New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: துக்ளக் பத்திரிக்கையில் ரசித்த பகுதிகள்


Guru

Status: Offline
Posts: 9863
Date:
துக்ளக் பத்திரிக்கையில் ரசித்த பகுதிகள்
Permalink  
 


 குப்பனும், சுப்பனும் நீதி கேட்டால்...? – சத்யா


காட்சி-1

படம்

குப்பன் : கும்பிடறோம்ங்க.

ராமதாஸ் :யார் நீங்க?

குப்பன் : என்னங்க தெரியாத மாதிரி கேக்கறீங்க? நான்தான் குப்பன். இவன் சுப்பன். ‘ஜனாதிபதிக்குக் கிடைக்கிற மருத்துவம் குப்பன் சுப்பனுக்கும் கிடைக்கணும்; முதல்வரின் பேரக் குழந்தைகளுக்குக் கிடைக்கிற கல்வி குப்பன், சுப்பன் குழந்தைகளுக்கும் கிடைக்கணும்’னு அடிக்கடி சொல்வீங்களே. அந்த குப்பன் சுப்பன் நாங்கதான்.

ராமதாஸ் : அடடா... சும்மா ஒரு பேச்சுக்குச் சொன்னா, நிஜமாவே என்னைத் தேடி வந்துட்டீங்களா? உடம்பு சரியில்லைன்னா ஜி.எச்.சுக்குப் போய் க்யூவிலே நில்லுங்க. இங்கே ஃபீஸ் இல்லாம வைத்தியம் பார்க்க மாட்டோம்.

சுப்பன் : வைத்தியம் பார்க்க வரலைங்க. 69 சதவிகித இடஒதுக்கீட்டிலே வசதியானவங்களும் சலுகை பெறலாம்னு அரசு உத்திரவு போட்டிருக்குது...

ராமதாஸ் : ஓ, அதுக்காக பாராட்ட வந்தீங்களா? அந்த சமூக நீதிக்காக குரல் கொடுத்த ஒரே கட்சி பா.ம.க.தான். பாராட்டறதோட நிறுத்திடாதீங்க. தேர்தல் வந்தா, பா.ம.க. எந்த கூட்டணியிலே இருக்குதுன்னு விசாரிச்சு தெரிஞ்சுகிட்டு, ஞாபகமா ஓட்டுப் போடணும். புரியுதா?

குப்பன் : அதிருக்கட்டும்ங்க. பெரிய பெரிய அரசியல்வாதிகளும் கோடீஸ்வரர்களும், சலுகைக்காக எங்களோட போட்டி போட்டா எப்படி? எங்களுக்கு சலுகை கிடைக்க அவங்க விடுவாங்களா? சலுகையிலே குப்பனுக்கும் சுப்பனுக்கும் முன்னுரிமை கொடுக்கணும்னு கேட்டு நீங்க போராடணும்ங்க. வளமான பிரிவினர் வீட்டுக்கு பூட்டு போடணும்ங்க.

ராமதாஸ் : என்னய்யா பேசறே நீ? உங்களுக்காக வாங்கின சலுகையை உங்களுக்கே தூக்கிக் கொடுத்துட்டா, உங்களுக்காக போராடின எங்களுக்கு என்ன லாபம்? உன் ஜாதிக்கார அரசியல்வாதிகளும் பணக்காரர்களும் முன்னேறினா சந்தோஷப்படணும்யா. உன் ஜாதியிலே ஒரு முக்கியமான பகுதி வாழுதே, அது போதாதா? நீயும் வாழணும்னு பேராசைப்படறியே. மனுஷனாய்யா நீ?

குப்பன் : எங்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகையை வசதி படைச்சவங்க பறிச்சுக்கிட்டா, இட ஒதுக்கீடு கொடுக்கிற நோக்கமே கெட்டுப் போயிடுதுங்களே. அது நியாயமா?

ராமதாஸ் : என்னய்யா நீ? என்கிட்டே வந்து நியாயத்தைப் பத்திப் பேசறே? குடிச்சுட்டு உளர்றீயா? அதுக்குத்தான் டாஸ்மாக்கை உடைக்கணும்ங்கறது. இதோ பார், அன்புமணிக்கு ராஜ்யசபாவிலே நிரந்தர இடஒதுக்கீடு வாங்கின பிறகுதான் மற்ற விஷயங்களை நான் கவனிக்க முடியும். நான் அன்புமணியைப் பத்தி கவலைப்படறதா? உன்னைப் பத்தி கவலைப்படறதா?

சுப்பன் : அப்ப நீங்களும் எங்களைக் கைவிட்டுட்டீங்களா?

ராமதாஸ் : சேச்சே! உன் ஓட்டை நம்பித்தானே நாங்க இருக்கோம்? உன்னை கை விட்டுர முடியுமா? நிழல் பட்ஜெட்டுக்கு அடுத்ததா, நிழல் இட ஒதுக்கீடு சட்டத்தை பா.ம.க. நிறைவேற்றப் போகுது. அதுலே உங்களுக்கு மட்டும்தான் சலுகை. சலுகை என்ன? நல்ல சம்பளத்திலே வேலையே கூட கிடைக்கலாம். ஆனா, நிஜமான சட்டத்திலே சலுகைக்கு ஆசைப் படாதே.

குப்பன் : ஐயா வந்து..

ராமதாஸ் : ஏய்... யாரங்கே? மணி, குரு.. இவங்களை வெளியே அனுப்புங்க!

காட்சி-2

வீரமணி : குப்பன், சுப்பனா? நானும் கலைஞரும் உங்களுக்காக பெரியார் காலத்திலேர்ந்து போராடிட்டு வரோமே. இன்னுமா நீங்க உயிரோட இருக்கீங்க?

குப்பன் : ஆமாங்க. வசதி படைச்சவங்களும் இந்த 69 சதவிகித இடஒதுக்கீட்டிலே வர்றதாலே, எங்களை மாதிரி ஜாதி ஜனம் அநாதையாப் போயிடுமோன்னு கவலையா இருக்குது.

வீரமணி : 69 சதவிகித இட ஒதுக்கீட்டைப் போராடி வாங்கினது நாங்க. அது பெரியார் கொள்கைக்கு கிடைச்ச வெற்றி. அதை நாங்க எங்க வசதிப்படி பிரிச்சுக்கிறோம். அதுலே தலையிடறதுக்கு நீங்க யாரு? பெரியார் உங்களுக்காக பாடுபட்டாரா? எங்களுக்காகபாடுபட்டாரா?

சுப்பன் : சலுகையெல்லாம் எங்க வகுப்பு மேல்மட்டக்காரங்களுக்கே போயிட்டா, எங்களை யாருங்க காப்பாத்தறது?

வீரமணி : 69 சதவிகிதம்ங்கறது ஜாதிக்காக கொடுக்கப்பட்டது. அதுலே ஏன் நீ பொருளாதாரத்தைக் கலக்கறே? ஆரிய சூழ்ச்சிக்கு பலி ஆயிட்டியா? மனு சாஸ்திரத்தைப் படிச்சுட்டு, வாலாட்டறியா நீ 

குப்பன் : ஐயையோ... அதெல்லாம் இல்லைங்க. எங்களுக்கு ஆதரவான சலுகை எங்களுக்கு கிடைக்காமலே போயிடும் போல இருக்குது. அதான்...

வீரமணி : இனமானத்தோடு பேசுய்யா. 69 சதவிகித இடஒதுக்கீட்டிலே சுப்ரீம் கோர்ட் கேள்வி கேக்க வைக்க சதி பண்ணாதே. வசதி படைத்த உன் ஜாதிக்காரங்களையே நீ எதிர்க்கிறதைப் பார்க்கும்போது, பெரியார் வாழ்ந்ததே வீண்தானான்னு தோணுது.

சுப்பன் : அப்படின்னா, எங்க கதி?

வீரமணி : கவலைப்படாதே. பெரியார் நெஞ்சிலே இருக்கிற முள்ளை அகற்றும் வகையிலே, என்னைக்காவது ஒரு நாள் 99 சதவிகித இடஒதுக்கீடு சட்டம் வரத்தான் போகுது. அது வரைக்கும் நீ உயிரோட இருந்தா, உன் கஷ்டம் தீர்ந்தாலும் தீரலாம்.

காட்சி-3

குப்பன் : ஐயா, எங்களைத் தெரியலை? ஏழை பாழைன்னு அடிக்கடி சொல்வீங்களே, நாங்கதான் அது.

கருணாநிதி : நீங்களா? ஏழைகளே இருக்கக் கூடாதுன்றதுதான் என் லட்சியம். அதனாலே சொல்ல வேண்டியதைச் சொல்லிட்டு, சீக்கிரம் இடத்தை காலி பண்ணு 

சுப்பன் : வந்து, ஒரு முக்கியமான பிரச்சனைங்க...

கருணாநிதி : என்ன, மின்வெட்டா? அம்மையாருக்குத்தானே ஓட்டுப் போட்டீங்க? அனுபவிங்க. அனுபவிச்சாத்தான் உங்களுக்குப் புத்தி வரும்.

குப்பன் : மின்வெட்டுப் பிரச்சனையை அஞ்சு வருஷமாவே அனுபவிச்சு பழகிப் போச்சுங்க. புத்தியும் வந்துடுச்சு. இப்ப நாங்க வந்த விஷயம் வேறே...

கருணாநிதி : என்ன, உங்க நிலத்தை யாராவது அபகரிச்சுட்டாங்களா? எந்த வருஷம்னு சொல்லுங்க. அது நிஜ வழக்கா பொய் வழக்கான்னு நான் சொல்றேன்.

சுப்பன் : அதில்லைங்க. இந்த 69 சதவிகித இடஒதுக்கீடு சட்டத்திலே...

கருணாநிதி : ஓ, அதுவா? கழகத்தின் போர்க் குரலுக்கு அம்மையார் பணிந்ததன் விளைவுதான் அது. அதுக்காக இப்ப பாராட்டு விழாவெல்லாம் வேண்டாம். பாராட்டு விழாவிலே கலந்துக்கற மன நிலையிலே நான் இல்லை. புறப்படுங்க.

குப்பன் : அந்த சலுகை எங்களுக்கு கிடைக்காதபடி எங்க வகுப்பைச் சேர்ந்த வசதி படைச்சவங்களே எங்களுக்கு குறுக்கே நிக்கறாங்க. நீங்கதான் அதைத் தடுத்து..

கருணாநிதி : அந்தச் சலுகை உங்களுக்கும் கிடைக்கணும்னா, நீங்க படிப்படியா முன்னேறி, ஒரு அரசியல்வாதியாகவோ, கோடீஸ்வரனாகவோ, வளர்ச்சி அடைஞ்சாத்தான் முடியும். ஆரம்ப கட்டத்திலேயே அதுக்கு ஆசைப்படறது முறையில்லை. பெரிய பெரிய நீதிபதி, டாக்டர், எஞ்ஜினியர்கள் எல்லாம் ஏராளமா இருக்கும்போது உங்களுக்கு எப்படி தனி உரிமை கொடுக்க முடியும்?

சுப்பன் : சலுகை கிடைச்சாத்தானே நாங்க கொஞ்சமாவது முன்னேற முடியும்?

கருணாநிதி : இடஒதுக்கீடு சலுகைக்கு எதிராக விஷம் கக்க, உங்களைத் தூண்டி விட்டது யாருன்னு எனக்குத் தெரியும். மீடியாதானே?

குப்பன் : ஐயையோ, எங்களை யாரும் தூண்டி விடலைங்க. நாங்களாத்தான் கேக்கறோம். இந்த சட்டத்தின் பலன் எங்களுக்கும் கிடைக்க நீங்க ஏதாவது செஞ்சு தான் ஆகணும்.

கருணாநிதி : என்ன மிரட்டறீங்களா? உங்க மிரட்டலுக்குப் பயந்து நீங்க சொல்றபடியெல்லாம் செய்ய, நீங்க என்ன என் குடும்ப உறுப்பினரா? ஏழை பாழைகள் நலனுக்காகத்தான் நான் செம்மொழி மாநாடு நடத்தினேன். புது சட்டசபைக் கட்டிடம் கட்டினேன். வள்ளுவர் சிலை, தொல்காப்பியப் பூங்கா, உளியின் ஓசை, பெண் சிங்கம் – இவ்வளவையும் அனுபவிச்சுட்டு, சட்டத்தின் பலனும் வேணும்னு ஆசைப்படறது முறையா?

சுப்பன் : சட்டத்தின் பலனை எங்க கிட்டேயிருந்து வசதி படைச்சவங்க பறிக்கிறதைத் தடுக்க வழியே இல்லையா?

கருணாநிதி : இடஒதுக்கீட்டுக்காக ஏராளமான தீர்மானங்களை எழுதிய விரல்கள்தான், நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த கருணாநிதியின் விரல்கள். ஆறாவது முறை நான் முதல்வரானதும் நான் போடப் போகும் முதல் கையெழுத்து,

இடஒதுக்கீட்டின் பலன் ஏழை பாழைகளுக்கு முழுமையாகக் கிடைக்கச் செய்யும் கோப்பில்தான். மீண்டும் முதல்வரானதும் பிரதமருக்கு வாரம் ஒரு கடிதம், மாதம் ஒரு தந்தி அனுப்பத் தயங்க மாட்டேன். இன்னுமா என் மீது நம்பிக்கையில்லை?

குப்பன் : இப்ப உடனடியா எதுவும் செய்ய முடியாதுங்களா? எங்க கோரிக்கையை கொள்கை அளவில் ஏற்கிறேன்னாவது அறிக்கை விடக் கூடாதா? எங்களை மாதிரி ஏழை எளியவர்கள் மீது பாசம் காட்டக் கூடாதா?

கருணாநிதி : முதல்வர் பதவியைவிட, ஏழைகளின் இதய சிம்மாசனத்தைத்தான் நான் பெரிதாகக் கருதுகிறேன். என் இதயத்தில் 69 சதவிகிதமும் ஏழைகளுக்குத்தான். அம்பேத்கர் பல்கலைக் கழகத்தை உருவாக்கியவனே நான்தான்.

சுப்பன் : இப்ப எங்களுக்கு ஒரு வழி சொல்லுங்கய்யா.

கருணாநிதி : யோவ்...! நானே குடும்பத்தைக் காப்பாத்தறதா, கட்சியைக் காப்பாத்தறதான்னு புரியாம தவிச்சுகிட்டிருக்கேன். இடஒதுக்கீடு, சலுகை, ஏழைன்னு கழுத்தறுக்கிறியே. உன்கிட்டே என்ன பேச்சு? என் கனவிலே அம்பேத்கர் வரும்போது, அவர் கிட்டேயே பேசிக்கிறேன். போய்யா!

பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கான 69 சதவிகித இடஒதுக்கீட்டிலிருந்து, வளமான பிரிவினரை நீக்க வேண்டிய அவசியமில்லை – என அ.தி.மு.க. அரசு அறிவித்திருக்கிறது. வழக்கமாக ‘குப்பனுக்கும் சுப்பனுக்கும்’ ஆதரவாக வாதாடுகிற தலைவர்கள் உட்பட எந்த அரசியல் கட்சியும் இதை எதிர்க்கவில்லை. அதனால், தங்களுக்கு நீதி கிடைக்குமா என்று குப்பனும் சுப்பனுமே நேரடியாக முயற்சிக்கிறார்கள்



-- Edited by devapriyaji on Monday 1st of August 2011 08:11:15 PM

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

dk-5a.jpg?w=640&h=905dk-5b.jpg?w=640&h=870



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

samasir-cho.jpg?w=640&h=847samasir-cho-2.jpg?w=640&h=896

samasir-cho-2.jpg?w=640&h=896samasir-cho-2.jpg?w=640&h=896



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

samasir-cho-2.jpg?w=640&h=896



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

samasir-cho-3.jpg?w=640&h=824



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

108-ambulance-scam.jpg?w=640&h=858



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

cartoons.jpg?w=640&h=748



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

பிரதமரின் அடுத்த பேட்டி – சத்யா

கேள்வி : லோக்பால் சட்ட வரம்புக்குள் பிரதமரைக் கொண்டு வர எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்?

பிரதமர் : நானா எதிர்க்கிறேன்? என் மந்திரி சபை சகாக்கள்தான் எதிர்க்கிறார்கள். அவர்கள் உரிமையில் நான் குறுக்கிட முடியாது. அவர்கள் உரிமையில் மட்டுமல்ல, யாருடைய உரிமையிலும் நான் குறுக்கிட முடியாது. காங்கிரஸ் –அதாவது சோனியா – கட்டளையிட்டால் மட்டுமே நான் குறுக்கிட முடியும்.

கேள்வி : தனிப்பட்ட முறையில் – பிரதமரை லோக்பால் வரம்புக்குள் கொண்டு வருவது பற்றி – உங்கள் கருத்து என்ன?

பிரதமர் : தனிப்பட்ட முறையில் எனக்கு எந்த விஷயத்திலுமே கருத்து கிடையாது. நான் சொந்த கருத்துகளுக்கு அப்பாற்பட்டவன். காங்கிரஸ் எதை கட்டளையாக இடுகிறதோ – அதுதான் என் கருத்து. அந்த ஆட்சி தர்மத்தைத்தான் நான் பின்பற்றுகிறேன்.

கேள்வி : லோக்பால் அமைப்பு பிரதமரை விசாரித்தால் என்ன தவறு?

பிரதமர் : என்னைப் பொறுத்தவரை நான் எந்த விசாரணைக்கும் பயப்படவில்லை. நான் ஏதாவது செய்திருந்தால்தானே பயப்பட வேண்டும்? நான்தான் எதையுமே செய்யவில்லையே? யார் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை காங்கிரஸ் கட்டளைப்படி பார்த்துக் கொண்டிருக்கிறேன். பார்க்க வேண்டாம் என்று சொன்னால் நிறுத்தி விடப் போகிறேன். அவ்வளவுதான்.

கேள்வி : அப்படியென்றால் லோக் பால் சட்ட மசோதா வரம்பில் பிரதமரைச் சேர்க்கலாம் என்கிறீர்களா? 

பிரதமர் : என்னை விசாரிப்பதற்கு ஏற்கெனவே சோனியா இருக்கும்போது, லோக்பால் சட்டம் தேவையில்லை என்பதுதான் அமைச்சரவையின் கருத்து. சோனியாவை சந்திக்கும்போதெல்லாம் அவர் என்னை விசாரித்துக் கொண்டுதான் இருக்கிறார். இந்த பேட்டி முடிந்ததும், அவர் நடத்தும் விசாரணையிலும் நான் ஆஜராகப் போகிறேன். அப்படியிருக்கும்போது லோக்பால் எதற்கு என்பதுதான் எங்கள் மந்திரிகளின் கேள்வி. 

பிரதமர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து நீக்க, இப்போதே வழி இருக்கிறது. அதன் மூலம் பல எம்.பி.க்கள் கோடீஸ்வரர்களாகவும் முடியும் என்பதுதான் வரலாறு.

கேள்வி : விலைவாசி உயர்வை எப்படி கட்டுப்படுத்தப் போகிறீர்கள்?

பிரதமர் : அதற்கு என்னிடம் மந்திரக்கோல் இல்லை. என்னிடம் இருப்பது ஒரே ஒரு நாற்காலிதான். அதில் உட்கார்ந்தபடி ஏழு வருடங்களாக விலைவாசி உயர்வை நினைத்துக் கவலைப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறேன். ஏழு வருடங்கள் கவலைப்பட்ட என்னால் இன்னும் மூன்று வருடங்கள் கவலைப்பட முடியாதா? விலைவாசி அடுத்த ஆண்டு எப்படியாது குறைந்துவிடும். குறையா விட்டால் தொடர்ந்து கவலைப்பட சோனியா எனக்கு அனுமதி வழங்கி இருக்கிறார்.

கேள்வி : மத்திய மந்திரி சபையில் மாற்றம் வருமா?

பிரதமர் : வரும் என்றுதான் தகவல்கள் தெரிவிக்கின்றன. எத்தகைய மாற்றத்தையும் எதிர் கொள்ள நான் தயார் நிலையில்தான் இருக்கிறேன். அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டவுடன் யாரெல்லாம் மாறியிருக்கிறார்கள் என்பதை முதலில் தெரிந்து கொள்ளும் அதிகாரம் என்னிடம்தான் இருக்கிறது. அந்த அளவுக்கு, நிர்வாகத்தில் சோனியா எனக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்.

(தொடரும்)
சுப்ரமணியன் சேகர்
விடிவெள்ளி
விடிவெள்ளி
 
பதிவுகள்: 38078
(காண் /இத்திரியில்)
(துவக்கிய திரிகள்)
சேர்ந்தது: சனி ஜன 29, 2005 4:10 pm
வசிப்பிடம்: மும்பை

Re: துக்ளக் சத்யாவின் அரசியல் கட்டுரைகள்!

பதிவிடுஆல் சுப்ரமணியன் சேகர் » சனி ஜூலை 16, 2011 6:51 am

தொடரும் கட்டுரை

கேள்வி : ஐ.மு. கூட்டணி ஆட்சியில் வரலாறு காணாத அளவில் 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஊழல் நடந்துள்ளதே?

பிரதமர் : ஊழல் விவகாரங்களை ஸி.ஏ.ஜி. அவசரப்பட்டு வெளியிட்டு விட்டது துரதிருஷ்டவசமானது. சோனியாவிடம் சொல்லாமல் நானே எதுவும் செய்யாதபோது, அவ்வளவு முக்கியமான அறிக்கையை சோனியாவிடம் காட்டாமல் ஸி.ஏ.ஜி. வெளியிட்டதுதான் அத்தனை பிரச்னைகளுக்கும் காரணம். சோனியாவுக்குத் தெரியாமல் ஸி.பி.ஐ. ஏதாவது செய்கிறதா? ஸி.ஏ.ஜி.யும் அப்படி செயல்பட்டிருக்கலாமே? தவிர, வெறும் ஆவணங்களை மட்டுமே பார்த்து ஸி.ஏ.ஜி. அறிக்கையை வெளியிட்டிருக்கக்கூடாது.

கூட்டணியில் யார் இருக்கிறார்கள், இத்தாலியில் யார் இருக்கிறார்கள், ஊழல் பணம் யாருக்கெல்லாம் போயிருக்கும், விவகாரம் கோர்ட்டுக்குப் போனால் அரசுக்கு எவ்வளவு கெட்ட பெயர் ஏற்படும் – போன்ற எதையுமே தெரிந்து கொள்ளாமல், அரசு ரகசியங்களை பொறுப்பில்லாமல் வெளியிட்டதை மன்னிக்க முடியாது. ஸி.ஏ.ஜி.. மத்திய அரசுடன் ஒத்துழைத்திருந்தால், 2-ஜி ஒதுக்கீட்டில் ஒரு பைசா ஊழல் என்று கூட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருக்க முடியாது. பத்திரிகைகளும் அரசின் கஷ்டத்தைப் புரிந்து கொள்ளாமல், நடந்தவற்றையெல்லாம் அப்படியே வெளியிட்டு விட்டன.

கேள்வி : 2ஜி ஒதுக்கீடு ஊழல் நடக்காதபடி நீங்கள் ராசாவைத் தடுக்காதது ஏன்?

பிரதமர் : 2ஜி விவகாரத்தில் ராசாவுக்கு இருந்த அளவுக்கு அதிகாரம் என்னிடம் இல்லை. கலைஞர், ராசாவுக்குத்தான் முழு அதிகாரத்தையும் வழங்கியிருந்தார். தவிர, ஊழல் நடக்கவில்லை என்று ராசாவே கூறும்போது அவர் மீது எப்படி சந்தேகம் வரும்? ‘அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தி விட்டேன்’ என்று அவர்தன் வாயால் சொல்லாதபோது, அவர் மீது சந்தேகப்படுவது முறையா? அமைச்சர்கள் கூறுவதை நம்புவதுதானே பிரதமரின் வேலை? அதே போல் காமன் வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ஊழல் நடக்கவில்லை என்று கல்மாடி கூறியதையும் அப்படியே நம்பினேன். ஆனால், மத்திய அரசு கூறுவதை மட்டும் சுப்ரீம் கோர்ட் நம்ப மறுப்பது ஏன் என்று எனக்குப் புரியவில்லை. நீதித் துறை இதுபோன்ற அரசு கொள்கைகளில் தலையிடாமல் மத்திய அரசுடன் ஒத்துழைத்திருந்தால், சர்வதேச அளவில், நாம் நேர்மையான நாடு என்று எல்லோரையும் நம்ப வைத்திருக்க முடியும்.

கேள்வி : மத்திய மந்திரி தயாநிதி மாறன் மீதும் 2ஜி ஒதுக்கீட்டில் ஊழல் புரிந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளனவே? அவர் நீக்கப்படுவாரா?

பிரதமர் : ‘அவர் எந்த ஊழலும் செய்யவில்லை; எல்லாம் முறையாகத்தான் நடந்துள்ளன’ என்று கூறி, அவர் முதுகில் தட்டிக் கொடுக்கலாமா, வேண்டாமா என்பது குறித்து காங்கிரஸ் தலைமையிடமிருந்து இன்னும் கட்டளை வரவில்லை. அதற்குப் பிறகு, தேவைப்பட்டால் சட்டம் தன் கடமையைச் செய்யும். என் மனசாட்சி மேலிடத்துக்குக் கட்டுப்பட்டு இருப்பதால்தான் என்னால் இப்படி தெளிவாக பதிலளிக்க முடிகிறது.

கேள்வி : நீங்கள் பலவீனமான பிரதமர் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனவே?

பிரதமர் : அது தவறு. ஆட்சியில் எது நடக்க வேண்டுமென்றாலும் சோனியா பெரும்பாலும் என்னிடம்தான் கூறுகிறார். அந்த அளவுக்கு என் பலத்தின் மீது அவருக்கு நம்பிக்கை இருக்கிறது. அப்படிப்பட்ட என்னைப் பார்த்து, சோனியாவால் இயக்கப்படுகிறேன் என்று கூறுவது என்ன நியாயம்? மத்திய மந்திரிகளை சேர்க்கிற, நீக்குகிற அதிகாரத்தை சம்பந்தப்பட்ட கூட்டணிக் கட்சிக்கு வழங்க சோனியா என்னைத்தான் அனுமதித்து வருகிறார். நானா பலவீனமான பிரதமர்? 

அவ்வளவு ஏன்? மத்திய மந்திரிகளை மாற்றுவது குறித்து நிரா ராடியாவுடன் யார் யாரோ ஃபோனில் பேசியிருக்கிறார்கள். இன்னாரை மந்திரியாக்குங்கள் என்று ஒருமுறையாவது நான் நிரா ராடியாவிடம் கேட்டிருப்பேனா?

கேள்வி : ராகுல் பிரதமராக வேண்டும் என்று காங்கிரஸில் கோரிக்கைகள் எழுந்துள்ளதே?

பிரதமர் : காங்கிரஸின் மற்ற தலைவர்களுக்கு சோனியா வழங்கிய கட்டளை இன்னும் என்னை வந்தடையவில்லை. கட்டளை வந்ததும், ‘என்னை விட விவரம் தெரிந்த, நாட்டின் மீது அக்கறை கொண்ட, சுயமாகச் சிந்தித்துச் செயல்படுகிற ராகுல்தான் பிரதமர் பதவிக்குத் தகுதியானவர்’ என்று அறிவிக்க நானே தயாராக இருக்கிறேன். அதற்குப் பிறகு, சோனியா கட்டளையிட்டால், துணைப் பிரதமராகி ராகுல் கட்டளைகளை நிறைவேற்றவும் தயங்க மாட்டேன். ஆகவே, என்னை யாரும் இயக்கவில்லை என்பதை இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள்.

பிரதமர் மன்மோகன் சிங் இனி அடிக்கடி ஊடக நிருபர்களைச் சந்திக்க வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் செயற்குழு அறிவுறுத்தியதையடுத்து, பேட்டி அளித்திருக்கிறார் பிரதமர். ஆனாலும், எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. ‘நான் பலவீனமானவன் அல்ல, செயல்படாத பிரதமர் அல்ல; என்னை யாரும் இயக்கவில்லை’ என்று மனிதர் கரடியாகக் கத்தியும் பா.ஜ.க.வினர் அதை நம்பாமல் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். பேட்டியில், பிரதமர் தன்னிலை விளக்கமாகக் கூறிய அனைத்து கருத்துகளையுமே ஏற்க மறுத்து, எதிர்க் கட்சிகள் தொடர்ந்து குறை கூறி வருகின்றன. இவர்களுக்கெல்லாம் சூசகமாகச் சொன்னால் புரியாது. தலைக்கு மேல் போன பிறகு ஜாண் என்ன? முழம் என்ன? பிரதமர் தமது அடுத்த பேட்டியில், இப்படி தெளிவாகவே கூறி விடலாம்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

. தயாராகிறது ஊழல் ஒளிப்பு மசோதா – சத்யா

லோக்பால் மசோதாவைத் தயாரிப்பதற்காக விவாதித்து வரும் அன்னா ஹஸாரே தலைமையிலான சமூக ஆர்வலர்கள் குழுவும், மத்திய அரசு தரப்பிலான மந்திரிகளும் ஏழு முறை பேச்சுவார்த்தை நடத்தியும், இதுவரை எந்தவிதமான உடன்பாட்டுக்கும் வரவில்லை. இவ்விவகாரம் போகிற போக்கைப் பார்க்கும்போது, அன்னா ஹஸாரே குழுவினரை மத்திய மந்திரிகள் இப்படித்தான் சதாய்த்து கொண்டிருக்கிறார்களோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

படம்
அன்னா ஹஸாரே : லோக்பால் மசோதா சம்பந்தமான எங்க கோரிக்கைகள் எல்லாவற்றையும் ஏத்துக்கறதாகச் சொல்றீங்க. ஆனா, எந்த ஷரத்தையும் மசோதாவிலே சேர்க்க எதிர்ப்பு தெரிவிக்கிறீங்களே. இப்படி ரெட்டை வேஷம் போட்டா எப்படி?

கபில்சிபல் : யார் வேஷம் போடறது? வார்த்தையை அளந்து பேசுங்க. அரசு பிரதிநிதிகளோட பேசும்போது மரியாதையாப் பேசணும். உங்க கோரிக்கைகளை ஏத்துக்கறோம்னுதான் சொன்னோமே தவிர, மசோதாவிலே சேர்க்கலாம்னு சொன்னோமா?

சந்தோஷ் ஹெக்டே : மசோதாவிலே சேர்க்காம, எங்க நிபந்தனைகளை தனிப்பட்ட முறையிலே ஏத்துக்கறதாலே என்ன பிரயோஜனம்?

வீரப்ப மொய்லி : மொதல்லே கோரிக்கைன்னு சொன்னீங்க. இப்ப நிபந்தனைன்னு சொல்றீங்க. இப்படி மாத்தி மாத்திப் பேசறதே உங்களுக்குத் தொழிலாப் போச்சு.

பிரசாந்த் பூஷன் : லோக் பால் மசோதாவைக் கொண்டு வரணும்ன்ற எண்ணமே உங்களுக்கு இருக்கிற மாதிரி தெரியலை.

சிதம்பரம் : சமயத்திலே இப்படி அறிவாப் பேசறீங்க. திடீர்னு, மசோதாவை நிறைவேற்றியே ஆகணும்னு அடாவடி பண்றீங்க. உங்களைப் புரிஞ்சுக்கவே முடியலை. ஒண்ணு – நீங்களாவது எங்க வழிக்கு வாங்க. இல்லே, நாங்களே உங்களை எங்க வழிக்குக் கூட்டிக்கிட்டுப் போறோம். ரெண்டுமே கூடாதுன்னா எப்படி?

சாந்திபூஷன் : நாங்க ஒரு வரைவு மசோதா தயாரிச்சு வெச்சிருக்கோம். இதுக்கு மத்திய அரசு சம்மதிக்குமா இல்லையான்னு பார்த்துச் சொல்லுங்க. தேவைப்பட்டா பேச்சுவார்த்தைக்கும் நாங்க தயார்.

பிரணாப் முகர்ஜி : இன்னும் என்ன பேச்சுவார்த்தை? இப்ப பேசிக்கிட்டுத்தானே இருக்கோம்?

அன்னா ஹஸாரே : இல்லே... நாம பேசறது அப்படியே லைவா டி.வி.யிலே வந்தா, ஊழலை ஒழிக்க நான் எவ்வளவு கஷ்டப்படறேன்னு மக்கள் புரிஞ்சுக்குவாங்க. மனசுக்கு திருப்தியா இருக்கும். அதுக்காகத்தான்.

சிதம்பரம் : உங்க வரைவு மசோதாவை மத்திய அரசு அப்படியே ஏற்க முடியாது. பார்லிமென்ட், அரசியல் சட்டம், மக்கள்னு உங்களை விட முக்கியமான பல விஷயங்கள் இருக்குது. 120 கோடி மக்களையும் தனித் தனியா கலந்து ஆலோசிக்கணும்.

அரவிந்த் கேஜ்ரிவால் : இப்படி இந்தப் பிரச்சனையை கேலிக் கூத்தாக்கறதா இருந்தா, நாம பேசறதிலே அர்த்தமே இல்லை.

கபில்சிபல் : அவர் பேச்சுவார்த்தைக்கு தயார்ன்றாரு. நீங்க, பேசறதிலே அர்த்தமே இல்லைன்றீங்க. நாம மேற்கொண்டு பேசணுமா வேண்டாமான்னு முதல்லே உங்களுக்குள்ளே பேசி முடிவு பண்ணுங்க. நாங்க வரோம்.

அன்னா ஹஸாரே : அவசரப்படாதீங்க. எங்க வரைவு மசோதாவிலே என்ன மாற்றம் செய்யலாம்னு நீங்க நினைக்கிறீங்களோ, அந்த மாற்றங்களைச் செய்யறது பற்றிப் பேசுவோம்.

சல்மான் குர்ஷித் : ஒரே ஒரு மாற்றம்தான். மசோதாவை மட்டும் மாத்திட்டா போதும்.

சந்தோஷ் ஹெக்டே : மசோதாவையே மாற்றணுமா? அது எப்படி முடியும்?

கபில்சிபல் : புரியும்படியா சொல்றேன். உங்க வரைவு மசோதாவையும், அரசு தரப்பு தயாரிக்கிற மசோதாவையும் மத்திய மந்திரி சபையின் பரிசீலனைக்கு அனுப்பலாம். எந்த மசோதாவுக்கு மந்திரிசபை ஒப்புதல் கொடுக்குதோ, அதுதான் லோக் பால் மசோதா. என்ன சொல்றீங்க?

அன்னா ஹஸாரே : இது நல்ல யோசனையாத்தான் இருக்குது.

சாந்திபூஷன் : என்ன நல்ல யோசனை? உங்களை ஏமாத்தப் பாக்கறாங்க. மந்திரிகள் தயாரிக்கிற வரைவு மசோதாவைத்தான் மந்திரிசபை ஏற்கும். அதை நாம எப்படி ஏற்க முடியும்?

சல்மான் குர்ஷித் : எங்க வரைவு மசோதாவை நீங்க ஏற்க மாட்டீங்க. உங்க வரைவு மசோதாவை மட்டும் நாங்க ஏற்கணுமா? என்ன நியாயம் நீங்க பேசறது?

அன்னா ஹஸாரே : ஊழலை ஒழிக்கணும்ன்ற எண்ணமே உங்களுக்கு இல்லை. ஆகஸ்ட் 15-க்குள்ளே லோக்பால் மசோதா வரலைன்னா, ஆகஸ்ட் 16-லேர்ந்து மறுபடியும் உண்ணாவிரதம் இருக்கப் போறேன். நாடு முழுவதும் எல்லா பேப்பர்லேயும் என் பேர் வரும்.

கபில்சிபல் : காலக்கெடு வெச்சு அரசாங்கத்தை மிரட்டறீங்களா? தொலைச்சுடுவோம், தொலைச்சு. அரசாங்கத்தை மிரட்டிட்டு நீங்க ஒழுங்கா வீடு போய் சேர்ந்துட முடியுமா? மிரட்டற வேலையெல்லாம் இங்கே வெச்சுக்காதீங்க. ஜாக்கிரதை.

பிரசாந்த் பூஷன் : தினம் ஒரு பெரிய ஊழல் வெளியே வருது....

வீரப்ப மொய்லி : உங்க கவலை எங்களுக்கும் இருக்குது. ஊழல்கள் வெளியே வராம தடுக்க ஏதாவது மசோதா கொண்டு வர வழி இருக்குதான்னு சொல்லுங்களேன்.

பிரசாந்த் பூஷன் : ஊழல் ஒழிப்புக்கு கடுமையான சட்டம் வரலைன்னா நாடே நாசமாப் போயிடும்.

சிதம்பரம் : பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். மாதிரியே பேசறீங்க. அவங்களும் ஊழலை ஒழிக்கணும்ன்றாங்க. நீங்களும் அதையே சொல்றீங்க. உங்களுக்கு சுயமாப் பேசவே தெரியாதா? உங்களைத் தூண்டி விடறது யாருன்னு இப்ப புரிஞ்சு போச்சு.

கபில்சிபல் : உண்மையைச் சொல்லுங்க. நீங்க அத்வானி ஆளா? மோடி ஆளா?

அன்னா ஹஸாரே : தயவு செஞ்சு பா.ஜ.க.வையும் என்னையும் இணைச்சுப் பேசாதீங்க. நான் அப்படிப்பட்ட ஆள் இல்லை. ஊழல் ஒழிப்புச் சட்டத்திலேர்ந்து சிறுபான்மை இனத்தவருக்கு விதி விலக்கு கொடுக்கணும்னு எங்க வரைவு மசோதாவிலே பரிந்துரை பண்ணவும் தயாரா இருக்கேன்.

பிரணாப் முகர்ஜி : அரசாங்கம் செய்ய வேண்டிய வேலையெல்லாம் நீங்களே செஞ்சு பேர் வாங்க ஆசைப்படாதீங்க. உங்க வரைவு மசோதாவைக் கொடுங்க. அதுலே மந்திரி சபை நீக்கற ஷரத்துகள் போக மீதி அப்படியே இருக்கும். அதுக்கு நாங்க கேரண்டி.

அன்னா ஹஸாரே : முக்கியமா, பிரதமரையும் லோக்பால் மசோதா வரம்புக்குள்ளே கொண்டு வரணும்.

கபில்சிபல்: அதெல்லாம் முடியாது. அப்புறம் மன்மோகன் சிங் மாதிரி பிரதமர் கிடைக்கிறது கஷ்டம். நிர்வாகம் ஸ்தம்பிச்சுடும்.

வீரப்ப மொய்லி : பிரதமரை லோக்பால் வரம்புக்குள்ளே கொண்டு வரணும்னா படிப்படியாத்தான் செய்ய முடியும். முதல் கட்டமா, செத்துப் போன பிரதமர்களை மட்டும் லோக்பால் வரம்புக்குள்ளே கொண்டு வந்து, நரசிம்மராவ், வி.பி. சிங் ஊழலை விசாரிக்கலாம். ஆனா அவங்க கிட்டே வாக்குமூலம் வாங்காம நடவடிக்கை எடுக்க முடியாது.

சாந்திபூஷன் : கடுமையான லோக் பால் சட்டம் வந்தா, மந்திரிகள் எல்லாம் ஒருத்தர் பின்னாலே ஒருத்தர் ஜெயிலுக்குப் போக வேண்டியிருக்கும்னு நீங்க பயப்படறது நல்லாப் புரியுது.

கபில்சிபல் : ஜெயிலைப் பத்திப் பேசி மிரட்டறீங்களா? லோக்பால் சட்டம் இல்லாமலேயே மந்திரிகள் ஒவ்வொருத்தரா ஜெயிலுக்குப் போயிட்டுத்தான் இருக்காங்க. அநாவசியமா எதுக்கு மசோதா?

அன்னா ஹஸாரே : ஜெயிலுக்குப் போக வேண்டிய பலர் இன்னும் போகலை. 

சிதம்பரம் : உங்க அவசரத்துக்கு நாங்க ஆட முடியாது.

பிரசாந்த் பூஷன் : ஊழலுக்கு ஒரு கட்டுப்பாடே இல்லாம போனதாலே, பல லட்சம் கோடி ரூபாய் கறுப்புப் பணம் இன்னும் வெளிநாட்டுலே இருக்குது. அதை எப்ப மீட்கப் போறீங்க?

பிரணாப் முகர்ஜி : வெளிநாடுகளிலே கறுப்புப் பணத்தை பதுக்கியவர்கள் யாருன்னு கண்டுபிடிக்கிறதுக்கு முன்னாலே, எந்த நாடுகளிலே பதுக்கப்பட்டிருக்குதுன்னு கண்டுபிடிக்கணும். அதுக்கு முன்னாலே அந்த நாடுகள் எந்த கண்டத்திலே இருக்குதுன்னு கண்டுபிடிக்கணும். இவ்வளவு வேலை இருக்குது.

அன்னா ஹஸாரே : பணம் எப்பதான் கைக்கு வரும்?

வீரப்ப மொய்லி : ஓஹோ! இவ்வளவு சீப்பான ஆளா நீங்க? பணம்தான் உங்க நோக்கமா? அப்படின்னா உங்களுக்கும் எங்களுக்கும் என்ன வித்தியாசம்? ஏன் உத்தமர் மாதிரி வேஷம் போட்டுக்கிட்டுத் திரியறீங்க?

சந்தோஷ் ஹெக்டே : கடைசியா கேக்கறோம். மசோதா நிறைவேற ஒத்துழைப்பீங்களா மாட்டீங்களா?

சிதம்பரம் : கடைசியான்னு தன்னிச்சையா முடிவெடுக்க நீங்க யாரு? அரசாங்கம் எதுக்கு இருக்குது...? நீங்க கூப்பிடும்போதெல்லாம் நாங்க பேச்சுவார்த்தைக்கு வந்துட்டுத்தானே இருக்கோம்? 

அன்னா ஹஸாரே : இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்படி உருப்படியில்லாம பேசறது?

கபில்சிபல் : இன்னும் ஒரு மூணு வருஷம் பேசினா போதும். அதுக்குள்ளே அடுத்த தேர்தல் வந்துடும்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

பொது அறிவு போதனை – சத்யா

“பசங்களா... எல்லாரும் கவனிங்க! பாடப் புத்தகங்கள் தயாராகிற வரைக்கும் உங்களுக்கெல்லாம் ‘பொது அறிவு’ கற்றுக் கொடுக்கப் போறேன். புத்தகத்துக்குப் பதிலா இனிமே தினமும் தவறாம பேப்பர் படிக்கணும்னு சொன்னேனே, படிச்சீங்களா? யாருக்காவது அது சம்பந்தமா சந்தேகம் இருந்தா கேக்கலாம்.”

“சமச்சீர்னா என்ன ஸார்?.”
படம்

“எல்லாம் சமமா ஏற்றத் தாழ்வில்லாம இருக்கிறதுதான் சமச்சீர். யாரும் அதிகமா படிச்சுடாம தடுத்து, எல்லாரையும் ஒரே அளவா படிக்க வெக்கறதுதான் சமச்சீர் கல்வி. அப்பதான் யாரும் மற்றவங்களை ஏமாத்தி தனியா முன்னேறிடாம, எல்லாரும் சமமா முன்னேறுவாங்க.”

“சமச்சீர் கல்வியிலே எல்லாருக்கும் சமமா மார்க் போடற சமச்சீர் மார்க் திட்டம் உண்டா ஸார்?”

“மடத்தனமா கேக்காதே. அப்புறம் அதுக்காக யாராவது போராட ஆரம்பிச்சுட்டாப் பிரச்சனையாப் போயிடும். உட்கார்.”

“பேப்பர்லே ‘இன்றைய மின்தடை’ன்னு போட்டிருக்குதே ஸார், அந்த இடங்களைத் தவிர மற்ற இடங்களிலே கரண்ட் போகாதா?”

“அப்படியெல்லாம் இல்லை. ‘இன்றைய மின்தடை’ன்னு போட்டிருக்கிற இடங்களிலே கண்டிப்பா கரென்ட் போகும். மற்ற இடங்களிலே போனாலும் போகலாம். போகாமலும் இருக்கலாம். குறிப்பிட்ட இடங்களிலே மட்டும் குறிப்பிட்ட டைம்லே போகும். மற்ற இடங்களிலே எப்ப வேணாலும் போகும். சில இடங்களிலே போயிட்டு போயிட்டு வரும். சில இடங்களிலே வந்துட்டு வந்துட்டுப் போகும்.”

“மின்சாரம் ஏன் ஸார் போகுது?”

“அதுக்கு பல காரணங்கள் இருக்குது. மின்வெட்டு, மின்பழுது, மின் பற்றாக்குறை, லோ வோல்டேஜ்... இப்படிப்பட்ட காரணங்கள் இருந்தாலோ இல்லைன்னாலோ கரெண்ட் அடிக்கடி போகும். மற்ற சமயங்களிலே அப்பப்ப போகும்.”

“லோக்பால், லோக்பால்ன்றாங்களே, அப்படின்னா என்ன ஸார்? வாலி பால், ஃபுட் பால் மாதிரி பந்தா?”

“ஒரு வகையிலே அதுவும் பந்துதான். சமூக ஆர்வலர்கள் குழு அடிக்கிற பந்தை அரசாங்க தரப்பு திருப்பி அடிக்கும். அரசாங்கம் அடிக்கிற பந்தை சமூக ஆர்வலர்கள் குழு திருப்பி அடிக்கும். இப்படி மாத்தி மாத்தி அடிச்சுக்குவாங்க.”

“அந்த விளையாட்டு எப்ப முடியும் ஸார்?”

“விளையாட்டு முடியாது. போரடிச்சு தானா நின்னுடும். அப்ப மக்கள் வேறே விளையாட்டைப் பார்க்கப் போயிடுவாங்க. மடையா! ஒரு உதாரணத்துக்குச் சொன்னா, நிஜமாவே அதை விளையாட்டுன்னு நினைச்சுட்டியா? ஊழலை ஒழிக்க ஒரு சட்டம் கொண்டு வரணும்னு அன்னா ஹஸாரே ஆளுங்க போராடறாங்க. அந்தப் போராட்டத்தை ஒழிக்க மத்திய அரசு போராடுது”

“ஊழல்னா என்ன ஸார்?” 


“ஊழல்னா திட்டம். திட்டத்தை நிறைவேற்றினா ஊழல் நடக்கும். ஊழலைத் தடுக்க நினைச்சா திட்டம் நிறைவேறாது. எந்த வேலையும் செய்யாம இருந்தாத்தான், ஊழல் அளவோட இருக்கும்.”

“இமாலய ஊழல்னா என்ன ஸார்?”

“ஒருத்தர் மட்டும் தனியா செஞ்சா அது ஊழல். ஒரு கூட்டமே சேர்ந்து செஞ்சா அது இமாலய ஊழல். அதெல்லாம் அரசியல். உனக்குப் புரியாது. வேறே கேள்வி கேளு.”

“கறுப்புப் பணம்னா என்ன ஸார்? ரூபா நோட்டுலே கறுப்புப் பெயின்ட் அடிச்சிருப்பாங்களா?”

“அதாவதுப்பா... அநியாயமான வழியிலே சம்பாதிக்கிற பணம் கறுப்புப் பணம். அப்படி சம்பாதிச்ச பல லட்சம் கோடி ரூபாய் பணத்தை சில பேர் வெளிநாட்டு பேங்குகளிலே பதுக்கி வெச்சிருக்காங்க. அந்தப் பணம் வந்தா, நம்ம நாட்டு கஷ்டமெல்லாம் தீர்ந்துடும்.”

“அநியாயமான வழியிலே சம்பாதிக்கிற பணத்தாலேதான் நம்ம கஷ்டம் தீருமா? நியாயமான வழி யிலே சம்பாதிக்கிற பணத்தாலே நம்ம கஷ்டம் தீராதா? அப்படின்னா நாம ஏன் ஸார் நியாயமா சம்பாதிக்கணும்?”

“அயோக்கிய படவா! அதிகப் பிரசங்கி மாதிரி கேள்வி கேக்காதே உட்கார்.” 

“அந்தப் பணம் வருமா ஸார்?”

“வரும்... ஆனா, வராது. வந்தாலும் தெரியாது. ஏன்னா அது அரசாங்க ரகசியம். மிஞ்சிப் போனா, கறுப்புப் பணம் எத்தனை லட்சம் கோடிங்கற புள்ளி விவரத்தை மட்டும்தான் நாம தெரிஞ்சுக்க முடியும். அத்தோட விட்டுடணுமே தவிர, அந்த கொள்ளைப் பணத்துக்கு மக்கள் ஆசைப்படக் கூடாது.”

“கொள்ளை, கொள்ளைன்றீங்களே. கொள்ளைன்னா என்ன ஸார்? டொனேஷனா?”

“ஏய், மெதுவா கேளு. மேனேஜ்மென்ட் காதுலே விழுந்தா ஆபத்து. டொனேஷன் வேறே. கொள்ளை வேறே. அதிகாரமா கேட்டு வாங்கறது டொனேஷன். கேக்காமலே அதிகாரமா எடுத்துக்கறது கொள்ளை. கொள்ளைக்காரங்களைப் பிடிச்சா நடவடிக்கை எடுக்க ஓரளவு சான்ஸ் உண்டு. டொனேஷன் வாங்கறவங்களைப் பிடிச்சாலும் நடவடிக்கை எடுக்க முடியாது. ஏன்னா, இதுலே அரசியல் சம்பந்தப்பட்டிருக்குது.”

“சோமாலிய கடல் கொள்ளைக்காரர்களிடமிருந்து மாலுமிகள் மீட்புன்னு போட்டிருக்காங்களே, அந்தக் கொள்ளைக்காரங்களும் அரசியல்வாதிகளா ஸார்?”

“குட் கொஸ்டின். அவங்க ஒரிஜினல் கொள்ளைக்காரங்க. அவங்களுக்கு அரசியல் தெரியாது. கொள்ளை மட்டும்தான் தெரியும். ஆனா, அரசியல்வாதிகளுக்கு பல விஷயங்கள் தெரியும். அதுலே கொள்ளையும் ஒண்ணு. கொள்ளைக்காரங்க கிட்டேயிருந்து மாலுமிகளை மீட்ட மாதிரி, அரசியல்வாதிகள் கிட்டேயிருந்து மக்களை மீட்க யாராலேயும் முடியாது.”

“ஏற்கெனவே அரசாங்கம் டி.வி., கேஸ் ஸ்டவ், இலவசமா கொடுத்தது. இப்ப மிக்ஸி, கிரைண்டர், ஃபேன், லேப்டாப், ஆடு, மாடு, அரிசி எல்லாம் இலவசம்னு பேப்பர்லே போட்டிருக்குதே. நம்ம அரசாங்கம் பணக்கார அரசாங்கமா ஸார்?.” 

“அரசாங்கம் தான் பணக்கார அரசாங்கம். ஆனா, மக்கள் ஏழைகள். அவங்களாலே காசு கொடுத்து எதுவும் வாங்க முடியாது. அதனாலேதான் அரசாங்கம் எல்லாத்தையும் இலவசமா கொடுக்குது. ஆடி தள்ளுபடி, விழாக்கால தள்ளுபடி மாதிரி, இது தேர்தல் கால தள்ளுபடி.”

“அப்படின்னா தேர்தல் சமயத்திலே எங்களுக்கு மார்க் இலவசமா போடுவாங்களா ஸார்?.”

“சீ வாயை மூடு! உனக்கென்ன ஓட்டா இருக்குது? ஒழுங்கா படிச்சு மார்க் வாங்கற வழியைப் பாரு.”

“சரி. மக்கள்தான் ஏழைகளா இருக்காங்களே. டீஸல், சமையல் கேஸ் விலையை எல்லாம் அரசாங்கம் ஏன் அடிக்கடி உயர்த்துது? அதையும் இலவசமா கொடுக்கலாமே? ஏன் மக்களைக் கஷ்டப்படுத்தணும்?”

“அது வந்து, இந்த எண்ணெய் வர்த்தக நிறுவனங்களை கஷ்டப்படுத்தக் கூடாதேங்கற நல்ல எண்ணத்தின் அடிப்படையிலேதான், அரசாங்கம் மக்களைக் கஷ்டப்படுத்துது. எதையெல்லாம் இலவசமா கொடுக்கணும், எதையெல்லாம் அநியாய விலையிலே விற்கணும்ன்றது கவர்மென்டோட கொள்கை முடிவு.”

“கொள்கைன்னா என்ன ஸார்?”

“கவர்மென்ட் என்ன செய்யுதோ, அதான் கவர்மென்டோட கொள்கை. அடுத்து வர்ற கவர்மென்டுக்கு அந்தக் கொள்கை பிடிக்கலைன்னா, அதை மாத்திரும். அது அந்த கவர்மென்ட்டோட கொள்கை.” 

“யாரோ ஒரு கலெக்டர் தன் மகளை கார்ப்பரேஷன் ஸ்கூல்லே சேர்த்ததை அதிசயமா போட்டிருக்காங்களே. அதுலே என்ன ஸார் ஆச்சரியம்?”

“சொல்றேன். கார்ப்பரேஷன் ஸ்கூல்லே எதுவுமே ஒழுங்கா நடக்காது. வாத்தியாருங்க வர்றதே அதிசயம். வந்தாலும் அக்கறையா பாடம் நடத்த மாட்டாங்க. டாய்லெட் கூட இருக்காது. குப்பை கூளங்கள் இருக்கும். ஆடு, மாடு, நாய் திரியும். நாட்டுக்கே தெரிஞ்சிருக்கிற இந்த விஷயம் அந்த கலெக்டருக்கு தெரியலையேன்னு ஆச்சரியப்படறாங்க.”

“அந்தப் பள்ளிக்கூடம் மட்டும் ஏன் அப்படி இருக்குது?.”

“அதான் சொன்னேனே. அது கார்ப்பரேஷன் பள்ளிக்கூடம். அப்படித்தான் இருக்கும். கார்ப்பரேஷன் ஆஸ்பத்திரி மாதிரிதான், கார்ப்பரேஷன் பள்ளிக்கூடமும். ஏற்கெனவே கஷ்டப்படறவங்க மட்டும்தான் அந்த மாதிரி இடங்களுக்குப் போய் கஷ்டப்படணும். அதான் நியாயம். மத்தவங்க போனா அநியாயத்துக்குப் புதுசா கஷ்டப்படணும்.”

“ஸார்... பேப்பர்லே நிறைய இடங்களிலே நகை பறிப்பு, கற்பழிப்பு, திருட்டு வி.ஸி.டி. டாஸ்மாக்குன்னு வருதே... அதெல்லாம் என்ன?”

“படவா ராஸ்கல்! பிஞ்சுலேயே பழுத்துட்டியா? பேப்பர் படிச்சு ஒரு நல்ல விஷயமாவது கத்துக்கறீங்களா? நாளையிலேர்ந்து யாராவது பேப்பரைத் தொட்டா பிச்சுப்பிடுவேன் பிச்சு. உருப்படற வழியைப் பாருங்க.”

{சமச்சீர் கல்வித் திட்டத்தைத் தொடர்வதா, வேண்டாமா என்று எழுந்துள்ள பிரச்சனையால் எந்த பாடத் திட்டத்தைப் பின்பற்றுவது என்று புரியாமல், ஆசிரியர்களும், மாணவர்களும் தவிக்கும் நிலை தாற்காலிகமாக ஏற்பட்டுள்ளது. இப்பிரச்சனையில் ஒரு முடிவு தெரியும் வரை, நேரத்தை வீணாக்காமல் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு இப்படி பொது அறிவை போதிக்கலாமே...!}



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

கருணாநிதி : உங்க பிரச்சனைகளுக்கு நீங்களே ஏதாவது பதில் சொல்லிக்குங்க. இப்ப அதுவா முக்கியம்? கனிமொழிப் பிரச்சனை நல்லபடியா முடியணும். அதுக்கு காங்கிரஸை மிரட்டணுமா கெஞ்சணுமான்னு புரியாம ரெண்டு வியூகத்தையும் கலந்து செஞ்சுகிட்டிருக்கேன்.

தயாநிதி மாறன் : நம்ம உணர்ச்சிகளை சோனியாவுக்கு விளக்க, நான் வேணும்னா கெஞ்சிக் கூத்தாடி ஒரு அரைநிமிஷ அப்பாயின்ட்மென்ட் வாங்கித் தரட்டுமா?

கருணாநிதி : அதைக் கடைசி வியூகமா வெச்சுக்கலாம். இப்ப சோனியாவையோ பிரதமரையோ காங்கிரஸையோ கண்டிச்சா நிலைமை இன்னும் மோசமாப் போயிடும். அதுக்காக, கண்டிக்காம விட்டா நிலைமை இதே மாதிரி மோசமா போயிட்டிருக்கும். அதனாலே அவசரத்துக்கு ஸி.பி.ஐ.யை மட்டும் லேசாக் கண்டிச்சு தீர்மானம் போடுவோம்.

அன்பழகன் : ஸி.பி.ஐ.யைக் கண்டிச்சா மத்திய அரசுக்கு கோபம் வராதா?

கருணாநிதி : கோபம் வந்தா, டி.ஆர். பாலு நேரா பிரதமரை சந்திச்சு, கழகத்தோட நிலைமையை விளக்கட்டும். ‘2ஜி வழக்கில் ஸி.பி.ஐ.யில் உள்ள ‘அவாள்’ அதிகாரிகள் கனிமொழியைச் சேர்த்துவிட்டதை மட்டும்தான் கழகம்

கூடா நட்பு பாடாய் படுத்தும் பாடு – சத்யா

தி.மு.க.வுக்கு எதிரான ஸி.பி.ஐ. நடவடிக்கைகள், கைது, ஜாமீன் மறுப்புகளுக்குப் பிறகு, அக்கட்சித் தலைவர்களின் கூட்டம் நடக்கும்போதெல்லாம், தி.மு.க. – காங்கிரஸ் உறவு முறிந்து விடுமோ என்ற பேச்சு கிளம்புவதும், பிறகு அப்படி எதுவும் இல்லை என்று கூட்டத்தை முடித்துக் கொள்வதும் வாடிக்கையாகி விட்டது. கோபம், சோகம், பயம், கலந்த உணர்ச்சிக் கதம்பமாகத் தவிப்பவர்களுக்குத்தான் அவர்கள் கஷ்டம் புரியும் என்பதை, அரசியல் வம்புக்கு அலைபவர்கள் இப்போதாவது புரிந்து கொள்ள வேண்டும். அதற்காகத்தான், சமீபத்தில் நடந்து முடிந்த தி.மு.க. உயர்நிலைக் குழுவில் அக்கட்சித் தலைவர்கள் என்ன விவாதித்திருப்பார்கள் என்று கண்டுபிடித்து வழங்கியிருக்கிறோம்.

படம்
அன்பழகன் : கழகத்தோட இந்த நிலைமைக்கு தேர்தல் தோல்விதான் காரணம்னு தெளிவாப் புரியுது. ஆனா, தேர்தல் தோல்விக்குத்தான் என்ன காரணம்னு புரியலை.

கருணாநிதி : கழகம், தேர்தலில் தோல்வியடைந்து விட்டதுன்னு யாராவது சொன்னா அது தவறு.

அன்பழகன் : நான் சொல்லலைங்க. பேப்பர்லே அப்படி போட்டுட்டாங்க. தேர்தல் கமிஷனும் அதையே சொல்லிடுச்சு. அதை நம்பி அம்மையார் முதல்வராவே ஆயிட்டாங்க.

கருணாநிதி : உண்மை நிலை என்னன்னா, கழகத்தின் கொள்கைகளுக்கு எப்பவும் தோல்வியில்லை.

துரைமுருகன் : கழகத்தின் கொள்கைகள் எப்படித் தோற்கும், தலைவரே? கழகத்தின் கொள்கைகளைத்தான் நாம தேர்தல்லே நிறுத்தவே இல்லையே. ஸ்பெக்ட்ரம் ஊழல், மின்வெட்டு – இதுங்களைத்தானே நிற்க வெச்சோம்?

கருணாநிதி : ஸ்பெக்ட்ரம் ஊழல், மின்வெட்டு எல்லாம் ஏடுகளால் பெரிதுபடுத்தப்பட்ட விஷயங்கள்தான். நாலு மணிநேர மின்வெட்டை ஆறு மணிநேர மின்வெட்டுன்னும், சில ஆயிரம் கோடி ரூபாய் ஊழலை, 1.76 லட்சம் கோடி ரூபாய் ஊழல்னும் பெரிதுபடுத்திட்டாங்க. 

ஆற்காடு வீராசாமி : என்னவோ இப்பதான் முதல் முறையா ஊழல் நடந்துட்ட மாதிரி மக்கள் நமக்கெதிரா பேயாட்டம் ஆடிட்டாங்க. நாம பார்க்காத ஊழலா? செய்யாத ஊழலா? இப்படி காலம் காலமா ஊழல் இருக்கும்போது, ஊழலாலே குடியே முழுகிட்ட மாதிரி பிரச்சாரம் பண்ணிட்டாங்க. அதான் தோல்விக்கு காரணம்.

கருணாநிதி : ஊழல் எதிர்ப்பு மசோதா கொண்டு வரணும்னு எழுபதுகளிலேயே குரல் கொடுத்தவன் நான். சர்க்காரியா ஊழலை ஒழிக்க மொரார்ஜி முன்வராததாலே, நாம காங்கிரஸோட சேர்ந்தோம். அதன் தொடர் விளைவா, ஊழல் இன்னைக்கு விஸ்வரூபம் எடுத்து, கழகத்தையே பலி கொடுக்கிற நிலைமை ஏற்பட்டிருக்குது.

துரைமுருகன் : போகட்டும் விடுங்க தலைவரே. அடுத்த தேர்தல்லே ஜெயிச்சா எல்லாம் சரி ஆயிடும். அதுவரைக்கும் கழகத்தை எப்படிக் காப்பாத்தறதுன்னுதான் நாம இப்ப கண்டுபிடிக்கணும்.

அன்பழகன் : அதாவது, கழகத்தை ஸி.பி.ஐ., அமலாக்கப் பிரிவு கிட்டேயிருந்து காப்பாத்தணும். நீதித்துறை கிட்டேயிருந்து காப்பாத்தணும். மத்தியிலே ஆட்சி செய்யற கட்சியோட கூட்டணி இருந்தும், ஊழலுக்கு தண்டனை அனுபவிக்கணும்ங்கறது என்ன ஜனநாயகம்? கேள்விப்படாத அக்கிரமமா இருக்குதே?

கருணாநிதி : மத்திய அரசின் உத்தரவோ, அலட்சியமோ, ஆணவப் போக்கோதான் கனிமொழி சிறையில் இருப்பதற்குக் காரணம். தன்மானத்தை இழந்து, சுயமரியாதையை பலி கொடுத்து விட்டு, இந்தக் கூட்டணி தொடரத்தான் வேண்டுமா என்ற வினாவிற்கு விடையாக நாம் இன்று எடுக்கிற முடிவு அமையணும். அதுக்காகத்தான் இந்தக் கூட்டத்தை கூட்டியிருக்கிறேன்.

ஆற்காடு வீராசாமி : கழகத்தைக் காப்பாத்த முடியாத மத்திய அரசை, நாம ஏன் காப்பாத்தணும்னு நீங்க கோபப்படறதிலே நியாயம் இருக்குது. கொள்கைதான் நமக்கு வேஷ்டி. பதவி சாதாரண துண்டுதானே தவிர, மஞ்சள் துண்டு இல்லை. துணிஞ்சு, தூக்கி எறியறதைப் பத்தி விவாதிக்கலாம்.

கருணாநிதி : என்ன பேசறீங்க நீங்க? எடுத்தேன் கவிழ்த்தேன்னு சுய மரியாதையைக் காட்ட நான் தயாராயில்லை. அலட்சியப் போக்கைக் காட்டுகிற, ஆணவம் பிடித்த மத்திய அரசுதான் கனிமொழியை சிறையிலிருந்து விடுவிக்க ஆவன செய்ய முடியும்ங்கிறதையும் நாம மறந்துடக் கூடாது. திஹார் சிறையை நினைச்சு என் மனம் படுகிறபாடு, உங்களுக்கு ஒரு மகள் இருந்து அவர் ஜாமீனில் வரமுடியாத நிலையில், சிறையில் அடைக்கப்பட்டிருந்தாத்தான் தெரியும். 

அன்பழகன் : உங்க கஷ்டம் எங்களுக்கும் புரியுது. நீங்க நினைக்கிற மாதிரியே, காங்கிரஸோட கூட்டணி தொடர்றதுதான் உங்க குடும்பத்துக்கு நல்லது. எதிரிகள் அடிக்கும்போது, திருப்பி அடிக்கிற நிலைமையிலே நாம இல்லைன்னா, மெதுவா அடிங்கன்னு கேக்கற உரிமை நமக்கிருக்குது. முடிஞ்சா, டெல்லிக்குப் போய் சோனியாவையும் பிரதமரையும் பார்த்துட்டு வந்துடுங்களேன்.

கருணாநிதி : யாரையும் கெஞ்ச வேண்டிய அவசியம் இல்லை. எதுவாயிருந்தாலும் சட்டப் பூர்வமா சந்திப்போம். ஆனா, போஃபர்ஸ் வழக்கிலே சட்டம் எப்படி சந்தி சிரிச்சதுன்னு விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடத்தி, மக்களுக்கு நினைவுபடுத்த நான் விரும்பலை. அது ஏடுகள் எழுத வேண்டிய விஷயம். க்வாட்ரோக்கிக்கு ஒரு நியாயம், கனிமொழிக்கு ஒரு நியாயமா என்கிற கேள்வி பிறக்குதா இல்லையான்னு சம்பந்தப்பட்டவர்கள் சிந்திக்கலையேன்றதுதான் என் வருத்தம்.

துரைமுருகன் : காங்கிரஸ் என்ன நினைக்குதுன்னே புரியலை. ‘கனிமொழி கைது விஷயமா கலைஞரின் கவலையில் மத்திய அரசும் பங்கு கொள்கிறது’ன்னு குலாம்நபி ஆஸாத் கூட சொல்லியிருக்காரு.

கருணாநிதி : அப்படி சொல்லிட்டா நான் நம்பிடுவேனா? இதென்ன இலங்கைப் பிரச்சனையா? தமிழகத்தின் கவலையில் மத்திய அரசும் பங்கு கொள்கிறதுன்னு சொல்றதை நான் வாயை மூடிக் கேட்டுக்கிறதுக்கு? கனிமொழி பிரச்சனையை அவ்வளவு சாதாரணமா விட்டுட என்னாலே முடியாது.

அன்பழகன் : அப்படின்னா, ‘மத்திய அரசை வெளியிலிருந்து ஆதரிப்போம்’னு மறுபடியும் அறிவிக்கலாமா? ஆட்சி கவுந்துடுமோன்ற பயத்திலே, ஸி.பி.ஐ.யை கொஞ்சம் அடக்கி வெக்க மாட்டாங்களா? அடக்கலைன்னாலும், ‘ஆதரவு தொடரும்’னு அடுத்த நாளே அறிவிச்சிடலாம்.

கருணாநிதி : பொறுப்போடதான் பேசறீங்களா? நம்ம ஆதரவு இல்லாமலேயே ஆட்சி நிலைச்சுட்டா நம்ம கதி என்ன ஆகறது? கழகம் வெளியே வந்தா, அதே சாக்குன்னு ரெண்டு அம்மையார்களும் நெருங்கிடுவாங்களே! காங்கிரஸ் நட்பை உதறக் கூடிய சரியான நேரம் வரும்போதுதான் நாம காங்கிரஸுக்கு பாடம் கற்பிக்க முடியும்.

ஆற்காடு வீராசாமி : சரி, அப்ப கூட்டணி தொடருதுன்னு அறிவிக்கலாமா? 

கருணாநிதி : எப்படித் தொடர முடியும்? குட்டக்குட்ட குனியச் சொல்றீங்களா? சரி, மெதுவாகவாவது குட்டறாங்களா? அதுவும் இல்லை. கைதுகள் எண்ணிக்கை கூடிக் கொண்டே போனாலும் வாளாவிருக்க இளிச்சவாயனல்ல தமிழன்ங்கறதை உணர்த்த வேண்டாமா?

தயாநிதி மாறன் : நான் கூட கூட்டணி முறியக் கூடாதுன்னுதான் முதல்லே நினைச்சேன். ஆனா போற போக்கு விபரீதமாயில்லே இருக்குது? கழகத்திலே இன்னொரு தலைவருக்கும் – அதாவது எனக்கும் – இப்ப பிரச்சனை வந்திருக்குதே?

கருணாநிதி : உங்க பிரச்சனைகளுக்கு நீங்களே ஏதாவது பதில் சொல்லிக்குங்க. இப்ப அதுவா முக்கியம்? கனிமொழிப் பிரச்சனை நல்லபடியா முடியணும். அதுக்கு காங்கிரஸை மிரட்டணுமா கெஞ்சணுமான்னு புரியாம ரெண்டு வியூகத்தையும் கலந்து செஞ்சுகிட்டிருக்கேன்.

தயாநிதி மாறன் : நம்ம உணர்ச்சிகளை சோனியாவுக்கு விளக்க, நான் வேணும்னா கெஞ்சிக் கூத்தாடி ஒரு அரைநிமிஷ அப்பாயின்ட்மென்ட் வாங்கித் தரட்டுமா?

கருணாநிதி : அதைக் கடைசி வியூகமா வெச்சுக்கலாம். இப்ப சோனியாவையோ பிரதமரையோ காங்கிரஸையோ கண்டிச்சா நிலைமை இன்னும் மோசமாப் போயிடும். அதுக்காக, கண்டிக்காம விட்டா நிலைமை இதே மாதிரி மோசமா போயிட்டிருக்கும். அதனாலே அவசரத்துக்கு ஸி.பி.ஐ.யை மட்டும் லேசாக் கண்டிச்சு தீர்மானம் போடுவோம்.

அன்பழகன் : ஸி.பி.ஐ.யைக் கண்டிச்சா மத்திய அரசுக்கு கோபம் வராதா?

கருணாநிதி : கோபம் வந்தா, டி.ஆர். பாலு நேரா பிரதமரை சந்திச்சு, கழகத்தோட நிலைமையை விளக்கட்டும். ‘2ஜி வழக்கில் ஸி.பி.ஐ.யில் உள்ள ‘அவாள்’ அதிகாரிகள் கனிமொழியைச் சேர்த்துவிட்டதை மட்டும்தான் கழகம் கண்டித்தது. மற்ற அனைவரையும் சேர்த்ததை தி.மு.க. மனதாரப் பாராட்டி நன்றி தெரிவிக்கிறது’ன்னு அறிக்கை விட்டு கூட்டணியை சரிப்படுத்திடறேன். 

துரைமுருகன் : அப்படின்னா காங்கிரஸ் நட்பு தொடரணும்னுதான் நினைக்கிறீங்களா?

கருணாநிதி : இல்லையே. நான்தான் ‘கூடா நட்பு கேடாய் முடியும்’னு சொன்னேனே. கேடாய் முடிஞ்சாலும், இப்ப அந்த கூடா நட்பை இழந்துடக் கூடாது. ஏன்னா தற்சமயம் நமக்கு உருப்படியா இருக்கிறது அந்த ஒரு ‘கூடாநட்பு’தான். கழகம் தப்பிக்கிறதிலே இவ்வளவு சிக்கல்கள் இருக்கிறதாலே, ‘காங்கிரஸுடனான உறவில் எந்த சிக்கலும் இல்லை’ன்னு சொல்லித் தொலைப்போம்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

வருங்கால சாதனைகளை வரவேற்போம் – சத்யா 

மத்திய அரசு தனது இரண்டாண்டு கால ஆட்சியின் நிறைவு விழாவைக் கொண்டாடி, கூட்டணி கட்சிகளுக்கு விருந்தளித்து மகிழ்ந்துள்ளது. அத்துடன் நிற்காமல், விழாவில், சோனியா தங்கள் ஆட்சியின் இரண்டாண்டு சாதனை அறிக்கையை வெளியிட்டு, ‘சாதனைகள் தொடரும்’ என்று வேறு எச்சரித்திருப்பதுதான் கவலையை ஏற்படுத்துகிறது. மத்திய அரசின் சாதனைகள் அடுத்த மூன்றாண்டுகளும் இதே ரீதியில் தொடர்ந்தால், ஐந்தாவது ஆண்டுவிழாவில் தலைவர்களின் பேச்சு இப்படியல்லவா இருக்கும்! 

படம்

1. பிரணாப் முகர்ஜி

விலைவாசி உயர்வு, ஊழல்கள், நக்ஸலைட் பிரச்சனை, விவசாயிகள் பிரச்சனை போன்ற பல சவால்களைச் சந்தித்தும் இதுவரை எதற்கும் பலியாகாமல், ஒரு வழியாக ஐந்தாண்டு கால ஆட்சியைப் பூர்த்தி செய்கிற அசுர சாதனையை இந்த அரசு நிறைவேற்றியுள்ளது. எதிர்க் கட்சிகளும் மீடியாவும்தான் இப்பிரச்சனைகள் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருந்தனவே தவிர, மத்திய அரசு சற்றும் மனம் கலங்காமல், ஆனது ஆகட்டும் என்று தன் போக்கிலேயே சென்றதுதான் இந்த மாபெரும் வெற்றிக்குக் காரணம். 

ஐந்தாண்டு காலத்தில் 137 முறை பெட்ரோல், டீஸல் விலையை உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அழிந்து விடாமல் காப்பாற்றி இருக்கிறோம். உலகம் முழுவதும் பொருளாதாரச் சீரழிவு ஏற்பட்டு, விலைவாசி தாறுமாறாக உயர்ந்திருக்கிற இந்தக் காலகட்டத்தில் கூட, நமது நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் 350 ரூபாய்க்கே கிடைக்கிறது என்பதிலிருந்தே இந்த ஆட்சியின் நிர்வாகத் திறனை மக்கள் புரிந்து கொள்ளலாம். 

வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் போட்டுள்ள கறுப்புப் பணம் ஒரு கோடியே எண்பத்தெட்டு லட்சம் கோடி ரூபாய் என்பதையும் இந்த அரசு கண்டுபிடித்திருக்கிறது. கண்டுபிடிக்கப்படாத கறுப்புப் பணம் எவ்வளவு என்பது மட்டும்தான் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதையும் கண்டுபிடித்து விட்டால் நமது நாட்டு மக்கள் மொத்தமாக ஏமாந்த பணம் எவ்வளவு என்பதைத் துல்லியமாக சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்து, வழக்கை முடித்து விடலாம். அதற்காகத்தான் இந்த அரசு பாடுபட்டுக் கொண்டிருக்கிறது. 

2. சிதம்பரம்

நம்மைச் சுற்றி பயங்கரமான நாடுகள் இருக்கின்றன. அந்நாடுகள் எல்லாம் திருந்திய பிறகு நம் நாட்டில் எந்தப் பிரச்சனையும் இருக்காது. உலக வரைபடத்தில் இந்தியா வேறு பகுதியில் இருந்திருந்தால் - குறைந்த பட்சம் பாகிஸ்தானாவது சற்று தள்ளி அமைந்திருந்தால் கூட - உலக அளவில் இந்தியா முதல் இடத்தைப் பிடித்திருக்கும். 

நாட்டில் எத்தனை லட்சம் கோடி ரூபாய் கள்ள நோட்டுகளை தீவிரவாத அமைப்புகள் புழங்க விட்டிருக்கின்றன என்பதைக் கண்டுபிடித்த பிறகுதான் பொருளாதார நிலையை சீர் செய்ய முடியும். எனவே, தீவிரவாத ஒழிப்புப் பந்து, தீவிரவாதிகள் பக்கம்தான் இருக்கிறது. 

போதை மருந்து கடத்துபவர்கள், கம்ப்யூட்டர் மூலம் தகவல் திருடுபவர்கள் விரைவில் தாங்களாகத் திருந்த வேண்டும். இல்லாவிட்டால் அவர்களையும் திருத்த நேரிடும் என்று எச்சரிக்கிறேன். எனவே, பத்திரிகைகளும் டி.வி. சேனல்களும் பிரச்சனைகளைப் பெரிதுபடுத்தாமல் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும். 

நக்ஸலைட்கள் கோழைத்தனமாக பல மாநிலங்களில் டி.ஜி.பி.யையே கடத்திச் சென்று அரசை மிரட்டத் தொடங்கியதையும் நான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். மத்திய அரசு உடனே தலையிட்டு நக்ஸலைட்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதின் விளைவாக, அவர்கள் கோரிக்கைகள் ஏற்கப்பட்டு நூற்றுக்கணக்கான நக்ஸலைட்களை சிறையிலிருந்து விடுவித்து, டி.ஜி.பி.க்களை மீட்டுக் காட்டியிருக்கிறோம். இந்தத் தொடர் நடவடிக்கைகளின் பலனாக, தற்சமயம் நமது நாட்டு சிறைகளில் தீவிரவாதிகளே இல்லாததால், அதிகாரிகளைக் கடத்துவதை நக்ஸலைட்களும் தாற்காலிகமாக நிறுத்திக் கொண்டு விட்டனர். இப்படி நக்ஸலைட் பிரச்சனைகளுக்கும் இந்த அரசு தீர்வு கண்டுள்ளது. 

நமது புலனாய்வுத்துறை, நிரா ராடியாவை தொடர்ந்து மூன்றாண்டுகளாகத் துருவித் துருவி விசாரித்ததன் அடிப்படையில், பல கவர்னர்களையும், அட்வகேட் ஜெனரல், ஆடிட்டர் ஜெனரல் உள்ளிட்ட பல மத்திய அரசு அதிகாரிகளையும் அவரே நியமித்து வந்திருப்பதையும் இந்த அரசு கண்டுபிடித்துள்ளது. இதுபோன்று இன்னும் மறைந்திருக்கும் பல அதிகார மையங்களையும் முடிந்த வரை கண்டுபிடித்து தண்டிக்க, இந்த அரசு தயங்காது. 

மும்பைத் தாக்குதலுக்குப் பிறகு, நாம் பயந்து விடுவோம் என்று தீவிரவாதிகள் கணக்கிட்ட காலம் ஒன்று இருந்தது. ஆனால், மும்பை மட்டுமல்ல, அதற்கு பிறகு டெல்லி, கல்கத்தா, ஹைதராபாத், சென்னை, பெங்களூரு, பூனா, ஒரிஸ்ஸா ஆகிய பல இடங்களில் தீவிரவாதத் தாக்குதல்கள் நடத்தப்பட்டும் கூட, அத்தனை தாக்குதலையும் துணிவோடு எதிர்கொண்டு, கண்டித்து கண்டித்தே அவர்களை வெளிநாடுகளுக்கு விரட்டி அடித்திருக்கிறோம். அவர்கள் வெளிநாடுகளில் பதுங்கி வாழலாமே தவிர, இங்கே அவர்களுக்கு இடமில்லை என்பதை உணர்த்தி விட்டோம். எதிர்பாராத விதமாக நமது காவல் துறையிடம் மாட்டிக் கொண்ட 57 தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு அத்தனை பேரும் ஜனாதிபதிக்கு கருணை மனு போட்டு காத்திருக்கிறார்கள் என்பதே நமது தீவிரவாத ஒழிப்புக்கொள்கைக்கு கிடைத்துள்ள வெற்றி. 

3. பிரதமர்

விலைவாசி உயர்வு கவலை அளிக்கிறது. வெளிநாட்டு தீவிரவாதம் அச்சுறுத்துகிறது. உள்நாட்டு தீவிரவாதங்கள் அச்சுறுத்துகின்றன. பண வீக்க உயர்வு பயமுறுத்துகிறது. ஊழல் அதிகரித்து வருவது திடுக்கிட வைக்கிறது. மற்றபடி சிறப்பான ஆட்சியைத்தான் இந்த அரசு வழங்கி வருகிறது. 

பண வீக்கம்தான் விலைவாசி உயர்வுக்குக் காரணம் என்பதைக் கண்டுபிடித்து விட்டோம். பணவீக்கம் 67.33 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. நாம் இவ்வளவு காலம் ஆட்சி செய்த பின்பும் அது 100-ஐ எட்டவில்லை என்பதுதான் இந்த அரசின் வெற்றி. கடந்த ஆண்டு மைனஸ் 2.4 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி தற்போது மைனஸ் 2.5 சதவீதத்தை எட்டியுள்ளது. பண வீக்கம் மேற்கொண்டு அதிகரிக்காமல் பார்த்துக் கொண்டால், விலை உயர்வைக் கட்டுப்படுத்திவிட முடியும். விலை உயர்வைக் கட்டுப்படுத்தியதும் பொருளாதார நிலை சீரடைந்து விடும். அதற்குப் பிறகு விவசாயிகள் தற்கொலை செய்வது இப்போது இருக்கிற மாதிரி பல்லாயிரக்கணக்கில் இருக்காது. சில ஆயிரக்கணக்கில்தான் இருக்கும். 

ஜனநாயக ஆட்சியில் ஊழல் சம்பந்தமாக யாரிடமும் கேள்வி கேட்பது அரசியல் நாகரிகம் அல்ல. பதில் சொல்லாதவர்களிடம் கேள்வி கேட்பதால், எந்தப் பயனுமில்லை. சுப்ரீம் கோர்ட் நடவடிக்கைப்படி, ஏராளமான ஊழல் தலைவர்கள் சிறைக்கு அனுப்பப்பட்டு விட்டதால், அவர்களால் செய்யப்படும் ஊழல் குறைந்திருக்கிறது. இதுதான் இந்த அரசின் சாதனை. 

இந்த அரசு நீதித்துறையின் கண்டனங்களை மிகவும் மதிக்கிற அரசு என்பதால்தான், ஊழல் ஒழிப்புத்துறை இயக்குனரின் ஊழல்களும், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனரின் லஞ்சங்களும், புலனாய்வுத்துறை தலைவரின் குற்றங்களும் அம்பலமானவுடன், சுப்ரீம் கோர்ட் உத்திரவுபடி அவர்களை மாற்றியிருக்கிறோம். இந்தப் பிரச்சனைகள் கூட ராகுல் பிரதமராகும் வரைதான். அதற்குப் பிறகு நாடு நல்ல வழியில் திரும்பி விடும். 


4. சோனியா

இந்த அரசின் சாதனைகளிலேயே எனக்குப் பிடித்தது ஊழல் ஒழிப்புதான். மாயாவதி, முலாயம்சிங், லாலு பிரசாத் போன்றவர்களோடு கூட சமயத்துக்கேற்ப சமரசம் செய்து கொள்ளலாம். ஆனால் ஊழலுடன் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஊழல் ஒழிப்புக்காக நாம எடுக்காத நடவடிக்கைகளே இல்லை. கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் நூற்றுக்கணக்கான ஊழல்களின் மீது சுப்ரீம் கோர்ட் உத்திரவுப்படி நடவடிக்கை எடுத்ததன் விளைவாக, ஆறு காங்கிரஸ் அமைச்சர்கள், 28 காங்கிரஸ் எம்.பி.க்கள் உட்பட கூட்டணிக் கட்சித் தலைவர்கள், 45 பேரும் திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். சுமார் 1235 ஊழல் வழக்குகள் விசாரணையில் உள்ளன. 

இப்படிப்பட்ட அரசைப் பார்த்து, ஊழல் அரசு என்று குற்றம்சாட்ட பா.ஜ.க.வுக்கு என்ன தகுதி இருக்கிறது? பா.ஜ.க. ஆட்சியில் ஒரு அமைச்சராவது இப்படி ஜெயிலுக்குப் போனது உண்டா? 

இந்த அரசு நேர்மையை மதிக்கிற அரசாக இருப்பதால்தான், மோசடிச் செயல்களில் வெளிப்படையாக ஈடுபட்டு மாட்டிக் கொண்ட பல கவர்னர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறோம். அதுமட்டுமல்ல, கவர்னர்கள் மாநில அரசுடன் சுமுகமான உறவைத் தொடர வேண்டும் என்பதிலும் உறுதியோடிருக்கிறோம். அதனால்தான் கர்நாடக முதல்வருடன் பலமுறை கைகலப்பில் ஈடுபட்ட கவர்னர் பரத்வாஜை ஒவ்வொரு முறையும் டெல்லிக்கு வரவழைத்து கவனமாகச் செயல்படும்படி எச்சரித்து அனுப்பியிருக்கிறோம். 

இந்த அரசு செய்யாமல் விட்டது மகளிர் மசோதா நிறைவேற்றம் மட்டும்தான். அதை நிச்சயமாக அடுத்த ஆட்சியில் நிறைவேற்றி விடுவோம். ஜெய் ஹிந்த்!


-- Edited by devapriyaji on Monday 1st of August 2011 08:34:15 PM

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

எது சமத்துவம்? – சத்யா
தி.மு.க. அரசு 2010 – 11 – ஆம் கல்வி ஆண்டில் அறிமுகப்படுத்திய சமச்சீர் கல்வித் திட்டத்தை, இப்போதைய அ.தி.மு.க. அரசு தொடராமல் நிறுத்தி வைத்துள்ளது. இது தொடர்பாக, முன்னாள் முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள பெரியதொரு விளக்க அறிக்கையில், சமச்சீர் கல்வித் திட்டத்தை தனது அரசு கொண்டு வந்ததற்கான காரணங்களை விரிவாகப் பட்டியலிட்டுள்ளார்.

‘மாநிலம் முழுவதும் ஒரே சீரான சமச்சீர் கல்வி முறையை நடைமுறைப்படுத்த தி.மு.க. அரசு கொள்கை முடிவெடுத்தது. அதன்படி முதலில் ஒரு குழு ஆய்வறிக்கையை சமர்ப்பித்தது. அக்குழுவின் பரிந்துரைகளை மற்றொரு ‘ஒரு நபர் குழு’ ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கியது. பிறகு மற்றொரு கல்வியாளர்கள் குழு, திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆய்வு செய்து அறிக்கை வழங்கியது.

அதன்படி அவசரச் சட்டம் இயற்றி, முதல் கட்டமாக 2010–11–ல் 1 மற்றும் 6-ஆம் வகுப்புகளுக்கும், 2011–12–ல் மற்ற வகுப்புகளுக்கும் நடைமுறைப்படுத்த முடிவெடுக்கப்பட்டது...’ என்று தொடர்கிற அவரது நீண்ட அறிக்கையில் எந்த ஒரு இடத்திலும், இந்த சமச்சீர் கல்வி திட்டத்தின் மூலம் கல்வியின் தரம் உயரும் என்றோ, குறைந்தபட்சம் காக்கப்படும் என்றோ கூட குறிப்பிடப்படவில்லை.

அப்படியொரு நோக்கம் அவருக்கோ அவரது அரசுக்கோ, அவரால் நியமிக்கப்பட்ட குழுக்களுக்கோ, பரிந்துரைத்த கல்வியாளர்களுக்கோ இருந்ததாகவே தெரியவில்லை. கல்வியின் தரத்தையும் மனதில் வைத்து, அதற்கேற்ப சமச்சீர் கல்வித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று முன்னாள் முதல்வரும் ஆய்வு குழுவினருக்கு அறிவுறுத்தவில்லை; அவர்களும் அதைப் பற்றிக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை – என்பதையே கலைஞரின் அறிக்கை உணர்த்துகிறது.

மாறாக, ‘எல்லாவற்றிலும் சமமாக இருக்க வேண்டும் என்பதுபோல கல்வியிலும் சமத்துவம் நிலை நாட்டப்பட வேண்டும் என்பதுதான் தி.மு.க.வின் நிலை’ – என்றே தெளிவுபடுத்தியுள்ளார் கலைஞர்.

மாநிலக் கல்வித் திட்டம், மெட்ரிக் கல்வி முறை, ஆங்கிலோ இந்தியக் கல்வி முறை, ஓ.எஸ்.எல்.ஸி. ஆகிய நான்கு வகை கல்வி முறைகளையும் இணைத்து இவற்றிலிருந்த சிறப்புக் கூறுகளை உள்ளடக்கி ஒரே சீரான சமச்சீர் கல்வி முறையை நடைமுறைப்படுத்துகிறோம் என்பது முன்னாள் முதல்வரின் விளக்கம்.

மாநிலக் கல்வித் திட்டத்தை பயிலும் மாணவர்கள் கற்பதற்கு வசதியாக, உயர்தரக் கல்வி முறையில் இருந்த ‘சிறப்புக் கூறுகள் எந்த அளவுக்கு தரம் குறைக்கப்பட்டிருக்கும் என்பது கவலைக்குரிய ஒன்று. அனைத்து சிறப்புக் கூறுகளும் புதிய பாடத்திட்டத்தில் முழுமையாக இடம் பெற்றுள்ளன என்பதை எந்த ஆய்வுக் குழுவும் உறுதி செய்யவில்லை. புதிய திட்டத்தில் கல்வியின் தரம் குறைந்திருப்பதாக பல தனியார் பள்ளிகள் கவலை தெரிவித்துள்ளதும் கவனிக்கத்தக்கது. எனவே, கல்வியில் சமத்துவத்தை ஏற்படுத்துவதற்காக, ஏற்கெனவே இருந்து வருகிற கல்வியின் தரம் தாழ்த்தப்பட்டால், அந்த ‘சமச்சீர் கல்வி’ பொதுநன்மைக்கு உகந்ததா என்ற கேள்வி எழுகிறது.

சமத்துவம் என்பது மனிதர்களிடையே இருக்க வேண்டியது. மனிதர்களில் உயர்ந்தவர், தாழ்ந்தவர் இல்லை என்கிற உணர்வை மக்களிடையே ஏற்படுத்துவது அவசியம்தான். மக்களைப் போல அமைச்சர்கள் வாழ்ந்து காட்டினால் அது சமத்துவம். அமைச்சர்களுக்கு உள்ள வசதி வாய்ப்புகளை மக்களுக்கும் ஏற்படுத்த ஓர் அரசு முனைந்தால் அதை சமத்துவம் என்று ஏற்கலாம். ஆனால், கல்வியின் மூலம் எப்படி சமுதாயத்தில் சமத்துவத்தைக் கொண்டு வர முடியும்? யார் எதைக் கற்க விரும்புகிறார்களோ அவர்கள் அதைக் கற்க அனுமதிப்பதல்லவா சமத்துவம்? யாரும் எந்தக் கல்வித் திட்டத்தையும் கற்கும் உரிமை இருக்கும் போது, சமத்துவத்திற்கு என்ன குறை வந்து விடும்? கல்வித் தரத்தைச் சுருக்கி, எல்லோரும் இதை மட்டும் படித்தால் போதும் என்பது எப்படி சமத்துவம் ஆகும்? பின்னர், கல்லூரியில் சேர்ந்து படிக்கிற மாணவர்கள், கல்லூரிப் பாடத் திட்டங்களைக் கற்கும் வகையில் திறன் பெற்றிருப்பது அவசியம் இல்லையா? ‘சமச்சீர் பள்ளிக் கல்வித் திட்டத்துக்கு ஏற்ப கல்லூரிக் கல்வித் திட்டத்திலும் ‘சமச்சீர்’ கொண்டு வரப்படுமா? 

எல்லா நிலையிலும் சமத்துவத்தைக் கொண்டு வருவதுதான் முக்கியம் என்றால், ‘சமச்சீர் மருத்துவம்’ ஏன் வரக் கூடாது? சிலர் சிகிச்சைக்காக லண்டன் போவதும், வேறு சிலர், உயர்ந்த மருத்துவமனைகளை நாடுவதும், ஏழைகள் அரசு ஆஸ்பத்திரிகளுக்குச் செல்வதும் ஏன்? சமத்துவம் மட்டும்தான் அரசின் நோக்கம் என்றால், இனி அரசு ஊழியர்கள் அத்தனை பேருக்கும் ஒரே சம்பளம் என்று அறிவுறுத்தி ‘சமச்சீர் ஊதிய’ திட்டத்தைக் கொண்டு வர முடியுமா ஒரு அரசால்? உழைப்புக்கேற்ற ஊதியம் என்கிற நிலையை மாற்றி, எல்லா உழைப்பாளிகளுக்கும் ‘சம சம்பளம்’ என்று நிர்ணயிப்பது சாத்தியமா? ஓட்டப் பந்தயத்தில் முன்னால் ஓடிக் கொண்டிருப்பவர்களைத் தடுத்து நிறுத்தி, ‘பின்னால் வருபவர்களோடு இணைந்து சமமாக ஓடுங்கள்’ என்று அறிவுறுத்துவது ஏற்றுக் கொள்ளக் கூடியதா?

நல்லவேளை, இப்படிப்பட்ட சிந்தனைகள் கலைஞரின் மனதில் தோன்றுவதற்குள் ஆட்சி மாறி விட்டது.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ஊழலை ஒழிப்போம், வாரீர்! – சத்யா

பிரதமர், நீதிபதிகள் உள்ளிட்ட அனைவரையும் லோக்பால் மசோதா வரம்புக்கு உட்படுத்தும் வகையில், கடுமையான ஊழல் ஒழிப்புச் சட்டத்தை உருவாக்குவது; வெளிநாட்டு வங்கிகளில் போடப்பட்டுள்ள பல லட்சம் கோடி ரூபாய் கறுப்புப் பணத்தை முழுமையாக மீட்பது – போன்ற கோரிக்கைகளை முன்வைத்து பாபா ராம்தேவ் தொடங்கிய உண்ணாவிரதம், மத்திய அரசின் தலையீட்டால் களேபரத்தில் முடிந்திருக்கிறது. 

ஊழலை ஒழிக்கும் விஷயத்தில் மத்திய அரசால் எது முடியும், எது முடியாது என்று ஊழல் எதிர்ப்பாளர்கள் புரிந்து கொள்ளாததுதான் இதற்குக் காரணம். அதிகபட்சமாக மத்திய அரசு எந்த அளவுக்கு ஊழலை ஒழிக்க முன்வரும் என்பதைத் தொலைநோக்கோடு சிந்தித்து, பட்டியலிட்டிருக்கிறோம். இதை ஏற்றுக் கொண்டு சமரசத்திற்கு முன் வந்தால், ஊழல் ஒழிப்புப் பிரச்சனை முடிவுக்கு வரும். இல்லாவிட்டால் ஊழல் எதிர்ப்பாளர்களுக்குத்தான் பிரச்சனை.
படம்

1. பிரதமர் மீதான அனைத்து ஊழல் புகார்களும் விசாரணைக்கு உட்படுத்தப்படும். அதன்படி, பிரதமரால் நியமிக்கப்படும் விசாரணைக் குழு, பிரதமர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும். பிரதமரிடம் எந்தக் கேள்வியையும் கேட்கும் அதிகாரம் இக்குழுவுக்கு உண்டு. அதே நேரத்தில், பதில் சொல்லாமல் மௌனமாக இருக்கும் உரிமை பிரதமருக்கும் உண்டு. கமிஷனின் இறுதி அறிக்கை பிரதமரின் பரிந்துரையோடு, அமைச்சரவையின் பரிசீலனைக்கு அனுப்பப்படும். இக்குழுவின் தலைவரையோ, குழுவின் அறிக்கையையோ மத்திய அரசு எந்த நேரத்திலும் மாற்றலாம். அல்லது ரத்து செய்யலாம். பிரதமர் தொடர்பான குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் இக்குழுவில் பிரதமரும் ஒரு உறுப்பினராக இருப்பார்.

2. நீதிபதிகள் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்கவும் தனி அமைப்பு ஏற்படுத்தப்படும். அந்த அமைப்பு, நீதிபதிகளின் சொத்து, வருமான விபரங்களை மக்களுக்குத் தெரியாமல் பாதுகாக்கும். நீதிபதிகளின் பழைய ஊழல்கள், நில அபகரிப்பு மோசடி போன்றவை குறித்து கேள்வி கேட்காது. நீதிபதிகளின் உறவினர்களின் முறைகேடுகளை விசாரிக்காது. நீதிபதியின் ஊழல் நிரூபிக்கப்பட்டாலும் படாவிட்டாலும், அவர் ஓய்வு பெற்றபின் மத்திய அரசின் வேறு ஏதாவது அமைப்புக்குத் தலைவராக நியமிக்கப்படுவார்.

3.வெளிநாட்டு வங்கிகளில் போடப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை என்றாவது ஒருநாள் முழுமையாக மீட்க வேண்டும் என்பதை மத்திய அரசு கொள்கை அளவில் ஏற்றுக் கொள்கிறது. முழுமையான கறுப்புப் பணம் எவ்வளவு என்பதை அறிய முதல் கட்டமாக ஐவர் குழு ஏற்படுத்தப்படும். அந்த ஐந்து நபர்கள் மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு ஏதேனும் உள்ளதா, அவர்கள் கிரிமினல் வழக்குகளில் சம்பந்தப்பட்டிருக்கிறார்களா என்பதை அறிந்தவுடன், ஐவர் குழு நியமனம் பூர்த்தியாகும். அதற்குப் பிறகு, அந்த ஐவர் குழு எப்போது தங்கள் பணியைத் தொடரலாம் என்பதைப் பற்றி ஆராய இரு நபர் குழு அமைக்கப்படும். அந்த இரு நபர் குழுவின் அதிகாரங்கள் கடமைகள் ஆகியவற்றை மத்திய அரசால் நியமிக்கும் ஒரு நபர் குழு முடிவு செய்யும். மத்திய அரசு உத்திரவிட்டதும் அந்த ஒரு நபர் குழு தன் பணியை ஆரம்பிக்கும்.

4. ஒரே ஊழலில் ஐம்பது லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் செய்து மாட்டிக் கொள்ளும் ஊழல் பேர்வழிகளை மன்னிக்க அரசு தயாராக இல்லை. அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொள்கிறது. ஆனால் மரண தண்டனை பெறும் அத்தகைய ஊழல்வாதிகள் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்ப, மத்திய அரசு மனிதாபிமானத்தோடு அனுமதிக்கும். ஜனாதிபதி, வரிசைக்கிரமமாகவும், ஐந்து வருடங்களுக்கு ஒரு மனு என்ற நெறிமுறைப்படியும் மனுவைப் பரிசீலிப்பார். பிறகு தனது உத்தரவை சம்பந்தப்பட்ட மாநில முதல்வருக்கு அனுப்புவார். மாநில முதல்வர் அதை கவர்னருக்கும், கவர்னர் அதை மீண்டும் முதல்வருக்கும், முதல்வர் அதை மீண்டும் கவர்னருக்கும், பக்கத்து மாநில முதல் வருக்கும் சில காலம் அனுப்பிக் கொண்டிருப்பார்கள். அதற்கு பிறகு ஜனாதிபதி மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை அந்த ஊழல் ஆசாமி ஆயுள் முடியாமல் உயிரோடிருந்தால், அடுத்த ஜனாதிபதி மறுபடியும் முதலிலிருந்து நடவடிக்கையைத் தொடங்குவார்.

5. வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் மொத்த கறுப்புப் பணம் எவ்வளவு என்று ஒவ்வொரு வருடமும் மத்திய அரசு கண்டுபிடித்து மக்களுக்குத் தெரிவிக்கும். இந்தப் பணத்தை மீட்பது குறித்து அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் அனைத்துக் கட்சிகளின் கருத்தை அறிந்தவுடன், அந்த கறுப்புப் பணம் கிரிமினல் செயல்கள் மூலம் ஈட்டப்பட்டதா, வருமான வரித் துறையை ஏய்த்து சம்பாதிக்கப்பட்டதா என்று அறிய பொருளாதார நிபுணர் குழு, சம்பந்தப்பட்ட உலக நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து விசாரணை நடத்தும்.

பிறகு அவர்களது அறிக்கை சட்ட வல்லுனர்களால் பரிசீலிக்கப்படும். அதற்குப் பிறகும், அந்த கறுப்புப் பணத்தை உரியவர்கள் எடுத்துச் செல்லாமல் வங்கிகளிலேயே வைத்திருந்தால் அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து ஆராய்வது பற்றி பரிசீலிக்க ஆவன செய்ய உயர்மட்ட அமைச்சர்கள் குழு நடவடிக்கை எடுக்கும். இதற்காக ‘கறுப்புப் பணக் கண்டுபிடிப்புத் துறை’ உருவாக்கப்படும். இச் செலவுகளுக்காக முதல் நிதியாண்டில் 3735 கோடி ரூபாய் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

6. எதிர்காலத்தில் வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணத்தைப் பதுக்குவதைத் தடுப்பதற்காக, 1.1.2012-க்குப் பிறகு கறுப்புப் பணத்தை நம் நாட்டு வங்கிகளிலேயே முதலீடு செய்ய சட்டம் கொண்டு வரப்படும். அவ்வாறு முதலீடு செய்பவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 12 சதவிகிதம் ஊக்கத் தொகை வழங்கப்படும்.

7.பிரதமர் நேரிடையாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கெனவே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இப்போதைய பிரதமர், சோனியாவால் நேரிடையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதே நடைமுறை எதிர்காலத்திலும் தொடரும் என்று மத்திய அரசு உறுதியளிக்கிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

எல்லோரும் மாறவில்லை – சத்யா 

சென்ற இதழ் ‘துக்ளக்’ தலையங்கத்தில், மக்கள் பணபலத்தை துரத்தித் துரத்தி அடித்து விட்டதாகவும், மனோதிடத்துடன் பணத்தை அலட்சியப்படுத்தி விட்டதாகவும் ஆசிரியர் குறிப்பிட்டிருப்பதை முழுமையாக ஏற்க முடியவில்லை. 

இந்தத் தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு சுமார் 1.40 கோடி வாக்குகள் கிடைத்திருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த 1.40 கோடி மக்களும் தி.மு.க. ஆட்சியை சிலாகித்துத்தான் வாக்களித்திருப்பார்கள் என்பதை நம்ப முடியவில்லை. குடும்ப ஆட்சி, ஸ்பெக்ட்ரம் ஊழல், மின்வெட்டு, விலைவாசி உயர்வு, சட்டம் – ஒழுங்கு சீர்குலைவு போன்றவை குறித்து இந்த 1.40 கோடி வாக்காளர்களுக்கும் எந்தக் கவலையும் இருந்திருக்காது என்று தி.மு.க.வினரே கூட நினைக்க மாட்டார்கள். ஆனால், அப்பிரச்சனைகளைப் பொருட்படுத்தாமல், ஓட்டுக்குத் தரப்பட்ட பணத்தில் மயங்கியவர்கள் அளித்த கணிசமான வாக்குகளும், இந்த 1.40 கோடி வாக்குகளில் அடங்கியிருக்கிறது என்றே நான் கருதுகிறேன். எனவே, பணத்துக்கு மயங்கிய – மயங்குகிற – மக்கள் இன்னமும் லட்சக்கணக்கில் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். மக்கள் பணத்தைப் புறக்கணித்திருந்தால், தி.மு.க.வின் தோல்வி இன்னும் அதலபாதாளத்துக்குப் போயிருக்கும். 

அ.தி.மு.க. கூட்டணிக்குக் கிடைத்துள்ள 1.90 கோடி வாக்குகள், பணத்தைப் புறக்கணித்து போடப்பட்ட வாக்குகள் என்றும் கருத வழியில்லை. பணம், மக்களைப் பெருமளவு சென்று சேராதது ஒரு காரணம். பணத்தை வாங்கிக் கொண்டு, எதிர் மறையாக வாக்களித்தவர்கள் எண்ணிக்கை கணிசமாக இருந்தது மற்றொரு காரணம். பணப் பரிமாற்றத்தை அதிரடி நடவடிக்கைகளின் மூலம் தடுத்த தேர்தல் கமிஷன் முழு முதற்காரணம். 

உதாரணத்துக்கு, ஆத்தூர் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரை விட சுமார் இரண்டு மடங்கு வாக்குகள் பெற்று, 54,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். அத்தொகுதியில் பணம் அலட்சியப்படுத்தப்படாதது ஏன் – என்பது சிந்திக்கத்தக்கது. அத்தொகுதி மக்கள் தி.மு.க. ஆட்சியின் சாதனைகளால் கவரப்பட்டு வாக்களித்து விட்டார்களா என்ன? 

எனவே, திருமங்கலம் இடைத்தேர்தல் முதல் பென்னாகரம் இடைத் தேர்தல் வரை – பாராளுமன்றத் தேர்தல் உட்பட – பணம் வாங்கிப் பழக்கப்பட்ட வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் திடீரென பணத்தை வெறுத்து விட்டார்கள் என்பது சரிதானா? 

தேடி வரும் ஐநூறையோ, ஆயிரத்தையோ வேண்டாமென்று நிராகரிக்க முடியாத அளவுக்கு வறுமையில் வாழும் மக்கள் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள் என்பதை மறந்து விட முடியாது. வசதி இருந்தாலும் கூட, கொடுக்கிற பணத்தை விடுவானேன் என்று நினைப்பவர்களும் ஏராளமாக இருக்கிறார்கள். அப்படி பணம் பெற்றவர்களில் ஒரு பகுதியினர், வாங்கியதற்கேற்ப வாக்களித்திருப்பார்கள். அவர்களது வாக்குகளும் தி.மு.க. கூட்டணிக்கு கிடைத்திருக்கும். மற்றொரு பகுதியினர், பணத்தை வாங்கிக் கொண்டு, தி.மு.க. ஆட்சியின் மீதிருந்த வெறுப்பின் காரணமாக எதிர்த்தும் வாக்களித்திருக்கலாம். அந்த எண்ணிக்கை கணிசமாக இருந்திருக்கக் கூடும் என்றே தோன்றுகிறது. ஆகவே, ஓட்டுக்குக் கொடுக்கப்படுகிற பணத்தை வாங்குகிறவர்கள் இன்னமும் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள். அதையும் மீறி, பணத்தின் தாக்கம் இத்தேர்தலில் நாம் பயந்த அளவிற்கு இல்லாமல் போனதற்கு ஒரே காரணம் தேர்தல் கமிஷன்தான். 

இப்படி நினைத்துப் பார்ப்போமே! தேர்தல் கமிஷன் இந்த அளவுக்கு கண்டிப்பாக தேர்தல் விதிகளை அமல்படுத்தியிருக்காவிட்டால், வண்டி வண்டியாக பணத்தை பறிமுதல் செய்யாமல் விட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும்? திருமங்கலம், பென்னாகரம் பாணியில் எந்தத் தடையும் இன்றி பணம் மக்களிடையே செல்ல வழி விட்டிருந்தால் தேர்தல் முடிவுகள் இப்படியே இருந்திருக்கும் என்று நம்ப முடிகிறதா? 

உத்தேசமாகச் சொல்வதென்றால், ஓட்டுக்குப் பணம் மக்களைச் சென்றடையாதது – சுமார் எழுபது சதவீதமாக இருக்கலாம். (அவர்கள் தங்கள் விருப்பப்படி வாக்களித்திருப்பார்கள்.) பணம் பெற்றவர்கள், அதற்காக வாக்களித்தது 10 சதவீதம் இருக்கலாம். பணம் பெற்றும் எதிரிடையாக வாக்களித்தவர்கள் 10 சதவீதம் இருக்கலாம். பணம் கிடைக்கப் பெற்றும் அதை ஏற்க மறுத்தவர்கள் பத்து சதவீதம் இருக்கலாம். ஆக, அ.தி.மு.க. அணியின் வெற்றிக்கு, சுமார் எழுபது சதவீதம் பேரை பணம் சென்று அடையாததுதான் காரணமாக இருக்க முடியும். அவர்கள் மீதும் பணத் தாக்குதல் நடத்த அனுமதிக்கப்பட்டிருந்தால், தேர்தல் முடிவு என்ன கதி ஆகியிருக்குமோ? எனவே, பணம் மக்களை நெருங்க விடாதபடி துரத்தியடித்தது தேர்தல் கமிஷன்தான். 

எனவே, மக்கள் பணத்தை வெறுத்து விடவில்லை. வெறுக்கிற அளவுக்கு வசதியான நிலையில் பெரும்பாலானவர்கள் இல்லை. வசதி இருப்பவர்களிலும் வாங்கியவர்கள் போக ‘இந்த பாவப்பட்ட பணத்தை வாங்கக் கூடாது’ என்று நினைத்து ஒதுங்கியவர்களின் எண்ணிக்கை மிகக் குறைந்த அளவாகத்தான் இருக்கும். அந்த எண்ணிக்கை உண்மையாகவே வளர்ந்தால் அப்போது, மக்களின் மனமாற்றத்தை எண்ணி நிச்சயமாக மகிழலாம். இப்போது – போக வேண்டிய ஆட்சி போயிருக்கிறது என்பதற்காக மட்டும் மகிழலாம் என்பது என் பணிவான கருத்து. 



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ஜனாதிபதி ஆற்ற வேண்டிய ஆறுதல் உரை – சத்யா 

நமது நாட்டுத் தலைவர்கள் சுதந்திர தினம், குடியரசு தினம், தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட முக்கிய தினங்களில், ‘வறுமை ஒழிந்து வளம் பெருகட்டும்; எங்கும் மகிழ்ச்சி பொங்கட்டும்’ என்ற வகையில் நாட்டு மக்களுக்கு தெரிவிக்கும் வாழ்த்துச் செய்திகள் எந்த லட்சணத்தில் பலிக்கிறது என்பது தெரிந்த விஷயம்தான். எனவே, நாடும் நாட்டு மக்களும் இன்று இருக்கிற நிலையில், குடியரசு தினத்தையொட்டி, ஜனாதிபதி, நாட்டு மக்களுக்கு வழக்கமான முறையில் வாழ்த்து தெரிவிப்பதை விட, இப்படி யதார்த்தமான முறையில் உரை நிகழ்த்துவதுதான் பொருத்தமாக இருக்கும் என்பது நம் கருத்து. 

எனதருமை இந்தியக் குடிமக்களே! உங்களையெல்லாம் நினைத்தால் மிகவும் பாவமாக இருக்கிறது. நான் எப்படியோ ஜனாதிபதியாகி விட்டேன். என் பிரச்சனை தீர்ந்துவிட்டது. பெரிய பங்களா, பல்லாயிரக்கணக்கில் சம்பளம், கார்கள், ஏராளமான வேலைக்காரர்கள் – என சகல வசதிகளோடும் வாழ வழி கிடைத்து விட்டது. வேலை மட்டும்தான் இல்லை. மரண தண்டனை பெற்ற குற்றவாளிகளின் கருணை மனுக்களைக் கூட வருஷக் கணக்கில் பரிசீலித்துக் கொண்டிருந்து விட்டு, அப்படியே அடுத்த ஜனாதிபதியிடம் ஒப்படைத்துவிட்டு நைஸாக வெளியேறி விடலாம். கேட்பார் யாருமில்லை. என் முன்னேற்றத்தை மட்டும் வைத்து, பெண் இனமே முன்னேறி விட்டது என்று சொல்லிக் கொள்ளவும் முடிகிறது. 

ஆனால், பாவம் உங்கள் பிரச்சனைகளைத் தீர்க்கத்தான் யாரும் இல்லை. இருந்தாலும் இந்த நன்னாளில், நீங்கள் எப்படியெல்லாம் கஷ்டப்படுகிறீர்கள் என்பதை உங்களுக்கு நினைவுபடுத்தி, ஆறுதல் கூற வேண்டியதை என் கடமையாகக் கருதுகிறேன். 

விலைவாசி உயர்வு உங்களை மட்டும்தான் பாடாய்படுத்துகிறது என்று நினைக்க வேண்டாம். பல மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நெருங்குவதால், பிரதமர் உள்ளிட்ட பல தலைவர்களும் உங்களைப் போலவே விலைவாசியை நினைத்து கவலைப்பட்டு கொண்டுதானிருக்கிறார்கள். எனவே, அத்தலைவர்களுக்கு ஒத்துழைப்பு தரும் வகையில், இப்போதைய விலைவாசியை அடுத்த வருஷ விலைவாசியோடு ஒப்பிட்டுப் பார்த்து, இப்போது பொருட்கள் எவ்வளவு சீப்பான விலையில் கிடைக்கின்றன என்பதைப் புரிந்து கொண்டு மகிழ்ச்சியடைய நீங்கள் பழகிக் கொள்ள வேண்டும். 

அரிசி குறைவான விலையில் கிடைத்தால், சோறாக்கி அதை மட்டும் சாப்பிட்டுப் பசியாறலாம். சோறாக்கவும் வசதியற்றவர்கள் அரிசியாகவே சாப்பிடத் தொடங்கி விட்டால், விலைவாசிக் கஷ்டம் அவ்வளவாகத் தெரியாது. வறுமையை ஒழிப்பதற்காக 65 ஆண்டுகளாக பாடுபட்டு வரும் உங்கள் அரசு தொடர்ந்து, இதே போல இன்னும் பல ஆண்டுகள் உங்களுக்காக பாடுபடும். அதுவரை சற்றுப் பொறுத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். 

நாடு முழுவதும் லட்சக்கணக்கான வாலிபர்கள் வேலை தேடி தவித்துக் கொண்டிருக்கும் நிலையும் மிகவும் கவலையளிக்கிறது. காஷ்மீரில் கலவரம் செய்து கல்லெறிய, வாரம் நானூறு ரூபாய் கொடுக்கப்படுவதாகத் தெரிகிறது. ஆனால் துரதிருஷ்டவசமாக இத்தகைய வேலை வாய்ப்புகள் எல்லா மாநிலங்களிலும் கிடைப்பதில்லை. கள்ளச் சாராயம், திருட்டு வி.சி.டி., போலி சர்ட்டிஃபிகேட் தயாரிப்பு போன்ற குடிசைத் தொழில்களுக்கோ கடும் போட்டி நிலவுகிறது. எனவே, இனியும் நல்ல வேலை தேடி நேரத்தை வீணாக்காமல், காலாகாலத்தில் ஏதாவது ஒரு அரசியல் கட்சியில் சேர்ந்து விட இளைஞர்களை நான் அழைக்கிறேன். மாநாடு, மீட்டிங்குகளுக்குச் சென்றால் பிரியாணி, பேட்டா கிடைக்கும். தொடர்ந்து அப்படியே பணியாற்றி படிப்படியாக முன்னேறி எம்.எல்.ஏ.வாகவோ மந்திரியாகவோ கூட ஆகிவிடலாம். அதற்குப் பிறகு உருப்படியான வேலைதான் இருக்காதே தவிர, வருமானம் கொட்டு கொட்டென்று கொட்டும். நீங்களும் உங்கள் குடும்பங்களும் மட்டுமாவது அமோகமாக வாழ முடியும். நாட்டில் ஏராளமான அரசியல் கட்சிகள் இருப்பதால், இத்தகைய வேலை வாய்ப்புகளுக்கு பஞ்சமில்லை. 

அரசியல்வாதியாக இருப்பதில் இன்னொரு வசதியும் இருக்கிறது. எவ்வளவுதான் சொத்து, நிலம் உங்கள் வசம் இருந்தாலும், அவற்றுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது. வேறு வகையில் முன்னேறி சொத்து சேர்த்தால்தான், எந்த அரசியல்வாதி உங்களை மிரட்டி குறைந்த விலைக்கு நிலத்தை விற்கும்படி கட்டாயப்படுத்துவார்களோ, பிள்ளையைக் கடத்தி லட்சக்கணக்கில் பணம் கேட்டு யாராவது கொலை மிரட்டல் விடுப்பார்களோ என்று கவலைப்பட வேண்டியிருக்கும். ஆனால் அத்தகைய செல்வந்தர்களும் ஆளும் கட்சிக்கு அவ்வப்போது கணிசமாக நிதி கொடுத்து வந்தால், அத்தகைய ஆபத்துகளிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள இந்த ஜனநாயக நாட்டில் வசதி செய்யப்பட்டுள்ளது. 

ஆளும் கட்சியினரோடு சமாதானமாகப் போய்விடும் சினிமாக்காரர்கள் தைரியமாகத் தங்கள் படத்தை ரிலீஸ் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். திருட்டு வி.சி.டி. பயம் இருக்காது. அவர்களோடு நட்பு கொண்டிருக்கும் கல்வி நிறுவனங்கள் எவ் வளவு வேண்டுமானாலும் கல்வி கட்டணமும் நன்கொடையையும் வசூலித்துக் கொள்ள முடியும். அரசை ஆதரிக்கும் பத்திரிகைகளுக்கு அரசு விளம்பரங்கள் தாராளமாக வழங்கப்படும். எனவே, அரசியல் தொடர்பு இல்லாதவர்களைத் தவிர மற்றவர்கள் இந்த நாட்டில் வளமாகவே வாழ்கிறார்கள். எனவே, ஆளும் கட்சிகளுக்கு அடங்காதவர்களும், விரைவில் நாட்டு நடப்பைப் புரிந்து கொண்டு திருந்தி விட்டால், இந்த நாடு உலகில் முன்னணி நாடாக இருக்கும் என்பதில் எனக்கு ஐயமில்லை. 

எண்ணற்ற கொலை, கொள்ளைகளுக்கு இடையேயும் நீங்கள் மட்டும் எப்படியோ உயிர் தப்பி வாழ்வது எனக்கு வியப்பை அளிக்கிறது. சட்டம் – ஒழுங்கை ஓரளவாவது சீர்படுத்தும் நோக்கத்தோடுதான், நமது ஆட்சி முறையில் பல கிரிமினல்கள் எம்.பி.க்களாகவும், எம்.எல்.ஏ.க்களாகவும் ஆகியிருக்கிறார்கள். அவர்கள் முழுநேர கிரிமினல்களாகவே தொடர்ந்திருந்தால் உங்கள் கதி என்னவாகியிருக்கும் என்று தயவு செய்து நினைத்துப் பாருங்கள். 

இந்த அரசு அடிக்கடி கவலைப்படுகிற விஷயங்களில் தீவிரவாதமும் ஒன்று. தீவிரவாதிகளை இந்த அரசு துணிவோடு எச்சரிக்கிறது. கடுமையாகக் கண்டிக்கிறது. அத்தோடு விட்டுவிடாமல், அச்சமும் படுகிறது. இதற்கு மேல் ஒரு அரசு என்னதான் செய்ய முடியும்? தீவிரவாதிகளும் இந்த நாட்டு மக்கள்தான். நம் நாட்டு மக்களைக் கொல்லும் நம் நாட்டு மக்கள் மீதே எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்? பிடிபட்டவர்கள் மீதே நடவடிக்கை எடுக்க முடியவில்லை எனும்போது, பிடிபடாதவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது நியாயமா? 

எனவே, தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களையும் அரசியலுக்கு கொண்டு வருவது ஒன்றுதான் இப்பிரச்சனைக்கு ஒரே தீர்வு. அரசியல்வாதிகளும், தீவிரவாதிகளும் ஒரே அணியில் வந்துவிட்டால், தீவிரவாதம் தனியாக இயங்குவது தடுக்கப்பட்டு விடும் என்று திட்டமிட்டு, இந்த அரசு செயலாற்றிக் கொண்டிருக்கிறது. அதற்குள் தீவிரவாதத்துக்கு பலியாகி அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தாதபடி மக்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். 

ஊழலை ஒழிக்கவும் இந்த அரசு அரும்பாடுபட்டுக் கொண்டிருக்கிறது. எப்படி முயன்றும் ஊழலை ஒழிக்க முடியாததால், கடைசி முயற்சியாக முள்ளை முள்ளால் எடுப்பது போல, ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவரையே ஊழல் கண்காணிப்பு துறை இயக்குனராக நியமித்து, ஊழலை ஒழிக்க இந்த அரசு முற்பட்டுள்ளது. 

அரசியல் ஊழலைத் தாங்கிக் கொள்ள முடியாத இதய பலவீனம் உள்ளவர்கள் பத்திரிகை படிப்பதையோ, செய்தி கேட்பதையோ நிறுத்திக் கொள்வது உத்தமம். லட்சம் கோடி ரூபாய் ஊழல் போன்ற செய்திகளை அன்றாடம் படித்து, ரத்தக் கொதிப்பு அதிகரித்து விடாமல் உங்களைக் காத்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது. அத்துடன், ஊழலால் பாதிக்கப்பட்டு நஷ்டமடைவதற்கு என்று ஒரு கணிசமான தொகையை மாதா மாதம் ஒதுக்கி வைப்பது நல்லது. 

இன்னொரு விஷயம். பல நீதிபதிகளே ஊழல் ஜோதியில் கலந்து விட்ட நிலையில், நீங்கள் மட்டும் திருந்த மறுப்பது சரியல்ல. உங்களைத் திருத்தும் முயற்சியாகத்தான், ஊழல் மூலம் நீங்கள் ஏமாந்த தொகையில் ஒரு சிறு பகுதி, தேர்தல் சமயத்தில் உங்களுக்கே திருப்பித் தரப்படுகிறது.

மக்கள் இப்படி பலவகையிலும் கஷ்டப்படுவதை பார்க்க இந்த அரசு உண்மையில் விரும்பவில்லை. ஆகவேதான், பரவலாக மதுக் கடைகளைத் திறந்து வைத்து, மக்கள் தங்கள் கஷ்டங்களை தாற்காலிகமாக மறக்கவும் இந்த அரசு தன்னால் இயன்ற உதவியைச் செய்து வருகிறது. 

ஏழை, நடுத்தர மக்களை இந்த அரசு சரியாகக் காப்பாற்றவில்லை என்பதற்காக, அது யாரையுமே காப்பாற்றுவதில்லை என்று குற்றம்சாட்டுவதும் நியாயமல்ல. பெட்ரோல் விலையை அடிக்கடி ஏற்றி, கச்சா எண்ணெய் நிறுவனங்களைக் காப்பாற்றுவது இந்த அரசுதான். பல லட்சம் கோடி ரூபாய் கறுப்புப் பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் போட்டுள்ளவர்களைக் காட்டிக் கொடுக்க விரும்பாமல், அவர்களையும் இந்த அரசுதான் பாதுகாத்து வருகிறது. தனக்கு வேண்டிய எந்த அமைச்சராவது ஊழல் செய்து மாட்டிக் கொண்டால், ‘அவர் ஊழலே செய்யவில்லை’ என்று நற்சான்றிதழ் அளித்து சட்டத்தின் பிடியிலிருந்து காப்பாற்றுகிறது. நக்ஸலைட், மாவோயிஸ்ட், தீவிரவாதிகளை மட்டுமல்ல, தூக்குத் தண்டனை பெற்ற தீவிரவாதியைக் கூட காப்பாற்றுகிற இரக்க சிந்தனை இந்த அரசிடம்தான் உள்ளது. 

இப்படி எவ்வளவு பேரைத்தான் இந்த அரசாங்கம் காப்பாற்றும்? அதற்கு ஒரு அளவு இல்லையா? அதனால்தான் பொது மக்களை மட்டும் கைவிட்டு விடுகிறது. ஆகவே எனதருமை குடிமக்களே! அரசாங்கம் காப்பாற்றா விட்டாலும் ஆண்டவன் எப்படியாவது உங்களைக் காப்பாற்றி விடுவார். தைரியமாக இருங்கள். 



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

மத்திய அரசும் கருப்புப் பணமும் – சத்யா 

வெளிநாட்டு வங்கிகளில் ஐம்பது லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கறுப்புப் பணத்தை பல இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ளது பற்றிய வழக்கில், சுப்ரீம் கோர்ட் மத்திய அரசைக் கடுமையாகக் கண்டித்து வரும் நிலையிலும், அவர்களைப் பற்றிய விவரங்களை வெளியிட மறுத்து வருகிறது மத்திய அரசு. சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு கூறிவரும் சாக்குகளைப் பார்க்கும்போது, ஒரு கட்டத்தில் கோர்ட் விவாதம் இப்படியும் அமையலாம் என்றே தோன்றுகிறது. 

சுப்ரீம் கோர்ட் நீதிபதி : வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணம் போட்டுள்ள இந்தியர்களின் பட்டியலை வெளியிடும்படி, அரசுக்கு இந்த நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. பட்டியல் தயாராக உள்ளதா? 

மத்திய அரசு வக்கீல் : அதில் சட்டச் சிக்கல் இருப்பதால் பட்டியலை வெளியிடுவது பற்றி விவாதிக்க ஒரு ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது யுவர் ஹானர். அந்தக் குழுவில் கூறப்படும் கருத்துகள் குறித்து அமைச்சரவையில் விவாதித்த பிறகு, பட்டியலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் தேதியை எந்தத் தேதியில் அறிவிப்பது என்று முடிவெடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 

சு.கோ.நீதிபதி : மக்கள் பணத்தைக் கொள்ளை அடித்தவர்களின் பெயர்களை வெளியிடுவதில் ஆலோசிக்க என்ன இருக்கிறது? 

ம.அ.வக்கீல் : இருக்கிறது யுவர் ஹானர். பட்டியலை வெளியிட்டால், உலகெங்கிலும் உள்ள கறுப்புப் பண வாடிக்கையாளர்களை இழந்து, ஸ்விஸ் பேங்க் திவாலாகி விடக் கூடிய ஆபத்து இருக்கிறது. அந்த வங்கியின் பணியாளர்கள் வேலை இழப்பார்கள். அவர்களுக்கு நாம் நஷ்டஈடு தர வேண்டியிருக்கும். உலகம் முழுவதும் வங்கித் தொழில் பாதிக்கும். 

பொதுநல வக்கீல் : யுவர் ஹானர், மற்ற நாடுகள் எல்லாம் கறுப்புப் பணத்தை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுத்துவிட்டன. இந்திய அரசு மட்டும் இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

ம.அ.வக்கீல் : மற்ற நாட்டு அரசுகளுடன் இந்திய அரசை ஒப்பிட முடியாது யுவர் ஹானர். இந்தியாவில் நடப்பது இந்திய அரசு. மற்ற நாடுகளில் நடப்பது மற்ற நாடுகளின் அரசு. எனவே, மற்ற நாடுகளில் செய்வதுபோல் இங்கு செய்ய முடியாது. 

சு.கோ.நீதிபதி : கறுப்புப் பணத்தை மீட்பது அரசின் கடமை இல்லையா? 

ம.அ.வக்கீல் : இப்போது போடப்பட்டுள்ள பணத்தை அவசரப்பட்டு மீட்டு விட்டால், எதிர்காலத்தில் மீட்பதற்கு கறுப்புப் பணமே இல்லாமல் போய்விடும். பெட்ரோல் விலை லிட்டர் ரூ.197-ஐ எட்டிவிடும். பண வீக்கம் 38.39% அளவுக்கு உயர்ந்துவிடும். இவ்வளவு பிரச்சனைகள் இருக்கின்றன. 

சு.கோ.நீதிபதி : பட்டியலை அரசு எப்போதுதான் வெளியிடும்? 

ம.அ.வக்கீல் : பட்டியலில் உள்ளவர்களின் மீது வழக்குத் தொடரும் நிலை வரும்போது நிச்சயமாக வெளியிடப்படும். முன்னதாக வெளியிட்டால் அவர்கள் பணத்தை எடுத்துக் கொண்டு தப்பி விடுவார்கள். 

சு.கோ.நீதிபதி : வழக்குத் தொடரும் நிலை எப்போது வரும்?

ம.அ.வக்கீல் : அது வராது யுவர் ஹானர். வழக்கு தொடர்ந்தால், கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் அரசை மதிக்க மாட்டார்கள். பங்கு பத்திரத் தொழில் விழுந்துவிடும். அதன் காரணமாக தீவிரவாதிகளுக்குக் கோபம் வரும். வெடிகுண்டு சம்பவங்கள் நடந்து உயிர் இழப்புகள் அதிகரிக்கும். கறுப்புப் பணக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதுதான் பிரச்சனைக்கு ஒரே தீர்வு. 

சு.கோ.நீதிபதி : கேட்ட கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லுங்கள். இது இந்த நாட்டு மக்களிடமிருந்து கொள்ளை அடிக்கப்பட்ட பணம் என்பதையாவது இந்த அரசு ஒப்புக் கொள்கிறதா இல்லையா?

ம.அ.வக்கீல் : ஆம், யுவர் ஹானர். அதனால்தான் அதற்குரிய வரியை வசூலிக்க பட்டியலில் உள்ளவர்களுடன் பேசி வருகிறோம். 

சு.கோ.நீதிபதி : மொத்தப் பணமுமே கொள்ளை அடிக்கப்பட்ட பணம் எனும்போது, வரி வசூல் பற்றி ஏன் பேசுகிறீர்கள்? 

ம.அ.வக்கீல் : இல்லாவிட்டால் வரியும் கொள்ளை போய்விடும் யுவர் ஹானர். 

பொதுநல வக்கீல் : வெளிநாட்டு வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட பட்டியலை அரசு மறைப்பதில் உள்நோக்கம் இருக்கிறது யுவர் ஹானர். 

ம.அ.வக்கீல் : கறுப்புப் பணம் வெளிநாட்டு வங்கிகளில் போடப்பட்டு விட்டதால், அது வெளிநாட்டுப் பிரச்சனையாகி விட்டது. பெயர்களை வெளியிட்டால் அயல்நாடுகளுடனான உறவு பாதிக்கப்பட்டு உலக யுத்தமே வரலாம். அணுகுண்டுகள் வீசப்பட்டு லட்சக்கணக்கானோர் உயிரிழக்கலாம். அரசு இவ்வளவையும் யோசிக்க வேண்டியிருக்கிறது. 

சு.கோ.நீதிபதி : கொள்ளையர்களுக்கு அரசு பாதுகாப்பு அளிப்பது அதிர்ச்சி அளிக்கிறது. கொள்ளைகளில் எத்தனை வகை இருக்கிறது என்பதை அறிய இந்த நீதிமன்றம் விரும்புகிறது. 

ம.அ.வக்கீல் : நல்ல கேள்வி யுவர் ஹானர். இந்திய வருமான வரித் துறையை மட்டும் ஏமாற்றி சில தொழிலதிபர்கள், நடிகர்கள் போன்றோர் நமது நாட்டுக்குள்ளேயே நேர்மையாகப் பதுக்கி வைக்கும் பணம் ஒரு வகை கொள்ளை. அது நல்ல கொள்ளை.

சு.கோ.நீதிபதி : கெட்ட கொள்ளை என்பது? 

ம.அ.வக்கீல் : எந்தத் தொழிலும் செய்யாமல் அரசியல்வாதிகள் பினாமி பெயர்களில் நமது நாட்டு வங்கிகளில் போட்டு வைக்கும் பணம் – கெட்ட கொள்ளை. 

சு.கோ.நீதிபதி : வெளிநாட்டு வங்கிகளில் போடப்படுவது? 

ம.அ.வக்கீல் : சில தொழிலதிபர்கள் தங்கள் தொழில் மூலம் கொள்ளை அடிக்கும் பணத்தை நாட்டுப் பற்றில்லாமல், வெளிநாட்டு வங்கிகளில் போடுவது மோசமான கெட்ட கொள்ளை. அரசியல்வாதிகள் கோடிக்கணக்கில் ஊழல் செய்து அதையும் வெளிநாட்டு வங்கிகளில் போடுகிறார்களே அதுதான் படுமோசமான கெட்ட கொள்ளை. இப்படி பல வகை கொள்ளைகள் உள்ளன. 

சு.கோ.நீதிபதி : இந்த நீதிமன்றம் கவலைப்படுவது, ஆயுதக் கடத்தல், போதைப் பொருள் விற்பனை போன்ற சமூக விரோதச் செயல்கள் மூலம் செய்யப்படும் பயங்கர கொள்ளை பற்றித்தான். அதைப் பற்றியும் அரசு கவலைப்படாதது அதிர்ச்சி அளிக்கிறது. 

ம.அ.வக்கீல் : நீதிமன்றம் உத்தரவிட்டால் அதிர்ச்சி அடைய இந்த அரசும் தயாராக இருக்கிறது யுவர் ஹானர். ஆனால், வெளிநாட்டு வங்கிகளுடன் போட்டுள்ள ஒப்பந்தத்தை மதிக்காவிட்டால் உலகமே நம்மை தூற்றும். ஐ.நா. சபை நடவடிக்கை எடுக்கும். 

ம.அ.வக்கீல் : ரகசியங்களை வெளியிட மாட்டோம் என்பதுதான் ஒப்பந்தம். ரகசியமாக பெறப்பட்ட தகவல்கள் ஒப்பந்தப்படி அரசிடம் ரகசியமாகவே இருப்பதுதான் முறை. 

சு.கோ.நீதிபதி : ஒப்பந்தம் பற்றிப் பேசாதீர்கள். கறுப்புப் பணம் பற்றி பேசுங்கள். 

ம.அ.வக்கீல் : கறுப்புப் பணம் பற்றி எதுவும் பேசக் கூடாது என்பதுதான் ஒப்பந்தம், யுவர் ஹானர். 

சு.கோ.நீதிபதி : ஒப்பந்த காலம் முடிந்த பிறகுதான் பட்டியல் வெளியிடப்படும் என்கிறீர்களா? 

ம.அ.வக்கீல் : இல்லை. அப்புறம் மறு ஒப்பந்தம் போடப்பட வேண்டும். அதற்குப் பிறகு மறு மறு ஒப்பந்தம் போடப்படும். அதற்குப் பிறகுதான், கொள்ளையடித்தவர்களுடன் ஒப்பந்தம் போட வேண்டும். 

சு.கோ.நீதிபதி : ஹசன் அலி என்பவர் 36000 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்துள்ளார். சரியாக விசாரிக்காமல், இந்த அரசு அவரை தப்ப விட்டுள்ளது. எந்த அடிப்படையில் அவரை தப்ப விட்டீர்கள்? 

ம.அ.வக்கீல் : வழக்கை முறையாக விசாரித்தால், அரசுக்கு பல லட்ச ரூபாய் இழப்பு ஏற்படும். எனவே 36000 கோடியோடு தொலையட்டும் என்று, வழக்குச் செலவையாவது மிச்சப்படுத்த அரசு கொள்கை முடிவெடுத்தது. இதற்கு முன்னுதாரணமாக க்வாட்ரோக்கி வழக்கும் இதே அடிப்படையில் கைவிடப்பட்டுள்ளது. 

பொதுநல வக்கீல் : நிரா ராடியா என்ற பெண்மணியின் டெலிஃபோன் பேச்சில் ஏராளமான ரகசியங்கள் இடம் பெற்றுள்ளன யுவர் ஹானர். அவற்றை ஆராய்ந்தால், கறுப்புப் பண முதலைகளின் பெயர்கள் தெரியலாம். 

ம.அ.வக்கீல் : அதுவும் கறுப்புப் பணப் பட்டியலை வெளியிடுவது போன்றதுதான் யுவர் ஹானர். அந்த பேச்சு ரகசியங்களை வெளியிட்டால், அதற்குப் பிறகு யாருமே டெலிஃபோனில் ரகசியங்களைப் பேச மாட்டார்கள். இதன் விளைவாக டெலிஃபோன் இலாகா பெரும் நஷ்டத்தைச் சந்திக்கும். பொருளாதாரம் நசிந்து, விலைவாசி வழக்கத்தைவிட அதிக வேகத்தில் உயர்ந்துவிடும். 

சு.கோ.நீதிபதி : (கோபத்துடன்) என்னதான் சொல்கிறீர்கள்? பட்டியலை வெளியிட எவ்வளவு அவகாசம்தான் வேண்டும்? நூறு ஆண்டுகள் வேண்டுமா? 

ம.அ.வக்கீல் : அது போதும், யுவர் ஹானர். அதுவரை வழக்கை ஒத்தி வைக்க கோருகிறேன்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

கஜானா மூலம் கட்சி வளர்க்கும் கலை – சத்யா 

பெருமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணத் தொகையாக ஹெக்டேருக்கு 10,000 ரூபாய், மற்ற வகை பயிர்களுக்கு ரூ.7500, மானாவரிப் பயிர்களுக்கு ரூ.4000, குடிசைகள் முழுமையாக சேதம் அடைந்திருந்தால் ரூ.5000, பகுதி சேதம் அடைந்திருந்தால் ரூ.2500, மாடு செத்தால் ரூ.10,000, கன்றுக்குட்டிக்கு ரூ.5000, ஆட்டுக்கு ரூ.1000 – என்றெல்லாம் அறிவித்திருக்கிறார் முதல்வர். ‘ஆட்டுவித்தால் ஆடுகிறேன்’ என்று கிறிஸ்தவர்களிடையே உரையும் ஆற்றியிருக்கிறார். ஸ்பெக்ட்ரம் பிரச்சனையால் பாதிக்கப்பட்டதிலிருந்து ஏதோ ஒரு முடிவோடுதான் இருகிறார் என்று நன்றாகவே புரிகிறது. இழந்த செல்வாக்கை ஈடுகட்ட அரசு இன்னும் என்னவெல்லாம் செய்யக் கூடும் என்று அவர்கள் வழியிலேயே சிந்திக்கிறோம். 

ஆற்காடு வீராசாமி : காங்கிரஸ் மாநாட்டிலே சோனியா பேசினதை கவனிச்சீங்களா? ‘ஊழலுக்கு எதிராக போர் தொடங்கி விட்டது’ன்னு பேசியிருக்காங்க. கழகத்தோட மோதத் தயாராயிட்டாங்களோன்னு சந்தேகம் வரலை? இதைச் சும்மாவிடக் கூடாதுங்க. 

கருணாநிதி : அனாவசியமா நீங்களும் பயந்து என்னையும் பயமுறுத்தாதீங்க. ஊழலுக்கு எதிரான போர்னா, கர்நாடக பா.ஜ.க. ஊழலுக்கு எதிரான போர்னுதான் அர்த்தம். நம்ம கூட்டணி இன்னும் உடையலைன்னுதான் நினைக்கிறேன். அதுக்குள்ளே குழப்பாதீங்க. 

அன்பழகன் : இருந்தாலும் அம்மையார் – அதாவது சோனியா அம்மையார் – போற போக்கே சரியில்லைங்க. ஸி.பி.ஐ. ரெய்டு, சம்மன், விசாரணைன்னு நடக்கிறதைப் பார்த்தா, வில்லங்கமா ஏதாவது திட்டம் போடறாங்களோன்னு ஒரு பயம் வரத்தான் செய்யுது. சுயமரியாதைக் கொள்கைப்படி, கழகம் எந்த அளவுக்கு அடங்கிக் கிடக்கலாம்னு ஒரு முடிவெடுக்கிறது நல்லதுதான். 

கருணாநிதி : நாம அவசரப்பட்டு எடுக்கிற எந்த நடவடிக்கையும் அம்மையார்கள் இணைப்புக்குக் காரணமா இருந்துடக் கூடாது. நம்ம அணியிலே எந்தக் கட்சி இருந்தாலும் இல்லைன்னாலும், கழகம் மறுபடியும் அரியணை ஏறணும். பதவி முக்கியமில்லை. ஆனா முக்கியமான பல விஷயங்கள் பதவி இருந்தாத்தான் கிடைக்கும். பதவியை வெறுக்கணும். ஆனா பதவியிலே இருந்தாத்தான் பதவியை வெறுக்க முடியும். 

துரைமுருகன் : மறுபடியும் நமக்கு இன்னொரு சான்ஸ் கிடைக்கும்ங்களா? மக்கள் ஸ்பெக்ட்ரம் பிரச்சனையை மறக்கணும். மின்வெட்டை மறக்கணும். விலைவாசி உயர்வு, சட்டம் – ஒழுங்கு சீர்கேடுன்னு ஏராளமான விஷயங்களை மறக்கணுமே. எப்படி முடியும்? 

கருணாநிதி : அதுக்கான நடவடிக்கைகளை நான் எடுக்க ஆரம்பிச்சுட்டேன். வெள்ளத்தால் பயிர்கள் சேதமடைஞ்சா எவ்வளவு, குடிசைகள் சேதம் அடைஞ்சா எவ்வளவு, ஆடு மாடுகள் செத்தா எவ்வளவுன்னு யாரும் கேக்காமலேயே அறிவிச்சுட்டேனே. அதுலே எப்படியும் அஞ்சு சதவிகித ஓட்டாவது ஏறியிருக்கும். ஆனா இது போதாது. இப்படி இன்னும் பல வளர்ச்சித் திட்டங்களைத் தீட்டணும்.

பொன்முடி : பயிர்ச் சேதம், குடிசை சேதம் மாதிரியே பல சாலைகளும் சேதம் அடைஞ்சிருக்குதுங்க. சேதம் அடைஞ்ச சாலைகளிலே இருக்கிற ஒவ்வொரு வீட்டுக்கும் தலா ரெண்டாயிரம் கொடுத்துடலாம். கவர்ன்மென்ட் பணத்தை கையிலே வெச்சுக்கிட்டு ஏன் கஞ்சத்தனம் பண்ணனும்? 

துரைமுருகன் : கரெக்ட். தேர்தல் கமிஷன் கெடுபிடியாலே, ஓட்டுக்கு பணம் தர முடியாத சூழ்நிலை வந்துட்டா, ஆபத்தாப் போயிடும். அதுக்குப் பதில் இப்படிக் கொடுத்துடலாம். 

எ.வ. வேலு : அதே மாதிரி, ஏப்ரல், மே சமயத்திலே மக்கள் வெயிலால கஷ்டப்படுவாங்க. வெள்ள நிவாரண நிதி மாதிரி, வெயில் நிவாரண நிதியும் அறிவிச்சுடலாம். ரேஷன் கார்டு இருக்கிற எல்லா குடும்பத்துக்கும் கலைஞர் படம் போட்ட இலவச குடையும் கொடுக்கலாம். 

ஆற்காடு வீராசாமி : வெங்காய விலை ஏற்றத்துக்கும் ஏதாவது செய்யணும். 

கருணாநிதி : விலையைக் குறைக்கிறதெல்லாம் கஷ்டம். அதுக்குப் பதிலா, அந்த 50 ரூபாய் பாக்கெட்டிலே இலவசமா ஒரு வெங்காயத்தைப் போட்டுருவோம். அதே அம்பது ரூபாதான். கூடுதலா ஒரு வெங்காயம். பல லட்சம் தாய்மார்களும், கழகமும் பயன் அடையற திட்டம். 

அன்பழகன் : திரைப்படங்களுக்கு தமிழ்ப் பெயர் வெச்சா கேளிக்கை வரி ரத்துன்னு ஒரு தமிழ் வளர்ச்சித் திட்டம் கொண்டு வந்தோமே... 

கருணாநிதி : அதைப் பத்தித்தான் நானும் சிந்திச்சுக்கிட்டிருக்கேன். தமிழ் பேர் வெக்க முடியாம திரையுலகத்தினர் கஷ்டப்படறதாலே, ‘தமிழ் திரைப்படத்துக்கு எந்த மொழியிலேயும் பேர் வெக்கலாம். ஆனா, அந்த பேர்லே ஒரே ஒரு தமிழ் எழுத்தாவது இருந்தாத்தான் வரிச் சலுகை’ன்னு ஆணை வழங்கி திரையுலகத்தினர் ஓட்டைத் திரட்டிடறேன்.

துரைமுருகன் : அருமையான ஐடியாங்க. திரையுலகத்தினர் வசமா மாட்டிக்கிட்டாங்க. பாராட்டு விழா நடத்தாம தப்பிக்கவே முடியாது. 

அன்பழகன் : வியாபாரிகள் ஓட்டும் முக்கியம். வணிக நிறுவனங்கள் தமிழில் போர்டு வெச்சா விற்பனை வரி ரத்துன்னு அறிவிச்சுடலாம். கணிசமா நஷ்டப்பட்டாத்தான் தமிழ் வளரும். இதன் மூலம் அரசுக்கு 4858 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டாலும், நமக்கு லாபம்தான். கழகத்துக்கு பல லட்சம் ஓட்டுகள் குவியும். 

ஸ்டாலின் : தமிழ் மூலம் கட்சியை வளர்க்க இன்னொரு வழியும் இருக்குது. குழந்தைகளுக்கு தமிழ் பேர் வெச்சா, பிரசவச் செலவை அரசே ஏற்கும்னு உத்திரவு போட்டுடலாம். ஏற்கெனவே இருக்கிற வேற்று மொழிப் பெயரை தமிழ்லே மாத்திக்கிற ஒவ்வொரு வாக்காளருக்கும் ஊக்கத் தொகை வழங்கிடுவோம். 

எ.வ. வேலு : குழந்தைகள்னதும் ஞாபகத்துக்கு வருது. இப்ப தினமும் ஒரு முட்டை போடறோம். இனிமே மூணு வேளையும் முட்டை போட்டுருவோம். முட்டை கான்ட்ராக்டருக்கும் நல்லது. கழகத்துக்கும் நல்லது. 

ஆற்காடு வீராசாமி : வேலை இல்லாத இளைஞர்கள், வேலையில்லாத பட்டதாரிகளுக்கு உதவித் தொகை கொடுக்கிறோம். தேர்தல் நெருங்கற சமயத்திலே கூடுதலா ஏதாவது எதிர்பார்ப்பாங்க. இந்த ஆண்டு முதல், வேலையில்லாதவர்களுக்கும் இன்க்ரிமென்ட். பாராளுமன்றத் தேர்தல் நெருங்கும்போது ‘ப்ரமோஷன்’னு அறிவிச்சா இளைஞர்கள் ஓட்டு வேறே எங்கேயும் போகாது. 

துரைமுருகன் : தை முதல் நாள் கழகத்துக்கு தனியா புத்தாண்டு பிறக்கிறதை முன்னிட்டு, சிறையில் இருக்கிற 2011 கைதிகளை விடுதலை பண்ணி, அவங்களுக்கு ஊக்கத் தொகையா இறுதிக் காலம் வரை ஓய்வூதியம் வழங்கிடலாம். எப்படியும் தேர்தல் பணியாற்ற நமக்கு ஆட்கள் தேவைப்படும். இதன் மூலம் அந்த கைதிகள் குடும்பத்து ஓட்டும் கிடைக்கும். 

பொன்முடி : வழக்கமா பொங்கலுக்கு இலவச வேஷ்டி, சேலை கொடுக்கிறோம். அதுமட்டும் எப்படிப் போதும்? உள்ளாடைகளுக்கு மக்கள் சொந்தப் பணத்தை செலவு பண்ண முடியுமா? தேர்தல் நெருங்கும்போது நாம செலவைப் பார்க்க கூடாது. இந்த வருஷம் வேஷ்டி, சேலையோட உள்ளாடைகளையும் இலவசமா கொடுத்துடுவோம். 

ஸ்டாலின் : விவசாயிகளுக்கு இலவச பம்ப் செட் கொடுத்து இலவச மின்சாரமும் கொடுக்கிறோம். மின்சாரம் வராம பம்ப் செட்டை எப்படி பயன்படுத்தறதுன்னு அடாவடியா கேக்கறாங்க. அதனாலே, விவசாயிகள் ஓட்டை வாங்க ஏதாவது செய்யணும். 

கருணாநிதி : மின்வெட்டுப் பிரச்சனை நான் எட்டாவது முறை முதல்வராகும்போதுதான் தீரும். அதனாலே, விவசாயிகளுக்கு இலவச ஜெனரேட்டர் கொடுத்துத் தொலைக்கிறேன். 

எ.வ. வேலு : போலி மருந்துகள் புழக்கத்தைத் தடுக்கிறதும் கஷ்டம்தான். அதனாலே போலி மருந்துகளால் உயிரிழப்பவர்களின் ஈமச் சடங்கை அரசே ஏற்கும்னு அறிவிச்சுடலாம். ஏதோ, நம்மாலான உதவி. 

அன்பழகன் : சட்டம் – ஒழுங்கு பிரச்சனையையும் நம்மாலே சரி பண்ண முடியலை. கொலை, கொள்ளைகள் நடக்காத நாளே இல்லை. யாருக்கு எவ்வளவு பணம் கொடுத்தா இந்தப் பிரச்சனை தீரும்னு நாம கண்டுபிடிக்கணும். 

கருணாநிதி : அதுக்கும் ஒரு வழி இருக்குது. கலைஞர் மருத்துவக் காப்பீடு திட்டம் மாதிரி, கலைஞர் சட்டம் ஒழுங்கு ஆயுள் காப்பீடு திட்டத்தையும் கொண்டு வந்து, மக்களுக்கு இன்ஷ்யூரன்ஸ் பாலிஸி எடுத்துக் கொடுத்துருவோம். சட்டம் – ஒழுங்கு பாதிப்பால் உயிர் இழப்பவர் குடும்பங்களுக்கு இன்ஷ்யூரன்ஸ் நிறுவனமே பணம் வழங்கிடும். பலன் அடையறவங்க எனக்கு நன்றி தெரிவிப்பாங்க. 

துரைமுருகன் : ஏங்க, ஒரே ஒரு சந்தேகம். பணத்தைப் பற்றிக் கவலையே படாம கருணை உள்ளத்தோட எவ்வளவோ இலவசங்களை அறிவிக்கறீங்க. இந்த கேபிள் இணைப்பையும் இலவசமா கொடுத்தா, மக்கள் ஓட்டை அப்படியே அள்ளிடலாமே? 

கருணாநிதி : ஏன் இப்படி விவரமில்லாம பேசறீங்க? என் குடும்ப உறுப்பினர்கள் வருமானத்திலே நஷ்டத்தை ஏற்படுத்த எனக்கு என்ன உரிமை இருக்குது? நம்ம இஷ்டத்துக்கு ஆட்டம் போட அது என்ன அரசு கஜானாவா? குடும்ப கஜானாவை, அரசு கஜானாவா நினைக்கிறவன் நான் இல்லை



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

குழப்பம் இல்லாத கூட்டணி – சத்யா 

தி.மு.க.வுக்கு எதிரான இளங்கோவனின் தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், தங்கபாலுவும் பீட்டர் அல்ஃபோன்ஸும் தமிழக முதல்வர் கருணாநிதியைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். ‘முதல்வருடன் அரசியல் பேசினோம்’ என்று தங்கபாலு சுருக்கமாகக் கூறியிருக்கிறார். அவர் அப்படி சுருக்கமாகத்தான் கூற முடியும். முதல்வரை தங்கபாலுவும், பீட்டர் அல்ஃபோன்ஸும் எப்படி சமாதானப்படுத்தியிருப்பார்கள் என்பதை விரிவாக விளக்க வேண்டியது நம்முடைய வேலைதானே? 

தங்கபாலு : வணக்கம்ங்க. ரொம்பக் கோபமா இருக்கீங்க போல இருக்குது. நாங்க வேணும்னா அப்புறமா வரவா? 

கருணாநிதி : உக்காருங்க. என் கோபத்தை நான் சோனியா கிட்டேயோ பிரதமர் கிட்டேயோ காட்ட முடியுமா? உங்க கிட்டேயே காட்டித் தொலைக்கிறேன். இருந்து கேட்டுட்டுப் போங்க. அப்பதான் என் மனசு ஆறும். 

பீட்டர் அல்ஃபோன்ஸ் : நாங்கதான், ‘ஆட்சியிலே பங்கே வேண்டாம்; கிடைச்ச வரைக்கும் லாபம்’னு விட்டுட்டோம்லே? இன்னும் என்ன கோபம் உங்களுக்கு? 

கருணாநிதி : பங்கு கொடுக்க லைன்னு குத்திக் காட்டாதீங்க. நாங்க பங்கு கொடுக்கிறோமா, இல்லையான்னு சோனியா மனச்சாட்சிக்குத் தெரியும். அந்தப் பிரச்சனைக்குள்ளே புக நான் விரும்பலை. 

தங்கபாலு : பின்னே, என்னங்க எங்க மேலே கோபம்? கூட்டணிக் கட்சின்ற முறையிலே, மாநிலத்திலே நடக்கிற எந்த அக்கிரமத்தைப் பத்தியாவது நாங்க ஒரு வார்த்தை சொல்லியிருப்போமா? அப்படி மனச்சாட்சிக்குக் கட்டுப்பட்டுத்தான் நாங்க நடந்துக்கறோம். 

கருணாநிதி : அதுக்கு நான் நன்றி தெரிவிச்சுக்கறேன். உங்களுக்கு இருக்கிற அந்த அரசியல் நாகரீகம் இளங்கோவனுக்கு இல்லையே! நாள் தவறாம ஏதாவது சொல்லிக்கிட்டிருக்காரே. அதை உங்க மேலிடமும் தடுக்கறதில்லையே! குட்டியை விட்டு ஆழம் பாக்கற வேலைதானே இது?

தங்கபாலு : அந்த ஒரு குட்டிதாங்க இப்படியெல்லாம் பேசுது. மேலிடம் ஒரு முடிவு எடுத்த பிறகு, எல்லா குட்டிகளும் சோனியா அன்னைக்கு அடங்கிடும். அதுதான் காங்கிரஸ் பேரியக்கத்தோட பெருமை. 

கருணாநிதி : அப்படின்னா, உங்க மேலிடம் முடிவெடுக்கிற வரைக்கும் இளங்கோவன் இப்படியே பேசிக்கிட்டிருப்பாரா? நான் அதை கேட்டுக்கிட்டிருக்கணுமா? என் பொறுமையை கோழைத்தனம்னு நினைக்காதீங்க. கழக மத்திய அமைச்சர்கள் மூலமா கிடைக்கிற பலாபலன்கள் பாதிக்கக் கூடாதேன்னுதான் பாக்கறேன். உங்க திட்டம் என்னன்னு எனக்கு இப்பவே தெரிஞ்சாகணும். 

பீட்டர் : திட்டம் எல்லாம் ஒண்ணும் இல்லைங்க. கூட்டணி உறுதியா இருக்குதுன்னு குலாம் நபி ஆஸாத் கூட சொல்லிட்டாரே. அடுத்த தடவையும் நம்ம ஆட்சிதான். அதாவது உங்க ஆட்சிதான். அதாவது உங்க பசங்க ஆட்சிதான். 

கருணாநிதி : அந்த பயம் இளங்கோவனுக்கு இருக்கிற மாதிரி தெரியலையே. கழக ஆட்சியிலே சட்டம் – ஒழுங்கு இல்லைன்றாரு. அரிசி கடத்தல், மணல் கடத்தல் நடக்குதுன்றாரு. ஒரு குடும்பம்தான் சொத்து சேர்க்குதுன்றாரு. யாரை ஆட்சியிலே அமர்த்த இப்படியெல்லாம் விஷம் கக்கறாரு? 

பீட்டர் : அவர் கிடக்கறாரு விடுங்க. அதெல்லாம்தான் மக்களுக்கே தெரியுமே! இவர் என்ன சொல்றது? ஒரு தலைவர்னா, மக்களுக்குத் தெரியாத விஷயத்தைச் சொல்லணும். 

கருணாநிதி : இவர் மாதிரி பேச எங்களுக்குத் தெரியாதா? ‘காமன்வெல்த் போட்டிகளில் கணக்கற்ற ஊழல்கள். வேலை முடியவில்லை என்று வெளிநாட்டினர் கூட வேதனை தெரிவித்து வெளியேறிக் கொண்டிருக்கிற வெட்க கேடான நிலை. வீணாகும் ஏராளமான உணவுப் பொருட்களைக் கூட ஏழைகளுக்குக் கொடுக்க மனமில்லாத எதேச்சதிகாரம்’னு உடன் பிறப்புக்கு கடிதம் எழுத எனக்குத் தெரியாதா? 

தங்கபாலு : ஐயையோ... அதெல்லாம் வேண்டாம்ங்க. உங்க திறமை எங்களுக்குத் தெரியாதா? உங்களாலே எப்படி வேணும்னாலும் பேச முடியுமே. கூட்டணியிலே மாற்றம் வராதுங்க. வித்தியாசமா சிந்திக்காதீங்க.

கருணாநிதி : அதை சோனியா வாயாலே ஒரு தடவை சொல்லிட்டா, ‘காமன் வெல்த் நாடுகள் களிப்படையும் வகையில் கட்டுக் கோப்பாகக் காரியங்களை கவனித்து வருகிறார் கல்மாடி அவர்கள். அயல் நாடுகள் ஆட்டங்களிலே கலந்து கொள்ள ஆர்வத்துடன் அணி வகுத்து வருவது, நம்மை ஆனந்தம் அடையச் செய்கிறது’ன்னு மாத்தி எழுத வசதியா இருக்கும். ஆனா, வடபுலம் வஞ்சக எண்ணத்தோடுதான் வாளாவிருக்கிறதோன்னு சந்தேகம் வருதே! 

பீட்டர் : அப்படியெல்லாம் சந்தேகப்படாதீங்க. நாங்க யாராவது அரசு கேபிள் டி.வி. நிறுவனம் பத்தியோ, மின்வெட்டு பத்தியோ, மின் கட்டண உயர்வு பத்தியோ வாயைத் திறந்து ஒரு வார்த்தை சொல்லியிருக்கோமா? இந்த நல்லாட்சியும் நல்லுறவும் தொடர வேண்டாமா? 

தங்கபாலு : அதை விடுங்க. தலித் துணை வேந்தர் மேலே தி.மு.க. எம்.எல்.ஏ.வே தாக்குதல் நடத்தினதாகச் செய்தி வந்தது. நைஸா கண்டுக்காம இருந்துட்டோமே. தமிழ்நாட்டிலே எழுபது லட்சம் பேருக்கு வேலை இல்லை. கல்விக் கட்டணத்திலே குழப்பம். ஒரு வார்த்தை சொன்னோமா? இதுக்கு மேலே என்ன கூட்டணி தர்மம் வேணும்? 

கருணாநிதி : பின்னே ஏன் இளங்கோவனை சோனியா கண்டிக்காம இருக்காங்க...? அவரை கட்சியை விட்டு நீக்கியிருந்தா அது என் மனப்புண்ணுக்கு அருமருந்தா அமைஞ்சிருக்கும்லே? 

தங்கபாலு : இளங்கோவனுக்கு எந்தப் பதவியும் இல்லைங்க. அதனாலே, பதவியைக் காப்பாத்திக்க வேண்டிய அவசியம் எதுவும் அவருக்கு இல்லை. அவரே தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராயிட்டார்னா வாயை மூடிக்கிட்டுத்தான் இருந்தாகணும். அதுக்குப் பிறகு காங்கிரஸ்லே ஒரு பய அவரை ஆதரிக்க மாட்டான். இப்ப பதவி இல்லாததாலேதான் இப்படியெல்லாம் ஆட்டம் போடறாரு. 

கருணாநிதி : என் கேள்விக்கு பதில் சொல்லுங்க. பெட்ரோல், டீஸல் விலை ஏறும் போதெல்லாம் அமைதி காத்ததுக்கு இதான் பரிசா? இலங்கை பிரச்சனையிலே பிரணாப் முகர்ஜி, எஸ்.எம். கிருஷ்ணா, எம்.கே. நாராயணன், நிருபமா ராவ்னு மாத்தி மாத்தி அனுப்பியும், இன்னும் மத்திய அரசை நம்பற மாதிரி நடிச்சுக்கிட்டிருக்கேனே, அந்தப் பண்பாட்டுக்கு இதுதான் நீங்க காட்டற நன்றியா? 

பீட்டர் : எங்களுக்கு நன்றி இல்லைன்னு மட்டும் நினைக்காதீங்க. காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு, ஹொகேனக்கல் பிரச்சனைகளிலே உங்களோடு ஒத்துழைப்பா இருந்து, நாங்களும் தமிழக உரிமையைப் பத்திக் கவலைப்படாமதானேஇருக்கோம்? அது உங்களுக்குக் காட்டற நன்றி இல்லையா? 

கருணாநிதி : ‘முதல்வர் பதவி வேணும்; துணை முதல்வர் பதவி வேணும்’னெல்லாம் கூட இளங்கோவன் பேசறாரு. ஏன் இப்படி அடுத்தவர் சொத்துக்கு ஆசைப்படறாரு? இவர் என்ன அழகிரியா, ஸ்டாலினா - இப்படியெல்லாம் பேசி என்னை மிரட்டறதுக்கு? என்ன பேசினாலும் கேட்டுக்கிட்டு சும்மா இருக்க இவர் என்ன என் குடும்பத்து ஆளா? 

தங்கபாலு : ஒரு வாதத்துக்கு காங்கிரஸுக்கு முதல்வர் பதவியோ, துணை முதல்வர் பதவியோ கிடைக்குதுன்னே வெச்சுக்குங்க. அப்புறம் கட்சி என்ன ஆகும்? அடிதடி, மோதல், கலவரம், தீ வைப்புன்னு கட்சி ஒரே ரணகளமாயிடுமே! கட்சியை கூண்டோட ஒழிச்சுக் கட்டத்தான் அவர் இப்படியெல்லாம் பேசறாரு. 

கருணாநிதி : கலவரம், தீ வைப்புன்னதும் ஞாபகத்துக்கு வருது. தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணியை காங்கிரஸ் தொண்டர்கள் விரும்பவில்லைன்னு இளங்கோவன் சொன்னதுக்கு எதிர்ப்பு தெரிவிச்சு, உங்க கட்சியிலே எந்த அசம்பாவிதமும் நடக்கலை. தொண்டர்கள் யாருமே கொதிச்சு எழலை. அப்படி ஏதாவது நடந்திருந்தா எனக்கு ஆறுதலா இருந்திருக்கும். சும்மாயிருந்து என் முதுகிலே குத்திட்டீங்களே? 

பீட்டர் : காங்கிரஸ் கட்டுப்பாடான இயக்கம்ங்க. மேலிடம் ஒரு முடிவை அறிவிக்கும்போது மட்டும்தான் தொண்டர்கள் கலவரத்திலே ஈடுபடுவாங்க. எங்களை மாதிரி சின்ன தலைவர்கள் பேச்சுக்கு தொண்டர்கள் மத்தியிலே எப்பவுமே மரியாதை கிடையாது. அதனாலே எங்க கருத்தை ஒரு பொருட்டா மதிச்சு, யாரும் எதிர்க்க மாட்டாங்க. 

தங்கபாலு : தமிழ்நாட்டுலே காங்கிரஸ் தொண்டர்கள் தி.மு.க. கூட்டணியை விரும்பறாங்களா இல்லையான்னு இளங்கோவனுக்கு என்ன தெரியும்? அது, சோனியாவைத் தவிர வேற யாருக்கும் தெரியாது. எங்களுக்குக் கூடத் தெரியாது. 

கருணாநிதி : சரி. அதை விடுங்க. காங்கிரஸுக்கு எதுவுமே கிடைக்கலைன்னு தொண்டர்களைத் தூண்டி விடறாரு. ராதாபுரம் பஸ் ஸ்டாண்டுக்கு காமராஜ் பேரை வெச்சேன். பாலத்துக்கு மூப்பனார் பேரை வெச்சேன். மார்ஷல் நேசமணிக்கு மணிமண்டபம் கட்டப் போறேன். நீங்க கேட்டிருந்தா, ஜூ-விலே வெள்ளைப் புலிகளுக்குக் கூட காங்கிரஸ் தலைவர்கள் பேரை வெச்சிருப்பேன். அப்படிப்பட்ட என்னைப் பார்த்து, காங்கிரஸுக்கு ஒண்ணுமே செய்யலைன்னா என்ன அர்த்தம்? 

தங்கபாலு : போனது போகட்டும்ங்க. இனிமே நம்ம கூட்டணியிலே பிரச்சனை வராது. அதுக்கு நாங்க கேரண்டி. நீங்க வழக்கம் போல மத்திய அரசை எந்தக் கேள்வியும் கேட்காம, லெட்டர் மட்டும் போட்டுக்கிட்டிருங்க. சோனியாவையும் பிரதமரையும் பாராட்டிக்கிட்டிருங்க. உங்களுக்கு பாராட்டு விழா நடந்தா அவங்க கண்டிப்பா வருவாங்க. தமிழ்நாட்டு மக்களுக்கு இதுக்கு மேலே என்ன வேணும்?



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

பதிலளிக்கிறார் பிரதமர் – சத்யா (2 மார்ச் 2011 இத‌ழ்)

2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், எஸ்-பாண்ட் விவகாரம் போன்ற மெகா ஊழல்கள் வெளியானதால், தொலைக்காட்சி சேனல்களுக்கு நேரடியாகப் பேட்டியளித்து, தன் மீதான களங்கத்தைத் துடைத்துக் கொள்ளப் பெரிதும் முயன்றிருக்கிறார் பிரதமர். ஆனால், பிரதமரின் மீது இரக்கப்பட்டோ என்னவோ, நிருபர்கள் எந்தக் கேள்விக்குள்ளும் ஆழமாகச் செல்லவில்லை. நிரா ராடியா டெலிஃபோன் பேச்சு தொடர்பான கேள்விகளை எழுப்பவும் இல்லை. பேட்டியில் அந்தக் குறையும் இல்லாமல் இருந்திருந்தால், பிரதமரின் நேர்மையில் இருந்த கொஞ்சநஞ்ச சந்தேகமும் இப்படித் தீர்க்கப்பட்டிருக்கும். 


கேள்வி : வெளிநாட்டு வங்கிகளில் போடப்பட்டுள்ள இந்தியர்களின் கறுப்புப் பணம் நூறு நாட்களில் மீட்கப்படும் என்று கூறினீர்கள். ஆனால், கறுப்புப் பணத்தை வைத்திருப்பவர்களின் பட்டியல் கிடைத்தும்கூட, பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்காதது ஏன்?

பிரதமர் : நூறு நாட்களில் நான் மீட்பேன் என்று கூறவில்லை. மத்திய அரசு மீட்கும் என்ற அர்த்தத்தில்தான் சொன்னேன். கறுப்புப் பணத்தை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கிறதா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. அது நீங்கள் மத்திய அரசைக் கேட்க வேண்டிய கேள்வி. 

கேள்வி : 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் இரண்டு வருடங்களுக்கு முன்பே வெளியாகி விட்டது. ஆனால், ஸி.பி.ஐ. விசாரணை, ரெய்டு எல்லாம் தாமதமாக நடத்தப்பட்டுள்ளது. இது, குற்றவாளிகளைத் தப்ப விடும் செயல் அல்லவா? 

பிரதமர் : எல்லா ஊழலையும் ஒரே மாதிரியாக பார்க்க முடியாது. கூட்டணிக் கட்சிகளின் ஊழல் தொடர்பான நடவடிக்கைகளை கூட்டணிக் கட்சிகள்தான் மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் கூட்டணி தர்மம். அதற்காகத்தான் ஸி.பி.ஐ. காத்திருந்தது. எனினும், சுப்ரீம் கோர்ட், அரசு நிர்வாகத்தில் அநாவசியமாகக் குறுக்கிட்டு நெருக்கடி தந்ததால், சம்பந்தப்பட்ட கூட்டணி கட்சியின் அனுமதியோடு, கூட்டணிக்கு பாதிப்பு வராத வகையில் ஊழல் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதிலிருந்தே யாரையும் தப்ப விடும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம். 

கேள்வி : 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை தடுக்க மத்திய அரசு தவறியது ஏன்?

பிரதமர் : மத்திய அரசைப் பொறுத்தவரை ஒருவருடைய வேலையில் மற்றவர் குறுக்கிடும் வழக்கமில்லை. அந்த அளவுக்கு எல்லா அமைச்சர்களுக்கும் நிர்வாக சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கிறது. அதே சமயத்தில், 2-ஜி ஒதுக்கீட்டில் ஊழல் நடக்கப் போகிறது என்று ராசா என்னிடமோ அமைச்சரவையிலோ தெரிவிக்கவில்லை. தெரிவித்திருந்தால் நிச்சயமாகத் தடுத்திருப்போம். பா.ஜ.க. ஆட்சியிலும் இப்படித்தான் யாரிடமும் சொல்லாமல் ஊழல் செய்யப்பட்டது. அதை மறைக்கத்தான் எதிர்க் கட்சிகள் இப்போது இப்பிரச்சனையை எழுப்புகின்றன. பா.ஜ.க.வின் வழிமுறையைத்தான் ராசா பின்பற்றியிருக்கிறார். அதில் என்ன தவறு? 

கேள்வி : ஜே.பி.ஸி. விசாரணையைச் சந்திக்க, மத்திய அரசு இந்த அளவுக்குத் தயங்குவதற்கு என்ன காரணம்?

பிரதமர் : மத்திய அரசு தயங்குகிறதா இல்லையா என்பது பற்றி நான் பதில் சொல்ல முடியாது. ஆனால் எந்த விசாரணைக்கும் நான் தயங்கவில்லை. யாருடைய கேள்விக்கும் பதிலளிக்க நான் எப்போதும் தயார் நிலையிலேயே இருக்கிறேன். சொல்லப் போனால், என்னுடைய வேலையே மற்றவர்களுக்கு பதில் சொல்வதுதான். ஆனால் யாரையும் கேள்வி கேட்கும் அதிகாரம் எனக்கில்லை. ஆஃப்டர் ஆல், நான் ஒரு பிரதமர். என்னால் சில விஷயங்களைப் பார்த்துக் கொண்டிருக்கத்தான் முடியும். அப்படியும் நான் எல்லா விஷயங்களையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். 

கேள்வி : மந்திரிசபையில் யாருக்கு எந்த இலாகா என்று நிரா ராடியாவும், வேறு சிலரும் முடிவு செய்தது எப்படி?

பிரதமர் : ஜனநாயக நாட்டில் யாரும் எந்தச் செயலிலும் ஈடுபடலாம். கூடுமானவரை அது சட்ட விரோதமாக இருக்கக் கூடாது என்பதுதான் முக்கியம். மந்திரிசபை உருவாக்கம் என்பது தனிப்பட்ட ஓரிருவர் செய்து விடக் கூடியதல்ல. அது ஒரு கூட்டுப் பொறுப்பு. மந்திரிகளை நியமிப்பதில் நிரா ராடியாவின் அனுபவம் மத்திய அரசுக்கு பயன்பட்டிருப்பது வரவேற்கத் தகுந்ததுதான். 

கேள்வி : மத்திய மந்திரிசபை மாற்றம் எப்போது இருக்கும்?

பிரதமர் : அது எனக்கு எப்படித் தெரியும்? நான் நிரா ராடியா அல்ல. என் அதிகாரத்திற்கு உட்பட்டவற்றை மட்டும்தான் நான் தெரிந்து கொள்ள முடியும். மந்திரி சபை மாற்றப்படுவதற்கு சற்று முன்போ அல்லது மாற்றப்பட்ட பிறகோ, பிரதமர் என்கிற முறையில் முதலில் என்னிடம்தான் தெரிவிக்கப்படும். அப்போது உங்களை அழைத்து அறிவிப்பேன். 

கேள்வி : தொலைத் தொடர்பு இலாகாவின் மந்திரியாக இருந்த ராசா மீது ஏற்கெனவே ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்த நிலையில், மீண்டும் அதே இலாகாவை அவரிடமே ஒப்படைத்தது ஏன்?

பிரதமர் : ஒருமுறை ஊழல் செய்தவர் அடுத்த முறையும் ஊழல் செய்வார் என்று முடிவு கட்டிவிடுவது தவறு. முதல்முறை என்னை நேர்மையான பிரதமர் என்று நினைத்த பலர், இப்போது தங்கள் கருத்தை மாற்றிக் கொள்ளவில்லையா? தவிர, ஊழல் செய்யாத நபர்களைத்தான் மந்திரிகளாக்க வேண்டும் என்றால், அப்படிப்பட்ட நபர்கள் கிடைக்க வேண்டாமா? மீண்டும் ராசாவுக்கே தொலைத் தொடர்பு இலாகா தரப்பட வேண்டும் என்பது தி.மு.க. எடுத்த முடிவு. தி.மு.க.வின் உள்கட்சி விவகாரங்களில் நான் எப்படித் தலையிட முடியும்? அவ்வளவாக ஊழல் செய்யாத ஓரிருவரும் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கிறார்கள் என்பதை நீங்கள் மறந்து விடக் கூடாது. 

கேள்வி : 2ஜி ஒதுக்கீட்டில் ஊழல் நடக்கவே இல்லை என்கிறீர்களா?

பிரதமர் : ஏதோ அந்த ஒரு ஒதுக்கீட்டில்தான் ஊழல் நடந்துள்ளது என்பதுபோல் திட்டமிட்டு பிரச்சாரம் செய்யப்படுகிறது. இந்தியா ஊழலற்ற நாடு என்பதை இந்தியர்களே ஏற்க மறுத்தால், உலக நாடுகள் நம்மை எப்படி மதிக்கும்? அர சுக்கு எதிரான ஊழல் வழக்குகளை ஏற்காமல் நீதிமன்றங்கள் அரசுடன் ஒத்துழைக்க வேண்டும். ஊழல் பற்றி கேள்விகள் கேட்டு நீதிமன்றங்களும் மீடியாவும் அரசை ஹிம்சிப்பது வருத்தம் அளிக்கிறது. இத்தகைய குறுக்கீடுகள் நாட்டின் முன்னேற்றத்தைப் பாதிக்கும் என்பதை உணர வேண்டும். 

கேள்வி : மத்திய மந்திரி பதவியை பெறுவதற்காக தயாநிதி மாறன், தயாளு அம்மாவுக்கு 600 கோடி ரூபாய் கொடுத்ததாக, நிரா ராடியா டெலிஃபோன் பேச்சில் வரும் தகவல் குறித்து உங்கள் கருத்து என்ன...?

பிரதமர் : நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களை நிதி அமைச்சர் விளக்குவதுதான் முறை. ஆனால், மீடியா நேர்மையைக் கடைப்பிடிக்க வேண்டும். மந்திரிசபையில் இடம் பெறுவதற்காக மற்ற மந்திரிகள் யாருக்கு எவ்வளவு கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? அவர்களை எல்லாம் விட்டு விட்டு, ஒரு குறிப்பிட்ட மந்திரி கொடுத்ததைப் பற்றி மட்டும் கேள்வி கேட்பது, மீடியாவின் உள்நோக்கத்தைக் காட்டுகிறது. 

கேள்வி : 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான ஆவணங்கள் சிலவும், கேஸ் டைரியும் காணவில்லை என்று ஸி.பி.ஐ.யே கூறியிருக்கிறது. இதன் மூலம் குற்றவாளிகளைத் தப்புவிக்க முயற்சி நடக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறதே? 

பிரதமர் : 2-ஜி ஆவணங்கள் மட்டும் காணாமல் போனால் நீங்கள் சந்தேகப்படலாம். ஏற்கெனவே காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல், ஆதர்ஷ் குடியிருப்பு ஒதுக்கீடு ஊழல் தொடர்பான ஆவணங்களும் காணாமல் போயிருக்கின்றன. அரசுக்கு எந்த பாரபட்சமான எண்ணமும் இல்லை என்பதற்கு இதைவிட என்ன ஆதாரம் வேண்டும்? போஃபர்ஸ் ஊழலில் எந்த ஆவணமும் காணாமல் போகவில்லை. குற்றவாளி பிடிபட்டு விட்டாரா? எனவே, ஆவணங்கள் காணாமல் போவதற்கும் குற்றவாளிகள் தப்புவதற்கும் முடிச்சு போடுவது சரியல்ல. 

கேள்வி : உங்கள் பொறுப்பிலுள்ள இலாகாவைச் சேர்ந்த இஸ்ரோ, உங்களுக்கே தெரியாமல் தேவாஸ் மல்டிமீடியாஸ் கம்பெனிக்கு சாட்டிலைட்களை செலுத்த ஒப்புக் கொண்ட வகையில், அரசுக்கு இரண்டு லட்சம் கோடி ரூபாய் இழப்பு என்று ஸி.ஏ.ஜி. கூறியிருக்கிறதே? 

பிரதமர் : நீங்கள் குறிப்பிடும் விவகாரம் எனக்குத் தெரியாமல்தான் நடந்ததா என்பது பற்றி எனக்குத் தெரியாது. அது விசாரணைக்குப் பிறகு தான் தெரியும். ஆனால் இரண்டு லட்சம் கோடி ரூபாய் நஷ்டம் என்பதை ஏற்க முடியாது. அது யூக மதிப்பீடுதான். அது 1.99 லட்சம் கோடியாகவோ அல்லது 1.98 லட்சம் கோடியாகவோ கூட இருக்கலாம். அதை மறைத்து ஒரேயடியாக இரண்டு லட்சம் கோடி நஷ்டம் என்று குற்றம்சாட்டுவது, ஸி.ஏ.ஜி.யின் பொறுப்பின்மையைக் காட்டுகிறது. அதற்காக அவர்களிடம் விளக்கம் கேட்கப்படும். 

கேள்வி : பிரதமர் பதவியிலிருந்து விலகுவீர்களா?

பிரதமர் : நானாக விலகும் அதிகாரம் எனக்கு இல்லை. யாராவது விலக்கும் வரை, விலகும் பேச்சுக்கே இடமில்லை. அடுத்தமுறை, யாராவது என்னை பிரதமராக ஆக்கினால்தான் பிரதமராவேன். இல்லாவிட்டால் ஆக மாட்டேன்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

வீரம் உறங்கும் நேரம் – சத்யா 

தி.மு.க.வின் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா ஊழல் காரணங்களுக்காக ஸி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்ட பிறகு நடைபெற்ற அக்கட்சியின் பொதுக்குழுவில், கட்சித் தலைவர் கருணாநிதி தி.மு.க.வின் சுயமரியாதை, தன்மானம் போன்ற பழங்காலக் கொள்கைகளை நினைவுபடுத்தி வீர உரையாற்றுவார் என்று எதிர்பார்த்திருந்த அவரது தொண்டர்கள் ஏமாற்றத்திற்கு உள்ளாகியிருக்கக் கூடும். அமைதியே உருவாக, சோக ரசம் ததும்ப கலைஞர் ஆற்றிய உரை அவர்களுக்கு அதிர்ச்சி அளித்திருக்கலாம். ஆனால், அவர்கள் யதார்த்த நிலையைப் புரிந்து கொள்ள வேண்டும். கலைஞர் நினைத்திருந்தால் பொதுக்குழுவில் இப்படிப் பொங்கி எழுந்திருக்க முடியாதா? 

‘இன்றைய தினம் தி.மு.க.வின் வளர்ச்சியையும், எழுச்சியையும் சகித்துக் கொள்ள முடியாத சில சக்திகள், தலித் தம்பி ராசா அவர்களை சிறையில் அடைக்கக் கூடிய அளவுக்கு துணிவு பெற்றிருக்கின்றன. இப்படி ஒரு கொடுமை அரங்கேற்றப்பட்ட பிறகும், இந்தச் சதிகாரக் கூட்டத்துக்குச் சாமரம் வீசிக் கொண்டிருக்க இளித்தவாயனல்ல தமிழன் என்பதை உணர்த்துகிற காலகட்டத்திலே, நாம் இந்தப் பொதுக்குழுவை நடத்திக் கொண்டிருக்கிறோம். தம்பி ராசா செய்த தவறு என்ன? தலித் சமுதாயத்திலே பிறந்ததுதான் குற்றமா? அல்லது இத்தாலியிலே பிறக்காதது குற்றமா? முப்பது பைசா செலவிலே மூவாயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ளவர்களோடும் பேசக் கூடிய செல்ஃபோனைக் கண்டுபிடித்து முத்தன், முனியனிடம் ஒப்படைத்தது குற்றமா? அல்லது இலவச வீடு கட்டித் தரும் இயக்கத்தைச் சேர்ந்த தொண்டன் என்பது குற்றமா? 

சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறி சண்டித்தனம் புரிகிற ஸி.பி.ஐ.யின் கரங்கள், பா.ஜ.க. அமைச்சர்கள் மீது மட்டும் பாயாதது ஏன்? அகந்தை கொண்ட ஆரியர்களுக்கு ஒரு நீதி, தீது அறியா திராவிடர்களுக்கு ஒரு நீதியா என்று கேட்கும் உரிமை நமக்கில்லையா? 

உன்னிடம் நாட்டை ஒப்படைத்த தமிழனுக்கு இதுதான் நீ காட்டுகிற நன்றியா? வெளிநாட்டு வங்கிகளில் ஐம்பது லட்சம் கோடி ரூபாய் கறுப்புப் பணத்தை மறைக்கத் தெரிந்தவர்கள், கேவலம் 1.76 லட்சம் கோடி ரூபாய்க்கு வானத்துக்கும் பூமிக்குமாய் துள்ளிக் குதிப்பது ஏன்? 

கூட்டணியை நாம் மதிப்பவர்கள்தான். தோழமையைப் போற்றுகிறவர்கள்தான். ஆனால், சுயமரியாதையை விற்றுவிட்டு கேவலம் ஆட்சிக்காக பதவியிலே ஒட்டிக் கொண்டிருப்பதைக் கழகம் என்றைக்குமே விரும்பியதில்லை. அண்ணா அப்படி வளர்க்கவில்லை நம்மை. நெருக்கடி நிலையை எதிர்த்ததற்காக ஆட்சியையே இழந்த வீர வரலாறு கழக வரலாறு. இலங்கைத் தமிழர்களின் இன்னுயிரைக் காப்பாற்றுவதற்காக இருமுறை ஆட்சியைத் தூக்கியெறிந்த இன மானக் கொள்கைக் குன்றுகள் நாம். அப்படிப்பட்ட நமது தன்மானத்தைச் சீண்டிப் பார்க்கும் சிறு நரிகளை தமிழகத்தில் நுழைய விடாமல் விரட்டி அடிக்கும் வீரமும், வலிமையும் நமக்கு உண்டு. 

ஸி.பி.ஐ.யின் அடாவடிச் செயலைக் கண்டித்தும், ஸி.பி.ஐ.யைத் தூண்டி விட்ட துஷ்டர்களின் ஜனநாயக விரோதச் செயலை எதிர்த்தும், நமது பொதுக்குழுவில் வரலாற்றுப் பெருமைக்குரிய தீர்மானங்களை எழுதி விட்டுத்தான் உங்கள் முன்னால் பேசிக் கொண்டிருக்கிறேன். தம்பி ராசாவுக்கு நீதி கிடைக்கும் வரை நமது போர்க் குரல் ஓயாது ஓயாது என்று கூறி, நமது இந்த உணர்வுகள் நாடு முழுவதும் தீயென பற்றிப் பரவ திட்டமிட்டுச் செயலாற்றும்படி வேண்டுகோளாக அல்ல, ஆணையாகவே தெரிவித்துக் கொள்கிறேன்’ – என்றெல்லாம் கலைஞர் சீறியிருக்க முடியாதா? அவர் மனம் வைத்திருந்தால், இப்படி பேட்டியும் அளித்திருப்பாரே! 

கேள்வி : ராசா ஸி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டிருக்கிறாரே? 

கலைஞர் : யார் தூண்டிவிட்டு ஸி.பி.ஐ. இப்படியொரு அரக்கத்தனத்தைக் காட்டியிருக்கிறது என்று எனக்கும் தெரியும். ராசா எந்தக் குற்றமும் செய்யவில்லை என்று பிரதமரும் கபில்சிபலும் கூறிய பிறகு, கைதுக்கு என்ன அவசியம் வந்தது? இடையில் நடந்தது என்ன? அதையும் உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று கேட்போம். அதுமட்டுமல்ல, ஜே.பி.ஸி. விசாரணையை வலியுறுத்தி, டெல்லி பெருச்சாளிகளின் முகத் திரையையும் கிழிப்போம்.

கேள்வி : ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஊழல் நடந்திருப்பதற்கு ஆதாரங்கள் இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் ஸி.பி.ஐ. கூறியிருக்கிறதே? 

கலைஞர் : எந்த ஸி.பி.ஐ.? பொய்யையும், புனை சுருட்டுகளையுமே ஆதாரங்களாகக் காட்டி, போஃபர்ஸ் வழக்கில் குற்றவாளியைத் தப்ப விட்டதே அந்த ஸி.பி.ஐ.யா? 

கேள்வி : காங்கிரஸுடன் கூட்டணி தொடருமா? 

கலைஞர் : கூட்டணியை விட, சுய மரியாதை முக்கியம் என்பதுதான் நான் அண்ணாவிடம் கற்ற பாடம். பொதுக்குழு, மத்திய அரசுக்கு எதிரான உணர்வுகளைப் பதிவு செய்திருக்கிறது. பலமுறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டது, இலங்கைத் தமிழர்களின் வாழ்வாதாரத்துக்கு எதையும் செய்யாமல் இரட்டை வேடம் போட்டு வருவது, காவிரிப் பிரச்சனையில் தமிழகத்தின் முதுகில் குத்துவது... போன்ற பல பிரச்சனை களில் உறுப்பினர்கள் தங்கள் கவலைகளைத் தெரிவித்துள்ளனர். இந்த அடிப்படையில் முடிவெடுப்போம். 

கேள்வி : மதவாத பா.ஜ.க. ஆட் சியை வரவிடாமல் தடுக்க, காங்கிரஸ் ஆட்சி தொடர வேண்டும் என்று கூறி வந்தீர்களே? 

கலைஞர் : மதவாத ஆட்சி கூடாதுதான். அதற்காக நாட்டை சர்வாதிகார ஆட்சியிடம் விட்டுவிட முடியாது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட போதே கம்யூனிஸ்ட்களிடம் இதை நான் கூறியிருக்கிறேன். எனது கம்யூனிஸ சிந்தனையை மாசேதுங் அப்போதே பாராட்டியிருக்கிறார்

கேள்வி : கூட்டணியில் பா.ம.க.வுக்கு இடம் தரக் கூடாது என்று சோனியா கூறியதை ஏற்பீர்களா? 

கலைஞர் : தமிழகத்தைப் பொறுத்தவரை, கூட்டணியில் பெரிய கட்சி தி.மு.க.தான் என்பது குழந்தைகளுக்கும் தெரியும். கூட்டணியில் எந்தக் கட்சி இடம் பெற வேண்டும் என்று முடிவெடுக்கும் உரிமை தி.மு.க.வுக்குத்தான் உண்டு. உத்தரவிடும் எஜமானத்தனத்திற்கு அடிபணிகிற கட்சியல்ல கழகம். 

– இப்படியெல்லாம் வீராவேச முழக்கம் புரிய கலைஞருக்குத் தெரியாதா? தெரியும். வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று வீரமாகப் பேசி விட்டால் கட்சி என்னவாகும் என்று அறிவுபூர்வமாக சிந்திக்கும் கலைஞருக்குத்தான், வரவிருக்கும் ஆபத்துகள் புரியும். ராசாவைத் தொடர்ந்து கட்சிக்கு வேண்டியவர்கள் இன்னும் எத்தனை பேர் கைதாவார்களோ? அவர்கள் கோர்ட்டில் என்னவெல்லாம் சொல்வார்களோ? 

பிள்ளைகளும் பேரர்களும் ஓஹோவென்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களது எதிர்காலத்துக்கு எந்த இடைஞ்சலும் வந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டாமா? தேர்தல் கமிஷனின் கெடுபிடியின்றி தேர்தல் பணியாற்றி, கழகத்தை மீண்டும் ஆட்சியில் அமர்த்த வேண்டாமா? மத்திய அரசோடு மோதி இவற்றை இழப்பதால் என்ன பெருமை வந்துவிடப் போகிறது? அதனால்தான், காங்கிரஸுடனான கூட்டணியை வலுப்படுத்திக் கொள்வதற்காக இப்படியும் பதில் அளிக்க கலைஞர் தயார் நிலையில் இருக்கிறார். 

கேள்வி : ராசா, ஸி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டிருக்கிறாரே? 

கலைஞர் : அதற்காக சோனியாவுக்கு நான் டெல்லியிலேயே நன்றி தெரிவித்து விட்டேன். கூட்டணிக் கட்சி என்றும் பாராது ஸி.பி.ஐ. தன் சட்டக் கடமையை நிறைவேற்றியுள்ளது. 

கேள்வி : ஊழலுக்கு ஆதாரம் இருப்பதாக ஸி.பி.ஐ. கூறுகிறதே? 

கலைஞர் : அந்த ஆதாரம் நீதிமன்றத்தால் ஏற்கப்படும் வரை ராசா குற்றவாளியல்ல என்று கூறுவதை, சோனியா தவறாகக் கருத மாட்டார் என்று நம்புகிறேன். எதிர்பாராத விதமாக நீதிமன்றமும் ராசாவுக்கு எதிராக தீர்ப்பளித்துவிட்டால், அதுதான் கழகத்தின் ஜாதகம் என்று கருதி, நீதித் துறையின் சுதந்திரமான செயல்பாட்டுக்காக கழகம் மத்திய அரசைப் பாராட்டவும் தயாராக இருக்கிறது.

கேள்வி : காங்கிரஸுடன் கூட்டணி தொடருமா? 

கலைஞர் : தொடரும் என்று பல காங்கிரஸ் தலைவர்களே கூறி விட்டார்களே. தம்பி ராசாவின் விருப்பமும் அதுதான். மதவாத பா.ஜ.க. ஆட்சி வரக்கூடாது என்ற கொள்கையில் கழகம் தொடர்ந்து தன் உறுதியைக் காட்டும். 

கேள்வி : பொதுக்குழுவில் ராசா கைதுக்காக மத்திய அரசையோ ஸி.பி.ஐ.யையோ கண்டித்து, ஒரு தீர்மானம் கூட நிறைவேற்றப்படவில்லையே? 

கலைஞர் : ராசா கைதுக்காகத்தான், கட்காரியையும், கம்யூனிஸ்ட்களையும், ஏடுகளையும் பொதுக்குழு வன்மையாகக் கண்டித்திருக்கிறது. கூட்டணியை பிளவு படுத்தும் உங்கள் விருப்பம் நிறைவேறாது. 

கேள்வி : ராசா கட்சியிலிருந்து நீக்கப்படுவாரா? 

கலைஞர் : கழகம் ஜனநாயக வழியில் செயல்படும் இயக்கம். எனவே, சோனியாவுடன் பேசி முடிவு செய்வோம். 

இப்படியெல்லாம் அடுக்கடுக்கான தியாகங்கள் செய்துதான், அண்ணா தன்னிடம் ஒப்படைத்த கழகத்தை கலைஞர் காப்பாற்றி வருகிறார். எனவே, கழகத் தொண்டர்கள் சுயமாகச் சிந்திக்க ஆசைப்படாமல், தொடர்ந்து கலைஞர் வழியிலேயே சிந்தித்துப் பயனடைவார்களாக!



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே...! – சத்யா

தி.மு.க. அரசை மிகக் கடுமையாக விமர்சித்து வந்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், திடீரென கருணாநிதியைச் சந்தித்து, தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வை இடம் பெறச் செய்திருக்கிறார். இருவரின் பெருந்தன்மையையும் நினைத்தால் உடல் சிலிர்க்கிறது. நாம் அவர்களைப் போல் இல்லாமல், சாதாரண மனிதர்களாக இருப்பதால், ராமதாஸின் பழைய பேச்சுக்கள் எல்லாம் தேவையில்லாமல் நமது ஞாபகத்திற்கு வருகின்றன. ராமதாஸ் அவற்றையெல்லாம் முற்றிலும் மறந்துவிட வேண்டும். இல்லாவிட்டால், தேர்தல் பிரச்சார மேடையில் அவரது பேச்சு – பல நிலைப்பாடுகளும் கலந்து – இப்படி அமைந்து விடக் கூடிய ஆபத்து இருக்கிறது.


‘இந்தத் தேர்தல்லே கலைஞரும் நானும் வெற்றிக் கூட்டணி அமைத்திருக்கிறோம். இரண்டுகோடி வன்னியர்களும் நான் சொல்றபடி ஓட்டு போட்டா, தி.மு.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் டெபாஸிட்டே கிடைக்காது. ஆனால், வன்னியரை முதல்வராக்கணும்ன்ற எண்ணம் வன்னியர்களுக்கே இல்லை. அதனாலதான் நான் கோபாலபுரத்துக்கும் போயஸ் தோட்டத்துக்கும் மாறி மாறி காவடி தூக்க வேண்டியிருக்குது. இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் நாம் நாற்பது ஸீட்டுக்கும் ஐம்பது ஸீட்டுக்கும் திராவிடக் கட்சிகளிடம் கையேந்திக் கொண்டிருப்பது? ஆகவேதான், கலைஞர் நமது பலத்தை உணர்ந்து 31 தொகுதிகளை ஒதுக்கியிருக்கிறார்.

அடிக்கடி கூட்டணி மாறுகிறோம்னு விமர்சிக்கிறாங்க. மற்ற கட்சிகள் மாறலையா? தி.மு.க. மாறி மாறி கூட்டணி வைக்கலையா? மத்தியிலே எந்த ஆட்சி நடந்தாலும் ஓடிப் போய் ஒட்டிக்கிறவர்தானே கலைஞர்?

தமிழ்நாட்டிலே இப்ப ஆட்சியா நடக்குது? தமிழ்நாடே குடிகார நாடாகி விட்டது. தமிழ்நாட்டுக்கு குடிகார நாடுன்னு பேரை மாத்தணும். அப்படி ஒரு போதைப் புரட்சி நடக்குது. டாஸ்மாக் ஊழியர்களை அரசு ஊழியர்களாக்கினால்தான் இந்தப் பிரச்சனை தீரும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி, தேர்தல் முடிஞ்ச மறுநாளே டாஸ்மாக் கடைகளை அடித்து நொறுக்கி, பூட்டுப் போடும் போராட்டத்தை பா.ம.க. நடத்தும்.

2009 பாராளுமன்றத் தேர்தல்லே அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் மறைமுகக் கூட்டணி வைத்து பா.ம.க.வை ஏழு இடங்களிலும் தோற்கடித்தன. பச்சை, பச்சை துரோகம் செய்த கட்சி தி.மு.க.. பென்னாகர இடைத் தேர்தல்லே ஓட்டுக்கு பணம் கொடுத்து ஜெயித்த கட்சிதான் தி.மு.க. இதுலே அண்ணன் கட்சி, தம்பி கட்சி வேறே. இது மதுரை தி.மு.க.ன்றாரு. யாரு? அழகிரி. கலைஞர் நல்லவர்தான். ஆனால் தி.மு.க. தொண்டர்கள் நம்ப வைத்து கழுத்தறுப்பவர்கள். அ.தி.மு.க. தொண்டர்கள் அப்படியில்லை. கூட்டணிக் கட்சிக்காக உயிரையும் கொடுப்பவர்கள். நான் இதை இப்ப சொல்லலை. உள்ளாட்சித் தேர்தல்லே, பா.ம.க. முதுகிலே தி.மு.க. குத்தினப்பவே சொன்னேன். கலைஞரைப் பார்க்க வேஷ்டியோட போனா, துண்டையும் உருவிகிட்டு அனுப்பிடுவாரு.

அன்புமணி சாதனைக்காக அமெரிக்காவே பாராட்டினாலும், கலைஞருக்கு மட்டும் பாராட்ட மனம் இல்லை. நான் எந்தக் கட்சியிடமும் பிச்சைக் கேட்கத் தயாரா இல்லை. தி.மு.க., அ.தி.மு.க. நம்மை தேடி வர வேண்டும். பா.ம.க. கூட்டணி அமைத்துத்தான் தேர்தலைச் சந்திக்கும். தனி அணி அமைக்கும் எண்ணம் இல்லை. ஏனென்றால், பா.ம.க.வை விட நல்ல கொள்கை உள்ள கட்சி இந்தியாவிலேயே கிடையாது.

தமிழ்நாட்டில் தமிழ் எங்கும் இல்லை, எதிலும் இல்லை. தமிழை வளர்க்கிறோம்னு சொல்லிட்டு மானாட மயிலாட நடத்தறவங்க ‘மக்கள் டி.வி.’யைப் பார்த்துக் கத்துக்கணும். இலவச டி.வி. கொடுக்கிறார்கள். டி.வி. இல்லாமல் மக்கள் வாழ முடியாதா? கொள்ளை அடித்த பணத்திலிருந்து ஒரு பகுதியைக் கிள்ளிக் கொடுக்கிறார் கலைஞர். இலவசம் கொடுப்பதற்கு தேர்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டும். தமிழ்நாட்டு மக்களை பிச்சைக்காரர்களாக்கியதுதான் இந்த ஆட்சியின் சாதனை. தமிழக அரசு குஜராத்தைப் பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டும். வீரமணி மாதிரி ஜிங்ஜாங் போட என்னாலே முடியாது. 

இடஒதுக்கீட்டுக்காக குரல் கொடுக்கும் ஒரே கட்சி பா.ம.க.தான். கலைஞருக்கு கடிதம் எழுத மட்டும்தான் தெரியும். நதிநீர் பிரச்சனைகளில் மத்திய - மாநில அரசுகள் கூட்டாக தமிழகத்துக்கு துரோகம் செய்கின்றன. தமிழகத்தின் ஒரு உரிமையைக் கூட கலைஞரால் காப்பாற்ற முடியவில்லை. ஜாதிவாரி சென்ஸஸ் எடுக்கணும்னு கலைஞர் மத்திய அரசை வற்புறுத்தணும். ஒரு நீதிபதி கூட வன்னியர் இல்லை. வயிறு எரியுது. நீதிபதிகளை ஜாதி அடிப்படையில் நியமிக்க கலைஞர் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். அவரால்தான் அது முடியும். மத்திய அரசு மறுத்தால், மத்திய அமைச்சரவையிலிருந்து தி.மு.க. வெளியே வர வேண்டும்.

உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கலை. அதைக் கேட்கக் கூட நாதியில்லை தமிழகத்தில். அதனால்தான் தி.மு.க. கூட்டணியிலிருந்து காங்கிரஸ் உடனே வெளியே வரணும்னு நான் சொல்றேன். தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் ஆதரவு கொடுக்க பா.ம.க. தயார்.

இலங்கைத் தமிழர் பிரச்சனையில் தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிராகச் செயல்படுகிறது மத்திய அரசு. தி.மு.க. மீது காங்கிரஸ் எப்போது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தாலும் பா.ம.க. ஆதரவு தரும். இலங்கைக்கு நிருபமா போனதால் ஒரு பயனும் இல்லை. தமிழனை ஏமாற்ற மத்திய அரசு போடுகிற நாடகத்துக்கு கலைஞர்தான் வசனம் எழுதித் தருகிறார். ஆகவே, தி.மு.க. ஆட்சியில் காங்கிரஸுக்கு பங்கு தரப்பட வேண்டும்.

ஆண்டுக்கு இருபதாயிரம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டித் தருகிற யோசனை என்னிடம் இருக்கிறது. கலைஞர் கேட்டால் சொல்லத் தயாராக இருக்கிறேன். ஆனா யாரும் கேக்கலை. அவ்வளவுதான் தமிழ்நாட்டின் மீது அக்கறை. இப்படிப்பட்ட மத்திய, மாநில அரசுகளை அகற்றுவதற்காக தமிழகத்தில் மூன்றாவது அணிக்கு தலைமை ஏற்கவும் பா.ம.க. தயாராக இருக்கிறது.

நமக்கு முதலியார், நாடார், நாயக்கர் எந்த ஜாதி ஓட்டும் தேவையில்லை. வன்னியர் ஓட்டு மட்டும் போதும். தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் மாறி மாறி ஆட்சி செய்து தமிழகத்தைச் சீரழித்து விட்டன. இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். அதற்காக போராட்டம் நடத்தி, சிறை செல்ல ஆசையாக இருக்கிறது. பல கட்சிகளைப் பார்த்து விட்டோம். வன்னியர்களுக்காக சிறையை காலி செய்து வையுங்கள்னு நான் கலைஞரைக் கேட்டுக்கறேன். தி.மு.க.வா, அ.தி.மு.க.வா என்று இன்னும் முடிவெடுக்கவில்லை. பா.ம.க. பொதுக்குழு கூடி ஓட்டெடுப்பு நடத்தித்தான் முடிவு செய்யும். என் மீது பாதுகாப்பு சட்டம் பாய்ந்தாலும் கவலையில்லை. கலைஞர் அதையும் செய்யக்கூடியவர்தான்.

தமிழ்நாட்டில் கள்ளச் சாராயம், கள்ள லாட்டரி, கஞ்சா விற்பனைன்னு பஞ்சமா பாதகங்களும் நடக்குது. அதனால்தான் அறிவாலயம் சென்று மரியாதை நிமித்தம் கலைஞரை சந்தித்து சால்வை போட்டதும், அரவணைத்து பா.ம.க.வுக்கு 31 தொகுதிகள் ஒதுக்கினார். அப்படிப்பட்ட நமது இனத்தைச் சேர்ந்த குருவை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் தள்ளியவர் கலைஞர். குரு என் பிள்ளை மாதிரி. அவரை சிறையில் தள்ளுவது இரண்டு கோடி வன்னியர்களை சிறையில் தள்ளுவதற்குச் சமம். இதற்கு கலைஞர் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

(கட்டுரையின் நான்காவது / இறுதிப் பகுதி இதோ வருகிறது....)
சுப்ரமணியன் சேகர்
விடிவெள்ளி
விடிவெள்ளி
 
பதிவுகள்: 38078
(காண் /இத்திரியில்)
(துவக்கிய திரிகள்)
சேர்ந்தது: சனி ஜன 29, 2005 4:10 pm
வசிப்பிடம்: மும்பை

Re: துக்ளக் சத்யாவின் அரசியல் கட்டுரைகள்!

பதிவிடுஆல் சுப்ரமணியன் சேகர் » வெள் மார் 04, 2011 11:24 am

(7வது கட்டுரையின் நான்காவது / இறுதிப் பகுதி)

ஒரு ரூபாய் ரேஷன் அரிசியை வாயில் வைக்க முடியவில்லை. செத்தவர்களுக்கு வாய்க்கரிசி போடத்தான் அது லாயக்கு. சமூக நீதியைப் பற்றி கலைஞர் பேசுகிறார். வன்னியர்களுக்கு 20 சதவிகித இடஒதுக்கீடு தராத கலைஞருக்கு சமூக நீதி பற்றி பேச தகுதி இல்லை. இதை நான் சொன்னா என் மேலே கோபம் வருது. யாருக்கு? கலைஞருக்கு. ஒவ்வொரு முறையும் பா.ம.க.வை கூட்டணியிலிருந்து வஞ்சகமாக வெளியேற்றியவர் கலைஞர்.

தமிழ்நாட்டில் ஆட்சியாளர்களின் துணையோடு இருபத்து நாலு மணி நேரமும் மணல் கொள்ளையடிக்கப்படுகிறது. விரைவில் ஆறுகளே காணாமல் போய் விடும். பாதி நேரம் மின்சாரம் வர்றதில்லை. இதுக்கு ஒரு அமைச்சர். அவர்தான் ஆற்காடு வீராசாமி. அவர் மின்துறை அமைச்சர் இல்லை, மின்வெட்டு அமைச்சர்.

முதல்வரின் பேரன்களுக்கு கிடைக்கிற சலுகைகள் குப்பன், சுப்பனுடைய பேரன்களுக்கும் கிடைக்க வேண்டும். அப்படிப்பட்ட கட்சியோடுதான் கூட்டு வைக்க முடியும். தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு என்பது மருந்துக்குக் கூட இல்லை. பேப்பரைப் புரட்டினால், கொலை கொள்ளைதான். நகை நட்டுடன் பெண்கள் நடமாட முடியவில்லை. இப்படி ஒரு ஆட்சி. போலீஸ் என்ன செய்கிறதுன்னு கலைஞரைத்தான் கேட்க வேண்டும். ஆனால், அவருக்கு பாராட்டு விழாவிலே கலந்து கொள்ளவும், சினிமா நிகழ்ச்சிகளிலே பேசவும்தான் நேரம் இருக்குது.

மேல்சபைக்கு ஆதரவாக பா.ம.க.வின் பதினேழு எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்காமல் இருந்திருந்தால், மேல்சபையை இவரால் கொண்டு வர முடியுமா? இவருக்கு வேண்டியவர்களுக்கு பதவி கொடுப்பதற்காகத்தான் மேல்சபையைக் கொண்டு வரார். அதுக்கு ஆதரவு கொடுத்ததற்குக் கூட நன்றி இல்லை. நாம தப்பு செஞ்சுட்டோம். ‘2010-ல் அன்புமணிக்கு ராஜ்யசபா ஸீட் தருவேன்’னு கலைஞர்கிட்டே எழுதி வாங்கியிருக்கணும். அதைச் செய்யாததால், நம்மை ஏமாற்றி நம் முதுகில் குத்தியவர் கலைஞர். இந்த ஒரு காரணத்துக்காகவே, கலைஞரின் ஆட்சிக்கு பூஜ்யம் மார்க் போடலாம். அதுக்கு கம்மியா மார்க் இல்லை. இருந்தா, அதைத்தான் போடணும்.

ஆகவே, இந்த வெற்றிக் கூட்டணியை ஆதரித்து, மீண்டும் கலைஞரை ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.’


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

 நீயா, நானா ? – கருத்து மகா யுத்தம் – சத்யா

‘துணைவேந்தர் ஒருவர் தி.மு.க. எம்.எல்.ஏ.வால் தாக்கப்பட்டார்; இரு அட்வகேட் கமிஷனர்கள் மீது தி.மு.க. கௌன்ஸிலர்கள் தாக்குதல்; பஸ்ஸை வழிமறித்து டிரைவரையும், கண்டக்டரையும் தி.மு.க. கௌன்ஸிலரின் மகனும் அவரது நண்பர்களும் தாக்கினர்; ஆளும் கட்சிக்கு வேண்டிய டி.வி. உயர் அதிகாரியின் அடியாட்கள் நட்சத்திர ஹோட்டலை அடித்து நொறுக்கினர் – என்றெல்லாம் சமீபகாலமாக அச்சமூட்டும் செய்திகள் பத்திரிகைகளில் அவ்வப்போது வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆளும் கட்சியினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே அப்படி என்னதான் பிரச்சனை? இரு தரப்பினரையும் சந்திக்க வைத்து சமரசம் ஏற்படுத்த விஜய் டி.வி.யோ, கலைஞர் டி.வி.யோ இப்படி முயற்சிக்கலாமே! 

நிகழ்ச்சித் தொகுப்பாளர் : வணக்கம். ஆளும் கட்சி அரசியல்வாதிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையே ஒரு கோல்ட் வார் – மௌன யுத்தம் – நடக்கிறது வழக்கமானதுதான். சமீபகாலமாக அந்த மௌனம் கலைஞ்சு நேரடியாகவே மோதிக்கிற நிகழ்ச்சிகள் நடக்க ஆரம்பிச்சிருக்குது. இதுக்கு அடிப்படை காரணம் என்னன்னு நினைக்கிறீங்க? 

தி.மு.க. எம்.எல்.ஏ. : நாங்க ஏற்கெனவே, கூட்டணியிலே ஏதாவது பிரச்சனை வந்துடுமா, அப்படியே கூட்டணி தொடர்ந்தாலும், மறுபடியும் எம்.எல்.ஏ. ஸீட் கிடைக்குமா, கிடைச்சாலும் ஜெயிக்கிறதுக்கு எத்தனை கோடி செலவு பண்ண வேண்டியிருக்குமோ, ஆட்சி மாறி வழக்கு, கிழக்கு வந்துட்டா என்ன பண்றதுன்னு ஏகப்பட்ட டென்ஷனோட மக்கள் பணியாற்றிகிட்டிருக்கோம். எங்க நிலைமை புரியாம பொதுமக்கள் எங்களைப் புண்படுத்தற மாதிரி நடந்துக்கறதுதான் அடிப்படைக் காரணம். 

குடிமகன் : எங்களுக்கும்தான், காலாகாலத்திலே பஸ் கிடைச்சு வேலைக்குப் போக முடியுமா, வீட்டுக்குப் போனா கரெண்ட் இருக்குமா, குழாய்லே தண்ணி வருமா, கொசுக்கடியை எப்படிச் சமாளிக்கிறது, பையன் ஸ்கூல்லே இன்னைக்கு கூடுதலா எவ்வளவு ஃபீஸ் கட்டச் சொல்லியிருப்பாங்களோன்னு ஆயிரம் டென்ஷன் இருக்குது. நாங்க கஷ்டத்தோட வாழப் பழகிக்கலை...? 

நி.தொ. : இருதரப்பிலும் டென்ஷன் இருக்குதுன்னு சொல்றீங்க. இது ஒரு நல்ல பாயின்ட். ஆனா மோதல் ஏன் வருது? எப்படி ஆரம்பிக்குதுன்னு சொல்ல முடியுமா? 

குடிமகன் : நான் ஒருதடவை ரோடுலே நடந்து போயிட்டிருந்தேங்க. லெஃப்ட் ஸைட்லே ஈ.பி.காரங்களும் ரைட் ஸைட்லே கார்ப்பரேஷன்காரங்களும் பள்ளம் தோண்டியிருந்தாங்க. நடுவிலே சேறும் சகதியுமா கொழகொழன்னு இருந்ததாலே, ஒரு மாதிரி நேக்கா நடந்து போயிட்டிருந்தப்போ, எதிர்லே ஒரு கார் வேகமா வந்து ஹாரன் அடிச்சுது. எந்தப் பள்ளத்திலே குதிக்கிறதுன்னு நான் யோசிக்கிறதுக்குள்ளே, கார்லேர்ந்து நாலஞ்சு பேர் இறங்கி வந்து என்னை அடிச்சுட்டாங்க... 

நி.தொ. : யார் அவங்க? 

குடிமகன் : அவங்க உரிமையோட அடிக்கிற ஸ்டைலைப் பார்த்தே, யாரோ அரசியல்வாதிங்கதான்னு நானே புரிஞ்சுகிட்டு ஒதுங்கிட்டேன். 

தி.மு.க. கௌன்ஸிலர் : கார்லே கட்சிக் கொடி இருக்கிறதைப் பார்த்த பிறகும், சிலர் மரியாதையில்லாம எதிர்லே வர்றதுதான் பிரச்சனைக்குக் காரணம். இப்படித்தான் ஒரு தடவை நானும் எம்.எல்.ஏ. அண்ணனும் ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்லே சாப்பிட்டுட்டு, டான்ஸ் பார்த்துட்டு, டயர்டா ராத்திரி ஒரு மணிக்கு ஒரு டீக்கடையிலே நுழைஞ்சோம். டீயைக் குடிச்சிட்டுப் பார்த்தா, திமிரா பில்லை நீட்டறார் அந்த சப்ளையர். 

நி.தொ. : நீங்க குடிச்ச டீக்குத்தானே பில் கொடுத்தாரு? 

தி.மு.க. கௌன்ஸிலர் : அட, யார் குடிச்சா என்ன? அதுவா பிரச்சனை? டி.வி., கேஸ் ஸ்டவ்னு இந்த அரசு எவ்வளவோ இலவசமா கொடுக்குது. எல்லாத்தையும் ஓசியிலே வாங்கிட்டு, நன்றியில்லாம எங்க கிட்டேயே டீக்கு காசு கேக்கறது என்ன நியாயம்? இப்படித்தான் பிரச்சனை ஆரம்பிக்குது. கோபத்திலே டேபிளையும், சேரையும் உடைச்ச பிறகு, முதலாளியே வந்து மன்னிப்பு கேட்டுக்கிட்டார். 

நி.தொ. : அரசு பல இலவசங்களை வழங்கும்போது, மக்களும் சில தியாகங்களுக்கு தயாராக இருக்க வேண்டும் என்பதை இச்சம்பவம் உணர்த்துகிறது. அடுத்து – உங்க அனுபவத்தைச் சொல்லுங்க ஸார். 

குடிமகன் : நான் போக்குவரத்துக் கழகத்திலே செக்கிங் இன்ஸ்பெக்டரா இருக்கேன். ஒருநாள் பஸ்லே ஏறி டிக்கெட் செக் பண்ணும்போது, என் கெட்ட நேரம் – ஒரு ஆளும் கட்சி எம்.எல்.ஏ. வீட்டு நைட் வாச்மேன்கிட்டே ‘டிக்கெட் இருக்குதா’ன்னு கேட்டுட்டேன். ‘யாரைப் பார்த்து டிக்கெட் கேக்கறே? உங்க அப்பன் வீட்டு ட்ரான்ஸ்போர்ட் டிபார்ட்மென்ட்டா?’ன்னு சண்டைக்கு வந்துட்டாரு. 

நி.தொ. : அடாடா...

குடிமகன் : விஷயம் தெரிஞ்சு எங்க டிபார்ட்மென்ட்லே என்னை சஸ்பென்ட் பண்ணிட்டாங்க. அப்புறம் நானே அந்த எம்.எல்.ஏ.வைப் பார்த்து, ‘இனிமே ஒழுங்கா நடந்துக்கறேன்’னு சொன்ன பிறகுதான், நாலு தட்டு தட்டி என்னை விட்டுட்டாங்க. வேலையும் திரும்ப கிடைச்சிருச்சு. 

நி.தொ. : ஆளும் தரப்பு அரசியல்வாதிகளுக்கும் அவர்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கும் அடையாள அட்டை இல்லாததால இப்படிப்பட்ட சம்பவங்கள் நடந்துடுது. இந்த நிகழ்ச்சியின் மூலம் இக்குறையை அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்கிறோம். ஓகே... அதுக்குப் பிறகு பிரச்சனை ஒண்ணும் இல்லையே..? 

குடிமகன் : எப்படிங்க பிரச்சனை வரும்? நான் வேலையைத்தான் விடலையே தவிர, செக் பண்றதை விட்டுட்டேன்லே? நான் பாட்டுக்கும் நான் உண்டு, என் வேலை இல்லைன்னு சைலண்டா பஸ் ஸ்டேண்ட்லே கொஞ்ச நேரம் நின்னுட்டு டூட்டியை முடிச்சுக்கறேன். லைஃப் ஸ்மூத்தாப் போகுது. 

மாவட்டச் செயலாளர் : நாங்களா யாரையும் விருப்பப்பட்டு அடிக்கிறதில்லைங்க. கலைஞர் எங்களை அப்படி வளர்க்லை. மக்களோ அதிகாரிகளோ அவங்களாவே வந்து மாட்டிக்கும்போதுதான் பிரச்சனை வருது. 

நி.தொ. : உங்க அனுபவத்தை நேயர்களுக்குச் சொல்லுங்களேன். 

மா.செயலாளர் : ஒருநாள் எங்க கட்சி கிளைச் செயலாளர் என் வீட்டுக்கு வந்தாருங்க. ‘அண்ணே, நான் அரசியல்லே இருக்கணுமா, வேண்டாமா? தேர்தல்லே வீடு வீடா பணம் கொடுத்து ஓட்டு சேகரிச்ச எனக்கு மரியாதையே இல்லையா?’ன்னு கதறி அழுதாரு. பரிதாபமா இருந்தது. 

நி.தொ. : அப்படி என்ன நடந்தது? 

மா.செயலாளர் : சின்ன விஷயம்ங்க. நம்ம கிளைச் செயலாளர் மணல் கான்ட்ராக்ட் எடுத்திருக்காரு. மணல் எடுக்கிறதுக்கான பெர்மிட்டோடதான் போயிருக்காரு. கூடுதலா ஒரு 38 யூனிட் எடுக்கிறது மாமூல்தான். அதைத்தான் செஞ்சாரு. தலைவர், தளபதி பிறந்தநாளைக்கு பக்கம் பக்கமா விளம்பரம் கொடுக்கிறவருக்கு அந்த உரிமைகூட இல்லையா? 

நி.தொ. : அதானே? அதிகாரிகள் தடுத்துட்டாங்களா? 

மா.செயலாளர் : ‘நாங்க இல்லாதப்போ எவ்வளவு வேணாலும் அள்ளிக்கிட்டு போங்க. எங்க கண் எதிர்லே அள்ளாதீங்க’ன்னு சட்டம் பேசியிருக்காங்க. ‘எல்லாரும் எடுக்கும்போது நான் மட்டும் என்ன இளிச்சவாயனா? இத்தோட நாளைக்குத்தானே மணல் எடுக்கப் போறேன்?’ன்னு இவர் நியாயமாத்தான் கேட்டிருக்கார். அப்படியும் இவர் மேலே கேஸ் புக் பண்ணிட்டாங்க. 

நி.தொ. : அப்புறம்? 

மா.செயலாளர் : அவனுங்களைத் தேடிகிட்டு நானே எங்க ஆளுங்களோட போனேன். நாங்க வந்த விஷயம் தெரிஞ்சு அந்த அதிகாரிகள் தப்பிச்சு ஓடிட்டாங்க. கலெக்டரைப் பார்த்து ‘எங்க ஆட்சியிலே எங்களையே கேள்வி கேக்கறீங்களா? ட்ரான்ஸ்பர் போட்டாத்தான் அடங்குவீங்களா?’ன்னு கேட்டு, நாலு ஃபைலைக் கிழிச்சு எச்சரிச்ச பிறகுதான் பிரச்சனை தீர்ந்தது. 

நி.தொ. : அதிகாரிகள் விதிமுறைகளை விட்டுக் கொடுத்தால்தான் ஆளும் கட்சியினர் நல்லாட்சி நடத்த முடியும் என்பதை இச்சம்பவம் நமக்கு உணர்த்துகிறது. நெக்ஸ்ட்? 

குடிமகன் : எல்லாத்தையும் விட்டுக் கொடுக்க முடியாது ஸார். நான் ஒரு காலேஜ் பிரின்ஸ்பால். ஒருநாள் எங்க தொகுதி எம்.எல்.ஏ.வோட பையன், காலேஜுக்கு வந்தாரு. ‘காலேஜ் ஆண்டு விழா இன்விடேஷன்லே ஏன் என் பேரைப் போடலை’ன்னு கேட்டாரு.

நி.தொ. : காலேஜ் ஆண்டு விழா இன்விடேஷன்லே எம்.எல்.ஏ. பேரைப் போடலாம். அவர் பையன் பேரை எப்படிப் போட முடியும்? 

குடிமகன் : அதைத்தான் ஸார் நானும் கேட்டேன். ‘எங்க அப்பா ஊர்லே இல்லே. அவர் இல்லாதப்போ ப்ரோட்டாகால்படி நான்தானே எம்.எல்.ஏ.? அதானே கட்சி வழக்கம்? என் பேரைத்தானே சீஃப் கெஸ்ட்டா போடணும்? மரியாதையே தெரியாதா?’ன்னு கேட்டு அவரும் அவர் கூட வந்தவங்களும் என் கையை முறிச்சு, கழுத்தை வளைச்சுட்டாங்க. 

நி.தொ. : அடாடா, அப்புறம் என்ன ஆச்சு? 

குடிமகன் : யாருக்குத் தெரியும்? நான் இன்னைக்குக் காலையில்தான் ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனேன். 

நி.தொ. : அரசியல்வாதிகளின் உணர்வுகளை பொதுமக்கள் புரிந்து கொள்ளும் பக்குவம் வரும் வரை, இத்தகைய பிரச்சனைகள் தொடரத்தான் செய்யும்... 

குடிமகன் : இருந்தாலும் ஓட்டுப் போடற மக்களை... ஓட்டு... 

தி.மு.க. கௌன்ஸிலர் : என்னய்யா ஓட்டு ஓட்டுன்னு மிரட்டறே? சும்மாவா ஓட்டு போட்டே? ரெண்டாயிரம் வாங்கலை? மூக்கு பிடிக்க மூணு வேளை பிரியாணி சாப்பிடலை? நன்றியில்லாம பேசினா மரியாதை கெட்டுரும். 

(ஆளும் தரப்பு அரசியல்வாதிகள், மக்கள் மீது பாய, குடிமகன்கள் சிதறி ஓடுகின்றனர்).



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

கூட்டணிக்கு வந்த சோதனை! – சத்யா 

திருச்சியில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் தி.மு.க.வுக்கோ கருணாநிதிக்கோ முக்கியத்துவம் தராத வகையில் சோனியா பேசியது தற்செயலானதுதானா அல்லது திட்டமிட்ட ஒன்றா என்று புரியாமல் தி.மு.க. தரப்பு குழம்பிக் கொண்டிருக்கிறது. இதையடுத்து “அரசியலில் எதுவும் நடக்கலாம்” என்று பெரிய எழுத்துக்களில் அடிக்கோடிட்டு தி.மு.க. தலைவர் கருணாநிதி உடன்பிறப்புக்கு கடிதம் எழுதியிருக்கிறார். எதுவும் நடக்கலாம் என்று பொதுவாகச் சொன்னால் எப்படிப் புரியும்? ‘என்னவெல்லாம் நடக்கலாம்’ என்று தெரிந்து கொள்ள தி.மு.க. தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்திற்கு வாசகர்களை அழைத்துச் செல்கிறோம். 

கருணாநிதி : நானும் நூறு தடவைக்கு மேலே சிந்திச்சுப் பார்த்துட்டேன். இந்தக் கூட்டணி நீடிக்கணும்னு சோனியா அம்மையார் உள்ளபடியே விரும்பறாங்களா, இல்லே வெளிநாட்டுப் புத்தியைக் காட்ட ஆரம்பிச்சுட்டாங்களான்னு கண்டுபிடிக்கவே முடியலை. உங்களுக்கு ஏதாவது புரியுதா? 

அன்பழகன் : கொஞ்சம் விஷமத்தனத்தைக் காட்டியிருக்கிற மாதிரிதாங்க தெரியுது. வழக்கமா, ‘மூத்த தலைவர் கலைஞரின் வழிகாட்டுதலின்படி அரசு நடக்குது’, ‘இந்தக் கூட்டணியின் வெற்றி தொடரணும்’னு பேசறவங்க, திடீர்னு மூளை மழுங்கின மாதிரி தன் சொந்தக் கட்சியைப் பத்தி மட்டும் பேசற அளவுக்கு ஆணவத்தைக் காட்டியிருக்காங்களே? 

கருணாநிதி : 2006 தேர்தல்லே ஜெயிச்சதுக்கு, அரசியல் நாகரிகப்படி எனக்கு நன்றி தெரிவிச்சிருக்கணும். குறைஞ்சபட்சம் கழகத்துக்காவது நன்றி தெரிவிச்சிருக்கலாம். ரெண்டையும் விட்டுட்டு மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறாங்களே. நன்றி கெட்டத்தனமா இல்லே இருக்குது? 

துரைமுருகன் : அப்படியென்ன திடீர்னு நம்ம மேலே அவங்களுக்கு கோபம்? இலங்கைத் தமிழர் பிரச்சனையிலே கூட மத்திய அரசுக்கு எதிரா நாம ஒரு வார்த்தை பேசலையே. மீனவர்கள் பலியாகும்போது கூட பொறுமையாத்தானே இருக்கோம்? மத்திய அரசு பண்ற அக்கிரமங்களுக்கு ஒரு மாநில அரசு இதுக்கு மேலே எப்படி ஒத்துழைப்பு தர முடியும்? 

அன்பழகன் : ‘காங்கிரஸ் புதிய சரித்திரத்தைத் துவங்கும்’னு வேறே பேசியிருக்காங்க. என்ன அர்த்தம்? ‘புதிய கூட்டணியைத் துவக்கும்’ன்ற மாதிரியில்லே இருக்குது? பதிலுக்கு, கழகம் பழைய சரித்திரத்தை ஆரம்பிச்சா இவங்களாலே தாங்க முடியுமா? 

ஸ்டாலின் : இன்னைக்கு நாலுமணி நேரம் மேடையிலே நின்னுகிட்டே 1250 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப் போறேன். அப்படியே ‘மாநில சுயாட்சிதான் கழகத்தின் உயிர் மூச்சு’ன்னு பேசட்டுமா? 

கருணாநிதி : ஆட்சிக்கு நெருக்கடி ஏற்படும் அளவுக்கு ஒரு அவல நிலை ஏற்படாத வரை மாநில சுயாட்சி பற்றியும், சுயமரியாதை பற்றியும் அவசரப்பட்டுப் பேசறதை நான் அனுமதிக்க மாட்டேன். அண்ணா கற்றுக் கொடுத்த பொறுமையை நாம கடைப்பிடிக்கணும். 

ஆற்காடு வீராசாமி : ஆமாங்க. காங்கிரஸ் உறவு இல்லைன்னா, தேர்தல் கமிஷன் கொடுக்கிற சவால்களை நாம தனியாவே சந்திக்க வேண்டியிருக்கும். ஸி.பி.ஐ., மத்திய லஞ்ச ஒழிப்புத்துறை எல்லாம் நம்ம கூட்டணியை விட்டுப் போயிடும். வேறே வழியே இல்லைன்னாத்தான் சுயமரியாதையைப் பத்தி சிந்திக்கணும். 

துரைமுருகன் : காங்கிரஸ்காரங்க பங்கு கேட்டுத்தானே கழுத்தறுக்கிறாங்க? பேசாம கொடுத்துத் தொலைச்சுடுவோம். பாதி பங்கை வெச்சுக்கிட்டு, மீதி வாழ்க்கையை – வழக்கு கோர்ட்டுன்னு அலையாம – கழிச்சிடுவோம். காங்கிரஸ் வெளியே போயிடாம பாத்துக்குங்க தலைவரே! 

அன்பழகன் : போன தேர்தல்லே சொன்ன மாதிரி, ‘கூட்டணி ஆட்சிக்கும் தயார்’னு சும்மா சொல்லி வைப்போம். ஜெயிச்சா, ‘சோனியா கேட்டால் தருவோம்’னு சொல்லிடலாம். அவங்க கடைசி வரைக்கும் கேக்கவே மாட்டாங்க. 

ஆற்காடு வீராசாமி : மேடையிலே இளங்கோவன் சிரிச்சுக்கிட்டே இருந்தாரு. தங்கபாலு சோகமா இருந்தாரு. அதனாலே, காங்கிரஸ் போற போக்கு சந்தேகமாத்தான் இருக்குது. எதுக்கும் ‘இலங்கைத் தமிழர் பிரச்சனை பற்றி பேசப் போறேன்’னு சொல்லிட்டு ஒரு நடை டெல்லிக்குப் போய் கூட்டணி பத்தி பேசிட்டு வந்துடறது நல்லதுங்க. 

ஸ்டாலின் : அதே சமயத்திலே காங்கிரஸ் நமக்கு எதிர் நிலை எடுத்துட்டா எப்படி சமாளிக்கிறதுன்னும் யோசிச்சு வெச்சுக்குவோம். ஏதாவது கல்யாண வீட்டுலே, ‘ஹிந்தி எதிர்ப்புக்காக கழகத் தொண்டர்களை பலி கொடுத்த வரலாறு, கழக வரலாறு! அந்த வரலாறு திரும்ப வேண்டுமா?’ன்னு மணமக்களை எச்சரிச்சுட்டு வரேன். 

கருணாநிதி : காங்கிரஸ் நமக்கு எதிரா விஷம் கக்க ஆரம்பிச்சா எப்படி பதிலடி கொடுக்கணும்னு கழகத்துக்கா தெரியாது? ‘முகாம்களில் மூர்க்கத்தனமாக அடைக்கப்பட்டிருக்கிற மூன்று லட்சம் தமிழர்களைக் காப்பாற்றக் குரல் கொடுப்பது தவறா? இரக்கமில்லாமல் தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கை அதிபருக்கு இந்தியத் துணைக் கண்டம் சாமரம் வீசுவதைக் கூட கழகம் கண்டிக்கக் கூடாதா?’ன்னு பேச முடியாதா? ஆனா பேச மாட்டேன். கூட்டணிக்கு சான்ஸே இல்லைன்னாத்தான் அப்படிப் பேசணும். 

துரைமுருகன் : காங்கிரஸ் நம்ம அணியிலேதான் இருக்குதுன்னு உறுதியாத் தெரிஞ்சா தமிழ் உணர்வைக் கொஞ்சம் தளர்த்திக்கலாம். ‘முகாம்களில் முப்பதாயிரத்துக்கும் குறைவானவர்கள்தான் இருக்கிறார்கள். நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதன் விளைவாக மேலும் ஒரு தூதர் இலங்கை செல்லவிருப்பதாக சிதம்பரம் அவர்கள் என்னை சந்தித்துக் கூறினார்’னு மாத்திக்கலாம். 

ஆற்காடு வீராசாமி : கரெக்ட். கூட்டணி இருந்தா, பிரதமருக்கு மாசத்துக்கு ஒரு லெட்டர் எழுதி, அதை நிருபர்களுக்குக் காட்டினாக் கூடப் போதும். அனுப்பனும்ன்ற அவசியம் கூட இல்லை. 

அன்பழகன் : கூட்டணியிலே இருக்கும்போது ராமதாஸ் கழகத்தைக் குறைவாத்தான் திட்டறாரு. அதனாலே, காங்கிரஸ் நம்ம கூட்டணியை விட்டுப் போயிட்டா, பா.ம.க.வை நம்ம பக்கம் இழுத்துக்கணும். அதிக ஸீட்டுக்காகத்தான் காங்கிரஸ் இப்படி அடாவடி பண்ணுதுன்னா, ராமதாஸ் சந்திப்புக்கும் கூட்டணிக்கும் சம்பந்தமில்லை’ன்னு சொல்லிடலாம். பா.ம.க.வுக்குக் கொடுக்கிற ஸீட் மிச்சமாகும்.

கருணாநிதி : இருந்தாலும், காங்கிரஸ் மேலே எனக்கு கொஞ்சம் சந்தேகமாத்தான் இருக்குது. ‘கர்நாடகத்திலே ஜனநாயக முறையிலே தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ.க. அரசை வீழ்த்திட காட்டுத்தனமாக முனைந்திட்ட காங்கிரஸ் கவர்னரின் போக்கு கவலை அளிக்கிறது’ன்னு கருத்து சொல்றது, பிற்காலத்திலே பா.ஜ.க.வோட சேர்றதுக்கு உதவியா இருக்கும். 

துரைமுருகன் : அம்மையார் கட்சியோட காங்கிரஸ் கூட்டு வெச்சுக்கிட்டா, கம்யூனிஸ்ட்களை நம்ம பக்கம் இழுத்துக்கலாம். ‘முதல்வர் பதவியை விட ‘கம்யூனிஸக் கொள்கைகள் கருணாநிதியின் ரத்தத்தில் கலந்திருக்கின்றன’ – என்று கல்யாணசுந்தரம் சொன்னதைத்தான் நான் பெரிதாக நினைக்கிறேன்’னு சொல்லி வையுங்க. கம்யூனிஸ்ட் காரங்க நிஜம்னு நம்பி ஏமாந்துடுவாங்க. 

கருணாநிதி : கூட்டணியிலே பிரச்சனை எதுவும் வராதுன்னு தெரிஞ்சா, ‘பா.ஜ.க.வின் ஆயாராம் காயாராம் அரசியலை ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள எவரும் ஏற்க மாட்டார்கள். தியாகத் திருவிளக்கு சோனியா உரிய நேரத்தில் தலையிட்டு, ஜனநாயகத்தைக் காப்பாற்றியதற்கு நன்றி’ன்னு அறிக்கை விட்டுடறேன். 

ஆற்காடு வீராசாமி : ‘தமிழகத்தின் எதிர்காலம் காங்கிரஸின் கையில்தான் இருக்கும்’னு சோனியா பேசி இளங்கோவன் கை தட்டறாருன்னா, ஏதோ உள்நோக்கம் இருக்கிற மாதிரிதானே தெரியுது? ‘காவிரி நீருக்காக இன்னும் எத்தனை நாளைக்குத்தான் பேசிக்கொண்டிருப்பது? இனியும் விவசாயிகள் பட்டினி கிடப்பதை வேடிக்கை பார்க்க என்னால் முடியாது’ன்னு எச்சரிக்கறது நல்லதுங்க

அன்பழகன் : விஜயகாந்தும் அம்மையாரும் போடற நிபந்தனைகளைக் கேட்டு பயந்து மறுபடியும் கழகத்தை நாடி சோனியா வந்துட்டா, ‘நதிநீர் பிரச்சனைகள் தீர பேச்சுவார்த்தைதான் ஒரே வழி. அம்மையாரைப் போல அண்டை மாநிலங்களைப் பகைத்துக் கொண்டு அரசியல் நடத்த எனக்குத் தெரியாது’ன்னு சொல்லிடுங்க. 

கருணாநிதி : சேது திட்டத்தையும், டி.ஆர். பாலுவையும் நினைச்சா எனக்கு கண்ணீரே வருது. ‘தமிழன் சோற்றாலடித்தப் பிண்டமாக இருப்பதால்தானே, தமிழகத்துக்கு நலன் தரக் கூடிய சேது திட்டத்தை மத்திய அரசு தடுத்து நிறுத்துகிறது’ன்னு கேட்க என் தமிழ் இதயம் துடிக்குது. கூட்டணி விஷயத்திலே சோனியா என்ன முடிவு எடுக்கப் போறாங்கன்னு தெரியலை. அதனாலே, ‘சேது திட்டத்தில் மத்திய அரசு விரைவில் ஒரு நல்ல முடிவு எடுக்கும் என்று நம்புகிறோம்’ன்னு சொல்ல வேண்டிய அவல நிலை. 

துரைமுருகன் : இந்த அளவுக்கு நாம தியாக உணர்வோட விட்டுக் கொடுத்தும் காங்கிரஸ் நம்ம உறவை முறிச்சுக்கிட்டா என்னங்க பண்றது? ஜெயிக்க என்னதான் வழி? 

கருணாநிதி : ஒரே வழிதான். ரேஷன் கார்டு உள்ள எல்லோருக்கும் இலவச உதவிப் பணம், பஞ்சப்படி, போனஸ்னு தேர்தல் அறிக்கையிலே சொல்லிடறேன். அப்படியும் தோல்வி அடைஞ்சா ‘நன்றிகெட்ட தமிழனுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும். எல்லாவற்றுக்கும் என் ஜாதகம்தான் காரணம்’னு விளக்கம் சொல்ல வேண்டியதுதான்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ஒரு பயங்கர நேர் காணல் ! – சத்யா 

முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவர் வருமான வரி அதிகாரி போல் நடித்து மோசடி செய்து கைதாகியிருக்கிறார். நமது நாட்டில் கிரிமினல்கள் தேர்தலில் நின்று வெற்றி பெறுவது புதிய விஷயமல்ல. பாராளுமன்றத் தேர்தல் நடந்து முடிகிற போதெல்லாம், ‘இம்முறை இத்தனை கிரிமினல்கள் எம்.பி.க்களாகி இருக்கிறார்கள்’ என்று அறிவிக்கப்படுவதும் வழக்கமானதுதான். இருந்தாலும், நாடு முழுவதும் பரவலாக நடந்து வருகிற இத்தகைய சம்பவங்களைப் பார்க்கும்போது, நமது அரசியல் கட்சிகள் வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதற்காக நடத்துகிற ‘நேர் காணல்’கள் இந்த வகையில் இருந்துவிடக் கூடாதே என்று கடவுளை வேண்டத்தான் தோன்றுகிறது. 

கேள்வி : தேர்தல்லே போட்டி போட ஸீட் கேக்கறியே. அரசியல் முன் அனுபவம் இருக்குதா?

பதில் : என்னங்க அப்படிக் கேட்டுட்டீங்க? நாங்க பரம்பரை கிரிமினல்ங்க. எங்கப்பா செய்யாத கிரிமினல் வேலையே கிடையாது. அவர் கிட்டேதான் நான் தொழில் கத்துக்கிட்டேன். அரசியலுக்கு இதுக்கு மேலே என்ன தெரியணும்? 

கேள்வி : இதுக்கு முன்னாலே என்ன தொழில் பார்த்தே?

பதில் : அதான் சொன்னேனுங்களே. நினைவு தெரிஞ்ச காலத்திலேர்ந்து கிரிமினல் தொழில்தான். 

கேள்வி : அது தெரியுதுப்பா. என்ன தொழில்னு விளக்கமாச் சொல்லு.

பதில் : விவரம் தெரியாத காலத்திலே பிக்பாக்கெட் அடிச்சிட்டிருந்தேனுங்க. அப்புறம் ஸ்கூட்டர்லே போய் செயின் பறிச்சேன். முக மூடிக் கொள்ளைக்காரர்கள் சங்கச் செயலாளர் பதவியிலே கூட இருந்திருக்கேன்.

கேள்வி : அப்புறம்?

பதில் : இப்படிப் படிப்படியா முன்னுக்கு வந்ததும், கள்ளச் சாராயம் காய்ச்ச ஆரம்பிச்சேன். கட்டப் பஞ்சாயத்து பண்ணேன். திருட்டு வி.சி.டி. வித்து லட்சாதிபதி ஆனேன். அப்பதான் ஒருநாள் எங்கப்பா என் கனவிலே வந்து, ‘இதெல்லாம் பார்ட் டைமா வெச்சுக்க. ஃபுல் டைம் வேலைக்கு டீஸன்டா அரசியல்லே இறங்கிடு’ன்னாரு. உடனே இங்கே வந்துட்டேன். 

கேள்வி : வெரிகுட். ஸீட் குடுத்தா உன்னாலே ஜெயிக்க முடியுமா?

பதில் : கண்டிப்பா ஜெயிப்பேனுங்க. பணம் வாங்கிட்டு ஓட்டுப் போடலைன்னா குடலை உருவிடுவேன்லே? என் தொகுதி மக்களுக்கு என்னைப் பத்தி நல்லாத் தெரியும்ங்க. என்னைப் பார்த்தவுடனே மடமடன்னு வீட்டுக் கதவையும் கடைக் கதவையும் மூடிடுவாங்க. அவ்வளவு மரியாதை. கோபம் வந்தா வீடு பூந்து அடிச்சிடுவேன்னு எல்லோருக்கும் தெரியும். 

கேள்வி : கொலை கிலை பண்ணதுண்டா?

பதில் : எல்லாத்தையும் நானே பண்ண முடியும்ங்களா? எதை செஞ்சாலும் முறையோட செய்யணும். அதான் என் பாலிஸி. அததுக்கு ஆள் வெச்சிருக்கேன். என்கிட்டே 150 பேர் வேலை பாக்கறாங்க. எந்த வேலை கொடுத்தாலும் போலீஸ்லே மாட்டாதபடி நேக்கா செய்வானுங்க. 

(கட்டுரையின் மூன்றாம் பகுதி தொடரும்...)

கேள்வி : தேர்தல் வேலைக்குத் தேவையான அளவு பணம் இருக்குதா? 

பதில் : அது ஒரு பெரிய விஷயம்ங்களா? நீங்க ஸீட் குடுங்க. தொகுதியிலே ஒரு ரௌண்ட் போய் வியாபாரிங்க கிட்டே வசூல் பண்ணிடறேன். நானே கோதாவிலே இறங்கினா பணம் கொட்டும்ங்க. அப்படி ஒரு முகராசி எனக்கு. 

கேள்வி : கேட்டவுடனே, வியாபாரிங்க பணம் கொடுத்துடுவாங்களா? 

பதில் : கொடுக்கலைன்னா, நாமே கல்லாவிலே கையை விட்டு தேவையான அளவுக்கு எடுத்துக்க வேண்டியதுதான். அப்பதான் அந்த அயோக்கியனுங்களுக்கு புத்தி வரும். எதிர்காலத்திலே ஒழுங்கா நடந்துப்பானுங்க. 

கேள்வி : எம்.எல்.ஏ. வேலை எல்லாம் தெரியுமா?

பதில் : வருமான வரி அதிகாரி, ஸி.பி.ஐ. அதிகாரி மாதிரியெல்லாம் வேஷம் போட்டவனுக்கு எம்.எல்.ஏ. வேஷம் போடறது ஒரு கஷ்டம்ங்களா? ஒரு தடவை, எம்.எல்.ஏ. மாதிரி போலீஸ் ஸ்டேஷன்லே நுழைஞ்சு, லாக்-அப்லே இருந்த எங்க ஆளை ரிலீஸே பண்ணியிருக்கேன். 

கேள்வி : அதிருக்கட்டும்ய்யா. நிஜமாவே எம்.எல்.ஏ. ஆனா, மக்கள் பணி ஆற்றணுமே. அந்த வேலையெல்லாம் தெரியுமான்னு கேக்கறேன். 

பதில் : ஓ. அதைக் கேக்கறீங்களா? அதுவும் தெரியும்ங்க. நம்ம கட்சிக்காரங்களுக்கு அரசாங்கத்திலே கான்ட்ராக்ட் வாங்கிக் கொடுத்து, வர்ற கமிஷன்லே கொஞ்சம் கட்சிக்கு நிதியா கொடுக்கணும். தொகுதி நிதியிலே, முடிஞ்சா ஒரு பத்து பர்ஸென்டை வேலைக்குன்னு ஒதுக்கி, மீதியை முக்கியமானவங்க பிரிச்சுக்கணும். போலீஸ்காரங்களை நம்ம கட்டுப்பாட்டிலே வெச்சுக்கணும்... 

கேள்வி : போதும் போதும். நிர்வாக ரகசியத்தை வெளியே சொல்லாதே. விவரம் தெரியுதான்னு டெஸ்ட் பண்ணேன். அவ்வளவுதான். தொகுதியிலே கரன்ட் இல்லை, ரோடு சரியில்லை, தண்ணி வரலைன்னு மக்கள் பிரச்சனை பண்ணா எப்படி சமாளிப்பே?

பதில் : சாமர்த்தியமா எதையாவது புளுகி சமாதானப்படுத்திடுவேனுங்க. இப்படித்தான் நான் ஒரு தடவை ஃபைனான்ஸ் கம்பெனி நடத்திட்டிருந்தப்போ, டெபாஸிட் பண்ணவன் எல்லாம், பணம் எப்பக் கிடைக்கும்னு கழுத்தறுத்துக்கிட்டே இருந்தானுங்க. அவங்களை எல்லாம் ஏமாத்தின அனுபவம் இருக்குது. அதே மாதிரி தொகுதி மக்களையும் ஏமாத்திட முடியும். 

கேள்வி : ஆட்சிக்கு திடீர்னு ஆபத்து வருதுன்னு வெச்சுக்க. எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களைக் கடத்தற வேலையைக் கொடுத்தா, நல்லபடியா செய்ய முடியுமா?

பதில் : முடியும்ங்க. கடத்தல்லே எனக்கு நல்ல எக்ஸ்பிரீயன்ஸ் இருக்குது. கஞ்சாக் கடத்தல் சம்பந்தமா போலீஸ்காரங்க என்னை ஏழு வருஷமா தேடிக்கிட்டிருக்காங்க. நானே போலீஸ் மந்திரி ஆகி அவங்க கொட்டத்தை அடக்கணும். போலீஸ் மந்திரி ஆகறதுதாங்க என் லட்சியம். 

கேள்வி : தொகுதி மக்கள் சிபாரிசு கடிதம் கேட்டு வந்தா, கொடுப்பியா? 

பதில் : அததுக்கு ஒரு ரேட் வெச்சு, கேக்கற சர்ட்டிஃபிகேட்டை கொடுத்துடுவேன்ங்க. வாழ்க்கையிலே எவ்வளவோ போலிச் சான்றிதழ் கொடுத்திருக்கேன். மக்களுக்காக இதைக் கூடச் செய்ய மாட்டேனா? ‘போலி செக் கொடுத்து பல லட்சம் அபேஸ்’னு போன மாசம் பேப்பர்லே கூட நியூஸ் வந்ததே. ஞாபகம் இருக்குதுங்களா? அது நான்தான். 

கேள்வி : தேர்தல் வேலையெல்லாம் ஒழுங்காத் தெரியுமா?

பதில் : ஒரு நெருக்கடின்னா, ஓட்டு மெஷினைத் தூக்கிட்டு வர முடியுமான்னுதானே கேக்கறீங்க? தனி ஆளா ஏ.டி.எம். மெஷினை பேத்து, மொத்தப் பணத்தையும் தூக்கிட்டு ஓடினவனாலே இதுகூட முடியாதா? 

கேள்வி : ஊழல் எல்லாம் ஒழுங்கா பண்ணுவியா? திடீர்னு சட்டத்துக்கு பயந்து, கட்சிக்கு துரோகம் பண்ணிட மாட்டியே?

பதில் : யாரைப் பார்த்து என்ன கேள்வி கேக்கறீங்க? எங்க அப்பா செத்து பத்து வருஷம் ஆகுது. அவர் உயிரோட இருக்கற மாதிரி, மாசா மாசம் அவர் கையெழுத்தை நானே போட்டு, பத்து வருஷமா பென்ஷன் வாங்கிட்டு வரேன். அவ்வளவு ஏன்? மூணு வருஷமா போலி ஆர்.டி.ஓ. ஆஃபீஸ் நடத்தி, பார்ட்னருங்களை ஏமாத்தி எல்லாத்தையும் சுருட்டிக்கிட்டு வந்தவன் நான். அந்த அளவுக்கு வேலை நுணுக்கம் தெரிஞ்சவன் மேலே இப்படி சந்தேகப்படறீங்களே? 

கேள்வி : கோவிச்சுக்காதேப்பா. தகுதியான ஆளுக்குத்தான் ஸீட் கொடுக்கிறோமான்னு நான் உறுதிப்படுத்திக்க வேண்டாமா? கட்சி வளர்ச்சியைப் பாக்கணும்லே? பயங்கரமான ஆள்தான்ற நம்பிக்கை எனக்கு வர வேண்டாமா? 

பதில் : பயங்கரம்னதும் ஞாபகத்துக்கு வருதுங்க. நான் பயங்கரவாதக் கூட்டத்திலே கூட கொஞ்ச நாள் இருந்தேன். வெடிகுண்டு பராமரிப்பு ஆஃபீஸுக்கு என்னை மேனேஜராவே போட்டிருந்தாங்க. தலைமறைவு வாழ்க்கை எனக்குப் பிடிக்கலை. கௌரவமா மக்கள் மத்தியிலே, ஜனநாயக முறையிலே கொள்ளையடிக்க ஆசைப்பட்டுத்தான் எம்.எல்.ஏ. ஸீட் கேக்கறேன். 

கேள்வி : சட்டசபையிலே எப்படி பணியாற்றணும்னு தெரியுமா?

பதில் : நான்தான் விடாம பேப்பர் படிக்கிறேனுங்களே. எதிர்க் கட்சி ஆளுங்க தகராறு பண்ணா நாலு தட்டு தட்டித் திருத்தணும். அவ்வளவுதானே? உங்க கிட்டே சொல்றதுக்கென்ன? ஒரு தடவை நானும் எங்க ஆளுங்களும் பேங்க்லே கொள்ளை அடிச்சிட்டு வெளியே வரும்போது, பொதுமக்கள் நூறு பேர் எதிர்லே வந்துட்டாங்க. அத்தனை பேரையும் அடிச்சு நொறுக்கினோம். அரசியல்லே இல்லாதப்பவே அவ்வளவு வேலை காட்டினவன், அரசியல் பாதுகாப்போட செயல்படும்போது கேக்கணுமா? 

கேள்வி : அதெல்லாம் சரிப்பா! இவ்வளவு கிரிமினல் வேலைகளை செஞ்சிருக்கியே. எப்பவாவது போலீஸ்லே மாட்டினது உண்டா? ஜனநாயகத்திலே, மாட்டாம செயல்படுகிற செயல் திறன்தான் முக்கியம். கட்சிக்கு கெட்ட பேர் வந்துடக் கூடாதே. அதுக்காகத்தான் கேக்கறேன்.

பதில் : ஐயா! எந்த போலீஸ் ஸ்டேஷன்லே வேணும்னாலும் விசாரிச்சுப் பாருங்க. எனக்கெதிரா ஒரு சின்ன ஆதாரம் கூட கிடையாது. அப்படி ஒரு க்ளீன் ரிகார்டு எனக்கு. ஒரே ஒரு சான்ஸ் குடுங்க. என் கை வரிசையைப் பார்த்து நீங்களே என்னை மந்திரியாக்கிடுவீங்க.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

 உருவாக மறுத்த உடன்பாடு – சத்யா 

தி.மு.க.வும் காங்கிரஸும் தொகுதிப் பங்கீடு தொடர்பாக நடத்திய பேச்சுவார்த்தையில் உறவை முறித்துக் கொள்கிற அளவுக்கு அப்படி என்னதான் சிக்கல் எழுந்திருக்கும் என்று – நமது அறிவுக்கு(!) எட்டிய வகையில் சிந்தித்துப் பார்க்கிறோம். 

குலாம் நபி ஆஸாத் : வணக்கங்க. நீங்க சொன்னதையெல்லாம் சோனியா கிட்டே சொன்னேன். ரொம்ப வருத்தப்பட்டாங்க. ஆட்சியிலே காங்கிரஸுக்கு பங்கு கொடுத்தா, குறைந்தபட்ச செயல் திட்டப்படி மூணு மாசத்துக்கு ஒருமுறை சோனியாவும் பிரதமரும், தமிழ்நாட்டுக்கு வந்து பாராட்டு விழாவிலே கலந்துக்குவாங்க. இல்லைன்னா பிரச்சனையை ராகுல்கிட்டே விட்டுடலாம்னு சொல்றாங்க. 

கருணாநிதி : பங்கா? எதுலே வேணும்னாலும் பங்கு கொடுக்க கழகம் தயாராயிருக்குது. ஆட்சியிலே மட்டும் பங்கு கேக்காதீங்க. அஞ்சு வருஷமா தமிழகக் காங்கிரஸுக்கு ஆட்சியிலே பங்கு கொடுக்காமலேயே, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் எல்லாம், கழக எம்.எல்.ஏ.க்களுக்கு சமமா ஓஹோன்னு இல்லையா? அவங்களுக்கு கழகம் எதுலேயாவது குறை வெச்சுதுன்னு சொல்ல முடியுமா? அந்த நல்லாட்சி தொடர வேண்டாம்னு முடிவு பண்ணிட்டீங்களா? 

குலாம் நபி : வந்து... மத்தியிலே உங்களுக்கு பங்கு இருக்குது... அதே மாதிரி மாநிலத்திலே எங்களுக்கும்... 

கருணாநிதி : உங்களுக்கு எங்களுக்குன்னு தயவு செஞ்சு பிரிச்சுப் பேசாதீங்க. மொத்த பங்கையும் பொதுவிலே வெச்சுட்டு, அவங்கவங்க பங்கை அவங்கவங்க உரிமையா எடுத்துக்கலாம். 

குலாம் நபி : புரியலை... ஸ்பெக்ட்ரம் பத்திப் பேசறீங்களா? 

கருணாநிதி : இல்லைங்க. 234 தொகுதியிலே, கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கினது போக, பாக்கியிருக்கறதிலேர்ந்து, கழகம் உங்களுக்கு ஒதுக்கற பங்கை நீங்க உரிமையோட எடுத்துக்கலாம். கடைசியா மீதியிருக்கிறதை மட்டும்தான் கழகம் எடுத்துக்கும். 

குலாம் நபி : காங்கிரஸ் முன்னே மாதிரி இல்லைங்க. ராகுல் தலையிட்ட பிறகு எக்கச்சக்கமா வளர்ந்திருக்குது. பழைய கோஷ்டிகளோட இப்ப இளைஞர் காங்கிரஸ், மாணவர் காங்கிரஸ் கோஷ்டிகளும் சேர்ந்திருக்குது. அதனாலே 70 இடமாவது வேணும். 

கருணாநிதி : கழகமும் வரலாறு காணாத வகையிலே வளர்ந்திருக்குதே. அழகிரி, ஸ்டாலின், கனிமொழி அணிகளுக்கு ஒதுக்கறது போக, கழக அமைச்சர்களுக்கும், அவங்க வாரிசுகளுக்கும் ஒதுக்க ஒரு முப்பது தொகுதியாவது வேண்டாமா? 53 தரோம். 

குலாம் நபி : எங்க பலத்தைக் குறைச்சு மதிப்பிடறீங்களே. உங்களுக்கு தெரியாததா? 250 கோடி ரூபாய் செலவு பண்ணியும் 64 கோடி ரூபாய் போஃபர்ஸ் ஊழல் குற்றவாளி கடைசி வரைக்கும் சிக்கலை. ஒழிஞ்சு போகட்டும்னு நீதி மன்றமே க்வாட்ரோக்கியை விடுவிச்சுடலையா? அதே தத்துவப்படி, 2.76 லட்சம் கோடி செலவு பண்ண பிறகு, ராசா நிரபராதியா வெளியே வரத்தான் போறார். அதனாலே, 69-க்குக் கையெழுத்துப் போட்டுடலாம். 

கருணாநிதி : கழக பலத்தையும் நீங்க சாதாரணமா நினைக்கறீங்க. தமிழ்நாட்டிலே ஆறு கோடி மக்களும் இலவசத்தாலே பயனடைற வகையிலே கடுமையா உழைச்சுக் காட்டியிருக்கோம். கொசுறா, அழகிரியும் வாக்காளர் மத்தியிலே வலம் வரப் போறார். அழகிரி செய்யறதை காங்கிரஸாலே செய்ய முடியுமா? 54 வாங்கிக்குங்க. 

குலாம் நபி : ஸ்பெக்ட்ரம் பிரச்சனையை காலாகாலத்திலே முடிக்கணும்ன்ற எண்ணமே இல்லாம பேசறது நியாயமா? தயாநிதி மாறன் மேலே அருண் ஷோரி சொல்லியிருக்கிற குற்றச்சாட்டுகள் தொடர்பா ஸி.பி.ஐ. விசாரிக்கிறதுக்குள்ளே நாம ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டாமா? ஏற்கெனவே உங்களுக்கு இருக்கிற பிரச்சனைகள் போதாதா? 68-க்குக் குறைக்காதீங்க. 

கருணாநிதி : மத்திய அரசின் வலிமை எனக்குத் தெரியாதா? முதல்வர் பதவியை விட, தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட நான்தான் காரணம்னு சோனியா எழுதிய கடிதத்தைத்தான் நான் பெரிசா மதிக்கிறேன். அதை விடுங்க. கடிதம்னதும் ஞாபகத்துக்கு வருது. உருப்படியா எதுவும் நடக்காதுன்னு தெரிஞ்சே, காவிரி, முல்லைப் பெரியாறு, மீனவர் பிரச்சனை, இலங்கைத் தமிழர் பிரச்சனைகளுக்காக எத்தனை லெட்டர் எழுதியிருக்கேன். அதுக்கு நன்றி காட்டற வகையிலே நீங்க 55-க்கு சம்மதிக்கணும்னு நான் எதிர்பார்க்கிறது தவறா? 

குலாம் நபி : காங்கிரஸும் உங்க ஆட்சிக்கு உறுதுணையா இருந்திருக்குதே! அரிசி கடத்தல், மணல் கடத்தல், தினகரன் எரிப்பு, மின்வெட்டு, ஹைகோர்ட்டில் வக்கீல் – போலீஸ் மோதல்.... எதைப் பத்தியாவது காங்கிரஸ் வாயைத் திறந்திருக்குமா? இந்த மக்கள் பணியைத் தொடரத்தான் 67 கேக்கறோம்.

கருணாநிதி : பொறுப்பில்லாம அள்ளிக் கொடுக்க இது என்ன அரசு நிதியா? கழக ஆட்சிக்கு எதிரா இளங்கோவன் எவ்வளவோ பேசினார். சோனியா என்னை எட்டுமணி நேரம் காக்க வெச்சாங்க. ராகுல் இங்கே வந்தபோதெல்லாம் என்னைப் பார்க்காமயே போனார். அவ்வளவு ஏன்? ராசா பதவி பறிப்பு, ஸி.பி.ஐ. ரெய்டு, கைதுன்னு எவ்வளவு நடந்தது? கழகம் எப்பவாவது ரோஷத்தைக் காட்டிச்சா? சுயமரியாதையை விட கூட்டணிதான் முக்கியம்னு சும்மா இருந்ததுக்குப் பரிசா, 56-க்கு சம்மதிக்கக் கூடாதா? 

குலாம் நபி : நீங்க சோனியா உணர்வுகளைப் புரிஞ்சுக்காம பேசறதை நினைச்சா வருத்தமா இருக்குது. நிரா ராடியா பேச்சுலே வெளியான தகவல்களை பி.ஏ.ஸி.யோ, ஜே.பி.ஸி.யோ குடையக் கூடாதேன்ற அக்கறையிலே நான் பேசிகிட்டிருக்கேன். காங்கிரஸ் தனியாத்தான் நிக்கணும்னு பிடிவாதம் பிடிக்கிற ராகுலை வேறே சம்மதிக்க வைக்கணும். இந்தக் கஷ்டத்துக்கு 66-ஆவது கொடுக்கணும். 

கருணாநிதி : ராசா பொங்கியெழுந்து சீற ஆரம்பிச்சா, மத்தியில் உள்ளவர்களுக்கு எவ்வளவு சிக்கல் ஏற்படும்ன்றதையும் நாம சிந்திக்கத் தவறிடக் கூடாது. நான் மானமிகு சுயமரியாதைக்காரன். தொடர்ந்து அவமானப்படுத்திகிட்டேயிருந்தா ஒரு கட்டத்திலே என்னையும் மீறி பதிலடி கொடுத்துடுவேன். அந்த நிலை வராம இருக்கணும்னா 57-க்கு மேலே ஆசைப்படாதீங்க. 

குலாம் நபி : காங்கிரஸோட நல்ல மனசை நீங்க புரிஞ்சுக்கணும். ரெண்டு வருஷம் டைம் கொடுத்த பிறகுதான் ராசா வீட்டிலே ரெய்டு நடந்தது. ‘சோதனை பண்ண வரலாம்’னு கலைஞர் டி.வி. அறிவிச்ச பிறகுதான், கலைஞர் டி.வி. ஆஃபீஸ்லே ரெய்டு நடந்தது. காமன்வெல்த் போட்டி ஃபைல், ஆதர்ஷ் ஃபைல் காணாமல் போன மாதிரியே 2-ஜி ஃபைல்களும் காணாமப் போயிருக்குது. இந்த நல்ல எண்ணங்களுக்கு பதில் மரியாதையா 65-க்கு முடிச்சுக்கலாமே. 

கருணாநிதி : அழகிரியும் தயாநிதியும் ஒற்றுமையான அடுத்த நிமிஷமே முடிஞ்சிருக்க வேண்டிய ஸ்பெக்ட்ரம் பிரச்சனையை, இவ்வளவு தூரம் வளர்த்து விட்டது யாருடைய விஷமத்தனம்ன்ற பிரச்சனைக்குள்ளே புக நான் விரும்பலை. தமிழக உரிமை சம்பந்தப்பட்ட விஷயம்னா நீங்க கேக்கறதுக்கு முன்னாலேயே விட்டு கொடுப்பவனே நான்தான். இது கழக உரிமை சம்பந்தப்பட்ட விஷயமாச்சே! மத்தியிலே காங்கிரஸை ஆட்சியிலே அமர்த்தினவன்ற உரிமையிலே சொல்றேன். 58-க்கு மேலே கேக்காதீங்க. 

குலாம் நபி : (செல்ஃபோனில் பேசிவிட்டு) ஒண்ணுமில்லை. ஸி.பி.ஐ. தமிழ்நாட்டிலே இன்னும் சில பேரை விசாரிக்கப் போகுதாம். அதிருக்கட்டும். நீங்க சொல்லுங்க. ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தும் ரெண்டாவது முறையும் ராசாவுக்கு அதே இலாகாவைக் கொடுத்ததை நினைச்சுப் பாருங்க. இப்படி ஒரு நேர்மையான பிரதமரை நாட்டுக்கு வழங்கிய காங்கிரஸுக்கு 64 இடம் பெறக் கூட தகுதியில்லையா? 

கருணாநிதி : பதிலுக்கு பதில் லாவணி பாட நான் தயாரா இல்லை. ‘2-ஜி குற்றவாளிகள் தப்ப முடியாது; எல்லா விசாரணை அமைப்புகளுக்கும் மத்திய அரசு ஒத்துழைப்பு கொடுக்கும்’னு பிரதமர் கருத்து சொன்னப்பவே, அவர் முகத்திரை கிழிஞ்சுட்டதாக கழக செயற்குழுவிலே சிலர் வாதாடியபோது கூட, நான் அதை ஏற்கலை. மத்திய அரசுக்கான ஆதரவை வாபஸ் வாங்குகிற நிலை கழகத்துக்கு ஏற்பட்டுவிடக் கூடாதேன்றதுதான் என் கவலை. அதனாலே 59-க்கு முடிவு செய்யலாம்.

குலாம் நபி : தி.மு.க. வாபஸ் வாங்கினாலும் முலாயம் சிங் யாதவ் ஆதரிக்கத் தயாரா இருக்காருங்க. மத்திய அரசுக்கு எந்த ஆபத்தும் வராதுன்றதாலேதான் இவ்வளவு தூரம் வாதாடிகிட்டிருக்கேன். காங்கிரஸ் ஆதரவில்லாம நீங்க தேர்தலைச் சந்திக்கிறதன் விளைவா, ஜெயலலிதா ஆட்சிக்கு வந்துட்டா என்னவெல்லாம் நடக்கும்னு யோசிச்சுப் பாருங்க. எத்தனை அமைச்சர்கள் கோர்ட்டு, வழக்குன்னு கஷ்டப்படணும்! இதெல்லாம் தேவையா? 63 கூட இல்லைன்னா எப்படி? 

கருணாநிதி : காங்கிரஸ் உறவு இல்லாமலேயே தேர்தலைச் சந்திக்கலாம்னு திருமாவளவன், ராமதாஸ், வீரமணி வற்புறுத்துவது பற்றி கழக உயர்மட்டக் குழு விவாதித்த பிறகுதான் என் முடிவை அறிவிக்க முடியும். ஒரு தலித் இளைஞனை சிறையில் தள்ளி சித்ரவதை செய்வதை, அந்தச் சமுதாயம் எந்த அளவுக்கு ஏற்கும் என்பதையும் பார்க்க வேண்டியிருக்குது. 60-க்கு சம்மதிச்சா, ‘இதெல்லாம் வழக்கமான நடைமுறைகள்தான்’னு சொல்ல வசதியா இருக்கும். 

(செல்ஃபோன் ஒலிக்கிறது) 

குலாம் நபி : ஒரு நிமிஷம். சோனியா கூப்பிடறாங்க. 

கருணாநிதி : யாரு நம்ம சொக்கத் தங்கமா? என்ன சொல்றாங்க? 

குலாம் நபி : நீங்க 63 தர மறுத்தா, 63 - லேயே நிக்கச் சொல்றாங்க. 63 தர சம்மதிச்சா, 65 கேக்கச் சொல்றாங்க!!!



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

.ஓர் ஏடாகூட நேர்காணல் – சத்யா 

தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ளவர்களிடம் தி.மு.க. தலைமை நேர்காணல் நடத்திக் கொண்டிருக்கிறது. ஸ்பெக்ட்ரம் பிரச்சனை, ராசா கைது, கலைஞர் டி.வி. ரெய்டு, ஸி.பி.ஐ. விசாரணை, கூட்டணிக் குழப்பம் போன்றவற்றால் பாதிக்கப்படாமல், தி.மு.க.வினர் வழக்கமான தெளிவோடுதான் இருக்கிறார்களா என்று தேர்வுக் குழு சோதித்துப் பார்க்கக் கூடும். அனைத்துக் கேள்விகளுக்கும் இப்படி ‘டாண் டாண்’ என்று பதில் சொல்லி ஸீட் பெற, மனுதாரர்கள் அனைவருக்கும் நமது அட்வான்ஸ் வாழ்த்துக்கள். 

“எந்தத் தொகுதிக்கு மனு போட்டிருக்கீங்க?”

“அழகிரி அண்ணனுக்காக 35 தொகுதியிலும், ஸ்டாலின் அண்ணனுக்காக 35 தொகுதியிலும், மற்ற தொகுதிகளிலே கலைஞருக்காகவும் மனு போட்டிருக்கேனுங்க. எதிர்காலத்திலே யார் கை ஓங்கும்னு யாருக்குத் தெரியும்? அதான் அப்படி மனு போட்டேன். எனக்கு ஒரு தொகுதி போதும்ங்க.” 

“உங்க தொகுதியிலே வெற்றி வாய்ப்பு எப்படி இருக்குது?”

“அருமையா இருக்குதுங்க. தொகுதியிலே போலி ரேஷன்கார்டு வெச்சிருக்கிறவங்களுக்குக் கூட இலவச டி.வி. கிடைச்சிருக்குது. முந்தா நாள்தான் காது குத்தல் நிகழ்ச்சி நடத்தி, தொகுதி மக்கள் அத்தனை பேருக்கும் பிரியாணி போட்டேன். வீடு டோக்கன் வினியோகமும் முடிச்சாச்சு. தொகுதியிலே அறுபது சதவிகிதம் பேர் என் ஜாதிக்காரங்கதான். அந்த ஜாதி ஓட்டெல்லாம் எனக்குத்தான் விழும். ஜாதி எனும் சனி தொலையணும்ன்ற கலைஞர் கொள்கை, எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும்ங்க.” 

“தொகுதி நிலைமை எப்படி இருக்குது?”

“எந்த ரோடும் சரியில்லைங்க. தண்ணி பத்து நாளைக்கு ஒரு தடவைதான் கிடைக்குது. ரௌடிகள் அட்டகாசம் தாங்க முடியலை. ஆறு மணிநேர மின்வெட்டு, தேர்தலுக்காக ரெண்டு மணிநேரமா குறைஞ்சிருக்குது. ஆனா, கணிசமா செலவு பண்ணா, அந்த சந்தோஷத்திலே மக்கள் இந்த கஷ்டங்களை எல்லாம் மறந்துடுவாங்க.” 

“தேர்தலுக்கு எவ்வளவு செலவு பண்ண முடியும்?”

“அது தேர்தல் கமிஷன் எந்த அளவுக்கு ஏமாறுதுன்றதைப் பொறுத்ததுங்க. எத்தனை கோடி வேணும்னாலும் செலவு பண்ண என்னாலே முடியும். ஒரு வியாபாரம்னா முதல் போட்டுத்தானே ஆகணும்?” 

“ஏது அவ்வளவு பணம்? உங்க சொந்தக்காரங்க யாராவது மந்திரியா இருக்காங்களா?”

“அதெல்லாம் இல்லைங்க. என் சம்சாரம் கௌன்ஸிலரா இருக்குது. ஆனா, பாவம் அதுக்கு தொழில் நுணுக்கம் எல்லாம் தெரியாது. நான்தான் வேலை கத்துக்கொடுத்து கணக்கு வழக்கையும் பாத்துக்கறேன்.” 

“எந்த லட்சியத்துக்காக தேர்தல்லே போட்டி போடறீங்க?”

“உங்க கிட்டே சொல்றதுக்கென்ன? சொந்தமா ஒரு காலேஜ் ஆரம்பிக்கணும். ஒரு பத்து இருபது ஆம்னி பஸ் வாங்கணும். தலைவர் ஆசி இருந்தா, அமைச்சர் ஆகற லட்சியமும் நிறைவேறும். இப்படி கழக மூத்த அமைச்சர்கள் மாதிரி ஒரு 95 வயசு வரைக்கும் அரசியல் பணி ஆற்றிட்டா, அதுக்குப் பிறகு ஸீட் கிடைக்கலைன்னா ஆயுட்காலம் முடியற வரைக்கும் மக்கள் தொண்டு ஆற்றலாம்னு இருக்கேன். அதான் என் லட்சியம்” 

“கழக ஆட்சியின் சாதனைகளைச் சுருக்கமா சொல்லுங்க பார்ப்போம்?”

“நாடே பொறாமைப்படற அளவுக்கு அழகிரி, ஸ்டாலின், கனிமொழி, தயாளு அம்மா, ராஜாத்தி அம்மா, கலைஞரோட பேரப் பசங்கன்னு நூற்றுக்கும் மேற்பட்டோர் அமோக வளர்ச்சி அடைஞ்சிருக்காங்க. எந்தப் பிரதி பதிலையும் எதிர்பார்க்காம, பிரதமருக்கு நூற்றுக்கணக்கான கடிதங்கள் எழுதிக் குவித்து சாதனைப் புரிஞ்சது கழக ஆட்சிதான். ‘உங்களுக்காக தொடர்ந்து கடிதம் எழுதிட மீண்டும் ஒரு வாய்ப்பளிப்பீர்’னு பிரச்சாரம் பண்ணலாம்னு இருக்கேன். கலைஞரிடம் கை நீட்டாத தமிழனே இல்லைன்ற அளவுக்கு, இலவசங்களை அறிவித்ததும் கலைஞரோட சாதனை.” 

“இந்த ஆட்சி செய்ய வேண்டிய சாதனைகள் இன்னும் என்ன பாக்கியிருக்குதுன்னு நினைக்கிறீங்க?”

“இலவசமா பெண்களுக்கு சோப்பு, சீப்பு, கண்ணாடி கொடுக்க வேண்டியிருக்குது. ரேஷன் கடைகள் மூலமா இலவச இட்லி மாவு, தோசை மாவு வினியோகம் பண்ண வேண்டியது பாக்கி இருக்குது. சத்துணவுத் திட்டத்திலே குழந்தைகளுக்கு முட்டைகளுக்குப் பதிலா கோழியே போடற திட்டத்தையும் இன்னும் அறிவிக்கலை. இதெல்லாம் தேர்தல் அறிக்கையிலே சொன்னா, நம்ம வெற்றியை தேர்தல் கமிஷனாலே கூட தடுக்க முடியாது.” 

“கூட்டணிக் கட்சிகளோட தோழமை உணர்வைக் கடைப்பிடிக்கிறீங்களா?”

“அது வந்துங்க... காங்கிரஸ் அடாவடி காரணமா கழகம் மத்திய அரசிலேர்ந்து விலக முடிவெடுத்ததும், ‘சோனியாவின் எடுபிடி காங்கிரஸே! தன்மானத் தலைவன், சுயமரியாதைச் சிங்கம் கலைஞரோடு மோதாதே’ன்னு தொகுதி முழுக்க போஸ்டர் அடிச்சு ஒட்டிட்டேன். மறுநாள் நிலைமை மாறினதும், ராத்திரியோட ராத்திரியா எல்லா போஸ்டரையும் கிழிச்சுட்டேன். அதனாலே காங்கிரஸோட நட்புறவு இதுவரைக்கும் தொடருது.” 




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

“நல்லவேளை. பா.ம.க.வோடயும் நட்பாத்தானே இருக்கீங்க?”

“மருத்துவர் மேலே கடந்த ஒரு மாசமா எனக்கு ரொம்ப மரியாதைங்க. அதனாலதான், ‘தேர்தலுக்கு தேர்தல் அணி மாறும் ராமதாஸை விரட்டி அடிப்பீர்’னு அடிச்சு தயாரா வெச்சிருந்த லட்சக்கணக்கான போஸ்டர்களை, அவர் நம்ம ஸைட் வந்ததும் மறைச்சு வெச்சுட்டேன். அடுத்த தேர்தலுக்குத்தான் அதைப் பயன்படுத்திக்கணும்.” 

“நம்ம கட்சிக் கொள்கைகளிலே உங்களுக்குப் பிடிச்ச கொள்கை எது?”

“இலங்கைப் பிரச்சனை சம்பந்தப்பட்ட கொள்கைதாங்க. போர் முடியப்போற நேரத்திலே போர் நிறுத்தத்தை வலியுறுத்தி, சில மணி நேரம் உண்ணாவிரதம் இருந்தே, சிங்கள வெறியர்களை அடக்கிக் காட்டிய கலைஞருக்கு ஆயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்களின் ஆன்மாக்கள் நன்றி தெரிவிக்குமே!” 

“2-ஜி ஸ்பெக்ட்ரம் பற்றி எதிர்க் கட்சிகள் பண்ற பிரச்சாரத்துக்கு எப்படி பதிலடி கொடுப்பீங்க?”

“ஊழல் நடக்கவே இல்லைன்னு கபில்சிபல் சொன்னதை மக்களுக்கு விளக்குவேன். ‘பூணூல் போட்ட பத்திரிகைகள்தான் ஸ்பெக்ட்ரம் பிரச்சனையைப் பெரிதுபடுத்துகின்றன’ன்னு பேசுவேன். எடியூரப்பா ஊழலை மறைக்கத்தான் பா.ஜ.க. ஸ்பெக்ட்ரம் பிரச்சனையை அரசியலாக்குகிறதுன்னு சொல்லுவேன். எதையாவது ஒண்ணை மக்கள் நம்பிட சான்ஸ் இருக்குது.” 

“இருந்தாலும், 2-ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பான சுப்ரீம் கோர்ட் கண்டனங்களுக்கு எப்படி விளக்கம் கொடுப்பீங்க?”

“விளக்கம் தேவையில்லைங்க. கோர்ட் கண்டனம் எல்லாம் இப்ப மக்களுக்கு பழகிடுச்சு. இருந்தாலும், அம்மையாரை சுப்ரீம் கோர்ட் எதுக்கெல்லாம் கண்டிச்சிருக்குதுன்னு மக்களுக்கு ஞாபகப்படுத்தி, நீதியை நிலை நாட்டிட முடியும்ங்க.” 

“ஸ்பெக்ட்ரம் குற்றச்சாட்டை மக்கள் நம்பறாங்கன்னு நினைக்கிறீங்களா?”

“ஆமாங்க. ஆயிரம், ரெண்டாயிரம் வாங்கினவங்க இப்ப விஷமத்தனமா அஞ்சாயிரம், பத்தாயிரம்னு எதிர்பார்க்கிறாங்களே. மக்கள் கேக்கற பணத்தைக் கொடுத்துட்டுத்தான் ஸ்பெக்ட்ரம்லே நாம நிரபராதிகள்னு நிரூபிக்கணும். அதுக்கப்புறம் எதிர்க் கட்சிகள் பிரசாரம் எடுபடாது. ஏன்னா, நம்மைவிட அதிகமா கொடுக்க அவங்களாலே முடியாது.” 

“இந்த ஆட்சி ஏன் தொடரணும்னு, உங்க வாதத்தை முன் வையுங்க பாக்கலாம்.”

“கழக ஆட்சி தொடர்ந்தாத்தான் ஸி.பி.ஐ. தீவிரத்தைக் குறைக்க முடியும். அப்புறம், படிப்படியா ஸ்பெக்ட்ரம் பிரச்சனை போஃபர்ஸ் பிரச்சனை மாதிரி ஆயிடும். ராசாவை ஹிம்ஸிக்கிறதுக்கும் ஒரு அளவு இருக்குதுன்னு பிரதமரே சொல்லிடுவாரு. பாராட்டு விழாக்களிலே கலந்துகிட்டு, கலைஞரைப் பாராட்டி கவிஞர்கள் தமிழ் வளர்க்க முடியும். கலைஞர் இன்னும் நிறைய சினிமாக்களுக்கு வசனம் எழுதுவார். இப்படி தமிழகத்துக்கு பல நன்மைகள் கிடைக்கும்.” 

“சட்டசபையிலே எப்படி பணியாற்றணும்னு தெரியுமா?”

“அது தெரியாதுங்களா? நம்ம கட்சிக்காரங்க பேசும்போது பெஞ்சைத் தட்டணும். எதிர்க் கட்சிக்காரங்க பேசும்போது, அவங்களை மட்டம் தட்டி, பேச விடாம தடுக்கணும். நாம எதிர்க் கட்சி ஆயிட்டா, ‘ஜனநாயகம் செத்துவிட்டது’ன்னு சொல்லி, அடிக்கடி வெளிநடப்பு செய்யணும். நாம மறுபடியும் ஆளும் கட்சியாவே தொடர்ந்தா, ‘ஜனநாயகக் கடமையைக் கூட ஆற்றாமல் வெளிநடப்பு செய்கிறார்களே. அரசியல் இப்படி ஆகிவிட்டதே’ன்னு கருத்து சொல்லணும்.” 

“ஸி.பி.ஐ. ரெய்டு, விசாரணைகள் பத்தி உங்க கருத்து என்ன?”

“தலைவரோட குடும்பப் பிரச்சனையிலே நான் கருத்து சொல்றது முறை இல்லைங்க. பெரிய பெரிய மந்திரிகளே வாயை மூடிக்கிட்டிருக்கும்போது, நான் வாயைத் திறக்கலாமா?” 

“ஜெயிச்சா, தொகுதிக்கு என்ன செய்வீங்க?”

“மக்களுக்கு நன்றி காட்டற வகையிலே, தொகுதிப் பக்கமே போகாம ஒதுங்கிடுவேன். எம்.எல்.ஏ. ஆயிட்டா, கான்ட்ராக்ட், கமிஷன், ரியல் எஸ்டேட் பிஸினஸ்னு ஆயிரம் வேலை இருக்கும்போது, தொகுதிக்குப் போக நேரம் எங்கே இருக்கப் போகுது?”



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

 கபில்சிபல் கூறத் தவறிய கருத்துகள் – சத்யா 

‘2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அரசுக்கு ஒரு பைசா கூட இழப்பு ஏற்படவில்லை; எந்தத் தவறும் நடக்கவில்லை; ஸி.ஏ.ஜி. அறிக்கை முற்றிலும் தவறு; ராசாவுக்கு பிரதமர் எந்தக் கடிதமும் எழுதவில்லை’ – என்றெல்லாம் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில்சிபல் சரமாரியாக புரட்சிகரமான கருத்துகளைக் கூறியிருக்கிறார். ‘பி.ஏ.ஸி. விசாரணைக்கு ஆஜராகத் தயார்’ என்று அறிவித்து விட்டு கலக்கத்தில் இருக்கும் பிரதமர், முன்னதாக கபில்சிபலிடம் இப்படி ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வது நல்லது. 

பிரதமர் : அவசரமா வரச் சொல்லி ஃபோன் பண்ணீங்களேன்னு ஓடி வரேன். கையோட ரப்பர் ஸ்டாம்பையும் எடுத்துட்டு வந்துட்டேன். எதுலே கையெழுத்துப் போடணும்? 

சோனியா : ஸ்பெக்ட்ரம் விவகாரம் வெளியானதிலேர்ந்து மாசக் கணக்கிலே அதைப் பத்தி எதுவும் பேசாம சும்மாத்தானே இருந்தீங்க? அப்படியே கடைசி வரைக்கும் காலம் தள்ளியிருக்கலாம்லே? பி.ஏ.ஸி. விசாரணைக்கு ஆஜராகத் தயார்னு சொல்லிட்டீங்களே! உங்க அரைகுறை நேர்மையாலே எவ்வளவு கஷ்டம் பாருங்க. 

பிரதமர் : ஜே.பி.ஸி. விசாரணையை சந்திக்கிற அளவுக்கு முழு நேர்மை இல்லைன்னாலும், எந்த விசாரணையையும் சந்திக்க மாட்டேன்னு சொல்ற அளவுக்கு நேர்மை குறைவும் இல்லை. அதனாலே பாதி நேர்மையையாவது காட்டலாமேன்னு பி.ஏ.ஸி. விசாரணைக்கு வரேன்னு சொல்லிட்டேன். 

சோனியா : 2-ஜி விவகாரத்தில், மறைப்பதற்கு எதுவும் இல்லைன்னு எந்த அர்த்தத்திலே சொன்னீங்கன்னு புரியலை. உங்களை நம்பி எப்படி விசாரணைக்கு அனுப்பறது? விசாரணையிலே எல்லாத்தையும் சொல்லிடப் போறீங்களா? 

பிரதமர் : அதெப்படிங்க சொல்வேன்? என் நேர்மை உங்களுக்குத் தெரியாதா? எல்லா விஷயமும் டி.வி.யிலேயும் பத்திரிகைகளிலேயும் விவரமா அம்பலமாயிடுச்சே. இனிமே மறைக்கிறதுக்கு என்ன இருக்குது? அதைத்தான் சொன்னேன். 

சோனியா : இருந்தாலும் இங்கே பேசற மாதிரி பி.ஏ.ஸி.யிலேயும் ஏதாவது உளறி வெச்சுட்டா, விபரீதமா போயிடும். அங்கே எப்படி பதில் சொல்லணும்னு கபில்சிபல் கிட்டே கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டாவது போங்க. அதுக்காகத்தான் வரச் சொன்னேன். 

பிரதமர் : நானே கேக்கணும்னு நினைச்சேன். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அரசுக்கு ஒரு பைசா கூட நஷ்டம் ஏற்படலைன்னு நீங்க சொன்னதைக் கேட்டு ரொம்ப ஷாக்காயிட்டேன். எப்படி துணிஞ்சு அப்படி ஒரு கருத்தைச் சொன்னீங்க? 

கபில்சிபல் : சொல்றது என்ன கஷ்டம்? சொல்லணும்னு நினைச்சா சொல்லிட வேண்டியதுதானே? 

பிரதமர் : உங்க அளவுக்கு எனக்கு துணிச்சல் இல்லை. புளுகும்போது லேசா கூச்சமா இருக்குது. அதான் என்கிட்டே இருக்கிற பிரச்சனை. 

கபில்சிபல் : ஆரம்பிச்சுட்டாப் பழகிடும். நியாயமாப் பார்த்தா, ராசா எடுத்த நடவடிக்கையாலே அரசுக்கு லாபம்தான். அது முப்பதாயிரம் கோடியா, அறுபதாயிரம் கோடியா, 1.76 லட்சம் கோடியான்றதுதான் கேள்வி. 

சோனியா : இதை பி.ஏ.ஸி.யிலே பதிவு பண்ணிட்டு, இந்த அளவுக்கு பா.ஜ.க. ஆட்சியிலே லாபம் கிடைக்கலைன்னும் சொல்லிடுங்க. 

பிரதமர் : ஆனா, ஸி.ஏ.ஜி. தன்னோட அறிக்கை நூறு சதவிகிதம் சரியானதுதான்னு சொல்றாரே? 

கபில்சிபல் : ஸி.ஏ.ஜி.க்கு தன்னுடைய அறிக்கை சரியா தவறான்னு சொல்ற உரிமை எந்த சட்டப்படியும் இல்லை. அறிக்கை கொடுத்ததும் அவர் வேலை முடிஞ்சுடுது. ஸி.ஏ.ஜி., பா.ஜ.க. ஆட்சிக்கு எதிரா கொடுத்த அறிக்கையைத் தவிர மற்றதெல்லாம் தப்பு. அதுக்கு ஆதாரம் இருக்குது. இல்லைன்னாலும் உருவாக்கிடலாம்.

சோனியா : 2-ஜி விற்பனையிலே ஏல முறையைக் கடைப்பிடிக்கணும்னு நீங்க போட்ட உத்தரவை, ராசா மதிக்காததைப் பத்தி பி.ஏ.ஸி. கேட்டா என்ன பதில் சொல்வீங்க? 

பிரதமர் : என்ன சொல்லணும்? 2ஜி விற்பனை நேர்மையாக நடக்கணும்னு நான் ராசாவுக்கு உத்திரவு போட்டேனா, போடலயா? நீங்க எப்படிச் சொல்றீங்களோ, அப்படி பதில் சொல்லிடறேன். 

சோனியா : நேர்மையை உங்க வரைக்கும் வெச்சுக்க வேண்டியதுதானே? மந்திரிகளுக்கும் லெட்டர் போட்டு அப்படி கஷ்டப்படுத்தணுமா? அப்புறம் எப்படி நிர்வாகம் நடக்கும்? 

கபில்சிபல் : பிரதமர் அப்படி எந்த லெட்டரும் போடலை. அப்படியே போட்டிருந்தாலும், 2ஜி விற்பனையை நேர்மையா நடத்தணுமா, இல்லே தன் இஷ்டம்போல நடத்தணுமான்னு முடிவெடுக்கிற அதிகாரம் சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு இருக்குது. அதான் சட்டம். இன்னும் சொல்ல போனா, ஏலம் விட்டிருந்தா, இந்த அளவுக்கு லாபம் கிடைச்சிருக்காதுன்றதுதான் உண்மை. 

பிரதமர் : அருமையான கருத்து. இது எனக்கு தோணவே இல்லை. அமைச்சர்கள் குழுவை ராசா கலந்து ஆலோசிக்காமலேயே தன்னிச்சையா முடிவெடுத்தார்னு ஸி.ஏ.ஜி. குற்றம் சாட்டியிருக்கறதைப் பத்தி பி.ஏ.ஸி. கேக்குமே. என்ன பதில் சொன்னா ராசாவைக் காப்பாத்த முடியும்? 

கபில்சிபல் : குற்றம்சாட்ட ஸி.ஏ.ஜி. யாரு? எந்தத் தேர்தல்லே நின்னு ஜெயிச்சாரு? இந்தியாவிலே யாருக்குமே இல்லாத அக்கறை இவருக்கு மட்டும் ஏன்? ஸி.ஏ.ஜி.யே தேவையில்லை. இருந்தாலும், ‘அமைச்சர்கள் குழுவுடன் ராசா கலந்து ஆலோசித்தார்’னு அடிச்சு சொல்லுங்க. கூச்சப்பட்டு பிரச்சனை பண்ணிடாதீங்க. 

பிரதமர் : சரி, கலந்தாலோசித்ததாக ராசாவே என்னிடம் கூறிவிட்டார்னு சொல்லிடறேன்.

சோனியா : சட்ட, நிதித் துறை அமைச்சர்கள் வழங்கிய எச்சரிக்கைகளை ராசா புறக்கணித்ததைப் பற்றி ஏன் ராசாவிடம் கேக்கலைன்னு பி.ஏ.ஸி. கேட்டா, என்ன பதில் சொல்வீங்க? 

பிரதமர் : நான் எந்த அமைச்சர் கிட்டேயும் எதையும் கேக்கறதில்லை. கேட்டு பிரயோஜனம் இல்லைன்றதாலே அவங்களை சுதந்திரமா இயங்க விட்டுடறதுதான் என் வழக்கம்னு உண்மையைச் சொல்லிடறேன். 

கபில்சிபல் : உண்மை சொல்லணும்னு அலையாதீங்க. ‘சட்ட, நிதி அமைச்சர்கள் ராசாவை எச்சரித்தனர். பதிலுக்கு ராசாவும் அவர்களை எச்சரித்து விட்டார். அத்தோடு அந்த பிரச்சனை முடிந்து விட்டது’ன்னு பதில் சொல்லுங்க. 

சோனியா : மனு பெறும் இறுதி தேதியை, முன்தேதியிட்டு மாத்தினது பற்றியும் பி.ஏ.ஸி. கேக்கலாம். உங்க சட்ட அறிவைப் பயன்படுத்தி, ஒரு நல்ல பதிலைக் கண்டுபிடிச்சு பிரதமருக்குச் சொல்லுங்க. 

கபில்சிபல் : இரண்டு தேதிகளையும் நிர்ணயித்தது ராசாதான். வேறு யாரோ நிர்ணயித்ததை அமைச்சர் மாற்றி விடவில்லை. தன் முடிவை மாற்றிக் கொள்ளக் கூட அவருக்கு உரிமை இல்லையா? அதனாலதான் பி.ஏ.ஸி.யும் தேவையில்லைன்னு சொல்றேன். இதை, உங்க கருத்தா அங்கே சொல்லிடுங்க. 

பிரதமர் : ஒரு வருஷம் பொறுத்து ராசா வீட்டில் ஸி.பி.ஐ. ரெய்டு நடத்தி விசாரிப்பதால் என்ன பயன்னு பரவலா ஒரு கேள்வி இருக்குது. 

சோனியா : ஸி.பி.ஐ.யைப் பத்தி தெரியாதவங்கதான் அப்படிக் கேக்கறாங்க. ஸி.பி.ஐ. ஆரம்பத்திலேயே விசாரிச்சிருந்தா மட்டும் பயன் கிடைச்சுடுமா? அப்பவும் நம்ம ஸி.பி.ஐ.தானே? பயன் இல்லாத விசாரணையை எப்ப நடத்தினா என்ன? 

கபில்சிபல் : போஃபர்ஸ் வழக்குக்காக ஸி.பி.ஐ. சக்தியையும் நேரத்தையும் அரசு பணத்தையும் வீணாக்கின மாதிரிதான் இந்தப் பிரச்சனையிலேயும் ஏற்படும். ராசாவுக்கு எதிரா வருஷக்கணக்கிலே வழக்கு நடத்திட்டு, கடைசியா வாபஸ் வாங்கறதை விட இப்பவே வாங்கிடலாம். இதையும் உங்க கருத்தா பி.ஏ.ஸி.யிலே சொல்லிடுங்க. 

பிரதமர் : ‘முதலில் வருபவர்களுக்கு முதலில்’ என்ற முறையைக்கூட ராசா சரியாகக் கடைப்பிடிக்கலை. அதுலேயும் முறைகேடு நடந்திருக்குது’ன்னு ஸி.ஏ.ஜி. குற்றம்சாட்டியிருக்கறதைப் பத்தி பி.ஏ.ஸி.யிலே... 

கபில்சிபல் : அது குற்றச்சாட்டு இல்லை. அது ஒரு தகவல். அதாவது ஒரு வாக்கியம். அவ்வளவுதான். பதிலுக்கு நாம எதிர் தகவல் சொன்னதும், ஸி.ஏ.ஜி. தகவல், மதிப்பை இழந்துடும். முதலில் ஓடி வந்தவர்களில் யாரை ராசா முதலில் பார்த்தார்ன்றதுதான் முக்கியம். ராசா யாரை முதலில் பார்த்தாரோ அவருக்குத்தான் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதில் எந்த முறைகேடும் இல்லை. பா.ஜ.க. ஆட்சியிலும் அப்படித்தான் நடந்தது. அதுதான் முறைகேடு. புரிஞ்சுதா? 

பிரதமர் : ராசா வீட்டிலேர்ந்து ஸி.பி.ஐ. ஒரு டைரியைக் கைப்பற்றியிருக்குதே. அதைப் பார்க்கணும்னு பி.ஏ.ஸி. கேக்குமா? 

கபில்சிபல் : அடுத்தவங்க டைரியை பாக்கறது என்ன கெட்ட பழக்கம்? அது தனிமனித உரிமை மீறலாச்சே! அதனாலே, டைரியைக் காட்ட முடியாதுன்னு மறுத்துடலாம். நாம மட்டும்தான் படிச்சுப் பாக்கணும். என்ன யோசிக்கிறீங்க? 

பிரதமர் : ... இப்படியெல்லாம் நான் பதில் சொன்னா, என் பேர் கெட்டுப் போயிடுமேன்னு யோசிக்கிறேன். 

சோனியா : அநாவசியமா கவலைப்படாதீங்க. கெடறதுக்கு இன்னும் என்ன இருக்குது?



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

சென்ற ஆண்டின் சிறந்த படங்கள் – சத்யா 

அரசியல் விமர்சனங்களை விரும்பும் வாசகர்களையும், சினிமா விமர்சனங்களை விரும்பும் வாசகர்களையும் ஒரே சமயத்தில் திருப்திப்படுத்தும் வகையில், 2010 -ல் வெளியான சிறந்த அரசியல் சினிமாக்களை வரிசைப்படுத்தியிருக்கிறோம். 

10. பையா


புதுமுகம் ஜெகன் மோகன் நடித்த படம் பையா. யாருக்கும் அடங்காத பையனாக நடித்திருந்தார், ராஜசேகர ரெட்டியின் பையன் ஜெகன்மோகன். தகுதிக்கு மீறி ஆசைப்பட்டால் என்னவாகும் என்ற கருத்தை வெளிப்படுத்தியது இப்படம். எதிர்பார்த்த அளவுக்கு படம் ஓடாவிட்டாலும், தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை இப்படத்தின் மூலம் ஜெகன் மோகன் உருவாக்கி இருப்பதை மறுக்க முடியாது. 

‘பையா, நான் சொல்வதைக் கேள்’ என்று அன்னை சோனியா எவ்வளவோ கெஞ்சியும், அடங்க மறுத்து ஜெகன் மோகன் அடிக்கும் லூட்டிகள் ரசிக்கும்படியாக இல்லாதது ஒரு குறை. ரோசையாவை ஜெகன் மோகன் பயமுறுத்தும் காட்சிகள் ரசிக்கும்படி இருந்தன. ‘ஐயோ என்னை விட்டு விடுங்கள்’ என்று கதறியபடியே நாற்காலியை தள்ளிவிட்டு ரோசையா ஓடும் காட்சி, நல்ல திருப்பம். ‘பையா’ பத்தாவது இடத்தைப் பிடிக்கிறது. 

9. வம்சம்

பெரிய வம்சத்தில் பிறந்த கோடீஸ்வரன், கதாநாயகன் ராகுல். நாட்டில் எங்கு பார்த்தாலும் குடிசைகளும் ஏழைகளும் இருப்பது அவரை வாட்டுகிறது. தனது கொள்ளு தாத்தா, பாட்டி, அப்பா வழியில் தானும் வறுமையை ஒழிக்கப் போவதாக வம்சாவழி சபதம் போடுகிறார். ‘ஐயோ பாவம்’ என்று பரிதாபம் ஏற்படுகிறது நமக்கு. நாட்டிலுள்ள அனைத்து குடிசைகளிலும் நுழைந்து, சாப்பிட்டு சாப்பிட்டே ஏழ்மையை ஒழிக்க பாடுபடுகிறார். அவரது லட்சியம் நிறைவேறியதா என்பதை வம்சம் விளக்கியிருந்தது. 

இளைஞர்களைக் கவரும் வகையில் திரைக்கதை அமைத்திருப்பதற்கு ஒரு சபாஷ் போடலாம். ஆர்.எஸ்.எஸ். பற்றி ராகுல் பேசும் வசனங்கள் சென்ஸாருக்குத் தப்பி வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

‘35 லட்சம் ஆதரவாளர்களைத் திரட்டிக் காட்டுகிறேன்’ என்று ராகுலிடம் உறுதியளிக்கும் தங்கபாலு, அதற்கு பதில் 35 லட்சம் பேப்பர்களை அவர் முன் கொட்டும் காட்சி செம காமெடி. மீண்டும் மீண்டும் ஊர் பெரியவர் கருணாநிதியை அலட்சியப்படுத்தும் காட்சிகளில், ராகுல் வித்தியாசமான முத்திரையைப் பதித்திருந்தார். வரவேற்கத்தகுந்த முயற்சி என்பதால் ஒன்பதாவது இடத்தை பிடிக்கிறது ‘வம்சம்’

8. இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம்

யாருக்கும் அடங்காத முரட்டுச் சிங்கமாக, வித்தியாசமான முறையில் வெளுத்துக் கட்டியிருந்தார் இளங்கோவன். ஆரம்பக் காட்சியில் வில்லன் கருணாநிதியிடம் மோதி விட்டு, மன்னிப்புக் கேட்கும்போது, அவரது பழைய படம் பார்த்தது போல் சப்பென்று ஆகிவிடுகிறது. ஆனால், இடைவேளைக்குப் பிறகு தனது பாணியை மாற்றிக் கொண்டு, கருணாநிதியைப் பார்த்து கர்ஜிக்கும் ஒவ்வொரு காட்சியிலும் புதுவிதமான முத்திரையைப் பதித்து, ரசிகர்களின் விசிலையும் கைதட்டலையும் பெற அவர் தவறவில்லை. 

யாராவது அவரை அடக்கக் கூடாதா என்று டெல்லியிலிருந்து வருவோர் போவோரிடமெல்லாம் கருணாநிதி கெஞ்சுவது புன்னகையை வரவழைத்தது. கருணாநிதிக்கும் இளங்கோவனுக்கும் இடையில் மாட்டிக் கொண்டு தங்கபாலு தவிக்கும் இடங்கள் படு தமாஷாகப் படமாக்கப்பட்டிருந்தன. 

டைட்டிலில் கூட இடம் பெறாத வாசனின் பின்னணி இசை, ஆர்ப்பாட்டமின்றி இருந்தது. இளங்கோவன் மீது கருணாநிதியின் ஆட்கள் டெல்லியில் புகார் செய்யும் காட்சியில் சோனியா எந்த உணர்ச்சியையும் காட்டாமல் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். எனவே, இப்படத்தை எட்டாவது இடத்துக்கு தேர்வு செய்கிறோம். 

7. போர்க்களம்

எடியூரப்பா, குமாரசாமி, கவர்னர் ஆகிய மூவரும் எந்த இடத்தில் சந்தித்தாலும் அந்த இடமே போர்க்களமாகி விடுகிறது. மற்றபடி படத்தில் கதை என்று உருப்படியாக எதுவுமில்லாததால், யார் ஜெயிக்கிறார்கள் என்பதுதான் கதை என்ற முடிவுக்கு நாம் வருகிறோம். 

‘என் ஆசை எதிராளியே’ என்று எடியூரப்பாவும் கவர்னரும் பாடும் திடீர் டூயட், கதையின் போக்கில் எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்துகிறது. எடியூரப்பாவை ஒழிப்பதற்காக ஆவேசத்துடன் வரும் கட்காரி, திடீரென்று அந்தத் திருமணக் காட்சியில் மனம் மாறி, அவரை கட்டிப் பிடித்து கொள்வது மற்றொரு மர்மமான திருப்பம். 

குமாரசாமியும் எடியூரப்பாவும் நேருக்கு நேர் சந்திக்கும் காட்சிகள் நெஞ்சை உறைய வைக்கும் வகையில் படமாக்கப்பட்டிருந்தன. அதிலும் மூத்த வில்லன் நடிகர் தேவகௌடா, பற்களை நறநறத்தபடி ‘சாம தான பேத தண்டம் நான்கும் தோற்றுப் போகும்போது தகிடுதத்தம்’ என்று பாடுவது படு பயங்கரம். 

குமாரசாமி, தன் ஆட்களை பஸ்ஸில் ஏற்றிக் கொண்டு சூட்கேஸ்களுடன் உல்லாசப் பயணம் செய்யும் அவுட்டோர் காட்சி பிரம்மாண்டமான செலவில் படமாக்கப்பட்டிருந்தது. சிறந்த திகில் படத்தைப் பார்த்த திருப்தியை ஏற்படுத்தியதால், போர்க்களம் ஏழாவது இடத்தைப் பெறுகிறது.

6. மாத்தியோசி

ராமதாஸும் அன்புமணியும் காமடி ரோலில் கலக்கியிருந்த படம் ‘மாத்தி யோசி’. எந்த முடிவை எடுத்தாலும், உடனே மாற்றி யோசித்து, அதற்கு எதிரான முடிவை எடுக்கும் வழக்கமான குணச்சித்திர ரோலை ஏற்றிருந்தார் ராமதாஸ். கண்கள் சிவக்க, தொண்டை நரம்புகள் புடைக்க, ‘நான் ஒரு முடிவெடுத்தா, உடனே அதை மாத்திடுவேன்’ என்று ராமதாஸ் ‘பஞ்ச் டயலாக்’ பேசி எச்சரிக்கும்போது அரங்கமே அதிர்கிறது. 

கோபாலபுரத்துக்கும் போயஸ் கார்டனுக்கும் இடையே, ராமதாஸும் அன்புமணியும் நடக்கும் போது நிகழும் சம்பவங்கள்தான் கதை. ராமதாஸ், கனிவான பார்வையோடு கருணாநிதியை நெருங்கும்போதெல்லாம், ‘என் உச்சி மண்டையிலே விர்ருங்குது. கிட்டே நீ வந்தாலே கிர்ருங்குது’ என்று பாடியபடி கருணாநிதி பதறிக் கொண்டு ஓடுவது செம சிரிப்பு. 

க்ளைமாக்ஸில் ராமதாஸும் அன்புமணியும் நடுத்தெருவில் அமர்ந்து கொண்டு எந்தப் பக்கம் போவது என்று யோசிக்கும்போது, ‘கோடானு கோடி வன்னியர்களுக்கு வழி காட்டும் இவர்களுக்கு வழி காட்ட யாரும் இல்லை’ என்று ஸ்லைடு போடுகிறார்கள். காமடியையும் உருக்கத்தையும் சம அளவில் கலந்து தந்ததால், ‘மாத்தி யோசி’ ஆறாம் இடத்துக்குத் தேர்வாகிறது. 

5. ரத்த சரித்தரம்

தீவிரவாதக் கூட்டத்தை கைது செய்வதற்காக நியமிக்கப்பட்ட காவல்துறை உயர் அதிகாரி மன்மோகன் சிங், தீவிரவாதிகளைக் கண்டு கனவிலும் நனவிலும் எப்படி பயப்படுகிறார் என்பதை, ரத்த சரித்திரத்தில் தனக்கே உரிய பாணியில் இயக்கியிருந்தார் சோனியா. 

தீவிரவாதச் சம்பவம் நடக்கும் ஒவ்வொரு காட்சியிலும், ‘இதை சகித்துக் கொள்ள மாட்டேன். பயப்பட மாட்டேன். ஆனா, அவங்க நம்ம ஆளுங்க. பேசத் தயாராக இருக்கிறேன். அச்சமளிக்கிறது’ என்று நடுங்கும் குரலில் மன்மோகன் சிங் தீவிரவாதிகளை எச்சரிக்கும் காட்சி அடிக்கடி வருவதால், ரசிகர்கள் கொட்டாவி விடுகின்றனர்.

‘உசுரே போகுது, உசுரே போகுது’ என்று விரக்தியோடு பாடும்போது, சோக ரசத்தைப் பிழிந்து தருகிறார் ஹீரோ மன்மோகன் சிங். பிடிபட்ட தீவிரவாதி கசாபுக்கு போலீஸார் சேவை செய்யும் காட்சியிலேயே, கதையின் போக்கு இப்படித்தான் இருக்கும் என்பதை ரசிகர்கள் புரிந்து கொண்டு விடுகிறார்கள். முதல் காட்சியில் அஃப்ஸல் குருவின் கருணை மனுவை பரிசீலிக்கத் தொடங்கும் பிரதிபா பாட்டீல், கடைசிக் காட்சி வரை பரிசீலித்துக் கொண்டே இருப்பது, சோனியாவின் குறும்பான டைரக்ஷன். வன்முறைக் காட்சிகள் நிறைந்த ரத்த சரித்திரம் ஐந்தாவது இடத்தைப் பெறுகிறது. 

4. களவாணி

சென்ற ஆண்டு பரபரப்பாக பேசப்பட்ட படம் காங்கிரஸ் ப்ரொடக்ஷன்ஸாரின் களவாணி. தனது நிறுவனத்தில் தன்னைச் சுற்றி தனக்கே தெரியாத களவாணிகள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்கும் வேலையை, தன் பொறுப்பில் உள்ள உளவுப்படையிடம் ஒப்படைக்கிறார் சோனியா. உளவுப் படை அதை எப்படி நிறைவேற்றுகிறது என்பதுதான் கதை. 

சோனியாவின் உதவியாளராக, கொடுத்த வேலையை ஒழுங்காகச் செய்திருந்தார் மன்மோகன் சிங். ‘க்வாட்ரோக்கியை இன்னும் எத்தனை நாள் தேடுவீர்கள்? அவரை சித்ரவதை செய்வதற்கு அளவே இல்லையா?’ என்ற சத்தியாவேசக் குரலில் வெடிக்கும்போது, மாறுபட்ட குணச்சித்திரத்தைக் காட்டியிருந்தார். ஊழலைக் கண்டுபிடித்துத் தடுக்கும் பொறுப்பில் ஊழல் அனுபவம் மிகுந்த தாமஸை அமர்த்தும் காட்சியில் சோனியாவின் குறும்புத்தனமான டைரக்ஷன் டச் பளிச்சிட்டது. ‘ஊழலை சகித்துக் கொள்ள மாட்டேன்’ என்று சோனியா பொங்கி எழும்போது, தியேட்டரில் குபீர் சிரிப்பு எழுகிறது. 

ஊழல் ஃபைல்கள் ஒன்றன் பின் ஒன்றாகக் காணாமல் போகும்போதே, கதையின் முடிவு புரிந்து விடுகிறது. களவாணி ராசாவா, கல்மாடியா, அசோக் சவானா என்ற சஸ்பென்ஸில் ரசிகர்கள் காத்திருக்க, அவர்களை மிஞ்சும் வகையில் செயல்பட்டு வெற்றிக் கொடியை நாட்டுகிறது சோனியாவின் உளவுப் படை. சிறந்த மர்மப் படமான களவாணி – நான்காம் இடத்தைப் பெறுகிறது. 

3. குரு சிஷ்யன்

குருவாக மன்மோகன் சிங்கும், சிஷ்யனாக ராசாவும் இணைந்து நடித்த வெற்றிப் படம் குரு சிஷ்யன். ஸ்பெக்ட்ரம் கம்பெனிக்கு மேனேஜராக ராசாவையும், சூபர்வைசராக மன்மோகன் சிங்கையும் நியமிக்கிறார் கம்பெனியின் எம்.டி. சோனியா. கம்பெனியின் பணத்தை ராசா எப்படி அசுர வேகத்தில் கபளீகரம் செய்கிறார், குற்றவாளிகள் கூட்டம் எப்படி தப்பிக்கிறது என்பதுதான் கதை. சிறந்த முறையில் ஸ்க்ரீன் ப்ளே அமைத்திருந்தார் டைரக்டர் சோனியா.

குருவுக்குத் தெரிந்து பாதியும், தெரியாமல் பாதியும் செய்து விட்டு, மொத்தப் பழியையுமே குருவின் மீது போடும் சிஷ்யனாக, கொடுக்கப் பட்ட வேலையைத் திறம்பட செய்திருந்தார் ராசா.மலையளவு ரூபாய் நோட்டுகளுக்கு நடுவே ராசாவும், அவரது நண்பர்களும் உருண்டு புரளும் காட்சி கிராஃபிக்ஸோ என்று ஒரு கணம் திகைக்கிறோம். ஆனால் அத்தனையும் உண்மையான நோட்டுக்கள்தான் என்று தெரியும்போது, நமது திகைப்பு பன்மடங்கு அதிகரிக்கிறது. 

போலீஸிடம் மாட்டும்போது, ‘எல்லாம் குருவுக்குத் தெரியும். குரு சொன்னபடிதான் செய்தேன்’ என்று குறும்பு கொப்பளிக்க ராசா சொல்லும் காட்சியில், மன்மோகன் சிங்கின் அப்பாவி முகத்தைப் பார்த்து பரிதாபப் படாதவர்களே இருக்க முடியாது. அது நடிப்பா, அதுதான் அவர் நிஜ முகபாவமா என்றே புரியாத அளவிற்கு நடிப்பில் சக்கை போடு போட்டிருந்தார் மன்மோகன் சிங். அதிலும் ராசாவின் முதுகில் தட்டிக் கொடுக்கிறாரே, பல பக்க வசனங்களை அந்த ஒரு தட்டுதல் மிஞ்சி விடுகிறது. குற்றவாளிகள் பிடிபட்டு விடுவார்கள் என்பதைப் போல் ரசிகர்களை நம்ப வைத்து, நைஸாக கதையை வித்தியாசமான பாதையில் திருப்புவது டைரக்டரின் திறமையைக் காட்டியது. எனவே மூன்றாம் இடத்தைப் பெறுகிறது ‘குரு சிஷ்யன்’. 

2. தில்லாலங்கடி

முழுக்க முழுக்க டெலிஃபோன் மூலமாகவே சொல்லப்பட்ட வித்தியாசமான மர்மக் கதை தில்லாலங்கடி. ஆன்டி ஹீரோயினாகத் தோன்றி, தனது தில்லாலங்கடிச் செயல்களின் மூலம் எதையும் சாதிக்க கூடிய சகலகலா வல்லியாக அசத்தியிருந்தார் நிரா ராடியா. அதிலும் அந்த 600 கோடி ரூபாய் ரகசியத்தை நிரா ராடியா உடைக்கும் காட்சியில் தியேட்டரே அதிர்ச்சியில் உறைந்து விடுகிறது. அப்போது கருணாநிதியின் முகத்தைப் பார்க்க வேண்டுமே! தனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லாதது போல் என்னமாய் அப்பாவி நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்! 

ராசாவுக்கு ஆதரவாக கனிமொழியும் நிரா ராடியாவும் பேசும் காட்சியில், மயிர்க் கூச்செறியச் செய்யும் வசனங்கள் படத்துக்குப் பெருமை சேர்க்கின்றன. கௌரவ நடிகராகத் தோன்றிய டாடாவிடமிருந்து இப்படியொரு மர்மமான நடிப்பை யாருமே எதிர்பார்த்திருக்க முடியாது. க்ளைமாக்ஸில், நிரா ராடியாவை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்துச் செல்லும்போது ‘இது ஒரு டாடா தயாரிப்பு’ என்று அறிவித்து, படத்தின் கம்பீரத்தை உணர்த்துகிறார்கள். அரசியல் திரையுலகில் இதுவரை பார்த்திராத கதையமைப்பைக் கொண்டிருந்ததால், தில்லாலங்கடியை 2-வது இடத்திற்கு தேர்வு செய்கிறோம். 

1. மகிழ்ச்சி

குடும்பப் பாசத்தின் சிறப்பை விளக்கிய நகைச்சுவை படம் மகிழ்ச்சி. டைட்டிலின்போது, பின்னணியில் ரூபாய் நோட்டுகள் மழையாகப் பொழிய, ‘அடடா மழைடா, அடை மழைடா’ என்று கலைஞரும் அவரது குடும்பத்தினரும் மகிழ்ச்சியோடு பாட, கணிசமான எதிர்பார்ப்போடுதான் அமர்கிறார்கள் ரசிகர்கள். 

கலைஞரே கதை வசனம் எழுதி இயக்கி நடித்திருந்த இப்படம், வசூலில் முந்தைய சாதனைகளை முறியடித்தது. குடும்பத் தலைவர் கலைஞர், தன் குடும்ப உறுப்பினர்களின் மகிழ்ச்சிக்காக என்னவெல்லாம் செய்கிறார் என்பதுதான் கதை. 

‘ஏழையாகப் பிறந்தாலும் வசதியான குடும்பத்தில்தான் பிறந்தேன்’ என்று கலைஞர் சீரியஸாக் கூறும் போது தியேட்டரில் சிரிக்காதவர்களே இல்லை. ‘நான் ஊழலுக்கு நெருப்பு’ என்ற பஞ்ச் டயலாக்கில் சிரித்து சிரித்து வயிறு புண்ணாகி விடுகிறது. அதிலும், அந்த சொத்துக் கணக்கு காட்டும் ஸீன் தூள். அவருக்கே உரித்தான குறும்பான நடிப்பு. ‘எனக்கு ஒரே ஒரு வீடு. அதையும் தானம் செய்து விட்டேன்’ என்று அந்த வீட்டில் இருந்தபடியே கூறும் ஒவ்வொரு முறையும் தியேட்டரில் ஏக கரகோஷம். வீரமணியின் பின்னணி இசை ஓவர். 

படம் முடியும்போது, ‘பிள்ளைகளை உயர்ந்த பதவிகளில் அமர்த்தி விட்டார். மகள்களை கோடீஸ்வரர்களாக்கி விட்டார். பேரன்களை சினிமா தயாரிப்பாளராக்கி விட்டார். உறவினர்கள் அனைவரையும் ஓஹோ என்று வாழ வைத்து விட்டார். ஆம்! ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் கண்டுவிட்டார்’ என்று கார்டு போடுவது சிந்தனையைத் தூண்டுகிறது. தலைசிறந்த குடும்பப் படமான ‘மகிழ்ச்சி’யை முதல் இடத்திற்கு தேர்வு செய்வதில் பெருமை கொள்கிறோம்!



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

கலைஞர் கண்ட கனவு – சத்யா

வழக்கமாக கலைஞரின் கனவில் பெரியாரும் அண்ணாவும்தான் வருவார்கள். ஆனால், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தைத் தொடர்ந்து நடைபெற்று வருகிற நிகழ்ச்சிகளை நினைத்தபடியே கலைஞர் தூங்கினால், அவரது கனவில் சோனியாவும், மன்மோகன்சிங்கும் வருவதற்கே அதிக வாய்ப்பு இருக்கிறது. தி.மு.க.வை காங்கிரஸ் தரப்பு அலட்சியப்படுத்துவதாகக் கருதப்படுகிற இப்போதைய சூழ்நிலையில், அவர்களிடம் கலைஞர் என்னவெல்லாம் கேட்பார் என்று தெரிந்து கொள்ளும் ஆவலோடு, அவர் கனவை நாம் காண்கிறோம். 

(டெல்லி விமான நிலையத்தில் கலைஞர் இறங்க, டி.ஆர். பாலுவும் தயாநிதி மாறனும் வரவேற்கிறார்கள்) 

கருணாநிதி : என்னய்யா? சோனியாவையும் மன்மோகன் சிங்கையும் நான் பார்த்துப் பேச ஏற்பாடு பண்ணிட்டீங்களா? 

டி.ஆர். பாலு : அப்பாயின்ட்மென்ட் கிடைக்கலைங்க. துணிஞ்சு போய் கதவைத் தட்டி உள்ளே நுழைஞ்சிடலாம், வாங்க. அப்படியும் அவங்க பேச மறுத்தா, சிதம்பரத்தோட பேசிட்டுத் திரும்பிடுவோம். அதுக்கு யாரும் தடை போட மாட்டாங்கன்னு நினைக்கிறேன். 

தயாநிதி மாறன் : சிதம்பரம் இப்பதான் ஃபோன் பண்ணி, கலைஞர் வந்துட்டாரான்னு கேட்டாரு. ஆனா, ‘நான் ஃபோன் பண்ண விஷயம் காங்கிரஸுக்குத் தெரிய வேண்டாம்’னு சொன்னாரு. 

(காட்சி மாற்றம்)

சோனியா : வந்துட்டீங்களா? சரி, பரவாயில்லை. வாங்க. என்ன விஷயம்னு சுருக்கமா சொல்ல முடியுமா? முக்கியமான வேலையா இருக்கோம். 

கருணாநிதி : சும்மாதாங்க. புத்தாண்டு வாழ்த்து சொல்லிட்டுப் போகலாம்னு வந்தேன். லெட்டர் போட்டா பதில் போடுவீங்களோ இல்லையோன்னு சந்தேகமா இருந்தது. அதான் நேராவே வந்துட்டேன். சமீப காலமா, பயங்கரமான கனவெல்லாம் வருது... 

சோனியா : உங்களுக்குமா? 

கருணாநிதி : ஆமாங்க. புதுசா ஒரு கவர்னர் ராஜ்பவனுக்கு வராரு. பார்த்தா, அசப்பிலே சுப்பிரமணியம் ஸ்வாமி மாதிரி இருக்குது. தமிழக காங்கிரஸ் தலைவரா இளங்கோவன் பொறுப்பேற்கிறாரு. தங்கபாலு அவருக்கு மாலை போடறாரு. கோபாலபுரத்து குடிசைப் பகுதியிலேர்ந்து ராகுல் வெளியே வந்து, ‘தி.மு.க.வை பிடிக்காதவங்க எல்லாம் கையைத் தூக்குங்க’ன்றாரு. அவங்களோட சேர்ந்து ராகுலும் கையைத் தூக்கறாரு. 

மன்மோகன் சிங் : தேர்தல் நெருங்கும்போது இப்படியெல்லாம் கனவு வர்றது சகஜம்தான். எனக்குக் கூட யாரோ சம்மன் அனுப்பற மாதிரியெல்லாம் கனவு வரும். 

கருணாநிதி : இன்னும் கேளுங்க. சட்டசபையிலே நம்பிக்கையில்லாத் தீர்மானம் வருது. ஓட்டெடுப்பு சமயத்திலே காங்கிரஸ்காரங்க வெளியே போயிடறாங்க. விஜயகாந்தும் பன்னீர் செல்வமும் சிரிச்சுப் பேசிகிட்டிருக்காங்க. ஸி.பி.ஐ. அதி காரிகள், கையிலே ஒரு துண்டுச் சீட்டை வெச்சுக்கிட்டு ‘இந்த அட்ரஸ் எங்கேயிருக்குது?’ன்னு அம்மையார் கிட்டே கேக்கறாங்க. இப்படியெல்லாம் கெட்ட கெட்ட கனவா வருதுங்க. அதான் அவசரமா ஓடி வரேன். 

சோனியா : அது ஒண்ணுமில்லை. ரொம்ப பயந்திருக்கீங்க. மந்திரிச்சா சரி ஆயிடும்

கருணாநிதி : அதை விடுங்க. நீங்க பண்றது உங்களுக்கே நியாயமா இருக்குதா...? நீங்க ஊழலுக்கு எதிரா யுத்தம் நடத்தற கட்சி. நான் ஊழல் விஷயத்திலே நெருப்பு. இவ்வளவு இயற்கையான கூட்டணி அமைஞ்சிருக்கும்போது, அதைக் கெடுக்கற மாதிரியான நிகழ்ச்சிகள் நடக்கிறது முறையா?

சோனியா : ராசாவை ஸி.பி.ஐ. விசாரிக்கிறது பத்தி சொல்றீங்களா? விசாரிக்கிறது மட்டும்தான் அவங்க வேலை. அவர் குற்றவாளியா நிரபராதியான்னு மத்திய அரசு இன்னும் முடிவு பண்ணலை. அதுக்கு இன்னும் டைம் இருக்குது. 

மன்மோகன் சிங் : மாயாவதி, முலாயம்சிங், லாலு பிரஸாத் வழக்குகளிலே, ஸி.பி.ஐ. எவ்வளவு நேர்மையா நடவடிக்கை எடுக்குதோ, அதே அளவு நேர்மையோட ஸ்பெக்ட்ரம் விஷயத்திலேயும் நடவடிக்கை எடுக்கும். நீங்க பயப்படாதீங்க. 

கருணாநிதி : கூட்டணி தொடருதுன்னு அறிவிச்சுட்டு ஸி.பி.ஐ. ரெய்டு, விசாரணை நடத்தினா நான் ஏன் பயப்படப் போறேன்? இப்ப சந்தேகமாயில்லே இருக்குது? 

மன்மோகன் சிங் : சந்தேகம்ன்ற வார்த்தையை மட்டும் சொல்லாதீங்க. நான் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவனா இருக்கத்தான் ஆசைப்படறேன். ஜே.பி.ஸி. தவிர வேறே எந்த விசாரணைக்கும் நான் தயாரா இருக்கேன். நீங்க கூட விசாரிக்கலாம். 

சோனியா : தி.மு.க.வுடன் கூட்டணி கிடையாதுன்னு நாங்க இன்னும் சொல்லலையே. அதுவரைக்கும் ‘கூட்டணியை யாரும் உடைக்க முடியாது’ ன்னு சொல்லிக்கிட்டிருங்க. 

கருணாநிதி : அப்படி கழகம் என்ன தப்பு பண்ணிடுச்சு? அஞ்சு வருஷமா தமிழக உரிமைக்காக வாயைத் திறந்து ஏதாவது பேசியிருக்கேனா? அப்பப்ப பேனாவை திறந்து லெட்டர் எழுதினது கூட குற்றமா? ஹைகோர்ட்டில் தமிழ், நுழைவுத் தேர்வு, பெட்ரோல் விலை எதுக்காவது போராட்டம் நடத்தியிருக் கேனா? என் இளிச்சவாய்த்தனத்தை கோழைத்தனம்னு நினைச்சுட்டீங்களா? 

சோனியா : நோ... நோ...! அதை நாங்க ஒத்துழைப்பாத்தான் நினைக்கிறோம். ஆனா சுப்ரீம் கோர்ட் உங்களை மாதிரி ஒத்துழைக்கலையே. அதனாலே நாங்க நேர்மையானவங்கதான்னு நிரூபிக்க சில நடவடிக்கைகளை எடுத்துட்டுவரோம். அதுலே ஒண்ணுதான் ஸ்பெக்ட்ரம் விவகாரம். 

கருணாநிதி : தலித் ஓட்டைவிட உங்களுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் பெருசாப் போயிடுச்சா? 2004-லே நாற்பதுக்கு நாற்பது ஜெயிச்ச மாதிரி, இப்ப 234-க்கு 234 ஜெயிக்கிற நேரத்திலே இப்படி தகராறு பண்றீங்களே? போதாக்குறைக்கு ஓட்டுக்குப் பணம் கொடுக்கிறதை தேர்தல் கமிஷன் தடுக்கும்னு குரேஷி சொல்லிட்டுப் போறாரு. ஏன் இப்படி மக்கள் முதுகிலே குத்தற மாதிரி பேசறாரு? மக்கள் பணம் மக்களைச் சென்றடையறது கூட தப்பா? 

மன்மோகன் சிங் : பயப்படாதீங்க. தேர்தல் கமிஷனும் கிட்டத்தட்ட ஸி.பி.ஐ. மாதிரிதான். சொன்னாதான் நடவடிக்கை எடுக்கும். நிறுத்துங்கன்னா நிறுத்திடும். 

சோனியா : அதிருக்கட்டும். தமிழ்நாட்டுலே பிரிவினைவாதக் கட்சி ஒண்ணு, பிரபாகரன் ஃபோட்டோக்களோட மாநாடு நடத்தினதாகக் கேள்விப்பட்டேனே, உண்மையா? எப்படி அனுமதிச்சீங்க? 

கருணாநிதி : அதை சீரியஸா எடுத்துக்காதீங்க. கூட்டணி தொடர்கிறதுன்னு ஒரு வார்த்தை சொல்லுங்க. இப்பவே திருமாவளவனை டெல்லிக்கு வரவழைச்சு மன்னிப்பு கேட்க வெக்கறேன். நான் அனுமதி கொடுத்தாத்தான் தமிழ் உணர்வைக் காட்டுவாரு. அப்படி அவரை வளர்த்துக்கிட்டு வரேன். ஆனா நீங்க இளங்கோவனை அப்படி கட்டுப்பாடா வளர்க்கலையே? 

சோனியா : இளங்கோவன் காங்கிரஸ்லேதானே இருக்காரு? 

கருணாநிதி : காங்கிரஸ்லே இருந்து என்ன பிரயோஜனம்? கூட்டணியிலே இல்லையே? அவரை நீங்க ஒரு வார்த்தை கண்டிச்சா எனக்கு எவ்வளவு ஆறுதலா இருக்கும்? 

மன்மோகன் சிங் : இளங்கோவனைக் கண்டிக்கிறதா, தங்கபாலுவைக் கண்டிக்கிறதான்னு கட்சி முடிவெடுக்கிற வரைக்கும் பொறுமையா இருங்க.

கருணாநிதி : பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, பா.ஜ.க. பேரை மட்டும்தானே எப்படியாவது கெடுக்கணும்னு நாம உறுதிமொழி எடுத்துக்கிட்டோம்! அதை மறந்துட்டீங்களா? அதையும் மீறி அவங்க ஆட்சியைப் பிடிச்சதாலே என்ன ஆச்சு? கழகம் இருக்கும் இடத்திலே மதவாதம் இருக்காதுன்ற அடிப்படையிலே பா.ஜ.க. அமைச்சரவையிலே கழகம் இடம் பிடிச்சது. அந்த அவல நிலை மீண்டும் வரணுமா? 

சோனியா : பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் மூணு வருஷம் இருக்குதே. பா.ஜ.க. ஆட்சியைப் பத்தி இப்பவே ஏன் கவலைப்படணும்? அதுவரைக்கும் ஊழலுக்கு எதிரா யுத்தம் நடத்தலாமே... 

கருணாநிதி : இதான் உங்க முடிவா? ஆரிய திராவிட யுத்தத்தை நீங்களும் ஆரம்பிச்சுட்டீங்களா? எனக்குன்னு இருந்தது ஒரே ஒரு வீடு. அதையும் தானமா கொடுத்துட்டேன். இப்படிப்பட்ட என்னை தலைவனாகக் கொண்ட ராசா ஊழல் செய்திருப்பாரா? 

சோனியா : அதை ஸி.பி.ஐ.தான் முடிவு பண்ணும். அந்த முடிவு சரியில்லைன்னு மத்திய அரசு நினைச்சாத்தான், ஸி.பி.ஐ. டைரக்டரைக் கூப்பிட்டு முடிவை மாத்துவோம். 

கருணாநிதி : ‘மத்த ஊழல் ஃபைல் எல்லாம் காணாமப் போகுது. கழகம் மட்டும் என்ன பாவம் செய்தது’ன்னு கேக்கற உரிமை எனக்கில்லையா? ‘இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற வக்கில்லாத மத்திய அரசுக்கு இனியும் துணைபோக கழகம் தயாராக இல்லை’ன்னு செயற்குழு தீர்மானம் போடறதுக்குள்ளே ஒரு நல்ல முடிவை அறிவிக்கணும்னு கெஞ்சிக் கேட்டுக்கறேன். கை விட்டுராதீங்க. 

சோனியா : என்ன அறிவிக்கணும்? 

கருணாநிதி : வேறே என்ன கேக்கப் போறேன்? ‘கூட்டணி தொடர்கிறது’ன்னு உங்க வாயாலே அறிவிச்சு, அம்மையார் முகத்திலே கரி பூசணும்.

சோனியா : அதை நாங்க எப்படி சொல்ல முடியும்? வீரப்ப மொய்லியோ தங்கபாலுவோதான் சொல்லணும்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

 நினைத்ததை முடிக்கும் நிரா ராடியா! – சத்யா 

நிரா ராடியா என்ற பெண் அரசியல் தரகர் சம்பந்தப்பட்ட டெலிஃபோன் உரையாடல்களில், இதுவரை வெளியாகியுள்ள ஒரு சிறு பகுதியே நாட்டைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்னும் இதுபோல் ஏராளமான உரையாடல் பதிவுகள் வருமான வரித்துறை மற்றும் உள்துறை அமைச்சகத்தின் வசம் இருப்பதாகத் தெரிகிறது. அவற்றில் எத்தகைய பயங்கரத் தகவல்கள் இருக்கின்றனவோ தெரியவில்லை. நமக்கோ விபரீதமாகக் கற்பனை செய்தே பழகி விட்டது. யார் கண்டது? நிரா ராடியாவால் சாதிக்க முடியாத விஷயமே இல்லை எனும்போது, வெளிவராத உரையாடல்கள் இப்படிக் கூட இருக்கலாம். 

“ஹாய், நிரா...! ஹவ் ஆர் யூ?” 

“வெரி ஃபைன் விஜய். டோன்ட் ஒர்ரி. உங்க சப்ஜெக்ட்டை மத்திய மந்திரிசபை மீட்டிங் அஜென்டாவிலே சேர்த்தாச்சு. இன்னைக்கு ஓகே ஆயிடும்.” 

“தேங்க்யூ! ஏன்னா, இன்டஸ்ட்ரியலிஸ்ட் மேத்தா இந்த டீலை கண்டிப்பா முடிக்கணும்ன்றாரு.... எழுபதாயிரம் கோடி ரூபாய் விஷயமாச்சே. மந்திரிசபையிலே எதிர்ப்பு எதுவும் வருமோன்னு கவலைப்படறாரு.” 

“எதுவும் வராது. நான் பேசிட்டேன்.” 

“பிரதமர்...?” 

“பிரதமரைப் பத்திக் கவலைப்பட வேண்டியதில்லை. அவரை வெளிநாட்டுக்குப் போகச் சொன்னாப் போயிடுவாரு. அதானே அவர் வேலை? அவர் எந்த நாட்டுக்குப் போனா நமக்கு நல்லது? ஸ்வீடன்?” 

“நோ... ஜெர்மனி பெட்டர்னு நினைக்கிறேன்.” 

“ஓ.கே., பி.எம். ப்ரோக்ராமை வாங்கி, ஜெர்மனின்னு மாத்திடறேன். மாத்திட்டு, இன்னைக்கே உங்களுக்கு ஃபோன் பண்ணிடறேன்.” 

“தேங்யூ! அப்புறம் என் ஃப்ரண்ட் ப்ரகாஷுக்கு மினிஸ்டர் போஸ்ட் கேட்டிருந்தேனே?” 

“அதையும் முடிச்சாச்சு. பட்... நீங்க கேட்ட இலாகா இப்பவே கிடைக்காது. த்ரி மன்த்ஸ் வெயிட் பண்ணா கண்டிப்பா வாங்கித் தரேன்.” 

“த்ரீ மன்த்ஸா? அவ்வளவு நாள் மந்திரி பதவி இல்லாம சும்மா இருக்க அவன் தயாராயில்லை. மந்திரி ஆயிட்டு சும்மா இருக்கணும்னு அவசரப்படறான். அதனாலே, அந்தோணி இடத்துக்கு கிருஷ்ணாவைப் போட்டு, சிதம்பரம் இடத்துக்கு பிரணாப்பைப் போட்டு, பவாருக்கு பதிலா கமல்நாத்தைப் போட்டு, மொய்லியை ஸ்டேட் மினிஸ்டராக்கி, அழகிரியை மதுரைக்கு அனுப்பிட்டா...” 

“தட்ஸ் குட் ஐடியா! எனக்கே இது தோணலை. இன்னைக்கே பேசிடறேன். ஹவ் ஈஸ் திலக்?” 

“அவர் என் பக்கத்திலேயே இருக்காரு. அவர் விஷயம் என்ன ஆச்சு?”

“பாரத ரத்னா அவார்ட்தானே? கமிட்டியிலே பேசிட்டேன். ஆனா அதுக்கு பல சோர்ஸிலேர்ந்து ப்ரஷர். எப்படி சமாளிக்கப் போறேன்னே தெரியலை. நிறைய லாபி பண்ண வேண்டியிருக்குது. திலக்கை அவசரத்துக்கு பத்மவிபூஷண் வாங்கிக்கச் சொல்லுங்களேன். அப்படின்னா இன்னைக்கே கன்ஃபர்ம் பண்ணிடறேன்.” 

“தேங்யூ நிரா! ஸீ யூ!” 

“நிரா, திஸ் ஈஸ் தீபக்.” 

“ஹாய் தீபக். எவ்ரிதிங் ஃபைன். ஹவ் ஈஸ் ஜகதீஷ்?” 

“ஃபைன். ஜகதீஷ் விஷயமாத்தான் ஃபோன் பண்றேன். அவர் கேட்ட ஆளுக்கு சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ் அப்பாயின்ட்மென்ட் ஏன் டிலே ஆகுதுன்னு ரொம்ப வருத்தப்படறாரு.” 

“அதைப் பத்தி உங்க ஸ்டேட் மினிஸ்டர் கிட்டே நேத்தே எக்ஸ்ப்ளெய்ன் பண்ணிட்டேன். அவர் கூட ரொம்ப கேட்டுக்கிட்டாரு. அதுக்காகத்தான் நான் இன்னைக்கு டெல்லி போறேன். அனேகமா இன்னைக்கு பேசி முடிச்சுடுவேன்.” 

“இந்த சின்ன விஷயத்துக்கு டெல்லி போகணுமா? ஃபோன்லேயே பேசி முடிக்கலாமே?”

“பட் யூ நோ... ஸி.பி.ஐ. டைரக்டர் போஸ்டிங் மாதிரியோ, அட்வகேட் ஜெனரல் அப்பாயின்ட்மென்ட் மாதிரியோ இதை ஈஸியா முடிக்க முடியாது. பல பேரை நான் கன்வின்ஸ் பண்ண வேண்டியிருக்குது.” 

“ஐ நோ யுவர் டிஃபிகல்டி. பட், மினிஸ்டரோட வழக்குகள் அடுத்த மாசம் சுப்ரீம் கோர்ட்லே ஃபைனல் ஹியரிங்குக்கு வருது. எத்தனை கோடி செலவானாலும் பரவாயில்லை, அதுக்குள்ளே ஜட்ஜை மாத்திடணும்னு ஆசைப்படறாரு.” 

“நியாயமான ஆசைதான். ஆனா, ரெண்டு நாளா நான் ரொம்ப பிஸி. எடியூரப்பாவுக்கும் கவர்னருக்கும் சரிப்பட்டு வரலை. அதனாலே ஆல் இந்தியா லெவல்லே கவர்னர்கள் மாற்றம் இருக்கலாம். அந்த வேலையையும் நான் கவனிக்க வேண்டியிருக்குது.” 

“ஐ.ஸீ.” 

“பஞ்சாப் கவர்னரை ஜார்கண்டுக்கு மாத்தி, அஸ்ஸாம் கவர்னரை ஆந்திராவுக்கு அனுப்பி, ஆந்திரா கவர்னரை கட்சி வேலைக்கு அனுப்பிட்டா, நம்ம டார்கெட் அச்சீவ் ஆயிடும். அது விஷயமாத்தான் இன்னைக்குப் போப்போறேன்.” 

“இந்த அமர்க்களத்திலே ஜனாதிபதி தேர்தலை மறந்துடப் போறீங்க. நம்ம ஆள்தான் அடுத்த ஜனாதிபதியா வரணும்.” 

“அந்த விஷயமா ஏற்கெனவே பேசிட்டேன். பட், எந்த விஷயத்திலேயும் தலையிடாம, என்ன நடந்தாலும் கோபமே வராத, சொல்ற வேலையை மட்டும் செய்ய தகுதியான ஆள் கிடைக்கணுமேன்னு கவலைப்படறாங்க. அனேகமா, நம்ம பிரதமரையே நெக்ஸ்ட் ப்ரஸிடென்டா ஆக்கிட்டா என்னன்னு ஒரு மூவ் இருக்குது.”

“ஓ மை காட்... அப்ப நம்ம ஆள் ஜனாதிபதி ஆக முடியாதா? அதை நம்பி ஏராளமான ப்ரபோஸல்ஸ் பெண்டிங்லே வெச்சிருக்கேனே?” 

“டோன்ட் வொர்ரி. ஐ வில் டேக் கேர். பைபை.” 


“ஈஸ் இட் நிரா?” 

“யா, வசந்த்! ஹவ் ஆர் யூ? நான் ஒபாமா கிட்டே பேசிட்டேன். எவ்ரிதிங் ஓகே.” 

“தேங்யூ. உங்களைத்தான் நம்பியிருக்கேன். ஒபாமா என்ன சொன்னார்?” 

“புடினை மாத்தணும்னு சொன்னார். அஃப்கோர்ஸ், அது அவங்க பிரச்சனை. நேத்துத்தான் புடின் என் கிட்டே ஒரு மணி நேரம் ஃபோன்லே பேசிட்டிருந்தாரு. ஒபாமா என் கிட்டே சொன்ன விஷயம் எதையும் நான் புடின் கிட்டே சொல்லலை. புடின் சொன்னதையும் ஒபாமா கிட்டே சொல்லலை.” 

“வெரிகுட். டிப்ளமேடிக் அப்ரோச். நம்ம விஷயத்தைப் பேசுவோம். ஏழு அக்ரிமென்ட்லே இந்தியா கையெழுத்துப் போடணும். அதுலே ஒண்ணும் பிரச்சனை இருக்காதே?”

“நிச்சயமா இருக்காது. அதெல்லாம் ஒபாமா பாத்துக்குவாரு. நான் ஹிலாரி க்ளிண்டன் கிட்டே கூட எக்ஸ்ப்ளெய்ன் பண்ணிட்டேன்.” 

“அப்ப கவலையே இல்லை. கையெழுத்தாயிடும். பின்லேடனுக்கு இந்த விஷயம் தெரியுமா?” 

“அவருக்கு எப்படி தெரியும்?நான்தான் சொன்னேன். எல்லாத்தையும் பொறுமையா கேட்டுக்கிட்டு, ‘அக்ரிமென்ட்லே இந்தியா மட்டும்தான் கையெழுத்துப் போடணும். அமெரிக்கா போடக் கூடாதுன்னாரு.” 

“ஐயையோ....” 

“பட் நான் அவரை சமாதானப்படுத்தி சம்மதிக்க வெச்சேன். என் ப்ளான் என்னன்னு கிறிஸ்துமஸுக்கு அப்புறம்தான் சொல்ல முடியும்னு சொல்லியிருக்காரு. எனிவே, ஜர்தாரி மூலமா பின்லேடனை சரிக்கட்டிட முடியும். நீங்க தைரியமா இருங்க.” 

“தேங்யூ நிரா. இந்த அக்ரிமென்டுக்கு கம்யூனிஸ்ட்கள் எதிர்ப்பு தெரிவிப்பாங்களா?” 

“சீனாவே ஓகே சொன்ன பிறகு கம்யூனிஸ்ட்கள் எப்படி பிரச்சனை பண்ணுவாங்க? பா.ஜ.க.தான் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரலாம். அப்பதான் எல்லாம் அப்செட்டாயிடும்.”

“அடடா, அதை எப்படி தடுக்கிறது?” 

“பா.ஜ.க. எம்.பி.க்கள் 65 பேர் கூட பேசிட்டேன். நம்பிக்கை இல்லாத் தீர்மானம் வரும்போது வெளியே போயிடுவாங்க. இதுக்கு 6500 கோடி செலவாகும். இந்தச் செலவை பில்கேட்ஸ் ஏத்துக்கறதாக என் கிட்டே ப்ராமிஸ் பண்ணியிருக்காரு.” 

“அப்பாடா! பெரிய பிரச்சனை தீர்ந்தது. இன்னும் ஒரே ஒரு சின்ன ஹெல்ப் நிரா. உங்களாலே முடியுமா?” 

“என்ன, ஸ்விஸ் பேங்க் பிரச்சனைதானே? அவங்களோடயும் பேசிட்டேன். எந்த விஷயமும் வெளியே வராதுன்னு இந்தியன் கவர்ன்மென்ட்டுக்கு லெட்டர் எழுதப் போறதாச் சொல்லிட்டாங்க.” 

“அது நாம எதிர்பார்த்ததுதானே! நான் அதைக் கேக்கலை.” 

“வேறே என்ன? எதுவாயிருந்தாலும் கேளுங்க. யார் கிட்டே பேசணும்னாலும் பேசிடறேன்.” 

“வந்து... என் ஃப்ரெண்ட் ஒருத்தர் தமிழ்நாட்டுலே காங்கிரஸ்காரரா இருக்காரு. தி.மு.க. ஆட்சியிலே பங்கு வேணும்னு ஆசைப்படறார். வாங்கித் தர முடியுமா?”

“ஓ... வெரி ஸாரி! அது மட்டும் என்னாலே முடியாது.”



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

அழைக்கின்றார், அழைக்கின்றார் கலைஞர்! – சத்யா 

(இப்ப‌டியெல்லாம் ந‌ட‌ந்த‌ பின் தான் கூட்ட‌ணி முடிவு செய்ய‌ப் ப‌ட்ட‌தோ என்று ந‌ம்மை யோசிக்க‌ வைக்கும் ச‌த்யாவின் க‌ட்டுரை!)

‘தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணியில் எந்தெந்த கட்சிகளைச் சேர்த்துக் கொள்வது என்பது குறித்து இரு கட்சிகளும் கலந்து பேசி முடிவெடுக்கும்’ என்று கருணாநிதி கூறியிருக்கிறார். இக்கூட்டணிக்கு வர விரும்புவதாக எந்தக் கட்சியும் தெரிவிக்காத நிலையில், மற்றக் கட்சிகளை கூட்டணியில் சேர்ப்பது குறித்து இவ்விரு கட்சித் தலைவர்கள் கலந்தாலோசிப்பதற்கு என்ன இருக்கிறது என்று நமக்குப் புரியவில்லை. ஒருவேளை இந்த ரீதியில் ஆலோசிப்பார்களா? 

கருணாநிதி : இந்த முறை நாம அமைக்கிற கூட்டணி மிகப் பெரிய அளவிலே இருக்கணும். அ.தி.மு.க.வைத் தவிர மற்ற எல்லா கட்சிகளும் நம்ம பக்கம் வந்துட்டாக் கூட நல்லதுதான். 

தங்கபாலு : என் கருத்தும் அதுதாங்க. இந்த நிமிஷம் வரைக்கும் நான்தான் எங்க கட்சித் தலைவரா இருக்கேன்னு நினைக்கிறேன். அதனாலே, எந்தெந்த கட்சிகளைச் சேர்த்துக்கலாம்னு நாம இப்பவே பேசி முடிவு பண்ணிடுவோம். அவங்க சேரும்போது சேரட்டும். 

கருணாநிதி : காங்கிரஸ்லே இருக்கிற மற்ற தலைவர்களோட கருத்து என்னன்னு கேக்க வேண்டாம்ன்றீங்களா? 

தங்கபாலு : எங்க கட்சித் தலைவர்கள் எல்லோரும் ஒரு மனதா ஏத்துக்கற கருத்துன்னு ஒண்ணு இல்லவே இல்லை. நீங்க சொல்றதை சோனியா ஏத்துப்பாங்க. சோனியா சொல்றதை நாங்க எல்லோரும் ஏத்துப்போம். அதாவது உங்க கருத்துதான் நம்ம கூட்டணி கருத்து. 

கருணாநிதி : ரொம்ப நன்றி. ‘காங்கிரஸில் முக்கியப் பதவியில் உள்ள துரோகி, எட்டப்பன், கருங்காலி’ன்னு எல்லாம் இளங்கோவன் உங்களை கண்டபடி தாக்கியிருக்காரே. அதை நினைச்சாத்தான் கவலையா இருக்குது. நீங்க எல்லாரும் ஓரளவுக்காவது ஒற்றுமையாத்தானே இருக்கீங்க? உங்க கட்சி, முழுசா நம்ம கூட்டணியிலே இருக்குமா? 

தங்கபாலு : இளங்கோவன் இப்படித்தான் உள் கட்சி ரகசியங்களை வெளியே பேசிடறாரு. ஆனா, என் பேரைச் சொல்லாமத்தான் திட்டியிருக்காரு. அதே நாகரீகத்தோட நானும் காதுலே விழாத மாதிரி இருந்துட்டேன். நீங்களும் கண்டுக்காதீங்க. விஷயத்துக்கு வாங்க. கூட்டணியிலே யாரை சேர்த்துக்கலாம்னு நினைக்கிறீங்க? 

கருணாநிதி : இப்போ நம்ம கூட்டணியிலே தம்பி திருமாவளவன் மட்டும்தான் இருக்காரு. அது போதாது... 

தங்கபாலு : திருமாவளவன் நம்ம கூட்டணியிலேதான் இருக்காருன்னு நிச்சயமா தெரியுமா? ஒரு குத்துமதிப்பா சொல்றீங்கன்னு நினைக்கிறேன். ஏன்னா, இலங்கைப் பிரச்சனையிலே அவர் மத்திய அரசு மேலே ரொம்ப கோபமா இருக்கிற மாதிரி தோணிச்சு... 

கருணாநிதி : புதுசா கோபம் வந்தாத்தான், கூட்டணியை விட்டுப் போயிடுவாரோன்னு நாம பயப்படணும். அவர்தான் ஆரம்பத்திலேர்ந்தே கோபமா இருக்காரே! அதனாலே, அவர் கூட்டணியை விட்டுப் போக மாட்டார். தமிழ் உணர்விலே அவரும் என்னை மாதிரிதான். 

தங்கபாலு : உங்களை மாதிரி, தமிழ் உணர்வுன்னா பரவாயில்லை. வேண்டாத சமயங்களிலே அடங்கியிருக்கும். சமயத்திலே வைகோ, நெடுமாறன் மாதிரியும் தமிழ் உணர்வைக் காட்டிடறாரே. அதான் சந்தேகமாயிருந்தது. 

கருணாநிதி : மேற்கொண்டு ஒண்ணு ரெண்டு தொகுதியைக் கொடுத்துத்தான் அவருடைய தமிழ் உணர்வை என் கட்டுப்பாட்டுலே வெச்சுக்கணும். அதை நான் பாத்துக்கறேன். 

தங்கபாலு : உங்க திறமை மேலே எனக்கு முழு நம்பிக்கை இருக்குதுங்க. தலித் அதிகாரி மீது நடவடிக்கை; தலித் துணைவேந்தர் மீது தாக்குதல்னு செய்தி வந்தப்போ கூட அவர் சாதுவாத்தானே இருந்தார்? தலித்தைவிட உங்க மேலேதான் அவருக்குப் பாசம்னு இதுலேர்ந்தே புரியலையா? இருந்தாலும், ‘ராமதாஸ் தி.மு.க. அணிக்கு வர வேண்டும்’னு ஏன் அவர் சொல்றாரு? நம்ம கூட்டணி மேலே அவருக்கு என்ன அவ்வளவு கோபம்? கூட்டணியை விட்டுப் போயிடுவாரா? 

கருணாநிதி : கூட்டணியை விட்டுப் போனா சும்மா விட்டுருவேனா? தேசப் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கிற மாதிரி பேசறவங்களை வேடிக்கைப் பார்க்க என்னாலே முடியாது. அப்படிப்பட்டவங்களுக்கு சீமான் கதிதான் ஏற்படும். எப்ப மொழி உணர்வைக் காட்டணும், எப்ப தேச உணர்வைக் காட்டணும்னு எனக்குத் தெரியாதா? மருத்துவர் ஐயாவை நம்ம கூட்டணிக்கு வர வெக்கணும்ன்ற நல்ல எண்ணத்திலேதான் பேசியிருப்பாருன்னு நினைக்கிறேன்.

தங்கபாலு : ராமதாஸ் நம்ம கூட்டணிக்கு வருவாரா? டாஸ்மாக் கடைகளை அடித்து நொறுக்குவோம்னு சமீபத்திலே கூட பேசியிருக்காரே? 

கருணாநிதி : கூட்டணியிலே சேர்த்துக்காத கோபத்திலேதான் அப்படிப் பேசறாரு. கூட்டணிக்கு வந்ததும் ‘மது விலக்கை படிப்படியாக அமல்படுத்த வேண்டும்; டாஸ்மாக் வேலை நேரத்தை ஐந்து நிமிடங்களாவது குறைக்க வேண்டும்’னு மரியாதையாத்தான் கேப்பாரு. 

தங்கபாலு : மது விலக்கை அமல்படுத்தறதெல்லாம் நடக்கிற காரியமா? 

கருணாநிதி : ஏன் முடியாது? பூரண மதுவிலக்குதானே அண்ணாவுடைய லட்சியம்? ‘இனி ஒவ்வொரு நாளும் அடையாள மதுவிலக்காக ஐந்து நிமிடங்கள் டாஸ்மாக் கடைகளில் ஒரு கதவுதான் திறந்திருக்கும். மருத்துவரின் கோரிக்கைப்படி மற்றொரு கதவு மூடப்படும்’னு அறிவிச்சுட்டாப்போதுமே. 

தங்கபாலு : தமிழக அரசு 200 கோடி செலவு பண்ணி இப்பவே ஜாதி அடிப்படையில் சென்ஸஸ் எடுக்கணும்னு வலியுறுத்தறாரே? அவரை எப்படி சமாதானப்படுத்துவீங்க? 

கருணாநிதி : அது ஒரு பெரிய விஷயமில்லை. குருவுக்கு எதிரான வழக்குகளை வாபஸ் வாங்கினதும், ‘பா.ம.க. நிழல் சென்ஸஸ் எடுத்து கலைஞரிடம் வழங்கும். மத்திய அரசை ஜாதி அடிப்படையில் சென்ஸஸ் எடுக்க வைத்த கலைஞருக்கு பா.ம.க. தனி சிம்மாசனம் போடும்’னு மாத்திக்குவாரு. 

தங்கபாலு : ஆனா, அவர் கேக்கற அளவு தொகுதிகளை ஒதுக்கறது கஷ்டமாச்சே!

கருணாநிதி : அது கூட பரவாயில்லை. தேர்தலுக்கு முன்னாலேயே, மைனாரிட்டி தி.மு.க.வா இருந்து தொலைக்கவும் சம்மதிச்சுத் தொலைப்பேன். ஆனா, கழகத்திலேயே ராமதாஸுக்கு பெரிய அளவுலே எதிர்ப்பு இருக்குதேன்னுதான் யோசிக்கிறேன். 

தங்கபாலு : அப்ப அவரைக் கூப்பிட வேண்டாம்னு நினைக்கிறீங்களா? 

கருணாநிதி : அவரா வந்தா, ‘பா.ம.க. இருக்க வேண்டிய இடமே இதுதான்’னு சொல்லி வரவேற்கலாம். வர மறுத்தா, குருவுக்கு எதிரான நடவடிக்கையை துரிதப்படுத்தி, அன்புமணி செய்த ஊழல்களை அம்பலப்படுத்திடறேன். 

தங்கபாலு : ஆனா, அவர் விஜயகாந்த் கூடவே சேர்ந்து மூணாவது அணி அமைச்சுடுவாரோன்னு கூட ஒரு பேச்சு இருக்குது. அப்படி நடந்து, அ.தி.மு.க. அணிக்கும், விஜயகாந்த் அணிக்கும்தான் போட்டின்ற மாதிரி நிலைமை மாறிடக் கூடாது. அதையும் பாத்துக்கணும். 

கருணாநிதி : அதுக்கு முன்னாலே விஜயகாந்தையே நாம இழுத்துட வேண்டியதுதான். தம்பி விஜயகாந்த் மீது எனக்கு எப்போதுமே தனிப் பாசம் உண்டுன்னு சொல்லி பாக்கறேன். 

தங்கபாலு : அவர் முப்பது நாற்பது ஸீட்டுக்கு கூட்டணி சேர மாட்டேன்னு சொல்றாரே...! 41-லேர்ந்துதான் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கணும் போல இருக்குதே... 

கருணாநிதி : அவர் தி.மு.க.வை விமர்சிக்கிற அளவுக்கு அ.தி.மு.க.வை விமர்சிக்க மறுக்கிற விஷமத்தனத்தைப் பாத்தா, அவரே அம்மையாருக்கு விலை போயிடுவாரோன்னு எனக்கும் சந்தேகமாத்தான் இருக்குது. அப்படி நடந்தா, நடிகர்கள் நாடாள வந்ததுதான் ஜனநாயகம் சீரழிந்ததற்குக் காரணம்னு பேசிடறேன்.

தங்கபாலு : விஜயகாந்த் அ.தி.மு.க. அணிக்கு போனா, ஸீட் பிரச்சனை வரும்ங்க. வைகோ கோவிச்சுக்கிட்டு நம்ம பக்கம் வந்தாலும் வரலாம்.

கருணாநிதி : அப்போ, ‘அம்மையாரால் ‘பொடா’வில் அடைக்கப்பட்ட தம்பி வைகோவை கட்டிப் பிடித்து கண்ணீர் உகுத்து அவரை விடுவித்தவனே நான்தான்’னு ஒரு கல்யாண வீட்டுலே வாழ்த்திப் பேசிடறேன். 

தங்கபாலு : ஆனா காங்கிரஸ் மேலே வைகோ ரொம்ப கோபமா இருக்காரே. இந்தக் கூட்டணி அவருக்கு சரிப்படாதே... 

கருணாநிதி : அவரும் அம்மையாரை விட்டு வர மறுத்தா, ‘ராஜீவ் காந்திக்கு நான் சொன்ன யோசனையை செயல்படுத்துவதற்கு முன்னால், திருட்டுத்தனமாக இங்கிருந்து ஒருவர் இலங்கைக்குச் சென்றதுதான் தமிழினத்தின் அழிவுக்குக் காரணமாகி விட்டது’ன்னு அறிக்கை விடறேன். 

தங்கபாலு : வைகோ அளவுக்கு கம்யூனிஸ்ட்கள் ஜெயலலிதாவுக்கு பயப்படறதில்லை. நீங்க அன்போட கூப்பிட்டா கம்யூனிஸ்ட்கள் நம்ம பக்கம் வர சான்ஸ் இருக்குது. 

கருணாநிதி : ‘அண்ணாவையும் பெரியாரையும் சந்திக்காமல் இருந்திருந்தால், இந்நேரம் நான் கேரளாவிலோ, மேற்கு வங்கத்திலோ முதல்வராக இருந்திருப்பேன். ஜீவானந்தமும் நம்பூதிரிபாடும் தி.மு.க.விலேயே சேர விரும்பினார்கள்’னு பேசி கம்யூனிஸ்ட்களை மயக்கிட முடியும்னு நினைக்கிறேன். 

தங்கபாலு : ஆனா, தேசிய அளவிலே காங்கிரஸும் கம்யூனிஸ்ட்களும் கடைப்பிடிக்கிற எதிர்ப்பு மனோபாவத்தைப் பார்த்தா, அதுக்கும் வழியிருக்கிற மாதிரி தெரியலையே! 

கருணாநிதி : அப்படின்னா, மாவோயிஸ்ட்கள்தான் கம்யூனிஸ்ட்கள் என்ற முகமூடியுடன் திரிகிறார்கள்னு முரசொலியிலே கவிதை எழுதிடறேன். என்ன அதுக்குள்ளே புறப்பட்டுட்டீங்க? 

தங்கபாலு : டெல்லியிலேர்ந்து சிதம்பரம் ஃபோன் பண்றாருங்க. தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி பத்தி விவாதிக்க ராகுல் தலைமையிலே மீட்டிங் நடக்குதாம். நான் வரேன்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

விக்கி லீக்ஸ் வெளியிடாத விபரீதங்கள் – சத்யா 

‘நமது நாட்டில் நடைபெறும் அரசியல் மோசடிகள் குறித்து, நம்மைவிட அமெரிக்கர்கள் அதிகமாகத் தெரிந்து வைத்திருக்கிறார்களோ என்று நினைக்கும் வகையில், விக்கி லீக்ஸ் இணைய தளம் பல்வேறு அரசியல் தகவல்களை அவ்வப்போது வெளியிட்டு, பீதியைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. போகிற போக்கைப் பார்த்தால், விரைவில் நமது பாராளுமன்றத்தில் இப்படியும் விவாதம் நடக்கலாம். 

படம்

சுஷ்மா ஸ்வராஜ் : தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸுக்கு 63 இடம் தர மறுத்து, மத்திய அரசுக்கான ஆதரவை தி.மு.க. வாபஸ் வாங்கிக் கொண்டபோது, நடந்தது என்ன என்று விக்கி லீக்ஸ் வெளியிட்டிருக்கிறது. ‘63 இடம் தர மறுத்தால், தி.மு.க. தலைவரின் குடும்பப் பெண்களை இன்றே ஸி.பி.ஐ. கைது செய்யும்’ என்று காங்கிரஸின் மிக முக்கியத் தலைவர், அழகிரியிடம் மிரட்டியுள்ளார். இத்தகவல் கருணாநிதிக்குத் தெரிவிக்கப்பட்டதும், ‘சரி. கொடுத்து தொலைக்கிறேன்’ என்று அவர் கூறியதாக விக்கி லீக்ஸ் கூறியுள்ளது. இதற்கு அரசு விளக்கம் அளிக்க வேண்டும். 

பிரணாப் முகர்ஜி : விக்கி லீக்ஸ் பற்றி விவாதிக்கும் இடம் இது அல்ல. பாபர் மசூதி இடிப்புக்கு அத்வானி காலம் கடந்து வருத்தம் தெரிவித்ததை மறைப்பதற்காக, பா.ஜ.க. விக்கி லீக்ஸை கையில் எடுத்துக் கொண்டிருப்பது வெட்கக் கேடு. 

அத்வானி : விக்கி லீக்ஸ் குற்றச்சாட்டுக்கு அரசு மௌனம் சாதிப்பது அதிர்ச்சி அளிக்கிறது. 2008-ல் அரசைக் காப்பாற்றிக் கொள்ள, 190 கோடி ரூபாயை பிரதமரிடமே கொடுத்ததாக, இரு முக்கிய தொழிலதிபர்கள் அமெரிக்க தூதரக அதிகாரிகளிடம் கூறியுள்ளனர். அந்தப் பணத்தை 19 எம்.பி.க்களுக்கு சோனியா முன்னிலையில் பிரதமரே வினியோகம் செய்துள்ளார் என்கிறது விக்கி லீக்ஸ். பிரதமர் பதில் சொல்ல வேண்டும். 

கபில்சிபல் : ‘எனக்குத் தெரிந்து எதுவும் நடக்கவில்லை’ என்று அப்போதே பிரதமர் விளக்கம் அளித்து விட்டார். அதை விக்கி லீக்ஸ் மறைத்திருப்பதற்கு பா.ஜ.க.வின் தூண்டுதல்தான் காரணம். பா.ஜ.க.வுக்கும் விக்கி லீக்ஸுக்கும் இடையேயான ரகசிய உறவு பற்றி விசாரணை நடத்தப்படும். 

அருண்ஜெட்லி : ‘ஊழல் கண்காணிப்பு ஆணையர் பதவிக்கு தாமஸைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லா விட்டால் பிரதமரை மாற்ற வேண்டியிருக்கும். நேர்மை முக்கியமா, பிரதமர் பதவி முக்கியமா என்று சீக்கிரம் முடிவெடுங்கள்’ என்று சோனியா பிரதமரை மிரட்டியதாகவும் விக்கி லீக்ஸ் அம்பலப்படுத்தியிருக்கிறது. இதற்கு பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும். 

மன்மோகன் சிங் : தாமஸ் நியமனம் போன்ற தவறுகளை இனி யாரும் செய்யக் கூடாது என்பதுதான் மத்திய அரசின் நிலை. முடிந்து போன பிரச்சனையை பா.ஜ.க. மீண்டும் துவக்குவது அதன் தீய நோக்கத்தைக் காட்டுகிறது. அதனால்தான் டெல்லி கார்ப்பரேஷன் தேர்தலில் பா.ஜ.க. தோல்வியுற்றது. 

யெச்சூரி : ஸ்விஸ் வங்கியில் கறுப்புப் பணத்தைப் பதுக்கியுள்ள இந்திய கறுப்புப் பண முதலைகளுக்கு சோனியா வீட்டில் விருந்து நடத்தப்பட்டுள்ளது. இத்தகவலை அமெரிக்கத் தூதரகம் வாஷிங்டனுக்கு அனுப்பியுள்ளதை விக்கி லீக்ஸ் கண்டுபிடித்துள்ளது. நாடு எங்கே போகிறது? 

அபிஷேக் சிங்வி : பிரதமரின் நேர்மை உலகுக்கே தெரியும். ஆனால், கம்யூனிஸ்ட்களுக்கு மட்டும் தெரியவில்லை. அதனால்தான் 2009 தேர்தலில் மக்கள் அவர்கள் பலத்தை 59-லிருந்து 24-ஆகக் குறைத்திருக்கின்றனர். இனியும் இடதுசாரிகள் திருந்தா விட்டால், கேரளாவிலும் மேற்கு வங்கத்திலும் ஆட்சியை இழப்பார்கள். 

குருதாஸ் குப்தா : 2009 தேர்தல் முடிவுகளை ஹிலாரி க்ளிண்டன் துல்லியமாக கணித்து 2008-லேயே கூறியுள்ளார். தேர்தல் முடிவும் அதே போல் அமைந்திருப்பதை விக்கி லீக்ஸ் சுட்டிக்காட்டியிருக்கிறது. இந்தியத் தேர்தல்களை நடத்துவது அமெரிக்காவா, இந்தியத் தேர்தல் ஆணையமா? 

பிரணாப் : அறுபது கோடி மக்கள் வாக்களித்து நடக்கும் தேர்தலை கொச்சைப்படுத்துவதை ஏற்க முடியாது. விக்கி லீக்ஸ் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்காவே கூறியிருக்கிறது. அப்படியிருந்தும், இடதுசாரிகள் பா.ஜ.க.வுடன் இணைந்து அரசை எதிர்ப்பதிலிருந்தே அவர்களது மதச்சார்பின்மை முகமூடி கிழிந்து விட்டது புரிகிறது. 

அத்வானி : விக்கி லீக்ஸ் கூறுவது எதையும் அரசால் மறுக்க முடியவில்லை. ‘என் வழக்கை இன்னும் வாபஸ் வாங்காதது ஏன்?’ என்று க்வாட்ரோக்கி, ஸி.பி.ஐ. அதிகாரிகளை அர்ஜென்டினாவுக்கு வரவழைத்து சோனியா முன்னிலையில் கண்டித்ததையும், ஸி.பி.ஐ. அதிகாரிகள் தலைகுனிந்து நின்றதையும் விக்கி லீக்ஸ் வெளியிட்டுள்ளது. ‘எனக்கு எதுவும் தெரியாது’ என்று பிரதமர் க்வாட்ரோக்கியிடம் பவ்யமாகக் கூறியதும் புகைப்பட ஆதாரத்துடன் வெளியாகியுள்ளது. 

மன்மோகன் சிங் : ஒரு மனிதரை அளவுக்கு மேல் துன்புறுத்தக் கூடாது. நான் க்வாட்ரோக்கி பற்றி கூறவில்லை. என்னைப் பற்றிக் கூறுகிறேன். எனவே எதிர்க் கட்சிகள் விக்கி லீக்ஸ் விவகாரத்தை விட்டுவிட்டு, விலைவாசி ஏன் குறையவில்லை என்று அரசுடன் சேர்ந்து கவலைப்பட வேண்டும். இல்லாவிட்டால் நடைபெறும் ஐந்து மாநிலத் தேர்தல்களில் பா.ஜ.க.வை மக்கள் நிராகரிப்பார்கள். 

சுஷ்மா : சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதி ஒருவர் ஸ்விஸ் வங்கியில் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்திருப்பதாக விக்கி லீக்ஸ் கூறுகிறது. இந்தப் பணத்தை மீட்டாலே இந்தியாவில் விலைவாசியைக் குறைக்க முடியும். 

கபில்சிபல் : ஸ்விஸ் பேங்கில் இந்தியர்கள் யாருக்கும் ஒரு ரூபாய் கூட இல்லை. விக்கி லீக்ஸ் என்று ஒரு இணையதளம் இருப்பதாகக் கூறப்படுவதே எதிர்க் கட்சிகளின் கற்பனை. அமெரிக்கா என்ற ஒரு நாடு இருப்பதற்கும் எந்த ஆதாரமும் இல்லை. 

யெச்சூரி : தி.மு.க. ஆட்சியில் பங்கு தர கருணாநிதி மறுத்ததால்தான், தினகரன் பத்திரிகை எரிப்பு வழக்கில் ஸி.பி.ஐ. அப்பீல் செய்துள்ளதாக டி.ஆர். பாலுவிடம் அகமது படேல் கூறியதை விக்கி லீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது. தேர்தலுக்குப் பிறகும் பங்கு தர தி.மு.க. மறுத்தால், ஸி.பி.ஐ. நடவடிக்கைகள் தீவிரமடையும் என்று தி.மு.க. மிரட்டப்பட்டதாகவும் அச்செய்தி கூறுகிறது. இதுபற்றி அரசு விளக்கம் தர வேண்டும்.

பிரணாப் : தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி தமிழகத்தில் தொடர்ந்து வெற்றி பெறுவதிலிருந்தே, உறுப்பினரின் குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்பது நிரூபணமாகி விட்டது. அச்சுதானந்தன் – பினராயி விஜயன் மோதலை மறைக்க உறுப்பினர் செய்யும் தந்திரம் பலிக்காது. 

லாலு பிரசாத் : மம்தா பானர்ஜி ரயில்வே நிதியை மேற்கு வங்கத் தேர்தல் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்துவதாக விக்கி லீக்ஸ் கூறியிருப்பதை இந்த அரசு மறைப்பது ஏன்? காங்கிரஸுக்கு அதிக இடங்கள் பெறுவதற்காகத்தான் மம்தாவின் ஊழலை இந்த அரசு மூடி மறைக்கிறது. 

மம்தா : லாலுஜியின் மீது எனக்கிருக்கும் மரியாதை காரணமாகத்தான் அவரது ஆட்சிக் காலத்தில், ராப்ரி தேவியின் பிறந்தநாள் பரிசாக 28 ரயில்களை அவர் பரிசாக அளித்ததை நான் பெரிதுபடுத்தவில்லை. அந்த விஷயத்தை விக்கி லீக்ஸ் வெளியிட்டு விட்டதால், ஊழல் குற்றவாளிகளைத் தப்பவிட மாட்டேன். 

யெச்சூரி : 2ஜி ஒதுக்கீடு யார் யாருக்கு செய்யப்பட வேண்டும் என்று தமிழக முதல்வரின் குடும்பப் பெண் ஒருவர் ராசாவுக்கு உத்தரவிட்ட விவகாரம் விக்கி லீக்ஸ் மூலம் வெளிவந்துள்ளது. முதல்வரின் குடும்ப உறுப்பினர்களுக்கு லண்டனில் 13 மருத்துவக் கல்லூரிகள் இருப்பதாகவும், சிங்கப்பூரில் 18 ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் இருப்பதாகவும் விக்கி லீக்ஸ் செய்திகள் கூறுகின்றன. இதுபற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும். 

அருண்ஜெட்லி : ‘காஷ்மீரில் தீவிரவாதத்தைச் சற்றுக் குறைத்துக் கொண்டால், வரும் சுதந்திர நாளில் பிரதமரே வந்து பாகிஸ்தான் கொடியை ஏற்றுவார். அதற்குப் பிறகு காஷ்மீரில் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்’ என்று பிரதமரின் சார்பாக பிரிவினைவாதிகளுடன் பேரம் பேசப்பட்டதையும் விக்கி லீக்ஸ் வெளியிட்டிருக்கிறது. இதற்கு என்ன சொல்கிறீர்கள்? 

சுஷ்மா : இரண்டாம் முறையாக ராசா தொலைத்தொடர்பு இலாகா அமைச்சர் பொறுப்பை ஏற்பதற்கு முன்பாக, கருணாநிதியே டெல்லியில், நிரா ராடியாவைச் சந்தித்து, ‘எப்படியாவது ராசாவை அமைச்சராக்கி விடுங்கள். இல்லாவிட்டால் நான் குடும்பத்தில் கடுமையான எதிர்ப்புகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். நானும் பிரதமரும் உங்களைத்தான் நம்பியிருக்கிறோம்’ என்று கூறி கண் கலங்கியதையும் விக்கி லீக்ஸ் வெளியிட்டிருக்கிறது. இதுதான் மத்திய அரசு நடக்கிற லட்சணமா? 

அத்வானி : அதுமட்டுமல்ல, ஹசன் அலியின் முதுகில் பிரதமர் தட்டிக் கொடுத்ததையும் விக்கி லீக்ஸ் புகைப்பட ஆதாரத்துடன்... 

கபில்சிபல் : பிரதமர் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவர். எனவே, அவரது நேர்மையை நாட்டு மக்களுக்கு மீண்டும் நிரூபிக்கும் வகையில், விக்கி லீக்ஸ் பற்றி கூறப்படும் செய்திகள் குறித்து விசாரிக்க ஒரு நபர் கமிஷன் அமைக்கப்படும். யாரையும் விசாரிக்காமல், எந்த ஆவணத்தையும் பார்க்காமல், நாளைக்கே அறிக்கை வெளியிட அவருக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்படும். 

(பின்குறிப்பு : ஒவ்வொரு கருத்தையடுத்தும் ‘கூச்சல், ரகளை, சபை ஒத்திவைப்பு’ என்று சேர்த்துப் படிக்கவும்.)



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

 இப்படியும் தேர்தல் அறிக்கை வெளியிடலாம் – சத்யா 

தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைகளில், ஒன்றையொன்று மிஞ்சும் வகையில் இலவச அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன. மக்களின் ஆதரவைப் பெற இலவச அறிவிப்புகள்தான் ஒரே வழி என்ற நிலையை எட்டி விட்ட பிறகு, கஞ்சத்தனம் என்ன வேண்டியிருக்கிறது! அடுத்த தேர்தலுக்காவது, எந்தக் கட்சியாவது துணிந்து இப்படி அறிவித்து, மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஆட்சியைப் பிடிக்கட்டும்! 

*அனைவருக்கும் தினம் இரண்டு லிட்டர் இலவச பெட்ரோல் வழங்கப்படும். ஸ்கூட்டர், கார் இல்லாதவர்களுக்கும் இலவச பெட்ரோல் உண்டு. இத்திட்டத்திற்குத் தேவையான பெட்ரோலை, எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து மாநில அரசே நேரடியாகக் கொள்முதல் செய்யும். 

படம்

* புது மணத் தம்பதிகளின் ஒரு வருட ஹனிமூன் செலவை, அரசே முழுவதுமாக ஏற்கும். அறுபதாம் கல்யாணம் செய்து கொள்பவர்களும் இத்திட்டத்தின் மூலம் பயன் அடையலாம். 

* அரசு ஊழியர்கள் வாரம் ஆறு நாள் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம். பென்ஷன் வாங்குபவர்களுக்கு, மூன்று வருடங்களுக்கு ஒரு முறை ப்ரமோஷன் உண்டு. குழந்தை பெறும் பெண் ஊழியர்களுக்கு அடுத்த குழந்தை பிறக்கும் வரை, சம்பளத்துடன் கூடிய பேறு கால விடுப்பு வழங்கப்படும். 

படம்

* வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் குடும்பங்களுக்கு, அனைத்து வெளிநாடுகளையும் கண்டுகளிக்கும் வகையில், இலவச விமான பாஸ் வழங்கப்படும். 

 பெண்கள், தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் எத்தனை முறை வேண்டுமானாலும் கட்டணமின்றி திரைப்படங்களைப் பார்க்கலாம். இதனால் பெண்களின் பொதுஅறிவு வளரும். 

* தமிழில் பெயர் வைக்கப்படும் திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்களின் சம்பளத் தொகையை அரசே வழங்கும். இதன் மூலம் விரைவான தமிழ் வளர்ச்சி உறுதிப்படுத்தப்படும். 

* ரேஷன் கடைகளில், மண்ணெண்ணெய்க்குப் பதிலாக ஏ.ஸி. இயந்திரம், அரிசிக்குப் பதிலாக வாஷிங் மெஷின், கோதுமைக்குப் பதிலாக ஃப்ரிட்ஜ், மைதா மாவுக்கு பதிலாக ஒரு பீரோ மற்றும் இரண்டு கட்டில் வாங்கிக் கொள்ளலாம். ஒவ்வொரு மாதமும் இந்தச் சலுகையைப் பெறலாம். போலி ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களும் இதன் மூலம் பயன் பெற முடியும். 

* கள்ளச் சாராயத்தை ஒழிப்பதற்காக, டாஸ்மாக் ஊழியர்கள் வீடு தேடி வந்து குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ‘இலவச க்வார்ட்டர்’ வழங்குவார்கள். இதனால், தெருவிலும் ப்ளாட்பாரங்களிலும் குடித்து விட்டு விழுந்து கிடக்கும் அவல நிலைக்கு ஒரு முடிவு கட்டப்பட்டு, வீட்டுக்குள்ளேயே விழுந்து கிடக்கும் வாய்ப்பு உருவாக்கப்படுகிறது. 

படம்

* டிரைவிங் லைசென்ஸ் இல்லாதவர்களுக்கும் இனி ஸ்கூட்டர், கார் ஓட்ட அனுமதி வழங்கப்படும். இதன் மூலம், ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் கொடுக்கப்படும் ஆயிரக்கணக்கான ரூபாய் லஞ்சம் பொதுமக்களுக்கு மிச்சமாகிறது. 

* ஆதரவற்ற மூத்த குடிமக்கள் திருமணம் செய்து கொள்ள விரும்பினால், அரசுச் செலவில் திருமணம் செய்து வைக்கப்படும். திருமணப் பரிசாக அரை கிலோ எடையுள்ள தங்கத் தாலி வழங்கப்படும். அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் ப்ளஸ் டூ வரை, அரசு பள்ளிக்கூடங்களில் இலவசமாகக் கல்வி கற்கலாம். 

மூன்று வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தலா ஒரு செல்ஃபோன் இலவசமாக வழங்கப்படும். செல்ஃபோன் கட்டணத்தையும் அரசே ஏற்கும். செல்ஃபோன் காணாமல் போனால், உடனே அரசுக்கு மனுச் செய்து புதிய செல்ஃபோன் பெற்றுக் கொள்ளலாம். 

படம்

* 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் எந்த ஹோட்டலிலும் எப்போது வேண்டுமானாலும் நுழைந்து இலவசமாகச் சாப்பிடலாம். இதற்குரிய தொகையை ஹோட்டல் உரிமையாளர்களுக்கு அரசே நேரடியாகச் செலுத்தி விடும். 

* வேலையற்ற வாலிபர்கள் வேலை தேடுவதற்கு வசதியாக இலவச ஆட்டோத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். எந்த ஆட்டோவிலும் ஏறி தமிழகம் முழுவதும் வேலை தேடியபடியே சுற்றலாம். இதற்காக, ‘தமிழக அரசு ஆட்டோ போக்குவரத்துக் கழகம்’ உருவாக்கப்படும். 

படம்

* இளைய தலைமுறையின் நலனுக்காக, ப்ளஸ்-டூ வரை படிக்கும் அனைத்து மாணவ – மாணவியர்க்கும் எல்லா பாடங்களிலும் அரசே இலவசமாக முப்பது மார்க் வழங்கும். மேற்கொண்டு ஐந்து மார்க் கிடைக்கிற அளவுக்குப் படித்தாலே போதும். தவிர, மாணவர்களுக்கு மட்டுமின்றி, அவர்களது பெற்றோருக்கும் ஆண்டுக்கு இரண்டு டஜன் சீருடை வழங்கப்படும். 

 செயின் பறிப்பு, முகமூடிக்கொள்ளை போன்ற கிரிமினல் சம்பவங்களால் பாதிக்கப்படுவோர்க்கு, அவர்களது இழப்பைக் கணக்கிட்டு, நியாய வட்டியுடன் அரசே திரும்ப வழங்கி விடும். இதனால், தாதாக்கள் கிரிமினல்கள் பயமின்றி மக்கள் வாழலாம். 

படம்

* குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் தலா அரை டஜன் எருமை மாடுகளும், ஒரு டஜன் கோழியும் இலவசமாக வழங்கப்படும். இதனால், முட்டை, பால் செலவு மக்களுக்கு மிச்சமாகிறது. 

* அனைத்து குடும்பங்களுக்கும் தினம் ஒரு மூட்டை அரிசி இலவசம். உபரியாக இருக்கும் அரிசியை, கடத்தல்காரர்களுக்கு மக்களே விற்று விடலாம். 

பின்குறிப்பு: இத்திட்டங்களை நிறைவேற்ற, அரசுக்கு ஆண்டொன்றுக்கு 30,000 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படலாம். அவ்வளவுதான்.அதனால் என்ன? அரசுப் பணம் தண்டமானாலும் தேர்தலில் வென்றுவிட முடியுமே! அதுதானே முக்கியம்!



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

 ஸி.பி.ஐ.யின் கண்டுபிடிப்புகள் – சத்யா 

2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக, ஸி.பி.ஐ. சுமார் ஒரு வருடத்திற்கு முன்பே வழக்குப் பதிவு செய்தது. மத்திய அமைச்சர் ராசா ராஜினாமா செய்த பதினைந்து நாட்களுக்குப் பிறகு – சுப்ரீம் கோர்ட்டின் கண்டனங்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் விமர்சனங்கள் எழுந்ததையடுத்து – அவரது இடங்களில் சோதனையும் நடத்தியுள்ளது. இவ்வளவு காலஅவகாசம் கொடுத்த பிறகு மேற்கொள்ளப்பட்ட ஸி.பி.ஐ. சோதனை, எவ்வளவு பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நமக்கு புரியவில்லை. ஆனால், நிகழ்ச்சிகள் போகிற போக்கைப் பார்க்கும்போது, ஸி.பி.ஐ. கண்டுபிடித்தவை இந்த வகையில் இருந்திருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றே தோன்றுகிறது. 

படம்

(ஸி.பி.ஐ. அதிகாரிகள், பரபரப்பாக ராசாவின் வீட்டிற்குள் நுழைகிறார்கள்). 

ஸி.பி.ஐ. அதிகாரி : எல்லா கதவுகளையும் மூடுங்க. ஃபோனை டிஸ்கனெக்ட் பண்ணுங்க. யாரும் வெளியே போகக் கூடாது. யாரும் உள்ளேயும் வரக் கூடாது. ஜன்னலையும் சாத்துங்க. 

ராசா : அதெல்லாம் இருக்கட்டும் ஸார். ஏன் இவ்வளவு லேட்? நீங்க சோதனை போடறதுக்கு வசதியா, எல்லாத்தையும் காலி பண்ணிட்டு தயாரா வெயிட் பண்றேன். இவ்வளவு மெதுவா வரீங்களே! நான் மற்ற வேலைகளைக் கவனிக்க வேண்டாமா? 

ஸி.பி.ஐ. : உத்தரவு கிடைச்சவுடனே ஒரு நிமிஷம் கூட வீணாக்காம வந்துட்டோம். எங்க கடமைகளிலே குறுக்கிடாம, நீங்க ஒரு ஓரமா உட்காருங்க. நாங்க கேக்கற கேள்விகளுக்கு மட்டும் பதில் சொன்னாப் போதும். 

ராசா : எதுவாயிருந்தாலும், பிரதமரைக் கேட்டுக்குங்க. அவருக்கு எல்லாம் தெரியும். கலைஞரைக் கேக்காதீங்க. அவருக்கு எதுவும் தெரியாது.

ஸி.பி.ஐ. : முதல்லே பீரோ சாவியை குடுங்க. சோதனை போடணும்.

ராசா : பீரோ திறந்துதான் ஸார் இருக்குது. சும்மாதான் சாத்தியிருக்கேன். பீரோவிலே ஏதாவது இருந்தாதானே பூட்டறதுக்கு? காலியாத்தான் இருக்குது. பாத்துக்குங்க. மற்ற இடங்களிலே ஏதாவது கிடைக்குதான்னு பாருங்க, பாவம் ரொம்ப தூரத்திலேர்ந்து வந்திருக்கீங்க. 

ஸி.பி.ஐ. : இதென்ன பேப்பர்? +1.76-ன்னு போட்டிருக்குதே? உண்மையை மறைக்காமச் சொல்லுங்க. 1.76 லட்சம் கோடி ரூபாய் வருமானம்னு கோட் வேர்ட்ஸ்லே குறிச்சிருக்கீங்க. அப்படித்தானே? 

ராசா : உளறாதீங்க ஸார். அது கண் டெஸ்ட் பண்ணப்போ, டாக்டர் எழுதிக் கொடுத்த பிரிஸ்கிரிப்ஷன். +1.76-ன்றது ஸ்பெக்ஸ் அளவு. ஸ்பெக்ட்ரம் அளவு இல்லை. 

ஸி.பி.ஐ. : அப்ப இதென்ன, 2835-ன்னு போட்டிருக்குதே? 2835 கோடி ரூபாய் ஒப்பந்தமா? ஏ.எம். ஏஜென்ஸிங்கறது யாருடைய கம்பெனி? உங்க பினாமி கம்பெனியா? 

ராசா : இல்லைங்க... 

ஸி.பி.ஐ. : கம்பெனியே இல்லையா? வெறும் லெட்டர் பேட்தானா? அதுக்கே சேங்ஷன் கொடுத்துட்டீங்களா? டாகுமென்ட்ஸ் எல்லாம் பாத்தீங்களா, இல்லையா? 

ராசா : ஸார், தயவு செஞ்சு அவசரப்படாதீங்க. அது கேஸ் கம்பெனி. என் மனைவி கேஸ் சிலிண்டருக்கு புக் பண்ணியிருக்கா. 2835-ன்றது எங்க கன்ஸ்யூமர் நம்பர். 

ஸி.பி.ஐ. : அதை ஏன் முதல்லேயே சொல்லலை? நாங்க துருவித் துருவி கேட்ட பிறகுதான் சொல்வீங்களா? எங்க கிட்டே எந்த உண்மையையும் மறைக்கக்கூடாது. இந்த துண்டுச் சீட்டுலே ‘டாடா 899’-ன்னு எழுதியிருக்குதே. 899 கோடி ரூபாய் டாடாகிட்டேயிருந்து வாங்கின பணமா? அது என்ன டீலிங்? 

ராசா : அது டாடா இல்லைங்க. 

ஸி.பி.ஐ. : பின்னே, அம்பானியா? டாடா பேர்லே அம்பானி கம்பெனி நடத்தறாரா? 

ராசா : உங்க சந்தேகத்துக்கு ஒரு அளவே இல்லையா? அது டாடா இல்லை. பாடா. சரியாப் பாருங்க. பாடா செருப்பு 899 ரூபாய்க்கு வாங்கினதுக்கான பில். 

ஸி.பி.ஐ. : எதுவாயிருந்தாலும் கேள்வி கேட்க வேண்டியது எங்க கடமை. நாங்க சோதனை போடற முறை கொஞ்சம் வித்தியாசமாத்தான் இருக்கும். ஹா... பாக்கெட் டயரி கிடைச்சுடுச்சு... 

ராசா : ஸார்... ஸார்... அது பர்ஸனல். அதை மட்டும் பாக்காதீங்க. 

ஸி.பி.ஐ. : கையை விடுங்க. எங்க கண்ணுலேயிருந்து எதுவும் தப்பிக்காது. 18-ஆம் தேதி முதல்வர் – 1 3/4. இதுக்கு என்ன அர்த்தம்? 18-ஆம் தேதி ஸி.எம்.முக்கு எதுக்காக ஒண்ணே முக்கால் கோடி ரூபாய் கொடுத்தீங்க? 

ராசா : அது பணம் இல்லை ஸார். 

ஸி.பி.ஐ. : பின்னே? கோல்டா? 3/4 கிலோவா, டன்னா? 

ராசா : ஏன் ஸார் இப்படி உயிர் எடுக்கறீங்க? 18-ஆம் தேதி மத்தியானம் ஒண்ணே முக்கால் மணிக்குத்தான் முதல்வரைப் பார்க்க அப்பாயின்ட்மென்ட் கிடைச்சது. அதைத்தான் குறிச்சு வெச்சிருந்தேன். ‘பெண் சிங்கம்’ ப்ரிவியூ ஷோ அன்னைக்குத்தான் நடந்தது. எந்த மந்திரியை வேணும்னாலும் கேட்டுப் பாருங்க. 

ஸி.பி.ஐ. : ...ம். மாட்டிக்கிட்டீங்க. ‘கொள்ளை அடிப்பது ஒரு கலை’ன்னு எழுதி வெச்சிருக்கீங்களே. என்ன இது? ஸ்பெக்ட்ரம் விவகாரத்துக்கும் இதுக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா? 

ராசா : சத்தியமா இல்லை ஸார். அது கலைஞரோட சினிமா டயலாக். நான் அவரோட ஃபேன். ‘கோவில்கள் கொடியவர்களின் கூடாரமாக இருக்கக் கூடாது’ன்னு கூட எழுதியிருக்கேன். பாருங்க. பொழுது போகாதப்போ, அப்பப்ப கலைஞர் வசனத்தை எழுதி, படிச்சு பார்ப்பேன். அவ்வளவுதான். 

ஸி.பி.ஐ. : சரி, இதுக்காவது சரியான பதிலைச் சொல்லுங்க. இந்த பேப்பர்லே க.ப.-4; மு.ப.-5; து.ப.-6; பி.ப.-2-ன்னெல்லாம் எழுதியிருக்கீங்களே? 

ராசா : ஸார்... அது வந்து... 

ஸி.பி.ஐ. : நீங்க சொல்ல மாட்டீங்க. நானே சொல்றேன். க.ப.ன்னா கலைஞர் பங்கு. ஓகே? மு.ப.ன்னா முக்கியமானவங்க பங்கு. அதாவது, பேர் குறிக்கக் கூடாதுன்னு, சூசகமா முக்கியமானவங்கன்னு குறிச்சிருக்கீங்க. து.ப.ன்னா துபாய்லே யாருக்கோ பங்கு. பி.ப.ன்னா என்னவா இருக்கும்? ஹா, பிரதமர் பங்கா? 

ராசா : ஸார் தயவு செஞ்சு நிறுத்தறீங்களா? 

ஸி.பி.ஐ. : அப்ப நீங்களே உண்மையைச் சொல்லிடுங்க. 

ராசா : கடலைப் பருப்பு, முந்திரிப் பருப்பு, துவரம் பருப்பு, பிஸ்தாப் பருப்புன்னு மளிகை சாமான் லிஸ்ட் ஸார் அது. வீட்டு வேலைக்காரன் சுருக்கமா எழுதி வெச்சிருக்கான். 

ஸி.பி.ஐ. : சரி, இதுக்கு பதில் சொல்லுங்க. ஹவாலா 1800 கோடின்னு பில் இருக்குதே. ஹவாலா பணத்தை எங்கே டெபாஸிட் பண்ணீங்க? ஸ்விஸ் பாங்க்கா? 

ராசா : ஏன் ஸார், இப்படி படுத்தறீங்க? ஸ்பெல்லிங்கைச் சரியாப் பாருங்க. அது ஹவாலா இல்லை, ஹல்வா. கலைஞர் பிறந்தநாளுக்காக 18 கே.ஜி. ஹல்வா வாங்கின பில். 

ஸி.பி.ஐ. : அதென்ன முதுகுக்குப் பின்னாலே மறைக்கறீங்க? என்ன அது? 

ராசா : ப்ளீஸ் வேண்டாம் ஸார். விட்டுருங்க. இதைப் பாக்காதீங்க. வெளியே தெரிஞ்சா அசிங்கம். 

ஸி.பி.ஐ. : விஷயம் இவ்வளவு தூரம் முத்தின பிறகு வெளியே தெரியாம இருக்குமா? கொண்டாங்க அதை. என்ன இது, புரியலையே? 60, 35, 36, 44... யாருக்கு இப்படியெல்லாம் கோடிகளை பங்கு பிரிச்சு கொடுத்திருக்கீங்க? உங்களுக்கு தொலைத்தொடர்பு இலாகா வாங்கிக் கொடுத்தவங்களுக்கான ரேட்டா இது? நிரா ராடியாவுக்கு அறுபது கோடி, புரியுது. மத்த பத்திரிகைகாரங்க யாரு? 

ராசா : ஐயோ, அது கொடுத்தது இல்லை. வாங்கினது. 

ஸி.பி.ஐ. : அப்படி வாங்க வழிக்கு. யார் கிட்டே கமிஷன் வாங்கினீங்க? முறைகேடா ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வாங்கின கம்பெனிகள் உங்களுக்குக் கொடுத்த கமிஷனா இது? 

ராசா : அது பணமே இல்லைங்க. அது என்னோட ப்ளஸ்-டூ ப்ராக்ரஸ் ரிப்போர்ட். நான் வாங்கின மார்க், பசங்க கண்ணுலே பட்டுடக் கூடாதுன்னு மறைச்சு வெச்சிருந்தேன். அதை நீங்க பாத்துட்டீங்க. 

ஸி.பி.ஐ. : இதென்ன, இந்த நோட்டு மேலே 2-ஜின்னு எழுதியிருக்குதே? கரெக்ட். இதேதான். இவ்வளவு நேரம் சோதனை போட்டு, கிடைக்காமப் போகுமா? இதுலே என்ன, லெட்டர் மயமா இருக்குதே... 

ராசா : அது முக்கியமில்லை ஸார். 

ஸி.பி.ஐ. : முக்கியம் இல்லைன்னு நீங்க சொல்லக் கூடாது. நாங்க சொல்லணும். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு கேட்டு, கம்பெனிகள் உங்களுக்கு தனிப்பட்ட முறையிலே எழுதின லெட்டர்ஸ் இதுலேதானே இருக்குது? எவ்வளவு கமிஷன் தர்றதாக குறிச்சிருக்காங்க? 

ராசா : அதுலே எப்படி ஸார் குறிச்சிருக்கும்? அது என் பேத்தியோட ஹோம் ஒர்க் நோட். லெட்டர் எழுதறது எப்படின்னு ஸ்கூல்லே சொல்லிக் கொடுத்திருக்காங்க. 

ஸி.பி.ஐ. : யாரை ஏமாத்தப் பாக்கறீங்க? நோட்டு மேலே 2-ஜின்னு எழுதியிருக்குதே? 

ராசா : ரெண்டாம் க்ளாஸ், ஜி- செக்ஷனை வேறே எப்படி எழுதுவாங்க? ஸார் ஸார்... அதை ஏன் எடுக்கறீங்க...? 

ஸி.பி.ஐ. : அப்பாடா...! ஒரு வழியா டைரியைக் கண்டுபிடிச்சுட்டோம். கட்டு கட்டா டைரிகள். எல்லாத்தையும் அப்படியே பறிமுதல் பண்றோம். இந்த டைரியிலே என்னென்ன ரகசியங்கள் இருக்குதுன்னு பார்த்துட்டு தேவைப்பட்டா, விசாரணைக்கு கூப்பிடுவோம். ஓகே...? 

ராசா : அதுலே எப்படி ஸார் ரகசியம் இருக்கும்? அதெல்லாம் அடுத்த வருஷத்து டைரிகள். ஒண்ணே ஒண்ணு எடுத்துக்குங்க. மத்தவங்களுக்கும் கொடுக்கணும்லே?



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

கலைஞரை விமர்சிக்கிறார், கலைஞர் – சத்யா 

எப்போதுமே முதல்வர் கருணாநிதியின் வாதங்களை விட எதிர்க் கட்சித் தலைவர் கருணாநிதியின் வாதங்களில் வலுவும், சத்தும் அதிகம் என்பது வரலாறு கூறும் உண்மை. கடந்த ஐந்தாண்டு கால தி.மு.க. ஆட்சி குறித்து, ஒரு எதிர்க் கட்சித் தலைவராக கருணாநிதி விமர்சித்தால் எப்படி இருக்கும்? இதோ, தி.மு.க. ஆட்சிக்கு எதிராக கலைஞர் பாணி கேள்விக் கணைகள்... 


‘என் உயிரினும் மேலான உடன் பிறப்புகளே...! இன்றைய தினம் ஆறாவது முறையாகவும் ஆளத் துடிக்கும் ஆட்சியாளர்கள் ஆற்றிட்ட சாதனைகள்தான் என்ன? எந்த முகத்தோடு அவர்கள் நம்மிடம் வாக்கு கேட்டு வருகிறார்கள்? – என்று சிந்தித்துப் பார்க்க வேண்டிய கடமையும் உரிமையும் நமக்கிருக்கிறது. 

விண்ணை முட்டும் விலைவாசி உயர்வின் விபரீதத்தைத் தாங்க முடியாமல் விழி பிதுங்கிக் கிடக்கிறது தமிழகம். எதிர்காலம் என்னாகுமோ என்று ஏங்கித் தவித்து கொண்டிருக்கிறார்கள் ஏதுமறியா ஏழை பாழைகள். ரோம் நகரம் பற்றி எரிந்து கொண்டிருந்தபோது, பிடில் வாசித்துக் கொண்டிருந்த நீரோ மன்னனைப் போல், பாராட்டு விழாக்களிலும் சினிமா நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று பதவி சுகத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறார் முதல்வர். 

விலைவாசி பற்றிக் கேட்டால், வாங்கும் சக்தி அதிகரித்திருக்கிறது என்று வக்கணையாக வாய்ஜாலம் காட்டுகிறார் வக்கற்ற முதல்வர். வாங்கும் சக்தி அதிகரித்திருந்தால் வகை வகையாக இலவசங்களை அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன...? அவர்களே வாங்கிக் கொள்வார்களே! 

ஒரு ரூபாய்க்கு அரிசி போடுகிறேன் என்று ஓயாமல் ஒப்பாரி வைக்கிறார். அரிசியை மட்டுமே சாப்பிட்டு அரைகுறையாக உயிர் வாழ, அறிவற்ற கோழிக் கூட்டமா தமிழினம்? மற்றப் பொருட்களின் விலையைக் குறைக்க என்ன செய்தது இந்த விவஸ்தை கெட்ட அரசு என்று வினவ மாட்டார்களா மக்கள்? கடத்தல்காரர்களைத் தவிர வேறு எவருக்குமே பயன்படாத ஒரு திட்டத்தை, சாதனை என்று சண்டித்தனமாகச் சாதிக்கும் சர்க்காரைத்தான் நாம் பெற்றிருக்கிறோம். 

ஏடுகளைப் புரட்டிட்டால் எங்கெங்கும் வன்முறை. நாள் தவறாமல் வீடு புகுந்து கொள்ளை. நங்கைகள் நகை அணிந்து நடமாட முடியவில்லை. சந்தி சிரிக்கிறது சட்டம் – ஒழுங்கு நிலை. ஐந்தாண்டுகள் என்னவெல்லாம் நடந்திட்டது இந்த ஆட்சியில் என்று எண்ணிப் பார்த்திட்டால், ஏமாற்றம்தான் ஏற்படுகிறது. ஏன் என்று கேட்க ஆளில்லாத ஏகாதிபத்யம். 

சட்டக் கல்லூரியில் பட்டப் பகலில் பலர் சேர்ந்து ஒரு மாணவனை அடித்து உதைத்திட்ட அவலம் அரங்கேற்றப்பட்டது இந்த அராஜக ஆட்சியில்தான். கண்டித்து தண்டிக்க வேண்டிய காவல்துறையினர், கை கட்டி கண்களை மூடிக் கொண்டிருந்த காட்சியை தமிழகம் மறந்து விடவில்லை.

உயர் நீதிமன்ற வளாகத்தில் கூட என்ன நடந்திட்டது? காவல் துறையினரும் வழக்கறிஞர்களும் கற்களை வீசி காட்டுத்தனத்தைக் காட்டிக் கொண்ட கேவலம் நடைபெற்றதும் இந்த கேடு கெட்ட ஆட்சியில்தானே? 

அது மட்டுமா? பட்டப்பகலில் ஒரு பத்திரிகை அலுவலகமே பலரும் பதறும் வகையில் தீயவர்களால் தீக்கிரையாக்கப்பட்டது. மூன்று முத்தான உயிர்கள் சாகடிக்கப்பட்டு சாம்பலான சரித்திரம் மறந்து விடக் கூடியதா? இதைத்தான் நல்லாட்சி என்று நாணமில்லாமல் கூறுகிறது நாணயமற்ற நயவஞ்சக அரசு. மத்தியிலும் மாநிலத்திலும் தனது மகன்களையும் மகளையுமே மாண்புமிகுக்களாக்கி விட்டு, மக்களுக்காக ஆட்சி நடத்துகிறேன் என்று மாய்மாலம் செய்பவர்களை அடையாளம் கண்டு, ஆட்சியிலிருந்து அப்புறப்படுத்த வேண்டிய அவசரமும் அவசியமும் அனைவருக்கும் இருக்கிறது. 

ஆட்சியில் மட்டும்தானா இந்த அடாவடி ஆக்கிரமிப்பு? இன்றைய தினம் திரையுலகினரே கூட திடுக்கிட்டுத் திகைக்கக் கூடிய அளவுக்கு, கோடிகளைக் கொண்டு கோடம்பாக்கத்திலும் கோலோச்சிக் கொண்டிருக்கும் கொடுமையை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள், ஆணவம் பிடித்த ஆட்சியாளர்களின் அருமைப் பேரன்மார்கள். கேட்டால், ஏ.வி.எம். குடும்பத்தினர் திரையுலகில் இல்லையா என்று ஏட்டிக்குப் போட்டியாக ஏகடியம் செய்கிறார் முதல்வர். அவர்களெல்லாம் உன்னைப்போல் ஆட்சி அதிகாரத்தில் இருந்து கொண்டா திரையுலகை ஆக்கிரமித்தார்கள்? 

தமிழகத்திற்காக எந்த உரிமையையாவது போராடிப் பெற்றதுண்டா இந்த பொறுப்பற்ற அரசு? எதற்கெடுத்தாலும் கடிதமும் நினைவூட்டும் தந்தியும் அனுப்புவதற்கா மக்கள் உன்னை ஆட்சியில் அமர்த்தினார்கள்? பதவிக்காகவும், கூட்டணியைக் காப்பாற்றிக் கொள்ளவும் டெல்லி பட்டிணத்துக்கே பதைபதைத்துக் கொண்டு பறந்து செல்கிறவர்கள், இலங்கைப் பிரச்சனையிலும் காவிரிப் பிரச்சனையிலும் மட்டும் பகல் வேஷம் போட்டு பசப்புவது ஏன்? 

தமிழில் பெயர் வைத்தால் திரைப்படங்களுக்கு வரி விலக்கு என்று ஒரு கோமாளித் திட்டமும் இந்த கோணங்கிகளின் ஆட்சியில்தான் அறிவிக்கப்பட்டது. இப்படிப் பெயர் வைத்தால், தமிழ் வளர்ந்து விடுமா? கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைப்பது போல, அரசு பணத்தை வாரி இறைக்க நீ யார்? உனக்கு என்ன உரிமை? சரி, அந்த திட்டமாவது ஒழுங்காக நிறைவேற்றப்பட்டதா என்றால், அதுவுமில்லை. ‘தமிழில் பெயர் வைக்காமலேயே வரி விலக்கு கேட்பது முறையா? கூடுமான வரையிலாவது தமிழ் பெயர் வைக்கக் கூடாதா?’ என்று கெஞ்சல் வேறு. கேட்பாரற்ற ஆட்சி என்பதால்தானே இப்படிப்பட்ட கேலிக்கூத்துகள் நடைபெறுகின்றன? தட்டிக் கேட்க ஆளில்லா விட்டால், தம்பி சண்ட பிரசண்டன் என்பது சரியாகத்தானே இருக்கிறது? 

ஒரே துறையில் சற்றொப்ப 1.76 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு மோசடி என்று ஆதாரங்களுடன் கண்டுபிடித்திருக்கிறது ஸி.ஏ.ஜி.. கண்டதுண்டா, இப்படியொரு இமாலய ஊழலை? கேட்டதுண்டா இப்படியொரு கடலளவு கொள்ளையை? உன்னைப் பாதுகாக்கும் கூட்டணிக் கட்சியால் கூட உன்னைக் காப்பாற்ற முடியவில்லையே. தலித் மீது குற்றம்சாட்டுவதா என்ற தகிடுதத்தம் தகர்த்தெறியப்பட்டு விட்டதே? யார் அப்பன் வீட்டுப் பணம்? குப்பன் சுப்பனுடைய பணத்தில் குபேரர்களாகி விட்ட கூட்டம், ஊழலுக்கு நான் நெருப்பு என்று உதார் விடும்போது கூட, உணர்ச்சியற்று ஊமைகளாக இருக்கத்தான் வேண்டுமா நாம்? அண்ணா அப்படியா நம்மை வளர்த்தார்? 

அவ்வளவு ஏன்? அரசு கேபிள் திட்டம் என்னவாயிற்று? அவசரக்காரர்களால் ஆர்ப்பாட்டமாக அறிவிக்கப்பட்ட திட்டம், இப்போது அடக்கமாகச் செயல்பட வேண்டிய அவல நிலைக்கு ஆளாக்கப்பட்டது ஏன்? திட்டம் செயல்படுவது உண்மை யென்றால், அதன் மூலம் அரசுக்கு வந்த வருவாய் எவ்வளவு? ஏன் சொல்ல மறுக்கிறது அரசு? வாயில் என்ன கொழுக்கட்டையா? உன் குடும்பத்திற்கு தாரை வார்க்க அரசு கேபிள் திட்டம்தான் கிடைத்ததா? 

எதிர்க் கட்சித் தலைவரைப் போல, ‘மணல் கடத்தலுக்கு முற்றுப் புள்ளி வைப்பேன்; மின்வெட்டை சரி செய்வேன்’ என்று மீசை முறுக்குகிறார் முதல்வர். இது வரை உன் ஆட்சிதானே நடந்தது? அப்போதே ஏன் செய்யவில்லை? ஆட்சி என்ற பெயரில் அவலங்களை அணி வகுக்கச் செய்து விட்டு, ‘நன்றியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்’ என்று நாக்கு தடித்துக் கேட்பவர்களுக்கு, நாடாளும் உரிமையை வழங்க தமிழர்கள் இளிச்சவாயர்களா? 

குடும்பத்திற்குள்ளேயே அறுநூறு கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டு, மத்தியில் மந்திரி பதவி பெற்ற மாபாதகச் செயலை மங்கையொருத்தி அம்பலப்படுத்திய பிறகும், அதை மாநில அரசு மறுக்காத மர்மம் என்ன? எதற்கெல்லாமோ வழக்குப் போடுவேன் என்று வாய் கிழியப் பேசும் வாய்மையாளர்கள் இதுபற்றி வாய் திறக்காமல், மீண்டும் வாகை சூட ஆசைப்படுவது ஏன்? 

இலட்சக்கணக்கான தமிழர்கள் இரக்கமற்ற இலங்கை அதிபரால் இன்னலுக்கு ஆளாக்கப்பட்டு தங்கள் இன்னுயிரை இழந்து நின்றபோது, உயிர் போகும்வரை உண்ணாவிரதம் என்று கதை விட்டு, கடற்காற்றை அனுபவித்த கல்நெஞ்சக்காரர்தான் இன்றைய தினம் ஓட்டு கேட்டு வருகிறார். நாமாக இருந்திருந்தால் இப்படிப்பட்ட நயவஞ்சக நாடகத்தை நடத்தியிருப்போமா? 

நம்மைப் போல் தமிழ் உணர்வுள்ளவராக இருந்திருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்? தமிழினத்தைக் காப்பாற்றப் பயன்படாத இந்தப் பதவியும் உயிரும் எனக்குத் தேவையில்லை என்று அப்போதே தூக்கியெறிந்திருக்க வேண்டாமா? அதுதானே அண்ணா வழி? இதற்கு முன்பெல்லாம் நாம் அப்படித்தானே செய்தோம்? அதுதானே நம் வரலாறு? ஏன் அப்படிச் செய்யவில்லை இந்த முதல்வர்? அவ்வளவு பதவி வெறி! மக்கள் மாண்டது போதாதா? கோடிகளைச் சேர்த்தது போதாதா என்றுதானே கேட்கத் தோன்றுகிறது...? 

இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய நாள் நெருங்கிவிட்டது. ஆம்! தமிழர்களைத் தொடர்ந்து சூறையாடிக் கொண்டிருக்க, அவர்கள் சூடு சொரணையற்ற சோற்றாலடித்த பிண்டங்கள் அல்ல என்று, நாம் உலகுக்கு உணர்த்த வேண்டிய நாள்தான் ஏப்ரல் 13.’



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

முப்பதே நிமிடங்களில் அரசியல் கற்கலாம்! – சத்யா 

ஓர் இளைஞர் அரசியலைக் கற்றுக் கொள்ளாமல் நல்லபடியாக இருக்கிறாரே என்று பாராட்டுகிற எண்ணமெல்லாம் இல்லை, இந்த மூத்த அரசியல்வாதிகளுக்கு. ‘ராகுல் அரசியலில் இன்னும் குழந்தை. அவர் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது’ என்று அவரை நிதீஷ் குமார், லாலு பிரசாத் யாதவ், மம்தா போன்றோர் உசுப்பிக் கொண்டேயிருக்கிறார்கள். அவர்களுக்கென்ன, ராகுல் மனம் வெறுத்துப் போய், சோனியாவிடமும், மன்மோகன் சிங்கிடமும் அரசியல் கற்றுக் கொள்ள முடிவெடுத்து விட்டால், இப்படியாகி விடுமே என்று நாமல்லவா கவலைப்பட வேண்டியிருக்கிறது! 

படம்

ராகுல் : அம்மா, எனக்கு அரசியலே தெரியலைன்னு எதிர்க் கட்சித் தலைவர்கள் கிண்டல் பண்றாங்க. ‘உடனே அரசியல் கத்துக் கொடுங்க’ன்னு பிரதமர் கிட்டே கேட்டேன். ‘எனக்கென்ன தெரியும்? நானே உங்கம்மா கிட்டேதான் கத்துக்கறேன்’னு சொல்றாரு. 

சோனியா : என்ன, அரசியல் கத்துக்கணுமா? பிரதமரான பிறகு மெதுவா கத்துக்கலாமே. நான் கூட அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவி ஆன பிறகுதானே அரசியல் கத்துக்கிட்டேன்? 

மன்மோகன் சிங் : ராகுலுக்கு நீங்க அரசியல் கத்துக் கொடுக்கிறது ஒருவிதத்திலே எனக்கும் நல்லதுதான். எதிர் காலத்திலே எனக்கே ஏதாவது சந்தேகம் வந்தாக் கூட, உங்க உத்திரவுக்காக வெயிட் பண்ணாம, நானும் அவர் கிட்டேயே கேட்டுத் தெரிஞ்சுப்பேன். 

ராகுல் : அரசியல்னா என்ன? முப்பதே நாளில் அரசியல் கற்றுக் கொள்வது எப்படின்னு புஸ்தகம் இருக்குதா? 

சோனியா : முப்பது நாள் எதுக்கு? முப்பது நிமிஷமே போதும். ஆட்சி நம்ம கையை விட்டுப் போகாம பாத்துக்கணும். நமக்கு வேண்டியவங்க சட்டத்தின் பிடியிலே சிக்கிடக் கூடாது. நம்ம எதிரிகள் தப்பு செஞ்சாலும் செய்யலைன்னாலும், சட்டத்தின் பிடியிலேர்ந்து தப்பிடக் கூடாது. இதுக்காக நாம எடுக்கிற நடவடிக்கைகள்தான் அரசியல். 

மன்மோகன் : நம்முடைய இந்த லட்சியத்துக்கு உதவத்தான் சட்டம், ஸி.பி.ஐ., வருமானவரித்துறை, லஞ்ச ஒழிப்பு ஆணையம், போலீஸ் – எல்லாம் இருக்குது. அந்த அமைப்புகள் எல்லாம் கிட்டத்தட்ட நம்ம தொண்டர்கள் மாதிரிதான். சொல்ற வேலையைக் கரெக்டா செஞ்சுடுவாங்க.

ராகுல் : மக்கள் பிரச்சனைகள்னா என்ன? 

சோனியா : மக்கள் பிரச்சனைகள்னா மக்களோட பிரச்சனைகள். அதை மக்களே பார்த்துப்பாங்க. அரசியல் பிரச்சனைகள்தான் நம்முடைய பிரச்சனைகள். அதைத்தான் நாம கவனிக்கணும். 

ராகுல் : விலைவாசி உயர்வுன்னு அடிக்கடி பேப்பர்லே பாக்கறேன். அதுக்கு என்ன காரணம்? விலை உயர்வை கட்டுப்படுத்த முடியுமா? 

மன்மோகன் : பண வீக்கம் அதிகரிக்காம பாத்துக்கிட்டா, விலை உயர்வைக் கட்டுப்படுத்த முடியும். ஆனா, விலை உயர்வைக் கட்டுப்படுத்தினாத்தான் பணவீக்கம் அதிகரிக்காம பாத்துக்க முடியும். பொருளாதார வளர்ச்சி 8.7 சதவிகிதத்திலேர்ந்து 9.9 சதவிகிதமா உயர்ந்தா, எல்லாம் சரி ஆயிடும். அதை எப்படி உயர்த்தறதுன்னுதான் புரியலை. அதனாலே, விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டியது மாநில அரசுகளோட பொறுப்பு. 

சோனியா : மாநிலத்திலேயும் நம்ம கட்சியே ஆட்சி செஞ்சா, நமக்கு முன்னாலே ஆட்சி செஞ்ச கட்சிதான் பொறுப்பு. 

மன்மோகன் : அதுக்காக நாம பொறுப்பே இல்லாம இருந்துட முடியாது. ‘விலைவாசி உயர்வது கவலை அளிக்கிறது’ன்னு சொல்ல வேண்டிய கடமை மத்திய அமைச்சர்கள் ஒவ்வொருத்தருக்கும் இருக்குது. வாரம் ஒரு அமைச்சர் கவலை தெரிவிச்சா, மக்களுக்கு ஆறுதலா இருக்கும். அப்பப்ப, ‘அடுத்த ஆண்டு விலைவாசி குறையும்’னு நமக்கு நாமே தைரியம் சொல்லிக்கணும். 

சோனியா : இதுதான் விலைவாசி பிரச்சனையை சமாளிக்கிற வழி. அடுத்த பிரச்சனைக்குப் போகலாம்.

ராகுல் : மதச்சார்பின்மைன்னா என்ன? 

சோனியா : சிறுபான்மையினர் ஓட்டு வங்கி, நம்ம கையை விட்டுப் போகாம பாத்துக்கணும். அது தான் மதச்சார்பின்மை. அதனாலேதான் அஃப்ஸல் கருணை மனுவை வருஷக் கணக்கிலே பரிசீலனை பண்ணிக்கிட்டே இருக்கோம். 

ராகுல் : மாவோயிஸ்ட்கள் அடிக்கடி திடீர் தாக்குதல் நடத்தி, பல அப்பாவிகளை கொலை பண்ணிடறாங்களே, ஏன்? 

மன்மோகன் : அதெல்லாம் கொலைதானான்னு சரியாப் புரியலை. ஒரு பக்கம் பார்த்தா, கொலை மாதிரியும் இருக்குது. இன்னொரு பக்கம் பார்த்தா, சமூக – பொருளாதார – அரசியல் பிரச்சனை மாதிரியும் இருக்குது. அதனாலே, மக்கள் திருப்திக்காக அதிர்ச்சி தெரிவிச்சுட்டு, தீவிரவாதிகள் திருப்திக்காக அவங்களைப் பேச்சுவார்த்தைக்கும் கூப்பிடறோம். 

சோனியா : இது ஒண்ணும் பெரிய பிரச்சனை இல்லை. ஒரு தீவிரவாத சம்பவம் நடக்கும்போது, இதுக்கு முன்னாலே நடந்த தீவிரவாதச் சம்பவம் மக்களுக்கு மறந்துடும். கடைசியா நடந்த தீவிரவாதத்துக்கு மட்டும் கொஞ்ச நேரம் கவலைப்பட்டா போதும். 

மன்மோகன் : தற்சமயத்துக்கு பெரிய பிரச்சனைன்னா, இந்த சுப்ரீம் கோர்ட் அப்பப்ப மத்திய அரசைக் கண்டிக்கிறதுதான். ஜனநாயகத்திலே இப்படிப்பட்ட சவால்களை நாம சந்திச்சுத்தான் தீரணும். தப்பிக்க வழி இல்லை. 

ராகுல் : நானும் பேப்பர்லே பார்த்தேன். 2-ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்திலே சுப்ரீம் கோர்ட் மத்திய அரசைக் கண்டிச்சிருக்குதே. அதுக்கு என்ன பதில் சொல்லணும்? 

மன்மோகன் : தயவு செஞ்சு எதைப் பத்தி வேணும்னாலும் கேளுங்க. 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் பத்திக் கேட்டு என் நேர்மையைச் சோதிக்காதீங்க. 

சோனியா : தமிழ்நாட்டிலே கூட்டணி விஷயத்திலே ஒரு முடிவெடுத்த பிறகுதான், 2-ஜி ஸ்பெக்ட்ரம் பிரச்சனையிலே நாம பழைய நிலைப்பாட்டிலேயே இருக்கோமா, மாறியிருக்கோமான்னு நமக்குப் புரியும். நம்ம நிலைப்பாடு நமக்கு புரியற வரைக்கும் அவகாசம் வாங்க வேண்டியதுதான். 

ராகுல் : நமக்குள்ளே பேசிக்கலாமே. ‘எல்லோருக்கும் இதே முறையைப் பின்பற்றுவீர்களா?’ன்னு சுப்ரீம் கோர்ட் கேக்கற கேள்விக்கு ஸி.பி.ஐ. என்ன பதில் சொல்லும்? 

மன்மோகன் : ஸி.பி.ஐ.க்கு என்ன தெரியும், பாவம்? நாம என்ன சொல்றோமோ, அதே பதிலைத்தான் சொல்லும். 

சோனியா : அதெப்படி ஒரே முறையை எல்லோருக்கும் பின்பற்ற முடியும்? குற்றச்சாட்டு யார் மேலேன்னு பார்க்க வேண்டாமா? ஊழல் செஞ்சது, நம்ம கட்சியா, எதிர்க் கட்சியா, கூட்டணிக் கட்சியா மாயாவதியா, லாலுவா, மோடியான்னு பாக்கணுமே. 

ராகுல் : புரியலை. ஸி.பி.ஐ.யோட வேலை என்ன? 

மன்மோகன் : ஸி.பி.ஐ. ஒரு சுதந்திரமான அமைப்பு. வழக்குகள் சம்பந்தப்பட்ட ஃபைலை பராமரிக்கிற சுதந்திரம் ஸி.பி.ஐ.க்கு உண்டு. வழக்குலே சம்பந்தப்பட்டவர் குற்றவாளியா, நிரபராதியா, வழக்கைத் தொடரணுமா, முடிக்கணுமா, வாய்தா வாங்கணுமான்னு மத்திய அரசோட கருத்தை அப்பப்ப தெரிஞ்சுகிட்டு, அதை தன் கருத்தா கோர்ட்லே தெரிவிக்கிற சுதந்திரமும் ஸி.பி.ஐ.க்கு உண்டு. க்வாட்ரோக்கிக்கு சுதந்திரம் கிடைச்சதுக்குக் கூட, ஸி.பி.ஐ.க்கு நாம வழங்கின சுதந்திரம்தான் காரணம். 

ராகுல் : பாராளுமன்றத்திலே எப்படி நடந்துக்கணும்? 

மன்மோகன் : காமன்வெல்த் போட்டி ஊழல், மும்பை ஆதர்ஷ் கூட்டுறவு சொஸைட்டி விவகாரம் பத்தி பா.ஜ.க. உறுப்பினர்கள் பிரச்சனை பண்ணா, பதிலுக்கு நாம பாபர் மசூதி இடிப்பு, குஜராத் கலவரம், அமித்ஷா விவகாரம் பற்றி பேசி அவங்களை அடக்கணும். அதான் மரபு. 

சோனியா : மாயாவதி கட்சிக்காரங்க தகராறு பண்ணா, தாஜ்மஹால் வணிக வளாக வழக்கு, சிலை வைப்பு விவகாரம் பத்தி நம்ம கட்சிக்காரங்க கேள்வி கேக்கலாம். லாலு, முலாயம் சிங் ரகளை பண்ணா அவங்களுக்கெதிரான ஸி.பி.ஐ. வழக்குகளை ஞாபகப்படுத்தி அடக்கி வைக்கலாம். ஜனநாயகத்திலே இருக்கிற இப்படிப்பட்ட வசதிகளைப் பயன்படுத்திக்கிறதுதான் அரசியல். 

ராகுல் : மகளிர் மசோதாவை நிறைவேற்றலைன்னு கூட உறுப்பினர்கள் பிரச்சனை பண்ணுவாங்களே...? 

மன்மோகன் : அதையும் வழக்கம்போலத்தான் சமாளிக்கணும். ‘இந்த கூட்டத் தொடரில் கண்டிப்பாக நிறைவேற்றுவோம்’னு நம்ப வெச்சு, கடைசி நாள்லே, ‘மகளிர் மசோதாவை நிறைவேற்ற போதிய அவகாசம் இல்லாதது வருத்தம் அளிக்கிறது. அடுத்த தொடரில் கண்டிப்பாக நிறைவேற்றுவோம்’னு சொல்லிட்டாப் போதும். 

ராகுல் : இந்தியர்களின் லட்சக்கணக்கான ரூபாய் கருப்புப் பணத்தை நூறே நாள்லே ஸ்விஸ் வங்கியி லேர்ந்து மீட்போம்னு சொன்னீங்களே. 

மன்மோகன் : அடப்பாவமே அதை நிஜம்னு நம்பிட்டீங்களா? அரசியல்லே இப்படி எதை வேணும்னாலும் சொல்லலாம். அது ஏன் நடக்கலைன்னு காரணம் சொல்றதுதான் முக்கியம். 

ராகுல் : நீங்க சொல்றதை எல்லாம் பார்த்தா, அரசியல்னா முழுக்க முழுக்க மக்களை ஏமாத்தறதுன்ற மாதிரியில்லே இருக்குது? 

சோனியா : அட, பரவாயில்லையே! முப்பதே நிமிஷத்திலே அரசியலைப் புரிஞ்சுக்கிட்டியே!




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

அன்னா ஹசாரேவும் அரசியல்வாதிகளும் – சத்யா 

ஊழலை உண்மையாகவே ஒழிக்கும் வகையில், புதிய லோக்பால் மசோதா தயாரிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் ஊழலை ஒழிக்க சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, பிரபல சமூக சேவகரும் காந்தியவாதியுமான அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்துள்ளார். நமது நாட்டு அரசியல் தலைவர்கள் அவரைச் சந்தித்து, தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்து, உண்ணாவிரதத்தை கைவிடும்படி கேட்டுக் கொண்டிருந்தால், என்ன ஆகியிருக்கும் என்று சிந்தித்தோம். 

படம்

கபில்சிபல் : நீங்க இப்படி பிடிவாதம் பிடிக்கிறது சரியில்லை. இதுவரைக்கும் நாட்டில் நடந்த எந்த ஊழல்னாலேயும் அரசுக்கு ஒரு பைசா கூட நஷ்டமில்லை. அதனாலே ஊழல் ஒழிப்புச் சட்டத்துக்கு அவசியமே இல்லை. உண்ணாவிரதத்தை நிறுத்தறதுதான் நியாயம். 

அன்னா ஹசாரே : ஊழல் நடக்காத துறையே இல்லை. ஊழல் நடக்காத நாளும் இல்லை. இதை இப்படியே விட்டா தேசமே பாழாயிடும். நான் சொல்ற ஷரத்துகளோட லோக்பால் திருத்த மசோதா தயாரிக்கிற வரைக்கும் உண்ணாவிரதத்தை நிறுத்த மாட்டேன். 

பிரணாப் முகர்ஜி : நீங்க சொல்றபடியெல்லாம் சட்டம் கொண்டு வந்தா, உலக நாடுகள் நம்மை மதிக்காது. அதனாலே ஊழலை ஒழிக்கிறதை விட, ஊழல் பணத்துக்கு வரி வசூலிப்பதைக் கட்டாயமாக்கி, சட்டம் இயற்றிடலாம். அரசுக்கும் கோடிக் கணக்கிலே பணம் குவியும். 

பிரதமர் : பழைய ஊழலையெல்லாம் லோக்பால் அமைப்பு விசாரிக்கக் கூடாதுன்னு ஜனாதிபதி மெசேஜ் அனுப்பியிருக்காங்க. 

சோனியா : நாடு சுதந்திரம் அடைஞ்சதிலேர்ந்து ‘வறுமையை ஒழிப்போம்’ன்றதை நிரந்தரக் கொள்கையா வெச்சுகிட்டிருக்கோம். பாவம், நீங்க இவ்வளவு தூரம் ஆசைப்படறீங்களேன்றதுக்காக ‘ஊழலை ஒழிப்போம்’ கொள்கையையும் சேர்த்துக்கறோம். உண்ணாவிரதத்தை முடிங்க. 

பிரதமர் : அரசியல்வாதிகளை ஹிம்ஸிக்கிறதுக்கும் ஒரு அளவு இருக்குது. ஊழலுக்கு எதிரா இப்ப இருக்கிற சட்டங்களே போதும். கடுமையான நடவடிக்கை எடுத்தா ‘அரசியல்வாதி உரிமை மீறல்’னு யாராவது கோர்ட்டுக்குப் போகலாம். இதெல்லாம் தேவையா? 

சிதம்பரம் : உணவு பெறுவது அடிப்படை உரிமைன்னு சட்டம் கொண்டு வந்த மாதிரி, ஊழலால் பாதிக்கப்படாமல் இருப்பது மக்களின் அடிப்படை உரிமைன்னு சட்டம் கொண்டு வந்துடறோம். இப்ப திருப்திதானே? 

கருணாநிதி : சாகும் வரை உண்ணாவிரதத்தை காலையிலே ஆரம்பிச்சு, மத்தியானம் ‘ஊழல் முடிவுக்கு வந்து விட்டது’ன்னு அறிவிச்சு முடிப்பீங்கன்னு பாத்தா, இப்படி தொடர்றீங்களே. ஊழல் ஒழிப்புச் சட்டத்தை வலியுறுத்த கடிதம், நினைவூட்டு, தந்தி, சமூக சேவகர்கள் சங்கிலின்னு பல ஜனநாயக வழிமுறைகள் இருக்கும்போது நாட்கணக்கில் உண்ணாவிரதம் தொடர்வது மரபுதானான்னு சிந்திச்சுப் பார்க்கணும்னு உரிமையோட கேட்டுக்கறேன். 

அன்னா ஹசாரே : ஊழல் ஒழியாம இருக்கிற யோசனைகளைத்தான் நீங்க சொல்றீங்க. உங்களை நம்பி மக்கள் ஏமாந்தது போதும். ஒரு முடிவு கிடைக்கிற வரைக்கும் நான் விட மாட்டேன். லோக்பால் மசோதாவைத் திருத்தி அமைக்கிற குழுவை உடனே ஏற்படுத்தணும். 

கபில்சிபல் : ஆனா அதுலே நீங்க தலைவரா இருக்க முடியாது. முன்னாள் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஒருத்தருக்கு எதிரா நிறைய புகார்கள் இருக்குது. அவரை தலைவரா போட்டு, மாயாவதி, லாலு பிரசாத், சிபுசோரன், எடியூரப்பா, கருணாநிதி, மதுகோடா, சுரேஷ் கல்மாடின்னு சர்வ கட்சித் தலைவர்களை உறுப்பினர்களாக்கிடலாம். அப்பதான் உங்களுக்குப் புத்தி வரும். 

சோனியா : பாவம், க்வாட்ரோக்கியும் அதுலே ஒரு உறுப்பினரா இருந்துட்டுப் போகட்டும். அவர் மனசை ரொம்பப் புண்படுத்திட்டோம். 

அன்னா ஹசாரே : உங்க யோசனைக்கெல்லாம் நான் சம்மதிக்க மாட்டேன். ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகாத நீதிபதிகள், அதிகாரிகள்தான் உறுப்பினர்களா இருக்கணும். 

கருணாநிதி : யார் உறுப்பினர் ஆவது என்ற பிரச்சனையில் நமக்குள் சகோதர யுத்தம் வேண்டாம். முதலில் வருபவர்களுக்கு முதலில் என்ற அடிப்படையில் உறுப்பினர்களை நியமிக்கலாம். முதல்வர் பதவியைவிட லோக்பால் மசோதா திருத்தக் குழு தலைவர் பதவியைத்தான் நான் பெரிதாக நினைக்கிறேன்.

சிபுசோரன் : அந்த அமைப்புக்கு ஒரு இரண்டரை வருஷம் நான் தலைவரா இருக்க சான்ஸ் கொடுத்தா நல்லாயிருக்கும். மதுகோடாவைத் தோற்கடிச்சுக் காட்டுவேன். 

பிரதமர் : லோக் பால் அமைப்பின் தலைவர் யார்னு முடிவெடுக்க நமக்கென்ன அதிகாரம் இருக்குது? நீரா ராடியாவுக்கு ஃபோன் பண்ணி அவங்க யாரை முடிவு செஞ்சிருக்காங்கன்னு கேட்டுருவோம். 

ராமதாஸ் : இப்படியெல்லாம் தலைவரையும் உறுப்பினர்களையும் நியமிப்பது சமூக நீதிக்கு எதிரானது. வன்னியர்களுக்கு 20 சதவிகிதம் இடஒதுக்கீடு கொடுக்கணும். இல்லேன்னா, அன்புமணிக்கு தலைவர் பதவி கொடுங்க. 

பிரணாப் முகர்ஜி : ஊழல் ஒழிப்பிலே மத்திய அரசுக்கும் அக்கறை இருக்கிறதாலேதான், எம்.பி.க்கள் தொகுதி நிதியை 2 கோடியிலிருந்து 5 கோடியா உயர்த்தியிருக்கோம். இதன் விளைவா எம்.பி.க்கள் லஞ்சம் வாங்றது ஓரளவு குறைய சான்ஸ் இருக்குது. 

மாயாவதி : எதுக்கு இப்ப அனாவசியமா எல்லோரும் ஊழல் எதிர்ப்பிலே தீவிரம் காட்டறீங்க? ஒரு தலித் பெண்ணோட வளர்ச்சி பொறுக்கலையா? என்கிட்டே எத்தனை கோடி சொத்து இருக்குதோ, அத்தனை கோடி தொண்டர்கள் கொடுத்த பணம்தான் அது. அநாவசியமா பிரச்சனை பண்ணாதீங்க. 

கருணாநிதி : நாட்டின் அனைத்து அரசியல் தலைவர்களும் என்னைப் போல் வீட்டை தானம் செய்துவிட்டு, ஓரளவுக்காவது சொத்துக் கணக்கைக் காட்டணும். அப்பதான் தம்பி அன்னா ஹாசரே போன்றவர்களுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை ஏற்படும். 

அன்னா ஹசாரே : இங்கேயிருக்கிற கறுப்புப் பணம் போதாதுன்னு வெளிநாட்டு பேங்குகளிலேயும் 55 லட்சம் கோடி கறுப்புப் பணம் இருக்குதுன்னு நீங்களே சொல்றீங்க. மக்கள் பணத்தை இப்படி பதுக்கி வைக்க உங்களுக்கெல்லாம் என்ன உரிமை இருக்குது? 

கருணாநிதி : மக்கள் பணத்தின் ஒரு பகுதி மக்களுக்கே போய்ச் சேரணும்ன்ற அந்தக் கொள்கை அடிப்படையிலேதான் கழகம் செயல்படுது. தேர்தல் கமிஷன் அதைத் தடுக்கும் மக்கள் விரோதச் செயலில் ஈடுபடாமலிருக்க லோக்பால் மசோதாவிலே தக்க திருத்தம் கொண்டு வரணும். 

சோனியா : எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் அஞ்சு வருஷத்திலே எவ்வளவு ஊழல் பண்ணலாம்னு உச்ச வரம்பு நிர்ணயிச்சு ஊழல் கட்டுப்பாடுச் சட்டம் கொண்டு வந்தா, படிப்படியா ஊழலை ஒழிக்கலாம். மத்திய அமைச்சர்களுக்கு உச்ச வரம்பிலேர்ந்து விதிவிலக்கு கொடுத்துடலாம். ஏன்னா, கூட்டணி தர்மத்தைப் பாக்கணும். 

எடியூரப்பா : சொத்து உச்ச வரம்பு பத்தாயிரம் கோடியாவது இருக்கணும். தேவகௌடா – குமாரசாமி தொல்லையைச் சமாளிக்க இந்தச் சட்டச் சலுகை எனக்கு அவசியம் வேணும். 

குமாரசாமி : நில உச்ச வரம்பு 2000 ஏக்கராவது இருக்கணும். இல்லேன்னா எங்க குடும்பத்துக்கு எதிரா லோக்பால் மசோதாவை எடியூரப்பா பயன்படுத்துவார். 

கருணாநிதி : ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவர் தலித்தா, சிறுபான்மை இனத்தவரா, பூணூல் போட்டவரான்னு பார்த்து அதன் அடிப்படையில் தீர்ப்பு சொல்ற உரிமை அந்த அமைப்புக்கு இருக்கணும். 

சிதம்பரம் : லோக்பால் அமைப்பு, ஊழல் வழக்கிலே தீர்ப்பு சொன்ன பிறகு, பாதிக்கப்பட்ட நபர் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பி தப்பிக்கிற வாய்ப்பும் மசோதாவிலே இருக்கணும். பத்து வருஷத்துக்கு ஒரு மனுவை பரிசீலிக்கிற அதிகாரத்தை ஜனாதிபதிக்கு கொடுக்கலாம். 

சோனியா : ஊழல் வழக்குகளைக் குறிப்பிட்ட காலத்துக்குள்ளே முடிக்கணும்னு எந்த ஷரத்தும் இருக்கக் கூடாது. அப்பதான் ஒரு கட்டத்திலே, ஊழல் பணத்தைவிட, வழக்குச் செலவு அதிகமாப் போயிடுச்சுன்ற சாக்குலே வழக்கை வாபஸ் வாங்கிட முடியும். 

அன்னா ஹசாரே : இதுக்கெல்லாம் நான் சம்மதிக்க மாட்டேன். இந்த தேசத்தை ஊழல் வியாதியிலிருந்து காப்பாத்தாம நான் விடப் போறதில்லை. 

பிரதமர் : திடீர்னு நம்பிக்கை இல்லாத் தீர்மானம் வந்துட்டா, தொழிலதிபர்கள் உதவியோட ஆட்சியைக் காப்பாற்ற வேண்டாமா? பொறுப்போட சிந்திச்சுப் பாருங்க. 

லாலு பிரசாத் : அதை விடுங்க. யாராவது பணம் கொடுக்கலைன்னா பல எம்.பி.க்கள் கேள்வியே கேக்க மாட்டாங்களே. அப்புறம், சபையோட மரியாதை என்ன ஆகும்? 

கருணாநிதி : அன்னா ஹசாரேவுக்கு உத்திரவிட்டது யாரென்று எனக்குத் தெரியும். ஆட்சியில் இருப்பது மத்திய அரசா, அன்னா ஹசாரேவா என்று எனக்கே சந்தேகமாக இருக்கிறது. லோக்பால் அமைப்பு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் போல் அடக்கமாகச் செயல்படுவதை வரவேற்பவனே நான்தான். 

கபில்சிபல் : நீங்க பண்ற கூத்தாலே, ஊழல் ஃபைல் எல்லாம் காணாமப் போயிட்டா, அரசாங்கமே முக்கால்வாசி காலி ஆயிடும். நாட்டுப் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும். அதனாலே காலா காலத்திலே திருந்தற வழியைப் பாருங்க. எங்களுக்குப் பசியெடுக்குது. நாங்க போறோம். 

சோனியா : தேர்தல் நேரத்திலே உங்க கூட தகராறு வேண்டாம். என்ன பண்றதுன்னு தெரியாத சமயங்களிலே கமிட்டி அமைக்கிறதுதான் வழக்கம். கமிஷன் அறிக்கை கிடைக்க ஒரு வருஷம் ஆகும். அதுக்கப்புறம் மறுபடியும் முதல்லேர்ந்து யோசிக்கலாம். இந்த உறுதியை ஏத்துக்கிட்டு உண்ணாவிரதத்தை முடிச்சுக்குங்க.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

2007ம் ஆண்டு துக்ளக் விருது பெறும் அரசியல் நட்சத்திரங்கள் – சத்யா 

கடந்த ஆண்டு அரசியல் வானில் ஜொலித்த நட்சத்திரங்களை, அவர்களது தகுதி அடிப்படையில் தேர்வுசெய்து அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். 

சிறந்த நடிகர் 

வழக்கம் போல கடந்த ஆண்டும் அரசியல் நட்சத்திரங்கள் அனைவரும், 
போட்டி போட்டுக்கொண்டு நடித்திருந்தனர். வீரமும் ஈரமும் படத்தில் மூத்த நடிகர் புத்ததேவ் பட்டாச்சார்யா, ரசிகர்களைக் கண்கலங்க வைத்தார். நந்திகிராம மக்களைப் பார்த்து "மரியாதையாக அடங்குகிறீர்களா, இல்லையா?' என்று துப்பாக்கியைத் தூக்கியபடி, வீரமாக அவர் மிரட்டும் காட்சியை மறக்கவே முடியாது. க்ளைமாக்ஸின்போது, திடீரென வீரம் மறைந்து ஈரம் தோன்றி, "நான் உங்களைக் கொல்வேனா? நான் அப்படிப்பட்டவனா?' என்று பிணங்களைப் பார்த்துக் கதறும் காட்சியில், "இவருக்குள் இப்படியொரு நடிப்புத் திறனா?' என்ற வியப்பை ஏற்படுத்தி இருந்தார். 

கடைசி வரை, தானே எப்படியாவது தலைமைப் பொறுப்பில் நீடித்துவிட வேண்டும் என்ற லட்சியம் கொண்ட கதாநாயகனாக, "லட்சியம்' படத்தில் தோன்றியிருந்தார் மன்மோகன் சிங். அதிகாரம் இல்லாத அதிகாரியாக வித்தியாசமான ரோலில், பரிதாபத்தை ஏற்படுத்தும் வகையில் நடித்திருந்தார். குறிப்பாக, புதுமுகம் கனிமொழிக்குச் சால்வை அணிவிக்கும்போது, எந்த ரோல் கொடுத்தாலும் என்ன ஏது என்று கேட்காமல் செய்யக்கூடியவர் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தார். 

படம்

ஆனால், வருடம் முழுவதும் நவரச நடிப்பை வெளிப்படுத்தி, விருதைத் தட்டிக்கொண்டு போகிறவர் கலைஞர்தான். பந்த் – உண்ணாவிரதத்தை மையமாக வைத்து அவரே தயாரித்து இயக்கிய "வீராப்பு' – அவரது நடிப்பாற்றலை நன்கு வெளிப்படுத்தியது. "உண்ணாவிரதம் இருந்து உயிரை விடுவது எங்கள் வழக்கம்தான்' என்று வீராப்பாக உண்ணாவிரதத்தை ஆரம்பிக்கும் கருணாநிதி, நீதிமன்ற எதிர்ப்பு பற்றிய தகவல் கிடைத்ததும், சடாரென்று "உண்ணாவிரதத்தைத் துவக்கிவைத்து, உத்தமர் காந்தி வழியில் பாதியிலேயே விடைபெறுகிறேன்' என்று வெளியேறும் காட்சியில், நயமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். எனவே, சென்ற ஆண்டின் 
சிறந்த நடிகராகக் கலைஞரைத் தேர்வு செய்கிறோம். 

சிறந்த நடிகை 

"இனிமே நாங்கதான்' என்று முலாயம் சிங் – சந்திரபாபு நாயுடு ஆகியோருடன் இணைந்து பாடியபடி, புதிய வியாபாரத்தைத் தொடங்கும் கதாநாயகி ஜெயலலிதா, பாட்டு முடிந்த கையோடு "போங்கய்யா! நீங்களும் உங்க வியாபாரமும்' – என்று, தானே கடையை மூடும்போது நம்மை அறியாமல் கைதட்டுகிறோம். 

"அம்முவாகிய நான்' படத்திலும் தனது குறும்பான நடிப்பை வெளிப்படுத்த அவர் தவறவில்லை. "உங்களுக்குத்தான் என் ஆதரவு. நம்ம ஆளை ஜனாதிபதி ஆக்குகிறேன்' என்று முலாயம்சிங், சந்திரபாபு நாயுடுவுக்கு உறுதி அளித்து நம்பவைத்து, அவர்கள் அந்தப்பக்கம் போனதும் ஃபோனை எடுத்து, "அவங்க கிடக்கறாங்க. என் உத்திரவை எதிர்பார்க்காம நீங்களாவே செகாவத்தை ஜெயிக்க வையுங்க' என்று தனது ஆட்களுக்கு உத்திரவிடும் காட்சியில், மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். 

படம்

ஆனால், நடிப்புத் திறனில் ஜெயலலிதாவையும் மிஞ்சி பிரகாசித்தவர் சோனியாதான். "செல்லத் திருடா' படத்தில் க்வாட்ரோக்கி தப்பியோடும் காட்சியில், மன்மோகன் சிங் உட்பட பலரும் பதறித் துடிக்கும்போது, தனக்கு எதுவுமே தெரியாததுபோல அப்பாவியான முகபாவத்தைக் காட்டியபடியே, க்வாட்ரோக்கிக்கு ஆசி தெரிவிக்கிறாரே, அதற்கு ஈடு இணையாக எந்த நடிப்பையும் குறிப்பிட முடியாது. கைதேர்ந்த நடிப்பு. எனவே, சென்ற ஆண்டின் சிறந்த நடிகையாக சோனியாவைத் தேர்ந்தெடுத்துக் கௌரவிக்கிறோம். 

சிறந்த குணச்சித்திர நடிகர் 

"கருப்பசாமி குத்தகைதாரர்' படத்தில், குத்தகைதாரர் கருப்பசாமியாக ஆன்ட்டி ஹீரோ ரோலில் நடித்திருந்தார் குமாரசாமி. "நான் நல்லவனா? கெட்டவனா?' என்று தன்னைச் சந்திப்பவர்களிடம் எல்லாம் கேட்கும் ரோலில் அசத்தி இருந்தார். சக குத்தகைதாரர் எடியூரப்பாவை அடித்துவிட்டு, அணைத்துக் கொள்வதும், பிறகு அணைத்துக்கொண்டே கழுத்தை நெறிக்க முயல்வதும் வித்தியாசமான குணச்சித்திரம். 

"கற்றது தமிழ்' படத்தில், ராமர் பற்றி தான் தமிழில் கற்றதையும், கல்லாததையும் கண்டபடி நினைவுபடுத்திக்கொண்டு, வாய்க்கு வந்தபடி ராமர் பற்றி கூறும் பாத்திரத்தை விரும்பி ஏற்றிருந்தார் கருணாநிதி. கோமாளியா, வில்லனா என்று புரிந்துகொள்ள முடியாத ஒரு மாதிரியான குணசித்திர வேடம். அவருக்கே உரிய முறையில் செய்திருந்தார். 

"காசு இருக்கணும்' படத்தில், சாய்பாபாவிடம் காசு இருப்பதைத் தெரிந்துகொண்டு, அவரை பக்தியுடன் வரவேற்கும் காட்சியில் வித்தியாசமான குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் கருணாநிதி. துணை நடிகர்கள் துரைமுருகனும், தயாநிதி மாறனும் மாய மோதிரம் பெற்றுக்கொண்டு, சாய்பாபாவிடம் ஆசிபெறும் காட்சியில், முகத்தில் எந்த உணர்ச்சியையும் வெளிப்படுத்தாமல் அழுத்தமான நடிப்பைக் காட்டியது நயமான நடிப்பு. 

ஆனால், குணச்சித்திர நடிப்பில் நம்மைக் கவர்ந்தவர் மன்மோகன் சிங். லட்சியம் படத்தில், அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்தே தீருவது என்ற லட்சிய வீரனாக சிற்சில காட்சிகளில் திறம்பட நடித்திருந்தார். அவரது லட்சியத்தை முறியடிக்கும் வில்லன்களாக கராத்தும், பரதனும் படம் முழுக்க பற்களை நறநறவென்று கடித்தபடி நடித்திருந்தனர். "லட்சியத்தை நிறைவேற்றாமல் விடமாட்டேன். லட்சியம் நிறைவேறாவிட்டால் குடிமுழுகிவிடாது. தயவுசெய்து என் லட்சியம் நிறைவேற 
உதவுங்கள்' என்று வீரம், சோகம், விரக்தி, கோபம் என பலதரப்பட்ட பாவங்களை திடீர் திடீரென்று வெளிப்படுத்தி, முத்திரை பதித்த மன்மோகன் சிங்கை சிறந்த குணச்சித்திர நடிகராகத் தேர்வு செய்கிறோம். 

சிறந்த நகைச்சுவை நடிகர் 

"வாழ்க்கையை யோசிங்கடா, தலையெழுத்தை நல்லா வாசிங்கடா' என்று "டைட்டில் சாங்'கின்போது, தனது ஆட்களுக்கு தானே உருவாக்கிய பள்ளிக்கூடத்தில் பயிற்சி அளிக்கும் ராமதாஸ், அவர்களை எப்படி உருவாக்குகிறார் என்பதை முழுநீள நகைச்சுவைப் படமான "பள்ளிக்கூடம்' விளக்கி இருந்தது. 

"கருணாநிதியை உருப்படியா எதையும் செய்யவிடாம தடுத்து, அப்புறம் "ஏன் எதையும் செய்யலை?'ன்னு கேக்கறதுதான் நம்ம லட்சியம். இப்படிச் செயல்பட்டா 2011லே நாமதான் ஆட்சிக்கு வருவோம். நாம வரலைன்னாலும் 2011 கண்டிப்பா வரும்' என்று ராமதாஸ் பாடம் நடத்தும்போது, ரசிகர்களின் சிரிப்பில் தியேட்டரே அதிர்ந்தது. நகைச்சுவை நடிப்பில் கொடிகட்டிப் பறந்தார் ராமதாஸ். 

ஆனாலும், மறக்க முடியாத நகைச்சுவைகளை அள்ளி வழங்கியவர் கருணாநிதிதான். "வீராப்பு' படத்தில் தமிழ் மீனவர்கள் தாக்கப்படும் செய்தி தெரிந்ததும், ஹீரோ கருணாநிதி ஆவேசமாக கடலை நோக்கிப் பாயும்போது, மிகப்பெரிய சண்டைக் காட்சியை எதிர்பார்க்கிறோம். பிறகு மீனவர்களைத் தாக்கியது விடுதலைப் புலிகள்தான் என்று தெரிந்ததும், "இப்ப போறேன். திரும்பி... வரமாட்டேன்' என்று ஸ்டைலாகப் பின்வாங்கும் காட்சியில், கருணாநிதி குலுங்கக் குலுங்கச் சிரிக்க வைத்தார். 

"கூட்டு அதிரடிப்படை கண்டிப்பா இருக்கணும். சரி, இருந்தா இருக்கட்டும். நான்தான் வேண்டாம்'னு அப்பவே சொன்னேனே' என்று சீரியஸாக மாற்றி மாற்றி ஹீரோ கருணாநிதி சொல்லும்போது, சிரிக்காதவர்கள் இருக்க முடியாதே. 

எனவே சிறந்த சிரிப்பு நடிகருக்கான விருதும் கருணாநிதிக்கே செல்கிறது.

சிறந்த வில்லன் 

"மதுரை வீரன்' படத்தில் கையில் தீப்பந்தத்தோடு திரியும் வில்லனாக, அழகிரி அமர்க்களமாகச் செய்திருந்தார். போலீஸ் கூட்டம் அழகிரியைப் பார்த்து, மிரண்டு சல்யூட் அடித்தபடி ஓடும்போது, குறுநகை புரிகிறாரே, அதை மறக்க முடியுமா? குலை நடுங்க வைக்கும் வகையில் அட்டகாசமாகச் செய்திருந்தார்

வில்லனாக பல படங்களில் கருணாநிதியும் சோபித்தார். குறிப்பாக "என் உயிரினும் மேலான' படத்தில், கார்ப்பரேஷன் தேர்தல் காட்சியில் "என் உயிரினும் மேலான' என்று அவர் குரல் கொடுத்ததும், திபுதிபுவென்று ஒரு கூட்டம் வரும்போது நடுங்கிப்போகிறோம். தனது ஆட்கள் நடுத்தெருவில் நின்றுகொண்டு, ஓட்டுக்களை பங்கு போட்டுக்கொள்ளும் காட்சியில் வெற்றிப் புன்னகை புரிகிறாரே! யாருக்கு வரும் அந்த ஸ்டைல் வில்லத்தனம்? 

ஆனால் "பொல்லாதவன்' படத்தில் வித்தியாசமான வில்லனாக எல்லோரையும் மிஞ்சிக் காட்டியவர் தேவகௌடாதான். குமாரசாமியை முன்னிறுத்தி அவர் செய்த அட்டூழியங்களை, இதுவரை எந்த அரசியல் திரைப்படத்திலும் எந்த வில்லனும் செய்திருக்கமாட்டார். ஒரு கட்டத்தில் "அப்பா என்னை விட்டுருங்க' என்று குமாரசாமி கதறும்போது, நமக்கே பரிதாபம் ஏற்படுகிறது. க்ளைமாக்ஸில் எல்லோரையும் வீழ்த்திவிட்டு, நடுத்தெருவில் சட்டையைக் கிழித்துக்கொண்டு "வெற்றி வெற்றி' என்று தேவகௌடா கத்துவதோடு படம் முடிகிறது. மறக்க முடியாத வில்லன். எனவே, தேவகௌடாவை சென்ற ஆண்டின் சிறந்த வில்லனாக அறிவிக்கிறோம். 

சிறந்த கதை வசனகர்த்தா 

"வீராசாமி' படத்தில் நீதிபதிகளைத் தாக்கிப் பேசும் ஆற்காடு வீராசாமியின் வீராவேசமான வசனங்களில், கதாசிரியர் கலைஞரின் முத்திரை பளிச்சிட்டது. "பூனைக்கு மணி கட்டிய தம்பி, இனி நமது கருத்தை அறியாமல் தீர்ப்பு வழங்கும் துணிவு எந்த நீதிபதிக்கும் வராது' என்று சவுக்கடி வசனம் பேசும் கருணாநிதிதான், பிரச்சனை முற்றியதும் "இருசாராரும் ஒற்றுமையாகச் செயல்படுவதுதான் நாட்டுக்கு நல்லது' என்ற குறும்பான வசனத்தையும் எழுதியிருந்தார். "அந்தக்காலத்தில் ராஜீவ் என்னிடம் என்ன சொன்னார் தெரியுமா?' என்பது போன்ற ஃப்ளாஷ் பேக் 
காட்சிகளிலும் அவரது கற்பனை திறன் மின்னியது. 

படம்

ஆனால் "வசனத்தில் சாதனை புரிந்தவர் ஜெயலலிதாதான். போதும் போதும் என்று நினைக்கும் அளவுக்கு வசன மழையை எல்லா படங்களிலும் பொழிந்திருந்தார். "இனிமே நாங்கதான்' படத்தில் "என் உடலிலும் தமிழ் ரத்தம்தான் ஓடுகிறது. நான் தமிழச்சியடா, தமிழச்சி' என்று பொங்கி எழும்போது, சிலிர்த்துப் போகிறோம். "கருணாநிதி கொடுக்கும் அரிசியைச் சாப்பிட்டால் மாடு செத்துப்போகும். டி.வி. பார்த்தால் பார்வை போய்விடும்' போன்ற வசனங்களை மறக்க முடியுமா? எனவே சிறந்த கதாசிரியர் ஜெயலலிதா என்று அறிவிக்கிறோம். 

சிறந்த டைரக்டர் 

"சாதனை', டைரக்டர் கருணாநிதியின் இயக்கும் திறனை நன்கு வெளிப்படுத்தியது. கதாநாயகன் கருணாநிதி ஒரு போலீஸ் அதிகாரி. சினிமா, டி.வி. பார்ப்பது அவரது பொழுதுபோக்கு. அதைப் பயன்படுத்திக்கொண்டு, ஊரில் மணல் கொள்ளை, அரிசி கடத்தல் போன்ற குற்றங்கள் நடைபெறுகின்றன. அதுபற்றி புகார் கூறுபவர்களிடம், "எனக்குத் தெரியாம இந்த ஊர்லே எதுவும் நடக்காது. இதுக்கு முன்னாலே மட்டும் கடத்தல், கொள்ளை நடக்கலையா? நான் பூணூல் போடாததால்தானே இப்படி எல்லாம் புகார் பண்றீங்க?' என்று போலீஸ் அதிகாரி சீறியதும், புகார் கூறியவர்கள் பயந்து போய் மன்னிப்பு கேட்டுக்கொண்டு வெளியேறிவிடுகிறார்கள். அவரது இந்த சாதனையைப் பாராட்டும் வகையில், அவரது ஊழியர்கள் அவருக்கு பாராட்டு விழா நடத்துகிறார்கள். இதுதான் கதை. படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் டைரக்டரின் "டச்' பளிச்சிட்டது. அதே படத்தில், ரயில் மறியல் செய்யும் வீரபாண்டி ஆறுமுகத்தை, ஹீரோ கட்டி அணைத்து சால்வை போர்த்திவிட்டு, சற்றுத் தள்ளி மறியல் செய்துகொண்டிருந்த வைகோவைக் கைதுசெய்து, சிறையில் தள்ளும் காட்சியிலும், தனது குறும்பான முத்திரையைப் பதித்திருந்தார் டைரக்டர் கருணாநிதி. 

படம்

ஆனால் "நிழல்' படத்தில் டைரக்டர்கள் இரட்டையர்களான கராத் – பரதன் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்தது. கதாநாயகன் மன்மோகன் சிங்கை நிழல்போல தொடரும் மேலதிகாரிகளாக டைரக்டர்களே நடித்திருந்தனர். மன்மோகன் சிங்கை சதா சர்வகாலமும் பின்தொடர்ந்து கொண்டு, அவர் எதைச் செய்தாலும் கேள்விகேட்டுத் துளைத்தெடுக்கும் ரோல். 

ஒரு கட்டத்தில் மன்மோகன் சிங், எது எக்கேடு கெட்டால் என்ன என்ற விரக்தி மேலிட்டு, திக்பிரமை பிடித்தவர் போல் நிற்க, "நாடு ஒழிந்தால் மதவாதம் 
ஒழிந்துவிடும்' என்று ஸ்லைடு போட்டு படம் முடிகிறது. 

கராத் – பரதனை சென்ற ஆண்டின் சிறந்த டைரக்டர்களாக தேர்ந்தெடுக்கிறோம். 

சிறந்த படம் 

"வியாபாரி' தயாநிதி மாறன் வியாபார தந்திரமாக எதையோ செய்யப்போக, அது அவரது வியாபாரத்தை எப்படிச் சீரழிக்கிறது என்பதுதான் "வியாபாரி' கதை. கருணாநிதி தனது ஆவேச நடிப்பைக் காட்டி கலங்க அடித்திருந்தார். "தாய்க்குப் பின் தாரம்' என்பதைப் போல, "மகனுக்குப் பின் பேரன்' என்ற தத்துவத்தை விளக்கிய "வியாபாரி' பரவலாகப் பேசப்பட்டது. 

ராமதாஸின் "அடாவடி'யில் ராமதாஸ் மட்டும் எதிரிகளோடு மோதுகிறாரே தவிர, எந்த எதிரியும் ராமதாஸோடு மோதாமல் ஒதுங்கிப்போய் விடுகிறார்கள். வித்தியாசமான மோதல் காட்சிகள் நிறைந்த படம். ராமதாஸ் கருணாநிதியிடம் சரணடைகிறாரா, கருணாநிதி ராமதாஸிடம் சரணடைகிறாரா என்று புரியாதபடி கதையின் போக்கு சென்றாலும், பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படமாக இருந்தது. 

கருணாநிதியின் தயாரிப்பில், ஸ்டாலின் ஹீரோவாக நடித்திருந்த "கிரீடம்' பிரம்மாண்டமான பொருட்செலவில் எடுக்கப்பட்டிருந்தது. என்னவோ நடக்கப்போகிறது என்ற வகையில் "பில்ட் அப்' செய்துகொண்டு போய், "என்ன நடக்கிறது என்பதை விரைவில் பார்ப்போம்' என்ற கருணாநிதியின் அறிவிப்புடன் படம் முடிகிறது. கிரீடத்தை அடிக்கடி "க்ளோஸ்அப்'பில் காட்டுகிறார்கள். என்ன அர்த்தம் என்று புரியவில்லை. 

உருப்படியான கருத்து எதுவும் இல்லாவிட்டாலும், கதையை ஆர்ப்பாட்டமாகச் சொன்ன விதத்தைப் பாராட்டலாம். கௌரவ நடிகராக அழகிரி கதையோடு ஒட்டாமல் ஒரே ஒரு காட்சியில் தலைகாட்டிவிட்டுப் போவது மர்மத்தைக் கூட்டியது. எதிர்பார்த்த அளவு ஓடாவிட்டாலும், வசூலை அள்ளிக் குவித்த படம் என்பதால், "கிரீடம்'தான் சிறந்த படம் என தேர்ந்தெடுக்கிறோம். 




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

கலைஞரின் கனவுத் திட்டங்கள் – சத்யா 

‘தி.மு.க. கூட்டணி 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும்’ என்று அழகிரியும், ஸ்டாலினும் கூறியிருக்கிறார்கள். ‘தி.மு.க.விற்கு தனியாகவே பெரும்பான்மை கிடைக்கலாம், கூட்டணி ஆட்சியும் அமையலாம்’ என்கிறார் கலைஞர். ‘அ.தி.மு.க. கூட்டணிக்கு 218 இடங்களுக்கு மேல் எதிர்பார்ப்பதாக’ ஜெயலலிதாவும் கூறியிருக்கிறார். தேர்தல் முடிவுகள் தெரிய ஒரு மாதகால அவகாசம் இருப்பதால், தலைவர்கள் தங்கள் விருப்பம் போல கனவு காண போதுமான நேரம் இருக்கிறது. நமக்கும் அதுவரை பொழுது போக வேண்டாமா? வேறு உருப்படியான வேலை இல்லாததால், தலைவர்களின் கனவுகளை ஆராய்கிறோம். 

படம்

கருணாநிதி : நேத்து ராத்திரி எனக்கு ஒரு கனவு வந்தது. நம்ம கூட்டணி 207 இடங்களிலே ஜெயிச்சுடுது. அம்மையார் கட்சிக்கு 15, விஜயகாந்த் கட்சிக்கு 8, கம்யூனிஸ்ட்களுக்கு 4. கிட்டத்தட்ட நாம நினைச்ச மாதிரியே வந்திருக்குது இல்லே? 

துரைமுருகன் : அருமையான கனவுங்க. என் அனுபவத்திலேர்ந்து சொல்றேன். கருத்து கணிப்புகளைத்தான் நம்ப முடியாது. ஆனா, உங்க கனவு எப்பவுமே ரொம்ப துல்லியமா இருக்கும். நீங்க வேணும்னா பாருங்களேன். தேர்தல் முடிவு இப்படித்தான் வரப் போகுது. 

தங்கபாலு : 207-லே காங்கிரஸுக்கு எவ்வளவு? அதுலே எங்க கோஷ்டிக்கு எத்தனை ஸீட்? நான் ஜெயிச்சேனா இல்லையா? 

கருணாநிதி : சொல்றேன், சொல்றேன். மறந்துடக் கூடாதேன்னுதான் கனவு கலையறதுக்குள்ளே படுக்கையிலே படுத்தபடியே குறிச்சு வெச்சுட்டேன். தி.மு.க.வுக்கு 117, காங்கிரஸுக்கு 53, பா.ம.க. 25, வி.சி. 7, மற்ற கட்சிகள் 5. நீங்களும் ஜெயிச்சுடறீங்க. 

தங்கபாலு : ரொம்ப நன்றிங்க. 

கருணாநிதி : யாருடைய நன்றியையும் எதிர்பார்த்து நான் கனவு காண்றதில்லை. மக்கள் விருப்பத்தைத்தான் நான் என் கனவிலே எதிரொலிக்கிறேன். நான் எப்பவுமே மற்றவர்களுக்காகத்தான் கனவு காண்கிறேனே தவிர, எனக்காக கனவு காண்கிறவன் அல்ல. அண்ணா என்னை அப்படி வளர்க்கலை. 

திருமாவளவன் : இருந்தாலும், காங்கிரஸுக்கு 53-ன்றது நம்பற மாதிரி இல்லையே! இலங்கைத் தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்ஷவுக்கு துணை போன கட்சிக்கு எப்படி அவ்வளவு ஸீட் கிடைக்கும்? 

தங்கபாலு : சும்மா இருங்க. நானே ஜெயிக்கும்போது காங்கிரஸுக்கு 53 ஸீட் கிடைக்கிறது கஷ்டமா? காங்கிரஸ் ஓட்டு இல்லாமலே உங்க கட்சி ஜெயிக்கும்போது நாங்க ஜெயிக்க முடியாதா? 

கருணாநிதி : யார் எப்படி ஜெயித்தார்கள் என்ற பிரச்சனைக்குள் நாம புக வேண்டாம். நான் ஏழை பாழைகளுக்கு ஆற்றிய சாதனைகளுக்கு, அவர்கள் எனக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்கள் என்ற அளவிலேதான் நாம் அதை எடுத்துக் கொள்ள வேண்டும். 

வீரமணி : உங்க கனவின் மூலமா பெரியாரின் கனவு நிறைவேறி விட்டதாகவே நான் நினைக்கிறேன். எங்கே மறுபடியும் அம்மையாரைப் பாராட்டி, ‘ஊழலை ஒழித்த வீராங்கனை’ பட்டம் கொடுக்க வேண்டியிருக்குமோன்னு கவலையா இருந்தது. 

ஸ்டாலின் : பணத்தாலே எதுவும் சாதிக்க முடியாதுன்னு சொன்ன ஜெயலலிதா முகத்திலே, மக்கள் இப்படி கரி பூசுவாங்கன்னுதான் நானும் நினைக்கிறேன். 

துரைமுருகன் : கலைஞரின் கனவை நாம வெறும் கனவா பார்க்க கூடாது. தேர்தல் முடிவே அதுதான். நமக்கும் இன்னும் ஒரு மாசம் இருக்குதே. இதே மாதிரி தேர்தல் முடிவு வந்தா, அடுத்து நாம எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை இப்பவே முடிவு செஞ்சுடலாம். 

ஜெகத்ரட்சகன் : சரி. அப்ப நான் புறப்படறேன். ‘தி.மு.க. கூட்டணியின் வெற்றிக்கு பெரிதும் காரணமாக இருந்தது கலைஞரின் இலக்கியப் பணியா, திரையுலகப் பணியா’ன்னு பட்டிமன்றத்துக்கு ஏற்பாடு பண்ணனும். அது முடிஞ்சதும் மே 15-ஆம் தேதி காலையிலே பதவி ஏற்பு விழா, மாலையிலே பாராட்டு விழா. எல்லோரும் வந்துடுங்க. 

துரைமுருகன் : பாராட்டு விழாவுக்கு சோனியாவையும் பிரதமரையும் மறக்காம கூப்பிடணும்ங்க. ஆனா, ராகுலை கூப்பிடக் கூடாது. ஏன்னா, கூப்பிட்டாலும் அவர் வர மாட்டார். 

கருணாநிதி : அதுக்கு முன்னாலே மக்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டியது என் கடமை. ‘தேர்தல் முடிவுகளை தலைவணங்கி ஏற்கிறேன். ஸ்பெக்ட்ரம் குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை என்று மக்களே தீர்ப்பளித்து விட்டனர். கழக அணியின் வெற்றிக்காக பிரச்சாரம் செய்த தம்பி ஸ்டாலின், தம்பி அழகிரி, கவிஞர் கனிமொழி மற்றும் கழக முன்னணியினருக்கும், கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கும், சிரிப்பு நடிகர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்’னு அறிக்கை தயார் பண்ணி வையுங்க. 

திருமாவளவன் : நீங்க ஆறாவது முறையா முதல்வர் ஆனதும், பூரண மதுவிலக்கை அமல்படுத்தற கோப்பிலேதான் முதல் கையெழுத்து போடணும்னு விரும்பறேன். மருத்துவர் கோரிக்கையும் அதுதான். 

கருணாநிதி : அதுக்கெல்லாம் இந்த முறை நேரமில்லை. என்னுடைய திரைப்படங்களையும், இலக்கியப் படைப்புகளையும் உலக மாணவர்கள் ஆராய்ந்து பயனடையற வகையிலே, உலகத் தரம் மிகுந்த பிரம்மாண்டமான மாளிகை கட்டணும். உலகத் தமிழ் ஏழை பாழைகள் அந்த மாளிகையை இலவசமா பார்வையிட்டு மகிழலாம். மாளிகைக்கு மேலே ஆயிரம் அடி அண்ணா சிலை. அந்த சிலைக்கு ‘செம்மொழி அண்ணா’ ன்னு பேர் வெக்கணும். 

திருமாவளவன் : அப்ப எங்க கோரிக்கை...? 

கருணாநிதி : கொஞ்சம் பொறுத்துக்குங்க. அடுத்ததாக, ஏழாவது முறையா முதல்வராகும்போது நான் போடப் போற முதல் கையெழுத்து, பூரண மதுவிலக்கை அமல்படுத்தற கோப்பிலேதான். எட்டாவது முறை முதல்வரானதும் போடப் போற கையெழுத்து இலவச கேபிள் இணைப்பு வழங்கற கோப்பிலே. ஒன்பதாவது முறை... 

ராமதாஸ் : அதிருக்கட்டும்ங்க. ஆறாவது முறை முதல்வரானதும் என்ன செய்யலாம்னு இருக்கீங்க? நீங்க என்ன செஞ்சாலும், செய்யலைன்னாலும் அன்புமணிக்கு 2013-லே ராஜ்யசபா சீட் கொடுப்பீங்கன்ற ஒரே நம்பிக்கையிலே, உங்க ஆட்சிக்கு நூற்றுக்கு நூறு மார்க் கொடுக்க முடிவு செஞ்சுட்டேன். இருந்தாலும் தெரிஞ்சுக்கறதுக்காக கேக்கறேன். 

கருணாநிதி : புதுசா நான்கு திரைப்படங்களுக்கு வசனம் எழுத இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கலாம்னு இருக்கேன். கலைஞர் டி.வி. நிகழ்ச்சிகளிலே கலந்துகிட்டு தமிழ் வளர்க்க வேண்டிய பொறுப்பும் எனக்கு இருக்குது. நெஞ்சுக்கு நீதி அடுத்த பாகம் எழுதணும். கிரிக்கெட் போட்டிகளைப் பாக்கணும். மக்களுக்கு இதைத் தவிர என்னாலே வேறே என்ன கொடுக்க முடியும்? 

அன்பழகன் : அதோட, நிர்வாகப் பணியிலேயும் கவனம் செலுத்தணும். முக்கியமா அதிகார வர்க்கத்திலே களையெடுக்கணும். எங்கே பார்த்தாலும், விபீஷணன்களும் பிரஹலாதன்களும் பெருகிட்டாங்க. அவங்களை கண் காணாத இடத்துக்கு மாத்திட்டு, ராவணன்களையும், ஹிரண்யன்களையும் அரசுக்கு நெருக்கமா வெச்சுகிட்டாத்தான் நல்லாட்சி நடத்த முடியும். 

கருணாநிதி : நேர்மை என்ற பெயரில் விஷமத்தனத்தைக் காட்டிய அதிகாரிகளுக்கு பாடம் கற்பிக்கிற பொறுப்பை, அழகிரியும் ஸ்டாலினும் ஏற்றுக் கொள்வார்கள். தமிழகத்தின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் பணியிலேதான் என்னை நான் ஈடுபடுத்தி கொள்ளப் போகிறேன். 

அன்பழகன் : உரிமைகளுக்காக குரல் கொடுக்கப் போறீங்களா? எதைச் சொல்றீங்க? காவிரிப் பிரச்சனையா? முல்லைப் பெரியாறு பிரச்சனையா? தமிழ் ஆட்சி மொழியா? 

கருணாநிதி : அதுக்கெல்லாம் லெட்டர் போட்டா போதும். இது டெல்லிக்கே நேரா போய் சோனியா முன்னாலே உரிமைக்கு குரல் கொடுக்க வேண்டிய விஷயம். 

துரைமுருகன் : எனக்குப் புரிஞ்சுடுச்சுங்க. இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை, கச்சத்தீவு, சேது திட்டம், மீனவர் மீது தாக்குதல் – இது விஷயமா மத்திய அரசை பிடிச்சு உலுக்கப் போறீங்க. கரெக்டா? 

கருணாநிதி : அதுக்கெல்லாம் தீர்மானம் போட்டா போதுமே. கனிமொழியோட போய், ராசாவுக்கு பதிலா தி.மு.க.வுக்கு ஒரு மத்திய மந்திரி பதவியைக் கேட்கப் போறேன். ‘ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கழகத்தின் மீது கூறப்பட்ட அவதூறுகளுக்கு ஆதாரமில்லை, கலைஞர் டி.வி.யில் எந்தத் தவறும் நடக்கவில்லை’ன்னு ஸி.பி.ஐ.யே அறிக்கை வெளியிடணும்னு சோனியாவை வற்புறுத்தப் போறேன். சோனியா சம்மதிக்கலைன்னா, கழகம் மத்திய அரசிலிருந்து விலகி நிற்கும்னு எச்சரிக்கப் போறேன்

வீரமணி : காங்கிரஸை எதிர்க்கிற இந்த தன்மான உணர்வையும், சுயமரியாதைச் சிந்தனையையும் பாராட்டறேன். திடீர்னு பயந்து போய், காங்கிரஸ் எதிர்ப்பை நீங்க கைவிட்டாலும் பாராட்டறேன். 

ராமதாஸ் : இந்தத் தள்ளாத வயதிலும் இப்படி குப்பன் சுப்பன்களுக்காகக் குரல் கொடுக்க உங்களாலேதான் முடியும். 

கருணாநிதி : பதவிக்காக எதையும் செய்பவன் அல்ல இந்த கருணாநிதி. நான் முதல்வராக இருப்பதை விட தம்பி ஸ்டாலின் என் பணிகளை ஏற்றுக் கொண்டு, என்னுடைய கடமைகளையும், பேராசிரியரின் கடமைகளையும் தொடர்ந்து ஆற்றுவதைத்தான் நான் விரும்புகிறேன். 

அழகிரி : நான் ஒருத்தன் இருக்கிறதையே மறந்துட்டீங்களா? உங்க இஷ்டத்துக்கு இப்படி ஏதாவது முடிவெடுத்தா என் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் வெளியிலிருந்துதான் ஆதரவு கொடுக்க வேண்டியிருக்கும். ஆமா.... சொல்லிட்டேன். 

கருணாநிதி : ஐயையோ... 

(கலைஞர் தூக்கத்திலிருந்து பதறியபடி எழுந்திருக்கிறார்). 

உதவியாளர் : என்னங்க ஐயா, ஏதாவது கனவா? 

கருணாநிதி : ஆமாம்பா! கனவுலே ஒரு கனவு வந்தது.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

homeattai1



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

sathya_1_11_08_2009



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

sathya_26_01_2012



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

கடவுள் சிந்தனை திணிக்கப்பட்டதா ?

 

 

1.jpg
டி.எம்.நாயர் பார்ப்பனக் கூட்டம் நடுங்க வேண்டும்; என்று நூறு ஆண்டுகளுக்கு முன்பு டாக்டர் டி.எம்.நாயர் அழைப்பு விடுத்ததாகவும், அதையே தான் மீண்டும் கூறுவதாகவும் கருணாநிதி உடன்பிறப்புகளுக்குக் கடிதம் எழுதினர்.திராவிட இயக்க வரலாற்றை அறிவதற்கு முன்பு, அதில் டி.எம்.நாயரின் பங்களிப்பைத் தெரிந்து கொள்வோம்.இந்திய சட்ட மன்றத்திற்கான தேர்தல் 1916 இல் நடந்த போது, டி.எம்.நாயர் வேட்பாளராகப் போட்டியிட்டார். மகாத்மா காந்தியின் நண்பர் என்று அறியப்பட்ட வி.எஸ்.சீனிவாச சாஸ்திரியாரால் தோற்கடிக்கப்பட்டார். இதே தேர்தலில் நில உரிமையாளர்களுக் கான தொகுதியில் போட்டியிட்ட பி.இராமராயலிங்கரும். பிற தொகுதிகளில் போட்டியிட்ட பிட்டி.தியாகராய செட்டியாரும், கே.வி.ரெட்டி நாயுடுவும் தோற்கடிக்கப்பட்டனர்.வெகுஜன ஆதரவு இல்லாத காரணத்தினால், தேர்தலில் தோல்வி அடைந்த இவர்கள் கூடி, தேர்தல் தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்தார்கள். பிராமணர்கள்தான் தங்களைத் தடுத்து விட்டார்கள் என்பது அவர்களுடைய கண்டுபிடிப்பு. எனவே, பிராமண எதிர்ப்பு என்ற கொள்கையை வகுத்துக் கொண்டார்கள். இப்படி அமைந்ததுதான் “தென்னிந்திய நல உரிமைச் சங்கம்”, இந்த அமைப்புதான் ஜஸ்டிஸ் என்ற நாளிதழையும் நடத்தியது. நாளடைவில், தென்னிதிய நல உரிமைச் சங்கத்தை பொதுமக்கள் ஜஸ்டிஸ் கட்சி என்றும், நீதிக் கட்சி என்றும் அழைத்தனர்.
2.jpg
தேசிய எழுச்சிக்குத் தடை போட முடியாமல் தவித்துக் கொண்டிருந்த ஆங்கில ஆட்சியாளர்கள், நீதிக் கட்சியின் வளர்ச்சிக்கு உதவினார்கள்.டி.எம்.நாயர், அக்.7, 1917-இல் நிகழ்த்திய சொற்பொழிவு திராவிட இயக்கத்தவரால் சிறப்பித்துச் சொல்லபடுகிறது. சென்னை நகரத்தின் ஸ்பர்டாங் சாலைப் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசினார். அந்தச் சொற்பொழிவை ‘வரலாற்றுச் சிறப்புமிக்க வீரங்செறிந்த, எழுச்சிமிக்க, உணர்ச்சி ஊட்டக் கூடிய சொற்பொழிவு என்று தமது‘திராவிட இயக்க வரலாறு’ என்னும் புத்தகத்தில் வர்ணனை செய்கிறார் இரா.நெடுஞ்செழியன். இந்த உரை திராவிட இயக்கத்தவரின் கொள்கை விளக்க அறிக்கையாகக் கருதப்படுகிறது. ஆகவே, அதை விவரமாகப் பார்க்கலாம்.ஜாலியன் வாலாபாக் படுகொலையை இந்தியர்கள் அனைவரும் ஒரு குரலாகக் கண்டனம் தெரிவித்த காலத்தில், அந்தப் படுகொலையை ஆதரித்து அறிக்கை விட்ட பெருமை டி.எம்.நாயருக்கு உண்டு என்பதை, நினைவில் கொள்ளவேண்டும்.
இன வேறுபாடு என்ற ஆயுதத்தைக் கொண்டு, இந்தியர்களுக்கிடையே பிளவை உண்டாக்க வேண்டும் என்பதே டி.எம்.நாயரின் நோக்கம். ஆனால், தமிழ்நாட்டிலேயே அதற்கு ஆதரவு இல்லை. பெரும்பாலான தமிழறிஞர்கள் இதற்கு எதிர்ப்பாக இருந்தார்கள். அந்த எதிர்ப்பு இந்தத் தலைமுறையிலும் தொடர்கிறது.‘ஆரியர்கள் இயற்கை நிகழ்ச்சிகளைக் காட்டி, ‘கடவுள்’ என்றொரு கற்பனை கருத்தைச் சுட்டிக்காட்டித் திராவிடர்களின் மூளையையே குழப்பிவிட்டார்கள் என்றார் நாயர். (பக்கம் 220 திராவிட இயக்க வரலாறு).
கடவுள் சிந்தனையை ஆரியர்கள் திராவிடருக்குக் கொடுத்தனர் என்பது முழுப் பொய்.
‘இந்திய மொழிகளிலேயே நாத்திகம் தொடர்பான கருத்துக்களை அதிகமாகக் கொண்டிருப்பது சம்ஸ்க்ருதம்தான்’ என்கிறார் நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென். சம்ஸ்க்ருத இலக்கியத்தில் கடவுள் மறுப்பைப் பேசிய சாருவாகனைப் பற்றிய செய்தி இருக்கிறது.‘ஆரியர்கள் கடவுளைக் கொண்டு வந்து திராவிடர்கள் மீது திணித்தார்கள்’ என்று சொல்லும் டாக்டர் டி.எம்.நாயருக்கு தமிழர் வரலாறே தெரியாது என்றுதான் சொல்ல வேண்டும்.
தமிழ் அன்னையின் மணிமுடியாகிய திருக்குறளில், கடவுள் வாழ்த்தாக பத்துக் குறட்பாக்கள் உள்ளன. அதில் ஏழு குறட்பாட்கள் திருவடிப் பெருமையைப் பேசுகின்றன. உருவ வழிபாடும் திருவடிப் போற்றுதலும் இஸ்லாத்திலும் கிருஸ்துவத்திலும் இல்லாதவை. ஆகவே திருவள்ளுவரும் அவர் காலத்துத் தமிழரும், இயல்பாகவே ஹிந்துக்களாக இருந்தனர் என்று அடித்துப் பேசலாம்.கடவுள் வாழ்த்து மட்டுமல்ல; இந்திரனைப் பற்றியும், சொர்க்கம், நரகம் பற்றியும், ஊழ்வினை பற்றியும் திருவள்ளுவர் எழுதியிருக்கிறார். கடவுள் வேண்டாம் என்று சொல்லும் டி.எம்.நாயரின் வழியில் நடக்கும் திராவிட இயக்கத்தவர் திருவள்ளுவரை சொந்தம் கொண்டாட முடியாது. இந்த மாதிரிப் பிரச்சனைகள் எல்லாம் வரும் என்ற எண்ணத்தில்தான் திருக்குறளை ஈ.வே.ரா. ஒதுக்கி வைத்துவிட்டார். ‘மொத்தத்தில் முப்பது குரலுக்கு மேல் தேறாது’ என்பது ஈ.வே.ரா. வின் அறிவிப்பு.
இக்கட்டுரை ஏப்ரல் 4 ஆம் தேதியிட்ட துக்ளக் வார இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

திராவிட மாயை ஒரு பார்வை.

 
1.jpg
திராவிட இயக்கத்தின் நூறாவது ஆண்டு விழா என்ற பெயரில், கலைஞர், தனது பழைய பாணி துவேஷ அரசியலை மீண்டும் துவக்கியிருக்கிறார். திராவிடம், திராவிட நாடு என்பதையெல்லாம் மீண்டும் உலவ விட்டிருக்கிறார். இந்த நிலையில், இவை பற்றி ஏற்கெனவே ஆராய்ந்து ‘திராவிட மாயை’ என்ற பெயரில் புத்தகம் எழுதிய ‘சுப்பு’ இந்த விஷயம் பற்றி ‘துக்ளக்’கில் கட்டுரை எழுத இசைந்துள்ளார். திரிசக்தி பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட ‘சுப்பு’வின்‘திராவிட மாயை’ புத்தகத்திலிருந்து பல பகுதிகளும், இக்கட்டுரைகளில் இடம் பெறும்.
திராவிட இயக்க நூறாம் ஆண்டு துவக்க விழா கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதியன்று சென்னையில் தி.மு.க.வினரால் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்குத் தொண்டர்களை அழைக்கும் விதத்தில், முரசொலியில் கடிதம் எழுதினர் கலைஞர். அந்தக் கடிதத்தில், திராவிட இயக்கத்தின் தோற்றத்தைப் பற்றிக் குறிப்பிட்ட அவர், ‘1917ஆம் வருடம் சென்னை ஸ்பர்டாங்க் சாலையருகே நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் டாக்டர் டி.எம்.நாயர் ஆற்றிய உரையைச் சுட்டிக்காட்டி, நம் பத்திரிக்கைகள் வளர்ந்தால்தான் நம் மக்களுக்கு பலம் வரும்; நம் எதிக் கட்சியான பார்ப்பனக் கூட்டம் நடுங்கும் என்று முழங்கியதை நான் இப்போதும் திரும்பக் கூற விரும்புகிறேன்’ என்று எழுதியுள்ளார்.இதைத் தொடர்ந்து நடந்த விழாவிலும், பிராமண எதிப்பைமையப் பொருளாக வைத்து கலைஞர் பேசியிருக்கிறார். அண்ணா எழுதிய தலையங்கத்தைச் சுட்டிக்காட்டி, ‘நாமெல்லாம் இனத்தால் திராவிடர்கள்’ என்று கூறியிருக்கிறார்.ஆனால், திராவிட இனம் பற்றிய அண்ணாவின் முக்கியமான கருத்தை உடன்பிறப்புகளுக்கு எடுத்துச் சொல்ல அவருக்கு சௌகரியப்படவில்லை. இதை இந்த நேரத்தில் எடுத்துச் சொல்ல வேண்டியது நம்முடைய கடமை.
2.jpg
பிராமணர் இனம் வேறு; பிராமணர் அல்லாதார் இனம் வேறு என்பது திராவிடர் கழகத்தின் கொள்கை. பிராமணர் அல்லாதார் நலனுக்காக ஏற்படுத்தப்பட்ட திராவிடர் கழகத்தில், பிராமணர் உறுப்பினராக முடியாது. ஈ.வே.ரா. வின் கொள்கையால் ஈர்க்கப்பட்ட சின்னக் குத்தூசி போன்றவர்களுக்குக் கூட அங்கே அனுமதி இல்லை. ஆனால், ஈ.வே.ரா.விடமிருந்து பிரிந்து வந்த திராவிட முன்னேற்றக் கழகத்தில் பிராமணர்கள் உறுப்பினராகலாம். இது எப்படி?தளபதி மீதும் தம்பிகள் மீதும் நம்பிக்கை இல்லாத காரணத்தால், மணியம்மையைத் திருமணம் செய்து கொண்டார் ஈ.வே.ரா. அது மட்டுமல்ல, கொள்கைக்கும் சொத்துக்கும் மணியம்மைதான் வாரிசு என்று அறிவித்தார் அவர்.ஈ.வே.ரா.விடமிருந்து பிரிந்து வந்தவர்கள், அண்ணாவின் தலைமையில் ஒன்று கூடி ஆலோசித்தார்கள். சொத்துக்காக சண்டை போடுவதில்லை என்றும், புதிய அமைப்பை உருவாக்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது. புதிய கட்சியின் பெயர் ‘திராவிட முன்னேற்றக் கழகம்’ என்று தீர்மானிக்கப்பட்டது. அங்கே இருந்தவர்களால் ‘கட்சியின் பெயரில் ‘ர்’ இல்லையே?’ என்ற கேள்வி கேட்கப்பட்டது.தம்பிகளுக்கு விளக்கம் அளித்த அண்ணா, ‘திராவிடர்’ என்பது இனத்தைக் குறிக்கிறது. ‘திராவிட’ என்பது ஒரு பிரதேசத்தைக் குறிக்கிறது என்றார். பிராமணர் உட்பட அனைவருக்கும் கழகத்தில் இடமுண்டு என்றார். இன அடையாளம் வேண்டாம் என்றார். சொன்னது மட்டுமல்ல பிரபல வழக்கறிஞரான வி.பி.ராமன் என்கிற பிராமணரைச் சேர்த்துக் கொண்டார். அண்ணாவின் கருத்துப்படி பிராமணர் அல்லாத இனம் என்பது அப்போதே கழற்றி விடப்பட்டது.
3.jpg
பிராமணர்களை உறுப்பினராக்கியது மட்டுமல்ல, அவர்களுக்கு பதவியும் கொடுத்தது, அண்ணாவின் தி.மு.க.ஜாதி அடிப்படையில் மேயரைத் தேர்ந்தெடுக்கும் முறை, சென்னை மாநகராட்சியில் கடைப் பிடிக்கப்பட்ட காலம் அது. தி.மு.க.சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிராமணரான திருமதி. காமாட்சி ஜெயராமன் என்பவர், சென்னை மாநகராட்சியின் மேயரானது ஒரு வரலாற்றுப் பதிவு.மாநிலங்களவையில் அண்ணாவின் கன்னிப் பேச்சு இன்னொரு முக்கியமான பதிவு. “யதா ராஜா ததா பிரஜா” என்று சொன்ன அறிஞர்கள் வாழ்ந்த காஞ்சிபுரத்திலிருந்து வருகிறேன்” என்றார் அவர். பிரிவினைக் கோரிக்கையை தி.மு.க.கைவிடாத அந்தக் காலத்திலும், தன்னுடைய உரையில் சம்ஸ்க்ருத மேற்கோள் காட்டுவதற்கு அவர் தயங்கவில்லை.இதைவிட சுவாரஸ்யமான செய்தி கூட உண்டு. திராவிட இயக்கத்தின் நன்கூரமான இடஒதுக்கீடு கொள்கையிலும் மாறுதல் செய்ய விரும்பினார் அண்ணா. ‘முற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் ஏழைகளாக இருந்தால், அவர்களுக்கும் கல்வியில் முன்னுரிமை தர வேண்டும்’ என்று அண்ணா, சட்ட மன்றத்தில் உரையாற்றினார்.பல கட்சிகளின் கூட்டணியோடும் வெகுஜன ஆதரவோடும் ஆட்சியைப் பிடிக்க முயன்ற அன்னாவிடத்தில், பிராமண எதிர்ப்பு இல்லை. ஹிந்தியை எதிர்க்கும் போது கூட ‘இந்த வேலையை ராஜாஜியிடம் விட்டு விடலாம். காலில் முள் தைத்துவிட்டது. இந்த முல்லை எடுக்க என்னால் முடியாது. பெரியாரிடம் விட்டால் காலை வெட்டி விடலாம் என்பார். காலுக்கு பாதகமில்லாமல் கச்சிதமாக முல்லை எடுக்க ராஜாஜிக்குத்தான் தெரியும்’ என்று பொதுக்கூட்ட மேடையில் போட்டுடைத்தவர் அண்ணா. முதலமைச்சர் அண்ணாவிடம் பிராமணர் எதிர்ப்பு என்கிற மனோபாவம் இல்லை.
திராவிட இயக்க வரலாற்றில் அண்ணா ஏற்படுத்திய ஆரோக்கியமான மாறுதல்களை கருணாநிதி புறந்தள்ளி விட்டார். தன்னுடைய கட்சி தோல்வி அடையும் போதெல்லாம் பிராமணர்கள் மீது கசப்பைக் காட்டும் கருணாநிதிக்கும், பக்குவப்பட்ட முதலமைச்சராக இருந்த அண்ணாவுக்கும் எவ்வளவு வித்தியாசம்! அண்ணாவின் அணுகுமுறையை கருணாநிதி மறந்து விட்டார். இதயத்தை பதவியிடமும், பெட்டிச் சாவியை குடும்பத்தாரிடமும் கொடுத்தவரிடம் பெருந்தன்மையை எதிர்பார்ப்பது வீண் வேலை.
 
 21 மார்ச் 2012 துக்ளக் 


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

கண்ணைத் திறப்பாரா கருணாநிதி?

சாமி. தியாகராஜன்
1.jpg
தமிழ்ப் புத்தாண்டு தை மாதத்தில் தொடங்குகிறது என்று முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஒரு சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றினார்.
இந்நாள் முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழ்ப் புத்தாண்டு சித்திரையில்தான் தொடங்குகிறது என்று ஒரு சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றி,கருணாநிதியின் சட்டத்தை நீக்கிவிட்டார்.
சட்டத்தின் வழி வரக்கூடியதா தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம். அதற்கென ஒரு வழி இருக்க வேண்டுமே என்ற கவலையில் அது பற்றி அறியத் தக்கவர்களை நாடி, அது தொடர்பாகச் சென்னையில் ஓர் ஆய்வரங்கம் நடத்துவது என்ற முடிவிற்கு வந்தது கும்பகோணம் மூவர் முதலிகள் முற்றம்.
தமிழ்ப் புத்தாண்டு சித்திரையில் தொடங்குகிறதா? அல்லது தையில் தொடங்குகிறதா? என்பது பற்றித் தங்கள் ஆய்வுக் கருத்தை எங்களுக்கு 2011 நவம்பர் 20௦ ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டுகிறேன் என்று செப்டம்பர் 2011இல் மூ.மு.முற்றத் தலைவர் ந.பன்னீர் செல்வம் பலருக்கு வேண்டுதல் கடிதங்கள் அனுப்பினார்.
கருணாநிதி தொடங்கித் தமிழ்க் குடிதாங்கி, தமிழ்த் தலைவர், தமிழினத் தலைவர் என்னும் பல பட்டங்களைச் சுமந்து திரிபவர்களுக்கும் குறிப்பாகக் கருணாநிதியின் கருத்துக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தந்தவர்களுக்கும் இந்த இந்த அறிஞர்களை இதுபற்றிக் கேட்டேன் என்று கருணாநிதி சொல்லியவர்களுக்கும் வேண்டுதல் கடிதங்கள் அனுப்பப்பட்டன.
சமயத் தலைவர்கள், நாத்திகர்கள் எனச் சொல்லிக் கொள்வோர், தமிழ்ப் பேராசிரியர்கள், தொல்லியல்துறை வல்லுனர்கள், வானவியல் நிபுணர்கள், வரலாற்று வல்லுனர்கள் என்று முற்றம் அறிந்த வரையில் கடிதங்கள் அனுப்பப் பட்டன.
பல்வேறு பணிகளிலும், கவலைகளிலும் ஆழ்ந்து கிடக்கும் கருணாநிதி மூ.மு.முற்றத்தின் கடிதத்தை ஒதுக்கி விட்டார். அவர் பக்கத்தில் நின்று ஆட்சி அதிகார சுகத்தை அனுபவித்த தமிழ் அறிஞர்களும் பிரமாணப் பத்திரம் தந்தவர்களும் கூட ஒதுங்கி விட்டார்கள். அவர்களுள் ஒருவர் கூடத் தை மாதம் தான் வருடம் பிறக்கிறது என்று கட்டுரைகள் எழுதவில்லை.
இவர்கள் இப்படி ஒதுங்க சித்திரை மாதம்தான் தமிழ் வருடம் பிறக்கிறது எனப் பலர், பல காரணங்களுடன் கட்டுரை அனுப்பியுள்ளனர். அவற்றுள் சிலவற்றைப் பார்ப்போம்.
2.jpg
1) இலக்கியச் சான்று
கருணாநிதி பிறந்து வளர்ந்த திருவாரூரில் அவரது முன்னோராக சுமார் 500௦௦ ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியவர் கமலை ஞானப்பிரகாசர் என்னும் தவசீலர். அவர் இயற்றிய நூல்களில் ஒன்று புட்பவிதி. சிவபெருமானுக்கு எந்தெந்த மாதங்களில் எந்தெந்த மலரைச் சிறப்பாகக் கொண்டு வழிபாடு செய்ய வேண்டும் என்பதைக் கூறம் நூல் புட்பவிதி . இந்த நூலில் எந்த எந்த மாதங்கள் எனப் பட்டியலிடும் கமலை ஞானப்பிரகாசர் சித்திரையைத்தான் முதல் மாதமாகக் கொள்கின்றார். சித்திரை முதலாக் கொள்க சிறந்திடு மாத புட்பம் என்பது அவரது வாக்கு. (பாடல் 20-04).
கமலை ஞானப்பிரகாசர் வாக்கிலிருந்து 500௦௦ ஆண்டுகளுக்கு முன்னரே ஆண்டின் தொடக்கமாகச் சித்திரையே இருந்தது என்பது தெரிகிறது.
அவர் காலத்துக்கு முன்பிருந்த வழக்கத்தைச் சொல்கிறார்.
 
தமது காலத்துக்கு முன்பிருந்த வழக்கத்தைத்தான் கமலை ஞானப்பிரகாசர் சொல்கிறார் என்பதற்கு என்ன ஆதாரம் என்றால், அதற்கான ஆதாரத்தைத் தருகிறார் தொல்லியல்துறை அறிஞர் சரித்திரச் செம்மல் ச. கிருஷ்ணமூர்த்தி.
2) கல்வெட்டுச் சான்று
சித்திரை விஷு மேஷ ராசியில் சூரியன் புகும் காலம் என்று ஒரு சாசனம் கூறுகிறது. காலம் கி.பி. 869(S.I.I. Vol.VII-525) சித்திரை விஷு என்ற சொற்றொடர் தமிழ் மரபிற்கேற்பச் சித்திரை விடு என்று ஒரு கல்வெட்டுக் குறிப்பிடுகின்றது. சித்திரை விடு தோறும் குடிநீர் சாத்தி என்பது கல்வெட்டு வாசகமாகும் (T.A.S. VIII P 43-45) காஞ்சி உலகளந்த பெருமாள் கோயிலில் உள்ள கல்வெட்டொன்று சித்திரை விஷுவை வெகு விமரிசையாகக் கொண்டாட சத்திரியர் தொடங்கி 96 ஜாதியினரும் ஒன்று கூடி முடிவெடுத்ததைச் சொல்கிறது.
கமலை ஞானப்பிரகாசர் காலம் மட்டும் அல்லாமல் அவர் காலத்துக்கு 500௦௦ ஆண்டுகளுக்கு முன்பு அதாவது இன்றைக்குச் சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்ப் புத்தாண்டு சித்திரையில்தான் தொடங்குகிறது என்பதைத் தெரிந்து கொள்கிறோம்.
3) வானியல் சான்று
ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டுக் காலத்தில் மட்டும்தான் சித்திரை வருடப் பிறப்பு மாதமாக இருந்ததா? அல்லது அதற்கு முன்பே வழக்கத்தில் இருந்ததா என்னும் கேள்விக்கான பதிலையும் அது தொடர்பாக மேலும் சில செய்திகளையும் விண்வெளி விஞ்ஞானி நெல்லை சு.முத்து தருகிறார்.
திண்ணிலை மருப்பின் ஆடு தலையாக
விண்ணூர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து
முரண்மிகு சிறப்பின் செல்வனொடு நிலை இய
உ ரோகிணி நினைவினல் நோக்கி நெடிதுயிரா (நெடு நெல்வாடை 160-163).
திண்ணிய கொம்பு உடைய மேஷம் முதலான உடுக்கணங்களின் ஊடாகச் சூரியன் இயங்கும் வான் மண்டலத்தில் (Zodiac) சூரியனுக்கு முரணான சந்திரன் உ ரோகிணி (Aideberan) விண்மீன் அருகில் தோன்றுவது கண்டு காதலில் நெகிழ்கிறாள் என்னும் இந்த வரிகளில் சங்க காலத் தமிழர் சூரிய வீதியின் (Ecliptic Path) முதலாவதான ஆடு (Aries) உடுக்கணத்தையே முன்னிறுத்துகின்றனர்.
இது பண்டைத் தமிழரின் புத்தாண்டுத் தொடக்கத்தைக் காட்டுகிறது என்று சொல்லும் விஞ்ஞானி முத்து, பண்டைக் காலத்தில் வசந்த சம நோக்கு நாள் விஷு ஆடு போன்ற வடிவம் கொண்ட மேஷ உடுக்கணத்தில் இருந்தது என்கிறார்.
மேலும் சூரியன் மேஷ உடுக்கணத்தில் இயங்கும் அந்த மாதத்தில் இரவு வானில் சந்திரம் முழு நிலவாகத் தோன்றும் கன்னி (Virgo) உடுக்கணத்தில் ஆல்பா வெர்ஜினிஸ் என்னும் விண்மீனே நாம் கூறும் சித்திரை. இதற்க்கு வானவியலில் ஸ்பைக்கா என்பது பெயர். அதுவே பண்டைய சித்திரை ஆண்டுத் தொடர்க்கம். அதுவே சித்திரை விஷு என மழங்கப்படுகிறது என்று சொல்லும் முத்து சங்கத் தமிழர்கள் சித்திரை மாதத்தை ஆண்டுத் தொடக்கமாகக் கொண்டு வாழ்ந்தனர் என்று முடிவு காண்கிறார்.
ஆக, கல்வெட்டில் காணப்படும் சித்திரை விஷுவும், சங்க இலக்கியத்தில் சொல்லப்படும் விஷுவும் ஒன்றே என்பதில் ஐயமில்லை.
இங்கே நாம் கொண்டிருக்கும் ஆய்வு சித்திரையா தையா என்பதுதான். பண்டைத் தமிழர் இடைக்காலத் தமிழர் தற்காலத் தமிழர் என அனைவரும் ஏற்பது சித்திரையே.
4) பஞ்சாங்கச் சான்று.
மறைமலை அடிகளின் நண்பர் அறிஞர் இ.மு.சுப்ரமணிய பிள்ளை ‘செந்தமிழ்ச் செல்வி’ சிலம்பு 06-பரல்-12 இல் எழுதியுள்ள செய்தியைத் திருபனந்தாள் காசித் திருமடத்துத் தலைவர் தாம் அனுப்பியுள்ள கட்டுரையில் எடுத்துக் காட்டியுள்ளார்.
சூரியன் மேஷ ராசியில் புகும்போது பூமி அதற்கு நேர் ஏழாவது வீடாகிய துலாத்தில் இருக்கும்.அதனால் துலாத்தின் முதல் நட்சத்திரமாகிய சித்திரை என்ற பெயர் மேஷ ஞாயிற்றுக்குக் கொடுக்கப் பெற்றது.
சூரியன் ரிஷபத்தில் புகும் போது அதன் ஏழாவது வீடாகிய விருச்சிகத்தில் பூமி புகும். அதனால் அம்மாதம் அவ்விருச்சிகத்தின் முதல் நட்சத்திரமாகிய விசாகத்தின் பெயரால் வைகாசி என அழைக்கப் பெற்றது. இவ்வாறே எழைய மாதங்களும் பெயர் பெற்றன” என்கிறார்.
பஞ்சாங்கம் என்பது எதோ ஒரு குறிப்பிட்ட ஜாதியினருக்கு மட்டுமே உரியது என்ற கருத்துடைய கருணாநிதி, அவர் ஆட்சிக் காலத்தில் கோயில்களில் பஞ்சாங்கம் படிக்கத் தடை விதித்தார் என்பதையும் இங்கே நினைத்துப் பார்க்கலாம்.
தமிழறிஞர் இ.மு.சுப்பிரமணிபிள்ளையின் கூற்று; விண்வெளி விஞ்ஞானி நெல்லை.சு.முத்துவின் கருத்து; ச.கிருஷ்ணமுர்த்தி எடுத்துக் காட்டும் கல்வெட்டுச் சான்று; கமலை ஞானப்பிரகாசரின் வாக்கு ஆகியவை அனைத்தும் தமிழ்ப் புத்தாண்டு சித்திரை மாதத்தில்தான் தொடங்குகிறது என்பதைச் சந்தேகம் இல்லாமல் உறுதி செய்கின்றன.
இங்கே காட்டப்பட்டுள்ள சான்றுகள் போன்று எவ்விதப் புறவய ஆதாரமும் இல்லாமல் சொல்லாமல் கருணாநிதி தன்னிச்சையாகத் தை மாதம்தான் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்று சொல்லிக் கொண்டிருப்பது அறிஞர் சபை ஏறாது. அறிவியலார் சபையிலும் ஏறாது.
மூவர் முதலிகள் முற்றத்தின் சார்பில் வெளியிட இருக்கின்ற ஆய்வாளர்கள் கட்டுரைகளப் படித்தாவது, தான் மூடிக் கொண்டிருக்கும் கண்களைக் கருணாநிதி திறக்க வேண்டும் . திறப்பாரா.
‘கல்லாத மேற்கொண்டொழுகல் கசடற
வல்லதூ உம் ஐயம் தரும்’ என்கிறது வள்ளுவம்.
11/01/2012


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard