ஆனால், முன்பே இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கமா என்ற கட்டுரையில் சொன்னது போல மூமீன்களே இது எளிய மார்க்கம்தான் போலிருக்கிறது என்று நினைத்து பல தவறான வழிகளில் சென்றுவிடுகிறார்கள்.
ஆகையால் மூமீன்களுக்கு சில விஷயங்களை விளக்க வேண்டியிருக்கிறது.
இஸ்லாத்துக்குள் வருவது எளிது. எல்லா மார்க்கம், மதங்களிலுமே உள்ளே நுழைவது எளிது. கிறிஸ்துவராக வேண்டுமென்றால், அற்புத சுகமளிக்கும் கூட்டத்துக்கு போய் அல்லேலூயா என்று கத்தினால் போதுமானது. அதே போல இந்து மதத்துக்கு போக வேண்டுமென்றால், கோவிலுக்கு போய் ஒரு அர்ச்சனை செய்தால் போதுமானது. அதே போல இஸ்லாத்துக்கு வர வேண்டுமென்றால், லாயிலாஹா இல்லல்லாஹ் என்று கலிமா சொன்னால் போதுமானது. அபிஷியலாக மதம் மாற வேண்டுமென்றால் எம்மதத்தவராக இருந்தாலும் கெஸெட்டில் பதிவது அவசியம். இல்லையென்றால் இந்திய அரசாங்கம் கண்டுகொள்ளாது.
அது கிடக்கட்டும். இஸ்லாத்துக்கு வருவோம்.
தாவா பணியின் போது, இஸ்லாத்தை பற்றி சில விஷயங்களை பேச கூடாது. உதாரணமாக, மற்ற மதங்கள் போல நினைத்தால் இஸ்லாத்தை விட்டு வெளியேறவும் முடியாது என்பதை நாம் சொல்லிவிடக்கூடாது. ஆனால், அதே நேரத்தில் நினைத்தால் நீ வெளியே போய்விடலாம் என்றும் சொல்லக்கூடாது.
”நெனச்சா வெளில போய்க்கலாங்களா?” என்று கேட்டால், “வெளிக்கு போகறதுதானே ? எங்க வீட்டு கொல்லையில கூட நீ போய்க்கலாம்.. நாமல்லாம் சகோதரருங்கல்லா?” என்று பேச்சை மாற்ற வேண்டும்.
இஸ்லாத்துக்கு வருவதற்கு முன்னதாக, “ இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம். இதிலே ஒரே அமைதிதான். நம்ம ஜெயினுலாபுதீன் மட்டுந்தேன் சும்மா வாள் வாள்னு கத்திகிட்டிருப்பாரு. அது அமைதி இல்லத்தான். ஆனா நாங்கல்லாம் ரொம்ப அமைதில்லா” என்று சொல்லி சமாதானம் செய்யவேண்டும். (மேல் தரவுகளுக்கு: இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கமா? என்ற தாவாப்பணி சிறப்பு கட்டுரை பார்த்துகொள்ளவும்). அவ்வப்போது அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக என்று எழுத வேண்டும். சொல்லவேண்டும். அல்லாஹ்வுக்கு எவ்வளவு சாந்தியும் சமாதானமும் இருக்குன்னு நமக்கு தெரியாதா? சட்டியில இருந்தாத்தானே ஆப்பையில வரும்பாய்ங்க? அதுனால தெகிரியமா சாந்தி சமாதானமெல்லாம் சொல்லலாம். ஒன்னும் பிரச்னையில்ல. இருக்கறது கொஞ்சூண்டு. அள்ளிட்டா போய்டப்போறாய்ங்க?
சரி எளிய மார்க்கத்துக்கு வருவோம்.
இஸ்லாம் ஒரு கடினமான மார்க்கம் என்பது நமக்குத்தான் தெரியும். அதுவும் பிறந்த காலத்திலிருந்தே இது ஹராம், இது ஹலால் என்று வளர்ந்த நமக்கு ரத்தத்திலேயே ஊறிய விஷயம். ஆனா இந்த அமெச்சூர் முஸ்லீமுக்கு அதெல்லாம் தெரியாது. ஆகையால் கொஞ்சம் மார்க்க கல்வி கொடுத்தாக வேண்டும்.
முதலில் நாம் உபயோகிக்கும் அரபி வார்த்தைகளுக்கெல்லாம் தமிழில் அர்த்தம் சொல்லித்தர வேண்டும். இல்லைன்னா ஒரே ரகளைதான். இது மாதிரி ஒரு அமெச்சூர் முஸ்லீம் நம்மளை பார்த்து முதல்ல இன்ஷா அல்லாஹ் என்று சொல்லிக்கொண்டிருந்தார். அப்புறம் எதுக்கெடுத்தாலும் இன்ஷா அல்லாஹ்தான்.
இன்ஷா அல்லாஹ் உச்சா போயிட்டு வரேன்.
இன்ஷா அல்லாஹ் ஆய் போய்ட்டு வரேன்.
இன்ஷா அல்லாஹ் கால் கழுவுறேன்
இன்ஷா அல்லாஹ் சாப்பாடு போடு
இன்ஷா அல்லாஹ் இது என்னக்கி பண்ண பிரியாணிடா?
இன்ஷா அல்லாஹ் உவ்வே வாந்தி வருது.
இன்ஷா அல்லாஹ் ப்ளக் ப்ளக்
இப்படியே எல்லாத்துக்கும் இன்ஷா அல்லாஹ் சொல்லி கொன்னேபுட்டான்.
கொஞ்சம் முன்னேறியவுடனே அல்ஹம்துலில்லாஹ்.. அதுவும் வானம் படம் பார்த்துட்டு கொலவெறியோடத்தான் அல்ஹம்துலில்லாஹ் சொல்லிக்கிட்டிருந்தான். எனக்கே கொஞ்சம் பயமா போயி ”மாப்ள.. எங்க மாமா ஊர்லர்ந்து வர்ரார்டா. அதனால வேற வீடு பாக்கணும்னு” சொல்லி உடுஜூட் பண்ணிட்டேன்.
ஸோ... இதுமாதிரி நெறய அரபி இஸ்லாமிய வார்த்தைகளை போட்டு பேசணும். எக்குதப்பா பேசி மாட்டிக்கக்கூடாது.
அப்புறம் ஒரு பெர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரீய லிஸ்டு இருக்கு. எது ஹராம் எது ஹலால் (அதாவது எதை முஸ்லீம்கள் செய்யக்கூடாது. எதை முஸ்லீம்கள் செய்யலாம் என்று)
சிம்பிளா சொல்லணும்னா எதெல்லாம் நபிகள் நாயஹம் (ஸல்) செய்திருக்காரோ, செய்ய சொல்லியிருக்காரோ அதெல்லாம் ஹலால். எதெல்லாம் செய்யக்கூடாதுன்னு சொல்லியிருக்காரோ அதெல்லாம் ஹராம்.
நபிஹள் நாயஹம் செஞ்சதெல்லாம் நாம் செய்யலாம். ஆனா அவரு 13 பொண்டாட்டி 23 வப்பாட்டி வச்சிருந்தார். அதுமட்டும் நாம் செய்யக்கூடாது. ஏன்னா அல்லாஹ் நபிஹள் நாயஹம்(ஸல்) அவர்களோட வாயில வஹியா இறங்கி அது நபிகள் நாயஹத்துக்கு மட்டும் பெஸல் அனுமதின்னு சொல்லிட்டார். மத்தபடி அவர் விரலை ஆட்டினார்னா அது மாதிரி ஆட்டணும். அவர் அகட்டி நின்னார்னா நாமளும் அகட்டி நிக்கணும். அவர் ஆறு வயது ஆயிஷா(ரலி) யை நிக்காஹ் செய்தார்ன்னா நாமளும் செய்யலாம். ஆயிஷாவ இல்லை. வேறெதாவது ஆறு வயசு பொண்ணை. அப்புறம் இன்னொன்னு. எல்லோரட மனைவியும் புருஷன் செத்ததும் மறு நிக்காஹ் பண்ணிக்கலாம். ஆனால் நபிஹள் நாயஹத்தோட மனைவிகள் மட்டும் செய்யக்கூடாது. அவுஹ எல்லாம் மூமீன்களுக்கு உம்மா மாதிரில்லா.
அது கிடக்கட்டும்.
லிஸ்டுக்கு வருவோம்.
இந்த லிஸ்டு இருக்கே.. அது ரொம்ப கொலைவெறி புடிச்ச லிஸ்டு. ஒருத்தன் இதுதான் சரிம்பாம். இன்னொருத்தன் அது தப்பும்பாம். சீ ஒரே பாம் பாம்னும் வருது.. தப்பும்பான். தப்பும்பான்.
இப்ப பாருங்க.
ரொம்ப சாதாரணமா ஒரு கிறிஸ்துவன்கிட்ட போய் நின்னுக்கிட்டு தண்ணி குடிக்கலாமா? உக்காந்துகிட்டு தண்ணி குடிக்கலாமான்னு கேட்டு பாருங்க. உங்களை ஏற இறங்க பார்ப்பான்.
சரி ஒரு இந்துகிட்ட போயி, “எல முத்து! ஒரு இந்துவா சொல்லுடா. இந்துக்களெல்லாம் நின்னுகிட்டு தண்ணி குடிக்கணுமா? இல்ல உக்காந்துகிட்டு தண்ணி குடிக்கணுமா?” ன்னு கேட்டு பாருங்க. “என்னாச்சிடா மாப்ள? நேத்து நல்லாத்தானே இருந்தே”ம்பாம்.,.. சீ...ம்பான்.
ஆனா இதே ஒரு விஷயத்தை ஒரு முஸ்லீம்கிட்ட கேட்டு பாருங்க. அவன் என்னா சொல்வான் தெரியுமா?
“இது என்ன கேள்வி? நபிஹள் நாயஹம் ஸல்லால்லாஹூ அலைஹிவசல்லம் தண்ணி குடிக்கும்போது நின்னுகிட்டு குடிக்கக்கூடாதுன்னு சொல்லியிருக்காரு. அதனால நின்னு கிட்டு குடிக்ககூடாது” என்று ஆணித்தரமாக சொல்வான்.
(மேலே இருப்பது ஹராம். நின்று கொண்டு குடிப்பதை சொல்கிறேன்)
மேலே இருப்பது ஹலால். உட்கார்ந்துகொண்டு குடிப்பதை சொல்கிறேன். தயவு செய்து அவுஹ உடையை தொடையை பாக்காண்டாம்)
(அமெச்சூர் முஸ்லீம்களுக்கு.
இந்த இணைப்பை பார்க்கவும்
)
இதுதான் மற்ற மதங்களுக்கும் நமது மார்க்கத்துக்கும் உள்ள வித்தியாசம்!
இது நம்மை மாதிரி பிறவி முஸ்லீம்களுக்கு தெரியும். ஆனால் எத்தனை அமெச்சூர் முஸ்லீம்களுக்கு தெரியும்? இப்படியெல்லால் ஒரு லிஸ்டு இருக்குன்னு கூட அவனுக்கு தெரியாது.
பெரியார்தாசன் மாதிரி பகுத்தறிவை விட்டுவிட்டவர்கள் மட்டுமே வரவேண்டிய மார்க்கம் இஸ்லாம் என்பதில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் உள்ளதா?
இங்கே எதற்குமே ஏன் எதற்கு என்று கேட்கக்கூடாது. நின்று கொண்டு ஏன் தண்ணீர் குடிக்கக்கூடாது என்று கேட்டால் நீங்கள் கெட்ட முஸ்லீம் ஆகிவிடுவீர்கள் (கெட்ட முஸ்லீம் என்றால் என்ன என்பதற்கு, அல்லாஹ்வின் இறுதி இறைதூதரின் அருட்கொடைகள் மூன்று என்ற பதிவில் மூன்றாவது அருட்கொடையை பார்க்கவும்) நபிகள் நாயஹம் செய்திருக்கார். அதனால நாம் செய்யணும். அவ்வளவுதான்.
ஆனால் பிரச்னை அத்தோடு முடிந்துவிடாது.