிகம் நுகர்கிறார்களா? மூலாதாரப் பற்றாக்குறைக்கு காரணம் மூன்றாம் உலக நாடுகளா?

உணவுப் பொருட்களின் விலை உயர்விற்கு இந்தியாவும் சீனாவுமே காரணம் என்ற அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா, ‘‘உலகெங்கிலும் உணவு விநியோகத்திற்கான தேவை அதிகரித்து வருகிறது, சீனா மற்றும் இந்தியாவிலுள்ள மக்கள் அதிக இறைச்சி உண்ணத் தொடங்கியுள்ளனர் மற்றும் உணவுப் பொருட்களின் விலையும் ஏறியபடி இருக்கிறது...’’ என்று கடந்த ஆண்டு பேசினார். முதல் பத்தியில் நான் எழுப்பிய கேள்விகளுக்கு எல்லா நாடுகளின் தலைவர்களும் சொல்லும் பதில் ஆம் என்பதுதான், ஆனால் தீவிர ஆய்வு முற்றிலும் வேறான பதிலைத் தருகிறது. 

உண்மை என்னவெனில், ஒரு சராசரி அமெரிக்கரின் ஆண்டு தானிய நுகர்வு, ஒரு சராசரி இந்தியனின் நுகர்வை விட ஐந்து மடங்கு அதிகம். ஓர் இந்தியர் 178 கி.கி. தானியத்தை நுகர்கையில் ஓர் அமெரிக்கர் 1,046 கி.கி. நுகர்கிறார். இது அமெரிக்க விவசாயத்துறை 2007ல் வெளியிட்ட புள்ளிவிவரம். அதே நேரத்தில் ஒரு சராசரி சீனர் உட்கொள்ளும் தானியத்தை விட ஒரு சராசரி அமெரிக்கர் உட்கொள்ளும் தானியம் மூன்று மடங்கு அதிகம். உலக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி 1997&99ல் வளரும் நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஒரு நாள் உட்கொள்ளும் தானியத்தின் அளவு 2681 காலரிகள், இது 2015ல் 2850 காலரிகளாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் 1997&99 காலகட்டத்தில் வளர்ந்த நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஒரு நாள் உட்கொள்ளும் காலரி 3380ஆக இருந்தது, 2015ல் அது 3440ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக மோசமான நிலையில் இருப்பது ஆப்பிரிக்க நாடுகள்தான், ஒரு சராசரி ஆப்பிரிக்கருக்கு 2195 காலரி உணவே கிடைக்கிறது. தெற்காசியாவில் நிலை சற்று மேல், நாள் ஒன்றுக்கு ஒரு தெற்காசியருக்கு கிடைக்கும் உணவு 2403 காலரி. ஆப்பிரிக்க கண்டத்தில் ஒருவருக்கு சராசரியாக ஆண்டு ஒன்றுக்கு கிடைக்கும் தானியத்தின் அளவு 162 கிகி. உலகிலேயே பசியாலும், பிணியாலும் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது ஆப்பிரிக்காவே.

ஆக உணவுப் பொருட்கள் விஷயத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி என்பது மேற்குலகின் கொடை. ஸ்டாக்ஹோம் இன்டர்நேஷனல் மற்றும் ஃபுட் அன்ட் அக்ரிகல்ச்சர் நிறுவனங்கள் நடத்திய ஆய்வுகளின்படி உலகம் உணவுப்பொருள் விஷயத்தில் எந்த நெருக்கடியையும் நோக்கியிருக்கவில்லை. இன்று ஏற்பட்டுள்ள நெருக்கடியானது உணவுப்பொருட்களை வீணடிப்பதால் ஏற்பட்டுள்ள நெருக்கடியாகும். உலகில் உற்பத்தியாகும் உணவுப்பொருட்களை கொண்டு உலகிலுள்ள அனைவருக்கும் தாராளமாக உணவளிக்க முடியும். உணவு மற்றும் விவசாய நிறுவனம் (திஷீஷீபீ ணீஸீபீ கிரீக்ஷீவீநீuறீtuக்ஷீமீ ளிக்ஷீரீணீஸீவீக்ஷ்ணீtவீஷீஸீ) 2002ஆம் ஆண்டு சமர்பித்த அறிக்கை ‘‘30 வருடங்களுக்கு முன்னர் இருந்ததை விட இன்று ஒரு நபருக்கு 17 சதவிகித காலரி உணவு அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. இன்று உற்பத்தி செய்யப்படும் உணவுப்பொருட்களைக் கொண்டு நபர் ஒருவருக்கு தினசரி 2720 காலரி அளிக்க முடியும்,’’ என்று கூறுகிறது. ஸ்டாக்ஹோம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி அமெரிக்கா மட்டும் வீணடிக்கும் உணவுப்பொருட்கள் மற்றும் தண்ணீர் சுமார் 50 கோடி மக்களின் தேவையை பூர்த்தி செய்யக்கூடியது. ஸ்வீடனைச் சேர்ந்த ஃபுட் அன்ட் பயோடெக்னாலஜி என்ற நிறுவனம் சமீபத்தில் (2011ல்) நடத்திய ஆய்வின்படி வளர்ந்த நாடுகளில் நுகர்வோரால் வீணடிக்கப்படும் உணவுப்பொருட்கள் சப்&சகாரன் ஆப்பிரிக்க நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் மொத்த உணவுப்பொருளுக்கு சமம்.  சப்&சகாரன் ஆப்பிரிக்க நாடுகளில் தினமும் இரவு 23.9 கோடி மக்கள் பட்டினியாக படுக்கச் செல்கிறார்கள்.  ஐரோப்பாவில் ஒருவர் ஆண்டிற்கு 280 கிகி உணவை வீணடிக்கிறார் என்றால் அமெரிக்காவில் அது 295 கிகி. இதற்கு மாறாக, சப்&சகாரன் ஆப்பிரிக்க நாடுகளில் ஆண்டிற்கு 160 கிகி வீணடிக்கப்படுகிறது, இது அமெரிக்கா வீணடிப்பதில் பாதி மட்டுமே. பிரிட்டன் ஆண்டிற்கு வீணடிக்கும் உணவின் அளவு 6.7 மில்லியன் டன். வளர்ந்த நாடுகளில் நபர் ஒருவருக்கு உற்பத்தி செய்யப்படும் உணவு 900 கிகி, இதுவே ஏழை நாடுகளில் 450 கிகி. ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டிருப்பவர்களை விட தேவைக்கு அதிகமாக குண்டாக இருப்பவர்களின் எண்ணிக்கை இன்று அதிகமாக இருப்பதற்கு காரணம் இதுவே.

அமெரிக்கா மற்றும் பிரிட்டன் போன்ற வளர்ந்த நாடுகளில் குடும்பத்தின் அளவானது சுருங்கியிருக்கிறது, ஆனால் ஒரு குடும்பம் நுகரும் அளவு அதிகரித்திருத்திருக்கிறது. ஆக, வளரும் நாட்டிலுள்ள ஒரு பெரிய குடும்பத்தை விட வளர்ந்த நாட்டிலுள்ள ஒரு சிறு குடும்பத்தின் நுகர்வு அதிகம். வளர்ந்த நாட்டிலுள்ள ஒரு சிறு குடும்பத்திற்கு தொலைக்காட்சி, ரெப்ஜிரேட்டர், கார், மின்சாரம் என எல்லா வசதிகளும் இருப்பதே இதற்குக் காரணம். இன்டர்நேஷனல் இன்ஸ்டியூட் ஃபார் அப்ளைடு சிஸ்டம்ஸ் அனலிஸிஸ் என்ற அமெரிக்க நிறுவனம் நடத்திய ஆய்வில், ஒரு நபரை மட்டுமே கொண்ட குடும்பம் சராசரியாக 774 டாலர் பெறுமானமுள்ள ஆற்றலை பயன்படுத்துகிறது, அதிகரிக்கும் ஓவ்வொரு நபருக்கும் 120 முதல் 160 டாலர் வரை செலவாகிறது. 

 இதுவே தண்ணீர் பயன்பாட்டிற்கும் பொருந்தும். வளரும் நாடுகளில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையால் சுமார் 150 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்த 25 ஆண்டுகளில் இது 300 கோடியாக அதிகரிக்கும் என அறிவியலாளர்கள் கணக்கிட்டுள்ளனர். பாதிக்கப்படுவர்கள் பெரும்பாலும் வளரும் நாடுகளை சேர்ந்தவர்களாகவே இருப்பர். வளர்ந்த நாட்டில் ஒருவர் பயன்படுத்தும் தண்ணீர் அளவு வளரும் நாட்டில் ஒருவர் பயன்படுத்துவதை விட 30 முதல் 50 மடங்கு வரை அதிகம். ஐநா வளர்ச்சி திட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அமெரிக்காவில்தான் தண்ணீர் அதிகம் செலவழிக்கப்படுகிறது. ஓர் அமெரிக்கர் சராசரியாக தினமும் 550 லிட்டரை செலவழிக்கிறார். ஆஸ்திரேலியர் (500லி), இத்தாலி (380லி), ஜப்பான் (375). வளரும் நாடுகள் இந்த விஷயத்தில் பட்டியலில் வெகு கீழே இருக்கின்றன. மொசாம்பிக் (5 லிட்டருக்கும் குறைவு), உகாண்டா, ருவாண்டா மற்றும் ஹைட்டி (15லி), சீனா (86லி).

தண்ணீர் மற்றும் உணவு மட்டுமே பிரச்னை அல்ல, ஆற்றலும் ஒரு முக்கியமான பிரச்னை. பணக்கார நாடுகளின் ஆற்றல் தேவைக்காக பல ஆட்சிகள் கவிழ்க்கப்பட்டிருக்கின்றன, புரட்சிகள் தூண்டிவிடப்பட்டிருக்கின்றன, பல கோடி மக்கள் துயரத்தில் ஆழ்த்தப்பட்டிருக்கிறார்கள். உலக மக்கள்தொகையில் வெறும் 5 சதவிகித மக்கள்தொகையைக் கொண்ட அமெரிக்கா உலகின் மொத்த ஆற்றலில் 20 சதவிகிதத்தை பயன்படுத்துகிறது. இன்று ஆற்றலை பயன்படுத்துவதில் சீனா, அமெரிக்காவை மிஞ்சினாலும் ஒரு சராசரி நபர் பயன்பாடு என்று வருகிற போது அமெரிக்கா வெகு முன்னணியில் இருக்கிறது. அமெரிக்காவில் ஒரு சராசரி நபர் பயன்படுத்தும் ஆற்றலின் அளவு 6.95 டன் பெட்ரோலுக்கு சமம், ஆனால் அது சீனாவிலோ 1.6 டன் மட்டுமே. உலக மக்கள்தொகையில் 20 சதவிகிதம் கொண்டுள்ள சீனா உலகின் 16 சதவிகித ஆற்றலை பயன்படுத்துகிறது, 17 சதவிகித மக்கள்தொகை கொண்ட இந்தியா 4 சதவிகித ஆற்றலை பயன்படுத்துகிறது. 2 சதவிகித மக்கள்தொகை கொண்ட ஜப்பான் 5 சதவிகிதத்தையும், 1 சதவிகிதத்திற்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட ஜெர்மனி 4 சதவிகிதத்தையும் பயன்படுத்துகிறது. மின்சாரத்தை செலவழிப்பதிலும் இதுவே நிலை. இதில் முதலிடத்தில் ஐஸ்லாந்தும், அதைத் தொடர்ந்து நார்வே, பின்லாந்து, கனடா ஆகிய நாடுகளும் உள்ளன. வட மரியானா தீவுகள், சாட், சியாரா லியோன் மற்றும் புரூண்டி ஆகியவை இந்தப் பட்டியலில் கடைசியாக உள்ள நாடுகள்.

அமெரிக்காவில் ஒரு குழந்தை நுகர்வின் அளவு இந்தியாவின் பத்து குழந்தைகளின் நுகர்விற்கு சமம். ஆற்றல் பயன்பாட்டிலும் சரி, வீணடிப்பிலும் சரி முன்னணியில் இருப்பது வளர்ந்த நாடுகளே. பசுமைக்குடில் வாயுக்களை வெளியேற்றும் விஷயத்திலும் இதுவே நிலை. அமெரிக்காவில் சராசரியாக ஒரு நபருக்கு 23.5 டன் பசுமைக்குடில் வாயுக்கள் வெளியேற்றப்படுகின்றன, சீனாவிலோ அது 5.5 டன்னாக இருக்க்க, இந்தியாவிலோ 1.7 டன்னாக இருக்கிறது. ஆசியா கண்டம் வெளியேற்றும் பசுமைக்குடில் வாயுக்களை விட 7 மடங்கும், சப் சகாரன் ஆப்பிரிக்க நாடுகள் வெளியேற்றுவதை விட 10 மடங்கும் அமெரிக்கா வெளியேற்றுகிறது. இத்தனைக்கும் அமெரிக்காவின் மக்கள்தொகை இந்தியா அல்லது சீனாவின் மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கே.

அடுத்த நாற்பது ஆண்டுகளில் உலகின் மக்கள்தொகை 200 கோடி அதிகரிக்கும். அதன் விளைவாக மூலாதாரங்களுக்கான நெருக்கடியும் அதிகரிக்கும். இன்று 550 கோடி மக்கள் வசிக்கும் வளரும் நாடுகளில்தான் மூலாதாரங்களுக்கான நெருக்கடி அதிகமாக இருக்கிறது. இதற்குக் காரணம் வளர்ந்த நாடுகளின் அதீத நுகர்வே. வளம்குன்றா வளர்ச்சி என்ற கருத்தாக்கத்தின் சிறப்புகளை வளர்ந்த நாடுகளின் மக்கள் கற்றுக்கொள்ள வேண்டிய நேரமிது.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

வறுமை இல்லாத இந்தியாவை நாம் விரும்பினால்

 

அரிந்தம் சவுத்ரி | நவம்பர் 15, 2011 15:08
 


பத்து ஆண்டுகளுக்கு முன்பு நான் சீனாவுக்குச் சென்றிருந்தபோது, நான் பார்த்தது என்னை கடுமையாகச் சீண்டியது.  டெல்லியில் உள்ள எல்லாரும் சேர்ந்து தினம் 24 மணிநேரம் வீதம் 25 ஆண்டுகள் உழைத்தாலும் டெல்லியை பெய்ஜிங்காக மாற்றமுடியாது என்பதை உணர்ந்தேன். அப்படியான சீனாவை எதிர்பார்த்துதான் நான் சென்ற மாதம் அங்கே போயிருந்தேன். ஆனால் அதற்குப் பதிலாக கடந்த 10 ஆண்டுகளில் மேலும் 25 ஆண்டுகளுக்கான வளர்ச்சியை சீனா எட்டியிருந்தது. பத்தாண்டுகளுக்கு முன்பு பிரமாண்டமான சாலைகள் இருந்தன. ஆனால் கொஞ்சம் கார்களே அப்போது இருந்தன. தற்போது அங்குள்ள சாலைகளை அமெரிக்க கார்கள் நிரப்பியுள்ளன. அந்த கார்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதில்கூட அக்கறை செலுத்தவில்லை. சென்ற முறை போனபோது நான் பார்த்த வானுயர்ந்த கட்டடங்களைவிட தற்போதைய சீனாவில் 10 மடங்கு கட்டடங்கள் பெருகியுள்ளன. சென்ற முறை நான் பெய்ஜிங்கைப் பார்த்து வியந்தேன். இந்த முறையோ அடுத்த 50 ஆண்டுகளுக்கு 24 மணிநேரம் நாள்தோறும் உழைத்தாலும் நம்மால் குவாங்சவ் அளவு கூட வளரமுடியாது என்பதை உணர்ந்துகொண்டேன். ஒவ்வொரு இந்திய அரசியல்வாதியும் அரசியலுக்கு வருவதற்கு முன்பு நாடாளுமன்றத்துக்குள் நுழைவதற்கு முன்பு, சீனாவை ஒருமுறை பார்த்தே ஆகவேண்டும் என்று நம்புகிறேன். குறிப்பாக இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்டுகளும் ஆண்டுக்கணக்கில் தாங்கள் ஆளும் மாநிலங்களில் மக்களை ஏமாற்றியுள்ளனர். தற்போது அவர்கள்  சீனப்  பொருளாதாரம் அமெரிக்கப் பொருளாதாரத் தின் பிடியில் சிக்கித் தவிப்பதாகக் கூறுகின்றனர். 10 ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் எழுதிய த கிரேட் இந்திய ட்ரீம் நூலில் இதையேதான் எழுதியுள்ளோம். 
 
அத்துடன் அமெரிக்க பொருளாதாரத்தை  வெகுதொலைவில் சீனப்  பொருளாதாரம் தாண்டி விட்டதாகவும் இன்று எழுது கிறேன். சீன தயாரிப்புகள் குறைவாகவே மதிப்பிடப்படுகின்றன. அவர்களது சிக்கலான பொருளாதார பிரம்மாண்டத்தின் சரியான மதிப்பை அளவிட எந்த முறையும் இல்லை. சில தசாப்தங்களுக்கு முன்புகூட சீனாவின் அரசியல் அமைப்பு மற்றும் அதிக மக்கள் தொகை காரணமாக எதிர்மறையாகவே பார்க்கப்பட்டது என்பதை நினைவு கூறலாம். ஆனால் சீனாவை தற்போது பார்க்கும்போது சில ஆண்டுகளுக்குள் அத்தனை கோடி மக்ககளுக்கும் வாங்கும் திறனை அளித்திருக்கும் மாயம் நம்மைக் கவரும். அந்த மக்கள் அனுபவிக்கும் வாழ்க்கையும் மேற்கு நாடுகளில் பலவும் அனுபவிக்காதவை. இது நிச்சயம் அதிசயம்தான். மிகப்பெரிய பொருளாதாரத்தை சரியான திட்டமிடுதலுடன் ஒவ்வொரு நுண் அலகிலும் செயல்படுத்தியதும், செயல்படுத்தி வருவதும்தான் பல நாடுகளின் கற்பனைக்கு எட்டாத நிலையில் சீனா நிற்பதற்குக் காரணமாகும். அத்துடன் முக்கியமாக தனது குடிமக்களை நாட்டின் வளர்ச்சியுடன் சேர்த்தே சீனா கொண்டு சென்றுள்ளது. இன்று பெய்ஜிங்கில் வாழும் ஒரு சீனர், ஷாங்காயில் வாழும் வசதியானவர் ஒருவர் அனுபவிப்பதை எல்லாம் அனுபவிக்கிறார். பெய்ஜிங் அல்லது ஷாங்காயில் வாழும் ஒரு சராசரி சீனரின் வாழ்க்கை வசதிகளையே நியூயார்க்கில் வாழும் சராசரி அமெரிக்கரும் அனுபவிக்கிறார். இப்படியான வளர்ச்சிக்கு சீனா செய்ததுதான் என்ன? 

1970களின் இறுதியில் சீனா, மத்திய கட்டுப்பாட்டின் பிடியிலிருந்து பொருளாதாரத்தை விடுவித்து இரும்புத் திரையை உயர்த்தியது. அத்துடன் ஏழை மக்கள் மீதான தனது கடமையையும் விடவில்லை. இது அதிசயத்தை நிகழ்¢த்தியது. இந்தியா போலன்றி அங்கு கவனமாக திட்டமிடப்பட்ட தாராளமயமாக்கத்தின் மூலம் வளர்ச்சியில் சீரான கதியை அந்த தேசம் எட்டி, 500 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் வறுமை நிலையிலிருந்து மீட்கப்பட்டனர். லட்சக்கணக்கான குடியானவர்கள்  வறுமையிலிருந்து விடுவிக்கப்பட்டு, தங்களது கனவுகளை தொடர அனுமதிக்கப் பட்டனர். இந்த சுதந்தரமும் கட்டுப்பாடற்ற நிலையும்தான் உற்பத்தி மற்றும் சேவை துறையில் கடந்த 20 ஆண்டுகள் வளர்ச்சியை கொண்டுவந்தது. சீன வெகுமக்களின் புதிய நம்பிக்கைக்கான திருவிழாவாகவும், சுதந்தரமான தொழில்முனைவுக்கான திறப்பாகவும் அது இருந்தது. உள்கட்டுமானம், கல்வி மற்றும் இதர சமூகநலப் பிரிவுகளில் சரியான முதலீடுகள் செய்யப்பட்டு புதிய உற்சாகத்திற்கும் புதிய நடவடிக்கைகளுக்கும் வழிவகுக்கப்பட்டது. இந்த வளர்ச்சிகள் சீனாவின் ஏற்றத்தை உலக அரங்கில் தெரியப்படுத்தின. அத்துடன் முதலீட்டுக்கு சிறந்த இடமாகவும் சீனா ஆனது. இந்த சுதந்தரம் சீனாவின் வேளாண்மைத்துறையையும் வளர்த்தது. விவசாயிகள் தங்கள் பொருளாதார முடிவை தாங்களே எடுக்க முடியும் என்ற கொள்கையின் மூலம் வறுமைக் கோட்டுக்கு வெளியே லட்சக்கணக்கான விவசாயிகள் வந்தனர். கிராமப்புற குடும்ப சராசரி வருவாய் 55 டாலரிலிருந்து 4115 டாலராக அதிகரித்தது. 1978க்கும் 2003க்கும் இடையில் நடந்த மாற்றம் இது. 1990க்கும் 2005க்கும் இடையில் தனிநபர் வருமான வளர்ச்சி சராசரி அடிப்படையில் சீனப் பொருளாதாரம் 8.7% வளர்ந்தது. சீன மக்கள் தொகை அடிப்படையில் 1981&ல் 64% பேர் வறுமைக்கோட்டுக்குக் கீழே இருந்தனர். ஆனால் 2004&ல் வெறும் 10 % ஆக அவர்கள் குறைந்துவிட்டனர். வாங்கும் சக்தியின் அடிப்படையில் பார்த்தால், இந்தியாவில் 40%க்கும் மேல் வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளனர். சீனாவின் வறுமை ஒழிப்புதான் அதன் சாதனைபூர்வமான குறிப்பிடத்தகுந்த செயலாக, மந்திரமாக தொடர்ந்து சுட்டிக்காட்டப்படுகிறது. உலகில் உள்ள அனைத்து வளரும் நாடுகளுக்கும் முன்னுதாரணமாக சீனாதான் உள்ளது. 

கடந்த 30 ஆண்டுகளில் சீனாவில் அமல்படுத்தப்பட்ட வறுமை ஒழிப்புத் திட்டங்கள் நவீன சீனாவை நம்பிக்கையுடன் நிமிர்ந்தெழ வைத்துள்ளது. இன்று எந்த சீன குடிமகனும் எந்த நகருக்கும் சென்று வேலை தேடி அங்கு வசிக்க முடியும்.  சீன நகரங்களில் உண்மையான ஏழை என்று ஒருவரைக்கூட பார்க்கமுடியவில்லை. அங்கே யாசகர்கள் இல்லை. குடிசைகள் இல்லை. யாரும் தெருக்களில் தூங்குவதில்லை. நகரங்களுக்கு ஏழைகள் சுதந்தரமாக இடம்பெயருகிறார்கள் எனில் அங்கே சேரிகள் இருக்கும். ஆனால் சீனாவில் நகரத்துக்கு கூடுதல் சௌகரியமான வாழ்க்கைக்காகவே வருகின்றனர். கிராமங்களில் வறுமையில் இறப்பதை தவிர்க்க அவர்கள் நகரங்களை நோக்கி வருவதில்லை. வறுமை ஒழிப்புக்காக சீனா கொண்டு வந்த திட்டங்கள் அங்கே 592 முக்கிய உள்ளாட்சிகளிலும் திபெத்தின் 74 முக்கிய உள்ளாட்சிகளிலும் கொண்டு வரப்பட்டுள்ளன. செல்வ வளத்தை பகிர்ந்துகொள்வதில் மத்திய மேற்குப் பகுதியில் உள்ள உள்ளாட்சிகள் பலவீனமான தொடர்புகளைக் கொண்டுள்ளவை. இந்தப் பொருளாதார இடைவெளியை சமாளிப்பதற்காக அதிகாரிகள் 1986லிருந்து ஏழை மக்களுக்கு அதிகமான மானியத்துடன் கடன்களை வழங்கினார்கள். அதேபோல உணவுக்கு வேலை திட்டமும் சீனாவில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. இந்த திட்டத்திற்காக 33.06 பில்லியன் ஆர்எம்பிஐ(சீன நாணயம்) 1986 முதல் 1997 வரை 11 ஆண்டுகளில் செலவழித்தது. இதுபோன்ற திட்டங்களில் மற்ற நாடுகளைப் போல் ஊழலில் ஈடுபடாமல் சாலைகள், பாலங்கள், அணைகள் மற்றும் பிற உள்கட்டுமானங்களில் செலவழித்து ஆக்கப்பூர்வமான சொத்துகளாக மாற்றின. வேளாண்மைத் துறையைப் பொறுத்தவரை விவசாய வரிகளில் மாற்றங்களும் செய்யப்பட்டது. அத்துடன் பிற கட்டணங்களும் குறைக்கப்பட்டு விவசாயிகள் மூச்சுவிட்டனர். 2000மாவது ஆண்டில் அனைத்து கட்டண முறைகளும் ஒழி¢க்கப்பட்டன. இவற்றுக்கு பதிலாய் ஒரே விவசாய வரி விதிக்கப்பட்டது. பின்னர் மார்ச் 2004ல் சீனாவில் உள்ள மத்திய அரசு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு முற்றிலும் விவசாய வரியை திரும்பப்பெற தீர்மானித்தது. அதே ஆண்டில் தான் விவசாயத்துக்கான மானியம் அறிமுகப்படுத்தப் பட்டது. அத்துடன் கிராமப்புற உள்கட்டுமானத்துக்கு 25 பில்லியன் டாலர் கூடுதலாக ஒதுக்கப்பட்டது. இறுதியாக வாகனப் போக்குவரத்து உள்கட்டுமான வசதிகள் விரைவு பயணத்தடங்கள் ஆகியவை கட்டுவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. இதனால் விரைவு வழிச்சாலைகள் 1988ல் 107 கி.மீ.களே இருந்த நிலை மாறி, 2002&ல் 25,130 மீட்டர்களாக வளர்ச்சி கண்டது. ஆரம்பத்தில் நகர்ப்புற மக்கள் மற்றும் கிராமப்புற மக்களுக்கு இடையே வறுமை ஒழிப்பில் வித்தியாசங்கள் இருந்தன. பிராந்திய ரீதியான வேறுபாடுகளும் இருந்தன. இதனால் நகர்ப்புறத்திற்கும் கிராமப்புற மக்களுக்கும் இடையே வளர்ச்சியில் ஏற்றத்தாழ்வுகள் இருந்தன. கிராமப்புற சீனாவின் நிலைமையை உணர்ந்து அரசு, மூன்று பண்ணை கொள்கையை அறிமுகப்படுத்தி விவசாய உற்பத்தி வழியாக விவசாயிகள் செல்வந்தர்களாவதற்கு வழிவகுத்தது. கிராமப்புறங்களில் முதலீட்டை அதிகரித்து நவீன விவசாய தொழில்நுட்பத்தை புகுத்தி தூய்மையான ஊழலற்ற நிர்வாகம் வாயிலாக விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது. இதே கொள்கை 2004ல் புதிய அம்சங்களுடன் புதுப்பிக்கப்பட்டு மறுபடியும் நடைமுறைப்படுத்தப்பட்டது. 

நான் முன்பு சொன்னதுபோலவே 2005ல் விவசாய வரிகள் அனைத்தும் ஒழிக்கப்பட்டன. இந்த நடவடிக்கையோடு கிராமப்புற உள்கட்டுமானத்தை அதிகப்படுத்தி தூய்மையான குடிநீர் மாசுபடாத ஆற்றல் மற்றும் சாலை மேம்பாடுகள், தகவல் தொடர்புகள் ஆகிய வசதிகள் மேம்படுத்தப்பட்டன. இந்த நடவடிக்கைகளால் கிராமப்புற மக்களின் வருமானமும் பொருட்களை வாங்கும் சக்தியும் நம்ப முடியாத அளவுக்கு அதிகரித்தது. கல்வி, ஆரோக்கியம், சுகாதாரம் ஆகியவற்றிலும் வளர்ச்சி ஏற்பட்டது. இதனால் கிராமப்புற மக்கள் இடம்பெயர்வது குறைந்தது. சமூக பொருளாதாரச் சூழ்நிலையிலேயே மாற்றம் ஏற்பட்டது. சீனாவின் வறுமை ஒழிப்புத் திட்டத்திற்கு சரியான இலக்கு ஒன்று இருந்தது. வறுமையிலிருந்து வெளியே வரும் மக்கள் மீண்டும் முந்தைய நிலைக்குச் செல்வதை விரும்பமாட்டார்கள் என்று அந்தத் திட்டத்தை வகுத்தவர்கள் நம்பிக்கை வைத்தனர். இது இந்தியாவுக்கும் பொருந்தும்.


1980 முதல் 2002க்குள் சீன உற்பத்தித் துறை அதிகபட்ச வளர்ச்சியைக் கண்டது. இதன் ஆண்டு வளர்ச்சி 11.3% ஆக இருந்தது. சேவை துறையின் ஆண்டு வளர்ச்சி 10.4 சதவிகிதமாக இருந்தது. 2003லிருந்து 2008 வரை இருந்த வேளாண்மைத் துறை வளர்ச்சி விகிதம் 18.4%. அதிகபட்ச உள்நாட்டு சேமிப்புகள் மக்களின் செலவு விகிதத்தை உள்கட்டுமானத்தில் அதிகரித்தன. இதனால் தொழிலாளர் நலனிலும் முன்னேற்றம் ஏற்பட்டது. பொருளாதாரத்தின்மீது அரசுக்கு இருந்த பிடியில் தளர்வு ஏற்பட்டது. தனியார் முதலீட்டின் பாய்ச்சலுக்கு வழிவகுத்து, பொதுத்துறை நிறுவனங்களின் வீழ்ச்சிக்கும் வித்திட்டது. 

சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் வழியாக அன்னிய நாட்டு முதலீடுகள் வரத்தொடங்கியதன் மூலமாகத்தான் உற்பத்தித் துறையில் வளர்ச்சி தொடங்கியது. இதைத்தொடர்ந்து சிறப்புப் பொருளாதார மண்டலங்களையும் தாண்டி சீனா தனது கதவுகளை பொருளாதாரத்திற்காக மூலைக்கொன்றாக திறந்துவிட்டது. இதனால் முதலீட்டாளரின் நம்பிக்கை சீனாமீது அதிகரித்து அனைத்து உலக பிராண்டுகளும் தங்கள் பொருட்களை உற்பத்தி செய்யும் தளமாக சீனாவை மாற்றும் நிலைமை ஏற்பட்டது. சீனாவின் சேவைத்துறை வளர்ச்சி எப்போதும் உற்பத்தித் துறை வளர்ச்சியால் மறைக்கப்படும் ஒன்றாகும். நாட்டின் மொத்த ஜிடிபியில் 40  சதவிகித  பங்கை  சேவைத்துறை வளர்ச்சி வகிக் கிறது. 20 சதவிகிதத்திலிருந்து உண்டான வளர்ச்சி இது. 1990களின் மத்தியிலிருந்து சீனாவின் சேவைத்துறை பணிகளில்தான் பொருள் உற்பத்தி மற்றும் வேளாண்மைத் துறையைவிட அதிகமான நபர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். 2007 ஆம் ஆண்டுக்குள் 250 மில்லியன் மக்களை சேவைத்துறை பணி அமர்த்தியுள்ளது. 
சீனாவின் திட்டம் மிகவும் விஞ்ஞானபூர்வமானதும், நுட்பமானதும்கூட. மற்ற நாடுகளுடன் சீனாவை ஒப்பிட ஒருவர் நினைக்கவே கூடாது. அதேபோன்றுதான் சீனாவுடன் இந்தியாவை ஒப்பிடுவதும் முட்டாள்தனமானது. சீனாவுக்கும் இந்தியாவுக்கும் மக்கள் தொகை அடிப்படையில் உள்ள ஒற்றுமை தவிர வேறு எந்த பொதுமைகளும் இல்லை. 

சீனாவில் கடந்த 25 ஆண்டுகளில் வந்த முதலீட்டு விகிதம் 35 முதல் 45 %  என்றால், இந்தியாவினுடையது வெறுமனே 20 முதல் 26 %தான். சீனா முதலீட்டைப் பொறுத்தவரை அவை முழுமையான முதலீடுகள். ஆனால் இந்தியாவிலோ முதலீட்டில் பெரும்பகுதி செயல்திறன் இன்மையாலும், ஊழலாலும் உறிஞ்சப்பட்டுவிடும். அவர்கள் உள்கட்டுமானத்துக்கு செய்யும் முதலீட்டுடன் நாம் ஒப்பிடவே முடியாது. 

சீனாவின் வளர்ச்சித்தன்மையும் இந்தியாவுடன் ஒப்பிடத்தகுந்தது அல்ல.  தனது முதன்மையான துறையில் மேம்பாடு காணுவதிலிருந்து ஆரம்பித்து, கடந்த 25 ஆண்டுகளில் இரண்டாம் நிலை துறைக்கு வந்து உலகின் பட்டறையாக தன்னை மாற்றியுள்ளது சீனா. ஆனால் இந்தியாவோ உற்பத்தி துறையில் சிறிதான வளர்ச்சியே பெற்று உடனடியாக சேவைத்துறையில் குதித்துவிட்டது. 1950களில் 60 சதவிகிதமாக தேசிய வருமானத்தில் பங்கு வகித்த உற்பத்தி துறை 2003ல் 25 சதவிகிதமாக அருகிவிட்டது. வர்த்தக கொள்கையும் வர்த்தக முறையும் இரண்டு நாடுகளுக்கும் மாறுபடுகிறது. சீனாவுக்கு அதிக முதலீடு வருவதும் ஏற்றுமதியால் அதிகமான வருமானம் இருப்பதற்கும் காரணம் சிறந்த போக்குவரத்து வசதிகள், மலிவான வீட்டு வசதி, மலிவான தொழிலாளர்கள் மற்றும் உலகத்தரமான உள்கட்டுமானத்தில்தான். ஆனால் இந்தியாவில் உள்ள நிலைமைகளோ சாதாரணமானது. ஏற்றுமதி அடிப்படையிலான தொழில்துறைகளை ஊக்குவிக்காதது. 

1960கள் வரைகூட இந்தியா பெரும்பாலும் சீனாவைவிட சிறந்த நிலையிலே இருந்தது. அடுத்த 50 ஆண்டுகளிலேயே சீனா பிரம்மாண்ட வல்லரசாக உருவெடுத்து அமெரிக்கர்களையே கீழே குனிந்து பார்க்கும் நிலைமைக்கு வளர்ந்துள்ளது. நாம் இந்தியாவை மாற்றுவதற்கு விரும்பினால் சோனியா காந்தி, ராகுல் காந்தி, அத்வானி ஆகியோர் முதல் பிரகாஷ் காரத், மம்தா பானர்ஜி வரை அனைவரையும் சீனாவுக்கு அழைத்து செல்லவேண்டும். ஏனெனில் அவர்கள் வறுமை ஒழிப்பைப் பற்றிப் பேசும்போது எனக்கு சிரிப்புதான் வருகிறது. அவர்களுக்கு வறுமை ஒழிப்பின் அர்த்தம் தெரியாது. அவர்களை குவாங்ஷௌவ் போன்ற நகருக்குள் அழைத்து செல்லவேண்டும். எவ்வளவு தரத்தில் நேர்த்தியுடன் கட்டப்பட்ட சாலைகள் என்று தெரியும். அவர்களை ஆண்டுதோறும் நடக்கும் கேன்டன் திருவிழாவுக்கு அழைத்துச் செல்லவேண்டும். வெளிநாட்டு வாடிக்கையாளர்களை எப்படி ஈர்க்கவேண்டும் என்று அப்போது அவர்களுக்கு புரியவரும். நமது டெல்லியின் பிரகதி மைதானத்தை ஒப்பிட்டால் வரலாற்றுக்கு முந்தைய அழுக்கான இடமாக அது தோற்றமளிக்கும்.


இதனால்தான் சீனாவில் எந்த கலகங்களும் இல்லை. துபாயில் சுதந்தரம் இல்லை என்று கூறுவதைபோலத்தான் சீனாவிலும். துபாயில் குரானுக்கு எதிராக பேசமுடியாது. சீனாவிலும் அதிபருக்கு எதிராக உங்களால் பேசமுடியாது. ஆனால் அரசில் உள்ள ஊழல் பற்றி தினசரிகளில் எழுதலாம். அவர்களது கொள்கைகளை விமர்சிக்கலாம். கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு வரலாம். வெளிநாட்டுக்குச் செல்லலாம். குக்சியை வாங்கிக்கொண்டு மெர்சிடஸில் டிரைவ் செய்யலாம். அங்கு ஏன் கலகங்கள் இல்லை என்றால், சீனாவின் ஒவ்வொரு குடிமகனும் தமது சகோதரிகளும், சகோதரர்களும் நாளுக்கு நாள் வளர்ந்துவருவதைப் பார்க்கின்றனர். மாற்றத்தையும் பார்க்கிறார்கள். நகரங்கள் தூய்மையாகவும், நவீனமாகவும் பெரிதாகவும் நியூயார்க்கைவிடவும், லண்டனைவிடவும் அழகானதாகவும் மாறியிருக்கின்றன. ஆனால் இந்தியாவை பற்றி அப்படி நாம் சொல்லவே முடியாது என்பதுதான் வெட்கக்கேடு. இதுதான் இந்த தேசத்துக்கு செய்திருக்கும் மகத்தான துரோகமாகும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

ஐரோப்பிய ஒன்றியத்தின் மாபெரும் குலைவும் இத்தாலியின் கதையும்!

 

அரிந்தம் சவுத்ரி | நவம்பர் 21, 2011 17:00
 

ஐரோப்பாவில் விழுந்துள்ள விரிசல்கள் எல்லோருக்கும் ஏற்கனவே தெரிகிறது. கிரீஸில் தொடங்கி போர்ச்சுகல், இத்தாலி, ஸ்பெயின் என இது தொடர்கிறது. இன்றைய ஐரோப்பிய நிலை எனக்கு இரண்டாம் உலகப் போருக்கு பிந்தைய அதன்   காலகட்டத்தை நினைவூட்டுகிறது. அப்போது ஐரோப்பிய சமூகமும் பொருளாதாரமும் சீர்குலைந்திருந்தன. கடந்த ஐந்து வருடங்களாக ஐரோப்பிய நாடுகள் பெரும் பொருளாதார சரிவுகளை சந்தித்து வருகின்றன. அதன் விளைவாக அவற்றின் மொத்த சமூக அமைப்பே பெரும் பாதிப்பிற்குள்ளாகியிருக்கிறது. வலுவாக இருந்த பல நாடுகளின் சரிவு மொத்த ஐரோப்பிய கண்டத்தையும் கிடுகிடுக்க வைத்திருக்கிறது.

இவற்றில் மிகவும் ஆர்வமூட்டக்கூடிய உதாரணம் இத்தாலியே. இந்த நாடு, உலகின் மிகவும் வளர்ச்சியடைந்த 25 நாடுகளுள் ஒன்று, இந்நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் மிக உயர்வானது (மனித வளர்ச்சி குறியீட்டில் முதல் 10 நாடுகளுள் ஒன்று), சராசரி தனிநபர் ஆண்டு வருமானத்தை பொருத்தவரை இந்நாடு உலகில் வளர்ந்த நாடுகளுக்கு இணையானது. ஐரோப்பாவில் நான்காவது மிகப் பெரும் பொருளாதாரமான இது இன்று 2.2 லட்சம் கோடி டாலர் கடனில் சிக்கியிருக்கிறது, அதாவது அதன் ஜிடிபி&யை (நாட்டின் மொத்த உற்பத்தி) விட அதன் கடன் 20 சதவிகிதம் அதிகம். உற்பத்தித் திறன் அதிகம் கொண்ட நாடாகவும், பேஷன் மற்றும் கார் தொழிற்துறைகளில் பல பெரும் நிறுவனங்களைக் கொண்ட நாடாகவும் இருந்தபோதிலும் அதனால் தனது வருமானத்தையும் செலவையும் சமநிலையில் வைத்திருக்க முடியவில்லை. இந்த ஆண்டின் தொடக்கத்தில் அந்நாட்டின் இரு பெரும் வங்கிகளும் முற்றிலும் குலைந்து போனதுடன் ஐந்து முக்கியமான வங்கிகள் தங்களது பங்குகளில் 30 சதவிகிதத்தை இழந்தன. கருப்புப் பொருளாதாரம் நாட்டுப் பொருளாதாரத்தில் 20 சதவிகிதமாக இருப்பதுடன் ஊழல் பெருமளவு பரவியுள்ளது. ஐரோப்பிய பொருளாதார ஒத்துழைப்பிற்கான அமைப்பு என்ற அமைப்பில் உள்ள நாடுகளில் வர்த்தகத்திற்கு உகந்த நாடுகள் என்ற பட்டியலில் இத்தாலி மிகவும் கீழ்நிலையில் உள்ளது. கடந்த ஓராண்டில் இந்த விஷயத்தில் இத்தாலில் 10 புள்ளிகளை இழந்திருக்கிறது. அதிக சம்பளம் தரப்படும் அதிகார வர்க்கமும், ஊழல் நிறைந்த அரசியலுமே இன்று இந்த தேசத்தை இந்த அளவிற்கு சீர்குலைத்திருக்கின்றன.

ஒவ்வொரு நாளும் இத்தாலியின் நிலை மோசமடைந்து வருகிறது. ஐரோப்பாவிலேயே வேலையின்மை மிகக் குறைவாக நிலவிய இத்தாலியில் 2009&2010 காலகட்டத்தில் மட்டும் 500,000த்திற்கும் அதிகமான (30 வயதிற்குட்பட்டவர்கள்)இளைஞர்கள் வேலை இழந்துள்ளனர். வேலையிழப்பில் அதிகம் பாதிக்கப்பட்டது கர்ப்பிணி பெண்களே (பேறு கால விடுப்பு கிடைக்காததால் சுமார் 800,000 கர்ப்பிணிகள் வேலையை விட வேண்டியதாயிற்று). இது குடும்ப வருமானத்தில் பெரும் குறைவை ஏற்படுத்தியதன் விளைவாக பலரால் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியவில்லை. கடந்த ஆண்டில் மட்டும் பள்ளியை விட்டு பாதியில் நிற்போர் எண்ணிக்கை 20 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இத்தாலியில் முதல் ஆறு ஆண்டு பள்ளிப் படிப்பு இலவசம் என்பதையும் நீங்கள் மனதில் வைக்க வேண்டும்.

அடுத்த சில மாதங்களில் நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 25 சதவிகிதம் வறுமையின் பிடியில் சிக்கக் கூடும் என இத்தாலி அஞ்சுகிறது. 2011 ஜூலையில் வெளியான அறிக்கையின்படி வறுமை 5 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. ஐந்து மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்களைக் கொண்ட குடும்பங்களில் 29.9 சதவிகிதம் வறுமையின் பிடியில் இருக்கின்றன. குடும்பங்களின் சேமிப்பு வேகமாக குறைந்தபடி இருக்கிறது. ஓரிரு ஆண்டுகள் முன்பு வரை 25 முதல் 34 சதவிகிதமாக இருந்த சேமிப்பு இப்போது 8 சதவிகிதமாக குறைந்திருக்கிறது. இன்றைய சமூகப் பொருளாதார நிலையின் காரணமாக குற்றங்களும் அதிகரித்திருக்கின்றன. வேலையில்லாத இளைஞர்கள் தற்கொலை செய்துகொள்வதும் அதிகரித்திருக்கிறது. 2009லிருந்து ஆண்டிற்கு 250 பேர் வழக்கத்தை விட கூடுதலாக தற்கொலை செய்துகொள்வதாக தெரியவந்துள்ளது. இவற்றில் 75 சதவிகிதம் வேலையின்மையால் என்பதும் தெரியவந்துள்ளது. ஆள்கடத்தல், செக்ஸ் குற்றங்கள் ஆகியவையும் சுமார் 25 சதவிகிதம் அதிகரித்துள்ளன. போதைமருந்து பழக்கம், குடி ஆகியவையும் கடந்த இரண்டு வருடங்களில் மிகவும் அதிகரித்துள்ளது.

மக்கள்தொகையில் ஏற்படும் மாற்றமும் அதிகரித்துள்ளது. இத்தாலிய புள்ளிவிவரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி இந்த வருட மக்கள்தொகை வளர்ச்சி பெரும் குழப்பத்தை சந்தித்துள்ளது. கடந்த காலத்தில் குடியேற்றத்தின் காரணமாக பிறப்பு மற்றும் இறப்பிற்கு இடையிலான விகிதம் நேர்மறையானதாக இருந்தது. ஆனால் குடியேற்றத்திற்கு எதிரான போராட்டத்தின் (உள்ளூர் ஆட்களுக்கு வேலை போகிறது என்பதால்) காரணமாக மக்கள்தொகை வளர்ச்சியில் சரிவு ஏற்பட்டுள்ளது. பல ஜோடிகள் குழந்தைப் பேறு காலத்தின் போதும் பின்னர் குழந்தைகளை வளர்க்க ஆகும் செலவிற்கும் பயந்து குழந்தை பெற்றுக்கொள்வதில்லை. முன்னர் தந்தது போல குழந்தை பெற்றுக்கொள்பவர்களுக்கு ஊக்கத்தொகையை அரசாங்கத்தால் இப்போது வழங்க முடிவதில்லை. 

அரசாங்கம் தரும் உதவித்தொகையை நம்பியிருக்கும் முதியவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது (அரசாங்கத்தின் நிதிப் பளுவை குறைக்க) என்ற முடிவுக்கு எழுந்த எதிர்ப்பால் அது கைவிடப்பட்டது. இன்று இத்தாலியில் பொருளாதாரத்திற்கு பங்களிக்கக் கூடிய வயதினரை விட ஓய்வூதியம் பெறுகிறவர்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள். ஜிடிபி&யில் சுமார் 15 சதவிகிதம் ஓய்வூதியம் தர செலவாகிறது. பொருளாதாரத்திற்கு பங்களிக்கக் கூடிய வயதினரோ வேலையின்மாயால் வீட்டில் சும்மா இருக்கின்றனர். பணக்காரர்களின் வரி ஏய்ப்பும் அதிகரித்திருக்கிறது. கடந்த ஓரிரு ஆண்டுகளாக ஆண்டிற்கு 140 முதல் 150 பில்லியன் டாலர் வரி ஏய்க்கப்பட்டு அது வெளிநாட்டு ரகசிய வங்கிகளில் பதுக்கப்படுகிறது. இவை அனைத்தும் இத்தாலிய பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி தலைமையின் கீழ் நடந்தவை.

ஊழல் மற்றும் வரி ஏய்ப்பிற்கு மட்டுமன்றி செக்ஸ் விவகாரங்களுக்கும் பேர் போனவர் பெர்லுஸ்கோனி. இப்போது பெர்லுஸ்கோனிக்கு பதிலாக சரியான நபர் ஒருவர் பிரதமராக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். புகழ்பெற்ற பொருளாதார நிபுணரும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்னாள் ஆணையருமான மரியோ மான்ட்டி பிரதராகியிருக்கிறார். மிகத் தீவிரமான சிக்கன நடவடிக்கை தேவைப்படுகிறது. மொத்த இத்தாலியும் மான்ட்டி இதை சாதிப்பார் என எதிர்பார்க்கிறது. ஆனால் அரசியல் சக்திகள் (பெர்லுஸ்கோனியின் கட்சி உட்பட) மான்ட்டியின் செயல்பாடுகளை உற்று கவனித்தபடி இருக்கின்றன. ஏதாவது சிறு தவறிழைத்தாலும் அவை பாய்ந்து குதறிவிடும். மான்ட்டியின் சிறு தவறு கூட பெரும் அரசியல் பதற்றத்தை ஏற்படுத்திவிடும்.

இத்தாலி மட்டுமல்ல, நான் ஏற்கனவே சொன்னது போல ஸ்பெயினும் அழிவின் விளிம்பில் இருக்கிறது. கிரீஸ் நாட்டை பொருளாதார சரிவிலிருந்து மீட்டதைப் போல ஸ்பெயினையும் மீட்கக் கூடிய சக்தி ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இல்லை. அயர்லாந்தின் நிலைமை மிக மோசமாக இருக்கிறது. தன்னை மீட்கும்படி ஐரோப்பிய ஒன்றியத்தை கெஞ்சிக் கொண்டிருக்கிறது. 2014ஆம் ஆண்டு வாக்கில் அயர்லாந்தின் கடன் சுமை அதன் ஜிடிபியை விட 80 சதவிகிதம் அதிகமாக இருக்கும். கிரீஸ் மற்றும் போர்ர்சுகலின் நிலைமையும் அதுதான். இந்த நாடுகள் அனைத்தும் சர்வதேச நாணய நிதியத்தை (ஐஎம்எப்) உதவிக்கு அணுகும் பட்சத்தில் ஐஎம்எப் நொறுங்கி விடும். ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தங்களது நாணயத்தையும் தங்களது சர்வதேச வர்த்தகத்திற்கு சாதமாக கையாள முடியாது. ஏனெனில் இவை தங்களது தனித்த நாணயத்தை விடுத்து ஈரோவை ஏற்றுக்கொண்டுவிட்டன.

ஐரோப்பா என்ற மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல் உலகெங்கும் அதிர்வலைகளை எழுப்பி வருகிறது. இது உலகிற்கே ஓர் எச்சரிக்கை. நியூ யார்க் முதல் ஷங்காய் வரையிலான அனைத்து பங்கு சந்தைகளின் சரிவையும் முடுக்கக் கூடியது ஐரோப்பாவின் பொருளாதார நெருக்கடி. வால் ஸ்ட்ரீட்டை நிரப்புவோம் இயக்கம் ஐரோப்பாவிலும் வேகமாக பரவி வருவது அதன் சமூக நெருக்கடி ஆழமாகி வருவதை காட்டுகிறது. சான்பிரான்ஸ்கோ மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி 2012ல் இந்த பொருளாதார நெருக்கடி இன்னும் அதிகரிக்கும். ஐரோப்பிய நாடுகள் எதுவும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெற முடியாத நிலையில் உள்ளதால் இவை சீனா, இந்தியா போன்ற நாடுகளின் உதவியை கோரக் கூடும். பொருளாதார நெருக்கடியில் உள்ள நாடுகளுடன் நாணய பரிவர்த்தனை வர்த்தகத்தில் ஈடுபடுவதை சீனா ஏற்கனவே நிறுத்திக் கொண்டிருக்கிறது. சீனாவின் முக்கிய வர்த்தக கூட்டாளி ஐரோப்பா. ஆகவே ஐரோப்பாவின் நெருக்கடியால் சீனாவின் ஏற்றுமதி வர்த்தகமும் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. பல நாடுகளில் நெருக்கடி முற்றிய நிலையில் அது இந்தியாவின் வர்த்தகத்தையும் பெரிதும் பாதித்தது. இதன் காரணமாக மத்திய வங்கியானது குறுக்கிட்டு தூண்டல் நிதியை அளித்து நிலைமையை மோசமடையாது பார்த்துக்கொண்டது.

ஐரோப்பிய நாடுகள் பொருளாதார நெருக்கடியை தவிர்த்து அரசியல் நெருக்கடியாலும் பீடிக்கப்பட்டிருக்கின்றன. முக்கியமாக நார்வே போன்ற நாடுகளில் வலதுசாரி தீவிரவாத கட்சிகள் உருவாகி வருகின்றன. இவை மேலும் நிலைமையை ஆபத்தானதாக ஆக்கக் கூடியவை. செக்ஸ் ஊழல் விவகாரங்கள், ஊழல் மலிந்த அரசியல் மற்றும் அதிகார வர்க்கம் ஆகியவை வலதுசாரி கட்சிகள் உருவாக வழி வகுத்துள்ளன. இது எதிர்காலத்தின் ஐரோப்பிய சமூகத்தின் சாரம்சத்தையே அழித்துவிடும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

மேற்குக்கு சீனாவின் பதில்: சீனாவில் தயாரிக்கப்பட்டது போய் சீனாவால் தயாரிக்கப்பட்டது என்பதாகும்

 

அரிந்தம் சவுத்ரி | ஆகஸ்ட் 10, 2011 11:58
 

புகழ்பெற்ற நகைச்சுவை ஒன்று உள்ளது. நீங்கள் உங்களை நான்கு மனிதர்களாக நகல் செய்தால்,  அதில் ஒருவர் சீனராக இருப்பார் என்பதே அந்த நகைச்சுவை. அதிக ஜனத்தொகை மற்றும் நகல் எடுப்பதில் வல்லவர்கள் என உலகம் சீனர்களைப் பற்றி கருதுவதிலிருந்து தோன்றியதே இந்நகைச்சுவை. ஆம். சந்தேகமே இல்லை. சீனா எல்லாரையும் ஆதிக்கம் செய்து உலக மக்கள் அனைவரது வாழ்க்கையிலும் இரண்டற கலந்துவிட்டதுதான். வெறுமனே மனித சக்தியைக் கொண்டு, பொருள் உற்பத்தி சக்தியைக் கொண்டு, தனது சேவைகளைக் கொண்டு நம்பவே முடியாத வேகத்தில் முன்னேற்றமடைந்துள்ளது. ஒருவர், தான் உபயோகிக்கும் பொருளின் பூர்வீகம் குறித்து தேடத்தொடங்கினால் சீனாவாக இருக்கும் வாய்ப்பே அதிகம் உள்ளது. செல்போனாக இருக்கட்டும், லேப்டாப்பாக இருக்கட்டும், உங்கள் காரின் என்ஜினாக இருக்கட்டும், எல்லாம் சீனாவில் செய்யப்பட்டவை. அசல் ஐபோனோ அதேபோல தோற்றமளிக்கும் போலி கருவியும் சீனாவில் தயாரிக்கப்பட்டது. இவையெல்லாம்  ஏற்கெனவே  தெரிந்தவை தான். சீனர்கள் இன்று அடைந்திருக்கும் வளர்ச்சிக்கு முக்கிய காரணம், அவர்கள் சொந்த தேசத்து பொருட்கள் மற்றும் பிராண்டுகளினால்தான் என்பது பலருக்கும் தெரியாது. மேற்கத்திய நிறுவனங்களுக்கு எல்லா பொருட்களையும் உற்பத்தி செய்வதோடு மட்டுமின்றி, தனது சொந்த உள்ளூர் உற்பத்தி மூலமே மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்றுள்ளது. வருவாய், சந்தைப் பகிர்வு மற்றும் அளவில் பன்னாட்டு நிறுவனங்களுடன் சீன நிறுவனங்கள் போட்டியிடுவதோடு, அவற்றுக்கு மாற்றாக இருப்பதோடு நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் மேற்கத்திய தயாரிப்புகளுக்கு சரியான பதிலியாகவும் மாறியிருக்கிறது. 

குறைந்த கூலி ஏற்றுமதிக்கும் நகல் எடுப்பதற்குமே ஏற்ற நாடு என்று சீனா பற்றிய பொது அபிப்ராயத்திற்கு எதிராக அந்நாடு மிக புதுமை விரும்பும் நாடாக சர்வதேச அளவில் எழுந்து வந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள உயர் ரக டிசைனர் உடை கடைக்குச் செல்லுங்கள். அல்லது டிஸ்னி ஸ்டோர்ஸுக்குப் போய் பாருங்கள். அங்குள்ள பொருட்கள் அனைத்தும் சீனாவில் தயாரிக்கப்பட்டவை. சீனப் பொருட்கள் அனைத்தும் மலிவான, குறைந்த தரமுள்ள பொருட்கள் என்ற எண்ணத்தை இவை சிதைக்கின்றன. மேற்கில் கிடைக்கும் எல்லா பொருட்களும் சீனாவில் தயாரிக்கப்பட்டவை போலவே தெரிகின்றன. அதனால்தான் செப்டம்பர் 11 தாக்குதல்களுக்குப் பிறகு எல்லா இடங்களிலும் அமெரிக்கர்கள் தங்கள் கொடிகளைப் பறக்க விட்டிருந்தனர். அந்தக் கொடிகளில் பெரும்பாலானவை சீனாவில்தான் செய்யப்பட்டது என்பது பின்பு தெரியவந்தது. இந்தியாவில் தயாரானவை  என்று  சொல்லும்படியாய் பொருட்களே இல்லை என்னும் உண்மை ஓர் இந்தியனாக உங்களைப் பாதிக்கலாம். ஒரு தேசமாக நம்மிடம் சிறந்த திறன்களும் இருந்தும் அவர்களில் பெரும்பாலானவர்கள் உலகின் மிகச்சிறந்த நிறுவனங்களை தற்போது நிர்வகித்தும்கூட இந்நிலைமைதான் நிலவுகிறது. அதனால்தான் ஹிலாரி கிளிண்டன் இந்தியாவுக்கு வந்தபோது தெற்காசிய பிராந்தியத்தில் இந்தியா சீனாவுக்கு இணையான பங்கை வகிக்கவேண்டும் என இந்தியர்களுக்கு உற்சாக டானிக் அளித்தார். நான் இதை கேட்டு புரண்டு சிரித்தேன். முந்தைய இதழிலிலிருந்தும் தொடர்ந்தும் சீனாவைப் பற்றி நான் எழுத வேண்டும் என்று நினைப்பதற்கு காரணம் என்னவெனில், அப்போதுதான் இந்தியர்கள் தாம் எந்த இடத்தில் இருக்கிறோம்? எப்படி இருந்திருக்கமுடியும் என்பதை உணர்வார்கள். 

சமீபத்தில் வந்த உலக அறிவுசார் சொத்து மானிகள் 2010 விவரங்களின்படி, காப்புரிமை விண்ணப்பங்களை அளிக்கும் பெரிய நாடுகளில் மூன்றாவது இடத்தை சீனா வகிக்கிறது. சீனா 2009 ஆம் ஆண்டில் மட்டும் 2 லட்சத்து 3 ஆயிரத்து 481 உரிமங்களுக்காக விண்ணப்பித்தது. 2003 லிருந்து 2007க்குள் 4 லட்சத்து 92 ஆயிரத்து 8 விண்ணப்பங்களைத் தந்துள்ளது. சீனர்களின் தொழில் முயற்சி மற்றும் சீன நிறுவனங்களை வலுப்படுத்த அந்நாட்டு அரசு ‘உள்நாட்டு புத்தாக்க’ திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. 2006லிருந்து இதுதான் தேசிய முக்கியத்துவத்திற்கு உரியது என்றும் அறிவித்துள்ளது. சீன உள்நாட்டு நிறுவனங்களுக்குள் நடைபெறும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்கான திட்டம் இது. அத்துடன் அறிவுசார் சொத்துரிமையில் தங்கள் நாட்டினர் அதிக காப்புரிமைகளைப் பெறுவதற்கான முயற்சியும்கூட. அத்துடன் அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த உற்பத்தி முறைகள் தொடர்ந்து பெரிய வரி விலக்குகள், கடன் உதவிகள் மற்றும் நிதி உதவிகள் வழியாக ஊக்குவிக்கப்படுகின்றன. 2010 ஆம் ஆண்டின் யுஎஸ் சேம்பர் அறிக்கை, “சீனாவின் உள்நாட்டுப் புத்தாக்க முயற்சி” என்ற பெயரில் அந்நாடு எப்படி முன்னேற்றப் படிகளில் ஏறி அறிவியல் தொழில்நுட்பத் துறையில் முக்கிய இடத்தை எப்படி பிடித்தது” என்று கூறுகிறது. 

சுவாரசியமான உதாரண குறிப்பு ஒன்றுடன் சீனாவின் முன்னேற்ற கதையுடன் நான் தொடங்குகிறேன். பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுகளை தொடர்ந்து பார்த்தவர்கள், முன்னாள் சீன ஜிம்னாஸ்டிக் வீரர் லீனிங்கின் செயலைப் பார்த்து நிச்சயம் வியந்திருப்பார்கள். அவர்தான் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றினார். அத்துடன் இந்த 45 வயதான மூன்று தங்கப் பதக்கம் வாங்கிய வீரர்தான் சீனாவின் மிகப்பெரிய விளையாட்டுப் பொருள் உற்பத்தி நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் நிறுவனராவார். அந்த நிறுவனத்தின் பெயர் லீனிங் கம்பெனி லிமிடெட். லீனிங் நிறுவனம் சீனாவின் பெரிய நிறுவனம் மட்டுமல்ல, உலகம் முழுவதும் இதற்கு கடைகள் உள்ளன. 2008 ஒலிம்பிக் விளையாட்டுகளில் சீன அணியோடு பிற அணிகளுக்கும் இந்நிறுவனம் புரவலராக இருந்தது. சீனாவில் நைக் மற்றும் அடிடாஸுக்கு மிகப்பெரிய போட்டி நிறுவனமாக விளங்குகிறார் லீனிங். கடந்த ஆண்டு வருவாய் மட்டும் 1.354 பில்லியன் டாலர். சீன சந்தை ஆய்வுக்குழு கருத்துக்கணிப்பு 2009ன் படி லீனிங்குக்கும் அடிடாஸுக்கும் சீன சந்தையில் 14 சதவிகிதம் இடமிருக்கிறது. சந்தையில் முதலிடம் பிடிக்கும் நைக் 3 சதவிகிதமே அதிகம் உள்ளது. 

சீனர்கள் எவ்வளவு திறன்வாய்ந்தவர்கள் என்பதை நிரூபிக்க இந்த ஓர் உதாரணம் போதும். நுட்பமான அளவில் பார்த்தால் எந்தப் பொருளாதாரமும் உறுதியான நிதித்துறை இல்லாமல் செழுமை அடைய முடியாது. மேற்கத்திய வங்கிகளை ஒப்பிடும்போது, சீன வங்கிகள் மிகப்பெரிய வீச்சை அடைந்துள்ளன. சீன தொழில்துறையின் உறுதியான தூண்களில் ஒன்றாக ஐசிபிசி வங்கி உள்ளது. 2011 இன் போர்ப்ஸ்  பட்டியலில் உலகின் ஏழாவது பெரிய பொது நிறுவனமாக இடம்பெற்றுள்ளது. சீனாவின் உயர் மட்டத்தில் உள்ள நான்கு வங்கிகளாக ஐசிபிசி, பியூப்புல்ஸ் கன்ஸ்ட்ரக்ஷன் வங்கி, பேங்க் ஆப் சீனா மற்றும் சீன விவசாயி வங்கி ஆகியவை உள்ளன. சீன நிதித்துறையில் 80 சதவிகித பங்கை இந்த வங்கிகள் வகிக்கின்றன. ஐசிபிசிக்கு தற்போது 200 மில்லியன் வாடிக்கையாளர்களும், நாடு முழுவதும் 6000 கிளைகளும் உள்ளன. எச்எஸ்பிசிக்கு உலகம் முழுவதும் 100 மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளதை ஒப்பிட்டுப் பார்ப்போம். சீனாவின் கன்ஸ்ட்ரக்ஷன் வங்கி சொத்து மற்றும் நிலக்கடன்களைக் கவனிக்கிறது. அத்துடன் சீனாவின் வெளிநாட்டு வைப்பு நிதிகளையும் கட்டுப்படுத்துகிறது. சீனாவில் 100 வர்த்தக வங்கிகள் உள்ளன. 1998 இல் சீனாவின் வர்த்தக வங்கிகள் அரசுரிமை நிறுவனங்களுக்கு கடன் கொடுக்க வேண்டும் என அரசிடம் இருந்து உத்தரவு வந்தது. சிறிய முதலீடுள்ள கூட்டுறவு வங்கிகள் தனியார் நிறுவனங்களுக்கு கடன் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. சீனாவின் உள்ளூர் நிறுவனங்கள், வெளிநாட்டுப் போட்டியையும் மீறி வளர்ந்ததெனில் அதற்குக் காரணம் சீன வங்கிகள்தான். வெளிநாட்டு வங்கிகளின் சந்தைப் பகிர்வு 2009 ஆம் ஆண்டில் வெறுமனே 1.71 சதவிகிதம்தான். 2010 இல் 1.83 ஆக உயர்ந்துள்ளது. 

சீனாவின் வலுவான நிதி அமைப்பு, குறைந்த வட்டியில் கடன் கொடுக்கும் நிலையும் பல தொழில் துறைகளை வாழவைத்தது. அவற்றில் ஒன்று சீனாவின் வாகன உற்பத்தித்துறை. சீனாவின் கடலளவு வாகனத்தேவையை அங்குள்ள 45 உள்ளூர் உற்பத்தியாளர்கள் நிறைவேற்றுகின்றனர். உலகிலேயே சீனாவில்தான் மிகப்பெரிய கார் சந்தை உள்ளது. இங்கு தயாரிக்கப்படும் கார்களில் பெரும்பாலானவை சீனாவுக்குள்ளேயே உபயோகி¢க்கப்படுகின்றன. மிகக்குறைவானவையே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. உள்ளூர் வாகன உற்பத்தியாளர்களான செரி, பிஒய்டி, ஷான்குவான் நோபில் மற்றும் சில மிகவும் விரும்பப்படும் சீன பிராண்டுகளாக உள்ளன. இவை முன்னணி நிறுவன தயாரிப்புகள் என்பதோடு மட்டுமின்றி, மேற்கத்திய டொயோட்டா, ஹோண்டா, பென்ஸ், ஜிஎம்ஸ் மற்றும் போர்ஷ் ஆகியவை பிராண்டுகளுக்கு பதிலாகவும் உள்ளன. வாகன உற்பத்தியாளர்களுக்கான சீன கழகத்தினர் 2010 ஆம் ஆண்டு கொடுத்த அறிக்கையின்படி ஒரு ஆண்டில் 35 லட்சத்து 58 ஆயிரத்து 400 கார்கள் தயாரித்திருப்பதாகக் கூறியுள்ளனர். இந்த அறிக்கை ஷாங்காய் ஆட்டோமேடிவ் இண்டஸ்ட்ரீ கார்ப்பரேஷனுக்கு வழங்கப்பட்டதாகும். சீனாவில் உள்ள கார் நிறுவனங்கள் மலிவான கார்களிலிருந்து உயர்ரக கார்கள் வரை தயாரிக்கின்றன. டொயோட்டா, ஹோண்டா, நிஸான் மற்றும் ஹுண்டாய் போன்றவை ஆளுக்கு 6 சதவிகித சந்தைப் பகிர்வை சீனாவில் வைத்திருக்கின்றன. ஆனால் இந்த சந்தைப் பகிர்வை சீன நிறுவனங்களுடன் கூட்டு உடன்படிக்கை செய்தே சாதிக்க முடிந்துள்ளது. 

விமானப் போக்குவரத்துத் துறையை எடுத்துக்கொண்டால் உலகிலேயே அதிகமான பேர்களை ஏற்றி செல்லும் விமான போக்குவரத்து சீனாவில்தான் நடக்கிறது. சீனாவின் விமான போக்குவரத்து நிறுவனமான ஏர் சீனா விமானங்கள் 2010 ஆம் ஆண்டில் மட்டும் 60 மில்லியன் மக்களை ஏற்றிச்சென்றுள்ளது. உலகின் லாபகரமான விமான போக்குவரத்து நிறுவனங்களில் ஏர் சீனாவும் ஒன்று. 2010 இல் இதன் மொத்த வருவாய் 1.83 பில்லியன் டாலர். ஏர் சீனா மூலம் தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் வடஅமெரிக்க நாடுகள் அனைத்துக்கும்  செல்லலாம்.  இத்தோடு சீனா சதர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனமும் உள்ளது. 2010 ஆம் ஆண்டில் இந்நிறுவன விமானங்கள் 76.5 மில்லியன் பயணிகளை எடுத்துச் சென்று உலகின் ஐந்தாவது பெரிய ஆசியாவின் முதல்நிலை விமானப் போக்குவரத்து நிறுவனமாக ஆனது. 2010 இல் இதன் லாபம் 883 மில்லியன் டாலர். சீனாவில் சரக்கு விமானப் போக்குவரத்து நிறுவனங்களும் நன்கு வளர்ந்துள்ளன. சீனா கார்கோ ஏர்லைன்ஸ், கிரேட்வால் ஏர்லைன் மற்றும் ஷாங்காய் ஏர் லைன்ஸ் ஆகியவை மிகப்பெரிய சரக்கு விமான நிறுவனங்கள். உலகம் முழுவதும் பொருட்களைக் கொண்டு செல்வதற்கு சீனா யாரையும் நம்பவேண்டிய தேவை இல்லை. 

1.3 பில்லியன் மக்கள் தொகையுடன் சில்லறை வர்த்தகர்களுக்கு தங்கச் சுரங்கமாக சீனா உள்ளது. இங்குள்ள வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உலகளாவிய சில்லறை வர்த்தகர்களின் வாயில் எச்சிலை ஊறவைத்து அந்நாட்டிற்குள் நுழையும் ஆசையை உருவாக்குபவை. கேர்போர், வால்மார்ட் மற்றும் டெஸ்கோ நிறுவனங்கள் சீனாவுக்குள் நுழைய வரிசையில் நிற்கும்போது, அங்கிருக்கும் உள்ளூர் சில்லறை வர்த்தக நிறுவனம் அவர்களை வரவேற்க காத்திருந்தது. அதன் பெயர் உமார்ட் ஸ்டோர்ஸ். இந்நிறுவனம் தனது சேவையை 1994 இல் தொடங்கியது. தற்போது அதற்கு நாடு முழுவதும் 500 கடைகள் உள்ளன. உமார்ட் இன்னும் தன்னை விரிவு படுத்திக் கொள்ளும் வேகத்தில் இருந்தாலும், இதன் ஆண்டு விற்பனை 2 பில்லியன் டாலர்கள்தான். ஆனால் சீனாவில் வால்மார்ட்டின் ஆண்டு விற்பனையோ இதைவிட 5 பில்லியன் டாலர்கள் அதிகம் ஆனால் அது கண்டுவரும் வளர்ச்சியால் விரைவில் இந்த இடைவெளியை எட்டிப் பிடித்துவிடும். சீனாவின் உள்ளூர் பிராண்டான ஹேயர் தற்போது உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ளது. 1920 இல் குளிர்சான பெட்டி தொழிற்சாலையாக ஹேயர் ஆரம்பிக்கப்பட்டது. 2000த்தின் ஆரம்பத்திலேயே 6.31 பில்லியன் முதலீடு கொண்ட நிறுவனமாக வளர்ந்தது. 
இவற்றையெல்லாம்விட சீனாவின் முதுகெலும்பாய் இருப்பது ஆற்றல் துறைதான். சீனாவில் பெட்ரோ கெமிக்கல் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் சில பெரிதாக உள்ளன. உலகின் மிகப்பெரிய எண்ணெய் எரிபொருள் பயனாளிகள் இங்கேதான் உள்ளனர். சீனாவின் பெட்ரோ சீனா நிறுவனம்தான் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தியாளராக இங்கு திகழ்கிறது. பெட்ரோ சீனாவின் 2010 ஆம் ஆண்டு வருவாய் 221.57 பில்லியன் டாலர். 

தகவல் தொழில்நுட்பம் இல்லாமல் 21 ஆம் நூற்றாண்டில் ஒரு நாட்டை சக்தியுள்ளது என்று சொல்லமுடியாது. சீனாவின் முக்கிய வருவாயாக தகவல் தொழில்நுட்பம் உள்ளது. வெளிநாடுகள் தங்களுக்கான தொழில்நுட்ப சேவைகளை அயலகப் பணிக்காக விரும்பிக் கொடுக்கும் இடமாக சீனா உள்ளது.  இருபது ஆண்டுகளுக்கு முன்பு தகவல் தொழில்நுட்ப சேவையில் இறங்கிய சீனா, தற்போது சரியான போட்டியை கொடுத்து முன்னணியில் உள்ளது. ஹூவாவே டெக்னாலஜிஸ் நிறுவனத்தை எடுத்துக்கொள்வோம். சீனாவின் மிகப்பெரிய வலைப்பின்னல் மற்றும் தொலைத்தொடர்புக் கருவி தயாரிக் கும் நிறுவனம் அது.  சீனா முழுவதும் விஸ்தரிக்கப்பட்டுள்ள ஹுவாவே சர்வதேச அளவிலும் புகழ்பெற்ற நிறுவனமாக உள்ளது.  
மேற்கத்திய தொழில்நுட்ப சாதனங்களுக்கும் சீனா மிகப்பெரிய போட்டியை அளித்துள்ளது. சந்தை ஆய்வு நிறுவனமான ஐடிசியின் தகவல்படி, 2010 இன் நான்காவது காலாண்டில் சீன கம்ப்யூட்டர் நிறுவனமான லெனோவா, சீனா சந்தையில் முதலிடம் வகிக்கிறது. உலகளவில் இதன் சந்தை பகிர்வு 10.2%. சீனாவிலும் உலகளவிலும்கூட கணிப்பொறி தேவைகளுக்கு லெனோவா சரியான தயாரிப்பாக உள்ளது. இந்த நிறுவனம் தொடங்கி சில ஆண்டுகளிலேயே பார்ச்சூன் 500 பட்டியலில் 449&ஆம் இடத்தைப் பிடித்துள்ளது. 

ஓர் ஆண்டுக்கு முன்பு சீனாவிலிருந்து கூகுள் வெளியேறியது மிக பெரிய அலையை ஏற்படுத்தியது. ஆனால் சீனச்சந்தையில் சிறு சலனம்கூட இல்லை. உலகளாவிய அளவில் தேடுதல் எந்திரங்களைப் பொறுத்தவரை கூகுள்தான் ஏகபோகமாக ஆட்சி செலுத்துகிறது. இதன் பரவல் 86 சதவிகிதமும், யாஹுவின் பரவல் 6.5 சதவிகிதம் என்றும் சொல்லலாம். ஆனால் சீனாவிலோ நிலைமை முற்றிலும் வேறு. அங்கு பைடு என்னும் தேடுதல் பொறியே இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 78 சதவிகிதத்தை வகிப்பதாய் உள்ளது.  

அனைத்துத் துறைகளிலும் மேற்கைத் தோற்கடித்து அவர்கள் மொழியிலேயே சீனா பதில் அளித்துள்ளது. மிகப்பெரிய அமெரிக்க, ஐரோப்பிய நிறுவனங்களுக்கு  மாற்றுகளை தருவதற்கு சீனா நீண்டதூரம் பயணித்துள்ளது. உற்பத் தித் தீர்வுக்கான முக்கிய இடமாக முன்பு பார்க்கப்பட்ட சீனா தற்போது புதுமையின் பிராந்தியமாக உருவாகியுள்ளது. உலகளவில் பார்த்தால் எரிக்ஸன் மற்றும் சிமென்ஸுடன் அடுத்து போட்டியிடும் மிகப்பெரிய மொபைல் தொலைபேசி நிறுவனம் ஹுவாவேதான். 2010 இல் இதன் வருவாய் 28 பில்லியன் டாலர். 

சீனாவின் வளரும் நிலையில் உள்ள நிறுவனங்களுக்கு எளிமையான கடனும் ஆதரவும் அளிப்பதன் மூலம், அந்நிறுவனங்கள் உலகின் பிரம்மாண்டமான நிறுவனங்களுடன் போட்டியிட்டு முன்னேறமுடிகிறது. ஆனால், இந்தியாவில் தாராளமயமாக்கலுக்குப் பிறகு நூற்றுக்கணக்கான இந்திய நிறுவனங்கள் வரலாற்றில் புதைக்கப்பட்டன. ஆனால் இன்று சீன பிராண்டுகள் வலுவாகவும், அனைவருக்கும் தெரியும்படியும் தரத்தில் சிறந்ததாகவும் உள்ளன. 2011 இன் பார்ச்சூன் 500 பட்டியலில் உள்ள 61 நிறுவனங்கள் சீனர்களுடையவை. அமெரிக்காவின் நிறுவனங்கள் 133, ஜப்பானுடையவை 68. சீனாவின் நிறுவனமான சினோபெக் 5ம் இடத்தில் உள்ளது. இன்னும் சொல்லவேண்டுமா?



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

இந்திய சில்லரை வர்த்தகத்தில் வெளிநாட்டு முதலீடை எதிர்ப்பதற்கு பதிலாக கொரியர்களின் வழியில் உலகத்தரம்வாய்ந்த பொருட்களை உருவாக்கி தேசிய பெருமிதம் கொள்ளுங்கள்!

 

அரிந்தம் சவுத்ரி | டிசம்பர் 2, 2011 16:26
 

இந்தியாவில் சில்லரை வர்த்தக துறையில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பது தொடர்பாக ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிகளும் முட்டிக்கொண்டிருக்கும் நிலையில் இந்த தலையங்கம் எழுதப்படுகிறது. இதுதொடர்பாக எழுந்திருக்கும் விவாதம் முக்கியமானது. ஏனெனில் தேசத்தின் நரம்பு மண்டலமாக சில்லரை வர்த்தகம் உள்ளது. பல தேசங்கள் தங்களது மோசமான நிலையில் இருந்து சில்லரை வர்த்தகத்தினால் மீண்டுள்ளன. இந்தியாவில் ஒருங்கிணைக்கப்பட்ட சில்லரை வர்த்தகம் என்பது இரண்டு சதவிகிதம்தான் உள்ளது. பெரும்பகுதி வாய்ப்புகள் இன்னும் பயன்படுத்தப்படாத துறை அது. அமெரிக்காவி¢ன் ஒருங்கிணைக்கப்பட்ட சில்லரை வர்த்தக சந்தை 80 சதவிகிதம் ஆகும். தாய்லாந்தில் 40. சீனாவில் 20 சதவிகிதம். இப்படி இருக்கும் நிலையில் ஏன் இப்போது அந்நிய முதலீட்டு எதிராக எதிர்ப்பு எழுந்துள்ளது? இந்த எதிர்ப்பு மிகவும் தாமதமானதும்கூட. எல்லா துறைகளிலும் அந்நிய முதலீட்டை அனுமதித்துவிட்டு சில்லரை வர்த்தகத்தில் மட்டும் அனுமதிக்காமல் ஏன் இருக்கவேண்டும்? முன்னாள் வந்த எல்லா அரசுகளும் அனைத்து துறைகளிலும் இந்திய நிறுவனங்களை போட்டித்திறன் வாய்ந்ததாக உருவாக்குவதற்கு முன்பாகவே அந்நிய முதலீடை அனுமதித்துவிட்டன. இதன்மூலம் இந்திய திறனையே நாம் அமைப்புரீதியாக சீரழித்துவிட்டோம். சில்லரை வர்த்தகத்தில் மட்டும் அந்நிய முதலீடு நுழைவதற்கு இப்போது நாம் கூச்சல் போடுகிறோம். சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு என்பது அவசியமானது. அதனால் பயனே இல்லை என்று சொல்லமுடியாது.

சரியானபடி இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டால் நாட்டின் பொருளாதாரம் மேம்படும். விவசாயிகள் பலன்பெறுவார்கள். உற்பத்தியாளர்கள் பலன்பெறுவதோடு, பெரிய அளவில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். அரசு வருவாயும் அதிகரிக்கும். பொருட்களை சேமித்து வைப்பதிலும் விநியோகிப்பதிலும் உள்ள பிரச்னைகளும் சீராகும். இப்படி ஒருங்கிணைக்கப்பட்ட சில்லரை வர்த்தக சந்தை மூலம் 2020ல் 260 பில்லியன் டாலர் வருவாய் கிடைக்கும். ஒரு ஆண்டுக்கு 35 முதல் 45 பில்லியன் டாலர் வருவாயும், நேரடியாக மூன்று முதல் நான்கு பில்லியன் பேர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். மறைமுகமாக 4 முதல் 6 பில்லியன் பேர் வேலைவாய்ப்பை பெறுவார்கள். சிறு நடுத்தர வர்த்தகர்களும் பயன்பெறுவார்கள். உற்பத்தி தர மேம்பாடு, உற்பத்தி திறன் நிச்சயமான விநியோகம், உடனடியாக வசூல் மற்றும் நல்ல தரம் கிடைக்கும். இத்துடன் ஒருங்கிணைக்கப்பட்ட சில்லரை வர்த்தகமும் மேம்படும். ஏற்கெனவே கடந்த மூன்று ஆண்டுகளில் இதன் வளர்ச்சி 24 சதவிகிதமாக உள்ளது. சில்லரை வர்த்தக துறை விவசாயிகளின் வருவாயையும் அதிகரித்து, அவர்களது வாழ்க்கையை மேம்படுத்தும். இன்று விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் நிலை உள்ளது.

முக்கியமான கேள்வி ஒன்று அந்நிய முதலீடு தொடர்பாக எழுப்பப்படுகிறது. வால்மார்ட் போன்ற பெரிய விற்பனை நிலையங்களில் இந்திய பிராண்டுகளுக்கு என்ன இடம் இருக்கும் என்பது அது. மக்கள் விரும்பக்கூடிய தரமான பொருட்களை இந்திய உற்பத்தியாளர்கள் உருவாக்கினால் அந்த பொருட்கள் நிச்சயம் இடம்பிடிக்கும் என்பதே பதில். அமெரிக்காவில் உள்ள வால்மார்ட் கடைகளில் இருக்கும் 60 சதவிகிதம் பொருட்கள் சீனாவில் உற்பத்தியானவை என்பது குறிப்பிடத்தக்கது. 
மகாத்மா காந்திக்கு பிறகு யாரும் தேசிய பெருமிதம் என்பதை இந்தியர்களுக்கு உருவாக்க தவறிவிட்டனர். அவர்கள் இந்தியாவின் கஜானாவை காலி செய்வதிலேயே குறியாக இருந்தனர். ஜப்பானிலோ உள்நாட்டு பணிமனைகளில் பொருட்கள் செய்யப்படுவதைதான் ஊக்குவிக்கின்றனர். இதுதான் மற்ற கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் பொருந்தும். அமெரிக்க நிறுவனங்களான ஜிஎம் மற்றும் கிரிஸ்லர் நிறுவனங்களை கடனில் இருந்து அமெரிக்கா ஏன் மீட்டது என்றால், அவைகள் அமெரிக்கத்துவத்தை பிரதிபலிப்பவை.

தேசிய பெருமிதம் என்பதற்கு உதாரணமாக தென்கொரியாவைதான் நாம் உடனடியாக குறிப்பிட வேண்டியிருக்கிறது. உலகிலேயே நான் அதிகம் பாராட்டும் நாடும் இதுதான். சீனாவை விட, ஜப்பானைவிட தேசிய பெருமிதத்தில் அது உயர்ந்த நிலையி¢ல் இருக்கிறது. இந்தியாவுடன் ஒப்பிடும்போது ஒரு துளி போல அந்த தேசம் இருக்கிறது. ஆனால் அனைத்து துறைகளிலும் தேசிய பெருமிதத்துடன் தங்கள் அடையாளத்தை பதித்துள்ளனர் அவர்கள். தென்கொரியாவில் உள்ள பள்ளிகளில் உள்ளூர் பிராண்ட் பொருட்களை மாணவர்கள் பயன்படுத்த வேண்டும் அன அறிவுறுத்தப்படுகிறது. இப்பொருட்கள் மீதான விமர்சனம் தேசத்தின் மீதான விமர்சனமாக அணுகப்படுகிறது. உலக அளவில் நோக்கியோ மற்றும் பிளாக்பெரி ஆகிய பிராண்டுகள் புகழ்பெற்றிருந்தாலும், தென்கொரியாவில் அவர்களது பிராண்டான சாம்சங்கே 48 சதவிகிதம் சந்தை பகிர்வுடன் முதலிடம் வகிக்கிறது. கூகுள் 20 சதவிகிதமே அங்கு வகிக்கிறது. தென்கொரியாவில் உள்ளூர் தேடுதல் எந்திரங்களான நாவர் மற்றும் டௌவும் ஆகியவைதான் 90 சதவிகிதம் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஆட்டோமொபைல் தொழிலை பொறுத்தவரையில் கியா அல்லது ஹுண்டாய் போன்றவையே முதலிடம் வகிக்கின்றன. சியோலின் சாலைகளில் அமெரிக்க, ஜப்பானிய கார்களை பார்ப்பதே அரிது. அத்துடன் தென்கொரியாவில் செய்யப்பட்ட கார்கள் பார்ப்பதற்கு பிரமாதமானவை, செயல்படுவதில் திறன்மிக்கவை. அரசின் கொள்கைகளும் உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு மிகவும் ஆதரவாகவும் உள்ளன. அருமையான தொழில் போட்டி சூழலையும் உருவாக்கியுள்ளன.

தேசிய பெருமிதத்தை தாண்டி வால்மார்ட் கொரியாவில் ஏன் தோற்றதென்றால், கொரியர்கள் ஒரு நாளைக்கு 12 மணிநேரம் வேலை செய்கின்றனர். அதற்கு பிறகு அவர்கள் அனுபவிக்கும் வாழ்க்கை தரமாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். மலிவான பொருட்களை வாங்க கூடாது என்று எண்ணுகிறார்கள். இருப்பினும் சர்வதேச அளவில் புகழ்பெற்றிருக்கும் பிராண்டுகள் கொரியாவில் எந்த முத்திரையையும் பதிக்கமுடியவில்லை. ஏனெனில் கொரிய நிறுவனங்கள் தர அளவில் மிகப்பெரிய உயரத்தை அடைந்துள்ளன. இந்தியாவின் சிறிய மாநிலத்தின் அளவே இருக்கும் கொரியா உள்நாட்டிலும் உலக அளவிலும், உலகின் சிறந்த பிராண்ட் தயாரிப்புகளை உற்பத்தி செய்வதாய் உள்ளது. கடந்த மாதத்தில்தான் ஸ்மார்ட் போன் விற்பனையில் சாம்சாங் உச்சத்தை அடைந்து ஆப்பிளை பின்தள்ளியது. கொரிய நிறுவனங்கள் உலகதரம்வாய்ந்த பொருட்களை உற்பத்தி செய்வதற்கு காரணம் அந்த நாட்டின் மக்களிடையே இருக்கும் அபரிமிதமான தேசிய பெருமிதம்தான். அத்துடன் அவர்களது கடின உழைப்பும் உதவுகிறது. 
ஆனால் அந்த வாய்ப்பை இந்தியர்களான நாம் இழந்துவிட்டோம். சிறிய நாடான கொரியாவால் இந்த வெற்றியை பெறமுடியும்போது, 10 மடங்கு பெரிய இந்தியாவால் ஏன் பெறமுடியவில்லை? சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நாட்டு முதலீட்டை விவாதிப்பதற்கு முன்னால் கொரியர்களை போல தேசிய பெருமிதத்தை ஏற்படுத்தி தரமான இந்திய பொருட்களையே வாங்கும் மனநிலைக்கு வருவோம். உலகின் பெரிய கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்தியர்கள் இருக்கிறார்கள். ஆனால் உலகின் உயர்ந்த பிராண்டுகளி¢¢ நமக்கு எந்த இடமும் இல்லை. இது வெட்ககரமானது.

இப்போது ஒன்றும் தாமதம் ஆகவில்லை. நமது பாரம்பரிய உற்பத்தியாளர்களை ஊக்குவித்து மேம்படுத்துவோம். அவர்களை ஆதரிப்போம். நமது பொருட்களை தரமாக உருவாக்கி தேசிய பெருமிதத்துடன் வால்மார்ட்டுகளை இங்கே தோற்கடிக்கலாம். வெறுமனே கோஷங்கள் போட்டு நாட்டை ஏமாற்றுவதற்காக காத்திருப்பது நம்மை எங்கும் கொண்டு செல்லாது. மக்கள் இதையெல்லாம் அதிகமாக பார்த்துவிட்டனர். கடின உழைப்பும், நேர்மையும் கொண்டு இந்திய பொருட்களை உலக தரத்துக்கு தயாரித்து, தேசபக்தியின் இன்னொரு பக்கத்தை திருப்புவோம். அவற்றை வாங்குவதின் மூலம் இந்தியனை பெருமை கொள்ள செய்வோம். அதை நீங்கள் செய்யமுடியாவிட்டால் சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு வருவதை பற்றி புகார் செய்யாமல் இருங்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

சென்ற நூற்றாண்டின் மிகப்பெரிய துயரம் நடந்து 20 ஆண்டுகள்!

 

அரிந்தம் சவுத்ரி | நவம்பர் 26, 2011 16:29
 

டெல்லியில் உள்ள சிஆர் பார்க் பகுதியில் உள்ள வங்காள குடியிருப்பில் வளர்ந்தவர்களுக்கு 10 வயதிலேயே முதலாளித்துவத்துக்கும் கம்யூனிஸத்துக்கும் உள்ள அடிப்படை வேறுபாடு தெரியும். அதில் ஒன்றின் மீதான விருப்பமும் தெளிவாக இருக்கும். ஆம். இந்த தெரிவுகள் உருவாவதில் அதிக தாக்கத்தை பெற்றோர்கள்தான் செலுத்தியிருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஒருவேளை எனது தந்தை மட்டுமே தேசியப் பொருளாதாரத் திட்டமிடுதலில் முந்தைய கம்யூனிஸ நாடான அப்போதைய கிழக்கு ஜெர்மனியில் முதுகலைப் பட்டம் படித்த ஒரே இந்தியராக இருக்கக்கூடும். லெனின் வாழ்க்கை பற்றிய கதை புத்தகங்கள்தான் முதலில் நான் படித்த புத்தகங்களாக இருந்தன என்பதைச் சொல்லத் தேவை யில்லை. அவர் மீதான  வசீகரத்தால்  முழுவதும் ஈர்க்கப்பட்டு கம்யூனிஸத்தின் சாதகமான அம்சங்களை நம்பத்தொடங்கினேன். இதுவரை அப்படித்தான் இருக்கிறேன். 

எனது தந்தையின் படிப்பு மேஜைக்கு எதிரே தொங்கிய பிரம்மாண்ட உலகப் படத்தில்  1989&ல்  பள்ளிப்படிப்பை முடிக்கும் வரை நான் அதிகம் கேள்விப்பட்ட, படித்த நாடாக இருந்த ஒன்றைப் பற்றி, இன்று பெரும்பாலான எனது வாசகர்கள் அறியவே மாட்டார்கள். அந்த நாடுதான் சோவியத் சோஷலிஸ குடியரசு யூனியன்! கார்ல் மார்க்ஸின் தத்துவத்தின் நீட்சியாக வந்த ஆட்சியாளர்களால் ஆளப்பட்ட நாடு அது. கார்ல் மார்க்ஸ், கடந்த நூற்றாண்டின் மிகப்பெரிய அறிவுஜீவியாக பிபிசியால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். உலக வரைபடத்தில் சோவியத் யூனியன் பாதி இடத்தைப் பிடித்திருந்தது. எந்தப் போர் ஏற்பட்டாலும் இந்தியாவைக் காப்பாற்றுபவர்கள் அவர்கள் என்ற நம்பிக்கையும் இருந்தது. அவர்கள் நமக்கு இரும்பு உருக்கு ஆலைகள், ராணுவ விமானங்கள் ஆகியவற்றைத் தந்தனர். முக்கியமான நண்பராய் இருந்தனர்.  பாகிஸ்தானுக்கு அமெரிக்கர்கள் ராணுவ உதவி தந்ததால் நமக்கு அவர்களைப் பிடிக்காமல் இருந்தது. 

சோவியத் யூனியனின் ஒவ்வொரு வெற்றியையும் கொண்டாடிக்கொண்டிருந்தோம். இந்தியா தூரத்தில் உள்ள நட்பு நாடு. கிழக்கு ஐரோப்பிய நாடுகளை சோவியத் யூனியன் தங்கள் சொந்த நாடு போலவே பாதுகாத்தது. அந்நாட்களில் கிழக்கு ஐரோப்பிய நாடுகளைப் பார்ப்பவர்கள் சோவியத் தாராள மனதுடன் தங்கள் நாட்டு மக்களுக்கு இணையான தரமான வாழ்க்கை நிலையை வழங்கி இருப்பதைப் பார்த்திருக்கமுடியும். சோவியத் யூனியனின் முழுமையான மகத்துவத்தைப் புரிந்துகொள்ள அமெரிக்காவுடன் அதன் வளர்ச்சியை 1989 வரை ஒப்பிட்டுப் பார்ப்பது அவசியமானது. சிஐஏ முதல் அமெரிக்காவின் முதல்தர பொருளாதார வல்லுநர்களும் அக்கால வரலாற்று ஆசிரியர்களும் அமெரிக்கர்களைவிட சோவியத் யூனியன் 40 சதவிகிதம் வாழ்க்கைத் தரத்தில் மேம்பட்டு இருந்ததை ஒப்புக்கொள்வார்கள். இரண்டாம் உலகப்போரின் சுமையுடன் அதற்கு பிறகு நாட்டின் ஜிடிபியில் 33 சதவிகிதத்தை ராணுவத்திற்கு செலவழித்த அதேவேளையில், மொத்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளையும் கவனித்துக்கொண்டு 45 ஆண்டுகளில் அமெரிக்காவைவிட தனிநபர் வருமானத்தில் 40 சதவிகிதம் உயர்ந்து பொறாமைப்படத்தக்க நிலையில் ரஷ்யா இருந்தது. ராணுவ வான்வெளி யுத்த தொழில்நுட்பத்தில் வல்லரசாக அக்காலகட்டத்தில் விளங்கியது. தொழில்நுட்பரீதியில் மிகுந்த வளர்ச்சி நிலையில் இருந்தாலும், அதை கொண்டு வாழ்க்கையை மிகுந்த ஆடம்பரமாக்கும் நுகர்வுமுறையை உருவாக்காமலும் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் சோவியத் யூனியன் தெருக்களில் உங்களால் உணவூட்டம் குறைந்த ஒரு குழந்தையைக்கூட பார்க்கமுடியாது. கல்வி அல்லது மருத்துவ வசதி இல்லாதவர்களையும் பார்க்கவே இயலாது. பேராசைமிக்க முதலாளித்துவ வெறியிலிருந்து மனிதாபிமானத்துடன் உலகைக் காக்கும் அந்த நாடுதான் சோவியத் யூனியன். அந்த நாட்டால்தான் உலகம் 45 ஆண்டுகள் அமைதியாக இருந்தது. கடந்த 20 ஆண்டுகளைப் பார்க்கும்போது முன்பு கண்டிராத முதலாளித்தவ பேராசை வெறி இந்த உலகை ஆட்கொண்டுள்ளது. 

இரண்டாம் உலகப்போருக்குப் பின் இருந்த மிக மிக அமைதியான ஒரு காலகட்டத்துக்கும் தற்போதைக்கும் இடையிலான வித்தியாசத்தின் விளைவு 20 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட ஒரு நிகழ்வின் பிரதிபலிப்பே. 1991 ஆம் ஆண்டு டிசம்பர் 25ந் தேதி இரவு 7.20க்கு  வரலாறு அப்படியே திருப்பி எழுதப்பட்டது. அப்போது அதிபராக இருந்த மிகையல் கோர்பச்சேவ்,- சிஐஏவின் கருத்தியல் ஒற்றராக சந்தேகத்திற்கு உள்ளானவர்; - தான் சோவியத் யூனியன் அதிபர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.  அதற்கு இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு சோவியத் யூனியனின் கொடி கிரம்ளினில் இறக்கப்பட்டு, ரஷ்யாவின் மூன்று வண்ணக்கொடி ஏற்றப்பட்டது. உலக வரைபடம் மொத்தமும் மறுநிர்மாணம் செய்யப்பட்டது. அது ஒரு கூட்டமைப்பின் மரணம் மட்டுமல்ல, அரசியல் கருத்தியலின் மரணமும்கூட. அமெரிக்கா மற்றும் அதன் கூட்டு நாடுகளின் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக 74 ஆண்டுகள் தடுப்புச் சுவர் போல நின்ற பிரம்மாண்டமான சோவியத் யூனியன் துண்டுத் துண்டாக சிதறிப்போனது. சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியின் முதன்மை செயலராக இருந்த மிகையல் கோர்ப்பச்சேவால் மாஸ்கோவின் வீதிகளில் எழுந்த ஜனநாயக ஆதரவு அலையை கையாள முடியவில்லை. 

 இந்த இயக்கத்தை நடத்தியவர் போரிஸ் யெல்ட்ஸின்.-- எந்த தத்துவப் பின்னணியும் இல்லாத சந்தோஷம் விரும்பும் குடிகாரர் என பின்பு முத்திரை குத்தப்பட்டார். இவர் சுதந்தர ரஷ்யாவுக்கு அதிபராக வரும் ஆசையை கொண்டிருந்தார். ரஷ்யாவின் இரும்புத் திரை அகற்றப்பட்டது. அரசியல் பொருளாதார நிர்வாக எந்திரத்தில் கடைபிடிக்கப்பட்ட இறுக்கங்களைத் தளர்த்தி கோர்ப்பச்சேவ் பெரஸ்த்ராய்கா(மறுகட்டமைப்பு) என்ற பெயரில் சீர்திருத்த நடவடிக்கைகளை கொண்டுவந்து, கிளாஸ்நாஸ்டை (வெளிப் படைத் தன்மை) 1985&ல் அறிமுகப்படுத்தினார். எண்ணெய் விலைகள் 85& 86 ஆம் ஆண்டுகளில் கடுமையாக வீழ்ச்சியுற்றன. இதனால் நாட்டின் வருவாயும் அந்நியச் செலாவணியும் பாதிக்கப்பட்டன. இதனால் தானியங்களை இறக்குமதி செய்யவேண்டிய பிரச்னை ஏற்பட்டு, மக்களிடம் கோபம் எழுந்தது. வருவாய் குறைந்துபோனதால் நாடு திவாலாகி ஆட்சிக்கு முடிவு வந்தது. அமெரிக்கா தலைமைதாங்கிய மேற்குநாடுகள் அனுபவித்த வளத்திற்காகவும் ஆடம்பரத்திற்காகவும் ஏங்கிய நிலையில் ஜனநாயகப் போராளியான யெல்ட்ஸினின் தாக்கமும் சேர, சோவியத் யுகம் துரதிருஷ்டமான முடிவுக்கு வந்தது. 

சோவியத் யூனியன் தகர்வுக்கு முக்கியமான காரணமாக இருந்தார் என்ற பொது அபிப்ராயத்துக்கு மாறாக கோர்ப்பசேவ் சோவியத் யூனியனை தக்கவைக்க கடுமையாக முயற்சித்தார். பொருளாதார, சமூக மற்றும் கலாசார சீர்திருத்தங்கள் வாயிலாக மாற்றங்களைக் கொண்டு வந்தார். ஆனால் போரிஸ் யெல்ட்ஸின் ஜனநாயகரீதியில் உடனடி மாற்றத்தை விரும்பினார். மேற்கு நாடுகளுக்கு ஆதரவான குழுக்கள் இந்த தகர்வை நோக்கி தள்ளினார்கள். இப்போதும் இந்த மாற்றத்தை சீனா எதிர்கொண்ட முறையில், சோவியத் யூனியனால் எதிர்கொள்ள முடியாததிலிருந்து சில பாடங்களைக் கற்றுகொள்ளமுடியும். 1991 ஆம் ஆண்டு ஆகஸ்டு 21ந் தேதி கோர்ப்பசேவ் மீண்டும் மீண்டும் சோவியத் யூனியன் காக்கப்பட வேண்டும் என்று கூறினார். அங்கு ஏற்பட்ட கலகம் இரண்டு நாட்களுக்கு மேல்கூட நீடிக்கவில்லை. ஆனால் அங்குள்ள கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சோவியத் யூனியன் மரணத்துக்கு அது காரணமானது. அவரால் சோவியத் யூனியன் தகர்வதைத் தடுக்கமுடியவில்லை.

சோவியத் தகர்வுக்குப் பிறகு 20 ஆண்டுகள் ஆனாலும் ரஷ்யாவில் இன்னும் முழுமையான ஜனநாயகம் வரவில்லை. போரிஸ் யெல்ட்ஸின் ஆட்சியில் சுதந்தரமான அரசியல் கட்சிகள் உருவாயின. ஊடகங்கள் சுதந்தரம் பெற்றன. ஆனால் இந்த மாற்றம் நீடிக்கவில்லை. விளாதிமிர் புடின், முந்தைய ஆட்சியாளர்களைப்போல  ஒரு சர்வாதிகாரியாக உருவானார். ஆனால் அவர்களைப் போல எந்த அரசியல்  தத்துவப் பின்புலமோ அர்ப்பணிப்போ புரிதலோ இல்லாதவர். ஒருவேளை கடந்த 100 ஆண்டுகளில் உருவான மிக மோசமான தலைவராகக்கூட இருக்கலாம். புடின், தனது மூளையை காண்பிப்பதைவிட வெற்றுடலை காண்பிப்பதையே பெரிதும் விரும்புகிறார். கேஜிபி உளவுத்துறை அதிகாரியான இவர்,  தனது பெண்கள் மற்றும் ஜுடோ காரணமாக புகழ்பெற்றவர். சுதந்தர  ஊடகங்கள் தொடங்கி ஜனநாயகத் தேர்தல்கள் அனைத்தையும் ஒடுக்கி, தற்போது கிரம்ளின், புடின் மற்றும் மெத்வடேவால் ஆதிக்கம் செய்து கட்டுப்படுத்தப்படுகிறது. ரஷ்ய தேர்தலே ஒரு கேலிக்கூத்தாக மாறிவிட்டது. முன்னாள் சோவியத் நாடுகள் அனைத்தும் புடின் மற்றும் அவரது ஆள்களால் நியமிக்கப்பட்ட உயர்வர்க்கத்தினரால் ஆளப்பட்டுக்கொண்டிருக்கின்றன. வேறு யாரும் தேர்தலில் நின்று வெல்ல சாத்தியமில்லாத நிலையே அங்கு உள்ளது. 

20 ஆண்டுகளாகியும் ரஷ்ய கூட்டமைப்பால் சுதந்தரத்தையோ ஜனநாயக நிலையையோ பொன்னான மேற்கத்திய வாழ்க்கை முறையையோ எட்டவே முடியவில்லை. இந்த லட்சியங்களுக்காகத் தான் மொத்த கூட்டமைப்பும் துண்டுத் துண்டாக சிதறியது. சோவியத் யூனியனின் தகர்வால் பல சுதந்தர நாடுகள் உருவாயின. அவை உருப்பெற்ற நாளிலிருந்து இன்றுவரை அவற்றில் பெரும்பாலானவை தங்களது தேசிய அடையாளத்தில் தெளிவாக இல்லை. இந்நாடுகளில் பெரும்பாலானவற்றில் உள்ள மக்கள் தேசிய உணர்வை அடையவே இல்லை. பெரும்பாலான மக்கள் இன்னமும் ரஷ்யாவுடனேயே தங்களை இனம் கண்டு கொள்கின்றனர். சமூக கலாசார அமைப்பை பொறுத்தவரையில் சோவியத் பாணி பொருளாதார மாதிரிதான் சௌகரியமாக உள்ளது. ஜார்ஜியாவின் ரோஸ் புரட்சியும் உக்ரைனின் ஆரஞ்சு புரட்சியும் கிர்கிஸ்தானில் பிங்க் புரட்சியும் இப்பிராந்தியங்களில் மக்கள் சமூக மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பதற்கு உதாரணமாக இருந்தன. ஒரு கட்டம்வரை பழைய அரசியல் அதிகாரத்தை இந்த புரட்சிகள் தூக்கியெறியவும் செய்தன. ஆனால் நவீன அரசியல் தலைமையால் அந்த இடத்தை நிரப்புவதில் அவை தோல்வியுற்றுவிட்டன. இந்தப் பிராந்தியத்தில் ஜனநாயகத்திற்கான இரண்டு உதாரணங்களாக உக்ரைன் மற்றும் ஜார்ஜியா நாடுகளைச் சொல்லலாம். அந்த நாடுகள் ஐரோப்பிய அடையாளத்துடன் தங்களை இனம் கண்டுகொண்டு அரசியல்ரீதியாகவும் பொருளாதாரரீதியாகவும் கலாசாரரீதியாகவும் மேற்குடன் தங்களை இணைத்துக்கொள்ளும் ஆசையை வைத்துள்ளன. 

சமீபத்தில் ரஷ்யாவின் பிரதமரான விளாதிமிர் புடின், சோவியத் யூனியனின் தகர்வை 20 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய புவி அரசியல் துயரம் என வர்ணித்தார். புடினுக்கு இன்னமும் சிதறிய சோவியத் நாடுகளை ஒரே கொடியின்கீழ் ஒருங்கிணைக்கும் திட்டம் இருக்கிறது.  எத்தனைதான் கொடூரமானவர்களாக இருந்தாலும் முந்தைய தலைவர்களுக்கு இருந்த பொருளாதார வளர்ச்சிக்கான பாதையும் திட்டமும் புடினிடம் இல்லாவிட்டாலும் இந்த ஒருங்கிணைக்கும் திட்டம் நல்லதே. 2008&ல் ஜார்ஜியாவில், நடந்த ரஷ்ய படையெடுப்பு அப்படியான ஒரு முயற்சி. அத்துடன் ரஷ்யா, பெலாரஸ் மற்றும் கஜகஸ்தான் ஆகிய நாடுகளுடன் இணைந்து சுங்க ஒன்றியம் ஒன்றையும் உருவாக்கியுள்ளது. ஜனவரி  2012க்குள் தங்களது பரப்பைப் பெருக்கி பொது பொருளா தார வெளி ஒன்றை உருவாக்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஒன்றியத்தில் கிர்கிஸ்தானும் தஜுகிஸ்தானும் சேர்வதற்கு விரும்புகின்றன. ரஷ்யாவும் கடந்த 10 ஆண்டுகளாக கூட்டுப் பாதுகாப்பு உடன்பாட்டு அமைப்பை ஆர்மீனியா, பெலாரஸ், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜுகிஸ்தான் மற்றும்  உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் சேர்ந்து நேட்டோ அமைப்புபோல உருவாக்கியுள்ளது.  சோவியத் யூனியனின் பொற்காலத்தை மீண்டும் கொண்டுவர ரஷ்யா முடிந்தவரை முயற்சிக்கிறது. 

ஆனால், தற்போதுள்ள நிலையோ மிகவும் வித்தியாசமானது. ரஷ்யா மிகவும் பலவீனமான நிலையில் உள்ளது. அரசியல்ரீதியாக வல்லரசாக மாறும் ஆசையை தொடர்ந்து வெளிப்படுத்தினாலும் அங்கே புறக்கணிக்கப்பட்ட நிலையில் மக்கள் சமூகம் உள்ளது. உலகிலேயே அதிகமாக எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களும், போதை அடிமைகளும் உள்ள நாடாக ரஷ்யா மாறியுள்ளது. அங்குள்ள கட்சிகள், குறிப்பாக புடினின் கட்சி, ரஷ்யாவை உலக அளவில் ஆதிக்கம் செலுத்தும் நாடாக மாற்றுவதற்கு அதிகம் முயற்சிக்கின்றன. ஆனால் சமூக மேம்பாட்டை புறக்கணித்துவிட்டன. ரஷ்யா தனது நிலப்பரப்பை இழந்துவிட்டது. பொருளாதாரம், ராணுவம், அந்தஸ்து மற்றும் கல்வி அனைத்தையும் இழந்துவிட்டது. சர்வதேச மாணவர் மதிப்பீட்டு திட்ட ஆய்வின் அடிப்படையில் ஓஇசிடி தரப்பட்டியலில் ரஷ்ய கல்வித்துறை 43வது இடத்தில் உள்ளது. வானவியல் துறை, பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் ஆய்வில் அத்தனை வளர்ச்சியைப் பார்த்த ஒரு நாடு அடைந்திருக்கும் இடம் மிக அவமானகரமானது. கல்விக்கான அரசு நிதி சூறையாடப்படுகிறது. ஆசிரியர்களுக்கு பற்றாக்குறையான சம்பளமே தரப்படுகிறது. இதனால் கல்வித்துறையில் போதுமான அறிவு வளம் இல்லை. ரஷ்ய சமூகத்தில் குடி கலாசாரம் நெருக்கடி நிலையையும் தாண்டிவிட்டது என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. 

அமெரிக்காவுக்கு எதிராக கம்பீரமாக நின்ற ஒரு நாடு, வளரும் நாடு ஒன்றின் நிலையை அடைவது சீர்குலைவுதான். ஆம். சோவியத் யூனியனில் பெரிய தவறு நிகழ்ந்தது. தொடர்ந்து சர்வாதிகாரத்தால் நிர்வகிக்கப்பட்டது. லெனின் முதல் ஸ்டாலின், பிரெஷ்னேவ் வரை எல்லோரும் சர்வாதிகாரிகள்தான். ஆனால் அந்த தலைவர்கள் எல்லோருக்கும் மிகப்பெரிய உலகப்பார்வையும் லட்சியங்களும் இருந்தன. அவர்களது தெளிவான திட்டத்தின் அடிப்படையில் சோவியத் பொருளாதாரரீதியில் முன்னேறி போனது. அந்தத் தலைவர்கள் சமூக மேம்பாட்டுக்கான மார்க்ஸிய மாதிரியைப் பின்பற்றி சமபகிர்வைப் பின்பற்றுபவர்களாக இருந்தனர். அவர்கள் ஓர் உலக ஒழுங்கை உருவாக்கினர். அவர்களிடம் அமைதிக்கான திட்டமும் இருந்தது. அவர்கள்தான் பொருளாதார வளர்ச்சி சரியாக பகிரப்பட்டால் பணக்காரருக்கும் ஏழைக்குமான இடைவெளி மிகவும் குறைவாக இருக்கும் என்பதைக் காட்டியவர்கள். நல்ல கல்வியும், ஆரோக்கியமும் ஒவ்வொரு மனிதனுக்கும் தரப்படும்போது  ஒலிம்பிக் மெடல்களாக குவியும் என்பதை காட்டியவர்களும் அவர்கள்தான். 

தற்போது பெய்ஜிங் மிகப்பெரிய அதிசயமாக இருந்தாலும் 50 ஆண்டுகளைக் கடந்த மாஸ்கோதான் அதைவிட அதிசயம் வாய்ந்தது. சோவியத் சமூகம் ஜனநாயகமானதாக இறுதியில் மாறியிருக்க வேண்டும். சோவியத் கூட்டமைப்பு ஏதாவது ஒரு வடிவத்தில் சிறிய அளவிலாவது இருந்திருக்க நான் விரும்பினேன். ஜனநாயகத்தைக் கொண்டுவருவதில் கோர்ப்பசேவ் வெற்றி பெற்றிருக்கவேண்டும் என்று விரும்பினேன். ஆனால் முழு தேசத்தின் அழிவை கொடுத்து அந்த மாற்றம் நடக்கும் என்று எண்ணவில்லை. அந்த மாற்றம் கல்வியற்ற தலைமையற்ற சுயநலக் கும்பலிடம் சென்றுவிட்டது. அப்படியும் பேராசைமிக்க அமெரிக்க மேற்கத்திய ஆக்கிரமிப்புக்கு எதிரான ஒரு துருவமாக ரஷ்யாவிலிருந்து ஒரு நல்ல தலைவர் உருவாவார் என்று நான் மிகவும் நம்பினேன். 

இஷ்டத்திற்கு தொடர்ந்து நாடுகள்மீது குண்டுகள் போடும் அமெரிக்காவை அச்சுறுத்துவதற்காவது அந்தத் தலைவர் உருவாக வேண்டும் என்று நான் நினைத்தேன். அப்படியான மனிதர் எப்படி புடினாக இருக்கமுடியுமா? இப்போதைய யதார்த்தம் என்னவெனில் 20 ஆண்டுகளுக்கு முன்பு சோவியத் கூட்டமைப்பில் நடந்த நிகழ்வுகளை வலியோடு எண்ணிப் பார்ப்ப தாகவே உள்ளது. எதுவும் திரும்பி வராது என எனக்குத் தெரியும். ஆனால் அந்த மாற்றத்தால் ரஷ்யர்களோ உலகமோ அதிகம் பலன் பெறவில்லை என்பதையும் நான் உணர்கிறேன்.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

வெளிநாடு வாழ் சீனர்களின் மாயாஜாலத்திலிருந்து இந்தியாவிற்கான பாடங்கள்

 

அரிந்தம் சவுத்ரி | செப்டம்பர் 12, 2011 17:03
 

உலகின் மொத்த மக்கள்தொகையில் 19.3 சதவிகிதம் சீனர்கள் என்பதிலிருந்து சீன மக்கள்தொகையின் பலத்தை அறிந்து கொள்ளலாம். இந்த புள்ளிவிவரம் வெளிப்படுத்தும் தகவல்களை விட, மறைந்திருக்கும் தகவல்கள் அதிகம். சீனாவின் பொருளாதார வளர்ச்சி வேகத்தை அதிகப்படுத்துவதில் உலகின் பல்வேறு பகுதிகளில் குடியேறியுள்ள சுமார் 5 கோடி சீனர்களின் பங்கு முக்கியமானது. சீனப் பொருளாதாரத்திற்கு தேவையான நிதியை தருவதில் இவர்கள் முக்கிய பங்கு வகிப்பதுடன் உலகளாவிய அளவில் கலாசார மற்றும் அரசியல் காலனியாக்கத்தில் சீனாவிற்கு உள்ள நோக்கங்களை நிறைவேற்றுவதிலும் வெளிநாடுகளில் வாழும் சீனர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். பல சர்வதேச நிறுவனங்களில் தலைமைப் பொறுப்புகளில் இருப்பது, பல நாடுகளின் ராணுவ மற்றும் அரசியல் அமைப்புகளில் இடம்பெற்றிருப்பது என பல வகைகளில் இந்த வெளிநாடு வாழ் சீனர்கள் முக்கியத்துவத்துடன் திகழ்கிறார்கள். வெளிநாடு வாழ் சீனர்கள் பெற்றுள்ள அதிகார செல்வாக்கை பற்றி ஒருவர் அறியாதிருக்கலாம், ஆனால் ஜாக்கி சான் பற்றி அறியாதிருக்க முடியாது.

சீனர்கள் வெளிநாடுகளில் குடியேறுவது என்பது மிங் வம்ச ஆட்சியின் போதே தொடங்கிவிட்டது எனினும் கலிபோர்னியாவில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு 1840களிலிருந்து அமெரிக்காவில் சீனர்களின் குடியேற்றம் பெருமளவில் நடந்தது. தொடக்கத்தில் படிப்பறிவற்ற சீனத் தொழிலாளர்களே அமெரிக்காவில் அதிகம் குடியேறினர் (சுரங்கத் தொழில் மற்றும் இருப்புப் பாதை போடுதல்). ஆனால், 19ஆம் நூற்றாண்டில் இந்த நிலை மாறியது. 19ஆம் நூற்றாண்டில் சீனாவை பிடித்தாட்டிய வறுமை மற்றும் பஞ்சத்திலிருந்து தப்பிக்க ஆயிரக்கணக்கான படித்த, சிறப்புத் திறன் கொண்ட சீனர்கள் வெளிநாடுகளில் குடியேறினர். இந்த முறை அவர்கள் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளில் குடியேறியதுடன் பல ஆசிய நாடுகளிலும் குடியேறினர். தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவில் ஏராளமான சீனர்கள் குடியேறினர். சீனாவை விட்டு சீனர்கள் வெளியேறுவது அதிகரித்ததால் உலகின் பல நாடுகளின் நகரங்களில் சீனர்கள் குடியேற்றம் அதிகரித்தது. படிப்படியாக இவர்கள் அங்கு வேரூன்றியதுடன் ஒரு வலிமையான சமூகக் குழுவாக உருவெடுத்தனர். உலகின் எல்லா நாடுகளிலும் ‘சீனாநகரம்’ என்ற ஒரு பகுதி உருவாகிற அளவிற்கு இந்த குடியேற்றம் பெருமளவில் நடந்தது.

சீனாநகரம் என்பது ஒரு நகரின் ஏதோவொரு கடைவீதி அல்ல மாறாக அது வெளிநாடு வாழ் சீனர்களின் செயல் மையமாகும். இங்கு சீனர்களும், உள்ளூர்வாசிகளும் சீனாவில் உற்பத்தியாகும் எல்லா வகையான பொருட்களையும் பெற முடிந்தது. சீனாவில் உற்பத்தியான எல்லா பொருட்களையும் இங்கு வாங்க முடிந்ததுடன் சீனர்களுக்கு இது தங்கள் வேருடன் தொடர்பில் இருப்பதற்கு உதவியாக இருந்தது. தங்களின் பொருளாதார அளவால் சீனாநகரங்கள் பிரம்மாண்டமானவையாக உருவாயின. உதாரணமாக, செர்க்யோவ்ஸ்கி சந்தையானது ஐரோப்பாவின் ஆகப் பெரிய சந்தையாகும். 2009ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்த சந்தையை சீனாநகர அங்காடி மையமாக மாற்ற மாஸ்கோ அரசாங்கம் முடிவு செய்த போது அதைக் கட்டுவதற்காக சீனா 1 பில்லியன் டாலர் தொகையை செல்விட்டது. இதன் மூலம் சுமார் 70,000 வெளிநாடு வாழ் சீனர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைத்ததுடன் சுமார் 5 பில்லியன் டாலர் மதிப்புடைய தனது பண்டங்களை அங்கு விற்கும் வாய்ப்பும் சீனாவிற்கு கிடைத்தது. 800 ஹெக்டேர் பரப்பளவில், 47 மில்லியன் டாலர் முதலீட்டில் உலகின் ஆகப் பெரிய சீனாநகரத்தை நிர்மாணிக்க துபாய் முடிவு செய்துள்ளது. அங்கீகரிப்பட்ட சீனாநகரங்கள் ஆப்பிரிக்காவில் 4ம், ஆசியாவில் 35ம், ஐரோப்பாவில் 30ம், லத்தீன் அமெரிக்காவில் 15ம், அமெரிக்கா மற்றும் கனடாவில் 50ம் உள்ளன. சீனாநகரங்களில் விற்கப்படும் பெரும்பாலான பண்டங்கள் சீனாவில் தயாரிக்கப்பட்டவை (இது சீனாவிற்கு பெருத்த வருமானத்தை அளிக்கிறது). மேலும், இங்கு வேலை செய்யும் சீனர்கள் தாங்கள் பெரும் சம்பளத்தை சீனாவில் உள்ள தங்கள் குடும்பங்களுக்கு அனுப்புவதால் சீனாவிற்கு மேலும் பல கோடி டாலர் வருமான கிடைக்கிறது.

இது இத்தோடு முடியவில்லை. பல கோடி டாலர்கள் அதிகாரப்பூர்வமற்ற மற்றும் அங்கீகரிக்கப்படாத வழிகளில் (சிறு அளவுகளில்) சீனாவிற்கு செல்வதுடன் வெளிநாடு வாழ் சீன கோட்டீஸ்வரர்கள் சீன அரசாங்கத்திற்கு அதிகாரப்பூர்வமாகவும் வெளிப்படையாகவும் பல கோடி டாலர்களை நன்கொடையாக அளிக்கின்றனர். லீ கா ஷிங் என்பவர் சமீபத்தில் சீனாவிற்கு மருத்துவ பல்கலைக்கழகம் ஒன்றை பரிசளித்தார். இத்தகைய நன்கொடைகளும் நிவாரண நிதிகளும் (இயற்கை பேரிடர்களின் போது) சீனாவிற்கு அதிகம் கிடைக்கின்றன. கலாசார மற்றும் குடும்ப உறவுகள் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. தங்களது தாய்நாட்டிற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற உந்துதல் வெளிநாடு வாழ் சீனர்களிடம் அதிகம். இது சீனாவின் எல்லா பிரச்னைகளையும் தீர்த்துவிடாது என்றாலும் வெளிநாடு வாழ்  சீனர்கள் சீனா பால் காட்டும் இந்த ஆதரவு அதன் பொருளாதாரத்தை பெருமளவு உயர்த்தியிருக்கிறது. 135 நாடுகளில் வாழும் 5.5 கோடி வெளிநாடு வாழ் சீனர்கள் மூலம், சீனாவிற்கு கிடைக்கும் மொத்த வெளிநாட்டு நேரடி முதலீட்டில் 60 சதவிகித முதலீடு கிடைக்கிறது. சீனாவிடம் குவிந்திருக்கும் மொத்த அந்நிய செலாவணி கையிருப்பு சுமார் 194 பில்லியன் டாலர், இத்துடன் வெளிநாட்டு நேரடி முதலீடு மூலமாக 61 பில்லியன் டாலர் கிடைக்கிறது. அதன் ஜிடிபி வளர்ச்சி 10.7 சதவிகிதம் (2006ல்). கடந்த தசாப்தத்திலும் (1990&2000) அதன் சராசரி வளர்ச்சி 9.6 சதவிகிதமாக இருந்தது. சீனாவின் வளர்ச்சியில் வெளிநாடு வாழ் சீனர்கள் காட்டும் ஆர்வமானது அவர்களது கலாசார மற்றும் தேசப்பற்றை பறைசாற்றுகிறது. 1985 & 2008 காலகட்டத்தில் சீனாவில் நடந்த வெளிநாட்டு நேரடி முதலீடானது 898 பில்லியன் டாலராக உயர்ந்தது. தொடர்ந்து 18 வருடங்கள் உலகில் அதிகபட்ச நேரடி வெளிநாட்டு முதலீட்டைப் பெறும் நாடாக சீனா விளங்கியது. 2010ஆம் ஆண்டில் நேரடி வெளிநாட்டு முதலீடானது 105.7 பில்லியன் டாலர் என வரலாறு காணாத உயரத்தை தொட்டது, அதன் அந்நிய செலாவணி கையிருப்பு 3.3 லட்சம் டாலர்களை தொட்டது. 

தங்கள் தாய்நாட்டில் முதலீடு செய்ய வேன்டும் அல்லது சொந்த தொழில் தொடங்க வேண்டும் என்பதில் வெளிநாடு வாழ் சீனர்கள் மிகத் தீவிரமாக இருப்பதுதான் இதற்குக் காரணம். உதாரணமாக, ஜின்ஜியாங் மாநிலத்தில் வர்த்தக முதலீடுகள் பெருமளவு நடந்ததற்குக் காரணம் அரசாங்கத்தின் நிதி மட்டுமல்ல மாறாக அங்குள்ள சீனர்களின் உறவினர்களான வெளிநாடு வாழ் சீனர்கள் அங்கு செய்த முதலீடும் ஒரு காரணம். 2006ஆம் ஆண்டில், வெளிநாடு வாழ் சீனர்களால் அனுப்பட்ட மொத்தத் தொகை 22.5 பில்லியன் டாலர்களாகும். இது இப்போது வருடத்திற்கு 50 பில்லியன் டாலர்களை என்ற அளவை தாண்டி விட்டது. தென்கிழக்கு ஆசியாவில் உள்ள சீனர்கள் 500 பில்லியன் டாலருக்கும் அதிகமான பொருளாதார உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். இதில் பெரும் பகுதி சீனாவிற்கு நன்கொடையாகவும், முதலீடாகவும் செல்கிறது.

சீன அரசும், அதிகாரிகளும் வெளிநாடு வாழ் சீனர்கள் பால் காட்டும் ஆர்வமும் அக்கறையும் முக்கியமான விஷயங்களாகும். வெளிநாடுகளில் குடியேறுவதை சீன அரசு ஊக்குவிக்கிறது. வெளிநாடுகளில் வாழும் சீனர்கள் தங்களது அனுபவங்களை உள்ளூர் சீனர்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர். வெளிநாடு வாழ் சீனர்களின் விவகாரத்தை கவனிப்பதற்கென்றே சீன அரசாங்கம் ஒரு காபினட் அமைச்சரை நியமித்திருக்கிறது. மாசேதுங்கின் கலாசாரா புரட்சி காலத்தில் ‘‘வெளிநாடு வாழ் சீனர்கள் விவகார ஆணையம்’’ என்ற அமைப்பு கலைக்கப்பட்டது. 1978ல் இது சற்றே பெயர் மாற்றப்பட்டு ‘‘வெளிநாடு வாழ் சீனர்கள் விவகார அலுவலகம்’’ என்று தொடங்கப்பட்டது. வெளிநாடு வாழ் சீனர்கள் சீனாவிலுள்ள தங்கள் குடும்பத்தினருடன் ஒருங்கிணையவும், தங்களது வருமானத்தை சீனாவிற்கு அனுப்பி வைக்க உதவுவதும் இதன் பணிகளாகும்.

வெளிநாடு வாழ் சீனர்களை ஒருங்கிணைக்க பல்வேறு மாநாடுகளை சீன அரசாங்கம் நடத்துகிறது. சீனாவில் முதலீடு செய்வதற்குள்ள பல்வேறு வாய்ப்புகள் மற்றும் வசதிகள் பற்றி இந்த மாநாடுகளில் விளக்கப்படுகின்றன, விவாதிக்கப்படுகின்றன. சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்காக பெருமளவில் பங்களிப்பவர்களை ஆண்டு தோறும் தெரிவு செய்து கௌரவிக்கிறது சீன அரசாங்கம். இது வரை வெளிநாடுகளில் சீன முதலீட்டுடன் இயங்கும் சுமார் 100 நிறுவனங்களை இவ்வாறு சீனா கௌரவித்திருக்கிறது. இத்துடன் வெளிநாடு வாழ் சீனர்கள் பலரையும் கௌரவித்திருக்கிறது. வெளிநாடு வாழ் சீனர்கள் எளிதாக சீனாவில் முதலீடு செய்வதற்கேற்றவாறு சீனாவின் வர்த்தக கொள்கைகள் வளைந்து கொடுக்கும் வண்ணம் இருக்கின்றன. மேலும் நன்கொடைகளை ஊக்குவிப்பதற்கென்று உலகெங்கும் பல வங்கிகளை சீன அரசாங்கம் திறந்திருக்கிறது. இதன் மூலம் அந்நிய செலவாணி கையிருப்பில் 3 லட்சம் கோடி டாலர்கள் அதிகரித்திருக்கிறது. வெளிநாடு வாழ் சீனர்களுக்கென்று 70க்கும் மேற்பட்ட வர்த்தக பூங்காக்களை உருவாக்கியிருப்பதுடன், சிறப்பு பொருளாதார மண்டலங்களில் இவர்கள் பங்கு பெறும் வண்ணம் அவர்க்களுக்கான விதிமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளன.

தங்களது தாய்நாட்டின் பொருளாதாரத்தை வலிமைபடுத்துவதில் வெளிநாடு வாழ் சீனர்கள் ஆற்றும் பங்களிப்பு பன்முகத் தன்மை வாய்ந்தது என்பதுடன் வெளிநாடுகளில் தாங்கள் ஈட்டும் பணத்தை அனுப்பும் விதத்திலும் வழக்கமான வழிகளை தாண்டி செயல்படுகின்றனர். புவியரசியல் விவகாரத்தில் உலக அரங்கில் சீனாவை முன்னிலைக்கு கொண்டுவரும் விதமாக இவர்கள் செயல்படுகின்றனர். இந்தியாவைப் போலல்லாமல், மேற்கல்வி பயின்றவர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுவிடுவதையும் சீனா நேர்மறையாக பார்க்கிறது. சீன மாணவர்களுக்கு மேற்கல்வி பயில்வதற்கான உதவித் தொகை வழங்குவதை இப்போது மேற்கத்திய நாடுகள் செய்கின்றன. இத்தகைய மாணவர்கள் மூலம் மேற்கத்திய நாடுகளின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சாதனைகளை சீனா பயன்படுத்திக் கொள்கிறது. நவீன தொழில்நுட்பங்களை சீனாவிற்கு கொண்டுவருவதற்கான வழிவகைகளையும் சீனா செய்துள்ளது. சீனா தனது மாணவர்கள் வெளிநாடுகளில் வாழ்வதை ஊக்குவிப்பதுடன் சீனாவின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பங்களிக்கும்படி அவர்களை கோருகிறது. ‘தாய்நாட்டிற்கு சேவை செய்ய திரும்பி வாருங்கள்’ என்ற தனது கோஷத்தை ‘நாட்டின் வளர்ச்சிக்கு பங்களியுங்கள்’ என்பதாக மாற்றிக் கொண்டது. வெளிநாடுகளில் சீனர்கள் வசதிகள் மற்றும் நல்ல வாய்ப்புகளுடன் வாழ்வதற்கு செய்ய வேண்டிய அனைத்து விஷயங்களையும் சீனா செய்துவருகிறது.

வெளிநாடு வாழ் சீனர்கள் தாங்கள் வசிக்கும் நாடுகளில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது என்பது பற்றிய விவரங்கள் அடங்கிய சுமார் 10 லட்சம் சிறு பிரசுரங்களை சீனா அவர்கள் மத்தியில் விநியோகித்திருக்கிறது. தங்களது மரியாதை நாட்டின் கௌரவத்தை நிலைநிறுத்தும் வண்ணம் அவர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் அது விவரிக்கிறது. சீனாவின் இந்த மாற்றங்களின் விளைவாக சுமார் 15,000 சீன ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து எழுதப்பட்டன. இன்று சீனாவில் ஏராளமான ஆராய்ச்சி இதழ்கள் வெளியாகின்றன. இவை வெளிநாட்டு பலகலைக்கழங்களில் பரிந்துரைக்கப்படுகின்றன. உலகெங்கும் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் சீனாவைச் சேர்ந்த பேராசிரியர்கள் பணியாற்றுவது இதற்குக் உதவியாக இருக்கிறது. மேற்கத்திய நாடுகளின் நிறுவனங்களில் வேலைக்கு சேரும் சீன மாணவர்கள் சீனா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கிடையில் பல்வேறு வர்த்தக ஒப்பந்தங்கள் ஏற்பட வழிவகுக்கிறார்கள். ஒரு சிலர் (நல்ல பயிற்சியை பெற்ற பிறகு) சீனாவிற்கு திரும்பி அங்குள்ள நிறுவனங்களை மேற்கத்திய நாடுகளில் தாங்கள் பெற்ற அனுபவங்களால் மேம்படுத்துகிறார்கள்.

இன்று பல நாடுகளில் ஜனாதிபதி, மாநில பிரதிநிதி, அமைச்சர், ஆலோசகர், ஆளுனர், மேயர், அரசு வழக்கறிஞர் என பல்வேறு பொறுப்புகளில் சீனர்கள் இருக்கின்றனர். ஜாக்கி சான், ரோஸாலின்ட் சாவ், ஜெஸிக்கா ஹென்விக், ரிச்சர்ட் லூ என 30க்கும் மேற்பட்ட சீன நடிகர், நடிகைகள் உலக சினிமாவின் பிரபலங்களாக உள்ளனர். இத்துடன் உலக அளவில் புகழ்பெற்ற சுமார் 10 திரைப்பட இயக்குனர்களும், 20 இசைக் கலைஞர்களும் உள்ளனர்.

பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகள் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அதில் சீனா பெற்ற பதக்கங்கள் அதன் பெருமைக்குச் சான்று. ஒரு சில சீன விளையாட்டு வீரர்கள் தங்கள் நாட்டிற்கு எதிராகவே போட்டியில் இறங்கினர். உலக அளவில் பிரபலமான சுமார் 40 விளையாட்டு வீரர்கள் வேறு நாடுகளுக்காக விளையாடி வருகிறார்கள். சுமார் 50 தொழிலதிபர்கள், 25 எழுத்தாளர்கள், 20 அறிவியலாளர்கள் (நோபெல் பரிசு பெற்றவர்கள் உட்பட)  என பல்வேறு துறையை சேர்ந்த நூற்றுக்கணக்கான பிரபலங்கள் சீன டிராகனின் வளர்ச்சிக்காக உலகெங்கும் பாடுபட்டு வருகிறார்கள். சீன கலாசாரம், சித்தாந்தம் மற்றும் தயாரிப்புகள் ஆகியவற்றின் வழியே இவர்கள் இவர்கள் சீனாவின் சக்தியை அதிகரித்து வருகிறார்கள். பெய்ஜிங் ஒலிம்பிக்கின் போது சில குழுக்கள் அதற்கெதிரான தங்கள் எதிர்ப்பை காட்ட வெளிநாடு வாழ் சீனர்கள் இந்த எதிர்ப்பிற்கு எதிராக குரலெழுப்பினர். இது வேறெந்த நாட்டின் புலம்பெயர்ந்த மக்களிடமும் காணப்படாத ஒரு விஷயம். கான்பெராவில் நடந்த வெளிநாடு வாழ் சீனர்களின் பெய்ஜிங் ஒலிம்பிக்கிற்கு ஆதரவான ஊர்வலமானது பெய்ஜிங் ஒலிம்பிக்கிற்கு எதிரான ஊர்வலத்தை விட பல மடங்கு பெரிது. சியோல், கோலாலம்பூர், ஜகர்தா, பாங்காக் மற்றும் ஹாங்காங் ஆகிய இடங்களிலும் இத்தகைய ஆதரவு ஊர்வலங்களை வெளிநாடு வாழ் சீனர்கள் நடத்தினர். இதன் விளைவாக பெய்ஜிங் ஒலிம்பிக்கிற்கு எதிராக நடத்தப்பட்ட ஊர்வலங்கள் மற்றும் போராட்டங்கள் பிசுபிசுத்துப் போயின.

சீன ஆதரவு இயக்கங்கள் பல பிரபலங்களால் ஆதரிக்கப்பட்டன. உதாரணமாக, பெய்ஜிங் ஒலிம்பிக்கிற்கு எதிரான போராட்டங்களை ஜாக்கி சான் வெளிபப்டையாக கண்டித்தார். பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக அதிகாரப்பூர்வமான ஒலிம்பிக் இசை ஆல்பத்தை ஜாக்கி சான் வெளியிட்டார். சீன நடிகை சாங் சியி, ஜாக்கி சானை ஆதரித்து அறிக்கை வெளியிட்டார். சீனப் பெண்கள் என்றாலே பழமையாளர்கள் என்ற தோற்றத்தை மாற்றி அவர்கள் எந்த வகையிலும் மேற்கத்திய நாடுகளின் பெண்களுக்கு குறைந்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்தவர் இந்த நடிகை. இவர் இன்று சீனப் பெண்களின் அடையாளமாக கருதப்படுகிறார்.

வெளிநாடு வாழ் சீனப் பிரபலங்களின் செயல்பாடுகளின் காரணமாக எல்லா நாடுகளும் தங்கள் மாணவர்களை ஆங்கிலம் பயில ஊக்குவிக்கின்றன என்றால் மேற்கத்திய நாடுகள் தங்கள் மாணவர்களை சீன மொழியான மாண்டரினை பயில ஊக்குவிக்கின்றன. இன்று உலகெங்கும் எல்லா நாடுகளிலும் கன்பூசியஸ் கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன. இவை சீன மொழியில் பயிற்சியை அந்நாட்டு மாணவர்களுக்கு அளிக்கின்றன.  மேற்கத்திய நாடுகளின் மாணவர்களுக்கு மாண்டரின் மொழியை பயிற்றுவிப்பதற்கான பயிற்சியை சீன ஆசிரியர்களுக்கு சீனா வழங்குகிறது. ழிணீtவீஷீஸீணீறீ ஷிமீநீuக்ஷீவீtஹ் லிணீஸீரீuணீரீமீ மிஸீவீtவீணீtவீஸ்மீ என்ற திட்டத்தில் மாண்டரின் மொழி அமெரிக்க மாணவர்களுக்கு பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்று  2006ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் கூறுகிற அளவிற்கு சீன மொழியின் முக்கியத்துவம் அதிகரித்தது. இதற்காக 114 மில்லியன் டாலர் நிதியை அமெரிக்க அரசாங்கம் ஒதுக்கியது.

தனது குடிமக்களிடையே தேசிய உணர்ச்சியை வளர்ப்பதில் சீன அரசு எப்போதும் தீவிரமாக இருந்து வருகிறது. கடந்த ஐந்தாயிர வருட வரலாற்றுத் தொடர்ச்சியின் விளைவாக சீனா தனது மக்களை எந்த நாட்டில் அவர்கள் வசித்த போதும் ஒரே குடையின் கீழ் கொண்டுவருவதில் வெற்றி பெற்றுள்ளது. உலகின் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் சீனர்கள் தங்களது தனிச்சிறப்பான வழியான ‘‘சீன வழியை’’ பின்பற்றுகின்றனர். சீனர்கள் தங்கள் வேருடன் எப்போதும் தொடர்பு கொண்டிருப்பதால் ஏதாவது ஒரு காலகட்டத்தில் தங்கள் தாய்நாட்டிற்கு செல்லக் கிடைக்கும் வாய்ப்பை தவறவிடுவதில்லை. உணர்வு ரீதியாகவும், ராஜீய ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் தனக்காக வாய்ப்புகளை பெறுவதில் எந்த அளவிற்கு வெளிநாடு வாழ் சீனர்களை பயன்படுத்திக்கொள்ள முடியுமோ அந்த அளவிற்கு சீனா பயன்படுத்திக்கொள்கிறது. அதே நேரத்தில் அவர்களை ஒற்றுமையாக வைத்திருப்பதிலும் அது பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, ‘‘சீனத்தன்மை’’ என்ற உணர்வை அது பழுதுபடாமல் பாதுகாத்து வருகிறது. சீன அரசின் மீதான எல்லா விமர்சனங்களையும் மீறி சில நேர்மறையான விஷயங்களை சீனாவிடமிருந்து இந்தியா கற்றுக்கொள்ள வேண்டும் என நான் தனிப்பட்ட்ட முறையில் நம்புகிறேன். உலகின் ஆகப் பெரிய மக்களாட்சி நாடாக இந்தியா இருக்கும் நிலையில், சீனாவின் நேர்மறையான விஷயங்களை இந்தியா பின்பற்றும் எனில் அது உலகின் ஆக சக்தி வாய்ந்த மக்களாட்சி நாடாக மட்டுமல்ல உலகின் ஆகச் சிறந்த மக்களாட்சி நாடாகவும் உருவாகும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

வைரங்களுக்கு இடையே வறுமையும் மரணமும்

 

அரிந்தம் சவுத்ரி | செப்டம்பர் 20, 2011 13:57
 

அமெரிக்கர்களுக்கு செப்டம்பர் 11 தாக்குதல்களின் 10வது ஆண்டு தினம் வித்தியாசமானது. அமெரிக்கர்கள் யாரைப் பழிவாங்க வேண்டும் என்று எண்ணினார்களோ அதுவும் முடிந்து  ஓர்  ஆண்டு நிறைவை அவர்கள் கொண்டாட லாம். அவர்கள் மீண்டும் உலக நாடுகள் மீதான தங்கள் மேலாண்மையை நிரூபித்துள்ளனர். ஆனால் துயரங்களுக்கு இடையில் நடக்கும் இந்த கொண்டாட்டம் முழுமையானது என்று சொல்லமுடியாது. செப்டம்பர் 11 தாக்குதலை தலைமைதாங்கி நடத்தியவர் இறந்திருக்கலாம். ஆனால் அதற்கான செயல்திட்டம் இன்னும் தாக்குதலுக்குக் காத்துக்கொண்டுதான் இருக்கிறது. செப்டம்பர் 11 தாக்குதல் குறித்த கூப்பாடுகளுக்கு மத்தியில் அந்த நடவடிக்கைக்கு அளிக்கப்பட்ட நிதி விஷயம் கண்டுகொள்ளப்படவேயில்லை. இத்தாக்குதல் நடவடிக்கைக்கான நிதி ஆதாரம் ஆப்பிரிக்காவில் உள்ளது என்பது அனைவரும் அறியாதது. விலைமதிப்பற்ற பரிசாகக் கருதப்படும் வைரங்களை லட்சக்கணக்கான மேற்கத்தியர்கள் வாங்குவதால்தான் இந்த தாக்குதல் சாத்தியமானது. ஆமாம். சரியாகச் சொல்லவேண்டுமானால் அவை ரத்த வைரங்கள். செப்டம்பர் தாக்குதல்கள் குறித்து புலனாய்வு செய்த பல அறிக்கைகளும் ஐ.நா. குற்ற அறிக்கை உட்பட அனைத்தும் தீவிரவாத நடவடிக்கைகளுக்காக அல்காயிதாவுடன் இணைந்து லைபீரிய அதிபர், ஆப்பிரிக்க வைர வர்த்தகத்தில் ஈடுபட்டு நிதி சேகரிப்பதாகத் தெரிவிக்கின்றன. 

காலத்தில் சற்று பின்னோக்கிப் போனால்  பிரச்னைக்குரிய வைரங்களின் கதை இரண்டாம் உலகப்போர் முடிந்த உடனேயே தொடங்கிவிட்டது. பிரிட்டிஷ் ராணுவத்துக்காக பணிபுரிந்த சியாரா லியோனைச் சேர்ந்த பூர்வக்குடிகள், நாடு திரும்பியபோது தங்கள் தேசம் இன்னமும் ஆங்கிலேயர்களால் கொள்ளையடிக்கப்பட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தனர். ஆப்பிரிக்காவின் பல பகுதிகளிலும் வைரச் சுரங்கங்கள் உண்டு. அவை குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே இருந்தன. ஆனால் சியாரா லியோனில், வைரச் சுரங்கங்கள் அனைத்து இடங்களிலும் பரவிக்கிடந்தன. அதனால் ஆங்கிலேயர்களின் கொள்ளை எளிமையாக இருந்தது. படிப்படியாக 1950 & 60களில் இங்குள்ள பூர்வக்குடிகள் (சட்டவிரோதமாக) வைரங்களைத் தோண்டி விற்கத் தொடங்கினார்கள். இதைத் தடுப்பதோ பாதுகாப்பதோ இயலாத காரியமாக இருந்தது. ஆங்கிலேயர்கள் பூர்வகுடிகளை வைரம் தோண்டுவதிலிருந்து தடுப்பதற்காக காவல்படையைப் பயன்படுத்தினார்கள். ஆனால் ஒருகட்டத்தில் பூர்வக்குடிகள் போர் செய்யும் கலையில் நிபுணர்களானார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் முன்னாள் ராணுவ வீரர்கள். குறிப்பிட்ட காலத்திற்குள் சட்டவிரோதமான வைரச்சுரங்க தொழில் வளமடைய தொடங்கியது. அத்துடன் சியாரா லியோனின் பூர்வக்குடிகளுக்கு லெபனான் போதுமான சந்தையையும் வழங்கியது. இந்த வர்த்தக வசதிகள் மற்றும் சந்தை வசதி வழியாக பூர்வக்குடிகளுக்கு சுரங்கக் கருவிகள் மற்றும் உபகரணங்கள் நிறைய கிடைத்தன. இந்த வைரங்கள் லைபீரியாவுக்குள்ளும் புகுந்தன. லைபீரியா டாலர் அடிப்படையிலான பொருளாதாரம் என்பதாலும் நீக்குப்போக்கான சட்டங்கள் கொண்டிருந்ததாலும் வைர விற்பனை மிக எளிதாக மாறியது. அத்துடன் சர்வதேச வர்த்தகமும் இங்கிருந்து சாத்தியமானது. 

அதேவேளையில் வைரம் மற்றும் அபூர்வ கற்கள் சந்தையில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கான வாய்ப்பாக டி பீர்ஸ் நிறுவனம் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான அங்கோலா மற்றும் சியாரா லியோனிலிருந்து வைரங்களை வாங்க தொடங்கியது. இந்த நிறுவனம் வைரங்களை வாங்கி தங்களிடம் சேமித்துக் கொண்டு குறைவான வைரங்களையே சந்தைக்கு அனுப்பியது. இதனால் வைரத்தின் விலை உயர்வாக இருந்தது. அத்துடன் ‘எப்போதைக்குமான வைரம்’ என்ற பிரச்சாரத்தை டி பீர்ஸ் தொடங்கியது. இந்த பிரச்சாரத்தைத் தொடர்ந்து ஆப்பிரிக்கா முழுவதும் வைரத்துக்கான தேவை அதிகரித்தது. இதனால் ஆப்பிரிக்கா கண்டத்தை ஆளும் சர்வாதிகாரிகள் மற்றும் அரசு தலைவர்கள் வைரங்களைத் தோண்டி எடுக்க கொடூரமான நடைமுறைகளை கடைபிடிக்கத் தொடங்கினர். ஆப்பிரிக்க கண்டத்தின் பூர்வக்குடிகளை சித்திரவதை செய்து கொன்று அவர்களது நிலத்திலிருந்து வெளியேற்றி, வைரங்களைத் தோண்டி எடுத்தனர். அத்துடன் வைரக் கற்களை எடுக்கும் வேலைக்காக கொத்தடிமைகளாய் பூர்வக்குடி ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளையும் பயன்படுத்தத் தொடங்கினார்கள். தற்போதுகூட மிக மோசமான நிலைமைகளில் அவர்கள் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். வைரங்களை விற்ற சர்வாதிகாரிகள் அதற்குப் பதிலாக ஆயுதங்கள் மற்றும் படைக்கலன்களை வாங்கிக் குவித்தனர். சட்டவிரோதமான ரத்த வைரங்களின் விற்பனை மூலம் வைரத் தொழில் வளம்பெற்றது. அத்துடன் ஆப்பிரிக்காவில் பணம் குவியத்தொடங்கியது. இந்த பணம் ஆயுத வர்த்தகத்தை நோக்கிச் சென்றது. சியாரா லியோனின் கலகக் குழுவான புரட்சி ஐக்கிய முன்னணிப் படையினர் மக்களைக் கொன்று அவர்களது உறுப்புகளைத் துண்டித்து வைரச் சுரங்க இடங்களிலிருந்து வெளியேற்றினர். வண்டல் மண் நிறைந்த கிராமங்களை அவர்கள் காலி செய்தனர். ஏனெனில் வண்டல் மண் நிறைந்திருக்கும் பகுதியில்தான் வைரங்கள் கிடைக்கும். இப்படியாக அப்பகுதி அவர்களது கட்டுப்பாட்டுக்குள் வரும். ஒவ்வொரு கிராமமாக இப்படித்தான் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டன. இந்த நடவடிக்கையில் ஒரு லட்சம் அப்பாவிகள் கொல்லப்பட்டனர். 2 மில்லியன் பேர் சியாரா லியோனை விட்டு வெளியேறினார்கள். மொத்த மரணங்கள் 4 மில்லியன் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. புரட்சிகரப் படையினர் கட்டுப்பாட்டில் இருக்கும் வைரங்கள் பிரச்னை வைரங்கள் என்று கருதப்படுகின்றன. இவைதான் ரத்த வைரங்களாக மாறுகின்றன. இந்த மாறுதலிலேயே அந்த பிராந்தியம் எதிர்கொண்ட சமூக குழப்பத்தை நாம் புரிந்துகொள்ளலாம். எளிமையாகச் சொன்னால் சர்வாதிகார ஆட்சியாளர்களும் கலகப் படையினர்களும் சுரங்க நிலங்களுக்காகவே சண்டையிட்டனர். ஆனால் சிறிது காலத்திலேயே அதே நபர்கள் இனப்படுகொலைகளிலும் தங்கள் அதி காரத்தைக் காட்டுவதற்காக ஈடுபடத் தொடங்கி னார்கள். இது பொதுவான வழக்கமாகவும் மாறியது. 

அப்போதைய பிரதமரான சியாகா ஸ்டீவன்ஸின் ஆட்சிக்காலத்தில்தான் 1960களில் சட்டவிரோத வைர வர்த்தகம் வடிவமெடுத்தது. 1968 முதல் 1990க்குள் வைர வர்த்தகம் இந்தப் பிராந்தியத்தில் மிகப்பெரிய வன்முறைகளை நிகழ்த்தியது. இதன் வழியாக அமைச்சர்கள் கோடிக்கணக்கில் பணத்தைச் சுருட்டினர். 1991இல் புரட்சிகர ஐக்கிய முன்னணி, அரசுக்கு எதிரான வன்முறை போராட்டத்தைத் தொடங்கினார்கள். அவர்கள் படிப்படியாக ஊழலை அகற்றும் தங்கள் இலக்கை விட்டுவிட்டு, வைரச்சுரங்க பிராந்தியங்கள் மீது தங்கள் கட்டுப்பாட்டை நிர்வகிப்பதை இலக்காகக் கொண்டார்கள். புரட்சிகர ஐக்கிய முன்னணியின் ஆளுகையின்கீழ் சுரங்கத் தொழிலாளர்கள் கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டனர். இக்காலகட்டத்தில் ஐரோப்பா மட்டுமே சட்டவிரோதமான வைரங்களை 125 மில்லியன் டாலருக்கு வர்த்தகம் செய்தது. இந்தப் பணத்தை புரட்சிகர ஐக்கியக் கூட்டணி தங்களது மேலதிக சுரங்கத்தொழில் விரிவாக்கத்திற்குப் பயன்படுத்திக் கொண்டது. 2001இல் வெளியான தகவல்களின்படி 10 லட்சத்திற்கும் மேற்பட்ட சியாரா லியோன் வாசிகள் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ளனர். இதனால் ஐக்கிய நாடுகள் மனித வளர்ச்சிக் குறியீட்டில் சியாரா லியோன் கடைசி இடத்திற்கு வந்தது. 

சியாரா லியோன் மட்டுமல்லாமல் மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்கா முழுவதும் ரத்த வைர சுரங்கத்தொழிலின் கோரப்பிடியில் சிக்கிக் கொண்டது. சியாரா லியோன் மற்றும் லைபீரியா தொடங்கி அங்கோலா மற்றும் காங்கோ வரை கொடுங்கோன்மை பரவியது. அங்கோலா புவி அரசியலின் முக்கியத்துவம் வாய்ந்த பிராந்தியமானது. 1975இல் போர்ச்சுகீசிய நாட்டின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட அங்கோலாவில் ரத்தம் தோய்ந்த உள்நாட்டுப் போர் ஆரம்பித்து 2001 வரை தொடர்ந்தது. அமெரிக்கா ஆதரவு பெற்ற அங்கோலா விடுதலைக்கான தேசிய யூனியன் இந்த பனிப் போரில் அதிகபட்சமான அமெரிக்க நிதியைப் பெற்றது. 

ரஷ்யா ஆதரவு பெற்ற அங்கோலா விடுதலை வெகுஜன இயக்கத்துடன் கோரமான யுத்தங்களை நடத்தியது. இந்த நிலை 80கள் வரை நீடித்தது. 1992 மற்றும் 1998 ஆம் ஆண்டுக்குள் அங்கோலா விடுதலை தேசிய யூனியன் மட்டும் 3.72 பில்லியன் மதிப்புள்ள வைரங்களை விற்று சர்வதேச சமூகத்திற்கு மிகப்பெரிய அபாய எச்சரிக்கையையும் விடுத்தது. குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபை இதனால் அதிர்ந்துபோனது. இதன் தொடர்ச்சியாக ஐ.நா. சபை இரண்டு தீர்மானத்தை வெளியிட்டது. ஐ.நா. பாதுகாப்பு சபை தீர்மானம் 1173 மற்றும் 1176 ஆகிய தீர்மானங்கள் அங்கோலாவிலிருந்து வைரங்களை இறக்குமதி செய்வதற்குத் தடை விதித்தன. ஆனாலும் கலகக்காரர்களின் வைர வர்த்தகம் நிற்கவே இல்லை. பல குறுக்கு வழிகளில் ஐரோப்பா மற்றும் அமெரிக்க சந்தைகளுக்குச் செல்லும் தூய்மையான வைரங்களுடன் கலக்கப்பட்டு சென்றன. இந்த வைரங்களை விற்கும் நிறுவனம் பற்றி சொல்லவேண்டியதில்லை. ஊழலான ஆப்பிரிக்க நாடுகளில் இருக்கும் கட்டுப்பாடற்ற விமான போக்குவரத்து இந்த  கடத்தலுக்கு உதவியாக இருந்தது. சௌரிமோவின் மாகாண தலைநகரில்தான் பெரும்பாலான வைரச் சுரங்கங்கள் அமைந்துள்ளன. இது தலைநகர் லுவாண்டாவி லிருந்து இரண்டு மணி நேர பயணத்தில் உள்ளது. இப்பகுதி வறுமையான சூழ்நிலையிலேயே உள்ளது. பிரபலமான வைர நிறுவனங்கள் இங்கே தங்கள் தளங்களைக் கொண்டுள்ளன. பெட்ரா டைமண்ட்ஸ், டிரான்ஸ் ஹெக்ஸ் மற்றும் கட்டோகா ஆகிய நிறுவனங் கள் உள்ளன. டி பீர்ஸும் இங்கே இருந்தது. ஆனால் அரசுடனான பிரச்னை வந்த பின் அவர்கள் வெளியேறிவிட்டனர் (அவர்கள் அதிகாரப் பூர்வமாக அறிவித்த செய்தி இது) . 

காங்கோ ஜனநாயகக் குடியரசின் கதையும் இதைப்போன்றதே. பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகளைப் போலவே, காங்கோவும் அதிகாரத் துக்காக அரசுடன் தொடர்ந்து போராடிவரும், கலகக்காரர்களால் பிரச்னைக்கு ஆளாகும் தேசமாகும். ஜிம்பாப்வே மற்றும் சூடானைவிட மோசமான மனிதாபிமான பிரச்னைகள் நிலவும் இடமாகும். வைரம் மற்றும் இதர தாதுக்களை தம் வசத்துக்குள் வைத்துக்கொள்ள, விவரிக்கமுடியாத மனித உரிமை மீறல்கள் அவர்களால் மேற்கொள்ளப்படுகின்றன. 1998 லிருந்து காங்கோ ஜனநாயகக் குடியரசில் ஏற்பட்ட போரில் 1.7 மில்லியன் பேர் மரணமடைந்துள்ளனர். ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டதால் மட்டும் இந்த மரணங்கள் நிகழவில்லை, கூடவே சுகாதார அமைப்பின் மொத்தமான சீரழிவு காரணமாக குணப்படுத்தக்கூடிய  நோய்கள், போஷாக் கின்மை காரணமாகவே இத்தனை மரணங் கள் நிகழ்ந்தன. காங்கோ இருப்பதிலேயே அதிகபட்ச இறப்பு விகிதத்தைக்கொண்டது. காங்கோவில்தான் உலகிலுள்ள வைரங்களில் 26% உள்ளது என்பது எவ்வளவு பெரிய முரண்! இருந்தும் உலகின் மிகவும் ஏழ்மையான நாடுகளில் ஒன்று.


ரத்தவைரத்தின் கதை பழங்கதையல்ல. கடந்த மாதம்கூட ஜிம்பாப்வே,  200 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமான வைரங்களை விற்றதும் அதில் வந்த பணம் குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்டதும் கண்டறியப்பட்டது. இந்த வைரங்கள் சான்றளிக்கப்படாதவை என்பதோடு அதில் சில மேற்கத்திய கார்ப்பரேஷன்களின் பங்கும் இருந்தது. சமீபத்தில் ஜிம்பாப்வே நிதியமைச்சர் டெண்டாய் பிட்டி 300 மில்லியன் டாலர் வைரவிற்பனை வருவாய் அலுவலகக் கணக்குகளைச் சென்றடையாததை வெளிப்படுத்தினார். அந்தப் பணம் ராபர்ட் முகாபே தலைமை வகிக்கும் அரசியல் கட்சிகளையும் ராணுவத்தையும் சென்றடைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பணத்தில் பெருமளவு தேர்தல் முடிவுகளை தன் வசப்படுத்த செலவிடப்பட்டிருக்கிறது. இந்த சட்டவிரோத வைரங்கள் மேற்கத்திய சந்தைக்கு மட்டுமின்றி சூரத்துக்கும் வருகிறது எனக் கண்டறியப்பட்டுள்ளது. இன்று சியாரா லியோனில் இருந்து 4 மில்லியன் மக்களும் லைபீரியாவிலிருந்து 1.5 மில்லியன் மக்களும் அங்கோலாவில் இருந்து 1.7 மில்லியன் மக்களும் இடம்பெயரச் செய்யப்பட்டுள்ளனர். கடந்த சில பத்தாண்டுகளில் உலகம் தான் வாங்கிய வைரங்களுக்காகக் கொடுத்த விலை இது. 
வைர வியாபாரம் மட்டுமின்றி, வைரம் தோண்டியெடுப்பதுமே சட்ட விரோதமாகத் திகழ்கிறது. வெளிப்படைத் தன்மையோ சான்றளிப்பு நடைமுறையோ மட்டும் இங்கிருக்கும் கொடூரத்தைச் சரிபார்க்கப் போதுமானதல்ல. தேவை அரசியல் உறுதிப்பாடு. உதாரணமாக நமீபியா, தென்ஆப்பிரிக்கா, தான்சானியா மற்றும் போஸ்ட்வானா போன்ற நாடுகள் வைரச் சுரங்கங்களிலிருந்து வரும் வருவாயை சமுக முன்னேற்றத்திற்குப் பயன்படுத்துகின்றன. போஸ்ட்வானா வைரச் சுரங்கத் தொழிலிலிருந்து வரும் வருவாயை கல்வி, ஆரோக்கியம் மற்றும் மழைக்காலத் தின் போதான மறுசீரமைப்புச் செயல் பாடுகளுக்காகப் பயன்படுத்திக் கொள்கிறது. சட்டபூர்வமான சந்தைகளில் சட்டவிரோத வைரங்கள் எட்டுவதைத் தடுக்க ஐக்கிய நாடுகள் அமைப்பு 2003 இல் கிம்பர்லி சான்றளிப்பு நடைமுறைத் திட்டம் எனும் நடைமுறையைக் கொண்டுவந்தது. எனினும் இந்தத் திட்டமும் கூட போதுமானதல்ல. சர்வதேச வைர மற்றும் தாது அமைப்பு உடனடியாக வைரத்திற்கான தேவையைக் குறைக்கவேண்டும். இவ்வாறு திட்டமிட்டு உருவாக்கப்பட்ட வைரத்திற்கான தேவையை யும் அதன் விலையையும் குறைத்தால்தான் நிலை சீரடையும். லாபத்திற்காக நடக்கும் இந்தக் கொலைக் கதைகள் உங்களைக் கவர்ந்ததெனில் நீங்கள் அவசியம் ‘ப்ளட் டைமண்ட்ஸ் படத்தைப் பார்க்கவேண்டும். அந்தப் படம் உண்மையிலேயே என்னைப் போலவே உங்களுக்கும் இந்த விஷயத்தில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தலாம். இந்தப் படத்தைப் பார்த்துத்தான் இதுகுறித்த மேலதிக விவரங்களில் ஆர்வம்காட்ட ஆரம்பித்தேன்.

வைரம் சார்ந்த இந்தத் துயரக் கதையில் மிகவும் முக்கியமானது என்னவெனில் மேற்குலகின் பேராசையும் சுரண்டலுமே. ஈராக்கிலிருந்து லிபியா வரையிலான எண்ணெய் வயல்களைக் கையகப்படுத்த பெரிய அளவில் போரைத் தொடங்கியதுபோல வைரங்களைக் குறைந்த விலையில் பெற்று லாபம் ஈட்டுவதற்கு லாபவெறி பிடித்த தனியார் நிறுவனங்களுக்கு மேற்குலகு அனுமதி அளித்துள்ளது. இவை நேரடி யாகவும் மறைமுகமாகவும் கும்பல் கும்பலாகக் கொலைசெய்யவும் ஆப்பிரிக்காவில் மனிதநேயமற்ற பிராந்தியங்கள் உருவாகவும் நிதியுதவி செய்திருக்கின்றன. இத்தகைய கொலைகளை நிறுத்துவதற்கு இது மறைமுகமாக 9/11 அல்லது அதுபோன்ற நிறைய அழிவுக்கு காரணமாகும் என்றாலும் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் படைகளை அனுப்பவில்லை. யதார்த்தத்தில், ஏழை ஆப்பிரிக்காவில் இருக்கும் லட்சக்கணக்கான கருப்பினத்தவருக்கு என்ன நேர்ந்தாலும் யாருக்குக் கவலை? அமெரிக்காவின் தலைமைப் பொறுப்பில் இருப்பவரின் வேர்கள் ஆப்பிரிக்கா என்றாலும் அதனாலென்ன? 



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

கல்விக்கு வாய்ப்பு இல்லாத ஒரு முழுமையான கண்டம்

 

அரிந்தம் சவுத்ரி | அக்டோபர் 17, 2011 13:03
 


இந்த டிசம்பரில் நான் ஆப்பிரிக்காவில் ஒரு கல்விக்கான கருத்தரங்கில் பேச இருக்கிறேன். அங்கு எதைப் பேசுவது என்பது குறித்து நான் ஆய்வுசெய்து கொண்டிருந்தபோது மொத்த உலகமும் (விதிவிலக்காக சில நாடுகள் இருக்கலாம்) நவீன வசதிகளுடனான கல்வியை குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுப்பதில் பாய்ச்சல் நிகழ்த்தியிருக்கும் வேளையில் இந்த மொத்த கண்டமும் இன்னும் கரும்பலகைகள், சாக்பீசுகள்கூட கிடைக்காத நிலையில் உள்ளதை உணர்ந்தேன். ஒருபுறம் வளர்ந்த நாடுகள் தொழில்நுட்ப வசதிகள் வழியாக அறிவை வளர்க்கின்றன. மறுபக்கத்தில் ஆப்பிரிக்காவோ குழந்தைகளுக்கு அடிப்படை வாசிப்பு, எழுத்துப்பயிற்சி மற்றும் எண்களைக்கூட சொல்லிக்கொடுக்க இயலாமல் திணறிக்கொண்டிருக்கிறது. பள்ளிகளில் மாணவர்சேர்க்கை இன்னமும் உலகில் மற்ற நாடுகளைவிட அங்கே குறைவான விகிதத்திலேயே உள்ளது. ஆரம்பப் பள்ளிகளில் ஆப்பிரிக்க குழந்தைகளில் 50 சதவிகிதமே படிக்க வருகின்றனர். வளர்ந்த ஆண்களில் 60 சதவிகிதமும், பெண்களில் 50 சதவிகிதமும் கல்வியறிவின்றி உள்ளனர்.

இந்நிலையில், ஆப்பிரிக்காவால் சிறந்த மனித ஆற்றலை உலகுக்குத் தரமுடியாத சூழலிலே உள்ளது. - இதில் 21 ஆம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்வதை அப்புறம் பார்க்கலாம். ஆப்பிரிக்காவில் உள்ள 15 நாடுகளில் பள்ளிச்சேர்க்கையே 50 சதவிகிதம்தான் உள்ளது. இந்த நாடுகள் அனைத்தும் ஐ.நாவின் சிறப்புத்திட்டம் வாயிலாக கல்வி உதவியை பத்தாண்டுகளுக்குப் பெற்றுவருகின்றன. இந்தத் திட்டத்தின்படி ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனி திட்டத்தைத் தீட்டி கல்வியைப் பெறுவதற்கு, அவர்களுக்கு இருக்கும் அடிப்படைப் பிரச்னைகளைக் களைவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.  மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களின்மை, தரமற்ற ஆசிரியர்கள், பாடப்புத்தகங்களின் தரமின்மை ஆகியவை மோசமான கற்பித்தல் முறைகளுக்கும் கற்றலுக்கும் காரணமாக உள்ளன. எச்ஐவி தொற்று பரவலாக உள்ள இடங்கள் அதிகம் கிராமப்பகுதிகளாகவே உள்ளன. இங்கே கல்வியின்மையும் அதிகம் நிலவுகிறது. உணவுப்பிரச்னை, தொற்றுநோய், வன்முறைகள் மற்றும் இயற்கைப் பேரிடர்கள் ஆகியவற்றுக்கு உடனடியாக ஆளாவது, மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காதான். இவை அனைத்திலும் பள்ளிச்சேர்க்கை விகிதம் தாழ்வான நிலையிலேயே உள்ளது. அத்துடன் பால்யவிவாகம், பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாதல் மற்றும் இளம்வயது கர்ப்பம் ஆகியவையால் பாலின பாகுபாடு கல்வியிலும் நிலவுவதற்குக் காரணமாகின்றன. பள்ளிச்சேர்க்கை விகிதத்தில் சிறிது வளர்ச்சி ஏற்பட்டால், அதேவேளையில் வெளியேறும் குழந்தைகளின் விகிதமும் கூடிவிடுகிறது.

இருப்பினும் உயர்கல்வியில் சேர்க்கை விகிதம் ஆப்பிரிக்காவில் அதிகமாகி வருவது நல்ல அம்சமாக உள்ளது. தற்போதைக்கு, நான்கு மில்லியன் மாணவர்கள் ஆப்பிரிக்க கண்டத்தில் உயர்கல்விப் பயிற்சியில் சேர்ந்துள்ளனர். இந்த எண்ணிக்கை ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்கா போன்ற வளரும் பிராந்தியங்களை ஒப்பிடும்போது குறைவான விகிதமே. அத்துடன் உயர்கல்வியில் சேரும் மாணவர்கள் தங்கள் கல்வியை முடிக்கும் விகிதத்தை வைத்துப்பார்த்தால் குறைவான மாணவர்களே பூர்த்தி செய்கின்றனர். பலர் பணவசதி இல்லாமல் வெளியேறிவிடுகின்றனர். அரசு உதவியும் படிப்புக்கு இல்லை. இதனால் அந்த நாடுகள் மேலும் மேலும் சர்வதேச பண நிதியத்தை தொடர்ந்து சார்ந்திருக்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் மாணவர்கள், தங்கள் கல்விக்கு தாங்களே முழுமையாக கட்டணம் செலுத்துமாறு முதலாளித்துவ நிபந்தனைகளை உலக பண நிதியம் இடுகின்றது. இதன் அடுத்தகட்டமாக தனியார் நிறுவனங்கள் இங்கே பெருகத் தொடங்கியுள்ளன. இப்போது ஆப்பிரிக்கா கண்டத்தில் 450 தனியார் கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் இயங்குகின்றன. இந்த வளர்ச்சி இக்கண்டத்தில் இருந்தாலும், லட்சக்கணக்கான மாணவர்களுக்கு இந்தப் படிப்புகளுக்கு ஆகும் செலவு கட்டுப்படியாகாமலேயே உள்ளது. தனியார் கல்விக்கு அதிக கட்டணம் என்பதால்  கூடுதல்  நன்கொடை கட்டணம் வசூலிப்பதும் ஆப்பிரிக்கா முழுவதும் அதிகமாகிவிட்டது. மொராக்கோவில் 90 சதவிகிதம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பள்ளியில் படிக்கவைக்க கூடுதல் பணம் செலவழிக்கிறார்கள்.

உலக வங்கி, யுனெஸ்கோ, யுனிசெப் மற்றும் யுஎன்டிபி ஆகிய சர்வதேச அமைப்புகள் ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஆரம்பக்கல்வியை அனைத்துக் குழந்தைகளும் பெறும்பொருட்டு முதலீட்டுத் திட்டங்களை  வைத்துள்ளன.  நார்வே, இந்த முதலீட்டு திட்டத்துக் காக ஏழு மில்லியன் டாலர் பணம் கொடுத்து உதவியுள்ளது. செனகல் நாடும் ஆரம்பக்கல்வியை ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், பத்து ஆண்டு ஆரம்பக்கல்வித் திட்டத்தில் ஆர்வம் செலுத்திவருகிறது. மொசாம்பிக்கில் ஐந்தாண்டு கல்வித் திட்டம் ஒன்றே தீட்டப்பட்டுள்ளது. அதேபோன்று கல்வித்துறை முதலீட்டுத் திட்டத்தின்கீழ் கினியா, கானா, மொரிஷீயஸ் மற்றும் மலாவி ஆகிய நாடுகளில் கல்விக்கான புதிய நம்பிக்கைகள் தெரிகின்றன. 

ஆப்பிரிக்க கண்டத்தில் தான்சானியா நாடு தனியாகக் குறிப்பிட வேண்டிய நாடாகும். அங்கே அரசு தீட்டும் கொள்கைகளுக்கு ஒன்றும் குறைவே இல்லை. ஆனால் அந்தக் கொள்கைகள் அரைவேக்கா டானவை. ஆப்பிரிக்காவின் மிக மோசமான நாடுகளில் ஒன்றாகிய இது மோசமான சமூகப் பிரச்னை களுக்கு ஆளாகியுள்ளது. பள்ளிக் கல்வியில் ஆங்கிலம் பயிற்று மொழியாக உள்ளது. ஆனால் ஆசிரியர்களோ மொழிப்புலமையும், பாடப்புலமையும் இல்லாதவர்கள். ஆங்கிலத்தில் பேசும் ஆசிரியர்களைப் பார்ப்பதே கடினம். இதனால் மொத்த கல்வி வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது. மேல்வகுப்புகளுக்கு தேர்வாகிச் செல்லும் மாணவர்களுக்குப் போதிய தயாரிப்பு இல்லை. ஆங்கிலத்தில் புலமை இல்லை. தனியார் பள்ளிகளிலும் இதே நிலைமைதான். 2015 ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கு இலவச ஆரம்பக்கல்வி என்ற ஐநாவின் மில்லினிய வளர்ச்சி இலக்குத் திட்டப்படி தான்சானிய அரசின் கல்விக்கொள்கைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால் அங்கிருக்கும் நிலைமையும் தவறான சேவையின்மையும் சரியான கற்பித்தல் இல்லாத மாணவர்களையே உற்பத்தி செய்கின்றன.

கட்டாயமாக ஏழு ஆண்டுகள் கல்வித்திட்டம் ஓரளவு பலன்களைக் கொடுக்கத் தொடங்கியுள்ளது. 90 சதவிகிதம் குழந்தைகள் பள்ளிக்குச் செல்கின்றனர். ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் திட்டமும் கொள்கைகளும் மிக உற்சாகத்தைத் தந்தாலும், ஏழு முதல் 13 வயது வரை உள்ள குழந்தைகளில் அடுத்த கட்ட வகுப்புகளுக்குப் போவது 9 சதவிகிதம்தான். யுனிசெப் கணக்கெடுப்பின்படி, 2005 முதல் 2009 க்குள் 83 சதவிகிதம் குழந்தைகள் ஆரம்பப்பள்ளிக் கல்வியை முடித்தனர். ஆனால் மேல்வகுப்புகளுக்குப் போனது மிகச் சொற்பமானவர்களே.
ஆப்பிரிக்க நாடுகளில் மாணவிகள் பள்ளிகளிலிருந்து வெளியேறுவது அதிகமான விகிதத்தில் உள்ளது. பெரும்பாலான பெண் குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே திருமணமாகிவிடுகிறது. தான்சானியாவில் உள்ள உவெசோ பயிலகம் நடத்திய ஆய்வின்படி, 38 மாவட்டங்களில் உள்ள ஏழாம் வகுப்பு தேறிய மாணவர்களால் இரண்டாம் வகுப்பு ஆங்கிலப் புத்தகத்தை வாசிக்க முடியவில்லை என்று தெரியவந்துள்ளது. கென்யாவும் தான்சானியாவைப் போன்றே பிரச்னைகளில் சிக்கித்தவிக்கிறது. இங்கே பத்தாண்டுகளுக்கு முன்பே இலவசக் கல்விக்கொள்கை திட்டம் ஏற்கப்பட்டுவிட்டது. ஆனாலும் பல சமூகப்பொருளாதாரப் பிரச்னைகளில் சிக்கி இங்குள்ள மக்கள் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பாமல் இருக்கும் நிலை காணப்படுகிறது. இங்கே 1.5 மில்லியன் குழந்தைகள் பள்ளிக்குப் போகாமல் வெளியே இருக்கின்றன. அவர்களில் பெரும்பாலானவர்கள் வேலைக்குச் செல்வார்கள். அல்லது ஒன்றுமே செய்யாமல் இருப்பார்கள். 

கென்யாவில் எட்டாண்டுகள் இலவச ஆரம்பக்கல்வித் திட்டம் செயல்படுகிறது. ஆனால் பள்ளிக்கல்விக்குத் தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் இங்கு இல்லை. கல்விக்கட்டணம் இல்லாமல் இருப்பினும், சீருடை மற்றும் புத்தகங்களின் விலையைப் பார்த்து பள்ளிக்கே வராமல் போகும் குழந்தைகள் அதிகம். முதல் எட்டு ஆண்டுகள் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்கூட, அதற்குப் பிறகு மேல்படிப்புக்கு அனுப்ப மிகுந்த சிரமங்களை எதிர்கொள்கின்றனர். முதல் எட்டாண்டு கல்வியை முடித்துவிட்டு  ஒவ்வொரு ஆண்டும் 3 லட்சம் மாணவர்கள் பள்ளிகளிலிருந்து வெளியேறுகின்றனர். 
தான்சானியாவைப் போன்றே கென்யாவும் தரமான கல்வியை வழங்க இயலாமல் திணறிவருகிறது. 2009 இல் நடந்த தேசிய மதிப்பீட்டு மைய ஆய்வின்படி, ஐந்தாம் வகுப்பு படிக்கும் குழந்தைகளில் 30 சதவிகிதம் பேருக்கு சாதாரணக் கணக்குகளைப் போடத்தெரியாத நிலை உள்ளது. பால்ய விவாகமும், கர்ப்பமும் பள்ளியிலிருந்து மாணவர்கள் நிற்கக் காரணமாகின்றன. ஓரளவு பள்ளிக்கல்வியை முடித்த இளைஞர்களுக்குக்கூட சந்தையில் வேலை கிடைப்பது கடினமானதாக உள்ளது. இதனால் அவர்கள் குற்றம் மற்றும் போதை வழிகளில் திரும்புகின்றனர்.

கென்யாவில் கல்வி என்பது வெகுசில வசதியான குடும்பங்களுக்கும் உயர்கல்வி என்பது உயர்வர்க்கத்தினருக்குமானதாக உள்ளது. இந்த நிலையால் தேசத்தின் பொருளாதாரமே பாதிக்கிறது. மனித ஆற்றல் இன்மை பொருளாதாரத்தை வளரவிடாமல் செய்கிறது. யுனெஸ்கோ அறிக்கையின்படி, ஆசிரியர்கள் பாடம் நடத்தும் நேரம் உலகிலேயே கென்யாவின் ஆரம்பப் பள்ளிகளில்தான் குறைவாக உள்ளது. அத்துடன் அங்கு நீக்கமற நிறைந்திருக்கும் ஊழலும் மொத்த அமைப்பையே அச்சுறுத்திவருகிறது. கடந்த ஜூன் மாதம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி, 46 மில்லியன் டாலர் பணம் காணாமல் போயிருப்பதாக அந்நாட்டு நிதி அமைச்சர் உகுரு கென்யத்தா கூறியுள்ளார். இத்தொகை அந்நாட்டுக் குழந்தைகளின் ஆரம்பக்கல்விக்கானது. இந்தத் தொகையில் நான்கு மில்லியன் குழந்தைகள்  ஓர்  ஆண்டுக்கு  இலவசமாகப் படிக்கமுடியும். 

இதற்கடுத்த நிலையில் வரும் நாடு மாலி. மாலி என்பது உலகின் மிக ஏழை நாடுகளில் ஒன்று. இங்குள்ள குழந்தைகளில் 80 சதவிகிதம் பேர் ரத்தசோகையால் அவதிப்படுபவர்கள். மாலியின் பிரச்னை என்னவெனில் தான்சானியாவையும், கென்யாவையும் போன்றே பள்ளிகளுக்கு பிள்ளைகளை அனுப்ப பெற்றோர்களுக்குக் கட்டுப்படியாகாத நிலையே காணப்படுகிறது. 2005 ஆண்டு கணக்குப்படி ஆரம்பக்கல்வி படிக்கும் குழந்தைகளில் அடுத்தகட்ட கல்விக்கு நகரமுடிந்த குழந்தைகள் 35 சதவிகிதம்தான். 

மோசமான வறுமை, எய்ட்ஸ் தொற்று, உள்நாட்டுக் கலகங்கள், கல்வியின்மை போன்ற அடுக்கடுக்கான பிரச்னைகளால் சகாராப் பாலைவனத்துக்குக் கீழே உள்ள ஆப்பிரிக்க நாடுகளில் வாழ்க்கை கடுமையாக உள்ளதற்கு நுட்பமான ஆய்வுகள் எதுவும் தேவையில்லை. இருப்பினும் இந்தத் தீமைகள் அனைத்திற் கும் காரணம் கல்வியின்மையும் கல்வி வசதியின்மையும்தான். போட்ஸ்வானா, மொரிஷீயஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகள் 75 சதவிகித கல்வியறிவை அடைந்து ஓரளவு நல்ல நிலையில் உள்ளன. இருப்பினும், ஏனைய பல நாடுகள் தங்கள் குடிமக்களின் கல்வியில் கவனமின்மையுடனேயே திகழ்கின்றன. பர்கினா பசா, மாலி, நைஜர் மற்றும் பல நாடுகளில் 20 சதவிகிதத்திற்கும் குறைவாகவே கல்வி பெற்றவர்களின் சதவிகிம் உள்ளது.

உள்ளூர் பயிர் சந்தைகள், வர்த்தகம், சிறுவியாபாரம் மற்றும் ஊராட்சி அளவு நிர்வாகத்துக்கும் கல்வி அவசியத்தேவையாகவே உள்ளது. அடிப்படையான மனித அவல நிலைமைகளையும் தாண்டி உலகமயமாதல் காலகட்டத்தில் அறிவுசார் பொருளாதாரங்களின் மத்தியில் ஆப்பிரிக்கா ஒதுக்கப்பட்டு வருகிறது. போலி ஜனநாயகமோ, நேரடி சர்வாதிகாரமோ நடக்கும் பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகளில் அரசுகள், தங்கள் மக்கள் கல்வியின்மையின் இருளில் மூழ்கியிருப்பது குறித்து பதற்றப்படவேயில்லை. அவர்கள் கல்வியின்றி இருந்தால்தான் அவர்களை ஆள்வது எளிதாகும். எதிர்ப்பும், விவாதமும் குறைவாகவே இருக்கும். அத்துடன் இந்நாடுகள் உலகப் பண நிதியம் மற்றும் பிற அமைப்புகளிடம் அதிக கடன்பெற்று நெருகட்டி நிலையில் உள்ளன. வட்டி கொடுக்கும் பணமே கல்விக்கான நிதியை விழுங்கிவிடுகின்றன. 

கல்வி மூலம் அதிக சம்பளமும் தொழிலாளர் சந்தைப் பங்கேற்பும் சாத்தியம் என்பதில் சந்தேகமே இல்லை. ஜிம்பாப்வேயில் பள்ளிக் கல்விக்கட்டணம் ஒரு பருவத்துக்கு 96 டாலரை 2007 இல் எட்டிவிட்டது. உயர்வர்க்கத்தினர்  படிக்கும் தனியார் ஆரம்பப்பள்ளிகளோ ஒரு பருவத்துக்கு 10 ஆயிரம் டாலர் வசூலிக்கின்றன. சம்பாதிப்பதில் 30 சதவிகிதம் வரியாக கானாவில் பிடிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கல்விக்கு குறைவாகவே செலவழிக்கிறார்கள். கென்யாவிலும் கல்வியின்மையின் சராசரி விலையாக வருமானத்தில் 6.7 சதவிகிதம் இருக்கிறது. இதனால் ஜிடிபியில் 2000 முதல் 2020 வரை 20 முதல் 30 சதவிகிதம் வீழ்ச்சி ஏற்படுகிறது. தென்னாப்பிரிக்காவில் கல்வியை ஒழுங்காக நடைமுறைப்படுத்த முடியாததால் ஏற்படும் இழப்பு 550 பில்லியன் ராண்டு. நான் சொல்லும் கணக்கு படிக்காத தென்னாப்பிரிக்கர்கள் கல்வி பெற்றிருந்தால் அவர்கள் தற்போது சம்பாதித்திருக்கும் பணத்தின் கணக்கு. அத்துடன் கல்வியின்மையின் நுண் இழப்புகள் மிகவும் அதிகம். காலம் அதிகம் இல்லை. ஆப்பிரிக்க தலைவர்கள் உடனடியாக விழித்துக் கொள்ளவேண்டும். 

கல்வியை ஊக்குவிப்பது உள்ளூர் சந்தையை மட்டுமல்ல சர்வதேச சந்தைக்கும் உதவும். வளர்ந்த நாடுகள் கடன்களை வட்டியுடன் சேர்த்துக்கொடுக்க நெருக்கடி அளிக்காமல், அந்நாட்டு அரசுகளுடன் சேர்ந்து நூற்றுக்கணக்கான ஆரம்பப் பள்ளிக் கூடங்களைக் கட்டலாம். ஊக்கத்தொகை வழங்கலாம். அயல்நாட்டு பல்கலைக்கழகங்களுடன் பரிமாற்றத் திட்டங்களுக்குக் கையெழுத்திட்டு ஊக்குவிக்கலாம். அத்துடன் பெற்றோர்கள் சமூக நிலைமைகளான பாலியல் விவாகம், உணவூட்டக் குறைபாடு, எச்ஐவி ஆகிய பிரச்னைகளையும் தீர்க்கவேண்டியது அவசியம்.

 கல்விபெற்ற வளர்ச்சியடைந்த ஆப்பிரிக்கா, உலகளாவிய மையமாக மட்டும் மாறாமல், ஆப்பிரிக்க வளங்களை மேற்குநாடுகள் சுரண்டுவதை நல்ல தொழில்நுட்பம் மற்றும் பொருளாதாரத் தன்னிறைவின் மூலம் தடுக்கவும் முடியும். உலகம் இரண்டு பக்கமும் சமமாக இருக்கவேண்டும். இதைத்தான் நான் எளிய வார்த்தைகளாக அங்கே பேச இருக்கிறேன்.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

பலவீனன் வாழ்வான்!

 

அரிந்தம் சவுத்ரி | நவம்பர் 1, 2011 15:42
 


அமெரிக்கா முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு நடத்திய  ஓர்  ஊர்வலத்தின் மூலம் வாய்ப்புகள், சுதந்தரம்  மற்றும் வீரத்தின் நிலம் என்று அந்நாடு இதுவரை தன்னைப் பற்றி உருவாக்கியிருந்த பிம்பம் சமீபத்தில் குலைந்துள்ளது. எழுபதுகளில் வியட்நாம் போருக்கு எதிராக பெருமளவில் மக்கள் திரண்ட போராட்டங் களுக்குப் பிறகு அமெரிக்கா சந்தித்த பெரிய திரள் இதுதான். இம்முறை அவர்களைக் கலையவைக்க முடியவில்லை. ஏனெனில் எதிரி ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிறார். முதலாளித்துவத்துக்கு முடிவு வருவதைப் பற்றி நான் 2008ஆம் ஆண்டிலேயே எழுதினேன். சமீபத்தில் வந்த பொருளாதார நெருக்கடி உலகைத் தாக்கியபோது எழுதப்பட்டது அது. திறந்த சந்தை வர்த்தகம் குறித்த குருட்டு நம்பிக்கையால் ஏற்பட்ட விளைவே இது. நிலைத்த தன்மையுள்ள கௌரவமான வாழ்க்கை தங்கள் உரிமை எனக் கோரி ஏன் இன்னமும் மேற்கில் மக்கள் தெருவுக்கு வரவில்லை என்று அதில் கூறியிருந்தேன். கடைசியாக வந்தேவிட்டார்கள். மேற்குலகின் தெருக்கள் எகிப்தின் தெருக்களைப்போல மக்களால் நிறையத் தொடங்கியுள்ளன. முதலாளித்துவத்தின் கொடும் அடையாளமான வால்ஸ்ட்ரீட்டின் வெட்கமற்ற லாபக்கொள்கையை எதிர்த்து ஆயிரக்கணக்கான மக்கள் சாலைக்கு வந்துவிட்டனர். அமெரிக்க மக்கள்தொகையில் பெரும்பகுதியாக இருக்கும் தொழிலாளர்களின் இயக்கம் இது. அவர்கள் பேராசைமிக்க கார்ப்பரேட்களால் பற்றாக்குறைக்கும், புறக்கணிப்புக்கும், ஏமாற்றத்திற்கும் உள்ளானவர்கள். அமெரிக்காவெங்கும் பரவும் போராட்டங்கள் அமெரிக்க நகரங்களின் நிதி மாவட்டங்களுக்கு தீவிரமான பிரச்னையைச் சுட்டிக்காட்டியுள்ளன. மறுபரிசீலனை செய்யப்படாத பழமைவாதப்போக்கும், அரசு அதிகாரிகளுக்கும் தொழிலதிபர்களுக்கும் இடையிலான நட்பால் உருவாகும் குழுவாத முதலாளித்துவமும்தான் பொருளாதார அநீதிக்கு அடிப்படை காரணமாகும். இந்த அநீதிதான் ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்களைத் திரளாக சாலைகளுக்கு அழைத்து வந்துள்ளது. அமெரிக்க முதலாளித்துவம் படிப்படியாக குழுவாத முதலாளித்துவமாக மாறியதுதான் இந்தக் குளறுபடிகளுக்குக் காரணம் என்பதில் யாருக்கும் வியப்பு இருக்கமுடியாது. 

அமெரிக்கா கடந்த 30 ஆண்டுகளாக வேலையில்லாத் திண்டாட்டத்தால் தத்தளித்துவருகிறது. அமெரிக்காவை வல்லரசு நாடாக்கிய மதிப்பீடுகள் மற்றும் உத்வேகத்தை பெருநிறுவன அதிபர்கள் உதறிக்களைந்து  குறுகியகால லாபங் களில் ஈடுபாடு காட்டியதுதான் முக்கியமான பிரச்னையாகும். கட்டுப்படுத்தப்படாத முறைகேடுகள்  இந்தக் குழுவாத முதலாளித்துவ அமைப்பில் நடந்துள்ளன. இந்த அமைப்பினால், சிறுபான்மையாக இருந்த பெரும்பணக்காரர்கள் கூடுதலாக செல்வத்தை வால்ஸ்ட்ரீட்டின் மூலம் குவித்தனர். ஆனால் பெரும்பான்மை மக்கள் இதனால் விளிம்புக்குத் தள்ளப்பட்டனர். வேலைவாய்ப்பின்மை, கூட்டம் கூட்டமாக பணி நீக்கம், எதிர்கால நிச்சயமின்மை & இவற்றால் உயிர்ப்புள்ள ஜனநாயகத்தின் அடிப்படை அம்சங்களே சேதத்திற்குள்ளாயின.

இப்பிரச்னைக்கு வங்கிகள் பொறுப்பற்ற முறையில் கடன் வழங்கியதும், பெரிய தொகையிலான நுகர்வோர் கடனும் காரணமாகும். சாதாரண மனிதனுக்கு பொருட்களை வாங்கும் சக்தி இல்லாமல் போனது. நுகர்வோருக்குத் தேவையில்லாமல் போனதால் புதிய முதலீடுகள் இல்லை;  அதனால் புதிய வேலைவாய்ப்புகளும் இல்லை. ஒபாமாவின் பாதுகாப்பு நடவடிக்கைகளும் பெரிய விளைவுகளை இதுவரை ஏற்படுத்தவில்லை. இதற்கு குடியரசு கட்சியினரின் தொடர்ந்த எதிர்ப்பும் பொருளாதாரத்தில் அரசு தலையிட அவர்கள் அனுமதிக்காததுமே காரணமாகும்.

அமெரிக்க நாட்டின் வருமானப் பரவல் குறியீட்டெண் (நிவீஸீவீ நீஷீமீயீயீவீநீவீமீஸீt), வளர்ச்சியடையாத நாடுகளாக இருக்கும் உகாண்டா போன்ற நாடுகளுக்கு இணையாக உள்ளது. 2010 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் மொத்த வருமானத்தில் 49.4 சதவிகிதத்தை முதல் 20 சதவிகித மக்கள் வைத்திருந்தனர். அமெரிக்காவின் முதல்நிலை பணக்காரர்களான 1% மக்கள் அமெரிக்காவின் மொத்த செல்வத்தில் 40 சதவிகிதத்தை வைத்திருந்தனர்; வருவாயில் 24 சதவிகிதத்தை வைத்திருந்தனர். இது குறிப்பாக கடந்த நாற்பது ஆண்டுகளில் 31% அதிகமாகும். அத்துடன் கடந்த நாற்பது ஆண்டுகளில் அமெரிக்க செல்வந்தர்களின் வருவாய் 300% அதிகரித்துள்ளது. ஆனால் நடுத்தர வர்க்க வருவாயோ வெறுமனே 20% அதிகரித்துள்ளது. அதற்கும் கீழ் நிலையில் இருப்பவர்களின் வருவாய் நிலையோ வெறும் 5% அதிகரித்துள்ளது.  
 
‘சமமின்மையைப் பயன்படுத்துதல்’ என்ற பெயரில் உலகக் கடன் நிதியம் வெளியிட்ட ஆய்வறிக்கையில்(2010 டிசம்பர்) வெகுகாலம் நீடித்த வருமான சமமின்மையால், கடன் வாங்குவது அதிகரித்து மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி அபாயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறுகிறது. இதுபோன்ற பொருளாதார நெருக்கடி நிலை 1929&லும்  2007&லும் இருந்தது. இந்த வருமான ஏற்றத்தாழ்வால் ஏழை அமெரிக்கர்கள் கல்வி மற்றும் சரியான மருத்துவ வசதிகளைப் பெறமுடியாமல் போனது. இதனால் உற்பத்தித்திறனும் வருவாயும் பாதித்தது. வால்ஸ்ட்ரீட்டின் எக்சிக்யூட்டிவ்கள் அதிகமான சம்பளங்களைப் பெற்று  கூடுதல் படி அனுகூலங்களையும் பெறும்நிலையில் ஒரு நாகரிகமான சம்பளம் பெறுவதற்கே பிறர் அல்லாடும் நிலை ஏற்பட்டது. 

டைம்ஸ் சதுக்கத்தில் அக்டோபர் 15 ஆம் தேதி 6 ஆயிரம் எதிர்ப்பாளர்கள் திரண்டனர். இந்தக் கூட்டம் வன்முறையாக மாறியபோது 100 பேர் கைதுசெய்யப்பட்டனர். சிகாகோ காவல்துறையினரும் 150 பேரைக் கைதுசெய்தனர். லண்டனிலும் இதேபோன்ற நிலையைக் காணமுடிந்தது. லண்டன் பங்கு வர்த்தக மையமான பெடர்நாஸ்டர் சதுக்கத்துக்குள் மக்கள் நுழைவதிலிருந்து காவல்துறையினர் தடுக்கவேண்டியிருந்தது. எதிர்ப்பாளர்கள் புவியியல் எல்லைகளைத் தாண்டி, கண்டங்கள் முழுவதும் பரவி தங்கள் செய்திகளைப் பரப்பினார்கள். சமீபத்தில் ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கிக்கு வெளியே எதிர்ப்பாளர்கள் தங்கள் கோபத்தைக் காண்பித்தனர். ரோமிலும் பிற ஐரோப்பிய நாடுகளிலும் வன்முறைக் கலவரங்கள் ஏற்பட்டு 100க்கும் மேற்பட்ட மக்கள் கைதுசெய்யப்பட்டனர்.  ஜப்பான், ஹாங்காங் மற்றும் கொரியாவிலும் மக்கள் வன்முறையில் இறங்கினார்கள்.

இந்தச் சம்பவங்கள் முதலாளித்துவ உலகிலிருக்கும் மக்கள் அனைவரின் மட்டுமீறிய கோபத்தை  வெளிப்படுத்துவதாக உள்ளது. அவர்கள் மேற்கொள்ளும் வன்முறையான மக்கள் போராட்டங்கள் உலகம் முழுவதும் உள்ள முதலாளித்துவ அமைப்பின் அடித்தளத்தையே அசைத்துப் பார்க்கின்றன. இந்த இயக்கம், 1960&களின் இறுதியில் நிகழ்ந்த மகத்தான குடிமை உரிமை இயக்கத்தையும் சமீபத்தில் துனிசியாவில் நடந்த புரட்சியையும் எனக்கு நினைவூட்டுகிறது. ஆனால் இந்த இயக்கத் திற்கு தத்துவார்த்தமான, கருத்தியல் வலு கொண்ட தலைமை இல்லாதது தான் ஒரே குறை. இந்த இயக்கத்துடன் கார்ல் மார்க்சின் ‘மூலதனம்’ நூலின் விற்பனை அதிகரித்துள்ளது.

பணக்காரர் மற்றும் ஏழைகளுக்கு இடையிலான பிளவு அதிகரித்து வரும் நிலையில் சேவைத்துறையில் மிகப்பெரிய சுணக்கம் ஏற்பட்டுள்ளது. வால்ஸ்ட்ரீட்டில் நடைபெறும் ஏமாற்றுகளையும் லாபி செய்தலையும் அமெரிக்கா கண் காணிக்கவேண்டியது அவசியம். இந்த வரலாறு காணாத நிதி ஏற்றத்தாழ்வு நிலையை உருவாக்கிய கார்ப்பரேட் நிறுவனங்களைத் தண்டிக்கவேண்டியது அவசியம். அவற்றை நெருக்கடியில் இருந்து மீட்க அமெரிக்க அரசு அளித்த தொகை மட்டும் அந்நாட்டு ஜிடிபியில் 150 சதவிகிதமாகும். பொருளாதார அறிவுக்குப் பொருந்தாத நடவடிக்கை இது. அதேநேரம், இழப்பீடுக்கான உச்ச வரம்பிலும் பிற சமூக அடுக்குகளுக்கான திட்டங்களிலும் கவனம் செலுத்த வேண்டும்.  

முதலாளித்துவம் தீவிரமாக கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டிய நேரம் இது. அத்துடன் தனது கட்டற்ற லாபவெறியையும் அது  மறுபரிசீலனைக்கு உள்ளாக்கவேண்டும். தங்குதடையற்ற தகவல் பெருக்கமும் சமூக செயல் வாதமும், பெரும்பான்மை மக்களின் குரல்களைப் புறக்கணித்துச் செல்ல முடியாத நிலையை உருவாக்கியுள்ளது. எகிப்து மற்றும் துனிசியாவுக்கு மட்டுமல்ல; தனது மக்களுக்கு அநீதி புரியும் ஒவ்வொரு தேசமும் இந்த அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. மக்கள் கொடுமைக் குள்ளான மத்திய கிழக்கு நாடுகளில் மட்டுமின்றி சுதந்தரம் மற்றும் ஜனநாயகத்தின் முகத்திரை அணிந்து சுரண்டலை மேற்கொண்ட  அமெரிக்க  நாடுகளும் கடைசியில் அம்பலப் பட்டுவிட்டன. சீனா அல்லது மத்திய கிழக்கு நாடுகளில் மட்டுமல்ல கார்ப்பரேட்கள் எதேச்சதிகாரம் செய்யும் அமெரிக்கா போன்ற நாடுகளிலும் சர்வாதிகாரமே கோலோச்சு கிறது. இந்த நாடுகளை அம்பலப்படுத்தியது மார்க்சியப் பழைமைவாதிகள் என்று முதலாளித்துவ ஊடகங்களால் தூற்றப்பட்ட அறிவுஜீவிகள் அல்ல. சாலைகளில் எதிர்த்து திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள்தான்!  நாம் இதுவரை அறிந்திருக்கும் முதலாளித்துவத்துக்கு முடிவுகட்டாமல் இந்த இயக்கம் செத்துவிடும் என்பதை நான் நம்ப மறுக்கிறேன்.
அப்படியெனில் முதலாளித்துவத்தின் எதிர்காலம் எப்படியிருக்கும் என்று ஒருவர் சிந்திக்கலாம். 

ஒரு நிறுவனத்தை லாபத்தை முன்னிறுத்தி மட்டுமே நடத்திச்செல்வதை காரின் பக்க ஆடியைப் பார்த்துக்கொண்டு மட்டுமே வண்டி ஓட்டிச்செல்வதற்கு ஒப்பிடமுடியும். அந்த  கண்ணாடி நீங்கள் கடந்து வந்த பாதையை மட்டுமே காட்டும். உங்கள் முன் உள்ள பாதையைக் காட்டாது. இன்றைய தொழிலதிபர்கள், தலைவர்கள் மற்றும் வர்த்தகர்கள் தங்கள் குறுகிய லாபக்கணக்குகளுக்கு அப்பால் இந்த உலகை முன்னேற்றத்திற்கு அழைத்துச்செல்வதில் கவனத்தைச் செலுத்தவேண்டும். பலமுள்ளவனே வாழ்வான் என்ற நம்பிக்கையைக் களைந்து, பலவீனன் வாழவேண்டும் என்ற நம்பிக்கையில்தான் இந்த உலகின் எதிர்காலம் உள்ளது (நானும் டாக்டர் மலாய் சவுத்ரியும் எங்களது நூலான த கிரேட் இந்தியன் ட்ரீமில் இதைச் சுட்டிக்காட்டியுள்ளோம்). 

நெடுங்காலமாகவே பொருளாதார வல்லுனர்கள் டார்வின் கோட்பாடான பலமுள்ளவன் வாழ்வான் என்பதையே கண்மூடித்தனமாக நம்பிவந்தனர். இதுதான் முதலாளித்துவப் பொருளாதாரத்தின் உச்சநம்பிக்கையும் ஆகும். இதுதான் அனைத்துப் பிரச்னைகளுக்கும் காரணமாக உள்ளது. ஒரு பொருளாதாரம் செயல்படுவதென்பது மனிதவாழ்க்கையை மேலும் நாகரிகமாக்குவதுதான் என்பதை அவர்கள் மறந்துபோனதுதான் அடிப்படைப் பிரச்னை. வனத்திலிருந்து வெளியேறி இன்றுள்ள நவீன மனிதன் எட்டியுள்ள நிலைதான் நாகரிகமாகும். ஆனால் இன்னமும் வாழ்வதற்காக வனத்தில் உள்ள விதிமுறைகளைப் பின்பற்றவேண்டியிருப்பது அவனது பரிதாபமான நிலையைத்தானே காட்டுகிறது? பகுத்தறிவு உள்ள மனிதன் திறந்த சந்தை வாய்ப்பில் தனக்கான வருவாயை அதிகப்படுத்தவே விரும்புவான் என்று ஆடம் ஸ்மித் கூறுகிறார். அவரும் மேற்சொன்ன கோட்பாட்டையே வழிமொழிகிறார். விமர்சகர்களோ சுதந்தரச்சந்தையில் தனிநபர் ஒருவரின் வருவாய் அந்தக் குறிப்பிட்ட நபரின் திறன் மற்றும் முயற்சிகளால் மட்டும் கிடைத்துவிடுவதில்லையென்றும் அதற்கு முன்பு சேர்த்து வைக்கப்பட்ட செல்வமும் அதற்கு உதவுவதாகவும் குறிப்பிடுகின்றனர். காட்டைப் பொறுத்தவரை பலமுள்ளவன் அல்லது சூழலுக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொள்பவனே வாழ்வான் என்கிற சூழ்நிலை இருக்கிறது. பொருளாதார உலகில் பலமுள்ளவன் என்பது செல்வ வளம் கொண்டவனைக் குறிப்பிடுகிறது. அதனாலேயே சந்தைப் பொருளாதாரம், மற்றவர் உழைப்பில் பணக்காரன் மேலும் பணக்காரனாகவே உதவுகிறது. இதுதான் முதலாளித்துவத்தின் அடிப்படைப் பிரச்னையாகும்.  இதுவே தெருக்களை நோக்கி மக்கள் திரள்வதற்கும் காரணமாகியுள்ளது.

இந்த உலகம் மக்கள் வாழ்வதற்கேற்ற வகையில் உருவானதில் முதலாளித்துவத்தின் பங்களிப்பை நான் கேள்விக்குள்ளாக்க விரும்பவில்லை. ஆனால் இத்தனை ஆண்டு வளர்ச்சி மற்றும் மேம்பாடுகளுக்குப் பிறகு முதலாளித்துவம் தனது பொருளாதார உச்சத்தைக் கண்டுவிட்ட நிலையில் மனிதனுக்கும் மனிதனுக்குமான பாரதூரமான இடைவெளியை அதாவது ஏழைக்கும் பணக்காரனுக்குமான இடைவெளியில் கவனம் செலுத்தவேண்டும் என்றே நான் கூறுகிறேன். இன்று ஒரு பணக்காரர் ஐந்து கார்களை வைத்துள்ளார். மனிதர்கள் பசியால் இறக்காத சூழ்நிலை வருவதைத் தவிர்க்கும்வரை, அந்தப் பணக்காரர்கள் 6ஆவது காரை வாங்க யோசிக்கலாம் அல்லவா? 

மனிதர்கள் சமமாகவே பிறக்கின்றனர். ஆரோக்கியம் மற்றும் கல்வியில் அவர்களுக்கு சம உரிமை தரப்பட்டால் அவர்களது பங்களிப்புத் திறனும் கிட்டத்தட்ட சமநிலையை அடையும். புத்திசாலித்தனம் அல்லது மரபணு சார்ந்த பண்புகள் வேண்டுமெனில் வித்தியாசப்படலாம்.  இன்று நம்மில் சிலர் வாழ்க்கைத்தரத்தைப் பொறுத்தவரை அதிகபட்ச வசதிகளை அடைந்திருக்கிறோம். நாம் வாழும் சமூகத்தில் சில மனிதாபிமான அம்சங்களை பரிசீலிப்பதற்கான சரியான சமயம் இது. 

ஒரு பலவான் நன்றாக வாழும் நிலையை பொருளாதாரரீதியாக அடைந்துவிட்ட பிறகு, அடுத்து பலவீனனை நோக்கி தனது வளங்களைத் திருப்பி அவர்களது வாழ்க்கைக்கு முகம்கொடுக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஊனமுற்ற  ஓர் உறுப்பினர் இருந்தால் அதிகபட்ச வளங்களும் வசதிகளும் அவரை நோக்கித் திருப்பப் படுவதில்லையா? அந்தக் குடும்பத்தில் ஒரு  ஏர்கண்டிஷனரை வாங்குவதற்கு வசதியிருந்தால் அதை அந்த நபரின் அறையில் பொருத்துவதில்லையா? இல்லையெனில் அந்த நபர் குடும்ப வருவாய்க்கு பங்களிப்புச் செய்ய வாய்ப்பில்லாததால், அவருக்கு உணவு தருவதை நிறுத்தி அடிப்படை  வசதிகளை நிறுத்தி விடுகிறோமா என்ன? குடும்பத்தில் அவரின் நிலை எப்படியுள்ளது? அது பலவான் வாழவேண்டும் என்ற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டதா? பலவீனன் வாழவேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டதா?

 நமது குடும்பங்களில் நாம் கம்யூனிசத்தை நம்புபவர்களாக உள்ளோம். ஆனால் நாடு என்று வரும்போது நாம் எதிரிடையாக யோசிக்கிறோம். இதன்மூலம் எல்லா பொருளாதாரங்களும் கம்யூனிச அடிப்படையில் இருக்கவேண்டும் என்று நான் கூறவில்லை. ஆனால் குடும்பங்களில் கடைப்பிடிக்கப்படும் அதே மனிதாபிமான, இயற்கை விதியை தேச அளவிலும் செயல்படுத்தவேண்டும் என்று நான் சொல்கிறேன். அமெரிக்கர்கள் ஏற்கெனவே ஒவ்வொரு வாரமும் 23 மணிநேரங்களை சராசரியாக சமூகப்பணிக்காக செலவழிப்பதாக பீட்டர் ட்ரக்கர் எழுதியுள்ளார். அவர்கள்  தங் கள் வாழ்க்கை நலனுக்காக, முதலாளித் துவத்தின் நலனுக்காக, பலவீனன் வாழ வேண்டும் என்ற நோக்குடன் செயல்பட ஆரம்பிக்கவேண்டிய தருணம் இது. நாம் அமைதியான,  மனிதாபிமானம் மிக்க சமத்துவ உலகை விரும்பினால் பலமுள்ளவன் வாழ்வான் என்ற கோட்பாடு இன்றைய உலகில் இனிமேலும் நீடித்திருக்க நியாயமே யில்லை. பலவீனனையும் வாழவைப்பதன் மூலமே முதலாளித்துவம் இத்தனை எதிர்ப்புகளையும் தாண்டி உயிர்த்திருக்க முடியும். 

பலவீனமான நிலையில் உள்ள மக்கள்வர்க்கத்தை வளப்படுத்தி அவர்களை பிரதான நீரோட்டத்துக்குக் கொண்டுவருவதும் அவர்களுக்கு கௌரவமான வாழ்க்கைக்கு உத்தரவாதம் தருவதும் இன்றைய தேவையாகும். பணக்காரர் மெதுவாக வளரவேண்டும். அவர்களின் வேகம் ஏழைகள் வளர்வதில் இடம்பெயரவேண்டும். இது ஏழைகளின் எதிர்கால வளர்ச்சியில் பிரதிபலிக்கும். செல்வந்தர்கள் வகுப்பிலிருந்து செய்யப்படும் இந்தப் பங்களிப்புதான் நாளைய உலகில் பெருமைகொள்ளத்தக்கதாக மாறும். இந்த பங்களிப்பு நாடுகள் அளவில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலும் இருத்தல் அவசியமானது. வலுவான நாடுகள் பலவீனமான பொருளாதார நிலையில் உள்ள நாடுகளுக்கு நேர்மையான எண்ணத்துடன் உதவிசெய்ய வேண்டும். 

லத்தீன் அமெரிக்க நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள் & இவற்றில் ஒரு நாடுகூட ஐ.நா பாதுகாப்பு சபையில் உறுப்பினர் ஆகவில்லை. நூறு கோடி மக்கள்தொகையைக் கொண்ட இந்தியாகூட இந்த அனுகூலத்தை இன்னமும் அனுபவிக்க முடியவில்லை. ஐநாவில் வல்லமை படைத்த நாடுகள் சேர்ந்து புதிய காலனியத்தை உருவாக்கியுள்ளன. ஐ.நா சபை, ஒரு கோடி மனித உயிர்களைப் பலிகொண்ட இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு தோற்று விக்கப்பட்ட அமைப்பாகும். ஆனால் இரண்டாம் உலகப் போரில் கொல்லப்பட்டவர்களைவிட இரண்டு மடங்குக்கும் அதிகமான மக்கள் இன்று பசியாலும் சாதாரணமாக குணப்படுத்தக்கூடிய நோய்கள் தாக்கியும் இறந்துபோகின்றனர். 
பணக்கார நாடுகளில் சராசரியாக ஒரு மனிதரின் ஆயுள் 80 ஆண்டாக உள்ளது. ஆனால் ஏழை நாடுகளிலோ 45 வயதுதான் சராசரி ஆயுள்காலமாக உள்ளது. இப்படித்தான் இந்த உலகில் பலவான் வெற்றியாளனாக இருக்கிறான். 

எனக்கு ஒரே ஒரு கேள்விதான் உள்ளது. ஏழை நாடுகளில் பிறந்த ஒருவனுக்கு 45 வயதுக்கு மேல் வாழ்வதற்கு உரிமை கிடையாதா? ஏற்கெனவே சௌகரியமாக உள்ள நாடுகளின் கூடுதல் சௌகரியங்களுக்காக கோடிக்கணக்கான உயிர்கள் முடிவுக்கு வரவேண்டுமா? எத்தனை காலம்தான் இந்தப் படுகொலை நீடிக்கும்?

வால்ஸ்ட்ரீட்டில் எழுந்த கிளர்ச்சிகளில் இந்தியாவுக்கும் மிகப்பெரிய பாடம் உள்ளது. மேற்கு நாடுகளில் கார்கள் மற்றும் உஷ்ணப்படுத்தும் வசதிகளை வைத்திருக்க இயலக்கூடிய ஏழை மக்களே சாலைக்குப் போராட வருகிறார்கள் எனில் நமது நாட்டில் பெரும்பான்மையாக இருக்கும் ஏழைகளும் எளியவர்களும் தெருவுக்கு வரமாட்டார்களா? நமது தலைவர்கள் தேசத்துக்குத் துரோகம் செய்து முற்றிலும் உறிஞ்சி வற்றவைத்து விட்டனர்.

2010 ஆம் ஆண்டுக்கான மனித வளர்ச்சிக் குறியீட்டு அறிக்கைப்படி, 169 நாடுகளில் இந்தியா 119 ஆம் இடத்தை வகிக்கிறது. இன்று இந்தியாவில் 37% மக்கள் தொகை வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்கின்றனர் என்று டெண்டுல்கர் கமிட்டி (அறிக்கை 2010) கூறுகிறது. 2004-&2005&ல் அரசு மதிப்பீட்டின்படி 25.7% மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்வதாக கணக்குகள் வெளியாயின. ஐநாவின் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் பார் சோசியல் டெவலப்மெண்ட் அமைப்பின் இயக்குனரான தன்டிகா எம்கந்தவீரே, இந்தியாவின் புள்ளிவிவரங்கள் எப்போதும் சர்ச்சைக்குரியவை என்கிறார். நகர்புறங்களில் வறுமைக்கோட்டுக்குக் கீழே ஒரு நபருக்கு 32 ரூபாயும், கிராமப்புறங்களில் 26 ரூபாயும் என்று சமீபத்தில்தான் வரையறுக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையை வறுமைக்கோடு என்று வரையறை செய்வதற்கு எந்தப் பொறுப்பும் நேர்மையும் அற்ற அரசியல்வாதிகள் மற்றும் பொருளாதார நிபுணர்களாலேயே சாத்தியம். இதை வறுமைக்கோடு என்று எப்படிச் சொல்லமுடியும்? அரசு வரையறையின்படி மாதத்திற்கு ஒரு நபர் 960 ரூபாய் சம்பாதித்தால் அவர் வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ளவர் என்று அர்த்தம். மும்பையின் சிவப்பு விளக்குப் பகுதியான காமாத்திபுராவில் தங்கள் தாத்தா பாட்டி 12 ரூபாய் முதல் 50 ரூபாய் கடன் வாங்கியதற்காக பேத்திகள் கொத்தடிமைகளாக விபச்சாரத்தில் ஈடுபடவேண்டியுள்ள நிலை இன்றும் உள்ளது. 
இன்று உலகளவிலான மொத்த ஏற்றுமதியில் 1.32 சதவிகிதத்தை இந்தியா பங்களிக்கிறது. சீனாவோ 9.6 சதவிகிதம் பங்குவகிக்கிறது. அவர்கள் பொருட்களுக்கு வைத்துள்ள விலையை வைத்துப் பார்க்கும்போது இந்த சதவிகிதம் குறைவானதாகவே தோன்றுகிறது. ஆனால் சீனாவின் தாக்கத்தைப் பற்றி சொல்லவேண்டுமானால் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள கடைகளுக்கு ஒருவர் விஜயம் செய்யவேண்டும். மலிவான பொருட்களிலிருந்து உயர்தர டிசைனர் பொருட்கள் வரை ‘மேட் இன் சைனா’ என்று முத்திரையை வைத்துள்ளன. இந்தியாவின் மக்கள்தொகையில் கல்வியறிவற்ற மக்கள் 35.5% உள்ளனர். ஆனாலும் இந்தியாவின் மனிதவளம்தான் சிறந்தது, தகுதிவாய்ந்தது என நாம் பெருமையடிக்கிறோம். இந்தியாவில் 2 ஆயிரத்து 400 பேருக்கு ஒரு மருத்துவர் இருக்கிறார். ஆனால் அமெரிக்காவில் 1,325 அமெரிக்கர்களுக்கு ஒரு இந்திய டாக்டர்  சேவை செய்கிறார்!

இன்று மும்பையில் உள்ள மக்களில் 40% பேர் சேரிகளில் வசிக்கின்றனர். டெல்லி மக்களில் 35% பேர் திறந்த வெளிகளில் கழிக்கின்றனர். இன்னமும் ஐந்து லட்சம் பேர் தலையில் மலத்தைச் சுமக்கும் பணியில் உள்ளனர். சர்வதேச உணவுக்கொள்கை ஆய்வு நிறுவனத்தின் பசிக் குறியீடு, 2010 அறிக்கையைப் பார்த்தால் இந்தியா 67 ஆவது இடத்தில் உள்ளது. உலகில் எடை குறைவாக இருக்கும் குழந்தைகளில் 42% பேர் இந்தியாவில் இருக்கின்றனர். வெறுமனே பிளேக் நோய் வந்து 50 பேர் இறந்தபோது கடுமையாக நாம் சத்தம் எழுப்பினோம். ஏனெனில் இது பொருளாதார வளமுள்ள மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தது.  ஆனால் ஆண்டுதோறும் காசநோயால் 3 லட்சத்து 70 ஆயிரம் பேர் இந்தியாவில் சாகின்றனர். தினசரி ஐந்து லட்சம் பேர் வாந்திபேதியால் அவதிப்படுகின்றனர். ஒரு சத்தமும் இல்லை. சீனாவில் உழுது பயிர் செய்யும் நிலையில் 60 சதவிகிதம் நிலங்கள் உள்ளன. அவர்களது ஆண்டு உணவு உற்பத்தி 550 மில்லியன் டன்கள்(2011 ஆய்வுகளின்படி). நாம் 241.56 மில்லியன் டன்கள் தான் உற்பத்தி செய்கிறோம். (2010-&2011 நிதிஆண்டு)
இந்தியாவில் நமது தலைவர்கள் இன்னும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டும் நிலையிலேயே உள்ளனர். கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசிடம் சலுகைகளை எதிர்பார்ப்பதைத் தவிர வேறொன்றும் உருப்படியாகச் செய்யவில்லை. தொண்டு நிறுவனங்களோ தன்னளவில் வர்த்தகமாகவே மாறிவிட்டன. நாமோ இதையெல்லாம் வெறுமனே பார்த்துக்கொண்டிருப்பதைத் தவிர ஒன்றும் செய்ய இயலாத நிலையில் இருக்கிறோம். அன்னா ஹசாரே போன்ற போராளிகளுக்காக நாம் காத்திருக்கும் நிலைதான் உள்ளது. அரசுமட்டத்திலும் தேசிய அளவிலும் போதிய தலைமைத்துவம் இன்றி மிகப்பெரிய துக்கசாகரத்தில் நாம் இருக்கிறோம். மக்களுக்கு அவர்களது அடிப்படை உரிமைகளான உணவு, குடிநீர், ஆரோக்கியம், சுகாதாரம் இல்லாத நிலையில் இந்தியாவில் நிலவுவது ஜனநாயகம்தானா என்று வியக்கும் நிலை உள்ளது. 

சுருக்கமாகச் சொல்வதெனில் கௌரவமாக வாழும் உரிமைக்கு, பெரும்பாலும் உயிர்வாழும் உரிமைக்காகவே போராடும் நிலைதான் உள்ளது. இந்த மக்கள் வாழும் கௌரவத்துக்காக -லோக்பாலுக்காக மட்டும் அல்ல- சாலைகளுக்கு வந்து போராடுவதற்கு இன்னும் எத்தனை காலம் பிடிக்கும் என்று நான் பார்க்கிறேன். 

அருகில் உள்ள சீனாவிலோ முதலாளித்துவவாதிகள் ஒரு மக்கள் போராட்டத்திற்காக ஆண்டுக்கணக்கில் காத்திருக்கின்றனர். ஆனால் அங்கேயோ மேலிருந்து கீழ்வரை திட்டமிடுதல் பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது. வறுமையிலிருந்து மக்களை மீட்கும் வளர்ச்சியால் சீனாவும் வளர்ந்துள்ளது. ஐநாவின் வளர்ச்சித்திட்ட புள்ளிவிபரங்களின்படி, கிராமப்புற வறுமை சீனாவில் 30.7%(1978) இலிருந்து 1.6%(2007) ஆகக் குறைந்துள்ளது. இதனால் சீனாவில் உள்ள வறியவர்களிலும் வறியவர்களுக்கு நலன்கள் கிடைக்கும் அதேவேளையில் அந்நாடு வலுவான சந்தையாகவும் மாறுகிறது. இந்தியாவை ஒப்பிடும்போது, சீனா சர்வாதிகார அரசாக இருந்தாலும் அந்நாட்டு நிர்வாகத்தில் மக்கள் நம்மைவிட சந்தோஷமாக உள்ளனர். சீன அரசு தங்கள் மீது அக்கறை எடுக்கிறது என்று அங்குள்ள மக்கள் நம்புகின்றனர்.

நாடுகள், கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் மக்கள் அனைவரும் தாங்கள் நலமாக இருக்கவேண்டுமெனில் பலவீனர்கள் நலமாக இருப்பது அவசியம் என்பதை உணரவேண்டும். எத்தனைதான் நிர்வாகம் செய்தாலும் விளம்பரங்கள் கொடுத்தாலும் 10 முதல் 15% வளர்ச்சியே வளரும் நாடுகளிலும் இருக்கும். ஆனால் இந்தியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் 1000 % வளர்ச்சியை மக்களின் வாங்கும் சக்தியை அதிகமாக்குவதன் மூலம் சாத்தியமாக்கமுடியும். இந்தியா போன்ற நாட்டில் 100 மில்லியன் தொகையில் உள்ள நடுத்தரவர்க்க மக்களின் எண்ணிக்கை 500 மில்லியனாக வளரும். 

நிறுவனங்களின் வெற்றி என்பது அதன் பரவலான சந்தையைப் பொருத்ததும், அவர்கள் பொருட்களை விற்கக்கூடிய நாட்டின் மக்களின் வாங்கும் சக்தியைப் பொருத்ததும் ஆகும். பலவீனன் வாழ்வதை முக்கிய குறிக்கோளாகக் கொண்டால் அடித்தட்டில் உள்ள மக்கள் நல்ல ஆரோக்கியம் மற்றும் கல்வி வசதிகளோடு கூடுதல் வாங்கும் சக்தியை அடைவார்கள். இதனால் மனித முதலீடு தரமுள்ளதாக மாறும். அத்துடன் பெருநிறுவனங்களின் வளர்ச்சிக்கு முக்கிய அடித்தளமாகச் சொல்லப்படுவதும் வளமடையும். 

முதலாளித்துவ பொருளாதாரம் மற்றும் வர்த்தகத் தலைமைத்துவத்தின் அடிப்படை விதிகளை மறுவரையறை செய்வது இப்போதைய அவசியமாகும். சமூகத்தில் விளிம்புநிலையில் உள்ளவர்களுக்கு தாராளம் காட்டி நல்ல உலகக் குடிமக்களாக மாற்றுவதற்கான தருணம் இது. பலவீனனும் வாழ்வதற்கான சூழலை உருவாக்கினால்தான் இது சாத்தியம். இனி உயிர்த்திருப்பதற்கான வழிகாட்டும் கோட்பாடாகவும் அதையே பின்பற்றவேண்டும். அப்போதுதான் நாம் உலகில் அமைதியைக் காணமுடியும். அதுவரை வால்ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிக்க நடக்கும் போராட்டங்கள் வாழ்க... அவர்கள் திரண்டு இன்று  நடைமுறையில்  இருக்கும் பேராசைமிக்க முதலாளித் துவத்தை முடிவுக்குக் கொண்டுவரட்டும்...
 



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

ஆப்பிரிக்காவில் சீனாவின் முதலீடுகள் உலகிற்கு ஒரு பாடம்

 

அரிந்தம் சவுத்ரி | ஆகஸ்ட் 16, 2011 15:44
 

லண்டன் எரிந்துகொண்டிருக்க, அமெரிக்காவின் மதிப்பு இறக்கப்பட்டு உலகம் அடுத்த பொருளாதாரத் தேக்கத்தை எதிர்கொண்டுள்ள வேளையில் ஒரு விஷயம் தெளிவாகியிருக்கிறது. உலகம் முழுவதும் ஏற்றத்தாழ்வுகளால் நிறைந்திருக்க, நீங்கள் அமைதியாக வாழ்வது என்பது சாத்தியமல்ல. கடந்த நாற்பது ஆண்டுகளில் அமெரிக்காவில் ஏழை பணக்காரர் இடையே இடைவெளி அதிகரித்ததைப்போல வரலாற்றில் எப்போதும் நடந்ததில்லை. ஒவ்வொரு வலதுசாரி கட்சியும் பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக்கவே பாடுபட்டது. ஒவ்வொரு முறையும் ஜனநாயகக் கட்சியினர் ஆட்சிக்கு வருகிறபோதும் வெறும் அரை சதவிகித வரியை பணக்காரர்கள் மீது உயர்த்தி, சந்தையால் விளிம்பிற்குத் தள்ளப்பட்டுள்ள மக்களுக்கு ஏதாவது செய்ய முயற்சிக்கிற போதும் குடியரசுக் கட்சி எதிர்த்து குரலெழுப்புகிறது. 
பொருளாதாரத்தைப் பற்றி ஒபாமா அறிந்திருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அமெரிக்காவில் இப்போது நடந்துகொண்டிருப்பது அவமானகரமானது; குறிப்பாக வலதுசாரி வெறியர்கள் எழுப்பும் கூக்குரல். பிரிட்டனின் பிரச்னை இந்த நாணயத்தின் மற்றொரு பக்கமே. தாங்கள் பிறந்த நாட்டில் இருந்ததைவிட பிரிட்டனில் சிறப்பாக வாழ்கிறார்கள் கருப்பின மக்கள் என்று மகிழ்ச்சி தெரிவிக்கிறார்கள் சுகபோகமாக இருக்கும் வெள்ளைக்காரர்கள். ஆனால், மகிழ்ச்சி என்பது ஒப்பீட்டு அளவிலானது, பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளி அதிகரிக்கிறபோது ஏழைகள் திருப்பித் தாக்குகிறார்கள். இது ஏற்கெனவே பிரான்சில் நடந்தது இப்போது பிரிட்டனில் நடக்கிறது. இதிலுள்ள பாடம் தெளிவானது: இந்த இடைவெளியை குறைக்காவிட்டால், உலக அளவிலும் இதைச் செய்வதற்காக ஒரு கொள்கையை வகுக்காவிட்டால் உலகில் அமைதி இருக்காது. ஏழை நாடுகளில் பணக்கார நாடுகள் முதலீடுகள் செய்யவேண்டும். ஆப்பிரிக்காவில் முதலீடு செய்வதன் மூலம் இந்த விஷயத்தில் சீனாவைவிட சிறப்பாக வழிகாட்டும் நாடு எதுவுமில்லை. ஆப்பிரிக்காவிற்கு உதவுவதுடன் தங்களது நீண்டகால லாபத்தையும் அந்நாடு மனதில் கொண்டிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. சீனாவின் இந்தச் செயல்பாடு மேற்கத்திய நாடுகளுக்கு மட்டுமல்லாமல் இந்தியா போன்ற நாடுகளுக்கும் பெரும் பாடங்களைக் கொண்டிருக்கிறது.

சீன&ஆப்பிரிக்க உறவானது கி.மு.200 இல் தொடங்கியது. ஆப்பிரிக்க நாடுகளுடனான வர்த்தக வாய்ப்புகள் பற்றி அறிய      டு ஹூவான் என்ற சீனர் டாங் வம்சத்தினர் ஆட்சியிலிருந்தபோது ஆப்பிரிக்க நாடுகளுக்கு (சூடான், எகிப்து மற்றும் சில நாடுகளுக்கு) பயணம் மேற்கொண்டார். ஹூவான் தொடங்கிய அந்தப் பயணம் நிற்கவேயில்லை. அதிலும் குறிப்பாக, கடந்த சில பத்தாண்டுகளாக, ஆப்பிரிக்கா மீதான சீனாவின் சாய்வு மிகவும் வெளிப்படையானது. 1979 இல் சீனாவின் துணைப் பிரதமர் குயான் குய்ச்சின் ஆப்பிரிகாவிற்குப் பயணம் மேற்கொண்டதிலிருந்து இது தீவிரமடைந்தது. 1990&98 காலகட்டத்தில் சீனத் தலைவர்கள் 35 ஆப்பிரிக்க நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர். இது மட்டுமல்லாது, சீன ஜனாதிபதி ஹு ஜின்டாவ், 2006&07 இல் மட்டும் 17 முறை ஆப்பிரிக்க நாடுகளுக்கும், 2009 இல் நான்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டுள்ளார். ஆனால் கடந்த 13 ஆண்டுகளில் அமெரிக்காவிற்கு ஒரேயொரு முறைதான் சீன ஜனாதிபதி பயணம் மேற்கொண்டுள்ளார். ஆப்பிரிக்க விடுதலைப் போர் காலகட்டத்தில் ஆப்பிரிக்கர்களை ஆதரித்ததன் மூலம் சீனா, தனது ஆப்பிரிக்க உறவை பலப்படுத்திக்கொண்டிருக்கிறது.  இப்போது இந்த உறவு ஆப்பிரிக்காவின் இயற்கை மூலாதாரங்களைப் பயன்படுத்திக்கொள்ள உதவுகிறது. ஆக, சீன&ஆப்பிரிக்க உறவின் முக்கிய தன்மை மூலாதாரங்களை பங்கிட்டுக்கொள்வதல்ல. மாறாக, ஆப்பிரிக்க மூலாதாரங்களை அந்நாடு எடுத்துக்கொள்வதாகும்.

‘‘எந்த நிபந்தனையும் இல்லை’’ என்ற முகமூடியை அணிந்துகொண்டு ஆப்பிரிக்காவில் சீனா முதலீடு செய்தது அதன் புத்திசாலித்தனத்தைக் காட்டுகிறது (மேற்குலக, குறிப்பாக அமெரிக்கா செய்யும் முதலீடுகள் நிபந்தனைகளைக் கொண்டது). 2006 நவம்பர் மாதம், 48 ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்கள் பெய்ஜிங்கில் நடந்த மாநாட்டில் சந்தித்தனர். சீனாவுடனான ஆப்பிரிக்க நாடுகளின் பலதரப்பட்ட ஒப்பந்தங்களை இறுதிசெய்வதே இந்த மாநாட்டின் நோக்கம். மேலும், ஆப்பிரிக்க நாடுகளில் சீனாவின் முதலீட்டை அதிகப்படுத்துவதும் இதன் நோக்கமாகும். கடந்த ஆண்டு இறுதியில் சீன&ஆப்பிரிக்க வர்த்தகத்தின் அளவு 100 பில்லியன் டாலரை தாண்டிவிட்டது. மேலும், இது ஆண்டுக்கு 40 சதவிகிதம் அதிகரித்து வருகிறது. ஆர்வத்திற்குரிய வகையில், ஆப்பிரிக்க நாடுகளுக்கான சீனாவின் உதவி உலக வங்கி ஆப்பிரிக்காவிற்கு அளிக்கும் உதவியைவிட அதிகம். 

ஆப்பிரிக்க நாடுகளிலேயே சீனாவின் அதிகபட்ச நேசத்திற்குரிய நாடு நைஜீரியாவாக இருப்பதற்கு காரணம் இருக்கிறது. ஜூ ஜின்டாவ், நைஜீரியாவிற்குப் பல பயணங்களை மேற்கொண்டிருக்கிறார், இரண்டு முறை (2004 மற்றும் 2006) நைஜீரிய நாடாளுமன்றத்தில் உரையாற்றியிருக்கிறார். 2004 இல் ஐநா பாதுகாப்பு அவையில் உறுப்பினராக இடம்பெற நைஜீரியா செய்த முயற்சிக்கு சீனா உதவியது. 2007 இல் அந்நாட்டிற்காக ஒரு செயற்கைக்கோளை ஏவியது. 2010ஆம் ஆண்டின் இறுதியில் அங்கு 7.5 பில்லியன் டாலர் முதலீடு செய்திருந்தது. நைஜீரியா மீது தனக்கிருக்கும் செல்வாக்கை இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில், 2000ஆம் ஆண்டு அக்டோபரில், பெய்ஜிங்கில் நடந்த சீன&ஆப்பிரிக்க அமைச்சர்கள் மாநாட்டில் சீனா வெளிப்படையாகக் காட்டியது. நைஜீரியாவின் முன்னாள் ஜனாதிபதி ஒலிஸிகன் ஒபசாஞ்சோ மாநாட்டில் கலந்துகொள்ள முடியாவிட்டாலும்  (அடுத்தகட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்) இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் தொடர்பான பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. 
அபுஜாவில் நடந்த ஆப்பிரிக்க விளையாட்டுப் போட்டிகளுக்காக 500 வீடுகளை கட்டுவதற்கான ஒப்பந்தத்தை சீனா பெற்றது. 2001 இல் கையெழுத்தான ஒப்பந்தத்தின்படி இரு நாடுகளும் பரஸ்பர வர்த்தக அலுவலகங்களை அடுத்த நாட்டில் திறந்தது (பெய்ஜிங்கில் அது நைஜீரியா வர்த்தக அலுவலகம் என்றும், அபுஜாவில் சீன முதலீடு, வளர்ச்சி மற்றும் வர்த்தக மேம்பாட்டு மையம் என்றும் அவை அழைக்கப்படுகின்றன). அதே ஆண்டு ஒபசாஞ்சோ சீனாவிற்கு அரசுப் பயணம் மேற்கொண்டார். அப்போது மேலும் பல ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கிடையே கையெழுத்தாயின. ஹூ ஜின்டாவ் மற்றும் ஒபசாஞ்சோ இடையே நிலவிய மிகவும் நேசபூர்வமான நட்பும் ஏராளமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாக ஒரு காரணமாகும். 2006 இல் ஜூ ஜின்டாவ், நைஜீரியாவிற்கு பயணம் மேற்கொண்டபோது ஏராளமான கவர்ச்சிகரமான திட்டங்களை சீனா அறிவித்ததுடன் 500 மில்லியன் டாலர் மதிப்பிற்கான நிதி உள்கட்டமைபிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாயின. மேலும், 6.2 மில்லியன் டாலருக்கான ஏற்றுமதி ஊக்கத்தொகையும் சீனா தந்தது.

இந்த பரஸ்பர வர்த்தகத்தின் முக்கியமான அம்சங்களுள் ஒன்று பெட்ரோல் என்றபோதும், சீனாவின் பெட்ரோல் இறக்குமதியில் 3 சதவிகிதத்தை மட்டுமே நைஜீரியாவால் பூர்த்தி செய்யமுடியும் (உலக வங்கி அறிக்கையின்படி). ஐந்தாண்டுகளுக்கு முன்னர் இருந்த நிலைமையைப் பாருங்கள். சீனாவிற்கான நைஜீரியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி 2005 இல் 526.9 மில்லியன் டாலர். இதில் தாதுப்பொருட்கள் மற்றும் பெட்ரோலிய பொருட்களின் பங்கு 503.9 மில்லியன் டாலர். உணவுப்பொருட்கள் உட்பட மற்றவற்றின் இறக்குமதி 12.6 மில்லியன் டாலர். ஆனால், யதார்த்தத்தில் நைஜீரியாவுடனான சீன வர்த்தகத்தின் மொத்த அளவு 2.3 பில்லியன் டாலர் மதிப்பு கொண்டதாகும். இது சீனாவின் ராஜீய முக்கியத்துவத்தைக் காட்டுகிறது.

மருத்துவம், கல்வி, தகவல்தொடர்பு, அடிப்படை கட்டமைப்பு ஆகிய விஷயங்களில் நைஜீரியாவிற்கு பல வகைகளில் சீனா உதவிசெய்துள்ளது. ஆனால் அந்நாட்டிற்குள் சீனா செய்திருக்கும் இந்த மெல்லிய ஊடுருவல் இரு நாடுகளுக்கிடையே நல்ல உறவு இருந்தபோதே நடைபெற்றது என்றாலும், சீனா தனது விருப்பத்தை நைஜீரியா மீது திணிக்கிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இதன் காரணமாக, ஒபசாஞ்சோவிற்கு அடுத்து முஸா யார் அடுவா நைஜீரியாவின் ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு சென்ற ஆட்சியின்போது ஏற்பட்ட ஒப்பந்தங்கள் மீள்பார்வைக்கு உட்படுத்தப்பட்டு சில ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டன. 2007க்குப் பிறகு இந்த இரு நாடுகளிடையேயான உறவு மிகவும் நட்புரீதியாக இருந்த நிலை மாறி லேசான கசப்பு கொண்டதாக மாறியது. மேற்குலக முதலீட்டுடன் ஒப்பிடுகிறபோது சீன முதலீட்டின் தன்மை சற்று வேறுபட்டது. மேற்கு நாடுகளைப் போல் அல்லாமல் சீனா தனது தொழிலாளர்களையும் தான் முதலீடு செய்யும் நாட்டிற்குக் கொண்டுவருகிறது. இதன் மூலம் தனது நாட்டின் வேலையின்மை பிரச்னையைத் தீர்த்துக்கொள்கிறதே தவிர முதலீடு செய்யப்படும் நாட்டிலுள்ளவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைப்பதில்லை. இன்னும் நைஜீரியாவில் முக்கியமான துறைகள் அனைத்திலும் சீனா பெருமளவு முதலீடு செய்துவருகிறது. இப்போது நைஜீரியாவிலிருந்து சீனா இறக்குமதி செய்யும் குரூட் பெட்ரோலின் அளவு 13.2 மில்லியன் டன்கள். இது 2012&13ல் 18 மில்லியன் டன்களாக அதிகரிக்கும். 2010 இல் சீனாவிற்கு 23 பில்லியன் டாலர் பெறுமானமுள்ள எண்ணை சுத்திகரிப்பு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டன. இது ராஜதந்திர ரீதியிலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

நைஜீரியாவுக்கு அடுத்தபடியாக ராஜீய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த சூடானிலும் சீனா பெருமளவு முதலீடு செய்துள்ளது.1995ஆம் ஆண்டு முதல் சூடானுடன் பெட்ரோல் தொடர்பான பல்வேறு ஒப்பந்தங்களை சீனா செய்துள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் சூடானில் எண்ணை சுத்திகரிப்பு நிலையன் தொடங்கப்பட்டது. இதை கட்டியது சீனாவின் தேசிய பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகும். இரு நாடுகளுக்கிடையிலான உறவின் சின்னமாக இது திகழ்கிறது. சூடான் ஜனாதிபதி ஒமர் அல்&பஷீர் சீனா சென்றிருந்தபோது சூடானின் பெட்ரோ மற்றும் எரிவாயு மூலாதாரங்கள் மீது ஏராளமான முதலீட்டிற்கான ஒப்பந்தங்கள் போடப்பட்டன. பல படுகொலைகள் சூடானில் நிகழ்ந்தபோதிலும், அரசியல் ரீதியாக சீனா தொடர்ந்து சூடானை ஆதரித்துவருகிறது. 2003ஆம் ஆண்டிலிருந்து சுமார் 300,000 பேர் அங்கு கொல்லப்பட்டுள்ளனர். சூடான் மீது பொருளாதாரத் தடை விதிக்க ஐநா முயன்றபோது அதை சீனா தடுத்துவிட்டது. மேலும் ஆப்பிரிக்க அமைதிப் படைகள் அந்நாட்டுக்குச் செல்வதை கோரும் ஐநா தீர்மானம் 1706ஐ சீனா நிராகரித்தன் மூலம் டார்பர் பகுதியில் கலவரங்கள் தொடர்ந்தன. பல சூடான் அரசு அதிகாரிகளை கைதுசெய்யக் கோரும் ஐநாவின் தீர்மானத்தையும் தனது வீட்டோ அதிகாரத்தின் மூலம் சீனா ரத்து செய்தது.

இன்று ஆப்பிரிக்காவின் பெரும்பகுதி பெட்ரோல் வர்த்தகம் சீன தேசிய பெட்ரோலியம் கார்ப்பரேஷனால் கட்டுப்படுத்தப்படுகிறது. அடிப்படை கட்டமைப்பு வளர்ச்சி விஷயத்திலும் சூடானில் சீனா ஏராளமான முதலீடுகளைச் செய்துள்ளது. 1997&2007 இல் பல அணைகள், ரயில் இருப்புப்பாதைகள், சாலைகள் மற்றும் கட்டிடங்கள் கட்டப்பட்டன. இவற்றுள் முக்கியமானது 1000 மைல் நீளத்திற்கு போடப்பட்ட பெட்ரோல் ஏற்றுமதிக்கான குழாய்களாகும். இது சூடானின் செங்கடல் துறைமுகத்திலிருந்து பெட்ரோலை சீனாவிற்கு ஏற்றுமதி செய்வதற்காக போடப்பட்டதாகும். நைஜீரியா மற்றும் சூடானுடனான சீனாவின் வர்த்தக உறவானது அந்நாட்டுக்கு ராஜதந்திர ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததும், மிகுந்த பலன் தரக்கூடியதும் ஆகும். 

நாளொன்றுக்கு 465,000 பேரல் பெட்ரோலை சீனாவிற்கு ஏற்றுமதி செய்கிறது அங்கோலா. இதற்கு கைமாறாக ஏராளமான உதவிகளை சீனாவிடமிருந்து அங்கோலா பெறுகிறது. இதேபோன்று ஜாம்பியா மற்றும் உகாண்டாவில் சீனா செய்துள்ள முதலீடுகள் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கியிருப்பதுடன் அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும் பெருக்கியிருக்கிறது. மாளாவியைப் பொறுத்தவரை எல்லாம், நாடாளுமன்ற கட்டடம் முதல் ஆடம்பர ஓட்டல்கள் மற்றும் கால்பந்து அரங்கு வரை அனைத்துமே சீனாவால் கட்டப்படதாகும்.

சீனாவின் மிகப்பெரிய மோட்டார் தொழில்நிறுவனம் தென்னாப்பிரிக்காவின் மோட்டார் தொழிற்துறையில் 100 மில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் கார்களுக்கான தேவை அதிகரித்துவரும் வேளையில் இது முக்கியத்துவம் பெறுகிறது. சீனாவின் சுமார் 1000 நிறுவனங்கள் கூட்டாக 300 மில்லியன் டாலர் முதலீட்டை எகிப்தில் செய்துள்ளன. 2008ல் காங்கோவில் தாமிரம் மற்றும் கோபால்ட் தாதுப்பொருட்கள் உற்பத்தியில் 6லிருந்து 9 பில்லியன் டாலர் வரை சீனா முதலீடு செய்துள்ளது.  காங்கோவில் 30 லட்சம் ஹெக்டேரில் பனைமரங்கள் வளர்ப்பதற்கான, பாமாயில் உற்பத்திக்காக, ஒப்பந்தம் ஒன்றை சீனா செய்துகொண்டுள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளில் கிடைக்கும் மலிவான உழைப்பை சீனா நன்கு பயன்படுத்திக்கொள்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதே நேரத்தில் ஆப்பிரிக்கா நாடுகளில் இதுவரை கிடைக்காதிருந்த பல தொழில்நுட்ப வசதிகள் சீன முதலீட்டின் காரணமாக ஆப்பிரிக்கர்களும் பலனடைந்துள்ளனர். இன்று மலிவான செல்போன்கள், சாட்டிலைட் டிவிக்கள், கணினிகள் ஆப்பிரிக்கா முழுவதும் எளிதில் கிடைக்கின்றன. மேற்குலக தொலைதொடர்பு நிறுவனங்களின் ஆதிக்கத்திற்கு சீனா ஒரு பெரும் அடி கொடுத்திருப்பதாக பொருளாதார உளவு அறிக்கை ஒன்று கூறுகிறது. இன்று ஆப்பிரிக்காவில் ஆதிக்கம் செலுத்துவது சீனாவின் தொலைதொடர்பு நிறுவனங்களே.

ஐநா மனித வளர்ச்சிக் குறியீட்டு அட்டவணையில் நைஜீரியா மற்றும் சூடானின் நிலை மேம்பாடு அடைந்திருப்பதற்கு சீனாவின் முதலீடுகள் ஒரு முக்கிய காரணமாகும். 1980ல் 0.250ஆக இருந்த மனித வளர்ச்சி 2010 இல் 0.379 ஆகவும், நைஜீரியாவினுடையது 0.40விலிருந்து 0.42 ஆகவும் உயர்ந்திருக்கிறது. ஆனால், இலவசம் என்று ஏதுமில்லை. ஆப்பிரிக்காவின் இயற்கை வளங்கள் மீது சீனாவின் பிடி இறுகிவருகிறது. ஆனால் அதே நேரத்தில் ஆப்பிரிகாவின் சமூக மற்றும் அடிப்படை கட்டமைப்பு வளர்ச்சியானது மேம்பாடு அடைந்துள்ளதுடன் ஏராளமான வேலைவாய்ப்புகளும் உருவாகிவருகிறது. ஆப்பிரிக்காவில் ஏற்பட்டுள்ள இந்த முன்னேற்றத்திற்கு சீனாவின் பங்கு மற்ற மொத்த உலகத்தின் பங்கைவிட அதிகம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

அன்னா அவரது இயக்கத்தின் மூலம் கூடுதலான தாக்கத்தைத் தர விரும்பினால் ஜனநாயக முறைகளுக்கு வளைந்து கொடுக்கவும், மரியாதை தரவும் வேண்டியது அவசியமானது

 

அரிந்தம் சவுத்ரி | ஆகஸ்ட் 26, 2011 13:22
 

நான்  சிறுவனாக  இருந்தபோது நடந்தது அது. ஆனால் அன்னா ஹசாரேயின் கைதின்போது திரண்ட மக்கள் போராட்டம், 1970களில் ஜெயப் பிரகாஷ் நாராயண் நடத்திய போராட்ட எழுச்சிக்கு நிகரானது என்று  நிறைய பேர் கூறுவதைக் கேட்டேன். உண்மையில் அது முழுமையான புரட்சி என்பதோடு குழப்படிகளையும் சேர்ந்தே கொண்டுவந்தது. இதனை தொடர்ந்து நெருக்கடி நிலை 1975 இல் கொண்டுவரப்பட்டது. இன்றைய நிலையை நிறைய பேர் நெருக்கடி நிலை காலகட்டத்துடன் ஒப்பிடுகின்றனர். 

இந்திய மக்கள் ஊழலாலும் நமது புழுத்துப்போன ஊழல் அமைப்பாலும் மிகவும் வெறுத்துப் போயுள்ளனர். இதனால் அலை அலையாக எழுந்துவரும் போராட்டங்கள் நம்மை பெரிதாக ஆச்சரியப்படுத்தவில்லை. நான் வழக்கமாக இந்தியாவை ஜனநாயகம் என்று அழைக்காமல் பேயாட்சி என்றே குறிப்பிடுவேன். இங்கே குறுகிய புத்தி படைத்த அரசியல்வாதிகள் மற்றும் அவர்களது ஆட்படைகள்தான் நாட்டை சூறையாடிக்கொண்டிருக்கின்றன. அந்தவகையில் போராட்டங்களும்  பேரணிகளும்  மெழுகுவர்த்தி  ஊர்வலங்களும் ஆத்மார்த்த மான கோஷங்களும் தேசம் முழுக்க நிகழ்வது இன்றைக்கு அவசியமான ஒன்றாகும். அன்னா ஹசாரே யால் சொல்லப்பட்ட செய்தியின் எளிமைதான் ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு அன்னா ஹசாரே ஒரு நவீன மீட்பராகத் தோன்றச் செய்துவிட்டதா என்று எனக்கு ஒரு சிறு சந்தேகம் உள்ளது. ஏப்ரலில் நடந்த ஜந்தர் மந்தர் உண்ணாவிரதம் எனக்கு இப்போதும் ஞாபகத்தில் உள்ளது. அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக நெகிழ்ந்து எழுதி, குடிமைச் சமூகப் போராட்டங்களின் சக்தியை வெளிப்படுத்தும் பொருட்டு சிறப்பு இணைப்பு ஒன்றையும் கொண்டு வந்தேன். அன்னா ஹசாரே வெளிப்படுத்தும்  ஊழல் எதிர்ப்புச் செய்தியில் பிரம்மாண்டமான சக்தியும் உண்மையும் இருப்பதாக நான் இன்னமும் நினைக்கிறேன். 

இருப்பினும் சில விஷயங்கள் என்னை தொந்தரவுக்குள்ளாக்குகின்றன. இந்தப் போராட்டத்தின் உணர்ச்சிகளும் வேகமும் அதிகமாக இருப்பது தெரிந்தும் அன்னா ஹசாரேயையும் அவரது நடைமுறைகளையும் நான் விமர்சித்தால் அரசின் ஜால்ரா என விமர்சிக்கப்படலாம். நான் எப்போதும் எதிர்நீச்சல் அடித்து அரசின் கொள்கைகளை எதிர்த்துப் பேசி வந்திருப்பதைப்போலவே, இப்பிரச்னை குறித்தும் சில உண்மைகளை உணர்வுபூர்வமாக இருக்கும் இந்தியர்களுக்குச் சொல்ல வேண்டும் என விரும்புகிறேன். 
இந்தியா முழுவதுமிருந்து இளைஞர்களும், வயதானவர்களும் அரசு திமிருடனும் கடுமையாகவும் இருப்பதாக விமர்சிக்கின்றனர். ஆளும் கூட்டணியின் மூத்த தலைவர்கள் சிலரின் அறிக்கைகள் மிகவும் பொறுப்பற்றவையாக இருக்கின்றன என்பதில் சந்தேகமும் இல்லை. அதுதான் இந்த கருத்தை வலுப்படுத்துகிறது. அத்துடன் ஏற்கெனவே ஊழலால் வெறுப்புற்றிருக்கும் மக்களின் கோபத்தையும் அதிகப்படுத்துகிறது. விடாப்பிடியாகவும், திமிராகவும் இருப்பதால் அரசு குற்றவாளி என்றால், அதேபோல் இருக்கும் அன்னா ஹசாரேயும் குற்றவாளி அல்லவா? தாங்கள் வரைவு செய்த லோக்பால் மசோதா ஏற்கப்படாததால் அரசின் உணர்வின்மையையும் சகிப்புத்தன்மையையும் அன்னா ஹசாரேயும் அவரது ஆதரவாளர்களும் குற்றம்சாட்டுகின்றனர்.

ஆனால் அவர்களது லோக்பால் மசோதா வரைவு குறித்து சந்தேகங்கள் தெரிவிப்பவர்கள் மீது சகிப்புத்தன்மை இல்லாமல் அவர்கள் அணுகவில்லையா? துரோகி என்றும் ஜால்ரா என்றும் குற்றம்சாட்டவில்லையா? எப்படி தாங்கள் வரைவு செய்த மசோதா மட்டும் முழுமையானது என்று அவர்களால் சொல்லமுடிகிறது? அதைப்பற்றி யாரும் விமர்சிக்கக்கூடாது என்றும் எப்படிச் சொல்லமுடிகிறது? மக்கள் தீர்ப்பு அல்லது நாடாளுமன்றத்தின் ஏகோபித்த முடிவு என்ற சுவருக்குப் பின் அரசு ஒளிகிறது என்றால், அன்னா ஹசாரேயின் குழுவும் புனிதத்தன்மை என்ற சுவரின் பின்னால் ஏன் ஒளியவேண்டும்? 
லோக்பால் மசோதாவை அலங்கோலப்படுத்துவதை விமர்சிக்கும் அன்னா மற்றும் அவரது அணியின் உரிமையை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். ஆனால் அதே அன்னாவின் குழுவினர் தயாரித்த வரைவை எந்த இந்தியர் விமர்சிக்கும் உரிமையையும் நான் முழுமையாக ஆதரிக்கிறேன். வெளிப்படையாகச் சொல்லப்போனால் கடந்த சில மாதங்களாக அரசு, அன்னா குழுவினர் இரண்டு தரப்பினருமே சகிப்புத்தன்மை இல்லாமல் வளைந்து கொடுக்காமல், உணர்வில்லாமல் நடந்து கொண்டனர்.  சில காங்கிரஸ்  தலைவர்கள் அன்னாவையும் அவரது குழுவினரை யும் வசைபாடி ஊழலானவர்கள் என குற்றம்சாட்டியதைப் பார்த்து ஆயிரக்கணக்கான இந்தியர்கள் நேர்மையாக கொந்தளித்தனர். ஆனால் ஏப்ரல் மாதத்திலிருந்து அன்னாவின் குழுவினர் பிரதமரையும் நாடாளுமன்றத்தையும் இந்திய தேர்தல்களையும், இந்திய ஜனநாயகத்தையும்கூட வசை பாடுவதைத் தவிர வேறு என்ன செய்தனர்? அன்னா கண்டிப்பாக போராடவேண்டும்.  போராட்டங்களுக்கு அதன் அளவில் தாக்கம் உண்டு. அதன் மூலம் மாற்றமும் ஏற்படும். ஆனால் நமது அரசியல் சாசனம் மற்றும் ஜனநாயக இயந்திரத்தின் உதவி இல்லாமல் அந்த மாற்றம் நடக்காது. 

நான் இதை எழுதும்போது அன்னா ஹசாரே திகாரில் ஜெயிலில்தான் இருக்கிறார். தற்போது அரசு அன்னா குழுவினரையும் அவரது ஆதரவாளர்களையும் உண்ணாவிரதப் போராட்டம் இருக்கலாம் என்று பகிரங்கமாக கூறுகிறது. அதே போல பகிரங்கமாக தனது முட்டாள்தனமான நிபந்தனைகளையும் திரும்பப்பெற்றுக் கொண்டது. இதனால் அன்னா ஹசாரே வெற்றி திருப்தியில் இருக்க வேண்டுமல்லவா? இல்லை. அவர் என்ன செய்ய நினைக்கிறாரோ அதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என தற்போது வலியுறுத்துகிறார். அவர் கேட்பதற்கெல்லாம் அரசு பணிந்து வழிவிட வேண்டும் என்றும் நினைக்கிறார். 

இந்தியா முழுக்க ஆயிரக்கணக்கில் போராடும் உணர்வுபூர்வமான அவரது ஆதரவாளர்கள் உடல்ரீதியான சிக்கல்களுக்கு உள்ளாகும் சூழ்நிலையில் உள்ளனர். இது பிடிவாதமானதோ, திமிரான போக்கோ, உணர்வற்ற தன்மையோ இல்லையா? வன்முறை மற்றும் பயங்கரத்திலிருந்து உணர்வுபூர்வமாக திரளும் மக்கள் கூட்டத்தைப் பிரிப்பதற்கு மெல்லிய கோடே உள்ளது. லோக் நாயக் ஜேபி அவர்கள் இன்னமும் மதிப்புக்குரிய தலைவராகவும், காந்தியவாதியாகவும் மக்கள் மனதில் இருக்கிறார். அன்னா ஹசாரேயும் மற்றொரு ஜேபியாக ஏற்கெனவே கருதப்படுகிறார். ஆனால் பல நடுநிலைமையான வரலாற்று ஆசிரியர்கள் தனிப்பட்ட முறையில் ஜேபியை புகழ்ந்து பேசினாலும், அவரது பிடிவாதமான நடத்தையையும் பற்றி எழுதியும் பேசியும் வருகின்றனர். இந்தியாவை செயலற்று போகச்செய்யுமாறு அவர் விடுத்த போராட்ட அழைப்பு பொறுப்பற்றதும், தொலைநோக்கற்றதும் என்று அவர்கள் கூறுகின்றனர். அன்னா ஹசாரேயையும் வரலாறு இப்படித்தான் முடிவு செய்யுமா?



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

இரு மாநகரங்களின் கதை: பெங்களூரு இழந்து கொண்டிருக்கிறது

 

அரிந்தம் சவுத்ரி | ஆகஸ்ட் 1, 2011 15:33
 

இரு நாடுகள் தங்களது மாநகரம் ஒன்றை மேம்படுத்த நடவடிக்கை எடுத்தபோது ஒரு நாடு தனது மாநகரத்தை பெரும் தொழில் மற்றும் உற்பத்தி மையமாக மாற்றுவதை நோக்கமாகவும் மற்றொரு நாடு தனது மாநகரத்தை தகவல் தொழில்நுட்பத்துறையின் மையமாக ஆக்குவதை நோக்கமாகவும் கொண்டிருந்தன. இந்த இரு நாடுகளிலும் இந்நகரங்கள் அவற்றின் தெற்குப் பகுதியில் அமைந்திருப்பது ஓர் ஒற்றுமை. ஒரு நாடு தனது கடலோர மாநகரத்தை தெரிவு செய்ய (கடல் வர்த்தகத்தை பயன்படுத்திக்கொள்வதற்காக) மற்றொரு நாடு நிலத்தால் சூழப்பட்ட மாநகரத்தை தெரிவுசெய்தது. ஒன்று 7,434.4 ச.கி. பரப்பளவும், 99.4 லட்சம் மக்கள்தொகையும் கொண்டது என்றால் மற்றொன்று 741 ச.கி. பரப்பளவும் 57 லட்சம் மக்கள்தொகையும் கொண்டது. பொருளாதார விமர்சகர்களின் விருப்பத்தேர்வாக இருக்கும் சீனாவும், இந்தியாவும்தான் அந்த இரு நாடுகள். குவாங்ஸோ என்ற மாநகரை சீனா தெரிவு செய்ய இந்தியா பெங்களூரு நகரை தெரிவு செய்தது. இந்த இரு நகரங்களையும் இவ்வாறு உருவாக்குவதற்கான அடித்தளம் 90ஆம் ஆண்டுகளில் போடப்பட்டது. 20ஆம் நூற்றாண்டில் இறுதியில் இவை இரண்டும் முறையே பெரும் தொழிற்துறை மையமாகவும்,              தகவல்தொழில்நுட்பத்துறை மையமாகவும் உருவெடுத்தன. ஆனால் இவற்றிற்கிடையே உள்ள ஒற்றுமைகளை விட இவற்றின் வளர்ச்சியில் உள்ள வித்தியாசமே அதிகம்.

மாசேதுங் பற்றிய நூல்களை சிறு வயதில் படித்திருந்ததால் சீனா பற்றி எப்போதுமே எனக்கு பெரும் ஆர்வம் உண்டு. முதல் முறையாக சீனா சென்றபோது அந்த ஆர்வம் பல மடங்கு அதிகரித்தது. அந்த நாடு உங்களிடம் ஏற்படுத்தும் பிரமிப்பு அசாதாரணமானது. நீங்கள் எந்த நாட்டிற்கு வந்திருக்கிறீர்கள் என்பது உங்களுக்கு தெரிந்திருக்காவிட்டால் & அந்நாட்டு மக்களின் தோற்றம் பற்றி நீங்கள் அறிந்திருக்காவிட்டால் & சாலைகள் மற்றும் கட்டிடங்களை மட்டுமே நீங்கள் பார்க்கும் பட்சத்தில் மிகவும் முன்னேறிய மேற்குலக நாடு ஒன்றிற்கு நீங்கள் வந்திருப்பதாகவே நினைத்துக்கொள்வீர்கள். இத்தகைய பிரமிக்கத்தக்க முன்னேற்றத்தின் மையமாக இருக்கிறது குவாங்ஸோ மாநகரம். இந்த இரு மாநகரங்களுக்குமான வித்தியாசத்தை அறிந்துகொள்ள 2010ஆண்டில் பிரைஸ்வாட்டர்ஹவுஸ் கூப்பர் குளோபல் வெளியிட்டுள்ள மாநகரங்களுக்கான ஜிடிபி தர அட்டவணையை பார்த்தால் போதுமானது. உலக மாநகரங்களில் 84ஆவது இடத்திலிருக்கும் பெங்களூருவின் ஜிடிபி 69 பில்லியன் டாலர், 44ஆவது இடத்திலிருக்கும் குவாங்ஸோவின் ஜிடிபி 143 பில்லியன் டாலர். பெங்களூருவை விட இரண்டு மடங்கு அதிகம். இந்த இரு மாநகரங்களுக்கிடையில் உள்ள மேலும் சில முக்கியமான வித்தியாசங்களை பார்ப்போம்.

143 பில்லியன் டாலர் ஜிடிபி மற்றும் 13,111 டாலர் ஆண்டு தனிநபர் வருமானத்துடன் குவாங்ஸோவை பெரும் தொழிற்துறை மையமாக சீனா உருவாக்கியது. 2010ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி அந்நகரில் வேலையிலிருக்கும் பெண்களின் சதவிகிதம் 70.84% (வேலைபார்க்கும் பெண்களின் எண்ணிக்கை கடந்த பத்தாண்டுகளில் மூன்று மடங்காக உயர்ந்திருக்கிறது), சுமார் 25 லட்சம் பெண்கள் வேலைசெய்கிறார்கள். மொத்த வேலைவாய்ப்பில் 40 சதவிகித வாய்ப்பை பெண்கள் பெற்றுள்ளனர். சிறப்பான வாழ்க்கைத்தரம் மற்றும் பொருளாதார சுதந்தரம் ஆகியவை அம்மாநகரின் சமூக வாழ்க்கயை மிகவும் மேம்படுத்திருயிருக்கிறது. எல்லாவற்றையும்விட முக்கியமாக பெண்களின் சராசரி வாழ்நாள் 81.33 வருடங்களாக உயர்ந்திருக்கிறது (கடந்த பத்தாண்டுகளில் சராசரி வயது 4.5 ஆண்டுகள் உயர்ந்திருக்கிறது). கல்வித்துறையில் பெண்கள் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளனர். மொத்தமுள்ள பட்டதாரிகளில் 49 சதவிகிதத்தினர் பெண்கள். சுகாதாரம், மருத்துவம், அறிவியல், தொழில்நுட்பம் என அனைத்துறைகளிலும் பெண்கள் பணிபுரிகின்றனர்.

இதற்கு மாறாக, சிலிக்கான் பள்ளத்தாக்கை மாதிரியாகக் கொண்டு தகவல்தொழில்நுட்ப நகரமாக பெங்களூரு உருவாக்கப்பட்டது. வெவ்வேறு தொழிற்துறைகளில் மொத்தமாக சுமார் 8 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது பெங்களூரு. 43.36 சதவிகிதம் பேர் உற்பத்தித்துறையில் ஈடுபட்டுள்ளனர். இதற்கடுத்தபடியாக உள்ள சேவைத்துறையில் 31.51 சதவிகிதம் பேர் ஈடுப்பட்டுள்ளனர். ஆண்டுதோறும் 6 சதவிகித வேலைவாய்ப்பு உயர்வும், 9 சதவிகித வருமான உயர்வும் இருப்பதால் இந்நகரம் வேலைவாய்ப்பு தேடுபவர்களின் புகலிடமாக இருக்கிறது. இந்த வளர்ச்சி குறிப்பிடத்தக்கதாக இருந்தபோதிலும் சமூக அடிப்படை கட்டமைப்பு வசதிகளில் பெரும் முன்னேற்றம் ஏதுமில்லை. மிக வேகமாக வளர்ந்துவரும் மாநகரங்களுள் ஒன்றாகவும், ஜிடிபி அடிப்படையில் இந்தியாவின் இந்தியாவின் நான்காவது பெரிய மாநகரமாகவும் இருந்தபோதிலும் ஆண்&பெண் படிப்பறிவு சதவிகிதம் என்று வருகிறபோது நிலைமை மோசமாக இருக்கிறது. 82.85 சதவிகித ஆண்கள் படிப்பறிவு கொண்டவர்களாகவும்,68.13 சதவிகித பெண்கள் படிப்பறிவு கொண்டவர்களாகவும் உள்ளனர்.
 
குவாங்ஸோவை பொறுத்தவரையில் அதன் நிலவியல் இருப்பிடம் மற்றும் அக்காரணத்தால் உருவாகிற வர்த்தக வாய்ப்புகள் முக்கியத்துவம் உடையன. பிரமிக்கத்தக்க வகையில் இதன் சராசரி வளர்ச்சி ஆண்டிற்கு 14 சதவிகிதமாக இருக்கிறது. அந்நாட்டின் மொத்த தொழிற்சாலைகளில் சுமார் 85 சதவிகிதம் இம்மாநகரின் 7434.4 ச.கி. பரப்பளவில் அமைந்துள்ளன. 40 பெரிய தொழிற்சாலைகளில் 34 குவாங்ஸோவை தங்களது தளமாக கொண்டுள்ளன. 2004ஆம் ஆண்டு வாக்கிலேயே சுமார் 8000 தொழில் நிறுவனங்கள் வெளிநாடுகளால் முதலீடு செய்யப்பட்டிருந்தன, 2000 வெளிநாட்டு நிறுவனங்கள் (60 நாடுகளிலிருந்து) இம்மாநகரில் இயங்கிக்கொண்டிருந்தன. உலகின் முதல் 500 பெரும் சர்வதேச நிறுவனங்களில் 112 இந்நகரில் இயங்கிக்கொண்டிருந்தன. 2010ஆம் ஆண்டில் இது 174ஆக உயர்ந்தது. இதன் வளர்ச்சிக் கதை இத்துடன் முடியவில்லை. கடந்த ஆண்டின் முடிவில் சுமார் 4,800 நேரடி வெளிநாட்டு முதலீடு திட்டங்கள் இம்மாநகருக்கு வந்திருந்தன. சேவைத்துறையில் பெரும் முன்னேற்றத்தை இது கண்டது. மொத்த வெளிநாட்டு முதலீடுகளில் 53.6 சதவிகிதம் சேவைத்துறையில் செய்யப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் செய்யப்பட்ட வெளிநாட்டு முதலீடுகளுடன் ஒப்பிட்டால் இது 30 சதவிகிதம் அதிகம். 2010ஆம் ஆண்டில் மொத்தமாக 17.8 பில்லியன் டாலர் நேரடி வெளிநாட்டு முதலீடு  (411 நிறுவனங்கள்) செய்யப்பட்டது. ஆனால் நேரடி வெளிநாட்டு முதலீடுகளை பெறுவதில் பெங்களூரு மிகவும் பின்தங்கியுள்ளது.

உலகிலுள்ள முக்கியமான நகரங்களுடன் வான் வழியே பெங்களூரு இணைக்கப்பட்டிருப்பதால் உலகின் எந்த மூலையிலிருந்தும் ஒரு சில மணி நேரத்திற்குள் பெங்களூருவை அடைந்துவிட முடியும். ஆனால் துறைமுக வசதி இல்லை. அருகிலுள்ள துறைமுகம் கொச்சி. நமக்கு கிடைக்கக் கூடிய நேரடி வெளிநாட்டு முதலீடு குறித்த தகவல்கள் மொத்த கர்நாடகா மாநிலத்திற்கானது. இம்மாநிலத்தின் மிக முக்கியமான மையம் பெங்களூரு என்பதால் கர்நாடகாவில் செய்யப்படும் நேரடி வெளிநாட்டு முதலீடுகளில் பெரும்பகுதி பெங்களூருவில் செய்யப்படுகிறது என்பதை நாம் ஊகிக்கலாம். 2008&09ல் கர்நாடாகாவில் செய்யப்பட்ட மொத்த நேரடி வெளிநாட்டு முதலீடு 2000 மில்லியன் டாலர் (நாட்டின் மொத்த நேரடி வெளிநாட்டு முதலீட்டில் 7.5 சதவிகிதம்). 2009ல் நேரடி வெளிநாட்டு முதலீட்டில் 28.17 சதவிகித வளர்ச்சி காணப்பட்டது. குவாங்ஸோவுடன் ஒப்பிடுகிறது இது மிக மிகக் குறைவு. குவாங்ஸோ மாநகரம் பெற்றுள்ள முதலீடு இரட்டை இலக்க பில்லியன் டாலர்களில் இருக்கையில் பெங்களூரு பெறும் முதலீடு ஒற்றை இலக்கத்தில் தடுமாறிக்கொண்டிருக்கிறது. குறிப்பாகச் சொன்னால், குவாங்ஸோ பெறும் முதலீடு பெங்களூரு பெறுவதை விட ஆறு மடங்கு அதிகம்.

கடந்த ஆண்டு இறுதியில், குவாங்ஸோவின் மொத்த ஏற்றுமதி மற்றும் இறக்குமதியின் அளவு 103.78 பில்லியன் டாலர் (அவர்களது 11வது ஐந்தாண்டு திட்டத்தின் பகுதியாக). ஏற்றுமதியை விட இறக்குமதி 7 பில்லியன் டாலர் அதிகம். அதாவது ஏற்றுமதி அளவு 48.38 பில்லியன் டாலர். கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏற்பட்ட ஏற்றுமதி வளர்ச்சியானது இயந்திர மற்றும் மின்சார பொருட்கள் (சராசரி வளர்ச்சி 14.2 சதவிகிதம்), உயர் தொழில்நுட்ப பொருட்கள் (12.1 சதவிகித வளர்ச்சி), சேவைத்துறை (24.9 சதவிகிதம் வளர்ச்சி) ஆகியவற்றால் ஏற்பட்டவை. ஏற்றுமதியில் இயந்திரப் பொருட்கள் 104.44 பில்லியன் டாலர், உயர் தொழில்நுட்ப பொருட்கள் 37.78 பில்லியன் டாலர், சேவைத்துறை 5.42 பில்லியன் டாலர். குவாங்ஸோவை பொறுத்தவரை உள்ளே வருமளவிற்கு முதலீடுகள் வெளியே போகவும் செய்கின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளில் (2005&2010), 200 வெளிநாட்டு நிறுவனங்களில் இம்மாநகரம் 1.6 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது. 2000ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகிறபோது முதலீடு செய்யப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை 2.7 மடங்கு அதிகம், முதலீடு செய்யப்பட்ட நிதி 15 மடங்கு அதிகம். பெங்களூருவை பொறுத்தவரை தகவல்தொழில்நுட்பம் மற்றும் உயிரியல்தொழில்நுட்பத்துறைகளில் நடந்த ஏற்றுமதியின் அளவு 6 பில்லியன் டாலர்கள் (ரூ.27,600 கோடி), மென்பொருள்துறையில் பெற்ற முதலீடு 262 மில்லியன் டாலர்கள் (ரூ.1,181 கோடி). 2005&05ஆம் ஆண்டு வரை மொத்த ஏற்றுமதி 9.64 பில்லியன் டாலர்கள் (ரூ.43,221 கோடி).

சீனாவின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் அங்கு சிறப்பு பொருளாதார மண்டலங்கள் மிகச் சிறப்பான முறையில் பயன்படுத்தப்பட்டதே. குவாங்ஸோ பல சிறப்பு மண்டலங்களாக பிரிக்கப்பட்டது. எல்லா வகையான தொழிற்துறைகளும் வளர்ச்சியடைய ஏற்றவாறு இது நடந்தது. குவாங்ஸோ பொருளாதார மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி மண்டலமானது தொழில்நுட்ப ரீதியிலான பொருட்களின் உற்பத்திக்கு என வடிவமைக்கப்பட்டது. போக்குவரத்தை எளித்தாக்கும் பொருட்டு இந்நகரம் அருகிலுள்ள ஷெஜென் துறைமுக நகருடன் சிறப்பான முறையில் இணைக்கப்பட்டுள்ளது. குவாங்ஸோ நான்ஷா ஏற்றுமதி மண்டலமானது கார்கள் மற்றும் உயிரியல் தொழில்நுட்ப ரீதியிலான பொருட்களின் உற்பத்திக்கும், கனரக இயந்திரங்களின் உற்பத்திக்கும் ஏற்றவாறு அமைக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக, வர்த்தக மண்டலம். இது சுதந்தர வர்த்தக மண்டலமாக இருப்பதால் உலகெங்குமிருந்து பல நிறுவனங்கள் தங்கள் பொருட்களை உற்பத்தி செய்யும் வேலையை இங்கு தந்துவிடுகின்றன (அவுட்சோர்சிங்). மேலும் இது குவாங்ஸோ பொருளாதார மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி மண்டலத்திற்கு வெகு அருகில் இருப்பதால் மூலப்பொருட்கள் இங்கு வந்தடைவது என்பது மிக எளிதாக இருக்கிறது. இது சீன கார் உற்பத்தியின் மையமாக இருக்கிறது. 2005ஆம் ஆண்டில் இங்குள்ள தொழிற்சாலைகளில் உற்பத்தியான கார்களில் எண்ணிக்கை 500,000. இது இந்த வருட இறுதிக்குள் 1,000,000த்தை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைப் போலவே, இந்நகரிலுள்ள பெட்ரோகெமிக்கல் தொழிற்சாலைகளில் 10 மில்லியன் டன் பெட்ரோல் சுத்திகரிக்கப்படுவதன் மூலம் சுமார் 8 பில்லியன் டாலர் வருவாய் கிடைப்பதுடன் வேதியியற் பொருட்கள் தொடர்பான வர்த்தகத்தின் மூலம் மேலும் சுமார் 31 முதல் 46 பில்லியன் டாலர் வரை வர்த்தகம் நடைபெறுகிறது.

ஆனால் பெங்களூருவோ, சிறப்பு மண்டலங்களாக பிரிக்கப்படுவதற்கு பதிலாக பலதரப்பட்ட உற்பத்திகளும் ஒரே இடத்தில் நடைபெறும் வகையில் அமைந்துள்ளது. இந்த சிறு நகரத்தில் (குவாங்ஸோவின் பரப்பளவில் பத்தில் ஒரு பங்குதான் பெங்களூருவின் பரப்பளவு) 10 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உள்ளன. குவாங்ஸோ போலல்லாமல் இவை பெரும்பாலும் இன்போசிஸ், பையோகான், விப்ரோ, பிராமல் குரூப் போன்ற தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமானது. இங்கு மாநில மற்றும் மத்திய அரசுக்கு சொந்தமான சிறப்பு பொருளாதார மணடலங்கள் ஏதுமில்லை. குறுகிய வட்ட முதலாளித்துவத்திற்கே உரிய வகையில் நாட்டின் செல்வாதாரங்கள் ஒரு சில தனியார் நிறுவனங்களுக்கு மிகக் குறைந்த விலையில், சில அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளால் தங்களுக்கு கிடைக்கும் ஊழல் பணத்திற்காக தாரைவார்க்கப்படுகின்றன. பெங்களூருவில் எல்லா வர்த்தக மண்டலங்களும் எல்லா வகையாக நிறுவனங்களை அனுமதிக்கின்றன. ஒரு குறிப்பான துறைக்கென்று மண்டலங்கள் உருவாக்கப்படவில்லை. ஆனாலும் உயிரியல்தொழில்நுட்பத்தில் இந்த நகரம் ஒரு பெரும் மையமாக உருவாகிவருகிறது. இந்தியாவின் 250 உயிரியல்தொழில்நுட்ப நிறுவனங்களில் சுமார் 100 நிறுவனங்களுக்கு பெங்களூருவில் கிளைகள் உள்ளன.

குவாங்ஸோவை பொறுத்தவரை போக்குவரத்து என்பது முதலீட்டாளர்களுக்கு சாதகமாக இருப்பதுடன் எல்லா வகையிலும் முதலீட்டாளர்களுக்கு வசதியாக உள்ளது. மின்னஞ்சல்&நிர்வாகத்தின் மூலம் முதலீட்டு நடவடிக்கைகளை எளிதாக்கியதுடன், 2003ல் ஆன்லைன் வர்த்தகத்திற்கான வாய்ப்புகளை உருவாக்கியது. இங்குள்ள ஐந்து சிறப்பு பொருளாதார மண்டலங்களிலும் நிர்வாகம் தொடர்பான கட்டனங்கள் பெரிதும் குறைக்கப்பட்டுவிட்டன. சீனாவின் மூன்றாவது மிகப் பெரிய நகரமாகவும், ஹாங்காங்கிற்கு அருகிலிருக்கும் நகரமாகவும் இருப்பதால் இங்கு ஏராளாமான வர்த்தக கண்காட்சிகள் மற்றும் மாநாடுகள் நடைபெறுகின்றன. இவற்றால் சீனா பல வகைகளில் பலன் பெறுகிறது. இவை தெற்காசிய நாடுகளை சீனாவில் முதலீடு செய்யத் தூண்டுவதுடன் விமான போக்குவரத்தை கணிசமாக அதிகரித்துள்ளது. குவாங்ஸோவில் நடந்த சில வர்த்தக கண்காட்சிகள் ‘சீனாவின் முதல் கண்காட்சி’ என்ற பெருமை பெறும் வகையில் பிரம்மாண்டமானதாக அமைந்துள்ளன. ஒவ்வொரு வருடமும் (2003&லிருந்து) குவாங்ஸோவின் வர்த்தக கண்காட்சிகளால் 10 பில்லியன் டாலர்கள் முதலீடு கிடைக்கிறது.

நேரடி வெளிநாட்டு முதலீடுகளை கவர்வதற்காக 2010 ஜூனில் பெங்களூரு சர்வதேச முதலீட்டாளர் சந்திப்பை நடத்தியது. தாதுப்பொருட்கள், சுற்றுலா, தகவல்தொழில்நுட்பம், உயிரியல்தொழில்நுட்பம், ஆற்றல், மருத்துவம், கல்வி, உணவுப் பொருட்கள், ஜவுளி உட்பட 12 துறைகள் இதில் அடக்கம். சரியான வரிச் சலுகை கொள்கை கடைபிடிக்கப்பட்டதால் முதலீடுகள் ஊக்கம்பெற்றன. நடுத்தர மற்றும் பெரிய தொழில் நிறுவனங்களுக்கு 3 முதல் 8 ஆண்டுகள் வரையில் வரி விலக்கு அளிக்கப்பட்டது. ரூ.100 கோடிக்கு அதிகமான முதலீடு கொண்ட தொழில்களுக்கு 8 முதல் 12 ஆண்டுகள் வரை வரி விலக்கு அளிக்கப்பட்டது. பல அளவிலான அதிகார மற்றும் நிர்வாக சிக்கல்களை தவிர்க்கும் பொருட்டு பெங்களூரு ஒன் என்ற கருத்தாக்கமும் உருவாக்கப்பட்டது. இந்த சர்வதேச முதலீட்டாளர் சந்திப்பு ரூ.3 லட்சம் கோடி பெறுமானமுடைய புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு வழிவகுத்தன. ஆனால் இதில் எவ்வளவு முதலீடுகள் யதார்த்தத்தில் வந்தடையும் என்பது வேறு விஷயம்.

 பொருளாதாரத்தை கணக்கிடுவதற்கான ஓர் அளவீடாக விமான போக்குவரத்தை கொண்டால் குவாங்ஸோ எளிதில் வென்றுவிடும். பெங்களூரு சர்வதேச விமானநிலையத்தின் மொத்த பயணிகள் போக்குவரத்து ஒரு கோடியே பதினைந்து லட்சம், ஆனால் குவாங்ஸோ பையூன் சர்வதேச விமானநிலையத்தின் & சீனாவின் இரண்டாவது பிஸியான விமான நிலையம் & மொத்த பயணிகளின் எண்ணிக்கை நான்கு கோடிக்கும் அதிகம். சரக்கு விமான போக்குவரத்தை பொறுத்தவரை இது உலகின் 21வது பிஸியான விமானநிலையம். இத்துடன் குவாங்ஸோ துறைமுகம் ஆண்டிற்கு 300 மில்லியன் டன் பண்டங்களை கையாள்கிறது.

மொத்தத்தில், இந்த இரண்டு மாநகரங்களும் ஏராளமான ஒற்றுமைகள் கொண்டுள்ளபோதிலும் ஒரு மாநகரம் உற்பத்தியில் கவனம் செலுத்தி உலக அளவில் சிறந்த அடிப்படை கட்டமைப்பு வசதிகளுடன் திகழ்வதுடன் அடுத்து வரக்கூடிய பல தலைமுறைகளுக்கான அடித்தளத்தை இட்டுள்ளது. ஆனால், இன்று பெங்களூரு தேக்கத்திலிருக்கிறது, பல வாய்ப்புகளை இழந்துவருகிறது. பல சர்வதேச மாநகரங்கள் தங்களது சில தவறுகளால் வாய்ப்பை இழந்து முக்கியத்துவம் இழந்திருப்பதற்கு வரலாறு சாட்சியாக இருக்கிறது. இப்போது பெங்களூரு அந்தப் பாதையில் செல்கிறது.  குவாங்ஸோவிடமிருந்து பாடம் கற்பதன் மூலம் நாம் நிலைமையை திருப்ப முடியுமா? அடுத்த இருபது வருடங்களில் ஒரு குவாங்ஸோவை நாம் இந்தியாவில் உருவாக்க முடியுமா? என்பதே நம் முன் உள்ள கேள்வி.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

இப்படித்தான் நாம் வெட்கக்கேடாக அடுத்த தலைமுறை காஷ்மீரிகளை இழந்துகொண்டிருக்கிறோம்

 

அரிந்தம் சவுத்ரி | ஜூலை 12, 2011 11:13
 

சில ஆண்டுகளுக்கு முன்பு காஷ்மீருக்கு சுதந்தரம் கொடுக்க வேண்டும் என்று தலையங்கம் ஒன்றை எழுதினேன். அது மிகப்பெரிய சர்ச்சைகளை ஏற் படுத்தியது. கட்டாயமாக ஓர்  இடத்தையும் அதன் மக்களையும் பிடித்துவைத்திருப்பதைவிட அனைத்து நடைமுறைக் காரணங்களுக்காகவும் அவர்களை விடுவித்துவிடுவதே நல்லது. துரதிர்ஷ்டவசமாக காஷ்மீரின் மக்கள்தான் அனைத்து பாதகங்களையும் சந்தித்து நரகம் போன்ற சூழ்நிலையை அங்கே அனுபவித்து வருகின்றனர். அவர்கள் தொடர்ந்த அச்சுறுத்தல் மற்றும் கண்காணிப்பில் வாழ்வதோடு மட்டுமின்றி அடிப்படை சுதந்தரம் கூட கடந்த கால விஷயமாக அவர்களுக்கு மாறிவிட்டது. ப்ரீபெய்ட் செல்போன் வசதிகள் முதல் நில உரிமை வரை எல்லாமும் தடைசெய்யப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட அனைத்து ஜனநாயக உரிமைகளும் இந்த பிராந்திய மக்களுக்குப் பறிக்கப்பட்டுள்ளன. காஷ்மீர் போன்ற நெருக்கடி நிலவும் பிரதேசத்தில் இதெல்லாம் சரிதான்  என்று  வைத்துக்கொண்டாலும்  காஷ்மீரின் சிறார் நீதிச் சட்டம்தான் மிகப்பெரிய அபாயமாகும். இந்தச் சட்டம் எதிர்காலத்தில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும். அதைவிட இந்தச் சட்டம் சர்வதேச மனித உரிமைப் பிரகடனங்களுக்கும் எதிரானது. இது இயற்கையின் விதிக்கே எதிரானது.

ஆனால் அந்தச் சட்டத்தின் கீழ்தான் எத்தனை வழக்குகள். பசீன் ரபீக் ஹக்கீம் என்ற 15 வயது சிறுவனின் வழக்கையே உதாரணத்திற்குப் பார்ப்போம். அவன் இந்த ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதி விசாரணையின்றி ஜம்மு காஷ்மீர் போலீசாரால் காவலில் வைக்கப்பட்டான். கூட்டமாக நின்று  ஒரு  போராட்டத்தில் போலீசார் மீது அவர் கல்லெறிந்ததாக தன் வீட்டுக்கு வெளியே அவன் கைது செய்யப்பட்டான். மாஜிஸ்திரேட் அவனுக்கு பிப்ரவரி 12 ஆம் தேதி பிணையில் விடுதலைசெய்ய  உத்தரவிட்ட பிறகும் போலீஸ் அதிகாரிகள் அவனை விடுதலை செய்யவில்லை. சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் தொடர்ந்த தலையீடுகள் மற்றும் மக்களின் போராட்டத்தை அடுத்து அவன்  ஏப்ரல் 5 ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டான். இந்த ஆண்டு மே மாதம் 17 வயதான முர்தசா மன்சூர் கைதுசெய்யப்பட்டான். அவன் கைது முழுமையாக சட்டவிரோதமானது என்று உயர்நீதிமன்றம் தலையிட்டு கண்டுபிடித்தது. அவன் மூன்று மாதங்கள் சிறையில் அதற்கு முன்பு அடைக்கப்பட்டிருந்தான். இதேபோல 15 வயது ஹாரீஸ் ரசீத் லங்கூ, 13 வயது ஓமர் மக்பூர் என பாதிக்கப் பட்டவர்களின் கதைகள் நீளுகின்றன. 

2010 இலும் ஜூன் 2011 இலும் எந்த உறுதியான குற்றச்சாட்டுகளும் இன்றி எண்ணற்ற குழந்தைகள் கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் உள்ளன. அத்துடன் அவர்கள் கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாகியிருப்பதாகவும் தெரிகிறது. 2010 இல் மட்டும் குழந்தைகள் மற்றும் சிறார் வகையினருக்குள் வருபவர்கள் 320 பேர் கைதுசெய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருக்கின்றனர். பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் விசாரணையின்றி நடத்தப்பட்ட கைதுகள் இவை. பெரும்பாலான சிறுவர்கள் கல் எறிதல், கலவரத்தில் ஈடுபடுதல் குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டுள்ளனர். கடந்த 20 ஆண்டுகளில் நடந்த கைதுகளைக் கணக்கிட்டால் இந்த எண்ணிக்கை 20 ஆயிரத்தைத் தொடலாம்.

இத்தனைக்கும் ஐநாவின் குழந்தைகள் உரிமைத் தீர்மான அம்சங்களை ஏற்கும் இந்திய சிறார் நீதிச் சட்டம் இதுபோன்ற அத்துமீறல்களை தவறு என்கிறது. 18 வயதுக்குக் கீழ் உள்ள எவரையும் கைது செய்யக்கூடாது என்று ஐநாவின் தீர்மானம் சொல்கிறது. 2000 இல் அமுல்படுத்தப்பட்ட மத்திய சிறார் நீதிச் சட்டமும் இதையேதான் குறிப்பிடுகிறது. ஆனால் ஜம்மு காஷ்மீர் சிறுவர் நீதிச் சட்டம்  16 வயதுக்குக் கீழானவர்களையே சிறுவர் என்று வரையறை செய்கிறது. இதனால்தான் 16 இலிருந்து 18 வயது வரை உள்ளவர்களை கைது செய்து லாக் அப்பில் வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 1989 க்கு முன்பு வரை காஷ்மீரில் ஒரே ஓர் அனாதை இல்லம்தான் இருந்தது. அதை உள்ளூர் தொண்டு நிறுவனம் ஒன்று நடத்திவந்தது. அத்துடன் இரண்டு மையங்கள் சமூக நலத்துறையால் நடத்தப்பட்டு வந்தன. ஆனால் தற்போது அநாதைகளின் எண்ணிக்கையைப் பார்த்தால் 26 ஆயிரத்து 355 என்று அரசுத் தகவல்கள் சொல்கின்றன. ஆனால் அரசின் தகவல்களைவிட எண்ணிக்கை மிகவும் அதிகம் என்று சில அமைப்புகள் தெரிவிக்கின்றன. 

இந்தப் பிராந்தியத்தில் மக்கள் மனதில் என்ன நடக்கிறது என்பதை ஒரு கூற்றில் சுருக்கி விளக்கி விடமுடியும்(இந்த கூற்று இதே சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்ட ஒரு குழந்தை வெளிப்படுத்தியது) &“நான் கற்களை எறியமாட்டேன். இப்போது குண்டுகள் பொருத்தப்பட்ட ஜாக்கெட் ஒன்றை அணிந்து வெடித்துச் சிதறவேண்டும்."



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

பல வளர்ந்த நாடுகளிலும் உள்ளதைப் போல சட்டம் போட்டு நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாகரிகமுறையில் நடக்கச் செய்யவேண்டும்...

 

அரிந்தம் சவுத்ரி | ஏப்ரல் 4, 2011 16:29
 

ஓர் அறிவியல் கதையை  திரைப்படமாக  எடுக்கும் ஹாலிவுட் இயக்குநர் நமது நாடாளுமன்ற நடவடிக்கைகளைப் பார்த்தால் மிரண்டுவிடுவார். நமது நாடாளுமன்றத்தில் பாட்டில்கள், மைக்ரோபோன்கள் தொடங்கி செருப்புகள் உட்பட அனைத்தும் பறப்பதைப் பார்க்கமுடிகிறது. மனிதர்கள்கூட எதிர்காலத்தில் பறக்கலாம். லோக்சபா தொலைக்காட்சியில் சிறிதுநேரம் பார்த்தாலோ, யூ ட்யூப்பில் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் பதிவைப் பார்த்தாலோ நமது மரியாதைக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அடிப்படை கலாசாரமும் கல்வியும் இல்லையென்பது தெரியவரும். இது வாக்காளர்களுக்கு அதிகபட்ச கேவலத்தையும் அசூயையையும் ஏற்படுத்துகிறது. இதுதான் பிரதிநிதித்துவப்படுத்தும் முறையா? செருப்புகளை கையில் வைத்துக்கொண்டு, வசைகளைப் பேசி, வன்முறை தாக்குதலிலும் இறங்குவது போன்ற செயல்களில் ஈடுபடுவதன் மூலம் வாக்காளர்களின் பிரச்னைகளை எப்படிப் பேசமுடியும். அதுவும்  உலகின்  மிகப்பெரிய ஜனநாயகக் கோவிலில்தான் இவையெல்லாம் நடக்கிறது.


கடந்த ஆண்டு பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவுக்கான விவாதத்தில் நாடாளுமன்றத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டு ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மிச்சமிருக்கும் கூட்டங்களில் கலந்துகொள்ள தடைவிதிக்கும் அளவுக்கு சூழ்நிலை சென்றது. அந்த உறுப்பினர்கள் மசோதா அறிக்கையை துண்டாகக் கிழித்தும் போட்டனர். தலைவரின் ஒலிபெருக்கியைப் பிடுங்கி மேஜைமீது ஏறி தங்கள் எதிர்ப்பைக் காண்பித்தனர். இதையெல்லாம் நமது நாட்டின் பெண்களுக்காகத்தான் நமது பிரதிநிதிகள் செய்தனர் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். மற்றொரு பிரச்னையில் ஏழு நாட்கள் தொடர்ந்து நாடாளுமன்றம் செயல்பட அனுமதிக்கப்படவில்லை. இரு அவைகளிலும் மிகப்பெரிய குழப்படிகள் காணப்பட்டன. பிரச்னையை விவாதித்துத் தீர்க்கமுயலாமல் இடைவெளிகளில் ஓடி கோஷமிட்டபடி இருந்தனர். 2008 ஆம் ஆண்டு நாடாளுமன்ற சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையான வாய்ச்சண்டையைக் கண்டு ஒத்திவைத்தார். அச்சூழலைப் பார்த்து, “நாடாளுமன்றம் சண்டை போடும் வீதிபோல ஆகிவிட்டது. எனது வருத்தத்தைத் தெரிவிக்க மட்டுமே முடியும். இது ஜனநாயகப் படுகொலை” என்றார். ஓட்டுகளுக்குப் பணம் கொடுத்த அந்த வெட்கக்கேடான சம்பவத்தை எப்படி மறக்க முடியும்? அல்லது 2008 ஆம் ஆண்டு எம்.பி.க்கள் ஒவ்வொருவரும் பரஸ்பரம் மைக்குகளையும் நாற்காலிகளையும் தூக்கி எறிந்ததை ஒருவர் எப்படி மறக்கமுடியும்? 2010 நிதிநிலை அறிக்கை விவாதவேளையில் நடைபெற்ற இடையூறுகள் மற்றும் தள்ளிவைப்புகளால் மட்டும் வரிகொடுப்பவரின் பணம் 18 கோடி ரூபாயும் 115 மணிநேரமும் செலவாகியுள்ளது. மக்களவை தனது நேரத்தில் 36 சதவிகிதத்தையும் மாநிலங்களவை 28 சதவிகிதத்தையும் இழந்துள்ளது.


இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமும் கௌரவமற்ற நடத்தையும் பாமரத்தனமான அரசியல் வகுப்பினரின் தன்மையை வெளிப்படுத்துவதோடு மட்டுமின்றி நாடாளுமன்றத்துக்கும் மிகப்பெரிய அவமதிப்பை ஏற்படுத்துகின்றன. இதுபோன்ற நடவடிக்கைகளால் இந்தியர்களுக்கு கேவலம் மட்டுமின்றி, நமது மூன்றாம் தர மதிப்பீடுகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.


இந்த நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். அத்துடன் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் உறுப்பினர்களை  நீக்குவதற்கு அரசியல் சாசனத்தில் வழிவகைகள் செய்யப்பட வேண்டும். தேவைப்பட்டால் தேர்தல் ஆணையம் அந்த உறுப்பினர்களின் அரசியல்பணியை ரத்துசெய்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும். வன்முறையில் ஈடுபட்டாலோ மோசமான வார்த்தைகளைப் பேசினாலோ தேவையில்லாமல் வெளிநடப்பு செய்தாலோ சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் முறைதவறி நடப்பதைத் தடுப்பதற்கான உடனடி சட்டங்கள் அவசியத் தேவையாக உள்ளது. இதனால் அந்த உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் ஒழுங்காக நடந்துகொள்வது மட்டுமின்றி அவர்கள் அனுபவித்துவரும் கட்டற்ற சுதந்தரமும் கட்டுக்குள் வரும். பெரும்பாலான வளர்ந்த ஜனநாயக நாடுகள் இதற்கான சட்டங்களை உருவாக்கி வைத்துள்ளன. ஓர் உறுப்பினர் தேவையில்லாத தகவல் சொல்லி நாடாளுமன்றத்தின் கவனத்தை திசைதிருப்பினாலோ,  மிரட்டல் அல்லது லஞ்சம் மூலம் உறுப்பினர்கள்மீது செல்வாக்கு செய்ய முயன்றாலோ இந்த சட்டங்கள் அந்த உறுப்பினர் மீது பாயும்.


துரதிர்ஷ்டவசமாக நமது நாடாளுமன்ற அவைகள் ஒரு சர்க்கஸ் கூடாரம் போன்று காட்சியளிக்கின்றன. அங்குள்ளவர்களுக்கு உண்மையிலேயே அவர்களுக்குரிய இடத்தைக் காண்பிக்க வேண்டிய நேரமிது.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

அரபு எழுச்சி என்பது நாகரிகத்தின் மாற்றம்

 

அரிந்தம் சவுத்ரி | பிப்ரவரி 4, 2011 14:40
 

அமெரிக்கா பல தசாப்தங்களாக இரட்டை நிலைப் பாடுகளைப் பேணிவருகிறது. ஆனாலும் அந்நாடு ஜனநாயகத்தைப் பற்றி பேசி கருத்து சுதந்தரம், முரண்படுதலுக்கான உரிமை மற்றும் மனித உரிமைகள் பற்றி வெட்கமே இல்லாமல் மேடையேறி மற்றொரு நாடுகளுக்கு உரைத்துவருகிறது. உண்மை என்னவெனில் தென் அமெரிக்கா, ஆசியா அல்லது ஆப்பிரிக்கா எந்த இடமாக இருந்தாலும் சரி, மிக மோசமான சர்வாதிகாரிகளை அமெரிக்கா ஆதரித்துள்ளது. அந்த சர்வாதிகாரிகள் தங்கள் குடிமக்களையே மிக மோசமான முறையில் சித்திரவதை செய்து கொன்றவர்கள். தென் அமெரிக்காவில் சிலி, வெனிசுலா, அர்ஜெண்டினா, பிரேசில், நிகராகுவா மற்றும் பொலிவியா ஆகிய நாடுகள் இதற்கு சரியான உதாரணங்களாகும். ஆசியாவில் தென்கொரியா மற்றும்  இந்தோனேசியா  சிறந்த உதாரணமாகும்.  பாகிஸ்தானும் கூடத்தான். ஏனெனில் பாகிஸ்தானில் அமெரிக்கா தனது இரட்டை நிலைப்பாடுகளை  அப்பட்டமாகக் காட்டியுள்ளது. பனிப்போர் காலகட்டத்தில் சோவியத் யூனியன் எதிர்த்தரப்பில் இருந்தபோது, அமெரிக்க உத்திவகுப்பாளர்கள் மோசமான சர்வாதிகாரிகளை ஊக்குவிப்பது என்பது தேவையானதென்றும், கருத்து சுதந்தரம், மனித உரிமைகளைப் பொறுத்தவரையில் அவற்றுக்கு மிகவும் எதிரான கம்யூனிசத்தின் முன்னெடுப்பைத் தடுக்கவேண்டும் என்றும் தர்க்கம் புரிந்தனர். சோவியத் யூனியன் மறைந்தது. இனிமேலும் கம்யூனிசம் பல தசாப்தங்களாக எதிரி என்றிருந்தது இல்லாமல் ஆனது. இதன்மூலம் மற்ற நாடுகளை சர்வாதிகாரிகளிடமிருந்து காப்பாற்றி  ஜனநாயகங்களாக மாற அமெரிக்கா உதவும் என்று பலரும் நம்பினார்கள். ஆனால் சோகமான விஷயமாக இந்த நம்பிக்கைகள் முறியடிக்கப்பட்டு நசுக்கப்பட்டன. பயங்கரவாதத்திற்கு எதிரான  யுத்தம் என்கிற சாக்கில் உலகளாவிய அளவில் மோசமான சர்வாதிகாரிகளை ஊக்குவித்து வளர்க்கத்  தொடங்கியது. ஆமாம். உலகிலுள்ள சர்வாதிகாரிகளில் பெரும்பாலானவர்கள் அராபிய உலகில் தான் உள்ளனர். அவர்களின் எண்ணெய் வளங்கள்தான் அமெரிக்காவின் சாய்வுக்குக் காரணம். அதைவிட்டு ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் பேசுவதெல்லாம் வாய்சவடால் தவிர வேறொன்றும் அல்ல.


1979 இல் மேற்கு ஆசியாவில் முதல் மக்கள் போராட்டம் நடைபெற்றபோது இப்பத்திரிகையின் பெரும்பாலான வாசகர்கள் பிறந்தே இருக்கமாட்டார்கள். அமெரிக்க உத்திவகுப்பாளர்களுக்கு மத்திய கிழக்கு என்றால் எளிதாகப் புரிந்துவிடும். அமெரிக்காவால் மிகவும் தனிமைப்படுத்தப்பட, தண்டிக்கப்பட,  நசுக்கப்பட விரும்பும் நாடான ஈரானைப் பற்றி பேச விரும்புகிறேன். 1979 க்கு பல தசாப்தங்களுக்கு முன்பிருந்தே அந்நாட்டின் ஆட்சியாளர் ஷா, இஸ்ரேலைவிட அமெரிக்காவின் தீவிர ஆதரவாளராக இருந்தார். அதனால் அந்நாட்டில் ஜனநாயகரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் செல்வாக்கு மிகுந்த பிரதமரைக் கவிழ்க்க முயன்ற கலகத்துக்கு அமெரிக்கா மகிழ்ச்சியாக ஆதரவு தெரிவித்து ஷாவை  ஆட்சியில் அமர்த்தி இருந்தது. ஏனெனில் அந்தப் பிரதமர் அமெரிக்காவின் கட்டளைகளுக்குப் பணிய மறுத்தார்.  ஆட்சி செய்த ஷா, மக்களிடம் செல்வாக்கு இல்லாதவராக இருந்தார். அத்துடன் சர்வாதிகாரமாக இரும்புப்பிடியில் சித்திரவதை, சிறைவைப்பு மற்றும் முரண்பட்டவர்களை கொலை செய்வது வரை செய்து ஆட்சியை நடத்தினார். 1978 இல் திடீரென்று ஈரான் நகரங்களில் மக்கள் போராட்டத்துக்குத் திரள ஆரம்பித்தபோதுதான் அமெரிக்காவுக்கு உறைத்தது. அயதுல்லா கொமேனி நாடு திரும்பினார். ஷா ஈரானிலிருந்து தப்பி ஓடியதால் ஈரான் இஸ்லாமியக் குடியரசாக மாறியது. அப்போதிலிருந்து அமெரிக்காவின் தீவிர ஆதரவாளராக இருந்த ஈரான் தவிர்க்க இயலாத எதிரியாக மாறியது.


துனிசியாவின் குடிமக்கள் ஆர்த்தெழுந்து அமெரிக்க ஆதரவாளராக இருந்த சர்வாதிகாரியைத் தூக்கி எறிந்தது ஏற்கெனவே நடந்ததைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது. அவரும் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக துனிசியாவை ஆண்டவர். அராபிய நாடுகளில் தாங்கள் வெறுக்கும் சர்வாதிகாரிகளை அதிகாரத்திலிருந்து நீக்குவதற்காக மக்கள் தெருக்களில் திரள்வதைப் பார்க்கும்போது இந்த உணர்வு மீண்டும் எனக்குள் ஏற்பட்டது. கோடிக்கணக்கான மக்களின் அடக்கப்பட்ட உணர்வுகள் ஒரு வடிகாலைக் கண்டறியும் போது எப்படியிருக்கும் என்பதை எகிப்து காட்டியுள்ளது. அந்நாட்டின் அதிபரான ஹோஸ்னி முபாரக்,- அவரும் அமெரிக்க வளர்ப்புதான்.- முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சர்வாதிகாரம் செய்தவர். அவர்,  தனது மகனை அடுத்த ஆட்சி வாரிசாக நியமிக்க முடிவுசெய்திருந்த போது மக்கள் போராட்ட அலை நாடெங்கும் எழுந்துள்ளது. துனிசியாவில் நடந்த மக்கள் எழுச்சியை விடவும், அராபிய நாடுகளில் உள்ள குடிமக்களுக்கு இப்போராட்டம் ஒரு வழியை ஏற்படுத்தியுள்ளது
எகிப்து தற்போது வாஷிங்டனுக்கு பல துயர இரவுகளைக் கொடுத்துவருகிறது. தற்போது வரை எகிப்திய அரசு அமெரிக்காவுக்கும் அதேபோல இஸ்ரேலுக்கும் தீவிர ஆதரவு நிலையில் உள்ளது. அராபிய உலகத்திலேயே இஸ்ரேலுடன் மனப்பூர்வமாக ராஜாங்க  உறவுகளைக் கொண்டிருக்கும் ஒரே நாடு எகிப்துதான். அத்துடன் எகிப்துதான் மற்ற அராபிய நாடுகளுக்கு தலைமை வகிக்கும் அந்தஸ்திலும் உள்ளது. கெய்ரோ மற்றும் அலெக்சாண்ட்ரியாவின் தெருக்களில் நடைபெறும் நிகழ்வுகள் மொத்த அரபு உலக நாடுகள் மீது தாக்கம் செலுத்துகின்றன.

பயங்கரவாதத்திற்கு எதிரான சண்டை என்ற பெயரில் அப்பாவி பாலஸ்தீனர்கள்மீது இஸ்ரேலியப் படையினர் புரியும் அட்டூழியங்களை எகிப்து அரசு ஆதரிப்பதை அரபு உலக மக்களும் கோபத்துடன் இன்றுவரை பார்த்துவந்துள்ளனர். விக்கிலீக்ஸ் வெளியிட்ட கடிதங்களும் எகிப்திய அரசு பற்றி எந்தப் பிரமைகளும்  அமெரிக்கா கொண்டிருக்கவில்லை என்பதைத் தெரிவித்தது. வாஷிங்டனும் அதன் கூட்டாளிகளும் ஆண்டுக்கு 2 பில்லியன் டாலருக்கும் மேலான உதவித்தொகையைப் பயன்படுத்தி தங்களது பிராந்தியக் கொள்கையை நிறைவேற்றும் ஏஜெண்டாக கெய்ரோவைப் பயன்படுத்தியிருப்பது பகிரங்கமாகியுள்ளது. குறிப்பாக பாலஸ்தீனர்களின் நியாயமான கோரிக்கைகளை ஒடுக்குவதில் அவை நன்கு செயல்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. எகிப்திய மக்களின் எழுச்சி, அதிகம் புகழப்பட்ட மேற்கு நாடுகளின் கூட்டாளியாகச் சொல்லப் பட்டவரின் தகுதியின்மையை உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளது. சந்தேகமின்றி அப்பிராந்தியத்தில் உள்ள சர்வாதிகார ஆட்சி நடக்கும் அனைத்துப் பகுதிகளிலும் இந்தச் செய்தி எதிரொலிக்கும்.


எகிப்தில் அரசு தூக்கி எறியப்பட்ட விதம் நிச்சயம் கொடுங்கனவைப் போல டெல் அவிவையும் வாஷிங்டனையும் துரத்தும் என்பதில் அதிசயப்பட ஒன்றுமேயில்லை. எகிப்து சர்வாதிகாரத்தின் பிடியிலிருந்து துருக்கியைப் போன்று மிதவாத இஸ்லாமியக் கட்சியால் ஆளப்போகும் நாடாக மாற உள்ளது. துருக்கியும் சந்தர்ப்பவசமாக எண்ணெய் வளம் நிறைந்திருக்கும் பகுதியில் உள்ளதால், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தீவிர ஆதரவாளராக உள்ளது. துருக்கி தற்போது எடுத்துவரும் நிலைப்பாடுகள் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நலன்களுக்கு எதிராகச் செல்கிறது. இஸ்ரேல் விதித்த  தடையால் பாலஸ்தீன மக்களின் வாழ்க்கையே கேள்விக்குள்ளான நிலையில், துருக்கி அம்மக்களுக்கு உதவ ஒரு கப்பலை அனுப்பியது. அந்தக் கப்பலை இஸ்ரேலியப் படையினர் தாக்கி அழித்தனர். அதில் துருக்கியர்கள் மட்டுமின்றி பாலஸ்தீன மக்களுக்கு உதவப்போன அமெரிக்கக் குடிமக்களும் கொல்லப்பட்டனர். அந்தச் சம்பவத்திற்குப் பிறகு இஸ்ரேலுக்கும் துருக்கிக்கும் இடையிலான உறவில் திருப்பம் ஏற்பட்டது. ஏகாதிபத்திய அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளி இஸ்ரேலுக்கு எதிராக இஸ்லாமிய துருக்கி உருவாகும் என்ற நம்பிக்கைகளையும் பலர் இந்த நிகழ்வுக்கு அடுத்து வளர்க்கத் தொடங்கினார்கள். எகிப்தும் மற்றொரு துருக்கியாக மாறுவது அமெரிக்காவுக்குத் தலைவலியாக அமையும். ஆனால் அது இஸ்லாமிய அடிப்படைவாதிகள் கையில் சென்று சேர்வது பயங்கரக் கனவாக அமையும்.


வெகுநாட்களாக அரசியல்ரீதியாகவும் பொருளாதார வாய்ப்புகளின் அடிப்படையிலும் புறக்கணிக்கப்பட்டவர்களான அராபிய உலகின் குடிமக்கள் சர்வாதிகாரிகளுக்கு எதிராக எழுவார்கள் என்று யாரும் கருதியிருக்கவில்லை. ஆனால் துனிசியா வழியை காண்பித்து அராபிய உலகம் முழுவதும் நெருப்பலை ஏற்பட்டுள்ளது. இன்று சோவியத் யூனியன் உடைந்த நிகழ்வைப் போன்று வரலாறு திரும்பி அமெரிக்காவைப் பார்த்து புன்னகைப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர். தற்போதோ அமெரிக்கா, ஈராக்கை ஆக்கிரமித்து ஆயிரக்கணக்கான மக்களை கொடூரமான முறையில் தவறான காரணங்களைக் கூறி கொன்றுவருகிறது. ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளைக் கொல்வதைவிட அப்பாவி மக்களைத்தான் அதிகம் கொன்றுவருகிறது.  தற்போது அரபு உலக மக்கள் போதும் என்ற முடிவுக்கு வந்துவிட்டனர். இப்போது இதுகுறித்து பல கோடி டாலர் கேள்வி ஒன்று எழுகிறது. அரபு உலகில் புதிய அரசுகள் எழுவது தவிர்க்கமுடியாதவை என்றும் அவை அமெரிக்காவுக் கும் இஸ்ரேலுக்கும் ஆதரவாக இருக்காதென்பதையும் அந்த இருநாடுகளும் ஏற்றுக்கொள்ளுமா?


இதில் இந்தியாவுக்கும் ஒரு பாடம் உள்ளது. ஆப்கானிஸ் தானில் சோவியத் யூனியன் ஆக்கிரமிப்பு நடத்தியதை கண்டனம் செய்யாமல் இருந்ததால், அரபு உலகில் இந்தியாவுக்கு எதிராக எழுந்த வெறுப்பை பாகிஸ்தான் புத்திசாலித்தனமாகச் சுரண்டிக்கொண்டது. தற்போதோ  அமெரிக்காவின் கூட்டாளியாக இருப்பதால் ஈரானுக்கு எதிராக நிலைப்பாடுகளை வெளிப்படையாக இந்தியா எடுக்கவேண்டி வருகிறது. அரபு உலகில் சர்வாதிகாரிகளுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களை இந்தியா பகிரங்கமாக ஆதரிக்கவேண்டும். அப்படி ஆதரிக்காவிட்டால் இந்தியா பல நண்பர்களை அரபு உலகில் இழக்கும். 


அரபு உலகம் இதுவரை மதத்தீவிரவாதம் மற்றும் சர்வாதிகாரத்தின் பிடியில் நீண்டகாலம் பாதிக்கப்பட்டிருந்தது. அரபு உலகம் எழுச்சிபெற இதுவே சரியான நேரம். அமெரிக்க ஆதரவு பெற்ற சர்வாதிகாரத்தை மட்டும் இந்தப் புரட்சி நீக்காது. உலகின் மற்றப்  பகுதி மக்களுடன் ஜனநாயகப்பூர்வமாக இணையும் சற்று தாராளவய மதிப்பீடுகள் மதத்தீவிரவாதத்தை இடம்பெயர்க்கும் எனவும் நம்பலாம். இதுபோன்ற  மாற்றம்தான் இந்தோனேசியாவிலும் நடைபெறுகிறது.  இதன்மூலம் நாகரிக மாற்றம் ஏற்படும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

ஊழலை ஒழிக்காவிடில் எகிப்தாக இந்தியா மாறும்!

 

வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருக்கும் கறுப்புப்பணத்தை அரசு திரும்பக் கொண்டுவந்து ஊழலை ஒழிக்கவேண்டும். இல்லையெனில் இந்தியத்தெருக்களும் எகிப்தின் நிலையை அடையும்!!!

அரிந்தம் சவுத்ரி | பிப்ரவரி 11, 2011 14:04
 

இது ஓர் உலகளாவிய பிரச்னை. இந்தியாவின் மாபெரும் பிரச்னை என்றபோதிலும் இதுகுறித்து எதுவும் செய்யப்படவில்லை. பேஸ்புக் மற்றும் அதைப் போன்ற வலைதளங்களில் எனது ஆன்லைன் நண்பர்கள் இதைப் பற்றி எழுதும்படி ஏறக்குறைய தினமும் கேட்கிறார்கள். ஆம், நான் கறுப்புப் பணம் பற்றியும் நமது கடும் கண்டனத்திற்குரிய அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் மற்றும் அதிகாரிகள் கூட்டாக நமது நாட்டில் உருவாக்கியிருக்கும் கருந்துளை பற்றியும் தான் இங்கு குறிப்பிடுகிறேன். இந்தியா கொள்ளையடிக்கப்பட்டதைப் போன்று வெட்கமற்று, நேர்மையற்று சொந்த   மக்களாலேயே கொள்ளையடிக்கப்பட்ட நாடு உலகில் வேறெதுவும் இல்லை. இந்தக் கொள்ளை ஒவ்வொரு நாளும் நடக்கிறது. நாட்டின் மொத்த வருமானத்தைவிட அதிகமான பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் இவர்கள் பதுக்கி வைத்திருக்கிறார்கள் என்பதை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நம்பமுடியாத அளவுக்கு இது பெரும் தொகை, 1450 பில்லியன் டாலர்கள். உலகிலேயே வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணத்தை அதிக அளவில் பதுக்கிவைத்திருப்பவர்கள் இந்தியர்களே. இரண்டாம் இடத்திலிருக்கும் ரஷ்யர்கள் பதுக்கிவைத்திருப்பது இந்தியர்கள் பதுக்கிவைத்திருப்பதில் மூன்றில் ஒரு பங்கு, 470 பில்லியன் டாலர். மூன்றாம் இடத்தில் பிரிட்டிஷ்காரர்கள், 390 பில்லியன் டாலர். நான்காவது இடத்தில் உக்ரைன், 100 பில்லியன் டாலர். ஐந்தாம் இடத்தில் சீனா,  90 பில்லியன் டாலர். நமது நாட்டின் அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்கள் எந்த அளவுக்கு ஊழலில் திளைத்துள்ளனர் என்பதற்கு இது ஆதாரம். ஆனால் இவை அனைத்தும் ஓர் இரவில் நடந்தவையல்ல. கடந்த அறுபது ஆண்டுகளாக நாம் உருவாக்கிவைத்துள்ள இந்த அமைப்பானது அளவற்ற அகோர பணப் பசியெடுத்தவர்கள், சுவிஸ் மற்றும் பிற வெளிநாடுகளில் ரகசியக் கணக்குகளில் பெரும் பணத்தைப் பதுக்குவதற்கு உதவிபுரிந்துள்ளது. 

இதற்கான விதைகள் இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தின்போது தூவப்பட்டு, ஊழல் நிறுவனமயமாக்கப்பட்டு, அவற்றின் நீட்சியாக கறுப்புப் பணம் உருவாகியிருக்கிறது. தன்னிறைவு கொண்ட தொழிற்துறை நாடாக இந்தியாவை உருவாக்க    தொழில் உரிமங்களை வழங்குதல், விலைக் கட்டுப்பாடு மற்றும் இறக்குமதிக் கட்டுப்பாடுகள் உருவாக்கப்பட்டன. திட்ட அளவில் இவை தர்க்கபூர்வமாக இருந்தாலும், 1920களில் ஸ்டாலின் தலைமையிலான சோவியத் யூனியனில் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டிருந்தாலும் & இதே மாதிரி சீனாவிலும் மாவோவின் தலைமையில் வெற்றிகரமாக செயல்பட்டிருந்தாலும் & இந்தியாவின் தரகு அரசியலமைப்பானது சோவியத் யூனியன் மற்றும் சீனாவிடமிருந்து மாறுபட்டது என்பதை நாம் மறந்துவிட்டோம். தன்னிறைவுபெற்ற இந்தியாவை உருவாக்குவதற்கான திட்டங்கள் என்று தம்பட்டம் அடிக்கப்பட்ட இவை மிகச் சில தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளை தன்னிறைவு அடையச் செய்வதில் முடிந்தது. அரசியல் தலைமைக்கு நெருக்கமாக இருந்ததைத் தவிர வேறெந்த சாதனைகளோ அல்லது நம்பகத்தன்மையோ இல்லாத தொழிற் குழுமங்களுக்கு தொழில் உரிமங்கள் தரப்பட்டன. இதன் காரணமாக திறனற்ற நிறுவனங்களே உரிமங்களைப் பெற்றதுடன், போட்டி என்பதே இல்லாததால் அவை வெற்றிகரமாக கறுப்புப் பணத்துடன் இயங்கின. தொடர்ந்து பதவியில் இருப்பதற்காக முயன்ற அரசியல் கட்சிகளோ கிரிமினல்மயமாகிவிட்டன. இக்கட்சிகளுக்கு வர்த்தக நிறுவனங்களின் ஆதரவும் கிடைத்தது.  அரசியல் கிரிமினல்மயமாவது என்பது அசுர வேகத்தில் வளர்ந்தது. அரசியல்வாதிகள், வர்த்தகர்கள் மற்றும் உழைக்காது பெரும் பணம் ஈட்டும் அதிகாரிகளின் கூட்டால் இந்தியாவில் ஊழல் வாழ்க்கைநெறியாகிப் போனது.

மேலே சொல்லப்பட்ட மூன்று வகுப்பினரில் அரசியல்வாதிகளே மிகப்பெரும் தவறிழைத்தவர்கள். தங்களுக்காக நாட்டின் செல்வத்தைக் கொள்ளையடித்ததுடன் இத்தகையை சூழ்நிலை செழித்து வளர்வதற்கான காரணமாக இருந்தார்கள். பல்வேறு ஊடகக் குழுமங்கள் வெளியிட்டிருக்கும் தகவல்களின்படி, 1967&68இல் ரூ.3,034 கோடியாக இருந்த கறுப்புப் பணம் 1979இல் ரூ. 46,867 கோடியாகவும் உயர்ந்தது. எளிய வார்த்தைகளில் சொன்னால், 1968ல் ஜிடிபியில் 9 சதவிகிதமாக இருந்தது, 1979இல் 49 சதவிகிதமாக அதிகரித்தது. இது முப்பது ஆண்டுகளுக்கு முந்தைய நிலை. ஆண¢டுகள் செல்லச் செல்ல ஊழல் மற்றும் கறுப்புப் பணத்தின் அளவும் பன்மடங்கு அதிகரித்தது. 1980களில் மொத்தம் எட்டு ஊழல்கள் அம்பலமாயின. அது 1990இல் 26ஆகவும், இன்று 150ஆகவும் அதிகரித்திருக்கிறது. மாட்டுத் தீவனம், ராணுவ வீரர்களின் சவப்பெட்டி, தியாகிகளுக்கு ஒதுக்கப்படும் வீடு என எதையும் அரசியல்வாதிகள் விட்டுவைக்கவில்லை. எதிலும் தங்களால் என்ன எடுக்க முடியும்  என்பதையே பார்த்தார்கள். நாட்டிலேயே அதிகமான தாதுப்பொருள் வளம் கொண்ட மாநிலத்தின் முதல்வர் ஏதோ அவை தனது வீட்டுச்சொத்து போல் பாவித்து விற்கிறார். மற்றொரு மாநில முதல்வரோ கார்கில் தியாகிகளுக்காக ஒதுக்கப்பட்ட வீடுகளை அபகரிக்கிறார். இதுபோதாதென்று, இந்திய விளையாட்டுத் துறையை தனது அரசாக பாவிக்கும் ஒருவர், காமன்வெல்த் விளையாட்டு மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய்களை சுருட்டிக்கொண்டார். இதுவும் போதாதென்று மற்றொரு அரசியல்வாதி தேசத்தின் பாதுகாப்பைப் பற்றிக்கூட கவலைப்படாமல், அலைக்கற்றை ஏதோ தனது சொத்து எனக் கருதி அடிமாட்டு விலைக்கு விற்று நாட்டிற்கு ரூ. 1,70,000 கோடி நட்டத்தை ஏற்படுத்தினார். குளோபல் பைனான்சியல் இன்டெகிரிட்டி என்று நிறுவனம் இந்தியாவில் ஆண்டுதோறும் 19 பில்லியன் டாலர்கள் கறுப்புப் பணமாகப் பதுக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளது. இந்தப் பணம் எங்கிருந்து வருகிறது என்பது நமக்குத் தெரியும்.

டிரான்ஸ்பரன்ஸி இன்டர்நேஷனல் தெரிவிப்பதைப்போல, 60 சதவிகித கறுப்புப் பணம் தேர்தல்களில் திருப்பிவிடப்படுகிறது. தங்களது சொந்த லாபத்திற்காக நாட்டை கொள்ளையடிப்பது இந்த அரசியல்வாதிகளின் ஏகபோகம் மட்டுமல்ல, இவர்கள் இத்தகைய கொள்ளைக்கான ஒரு சூழலை உருவாக்கி, அதில் தொழிற் குழுமங்களும் பங்குபெறும்படிச் செய்துள்ளனர். அப்படியில்லாவிடில், தொடந்து வெளியாகும் அவமானகரமான கசிவுகளுக்குப் பிறகு ஏன் இந்திய அரசு நீண்டகால மூலதன லாபங்களுக்கு வரி இல்லை என்ற நிலையைத் தொடர்கிறது? இதை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, பல கோடி ரூபாய்களை தங்களது சொந்த நிறுவனங்களிலிருந்து எடுத்து, கறுப்புப் பணமாக உலகெங்கும் வரி இல்லாத அல்லது மிகக் குறைவாக உள்ள நாடுகளில் பதுக்கிவைக்கிறார்கள். இதுபோன்ற பணம் மொரீஷியஸ், கேமான் தீவுகள், பெர்முடா, பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் அல்லது ஸ்கேன்டிநேவிய நாடுகளிலோ அல்லது ஐரோப்பிய நாடுகளிலோ பதுக்கப்படுகின்றன. இப்போது தாய்லாந்து, சிங்கப்பூர், ஹாங்காங், மேக்கவ் போன்றவையும் கறுப்புப் பணம் பதுக்குவதற்கான இடங்களாக உருவாகிவருகின்றன. ஏனெனில் அந்த நாடுகளுக்கு இந்தப் பணம் இலவசமாக கிடைக்கிறது.

இது எதார்த்தமாக இல்லாவிட்டால் இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு நேரடி முதலீட்டில் மொத்த தேசிய வருமானமே 8.7 பில்லியன் இருக்கக்கூடிய மொரீஷியஸ் வங்கித் துறையில் மட்டும் 1.5 பில்லியன் டாலருக்கும் சற்று அதிகமாக முதலீடு செய்யமுடியும்? மேலும், மொரீஷியஸைச் சேர்ந்த 9,000க்கும் அதிகமான நிறுவனங்கள் வெளிநாடுகளில் இயங்குகின்றன. இவற்றில் பெரும்பாலானவை இந்தியாவுடன் தொடர்புடையவை. இந்திய&மொரீஷியஸ் ஒப்பந்தத்தின் படி, மொரிஷியஸில் பதிவு செய்துள்ள ஒரு நிறுவனம் இந்திய நிறுவனத்தின் பங்குகளை விற்கமுடியும். இதன் மூலம் இந்திய அரசுக்கு வரி செலுத்துவதிலிருந்து தப்பிக்கமுடியும். ஏனெனில் மொரீஷியஸில் மூலதன லாபத்திற்கான வரி இல்லை. இதே நிலைதான் வேறு மாதிரியான வரி விதிப்பு கொண்ட நாடுகளாலும் இந்தியாவிற்கு நிகழ்கிறது. 2008இல் சுமார் 3,600 மில்லியன் டாலர்கள் சிங்கப்பூருக்கும், 2,200 மில்லிய டாலர்கள் சைப்ரஸிற்கும் திருப்பப்பட்டன. இந்தியாவில் கனடாவின்         அதிகாரப்பூர்வமான முதலீடு சுமார் 239 மில்லியன் டாலர்கள். ஆனால், உண்மையில் இது 10 பில்லியன் டாலருக்கு குறைவாக இருக்க வாய்ப்பில்லை என 2009இல் இந்தியாவிற்கான கனடிய தூதர் கூறினார். இந்த வரி ஏய்ப்பின் மூலம்     இந்தியா இழக்கும் பணம் 1.5 பில்லியன் டாலர். வரிச் சலுகை காட்டும் நாடுகளில் உள்ள இந்திய நிறுவனங்களின் புரமோட்டர்கள் தங்களது பங்குகளின் மதிப்பை அயோக்கியத்தனமான வழிகளில் அதிகப்படுத்தி, அவற்றை வரிச் சலுகை காட்டும் நாடுகளுக்கு கடத்தி மீண்டும் அந்தப் பணத்தை வெளிநாட்டு நேரடி முதலீடு என்ற பெயரில் இந்தியாவிற்கு          கொண்டுவருகின்றனர். இது உண்மையாக இல்லாதபட்சத்தில், பி.எஸ்.ஈ. மற்றும் என்.எஸ்.ஈ. ஆகியவற்றில் பட்டியலிடப்பட்டுள்ள ஒரு சில நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பானது, இந்தியாவின் ஜிடிபியைவிட அதிகமாக இருப்பதை எப்படி விளக்குவது? இந்தப் பட்டியலில் உள்ள ஓரிரு நிறுவனங்களின் சந்தை மதிப்பு இந்தியாவின் ஜிடிபியில் 25 சதவிகிதம்.

இந்த வெளிப்படையான, வெட்கமற்ற கொள்ளையடித்தல் இதோடு நிற்கவில்லை. இதில் சிந்தி சிதறியவைகளை பொறுக்க மனச்சாட்சியற்ற அதிகாரிகள் முதல் நேர்மையற்ற பியூன்கள் வரை காத்திருக்கின்றனர். வறுமைக்கோட்டிற்குக்கீழ் வாழும் 5 கோடி குடும்பங்கள் தங்களுக்கான சான்றிதழ் பெற தந்திருக்கும் லஞ்சப் பணம் 9000 கோடி ரூபாய். இதே நிலைதான் காவல்துறை, மருத்துவம், கல்வி, வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் என அனைத்திலும் நிலவுகிறது. சுரண்டுவதற்கான வாய்ப்புள்ள எதையும் விட்டு வைப்பதில்லை. சுவிட்ஸர்லாந்து போன்ற நாடுகள் நமது பணத்தில் கொழிப்பது என்பது மிகவும் துரதிருஷ்டவசமானது. இன்று அந்த நாடுகள் ஒத்துழைக்க முன்வரும் தருணத்தில், நமது நேர்மையற்ற அரசு அந்த கறுப்புப் பணத்தைத் திரும்பப் பெறவும், பணத்தைப் பதுக்கிவைத்தவர்களின் பெயர்களை வெளியிடவும் தயங்குகிறது. ஏன் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. 2009இல் சுவிட்ஸர்லாந்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் மூலம், 4,450 ரகசிய கணக்குகள் பற்றிய விவரங்களை அமெரிக்காவால் பெறமுடிந்தது. 18 ஆண்டுகால தொடர்ச்சியான போராட்டத்திற்குப் பிறகு நைஜீரியாவால் 700 மில்லியன் டாலர்களை திரும்பப் பெறமுடிந்தது. இதைப் போலவே பிலிப்பைன்ஸ் 700 மில்லியன் டாலர், மெக்சி«கோ 74 மில்லியன் டாலர் திரும்பப்பெற்றன.

இப்போது இந்தியாவின் நேரம். வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணம் இந்தியர்களுடையது என்று அரசு கூறியது. இது வெறும் உதட்டளவிலான பேச்சு. இந்த விஷயத்தில் அரசுக்கு அக்கறை இருக்கும் பட்சத்தில் நேர்மையான அதிகாரிகளை நியமித்தது. அவர்களை சுதந்தரமாக இயங்கவிட்டு அப்பணத்தைத் திரும்பக்கொண்டுவருவதற்காக காலக்கெடுவையும் அறிவித்திருக்க வேண்டும். தனது நாட்டு வங்கிகளில் வைக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணம் குறித்த தகவல்களைத் தர சுவிட்ஸர்லாந்து தயாராக இருக்கையில், வெட்கமற்ற வகையில் இந்திய அரசு அதைப் பெற தயக்கம் காட்டுகிறது. உண்மையிலேயே இந்த அரசு தீவிரமாக இருந்தால், இந்நேரம் அனைத்துத் தகவல்களையும் பெற்றிருக்க முடியும். ஏன் இந்த அரசு பணத்தைத் திரும்பப் பெற தயக்கம் காட்டுகிறது என்பதுதான் எனது கேள்வி. தாங்களும் கறுப்புப் பணம் வைத்திருக்கும் மற்றவர்களும் தங்களது பணத்தை சுவிட்ஸர்லாந்திலிருந்து இன்னமும் ரகசியக் கணக்குகளுக்கான சட்டங்கள் தீவிரமாகப் பின்பற்றப்படும் துபாய்க்கு மாற்றப்படும் வரை காலத்தை ஒத்திப்போட இப்படி நடந்துகொள்கிறதா? இது நடந்த பிறகு இந்திய அரசு சுவிட்ஸர்லாந்தை தகவல்களைத் தரும்படி கேட்கும். ஆனால் தருவதற்கு அதனிடம் எந்த தகவலும் இருக்காது. இனி வரும் காலம் வாசகர்களுக்கு இதற்கான பதில் தெரியவரும். ஆனால் ஒரு விஷயம் நிச்சயம். இந்த அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் எகிப்தில் நடப்பதைப் போன்று இந்தியாவில் நடக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. அதிகாரத்திலிருப்பவர்கள் கவனிப்பார்கள் என்று நம்புகிறேன்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard