New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கலாநிதி தயாநிதி மாறன் சன் பிக்சர்ஸ் வெற்றிகள்


Guru

Status: Offline
Posts: 9863
Date:
RE: சன் பிக்சர்ஸ் மாறன்களின் மஹா வெற்றிகள் லீலைகள்
Permalink  
 


இ-மெயில்கள் மூலம் அம்பலமான தயாநிதியின் நிர்பந்தம்

 
ஏர்செல் நிறுவனத்தின் முன்னாள் உரிமையாளர் சிவசங்கரன், மேக்சிஸ் நிறுவனத்தின் தலைவர் அனந்த கிருஷ்ணன் மற்றும் ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கியின் நிர்வாக இயக்குனர் பிரகலாத் சாந்திகிராம் இடையே நடைபெற்ற இ - மெயில் பரிமாற்றங்கள் மூலம், ஸ்பெக்ட்ரம் மோசடியில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிக்கும், மேக்சிஸ் நிறுவனத்திற்கும் இடையே ரகசிய தொடர்பு இருந்திருக்கலாம் என்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2006ம் ஆண்டு, சிவசங்கரன் வசமிருந்த ஏர்செல் நிறுவனம், மலேசியாவைச் சேர்ந்த அனந்த கிருஷ்ணன் தலைமையிலான மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்கப்பட்டது. இந்த விற்பனை தொடர்பாக, மேக்சிஸ் நிறுவனத்தைச் சேர்ந்த டி.அனந்த கிருஷ்ணனுடன், சிவசங்கரன் பேச்சு நடத்திய போது, தொலைத் தொடர்பு அமைச்சகத்தில் நிலுவையில் உள்ள, ஏர்செல் நிறுவனத்திற்கான லைசென்ஸ்களை பெறுவது மற்றும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெறுவது போன்ற விவகாரங்களை எல்லாம் தாங்களே பார்த்துக் கொள்வதாக, சிவசங்கரனிடம் அனந்த கிருஷ்ணன் உறுதி அளித்துள்ளார்.
அத்துடன், மலேசியாவைச் சேர்ந்த தங்கள் நிறுவனம் இந்தியாவில் ஏர்செல் நிறுவனத்தில் முதலீடு செய்வது தொடர்பான ஒப்புதலையும், மத்திய அரசிடம் தாங்களே பெற்றுக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.இந்த விவகாரம் தொடர்பாக, அனந்த கிருஷ்ணன் சார்பாக, மேக்சிஸ் நிறுவனத்தின் இயக்குனர் ரால்ப் மார்சல், 2005ம் ஆண்டு நவம்பர் 16ம் தேதி, சிவசங்கரனுக்கு இ - மெயில் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், "மேக்சிஸ் நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்வதற்குத் தேவையான ஒப்புதலை பெறுவது எங்கள் பொறுப்பு. அதே நேரத்தில், மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகத்திடம் இருந்து ஏர்செல் நிறுவனம் பெற முடியாத லைசென்ஸ்களை பெறுவது, இரு நிறுவனங்களின் கூட்டுப் பொறுப்பு' என்று கூறியுள்ளார்.
இந்த இ - மெயில் அனுப்பப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பின், ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கியின் நிர்வாக இயக்குனர் பிரகலாத் ஷாந்திகிராம், ஏர்செல் நிறுவனத்தின் அப்போதைய உரிமையாளரான சிவசங்கரனுக்கு இ - மெயில் ஒன்றை அனுப்பியுள்ளார். அதிலும், தொலைத் தொடர்பு அமைச்சகத்தில் நிலுவையில் உள்ள ஏர்செல் நிறுவனத்தின் லைசென்ஸ் விண்ணப்பங்கள் மற்றும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் பெறுவது மேக்சிஸ் மற்றும் ஏர்செல் நிறுவனத்தின் கூட்டுப் பொறுப்பு என்று கூறப்பட்டுள்ளது. இந்த இ - மெயிலின் நகல், ரால்ப் மார்சலுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. மேக்சிஸ் நிறுவனம் ஏர்செல் நிறுவனத்தை வாங்க, ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கிதான் நிதியுதவி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.ஒரு தொலைத் தொடர்பு நிறுவனத்தை வாங்கும் போது, நிலுவையில் உள்ள லைசென்ஸ்கள் மற்றும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டிற்கான ஒப்புதல் பெற, தாங்களும் பொறுப்பேற்றுக் கொள்வதாக எந்த ஒரு நிறுவனமும் உத்தரவாதம் அளிக்காது.ஆனால், மேக்சிஸ் நிறுவனம் இந்த விஷயத்தில், சிவசங்கரனுக்கு உத்தரவாதம் அளித்துள்ளது. இதிலிருந்தே, தயாநிதிக்கும், மேக்சிஸ் நிறுவனத்திற்கும் ரகசிய தொடர்பு இருந்திருக்கலாம் என்பது தெளிவாகிறது என, நிபுணர்கள் கூறுகின்றனர்."நிலுவையில் உள்ள லைசென்ஸ்களை தாங்களே பெற்றுக் கொள்வதாகவும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்றுக் கொள்வதாகவும், முதலீட்டிற்கான ஒப்புதலை பெற்றுக் கொள்வதாகவும் பொறுப்பேற்று, ஒரு நிறுவனத்தை மற்றொரு நிறுவனம் வாங்கியது தொடர்பான வர்த்தக ஒப்பந்தத்தை, இதுவரை நான் பார்த்ததில்லை. 
ஏர்செல் நிறுவனத்தை மேக்சிஸ் வாங்கியதில் தான் இது நடந்துள்ளது' என, பிரபல சட்ட நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.மேக்சிஸ் நிறுவனம் இப்படி பொறுப்புகளை ஏற்றுக் கொண்ட பின்னரே, 2006ம் ஆண்டு மார்ச் மாதம், ஏர்செல் நிறுவனம் சிவசங்கரனிடமிருந்து 4,813 கோடி ரூபாய்க்கு, மேக்சிஸ் அனந்த கிருஷ்ணனுக்கு விற்கப்பட்டது. ஏர்செல் நிறுவனம், "மேக்சிஸ்'க்கு கைமாறிய ஏழு மாதத்தில், அந்த நிறுவனம் தொலைத் தொடர்பு அமைச்சகத்தில் நிலுவையில் இருந்த லைசென்ஸ்களை எல்லாம் பெற்றுள்ளது. ஏர்செல் நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கான ஒப்புதலை, அன்னிய முதலீட்டு அபிவிருத்தி வாரியத்திடமிருந்து இரண்டு மாதங்களுக்குள் பெற்றுள்ளது.
ஆனால், சிவசங்கரன் வசம் ஏர்செல் நிறுவனம் இருந்த போது, விண்ணப்பித்து 20 மாதங்களுக்கும் மேலாக, அந்த நிறுவனத்திற்கு தொலைத் தொடர்பு சேவை துவக்க லைசென்ஸ்களும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.சிவசங்கரன், அனந்த கிருஷ்ணன், பிரகலாத் சாந்திகிராம் இடையே நடந்த இ - மெயில்கள் தொடர்பாக, பத்திரிகை நிறுவனம் ஒன்று தயாநிதியிடமும் மற்றவர்களிடமும் கருத்து கேட்ட போது, அவர்கள் எதையும் தெரிவிக்க மறுத்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மோசடி கதை என்ன?* சிவசங்கரன் வசம் ஏர்செல் நிறுவனம் இருந்த போது, அந்த நிறுவனத்தின் துணை நிறுவனமான டிஷ்நெட் ஒயர்லெஸ் நிறுவனம், ஏழு வட்டங்களில் தொலைத் தொடர்பு சேவையை துவக்க அனுமதி கேட்டும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு கேட்டும் விண்ணப்பித்த போதும், அதற்கு ஒப்புதல் தராமல் இழுத்தடித்தார் தயாநிதி* பின்னர் தான், ஏர்செல் நிறுவனம், தயாநிதியின் நண்பரான, மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்தின் தலைவர் அனந்த கிருஷ்ணனுக்கு விற்கப்பட்டது.* ஏர்செல் நிறுவனத்தை மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்கும்படி, தயாநிதி தன்னை கட்டாயப்படுத்தினார் என, சிவசங்கரன் சி.பி.ஐ.,யிடம் வாக்குமூலம் அளித்தார்.* மேக்சிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான அஸ்ட்ரோ, தயாநிதி குடும்பத்தின் சன் டைரக்ட் "டிவி'யின், 20 சதவீத பங்குகளை மிக அதிக விலையான 675 கோடி ரூபாய்க்கு வாங்க, நான்கு மாதங்களில் மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் அளிக்கப்பட்டது.* மேக்சிஸ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் ஏர்செல் நிறுவனம் வந்த பின்னரே, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற நடைமுறையை தயாநிதி கொண்டு வந்தார்.* ஏர்செல் நிறுவனத்தை சிவசங்கரனிடமிருந்து மேக்சிஸ் வாங்கியதும், அதற்கு நிறுவனத்திற்குத் தேவையான லைசென்ஸ்களை எல்லாம் தயாநிதி வழங்கினார். தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரைகள் இல்லாமலேயே இவற்றை வழங்கினார்.* சிவசங்கரனிடமிருந்து ஏர்செல் நிறுவனம் கைமாறியதும், அந்த நிறுவனத்திற்கு லைசென்ஸ் வழங்காமல் இருப்பதற்காக கொண்டு வந்த விதிமுறைகளை எல்லாம் தயாநிதி ரத்து செய்தார்.* ஏர்செல் நிறுவனத்தை மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்க, தயாநிதி நிர்பந்தம் செய்தார் என, கடந்த ஜூலை 6ம் தேதி, சி.பி.ஐ., குற்றம் சாட்டியது.* ஏர்செல் நிறுவனம் மேக்சிஸ் வசம் வந்த பின், அந்த நிறுவனத்திற்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யவும், லைசென்ஸ்கள் வழங்கவும், சட்ட விரோதமாக தயாநிதி சலுகை காட்டினார் என்றும், சி.பி.ஐ., குற்றம் சுமத்தியது. தங்கள் குடும்ப நிறுவன சன் டைரக்ட் "டிவி'யில் மேக்சிஸ் நிறுவனம் கணிசமான அளவில் முதலீடு செய்யவே இதைச் செய்தார் என்றும் கூறியது.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ரூ 5 கோடி சாதனங்கள் பறிமுதல்... எஸ்சிவி மீது புகார்!

 
கோவை: சன் டிவி குழுமத்தின் முக்கிய நிறுவனமான சுமங்கலி கேபிள் விஷன் மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சேனலின் நிர்வாகிகள் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கேபிள் இணைப்புகளை துண்டித்ததுடன் ரூ.5 கோடி மதிப்புள்ள மின்சாதன பொருட்களை பறிமுதல் செய்ததாக மீது கோவை மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்துள்ளனர்.

கோவை அரசு கேபிள் டிவி ஒளிபரப்பாளர்கள் சங்கத்தை சேர்ந்த 70க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அரசு கேபிள் டிவி ஒளிபரப்பாளர்கள் சங்க மாநில தலைவர் யுவராஜ் தலைமையில் கோவை மாவட்ட கலெக்டரிடம் நேற்று புகார் மனுவை அளித்தனர்.

எஸ்.சி.வி. நிறுவனத்தினர் கடந்த ஆட்சியின் போது 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கேபிள் டிவி இணைப்புக்களை துண்டித்ததுடன் 100க்கும் மேற்பட்ட கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பயன்படுத்திய சுமார் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு மின்னணு பொருட்களை பறிமுதல் செய்திருப்பதாகவும் அதை திரும்ப தங்களிடம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்தப் புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.

எஸ்.சி.வி. நிறுவனத்தின் மேலாளர் நடேசன் தூண்டுதலின் பேரில் கே டிவி நிறுவனத்தை சேர்ந்த குமார், ராஜேந்திரன் மற்றும் சேலம் முருகேஷ், யூனிகான் பாஸ்கர் ஆகியோர்தான் இணைப்புகளை துண்டித்து பொருட்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், எனவே இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்திலும் புகார்

இதே போல நாமக்கல் மாவட்டத்தில் கேபிள் டிவி நடத்தி வரும் மத்திய அமைச்சர் காந்தி செல்வனின் தம்பி அரசு கேபிள் டிவி இணைப்புகளைத் துண்டிப்பதாகவும், அவர் நடத்தி வரும் கேபிள் டிவி இணைப்புகளை மட்டுமே பயன்படுத்த வலியுறுத்துவதாகவும் நாமக்கல் மாவட்ட கலெக்டரிடம் புகார் தரப்பட்டுள்ளது.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

03_08_2011_003_002-sun-tv.jpg?w=640&h=229



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

03_08_2011_001_003-dayanithi-cbi.jpg?w=640&h=660



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

 கலாநிதி மீது புகார் கொடுத்தவரின் மரணத்தில் மர்மம்: போலீஸார்

 03 Aug 2011 06:29:09 PM IST

 
ராமநாதபுரம், ஆகஸ்ட் 3: கலாநிதி மாறன் தன்னை போனில்  தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுத்தார்; மேலும் டிஎஸ்பி குமாரவேல், சுமங்கலி கேபிள் விஷன்ஸ் விநியோகஸ்தர்கள் இருவர் என் 15 லட்ச ரூபாய் உபகரணங்களை கைப்பற்றிக் கொண்டனர்  என்று குற்றம் சாட்டி புகார் கொடுத்திருந்தார் ராமநாதபுரத்தைச் சேர்ந்த எஸ்.நாகராஜன்.

 

இப்புகார் தொடர்பாக ராமநாதபுரம் எஸ்.பி.அணில்குமார் கிரி மதுரையில் போலீஸ் உதவி கமிஷனராக இருந்து தற்போது திருவண்ணாமலை மாவட்டக் குற்ற ஆவணக்காப்பக பிரிவில் டி.எஸ்.பி.யாக பணிபுரியும் குமாரவேலிடமும் புகார்தாரரான எஸ்.நாகராஜனிடமும் விசாரணை செய்தார்.

 

இந்நிலையில் எஸ்.நாகராஜன் புதன்கிழமை

 

இன்று வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு உயிரிழந்து விட்டதாகக் கூறப்படுகிறது.

 

இச்சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் பஜார் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன், இது இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.

 

நாகராஜன் அளித்த புகார் விசாரணையில் இருப்பதாலும், அவருடைய மரணத்தில் சந்தேகம் இருப்பதாலும் போலீஸார் இத்தகைய நடவடிக்கை எடுத்துள்ளனர். மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு உடலை அனுப்பி வைத்த போலீசார், அதன் முடிவுகளைப் பொறுத்தே அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து யோசிப்போம் என்று தெரிவித்துள்ளனர்.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

தயாநிதி மாறன்....prg..

 
நான் ஒரு ராசி இல்லாத ராஜா என்ற இந்த பாட்டுக்கு சொந்தக்காரர் வேறு யாருமில்லை. தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன்தான்.
அவர் ராசியில்லாதவரா.... ராசியானவரா என்பதை பார்க்கும் முன்பு, தயாநிதியின் இந்த நிலைக்கு காரணம் யார்?
ஒரு தாத்தா... உடனே... அந்த தாத்தா கலைஞர் கருணாநிதி என்று நினைக்காதீர்கள்.
தாத்தா என்றால், வயதானவர். அவர் தாதாவும் கூட... தாதா என்றதும் ஏதோ பேட்டை வஸ்தாது... பிஸ்தா என்று நினைக்காதீர்கள்.
தாதா என்றால் தொழில்துறையில் தாதா என்று அழைக்கப்படுவர். இன்னுமா தெரியவில்லை.
அவர் பெயர் ரத்தன் டாட்டா. கிட்டத்தட்ட தயாநிதி மாறனின் வயதை வைத்து பார்த்தால் ரத்தன் டாட்டா தாத்தா போன்றவர். அந்த டாட்டாவை போட்டு பார்த்து, இன்று டப்பா டான்ஸாடிக் கொண்டிருக்கிறார் தயாநிதி.
தயாநிதியை சொல்லி குற்றமில்லை. அவருக்கு அந்த இடத்தை கொடுத்த கலைஞரைத்தான் குற்றம் சாட்ட வேண்டும். டாட்டாவை எதிர்க்க
வேண்டிய நிர்ப்பந்தம் என்ன
? அவருக்கும் இவருக்கும் பரம்பரை பகையா? அல்லது பாகம் பிரிக்கும் பங்காளிச் சண்டையா?அல்லது தயாநிதியை சந்தித்து, தொலைத்தொடர்புத்துறையில் இருந்து ரவுடி மாமூல் தரும்படி டாட்டா கேட்டாரா?
டாட்டா யார்? பரம்பரை பணக்காரன். அதுவும் மூன்று நான்கு தலைமுறைகளாக பணத்தை பார்த்துக் கொண்டிருப்பவர்கள். கிட்டத்தட்ட 70 வருடங்களுக்கு மேல் தொழில் துறையில் டாட்டா குடும்பம் ஈடுபட்டு வருகிறது. தயாநிதி மட்டுமல்ல.... இந்தியாவில் 1950க்கு மேல் பிறந்த எல்லாருடைய தந்தையும், தன் மகனை பார்த்து.... நீ கேட்டதெல்லாம் வாங்கித்தர நீ ஒன்னும் டாட்டா-பிர்லா குடும்பத்தில் பிறக்கலை என்ற டயலாக்கை கேட்டிருப்பார்கள். அப்படிப்பட்ட பேமிலி அது.
பத்தாயிரம் கோடி ரூபாயை தொழில் மூலம் சேர்க்க, அந்த நிறுவனம் எத்தனை ஆண்டுகள் பாடுபட்டது.... டி.வி.எஸ். குழுமம் இன்று இத்தனை கோடிகள் கொண்ட நிறுவனமாக மாறியது எப்படி? மலையாள மனோரமா பத்திரிகையின் வளர்ச்சி எப்படி? சென்னை சில்க்ஸ் குழுமத்தின் எப்படி இத்தனை வளர்ச்சி கண்டது. அடையாறு ஆனந்தபவன் ஓட்டல் கிளைகள் இன்று 70க்கு மேல் போய்க் கொண்டிருக்கிறதே எப்படி? இதெல்லாம் ஒரு நாளில் அல்லது ஒரு வருடத்தில் நடந்த சாகசமா? இந்த குழுமங்கள் எல்லாமே குறைந்து முப்பது வருடங்களாக தொழிலில் இறங்கி மேலே வந்தவை?
10 ஆயிரம் கோடி ரூபாய் நிறுவனம் என்ற பெயரை பெற டாட்டா குடும்பத்தின் உழைப்பு என்ன? அவர்கள் எல்லாம் எம்.எல்.ஏ.வும்.... எம்.பி.யுமாகி அமைச்சர்களாக வலம் வந்து பணத்தை லவட்டிக் கொண்டவர்களா?
பத்து வருடங்களில் கலாநிதியும் தயாநிதியும், இந்தியாவின் பணக்காரர் பட்டியலில் 20 முதல் 30க்குள் வரும் அளவுக்கு எப்படி முடிந்தது? அந்த வேகம் தான் 70 வருடங்களுக்கு மேல் இந்தியாவில் தொழில் துறையில் தாதாவாக இருக்கும் டாட்டா குடும்பத்துடன் மோத வைத்தது?
 
அதுவும் டி.டி.எச். என்ற தொழில்நுட்பம் மூலம் டிவி சேனல்களை காட்டும் தொழிலில்
தமிழ்நாட்டில் டாட்டாவின் நிறுவனம் கால் பதிக்கக் கூடாது.... அப்படி கால் பதித்தால், அதில் பங்கு வேண்டும் என்று மிரட்டுவதற்கு தயாநிதிக்கு என்ன துணிச்சல்?
டாட்டாவை தயாநிதி மிரட்டினார் என்று செய்தி வந்த போதே கருணாநிதி என்ன செய்திருக்க வேண்டும். பேராண்டி....உனக்கு அனுபவம்
3.jpg
பத்தாது. நானே இங்க இருக்கற தொழிலதிபர்களை மிரட்டினது கிடையாது என்று அறிவுரை கூறி தயாநிதியை தலையில் தட்டி
வைத்திருந்தால்... இந்த அவமானம் வந்திருக்குமா?
தயாநிதி யார்? முரசொலி மாறனின் மகன். முரசொலி மாறன் யார்? கருணாநிதியின் அக்காள் மகன். முரசொலி மாறனுக்கு முகவரி யார் கருணாநிதி. முரசொலி மாறனின் வளர்ச்சிக்கு காரணம் யார் கருணாநிதி. முரசொலி மாறன், மத்தியில் அமைச்சராக இருந்ததற்கு காரணம் யார் கருணாநிதி.
முரசொலி மாறனின் மகன் கலாநிதி சன் டிவி என்ற தொழிலை தொடங்க காரணம் யார் கருணாநிதி. அதற்கு வங்கியில் இருந்து 6 கோடி ரூபாய் கடனுதவி வாங்கிக் கொடுத்தது யார் கருணாநிதி. அதையும் எப்படி வாங்கிக் கொடுத்தார் தி.மு.க.வின் சொத்துக்களை வங்கியில் கேரண்டி கொடுத்து?
இப்படி வளர்ந்த மாறனின் மகன்கள், தாத்தாவின் மார் மீதே முட்டினார்களே? பேரன்கள் மீது தாத்தா வைத்த பாசம் மோசமாகிவிட்டதே. பதிலுக்கு அவர்கள் காட்டிய பாசமும் விசுவாசமும் என்ன? குடும்பத்தில் யார் பெரியவர் என்ற மோதலில் ஸ்டாலினையும் அழகிரியையும் மோதவிட்டு வேடிக்கை பார்த்தவர்கள் தானே இந்த பேரன்கள்?
கருணாநிதியின் பாசம் கண்ணை மறைத்தது. கடைசியில் பாசத்தால்... இன்று கட்சியே மறையத் தொடங்கிவிட்டதே?
கருணாநிதியின் சுயநலத்தால் கட்சியும் இன்று கலகலத்துவிட்டது. குடும்பமும் பொல பொலவென உதிர்கிறது.
சரி... அது போகட்டும். தயாநிதிக்கும் மத்திய அமைச்சர் பதவிக்கும் ஏன் ராசி இல்லை.
ராசி என்றால், ஏதோ ஜோதிட ரீதியாக சொல்லும் அர்த்தம் இல்லை. ராசி என்பது, அதற்கான பக்குவம் வரவில்லை என்பதுதான் அதன்
உண்மையான கருத்து.
 
ஒரு தொழில் செய்ய வேண்டும். அதை தெரிந்து செய்ய வேண்டும். அதில் இருக்கும் கஷ்ட நஷ்டங்களை நெளிவு சுளிவுகளை அனுபவிக்க வேண்டும். அப்போதுதான், அத்தொழிலில் இருக்கும் நன்மை தீமைகள் தெரிய முடியும்.
4.jpg
இதெல்லாம் எதுவுமே அறிந்துக் கொள்ளாமல், தங்கள் குடும்ப அதிகாரத்தின் மூலம் தொழில் நடத்தி வந்தவர் தயாநிதி!
முதலில் அவர் நடத்திய தொழில் என்ன? எச்.எப்.ஓ. என்ற டிஸ்கொத்தே டான்ஸ் தொழிலை, அருணா இன் ஓட்டலில் ஒரு தளத்தை வாடகைக்கு எடுத்து நடத்தி வந்தார். டிஸ்கொத்தே டான்ஸூக்கு வரும் கூட்டம் யார்? காசு கொழுத்தக் குடும்பமும், கட்டப்பஞ்சாய்த்து செய்து, அதில் வரும் காசை அடாவடியாக செலவழிக்கும் கும்பலும் தான் டிஸ்கொத்தேவுக்கு வரும்.
அந்த கும்பலை டான்ஸ் ஆடும் போது அடக்கி ஆள பவுன்சர்கள் என்ற தடியர்கள் கூட்டத்தை கையில் வைத்துக் கொள்ள வேண்டும். அப்படி பத்துக்கும் மேற்பட்ட பவுன்சர்களை வைத்துக் கொண்டு தொழில் செய்துக் கொண்டிருந்தார். அதாவது பத்து அடியாட்களை வைத்து தொழில் நடத்தும் எண்ணம் படைத்தவருக்கு, என்ன மனோபாவம் இருக்கும் என்பதை நீங்களே புரிந்துக் கொள்ளுங்கள். அவர் எந்தத் தொழில் தொடங்கினாலும், அடியாட்களை வைத்து அடக்கியாள வேண்டும் என்ற மனநிலைக்கு தள்ளப்பட்டிருப்பார் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.
பின்னர், சுமங்கலி கேபிள் விஷன் என்ற தொழிலில், கேபிள் டிவி ஆபரேட்டர்களை ஒருங்கிணைக்கும் பணியில் அமர்ந்தார். அங்கேயும் உருட்டல், மிரட்டல் பணிகளே பரிணாமித்தது.
இந்த நேரத்தில் தான், அவரது தந்தையின் மரணத்துக்குப் பிறகு, அவருக்கு மத்திய அமைச்சராக்கும் யோகம் அடித்தது. அடிப்படையில், தயாநிதிக்கு அந்தப் பதவியை தக்க வைத்துக் கொண்டு, 50 வருடம் அரசியல் நடத்த வேண்டும் என்ற எண்ணம் இருந்திருந்தால்................. எப்படி நடந்திருப்பார்?

சிவசங்கரனை மிரட்டி அவரது கம்பெனியை விற்க வைத்திருக்கமாட்டார்?
பின்னர் அவரையே கைது செய்து சிறையில் அடைக்க துடித்திருக்க மாட்டார்?
5.jpg
கேபிள் டிவி தொழிலில் வந்த சிட்டி கேபிள், ஹாத்வே குழுமங்களின் கேபிள்களை அறுக்கும்படி உத்தரவிட்டிருக்கமாட்டார்?
டாட்டாவை எதிர்த்திருக்கமாட்டார்?
அழகிரியுடன் மோதியிருக்க மாட்டார்?
தாத்தா கருணாநிதியை எதிர்த்து பேட்டி கொடுத்திருக்கமாட்டார்?
-இப்படி எத்தனையோ மாட்டார்........ என்று வாசகங்கள் வரும்.
முதலில், 2004ம் ஆண்டில் 36 வயதில் அவருக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைத்த போது, அவருக்கு இருந்த பக்குவம் போதாது. வயது... பணம்.... அதிகாரம்... இதெல்லாம் அவரை ஆட்டிப்படைத்துவிட்டது. 2004ம் ஆண்டு பதவிக்கு வந்த அவர், 2007ம் ஆண்டு பதவியை இழந்தார். அடுத்து எப்படியோ, குடும்பம் ஒன்று சேர்ந்து 2009ம் ஆண்டு மீண்டும் மத்திய அமைச்சரவையில் சேர்ந்தார். 2011ம் ஆண்டு பதவி போனது.
முதல் முறை மூன்று வருடங்களும், இரண்டாவது முறை இரண்டு வருடங்களுமே அவரால் மத்திய அமைச்சராக முடிந்தது.6.jpg


ஸ்பெக்டரம் ஊழல் விவகாரத்தில் ராசாவை சிக்க வைக்க செக் வைத்தவரே தயாநிதி தான் என்ற குற்றச்சாட்டுகள் தி.மு.க.வினராலே வைக்கப்படுகிறது. அதே பூதம் தன்னையே தாக்கும் என்ற எண்ணம் அவருக்கு வந்திருந்தால்.... இன்று இந்த நிலை வந்திருக்குமா?
அதாவது இங்கே மீண்டும் ஒரு முறை பழைய பாடலை நினைவு கூற வேண்டியிருக்கிறது.
“நான் ஒரு ராசியில்லா ராஜா” என்ற பாடல் அல்ல அது.
தி.மு.க.வின் தலைவர் கருணாநிதியின் குடும்ப நிழலில் வளர்ந்ததால், கஷ்ட நஷ்டங்களையும் அறியாமல் உச்சாணிக்கொம்பில் ஏறி நின்றவர் தயாநிதி. இந்த உயரத்தை அடைய டி.ஆர்.பாலு, பழனிமாணிக்கம் ஆகியோர் கடந்து வந்த பாதை என்ன என்பதை ஒரு நாள் அவர் சிந்தித்துப் பார்த்திருந்தால்.... 
இதோ அந்த பாடல்... 

ஆற்றங்கரையின் மரமும்.. 
அரசறிய வீற்றிருந்தார் வாழ்வும்... 
விழுமன்றோ! 
 


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

என்னதான் தவறு செய்துவிட்டார் தயாநிதி.dm

 
எப்போதோ நடந்திருக்க வேண்டியது, காலதாமதமாக இப்போது நடந்திருக்கிறது. மத்தியப் புலனாய்வுத் துறை ஐயம்திரிபற மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறனின் செயல்பாடுகளில் இருந்த தவறை உச்ச நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டிய பிறகுதான் வேறு வழியே இல்லாமல் அவரது பதவி விலகல் கடிதத்தைக் கேட்டுப் பெற்றிருக்கிறார் என்பதிலிருந்தே தனது கடமையைப் பிரதமர் நன்கு செய்யவில்லை என்பது உறுதியாகிறது.

 2004 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் அங்கம் வகிக்க திமுக முன்வைத்த நிபந்தனைகளில் முக்கியமானது, தயாநிதி மாறனுக்குத் தகவல் மற்றும் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் பதவி. அந்தப் பேராசைதான் இப்போது அந்தக் குடும்பத்தினர் ஒருவர்பின் ஒருவராக திகார் சிறைச்சாலைக்குள் அடைக்கப்பட வழிகோலியிருக்கிறது.

 அப்படி என்னதான் தவறு செய்துவிட்டார் தயாநிதி மாறன்? 2004 முதல் 2007 வரை தயாநிதி மாறன் மத்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில்தான் அலைக்கற்றை ஒதுக்கீடு என்பது லாபம் கொழிக்கும் ஒன்றாக மாறத் தொடங்கியது. அதுவரை குறைந்த அளவிலான செல்பேசிகள் இருந்ததுபோய், ரிக்ஷா ஓட்டுநரும், காய்கறி வியாபாரியும், விவசாயியும், கட்டடத் தொழிலாளியும்கூட செல்பேசியும் கையுமாக இந்தியாவை ஒளிரச் செய்யத் தொடங்கிய காலகட்டம் அது.

 1994-ல் செல்பேசி சேவையில் ஈடுபடத் தொடங்கிய சிவசங்கரன் என்பவரின் "ஏர்செல்' நிறுவனம் 1999 முதல் சென்னையைத் தவிர, தமிழகத்தின் ஏனைய பகுதிகளின் சேவைக்காக உரிமம் பெற்றது. 2003-ல் சென்னையிலும் சேவையில் ஈடுபட உரிமம் பெற்றதுடன், 2004-ல் விண்ணப்பித்திருந்த இந்தியாவின் 10 வெவ்வேறு பகுதிகளில் 7 பகுதிகளுக்கான உரிமத்தையும் பெற்றது. இதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தயாநிதி மாறன் 2004-ல் மத்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்புத்துறை அமைச்சராகிறார்.

 தான் விண்ணப்பித்திருந்த மீதமுள்ள 3 பகுதிகளுக்கு உரிமம் பெற தலைகீழாக நின்றும் சிவசங்கரனின் ஏர்செல் நிறுவனத்துக்கு உரிமம் தராமல் வேண்டுமென்றே தள்ளிப்போடுகிறார் அமைச்சர் தயாநிதி மாறன். ஏர்செல் நிறுவனம் மீதமுள்ள 3 உரிமங்களையும் பெற்றுவிட்டால் தொலைக்காட்சி டிடிஎச் சேவையைத் தொடங்கக்கூடும், அதனால் தங்களது குடும்ப நிறுவனமான சுமங்கலி கேபிள் விஷன் பாதிக்கப்படக்கூடும் என்பதுதான் தயாநிதி மாறனின் தயக்கத்துக்கான பின்னணி.

 அரசியல் சட்டத்தின் மீது விருப்பு வெறுப்பில்லாமல், சுயநல மனமாச்சரியங்களுக்கு இடம்கொடுக்காமல் பணியாற்றுவேன் என்று கூறி பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட தயாநிதி மாறனின் அடுத்தகட்ட நடவடிக்கை அதைவிட மோசமானது. ஏர்செல் நிறுவனத்துக்கு உரிமம் தராமல் இழுத்தடித்து சிவசங்கரனை உருட்டி மிரட்டி ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் என்கிற நிறுவனத்துக்கு விற்றுவிடச் செய்திருக்கிறார் அமைச்சர் தயாநிதி மாறன்.

 ரூ. 36,000 கோடி விலை மதிப்புள்ள ஏர்செல் நிறுவனத்தின் பங்குகள் வெறும் ரூ. 3,600 கோடிக்கு மேக்சிஸ் நிறுவனத்துக்கும் (74%), அப்போலோ குழுமத்துக்கும் (26%) வலுக்கட்டாயமாகப் பெறப்பட்டன. இந்த விற்பனை முடிந்ததுதான் தாமதம், முறையான கட்டணத்தைப் பெறுவதற்குக்கூட காத்திராமல் ஏர்செல் நிறுவனத்துக்கு மீதமுள்ள 3 உரிமங்களும் வழங்கப்பட்டன. இதன்மூலம், இந்தியாவிலுள்ள 62 கோடி செல்பேசி வாடிக்கையாளர்களின் வியாபாரத்தைப் பெறும் வாய்ப்பை புதிய நிர்வாகத்தின்கீழ் உள்ள ஏர்செல் நிறுவனம் பெற்றது. இதற்குப் பிரதியுபகாரமாக மேக்சிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஆஸ்ட்ரோ என்கிற நிறுவனம் சன் குழுமத்தின் டிடிஎச் சேவையிலும் எப்எம் சேவையிலும் ரூ. 600 கோடி முதலீடு செய்திருக்கிறது என்பது சிவசங்கரனின் குற்றச்சாட்டு.

 அத்துடன் நின்றுவிடவில்லை தயாநிதி மாறனின் முறைகேடுகள். 2006-ல் அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான கட்டண நிர்ணயம் அமைச்சர்களின் குழுவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்கிற நிதியமைச்சகத்தின் கருத்தைப் பிடிவாதமாக எதிர்த்து, அது தகவல் மற்றும் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் என்கிற முறையில் தனது தனிப்பட்ட உரிமையாகத்தான் இருக்க வேண்டும் என்று கேட்டுப் பெற்றிருக்கிறார் தயாநிதி மாறன். ஒருவேளை, அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான கட்டண நிர்ணயம் அமைச்சர் குழுவால் தீர்மானிக்கப்பட்டிருந்தால் ஒதுக்கீட்டில் முறைகேடுகளுக்கு இடமே இல்லாமல் போயிருக்கும்.

 மாறன் சகோதரர்களின் முறைகேடான வியாபார வழிமுறைகள் என்றாவது ஒருநாள் அவர்களைச் சட்டத்தின் பிடியில் சிக்க வைக்கும் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனால், எதிர்பாராத ஒன்றும் நடந்திருக்கிறது. மாறன் சகோதரர்களின் தாத்தாவான முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியின் விசித்திரமான வியாக்கியானம்தான் அது.

 "உலகிலேயே, குறிப்பாக இந்தியாவில் மீடியாக்களின் ஆட்சி நடைபெறுகிறது. அவர்கள் நினைத்தால் யாரையும் இழிவுபடுத்திவிட முடியும். அதற்குத் தயாநிதி மாறன் விதிவிலக்கல்ல' என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார் கருணாநிதி. ஊடகத்தின் மூலம் தனக்கு வேண்டாதவர்களை இழிவுபடுத்தும் வழிமுறைக்கு வித்திட்டதே கருணாநிதியும் அவர் சார்ந்த இயக்கமும்தானே. காமராஜ், பக்தவத்சலத்தில் தொடங்கி யார் யாரையெல்லாமோ, ஊடகம் கையிலிருக்கிறது என்கிற மமதையிலும் இறுமாப்பிலும் இழிவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடியபோது கிடைக்காத ஞானோதயம் இப்போது தனது மகளும், பேரனும் "மெகா' ஊழலில் ஈடுபட்டு சட்டத்தின் பிடியில் சிக்கும்போதுதான் கருணாநிதிக்கு ஏற்பட்டிருக்கிறது!
 


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

சன் டிவியின் புதிய சேனல்கள் லிஸ்ட்

ஆட்சி மாற்றம் நடந்தாலும் எங்களுக்குக் கவலையில்லை. எங்கள் ராஜ்ஜியத்தில் நாங்கள்தான் ராஜா என்பதைப் போல தொழிலில் தொலைக்காட்சி உலகத்தில் தனிக்காட்டு ராஜாவாகத் திகழ்கிறார்கள் மாறன்கள்.

ஏற்கெனவே இருக்கின்ற சேனல்களையே பார்ப்பதற்கு முடியாமல் இருக்கும் நிலையில், கடந்த ஜனவரி மாதம் 12-ம் தேதியன்று கூடுதலாக 13 சேனல்களுக்கு அனுமதி பெற்றுள்ளார்கள் மாறன்கள்.
 
sun-network.jpg
அந்த 13 சேனல்களுக்கும் அப்லிங், டவுன்லிங் உடன் அனுமதி பெற ஒரே நாளில் மட்டும் 50 கோடி ரூபாயை செலவழித்துள்ளார்கள்.

வரவிருக்கும் புதிய சேனல்களின் பெயர்கள் இது :

1.ஜெமினி ஆக்சன்

2.ஜெமினி லைஃப்

3.ஜெமினி டிவி ஹெச்டி

4.கே டிவி ஹெச்டி

5.கொச்சு டிவி

6.சன் ஆக்சன்

7.சன் லைஃப்

8.சன் மியூஸிக் ஹெச்டி

9.சன் நியூஸ் ஆங்கிலம்

10.சன் டிவி ஹெச்டி

11. சன் டிவி ஆர்-1

12 சூரியன் டிவி நியூஸ்

13. சூரியன் ஆக்சன்

கூந்தல் உள்ள மாமி அள்ளியும் முடிவாள். கொண்டையும் போடுவாள். இல்லாதவள் எதுக்காக வயிறு எரிய வேண்டும்..!? 

உண்மைதான். இருந்தாலும் சுமங்கலி கேபிளில் கேட்காமலேயே அனைத்து மொழி சன் குரூப் சேனல்களையும் நம்மிடம் தள்ளிவிடும் சன் நிர்வாகம், இந்த 13 சேனல்களையும் சேர்த்துக் கொடுத்தால் சுமங்கலியில் இடம் பெற்றிருக்கும் மற்ற சேனல்களெல்லாம் எங்கே போகும்..?



Read more: http://truetamilans.blogspot.com/#ixzz1U1o1EJ59



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

சக்சேனா குடும்பத்துடன் துபாயில் செட்டில் ஆகிவிடுவார் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

 
அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், சினிமா துறையில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் மாற்றம் இப்படி இருக்கும் என்று சினிமாக்காரர்களே எதிர்பார்க்கவில்லை. சக்சேனாவில் ஆரம்பித்த கைது ஐயப்பன், அழகர் என நீண்டுகொண்டே செல்ல, உச்சகட்ட பரபரப்பில் இருக்கிறது கோடம்பாக்கம்.

கடந்த ஆட்சியில் அதிகாரத்தைப் பயன்படுத்தி திரைப்படத் தயாரிப்பாளர்களை மிரட்டுவதாக சன் டி.வி. மீது புகார் எழுந்தது. ஆனால் ஆளுங்கட்சியை மீறி அவர்களை யாராலும் நெருங்க முடியவில்லை. ஆட்சி மாறுவதற்காகக் காத்திருந்த சினிமா துறையினர், அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் புகார்களைக் குவிக்க, சக்சேனா கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவருக்கு வலதுகரமாக இருந்த ஐயப்பனும் சிறைக்குச் சென்றார்.

மதுரை, ராமநாதபுரம் ஏரியாக்களில் கொடிகட்டிப்பறந்த அன்புச்செழியன், அழகர் சகோதரர்களில் அழகர் கைது செய்யப்பட, தயாரிப்பாளர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளனர். இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், இயக்குநர் ராசு மதுரவன், ‘ஆடுகளம்’ சுரேஷ், ‘தம்பிக்கோட்டை’ சுரேஷ், ‘சுந்தரா டிராவல்ஸ்’ தங்கராஜ் ஆகியோர் கைதானவர்கள் மீது புகார் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். சுஷில் குப்தா என்கிற மும்பை ஃபைனான்ஸியர் தற்போது திரைப்படம் ஒன்றை எடுத்து வரும் தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருவர் மீது புகார் கொடுத்திருக்கிறாராம். திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் செயலாளர் சிவசக்தி பாண்டியன் மீது மலேசியாவைச் சேர்ந்த செந்தில் என்பவரும் புகார் கொடுத்திருக்கிறாராம். 

தயாரிப்பாளர்கள் இப்போது கொடுத்துக் கொண்டிருக்கிற புகார்கள் எல்லாமே கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நடந்த தில்லுமுல்லுகள் குறித்துத்தான். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு புகார்கள் கொடுப்பதற்குக் காரணமே புதிய ஆட்சியில் நிச்சயம் நல்ல தீர்வு கிடைக்கும் என்கிற நம்பிக்கைதான். சக்சேனா, ஐயப்பன் ஆகியோர் அன்றைய ஆட்சியாளர்களின் உதவியுடன் தயாரிப்பாளர்களை உறிஞ்சி எடுத்துவிட்டார்கள். அவர்கள் பணிபுரிந்த நிறுவனத்திற்கும் விசுவாசமாக இருக்கவில்லை என்கிறார்கள். 

படத்தின் சாட்டிலைட் உரிமையை சக்சேனாவின் மைத்துனர் நிறுவனத்திற்குக் கொடுத்து விடுவார்கள். இந்த நிறுவனம் அந்தப் படங்களை சன் தொலைக்காட்சிக்கு கொடு த்துவிடும். இப்படி சாட்டிலைட் உரிமையைக் கொடுத்தாலும் படத்தின் சி.டி. உரிமை, தயாரிப்பாளருக்குத்தான். ஆனால் ஐயப்பனே அந்தப் படத்தின் சி.டி.களையும் போட்டு பணம் பார்த்து விடுவாராம். ‘ஏன் இப்படிச் செய்தீர்கள்?’ என்று கேட்டதற்காக ‘ஆடுகளம்’ தயாரிப்பாளர் கதிரேசன் என்பவரை மிரட்டி அடித்த கதையை கோபமாகச் சொல்கிறார்கள் திரைப்படத் துறையினர்.

அன்பு - அழகர் இருவர் மீதும் பலவிதமான புகார்கள் சொல்லப்பட்டாலும் சட்டரீதியாக புகார் கொடுக்க பலரும் தயங்கி இருக்கிறார்கள். ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் சட்ட ஆலோசகர் கணேசன்தான் முதலில் புகார் செய்திருக்கிறார். மதுரை, ராமநாதபுரம், சென்னை பகுதிகளில் ‘எந்திரன்’ படத்தை விநியோகிப்பதற்கான உரிமையை சன் பிக்சர்ஸிடம் இருந்து ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் நிறுவனம் வாங்கியது. இதில் தான் அன்பு, அழகர் சகோதரர்களுடன் பிரச்னை ஏற்பட்டதாம். 3.53 கோடி ரூபாய் பாக்கியை தங்களுக்கு செட்டில் செய்யவில்லை என ஜெமினி நிறுவனம் புகார் கொடுத்திருக்கிறது.

அழகர் கைதைத் தொடர்ந்து அன்பு மீதும் புகார்கள் குவிகின்றன. சென்னை வெங்கட்ரமணா சாலையில் உள்ள ஒரு ஹோட்டல் தொடர்பான வழக்கு இதில் முக்கியமானது. மதுரையில் வருமானவரி அதிகாரி ஒருவரைத் தாக்கிய வழக்கும் தூசி தட்டப்படுகிறது. தி.மு.க. மத்திய அமைச்சர் ஒருவரின் உறவினர் என்று சொல்லித் தான் அன்பு ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார் என்று புலம்புகிறார்கள் திரைத்துறையினர். 

‘‘படங்களின் சாட்டிலைட் உரிமைகளை ப்ளு ஸ்கை, ரெட் ஸ்கொயர் நிறுவனங்களுக்குத்தான் தரவேண்டும் என்று சக்சேனா கட்டாயப்படுத்தினார். இந்த நிறுவனங்களை சக்சேனாவின் மைத்துனர் சுரேஷ்தான் கவனித்து வந்தார். இவருக்கு இணங்காதவர்களை அன்பு, அழகர் ஆகியோரிடம் சொல்லி விடுவார்கள். தமிழ்ப் படத் தயாரிப்பாள ர்களில் அன்பு சகோதரர்களிடம் கடன் வாங்காதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்’’ என்று தயங்கியபடியே பேசினார் அந்தத் தயாரிப்பாளர்.

தொடர்ந்து, ‘‘தமிழ்ப் படத் தயாரிப்பாளர்கள் யாரும் முழுப் படத்தையும் முடிக்கும் அளவுக்கு போதிய பணத்துடன் வருவதில்லை. முதலில் மார்வாடிகள்தான் அதிக அள வில் ஃபைனான்ஸ் பண்ணி வந்தார்கள். ஆனால் அன்பு சகோதரர்கள் வருகைக்குப் பின்னர் அவர்கள் பயந்து ஒதுங்கி விட்டார்கள்.

45 சதவிகிதம் பணம் போட்டு படத்தைத் தொடங்குகிற தயாரிப்பாளர் படத்தை முடித்து அசல் தொகையை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் ஃபைனான் ஸியரிடம்தான் போக வேண்டும். அன்பு நான்கு சதவிகித வட்டிக்கு எவ்வளவு கோடி வேண்டும் என்றாலும் கடனாகக் கொடுப்பார். அழகரிடம் போனால் ஏரியா ஃபைனான்ஸ் பண்ணிவிட்டு மதுரை, ராமநாதபுரம், விருதுநகர் ஏரியாக்களில் படத்தைத் திரையிடுகிற டிஸ்டிரிபியூஷன் உரிமையை எழுதி வாங்கிக் கொள்வார். 

படம் ஹிட்டானால் பிரச்னை இல்லை. ஓடாவிட்டால் அவ்வளவுதான். ஏரியா, தியேட்டர்கள் அத்தனையும் அழகரின் கட்டுப்பாட்டில் இருப்பதால் தயாரிப்பாளர் பாடு திண் டாட்டம்தான். அடுத்து படங்களை திரையிடவும் முடியாது. கடன் தொகையின் வட்டியும் ஏறிக்கொண்டே போகும்.



அப்புறம் பணத்தைக் கட்டும்படி நிர்ப்பந்தம் வரும். மரியாதை குறையும். வீடு, வாசலை விற்று விட்டு தயாரிப்பாளர் நடுத்தெருவுக்கு வந்துவிடுவார். தயாரிப்பாளர் ஏ.எம்.ரத் னம் இதற்கு ஓர் உதாரணம். தயாரிப்பாளர் ஜி.வி. தற்கொலை செய்ததற்கும் இதே போன்ற ஃபைனான்ஸியர்கள்தான் காரணம். ‘சிவாஜி’ படத்தை ரிலீஸ் பண்ணுகிற கடைசி நேரத்தில் ஒருவர் பணத்தைக் கட்டவில்லை. நள்ளிரவு வரை பஞ்சாயத்து நடந்தது. ரஜினிகாந்த் கூட பேசிப் பார்த்தார். கடைசியில் அன்புதான் பணத்தைக் கட்டி ரிலீஸ் பண்ணினார். அந்த அளவுக்கு எப்போதும் ரெடி கேஷ் அவர் கையில் இருக்கும். ‘சிவாஜி’ படத்திற்கே அப்படி ஒரு நிலைமை என்றால் மற்ற தயாரிப்பாளர்களை நினை த்துப் பாருங்கள்’’ என்று பெருமூச்சு விட்டார்.

‘‘வசூல் ராஜா படத்தின் ரிலீஸ் நாளன்று 50 லட்சம் தரவில்லை என்பதற்காக படப்பெட்டியை அன்பு ஆட்கள் தூக்கிக்கொண்டு போய்விட்டார்கள். இந்தப் பிரச்னையில் சக்சேனாவும், ஐயப்பனும் தான் போலீஸ் தலையிடாமல் பார்த்துக் கொண்டார்கள். சன் பிக்ஸர்ஸ் நிறுவனம் தொடங்குவதற்கு முன்பே சக்சேனாவுக்கு திரைத்துறையில் லிங்க் இருந்தது. தங்களின் வியாபாரத்துக்காக அன்பு, அழகர் இருவரையும் சக்சேனா பயன்படுத்திக் கொண்டதால் அவர்களுக்கு போலீஸ் குடைச்சல் கொடுக்காமல் பார்த்துக் கொண்டார். இனியாவது இவர்கள் தொல்லை தீர்ந்தால் சரி’’ என்கிறார் மற்றொரு தயாரிப்பாளர். 

அடுக்கடுக்காக தன்மீது புகார்கள் குவிவதால் சக்சேனா நடுக்கத்தில் இருக்கிறாராம். அது மட்டுமின்றி சக்சேனாவின் காரில் சென்றபோது ஒரு பெண் மீது மோதியதாக ஒரு வழக்கு பெண்டிங்கில் உள்ளதாம். சிங்கப்பூரில் படித்துவரும் சக்சேனா மகன் சென்னை திரும்பினால் அவர் மீதும் வழக்கு பாயுமாம். புதிதாக யாரும் புகார் கொடுக்காமல் பார்த்துக் கொள்ள தன் நண்பர்களிடம் சொல்லி இருக்கிறாராம். வழக்குகளை முடித்துக்கொண்டு சக்சேனா குடும்பத்துடன் துபாயில் செட்டில் ஆகிவிடுவார் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

கமலக்கண்ணன், ஏ.சி.குமரவேல், சன் டி.வி. கலாநிதி மாறன் ஆகியோர் தன்னை மிரட்டி கேபிள் டி.வி.யை எழுதி வாங்கிவிட்டனர்’

 
கேபிள் தொழில் செய்ய விடாமல் தடுத்ததாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த மான்கொம்பு நாகராஜன் என்பவர் சன் டி.வி. நிர்வாக இயக்குனர் கலாநிதி மாறன் மீது புகார் கொடுத்திருந்தார். இந்நிலையில், அவர் மர்மமாக இறந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் மான்கொம்பு நாகராஜன். கடந்த 27-ம் தேதி இவர் ராமநாதபுரம் எஸ்.பி.அனி ல்குமார் கிரியிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில், ‘மதுரையில் ஆகாஷ் கேபிள் டி.வி. நடத்தும் சரவணன், கமலக்கண்ணன், ஏ.சி.குமரவேல், சன் டி.வி. கலாநிதி மாறன் ஆகியோர் தன்னை மிரட்டி கேபிள் டி.வி.யை எழுதி வாங்கிவிட்டனர்’ என்று குறிப்பிட்டிருந்தார். 

தொடர்ந்து 29-ம் தேதி மான்கொம்பு நாகராஜனை நேரில் சந்தித்தோம். பயந்தபடியே பேசிய அவர், ‘‘நான் சொல்லாததை எல்லாம் எழுதிடறாங்க. உயிருக்கு ஏதாவது ஆயிடுமோன்னு பயமா இருக்கு. எதுக்கும் நாம பேசறதை வீடியோ செய்துக்கலாம்’’ என்றபடியே தன் நண்பர் மூலம் நம்முடன் பேசியதைப் பதிவு செய்து கொண்டார்.

‘‘கடந்த 1998-ம் ஆண்டு முதல் 2002-ம் ஆண்டு வரை ‘லிங்க் ஆபரேட்டராக’ இருந்து கேபிள் டி.வி. நட த்தி வந்தேன். பிறகு 55 சேனல்களை ஒளிபரப்பு செய்யும்படியாக கண்ட்ரோல் ரூம் அமைத்தேன். அப்போது மதுரை எஸ்.சி.வி.அலுவலகத்திலிருந்தும், ராமநாதபுரத்திலிருந்தும் எனக்கு மிரட்டல்களும், இடையூறுகளும் வந்தது. இந்நிலையில், 27.2.2008 அன்று என் பெயரில் லைசென்ஸ் வாங்குவதற்கு போஸ்ட் ஆபீஸில் விண்ணப்பித்திருந்தேன். 2.3.2008 அன்று சிலர் என்னைக் கட்டாயப்படுத்தி மதுரைக்கு தூக்கிப் போனார்கள். 

மதுரை ராஜேஸ்வரி ஹோட்டல் மற்றும் செனாய் நகரில் உள்ள ஆகாஷ் கேபிள் டி.வி.யில் வைத்து என் னை கேபிள் தொழில் செய்யக்கூடாது என மிரட்டினார்கள். ஆகாஷ் டி.வி.யின் உரிமையாளர்களும், கலாநிதி மாறனின் ஏஜெண்டுகளுமான சரவணன், கமலக்கண்ணன் ஆகியோர் என்னை மிரட்டினார்கள். 

மறுநாள் மதியம் காவல்நிலையத்திற்கு என்னைக் கொண்டு சென்றனர். ஏ.சி.குமாரவேல் அங்கு வந்து, ‘ஒழுங்கு மரியாதையா கேபிள் டி.வி.யை எழுதிக் கொடுத்துட்டுப் போயிடு, இல்லைன்னா உன்னை அடிச்சே கொன்னுடுவேன். உம்மேல கற்பழிப்பு கேஸ், கஞ்சா கேஸ், காருக்கு தீவைச்ச கேஸ், வீட்டுக்கு தீ வைச்ச கேஸ் என எல்லாத்தையும் போட்டு உன்னை உள்ளே தள்ளி, உன்னோட வாழ்க்கையே தொலைச்சுப்பு டுவேன். நீ ஜென்மத்துக்கும் வெளியில் வரமுடியாது. ஒழுங்கா கையெழுத்துப் போட்டுட்டு போயிடு’ என மிரட்டினார். 

ஏ.சி.குமாரவேலுகிட்ட, ‘சார் நானும் தி.மு.க.காரன்தான்’னு சொன்னேன். ‘கட்சியைப் பத்தி பேசாதடா. அழகிரியை விட கலாநிதி மாறன் பெரிய வி.ஐ.பி, அவர்கிட்ட பேசுறியா?’னு செல்போனை என்னிடம் கொடுத்தார். போனில் பேசியவர், ‘நான் கலாநிதி மாறன் பேசுகிறேன்’ என சொல்லிவிட்டு, ‘மரியாதையாக சரவணன், கமலக்கண்ணன், ஏ.சி சொல்லுறபடி எழுதிக் கொடுத்துவிட்டுப் போயிடு. என்னை எதிர்த்து உ ன்னால தொழில் செய்யமுடியாது’ என மிரட்டினார். 

பயந்து போன நான், எதில் வேண்டுமானாலும் கையெழுத்துப் போடுவதாகத் தெரிவித்தேன். பத்திரத்திலும், நிறைய வெள்ளை பேப்பரிலும் கையெழுத்து வாங்கிக் கொண்டார்கள். என்னை காவல் நிலையத்தில் வைத் துக்கொண்டு, என்னோட கேபிள் ரூமில் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்த ரூ.15 லட்சம் மதிப்புள்ள பொரு ட்களையும், எடுத்துட்டுப் போயிட்டாங்க.இத்தனைக்கும் நான் தி.மு.க.வில் இருக்கிறேன். அழகிரி ஆதரவாளர் வேறு’’ என்று கலங்கினார். 

‘இந்தப் பிரச்னை தொடர்பாக நீங்கள் அழகிரியைப் பார்க்கவில்லையா?’ எனக் கேட்டோம். ‘‘என்னோட பிரச்னை நடக்கிறபோது, அதுவரை பிரிந்திருந்த சன் குழுமமும், அழகிரி அண்ணனும் சேர்ந்திருந்தாங்க. இரண்டு பேரும் மாத்தி, மாத்தி கேக் ஊட்டிக்கிட்ட போட்டோக்களை பேப்பர்களில் பார்த்தபின், என்னோட பேச்சு எடுபடாதுன்னு ஒதுங்கிட்டேன். கடந்த 15 ஆண்டுகளாக கேபிள் டி.வி.யை ஆக்டோபஸ் போல் ஆக்கிரமித்து சன் குழுமம் வைத்திருந்தது. பல கேபிள் ஆபரேட்டர்கள் தற்கொலை செய்துள்ளனர். ஆட்சி மாறியதால் நியாயம் கிடைக்கும் என புகார் கொடுத்துள்ளேன்’’ என்றார் கலங்கியபடி.

மறுநாள் 30-ம் தேதி நமக்கு பதற்றத்துடன் போன் செய்தார் நாகராஜன். ‘‘சார், எனக்கு நிறைய மிரட்டல்கள் வருது. போலீஸ் தரப்பிலிருந்தே மிரட்டுறாங்க. யாரை நம்பறதுன்னே தெரியலை. பெரிய இடம் என்பதால், என்னோட அம்மா பயப்படுறாங்க. இந்த செய்தியைப் போட வேண்டாம், ப்ளீஸ்’’ என கெஞ்சலாகவும், பட படப்பாகவும் பேசினார். 

இந்த வழக்கு குறித்து ஏ.சி. குமரவேல், மதிச்சியம் இன்ஸ்பெக்டர் குணசுந்தரம் ஆகியோரை கேணிக்கரை காவல் நிலையத்தில் வைத்து எஸ்.பி. அனில்குமார் கிரி மூன்று நாட்கள் விசாரித்தார். விசாரணையில் தன் மீதான புகாரை குமரவேல் முற்றிலும் மறுத்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், எஸ்.பி. அனில் குமார் கிரி தஞ்சாவூருக்கு மாற்றப்பட்டார். 
விசாரணை தீவிரமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், ஆகஸ்ட் 3-ம் தேதி மான்கொம்பு நாகராஜன் திடீரென இறந்து போனார். காலையில் இட்லி சாப்பிடுவதற்காக உட்கார்ந்தவர், துடிதுடித்து மயங்கி விழுந் துள்ளார். மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட அவர் ரத்தவாந்தி எடுத்து இறந்துள்ளார். ‘ஹார்ட் அட் டாக்’ என்று மருத்துவமனை கூறினாலும், நாகராஜன் சாவில் மர்மம் இருப்பதாக கிராம நிர்வாக அலுவலர் புகார் கொடுத்துள்ளார். 



மான்கொம்பு நாகராஜனின் மனைவி பூபதியை சந்தித்தோம். ‘‘இந்தப் புகார் கொடுத்த நாளிலிருந்து அவர் நிம்மதியாவே இல்லை. அடிக்கடி போலீஸ்காரங்க வந்து அவரை விசாரணைக்காக வெளியூர் கூட்டிக்கிட்டுப் போனாங்க. வெள்ளை சட்டையுடன் பெரிய ஆட்கள் நிறையப் பேர் காரில் வந்து பேசுவாங்க. ‘இந்தப் புகார் கொடுத்தது பெரிய தப்பாப் போச்சு. நிறையப் பேருக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கு’னு பலதடவை என் கிட்ட புலம்பினார். நேற்றுகூட மதுரைக்குப் போயிட்டு வர்றதா சொல்லிவிட்டுப் போனார். திரும்பி வந்து ஒரு வாய்தான் சாப்பிட்டார். மயங்கி விழுந்துட்டார்’’ என்றபடி கதறி அழுதார். 

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, ‘‘ஏ.சி.குமரவேலுக்கு வேண்டிய அதிகாரிகள்தான் நாகராஜன் புகார் குறித்து விசாரணை செய்தனர். அவர்கள் நாகராஜன் கொடுத்த புகாரை பொய்ப் புகாராக்க தொடர்ந்து முயற்சி செய்தார்கள். ‘பொய்ப் புகார் கொடுக்கிறாயா?’ என மான்கொம்பு நாகராஜனையே மிரட் டினார்கள். அதேபோல், ராமநாதபுரத்தில் கேபிள் டி.வி. நடத்தும் ஒருவரை மதுரையில் வைத்து ஏ.சி கு மரவேல் விசாரிக்க வேண்டிய அவசியம் என்ன என்பது குறித்தும் போலீஸார் விசாரிக்கவில்லை. கு மரவேல் ஜாலியாக விசாரணை முடிந்து வெளியேறி விட்டார். இதனால் புகார் கொடுத்த நாகராஜ் பயப்படாமல் என்ன செய்வார்? இது தவிர போன் மூலமும் அவரை நிறையப் பேர் மிரட்டினார்கள். பாவம் அவர்’’ என நாகராஜனுக்காக வருத்தப்பட்டார் அந்த போலீஸ் அதிகாரி. 

தனக்கு நியாயம் கிடைக்கும் என நம்பி புகார் கொடுத்தவர் இன்று உயிரோடு இல்லை. நாகராஜன் மரணம் குறித்த விசாரணையாவது ஒழுங்காக நடந்தால் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களுக்கு சின்ன நம்பிக்கை கிடைக்கும்!


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

24521812-sun-pictures.jpg?w=640&h=637



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

06_08_2011_011_004-paper-mill-saksena.jpg?w=347&h=1063



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

இன்டிகோவுக்கு எதிராக மத்திய அரசில் ‘கவனித்தது’ யாருங்க?

Viruvirupu, Monday 08 August 2011,

20110805-TOD-9.jpg

மும்பை, 

இந்தியா: இன்டிகோ விமான நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருந்த சில வெளிநாட்டு ரூட் உரிமங்களை மீளப்பெற்றிருக்கிறது மத்திய அரசு. அது மாத்திரமல்ல, அந்த உரிமங்களை அரசு நிறுவனமான ஏர் இந்தியாவிடம் கையளித்தும் உள்ளது. இந்திய விமானத்துறை வரலாற்றில் இப்படியொரு சம்பவம் நடைபெறுவது, இதுவே முதல் தடவை.

இந்தியாவிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் விமான ரூட்களிலேயே இந்தக் கைமாற்றல் நடைபெறுவதாகத் தெரியவருகின்றது. பெயர் வெளியிட விரும்பாத ஏவியேஷன் அதிகாரி ஒருவர், “ஓமன் நாட்டின் மஸ்கட்டுக்குச் செல்லும் விமான ரூட்களே தற்போது இன்டியோவிடமிருந்து மீளப் பெறப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

தற்போது இந்தியாவின் லோ-காஸ்ட் விமான நிறுவனங்களில் அளவில் மிகப் பெரியதாக விளங்குவது, இன்டிகோதான். இந்திய உள்நாட்டு விமானச் சந்தையில், 19.6% மார்க்கெட்-ஷேரை இந்த நிறுவனம் வைத்திருக்கிறது. 42 ஏர்பஸ் (ஏ-320) விமானங்களை இயக்கும் இன்டிகோ, அடுத்த மாதத்திலிருந்து (செப்டெம்பர்) தனது வெளிநாட்டு ஆபரேஷனைத் தொடங்கவுள்ளதாக அறிவித்திருக்கிறது.

அடுத்த மாதத்தில் இன்டிகோவின் விமானங்கள் முதல் தடவையாக இந்தியாவுக்கு வெளியே பறக்கப் போகின்றன. பாங்காக், துபாய், மற்றும் சிங்கப்பூர் ஆகிய மூன்று ரூட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுபற்றி விறுவிறுப்பு.காம் ஏற்கனவே ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது. (அதைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்)

மஸ்கட் ரூட் கைமாறிய விவகாரத்தில், கவனிக்க வேண்டிய இரு முக்கிய விஷயங்கள் உள்ளன.

முதலாவது, இன்டிகோ தமது மஸ்கட் சேவை தொடங்கவுள்ளது குறித்து இன்னமும் அறிவிக்கவில்லை. அதாவது, இந்த ரூட் உரிமம் அவர்களுக்கு வழங்கப்பட்டு, அவர்கள் உபயோகிக்கும் முன்னரே மீளப் பெறப்பட்டுள்ளது.

வேறு நாடுகளில், ஒரு விமான நிறுவனத்துக்கு குறிப்பிட்ட ரூட் உரிமம் வழங்கப்பட்டால், அவர்களை அந்த வழித்தடத்தில்  விமானங்களை இயக்க ஒரு வருடம் கால அவகாசம் கொடுப்பார்கள். அந்தக் காலப்பகுதியில், விமான நிறுவனத்தால் குறிப்பிட்ட ரூட்டில் வெற்றிகரமாக சேவை நடாத்த முடியாவிட்டால்தான், மற்றொரு விமான நிறுவனத்துக்கு உரிமம் கைமாறும்.

இங்கு நடந்தது அப்படியல்ல. உரிமத்தைக் கொடுத்துவிட்டு, விமானங்கள் இயக்கப்படுவதற்கு முன்னரே மீளப் பெறப்பட்டுள்ளன.

இரண்டாவது விஷயம், மீளப் பெறப்பட்ட உரிமம் யாருக்குக் கொடுக்கப்பட்டுள்ளது என்பதைப் பாருங்கள். அரசு நிறுவனமான ஏர் இந்தியாவுக்கு!

ஏற்கனவே பண நெருக்கடியில் தள்ளாடி, தனது ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவே முடியாத நிலையில் இருக்கும் ஏர் இந்தியா, தாம் ஆபரேட் பண்ணும் ரூட்கள் சிலவற்றையே ரத்து செய்து வருகின்றது. இந்த நிலையில், மஸ்கட் ரூட்டை இன்டிகோவிடமிருந்து பிடுங்கி, ஏர் இந்தியாவிடம் கொடுத்திருக்கிறது விமானப் போக்குவரத்து அமைச்சு.

இதற்குள் மற்றுமொரு தமாஷ் இலவச இணைப்பாக உண்டு. அது என்னவென்றால், ஏர்-இந்தியாவிடம் ஏற்கனவே மஸ்கட் ரூட் உள்ளது.

விமானப் போக்குவரத்து அமைச்சு ஏன் இந்தக் காரியத்தைச் செய்ய வேண்டும்? இந்தியாவிலிருந்து வெளிநாட்டு ரூட்களில் விமானங்களை இயக்கும் ‘மற்றொரு’ விமான நிறுவனத்தின் ‘கவனிப்பு’ காரணமாகவே இப்படியொரு முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக டில்லியில் காதைக் கடிக்கிறார்கள்.

இன்டிகோ ஏர்லைன்ஸ், மும்பை டில்லி ஆகிய இரு இடங்களில் இருந்தும் மஸ்கட்டுக்கு விமானங்களை ஆபரேட் பண்ணுவதற்கான உரிமம் வழங்கப்பட்டது இந்த வருடம் ஜனவரி மாதத்தில். அப்போதைய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பிராபுல் பட்டேல் அந்த உரிமத்தை வழங்கியிருந்தார்.

இந்த உரிமம் வழங்கப்பட்டு சில நாட்களிலேயே, ஜனவரி 19ம் தேதி அவர், விமானப் போக்குவரத்து அமைச்சிலிருந்து மாற்றப்பட்டார். புதிய துறை (ஹெவி இன்டஸ்ட்ரீஸ்) அவருக்கு வழங்கப்பட்டது. வெளியிலிருந்து வந்த முக்கிய ‘அழுத்தம்’ காரணமாகவே இவரது அமைச்சு பறிக்கப்பட்டது (அல்லது மாற்றப்பட்டது) என்றும் அப்போது தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்த அழுத்தம் எதைப் பற்றியது என்பது தற்போது லேசாகப் புரிகின்றது.

பிராபுல் பட்டேல் அமைச்சராக இருந்து வழங்கிய புதிய ரூட்களில் ஆபரேட் பண்ணுவதற்காக இன்டிகோ விமான நிறுவனம், இந்த வருடம் 12 புதிய விமானங்களை வாங்கியிருந்தது. இவை அனைத்துமே வெளிநாட்டு ரூட்களில் பயன்படுத்துவதற்காக என்றே திட்டமிடப்பட்டிருந்தது.

இதுபற்றி இன்டிகோ விமான நிறுவனத்தின் தலைமைச் செயலகத்தில் நாம் விசாரித்தபோது, ‘ஏதோ காரணங்களுக்காக’ அவர்கள் கருத்து எதையும் தெரிவிக்க விரும்பவில்லை. “வெளிநாட்டு உரிமங்கள் ரத்தானால், அவற்றுக்காக அலாட் பண்ணிய விமானங்களை உள்நாட்டு ரூட்களில் உபயோகிப்போம்” என்று மாத்திரமே தெரிவித்தார்கள்.

இப்போதுள்ள முக்கிய கேள்வியே, இன்டிகோவிடமிருந்து மஸ்கட் ரூட் பறிபோனதுபோல, அவர்களுக்கு வழங்கப்பட்ட மற்றைய வெளிநாட்டு விமான ரூட்களும் ஒவ்வொன்றாகப் பறிபோகப் போகின்றனவா?

இன்டிகோ ஏர்லைன்ஸ் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு தமது லோ-காஸ்ட் விமான சேவையைத் தொடங்கினால், ரூட்களின் அடிப்படையில், யாருக்குப் பாதிப்பு ஏற்படும்?

எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ், ஏர் அரேபியா, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், தாய் ஏர்வேஸ், ஏர் ஏஷியா ஆகிய வெளிநாட்டு விமான நிறுவனங்களும், ஜெட் ஏர்வேஸ், கிங்ஃபிஷர், ஸ்பைஸ் ஷெட் ஆகிய இந்திய நிறுவனங்களும் நேரடியாகப் பாதிக்கப்படுவார்கள்.

சரி. இந்த 8 நிறுவனங்களில் யார், இன்டிகோவுக்கு எதிராக டில்லியில் ‘அலுவல்’ பார்க்கிறார்கள் என்று ஊகியுங்கள் பார்க்கலாம்.

                                           -மும்பையிலிருந்து ஷர்மிலா பட்டேல், டில்லியிலிருந்து நர்மதா பானர்ஜி  ஆகியோரின் குறிப்புகளுடன், ரிஷி.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

sunfinal_page_115.jpg?w=596&h=866



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

sunfinal_page_186.jpg?w=640&h=905



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

19_08_2011_003_030.jpg%2Bkalanithi.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

 

நித்யானந்தா-ரஞ்சிதா ஆபாச படம் விவகாரம் : சீடர் லெனின் சிக்குகிறார்.

நித்யானந்தா சாமியார் பெங்களூரில் ஆசிரமம் அமைத்து புகழ் பெற்றார். இவரும், நடிகை ரஞ்சிதாவும் ஒன்றாக இருப்பது போன்ற ஆபாச படம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் சன் டி.வி.யில் ஒளிபரப்பானது

 

இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட நித்யானந்தா பின்னர் ஜாமீனில் வெளிவந்து ஆசிரம பணிகளை செய்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் நித்யானந்தா ஆசிரமத்தின் தமிழக தலைவர் நித்யசிவானந்தா, மற்றும் பெங்களூர் ஆசிரமத்தின் மானேஜர் ஆத்ம பிரமானந்தா ஆகியோர் கமிஷனர் திரிபாதியிடம் தனித்தனியாக 2 புகார் மனுக்களை அளித்தனர்.

அதில் ஆபாச படத்தை வெளியிடாமல் இருக்க ரூ.60 கோடி வரை பேரம் பேசப்பட்டது. பின்னர் ரூ.35 கோடி பணம் தரவேண்டும் என்று மிரட்டினார்கள். முதலில் தியாகராயநகரில் உள்ள ஒரு ஓட்டலில் ஆசிரம நிர்வாகிகளை சிறை வைத்து ரூ.30 லட்சம் பணத்தை பறித்துக் கொண்டனர் என்று கூறியிருந்தனர்.

images?q=tbn:ANd9GcRwRE7IJM3PQKBwOaCPsuEr8RW7SkyPryOwLAlgUOF-JsSNlunK

இது தொடர்பாக பாண்டி பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சன் டி.வி.யின் நிர்வாக இயக்குனர் கலாநிதிமாறன், சன் பிக்சர்ஸ் தலைமை 

நிர்வாகி சக்சேனா, அவரது உதவியாளர் அய்யப்பன், ஆபாச படம் எடுத்த நித்யா னந்தாவின் சீடர் லெனின் ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

பின்னர் இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. கூடுதல் டி.ஜி.பி. சேகர், டி.ஐ.ஜி. ஸ்ரீதர் ஆகியோரது மேற்பார்வையில் துணை போலீஸ் சூப்பிரண்டு பரணிகுமார் இந்த வழக்கை விசாரித்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று நித்யானந்தா- ரஞ்சிதா ஆகியோருக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.

images?q=tbn:ANd9GcSovgRv5Eb75UrTlcWmSX8FVYm6iBLEj0xQpDek0Ffw0Hun4y5bQAஇதனை ஏற்று நேற்று மாலை 3 மணிக்கு கிண்டியில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் நித்யானந்தா ஆஜரானார். அவரிடம் 2 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. ஆபாச படம் வெளியானது மற்றும் அதன்பிறகு நடைபெற்ற மிரட்டல் சம்பவங்கள் குறித்து நித்யானந்தா விரிவாக விளக்கம் அளித்துள்ளார். இதனை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்துள்ளனர். ரஞ்சிதாவிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. உடனடியாக தன்னால் புகார் கொடுக்க முடியாதது குறித்தும் ரஞ்சிதா எடுத்துக் கூறியுள்ளார். தன்னை யார்-யார் மிரட்டினார்கள் என்பது பற்றிய தகவல்களையும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆபாச படத்தை காட்டி சீடர் லெனின் தன்னை கற்பழிக்க முயன்றார் என்று ரஞ்சிதா குற்றம் சாட்டியிருந்தார். இதுகுறித்தும் பல்வேறு தகவல்களை ரஞ்சிதா கூறியுள்ளார். இதையடுத்து சீடர் லெனினிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டனர். இந்த வழக்கில் இவர் விரைவில் சிக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல சக்சேனா, அய்யப்பன் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது. இதுதொடர்பாக 2 பேருக்கும் விரைவில் சம்மன் அனுப்பப்பட உள்ளது. நித்யானந்தா- ரஞ்சிதா ஆபாச படவிவகாரம் 1.5 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் சூடு பிடித்துள்ளது. சி.பி.சி.ஐ.டி. விசாரணை தீவிரம் அடைந்துள்ளதை தொடர்ந்து இதன் பின்னணியில் இருந்த அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது

 



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

சுதந்திர இந்தியா தனது வரலாற்றில் ஏராளமான கார்ப்பரேட் மோதல்களைக் கண்டிருக்கிறது. ஸ்பெக்ட்ரம் ஊழல் என்ற முகமூடியுடன் நடக்கும் கார்ப்பரேட்-அரசியல் மோதலுக்கு அவை எதுவுமே நிகரல்ல. சுமார் 20 ஆண்டு காலம் நுஸ்லி வாடியாவுக்கும் தீருபாய் அம்பானிக்கும் நிகழ்ந்த யுத்தம்கூட 2ஜி அலைவரிசை ஊழல் விவகாரத்தின் பின்னணியில் சிறியதாகத் தெரிகிறது. இரண்டு நபர்களிடையிலான பிசினஸ் மோதலாகத் தொடங்கி, ராஜீவ் காந்தி - வி.பி.சிங் இடையிலான மோதலாக, அரசியலுக்குள்ளும் அம்பானி - வாடியா மோதல் நுழைந்தது. ரத்தன் டாடா, அனில் அம்பானி, பார்தி மிட்டல், ஷாகித் பல்வா முதலிய கார்ப்பரேட்களில் தொடங்கி, கருணாநிதி குடும்பத்தினர், ஆ.இராசா, ஷரத்பவார் முதலிய அரசியல்வாதிகள் என 2ஜி ஊழல் போரில் ஏராளமான வி.வி.ஐ.பி.க்கள் முக்கிய பாத் திரமேற்றிருந்தார்கள். தயாநிதிமாறன், கலாநிதி மாறன், ஸ்டெர்லிங் சிவசங்கரன், ஏர்செல் அனந்தகிருஷ்ணன் போன்ற கார்ப்பரேட்களும் அரசியல்வாதிகளும் புதிதாக இணைந்திருப்பது மூலம் ஸ்பெக்ட்ரம் ஊழல் குருட்சேத்திரம் உக்கிரமான நிலையை எட்டியிருக்கிறது.

ஸ்பெக்ட்ரம் ஊழலும் அதன் அம்பலமும் அது தொடர்பான விசாரணையும் ஒரு சாதாரண ஊழல் விவகாரம் சார்ந்தது அல்ல என்ற எளிய உண்மையை விளக்கிப் புரிய வைக்க மிகுந்த பிரயத்தனம் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது என்பது ஒரு சுவாரசியமான முரண்நகைதான். கிளப்பிவிட்ட சூத்ரதாரிகளான மாறன் சகோதரர்களுக்கு எதிராகவே ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் திரும்பும் சமயம் இது. பாட்டிலில் அடைக்க முடியாத ஒரு பூதத்தை திறந்துவிட்டிருக்கிறோம் என்று 'கேடி பிரதர்ஸ்' என செல்லமாக அறியப்படும் கார்ப்பரேட் - அரசியல் அதிபர்கள் காலம் கெட்ட பிறகு வருந்தக்கூடும். பிசினஸ் போட்டியில் தொடங்கி, அரசியல் அரங்கிற்கு மாறிய இது வரையிலான கார்ப்பரேட் மோதல்களுக்கு மாறாக ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், 21ஆம் நூற்றாண்டிற்கே உரிய வகையில் ஒவ்வொரு அங்கத்திலும் அரசியலும் கார்ப்பரேட் மோதலும் பிரிக்க முடியாதபடி பிணைந்திருக்கிறது. தங்களின் குடும்பத் தொழில் செழிக்க உதவிய தொலைதொடர்புத் துறை தங்கள் பிடியிலிருந்து பறி போனதற்குப் பழிவாங்குவதற்காகத்தான் மாறன்கள் இந்த ஊழலை அம்பலமாக்கினார்களா? டாடாவின் டி.டி.ஹெச். நிறுவனத்தில் பங்குகள் கேட்டு மாறன்கள் மிரட்டியதாக கூறப்பட்ட நிலையில், தயாநிதி மாறன் அமைச்சராக இருந்தபோது நடந்த 2ஜி ஒதுக்கீட்டின் முறைகேடுகள் குறித்த சமீபத்திய அம்பலங்களின் பின்னணியில் டாடாக்கள் இருக் கிறார்களா?

ராசாவின் தலையை வாங்க அனைவரும் துடித்துக்கொண்டிருந்த ஒரு கால கட்டத்தில் 2001 முதல் நிகழ்ந்த அத்தனை அலைவரிசை ஒதுக்கீடுகளையும் ஆய்வு செய்யும்படி புதிய தொலை தொடர்பு அமைச்சர் கபில்சிபல் உத்தரவிட்டபோதே மாறன்களும் குற்ற வளையத்தில் வருவது தவிர்க்க முடியாததாகிவிட்டது. ஆனால் சன் டி.வி. நெட்வொர்க்கின் பின்னணியில் மிகப் பெரிய பிசினஸ் சாம் ராஜ்யத்தையும் தந்தை முரசொலி மாறன் காலத்திலிருந்தே அரசியல் ஆதரவையும் சேகரித்து வைத்திருந்த ஒரு குடும்பத்தை, தி.மு.க.வைத் தனது அரணாகப் பயன்படுத்திய மாறன் சகோதரர்களை அவ்வளவு எளிதாக வீழ்த்த முடியாதே! அதனால், கபில்சிபல் நியமித்த நீதிபதி ஷிவ்ராஜ் பாட்டீல் ஒரு நபர் கமிஷன் தயாநிதி மாறனின் தவறுகளை அக்குவேறாக அம்பலப்படுத்தியும் சுமார் இரண்டு ஆண்டுகளாக சி.பி.ஐ. அந்தக் கோப்புகளின் மீது தூங்கிக்கொண்டிருந்தது. சட்டம் தனது கடமையைச் செய்ய, தி.மு.க. தலைவர் மு.கருணாநிதியின் மகள் கனிமொழி சிறைக்குச் செல்ல வேண்டியிருந்தது. மாறன் குடும்பத்தை தி.மு.க. கைகழுவ நினைத்த ஒரு அரசியல் திருப்புமுனை கால கட்டத்தில்தான் நீதியும் நியாயமும் கண்விழித்துக்கொள்ளும் சௌகரியத்தைப் பெறுகின்றன. மாறன் குடும்பத்தினர் தன்னை எவ்வாறு ஏர்செல்லை விற்கும்படி நிர்பந்தித்தனர் என்பதை சி.பி.ஐ.யிடம் சாட்சியமாகக் கொடுக்க திடீரென ஸ்டெர்லிங் சிவசங்கரனுக்குத் தைரியம் வந்தது. ஏர்செல்லை வாங்கிய அனந்தகிருஷ்ணன் கலைஞர் டி.வி.யைப் போலவே புத்தம் புதிதாகத் தொடங்கப்பட்ட சன் டி.டி.ஹெச். நிறுவனத்திற்கு அதன் பிரதிபலனாகத்தான் 800 கோடி ரூபாய் முதலீடு தந்தார் என்றவாதம் முன்வைக்கப்பட்டது. ஏர் செல் தனது கட்டுப்பாட்டில் இருந்தபோதே வழங்கப்பட்டிருக்க வேண்டிய 14 அலைவரிசை உரிமங்களை, அது கைமாறிய பிறகு வழங்கியதற்கான லஞ்சம்தான் இது என்பது சிவசங்கரனின் வாதம். நீதிபதி ஷிவ் ராஜ் பாட்டீல் கமிட்டி அறிக்கையும் இத்தகைய ஒரு பார்வையை முன்வைத்திருப்பதால், தயாநிதிமாறனை விசாரிக்க பிரதமர் மன் மோகன் சிங் அனுமதி கொடுத்திருக்கிறார் என்ற தகவல் ஆச்சரியமளிக்கவில்லை. தயாநிதி மாறன் பதவி விலக நேரும், அவர் மட்டுமின்றி அவரின் சகோதரரும் கார்ப்பரேட் அதிபருமான கலாநிதியும் கம்பி எண்ண வேண்டியிருக்கலாம் என்ற பேச்சுக்களும் ஒரு நாள் உண்மையாகலாம்.

ஸ்பெக்ட்ரம் விசாரணை எதுவரை பாயும், எது வரை பாயாது என்பது முற்றிலும் சட்டத்திற்குட்பட்டது அல்ல என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மைதான். ஆ.ராசாவின் 2ஜி அலைவரிசை ஊழலில் நேரடி தொடர்பு இருந்தாலும் ரத்தன் டாடாவும் அனில் அம்பானியும் இதுவரை கைது செய்யப்படவில்லை. மற்றவர்களிடம் கடுமை காட்டி வரும் நீதித்துறை ரத்தன் டாடாவையும் அனில் அம்பானியையும் வழக்கில் சேர்க்க வேண்டும் என்ற மனுவைத் தள்ளுபடி செய்திருக்கிறது. அவர்கள் அளவுக்குப் பெரிய தொழிலதிபர் அல்லாத ஷாகித் பல்வா மட்டும் கம்பிகளின் பின்னால் ஜாமீன் இல்லாமல் தொடர்கிறார். அதனால் கலா நிதி மாறனின் உயரம் விசாரணைக்கு உட்படுத்தும் அளவில் இருக்குமா, இல்லையா என்பது கணிப்புகளுக்கு அப்பாற்பட்டது. ஆனால் தங்களின் அகந்தையாலும் அடாவடித்தனங்களினாலும் மாறன் குடும்பத்தினர் சம்பாதித்திருக்கும் எதிரிகளின் எண்ணிக்கை தராசை அவர்களுக்கு எதிராகத் திருப்பக்கூடும்.

நுஸ்லி வாடியாவுக்கும் திருபாய் அம்பானிக்கும் இடையிலான மோதலை, பாரம்பரிய பணக்காரருக்கும் புதுப் பணக்காரருக்கும் இடையிலான மோதலாகப் பார்ப்ப துண்டு. நேர்மையான வழிகளில் பிசினஸ் செய்யும் வாடியாவின் வழிமுறைக்கும் அத்தனை தில்லு முல்லுகள் மூலம் பிசினஸ் சாம் ராஜ்யத்தை விரிவாக்கும் அம்பானியின் வழிமுறைக்குமான மோதலாகவும் பார்க்கப்படுவதுண்டு. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தின் பின்னணியில் நிகழும் கார்ப்பரேட்-அரசியல் மோதல் அவ்வளவு தெளிவான வரையறைகள் கொண்டது அல்ல. அரசையும் சட்டத்தையும் தனக்கு சாதகமாக வளைத்து, அத்தனை துஷ்பிரயோகங்களிலும் ஈடுபட்டு பிசினஸ் செய்ய வேண்டிய யுகம் அம்பானியின் வரவுடன் தொடங்கிவிட்டதை உணர்ந்த நுஸ்லி வாடியாவின் தந்தை தனது அத்தனை சொத்துக்களையும் விற்றுவிட்டு ஸ்விட்சர்லாந்தில் செட்டிலாகிவிடத் துடித்தார். அதை ஏற்க மறுத்து, தந்தையுடன் மோதி தனது சொத்துரிமையைப் பெற்று, அம்பானியின் சாம தான பேததண்ட சாம்ராஜ்யத்திற்கு எதிராக நீண்ட தர்ம யுத்தத்தை நடத்தினார் வாடியா. 21 ஆம் நூற்றாண்டில் கிளம்பியிருக்கும் ஸ்பெக்ட்ரம் விவகாரம் துரோகமும் வஞ்சமும் நிறைந்த மகாபாரத யுத்தம் போல நிகழ்கிறது. ஆனால் இந்த நவீன மகாபாரத குருட்சேத்திரத்தில் இரு புறமும் கௌரவர்களே நிற்கிறார்கள்.

அம்பானிகளைப் போல சாமதான பேத தண்டங்களைப் புரியும் மாறன் குடும்பத்தினரின் முன்பு ரத்தன் டாடாவும் தனது மதிப்பீடுகளை இழந்து நிற்கிறார். நேர்மையான, பொறுப்பான பிசினஸ் வழி முறைகளின் முன்னுதாரணமாகத் தன்னைக் கூறிக்கொள்ளும் இந்தியப் பொருளாதாரத்தின் உந்து சக்தியான டாடா குழுமம், மாறன்களைத் தோற்கடிப்பதற்காக ஆ.ராசாவின் ஊழல் கூட்டாளியாகத் தன்னை மாற்றிக்கொண்டது. டாடா-ராசா கூட்டணியை அம்பலப்படுத்தியதில் முக்கிய பங்கேற்ற மாறன் குடும்பத்தினர் இப்போது பதிலடியை எதிர்கொள்கிறார்கள். கண்ணாடி வீட்டிலிருந்துகொண்டு கல்லெறியக்கூடாது என்ற பழ மொழியின் வாழும் உதாரணமாக அவர்கள் மாறுகிறார்கள்.

ஆ. ராசாவும் கனிமொழியும் இவ்வளவு முட்டாள்தனமாகவா ஊழல் செய்வார்கள் என்ற ஆச்சரியத்திற்கு நடுவில், மாறன் சகோதரர்கள் இவ்வளவு ஆணவத்துடனா ஊழல் செய்வார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது. தயாநிதி மாறன் தொலைதொடர்பு அமைச்சரானவுடன் சென்னையிலுள்ள அவரது அதிகாரபூர்வ இல்லத்திற்கு கொடுக்கப்பட்ட 323 பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்புகள் அவரது அண்ணன் கலாநிதிக்குச் சொந்தமான சன் டி.வி.யின் அலுவலகத்துடன் இணைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அமைச்சரின் அதிகார பூர்வ பயன்பாட்டிற்கு மட்டுமே உபயோகிக்க வேண்டிய இந்த இணைப்புகள், சன் டி.வி..யின் ஒளி பரப்பிற்குப் பயன்படுத்தப்பட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது. இதன் மூலம் அரசுக்கு 440 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. சில வருடங்கள் முன்பு கிளம்பி பிசுபிசுத்த இந்தக் குற்றச் சாட்டுகள் இன்று மீண்டும் கிளம்பி மாறன்களின் கழுத்தை இறுக்குகிறது.

கனிமொழி சிறை சென்ற பிறகே மாறன்கள் வலையில் சிக்குகிறார்கள் என்பதால் இதில் சி.ஐ.டி. காலனி சக்திகளின் பங்கு இருக்கிறது என நம்பப்படுகிறது. சிவசங்கரன் சி.ஐ.டி. காலனிக்கு நெருக்க மானவராகவே அறியப்படுகிறார். ஒரு காலத்தில் முரசொலி மாறனுக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்த அவரையே மாறனின் புதல் வர்கள் பதம் பார்த்தார்கள். சிவசங்கரனை ஒரு வழக்கில் சிக்க வைத்து, சிறையில் தள்ள 'கேடி பிரதர்ஸ்' முயன்றதாக கூறப்படுகிறது. சிவசங்கரன் நாட்டை விட்டு ஓடி தப்பித்த நிலையில், அவரின் வயதான பெற்றோரைக் கம்பிக்குப் பின்னால் நிறுத்தி பிளாக்மெயில் செய்ய திட்டம் தீட்டியதாகவும் கூறப்படுகிறது. இந்த விரோதத்தால் உந்தித் தள்ளப்படும் சிவசங்கரன் மட்டுமே மாறன் சகோதரர்களை சிறையில் தள்ளப் போதுமானது அல்ல. நுஸ்லி வாடியா தனது தந்தையுடனான சண்டையில் வெற்றி பெற ஜே.ஆர்.டி. டாடாவின் ஆசீர்வாதத்தைப் பெற்றிருந்தார். அதே போல மாறன் சகோதரர்களால் பாதிக்கப்பட்ட ரத்தன் டாடா, ஸீ டி.வி. குழுமத்தின் சதீஸ் சந்திரா முதலிய சக்திகள் தங்களின் செல்வாக்கையெல்லாம் சி.ஐ.டி. காலனியின் இந்த முயற்சிக்குப் பின்னால் ஒன்று திரட்டினால்தான் ஜெகஜ்ஜால கில்லாடிகளான கேடி சகோதரர்கள் வசமாக சிக்குவார்கள். தி.மு.க.வும் அதன் தொண்டர்களும்கூட மாறன்களுக்கு எதிராகத் திரும்புவதால் சிவசங்கரனைத் தங்களின் பிரம்மாஸ்திரமாக சி.ஐ.டி. காலனி பயன்படுத்துகிறது. தங்களின் சிறைவாசத்திற்கு முழு காரணம் என சி.ஐ.டி. காலனி நம்பும் மாறன்களையும் தங்கள் வரிசையில் திகாரில் அடைக்கும்வரை அவர்கள் ஓயப் போவதில்லை. எனினும் எஸ் டெல் என்ற நிறுவனம் மூலம் மறைமுகமாக 2ஜி அலைவரிசை ஒதுக்கீடு பெற்ற சிவ சங்கரனுக்கு எதிராகவும் ஸ்பெக்ட் ரம் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், அவரின் வாக்குமூலம் மட்டுமே மாறன்களை வீழ்த்தப் போவதில்லை. மாறாக, மாறன்களுக்கு எதிரான சாட்சியங்களாக ராசா ஏற்பாடு செய்திருப்பதாகக் கூறப்படும் தொலைதொடர்பு அதி காரிகள்தான் கேடி பிரதர்ஸின் கதையை முடிக்கும் கடைசி ஆணி களாக இருக்கப் போகிறார்கள்.

இந்தப் பூனைக்கு மணி கட்டப்போவது யார் என்ற தலைப்பில் தெஹல்கா வெளியிட்ட கட்டுரை வரை தனக்கு எதிரான அத்தனை செய்திகளுக்கும் வக்கீல் நோட்டீல் அனுப்பி மிரட்ட முயன்ற மாறன்கள் இப்போது அந்தப் பழக்கத்தை முடித்துக்கொண்டிருக்கிறார்கள். விவகாரம் தலைக்கு மேல் போய்விட்டது என்பதால் தேங்காய் மூடி வக்கீல்களை விட்டுவிட்டு நிஜமான அதிகார மையங்களிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். மாறன்கள் ஸ்பெக்ட்ரம் ஊழலில் உள்ளே போகிறார்களோ இல்லையோ, அவர்களின் கேபிள் தொழில் ஏகாதிபத்யம் ஒழிக்கப்பட வேண்டும். அது ஒரு பெரிய சமூக சேவை. ஏனெனில் கேபிள் தொழில் வெறுமனே அவர்களின் பிசினஸ் வெற்றிக்கு மட்டுமே உதவவில்லை. மக்களுக்குச் சென்று சேர வேண்டிய உண்மையான செய்திகளை முடக்கும் மோசமான தணிக்கையாகவும் அது திகழ்கிறது. இந்தியா போன்ற ஜனநெருக்கடி மிகுந்த தேசத்தில் டி.டி.ஹெச்.சைவிட என்றென்றைக்கும் கேபிள் தொழில்தான் அதிக லாபகரமாகவும் அதிக வீச்சு கொண்டதாகவும் இருக்கப்போகிறது. இதை துருப்புச் சீட்டாகப் பயன்படுத்திக்கொண்டு தனது எதிரி சேனல்கள் எதுவும் தமிழகத்தில் காலூன்ற விடாமல் மாறன்கள் தடுத்தி நிறுத்தி வருகிறார்கள். மாறன்களின் கேபிள் ஆதிக்கம், அரசியல் செல்வாக்கு, சூழ்ச்சித் திறனைக் கண்டு தேசிய, சர்வதேச அளவிலான ஊடக நிறுவனங்கள் அஞ்சுவதால் தமிழ்ச் சந்தையில் களமிறங்குவதற்குத் தயங்குகிறார்கள். தமிழ் டி.வி. ஊடகச் சூழல் ஜனநாயகமற்றதாகத் திகழ்வதற்கு இதுவும் ஒரு காரணம். ஆனால் ஒட்டுமொத்த கேபிள் தொழிலையும் அரசுடமையாக்குவது அதற்குத் தீர்வல்ல. ஏனெனில் ஒரு தனியார் நிறுவனத்தின் தணிக்கையைவிட ஒரு அரசு அமைப்பின் தணிக்கை மோசமானது. அரசு கேபிள் கார்ப்ப ரேஷன் மூலம் சன் குழுமத்தின் கேபிள் நிறுவன ஏகாதிபத்யம் உடைக்கப்பட்டாலே ஊடகச் சூழலில் ஜனநாயகம் தழைக்கத் துவங்கும்.

மோசடிகளின் மீது கட்டமைக்கப்படும் அம்பானிகளின் சாம்ராஜ்ஜியம் ஒரு நாள் ஒட்டுமொத்த இந்தியாவையும் விழுங்கப் போகிறது என்ற நுஸ்லி வாடியாவின் எச்சரிக்கையை 1980களில் யாராலும் புரிந்துகொள்ள முடியவில்லை. டாடா, பிர்லாவைப்போல அம்பானிகள் வளர்வார்கள் என அன்றைய தலைமுறை கார்ப்பரேட்கள் நம்பாததால் வாடியா உளறுகிறார் என நினைத்தார்கள். இன்று அதே வர்ணனை மாறன்களுக்குப் பொருந்தும். தங்கள் பிசினஸ் வெற்றிக்காக அத்தனை வஞ்சகங்களிலும் ஈடுபடக்கூடிய 21ஆம் நூற்றாண்டின் அம்பானிகளாகத் திகழும் மாறன்கள் தென்னிந்திய டி.வி. சந்தையை ஏற்கனவே தங்கள் மூர்க்கமான பிடியில் வைத்திருக்கிறார்கள். மலிவு விலை விமான சேவைத் தொழிலைக் கைப் பற்றும் அவர்களின் முயற்சிக்கு தற்காலிக தடை மட்டுமே ஏற்பட்டிருக்கிறது. 1980களில் ரிலையன்ஸ் நிறுவனம் ஜவுளித் தொழிலை வியாபித்தபோது, பிற்பாடு பல்வேறு துறைகளையும் அவர்கள் வளைத்துப் போடுவார்கள் என யாரும் கற்பனை செய்யவில்லை.

தனக்குச் சொந்தமான இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் தன்னைவிட அம்பானிக்கு அதிக செல்வாக்கு இருப்பதாக அதன் உரிமையாளர் ராம்நாத் கோயங்கா ஆத்திரத்துடன் கூறியதுண்டு (ரிலையன்ஸுக்கு எதிராக வாடியாவுடன் கைகோர்க்கவும் அது ஒரு காரணமாக இருந்தது). அந்த அளவுக்கு ரிலையன்ஸின் செல்வாக்கு பாதாளம் வரை பாய்ந்தது. ஆனால் மாறன்களுக்கு இன்று நண்பர்களைவிட எதிரிகளே அதிகம். ரிலையன்ஸ் காசு கொடுத்து வாங்கியது போன்ற அரசியல் செல்வாக்கை, தி.மு.க.வின் பின்னணி மூலம் மாறன்கள் அனுபவித்தார்கள். தி.மு.க.வின் பின்னணி இல்லாத காலகட்டத்தில் மாறன்களின் எதிரிகள் ஒன்று சேர்வது அவர்களின் சாம்ராஜ்யத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது. நுஸ்லி வாடியாவும் தீருபாய் அம்பானியும் ஒரு கட்டத்தில் சமரசமாகச் சென்றது போன்ற வரலாறு திரும்புமா? மாறன் சகோதரர்களில் ஒருவராவது சிறை செல்லாமல், துரோகமும் வஞ்சமும் நிறைந்த ஸ்பெக்ட்ரம் மகாபாரதப் போரில் சமரசம் துவங்காது என்பது உறுதி.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ரூ 12 கோடி மில் அபகரிப்பு வழக்கில் சக்சேனாவுக்கு காவல் நீட்டிப்பு!

 
உடுமலை: ரூ 12 கோடி உடுமலை பேப்பர் மில்லை அபகரித்ததாக தொடரப்பட்ட வழக்கில் சன் பிக்சர்ஸ் ஹன்ஸ்ராஜ் சக்சேனா, அவரது உதவியாளர் அய்யப்பன் ஆகியோருக்கு வரும் ஆகஸ்ட் 30 வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

உடுமலையைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவருக்குச் சொந்தமான ரூ. 12 கோடி மதிப்புள்ள பேப்பர் மில் அபகரிக்கப்பட்டது தொடர்பாக திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது. 

இது தொடர்பாக சென்னை சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன், சன் பிக்சர்ஸ் தலைமை நிர்வாகி சக்சேனா, அவரது உதவியாளர் அய்யப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 

சக்சேனா, அய்யப்பன் ஆகியோர் உடுமலை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 19-ந் தேதி (நேற்று) வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி இருவரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். காவல் முடிந்ததை தொடர்ந்து சக்சேனா, அய்யப்பன் இருவரும் நேற்று உடுமலை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். 

இருவருக்கும் வருகிற 30-ந் தேதி வரை காவலை நீடித்து உடுமலை குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி (பொறுப்பு) ஷர்மிளா உத்தரவிட்டார். அப்போது சக்சேனா, அய்யப்பன் சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மனு வருகிற 23-ந் தேதி விசாரணைக்கு வருகிறது. காவல் நீடிப்பு செய்யப்பட்ட சக்சேனாவும், அய்யப்பனும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை மத்திய சிறைக்கு அழைத்து வரப்பட்டனர். இன்று காலை புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

சன் டிவி மீது தர்மபுரி கேபிள் ஆபரேட்டர் போலீஸில் புகார்.

சேனல் ஒளிபரப்பு செய்ய பணத்தை பெற்றுக்கொண்டு அதற்கான உபகரணங்கள் வழங்காமல் மோசடி செய்த சன் குழுமத்தின் மீது தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கேபிள் ஆபரேட்டர் புகார் கொடுத்துள்ளார்.

தர்மபுரி மாவட்டம் மாரண்டஹள்ளியில் கேபிள் ஆபரேட்டர் தொழிலில் சே.பாஸ்கர் அவரது சகோதரர் சண்முகம் ஆகிய இருவரும் ஈடுபட்டு முறையான அனுமதி பெற்று ஜீரோ பாயிண்ட் என்ற பெயரில் கேபிள் இணைப்புகளை பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர். இவர்கள் இருவரும் கடந்த 7 ஆண்டுகளாக சன் டி.வி. குழுமத்தின் சேனல்களை விலைகொடுத்த  பெற்று ஒளிபரப்பி வருகின்றனர்.

இந்நிலையில் இவர் சன் டி.வி. குழுமத்திற்கு கடந்த இரண்டரை ஆண்டுகளாக சன் டி.வி., கே.டி.வி., சன் நியூஸ், சன் மியூசிக் ஆகிய நான்கு சானல்களுக்கு உண்டான கட்டணத்தொகையை டி.டி. மூலம் அனுப்பியிருந்தும் சன் குழுமத்தினர் சன் டி.வி., கே.டி.வி. ஆகிய இரண்டு சேனல்களை மட்டும் பயன்படுத்த உரிய உபகரணங்களை அனுப்பியுள்ளனர். மீதமுள்ள இரண்டு சேனல்களுக்கான உபகரணங்களை அனுப்பாமல் மோசடி செய்துள்ளதாக கேபிள் டி.வி. ஆப்பரேட்டர் பாஸ்கர் மற்றும் சண்முகம் ஆகிய இருவரும் தர்மபுரியில் உள்ள மாவட்ட  குற்றப் புலனாய்வுத்துறை அலுவலகத்தில் புகார் செய்துள்ளனர்.

இதனால் தனது வாடிக்கையாளர்களுக்கு விருப்பச் சேனல் வழங்க முடியாமல் வாடிக்கையாளர்களை இழந்து தொழிலில் ரூ. 30 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், தங்களை ஏமாற்றி மோசடி செய்த சன் குழுமத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் புகாரில் தெரிவித்துள்ளார். 

கேபிள் ஆப்பரேட்டர்கள் சன் குழுமத்தின் மீது தர்மபுரி மாவட்ட காவல் அலுவலகத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

மீண்டும் புது வேகத்தில் சன் பிக்சர்ஸ்- மங்காத்தாவை வாங்கியது!

 
வழக்குகள், கைதுகள், தயாரிப்பாளர்களின் புகார்கள் என ஒரு பக்கம் சிக்கல்களைச் சந்தித்தாலும் மீண்டும் புதிய வேகத்தோடு திரைப்படத் துறையில் களமிறங்குகிறது சன் பிக்சர்ஸ். 

இந்த இரண்டாவது இன்னிங்ஸில் எடுத்த எடுப்பிலேயே மங்காத்தா என்ற பெரிய படத்தை வெளியிடுகிறது இந்த நிறுவனம். 

தயாநிதி அழகிரியின் தயாரிப்பான இந்தப் படம், சமீபத்தில் ஞானவேல் ராஜாவுக்கு விற்கப்பட்டது. உடனே அவர் படம் தொடர்பான விளம்பரங்களில் தயாரிப்பாளரான தயாநிதி அழகிரி மற்றும் அவரது க்ளவுட் நைன் நிறுவன பெயரை முற்றாக நீக்கிவிட்டார். மேலும் ஜெயா டிவிக்கு படத்தின் ஒளிபரப்பு உரிமையைத் தர முயன்றதாகவும் கூறப்படுகிறது. 

இந்த நிலையில், படத்தை ஞானவேலிடமிருந்து திரும்பப் பெற்றுக் கொண்டார் தயாநிதி அழகிரி. 

மங்காத்தாவின் தொலைக்காட்சி உரிமம் மட்டுமல்லாமல், நெகடிவ் உரிமையையும் சன் குழுமத்துக்கே அவர் கொடுத்துவிட்டார். 

வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி சன் பிக்சர்ஸ் பேனரில் மங்காத்தா வெளியாகிறது. எங்கேயும் காதலுக்குப் பிறகு, தான் வாங்கிய அவன் இவன் உள்ளிட்ட படங்களைக் கூட திரும்பக் கொடுத்து வந்த சன் பிக்சர்ஸ், இப்போது மீண்டும் அதிரடியாக மங்காத்தாவை வெளியிடுகிறது.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

கழற்றிவிடப்பட்ட சக்சேனா!

 
தொலைக்காட்சியின் பட நிறுவனத்தில் வேலை பார்த்து தற்போது சிறையில் இருக்கும் சக்சேனாவை முழுசாக நிறுவனம் கழற்09d.jpgறிவிட்டுவிட்டதாம். நிறுவனம் மீது இருந்த வழக்குகளை எல்லாம் சமாதானம் பேசி, வாபஸ் செய்ய வைத்து விட்டார்கள். ஆனால், சக்சேனா மீதான தனிப்பட்ட வழக்குகளில் எந்த வகையிலும் உதவி செய்யவில் லையாம். அதனால்தான் அவர் வெளியே வர முடியவில்லையாம். சக்சேனா இடத்துக்கு தினசரி நாளிதழில் கோவை பதிப்பில் பணியாற்றிய மூத்த படத் தயாரிப்பாளரின் மகனை தலைவராக நியமித்துவிட்டார்கள். அவரும் சுறுசுறுப்பாகப் பணியாற்ற ஆரம்பித்துவிட்டாராம். அவரும் படத் தயாரிப்பாளர்களுடன் தினமும் பேசி, நிறுவனத்தின் நிலையை எடுத்துச் சொல்லி வருகிறாராம். இதையடுத்து, பல புதிய படங்களின் ரைட்ஸை நிறுவனம் வாங்க ஆரம்பித்து இருக்கிறதாம். 


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

01_09_2011_013_008-maxis.jpg?w=640&h=388



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

01_09_2011_007_003-maran-dishnet-delay.jpg?w=336&h=681



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

20110902a_001101007-dayanithi.jpg?w=640&h=319



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

2131734-mk-cbi.jpg?w=640&h=608



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

02_09_2011_001_020-trai-raja.jpg?w=165&h=629 02_09_2011_001_024-maran-clean-chit.jpg?w=362&h=632



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

02_09_2011_013_006-2g-properties.jpg?w=640&h=376



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

20110902a_012101010-sun-direct.jpg?w=640&h=586



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

சன் பிக்சர்ஸ் சிஓஓவாக செம்பியன் நியமனம்

 
02-sembian2-300.jpg
சன் பிக்சர்ஸ் சிஓஓ ஹன்ஸ்ராஜ் சக்சேனா பல்வேறு சட்டப் பிரச்சினைகளில் சிக்கித் தவித்து வரும் இந்த சூழலில், நிறுவனத்தை புதிய வேகத்துடன் நடத்த புதிய சிஓஓவாக செம்பியனை நியமித்துள்ளது சன் நிர்வாகம். பிரபல தயாரிப்பாளரும்புரட்சித் தலைவர் எம்ஜிஆருக்கு நெருக்கமானவருமான கோவை செழியனின் மகன் செம்பியன் சிவகுமார். சன் குழுமத்தின் மலையாள சேனல் சூர்யா டிவி, எஸ்சிவி மற்றும் சூரியன் எப்எம் ஆகியவற்றை நிர்வகித்து வந்தார். இப்போது, சன் பிக்சர்ஸ் நெருக்கடியான சூழலில் இருப்பதால், சக்சேனாவுக்கு பதிலாக அந்தப் பொறுப்பில் செம்பியனை நியமித்துள்ளது சன் நிர்வாகம். தனது நியமனம் குறித்து செம்பியன் கூறுகையில், "மீண்டும் பழைய உத்வேகத்தோடு களமிறங்குகிறோம். வருகின்ற நாட்களெல்லாம் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு சிறப்பான நாட்களாக அமையப் போகின்றன. இப்போது சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள மங்காத்தா சூப்பர் ஹிட்டாகிவிட்டது. அடுத்து சூர்யாவின் ஏழாம் அறிவு படத்தை வெளியிடுகிறது சன் பிக்சர்ஸ். இன்னும் நிறைய பெரிய படங்கள் சன் வசம் வருகின்றன," என்றார்.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

தயாநிதியை ‘துள்ள விட்டு’ வேடிக்கை பார்க்கிறது சி.பி.ஐ.!

20110901-TOD-19.jpg
புதுடில்லி, இந்தியா:
 சி.பி.ஐ.யின் மூன்றாவது குற்றப் பத்திரிகைக்காக பதட்டத்துடன் காத்திருக்கிறார் கனிமொழி. காரணம், கடந்த மே மாதம் 20ம் தேதி சிறையில் அடைக்கப்பட்ட கனிமொழிக்கு இதுவரை ஜாமீன் கிடைக்காமல் இருப்பதற்கு காரணமே, இன்னமும் சி.பி.ஐ.யின் மூன்றாவது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்ற சி.பி.ஐ.யின் வாதம்தான்.

இந்த மூன்றாவது குற்றப் பத்திரிகையைத்தான், இதுவரை ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரையும் ஏன் கைது செய்து வைத்திருக்கிறோம் என்று காட்டுவதற்கான மந்திரக் கோலாகக் காட்டவுள்ளது சி.பி.ஐ.

ஒரு வகையில் சொல்லப்போனால், கனிமொழியைக் கைது செய்து சிறையில் அடைத்து வைத்திருப்பதற்கு கோர்ட்டில் சி.பி.ஐ. கொடுத்துள்ள காரணங்கள் போதாது. வேறு கேஸ் என்றால், இப்படி கைது செய்யப்பட்ட ஒருவர், சுலபமாக ஜாமீனில் வெளியே வந்திருக்க முடியும்.

“இந்த வழக்கில் இவர்களை ஜாமீனில்கூட வெளியில் விடாமல் இன்னும் எத்தனை காலத்துக்கு உள்ளே வைத்திருக்கப் போகிறீர்கள்?” என்று நீதிபதி ஷைனியே சினத்துடன் சி.பி.ஐ. வக்கீல்களிடம் கேட்டதும் நடந்தது. அந்தளவுக்கு ஜாமீன் மறுப்பதற்கான காரணங்கள் போதாது என்ற நிலையில் உள்ளது வழக்கு.

ஆனால் சி.பி.ஐ., “மூன்றாவது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யும்வரை பொறுத்திருங்கள். இவரை ஏன் ஜாமீனில் வெளியே விடக்  கூடாது என்பதற்கான காரணங்களை அதில் காண்பிக்கிறோம்” என்று நீதிபதிகளை கன்வின்ஸ் பண்ணிப் பண்ணியே, கனிமொழியை வெளியே விடாமல் வைத்திருக்கின்றது. மூன்றாவது குற்றப் பத்திரிகையை இம்மாதம் 15ம் தேதி தாக்கல் செய்து விடுவோம் என்றும், நீதிமன்றத்தில் கூறியிருக்கிறது சி.பி.ஐ.

அதற்கு இன்னமும் இரண்டு வாரங்களைவிட குறைவான நாட்களே உள்ளன.

இதுதான் கனிமொழி சி.பி.ஐ.யின் மூன்றாவது குற்றப் பத்திரிகைக்காக பதட்டத்துடன் காத்திருப்பதற்கான காரணம். இதுவரை தமக்கு தெரியாத ஆதாரங்கள் எதையாவது சி.பி.ஐ. அந்தக் குற்றப் பத்திரிகையில் காண்பிக்கப் போகின்றதோ என்ற லேசான நடுக்கம் கனிமொழி தரப்புக்கு இருக்கிறது.

கனிமொழி தரப்பைப் பற்றி, வித்தியாசமான கோணத் தகவல் ஒன்றைக் கூறுகிறார்கள். இந்த வழக்கில் தயாநிதி மாறன் சிக்கிக் கொள்வதைப் பற்றிய கவலை ஏதுமில்லாமலேயே, அவரது வக்கீல் வாதிடுகிறார் என்பதே அது.

அதாவது, கனிமொழியின் வக்கீலின் வாதங்களின் பிரதான பாயின்ட் கோர்ட்டால் ஏற்றுக் கொள்ளப்பட்டால், அதே பாயின்ட், தயாநிதி மாறனை வழக்குக்குள் சிக்க வைத்துவிடும். இதைப் புரிந்துகொண்டுதான் சி.பி.ஐ., தயாநிதி மாறன் பற்றி சமீபத்தில் அடக்கி வாசிக்கத் தொடங்கியுள்ளது என்கிறார்கள் சட்டத்துறை வட்டாரங்களில்.  இது ஒருவகை avoiding tactic என்றும் ஊகிக்கிறார்கள்.

முன்றாவது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படும் முன்னரே, சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள வேறு சில ஆவணங்களில், தயாநிதி மாறன் ஸ்பெக்ட்ரம் ஊழலில் அவ்வளவாக முக்கியத்துவம் இல்லாத நபராக காட்டும் வகையில் வார்த்தைப் பிரயோகங்கள் இருந்தன.

சில தினங்களுக்குமுன் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் தொடர்பில், சி.பி.ஐ. அதிகாரிகள் ஆச்சரியமான காரியம் ஒன்றைச் செய்தார்கள். தமக்கு அறிமுகமான குறிப்பிட்ட சில பத்திரிகையாளர்களை தொடர்பு கொண்ட சி.பி.ஐ. அதிகாரி ஒருவர், “இன்று தாக்கல் செய்துள்ள டாக்குமென்ட்ஸை கவனமாகப் படித்துப் பாருங்கள். உங்களுக்கு ஏதாவது ஸ்கூப் கிடைக்கலாம்” என்று கோடி காட்டினார்.

அன்று வெளியான இரு டில்லிப் பத்திரிகைகளின் மாலைப் பதிப்பில், “தயாநிதி மாறனை இந்த வழக்கில் சிக்க வைக்க போதிய ஆதாரம் ஏதும் சி.பி.ஐ.யிடம் இல்லை” என்று சுடச்சுட செய்தி வெளியானது. மறுநாள் அதே செய்தி தமிழ் ஊடகங்களிலும் இடம் பிடித்துக் கொண்டது.

மீடியாவில் இந்தச் செய்தி நன்றாக அடிபடுவதையும், அதன் ரியாக்ஷனையும் கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தது சி.பி.ஐ.

டில்லியில் இந்த வழக்குடன் நெருங்கிய தொடர்புடைய சோர்ஸ் ஒன்றை நாம் விசாரித்த வகையில், “மூன்றாவது குற்றப் பத்திரிகையில், கனிமொழி, தயாநிதி மாறன் ஆகிய இருவரில் ஒருவரது பங்குதான் ஹைலைட் பண்ணப்பட்டிருக்கும். தயாநிதி மாறனை நிச்சயமாகச் சிக்க வைப்பது என்று முடிவு எடுத்தால், கனிமொழி ஜாமீனில் வெளியே செல்வதை சி.பி.ஐ. பெரிதாக எதிர்க்காது. சும்மா ஒப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துவிட்டு அமைதியாகிவிடும்” என்று கூறினார்.

அப்படியானால், வரும் 15ம் தேதிக்காக கனிமொழி மாத்திரமல்ல, தயாநிதி மாறனும் பதட்டத்துடன் காத்திருக்க வேண்டியிருக்கிறது
.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

எந்திரன் மற்றும் நில அபகரிப்பால் ரூ 10 கோடி இழந்ததாக சக்தி சிதம்பரம் புகார்!

 
சென்னை: 'எந்திரன்' படம் மூலமும், நில அபகரிப்பாலும் தனக்கு ரூ.10 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் சினிமா தயாரிப்பாளர் சக்தி சிதம்பரம் நேற்று பரபரப்பான புகார் கொடுத்தார். செவ்வாய்க்கிழமை அவர் இரண்டு விதமான புகார் மனுக்களை கமிஷனரிடம் கொடுத்தார். அதன் விவரம்: நான், தமிழ் திரையுலகில் 20 வருடங்களாக இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும் தொழில் செய்து வருகிறேன். ரஜினிகாந்த் நடித்த 'எந்திரன்' திரைப்படத்தின் செங்கல்பட்டு ஏரியா விநியோக உரிமையை சன் பிக்சர்ஸ் தலைமை அதிகாரி சக்சேனாவிடம் இருந்து ரூ.4 கோடிக்கு விலைபேசி வாங்கினேன். ரூ.4 கோடி பணத்தையும் கொடுத்துவிட்டேன். ஆனால் 8 சினிமா தியேட்டர்களில் அந்த படத்தை திரையிட வேண்டும். ஆனால் அதிகம் வசூலாகும் ஒரு தியேட்டரை எனக்கு கொடுக்காமல், 7 தியேட்டர்கள் மட்டுமே கொடுத்தனர். இதனால் எனக்கு ரூ.1 கோடியே 60 லட்சம் நஷ்டம் ஏற்பட்டது. இதுபற்றி கேட்டபோது, சக்சேனாவும், அவரது உதவியாளர் அய்யப்பனும் என்னை மிரட்டினார்கள். இதனால் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து எனக்கு ஏற்பட்ட இழப்பீட்டு தொகையான ரூ.1 கோடியே 60 லட்சத்தை மீட்டுத்தரும்படி வேண்டுகிறேன். நிலமோசடி அதே எந்திரன் படம் விநியோக உரிமையை செங்கல்பட்டு ஏரியாவில் நான் எடுத்துள்ளதை அறிந்து, தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபுவும், அவரது அண்ணன் மகன் தினகரன் என்பவரும் அந்த படத்தை வெளியிடுவதில் என்னோடு கூட்டணி சேர்ந்துகொள்வதாக கூறினார்கள். அதற்காக ரூ.2 கோடி தருவதாகவும் சொன்னார்கள். அதற்கான ஒப்பந்தம் போடுவதாக வெற்றுத்தாளில் என்னிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டனர். செங்கல்பட்டு ஏரியாவில் எந்திரன் படம் விநியோகத்தையும், அதன் கணக்கு வழக்குகளையும் தினகரனே கவனித்துக்கொண்டார். பின்னர் திருவள்ளூரில் எனது மாப்பிள்ளைக்கு சொந்தமான ரூ.5 கோடி மதிப்புள்ள நிலத்தை தினகரன் வாங்கிக்கொண்டார். ரூ.5 கோடி மதிப்புள்ள நிலத்தை, ரூ.55 லட்சம் மதிப்புள்ள நிலம் என்று குறைவாக மதிப்பிட்டு பத்திரப்பதிவு செய்துகொண்டார்கள். எந்திரன் படத்தில் வசூலான பணத்தையும் எனக்கு தரவில்லை. நிலம் வாங்கியதற்கான பணத்தையும் எனக்கு தரவில்லை. இதுபற்றி கேட்டபோது, வி.எஸ்.பாபுவும், அவரது அண்ணன் மகன் தினகரனும் ஒரு அறையில் அடைத்துவைத்து மிரட்டினார்கள். அடியாட்களை ஏவிவிட்டு என்னை அடித்து உதைத்தனர். இதுதொடர்பாகவும் சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்." இவ்வாறு சக்தி சிதம்பரம் தனது புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

09_09_2011_002_008-dayanithi.jpg?w=640&h=419



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

09_09_2011_006_034-pc-in-2g.jpg?w=541&h=653



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

மீண்டு விட்டதா தமிழ் சினிமா?

 

வெளிச்சத்துக்கு வரும் தகவல்கள்
1.jpg
தி.மு.க. ஆட்சியில் நடந்த சம்பவம் இது. மு.க. அழகிரியின் மகன் துரை.தயாநிதியின் நிறுவனம் ரிலீஸ் செய்த படம் தொடர்பாக அவரைப் பேட்டி காண விரும்பியது ஒரு சேனல். சத்யம் தியேட்டர் மாடியில் பில்லியர்ட்ஸ் ஆடிக் கொண்டிருந்த தயாநிதி அங்கே வரச் சொல்லிவிட்டார். தயாநிதி பேட்டி கொடுக்க இருப்பதைக் கேள்விப்பட்ட தியேட்டர் நிர்வாகம் மற்ற மேஜைகளில் ஆடிக்கொண்டிருந்தவர்களிடம் கெஞ்சி, இடத்தைக் காலி பண்ணுங்க" என்று கேட்டுக்கொண்டது. இந்தச் சம்பவத்தை நம்மிடம் சொன்ன ஒரு திரையுலகப் பிரமுகர், தியேட்டர்காரர்கள் கருணாநிதி குடும்ப உறுப்பினர்களுக்கு அந்த அளவு பயந்து கொண்டு ராஜமரியாதை கொடுத்தார்கள். பேட்டியின்போது எந்தத் தொந்தரவும் இருக்கக் கூடாதென்று மற்றவர்களைப் போகச் சொன்ன தியேட்டர் நிர்வாகம், அவர்களின் படங்களை மட்டுமே திரையிட்டு வந்ததில் ஆச்சர்யமென்ன?" என்று கேட்டார்.
 
1.jpg
சென்னை மட்டுமல்ல; தமிழகத்தின் மாவட்டத் தலைநகர்களில் உள்ள முக்கியமான தியேட்டர்களில் கூட தங்கள் படம் மட்டும்தான் திரையிடப்பட வேண்டும் என்று தியேட்டர் அதிபர்கள் ‘அன்பாக’ மிரட்டப்பட்டனர். இதனால் விஜய் நடித்த ‘காவலன்’ படமே கூட தியேட்டர் கிடைக்காமல் சில நாட்கள் பெட்டியில் அடங்கியது. ‘களவாணி’ போன்ற நல்ல படங்களுக்குப் பல தடைக் கற்கள். இது மக்களிடம் எரிச்சலை உண்டாக்கியது. சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நல்ல படங்களுக்கு தியேட்டரும் விநியோகஸ்தர்களும் கிடைக்கவில்லை. பல தயாரிப்பாளர்கள் நொந்து போனார்கள். தமிழ்ப் படவுலகில் அறிவிக்கப்படாத அவசர நிலை அமல்படுத்தப்பட்டு, ஒரு குடும்பம் கோலோச்ச அனுமதிக்கப்பட்டு விட்டது என்று புலம்பினார்கள்.
ஆட்சி மாறிய பின் நிலைமை மாறிவிட்டதா?
1.jpg
எங்களுக்கு இப்போது சுதந்திரம் கிடைத்திருக்கிறது. பேச்சு சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் போன்றவை எங்களிடமிருந்து பறிக்கப்பட்டு இருந்தன. இப்போது ஆரோக்கியமான சூழல் உருவாகி, நல்ல படங்களை ஒரு நம்பிக்கையுடன் தயாரிக்கும் நிலை உருவாகியிருக்கிறது," என்கிறார் தயாரிப்பாளர் கே.ஆர். முன்பு போல் திரையுலகில் கோலோச்ச முடியாது என்பதை உணர்ந்த துரை. தயாநிதி தமது ‘மங்காத்தா’ படத்தை சன் நிறுவனத்துக்கு கைமாற்றிவிட்டு லண்டனில் தற்காலிகமாக செட்டில் ஆகிவிட்டார். சன் நிறுவனமும், ‘நேரடியாகக் களத்தில் குதித்தால் வம்பு வந்து சேரும்’ என்று பயந்து ராதிகாவின் ரேடன் நிறுவனத்துக்கு 19 கோடிக்குக் கைமாற்றி(?) விட்டது.

ஆளும் கூட்டணியில் உள்ள சரத்குமார், ‘அரசு மற்றும் தியேட்டர்கள் தொடர்பாக ஏதாவது பிரச்னை வந்தால் சமாளித்துக் கொள்வார்’ என்று சன் நிறுவனமும் நினைத்ததில் தவறில்லை. சாட்டிலைட் உரிமையை மட்டும் வைத்திருக்கும் சன், தனது சேனல்களில் செய்த விளம்பர சுனாமி காரணமாக, ‘மங்காத்தா’ முதல் ஐந்து நாட்களிலேயே வசூலைக் கொட்டி அசர வைத்திருக்கிறது. உதயநிதி ஸ்டாலினும் தமது ‘ஏழாம் அறிவு’ படத்தை சன் மூலம் வெளியிட இருக்கிறாராம்.சிலரது சேனல் பின்புலம்தான் எங்களைப் போன்ற தயாரிப்பாளர்களுக்குப் பெரிய சவால். ஊக்க மருந்து சாப்பிட்டு விட்டு ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொள்ளும் ஒருவருடன், உறுதியான, திறமையான வீரர் கலந்து கொண்டால் கூட அவர் தோற்றுத்தான் போய்விடுவார். படவுலகில் தொடர்ந்து இருக்கும் தயாரிப்பாளர்கள் மத்தியில் புயலெனப் புகுந்த சிலர், மீடியா என்ற ஊக்க மருந்தை கைவசம் வைத்துக் கொண்டு, தங்கள் தொடர்பான படங்களையே தமிழகம் முழுவதும் வெளியிட்டு விளம்பர பலத்தால் திரையுலகை, தங்கள் பிடிக்குள் வைத்துக் கொண்டார்கள்.
1.jpg
பத்திரிகைகளில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் சினிமா விளம்பரம் செய்யக்கூடாதென்று கட்டுப்பாடு உண்டு. அதேபோல் சேனல் நடத்துபவர்கள் தங்கள் படங்களுக்குக் கூட சகட்டுமேனிக்கு விளம்பரம் செய்து கொள்வதைத் தடுக்க, கட்டுப்பாடு தேவை. சேனலாகட்டும்; பத்திரிகைகளாகட்டும்; சமதள ஆடுகளம் இருக்கும்படியான நிலை உருவானால் மட்டுமே, நல்ல படங்களைத் தயாரிக்கும் சிறு தயாரிப்பாளர்கள் கூட தயாரிப்புத் தொழிலில் நீடிக்க முடியும்," என்கிறார் விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் கலைப்புலி சேகரன்.‘மைனா,’ ‘மதராசபட்டினம்’ போன்ற பல நல்ல படங்கள் மக்களை ரீச் பண்ண அவர்கள்தானே காரணம்" என்கிறார் தி.மு.க. அனுதாபி ஒருவர்.திரைப்பட விநியோகம் மற்றும் தியேட்டர் தொழிலில் முக்கியமான புள்ளி அபிராமி ராமநாதன். திரையுலகம் சிலரது பிடியிலிருந்து மீண்டு விட்டதா என்ற நம் கேள்விக்குப் பதிலளிக்க மிகவும் தயங்கினார் அவர். வேண்டாம் ஸார். சர்ச்சைக்கிடமான விவகாரம்" என்று கழன்று கொண்டார்.
1.jpg
தேர்தல் முடிந்து ஆட்சியும், காட்சியும் மாறியபின் முடங்கியிருந்த படங்கள் ரிலீஸாகத் தொடங்கி விட்டன. கடந்த நூறு நாட்களில் முப்பதுக்கும் மேற்பட்ட படங்கள் வெளிவந்திருக்கின்றன. ஆனால் நல்ல சரக்கு மட்டுமே விலை போகும் என்பது போல, ஒருசில படங்களே குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றிருக்கின்றன. ‘அவன்-இவன்’, ‘தெய்வத் திருமகள்’, ‘காஞ்சனா’ ஆகிய படங்களை வெற்றிப் படங்களாகச் சொல்லலாம். ஆனால் முடிந்த படங்கள் வெளிவர ஒரு சாதகமான சூழல் நிலவுவதே தமிழ்த் திரைப்பட உலகம் சிலர் பிடியிலிருந்து மீண்டு விட்டது என்பதைக் காட்டுகிறது," என்கிறார் கலைப்புலி சேகரன். இருந்தும் இன்றைய திரைப்படத் தயாரிப்பு, விநியோகச் சூழல், ஆரோக்கியமாக இல்லை. காரணம், கொதிக்கும் எண்ணெய்ச் சட்டியிலிருந்து எரியும் தீக்குள் விழுந்து விட்ட நிலையில்தான் படவுலகம் இருக்கிறது. இதற்கு இரண்டு காரணங்கள். தியேட்டர்காரர்கள் தங்கள் இஷ்டத்துக்கு நிர்ணயித்துக் கொள்ளும் கட்டணம்; மற்றும் தொழிலாளர் சம்பளப் பிரச்னை. குறிப்பாக தொழிலாளர் சம்பளப் பிரச்னையில் படவுலகம் தடுமாறி நிற்கிறது. புதுப்பட பூஜைகள் நிறுத்தப்பட்டிருக்கின்றன.தியேட்டர்களில் பிரபல நடிகர்கள் நடித்த படங்கள் ரிலீஸான முதல் வாரத்தில் டிக்கெட்டுக்கு 200, 250 என்று வசூல் வேட்டை ஆடுகிறார்கள் தியேட்டர் அதிபர்கள். தியேட்டரில் வசூல் ஆவதால் அரசுக்கு வரி மூலம் எந்த லாபமும் இருக்காது. காரணம், அரசு நிர்ணயித்துள்ள கட்டணப்படிதான் அவர்கள் வரி செலுத்துகிறார்கள். அரசை ஏமாற்றுகின்ற அதே சமயம் வசூல் விஷயத்தில் தயாரிப்பாளர் - விநியோகஸ்தர்களையும் தியேட்டர் அதிபர்கள் ஏமாற்றுகிறார்கள் என்பது பலரது குற்றச்சாட்டு. இப்போது சென்னையில் சில தியேட்டர்களில் வார வாடகை கொடுத்துவிட்டு படத்தைப் போடுகிறார்கள். பல படங்களுக்கு கொடுத்த வாடகையை விட மிகக் குறைவாக வசூலாகிறது. தயாரிப்பாளர் - விநியோகஸ்தர் தலையில் துணியைப் போட்டுக் கொண்டு போக வேண்டியதுதான். சென்னைக்கு வெளியே உள்ள தியேட்டர்களில் சதவிகிதக் கணக்கில் வியாபாரம் நடக்கிறது. ஏ.ஸி. தியேட்டர்களுக்கு, குறைந்தபட்சக் கட்டணம் ரூபாய் 20. அதிகபட்சம் 100. ஏ.ஸி. அல்லாத தியேட்டர்களுக்கு, பதினைந்திலிருந்து 70 ரூபாய் வரை நிர்ணயம் செய்ய வேண்டுமென்று அரசுக்கு வேண்டுகோள் வைத்துள்ளோம்," என்கிறார் தியேட்டர் உரிமையாளர் சங்கச் செயலர் திருச்சி ஸ்ரீதரன். இந்த விஷயத்தில் அரசு ஒரு முடிவு விரைந்து எடுக்க வேண்டும் என்பது பலரது எதிர்பார்ப்பு.
1.jpg
படவுலக விவகாரங்களில் தலையிடுவதை ஜெயலலிதா விரும்பவில்லை என்கிறார்கள். ‘மங்காத்தா’ படம் மூலம் சன் நிறுவனம் மீண்டும் களத்துக்கு வந்தாலும் அதிகாரப் பின்னணி இல்லாததால் இனி அடாவடி, அத்துமீறல் இருக்காது என்றும் கருதப்படுகிறது. அரசிடமிருந்து எந்தக் குறுக்கீடும் கிடையாது. எங்கள் பிரச்னைகளை நாங்களே தீர்த்துக் கொள்ளும் சூழல்தான் இருக்கிறது," என்கிறார் கலைப்புலி சேகரன்.
பாக்கி இல்லை
சன் நிறுவனம் உதயநிதி ஸ்டாலின், துரை தயாநிதி ஆகியோர் தயாரித்த படங்களில் தொழிலாளர்களுக்கு எந்தப் பாதிப்பும் கிடையாது," என்கிறார் திரைத் தொழிலாளர் கூட்டமைப்பின் முன்னாள் தலைவரான வி.சி.குகநாதன். பையனூரில் திரைப்படக் கலைஞர்கள் தொழிலாளர்களுக்காகக் கட்டப்படும் குடியிருப்பைப் பற்றி விசாரித்தோம்.50 ஏக்கரில் 10,000 வீடுகள் கட்ட வேண்டுமென்பது திட்டம். ஹட்கோ நிறுவனம் 249 கோடி நிதி உதவி செய்கிறது. இந்தக் கடனுக்கு தமிழக அரசு கியாரண்டி. 15 ஏக்கரில் இரண்டு படப்பிடிப்புத் தளங்களை எங்கள் செலவில் அமைக்கிறோம். இந்தப் பணிகளை வேகப்படுத்த அரசுடன் தொடர்பில் இருக்கிறோம்" என்றார் அவர்.
கல்கி


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

தயாநிதியை தப்பிக்க வைக்கும் சர்வதேசப் பின்னணி

 
dhayanidhimaran.jpg


           இந்தியாவையே  நடுநடுங்க வைத்தது 2ஜி விவகாரம். ஒரு லட்சத்து எழுபத்து ஆறாயிரம் கோடிக்கு எத்தனை சைபர் என்று மக்கள் கேட்கக்கூடிய அளவுக்கு மீடியாக்களில் இது பற்றி பரபரப்பாக விவாதிக்கப்பட்டது. 

தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ஆ.ராசாவின் கீழ் பணிபுரிந்த சில அதிகாரிகளை வளைத்து, அவர்கள் மூலமாக டிபார்ட்மெண்ட்டின் டாக்குமெண்ட்டுகளைக் கத்தை கத்தையாக எடுத்து அவற்றை ஜெராக்ஸ் போட்டு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச்செயலாளர் பிரகாஷ்காரத், ராஜ்யசபா எம்.பி சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், பா.ஜ.க. தலைவர்கள் எனப் பலரிடமும் அதனைக் கொடுத்து தேசிய அளவிலும் மாநில அளவிலும் 2ஜி சர்ச்சை, சரமாரியாகக் கிளம்புவதற்குக் காரணகர்த்தாவாக இருந்தார்கள். 

சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கடும் தோல்வியடைந்து, பிரதான எதிர்க்கட்சி என்ற  தகுதியைக்கூடப் பெற முடியாமல் போனது. சென்னை போன்ற தி.மு.க.வின் முக்கியக் கோட்டைகள் சரிந்தன. இதற்கெல்லாம் 2ஜி விவகாரம்தான் காரணம் என்று தி.மு.க.வினரே வேதனையோடு பேசுவதை இப்போதும் கேட்க முடிகிறது. தன்னை எம்.பி.யாக்கி, மந்திரியாக்கிய கட்சிக்கு ஏற்பட்டுள்ள பெரும் சரிவு பற்றி துளியும் கவலைப்படாமல், தனக்கு வேண்டியவர்கள் மூலமாக சி.பி.ஐ. அலுவலகத்திற்கு தொடர்ந்து மொட்டை பெட்டிஷன்களை அனுப்பச் செய்தனர். தனக்கு வேண்டிய அதிகாரிகள் மூலமாக, தனக்குப் பிடிக்காத நபர்களை 2ஜி விவகாரத்தில் சிக்க வைக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் அவர்களைப் பற்றி இல்லாததும் பொல்லாததுமான செய்திகளைப் போட்டுக் கொடுத்தனர். அதன் விளைவாக, 2ஜியில் எந்த சம்பந்தமுமில்லாதவர்களின் வீடுகளில்  சி.பி.ஐ. சோதனை செய்தது. இதனால் குடும்பத்தினர் கடும் மன உளைச்சலுக்குள்ளாயினர். அவர்களின் நற்பெயர் சிதறடிக்கப்பட்டு, அவதூறுகள் பரப்பப்பட்டன.

2ஜி விவகாரத்தில், விசாரணை என்ற பெயரில் தாறுமாறாக ஓடிக்கொண்டிருந்த சி.பி.ஐ. ஒரு கட்டத்தில், மிகத்தெளிவாக ஒவ்வொரு ஆவணத்தையும் ஆராய்ந்து உண்மை எது, பொய் எது எனப் புரிந்துகொண்டது. அப்போதுதான்,  2ஜி விவகாரத்தின் சூத்திரதாரி யார் என்பது சி.பி.ஐ.க்குத் தெரியவந்தது என்கிறார்கள் டெல்லி வட்டாரத்தினர். இது பற்றி ஜூன் 04-07 மற்றும் ஜூன் 08-10 தேதியிட்ட இதழ்களில் நக்கீரன் தெளிவாகவும் விரிவாகவும் செய்திகளை வெளியிட்டிருந்தது. 

dhayanidhimaran3.jpgதயாநிதி மாறன் தகவல் தொழில்நுட்பத்துறையில் இருந்தபோது தொலைத் தொடர்புத்துறையில் வெளிநாட்டுக் கம்பெனிகள் மூலம் அன்னிய மூலதனம் 74% வரை உள்ளே வர அனு மதிக்கப்பட்டது. இந்த அனுமதியளிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டதில்தான் விவகாரம் ஆரம்பிக்கிறது. அதுவரை, தமிழ்நாட்டில் மட்டும் சேவை அளித்து வந்த தொழிலதிபர்  சிவசங்கரனின் ஏர்செல் நிறுவனத்தை, தயாநிதிமாறன் அனுமதித்த வெளிநாட்டு மூலதன அனுமதி கொள்கையின் அடிப்படையில் மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் கம்யூனிகேஷன் என்கிற கம்பெனி 74% ஏர்செல் பங்குகளை வாங்கியது. இந்த மேக்சிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அனந்தகிருஷ்ணன். மேக்சிஸ் என்கிற வெளிநாட்டுக் கம்பெனியின் கைக்கு ஏர்செல் போனதும் அதுவரை இரண்டு வருடங்களாக தமிழகத்தில் இயங்குவதைப்போல இந்தியா முழுவதுமுள்ள 14 பகுதிகளில் சேவைகளை நடத்த ஏர்செல் நிறுவனம் விண்ணப்பித்திருந்த விண்ணப்பங்கள் திடீரென ஏற்றுக் கொள்ளப்பட்டு, அவற்றிற்கான லைசென்ஸ்கள் வழங்கப்பட்டன. 

அதாவது, ஏர்செல் நிறுவனத்தை மேக்சிஸ் அனந்தகிருஷ்ணனுக்குவிற்கும்படி மாறன் சகோதரர்களால் சிவசங்கரன் வலியுறுத்தப்பட்டார். அவர் அதற்கு மறுத்தபோது மிரட்டப்பட்டார். தயாநிதிமாறனுக்கு முன்பாக, பா.ஜ.க. அமைச்சரவையில் தகவல் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த அருண்ஷோரி, சிவசங்கரனின் ஏர்செல் (டிஷ்நெட்) நிறுவனத்திடமிருந்து 8 மண்டலங்களுக்கான விண்ணப்பங்களைப் பெற்றிருந்தார். அதில் 7   மண்டலங்களுக்கான எல் ஓ ஐ எனப்படும் லெட்டர் ஆஃப் இன்ட்ரஸ்ட் எனும் கடிதத்தைக் கொடுத்துவிட்டார். தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்துவிட்டதால் மத்தியபிரதேச மாநிலத்திற்கான விண்ணப்பத்திற்கு மட்டும் கடிதம் மட்டும் நிறுத்தப் பட்டிருந்தது.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 2004-ல் தயாநிதி மாறன் அமைச்சரானதும் சிவசங்கரன் நிறுவனத்தின் விண்ணப்பங்கள் மீதான முடிவு நிறுத்திவைக்கப்பட்டு, அது சம்பந்தப்பட்ட ஃபைல்கள் தேவையின்றி அலைக்கழிக்கப்பட்டன. இந்தத் தருணத்தில்தான் சிவசங்கரனுக்கு மாறன் சகோதரர்களால் மிரட்டல்கள் வர, ஒரு கட்டத்தில் நெருக்கடியைத் தாங்கமுடியாமல் தனது நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவன அதிபர் அனந்தகிருஷ்ணனிடம் விற்றார் சிவசங்கரன். நிறுவனத்தின் பங்குகள் கைமாறியதும், அதுவரை அலைக் கழிக்கப்பட்டு வந்த ஃபைல்கள் உடனடியாக க்ளியராகி, இந்தியா முழுவதும் ஏர்செல் நிறுவனம் இயங்குவதற்கான லைசென்ஸ் வழங்கப்பட்டது.

2006-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியா முழுவதும் ஏர்செல் செல்போன் சேவை இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட, அடுத்த 3 மாதத்திற்குள் அந்த நிறுவனம் மாறன் சகோதரர்களின் நிறுவனமான சன் டி.வியின் துணை நிறுவனமாகிய சன் டி.டி.ஹெச்  நிறுவனத்தில் 20% பங்குகளுக் கான 315.71 கோடி ரூபாயை முதலீடு செய்தது. 2008 பிப்ரவரி முதல் 2009 ஜனவரி வரையிலான காலகட்டத்தில் மீண்டும் சன் டி.டி.ஹெச் நிறுவனத்தில் மேலும் 233.30 கோடி ரூபாயை முதலீடு செய்தது. மீண்டும் 2009 டிசம்பரில் 50 கோடி ரூபாயை முதலீடு செய்தது. இதன் மூலம் சன் டி.டி.ஹெச் நிறுவனத்திற்கு, செல்போன் சேவை லைசென்ஸ் பெற்ற மேக்சிஸ் நிறுவனம் மூலமாக 599.01 கோடி ரூபாய் வந்துள்ளது.

dhayanidhimaran1.jpgமேக்சிஸ் நிறுவனத்தின் ஆஸ்ட்ரோ என்ற துணை நிறுவனம் மூலமாக சன் குழுமத்திற்கு சொந்தமான சவுத் ஏசியா எஃப்.எம் லிமிட்டெட் என்ற நிறுவனத்துக்கு 111.28 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது. ஆக, அனந்தகிருஷ்ணன் கைக்கு ஏர்செல் சென்றதும் அதற்கு லைசென்ஸ்கள் வழங்கப்பட, அதன் தொடர்ச்சியாக மேக்சிஸ் நிறுவனம் மூலம் மாறன் சகோதரர்களின் சன் குழுமத்திற்கு  வந்த முதலீடு 710 கோடி ரூபாயாகும். 

இந்த விவரங்களெல்லாம் சி.பி.ஐ. நடத்திய விசாரணைகளில் தெரியவந்ததுடன், தொழிலதிபர் சிவசங்கரனே சி.பி.ஐ.யிடம் நேரடியாக வாக்குமூலம் அளித்தார். அதில் மாறன் சகோதரர்களான கலாநிதி மாறனும் தயாநிதி மாறனும் தன்னை எப்படியெல்லாம் மிரட்டினார்கள் என்பதுடன், தமிழகத்திலேயே தலைகாட்ட முடியாதபடி நெருக்கடி கொடுத்து விரட்டியதையும் விரிவாகச் சொல்லியிருந்தார். 

2ஜி விவகாரத்தின் சூத்திரதாரியான தயாநிதி மாறன் மீதான பிடி இதன் மூலமாக இறுகத் தொடங்கியதையடுத்துதான் அவர் மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயத்திற்கும் ஆளானார். 

தற்போது திடீர் திருப்பமாக, சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.ஐ தரப்பு, "சிவசங்கரனுக்கு தயாநிதி மாறன் நெருக்கடி கொடுத்து ஏர்செல் பங்குகளை விற்கச் செய்தார் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை. உரிமங்கள் வழங் கப்பட்டதில் எந்த சக்தியின் நிர்பந்தமும் இருப்பதாகத் தெரியவில்லை. தயாநிதி மாறன் தொடர்பான மற்ற விவரங்கள் பற்றி தொடர்ந்து விசாரித்து வருகிறோம்' என்று தெரிவித்தது. இது சிவசங்கரன் உள்பட பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 

2ஜியின் உண்மை விவரங்கள் வெளியாகவேண்டும் என்பதில்  தீவிரமாக இருக்கும் சமூக நல ஆர்வலரும் பிரபல வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷண் செப்டம்பர் 6-ந் தேதியன்று உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அதில், "2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் தயாநிதி மாறனின் பங்கை சி.பி.ஐ. முற்றிலும் கண்டுகொள்ளாமல் விட்டுள்ளது. இது தொடர்பான உண்மைகளையும் அது புறந்தள்ளியுள்ளது. தயாநிதி மாறன் மீதான புகார்களையும் அது தொடர்பான தகவல் களையும் சி.பி.ஐ. சரியாகவும் முறையாகவும் விசாரிக்கவில்லை'  என்று குறிப்பிட்டுள்ளார்.

மாறன் சகோதரர்களின் நெருக்கடிகள் பற்றி சி.பி.ஐ.யிடம் முழுமையாக வாக்குமூலம் அளித்தவர் தொழிலதிபர் சிவசங்கரன்.  அவரது  தரப்பில் இது பற்றி நக்கீரன் கேட்டபோது, ""கலாநிதியும் தயாநிதியும் எப்படியெப்படியெல்லாம் மிரட்டினார்கள் என்பதை சிவசங்கரன் விரிவாகவே சி.பி.ஐ.யிடம் சொல்லியிருந்தார். எல்லாவற்றையும் பதிவு செய்துகொண்டார்கள். அதோடு, அவருடைய 3 செயலாளர்களிடமும் இந்த மிரட்டல்கள் பற்றி சி.பி.ஐ. உறுதி செய்துகொண்டது. அவர்கள் தங்களையும் மாறன் சகோதரர்கள் மிரட்டியதை சி.பி.ஐ.யிடம் சொன்னார்கள். 

சி.பி.ஐ. வரை சிவசங்கரன் போனதால் பதறிப்போன மாறன் சகோதரர்கள் பல வழிகளிலும் சமாதான முயற்சிகளை மேற்கொண்டார்கள். வெளிநாடுகளுக்கு சென்ற சிவசங்கரனை அங்கேயும் மாறன் தரப்பு ஆட்கள் வந்து சந்தித்துப் பேசினார்கள். எந்த சமாதானத்துக்கும் சிவசங்கரன் உடன்படவில்லை. இப்படிப்பட்ட நிலையில், மிரட்டல் பற்றி கொடுத்த வாக்குமூலத்தையெல்லாம் சி.பி.ஐ. புறக்கணித்துவிட்டு, தயாநிதி மாறனுக்கு சாதகமாக கோர்ட்டில் தெரிவித்திருப்பது எப்படி என்பது எங்களுக்குப் புரியவில்லை. ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது'' என்கிறார்கள் ஓப்பனாகவே.
dhayanidhimaran2.jpg

பாதிக்கப்பட்டவரே துணிச்சலாக வாக்குமூலம் கொடுத்தபிறகும், 2ஜி விவகாரம் திசைதிரும்புவது ஏன் என நாம் விசாரணையில் இறங்கியபோது, சர்வதேச அளவில் மாறன் சகோதரர்கள் காய் நகர்த்தியுள்ள விவரம் தெரியவருகிறது. மலேசியாவில் 1993ஆம் ஆண்டில் மேக்சிஸ் நிறுவனத்தைத் தொடங்கிய அனந்தகிருஷ்ணன் டெலிபோன், வயர்லெஸ், இன்டர்நெட் சர்வீஸ்களில் சக்கரவர்த்தியாக இருக்கிறார். 

6.37 பில்லியன் அளவுக்கு மலேசியக் கரன்சியில் பிசினஸ் டர்ன் ஓவர் நடந்து கொண்டிருக்கிறது. 3000 பேர் அவரிடம் வேலை பார்க்கிறார்கள். தனக்குப் போட்டியாக வரும் எந்த நிறுவனத்தையும் சமாளித்துவிடுவது அல்லது அவற்றை விலைக்கு வாங்கிவிடுவது என்பது இவரது வழக்கம். ஆசிய-பசிபிக் பகுதியில் மொபைல் ராஜாவாகத் திகழும் அனந்தகிருஷ்ணன் மீது மலேசிய அரசோ வெளி நாட்டு அரசுகளோ கை வைத்துவிட முடியாது என்கிற அளவுக்கு கார்ப்பரேட் சங்கிலி பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி யுள்ளது.

இதைப் புரிந்துகொண்ட மாறன் சகோதரர்கள், அனந்தகிருஷ்ணன் மூலமாகவே மலேசிய அரசைத் தொடர்புகொண்டு, மேக்சிஸ் நிறுவனத்திற்கு எதிராக இந்தியாவில் சி.பி.ஐ. காய் நகர்த்துகிறது. அந்த நிறுவனத்தின் செயல்பாடுகளை முடக்கினால், உங்கள் நாட்டின் பொருளாதாரம் பெரும் பாதிப்புக்குள்ளாகும் என்று தெரிவிக்க, நாட்டின் பொருளாதாரம் மீது அக்கறை கொண்ட மலேசிய அரசு, இந்திய அரசைத் தொடர்பு கொண்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கொடுக்கப்பட்ட அழுத்தங்களின் காரணமாகவே, 2ஜியில் தயாநிதியின் பங்கு பற்றி சி.பி.ஐ. ரிவர்ஸ் கியர் போட்டது என்கிறார்கள் டெல்லியில் உள்ள முக்கியப் புள்ளிகள்.

சமூகநல ஆர்வலர்கள், சட்ட வல்லுநர்கள் ஆகி யோர் ""சி.பி.ஐ.யின் நடவடிக்கையை விமர்சிக்கத் தொ டங்கியிருப்பதால், சி.பி.ஐ. வட்டாரம் கடந்த  செவ்வா யன்று, தயாநிதிமாறன் நிரபராதி என்று ஒருபோதும் நாங்கள் சொல்லவில்லை. அவருக்கு எதிரான ஆதா ரங்கள் இல்லாவிட்டாலும் அவர் மீதான வழக்கை இன் னும் கைவிட்டுவிடவில்லை எனத் தெரிவித்தது.  மீண் டும் பிடி இறுகும்'' என்கிறார்கள் சட்ட நிபுணர்கள்.

-காமராஜ்

 


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

STAKE RISES TO 43% 
Maran to inject Rs 130cr into SpiceJet for 5% more 

New Delhi: Low-cost airline SpiceJet said on Tuesday it would raise about Rs 130 crore by allotting shares,amounting to 5% stake,on preferential basis to majority shareholder Kalanithi Maran.
We are selling 5% stake to Maran through preferential allotment for Rs 130 crore.With this,his stake will increase from 38.16% to 43%.He is taking preferential allotment at a premium of about 50% on the current market price of Rs 28, Neil Mills,chief executive officer of SpiceJet said over the phone.In the April-June quarter of this fiscal,SpiceJet reported a net loss of Rs 71.96 crore against a net profit of Rs 55.2 crore in the corresponding quarter last fiscal.
We made losses in the last two quarters and we would also need funds for regional expansion, Mills said,when asked about the reason for the stake sale.
Making Hyderabad its base for the Bombardier Q-400 aircraft fleet,the low-cost carrier plans to connect it to tier-II and tier-III cities like Aurangabad,Bhopal,Indore,Mangalore,Rajahmundry,Tirupati and Vijayawada.
Mills added that from Maran's perspective,he has belief in the long-term future of this company and he is ready to support it.It is symbolic as it is important that at this difficult time,the promoter stands up and supports the company.
Mills,however,denied having spoken to any other investor for the stake sale and also declined to comment on the carrier's funds requirement for the fiscal.
We were not in talks with any other investors.We were not talking to anyone seriously about equity stake or fund requirement.We have not come out with any public statement on how much funds we would require, he said.In August,SpiceJet had announced that it would issue over 3.59 crore shares to promoter Kalanithi Maran on preferential basis,amounting to around Rs 78 crore.
Earlier in July,SpiceJet had said its promoter group firm Kal Airways has pledged 86.17% of its total holding in the company.It amounts to 33.27% of the outstanding shares of the company.Kal Airways holds over 15.65 crore shares in SpiceJet.PTI


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

14_09_2011_001_035-sun-pictures.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

சன் டி.வி. கேபிளை கபளீகரம் செய்கிறதா அரசு கேபிள்?

மச்சீர்க் கல்வி விவகாரத்தில் சறுக்கிய அ.தி.மு.க. அரசுக்கு, அடுத்த உலுக்கல் கேபிள் வடிவில் வந்திருக்கிறது. தமிழக அரசின் ‘அரசு கேபிள் டி.வி.’ சேவையை கடந்த 2-ம் தேதி முதல்வர் ஜெயலலிதா தொடங்கிவைத்த தினத்தில் இருந்தே புலி வால் பிடித்த கதையாகப் பிரச்னை மேல் பிரச்னைகள். மக்கள் விரும்பிப் பார்க்கும் சில சேனல்களை தமிழக அரசு கேபிளில் பார்க்க முடியாத கோபத்தால்… ஆபரேட்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் ஆங்காங்கே நடக்கும் பிரச்னைக்கு இதுவரைத் தீர்வு காண முடியவில்லை.

இந்நிலையில், ‘அரசு கேபிள் டி.வி. தனக்கெனத் தனியாக கேபிள் பதிக்காமல், சன் டி.வி. குழுமத்துக்குச் சொந்தமான கேபிளில் தனது ஒளிபரப்பை நடத்தி வருகிறது’ என்று ‘கல்’ கேபிள் லிமிடெட் சார்பில் அதன் பொது மேலாளர் ராஜேஷ், சென்னை உயர் நீதிமன்றத்தின் படி ஏறி இருக்கிறார்.

”எங்களது நிறுவனம் எம்.எஸ்.ஓ. மூலம் தமிழகம் முழுவதும் கேபிள் டி.வி. வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த வியாபாரத்தில் எங்கள் நிறுவனம்தான் முன்னணியில் உள்ளது. கடந்த 1995-ம் ஆண்டு வகுக்கப்பட்ட கேபிள் ஒழுங்குமுறை சட்டத்தின்படி, நாங்கள் உரிய லைசென்ஸ் பெற்று, 12 ஆண்டுகளாக இந்தத் தொழிலை முறையாகச் செய்து வருகிறோம். எங்கள் நிறுவனத்தின் சார்பில் இதற்கெனத் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே அரசு அதிகாரிகளிடம் அனுமதி பெற்று கேபிள் வயர்களைப் பதித்துள்ளோம். அதற்கான கட்டணமும் எங்கள் நிறுவனத்தின் சார்பில் தவறாமல் செலுத்தப்பட்டு வருகிறது. இதுபோக ‘டிராக்’ வாடகை என்ற கட்டணத்தையும் அரசுக்கு செலுத்துகிறோம். கேபிள் ஆபரேட்டர்கள் மூலம் எங்கள் டி.வி. நிகழ்ச்சிகளைப் பொதுமக்களுக்கு ஒளிபரப்பி வருகிறோம். இந்த நடைமுறையில் நாங்கள் எந்த சட்டவிதிகளையும் மீறவில்லை.

கடந்த 2-ம் தேதி தொடங்கப்பட்ட தமிழக அரசு கேபிள் கார்ப்பரேஷன், தனக்கெனத் தனியாக எந்த கேபிளும் பதிக்காமல் அவசர அவசரமாக சேவையைத் தொடங்கி உள்ளது. அரசு கேபிள் தொடங்கியவுடன், கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற பல பகுதிகளில் எங்கள் நிறுவன கேபிள் வயர்களை ஆக்கிரமித்து… அந்தக் கேபிளில் அரசு கேபிள் உரிமம் பெற்ற சேனல்கள், சட்ட விரோதமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த சட்ட விரோத நடவடிக்கைகள் அனைத்தும் போலீஸ் துணையுடன் நடப்பதுதான் அதிர்ச்சி அளிக்கக்கூடிய விஷ​யம்.

எங்கள் கேபிளுக்கு நாங்கள் ஆண்டு வாடகை செலுத்தி வருகிறோம். அப்படி இருக்கும்போது, எந்த அடிப்படை வசதிகளும் முறையாக ஏற்படுத்தப்படாமல் தொடங்கப்பட்ட அரசு கேபிள் டி.வி., எங்களுக்கு சொந்தமான கேபிளைப் பயன்படுத்துவது பெரும் குற்றம். இது குறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள், எஸ்.பி-களிடம் புகார் மனு கொடுத்தோம். ஆனால், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திருப்பூரில் பட்டாளம் சாலை, பழைய பஸ் நிலையம், மாரியம்மன் கோயில், குமரன் ஹோட்டல், ஈஸ்வரன் கோயில், நொய்யல் போன்ற இடங்களில் எங்கள் கேபிள்களை, அரசு கேபிள் நிறுவனம் கட் செய்து, அதில் தனது இணைப்பைக் கொடுத்துள்ளது. இதுபோல, கோவை, ஈரோடு எனத் தமிழகத்தின் பல பகுதிகளிலும் போலீஸ் உதவியுடன் அரசு கேபிள் அத்துமீறல் நடத்தி வருகிறது.

‘அரசு கேபிளின் இந்தச் செயல் திருட்டுத்தனம் போன்றது’ என அதிகாரிகளிடம் எடுத்துச் சொல்லியும் இந்தக் குற்றம் தடுக்கப்படவில்லை என்பதை விளக்கி, கடந்த 7-ம் தேதி தமிழக உள்துறை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி. ஆகியோரிடம் மனு கொடுத்தோம். ஆனால், அவர்களும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஜனநாயக நாட்டில் ஒவ்வொருவரும் சட்டப்படி வியாபாரம் செய்ய உரிமை உள்ளது. இப்படி சட்டப்படி நடக்கும் எங்கள் வியாபாரத்தைத் தடுக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் அரசு கேபிள் நிறுவனம் செயல்படுகிறது. இது இந்திய அரசியல் சட்டம் பிரிவு 19(1)க்கு எதிரானது. எனவே, எங்கள் கேபிள்களை சட்ட விரோதமாகப் பயன்படுத்த அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துக்குத் தடை விதிக்க வேண்டும். மேலும் நாங்கள் கொடுத்த புகார் மீது மாவட்ட கலெக்டர்கள், எஸ்.பி-கள் என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்பது குறித்த அறிக்கை தாக்கல் செய்யவும் அவர்களுக்கு உத்தரவிட வேண்டும்!” என்று அந்த மனுவில் குறிப்பிட்டு இருக்கிறார் ராஜேஷ்.

”அவர்கள்தான் அனுமதி வாங்கவில்லை!”

கடந்த 8-ம் தேதி இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி பால் வசந்தகுமார், ”அரசு கேபிள் நிறுவனத்துக்கு தனி கேபிள் இருக்​கிறதா? ஒளிபரப்புக்கு எந்த கேபிள்களைப் பயன்படுத்துகிறீர்கள்?” என்று அடுத்தடுத்துக் கேள்வி கேட்டு அரசுத் தரப்பைத் திணறவைத்தார். கடந்த 12-ம் தேதி நீதிமன்றத்தில் அரசு தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்தார்கள். ”நாங்கள் யாருடைய இணைப்பையும் துண்டித்தோ, கைப்பற்றியோ ஒளிபரப்பு வழங்கவில்லை. ‘கல்’ கேபிள் லிமிடெட் பல இடங்களில் முறையாக அனுமதி வாங்காமல் ஒளிபரப்பை செய்து வருகிறது. இந்த வழக்கு குறித்த விரிவான பதில் மனுவை மேலும் ஒரு வார காலத்துக்குள் தாக்கல் செய்கிறோம்…” என்று அரசு விளக்கம் அளித்து இருக்கிறது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ஒரு வார காலத்துக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டிருக்கிறார். ஆக, அரசுக்கும் சன் டி.வி.க்குமான மோதல் நீதிமன்றத்தின் மூலமாக சூடு பிடித்துள்ளது!

கட்டணம் தர முடியாது!

பொதுமக்களுக்கும் கேபிள் டி.வி.ஆபரேட்டர்​களுக்கும் பல இடங்களில் கொந்தளிப்பு ஏற்பட்டு வருகிறது.

கோவையைச் சேர்ந்த கேபிள் ஆபரேட்டர் மூர்த்தி, ”எங்க வாடிக்கையாளர்கள், ‘சன் பேக்கேஜையும் சீக்கிரமே கொடுக்குறீங்களா… இல்லேன்னா டிஷ் வாங்கி மாட்டிக்கட்டுமா?’-னு கோபப்படுறாங்க. நிலைமை இப்படியே போயி ஆளாளுக்கு டிடிஹெச் வாங்கி மாட்டிட்டா, நாங்க என்ன சார் பண்றது? பல வீட்டுல, ‘கட்டுன டெபாசிட்டைத் திருப்பிக் கொடுங்க. கிட்டத்தட்ட ஒரு மாசமா உருப்படியான சேனல்கள் எதுவும் தெரியலை. அதனால போன மாசத்துக்கு கேபிள் கட்டணம் தர முடியாது’னு சொல்றாங்க!” என்று வேதனைப்பட்டார்.

தர்மபுரியைச் சேர்ந்த அரசு கேபிள் ஆபரேட்டரும், மாவட்ட கேபிள் ஆபரேட்டர் சங்கத்தின் தலைவருமான அருளரசு, ”கலெக்ஷனுக்காக எந்த வீட்டு முன்னால போய் நின்னாலும் 10, 15 லேடீஸ் வந்து சூழ்ந்துக்கிறாங்க. நீங்க பழையபடியே கொஞ்சம் கூடுதலா கட்டணம் வாங்கிக்​கோங்க. எங்களுக்கு எல்லாச் சேனலும் வரணும். இல்லைன்னா, கேபிளைக் கழட்டிட்டுப் போங்க’ன்னு திட்டுறாங்க!” என்கிறார்.

புதுக்கோட்டை ஜி.ஆர் கேபிள் உரிமையாளரான ஸ்ரீதர், ”மக்களுக்கு பதில் சொல்லி மாளலை, சார். ‘எங்க சௌகரியத்துக்காகத்தான் டி.வி. பாக்குறோம். நீங்க கட்டாயப்படுத்தி வேற சேனலைப் பாக்கவைக்க முடியாது’னு சத்தம் போடுறாங்க… இப்படியே போனா, என்ன நடக்கப்போகுதோ?” என்றார்.

அரசு கேபிளில் சன் டி.வி.!

நாகை மாவட்டத்தில் ஓர் ஆச்சர்யம். இங்கு அரசு கேபிள் துவக்கப்பட்டுவிட்டாலும், அதிலும் சன் டி.வி. வருகிறது. ”இது முழுக்க முழுக்க கிராமங்கள் அடங்கிய பகுதி. இங்கு உள்ள மக்கள், கேபிள் டி.வி. கனெக்ஷன் இருக்குதான்னு கேக்குறதையே, ‘சன் டி.வி. இருக்கா?’னுதான் கேட்பாங்க. சன் டி.வி. இல்லாத கேபிள் கனெக்ஷனை அவங்களால் நினைச்சுக்கூட பார்க்க முடியாது. அதனால, அரசு கேபிளில் இணைஞ்சுட்டாலும், சன் டி.வி. இல்லாம கொடுக்குறது கிடையாது. சன் டைரக்ட்டில் இருந்து லிங்க் எடுத்துக் கொடுத்துட்டு இருக்கோம்!” என்று சொன்னார் ஆபரேட்டர் ஒருவர்.

சிவகங்கை கேபிள் ஆபரேட்டர்கள், ”மக்கள் விரும்பிப் பார்க்கும் சேனல்கள் அரசு கேபிளில் இல்லை. கட்டண சேனல்களையும் சேர்த்து வழங்கினால், அரசு கேபிளில் இணைந்துகொள்ளத் தயார்னு கலெக்டரிடம் மனு கொடுத்தோம். ஆனால் அவரோ, ‘உங்க சூழ்நிலை எனக்குப் புரிகிறது. ஆனால், அரசு உத்தரவை மீறி என்னால் எதுவும் செய்ய முடியாது’னு சொல்கிறார். 10 வருஷத்துக்கு முந்தி நாங்க எந்த டெக்னாலஜி மூலமா கேபிள் ஒளிபரப்பு செஞ்சோமோ, அந்த டெக்னாலஜி மூலமா அரசு கேபிள் ஒளிபரப்பப்படுவதால் தெளிவில்லாமல் இருக்கு. இதை எடுத்துச் சொன்னா, ‘நீ தி.மு.க-காரன்; சன் டி.வி-க்கு சப்போர்ட்டாப் பேசுறே’னு சிக்கல்ல மாட்டிவிடுறாங்க. உண்மை என்னன்னா, சிவகங்கை கேபிள் ஆபரேட்டர்களில் 80 சதவிகிதம் பேர் அ.தி.மு.க-காரர்கள்தான்!” என்று சொல்கிறார்கள்.

நிறுத்தப்பட்ட அரசு கேபிள்!

நெல்லையில் அரசு கேபிள் ஒளிபரப்பு தொடங்கப்பட்ட வேகத்திலேயே நிறுத்தப்பட்டது. தொடக்கத்திலேயே ஆபரேட்​டர்களிடம் வரவேற்பு கிடைக்க​வில்லை. இருந்தாலும் திட்டத்தைத் தொடங்கியாக வேண்டுமே! அதனால் அவசரகதியில் ஜங்ஷன் பகுதியைச் சேர்ந்த பரமசிவன் என்ற ஆபரேட்டரது இணைப்பு  மூலம்  கொடுக்கப்பட்டது. மதிய நேரத்தில் சீரியல் பார்க்க டி.வி. முன்பாக அமர்ந்த பெண்களுக்கு தாங்கள் விரும்பிய சேனல்கள் தெரியாததால் ஆபரேட்டரை போனில் வறுத்து எடுத்தனர். ‘எல்லா சேனலும் கொடுக்க முடியலைன்னா, நாளைக்கே வேறு ஆபரேட்டரிடம் இணைப்பை பெறுவோம்…’ என்று சண்டைக்கு வந்ததால், அரசு கேபிள் இணைப்பைக் கொடுத்த ஒரே ஆபரேட்டரும் பணிந்துவிட்டார். இதனால் ஓரிரு மணி நேரத்திலேயே நெல்லையில் அரசு கேபிள் ஒளிபரப்பு நின்றுபோனது.

பேச்சு வார்த்தைக்கு இப்போதுதான் குழு!

கட்டண சேனல்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி, அரசு கேபிளில் கட்டண சேனல்களைக் கொண்டு வர விலை நிர்ணயக் குழு ஒன்றை அமைத்திருக்கிறது அரசு. இந்த குழுவில் அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் தலைவர், தமிழக அரசின் நிதித்துறை செயலாளர், தகவல் தொழில் நுட்பத்துறை செயலாளர், உள்துறை கூடுதல் செயலாளர், அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் ஆகிய ஐந்து பேரை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆறாவதாக இக்குழுவில் சிறப்பு அழைப்பாளர் ஒருவரும் இடம் பெறப் போகிறாராம். ”இதெல்லாம் அரசு கேபிளை தொடங்குவதற்கு முன்பே செஞ்சிருக்கணுமா இல்லையா..? ‘சோறு ஆக்கி இலையில போட்டு வெச்சிட்டு குழம்பு வைக்கப் பருப்பு வாங்கக் கடைக்கு போன’தைப் போல இருக்குது!” என்று புலம்புகிறார்கள் கேபிள் ஆபரேட்டர்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

சன் டீவியின் புது நாடகங்கள்

சக்சேனா, அய்யப்பன் கஸ்டடி சித்ரவதைகள்… கண்ணீர் காட்சிகள்…

செப்டம்பர் 8. சைதை நீதிமன்றம்…

சன் பிக்சர்ஸ் (முன்னாள்) அதிகாரி சக்சேனாவையும், சினிமா விநியோகஸ்தர் அய்யப்பனையும் நீதிபதி முன் ஆஜர்படுத்த அழைத்து வந்தனர்.

வீங்கிய கால்கள், அதில் வரி வரியாகத் தழும்புகளுடன் வேனில் இருந்து இறங்கிய அய்யப்பன், நடக்க முடியாமல் நொண்டி நொண்டி முன்னேற… முற்றிலுமாக கம்பீரம் தொலைத்து, வெலவெலத்து இருண்ட முகத்துடன் அவருக்குக் கைத்தாங்கலாக உடன் வந்தார் சக்சேனா. ஓடோடிப் போய் அய்யப்பனைச் சூழ்ந்து​கொண்ட நிருபர்கள், ‘எப்படிக் காயம் ஏற்பட்டது?’ என்று கேட்டதுதான் தாமதம்… இருவருமே கதறி அழ ஆரம்பித்தனர். பிறகு அவர்கள் சொன்னதைக் கண்டு, ‘இப்படியும்கூட நடக்குமா?’ என்பதான திகைப்புடன் பார்த்தனர் நிருபர்கள்.

தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு அய்யப்பன் சில வார்த்தைகளை நிருபர்களிடம் சொன்னார். ‘சி.பி.சி.ஐ.டி. போலீஸார் என்னைக் காவலில் எடுத்து விசாரித்தபோது, ‘சன் குரூப் கலாநிதி மாறன் பற்றி உனக்கு என்ன தெரியும்? அவருக்கு எங்கெங்கே சொத்துகள் இருக்கு?’னு திரும்பத் திரும்பக் கேட்டாங்க. ‘அவரைப்பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் இதுவரை அவரை நேரில்கூட பார்த்தது இல்லை’னு சொன்னேன். உடனே ஆத்திரத்தோடு போலீஸ்காரங்க கண்மூடித்தனமா அடிச்சாங்க. என்கவுன்ட்டர் நடக்கப்போகுதுன்னு மிரட்டுறாங்க’ என்று பீதியோடு சொன்னார்.

தங்களை போலீஸார் தாக்கிய​தாக நீதிபதியிடமும் இவர்கள் சொன்னார்கள். அவர் மருத்துவ சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்!

சக்சேனா, அய்யப்பனின் வழக்​கறிஞர் செந்தில்குமார் இந்த விவகாரத்தை மனித உரிமை ஆணையத்திடம் கொண்டு​சென்றுள்​ளார். அவரை சந்தித்தோம்.

”கடந்த இரண்டு மாத காலமாக சக்சேனாவையும் அய்யப்பனையும் திட்டமிட்டு வேண்டுமென்றே போலீஸார் மாறி மாறி வழக்குகள் போட்டு, தொடர்ந்து சிறையில்வைத்துச் சித்ரவதை செய்து வந்தனர். ஒரு வழக்கில் ஜாமீன் பெற்றால் இன்னொரு வழக்கில் கைது என்ற ரீதியில் அவர்களின் அத்துமீறல்கள் தொடர்ந்தன. இறுதியாக, ‘தம்பிக்கோட்டை’ படம் தொடர்பான புகாரில் இருவரை​யும் கைது செய்து இருந்தார்கள். ‘தம்பிக்கோட்டை’ தயாரிப்பாளர் படத்துக்காக  5 கோடி செலவு செய்ததாகச் சொல்லி இருந்தார். ஆனால், செலவு குறித்து முறையான பில்கள் எதுவும் புகாருடன் இணைக்கவில்லை. இந்தப் பொய்ப் புகாருக்காக இருவரையும் ஏழு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று சி.பி.சி.ஐ.டி. கேட்டது. இறுதியில் 5-ம் தேதி காலை முதல் 7-ம் தேதி காலை வரை அதாவது இரண்டு நாட்களுக்கு மட்டும் அனுமதி கொடுத்த நீதிபதி, ‘இந்த காலகட்டத்தில் கைதிகள் இருவரையும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தூங்க அனுமதிக்க வேண்டும். அவர்களின் வழக்கறிஞர்கள் சந்திக்கவும் அனுமதிக்க வேண்டும்’ என்று கூறி இருந்தார். கிண்டி சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில்தான் விசாரணை நடந்தது.

கடந்த 6-ம் தேதி மாலை எனது கட்சிக்காரர்களை நான் சந்திக்க வேண்டும் என்று டி.எஸ்.பி. ஜெயச்சந்திரனுக்கு போன் செய்தேன். அவரோ தொடர்ந்து மீட்டிங்… அது… இது… எனக் காரணம் சொல்லி என்னை சந்திக்க விடாமல் தடுத்து சதி செய்தார். இறுதியில் நீதிமன்ற உத்தரவு குறித்து நான் எச்சரிக்கை மெசேஜ் அனுப்பிய பிறகே, என்னால் உள்ளே நுழைய முடிந்தது. ‘அய்யப்பனிடம் விசாரணை நடக்குது… சக்சேனாவை மட்டும் பார்க்க அனுமதிக்கிறோம்’ என்று அவர்கள் கூறியபோதே எனக்கு சந்தேகம். இருந்தாலும் எதையும் காட்டிக்கொள்ளாமல் சக்சேனாவை சந்தித்து, ‘நேரத்துக்கு சாப்பாடு கொடுத்தார்களா? வேற ஏதாவது பிரச்னை இருக்கா?’னு கேட்டேன். ‘ஒரு பிரச்னையும் இல்லை சார்’னு சக்சேனாகிட்ட இருந்து பதில் வந்தது. ஆனால் அவர் குரலில் வாட்டம் தெரிஞ்சது.

அடுத்த நாள் விசாரணை முடிந்து 20 போலீஸ் புடைசூழ ரெண்டு பேரையும் கோர்ட்டுக்கு அழைத்து வந்தார்கள். அய்யப்பன் தாங்கித் தாங்கி நடந்ததைப் பார்த்து அதிர்ச்சியான நான், ‘என்ன நடந்தது அய்யப்பன்? பயப்படாமச் சொல்லுங்க’னு கேட்டேன். அருகில் இருந்த சி.பி.சி.ஐ.டி போலீஸார் அய்யப்பனின் கையை முறுக்கிப் பிடித்துக்கொண்டு இருந்தார்கள். அப்போதைக்கு அவர் என்னிடம் எதையும் சொல்லவில்லை.

‘தம்பிக்கோட்டை’ வழக்கில் ஜாமீன் கிடைத்த காரணத்தால், மறுநாளான 8-ம் தேதி அவர்கள் இருவரும் சிறையில் இருந்து விடுதலையாகி, வெளியில் வர இருந்தனர். அன்று மாலை அவர்களை சந்திக்க நான் புழல் சிறைக்குச் சென்றபோது, என்னைப் பார்த்ததும் மொத்தக் காயங்களையும் காட்டி கண்ணீர்விட்டார் அய்யப்பன். ‘நேத்து கோர்ட்டுல இதை நான் சொல்லி இருந்தா… திரும்பிக் கூட்டிட்டுப் போகும்போது என்கவுன்ட்டர்ல போட்டுருப்பாங்க…’ என்று அய்யப்பன் சொன்னார். வெள்ளைச் சட்டை அணிந்த 30 போலீஸார் ஷிஃப்ட் முறையில் அய்யப்பனை அடித்து இருக்கிறார்கள். கால் பகுதி முழுவதும் வரி வரியாகத் தழும்புகள். ஆங்காங்கே சதை பிய்ந்து தொங்கிக்கொண்டு இருந்தது. ‘டாய்லெட் போகக்கூட உட்கார முடியலைண்ணா…’ என்று அழுதார்.

இந்த சூழலில் இருவரையும் நித்தியானந்தா வழக்கில் மீண்டும் கைது செய்யப்போவதாக எனக்குத் தகவல் கிடைத்தது. அதனால், ‘இன்னும் கொஞ்ச நேரத்தில் உங்களைக் கோர்ட்டுக்குக் கூட்டிட்டு வருவாங்க. நீதிபதியிடமும் மீடியாக்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீஸார் தாக்கியதைப் பற்றித் தயங்காமல் சொல்லுங்கள்’ என்று சொல்லிவிட்டு நானும் கோர்ட்டுக்கு விரைந்தேன்.

எதிர்பார்த்ததுபோல, அடுத்த வழக்கில் கைது செய்தார்கள். சன் டி.வி. நிர்வாகத்தை அச்சுறுத்தவும், கலாநிதி மாறனுக்குக் குடைச்சல் கொடுக்கவும் சில அரசியல் சக்திகள் தீவிர முயற்சியில் இறங்கி உள்ளனர். அவர்களின் கைத்தடிகளைப்போல சி.பி.சி.​ஐ.டி. போலீஸ் நடந்து​கொள்கிறது. போலீஸ் காவலுக்கு எடுத்து விசாரிக்கும்போது கைதிகளைத் தாக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் பல வழக்குகளில் தெளிவான உத்தரவு பிறப்பித்​துள்ளது. எனவே, இந்தத் தாக்குதலுக்குக் காரணமான சி.பி.சி.ஐ.டி-யின் டி.ஐ.ஜி-யான ஸ்ரீதர், டி.எஸ்.பி-யான ஜெயச்​சந்திரன், இன்ஸ்பெக்டர் காசி உள்ளிட்ட போலீஸார் இதற்குப் பதில் சொல்லியே தீர வேண்டும். அவர்களைக் கூண்டில் ஏற்றாமல், நான் ஓய மாட்டேன்!” என்று கொந்தளித்தார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து டி.ஐ.ஜி. ஸ்ரீதரிடம் கேட்டபோது, ”கலாநிதி மாறனை இந்த அய்யப்பன் நேரில் பார்த்தது இல்லை என்பது எங்களுக்கும் தெரியும். எனவே, விசாரணையின்போது நாங்கள் கலாநிதி மாறன் பெயரைச் சொல்லும்படி அய்யப்பனைக் கேட்கவில்லை…” என்றார்.

”அப்படியானால் அய்யப்ப​னின் உடலில் காயங்கள் எப்படி ஏற்பட்டது?” என்று கேட்டதற்கு, மௌனம் மட்டுமே நமக்குப் பதிலாகக் கிடைத்தது.

பொதுவாக ‘போலீஸ் அடி’யில் ‘காயம் வெளியில் தெரியாது’ என்பார்கள். ஆனால், அய்யப்பன் தரப்பு சொல்வதையும் அவர் காயங்களையும் பார்த்தால்…. என்ன நடக்கிறது? அடுத்து என்ன நடக்கப்போகிறது?



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

15_09_2011_001_002-marans.jpg?w=640&h=34215_09_2011_004_008-dayanithi.jpg?w=640&h=3962404978-marans.jpg?w=640&h=284



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

சகோதரர்கள் இருவரிடமும் சுமார் ஐநூறு கேள்விகள் கேட்டதாக டெல்லி வட் டாரங்கள்

 
கடந்த திங்களன்று கலாநிதி மாறனை டெல்லிக்கு வரவழைத்து விசாரித்திருக்கிறது, சி.பி.ஐ.! கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் அவரை கேள்விகளால் துளைத்து எடுத்துவிட்டார்களம். ஏற்கெனவே வழக்கறிஞர்கள் மூலம் என்னென்ன கேள்விகள் வரக்கூடும் என்பதை யூகித்து தயாராகச் சென்று இருந்தாராம். ஆனால், அவர் எதிர்பார்த்ததை விட அதிகமான கேள்விகளைக் கேட்டு சி.பி.ஐ. கிடுக்கிப்பிடி போட்டதாம், சி.பி.ஐ.! சிவசங்கரன் சொல்லிய குற்றச்சாட்டுக்கள், அதன் அடிப்படையில் வங்கி அதிகாரிகள், அரசு அதிகாரிகள் ஆகியோரிடம் விசாரித்ததன் அடிப்படையில் சி.பி.ஐ. கேள்விகளைத் தயாரித்து வைத்திருந்ததாம். கேள்விகளுக்கு சரியாக பதில் அளிக்கும் போது அலட்டிக் கொள்ளாத சி.பி.ஐ. அதிகாரிகள், அவர் தயாராக பதில் வைத்திருக்கும் கேள்விகளை மாற்றி மாற்றிக் கேட்டு தோண்டித் துருவியுள்ளனர். இதில் அவர் வேர்த்து விறுவிறு த்துப் போய்விட்டாராம். அவரைத் தொடர்ந்து கடந்த புதனன்று தயாநிதி மாறனிடமும் சுமார் ஐந்து மணி நேரம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியிருக்கிறது. இவரும் பல கேள்விகளுக்கு பதிலைத் தயார் செய்து கொண்டு வந்திருந்தாராம். அந்தக் கேள்விகளை எல்லாம் விட்டுவிட்டு வேறு கேள்விகளைக் கேட்டுத் திணறடித்து விட்டார்களாம். தயாவும் சி.பி.ஐ.யின் பல கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தடுமாறிப்போனாராம். சகோதரர்கள் இருவரிடமும் சுமார் ஐநூறு கேள்விகள் கேட்டதாக டெல்லி வட் டாரங்கள் சொல்கிறது.’’

‘‘தயாநிதி மாறன் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லை என்று சில நாட்களுக்கு முன்பு சி.பி.ஐ. சொன்னதே...’’

‘‘அது சி.பி.ஐ.யின் தந்திரம் என்கிறார்கள், விவரம் அறிந்தவர்கள்.’’

‘‘எப்படி?’’

‘‘மாறன் சகோதரர்களை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்று அரசியலில் பெரிய இடத்தில் இருந்து சி.பி.ஐ.க்கு ஏகப்பட்ட பிரஷர். அதனால்தான் அவர்களை விசாரிப்பதைக் கூட தள்ளி வைத்தனர். பிரஷரை சமாளிக்க அவர்கள், மாறன் சகோதரர்கள் மீதான குற்றச்சாட்டிற்கு போதிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்று கோர் ட்டில் சொன்னார்கள். இதையடுத்து, பிரசாந்த் பூஷண் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார். இதைத்தான் சி.பி.ஐ. எதிர்பார்த்தது. ‘கோர்ட்டில் விசாரணை நடந்து கொண்டு இ ருக்கிறது’ என்று சொல்லி சமாளித்ததோடு, பெரிய இடத்துக்கு ‘கோர்ட்டுக்கு பதில் சொல்ல வேண்டியது இருக்கிறது’ என்று சொல்லி, மாறன் சகோதரர்களை கிரில் செய்ய அனுமதி வாங்கியது. மூன்றாவது குற்றப்பத்திரிகையில் பெயர் இடம் பெற்றால், இருவரும் ஜெயிலுக்குப் போக வேண்டியது வரலாம்.’’

‘‘ஜாமீன் கிடைக்காதா?’’

‘‘குற்றச்சாட்டுகள் பதிவு செய்த பின்னர்தான் ஜாமீன் கேட்க முடியும்... ஏற்கெனவே சிறையில் இருக்கும் ராசா, கனிமொழி, ஷாகித் பல்வா போன்றவர்களுக்கு ஜாமீன் கொடுத்த பின்னர்தான் இவர்களுக்குக் கிடைக்கும்...’’


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

 

 

”காங்கிரஸ் கட்சிக்கு கருணாநிதி இப்படி ஒரு ஷாக் கொடுப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ‘உள்ளாட்சித் தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை’ என்று திடீரென்று கருணாநிதி அறிக்கை வெளி வந்ததை காங்கிரஸ் தலைவர்கள் ‘உண்மையா… உண்மையா?’ என்று கேட்டுக்கொண்டு இருந்தார்கள். ‘எல்லாவற்றுக்கும் கட்சியின் பொதுக் குழு, செயற்குழு கூடி முடிவெடுக்கும்’ என்று சொல்லக்கூடிய கருணாநிதி, இந்தப் பெரிய முடிவை எப்படித் தன்னிச்சையாக வெளியிட்டார் என்பதையும் யோசிக்கத்தான் வேண்டி உள்ளது. ‘ ஒருவேளை சொல்லக்கூடிய அளவுக்கு வெற்றி கிடைத்தால் அந்தப் பெருமை காங்கிரஸுக்கு எதற்குப் போகவேண்டும்? ஒருவேளை தோல்வியைத் தழுவினால்..தனியாக நின்றது தி.மு.க. அதனால் தோற்றது.’ என்ற பிம்பத்தை உருவாக்க நினைக்கிறாராம் கருணாநிதி. அதனால்தான், இப்படி ஒரு முடிவு என்று சொல்கிறது காங்கிரஸ் தரப்பு. டெல்லி காங்கிரஸ் தலைமை மீதான கோபமே இதற்குக் காரணம் என்று சொல்கிறார்கள் தி.மு.க-வில்…”

”என்னவாம்?”

”ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் டெல்லி உரிய ஒத்துழைப்புகள் தரவில்லை என்பது தி.மு.க. தலைமை யின் வருத்தம். கருணாநிதிக்கு இப்போது ஒரே சிந்தனை, கனிமொழி வெளியில் வர வேண்டும் என்பதுதான். அதற்கான முஸ்தீபுகளைச் செய்ய காங்கிரஸ் முயற்சிக்கவில்லை என்றும் நினைக்கிறார். இதை கருணாநிதி சொன்னபோது, அழகிரி ஏற்றுக் கொண்டதாகவும் ஸ்டாலின் மட்டும் கருத்து வேறுபட்ட தாகவும் சொல்கிறார்கள். ‘இங்கேயும் ஆட்சியை இழந்து டெல்லி காங்கிரஸ் நட்பையும் உதறணுமா?’ என்ற ரீதியில் யோசிக்கிறாராம் ஸ்டாலின்.”

”அவர் லண்டனில் இருந்து திரும்பிவிட்டாரே?”

”ஆம்! சட்டசபை கூட்டத்தொடர் முடிந்ததும் இவரும் லண்டனில் இருந்து வந்துவிட்டார் என்று தி.மு.க-விலேயே கிண்டல் அடிக்கிறார்கள். சென்னைக்கு வந்ததும் மறுநாளே மதுரைக்குச் சென்றார். அங்கு இருந்து பரமக்குடிக்குச் செல்லவும் திட்டமிட்டார். ஸ்டாலின் மதுரைக்கு வரும்போது, அழகிரி மதுரையில் இருக்க முடியாது அல்லவா? அதனால், அவர் வேறு ஊருக்குக் கிளம்பிப் போய்விட்டார். ஸ்டாலினைச் சந்திக்கலாமா கூடாதா என்று கட்சிப் பிரமுகர்களுக்கு மத்தியில் பெரும் குழப்பம். அந்த அளவுக்கு மீண்டும் மோதல் முற்றிக்கொண்டு இருக்கிறது…” என்ற கழுகாரிடம், ”இப்போதாவது டெல்லி கதைக்கு வாரும்!” என்றோம்!

”டெல்லிக் காட்சிகள் நிறைய மாறிக் கொண்டு இருக்கின்றன.கவனமாகக் கேளும். தயாநிதி மாறனை மையம் கொண்டு செப்டம்பர் முதல் வாரம் புயல் வீசும் என்று சொல்லி இருந்தேன் அல்லவா? தயாநிதி மாறன், ‘ஸ்டெர்லிங்’ சிவசங்கரன், ‘மேக்சிஸ்’ அனந்தகிருஷ்ணன் என்று பெருந்தலைகள் உள்ள சமாசாரம் இது என்பதால் கவனத்துடன் கையாள்கிறது சி.பி.ஐ. ஏர்செல் நிறுவனத்தை மேக்சிஸ் வசம் ஒப்படைக்க தயாநிதி கட்டாயப்படுத்தினாரா என்பதுதான் இதன் மையப்புள்ளி. மேக்சிஸ் நிறுவனத்தின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான ரால்ப் மார்ஷலுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி வைத்தது. அவரும் 12-ம் தேதி டெல்லிக்கு வந்தார். சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு முன்னால் ஆஜரானார். அவர் எந்த மாதிரியான வாக்குமூலங்களைக் கொடுத்துள்ளார் என்பதை அதிகாரிகள் வெளியே இன்னமும் அவிழ்க்கவில்லை. இதைத் தொடர்ந்து 14-ம்தேதி தயாநிதி மாறனை வரவழைத்தார்கள் சி.பி.ஐ. அதிகாரிகள். ‘ஏர்செல் நிறுவனத்தை மேக்சிஸ் வாங்கியதில் என்னுடைய பங்கு எதுவும் இல்லை’ என்று அப்போது தயாநிதிமாறன் மறுத்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் சுமார் 5 மணிநேரம் இந்த விசாரணை நடந்துள்ளது. ‘இந்த விஷயத்தில் நாங்கள் ஒரு தெளிவான முடிவுக்கு வந்துவிட்டோம்’ என்று இப்போது அதிகாரிகள் சொல்ல ஆரம்பித்துள்ளார்கள்!”

”தயாநிதிமாறன் விவகாரத்தில் எங்களுக்கு ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை என்று முதலில் சி.பி.ஐ. சொன்னதே?”

”நாங்கள் அப்படிச் சொல்லவே இல்லை, மீடியா தான் திருத்திச் சொல்லிவிட்டது என்று சி.பி.ஐ. தரப்பு வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் சுப்ரீம் கோர்ட்டில் சொல்லிவிட்டாரே! தங்கள் மீது எந்தப் பழியும் வந்துவிடக்கூடாது என்று சி.பி.ஐ. தனது கரத்தை இன்னும் இறுக்கிப் பிடிக்க ஆரம்பித்துள்ளது. இப்போது நான் உம்மிடம் பேசிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் கூட பாட்டியாலா கோர்ட்டில் சி.பி.ஐ. வழக்கறிஞர் யு.யு.லலித், தனது தரப்பு வாதங்களைக் கெட்டியாக வைத்துக் கொண்டுதான் இருக்கிறாராம். குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது செப்டம்பர் 15-ம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யத் தீர்மானிக்கப்பட்டது. அன்று காலையிலேயே புது மனுவுடன் சுப்பிரமணியன் சுவாமி என்ட்ரீ கொடுத்துவிட்டார். ‘ப.சிதம்பரத்தையும் இதில் சேர்க்க வேண்டும்’ என்பதுதான் அவரது அஜென்டா. சுவாமியின் மனு ஏற்கப்பட்டு அதுவும் 26-ம் தேதி விசாரணைக்கு வரப்போகிறது. இனி மீடியாக்களிடம் இருந்து ப.சி-யும் தப்ப முடியாது!”

”அடுத்து நடந்ததையும் சொல்லும்!”

”டிராய் கொடுத்த அறிக்கையை எதிர்த்து சி.பி.ஐ. தனது வலுவான வாதங்களை வைத்து வருகிறது. டிராய் கொடுத்த அறிக்கையை தங்களுக்கு ஆதாரமாக வைத்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் வாதிட்டு வருகிறார்கள். இந்த வாரம் முழுக்க இதில் போய்விடும்! இதைக் கவனிப்பதற்காக வந்த டெல்லித் தொலைக்காட்சி நிருபர்  ஒருவரைப் பார்த்து, ‘எங்களை எல்லாம் என்கொயரிக்கு அழைக்கிறதுக்கு முன்னாடியே காட்டினீங்களே! ஒருத்தர்ட்ட என்கொயரி நடந்து முடிஞ்சப்பிறகும் காட்ட மாட்டேன்றீங்களே!’ என்று கிண்டல் கலந்து சீறினாராம் கனிமொழி.வழக்கைத் தாண்டிய குடும்ப சுவாரஸ்யங்கள்தான் பாட்டியாலாவில் அதிகம் நடக்கிறது. டெல்லி பக்கமாக காதை கூர்தீட்டி வையும்!” என்று கட்டளை போட்டபடி பறந்தார் கழுகார்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

சி.பி.ஐ. குற்றப் பத்திரிகையிலும் குழப்பங்கள்!


போட்டு உடைக்கிறார் பிரணவ் சச்தேவாசுப்பிரமணியன் சுவாமிக்கு இணையாக 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் போராடுகிறது பொது நலன் வழக்காடு மையம் என்ற அமைப்பு. சாந்தி பூஷண், அவர் மகன் பிரசாந்த் பூஷண் மற்றும் பிரணவ் சச்தேவா ஆகிய மூவர் இந்த மையத்தின் வழக்கறிஞர்கள். ஸ்பெக்ட்ரம் வழக்கு குறித்து எத்தனையோ வதந்திகள் பரவிக்கிடக்க… இன்றைய நிலவரம் அறிய பிரணவ் சச்தேவாவை சந்தித்தோம்!

”உச்ச நீதிமன்றத்தில் ஸ்பெக்ட்ரம் விசாரணை தொடர்பான நிலவர அறிக்கையைத் தாக்கல் செய் வதில், சி.பி.ஐ. குழப்பங்களைச் செய்வதாகச் சொல் கிறார்களே?”

”தயாநிதி மாறன் குறித்து கடந்த மே மாதக் கடைசியிலேயே எல்லாத் தகவல்களும் வந்துவிட்டன. பத்திரிகைகளில் வந்த செய்திகளோடு வேறு சில ஆவணங்களும் எங்களுக்குக் கிடைத்தன. கோடை விடுமுறைக்குப் பின்னர் ஜூலை 6-ம் தேதி நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ. இந்த விவகாரம் குறித்து தங்களது கருத்துக்களை முன்வைத்தது.

‘சிவசங்கரனைக் கட்டாயப்படுத்தி மேக்சிஸ் நிறுவனத்துக்கு ஏர்செல் பங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இப்போது ஆரம்ப கட்ட விசாரணையில் இருக்கிறது. மேலும் விசாரித்து வருகிறோம்’ என்றது சி.பி.ஐ. இதன் பின்னர் செப்டம்பர் 1-ம் தேதி, இந்த விவகாரம் குறித்து சி.பி.ஐ., உச்ச நீதிமன்றத்துக்குத் தகவல் கொடுக்க வேண்டி இருந்தது. அப்போது சி.பி.ஐ. சார்பில் வேணுகோபால், ‘தொடர்ந்து விசாரித்து வருகிறோம். தயாநிதி மாறன், சிவசங்கரனைக் கட்டாயப்படுத்தி மேக்சிஸுக்கு விற்பனை செய்தது நிரூபிக்கப்படவில்லை. இதே மாதிரி ஆதாயம் பெற்றதற்கான விவகாரம் குறித்துத் தொடர்ந்து புலனாய்வை மேற்கொண்டு வருகிறோம்’ என்றார். இதற்கிடையே மீடியாக்கள், ‘மாறனுக்கு சி.பி.ஐ. கிளீன் சிட்(நீறீமீணீஸீ நீலீவீt சுத்தமானவர்)’ என்று ரிப்போர்ட்களை வெளியிட்டனர். நாங்கள் இந்த விவகாரத்தை விடுவதாக இல்லை.

அதனால், கடந்த 5-ம் தேதி மற்றொரு மனுவைத் தாக்கல் செய்தோம். அப்போது தயாநிதி மாறனுக்கு எதிராக இருக்கும் சம்பவங்களையும் ஆதாரங்களையும் விளக்கி, ‘இவ்வளவு இருந்தும் சி.பி.ஐ. வழக்கைப் பதிவு செய்யாமல் இருப்பது ஏன்? தயாநிதி மாறனை விசாரிக்காமல் இருப்பது ஏன்?’ என்று கேள்விகளை எழுப்பினோம். அதனால் கடந்த 8-ம் தேதி சி.பி.ஐ-யின் வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், இந்த விவகாரத்தை 2ஜி ஊழல் வழக்கைக் கண்காணிக்கும் உச்ச நீதிமன்ற பெஞ்ச் நீதிபதிகளிடம் பேசினார். ‘பத்திரிகைகளில் தயாநிதி மாறனுக்கு கிளீன் சிட் கொடுக்கப்பட்டு உள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன. நாங்கள் யாருக்கும் கிளீன் சிட் கொடுக்கவில்லை. இது விசாரணையில் இருக்கிறது. மேக்சிஸ் இயக்குநரான ரால்ஃப் மார்ஷல், ஏர்செல் கைமாறுவதற்கு முன்பே, அமைச்சராக இருந்த தயாநிதி மாறனோடு மொரீஷியஸில் தொடர்புகொண்டார். இந்தத் தொடர்புகளுக்குப் பின்னர்தான் ஏர்செல்லுக்கு உரிமங்கள் கொடுக்கப் பட்டன. சிவசங்கரனிடம் ஏர்செல் இருந்தபோது உரிமங்கள் கொடுப்பதில் தாமதம் செய்தனர்…’ என்று சி.பி.ஐ. தரப்பில் கூறிவிட்டு, ‘ஆனால் அமைச் சராக இருந்த தயாநிதி மாறன், சிவசங்கரனை கட்டாயப்படுத்தி ஏர்செல்லை மேக்சிஸுக்கு விற்கவைத்த விவகாரத்தை சி.பி.ஐ-யால் நிரூபிக்க முடியவில்லை!’ என்றார்.

கடந்த ஜூன் மாதம் ஆதாரங்கள் இருப்பதாகச் சொன்னவர்கள் இப்போது மாற்றிச் சொன்னதால், நாங்கள் சி.பி.ஐ-யின் நேர்மை மீது சந்தேகம் எழுப்பி னோம். விரைவில் எஃப்.ஐ.ஆர். போட்டு குற்றப் பத்திரி கையும் தாக்கல் செய்வார்கள் என்றே நம்புகிறோம்.”

”தயாநிதி மாறன் மீதான குற்றச்சாட்டுக்கு என்னென்ன ஆதாரங்களைக் கொடுத்துள்ளீர்கள்?”

”2004 மார்ச் முதல் டிஷ்நெட் வயர்லெஸ் மற்றும் ஏர்செல் ஆகியவற்றுக்கு சிவா குரூப் உரிமை யாளர்களாக இருந்தனர். இவர்கள் பல்வேறு கட்டங் களில் ஸ்பெக்ட்ரம் கேட்டு விண்ணப்பித்தனர். 2004 மார்ச் மாதம் எட்டு ஏரியாக்களுக்கும் பின்னர் மேலும் ஆறு விண்ணப்பங்கள் என சுமார் 14 உரிமங்களுக்கு விண்ணப்பங்கள் போட்டு இருந்தனர். இது குறித்து இந்த நிறுவனத்தின் உரிமையாளர் சிவசங்கரன் தொலைத் தொடர்பு அமைச்சருக்கு பல முறை கடிதம் எழுதினார். அவர், ‘தன்னைக் கட்டாயப்படுத்தி, மேக்சிஸ் நிறுவன உரிமையாளர் டி.அனந்த கிருஷ்ணனுக்கு விற்பனை செய்யப்பட்டது, அதுவும் குறைவான விலைக்கு விற்கப்பட்டது’ என்கிறார். இது உண்மைதானா என்பதை சி.பி.ஐ-தான் வெளியில் கொண்டுவர வேண்டும்!”

”உங்கள் மனு பெரும்பாலும் பத்திரிகைச் செய்திகளின் அடிப்படையில் இருக்கிறதே?”

”எங்களிடம் தொலைத் தொடர்புத் துறை சம்பந்தப்பட்ட ஃபைல்களின் நகல்கள், சிவசங் கரனுக்கும் மாறனுக்கும் இடையே நடந்த கடிதப் போக்குவரத்துகள், மேக்சிஸ் நிறுவனம் எப்படி ஏர்செல்லை வாங்கியது, அந்த டீல்கள், பத்திரிகைச் செய்திகள் போன்றவை உள்ளன. குறிப்பாக நீதிபதி சிவராஜ் பாட்டீல் அறிக்கையில் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. அவற்றையும் எடுத்துக் கொடுத்து உள்ளோம்.”

”டிராய் ரிப்போர்ட் மூலம் ஆ.ராசா தப்பித்துவிட முடியுமா?”

”சி.பி.ஐ. நேர்மையாக வழக்கை நிரூபிக்க முயற்சித்தால், இது முடியாது. ஏராளமான சாட்சியங்கள் இவர்களுக்கு எதிராக உள்ளன. அதனால் இந்த ஒரு ரிப்போர்ட் மூலம் அவர்கள் தப்புவார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால், வழக்கை ‘வீக்’ செய்ய இதுபோன்ற முயற்சிகள் நடக்கின்றன. குற்றப் பத்திரிகையிலும் ஏராளமான குழப்பங்கள். வாக்குமூலங்களும் ஒன்றுக்கு ஒன்று எதிராக உள்ளன. இதையெல்லாம் பார்க்கும்போது,  இந்த வழக்கு நிரூபிக்கப்படாமல்… ஊழல் விவகாரத்தை சிதறடிக்கும் முயற்சிகள் நடக்கலாம் என்றும் எண்ணத் தோன்றுகிறது!”



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

சன் டி.வி.க்காக துணிகரக் கொள்ளை சூறையாடப்பட்ட பிஎஸ்என்எல்

 
 
dayanidhimaran2.jpg

 

நாட்டின் மிகப் பெரும் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் தொலைத் தொடர்பு நிறுவனத்தில், நினைத்தாலே அதிர்ச்சிதரத்தக்க துணிகரமான கொள் ளையை தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் நிகழ்த்தி யிருப்பது அம்பலமாகியுள்ளது. 323 தொலைபேசிகளைத் தன்னுடைய வீட்டோடு இணைக்குமாறு பி.எஸ்.என். எல்.லைப் பணித்த தயாநிதிமாறன், அந்த 323 இணைப்புகளையும் தனது பெயரில் அல்லாமல் சென்னை பி.எஸ். என்.எல். பொது மேலாளர் பெயரிலேயே இணைத்துள்ளார் என்று இந்தியன் எக்ஸ் பிரஸ் ஏட்டின் குருமூர்த்தி எழுதியுள்ள செய்தியில் அம்பலப்படுத்தியுள்ளது.

இவை வெறும் 323 தொலைபேசி இணைப்புகள் அல்ல - இவை ஒரு முழு தொலைபேசி இணைப்பகமே; இந்த இணைப்பகம் அமைச்சர் குடும் பத்து வியாபார நலனுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக 3.4 கிலோ மீட்டர் நீளத்துக்கு பொது வீதி யில் ‘ரகசியமாக’ கேபிள்கள் பதிக்கப் பட்டுள்ளன. வீட்டிலிருந்து குடும்ப வர்த்தக நிறுவனத்துக்கு இணைப்பு தரப்பட்டிருக்கிறது. இதனால் பி.எஸ். என்.எல். நிறுவனத்துக்கு கோடிக் கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற் பட்டுள்ளது என இச்செய்தியில் விவ ரிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக் கிய முற்போக்குக் கூட்டணி அரசின் முதல் ஆட்சிக் காலத்தில் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக பதவி வகித்த தற்போதைய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன், ஏர்செல் நிறுவனத்திற்கு அலைக்கற்றை உரிமம் வழங்கியதில் ரூ.700 கோடி லஞ்சம் பெற்றார் என புகார்கள் வலுத்துள்ள நிலை யில், அவருடைய இந்த இணைப்பக ஊழலை விசாரித்த மத்தியப் புலனாய் வுக் கழகம் (சி.பி.ஐ.) இந்த மோசடிக்காக தயாநிதி மாறன் மீது நடவடிக்கை எடுக் குமாறு மத்தியத் தகவல் தொடர்புத்துறை செயலருக்கு 10.9.2007-லேயே கடிதம் எழுதியதும் தெரியவந்துள்ளது.

323 தொலைபேசி இணைப்புகளை தயாநிதி மாறன் பொழுதுபோக்குக்காக வைத்துக் கொள்ளவில்லை. சென்னை யில் தான் வசித்த போட்கிளப் சாலை வீட்டிலிருந்து அண்ணா சாலையில், அண்ணா அறிவாலயத்தில் உள்ள சன் டி.வி. அலுவலகம் வரையிலும் தன்னு டைய குடும்ப நிறுவனத்தின் பயன்பாட் டுக்காகத் தனிப்பட்ட முறையில் தொலை பேசி இணைப்புக் கேபிள்களைப் பதித்துக் கொண்டிருக்கிறார். தன்னு டைய வீட்டுடனான 323 தொலைபேசி இணைப்புகளையும் மோசடியாக தனது சகோதரர் கலாநிதி மாறனின் சன் டி.வி. குழுமத்தின் டி.வி. நிகழ்ச்சி ஒளிபரப்பு களுக்குப் பயன்படுத்திக் கொண்டிருக் கிறார்.

இந்த 323 இணைப்புகளில் முதல் 23 இணைப்புகள் 24372211 முதல் 24372301 வரையிலான எண்ணில் செயல் பட்டவை. அடுத்த 300 இணைப்பு கள் 24371500 முதல் 24371799 வரையி லானவை. எல்லா தொலைபேசிகளும் 2437 என்ற எண்ணுடன் தொடங்கிய தால் 323 இணைப்புகளும் ஒரே தொலைபேசி இணைப்பகத்தைச் சேர்ந்தவையாகச் செயல்பட்டன. 2007 ஜனவரி முதல் பல மாதங்களுக்கு இந்த இணைப்பகம் சன் குழுமத்துக்காகப் பயன்படுத்தப்பட்டது.

இவை சாதாரண தொலைபேசி இணைப்புகள் அல்ல; விலைமதிப் புள்ள ஐ.எஸ்.டி.என். இணைப்புகளைக் கொண்டவை. செயற்கைக் கோள்களை விட அதிக விரைவாக உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் எந்தப் பகுதிக்கும் செய்திகளையும் படங்களையும் வீடியோ காட்சிகளையும் நொடிக்கணக்கில் கொண்டுபோய்ச் சேர்க்கும் அதிநவீன தகவல் தொடர்பு இணைப்புகளாகும்.

டிஜிட்டல் வழியிலான தகவல் களைக் கொண்டுபோய்ச் சேர்க்கவும் வீடியோ கான்பரன்சிங் சேவை அளிக்க வும் ஆடியோ, வீடியோ சேவைகளை அளிக்கவும் வல்லவை இந்த இணைப் புகள். சுருக்கமாகச் சொன்னால் சன் குழுமத் தொலைக்காட்சி நிறுவனங்கள் வெகு திறமையாகச் செயல்பட பெரும் பங்காற்றியவை.

இதை சன் குழுமம் தனிப்பட்ட முறை யில் வாடகைக்கு அமர்த்தியிருந்தால் கோடிக்கணக்கான ரூபாய் இதற்காகச் செலவிட வேண்டியிருந்திருக்கும். ஆனால் அமைச்சரின் ‘அபாரமான உத்தியால்’ இவை அனைத்தும் ஒரு பைசா செலவில்லாமல் முழுக்க முழுக்க இலவசமாகவே குடும்ப வியாபாரத் துக்குப் பயன்படுத்தப்பட்டன.

இது அமைச்சரின் சொந்த உபயோகத்துக்காக மட்டுமே ஏற்படுத்தப்பட்ட இணைப்பகம் என்று பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ஒரு சில ஊழியர்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாத வண் ணம் மிகமிக ரகசியமாக வைக்கப்பட் டிருந்தது என்று இந்த விவகாரத்தை விசாரித்த சி.பி.ஐ. தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

மேலோட்டமாகப் பார்க்கும்போது பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்புகளை அமைச்சர் தன்னுடைய வீட்டில் பயன்படுத்தியதைப் போலத் தோற்றம் அளிக்கும். ஆனால் இந்த இணைப்புகள் அனைத்தும் நீட்டிக்கப்பட்ட கேபிள்கள் வழியாக அமைச்சருடைய குடும்ப நிறுவனத்தின் வர்த்தக நோக்கத் துக்குப் பயன்பட்டன என்று சிபிஐ சுட்டிக்காட்டியுள்ளது.

கூகுள் மேப் சேவை மூலம் இந்தத் தொலைவைக் கணக்கிட்டபோது அது மொத்தம் 3.4 கிலோ மீட்டர் என்று காட்டுகிறது. நகரின் மையப் பகுதியில் பெரிய சாலைகள் வழியாக இந்த கேபிள் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. இதை ரகசியமான மோசடி என்று சொல்ல முடியாது, பகிரங்கமாக நடத்தப் பட்ட ரகசிய மோசடி என்றே கருத வேண்டும்.

இதனால் அரசுக்கு ஏற்பட்ட நஷ்டம் எவ்வளவு? மலைக்க வைக்கும் இந்தக் கணக்கையும் சி.பி.ஐ.யே ஒரு மாதி ரிக்கு போட்டுக் காட்டியிருக்கிறது.

24371515 என்ற ஒரு தொலைபேசி மூலம் மட்டும் 2007 மார்ச் மாதத்தில் மட்டும் 48 லட்சத்து 72 ஆயிரத்து 27 யூனிட்டுகள் அளவுக்குப் பயன்படுத் தப்பட்டிருக்கிறது. அதாவது ஒரே ஒரு தொலைபேசி மூலம் ஒரு மாதத்துக்கு சராசரியாக 49 லட்சம் யூனிட்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அப்படி யானால் 323 இணைப்புகள் வாயிலாக எத்தனை லட்சம் - இல்லையில்லை - கோடி யூனிட்டுகள் பயன்படுத்தப் பட்டிருக்கும்?

2007 ஜனவரி முதல் ஏப்ரல் வரை யில் 629.5 கோடி யூனிட்டுகள் பயன் படுத்தப்பட்டிருக்கும் என்று சராசரி கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. ஒரு யூனிட்டுக்கு 70 பைசா என்ற கணக் கில் பார்த்தால், பி.எஸ்.என்.எல்லுக்கு இதன் மூலம் ரூ.440 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்று சி.பி.ஐ. மதிப்பிட்டுள்ளது. இதையே சி.பி.ஐ. மதிப்பிடாமல், தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் கணக்கிட்டால் இன்ன மும் துல்லியமாக - ரூ.440 கோடியை விட - அதிகமாக இருக்கக்கூடும்.

இந்த இணைப்புகள் சன் டி.வி. குழுமத்தோடு நிற்கவில்லை; அதன் சகோதர நிறுவனமான தினகரன் நாளி தழின் மதுரை அலுவலகப் பதிப்புக்கும் பயன்பட்டிருக்கிறது, அந்த தொலை பேசி இணைப்புகள் குறித்து துல்லிய மான விவரங்கள் கிடைக்காவிட்டாலும் பயன்பாடு குறித்து தகவல்கள் கிடைத் துள்ளன என்று சி.பி.ஐ. அறிக்கை தெரிவிக்கிறது.

சிக்கியது எப்படி?

மு.க.அழகிரி தொடர்பாக தினகரன் நாளேட்டில் வெளியான செய்தியை யொட்டி ஏற்பட்ட குடும்ப மோதல் சூழ லில், மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தயாநிதி மாறன் ஓரங்கப்பட்டி ருந்தார். அந்த நேரத்தில்தான் மத்தியப் புலனாய்வுக் கழகம் (சி.பி.ஐ.) தயாநிதி மாறன் தன்னுடைய குடும்ப வியாபார நோக்கத்துக்குப் பயன்படுத்திய இந்த தனி இணைப்பகம் குறித்த தகவல் களைச் சேகரித்தது.

மாறன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 2007 செப்டம்பர் மாதமே சி.பி.ஐ. பரிந்துரைத்தது. ஆனால் அதற்குப் பிறகு கடந்த 44 மாதங்களாக சி.பி.ஐ. இந்த விஷயத்தில் எந்த முயற் சியும் மேற்கொள்ளவில்லை. தயாநிதி மாறனின் துறைக்கு ஆ. ராசா அமைச்ச ரானார். ஆ. ராசாவிடம் ஒப்புதல் பெற்று மேல் நடவடிக்கைக்கு வழி செய்யுமாறு தொலைத்தொடர்புத்துறை செயலருக்கு சி.பி.ஐ. கடிதம் எழுதியது.

இதற்கிடையே 2009-ல் மக்க ளவை பொதுத் தேர்தலைச் சந்திக்க வேண்டியிருந்ததால் கருணாநிதியின் குடும்பத்தில் சமாதானக் கொடி ஏற்றப் பட்டது.

பின்னர், 2009 மக்களவை பொதுத் தேர்தலுக்குப் பிறகு மீண்டும் தொலைத் தகவல் தொடர்புத்துறையைப் பெற தயா நிதி மாறன் முயற்சி செய்தார், ஆனால் வெற்றி பெறவில்லை. அதன் பிறகு ஜவுளித்துறை அமைச்சரானார், இன்று வரை அந்தப்பதவியில் நீடிக்கிறார்.

குடும்பத்துக்குள் பூசல் தணிந்து விட்டபடியால் சி.பி.ஐ. கடிதமும் கவ னிக்கப்படாமல் தொலைத்தகவல் தொடர்புத்துறையில் எங்கோ தூங்கு கிறது. 2ஜி அலைக்கற்றை ஊழல் புகார் காரணமாக 2010 நவம்பரில் ஆ. ராசா பதவியை ராஜினாமா செய்தார். கபில் சிபல் அத்துறை அமைச்சரானார். அன் றிலிருந்து கபில் சிபலும் சி.பி.ஐ.யின் கடிதம் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார்.

ஜவுளித்துறை அமைச்சர் என்ற வகையில் தயாநிதி மாறனும் கபில் சிபலோடு சேர்ந்து மத்திய அமைச்சர வைக் கூட்டங்களில் பங்கேற்கிறார். சி.பி.ஐ. கடிதம் எழுதி 44 மாதங்களாகி யும் ஒரு நடவடிக்கையும் இல்லை.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

சக்சேனாவின் துபாய் பினாமியும் கல்லூரித் தோழருமாக வலம் வந்தவர் 60 கோடி ரூபாயை அபேஸ் செய்தது

 
சிறைப் பறவையாக கூண்டுக்குள் அடைந்து கிடந்த சக்சேனா, இப்போது வீட்டுக்குள் அடைந்து கிடக்கிறார். சிறையில் இருந்த போது, தனது எதிரிகள் யார் யார் என்று தெரிந்துகொள்ள வாய்ப்புக் கிடைத்தது என்று சொல்லி புலம்புகிறார். சக்சேனாவின் துபாய் பினாமியும் கல்லூரித் தோழருமாக வலம் வந்தவர் 60 கோடி ரூபாயை அபேஸ் செய்தது வேறு சக்சேனாவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அரசியல்வாதி கைது செய்யப்பட்டால், அரசியலில் அவருக்கு எதிர்ப்பாளர்கள் சந்தோஷப்படுவார்கள். சினிமாத் துறையில் ஒருவர் கைது செய்யப்பட்டால், அத்துறையில் இருக்கும் அவரது எதிரிகள் சந்தோஷப்படுவார்கள். பெரிய ரியல் எஸ்டேட் அதிபர் கைது செய்யப்பட்டால், கட்டுமானத் தொழிலில் அவரது போட்டியாளர்கள் கொண் டாடுவார்கள். அரசியல், சினிமா, ரியல் எஸ்டேட் ஆகிய துறைகளில் எந்த முத்திரையும் பதிக்காத, நேரடியாக அந்தத் தொழில்களில் இறங்காத ஹன்ஸ்ராஜ் சக்சேனா கைது செய்யப்பட்டதும் எல்லா தரப்பினரும் பட்டாசு வெடித்துக் கொண்டாடினார்கள்.

தொழில்ரீதியாக இப்படி போட்டிகள் இருப்பதைக் கூட ஓரளவுக்குப் புரிந்துகொள்ள முடியும். ஒரு நண்பன் கைது செய்யப்பட்டால், அவரது நண்பர்கள் வருத்தப்படுவதுதான் இயல்பு. ஆனால், ஹன்ஸ்ராஜ் சக்சேனா கைது செய்யப்பட்டதை அடுத்து, அவரது நண்பர்கள் எல்லாம் ரகசியமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர் என்றால் நம்ப முடிகிறதா?

எல்லாத் தரப்பிலிருந்தும் ஏன் இப்படி சக்சேனாவுக்கு எதிர்ப்பு? தனக்கு வாழ்வளித்த கலாநிதியையே மதிக்காத சக்சேனா, நண்பர்களையும் அப்படியே நடத்தியதுதான் இதற்குக் காரணம். 

தி.மு.க. ஆட்சியில் கிண்டியில் இருக்கும் செக்கர்ஸ் ஓட்டலை அடித்து நொறுக்கிய வழக்கு குறித்து, நண்பர்களிடம் பேசிய சக்சேனா, “அந்த ஓட்டல் அடிச்ச விவகாரத் துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எல்லாம் துரை தயாநிதியும் அவனோட ஆட்களும் செஞ்ச வேலை. இது கலாநிதிக்கும் தெரியும். ஆனால், மாமனும் மச்சானும் சேர்ந்து என்னை மாட்டி விடணும்னு நினைக்கறானுங்க’’ என்று சொல்ல, நண்பர்கள் வட்டாரம் ஆடிப்போயிருக்கிறது. இந்தத் தகவலும் அப்போதே கலாநிதியின் காதுக்குப் போனதாம்.

இப்படியே தனது பழக்க வழக்கங்களையும் நடவடிக்கைகளையும் வைத்திருந்த சக்சேனாவை துபாய் பினாமியும் எதற்காக ஏமாற்றினார் என்பது அவரை விசாரித்தால்தான் தெரியும் என்கிறது சக்சேனாவின் நட்பு வட்டாரம்.

சரி... யார் அந்த துபாய் பினாமி?

சக்சேனாவின் நண்பரான வெங்கட்குமார் ஈரோட்டைச் சேர்ந்தவர். லயோலா கல்லூரியில் சக்சேனாவின் ஜூனியரான இவர், துபாயில் பெரும் நிதி நிறுவனத்தில் தற்போது பணியாற்றி வருகிறார். வெங்கட் சென்னை வரும்போதெல்லாம், சென்னையில் இருக்கும் காஸ்மோபாலிட்டன் கிளப்பில் தங்கிச் செல்வது வழக்கம். கடந்த ஐந்து வரு டங்களில், வெங்கட் சென்னை வந்து செல்லும் போதெல்லாம், சக்சேனா மூலம் ஏகப்பட்ட கோடிகள் கைமாறியிருக்கிறது.

அந்தப் பணத்தை சென்னை பாரிமுனையில் இருக்கும் ஹவாலா பேர்வழிகள் மூலம் துபாய்க்கு எடுத்துச் சென்றிருக்கிறார் வெங்கட். இப்படி பலமுறை கைமாறிய தொகையின் மதிப்பு மட்டும் 60 கோடி ரூபாய். அந்த நிதியை, அங்கே பெரும் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பதாகச் சொல்லி இருக்கிறார் வெங்கட். இதை உறுதிப்படுத்திக் கொள்ள இரண்டு முறை சக்சேனாவும் துபாய் சென்றிருக்கிறார்.

நான்கைந்து முறை, 3 கோடி, 4 கோடி என்று கொடுத்த சக்சேனா, கடைசியில் கொடுத்த தொகை 20 கோடியாம். இந்த நிதி எப்படி வந்தது என்று வெங்கட் விசாரித்த போது, ‘எந்திரன்’ படத்தின் மூலம் தனக்கு பெரிய கமிஷன் கிடைத்ததாக, சக்சேனா சொல்லியிருக்கிறார்.

இப்படி சேர்ந்த தொகை அனைத்தும், துபாயில் முதலீடு செய்த விஷயம் வெங்கட்டுக்கும், சக்சேனாவுக்கும் மட்டுமே தெரியும். சிறை சென்ற பிறகு, தனது முக்கிய நண்பர் மூலமாக வெங்கட்குமாரிடம் பேசி இருக்கிறார் சக்சேனா.. அந்த நண்பரிடம், ‘சக்சேனா எந்தப் பணமும் என்னிடம் தரவில்லை’ என்று மறுத்து விட்டாராம் வெங்கட்குமார். இந்தத் தகவல் கிடைத்ததும் சக்சேனா சிறைக்குள் தனிமையில் கதறி அழுதிருக்கிறார்.

சிறையில் இருந்து சக்சேனா வெளியே வந்ததும் முதல் வேலையாக வெங்கட்குமாரை தொடர்பு கொண்டு பணம் குறித்து கேட்டிருக்கிறார். ‘பணத்தை முதலீடு செய்த நிதி நிறுவனம் கடும் நஷ்டத்தில் இருக்கிறது. பணம் எப்படி வரும் என்று தெரியவில்லை. அதை எப்படியாவது வாங்கிடலாம்’ என்று பதில் சொல்ல, ஆடிப் போய்விட்டாராம் சக்சேனா.



இந்தப் பண விவகாரத்தை வெளியே சொல்லவும் முடியாமல், வெங்கட்குமாரை அழைத்து கறாராக கேட்கவும் முடியாமல் தவித்து வருகிறார் சக்சேனா. இது குறித்து சக்சேனாவின் நட்பு வட்டாரத்தில் கேட்டபோது, “அவருக்கு துபாயில் ஏகப்பட்ட நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மூலமாக மலேசியா, சிங்கப்பூரில் முதலீடு செய்தி ருக்கலாம். ஆனால், வெங்கட்குமாரிடம் அவ்வளவு தொகை இருக்குமா என்பது சந்தேகம். ஒரே நபரிடம் இத்தனை பெரிய தொகையை சக்சேனா தருவதற்கு முட்டாள் இல்லை. வெங்கட்குமார் சென்னை வரும் போதெல்லாம், காஸ்மோபாலிட்டன் கிளப்பில் சக்சேனாவை தனியாக சந்தித்துப் பேசுவார். மற்றபடி வெங்கட்குமாரிடம் சக்சேனா பணத்தைக் கொடுத்து ஏமாந்தாரா என்பது தெரியாது’’ என்ற மழுப்பலான பதிலே கிடைத்தது.

தங்களுக்குத் தெரியாமல் சன் நிறுவனத்தில் சக்சேனா செய்திருந்த தில்லுமுல்லுகள் ஒவ்வொன்றாக வெளிவர, மாறன் சகோதரர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்களாம். இந்த வெங்கட் விவகாரம் அவர்கள் கோபத்தைப் பலமடங்கு அதிகரித்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

‘சன் பிக்சர்ஸ்’ சம்பளமும் இல்லை. காஸ்மோபாலிட்டன் கிளப்பிலிருந்துகூட அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். நண்பர்களும் ‘அல்வா’ கொடுத்திருக்கும் இந்த நிலையில், அதிகாரத்தில் இருக்கும் போது போட்ட ஆட்டங்களை சக்சேனா நிச்சயம் நினைத்திருப்பார்.

திருட்டு சி.டி. தயாரித்தாரா?

கடந்த ஆட்சியில் எல்லா புதுப்படங்களின் சிடியும் உடனடியாக வெளிவர, ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்து, வெளியிட்ட படங்களுக்கு மட்டும் ஏக கெடுபிடி விதிக்கப்பட்டது.

ஆனாலும், படம் வெளிவந்து ஓரிரு வாரங்களில் சி.டி. வெளியானது சன் பிக்சர்ஸ் நிர்வாகிகளை அதிர்ச்சியடைய வைத்தது. அதிலும் மற்ற படங்களை விட, சன் பிக்சர்ஸ் நிறுவனப் படங்களின் சி.டி.க்கள் அதிக தரத்தில் வெளிவந்ததைப் பார்த்து அவர்கள் அதிர்ந்து போனார்கள். இதுகுறித்து கலாநிதி மாறன் பலமுறை சக்சேனாவிடம் பேசியி ருக்கிறாராம். அதுகுறித்து தன்னுடைய அதிர்ச்சியையும் பதிலாகத் தெரிவிப்பாராம் சக்சேனா.

அந்த திருட்டு சி.டி.க்களைத் தயாரித்ததும் சக்சேனாதான் என்று இப்போது தெரிய வந்துள்ளதாம். இதன் மூலமும் பெருமளவு பணம் சம்பாதித்து இருக்கிறார் சக்சேனா. இந்தத் தகவல் தெரிந்து கோபத்தின் உச்சத்தில் இருக்கிறார் கலாநிதி மாறன். 



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தலைவணங்கும் இந்திய அரசு.

 

டில்லியில் அரசியல் புயலைக் கிளப்ப இரண்டாவது கடிதமும் வெளியாகிவிட்டது. ஏற்கனவே ஒரு கடிதம் வெளியாகி பலத்த அரசியல் சர்ச்சையைக் கிளப்பிவிட்டதை சமாளிக்கவே மத்திய அரசு திணறுகிறது. இந்த இரண்டாவது கடிதம், அரசியலில் எப்படியான பூகம்பத்தைக் கிளப்பப் போகின்றதோ!

இரண்டாவது கடிதம், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனால், பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதப்பட்டுள்ளது.

தயாநிதி தொலை தொடர்பு துறை அமைச்சராக இருந்தபோது, அவர் பிரதமருக்கு எழுதிய இந்தக் கடிதத்தில், ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயத்தில் சுதந்திரமாக செயல்பட்டு, தனது துறையே முடிவு செய்வதற்கு அனுமதிக்குமாறு கோரியுள்ளார். அத்துடன,

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டுக்கு மார்க்கெட் ரேட்டில் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் அதிக பணம் கொடுக்கும் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்னும், அமைச்சரவைப் குழுவின் பரிந்துரையை ஏற்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரவை குழுவின் பரிந்துரை, நேர்மையான வழிமுறை. அந்த வழிமுறையில் அரசுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய பணம் கிடைக்கும்.

ஆனால், தயாநிதியின் வழிமுறை என்னவென்றால், அதிக பணம் கொடுக்கத் தயாராக உள்ள நிறுவனங்களுக்கு உரிமம் கொடுக்காமல், எந்த நிறுவனம் முதலில் வந்து உரிமம் கேட்கிறதோ, அந்த நிறுவனத்துக்கு குறைந்த விலையில் கொடுப்பது!

அதாவது, அரசுக்கு நஷ்டம் ஏற்பட வைத்து, முதலில் வரும் நிறுவனங்களுக்கு கொள்ளை லாபம் கொடுக்கும் வழிமுறை அது. கொள்ளை லாபம் பெற்ற நிறுவனங்கள், அதற்கு பிரதி உபகாரமாக, கொடுக்க வேண்டியதை, கொடுக்க வேண்டியவர்களுக்கு, கொடுப்பார்கள்.

தயாநிதி மாறனின் இந்த கடிதத்துக்கு பிரதமர் எந்த எதிர்ப்பும் காட்டாமல் ஒத்துக்கொண்டதால்தான், ஸ்பெக்ட்ரம் முறைகேடு நடைபெற்றது என்பதே தற்போது எதிர்க் கட்சிகளின் குற்றச்சாட்டு. அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக, லட்டு மாதிரிக் கிடைத்துள்ளது, தயாநிதி மாறன் பிரதமருக்கு எழுதிய இந்தக் கடிதம்.

தகவல் அறியும் சட்டத்தின்படிதான் இந்தக் கடிதமும் பெறப்பட்டுள்ளது. (ப.சிதம்பரத்துக்கு எதிரான முதல் கடிதம் பெறப்பட்டதும், அப்படித்தான்)

இங்குள்ள மற்றொரு முக்கிய விஷயம் என்ன தெரியுமா? தயாநிதியால் தொடங்கப்பட்ட இந்த நடைமுறையை அப்படியே காப்பியடித்துத்தான் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா செயற்பட்டார். அதற்காக அவர் திகார் ஜெயிலில் கம்பி எண்ணுகிறார்.

ஆனால் கார்ப்பரேட் முதலாளியான தயாநிதி மாறன் மீது கை வைக்க மத்திய அரசு அஞ்சுகிறது.

மூத்த அரசியல்வாதியான கருணாநிதியின் மகள் கனிமொழியை அசால்ட்டாக கைது செய்து சிறைவைத்த மத்திய அரசு, கார்ப்பரேட் முதலாளி மீது கை வைக்க யோசிக்கிறது.

அரசியல் நெருக்கடியைவிட, கார்ப்பரேட் முதலாளிகளின் நெருக்கடிக்கு இந்திய அரசு தலைவணங்குகிறது


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

27_09_2011_002_008-sun-tv.jpg?w=640&h=259



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

22811312-sun-tv.jpg?w=640&h=857



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

26_09_2011_001_042-2g-sc.jpg?w=640&h=226



__________________
«First  <  1 2 3 4 5 6  >  Last»  | Page of 6  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard