New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கலாநிதி தயாநிதி மாறன் சன் பிக்சர்ஸ் வெற்றிகள்


Guru

Status: Offline
Posts: 9863
Date:
RE: சன் பிக்சர்ஸ் மாறன்களின் மஹா வெற்றிகள் லீலைகள்
Permalink  
 


20110714a_003101003-kk-nagar-po-sn.jpg?w=640&h=476



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

கலாநிதி மாறனுக்கு தெரியாமல் பணபரிவர்தனை நடந்திருக்க வாய்ப்பில்லை
வியாழக்கிழமை,  14 ஜூலை 2011, 08:00 [IST]
 
பண மோசடி தொடர்பாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த சச்சேனா கைது செய்யப்பட்டு உள்ளார். மேலும், இது தொடர்பாக விசாரணைக்கு வருமாறு சன் டிவியின் நிர்வாக இயக்குனர் கலாநிதி மாறனுக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். சன் பிக்சர்சில்  நிறுவனத்தில் நடந்த பண பரிவர்தனைகள் கலாநிதி மாறனுக்குத் தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் நிர்வாகி ஹன்ஸ்ராஜ் சச்சேனா, பண மோசடி புகார் காரணமாக கைது செய்யப்பட்டு உள்ளார். தீராத விளையாட்டுப் பிள்ளை என்ற படத்தைத் தயாரித்த செல்வராஜ் என்பவர் கொடுத்த புகாரின் காரணமாக அவர் கைது செய்யப்பட்டு உள்ளார். மேலும், சில  விநியோகஸ்தர்களும் அவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில், இது தொடர்பாக விசாரணைக்கு வருமாறு சன் டிவியின் நிர்வாக இயக்குனர் கலாநிதி மாறனுக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.

எனினும், கலாநிதி மாறனுக்கு முன்னரே திட்டமிடப்பட்ட வேலைகள் இருக்கும் காரணத்தால், வரும் 26 ஆம் தேதி வரை விசாரணைக்கு ஆஜராக கால அவகாசம் அளிக்குமாறு அவரது சார்பில் கோரப்பட்டு உள்ளது. இது பற்றி தெரிவித்த போலீஸ் தரப்பு, புகாரில் கூறப்பட்டு உள்ள பண பரிவர்த்தனைகள் கோடிகளில் உள்ள காரணத்தால், அவை கலாநிதிக்குத் தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை என்றும் அதனாலேயே அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டு உள்ளார் என்றும், அருடைய கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளது.
 


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

15_07_2011_002_035-saxsena.jpg?w=640&h=256



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ரஞ்சிதா புகார் எதிரொலி: கைது நடவடிக்கையை தவிர்க்க நக்கீரன் கோபால் முன் ஜாமீன் மனு தாக்கல்.

 
நடிகை ரஞ்சிதா, நித்யானந்தா சாமியுடன் ஒன்றாக இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த மார்ச் மாதம் இந்த ஆபாச வீடியோ காட்சிகள் சன் டி.வி.யில் ஒளிபரப்பானது. நக்கீரன் வார இதழிலும் ரஞ்சிதா-நித்யானந்தாவின் ஆபாச படங்கள் வெளியிடப்பட்டன.
இது தொடர்பாக பெங்களூரில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தின் மேலாளர் நித்ய பரமானந்தா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் நித்யானந்தாவின் ஆபாச வீடியோவை வெளியிடாமல் இருப்பதற்காக ரூ. 60 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாக பரபரப்பான குற்றச்சாட்டை கூறியிருந்தார்.  
 
நித்யானந்தாவின் முன்னாள் சீடர் லெனின், சன் டி.வி. சக்சேனா, அவரது உதவியாளர் அய்யப்பன், நக்கீரன் கோபால், காமராஜ் ஆகியோரது பெயர்கள் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கடந்த ஆட்சியில் கொடுக்கப்பட்ட புகார் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படாததால் தற்போது புகார் கொடுத்துள்ளதாகவும் நித்யபரமானந்தா கூறியிருந்தார்.
 
இந்த புகார் மனு தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.   இந்த வழக்கில் தங்களை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று நக்கீரன் கோபால், காமராஜ் ஆகியோர் முன்ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
 
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

சொல்வதெல்லாம் உண்மை பாகம்

 

07

ஒருவர் புகழ்பெறத் தொடங்கி பிரபலமடைகிறார்  என்றால் பிரச்னைகளும் அவரைத் தொடரத் தொடங்கிவிடுகிறது. கொஞ்ச நாட்களில் அவரின் பழைய உண்மையான  முகம் வெளியில் யாருக்கும். தெரியாமல் மறைக்கப்படுகிறது. அந்த நபர் தன்னை எப்படி காட்டிக்கொள்ள நினைக்கிறாரோ அந்த அளவே வெளியுலகமும் அவரை  அறிந்துகொள்கிறது. எனவே அவர்கள் வெளியில் ஒரு முகத்தோடும், மறைவில் ஒரு முகத்தோடும்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களை அவர்களுக்கே காட்டும்  கண்ணாடிதான் இந்தத் தொடர். மக்களும் தங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அவர்களின் தலைவர்களைப் பற்றிய உண்மைகளை அறிந்துகொள்ள இந்தத் தொடர் நிச்சயம்  உதவும் என்று நம்புகிறோம். 

இதன்மூலம் தங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவர்களை அவர்கள் சீர்தூக்கிப் பார்க்கவும் அவர்கள் தடம்புரளும் நேரங்களில் தட்டி வைக்கவும் முடியும். தமிழகத்தில்  அரசியல், சினிமா, அதிகாரம் என பல்வேறு துறைகளில் பிரபலமானவர்களைப் பற்றி அலசி ஆராயும் பகுதி இது. அவர்களைப் பற்றிய உண்மைகளை  அப்படியே  வாசகர்களுக்குத் தருகிறோம். வாசகர்களே அந்தந்த வி.ஐ.பி.க்களை மதிப்பீடு செய்துகொள்ளலாம். உண்மைக்கு மாறாகவோ, சுவாரஸ்யத்திற்காகவோ எதுவும் மிகைப்படுத் தாமல் எழுதுவதே இந்தப் பகுதியின் சிறப்பம்சம். எந்த வி.ஐ.பி.யிடம், பேட்டிக்காகப் பேசினாலும் அவர்கள் தங்களின் புது முகத்தையே வெளிப்படுத்துவார்கள். அவர்களின்  இன்னொரு பகுதியை, இருட்டுப் பகுதியை வெளிக்கொண்டு வரவேண்டுமெனில் அவர்களின் மனசாட்சிதான் பேச வேண்டும். ஆகவே, மனசாட்சியை பேட்டி எடுத்தால்  அவை கூறும் உண்மையையே இங்கு தரப்போகிறேன்.

இனி ஒவ்வொரு இதழிலும் ஒவ்வொரு பிரபலத்திடமும் மனசாட்சியின் வாக்குமூலம் பெற்று வாசகர்களுக்குத் தரப்பட இருக்கிறது.

தமிழக அரசியல் எல்லை ஆரம்பிப்பதே வடசென்னையிலிருந்துதான். எனவே, நாமும் வடசென்னை வி.ஐ.பி.யிலிருந்தே இந்த தொடரைத் தொடங்குகிறோம். வடசென்னை  அரசியலில் மட்டுமின்றி தமிழக அரசியல் களத்திலும் இவர் முக்கியமான நபர்தான். இன்றும் முதலமைச்சரின் அடுத்த நாற்காலியில் பந்தாவாக, பெரிய மனிதராக அமர்ந்து  அரசியல் நடத்திவரும் அந்த வி.ஐ.பி.யின் மனசாட்சியின் வாக்குமூலம் இதோ உங்களுக்காக.

‘‘நான் பொறந்து வளர்ந்ததெல்லாம் ஆந்திராவில்தான். எங்கப்பா ரயில்வேயில் வேலை செய்துகிட்டிருந்தாரு. எங்க வீட்டில பசங்க மொத்தம் ஆறு பேரு. வருமானம்  போதாம நாங்க குடும்பத்தோட சென்னைக்கு வந்து குடியேறினோம். ஆந்திராவுல எஸ்.எஸ்.எல்.சி., வரைக்கும் படிச்சிருந்த எனக்கு சென்னையில போரூர் பக்கத்துல ஒரு  தனியார் கம்பெனியில வேலை கிடைச்சது.

அங்க யூனியன் பிரச்னை வந்தபோது நான் மேனேஜ்மெண்ட்டை எதிர்த்து குரல் கொடுத்தேன். மேனேஜ்மெண்ட் ஆட்கள் மேல ஆசிட் அடிச்சேன்னு சொல்லி என்னை  வேலையை விட்டு அனுப்பிட்டாங்க. எதிர்காலத்துல என்மீது ஆசிட் வழக்குப் போடறதுக்கு இதுவே அடித்தளமாயிடுச்சு. எங்கப்பா இறந்ததற்காக எங்க அண்ணனுக்கு  ரயில்வேயில் வேலை கிடைச்சுது.. நாங்க வண்ணாரப்பேட்டையில் பத்துக்குப் பத்து அடி ஓட்டு வீட்ல வாடகைக்கு இருந்தோம். என் தம்பி பாரிமுனைப் பக்கம் ஒரு  தனியார் கம்பெனியில வேலை செய்தான். அவன் வேலைக்குப் போகும்போதும், வரும்போதும் ராயபுரத்துல இறங்கிதான் வீட்டுக்கு வருவான். அடுத்த பஸ் ஸ்டாப்புலதான்   எங்க வீடு. ஆனா அங்க இறங்கினா ஐந்து பைசா அதிகமாகும். எனவே, இருபது பைசா டிக்கெட் எடுத்து ராயபுரத்துல இறங்கிடுவான். அவ்வளவு கஷ்டமான நிலைமை.

குடும்பத்துல இருக்குறவங்க எவ்வளவு கஷ்டப்பட்டு வாழ்ந்தாலும் நான் மட்டும் கொஞ்சமும் பொறுப்பில்லாம சுத்திக்கிட்டிருந்தேன். எங்க வீட்டுத் திண்ணையில  சாயங்காலத்துல ஸ்கூல் பசங்களுக்கு டியூஷன் சொல்லிக் கொடுப்பேன். அந்த நேரத்துலதான் எம்.ஜி.ஆர். ‘அ.தி.மு.க.’ என்ற கட்சியை ஆரம்பிச்சாரு. அப்போ, நான்  அ.தி.மு.க. கூட்டம் ஏதாவது நடந்தா போய் கலந்துப்பேன். சென்னையிலே அ.தி.மு.க.வின் மிகப் பெரிய சக்தியாக வண்ணை மு. பாண்டியன் இருந்தார். தலைவரோட  ரொம்ப நெருக்கமா இருந்த பாண்டியன் வீட்டுக்கு தினமும் நான் போய் வரத் தொடங்கினேன். அப்போ ஜேப்பியாரும் பாண்டியன் வீட்டுக்கு வந்து போவார். எங்களை  பாண்டியன்தான் தலைவர்கிட்ட அறிமுகம் செய்து வைத்தார்.

அரசியலில் தலைவரின் அறிமுகம் ஒரு பக்கம் வந்தாலும், இன்னொரு பக்கம் பண வருமானத்தை தேடத் தொடங்கினேன். நாங்கள் வாடகைக்கிருந்த வீட்டின் பின்பக்கம்  அந்த வீட்டுச் சொந்தக்காரருக்கு கொஞ்சம் காலி மனை இருந்தது. அங்கு ஒரு அரச மரமும் இருந்தது. அந்த அரச மரத்தடியில் ஒரு குடிசைப் போட்டு நான் தனியாக  இருக்கத் தொடங்கினேன். எனது அரசியல் வாழ்க்கையில் நான் செய்த முதல் நில ஆக்கிரமிப்பு இதுதான். அந்த அரச மரத்திலிருந்து விழும் காய்ந்த இலைகளை  கொளுத்தி தண்ணீர் சுடவைத்துக்கொண்டே வாயில் அரச மரக் குச்சியை வைத்து பல் துலக்கியபடி போவோர், வருவோரிடமெல்லாம் மணிக்கணக்கில் அரசியல்  பேசிக்கொண்டிருப்பேன். இதுதான் தினமும் என் காலைப் பணி.

அப்போதெல்லாம் எனக்கு போட்டுக்கொள்ள சட்டையே இருக்காது. வேலைக்குச் செல்லும் அண்ணன், தம்பிகளின் சட்டையை எனக்குத் தரமாட்டார்கள். கட்சிக்காரர்கள்  யாராவது வந்தால் அவர்களுடன் சுத்துறது, சின்னச் சின்ன பஞசாயத்து செய்யறதுதான் அப்போதைய பொழப்பு. ஏதாவது பிரச்னைன்னா நான் உடனே ரிக்ஷாவில் ஏறி  ஸ்பாட்டுக்குப் போவேன். கையில் சார்மினார் சிகரெட், வெத்தல பாக்கு இதுதான் அந்தக் காலத்துல எனக்கு பிராண்டாக இருந்தது. அதுக்குப் பிறகு கொஞ்சம் வளர்ந்து  தலைவர் வீட்டுக்குப் போறதுக்கு எம்.எஸ்.எல். 1212 என்ற ஃபியட் டாக்சியில போவேன். அதுக்கும் வேற யாராவதுதான் பணம் கொடுக்கணும். அந்த டாக்ஸியின் டிரைவர்  கண்ணாயிரத்துக்கு அப்பவே நான் கடன் சொல்லி ஏமாத்துவேன்.

அந்த நேரத்துல வடசென்னையில சிங்காரத்தோட்டம் ஏரியாவுல கட்பீஸ் துணிங்க விக்கிற பிஸினஸ் வளர ஆரம்பிச்சது. அந்தக் காலத்துல செட்டியார்களும்  மார்வாடிகளும் அந்த பிஸினஸை செய்தாங்க. அந்த ஏரியாவுக்குப் போனா அங்கிருந்து ஏதாவது வசூலாகும். அதை வைத்துதான் தினமும் வாழ்க்கையை ஓட்டுவேன்.  அந்தப் பகுதியில இருந்த கோவிந்தன் நாயர் ஓட்டல், கோபாலகிருஷ்ணன் ஓட்டல்ல எனக்கு இலவசமா சோறு போடுவாங்க. அதுக்கு முன்னாடியெல்லாம் ஸ்கூல்  பசங்களுக்கும், ஆபீஸருக்கும், வீட்ல வேலை செய்றவங்க கூடையில சாப்பாடு எடுத்துக்கினு போவாங்க. அவங்க சாப்பிட்டு முடிச்சதும் மிச்சமிருக்கும் சாப்பாட்டைக்  கொண்டு வந்து விப்பாங்க. அந்தச் சாப்பாடு ரொம்ப டேஸ்ட்டா இருக்கும். குறைஞ்ச காசுல கிடைக்கிற அந்த கூடை சாப்பாட்டுக்காக நாங்க சில பேர் காத்துக்கினு இரு ப்போம். கொஞ்ச நாளுக்கப்புறம் இந்த கூடைச் சோறை மனசுல வச்சுக்கிட்டுத்தான் நான் மத்தவங்கள கூடைச் சோறுன்னு திட்டுவேன். வெறும் வாய் உதாரிலேயே  வடசென்னையை சுத்தி வந்த எனக்கு ‘அஞ்சாநெஞ்சன்’, ‘மாவீரன்’னு கட்சிக்காரங்க போஸ்டர் அடிப்பாங்க. நான் இதுவரைக்கும் கத்தியை கையாலகூட தொட்டதில்லை.  பூனை வாலக்கூட அறுத்ததில்லை. ஊர்ல ஏதாவது சின்ன சண்டைன்னாகூட என் கை, கால்கள் எப்படி உதறும்னு எனக்குத்தான் தெரியும்.

சென்னையின் ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளரா இருந்தவர் பாண்டியன் பிறகு, வடசென்னை, தென்சென்னை என பிரித்து தலைவர் ஜேப்பியாரை தென்சென் னையின் மாவட்டச் செயலாளராக்கினார். அதுக்குப்பிறகு 77-ல் பாண்டியனுக்கு சீட் கொடுக்கலைன்னு கோவிச்சுக்கிட்டு அவர் தி.மு.க.வுக்குப் போய்ட்டார். அதன்பிறகு  80-ல் உட்கட்சித் தேர்தல் வந்தது. ஜேப்பியாரை எதிர்த்துப் போட்டியிட்டு தோற்றுப்போனேன். அதே நேரத்துல ராயபுரத்துக்குப் பகுதிச் செயலாளராகிவிட்டேன்.   

அப்போ எனக்கு ஆதரவாயிருந்த எல்லா பகுதிச் செயலாளர்களையும் நான் நடுத்தெருவுல விட்டுட்டேன். ஜேப்பியாருக்கும், எனக்கும் என்ன வித்தியாசம்னா,  ஜேப்பியாரை யார் தேடிப் போனாலும் வாங்க சார், வாங்க தம்பின்னுதான் கூப்பிடுவாரு. என்னைப் பாக்க வந்தவங்க ஆம்பளயா இருந்தா ‘ஓ... இன்னாடா’ன்னுதான்  ஆரம்பிப்பேன். பொம்பளயா இருந்தா பின்னால பக்கம் தட்டுவேன். அதேபோல ஜேப்பியார் கட்சிக்காரங்களுக்கு நிறைய பணம் கொடுப்பாரு. என்கிட்ட வந்தா கட் சிக்காரங்கதான் பணம் கொடுக்கணும். நான் இன்னைக்குவரைக்கும் எந்த கட்சிக்காரங்களுக்கும் ஒரு ரூபாய்கூட கொடுத்ததில்லை. இன்னைக்கு எங்கிட்ட இருநூறு கோடி  ரூபாய்க்கு மேல சொத்து இருக்கு. ஆனாலும் பஞ்ச வேஷம் போடறதுதான் என்னோட ஸ்பெஷாலிட்டி. அன்னிக்கு ஐந்து பைசாவுக்காக அரை கிலோமீட்டர் நடந்து  வந்த என் தம்பிகிட்டயும் இன்னைக்கு முந்நூறு கோடிக்கு சொத்து இருக்கு. 



அதேபோல சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டு படிச்சு வளர்ந்த என் அக்கா பையனிடம் இன்னைக்கு ஆயிரம் கோடிக்கு சொத்திருக்கு. தெருவுல சுத்திக்கிட்டிருந்த அவனை  பெரிய தொழிலதிபராக்கிட்டேன். அவனை தனியா இந்தத் தொடர்ல உங்ககிட்ட பேசச் சொல்றேன்.

அந்த நேரத்துல அம்மா அரசியலுக்கு வந்தபோது அவங்ககூட நான் இருக்கத் தொடங்கினேன். அவங்க என்னையும் பண்ருட்டியைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணனையும்  எம்.எல்.சி.யாக்க தலைவர்கிட்ட பரிந்துரை செஞ்சாங்க.

அதன்பிறகு எனக்கு பழைய எம்.எல்.ஏ. ஹாஸ்டல்ல 11-ம் நம்பர் அறை கிடைச்சது. அதுக்குப்பிறகுதான் நான் புது சட்டையே போட ஆரம்பிச்சேன். என் அண்ணன்,  தம்பியெல்லாம் என்னைத் தேடிவர ஆரம்பிச்சாங்க. 

கட்சிக்கார பொம்பளைங்களும் என்னை தனியா வந்து சந்திப்பாங்க. அவங்க வேலையும் முடியும். என் வேலையும் முடியும்.

அப்புறமா நான் வடசென்னையில வாடகைக்கு ஒரு ஆபீஸை புடிச்சேன். அதன்பிறகு, அந்த ஆபீஸ்தான் எனக்கு எல்லாமும். நான்  அங்க தனியாவே இருந்ததில்லை.  எப்போதும் பதினாறு, பதினெட்டு வயசுக் பொண்ணுங்க என்கூட இருக்கணும்.

நான் சேர்ல உட்கார்ந்திருப்பேன். பொண்ணுங்க டேபிளுக்கு கீழே போய் உட்கார்ந்துக்குவாங்க. யாராவது திடீர்னு வந்துட்டா. அந்தப் பசங்க எழுந்து ஓடிப்போயிடும்.  இப்படி நான் பல பேர்கிட்ட மாட்டினு இருக்கேன்.

எவ்வளவு பெரிய கூட்டமாக இருந்ததாலும் கட்சிக்காரப் பொம்பளைங்க என்னைச் சுத்தி இருக்கணும், அவங்களை தொடையில தட்றது, கிள்ளறது, சில்மிஷம் செய்யறது தான் எனக்கு பொழுதுபோக்கு. சிலருக்கு இது பிடிக்கும். சிலருக்கு பிடிக்கலைன்னாலும் எதிர்த்துப் பேசமாட்டாங்க. இப்படியே நான் பொம்பளைங்ககூட சுத்தினு இருந் ததால 48 வயசுலதான் கல்யாணமே ஆச்சு.

அந்த பீரியட்லதான், அதாவது 1986-ன்னு நினைக்கிறேன். ஆர்.கே. நகர்ல இருந்து ஒரு பையன். போலீஸ் ஸ்டேஷன் விவகாரமா என்கிட்ட வந்தான். ‘கிரி’ படத்துல  வடிவேலு கணக்கா அவனோட அக்காவ கூட்டினு வந்து எங்கிட்ட வுட்டுட்டு அவன் வேலையை முடிச்சுனு கிளம்பிட்டான். அதுக்குப் பிறகு அவனும் கட்சியில பெரிய  அளவுல வளர்ந்துட்டான்.

அதுக்கப்புறம் 91-ல் நடந்த தேர்தல்ல நான் ஜெயிச்சு அஞ்சு வருஷம் சிவப்பு விளக்கு கார்ல சுத்தினேன். அதுல ரெண்டு வருஷம் நெசவு, இரண்டரை வருஷம் கால் நடையையும், கடைசி ஆறு மாசம் சாப்பாட்டையும் கவனிச்சேன். என்கூட ‘எஸ்சார்’ ‘எஸ்சார்’னு சொல்லிக்கினு வந்தவரும் இன்னைக்கு ஐநூறு கோடிக்கு அதிபதியாயிட் டார். என்னை ஜாலியா வச்சுக்க அவருதான் ரொம்ப கஷ்டப்படுவார். அவரும் பேசினால் இன்னும் நிறைய ஜாலியான விஷயங்கள் கிடைக்கும்.
தி.மு.க. ஆட்சியில என் மேலயும் என் அக்கா பையன் மேலேயும் கேஸ் போட்டாங்க. அதுல தண்டனையும் கிடச்சுடுச்சு. ஆனா, நாங்க அப்பீல் செஞ்சு தி.மு.க. ஆட் சியிலயே நிரபராதியாயிட்டோம்.

கடந்த தி.மு.க. ஆட்சியில நான் ஆபீஸ் வச்சிருக்கும் இடத்துக்கு வாடகை தரலைன்னு அந்த இடத்து ஓனர் சி.எம். ஆபீஸுக்கு ஒரு கம்பளைண்ட் கொடுத்தாங்க. ஆட்சி  மாறினதும் அத அமுக்கிடலாம்னு பார்த்தா இப்பத்தான் அந்தப் புகார் பரிந்துரை செய்யப்பட்டு விசாரணைக்கு வந்துருக்கு.

இந்த முறையும் நான் சிவப்பு விளக்கு கார்ல போயிருந்தா இன்னும் சில கோடிக்கு சொத்து சேர்த்திருப்பேன். இன்னும் கொஞ்சம் ஜாலியாயிருப்பேன். என்ன செய்யறது?  இருந்தாலும் வாய்ப்புக் கிடைக்கும்னு காத்துக்கினு இருக்கேன்...’’

06

 

பிரகாசமான தொலைக்காட்சி என்றாலே முதலாளியை விட அதிகமாகப் பேசப்படுவது இந்த நபரைத்தான். ஒரு மாதத்திற்கு முன்புவரை எல்லாரையும் ஆட்டி வைத் துக்கொண்டிருந்த இவர் இப்போது ஆடிப்போய் இருக்கிறார். கரன்ஸியை எண்ணிக்கொண்டிருந்தவருக்கு இப்போது கம்பி எண்ணும் வேலை. பரபரப்பாக இயங்கிக்  கொண்டிருந்தவருக்கு இப்போது ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் அவரின் மனசாட்சியின் வாக்குமூலம் :

‘‘நான் சென்னை தி. நகரில் பொறந்தேன். அம்மா பர்மாவைச் சேர்ந்தவர். அப்பா தெலுங்கு நாயுடு. பணவசதி படைத்த குடும்பம் இல்லை என்றாலும் நடுத்தர வர்க்கம்.  எனது பள்ளிப் பருவத்தில் எதுவும் சிறப்பாக அமையவில்லை என்றாலும், கல்லூரியில்தான் எனது வாழ்க்கையின் திருப்புமுனை ஏற்பட்டது.

அந்தக் கல்லூரியில் பிரபல சகோதரர்களில் ஒருவர் எனக்கு கிளாஸ்மெட்டாக வந்தார். அப்போதைய அரசியலில் முக்கிய புள்ளியின் வாரிசு என்பதால் அவருக்கு கல் லூரியில் கொஞ்சம் செல்வாக்கு இருந்தது. அவரின் பையிலும் கொஞ்சம் பணமிருந்தது. நாங்கள் இயற்பியல் பாடம் எடுத்திருந்தாலும் தாவரவியலில் வரும் ஒட்டுண்ணி  விவகாரம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். வளமான ஒரு செடியை, மரத்தைப் பற்றிக்கொண்டு அந்த மரத்திற்கு சமமாக அல்லது அதற்கும் மேலாக வளருவதுதான் ஒட்டு ண்ணி. நானும், அந்த அரசியல் வாரிசை ஒட்டுண்ணியாகப் பிடித்துக்கொண்டேன்.

கல்லூரியில் தொடங்கி இன்றுவரை நான் அந்த தொடர்பைப் பயன்படுத்தி வளர்ந்து, எங்கேயோ போயிட்டேன்.

கல்லூரி வாழ்க்கை முடிந்ததும் அவர்கள் நடத்திவந்த மங்களகரமான பத்திரிகையில் ஆரம்பத்தில்  சேர்ந்தேன். பின்னர் அந்த வாரிசுகள் தயாரித்த மாலையை விற்கும்  வேலைகளில் மும்முரமாக இறங்கி நான் திறமையானவன் என்பதை காட்டிக்கொண்டேன். அதன்பிறகுதான் தொழில்ரீதியாகவும் நான் அவர்களுடன் என்னை இணைத் துக்கொள்ள முடிந்தது. எனது உண்மையான பெயர் திருப்பதி கடவுளுடையது. ஆனால் எனது அம்மாவின் அப்பா, அதாவது எனது தாத்தா பெயரையும் எனக்குப் பிடி த்த பெயரையும் சேர்த்து புதுப்பெயரை வைத்துக்கொண்டேன். அதாவது ஒரு சேனையை வைத்து உறிஞ்சுவதற்கு சமமாக நானே என் முதலாளியை உறிஞ்சிவிடுவேன்  என்பதாலோ அல்லது உறிஞ்சுவதற்கு ஒரு சேனையை வைத்திருந்தேன் என்பதாலோ எனக்கு அந்தப் பெயர் மிகவும் பிடித்திருந்தது.

அந்தப் பெயர் வச்சபிறகு எனக்கு பேரும், புகழும் கொட்டத் தொடங்கிடுச்சு. நான் சினிமாவுல பார்த்து அசந்துபோன அந்த தலைகோதும் நடிகரை சமீப காலத்துல தனியா  சந்திச்சுப் பேசவும், அவர் என்னை அண்ணேன்னு கூப்பிடும் அளவுக்கு எனக்கு பேர் கிடச்சது.

ஆரம்பத்துல முதலாளிக்கு கொஞ்சம் விசுவாசமா இருந்து வளர்ந்தேன். அதுக்கப்புறம் கொஞ்சம் கொஞ்சமா தனி ஆவர்த்தனத்தைத் தொடங்கிட்டேன். அந்தப் பிரகாச  சேனலில் எனது பங்கு மிக முக்கியமானதாகிவிட்டது. அதில் நிகழ்ச்சி தொகுக்க வருபவர்களை நான் தொகுக்க ஆரம்பிச்சுட்டேன். 

இதற்கிடையில் நான் காதலித்து திருமணம் செய்துகிட்டேன். என் மகன் வெளிநாட்ல படிச்சுகிட்டிருக்கான்.

பலரிடம் பிரியமாக இருந்துவிட்டு, என்னிடம் தொகுக்க வந்தார் அந்தப் பெண். அவர் திருமணமானவர்தான் என்றாலும், என்மீது அந்தப் பெண் காட்டிய பிரியம் ரொம்ப  அதிகம். எனக்கு ஏறக்குறைய இரண்டாவது மனைவியாகவே ஆகிவிட்டார் அவருக்கு மகாபலிபுரம் சாலையில் ஒரு பெரிய வீட்டை வாங்கிக் கொடுத்தேன். அந்தப்  பிரியம் என்னிடமிருந்து பணத்தை வாங்கி தனது கணவரின் பிஸினஸுக்காக கொடுத்து வந்ததால் எங்க பிஸினஸை அவரது கணவர் கண்டுக்கவில்லை. இன்றைக்கு  பிரியத்திடம் பணம் மட்டுமே சுமார் இருபது கோடியும், சொத்துக்கள் ஐம்பது கோடியாக வசதியாக செட்டிலாகிவிட்டார்கள். 

நான் இந்தப் பிரியத்திடம் தொடர்பு வைத்ததிலிருந்து வீட்டிற்கு சரியாகப் போவதில்லை. நாளடைவில் வீட்டிற்குப் போவதையே நிறுத்திக்கொண்டேன். இதனால்  கோபமடைந்த என் மனைவி விவாகரத்து வரை போக, பேசி சமாதானம் செய்து வைத்திருக்கிறேன்.

ஒருவன் உழைக்காமலேயே பணம் கொட்டத் தொடங்கிவிட்டால் அவனின் பொழுதுபோக்குக்கு புட்டியும், குட்டியும்தானே தேவை. இன்றைக்கு சுமார் இருநூறு  கோடிக்குமேல் சொத்து. சினிமா உலகில் நான் வைப்பதுதான் சட்டம் என்றாகிவிட்டதால், நடிகைகளை போன் போட்டு அழைத்தால் வந்துவிடும் நிலை. தங்கவேட் டையாடிய நடிகை பக்கத்து மாநிலத்தில் செட்டிலாகியிருந்தாலும் அவர் பெரும்பாலும் இருப்பது சென்னையில்தான். அவருக்கும் சென்னையில் ஒரு வீட்டை வாங்கிக்  கொடுத்து அவரின் கணவருக்கும் கைச் செலவுக்கு பணத்தைத் தருவேன். ஆண்களுக்கு சமமாக சரக்கடிக்கும் அந்த நடிகை என்னை திணறடித்துவிடுவார்.

இப்படி உல்லாசப் பேர்வழியாக நான் திரிந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் சினிமா சம்பந்த மான பஞ்சாயத்துகளிலும் இறங்கிவிட்டேன். சாதாரணமாக ‘பயந் தாங்கொல்லி’யான நான் பணமும் புகழும் பெருகப் பெருக அடியாட்களின் கும்பலையும் உருவாக்கிக் கொண்டேன். சில வருடங்களுக்கு முன் பரோட்டா கடையில்  வேலை செய்து வந்த மணிகண்ட சுவாமிகளின் பெயரைக் கொண்ட ஒரு நபர் என்னிடம் வந்தார். பழக்கடை சார்பாக சின்னச் சின்ன பஞ்சாயத்துகளை செய்து வந்த  அவனை எனக்கு கையாளாக வச்சுக்கிட்டேன். என் முதலாளி என்னிடம் ‘அவனை செய்ஞ்சிடு’ என்றால் அவனை தட்டிவைனு அர்த்தம். ‘நெருக்கி செய்’னு சொன்னால்  பொளந்துடுன்னு அர்த்தம். அந்த வேலைகளை அந்த மணிகண்ட சுவாமிகள்  மூலம்தான் செஞ்சு முடிப்பேன். வெறும் உருட்டுக் கட்டையை மட்டுமே மூலதனமா  வச்சுகிட்டு என்கிட்ட வந்த அவனுக்கு இன்னைக்கு கார்கள் மட்டுமே எட்டுக் கோடி ரூபாய்க்கு இருக்கு. எல்லா வெளிநாட்டு கார்லயும் டாப் எண்டு மாடல் வச்சுகிட்டி ருக்கான். பிஸ்லரி வாட்டர்ல தான் வாய் கொப்புளிச்சு முகம் கழுவுறான். இப்போது என் கூடவே கம்பி எண்ணும் வேலை செய்து கொண்டிருக்கும் அவனுக்கு இப்போது  எனக்கு சமமான சொத்து இருக்கு. இப்போது அவனும் சினிமா தயாரிப்பாளராயிட்டான்.

இதுவரைக்கும் சினிமா தொடர்பான தொழில் செய்து வந்த என்னோட முதலாளி கொஞ்ச வருசத்துக்கு முன் நேரடியாகவே  சினிமாவுக்கு ஃபைனான்ஸ் பண்றது, படம்  எடுக்கறதுன்னு இறங்கினார். அதுக்குப் பிறகு என்னோட ஆட்டத்த கேட்கவே வேண்டாம். ஒரு படத்துக்கு  ஃபைனான்ஸ் செய்தோம்னா அந்தப் படம்  எந்த ஊர்ல ஷூட்டிங் நடக்குதோ அந்த ஊருக்குப் போய் இறங்கிடுவேன். அங்க ஓட்டல்ல அந்த நடிகையோட டிஸ்கஷன் முடிச்சுட்டு சென்னைக்குத் திரும்பிடுவேன்.

எங்களுக்கு ஒத்துவராத எத்தனையோ தயாரிப் பாளர்கள நடுத்தெருவுல திரியவிட்டிருக்கேன். எனக்கு கட்டிங் கொடுத்து, குஷிப்படுத்துனாதான் சினிமா விமர்சனத்துல  பாராட்டு கிடைக்கும். இல்லன்னா படம் மோசம்தான்.

தொலைக்காட்சியில எனக்கு முழு சுதந்திரம் கிடைச்சதுக்கப்புறம் நானே பினாமி பேர்ல நாலஞ்சு புரோகிராம் எடுத்து நடத்தியதும், எல்லாத்துலயும் எனக்கு கட்டிங் வந்து டணும். என் கூட இருந்த மணிகண்டசாமிக்கு படம் டிஸ்ட்ரி பியூஷன்ல ஒரு ஏரியாவை கொடுத்துடணும். சில நேரங்கள்ல எங்க முதலாளி யார் கூடவாது  டிஸ்கஷனுக்குப் போகணும்னு நினைச்சா அதையும் நான் ஏற்பாடு செய்து தரணும்.

ஒரு முறை ஒரு பொண்ணு விஷயத்துல ஒரு «‘ஹாட்டல்ல பெரிய சண்டையாயிடுச்சு. அதை ராஜ தந்திரமாக என் வழக்கறிஞர் நண்பர் ஒருத்தர் பேசி முடிச்சிட்டாரு.  ஆனா அவருக்கு மணிகண்ட சாமியால் ஏற்பட்ட அவமானத்தால் என்னை அடிக்க வந்துட்டாரு.

அதேபோல பிரபல சாக்லெட் ஹீரோகிட்ட ஒரு படத்த நடிச்சு கொடுக்கக் கேட்டேன். அவர் முடியாதுன்னு சொல்லிட்டாரு. உடனே அவரை வச்சு யாரும் படம் எடுக்கக்  கூடாதுன்னு வாய்மொழி உத்தரவு போட்டேன். அப்போ நான் சொல்றதெல்லாம் கேட்ட சினிமாக்காரங்க இதையும் கேட்டாங்க. நாலஞ்சு வருஷமா அவருக்கு தமிழ்ல  படமே இல்லை.

இதற்கிடையில நான் தனி ஆவர்த்தனம் செய்யறது என் முதலாளிக்கு அரசல் புரசலா தெரிய வந்துடுச்சு. இருந்தாலும் பழைய நட்ப நெனச்சு அவர் என்கிட்ட எதுவும்  கேட்கல. நானும் எதுவும் கண்டுக்காம என்  வேலைகளைச் செய்து வந்தேன். ஆளுங்கட்சி, மீடியா வேற கேக்கணுமா! எங்க வேணும்னாலும் எதை வேணும்னாலும் என்னால செய்துக்க முடிந்தது.

இதனால என்ன யாராலயும் கட்டுப்படுத்த முடியல. ஆனா இந்த வாழ்க்கையே நிரந்தரம்னு நெனைச்சுட்டேன். ‘மெஷின்’ சினிமா பாட்டு போடற அன்னிக்கு மேடைல  வச்சு சினிமா உலகமே என்னைப் பாராட்டுச்சு. இப்ப என்மேல புகார் கொடுக்க ஒட்டுமொத்த சினிமா உலகமும் கிளம்பிடுச்சு. என்னை கம்பி எண்ண கூட்டினு  போனபோது எல்லாரும் பட்டாசு வெடிச்சு ஸ்வீட் கொடுத்துக் கொண்டாடினார்களாம். அத நெனச்சா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. ஏற்கெனவே என்னோட  சேஷ்டைகளால என் முதலாளிக்கு என் மேல கொஞ்சம் வெறுப்பு இருந்தது உண்மைதான். அதுமட்டுமின்றி என் முதலாளியோட பொழப்பும் சினிமா சம்பந்தப்பட்டது.  இப்போ எல்லா சினிமாக்காரங்களும் என்னை எதிரியா பாக்கிறதால என்னால என் முதலாளி பொழப்பு டிஸ்டர்ப் ஆயிடும்னு அவர் யோசிக்கிறார். அதனால நான்  வெளியில் வந்ததும் என்னை அவர் ஒதுக்கி வச்சுடுவாரோன்னு சந்தேகமா இருக்கு. ஆனாலும் இதுவரைக்கும் நான் அவருக்கு செஞ்ச துரோகத்தை அவர் பொறுத்ததே  பெரிய விஷயம்தான்.

வெளியே வந்தபிறகுதான் நான் என்ன செய்யறதுன்னு முடிவு செய்யணும். அதுவரைக்கும் கொஞ்சம் ஓய்வெடுத்துக்கறேன்

 

நன்றி குமுதம் ரிப்போர்ட்டர்

 



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

அரக்கனை அழித்தால் தீபாவளி கொண்டாடத்தானே செய்வார்கள் -எஸ். ஏ. சந்திர சேகர் தடாலடி

சன் பிக்சர்ஸ் தலைமைச் செயல் அதிகாரி சக்சேனா கைது செய்யப்பட்டதை திரையுலகமே கொண்டாடி வருகிறது. தி.மு.க. ஆதரவாளராகவே பல ஆண்டுகள் இருந்த நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கூட, விஜய்க்கு அப்போது கொடுக்கப்பட்ட நெருக்கடிகளைப் பார்த்து கொதித்து எழுந்தார். 

கடந்த சில நாட்களாக சன்பிக்சர்ஸ் மீது வழக்குகள் பாயும் நிலையில், எஸ்.ஏ.சந்திரசேகரை சந்தித்து கேள்விகளைத் தொடுத்தோம்...

சன் பிக்சர்ஸால் விஜய்க்கு எந்த வகையில் பாதிப்பு இருந்தது?

‘‘ஈரோட்டில் விஜய்யின் மக்கள் இயக்க நற்பணி விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விஜய்யின் காலடி அந்த ஊரில் படக்கூடாது என்று அப்போதைய தி.மு.க. மந் திரியின் மகன் போலீஸுக்கு உத்தரவு போடுகிறார்... போலீஸாரும் நெருக்கடி கொடுத்தனர். இது குறித்து, முதல்வராக இருந்த கருணாநிதியிடம் போய் சொன்னேன். சன் தொலைக்காட்சி நெருக்கடி கொடுப்பது பற்றியும் சொன்னேன். அதற்கு அவர், ‘என்னால அவங்கள ஒண்ணும் செய்ய முடியல. நான் சொன்னாலும் கேட்க மாட்டாங்க’ என்றார். எதுவும் செய்ய முடியாத இயலாமை உள்ளவரை விட ‘சக்தி’யை நம்புவதுதான் நல்லது என்று அன்றைக்கு முடிவு செய்தேன்.’’

ஒருவர் கைது செய்யப்பட்டதை பட்டாசு வெடித்துக் கொண்டாடுவது சரியா?

‘‘கருணாநிதி குடும்பத்தினர் சினிமாவுக்கு வந்தது தவறு இல்லை. சினிமாதுறை மொத்தமும் அவர்களுக்கே சொந்தம் என்று நினைத்தது தான் தவறு. சன் டி.வி.யின் சக்சேனா செய்த அராஜகம் கொஞ்சம்நஞ்சமல்ல. அரக்கன் அழிந்ததற்காகத்தானே பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடுகிறார்கள். அதைப் போலவே சக்சேனா கைதானதும் மகிழ்ச்சியாக வெடி வெடித்துக் கொண்டாடி இருக்கிறார்கள்.’’

சன் டி.வி. மீதான போலீஸ் அதிரடி நடவடிக்கைகளுக்கு நீங்கள்தான் காரணம் என்கிறார்களே?

‘‘தேர்தல் முடிவுகள் வந்ததும், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்து ராம.நாராயணன், சிவசக்தி பாண்டியன் இருவரும் ராஜினாமா செய்துவிட்டனர். து ணைத் தலைவரான என்னை தற்காலிகத் தலைவராக பொறுப்பு ஏற்கவேண்டும் என்று சொன்னார்கள். சன் டி.வி.யால் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டும் என்ற என் போராட்டத்தைத் தொடர நீங்கள் சம்மதித்தால் தற்காலிகத் தலைவர் பதவியில் உட்காருவேன் என்றேன்... அவ்வளவுதான்.’’

தி.மு.க. ஆட்சியால்தான் சினிமா அழிந்தது என்று சொல்வது சரியாகத் தெரியவில்லையே...?

‘‘கடந்த ஒன்றரை வருடத்தில் 180 படங்கள் ரிலீஸ் ஆகி இருக்கின்றன. இதில் சன் டி.வி.யின் படங்கள் ஒன்பது. கருணாநிதியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களின், நிறுவனங்களின் படங்கள் இருபத்தொன்று. கலைஞர் கதை வசனம் எழுதிய படங்கள் மூன்று. இந்தப் படங்களை ஒவ்வொரு விநியோகஸ்தரையும் கூப்பிட்டு தலையில் க ட்டினார்கள். இதுதான் ஏரியா, இதுதான் விலை என நிர்ணயம் செய்து தள்ளினார்கள். இந்தப் படங்கள் நீங்கலாக மற்ற 156 படங்களும் சிறு படங்கள். சிறிய தயாரிப்பாள ர்கள் கடன் வாங்கி எடுத்த படங்கள். இந்தப் படங்களை ரிலீஸ் ஆக விடாமல், அப்படியே ரிலீஸ் ஆனாலும் அவர்கள் சொல்லும் நேரத்தில் தூக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. இதனால் ஐநூறு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இதுமட்டும் அல்ல, இனி தயாரிக்கப்படுகிற சிறிய தயாரிப்பாளர்களின் படங்களுக்கு விநியோகஸ்தர்கள் கிடைக்கவும் மாட்டார்கள். காரணம், விநியோகஸ்தர்கள் கடந்த கால ஆட்சியினரால் அழிக்கப்பட்டுவிட்டார்கள். போண்டியாகிவிட்டார்கள். படம் எடுப்பவர்கள் அவர்களே இனி விநியோகஸ்தர்களாக மாற வேண்டியதுதான். கடந்த ஆட்சியில் அடித்து, உதைத்து அவமானப்படுத்தப்பட்டதால் ஒதுங்கி விட்டவர்கள், பாதிக்கப்பட்டவர்கள்தான் இப்போது புகார் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.’’

அண்மையில் நடந்த தி.மு.க. இளைஞர் அணிக் கூட்டத்தில் விஜய் பற்றியும் பேசப்பட்டதாமே?

‘‘என் காதுக்கும் அந்தச் செய்தி வந்தது. தி.மு.க.வின் படுமோசமான தோல்விக்கு விஜய்யை பகைத்துக் கொண்டதை மூன்றாவதாக வரிசைப் படுத்தி இருக்கிறார்கள். தி.மு.க.வின் ஆதரவாளர்களாக இருந்த பலர் விஜய்யின் அறிக்கைக்குப் பின்னர் தி.மு.க.வை உதறிவிட்டுப் போனதை மாவட்டச் செயலாளர்கள் எடுத்துச் சொன்னார்களம்.’’



விஜய்யை நீங்கள்தான் இயக்குவதாகச் சொல்லப்படுகிறதே?

‘‘நான் இயக்குவதையே விட்டுவிட்டேன். அவரை எப்படி இயக்கமுடியும்? 
அவருக்கு என்னை விட அரசியல் மிக நன்றாகத் தெரியும். உலக அரசியலும், உள்ளூர் அரசிய லும் அவருக்கு அத்துபடி. எந்த மாதிரியான அரசியல் சீரழிவுக்கு, எந்த மருந்து கொடுத்தால் சரியாகும் என்பதைத் தெரிந்து வைத்திருக்கிறார். 

அரசியலில் அவர் எனக்குத் தலைவர். அவர் என்னுடைய மகன், அவரை சினிமாவில் அறிமுகம் செய்தவன் என்பதால் ஆசிரியர். அவ்வளவுதான். மற்றபடி நான் மக்கள் இயக்கத் தொண்டன். ‘புரட்சித் தலைவி அம்மாவுக்கு நாம் ஆதரவு தர வேண்டும். தி.மு.க.வைத் தோற்கடிக்க வேண்டும்’ என்று அவர்தான் உத்தரவிட்டார். அதன் படி, மக்கள் இயக்கத்தினருடன் சேர்ந்து நான் தேர்தல் பணியாற்றினேன்.’’

மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறுவது எப்போது? உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடும் எண்ணம் இருக்கிறதா?

‘‘விஜய்க்கோ, எனக்கோ உடனே அரசியலுக்கு வந்து சாதிக்க வேண்டும் என எதுவும் இல்லை. மக்களுக்கு நல்லது செய்கிறவர்களுக்குத் துணையாக இருக்க வேண்டும் என்பதுதான் ஆசை. சமூகப்பணி செய்வதற்கு அந்தந்த ஊர்களில் அங்கீகாரம் வேண்டுமல்லவா? அவர்களுக்கு ஏதாவது செய்ய நினைக்கிறார் விஜய்’’ என்று முடித் துக்கொண்டார் எஸ்.ஏ.சி.

- குமுதம் ரிப்போட்டர் 



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ஒயின் ஷாப் ஊழியர் தயாரிப்பாளரான கதை - வெளிவராத பகீர் பின்னணி 


நமது அடிமைச் சங்கிலியை அறுத்தெறிவதற்கான காலம் இன்று இல்லாமல் போகலாம். நாளை... நாளை மறுநாள்...’ 

நீக்ரோ இன மக்கள் தங்கள் விடுதலைக்காகப் பாடிய இந்தப் பாடல் தான், தற்போது தமிழக திரையுலகினருக்கு சுதந்திர கீதமாகியிருக்கிறது.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தால் தான் பட்ட வேதனைகளை இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரின் கவனத்திற்குக் கொண்டு சென்றார் செல்வராஜ். இதன்பிறகு பதிவு செய்யப்பட்ட புகாரில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சக்சேனா கைது செய்யப்பட்டார். சக்சேனா கைது செய்யப்பட்டதை விட, அவருக்கு ‘ஆல் இன் ஆலாக’ இருந்த ஐயப்பன் கைது செய்யப்பட்டதுதான் திரையுலகினருக்கு இனிப்பூட்டும் செய்தி.

இந்நிலையில், ஐயப்பன் மீதான புகார்கள் அணிவகுக்க ஆரம்பித்து விட்டன. ‘எந்திரன்’ பட விநியோகத்தில் ஒரு கோடியே ஐம்பத்தைந்து லட்சத்தைத் தராமல் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் ஐயப்பன் ஏமாற்றிவிட்டார் என தியேட்டர் உரிமையாளர் சங்க இணைச் செயலாளர் ஸ்ரீதர், கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகார், அடுத்த பரபரப்புக்கு அடிபோடப்பட்டது. 

இந்த விவகாரம் குறித்து திரையுலக வட்டாரத்தில் விசாரித்தோம். 

“தேனி மாவட்டம் குச்சனூர்தான் இவரது பூர்வீகம். சிறுவயதிலேயே பிழைப்புத் தேடி மதுரை திருமங்கலம் வந்துவிட்டார். சந்தைப்பேட்டையில்தான் குடியிருந்தார். வறுமையின் காரணமாக தனது பள்ளிப்படிப்பைக் கூட ஐயப்பன் முடிக்கவில்லை. திருமங்கலத்தில் உள்ள மீனாட்சி தியேட்டரில் டிக்கெட் கொடுக்கும் வேலை பார்த்தார். லோடு மேன், ஆட்டோ ஓட்டுறது என கிடைக்கும் வேலைகள் எல்லாம் செய்து வந்தார். முன்னாள் சபாநாயகருக்கு நெருக்கமான அரசியல் புள்ளியின் ஒயின் ஷாப்பில் வேலை பார்த்தார். அவருடன் ஏற்பட்ட நெருக்கம் காரணமாக சின்னச் சின்ன பஞ்சாயத்துகளில் ஈடுபட்டார். அதன் பின்னர் மதுரையில் பரோட்டா கடை நடத்தி வந்தார். அவர் பெயரே ‘பரோட்டா கடை’ ஐயப்பன்தான். இடையிடையே கட்டப்பஞ்சாயத்து, அடிதடி என உள்ளூர் அளவில் குட்டி தாதாவாக மாறினார்.

கொஞ்சம் பணப்புழக்கம் ஏற்பட்டவுடன் சந்தைப்பேட்டையில் இயங்கி வந்த கேபிள் டி.வி.யை ‘லீஸுக்கு’ எடுத்து நடத்தினார். அப்போது சுமங்கலி கேபிள் நெட் வொர்க்குடன் தொடர்பு ஏற்பட்டது. அதன்பின்னர் பலரிடம் பணத்தை வாங்கி மோசடி செய்துவிட்டு சென்னைக்கு ஓடிவிட்டார். மதுரையில் ஏமாற்றிய பணத்தை சினிமா புள்ளிகள் சிலருக்கு வட்டிக்குக் கொடுத்து வந்தார். வட்டி கட்ட முடியாத சினிமா புள்ளிகளை மிரட்டி அந்தப் படங்களை, தானே ரிலீஸ் செய்து வந்தார். இந்நிலையில், தென்சென்னை தி.மு.க. முக்கிய பிரமுகர் ஒருவரின் ‘அன்பு’ கிடைக்க, ஏறுமுகம் தொடங்கியது.

சினிமா தொழிலில் சிறிய பட்ஜெட் படங்களை விநியோகம் செய்யத் தொடங்கினார். ஏற்கெனவே இருந்த கேபிள் தொடர்பைப் பயன்படுத்தி, சக்சேனாவை நட்பாக்கிக் கொண்டார். அதன் பின்னர் அவர் வாழ்க்கையில் பணம் கொட்ட ஆரம்பித்தது. தான் ஃபைனான்ஸ் செய்யும் படங்களின் சேட்டிலைட் உரிமையை சன் டி.வி.க்கு குறைந்த விலையில் வாங்கிக் கொடுத்தார். இதைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் எதைச் சொன்னாலும் செய்து முடிக்கும் வல்லமை ஐயப்பனுக்கு வந்தது.

சன் பிக்சர்ஸ் புதிதாக எந்தப் படத்தை வாங்கினாலும் கதை கேட்பது, பணத்தை முடிவு செய்வது எல்லாம் ஐயப்பனிடம் விடப்பட்டது. அடிமாட்டு விலைக்குப் படத்தைப் பேசுவது சன் டி.வி.யின் பழக்கம். ஐயப்பன் கும்பல் கதை கேட்கும் லட்சணம் தயாரிப்பாளர்களை ரொம்பவே நோகடிக்கும்.



படத்தை சன் டி.வி.க்கு விற்க வருகிறவர்கள் கதை பற்றிச் சொல்லும்போது, ஐயப்பனும், அவரது அடியாட்களும் கால் மேல் காலைப் போட்டுக் கொண்டு, ‘நீ என்ன கதை சொன்னாலும் சன் டி.வி. மனசு வைத்தால்தான் ஓடும். கொடுக்கற காசை வாங்கிட்டுப் போ’ என மிரட்டுவார். படத்திற்காக செலவு செய்த தொகையைவிட பலமடங்கு நஷ்டத்திற்குப் படத்தைக் கொடுத்துவிட்டு நொடிந்துபோன தயாரிப்பாளர்கள் ஏராளம்.

அது மட்டுமல்ல... படத்தை விற்க ஐயப்பனை தனியாக கவனிக்க வேண்டுமாம். ஒரு தேங்காய் உடைக்கணும் என்றால், ஒரு கோடி ரூபாய் கொடுக்கணுமாம். 

ஒரு படத்துக்கு இவ்வளவுதான் ரேட் என ஐயப்பன் குறித்துவிட்டால், அதை மீறி யாரும் எதுவும் பேச முடியாது’’ என்றனர்.

பிரபல தயாரிப்பாளர் ஒருவர் ஐயப்பனின் திருவிளையாடல் குறித்து விவரித்தார்...

‘‘சினிமா தயாரிப்பாளர் சங்கத்தில் தேர்தல் நடந்தபோது ராம.நாராயணனை எதிர்த்துப் போட்டியிட்டவர்கள் மிரட்டப்பட்டனர். தேர்தல் அன்று ஓட்டுப் பெட்டியை ரோட்டில் போட்டு சாகசம் செய்ததில் ஐயப்பனுக்கும் பங்கு உண்டு.

ஒருமுறை தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுவில் வயதில் மூத்த ஒரு தயாரிப்பாளர், ‘டி.வி.க்களுக்குக் கட்டுப்பாடு விதிக்க வேண்டும். சன் டி.வி.க்கு மட்டும் அதிகமான வி ளம்பரம் போவது சரியில்லை’ என காட்டமாகப் பேசினார். 

கூட்டம் முடிந்து வெளியே வந்த அந்தத் தயாரிப்பாளரை வயது வித்தியாசம் பார்க்காமல் அடித்து உதைத்தார் ஐயப்பன். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் நிழலாகவே வலம் வந்தவர் ஐயப்பன். சக்சேனாவுக்காக செக்கர்ஸ் ஓட்டலை அடித்து நொறுக்கியதும் ஐயப்பனின் சகாக்கள்தான். 

இவரைப் போலவே இன்னும் மூன்று பேர் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அடியாட்கள் குழுவின் தலைவர்களாக இருக்கிறார்கள். இவர்களையும் கைது செய்தால்தான் திரையுலகம் நிம்மதிப் பெருமூச்சுவிடும்’’ என்றார் கொதிப்போடு. 

‘சக்சேனாவிற்கு இவர் செய்து கொடுத்த காரியங்களுக்கு நல்ல பலன் கிடைத்தது. கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு கார், சென்னை அலுவலகத்தில் 12-க்கும் மேற்பட்ட சொகுசு கார்கள், பங்ளாக்கள் என உச்சத்திற்கே சென்றுவிட்டார் ஐயப்பன்.

இவரது கதையை டி.வி. சீரியலாக எடுத்தாலே சன் டி.வி.யில் பத்து வருடத்துக்கு ஒளிபரப்பலாம்’ என்று அடுக்கிக் கொண்டே போகிறார் அந்தத் தயாரிப்பாளர்.

ஆ.விஜயானந்த், வெற்றிப்பாண்டி

- குமுதம் ரிப்போட்டர் 



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

சவுக்கு   
வெள்ளிக்கிழமை, 15 ஜூலை 2011 14:42

 

1992ல் நாடோடித் தென்றலில் பாரதிராஜா அறிமுகப் படுத்திய இந்த ஸ்ரீவள்ளி என்கிற ரஞ்சிதா தமிழ்த்திரையுலகில்  அறிமுகமானாலும், தமிழ், தெலுங்கு, மலையாளம் என 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

 

திரைத்துறையில் உள்ள பெண்களுக்கு இருக்கும் அற்ப ஆயுளைப் போல, இவரும், சிறிது காலத்திற்குப் பிறகு, சின்னத் திரையில் தலை காட்டி விட்டு, திரையுலகை விட்டு விலகியே இருந்தார்.

 K14l

கடந்த ஆண்டு மார்ச் 2010ல் புலனாய்வு பத்திரிக்கை என்று தன்னை அழைத்துக் கொள்ளும், நக்கீரனும், சன் டிவியும், தினகரனும், ரஞ்சிதா நித்யானந்தா என்ற சாமியாரோடு நெருக்கமாக இருக்கும் காட்சிகளை ஒளிபரப்பிய பிறகு, ரஞ்சிதாவின் வாழ்க்கை சரி செய்ய முடியாத வகையில் புரட்டிப் போடப்பட்டது.

 

சன் டிவி ஒளிபரப்பிய அந்தக் காட்சிகள், குடும்பத்தோடும், குழந்தைகளோடும் உட்கார்ந்து பார்க்க முடியாத வகையிலான மோசமான காட்சிகள்.   ப்ரைம் டைமில், அனைவரும் செய்தி பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்தக் காட்சிகளை சன் டிவி ஒளிபரப்பியது.

 

நக்கீரன் இதழோ, நடிகை திரிஷா குளிக்கும் காட்சியை எப்படி ஃப்ரேம் ஃப்ரேமாக போட்டு காசு பார்த்ததோ அதே போல, இந்தக் காட்சிகளையும் வண்ணப் படங்களாக போட்டு காசு பார்த்தது. தினகரன் மற்றும் தமிழ் முரசு நாளேடும் இதற்கு விதிவிலக்கல்ல.

 

இந்தச் சமூகம் சாமியார்களிடம் வாழ்வுக்கான தீர்வுகளைத் தேடி செல்லும் வரை பல நித்யானந்தாக்கள் உருவாகிக் கொண்டுதான் இருப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.   ஆன்மீகம் என்பது, இன்று பல்லாயிரம் கோடிகளை அள்ளித் தரும் ஒரு வளமான வியாபாரம். தனது சிந்தனைகளை நிறுவனமயப்படுத்தி வியாபாரம் ஆக்காத யு.ஜி.கிருஷ்ணமூர்த்தியைத் தவிர, அத்தனை சாமியார்களும் வியாபாரிகளே… இன்று பல்லாயிரக்கணக்கான கோடிகளில் புரண்டு கொண்டு ஆன்மீக வியாபாரம் நடத்திக் கொண்டிருக்கும், ஜக்கி வாசுதேவ் மற்றும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் உட்பட. நமது பிரச்சினைகளுக்கான தீர்வை நம்மை விட வேறு யார் கண்டறிந்து விட முடியும் ? பிரச்சினைகளுக்கான எளிதான இன்ஸ்டன்ட் தீர்வை தருவார்கள் என்று இந்த சாமியார்களை நம்பினால் அவர்கள் ஏமாற்றத் தானே செய்வார்கள் ?

 

நித்யானந்தாவை நம்பி அவர் பின்னால் அலைவதும், அவருக்கு நன்கொடை வழங்குவதும், அவர் ஒரு பெண்ணோடு நெருக்கமாக இருந்தார் என்று தெரியவந்ததும், அவர் படத்தை செருப்பால் அடித்து, அவர் ஆசிரமத்தை கொளுத்துவதும், மூடர்கள் செய்யும் செயலல்லவா ?

 7

இந்தச் சாமியாரை அம்பலப் படுத்துகிறேன் பேர்விழி என்று, ரஞ்சிதா என்ற பெண்ணை அவமானப்படுத்துவது எந்த வகையில் நியாயம் ?

 

நேற்று வெளிவந்த குமுதம் ரிப்போர்ட்டர் இதழில், நக்கீரன் காமராஜின் புகைப்படத்தோடு, ஜாஃபர் சேட் தொடர்பாக வந்த ஒரு கட்டுரைக்காக இரண்டு நாட்களாக தையா தக்கா என்று குதித்திருக்கிறார் காமராஜ்.   அவரும் ஜாபரும் கூட்டு சேர்ந்து கொண்டு, கடந்த ஆட்சியில் ஆட்டம் போட்டார்கள் ? புகைப்படத்தோடு ஒரு செய்தியை வெளியிட்டதற்காக இப்படி குதிக்கும் காமராஜ், ரஞ்சிதாவை இப்படி சித்தரிக்கையில் சிந்தித்திருக்க வேண்டாமா ?

 

நாமும் ஒரு பெண் வயிற்றில்தானே பிறந்தோம்…. ?   எத்தனை பெண்களோடு பழகுகிறோம் ?   ஒரு பெண் நடிப்பை தொழிலாக கொண்டுள்ளார் என்ற ஒரே காரணத்துக்காக, அவர் படுக்கையறையில் எட்டிப் பார்க்கும் உரிமையை நமக்கு யார் கொடுத்தது ? இந்தக் காட்சிகள் ஊடகங்களில் வெளியான உடனேயே சவுக்கு, “எனக்கு வேற வழி தெரியல“ என்ற சிறுகதை மூலமாக தனது ஆதங்கத்தை பதிவு செய்திருந்தது.

 

நேற்று மாநகர ஆணையாளரிடம் தினகரன், நக்கீரன் மற்றும் சன் டிவி மீது புகார் அளித்துள்ளார் ரஞ்சிதா.   புகார் அளித்து விட்டு, பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த ரஞ்சிதா, தமிழ்நாட்டுக்கு வந்தால் தான் கைது செய்யப் பட்டு விடுவோம் என்று மிரட்டப் பட்டதாக தெரிவிக்கிறார். இவரை மிரட்டியது தினகரன், நக்கீரன் மற்றும் சன் டிவி குழுமத்தைச் சேர்ந்தவர்களே என்று கூறுகிறார்.

 

நேற்று பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த நித்யானந்தா, 100 கோடி ரூபாய் கேட்டு மிரட்டி அந்தப் பேரம் 60 கோடிக்கு படிந்ததாகவும், நேற்று தெரிவித்தார். நித்யானந்தா சிடி வெளியானது எப்படி என்று ஜுன் மாதத்தில் வெளிவந்த சவுக்கு கட்டுரையில் உள்ள தகவல்களை நித்யானந்தாவின் கூற்று உண்மையாக்கியிருக்கிறது.

 

நித்யானந்தா ஒரு தந்திரக்கார சாமியார் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது.   இன்றைக்கு ரஞ்சிதாவுக்கு ஓரளவுக்கு ஆதரவு வரத் தொடங்கியிருந்தாலும், மார்ச் 2010ல் ரஞ்சிதாவின் நிலைமை என்ன என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

 

இந்த காட்சிகள் ஊடகங்களில் வெளியாகிய உடன் யார் மேல் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் ?   இந்தக் காட்சியை ஒளிபரப்பிய ஊடகங்கள் மீது தானே ?   ஆனால், ரஞ்சிதா மீதும், நித்யானந்தா மீதும், சென்னையில் சில விஷமக் கார வழக்கறிஞர்கள் கண்ணாயிரத்திடம் புகார் அளித்தனர். அந்தப் புகாரில், நித்யானந்தா ஏமாற்றி விட்டார் என்றும், ஆபாசமாக நடந்து கொண்டு தமிழ்க் கலாச்சாரத்தை சீரழித்து விட்டார் என்றும், அந்தப் புகாரில் கூறப்பட்டிருந்தது. இவ்வாறு புகார் கொடுக்கச் சென்ற வழக்கறிஞர்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் எப்படி இருக்கிறார்கள் என்பது சவுக்குக்கு நன்றாகத் தெரியும். ஆனால், பரபரப்புக்காக இது போன்ற ஒழுக்க சீலர் வேஷம் போட்டு, தமிழ்க் கலாச்சாரம் சீரழிந்து விட்டது என்று ஊளையிடுகிறார்கள்.

 

அந்தப் புகார் அப்போது கமிஷனராக இருந்த கண்ணாயிரத்தைச் சென்று அடைவதற்கு முன்பாகவே, கல்யாணி என்ற வழக்கறிஞர், சன் டிவி, நக்கீரன், தினகரன் மற்றும் தமிழ் முரசு ஊடகங்களின் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரை சரக்கடித்து விட்டு வாயைத் துடைக்கும் டிஷ்யூ பேப்பராக பயன்படுத்திய கண்ணாயிரம், வழக்கறிஞர்கள் கொடுத்த புகாரின் மீது மட்டும் உடனடியாக நடவடிக்கை எடுத்தார். வழக்கு பதிவு செய்தார்.  

dinakaran_complaint_1_Page_1

nakkheran_complaint_Page_1

nakkheran_complaint_Page_2

 

sun_tv_complaint_1_Page_1


sun_tv_complaint_1_Page_2

 

வழக்கு பதிவு செய்ய உத்தரவிடும் முன்பாக, கண்ணாயிரத்தின் தனிப்பட்ட நடவடிக்கைகளை இது போல படம் பிடித்துக் காட்டினால் எப்படி இருந்திருக்கும் என்பதை சிந்தித்துப் பார்த்திருக்க வேண்டும்.   அவருக்கு மிகவும் பிடித்தமான ஸ்காட்ச் விஸ்கியை பருகிய பிறகு, அவர் அடித்த கூத்துக்களை படம் பிடித்து சன் டிவியில் ஒளிபரப்பினால் எப்படி இருந்திருக்கும் என்பதை சிந்தித்துப் பார்த்திருக்க வேண்டாமா ?

 RAJENDRAN

ஆனால், தாமதமாக இருந்தாலும் தற்போதாவது ரஞ்சிதா புகார் கொடுக்க முன் வந்தார் என்பதில் மகிழ்ச்சியே… இந்தப் புகாரின் மீது எடுக்கப் படும் நடவடிக்கைகைள் தனி நபர்களின் அடிப்படை உரிமைகளை மீறி ஆபாசமான செய்திகளை வெளியிடும் ஊடகங்கள் ஒரு முறைக்கு இரு முறை யோசிக்க வேண்டும்.

 ranjitha-38240-680x1024

எழுத்தாளர் ஞாநி ஓ பக்கங்களில் ரஞ்சிதா விவகாரம் தொடர்பாக, ரஞ்சிதாவுக்கு எழுதியிருக்கும் கடிதத்தை பிரசுரிப்பது பொருத்தமாக இருக்கும்.

 

அன்புள்ள ரஞ்சிதாவுக்கு,  முதலிலேயே  உங்களுக்கு  ஒன்றைத்  தெளிவுபடுத்த  விரும்புகிறேன்.  வீடியோவில் காட்டியபடி  நித்யானந்தனுடன்  நீங்கள்  கொண்டிருந்த  உறவை  நான் ஆபாசமானதாகக்  கருதவில்லை.  அதில் எந்தக்  குற்றமும்  நீங்கள்  செய்யவில்லை. அந்த  வீடியோவை  ஒளிபரப்பிய  தொலைக்காட்சியை  நடத்துபவர்களாகட்டும், வெளியிட்ட  பத்திரிகையாளர்களாகட்டும்,  பார்த்த  எண்ணற்ற  பொதுமக்களேயாகட்டும்  அவர்கள்  யார்  வீட்டுப்  படுக்கையறைக்குள்  கேமராவைக் கொண்டு  போய்  வைத்தாலும்,  அது  பதிவு  செய்யக் கூடிய  காட்சி  இதே  போலவோ இதைவிட  ‘கிளுகிளுப்பாகவோ’ தான்  இருக்க  முடியும்.  ஆண் & பெண்  பாலுறவு என்பது  அப்படித்தான்  இருக்கும்.

தனியறைக்குள்  நடந்ததை  படம்  எடுத்துக்  கொண்டு  வந்து  ஓயாமல்  36  மணி  நேரம் காட்டியதும்,  அதை  அச்சிட்டு  விற்று வியாபாரம்  செய்ததும்தான்  ஆபாசம் என்று நான் கருதுகிறேன்.

உங்களுடைய  தனி நபர்  உரிமைகள்  மிக மோசமாக  மீறப்பட்டிருக்கின்றன.  நீங்கள்விரும்பும்  ஆணுடன்  உறவு  கொள்வது  முழுக்க  முழுக்க  உங்கள்  உரிமை.  தங்களை அது பாதித்தாலன்றி,  அதில் தலையிடவோ,  விமர்சிக்கவோ  யாருக்கும்  உரிமை கிடையாது.  அப்படிப்  பார்த்தால்  அது  அதிகபட்சம்  உங்கள்  குடும்பப்  பிரச்சினையாக இருக்கலாமே  தவிர  சமூகத்தின்  பொதுப்  பிரச்சினையே  அல்ல.

இதுவே  மேலை  நாடாக இருந்தால்,  நீங்கள் உங்கள்  அந்தரங்கத்தில் அத்துமீறியதற்காக  அத்தனை  ஊடகங்கள், பத்திரிகைகள்  மீதும் வழக்கு  தொடுத்து  பெரும்தொகைகளை  இழப்பீடாகப்  பெறுவதற்கான  சட்டப்பூர்வமான  உரிமைகள் தெளிவாக  இருக்கின்றன.  நம் நாட்டில்  அவையெல்லாம்  இன்னும்  சரியாக வடிவமைக்கப்படவில்லை  என்பது  வருத்தத்துக்குரியது.

நித்யானந்தா என்ற ஆன்மீக வாதி, ஊருக்கெல்லாம்  பிரும்மச்சரியத்தை போதித்துவிட்டு  தான்  அதைப்  பின்பற்றாத ஒரு போலி மனிதன் என்று அம்பலப்படுத்த ஒருவர்  விரும்பினால்,  அதற்கு  அவருக்கு  முழு  உரிமை இருக்கிறது.  அரசியல்  முதல்  ஆன்மீகம்  வரை, டி.வி.  முதல் பத்திரிகை  வரை, சொல்  ஒன்றும்  செயல் ஒன்றுமாக பொது  வாழ்க்கையில் ஈடுபட்டிருப்போரை அம்பலப்படுத்த  நடக்கும்  முயற்சிகளை நான் ஆதரிப்பேன்.

அதே  சமயம்  அந்த  வீடியோவில்  உங்கள்  முகத்தை  மறைத்துவிட்டு வெளியிடுவதுதான்  நியாயமானதாகவும் நேர்மையானதாகவும் இருந்திருக்க முடியும்.  ஏனென்றால்  அம்பலப்படுத்தப்பட வேண்டிய  போலி  நீங்கள் அல்ல. இன்னொருவர்தான்.

அந்த  வீடியோவில் உங்களுக்கு  பதில்  வேறு  ஏதோ  ஊர்  பேர்  தெரியாத பெண் அல்லது  ஏதோ  ஒரு  அதிகாரி,  தொழிலதிபர்,  அலுவலர் வீட்டுப்  பெண்இருந்திருந்தால்  இந்த  அளவு  மீடியா  ஆனந்த  தாண்டவம்  ஆடியிருக்காது. நடிகை என்பவள்  நம்  சமூகத்தில்  இன்னமும்  பெருவாரியாகப் பலராலும் தேவடியாளாகவேக்  கருதப்படுகிறாள். அவளைத்  துகிலுரியவும்,  அதை ரசிக்கவும் கொன்டாடவும்  மனநிலை  இருக்கிறதே  தவிர, அவளை  மதிப்பதில்லை. புவனேஸ்வரி  கைதின்போது  வெளியான  அவதூறு செய்திகளுக்காக  வெறியாட்டம் ஆடிய  நடிகர்  சங்கமும்  நடிக & நடிகைகளும்  இப்போது  உங்கள்  விஷயத்தில்  உரத்த மௌனம்  சாதிப்பது  வெட்கக்கேடானது.  நீங்கள்  ஒன்றும் விபசாரம்  செய்ததாக அந்த  வீடியோ  சொல்லவில்லை.  உங்களுக்கு  விருப்பமான ஒருவருடன் உறவுகொள்கிறீர்கள்.  அவ்வளவுதான்.

யாருடன்  உறவு  கொள்ள  வேண்டும்  என்பது  முழுக்க  முழுக்க  உங்கள் உரிமை. ஆனால்  என்னைப்  போன்றவர்களுக்குப்  புதிராக  இருப்பதெல்லாம்  உங்களைப் போன்ற  பல பெண்கள்  ஏன் சாமியார்களிடம்  போய்  சிக்கிக்  கொள்கிறீர்கள் என்பதுதான்.  இப்போது  கூட ஒரு உயர் பெண் அதிகாரி, ‘சுவாமிஜி  இந்த சோதனையை எல்லாம் கடந்து வருவார்’ என்று சொன்னதாகக் கேள்விப்பட்டேன்.

பலருக்கும்  அப்படிப்பட்ட  முட்டாள்தனமான  பக்தி இருக்கிறது.  அப்படி  இந்தசாமியார்கள் நமக்கு அளிப்பதாகக் கூறும் மன நலத்துக்கும் உடல் நலத்துக்கும்அவர்கள்  சொல்லும் வழிகள்  மூன்றுதான். யோகா, மூச்சுப்  பயிற்சி, தியானம்.இந்த  மூன்றையும்  கற்க  கடவுளும்  தேவையில்லை.  மதமும்  தேவையில்லை. சடங்குகளும்  தேவையில்லை.  கிருஷ்ணமாச்சாரியாரின்  யோக  மந்திரம்  போன்றபல  அமைப்புகள்  ஒரு பள்ளிக்கூடம்  போல  இவற்றை  சொல்லிக்  கொடுத்துவிடுகின்றன.  கடவுள் நம்பிக்கையற்றவர்  என்று தன்னைக் கூறிக் கொள்ளும் நம்முதலமைச்சர் கூட இவற்றால் பயனடைய முடிந்திருக்கிறது.

நீங்கள்  எங்கே  என்ன  படித்தீர்கள்,  உங்கள்  குடும்பப்  பின்னணி  என்ன என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால்  பெருவாரியான  ஆண்களும் பெண்களும்  சாமியார்களிடம்  தஞ்சமடைவதற்குக்  காரணம்,  நம் குடும்பங்களும்கல்வி முறையும்தான்.

பத்து  வாழ்க்கைத்  திறன்கள் நம்  ஒவ்வொருவருக்கும்  தேவை  என்று உலக  சுகாதாரநிறுவனம்  வரையறுத்திருக்கிறது.  தன்னை அறிதல்,  தன்னைப் போல்  பிறரைஉணர்தல்,  இன்னொருவருடன்  சரியாக உறவாடக்  கற்றல், உரையாடக்  கற்றல்,எதையும்  கேள்வி  கேட்கப்  பழகுதல், எதற்கும்  நாமே  பதில்  தேடப்  பழகுதல், தெளிவாக  முடிவெடுத்தல்,  சிக்கல்களை  அவிழ்த்தல்,  உணர்ச்சிகளை உணர்ந்து கொள்ளுதல்,  அழுத்தங்களை  லேசாக்குதல்  என்ற  பத்து  வாழ்க்கைத் திறன்களைப் பழகிவிட்டால் வாழ்க்கை இனிமையாகிவிடும்.

இந்த  வாழ்க்கைத்  திறன்களை  நம்  குடும்பத்தில்  கற்கலாம்.  பள்ளியில்  கற்கலாம். ஆனால்  அதற்கு  மாறாக  ஒவ்வொரு பிரச்சினை  வரும்போதும்  கடவுள்,  கோவில், சாமியார்,  மடம்  என்று  குடும்பமே  நம்மை  வேறு  திசைக்கு  இழுத்துப் போய் விடுகிறது. செக்ஸ்  எப்படி  முழுக்க  முழுக்க  அந்தரங்கமான  விஷயமோ  அதே போல  கடவுள்  நம்பிக்கை  என்பதும்  முழுக்க  முழுக்க  அந்தரங்கமானதாக  மட்டுமே இருந்தால்  போதும்  என்ற  பார்வையை  நாம் பெறுவதில்லை.

இதன் விளைவு உங்களைப் போன்றவர்கள் தன்னைத்தானே நம்பாமல்,சாமியார்களை நம்பத் தொடங்குகிறீர்கள்.

பல வருடம் நம்முடன் பழகிய பெற்றோரோ, உறவினரோ, நண்பர்களோ,ஆசிரியர்களோ  காட்டாத  வழியை  முன்பின்  தெரியாத  ஒரு  சாமியார்  காட்டுவார் என்பதே  பெரும்  மூட  நம்பிக்கைதான்.  இதைத்தான் தங்கள் முதலீடாக சாமியார்கள்வைத்துக் கொள்கிறார்கள்.

பேச்சுத்  திறமை  இருந்தால்  அரசியலுக்குப் போய்  பிழைத்துக்  கொள்ளலாம்  என்ற நிலை இப்போது  இல்லை. அங்கே வாய்ப்புகள்  குறைந்துவிட்டன. குடும்பத்துக்குள்ளேயே  போட்டா போட்டி  போடும் அளவுக்கு நெரிசலாகிவிட்டது.

எனவே  சாமியாராவது  நல்ல  மாற்றுத் தொழிலாக  இருக்கிறது.  கொஞ்சம் யோகா,கொஞ்சம் தியானம், கொஞ்சம் சடங்கு, பத்து வாழ்க்கைத்  திறன்களிலிருந்தும் கொஞ்சம்  கிள்ளியெடுத்து  பேச்சில் தெளித்தல்,  இத்துடன்  காவி  காஸ்ட்யூம் சேர்த்தால்  சாமியார்  தயார்.  கறுப்புப்  பணத்தை  கொண்டு  வந்து  கொட்டத் தொழிலதிபர்கள்  தயாராக  இருக்கிறார்கள்.  அதனால்தான் எந்த சாமியாரும் பின்தங்கிய  ராமநாதபுரம்  மாவட்டத்துக்குப்  போவதில்லை.  ஈரோடு,  கோவை  என்று வளமான  பகுதிகளில்  மடம் வைக்கிறார்கள்.

அடுத்த  ஸ்டெப்  அரசியல்  செல்வாக்கு.  உங்கள்  நண்பர்  நித்யானந்தா  அதிலேதான் வழுக்கிவிட்டார்.  அரசியல்  செல்வாக்கு  இருக்கும்  எந்த சாமியாரும் இதுவரை அம்பலப்பட்டதில்லை.  பெரும்  கூட்டத்தை  திரட்டி  அரசியல்வாதிகளை பயமுறுத்தினால், கூட்டணிக்கு  வந்து விடுவார்கள்.  வீட்டுக்கே  அழைத்து  ஆசி கேட்பார்கள்.  ஒரு  கூட்டணி  சிக்கலானால்  இன்னொரு  கூட்டணி  அரசியலில் அமைப்பது  போல  இதிலும் அமைக்கலாம். அப்போது  எதிலாவது  சிக்கினாலும் வழக்கு சாட்சிகள்  கூட பல்டி அடிப்பார்கள்.

இந்த தந்திரங்களை  இன்னும் நித்யானந்தா  சரியாகப் பழகிக்  கொள்ளாததால் அடிபட்டுவிட்டார்.  கூட சேர்ந்து  நீங்களும் அடிபட்டிருக்கிறீர்கள்  என்பதுதான் பாவமாக இருக்கிறது.

சாவித்திரி முதல் காஞ்சனா,  கனகா,  நீங்கள்  வரை  நடிகைகளின்  வாழ்க்கை பெரும்பாலும்  சோகமும்  வேதனையும்  நிரம்பியதாகவே  முடிகின்றன.  அதற்குக் காரணம்  கல்வி  இல்லாதது, தப்பானவர்களையே நம்புவது,  எது  உண்மையான ஆனந்தம் என்ற  அறிவை  வளர்த்துக்  கொள்ளாதது,  தற்காலிக  மகிழ்ச்சிகளில் தன்னைத் தானே  தொலைத்துக்  கொள்வது  இவையெல்லாம் தான்.

ranjitha-18220-680x1024

உங்கள்  அனுபவங்களை  நீங்கள்  பகிரங்கமாகச்  சொல்ல  முன்வரவேண்டும்.அதிலிருந்து  வருங்கால  நடிகைகள்  மட்டுமல்ல,  ஒவ்வொரு  பெண்ணும்  கற்றுக்கொள்ள  நிறைய  பாடங்கள் இருக்கும்  என்று  நான்  நம்புகிறேன். நம்முடைய வாழ்க்கையை  இன்னொருத்தர் தீர்மானிக்க  விட்டுவிட்டால்  என்னவெல்லாம் கஷ்டங்கள்  ஏற்படும்  என்பதை ஒவ்வொருவரும்  உணர  வேண்டும்.  என்  வாழ்க்கை என் கையில்  என்ற  உறுதியோடு  நம்  சமூகத்தில்  ஒவ்வொருவரும்  வளர,  உங்கள் பங்களிப்பாக  உண்மைகளை  உரக்கச் சொல்லுங்கள்.

உங்களைச்  சூழ்ந்துவிட்ட  இழிவிலிருந்து  விடுதலை  பெற அது  ஒன்று தான்  வழி.

அன்புடன்

ஞானி

தற்போது, ரஞ்சிதா மற்றும் நித்யானந்தா கொடுத்துள்ள புகார்களின் மீது பாரபட்சமில்லாமல் விசாரணை நடத்தப் படுவதோடு மட்டுமல்லாமல், ரஞ்சிதா மற்றும் நித்யானந்தா மீது வழக்கு பதிவு செய்யச் சொல்லி உத்தரவிட்டும், வழக்கறிஞர் கல்யாணி அளித்த புகாரின் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் தன் கடமையில் இருந்த தவறிய காரணத்துக்காக அப்போதைய கமிஷனர் கண்ணாயிரத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்ப்பார்ப்பு.   ஜெயந்திரர் மீது துணிச்சலாக நடவடிக்கை எடுத்த ஜெயலலிதா, இதையும் செய்வார் என்று நம்புவோம்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

சன் டி.வி. அலுவலகத்திற்கு அனுமதியின்றி பெறப்பட்ட 323 தொலைபேசி இணைப்புகள் வழங்கப்பட்ட வழக்கில், பி.எஸ்.என்.எல். அதிகாரியின் வாக்குமூலம்தான்  தயாநிதியின் அமைச்சர் பதவியைப் பறிக்க காரணமாக இருந்ததாக சொல்கிறார்கள்.

தயாநிதி மாறன் ராஜினாமா செய்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு தொலைத்தொடர்புத் துறையின் டெல்லி அலுவலகத்திலிருந்து ஒரு விசாரணைக் குழு சென்னை  பி.எஸ்.என்.எல். கிளையில் பணியாற்றும் நாற்பதுக்கும் மேற்பட்ட அதிகாரிகளிடம் விசாரணை நடத்திவிட்டுச் சென்றது. 

இந்தப் பரபரப்பு அடங்குவதற்குள், சி.ஜி.எம். ஆக இருந்து ஓய்வு பெற்ற வேலுச்சாமியை சி.பி.ஐ. அதிகாரிகள் மூன்று நாட்கள் கேள்வி கேட்டு துளைத்து எடுத்தி ருக்கிறார்கள். ஒரு வழியாக இவரிடம் வாக்குமூலங்களை வாங்கிக்கொண்ட சி.பி.ஐ., தயாநிதியின் பக்கம் பார்வையைத் திருப்பியிருக்கிறது.

இந்த விசாரணையில் சிக்கிய வேலுச்சாமிக்கும், தயாநிதிக்கும் என்ன சம்பந்தம்? 

வேலுச்சாமி ஏதோ சாதாரண அதிகாரி என்று நினைத்துவிட வேண்டாம். முன்னாள் மத்திய இணை அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசனின் தங்கை கணவர். முன்னாள்  அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்துக்கு ‘ஆல்...இன்...ஆல்’  இந்த வேலுச்சாமி தான். 

சேலம் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் பல வருடங்களாக பொது மேலாளராகவும் பணி புரிந்திருக்கிறார். பணியில் மூத்த அதிகாரிகள் பலர் இருக்க ஜூனியரான இந்த  வேலுச்சாமி, வீரபாண்டியாரின் சிபாரிசில், அப்போதைய மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் தயாநிதி மாறனின் அரவணைப்போடு சி.ஜி.எம். ஆனார்.



குறுகிய காலத்திற்குள் உயர்ந்த பதவியைப் பிடித்த வேலுச்சாமி, தன் பதவியை தக்க வைத்துக்கொள்ள தி.மு.க.வின் தொழிற்சங்கப் பிரதிநிதிகளை கையில் போட்டுக்கொண்டு  ஆடாத ஆட்டம் இல்லை என்கிறார்கள் சக அதிகாரிகள்.  பதவி உயர்வை ‘ஓவர் டேக்’ செய்து வேலுச்சாமி பெற்றதை சுட்டிக்காட்டி அனுப்பிய புகார்களையும் தயாநிதி  குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டார்  என்றும் குமுறுகிறார்கள் பாதிக்கப்பட்ட அதிகாரிகள்.

இந்நிலையில், பதவி உயர்வு பெற்றுத் தந்த தயாநிதி மாறனுக்கு விசுவாசத்தைக் காட்டுவதற்காகவே, சன் டி.வி.க்கு 323 தொலைத்தொடர்பு இணைப்புகளை தாராளமாக  தாரைவார்த்திருக்கிறார் வேலுச்சாமி என்கிறார்கள். 

இந்த விவகாரத்தில் தொழில்நுட்ப ரீதியாக தயாநிதி சொன்னதை எல்லாம் முழு ஈடுபாட்டோடு செய்து முடித்து அவரின் பாராட்டைப் பெற்றிருக்கிறார் வேலுச்சாமி.

கடந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலில் இந்தத் தொலைபேசி இணைப்பு விவகாரம் எதிர்க்கட்சிகளால் பெரிதாகப் பேசப்பட்டது. .அப்போது, இந்த பிரச்னையில் இருந்து   தயாநிதி மாறன் விடுபடுவதற்கு வேலுச்சாமிதான் தோள் கொடுத்திருக்கிறார்.

‘தயாநிதி மாறன் வீட்டில் ஒரேயொரு தொலைபேசி இணைப்புதான் வேலை செய்கிறது. அதிலும் கூட மிகக் குறைவான அளவிற்குதான் பேசுகிறார்கள்’ என ஒரு  பொய்யான விஷயத்தை பொதுமேலாளராக இருந்த மீனலோச்சனியைக் கட்டாயப்படுத்தி எழுத்து மூலமாகப் பெற்றதே இந்த வேலுச்சாமிதான் என்கிறார்கள் விஷயம்  அறிந்தவர்கள்.

பிரச்னை பெரிதானபோது, அந்தக் கடிதத்தை முக்கிய ஆதாரமாக வைத்துதான் தயாநிதி தான் நிரபராதி என்றும், தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானவை  என்றும் கூறிவந்தார்.

பி.எஸ்.என்.எல். நிறுவனத்திடமிருந்து ஒருவர் புதியதாக ஒரு இணைப்பைப் பெற வேண்டும் என்றால் மாதக்கணக்கில் காத்துக்கொண்டிருக்க வேண்டும். பொதுமக்கள் எ ல்லோருக்கும் இதுதான் நடைமுறைச் சட்டம். அதோடு இணைப்பிற்காகத் தோண்டப்படும் குழிக்காக மாநகராட்சியிடம் பணம் கட்டி முன் அனுமதி பெற வேண்டும்.

ஆனால், தயாநிதி மாறனின் விஷயத்தில் இரவோடு இரவாக அவரது ‘போட் கிளப்’ வீட்டில் இருந்து சன் டி.வி. அலுவலகத்திற்கு ஒரே இரவில் சகல வேலைகளும்  முடிக்கப்பட்டு இருக்கின்றன. இந்த வேலையை மாநகராட்சிதான் செவ்வனே முடித்திருக்கிறது. அனுமதி வாங்காமலேயே இவ்வளவு பெரிய வேலையை நடத்தி முடித்தி ருக்கிறார்கள் மாறன் சகோதரர்கள் என்பதுதான் இதில் ‘ஹைலைட்’. விஷயம். 

இந்த விஷயங்களை எல்லாம் கலெக்ட் செய்த தொலைத்தொடர்புத் துறை குழு இதை அறிக்கையாக அமைச்சர் கபில்சிபல் வசம் கொடுத்தனர். இதையடுத்துதான் தயாநிதி  மாறனை ராஜினாமா செய்யச் சொன்னார்களாம். அதோடு சி.பி.ஐ. விசாரணையில் வேலுச்சாமி அனைத்து விஷயங்களையும் கொட்டியதோடு, அப்ரூவர் ஆக தயாராக  இருப்பதாகவும் சொல்லியுள்ளாராம். இதுவே இப்போது தயாநிதி மாறனுக்கு எதிரான விஷயமாக திரும்பியிருக்கிறது.

இந்த விவகாரம் தொடர்பாக பி.எஸ்.என்.எல். தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தைச் சேர்ந்த மதிவாணனிடம் கேட்டபோது, ‘‘ஆட்சி மாற்றம் நடக்காமல் இருந்திருந்தால், இந்த  மோசடி கேபிள் வயர்களைப் போல பூமிக்குள்ளேயே புதைந்து கிடந்திருக்கும். இந்த ஒரு மோசடியில் மட்டும் பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு ரூ.440 கோடிக்கு மேல் வ ருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து இந்த இழப்பைத் திரும்பப் பெற வேண்டும்’’ என்றார்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

16_07_2011_003_002-vallakkottai-sansena.jpg?w=640&h=585



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

2442531-saksena.jpg?w=640&h=366



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

எந்திரன் கதை திருட்டு விவகாரம்! கலாநிதி மாறன், சங்கர் கோரிக்கையை நிராகரித்தது நீதிமன்றம்!

kalanithimaaran-shangkar.jpgதனது ஜூகிபா கதையை அப்படியே திருடி, ஸ்கிரீன் பிளே செய்து, சினிமா சமாச்சாரங்களான பாடல் காட்சிகள்,சண்டைக்காட்சிகள், கிராபிக்ஸ் உத்திகள் போன்றவற்றை சேர்த்து எந்திரன் படத்தை டைரக்டர் சங்கர் இயக்கியிருக்கிறார். இந்தக் திருட்டுக்கதையை தயாரிப்பாளராக இருந்து படமாக வெளியிட்டிருக்கிறார் கலாநிதிமாறன், என்றெல்லாம் எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததோடு எந்திரன் படக்கதையை தனது கதை என்று அறிவிக்க வேண்டும் என்றும் இதற்கு இழப்பீடாக ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டுமென்றும் கோரிக்கை வைத்திருந்தார். 

மேலும் டைரக்டர் சங்கரும், தயாரிப்பாளர் தயாநிதிமாறனும் மோசடியாக கதையைத் திருடி கூட்டுச் சதி புரிந்து சுயலாபம் பார்க்கும் வகையில் நடந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் மீது பதிப்புரிமை சட்டப்படியும் மோசடிக்குற்றத்தின் அடிப்படையிலும் கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை காவல்துறை ஆணையராக இருந்த ராஜேந்திரனிடம் புகாரும் கொடுத்திருந்தார். 

அப்போது திமுக ஆட்சி நடந்ததால் திகைத்துப்போன போலீஸ் அதிகாரிகள், புகாரில் இருந்து கலாநிதிமாறனின் பெயரை நீக்கினால்தான் புகாரை பதிவு செய்ய முடியும் என்று தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து எழும்பூர் சிறப்பு மெட்ரோ பாலிடன் கோர்ட்டில் பிரைவேட் வழக்கு தொடர்ந்தார் தமிழ்நாடன். 

வழக்கை விசாரித்த நீதிபதி சிவகுமார், இதுகுறித்து கலாநிதி மாறனுக்கும், டைரக்டர் சங்கருக்கும் கோர்ட்டில் ஆஜராகும்படி சம்மன் அனுப்ப உத்தரவிட்டார். 

இதில் அதிர்ந்துப்போன கலாநிதி மாறனும், சங்கரும் சென்னை உயர்நீதிமன்றத்தில், இந்த வழக்கை விசாரிக்க இடைக்கால தடையை வாங்கினர். 

இந்த நிலையில் 15.07.2011 அன்று எழும்பூர் கோர்ட்டில் எந்திரன் கதைத் திருட்டு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான கலாநிதிமாறன் மற்றும் சங்கரின் வழக்கறிஞர்கள், உயர்நீதிமன்றம் கொடுத்த இடைக்காலத் தடையைக் காட்டியதோடு, இது விசாரிக்க உகந்த வழக்கல்ல. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தனர். 

 

தமிழ்நாடன் தரப்போ அப்பீல் மூலம் இடைக்காலத் தடையை கேட்கும் முயற்சியில் இருப்பதாக தெரிவித்தது. 

 

இதைத்தொடர்ந்து வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கலாநிதி மாறன் மற்றும் சங்கரின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் வழக்கை செப்டம்பர் 28ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

தமிழ்நாடன் சார்பில் வழக்கறிஞர்கள் ராஜகோபால், எட்வின், சிவகுமார் ஆகியோர் ஆஜராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆட்சி மாறிய பிரகாவது நீதிகிடைக்குமா? என காத்திருக்கிறது தமிழ்நாடன் தரப்பு.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

தயாநிதி-மாறன-கலாநிதி-மாறன்-திமுக-சன்-டிவி-ஸ்பைஸ்-ஜெட்-

கலைஞருடன் தயாநிதி மாறன் குடும்பம் : மகன் கரன் மாறன், மனைவி பிரியா மாறன், கலைஞர்,தயாநிதி மாறன், மகள் திவ்யா மாறன்

புதுடில்லி ஜூலை 7 : இந்தியாவின் மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ, தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்து போது  தயாநிதி மாறன் 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில்,  ஏர் செல் நிறுவன பங்குகளை மலேஷியவின் ‘மேக்சிஸ்’ நிறுவனத்திற்கு விற்க நிர்பந்தித்தார் என உச்சநீதிமன்றத்தில், தாக்கல் செய்த  அறிக்கையை அடுத்து, தற்போது ஜவுளித்துறை அமைச்சராக இருக்கும்தயாநிதி மாறன் பதவி விலகியுள்ளார்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள, தயாநிதிமாறனின் பதவி விலகல், காங்கிரஸ்  மேலிடம் திமுக தலைவர் கருணாநிதியை தொடர்பு கொண்டு பேசியதன் பின்னர்,  திமுகவின் தலைவரின் இசைவின் பேரில் நடந்துள்ளது.

முன்னதாக, வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசில் ‘அருண் ஷோரி’ தொடங்கிய வைத்த 2 G அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடானது, தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் இரண்டு அமைச்சர்கள் பின்பற்றிய நிலையில், முதலில் அமைச்சர் ராஜாவிடம் தொடங்கிய ஊழல் விசாரணை பின்னோக்கி சென்று இப்போது தயாநிதி மாறனின் பதவி பறிப்பளவிற்கு வந்துள்ளது.

இனி கூடிய விரைவில் இன்னும் பின்னோக்கி சென்று ‘அருண் ஷோரி’ மற்றும் ‘வாஜ்பாய்’ அமைச்சரவையின் அமைச்சர்களின் கூட்டு முடிவை கேள்விக்காளாக்கி, ‘சட்டத்தின்’ பிடிக்குள் ‘பாஜகவின்’ பல பெரும் தலைகளை சிக்க வைக்கும் என எதிர்பார்க்கபடும், நிலையில் காங்கிரஸ் தனது காய்களை மெதுவாக ஆனால் உறுதியாக நகர்த்தி இந்திய அரசியலில் தனது பிடியை உறுதி செய்து கொள்ள முனைகிறது என்பது உறுதி.

முன்னதாக இந்தியவின்  தொலைத்தொடர்பு அமைச்சகத்தில்,  இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீடு விடயத்தில், பெரும்  ஊழல் நடந்ததாக எழுந்த புகார்களின், அடிப்படையில் திமுகவைச் சேர்ந்த ராசா தொலைத்தொடர்பு அமைச்சர் பதவியிலிருந்து விலக நேர்ந்து பின்னர் கைது நடவடிக்கைக்கும் ஆளானார்.

2 G அலைக்கற்றை ஊழலில் அடுத்த பின்னோக்கிய விசாரணை நிலையில், இப்போது தயாநிதி மாறனின் முறை வந்து, பதவி விலகி சிபிஐ யின் விசாரணையை எதிர் நோக்கி இருக்கும் நிலையில் ‘மாறன்’ குடும்பத்தினரின் அரசியல் மற்றும் தொழில் செயல்பாடுகள், அந்த செயற்பாடுகளால் திமுக என்ற ‘திராவிட இயக்கத்திற்கு’ ஏற்பட்டுள்ள சொல்லொன்னா பாதிப்புக்கள், மற்றும் பெரும் பின்னடைவு ஆகியவை பற்றி ஆராயப்படுவது தவிர்க்க முடியாததாகியுள்ளது.

எனவே  இப்போது நாம் காணப்போவது என்னவென்றால் ‘மாறன்’ குடுபத்தினரின் செயல்பாடுகள், அந்த செயல்பாடுகளுக்கு பின்னால் இருந்த சமூக, இன, அரசியல் மற்றும் தத்துவ ரீதியான, அடிப்படைககளை  அக்கு வேறு ஆணி வேறாக அலசப்போகிறோம்.

கலாநிதி-மாறன-மனைவி-காவேரி-கர்நாடக-மாநிலம்-கூர்கை-சேர்ந்த-பிராமண-பெண்

கலாநிதி மாறன் மற்றும் மனைவி காவேரி மாறன் : திராவிட - ஆரிய திருமண பந்தம்

முதலாவதாக ராசாவுக்கு முன்னர் தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக பதவி வகித்த தயாநிதி மாறன்மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுழற்றி அடிக்கத்தொடங்கியது, மிகவும் சமீபத்தில்தான். குறிப்பாக, தனது வீட்டில் அவர் அமைத்த ஒரு ‘தொலைதொடர்பு தானியங்கி பரிமாற்ற கேந்திரம்’ (Hi-tech Exchange) மூலம் சுமார் 300 தனி தொலைபேசி தொடர்புகளை சட்டவிரோதமாக ‘சன் டிவி’ யின் ‘காணொளி தகவல் தரவேற்றத்திற்கு’ (Video data upload) பயன்படுத்தியது மூலம்  அரசுக்கு சுமார் 400 கோடி ரூபாய்களை இழப்பு ஏற்படுத்தியது குறித்த குற்றச்சாட்டுக்கள்  மற்றும் மலேசிய மேக்சிஸ் நிறுவன பிரச்சனை போன்றவை குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக, தொழிலதிபர் சிவசங்கரன் வசமிருந்த  ஏர்செல் நிறுவன பங்குகளை, தனது  மலேஷிய நண்பரின் நிறுவனமான மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு விற்க வைத்து, பின்னர் மாக்சிஸ் நிறுவனத்தின் துணை நிறுவத்தின் மூலம் தந்து, தனது  சகோதரர் கலாநிதி மாறனின் ‘சன் டிவி’ நிறுவனத்தில் முதலீடு செய்ய வைத்ததன் மூலம், பெரும் லாபமடைய, தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாக ‘சிவசங்கரன்’ ஆதாரங்களுடன் குற்றம் சாட்டினார்.

இதையடுத்து நடந்த சிபிஐ விசாரணைகளில் தயாநிதி மாறன் மீதான குற்றச்சாட்டிற்கு வலுவான ஆதாரங்களாக, தயாநிதி மாறன் தொலைதொடர்பு அமைச்சராக இருந்த போது அவரது, உதவியாளராக இருந்தவரின் சாட்சியம் கிடைத்த நிலையிலேயே மத்திய புலனாய்வு அமைப்பு, நீதிமன்றத்தில் இவ்வாறான உறுதியான மனுவை தாக்கல் செய்து, மாறன் பதவி பறிப்புக்கு வழி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, தயாநிதி மாறனின் ராஜிநாமாவையடுத்து மாறன் சகோதரர்களுக்கு சொந்தமான நிறுவனங்களான சன்டிவி மற்றும்  ஸ்பைஸ்ஜெட்  பங்குகளின் பெரும் சரிவை சந்தித்துள்ளன. பதவி விலகல் நடந்த அன்றே சன் டிவி பங்குகளின் விலையில்  7 சதவீத சரிவும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத பங்கு விலைகளில் சுமார் 3 சதவீத சரிவும் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மாறன்-குடும்பங்கள்-சோனியா-காந்தி-மற்றும்-கருனாநிதியுடன்

'எங்கள் வழி தனி வழி' : மாறன் சகோதரர்கள் குடும்பங்கள் சோனியா காந்தியுடன்

இந்நிலையில் திமுக வை அழித்ததே ‘மாறன்கள் தான்’ என்ற முதல்வர் ஜெயலலிதாவின் கருத்து அரசியல் நோக்கர்களால் மிகவும் ஆமோதிக்கும் ஒன்றாக இருக்கிறது. ஜெயலலிதா இந்த கருத்தை, இப்போது கூறுவதற்கும் காரணங்கள் இல்லாமலில்லை. இவ்வாறு கூறுவதன் மூலம் ‘மாறன்’ மற்றும் திமுக வுக்கிடையே பிளவை ஏற்படுத்தி, ‘திமுக’ வை பிளவுபடுத்தி ‘கூத்தாடுவதே’ அவரது நோக்கம் என்பதிலும் சந்தேகமில்லை.

சரி மாறன்  சகோதரர்கள், ஜெயலலிதா இப்போது குற்றம் சாட்டுவதை போல ‘திமுக வின்’ அழிவுக்கு அல்லது கடும் பின்னடைவுக்கு காரணமாக தெரிந்தோ தெரியாமலோ காரணமாக இருந்திருப்பார்களேயாயின் அது எதனால் என்று பார்ப்பதற்கு சற்று பின்னோக்கி ‘முரசொலி மாறனிடமிருந்து’ நமது ஆராய்ச்சியை தொடங்க வேண்டியிருக்கும்.

மாறன் சகோதரர்களில் தந்தையான ‘முரசொலி மாறன்’ திமுக-பாஜக உறவை தொடங்கி வைத்து தனது மற்றும் தனது மகன்களின் வளர்ச்சிக்கு அடித்தளம் இட முயன்ற போதே ‘திமுக’ பாதை மாறத்தொடங்கிவிட்டதை அவதானிக்க கூடியதாக இருந்தது என்று கூறுகிறார்கள்.

இவ்வாறான முரசொலி மாறனால் தொடங்கி வைக்கப்பட்டு, பின்னர் ‘மாறன’ குடும்பத்தினரது திராவிட கொள்கைகளிலிருந்து முழுமையாக ‘பாதை மாறிய’ நடவடிக்கைகளுக்கு, முக்கியமான ஒரு பின்னணி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த பின்னணி ‘முரசொலி மாறன்’ காலம் தொடங்கி வழங்கி வரும் திருமண உறவு வழக்கு முறையாகும். இந்த கலப்பு திருமண முறையானது ‘மாறன்’ குடுபத்தின் ‘திராவிட தனித்தன்மைக்கு’ முடிவு கட்டியதுமன்றி, குடும்ப ரீதியாகவும், சமூக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

‘முரசொலி மாறன்’ குடும்பத்தில் ஒரு வினோதமான கலப்பு திருமண உறவு முறை, முரசொலி மாறன் காலத்திலிருந்தே தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

திராவிடர்களின் அடிமைத்தனத்திற்கும், சாதி ஒடுக்குமுறைக் கொடுமைகளுக்கும் 2000 ஆண்டுகளாக  காரணம் என்று எப்போதும் கடுமையாக தாக்கி குறை சொல்லி, ‘பார்ப்பனர்கள்’, ‘பார்ப்பன தத்துவம்’ என இன்றுவரை ‘திமுக’  இழிவு படுத்தி வந்த, ‘பிராமண’ சமுதாயத்தோடு திருமண உறவு முறைகளை மேற்கொள்ள தொடங்கியதுதான்.

முரசொலி மாறனின் குடும்ப திருமண உறவுமுறைகள்  பெரும்பாலும் சர்ச்சையை கிளப்பாமல் போனதற்கு, முக்கிய காரணம் அதன் மூலம் திமுக அரசியல், சமூக மற்றும் பொதுவாக ‘பிராமணர்கள்’ அதிகமிருக்கும் ஊடக, அதிகார மட்டங்களில் பலன் பெற்றதுதான்.

முரசொலி-மாறன்-மல்லிகா-மாறன

ஆரியமும் திராவிடமும் : மனைவி மல்லிகா மாறனுடன் முரசொலி மாறன்

இந்த ‘திராவிட – ஆரிய’ உதடுகளின் சந்திப்பு முதலில் நடந்தது, முரசொலி மாறன், ஏ.என். கல்யாண சுந்தர ஐயரின் மகளான மல்லிகா மாறன் என்ற ஒரு பிராமண குடும்பத்து பெண்ணை திருமணம் செய்து கொண்டபோதுதான்.

இதன் தொடர்ச்சியாக தனது மகன்கள் யாவரையும் பிராமண குடும்பத்தினர்களோடு மட்டுமே சம்பந்தம் செய்து திருமணம் செய்து வைத்துள்ளார் ‘முரசொலி மாறன்’.

குறிப்பாக ‘ஹிந்து பத்திரிகை ராமின் மச்சினியான பிரியா  என்பவர் தான் தயாநிதி மாறனின் மனைவி. பிரியா, ரங்கராஜன்  ஐய்யங்கார் என்பாரின் மகள் ஆவார்.

இது போன்றே கலாநிதி மாறனின் மனைவியான காவேரியும் ஒரு பிராமண பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறாக, ‘பிராமண எதிர்ப்பு குறித்து பேசும்’ திமுக வின் தலைமை குடும்ப உறவுகளில், மருமக்கள் வழியில் ஒரு ‘பிரதிலோமர்’ (ஒரு பிராமணரல்லாத ஆணுக்கும பிராமண பெண்ணுக்கு பிறக்கும் குழந்தைகள். இதற்கு மாற்றமாக இருந்தால் ‘அனுலோமர்’ என்று பெயர். இவர்களை முழு பிராமணர்களாக ‘மனு ஸ்மிருதி’ ஏற்காததால் இப்பிரிவுமுறை வந்தது) குடும்ப தொடர்ச்சியே வழி வழியாக வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான ‘முரசொலி மாறன்’ குடும்ப திருமண உறவுகளே, திமுக -பாஜக உறவுக்கு காரணம் என்பது வெள்ளிடை மலை.

இதன் தொடர்ச்சியாகவே ‘முரசொலி மாறனின்’ குடும்பத்தினர் மற்றும் சந்ததியினர், தங்களுக்கென ஒரு இன ரீதியான   ‘தனித்தன்மையை’ (Cultural Identity), தனிப்பட்ட தோற்றங்களில், குடும்ப உறவு முறைகளில், அரசியல் மற்றும் தொழில் துறை நடவடிக்கைகளில்  மேற்கொள்ள நேரிட்டது, இயல்பே.

இதன் விளைவாக சன் டிவி க்கும் மற்ற வலது சாரி ஊடகங்களுக்கும் அதிக வித்தியாசமில்லாத நிலை உருவாகியது. சன் டிவி யில் நிகழ்ச்சி வழங்குவோரிலும், பல  முன்னணி பதவிகளிலும்,  ‘மக்கள் டிவி’ போன்று தமிழர்களுக்கும், தமிழுக்கும் முக்கியத்துவம் தரப்படாமல், திராவிட கொள்கைகளுக்கு எதிரானவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டது வெள்ளிடைமலை.

இதன் விளைவாகவே, தனது ‘தொலைதொடர்பு அமைச்சர் பதவியை’ திமுக தலைமை, ஒரு தலித்தான ராஜாவிற்கு வழங்கியபோது ‘மாறன் சகோதரர்களின்’ இரட்டிப்பான கண்டனத்திற்கு அது காரணமானது. ராஜாவிற்கும், மாறன் சகோதரர்களுக்கும் எந்த நேரடியான தகராறு இல்லையென்றாலும், ராஜாவின் மீதான 2 G குற்றச்சாட்டுக்களை, சன் டிவி கடும் வேகத்துடன் வைப்பதற்கும் இதுவே காரணமானது.

ஒரு படி மேலே சென்று, 2 G பிரச்சனையில் ராஜா பதவி விலகி கைதானபோது, மாறன் சகோதரர்கள் தரப்பில் அது ஒரு ஐந்து நட்ச்சத்திர ஓட்டல் கொண்டாட்டத்திற்கு காரணமானதற்கும் காரணத்தை வேறெங்கும் தேடவேண்டாம்.

உண்மையில் ராஜாவின் வீழ்ச்சி தங்களது வீழ்ச்சியின் முன்னோட்டமே என்பதை ‘மாறன்’ சகோதரர்கள் அன்று அறிந்திருக்கவில்லை.

இப்போது, தயாநிதி மாறனின் பதவி விலகலின் போதும், ராஜா தரப்பு நீதிமன்றத்தில் வைத்து ராஜாத்தி அம்மாள் மற்றும் அங்கிருந்தவர்கள் அனைவருக்கும் இனிப்பு பரிமாரியதாக ‘மாலைசுடர்’ வெள்ளி , 08 ஜூலை, 2011   11:34 காலை இணைய வெளியீட்டில்,  செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறாக, இன ரீதியாக ‘திராவிட – ஆரிய’ இனங்களுக்கிடையே திரிசங்கு சொர்கத்தில் இருந்த ‘மாறன்’ குடும்பத்தினர் மற்றும் தங்களை அரசியல் ரீதியாக வளர்த்து கொள்ள முயன்ற மாறன் சகோதரர்கள், திமுகவை அதற்கு எல்லா வகையிலும் அரசியல் ரீதியாக பயன்படுத்த முயன்றனர்.

இதன் நேரடி  விளைவாக அரசியல் ரீதியாக முன்னேறிய ‘மாறன் குடும்ப’ அங்கத்தினர்கள், அதனுடன் கூடாக, சன் டிவி போன்ற ஒரு ஊடக சாம்ராஜ்யத்தையும் நிறுவி எளிதில்  முன்னேற்றி, இந்தியாவின் முன்னணி ஊடகமாக மாற்றவும், ஆசியாவின் மிகபெரிய ‘பணக்காரர்கள்’ பட்டியலில் இடம் பெறவும் முடிந்தது.

ஆனால், இவ்வாறு வளர்ந்த ‘மாறன் சகோதரர்களின்’ செயல்பாடானது, அரசியல், ஊடகம், தொழில் துறை என்பதையும் தாண்டி, கலாநிதி மாறன் சன் டிவி மூலம் பெற்ற வெற்றியை போன்றே, தயாநிதி மாறனை   இந்திய அரசியலில் ‘தன்னிகரில்லா’ தென்னகத்து தலைவனாக, ‘புது டில்லியில்’ நிலை நிறுத்திவிட வேண்டும் என்ற முயற்சியில் இறங்க தொடங்கியதுதான், எல்லாவற்றையும் தலை கீழாக புரட்டி போடச்செய்த முதல் படி.

தயாநிதி மாறனின் இந்த அரசியல் பேராசை, ‘மாறன்’ குடும்பத்திற்கு மட்டுமின்றி ‘திமுக விற்கே’ பெரு நஷ்டமாகிப்போனது முன்னரே கூறியது போன்று  வராலாறாகிப்போன நிலையில், இந்த ‘நிறைவேறா’ பேராசைக்கு காரணம் ‘மாறன் சகோதரர்களின்’ சொந்த நடவடிக்கைகளா அல்லது பின்னணியில் இருந்து ‘திமுக’ மற்றும் ‘திராவிட இயக்க’ வீழ்ச்சியை திட்டமிட்ட வகையில் நடத்தி முடிக்க முயன்ற வேறு எவருமா, என்ற லட்சம்  கோடி ரூபாய்கள் பெறுமான கேள்விக்கு பதிலளிக்க பல்வேறு அனுமானங்கள் நிலவுகின்றன.

எது எவ்வாறாயினும் ஜெயலலிதா கூறியது போன்று,  திமுக வின் தற்போதைய நிலைக்கு, மாறன் குடும்பத்தினரின் பங்கு கணிசமான அளவிற்கும் அதிகமானது என்பதில் எள்ளளவும் சந்தேகமிருக்க முடியாது.

 



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

கலாநிதி மாறன் மீது புகார் கொடுக்க்கும் நடிகர் விஜய்?
[ Saturday, 16-07-2011 11:32 ]
vijay-kalanithimaran-16-07-11

காவலன் பட விவகாரம் தொடர்பாக சன் குழும தலைவர் கலாநிதி மாறன், சன் பிக்சர்ஸ் சிஓஓ ஹன்ஸ்ராஜ் சக்சேனா, அய்யப்பன் ஆகியோரின் மீது புகார் தர தயாராகிறார் நடிகர் விஜய் என செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த 5 ஆண்டுகளாக சன் டிவி மற்றும் சன் பிக்சர்ஸுக்கு நெருக்கமாக காட்டிக் கொண்ட பெரும்பாலான சினிமா தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் இப்போது அப்படியே நேர் எதிராகத் திரும்பியுள்ளனர்.

சன் பிக்சர்ஸ் வெளியிட்ட வேட்டைக்காரன், சுறா போன்ற படங்களில் நடித்த விஜய், காவலன் படத்தின் போது அதே சன் பிக்சர்ஸுக்கு எதிராக மாறினார்.

இந்த காவலன் படத்தை வெளியிட தொடர்ந்து சன் பிக்சர்ஸ் சக்சேனா, அய்யப்பன் ஆகியோர் தடைகளை ஏற்படுத்தியதால் உரிய தேதியில் வெளியாகாமல் 3 நாள் கழித்து படம் வெளியானதாம்.

இதனால் பல கோடி வசூல் இழப்பு ஏற்பட்டதாகவும் இதற்கு சன் பிக்சர்ஸ்தான் காரணம் என்றும் கூறி விஜய்யே நேரடியாக கலாநிதி மாறன், சக்சேனா, அய்யப்பன் மீது புகார் கொடுப்பார் என்று கூறப்படுகிறது.

ஏற்கெனவே 4 வழக்குகளில் சக்சேனா, அய்யப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கலாநிதி மாறன் மீது 2 மோசடி, மிரட்டல் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் வரும் ஜூலை 26-ம் தேதி போலீசார் முன் விசாரணைக்கு ஆஜராகிறார்.

இந்த நிலையில் விஜய்யும் புகார் தரவிருப்பது, சன் குழுமத்துக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அதேநேரம் சுறா பட நஷ்டத்தை ஈடுகட்டுமாறு விஜய்க்கு எதிராக முன்பு போர்க்கொடி தூக்கிய அனைத்து விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர்காரர்கள் இப்போது அமைதியாகிவிட்டது குறிப்பிடத்தக்கது.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

மாறன் குடும்பத்துக்கும் மத்திய அமைச்சர் பதவிக்கும் கொஞ்சமும் ஒட்டுதல் இல்லை போலும்! 

முரசொலி மாறன் மூன்று முறை மத்திய அமைச்சராக இருந்த போதும், பதவிக் காலமான ஐந்து ஆண்டுகளில் ஒருமுறைகூட முழுமையாக நீடிக்கவில்லை. பிரதமராக இருந்த வி.பி.சிங் மற்றும் குஜ்ரால் ஆட்சிகள் கவிழ்ந்ததால், பதவியை இழக்க வேண்டி இருந்தது முரசொலி மாறனுக்கு. வாஜ்பாய் காலகட்டத்தில், உடல் நிலை பாதிக்கப்பட்டதால், மாறனால் தொடர்ந்து பதவியில் நீடிக்க முடியவில்லை.

அதேபோலத்தான் தயாநிதி மாறனும். கடந்த ஆட்சியின்போது 'தினகரன்’ இதழில் வெளியான கருத்துக் கணிப்புக் கோபத்தால், தயாநிதி ராஜினாமா செய்ய வேண்டிய நெருக்கடி. இப்போது உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள அறிக்கை காரணமாக, இரண்டாவது முறையாகவும் ராஜினாமா செய்துள்ளார்!

raja-dhayanidhi-maran.jpeg
ஆ.ராசாவும் கனிமொழியும் கைதானபோது, தயாநிதி மாறன் ஆதரவாளர்கள் வருத்தப்படவில்லை. அதேபோல், இப்போது தயாநிதி குறித்து 'தெஹல்கா’ செய்திக் கட்டுரை வெளியிட்டபோது, அந்த இதழை பாட்டியாலா நீதிமன்றத்தில் வைத்து கனிமொழியும் ஆ.ராசாவும் படித்து மகிழ்ந்த காட்சிகள், டெல்லி மீடியாக்களின் கண்களில் இருந்து தப்பவில்லை. இவை, தி.மு.க. வரலாற்றின் மிகச் சோகமான இறங்குமுகத்தின் சாட்சியங்கள்!

தயாநிதி பதவி விலகல் குறித்து கருணாநிதியிடம் கேள்வி கேட்கப்பட்டது. அவராலும் தயாநிதிக்கு வக்காலத்து வாங்க முடியவில்லை. ''உலகத்தில் குறிப்பாக, இந்தியாவில் மீடியாக்களின் ஆட்சி நடக்கிறது. அவர்கள் நினைத்தால் யாரையும் இழிவுபடுத்திவிட முடியும். அதற்கு தயாநிதியும் விதிவிலக்கு அல்ல'' என்று சொன்னார். ''பத்திரிகையாளர்கள் பூதாகாரமாகச் சொன்னதை சி.பி.ஐ. நம்பியது. அதை உறுதிப்படுத்திக் கொள்ள வழக்குப் போட்டுள்ளது'' என்று ஏற்கெனவே சொன்னவர்தான் கருணாநிதி. பத்திரிகைகள் சொன்ன பொய்யை கருணாநிதி ஏன் நம்பினார்? அப்பாவி ஆ.ராசாவை ஏன் பதவி விலகச் சொன்னார்? அதாவது, தி.மு.க. தலைவர் இன்னமும் தன்னுடைய சகாக்களின் தவறை உணரவோ, ஒப்புக் கொள்ளவோ, முன் வரவில்லை!

தயாநிதி மாறனின் பதவி விலகல் யாரும் எதிர்பாராத திடுக் சமாசாரம் அல்ல. என்றைக்கு ராசா மீது வழக்குப் பதிவு ஆனதோ... அன்றே இதுவும் தீர்மானிக்கப்பட்டது. ''ஆ.ராசா பதவி விலகியே ஆக வேண்டும்'' என்று பாரதிய ஜனதா கட்சி எம்.பி-க்கள் குரல் கொடுத்தபோது, ''பாரதிய ஜனதா ஆட்சிக் காலத்தில் இருந்தே இப்படித்தான் நடக்கிறது. அந்த சமாசாரங்களையும் விசாரிக்க வேண்டும்'' என்று காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள், தானே வலியப் போய் விவகாரத்தில் மாட்டிக்கொண்டன. 

பாரதிய ஜனதா ஆட்சிக் காலத்தில் பிரமோத் மகாஜன் தொலைத் தொடர்புத் துறைக்கு அமைச்சராக இருந்தார். அடுத்து, அருண்ஷோரி வந்தார். வாஜ்பாய் ஆட்சியில் மூன்றாவதாக இந்தத் துறையைக் கைப்பற்றியவர் தயாநிதி மாறன். சி.பி.ஐ. தன்னுடைய அறிக்கையில் 'மூன்றாவது அமைச்சர்’ என்று சொல்வது, தயாநிதி மாறனைத்தான். அவரது பெயரை இந்த அறிக்கையில் நேரடியாகச் சொல்லாமல், இந்த கோட் வேர்டு பயன்படுத்தப்பட்டு உள்ளது.

தயாநிதி மாறன் குறித்த சி.பி.ஐ-யின் குற்றச்சாட்டு புரிந்துகொள்ள கஷ்டமான சுற்றி வளைப்புப் புகார் அல்ல. தமிழகத் தொழில் அதிபர்களில் ஒருவரான சிவசங்கரன், தன்னுடைய ஏர்செல் நிறுவனத்தை விற்பனை செய்தது தொடர்பான ஒரு புகாரை சி.பி.ஐ.யிடம் கொடுக்கிறார். 

''என்னுடைய நிறுவனத்தை விரிவுபடுத்துவதற்காக தொலைத் தொடர்புத் துறையிடம் விண்ணப்பம் கொடுத்தேன். அவர்கள் லைசென்ஸ் தர மறுத்தார்கள். தரக் கூடாது என்பதற்காகவே தேவை இல்லாத கண்டிஷன்களைப் போட்டார்கள். அதன் பிறகு, மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு ஏர்செல்லை விற்க தயாநிதி கட்டாயப்படுத்தினார். என்னை மிரட்டினார். அதன் பிறகு, குறைந்த விலைக்கு நான் அதை விற்றேன். நிறுவனம் கை மாறிய பிறகு, ஏர்செல்லுக்கு தொலைத் தொடர்பு லைசென்ஸ் கிடைத்தது. என்னை மிரட்டியதும், குறைந்த விலைக்கு நிறுவனத்தை விற்கக் கட்டாயப்படுத்தியதும், எனது தொழிலுக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தி உள்ளது'' என்று தனது வாக்குமூலத்தில் சிவசங்கரன் சொல்லி இருக்கிறார். இவரது பெயரைச் சொல்லாமல், 'ஜென்டில்மேன்’ என்று கோட் வேர்டைச் சொல்கிறது சி.பி.ஐ. தனது அறிக்கையில்!

sivasankaran-1.jpg
தகவல் தொடர்புத் துறையின் மூன்றாவது அமைச்சருக்கும் ஜென்டில்மேனுக்கும் நடக்கும் யுத்தம்தான் இந்த வழக்கு. இதன் தொடர்ச்சியாக ஒரு ரகசியத்தை சி.பி.ஐ-யும் மத்திய அமலாக்கத் துறையும் கொண்டு வருகின்றன. ''இந்த டீலிங் மூலமாக ஆதாயம் பெற்ற மேக்சிஸ் தன்னுடைய துணை நிறுவனமான ஆஸ்ட்ரோ மூலமாக சன் டைரக்ட் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது.'' என்பதுதான் சி.பி.ஐ. கொண்டு வரப் போகும் குற்றச்சாட்டு. 

அதாவது, கலைஞர் டி.வி. மீது என்ன மாதிரியான புகார்கள் கூறப்பட்டனவோ, அதேபோன்று இந்த விவகாரத்திலும் வரப் போகிறது. ''நான் தொலைத் தொடர்புத் துறையின் அமைச்சராக இருந்தபோது, எந்த ஒரு நிறுவனமும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சன் டைரக்ட் நிறுவனத்தில் முதலீடு செய்யவில்லை. ஆஸ்ட்ரோ நிறுவனம் முதலீடு செய்தபோது, நான் அமைச்சராக இல்லை!'' என்று தயாநிதி தரப்பு விளக்கம் வைத்துள்ளது. 

''ஆஸ்ட்ரோ நிறுவனத்துக்கும் சன் குழுமத்துக்கும் 1998-ம் ஆண்டு முதலே தொடர்புகள் உண்டு'' என்றும் சொல்கிறார்கள். ஆனால், சி.பி.ஐ. இன்னும் என்ன மாதிரியான பூதங்களைக் கோர்ட்டில் கொண்டுவந்து கொட்டப் போகிறது என்று தெரியவில்லை.

''அடுத்து, யாரைக் குற்றப் பத்திரிகையில் கொண்டுவரப் போகிறீர்கள்?'' என்று இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் ஏ.பி.பரதன் கிண்டலாகக் கேட்கும் அளவுக்கு, மத்திய அரசாங்கத்தின் முகம் சிதைந்து கொண்டிருக்கிறது.  தயாநிதி தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பாக, சிவசங்கரன் உள்ளிட்ட 10 பேரிடம் வாக்குமூலம் வாங்கி வைத்துள்ளது சி.பி.ஐ.

ஆ.ராசா தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில் லைசென்ஸ் பெற்ற நிறுவனங்களுக்கு, தயக்கம் இல்லாமல் கோடிக்கணக்கான ரூபாய் பல்வேறு வங்கிகள் மூலமாகக் கடனாகத் தரப்பட்டுள்ளன. அப்போது நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தை, பி.ஜே.பி. குறி வைத்து தாக்கி வருகிறது.  எந்தக் கேள்விகளும் கேட்காமல், நிதித் துறை அந்தக் காலகட்டத்தில் செயல்பட்டதன் பின்னணியில் அடங்கி உள்ள மர்மத்தை விசாரிக்க வேண்டும் என்கிறது பி.ஜே.பி.

''மத்திய மந்திரி சபையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ள ராசா, இந்த ஊழலின் ஒரு பங்குதாரர்தான். இன்னொரு பங்குதாரர் சிதம்பரம்.'' என்கிறது பி.ஜே.பி. இவர்கள் அடுத்ததாக, கபில்சிபலையும் குறிவைத்து உள்ளார்கள். இப்போது, தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக கபில்சிபல் இருக்கிறார். 

''ரிலையன்ஸ் கம்பெனி தனது தொலைபேசிச் சேவையை கிராமப் பகுதிகளில் இருந்து திடீரென ரத்து செய்தது. இது விதிமுறையை மீறிய செயலாகும் என்று சொல்லி தொலைத் தொடர்புத் துறை 650 கோடியை அபராதமாக விதித்தது. அதாவது, 13 மண்டலத்துக்குத் தலா 50 கோடி என்று தொகை முடிவு செய்யப்பட்டது. இந்த 50 கோடியை 5 கோடியாகக் குறைத்து இருக்கிறார் கபில்சிபல். இந்தச் சலுகை மூலமாக அவர் அடைந்த லாபம் என்ன என்று விசாரிக்க வேண்டும்’ என்று பி.ஜே.பி. கேட்கிறது. ஏற்கெனவே, அமைச்சர் சரத்பவார் மீதான குற்றச்சாட்டு எழுந்து அடங்கி இருந்தது. அதையும் மீண்டும் கிளறப் போகிறார்கள்.

போகிற போக்கைப் பார்த்தால், மன்மோகன் சிங் அதிக நாட்கள் நீடிக்க மாட்டார் என்றே தோன்றுகிறது!  

நன்றி : ஆனந்தவிகடன்

 

 



Read more: http://truetamilans.blogspot.com/#ixzz1SHZLS63M



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ஸ்பெக்ட்ரம் பூதம் தயாநிதி மாற​னையும் கவ்விக் கொண்டது!  ஆ.ராசா, கனிமொழி இருவ​ருடன் இது முடிந்துவிடும்... என்று நினைத்து இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, அதிர்ச்சியின் எல்லைக்குத் தள்ளப்​பட்டுள்ளார். தயாநிதியின் பெயரை சி.பி.ஐ. தனது அறிக்கை​யில் தாக்கல் செய்ததுமே டெல்லி காங்கிரஸ் பிரமுகர் அடித்த கமென்ட், 'தி.மு.க-வின் கரன்சி ஆக்ஸிஜன் இதன் மூலம் அடைக்கப்பட்டுவிட்டது!’ என்பதுதான். அந்த அளவுக்கு, சென்னையையும் டெல்லியையும் அதிரவைத்துள்ளது சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள அறிக்கை!

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் இதுவரை 14 பேர் கைது செய்யப்​பட்டு, டெல்லி பாட்டியாலா சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி முன்னால் நிறுத்தப்பட்டு உள்ளனர். இதில் ஆ.ராசா நீங்க​லாகக் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் ஜாமீன் மனுக்களைத் தாக்கல் செய்தனர். யாருக்கும் கிடைக்கவில்லை என்பதால், திகார் சிறையிலேயே இருக்கிறார்கள்.

ஜூன் 3-ம் தேதி பாட்டியாலா நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை தொடங்கி, ஜூலை 4-ம் தேதி மீண்டும் கோர்ட் நடவடிக்கைகள் தொடங்கியது. கடந்த 5-ம் தேதி சி.பி.ஐ-யைப் பார்த்து நீதிபதி சைனி சீறினார் - ''குற்றம் சாட்டப்பட்ட 14 பேரும் திகார் சிறையில் அடைக்கப்பட்டு இத்தனை நாட்கள் ஆகியும், ஏன் இன்னும் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யவில்லை? தொடர்ந்து அவர்கள் சிறையில் இருக்க வேண்டும் என்பது உங்களது விருப்பமா? குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குத் தர வேண்டிய ஆவணங்களை இதுவரை ஏன் தரவில்லை? இனியும் தாமதம் செய்தால், சி.பி.ஐ-க்கு அபராதம் விதிக்க வேண்டி வரும்!'' என்றதும், சி.பி.ஐ. தரப்பு கொஞ்சம் ஆடிப்போனது.

ஆனால், மறு நாள் உச்ச நீதிமன்றத்தில் சிலிர்த்துக் கிளம்பியது சி.பி.ஐ. ''இந்த வழக்கு, இதுவரை கைதான 14 பேருடன் முடியப்போகும் சமாசாரம் அல்ல. இதோ வருகிறது அடுத்த அஸ்திரம்!'' என்று சி.பி.ஐ. வைத்த வெடிகுண்டுதான்... முதல்கட்டமாக தயாநிதி மாறனின் மந்திரி பதவிக்கு வேட்டுவைத்துள்ளது. ஆ.ராசா, மத்திய தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த காலத்தில் நடந்த விவகாரங்களை மட்டும் அல்ல... அதற்கு முன்னால் தயாநிதி மாறன் பதவியில் இருந்த காலத்தையும் சி.பி.ஐ. தோண்ட ஆரம்பித்து உள்ளது.

dhaya-1.jpg
தயாநிதி மாறன் அமைச்சராக இருந்தநேரத்தில் நடந்ததாக சில விஷயங்களை, மத்திய அரசு அமைத்த ஒரு நபர் கமிஷன் முன்னால் அருண் ஷோரி வரிசையாக எடுத்து வைத்தார். அவர் அளித்த மனுவை அப்படியே சி.பி.ஐ-க்கு, விசாரணை அதிகாரியான நீதிபதி சிவராஜ் பாட்டீல் அனுப்பி​வைத்தார். உடனடியாக, சி.பி.ஐ. இதனை விசாரிக்க ஆரம்பித்தது. இதன் மையப் புள்ளியாக 'ஸ்டெர்லிங்’ சிவசங்கரனை, சி.பி.ஐ. அதிகாரிகள் ரகசியமாக விசாரிக்கத் தொடங்கினார்கள். இதுபற்றி, ஜூன் 8, 15, 16 தேதியிட்ட ஜூ.வி. இதழ்களில் தொடர்ந்து விவரங்கள் வெளியாகின.

இதுதொடர்பான குற்றச்சாட்டை 'பொது நல வழக்கு தொடர்பான சமூக சேவை அமைப்பு’ உச்ச நீதிமன்றத்தில் மனுவாகத்  தாக்கல் செய்தது. வக்கீல் பிரசாந்த் பூஷண் நடத்தி வரும் அமைப்பு இது.

சுப்ரீம் கோர்ட் இந்த விஷயத்தைக் கையில் எடுக்கும் என்று தெரிந்ததுமே, சிவசங்கரனை அதிகாரபூர்வமாக அழைத்து ஜூன் 6-ம் தேதி வாக்குமூலம் வாங்கியது சி.பி.ஐ. அவரது வாக்கு​மூலத்தை அடிப்படையாக வைத்துதான், கடந்த 6-ம் தேதி சி.பி.ஐ. ஒரு மனுவைத் தாக்கல் செய்தது.

நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி இருவரும்​தான், 2ஜி வழக்கை வைத்துக் கலக்கி வரும் நீதிபதிகள். இவர்களிடம் சி.பி.ஐ. சார்பில் மூடிய கவர் ஒன்றை சி.பி.ஐ. வக்கீல் கே.கே.வேணுகோபால் கொடுத்தார். மொத்தம் 71 பக்கங்களைக்கொண்ட அந்த அறிக்கையின் சாராம்சத்தை வேணுகோபால் சொல்லச் சொல்ல... அதிர்வலைகள் பலமாகின.

இந்த அறிக்கையில் தயாநிதி மாறனின் பெயர் குறிப்பிடப்படவில்லை. ஆனால், அவர் தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த காலகட்டத்தில் நடந்ததாக சில விஷயங்களை அவர் பெயரைச் சொல்லாமல் குறிப்பிட்டார் வேணுகோபால். ''2004 - 2007 காலகட்டத்தில் ஏர்செல் நிறுவனம் தனது சேவையை விரிவாக்கம் செய்ய முயற்சித்தது. ஆனால், கிடைக்கவில்லை. ஏர்செல் நிறுவனத்திடம் தேவை இல்லாத, முக்கியத்துவம் இல்லாத கேள்விகள் கேட்கப்பட்டன. அவசியமற்ற விசாரணைகள் நடத்தப்பட்டன. ஏர்செல்லைப் போலவே வேறு இரண்டு நிறுவனங்களும் இதே போன்று விண்ணப்​பம் செய்திருந்தன. அந்த நிறுவனங்களிடம் இது மாதிரியான கெடுபிடிகள் காட்டப்படவில்லை. உடனடியாக அந்த இரண்டு நிறுவனங்களுக்கு லைசென்ஸ் கிடைத்தது.

தொலைத் தொடர்புத் துறையின் அமைச்சராக இருந்தவர் ஏதோ ஒரு நிர்பந்தத்தை ஏர்செல் நிறுவனத்​துக்குக் கொடுத்திருக்கிறார் என்பது சி.பி.ஐ-யின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் அனந்தகிருஷ்ணன்  நிறுவனத்துக்கு ஏர்செல்லின் பங்குகளைத் தர வேண்டும் என்று நிர்பந்தம் செய்துள்ளார்கள். சிவசங்கரன் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
  sivasankaran.jpg
சிவசங்கரன் தனது கம்பெனிப் பங்குகளை விற்பதைத் தவிர வேறு வழி இல்லை. அதன் பிறகு, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு அந்த நிறுவனத்துக்குக் கிடைக்கிறது. இந்தப் பரிமாற்றத்தில் என்ன நடந்து இருக்கிறது என்பது குறித்துத்தான் சி.பி.ஐ. இப்போது விசாரித்து வருகிறது. பணப் பரிமாற்றம் குறித்தும் விசாரித்து வருகிறோம்!'' என்று சொன்னார் கே.கே. வேணுகோபால்.

அதாவது, இந்த விவகாரத்தில் இறங்கி சி.பி.ஐ. விசாரிப்பதற்கான அடிப்படை ஆதாரங்கள் இருப்பதாக நீதிபதிகளிடம் சொன்னார் வேணுகோபால். சிவசங்கரன் பற்றிக் குறிப்பிடும்போதும், 'திஸ் ஜென்டில்மேன்’ என்று மட்டும் சொன்னார். ''பணப் பரிமாற்றம் குறித்து சி.பி.ஐ. தனது விசாரணைகளை ஆரம்பித்துவிட்டது. சிங்கப்பூரில் இருக்கும் ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கி மூலமாகத்தான் இதற்கான பணப் பரிமாற்றங்கள் நடந்துள்ளன என்று சந்தேகப்படுகிறோம். சிங்கப்பூரில் உள்ள அதன் அதிகாரியை ஜூலை 13-ம் தேதி விசாரணைக்கு வருமாறு அழைத்து உள்ளோம். மேக்சிஸ், ஆஸ்ட்ரோ, சன் டைரக்ட் ஆகிய மூன்று நிறுவனங்களுக்கு மத்தியிலும் இந்தக் கால கட்டங்களில் நடந்துள்ள டீலிங்குகளை வைத்து, என்ன நடந்துள்ளது என்பதை முழுமையாக அறிய முடியும். அந்த அதிகாரி எங்கள் முன்பு ஆஜராகி விவரங்களை கூறியபிறகு எங்கள் விசாரணை வேகம் பிடிக்கும்!'' என்று சி.பி.ஐ. வட்டாரத்தில் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

''ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான விசாரணை ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் முடிந்துவிடும். 2001 முதல் 2008-ம் ஆண்டு வரையிலான லைசென்ஸ் முறைகேடுகள், செப்டம்பர் 30-ம் தேதிக்குள் முடிந்துவிடும்!'' என்று வக்கீல் கே.கே.வேணுகோபால் சொல்லியதை வைத்துப் பார்க்கும்போது, தயாநிதி மாறன் மீது முழுமையான குற்றப் பத்திரிகை செப்டம்பர் மாதத்துக்குள் தாக்கல் ஆகிவிடும் போலிருக்கிறது!'' என்கிறார்கள் டெல்லி நீதித் துறை வட்டாரங்களில்.

anandhakrishnan.jpg
''ராசா அமைச்சராக இருந்த காலகட்டத்தில் நடந்தவை குறித்து அனைத்து விசாரணைகளும் முடிந்துவிட்டன. ராசாவின் சொத்துகள் மற்றும் பண முதலீடுகள் குறித்து வெளிநாட்டு வங்கிகளில் தகவல்கள் திரட்டுவது மட்டுமே பாக்கி. அது தொடர்பாக பல குளுகுளு தீவுகளுக்கெல்லாம் கடிதப் பரிமாற்றங்களைத் தொடங்கி உள்ளோம். எங்களில் சில அதிகாரிகளும் நேரடியாகப் போய் அங்குள்ள முதலீடுகள் பற்றி தகவல்கள் சேர்த்துக் கொண்டு வந்துள்ளனர். அந்த வேலைகள் இன்னும் ஒன்றிரண்டு வாரங்களில் முடியும். தயாநிதி மாறன் தொடர்பான விவரங்களுக்குள் இப்போதுதான் நுழைய ஆரம்பித்துள்ளோம். அதில் மேக்சிஸ் நிறுவனம், சன் டைரக்ட் நிறுவனம் ஆகியவற்றையும் இனி மேல்தான் விசாரிக்க வேண்டி உள்ளது. தயாநிதி மாறனை முதல் கட்டமாக விசாரிப்போம். அவரது ஒத்துழைப்பைப் பொறுத்தே, அடுத்த கட்ட நடவடிக்கைகளை முடிவு செய்வோம்!'' என்று சி.பி.ஐ. அதிகாரிகள் சொல்கிறார்கள்.

சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள இந்த அறிக்கை தொடர்பாக எந்தக் கருத்தையும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சொல்லவில்லை. ''இந்த அறிக்கை பற்றிய விசாரணை வரும் 11-ம் தேதி நடக்கும்!'' என்று மட்டும் கூறினார்கள். இதனால், 11-ம் தேதிக்குள் சி.பி.ஐ. தன்னுடைய அடுத்த கட்ட நடவடிக்கையைத் தொடங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. ''தயாநிதி மாறனை 11-ம் தேதிக்குள் விசாரிக்க வாய்ப்பு இல்லை. 13-ம் தேதி சிங்கப்பூர் வங்கி அதிகாரிகள் சி.பி.ஐ. முன்னால் ஆஜராக இருக்கிறார்கள். அவர்களது வாக்குமூலங்களையும் வாங்கி வைத்துக்கொண்டுதான், சி.பி.ஐ. தயாநிதி மாறனை விசாரணைக்கு அழைக்கும். 

அதே சமயம்,  நீதிபதிகள் 11-ம் தேதி என்ன உத்தரவிடுகிறார்கள் என்பதையும் வைத்தே சி.பி.ஐ. செயல்படும்...'' என்று டெல்லியில் ஒரு தரப்பினர் சொல்ல... ''அதற்கு முன்பேகூட சி.பி.ஐ. தன் செயல்பாட்டை தொடங்கிவிடும். அதைப் புரிந்துகொண்டுதான், பிரதமர் தரப்பிலிருந்து தயாநிதி மாறனின் மந்திரி பதவியை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்திருக்கிறார்கள். 

இது தொடர்பாக பிரதமர் அலுவலகத்திலிருந்து தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் பேசினார்கள். 'ஆ.ராசா விஷயத்தில் நடந்ததுபோல் இதில் அடம் பிடிக்க வேண்டாம். ராஜினாமாவை ஒத்திப் போடுவது காங்கிரஸ் - தி.மு.க. ஆகிய இரு தரப்புகளுக்குமே மேலும் மேலும் சங்கடங்களை ஏற்படுத்தும் என்று எடுத்துச் சொன்னார்கள். அதைத் தொடர்ந்தே ராஜினாமா கடிதத்தை தயாநிதி மாறன் ஒப்படைத்தார். மந்திரி பதவியிலிருந்து விலகிய பிறகுதான் ஆ.ராசா தொடர்பாக சி.பி.ஐ-யின் நேரடி நடவடிக்கைகள் தொடங்கின. அதுபோலவே இதிலும் ஆக்ஷன்கள் வேகம் பெறும்'' என்றும் கூறப்படுகிறது.

''இந்த நிகழ்வுகள் சூடு பிடித்த சமயத்தில் டெல்லியில் இருந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா 'பிரதமர் இனியும் சும்மா இருக்கக்கூடாது' என்ற பாணியில் உசுப்பிக் கொண்டே இருந்ததை சுட்டிக் காட்டும் சிலர், ''மந்திரி பதவியிலிருந்து தயாநிதி மாறன் விலகிய பிறகு தமிழக அரசு தரப்பிலிருந்து சில நடவடிக்கைகளை எடுப்பதே ஜெயலலிதாவின் நோக்கம்!'' என்றும் கூறத் தொடங்கியுள்ளனர்.

''தயாநிதி தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் எந்த தொலைத்தொடர்பு நிறுவனமும் சன் டைரக்ட்டில் முதலீடு செய்யவில்லை. ஆஸ்ட்ரோ நிறுவனம், சன் டைரக்டில் முதலீடு செய்தபோது தயாநிதி அமைச்சராகவே இல்லை. இந்த நிறுவனங்களில் அவருக்கு எந்தப் பங்கும் இல்லை!'' என்று தயாநிதிமாறன் தரப்பு தனது விளக்கமாகச் சொல்ல ஆரம்பித்துள்ளது.

ஜூலை 13-க்குப் பிறகு விவகாரம் இன்னும் சூடுபிடிக்கும்!

- சரோஜ் கண்பத்

நன்றி : ஜூனியர்விகடன்-10-07-2011



Read more: http://truetamilans.blogspot.com/2011/07/blog-post_15.html#ixzz1SHacaUxs



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

கலாநிதி மாறன் சுவிட்சர்லாந்து பயணம் - திரும்பி வருவாரா ?

கலாநிதி-மாறன-மனைவி-காவேரி-கர்நாடக-மாநிலம்-கூர்கை-சேர்ந்த-பிராமண-பெண்சன் டிவி அதிபர் கலாநிதி மாறன் சுவிட்சர்லாந்து சென்றுள்ளதாக சன் டிவி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திரைப்பட விநியோகிஸ்தர் செல்வராஜ் கொடுத்த மோசடி புகாரின் அடிப்படையில் நேரில் விசாரிக்க வேண்டும் என்பதற்காக கேகே நகர் காவல் துறையினர் நேற்று ஆஜராக உத்தரவிட்டிருந்தனர். ஆனால் கலாநிதி மாறன் சார்பாக ஆஜரான அவரது வழக்கறிஞர்கள், கலாநிதி மாறன் வியாபார விஷயமாக வெளிநாடு செல்வதால் நேரில் ஆஜராக ஜூலை 16ந் தேதி வரை அவகாசம் கேட்டதையடுத்து அவருக்கு அவகாசம் வழங்கப்பட்டது.

 

தயாநிதி-மாறன-கலாநிதி-மாறன்-திமுக-சன்-டிவி-ஸ்பைஸ்-ஜெட்-இதற்கிடையே கலாநிதி மாறன் எங்கு சென்றிருப்பார் என்ற கேள்விக்கு தற்போது பதில் கிடைத்துள்ளது. செவ்வாயன்று காலை சம்மனை பெற்று கொண்ட திரு மாறன், அன்றிரவே, டில்லி வழியாக சுவிட்சர்லாந்து நாட்டிற்கு சென்று விட்டதாக தெரியவந்துள்ளது. இதனால் தான் தனது வழக்கறிஞர்களை அனுப்பி கால அவகாசம் கேட்டதாக தெரியவந்துள்ளது.  சிறையில் இருக்கும் சன் பிக்சர்ஸ் தலைமை நிர்வாகி சக்ஸேனாவை காவல் துறையினர் தொடர்ந்து விசாரித்து வருவதால், அவர் கொடுக்கும் தகவலை கொண்டு, தான் நேரில் ஆஜராகும் போது கைது செய்ய வாய்ப்பு உள்ளது என்ற தகவல் அடிப்படையில் தான் அவர் வெளிநாடு சென்று விட்டார் என்றும் கூறப்படுகிறது. 2ஜி ஊழல் வழக்கில் மாறன் சகோதரர்கள் இருவரும் வெளியே வரமுடியாத அளவிற்கு சிக்கி கொண்டுள்ளனர். கலாநிதி மாறன் தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழக திரைப்பட துறையில் செய்த அடாவடித்தனங்கள் அனைத்தும் தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் அவர் வெளிநாடு சென்றுள்ளது அவர் இந்தியா திரும்புவாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

 

இந்தியாவில் இருந்து கலாநிதி மாறன் தப்பித்தது எப்படி? பரபரப்பான தகவல்கள்.

சன் பிக்சர்ஸ் முறைகேடுகள் (மிரட்டல், பண மோசடி) காரணமாக நேற்று (புதன் கிழமை) காலை 10 மணிக்கு கே.கே.நகர் போலீஸ் ஸ்டேஷனில் எதிர்பார்க்கப்பட்ட கலாநிதி மாறன், அதற்கு 8 மணி நேரத்துக்கு முன்பே இந்தியாவை விட்டு வெளியேறிவிட்டார். புதன் கிழமை காலை 10 மணிக்கு போலீஸில் ஆஜராக வேண்டும் என்ற சம்மன் அவருக்கு வழங்கப்பட்டது, திங்கட்கிழமை.

கே.கே.நகர் போலீஸ் ஸ்டேஷனில் கலாநிதி மாறன் ஆஜராக வேண்டியிருந்த அதே புதன் கிழமை காலை 6.20 மணிக்கு, அவர் பயணம் செய்த விமானம்,  Flughafen Zürich விமான நிலையத்தில் தரையிறங்கியது. புதுடில்லியிலிருந்து அதிகாலை 1.15க்குப் புறப்படும் சுவிஸ் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானம் அது. தடம் இலக்கம் LX147.

புதுடில்லியிலிருந்து 3 நிமிட தாமதத்துடன் சரியாக 1.18க்குப் புறப்பட்ட விமானத்தின் பிசினெஸ் கிளாஸ் வகுப்பில் கலாநிதி மாறனும் அவரது மனைவியும் ஜூரிச் வந்திறங்கினர். அவர்களது இந்தியப் பாஸ்போர்ட்களில் சுவிட்சலாந்துக்கான ‘லோங் டேர்ம் – மல்டிபிள் என்ட்ரி’ பிஸினெஸ் விசாக்கள் உள்ளன. 2013ம் ஆண்டுவரை செல்லுபடியாகக்கூடிய விசாக்கள் அவை.

ஜூரிச் விமான நிலைய இமிகிரேஷன் கன்ட்ரோலை எவ்விதச் சிரமமும் இன்றிக் கடந்த அவர்கள், விமான நிலையத்தை விட்டு வெளியே செல்லவில்லை. அரைவல் எக்ஸிட் வழியாக வெளியேறிய அவர்கள், அதிலிருந்து ஒரு தளம் மேலே அமைந்துள்ள டிப்பாச்சர் ஏரியாவுக்குச் சென்றனர்.

அங்கிருந்த சுவிஸ் இன்டர்நேஷனல் செக்-இன் கௌண்டரில் மீண்டும் ஒருமுறை, மற்றொரு விமானத்துக்கு போர்டிங் பாஸ் பெற்றுக் கொண்டனர். சுவிஸ் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸின் தடம் எண் LX2804 விமானத்துக்கான போர்டிங் பாஸ்கள் அவை. காலை 9.40க்கு ஜெனீவா நோக்கிச் செல்லும் விமானம் அது.

இவர்கள் ஜெனீவாவில் தங்குகிறார்களா, அல்லது அங்கிருந்து வேறு இடத்துக்குச் சென்று விடுவார்களா என்பது தற்போதைக்குத் தெரியாமல் உள்ளது. தகவல் கிடைக்கும்போது அறியத் தருகிறோம்.

திங்கட்கிழமை அவர் இந்தியாவில் இருந்த நிலையில் சம்மனை வாங்கியிருந்தும், புதன் அதிகாலையில் அவரால் நாட்டைவிட்டு வெளியேற முடிந்திருக்கின்றது. இதற்குக் காரணம், குறிப்பிட்ட சம்மன், சாதாரண விசாரணைக்காக அழைக்கப்படுவதற்காக வழங்கப்படும் ஒன்றாக இருந்திருக்கின்றது.

இந்த ரகத்திலான சம்மன் ஒருவருக்கு வழங்கப்படுகையில், அதுபற்றி குடிவரவுத் துறைக்கு அறிவிக்கப்படுவதில்லை. அவர் இந்தியாவை விட்டு வெளியேறுவதற்கு எக்ஸிட் முத்திரை குத்திய இமிகிரேஷன் அதிகாரிக்கு, அவருக்கு அன்று போலீஸில் ஆஜராக வேண்டிய அவசியம் இருப்பது தெரிந்திருக்க வேண்டியது அவசியமில்லை.

குறிப்பிட்ட சம்மன் கலாநிதியின் கைகளில் கிடைத்தபோது, புதன் கிழமை தன்னால் வரமுடியாதபடி வெளிநாட்டு புரோகிராம் இருப்பதாக அவரால் சொல்லியிருக்க முடியும். சட்டம் அதை அனுமதிக்கின்றது. அல்லது, புதன்கிழமை அதிகாலை வெளிநாடு செல்லும் பயணம் உறுதியானதும்கூட, தன்னால் புதன்கிழமை வரமுடியாது என்ற விஷயத்தை காவல்துறைக்கு அவர் அறிவித்திருக்க முடியும்.

இந்த இரண்டையும் அவர் செய்யவில்லை.

தனது பயணத் திட்டத்தை ரகசியமாக வைத்திருந்த நிலையிலேயே, அவர் நள்ளிரவு தாண்டிய நேரத்தில் இந்தியாவை விட்டு வெளியேறியிருக்கிறார்.

இதிலிருந்து, போலீஸ் விசாரணையில் முகம் கொடுக்க விரும்பாத நிலையிலேயே அவர் தப்பிச் சென்றிருக்கிறார் என்று எடுத்துக் கொள்ளலாம்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

பிரகாசமான தொலைக்காட்சி என்றாலே முதலாளியை விட அதிகமாகப் பேசப்படுவது இந்த நபரைத்தான். ஒரு மாதத்திற்கு முன்புவரை எல்லாரையும் ஆட்டி வைத் துக்கொண்டிருந்த இவர் இப்போது ஆடிப்போய் இருக்கிறார். கரன்ஸியை எண்ணிக்கொண்டிருந்தவருக்கு இப்போது கம்பி எண்ணும் வேலை. பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தவருக்கு இப்போது ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் அவரின் மனசாட்சியின் வாக்குமூலம் :

‘‘நான் சென்னை தி. நகரில் பொறந்தேன். அம்மா பர்மாவைச் சேர்ந்தவர். அப்பா தெலுங்கு நாயுடு. பணவசதி படைத்த குடும்பம் இல்லை என்றாலும் நடுத்தர வர்க்கம். எனது பள்ளிப் பருவத்தில் எதுவும் சிறப்பாக அமையவில்லை என்றாலும், கல்லூரியில்தான் எனது வாழ்க்கையின் திருப்புமுனை ஏற்பட்டது.

அந்தக் கல்லூரியில் பிரபல சகோதரர்களில் ஒருவர் எனக்கு கிளாஸ்மெட்டாக வந்தார். அப்போதைய அரசியலில் முக்கிய புள்ளியின் வாரிசு என்பதால் அவருக்கு கல் லூரியில் கொஞ்சம் செல்வாக்கு இருந்தது. அவரின் பையிலும் கொஞ்சம் பணமிருந்தது. நாங்கள் இயற்பியல் பாடம் எடுத்திருந்தாலும் தாவரவியலில் வரும் ஒட்டுண்ணி விவகாரம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். வளமான ஒரு செடியை, மரத்தைப் பற்றிக்கொண்டு அந்த மரத்திற்கு சமமாக அல்லது அதற்கும் மேலாக வளருவதுதான் ஒட்டு ண்ணி. நானும், அந்த அரசியல் வாரிசை ஒட்டுண்ணியாகப் பிடித்துக்கொண்டேன்.

கல்லூரியில் தொடங்கி இன்றுவரை நான் அந்த தொடர்பைப் பயன்படுத்தி வளர்ந்து, எங்கேயோ போயிட்டேன்.



கல்லூரி வாழ்க்கை முடிந்ததும் அவர்கள் நடத்திவந்த மங்களகரமான பத்திரிகையில் ஆரம்பத்தில் சேர்ந்தேன். பின்னர் அந்த வாரிசுகள் தயாரித்த மாலையை விற்கும் வேலைகளில் மும்முரமாக இறங்கி நான் திறமையானவன் என்பதை காட்டிக்கொண்டேன். அதன்பிறகுதான் தொழில்ரீதியாகவும் நான் அவர்களுடன் என்னை இணைத் துக்கொள்ள முடிந்தது. எனது உண்மையான பெயர் திருப்பதி கடவுளுடையது. ஆனால் எனது அம்மாவின் அப்பா, அதாவது எனது தாத்தா பெயரையும் எனக்குப் பிடி த்த பெயரையும் சேர்த்து புதுப்பெயரை வைத்துக்கொண்டேன். அதாவது ஒரு சேனையை வைத்து உறிஞ்சுவதற்கு சமமாக நானே என் முதலாளியை உறிஞ்சிவிடுவேன் என்பதாலோ அல்லது உறிஞ்சுவதற்கு ஒரு சேனையை வைத்திருந்தேன் என்பதாலோ எனக்கு அந்தப் பெயர் மிகவும் பிடித்திருந்தது.

அந்தப் பெயர் வச்சபிறகு எனக்கு பேரும், புகழும் கொட்டத் தொடங்கிடுச்சு. நான் சினிமாவுல பார்த்து அசந்துபோன அந்த தலைகோதும் நடிகரை சமீப காலத்துல தனியா சந்திச்சுப் பேசவும், அவர் என்னை அண்ணேன்னு கூப்பிடும் அளவுக்கு எனக்கு பேர் கிடச்சது.

ஆரம்பத்துல முதலாளிக்கு கொஞ்சம் விசுவாசமா இருந்து வளர்ந்தேன். அதுக்கப்புறம் கொஞ்சம் கொஞ்சமா தனி ஆவர்த்தனத்தைத் தொடங்கிட்டேன். அந்தப் பிரகாச சேனலில் எனது பங்கு மிக முக்கியமானதாகிவிட்டது. அதில் நிகழ்ச்சி தொகுக்க வருபவர்களை நான் தொகுக்க ஆரம்பிச்சுட்டேன். 

இதற்கிடையில் நான் காதலித்து திருமணம் செய்துகிட்டேன். என் மகன் வெளிநாட்ல படிச்சுகிட்டிருக்கான்.

பலரிடம் பிரியமாக இருந்துவிட்டு, என்னிடம் தொகுக்க வந்தார் அந்தப் பெண். அவர் திருமணமானவர்தான் என்றாலும், என்மீது அந்தப் பெண் காட்டிய பிரியம் ரொம்ப அதிகம். எனக்கு ஏறக்குறைய இரண்டாவது மனைவியாகவே ஆகிவிட்டார் அவருக்கு மகாபலிபுரம் சாலையில் ஒரு பெரிய வீட்டை வாங்கிக் கொடுத்தேன். அந்தப் பிரியம் என்னிடமிருந்து பணத்தை வாங்கி தனது கணவரின் பிஸினஸுக்காக கொடுத்து வந்ததால் எங்க பிஸினஸை அவரது கணவர் கண்டுக்கவில்லை. இன்றைக்கு பிரியத்திடம் பணம் மட்டுமே சுமார் இருபது கோடியும், சொத்துக்கள் ஐம்பது கோடியாக வசதியாக செட்டிலாகிவிட்டார்கள். 

நான் இந்தப் பிரியத்திடம் தொடர்பு வைத்ததிலிருந்து வீட்டிற்கு சரியாகப் போவதில்லை. நாளடைவில் வீட்டிற்குப் போவதையே நிறுத்திக்கொண்டேன். இதனால் கோபமடைந்த என் மனைவி விவாகரத்து வரை போக, பேசி சமாதானம் செய்து வைத்திருக்கிறேன்.

ஒருவன் உழைக்காமலேயே பணம் கொட்டத் தொடங்கிவிட்டால் அவனின் பொழுதுபோக்குக்கு புட்டியும், குட்டியும்தானே தேவை. இன்றைக்கு சுமார் இருநூறு கோடிக்குமேல் சொத்து. சினிமா உலகில் நான் வைப்பதுதான் சட்டம் என்றாகிவிட்டதால், நடிகைகளை போன் போட்டு அழைத்தால் வந்துவிடும் நிலை. தங்கவேட் டையாடிய நடிகை பக்கத்து மாநிலத்தில் செட்டிலாகியிருந்தாலும் அவர் பெரும்பாலும் இருப்பது சென்னையில்தான். அவருக்கும் சென்னையில் ஒரு வீட்டை வாங்கிக் கொடுத்து அவரின் கணவருக்கும் கைச் செலவுக்கு பணத்தைத் தருவேன். ஆண்களுக்கு சமமாக சரக்கடிக்கும் அந்த நடிகை என்னை திணறடித்துவிடுவார்.

இப்படி உல்லாசப் பேர்வழியாக நான் திரிந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் சினிமா சம்பந்த மான பஞ்சாயத்துகளிலும் இறங்கிவிட்டேன். சாதாரணமாக ‘பயந் தாங்கொல்லி’யான நான் பணமும் புகழும் பெருகப் பெருக அடியாட்களின் கும்பலையும் உருவாக்கிக் கொண்டேன். சில வருடங்களுக்கு முன் பரோட்டா கடையில் வேலை செய்து வந்த மணிகண்ட சுவாமிகளின் பெயரைக் கொண்ட ஒரு நபர் என்னிடம் வந்தார். பழக்கடை சார்பாக சின்னச் சின்ன பஞ்சாயத்துகளை செய்து வந்த அவனை எனக்கு கையாளாக வச்சுக்கிட்டேன். என் முதலாளி என்னிடம் ‘அவனை செய்ஞ்சிடு’ என்றால் அவனை தட்டிவைனு அர்த்தம். ‘நெருக்கி செய்’னு சொன்னால் பொளந்துடுன்னு அர்த்தம். அந்த வேலைகளை அந்த மணிகண்ட சுவாமிகள் மூலம்தான் செஞ்சு முடிப்பேன். வெறும் உருட்டுக் கட்டையை மட்டுமே மூலதனமா வச்சுகிட்டு என்கிட்ட வந்த அவனுக்கு இன்னைக்கு கார்கள் மட்டுமே எட்டுக் கோடி ரூபாய்க்கு இருக்கு. எல்லா வெளிநாட்டு கார்லயும் டாப் எண்டு மாடல் வச்சுகிட்டி ருக்கான். பிஸ்லரி வாட்டர்ல தான் வாய் கொப்புளிச்சு முகம் கழுவுறான். இப்போது என் கூடவே கம்பி எண்ணும் வேலை செய்து கொண்டிருக்கும் அவனுக்கு இப்போது எனக்கு சமமான சொத்து இருக்கு. இப்போது அவனும் சினிமா தயாரிப்பாளராயிட்டான்.

இதுவரைக்கும் சினிமா தொடர்பான தொழில் செய்து வந்த என்னோட முதலாளி கொஞ்ச வருசத்துக்கு முன் நேரடியாகவே சினிமாவுக்கு ஃபைனான்ஸ் பண்றது, படம் எடுக்கறதுன்னு இறங்கினார். அதுக்குப் பிறகு என்னோட ஆட்டத்த கேட்கவே வேண்டாம். ஒரு படத்துக்கு ஃபைனான்ஸ் செய்தோம்னா அந்தப் படம் எந்த ஊர்ல ஷூட்டிங் நடக்குதோ அந்த ஊருக்குப் போய் இறங்கிடுவேன். அங்க ஓட்டல்ல அந்த நடிகையோட டிஸ்கஷன் முடிச்சுட்டு சென்னைக்குத் திரும்பிடுவேன்.

எங்களுக்கு ஒத்துவராத எத்தனையோ தயாரிப் பாளர்கள நடுத்தெருவுல திரியவிட்டிருக்கேன். எனக்கு கட்டிங் கொடுத்து, குஷிப்படுத்துனாதான் சினிமா விமர்சனத்துல பாராட்டு கிடைக்கும். இல்லன்னா படம் மோசம்தான்.

தொலைக்காட்சியில எனக்கு முழு சுதந்திரம் கிடைச்சதுக்கப்புறம் நானே பினாமி பேர்ல நாலஞ்சு புரோகிராம் எடுத்து நடத்தியதும், எல்லாத்துலயும் எனக்கு கட்டிங் வந்து டணும். என் கூட இருந்த மணிகண்டசாமிக்கு படம் டிஸ்ட்ரி பியூஷன்ல ஒரு ஏரியாவை கொடுத்துடணும். சில நேரங்கள்ல எங்க முதலாளி யார் கூடவாது டிஸ்கஷனுக்குப் போகணும்னு நினைச்சா அதையும் நான் ஏற்பாடு செய்து தரணும்.

ஒரு முறை ஒரு பொண்ணு விஷயத்துல ஒரு «‘ஹாட்டல்ல பெரிய சண்டையாயிடுச்சு. அதை ராஜ தந்திரமாக என் வழக்கறிஞர் நண்பர் ஒருத்தர் பேசி முடிச்சிட்டாரு. ஆனா அவருக்கு மணிகண்ட சாமியால் ஏற்பட்ட அவமானத்தால் என்னை அடிக்க வந்துட்டாரு.

அதேபோல பிரபல சாக்லெட் ஹீரோகிட்ட ஒரு படத்த நடிச்சு கொடுக்கக் கேட்டேன். அவர் முடியாதுன்னு சொல்லிட்டாரு. உடனே அவரை வச்சு யாரும் படம் எடுக்கக் கூடாதுன்னு வாய்மொழி உத்தரவு போட்டேன். அப்போ நான் சொல்றதெல்லாம் கேட்ட சினிமாக்காரங்க இதையும் கேட்டாங்க. நாலஞ்சு வருஷமா அவருக்கு தமிழ்ல படமே இல்லை.

இதற்கிடையில நான் தனி ஆவர்த்தனம் செய்யறது என் முதலாளிக்கு அரசல் புரசலா தெரிய வந்துடுச்சு. இருந்தாலும் பழைய நட்ப நெனச்சு அவர் என்கிட்ட எதுவும் கேட்கல. நானும் எதுவும் கண்டுக்காம என் வேலைகளைச் செய்து வந்தேன். ஆளுங்கட்சி, மீடியா வேற கேக்கணுமா! எங்க வேணும்னாலும் எதை வேணும்னாலும் என்னால செய்துக்க முடிந்தது.

இதனால என்ன யாராலயும் கட்டுப்படுத்த முடியல. ஆனா இந்த வாழ்க்கையே நிரந்தரம்னு நெனைச்சுட்டேன். ‘மெஷின்’ சினிமா பாட்டு போடற அன்னிக்கு மேடைல வச்சு சினிமா உலகமே என்னைப் பாராட்டுச்சு. இப்ப என்மேல புகார் கொடுக்க ஒட்டுமொத்த சினிமா உலகமும் கிளம்பிடுச்சு. என்னை கம்பி எண்ண கூட்டினு போனபோது எல்லாரும் பட்டாசு வெடிச்சு ஸ்வீட் கொடுத்துக் கொண்டாடினார்களாம். அத நெனச்சா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. ஏற்கெனவே என்னோட சேஷ்டைகளால என் முதலாளிக்கு என் மேல கொஞ்சம் வெறுப்பு இருந்தது உண்மைதான். அதுமட்டுமின்றி என் முதலாளியோட பொழப்பும் சினிமா சம்பந்தப்பட்டது. இப்போ எல்லா சினிமாக்காரங்களும் என்னை எதிரியா பாக்கிறதால என்னால என் முதலாளி பொழப்பு டிஸ்டர்ப் ஆயிடும்னு அவர் யோசிக்கிறார். அதனால நான் வெளியில் வந்ததும் என்னை அவர் ஒதுக்கி வச்சுடுவாரோன்னு சந்தேகமா இருக்கு. ஆனாலும் இதுவரைக்கும் நான் அவருக்கு செஞ்ச துரோகத்தை அவர் பொறுத்ததே பெரிய விஷயம்தான்.

வெளியே வந்தபிறகுதான் நான் என்ன செய்யறதுன்னு முடிவு செய்யணும். அதுவரைக்கும் கொஞ்சம் ஓய்வெடுத்துக்கறேன். 
- குமுதம் ரிப்போட்டர் 



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

மிஸ்டர் கழுகு: தயாநிதிக்கு செம சிக்கல்!

 

 

ழுகார் வந்ததும் நமக்கு ஸ்பெஷல் சல்யூட் அடித்த விதமே, சிரிப்பை வரவழைத்தது! ”கோர்ட்… போலீஸ்… சி.பி.ஐ…. கைது… என எல்லாமே காக்கிக் கதைகளாக இருப்பதால்தான், உமக்கு ஒரு சல்யூட் வைத்தேன்!” என்று காரணம் சொன்ன கழுகாரிடம்,

”முதலில் கோர்ட்டில் இருந்து ஆரம்பியும்!” என்றோம்.

”முதல்வர் ஜெயலலிதாவைச் சுற்றிய சொத்துக் குவிப்புக் கொக்கி, மெள்ள மெள்ள இறுக ஆரம்பித்துவிட்டது. முதல் முறை முதல்வராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்த்ததாக ஜெயலலிதா மீது பதிவான வழக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவால் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ‘ஜெயலலிதா மீண்டும் முதல்வர் ஆனதால், சொத்துக் குவிப்பு வழக்கு அம்பேல் ஆகிவிடும்’ என்று தி.மு.க-வினரே நினைத்தனர். ஆனால், அதற்கு மாறாக, வழக்கு வேகமாக நடக்க ஆரம்பித்துவிட்டது என்று சில வாரங்களுக்கு முன்னால் நான் சொல்லியது ஞாபகம் இருக்கிறதா? வரும் 27-ம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் ‘முதல்வர் ஆஜராக வேண்டும்’ என்று நீதிபதி மல்லிகார்ஜுனய்யா உத்தரவிட்டுள்ளார்.”

”எத்தனையோ சம்மன்கள் பார்த்தாச்சே… அதோடு இதுவும் ஒன்றுதானே?”

”இல்லை என்கிறார்கள், பெங்களூரு நீதித் துறை வட்டத்தினர். ‘எத்தனையோ தடவைகள் கோர்ட் உத்தரவுகளை, ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீறியுள்ளனர். இதனால், அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா கோபத்தில் இருக்கிறார். அவரது வலுவான வாதங்களைப் பார்த்துதான் நீதிபதி இம்மாதிரியான ஆஜர் உத்தரவைப் போட்டார்’ என்கிறார்கள். ஒரு முறை ஜெயலலிதாவின் வக்கீல் நவநீதகிருஷ்ணனைப் பார்த்து, ‘இப்படி ஒரு வழக்கு இங்கு நடப்பது உங்களது பெட்டிஷனருக்குத் தெரியுமா?’ என்று நீதிபதியே கேட்டார். அந்தக் கோபம்தான் இன்று வெடித்துள்ளது.”

”ஓகோ!”

”அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா, ‘இந்த வழக்கில் இதுவரை குற்றம் சாட்டப்பட்டவர்கள், நேரில் ஆஜராகவே இல்லை. இந்திய கிரிமினல் சட்டம் 313-ன்படி, ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நான்கு பேரையும் நேரில் ஆஜராக உத்தரவிட வேண்டும்’ என்று சொன்னதும், ஜெ. தரப்பு வழக்கறிஞர் வெங்கடேஷ்வர ராவ், ‘ஆடிட்டர் பாலாஜியை மீண்டும் விசாரிக்க வேண்டும் என பெங்களூரு ஹைகோர்ட்டில் நாங்கள் போட்ட மனு விசாரணையில் இருக்கிறது. அதன் தீர்ப்பு வரும் வரை குற்றம் சாட்டப்பட்டவர்களை நேரில் ஆஜராக சொல்லக் கூடாது’ எனக் கேட்டாராம். ‘ஒருமுறைகூட ஜெயலலிதா ஆஜராகாதது, கோர்ட்டை அவமதிக்கும் செயல்’ என்று ஆச்சார்யா சொல்ல… 27-ம் தேதி என்று நாள் குறித்துள்ளார் நீதிபதி. ‘கோட்டையில் உட்கார்ந்து​கொண்டு கோர்ட் படி ஏறுவதா?’ என்று ஜெ. தரப்பு கொந்தளிக்க ஆரம்பித்துள்ளதாம்.”

”கோர்ட் மேட்டர் இது. என்ன நடக்கிறது என்று பார்ப்போம்…”

”அடுத்து சி.பி.ஐ. விவகாரத்துக்கு வருகிறேன்! தயாநிதி மாறன்-சிவசங்கரன் சம்பந்தமான விஷயம் குறித்து எழுதிய உமது நிருபர், சிங்கப்பூரில் இருந்து ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கி அதிகாரியைப்பற்றி கோடிட்டுக் காட்டி இருந்தார். அந்த அதிகாரியை கடந்த 13-ம் தேதி சி.பி.ஐ. வரவழைத்துவிட்டது.”

”வேகமாகத்தான் இருக்கிறதோ சி.பி.ஐ.?”

”ம்! சிவசங்கரனுக்கு சொந்தமான ஏர்செல் நிறுவனம், தயாநிதி மாறனின் கட்டாயத்தால்தான் மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்கப்பட்டது என்பதுதான் இந்த வழக்கின் சாராம்சம். இதில் சிவசங்கரன் சொல்வது நிஜமா, அல்லது தயாநிதி சொல்வது நிஜமா என்ற பூர்வாங்க விசாரணையில் சி.பி.ஐ. இறங்கி உள்ளது. இதற்கான பணப் பரிவர்த்தனைகள் மும்பையில் உள்ள ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கி மூலமாகத்தான் நடந்ததாம். இதை சிவசங்கரன் தனது வாக்குமூலத்தில் விவரித்துள்ளாராம். கடந்த மே மாதம் அந்த வங்கிக்கு சி.பி.ஐ. ஒரு தாக்கீது அனுப்பியது. அந்தக் காலகட்டத்தில் வங்கி அதிகாரிகளாக இருந்தவர்களின் பட்டியலும் சி.பி.ஐ. வசம் வந்து சேர்ந்தது.  மும்பையில் இந்த வங்கியின் மெர்ஜர் மற்றும் அக்கியூசேஷன் [Merger & Acquisition Cell]பிரிவுதான் இந்தப் பங்கு பரிவர்த்தனைப் பணிகளை மேற்கொண்டுள்ளது. இந்தப் பணிகளைக் கவனித்த அதிகாரியின் பெயர், பிரகலாத் சாந்திகிராம். அகமதாபாத்தைச் சேர்ந்த இவர், மும்பையில் இந்த வங்கியில் பணியாற்றி, இப்போது சிங்கப்பூரில் உள்ள ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு வங்கியில் இருக்கிறார். சி.பி.ஐ. தனது துருப்புச் சீட்டாக நினைப்பது இவரைத்தான்!”

”என்ன சொன்னாராம் இவர்?”

”முழு விவரங்கள் இனிமேல்தான் மெள்ளக் கசியும். ஆனால், தயாநிதிக்கு செம சிக்கல் காத்திருக்கிறது என்கிறது சி.பி.ஐ.! டெல்லி வந்தார் பிரகலாத். சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் மதியம் 11.30-க்குத் தொடங்கிய விசாரணை, மாலை 5.30 வரை நீடித்தது. ‘ஏர்செல்லின் பங்குகள் மேக்சிஸுக்கு எப்படி விற்கப்பட்டன? இதன் உரிமை எப்படி கைமாறியது?’ என்பன போன்ற விவரங்களை இவர் கூறியுள்ளார். சிவசங்கரன் – அனந்தகிருஷ்ணன் – வங்கி… இந்த முக்கோணப் பரிமாற்றங்களை அப்படியே  வாக்குமூலமாகக் கொடுத்துள்​ளாராம் பிரகலாத். ஏர்செல் விற்பனையில் சுமார் 500 மில்லியன் டாலர் வரை குறைவாகவே தனக்குக் கிடைத்தது என்பது சிவசங்கரனின் புகார். இதில் சிவசங்கரனின் புகார் உண்மையா என்பதை அறியவும் பிரகலாத்  போன்ற வங்கி அதிகாரிகளிடம் விசாரணை தொடங்கி உள்ளதாம். ஒட்டுமொத்தமாக, சன் குரூப் – ஆனந்த கிருஷ்ணன் – சிவசங்கரன் ஆகிய மூன்று தரப்புகளுக்கும் இடையே நடந்த வர்த்தக விவரங்களை அறியும் விவகாரம் சூடு பிடித்துவிட்டது. இதன் பிறகுதான் மலேசியா அனந்தகிருஷ்ணனுக்கு ஆதரவாக அதில், தயாநிதி மாறன் இருந்தாரா என்பது முழுமையாகத் தெரியவரும்…”

”அடுத்து யாரை விசாரிப்பார்கள்?”

”சென்னையில் கால் ஊன்றி இன்று இந்தியா முழுவதும் கொடிநாட்டி வரும் மிக முக்கியமான மருத்துவக் குடும்பம் இந்த விசாரணை வளையத்துக்குள் வரப்போகிறது. அடுத்த சில நாட்களில், தயாநிதி மாறனுக்கு சி.பி.ஐ. அழைப்பு வரலாம். அவரது டெல்லி விசிட் வெகு சீக்கிரமே இருக்கும்.”

”இங்கே தமிழ்நாடு போலீஸும் சீரியஸாக அலைந்து​கொண்டு இருக்கிறதே?”

”சன் பிக்சர்ஸ் சக்சேனா கைதைத் தொடர்ந்து, பலரும் பல புகார்களை அள்ளி வீசிக்கொண்டு இருக்கிறார்கள். இதுவரை 12-க்கும் அதிகமான புகார்கள் அவர் மீது பதிந்து உள்ளன. இந்த வழக்குகளில் தனித் தனியாகக் கைது செய்து ஜாமீன் கிடைக்கவிடாமல் தடுக்கவே, இந்த நடவடிக்கை. இதன் தொடர்ச்​சியாக, கலாநிதி மாறனுக்கு சென்னை கே.கே.நகர் போலீஸார் சம்மன் அனுப்பி, விசாரணைக்கு அழைத்தார்கள். அவர் 26-ம் தேதி ஆஜராவதாகச் சொல்லி இருக்கிறார். அதற்குப் பிறகுதான், இந்த விவகாரத்தில் தமிழ்நாடு போலீஸ் சீரியஸாக முன்னேறும். சி.பி.ஐ-யின் நடவடிக்கைகளைப் பார்த்த பிறகுதான், தமிழக போலீஸாரின் நடவடிக்கைகள் அமையும்.”

”மியூச்சுவல் அண்டர்ஸ்டேண்டிங்கா?”

”இருக்கலாம்! அடுத்த விஷயத்தைக் கேளும்… நீரா ராடியாவின் டேப் விவகாரங்களை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ளது அல்லவா? இப்போது, மேலும் 11 போன் அழைப்புகளை புதிதாக சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ளது. அதில், கனிமொழி, ஆ.ராசா, ராசாவின் செயலாளராக இருந்த சந்தோலியா ஆகியோரின் புதிய உரை​யாடல்கள் இருக்கின்றனவாம். இத்துடன், ஸ்வான் டெலிகாமைச் சேர்ந்த வினோத் கோயங்கா மற்றும் அவரது மனைவி அஸீலா, சகோதரர் பிரமோத், அவரது மகன் என்று 11 சாட்சிகளையும் தஸ்தாவேஜ்களையும் சி.பி.ஐ. புதிதாகச் சேர்த்துள்ளது. இந்த டேப்பில் உள்ள உரையாடல்களின் முழு விவரங்கள் வெளியில் வந்தால்… புதிய பூகம்பங்கள் கிளம்பலாம்!” என்றபடி மீண்டும் போலீஸ் சல்யூட் அடித்துக் கிளம்பினார் கழுகார்!

படம்: சு.குமரேசன்



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

சென்னை வந்த நடிகை ரஞ்சிதாவை, தாஜ் கன்னிமாரா ஹோட்டலில் சந்தித்தோம். ”எனக்கு வாழ்வு கொடுத்து ஆளாக்கியது சென்னைதான். ஆனால், கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக இந்த மண்ணில் என்னைக் கால் மிதிக்கவிடாமல் செய்துவிட்டார்கள். தப்பு செய்து அதற்காகத் தண்டனை கொடுத்து இருந்தால், கவலைப்பட்டு இருக்க மாட்டேன். ஆனால், செய்யாத தப்புக்கு நான் தண்டனை அனுபவித்தேன். அனுபவித்த எனக்குத்தான் அந்த வலி புரியும். ஒவ்வொரு நாளும் தூக்கம் இல்லாமல் நான் பட்ட வேதனைகள் கொஞ்சம்நஞ்சம் இல்லை…” என்றவரிடம் கேள்விகள் கேட்டோம்.

”அந்த வீடியோ பற்றி என்னதான் சொல்கிறீர்கள்?”

”ஒரு நாள் திடீர் என்று லெனின் கருப்பன் என்கிற தர்மானந்தா, என்னை சந்திக்க வந்தார். ஆசிரமத்தின் முன்னாள் சீடரான அவர் அந்த வீடியோவை என்னிடம் காட்டினார். பார்த்ததும் அதிர்ந்து​விட்டேன். ‘இப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லையே… அப்புறம் எப்படி?’ என்று கத்தினேன். ‘அது எங்களுக்கும் தெரியும். இது நாங்களே உருவாக்கிய வீடியோ. இதை வெளியிடாமல் இருக்க வேண்டுமானால், நாங்கள் சொல்​வதை நீ கேட்கணும்!’ என்று சொன்ன லெனின், இந்த வீடி​யோவைக் காட்டி என்னிடம் தவறாக நடந்துகொள்ளவும் முயற்சி செய்தார். நான் அவரைத் திட்டி அனுப்பினேன்.

அதற்குப் பிறகு, ‘நாங்கள் நான்கு பேர் சேர்ந்துதான் இதைத் தயாரித்தோம். வீடியோவை சன் டி.வி-யிலும், போட்டோவை நக்கீரன் பத்திரிகையிலும் வெளி​யிடாமல் இருக்க வேண்டும் என்றால்,  60 கோடி கொடுக்கணும்’ என அடுத்த மிரட்டல் வந்தது. ‘போலியான வீடியோவை வைத்து உங்களால் என்ன பண்ண முடியும்?’ என்று கேட்டேன். ‘அது நமக்கு மட்டும்தானே தெரியும். எங்களுடைய நோக்கம் சாமியின் பேரைக் கெடுக்கணும்!’ என்று சொன்னார்கள். நான் எவ்வளவோ பேசிப் பார்த்தேன். அவர்கள் கேட்கும் மன நிலையில் இல்லை.

அடுத்த சில நாட்களில் டி.வி-யிலும், பத்திரிகையிலும் வெளியிட்டு, எங்களை எவ்​வ​ளவு கேவலப்படுத்த முடியு​மோ… அவ்வளவு கேவலப்​படுத்தினார்கள்!”

”அந்த வீடியோவில் அத்தனை விவரமாகவும் துல்லியமாகவும் உள்ள காட்சிகளை ‘மார்ஃபிங்’ செய்து ஒட்டுவேலையில் காட்டி இருக்க முடியாது என்று சொல்கிறார்களே?”

”அது மார்ஃபிங் செய்யப்​பட்டதுதான்!

அந்த வீடியோ ஒளிபரப்பான அன்று இரவு, ‘நீங்க சாமிக்கு எதிராகத்தான் பேட்டி கொடுக்​கணும். அதையும் மீறி ஏதாவது வாய் திறந்தீங்கன்னா, என்ன நடக்கும்னு தெரியாது’ என்று எனக்கு மிரட்டல் வந்தது. உடனே, மிரட்டியவர்கள் மீது புகார் கொடுக்கக் கிளம்பினேன். மறுபடியும் டி.வி. தரப்பில் இருந்து போன் வந்தது. ‘மெட்ராஸ் பக்கம் காலெடுத்து வைத்தால், பொய் கேஸ் போட்டு உன்னை உள்ளே தள்ளுவதற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டோம். நீ வாயே திறக்கக் கூடாது!’ என மிரட்டினார்கள். அந்தச் சூழ்நிலையில் ஆட்சி, அதிகாரம் எல்லாம் அவர்கள் கையில் இருந்தது. அதை மீறி நான் கொடுத்து இருந்தாலும் எந்த நடவடிக்கையும் எடுத்திருக்க மாட்டார்கள்.

இப்போது ஆட்சி மாறிவிட்டது. முதல்வர் ஜெயலலிதா மேடம், தப்பு செய்தவர்களை உள்ளே தள்ளிக்கொண்டு இருக்கிறார். இந்த சமயத்தில் நாமும் புகார் கொடுத்தால் நீதி கிடைக்கும் என்று நம்பித்தான், சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்தேன்.

‘சம்பந்தமே இல்லாத என்னை சுவாமியோடு இணைத்து ஒரு வீடியோ தயாரித்து, அதை வெளியிட்ட டி.வி. மீதும், என்னை மிரட்டியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!’ என்று புகார் கொடுத்தேன். சன் குழுமத்தைச் சேர்ந்த சிலரது பெயரையும் என் புகாரில் சொல்லி இருக்கிறேன். ‘அவங்க பேரை இப்போது வெளியில் சொன்னால், அவர்கள் வெளிநாட்டுக்குத் தப்பிப் போக வாய்ப்பு இருக்கிறது. அதனால், விசாரணை முடியும் வரை அதை வெளியில் சொல்ல வேண்டாம்’ என போலீஸ் தரப்பில் சொன்னார்கள். அதனால் அதை உங்களிடம் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறேன்!” என்று சொல்கிறார் ரஞ்சிதா.

”அந்த வீடியோ முழுக்கவுமே பொய்க் காட்சி. அப்படி எதுவும் நடக்கவே இல்லை என்று கூறும் நித்தியானந்தா தரப்பு, தங்கள் பக்தர்களிடம் பணமும் நிலமும் கேட்டு சிலர்  பிளாக்மெயில் செய்தததாகவும் அதில் சிலர் பணம் கொடுத்துவிட்டதாகவும் கூறுவது எப்படி?

நித்தியானந்தா குரூப்பைப் பார்த்தால், தப்பே செய்யாமல் மிரட்டலுக்குப் பணிகிற ரகம் மாதிரியா தெரிகிறது?” என்று சிலர் கேட்பதற்குத்தான் பதிலே இல்லை!

- கே.ராஜாதிருவேங்கடம், படங்கள்: சு.குமரேசன்



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

தயாநிதி மாறன் மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சரானதும் இளமையான அமைச்சர்,நிர்வாகத்திறன்மிக்கவர் என்றெல்லாம் அவரது ஊடகங்கள் மாநில வாரியாக அவரைப்பற்றி புகழ் சூட்டின.இப்போது 2ஜி ஊழலில் சிக்கி தன் பதவியை இழந்திருக்கின்றார் தயாநிதி அவரது கடந்த காலங்களை கொஞ்சம் திரும்பி பார்த்தால் அவரது திரமை தெரியவரும்.
தயாநிமாறனின் இத்தனை வளர்ச்சிக்கும் அவர் முரசொலி மாறனின் மகன் என்பதையும் கருநாநிதியின் பேரன் என்பதையும் தவிர வேறு எந்த தகுதியும் இல்லை.சென்னை லயாலோ கல்லூரியில் பி.ஏ பொருளாதாரத்தில் பட்ட படிப்பை முடித்தவர் தயாநிதிமாறன்.
ஆனால் எந்த வேலைக்கும் செல்லவில்லை.மத்திய அமைச்சர் முறசெலி மாறனின் மகன் என்கின்ற செல்வாக்கை வைத்துக்கொண்டு நண்பர்களோடு சுற்றித்திரிந்தார்.குடும்பத்தினரே அவருகக்கு அன்பு லெதர் கார்மென்ட்ஸ் என்கின்ற பெயறில் அறிவாலயத்தில் ஒரு நிறுவனத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர்.
தயாநிதியால் தன் சொந்த நிறுவனத்தை எட்டு மாதங்கள் மட்டுமே நடத்தமுடிந்தது நஷ்டத்தால் நிறுவனத்தை இழுத்து மூடிய தயாநிதி மறுபடியும் நண்பர்களோடு ஊர்சுற்ற ஆரம்பித்தார்.இந்த நேரத்தில்தான் கலாநிதி மாறன் சன் டீ.வி ஆரம்பித்தார்.
ஆகவே தானும்சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்கின்ற ஆசை தயாநிதிக்கு ஏற்பட டிஸ்கொதே கிளப் என்கின்ற பெயரில் நடன பார்கள் சென்னையில் அறிமுகமான நேரம் அது தானும் அப்படி ஆரம்பித்தால் என்ன எனத் தோன்ற கலாநிதியிடம் ஐடியா கேட்க அவரும் சம்மதிக்க , குவாலட்டி இன் அருனா ஓட்டல் மாடியில் கிளப் ஆரம்பித்தார்.2000- ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அரசியல் செல்வாக்கு மூலம் ரஜினியை வரவழைத்தார் தயாநிதிமாறன்
அந்தவருடம் மற்ற ஓட்டல் புத்தாண்டு கொண்டாட்டங்களைவிட இவர்களது கிளப் அமர்களப்பட்டது 2001-ல் ஆட்சிமாற்றம் வந்ததும் டிஸ்கொதே கிளப்களில் ரெய்டு நடத்த முதல்வர் ஜெயலலிதா உத்திரவிட,தயாவின் கிளப்பும் இழுத்து மூடப்பட்டது.
அந்த நேரத்தில் கலாநிதி மாறன்தான் முரசெலி நிர்வாக இக்குனராக இருந்தார்.சன் டீவி வேலைகளில் அவர் பிஸியாக இருந்ததால் முரசொலி பொறுப்பிலிருந்து விலகினார்.இதையடுத்து முறசொலி இயக்குனரானார் தயாநிதி மாறன்.அதன்பிறகும் இரவில் கேளிக்கை விடுதிகளுக்குப் போவது,நண்பர்களுடன் ஊர் சுற்றுவது என்றே இருந்ததால் அண்ணன் அளவுக்கு நீ எதுவுமே செய்வதில்லை என்ற திட்டு கருணாநியிடம் இருந்து கிடைத்தது.
வேறு வழியில்லாமல் முரசொலி நிர்வாகதம்தில் கொஞ்சம் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.வண்ண அச்சகத்தை கொண்டு வந்தார் அலுவலகத்தை நவீனமாக்கினார் மற்ற பத்திரிக்கை நிறுவனங்களோடு போட்டிபோட்டுக்கொண்டு முன்னுக்கு வரவேண்டும் என்பதற்காக தீபாவளி மலரையும் கொண்டு வந்தார் மரரோடு இலவசங்களையும் வாரியிறைத்தார் இது குறித்து பொதுநல வழக்கு தொடரப்பட்டு தடைவிழுந்;தது இப்போதும் திபாவளி மலரோடு இலவசங்கள் கொடுக்க தடையுள்ளது.
முரசொலியில் உர்காந்து கொண்டே கட்சிக்காரர்களுடன் நெருங்கி பழகினார்.அப்பா முறசொலிமாறன் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டவுடன் அண்ணன்,தம்பி இருவருமே சிகரெட் குடிப்பதை நிருத்திவிட்டனர். ஆனால் மற்ற கேளிக்கைகளுக்கு பஞசமிருக்காது.இநநிலையில் முறசொலிமாறன் இறந்துவிட தம்பிக்கு ஏதாவது தொழில் இருக்கவேண்டும் என்று நினைத்தார் கலாநிதிமாறன்;
ஆனால் முன்னரே தயாவின் நிர்வாக திறன்(?) பற்றி தெரியும் என்பதால் குடும்பத்தினர் அவருக்காக ரிஸ்க் எடுக்க முன்வரவில்லை இந்த நிலையில்தான் அவரை அரசியலுக்கு கொண்டுவந்தால் என்ன என்கின்ற யோசனை வருகின்றது இதை செயல்படுத்த கனிமொழி மூலமாக முயற்சிக்க அவர் அப்பாவிடம் செல்ல 2004-ல் மத்திய சென்னை எம்.பி ஆனார்.
உடனடியாக அவருக்கு மத்திய அமைச்சர் பதவியும் கொடுக்கப்பட்டது அதற்கும் அப்போதே கட்சியில் கடும் எதிற்பு எழுந்தது மதுரையில் தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்ட விவகாரம் மத்திய அமைச்சர் பதவி பிடுங்கப்பட்டது. தனது அரசியல் எதிர்காலத்தை காப்பாற்றிக் கொள்ள தனது ஆதவாளர்களை வைத்துக் கொண்டுமாறன்பேரவை ஆரம்பிக்க திட்டமிட்டார்
குடும்பம் மறுபடியும் இனைந்ததால் மாறன்பேரவை கணவு கலைந்தது 2009-ல் மறுபடியும் அதே தொகுதியில் போட்டியிட்டு வென்றார் தான் வகித்துவந்த தகவல் தொழில் நுட்பத்துறை ஆ.ராசாவுக்கு கொடுக்கப்பட்டதில் தயாவிற்கு எரிச்சல் அது ஸ்பெக்ட்ராம் விவகாரத்தில் எதிரொலித்தது. .ஸ்பெக்ட்ராம் விவகாரத்தை பட்டிதொட்டிக்கெல்லாம் கொன்டுசென்ற பெருமை மாறன் சகோதரர்களுக்கே சேரும்.
தயாநிதிமாறன் அரசிலுக்கு வந்தபிறகு மாறன் சகோதர்களின் வளர்ச்சி கற்பனை செய்யமுடியாதது.தி.மு.க. தலைவர் கருனாநிதியின் கட்டுப்பாட்டையும் மீறி விஸ்வரூபம் எடுத்தார்கள் தி.மு.க.வின் பெயரை பயன்படுத்தி ஊடகங்களிலும் அரசியளிலும் இருவரும் செய்த அட்டகாசங்களை கருனாநிதியாலும் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு சென்றுவிட்டது என்பதுதான் உண்மை.மிக உச்சகட்டமாக கனிமொழி கைது செய்யப்பட்டதற்கு பின்னனியில் தயாநிதிமாறன் இருக்கின்றார் என்ற செய்தி கருனாநிதியை கடும் கோபத்தில் ஆழ்த்தியது.
தன்னால் கட்டுப்படுத்த முடியாத பேரன்கள் இன்று 2ஜியில் சிக்கி வதைபடுவதை கருனாநிதி உள்ளுக்குள் ரசிக்கக்கூடும் .ஏனெனில் அறுபது ஆண்டுகள் பாரம்பரியம்மிக்க தி.மு.க.வின் இன்றைய வீழ்ச்சிக்குதயாநிதிமாறன் தான் முக்கிய காரணம் என்பதை கருனாநிதி மறக்கவும் முடியாது மறுக்கவும் முடியாது.
 நன்றி குமுதம் ரிப்போர்ட்டர்



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

சாதாரண தமிழக அரசியல்வாதிகளிலிருந்து முற்றிலும் வேறுபட்ட தோற்றம். தமிழன் என்பதை ஓங்கி உரைக்கும் அடையாளங்கள் எதுவுமில்லை. கட்சிக் கொடியின் நிறத்தில் கரைவேட்டி, கதர் சட்டை, தோளில் ஒரு துண்டு சகிதம் முறுக்கிய மீசையுடன் தமிழை தவிர வேறு எந்த மொழியும் தெரியாமல் நாடாளுமன்ற அவைகளின் இருக்கையில் முழித்து கொண்டிருக்கும் தமிழக அரசியல்வாதிகளின் எந்த கெட்டப்பும் இல்லாத மேனரிசம்.

சரளமாக நுனி நாக்கிலிருந்து வெளிப்படும் கான்வெண்ட் இங்கிலீஷ். அதுவும் ஆக்ஸ்ஃபோர்ட் ஆக்ஸண்டில்.கோட்டும், சூட்டும் கூடவே வெளிநாட்டு மூக்கு கண்ணாடியும் அணியும் பாணி. முடியை அழகாக வகுந்தெடுத்து சீவிய தோற்றம். ஆக மொத்தத்தில் ஒரு பிசினஸ்காரனின் லுக். மைக்ரோஸாஃப்டின் தலைவர் பில்கேட்சுடன் நெருக்கம். பன்னாட்டு நிறுவனம் ஒன்றின் சீஃப் எக்ஸ்க்யூடிவ் ஆஃபிஸரோ? என எண்ணத்தோன்றும். ஒட்டுமொத்தமாக நடை, உடை, பாவனைகளில் கவர்ந்திழுக்கும் ஆளுமைத்தன்மை. வடநாட்டின் வெள்ளைத்தோலையும், ஹிந்தியையும், ஆங்கிலத்தையும் எதிர்கொள்ளும் திராணி பெற்ற தி.மு.கவின் டெல்லி பிரதிநிதி.

அவர்தான் தயா நிதி.

இந்த அடைமொழிகளையெல்லாம் கூறி என்ன பயன்? அதிர்ஷ்டம் வேண்டும்! கேரள பத்மனாபாசுவாமி கோயில் நிதியை (புதையல்) போலத்தான் தயாநிதியின் நிலைமையும். புதையலை கண்டுபிடித்தது தான் இப்பொழுது பிரச்சனைகளுக்கெல்லாம் காரணமாம். 2ஜி என்ற புதையல் ரகசியத்தை சி.ஏ.ஜி(comtroller and audit general of india) கண்டுபிடித்த பிறகு வந்த தொல்லைகள் தானே இதுவெல்லாம்.

தயாநிதியால் தி.மு.க-வுக்கு என்ன கதி ஏற்பட போகிறதோ? என்பது தமிழக மக்களின் உள்ளங்களை அலைக்கழிக்கும் கேள்வியாக மாறிவிட்டது. ஆனால் தி.மு.கவினர் தயாநிதியை சுமையாகத்தான் கருதுகிறார்களாம். பிசினஸையும் கவனித்து டிஸ்கோத்தே கிளப்புகளில் ஆனந்தமடைந்து துள்ளித்திரிந்த இளைஞனை பிடித்து அரசியலில் நுழையவைத்தவர் தாத்தா கலைஞர்தான். முதலில் வாரி வழங்கியது பொன்முட்டையிடும் வாத்து என கருதப்படும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் செய்தி ஒலிபரப்பு துறை.

நாடு தகவல் தொழில்நுட்ப புரட்சியை நோக்கி சென்றுக்கொண்டிருந்த காலக்கட்டத்தில் மாறனுக்கு யோகமும் அடித்தது. ஒரு சாதாரண பிசினஸ்காரன் என்ற நிலையிலிருந்து கோட்டும், சூட்டும் தரித்து நுனி நாக்கில் ஆங்கிலம் பேசி பன்னாட்டு குத்தகை நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் ஒரு ஃப்ரொபசனல் மினிஸ்டர் என்ற நிலையை அடைய தயாநிதிக்கு ரொம்ப காலம் தேவைப்படவில்லை. அதைப்போலவே அவருடைய வீழ்ச்சிக்கும் அதிக கால அவகாசம் தேவைப்படவில்லை.

பெயரும், புகழும் வளர்ச்சியடைந்தாலும் வீழ்ச்சியும் எளிதில் உருவானது. முன்பும் முழுமையாக 5 ஆண்டுகள் அதிகாரத்தை அனுபவிக்க முடியாமல் தயாநிதிக்கு அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. காரணம், குடும்பத்தில் பதவியை போட்டியை கிளறிவிட்டது. இப்பொழுது இரண்டாவது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் அமைச்சரவைலிருந்தும் இரண்டு ஆண்டுகளின் முடிவில் பதவியை பறிகொடுக்க வேண்டிய சூழல் தயாநிதிக்கு ஏற்பட்டுள்ளது. பதவியை முழுமையாக அனுபவிக்கும் தலைவிதி தயாநிதிக்கு இல்லைபோலும்!

ஆண்டி முத்த ராசா திகார் சிறையில் கம்பிகளை எண்ணிக்கொண்டிருக்கும் போது கனிமொழி கவிதை வடிக்கிறாராம். இடையே கலைஞர் சென்று கனியை கண்டவுடன் கண்ணீரும் வடித்தார். தி.மு.க வை முன்னேற்றுவதற்காக கோடிகளை சம்பாதித்தது தான் இவர்கள் செய்த தவறு. தயாநிதி ஐ.டி அமைச்சராக பதவி வகிக்கும் பொழுதுதான் பன்னாட்டு குத்தகை நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முகாமிட்டன.

பிற மாநிலத்தவர்கள், சொந்த மாநிலத்தை ரொம்பவே கவனிக்கிறார் என அங்கலாய்த்த பொழுது தயாநிதி கூலாக கூறினார் ‘நான் தமிழகத்தின் அமைச்சர் அல்லவா’ என. மலையாள மாஃபியாக்கள் டெல்லியில் அதிகாரத்தை சுகித்து வாழும் பொழுது தமிழன் என்ன ஏமாளியா? தயாநிதி கோடிகளுடன் விளையாடினார். தயாநிதியின் குடும்பத்திற்கு நெருக்கமான அனந்தகிருஷ்ணன் என்ற தொழிலதிபர் சகோதரர் கலாநிதியின் நிறுவனத்தில் முதலீடு செய்தது 800 கோடி ரூபாய்.

அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து அவருக்கு உதவினார் என்பது தற்போதைய குற்றச்சாட்டு.கோடிகளுக்கு குறைவான பரிவர்த்தனை கிடையாது. 2004-ஆம் ஆண்டு தயாநிதி வெளியிட்ட சொத்து மதிப்பு 1 கோடியே 60 லட்சமாகும். தகவல் தொழில்நுட்பம் புரட்சியை நடைமுறைப்படுத்தி பதவியிலிருந்து விலகிய வேளையில் போதுமான அளவு சம்பாதித்திருப்பார். இப்பொழுது கோடிகளின் சாம்ராஜ்ஜியத்தை மாறன் சகோதரர்கள் ஆளுகிறார்கள்.

பதினான்கு ஆயிரம் கோடிகளின் நிறுவனங்கள் மாறன் சகோதரர்கள் வசம் உள்ளதாக கூறப்படுகிறது. போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களின் பட்டியலில் கலாநிதியும் இடம்பெற்றார். பல்வேறு மாநிலங்களில் சன் நெட்வர்கின் கீழ் 25 தொலைக்காட்சி அலைவரிசைகள் செயல்படுகின்றன. ஒரு விமான நிறுவனம், இரண்டு நாளிதழ்கள், நான்கு மாத இதழ்கள், 45 எஃப்.எம்.ரேடியோ நிலையங்கள், ஒரு திரைப்பட தயாரிப்பு நிறுவனம், டி.டி.ஹெச் சேவை, 27 நாடுகளில் பரந்துவிரிந்த கார்ப்பரேட் தொடர்புகள். இத்தகையதொரு வர்த்தக சாம்ராஜ்ஜியத்தின் உச்சத்தில் இருக்கும் நபருக்கு கவனமெல்லாம் அந்த சாம்ராஜ்ஜியத்தை வலுவாக கட்டியெழுப்புவதில் தான் கண்கொத்தி பாம்பாக இருக்கும்.

மக்கள் சேவை, மக்கள் பிரநிதி என்பதெல்லாம் வெறும் வார்த்தை ஜாலங்கள் தாம். இதுதான் தயாநிதிக்கும் நிகழ்ந்தது.

1966 டிசம்பர் ஐந்தாம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்தில் பிறந்தார் தயாநிதி. கலைஞரின் பேரமருமகன் (மருமகனின் மகன்). அதாவது சகோதரி மகனின் மகன். எழும்பூர் டான் போஸ்கோ பள்ளிக்கூடம், லயாலோ கல்லூரி என தயாநிதியின் படிப்பு தொடர்ந்தது. பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பிசினஸ் ஸ்கூலில் பிரசிடெண்ட் மேனேஜ்மெண்ட் புரோக்ராமில் பங்கேற்றுள்ளார்.

ஹெல் ஃப்ரீஸஸ் ஓவர் (ஹெச்.எஃப்.ஒ) என்ற சென்னையில் செயல்படும் பிரசித்தி பெற்ற டிஸ்கோத்தே கிளப்பின் உரிமையாளர்களில் ஒருவர். அங்கிருந்து 2004 ஆம் ஆண்டு தேசிய அரசியலுக்கு தாவினார். படி படியான முன்னேற்றம் ஒன்றும் தயாநிதிக்கு இல்லை.தி.மு.க வின் உடன்பிறப்புகளைப் போல போராட்டங்களில் கலந்துக்கொண்ட அனுபவங்களும் இல்லை. மருமகன் மாறனின் மறைவிற்கு பிறகு அவரது வாரிசாக கலைஞர் தேர்வு செய்து டெல்லிக்கு அனுப்பி வைத்தார்.

தயாநிதியிடம் அரசியல் பிறப்பெடுத்தது மத்திய சென்னை நாடாளுமன்ற தேர்தலில் ஆகும். திக்கி திணறி தமிழ் பேசிய தயாநிதிக்கு தேர்தல் பிரச்சாரத்தில் உதவியவர் மாமா மு.க.ஸ்டாலின் ஆவார். ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றார் தயாநிதி. கலைஞரின் தயவில் மூத்த தி.மு.க தலைவர்களையெல்லாம் புறந்தள்ளிவிட்டு கேபினட் அமைச்சரானார். தேசிய அரசியலில் விரைவாகவே முன்னேறினார்.

தயாநிதியின் அரங்கேற்றத்தில் டி.ஆர்.பாலு போன்ற மூத்த தி.மு.க தலைவர்கள் காணாமல் போயினர்.தி.மு.க வின் இரண்டாவது தலைவராக கருதப்படும் மு.க.ஸ்டாலினை விட டெல்லியில் செல்வாக்கையும், நம்பிக்கையும் பெற்றார் தயாநிதி. காங்கிரசுடனான நெருக்கம், ஊடகங்களில் அடிக்கடி இடம்பெற்றது இவையெல்லாம் தி.மு.கவினரே பொறாமையுடன் பார்த்தனர். மூத்த தலைவர்களையெல்லாம் தயாநிதி மதிக்க வேண்டிய முறையில் மதிக்கவில்லை. கட்சியின் தொண்டர்கள் தயாநிதியை ஒரு அந்நிய நாட்டை சார்ந்தவர் போலவே பார்த்தனர்.

2007 மே மாதம் தினகரன் நாளிதழில் வெளியான சர்வே ரிப்போர்ட் வினையாக மாறியது. ஸ்டாலின் முதல்வராக 70 சதவீதம் பேர் ஆதரவு தெரிவிப்பதாகவும், கலைஞரின் மூத்த மகன் அழகிரி முதல்வராக 2 சதவீதம் பேரே ஆதரவு அளிப்பதாகவும் அந்த சர்வே கூறியது. சொந்த மகன்களிடையே மோதலை ஏற்படுத்திட பேரமருகன் நடத்தும் நாடகம் என்பதை கலைஞர் புரிந்து கொண்டார். அழகிரியின் ஆதரவாளர்கள் மதுரை தினகரன் அலுவலகத்தை தாக்கினர். தீவைத்து கொளுத்தினர். அப்பாவிகள் சிலர் பலியாகினர்.

தி.மு.கவின் நிர்வாக குழுக்கூட்டத்தில் கலந்து கொண்ட 143 பேரும் தயாநிதியின் ராஜினாமாவை கோரினர். இதனைத் தொடர்ந்து 2007 மே மாதம் 13-ஆம் தேதி பதவி விலக வேண்டிய நிர்பந்தம் தயாநிதிக்கு ஏற்பட்டது. கட்சியிலிருந்து வெளியான பொழுது அவருக்கு ஆதரவாக எந்த தி.மு.க தொண்டனும் முன்வரவில்லை. 2008 டிசமபர் மாதம் கலைஞருக்கும், மாறன் சகோதரகளுக்கும் இடையே நல்லிணக்கம் ஏற்பட்டது. கோபாலபுரத்தில் அமைந்துள்ள கலைஞரின் வீட்டில் மாறன் சகோதரர்கள் வந்த பொழுது ஒன்றரை ஆண்டுகால இறுக்கமும், வெறுப்பும் தணிந்தது.

மத்திய சென்னையில் மீண்டும் போட்டியிட்டார் தயாநிதி. வெற்றி பெற்று மத்திய ஜவுளித்துறை அமைச்சராக பதவியேற்றார். 600 கோடி ரூபாயை கருணாநிதிக்கு அளித்துவிட்டு நல்லிணக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர் என புரட்சி தலைவி(?) ஜெயலலிதா குற்றம் சாட்டினார். தயாநிதிக்கு கோடிகள் எட்டா கனி அல்லவே!

உலகமயமாக்கலின் வாய்ப்புகளை பயன்படுத்தி ஐ.டி துறையில் முதலீடுகளை கொண்டு வந்த கார்ப்பரேட் தரகு நிறுவனங்களின் உற்ற தோழன் என்பதால் அவர் மீது மிதமான நடவடிக்கைகள் மட்டுமே எதிர்பார்க்கலாம். தயாநிதியை விட குறைந்த குற்றங்களுக்காகத்தான் ஆண்டி முத்த ராசா சிறையில் வாடுகிறார். தொலைத்தொடர்பு துறை உண்மையான ராசா வெளியேத்தான் உள்ளார். நீதி நடைமுறைப்படுத்தப்படாவிட்டால் தயாநிதிக்கு பிசினஸ் போக மீதமுள்ள நேரத்தை இனி மீண்டும் டிஸ்கோத்தே கிளப்பிலேயே கழிக்கலாம்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

 மத்திய நிதித்துறையின் இணை அமைச்சர் பழனி மாணிக்கம் 

புதுடில்லி, இந்தியா: டப்பா காலியானாலும், உள்ளே பெருங்காய வாசனை பலமாகத்தான் இருக்கும். கட்சிக்கு அப்படியொரு பெருங்காய வாசனையை காட்டியிருக்கிறார் தி.மு.க. அமைச்சர் பழனி மாணிக்கம் என்று டில்லி வட்டாரங்களில் பேசப்படுகின்றது.

தி.மு.க.வுக்கு எதிராகப் பாயும் சட்ட நடவடிக்கைகளின்போது பெரிதாக எந்த உதவியும் செய்ய முடியாது என்ற நிலையில், ஏதோ தனது சக்திக்கு முடிந்தவரை, சிறியதாக ஒரு மின்னல் கீற்று காட்டியிருக்கிறார் அவர் என்கிறார்கள்.

சன் பிக்சர்ஸ் சக்சேனா தொடக்கத்தில் கைதாகக் காரணமாக இருந்தது, சேலம் செல்வராஜ் என்பவர் கொடுத்த புகார்தான். அதைத் தொடர்ந்துதான் மற்றைய சினிமாப் புள்ளிகள் வெளியே தைரியமாக வந்து புகார் கொடுக்கத் தொடங்கினார்கள்.

இதையெல்லாம் ஆரம்பித்து வைத்த சேலம் செல்வராஜை சும்மா விடலாமா? கட்சியின் கியாதி என்னாவது? நாளைக்கு கட்சியை யார் மதிப்பார்கள்?

இப்படியான பிரஸ்டீஜ் மேட்டரில், அமைச்சர் பழனி மாணிக்கத்துக்கு சென்னையிலிருந்து உத்தரவு வந்தது என்கிறார்கள் டில்லியில். இந்த மாணிக்கம்தான், மத்திய நிதித்துறையின் இணை அமைச்சர்!

சக்சேனாவில் அடிதடி-மிரட்டல் வழக்குகளில் இருந்து அவரைக் காப்பாற்ற மத்திய நிதியமைச்சால் முடியாது. கிரிமினல் வழக்குக்கும் நிதி அமைச்சுக்கும் சம்மந்தமில்லை. ஆனால், நிதி அமைச்சுடன் சம்மந்தமுடைய வேறு ஏதாவது ஒன்றைப் பற்றிக் கொண்டு, இன்டைரக்டாக இதற்குள் வருவதற்கு, நம்மாட்களுக்கு சொல்லியா கொடுக்க வேண்டும்?

சாமர்த்தியமாக, அந்த ரூட்டில் வந்து சேர்ந்தார் பழனி மாணிக்கம் என்பதே பேச்சாக இருக்கின்றது!

இவரது துறையின்கீழ்தான் வருமான வரி இலாகா வருகின்றது. பொதுவாக சினிமாக்காரர்களை எடுத்துக் கொண்டால், வருமானவரி இலாகாவின் ‘கோ-பை-த-புக்’ நடைமுறைகளை 100% பின்பற்றும் ஆட்களை விரல்விட்டு எண்ணலாம். (ஒரு கை போதும்)

இந்த வசதியை வைத்துக்கொண்டுதான், செல்வராஜ்மீது வருமானவரித் துறையின் ரெய்டுக்கு உத்தரவு கொடுக்க வைத்தார் அமைச்சர்.

செல்வராஜின் வீடு பிருந்தாவனம் ரோட்டில் உள்ளது. அலுவலகம், சினிமா நகரில் உள்ளது. இந்த இரண்டு இடத்திலும் ஒரே நேரத்தில் புகுந்த வருமான வரித்துறை அதிகாரிகள், அங்கிருந்த சில ஆவணங்களை எடுத்துப் போயிருக்கிறார்கள். இனி, அந்த ஆவணங்களில் உள்ள கணக்கு வழக்குகளை வைத்துக் குடைச்சல் கொடுக்க முடியும்.

செல்வராஜின் வீட்டில் ரெயிட் ஒருபக்கமாக நடந்து கொண்டிருந்தபோது, வந்திருந்த வருமானவரித்துறை அதிகாரிகளில் ஒருவர், “நீங்களே வருமானவரி சம்மந்தமான சிக்கல்களை வைத்துக்கொண்டு, எதற்காக சக்சேனாமீது புகார் கொடுக்கப் போனீர்கள்? பேசாமல் உங்க பிசினெஸைப் பார்த்துக்கொண்டு இருந்திருந்தால், நாங்களெல்லாம் ஏன் இங்கே வரப்போகிறோம்?” என்று அட்வைஸ் கொடுத்ததாகத் தகவல்.

சரி. சக்சேனாமீது புகார் கொடுத்தவர் காரணத்தால், தனது துறையைப் பயன்படுத்தி செல்வராஜ் வீட்டில் ரெயிட் நடாத்திய அமைச்சருக்கு, டில்லியில் சிக்கல் வராதா? நாளைக்கே இந்த விஷயம் ஊடகங்களால் பெரிதுபடுத்தப்பட்டால், நிதியமைச்சு நடவடிக்கை எடுக்காதா?

‘ஜெயிலில் 50வது நாள்’ கேடயமும் வழங்குவார்களா?

இந்தக் கேள்விகளுடன், நிதியமைச்சில் எமக்குத் தெரிந்த உயரதிகாரி ஒருவரை அணுகியபோது, அவர் கடகடவென்று சிரித்தார்.

“வருமானவரித்துறையில் இதெல்லாம் கோலிகுண்டு விவகாரம். ரெயிட் என்பது, கோர்ட்டில் பதிவாகும் வழக்கு அல்ல. வருமானவரித்துறைக்கு சட்ட ரீதியாக அனுமதிக்கப்பட்ட ஒரு நடைமுறை அது. அதற்கான புரொஸீச்சர்களை சரியாகப் பின்பற்றினால், அதில் அமைச்சிலுள்ள யாரையும் மாட்டிவிட முடியாது.

புரொஸீச்சர் என்ன? சம்மந்தப்பட்ட நபரின்மீது வருமானவரித்துறை டைரக்டரின் முகவரியிட்ட ஒரு புகார் கடிதம் வேண்டும். ரெயிடு செய்யப்பட வேண்டிய நபரின் 2009ம் ஆண்டு வருமானவரிக் கணக்கில் காட்டப்பட்ட சோர்ஸ் ஆஃப் இன்கம்முக்கும், 2010ம் ஆண்டுக் கணக்கில் காட்டப்பட்டதற்கும் இடையே, ஒன்றுக்கொன்று சம்மந்தமில்லாத ஓரிரு பதிவுகள் இருக்க வேண்டும். அவ்வளவுதான் தேவை.

அமைச்சர் நினைத்தால், மிகச் சுலபமாக சென்னையிலிருந்து யாரோ ஒருவரின் பெயரில் புகார் கடிதம் அனுப்புமாறு செய்திருக்க முடியும். சினிமாக்காரர்களில் சோர்ஸ் ஆஃப் இன்கமில், வருடத்துக்கு வருடம் நிச்சயம் சம்மந்தமில்லாத பதிவுகள் இருக்கும். செட்டப் புகார் லெட்டரின் பிரதியையும், இரண்டு வருட டாக்ஸ் ரிடர்ன் பிரின்ட்-அவுட்டையும் ஒரு பைலில் போட்டுக்கொண்டு, ரெயிட் உத்தரவில் கையெழுத்து போட்டு சென்னை அலுவலகத்துக்கு அனுப்பி விடலாம்.

ரெயிடில் சில ஆவணங்களை எடுத்துவந்து, ஆராயலாம். தேவைப்பட்டால், நீண்ட கால அவகாசம் எடுத்துக் கொள்ளலாம். கணக்குகளில் சிக்கல் இல்லாவிட்டால், சம்மந்தப்பட்ட பார்ட்டிக்கு ஒரு லெட்டர் அனுப்பி விடலாம் – “இதனால் தங்களுக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு வருமானவரித்துறை மனம் வருந்துகிறது”

இதில் அமைச்சரையும் சிக்கவைக்க முடியாது. கையெழுத்திட்ட டைரக்டரையும் சிக்கவைக்க முடியாது” என்று விளக்கமாகச் சொன்னார் அந்த உயரதிகாரி.

இந்த ரெயிட் பெரிய விஷயமில்லைத்தான். ஆனால், சக்சேனாவுக்கு எதிராக புகார் கொடுக்க நினைக்கும் மற்றைய சினிமாப் புள்ளிகளை, ஒரு முறைக்கு இருமுறை யோசிக்க வைக்கும். இன்கம்டாக்ஸ் அலுவலக பைலில் தமது பெயர் இடம்பெற்றாலும் பரவாயில்லை என்று, சக்சேனாவுக்கு எதிராக புகார் கொடுக்க, எத்தனை சினிமாக்காரர்கள் முன்வருவார்கள்?

இந்த விஷயத்தில் தி.மு.க. தலைமையைப் பாராட்டத்தான் வேண்டும். ஏனென்றால், தமது கட்சியின் சார்பில் ஒரு முட்டாளை அமைச்சராக டில்லிக்கு அனுப்பவில்லை அவர்கள்! (அழகிரி மன்னிக்கவும்!!)

நன்றி -விறுவிறுப்பு



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

 'கேடி சகோதரர்கள்'-தயாநிதி, கலாநிதி குறித்து பரபரப்பு புத்தகம்!

 
மதுரை: சென்னையில் சன் டிவி அதிபர் கலாநிதி மாறன் பற்றியும், மத்திய முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் பற்றி பரபரப்பு புத்தகம் வெளியீடு நடைபெற உள்ளது.

'கேடி சகோதரர்கள், உண்மையும், ஊழலும்' என்ற தலைப்பில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. இதன் வெளியீடு இன்று நடைபெறுகிறது. புதிய தமிழகம் வார இதழின் ஆசிரியர் அன்பழகன் இந்த நூலை எழுதியுள்ளார்.

கலாநிதி மாறன், தயாநிதி மாறன் சகோதரர்களின் ஆரம்ப கால வரலாறு உள்ளிட்ட பல்வேறு பரபரப்பு தகவல்கள் இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில், இப் புத்தகத்தை மூத்த பத்திரிக்கையாளரும், எழுத்தாளரும், அரசியல் விமர்சகருமான தி.சு.கிள்ளிவளவன் வெளியிடுகின்றார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது முதல் கடந்த சில வாரங்களாக சன் டிவி அதிபர் கலாநிதி மாறன் பற்றியும், மத்திய முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் பற்றியும் பரபரப்பான தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

இந்த நிலையில், இந்த புத்தகம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தும் என எதி்ர்பார்க்கப்படுகின்றது.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

31351781-thatthaa.jpg?w=640&h=713



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

சக்சேனா வழக்கில் திடுக் திருப்பம்


ஆவணங்களை அள்ளிப்போனது யார்?

 

 

த்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி என்பார்களே, அந்த நிலையில் இருக்கிறார் ஹன்ஸ்ராஜ் சக்சேனா. ஒரு வழக்கில் அவர் ஜாமீன் வாங்குவதற்குள் இன்னொரு வழக்கில் அவரைக் கைது செய்வது, விசாரணை செய்வது என்று தொடர்ந்து அடுத்தடுத்து விழுகிறது அடி.

‘மாப்பிள்ளை’ பட விநியோகம் தொடர்​பாக, ஹித்தேஷ் ஜபக் என்ற தயாரிப்பாளர் சக்சேனாவுக்கு எதிராக ஒரு புகார் கொடுத்து இருந்தார். இந்த வழக்கில் ஏற்கெனவே சக்சேனாவைக் கைது செய்துவிட்ட போலீ​ஸார், கடந்த 15-ம் தேதி இரண்டு நாள் போலீஸ் காவல் எடுத்து மீண்டும் துருவி இருக்கிறார்கள்.

விசாரணையின் போக்கு குறித்து காக்கிகள் வட்டாரத்தில் கேட்டபோது, ”மாம்பலம் ஏ.சி-யான ஞானசேகர் மேற்பார்வையில், சக்சேனாவிடம் விசாரணை நடந்தது. தொடக்கத்தில் கேள்விகளுக்குச் சரிவரப் பதில் கொடுக்காமல் மௌனமாகவே இருந்தார். தன் அலுவலகத்தில் அமர்ந்தபடி, இதை லைவ்வாகக் கேட்டுக்கொண்டு இருந்த ஓர் உயர் அதிகாரிக்கு செம டென்ஷன். உடனடியாக போனைப் போட்டு, ‘சக்சேனா வாங்கிக் குவித்துள்ள நிலங்கள், பங்களாக்கள், வெளி மாநில முதலீடு மற்றும் சினிமாத் தொடர்புகள்…’ என மொத்த விவரங்களையும் புட்டுவைத்து, ‘விசாரணைக்கு ஒத்துழைக்கலைன்னா, இதில் இருந்தும் பிரச்னை கிளம்பும்’னு சொல்லுங்க’ என்று சிடுசிடுக்க… அதன் பிறகு சக்சேனாவிடம் இருந்து தடங்கல் இல்லாமல் பதில்கள் வந்தன!” என்றனர்.

சக்சேனா தரப்பிலோ, ”ஹித்தேஷ் ஜபக்கை சக்சேனா மிரட்டவில்லை. நீண்ட நாட்களாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடனும், சக்சேனாவுடனும் நெருங்கிய நட்பு பாராட்டிய ஜபக், தான் தயாரித்த பல படங்களை சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கே தொடர்ந்து கொடுத்து வந்தார். அவருக்கு உரிய லாபம் கிடைக்கவில்லை என்றால், எப்போதோ வியாபாரத் தொடர்புகளை துண்டித்து இருக்கலாமே? சக்சேனாவுக்கு மேலும் நெருக்கடி உண்டாக்கும் நோக்கில், காவல் துறையில் உள்ள சிலரே ஜபக்கை மிரட்டிப் பகடைக்காயாகப் பயன்படுத்துகிறார்கள்!” என்று ஆதங்கப்பட்டனர்.

இதனிடையே சமீபத்தில் நடந்த சம்பவம் ஒன்றைச் சொல்லி ஹார்ட் பீட்டை எகிறவைக்கிறார் காவல் துறை உயர் அதிகாரி ஒருவர். ”சில தினங்களுக்கு முன் சக்சேனா வீட்டுக்குள் புகுந்த மர்மக் கும்பல் ஒன்று, அங்கு இருந்து பல ஆவணங்களை சத்தம் இன்றி அள்ளிக்கொண்டு போய்விட்டது. ‘இதற்கு மூளையாக செயல்பட்டது யார்? அவை என்ன ஆவணங்கள்?’ என்று தீவிரமாக விசாரித்து வருகிறோம்!” என்று பகீர் கிளப்பினார்.

தயாரிப்பாளர் ராஜா நம்மிடம் பேசும்போது, ”நான் தயாரித்த ‘வல்லக்கோட்டை’ படத்தை முதலில்  1.25 கோடி ரேட் பேசி, சன் பிக்சர்ஸுக்கு வாங்கிக்கொள்வதாக என்னிடம் உறுதி கூறி இருந்தார் சக்சேனா. ஆனால் கடைசி நேரத்தில், ‘அவ்வளவு எல்லாம் தர முடியாது’ என்று பின்வாங்கியதோடு, வேறு யாரும் என் படத்தை வாங்க முடியாதபடி பல்வேறு முட்டுக்கட்டைகள் போட்டார். இதனால், எனக்குப் பெரும் நெருக்கடி. வேறு வழி இல்லாமல் சக்சேனா சொன்னபடி அவரது உறவினரான சுரேஷ் என்பவருக்கு, வெறும்  70 லட்சத்துக்கு படத்தை விற்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானேன்.  இறுதியில், சுரேஷ் மூலமாக எனது  படம் சன் தரப்புக்கு  1.25 கோடிக்கு விற்கப்பட்டு இருக்கிறது!” என்று கொதித்தார்.

இந்தப் பிரச்னையை வெளியே கொண்டுவந்து மொத்த விவகாரத்துக்கும் பிள்ளையார் சுழி போட்டுக் கொடுத்த ஒரு சினிமா வி.ஐ.பி,  ”அவருக்கு இவ்ளோ பிரச்னைகள் வரும்னு சத்தியமா நான் நினைச்சுப் பார்க்கலை. எனக்கு வர வேண்டிய  6 கோடி வந்து சேர்ந்தா, அவர் வெளியே வர என்னால் ஆன உதவியை நிச்சயம் செய்றேன்!” என்று சில நலம் விரும்பிகள் மூலம் இப்போது தூதுவிடுகிறாராம்!



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

சன் டிவி சிஇஓ ராஜினாமா

.

Wednesday, 13 July, 2011   02:53 PM
.
சென்னை, ஜூலை 13:சன் டிவி நெட்வொர்க் நிறுவனத்தின் சிஇஓ திடீர் ராஜினாமா செய்ததை அடுத்து அதன் தலைமை அதிகாரி (சிஓஓ) புதிய சிஇஓவாக நியமிக்கப்பட்டுள்ளார். 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக தயாநிதி மாறன் தமது பதவியை ராஜினாமா செய்த நேர்ந்தது. 
.
அவர் தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்தபோது ஏர்செல் நிறுவனத்தை விற்க நிர்ப்பந்தித்தது தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஏர்செல் நிறுவனத்தை வாங்கிய சிங்கப்பூரை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம் சன் டி.டி.எச். நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது. 

இது தொடர்பாக தயாநிதி மாறன் மற்றும் கலாநிதி மாறன் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிபிஐ இந்த அம்சம் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறது.இதனிடையே சன் பிக்சர்ஸ் தலைமை நிர்வாகி சச்ஸேனா மீதும் மோசடி புகார்கள் கூறப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். திரைப்பட வினியோகம் தொடர்பாக அடுக்கடுக்கான புகார்கள் கூறப்பட்டு வருகின்றன.

இந்த விவகாரத்தால் சன் டிவி பங்குகளின் விலை சரிந்தது. இந்நிலையில் சன் டிவி சிஇஓ அஜெய் வித்யாசாகர் ராஜினாமா செய்திருக்கிறார். இதனையடுத்து சிஓஓவாக இருந்த கே.விஜயகுமார் புதிய சிஇஓவாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை சன் டிவி மும்பை பங்குச் சந்தையில் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

மாறன்களும் மர்டோக்கும்! ஓ பக்கங்கள் 20 ஜூலை 2011

 

 
பல ஆண்டுகள் முன்பு சன் டி.வி.யின் அதிபர் கலாநிதி மாறன் ஒரு பத்திரிகைப் பேட்டியில் இந்தியாவின் ரூபர்ட் மர்டோக் ஆக வளர்வதே தம் லட்சியம் என்று சொல்லியிருந்ததாக நினைவு. அதாவது பத்திரிகை, டி.வி, சினிமா, மீடியா என்று எல்லாத் தகவல் தொடர்புத் துறைகளிலும் மர்டோக் ஆதிக்கம் செலுத்துவது போல, தமிழ் நாட்டில் இந்தியாவில் முதல் இடத்தைத் தமது குழுமம் கைப்பற்ற வேண்டும் என்பதே தம் ஆசை என்று அவர் சொல்லியிருந்தார். இந்த வாரம் கலாநிதி மாறன், ரூபர்ட் மர்டோக் இருவர் பெயர்களும் செய்திகளில் அடிபடுகின்றன. கலாநிதிக்கும் மர்டோக்குக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. இருவரும் ஏற்கெனவே அப்பா ஆரம்பித்து நடத்திய பத்திரிகைத் தொழிலில் நுழைந்து அடுத்து பெரு முதலாளிகளாக வளர்ந்தவர்கள். ஏற்கெனவே இருக்கும் நிறுவனங்களைக் கைப்பற்றித் தங்கள் குழுமத்தை விரிவுபடுத்துவது, போட்டி நிறுவனங்களை வளர விடாமல் முடக்குவது, தொழில் வளர்ச்சிக்கு அரசியல் தொடர்புகளைப் பயன்படுத்துவது முதலிய அணுகு முறைகள் இருவருக்கும் பொதுவானவை. அரசியல் சார்ந்த தொழில் சிக்கலில் இருவரும் இப்போது சிக்கியிருக்கிறார்கள். இதன் விளைவாக உலகத்தின் மூத்த வார இதழான ‘நியூஸ் ஆஃப் தி வேர்ல்ட்’ பத்திரிகையையே மர்டோக் மூடவேண்டியதாகி விட்டது. சன் குழுமத்தில் சுமங்கலி கேபிள் விஷன், சன் பிக்சர்ஸ் எல்லாம் அதே நிலைமையைச் சந்திக்கக்கூடிய ஆபத்தில் இருக்கின்றன. பங்கு மார்க்கெட்டில் சன் குழும பங்குகள் கடந்த இரு மாதங்களாகப் பெரும் சரிவைச் சந்தித்து வருகின்றன. ரூபர்ட் மர்டோக் உலகத்தின் ஒரு பெரும் பத்திரிகை, டி.வி, கேபிள், சினிமா தொழிலதிபர். ஆனால் நிச்சயம் ஒரு முன்னுதாரணமாக இளைஞர்கள் கொள்வதற்கான தொழிலதிபர் அல்ல. தான் ஆதரிக்கும் கட்சியை ஆளும் கட்சியாக்க முயற்சிப்பது, அல்லது ஆட்சிக்கு வரும் கட்சியை, தனக்கு சாதகமான முடிவுகள் எடுக்கும் கட்சியாக ஆக்குவது என்ற அரசியல் விளையாட்டில் சுமார் 50 வருடங்களாகத் தொடர்ந்து ஈடுபட்டு வந்திருப்பவர் இப்போது 80 வயதாகும் மர்டோக். 


ஆஸ்திரேலியாவில் பிறந்து, தொழில் சட்டங்களை வளைக்கும் வசதிக்காக அமெரிக்கக் குடிமகனாகப் பதிவு செய்து கொண்ட ரூபர்ட் மர்டோக்கின் மீடியா சாம்ராஜ்யத்தில் இருக்கும் நிறுவனங்கள் எல்லாம் பிரபலமானவை. ஆஸ்திரேலியாவில் ஹெரால்ட், பிரிட்டனில் சன், சண்டே டைம்ஸ், டைம்ஸ், அமெரிக்காவில் ஸ்டார், நியூயார்க் போஸ்ட், வால் ஸ்ட்ரீட் ஜர்னல் என்று பல பத்திரிகைகள். ட்வெண்டியத் செஞ்சுரி ஃபாக்ஸ், ஃபாக்ஸ் நியூஸ், ஸ்டார் டி.வி. (நம்ம ஊர் ஸ்டார் விஜய் உட்படத்தான்) என்று மீடியா கம்பெனிகள் எல்லாம் மர்டோக்கின் நியூஸ் கார்ப்பரேஷனுடையவைதான். அமெரிக்காவின் பெரும் பணக்காரர்களில் 38வது இடம் மர்டோக்குடையது. உலக அளவில் 117வது இடம். ஆனால் வரி ஏய்ப்பில் மன்னன். இதுவரை அவர் லாபத்தில் ஏழு சதவிகிதத்துக்கு மேல் வரியாகக் கட்டியதில்லை. வரி ஏய்ப்பதற்காகவே பல கம்பெனிகளை உருவாக்கி அவற்றையெல்லாம் வரிச் சலுகைத் தீவுகளில் பதிவு செய்து வைத்திருக்கிறார். கடைசியாக மர்டோக் தொடர்பான சர்ச்சை, பத்திரிகைத் துறைக்கே அவமானத்தையும் களங்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. கடைசியாக கலாநிதி மாறன் சிக்கியிருக்கும் சர்ச்சையும் அப்படிப்பட்டது தான். சாமியார் - நடிகை தொடர்பானது என்று சன் டி.வி. ஒளிபரப்பிய ஆபாசமான வீடியோ, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வீடுகளில் பார்க்கக்கூடிய விதத்தில் பல முறை வர்த்தக நோக்கில் ஒளிபரப்பப்பட்டது. மீடியா நெறி முறைகளுக்கு விரோதமானது. 


மர்டோக் அண்மையில் இழுத்து மூடிய நியூஸ் ஆஃப் தி வேர்ல்ட் வார இதழ் கடைசியாக 28 லட்சம் பிரதிகள் விற்று வந்தது. ஐம்பதுகளில் இந்த இதழ் 90 லட்சம் பிரதிகள் வரை விற்றிருக்கிறது.நியூஸ் ஆஃப் தி வேர்ல்ட் இதழ் பற்றிப் படிக்கும்போது சில தமிழ் பத்திரிகைகளின் ஞாபகம் வரக் கூடும். ‘நியூஸ்’ எப்போதுமே பரபரப்பான செய்திகளை நம்பியே இயங்கி வந்திருக்கிறது. அரசியல்வாதிகள், சினிமா, டி.வி.நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோர் பற்றிய செக்ஸ் தொடர்பான விஷயங்களைத் தோண்டித் துருவி வெளியிடுவதுதான் ‘நியூஸ்’ இதழின் பிரதான வேலை.நியூஸ்’ இதழால் அவதூறு செய்யப்பட்டவர்கள் பலர் வழக்கு போட்டு ஜெயித்திருக்கிறார்கள். பல வழக்குகளை கோர்ட்டுக்கு வெளியே சமரசமாகப் பணம் கொடுத்துத் தீர்த்துக் கொண்டிருக்கிறது. ஒரு சிலர் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். ஆங்கில நடிகர் டெனாம் எலியட்டின் மகள் ஜெனிஃபர் தெருவில் திரியும் வேசியாக வாழ்க்கை நடத்துகிறார் என்று ‘நியூஸ்’ தொடர்ந்து எழுதியதையடுத்து ஜெனிஃபர் தூக்கு போட்டுக் கொண்டு செத்தார். 


குழந்தைகளிடம் வலுக்காட்டாயமாக செக்ஸ் உறவு கொள்வோரை அம்பலப்படுத்தும் வேலையில் ‘நியூஸ்’ ஈடுபட்டது. இதில் சில உண்மையான குற்றவாளிகள் சிக்கினார்கள். சில அப்பாவிகள் அவதூறுக்குள்ளானார்கள். ‘நியூஸ்’ வெளியிட்ட பரபரப்பு செய்திகளில் உண்மையாக இருந்து தாக்கத்தை ஏற்படுத்திய செய்தி கிரிக்கெட் வீரர்கள் பணம் வாங்கிக் கொண்டு ஆட்டத்தை ஃபிக்ஸ் செய்வது பற்றியதாகும். மூன்று பாகிஸ்தான் கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் பணம் வாங்குவதை வீடியோ எடுத்து ‘நியூஸ்’ வெளியிட்டதையடுத்து மூவரும் பத்தாண்டுகளுக்கு விளையாட்டிலிருந்து தடை செய்யப்பட்டார்கள்.‘நியூஸ்’ இதழின் பரபரப்பான செய்திகளுக்குப் பின்னால் இருந்த முக்கிய அம்சம், அது அவற்றைத் திரட்டுவதற்காகச் செய்த ஊழல்களும் லஞ்சம் தரும் நடவடிக்கைகளுமாகும். பல போலீஸ் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து ஒரு வழக்கின் ரகசியத் தகவல்களைப் பெறுவதை ‘நியூஸ்’ வாடிக்கையாக வைத்திருந்தது. (தமிழ்நாட்டிலும் சில தினசரிகள் காவல் நிலையங்களில் இருக்கும் கீழ்மட்ட கான்ஸ்டபிள்களை ‘கவனித்துக்கொள்ளும்’ வழக்கம் இருந்து வருகிறது.)இந்த நடவடிக்கைதான் இப்போது பத்திரிகையையே மூடும் நிலைக்குக் கொண்டு வந்து விட்டுவிட்டது. கடந்த சில வருடங்களாக பிரபலங்களுடைய ஃபோன்களையும், கோர்ட் வழக்குகளில் சம்பந்தப்பட்டிருப்பவர்களுடைய ஃபோன்களையும் ஒட்டுக் கேட்பதை ‘நியூஸ்’ இதழ் பத்திரிகையாளர்கள் போலீஸ் உதவியுடன் செய்து வந்தனர். டெலிஃபோன்களின் வாய்ஸ் மெயில்களைப் பயன்படுத்தி செய்திகளை எழுதினார்கள். நான்கு வருடங்கள் முன்பு, பிரிட்டிஷ் அரசக் குடும்ப ஃபோன்களை ‘நியூஸ்’ ஒட்டுக் கேட்டது அம்பலமானது. இளவரசர் வில்லியம் தொடர்பான செய்திகளை ‘நியூஸ்’ தொடர்ந்து வெளியிட்டபோது, ஓரிருவருக்கு மட்டுமே தெரிந்தவற்றை எப்படி வெளியிடுகிறார்கள் என்று வில்லியம் சந்தேகம் எழுப்பினார். தொடர்ந்து நடத்திய விசாரணையில் ஒட்டுக் கேட்பு அம்பலமானது. ‘நியூஸ்’ நிருபர் க்ளைவ் குட்மேன் (!) இதை ஒப்புக் கொண்டு நான்கு மாத சிறைத் தண்டனை பெற்றார்.


‘நியூஸ்’இதழுக்கும் போலீசுக்கும் அரசியல்வாதிகளுக்கும் எந்த அளவு நட்பும் உறவும் இருந்தன என்பதற்கு மேற்படி வழக்கே ஓர் அடையாளம். ஏனென்றால் அந்த வழக்கை விசாரித்த போலீஸ் அதிகாரி ஹேமேன் பதவியிலிருந்து விலகி நியூஸ் இன்டர்நேஷனல் பத்திரிகைகளின் பத்தி எழுத்தாளராகிவிட்டார்.ஒட்டுக் கேட்பு மோசடி அம்பலமானதையடுத்து பத்திரிகையின் ஆசிரியர் ஆண்டி கல்சன் பதவியிலிருந்து விலகவேண்டி வந்தது. அவரோ அடுத்தபடியாக இப்போதைய பிரதமரான கேமரோனின் செய்தி ஆலோசகராகப் பொறுப்பேற்றார்! ரூபர்ட் மர்டோக் தன் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி ‘நியூஸ்’ இதழுக்கு எதிரான விசாரணைகளை நிறுத்திவைக்க முயற்சித்தார். ( ஒற்றுமைகள் தொடர்கின்றன?) மேலும் மேலும் தகவல்கள் கசிய ஆரம்பித்தன. காணாமற்போய் கொலை செய்யப்பட்ட ஒரு சிறுமியின் ஃபோன் வாய்ஸ்மெயில்களையெல்லாம் ‘நியூஸ்’ ஒட்டுக் கேட்டதும் அம்பலமானது. ஆயிரக்கணக்கான ஃபோன்களை ‘நியூஸ்’ ஒட்டுக் கேட்டிருப்பது தெரியவரவும், மூன்று ‘நியூஸ்’ நிருபர்கள் கைது செய்யப்பட்டனர்.

நியூஸ்’ இதழின் டெலிஃபோன் ஒட்டுக் கேட்பு மோசடிகளை அம்பலப்படுத்தியது இன்னொரு பத்திரிகையான கார்டியன். பிரிட்டிஷ் பாராளுமன்றம் வரை இந்த விவகாரம் ஒலித்தது. நாடாளுமன்றத்தின் செலக்ட் கமிட்டி இது பற்றி விசாரித்தது. ‘நியூஸ்’ இதழின் நிருபர்கள் கமிட்டி முன்பு பொய்கள் சொன்னதாகப் பதிவாகியிருக்கிறது. கடைசியில் பிரதமர் கேமரோன் தம் ஆலோசகர் கல்சனை வீட்டுக்கு அனுப்பி விட்டதோடு நிற்காமல் கைது செய்யவும் உத்தரவிட்டார். ரூபர்ட் மர்டோக், பத்திரிகையை இழுத்து மூடி விட்டார். இன்னும் பல தலைகள் மீது நடவடிக்கை தேவை என்று குரல்கள் எழுந்துள்ளன. மர்டோக்கின் ‘நியூஸ்’ இதழ் மட்டுமல்ல, இதர பத்திரிகைகளான, சன், டைம்ஸ் ஆகியவையும் டெலிஃபோன் ஒட்டுக் கேட்பு மோசடிகளில் ஈடுபட்டதாக புகார்கள் வந்திருக்கின்றன. முன்னாள் பிரதமர் கார்டன் பிரவுனின் மகனுடைய நோய் என்ன என்று அறிவதற்காக ஈ மெயில்கள் மூலம் மருத்துவ ரிகார்டுகளையெல்லாம் திருடியதாகவும் குற்றச்சாட்டுகள் வந்துள்ளன. எல்லா விவரங்களும் இன்னும் முற்றாக வெளிவரவில்லை. சில வழக்குகளில் கோர்ட்டுக்கு வெளியே சமரசம் செய்து பணம் நஷ்ட ஈடாகக் கொடுத்துவிடும்போது அந்தத் தகவல்களைப் பகிரங்கப்படுத்தத் தேவையில்லை என்ற சட்ட வசதியை ‘நியூஸ்’ இதழ் குழுமம் பயன்படுத்தியிருக்கிறது. தமிழ்நாட்டிலும் சில பத்திரிகைகள், டி.வி. சேனல்கள் சட்ட விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதும், பரபரப்புக்காக அவதூறுகளை வெளியிடுவதும், பல அதிகாரிகள், பொது வாழ்வில் இருப்போரை பிளாக் மெயில் செய்வதும், அரசியல் செல்வாக்கையோ பண பலத்தையோ பயன்படுத்தி இவற்றையெல்லாம் அமுக்கப் பார்ப்பதும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.பிரிட்டன் போன்ற நாடுகளில் இவை நடந்தாலும், அமபலமாகும் வாய்ப்பும், அடுத்து கடும் நடவடிக்கைகள் எடுக்கும் வாய்ப்பும் நம்மைவிட அதிகமாக இருப்பதுதான் நமக்கும் அவர்களுக்கும் உள்ள முக்கியமான வேறுபாடு. இதழியல் நாம் கண்டுபிடித்ததல்ல. மேற்கிலிருந்து நமக்கு வந்ததுதான். ஆனால் அங்கிருந்து யாரை ரோல்மாடலாக எடுத்துக் கொள்கிறோம் என்பதுதான் முக்கியம். பெஞ்சமின் பிராங்க்ளினா, புலிட்சரா, ரூபர்ட் மர்டோக்கா ? மர்டோக் காயிருந்தால், அதே படுகுழியில்தான் விழ வேண்டி வரும். ஒரு பின்குறிப்பு: ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பு நிறுத்தப்படவும், நான் தொடர்ந்து பங்கேற்ற ‘மக்கள் யார் பக்கம்’ நிகழ்ச்சி நிறுத்தப்படவும் அப்போது தயாநிதி மாறனின் அமைச்சகத்தில் மர்டோக்கின் ஸ்டார் டி.வி. அதிகாரிகளுடன் நடந்த ஒரு சந்திப்புதான் காரணம். நிகழ்ச்சிகள் நிறுத்தப்படாவிட்டால், சேனலின் உரிமங்கள் ரத்தாகும் என்று சொல்லப்பட்டது. நன்றி gnani.net.in


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

20110721a_012103002-saxsena.jpg?w=640&h=340



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

சவுக்கு   
திங்கட்கிழமை, 18 ஜூலை 2011 08:14

 

கேடி சகோதரர்கள், உண்மையும், ஊழலும் என்று கேடி சகோதரர்களின் முகத்திரையை கிழிக்கும் ஒரு புத்தகம் நாளை வெளியிடப் பட உள்ளது.   புதிய தமிழகம் வார இதழின் ஆசிரியர் திரு.அன்பழகன் இந்த நூலை எழுதியுள்ளார்.   கேடி சகோதரர்களின் ஆரம்ப கால வரலாறு உள்ளிட்ட பல்வேறு தகவல்களை இப்புத்தகம் கொண்டுள்ளது என்று தெரிகிறது.  

 

நாளை காலை 11 மணிக்கு, சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில், இப்புத்தகத்தை வெளியிட்டு சிறப்புரை ஆற்றுபவர் மூத்த பத்திரிக்கையாளரும், எழுத்தாளரும், அரசியல் விமர்சகருமான திரு.தி.சு.கிள்ளிவளவன் அவர்கள் வெளியிடுகிறார்.   

 

KD_BRO_wrapper_1_Page_1

 

KD_BRO_wrapper_1_Page_3

 

KD_BRO_wrapper_1_Page_2

 



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 


ஆட்சி மாற்றத்திற்கு பிறகு வெளியே தலை காட்டத் துவங்கியிருக்கும் நித்தி, "ஜூலை 15-ந் தேதி குருபூர்ணிமா நாளில் பக்தர்களை அந்தரத்தில் மிதக்கவைக்கவிருக்கிறேன்'’ என்று அறிவித்திருந்தார். இந்த நிகழ்ச்சிக்காக பிடதி ஆசிரமம் ஜெகஜோதியாக மின்னியது. உடலை அந்தரத்தில் மிதக்க வைக்கும் நித்தியின் சாகஸத்தைக் ’கண்டு களிக்க’ உள்நாடு, வெளிநாடு பக்தர்கள் ஏராளமாக நிகழ்ச்சியில் குவிந்திருந்தனர். 

புவியீர்ப்பு விசைக்கு எதிராக ஒரு சக்தியா? அதுவும் நித்தியின் உடம்பிலா? எந்த சக்தியைக் கொண்டு அவர் பக்தர்களை மிதக்க வைக்கப் போகிறார்? ஏதேனும் மந்திரக்கோல் வைத்திருப்பாரோ? என்கிற கேள்விகளுடன், ஏகத்துக்கும் ஆச்சரியமும் எதிர்பார்ப்புமாக காத்திருந்தனர் பக்தர்கள். கூட்டம் நிரம்பியதை அறிந்து, தனக்காக ஏக அலங்காரத்துடன் மேடையில் உருவாக்கப்பட்டிருந்த பெரிய்ய சிம்மாசனத்தில்’தனது டிரேட் மார்க் சிரிப்புடன் வந்தமர்ந்தார் நித்தி. 

அப்போது நித்தி,’""நான் இப்போ உங்களுக்கு ஒரு அதிசயம் காட்டப்போகிறேன். குண்டலினி சக்தியின் வலிமை உங்களுக்குத் தெரியும். அந்த சக்தியைக்கொண்டு, புவியீர்ப்பு விசைக்கு எதிரா உங்களை அந்தரத்தில் மிதக்க வைக்கப்போகிறேன்''’’என்றார் ஒரு லத்தியை இடது கையில் வைத்து ஆட்டியபடியே. அந்த லத்தியைப் பார்த்து அடிக்கடி, "ப்பூ... ப்பூ...' என்று ஊதிக்கொண்டிருந்த நித்தி,’’""குண்டலினி சக்தியை நீங்க அடையணும்னா உங்களுக்கு வயசாகிடும். அதனால நானே அந்த சக்தியை வைத்திருக்கிறதால அதைக்கொண்டு உங்க உடலை தரையைவிட்டு எழுப்பிக்காட்டு றேன்''’என்றார்.

அந்த ’சொற்பொழிவைக் கேட்டு மேலும் பரவசமான பக்தர்கள், தங்கள் உடல் அந்தரத்தில் மிதக்க போவதால் மீண்டும் ஒருமுறை தங்களைத் தாங்களே பார்த்துக் கொண்டனர். அந்தரத்தில் உடல் மிதக்கப் போவதால்... திடீரென்று கீழே விழுந்து தலை அடிபட்டுவிடக்கூடாது என்பதற்காக சீடர்கள் சிலர் ஹெல்மெட் வேறு அணிந்திருந்தனர். இதைப் பார்க்கவே சுவாரஸ்யமாக இருந்தது. ஹெல்மெட் அணியாத சீடர்கள் ஹெல்மெட் அணிந்தவர்களை ஏதோ வேற்று கிரகத்து ஆசாமியைப்போல பார்த்தனர். 

தனது கையில் வாளும் கேடயம் மாதிரி ஒன்றையும் வைத்துக்கொண்டிருந்த நித்யா னந்தா, கண்களை மூடிக்கொண்டு ஏதோ மந்திரங்களை முணுமுணுத்தார். பிறகு கண் களை திறந்து வாயை குவித்து மீண்டும் முணுமுணுக்க "சூ... சூ... ப்பூ... ப்பூ...' என்கிற ஓசைகள் வெளிப்பட்டது. பக்தர்களும் சீடர்களும் கண்ணிமைக்காமல் நித்தியை கவனித்துக் கொண்டிருந்தனர். சில பக்தர்கள் நித்தியைப் போலவே "ச்சூ... ச்சூ...' என ஓசை எழுப்பி னார்கள்.





"ம்... நடக்கட்டும்... படை திரளட்டும்...' என்று "இம்சை அரசன் 23-ம் புலிகேசி'யில் வடிவேலு சொல்வதுபோல சீடர்களைப் பார்த்து தனது வலது கையை நீட்டி நித்தி சைகை செய்ய, நித்தியைச் சுற்றி மேடையில் இருந்த சீடர்களும் கீழே அமர்ந்திருந்த பெண் சீடர்களும் உட்கார்ந்த நிலையிலேயே சாமியாடினார்கள். அப்போது நித்தி,’’""சம்மணம் போட்டு உட்கார்ந்த நிலையிலிருந்தே உடம்பை எம்பி எம்பி குதியுங் கள்.. ஒரு கட்டத்தில் உங்க உடல் அந்தரத்தில் மிதக்கும்''’என்று சொல்ல, அதேமாதிரி எம்ப முயன்றனர். ரஞ்சிதாவைப் பார்த்து, "நீயும் குதி..' என்கிற தொனியில் நித்தி சைகைக் காட்ட... தனது சேலையை இழுத்து இடுப்பில் செருகிக்கொண்டு ஆவேசம் வந்தவர் மாதிரி... துள்ளிக் குதிக்கத் துவங்கினார் ரஞ்சிதா. குதித்துக்கொண்டிருந்தவர்களிடமிருந்து வினோதமான ஒலிகள் எழுந்தன. ஹெல்மெட் மாட்டிக்கொண்டிருந்த ஒருவர் நித்தியிடம் போய் "என்னையும் அந்தரத்தில் மிதக்க வைக்க முடியுமா?' என்று கேட்க, ""ம்... முடியும் நீயும் குதி..'' என்றார். அந்த ஹெல்மெட் ஆசாமியும் துள்ளாட்டம் போட்டார். 

துள்ளாட்டமும் குதியாட்டமும் சில நிமிடங் கள் நீடிக்க... தரை யைவிட்டு ஒருத்தருடைய உடலும் ஒரு இன்ஞ் கூட மேலே எழும்பவில்லை. துள்ளாட்டம் போட்ட பலருக்கும் கழுத்து சுளுக் கிக்கொண்டது போல.. .தங்கள் கழுத்தை பிடித்துக் கொண்டே’"அப்பாடா... முடியல...'’என்றபடியே ஆட்டத்தை நிறுத்திக் கொண்டனர். தான் சொன்னபடி யாருடைய உடம்பும் அந்தரத்தில் மிதக்காததால் சற்றே அதிர்ச்சியடைந்தார் நித்தி. ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சிரித்துக்கொண்டே இருந்தார் நித்யா னந்தா. கொஞ்சம்கூட அவரிடம் வெட்கமோ கூச்சமோ தெரிய வில்லை.

வெளிநாட்டு பக்தர்கள் பலரும் "எங்களை முட்டாளாக்கு கிறீர்கள்'’என்று சத்தம் போட, அவர்களை நித்தியின் உள்ளூர் சீடர்கள் சமாதானப்படுத்துகிற விதத்தில் அடக்கினார்கள். சிலர் நித்தியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட, அப்போதும் கொஞ்சம்கூட லச்சையில்லாமல் ’’"குதிச்சிக்கிட்டே இருந்தா உடம்பு மேலே போகும். நிறுத்தக்கூடாது. ஏன் நிறுத்துனீங்க. நிறுத்துனதுனாலதான் உங்க உடம்பு மேலே போகல'’என்று காமெடிபண்ணி மழுப்பினார்.

இப்படி ஒரு மோசடியை அரங்கேற்றிய நித்யானந்தாவின் குண்டலினி சக்தி பற்றி, இந்து மதத்தின் மீது ஆழ்ந்த பற்று வைத்துள்ள இந்து முன்னணி கட்சியின் மாநில தலைவர் ராம.கோபாலனிடம் கேட்டபோது,’’""நமது உடலில் 6 சக்கரங்கள் உண்டு. அந்த 6-ம் ஆறுவிதமான சக்தி கொண்டது. அதில் ஒன்று குண்டலினி சக்தி. இந்த சக்தி மூலம் நமது உடலை அந்தரத்தில் மிதக்கவைக்க முடியும். மிகுந்த தவமிருந்து கிடைக்கப் பெறுகிற வலிமை இது. ராமகிருஷ்ண பரமஹம்சர் மிகப்பெரிய யோகி. தவ வலிமை மிக்கவர். தனது குண்டலினி சக்தியால் இறைவனை பார்த்தவர். ஒருமுறை அவரிடம் ஒரு சீடர்,’"ஸ்வாமி... அங்கே பாருங்கள்... ஒருவர் கடலில் நடந்து வருகிறார்'’என்று சொல்ல,’ "அதெல்லாம் 5 பைசா வேலை இது'’என்று சொன்னார் பரமஹம்ஸர். விஞ்ஞான ரீதியாக குண்டலினி சக்தி மூலம் உடலை அந்தரத்தில் மிதக்க வைக்க முடியும். பல சித்தர்களும் யோகிகளும் இதனை செய்திருக்கிறார்கள். ஆனால் நித்யானந்தாவால் முடியுமா? முடியாதா? என்று எனக்கு தெரியவில்லை. அந்த அளவுக்கு முறையான பயிற்சி அவருக்கு இருக்குமா என்றும் தெரியவில்லை'' என்கிறார்.

இந்து சமயத்தை பாதுகாக்கும் பணியில் கடந்த 15 வருடங்களாக ஈடுபட்டு வருபவரும் ஆன்மிக சாமியார்களின் மோசடிகளுக்கு எதிராக இயக்கம் நடத்தி வருபவருமான இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்,’""நமது உடலின் மூலா தாரத்திலிருந்து 6 சக்தி மையங்கள் மூலம் முதுகுத்தண்டு வழியாக உயிர்நிலையை நெற்றிக்கு கொண்டுவரும் சக்திக்கு குண்ட லினி சக்தி என்று பேர். தன் னைத்தானே உணரும் சக்தி இது. இந்த சக்தியை பயன்படுத்தும் போது நமது உடல், காற்றைவிட மிக லேசாக ஆகிவிடும். புவி ஈர்ப்பு விசையை விட லேசாக இருக்கும். அதனால் உடல் அந்தரத்தில் மிதக்கும். இதை ஒருநாளில் பெற்றுவிட முடியாது. கடுமையான மூச்சுப் பயிற்சி, யோகா பயிற்சி என பன்னெடுங்காலம் செய் திருந்தால் மட்டுமே இது சாத்தியம். அருள்மிகு வள்ளலார் குண்டலினி சக்தியைப் பெற்றவர். அதை பலமுறை நிரூபித்திருக்கிறார். அந்த சக்தியைத்தான் தனது தலைக்கு மேலே ஜீவஜோதியாக கொண்டிருக்கிறார் வள்ளலார். ஆனந்தமான நிலை இது. அதே போலத்தான் தனது சீடர் விவே கானந்தருக்கு தனது தவ வலிமையைக்காட்ட குண்டலினி சக்தி மூலம் அந்தரத்தில் மிதந்தார் ராமகிருஷ்ண பரமஹம்ஸர். நான்தான் பரமஹம்ஸர் என உதார்விடும் நித்யானந்தா, முதலில் தனது உடலை அந்தரத்தில் மிதக்கவைத்து காட்டட்டும். அப்புறம் தனது சீடர்களின் உடலை மிதக்க வைக்கலாம். நாங்கள் சவால் விடுகிறோம்... இவர் அந்தரத்தில் மிதப்பாரா? மிதக்க முடியுமா? உள்ளத்தில் தூய்மை, உடலில் தூய்மை, பிரம்மச்சர்யம் கடைப்பிடித்தல் போன்ற குணங்களாலும் கடுமையான தவ வலிமையினாலும் மட்டுமே இந்த சக்தியைப் பெற முடியும். ஆனால் இந்த குணங்கள் எதுவும் நித்திக்கு கிடையாது. இவருக்குத் தெரிந்ததெல்லாம் 30 வயது இளைஞனுக்கு இருக்கும் லௌகீக குணங்கள்தான். இதனை இவரை நம்பிப்போகும் நபர்கள் புரிந்துகொள்ள வேண்டும். குறிப்பாகப் பெண்கள்'' என்கிறார் அதிரடியாக.

துள்ளாட்டம், குதியாட்டம் மூலம் நித்தி- ரஞ்சி ஜோடியின் மற்றொரு மோசடி முகம் கிழிந்து தொங்கி குப்பையாகி கழுதையின் வாயில் போய்க்கொண்டி ருக்கிறது..

-ஆர்.இளையசெல்வன்

""எல்லாமே பொய்'' -வக்கீல் ஸ்ரீதர்



நித்யானந்தாவின் வழக்கறிஞராக இருந்தவர் ஸ்ரீதர். ஆனால், "நக்கீரன் சார்பில் நித்யானந்தாவை மிரட்டியதே இவர்தான்' என ஸ்ரீதர் உள்ளிட்டவர்கள் மீதே சென்னை கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளார் நித்தி தரப்பில் நித்ய ஆத்மபிரபானந்தா.

இந்தப் புகாரின் மீது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது காவல்துறை. இந்த நிலையில், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் 18-ந்தேதி மாலை 5 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்தார் வக்கீல் ஸ்ரீதர்.



அப்போது, ""நக்கீரன் சார்பில் நீங்கள்தான் பணம் கேட்டு மிரட்டியதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளதே?'' என்று கேட்கப்பட்டபோது, ""இது பொய். நட்பு ரீதியாகக் கூட நக்கீரனோடு எனக்குப் பழக்கம் இல்லை. நக்கீரன் பத்திரிகை சார்ந்த எவரோடும் எனக்குத் தொடர்பு கிடையாது. அந்தப் பத்திரிகை மீது 2 வழக்குத் தொடர்ந்தவனே நான்தான். அதனால் அந்த புகாரில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய்யானது'' என்றார்.



நித்ய ஆத்ம பிரபானந்தாவை கடத்திப் போய் 100 கோடியில் ஆரம்பித்து 60 கோடி கேட்டு மிரட்டினீர்களாமே?'' என்ற கேள்விக்கு, ""நித்ய ஆத்ம பிரபானந்தா கொடுத்த புகாரில் 2010 பிப்ரவரி 16 மற்றும் 22-ந்தேதிகளில் அவரை நான் மிரட்டியதாக சொல்கிறார். ஆனால் 2010 மார்ச் 4-ந்தேதி நானும் நித்ய ஆத்ம பிரபானந்தாவும் சேர்ந்துதான் நித்யானந்தாவுக்காக செய்தி யாளர்களை இதே இடத்தில் சந்தித்து பேட்டி தந்தோம். அப்படியிருக்க, அவரை எப்படி கடத்திக் கொண்டு போய் மிரட்டியிருக்க முடியும்? நான் மிரட்டியிருந்தால் என்னோடு சேர்ந்து அவரால் எப்படி பேட்டி தரமுடியும். அதனால் அவர் சொல்வது எல்லாமே பொய்!'' என்றார். 

thanks nakkeeran+chandramohan from Milwaukee



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

மாறன் பிரதர்ஸ் தரப்பிடமிருந்து நெருக்கடி

 
""மதுரையில் பாரமவுண்ட் ஏர்வேஸ் ஆபீஸை திங்கட்கிழமையன்னைக்கு சி.பி.ஐ ரெய்டு செய்தது. ஏற்கனவே இந்த ஏர்வேஸ் சர்வீஸ் நிறுத்தப்பட்டுவிட்டாலும், வங்கியில் லோன் வாங்கியதில் மோசடின்னு வந்த புகாரின் பேரில் சி.பி.ஐ. ரெய்டுக்கு வந்ததா சொல்லப்படுது. பாரமவுண்ட் ஏர்வேஸ் விவகாரத்தில் கலாநிதி மாறன், தயாநிதி மாறன் இருவருக்கும் தொடர்புள்ளதை சி.பி.ஐ. கண்டுபிடிச்சிருக்காம். சிரமத்தில் இருந்த இந்த ஏர்வேஸை வாங்கத்தான் சகோதரர்கள் முதலில் ட்ரை பண்ணியிருக்காங்க. லண்டனில் இருக்கும் ஷேர் ஹோல்டர் ஒருத்தர் இந்த விஷயத்தில் மிரண்டு போக, பாரமவுண்ட் ஓனரான கருமுத்து தங்கை மகன் தியாகராஜன் சிங்கப்பூருக்குப் போய் ஃப்ண்ட் கலெக்ட் பண்ணும் முயற்சியில் ஈடு பட்டிருக்கிறார். அங்கேயும் அவருக்கு மாறன் பிரதர்ஸ் தரப்பிடமிருந்து நெருக்கடி. இதை யடுத்து, ப.சியின் மகன் கார்த்தி சிதம் பரம், உறவின் அடிப் படையில் தியாகராஜ னுக்கு உதவமுன் வந்து, மாறன் பிர தர்ஸ்கிட்டே பேசி யிருக்காரு. அதற்கப் புறம்தான் பாரமவுண்ட் ஏர்வேஸை விட்டுவிட்டு, ஸ்பைஸ்ஜெட்டை வாங்கும் முயற்சியில் மாறன் சகோதரர்கள் ஈடுபட்டிருக்காங்கங்கிற விஷயம் சி.பி.ஐ.க்கு தெரிய வந்தி ருக்காம். ஏர்செல் நிறுவன விஷயத்தில் சிவசங்கரனை மிரட்டியதுபோல, பாரமவுண்ட் விவகாரத்தில் மாறன் சகோதரர்கள் என்ன நெருக்கடி கொடுத்தாங்கங்கிற கோணத்தில் தியாக ராஜனிடம் சி.பி.ஐ. விசாரிச்சிக்கிட்டி ருக்காம்.''

""சீக்ரெட்டா பேசப்படும் விஷ யத்தை நான் சொல்றேன். வாட் வரி உயர்த்தியதால அரசுக்கு வரும் வரு மானத்தில் 10% தொகை எவ்வளவோ அதை கருப்பாக தங்களுக்குக் கொடுத் திடணும்னும், அதிலும் இந்த வருடத் தில் மிச்சமுள்ள 6 மாதகாலத்திற்கான தொகையை உடனடியா கொடுத்திட ணும்னும் நெருக்கடியாம். இந்த கலெக்ஷன் விஷயத்தில் சரியா கவனம் செலுத்தாததால்தான் முதலில் இருந்த மாண்புமிகுவை மாத்திட்டாங்களாம்.''


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

23_07_2011_002_007-sun-tv.jpg?w=640&h=510



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

தயாநிதி மாறனின் முன்னாள் தனிச் செயலாளரிடம் 
சிபிஐ அதிகாரிகள் விசாரணை


2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு தொடர்பாக, முன்னாள் மத்திய மந்திரி தயாநிதி மாறனிடம் தனிச் செயலாளராக இருந்த கே.சஞ்சய் மூர்த்தியிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.


2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இதுதொடர்பாக முன்னாள் தொலைத் தொடர்புத்துறை மந்திரி ஆ.ராசா உள்பட சிலர் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

தயாநிதி மாறன் 2004-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை தொலைத் தொடர்பு துறை மந்திரியாக இருந்த போது, 2ஜி அலைவரிசை ஒதுக்கீடு கேட்டு விண்ணப்பித்த ஏர்செல் நிறுவனத்தின் தலைவர் சிவசங்கரனின் விண்ணப்பத்தை பரிசீலிக்காமல் தாமதப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக சிவசங்கரனிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மலேசியாவின் மாக்சிஸ் நிறுவனத்துக்கு விற்குமாறுதான் வற்புறுத்தப்பட்டதாக கூறினார். 

அப்படி ஏர்செல் நிறுவனத்தின் பங்குகள் விற்கப்பட்டதை தொடர்ந்து, மாக்சிஸ் நிறுவனம் தயாநிதி மாறனின் குடும்ப நிறுவனத்தில் முதலீடு செய்ததாக சி.பி.ஐ. விசாரணையின் மூலம் தெரிய வந்தது. 

இந்த பிரச்சினை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து, தயாநிதி மாறன், தான் வகித்து வந்த மத்திய மந்திரி பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்தார்.

 


இந்த நிலையில், தயாநிதி மாறன் முன்பு தொலைத் தொடர்பு மந்திரியாக பதவி வகித்த போது அவரிடம் தனிச் செயலாளராக இருந்த கே.சஞ்சய் மூர்த்தியிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். இமாசலபிரதேச மாநில பிரிவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர் தற்போது அந்த மாநிலத்தில் நிர்வாக சீர்திருத்த துறையின் செயலாளராக இருந்து வருகிறார்.


தயாநிதி மாறன் தொலைத் தொடர்பு துறை மந்திரியாக இருந்த போது நடந்த 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு பற்றி அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மாக்சிஸ் நிறுவனத்துக்கு விற்குமாறு தயாநிதி மாறனால் தான் நிர்ப்பந்திக்கப்பட்டதாக சிவசங்கரன் கூறி இருக்கும் புகார் பற்றியும் கே.சஞ்சய் மூர்த்தியிடம் அவர்கள் விசாரித்தனர்.


2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு தொடர்பான விசாரணை நேற்று டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தனிக் கோர்ட்டில் நடைபெற்றது. இதற்காக இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சுவான் டெலிகாம் நிறுவன அதிபர் சாகித் பல்வா மற்றும் சிலர் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டு இருந்தனர். நீதிபதி ஓ.பி.சைனி வருவதற்கு முன் அவர்கள் தங்கள் வக்கீல்களுடன் பேசிக் கொண்டு இருந்தனர்.


அப்போது நடுத்தர வயதுடைய ஒரு நபர் தனது செல்போன் கேமரா மூலம் அவர்களை படம் எடுத்தார். உடனே சாகித் பல்வா அந்த நபரின் பக்கம் திரும்பினார்.


இதை கவனித்த போலீசார் பாய்ந்து சென்று புகைப்படம் எடுத்த நபரை மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தினார்கள்.


அந்த நபர் யார்? என்று போலீசாரிடம் நிருபர்கள் கேட்ட போது, அவர் சி.பி.ஐ. யைச் சேர்ந்தவர் என்று கூறிய போலீசார், அவருடைய பெயர் மற்றும் அவரைப்பற்றிய விவரங்களை வெளியிட மறுத்து விட்டனர்.   இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

சன் டிவி லாபம் ரூ.772 கோடி!

 
‎சென்னை: சன் டிவி குழுமத்தின் லாபம் 36 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன்மூலம் ரூ. 772 கோடி லாபத்தை ஈட்டியுள்ளது இந்த நிறுவனம்.

கடந்த ஆண்டு மார்ச் 31 வரையிலான நிதியாண்டில் இந்த நிறுவனத்தின் லாபம் ரூ. 567 கோடியாக இருந்தது. இந்த ஆண்டு இது 36 சதவீதம் அதிகரித்து ரூ. 772 கோடியாக உயர்ந்துள்ளது.

கடந்த 2010ம் ஆண்டில் மொத்த வருமானம் ரூ. 1,437 கோடியாக இருந்தது. இது இந்த ஆண்டு ரூ. 1,970 கோடியாக உயர்ந்துள்ளது.

இதையடுத்து தனது பங்குதாரர்களுக்கு ஒரு பங்குக்கு (மதிப்பு ரூ.5) ரூ. 3.75 டிவிடன்ட் வழங்க இந்த நிறுவனத்தின் நிர்வாகக் குழு முடிவெடுத்துள்ளது.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

SpiceJet Looks to Raise 400 cr 

Carrier may raise funds via equity instruments;process to conclude by the year-end 

MANISHA SINGHAL MUMBAI 


Low-cost carrier SpiceJet is looking at raising funds through equity instruments,its top official said,a month after promoter Kalanithi Maran pledged 86.7% of his shares to raise.200 crore for the cashstrapped airline.A rights issue can be one option the company might consider, SpiceJet CEO Neil Mills said,adding that merchant banker Enam has been appointed to suggest options and methods of getting capital into the airline.Mills did not disclose how much the airline was looking at raising,but bankers said it could be.400 crore through offering of shares.The carrier hopes to conclude the process by December end.There have been concerns that Maran,whos Sun TV network is under the scanner for alleged financial irregularities,might look for an exit from SpiceJet as he might not be able to sustain losses,which are part of an airlines cyclical business,for long under these circumstances.Industry insiders expect Gurgaon-headquartered SpiceJet to post a loss of.50-100 crore in the first quarter.The carrier made a profit of.101 crore in FY10-11,but posted a loss of.59 crore in the last quarter,as opposed to a profit of.29 crore in last quarter of the previous year.The airlines shares have taken a beating over the past few months.Maran,who acquired a 38.6% stake in SpiceJet for.750 crore last year,pledged 86.7% of his shares on July 13 to raise funds.Sources said it was with a commercial bank that had transactions with the airline earlier.Enam was appointed around the same time.Enam will get back to us within two to three weeks with the option for fund raise.We will have to decide if we want this to be a onetime fund raise exercise or we want to secure ourselves for just about another 12 months, Mills said.Mills,who steered Dubais lowcost airline FlyDubai before joining SpiceJet,said the money through share pledges would take care of the airlines immediate requirements.We needed some immediate cash to keep going to bear industry costs and for some guarantees and securities and to sustain operations.We are adding significant number of aircraft between now and March next year and we cannot grow without cash.As we are not generating enough to sustain this growth,we need to look at a fund raise, the SpiceJet CEO said.Mills,however,said funding for its 15 regional aircraft type Bombardier Q400s,deliveries for which were to start by end-June,would get Reserve Bank of India (RBI) approval soon and no money would be required for the deliveries.SpiceJet had to postpone its regional operations launch planned for July 15 because of a delay by the RBI in clearing $270 million from a Canadian financing firm for these aircraft.SpiceJet also has 30 Boeing 737 on order.Making clear that the funds requirement was immediate,Mills said they would not wait for the markets to improve and that if there was a need for the promoter to dilute equity,the option would be considered.If equity dilution is required then a decision will be taken on it.We cannot wait for the markets to bounce back as we need the money, he said.Mills,however,said whatever transaction eventually materialises,it will be through the companys shares and KAL Airways,through which Maran has stake in SpiceJet,will be a participant.Bankers close to Marans acquisition in SpiceJet said it was part of the original plan to have a rights issue later.But banks and investors might have little appetite for the aviation sector at this point.The sentiment for aviation funding is at an all-time low in India and state-run Air India and Vijay Mallya-promoted Kingfisher Airlines are facing operational challenges and liquidity crunch.Kingfisher is trying to raise $350 million through a GDR,but Mallya had said earlier that because of higher fuel prices he needed to take a modified business plan to investors.Kingfisher,which has a debt of.6,000 crore even after a debt recast,has not been able to close the fund raise as yet.Jet Airways promoter Naresh Goyal too had said earlier that the market was not conducive for raising funds for airlines.


Pc0050700.jpg 



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

சன் டிவி கலாநிதிமாறன் இன்று காவல் நிலையத்தில் ஆஜர் ஆவாரா?

சேலத்தை சேர்ந்த திரைப்பட விநியோகஸ்தரிடம் பண மோசடி செய்யப்பட்ட வழக்கில், சன் டி.வி. நிர்வாக இயக்குநர் கலாநிதிமாறன் திங்கள்கிழமை கே.கே. நகர் காவல் நிலயைத்தில் ஆஜராவார் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

 சேலத்தை சேர்ந்த திரைப்பட விநியோகஸ்தர் டி.கே. செல்வராஜ். "தீராத விளையாட்டு பிள்ளை' திரைப்பட விநியோகம் தொடர்பாக ரூ. 82.53 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக சன் குழும நிர்வாகி சக்சேனா மீது கடந்த ஜூலை 3-ம் தேதி கே.கே. நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

 இதையடுத்து, சக்சேனாவை போலீஸôர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த புகார் தொடர்பாக, சன் டி.வி. நிர்வாக இயக்குநர் கலாநிதிமாறனையும் விசாரிக்கும் வகையில் அவருக்கு போலீஸôர் அவருக்கு சம்மன் அனுப்பினர்.

 அதில், ஜூலை 13-ம் தேதி கே.கே. நகர் காவல் நிலையத்தில் ஆஜராஜ வேண்டும் என கூறப்பட்டிருந்தது. ஆனால், அன்றைய தினம் அவர் போலீஸில் ஆஜராகவில்லை.

 அவரது சார்பில் காவல் நிலையத்துக்கு வந்த வழக்கறிஞர்கள் கலாநிதிமாறன் காவல் நிலையத்தில் ஆஜராக ஜூலை 25-ம் தேதி வரை அவகாசம் கேட்டனர். போலீஸôரும் இதே ஏற்றுக் கொண்டனர்.

 இந்நிலையில், காவல் நிலையத்தில் அவர் ஆஜராவதற்கு அவர் கேட்டிருந்த கால அவகாசம் திங்கள்கிழமையுடன் முடிவடைகிறது. எனவே, அவர் செவ்வாய்க்கிழமை மாலைக்குள் கே.கே. நகர் காவல் நிலையத்தில் ஆஜராகலாம் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

15315468-kalanithi.jpg?w=567&h=1311



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

niiraradiamotherboard20.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

 போலீசில் கலாநிதிமாறன் இன்று ஆஜராகவில்லை

 
First Published : 26 Jul 2011 03:48:08 PM IST


 
சென்னை, ஜூலை 26: சேலத்தை சேர்ந்த திரைப்பட விநியோகஸ்தரிடம் பண மோசடி செய்யப்பட்ட வழக்கில், கே.கே. நகர் காவல் நிலையத்தில் சன் டி.வி. நிர்வாக இயக்குநர் கலாநிதிமாறன் இன்று ஆஜராவார் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. எனினும் அவர் ஆஜராகவில்லை.

 

வெளிநாட்டில் உள்ள அவர் இதுவரை சென்னைக்கு திரும்பவில்லை என்று தகவல் வட்டாரங்கள் தெரிவித்தன.

 

சேலத்தை சேர்ந்த திரைப்பட விநியோகஸ்தர் டி.கே. செல்வராஜ். தீராத விளையாட்டு பிள்ளை திரைப்பட விநியோகம் தொடர்பாக ரூ. 82.53 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக சன் குழும நிர்வாகி சக்சேனா மீது கடந்த ஜூலை 3-ம் தேதி கே.கே. நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

 

இதையடுத்து, சக்சேனாவை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த புகார் தொடர்பாக, சன் டி.வி. நிர்வாக இயக்குநர் கலாநிதிமாறனையும் விசாரிக்கும் வகையில் அவருக்கு போலீஸார் அவருக்கு சம்மன் அனுப்பினர்.

 

அதில், ஜூலை 13-ம் தேதி கே.கே. நகர் காவல் நிலையத்தில் ஆஜராஜ வேண்டும் என கூறப்பட்டிருந்தது. ஆனால், அன்றைய தினம் அவர் போலீஸில் ஆஜராகவில்லை.

 

அவரது சார்பில் காவல் நிலையத்துக்கு வந்த வழக்கறிஞர்கள் கலாநிதிமாறன் காவல் நிலையத்தில் ஆஜராக ஜூலை 25-ம் தேதி வரை அவகாசம் கேட்டனர். போலீஸாரும் இதே ஏற்றுக் கொண்டனர்.

 

இந்த நிலையில், காவல் நிலையத்தில் அவர் ஆஜராவதற்கு அவர் கேட்டிருந்த கால அவகாசம் இன்றுடன் முடிவடைந்தது. எனினும் அவர் போலீஸ் முன்பு ஆஜராகவில்லை.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

கருணாநிதி குடும்பத்தின் மீடியா வியாபாரம்! – துர்வாசர்

ஜன்னல் வழியே

டக்கி வாசிப்பது என்பது தி.மு.கழகத் தலைவரிடமும் சரி, அதன் இதர தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடமும் சரி, அறவே கிடையாது. பதவியில் இருக்கும்போது ஆடாத ஆட்டமெல்லாம் ஆடித் தீர்ப்பது என்பது தி.மு.க.வின் வரலாறு. பதவியையும் செல்வாக்கையும் சொந்த நலன்களுக்காகத் துஷ்பிரயோகம் செய்வது என்பது அவர்களுக்குக் கைவந்த கலை. கருணாநிதி மகா தந்திரசாலி. தனது ஆசைகளையும் எண்ணங்களையும் எப்படியாவது நிறைவேற்றிக் கொள்வார்.



முரசொலி மாறனை முதல் முதலாக மத்திய அரசில் நுழைத்ததே, தனக்கு டெல்லியில் நம்பகமான ஒரு ஆள் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். முரசொலி மாறனும் சரி, அவரது வாரிசுகளும் சரி, வியாபாரத்தில் வெகு சூட்டிகையானவர்கள். கையில் அதிகாரம் வேறு இருக்கவே, அதை வைத்து தங்களுடைய பிஸினஸ் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்திக் கொண்டார்கள் என்பது உலகமறிந்த செய்தி.

மாறனுக்குப் பிறகு கருணாநிதி, பேரன் தயாநிதி மாறனை மத்திய அமைச்சகத்தினுள் நுழைத்தார். தொலைத் தொடர்புத் துறையைக் கேட்டுப் பெற்றார்.

தமிழ்நாட்டில் பல ரயில்வே திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் உள்ளன. ரயில்வே துறையைக் கேட்டுப் பெற்றால் அத்திட்டங்களை நிறைவேற்றலாம். ஆனால், கருணாநிதியும் அவரது குடும்பமும் ரயில்வே காண்ட்ராக்டர்களா என்ன, ரயில்வே துறையைக் கேட்டு வாங்கி ஆதாயம் அடைய? கருணாநிதி, மாறன் குடும்பங்கள் இரண்டுமே மீடியா வியாபாரிகள். மீடியா வியாபாரிகளுக்கு ரயில்வே எதற்கு?

93-ல் சாதாரண வீடியோ கேஸட்டுகளை விற்பனை செய்து வந்த கலாநிதி, தயாநிதிகள் சன் டி.வி.யை ஆரம்பித்தார்கள். 2000-ல் எஸ்.சி.வி.யைத் துவக்கினார்கள். ஹாத்வே போன்ற இதர கேபிள் டி.வி.க்களை தனக்குப் பின்புலமாக உள்ள தாத்தா கருணாநிதியின் அரசியல் செல்வாக்கு, மத்திய அரசிலுள்ள தொடர்பு இவற்றால் எஸ்.சி.வி. ஒழித்துக் கட்டியது. கலாநிதி, தயாநிதிகள், டி.வி. உலகில் பட்டம் பறக்கிற மாதிரி உயரே உயரே பறந்தார்கள்.

2004-ல் மத்திய தொலைத் தொடர்பு அமைச்சரான தயாநிதி, டெல்லியில் இருந்து கொண்டே சன் டி.வி.க்கு வேண்டிய சகலத்தையும் செய்து கொண்டிருந்தார். அடுத்தடுத்து கே. டி.வி., சன் நியூஸ், இதர மொழிச் சேனல்கள்…. என்று தென்னிந்தியாவில் தனது கால்களை சன் டி.வி. அகலமாக விரித்து வைத்து விட்டது.

மத்திய அரசில் தொலைத் தொடர்பு மந்திரியாக இருக்கும் முன்னுரிமையை வைத்து ராஜ் டி.வி.க்கோ, விஜய் டி.வி.க்கோ கிடைக்காத வசதிகளை, சதா சர்வ காலமும் சிரித்துக் கொண்டே இருக்கும் தயாநிதி, தனது சன் குழுமத்துக்குச் செய்து கொடுத்துக் கொண்டே இருந்தார்.

பதவியும், தாத்தா கருணாநிதியின் பின்பலமும் இருக்கிற தைரியத்தில்தானே, தனது வீட்டில் சட்டத்துக்கு விரோதமாக தனி டெலிஃபோன் எக்ஸ்சேஞ்சையை இயக்கி இருக்கிறார் தயாநிதி?

2006-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, கருணாநிதி குடும்பத்திலிருந்து ஏகப்பட்ட ‘நிதி’கள் சினிமா வினியோகத்திலும், சினிமா தயாரிப்பிலும் புற்றீசல் போல் கிளம்பி வந்து ஈடுபட்டார்கள். சன் குழுமம் ஹாத்வேயை ஒழித்துக் கட்டிய மாதிரி, பல சினிமா வினியோகஸ்தர்களையும், தயாரிப்பாளர்களையும் கதறடித்தனர் இந்த ‘நிதி’கள். விளைவு, இந்தக் கருணாநிதி குடும்பத்து ‘நிதி’களை மீறி சினிமாவில் யாரும் தலையெடுக்க முடியவில்லை.

சன் டி.வி. குழுமம், தினகரன், தமிழ் முரசு, குங்குமம் முதலான பத்திரிகைகள், சினிமா வினியோகம் என்று தமிழ்நாட்டு மீடியாவே கலாநிதியின் கைக்குள் வந்துவிட்டது. தமிழன் படிப்பதாக இருந்தால் தினகரனைத்தான் படிக்க வேண்டும்; பார்ப்பதாக இருந்தால் சன் டி.வி.யையோ, சன் பிக்சர்ஸ் வினியோகித்த திரைப்படத்தையோதான் பார்க்க வேண்டும் – என்ற நிலைக்குத் தமிழர்களைத் தள்ளி விட்டனர்.

மீடியா வியாபாரத்தில் தங்களை அடித்துக் கொள்ள ஆள் இல்லை என்கிற அளவுக்கு, இந்த இரண்டு நிதிகளும் வளரக் காரணமே பெரிய நிதியான கருணாநிதிதான். மீடியா வியாபாரம் செய்யக் கூடாது என்றில்லை. ஆனால், பதவி அதிகாரத்தையும், தங்கள் அரசியல் செல்வாக்கையும் துஷ்பிரயோகம் செய்து, மீடியா வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்கிற சுயநலம் கருணாநிதி குடும்பத்துக்குத்தான் உண்டு.

கருணாநிதி ‘ஏழு வயதிலிருந்தே பொது வாழ்வில் இருக்கிறேன், எட்டரை வயதிலிருந்தே பொதுவாழ்வில் இருக்கிறேன்’ என்று பீற்றிக் கொள்கிறார். அவர் பொது வாழ்வில் இருப்பதால், தமிழ்நாட்டு மக்களை உயர்த்தி விட்டாரோ இல்லையோ, சன் குழுமத்தையும், தனது கலைஞர் டி.வி.யையும் உயர்த்தி விட்டார்.

இத்தனை அதிகார துஷ்பிரயோகத்துக்கும் காரணமான கருணாநிதி இப்போது தனது பேரன் தயாநிதிக்குப் பரிந்து கொண்டு ‘இந்தியாவில் மீடியாவின் ஆட்சி நடக்கிறது…’ என்று மீடியாவைச் சாடுவது நல்ல கூத்துதான்.

–நன்றி துக்ளக்



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

கலாநிதி ரகசியமாக இந்தியா வருவதற்கு…

 

கலாநிதி மாறன், தனது் வக்கீல் மூலமாக அனுப்பிவைத்த கடிதத்தின்படி அவர், இன்று (26ம் தேதி, செவ்வாய்க்கிழமை) இந்தியா திரும்பவேண்டும். இன்று அல்லது நாளை அவரை நேரில் ஆஜராகும்படி புதிய சம்மன் ஒன்றைக் கொடுக்கும் ஏற்பாடுகளில் காவல்துறை இறங்கியிருக்கின்றது.

கேள்வி என்னவென்றால், கலாநிதி இன்று இந்தியா வந்திறங்குகிறாரா? அல்லது, ஏற்கனவே வந்துவிட்டாரா?

 

கலாநிதி நேற்று இரவுவரை அவரது சென்னை வீட்டுக்கு வந்ததாக தகவல் இல்லை. அவர் புத்திசாலியாக இருந்தால், வெளிநாடு ஒன்றிலிருந்து நேரடியாக சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கியிருக்கவும் மாட்டார்.

 

அதற்கு இரு காரணங்கள் உண்டு. முதலாவது, காலாநிதி சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கினால், முன்புபோல வி.ஐ.பி. கேட் வழியாக வெளியேறுவதெல்லாம் எந்தளவுக்கு சாத்தியம் என்று சொல்ல முடியாது. சாதாரண பயணிகள் வாயிலூடாக வெளியே வந்தால், பத்திரிகையாளர்கள் மொய்த்துக் கொள்வார்கள்.

 

சொந்தமாக மீடியா நிறுவனம் வைத்திருக்கும் கலாநிதிக்கு, எங்கெல்லாம் நிருபர்களும், போட்டோகிராபர்களும் நிற்பார்கள் என்பது நன்றாகவே தெரியும். அதுவும் அவர் 26ம் தேதி நாடு திரும்புவார் என்று காவல்துறைக்கு கடிதம் கொடுத்துள்ளார். இதனால், 25ம், 26ம் தேதிகளில் எந்தெந்த மீடியாவின் ஆட்கள் சென்னை விமான நிலையத்தைச் சுற்றிச் சுற்றி வருவார்கள் என்பது யாருக்குத் தெரிகிறதோ இல்லையோ, கலாநிதிக்கு நன்றாகவே தெரியும்.

 

அடுத்த காரணம், வெளிநாடு ஒன்றிலிருந்து நேரில் சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கினால், அவர் வருவதற்கு முன்னரே PNM என்ற லிஸ்ட் ஏர்போர்ட் பாதுகாப்பு பிரிவினரின் கைகளுக்கு போய்விடும். அது அப்படியே தமிழக உளவுத்துறையின் கைகளுக்கு போவதற்கு அதிக நேரம் எடுக்காது.

 

PNM என்பது, ஏர்லைன்ஸ் பரிபாஷையில் Passenger Name Manifest என்பதன் சுருக்கம். விமானம் புறப்படும் இடத்திலிருந்து கிளம்பி 30 நிமிடங்களுக்கு உள்ளே இந்த லிஸ்ட் ஆட்டோமேட்டிக்காக விமானம் போய்ச்சேரும் விமான நிலையத்திலுள்ள ஏர்லைன் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டுவிடும்.

 

இந்த லிஸ்ட்டில் விமானத்தில் வந்திறங்கப்போதும் பயணிகள் அனைவரது பெயர்களும் அகர வரிசையில் இருக்கும்!

 

உதாரணமாக, சென்னை வரும் லுஃப்தான்சா விமானத்தை எடுத்துக் கொள்ளுங்கள். பிராங்பேர்ட்டிலிருந்து அந்த விமானம் மதியம் 11.05க்கு புறப்படுகிறது. சரியான நேரத்தில் புறப்பட்டால், 11.35க்கு முன் PNM சென்னையிலுள்ள லுஃப்தான்சா அலுவலக பிரின்டருக்கு வந்துவிடும்.

 

அப்போது சென்னையில் நேரம், மாலை 2.35. விமானம் சென்னையில் தரையிறங்குவது இரவு 11.45க்குத்தான்! அதாவது, விமானம் வந்திறங்குவதற்கு கிட்டத்தட்ட 9 மணிநேரத்துக்கு முன்னரே PNM வந்துவிடும்.

 

அவ்வளவு அவகாசம் போதாதா? காவல்துறை செய்ய நினைத்தால், மேஜிஸ்ட்ரேட் உத்தரவுகூட வாங்கி, விமான நிலையத்தில் கோழி அமுக்குவதுபோல ஆளை அமுக்கி விடலாம்.

 

கலாநிதி விவகாரத்தில் காவல்துறை அப்படிச் செய்யுமோ செய்யாதோ என்பது வேறு விஷயம். ஆனால் செய்யலாம். அதனால்தான் எழுதினோம், கலாநிதி புத்திசாலியாக இருந்தால், வெளிநாடு ஒன்றிலிருந்து சென்னை விமான நிலையத்துக்கு நேரில் வந்திறங்க மாட்டார் என்று!

 

ஓசைப்படாமல் இந்தியா வந்திறங்க சுலபமான வழி, வெளிநாட்டு விமானங்கள் வரும் சிறிய விமான நிலையம் ஒன்றுக்கு வருவதுதான். இந்தியாவில் பல விமான நிலையங்கள் அப்படி இருக்கின்றன.

 

உதாரணமாக, கேரள மாநிலத்திலுள்ள கொச்சின்.

 

ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து புறப்பட்டு, மத்திய கிழக்கு நாடு ஒன்றில் ட்ரான்சிட் போட்டுக் கொண்டு நேரே கொச்சின் வரலாம். அதுவும் குறிப்பிட்ட சில நேரங்களில் வந்திறங்கும் விமானங்கள், அட்டகாசமான டைமிங்!

 

யார் வருகிறார்கள் யார் போகிறார்கள் என்றே கண்டுபிடிப்பது கஷ்டம்!

 

குறிப்பிட்ட நேரம் என்று குறிப்பிடுவது, அதிகாலை நேரத்தை! இதோ பாருங்கள்… ஒரு அதிகாலையில் கொச்சினுக்கு வரும் வெளிநாட்டு விமானங்களின் டைமிங்கை.

 

துபாயிலிருந்து புறப்படும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸின் EK530, அதிகாலை 3.05க்கு வந்திறங்கும். அடுத்து அபுதாபியிலிருந்து புறப்படும் எதியாட் ஏர்லைன்ஸின் EY280, 3.30க்கு வந்து சேரும். அடுத்த 10 நிமிடங்களில் 3.40க்கு, தோஹாவிலிருந்து புறப்படும் கத்தார் ஏர்வேஸ் QR264 தரையிறங்கும்.

 

அளவில் சிறிய கொச்சின் விமான நிலையத்தில், அதிகாலையில் இப்படி 3 வெளிநாட்டு விமானங்கள் வந்திறங்கினால், இமிகிரேஷன் மற்றும் அரைவல் கன்ட்ரோல் பகுதிகள், பொள்ளாச்சி சந்தைக்குள் புகுந்துவிட்டது போல இருக்கும்.

 

இப்படியான நேரத்தில், கர்னல் கடாபி வந்திறங்கினாலே கண்டுபிடிக்க முடியாது. கலாநிதி மாறனை யார் கண்டுபிடிப்பது? 

viruvirupu.com.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

சிவசங்கரனை தூண்டிய தி.மு.க. பெண்மணி ! இப்படியும் சிக்கினார் தயாநிதி !!

 

“தயாநிதி மாறன் அழுத்தம் கொடுத்து ஏர் செல் நிறுவனத்தை விற்க்க வைத்ததாகக் கூறுகிறீர்கள். சரி. அது நடந்து 6 வருடங்கள் ஆகிவிட்டனவே! உங்களுக்கு சி.பி.ஐ.யிடம் வர ஆறு வருடங்கள் எடுத்தனவா?” ஏர் செல்லின் முன்னாள் அதிபர் சிவசங்கரன் வி.பி.ஐ.யிடம் வாக்குமூலம் கொடுக்க வந்தபோது, சி.பி.ஐ. அதிகாரி கள் கேட்ட முதல் கேள்வி இது.

இதற்கு சிவசங்கரன், “தயாநிதி மாறனால் ஏற்பட்டிருக்கக்கூடிய உயிர் ஆபத்தில் இருந்து தப்புவதற்காகவே நான், இந்தியாவை விட்டு வெளியேறி விட்டேன்” என்று பதிலளித்ததாகத் தெரிகின்றது. இந்தப் பதிலை சி.பி.ஐ. தயாநிதிக்கு எதிராக உபயோகித்துக் கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால், சிவசங்கரன் ஆறு வருடங்களுக்குப்பின் தயாநிதிக்கு எதிரான வெடிகுண்டாக மாறியதற்கு, மற்றொரு நபரின் தூண்டலும் காரணம் என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.

அந்த மற்றொரு நபர், தி.மு.க.வின் உயர்மட்ட பெண்மணி என்பதே இதிலுள்ள ஹைலைட்!

சிக்கலில் மாட்டப்பட்டுள்ள தயாநிதியும் தி.மு.க.தான். அவரும், தி.மு.க. உயர்மட்டக் குடும்ப உறுப்பினர்தான். அப்டியிருந்தும், தி.மு.க.வின் மற்றொரு உயர்மட்டக் குடும்ப பெண்மணி எதற்காக தயாநிதிக்கு எதிராக, சிவசங்கரனுக்கு கொம்பு சீவி விடவேண்டும்?

“எல்லாமே குடும்ப உட்பூசல்தான்” என்கிறது விபரமறிந்த தகவல்!

தி.மு.க.வில் எந்தவித செல்வாக்கும் இல்லாமல் தயாநிதி இருந்த காலத்தில், டில்லியை நோக்கி பாதை காட்டிவிட்டதே இந்த பெண்மணிதான். அதன் பிறகு, மதுரை அடிதடியுடன் குடும்பம் பிரிந்தபோது, தயாநிதிக்கு ஆதரவாக இருந்தவரும் இதே பெண்மணிதான்.

ஆனால், ராசா.. கனிமொழி.. என்று வரிசையாக ஆட்கள் உள்ளே போகத் தொடங்க, தயாநிதி மாத்திரம் மத்திய அமைச்சர் பந்தாவுடன் வலம்வந்து கொண்டிருந்தது இந்த பெண்மணியின் மனதில் ஏற்பட்ட முதல் நெருடல்.

அதற்கு அடுத்தபடியாக, இந்த பெண்மணிக்கு மற்றொரு விடயத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. டில்லி நினைத்தால், கோர்ட் கேஸையெல்லாம் ஊதித் தள்ளிவிடலாம் என்பதே அந்த நம்பிக்கை.

“அதற்கான காலம் கடந்துவிட்டது. இப்போது விவகாரம் இந்திய சட்ட எந்திரத்துக்குள் போய்விட்டது. இனி டில்லி நினைத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது” என்று குடும்பத் தலைவர் உட்பட, யார் விளக்கிச் சொன்னாலும் பெண்மணி, தனது நம்பிக்கையை மாற்றிக் கொள்வதாயில்லை.

இடையே சிறிதுகாலம் தயாநிதியுடன் இந்த பெண்மணி முரண்பட்டு இருந்தார். அப்படியிருந்தும், கோர்ட் விவகாரத்தை டில்லியில் பேசி சுமுகமாக முடித்துத் தரும்படி ஒரு கோரிக்கையுடன் தயாநிதியை அணுகியிருக்கிறார். ஆனால், அதற்கு தயாநிதி கூறிய பதில், குடும்பத் தலைவர் கூறிய அதே பதில்தான்! “காரியம் கையை விட்டுப் போய்விட்டது”

இதையடுத்தே, மீண்டும் தயாநிதிக்கு எதிரானவரானார் பெண்மணி.

முன்பாவது, கோபத்தில் இருந்தார். இப்போது ஆவேசத்தில் குமுறத் தொடங்கினார். “நாங்கள் சிக்கலில் மாட்டினால் டில்லியால் ஒன்றும் செய்ய முடியாது என்றால், தயாநிதி மாட்டினால் என்ன செய்வார்கள்?”

இந்தப் பின்னணியில்தான் சிவசங்கரன், இந்த பெண்மணியால் போன் மூலம் தொடர்பு கொள்ளப்பட்டார் என்கிறார்கள்.

சிவசங்கரனும் தயாநிதிக்கு எதிரான ஒரு நகர்வைச் செய்யலாமா என்று யோசித்துகொண்டிருந்த நேரம் அது. அதற்குள் இந்த பெண்மணியின் தூண்டலும் சேரவே-

சிவசங்கரன், சி.பி.ஐ.யின் அலுவலகம் போய் சேர்ந்தார் என்கிறார்கள்!


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

அம்பானி கம்பனியில் தயாநிதிக்கு பங்கு ! வந்து விழுகிறது அடுத்த இடி !!

 

தயாநிதி மாறனுக்கும், அவரது மனைவிக்கும், அம்பானி குரூப்பின் மூன்று நிறுவனங்களில் பங்குகள் இருக்கின்றன!

தயாநிதியின் விவகாரங்களைத் தோண்டத் தோண்ட, தினமும் வெவ்வேறு பூதங்கள் வெளியாகின்றன. இன்று புதிதாகக் கிளம்பியுள்ள பூதம், அம்பானியின் கம்பனிகளில் தயாநிதிக்கு பங்குகள் இருக்கின்றன என்பதே! இந்த பங்கு விவகாரம் தயாநிதியை மேலும் இறுக வைக்கிறது!

“அமைச்சர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் சொத்து விவரங்கள் வெளியிடப்படவேண்டும்” என்ற பிரதமரின் உத்தரவால், வட இந்திய அமைச்சர்களுக்கு இருக்கும் நெருக்கடிகளைவிட, நம்ம தமிழக அமைச்சர் தயாநிதி மாறனுக்கு நெருக்கடி அதிகம்.

பிரதமர் மன்மோகன்சிங், ப.சிதம்பரம், ஏ.கே. அன்டனி, பிரணாப் முகர்ஜி, கபில் சிபல் ஆகியோரின் சொத்து விபரங்கள் வெளியாகியுள்ளன. அவற்றில் வில்லங்கங்கள் ஏதுமில்லை.

ஆனால், தயாநிதி மாறனின் சொத்து விபரங்களில்தான், வில்லங்கங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானது, அம்பானியின் நிறுவனங்களில் தயாநிதிக்கும், அவரது மனைவிக்கும் உள்ள பங்குகள்!

தயாநிதி மாறனுக்கும், அவரது மனைவிக்கும் பங்குகள் இருக்கும் அம்பானி குரூப்பின் மூன்று நிறுவனங்கள்: Reliance Industries, Reliance Natural Resources Ltd, Reliance Communications (RCom). இவற்றில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், தகவல் தொழில்நுட்ப நிறுவனம்.

தயாநிதி, தகவல் தொழில்நுட்பத் துறையின் அமைச்சராக 2004-2007 காலப்பகுதியில் இருந்திருக்கிறார். அதே காலப்பகுதியில் அம்பானியின் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் பங்குதாரராகவும் இருந்திருக்கின்றார்! இது ஒரு அப்பட்டமான conflicts of interest!

இதை வைத்துக்கொண்டு, 2004-2007 காலப்பகுதியில் அம்பானி குரூப் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட பல்வேறு சலுகைகள், அல்லது ஒப்பந்தங்கள் பற்றி குற்றச்சாட்டுகளை எழுப்ப முடியும். முடிவெடுக்கும் அதிகாரமுள்ள கபினெட் அமைச்சரின் conflicts of interest, இந்தியக் குற்றவியல் சட்டத்தில் லேசான விசயமல்ல.

பொறுத்து இருந்து பாருங்கள், அம்பானி குரூப்பின் போட்டி நிறுவனங்கள், இந்த விவகாரத்தைக் கையில் எடுக்கப் போகின்றன!


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

27_07_2011_003_013-kalanithi.jpg?w=536&h=667



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

MINOR REPRIEVE 
2 film distributors withdraw cases against Suns Saxena 

A Selvaraj TNN 

Chennai: Film distributors T S Selvaraj and Shanmugavelu,who rocked the Tamil film industry by filing complaints of cheating against Sun Pictures chief operating officer W Hansraj Saxena,withdrew their cases on Tuesday.Saxena and producer Ayyappan were arrested by the KK Nagar police on July 3.Saxena,however,faces three other cases.
Sources said Selvaraj and Shanmugavelu,both from Salem,filed petitions on Tuesday at the Madras high court,stating that they had entered into a compromise with Sun Pictures and wanted to withdraw their complaints.Justice T Sudanthiram admitted the petitions and asked the public prosecutor get instructions from KK Nagar police inspector Durai,the investigation officer in both cases.
Saxena was arrested on July 3 based on Selvarajs complaint that Sun Pictures cheated him of Rs 82.53 lakh in connection with the release of Theeratha Vilayattu Pillai.Ayyappan was arrested on July 7.
The police slapped another case against Saxena,based on Shanmugavelus complaint.He said had got the distribution rights for the film for Salem but later withdrew.He alleged that he had been threatened and forced to pay Rs 45 lakh to Saxena,who has got bail in both cases.
Police sources said Sun Pictures had settled the disputes with the film distributors out of court.


Pc0012400.jpg 



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Saxena faces three more cheating cases 


But Saxena continues to face three more cases.On July 11,producer Hitesh Jhabak alleged that he had cheated him of Rs 3.37 crore while buying the rights of Mappillai,starring Dhanush and Hansika Motwani.
Producer of Vallakottai T D Raja filed another case on July 15,claiming that Saxena had cheatedhim of Rs55lakh.Only July 19,ArulMurthy,who runs an animation studio in Nungambakkam,claimed that he had been cheated of Rs 11 lakh.
TheKKNagar policesummoned Sun Network chairman and managing director Kalanithi Maran on July 11.He was asked to appear for questioning on July 13 but as he was abroad,his counsel sought more time.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

அதிகாரிகளை மிரட்டும் தினகரன் தலைமை நிருபர்அச்சிடுகமின்-அஞ்சல்

சவுக்கு   
புதன்கிழமை, 27 ஜூலை 2011 14:05

 

இன்றைய தினகரன் நாளேட்டிலும், நேற்றைய தமிழ் முரசு இதழிலும் ஜாபர் சேட் வீட்டில் நடந்த சோதனையைப் பற்றிய செய்தியோடு ஒரு பெட்டிச் செய்தி.

 

“தானே முன் வந்து தனிப்படையில் சேர்ந்த ஜெயலட்சுமி” என்ற தலைப்பில் வந்த செய்தி.

 20110727a_00310100703

“ஜாபர்சேட் வீட்டில் சோதனை நடத்தும் விஜிலன்ஸ் டீமில் முக்கியமானவர் கூடுதல் எஸ்பி ஜெயலட்சுமி. இவர், இதற்கு முன்பு ஜாபர்சேட்டுடன் உளவுத்துறையில் பணியாற்றினார்.

 

கடந்த ஆட்சியில், மார்க்சிஸ்ட் தலைவர் பிருந்தாகரத்தை மதுரை மாவட்ட போலீசார் கைது செய்தனர். இதுபற்றிய தகவல் உளவுத்துறை மூலம் சரியான நேரத்தில் அப்போதைய முதல்வருக்கு தெரிவிக்கப்படவில்லை. இதுதொடர்பாக, கூடுதல் எஸ்.பி. ஜெயலட்சுமியை ஜாபர்சேட் திட்டியிருக்கிறார். அதிகாரிகள் பலர் முன்னிலையில் தன்னை ஜாபர்சேட் திட்டியது பற்றி அப்போதே பலரிடம் வருத்தப்பட்டிருக்கிறார் ஜெயலட்சுமி. இன்று ஜாபர்சேட் வீட்டில் ரெய்டுக்காக கிளம்பிய டீமுடன், தானாகவே முன்வந்து அவரும் சேர்ந்து கொண்டதாக தெரிகிறது. ரெய்டு நடந்த போது, டீமில் இருந்த அதிகாரிகளுக்கு பல முக்கிய தகவல்களை சொல்லி ஜெயலட்சுமி உதவியதாக கூறப் படுகிறது.”

 

இந்தச் செய்தியின் பின்னணியைப் பார்க்கும் முன், இந்தச் செய்தியை வெளியிட்டவர் யார் என்று பார்ப்போம். தினகரன் இதழின் தலைமை நிருபர் சுரேஷ். யார் இந்த சுரேஷ் ?

 a

 

சுரேஷ்

சுரேஷ் என்கிற சுரேஷ் வேதநாயகம் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறைச் சேர்ந்தவர்.   பாளையங்கோட்டையில் பிஎஸ்சி படித்து, வெட்டியாக ஊரைச் சுற்றிக் கொண்டிருந்தவரை, இவர் தாய் மாமன் பாக்கியநாதன், சென்னைக்கு வரவழைத்து பத்திரிக்கையாளர் ஆக்குகிறார்.

 

அப்படித் தான் இந்த சுரேஷ் பத்திரிக்கையாளர் ஆகிறார்.   மாலைச் சுடர் பத்திரிக்கையில் சிறிது காலம், பணியாற்றிய பின்னர் திருச்சி தினமலர் பத்திரிக்கையில் க்ரைம் பீட் பார்க்கிறார்.   க்ரைம் பீட் பார்க்கத் தொடங்கியதும், இந்த சுரேஷ் தன்னை டிஜிபியாக கருதிக் கொள்ளத் தொடங்கி விட்டார். இவர் அடிக்கும் லூட்டிகள் சொல்லி மாளாது.

 

ஒரு முறை சென்னை மாநகர கமிஷனர் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, ஒரு சாராய பாக்கெட்டை எடுத்து காட்டினார். இந்தச் சாராய பாக்கெட், மைலாப்பூர் ஏரியாவில் விற்கப் படுகிறது என்று கூறி, அதிர்சியை ஏற்படுத்தினார்.   பத்திரிக்கையாளர்கள், இவரை சிறந்த புலனாய்வு நிருபர் என்று பாராட்டினார்கள். மறு நாளே, மைலாப்பூர் உதவி ஆணையரைச் சந்தித்து, குற்றாலம் டூர் போக வேண்டும் ஏற்பாடு செய்யுங்கள் என்று பணம் வாங்கிய விபரம் தெரிய வந்ததும், பத்திரிக்கையாளர்கள் காறித் துப்பினர்.

 

இதுதான் இந்த சுரேஷின் லட்சணம்.   பத்திரிக்கையாளர் என்ற போர்வையில், கட்டப் பஞ்சாயத்து செய்வது, அதிகாரிகளுக்கு ப்ரோக்கர் வேலை செய்வதுதான் இவரது முழு நேரத் தொழில்.   நக்சலைட் ப்ரகாஷ் இவரது நெருங்கிய நண்பர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

 

தமிழகத்தின் மிக மிக மிக மிக மிக நேர்மையான அதிகாரிகளில் ஒருவரான துக்கையாண்டிக்கு இவர் மிகவும் நெருக்கம். இந்த அதிகாரிகளைப் பற்றி ஆகா ஓகோ என்று பாராட்டி செய்தி வெளியிடுவார்.   இவருக்கு நெருக்கமான இது போன்ற பாராட்டுக்களை பெற்ற அதிகாரிகள் துக்கையாண்டி, மவுரியா, காந்திராஜன் போன்றவர்.

 

தினகரன் நாளேட்டிலும், செய்தி வெளியிடுவதை விட, தினகரன் நிர்வாகம் சார்பில், கட்டப் பஞ்சாயத்து செய்வதையே முழு நேரத் தொழிலாகக் செய்து வருகிறார். கருணாநிதி ஆட்சி காலத்தில், அரசு கேபிள் செயல்படுத்தப் படுகையில், சன் டிவி நிர்வாகம் சார்பாக, கேபிள்கள் அறுத்தெறியப் பட்டன.   அந்த கேபிள்களை அறுத்தெறிவதிலும், க்ரைம் பீட் பார்க்கும் பொழுது கிடைத்த தொடர்புகளை வைத்து, ரவுடிகளை விட்டு கேபிள்களை அறுத்ததிலும், அதில் காவல்துறை வழக்கு பதிவு செய்யாமல் பார்த்துக் கொண்டதிலும், இந்த சுரேஷுக்கு முக்கிய பங்கு உண்டு.

 

தினகரன் ஆசிரியர் ஆர்.எம்.ஆர் ரமேஷுக்கு மிகவும் நெருக்கமானவர் இந்த சுரேஷ். இந்த ரமேஷுக்கு தேவையான வேலைகளை செய்து கொடுத்து, அந்தப் பத்திரிக்கையில் பணியாற்றும் மற்றவர்களை போட்டுக் கொடுத்து இதன் மூலம், பிழைப்பை நடத்துபவர்தான் இந்த சுரேஷ்.

 

இப்படிப் பட்ட சுரேஷ் தான் கூடுதல் எஸ்பி ஜெயலட்சுமி, ஜாபர் சேட் வீட்டுக்கு ரெய்டுக்குச் செல்கையில், தானாக வந்து பங்கெடுத்தார் என்று செய்தி வெளியிட்டிருக்கிறார்.

 

லஞ்ச ஒழிப்புத் துறையின் சோதனைகள் என்பவை ஒரு அறுவை சிகிச்சைக்கான நேர்த்தியோடு செய்யப் படும்.   எந்த அதிகாரி எந்த இடத்திற்கு செல்ல வேண்டும், எத்தனை பேர் செல்ல வேண்டும், செல்லும் இடம் எது என்பன போன்ற விபரங்கள், முதல் நாளே முடிவு செய்யப் பட்டு மிகுந்த ரகசியமாக வைக்கப் படும்.     இந்த அதிபுத்திசாலி எழுதுவது போல கடைசி நேரத்தில் நானும் வருகிறேன் என்றெல்லாம் எப்போதும் நடைபெறாது.

 

சரி, அப்படி இருக்கையில் எதற்காக சுரேஷ் இப்படி செய்தியை வெளியிட்டார் ? அதை சுரேஷே தன் வாயால், மற்றொரு நண்பரிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார். “நியூஸ் எப்படி போட்டேன் பாத்தியா…. ?   நேத்து நான் போன் பண்ணி நியூஸ் குடுன்னு கேட்டா, அந்தம்மா போன எடுக்கவேயில்ல… அந்தம்மா நியூஸ் குடுக்கலன்னா எனக்கு நியூஸ் கிடைக்காதா ? அதான் இப்படி நியூஸ் போட்டு காலி பண்ணிட்டேன்.   இனிமே என் போன எடுக்கலன்னா, இப்படித் தான் காலி பண்ணுவேன்” என்று கூறியிருக்கிறார்.

 

அதிகாரிகள், முக்கியமான சோதனையில் ஈடுபட்டிருக்கும் போது, இது போன்ற லூசுப் பயல்களின் போனை அட்டென்ட் செய்ய மாட்டார்கள். அவர்கள் சோதனை போட வந்திருக்கிறார்களா, இந்த லூசுப் பயல் போனை அட்டென்ட் பண்ண வந்திருக்கிறார்களா ?   பணியைச் செய்யும் அதிகாரிகளைப் பற்றி அவதூறாக இது போன்ற செய்திகளைப் போடுவது கடுமையான கண்டனத்திற்கு உரியது.

 

இப்படி செய்தி போடும், சுரேஷ், இவர்கள் பத்திரிக்கையின் உரிமையாளர், கலாநிதி நாளை கைது செய்யப் படும் போது இப்படி செய்தி போடுவாரா ?

 

இந்த சுரேஷ் இது போல அதிகாரிகளை மிரட்டும் போக்கை இன்றோடு கைவிடுவது அவருக்கு நல்லது. இல்லையென்றால், சுரேஷ் சக்சேனாவுக்கு அடுத்த செல்லில் இருக்கும் நாள் வெகு தொலைவில் இருக்காது.

 



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

28_07_2011_003_003-saksena.jpg?w=640&h=493



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

 02_08_2011_002_003-dayanithi.jpg?w=640&h=301



__________________
«First  <  1 2 3 4 5 6  >  Last»  | Page of 6  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard