கடந்த ஓராண்டாக “இஸ்லாம்: கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே” எனும் தொடர் செங்கொடி தளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது. இது பரவலாக கவனம் பெற்ற தொடராக இருந்துவருகிறது. இத் தொடரை தொடங்கும்போது அனைத்து திசைகளிலிருந்தும் இதற்கு எதிர்ப்பும் மறுப்பும் கிளம்பிவரும் என எதிர்பார்த்தேன். ஆனால் நான் அறிந்தவரை குறிப்பிட்டுச் சொல்லும்படியான மறுப்பேதும் வரவில்லை. இத்தொடருக்கு வந்த எதிர்ப்பின் அளவில் கூட மறுப்புரைகள் வரவில்லை. இது என்னில் ஏமாற்றத்தையே உண்டாக்கியது என்றால் அது மிகையான கூற்றல்ல.
இந்நிலையில் நண்பர் சலாஹுத்தீன் என்பவர் தன்னுடைய தளத்தில் இத்தொடருக்கு மறுப்பு எழுதுவதாக என்னிடம் தெரிவித்தார். அவர் எழுதிய ஓரிரு பகுதிகளில் நானும் சென்று என்னுடைய விளக்கங்களை பின்னூட்டமாக வைத்தேன். (அதை இங்கு காணலாம்)பின்னர் அவர் தன் தொடரை நிறுத்திவிட்டு என்னிடம் விவாதிக்க விரும்புவதாகத்தெரிவித்தார். அந்த விவாதமும் இடையில் நின்றுபோனது. இந்த விவாதம் நூலகம் பகுதியில் விவாதம் எனும் தலைப்பின் கீழ் பிரபஞ்சம் தோன்றியது எப்படி? என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது முஹம்மது இஹ்சாஸ் என்பவர் இஸ்லாம் குறித்த தொடருக்கு மறுப்பு எழுதுவதற்கென்றே தனியாக ஒரு தளத்தை தொடங்கி, முறைப்படி எனக்கு அறிவிக்கவும் செய்திருக்கிறார். இதுவரை அவர் நான்கு பகுதிகளை எழுதியுள்ளார். தொடக்கத்தில் அதை நான் பொருட்படுத்தவில்லை காரணம், அத்தொடர் தொடருமா என்பதில் எனக்கிருந்த ஐயம் தான். ஆனால் மறுப்புகளை எழுத அவர் எடுத்துக்கொள்ளும் முனைப்பு அத்தொடர் தொடர்ந்து வெளிவரும் என்பதை எடுத்துக்காட்டும் விதத்தில் இருந்தது. எனவே அந்த மறுப்பிற்கான விளக்கத்தை அளிக்கவேண்டிய தேவை எழுகிறது. மட்டுமல்லாது, இஸ்லாம் குறித்த தொடரின் கடந்த பதிவுகளை மேலதிக விளக்கங்களுடன் கூர் தீட்டவும் பயன்படும் என்பதாலும் இது இன்றியமையாததாகிறது. நண்பர் முஹம்மது இஹ்சாஸ் தன் தொடரை தொடரும் வரை இதுவும் தொடராக வெளிவரும். தொடக்கத்தில் அவருடைய தளத்திலேயே பின்னூட்டமாக பதிவு செய்யலாம் என எண்ணினேன். ஆனால், இஸ்லாம் குறித்த தொடரை தொடர்ந்து படித்து வருபவர்களுக்கு அதன் மறுப்பையும் அறிமுகம் செய்து வைப்பதுதான் பொருத்தமாக இருக்கும் என்பதாலும் இத்தொடரை தொடங்குகிறேன்.
தோழமையுடன்
செங்கொடி
இஸ்லாம் கற்பனை: மறுப்புக்கு மறுப்பு பகுதி: ௧
எடுத்துக்கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு
தம்முடைய முதல் பதிவை நேரடி விவாதம் பற்றிய சுட்டலுடன் தொடங்கியுள்ளார். அதுகுறித்த விளக்கத்துடனே நானும் தொடங்குகிறேன்.
“இஸ்லாம்: கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே” எனும் இந்தத்தொடர், பிஜேவுடன் நேரடி விவாதத்தில் பங்குகொள்ள வேண்டும் எனும் நோக்கத்தில் தொடங்கப்பட்டதல்ல. நிகழ் உலகின் சுரண்டல்களுக்கு எதிராக, அதிகார வர்க்கங்களுக்கு எதிராக நடக்கும் போராட்டங்களில் இஸ்லாமியர்களின் பங்களிப்பை அதிகரிக்க முடியுமா எனும் எண்ணத்தில், அனைத்து மதங்களுமே வர்க்கச் சுரண்டல்களுக்கு ஆதரவாகவும், அதை எதிர்க்கும் போராட்டங்களுக்கு எதிராகவும் செயல்படுகின்றன என்றாலும், நான் பிறந்த மதம் எனும் அடிப்படையில் இஸ்லாமிய புனிதங்களுக்கு எதிராக உண்மைகளைப் பேசுவதனூடாக சமூகப் போராட்டங்களுக்கு பயணப்படவைக்கும் முயற்சியில் தொடங்கப்பட்டதுதான்.
இந்தத்தொடரைத் தொடங்கியது முதலே பிஜே அவர்களுடன் நேரடி விவாதத்தில் பங்குகொள்ளுங்கள் என்று குறைவாகவும் கூடுதலாகவும் பல வடிவங்களில் எதிர்வினைகள் வந்தன. அதில் சில கட்டுரைகள் கடந்தபின் நண்பர் அப்துல் லத்தீப் சென்னையில் நடக்கும் விவாதத்தில் நீங்களும் பங்குகொள்ள முடியுமா என கேட்டிருந்தார். அதற்கு நான் சாத்தியமில்லை என்றும் எழுத்தில் தயார் என்றும் பதிலிறுத்திருந்தேன். இதன்பிறகே ‘இனிமை’ என்பவர் செங்கொடி தளத்திற்கான சுட்டியை இணைத்து, இதற்கு நீங்கள் பதிலளிக்க முடியுமா என பிஜேவிடம் கேட்கிறார். அவர் தன் கடிதத்தை இப்படித் தொடங்குகிறார்,
“தயவுசெய்து கீழேயுள்ள லிங்கை பார்வையிடுங்கள். அதில் இஸ்லாம் விஞ்ஞானத்திற்கு எதிரானது என்று சில தமாஷான கட்டுரைகளை வெளியுட்டுள்ளார். முக்கியமாக தங்களுடைய குரான் மொழியாக்கத்தையும் அறிவியல் ஒப்பீட்டையும் தான் அதிகளவில் விமர்சனத்திற்கு எடுத்துள்ளார். நாத்திகர்கள் எடுத்துவைத்த வாதங்கள் போன்று இருந்தாலும் இதற்குப் பதில் கொடுப்பது அவசியம் என்று கருதுகிறேன்”
இதுதான் அவரது கடிதத்தின் முக்கியப் பகுதி. அதாவது நான் நேரடி விவாதத்திற்கு வரமுடியாது என மறுத்துவிட்ட நிலையில் என்னுடைய கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்பதே அவரது கடிதத்தின் நோக்கம். மேலதிக விபரமாக நேரடி விவாதத்திற்கு அழைத்து, மறுத்த விபரத்தையும் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் இதற்குப் பதிலளித்த பிஜே அவர்கள், கடிதத்தின் நோக்கமான பதிலளிப்பது என்பதை கவனமாக தவிர்த்துவிட்டு, நேரடி விவாதத்திற்கு வரச்சொல்லுங்கள் நாம் தயார் என பதிலளித்திருந்தார். எழுத்தில் தயார் நேரடியாக இயலாது என்பது என் நிலை, எழுத்தில் இயலாது நேரடியாக தயார் என்பது அவர் நிலை. யாருக்கு எதில் வசதிப்படுகிறதோ அதில் பதிலளிப்பது எனும் யதார்த்தமான நிலைக்கான அவர் பதிலின் தொனி எப்படி இருக்கிறது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு \\ஆனால் எழுத்து வடிவிலான விவாதம் மட்டுமே செய்வேன் என்பது கோழைத்தனமானது// இதுபோன்ற அணுகுமுறையின் விளைவாகவும், தொடர்ந்து வந்த பின்னூட்டங்கள் மின்னஞ்சல்களின் விளைவாகவும் நேரடி விவாதத்திற்கு மறுப்பது என்னுடைய வசதியை அனுசரித்துத்தனேயன்றி பயத்தினால் அல்ல என்பதை வெளிக்காட்டவேண்டி நேரடி விவாதத்திற்கு சம்மதித்தேன்.
ஆனால் எந்த நோக்கத்திற்காக நான் எழுதத்தொடங்கினேனோ அந்த நோக்கத்திற்கு நேரடி விவாதத்தை விட எழுத்து விவாதமே பொருத்தமானது என்பதோடு மட்டுமல்லாது, நேரடி விவாதத்தை விட எழுத்து விவாதமே சிறந்ததாகவும் இருக்கிறது என்பதை உணர்ந்தேன். என்னுடைய அந்த உணர்தலை வெளிப்படுத்தும் விதமாகவும், எப்போது விவாதம் செய்யப்போகிறீர்கள் என தொடர்ந்துகொண்டே இருக்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாகவும் நான் ஏன் பிஜேவுடன் நேரடி விவாதம் செய்யவேண்டும் எனும் இடுகையாக வெளியிட்டேன். என்னுடைய இந்த முடிவை தோழர்கள் சிலரும் மீளாய்வு செய்யுமாறு கேட்கிறார்கள். எது நோக்கத்திற்கு சரியானது? எது சிறப்பானது? என்பதில் நான் நின்றுகொண்டிருப்பதால் வடிவத்திற்கு முதன்மையளிக்கவில்லை.
காலத்துக்கு காலம் இஸ்லாம் மட்டுமே அனைவராலும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக நண்பர் கூறுவது தவறு. உலகின் விமர்சனமின்றி கேள்வியின்றி ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று என்று எதுவுமில்லை. அனைத்தும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டே வருகிறது. ஆனால் விமர்சனத்தை எதிர்த்து வளர்வது சரியான வளர்ச்சியல்ல. விமர்சனத்தை உள்வாங்கி அலசிப் பார்த்து தன்னுள் தகுந்த மாற்றங்களைச் செய்துகொள்வதே சரியான வளர்ச்சி.
பிஜே அவர்கள் பதிலில் தென்படுவதாக நான் குறிப்பிட்ட அதே தொனி நண்பரின் மறுப்பிலும் தொழிற்படுகிறது. மாற்றிக்கொண்டால் மகிழ்ச்சி.
சங்கர் ///முதலில் இந்த வசனத்தின் சரியான மொழி பெயர்ப்பை அடைப்பு குறி இல்லாமல் தெரிந்து கொள்வோம்.///
அடைப்புக் குறி பயன் படுத்துவது விளங்கிக் கொள்ளும் வண்ணமாகவே .அரபு மொழி நடைக்கும் பிற நடைக்கும் உள்ள வித்தியாசத்தால் விளக்கமே அடைப்புக்குறிக்குள் கொண்டு வரப் படுகிறது.
///வேலையாள என்பவர் முகமது என்று எப்படி கூற முடியும்.ஏனெனில்
17.2 மூஸா பற்றியும் 17.3 நூஹை பற்றியும் பேசுகிறது///
அந்த வசனத்திற்கு ஹதித்கள் மூலம் விரிவுரையாளர்கள் கூறும் விளக்கத்தை ஆதாரத்தோடு கூறி இருக்கும்போது உமது அறை வேக்காட்டுத்தனத்தை ஒதுக்கி வைப்பதே நல்லது..
///அந்த சமயம் மெக்காவில் உள்ள ஆலயத்தில் விக்கிரகங்கள்(360?) இருந்தன.எப்படி புனித மசூதி ஆக முடியும்///
நேர்மையான அதிகாரி சகதியில் விழுந்தாலும் அவர் மிஸ்டர் கிளீன் தான்
///.யூதர்களின் ஆலயமும்(சுலைமான் கட்டியது) இடிக்கப் பட்டு அங்கே இல்லை. எந்த மசூதிக்கு சென்றார்?///
பாபரி மசூதி இடிக்கப்பட்டாலும் இன்று வரை அது பாபரி மசூதி என்றே கூற பட்டு வருகிறது.
சங்கர் \\\விண்வெளி பயணத்தை குறிக்கும் குரான் வசனம் 17.1 பல அடைப்புக் குறி வார்த்தைகள் இடப்பட்டு விளங்க படுகிறது.அது ஏன் என்றால் பதில் கிடையாது///
௨௫ ஹதித்கள் முகம்மது நபி[ஸல்] தான் வின் வெளிபயணம் தான் என்பதை தெளிவாக விளக்கும்போது கோமாளித்தனமாக உளற வேண்டாம்
//தெளிவாக விளக்கும்போது //
அவ்ளோ தெளிவாஆஆஆஆஆஆஆ இருக்கிங்கன்னு தெரியது!
/மதங்களுக்கு அதைப்பற்றி ஒன்றும் தெரியது, அவைகள் வெற்று நம்பிக்கைகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவைகள்////
கலை,
வெற்று நம்பிக்கைகள் 1400 ஆண்டுகளுக்கு மேலாக கோலாச்சிக்கொண்டு இருக்கின்றன. ஏங்கல்ஸ் ,மார்க்சின் கற்பனை காவியங்களாக சினிமா எடுத்தால்கூட [பண்ணை வாழ்க்கையை ஏ படமாக காட்டினால் கூட] தேறாத கம்யுனிசம் இன்று பரிதாப நிலையில் உள்ளது..
நன்றி நண்பர் இப்ராஹிம்
இந்த அடைப்புக் குறிக்குள் உள்ள விவரங்கள் மூல மொழியில் இருக்காது.
அடியார்__முகமது
புனித மசுதி__மெக்கா
தூர மசுதி__ஜெருசலேம்
1. குரான் 17.1 ஐ ஹதிதுகள்(200 ஆண்டுகளுக்கு பிறகு தொகுக்கப் பட்டவை) துணை கொண்டே முகமது என்று கூற முடியும்.ஹதிதுகளின் நம்பகத் தன்மை பொறுத்தே இவ்விவரங்களை நம்ப முடியும்.
2.//நேர்மையான அதிகாரி சகதியில் விழுந்தாலும் அவர் மிஸ்டர் கிளீன் தான்//
யார் அந்த நேர்மையான அதிகாரி?
சகதியில் விழுந்தார் என்றால் என்ன செய்தார்?
கி.பி 621ல் காபாவில் சிலைகள்,அவற்றின் வழிபாடு, இருந்தாலும் புனித மசூதி என்று சொல்கிறீர்கள் என்று எடுத்துக் கொள்கிறேன்.
கிரி வலம் முகமது நாள் முதல் இன்றுவரை செய்வதால் இது ஒன்றும் பெரிய விஷயமில்லை.
_____________
1647. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் மக்காவுக்கு வந்தபோது, இறையில்லம் கஅபாவை வலம் வந்த பின் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பின்பு ஸஃபா மர்வாவுக்கிடையே ஓடினார்கள்.
“இதை அறிவித்த பிறகு, ‘நிச்சயமாக, அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கு அழகிய முன் மாதிரி இருக்கிறது’ என்னும் இறைவசனத்தை இப்னு உமர்(ரலி) ஓதினார்கள்” என அம்ர்ப்னு தீனார்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
Volume :2 Book :25
1649. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபாவையும் ஸஃபா மர்வாயையும் வலம் வரும்போது தொங்கோட்டம் ஓடியது இணைவைப்போருக்குத் தம் பலத்தைக் காட்டுவதற்காகத்தான்.
Volume :2 Book :25
_____________
3.//பாபரி மசூதி இடிக்கப்பட்டாலும் இன்று வரை அது பாபரி மசூதி என்றே கூற பட்டு வருகிறது//
இன்னொரு கோஷ்டி வேறு பெயர் சொல்லுது.அது வேறு விஷயம்.
ஜெருசலேமில் சுலைமான் கட்டிய ஆலயம் இல்லை.வெற்று இடத்தை பார்த்து மசுதி என்று கூறினார்.
இப்போது சரியான விளக்கம்
அழைத்து சென்றவர்இறைவன்
செல்லப்பட்டவர்_முகமது(ஹதிதின் படி மட்டும்)
புனித மசுதி______சிலைகள் உள்ள காபா
தூர மசூதி____ வெற்று இடம்
உங்களின் விளக்கப் படி அடைப்புக் குறி போட்டால் எப்படி இருக்கும்?
___________
ரபி
///உண்மையான விண்வெளி பயணம் சென்றுவந்த தினத்தைக் கூட யாரும் உலகில் கொண்டாடுவது இல்லை. ஆனால் ஒரு கற்பனையான டுபாக்கூர் பயணத்திற்கு ஆண்டுதோறும் விழா எடுத்து சிறப்புத் தொழுகை என கொண்டாடி மகிழ்வதுதான் இவர்களின் பகுத்தறிவாம்(?),
விண்வெளி பயணத்தை காட்டி,இஸ்லாம் ஒன்றும் பூச்சாண்டி காட்டவில்லை.விண்வெளி பயணத்தை உறுதி படுத்தும் ஹதித்கள் அதை வருடந்தோறும் கொண்டாடுவதர்க்கோ தொழுகை நடத்துவதற்கோ சான்றாக இல்லை.
கம்யுனிசம்தான் உலகதீர்வு என்று சொல்லிக் கொண்டு அரபு பெயர்களையும் இஸ்லாமிய திருமணமாக பதிவு செய்யப்பட்டதையும் மாற்ற திராநியற்றதொடு புரட்சி திருமணம் என்று கொள்கை புரட்டாக நாங்கள் கொண்டாடி கொண்டு இருக்கவில்ல்லை
ஹதிதுகள்(புஹாரி) கூறும் இரவு பௌஅண தொடக்கம்
__________
1.காபாவில் இருந்து சுத்தம் செய்யப் பட்டு முதல் வானம்
________________________________________________
3207. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் இறையில்லம் கஅபாவில் இருமனிதர்களுக்கிடையே (பாதி) தூக்கமாகவும் (பாதி) விழிப்பாகவும் இருந்தபோது நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரப்பப்பட்ட தங்கத் தட்டு ஒன்று என்னிடம் கொண்டு வரப்பட்டது. என்னுடைய நெஞ்சம் காறையெலும்பிலிருந்து அடி வயிறு வரை பிளக்கப்பட்டது. பிறகு ஸம்ஸம் நீரினால் என் வயிறு கழுவப்பட்டது. பிறகு, (என் இதயம்) நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரப்பப்பட்டது. மேலும், கோவேறுக் கழுதையை விடச் சிறியதும் கழுதையை விடப் பெரியதுமான ‘புராக்’ என்னும் (மின்னல் வேக) வாகனம் ஒன்றும் என்னிடம் கொண்டு வரப்பட்டது. நான் (அதில் ஏறி) ஜிப்ரீல்(அலை) அவர்களுடன் சென்றேன். நாங்கள் முதல் வானத்தை அடைந்தோம்…..
__________________
2 இங்கு படுதத இடம் கொஞ்சம் குழப்பம் காபாவின் அருகில் எங்கோ
__சுத்தம் செய்யப் பட்டு___முதல் வானம்
______________
3887. அப்பாஸ் பின் மாலிக் ரலி அவர்கள் கூறினார்கள்.
நான் (இறையில்லாம் கஅபா அருகில்) ஹத்தீமில்… அல்லது ஹிஜ்ரில்… படுத்துக் கொண்டிருந்தேன். அப்போது என்னிடம் ஒருவர் (வானவர் ஜிப்ரீல்) வந்து (என் நெஞ்சைப்) பிளந்தார்.பிறகு அ(ந்த வான)வர் (ஜீப்ரீல்) என்னுடைய இதயத்தை வெளியிலெடுத்தார். பிறகு, இறை நம்பிக்கையால் நிரப்பப்பட்ட தங்கத் தட்டு ஒன்று என்னிடம் கொண்டு வரப்பட்டது, என்னுடைய இதயம் கழுவப்பட்டு, (அதில்) அந்த இறை நம்பிக்கை நிரப்பட்டது. பிறகு பழையபடி மீண்டும் (என்னுடைய இதயம், மூடி) வைக்கப்பட்டது. பிறகு கோவேறு கழுதையை விடச் சிறியதும் கழுதையை விடப் பெரியதுமான வெள்ளை நிறத்திலமைந்த (மின்னல் வேக) வாகனம் ஒன்றும் என்னிடம் கொண்டு வரப்பட்டது.
-(இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அனஸ்(ரலி) அவர்களிடம் ஜாரூத்(ரஹ்), ‘அது புராக் எனும் வாகனம் தானே அபூ ஹம்ஸா அவர்களே!” என்று கேட்டார்கள். அதற்கு அனஸ்(ரலி), ‘ஆம், (அது புராக் தான்.) அந்த வாகனம் பார்வை எட்டுகிற தூரத்திற்கு ஓர் எட்டு வைக்கும்” என்று
பிறகு நான் அந்த வாகனத்தில் ஏற்றப்பட்டேன். என்னை ஜிப்ரீல் முதல் வானத்திற்கு அழைத்துச் சென்று அதன் கதவைத் திறக்கும்படி கூறினார். அப்போது, ‘யார் அது?’ என்று கேட்கப்பட்டது.
_______
3 மூன்று வானவர்கள்.அவர்களுக்கு முகமது யாரென்று தெரியாமல் மற்றவர்களை கேட்கிறார்.
காபாவில் சுத்தம் செய்து பிறகு பைத்துல் முகத்தஸ்(ஜெருசலேம் மசுதி பிறகு முதல் வானம்
______________
7517. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கஅபா பள்ளிவாசலிலிருந்து (விண் பயணத்திற்கு) இரவில் அழைத்துச் செல்லப்பட்டது பற்றி அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார்:
நபி(ஸல்) அவர்களுக்கு (சட்டங்கள் தொடர்பாக) வேத அறிவிப்பு (வஹீ) வருவதற்கு முன்பு (ஒரு நாள் இரவு) அவர்கள் புனித (கஅபா) பள்ளிவாசலில் உறங்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களிடம் (வானவர்கள்) மூன்று பேர் வந்தனர். அவர்களில் முதலாமவர், (அங்கு படுத்திருந்த ஹம்ஸா(ரலி), முஹம்மத்(ஸல்), ஜஅஃபர்(ரலி) ஆகியோரை நோக்கி) ‘இவர்களில் அவர் (முஹம்மத் – ஸல்) யார்?’ என்று கேட்டதற்கு நடுவிலிருந்த(வான)வர் ‘இவர்களில் (நடுவில் படுத்திருக்கும்) சிறந்தவரே அவர்’ என்று பதிலளித்தார். அப்போது அம்மூவரில் மூன்றாமவர், ‘இவர்களில் சிறந்தவரை (விண் பயணத்திற்காக) எடுத்து வாருங்கள்’ என்று கூறினார். அன்றிரவு இவ்வளவு தான் நடந்தது. அடுத்த(நாள்) இரவில் நபி(ஸல்) அவர்கள் தங்களின் உள்ளம் பார்க்கிற நிலையில் (-உறக்க நிலையில்) அம்மூவரும் வந்தபோது தான் அவர்களைக் கண்டார்கள். நபி(ஸல்) அவர்களின் கண் மட்டுமே உறங்கும்; அவர்களின் உள்ளம் உறங்குவதில்லை. -இறைத்தூதர்கள் நிலை இவ்வாறுதான்; அவர்களின் கண்கள் மட்டுமே உறங்கும்; அவர்களின் உள்ளங்கள் உறங்கமாட்டா. பிறகு அந்த வானவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் ஏதும் பேசாமல் அவர்களைத் தூக்கிக் கொண்டுவந்து ஸம்ஸம் கிணற்றின் அருகில் இறக்கினர். அவர்களிடமிருந்து நபி(ஸல்) அவர்களின் பொறுப்பை (வானவர்) ஜிப்ரீல்(அலை) ஏற்றார்கள்.158
அவர் நபி(ஸல்) அவர்களின் காறையெலும்பிலிருந்து நெஞ்சின் நடுப்பகுதி வரை பிளந்து, நெஞ்சிலிருந்தவற்றையும் வயிற்றிலிருந்தவற்றையும் அகற்றினார். பின்னர் தம் கையால் நபியவர்களின் இருதயத்தை ஸம்ஸம் நீரால் கழுவி, அவர்களின் வயிற்றைச் சுத்தப்படுத்தினார். பிறகு தங்கத் தட்டு ஒன்று கொண்டு வரப்பட்டது. அதில் தங்கக் கோப்பை ஒன்று இருந்தது. அது இறைநம்பிக்கையாலும் ஞானத்தாலும் நிரப்பப்பட்டிருந்தது. அதனை நபியவர்களின் இருதயத்திலும் தொண்டை நாளங்களிலும் இட்டு நிரப்பினார் ஜிப்ரீல்; பின்னர் இருதயத்தை மூடிவிட்டார். (பிறகு ‘புராக்’ வாகனம் கொண்டு வரப்பட்டு அதில் ஏற்றப்பட்ட நபியவர்கள் பைத்துல் முகத்தஸை அடைந்தார்கள். அங்கிருந்து) நபி(ஸல்) அவர்களை அழைத்துக்கொண்டு அவர் முதல் வானத்திற்கு உயர்ந்தார்.
_______________
ஏன் இந்த் மூறு புஹாரியின் ஹதிதுகளில் வித்தியாசம்.ஜெருசலெம் போனதாக ஒரு ஹதிது மட்டுமே கூறுகிரது.
எது சரி?
_______________
இன்னும் விண்வெளி பயணம் தொடங்கவில்லை
COMING SOON
_________________
//.யார் அந்த நேர்மையான அதிகாரி?
சகதியில் விழுந்தார் என்றால் என்ன செய்தார்?/////
நேர்மையான அதிகாரி[ புனித மக்கா ]யை சங்கர் தள்ளி விட்டதால் சகதியில் விழுந்தாலும் [குறைஷிகள் சிலை வைத்து வணங்கினாலும் ] அவர் மிஸ்டர் கிளீன் தான் .[புனித மசூதிதான் ]
1647 1648 ஹதித்களை எதற்காக சுற்றி வளைத்துள்ளீர்கள்?
புனித மசுதி______சிலைகள் உள்ள காபா
தூர மசூதி____ வெற்று இடம்
நியாயவான்கள் அவர் சதிகாரர்களால் சகதியில் தள்ளி விடப்பட்டு சகதியுடன் வந்தாலும் மிஸ்டர் கிளீன் என்றுதான் சொல்லுவார்கள்.
நீதிமான்கள் அங்கு பள்ளிவாசல் இடிக்கப்பட்டாலும் அதை பாப்ரி மசூதி என்றே கூறுவார்.சதிகாரர்கள் அதை சர்ச்சைக் குரிய பகுதி என்று ஆக்கிரமிப்பாளர்கள் வேறு பெயரையும் கூறுவார்கள்
sankar///ஏன் இந்த் மூறு புஹாரியின் ஹதிதுகளில் வித்தியாசம்.ஜெருசலெம் போனதாக ஒரு ஹதிது மட்டுமே கூறுகிரது.
எது சரி?////
கலை>சங்கர் மதுரையிலிருந்து திருச்சி வழியாக சென்னை சென்றார்
வால்பையன்>சங்கர் சென்னை சென்றார்.
ரபி>சங்கர் மதுரையிலிருந்து சென்னை சென்றார்
எது சரி?
sankar////இன்னும் விண்வெளி பயணம் தொடங்கவில்லை
COMING SOON////
கலகலக்கும் பண்ணை வாழ்க்கை எப்போது வரும்?
// சங்கர் தள்ளி விட்டதால் //
//சதிகாரர்களால் சகதியில் தள்ளி விடப்பட்டு//
நண்பர் இப்ராஹிம்,
என்னை சதி செய்பவன் என்று கூறி விட்டீர்களே இப்ராஹிம்.
ஆனால் சதி செய்பவர்களிலேயெ சிறந்தவர் யார்?
3:54. (ஈஸாவை நிராகரித்தோர் அவரைக் கொல்லத்) திட்டமிட்டுச் சதி செய்தார்கள்; அல்லாஹ்வும் சதி செய்தான்; தவிர அல்லாஹ் சதி செய்பவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான்..
சங்கர். ////தவிர அல்லாஹ் சதி செய்பவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான்…/////
இஸ்லாத்தை எப்படியாவது ஒழித்து விடலாம் .என்று கங்கணம் கட்டிக் கொண்டு சதித்திட்டம் வகுக்கும் சவடால் கம்யுனிச வாதிகளுக்கும் அமெரிக்கரகளுக்கும் அது போன்றே பதிலடி கொடுப்பவன். உங்களது சதிகள் அவனது பதிலடி முன் தூள் தூளாக நொறுங்கி போகும்.
ஒருகன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்ட இஸ்லாம் சொல்லித்தரவில்லை.
வெள்ளைக் குதிரை(?)யில் விண்வெளி பயணம்
தொடக்க பாடல்
திரு நகூர் அனிஃபா அவர்களின் கருணைக் கடலாம் என்ற மெட்டில் பாடவும்.
_________
அருமை நபியாம் அண்ணல் முகமது பயணச் சரிதம் கேளுங்கள்
இணையில்லாத இறைவனின் தூதர் அற்புத பயணம் பாருங்கள்
_________
ஒரு நாள் இரவு புனிதப் பள்ளி பைத்துல் ஹராம் அருகினிலே
இறைவனை தொழுது இனிதே துயின்றார் நல்ல அடியார் முகமதுவே.
வானவர் வந்து ஜம்ஜம் நீரிலே சுத்தம் செய்தார் உள்ளத்தையே
வாகனம் வந்தது ஜிப்ரீலோடு வானம் அழைத்து சென்றிடவே
__
இறைத்தூதராம் நபி
அவர் வாகனம்தான் புராக்
________
முன் கதை சுருக்கம்.
_________________________
ஜம்ஜம் நீரால் இறைத்தூதரின் உடல் இதயம்(உள்ளம்? நன்றி திரு பி.ஜே)சுத்தம் செய்யப்பட்ட்டு விட்டது.ஒரு வழியாக காபாவில் இருந்தோ அல்லது அருகில் இருந்தோ,ஜெருசலேமுக்கு போயும் போகாமலும் ஜிப்ரீலோடு புராக்கில் ஏறி முதல் வானத்தை அடைகின்றனர்.
____________________________
பயணம் தொடங்கியது
காட்சி.1. முதல் வானம்
________
புஹாரி 3207. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
….
நாங்கள் முதல் வானத்தை அடைந்தோம். ‘யார் அது?’ என்று கேட்கப்பட்டது. ஜிப்ரீல்(அலை), ‘ஜிப்ரீல்” என்று பதிலளித்தார். ‘உங்களுடன் (வந்திருப்பவர்) யார்?’ என்று கேட்கப்பட்டது. அவர், ‘முஹம்மது” என்று பதிலளித்தார். ‘அவரை அழைத்து வரச் சொல்லி ஆள் அனுப்பப்பட்டிருந்ததா?’ என்று கேட்கப்பட்டது. அவர், ‘ஆம்” என்றார். ‘அவரின் வரவு நல்வரவாகட்டும்! அவரின் வருகை மிக நல்ல வருகை” என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நான் ஆதம்(அலை) அவர்களிடம் சென்றேன். அவர்களுக்கு சலாம் சொன்னேன். அவர்கள், ‘(என்) மகனும் இறைத் தூதருமான உங்கள் வரவு நல்வரவாகுக!” என்றார்கள். …..
__________________
புஹாரி 349
…
முதல் வானத்திற்கு என்னை ஏற்றிச் சென்றார்கள். முதல் வானத்தை அடைந்ததும் அந்த வானத்தின் காவலரிடம் ‘திற’ என்றார்கள். அவ்வானவர், ‘யார் அவர்?’ என்று வினவியதற்கு ‘நானே ஜிப்ரீல்’ என்று பதில் கூறினார். அதற்கு அவ்வானவர், ‘உம்முடன் எவரேனும் இருக்கிறார்களா?’ எனக் கேட்டார். ஜிப்ரீல் ஆம்! என்னுடன் முஹம்மத் இருக்கிறார்கள்’ என்று கூறினார்கள். அதற்கு வானவர் ‘அவர் அழைக்கப்பட்டிருக்கிறாரா?’ எனக் கேட்டார். ஜிப்ரீல் ‘ஆம்’ என்றார்கள்.
வானவர், முதல் வானத்தைத் திறந்ததும் நாங்கள் அவ்வானத்தில் ஏறினோம். அப்போது அங்கு ஒருவர் அமர்ந்திருந்தார். அவரின் வலப்பக்கம் சில மனிதர்களும் இடது மக்களும் சில மனிதர்களும் காணப்பட்டார்கள். அவர் தங்களின் வலப்பக்கமுள்ள மனிதர்களைப் பார்த்தால் சிரிக்கிறார். தங்களின் இடப்பக்கமுள்ளவர்களைப் பார்த்தால் அழுகிறார்.
இந்நிலையிலுள்ள அவர் ‘நல்ல நபியே! வருக! நல்ல மகனே வருக!’ என்றார். அப்போது ஜிப்ரீல்(அலை) அவர்களிடம் இவர் யார்? என கேட்டேன். ‘இவர் தாம் ஆதம். அவரின் வலப்பக்கமும் இடப்பக்கமும் உள்ளவர்கள் அவரின் சந்ததிகளிலுள்ள மனிதர்கள். வலப்பக்கமுள்ளவர்கள் சுவர்க்கவாசிகள்; இடப்பக்கமுள்ளவர்கள் நரகவாசிகள். (எனவேதான்) அவர் தங்களின் வலப்பக்கம் பார்த்துச் சிரிக்கிறார்; தங்களின் இடப்பக்கம் பார்த்து அழுகிறார்’ என்று கூறினார்கள். …
___________
7517
…
(பிறகு ‘புராக்’ வாகனம் கொண்டு வரப்பட்டு அதில் ஏற்றப்பட்ட நபியவர்கள் பைத்துல் முகத்தஸை அடைந்தார்கள். அங்கிருந்து) நபி(ஸல்) அவர்களை அழைத்துக்கொண்டு அவர் முதல் வானத்திற்கு உயர்ந்தார். அந்த வானத்தின் கதவுகளில் ஒன்றை அவர் தட்டினார். அப்போது அந்த வானத்திலிருந்த (வான)வர்கள், ‘யார் அவர்?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘ஜிப்ரீல்’ என்று பதிலளித்தார். ‘உங்களுடன் வந்திருப்பவர் யார்?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘என்னுடனிருப்பவர் முஹம்மத்’ என்று பதிலளித்தார். ‘(அவரை அழைத்துவரச் சொல்லி) ஆள் அனுப்பப்பட்டிருந்ததா?’ என்று கேட்டனர். அதற்கு ஜிப்ரீல்(அலை) ‘ஆம்’ என்றார்கள். ‘அவரின் வரவு நல் வரவாகட்டும்! வாழ்த்துகள்!’ என்று கூறினர். நபியவர்களின் வருகையால் வானில் இருபபோர் மகிழ்ச்சியடைகிறார்கள். பூமியில் அல்லாஹ் எதை (நிகழச் செய்ய) நினைக்கிறானோ அதை அவனாக வானவர்களிடம் அறிவிக்காத வரை வானவர்கள் அதை அறிந்து கொள்ளமாட்டார்கள்.
அந்த முதல் வானத்தில் நபி(ஸல்) அவர்கள் (ஆதி மனிதர்) ஆதம்(அலை) அவர்களைக் கண்டார்கள். அப்போது ஜிப்ரீல்(அலை) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம், ‘இவர்தாம் உங்கள் தந்தை. இவருக்கு நீங்கள் சலாம் (முகமன்) கூறுங்கள்’ என்றார்கள். அவ்வாறே அவருக்கு நபி(ஸல்) அவர்கள் முகமன் கூற, அதற்கு ஆதம்(அலை) அவர்கள் பதில் (முகமன்) சொல்லிவிட்டு, ‘அருமை மகனே! வருக! வருக! நீரே நல்ல புதல்வர். (உங்கள் வரவிற்கு) வாழ்த்துக்கள்’ என்று கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் அந்த முதல் வானத்தில் பாய்ந்தோடும் இரண்டு நதிகளைக் கண்டார்கள். உடனே ‘ஜிப்ரீலே! இவை எந்த நதிகள்?’ என்று கேட்டார்கள். அதற்கு ஜிப்ரீல்(அலை) அவர்கள், ‘இவையிரண்டும் நைல் மற்றம் யூப்ரடீஸ் நதியின் மூலங்கள்’ என்று பதிலளித்தார்கள். பிறகு நபி(ஸல்) அவர்களை அழைத்துக்கொண்டு அந்த வானத்தில் சென்று கொண்டிருந்தபோது இன்னொரு நதியையும் கண்டார்கள். அதன் மீது முத்துகளாலும் பச்சை மரகத்தாலும் ஆன மாளிகை ஒன்று இருந்தது. (அந்த நதியில்) நபி(ஸல்) அவர்கள் தங்களின் கையால் அடித்தார்கள். அ(தன் மண்ணான)து உயர்ந்த நறுமணமிக்க கஸ்தூரியாக இருந்தது. நபி(ஸல்) அவர்கள், ‘இது என்ன நதி ஜிப்ரீலே?’ என்று கேட்டார்கள். ஜிப்ரீல்(அலை) அவர்கள், ‘இது உங்களுக்காக உங்களுடைய இறைவன் ஒதுக்க வைத்துள்ள கவ்ஸர் (எனும் நதி) ஆகும்’ என்று பதிலளித்தார்கள்…
________________
காட்சி 2. ல் இரண்டாம் வானம் இன்னும் வியத்தகு சம்பவங்கள் நிறைந்தது.
DONT MISS IT
Under the Law ( ix ) section iii. News Publication & Duplication and Imitation of Articles Act, Mr.Shankar must pay compensation to Indian@Indian.com for above screenplay & script.
FYKI
நண்பர் இபுறாஹிம்
//விண்வெளிப் பயணத்தை உறுதிபடுத்தும் ஹதீதுகள்…….//
குரானோ ஹதீதுகளோ வெறும் புத்தகத்தில் எழுதி வைத்துக் கொண்டால் மட்டும் அது உறுதிபடுத்தப்பட்ட பயணமாகிவிடுமா?புஷ்பக விமானப் பயணம்,முருகனின் மயில் வாகனப் பயணம் இவைகளும் உறுதிபடுத்தப்பட்ட பயணமாக எடுத்துக் கொள்ளலாமா?இப்படித்தானே மாற்று மத நண்பர்களும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள்?இதுபோல் ஒன்றுக்கும் உதவாத கற்பனைக் கட்டுக்கதைகளையும் மூட நம்பிக்கைகளையும் களைந்துவிட்டு சுயமாக சிந்திக்கத்தான் சொல்கிறோம். தலைப்பு கற்பனையான விண்வெளிப்பயணத்தைப் பற்றித்தான்.கம்யூனிசத்திலும் இஸ்லாத்திலும் உள்ள நல்ல கொள்கைகளில் எது சிறந்தது என்ற தலைப்பு வரும்போது அது பற்றி சிந்திக்கலாம் நண்பரே! தவிர நல்லவைகள் எங்கிருந்து கிடைத்தாலும் நமதாக்கிக் கொள்வோம் என்பதில் எனக்கு உடன்பாடு உண்டு.அதுபோல் பயன்படாத குப்பைகளைக் களைந்தெரிவதிலும் ஆர்வம் உண்டு.
ஆள் இல்லா வெறும் விண்வெளிக்களம் இன்று பயணம் செய்வதினால் உலகில் உள்ள ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கே பயன் உண்டு.பல்லாயிரமாண்டுகளுக்கு முன் பயணித்ததாகக் கூறிக்கொள்ளும் விண்பயணத்தால் இன்று யாருக்கு பயன்? முன்னவர்களைப்போல் நாமும் விண்வெளிக்கு பயணிக்க வேண்டும் என சிந்திப்பது அறிவின் வளர்ச்சி,அவர்கள் பயணித்ததையே நினைத்துக் கொண்டிருப்பது அறிவின் வீழ்ச்சி.
முதல் வானத்தின் முதல் பிரச்சினை
_________________________________________________________
முதல் வானத்தில் ஆதம் அவர்களை முகமது சந்திக்கிறார். ஆதமுக்கு வலது இடது புறங்களில் சொர்ர்கம்,நரகம் ஆகியவற்றை பார்த்ததாகவும் அதில் மக்கள் இருந்ததாகவும் ஹதிதுகள் கூறுகின்றன.
_______
புஹாரி 349
முதல் வானத்தைத் திறந்ததும் நாங்கள் அவ்வானத்தில் ஏறினோம். அப்போது அங்கு ஒருவர் அமர்ந்திருந்தார். அவரின் வலப்பக்கம் சில மனிதர்களும் இடது மக்களும் சில மனிதர்களும் காணப்பட்டார்கள். அவர் தங்களின் வலப்பக்கமுள்ள மனிதர்களைப் பார்த்தால் சிரிக்கிறார். தங்களின் இடப்பக்கமுள்ளவர்களைப் பார்த்தால் அழுகிறார்.
இந்நிலையிலுள்ள அவர் ‘நல்ல நபியே! வருக! நல்ல மகனே வருக!’ என்றார். அப்போது ஜிப்ரீல்(அலை) அவர்களிடம் இவர் யார்? என கேட்டேன். ‘இவர் தாம் ஆதம். அவரின் வலப்பக்கமும் இடப்பக்கமும் உள்ளவர்கள் அவரின் சந்ததிகளிலுள்ள மனிதர்கள். வலப்பக்கமுள்ளவர்கள் சுவர்க்கவாசிகள்; இடப்பக்கமுள்ளவர்கள் நரகவாசிகள். (எனவேதான்) அவர் தங்களின் வலப்பக்கம் பார்த்துச் சிரிக்கிறார்; தங்களின் இடப்பக்கம் பார்த்து அழுகிறார்’ என்று கூறினார்கள். …
_____
1. கியாமத் நாளில்தான் அனைவரையும் உயிராக்குகிறார் இறைவன்
__________
22:7. (கியாம நாளுக்குரிய) அவ்வேளை நிச்சயமாக வரும்; இதில் சந்தேகமே இல்லை; மண்ணறைகளில் இருப்போரை, நிச்சயமாக அல்லாஹ் (உயிர் கொடுத்து) எழுப்புவான்.
_________
45:26. “அல்லாஹ் உங்களுக்கு உயிர் கொடுக்கிறான்; பின்னர் அவனே உங்களை மரணம் அடையச் செய்கிறான்; பின்னர் கியாம நாளன்று அவன் உங்களை ஒன்று சேர்ப்பான் – இதில் சந்தேகமேயில்லை” எனினும் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள் என்று (நபியே!) நீர் கூறும்.
_____
கியாமத் நாளுக்கு முன்பே வானங்களில்,சொர்க்கம்,நரகம் ஆகியவற்றில் மனிதர்கள் எப்படி வந்தார்கள்?
குரானுக்கு முரண்பட்ட ஹதிது வசனங்களை நிராகரிக வேண்டுமல்லவா?
அப்போது விண்வெளி பயணம் குரானுக்கு முரண்பட்டது. சரியா?